முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 8
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)
படக்கதை – 8
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்
+++++++++++++++
1974 இல் தொடங்கி 1975 இல் நான் வால்மீகி முனிவரின் ராமாயணத்தை ஆங்கிலத்தில் ஈரடிப் பாடல்களாகச் சிறுவர்க்காக எழுதி முடித்தேன். முதலில் சுமார் 1000 பாடல்களில் கதை முடிந்தது, முக்கியமான சில்வற்றை நீளம் கருதியும் அது சிறுவர்க்கானது என்பதாலும் அதில் சேர்க்க்காதிருந்தேன். ஆனால் அவற்றைச் சேர்க்க நினைத்துப் பெரியோர்க்கானதாக மாற்றி எழுதியதில் அது 1789 பாடலகளாக உருக்கொண்டது. அப்போது நான் மைய அரசுப் பணியில் இருந்ததால், Fair copy யைத் தட்டெழுத நேரம் கிடைக்கவில்லை. ராமரின் பட்டாபிஷேகம் வரையிலான கதை மட்டுமே அதில் அடக்கம். வண்ணான் ஒருவனின் பேச்சைக் கேட்டு மதி இழந்து ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என் சிறு வயதிலேயே சம்மதமற்ற ஒன்றாக இருந்ததால் கதையைப் பட்டஞ்சூட்டு விழாவுடன் நிறுத்தினேன். ராஜாஜி அவர்களின் ஆங்கிலப் படைப்பின் அடிப்படையில் இது எழுதப்பட்டது. ஒரு முனிவரின் படைப்பை மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லாததாலும், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்ட கதை பிடிக்காததால், அதைத்தான் நாம் சொல்லப்போவதில்லையே என்கிற சமாதானத்திலும், ராஜாஜியே வால்மிகியைத் தழுவி எழுதியிருக்கும் போது நான் செய்தால் என்ன என்கிற எண்ணத்தாலும் அதைத் தழுவியே படைக்க முற்பட்டேன்.
கணிப்பொறி வாங்கிய பிறகு அதனை மீண்டும் தட்டெழுதினேன். அதன் வெளியீட்டுக்கு இப்போதுதான் வேளை வந்துள்ளது. Cyberwit Net எனும் பதிப்பகம் அதை வெளியிட முன்வந்துள்ளது. விரைவில் அது வெளியாகிவிடும்.
அன்புடன்
ஜோதிர்லதா கிரிஜா
–பிரசாத் வேணுகோபால்.
உறவுகளுக்கு வணக்கம்.
யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.
வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
வெண்பாவிற்கான ஈற்றடியாக “போதுமப்பா ஆளை விடு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 11 வெண்பாக்கள் வந்துள்ளன. அவை:
___________________________________________________
[1]
சாதுபோல உள்நுழைந்தான் சாமான்யன் என்நெஞ்சில்
சாத்திரங்கள் நானறிந்தேன் சங்கடங்கள் ஏதுமில்லை
போது(ம்)கண்ணன் எண்ணமதே; போதனைகள் தேவையில்லை
போதுமப்பா ஆளை விடு.
– பிரசாத் வேணுகோபால்
[2]
எத்தனைதான் கேட்டாலும் எத்தனைப்போல் ஏய்த்துநிற்கும்
பித்துக்குளி பேச்சுனது பித்தராக்கும் கேட்பவரை
சாதுவாம் என்னையும்நீ சண்டியராய் மாற்றாதே
போதுமப்பா ஆளை விடு
– பிரசாத் வேணுகோபால்
[3]
நாலு வரிவெண்பா நானெழுத ஆசைபட்டு
நாளெல்லாம் யோசிச்சி நானெழுதிப் போட்டாக்க
போதுபோ(து) என்று தலைவலி தான்லாபம்
போதுமப்பா ஆளை விடு.
– பிரசாத் வெணுகோபால்.
___________________________________________________
[4]
எனதப்பா கண்டுவிட்டால் என்னுடனே உன்னை
கணம்தப்பா துன்னை கொலைசெய்வார் அஃதில்
எனக்கேதும் சந்தேகம் இல்;அதனால் ஓடிவிடு
போதுமப்பா ஆளை விடு.
– நடராஜன் கல்பட்டு (திருத்தம்: பிரசாத் வேணுகோபால்)
___________________________________________________
[5]
தளைதட்டும் வெண்பா தவறுதான், ஆனால்
களைகட்டா விட்டாலோ குற்றம்; -இலையிலிட்ட,
சாதமப்பா தேடப்ர சாதமப்பா , தொல்காப்யம்
போதுமப்பா ஆளை விடு
– கிரேசி மோகன்
___________________________________________________
[6]
மண்வெட்டும் வேலையில் மத்திய வேளையில்
கண்கட்டக் கச்சிதமாய் ‘நண்பரே – பண்ணிரண்டு
தாருமப்பா’ என்றவுடன் பன்னிரண்டு பாடிவைப்பார்;
போதுமப்பா ஆளை விடு
– துரை ந. உ.
___________________________________________________
[7]
நீரோட்டம் போல்வெண்பா நெய்கின்ற அண்ணாரே
தேரோட்ட வெண்பா திரள்கிறதே — சாரேநான்
மோதுதற்காய் இங்கே முனையவில்லை; ஆகவே
போதுமப்பா ஆளை விடு.
