Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்

     

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    jaya1

     

    http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html

    http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101

    *****

    அழுதாலும் பயனில்லை!

    தொழுதாலும் பயனில்லை!

    கரைமதில் உடைந்து விட்டால்,

    காத தூரம் ஓட வேண்டும் அம்மா !

    குடியிருக்க இடம் ஏதம்மா ,

    கடல் தடுப்பு முறிந்து போனால்!

    உடைந்து போகும் பழைய மதில்

    ஓலமிட்டு மக்கள்

    துயரப்படவே  வைக்குதம்மா!

    ++++++++++

    லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]

    jaya2

    பூம்புகார் சூறாவளிச் சுனாமி அடித்துக்

    கடல் மூழ்கிப் போன தம்மா!

    சுனாமிப் பேயலை மீண்டும்

    கடந்து போன ஆண்டில்,

    கடும் புயலாய் அடித்து

    மீனவர் குடிசைகளை விழுங்கிய தம்மா!

    ஒருநாட் பொழுதில் அடித்த

    சூறாவளி  பூதப் பேய்மழை

    நியூ ஆர்லீன்ஸ்

    பெருநகரை நரக மாக்கிய தம்மா!

    +++++++++++++++

    jaya3

    ஆண்டுதோறும் அமெரிக்காவில் அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள். 

    ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன ?  ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன.  மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது.  சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும்?

    jaya4

    2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2016 இல் இதுவரை இந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய்விட்டது !  அடுத்த கேள்வி, எங்கே இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன ?  1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே.  2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே !  2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின.  ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.

    +++++++++++++

    ‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘

    இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]

    jaya5

    ‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘

    வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]

    ‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘

    காதிலீன் பிளான்கோ [Louisiana Governor (Aug 31, 2005)]

    jaya6

    உலகிலே நீளமான ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதில்கள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

    jaya7

    சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

    jaya8

    நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை

    சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

    jaya9

    ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு

    2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.

    1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.
    2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.
    3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.

    jaya10a

    நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்

    அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்கவில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர்நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.

    jaya-10

    கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்

    நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.

    jaya11

    நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.

    jaya12

    பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா

    நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

    jaya13

    நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]
    2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)
    3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)
    4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]
    5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)
    6. Mayor of New Orleans Orders Forced Evaquations By: CTV.ca News Staff (Sep 7, 2005)
    7. An American Tragedy, Time Magazine Special Report (Sep 2, 2005) Picture Courtesy: Time.
    8.  http://www.nhc.noaa.gov/[USA Hurricane Center]
    9.  http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/hurricane-profile/
    10.  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone[October 13, 2016]
    11. https://en.wikipedia.org/wiki/Effects_of_Hurricane_Katrina_in_New_Orleans [October 14, 2016]
    12. https://en.wikipedia.org/wiki/Hurricane_Matthew[October 15, 2016]
    13. https://blogs.scientificamerican.com/sa-visual/visualizing-hurricanes/?print=true[September 1, 2016]

    *****************************

    jayabarathans@gmail.com [S. Jayabarathan] (October 15, 2016)

     

     

    Share
  • தமிழ் இலக்கியங்களில் தாவர அறிவியல்

    -சு.விமல்ராஜ்

    சங்க இலக்கியங்கள் பழையனவற்றைப் பாதுகாக்கின்ற ஆவணங்களாக விளங்குகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இலக்கியங்கள் மிகச்சரியான சான்றுகளாக விளங்குகின்றன. தமிழர்களின் இந்த நுணுக்கம், வானியல்,தாவரவியல்,விலங்கியல்,உளவியல், மொழியியல் போன்ற பல்துறைப் புலமை இவைகளெல்லாம் பல நூற்றாண்டுகள் காடு, மலை, கடல், விலங்கு, பறவை, வானம் என்ற இயற்கையின் எல்லா நிலைகளையும் அதன் ஆழ அகலங்களில் நுழைந்து அனுபவித்து வாழ்ந்ததன் மூலம் பெற்ற பட்டறிவின் வெளிப்பாடே என்று சொல்லலாம்.

    தமிழிலக்கியத்தில் இருக்கக்கூடிய தாவார அறிவியல் உண்மைகள், தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் அல்லது இயற்கை மீதான முழுமையான அன்பு இவைகளைப் பார்ப்பதற்குமுன்னால் தமிழர்களின் உயிர்க்கொள்கையைச் சற்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். காரணம், அந்த உயிர்க்கொள்கையே மிக அற்புதமானது. மேலைநாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர்க்கொள்கை, தாவரம் சார்ந்த கொள்கை இவைகளைப் பதிவுசெய்தது 19ஆம் நூற்றாண்டு. ஆனால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கிய இலக்கண நூல்களின் வாயிலாகப் பல்வேறு அறிவியல் நுணுக்கங்களைத் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

    ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அவற்றோடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
    ஆறறி வதுவே அவற்றோடு மனனே
    (தொல்.மர.1526)

    என்று உயிர்களை அதன் அறிவின் தன்மைக்கேற்ப வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். கரோலஸ் லின்னேயஸ் உலக உயிர்களை இரண்டு பிரிவாக பிரித்தார். ஒன்று தாவர உலகம், மற்றொன்று விலங்கு உலகம். தொல்காப்பியர் சுட்டும் ஓரறிவு உயிர் தாவர உலகம். ஏனைய நான்கு உயிர்களும் விலங்கு உலகத்தைச் சார்ந்தது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களின் அறிவுகளை வைத்தே உயிர்களின் வகைப்பாட்டியலைத் தொல்காப்பியர் முன்வைக்கிறார். ஆறாவது புலனாக மனத்தைச் சுட்டியே மனத்தின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிற உயிராக மனித விலங்கை அடையாளப்படுத்துகிறார். அதுமட்டுமின்றி மனிதனை உயர்திணை என்று பிரித்துக்காட்டி, மனிதனைத் தவிர்த்த ஏனைய உயிர்களை அல்திணை என்றார் அவர். ஹிப்போகிரேட்டஸ், அரிஸ்டாடில், தியோஃபரஸ்டஸீம், ப்ளைனி த எல்டர், ஜான்ரே, கரோலஸ் லின்னேயஸ், அகஸ்டின் பாரமஸ்டின் கண்டோல் ஆகிய இவர்களெல்லாம் உயிரினம் தொடர்பாகவும், தாவரத்தின் வகைப்பாடுகள் தொடர்பாகவும் விதியைப் படைத்தவர்கள்.

    தொல்காப்பியர் புலன் அறிவை வைத்துப்பேசுகிறார். மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் உயிர் இயங்குதல் அல்லது திசுக்களின் அடிப்படையில் பிரிக்கிறார்கள். 19-ஆம் நூற்றாண்டில் வார்மிங் நீர்வாழ் தாவரங்கள், இடைனிலைத் தாவரங்கள், வறள்நிலத் தாவரங்கள் என்று மூன்றாகப் பிரித்தார். தாவர வகைப்பாடு என்பது அதன் வளரும் தன்மையை வைத்துத்தான் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வளரும் இடம், அதன் சூழல் எது என்பதை வைத்து அதன் தன்மையைப் பிரிக்கிறார்கள் அறிவியலாளர்கள். தமிழர்களின் தாவர வகைப்பாடு வளர்நிலை அடிப்படையில் இருந்தது, மேலை நாட்டு வகைப்பாடும் வளர்நிலை அடிப்படையில் இருந்தபோதும் 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. தமிழில் இத்தகைய செயல்முறை அறிவியல் வளர்ச்சி இல்லை.

    மேனாட்டு அறிஞர்களின் பார்வையில் தாவரங்கள் தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோபைட்டா என்று மூன்று பெரும்பிரிவாகப் பார்க்கப்படுகிறது. தாலோபைட்டாவை தகட்டுத்தாவரங்கள் என்றும் பிரையோபைட்டாவை பாசத்தாவரங்கள் என்றும் டெரிட்டோபைட்டாவை குழாய்த்தாவரங்கள் என்றும் தமிழில் அழைப்பர். குழாய்த்தாவரம் என்னும் அமைப்பில்தான் பெரும்பாலான புல், மரம், செடி, கொடி ஆகிய அனைத்தும் அடங்கும். மேலும் விதைமூடிய தாவரம் விதைமூடாத தாவரம் என்றும் சுட்டுவர். விதை மூடியது ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் பொதுவானது. விதை மூடாதது ஜிம்னோஸ்பெர்ம். இது குளிர்பகுதிகளில் வளரக்கூடியது.

    இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் கருதும் தொல்காப்பியர் ஓரறிவு உடையது என்று தாவரத்தையே சுட்டுகிறார். “புல்லும் மரனும் ஓரறி வினவே”(தொல்.மர.1527) என்கிறார். இந்த இடத்தில் புல் என்றும், மரம் என்றும் தாவரத்தை இரண்டாக பிரிக்கிறார். புறக்காழ் உடையது புல், அகக்காழ் உடையது மரம், காழ் என்பதை வைரம் என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள். இந்த வகைப்பாடு உள்ளீடு அடிப்படையிலானது. உலகில் உள்ள அனைத்துத் தாவரங்களையும் இந்த வகைப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது தொல்காப்பியரின் எண்ணம். புறவயிர்ப்பு உடைய புல்லின வகைத் தாவரத்திற்குரிய உறுப்புகளைக் குறிப்பதற்கென்று தனியே பெயர் வழக்குகள் உள்ளனவென்பதைத் தொல்காப்பியர்,

    தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்
    (தொல்.மர.1586)

    என்று குறிப்பிடுகிறார். புல்லினத்தின் இலை தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறது. அவற்றின் பூவுறுப்பு பாளை எனப்படுகிறது. பழம் கொத்தாகத் தோன்றுவதால் அவை குலை என்று பெயரிட்டுக் கூறப்படுகிறது. நீண்ட இலையின் மைய நரம்புகள் ஈர்க்கு என்று அழைக்கப்படுகிறது.

    அகவயிர்ப்பு உடைய மரவகைத் தாவரத்திற்கு உரிய உறுப்புகளைக் குறிப்பதற்கு தொல்காப்பியர்,

    இலையே முறியே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத்த அனையவை எல்லாம்
    மரனோடு வரூஉம் கிளவி
    (தொல்.மர.1587) என்கிறார்.

    புல்லினம் மரஇனம் என்ற இரண்டிற்கும் பொதுவான உறுப்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு,

    காயே பழமே தோலே செதிளே
    வீழோடு என்றாங்கு அவையும் அன்ன
    (தொல்.மர.1588)

    என்கிறார். தென்னையும் கமுகு என்னும் பாக்கும்  புல்வகையைச் சார்ந்தது இதன் காய் தேங்காய் கமுகங்காய் எனப்படுகிறது. வேம்பு மருதம் இவ்விரண்டும் மரவகையைச் சார்ந்தது. இதன் காய் வேப்பங்காய் மருதங்காய் எனப்படுகிறது. பழத்திற்கும் இதையே கூறுவர். பனை புல்வகையைச் சார்ந்தது; வேம்பு மரவகையைச் சார்ந்தது. இவ்விரண்டிற்கும் பனந்தோல், வேப்பதந்தோல், பனஞ்செதில் வேப்பஞ்செதில் என்பன பொதுவாக உள்ளன.

    புல் மரம் என்ற பகுப்பு அதன் உள்ளீடு தொடர்பானது. அதுமட்டுமல்லாமல் தமிழில் வளரியல்பு நோக்கில் தாவரம் வகைப்படுத்தப்படுகிறது. அவை மரத்தாவரம், கொடித்தாவரம், நிலத்தாவரம், நீர்த்தாவரம் என்பனவாகும். இந்த வகைப்பாடு பூவை முன்னிலைப்படுத்தியே பிரித்துப்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பூவை மரத்தில் பூக்கக்கூடிய கோட்டுப்பூ, கொடிப்பூ, செடி அல்லது புல்லினங்களில் பூக்கக்கூடிய நிலப்பூ, நீர்ப்பூ என்று நான்காக வகைப்படுத்தப் படுகிறது.

    கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப் பூவொடு
    புதல்பூ
    என்று இவை நால்வகைப் பூவே ( பிங். நிகண்.2781) என்கிறது பிங்கல நிகண்டு. இந்த நான்குவகை அடிப்படையில் பல்வேறு சான்றுகளைத் தாங்கி நிற்கிறது சங்க இலக்கியங்கள். கோங்க மரத்தின் பூந்தாதினைச் சொல்லும்பொழுது அகநானூற்றில் ‘சினைப் பூங் கோங்கின் நுண் தாது’ (அகம்.25.10) என்று இடம்பெற்றிருக்கிறது. சினை என்பது மரத்தாவரத்தின் உறுப்புப்பெயர். வண்டுகள் மாலை நேரத்தில் கூம்பும் இயல்புடைய நீர்ப்பூக்களில் இருந்து விலகி மரத்தின் பூக்களைப் போய்ச்சேர்ந்தன என்னும் செய்தியை அகநானூற்றின் ஒரு பாடல் வழியே பெறமுடிகிறது.

    அதாவது,
    வண்டினம்
    சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர
    (அகம்.71.4) என்று சுட்டுகிறது.

    புதலில் பூக்கள் பூத்திருந்ததைப் புறநானூற்றுப்பாடல் “வயலகம் நிறைய புதல்பூ மலர” (புறம்.117.3) என்கிறது.

    சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டால், மரம், கொடி, புதல், செடி, பூண்டு, பயிர், நீர்த்தாவரம், புல், பாசி, காளான், நார், புலன் உணர்வுத்தாவரங்கள், விரிவாக எடுத்துக்கொண்டால் அதில் மரங்கள் வளரியல்பு அடிப்படையில் எடுத்தாளப்படுகிறது. மரம் என்ற சொல் திராவிட மொழிகளில் மரம், மரனு, மர, மேன், மர்ம், மாக், மக் என்று ஒரே பொருளை உணர்த்தியும் ஒலித்திரிபு அடைந்தும் வழங்கப்படுகிறது. மரவழிபாடுதான் மிகப்பழமையான வழிபாடு.

    சங்க இலக்கியம், வாவல் பழுமரம் (குறுந்.172), காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த ( நற்.256), மரம் தலை மணந்த நனந்தலை கானத்து ( நற்.246) என்று மரவகையைச் சுட்டி நிற்கிறது. மரவகைக்கு மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் கூறும் நெறிமுறைகள் சங்கத்தமிழில் நிறைந்து காணப்படுகிறது. பராரை (அகம்.69) என்னும் அதன் திண்மையுடைய வைரம் அகநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மீமிசைச்சாந்து (நற்.1), வான் பொரு நெடுஞ்சினை ( நற்.3) என்ற நற்றிணைப்பாடல் வரிகள் மரம் உயர்ந்து வளரக்கூடியது என்பதை எடுத்துக்காட்டுகிறது. தொல் மூதாலம் (குறுந்.15) என்னும் குறுந்தொகைக் கவிதை மரம் நீண்டநாள் உயிர் வாழக்கூடியது என்பதை உணர்த்துகிறது. காழ் என்னும் மரத்தின் வயிர்ப்பை உணர்த்துவது போல் வெளிறுஇல் காழ்வேலம் [வேல மரம்] (நற்.302.), நறுங்காழ் ஆரம் [சந்தன மரம்] ( நற்.5) புறக்காழ் உடைய புல் இனமான மூங்கிலைக் குறுந்தொகைப்பாடல் (304) ‘முளிவெதிர் நோன்காழ்’ என்கிறது.

    அரைப்புல்லுருவி வகையாகச் சந்தனத்தைக் கூறுகிறது,

    குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
    நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
    ( நற்.5) என்பது நற்றிணைப்பாடல். இது தமக்கு உரிய உணவைத் தயாரித்துக்கொண்டு மீதமுள்ள உணவுக்கு ஏனைய தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்ளும். புல்லுருவி வகை என்பது உண்டு. இது தமக்கு உரிய உணவைத் தாமே தயாரிக்கும் ஆற்றல் இல்லாமல் பிற தாவரம் அல்லது உயிர்களைச் சார்ந்து அவற்றிலிருந்து உணவைப் பெறுபவை ஆகும். இதைப் புல்லுருவி அல்லது சாறுண்ணி என்று அழைப்பர்.

    அடுத்து கொடிவகைகள் நீண்டு வளரக்கூடியவை. ஆனால் தாமாகவே தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் பிறவற்றைச்சார்ந்து நிற்கக்கூடியது. இவற்றின் தண்டுப்பகுதி மிக மெல்லியவை. கயிறு போன்று இருக்கக்கூடியவை. வேர்க்கொடி, படர்க்கொடி, பற்றுக் கம்பிக்கொடி, சுற்றுக்கொடி, பெருங்கொடி என்று ஐந்துவகையாகக் கொடியைப் பிரிப்பர். கொடியின் மெலிந்த தன்மையை நுண்கொடி(அகம்.237), புன்கொடி(மலைபடு.101), மென்கொடி(குறுந்தொ.186) என்பனவும், பரூஉக்கொடி (மலைபடு.216) தண்டின் பருத்த தன்மையைக் காட்டுகிறது. நெடுங்கொடி(ஐங்குறு.6),  மாக்கொடி(குறுந்தொ.256) என்பன கொடியின் வளமான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. வெண்கொடி(ஐங்.456),கருங்கொடி(மலைபடு.521),செங்கொடி(ஐங்குறு.25),பைங்கொடி(பெரும்பாண்.337) என்பன கொடியின் நிறத்தை உணர்த்துகிறது. நறுங்கொடி தாமலம்(நற்.292) என்பது மணத்தைக் குறிக்கிறது. இவர் கொடிப்பீரம் (ஐங்.464), இவர்ந்த அதர்கொடி அதிரல் (அகம்.159), இவர்ந்த பைங்கொடி அவரை (குறுந்தொ.240), தவழ்கொடி(கலி.102), நெடுங்கண் ஆரத்து அலங்குசினை வலந்த பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலம்  ( நற்.292),  குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன( நற்.5) என்னும் இடங்கள் எல்லாம் படரியல்பு அடிப்படையில் படர்கொடி இதனை ஆங்கிலத்தில் கிரீப்பர் என்பர், ஏறுகொடி என்பதை ஆங்கிலத்தில் கிளைம்பர் என்பர். இவ்வகை கொடிக்கு இவை சான்றாக அமைகின்றன. கொடிக்கு பவர் என்னும் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதல் வகையை எடுத்துக்கொண்டால் செடி என்|றும் பொருள் கொள்ளலாம். ஏனெனில் இது நிலத்தில் புதர் புதராய் மண்டி வளரக்கூடியது.  சிறு செடிகளையும், குற்று மரங்களையும் செடி என்று வழங்குவர். செடியை அவற்றின் வாழ்நாள் அடிப்படையில் ஒரு பருவச்செடி, இருபருவச்செடி, பல பருவச்செடி என்று மூன்றாகக்கொள்வர். ஒரு பருவச்செடி ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தோன்றிச் சிலவாரம் அல்லது மாதங்களில் இலையும், பூவும் கனியும் உண்டாகி விதைமுற்றி அப்பருவத்திலேயே பட்டுப்போகும். இருபருவச் செடியில் முறையே சேமித்தல் முதல் பருவத்திலும் அவ்வுணவைக் கொண்டு பூவும் கனியும் உண்டாக்குதல் இரண்டாம் பருவத்திலும் நிகழும். இரண்டாம் பருவத்தின் முடிவில் அத்தாவரம் முழுமையும் பட்டுப்போகும். பல பருவச்செடியில் ஒருமுறை செடி தோன்றியபின் அது வளர்ந்து பூ, கனிகளை உண்டாக்கியதும் மேற்புறமிருக்கும் தண்டுக்கிளை மட்டுமே அழிந்து போகும். நிலப்பரப்பின் உட்புறம் உள்ள கிழங்கு அல்லது மட்டத் தண்டுக்கிழங்கு முதலியவற்றிலிருந்து புதிய தண்டுக்கிளை முளைத்து வளரும் இத்தகைய வளர்ச்சி முறை மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் வரை நிகழும். இந்த பகுப்பை வைத்துப்பார்த்தால் பலபருவச்செடி என்பது குறுமர வகுப்பு அல்லது புதலை குறிப்பதாகும். இருபருவ வாழ்விகளை செடி என்று கொள்ளலாம். ஒரு பருவ வாழ்விகளைப் பூடு என்று அழைக்கலாம்.

    அணிலின் வால்போல் கதிர்கொண்ட ஊகம்புல், மணமிக்க புல்லாகிய நரந்தம், பசும்புல், நுண்புல் முற்றா இளம்புல், முளிபுல் என்று ஊகம்புல்லும், நரந்தம்புல்லும், பொது நிலையில் புல்லின் வளரி இயல்பும் கோடிட்டுக்காட்டப்படுகிறது.

    விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
    வழும்பு கண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
    அடிநிலை தளர்க்கும் அருப்பம்
    (மலைபடு.220-22) என்ற மலைபடுகடாம் வரிகள் பாசித்தாவரத்தின் வழுக்கும் இயல்பை வழும்பு என்ற சொல்லால் குறிக்கிறது. பாசியின் வழுக்கும் தன்மைக்குக் காரணம் மியூக்கஸ் என்னும் நெய்ப்புத்தன்மையுடைய ஒரு திரவம்தான். அந்த மியூக்கஸை வழும்பு என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறித்துவைத்திருக்கிறது.

    கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்று
    கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ (நற்.65.2-3) என்று நீரின் அலையால் பிரிந்தும் சேர்ந்தும் பரவும் தன்மைக்கொண்ட பசிய நிறமுடைய பச்சைப்பாசியை குறிக்கிறது., இவை அன்றி இழைப்பாசி, கொட்டைப்பாசி ஆகியனவும் காட்டப்படுகிறது. பசுங்கனிகங்கள் பொருந்தித் தம் உணவைத் தாமே தயாரித்துக்கொள்ளும் இயல்பால் அமைந்த இதைத் தாவரமாக உணர்ந்து பாசி என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் சங்கக்கவிஞர்கள்.

    தம் உணவைத் தாமே தயாரிக்காமல் பிறவற்றைச் சார்ந்து வாழக்கூடியவை காளான்கள். இது பெசிடியோமைசீட் என்னும் வகையைச் சார்ந்தது. சங்க இலக்கியத்தில் காளான்கள், காளான், ஆம்பி என்ற பெயரால் வழங்கப்பட்டுள்ளது.

    ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
    உறையமை தீந்தயிர் கலக்கி நிரைதெரிந்து
    (பெரு.157-58)

    ஆடு நனி மறந்த கோடுயர் அடுப்பின்
    ஆம்பி பூத்த
    (புறம்.164)

    புல்லென் அட்டில்
    காழ் சேர்முது சுவர்க் கணச்சிதல் அரித்த
    பூழி படர்ந்த புழற்காளாம்பி
    (சிறுபாண்.132-34)

    என்று காளான் குறிக்கப்படுகிறது. காளானின் தன்மை ஈரப்பசை பொருந்திய இருண்ட இடங்களில் குறிப்பாக புழுதியில் தோன்றுவன. அதையே, பல நாள்கள் அடுதொழில் நடைபெறாத அடுப்பு, சமையலறைச் சுவர்கள் ஆகியவற்றின் மீது முளைத்திருப்பதைக் காட்டியிருக்கிறது.

    நார் என்பது மிக முக்கிய ஒன்றாகும். தாவரங்களின் சத்துக்களைக் கடத்துவதற்கு இந்த நார் பங்குவகிக்கிறது. முருங்கை மரத்தின் நார் தொடர்ச்சியற்றது. இதை,

    சுரம் புல்லென்ற அற்ற அலங்குசினை
    நாரில் முருங்கை நவிரல் வான்பூ
    (அகம்.1)

    என்ற அகநானூற்றுப்பாடல் சுட்டிக்காட்டுகிரது. எளிதில் முறியும் இயல்பினாலே இது முருங்கை என்னும் பெயர் பெற்றதென்பர்.

