Blog

  • சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்..

    கர்மவீரர் காமராசர்!

     

    kamarasar
    சுதந்திரதாகம் தன்னில் தேசம் சுழன்றுகொண்டிருந்தநேரம்.
    இளைஞர்கள்தாமே அந்த விடுதலைப் போருக்கு வந்தார்!
    சத்தியமூர்த்தி போன்ற தியாகிகள் தலைமைதாங்க..
    இந்தியா முழுவதுமே அண்ணல்காந்தியின்வழியே நின்றார்!

    சுயநலம்துளியும் இல்லா மனிதர்கள் மண்ணிலுண்டு..
    அவர்களில்ஒருவராக அடையாளம் காணப்பட்டார்!
    எளிமையும்இவரும் ஒன்று இரண்டிற்கும் பேதமில்லை..
    தமிழக காங்கிரஸ் இயக்கம் கண்டிட்ட மாபெரும்தலைவர்!

    பொதுநலம் ஒன்றே தனது கொள்கையாய் மூச்சாய்கொண்டு
    திகழ்ந்தவர் இவரே என்று மாற்றாரும் போற்றுகின்றார்!
    இல்லறவாழ்வும்கூட இடைமறிக்கக்கூடாதென்று..
    தன்னந் தனியாகவே வாழ்ந்தவர் காமராசர்!!

    மக்களுக்காக வாழ்ந்த மகோன்னதத் தலைவரிவர்போல்
    மண்ணிலே காண்பதரிது என்பதை மறுக்கவே முடியாது!
    கல்விக் கண்ணைத் திறந்துவைத்த கர்மவீரரை.. காலம்
    என்றுமே நினைந்திடும்! போற்றிடும்!  புகழ்ச்சியில்லை!!

    படிப்பிற்காக இவர்ஒதுக்கிய அரசுநிலங்கள்.. அவைதான்
    பல்கலைக்கழகங்களாக இன்றும்கூட விளங்குகின்றன!
    தொழில்புரட்சியைக்கூட அமைதியாய் நடத்தி ஆண்டவரிவர்
    அம்பத்தூர்முதல் கிண்டிவரையிலும் தொழிற்கூடங்கள்!!

    கடமையைப்புரிவதில் கண்ணும்கருத்துமாய் இவரிருந்தார்! – கல்வி
    கற்றவரில்லை.. எனினும் கற்றவர்க்கெல்லாம் காரணமாயிருந்தார்!
    ஏழ்மைநிலையில் இருந்தாலும் படிக்க வாருங்கள் என்றே
    ஆயிரமாயிரம் பள்ளிகள் திறந்தார்! மதிய உணவும்தந்தார்!!

    சரித்திரம்தன்னில் வாழுகின்ற மக்கள் தலைவன்.. என்னும்
    நித்திலப்புகழுடன் வாழுகின்றார் சிவகாமியின் புதல்வன்!
    இந்தப்பிறவியில் இவரின்சாதனை இமயத்தைக்காட்டிலும்..
    இவரைப்பற்றி எண்ணவும்பேசவும் என்றும்பெருமைகொள்வோம்!
    kamarasar1

     

     

     

     

     

     

    காவிரிமைந்தன்

    Share
  • வாயுள் உலகம்!

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ஒரு சின்னப் பந்து
    கருஞ்சிவப்பில்
    சுற்றி வெள்ளை முகப்பூச்சு
    பெண் பார்க்க செல்லும் பையன் போல்!

    குவியலாகக் கிடக்கும்
    நாம் நினைத்த இடத்தில்
    பார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு
    சூரியன் போல் அனைவருக்கு பொது!

    அது உள் இருக்கையில் வராது பேச்சு
    சுரக்கும் அளவில்லாமல்
    சுழற்றியபடி பந்தாடும், வாய்
    உடைக்கத் துடிக்கும் மனம்!

    தடுக்க நினைக்கும் மறு கணம்
    மென்மை ஆக்கி நா உறிஞ்சும்
    பொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்
    உடைந்திறங்கும் தேன் மிட்டாய்!

     

    Share
  • அந்த சிவகாமி மகனிடம்…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘இருக்கும் பிடிசோறு தனக்கென எண்ணாது கொடுக்கின்ற கோயிலது’ என்னும் தாய்மையைப் போற்றும் பாடல்வரிகளைக் கொண்ட படம் – பட்டிணத்தில் பூதம்.. கவியரசர் அடிக்கடி அரசியலில் கட்சி மாறுவதேன் என்று கேட்கப்பட்டபோது.. இல்லையே… நான் அப்படியே இருக்கிறேன்.. கட்சிகள் தான் என்னைவிட்டு மாறிக்கொண்டே இருக்கின்றன என்றாராம்.  இப்படி திரைத் துறையிலும் அரசியல் துறையிலும் இலக்கியத்துறையிலும் முத்திரை பதித்த கண்ணதாசனிடம் முத்தாய்ப்பானது.. அவரது கவியாற்றலே என்பது காலம் கண்டறிந்த உண்மை!

    அதுவும் தனது தனி மனித உணர்வுகளைக் கூட, அனுபவங்களை அப்படியே வரிகளில் வடித்திடும் பேராற்றல் கண்ணதாசனிடம் கண்டதுபோல் காணக்கிடைப்பது அரிது.
    kk kk
    ஆம்.. அரசியல் களத்திலே ஏற்பட்ட ரணங்களாய் தடம் மாறி நின்றபோதும் கல்விக்கண்தந்த கர்மவீரர் காமராசரிடம் கொண்ட பற்று.. பாசம்.. அற்றுப்போகாமல்.. தன் ரத்த நாளங்களிலும் காமராசரை மெச்சிப் புகழ்ந்து வைத்திருந்தார்.  மேலும் அவரைக் காணவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

    sivakamiகாதலன் காதலிக்கு தூது அனுப்பவதற்கு ஆயிரமாயிரம் வழிகள்.  ஆனால், இங்கே கண்ணதாசன் காமராசரைக் காண துடித்தபோது.. கை கொடுத்தது எது தெரியுமா?  திரைப்பாடல் மட்டுமே!  அதுவும் இத்திரைப்படத்தில் இக்காட்சி அமைப்பு இதற்காகவே இணைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    பெண் பார்க்கும் படலத்தில் இடம் பெறும் பாடலாய்.. எத்தனை எளிமையாய்.. எத்தனை லாவகமாய்.. தூதுவிடுகின்றார் பாருங்கள்.. அருமையான பாடலிது என்று கொண்டாடலாம்.  அப்படி இசை அமைத்திருக்கும் அதிசய மனிதர் திரு.கோவர்த்தனம் ஆவார்.  ஆயிரம் பாடல்களை இசையமைத்துப் பெற வேண்டிய புகழை ஒரே பாடலில் பெற்றுவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

    புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அவர்களின் நளினங்கள் நாட்டியமாடும் திருமுகத்தை யார்தான் மறக்க முடியும்?

    காமராசரின் தாயார் பெயர் சிவகாமி.. அட.. பாடல் பிறந்து விட்டது!!!!

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
    இல்லாமல் தோகை ஏதடி…

    வேலை வணங்காமல் வேறென்ன வேலை – என்னும் சிலேடை விளையாட்டுக்களோடு..

    எத்தனைப் பாடல்கள் இப்போது வந்தாலும் அந்தக் காலப் பாடல்கள் போல் ஆகுமா என்று ஏன் ஏங்குகிறோம்.. அர்த்தம் புரிகிறதல்லவா?
    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

    http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y

    காணொளி: http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y

     

    படம் : பட்டணத்தில் பூதம்
    பாடலாசிரியர் : கண்ணதாசன்
    இசை : திரு.கோவர்த்தனம்
    குரல் : T.M.S., P. சுசீலா
    நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – வேலன்
    இல்லாமல் தோகை ஏதடி

    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…

    கண்கள் சரவணன் சூடிடும் மாலை
    கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
    வேலை வணங்காமல் வேறென்ன வேலை

    நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
    நிழலாடும் விழியோடும் ஆடினானே – அன்று
    நிழலாடும் விழியோடும் ஆடினானே – என்றும்
    கண்ணில் நின்றாடச் சொல்லடி

    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ
    மாறாது மாறாது இறைவன் ஆணை – என்றும்
    மாறாது மாறாது இறைவன் ஆணை

    இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி – இன்னும்
    சேரும் நாள் பார்ப்பதென்னடி
    வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி – தோகை
    இல்லாமல் வேலன் ஏதடி…

    ஆ……ஆ……ஆ..ஆ..ஆ.ஆ

    அந்த சிவகாமி மகனிடம்…
    அந்த சிவகாமி மகனிடம்…
    அந்த சிவகாமி மகனிடம்…
    சேதி சொல்லடி… என்னைச்
    சேரும் நாள் பார்க்கச் சொல்லடி….

    Share
  • வேதவியாசர் கோயில்

    –விசாலம்

    வடக்கில் கங்கை கங்கோத்திரியிலிருந்து  ஒரு வெள்ளிக்கம்பி போல ஆரம்பித்து  சில இடங்களில் அமைதியாகவும் சில இடங்களில் ஆக்ரோஷமாகவும்  பாய்ந்து ஓடுகிறது. புனித கங்கை ரிஷிகேசத்திலிருந்து ஏழு கிளைகளாகப் பிரிந்து  மிக வேகமாக சீற்றத்துடன்  பிரவாகமாக ஓடி வருகின்றது. இந்த  கங்கை கரையில்  இருப்பது ஹரிதுவார் என்ற  ஒரு க்ஷேத்திரம். ஹரியின் வாசல் என்று தமிழில் பொருள் வருகிறத. இந்த ஹரிதுவாரிலிருந்து சுமார் எட்டு கிமீ சென்றால் ஸ்ரீ வேதவியாசர் கோயில் வந்துவிடும். இந்த இடத்தின் பெயர் சப்தசரோவர் .. அதாவது, ஏழு ஏரி என்ற பொருள். இந்த இடத்திற்கு நான் பள்ளி மாணவர்களுடன் வந்திருக்கிறேன். ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகாசுவாமிகள் இந்தக்கோயிலை சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிக அழகாகக் கட்டியிருக்கிறார்.

    யார் இந்த வேதவியாசர்? அவருக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும் ?

    ஒரு சமயம் பராசர முனிவர் சிவனை நோக்கி தவம் இருநதார்.  சிவனும் அவர் முன் தோன்றி “உன் சிவபக்திக்கு மெச்சினேன் உன்னுடைய குமாரன்  வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்று உலகமக்களின் நன்மைக்காக வேதங்களைத் தொகுத்து அளிப்பார்”  என்று கூறி மறைந்தார்.

    பராசர முனிவருக்கும்  சத்யவதிக்கும்  ஒரு மகன் பிறந்தான். பெற்றோர்   அவருக்கு கிருஷ்ண துவைபாயனர்  என்று பெயரிட்டனர். அந்த  பரமேஸ்வரன் கூறியபடி  அவர் தன் தகப்பனார் மகரிஷி பராசரரிடத்தில் வேதம் பயின்றார். பின்னர் பதஞ்சலியிடமிருந்தும் ஆழமாக சென்று சிறந்த பாண்டித்யம் பெற்றார்.  பின் தேசயாத்திரை தொடங்கி பல இடங்களிலிருந்தும் வேதங்களைச் சேகரித்தார். பின்னர் அதை நான்காகப்பிரித்தார். அவையே ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம். பின்னர் தன்னுடைய நான்கு சீடர்களுக்கு அளித்தார்.

    ரிக்வேதத்தை  பைல முனிவருக்கும், யஜூர் வேதம் வைசம்பாயனருக்கும்,  சாம வேதத்தை  ஜைமினி முனிவருக்கும், சுமந்து முனிவருக்கு  அதர்வணவேதத்தையும் கற்றுக்கொடுத்தார். இப்படி வேதத்தைப்பிரித்துக்கொடுத்ததால்  இவருக்கு வேத வியாசர் என்ற பெயர் வந்து  சேர்ந்தது.

    பின் இவர் பிரும்ம சூத்திரம் என்ற அரிய நூலை எழுதி நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷமாக அருளியிருக்கிறார். மேலும் நமக்கு வேதம், உபநிஷதம், புராணங்கள் போன்று பல பொக்கிஷங்கள்  அவர் மூலம் கிடைத்திருக்கின்றன.