– ஹரிகிருஷ்ணன்
___________________________________________________
[8]
வீட்டுக் கடன்,வெளி நாட்டுக் கடன்,தனி,
ஈட்டுக் கடன்,வா கனக்கடன் – கூட்டியென்
காது கருகக் கடன்காரன் ஆக்காதே
போதுமப்பா ஆளை விடு.
– அண்ணாகண்ணன்
___________________________________________________
[9]
அரசியலைச் சூதாட்டம் ஆக்கிடும் செல்வர்
தரணியைச் சீர்குலைப்பர் தாமாய் – உரிமையென
வேதனை தந்திடும் வீணான சூதாட்டம்
போதுமப்பா ஆளை விடு.
– சி. ஜெயபாரதன்
[10]
ஏதப்பா காதலிந்த ஏழமை வாழ்க்கைதனில் ?
மாதப்பா தோல்வியில் மாள்வது ! – வேதனை
மோதுமப்பா காதலர்க்கு ! மோகக் கனவுகள்
போதுமப்பா ஆளை விடு !
– சி. ஜெயபாரதன்
___________________________________________________
[11]
கண்ணே மணியே கவின்மலர்க் காதலியே
கண்கவர் ஓவியமே என்னுயிர் நீயென்ற
பொய்யுரை கேட்டு மயங்காத பெண்ணுண்டு
போதுமப்பா ஆளை விடு.
– தேமொழி
___________________________________________________
அடுத்து வரும் ஈற்றடி: “புதன்காலை எட்டு மணி”
ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.
நன்றி.
பிரசாத் வேணுகோபால்
நன்றி, படம் உதவி: http://8tracks.com/
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–
உள்ளே புகுந்த, ஒருதுளி விந்துக்கு,
பிள்ளை வடிவம் பெறவைப்போன், -கள்ளன்,
பரிட்சித்தை கர்ப்பப், பரிசோ தனைசெய்,
அரிச்சித்தம் ஆரறிவா ரோ….(180)
உண்டி உடமைக்(கு), உகந்தோடி உச்சித்தேன்,
நொண்டி முடமாய் நசிப்பீரே, -பண்டையில்,
ஆலில் மிதந்த, அனந்த பதுமநாபன்,
காலில் விழுவீர் காப்பு….(181)
உதவிக் கரம்நீட்டி, உய்யவழி காட்டி,
கதவைத் திறந்திடும் கண்ணா, -பதவிப்,
புகழாசை விட்டுனது, பண்டரிவாழ் வீட்டில்
திகழ்வேனோ தூணில் துரும்பு….(182)
வானரம் ஆயிரம், சூழ இலங்கைக்குப்,
போனராமன் கட்டிய பாலத்தில், -ஏநரா!,
ஏறிக் கடக்க, எதிர்கரையில் தெய்வமாய்,
மாறிடச் செய்யும் மூலம்….(183)
வான்முகடு மீறி, வளர்ந்திறங்கி மாபலிக்,
கோன்முகடு தொட்டக் குறளுருவே, -தேன்முகடு,
ஏறத் தவித்திடும்,ஏழை எனக்கருளை,
கூறையைப் பிய்த்துக் கொடு….(184)
வாழை யடிவாழை, வந்தோர் வளத்துடன்,
வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள், -ஏழை,
சகாயா ஏ!பாண்டு, ரங்கா என்னுள்,
புகாயோ புகல்வாய் பதில்….(185)
————————————————————————————————-
பவள சங்கரி
வாழ்நாள் வல்லமையாளர் விருது பெற்ற ஐயா திரு ப. முத்துக்குமார சாமி அவர்களுக்கு வல்லமையின் பாராட்டுகள்.
திரு. ப. முத்துக்குமார சுவாமி அவர்கள் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலும், தருமபுரம் பல்கலைக் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். அரசுப் பணியிலிருந்து 1993 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். ஆன்மீகம், சுய முன்னேற்றம், திறனாய்வு இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், இதழ் தொகுப்புகள், அறிஞர்களின் வாழ்வியல், சரிதை நூல்கள், உலக அறிஞர்களின் பொன்மொழித் தொகுப்புகள் என நூறு நூல்களை தமிழுக்குத் தந்தவர்.
1972 இல் ‘கவியரசர் கண்ணதாசன் கவிதைகள் ஒரு மதிப்பீடு’ என்ற திறனாய்வு நூலுக்கு மாநில அளவில் முதர்பரிசினைப் பெற்றவர். வேளாண் விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது வாழ்வியல் சரிதைகளையும், வேளாண் துறை ஆய்வுகளையும் விளக்கிப் படைத்த இவரது நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் விரிவான அணிந்துரை வழங்கி பாராட்டியுள்ளார். 2004 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான முதற் பரிசினையும் , திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் முதற் பரிசும், விருதும், மலேசியா நாட்டின் அபூர்வாஸ் நிறுவனத்தின் 2005 ஆம் ஆண்டின் நிறுவன நாள் விருதும், 2008 ஆம் ஆண்டு சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் சிறந்த நூலுக்கான விருதும், 2009 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சான்றோர் விருதும், 2011 ஆம் ஆண்டு தில்லி தமிழ்ச் சங்கத்தின் விருதினையும் பெற்றவர்.
எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழுக்கும் , சைவத்திற்கும், நாட்டு விடுதலைக்கும் நாயகனாக முன்னின்று நாளெல்லாம் உழைத்து, பொருளெல்லாம் இழந்து, புகழ் சேர்த்த கப்பலோட்டிய தமிழன் என்று வையகமே பாராட்டும் வ.உ. சிதம்பரனாரின் வம்சாவளிப் பெயரன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சு. ரவி
ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.
“ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.
பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷ்த்துக்களும், புராணங்களும் சொல்லியதை விட அற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;
ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய மேன்மை;
இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.
பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின்
உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி
ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது.
கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.
நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.
திண்டிவனத்துக்கு அருகே ஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது. சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும் நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.
முகாம் வந்த இடத்தின் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்து கொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போது மாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,
” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.
அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.
நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும், உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும், யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..
கோட்டோவியங்களாக…
ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:
1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.
வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.
ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.
2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில் பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில் ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம் இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.
ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப்பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.
சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.
” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான் மாற்றுரைதிருப்பார்” என்று விளக்கி உள்ளார்.
மஹான்கள் பார்வையே தனி.
அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.
” பவ சங்கர தேசிக மேசரணம்! “
–பிரசாத் வேணுகோபால்.
உறவுகளுக்கு வணக்கம்.
யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது.
வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) பலரும் வெண்பா எழுதக் கற்றவர்கள். இப்போதைக்கு அவர்கள் எப்போதாவது வெண்பா எழுதி வருகிறார்கள். அவர்களை அடிக்கடி எழுதத் தூண்டும் வகையில் ஈற்றடிகள் தரப்பட்டு ஒவ்வொரு நாளும் ஓர் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அவ்வாறு எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து இங்கு அனைவரும் படித்து மகிழ வல்லமை மின்னிதழில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
வெண்பாவிற்கான ஈற்றடியாக “என்னோடு நீவந்து இரு” வழங்கப்பட்டதில் எட்டுப் பேர்களின் 12 வெண்பாக்கள் வந்துள்ளன. அவை:
சி. ஜெயபாரதன், கனடா:
உன்னோடு வாழ்வேன் ஒருதுணையாய், கண்மணியே
பொன்முகம் தாய்மையில் பொங்கிடும் – அன்னை நீ
உன்னருகில் நானுதவ உள்ளதே, என்னில்லம்
என்னோடு நீவந் திரு.
_______________________________________________
பிரசாத் வேணுகோபால்:
[1]
எண்ணற்ற ஆசையினால் இங்குபலர் அல்லலுற
எண்ணத்தை உன்பாலே ஏற்றியிங்கு வாழ்பவர்க்கு
எந்நாளும் நன்னாளே என்றுணர்ந்தேன் நான்முகனே
என்னோடு நீவந்து இரு.
[2]
காலங்கள் மாற கருத்துகள் மாறலாம்இக்
கோலத்தை நன்குணர்ந்து; கொள்ளும் மனப்பாங்கே
என்றென்றும் நான்விட்டு எளியேனாய் வாழ்ந்திருக்க
என்னோடு நீவந்து இரு.
[3]
தன்னையும் தன்எதிரி தன்னையும் மாய்த்துவிடும்
வெஞ்சினம் கொன்றழிக்கும் வெற்றிவஜ் ராயுதமே
என்றும் பெருமை எனக்களிக்கும் நல்பொறையே
என்னோடு நீவந்து இரு.
_______________________________________________
துரை.ந.உ.:

[1]
என்னையழித்(து) உன்னை வளர்த்தேனே; பின்னாளில்
உண்மைமறந்(து) என்னைத் துறந்தாயே – தன்இடத்தை
இன்றிழந்த என்கண்ணே, வாமுதியோர் இல்லத்தில்
என்னோடு நீவந்(து) இரு.

[2]
உன்ஓடு நானென்(று) இருந்ததும் வாழ்வினில்
என்ஓடு நீயென்(று) இருந்ததும் வீழ்ந்ததே
உன்னோடு நான்வந்(து) இருப்பேன்; இனியாவ(து)
என்னோடு நீவந்து இரு.
_______________________________________________
கிரேசி மோகன்:
திங்கள் முகத்தவளே, தித்திக்கும் செவ்வாயே,
தங்கபுத னாய்வந்த தேவியே, -சங்கரன்,
தன்னோடு பின்னிய தாயே, குருவாக,
என்னோடு நீவந்து இரு.
_______________________________________________
தேமொழி:
[1]
கன்னல் மொழிகொண்டு கற்கவே, சிந்தைமகிழ்
இன்னிசைப் பண்கள் இசைத்திடவே – என்னுயிரே
உன்புகழ் பாடிடவே சங்கத் தமிழமுதே
என்னோடு நீவந்து இரு.