    வாழை, தென்னை, மரல், சணல், பாலை, ஆம்பல் ஆகியவற்றில் நீர் கடத்தும் நார் பற்றிய உண்மை சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புலன் உணர்வுபெற்ற தாவரங்களாக நெருஞ்சி, அனிச்சம் ஆகியன காட்டப்பெறுகிறது. தரைத்தாவரமான நெருஞ்சி மலர்ந்ததும் கதிரவனின் ஒளியை நோக்கி திரியும் தன்மையை,

    சுடரொடு திரிதரும் நெருஞ்சி(அகம்.336)

    பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு(புறம்.155)

    என்ற பாடல் வரிகளும்,

    தூநீர் பயந்த துணையமை பிணையல்
    மோயினள் உயிர்த்த காலை மாமலர்
    மணியுரு இழந்த அணி அழிதோற்றம் (அகம்.5)

    என்ற வரிகளும் தாவரங்களின் புலன்உணர்வை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.

    உலகில் தற்போது வாழ்ந்து வரும் தாவரங்கள் ஏறத்தாழ 3,63,730 தாவரப் பேரினங்களில் அடங்கும். இவை பரிணாம முறையில் நுண்மங்கள், பாசிகள், காளான்கள், ஈரற்செடிகள், பெரணைகள், விதை மூடாத தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் எனப் பாகுபடுத்தப்பட்டுள்ளன. பூக்கும் தாவரங்களில் மட்டும் 96,680 பேரினங்கள் உலகெங்கிலும் வளர்கின்றன. ஒரு பேரினத்தில் பல சிற்றினங்கள் உண்டு. பண்டைய இந்திய நாட்டில் மட்டும் வளரும் சற்றேறக்குறைய 47,200 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.டி.ஹூக்கர் (1897) என்பவர் எழுதியுள்ளார்.பழைய சென்னை மாநிலத்தில் 9300 சிற்றினங்கள் பற்றிய விளக்கங்களை ஜெ.எஸ். காம்பில்(1915) எழுதியுள்ளார். இம்மாநிலத்தில் வளரும் ஏறக்குறைய 10,640 மரம், செடி, கொடிகளின் தாவரச் சிற்றினப் பெயர்களையும் அவற்றின் தமிழ்ப்பெயர்களையும் ஏ.டபுள்யூ.லஷிங்டன் (1915) என்பவர் பட்டியலிட்டுள்ளார்.

    சங்க இலக்கியங்களில் மட்டும் 210 மரம் செடி கொடிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரங்கள், இனி புதிய தாவரத்தைக் கண்டறிந்தாலும் அதை இண்டர்நேஷனல் கொட் ஆஃப் பொடான்னிகல் நோமென்க்லேச்சர்- ஐ சி பி என் என்ற விதிமுறைக்கு உட்பட்டே பகுக்கின்றனர். புதிய அனுமதி பெறுவதற்கு லண்டல் கியூ நிறுவனத்தை நாடவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தாவரப்பட்டியல் வெளியிடப்படுகிறது., அதற்கு இண்டெக்ஸ் கெவென்சிஸ் என்று பெயர்.

    பழந்தமிழர்கள் இயற்கையை மிக ஆழமாக நேசித்திருக்கிறார்கள். தங்களின் ஒவ்வொரு அசைவையும் இயற்கையின் விதியை மீறாமல் நடத்தியிருக்கிறார்கள். இன்று இயற்கையை மதியாத பல விதிமீறல்கள்  நடைபெறுவதால் தான் வானம் பொய்க்கிறது; இல்லையேல் காலம் மாறிப் பெய்கிறது. சுற்றுச்சூழலை மனிதன் மதித்து நடக்கவேண்டும். கவிஞர் வைரமுத்து அவர்கள் மரத்தின் பயனாகா பட்டியலிடுவார்,

    “பிறந்தோம்
    தொட்டில்
    மரத்தின் உபயம்
    நடந்தோம்
    நடைவண்டி
    மரத்தின் உபயம்
    ………………………………………
    இறந்தோம்
    சவப்பெட்டி பாடை
    எரிந்தோம்
    சுடலை விறகு
    மரத்தின் உபயம்”(இ.பூ.168)

    மரம் மனிதனுக்குக்கொடுப்பது…..

    உண்ணக்கனி- ஒதுங்க நிழல்
    உடலுக்கு மருந்து – உணர்வுக்கு விருந்து
    அடையக்குடில் – அடைக்கக் கதவு
    அழகு வேலி – ஆடத்தூளி
    தடவத் தைலம் – தாளிக்க எண்ணெய்
    எழுதக் காகிதம் – எரிக்க விறகு (இ.பூ.166)

    இத்தனைப் பயன்களையும் பெற்றுக்கொண்டு இயற்கையை

    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான் என்று மரத்தை உயர்த்தியும் மனிதனின் தவற்றை உணர்த்தியும் கூறியிருக்கிறார். இயற்கையை இனிது போற்றுவோம்; எழிலார்ந்த வாழ்வை கூடிப்பெறுவோம்.

    *****

    சு.விமல்ராஜ்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி(தன்.)
    மன்னன்பந்தல்.
    அலை:8220470590
    மின்:thamizvimal@gmail.com

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    -க.பிரகாஷ் 

    விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவுமுறை. பொதுவாக விருந்தோம்பல் உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பதுண்டு.  ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். இது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ ‘அதிகாரம் கொள்ளல்’ எனப் பொருள்படுவதான ‘ஹாஸ்டடிஸ்’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ‘ஹோஸ்ட்’ என்பதன் பொருள் சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும்.

         ஹோமரின் காலங்களில் கிரேக்க மதக் கடவுளரின் தலைவராக இருந்த ஜீயஸ் என்னும் கடவுளின் பொறுப்பில் விருந்தோம்பல் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஜீயஸ் கடவுளை ஜெனோஸ் ஜீயஸ் (ஜெனோஸ் என்பதன் பொருள் அந்நியன்) என்றும் கூறுவதுண்டு. விருந்தோம்பலே தலையாய பணி எனும் மெய்ம்மையை வலியுறுத்துவதாக இது அமைந்தது. கிரேக்கத்தில் ஒரு வீட்டுக்கு வெளியே சென்று கொண்டிருக்கும் அந்நியர் ஒருவரை அவ்வீட்டில் வசிப்பவர்கள் இல்லத்தினுள் வருமாறு அழைப்பு விடுப்பர். வீட்டின் தலைவரான புரவலர் அந்த அந்நியரின் பாதங்களைக் கழுவி உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே அவரது பெயரைக் கூடக் கேட்டறிந்து கொள்ளும் வழக்கம் உண்டு.

    பண்டைய கால விருந்தோம்பல்

         பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களுக்கு விருந்தேம்பல் என்பது ஒரு தெய்வீக நிலையாக இருந்தது. தனது விருந்தாளிகளின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விட்டனவா என்று உறுதிசெய்து கொள்வது ஒரு புரவலனின் கட்டுப்பாடாக இருந்தது. பண்டைய கிரேக்கச் சொல்லான எக்ஸெனியா என்பதன் பொருள் விருந்தாளி – நட்புச் சடங்கு உறவைச் சுட்டுவதாகும்.

         பண்டைய உலகில் விருந்தோம்பல் எவ்வாறு மிகப்பெரும் இடம் பெற்றிருந்தது என்பதை பாசில் மற்றும் ஃபிலோமின் கதை விவரிக்கிறது. இக்கதையில் பழங்காலத்திய கடவுளரான ஜீயஸ் மற்றும் ஹெர்ரமஸ் ஆகியோர் ஃபிர்ஜியா நகரில் எளிய உழவர் போல வேடம் புனைந்து வருகின்றனர். இரவுக்கான உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் அலைகையில் பெரும்பாலும் மூடிய கதவுகளையே சந்திக்கின்றனர். இறுதியாக பாசிஸ் மற்றும் ஃபிலோமினின் இல்லத்தை அடைகின்றனர். தாங்கள் ஏழ்மையில் வாடியபோதும் இத்தம்பதி இருக்கும் மிகக் குறைவான உணவை விருந்தினருக்கு அளிக்கின்றனர். தங்களது விருந்தினர் உண்மையில் கடவுள் என அறிகையில் தங்களது வீட்டைக் காக்கும் ஒரே வாத்தையும் வெட்டிப் படைப்பதற்கு முன்வருகின்றனர். இதற்கு வெகுமதியாக கடவுளர் அவர்களுக்கு வரம் ஒன்றை கொடுக்கின்றனர்.

    செல்ட்டிக் நாகரிகங்களில் விருந்தோம்பல்

         விருந்தோம்பல் என்னும் பண்பு, குறிப்பாக, பாதுகாப்பு அளிப்பது ஆகும்.  செல்ட்டிக் நாகரிகத்தைச் சார்ந்த சமூகங்களில் மிகுந்த அளவில் மதிப்புற்றிருந்தது. அடைக்கலம் கேட்டு வரும் ஒருவருக்குப் புரவலரானவர், உண்டியும் உறைவிடமும் மட்டும் அன்றித் தமது கவனிப்பில் இருக்கையில் அவருக்குத் தீங்கு ஏதும் நேராத வண்ணம் பாதுகாக்கவும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு யதார்த்தமான வாழ்க்கையில் உதாரணம் ஒன்றை வரலாறு அளிக்கிறது.

    கி.பி 17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்தது ஸ்காட்டிஷ் மெக்கிராகோர் எனும் குலம். இலாமோண்ட் என்னும் குலத் தலைவர் கிளைன்ஸ்டிரேவில் வாழும் மெக்கிராகோர் தலைவரின் இல்லத்தை அடைந்து தாம் எதிரிகளிடம் இருந்து தப்பித்து வருவதாகக் கூறி அடைக்கலம் கோருகிறார். தமது சகோதரத் தலைவரை கேள்விகள் ஏதும் கேட்காமலேயே மெக்கிரோகர் வரவேற்கிறார். பின்னர், இரவுப் பொழுதில் இலாமோண்ட் தலைவரைத் தேடி வரும் மெக்கிரகோர் குல மக்கள் மெக்கிரகோரிடம் உண்மையில் அவரது மகனையே இலாமோண்ட் தலைவர் கொன்றுவிட்டதாக குறிப்பிடுகின்றனர். விருந்தோம்பலின் புனிதக் கடமையின் பாற்பட்டு மெக்கிரோகர் தலைவர் இலாமோண்ட்டைத் தனது குல மக்களிடம் ஒப்படைக்க மறுப்பது மட்டும் அல்லாது மறுநாள் காலை அவரை அவரது பூர்வீக இடத்திற்குத் தாமே வழித்துணையாக உடன்சென்று அனுப்பிவைக்கின்றார்.

    இந்தியாவில் விருந்தோம்பல்

         உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. தொன்மையான கலாசாரங்களைப் போலவே விருந்தோம்பல் உள்ளிட்ட பல அருமையான பண்புகளை இந்தியக் கலாசாரமும் கொண்டுள்ளது. மூடன் ஒருவன் அழையாத விருந்தாளியுடன் தனது சிறு உண்டியை மறுபேச்சின்றிப் பகிர்ந்து கொள்கையில் தன்னிடம் வந்த விருந்தாளி மாறுவேடம் பூண்ட இறைவன் என்பதைக் கண்டு கொள்கிறான். அவனது தாராள மனத்திற்காகக் கடவுள் அவனுக்கு மிகுந்த செல்வமளிக்கிறார்.

         பசியுடன் இருக்கும் அனைவரும் உண்பதற்காகப் பெண் ஒருத்தி தன்னிடம் இருக்கும் கிச்சடி அனைத்தையும் சமைத்து அளிக்கிறாள். ஒரு நாள் அவளிடம் இருக்கும் உணவுப் பண்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடவே இறுதியாகப் பசியுடன் வரும் ஒருவனுக்குத் தன் உணவையே அவள் அளிக்கையில் இறைவனிடம் இருந்து என்றும் குன்றாது நிறைந்தே இருக்கும் கிச்சிடி கொண்ட பாத்திரம் ஒன்றைப் பெறுகிறாள். குழந்தைகளாகத் தாம் இருந்த காலம்தொட்டே இத்தகைய கதைகளைக் கேட்டு வளரும் பெரும்பாலான இந்தியர்கள், விருந்தாளியே ஆண்டவன் என்பதை உணர்ந்து, சமூக நிகழ்வுகளிலும் விருந்தாளிகளின்பால் அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளும் இந்த அணுகு முறையை உருவாக்கினர்.

    எனவே தமிழில் படைக்கப்பட்ட தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

    “…………………………………………………………………………………………….
         உண்டாயின் பதம் கொடுத்து
         இல்லாயின் உடன் உண்ணும்
         இல்லோர் ஒக்கல் தலைவன்
        அண்ணல் எம்கோமான், வைந் நுதி வேலே”                (புறம் – 95)

         செல்வமுடையராய் இருக்கும்போது உணவு கொடுத்தும், இல்லாதபோது இருப்பதைப் பகிர்ந்து உடன் உண்ணும் வறியோர் சுற்றத்திற்குத் தலைவனும், தலைமை சான்றவனுமாகிய வேந்தன், அவனுடைய கூரிய துனியையுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து குறுகிய பணிக் களரியில் கிடப்பனவாயின.

         “ஒரு தலைப் பதலை தூங்க ஒரு தலைத்
           தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
           கவிழ்ந்த மண்டை மலர்க்கு நர்யார் எனச்
          சுரன் முதல் இருந்த சில்வளை விறலி”                                     – (புறம் – 103)

         தோள் அமையினது ஒருபுறத்தே பதலை என்னும் கருவி தொங்குகின்றது. மற்றொரு புறத்தே துளையுடைய சிறிய முழா தொங்குகின்றது. இவற்றைச் சுமந்தவாறே எமக்கு உணவு இடுவார் யாருமிலராயினர். எமக்கு உணவு இட்டு கவிழ்ந்து கிடைக்கும் உண்கலத்தை மலர்த்த வல்லார் யாரெனச் சொல்லிச் சுரத்திடையே வந்திருந்து வருந்தும் விறலியே… நீ அவனிடத்துச் செல்வையாயின், பல வேற்படையையுடைய அதியாமான் ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும் படுதலால் ஈரம் காயாத உண்கலத்தில் மெழுகான் இயன்ற மெல்லிய அடைபோலக் கொழுத்த நிணம் மிக அளித்தல் வல்லன்.

         “………………………………………………………………………………………………
         பிறர் அஞ்சுவது அஞ்சி
         புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
         உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
         அன்ன மாட்சி அனையர் ஆகி”  ( புறம் – 182)

         தேவர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தாலோ தவத்தாலோ தமக்க வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலும் இலர். யாரோடும் வெறுப்பிலர் பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி, அது தீர்த்தற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர், பழியெனின் அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை இல்லார். அத்தகைய மாட்சிமைப்பட்ட தன்மையராய், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் சான்றோரால் இவ்வுலகம் இருக்கின்றது.

         தனித்துத் தாம் மட்டும் உண்ணுவதை விரும்பார்; இதனை இனிது எனத் தமியர் உண்டலும் இலர் என்றார். யாவரிடத்தும் அன்புடையர் என்பதை உணர்த்த முனிவிலர் என்றும் அஞ்சத்தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதனால் செயல்படாது சோம்பியிரார் என்பதை ‘துஞ்சலும் இலர்’ என்று குறித்தார்.

         “உண்க என உணரா உயவிற்று ஆயினும்     ………………………………………………………………………………………………………………………..
         வரகும் தினையும் உற்றவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
        …………………………………… கூட்டு” ( புறம் – 333)

         தம்மிடம் உள்ள வரகும் தினையும் இரவலர்க்கு வழங்கப்பட்டுவிட்டன. குறி எதிர்ப்பாகத் தந்த பொருள்களும் கிடைக்கப் பெறவில்லை. வீரனின் மனைவி, விதைப்பதற்காக வைத்திருந்த தினையைக் குத்தி உணவு சமைத்து வழங்கினாள். அவ்வுணவே போர் மேற்செல்லும் வீரனின் உணவுமாயின. ஒரு வீரனின் மனைவியின் விருந்தோம்பும் இயல்பு இப்பாடலால் விளக்கப்பட்டுள்ளது. பகைவரொடு போர் செய்வதற்கு அரசர்கள் வழங்கும் பொருளை அவன் பாணர் முதலியோர்க்கும் பரிசாக வழங்குவான்.

         “எழுதி யன்ன திண்நிலைக் கதவம்
         கழுதுவழங்கு அரைநாள் காவல் மடிந்தென     ……………………………………………………………………………………………………..
         இம்மை உலகத்து இல் எனப் பல்நாள்
         பொம்பல் ஓதி நீவிய காதலொடு”  (அகம் – 311)

              மழை பெய்யாது பொய்த்தமையால் திசையெல்லாம் வெப்பம் மிகுந்தது. பாலைவழி வருவோரைப் பேணிக் காக்கும் பண்பினைப் பெற்ற வெற்றி ஆயர்கள் இளைய எருதுகளின் எழுத்தில் கட்டிய மூங்கில்குழாயுள் அடைத்து வைத்த சுவைமிக்க புளிச் சோற்றினை தேக்கின் இலையில் இட்டு அப்புதியோரின் பசி நீங்கக் கொடுத்தார்.

         அத்தகைய புல்லி என்பானது நல்ல நாட்டின் அப்பாலுள்ள கடத்தற்கரிய பாலை வழியைக் கடந்து நம் தலைவர் சென்றிருந்தாலும் காலந் தாழ்த்தாது நின்னை நினைந்து விரைந்து வருவார்.

         “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்              முல்லை சான்ற கற்பின்
          மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே”

                                           ( நற்றி – 142)

         இரவு நேரத்தே விருந்து வரினும் உவப்பவள் என் தலைவி. அவள் என்சொற் கேட்டு இல்லிருந்து நல்லறம் செய்யும் கற்பினையும், மென்மையான இயல்பையும் இளமையையும் உடையவள் ஆவாள். அத்தகைய காதலி தங்கியிருப்பதும் பொய்யாத வருவாயுடையதுமான ஊர் காட்டகத்தே அமைந்தது.

    ***** 

    குறிப்புகள்: 

    சங்க இலக்கியம்
    புறநானூறு – 1, 2
    அகநானூறு – 1, 2
    குறுந்தொகை – 1, 2
    நற்றிணை – 1 – நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    41 – பி -சிட்கோ, இண்டஸ்டிரியல் எஸ்டேட்
    அம்பத்தூர், சென்னை – 098

    *****

    க.பிரகாஷ்
    தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் ( பகுதி நேரம்)
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-26

    மீனாட்சி பாலகணேஷ்

     

    சகலலோகமும் பின்வரும் தெய்வமாக்கொடி

    சிறுமகள் தளர்நடை நடக்கிறாள். தாயும் சேடியரும் கண்கள் பெற்றபேறு என்று மகிழ்வெய்துகின்றனர். “வா குழந்தாய், எம் கண்மணியே, முத்தே,” என்றெல்லாம் அவளை அழைத்து குறுநடை பயின்றுவர வேண்டுகின்றனர். அடியவர் ஒருவர், இந்த தெய்வக்குழந்தை நடந்து வரும்போது இன்னும் பல பொருட்கள் உடன்வரக் காண்கிறார். பக்திப் பரவசத்தில் பாடல் பெருகுகிறது.

    குழந்தை, பெண்குழந்தையல்லவா? தாயார் தலைவாரிப் பூச்சூடி விட்டிருக்கிறாள். கரிய மேகம் போன்ற தண்மையான குழல், அக்குழலில் அணிந்துள்ள பூமாலையில் உல்லாசமாக மொய்க்கின்ற வண்டுகளுடன், குழந்தை அசைந்தாடி நடைபயிலும்போது தானும் அசைந்தாடி வருகின்றதாம்! நறுமண எண்ணெயைத் தேய்த்து, வாசனைப்பொடியிட்டு நீராட்டி, அகில்புகை ஊட்டிய கூந்தல் குளிர்ச்சியாக இருக்குமல்லவா? அதனால்தான் ‘தண்குழல்’ என்றார் போலும்! தேன் நிறைந்த மலர்களாலான பூமாலைகள், கண்ணிகள், இவற்றில் வண்டுகள் ரீங்காரமிட்டு மூழ்கியெழுகின்றன.

    வானில் கருமேகங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இருப்பினும் அவற்றினுள் சென்று மறைந்துவிடாத ஒளிநிறைந்த கதிரவன்போலப் பிரகாசிக்கும் கற்கள் இழைத்துச்செய்த நெற்றிச்சுட்டியை குழந்தைக்கு அணிவித்துள்ளனர். அது சுடர்வீசி மின்னியபடி உடன்வருகின்றது! கருங்குழல் கற்றையினுள் மறைந்துவிடாமல் சுடர்வீசும் நெற்றிச்சுட்டி எனவும் கொள்ளலாம்.

    ab1முகமாகிய மதி அழகுற விளங்குகிறது; அதற்குள் இன்னொரு மதி என்பதுபோலக் குமுதமலர் காணப்படுகிறது. இது என்ன முரண்?முரணாவது ஒன்றாவது? புலவர் பெருமக்களின் சொன்னயம். ‘குஸுமே குஸுமோத்பத்தி’ – ‘மலரினுள் மலர்ந்த மலர்’- எனக் காளிதாசன் பாடவில்லையா? முகமாகிய தாமரை மலரில் கண்களாகிய குவளைமலர்கள் பூத்துள்ளன,’ என்று உவமித்தான்; அதுபோல, இங்கும் அம்பிகையின் முகமாகிய மதியினைக் கண்டு மகிழ்ச்சியால் குமுதம் – அல்லிமலர் ஆகிய சிறுமுறுவல் அரும்பி உடன்வருகின்றதாம். ‘ஆகா, அருமை,’ எனத் தலையாட்டத் தோன்றுகிறதல்லவா?

    இன்னும் அந்த ஆகாயத்து முழுமதி, அம்பிகை அணிந்துள்ள முத்துப்புல்லாக்கினால் (பெண்கள் நாசியிலணியும் அணி) அவள் திருமுகத்தில் திகழும் வெண்முறுவலின் ஒளியைக் கவர்ந்து செல்லும் பொருட்டு, ஓரிடத்தில் நிற்காமல், அலைந்தபடி அவள்பின்னே வருகின்றதாம்.

    மென்மையான மல்லிகை, முல்லை மலர்மாலைகளை குழந்தைக்கு அணிவித்திருக்கிறாள் தாய். பசிய, ஒளிமிகுந்த தோள்கள் அவளுடையவை; ஆயினும் சிறுகுழந்தையல்லவா? சிறிய தோள்களல்லவா? தோள்வளை என்னும் அணிகலன் வேறு அணிவிக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் அம்மையுடன் வருகின்றன.
    அடுத்து வரும் வரிகளும் அவற்றின் பொருளும் எல்லையற்ற அழகு வாய்ந்தவை. அன்னையே அத்தனை அண்டகோடிகளையும் படைத்து அருளுபவள். அவளை ‘உலகனைத்தையும் கருப்பெறாதீன்ற கன்னி,’ என்பர். குழந்தையின் சிறுவயிறு அதன் தளர்நடையினால் குலுங்குவது அத்துணை அண்டங்களும் அவள் திருவயிற்றில் அடங்கியதால் குலுங்கிவருவது போலுள்ளதாம். இடையிலணிந்த மேகலையும் மகிழ்ச்சியால் ஒலிக்கிறது.