    மகாபாரதத்தில் போர் கடுமையாக நடந்து அதில் பலர் மடிந்தனர். மகாபரதப்போரை கண் தெரியாமல் இருந்த திருதாஷ்டிரர் பார்க்க விரும்பினார். யுத்தபூமியில் நடக்கும் எல்லா காட்சிகளையும் அரண்மணையில் இருந்தபடியே வர்ணிக்கும் சக்தியை சஞ்சயனுக்கு அளித்து திருதாஷ்டிரரது ஆசையைப்பூர்த்தி செய்தவர் ஸ்ரீ வேதவியாசர் தான். அவரிடம் அத்தனை சக்தி  இருந்தது. போர் முடிந்த பின் குந்தி தேவியுடனும் மன்னர் திருதிராஷ்டிரனுடனும் சில நாட்கள் வியாசமுனிவர் தங்கினார். அப்போது மன்னர் போரினால் தனது செல்வங்கள் அனைவரும் அழிந்து  அத்துடன் பல உறவினர்ளையும் இழந்து விட்டேனே என்று வருந்தி, மறுபடியும்  அவர்களைப்பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது என்று வியாசமுனிவரிடம் தன் ஏக்கத்தைத் தெரிவித்தார் , வியாசமுனிவரும் அவரை கங்கைக்கரைக்கு  அழைத்துபோனார்  மகா பாரதப்போரில் இறந்தவர்களை வரச்சொன்னார். இறந்தவர்களும் அரச உடைகளுடன், அலங்காரமாக தங்களது தேரில்  வந்து காட்சியளித்தார்கள். இதனால் திருதாஷ்டிரரின் ஏக்கம் தீர்ந்ததாம்.  இந்தச்சம்பவம் ஒரு கதாகாலட்சேபத்தில் கேட்டது.

    தவிர  மஹாபாரதத்தை ஸ்ரீ வியாசர் சொல்லிக்கொண்டு வர ஸ்ரீ மகாகணபதியே  அதை எழுதினார் என்பதை நாம் புராணங்கள் வாயிலாக தெரிந்துக்கொள்கிறோம். இத்தனைச்சிறப்பு பெற்ற ஸ்ரீவியாசபகவானுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற ஏக்கம் ஸ்ரீ சர்தார்வல்லப பாய் பட்டேலுக்கு இருந்தது இதற்காக அவர்  ஸ்ரீ வியாசபகவானுக்கு ஒரு ஆறடி சிலை  தயார் செய்து அதை யமுனை நதிக்கரையில் “குல்பீ” என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.ஆனால் அங்கு நித்தியப்படி பூஜை . புனஸ்காரம் நடத்தப்படவில்லை .

    ஒரு நாள்  காசியில்  காசிமட சமஸ்தானத்தின் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ யாதவேந்திர தீர்த்த சுவாமிகள் கங்கையில் ஸ்னானம் செய்ய இறங்கினார். அவர் காலில் ஏதோ ஒன்று பளுவாக தட்டுப்பட்டது. முதலையாக இருக்குமோ என்று எண்ணினார். ஆனால் அது கற்போல் காலில் தட்டுப்பட்டதால் குனிந்து அதை எடுத்தார். அது ஒரு அழகான விக்கிரகம். அதுவும் ஶ்ரீ வேத வியாசரின் விக்கிரகம். அதை தன் மடத்தில் எடுத்துக்கொண்டு  போய் தினமும் பூஜை செய்யலானார். வரிசை வரிசையாக அது பலரால் பூஜிக்கப்பட்டது, பின்னர் காசி மடத்து  சமஸ்தான இருபதாவது பட்டத்தில் அருளப்பட்ட ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகா சுவாமிகள் இவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கி  வெற்றியும் கண்டார்.

    Veda Vyas templeஇனி கோயிலைப் பார்ப்போம். கோயிலின் முகப்பில் அஷ்டதிக்கு பாலகர்கள் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு முனி குமாரர்கள் நின்றபடி இருக்கின்றனர். பிரகார சுவர்களில் பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இதில் ஸ்ரீராமர், சீதாதேவி, ஸ்ரீ நரசிம்மர்,  ஸ்ரீ பாலாஜி,  கீதாநாயகன் கண்ணன், ஸ்ரீ வியாசபகவானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக்  காணமுடிகிறது. கர்ப்பகிரகத்தில் ஸ்ரீ வியாசபகவான் எழந்தருளியுள்ளார். அவரின் நான்கு பக்கங்களிலும் நான்கு சீடர்களான பைலமுனிவர், வைசம்பாயனர், ஜைமினி முனிவர், சுமந்து முனிவர்  ஆகியோர் தனித்தனி சன்னிதியில் அருள் புரிகின்றனர்.

    தவிர சப்தரிஷிகள் ஸ்ரீ காச்யபர், கௌதமர் , ஜமதக்னி , அத்ரி ,பரத்வாஜர், விஸ்வாமித்ரர் ,வசிஷ்டர் இவர்களின் உருவங்கள்  நான்கு பக்கச்சுவர்களிலும் பெரிய அளவில் மிக அருமையாக  வரையப்பட்டுள்ளன.

    கோயிலின் கோபுரம் சுமார் அறுபது அடியாகும் கோயிலில் தங்க விடுதிகளும் சமையல் செய்யும் கூடங்களும் உள்ளன. தவிர ஆயுர்வேத மருத்துவம், பெரிய நூலகம், வேதபாடசாலை  என்று பல பாகங்களைப் பார்க்கமுடிகிறது . உத்திரபிரதேசத்திற்கு இந்தக்கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://arundathiga.blogspot.com/2008/08/badrinath-to-bangalore-may-2008.html

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 22

    கே.ரவி

    1980-ஆம் ஆண்டு, ஒருநாள் மாலை, தொலைக்காட்சியில் (அப்பொழுதெல்லாம் ஒரே சேனல் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே) ஒரு கவியரங்கம். கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் கவிதை படித்தனர். கவிதை படித்த எல்லாக் கவிஞர்களுமே பாரதியைக் குறிப்பிடத் தவறவில்லை. கவிஞர் கண்ணதாசனும் பாரதி பற்றிய உணர்வை அவருக்கே உரிய பாணியில் பகிர்ந்து கொண்டார்.

    பாரதி பற்றி நிறைய கவிதைகள் கேட்டிருக்கிறேன். அதிலும் உணர்ச்சி பூர்வமான அற்புதக் கவிதைகள் நிறையவே கேட்டிருக்கிறேன். அன்று அந்தக் கவியரங்கில் படிக்கப் பட்ட கவிதைகள் மிகச்சிறப்பாக இருந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும், அக்கவியரங்கம் முழுதும் பாரதியின் உணர்ச்சிப் பெருக்கு, நீறு பூத்த நெருப்புப் போல இழையோடியிருந்தது. அன்று படிக்கப்பட்ட கவிதை வரிகளைக் காட்டிலும், அவை நினைவு படுத்திய பாரதியின் வரிகளிலும், அவன் வாழ்க்கையில் சந்தித்த சோதனைக் களங்களிலும் என் மனம் தோய்ந்து விட்டது. என்னை அறியாமல் அந்தக் கவிதைகளின் நடுவிலிருந்து முண்டாசுக் கவிஞன் முளைத்தெழுந்து என் மனத்திரையை ஆக்கிரமித்துக் கொண்டான். ஓர் உத்வேகத்தோடு என் உள்ளத்திலிருந்து சில கவிதை வரிகள் ஊற்றெடுத்து வந்தன. வந்த வரிகளை எழுதி வைத்துவிட்டுப் படித்துக் கூடப் பார்க்காமல் காத்திருந்தேன்.

    shobaஷோபனா செய்தி படித்து முடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்ததும், பரபரப்பாக அவளிடம் அந்தக் கவிதையைப் படித்துக் காட்ட முயன்று, படிக்க முடியாமல் குரல் தழுதழுக்க, நான் அழ, ஷோபனாவும் அழச் சற்று நேரம் ஒரே உணர்ச்சி மயமாகக் கழிந்தது. அதை அழுகை என்று சொல்வதா, உள்ளத்தின் ஆழத்திலிருந்து பீறிட்டெழுந்து வந்த உணர்ச்சிப் பிரவாகம் என்று சொல்வதா?

    இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு பாரதி கலைக்கழகத்தில், ஹா.கி.வாலம் அம்மையார் நினைவுக் கவியரங்கத்தில் அந்தக் கவிதையைப் படிக்கத் துணிந்தேன். படித்து முடிக்கும் போது மீண்டும் தொண்டையடைக்கக் கண்ணீர் பெருக்கினேன்.

    அந்தக் கவிதை:

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

    புதைமண லில்சில விதைகள் தூவப் புறப்பட்டானே

    போகும் வழியில் எல்லாம் நெஞ்சு மிதிபட்டானே

    அதையும் மீறிச் சென்றே கனவுப் பயிர் வைத்தானே

    அதற்குத் தன்னை ஆகுதி யாக்கி உயிர்விட் டானே

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

     

    கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே

    காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே

    தேடிச் சென்ற திசையெல் லாம்பெருந் தீ வளர்த்தானே

    தேகம் எடுத்தத னாலே அவனும் தேய்ந்து விட்டானே

    அவனுக்காகக் கொஞ்சம் அழக்கூடாதா

     

    கனவுக் கொடிகள் காற்றில் ஆடும் காட்சி தெரிகிறது

    காட்டு வெளியில் எல்லாம் பாடல் காவல் இருக்கிறது

    தினமும் இங்கே தெய்வ நெருப்பு நெஞ்சில் உதிக்கிறது

    தேய்ந்து போகும் தேகங் களுக்குத் தெம்பு கொடுக்கிறது

    நட்சத்திரங்கள் மண்ணில் விழக்கூடாதா

    இந்தக் கவிதையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் நண்பன் சுகி சிவம் சொன்ன போது, பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களெல்லாம் அதை மிகவும் ரசித்ததாக அவனே சொல்லக் கேட்டு நெகிழ்ந்தேன்.

    இந்தக் கவிதையில் அப்படி என்ன இருக்கிறது என்று இதுவரை சிகாமணி செய்த ஆராய்ச்சியில் அவனுக்கு எதுவுமே அகப்படவில்லை. ஆனால், மனோன்மணிக்குத் தெரியும், பின்னணி உணர்ச்சியாக, கனமாக, அதில் பொதிந்திருக்கும் சுமை என்ன என்று. கவிதைச் சுவையா, கவிதைச் சுமையா? பட்டிமன்றம் போல் சிகாமணி கேலியாகக் கேட்ட கேள்விகளை அவள் பொருட்படுத்தவே இல்லை. அது சுவையின் சுமை, சுமையின் சுவை.

    sardarஒருநாள் தொலைபேசியில் சர்தார் சிங் என்ற கவிஞர் என்னைக் கேட்டார்: யாரும் அழுவதை பாரதி விரும்ப மாட்டான். அவனை நினைத்தாலே வீரம்தான் பொங்கியெழும், அழுகை வராது. பின் ஏன் நீங்கள் அவனுக்காக அழச்சொல்கிறீர்கள்?”

    நான் அவரை மறுத்து எதுவும் பேசவில்லை. அவர் சொன்னது முற்றிலும் சரியென்றே தோன்றியது. அறிவு பூர்வமாக நிறுவவே முடியாத இரண்டு விஷயங்கள், கடவுளும், கவிதையும். அந்த முயற்சியில் ஈடுபடுவது வியர்த்தம்தம்தான்.

    சென்ற பகுதியில், பாரதியின் பாடல் ஒன்றை அமரர் தேவநாராயணன் பாடக் கேட்டு, “என் கண்கள் கலுழ்ந்தன” என்று நான் எழுதியிருந்ததைப் படித்து விட்டுக் ‘கலுழ்ந்தன’ என்ற சொல் கடினமான புலமைச் சொல்லாக இருக்கிறதே, அதை எளிய சொல்லாக மாற்றக் கூடாதா என்று ஷோபனா கேட்டாள்.

    அவள் கேட்டு நான் எதைச் செய்யாமல் இருந்திருக்கிறேன்? உடனே, ‘கலங்கின’ என்று திருத்தி எழுதினேன். ஆனால், மறுநாளே நண்பன் சு.ரவி ‘வல்லமை’ மின்னிதழில் எழுதிய ஒரு கட்டுரை மீண்டும் அந்தச் சொல்லைக் ‘கலுழ்ந்தன’ என்று பழையபடித் திருத்தம் செய்ய என்னைத் தூண்டியது. சு.ரவியின் கட்டுரை மிகவும் சூடாகவே இருந்தது:

    நீ அழுவதற்காகப் பிறக்கவில்லை. பிறந்ததற்காக அழுதால் பயனேதும் இல்லை. கண்ணீர்மன அழுத்தத்தைக் கரைக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை.

    அது உன் திறமையையும் தன்னம்பிக்கையையும் தகர்த்து விடுகிறது. அழுகை ஆன்மாவைப்புனிதமாக்குகிறது என்பது வேலையற்றவரின் வெட்டி வேதாந்தம்.