(திருத்தம்: அண்ணாகண்ணன்)
[2]
கன்னல் தமிழ்மொழியில் கற்பனைச் சாறெடுத்து
இன்னிசையில் பண்கள் இயற்றிடுவோம் – மின்வலையில்
உன்புகழ் மேவ உலகெலாம் செந்தமிழே
என்னொடு நீவந் திரு.
(திருத்தம்: ஜெயபாரதன்)
_______________________________________________
அண்ணாகண்ணன்:
இல்லை ஒருசொந்தம் என்றே வருந்தாதே
எல்லாம் இழந்தேனென்று ஏங்காதே இங்கேவா
என்னவுண்டோ சேர்ந்துண்போம் இன்பக் கதைவளர்ப்போம்
என்னோடு நீவந்து இரு.
_______________________________________________
தமிழ்த்தேனீ:
கன்னிமா டம்தன்னில் கன்னிநான் காத்திருந்தேன்
என்னுயிரின் பாதியே ஸ்ரீராமா – கண்ணோடு
கண்ணோக்கிக் காதலினைத் தந்தாய், களிபெருக
என்னோடு நீவந்து இரு.
_______________________________________________
ஹரிகிருஷ்ணன்:
மூட்டை பிரிச்சா முழுங்கலாம்; தீத்துடலாம்.
ஓட்டையெண்ணு தோசைல ஒய்ங்காக — சேட்டைக்கோர்
அன்பா பிரசாத்தா ஆஞ்சாட்டு* அப்புறமா
என்னோடு வந்தே இரு.
*ஆஞ்சாட்டு: மம்மம் சாப்பிட்டுவிட்டு.
_______________________________________________
அடுத்த ஈற்றடி: போதுமப்பா ஆளை விடு
களத்தில் இறங்குங்கள், தூள் கிளப்புங்கள்
ஆர்வமுள்ள நண்பர்கள் வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com/forum/#!forum/vallamai) இணைந்து பங்கேற்கலாம்.
நன்றி.
பிரசாத் வேணுகோபால்
கோத்தா கினபாலு, மலேசியா

விண்ணில் பறந்துவந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இங்குள்ள ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தின்மீது பூமாரி பொழிந்து பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தின.
பக்தர்கள் கோயில் வளாகத்தில் புடைசூழ்ந்து இந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தனர்.
கடந்த ஞாயிறன்று இக்கோயிலில் மூன்றாம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது.
சுமார் 100 கிலோ பூக்கள் ஹெலிகாப்டரிலிருந்து தூவிவிட, அவை பூமரியாகப் பொழிய, பக்தர்கள் அப்பூக்களைப் பிடித்து மகிழ்ச்சி அலையில் மூழ்கினர்.
விண்ணிலிருந்து தேவர்கள் பூமாரிப் பொழிவதுபோல் அக்காட்சி பிரம்மிக்கவைத்தது.
இதற்கு முன்னர் ஸ்ரீமுத்துக்குமார சிவாச்சரியார் அந்த ஆலயத்தின் உச்சிக் கலசத்தில் திருக்குட நன்னீராட்டி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.
சுமார் எண்ணூறு பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ பசுபதினாதரின் அபிஷேக நீரில் நனைந்து அருளைப்பெற்றனர்.
சாபா மாநிலத்தின் சண்டாகான், தாவாவ் நகரங்களிலிருந்தும், லாபுவான் தீவு, தீபகற்ப மலேசியாவிலிருந்தும் பக்தர்கள் இந்நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சாபா மாநில அரசு இரண்டு லட்சம் ரிங்கிட் மான்யம் வழங்கியது. இத்தொகையை முதலமைச்சர் சார்பில் சாபா சிறப்புப்பணி அமைச்சர் டத்தோ தியோ ச்சி காங் நேரில் வழங்கினார்.
மேலும், சாபா மாநில மஇகா தலைவர் டத்தோ வி. ஜோதி ஐம்பதினாயிரம் ரிங்கிட்டை இக்கோயிலுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து கூடுதலாகப் பெற்றுத் தந்தார்.
ஸ்ரீபசுபதிநாதர் ஆலயத்தலைவர் டத்தோ டாக்டர் க. மாதவன் மாநில அரசுக்கு கோயில் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பிறசமய இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கிரேசி மோகன்

கண்னன் திருப்புகழ்(வெண்பா)….