    இவ்வாறெல்லாம் அம்பிகை குழந்தையாய் நடந்து சென்றால் அகில உலகங்கள் சும்மா இருக்கத்தகுமா? அவையும் அவள்பின் தொடர்ந்து செல்கின்றனவாம். ‘பராசக்தியின் ஆணைப்படி இவ்வுலகம் நடைபெறும், பெறவேண்டும்,’ அல்லவா? அதுவே இதன் கருத்து.

    இங்ஙனம் அனைத்தும் உடன் வருமாறு பெருமை நிறைந்த திருச்சுழியல் எனும் ஊரில் வாழும் கருணைமிகுந்தவளும், மைதீட்டப்பெற்ற விழிகளை உடையவளும் ஆகிய மயில் போல்பவளே! திருமேனியை உடைய நாயகனான சிவபிரான் உனக்குத் தன் திருமேனியின் பாதியைத் தந்தானல்லவோ? அந்தத் தெய்வக்கொடியே வருக,’ என அடியவர்பங்கில் வேண்டிநிற்கிறார் புலவர்.

    கார்கொண்ட தண்குழற் களிவண் டினங்குழற்
    கண்ணியோ டசைந்துவர வான்
    கருமுகிற் குள்ளெழுந் தொளியாத மின்னிறக்
    கதிர்சுட்டி மின்னிவரநன்
    னீர்கொண்ட முகமதிக் குண்மதி யெனக்குமுத
    நிகழ்நகை யரும்பிவரவெண்
    ணின்றுமொரு தண்டரள மூரலொளி யைக்கவர
    நில்லா தலைந்துவரமென்
    தார்கொண்ட பைஞ்சுடர்த் தோள்வளைக் கடைவரத்
    தருமண்ட கோடியுதரா
    தன்னிற் குலுங்கிவர மேகலை குலாய்வர
    சகலலோ கமும்பின்வரச்
    சீர்கொண்ட சுழியற் பெருங்கருணை மைவிழிச்
    செல்வமா மயில்வருகவே
    திருமேனி நாயகற் திருமேனி தந்தமெய்த்
    தெய்வமாக் கொடிவருகவே.

    (திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்)

    *****

    ab2
    திருச்சுழியல் துணைமாலை அம்மை பிள்ளைத்தமிழ் பழமையானது. இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை; கிடைக்கவில்லை. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் ஆகிய முதல் ஐந்து பருவங்களுக்குரிய பாடல்களும் வருகைப்பருவத்தில் முதல் ஆறு பாடல்களுமே கிடைத்துள்ளனவாம். மேற்கண்ட பாடல் அவற்றுள் ஒன்று.
    அவ்வாறெனில் முழுநூல் எவ்வாறு கிடைத்தது எனும் வினா எழலாம். அறுபதுகளில், இந்த முடிக்கப்பெறாத நூலை ஏனைய பருவத்துப் பாடல்களையும் இயற்றி முடித்துத்தருமாறு கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. டி. எச். விவேகானந்தம் கேட்டுக்கொண்டாராம். கவியரசு அவர்களால் முழுமை செய்யப்பட்டு இந்நூல் முதன்முறையாக 1964-ல் பதிப்பிக்கப்பட்டது. சொற்சுவையும், பொருட்சுவையும், பக்தி, தமிழ்ச்சுவையும் சிறிதும் குன்றாது கவியரசு பாடிய பாடல்கள் இவை. அவற்றிலிருந்து வருகைப்பருவத்துக்குண்டான பாடல் ஒன்றினையே காண்போமே!

    *****

    இங்கு குழந்தையை வருமாறு வேண்டுவது தாயின் கூற்றாகக் காணப்படவில்லை; அடியவர் கூற்றாக அமைந்துள்ளது. அழகான தெய்வக்குழந்தையைப் பாட, தாய், செவிலி, தோழி, தந்தை மட்டுமல்ல; அடியவர்களும் அனைவருமே விரும்புவார்களல்லவா? இப்பாடலும் அந்தக்குறிப்பிலேயே அமைந்துள்ளது!

    ‘உனக்கு ஒன்றுமே அரியதல்ல; பெரும் செயலல்ல; அனைத்தையும் விளையாட்டாகச் செய்து விடுபவளல்லவோ நீ தாயே!’ என்கிறார் புலவர் பெருமகனார். இது பராசக்தியாம் அம்பிகையின் அருள்பெற்றவர்கள் யாண்டும் கூறும் திருவாக்காகும். ‘அனேககோடி ப்ரஹ்மாண்ட ஜனனி,’ ‘லீலாக்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா,’ என ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அவள் புகழ்பேசும். அதாவது ‘அத்தனை உலகங்களையும் அநாயாசமாக / விளையாட்டாகப் படைத்து விட்டவள்,’ என்பது பொருள்.

    இன்னுமிவள் என்னவெல்லாம் செய்தாள்?

    “ஊமையான ஒரு அடியவர் வடமொழியான சமஸ்கிருதத்தில் ஐந்நூறு கவிதைகளை உன்மீது இயற்றும்வண்ணம் அருள்புரிந்தாய்.” (இவரே மூககவி; இவர் இயற்றியது மூக பஞ்சசதி எனப்படும் அற்புதமான ஐந்நூறு ஸ்லோகங்கள் கொண்ட நூல்).

    ab4
    “பக்தி உணர்வு கொப்பளிக்கும் வகையில் ஆதிசங்கரர் எனும் மகான் பலநூல்களை (உன்மீதும் மற்ற தெய்வங்களின்மீதும்) புனைந்து இயற்றுமாறு அவருடைய மணிநாவில் நீயே கலைவாணியாக அமர்ந்தாய்.” (சௌந்தர்யலஹரி, கணேச, பவானி, சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரங்கள், இன்னும் பல)

    “மிகுந்த புகழ்வாய்ந்த கவிஞனான காளிதாசன் இனிமைநிறைந்த கவிதைகளை மழையெனப் பொழிந்து பல காவியங்களைப் படைக்குமாறு அருளினவளும் நீயே தாயே!”

    “பிரமாபுரம் எனும் திருவூரில் ஒரு சிறுவனுக்கு அமுதினை ஊட்டி பெரும்நெறிகள் வாய்ந்த தமிழ்நூல்களை இயற்ற வைத்தாய்!” (திருஞான சம்பந்தருக்கு, உமையன்னை முலைப்பாலை அருந்துவித்து, அவரைச் சிறுவயதிலேயே பெரிய புகழ்வாய்ந்த தமிழ்ப்பாடல்களாம் தேவாரத்தினைப் பாடியருள அருள்புரிந்தாள். அவரும் ‘தோடுடைய செவியன்’ முதலாக ஆயிரக்கணக்கான தேவாரப்பதிகங்களைப் பாடியருளினார்).

    ab3
    “இவையெல்லாம் உன் கருணைக்கு மிகச்சில உதாரணங்களே! உன் மனம் உருகி, இன்னும் எத்தனையெத்தனையோ அடியார்களுக்கு உனது அருளாகிய பெரும்செல்வம் எளிதில் கிடைத்தருளுமாறு செய்து உதவினாய்! அத்தகைய பெரும் அடியார்களின் மரபில் வழிவழியாக வந்துள்ள நான் மிக எளியவன் தாயே! நானும்கூட உய்யும்வண்ணம் ஒருமுறை எந்தன்முன், என் கண்கள்முன்பு வந்தருளி காட்சி கொடுப்பாய்! எத்தனையோவிதமாக மற்ற அடியார்களுக்கு அருள்புரிந்த உனக்கு இதென்ன பெரிய கடினமான செயலோ? அல்லவே! வந்தருள் புரிவாய்! திருச்சுழியலில் கோயில் கொண்டுள்ள மாணிக்கமாலையே வந்தருள்வாய்!” என வேண்டி நிற்கிறார் புலவர்பிரான்.

    அன்னை வாராதிருப்பாளா என்ன?

    ஒருமூக னரியவட மொழியிலைந் நூறுகவி
    உனையோத அருள்புரிந்தாய்
    உணர்வின்மிகு சங்கரா சாரியன் பலநூல்
    உரைக்கமணி நாவமர்ந்தாய்
    பெருமைமிகு காளிதா சன்மதுர கவிமாரி
    பெய்யுமாற ருள்சுரந்தாய்
    பிரமா புரத்துவரு மொருசிறுவன் அமுதுண்டு
    பெருநெறித்தமிழ் செய்வித்தாய்
    உருகமனம் இன்னுமெத் தனையடிய ருக்கெளிதில்
    உற்றுனருள் வைத்துதவினாய்
    உனதுவழி வழியடியர் மரபில்வரு மெளியேமு
    முய்யவொருகால் விழிமுனர்
    வருகவருள் புரிகஇதென் அரிதோ மலைச்செல்வி
    வந்தருள்க வந்தருள்கவே
    வளமருவு சுழியலமர் மாணிக்க மாலையே
    வந்தருள்க வந்தருள்கவே.

    (திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    ஒருவரால் பாதி இயற்றப்பட்ட நூலை அதே கருத்துக்களைப் பிரதிபலித்து, அதே மனோபாவங்களை உள்ளேற்றி மீதிப்பாடல்களையும் இயற்றி முழுமைசெய்ய மிகுந்த புலமை வேண்டும். மேலான தெய்வ அருள் வேண்டும். கவியரசு அவர்களின் புலமை இதில் அழகுற நயம்பட வெளியாகின்றது. இதனை நமது நல்வினைப்பயன் என்றே கொள்ளவேண்டும்.

    இன்னும் காண்போம்; கண்டு மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    _

    Share
  • அமுதனார் கண்ட எம்பெருமானார்

     

     தி விப்ரநாராயணன்

    ramanujar19

          மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள்  மாதவனே

          கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்க ளெல்லாம்

          அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே

          நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற் காயினரே

    திருவரங்கநாதர்  இராமானுசரிடம் கேட்டாராம்.” அதெப்படி நான் யுகந்தோறும்  அவதரித்து  அவர்களை ரக்ஷிக்கின்றேன். என்னால் அவர்களை  என்னை  உணரவைக்க முடியவில்லை. உன்னால் எப்படி இச்செயல் முடிந்தது. அறியேன்  நான், எடுத்துரைப்பாய் நீ ”என்று வினவினாராம் அதற்கு எம்பெருமானார்  ,                          ” உன்பெருமையை நீ சொல்ல முடியுமா.  அடியார்களாகிய  நாங்கள்தானே சொல்ல வேண்டும்” என்றாராம். அண்ணல் இராமானுசன் தோன்றிய அப்போழுதே  நாராயணன் பற்றிய ஞானம்  மக்களுக்கு வந்துவிட்டது என்று அமுதனார் எம்பெருமானாரின் அரிய பெருமையை இப்பாடலின் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் 108 பாடல்கள் மூலம் தன் ஆச்சார்யரின் பெருமையை சொல்கிறார். ஒவ்வொரு பாடலையும்  இராமானுசன் என்ற பெயர் வருமாறு  பாடியிருக்கிறார்

    இப்பாடல் தொகுதிக்கு இராமானுச நூற்றந்தாதி என்று பெயர்.. இப்பாடலாசிரியர் திருவரங்கத்தமுதனார்  திருவரங்கத்தில் அரங்கநாதர் கோவில் பட்டராகவும் நிர்வாகத்தையும் கவனித்துவந்தார். இவர் போக்கு இராமானுசருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இவர் இராமானுசரை வெறுத்தார்.எப்படியாவது இவரை கோவில் காரியத்திலிருந்து விடுவித்துவிட எண்ணினார் இராமானுசர். ஆனால் தாயார் இவர் கனவில் வந்து ”அவன் என் பிள்ளை.அவனை அனுப்பிவிடாதே” என்றாராம். ஆகவேதான் காஞ்சிபுரம் சென்றுவிடலாம் என நினைத்து தன் சீடர் கூரத்தாழ்வானிடம் கூற அவரும் ”வேண்டாம், அமுதனாரை திருத்திப் பணிகொள்வோம்” என்றாராம். ”நீரே அக்காரியத்தைச் செய்யும் ” என்று கூறிவிட்டார் இராமானுசர்.   அமுதனார்     கூரத்தாழ்வானின் சீடரானார். தக்க தருணத்தில் கோவில் காரியத்திலிருந்து அவரை விடுபட வைத்தார்.  ஆனால் அவருக்கு வேண்டிய கோவில் மரியாதைகள்  பிறழாது நடக்க ஏற்பாடு செய்தார் இராமானுசர். தான் வெறுத்தும் தன்னிடம் அன்பு காட்டும் ஆச்சார்யரின் மனோபாவம் கண்டு வியந்தார். அவ்வியப்பே அந்தாதியாக உருவாயிற்று.

    ஆச்சார்ய பரம்பரையில்  ஆளவந்தாருக்குப்பின் அரியணையில் அமர்ந்தவர் இராமானுசர்தான். நம்மாழ்வாரால் இவர் வருகை  முன்னரே உரைக்கப்பட்டு இவரின் திருவுருவச் சிலையை தாமிரபரணி நீரிலிருந்து   மதுரகவி ஆழ்வாருக்குக் நம்மாழ்வார்  கொடுத்தார்.  பின்   தன் திருவுருவத்தைக் கொடுத்தார்.  நம்மாழ்வாரால் நாதமுனிகளுக்கும்  இராமானுசரின் திருவுருவம்  கொடுக்கப்பட்டது.அதை திருக்கோட்டியூர் நம்பிவரை ஆராதனம் செய்து வந்தனர்.மணக்கால் நம்பி   ஆளவந்தாருக்கு வரப்போகும் இராமானுசர் பற்றி உரைக்கவே அவரைக் காணவேண்டும் என்ற அவா ஆளவந்தாருக்கு மேலிட்டது. அதன்படி காஞ்சிக்கு வந்து இராமானுசரை அவர் அறியாது திருக்கச்சி நம்பி மூலம் பார்த்தார். உடனே இவர்தான் ”ஆம்முதல்வன்” என்று ஆனந்தித்துக் கூறினார். ஆகவே அத்தகைய பெருமை பெற்றவர் இராமானுசர். ஆதிசேஷன் அம்சமாக அவதரித்தவர்.

    07-1452138339-tirupati-balaji-temple-600

    இராமானுசரின் பெருமைகளை அறிந்து அவற்றை அந்தாதி மூலம் நமக்கு அளித்துள்ளார் அமுதனார்”பாமன்னு மாறன் அடிபணிந்துய்ந்தவன்” என்றும்,”’ குறையல் பிரானடிக்கீழ் விள்ளாத அன்பன் ” என்றும்  ”பூதத் திருவடித்தாள்கள் நெஞ்சத்துறைய வைத்தாளும் இராமானுசன்”என்றும் தமிழ்த் தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்” என்றும் ”அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல்” என்றும் ”தூயநெறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமானுசன்” என்றும் பலவாறு பாடுகிறார். அந்த அளவுக்கு ஆழ்ந்த பக்தி இராமானுசரிடத்தில் அவருக்கு. ”இராமானுசன் புகழன்றி யென்வாய் கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வின்று கூடியதே” என்கிறார்.

    எம்பெருமானாரைத் துதித்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்கிறார் இந்தப் பாட்டில்

              பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல

             திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்

            வருந்திய ஞாலத்தை  வன்மையினால்வந்    தெடுத்தளித்த

            அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே

    கருணையின் உறைவிடம்

    images-4

     இராமானுசருக்கு பெற்றோர்கள் சூட்டிய திருநாமம் இளையாழ்வார் என்பதே. ஏனெனில் இவர் லக்ஷ்மணனின் அவதாரம்.இவர் திருப்புட்குழியில் அத்வைதியான யாதவப் பிரகாசரிடம் பாடம் கேட்டார். அவரின் அத்வைத விளக்கத்தை ஆட்சேபித்து பணிவுடன் விசிஷ்டாத்வைத விளக்கத்தைக் கொடுத்தார், அவருக்கு இது பிடிக்கவில்லை. குருவுக்கு மிஞ்சிய சீடனாக இருக்கிறான் என்று அறிந்தவுடன் அவர் இளையாழ்வாரைக் கொல்ல சதி தீட்டினார். காஞ்சி வரதராசனே நேரில் வந்து   காப்பாற்றினார்.. இருந்தும் தன் ஆசானிடம்  மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கடைசியில் ஆசானையே ஆட்கொண்டு  தம் சிடராக்கிய பெருந்தன்மை   படைத்த பிரான் இராமானுசர் அவர்கள்,. அவர்தம்  மனைவி தஞ்சமாம்பாள் அவர்  ஆசான் பெரியநம்பியின் மனைவியை அவமதித்தாள்; அவரின்  மற்றொரு ஆசான் திருக்கச்சிநம்பியையும் அவமதித்தாள். பசியென்று வந்த அந்தணர்கள் இருவருக்கு உணவில்லையென்று சொன்னாள். ஆனால் அவரைக் கடிந்து கொள்ளாது இத்தவற்றுக்கெல்லாம் தானே காரணம் என்று கருதி அவரின் மனைவிக்கு வேண்டிய வசதிகள் கொடுத்து பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்த, துறவறம் பூண்ட   கருணைக்கடல் .

            இராமானுசர்  திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்தபோது கோவில் நிர்வாகத்தைச் சரிப்படுத்தினார்.  இவருடைய சீர்திருத்தங்கள் பிடிக்கவில்லை சில அந்தணர்களுக்கு.அதனால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்ல முற்பட்டனர். ஒருநாள் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது ஒரு பிராமணப் பெண்மணி அவருடைய பாத்திரத்தில் சோறிட்டு அழுதுவிட்டாள். ஏனென்று கேட்கையில்  அவள் கணவன் விஷம் கலந்து கொடுக்கசொன்னார் என்று கூறினாள்,அவளை மன்னித்து அன்றிலிருந்து உண்ணாவிரதமிருந்தார். இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பி   அவரின் உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தார். விஷம் கொடுத்த அந்தணர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார் கருணை வடிவினரான இராமானுசர். கூரத்தாழ்வானின் கண்பறித்த சோழனின் மகனுக்கு மனமிரங்கி  ஆட்கொண்டது,வாதம்புரியவந்த யக்ஞமூர்த்தியை வென்று ஆட்கொண்டது ஊமைகள்முதலான ஊனமுற்றவர்களுக்கு அன்பு காட்டியது ,முக்தி அளித்தது குருமார்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட, ஊனமுற்ற  ஹொய்சாலமன்னனான விட்டலதேவராயனின்பால்     கருணைகாட்டி அவரை மன்னனாக்கியது,  அரசனின் சித்திரவதைக்குட்பட்ட சமணர்களைக் காப்பாற்றி  வைணவராக்கி ஆட்கொண்டது . முதலியன அவரின் கருணைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும் அதனால்தான்       அமுதனார் இந்தப் பாடலை இயற்றினார் போலும்

    காரேய் கருணை ராமானுசா இக்கடலிடத்தில்

    ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு

    நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்

    சீரே  உயிர்க்குயிராய் அடியேற்கின்று தித்திக்குமே

    அனைவரும் ஓர்குலத்தார்

    எட்டெழுத்து மந்திரத்தை ஒரு குருவிடமிருந்து உபதேசமாய்க் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது வைணவ மரபு. அதன்படி எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்றார்.அதற்காக திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு 18 முறை சென்றாரென்று கதைகள் மூலம் அறிகிறோம். அப்படிப் பெற்ற அம்மந்திரத்தை  ஆசையுடையோரெல்லாம் கேட்டுப் பயனடையலாம் என்று திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி  அம்மந்திரத்தைச் சொன்னார். இதையறிந்த ஆசான் கடிந்துகொண்டார். .இராமானுசர் சொன்னார்.”நான் ஒருவன் நரகம் புகுந்து எல்லோரும் சுவர்க்கம் புகுந்தால் எனக்கு ஆனந்தமே” என்று சொன்னவுடன் அவரை ஆசான் ஆரத்தழுவி அவருக்கு நீர்தான் ”எம்பெருமானார்”என்று பெயரைச் சூட்டினார்.

     திருக்கச்சிநம்பி தாழ்குலத்தவர். அத்திகிரி அருளாளனுடன் உரையாடும் புண்ணியத்தைப் பெற்றவர் அவரை ஆசானாக அன்புடன் ஏற்றுக்கொண்டார். இராமானுசர்        இளவயதிலிருந்தே அவரிடம் பக்தியுடன் பழகிவந்தார். தாழ்ந்தசாதியினரைத் ”திருக்குலத்தார் ” என்று அழைத்தார்.     ஊர்க்காரர்கள் எதிர்த்தாலும் தன்மனைவிக்குப் பிடிக்காவிட்டாலும்  அவர் எப்போதுமே எக்குலத்தவரையும் மதிக்காமல் இருந்ததில்லை.மாறனேர் நம்பி என்பவர் நம்மாழ்வாரிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட கீழ்ச்சாதிக்காரர். அவரின் அந்திமக் கிரியைகளை அவரது ஆசான் பெரியநம்பி செய்தார். ஊரார் அவரை ஒதுக்கிவைத்தனர்  . அவரை இராமானுசர் பெரிதும்  மதித்தார். ஸ்ரீராமன்  ஜடாயுவுக்கு கிரியைகள் செய்தார்  தருமன் விதுரருக்கு செய்தான்    குகனை தன் சகோதரனாகக் கொண்டார் ஸ்ரீராமன் என்றெல்லாம் பெரியநம்பி தன் சீடனுக்கு எடுத்துச்சொல்லி தன் செயலை நியாயப்படுத்தினார்.  திருவரங்கநாதனே அவர் செயலை அங்கிகரித்து அவரின் மதிப்பை உயாத்தினார் என்று கதைகள் கூறுகின்றன. இப்படி சீடனும் குருவும் சாதி வேறுபாட்டைக் களைவதில் முனைப்பாக இருந்தனர்.திருவரங்கத்தில் சோழமன்னனால்  உடையவரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தது. அதனால் தன்சீடர்களுடன் மைசூருக்கு சென்றார். அப்பொழுது வழியில் காடுகள் அதிகம். இரவில் தங்க இடம் தேடினர். சில வேடர்கள் இவரை வணங்கி அவர்கள் குடிசையில் தங்க வைத்தனர். அவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து அவர்கள் கொடுத்த உணவை உண்டார்  உடையவர்.  எங்கு சென்றாலும் வேறுபாடு பார்க்காது வேதம் கூறியதை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய வள்ளல்.

    திருவரங்கத்தில் குளிக்கச் செல்லும்போது  கூரத்தாழ்வானையும் முதலியாண்டானையும்  அழைத்துச்செல்வது வழக்கம்..அப்பொழுது தன் இருகரங்களில் துணிவைத்து அதில் அவர்கள் கைகளைவைத்து  அழைத்துச்  செல்வார். ஆனால் நீராடிவிட்டு  திரும்பிவரும்போது தாழ்குலத்தவனான உறங்காவில்லியின் தோளில் கைபோட்டுக்கொண்டு வருவாராம்   மிக நெருங்கிய சீடர்களுக்கே இல்லாத மதிப்பை  இந்த தாசருக்கு அளித்தார் இராமானுசர்.  ஏனெனில் இவர் மிக உயர்ந்த பக்தர் :  இவர்   மனைவி மிகச் சிறந்த  பக்தை.,  திருப்பாணாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதனே அழைப்பு விடுத்தார். பக்திதான் முதன்மையே தவிர குலம் இல்லை  என்பதைச் சென்றவிடமெல்லாம் சொல்லிவந்தவர்  இராமானுசர். காந்திஜியால்  அரிஜனங்கள் என்று அழைக்கப்பட்டவர்களை  இராமானுசர்  திருக்குலத்தார் என்று அழைத்து அவர்களுக்கு ஆலயப் பிரவேசம் செய்து வைத்த முதல் சீர்திருத்தவாதியாவார்.மேல்கோட்டையில் இதை நிகழ்த்தினார்.