    அழுவது வேறு; கண்கள் கலுழ்வது வேறு. உருகிக் கரைவதைக் கூடப் பெரிய புலவர்கள் ‘அழுகை’ என்றே குறிப்பிட்டிருந்தாலும், அந்தச் சொல், சு.ரவி சொல்வது போல் இயலாமையையும், துயர் மிகுதியையும் குறிக்கக் கூடும் என்பதால், ‘கலுழ்தல்’ என்ற சொல்லே பொருத்தம் என்று முடிவு செய்தேன்.

    நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்துருகச் செய்யும் சரணாகதி நிலைதானே ஆன்மிகப் பாதையில் அடிப்படை உந்து சக்தி! அதுதானே “நாமார்க்கும் குடியல்லோம்” என்ற துணிவோடு, கடவுளாகிய “கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்மலர்ச் சேவடியே” குறுகி நிற்கும் பணிவையும் அப்பரடிகளுக்குத் தந்தது! அதுதானே, “பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்” என்று முழங்கிய பாரதியை, “பரிபூரணர்க்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று நெகிழ்ந்துருகச் செய்தது!

    இமைகள் நனைந்தேன் இதய புரீஸ்வரா

    என்று நெக்குநெக்குருகி சபரிகிரீசனைப் பாடிய நண்பன் சு.ரவி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பரமானந்த நிலையை மறுக்கவோ, வெறுக்கவோ முடியுமா?

    தொலைக்காட்சியில் கண்ணதாசன் தலைமையில் ஒளிபரப்பாகிய கவியரங்கம் எனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை நான் மறுப்பதற்கோ, மறப்பதற்கோ இல்லை.

    கவிதைக்குத் தெரியுமா எது சரி, எது தவறென்று? ஆனால் கவிதையில், அதன் த்வனியில் மூழ்கினால், மூழ்கினால் . . . !

    ‘மூழ்கினால் மூச்சிழந்து மரணமடைய நேரிடும்’ என்று சிரித்தான் சிகாமணி. மூச்சிழந்தபின் முத்து மண்டபம் காத்திருக்கும் என்று சொன்னால் அவனுக்குப் புரியாது. கவிதையாகவே சொன்னேனே, 1979-ல்:

    தடம் புரண்டன சொற்கள்

    தவிக்க வைத்தது தாகம் – இருட்டில்

    தடவிக் கொண்டே நடந்து செல்லும்

    குருட்டு மனத்தின் குமுறல்

    நடுங்க வைக்கும் நள்ளிர வைப்போல்

    நகர மறுக்கும் தனிமை

    ஓவென் றலறி உதவக் கூட

    நாவின்றி நின்ற வேளை

    உருவற்ற மேகத்தில் ஒருகோடி மின்னல்

    உருவான தோகவிதை ஓசைப் பிரவாகம்

    உடைகின்ற மெளனத்தை அடைகாத்த நெஞ்சம்

    உயிர்க்கின்ற பயிர்க்கென்(று) உதிர்க்கின்ற முத்தெல்லாம்

    சரித்திரக் கடலில் சங்கம மாகும்

    சான்று தேவை யென்றால்

    மூழ்க வேண்டும்

    மூச்சிழந்த பின்னே

    முத்து மண்டபம் காத்தி ருக்குமே

    baba1கவிதை ஒரு வாசல், அனுபவ வாசல். அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழையத் துணிந்தால், அது உதித்த அதே அனுபவக் களத்துக்கு, அதற்குள் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் அதே அனுபவக் களத்துக்குச் செல்ல முடியும் என்று நான் சொல்வதை விட என்றாவது ஒருநாள் கவிஞர் சர்தார் சிங் சொல்வார் என்று காத்திருக்கிறேன்.

    ஷீர்டி சாய்பாபாவை நினைந்துருகி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் பாடிய பாடலொன்றை மெல்லிய குரலில் மனோன்மணி இப்போது பாடுகிறாளே!

    அழுதழுது வரண்ட கண்கள் – உன்னைbaba

    அழைத்தழைத்து வாடும் நெஞ்சம்

    தொழுவதற்கும் வலுவிழந்த கைகள் – நீ

    தோன்றிவிடு என்னெதிரில் கொஞ்சம்

    நிழல்கொடுக்கும் தூயவொளி நீயே

    நேரில்வரும் தெய்வமிங்கு நீயே

    உழல்கின்ற மனமாயை தீர – வந்(து)

    உதிக்கின்ற தழலேயென் தாயே

    ஶ்ரீ சாயிராம் ஜெய் சாயிராம்

    சீரடிக் கமல க்ருபா சாயிராம்

    . . . . . . .

    சிந்தனைக் கோட்டத்தின் “கூட்டுவழி பாடு” என்ற வாராந்திரப் பிரார்த்தனைக் கூட்டங்கள் ஒரு சிறிய நண்பர் குழுவைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பொற்காலம் என் நெஞ்சத் திரையில் நிழலாடுகிறது.

    ஓ அந்த இனிய நாட்கள் . . . .!

    (தொடரும்)

    Share
  • சான் ஃபிரான்சிஸ்கோ பயணக்கட்டுரை – பாகம் 2

    –செம்பூர் நீலு.

    10,000 புத்தர் உருவச்சிலைகள் உள்ள நகரம்

    நாப்பா வாலியை சுற்றிப்பார்த்துவிட்டு இரவில் ஒரு நல்ல லாட்ஜில்  தங்கிவிட்டு மறு நாள் காலையில் உக்கியா நகரிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ள 10,000 உருவச் சிலைகள் கொண்ட புகழ் வாய்ந்த புத்தர் கோவிலுக்குச்  சென்றோம்.

    நுழை வாயில் வளைவு மண்டபம்
    picture 1நகரின் நுழை வாசலில் உள்ள மண்டபம் அழகாக சைனா ஜென் கோவில் கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. இருமருங்கிலும் பச்சைப்  பசேலென்று அமைந்திருக்கும் செடிகள் பார்ப்பதற்குக்  கண்ணிற்குக்  குளுமையாக இருந்தது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்தக்  கோவில் வளாகம், அதைச்  சுற்றி  புல்வெளிகள், எக்சிபிஷன் அறை, பெரிய தியான மண்டபம், புத்தா பல்கலைக்கழகத்தின் தர்ம பரிபாலனம், கல்விக்கூடங்கள்,  வெஜிடேரியன் உணவகம் மற்றும் அலுவலகக் கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. நுழை வாயிலில் காலெடுத்து வைத்தவுடன் அங்கிருக்கும் அமைதியான சூழ்நிலை நம்மை மௌனமாக்கிவிடுகிறது. வழியில் தென்படும் யாத்திரிகர்கள் / புத்த பிக்குக்கள் கை கூப்பி சிரம் தாழ்த்தி  வணக்கம் தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவில் வளாகம் சர்வ தேச புத்த சமூக ஜென் அமைப்பை, குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் முக்கிய அமைப்பை சேர்ந்த திரு ஹுசுவான் ஹுஆ என்பவரால் 1974 ம் வருடம் நிர்மாணிக்கப்பட்டது. உலகத்திலேயே முதல் சைனா ஜென் கோவிலாகவும் மேற்கத்திய நாடுகளின்  5 புத்த சமூகத்தினரின் கோவிலாகவும் கருதப்படுகிறது. மேற்கத்திய உலகில் வாழும் மக்களுக்கு புத்தரின் போதனைகளை கற்றுத்  தருவதற்காக வேண்டி இந்த வளாகத்தை நிர்மாணம் செய்தார்.

    பிரதான அலுவலகத்தின் அதிகாரி கைகூப்பி வணங்கி வரவேற்கிறார். அங்கிருக்கும் பதிவேட்டில் பெயரையும் முகவரியையும் பதிவு செய்தபின் அருகிலிருக்கும் எக்ஸிபிஷன் அறைக்குள்  அடியெடுத்துவைக்கிறோம். அழகான கம்பீரமான சிங்க உருவச்சிலையும் பளிங்கு நிறமுள்ள நிற்கும் நிலையில் புத்தர் சிலையும் நம்மை வரவேற்கிறது.

    picture 2   picture 3   picture 6

    picture 4    picture 5

    அருகில் உள்ள புல் வெளிகளில் மயில்கள் கூவிக்  கூவி யாத்ரிகர்களை வரவேற்கிறது.
    ஒரு மரநிழலில் மயில் தோகை விரித்தாடும் காட்சியை காண கண் கோடி வேண்டும். ஒரு மயில் மரத்தின் மேல் நின்றுகொண்டிருந்த்து. இன்னொன்று மரநிழலில் ஆடி அசைந்து நடந்து கொண்டிருந்தது.

    picture 7   picture 8

    அருகில் ஒரு சிறிய வாய்க்கால் ஒடிக்கொண்டிருந்தது. அதில் பல நிறங்களில் மீன்கள் நீந்தி விளயாடிக்கொண்டிருந்தன.
    picture 9   picture 10

    பின்னர் பிரதான கோவிலும் தியான ஹாலிருக்கும் இடத்திற்குச்  சென்றோம். முன்னால் கொடிமரம் போன்றொரு விளக்கு. இரண்டு சிங்கங்களின் உருவச்சிலைகள் மேல் மாடத்தில் புத்தரின் உட்கார்ந்த நிலையில் அமைந்திருக்கும் உருவச்சிலை. படியேறிச் சென்றவுடன் நம்மை வரவேற்பது ஒரு சிறிய கோவில் போன்ற அமைப்பு.
    picture 11   picture 12

    புத்த பெருமானை வணங்கிவிட்டு தியான ஹாலில் நுழைகிறோம். ஒரு அமைதியான சூழ்நிலை. திரியிட்டு எரியும் நில விளக்குகள் மாதிரி மின்சார வட்ட வடிவமான உயர்ந்த விளக்குகள்

    ஒவ்வொரு விளக்கிலும் புத்தரின் உருவம். எங்கிலும் எதிலும் புத்தர். எல்லாமே புத்தர் மயம்.

    பெரிய தியான மண்டபத்திற்குள் நுழைகிறோம். நான்கு சுவர்களிலும் புத்தர் பெருமானின் உருவச்சிலைகள் வரிசையாக ஷெல்ஃபுகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஹாலின் இரண்டு பக்கத்திலும் வரிசையாக சிறிய சதுர வடிவ மெத்தைகள்.  பக்தர்கள் சிவப்பு க்ம்பளம் விரிக்கப்பட்ட தறையில்  சிறிய சதுர வடிவ மெத்தைகளின் முன்னால் அமர்ந்துகொண்டு கைகூப்பி சிரம் தாழ்த்தி அமைதியாக வழிபடுகின்றன்ர். முன்னால் மேடையில் புத்தர் பெருமானின் பெரிய உருவச்சிலை.
    picture 13   picture 14
    அருகில் சென்று பார்த்தால் அந்த பிரும்மாண்டமான உருவம் பரந்தாமன் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு காட்சிகொடுத்து பகவத் கீதையை உபதேசித்த காட்சி நினவுக்கு வருகின்றது. புத்த பகவானும் மஹாவிஷ்ணுவின் அவதாரம்தானே. அமைதியான சூழ்நிலையில் 30 நிமிடம் தியானம் செய்துவிட்டு வெளியில் வருவதற்கு மனது கேட்கவில்லை. அதிகம் வெளிச்சமில்லாத வெளிர் மஞ்சள் நிறமுள்ள விளக்கு ஒளியில் புத்த பெருமானின் தஙக நிறமுள்ள பெரிய உருவச்சிலை. நல்ல இனிமையான மணியோசை. எல்லா பக்தர்களும் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புத்த பிக்குகள் (ஆண்களும் பெண்களும்) தனித் தனியாக இரண்டு பக்கத்திலும் அமர்ந்து தியானம் செய்கின்றனர். வெளியில் வரும்போது அங்கிருக்கும் அதிகாரி பக்தர்களை உணவத்திற்கு செல்லுமாறு விண்ணப்பிக்கின்றார்.

    பக்தர்கள் அனைவருக்கும் வெஜிடேரியன் உணவு இலவசமாக உணவகத்தில் பகல் 11 மணி முதல் 3 ம்ணி வரை அளிக்கப்படுகிறது.
    picture 15   picture 16

    உணவகத்திற்குச்  சென்று சோயா பாலாடைக்கட்டிகளுடன் காய்கறி சாலட், நூடுல்ஸ் மற்றும் சில சைனீஸ் உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு புல்வெளியில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். இந்த மாதிரி ஒரு அமைதியான புத்தர் கோவில் வளாகத்தை பார்க்க கிடைத்த வாய்ப்பை அளித்த அந்த புத்த பெருமானுக்கு வணக்கம் கலந்த நன்றியை தெரிவித்துவிட்டு அடுத்த சுற்றுலா மையத்திற்குப்  புறப்பட்டோம்.

    செம்பூர் நீலு ( நீலகண்டன் )
    ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
    13-07-2014

    Share
  • காதல் நாற்பது – 13: கட்டு மீறிய காதல் !

