இவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி

உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருக்கோயில் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு ஆலோசனை அளித்து, நடக்கத் தூண்டுதலாக இருந்தவர், பார்யாய பேஜாவர் மடத்தின் தலைவரான விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் ஆவார்

சுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மாலை 6.59 மணி அளவில் தன் நோன்பை முறித்த பின், வாழைப்பழம், ஆப்பிள், பேரீச்சை ஆகிய உணவுகளுடன் கஷாயமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் “கர்நாடகாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

2

இவர் 30 ஆண்டுகளாக ரம்ஜான் சமயம் இந்து-முஸ்லிம் சம்மேளனத்தை நடத்தி வந்தாலும் உடுப்பி கோவிலில் நடப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.

இப்தார் உணவு உண்டபின், கோயில் வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தினார்கள்.

அன்பையும்  சமத்துவத்தையும் வலியுறுத்தும் வைணவம் மற்றும் இஸ்லாமிய நெறிகளை பின்பற்றுவோர் தம்மிடையே உள்ள ஒற்றுமைகளையும், தாம் இந்தியர், சகோதரர், ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகளை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

1

இந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இவ்வார வல்லமையாளர்

  1. செல்வன் என்றால் செல்வன் தான். அருமையான தேர்வு. இந்த ஒரு பதிவினால், வல்லமையின் புகழ் பரவுகிறது. செல்வனின் புகழ் ஓங்குகிறது. நமக்குத்தான் சுவாமிகலின் ஆசீர்வாதத்ததால் பெருமை.

  2. ஆஹா, நல்ல தெரிவு. தகுந்த ஆலோசனை அளித்த விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகளுக்கும் இதனை ஏற்றுச் செயல்படுத்திய உடுப்பி கண்ணன் திருக்கோவில் குழுவினர்க்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

  3. மிகச்சிறப்பான தேர்வு. விஷ்வேச தீர்த்த சுவாமிகளை தேர்வு செய்து அடையாளம் காட்டிய ஆசிரியர் திரு. செல்வனுக்கும் ஏற்று அங்கீகரித்த வல்லமை குழுவினருக்கும் வாழ்த்துகள். ஐயாவிற்கு அன்பும் வணக்கமும். அன்பும் சமத்துவமும் என்றென்றும் தழைக்கட்டும். 🙂

  4. அருமையான நடுநிலையான தேர்வு. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.