    சுருங்கச் சொன்னால்  தாழ்ந்தார் பொருட்டும்’ஐயோ” என்று முகங்காட்டி  அன்புப்பணிகள் புரிந்த ராமானுசரின் சித்தசக்திதான் ,நன்னெஞ்சம்தான் ,மகாவிசுவாசம்தான் ‘அற்புதம்,அற்புதம்”. என்று பிரமிக்கத்தக்க செயற்கருஞ்செயல்களைச் செய்து முடித்து சித்தாந்தப் பெருங்கோயிலை ஆழ்ந்தகன்றதோர் அடிப்படையில்  நிலைநிறுத்த உதவியிருக்க வேண்டும்.( ஸ்ரீராமானுஜர்-பக் 317 -பி ஸ்ரீ ஆச்சார்யா) ஒரு தொண்டர் குலத்தைத் தோற்றுவித்த அருமையான வைணவப் பண்ணை உருவாக வித்திட்ட பெருமகனார்.

    இக்கருத்தை அமுதனார் ஒரு அழகான பாடலின்மூலம் தருகிறார்

        திக்குற்ற கீர்த்தி இராமானுசனை * என் செய்வினையாம்

        மெய்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை  மேவு நல்லோர்

         எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர்

          அக்குற்றம் அப்பிறப்பு   அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே.

     எத்தகைய மனிதர் என்று நாம் அறிந்துகொள்ள இப்பாடல் ஒன்றே போதுமே. அதனால்தான் வினோபா அவர்கள் துறவிகளில் சிறந்த துறவி என்று தமது உரையில் கூறுவார்

    முக்திக்கு வழிகாட்டியவர்

    “இந்த உலகில் உள்ள சரணாகதர்கள் அனைவருக்கும் ஸ்வாமியாக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். தன்னை அண்டியவர்களைக் காப்பதில் பெருமை ஏதும் இல்லை, தன்னை எளிதில் அண்டாமல் உள்ளவர்களையும் காத்தருளியவர் எம்பெருமானார் ஆவார். ஆகவே இனி உள்ள காலம் முழுவதும் நமது ஸித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள், அஹங்காரம் பற்றியவர்கள் ஆகியோருடைய நரகத்தின் வாயிலை ஒத்த அவர்களின் இருப்பிடத்தை நான் நாடமாட்டேன்; அவர்களை,  மேகம் போன்று நவநிதியைப் பொழிவார்கள்   என்று வாய்க்கு வந்தபடி துதிக்கமாட்டேன்; ஸம்ஸாரத்தில் உழல வைக்கும் இது போன்ற செயல்களில் இனி நான் ஈடுபடமாட்டேன்.”  என்று எம்பெருமானார்   தன்னை ஆட்கொண்ட விதத்தை இப்பாடலின் மூலம் தெரிவிக்கிறார்   அமுதனார்

           நிதியைப் பொழியும் முகில் என்று * நீசர் தம் வாசல் பற்றித்

            துதிகற்று உலகில் துவள்கின்றிலேன் இனி * தூயநெறி சேர்

             எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்

            கதி பெற்றுடைய * இராமானுசன் என்னைக் காத்தனனே.

    மற்றொரு பாட்டினால் அவர்தம் பெருமையை எடுத்துக் கூறுகிறார் அமுதனார்.

              கொள்ளக் குறைவு அற்று இலங்கி * கொழுந்துவிட்டு ஓங்கிய உன்

             வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் *

             வெள்ளைச் சுடர்விடும் உன் பெருமேன்மைக்கு இழுக்கு இதென்று

             தள்ளுற்று இரங்கும் * இராமானுச என் தனி நெஞ்சமே.

    மழை மேகம்போல்  அள்ள அள்ளக் குறைவில்லாத செல்வத்தைக் கொடுத்தார் என்கிறார் அமுதனார். அப்படியென்ன செல்வத்தைக் கொடுத்தார். மற்ற சமயங்கள் தவறாக  வேதத்தின் சாரத்தைக் கூறிவந்ததை மறுத்து அரிய க்ரந்தங்களையும் உரைகளையும் எழுதி மக்களை நல்வழிப் படுத்திய மேதையல்லவா அவர்  நல்ல அரியதொரு ஆச்சார்ய பரம்பரையை உலகிற்கு ஈந்த வள்ளல்.அதனால் தான் இராமானுசரைத் தன் தனி நெஞ்சமே என்று விளிக்கிறார்.

    எம்பெருமானார் தன்னை ஆட்கொண்டபின் தனக்கென்ன கவலை, வைகுண்டம் கிடைத்தாலும் துன்பம் சூழ்ந்த நரகம் கிடைத்தாலும் தான்  கவலைப்படமாட்டேன் என்று கீழ்வரும் பாடலில் கூறுகிறார் அமுதனார்

             இன்பம்தரு பெருவீடு வந்தெய்திலென்? * எண்ணிறந்த

             துன்பம்தரு நிரயம்பல சூழிலென்? * தொல் உலகில்

             மன் பல் உயிர்கட்கு இறைவன் மாயன் என மொழிந்த

                அன்பன் அனகன் * இராமானுசன் என்னை ஆண்டனனே

           தனக்கு எம்பெருமானார் கிட்டியபின் தான் எதற்கு மற்ற சாதனங்களை முக்திக்காக நாட வேண்டும் என்று அவர் உணர்வதை இவ்வரிகள்

             கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம்

            கொதிக்கத் தவம் செய்யும் கொள்கையற்றேன்

     நமக்கு உணர்த்தும்.. வீடு விட்டு வீடு பெற காடு நோக்கிச் செல்லவேண்டாம் என்பது உடையவரின் அமுதவாக்கு. அதைத்தான் அமுதனார் இங்கு வலியுறுத்துகிறார்.

    வைணவக் கொழுந்து

    இராமானுசர் தான் தன் தெய்வம் என்று  இப்பாடலில் குறிப்பிடுகிறார் அமுதனார்.

           நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே   சில மானிடத்தைப்

            புயலே எனக் கவிபோற்றி செய்யேன்   பொன் அரங்கமென்னில்

            மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்

           அயரேன்   அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?

    எம்பெருமானார் எந்தவித கைம்மாறும் எதிர்பாராது தனது அளவற்ற கருணையினால் மிகவும் உயர்ந்த ஞானத்தை  அளித்து களைகள் நீக்கி வைணவப் பயிரை  வளர்த்தார் என்று இப்பாடலில் கூறுகிறார் நாங்கள் இழந்த வாழ்வை மீட்டுக் கொடுத்த முனி என்று போற்றுகிறார் அமுதனார்

          வாழ்வற்றது   தொல்லை வாதியர்க்கு   என்றும் மறையவர்தம்

           தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது  தத்துவ நூல்

           கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்

           நாழற்றது   நம் இராமானுசன் தந்த ஞானத்திலே.

    மெய்ஞ்ஞானியர் என்று அழைக்கப்பெறும் ஆழ்வார்களின் சிகரமாய் விளங்கிய நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் நறுமணத்தை   பதிதொறும் எடுத்துச் சென்று பக்தி எனும் பயிரை வளர்த்த மாமுனி எம்பெருமானார்,வேருக்கு வெப்பம் கண்டால் கொழுந்து வாடுவதுபோல வைணவப் பயிருக்கு எந்த வாட்டமும் வராது காத்த வைணவக்குலக் கொழுந்து என்று இப்பாடலின் மூலம் போற்றுகிறார்.

             உணர்ந்த  மெய்ஞ்ஞாநியர்  யோகந்தொறும்   திருவாய்மொழியின்

           மணம்  தரும்  இன்னிசை  மன்னும்  இடந்தொறும்   மாமலராள்

           புணர்ந்த  பொன்மார்வன்  பொருந்தும்  பதிதொறும்  புக்கு  நிற்கும்

           குணம்  திகழ்  கொண்டல்   இராமானுசன்  எங்குலக்  கொழுந்தே.

    அற்புதம் நிகழ்த்திய அருந்தவச் செம்மல்

    அற்புதம் செய்தார் ஆளவந்தாரின் சீடர் இராமானுசர் என்று பாராட்டுகிறார் அமுதனார். அப்படியென்ன அற்புதம் செய்துவிட்டார்,மிகவும் புரிந்துகொள்ள முடியாத கருத்தாகிய ”நாராயணனே அனைவர்க்கும் புகலிடம்’ என்பதை எளிதில் தன் உபதேசம் மூலம் புரியவைத்தார்.எப்போதும் இக்கருத்து  நம்மனதில் நிலையாக இருக்கவே ஸ்ரீபாஷ்யம் என்ற நூலை உலகிற்கு அளித்தார். இக்கருத்தைத்தான் இப்பாடலில் குறிப்பிடுகிறார்

           அற்புதம் செம்மை இராமானுசன் * என்னை ஆளவந்த

           கற்பகம் கற்றவர் காமுறு சீலன் * கருதரிய

           பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதென்னும்

           நற்பொருள் தன்னை * இந்நானிலத்தே வந்து நாட்டினனே

    திருவடி பெருமை

     எம்பெருமானாரின் அருள்பார்வையில் வீழ்ந்த அமுதனார் தனக்கு ஒன்றும் வேண்டாம், அவர்தம்  உயர்ந்த திருவடி சரணமே போதும் என்கிறார்,ஏனென்றால் திருவேங்கட மலையும் ஸ்ரீவைகுண்டமாகிய திருநாடும் திருப்பாற்கடலும் தரக்கூடிய பேரானந்தத்தைத் அவர்தம்  திருவடி தனக்கு அருளும் என்றுமன உறுதியுடன் கூறுகிறார், அக்கருத்தை வெளிப்படுத்தும் பாடல் இதோ

             நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்

              குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்

              உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்

              என்றனக் கும்அது,இராமா னுச! இவை யீந்தருளே.

    அவரது திருவடிகளில் சரணடைந்தபின் தன் இருவினைகளெல்லாம் தவிடுபொடியாய்ப் போயிற்று என்பதைக் கண்டுகொண்டேன் என்றும் சொல்லொணா அவரது கல்யாண குணங்களை அனுபவித்தேன் என்றும் பாடி ஆனந்திக்கிறார்

                  கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை காண்டலுமே

                   தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்

                  விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்று

                 உண்டுகொண் டேன், இன்னம் உற்றன ஓதில் உவப்பில்லையே.

    தான் யார் பின்னேயும் செல்லமாட்டேன். எம்பெருமானார் திருவடி பற்றிய மகான்களையே பற்றி தன் வாழ்வை நடத்துவேன் என்று தொன்டர்தம் பெருமையை திருவடிப் பெருமை மூலம் கூறும் பாங்கே தனிதான்  .இதோ அந்தப் பாடல்

              பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே

                உற்றா ரெனவுழன் றோடிநை யேனினி, ஒள்ளியநூல்

              கற்றார் பரவும் இராமா னுசனைக் கருதுமுள்ளம்

                பெற்றார் எவர், அவ ரெம்மைநின் றாளும் பெரியவரே.

    உலகம் உய்ய வந்த உடையவரின் திருவடி பற்றினால் பரமபதமே கிடைக்கும் என்று ஆணித்தனமாக வெளியிடுகிறார் இப்பாட்டில்

               தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்

              பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்

              திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்

                  குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.

    முடிவாக அவர் குறிப்பிடுகிறார். திருவேங்கடத்துள்ளானும் திருமாலிருஞ்சோலையுள்ளானும் எம்பருமானாரின் இதயத்தை இருப்பிடமாய்க் கொண்டுள்ளனர். அத்தகைய புண்ணியவான் தன் இதயத்தில் வீற்றிருப்பது தான் செய்த புண்ணியம் என்றும் அவரது எளிமைப் பண்பென்றும் மனமுருகிச் சொல்கிறார்.

               இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ் சோலையென்னும்

                பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்

                திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்

               திருப்பிடம் என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே.

    இறுதிப் பாட்டில் அவர் இராமானுசரிடம்  ஓர் வேண்டுகோள் விடுக்கிறார், அதைப் பார்க்கும்போது  உயர்ந்த    வைணவப் பண்பாகிய அடியார்தம் அடியவர்க்குத் தொண்டு செய்து வாழ விரும்பும் அமுதனாரின்  பண்பு வெளிப்படுகிறது.இதோ அந்த வேண்டுகோள். என்னே அவர்தம் சீரிய பண்பு. என்னே அவர்தம் நம்பிக்கை.

               இன்புற்ற சீலத் திராமா னுச, என்றும் எவ்விடத்தும்

               என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய

              துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

             அன்புற் றிருக்கும் படி, என்னை யாக்கியங் காட்படுத்தே.

    தேனினும் இனிய தமிழில் ஒரு அந்தாதியைத் தந்தருளிவிட்டார் அமுதனார். 130 ஆண்டுகள் வாழ்ந்து கஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை புனித யாத்திரை மேற்கொண்டு வைணவ மதத்தைப் பரப்புவதற்கு 72 யதிகளை நியமித்து அவர்கட்கெல்லாம் தலைவராயிருந்து வழிநடத்தி அனைத்துப் பிரிவினரையும் அன்பால்  ஒருங்கிணத்து வைணவ மரபை உலகிற்களித்த மாமுனியே எம்பெருமானார். அவரது 1000 ஆவது அவதார நன்னாள் சித்திரை திருவாதிரை நாளன்று அடுத்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அவரின் அடியவர்களாகிய நாம் அவர் பெருமையைப் பரப்புவோமாக

            உலகத்தை உய்விக்க வந்த  பெருமானே

          உத்தம புருடரே மாமுனியே– உள்ளத்தால்

          எப்பிறப்  பினரையும்  உவந்தேற்றுக்  கொண்டவரே

          எங்கள் எதிராஜரே போற்றி

    Share
  • எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு

    -பா.ராஜபாண்டி

     

    சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அகம், புறம் என்ற இரு பொருண்மைக்கு உட்பட்டு வந்த பாக்களைப் பெற்று அமைந்துள்ளன. இவற்றுள் செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்கள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகின்றன. இப்பாக்களில் ஈற்றடியில் கடைசி எழுத்து உயிர்மெய் கலந்து ஏகார ஓசையுடன்  அமைந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில பாடல்கள் இவ்விதியிலிருந்து சற்று மாறுபட்டு உயிர்மெய்யீராக அல்லாமல் மெய்யெழுத்தாகவே வந்துள்ளன. தொல்காப்பியர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களும் ஈற்றடியில் இறுதியாக வந்து அமையும் செய்யுட்களை இயைபுவனப்பு எனக் கூறுகின்றார். எட்டுத்தொகை நூல்களில் சில செய்யுட்கள் தொல்காப்பியரின் எண்வகை வனப்புகளுள் ஒன்றான இயைபுவனப்பு செய்யுட் வகையைச் சார்ந்தவையாகும். இந்நூலில் உள்ள தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் இலக்கண அமைப்பு கொண்ட செய்யுட்களைக் கண்டறிந்து, அவற்றின் பாடுபொருள் நிலையினையும், சிறப்பினையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

    தொல்காப்பியரின் எண்வகை வனப்பு:

    வனப்பு என்பது அழகு, அலங்காரம் எனப் பொருள்படும். வனப்பின் வகைமை பற்றிக் கூறும் தொல்காப்பியர், “பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ” (தொல்.செய்யுளியல்.நூ.1) எனக் கூறுகின்றார். அதாவது, வனப்பு எட்டு வகைப்படும். அவை, 1.அம்மை, 2.அழகு, 3.தொன்மை, 4.தோல், 5.விருந்து, 6.இயைபு, 7.புலன், 8.இழைபு போன்றவையாகும். இவர் செய்யுளியலில் முதலில் கூறிய 26 செய்யுள் உறுப்புகளோடு அம்மை முதலாக இழைபு ஈறாகச் சொல்லப்பட்ட எண்வகை வனப்புகளோடு சேர்த்து மொத்தம் 34 செய்யுள் உறுப்புகள் என்று கூறுகின்றார்.

    தொல்காப்பியரின் இயைபுவனப்பு:

    இயைபு என்னும் வனப்பு இலக்கியச்செய்யுளில் இறுதியில் அமையும் மெல்லின, இடையின எழுத்துக்கள் அடிப்படையில் இனங்காணப்படும் செய்யுளுறுப்பாகும். அதாவது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களில் ஏதேனும் ஒன்று ஈற்றில் பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவதை இயைபுவனப்பு என்கிறார் தொல்காப்பியர். இதனை,

    “ஞகார முதலா னகார ஈற்றுப்
    புள்ளி இறுதி இயைபெனப் படுமே” (தொல்.செய்.இளம்பூரணர் உரை. நூ.232)

    என்ற நூற்பா மூலம் விளக்குகின்றார். இளம்பூரணர், “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுள் இயைபென்னும் செய்யுளுறுப்புகளாகும் என்பார்.”1  இவ்வுறுப்புக்கு உதாரணம் வந்த வழிக் காண்க என்று கூறி, இறுதியில் முடியும் மணிமேகலை பாட்டுக்களைக் கூறுகின்றார். பேராசிரியர், “மேலே கூறப்பட்ட பதினொரு புள்ளியீற்றினுள் ஒன்றினை இறுதியாகச் செய்யுள் பொருள் தொடராகவும், சொற்றொடராகவும் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”2 இவர் இயைபு என்பது பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவது என்கிறார். சான்றாக மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட கொங்குவேண்மாக்கதையினையும் காட்டுகின்றார். இவர் “அவை இப்பொழுது வீழ்ந்தன போலும்’’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஏனைய பத்து மெய்களும் ஈற்றில் அமையும் தொடார்நிலைச் செய்யுள் கிடைக்கவில்லை என்பது நன்கு புலனாகின்றது. நச்சினார்க்கினியர், “முன்னர்க் கூறிய பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈற்றில் வந்து செய்யுளை பொருட்டொடராகச் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”3 சான்றாக மணிமேகலையும், உதயணன் கதையும் இக்காலத்தவர் கூறும் அந்தாதிச் சொற்றொடரும் கொள்க எனக் கூறுகின்றார்.

    தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்து,

    “ஞகார முதலா னகார ஈற்றுப்
    புள்ளி யிறுதி இயைபெனப் படுமே” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.552)

    என்ற நூற்பாவினையும், மொழிக்கு இறுதியாக வரும் எழுத்துக்களைக் கூறும் போது ‘ங்’ என்ற மெய்யொற்றைத் தவிர்த்து,

    “ஞணநம னயரல வழள வென்னும்
    அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழி.நூ.45)

    என்ற நூற்பாவினையும் படைத்துள்ளார். ‘ங்’ என்ற மெய்யொற்றை ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை. மேலும் தொல்காப்பியர் மொழி மரபில் மொழிக்கு ஈறாகும் எழுத்துக்களைக் கூறும்போது,

    “உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும்”
    (தொல்.எழுத்து.மொழி.நூ.36) என்றும்,

    “கவவோ டியையின் ஒளவு மாகும்” (தொல்.எழுத்து.மொழி.நூ.37)

    என்றும் நூற்பாக்களைக் கூறுகின்றார். அதாவது, உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் மொழிக்கு ஈறாக வரும் என்று கூறுகின்றார்.

    ‘ங்’என்ற மெய்யொற்றைத் தவிர்த்து மீதமுள்ள பதினொரு மெய்யீறுகள் இலக்கியச் செய்யுளின் இறுதியில் தொடர்நிலைச் செய்யுளாக வந்து, அழகுற அமைவது இயைபுவனப்புச் செய்யுளாகும், இதேபோல் தொடை வகையினைக் கூறும்போது ‘இயைபுத் தொடை’ என்றும், வண்ணம் வகையினைக் கூறும்போது ‘இயைபு வண்ணம்’ என்றும் கூறுகின்றார். இவற்றில், இயைபுத் தொடை என்பது அடிதோறும் இறுதி எழுத்தோ அல்லது இறுதிச் சீரோ ஒன்றி வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,

    “இறுவாய் ஒப்பின தியைபென மொழிப” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.408)

    என்று நூற்பா மூலம் விளக்குகிறார். ‘இயைபு வண்ணம்’ என்பது இடையின எழுத்துக்கள் மிகுதியாக வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,

    “இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே” (தொல்.பொருள்.செய்.தமிழண்ணல் உரை.நூ.1474)

    என்ற நூற்பாவின் மூலம் சுட்டுகின்றார். ஆகையால் தொல்காப்பியர் காலத்தில் எண்வகை வனப்புகளில் ஒன்றான இயைபு வனப்பு பிற்காலத்தில் ஒரு தொடை வகையாகக் கருதப்பெற்றது எனலாம்.

    தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்துள்ளார். மீதமுள்ள பதினொரு மெய்களும் இலக்கியச்செய்யுளில் இறுதியில் வந்து அழகுற அமைவது இயைபுவனப்பு செய்யுளுறுப்பாகும். க.வெள்ளைவாரணார், ”ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றினை இறுதியாகக் கொண்டு முடியும் செய்யுள் இயைபு என்னும் வனப்புடையது என்பார்.”4 ச.பாலசுந்தரம், “விட்டிசையின்றிச் சொற்களைப் புணரியல் விதிப்படி இயைந்து யாப்பது இயைபெனப்படும். ஞகார முதலா னகாரம் ஈறாக மொழியிறுதி நிற்கும் புள்ளி எழுத்துப் பதினொன்றையும் வருமொழியொடு புணர்த்தி யாப்பது இயைபென்னும் உறுப்பாகும். உரையாசிரியர்கள், பதினொரு மெய்யெழுத்துகளும் செய்யுள் ஈறாக நிற்குமாறு அமைதல் இயைபு என்பர். ஆனால் ஞ.ந.வ ஆகிய ஈறுகள் அங்கனம் நிற்றற்குரியன அல்ல, ஆகலின் அவர்கள் கருத்து பொருந்துமாறு இல்லை என்பார்.”5 இவரின் கருத்து தொல்காப்பிய எழுத்ததிகார மொழிமரபு என்ற இயலின்,

    “உச்ச காரமோடு  நகாரம் சிவணும்” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.46)

    என்ற நூற்பாவினையும்,

    “உப்ப காரமோடு  ஞகாரையும் அற்றே
    அப்பொருள் இரட்டாது இவணை யான” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.47)

    என்ற நூற்பாவினையும்,

    “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.48)

    என்ற நூற்பாவினையும் ஒட்டியே அமைந்துள்ளது. அதாவது நகர மெய் பொருந், வெரிந் என்றும், ஞகர மெய் உரிஞ் என்றும், வகர மெய் அவ், இவ், உவ், தெவ் என்றும் வருகின்ற சொற்களின் மட்டும் இறுதியில் வரும் என்ற கருத்துரை உள்ளதைக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால் உரையாசிரியர்கள் கருத்தானது,

    “ஞணநம னயரல வழள வென்னும்
    அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.45)

    என்ற நூற்பாவினை ஒட்டியே அமைந்துள்ளது. அடிகளாசிரியர், “இயைபு என்பன மேலே கண்ட பதினொரு புள்ளி ஈறாய் வந்த பாட்டெல்லாம்”6 என்றும், தமிழண்ணல், “ஞகரமெய், னகரமெய் ஆகியன செய்யுள் இறுதியில் வருமாறு இயற்றுதல்”7 என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இயைபுவனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது.

    தொல்காப்பியர் மெல்லினம், இடையினம் சார்ந்த எழுத்துக்கள் (ஙகரத்தை தவிர) மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறியவர் வல்லின எழுத்துக்களில் குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும் என்பதை புணரியலில்,

    “அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்”
    (தொல்.எழுத்து.புணரியல்.நூ.1)

    என்ற நூற்பாவில் சுட்டிச் செல்கின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் இருபத்தாறு எழுத்துக்கள் வரும் என்று கூறியவர் அவற்றுள் உயிரீற்றுக் குற்றியலுகர ஈறுகளை ஒழித்து, ஏனைய பதினொரு ஒற்றுகளே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். எனவே ஒற்றுகள் என்பது இயைபு வனப்பிற்குச் சிறந்த இயல்பாகும் என்பதை உணர முடிகின்றது.