    –சி. ஜெயபாரதன்.

     

     

    Elizabeth Browing

     

    காதல் நாற்பது (13)
    கட்டு மீறிய காதல் !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    உன்மீது நான் கொண்ட காதலை
    என்னைச் சொல்ல வைத்தி டுவாய்
    ஏற்புடைய சொற்களில்
    நாகரீகமாக !
    நம்மிரு முகங்களுக் கிடையே
    ஒளித் தீபம் ஏந்தி,
    வெளியே காற்று கொந்தளிக்க,
    விளக்கொளியை
    சமர்ப்பிப்பேன் நின் பாதங்களில் !

    எனது கையிக்கும் எட்டாமல்
    என்னுள் ஒளிந்திருக்கும்  உணர்ச்சியை
    எப்படி வார்த்தை களில்
    நிரூபணம் செய்வது ?
    என்னைத் தாண்டிச் செல்லும்
    எனது ஆன்மாவைப்
    பற்றி நிறுத்த என் கையிக்குக்
    கற்றுக் கொடுக்க இயலாது !

    அந்தோ இல்லை,
    உன் நம்பிக் கைக்கு
    என் ஊமைத்தனப் பெண் நிலைமை
    பாராட்டச் செய்யும்
    என் பெண்மைக் காதலை !
    உனை வசப்படுத்த நான்
    முனைந்தாலும்
    உனக்குரி யவளாய்
    ஆக்கப் படாது போனால்
    கிழிக்குமென் உயிர் ஆடையைச்
    சிறிதளவில் !

    உறுதியாய் யுள்ள
    வாய்ச்சொல் தோற்றாலும்
    வைராக்கிய முள்ள
    இந்த இதயம்,
    ஒருமுறை உன்னால்
    தீண்டப் பட்டால்
    எடுத்து ரைக்கும்  அது
    படும் துயரை !

    ********************

    Poem -13
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    And wilt thou have me fashion into speech
    The love I bear thee, finding words enough,
    And hold the torch out, while the winds are rough,
    Between our faces, to cast light on each?–
    I drop at thy feet. I cannot teach
    My hand to hold my spirit so far off
    From myself–me–that I should bring thee proof
    In words, of love hid in me out of reach.
    Nay, let the silence of my womanhood
    Commend my woman-love to thy belief,–
    Seeing that I stand unwon, however wooed,
    And rend the garment of my life, in brief,
    By a most dauntless, voiceless fortitude,
    Lest one touch of this heart convey its grief.

    **********

    Share
  • கணேசன்

    –நாகை வை. ராமஸ்வாமி.

    குக்கிராமமும் இல்லாத, டவுனும் இல்லாத அந்த ஊர், கடலூர் டவுன் ஒட்டியது. மலைகள் இல்லாவிட்டாலும்,  கடிலம் ஆற்றை ஒட்டி, மலர்கள் பூத்துக் குலுங்கும், அழகான செழுமையான இடம்.

    அங்கே,  “திரு நாகலிங்கம் ஐயா உபய துணிக்கடல்”  மிகவும் பிரபலம் வாய்ந்தது.  மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடை, வளர்ந்து, பல நகரங்களிலும் கிளைகள் பெருகியதால், துணிக்கடை, ‘துணிக்கடல்’ ஆக மாறியது.  நாணயம், நம்பிக்கை, தரம் இவற்றிற்குப் பெயர் பெற்றது.

    அதன் உரிமையாளர் திரு கணேசன் அந்த ஊரின் பெரிய புள்ளி.  இலவசப் பள்ளிக்கூடம், இதர பல திட்டங்கள் அவர் நன்கொடையுடன் மக்களுக்கு நன்மை செய்து, அந்த செய்தி பரவி, பத்திரிகைகளிலும் வரத் தொடங்கியது.  அவர் எது செய்தாலும், ‘திரு நாகலிங்கம் ஐயா உபய….” என்ற பெயரில் தான் தொடங்குவார்.

    அன்று காலை, ‘செய்தியாளர்’ என்று எழுதப்பட்ட ஒரு ஜீப் அந்தக்கடை வாசலில் நின்றது.  அதிலிருந்து இறங்கிய ஒரு நிருபர், “கணேசன் சார் இருக்கிறார்களா” என்று வினவியபடியே கடைக்குள் நுழைந்தார்.

    “ஐயா வர இன்னும் நேரம் இருக்குங்க, நீங்க வேண்டுமானால் அவங்க தோட்டத்தில சந்திக்கலாம்” என்று விலாசம் கொடுத்தார்கள் சிப்பந்திகள்.

    சிப்பந்திகளை தம் குடும்ப உறுப்பினர்கள் போல் கவனித்து வந்தார் உரிமையாளர் கணேசன்.  அதனால், சிப்பந்திகளும், தண்டத்திற்கு அழும் மற்ற வேலைக்காரர்கள்  போலல்லாமல், பொறுப்புடனும், அக்கறையுடனும் வேலை செய்து, வியாபாரம் வளர பெரிதும் பாடுபடும் வகையினர்.

    தலையில் முண்டாசுடன் தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நடு வயது தாண்டிய,  ஆனால் கம்பீரம் குறையாத அந்த ஆசாமியிடம், நிருபர், “கணேசன் ஐயாவைப் பார்க்க வேண்டும், அழைத்துச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

    “என்ன விஷயம்?”

    “எங்கள் பத்திரிகைக்கு ஒரு பேட்டி காண்பதற்காக”

    “அப்படியா, உள்ள வாங்க”

    உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் அவரை அமர்த்திவிட்டு உள்ளே சென்றார் அந்த ஆசாமி.

    சிறிது நேரம் கழித்து உள்ளிருந்து, “வணக்கம், வாங்க, நான் தான் கணேசன்” என்ற குரல் கேட்டது.

    அந்த நபரைப் பார்த்த நிருபருக்கு ஒரே ஆச்சரியம்.  ஏனென்றால், அவர் சந்தித்த அந்த தோட்ட ஆசாமிதான் அவர்.

    “ஐயா, நீங்க..?”

    “நான் தான் அது.  அப்போ தோட்ட தொழிலாளி, இப்போ கடை முதலாளி, என்ன வேண்டும் சொல்லுங்க.

    “முதலில் கொஞ்சம் தேனீர் அருந்துங்க” என்று சொல்லிகொண்டிருக்கும் பொழுதே ஒரு அழகான ட்ரேயில் பீங்கான் கோப்பையில் சூடான தேனீர் பிஸ்கட்டுகளுடன் வந்தது.

    “ஐயா, முதலில் முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்கு என்னை மன்னிக்கவும். தாங்கள் இந்த வட்டாரத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரிய மனிதர்.  எங்கள் பத்திரிகையில் தங்கள் பேட்டி வரவேண்டும் என்று வாசகர் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில், வந்துள்ளேன்.”

    “அப்படி என்ன தம்பி பேட்டி எடுக்கும் அளவுக்கு நான் செஞ்சிட்டேன்? உங்க பெயர் என்ன சொன்னீங்க?”

    “நான் சென்னையிலிருந்து வருகிறேன் ஐயா, என் பெயர் ஸ்ரீதர், ‘சாதனை’’ பத்திரிகையின் சார்பாக வந்திருக்கிறேன்.

    “அப்படியா, பெயர் நல்லா இருக்கே, உங்களுடையவும், உங்கள் பத்திரிகையுடையவும்.  அது என்ன சாதனை? பெயர் புதுசா இருக்கே?”

    “ஆமாம் ஐயா, எங்கள் உரிமையாளர் திரு கிருஷ்ணஸ்வாமி எதையும் புதியதாக, ஒரு சாதனையாகச் செய்வார்.   எங்கள் பத்திரிகையில் வரும் பேட்டிகள், கட்டுரைகள் அனைத்தும் ஏதாவதொரு சாதனை பற்றியே இருக்கும்.  அது வருங்கால சந்ததியினருக்கு ஒரு படிப்பினையாகவும், ஊக்கமளிக்கும் முன்னோடியாகவும்,  அமையும்.  ”

    “ரொம்ப நல்ல விஷயம்.  சொல்லுங்க, என்ன தெரிஞ்சுக்க வேணும் என்னய பத்தி?”

    “எல்லாமே சொல்லுங்க, உங்க கடந்த கால வாழ்க்கை, எப்படி முன்னுக்கு வந்தீங்க, எல்லாமே”

    “நான் ஒரு ஆறாங் கிளாஸ் மட்டும் தொட்ட படிப்பறிவில்லாதவன், ஏதோ எனக்குத் தெரிஞ்ச வரை சொல்லிட்டே போறேன், எப்படி எளுதணும்னு நினைக்கிறீங்களோ, எளுதிக்கிங்க, ஆனால், தப்பா மட்டும் எளுதிடாதீங்க, சரியா?”

    “ஆகட்டும் ஐயா, சொல்லுங்க”

    ஜவுளிக்கடைகமல் ஹாசனின் ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சி பின்னோக்கி செல்லும், வெகு பிரமாதமாக எடுத்திருப்பார்கள், அது போல, கணேசனின் நினைவலைகள் பல வருடங்கள் பின்னோக்கி சென்றன.

    கணேசன் ஒரு 11 வயது சிறுவன்.  குடிகார கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, கணேசனையும், அவனுக்கு அடுத்த 6 வயது தங்கையையும் பராமரித்துக் கொண்டு, சமாளித்து வரும் அம்மாவின் மீது அளவு கடந்த பாசமுடைய நல்ல குணமுடைய சிறுவன்.  ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றினாலும், என்ன செய்வது எப்படி செய்வது என்று அறியாமல் திணறினான்.

    அன்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அவன் வீட்டில் நடந்ததைப் பார்த்து கதி கலங்கிப் போய்விட்டான்.   குடித்துவிட்டு வந்த அப்பா, காசு கேட்டு அம்மாவை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்.   இது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இப்பொழுது தான் நேரில் பார்க்கிறான்.

    சிறுவனாக இருந்தாலும், இப்பிரச்சினைக்குக் காரணம் பணம் என்பதைப் புரிந்து கொண்டான். ஒரு முடிவு எடுத்தான்.

    மறுநாள், வழக்கம்போல் அம்மா, பள்ளிக்கூடம் போவதற்காக சோற்றுமூட்டை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, “அம்மா, நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன்.” என்றான்.

    அம்மா திடுக்கிட்டு, “ஏண்டா கணேசு, இப்படிச் சொல்லறே?” என்று கேட்டதற்கு, “நான் வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கிறேன் அம்மா, நீ இப்படி அப்பாவிடம் அடிபடுவது எனக்கு ரொம்ப தாங்கலை” என்று அழுதான்.

    “எல்லாம் சரியாயிடும் கண்ணு, கடவுள் கண்ணைத் திறந்தார்னா, ஒரு நிமிஷத்தில் கஷ்டமெல்லாம் சரியாயிடும்,  அப்பா வேணுமின்னா அடிக்கிறாரு, அவருக்குள்ள ஒரு கஷ்மாலம் பூந்துகிட்டு ஆட்டுது. நீ இஸ்கூலுக்கு போய் படிச்சு பெரிய ஆளா வரணுமின்னு நான் கனா கண்டுகிட்டு இருக்கேன், நீ என்னடான்னா, என் தலையில இடி போடறே?”

    “சரி வுடு, இன்னிக்கு போவல.”

    அன்று இரவு தூங்காமல் மண்டைக்குள் கரப்பான் பூச்சி, தேள், பூரான் இவையெல்லாம் புகுந்து குடைந்தாற்போல் உணர்ந்தான், பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தான், மனசு லேசானது, மண்டையில் கலக்கம் இல்லை, தேள் இல்லை, தெளிவு இருந்தது.

    “டேய், கணேசு, செல்லம், எளுந்திரிச்சி இஸ்கூல் போடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே வந்த அவன் அம்மாவுக்கு அதிர்ச்சி.

    படுக்கையில் கணேசன் இல்லை.  படுக்கை சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.  பட்சி பறந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.  வயிற்றில் கலக்கம், நெஞ்சில் கனம், கண்களில் தாரை.

    ஆறு மாதங்களாகியும் கணேசன் என்ன ஆனான் என்று புரியாமல் தவித்தனர், அம்மாவும், தங்கையும்.

    ஒரு நாள் விடியல், “அம்மா” என்று குரல் கேட்டு, கனவோ என்று படுத்துவிட்டாள், மீண்டும் “அம்மா” என்று கேட்டு, குடிசைக் கதவைத் திறந்து பார்த்து ஆச்சரியத்தில் மகிழ்ந்தாள்.  அங்கே, சற்று வளர்ந்த கணேசன்.  உச்சி முகர்ந்து கட்டி பரவசமடைந்தாள்.

