கவிஞர் ஆர். கண்ணன்
கவிஞர் ஆர். கண்ணன்
வெங்கட் சாமிநாதன்
என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே. தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்[போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு ;பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான். இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல. அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்த மானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல.
ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே, கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல. வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம் எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.
விஜய பாஸ்கரன் தன் சரஸ்வதி இதழில் தன்னை ஒரு செஞ்சட்டை அணிந்த தெருக்களில் கட்சி கோஷமிட்டுச் செல்பவராகக் காணவில்லை. அதில் க.நா.சு. சி.சு. செல்லப்பா, ஈழத்து கே டேனியல், டொமினிக் ஜீவா, என எல்லோருக்கும் இடமிருந்தது. மறக்கப்பட்டிருந்த மௌனியின் கதைகள் தொகுக்கப்பட்டதே கூட மௌனி வழிபாடாகிவிட்டதாக குற்றம் சாட்டிய ஈழத்துப் பேராசிரியர் ஏ ஜெ. கனகரத்னா வின் மௌனி வழிபாடு என்ற ஒரு கண்டன கட்டுரைக்குக் கூட இடம் இருந்தது. சரஸ்வதியில் வெளிவந்த ரகுநாதனின் எழுத்துக்களில் கட்சி கோஷங்கள் இருக்கவில்லை.
ஏன், முதன் முதலாக செல்லப்பா என்னை சரஸ்வதி காரியாலயத்துக்கு அழைத்துச் சென்ற போது (1961) விஜய பாஸ்கரன் என்னையும் சரஸ்வதிக்கு எழுதச் சொன்னார். யாரை? யாருக்கு அந்த அழைப்பு? அமெரிக்க முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்யத்துக்கும் அடிவருடியும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட்டும், ஆன என்னை, அமெரிக்காவிலிருந்து மணிஆர்டரில் பணம் பெற்றுவருவதாக முற்போக்குகள் எல்லாம் ஒரே குரலாக விடாது குற்றம் சாட்டி வந்த என்னைத் தான் எழுதச் சொன்னார். அது ஆரம்ப காலம். நான் என்னங்க எழுதப் போறேன்?” என்று சொல்லி என்னை அறியாதே பின்னர் அந்தக் கட்சிக்குள் ஒரு பயங்கர சுனாமி புயல் வீசக்கூடும் அபாயத்தைத் தடுத்துவிட்டேன்.
அப்படியும் கூட, ஜீவா ஒன்றும் ஒரு பயங்கர புரட்சித் தீ கக்கும் கோஷங்களே அறிந்த கட்சிக் காரர் இல்லை. இலக்கியத்தில் தோய்ந்தவர். பாரதி பற்றி மணிக்கணக்கில் பேசுபவர். கட்சிப் பிரசாரம் என்று வந்து விட்டால், அது வேறு விஷயம். ஏழை விவசாயியின் வாழ்க்கையில் ஒரு ட்ராக்டரின் வருகை எத்தகைய முக மலர்ச்சியைத் தரும் என்று கிட்டத்தட்ட கருணாநிதி பாணி வசனத்தில் வர்ணித்து மாய்ந்து போவார். இப்படி அவர் எழுத்தைப் படித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு. சின்னப் பையன் சுந்தர ராமசாமியை, “நீ பூணூல் போட்டுக்கணும்” என்று உபதேசித்து, ”எங்கே, நீ சந்தியா வந்தன மந்திரம் சொல்லு பாப்பம்” என்றும் கேட்பார். நல்ல மனிதர் ஆனால் அப்பப்போ கட்சி தான் அவரை சாமியாடச் சொல்லும் போலும். என்ன செய்ய?, வல்லிக்கண்ணன் சொல்வதை நம்பித் தான் ஆகணும்.
ஆனால், தி.க.சியின் ஆசிரியத்வத்தில் வந்த தாமரை தன்னை ஒரு கட்சித் பத்திரிகை என்று பிரகடனப்படுத்துவதற்கான சமாசாரங்களையும் தவறாது பிரசுரித்து வந்தாலும்,(அச்சாவது ஜனசக்தி பிரஸ்ஸிலாக்கும்) பூமணி, பா. செயப்ரகாசம், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், ஆ.பழனியப்பன் (பெயர் சரிதானா?) சார்வாஹன், வண்ணநிலவன், இப்படி பலர், அதில் எழுதினார்கள். தஞ்சை பிரகாஷ் நாடோடிக் கதைகள் நிறைய எழுதினார் என்று நினைவு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எழுத்து பத்திரிகையும் க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் புதுக்கவிதைக்கு களம் தந்ததும் அதை தீவிரமாக எதிர்த்து வந்த சிதம்பர ரகுநாதன், நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஹெச் டி ஆகியோரின் புதுக்கவிதைக்கு எதிரான தொடர்ந்த பிரசாரத்துக்கும் இடம் தந்தது. அத்தோடு, நிற்கவில்லை. வானம்பாடிகளின் “புதுக்கவிதைகளும்(?):” அதில் பிரசுரமாயின. சி.மணி நா.வானமாமலையின் புதுக்கவிதை எதிர்ப்புக்கு பதிலளித்த கட்டுரையையும் தாமரை பிரசுரித்தது. தருமு சிவராமூவின் E = mc2 என்னும் கவிதைக்கு வானம்பாடிகளின் ஆசிரியக் குழுவினரும் முற்போக்கு கவிஞருமான சிற்பி அவர்களின் நீண்ட பாஷ்யத்தையும் பிரசுரித்தது. யாருடைய கவிதையை?, அராஜக வாதியும், இருள்மய வாதியும் மாயாவாதியும் இன்னும் என்னென்னவோ வாதியும் மட்ட ரக புளுகனும், அற்ப புத்தி படைத்த அவதூறுக்காரனும், (எல்லாம் திகசி அவர்கள் கொடுத்த பட்டங்கள் தாம்) ஆன, அரூப் சீவராம் என்று தனக்கு அந்த சில நாட்களில் பெயர் சூட்டிக்கொண்ட இன்றைய பிரமிள் கவிதையை. பிரமீள் ஒவ்வொரு முறையும் எழுத உட்காரும்போது தன் பெயரை, அல்லது அதன் உச்சரிப்பை மாற்றிக் கொள்வார். வேறு வழியின்றி பிரமிள் என்ற பெயர் நிலைத்தது அவர் மறைவுக்குப் பிறகு தான்.
இதற்கிடையில் புதுக்கவிதையை ஏதொ கொள்கை என்று அவர் கற்பித்துக் கொண்டவகையில் எதிர்த்து வந்த கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஎச் டி அவர்கள், வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரான தமிழன்பனின் தோணி என்ற தலைப்பின் ”புதுக்கவிதை” தொகுப்புக்கு பாராட்டுக்களும் தன் ரசனையும் நிறைந்த நீண்ட முன்னுரை ஒன்று எழுதி ஆசீர்வதித்து இருந்தார். தமிழன்பனுக்கும் அவர் கட்சியின் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த சந்தோஷம். ஆனால் யாருமே தாமரை பிரசுரித்த சார்வாகனின் கவிதைகளைப் பற்றி மூச்சு விடவில்லை. தாமரையில் எழுதுவதால் அவர் முற்போக்காகத் தானே இருக்க வேண்டும், திகசி யும் தீர விசாரிக்காமல் போட்டிருக்க மாட்டாரே என்ற நினைப்பில் கட்சிப் பெரியவர்கள் ஏதும் மறுப்புச் சொல்லவில்லை. கா. சிவத்தம்பிக்கு கலாநிதி கைலாசபதி எம். ஏ. பிஹெச். டியின் புதுக்கவிதை எதிர்ப்புப் பிரசாரத்தையும் ஆதரித்துப் பேசவேண்டும். தாமரையில் புதுக்கவிதைத் தோற்றம் தரும் சமாசாரங்களுக்கும் சமாதானம் சொல்லவேண்டும் என்னும் திக்குமுக்காடலில் தவிப்பு. இப்படியா?, அப்படியா? என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவித்தார். தாமரை ஆசிரியர் தி.க.சியைச் சாடமுடியுமோ? அல்லது தன் சித்தாந்த மூலவரான கலாநிதி கைலாசபதிக்குத் தான் எதிராக ஒரு நிலை எடுக்கமுடியுமோ? எனவே,”முன்னாலே பாத்தா செட்டியார் குதிரை, பின்னாலே பாத்தா கௌண்டர் குதிரையாட்டும் தெரியுது? என்ற அவரது ஒரு சமாளிப்பைக் கீழே பார்க்கலாம்.
“எனவே, முற்போக்குக் கடப்பாடுடைய தாமரை புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்படவேண்டியதொன்றாகும். தமிழ் நாட்டில் கிராமீயக் கலை ஆய்வுக்கு இலக்கியத் தளம் அமைத்துக்கொடுத்த தாமரை, இன்று புதுக்கவிதை பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா (elitism-ஆ) அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 1973 மல்லிகை இதழில் கா.சிவத்தம்பி)
கா. சிவத்தம்பி நல்ல படிப்பாளி, கைலாசபதி எம்.ஏ.பிஎச் டிக்கு இல்லாத இலக்கிய உணர்வும் ரசனையும் வாய்க்கப் பெற்றவர் என்றாலும் கலாநிதிக்கு ஒத்து ஊதியே பழக்கப் பட்டவர். அந்தப் பழக்கத்தின் காரணமாக, செம்மொழி மாநாட்டுக்கு வந்து கருணாநிதி புகழ்பாடியும் சென்றார். கருணாநிதி சாதாரண பாராட்டுக்களில் திருப்தி அடைபவரில்லை என்பது உலகம் அறியும்.
என்னமோ என்று நான் நினைத்திருந்த தி.க.சி. தன் தாமரை ஆசிரியத்வத்தில் பெரிய பெரிய அறிஞர் பெருமக்களை எல்லாம் கழைக்கூத்தாட வைத்துள்ளார் என்று பார்க்கும் போது, எனக்கு எல்லாம் தமாஷாகத் தான் இருந்தது. நான் ரசித்தேன். வேறு யாரும் நினைவு படுத்தாதையெல்லாம் நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.
வெகு ஆச்சரியமான நிகழ்வுகள் இவை. க.நா.சுவின் இலக்கிய வட்டம் 1948 – 1964 கால கட்டத்திய இலக்கிய நிகழ்வுகள் குறித்து சாதனை இதழ் என்றோ என்னவோ பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் நானோ, நகுலனோ, க.நா.சு. வோ எழுதியது பெரிய விஷயம் இல்லை. எனக்கு ஆச்சரியம் தந்தது தி.க. சியும் அதில் ஒரு மிக மிக நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நினைவிலிருந்து எழுதுகிறேன். அதில் வணிக பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் செய்யும் நாசவேலைகளுக்கு ”மரண அடி” தந்தது மட்டுமல்லாமல் முதலாளித்துவத்துக்கு எதிராக, சோஷலிஸ சமுதாய உருவாக்கத்துக்கு எழுத்தாளர் பாடு படவேண்டும் என்றோ என்னவோ எழுதி, சில நல்ல எழுத்துக்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர் பாராட்டுக்கள், எழுத்து மக்களுக்காகவே தானே ஒழிய, வணிகத்துக்காக அல்ல, கலையும் உழைக்கும் பாட்டாளி மக்களின் எழுச்சிக்காக…….வகையறா வகையறாவாக வே இருந்ததாக என் நினைப்பு. பிராபல்யங்களை எதிர்த்த வரையில் சரி என்பது என் நினைப்பாக இருந்தது. கூரான இலக்கியப் பார்வை இல்லாத ஒரு நீண்ட கட்டுரைக்கு க.நா.சு இடம் கொடுத்ததும், அதிகப் பேர் எழுதாத போது எழுதக் கேட்டு வந்ததை மறுப்பானேன் என்றும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மாறாக, தி.க.சி. எல்லோரிடமும் சகஜ பாவத்தோடு பழகி வந்தவர் தன்னோடு கொள்கையளவில் மாறுபட்டு விரோதம் கொண்டவர்களுடனும் சினேகம் கொண்டிருந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.