    தமிழண்ணல் “ஞ,ண,ந,ம,ன என்ற புள்ளியிறுதியில் முடியும் பாடல்கள் இயைபு வனப்பாகும். இந்நூற்பாவின் பொருள் விளங்கவில்லை. அவ்வாறு முடியும் பாடல்கள் எவையும் இல்லை’’8 என்றும், “இயைபு வனப்பு என்பது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுட்கள். இது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு வகையாகத் தோன்றுகின்றது. நெடும்பாடல்களின் தொகுப்பு போன்ற பழங்காப்பியங்களில் இவ்வியைபு வனப்பு அமையும்”9  என்றும் எடுத்துரைக்கின்றார்.

    சோ.ந.கந்தசாமி, “செய்யுளின் இறுதி எழுத்து கூறப்பட்ட புள்ளி எழுத்துக்களில் ஒன்றாக வருவது இயைபு வனப்பாகும்”10   என்றும், சொ.பரமசிவம் “மெல்லினம் ஆறனுள் ஞ்,ண்,ந்,ம்,ன் என்னும் ஐந்தும், ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்ற இடையினம் ஆறும் சேர்ந்த பதினொரு புள்ளி எழுத்துக்கள் ஈறாக வந்த பாட்டுக்கு இயைபுவனப்பு என்று பெயர். இயைபுப் பொருள் தொடராகவும், சொற்றொடராவும் செய்யப்படும் பாட்டு’’11 என்றும், வை.கா.சிவப்பிரகாசம் “ஞகரம் முதலா  னகரம் ஈறாகவுள்ள பதினொரு மெய்கள் அமைவது இறுதியில் இயைபு வனப்பின் சிறப்பு’’12   என்றும் கூறுகின்றனர்.

    இவ்வாறு இயைபு வனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது. தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி மொழி மரபில் நூற்பா 36,37 ஆகியவற்றில் கூறுகின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி கூறியவர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்களே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். பிற்கால இலக்கண நூலான யாப்பருங்கல விருத்தியுரை, “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் சொற்றொடராய்ச் செய்யப்படும் பாட்டு இயைபு எனப்படும்”13  என்று கூறுகின்றது. இவ்வாறு பதினொரு மெய்களும் ஈற்றில் அமைவது இயைபுவனப்பு இலக்கியம் என்று இலக்கணம் உள்ளதே தவிர, இவற்றுக்கான இலக்கியம் மறைந்தன  போலும் என்பதும் இடைக்கால உரையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.

    எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு:

    எட்டுத்தொகை நூல்களின் செய்யுட்களில் தொல்காப்பியரின் இயைபு வனப்பில் அமைந்த செய்யுட்களைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

    ஐங்குறுநூற்றில் பொருளீட்டச் சென்ற தலைவன் தன் மனைக்குக் காலம் தாழ்த்தி வந்தவனைக் கண்ட தலைவி அவன் புறத்தொழுக்கம் (பரத்தமை ஒழுக்கம்) புரிந்துள்ளான் என வருந்துகின்றாள். அவ்விடத்தில் தோழி தலைவனின் நல்லொழுக்கத்தினைக் கூறித் தெளிவுபடுத்துகின்றாள். இதனை ஓரம்போகியார்,

    “செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
    றண்ணக மண்ணளைச் செல்லு மூரற்
    கெல்வளை நெகிழச் சாஅ
    யல்லல் உழைப்பது எவன் கொல் அன்னாய்” (ஐங்குறுநூறு. பா-27)  என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். செந்நெற் கதிர்களை நண்டுகள் மண்ணாலான குளிர்ந்த வளையத்திற்குள் (நண்டுபொந்து) கொண்டு சொல்வதைப் போன்று தலைவன் தன் முயற்சியால் பொருளீட்டித் தன் மனைக்கு வருவான் எனத் தலைவனின் கடமையைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள். இப்பாடலில் ஈற்றடியின் கடைசிச்சொல் “அன்னாய்” என்று “யகர” மெய்யெழுத்தில் வந்து முடிவதைக் காணமுடிகிறது.தலைவன் மீது காதல்மனம் கொண்ட தலைவி அவன் பிரிவினை நினைத்து உடல் மெலிவுற்றாள். செவிலி உடல் மெலிவிற்குக் காரணம் அணங்கினால் வந்திருக்கும் என எண்ணி வெறியாட்டு நிகழ்த்த முயன்றாள். அதனை அறிந்த தோழி தலைவியின் கற்பினைக் காப்பதற்குச் செவிலியிடம் தலைவியின் உடல் மெலிவுக்கான காரணத்தைத் தோழி அறத்தோடு நின்று கூறுகின்றாள். இதனை ஓரம்போகியார்,

    “உண்டுறை யணங்கிவ ளுறைநோ யாயிற்
    றண்சேறு கள்வன் வார்க்கு மூரற்
    கொண்டொடி நெகிழச் சாஅய்
    மென்றோள் பசப்ப தெவன்கொ லன்னாய்” (ஐங்குறுநூறு.பா-28)

    என்ற பாடலின் மூலமாகச் சுட்டுகின்றார்.பசலை நோயானது ஊரார் நீர் எடுக்கும் துறையின்கண் உள்ள தெய்வத்தால் உண்டானதல்ல. தலைவியின்மேல் உள்ள இந்நோய் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் ஊர்ந்து கோலம் போடுவதற்கு ஏற்ற ஊரினையுடைய தலைவனால் வந்த காதலே, தலைவியின் உடல் மெலிந்து ஒளிமிக்க வளையல் நெகிழ்வதற்கு காரணம் எனத் தோழி தன் தாயான செவிலியிடம் கூறுகின்றாள். இப்பாடலில் “உண்துறை அணங்கு” என்ற சொல் ஊரில் குடிநீர் எடுக்கும் இடத்தினையும், அவ்விடத்தில் மனிதர்களைத் தீண்டி வருத்தும் அணங்கு (பேய் அல்லது தெய்வம்) தங்கும் என்ற பண்டைய மக்களின் நம்பிக்கையும் கூறப்பட்டுள்ளன. இப்பாடலில் ஈற்றடியின் இறுதி எழுத்து யகர மெய்யுடன் முடிவதைக் காணமுடிகின்றது.

    இவ்வாறு ஐங்குறுநூற்றில் மூன்றாம் பத்தான கள்வன் பத்தில் உள்ள பத்துப்பாடல்களும், யகர மெய்யெழுத்து இறுதியில் வந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. இப்பாடல்களில் அன்னாய் என்ற சொல் தலைவி, தோழி, செவிலி, ஆகியோரைக் குறித்து வருகின்றது. இப்பாடலில் ஈற்றடியில் முடியும் அன்னாய் என்ற சொல் கூற்றின் பொருளை விளக்க வருமிடத்து முதல் சொல்லாக வந்து நிற்கின்றது. எனவே, உரையாசிரியர்களின் விளக்க உரைகளின்படி யகர மெய்யுடன் அமைந்த இப்பாடல்களை இயைபு வனப்புச் செய்யுளாகக் கொள்ளலாம். மேலும் கபிலரின் குறிஞ்சித் திணையில் ‘அன்னாய்ப் பத்து’ என்னும் பகுதியில் ‘அன்னாய்’என யகரமெய் ஈற்றில் வந்து முடிவதாக பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ‘அன்னாய்’ என்ற சொல் தலைவியைக் குறிப்பதாக ஆறு பாடல்களிலும், செவிலியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும், தோழியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

    எனவே ‘அன்னாய்’என்ற சொல் தோழி, செவிலி, தலைவி ஆகியோரைக் குறித்து நிற்கின்றது. தோழி தலைவியை பெருமாட்டி, அன்னை என்று அழைப்பதாகவும், தலைவி தோழியை தோழியே என்று விளித்து அழைப்பதாகவும், தோழி செவிலியை அன்னை, தாய் என அழைப்பதாகவும் ‘அன்னாய்’ என்ற சொல் பொருள்படுவதை உணரமுடிகின்றது.

    தோழி தலைவியிடம் கேட்காமலே தலைவனிடம் சென்று இரவுக்குறி நேர்ந்து பின்னர் தலைவியிடம் தலைவன் இரவுக்குறியில் வருவதை உணர்த்தியபொழுது தலைவி நீ நேர்ந்தமை நன்றே எனத் தோழியிடம் தலைவி கூறுகின்றாள். இதனை மாடலூர் கிழார்,

    “ சேணோன்  மாட்டிய நறும்புகை ஞெகிழி
    வான மீனின் வயின்வயின் இமைக்கும்
    ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
    உள்ளின், உள்நோய் மல்கும்:
    புல்லின் மாய்வது எவன்கொல்? – அன்னாய்” (குறுந்தொகை.பா.150)

    என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். ‘அன்னாய்’ என்ற சொல் இறுதியில் வந்து முடிவதால் யகரமெய் ஈற்றில் வருகிறது. இப்பாடலில் அன்னாய் என்பது தோழியைக் குறிக்க வரும் சொல்லாகும். மேலும், சங்க நூலான எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் பல மெய்யெழுத்துக்களை ஈற்றில் எழுத்துக்களாகக் கொண்டு முடிகின்றது.

    இயற்கைப் புணார்ச்சிக்குப் பின்னர் தலைவி மாட்டு நிகழும் செயல் வேறுபாடுகளைத் தலைவியது நாற்றம், தோற்றம் முதலான ஏழன் முதலாகத் தலைவியின் ஒழுக்கத்தை உணர்ந்த தோழி, தலைவி தன்னை மறையாமை காரணமாக மெய்யாகவும், பொய்யாகவும் பிழை நிகழாவண்ணம் கவர் பொருள் நாட்டத்தாள் என்று புனைந்து தலைமகனுக்குக் கூறுகின்றாள். இதனைக் கபிலர்,

    “கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
    ஆங்கண் உடைய அவன்”(கலித்தொகை.பா.37)

    என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலில் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற மெய்யெழுத்து ‘அவன்’ என்று பயின்று வந்துள்ளது. இதே போன்று கலி.51(அவன்), கல்-56(உடையான்), கல்-84 (தவறுடையேன்), கலி-86 (மகன்), கலி-11(மன்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற எழுத்தானது பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    தலைமகளது குறிப்பினைக் கண்டு பிரிய இருக்கின்றான் என ஐயம் கொண்ட தலைவி, ஐயுற்றுச் செல்கின்ற அக்காலத்து தலைவன் கனவில் அரற்றினமைக் கேட்ட தலைவி, பொருள் வயிற் பிரிவான் எனத் துணிந்து ஆற்றாதவளாய்த் தோழியிடம் கூறுகின்றாள். இதனைப் பெருங்கடுங்கோ,

    “நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும் தாம்
    போயின்று சொல் என் உயிர்” (கலித்தொகை.பா.24)

    என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்ற எழுத்தினைக் கொண்டு ‘உயிர்’ என அமைந்துள்ளது. இதே போன்று கலி-141 (தமர்), கலி-145 (துயர்) போன்ற பாடல்களில் ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்னும் மெய்யெழுத்து பாடலின் இறுதி எழுத்தாகப் பயின்று வருவதைக் காணலாம்.

    தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வந்த பொழுது காமக்கிழத்தி தன் அன்பு மிகுதியால் ஊடியதைக் கண்ட தலைவன் அங்கு சென்றான். இதனைக் கண்ட காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாளாயாகக் கூறினாள். இதனை மருதனிளநாகனார்,

    “பொது அவிழ் பனிப்பொய்கை புதுவது தளைவிட்ட
    வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.” (கலித்தொகை.பா.69)

    என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் மெய்யெழுத்து ‘அற்றக்கால்’ என பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-70 (கால்), கலி-82(தொழில்), கலி-85 (பால்), கலி-91 (செயல்), கலி-96 (செல்) போன்ற பாடல்களின் இறுதியில் ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் எழுத்து பயின்று வந்தமையை உணர முடிகின்றது.

    தலைவன் பரத்தையிடமிருந்து வீட்டுக்கு வந்து, இல்லத்துள்  நுழையாமல் வேலிக்கு அப்பால் நிற்கின்றானாகத் தலைவி தலைமகனுக்கு உரைக்கின்றாள். இதனை மருதனிளநாகனார்,

    “நயம் தலை மாறுவார் மாறாக மாறா
    கோதை பார்ப்பு ஆட காண்குவம்.” (கலித்தொகை.பா.80)

    என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் மகர மெய்யான ‘ம்’ என்ற மெய்யெழுத்து இறுதி எழுத்தாக ‘காண்குவம்’ எனப் பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-81(நாம்), கலி-90(உடையேம்), கலி-109(வரும்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக மகர மெய்யான  ம்’ என்ற மெய்யெழுத்து பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    தலைவனது கொடுமை உள்ளத்தைச் சுடுகின்றது என்று கூறிய தலைவியிடம் பாணன் முதலிய வாயிலோர் நயந்து கூறும் வழி, தலைவியானவள் பரத்தையரைக் குறும்பூழ்ப் பறவை என்று கூறுகின்றாள். இதனை மருதநிளநாகனார்,

    “நில் ஆங்கு நில் ஆங்கு இவார்தரல் எல்லாநீ
    நடலைப்பட்டு  எல்லாம்  நின் பூழ்.” (கலித்தொகை.பா.95)

    என்ற பாடல் மூலம் விளக்குகிறார். இப்பாடலின் இறுதியடியில் ழகர மெய்யான ‘ழ்’ என்னும் மெய்யெழுத்து ‘பூழ்’ என்று இறுதி எழுத்தாகப் பயின்று வந்துள்ளது.

    பாண்டியனுடைய தலைநகராகிய மதுரை அறிவானே ஆராய்ந்து நோக்குமிடத்து இவ்வுலகினுள்ள ஏனைய நகரங்கள் அனைத்தினும் சிறந்தது என்பதை,

    “உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
    புலவார் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
    தான்வாட வாடத தன்மைத்தே
    தென்னவன்
    நான்மடக் கூடல் நகர்.”  (பரிபாடல்திரட்டு, ஆறாம்பாடல். மதுரை.பக்.475)

    என்ற பாடல் மூலம் அறியமுடிகின்றது. இப்பாடலானது பாண்டியனது மதுரை நகர் நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே இவ்வுலகத்தில் உள்ள நகரங்கள் அனைத்தினது பெருமையினையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு சீர்தூக்குமிடத்து உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களின் பெருமையும் தாழ்ந்து நிற்க, தன்பெருமை அங்கனம் தாழ்ந்து நிற்காமல் சிறப்பினைப் பெறும் தன்மை உடைத்ததாகும் என்று கூறுகின்றது. இப்பாடலின் கடைசி அடியின் இறுதிச் சீரில் இறுதி எழுத்தானது இயைபு வனப்பின் இலக்கணமான ரகர ஒற்று இடம் பெற்றுள்ளதை உணரலாம்.

    முடிவுகள்

    தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் பாடுபொருளானது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்கள் பாடலின் இறுதியில் பயின்று வருவன என்பதாகும். எட்டுத்தொகையில் பதினொரு மெய்களில் ன்,ர்,ல்,ம்,ழ்,ய் போன்ற மெய்யெழுத்துகளே பாடலின் இறுதியில் பயின்று வந்துள்ளது. மற்ற ஐந்து மெய்களான ண்,ஞ்,ந்,வ்,ள் போன்றவை பயின்று வரவில்லை. சங்க இலக்கியங்களுக்கு உரித்தான ஏகார ஓசையுடன் எழுத்துக்கள் வராமல் இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்கள் இறுதியாக வருவதால் இப்பாடல்களின் அடியானது மிகச் சிறப்பினைப் பெறுகிறது. இவை தவிர மற்ற உயிர் மெய் எழுத்துகளும் எட்டுத்தொகையில் பயின்று வருவதைக் காணலாம். சங்க இலக்கியத்திற்கான ஏகார ஓசையில் முடியும் என்ற பாடுபொருள் அமைப்பு, இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்களின் வழியில் பாடுபொருள் மாற்றி அமைவதால் பாடல்கள் மிகச்சிறப்பினைப் பெற்றுள்ளமையினை உணரலாம்.

    ***

    குறிப்புகள்

    1. தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.167
    2. தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை,பக்.429-430
    3. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சர் உரை,ப.240
    4. வெள்ளைவாரணர்.க, செய்யுளியல் உரைவளம்,ப.1031
    5. பாலசுந்தரம்.ச, செய்யுள் உறுப்புக்கள்,ப.136.
    6. அடிகளாசிரியர்(ப), தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.428
    7. தமிழண்ணல், சங்க மரபு,ப.89
    8. தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்-    2,ப.97
    9. தமிழண்ணல், இந்திய இலக்கியச் சிற்பிகள்,தொல்காப்பியர்,ப.108

    10.கந்தசாமி. சோ.ந, தமிழ் யப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்,         பாகம்-1,ப.282

    1. பரமசிவம். சொ.ம, நற்றமிழ் இலக்கணம்,ப.645
    2. சிவப்பிரகாசம். வை.கா, செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும்,ப.425
    3. யப்பருங்கல விருத்தியுரை.ப.172

     ***

    துணை நின்றவை:

    குறுந்தொகை மூலமும் உரையும், (2009), பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18.

    ஐங்குறுநூறு மூலமும் உரையும், (2009), பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    கலித்தொகை. மூலமும் உரையும், (2007), நச்சர் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    பரிபாடல் மூலமும் உரையும், (2007) பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    தொல்காப்பியம்,பொருளதிகாரம், (2001), கழக வெளியீடு,

    522,டி.டி.கே.சாலை, சென்னை-18

    தமிழண்ணல் – தொல்காப்பியம்,பொருளதிகாரம் மூலமும் கருத்துரையும், (2008), மீனாட்சி புத்தக நிலையம்,

    48,தானப்ப முதலி தெரு, மதுரை-1

    பாலசுந்தரம்.ச – தொல்காப்பியம்,பொருளதிகாரம்,காண்டிகையுரை (1991), தாமரை வெளியீட்டகம்,367,மேலவீதி, தஞ்சாவூர்-9

    வெள்ளைவாரணர்.க – தொல்காப்பியம், செய்யுளியல் உரைவளம் (1989),மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை, மதுரை-21

    பரமசிவம்.சொ.ம – நற்றமிழ் இலக்கணம்,(2010), பட்டுப் பதிப்பகம்,

    1269,32-ம் தெரு, அண்ணா நகர் மேற்கு, கம்பர் குடியிருப்பு,

    சென்னை-40

    தமிழண்ணல் – சங்க மரபு, (1991), மீனாட்சி புத்தக நிலையம்,

    48, தானப்ப முதலி தெரு, மதுரை-1

    தமிழண்ணல் – தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்-2,

    செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1

    சிவப்பிரகாசம்.வை,கா –  செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும், (1963) தமிழ் பண்பாட்டு மையம்,மதுரை-1

    ***

    -பா.ராஜபாண்டி
    முனைவா் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46.

    Email:rajapandiraja1986@gmail.com

     

     

    Share
  • வள்ளுவத்தில் சமுதாயம்

    -க.பிரகாஷ்  

         tiruvalluvarவள்ளுவர்காலச் சமுதாயத்தின் தன்மையை அவர்தம் நூலிலிருந்தே உய்த்துணரலாம். உழவுத் தொழிலைத் தலைமையாகக் கொண்ட மருதநிலச் சமுதாயத்தில் நாகரிகம் நிலைகொண்டு கோனாட்சி வேர்விட்டிருந்த சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த சமுதாயத்தில் தமிழர்கள் வாழ்ந்த நிலையினைக் குறளில் காண்கிறோம். வள்ளுவர் காலத்தில் பொருட் செல்வத்தால் பெருமை எய்திய சிலர் இருந்தனர். அன்றாடம் குடல் கழுவுவதற்கு வழிதெரியாத, ஆலாய்ப் பறந்த ஏழைகளாகப் பலர் இருந்தனர். “கரவாது உவந்து ஈயும்” என்ற குறளில் குறிப்பிடுவதுபோலச் செல்வர் சிலரைக் கண்டிருக்கிறார். “ஈட்டம் இவறி இசை வேண்டா” என்ற குறளில் பூமிக்குப் பாரமாய் வந்த பிறவிகளையும் அறிந்துள்ளார். தொழில் பிரிவினை தலைமுறை தலைமுறையாகத் தொடர்வதாலும் குலங்களை நாகரிகச் சமுதாயத்தின் அங்கங்களாக அமைந்த ஏற்பாட்டின் மூலம் சாதி முறை இன்றிய சமுதாயத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். முல்லை நிலத்திலேயே ஆயருக்கு அடங்கிய பாணன் துடியன், பறையன், கடம்பன் என்றும் குடிகள் வாழ்ந்தனர் என்பது மாங்குடிகிழார் பாடல் ( புறம் 335) விளங்கும்.  மருதநிலச் சமுதாயத்தில் இந்தக் குடிவகைகள் பல்கிப் பெருகியது இயல்பே.

         கொடுங்கோல் மன்னர்களும் அறம்பேணாச் செல்வர்களும் போலித் துறவிகளும் இன்னோரன்ன பிறரும் சமுதாயத்தின் சத்ருக்கள் என்பதை உணர்த்தும். அந்தத் தீயோருக்கு இடமில்லாததும் மாநிலம் எங்கும் மக்கட் பண்பு மலர்ந்து மணம் வீசுவதுமான புதுமைச் சமுதாயத்தை தோற்றுவிக்கும் பேரார்வத்தால் உந்தப்பட்டே வள்ளுவர் தம் நூலைப் படைத்தார்.

         அற உணர்வில் எழும் உலகப் பொதுமைக்கு ஊறுநேராத வண்ணம் அவர் இமைகொட்டா விழிப்போடு தற்காத்துக் கொள்ளும் தகைமை போற்றுதற்கு உரியது. தமிழை வாழ்வித்த மூவரில் ஒருவரான வள்ளுவர் தமிழையோ தமிழ் நாட்டையோ ஓரிடத்திலேனும் குறித்தாரில்லை. “அருள் தமிழ் ஆற்றல்”, “தென்தமிழ் ஆற்றல்”, என்று சிலப்பதிகாரத்தில் – இளங்கோவடிகள் கவிக்கூற்றிலேயே ஆற்றுவார்.  வள்ளுவர் படைவீரத்தைப் பற்றிப் பேசும் போதோ நாட்டு வளத்தைப் பற்றிப் பேசும்போதோ தமிழை உவமையாகக் குறிப்பிட்டிருக்கலாம். காதலைப் பற்றிப் பேசும்போது மலரின் மென்மையை உவமையாகக் கொள்வதைப்போல் தமிழின் இனிமையைச் சுட்டியிருக்கலாம். ஆனால் சாதி, சமயம், நாடு, மொழி முதலிய எல்லைகள் அனைத்தையும் கடந்த மனிதகுல நல நாட்டம் மணிகளின் ஊடே செல்லும் பொன்னூல்போல் திருக்குறள் பாக்கள் அனைத்தையும் ஊடுருவி நிற்கிறது என்று பாரதி கூறுவார்.

        “வரும் குணத்தாலும் செயலாலும் கீழ்மை இல்லா
         தார் கீழ்மக்கள் ஆகார்”

         யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை – பாரதி தமிழ்.

         “கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்
         இரவாமை கோடி யுறும்”

         உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

         “ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
         தோற்றம் நிலக்குப் பொறை”

         சேர்த்து வைப்பதையே விரும்பும் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.