——————————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————
தடையற்ற ராதை, இடைபற்றி வாழும்,
இடவத்துப் பாதிமுகில் வண்ணா, -இடையினத்தா,
அள்ளக் குறையாத, தெள்ளுதமிழ் வெண்பாக்கள்,
வெள்ளமாய்ப் பாய்ந்தோட வா….(174)
தயிர்வெண்ணை உண்டு ,தளதள வென்று,
மயிற்பீலி சூடிநிற்கும் மன்னா, -வெயிற்கால,
தாகமாய் தொண்டையில், சோகம் அடைக்குது,
மோகமா! மோட்சமா! சொல்!….(175)
திகட்டும் அளவு, திரவியம் தந்தாய்,
புகட்டிய நஞ்சை புசித்தாய், -நகத்தால்,
உரித்தெறிந்த உற்சாகம், இன்றெங்கு போயிற்று
தரித்திர நாராயணா வா….(176)
தீக்குள் தகிப்பாய், துளிநீரில் தாகிப்பாய்,
காய்க்குள் கனிவாய் கொடியமனப், -பேய்க்குள்,
முனியாய் இருப்பாய், முகுந்தா எனக்கு,
தனியாய் தரிசனம் தா….(177)
திருப்பாற்க் கடலில், திருவனந்தப் பாய்மேல்,
விருப்பாய்க் கிடப்பாய் வெகுண்டால், -உரத்தால்,
இரணியனைக் கொல்ல, இரும்பைப் பிளந்து,
நரசிங்கம் ஆவோய் நம….(178)
தொட்டால் சுடுவான், தொடாமல் இருந்தாலும்,
கொட்டோகொட் டென்று குளிர்விப்பான், -விட்டலன்,
சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை,
பட்டறையில் வைப்பான் புதைத்து….(179)
—————————————————————————————————————-
கவிநயா
காவல் இருக்கின்றேன்,
காத்துக் கிடக்கின்றேன்,
வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…
வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!
நீண்டு கிடக்கும்
காலமெனும் பாதையில்
விழிகள் பதித்து –
முரண்டு பிடிக்கும்
புத்திக்குள் வித்தாக
உன்னை விதைத்து –
துவண்டு கிடக்கும்
மனக் குடிலின் வாயிலில்
மலர்கள் விரித்து –
வண்டு குடிக்கும்
மதுவாக உன்
அன்பை நினைத்து –
மண்ணூடே ஓடி
நீர் தேடும் வேர் போல –
மரம் தேடி ஓடி
கிளை சுற்றும் கொடி போல –
மடி தேடி ஓடும்
பாலுக் கழும் கன்றாக –
கடல் தேடி ஓடும்
காதல் மிகு நதியாக –
உனைத் தேடி நானும்என்
உயிர் களைத்துப் போன பின்னே…
இன்று,
என் மனக் கதவின்
ஒரு ஓரத்தில்…
காவல் இருக்கின்றேன்,
காத்துக் கிடக்கின்றேன்,
வேண்டாத விருந்துகள் வந்து விடக் கூடாதென…
வேண்டி விரும்பும் நீ என்று வருவாயென!
–மேகலா இராமமூர்த்தி
கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், அவற்றின் இலக்கிய நயமும், கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவரும் அவருடைய தத்துவப் பாடல்களுமே பலருடைய நினைவிற்கும், கவனத்திற்கும் வருபவை. ஆயினும் பன்முகத் திறனும், பரந்துபட்ட ஆற்றலும் கொண்ட அம்மாமேதை திரைப்படத்துறை அன்றியும் வேறுபல் தளங்களிலும், களங்களிலும் செயலாற்றி வெற்றி கண்டவர்; தனி முத்திரை பதித்தவர்.
அவ்வகையில், இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத அவருடைய பத்திரிகைத்துறை அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள், பத்திரிகைவழி அவராற்றிய தமிழ்த்தொண்டு ஆகியவை குறித்துப் பகிர்ந்துகொள்ள விழைந்ததன் விளைவே இக்கட்டுரை.
’சிறுகூடல்பட்டி’ முத்தையா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து ‘கண்ணதாசன்’ ஆனார். அவர் கழகத்தில் சேர்ந்த காலத்தில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தனர். ’விடுதலை’ என்ற இதழை நடத்திவந்த பெரியாரிடமிருந்து பிரிந்த பேரறிஞர் அண்ணா ’திராவிட நாடு’ கண்டார். அஃது அண்ணாவின் அரிய கருத்துக்களைத் தாங்கி வார இதழாக வெளிவந்தது. நாவலர் நெடுஞ்செழியன் ‘மன்றம்’ என்ற இதழை இலக்கிய இதழாக நடத்திவந்தார்; கலைஞர் கருணாநிதியோ ‘முரசொலி’க்கச் செய்தார்.
அத்தருணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்பாதம் பதித்த கவியரசு கண்ணதாசன், ’தென்றல்’ எனும் அழகிய பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். அவ்விதழ் இலக்கிய இதழாகவும், அரசியல் இதழாகவும் விளங்கியது. உள்நாட்டு, கழகச் செய்திகளோடு பிறநாட்டுச் செய்திகளும் அதில் சுருங்கிய அளவில் இடம்பெற்றிருந்தன.
நல்ல தமிழில் அந்த (கவிதைத்) தென்றல் வீசியது. கழக இளைஞரும், தமிழார்வலர் பிறரும் தென்றலை மிக விரும்பி வாங்கினர்; படித்தனர்; சுவைத்தனர்.
கல்லூரி மாணவர்களிடையே ’தென்றல்’ நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிஞர் கா. அப்பாதுரையாரின் துணையோடு கண்ணதாசன் ’வெண்பாப் போட்டி’யைத் தென்றல் பத்திரிகையில் நடத்திப் பரிசுகள் வழங்கினார். வெண்பாப் போட்டியாலும், தென்றலின் சுவைமிகுந்த பிற பகுதிகளாலும் தமிழ் இளைஞர்களிடத்துத் தமிழ்ப்பற்றும், தமிழின உணர்வும் மிக்கோங்கின. ஈழத் தமிழர் பற்றிய செய்திகளும் தென்றலில் தவறாது இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தென்றலையொட்டி ’முல்லை’ என்ற இலக்கியத் திங்களிதழும் கண்ணதாசனால் தொடங்கப்பெற்றது. இவ்விதழ் அளவிற் சிறியதேனும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது என்பதை யாரும் மறுக்கவியலாது. வரலாற்றுச் சிறுகதைகளும், புனைகதைகளும் முல்லைக்கு மேலும் மணங்கூட்டின.