கடுமையான, காரசாரமான வாத விவாதங்கள் புதுக்கவிதை பற்றி நிகழ்ந்து வந்த கட்டம் அது. வானமாமலைக்கு எழுத்து பத்திரிகையிலும் அவரது புதுக்கவிதை எதிர்ப்புக்கு நீண்ட பதில் தந்திருந்தார் செல்லப்பா அதற்கு முன்னோ பின்னோ நான் விடுமுறையில் தெற்கே வந்திருந்த போது சென்னையில் செல்லப்பாவைப் பார்க்க வந்த போது அங்கு அவர் வீட்டில் சார்வாகனையும் தி.க.சியையும் செல்லப்பாவுடன் வெகு கால சினேகிதர்கள் போல உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். செல்லப்பா அவர்கள் இருவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது நான் சார்வாஹனிடம் சொன்னேன். “ இங்கு தி.க.சியை இங்கு பார்ப்பதும் அவர் வெகு சகஜ பாவத்தோடு உங்களோடும் செல்லப்பாவோடும் உரையாடிக்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. சந்தோஷமாக இருக்கிறது” என்றேன். அதற்கு சார்வாஹன் சொன்னார். “தாமரையே இப்போதெல்லாம் அவ்வளவு கடுமையாக இல்லையே” என்றார். “ஆமாம், கட்சியையும் மீறி சில விஷயங்கள் அதில் வருகின்றன, பார்த்தேன்” என்றேன்
ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர்களின் கட்சிக்காரர்களின் சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே அவரை ஆதரித்தவர்கள் அவர்கள் தான்.
உன்னைப் போல் ஒருவன் படம் தில்லியில் ஷீலா தியேட்டரில் ஒரு நாள் திரையிடப்பட்டது. பார்த்தேன். வெகு தைரியமான தீவிர முயற்சி என்று எனக்குப் பட்டது. அதற்கு உதவியவர்கள், படத்தில் பேராசிரியராக நடித்தவர் எல்லோரும் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். தில்லியில் இருந்தவர் ஒருவர் சோவியத் லாண்ட் பத்திரிகையில் வேலை பார்த்தவர். அவர் வீட்டில் தான் ஜெயகாந்தன் கரோல்பாகில் தங்கியிருந்தார். அவரை வரவேற்றுப் பாராட்டிப் பேசிய கூட்டத்தில் தலைமை தாங்கிய பால தண்டாயுதமும் இருந்தார். ஜெயகாந்தன் பேசும் போது, ஏதோ ஒரு கட்டத்தில் ”பாலா அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம்”. என்று தன்னை அன்னியப்படுத்திக் கொண்டு பேசினார். எனக்கு இது என்ன புதிர் என்று பட்டது. சில வருடங்களுக்குப் பின் கசடதபற இதழில் நான் ஜெயகாந்தனைக் கடுமையாகத் தாக்கி எழுத நேர்ந்தது. அப்போது திகசி எனக்கு எழுதிய கடிதத்தில் “இதற்கெல்லாம் காரணம் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான். நீங்கள் வளர்த்து விட்ட ஜெயகாந்தன் வேறு எப்படி நடந்து கொள்வார்?” என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். ஜெயகாந்தன் தன்னை முற்போக்கு முகாமிலிருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் என்று தெரிந்தது. ஆனந்த விகடனிலும் சாவியின் ஆசிரியத்வத்தில் இருந்த தினமணிக் கதிரிலும் வெகுவேகமாக ஜெயகாந்தன் வளர்ந்துவிட்டதன் விளைவு என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கடிதம் கசடதபற பத்திரிகையோடு நிகழ்ந்த சர்ச்சையில் அதற்கு எதிராக தருமு சிவராமு எழுதிய “கோணல்கள்” கட்டுரையில் பிரசுரமானது. கட்சியின் தலைமைக்கு திகசி எழுதிய கடிதம் சம்மதமாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது பேச்சு வாக்கில் தான்.
இதெல்லாம் பெரிய விஷயமில்லை. சின்ன சின்ன உரசல்கள். திகசியையும் கட்சியின் தலைமையையும் பொருத்த வரை. திகசியின் பொறுப்பில் தாமரை கட்சிப் பத்திரிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும், கட்சி சார்பும் கொள்கை விளக்கங்களும் நன்கு வெளித்தெரிய இருந்தாலும், திகசி அவர் காலத்திய இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே தம்மை ஊக்குவிக்கும் பெரியவர் என்ற ஸ்தானம் பெற்றவராக இருந்தார். வல்லிக்கண்ணனிட மிருந்தும் கூட தன்னை ஊக்குவிக்கும் ஒரு கார்டு கட்டாயம் வந்து விடும் தான். ஆனால் திகசி தாமரையில் இடமும் கொடுப்பாரே. பிரசுரமும் ஆகுமே.
”நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாட்டாளி மக்கள் புரட்சிக்கு உங்கள் எழுத்து வித்திடும்”, என்று வேறு ஊக்குவித்து நேரிலும் சொல்வார். ஒரு கார்டும் வந்து சாட்சியம் சொல்லுமே. அவரை நன்றியுடன் பார்க்கும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே உருவானது அவர் காலத்தில். அந்த பழக்கம் அவர் தாமரை ஆசிரியத்வத்தில் இல்லாத போதும் தொடர்ந்தது. அதிலும் திருநெல்வேலி இளைஞர் கூட்டத்துடன் திர்நேலி தமிழில் பேரப்புள்ளைகளை உற்சாகப் படுத்துவது இருக்கே அது மிக இனிமையும் வாத்சல்ய பாவமும் கொண்டது. பின்னாட்களில் அவரைச் சந்தித்தவர் தரும் புகைப்படங்களில் அவர் தன் சுடலை மாடன் தெரு வீட்டின் தாழ்வாரத்தில் தன் அறைக்கு எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்த வண்ணம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் காட்சியே காணக் கிடைக்கும். காந்தி என்றால் சர்க்காவில் நூல் நூற்கும் காட்சி. சிவாஜி என்றால் முறுக்கிய மீசையும் வாளேந்திய கையுமாக நிமிர்ந்து நிற்கும் கட்டபொம்மன் வேஷம் தரித்து, தி.க.சி.க்கு தன் இளைய தலைமுறைக்கு கடிதம் எழுதும் காட்சி.
தி.க.சியின் ஆரம்பங்கள், நாற்பதுகளில், தாமரையில் நாம் கண்ட தி.க.சி உருவாவதற்கான ஆரம்பங்கள் இல்லையென என் நினைப்பு. அப்போது அவர் தொடர்புகள், கு.ப.ரா. கிராம ஊழியன் என்று எப்படி இருந்திருக்க முடியும்?. வென்றிலன் என்ற போதும், ஐந்தாம் படை போன்ற கதைகள் எழுதிய ரகுநாதன் தான் பின்னர் தீவிர முற்போக்கு ஆனார். இந்த மாயம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆராய்வது கஷ்டம். சோமன துடி மாதிரி ஏன் தமிழில் ஒரு திரைப்படம் வருவதில்லை என்று ஒரு இடத்தில் ஏங்கும் தி.க.சி. தான், அகிலனின் சித்திரப் பாவை நாவலுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததும், “இது தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பது, என்றும், அகிலன், சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் சோஷலிஸம் ஆகிய லட்சியங்களுக்காக போராடுகிறவர்” என்று பாராட்டுக்களை அள்ளிச் சொரிந்தார். வேடிக்கை இல்லை. சிரிக்க வேண்டாம். நிஜமாகவே தான். ஒரு வேளை இடைப்பட்ட காலத்தில் அகிலனுக்கு சோவியத் ரஷ்ய அழைப்பு விடுத்து அவருக்கு ரஷ்ய சுற்றுப் பயணத்துக்கு உதவியதால் ஒரு வேளை திடீரென அகிலனை இந்த புஷ்பார்ச்சனைக்கு தகுதியாக்கியிருக்கலாம். அகிலனும் தன் பங்குக்கு தன் ரஷ்ய பயணம் பற்றி வெகு பரவசம் அடைந்து ரஷ்ய புகழ் பாடி கட்டுரைகள் எழுதினார். ஆனால் அத்தோடு அந்தக் கதை சரி.
ஆனாலும் தன் கட்சி ஆசான்களும் கட்சியும் புதுக்கவிதைக்கு எதிராக தொடர்ந்த பிரசாரம் நடத்திக்கொண்டிருக்கு போது தாமரையில் புதுக்கவிதை தோற்றம் அளிக்கும் வானம்பாடிகளுக்கும் இன்னம் மற்றோருக்கும் தொடர்ந்து இடமளித்து அதுபற்றி விவாதங்களுக்கும் களம் தந்த ஆசிரியரின் தாராள மனதை என்னவென்று சொல்வது? அது மட்டுமல்ல. பூமணி, வண்ணநிலவன், சார்வாகனுக்கெல்லாம் இடமென்றால், பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தை எப்படி கொணர இயலும்? இதையெல்லாம் எதிர்த்து கட்சி எழுத்தாளர்களும் தலைமையும் போராடிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டாமா? கட்சித் தலைமையிடமிருந்து கேள்விகளும் எதிர்ப்பும் எழவே, தி.க.சி என்ன செய்தார்?. தாமரையை விட்டு விலகினார் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். திகசி பற்றிய இந்த உள் விவகாரங்களில் வல்லிக்கண்ணனை நம்பாமல் வேறு யாரை நம்புவது?. தன் பதவியைத் துறந்த திகசி யை நாம் பாராட்டவேண்டும். இன்னொன்றுக்கும் நாம் திகசி யை பாராட்டவேண்டும். தன் மகன், வண்ணதாசன், பின் தன் திர்நேலி சீட இளவல்கள், கலாப்ரியா, வண்ணநிலவன் யாரையும் அவர் முற்போக்கு ப்ராண்ட் எழுத்தை வற்புறுத்தவில்லை. அவர்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டு விட்டது பெரிய விஷயம் இல்லையா? யாருக்கும் இதில் சந்தேகமிருப்பின், சு.கா. வுக்கு திகசி அவ்வப்போது தரும் பாராட்டுக்களையும் உற்சாகத்தையும் சுகாவே எழுதியிருப்பதைத் தான் நான் சுட்டவேண்டும். எந்த வகைக்கும் உட்படாத சுகாவின் எழுத்தைப் பாராட்டுவது என்றால், அதில் முற்போக்கு எங்கே என்று தேடத்தான் வேண்டும். கிடைக்காது.
தி.க.சி யின் ஆசிரிய பீடத்தில் தொ.மு.சி. ரகுநாதன் வந்து அமர்ந்தார். திகசியின் காலத்திலும் சரி, பின்னரும் சரி, தாமரை இதழ்களை அவ்வப்போது பார்க்கத் தான் எனக்குக் கிடைக்குமே தவிர, தொடர்ந்து அதை நான் கவனித்தவனில்லை.
நவீன விருட்சம் பத்திரிகைக்கு மதிப்புரை எழுதச் சொல்லி எனக்குக் கிடைத்த புத்தகம் திகசி யின் கட்டுரைகளையெல்லாம் தொகுத்திருந்த விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள். அப்புத்தகம் என்னிடம் இல்லை. நவீன விருட்சம் இதழும் இல்லை. என் பார்வையில் நாவல்கள், சிறுகதைகள்………….. ……….. என்ற என் கட்டுரைத் தொகுப்பு 2000-ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது, அதில் சேர்க்கப்பட்டுள்ள, தி.க.சியின் புத்தகத்துக்கு நான் எழுதிய மதிப்புரையிலிருந்து (பக்கம் 201 – 204) எழுதுகிறேன். மேலே தரப்பட்டிருக்கும் மற்ற மேற்கோள்களும் சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை தான்.
