விவேக் பாரதி
Blog
-
நலம் .. நலமறிய ஆவல் (61)
நிர்மலா ராகவன்
நீங்கள் குதர்க்கவாதியா?
`குதர்க்கம்!’
யாராவது உங்களை இப்படிப் ழித்திருக்கிறார்களா?
பெருமைப்படுங்கள்! நீங்கள் சுயமாகச் சிந்திக்கிறீர்கள். உங்களுக்குக் கற்பனைத்திறன் அதிகம் என்பதைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை.
உங்கள் தனித்திறமையைக் காட்ட வரைவது, எழுதுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட ஆரம்பிக்கவில்லையா இன்னும்?
ஒருவர் எப்போது எழுத்தாளனாக ஆசைப்படுகிறார் என்றால், பிறரது எழுத்தை நிறையப் படித்தபின், `இதைவிட நன்றாக என்னால் எழுதமுடியுமே!’ என்ற எண்ணம் எழும்போது.
`என்ன எழுதுவது?’ என்ற குழப்பமானால், ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்களைப் பாதித்த ஏதாவது ஒன்றைப்பற்றி கொஞ்சம் எழுதுங்கள். முடிவைப்பற்றி யோசிக்காது, தினமும் தூங்குமுன் இருபது நிமிடங்களாவது அதற்காகச் செலவிடுங்கள். நாளடைவில், எழுதுவது எளிதாகும். பிரபலமான ஆங்கில எழுத்தாளர்கள் பலரும் இம்முறையைப் பரிந்துரைக்கிறார்களே என்று நானும் முயன்று பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது.
ஒரு சிறு புத்தகத்தை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொண்டிருந்தால், வெளியில் போகும்போது வித்தியாசமாகக் காணப்படும் எதையாவது உடனடியாகக் குறித்துக்கொள்ள முடியும்.
திரைப்படங்கள், நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆகியவையும் கற்பனையைத் தூண்ட வல்லவை. உதாரணமாக, ஒருவன் காதலியுடன் வந்த பெண்ணைப் பார்க்கிறான். அவன் மனம் சலனமடைகிறது என்று குதர்க்கமாக யோசியுங்கள். `இவள்தான் எனக்கு ஏற்றவள்!’ என்று அத்தோழியை மணந்துகொள்கிறான். அப்போது காதலியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தால், ஒரு கதை கிடைக்கும்.
ஒவ்வொரு நாளையும் ஒரேமாதிரி கழிக்காது, அதாவது வீட்டு வேலை முடிந்து புத்தகத்தைக் கையில் எடுத்தபடியே தூக்கம் அல்லது தொலைகாட்சி பார்ப்பது என்று நேரத்தைச் செலவிடாது, அசாதாரணமாக எதையாவது செய்வது மூளைக்குப் பயிற்சி கொடுப்பதுபோல். உதாரணம்: இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்தபடி சாயந்திர வேளையில் உலவுவது. வெவ்வேறு திசைகளில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பது (பார்ப்போர் நம்மைப் பைத்தியம் என்று நினைத்தாலும்) வித்தியாசமாகச் சிந்திக்க வைக்கும். நடைப்பயிற்சியால் மன இறுக்கம் குறைய, கற்பனைக் குதிரை விரைந்து ஓட ஆரம்பிக்கும்.
வளரும்போதே தாழ்வு மனப்பான்மை
“ஒன் தங்கையைப் பார்! எப்படி கலகலன்னு இருக்கா! நீயும் இருக்கியே, உம்மணாமூஞ்சி!”
“என்ன இருந்தாலும் நீ பொம்பளைப்பிள்ளை!”
இம்மாதிரியெல்லாம் பெரியவர்களால் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் தாழ்மை உணர்ச்சியுடன் வளர்கிறார்கள். துணிந்து எதையும் சாதிக்கப் பயம் எழுகிறது. தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஆச்சரியமோ, பொறாமையோ எழுகிறது.
இப்படிப்பட்டவர்கள் எந்த வயதானாலும், `நான் ஒரு தனிப்பிறவி. பிறர்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை,’ என்று தமக்குத்தாமே வலியுறுத்திக்கொண்டால் தன்னம்பிக்கை வளரும்.
எத்தனை வயதானாலும், பிறர் கூறுவதையெல்லாம் ஆமோதித்து, அதன்படியே இம்மி பிசகாது நடக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மூளை எதற்கு? அரைத்த மாவே அரைபடுவது இதனால்தான். `ஊருடன் ஒத்து வாழ்!’ என்று என்றால், ஒருவருக்குத் தனித்தன்மை இருக்கக்கூடாது என்று அர்த்தமா?
எழுத்தால் புரட்சி
பேனாவால் கத்தியைவிட அதிகம் சாதிக்க முடியும். பிறர் எழுதியதைப் படித்தே தம் வாழ்வின் போக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் எத்தனைபேர் துணிந்து, பேனா (இப்போது கணினி) பிடிக்கிறார்கள்?
`புரட்சி எழுத்தாளர்!’
நூதனமான, ஆனால் சமூகத்தை நல்விதமாக மாற்றக்கூடிய கருத்துக்களை எழுதுபவரை பலவீனமாக்க சிலர் கையாளும் உத்தி இது. தமக்குச் சாதகமாக இருக்கும் நடைமுறையை இவள் ஏன் மாற்ற முயற்சிக்கிறாள் என்ற அச்சத்தில் அவளைப் பழிக்கிறார்கள்.
எப்போதும் பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்று நினைத்து வாழ்பவர்களால் எதையும் சாதிக்க இயலாது. எந்தவித எதிர்ப்பையும் சமாளித்து, துணிந்து எதிர்க்கும் தைரியம் இருப்பவர்களால்தான் எத்துறையிலும் நிலைத்து நிற்க முடிகிறது.
கரு எப்படிக் கிடைக்கும்?