தி.மு.க.வில் இணைந்திருந்த கவிஞரின் (கழக) அரசியல்வாழ்வு நீண்டநாள் நீடித்திருக்கவில்லை. சூழ்நிலை அவரைக் கழகத்தினின்றும் பிரித்தது. எனினும், அவருடைய கலை, இலக்கியப் பணிகள் தென்றலிலும், முல்லையிலும் தொடர்ந்தவண்ணம் இருந்தன. ஊழின் பெருவலியோ அல்லது காலத்தின் கோலமோ யாமறியோம்…..தென்றலையும், முல்லையையும் அவரால் தொடர்ந்து நடத்த இயலவில்லை; அதனால் தென்றல் ஓய்ந்தது; முல்லையும் காய்ந்தது.
ஆயினும், கவிஞரின் இலக்கிய நெஞ்சமும், கவிதை ஈடுபாடும் அவரை விடாமல் துரத்தின. அதன் விளைவே சில ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ’கண்ணதாசன்’ எனும் இலக்கியத் திங்களிதழ். போற்றுதலுக்கும், திறனாய்வுக்கும் உரிய சிறுகதைகள் பல அவ்விதழில் வெளிவந்தன. தரமான பிறர் படைப்புக்களோடு கவியரசரின் கருத்தோவியங்களும் இதழுக்கு எழில்கூட்டின.
கண்ணதாசன் இதழில் இடம்பெற்ற பல சிறுகதைகள், கருத்தரங்குகள் பலவற்றில் மீள்வாசிப்பிற்கும், திறனாய்விற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ’வனவாசமும், மனவாசமும்’ கவிஞரின் உண்மை வாழ்வைப் புனைவின்றி வாசகர்களுக்குப் புகன்றன எனில் மிகையில்லை. ஆம்…கவியரசு கண்ணதாசன் என்றுமே உண்மைகளை எடுத்துரைக்கத் தயங்கியதில்லை. அவற்றின் வெளிப்பாடே அவரெழுதிய வனவாசமும், மனவாசமும்!
கவியரசரின் வாழ்வில் தொடர்ந்து பல சங்கடங்கள் ஏற்பட்டன. அரசியலிலிருந்து முற்றிலும் விலகாவிட்டாலும்கூட ஒதுங்கியிருக்கலானார். உண்மைகளையும், நன்மைகளையும் மட்டுமே ஆதரிப்பவரானார். அவர் பெரிதும் நம்பியிருந்த திரையுலகிலும் அவருக்குச் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. எனினும் அவரது கவித்துவம், அனைத்து எதிர்ப்புக்களையும் வென்று அவரை வாழவைத்தது. பொருளாதாரச் சிக்கல்களினால் ’கண்ணதாசன்’ இதழும் இடையிடையே தடைப்பட்டு வெளிவந்து, இறுதியில் முற்றிலும் நின்றே போனது. அந்தோ!
இக்காலகட்டத்தில் கவிஞரோடு நட்புப் பாராட்டிய எழுத்தாளர்களாக விளங்கிய ஜெயகாந்தனையும், தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியையும் தமிழிலக்கிய உலகம் என்றும் மறவாது போற்றும். இவர்கள் மூவரும் அன்று எழுத்துலகில் மும்மணிகளாக – திரிரத்தினங்களாகத் திகழ்ந்தனர் எனலாம்.
’கண்ணதாசன்’ திங்களிதழ் நின்றபின்பும் கவியரசரின் எழுத்துப்பணி தொய்வின்றித் தொடர்ந்தது. கல்கியில் அவர் எழுதிவந்த ’சேரமான் காதலி’ என்ற வரலாற்றுப் புதினம், அவருக்குச் சாகித்ய அகாதெமியின் விருதினைப் பெற்றுத் தந்தது. பின்னர் அவர் எழுத்தின் – சிந்தனையின் திசைமாறியது. ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற பெயரில் பல தொகுதிகள் இந்து சமயத்தை எளிதாக விளக்கும் முறையில் வெளியாயின. வாசகர்களிடம் பேராதரவினை இந்நூல்கள் அவருக்குப் பெற்றுத்தந்தன. கண்ணனைப் பற்றிய பல சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். ஆதிசங்கரரின் ‘கனகதாரா தோத்திரம்’ ’பொன்மழை’யாகப் புத்துருப் பெற்றது.
கவியரசரின் இலக்கியப் படைப்புக்களின் முடிமணியாக இன்றும் திகழ்ந்துவருவது கிறித்தவப் பேரிலக்கியமான ‘இயேசு காவியம்’ என்றால் அதனை இலக்கிய ஆய்வாளர் யாரே மறுப்பர்?