திகசி யின் இத்தொகுப்பு பல ஆச்சரியங்களைத் தந்தது. ஆச்சரியம் என்ன. முற்போக்கும், கட்சி சேவகமும் திகசியை முற்றாக மாற்றிவிடவில்லை என்று எண்ணத்தை ஏற்படுத்தியது.
அதிலிருந்து என் வார்த்தைகள் சிலவற்றையும் திகசி யின் வார்த்தைகள் சிலவற்றையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அனேகமாக பலருக்கு இது திகசி யின் கேட்காத குரலாக இருக்கும்.
(இப்புத்தகத்தின்) 330 பக்கங்களும் படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன. வெளித்தெரிந்த திகசியை விடுங்கள். உண்மையான திகசி யாரென்பது சுவாரஸ்யமான புதிராக இருக்கிறது. கட்சி நிர்ப்பந்தங்களை மீறி, ஒதுக்கி, ஒரு நெருக்கம் ஏற்படும் எனில், திகசி பழகுவதற்கு மிக நல்ல மனிதராக இருக்கவேண்டும்.
இனி ஒரு நேர்காணல் (ப. 303)
கேள்வி: ஒரு நல்ல படைப்பை நீங்கள் எப்படி இனம் கண்டு கொள்வீர்கள்?
திகசி: கலாபூர்வமாக மனசுக்கு நிறைவு அளிக்கும்படியான படைப்பு எதுவும் மிகச் சிறந்த படைப்பு தான். ஒரு தனித்தன்மை இனம் காட்டிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக அது நம் நெஞ்சை நெருட வேண்டும். (it must disturb) படித்தபின் என்னவோ பண்ணுகிறது. அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. படிக்குமுன் இருந்த நான் வேறு. இப்போதைய நான் வேறு என்கிற மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய ரஸவாதம் எல்லா கலைகளுக்கும் உண்டு.”
இன்னும் சில கருத்துக்கள் வெவ்வேறு பக்கங்களிலிருந்து:
”சமூக சீர்திருத்த வேட்கை நிரம்பிய இவற்றில் (40 வருட திராவிட இயக்க படைப்புகளில்) பிரசார அம்சம் அதிகம். கலை அம்சம் குறைவு (ப. 29). கலை அம்சத்தைவிட கருத்து வலியுறுத்தலுக்கே சிறப்பிடம் (ப. 57). உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்திருப்பாராயின் (ப. 73). சில கவிதைகளில் பிரசார நெடி பலமாக அடிக்கிறது. (ப.146) படைப்புகளில் கலை அம்சம் இருக்க வேண்டும்……சமூக நீதி கேட்கும் மக்கள் பகுதியின் வாழ்க்கையும் குரல்களும்……..படைப்புகளாகும் போது எவ்வளவு தூரம் கலை மதிப்பும், கலைத் தரமும் கொண்டதாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் தகுதி நிர்ணயிக்கப்படும் (ப. 309)
இவையெல்லாம் எப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் என்பது தெரியவில்லை. இந்தத் திகசியை பொதுவாக அறியப்பட்ட திகசியில் அடையாளம் காணமுடியாது. ஆனல், இதற்குப் பின்னும் திகசி கட்சி கோஷங்களை விட்டவரில்லை.
அதற்கு ஒரு சோறு பதமாக அவர் பாராட்டும் ஒரு கவிதையையும் அவர் பாராட்டையும் தரவேண்டும்.
”எங்கள் இலக்கியப் படைப்புகள் யாவும்
அறுசுவை கொண்ட
அரிசியின் சிற்றுண்டிகளை
நினைவுறுத்த வல்லவை. ஆம்
அவை யாவும் அடிப்படையில்
அரிசிக் கவிதை கதை கட்டுரைகளே!
அவற்றைப் படைக்கும் நாங்களும்
அரிசிப் படைப்பு பண்பாட்டாளர்களே!”
இது கவிதை எனவும், இவற்றில் நயம் அழகு, அருமையான முத்தாய்ப்பு எல்லாம் இருப்பதாக திகசி பாராட்டுகிறார்.(ப. 319) ஆனால் ஒன்று, கட்சியும் அது தந்த கொள்கைகளும் திகசி என்ற மனிதரை முற்றிலுமாக மாற்றிவிடவில்லை. ஆனால் சுமார் ஐம்பது வருட காலம் நீடித்து வந்துள்ளது.
திகசி யின் இந்த கட்டுரைத் தொகுப்பு 1999- ஆண்டுக்கான சாஹித்ய அகாடமியின் தமிழ் விருது பெற்றது. நான் நிரந்தரமாகச் சென்னைக்குத் திரும்பியதும், பங்கு பெற்ற முதல் இலக்கியக் கூட்டம் திகசி-க்கான பாராட்டு விழா தான். திகசி தன் நன்றியுரையில் மேடையில் இருந்த சிவகாமி பக்கம் பார்த்த வாறே அடுத்த ஆண்டு விருது ஒரு பெண் எழுத்தாளருக்குத் தரப்படவேண்டும் என்பது தன் விருப்பம் என்று சொல்லி அகாடமியின் செயலர் சச்சிதானந்திடம், “இதை ப்ரெசிடெண்ட் ரமா காந்த் ராத்திடம் ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்றார். இந்த விருது அவருக்கு மன நிறைவைத் தந்த ஒன்று என எனக்குத் தோன்றியது. எண்பது வருட வயதினருக்கு 60 வருட கால உழைப்பிற்குப் பிறகு வந்த அந்த சந்தோஷத்திற்கு உரியவர் தான் அவர்.
பல சமயங்களில் அவர் கட்சிக்காரராகவே நடந்து கொள்வதில்லை. அந்த சமயம் திகசியின் நினைப்பும் பேச்சும், ஐந்து சித்தாந்தங்களை ஒரு சேர பிரகடனம் செய்து வந்தது. “பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழியம். என்பன அந்த ஐந்து சித்தாந்தங்கள். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு பொதிகை தொலைக்காட்சியின் நேர்காணலில் தனக்கு வழிகாட்டியாக,தம் வாழ்க்கையை வடிவமைத்தவர்களாக, திருவள்ளுவரிலிருந்து தொடங்கி கம்பன், வள்ளலார் என்று எல்லாரையும் கடந்து வந்து பாரதி, ஜீவா வரை ஒரு நீண்ட பட்டியலையே வாசித்தார். வம்பற்ற பாடு. தவறிப் போய்க்கூட மார்க்ஸிலிருந்து தொடங்கி, ஸ்டாலின், ராமமூர்த்தி நம்பூதிரிபாத் பாட்டையில் அவர் செல்லவில்லை.
தாமரையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவரை ஒரு கூண்டுக்குள், என்ன, எந்தக் கூண்டுக்குள்ளும் அவர் அடைபடவில்லை. 90 வயதை எட்டிப் பார்ப்பவரிடம் கட்சியும் அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள். ஓய்வு பெற்றுவிட்டவரை எந்த நிர்வாகம் தான் என்ன செய்யும்?
நான் இங்கு பங்களூருக்கு குடி பெயர்ந்த பிறகு ஒரு நாள் திடீரென்று சித்தன் பிரசாதிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் யுகமாயினியில் என்னை எழுத அழைத்ததிலிருந்து பழக்கம். நேரில் பார்த்ததுமில்லை. பழகியதுமில்லை. உறவை வளர்த்தது தொலைபேசிதான். தமிழை இனி உய்விக்கவேண்டிய அவசியம் தனக்கில்லை யுகமாயினி கடையைப் பூட்டிவிட்டு தமிழ் சினிமாவுக்கு ஏதாவது சேவை செய்யமுடியுமா? என்று கிளம்பிவிட்டார். 2012 வருட இடைப்பட்ட மாதஙகளில் ஒரு நாள் முன்னிரவு நேரம் என்று நினைவு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சித்தன் பிரசாத் பேசறேன், சாமிநாதன். திருநெல்வேலியிலே இருக்கேன் இப்போது. திகசி வீட்டில் அவர் என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கார். அவருக்கு உங்களோட பேசணுமாம். பேசுங்க” என்றார். திகசி பேசினார். எனது சௌக்கியம் பற்றி விசாரணையோடு, “அங்கே நீங்க என்ன பண்றீங்க. இங்கே ஒருக்கா வாங்களேன். நானும் தனியாத் தான் இருக்கேன். நீங்களும் இப்போ தனி ஆளாப் போயிட்டிங்க. நீங்க வாங்க இங்கே. என்னொடு பத்து நாள் இருங்க” என்றார். ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. அதிலும் ஒருவர் பெயர் இன்னொருவருக்குத் தெரிந்த காலத்திலிருந்தே சண்டை தான் போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்த சிஐஏ ஏஜெண்டை இவ்வளவு பரிவுடன், சினேக பாவத்துடன் அழைக்கிறாரே. மனித ஹிருதயம் தான் எத்தனை விசித்திரமான ஒன்று! எனக்கு அவரைக் கொஞ்சம் சீண்டத் தோன்றியது. “எதுக்கு ஐயா. நாம எழுத்திலே ஐம்பது வருஷமா சண்டை போட்டதை நேரிலேயே தொடரலாம்னா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சளைக்கவில்லை. “வாங்க நிறைய பேசலாம் .சண்டையும் போடலாம். திரும்பிப் போய் திகசி இன்னமும் அதே முட்டாளாத் தான் இருக்கான்னு எழுதுங்க” என்றார். சிரித்துக் கொண்டோம். இந்த வயசிலே எவ்வளவு உரக்கவும் சௌஜன்யத்துடனும் பேசமுடிகிறது அவரால்!
”சந்திக்கலாம் வரேன் எப்போ வாய்க்கிறதோ பார்க்கலாம்” என்றேன். சரி மனசிலே வச்சுக்கங்க. இப்போ வேண்டாம். ஒரே வெக்கையா இருக்கு. பவர் கட் வேறே நாள்முழுக்க. இது கொஞ்சம் சீரானதும் சொல்றேன். வாங்க” என்றார்.
இதற்கு கொஞ்ச நாள் பிறகு ஃபேஸ் புக்கில் சு.கா. திடீரென அசரீரியாக தரிசனம் தந்தார். அது தான் அவரோடு முதல் பரிச்சயம். அவரது குரல் அல்ல. எழுத்து தான் பேசிற்று. உலகத்து எழுத்தாளர்கள் எல்லோரையும் நாம் அப்படித்தானே தெரிந்து பரிச்சயம் கொள்கிறோம், அந்த மரபு கெட்டு விடக்கூடாது என்றிருப்பவர் சு.கா. என்று தெரிந்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்திற்கு முன் “வாதங்கள், விவாதங்கள்” வெளியீட்டின் போது அவர் வந்திருந்ததாகச் சொன்னார்கள். அப்போது தரிசனம் தருவதற்கு இன்னம் வேளை வரவில்லை என்று நினைத்திருக்கலாம். பிறகு ஒரு நாள் அவர் குரலையும் கேட்டேன். அவரும் சொன்னார், ”நீங்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து அவருடன் சில நாட்கள் இருக்கவேண்டும் என்று திகசி உங்களிடம் சொல்லச் சொன்னார். இதற்கு முன்னரே அவர் அழைப்பு எனக்கு தொலைபேசியில் வந்ததைச் சொன்னேன். எனக்கு துணையாக யாராவது வந்தால் தான் நான் எங்கும் செல்ல முடியும். எல்லோரும் சேர்ந்தே போகலாமே, நான் நீங்கள், சொல்வனம் சேது, பாரதி மணி எல்லோரும் சென்னை வழியாகவே போகலாம். எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டே பயணம் செல்வது சுகமாகவும் இருக்கும். எனக்கும் துணை இருக்கும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். நாட்கள் கடந்தன. சேது ஃபின்லாந்து போய்விட்டார். பாரதி மணி தில்லிக்கோ குர்காவ்ன்க்கோ போய் விடுவார். சுகா வுக்கு அவரது நிர்பந்தங்கள். இப்படி நாட்கள் கடந்தன.