பரிச்சயமில்லாதவர்களுடன் பேசினால், புதிய விஷயங்களை அறியமுடியும்.
ஒரு முறை தைப்பூசத்திற்கு முதலிரவு நான் மலேசியாவில் பிரசித்தமான பத்து மலைக்குச் சென்று தங்கினேன். தனியாக. பையில் பேனா, காகிதத்துடன். லட்சக்கணக்கான பக்தர்களும், காவல் துறை அதிகாரிகளும் அங்கிருந்ததனால் பயமில்லை.நள்ளிரவில் மழை பிடித்துக்கொண்டது. ஒரு கட்டடத்தின்கீழ் தங்கியபோது, அருகிலிருந்த முதியவர் தாமாகப் பேசினார்: “கட்டையன் உசிருள்ள பாம்பை கத்தியால ரெண்டா வெட்டி, சீனியில தோய்ச்சு சாப்பிடுவாம்மா!”
அவர் குறிப்பிட்டது ஜப்பான்காரனை என்று புரிந்து, “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சந்தேகத்துடன் வினவினேன்.
புதிய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள நிறைய கேள்விகள் கேட்க நேரிடும். சிலர், `நம்மைச் சோதிக்கிறாளோ?’ என்று ஆத்திரப்படவும் செய்வார்கள்.
அனைவருக்குள்ளும் பல விஷயங்கள், அந்தரங்கம் இருக்கின்றன. அதை யாரிடம் சொல்லி நிம்மதி அடையலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உண்மையாகவே தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறோம், நமக்கு அவர் கூறப்போவதில் ஆர்வம் என்பதைப் புரியவைத்தால், தயக்கமின்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
1942 -ல், அன்றைய சயாமிலிருந்து பர்மாவரை ஒரு ரயில் பாதையை அமைக்க பல்லாயிரக்கணக்கான மலாயாக்கார்கள், பிணைக்கைதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் ஆகியோரை ஜப்பானியர்கள் பிடித்துப்போனார்கள். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரும் ஒருத்தராம். (மதுக்கடையிலிருந்தபோது, அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் ஒரு லாரியில் கடத்திக்கொண்டு போய்விட்டனர், வீட்டுக்கே தெரியாது).
நான் பேராவலுடன் பல கேள்விகள் கேட்டேன் அதைப்பற்றி. வாய்வழி சரித்திரம் போல் ஆகுமா?
எங்களைச் சுற்றி பத்து இளைஞர்களும் சுவாரசியமாக அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நிறையப் பேசிவிட்டு, பழைய நினைவுகளின் தாக்கத்தைத் தாங்கமுடியாது, “போகணும்!” என்று எழுந்து, வேகமாக அப்பால் சென்றார்.
கும்பலோடு கும்பலாக இருக்க வேண்டும், தனித்துத் தெரியக்கூடாது என்று பழைய புடவை ஒன்றைக் கட்டிக்கொண்டு போயிருந்தேன் அன்று. நட்புடன் பழகி, தன் விரிப்பில் என்னைப் படுத்துக்கொள்ள உபசாரம் செய்த வெள்ளையம்மா என்ற மாது, `டீச்சருங்களுக்கு சம்பளம் கம்மியா?’ என்று விசாரித்தாள்!
அவளுடைய கணவனையும் ஜப்பானியர்கள் பிடித்துப்போக இருந்தபோது, எதிர்வீட்டு இளைஞனின் குடும்பத்துக்கு முன்னூறு வெள்ளி கொடுத்து, கணவனுக்குப் பதிலாக அவனை அனுப்பினார்களாம். போன இடத்தில் இறந்த 60,000 தமிழர்களில் அவனும் ஒருத்தனாகிப்போனான். அதனால்தான் அரைகுறையாக நின்றுபோன பலரின் முயற்சி இன்று “மரண ரயில்வே” என்று அழைக்கப்படுகிறது.
“நாங்க முன்னூறு வெள்ளி குடுத்தோம்!” என்று திரும்பத் திரும்ப அழுத்திச்சொன்னாள் வெள்ளையம்மா, தனது குற்ற உணர்ச்சியைக் குறைத்துக்கொள்ள முயற்சிப்பவளாக.
(அந்தக் காலத்தில் ஒரு சவரன் தங்கம் பத்து அல்லது இருபது வெள்ளியாக இருந்திருக்கும். ஐம்பது வருடங்களுக்குமுன்னரே முப்பது வெள்ளிதான். அப்போதெல்லாம், `பணத்தட்டுப்பாடு வந்தால், அடகு வைத்துக்கொள்ளலாம். தங்கம் வாங்குங்கள்,’ என்று வானொலியில் தமிழில் அறிவுரை கூறுவார்கள். தொடுத்து வைத்த மல்லிகைச்சரம்போல், தங்கச்சங்கிலியை கடை வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். காவலுக்கு யாரும் கிடையாது என்பது என்னைப் பெரிதும் அதிசயப்படுத்தியது. வாடிக்கையாளர் தமக்கு வேண்டிய நீளத்தில் வெட்டச் செய்து வாங்கிப் போவார்!)
பூரி, அது, இது என்று தைப்பூசத்திற்கு முதல் நள்ளிரவில் சாப்பிடக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலை, சக்கரங்களில் அமைக்கப்பட்ட, தாற்காலிகமான கழிப்பறைகளுக்கு வெளியே பெரிய வரிசை. `ஒண்ணுக்குப் போறதுக்கெல்லாம் காசு கேக்கறான்!’ என்று ஒரு பெண்மணி கத்திக்கொண்டிருந்தாள். ஓர் உபகாரி எல்லாருக்கும் வாளியில் தண்ணீர் கொண்டு வந்தபடி இருந்தாள்.
புதிய அனுபவங்களைத் தேடிப்போனால், அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும். அவைகளைப் பெரிது பண்ணாமல் ரசிக்கத் தெரிந்தால், எல்லாமே அனுபவங்கள்தாம். உடனுக்குடன் எழுதுகிறோமோ, இல்லையோ, மூளை சுறுசுறுப்பு குன்றாமல், எப்போதுமே நம்மை உற்சாகமாக வைக்கும்.