         கராவது        –    (இருப்பதை) ஒளிக்காது
         கண்      –    (சமுதாயத்தின்) கண் போன்றவர்
         ஈட்டம்         –    பொருளைத் திரட்டுவதை
         இவறி    –    பேராசைகொண்டு
         இசை          –    புகழ்

    “மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்
    கீழ்இருந்தும் 
    கீழ்அல்லார் கீழ் அல்லவர்” 

         மேல் நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

         கலைஞர்களும் அறிஞர்களும் சமுதாயத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவர்கள் சமுதாய வாழ்வின் நினைவுகளையோ அனுபவங்களையோ புறக்கணித்துவிட்டு வெறுமையில் கற்பனை செய்யவோ, சிந்திக்கவோ முடியாது. ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி, கற்பனை எல்லாம் அவர் சமூகவாழ்வில் பெறும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமுதாயமோ ஒரே நிலையில் இருப்பதில்லை. அது மாறுகிறது; வளர்கிறது. காலந்தோறும் மாறுதலும் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கில் கருத்துக்கள் மாறுதல் அடைவதும் பண்பாடு செம்மையுறுவதும் வரலாற்று ஆசிரியர் ஒப்பும் உண்மைகளாகும். நாம் இதை ஓர் உதாரணத்தால் உணர்ந்து கொள்ளலாம். சுதந்திரம் அல்லது உரிமை என்று கருத்து காலப்போக்கில் செழுமையடைந்து வருவதை நாம் நன்கறிவோம். சட்டமன்றக் குடியாட்சி முறையே உரிமைக்கு உத்தரவாதம் என்ற கருத்து நூற்றாண்டுகட்கு முன்னர் நிலைப்பெற்று விளங்கியது.

    நெடிது நோக்கும் நோன்மை படைத்த கார்ல்மார்க்ஸ் போன்ற அறிஞர் சிலரே அக்கருத்தின் தவற்றை அக்காலத்தில் உணர்த்திருந்தனர். ஆனால் சோஷலிஸச் சமுதாயத்தில் தான் சட்டமன்றக் குடியாட்சி முறையும் உரிமைக்கு உறுதி தேடுமென்ற சிந்தனை இக்கால மக்களில் பெரும்பாலோரை ஆட்டிப்படைத்து வருகிறது. எனவே திருக்குறளை வாழ்வியல் மட்டும் அல்லாமல் அரசியல் போன்ற பல்நோக்க முறையில் வகுத்துள்ளார் வள்ளுவர்.

     ***

    பார்வை : 

    திருக்குறள் ஒரு சமுதாயப் பார்வை –
    டாக்டர் .எஸ் இராமகிருஷ்ணன்
    திருக்குறள்     – டாக்டர் மு. வரதராசனார்

     *** 

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

     

    Share
  • சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வர்

    -முனைவர்  சி.சேதுராமன்

    தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமாக விளங்கும் எனது ஊரான மேலைச்சிவபுரிக்கும் தனித்ததொரு சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் தமிழன்னையின் உயர்விற்கு அயராதுபாடுபட்ட தமிழ்ப்பெருந்தகை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பிறந்தார். அவரால் மேலைச்சிவபுரி தமிழக வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றது. கதர்ச்சட்டை, கதர்வேட்டி கதர்த்துண்டு, கையில் குடை,  காலில் சாதாரண நடையன், நெற்றியில் திருநீறு இத்தகைய எளிமையான தோற்றத்துடன் தீட்சண்யமான கூர்ந்த பார்வையுடன் கம்பீரமாகத் திகழ்ந்தவர்தான் மூதறிஞர் வ.சுப.மா.

    manikkanar1987-ஆம் ஆண்டு நான் கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட்., முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே மூதறிஞரின் வீடு. அப்போது நான் கல்லூரிக்குப் போகும் போதெல்லாம் அவரும்என்னுடனேயே நடந்து வருவார். அவர் எங்கள் ஊர் என்பது தெரியும். அவரின் சிறப்புகளைப் பற்றி அறியாத பருவம்.

    நாள்தோறும் அவர் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபைக்கு வருவார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் எங்களுக்கு முதலாம் ஆண்டில் நம்பியகப்பொருள் இலக்கணத்தை பேராசிரியர் தா. மணி ஐயா அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் பாடத்தைக் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடன் நடந்துவரும் பெரியவர் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தார். எனது ஆசிரியர் மணி ஐயா அவரைக் கண்டவுடன் பணிவாக வணக்கம் ஐயா என்று மரியாதையுடன் கூறிவிட்டுத் தான் எடுக்கும் பாடம் குறித்து அவரிடம் கூறினார்.

    கருப்பொருள் குறித்த பாடம்தான் பேராசிரியர் மணி ஐயா  நடத்திக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட மூதறிஞர் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் குறித்த நூற்பாவைச் சிறிதுநேரம் எடுத்துரைத்து அதற்கு விளக்கம் கூறிவிட்டு அதிலிருந்து வினாக்களைக் கேட்டார். அவர்கேட்ட வினாக்களுக்கு விடைகளை எங்கள் வகுப்பிலிருந்தோர் கூறினோம். அப்போது மூதறிஞர் நூற்பாவைக் கூறுமாறு வினவ, நானும் என் நண்பர்கள் சிலரும் தெரிந்தவரை கூறினோம். அதனைக் கேட்டபின்னர் மூதறிஞர் எங்களைப் பாராட்டிவிட்டு வகுப்பறையை விட்டுச்சென்றுவிட்டார். அவர் சென்றபின்னர் அவர் யார் என்று எங்கள் பேராசிரியரிடம்கேட்டோம். அதற்கு அவர் ‘‘இவர்தான் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் என்ற தமிழறிஞர்’’ என்று எங்களுக்குக் கூறினார்.

    அதன்பின்னர் சன்மார்க்கச் சபைக் கட்டிடத்தில் மூதறிஞர் எங்களுக்குச் சிறப்பானதோர் உரையை வழங்கினார். அவரது உரையைக் கேட்ட எனக்கு அவர் மீதுபற்றுதல் ஏற்பட்டது. பலமுறை மூதறிஞர் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனை எனது வாழ்நாளில் கிட்டிய பேறாகக் கருதுகிறேன். அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

    ஆனால் எனக்கு நூல்கள் கிட்டவில்லை. எனது ஆவல் நான் பி.லிட் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோதுதான் நிறைவேறியது. ஆம் மூதறிஞர் எழுதிய ‘‘தமிழ்க்காதல்’’ என்ற நூலைக் கற்கின்ற வாய்ப்பு அப்போது எனக்குக் கிட்டியது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகை சதாசிவம் அவர்கள் தன்னிடமிருந்த அந்நூலை எனக்குக் கொடுத்துப் படிக்குமாறு தந்தார். அந்நூலைப் படிக்கப் படிக்க என்னுள் மூதறிஞரைப்பற்றிய எண்ணம் மேலோங்கி எழுந்தது. அவரது மேதைமைத் தன்மை என்னுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய அறிஞரின் வீட்டருகில் வாழ்ந்துகொண்டு அவரைப் பற்றி ஒன்றும் அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

    எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அவரைப் பற்றி கேட்டபோது அவர்கள்அவரைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறினார்கள். எங்கள் ஊரில் வாழ்ந்துமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி சுவாமிநாதன் செட்டியார் அவர்களும் மறைந்த எனது பேராசிரியர் பழ. சிதம்பரம் ஐயா அவர்களும் மூதறிஞரைப் பற்றி பல செய்திகளைக் கூறினர்.

    இளம் வயதில் தாய்தந்தையை இழந்து பர்மாவில் உள்ள வட்டிக்கடைக்குப் பெட்டியடிப் பையனாகச் சேர்ந்து அக்கடையின் முதலாளி யாராவது வந்து கேட்டால் தான் இல்லையென்று கூறுமாறு பொய் சொல்லச் சொன்னபோது மூதறிஞர்  மறுத்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற முதலாளி அவரை மீண்டும் ஊருக்கேஅனுப்பிவிட்டதாகவும் கூறி எந்தச் சூழலிலும் பொய்சொல்லாமல் வாழ்ந்த அவரதுநேர்மையை எங்கள் ஊர்ப் பெரியவர்களின் வாயிலாக அறிந்தபோது என்னுள் அவர் இமயமலைபோல் உயர்ந்து நின்றார்.

    மூதறிஞரை வீட்டிலேயே சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்று என்னுள் விருப்பம் எழுந்தது. அந்த நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதை விடத் தவம் கிடந்தேன் என்று சொல்லலாம். பல பணிகளின் காரணமாக மூதறிஞர் பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருந்தார். மூதறிஞரை எவ்வாறேனும் தனித்துச் சந்தித்துவிட வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. பி.லிட். மூன்றாம் ஆண்டுத் தேர்வும் வர, தேர்வெழுதிக் கொண்டிருந்தோம்.

    கடைசிநாள் தேர்வு நடந்த பொழுது ஓர் அதிர்ச்சியான தகவல் எங்களை வந்தடைந்தது. தேர்வறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த பேராசிரியர் அங்குவந்த மற்றொரு பேராசிரியரிடம் மூதறிஞர்  இறந்துவிட்டதாகத் தகவலைக் கூறினார்.  அதைக் கேட்ட எனக்குப் பேரதிர்ச்சி.  இது உண்மையானதா என்று அறிய என் மனம் பரபரத்தது. தேர்வினை முடித்தபின்னர் விரைந்து சென்று எனதுபேராசிரியரிடம் கேட்க அவர் கூறிய தகவல் என்னுள்ளத்தைப் பிளந்தது.

    ‘‘தண்டாமரையின் உடன் பிறந்து தண்டே நுகரா மண்டூகம்’’ போன்று இருந்துவிட்டோமே! என்று என்னுள்ளம் வேதனையில் துடித்தது. நானும் எனது வகுப்புத் தோழர்  பிரான்மலை கணபதி  அவர்களும் என்  ஊர்க்கார்கள் சிலருடன் மூதறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடிக்குச் சென்றோம். யாரைப் பார்த்து உரையாட வேண்டும் என்று  எண்ணியிருந்தேனோஅங்கு அந்தப் பெருந்தகை இறைவனடி சேர்ந்திருந்தார்.

    எனக்குச் சொல்லொணாத வேதனை ஏற்பட்டது. மூதறிஞர் அவர்களுக்கு மனமுருக எனது அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவரது  இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எனது நண்பருடன் திரும்பினேன். எனது ஊரில் அனைவரும் அவரைக்குறித்த பல்வேறு தகவல்களைக் கூறி  அவரை  நினைவு கூர்ந்தனர்.

    முன்பெல்லாம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைஎழுதுவதற்கு விளம்பரம் வந்தால் அதில் கல்வித் தகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பி.லிட்.,  நீங்கலாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் படித்தால் அரசுத்தேர்வுகளை எழுத முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மூதறிஞர் தனது முயற்சியால் அதனைப் போக்கி பி.லிட். பட்டம் பயில்வோரும் தேர்வெழுதும் நிலையைக் கொண்டுவந்தார்.  இது பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொணர்ந்தது. எங்கள் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபையில் நடைபெற்ற மூதறிஞரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் ஊர்க்காரர்களும் பலஊர்களிலும் இருந்து வந்த தமிழறிஞர்களும் மூதறிஞரின் சாதனைகளை நினைவுகூர்ந்தனர்.  அப்போதுதான் அவரது பெருமைகள் பல தெரியவந்தன.

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் மூதறிஞர். அதோடு மட்டுமல்லாது மூதறிஞர்  எழுதிவைத்த உயிலில் தனதுசொத்தில் ஒரு பங்கினை எங்கள் ஊர்  ஏழை எளியவருக்கு உதவி செய்வதற்கு எழுதி வைத்துள்ளதை அறிந்து உள்ளம் நெகிழ்ந்தேன். கிடைப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகும் இன்றய உலகில் இத்தகைய மாமனிதர்  வாழ்ந்திருக்கின்றாரே என்று எண்ணி வியந்தேன். பண்டித ஜவகர்லால் நேரு இந்தியத் திருநாட்டிற்காகத் தாம்வசித்த வீட்டைக் கொடுத்ததைப் போன்று மூதறிஞர் தாம் நேர்மையாக உழைத்துச்சேர்த்த செல்வத்தைத் தாம் பிறந்த ஊருக்கென்று எழுதி வைத்தார்.

    மூதறிஞரின் இத்தகைய செயல் காலம் உள்ளளவும் சிவபுரிக்காரர்களின் உள்ளத்தில் நின்று நிலைத்திருக்கும். அவர்  பெயரால் இன்றும் பல நலத்திட்டஉதவிகள் மூதறிஞரின் பிறந்த நாளில் அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  இந்த நூற்றாண்டு விழாவில் அவரது நினைவுகள் பலசுழன்று சுழன்று என்னுள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. அவர்  எங்களுக்கு ஒரு நூற்பாவைக் கூறி விளக்கமளித்த பாங்கு இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவேஉள்ளது.

    மூதறிஞரிடம் பாடம் கேட்ட அந்த ஒருசில மணித்துளிகள் வாழ்நாளில் மறக்கமுடியாதவையாகும்.  மூதறிஞர்  செம்மலார் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வராக மூதறிஞர் விளங்கினார். கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியை வளர்த்தெடுத்து அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கும் கல்விக் கண்ணைத்திறந்து வைத்த அந்த மாமேதையின் பெயரை மேலைச்சிவபுரி மட்டுமல்ல தமிழ்கூறும் நல்லுலகமும் என்றும் கூறிக் கொண்டே இருக்கும். அதில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.

    ***

    முனைவர்  சி.சேதுராமன்
    தமிழாய்வுத்துறைத் தலைவர்
    மாட்சி தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி) புதுக்கோட்டை.

    மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

     

     

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-25

    மீனாட்சி பாலகணேஷ்

    கண்ணன் மருகா தாலேலோ!

    புலவர் பகழிக்கூத்தர் வைணவ சமயத்தவர். தமக்குண்டான தீராத வயிற்றுவலியை திருமால் மருகனான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அழகான பிள்ளைத்தமிழ் ஒன்றினைப்பாடியதால் தீர்த்துக்கொண்டவர் என்பது வரலாறு. இவருடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் திருமால் பெருமை, மேலும் திருமால் செய்த விளையாடல்கள் தொடர்பான தொன்மங்கள் அழகுறப் புனையப்பட்டுள்ளதனைக் காணலாம். “இத்தகு திருமாலின் மருமகனே,” எனக்கூறிப் பாடி முருகவேளை வழுத்துவது இவருடைய முத்திரை எனலாம்!

    முருகப்பெருமானைச் சேடியரும் செவிலியரும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி உறங்கவைக்கின்றனர். மாலெனும் மாமன் புகழைப்பாடி முருகனாம் மருமகனைக் கொண்டாடிப் பேரானந்தமடைகின்றனர்.

    “வாசுகி எனும் பாம்பினை நாணாகக் கொண்டு கடலினைக் கடைந்தவன்; கொடியதும் கருமையான நிறம் கொண்டதுமான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் பொழிந்த அடைமழைக்கு, பெரிய மலையாகிய கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தவன். எதற்காக? ஆயர்குல மக்களின் பசுக்கூட்டங்கள் அனைத்தும் அந்த அடைமழையாலும், இடிமின்னலிலும் பயந்துபதறிச் சிதறியோடாமல் இருப்பதற்காக அவற்றிடம் கொண்ட அன்பினாலும் கருணையினாலும் அவ்வாறு குடைகவித்தான். அது மட்டுமின்றி, மூங்கிலாலான தனது புல்லாங்குழலால் இனிய இசையைப் பொழிந்தும் அவற்றை அமைதிகொள்ளச் செய்கிறான். அந்தப் பசுக்கள் அவனுடனும் மற்ற இடையர்களுடனும் மேய்ச்சலுக்குச் செல்லும்போதெல்லாம், கண்ணனின் இனிய குழலோசையைக் கேட்டு அதில் திளைத்திருப்பதுண்டு. ஆகவே, பெருமழை பொழிந்த சமயத்தும், அவ்விசையைக் கேட்டால் பசுக்கள் அமைதிபெறும் என எண்ணங்கொண்டு, குழலை ஊதி அவற்றை அமைதியடையச் செய்கிறான். அவன் பெருங்கருணையாளன்!

    “காளிந்தி எனும் பெயர்கொண்ட யமுனை ஆற்றின் கரையில் மாடுகளை மேய்த்தபடி அவற்றின் பின்னே நடந்து சென்றவன் அவன். இத்தகைய பெருமை வாய்ந்த கண்ணனின் மருமகனே இவன், நமது சிறுமுருகன்,” எனக்கூறிப் பெண்டிர் பெருமையாகத் தாலாட்டுவதாகப் பாடியுள்ளார்.
    இவ்வாறெல்லாம் முருகப்பெருமானின் குலப்பெருமையை விளம்பியவர், அடுத்து அவனுறையும் திருச்செந்தூரின் பெருமையையும் அழகுற, அதன் இயற்கைநலன்களை விவரித்துப் பரவுகிறார். அடியார்களைப் பரவசப்படுத்துகிறார்.

    2
    “மொட்டுக்கள் கட்டவிழும் மலர்ச்செடிகளும் பசுங்கொடிகளும் நெருங்கியுள்ள தாமரை மலர்த்தடாகங்கள் நிறைந்துள்ளது அவ்வூர். இளம் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தமாத்திரத்தில் தாயன்பால் தமது மடியினின்று பாலைப்பொழிகின்றன. அதனால் அத்தாமரைத்தடாகம் முழுதும் பால் நிறைந்துள்ளது. அதனைக்கண்ணுற்ற பெட்டை அன்னப்பறவை (பேட்டெகினம்) நீரையும் பாலையும் பிரித்து பாலைப்பருகி மகிழ்கின்றதாம். அத்தகைய இயற்கைவளம் கொழித்து விளங்குவது திருச்செந்தூர். அவ்வூரின்கண் குடிகொண்ட செல்வனே தாலோ தாலேலோ! தெய்வயானையை மணம்புரிந்து கொண்ட சிறுவா தாலோ தாலேலோ!” எனப்பாடி மகிழ்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

    நுட்பமாக நோக்கின் ஒரு கருத்து நமக்குச் சிறிது வியப்பையும் குழப்பத்தையும் தரும். தாலாட்டுப் பாடுவதென்றால் முருகன் தொட்டிலில் கண்வளரும் சின்னஞ்சிறு குழந்தையாகத்தானே இருக்க வேண்டும். அந்தச் சின்னஞ்சிறு குழந்தை வளர்ந்து பெரியவனான பின்பல்லவோ மணம்புரிந்து கொள்ள வேண்டும்? அவனை இப்போதே தெய்வயானையை மணந்த முருகனே தாலோ எனக்கூறுவது ஏன்? இதுவே பிள்ளைத்தமிழின் சிறப்பாகும். அழகிய கவிதைநயம் வாய்ந்த, இலக்கணம் ஒப்புக்கொண்ட முரண்பாடு!

    ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பார் தொல்காப்பியர். சிறப்பான பெரியோர்கள் மீதே பிள்ளைத்தமிழ் பாடப்படும். அப்போது அவர்களை மானிடக்குழந்தையாகக் கருதியே பாடவேண்டும் என்பது நியதி! உண்மையாலுமே சிறுபிள்ளைகள் மீது பிள்ளைத்தமிழ் இயற்றப்படுவதில்லை! சாமானிய மக்கள்மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்படுவதில்லை!

    3
    தெய்வங்களையும், மன்னர்களையும், சான்றோரையும், அவர்களைப் பிள்ளையாகக்கொண்டு மட்டுமே பாடுவதனால், அப்பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் இளமைப்பருவத்து, வளர்ந்த பருவத்து நிகழ்ச்சிகளையும், வீரதீரப் பிரதாபங்களையும், அவர்தம் சார்பான தொன்மங்களையும் கவிதை நயத்துக்காகவும், நூலின் சிறப்புக்காகவும் அழகுற எடுத்தோம்புவது ஒரு வழக்கம்; புலவர் தனது நூலைச் சிறப்புற அமைக்க எடுத்துக்கொள்ளும் உரிமை/உத்தி எனலாமா? அதுவே தனித்தன்மை வாய்ந்த பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம்! தமிழ்மொழிக்கு ஒரு அழகான சிறப்பானஅணிகலன்!
    பாடல் இதோ!

    பாம்பால் உததி தனைக்கடைந்து
    படருங் கொடுங்கார் சொரிமழைக்குப்
    பரிய வரையைக் குடைகவித்துப்
    பசுக்கள் வெருவிப் பதறாமற்

    காம்பால் இசையின் தொனியழைத்துக்
    கதறுந் தமரக் காளிந்திக்
    கரையில் நிரைப்பின் னேநடந்த
    கண்ணன் மருகா முகையுடைக்கும்

    பூம்பா சடைப்பங் கயத்தடத்திற்
    புனிற்றுக் கவரி முலைநெரித்துப்
    பொழியும் அமுதந் தனைக்கண்டு
    புனலைப் பிரித்துப் பேட்டெகினந்

    தீம்பால் பருகுந் திருச்செந்தூர்ச்
    செல்வா தாலோ தாலேலோ
    தெய்வக் களிற்றை மணம்புணர்ந்த
    சிறுவா தாலோ தாலேலோ.

    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

    **********

    சேடியரும், செவிலியரும், தாயரும் குழந்தை முருகனைத் தாலாட்டிச் சீராட்டி மகிழ்கின்றனர்.

    1
    “உனது மரகத வடிவம் (பச்சை நிறம்) சூரியனின் சிவந்த கதிர்கள் பட்டு அழகாக வாடித்துவண்டு போய்விடாதோ ஐயா?” என்கிறாள் ஒருத்தி.

    அதாவது வெயில்பட்டுக் குழந்தை வாடிக்களைத்து விட்டதாம்; அதுவும் அம்முருகனுக்கு ஒரு தனி அழகாகத் தெரிகின்றது:

    இதனை இன்னொருவிதமாக, பச்சை மயிலின்மீது ஊர்ந்து வரும் முருகப்பெருமான் வெயிலினால் வாடிக்காண்கிறான் எனக்கூறுவதாகவும் கொள்ளலாம்.

    “மதிபோன்ற உனது அழகான முகம் சிறு (வியர்வைத்)துளிகள் அரும்பிடுமாறு மிகுதியாக வியர்த்துவிடாதோ?” எனக்கொஞ்சுகிறாள் இன்னொருத்தி.

    “மலர்கள் போன்ற கைகளால் (குழந்தையாகிய) உன்னை அணைத்து இன்பம் எய்தும் அழகான பெண்டிர் உன்னைக்காணாமல் சென்றுவிடுவார்களோ? சென்றுவிடத்தான் அவர்கள் மனம் கேட்குமோ?” என வியக்கிறாள் செவிலித்தாய்.

    “பொன்மணிகள் கொஞ்சும் குண்டலம், அரைநாண் ஆகியவற்றினை அணிந்து நீ விளையாடச் சென்றால், உன் அழகான மழலைவடிவைக்கண்டு தாயன்பு பொங்கிட, கச்சணிந்த விம்மிய முலைகளிலிருந்து பொங்கிச்சுரக்கும் பாலை உனக்குத்தர தாய்மார்கள் உன்னைத்தேடி ஓடி வரமாட்டார்களோ?”