இடையில் சொல்வனத்தில் சுகா அவர் தனக்கென அவரே உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு புதிய சுவாரஸ்யமான வடிவில் திகசியைப் பற்றிய பாசமும் வியப்பும் நிறைந்த ஒரு அழகான சித்திரம் வரைந்திருந்தார். அதில் மறுபடியும் திகசியின் அழைப்பு பற்றி. அதை சுகாவே அவரது எழுத்திலேயே சொல்லட்டும். என் வார்த்தைகளில் சொவது சுகாவின் எழுத்து அழகைக் கெடுத்துவிடும். சுகா எழுத்துக்கு நான் நியாயம் செய்ய வேண்டும்.
”தி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.
உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.
‘என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’
நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.
சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.
சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.
(மூத்தோர் – சுகா – சொல்வனம் 21.10.2012)
–
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு. நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள். காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம். நான் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தேன். எவ்வளவு காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்தது நடவாதது, திடீரென திட்டமிடாமலேயே எல்லாம் நடந்து விடுகிறது!! சின்ன குறுகிய தெருதான். ஆனால் நீண்ட தெரு. திகசியின் வீட்டு வெளிக்கதவைத் தாண்டி உள்ளே காலடி வைத்தால், சுகா தந்திருந்த புகைப்படத்தில் காணும் அதே காட்சி. தாழ்வாரத்தின் கோடியில் தன் அறைக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மெதுவாக உள்ளே சென்று அவர் அருகில் நிற்பதற்குள் ஏதோ நடமாட்டம் அறிந்து தலை நிமர்கிறார். சீனுவாசனுக்கு திகசியையும் அவரது திருநேலி சகாக்கள் வண்ணதாசன் கலாப்ரியா, எல்லோரையும் தெரியும். எங்களையெல்லாம் பார்த்ததும் அவரது முகக் களிப்பைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. மனித உறவுகளும் பாசமும் அந்த வயதில் அபரிமிதமாகப் பொங்கி எழும். இல்லாத போது ஏக்கம் சூழும். பேச்சு, படிப்பு, உற்சாகப்படுத்தி எழுதும் கடிதங்கள் இவை தான் அவரது தினசரி வாழ்க்கை. தனி மனிதர். தனித்து வாழவே ஆசை. பக்கத்தில் சில வீடுகள் தள்ளி ஒருவர் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறார். தினசரி பத்திரிகைகள் செய்தித் தாள்கள் வந்து சேர்ந்து விடுகிறது இன்னொரு நெடுங்கால அன்பரின் தயவில். போன உடன் பெரிதாக கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப் பட்டுள்ள அட்டையைக் காண்பிக்கிறார். அதிகம் அவரைப் பேச விடவேண்டாம். என்று ஒரு எச்சரிக்கை அதில் . காது அவ்வளவாகக் கேட்பதில்லை. உரத்துப் பேசியும் பயனில்லை. எச்சரிக்கை அட்டையைக் காண்பித்து கீழே வைத்தவர் தான். அவர் தான் பேசிக்கொண்டிருக்கிறார். பயந்து பயந்து சில வார்த்தைகள் பேசியும் தலையை ஆட்டி பதில் தந்து கொண்டும் இருந்தோம் பக்கத்தில் உள்ள அன்பர்களும் வந்து சேர்ந்தார்கள். வயோதிகத்தையும் உடல் பலஹீனத்தையும் மீறி அவர்தான் எங்கள் எல்லொரையும் விட அதிக உற்சாகத்துடன் ஜீவனுடன் இருந்தார். (He was more lively and active than any of us there) பக்கத்துச் சிறிய அறை முழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள். ஏதோ பழைய பத்திரிகைக் கடை மாதிரி. வெளியே வராந்தாவில் அவர் காலடியிலும் பத்திரிகைகள் பரவிக் கிடந்தன. அன்றாட உலகின் அக்கறை கொண்டும் அதே சமயம் விலகியும் தனித்து ஏதோ ஆஸ்ரமத்தில் வாழும் ரிஷி மாதிரி திகசி தந்த அந்த 2013 டிஸம்பர் காட்சி. சில மைல் தூரத்தில் வாழும் வண்ணதாசன் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார். திகசி பிடிவாதமாக தனித்து வாழவே தேர்ந்து கொண்டுள்ளார். அதுவும் என் மனதில் அவரிடம் மரியாதை உணர்வையும் வியப்பையும் உண்டாக்கியது. இந்த அமைதியும் தைரியமும் எனக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தனிமை தான். இருப்பினும் உலகோடு உறவு அறவில்லை. நிறைய அன்பர்களும் நண்பர்களும் சிஷ்யகோடிகளும் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு மணிநேரம் அங்கு இருந்திருப்போமா? இருக்கலாம். அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டோம். திருநெல்வேலியிலிருந்து அரவிந்தன் நீலகண்டனையும் அவரது அப்பாவையும் பார்க்க அவரைப் பார்த்து வருடங்கள் பல ஆகிவிட்டன. இனி எப்போது வாய்ப்பு கிட்டுமோ. நாகர் கோயில் போய்க்கொண்டிருந்தோம். சுபாஷிணி திகசியின் வீட்டில் இருப்பதாகவும் அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. நாங்கள் திருநெல்வேலியிலிருப்பதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.
நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சிலமணி நேரத்துக்குள் சென்னையிலிருந்து சுபாஷிணி திகசியைப் பார்க்க அவர் வீட்டில். மனித உறவின் நெருக்கத்தை விடாத நிறை வாழ்வு தான். இதை விட வேறென்ன வேண்டும்
2014 மார்ச் 25ம் தேதி அவர் மறைந்து விட்டார். இன்னம் ஐந்து நாட்களில் அவரது 90 வயது பூர்த்தியாகி, 91 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இலக்கிய மற்றும் பத்திரிகை உலகினர் கூட்டம் ஆச்சரியம் இல்லை வை.கோவும் நல்லகண்ணுவும் கூட ஈர்க்கப்பட்டனர் என்பது திகசியின் ஆளுமையின் வியாபகத்தைச் சொல்லும். அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் அவர் காலத்தில் காய்ச்சி வறுத்தெடுத்த வணிகப் பத்திரிகைகளும் இருந்தன.
எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாட்டிலும், மனித உறவுகளை அவர் மறக்கவில்லை. எந்த வகைப் பாட்டிலும் அடங்காத சுகாவின் எழுத்தை உடன் இனம் கண்டு பாராட்டினார் என்றால், கட்சி வாய்ப்பாடு அவரது உணர்வுகளை மழுங்கடிக்கவில்லை என்று தானே அர்த்தம்? தாமிரபரணி தண்ணீரின் ஈர்ப்பும் இருக்கும் தான். ஆனால், பொது உலகில் அவருக்கு கட்சிரீதியாக எதிர்த் தரப்பில் நான் இருந்தாலும் மனதிற்குள் என்னிடம் அவர் சினேக உணர்வும் பாராட்டுமே கொண்டிருந்தார். நான் அவர் விருப்பப்படியே நேரில் சென்று அவருடன் சில மணி நேரங்களாவது சக மனிதர்களாக சந்தோஷத்துடன் கழித்தது அவருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்கும். எனக்கும் கட்சி மறைத்து வைத்திருந்த ஒரு சக மனிதரைக் கண்டதில் சந்தோஷம்.
வெங்கட் சாமிநாதன்/6.6.2014
-ரா. பார்த்தசாரதி
அன்புள்ள கணவா! உன் நெஞ்சில் நான் நிறைந்திருந்தாலும்,
என் பெண்ணுள்ளம் எதிரொலியாய் இருந்தாலும்,
நான் என்றும் நீ என்றும் இருவராக இருந்தாலும்,
நான் வேறு, நீ வேறு யார் சொன்னாலும்,
உந்தன் மனதினிலே நான் என்றும் இருந்தாலும்,
சுகமும், துன்பமும் சரிபாதியாய் இருந்தாலும்,
பூவாகி, காயாகி, கனியாய் இருந்தாலும்,
நீயாகி, நானாகி, நாமாய் இருந்தாலும்,
சுகம் சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
மனம், பேதை மனம் மாறாத சொந்தம் இருந்தாலும்,
இனமாகிய பெண் உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
அது பூப்போல மென்மையாய்ப் பூத்திருந்தாலும்,
உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தாலும்,
தேன் உண்ணும் வண்டாய் நீ இருந்தாலும்,
தெம்மாங்கு பாட நீ நினைத்திருந்தாலும்,
தொலைவில் இருந்தும் என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,
கல்யாணம் முடிந்து காதல் மறைந்தாலும்,
பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
நமது வாழ்க்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருந்தாலும்
பொங்கும் நமது உள்ளமே வாழ்வின் புது வெள்ளமே!
கவிஞர் காவிரி மைந்தன்
கவிஞர்களின் கற்பனையில் பாடுபொருள் ஒன்றுதான் என்றாலும் புதிய யுக்தி, புதிய சிந்தனை, புதிய பார்வை – இவைதான் மக்களின் கவனத்தை ஈர்க்கும். காதலைப் பற்றியும், காதலியின் அழகைப் பற்றியும் பாடாத கவிஞர்கள் இல்லை! இது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒன்றுதான் என்றாலும், கவிஞர்கள் தங்கள் கற்பனையை பலநூறு முறை கொட்டிக்கவிழ்த்தாலும், இன்னுமின்னும் மிளிர்கிறதே! அதுதான் நம் தமிழ் மொழியின் மேன்மை! சொல்லாட்சி! கற்பனா வளம் மிக்க கவிஞர்களின் கையில் தமிழ் கிடைத்துவிடும்போது எத்தனை அற்புதமாய் கவிதை பிறந்துவிடுகிறது! திரைப்பாடலென்பது ஒரு பல்லவி – மூன்று சரணங்கள் என்கிற அளவுகோலுக்குள் அடடா ஒரு ஜீவசிற்பத்தை செதுக்குவதுபோல் கவிஞரின் பேனா நகர்கிறது! நாம் விரும்பி நனையும் கவித்துவமழையும் பொழிகிறது! இதோ கவிஞர் வாலியின் புகழ்க்கொடி பறக்கிறது!
பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை
திரைப்படம்: பூவா? தலையா?
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1969

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே – இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
ஒரு பெண்ணை வர்ணிக்க இவர் ஒட்டுமொத்த தமிழகத்தையே தனது உவமைக் களமாக்கியிருக்கிறார்! இப்படியெல்லாம்கூட வர்ணிக்க முடியுமா என்று நம் உள்ளத்திலும் உயர்கிறார்! பொருத்தமான வார்த்தைகளை எடுத்து அதற்கான அங்கங்களோடு அழகுபார்த்து சேர்த்திருக்கும் கவிஞரின் திறன் போற்றத்தக்கது! புகழத்தக்கது! டி.எம்.செளந்திரராஜன் குரலில் கம்பீரமாக ஒரு காதல் ஆலாபானை கற்பனைக் கொடி பறக்க காற்றில் தவழ்கிறது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பூவா தலையா – இது இயக்குனர் கே.பாலச்சந்தர் படம்! காதல் பாடல்கள் வரிசையில் ஒரு கானாமிர்தம்! கவிதை வகையில் சொன்னால் தேனாமிர்தம்! அண்மைக் காலத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற பா.விஜய் அவர்களின் கற்பனையிலும் இந்த யுக்தி எதிரொலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..- தஞ்சாவூரு மண்ணை எடுத்து… ..