தொடருவோம்
-
நீயிருப்பதால்
விவேக் பாரதி
நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன் !
நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன் !
தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் !
திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய் !பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய் !
தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய் !
தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய் !
நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய் !ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய் !
தூங்கவிட்டு பின்னெழுப்பிக் கனவு தருகிறாய்
வாங்கிவிட்ட பாவமென்ன ? என்னைக் கையிலே
தாங்கிக்கொள்ள நேரமென்ன ? வா அணைக்கவே !மாலைநேரத் தென்றல் போல நீ நுழைகிறாய் !
கோலம்நூறு என்னகத்தில் நீ வரைகிறாய் !
வேலையென்ன பாரினுக்குள் என்னை வைக்கிறாய்
காலமென்னும் நூல்படைத்து நீ அசைக்கிறாய் !ஒற்றைக் கையில் வீணையோடு நீ ஜொலிக்கிறாய்
கற்றைக் கூந்தல் காற்றிலாட தீ வளர்க்கிறாய் !
நெற்றிக் கண்ணன் பாதியாகி நிமிரவைக்கிறாய்
வெற்றி உண்மை வீரமாகக் கொலுவிருக்கிறாய் ! -
கற்றல் ஒரு ஆற்றல் -83
க. பாலசுப்பிரமணியன்
வகுப்பறைகளில் கற்றலின் வேறுபட்ட முறைகளின் பாதிப்புக்கள்
பார்வைகளின் உந்துதல்களால்(visual inputs)ஏற்படும் கற்றல் மற்றும் செவி, செயல் சார்ந்த (auditory and kinesthetic ) உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் கற்றல் திறன்கள் அநேகமாக அனைவருக்குமே உண்டு. ஆயின், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட முறையின் அதிகபட்ச தாக்கம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. இத்தகைய அதிக பட்சத் தாக்குதல்களால் மற்ற வகையான கற்றல் முறைகள் ஒதுக்கப்பட்டு அவற்றின் பலன்கள் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படலாம். ஆகவே, இந்த மூன்று விதமான தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் உறவுகள், பயிற்சிகள் அமைதல் அவசியம். ஆசிரியர்கள் ஏதாவது ஒரு முறையில் ஏற்படும் கற்றலுக்கோ பயிற்சிக்கோ அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் வகுப்பறைகளில் பாதிக்கும் மேலான மாணவர்கள் அந்த பயிற்சிகளில் ஈடுபாடு இன்றியோ அல்லது அந்த நேரங்களில் தங்கள் கவனத்தை மற்ற பொருள்களிலும் மற்ற ஆர்வத்தை ஈர்க்கும் காட்சிகள் ஏற்படுத்தும் கற்றலின் உந்துதல்களில் ஈடுபடுத்தியோ இருப்பார்கள். இதனால் அந்த வகுப்பறைகளில் கற்றலின் தாக்கங்கள் மிகக் குறைவாக இருப்பதால் நேரத்தின் பயன்பாடுகள் மிகக் குறைவாக இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.
உதாரணமாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒரு பாடத்தை பற்றி பேசும்பொழுதோ பொழுது, பார்வைசார் கற்றலில் சிறந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் “அய்யா, தங்கள் சொல்லுவதை சற்றே கரும்பலகையில் எழுதுங்கள்” என்று கேட்பார்கள். அல்லது, அவர்கள் தங்கள் கவனத்தை ஆசிரியர்களிடமிருந்து விலக்கி அருகிலிருக்கும் சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த வகுப்பறைக்கு வெளிப்பக்கமாக எத்தனை பேர் வந்தார்கள், போனார்கள் என்ற துல்லியமான கணக்கு அவர்களிடம் இருக்கும். மாறாக, ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் செவிசார் கல்வியில் சிறந்த மாணவர்கள், கரும்பலகையிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி அருகிலுள்ள மாணவர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். செயல் சார் கல்வியில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை விலக்கி வேறு எங்காவது செல்ல முயற்சித்துக் கொண்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளால் மற்றவர்களுடைய கவனத்தை தங்களிடம் ஈர்த்துக்கொண்டும் இருப்பார்கள்
அதே போல், ஆசிரியர்கள் மாணவர்களை ஏதாவது ஒரு பாடத்தை உரக்கப் படிக்கச் சொல்லும் பொழுது, பார்வைசார் கற்றலில் (visual) சிறப்பான மாணவர்கள் வேறு எங்காவது தங்கள் கவனத்தைச் சிதறவிட்டோ அல்லது ஆசிரியர்கள் சொல்வதைக் காதில் வாங்கி கொள்ளாமல் அவருடைய முகத்தை மற்றும் பார்த்துக் கொண்டோ இருப்பார்கள். அதே நேரத்தில் செவிசார் கற்றலில் (auditory) மாணவர்கள் “எந்தப் பாடம் படிக்கச் சொன்னீர்கள் ? எந்தப் பக்கத்தில்? எந்த வரிகள் ” என்று பல விதமான கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களோடு தொடர் உரையாடலில் ஈடுபடுவார்கள். செயல்சார் ( kinesthetic) மாணவர்களோ புத்தகங்களில் பக்கங்களை ஒன்றொன்றாகத் திருப்பிக்கொண்டும் புத்தகங்களால் மேசைகளைத் தட்டிக்கொண்டும் இருப்பார்கள். பொதுவாக அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்
இது போன்று கற்றல் முறைகளின் மாறுபாடுகளாலும், மற்றும் ஏதாவது ஒரு முறையின் சிறப்பான தாக்கத்தாலும் வகுப்பறைகளில் கற்றலில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்த மாதிரியான மாணவர்களின் கற்றல் திறன்களை ஆராய்ச்சி செய்துள்ள கல்வியல் மற்றும் மூளை- நரம்பியல் வல்லுநர்கள் கண்டுபிடிப்புக்கள் சில ஆச்சரியமாக உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக பார்வைசார் கற்றலில் சிறப்பான மாணவர்கள் மொழிகள் கற்பதிலும், ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கற்பனையைத் தூண்டும் கலைகளிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மொழிகளில் எழுதும்போது அவர்களுடைய சொற்தொடர்களில் மொழி வல்லமை, வண்ணங்களைச் வார்த்தைகளின் ஆதிக்கம், சரியான உச்சரிப்புக்கள் ஆகியவை மேலோங்கியிருக்கும். சிறந்த கட்டுரை ஆசிரியர்கள், எழுத்தாளர்களும் இந்தத் திறன்சார்ந்தவர்களாக இருப்பார்கள்
மேலும் ஆராய்ச்சிகளின் மூலமாக நமக்கு வெளிப்படுவது யாதெனில் – செவிசார் கற்றலில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கணிதம் போன்ற பாடங்களில் குறைவான அக்கறை இருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கணிதம் போன்ற பாடங்களில் அதிகமான உரையாடல்களும் பேச்சுகளுக்கு வாய்ப்புக்கள் இல்லை. இவர்கள் மேடைப்பேச்சாளர்களாகவும், பாடகர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களைத் தேடுவதிலும், நண்பர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அலைபேசிகளின் ஆருயிர் நண்பர்கள்.! இவர்களுடய பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம்.