’கன்னியின் காதலி’ என்ற படத்தில் ‘கலங்காதிரு மனமே; உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்ற பாடல்மூலம் தன் திரையுலக வாழ்வைத் தொடங்கிய கண்ணதாசன், பாடல்கள் எழுதியதோடல்லாமல் சொந்தத் தயாரிப்பாகவும் திரைப்படங்கள் பல எடுத்தார். கழகக் கருத்துக்களும், தேசியக் கருத்துக்களும் அவருடைய திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தன. ‘சிவகங்கைச் சீமையும்’, ’இரத்தத் திலகமும்’ அவரது சிறந்த தயாரிப்புக்களாகும்.
நிழலுலகத்தாரால் மட்டுமன்றி, நிஜவுலகத்தாராலும் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளானவர் கவியரசர். ஆயினும்,
”போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்!” என்ற கருத்தில் சற்றும் பின்வாங்காது வாழ்ந்தவர் அவர்.
கண்ணதாசன், தன் தனிவாழ்வில் பெருவெற்றி பெற்றவர் அல்லர்; ஆனால் பலருடைய வெற்றிக்கு வழிகாட்டியவர்; உழைத்தவர்; உதவியவர். குறைகண்டவிடத்து ஏசிய கவிஞர்; நிறைகண்டவிடத்து யாரையும் போற்றவும் தயங்கினாரில்லை. ‘குரல் கெட்ட குயிலே கேள்!’ எனப் பாவேந்தரை ஏசிய கண்ணதாசன்,
”புரட்சிப் பாவல வணக்கம்………
”ஏடெடுத்துக் கவியெழுத நினைக்கும் போதில்
என்னெதிரே நின்னுருவம் ஏறு போன்று
‘பாடுதமிழ்’ என்றுரைக்கக் கேட்பேன்! அந்தப்
பத்தியிலே பன்னூறு கவிதை யாப்பேன்
கூடலிறை பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்கும்
குலத்தலைவா! யான்கற்ற கல்வி கொஞ்சம்,
நாடெனையும் நோக்கும்வகை நான் வளர்ந்தேன்
யாவுமுனைக் கற்றதனால் பெற்ற பேறு!
………………………………………………………….
இருபதுடன் பதினான்கு வயது சென்றும்
இயல்பினில்யான் குழந்தையென அறிவாயன்றோ!
எனப் பாவேந்தர் புகழ்பாடுகின்றார். அவருடைய குழந்தை உள்ளத்திற்கு இதனினும் விஞ்சிய சான்றுண்டோ?
திரைப்படப் பாடல்கள் அன்றித் தன் தனிப்பாடல்களாலும் பெரும்புகழ்பெற்றவர் கண்ணதாசன். சான்றாக ஒன்று…
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
…………………………………………………………
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
’அனுபவம் என்பதே நான்தான் ’என்றான்!
இக்கவிதையில், ’ஆண்டவன் என்றொருவன் வெளியில் இல்லை; நம் அனுபவங்களில்தான் அவன் வாழ்கிறான்’ என்றுரைக்கும் கவியரசரின் தீர்க்க தரிசனம் நம்மை வியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்துகிறது அல்லவா?
அகவை ஐம்பதைத் தாண்டிய சில ஆண்டுகளில் மிக அவசரமாகத் தன் பூவுலக வாழ்வைக் கவிவேந்தர் நீத்தாலும்,
”மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” என்ற புறப்பாடலுக்குச் சான்றாய்த் தன் அழியாப் புகழை நிறுவி என்றும் வாழ்கிறார் அவர்!
காவியத் தாயின் இளைய மகன் என்று தன்னை உரிமையோடு அழைத்துக்கொண்ட கண்ணதாசன், இன்று தானே ஒரு காவியமாகித் தமிழர்கள் அனைவர் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். பைந்தமிழ் வளர்த்த கண்ணதாசனின் புகழ் வையமுள்ளவரை நிலைத்திடும் என்பதில் ஐயமில்லை.
–பி.தமிழ் முகில்.
தகதகவென ஜொலிக்கும்
தங்கக் கிரீடம் சுமந்து
சூரியப் பெண்ணவள்
வான் சோலையில் உலவ
எதிர்பட்ட மேகக் காதலனை
கண்டதும் மெல்ல
நாணமதுவும் ஆட்கொண்டு விட
தன் சூரியக் காதலியை
மேகக் காதலன்
ஆரத் தழுவிக் கொள்ள – அவளோ
வெட்கத்துடன் சிறு கீற்றாய்
புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு
மெல்ல தன் முகம் மூடிக் கொள்ள
ஆங்கே அரங்கேறுகிறது
அந்திப் பொழுதிலோர்
நிலை மாறாக் காதல் !
-கீதா மதிவாணன்
அன்றொருநாள் அவசர நிமித்தம்
கவிதையொன்றைக் கைமாற்றாய்க் கேட்டுக்
கையேந்தி நின்றிருந்தாய் என் வீட்டுவாயிலில்! 
உன் கையறுநிலையைக் காணச் சகியாது
என் கவிதைத் தாள்களின் கதறல்களை மீறிப்
பிய்த்துக்கொடுத்தேன் என் கவிச்சிதறல்களை!