கலைஞரும் கவிஞரும்
இத்திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருதுகள் வழங்கிய பெருமகனார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். வாழ்த்துரை வழங்க கலைஞரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணதாசன் கண்களில் கலைஞரின் தலைப்பாகம் பட்டிருக்க, தனது பேச்சின்போது.. கண்ணதாசன், நான் பின்னிருந்து பார்க்கையிலே கலைஞரின் தலை பூவா.. தலையா என்றே சந்தேகம் எழுந்தது என்றார். கலைஞர் தனது சிறப்புரையில்.. இதைக் குறிப்பிட்டு.. நல்லவேளை நண்பர் கவிஞர் கண்ணதாசனுக்கு எந்தன் தலை பூவா.. தலையா என்று சந்தேகம் மட்டும் வந்தது. பூ என்று நினைத்து பறிக்க வந்துவிடவில்லை என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார் என்பது ஒரு சுவையான தகவல்!
http://www.youtube.com/watch?
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
—————————————————————–
”கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————-

ஆபாசம், அச்சம், அழுக்கா(று), அகங்காரம்,
நாபேசும் இன்னா நயவஞ்சா! -ஏபாவா!
என்பக்கம் வாராதே, உன்னுருவைப் புண்ணியமாய்,
கண்ணப்பன் மாற்றிடுவான் காண்….(233)
காணல் அவன்ரூபம், பூணல் அவன்நாமம்,
நாணல் யமுனா நதிதீரம், -சாணப்,
புரவிக்கு நீரூற்றி, புல்வார்க்கும் கண்ணன்,
கருமமே கண்ணான வன்….(234)
அந்தரங்க சுத்தியுடன், அந்தணங்கு ஆண்டாள்போல்,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க, -வந்திறங்கி,
வைகுண்டம் வாவென்று, கைகொடுத்து தூக்கிவிடும்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு….(236)
நீராடை பூண்ட, நிலத்தை உண்டன்று,
ஓரா லிலையில் உறங்கிய, -சீராளன்,
போரானை கொம்பொசித்து, நூறோர் கதைமுடித்த,
நாரா யணனே நெறி….(237)
கருந்தா மரையின்கீழ், செந்தா மரைபோல்,
புறங்கை அடியில் புலர்ந்த, -வரங்கை,
கோலும் குழலுமேந்த, கோகுலம் காத்தவனாம்,
மாலோன் மலர்த்தாள் மருவு….(238)
திருவிருந்த மார்பன், திருத்துழாய் மார்பன்,
மருவிருந்த மார்பன், மகனாய்ச் -சிறையில்,
கருவிருந்த மார்பன், தெருவிருந்த மண்ணை,
பெருவிருந்தாய் உண்ட புதிர்….(239)
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://bhagavatham.blogspot.in/
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
http://www.youtube.com/watch?
http://www.space.com/25589-
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
[Meteor Strike Injures 1200 People in Russia]
வக்கிரக் கோள்கள் வழிதவறி
வையத்தில் மோதிச்
சுக்கு நூறாக்கப்
பக்கத்தில் வருகின்றன !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை ஆய்ந்தார்
நாசா பொறியியல் விஞ்ஞானிகள் !
விண்வெளியில் வால்மீனை
விரட்டி வாலின்
தூசியைப் பற்றி
காசினிக்குக் கொண்டு வந்தார் !
வக்கிரக் கோள் மாதிரியை
வையத்தில் இறக்கி வைத்தது
ஜப்பான் ‘கழுகு’ !
முரண்கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்டது
நாசாவின்
“புலர்ச்சி” விண்ணுளவி
சூரிய மண்டலத் தோற்றம்
ஆராய் வதற்கு !
இரு விண்வெளி விமானிகள்
2025 ஆண்டுக்குள் பயணம் செய்து
முரண்கோள் ஒன்றில்
தடம் வைப்பார்
தளவுளவி இறக்கி
உளவு செய்யப் பயிற்சி
அளிக்கிறது நாசா,
வையத்தை மோத வரும்
வக்கிரக் கோளை நாசா குழு
திக்கு மாற்றி
பூமி காக்கப் போகுது !
+++++++++++++++++
“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”
டிமிட்ரி ரோகோஜின் [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]
எதிர்பாராத சிதைவுகளைப் பூமியில் உண்டாக்கும் முரண்கோள்களின் அபாயத்தைக் கண்டறிய பொதுநபர் பேரளவில் எங்களுக்கு உதவி செய்ய வழிகள் உள்ளன. உலக மாந்தரின் ஆக்கபூர்வச் சிந்தனைகள், செயற்பாடுகளைப் பயன்படுத்தி, முரண்கோள் தகவல் அறிவிப்பில் கலந்து கொண்டு, நமது பூமியை ஓர் பாதுகாப்பு அரங்கமாகச் செய்திடப் பங்கேற்க வேண்டும்.
ஜேஸன் கெஸ்லர் [Program Executive, NASA Asteroid Grand Challenge [AGC] Spacecraft]
“இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப்பொழியும்.இந்தநிகழ்ச்சி
நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]
முரண்கோள் திசை திருப்புத் திட்டங்களோடு அடுத்து 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் அனுப்பும் ஆழ்வெளி முயற்சிகளையும் விருத்தி செய்து, முரண்கோள் மோதுதலிலிருந்து பூமியைக் காக்கும் செயல்களைத் தீவிரமாக மேற்கொள்ளப் போகிறோம்.
வில்லியம் கெர்ஸ்டென்மையர் [NASA Human Exploration & Operation Mission]
சூரிய மண்டலத் தோற்ற காலத்தின் எச்சத் துண்டுகள் நமது பூமியை நோக்கி நெருங்கி வரும் போது தொலைநோக்கிகள் மூலம் கூர்ந்து ஆராய்வது நம் அறிவைப்பெரிதும் விரிவாக்கி யுள்ளது. முரண்கோள்களை நெருங்கி உளவுசெய்து, சோதிப்பது, நமது புவியைப் பாதுகாக்க உதவும் சவாலான சாதனைக்கு நம்மைத் தயார் செய்யும். அத்தகைய அரியபணிகளுக்கு ஏற்ற சாதனங்களில் ஒன்றுதான், ஸ்பிட்ஸர் விண்ணோக்கி. [Spitzer Observatory]
ஜான் குருன்ஸ்ஃபெல்ட் [NASA Science Mission Directorate]
பூமியைத் தாக்கவரும் முரண்கோள் போக்கைத் திசைமாற்றும் நாசா விண்ணுளவி
2014 ஜூன் 19 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பூமியை நெருங்கும் முரண்கோள்கள் [Asteroids] போக்கைத் திசை திருப்பும் சுயத்தடுப்பு விண்கப்பலைத் [Robotic Spacecraft] தயாரிக்கத் திட்ட மிட்டிருப்பதாய் வான்பௌதிக வெளியீட்டில் [Astrophysical Journal] அறிவித்துள்ளது. தயாராகும் அந்த விண்கப்பலின் பெயர் : முரண்கோள் பெருஞ்சாதனைச் சவால்விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]. அத்திட்டப்படி நாசா தான் ஏவிய சுயத் தவிர்ப்பு விண்ணுளவி [Robotic Spacecraft] மூலம் பாதை தவறிப் பூமியைத் தாக்க நெருங்கி வரும் முரண்கோளைத் திசைமாற்றி நமது நிலவை நிரந்தச் சுற்றுவீதியில் வலம்வரச் செய்கிறது. நாசாமுரண்கோள்திசைமாற்றுத் திட்டத்தின் பெயர் [Asteroid Redirect Mission (ARM)]. 2019 ஆம் ஆண்டில் நாசா அந்தச் சுயத் தவிர்ப்பு விண்கப்பலைத் தயாரித்து ஏவத் திட்ட மிட்டுள்ளது. அதற்குச் செல்வாகும் நிதித்தொகை 4.9 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பு]. அப்போது சோதனைக் கோர் முரண்கோளை நாசா தேர்ந்தடுக்கும். முதலில் சிறிய முரண்கோளை விண்வெளியில் கண்டுபிடித்து, திசை திருப்பச் சோதிக்கும். பின்னர் பெரும்முரண்கோளைத் தொட்டுமாதிரி எடுத்துச் சோதித்து, பூமிக்கு நெருங்கி வருவதை, வசப்படுத்தி திசைமாற்றும்.
2014 ஜூன் 9 ஆம் தேதிவரை 11,140 மேற்பட்ட முரண்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பூமிமேல் மோதி அபாயம் விளைவிக்கலாம் என்று கருதப்படுபவை : 1483. சிறுநிறை, பெருநிறை முரண் கோள்களைத் திசை திருப்ப இவ்விருமுறைகளும்32 அடி [10 மீடர்] அளவுக்குக் குன்றிய விண்கற்களையே தேர்ந்து, நமது நிலவைச் சுற்றிவரக் கட்டுப்படுத்தும். 2014 ஆண்டில் தான் நாசா விஞ்ஞானிகள் இவ்விரு முறைகளில் [சிறுநிறை அல்லது பெருநிறை முரண்கோள் திசை திருப்பல்] ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். 2013 ஜூனில்தான் நாசா முரண்கோள் பெருஞ்சவால் விண்கப்பல் [Asteroid Grand Challenge Spacecraft] திட்டத்தைத் தீவிரமாக மேற்கொள்ள தீர்மானித்து, இப்போது விருத்தி செய்து வருகிறது.
ரஷ்ய தேசத்தில் நேர்ந்த விண்கல் பாய்ச்சல் அபாயம்
ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது. 30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு. வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT]. வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன. 50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார். விளைந்த சேதாரச் செலவு: சுமார் 33 மில்லியன் டாலர். பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry] கூறுகிறார்.
அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது. வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது. அந்தஒளிமயமானதோரணக்காட்சிபூமி

விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:
“பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும். விண் பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.” என்று ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி, டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் சிறப்பு அறிவிப்பு மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2013 பிப்ரவரி 15
ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் ஒலி மிஞ்சிய வேகத்தில் பாய்ந்த விண்கல் [Me
தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள் [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை. அவை விண்வெளியி லிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்கமுடியா. விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா ! விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும். மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள் மேன்மைப் படுத்த வேண்டும்.
இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது. வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும். அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும். அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும். அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும், பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது. விண்கல்லின்திசைமாற்றஏற்றகாலப்
ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி. சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார். நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார். முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க முயன்றார். இதுவரைஎதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி ஏற்பட்டுள்ளது. அதற்குப்பிறகு2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது. “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும். இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.
இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.
+++++++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 21, 2014
Preview YouTube video NASA Seeks Bounty Hunters for Asteroids – $35K in Awards | Video
Preview YouTube video Planetary Society Hangout: Asteroid Astronomy with Andy Rivkin
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
————————————————
தொண்டைக் கட்டு வந்தபோது வேண்டுதல் வெண்பா
——————————————————————————————-

கொண்டை மயிற்பீலி, கொண்டென் கரகரா,
தொண்டை சரிசெய்வாய் துப்புரவாய், -பண்டரி,
விட்டலா பாண்டுரங்கா, வேய்ங்குழல் நாதமாய்,
கொட்டவை வார்த்தைகளை சட்னு….(227)
குரல்வளை தன்னை, கிரகணம் பிடிக்க,
பொருள்விளங் காயாச்சு பேச்சு, -அருள்மழையை,
தொண்டையில் பெய்திடுவீர், பண்டரி நாதரே,
விண்டுரைக்க வைப்பீர் வசனம்….(228)
வலம்புரியோ(டு) அன்று, களம்புகுந்தோன் இன்று,
நலம்புரிந்தான் பேசிட நன்றாய், -வளம்புரிந்தான்,
சும்மா இருந்த, சிருத்தொண்டை ஊதினான்,
அம்மா அறிந்தேன் அரி….(229)
வாத புரீசா, வ்ரஜகுல விஸ்வாசா,
சேதம் அசேதனம் செய்திடுவோய், -தோது,
புரியெந்தன் தொண்டை, சரியாகக், காக்கும்,
அரியுந்தன் தொண்டைநீ ஆற்று….(230)
பாடிப் பெறமோட்சப், பாதை இருக்கையில்,
நாடிப் பறந்தேன் நவநீதா, -சாடிக்,
கெடுக்கும் குரலெனக்கு, கொஞ்சமும் வேண்டாம்,
முடக்கி மவுனியாய் மாற்று….(231)
——————————————————————————————————-
என்னதவம் ஆனாலும், எங்கதைச் செய்தாலும்,
தன்னந் தனியாய்த் தவிக்காதே, -கண்ணனருள்,
கூட அழைத்துச்செல், கைகூடும் காரியங்கள்,
மாடுகள் மேய்த்தோனின் பாடு….(232)
———————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/
முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 9
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
எம். ஜெயராமசர்மா – மெல்பேண்
குருவி ஒன்று மரத்திலே
கூடு கட்டி வாழ்ந்தது! 