செயல்சார் மாணவர்கள் நாடகம், விளையாட்டுகள், பரிசோதனைகள், பொறியியல்சார் வேலைகளில் ஆர்வம் உடையவர்கள்; பள்ளிகளில் அலங்கரித்தல், கண்காணித்தல், தலைமைப் பொறுப்புகள் ஏற்றல் போன்ற செயல்களில் ஈடுபாடு அதிகம் உண்டு. வகுப்பறைகளில் பாடங்கள் சொல்லிக்கொடுக்கும்பொழுது மேசைகளைத் தட்டிக்கொண்டோ அல்லது தங்களுடைய செயல்களால் மற்றவர்கள் கவனத்தை சிதறடித்து ஆனந்தப்படுவதிலோ இவர்களுக்கு இன்பம் அதிகம். வகுப்பறைகளில் ஏதாவது சில்மிஷங்கள் நடத்தி அதிகம் பிடிபடக்கூடிய வகையைச் சார்ந்தவர்கள்.
இந்தச் சூழ்நிலையில் அத்தனை வகையைச் சார்ந்த மாணவர்களின் கவனத்தையும் ஒருங்கிணைத்து அவர்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி கற்றலில் அவர்கள் ஆர்வத்தை தக்கவைத்தும் மேம்படுத்தியும் சிறப்படையச் செய்தும் மற்றும் அவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுத்தும் செயல்படும் ஆசிரியர்கள் உண்மையிலேயே மிகப் பொறுப்பான தொழிலில் ஈடுபடுபவர்கள். போற்றத் தக்கவர்கள்!
(தொடரும்)
-
குறளின் கதிர்களாய்…(172)
செண்பக ஜெகதீசன்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.
-திருக்குறள் -165(அழுக்காறாமை)
புதுக் கவிதையில்…
பகையென தனியே
வேண்டாம்,
பொறாமை குணம் கொண்டவர்க்கு..
அதுவே பகையாகி
அழித்திடும் அவரை…!
குறும்பாவில்…
பொறாமை குணம் கொண்டோர்
பகையென ஏதுமின்றி,
அதுவே பகையாகி அழிவர்…!
மரபுக் கவிதையில்…
மனதில் பொறாமை கொண்டவரை
முழுதாய் அழித்தே ஒழித்திடத்தான்
தனியே பகையென ஒன்றுவேண்டாம்,
தாங்காப் பகையிது ஒன்றுபோதும்,
கனலாய்த் தீங்கது செய்திடவே
கொடிய பகைவர் தவறிடினும்,
மனதி லுள்ள பொறாமையதே
மாறாப் பகையாய் அழித்திடுமே…!
லிமரைக்கூ..
பொறாமை என்பது பகை,
கொண்டவரை அழிக்குமது பகைவரின்றியே,
பகைவேறிலை அதற்கு மிகை…!
கிராமிய பாணியில்…
கொள்ளாத கொள்ளாத
பொறாம கொள்ளாத,
ஆயிரமிருந்தாலும் அடுத்தவர்மீது
பொறாம கொள்ளாத..
பொறாமகொண்டவர அழிச்சிடத்தான்
எதிரி தனியே வரவேண்டாம்,
அந்தப் பொறாமதானே
எதிரியாயிருந்து அவன
எல்லாஞ்சேத்து அழிச்சிடுமே..
அதால
கொள்ளாத கொள்ளாத
பொறாம கொள்ளாத,
ஆயிரமிருந்தாலும் அடுத்தவர்மீது
பொறாம கொள்ளாத…!
-செண்பக ஜெகதீசன்…
-
இன்றைய கோப்பு: [3]
இன்னம்பூரான்
ஜூன் 25, 2017ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.
கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் முதல் பகுதி:
“தனிமனிதன் இன்புறவேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்கவேண்டும். சமுதாயம் பழங்காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்கவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தன் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்கு உரிய பங்கைப் பெறுமாறு, அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்.”
-இது சுதேசமித்திரன் இதழில் பேராசிரியர் மு.வரதராசன் ஏப்ரல் 1957இல் எழுதியது.
‘…அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்…அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்…வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.