    “புரவலர் ( கொடையாளிகள்) அனைவரும் உனது விரிந்த மலர்போன்ற திருவடிகளைத் தொழுவார்கள் (ஏனெனில் புரவலர்க்கெல்லாம் புரவலன் நீதான்). போது- மலர்; இங்கு முருகனின் திருவடிகளைக்குறிப்பிடும். மெய்ஞ்ஞானமுடையவனே! (போதா) சரவணப்பொய்கையில் வளர்கின்ற தமிழ்க்கடவுளாகிய முருகனே! தாலோ தாலேலோ! நான்குவேதங்களும் போற்றுபவனே! திருச்செந்தூரை உறைவிடமாய்க் கொண்டவனே! தாலோ தாலேலோ!” எனத்தாய்மார் (ஆறு கார்த்திகைப்பெண்டிர் எனக் கொள்ளலாமா?) கொஞ்சி மகிழ்வதாக ஒரு தாலப்பருவப்பாடல்.

    மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்
    வாகாய் வாடாதோ
    மதிமுக முழுதுந் தண்துளி தரவே
    வார்வேர் சோராதோ

    கரமலர் அணைதந் தின்புறு மடவார்
    காணா தேபோமோ
    கனமணி குலவுங் குண்டலம் அரைஞா
    ணோடே போனால்வார்

    பொருமிய முலையுந் தந்திட வுடனே
    தாய்மார் தேடாரோ
    புரவலர் எவருங் கண்டடி தொழுவார்
    போதாய் போதாநீள்

    சரவண மருவுந் தண்டமிழ் முருகா
    தாலோ தாலேலோ
    சதுமறை பரவுஞ் செந்திலை யுடையாய்
    தாலோ தாலேலோ.

    (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்- தாலப்பருவம்)

    இப்பாடலைப்பற்றிய இன்னொரு இனிமையான செய்தி என்னவென்றால் நமது தமிழ்நாட்டின் இசையரசி திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பத்து வயதுச் சிறுமியாக இருந்தபோது பாடி ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது முதற்பாடல் இதுவாகும். இதன் ஒலி-ஒளிப்பதிவு You Tube-ல் காணக்கிடைக்கும். கண்டு ரசித்து கேட்டு மகிழுங்கள். அழகான தெளிவான உச்சரிப்பு. குழந்தையே ஆயினும் சுருதிசுத்தமாகப் பாடிய பாடல்.

    இன்னும் தொடர்ந்து பிள்ளைத்தமிழ் இலக்கியத்தைப் படித்து மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக் கிளர்ச்சியைப் பதிவு செய்தது

     

     

    pic1
    comet Halley
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    https://youtu.be/16z1ZUMnGn0

    https://youtu.be/Tp2P4ht2WNM

    https://youtu.be/J7I9z6Lcemo

    https://youtu.be/2-M5_xBVSLQ

    ++++++++++++++

    pic2

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    வால்மீன்கள் !
    வியாழக்கோள் வலையில்
    சிக்கிய
    வால்மீன் மீது கவண் வீசிக்
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    அண்ட கோள்களின்
    ஆதித் தோற்றம் அறியவும்,
    உயிரின மூலத்தை உளவிடவும்
    ஏவிய விண்ணுளவி
    பூமிக்கு மீண்டது !
    வால்மீன்  ஒளிக் கிளர்ச்சியை
    ஐரோப்பிய  விண்ணுளவி
    முதன்முதல் திடீர்ப் பதிவு செய்து
    தகவல் அனுப்பியது !

    +++++++++++++++

    pic3

    கடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.  ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.

    ஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.  ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.

    மாத்தியூ டெய்லர் [ESA Rosetta Project Scientist]

    pic4

     ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.

     எபெர்கார்டு குருயன் [Eberhard Grun, Nuclear Physics, Max-Plank Institute, Heidelberg, Germany]

     

    pic5

     

    2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்

    ரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name :  67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது.  பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன.  இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.  வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது.  அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].

    pic6

    ரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது.  அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus].  வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது.  ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின.  மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது.  சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது.  ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது.  புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.

    ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள்  நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார்.  வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.  உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.

    ++++++++++++++++

    pic7

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    pic8

    ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது.  பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும்.  இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள்  யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.

    பார்பரா கொஸ்ஸோனி  [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்] 

    240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.

    எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்] 

    pic9

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    pic10

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    pic11

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர். “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும். அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது. மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும். வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    pic12

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    pic13

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    pic14

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    pic15

     விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1. “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]
    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]
    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]
    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]
    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]
    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]
    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    pic16

    8.“ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9.“ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10. “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]
    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]
    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    pic17

    1. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]
    2. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]
    3. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]
    4. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]
    5. “லெஸ்டி2” மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]
    6. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    pic18

    அணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்

    2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார்.  அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார்.  செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள்.  அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.  டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.

    Rosetta Spaceship Launching 

    [March 2, 2004]

    pic19

    2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி.  ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது.  விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது.  அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது.  மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது!  விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது.  நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது.  விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.

    pic20

    ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி

    ஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது.  அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது.  விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம்.  அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.

    pic21

    ரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன.  2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது.  நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன.  சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது.  அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன.  பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.

    pic22

    பரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும்.  2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும்.  தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும்.  தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்.  ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.

    pic23

    pic24

     

    (தொடரும்)

    **********************

    தகவல்:

    1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
      2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
      3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
      4. Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.comJuly 1, 2005]
      5. NASA to Study Comet Collision www.PhysOrg.com[2005]
      6. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
      7. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
      8. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
      9. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
      10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [Deep Impact: 1]
      11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [Deep Impact: 1]
      12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html[Stardust Probe: 1]
      13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html[Stardust Probe: 2]
      14 BBC News: Space Probe Performs Mars Fly-By [Feb 25, 2007]
      15 European Space Agency (ESA) Science & Technology -Rosetta Fact Sheet [Feb 19, 2007]
      16 Europe’s Space Probe Swings By Mars [Feb 25, 2007]
      17 Europe Comet Probe Makes Key Mars Flyby By: David McHugh (Associated Press) [Feb 24, 2007]
      18 Spaceflight Now: Comet-bound Probe Enjoys Close Encounter with Mars By: Stephan Clark [Feb 25, 2007].
      19 SkyNews: Was Hyakutake the Comet of the Century [July 1996] &
      SkyNews: Comet Hale-Bopp [April 1997]
      20 Sky & Telescope: Brightest Comet in 41 Years [April 2007]
      21 BBC News Houston: Asteroid Mission Concept Unveiled By: Paul Rincon [March 14, 2007]
    2. http://www.spacedaily.com/reports/Touchdown!_Rosettas_Philae_probe_lands_on_comet_999.html[November 12, 2014]
    3.  http://www.spacedaily.com/reports/A_close_up_with_a_comet_999.html[November 12, 2014]
    4. http://www.spacedaily.com/reports/European_probe_lands_on_comet_fails_to_anchor_999.html[November 12, 2014]
    5.  http://www.bbc.com/news/science-environment-30034060[November 13, 2014]
    6.  http://www.spacedaily.com/reports/Philae_to_attempt_comet_drill_mission_scientist_999.html[November 14, 2014]
    7.  http://www.bbc.com/news/science-environment-30058176[November 15, 2014]
    8.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)[November 15, 2014]
    9.  http://fr.wikipedia.org/wiki/Rosetta_(sonde_spatiale)[?November 15, 2014]
    10.  http://sci.esa.int/rosetta/14615-comet-67p/[November 16, 2014]
    11. http://storiesbywilliams.com/2014/09/17/news-from-space-rosetta-maps-comet-surface/
    12.  http://sci.esa.int/rosetta/ESA Rosetta Website [June 19, 2015]
    13. https://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)[June 20, 2015]
    14.  http://rosetta.jpl.nasa.gov/[NASA Rosetta Site]
    15.  http://www.space.com/27697-rosetta-comet-landing-full-coverage.html
    16.  http://blogs.esa.int/rosetta/2015/03/27/cometwatch-around-anubis-and-atum/[March 21, 2015]
    17.  http://www.telegraph.co.uk/news/science/space/11195744/The-Rosetta-mission-everything-you-need-to-know-about-the-quest-to-catch-a-comet.html[June 20, 2015]
    18. http://www.spacedaily.com/reports/Rosetta_comet-chasing_mission_extended_to_September_2016_999.html[June 23, 2015]
    19.  https://en.wikipedia.org/wiki/Halley%27s_Comet[August 19, 2016]
    20. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Rosetta_captures_comet_outburst[August 25, 2016]
    21. http://phys.org/news/2016-08-rosetta-captures-comet-outburst.html[August 25, 2016]
    22.  http://blogs.esa.int/rosetta/2016/08/25/rosetta-captures-comet-outburst/[ August 25, 2016]

    ********************

    Jayabarathan [jayabarathans@gmail.com]  (September 1, 2016) [R-2]

     

     

    Share
  • தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிரிவாக்கமும் சுற்றுச்சூழல் சீர்கேடும்

    –ரா. மூர்த்தி

     

          தமிழர்கள் நிலங்களை ‘நிலம், ‘திணை’ சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு இயற்கையும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுமே காரணமாக அமைந்தது. இதனைத் தொல்காப்பியம் ’ஐவகை சார்ந்த திணைக்கோட்பாடு’ என்கிறது. தொல்தமிழர்கள் இனக்குழுவாழ்க்கை, கூட்டுவாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமூக வாழ்க்கை வாழ்ந்ததற்கான பண்பாட்டு இறுமையாக அடையாளமாகவும் இனங்கானுகிறது. தமிழ்ச்சமுதாயம் நிலப்பின்னணியில் குறிஞ்சி – மலை, முல்லை – காடு, மருதம் – வயல், நெய்தல் – கடல் என வகுப்பட்ட நிலையில், அந்தந்த நிலத்திற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இவைகளையும் சுற்றுச்சூழல் தகவமைப்பிற்கு ஏற்பவே இனங்காணப்பட்டுள்ளது.

          முதற்பொருள் முழுக்க முழுக்க இயற்கைச் சூழலினை உள்வாங்கிக்கொண்டு நிலம் – பொழுது என வரையறைப்படுத்தி அதற்குள் நிலங்களை நானிலமாக பிரித்தாள்வதைப் பேசுகிறது. இதில் சில மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்திருந்தன. அதிலே இணைக்கப்பட்டதுதான் பாலை என்றொரு வறண்ட நிலம். இவற்றிற்கென்று தனிநிலம் இல்லையாயினும் காலம் கருத்தில் கொள்ளப்பட்டது.

          இந்நிலங்களில் வாழ்ந்த வாழ்வு நிலைத்திருக்கவில்லை. இடமாற்றம் அடிக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் இயற்கைப்பேரிடர்கள் ஏற்படவும் செய்தன. நிலத்திற்கு ஏற்ப மலை, காடு, வயல், கடல், வறட்சி (பாலை) என இயற்கையினையும் சுற்றுச்சூழலையும் கொண்டு உருவாக்கியதோடு மக்களும் (கருப்பொருள்) அவர்களுக்கான துணைவினைப்பொருட்கள் தேவைப்படுதை அறிந்து அந்தந்த நிலங்களில் கிடைக்கும் துணைவினைகளைக் கருப்பொருளாக உருவாக்கி, பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வாழத்தொங்கினர்.

          திணைச்சமூக வாழ்வில் இயற்கையே நமக்கு முன்னோடியாகத் திகழ்வதை அறிந்துகொள்ளலாம். ஏனென்றால் மனித வாழ்க்கையானது இயற்கையான மலை, காடு இவைகளிலிருந்தே நாடோடியாகத் தொடக்கத்தில் தொடங்குகிறது. அதனால்தான் குறிஞ்சியும் முல்லையும் பூக்களின் பெயரைக்கொண்டு – இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தொல்காப்பியர் நிலங்களை பிரித்தாண்டுள்ளனர். இதிலிருந்து வளர்ச்சி பெறும்போது மற்றவைகள் விரிவு பெறுகின்றன.

          பழந்தமிழகத்தில் நிலத்தின் விரிவாக்கத்திற்கு நீரின் பயன்பாடு முதன்மையாயிற்று. நிலத்தின் மீதான உரிமையே நீரின் மீதான உரிமையினையும் இயல்பாகவே நிலவுடைமையாளர்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. தொடக்க காலங்களில் நீர் உரிமையும், நீரினைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும் ஊராரிடமுமே இருந்துள்ளன. நீர் மேலாண்மையில் பாசான விவசாயமே முதன்மைப்படுத்தப் பட்டது. அதில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விதந்து பேசப்பட்டுள்ளன. அவற்றுள் நெல் ஆட்சியாளர்களை நீர்ப்பாசன வேளாண்மைக்கு ஈர்த்திருக்கும். நெல்லிற்கு இணையாக உப்பும் மதிக்கப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்தில் கடல் நீரினைப் பாத்திகட்டி உப்பு விளைவிக்கப்பட்டுள்ளது. மாறாக மருதநிலத்தில் மிருதுவான நன்னீர் கொண்டு பாத்திகட்டி நெல் பயிரிடப்பட்டது.  மருதம் நெய்தல் இவ்விரு நிலங்களின் அமைப்பானது வெகுதொலைவில் இருந்ததில்லை. அருகருகே இருக்கவும் செய்துள்ளது; இன்றும் இருந்து வருகிறது.

          ஒரு களத்தில் உழவர்கள் நெல்தூற்றியபோது பறந்துசென்ற துரும்புகள் அருகேயுள்ள உப்பளத்தில் பாத்திகளில் படர்ந்ததால் உப்பளப் பாத்திகளிலுள்ள வெண்மையான உப்பு கெட்டது. இதனால், ஆத்திரமுற்ற பரதவர்கள் உழவர்களோடு சண்டையிட்டு இரு தரப்பாரும் சேறுகளை வாரியடித்துக் கொண்டனர். இத்தகைய நிகழ்வு மருதநில நரைமுது பெரியோர்கள் முன்னிலையில் சரிசெய்யப்பட்டு மருத நிலத்தில் கிடைக்கும் கள் பரதவர்களுக்கும் உழவர்களுக்கும் கொடுக்கப்பட்டு வழக்கு முடித்து வைத்து அணுப்பட்டுள்ளதை

    “தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
     நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்புஅழித்து
    கள்ஆர் களமர் பகடுதலை மாற்றி
    கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
    காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்
    இருநீர்ப் பரப்பின் பனிந்துறைப் பரதவர்
    தீம்பொழி வெள்ளுப்பு சிதைதலின் சினைஇ
    கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
    இருஞ்சோற்று அள்ளல் எறிசெருக் கண்டு
    நரைமூதாளர் கைபிணி விடுத்து
    நனைமுதிர் தேறல் நுழையர்க்கு ஈயும்” (அகம்.366)

          என்ற பாடல் வரிமூலம் அறியமுடிகிறது. இங்கு நிலத்தின் விரிவாக்கம் பரந்து கிடப்பினும் பரதவர், உழவர் மத்தியில் நிலத்தைத் தன்வயப்படுத்தி தொழில்செய்யும் ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  நிலத்திற்கான உரிமை தனிமனித வயத்தில் தற்காத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நிலத்தின் பரப்பளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இனங்காணப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்த தமிழர்களுக்கு நிலத்தின் ஈர்ப்பு தொழிலாக செயல்பட்டு வந்தாலும் உணவு, பொருளீட்டல் பெருக்குதல் நிலையிலே முதன்மையாயின.

          உணவு, பொருளீட்டல் நிலைக்கு மாறிய மனிதனுக்கு இருப்பிடத்தின் நிரந்தரத் தேவையை அமைக்கும் தன்முனைப்பிலும் இரங்க வேண்டிய நிலைக்கும் மாற்றமுற்றான். இதனால் தாவரங்கள், விலங்குள் ஆகியவைகளை தனிமைப்படுத்தியும் அழித்தாண்டும் அழிவுகுள்ளாக்கியும் வாழச் செய்தான். விலங்குகள், தாவரங்கள் தன்வயப்படுத்தல் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய நிலங்களிலும் கடல்வாழ் உயிரினங்கள் பயன்படுத்துதல் நெய்தல் நிலங்களில் நிகழ்ந்துள்ளன.

    நிலஅழிவும் விரிவாக்கமும்

          நிலஅழிவு தொடக்க காலத்தில் மலைகளிலே தொடக்கம் கொள்கிறது. இதில் மனிதன் மூன்று நிலைகளில் முன்னோடியாகத் திகழ்க்கிறான்.

    1. மனிதன் – விலங்குகளை அழித்தல்
    2. மனிதன் – தாவரங்களை அழித்தல்
    3. மனிதன் – நிலங்களை அழித்தல்.
    4. மனிதன் – மனிதனை அழித்தல்.

    இம்மூன்று நிலைகளிலும் மனிதன் முன்னோடியாக இருந்தான். அதற்குமுன் நாடோடியாக விலங்குகளை மட்டும் அழிவுகுள்ளாக்கும் செயலினைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தான். உணவின் தேவை அதிகரிப்பு, இனக்குழு பெருக்கம், வாரிசுஏய்ப்பு போன்ற காரணங்களினால் மற்றவைகளின் மீதும் அவனுடைய நாட்டம் இறங்கத்தொடங்கிற்று.

          இருப்பினும் சங்க காலத்தில் நிலஅழிவு, தொழில் அடிப்படையில் தினைக்காடுகளிலே கானக்குறவர், குன்றக்குறவர், புனக்குறவர், ஏனல் காவலர், கானவன், நாடன், மலைக்குறவர், குடிக்குறவர், புனவன், சிறுகுடிக் குறவன் இவர்களின் முனைப்பிலே தொடக்கம் கொள்கிறது. இவர்கள் செய்த வேளாண்மை முறையை உலகளாவிய நிலையில் இனவரைவியலார்கள் பலவாறு பெயர்கள் கூறி அழைக்கின்றனர். ‘காட்டெரிப்பு வேளாண்மை (Slash-and – burn cultivation), இடம்பெயரும் வேளாண்மை’ (fallow peirod, shifting cultivation), ‘சுவிடன் வேளாண்மை’ (Swidden cultivation),  ‘மில்பா வேளாண்மை’ (Milpa agriculture), ‘ரோசா வேளாண்மை’ (roza farming) எனப் பலவாறு கூறப்படும் .(”ப. 118 தமிழ்பழங்குடிகள்). இந்தியாவில் பழங்காலம் முதல் பழங்குடிகள் தொடர்ந்து காட்டெரிப்பு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர்.

          சங்க இலக்கியத்தில் வேட்டையாடி உணவு சேகரிக்கும்முறை (விலங்குகள் அழித்தல்), குறித்தும், காட்டெரிப்பு வேளாண்மை முறை (தாவரங்கள் அழித்தல்) குறித்தும் பல்வேறு பதிவுகள் காணக்கிடைக்கின்றன. அதில் குறிஞ்சி நிலமே முன்னின்று செயல்பட்டது. குறிஞ்சிநில மலைகளிலுள்ள காடுகளை அழித்து அவ்விடத்தில் புனங்களை உருவாக்கியதை,

    “யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
     கரும்பு மருள் முதல பைந்தாட் செந்தினை
    மடப்பிடித் தடக்கை அன்ன பால்வார்ப்பு”  (குறுந்.குறி.198:1-3) 

    “இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
     கருங் காற் செந் தினை கடியுமுண்டன”
    (நற்.குறி.122:1-2) 

    “மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
     துளி பதம் பெற்ற கான்உழு குறவர்
     சில வித்து அகல இட்டென பல விளைந்து” (நற்.குறி.209:1-3) 

    கூறுகிறது. இங்கு மலைகளிலுள்ள யாமரங்களை வெட்டியளித்து அவ்விடத்தில் மழைநீர் தங்கி இருக்கும் பொருட்டு நிலத்தை அகலமாக அமைத்து உழுது கரும்பு போன்ற அடிப்பகுதிகளையுடைய தினையினை விதைத்து வளர்த்துள்ளனர். குறவர்கள் மரங்களை வெட்டி அழித்ததுடன் அப்புனத்தை களைக்கொட்டினால் நன்றாகக் கிளறி கருந்தினைகளை விதைத்துள்ளனர். இதனை,

    “மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
     பிறங்கு குரல் இறடி காக்கும் புறம்” (குறுந்.குறி.214:1-2) 

          இங்கு கானவர்கள் தினைப்புனங்களை அழித்துத் தினைக்காடுகளை உருவாக்குவதற்கு ‘துளா’; எனும் இரும்பாலான கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். பாரியின் மலைநாட்டிலும் வேங்கை மரங்களுக்கிடையே இருந்த மேடுகளை மழைபெய்யும் காலத்தில் நன்றாக கலப்பையில் பொருத்தப்பட்ட பூழி மழுங்குமளவிற்கு நன்றாக உழுதுத் தினை விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.

    “வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
     கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
     பூழி மயங்கப் பல உழுது” (புறம்.120:1-3) 

          முல்லை நிலத்தில் கார்காலத்தில் பெய்த மழையால் செம்மண் நிலம் ஈரம் மிகுந்து காணப்பட்டது. அதில் வினைஞர் (கொல்லை உழவர்) ஏரின் உதவியால் செம்மண் நிலத்தை உழுது அதில் வரகினை விதைத்தனர்.

    “பேர்உறை தலைஇய பெரும்புலர் வைகறை
     ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
     புறம்மாறு பெற்ற பூவல் ஈரத்து
     ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
     வித்திய மருங்கின் விதைபல நாறி” (அகம்.முல்.194:1-5) 

    இவ்வாறு செய்த விவசாயத்திலிருந்து படிப்படியாக மாறி மருத நிலத்தில் நிலமும் சமதளப்பரப்புடன் திகழ்ந்ததால் உழவர்கள் தொடர் விவசாயம் மேற்கொண்டனர். நெல்லறுத்து நீக்கப்பெற்ற வயலில் மீண்டும் ஏர்கொண்டு உழுது அதில் விதைகளை விதைத்து விவசாயம் மேற்கொண்டனர்.

    “அரிகால் மாறிய அம்கண் அகல் வயல்
     மறு கால் உழுத ஈரச் செறுவின்
     வித்தொடு சென்ற வட்டி பற்பல” (நற்.மரு.210:1-3) 

          மருத நிலத்தில் நிலத்தை அழிவுக்குள்ளாக்கும் முனைப்பில் உழவர்கள் செயல்படவில்லை. மாறாக நிலத்தில் தொடர் விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணப்போக்கினையே கொண்டிருந்தது தெரிய வருகிறது. ஒரு வகையில் மனிதர்கள் நிலங்களைத் தன்வயப்படுத்தி உழுது செய்த விவசாயம் போன்று உழாமலேயும் விவசாயம் செய்துள்ளனர்.

          மலைகளில் கார்காலத்தில் பெய்யும் மழையால் காந்தள் செடிகள் கிழங்கு உருப்பெறுமளவிற்கு வளர்ந்து நிற்கும். அதனை பன்றிகள் தன்னினத்துடன் சேர்ந்து சென்று தன்னுடைய கூர்மையான மூக்கினால் நன்றாக கிளறி அதன் கிழங்குகளை உண்டு செல்லும். அவ்விடத்தில் குறவர்கள் உழாமலே சிறுதினைகளை விதைத்து விவசாயம் மேற்கொண்டனர்.

    “கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தட்
     கொழுங் கிழங்கு மிளரக் கிண்டி கிளையொடு
    கடுங் கண் கேழல் உழுத பூழி
    நல் நாள் வரு பதம் நோக்கி குறவர்
    உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறு தினை” (புறம்.168:2;-5) 

    குறவர்கள் செய்த தினை விவசாயம்போன்று பெருங்கடலில் சென்று தனது வாழ்க்கையை நிகழ்த்தக்கூடிய பரதவர்களும் பெரிய உப்பங்கழிகளின் வயலில் உப்பை விளைவிக்காமல் வெண்ணிறக் கல் உப்பினை உழாமலே விளைவிக்கவும் செய்துள்ளனர்.

    “பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
    இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
    வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி” (அகம்.நெய்.140:1-3). 