காயமுற்ற என் கவிதைப் புத்தகம்
நேயமற்ற என்னோடு வாழ மறுத்ததால்
சுயமிழந்து தவிக்கிறேன் நான்!
விரைவில் திருப்புவதாய்க் கையடித்தபோது
என்விரல் ரேகைகளுக்கு மத்தியில் படிந்த
தூசுபடிந்த உன் சத்தியங்கள் காலாவதியாகிக்
கணகாலமாகிவிட்டதை உணராது
விடுபடும் நாளை எதிர்பார்த்திருக்கின்றன
விம்மலும் விசும்பலுமாய்!
உன் கையொப்பத்துக்காக முண்டியடித்த
கூட்டத்தின் நடுவில் நேற்றுன்னைக் காண நேர்ந்தது!
பைத்தியங்குளியைப் போன்ற தோற்றத்திலும்
என்னைநீ அடையாளங் கண்டுகொண்டாய் என்பதை
விழிகளைத் தழைத்து வேகமாய்க் கடந்துணர்த்தினாய்!
இன்றென் கவிதைகள் என்னிடமே திரும்பும்
முகாந்திரமிருப்பதைச் சொல்லிச் சொல்லிக்
கரைந்து கொண்டிருக்கின்றன காக்கைகள்!
கையுதிர்க்கவிருக்கும் சத்தியத்தின் காத்திருப்போடு நான்!
கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப்
படபடப்போடு புரட்டிக்கொண்டிருக்கிறது காற்று!
-சங்கர் சுப்ரமணியன்
அவள் கிடத்தப்பட்டிருந்தாள் வீட்டு முற்றத்தில்
பதற்றமும் கண்ணீரும் கவலையும்
சோகமும் சொல்லவொண்ணாத் துயரமுமாக
தனித்து நின்றிருந்தேன் நான் தவித்தபடி!
எதுவோ நடந்திருக்கிறது என்பதற்குச் சாட்சியாக
நான் இருப்பதாகவே பொய்யான காரணங்களை
உயிர்ப்பித்துச் சந்தேகப் பார்வையில் என்னை
மேய்ந்தது சுற்றியிருந்த ஊர்ஜனம்!
சமமாகப் பிரித்து கலைத்துவிட்ட விதியின்
இந்த கோர விளையாட்டைக் கண்டு திகைத்து
மீளாத துயரத்தில் தாங்கவே முடியாமல்
கனத்து வலித்தது என் நெஞ்சம்!
எல்லாக் காரணங்களையும் ஒவ்வொன்றாக
மனத்தில் திரையிட்டு உண்மையில்லை
என்பதாக அழித்துக்கொண்டிருக்கும் காரணங்களை
மறுதலிக்கும் என் மனம்!
என்ன காரணமென்று எழுந்துவந்து என்
காதிலாவது சொல்லிப்போயேன்
சந்தோஷமாய் நாம் வாழ்ந்ததற்கு அதுவாவது
ஒரு சாட்சியாய் இருந்து போகட்டுமே!
மூலம்: எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னால் கொடுக்க முடிந்ததை
ஈவது நியாய மாகுமா?
உப்புக் கண்ணீர்த் துளிகள்
வீழும்போது உன்னைக்
கீழே உட்கார வைத்து
நெடுங்காலம் எழும் பெருமூச்சு
நின் செவியில் கேட்க வேண்டுமா?
உன் பரிந்துரையைக் கேட்பினும்
வாழத் தவறி என்
மீளாத புன்னகைக் கிடையே
மீண்டும் வெளிவிடும் பெருமூச்சை
எந்தன் உதடுகள்!
அந்தோ! அர்த்தமின்றிப் போகலாம்
எந்தன் அச்சங்கள்!
காதலராய்க் காட்டிக் கொள்ளச்
சகதோழர் அல்லர்
நாமிருவரும்!
காதலை ஏற்று நான்
வேதனை அடைகிறேன்!
அத்தகைப் பரிசுகள் எனக்களிப்போர்
கருணை இல்லாத வராகக்
கருதப் படுவர் !
என் தூசிகள்
உன் அங்கியில் பட்டுக்
கறை படுத்தச் செய்யேன்!
உன் கண்ணாடி முன்பாக
வெளியேறாது என்
விஷ மூச்சு!
நேசிப்பைக் காட்டுவ தில்லை
நான் உனக்கு!
நியாய மில்லை அது,
என் இனியவனே!
உன்னை மட்டுமே நான் நேசிப்பது
நிறைவே றட்டும்
நமது நேசம்!
**********************
Poem -9
Sonnets from the Portuguese
By: Elizabeth Browning
Can it be right to give what I can give?
To let thee sit beneath the fall of tears
As salt as mine, and hear the sighing years
Re-sighing on my lips renunciative
Through those infrequent smiles which fail to live
For all thy adjurations? O my fears,
That this can scarce be right! We are not peers,
So to be lovers; and I own, and grieve,
That givers of such gifts as mine are, must
Be counted with the ungenerous. Out, alas!
I will not soil thy purple with my dust,
Nor breathe my poison on thy Venice-glass,
Nor give thee any love–which were unjust.
Beloved, I only love thee! let it pass.
*******************