[ஏப்ரல் 25. பேராசிரியர் மு.வரதராசனாரின் (1912-1974) பிறந்த தினம். அவர் நினைவில், தெ. ஞானசுந்தரம் தினமணியில் 2012-இல் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்: இதை கொடுத்து அருளியது, பசுபதிவுகள்: http://s-pasupathy.blogspot.in/2016/04/]
சிந்தனையை கிளரும் மேற்படி அறிவுரையை நடைமுறைக்குக் கொணர, தமிழ்நாட்டு சமுதாயம் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில், இதற்கு எதிர்வினையாகத்தான், அரசியலும், பிரதிநிதித்துவமும், பெரிய சமுதாயமும், பல சமூகங்களும் நடந்து கொண்டன. சினிமாத்தனம் நிறைந்த பண்பில் நடிப்பு சுதேசித்தனம் மலிந்திருந்தது. இந்த அறுபது வருடங்களில் திராவிடக்கட்சிகள் தான் தேர்தல் மூலமாக ஆட்சியை பெற்று, பின்னர் பல காலகட்டங்களில், தேர்தலை ஒரு நாடகமாக ஆடி, அதிலும் சகுனியாட்டம் ஆடி, அரசு மேலாண்மையை சீர்குலைத்தன. பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பிரதிநிதித்துவம், சுயநலனுக்கு மட்டும் தொண்டு செய்தது. லஞ்சம் வாங்குவது ஒரு தொத்து வியாதியாக மக்களை பற்றிக்கொண்டது. இதற்கு நடுவில் சில வேடிக்கைகளும் இடம் பெறுகின்றன. காரசாரமான கடுஞ்சொல் வீசி, ஆத்திகத்தின் மீது, பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தெளித்த நாத்திக தொல்லைக்காட்சிகளில் ராப்பகலாக சாமி, சம்பிரதாயம், கும்பிடு, ஐயருக்குக் காணிக்கை உயிரை வாங்குகின்றன. காசு வர்ரது. அதான். பெரியாருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு மண் சோறு உண்கின்றனர், தீ மிதிக்கின்றனர், மொட்டை போடுகிறார்கள், குங்குமதிலகர்கள், எல்லா திராவிடகட்சிகளிலும்.
எனக்கு என்ன அச்சம் என்றால், மு.வ, அவர்களின் தேரை உடைக்கும் இவர்கள், அதை விறகாகக் கொளுத்தி, சிக்கன் பிரியாணி செய்து, அதை அன்னதானம் செய்து கூட்டம் கூட்டி, வருங்கால சந்ததியையும் மூளைச்சலவை செய்து விடுவார்களோ என்ற அச்சம்.
தாமதம் செய்யாமல், நாம் அவரவருக்கு முடிந்தவரை மு.வ. அவர்களின் அறிவுரையை நடைமுறைக்குக் கொணர முயல்வோமாக. படித்தால் மட்டும் போதாது. அவரவர் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://siliconshelf.files.wordpress.com/2012/06/mu_-varadarajan.jpeg -
இவ்வார வல்லமையாளர்
இவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி
உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருக்கோயில் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு ஆலோசனை அளித்து, நடக்கத் தூண்டுதலாக இருந்தவர், பார்யாய பேஜாவர் மடத்தின் தலைவரான விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் ஆவார்
சுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மாலை 6.59 மணி அளவில் தன் நோன்பை முறித்த பின், வாழைப்பழம், ஆப்பிள், பேரீச்சை ஆகிய உணவுகளுடன் கஷாயமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் “கர்நாடகாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இவர் 30 ஆண்டுகளாக ரம்ஜான் சமயம் இந்து-முஸ்லிம் சம்மேளனத்தை நடத்தி வந்தாலும் உடுப்பி கோவிலில் நடப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.
இப்தார் உணவு உண்டபின், கோயில் வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தினார்கள்.
அன்பையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் வைணவம் மற்றும் இஸ்லாமிய நெறிகளை பின்பற்றுவோர் தம்மிடையே உள்ள ஒற்றுமைகளையும், தாம் இந்தியர், சகோதரர், ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகளை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது
இந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
-
Thirukallyanam of Gho Lakshmi & Rishabha Raja
Sri Muralidara Swamigal
Namasthe,You are invited for the Thirukallyanam of Gho Lakshmi & Rishabha Raja and also for the Sahasra Chandi Yagam. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’மந்திக்(கு) ஓருகாலும், மாட்டுக்(கு) ஒருகாலும்,
இந்திர கர்வத்தை ஈயாக்கி -சந்திர
கோத்திரர் ,யாதவர் கோவர் தனதாரி
காத்திருக்கார் வானவில்லுக் காய்’’….கிரேசி மோகன்….! -
அரசு ஒதுக்கீடு – புதிய கொள்கை!
பவள சங்கரி
கல்வி நிலையங்களில் அனுமதிப்பதற்கான ஒதுக்கீடுகளில் முற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான அளவில் 50.5 சதவிகிதமாகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடுகள் 49.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுடைய வாய்ப்பு பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீடான 49.5 சதவிகிதத்திலிருந்துதான் கிடைக்கப்பெறும். அதாவது உயர் வகுப்பு பிரிவினர்க்கான 50.5 சதவிகிதத்திலிருந்து அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது உயர் வகுப்பு பிரிவினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்பதே செய்தி.
-
நீட் தேர்வு!
பவள சங்கரி
தலையங்கம்
நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து 80,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் 15,000 மாணவர்கள். இதில் அதிக மதிப்பெண்களைப்பெற்ற 25 மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழ் மாணவர்கூட இடம் பெறவில்லை. நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சார்ந்த மாணவர்கள் 8 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த மதிப்பெண்களில் நமது தமிழக மாணவர்கள் சராசரியாக 50% மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது வருத்தமான செய்தி.