    அப்பா குடல் வெந்து இறந்த செய்தியும், அவன் ஒரு துணிக்கடையில் வேலையிலிருக்கும் விஷயத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

    அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வாங்கி வந்த துணிமணிகள், தின்பண்டங்கள் கொடுத்து அம்மாவின் கையில் ரூ.2000 கொடுத்து வணங்கினான்.  அன்று பூராவும் அம்மாவின் அரவணைப்பு அன்பில் திளைத்தான்.  அடிக்கடி வருவதாகச் சொன்னான்.

    கணேசன் வேலையில் சேர்ந்தது ஒரு பிரபல துணிக்கடையில்.  அவன் முதலாளி திரு நாகலிங்கம் ஒரு பெரிய தனவந்தர், மனவேந்தர் (பெரிய மனம் படைத்தவர்களை, ஏன் மனவேந்தர் என்று அழைக்கக் கூடாது?)

    அவனைப் பற்றி அறிந்து, முதலில் கவுண்டரில் உதவியாளராகச் சேர்த்து, வேலை கற்றுக் கொள்ளச் சொன்னார்.  பிறகு ‘டெலிவரி பாய்’ என்று சரக்குகளை  வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் பணி கொடுத்தார்.

    கவுன்டரில் துணி காண்பித்து அளந்து கொடுக்கும் வேலையும் அவ்வப்போது.. அதற்குள் வியாபாரம் பற்றிய விபரங்கள் தெரிந்துகொண்டான்.  துணி மணிகள் மொத்தமாக சென்னை, பம்பாய், சூரத் முதலிய இடங்களிலிருந்து கொள்முதல் செய்வது, தரம் பிரிப்பது, விலை நிர்ணயம் செய்வது எல்லாம்.

    அப்பொழுதுதான் அவனுக்குள் புகுந்தது பணத்தாசை பூதம்.  நாணயத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்ட அவன் துரோகம் செய்ய முற்பட்டான்.

    “தம்பி கணேசா, நாளை அடுத்த ஊர் மிராசுதார் வீட்டுக்கு சரக்கு கொடுத்துவிட்டு, பணம் வாங்கி வந்துடு, ஜாக்கிரதை, பணம் பெருசு.  வெள்ளன கிளம்பி நம்ம வண்டியிலே போய்விட்டு வந்துடு” என்றார் முதலாளி.

    “ஆகட்டும் ஐயா”

    ஏற்கனவே கவுன்டர் வேலை வரும்பொழுதெல்லாம், அரை மீட்டர் அளவுக்கு துணிகளில் மிச்சம் பிடித்து, பிட் துணி வரும்பொழுதெல்லாம், அதை சுருட்டி, ஒரு நண்பராக்கிக் கொண்ட டெய்லரிடம் கொடுத்து சிறிது சிறிதாக பணம் சேர்த்தான்.

    அங்குள்ள வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பித்து அதில் சேமித்தும் வைக்கத் துவங்கியாகிவிட்டது.

    மறுநாள் காலை வண்டி வந்ததும், ஐயாவிடம் சொல்லி, வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி, தானே வண்டியை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

    மாலை கடை திரும்பிய கணேசைப் பார்த்த முதலாளி பதற்றம் அடைந்துவிட்டார்.  ஏனெனில், அவன் உடம்பில் ரத்தக் காயங்கள்.

    விசாரித்தபொழுது, வழியில் திருடர்கள் அவனை மடக்கி பணத்தைப் பறிக்க முயன்றதில், அவனுக்கு செமத்தியாகக் கொடுத்துவிட்டனர்.

    “அடப் பாவமே, ஏண்டா கணேசா, பணம் பறி போய்விட்டதா?”

    “பூரா போகல ஐயா, நான் மறைச்சு வச்சிருந்தேன், ஒரு இருபத்தி ஐயாயிரம் மட்டும் எடுத்துக்கிட்டு போயிட்டாங்க ஐயா, மீதி பத்திரமா இருக்கு ஐயா, இந்தாங்க, எழுபத்தையாயிரம். ஆனா ரொம்ப வருத்தமாயிருக்கு ஐயா, ஐயா பணத்த இப்படி கோட்டை  விட்டுட்டமேன்னுட்டு ”

    “போனாப் போவது பயலே, நீ பத்திரமா வந்திட்ட இல்ல, டாக்டருகிட்ட போய் நான் சொன்னதாக சொல்லி மருந்து போட்டுக்கிடு”.

    “சரிங்க ஐயா,”  உள்ளுக்குள் சந்தோஷம் அவனுக்கு.  இதுவரை சேர்த்ததில் இருபத்திஐயாயிரம், இப்போது சுளையாக இருபத்தி ஐயாயிரம், ஐம்பது ஆயிரம் சேர்த்தாகிவிட்டது, ஒரு சின்ன கடையாகப் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட வேண்டியது தான்.

    கடை வெச்சு, நல்லா பணம் பண்ணனும், தங்கச்சியை நல்லா படிக்கவெச்சு, நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  அம்மாவை பத்திரமா பாத்துக்கணும், அவங்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷமா வச்சுக்கணும்.

    அவன் கற்பனை இறக்கை முளைத்த வெண் குதிரையாக வானில் பறந்தது, அதில் அவன் ஒரு ராஜகுமாரானாக உட்கார்ந்திருந்தான்.  சினிமா பார்க்கும் பழக்கமுள்ளவனாதலால், அவன் உதடுகள் “ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்….” என்ற பாடலை முணுமுணுத்தது, மனது, எம்.ஜி.ஆருக்குப் பதிலாக தன் உருவத்தைப் பதித்தது.

    சற்று ஓய்வில், முதலாளி வெளியில் சென்றிருந்த சமயம், வண்டிக்கார அண்ணாச்சி, கணேசைத் தனியே அழைத்து, “தம்பி உங்கிட்ட தனியே பேசணும், ராத்திரி தூங்கப் போகயிலே, எங்க வீட்டு வாசலுக்கு வந்து ஒரு குரல் கொடு.” என்றதும் தான் சுய நினைவிற்கே வந்தான்.

    “என்ன அண்ணாச்சி, எதினாச்சும் சங்கடமா?”

    “நேரில சொல்றேன், வா.”

    அன்று இரவு அண்ணாச்சி சொன்ன விஷயம், அவனுக்கு அதள பாதாளத்தில் விழுந்த உணர்வை ஏற்படுத்தியது.

    அவன், முதலாளிக்குச் செய்துகொண்டிருந்த துரோகம் அனைத்தும் முதலாளிக்குத் தெரியும் என்றும், அன்று வண்டிக்காரர் வேண்டாம் என்று சொல்லி அவனே மிராசுதார் வீட்டிற்கு அவன் கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம், அண்ணாச்சியை பின் தொடர்ந்து பார்க்கச் சொல்லிவிட்டார் முதலாளி.   வரும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, அவனே காயம் ஏற்படுத்திக் கொண்டு, பணத்தை அவன் அறையில் பதுக்கி வைத்துவிட்டு வந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்துவிட்டது என்று சொன்னதுமல்லாமல், அநேகமாக அவனுக்கு சீட்டு கிழிக்கப்படும் என்றும் சொன்னார்.

    வியர்த்து வெலவெலத்துவிட்டது கணேசனுக்கு, இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான், கம்பி எண்ணி ஜெயில் வாசம் தான் என்ற பயத்தில் இரவைக் கழித்தான்.

    என்னதான் இருந்தாலும், அடிப்படையில் நல்ல குணம் கொண்ட அவன், அம்மா சொல்லிக் கொடுத்த அரைகுறை கடவுள் வாழ்த்துக்களைச் சொல்லி, விபூதி இட்டுக் கொண்டு, கோயிலுக்குச் சென்று கும்பிட்டுவிட்டு முதலாளி வீட்டிற்கு கடை திறக்குமுன்னே சென்றான்.

    முதலாளி, “எங்கடா பயலே வந்தே, காலங்கார்த்தால, என்று சொல்வதைப் பார்த்தால், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, அண்ணாச்சி சொன்னது வேறு, நடப்பது வேறாக இருக்கிறதே?

    எது என்னவானாலும் சரி என்று, முதலாளி கால்களில் நெடுஞ்சாணாக விழுந்து, “ஐயா, என்னை மன்னித்துவிடுங்க  என்ன வேண்டுமானாலும், எப்படி வேணுமானாலும் தண்டிச்சிடுங்க ஐயா, உங்க உப்பைத்தின்றுவிட்டு, உங்களுக்கே துரோகம் செய்துவிட்டேன் ஐயா”, என்று தேம்பித் தேம்பி அழுதவாறே செய்த தவறுகள் எல்லாம் சொல்லிவிட்டு, இதுவரை சேமித்து வைத்த ஐம்பதாயிரம் ரூபாயையும் கடையில் அவரிடம் கொடுத்துவிடுவதாகச் சொன்னான்.

    “எளுந்திரடா பயலே, எனக்கு எல்லாம் தெரியும்.  நீ நல்லவனாச்சே, ஏன் இப்படி புத்தி போச்சு என்று யோசனை செய்தேன், உன்னுடைய கடந்த கால வாழ்க்கைக் கஷ்டம், நீ உன் அம்மாவிடமும் தங்கச்சியிடமும் வச்ச பாசமும் இப்படி செய்யத் தூண்டிவிட்டது தெரிந்தது.  நீ கெட்டுப் போறதுக்கு முன்னமே, நான் ஒன்னய ஒரு வழி செஞ்சிருக்கணும்.  பரவாயில்ல, நீ இன்னிக்கு கடைக்குப் போகவேண்டாம்.  சாயந்திரம் வீட்டுக்கு வா”  என்றார்.

    வங்கிக் கணக்கை முடித்து பணத்தை எடுத்துக் கொண்டு, கையில் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, முதலாளி வீட்டுக்குச் சென்றான்.  பணம் பூராவையும் அவர் காலடிகளில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கால்களில் விழுந்தான்.

    “டேய் பயலே, எழுந்திருடா,  நீ உண்மையானவன், உழைப்பாளி, நல்லவன் என்று எனக்குத் தெரியும்.  இருந்தாலும், நீ பட்ட கஷ்டம் உன்னை சில தவறுகளை செய்ய வைத்துவிட்டது.  நான் உன்னைக் கண்காணித்து வந்தேன்.  நீ உன் தவறுகளை உணர்ந்து, எடுத்த பணத்தை பூராவும் திரும்ப கொடுத்த நேர்மையே நான் உன் மீது வைத்த நம்பிக்கை வீணல்ல என்று காட்டுகிறது” என்றார்.

    பிறகு,  அங்கு காத்திருந்த வண்டிக்கார அண்ணாச்சியைக் கூப்பிட்டார், “என்னப்பா, நான் சொன்னது உனக்கு சம்மதமா?” என்று கேட்டார்.  அண்ணாச்சி, “ஐயா, எது சொன்னாலும் செஞ்சாலும் அது நல்லதுக்குத் தானே ஐயா, நீங்க சொன்னா சரி ஐயா” என்றார்.

    பிறகு, கணேசனிடம், “இந்தாப்பா, நீ வேலை செஞ்சது போதும்..” என்றார்.

    அவனுக்குத் தலை சுற்றியது.

    “ஐயா, எனக்குத் தண்டனை கொடுங்க ஐயா, ஆனா, வேலையிலிருந்து மட்டும் நிறுத்திடாதீங்க ஐயா” என்று கதறினான்.

    “எலே, இருடா, நான் ஒன்னய வேலை செஞ்சது போதும் என்று தானே சொன்னேன், வியாபாரம் செய்ய வேண்டாமுனு சொன்னேனா?” என்றார்.

    திகைத்தான் கணேசன்.

    அவனை மன்னித்ததோடல்லாமல், அவனுக்காக ஒரு சிறிய துணிக் கடை வைத்துக் கொடுத்து, அண்ணாச்சி மகளையும் அவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்து அவனை வாழ வைத்துவிட்டது அந்த மனித தெய்வம்.

    அவன் நா தழுதழுத்தது.  “ஐயா, உங்கள் பெருந்தன்மைக்கும் என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும், என் தோலை செருப்பாகச் செய்து தங்களுக்குப் போட்டாலும் ஈடாகாது” என்று சொல்லி தேம்பினான்.

    “ஹலோ, தம்பி ஸ்ரீதர், என்ன, நான் சொன்னது கேட்டுச்சா? தூங்கிட்டீங்களா?” என்றதும் தான், அந்த நிருபருக்கு கனவிலிருந்து மீண்டது போல் இருந்தது..

    ஐயா, மெய் மறந்து விட்டேன் ஐயா, இப்ப புரியுது நீங்க ஏன் உங்க கடைக்கு  எல்லாம் அப்படி பெயர் வைத்தீர்கள் என்று.

    “எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம்  வருது, சொல்லவா?” என்றார் அந்த நிருபர்.