தெருவில் போகும் மனிதரைத்
தினமும் பார்த்து நின்றது!
குருவிக் கூட்டில் குஞ்சுகள்
குதூகலமாய் வளர்ந்தன!
அனுதினமும் தாயைப் பார்த்து
அகமகிழ்ந்து நின்றன!
தெருவில் போகும் மனிதரின்
தில்லு முல்லு பார்த்ததும்
திகைப் படைந்த குஞ்சுகள்
திரும்பித் தாயைப் பார்த்தன!
தெருவில் சண்டை நடந்திடும்
தினமும் மனிதர் மோதுவார்
அதனைப் பார்க்கும் குஞ்சுகள்
அஞ்சித் தாயைப் பார்க்குமே!
சண்டை நடக்கும் காரணம்
சரியாய்த் தெரியாக் குஞ்சுகள்
மென்று விழுங்கிக் கேட்டிடும்
மெதுவாய்த் தாயும் சொல்லுமே…
சிண்டு முடிக்கும் குணமெலாம்
சீராய் மனிதர் செய்குவர்!
அண்டை அயலில் உள்ளவர்
மண்டை உடைத்து நிற்பரே!
வம்பு தும்பு பேசியே
வாழ்வு நடத்தும் மனிதரால்
எங்கும் சண்டை நடக்குதே
இதனை எங்கு சொல்வது?
கோள்முடிக்கும் கூட்டமும்
குறைகள் சொல்லும் கூட்டமும்
நாள்முழுக்கச் சண்டையை
நடக்கவிட்டுப் பார்க்குது!
விலங்கு பறவை என்றெமை
விலக்கி விட்ட மனிதர்கள்
விளக்கமின்றி நாளுமே
வெட்டிக் குத்தி மாள்கிறார்…
என்று சொல்லிக் குருவித்தாய்
ஏக்க மூச்சு விட்டதும்
எல்லாக் குஞ்சும் ஒன்றாக
இரையைக் கொத்தி நின்றன!
தாயைப் பார்த்த குஞ்சுகள்
தயங்கித் தயங்கிக் கேட்டன
எங்கள் கூட்டை மனிதர்கள்
ஏறிப் பிடுங்க மாட்டாரா…?
என்று கேட்டு நிற்கையில்
எங்கிருந்தோ வந்த கல்
குஞ்சைப் பதம் பார்த்தது
குருவிக் கூடும் விழுந்தது!
விலங்கு பறவை யாவுமே
விலத்தி நின்ற போதிலும்
நலங் குறைந்த மனத்துடன்
நாட்டில் மனிதர் வாழ்வதேன்!?
-ரா. பார்த்தசாரதி
சந்தோஷம் என்றும் நம் பக்கம்!
சந்தோஷம் என்றாலே மனிதனுக்குப் பாதிபலம்!
அது இல்லையெனில் மனிதனுக்கு ஏது பலம்?
சந்தோஷம் நாம் வாழ்க்கையில் தேடுவது!
எப்பவும் எல்லோர் நெஞ்சுக்குள் நினைப்பது!
போதுமென்ற மனம் இருந்தால் தானே வருவது!
சூரியனைக் கண்டால் தாமரை
சந்தோஷத்துடன் மலர்ந்துதானே பழக்கம்?
கார்முகில்கள் திரண்டு வந்து
மழை தந்துதான் பழக்கம்!
மழையைக் கண்டால் மயிலுக்கு
மகிழ்ச்சியுடன் ஆடித்தான் பழக்கம்!
காட்டில் உள்ள குயிலுக்கோ
சந்தோஷத்துடன் கூவித்தான் பழக்கம்!
கிடைத்ததை மனதிற்கொண்டு நடப்பவை
எல்லாம் நன்மைக்கே எனத் தெளிந்தால்
வாழ்வில் சந்தோஷம் என்றும் நம் பக்கம்!
–சு.கோதண்டராமன்
என்னதான் இருக்கிறது வேதத்தில் – 12
“சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை. இஃதே வேத ரகஸ்யம். இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.” – பாரதி
பிறந்தவர்கள் சாகாமல் இருக்க முடியுமா? நாம் அறிந்தவரை அது சாத்தியம் இல்லை. சில சித்தர்கள் அவ்வாறு வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. கண்டவர் இல்லை. நான் சாகாதிருப்பேன் காணீர் என்று மார் தட்டிய பாரதிச் சித்தரும் செத்துத் தான் போனார்.
மனிதனுக்குத் தான் சாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருக்கிறது. சாகாமல் இருப்பது சாத்தியம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட பின்னும் சாகா நிலையை வேறு வகையில் அடைய முடியுமா என்று ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் வேதத்தில் காணப்படும் அமரத்வம் பற்றிய சிந்தனை.
தானம் செய்வதும் ஹோமம் செய்வதும் அம்ருதத்தைக் குறித்தே.[1]
அமரத்துவம் என்பதை எந்தப் பொருளில் வேதம் பயன்படுத்துகிறது என்பதை அறிய மீண்டும் ஆழ்ந்து நோக்குவோம்.
மரணமும் அமரத்துவமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அவை இரண்டும் சகோதரர்கள், ஒரே மரத்தில் அமர்ந்துள்ள இரு பறவைகள் என்பது வேத ரிஷிகளது கருத்து.[2]
இதனால் தான் நூறாண்டு வாழ்வையும் அமரத்துவத்தையும் வேண்டி இரு விதமான பிரார்த்தனைகள் வேதத்தில் காணப்படுகின்றன.
ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம்.
நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக.[3]
வருணா, எங்களுக்கு மழையையும் அமரத்துவத்தையும் தருக.[4]
வேதத்தைப் பெரிதும் மதித்த பாரதியும், விநாயகர் நான்மணி மாலை என்ற நூலில், ஒரு பாடலில் “நோவு வேண்டேன் நூறாண்டு வேண்டினேன்” என்றும், மற்றொரு பாடலில், “நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க” என்றும் வேண்டுகிறார்.
அவர்கள் நூறாண்டு வேண்டியது உடலுக்கு. அவர்கள் கூறும் அம்ருதம், அமரத்துவம் அல்லது சாகா நிலை என்பது உடல் அழியாமல் வாழ்வது அல்ல. அது உடல் கடந்தது; பாரதி கூறும் அமரத் தன்மையும், மதுரை வீரன் போன்றோர் நாட்டார் தெய்வங்களாக ஆனதும் உடல் அழிவின்மையைக் குறிப்பிடாமல் புகழுடம்பு பெறுவதையே குறிப்பிடுகின்றன.
வேதம் மூன்று வகையான அமரத்வங்களைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது சந்ததி மூலம் அடையப்படும் அமரத்வம்.
அக்னியே, வம்சத் தொடர் அறுந்து போகாமல் எனக்கு அமரத்துவம் தருக.[5]
“ஆத்மா வை புத்ர நாமா அஸி” என்று சதபத பிராமணமும்[6] கூறுகிறது.
ஒருவன் தானே தனக்கு மகனாகப் பிறக்கிறான் என்பது பொருள். அதாவது மகன் பிறந்தால், தந்தை புத்துயிர் பெற்று வாழ்வதாகக் கருதப்படுகிறது. இதனால் அமரத்வம் என்பது சந்ததி அறுபடாமல் இருப்பதைக் குறிப்பது புலப்படுகிறது. ஒரு குழந்தையினிடத்தில் அதன் பெற்றோர்களின் குணங்கள் மட்டுமல்ல, அவர்களது மூதாதையர்களின் குணங்களும் திறமைகளும் அடங்கியிருக்கின்றன என்பதால் இக்கருத்து தோன்றியது. மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று சந்ததி நீடிக்க நீடிக்க அவன் தொடர்ந்து வாழ்வதாக, அமரத்துவம் அடைவதாகக் கருதப்படுகிறது.
இது அனேகமாக எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இத்தகைய அமரத்துவத்தில் சிறப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில், அந்த மனிதன் இறந்த பிறகு சில காலம் அவனது சந்ததியினர் அவனை நினைத்துக் கொண்டிருப்பர், வழிபாடு செய்வர். ஆனால் இது எல்லாராலும் வணங்கப்படும் தேவ நிலையைத் தருவதில்லை.
இரண்டாவது வகை அமரத்வம் சோம பானம் மூலம் அடையப்படுவது.
நாங்கள் சோமனைக் குடித்து அமரத்துவம் அடைந்து விட்டோம், எங்களை எதிரிகள் என்ன செய்ய முடியும்?[ 7]
சோமக் கொடியின் சாறு சோம பானம் எனப்படுகிறது. (இதுபற்றி விரிவாகப் பின்னர் பார்க்கப் போகிறோம்.) இது மனதை விசாலப்படுத்தும் தன்மை உடையது. மனதில் அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியது. இந்த ஆனந்தம் அனுபவிப்பவருக்கு காலம் என்னும் உணர்வு அற்றுப் போவதால் இது ஒரு வகையான அமரத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலையை சோம பானம் இல்லாமல் யோகப் பயிற்சியின் மூலமும் அடைய முடியும். பானத்தின் அல்லது யோகத்தின் விளைவு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் இருக்கும். இந்த நிலையை அடைந்தவர் தன் அளவில் ஆனந்தமாக இருப்பர். மற்றவர்க்கு இதனால் பயன் இல்லை. எனவே இவர்களது அமரத்வம் வணக்கத்துக்குரிய தேவ நிலையைத் தருவதில்லை.
இனி மூன்றாவது வகையான புகழ் மூலம் அடைப்படும் அமரத்வம்.
அவர்கள் புகழ் என்னும் உடையணிந்து அமரத்துவம் அடைகின்றனர்.[8]
வணங்கப்படும் தேவ நிலைக்கு உயர்த்தும் அமரத்வம் என்பது புகழால் மட்டுமே ஏற்படும். புகழ் எப்பொழுது வரும்? செயற்கரிய செய்தால் தான் வரும். அதுவும் பிறர் நலனுக்காகச் செய்தால் தான் வரும். 100 மணி நேரம் ஒற்றைக் காலில் நிற்பது செயற்கரிய செயல் தான். அதனால் பிறர்க்கு நன்மை விளையுமானால் தான் அது உண்மையான புகழுக்கும் அமரத்வத்துக்கும் காரணமாகும். ரிபு சகோதரர்கள் பிறர் நன்மைக்கான பல அருஞ்செயல்கள் செய்தனர். அதனால் பெரும் புகழ் பெற்றனர். ஸவிதாவால் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். தேவர்களுக்குச் சமானமாக ஹவிர்பாகம் பெறும் உரிமையையும் அமரத்துவத்தையும் பெற்றனர் என்று வேதம் கூறுகிறது.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அம்ருதம் உண்டாயிற்று. அதைக் குடித்ததால் தான் தேவர்கள் சாகாநிலை பெற்றார்கள் என்பது புராணம். அம்ருதம் பற்றி ரிக் வேதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மா அம்ருதாத்.