நேற்று சட்டசபையில், தமிழகக் கல்வி வழியில் நீட் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களில் 85% மாணவர்களுக்கு நமது மருத்துவக் கல்லூரிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலமாக பயின்ற 15% மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்பே நமது உச்ச நீதி மன்றம், உயர்நீதி மன்றங்களில் இதற்கு விலக்கு அளிக்க மறுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது சட்ட அங்கீகாரத்தைப் பெறுமா என்பது ஐயமே. அரசு அடுத்த ஆண்டிற்கு இப்போதிருந்தே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது போல நீட் தேர்வுகளுக்கும் தமிழகம் முழுவதும் சிறந்த பயிற்சி அளிக்க ஆவண செய்யவேண்டியதே அவசியமாகும். அதைவிடுத்து குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பளித்தாலும் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
-
சூரிய குடும்பத்தில் புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் பத்தாவது கோள் ஒன்று ஒளிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது

சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச்
சுற்றும் புதிய கோள் பத்து
ஒளிந்து திரிவது
உறுதி செய்யப் படுகிறது !
ஒன்பதாம் கோள் இருப்பதைச்
சென்ற ஆண்டு கண்டார் !
கியூப்பர் வளைய அண்டங்கள் .
குளிர்ந்து போனவை.
கியூப்பர் வளைய அண்டங்கள்
சூரியனைச் சுற்றும்
பாதைகள் சாய்வதின் காரணம்
என்ன ?
பூமி வடிவில் பத்தாவது கோள்
புளுடோ வுக்கு அப்பால்.
சாய்க்கும் மர்மம் என்ன ?
இதுவரைக் கோளைக் கண்டிலர்.
சூரியன் சுழலச்சைப் பூதக்கோள் -9
கோரமாய்ச் சாய்க்கும்,
விந்தை என்ன ?
விதி என்ன ?++++++++++++++
புளுடோவுக்கு அப்பால் பூமி வடிவில் சூரிய மண்டலத்தின் புதிய புறக்கோள் – 10
ஒன்பதாவது கோளாய் ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோ 2006 ஆகஸ்டில் குள்ளக் கோள் வகுப்பில் தள்ளப்பட்டு , ஒன்பதாம் கோள் தகுதி இழந்து ஒதுக்குப்பட்டது. அதன் பிறகு கால்டெக் விஞ்ஞானிகள் இருவர், கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் பூமிபோல் பத்து மடங்கு பெரிய கோள் -9 புளுடோ வுக்கு அப்பால் ஒளிந்து திரிவதை 2016 ஜனவரியில் மெய்ப் படுத்தினார். பரபரப்பான இந்த சூரிய மண்டலப் புதிய கோள் எண்ணிக்கை, பலரை வியப்புக்குள்ளாக்கி வரும்போது, பூமி வடிவில் இப்போது [2017 ஜூனில்] பத்தாவது கோளும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று அரிசோனா பல்கலைக் கழக வானியல் நிபுணர் இருவர், காத் வோக் & ரேணு மல்கோத்ரா [Kat Volk & Renu Malhotra] அறிவிப்பது மேலும் குழப்பத்தை உண்டாக்கி யுள்ளது. இத்தோடு சூரிய குடும்பக் கோள்களின் எண்ணிக்கை முடிந்து விட்டது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்யக் கூடாது என்றும் அரிசோனா நிபுணர் எச்சரிக்கையும் விடுகிறார்.

அரிசோனா பல்கலைக் கழகத்துக் கோள் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பூமி-செவ்வாய்க் கோள்கட்கு இடைப்பட்ட வடிவில் கோள் வடிவில், பனி மண்டலக் கியூப்பர் வளையத்தில் [Kuiper Belt] ஒளிந்து திரியும் சூரிய மண்டலக் கோள் இருப்பதை உறுதியாக நம்பி அறிவிக்கிறார். 2016 ஜனவரியில் கால்டெக் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் இருவர், புளுடோக்கு அப்பால் பூமிபோல் 25 மடங்கு பெரிதாய், ஒளிந்திருக்கும் மாபெரும் கோளை முன்னறிவித்தார். அந்தக் கோள் வேறு. தற்போது அரிசோனா நிபுணர் அறிவித்த பூமி வடிவக் கோள் வேறு. இந்தக் கோள் கியூப்பர் அரங்கு அண்டங்களின் சூரியச் சுற்றுப் பாதைகளைச் சராசரி 8 டிகிரி சாய்வு செய்கிறது. இந்த விஞ்ஞான அறிவிப்பு அடுத்து வானியல் விஞ்ஞான இதழில் [The Astronomical Journal] வெளியாகப் போகிறது.

இந்த மர்மக் கோள் -10 சிறியது; பூமி வடிவில் பூமியிலிருந்து 500 – 700 AU [Astronomica Unit] [One AU = distance between the Sun & Earth] [93 மில்லியன் மைல் அல்லது 150 மில்லியன் கி.மீ.] தூரத்தில், நெப்டியூன் கோளுக்கு அப்பால் புலப்படாமல் ஒளிந்து கொண்டு திரிகிறது. ஹப்பிள் தொலைநோக்கியை விட நூதன பெரிய தொலைநோக்கி மூலம் தேடினால் கிடைத்து விடலாம். புளுடோ சூரியனை உச்ச தூரத்தில் சுற்றுவது சுமார் 50 AU தூர அளவு. கியூப்பர் வளைய அண்டங்களின் தூரம் சுமார் 100 AU.
புறக்கோளாய் சூரியனுக்குப் புதிய பூதக்கோள் – 9 இருப்பு
[ஜனவரி 2016]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++++
http://video.pbs.org/video/
1790621534/ https://www.youtube.com/watch?
feature=player_embedded&v= mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?
feature=player_embedded&v= YTRP_lyBk7A *********************


புதுப் புறக்கோள் -9 தொடர்ந்து எமக்கு வியப்பளித்து வருகிறது. கூர்ந்து நோக்கும் போது மர்மமாக இருந்த சூரிய மண்டத்தின் சில புதிர்களை விடுவிக்கிறது.