    “சொல்லுங்க தம்பி, ஆனால், இந்த போர்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்க” என்றார் கணேசன்.  “அட, அதாங்க நான் சொல்ல வந்தது” என்று சொன்ன ஸ்ரீதர் பார்த்த அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது,

    “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
    நன்னயம் செய்துவிடல்” என்ற குறள்.

    நான் எங்க முதலாளிக்கு துரோகம் செய்தேன், ஆனால், என்னை அவர் நான் எண்ணிப் பார்க்க முடியாத, எனக்குத் தகுதியே இல்லாத உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார வச்சிட்டார்.  அதனால தான் அந்த குறளை ஒரு படிப்பினைக்காக எளுதி வச்சிருக்கேன் தம்பி.

    “டாடி, நான் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரேன், பை” என்றவாரே வந்த அந்த பையனிடம், “அங்கிளுக்கு வணக்கம் சொல்லுடா தம்பி” என்றார்.

    வணக்கம் சொன்ன அந்த பையனிடம்,  “தம்பி, உன் பெயரென்ன?” என்று கேட்டதற்கு வந்த பளிச் –

    “நாகலிங்கம்”..

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://redtricom.files.wordpress.com/2013/07/sonia-selections-devon.jpeg?w=494&h=403

    Share
  • மாபெரும் குறு – கதைப் போட்டி!

    செல்வமுரளி

    “விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு @Visualmedia Technologies மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு – கதைப் போட்டி.

    50 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள்போய் இன்று 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டம் வந்துவிட்டது.அதேபோல் இந்த கதை எழுதுபவர்களிடையே ஆர்வம் ஊட்டவும், புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும் இந்த முயற்சி

    சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.

    இந்த போட்டியில் தேர்வாகும் சிறந்த தேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் கதை தொகுப்புகள் கொண்ட ஒரு மென்பொருளாக உருவாக்கி வெளியிடப்படும். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.

    கதைகளை அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் – ஈ.மெயில் ஐ.டி-க்கள்

    murali(at)visualmediatech.com & yeskha(at)gmail.com

    கதைகள் அனுப்ப கடைசி தேதி : 30.07.2014

    முதல் பரிசு : 20 கிராம் வெள்ளி நாணயம்

    இரண்டாம் பரிசு : 10 கிராம் வெள்ளி நாணயம்

    மூன்றாம் பரிசு : 5 கிராம் வெள்ளி நாணயம்

    மூன்று கதைகள் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

    விதிமுறைகள்

    உங்கள் கதையின் அளவு அதிக பட்சம் 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.

    ஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் “ஏ, சூப்பருப்பா” என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும்

    வயது வரம்பா? கிடையவே கிடையாது.

    உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.

    கதைகள்

    இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) “கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு” செய்யவே கூடாது.

    போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.

    கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

    கதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்” ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.

    தேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.

    திகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.

    “அட” என ஆச்சரியப்படுத்தும் “ஆ” என அதிர்ச்சியூட்டும், “க்யூட்” என புன்னகை பூக்க வைக்கும் “பளிச்” என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம்.

    “காதல் வலையில் வீழ்த்து”, “சதி வலை”, “டைப்பிஸ்ட் கமலா”, “ஹெட்கிளார்க் ரங்கநாதன்” போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும்.

    முடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்
    .
    இது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.

    தீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்துகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- , சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.

    பரிசு வழங்க விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)மாபெரும் குறு – கதைப் போட்டி சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.

    “விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5 -ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு @Visualmedia Technologies மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு – கதைப் போட்டி.

    தேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக உருவாக்கி வெளியிடப்படும். உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.

    கதைகளை அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் – ஈ.மெயில் ஐ.டி-க்கள்

    murali(at)visualmediatech.com & yeskha(at)gmail.com

    கதைகள் அனுப்ப கடைசி தேதி : 30.07.2014

    முதல் மூன்று கதைகள் பிரபல நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். பரிசு மற்றும் நடுவர்கள் விபரம் பிறகு….
    நண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.

    விதிமுறைகள்

    உங்கள் கதையின் அளவு அதிக பட்சம் 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.

    ஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் “ஏ, சூப்பருப்பா” என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும் வயது வரம்பா? கிடையவே கிடையாது.

    உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.

    கதைகள் இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) “கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு” செய்யவே கூடாது.

    போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.

    கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

    கதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் பதிப்பு உரிமை “விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்” ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.

    தேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.

    திகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.

    “அட” என ஆச்சரியப்படுத்தும் “ஆ” என அதிர்ச்சியூட்டும், “க்யூட்” என புன்னகை பூக்க வைக்கும் “பளிச்” என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம்.

    “காதல் வலையில் வீழ்த்து”, “சதி வலை”, “டைப்பிஸ்ட் கமலா”, “ஹெட்கிளார்க் ரங்கநாதன்” போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும்.

    முடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்
    .இது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.

    தீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்துகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- , சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.

    பரிசு வழங்க விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)
    நண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள் நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் படி கேட்டுக் கொள்கிறோம்.

    Selva.Murali | Visual Media Technologies | Your Dreams Visual Here

    Mobile : +91-99430-94945/
    Mail ID :- murali@visualmediatech.com <Murali@visualmediatech.com> |
    visualmediatech.com

    www.Rupeeshost.com | www.CloudsIndia.in| Cloud Hosting Providers | VPS|
    Cloud|

    DoveMail | Bulk mailing Solutions | Voice mail Solutions

    Technet24x7.com | Technical Support & Call Center support

    CPAD – Low Cost Tablet PC Sellers | WWW.CPADINDIA.COM

    Share
  • திருமால் திருப்புகழ் (145)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    blogger-image-1688585714

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2014_06_01_archive.html

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (144)

    கிரேசி மோகன்

    Bhagavatha - Krishna's subdues Indra's pride  - keshav
    Bhagavatha – Krishna’s subdues Indra’s pride – keshav

    செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் விஷ்ணுவின் சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    Bhagavatha - Grace shown to the brahmin matrons - Keshav
    Bhagavatha – Grace shown to the brahmin matrons – Keshav

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • வாஸுதேவ அஷ்டகம்

    சு.ரவி 

     

    Click on link below to listen to some Krishnar Songs written by me & sung by SPB, CHITHRA,KS RAJAGOPAL- music by Ramesh Vinayagam n one song by L.Krishnan.
    4 stanzas of Vaasudeva Ashtakam can be heard in SPB’s golden voice..

    Scroll below for full Ashtakam n a few Krishna paintings frm my iPad..

    For ketka, padikka, paarkka rasikka..

    Su.Ravi

     

    https://archive.org/details/SuraviKrishnarAlbumSongs

    3EFC1BDF-2029-4A1C-9FB5-7C905DBE2E77

    வாஸுதேவ அஷ்டகம்
    சினம் கொண்ட மாமன்
    சிறை தந்த பாலன்
    தினம் கோடி லீலை
    நிகழ்த்தும் ப்ரதாபன்
    மனம் கொண்ட கள்வன்
    மழை மேக வண்ணன்
    இனம் கண்டு கொண்டேன்
    இவன் வாசுதேவன் (1)

    விளம் சாய்த்த கன்றும்,
    விரல் மீது குன்றும்
    உளம் தன்னில் என்றும்
    படம் போல் இலங்கும்
    இளம் பிள்ளை என்றாலும்
    தெய்வ ஸ்வரூபம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (2)

    55DC1229-D01F-4DCE-9656-39E72922A910

    விடம் கோண்ட நீரில்
    ‘துடும்” என்று பாயும்
    படம் கண்டு தாவிப்
    பதம் மாற்றி ஆடும்
    நடம் செய்த பாதத்தை
    நாராயணன் என்(று)
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (3)

    ‘ஹரே த்வாரகா வாஸி
    கோவிந்தா’ என்றே
    குரல் தந்த பெண்ணின்
    குறை தீர்த்த தெய்வம்
    அறம் காக்க வென்றே
    முனம் தூது சென்றான்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (4)

    2950F0C3-96B2-4409-928B-2594D6E13CDA

    களம் கண்ட பார்த்தன்
    கலங்கித் துடித்தே
    உளம் சோர்ந்த நேரம்
    உரம் தந்த சாரம்
    நலம் காட்டும் கீதை
    நவில்கின்ற தாதை
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (5)

    குழல் கொண்டு ராகம்
    இசைக்கின்ற மேகம்
    தழல் உண்டதே போல்
    தகிக்கின்ற தேகம்
    சுழல்கின்ற சிந்தைக்குள்
    சூல்கொண்ட மோஹம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (6)

    B7D35E70-35CF-47B7-ADFD-ECCC825A75EA

    இவன் கோபியர் நெஞ்சில்
    காதல் ப்ரவாஹம்
    இவன் யோகியர் நெஞ்சில்
    ஞானத் தடாகம்
    இவன் யாவும் ஆகின்ற
    ப்ரம்ஹ ஸ்வரூபம்
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (7)

    இவன் கேசவன், மாதவன்
    பத்மநாபன்
    இவன் மாயவன், வாமனன்
    பாண்டுரங்கன்
    இவன் ஸ்ரீதரன், விஷ்ணு
    கோவிந்தன் என்றே
    இனம் கண்டு கோண்டேன்
    இவன் வாசுதேவன் (8)

     

     

    Share
  • வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி
    வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா – ஒரு பார்வை
    (செயின்ட் லூயி, மிசௌரி)
    பகுதி – 2

    ஜூலை 5-ஆம் தேதி காலையும் (முந்தைய நாளைப் போலவே) 8:30 மணியளவில் ’மறை ஓதுதல்’ நிகழ்ச்சியோடு அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.

    IMG_0285தமிழ் விழாக்கள் எவற்றிலுமே இதுவரை நிகழ்த்தப்பட்டிராத ஒன்றான குறும்படங்கள் இயக்கும் போட்டியை இவ்விழாவையொட்டிப் பேரவை நடத்தியிருந்தது. அதில் சுமார் 30 குறும்படங்கள் கலந்துகொண்டன. அவற்றில் சிறந்தவையாகத் தேர்வான 10 படங்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    அடுத்த நிகழ்ச்சியாக, குழந்தைகள் பங்கேற்ற தமிழ்த்தேனீ – பன்முகத்திறன்(Jeopardy)போட்டி அரங்கேறியது. பாரதியார் அணி, பாரதிதாசன் அணி, கம்பர் அணி, கண்ணதாசன் அணி என்ற நான்கு அணிகள்IMG_0304 இதில் பங்குபெற்றிருந்தன. கொடுக்கப்படும் படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளைச் சொல்லுதல், சொல்லப்படும் தலைப்புக்களில் பேசுதல், திரைப்படப் பாடல்களில் கேள்விகள் என்று பல்வேறு துறைசார் வினாக்கள் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்கும் வகையில் இப்போட்டியில் கேட்கப்பட்டன; அவர்களும் சளைக்காமல் எல்லாவற்றிற்கும் பதில்களை உடனுக்குடன் அளித்தனர். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவியது பார்வையாளர்கள் மத்தியில் யார் வெல்லப்போகிறார்கள் என்னும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில் இவ்வணியினரிடையே சமநிலை (tie) ஏற்பட்டு ‘tie-breaker’ மூலம் பாரதிதாசன் அணியினர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுக் கோப்பையைத் தட்டிச் சென்றனர்.

    திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் நிகழ்த்திய ‘இலக்கியம் – தமிழ் அமெரிக்கர்களுக்கு’ என்ற சுவையான சொற்பொழிவொன்று அடுத்து இடம்பெற்றது. அமெரிக்கத் தமிழர்கள் தமிழிலக்கியங்களைக் கற்றின்புற வேண்டும்; அடுத்த தலைமுறையினரிடம் அவற்றைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அவர் தன் இனிய உரையை நிறைவு செய்தார்.

    அடுத்து, பல்வேறு நடனக் குழுவினர் பங்குபெற்ற ‘FeTNA – தில்லானா போட்டி’ எனும் நடனப்போட்டி விழாமேடையில் நிகழ்ந்தது. நடனக் குழுவினரின் அதிரடி ஆட்டங்களும், வண்ண வண்ண உடைகளும் பார்வையாளர்களின் கண்களுக்கு நல்லதோர் விருந்தாக அமைந்திருந்தன என்றே சொல்லவேண்டும். இதில் ’சென்னை கேங்ஸ்டர்ஸ்’ மற்றும் ’ரகளை பாண்டியர்கள்’ என்ற புதுமைப் பெயர்களைக் கொண்ட இரு குழுக்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்குத் தலா $500 பரிசும், $250 பரிசும் வழங்கப்பட்டன.

