Archive for the ‘கேள்வி-பதில்’ Category

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43 43. அறிவுடைமை குறள் 421: அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் அறிவு நமக்கு அழிவு வராம காக்கும். அது மட்டுமல்லாம பகையாளியாலயும் அழிக்க முடியாத அரண் கணக்காவும் நிக்கும். குறள் 422: சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு மனச அது போக்குல விடாம கெட்டத வெலக்கி நல்ல வழில நம்மள நடத்துததே அறிவு. குறள் 423: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு யார் என்ன சொன்னாலும் நம்பாம உண்ம எது னு கண்டுபிடிக்கது தான் அறிவு. குறள் 424: எண்பொருள வாகச் ... Full story

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42 42. கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை காதால கேட்டுப்பெறுத நல்ல விசயங்களே சிறப்பான சொத்து. அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது. குறள் 412: செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் காதுக்கு மகிழ்ச்சி தருத விசயங்கள் ங்குத உணவு கெடைக்காம போவுதப்போ தான் வயித்துக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு கொடுக்கப்படும். குறள் 413: செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து கேள்வி ஞானம் ங்குத செவி உணவு கெடச்சவங்க பூமி ... Full story

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41 41. கல்லாமை குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் நெறய புத்தியக் கொடுக்க நூல்களப் படிக்காதவன்  படிச்சவங்க சபையில பேசுதது கட்டம் வரையாம தாயக்கட்டம் ஆடுததுக்கு சமானம். குறள் 402: கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று படிக்காதவன் ஒண்ணச் சொல்ல விரும்புதது முலை ரெண்டும் இல்லாதவ பெண் தன்மய விரும்புதது கணக்கா ஆவும் . குறள் 403: கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் படிச்சவங்க முன்ன ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாம்னா  ... Full story

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37 37. அவா அறுத்தல் குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து எல்லா உசிருக்கும் எல்லாக் காலத்திலயும் ஓயாம வருத பிறவித் துன்பத்த உண்டாக்கும் விதை தான் ஆச. குறள் 362: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் ஒண்ண விரும்புததுக்கு நெனைக்கவன் பொறக்காம இருந்திருக்கலாமோன்னு ரோசன (யோசனை)  பண்ணுத அளவு தொயரம் ஆசய ஒழிக்கலேனா வரும். குறள் 363: வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்ப தில் எதிலயும் ஆச இல்லாம இருக்குததுபோல செல்வம் இந்த ஒலகத்துல இல்ல. ... Full story

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36 36. மெய்யுணர்தல் குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு பொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது. குறள் 352: இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு மனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி ... Full story

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35

-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-35 35. துறவு குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் ஒருத்தன் எது எதுலேந்தெல்லாம் ஆசப் படாம வெலகுதானோ அந்தந்த பொருள் னால ஏற்படுத துன்பம் அவன அண்டாது. குறள் 342: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல துன்பம் அண்டாம வாழணும்னா எல்லாம் நம்ம கிட்ட இருக்குதப்பவே அது மேல இருக்க ஆசய ... Full story

கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி
சேஷாத்ரி ஸ்ரீதரன் கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி புதுவை அருகு  திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் கிடக்கும் கற்பலகையில் உள்ள 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட  கல்வெட்டு. விளம்பிஸ்ரீ_ _ _ மாதம் 10 தேதி நயினார் வசவப்ப மழவராயர் திருவய்யாறுடை ய நயினார் கோயில் வந்தேறு குடியளு க்கு ... Full story

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் - 33 33.கொல்லாமை குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் அறம் ங்கது என்னன்னா எந்த உசிரயும் கொல்லாம இருக்கது. கொல்லுதது எல்லா பாவத்தையும் குடுக்கும். குறள் 322: பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை இருக்கத பங்குபோட்டு சேந்து சாப்புட்டு பல உசிர காப்பாத்தணும் ங்கது நூல்கள ... Full story

ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!
இன்னம்பூரான் திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்றுப் பேராசிரியர், என்னுடைய மாமனார். மணிக் கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப் புனல் காலத்துச் செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, என் மனத்தில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்துகொண்டேன். அது மனத்தில் உதித்தது, இன்றும். “குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹம் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (287)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் மற்றொரு மடலுடன் அன்பு வாசகர்களுடன் கருத்தாட விழைகிறேன். காலம் காற்றாகக் கரைந்து 2018ஆம் ஆண்டு இறுதியை நோக்கி அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்து முழுமையாகத் தன்னை "ப்ரெக்ஸிட்" எனும் புதை சேற்றுக்குள் புதைத்துக் கொண்டு செல்கிறது. இந்த "ப்ரெக்ஸிட்" எனும் சொல்லின் பின்னால் இங்கிலாந்து நாட்டில் ஏற்படப்போகும் சிக்கல்களின் ஆழத்தை"ப்ரெக்ஸிட்" தேவை என்று வாக்களித்த மக்கள் முழுமையாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது சந்தேகமே! 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது தவிர்க்கப்படமுடியாத உண்மை. மிக விரைவாக அக்காலக்கெடுவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னால் ... Full story

குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

-முனைவர் த. ராதிகா லட்சுமி      பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர். 'பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு:' என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ஏற்படுவது சகஜம். புத்தாடைகள் வாங்கிப் பட்டாசுகள் வெடித்து ஆடம்பரமான கேளிக்கைகள் இடம்பெறும் அதேசமயத்தில் நாட்டில் நிலவும் சமகால நிகழ்வுகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இங்கிலாந்தில் இவ்வாரம் ... Full story

மரணத்தைத் தடுத்த மனித நேயம்!

மரணத்தைத் தடுத்த மனித நேயம்!
-முனைவா். இரா. மூர்த்தி  புகைவண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரமே இருந்தது. நேரத்தை விரயம் செய்யாமல் எப்படியாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு வேகமாக நடந்தான் ரகிம். டீக்கெட் கவுண்டரில் பதினைந்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்து நிமிடத்திலே டிக்கெட்டும் கிடைத்தது.  நடைபாதையில் வரும் வழியில் ஒருவரிடம் ‘சார் அமிர்தா எக்ஸ்பிரஸ் எத்தனையாவது நடைமேடையில் நிக்குது. “தம்பி மூன்றாவது நடைமேடையில்” சரி நன்றி சார். ... Full story

ஒரு நாள் கூத்து!

-பேரா. ம. பரிமளா தேவி உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள். என்னங்க ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (285)

அன்பினியவர்களே! அன்பினுமினிய வணக்கங்கள். காலத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எமக்கு வாரங்கள் அவசரமாய்ப் புரண்டு கொண்டு ஓடுவது தெரிவதில்லை/ இதோ மற்றொரு மடலில் உங்களுடன் உறவாட விழைந்து இம்மடல் வரைகின்றேன். இந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. சில அனைவராலும் வரவேற்கப்பட்டவை, மற்றும் சில அனைவராலும் வெறுக்கப்பட்டவை வேறு சிலவோ கலவையான உணர்வுகளைக் கொண்டவை. முதலாவதாக இங்கிலாந்தின் பிரதமர் திரேசா மே அவர்களின் நிலையை எடுத்துப் பார்த்தோமானால் அவரது எதிர்காலம் சிக்கல் மிக்க கேள்வியாகவே இருக்கிறது. “ப்ரெக்ஸிட்" எனும் ஒரு பெரிய சுமையை எப்போது ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.