கான்ஸ்டன்டின் படிஜின் [Professor, Planetary Science Caltech Researcher]
மற்ற கோள்கள் போலின்றி மிகச் சரிந்த சுற்றுப் பாதையில் செல்லும் புதுக் கோள் -9 இன் நிறை பேரளவானது ! அதனால் சூரிய மண்டலம் மெதுவாய் நேர்நிலை நழுவிச் சரிவதைத் தவிர வேறு வழியில்லை.
எலிஸபெத் பெய்லி [கோள் -9 கண்டுபிடித்த கால்டெக் ஆய்வுக் குழு மாணவி]
பெருநிறை கொண்ட புதுக்கோள் -9 சூரியனைக் குலுக்கிச் சாய்க்கிறது
2016 ஜனவரியில் ஹப்பிள் போன்ற தொலைநோக்கிக் கருவிகளுக்குத் தெரியாது, கணினி போலி மாடல் மூலம் இருப்பதாய்க் கருதப்பட்டது பூதப் புறக்கோள் -9. அதன் இருப்பு, சுற்றுப் பாதை, நிறையைக் கணித்தவர் இருவர். அமெரிக்கக் கால்டெக் ஆய்வகத்தின் கோள் ஆய்வுப் பேராசிரியர், கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Konstantin Batygin & Michael Brown] அவரது 2016 அக்டோபர் 18 ஆம் தேதிப் புதிய வாசிப்பு வெளியீடு [American Astronomical Society Annual Meeting], கோணி நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வரும் புதுக்கோள் -9 சூரியனின் வழக்கத்துக்கு மாறான சரிவுக்குப் [Tilt] பொறுப்பாகிறது என்று அறிவிக்கிறது. வெகுதூரத்தில் பேரளவு நிறை கொண்ட புதுக்கோள் -9 சூரிய மண்டலத்துக்கு ஒரு குலுக்கைச் [Wobble] சேர்க்கிறது என்றும் கூறுகிறார். அந்தக் குலுக்கே சூரிய மண்டலம் சிறிது சரிந்துள்ளதாகக் காட்டுகிறது.

பொதுவாக சூரியனின் அண்டக்கோள்கள் இரண்டு டிகிரிக் கோணத்துக்குள் ஒன்றுக்கொன்று மாறுபடும் மட்டநிலைப் பாதைகளில்தான் சுற்றி வருகின்றன. அந்த மட்டநிலை சுற்றுப் பாதைகள் சூரியனுக்கு 6 டிகிரிச் சாய்வில் உள்ளன. அச்சரிவு சூரியனே சற்று கோணிப் போனதாய்க் காட்டுகிறது ! இதுவரை அவ்விளைவு எதனால் நேர்கிறது என்று எவராலும் உறுதியாக விளக்க முடியவில்லை. அதனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. புதுக்கோள் -9 பூமியைப் போல் 10 மடங்கு வடிவு. சுற்றும் தொலைவு : புறக்கோள் நெப்டியூன் சூரியனைச் சுற்றும் தூரத்தைப் போல் 20 மடங்கு அளவு. புதுக்கோள் -9 இன் சுற்றுப் பாதை மற்ற கோள்கள் சுற்றும் மட்டப் பாதைக்கு 30 டிகிரிக் கோணத்தில் இருப்பதாகத் தெரிகிறது. புதுக்கோள் -9 சூரியனைச் சாய்ப்பது போல், கியூப்பர் வளைய [Kuiper Belt] அரங்கில் நகரும் ஏராளமான அண்டங்களையும் பாதிப்பு செய்கிறது.

புதுக்கோள் -9 இன் “கோண நெம்பியக்கம்” [Angular Momentum], தனது பூத வடிவத்தாலும், தூர இடத்தாலும் சூரிய மண்டலத்தில் நிறை மீறிய தாக்கத்தை [Outsized Impact] உண்டாக்குகிறது. [Angular Momentum = Mass of the Planet X Its Distance from the Sun]. மேலும் புதுக்கோள் -9 இன் வியப்பான கோணப் பாதை சூரியனுக்குப் பல பில்லிய ஆண்டுக்கு ஒரு குலுக்கு [A Multi-billion-year Wobble] கொடுக்கிறது ! அந்தக் குலுக்கு 6 டிகிரிச் சரிவுக்கு வெகுப் பொருத்தம் என்று சொல்கிறார் மைக்கேல் பிரௌன்.
புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, புதுக்கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது. அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம். அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது.
கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers]
சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம்
சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது. ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது. அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல்[Computer Simulation Model] மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்: காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown]

சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது. நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில் [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது.

இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை. 2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard] வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது. அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில் உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது.

மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார். அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார். அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது. இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார். அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார். 2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர். இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன.
எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை. அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல. தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும். அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.
பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !
ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency) [ஏப்ரல் 15, 2008]

பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு
பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids] என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது. முரண் கோள்கள் சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு; அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது, ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos] ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள் [Beads like Chondrules] எறிகற்களில் காணப்பட்டன. அவை இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது. இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.
முடிவுகள் இவைதான் :
1. முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள். அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.
2. உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே. சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா. அவையும் கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?
வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது ! பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !
பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன. அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?
விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை. 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்: அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது ! 1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார். ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.
இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது. அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள். அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது. முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது. வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது. மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது. அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?
வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது. மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது. நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ? பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது ! அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது. அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !
பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது. அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது. தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.
பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது. அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின. தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின. துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.
பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின. வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன. புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின. வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின. ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது. செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !
அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ? அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ? அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான். கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான். இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !
ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் ! அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது. இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.
++++++++++++++++++++++
[தொடரும்]
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40206291&format=html[சூரியன்]
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40804101&format=html (What will Happen to the Sun ?)