இது ஒரு பிரபலமான மந்திரம். ரிக் 7.59.12 இல் உள்ளது. யஜுர் 3.60 இலும் உள்ளது.
நறுமணமுள்ளவரும் புஷ்டி அளிப்பவருமான முக்கண்ணனை வணங்குகிறோம். வெள்ளரிப்பழம் கொடியிலிருந்து விடுபடுவது போல, நாங்கள் மரணத்திலிருந்து விடுபட அவர் உதவுவாராக. அம்ருதத்திலிருந்து விடுபடாமல் இருப்போமாக.
ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்று சொல்லப்படும் இதை லட்சக் கணக்கான முறை ஜபித்தோரும் ஹோமம் செய்தவரும் இறுதியில் ஒரு நாள் மரணத்தை அடைந்து தானே தீருகிறார்கள் என்ற கேள்வி எழலாம்.
மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். உடல் அழியாமல் வாழும் வரம் அவர்கள் கேட்கவில்லை. அது யாருக்கும் சாத்தியம் இல்லை என்பது அவர்கள் அறியாதது அல்ல. உடல் அழிந்த பின்னும், ரிபு சகோதரர்களைப் போல தேவ நிலை அடைந்து இறவாப் புகழுடன் விளங்க வேண்டும் என்பது இந்தப் பிரார்த்தனையின் பொருள். எல்லோரும் ரிபுக்களைப் போல புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ ஆக முடியுமா? படிப்படியாக மனிதன் தேவ நிலையை நோக்கி முன்னேறுகிறான் என்று வேதம் காட்டுவதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
குறிப்புகள்:
1 – 8.31.9, 10.62.1
2 – 1,164.20, 1,164.30
3 – 2,33.2
4 – 5,63.2
5 – 5.4.10
6 – சதபத பிராமணம்14.6.4.8.16
7 – 8,48.3
8 – 9,94.4
படம் உதவி: http://commons.wikimedia.org/wiki/File:Amitayus,_the_Buddha_of_Eternal_Life_ca_1625_LACMA.jpg
கே.ரவி
தந்தையினும் களிகூரத் தழுவி எங்களைத் தமிழிலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்திய டாக்டர் ஒளவை நடராஜன் போலவே என்னிடமும், சிவத்திடமும் பாசத்தோடு பழகிய இன்னுமோர் இலக்கிய அன்பர், தீபம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த நா.பார்த்தசாரதி.
1960-70 களில், ஓரளவு தமிழ் இலக்கிய ஈடுபாடும், லட்சிய தாகமும் கொண்ட இளைஞர்களிடம் நா.பா.வை ப் போலத் தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர் வேறு எவரும் இருந்திருக்க முடியாது. யதார்த்தத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு ஜெயகாந்தன் என்றால், இலட்சியத்தின் பக்கம் ஈர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு நா.பா.! அவருடைய குறிஞ்சி மலர், பொன்விலங்கு, மணிபல்லவம் ஆகிய நாவல்களால் பாதிக்கப் படாத இளைஞர்கள் அப்போது வெகு குறைவு.
சிவமும், நானும் நா.பா.விடம் நெருக்கமாகப் பழகித் தமிழ் இலக்கியத்தின் பல நுட்பங்களை அவரிடமிருந்து தெரிந்து கொண்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பல பட்டிமன்ற மேடைகளில் அவரோடு கலந்து கொண்டு வாதாடியிருக்கிறோம்.
1971-ல் என்று நினைக்கிறேன், நா.பா. அவர்களுடன் பூனேவுக்கு, (அப்போதைய பூனா) ஓர் இலக்கியக் கூட்டத்தில் உரையாற்ற சிவமும், நானும் சென்றிருந்தோம். பாரதி இளைஞர் சங்கத் தலைவர், பாரதி காவலர் கே.ராமமூர்த்திதான் ஏற்பாடு செய்து எங்களை அனுப்பியிருந்தார். அந்தக் கூட்டத்தில் நா.பா.அவர்கள் ஆற்றிய உரை எங்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியதுடன், கவிதை ரசனையின் புதிய கோணம் ஒன்றைக் கற்றுத் தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தக் கூட்டத்தில் பாரதியின் கவிச்சொல்லாளுமை பற்றிக் குறிப்பிட்ட நா.பா., பாரதியின் கவிச்சொற்கள் முப்பரிமாணச் சொற்கள் என்று சொல்லி விளக்கினார். ‘வெள்ளிப்பனிமலை’, ‘சுட்டும்விழிச்சுடர்’, ‘சோலைமலரொளி’, இப்படிப் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கி வைத்தார். மலை, பனிமலை, வெள்ளிப்பனிமலை, என்று மூன்று அடுக்குகளாகக் காட்சி விரியும் அழகை அவர் விளக்கிய விதம் இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
நா.பா.விடம் நல்ல கவிதை ரசனையும் இருந்தது, கவியூக்கமும் இருந்தது. அது என்ன கவியூக்கம்?
உரைநடையில் ஏதாவது எழுதிக் கொண்டே வரும்போது, திடீரென்று ஓர் உந்து சக்தியால் ஊக்கப் பெற்றுச் சிந்தனையின் முயற்சி இல்லாமலேயே சொற்கள் ஜிவ்வென்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கிவிடும். ஆங்கிலத்தில் இதை ‘flight’ என்றே குறிப்பிடுவார்கள்.
உரைநடையில் நான் அதிகம் எழுதியிராத போது, 1980-ல் என்று நினைக்கிறேன், சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்காக பாரதியின் மீது ‘கானப் பறவை’ என்ற தலைப்பில் ஓர் ஒலி-ஒளிச் சித்திரம் எழுதினேன். உரைநடையாக எழுதிக் கொண்டே வந்த போது, என்னையறியாமல் பல இடங்களில் மேற்சொன்னவாறு சொற்கள் சிறகடித்துப் பறந்ததை நான் அனுபவித்தேன். அதைப் படித்துப் பாராட்டித் தேர்வு செய்த தொலைக்காட்சி அதிகாரி, திரு எம்.எஸ்.பெருமாள் (நம்ம சுகி சிவத்தின் மூத்த சகோதரர்), தம் பரிந்துரையில் பல இடங்களைக் குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று: “கவிதை வெறும் ஆற்றல் இல்லை, அதுவோர் ஆற்றாமை”.
நா.பா.வின் புதினங்களில் இப்படிப்பட்ட இடங்கள் விரவியிருக்கும். “தின்பதற்காக மட்டுமன்றித் தின்னப் படுவதற்காகவே அமைந்த பற்கள்” போல பல உதாரணங்கள் சொல்லலாம். அதையும் தாண்டி, அவருடைய உரைநடைப் புதினத்தில் திடீரென்று செய்யுள் நடையில் ஓரிரண்டு வரிக் கவிதைகளே வந்து விழுவதும் உண்டு. “முத்துநகை பூத்த முகம்” என்ற ஈற்றடியோடு மணிபல்லவத்தில் கனஜோராக வந்து குந்தியிருக்கும் வெண்பாவைச் சொல்வேனா? இல்லை, “சொல்லிவிட்ட பழமையெல்லாம் சீர்திருத்த முன்வந்தான், புல்லரித்து மனம்வாடிப் போகின்றான் போகின்றான்” என்று பொன்விலங்கில் இடம்பெற்ற உணர்ச்சி வரிகளைச் சொல்வேனா? இல்லை, “நிலவைப் பிடித்துச் சில கரைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம், தரளம் மிடைந்து ஒளி தவழக் குடைந்து இரு பவளம் பதித்த இதழ்” என்று குறிஞ்சி மலரில் சந்தம் மிடைந்து சுவை யூறிக் கலந்து மணி யாகத் தெறித்த வரி வந்த அழகைச் சொல்வேனா?
கல்கி தொடங்கிய இந்த உத்தியை நா.பா. மிக அழகாகத் தம் புதினங்களில் பயன்படுத்தியிருந்தார்; புதினம் என்ற பூங்காவில் புதுவெள்ளம் போல் பொங்கிவந்த கவிதைப் பெருக்கு, வாசகர்களைத் திக்கிமுக்காடச் செய்தது.
ஆனால், புதினங்களில் இடம்பெற்ற உன்னதக் கவிதை வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு அவற்றையெல்லாம் நீட்டி முழுக் கவிதைகளாக்கி அவர் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அந்தக் கவிதை நீட்டல்களில் ஆரம்ப வரிகளின் ஜீவன் இல்லை. அந்த உணர்ச்சி வேகம் இல்லை. வெறும் சிந்தனை முயற்சியாகவே அந்தக் கவிதைகள் இருந்தன. படித்துவிட்டுச் சலித்துக் கொண்டேன்.
அவரைச் சந்தித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒருநாள் அவர் இல்லத்திலேயே நடந்த கவியரங்கத்தில் நான் கலந்து கொண்டேன். கவிஞர்கள் சொன்ன கவிதைகளை ரசித்துக் கேட்டுவிட்டு அவர் ஒரு சிற்றுரையாற்றினாரே தவிர ஏதும் கவிதை படிக்கவில்லை. கவியரங்கம் முடிந்த பிறகு மெல்ல அவர் அருகில் சென்று ‘நீங்கள் ஏன் கவிதை படிக்கவில்லை’ என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்.
‘நீதான் என் கவிதைத் தொகுப்பைப் படித்துவிட்டு வெறும் சிந்தனை முயற்சி கவிதையாகுமா என்று விமர்சனம் செய்தாயே. அது என் மனத்துக்குச் சரியென்று பட்டது. இன்ஸ்பிரேஷன் வராமல் கவிதை எழுதுவது இல்லை என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு உள்ளூக்கமே வரவில்லை, கவிதையும் எழுதவில்லை’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார். நான் எப்பொழுது அந்த விமர்சனத்தை அவர் செவிபடச் சொன்னேன் என்று இன்றுவரை ஞாபகம் வரவில்லலை. ஆனால், அவருடைய பெருந்தன்மையால் வாயடைத்துப் போய் அப்போது ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வந்து விட்டேன். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவே இல்லை.
என்ன சிகாமணி! கவனித்தாயா, கவிதையின் கதை எங்கே போகிறது? நீ ரொம்ப அலட்டிக் கொண்டால் கவிதை வராதுங்காணும். நான் மட்டுமா சொல்கிறேன். காலேஜ் பிரின்ஸிபலே சொல்லிவிட்டார் அப்பா.
ஆம், வ.வே.சுவும் மிக அழகாகக் கவிதையிலேயே இதைச் சொல்லிவிட்டார். அந்த வரிகளை நான் வேத வாக்காகவே மதிக்கிறேன்.
“—— ——- ——– —- —– ——– வெறும்
புத்தியைக் கொண்டு புனைகின்ற கவிதைகள்
பூஜைக்குச் சேர்வதில்லை — கவி
ஒத்திகையில் கொஞ்சம் பக்தி சேராவிடில்
உள்ளம் தொடுவதில்லை.”
சிகா ஏதோ சொல்ல வாயெடுத்தான். நான் குறுக்கிட்டு, ‘மனோன்மணி எங்கே?’ என்றேன்.
‘என்ன ஓய், விவரம் புரியாத வைதிகமாயிருக்கிறீர், எப்பப் பார்த்தாலும் நான் வேறு, மனோன்மணி வேறு என்றே நினைக்கிறீர்! என் பெயரென்ன?’ என்று கேட்டான்.