    IMG_0321பின்பு, பேரவை விழாவைப் பொறுப்பேற்று நடத்திவந்த மிசௌரி தமிழ்ச் சங்கத்தினர் பங்குகொண்ட ’இயற்கையின் படைப்புக்கள்’ எனும் கருத்தை மையப்படுத்திய குழந்தைகளின் நடனம் ஒன்று மிகச் சிறப்பாக அரங்கேறியது. காற்று, நீர், நிலம், வானம், நெருப்பு என்ற பஞ்சபூதங்கள் மனித வாழ்க்கைக்கு எத்துணை இன்றியமையாதவை என்பதை விளக்கும் நிகழ்ச்சியாக – சமூக விழிப்புணர்வூட்டும் பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்திருந்தது.

    அதற்கடுத்து, ’சிரித்தால் பெறலாம் இதய நலம்’ எனும் பொருளில் பேசிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார், தமிழகத்திலிருந்து வந்திருந்த இதய நல மருத்துவர் சொக்கலிங்கம் அவர்கள்.

    அமெரிக்கத் தமிழ் அகாதெமி சார்பில் நடத்தப்பட்ட ‘தமிழ்க்கல்வி நேரம்’ அடுத்து அரங்கு கண்டது. இதில், அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள் தமிழ்க்கல்வி பெறவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு, தமிழ்க்கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருவதாகவும் அக்கல்விக் கழகத்தினர் குறிப்பிட்டுப் பார்வையாளர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

    அதனைத் தொடர்ந்து, பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை த்ரிஷா கலந்துகொண்டு ரசிகர்களின் வினாக்களுக்கு விடையளித்த ‘திரை நட்சத்திர நேரம்’ எனும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அடுத்த நிகழ்வாகவும் அன்றைய நிகழ்வுகளின் மணிமுடியாகவும் திகழ்ந்ததுIMG_0345 வடஅமெரிக்காவைச் சேர்ந்த 15 தமிழ்ச் சங்கங்கள் தங்கள் சங்கங்களின் பதாகைகளுடன் வீரநடைபயின்ற ‘சங்கங்களின் சங்கமம்’ எனும் அற்புத நிகழ்ச்சி. ஒவ்வொரு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ்ச் சங்கத்தினரும் மேடையில் அணிவகுத்து வந்தபோது அந்தந்த மாகாணங்களிலிருந்து விழாவைக் காண வந்திருந்த மக்கள் கரவொலி எழுப்பியும், சீழ்க்கை ஒலி(விசில்) எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் புலப்படுத்தினர். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மிசௌரி தமிழ்ச் சங்கத்தினர் நடத்திக்காட்டிய பறையிசையோடு கூடிய நடனம் வெகுசிறப்பாகவும், கலை நேர்த்தியுடனும் விளங்கியது. ’சங்கங்களின் சங்கமம்’ எனும் இந்நிகழ்ச்சி இவ்வாண்டுதான் முதன்முதலாக பேரவை விழாவில் இடம்பெற்றிருக்கின்றது. முதல் முயற்சியிலே முத்திரை நிகழ்ச்சியாக இது அமைந்துவிட்டது போற்றத்தக்கதே!

    maruthasala adigalதொடர்ந்து வந்த நிகழ்ச்சி, தமிழகத்திலுள்ள பேரூர் மடத்தைச் சேர்ந்த குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார் வழங்கிய ’எங்கும் தமிழ்’ எனும் சிறப்புச் சொற்பொழிவாகும். தமிழின் இலக்கிய இலக்கண வளங்களை அருமையாய் விளக்கிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழ் சந்தித்துவரும் பல்வேறு மாற்றங்களையும், வளரும் தலைமுறையினர் தமிழைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தையும் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் தன் பேச்சில் வெளியிட்டார்.  மருதாசல அடிகளாரின் பேச்சு வளரும் தலைமுறையினரின் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்திருந்தது.

    அன்றைய இரவின் இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது, விஜய் தொலைக்காட்சி sonia divakar’சூப்பர் சிங்கர் புகழ்’ திவாகர் மற்றும் சோனியா குழுவினர் நடத்திய ’மெல்லிசை – சூப்பர் சிங்கர்ஸ்’ எனும் நிகழ்ச்சி. இதில், புகழ்பெற்ற  பல்வேறு தமிழ்த் திரைப்படப்பாடல்களைப் பாடி திரையிசை ரசிகர்களை குதூகலப்படுத்தினர் இக்குழுவினர்.

    இவ்வாறு பல்சுவைகளையும் உள்ளடக்கிய முழுநாள் நிகழ்ச்சிகளை ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் செயின்ட் லூயி நகரில் தமிழ் மக்கள் கண்டு களித்தனர்.

    ஜூலை 6-ஆம் தேதி நிகழ்ச்சிகள் அரைநாள் நிகழ்ச்சிகளாய், தமிழின் வளர்ச்சி குறித்துச் சிந்திக்கும் நிகழ்ச்சிகளாய் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த அறிஞர் பெருமக்களான ஸ்ரீலஸ்ரீ மருதாசல அடிகளார், கவிஞர் குட்டிரேவதி, மருத்துவர். எழிலன் நாகநாதன், அமெரிக்காவாழ் தமிழறிஞர் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு தமிழிலக்கியங்களின் சிறப்புக்கள், நவீன இலக்கியங்களின் ஆளுமை, வருங்காலத்தில் தமிழ் எனப் பல்வேறு தளங்களில் தங்கள் சிந்தனைகளைப் பதிவு செய்தனர். மதியம் 12 மணியளவில் இவ்விலக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

    ஜூலை 3-ஆம் தேதி இரவு ’ஸ்டார் நைட்’ நிகழ்ச்சியோடு தொடங்கிய பேரவையின் தமிழ்விழா ஜூலை 6-ஆம் தேதி மதியம் தமிழிலக்கியத் திறனாய்வோடு இனிதே முடிவுற்றது.

    தமிழர் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்! எனும் வாசகங்களை இவ்வருடத்திய கொள்கை முழக்கமாகக் கொண்டிருந்த பேரவையின் 27-ஆம் ஆண்டு விழா, தமிழரின் பல்வேறு பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகளையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்திக் காட்டியதன் வாயிலாகத் தங்கள் கொள்கை முழக்கம் வெற்று முழக்கமல்ல…வெற்றி முழக்கமே என்பதை நிரூபித்தது.

    வாழ்க தமிழர் விழா!
    வெல்க தமிழ்!

    (முற்றும்)

    Share
  • டாக்டரும் பீ.பியும்

    மாதவ. பூவராக மூர்த்தி

    examen_medico_paciente_del_doctor_3_oficina_pegatina-r8b97746fbd6340e4b561f443aca9fc0c_v9wth_8byvr_512உலகத்தில் தனியாக இருக்கும் எதுவும் அவ்வளவு சிறப்பு பெற்றதாக இருக்காது. ஒரு துணை வேண்டும் அப்போதுதான் அதன் சிறப்பு இன்னும் அதிகமாகும். உதாரணம் பாலும் பழமும், பாயும் தலைகாணியும், கீத்தும் கழியும், வெற்றிலையும் பாக்கும். ஆணும் பெண்ணும். இப்படித்தான் நானும் பீ பியும். முதலில் அப்படித்தான் தலைப்பிடுவதாக இருந்தேன். அதன் பிறகு நான் என்னும் அகங்காரம் வேண்டாம் என்று தோன்றியது. போனமுறை “அப்பரும் நானும்” என்று ஒரு கட்டுரை எழுதினேன்.

    மறுபடியும்” நான்” “தான்” இதெல்லாம் எதற்கு என்று எனக்கே தெரியாமல் என்னுள் இருந்த பீ.பி யை கண்டுபிடித்து சொன்ன டாக்டரை அதனுடன் சேர்த்து இந்த தலைப்பை உருவாக்கினேன். உங்களுக்கு B.P இருக்கிறதா? அதற்கான மாத்திரை எல்லாம் எடுக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே போய் செக் பண்ணி மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள். செக் எல்லாம் பண்ணியாயிற்று நார்மல் என்றால் சந்தோஷம்.

    சிலபேரிடம் யதேட்சையாக உங்களுக்கு பீ.பி இருக்கிறதா என்று கேட்டால் அவர் இரத்த அழுத்தம் மேலும் “அதிகமாகி இருந்தா என்ன பண்ணப் போறீங்க ? இல்லேன்னா என்னப் பண்ணப் போறீங்க” என்று நம்மிடம் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து விடுவார். ஆசாமிக்கு அது இருக்கிறது என்பது அவர் சொல்லாமலேயே நமக்குப் புரிந்து விடும்.

    அந்த காலத்தில் எல்லாம் விரிவாக சொன்ன காலம். என் பெரிய மாமாவுக்கு (பீ.பி என்று தமிழில் அடிப்பது கஷ்டமாக இருப்பதால் அதை “அது” என்று வைத்துக் கொள்வோம்.) அது இருந்தது. அவர் எல்லோரிடமும் அதைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார். எனக்கு இரத்தக் கொதிப்பு இருக்கு டாக்டர் கிட்ட காட்டி மருந்து சாப்பிட்டுகிட்டு இருக்கேன் என்பார். சில சமயம் அதை பிளட் பிரஷ்ர் என்பார் பலசமயம் பிளட் பிளஷர் என்பார்.

    இந்த கட்டுரை நீங்கள் முழுவதுமாக ரஸிக்க வேண்டுமென்றால் என்னைப் பற்றியும் என் தைரியத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் எனக்கும் ஆஸ்பத்திருக்கும் வியாதிக்கும் காத தூரம். நான் பிறந்ததும் கிராமத்தில் பாட்டி வீட்டில்தான். அதன் பிறகு மாந்தம், கணை பெரளி வாயு ஜலதோஷம் ஜுரம் எல்லாவற்றிற்கும் கை வைத்யம்தான். ஜுரத்துக்கு கஷாயம், இருமலுக்கு சித்தரத்தை, மாந்தத்துக்கு வேப்பெண்ணெய், அஜீரணத்துக்கு ஓமவாட்டர், தலைவலிக்கு சுக்கு பட்டைதான். மஞ்சகாமாலைக்கு அஞ்சு ஊசி மந்திரிப்பு சுளுக்குக்கும் தேள்கடிக்கும் அப்பாவே மந்திரிப்பார்.

    இப்படி நாளொரு வியாதியும் பொழுதொரு வைத்யமாய் வளர்ந்தேன். பள்ளி கல்லூரி காலத்தில் எங்கள் ஊர் மாயவரம் ராம்மூர்த்தி டாக்டர்தான் வைத்யர். அவர் என் சகல வியாதிக்கும் பத்து ரூபாயிக்கு மிகாமல் மருந்து எழுதி கொடுத்து சரி பண்ணிவிடுவார்.

    ஆஸ்பத்திரி பக்கமே போகாமல் தப்பித்து வந்தேன். வேலையும் கிடைத்தது. கல்யாணமும் நடந்தது. ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய கட்டாயம் சிசேரியன் பண்ணி பிறந்த இரண்டு குழந்தைகளைப் பார்க்க அப்பாவாக (அப்பாவியாகப்) போய் வந்தேன்.

    பெட்டில் படுத்திருக்கும் வியாதியஸ்தர்களை நண்பர்களை பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போவதை தவிர்த்து முக்கியமான கட்டங்களில் மட்டும் போனேன்.

    இன்ச்ஜெக்‌ஷன் கூட ரொம்ப கம்மிதான். போடுவதற்கு முன்பே கண்ணை மூடிக்கொண்டு முகம் அஷ்ட கோணலாக்கிdoctor-cartoon (சாதாரணமாகவே முகம்  சப்தகோணல்) பயந்துகொண்டு போட்டு பஞ்சை பதினைந்து நிமிடம் போட்ட இடத்தில் வைத்துக் கொண்டு சோகமாக இருப்பேன்.

    சென்னையில் சீனிவாசன் டாக்டரும் நல்லவர். என் டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர் அன்போடு கவனித்து என் உபாதைகளுக்கு மாத்திரை சிரப்போடு நிறுத்திக் கொள்வார். சில சமயம் வியாதியின் தீவிரத்தைக் கருதி என்னிடம் நிலமை விளக்கி ஊசி போட வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதாகவும் என் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வேண்டுகோள் விடுப்பார். நானும் அவருக்காக ஒத்துக்கொண்டு அந்த அவஸ்தைக்கு ஆளாவேன். நல்ல உயரம் பருமன் அவர் உள்ளே போய் அந்த ஊசியை கையில் பிடித்தவுடன் என் லப்-டப் ஜாஸ்தியாகிவிடும். அந்த சில நிமிடங்கள் நான் நானாக இருக்க மாட்டேன். அவர் போட்ட ஊசி மருந்து போட்ட இடத்திலேயே அசையாமல் இருப்பது போல் எனக்கு பிரமை.