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008] 19. http://www.spacedaily.com/
reports/A_twist_on_planetary_ origins_999.html [January 15, 2015] 20. http://www.spacedaily.com/
reports/Meteorite_material_ born_in_molten_spray_as_ embryo_planets_collided_999. html [January 15, 2015] 21. http://mashable.com/2016/01/
20/new-solar-system-planet- nine/#PKq33NOdLPqT [January 20, 2016] 22. http://iopscience.iop.org/
article/10.3847/0004-6256/151/ 2/22/pdf 24. http://www.dailygalaxy.com/
my_weblog/2016/01/caltech- evidence-found-for-a-ninth- planet-in-the-outer-solar- system.html? [January 20, 2016] 25. http://www.dailygalaxy.
com/my_weblog/2016/01/todays- galaxy-insight-beyond-pluto- discovery-of-an-unseen-9th- planet-in-our-solar-system- video.html? [January 23, 2016] 26. http://www.dailygalaxy.com/
my_weblog/2016/10/unusual- tilt-of-our-sun-caused-by- planet-caltech-scientists- explains-something-about-the- solar-syste.html? [October 19, 2016] 27. http://www.cbc.ca/news/
technology/9th-planet-x-1. 3412070 [January 21, 2016] 27(a) https://en.wikipedia.org/
wiki/Pluto [May 20, 2017] 28. https://en.wikipedia.org/
wiki/Planets_beyond_Neptune [June 23, 2017] 29. http://www.dailygalaxy.
com/my_weblog/2017/06/the- curious-case-of-the-warped- kuiper-belt-is-there-an-earth- sized-planet-far-beyond-pluto. html [June 22, 2017] 30. https://www.space.com/37295-
possible-planet-10.html?utm_ source=sdc-newsletter&utm_ medium=email&utm_campaign= 20170623-sdc [June 22, 2017] ******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 24, 2017 [R-4]
Attachments areaPreview YouTube video Evidence of a Ninth Planet
Evidence of a Ninth PlanetPreview YouTube video Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016
Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016Preview YouTube video We can’t see this possible 9th planet, but we feel its presence
We can’t see this possible 9th planet, but we feel its presence
Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been -
கவியரசர் கண்ணதாசன்
விவேக பாரதி
கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து….இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்….
வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ?
வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ?
ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ?
ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ?ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல,
ஊருக்குள்ள கேக்குற உற்சாகக் கூத்துல,
தானும்வந்து நிக்குறானடி – என் கண்ணம்மா
தமிழால சொக்குறோமடீ !பாட்டுபாடி வந்தானே பாடமெலாஞ் சொன்னானே
பக்குவமா பக்தியோடு பலசேதி தந்தானே !
ஆட்டம்போட வெச்சானே அமையாக வெச்சானே !
ஆடி அடங்கிப்போகும் அர்த்தமெலாஞ் சொன்னானே !கூட்டஞ்சேக்க பாக்கல ! கொள்கயெதும் பேசல !
கூட்டாளி யாகல ! குடுக்காம போகல !
நாட்டுக்குள்ள நிக்குறானடி – என் கண்ணம்மா
நாமபாத்து சொக்குறோமடீ !கண்ணனுக்கு தாசனா ! கவிதைக்கெல்லாம் ராசனா !
கதசொல்லும் பாட்டுகளக் காலமெலாம் வீசுனான் !
வண்ணத்தமிழக் கொஞ்சுனான் ! வரிவரியாக் கொஞ்சுனான் !
வாழ்க்கையோட தத்துவத்த வாழ்ந்துகிட்டே பாடுனான் !கிண்ணத்தையும் மறக்கல ! கீதையையும் மறக்கல !
கீழிருந்து வந்தவன் மறுபடியும் விழுகல !
எண்ணத்துல நிக்குறானடி – என் கண்ணம்மா
எழுத்தால சொக்குறோமடீ !https://soundcloud.com/vivekbharathi/nlb3dghekzqg
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பகவான் உவாச
———————-
”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -ஆரியா
தேரை குதிரையை தேர்ந்தெடுத்த நீயெனக்குத்
தேரைநான் பாறை துளி’’….கிரேசி மோகன்….! -
நாளையென்ன நாளை
நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! – உன்
. நல்லருளை இன்றனுப்பு வரதராஜா !
நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா – உன்
. நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா !
தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே – மனம்
. தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே
ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா – அட
. அம்பிகையின் சோதரனே வரதராஜா !காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ – உன்
. கழல்பிடிக்க விளையாட்டு கொண்டிருப்பதோ
ஓலமிட்டு கெஞ்சுமொலி கேட்கவில்லையோ – என்ன
. ஓரவிழியின் ஜாலமெலாம் பிள்ளைமுன்னமோ ?
தோலிறுக்கம் மொழிநடுக்கம் நேரும்போதுதான் – உரு
. தோற்றியெனைத் தேவலோகம் காட்டுமெண்ணமோ ?
பாலனிட்ட கவிப்புலம்பல் மாண்டுபோகவோ – ஒரு
. பார்வையொளி வீசமனம் சொல்லவில்லையோ ?காத்திருப்பு நன்மையென்று கண்டபோதிலும் – உன்
. கருணைமழை கடமைவினை அதைமறுப்பதோ ?
பூத்திருக்கும் கண்களுக்குள் புயல்நடப்பதோ ? – வளிப்
. பூழ்திவந்து நெஞ்சினோரம் வெடிவெடிப்பதோ ?
சாத்திரங்கள் சொல்வதுபோல் வாட்டுமெண்ணமோ ? – இந்தச்
. சமகாலத் தீயட்டம் இன்னும்மன்னுமோ ?
ஆர்த்தெழுந்து கையிலெனைத் தூக்குராஜா – உன்
. அருட்கமலப் பாதத்தைக் காட்டுராஜா !https://soundcloud.com/vivekbharathi/drofx6rv7ntu
“ஓம் சக்தி”
விவேக்பாரதி






