‘சிகாமணி; புத்தி சி கா ம ணி’ என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்லிவிட்டு அவனை உற்றுப் பார்த்தேன். அடாடா! ஒரே கணத்தில் என் நோக்கு விரிவு பெற்றது. கண்டறியாதன கண்டேன். ஆம், சிகாவும், மனோன்மணியும் கலந்த அர்த்தநாரியாக, மாதொருபாகனாக, சிகா-மணியாக என்னெதிரே அவன் விஸ்வரூப தரிசனம் காட்டி மறைந்தான். தரிசனத்துக்குப் பிறகு உடனே எதுவும் சொல்ல வார்த்தை வருமா? பிறகு சந்திக்கிறேன்.
(தொடரும்)
கார்த்திகேயன்
கேள்வி : 1
என்னுடைய வயது 26. 15 வயதிலேயே என் பெற்றோர் இறந்து விட்டனர். என் உறவினர் வீட்டில் வளர்ந்து கல்லுரி படிப்பு வரை முடித்தேன்.எப்போதும் நான் தனி அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பேன். யாரிடமும் பேச மாட்டேன் என்னை குடும்பத்திலே ஒரு சிலர் அன்னியர் போல பாவிக்கின்றனர். இதனால் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லை பாதுகாப்பு உணர்வும் இல்லை. என் மேல் பிரியமாக இருந்த என்னுடைய தாத்தா ஒரு வருடத்திற்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். அதிலிருந்து எனக்கு மாரடைப்பு புற்று நோய் வந்து விடுமோ என்ற பயம் வந்தது. டாக்டரிடம் போனேன் அவர் என் பயத்தைப் புரிந்து கொண்டு எல்லா சோதனைகளையும் செய்து விட்டு , எனக்கு உடல் ரீதியாக எந்த கோளாறும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனாலும் எனக்கு பயம் நீங்கவில்லை. நான் பயம் இன்றி வாழ்வது எப்படி?
பதில்
எப்போதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் நீங்கள் அனாவசிய பயத்திற்கு உள்ளாகிறீர்கள். மற்றவர்கள் நம்மிடம் எப்படிப் பழகுகிறார்கள் என்பது நாம் எப்படி மற்றவர்களிடம் பழகுகின்றோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. நீங்கள் அன்பாக மற்றவர்களுடன் பழகி அவரவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தால் உங்களை யாரும் அன்னியராகப் பார்க்க மாட்டார்கள். உங்கள் மேல் பிரியமாக இருந்த தாத்தாவைப் பற்றிய எண்ணம் சுழன்று கொண்டிருப்பதால் நீங்கள் அதிகமாக யாருடனும் பேசாமல் ஒரே அறையில் முடங்கிக் கிடப்பதாலும் உங்கள் தாத்தாவின் இறப்பிற்குக் காரணமான மாரடைப்பு நோய் பற்றி நீங்கள் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்கள். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட நோயைப் பற்றி அதிகமாக யோசிக்கும் போது நமக்கே அந்நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்கின்ற பயம் ஏற்படுவது இயல்பு தான். இன்னமும் சொல்லப் போனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களே கூட பேத்தாலஜி எனப்படும் நோயியல் பாடம் படிக்கும் போது அதில் சொல்லப்படுகின்ற நோய்கள் நமக்கும் இருக்கின்றனவா? என்ற குழப்பத்திற்கு உள்ளாவதுண்டு. எனவே கவலையை விடுங்கள் எல்லோரிடமும் கலந்து பேசிப் பழக ஆரம்பியுங்கள் வாழ்க்கை முடங்கிக் கிடப்பதற்கு அல்ல.
கேள்வி : 2
என்னுடைய பையனுக்கு தற்போது வயது 8 ஆகிறது. இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பிற்குச் செல்கிறான். வீட்டில் அமைதியாக இருப்பான். ஆனால் நண்பர்கள் உறவினர் வீட்டிற்கு செல்லும் போது அங்குள்ள பொருட்களை எடுத்து விளையாடச் செய்கிறான் பெரும்பாலும் உடைத்து விடுகிறான் அவன் செயலை தடுக்க முற்பட்டால் ரொம்ப அடம் பிடிப்பான் இதனால் நான் பெரும் மன வேதனை அடைகிறேன் அவனை எப்படி கட்டுப்படுத்துவது?
பதில் : 2
இந்த பிரச்சனைக்காக நீங்கள் அதிக கவலைப்பட வேண்டியதில்லை. 8 வயது மகனிடம் உங்களின் மனப்பக்குவத்தை எதிர்பார்க்கக் கூடாது. சிறுவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களைப் பக்குவமாகத் திருத்த வேண்டும். அது எளிது.
வீட்டில் அவன் அடங்கி இருப்பதால் அவன் மனதளவில் அடங்கி இருக்கிறான் என்று அர்த்தம் இல்லை. வீட்டில் பொருட்களை உடைத்தால் அடி கிடைக்கும் என்று அவன் தண்டனைக்கு பயந்து அடக்கமாக இருக்கிறான். வெளியே சென்றால் வீட்டில் செய்ய முடியாததைச் செய்யலாம் என நினைக்கிறான். அங்கே நாகரீகம் கருதி அவனை தண்டிக்க முடியாது என கருதுகிறான். ஒரு வேளை நீங்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனையால் உங்களைப் பழிவாங்கும் எண்ணத்தில் இப்படி பிள்ளையை வளர்த்து வைத்திருக்கிறாளே என்ற குறை உங்கள் மீது விழட்டும் என்று கூட அவன் இதைச் செய்யலாம். உங்கள் மகனிடம் அடக்கம் ஒடுக்கமாக இருப்பது நல்ல பண்பு வீடு, வெளி இடங்களுக்கு எங்கு சென்றாலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்று பக்குவமாக எடுத்து கூறுங்கள். அவனை மிரட்டாமல் ஏன் பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை அமைதியாக விளக்கி என்பதையும் அடுத்த வீட்டிற்கு போய் பொருட்களை உடைப்பதால் அவர்களுக்கும் நமக்கும் ஏற்படும் சிரமங்களையும் உணர்த்துங்கள். இந்தக் குறையை வளர விடாமல் இப்போதே சரி செய்து விடுங்கள்
கேள்வி : 3
என் வயது 40. சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பெரிய பதவியில் இருக்கிறேன். எனக்கு பணம்பெரிய விஷயமில்லை. நான் பாசத்திற்காக ஏங்குபவள். எனக்கு பாதுகாப்புக்கு இருக்கும் ஒரே ஜீவன் என் தாய் .அவருக்கு 65 வயது. நான் இவ்வளவு பெரிய நிலைக்கு வருவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள் ஏராளம். நான் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னை இழந்து விரக்திக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்த போதெல்லாம் என் மீது ஒரு சுடு சொல் கூட பேசாமல், கண்னை மூடி ஆதரித்து ஏற்றுக் கொண்டு என்னை ஆளாக்கிய என் தாய் இப்போது மறதியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அரை மணி நேரத்திற்கு முன்பு சொன்னதை கூட மறந்து விடுகிறார். பொருட்களை வைக்கும் இடத்தை மறந்து விடுகிறார். எதிலும் விருப்பம் இல்லாமல் யாரிடமும் பேசாமல் இருக்கிறார். சொந்தமாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரின் இறுதி காலம் வரை அவரை ஒரு குழந்தை போல் வைத்து பராமரிக்க விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் : 3
உங்கள் தாய் மீது பேரன்பு வைத்திருக்கிறீர்கள். மறதி நோய்க்கு சிறந்த மருந்து அன்பு காட்டுதல் தான்.அதுவே உங்களிடம் அதிகம் இருப்பது உங்கள் அம்மாவுக்கு பலம்.தொடர்ந்து எக்காரணம் கொண்டும் அந்த பாசத்தில் குறைவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிக்காட்டும் பாசம் அவரால் உணரப்பட வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்கது. அவரால் என்னென்ன வேலையைச் செய்ய முடியும் என்பதை பகுத்து உணருங்கள். செய்ய முடியும் என்கின்ற வேலையை அவர் செய்யட்டும் முடியாததை வற்புறுத்த வேண்டாம். தினமும் அவரிடம் பொறுமையாகப் பேசுங்கள். அவர் சொல்வதை எல்லாம் கேளுங்கள். கோபம் கொள்ளவோ எதிர்த்துப் பேசவோ வேண்டவே வேண்டாம். அவரது மறதியை குறையாக வேறு யாரிடமும் பேசி விடக்கூடாது. அப்படி நீங்கள் பேசி அவர் காதில் விழுந்தால் மறதி நோய் போய் அதிகப்படவே செய்யும். அவரது நினைவாற்றலை பரிசோதிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். வயதுக்கு ஏற்ற உணவை சரியான நேரத்தில் வழங்கி விடுங்கள். அவரது விருப்பங்களை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். தனியாக எங்கேயும் விட வேண்டாம். இவை அனைத்தும் பொதுவான பராமரிப்பு விசயங்கள். மேற்கொண்டு குறிப்பிட்ட விசயங்களுக்கு ஆலோசனை தேவைப்பட்டால் நேரடியாக அணுகுங்கள்.
கவிஞன் என்பவன் யாரடி?
காணும் இலக்கணம் கூறடி !
கலைஞனும் அவனும் ஒன்றடி
அலையெனும் படைப்புகள் காணடி
கவிதைப் படைப்பவன் கவிஞன் தான்
கவிதைப் படிப்பவன் கவிஞன் தான்
கவிதை கொடுப்பவன் கவிஞன் தான்
கவிதை ரசிப்பவன் கவிஞன் தான்
மொழியை மதிப்பவன் கவிஞன் தான்
மொழியில் மிதப்பவன் கவிஞன் தான்
கலையைக் களிப்பவன் கவிஞன் தான்
கலையைக் காப்பவன் கவிஞன் தான்
எளிமைப் படைப்பினில் கவிஞன் தான்
இனிமைப் படைப்பதும் கவிஞன் தான்
வலிமை வரிகளும் கவிஞன் தான்
வாழ்த்தி இசைப்பதும் கவிஞன் தான்
வடிவம் பலவும் அவனெடுப்பான்
அதனுள் இருப்பதை அனுபவிப்பான்
அனுபவந் தானதில் வரிசமைப்பான்
வரிகளில் பாடல்கள் பிரசவிப்பான்
காலம் அவனுக்கு கைகூலி
தனிமை அவனுக்கு பொன்வேலி
காற்று அவனுக்கு இசைக்கூடம்
கற்பனை அவனுக்கு விசைக்கூடம்
அறிந்தாயானால் அவன் வெளிச்சம்
அல்லவென்றால் நீயிருட்டு
பழகப்பழக அவன் புதையல்
விலகவிலக உனக்கிழப்பு
எழிலைப் பார்த்து அவனாக்கம்
ஏழ்மைப் பார்த்து அவனேக்கம்
இன்னும் ஐயம் தெளியவில்லை?
என்றால் நீயும் வளரவில்லை
தொட்டு பார்த்தா தீயென்பாய்
கட்டிப் பார்த்தா கனலென்பாய்
குதித்து பார்த்தா கடலென்பாய்
கடித்து பார்த்தா கல்லென்பாய்
நிமிர்ந்து பார்க்கையில் களிறென்பாய்
நடந்து பார்க்கையில் புலியென்பாய்
கலந்து பார்க்கையில் மதுவென்பாய்
வியந்து பார்க்கையில் விண்னென்பாய்
கோள்கள் ஆயிரம் இருந்தாலும்
அதிலே புவிபோல் வாழ்வுண்டோ
படிப்பும் பதவியும் பெற்றாலும்
வாழ்த்தாதிருப்பதில் வாழ்வுண்டோ
மொழியை வளர்ப்பவன் நீயாயின்
மொழியின் படைப்பினை ரசிக்காமல்
மனிதரை பார்த்து புகழுரைத்தால்
மறைமுக மான அசிங்கமிது.
கொடுக்கும் மேகத்தை பழிக்காதே
ஆடும்மயில் திசை பொழியுமது
கெடுக்கும் மமதையில் இருக்காதே
ஆடும்வரையது அழிக்குமது!