    நான் நாற்பது வயது வந்தவுடன் வாக்கிங் போக ஆரம்பித்தேன். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஆஸ்பத்திருக்கு நான் போக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன். தொடர்ந்து வயிற்று வலி போக்கு அடி வயற்றில் வலி. இரண்டு நாள் சீனிவாச டாக்டர் மருந்து கொடுத்துப் பார்த்தார். இடது தொடையில் வீக்கம்போல் இருந்து வலித்தது. நான் நரிகட்டியிருக்கும் என்று நினைத்தேன். எதற்கு இருக்கட்டும் என்று அவரிடம் சொல்லி வைத்தேன். வைத்யரிடமும் வக்கீலிடமும் உண்மை சொல்ல வேண்டும் அல்லவா?

    அவர் யோசனையில் ஆழ்ந்தார். தலையை இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆட்டினார். உள்ள வந்து படுங்க என்றார். இருமச்சொன்னார். மர்மதேசத்தில் டார்ச் அடிச்சு சோதனை செய்தார்.. வாங்க என்று கையலம்பினார். உங்களுக்கு ஹிரண்யா. ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றார்.

    இடியோசை கேட்ட நாகம்போல் என்று ஒரு பிரயோகம் உண்டல்லவா அதை இங்கே உபயோகப்படுத்தத் தோன்றுகிறது. என் மனைவி கூட நின்றாள். பயத்தில் என் முகம் வெளிறிவிட்டது. தொண்டை வறண்டது. குரல் கம்ம ஸார் இதுக்கு என்ன மருந்து என்றேன். மருந்து கிடையாது ஆபரேஷன் தான் என்றார்.

    அடுத்த நாள் அவரிடம் போனபோது பிரஷர் செக் பண்ணினார். பயத்தில் அது தாறுமாறாக எகிறியது. சீனிவாச டாக்டர்.பி பி சோதனை மெஷினை அடிக்கடி பம்ப் செய்தார். என் கையை சுற்றியிருந்த துணி கையை நெருக்கியது. இரண்டு வேளை செக் செய்து உங்களுக்கு பி.பி இருக்கு ஆபரேஷனுக்கு முன் ஹார்ட் ஸ்பெஷ்லிஸ்டைப் பார்த்து விடுங்கள் என்று ஒரு டாக்டரின் முகவரியும் தந்தார். அவரிடம் போனிலும் சொல்ல டாக்டர் அர்த்த நாரி என்னை அவர் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

    முதல் நாள் அனுபவம் மறக்க முடியாது. நல்ல நாள் பார்த்து ஒருநாள் பிளாட் பிள்ளையாருக்கு அஞ்சு ரூபாயும், வெங்கடாஜலபதிக்கு ஒரு மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் காசை மீசல் கட்டிவைத்துவிட்டு சகுனம் பார்த்து புறப்பட்டோம்.

    நிறைய பேர் கையில் எக்ஸ்ரே முகத்தில் கவலையுமாக இருந்தார்கள். ஒரு பக்கம் மாவு மிஷின் அரைக்கறமாதிரி சத்தத்தில் ஒரு பலகையில் ஒருவர் நின்ற இடத்திலேயே நடந்து கொண்டிருந்த்தார். எனக்கு முன் ஒரு பத்து பேர் இருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் சந்தோஷமாக இருந்தார்கள். விஜாரித்த்தில் அவர்கள் எல்.ஐ.சி பாலிசி வாங்கியவர்களுக்கு டாக்டர் சர்டிபிகேட் வாங்க வந்தவர்கள் என்று தெரிந்தது.

    ஒரு பெரியவர் தன்பக்கத்தில் இருந்தவரிடம் எனக்கு மூணு இடத்திலே பிளாக்.98 ,90 ,95% என்று ஏதோ பிளஸ் டூ பையன் வாங்கின மார்க் போல சொல்லிக்கொண்டிருந்தார்.

    என் முறை வந்த பொழுது நான் பயத்தோடு அவர் முன் நின்றேன் பி பி பார்த்தார். திரும்பச்சொன்னார். மறுபடியும் அவர் பக்கம் திரும்பசொல்லி ஒரு எக்ஸ்ரேயும் ஈ.சி.ஜியும் எடுத்துடுங்க என்றார். அடுத்த ரூமில் இருந்த சுமதி என்னை இருட்டறையில் வைத்து எக்ஸ்ரே எடுத்து, உயரமான டேபிளில் படுக்க வைத்து வாட்சு மோதிரமெல்லாம் பறித்துக் கொண்டு உடல் முழுவதும் ஒரு பிசினைத் தடவி அதில் ரப்பர் குமிழியை ஒட்டி மிஷினுடன் இணைத்து ஒரு பேப்பரை உருவி அட்டையில் ஒட்டி என் கையில் திணித்தாள்.

    அதற்குள் இரண்டு பேர் டாக்டரைப் பார்த்துவிட்டு ஈ.சி.ஜிக்கு வரிசையில் நின்றார்கள். டாக்டர் என்னை பார்த்து அது பற்றியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விரிவாக என்னிடம் கூறி உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகளை மாற்றி கொள்ளவேண்டும் என்று சொல்லி ஒரு மாதத்திற்கு மருந்து எழுதிக் கொடுக்க, சுமதி அதை காலை மாலை என்று இரண்டு கவரில் போட்டு மொத்த பில் தொகையும் வாங்கிக் கொண்டாள்.

    வெளியே வரும்போது இருட்டி விட்டது. மனைவி கவலையோடு பக்கத்தில் வந்து நீங்க இனிமே ரொம்ப கத்தக்கூடாது என்றாள். நான் அவளை முறைத்தேன். ஒருவாரம் சாப்பிட்டேன். வாழும் நாளில் வலியில்லாமல் வாழ வேண்டும் என விரதம் பூண்டேன். காபியை நிறுத்தினேன். எண்ணெய் பதார்த்தங்களை அறவே ஒழித்தேன். வறுவல் முறுக்கு சீடை பூரி எல்லாவற்றையும் தியாகம் செய்தேன்.

    ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்த்து. அது ஒரு தனிப்பதிவிற்கு உகந்தது. ஆனால் பீ.பி தொடர்ந்தது. மாத்திரை தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது எப்போது அதிகமாகும் எப்போது குறையும் என்று இன்னும் எனக்கு பிடிபடவில்லை.

    இப்போது உணவு விஷயத்தில் கொஞ்சம் தளர்த்திவிட்டேன். அவ்வப்போது பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதுண்டு. சில மாதம் செக்கப் போகும்போது டாக்டர் வழக்கம்போல் அன்போடு நலம் விசாரித்து எப்படியிருக்கீங்க என்று கேட்பார். நல்லா இருக்கேன் என்பேன். பார்த்துடலாம் என்று சினிமா டிராமா பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டே பிரஷர் மானியை என் கையில் சுற்றி பம்ப் பண்ணுவார். இந்த மாதம் சாப்பிட்ட போண்டாவெல்லாம் மனதில் வரும். சாப்பிட்டுருக்க வேண்டாமோ என்று தோன்றும். அவர் மீட்டரை அவர் பக்கம் வைத்து காற்றை இறக்கி மறுபடியும் ஏற்றி பார்ப்பார். ஒன்றும் சொல்லாமல் எழுத ஆரம்பிப்பார்.

    எட்டிப் பார்த்தால் 130/84 என்று இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். சில சமயம் ரொம்ப குறைவாக போண்டா சாப்பிட்டு அதைவிட குறைவாக சத்தம் போட்ட மாதத்தில் 140/100 காட்டும். கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே என்று மாத்திரை மாற்றி கொடுப்பார்.

    ஊருக்குப் போகும் போது ஜட்டி பனியன் எடுத்து கொள்கிறேனோ இல்லையோ மாத்திரைகளை மறக்காமல் எடுத்து கொண்டுவிடுவேன். மாத்திரை இல்லையென்றால் மனதில் பயம் வந்து விடும்.

    இந்த பீ.பி ஒரு வியாதி என்று ஆபீஸில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். டோமிசலிரி மருத்துவ வசதி அளிக்கப்படுவதில்லை. உங்களுக்கு அது இருப்பதையோ அதற்கு நீங்கள் மாத்திரை எடுப்பதையோ உங்கள் உரையாடல்களில் இடம்பெறச் செய்யாதீர்கள்.

    கேட்கும் சிலர் இலவசமாக அறிவுரை வழங்கி சிலசமயம் அதிகம் எச்சரிப்பார்கள். ஸார் அதுக்கு ரெகுலரா மாத்திரை எடுத்துங்கோ இப்படித்தான் என் ஃபரண்டு ஒருத்தன் இரண்டு நாள் மாத்திரையை மறந்துட்டான். ஒரே அடியா அடிச்சுடுத்து.கிழங்கு மாதிரி இருந்தவன் பட்னு போயிட்டான் ஜாக்ரதை.

    ஏண்டா இவருடன் பேசினோம் என்று பண்ணிவிடுவார்கள். அதனால் இப்போது நான் அது பற்றி யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

    ஆமாம் உங்களுக்கு b.p இருக்கா?

    Share
  • எம்மொழியே செம்மொழி!

    -ரா. பார்த்தசாரதி

    இனிய  தமிழ் மொழியே நமக்கு அமுதம்!                   semmozhi tamil
    நமக்கு இன்பம் தந்ததாலே நல்லமுதம்!
    எங்கள்  தமிழ்மொழியே சிறந்த செம்மொழி!
    அருளாளர்களும், ஆழ்வார்களும் வளர்த்த மொழி!

    தமிழுக்கும் அமுதென்றுபேர் என்பார் பாரதிதாசன்!
    தமிழ்  எங்கள் அறிவுக்குத்  தேன் என்பார்
    தமிழ் எங்கள்  பிறவிக்குத்  தாய்  என்பார்
    தமிழையும் தாயையும் புகழாமல் இருப்பவருண்டோ தரணியிலே?

    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
    தேன்வந்து  பாயுது காதினிலே என்றார் பாரதியார்!
    செம்மொழி மாநாடு நடந்ததும் கோவையிலே,
    தமிழர்கள் கவிதை பாடியதும் தமிழ் ஆர்வத்தினாலே!

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!
    தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை,
    தமிழ் உரையாடலே, நீதிமன்றச்  சபையினிலே,
    எம் தமிழ்மொழியும், பெருமையுறுமே பாரினிலே!

    தமிழ் பரவும் வகை செய்திடுவோமே!
    கணினி மென்பொருளால் உலகெங்கும் பரப்பிடுவோமே!
    அயல் நாட்டினரிடையே  எம்மொழி தொன்மையென எடுத்துரைப்போமே!
    எம்மொழியே ஏற்ற மொழி என நிலைநாட்டுவோமே!

    தமிழ் தமிழென முரசு கொட்டவேண்டாம்!
    ஆங்கிலத்தை என்றும் தமிழிலே கலக்கவேண்டாம்!
    தமிழிலும்  அறிவியல், உலகவியல்  உண்டு!
    பொருளை விளக்கவும் எம்மொழிகே தனித்திறமை உண்டு!

    எளிய நடையினில் எம்மொழியில் எழுதிடவே…
    இலக்கணங்கள் புதிதாய் நன்முறையில் தோன்றிடவே…
    வெளியுலகில் புதிய சிந்தனைகள் வருவதுண்டு!
    அச்சிந்தனையினை விளக்கவும் எம்மொழிக்குத் தனிச் சிறப்புண்டு!

    ஆங்கிலப் பெயர்ப் பலகையினைத் தமிழில் மாற்றுவதும் நல்லதன்றோ!
    அதுவே தமிழ்நாட்டின் தமிழ்க்கே ஒரு சிறப்பன்றோ!
    தனியார்ப்பள்ளிகளிலும் தமிழ்மொழிக் கல்வி புகுத்திடவேண்டுமே!
    அறிவியலிலும், உலகவியலிலும் தனித்தொரு திறனாய்வு செய்திடல்                                                                                                                                                     வேண்டுமே!

    எம்மொழி, செம்மொழி  எனச் சொன்னால் போதாது!
    ஏற்றமிகு மாற்றங்கள் செய்திடல் வேண்டும்!
    மாற்றங்கள் செய்யப் பள்ளியும், கல்லூரியும் ஒருமைப்படவேண்டுமே!
    பாமரனும் படித்து  உவகை  கொள்ள வேண்டுமே!

    இலவச நூலகங்கள்  எவ்விடத்திலும் நிறுவவேண்டும்!
    எம்மொழியே உயர்வென்று பறைசாற்றிட வேண்டும்!
    தலைமுறைகள் பல கழிந்தோம் குறைகளைய வேண்டும்!
    எம்மொழியே செம்மொழியென ஆதரிப்பீர்! வாரீர்!

    Share