          இங்கு நிலத்தின் தன்மை மலையாக இல்லாமல் கடல்புறமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறவர்கள் செய்த உழாத சிறுதினை விவசாயத்தைக் கருத்தில் கொண்டே பரதவர்கள் கடல் நீரினைப் பாத்திகட்டி உப்பு விளைவிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்க வேண்டும். இங்கு இரு பண்பாட்டிற்கான தொழில், தொழில் பொருட்கள் (குறிஞ்சி – தினை, சிறுதினை – நெய்தல் – உப்பு) வௌவ்வேறாக இருப்பினும் மக்களுக்குள் ஓர் ஒத்திசைவு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

    குடிபெயர்வு

          ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பூர்வக் குடிகளைத் தவிர மற்ற மக்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லை. மாற்று இடங்களை நோக்கிக் குடிபெயரவும் செய்துள்ளனர். இக்குடிபெயர்வு தொழிலுக்காக நிகழ்ந்துள்ளது. உணவுக்காக இருந்துள்ளது. பூர்வக்குடிகளின் தாட்டிமை தொடர்நிகழ்வாக இருக்கும்போது இடம்பெயர்வுகான தன்மையாகவும் இருந்துள்ளது. பாலைநிலம் இயல்பாகவே வறண்டு காணப்படும். அங்கு வாழக்கூடிய மறவர்களின் தொழில் வழிப்பறி,  ஆட்கொலை,  உடைமைப்பொருட்களை கவர்தல் போன்றவே. அத்தகைய நிலையில் வழிச்செல்வோர் மறவர்களின் வழிப்பறிக்குப் பயந்தும் நிலத்தின் கொடும் வேனிலுக்குப் பயந்தும் மாற்று இடங்களைத் தேடி குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.

    “ஆறுகொல் வம்பலர் தொலைய மாறுநின்று
     கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்”
    (குறுந்.பாலை.331:2-3)

    “கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
     இடுமுடை மருங்கில்
    போரிய முது பாறு
    இறகு புடைத்து இற்ற பறைப் புள் தூவி
    சேங்கனைச் செறிந்த வன்கண் ஆடவர்” (நற்.பாலை.229:2-6, 352:1-2) 

          அதே போன்று பாண்குடிகளின் வாழ்வும் நாடோடி வாழ்வாக தொடர்ந்திருந்தது. இவ்வாழ்வு உணவிற்காகவும், அரசர்கள் வழிப்படுத்துவதற்காகவுமே இருந்தன. பாண் குடிகளின் வாழ்வு வாழ்க்கையின் காலகட்டத்தைப் பார்க்கும்போது அரசு உருவாக்கம் நிலவிய காலமாக மாறியுள்ளது. இனக்குழு வாழ்வு அழிந்து அரசுடைமையாக்கத்திற்கு மாறிய வாழ்வாக தென்படுகிறது. இங்கு நிலத்தின் ஆளுமை அனைத்தும் பெருமன்னர்கள்,  குறுநில மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டு இருந்து வந்தது. இங்கு நிலம் ஒரே மன்னரின் கீழ் நிரந்தரப்பட்டிருக்கவில்லை. தொடர்மாற்றமாக இருந்துள்ளது. இதனால் மன்னர்கள் மக்களை வழிப்படுத்துவதுடன் அவர்களைத் தன்னுடைய கட்டுபாட்டிற்குள் அடக்கும் நிலைக்கும் மாறிவிடுகின்றனர். அத்தோடு உயிர்க் காரணிகளை அழிக்கும் தன்மைக்கு மாறியவர்களாக மாறவும் செய்துள்ளனர்.

    உயிர்க்காரணிகளை அழிப்பவைகளை கிப்போ ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.

    1. வாழிடம் அழித்தல் (H – Habitat destruction)
    2. அறிமுகப்படுத்தும் சிற்றினங்கள் (I – Invasive Species)
    3. மாசுபாடு (P – Pollution)
    4. மனித மக்கள்தொகை அதிகரிப்பு (P – Human over Population)
    5. அதிகமான அறுவடை (O – Over harvesting)

    என்று கூறுகிறார். மேற்கண்ட ஐந்து கருத்தாக்கங்களும் மருத நிலத்திற்குப் பொருந்தியுள்ளது. அகவாழ்விலிருந்து புறவாழ்க்கைக்கு (தொல்காப்பிய நிலையில் புறத்திணைக்கு) மாறிய வாழ்வில் இவை ஐந்தும் வெளிப்பட்டு நிற்கிறது.

          அகத்திணைகளைத் திணை வாழ்க்கையாக உருவகித்துக்கொண்டுள்ள நாம் அதற்கு மாறாகப் புறத்திணை வாழ்க்கையை வீரநிலை வாழ்க்கையாக மாற்றமுறச் செய்து கொண்டுள்ளோம். இதில் நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு, கவர்தல், மீட்டல்,  படையெடுத்தல்,  கைக்கொள்ளுதல் என நகரும் சூழலில் அரசுருவாக்கத்தில் உருவாகிய கோட்டைக் கொத்தளங்கள்,  காவல் மரங்கள்,  அடக்குமுறை,  வெற்றிசூடல் ஆகியன தொடர்ந்து நிகழ்ந்தன. இதில் காவல் மரங்கள், தெய்வம் குடிகொள் இடங்கள், அரண்மனைகள் அழிவுக்குள்ளாகின. அடக்குதல், கவர்தல்,  அழிவுறுதல் என்ற சூழலில் நகர்ந்து வந்துள்ளது.

    அகம் புறம் உட்பிரிவுகள் கொண்டு பார்க்கும்போது வெளிப்படுவனவாக உள்ளவைகள்:

    கைக்கிளை  – பாடாண்  – கடவுள் பரவல்:  தெய்வக்காதல்,  வருணனை, தெய்வ  மனிதக் காதல், இளம் பருவக்காதல், பாசம், குடும்ப வருணனை,  தலைவன் துதி, ஆற்றுப்படை,  வேள்விப்பாடல்கள், கடவுள்அருள் கூறி வாழ்த்தல்,  அரசனிடம் மயங்கிய மகளிர் பாடல், பள்ளியெழுச்சிப்பாடல்,  அரசரின் நீராடல், பரிசு ஏற்றல், சகுன – நிமித்தங்கள்.

    முல்லை   – வஞ்சி    – ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர்:  படையின் ஆரவாரம், தீயிடல், வீரப் பெருமை, ஈகை, பகை, அழிப்பு, பரிசுபெறல், தனியொருவன் படைபொருதல்,  பெருஞ்சோற்று விழா, வென்றோன் புகழ், தோற்றோன் அழிவு, வெற்றிப் பாடல்,  காயம்பட்டோருக்கு உதவி.

    குறிஞ்சி – வெட்சி – ஆநிரை கவர்தல்:     வீரக் குடும்பப் பெருமை கூறல், கொற்றவை வணக்கம், வெறியாடல், அடையாளப் பூ வேம்பு, பனை, ஆத்தி சூடல், வள்ளிக்கூத்து, நிமித்தம் காணல்,  பகைவரை ஓட்டல், ஆமீட்டல், சூளுரை, படையை எதிர்த்தல், வாள்போரில் மரணம், வீரசொர்க்கம், நடுகல்

    பாலை – வாகை -திறன்/ஆற்றல் புகழ்தல்: நடுகல் வரவேற்பு, நடுகல் நீராடல், கல்நடல்,  கல் வழிபாடு, வீரனைக் கல்லில் ஏற்றல் – போர்ப்படை பாசறை, களவழிப் பாட்டு, குரவைக் கூத்து, வேலின் புகழ், வீரத்தியாகம், உடன்படிக்கை,  புகழ்பாடல்,  அரியணை ஏற்றம்,  அவையோர் பாராட்டு, ஈகைக் குணம், மன்னிப்பளித்தல்,  ஒழுக்க மரபு படியாக வாழ்தல்,  செல்வ வளம் மிக்க வாழ்வு, காமம் கைவிடல்,  பிராமண அரச வணிக ஒழுக்கங்கள்,  பணிகள்,  அறிவுத்தேட்டம்,  தவமியற்றல்,  வீரமியற்றல்.

    மருதம் – உழிஞை – மதில்முற்றுகை/ கைப்பற்றுதல்:   ஆக்கிரமிப்பைத் தீர்மானித்தல், படைவகுப்பு, மதில் முற்றுகை, தனியொருவனாகிப் பகையுடன் மோதல், நல்ல புறப்பாடு, மதிலில் ஏணி வைத்து ஏறுதல், மதில் கைப்பற்றுதல், மதிலின் அகத்து இருந்த மன்னன் வீழ்ச்சி, வெளியே இருந்தவனின் தோல்வி, கிடங்குப்போர்,  தெருப்போர், வெற்றி நீராடல்,  தோற்றோர் குல அழிவு.

    நெய்தல் – தும்பை – பகை அழிப்பு தலையில்லா உடலின் துள்ளல்: படைமோதல், யானைப்போர், குதிரைப்போர், பகைவர் அழிப்பு, இருவரும் இறத்தல், படை ஓட்டம்/ புறமுதுகிடல், மற்போர், வெற்றி நடனம், வீரமரணம், பாய்ந்துசென்று பகைவனைத் தாக்குதல்.

    பெருந்திணை – காஞ்சி – உலக நிலையாமை கூறல்:   காலனின் தண்டனை, நல்வழிபடுத்தல், காயவைத்துப் பிளந்து பெருக்கி இறத்தல்,  காயம்பட்ட வீரனைப் பேய்கள் சூழ்ந்து காத்தல், வீரனைப் புகழ்ந்து வருந்திப்பாடல்,  உறுதிமொழி,  பிணம் காத்தல்,  கணவனுடன் மனைவியும் இறத்தல்.

    முடிவுகள்

          அகம் மற்றும் புறவாழ்க்கை நிலையை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இயங்கி வந்த தமிழ்ச் சமூகம் இன்றைய நிலையில் ஐவகை நிலங்களைக் கடந்து நகரம் நகரம் சார்ந்த வாழ்வாக மாற்றம் பெற்றுவருகிறது. இதனால் பூகோளத்திலுள்ள இயற்கை வாழிடங்கள் அனைத்தும் அழிவுக்குள்ளாவதுடன், நீர்நிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, புதிய இருப்பிடங்கள் உருப்பெறுகின்றன. மேலும், விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு மொத்தமாகவும், தவணை முறையில் நில மனைகள் உருவாகி வருகின்றன. அத்தோடு விலங்குகள் உலாவி வந்த மலை, காடு சார்ந்த இடங்கள் அனைத்தும் வழித்தடங்களாக மாறுவதுடன், அவை மனித இருப்பிடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உயிர்ப் பாதுகாப்பு இல்லாநிலை ஏற்படுகிறது. இதில் அதிகம் விலங்குகளே அழிவுக்குள்ளாகிறது. இயற்கையின் தட்பவெப்ப மாற்றமும் தொடர்ந்து மாறிப் பருவமழை, காலமாற்றம் எனத் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.

    பார்வை நூல்கள்:

    1. பக்தவத்சல பாரதி – தமிழகப் பழங்குடிகள்
    2. ரா. மூர்த்தி – பயன்பாட்டுப் பார்வையில் தமிழகம் (கட்டுரை)
    3. ஐயப்பப் பணிக்கர் – இந்தியக் கோட்பாடுகள் சூழல் பொருத்தம்

    ****

    –ரா. மூர்த்தி
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் -641046
    ramvini2009@gmail.com

     

     

    Share
  • எழுவகைப் பெண்கள்- 11

    அவ்வை மகள்

    பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து

    மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின்  கருத்து என்ன என்று சொல்வதாகச்  சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிகாரி தொடர்ந்து வினவினார்  –  என் உரையாடல் தொடர்ந்தது.

    பெண்ணின் மூலாதாரத்தில் வெப்பம் உருவாகிறது என்றும் அந்தக் கனலின் உஷ்ணத்தை, பெண்ணின் பலவேறு உறுப்புக்களில் காணமுடிகிறது என்றும் பார்த்தோம் அல்லவா?.  பெண்ணின் பல்வேறு  உறுப்புக்களில் உஷ்ணம் எதிரொளித்ததாலும், மூலாதாரத்தில் உஷ்ணம்  தேங்கி – அங்கேயே தங்கி – செறிவடைகிறதான உடலியல் பெண்ணினுடையது. ஏனெனில் பெண்ணானவள், சிருஷ்டி கர்த்தாவானதால், எந்நேரமும் படைப்புப் பணிக்குத்தேவையான வெப்ப ஆற்றலோடு அவள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதே அவளுக்கு இடப்பட்டிருக்கிற இயற்கைப் பணி.

    ஆனால், இந்தக் கனலை மூலாதாரத்திலேயே தங்கவிட்டால் – தொங்கவிட்டால்- தூங்கவிட்டால் – பலப்பல விளைவுகள் எழும்:

    1. பெண்ணுக்கு, புற உடலுறுப்புக்களில் இருக்கவேண்டிய உஷ்ணம் குறைந்துவிடும் – இதனால் அவளது உடலியக்கத்தில் அவளுக்கு களைப்பும் அசதியும் ஏற்படும்.
    2. பெண்ணுக்கு அடிவயிற்றில் உஷ்ணம் அதிகரித்து அதனால் அதிக கோபம், ஆத்திரம், கடுமையான பேச்சு ஆகியன எழும் – அல்லது கடும் தலை வலி – தலைச்  சுற்றல் ஏற்படும்.
    3. பெண்ணுக்கு மலச்சிக்கல்,  நீர்க்கடுப்பு, ஆகியன ஏற்படும்.
    4. அவளுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படும்.
    5. அவளது உணர்வலைகள் தாறுமாறாக இருக்கும்.
    6. வெள்ளை படும்.
    7. பெண்ணின் மறையுறுப்பில் அரிப்பு ஏற்படும் – கொப்புளங்கள் உண்டாகும்.
    8. அவளுக்கு ஜீரணக்  கோளாறுகள் ஏற்படும்.
    9. அவளது வயிறு உப்பும் – அல்லது கடும் வலி காணும்.
    10. தலைமுடி கொட்டும், பொடுகு வளரும்.
    11. தோல் வறட்சி ஏற்படும்.
    12. பாத வெடிப்புக்கள் உண்டாகும்.
    13. உடலின் முப்பெரும் உறுப்புக்களான – கல்லீரல் (பித்தகம்), நுரையீரல் (கபமகம்), மற்றும் பெருங்குடல் (வாய்வகம்) ஆகியன பாதிக்கப்படும். இதனால் பெண்ணுக்கு ஏப்பமும் குதவழி வாயு வெளியேற்றமும் அதிகம் ஏற்படும். மூக்கடைப்பு – தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும் – அதிகப் பசி உணர்ச்சி ஏற்படும். எவ்வளவு நீர்ப் பருகினாலும் கூட – உடலில் நீர்ச் சத்து காணாமல் போகும் – தோல்  வறண்டே இருக்கும் – குறிப்பாகக் கால் பாதங்கள் வெகுவில் களைப்படையும் – பாத மேல்  தோல்  சாம்பல் பூச்சோடு – வறண்டு உலரும்.
    14. உடல் நிமிர்ந்து நிற்கமுடியாமல் முதுகெலும்பு  வளையும்.
    15. வாய்- உதடுகள் – நாசித்துவாரங்கள் – முகத்தோல் ஆகியன வறண்டு போகும்.
    16. கழுத்தும் தோளும் பொலிவிழந்து நோகும்.
    17. சிறிய பிரச்சினைகளையும் கண்டு மிரளுவாள் – பயப்படுவாள், பிறருடன் பழக முனைய மாட்டாள், பிடிவாதம் மிகும்.

    மொத்தத்தில் ஓரு  பெண், எரிச்சல் உணர்ச்சியோடு – தலைபாரத்தோடு, உடல் – உள  அவதியோடு உங்களுடன் வசிப்பாள். அவளை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் – தகாத வார்த்தைகள்  பேசி அவளை  வைவீர்கள் – அல்லது கொடிய, இழிய  வார்த்தைகளால் அவளை வருணிப்பீர்கள். அவளுக்கு வேண்டியன செய்யாமல்  அவளைப் புறக்கணிப்பீர்கள்-கொடுமை செய்வீர்கள். அவளை ஒதுக்கிவிட்டு வேறு பெண்துணையைக் கூடத் தேடப் போவீர்கள். ஏனென்றால் பொதுவாகவே பெண் என்றால் அவளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் – நடத்தலாம் -என்பது இங்கே வாடிக்கை.”

    “Yes. Yes. Yes!!! – you are absolutely correct! We men really do not get to understand females at all! As you said, we take them for granted! I think this is mostly the problem of the western culture” என்றார்.

    “சரியாகச் சொன்னீர்கள் பெண்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சையாகக் கையாளும் போக்கு  ஆண்களுக்கு கைவந்த கலை. சொல்லப்போனால், ஆண்களின் இந்தப் போக்கு எல்லாக் கலாச்சாரங்களிலும் எல்லாக்  கால காலக்கட்டத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் கலாச்சாரங்கள் இப்பிரச்சினையை எவ்வாறு கையாண்டான – இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு கண்டன என்பதிலேதான் கலாச்சாரங்களின் உயர்வும் தாழ்வும் அமைகிறது. கிழக்கத்திய கலாச்சாரங்களில் பல  ஒற்றுமைகள் இருக்கின்றன தான் என்றாலும் என்றாலும் எங்கள் தமிழ்ச்சமுதாயம் பெண்களின் முக்கியத்துவத்தை  உணர்ந்த அளவிற்கும் – அவர்களை அரவணைத்துக்  காத்த அளவிற்கும் ஈடு இணை இல்லையென்றே  சொல்லமுடியும். பெண்களை மையமாகவைத்தே அவர்கள் எங்கள் தமிழ்ச் சமுதாயத்தைக் கட்டமைத்தார்கள் என்றால் அவர்களது பெண்மைப் போற்றுதலை நீங்களே புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் நீங்கள் சொல்லியது போல, மேற்கத்திய கலாச்சாரம் ஆழ்ந்த ஷரத்துக்கள் இல்லாத துர்ப்பாக்கிய நிலை உடையது  என்பது உண்மையே. அதனிடம் ஒன்றும் இல்லை என்ற நிலை இருப்பினும் பல்வேறு  காரணங்களால் அது விரவிப்பரவுகிறது ஒரு தொற்று நோயைப்போல.  ஆரோக்கியமான கலாச்சாரங்களில் இருக்கிற பலரை அது பீடித்து – அவர்களைத் தன் வசப்படுத்தி – அவர்களின் பாரம்பரிய செல்வங்களை கபளீகரம் செய்கிறது – அவர்களின்  கண்களை மறைக்கிறது – அவர்களின் மூளையை  மழுங்கச்செய்கிறது.

    எங்களைப் பொறுத்தவரை – நாங்கள் வேண்டியும் – வேண்டாமலும் – எமக்குள் நுழைந்த மேற்கத்திய கலாச்சாரம் – இந்த இருநிலைகளிலும் எங்கள்  கலாச்சாரத்தை மூடுதிரைபோட்டு மூடிவிட்டிருக்கிறது.  மாணிக்கம் போன்ற  எங்கள் கலாச்சாரத்தின் மீது தூசி படிந்து மணியின் ஒளி குறைந்திருக்கிறது –  இத்திரையை விலக்கி – மாசு களைந்து – தூசி துடைத்து – எங்கள்  மணி ஒளியை மீண்டும் எமக்கும் உலகிற்கும்  வழங்க நாங்கள் முனைந்தாக வேண்டும். அந்த உணர்வை எனக்குள் மீண்டும் நான் உணர உங்கள் வாசகம் உதவியது. மிக்க நன்றி.” என்று தொடர்ந்தேன்.

    “சொல்லப்போனால், நாம் பேசிவரும்  அவ்வை எனும் இந்தப் பெண், பொல்லாத  ஆண் உலகில் படாத பாடுபட்டவள் தான். இன்று நாம் “professional women” என்று சொல்லக்கூடிய பணியிடப் பெண்களுக்கான பிரச்சினைகளைப்  பற்றிப்    பேசி வருகிற  இந்தத் தருணத்தில் அவ்வையின் பணியிடப் பிரச்சினைகளையும் கூடக்  கருத்தில் கொள்ள வேண்டும்.  அந்நாளில் மன்னராட்சியில் –  புலவராக, எழுத்தாளராக, Governance எனப்படும் அரசாட்சி நுணுக்கங்களில் விற்பன்னராக – அரசவையில் மன்னருக்கு ஆலோசகராக, மக்கள் தொடர்பு மிகக் கொண்ட மக்கள் பிரதிநிதியாக, சமயத் தலைவராக, இறை அன்னையாக,  மாதர்குலத் திலகமாக இருந்திருக்கிற  மிக அசாதாரணமான பெண் அவ்வை. உலகின் எந்த கலாச்சாரத்திலும் அவ்வையைப் போன்ற ஒரு professional woman – பெண் அதிகாரியை – நீங்கள் காணமுடியாது.  பன்முக ஆற்றலும் பரிமாணமும், சொல் வன்மையும், கடப்பாடும், கட்டுப்பாடும், இறை சிந்தனையும்  கொண்டு விளங்கிய பெண் அவ்வை. மனித குலத்துக்கு மாதர்களின் மேன்மையை அறிவிக்கும் விநாயகர் அகவல் என்கிற புனித நூலை இயற்றி அவள் மனித குலத்துக்கு ஒப்பற்ற சேவை சேவை செய்திருக்கிறாள். இது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியாகவேண்டும்.

    சொல்லப்போனால்  இந்திய கலாச்சாரத்தில், கணபதி என்னும் கடவுள், பெண்ணின் உடலின் உயர் இலக்கணங்களை – அவளது உடலில் பொதிந்திருக்கும்  ஒப்பற்ற இறைமையின் அடையாளங்களைக் காட்டுமுகமாக உலகிற்குத் தோற்றம் அளித்தவரே.

    அத்தகைய கணபதி எனும் விநாயகக் கடவுள் காட்டும் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் பொதித்து, அவள் – இவ்விநாயகர் அகவலை ஓதுகிறாள் –  அந்நிலையில், அவளது மனித குல சேவையைப் பாராட்டியவாறு அருள்பாலித்து கடவுள்அவளைத் தன்னுடன் ஐக்கியமாக்கி அவளுக்கு இறைபதவி அளிக்கிறான் என்பது வரலாறு.

    அவ்வை எனும் ஒரு professional woman, பெண்களுக்கான முழுமையான வேதமாக விநாயகர் அகவலை ஆக்கிப் படைத்திருக்கிறாள்  என்பதை நாம் உற்று நோக்கவேண்டும். எவரும் பேசத் தயங்கும் அல்லது கொச்சைப்படுத்தி இழிவு செய்யும் ஒரு முக்கியமான சமாச்சாரத்தை, professional woman என்ற வகையிலும், சாதாரணப்பெண் என்ற வகையிலும் இரு நிலைகளில் நின்று, அவ்வை ஆய்ந்து எழுதியிருப்பது விநாயகர் அகவல். பெண்கள் பிரச்சினைகளை அவள் எத்தனை அகலம் சென்று – எத்தனை ஆழம் சென்று  புரிந்துகொண்டிருந்தாள் என்பதைக்  காட்ட இந்த  விநாயகர் அகவல் ஒன்றே போதும்   இது ஒரு அசாத்தியமான படைப்பு. விநாயகர் அகவலின் ஒவ்வொரு சொல்லும் ஒரு காவியம். professional woman என்கிற வகையில் விஞ்ஞானியாக என் முப்பதாண்டு காலப்  பணி  அனுபவம், பன்னாட்டுதொடர்பு,  அரசுப்பணி, எழுத்துப் பணி,  பதிப்புப் பணி  என அடிமட்ட அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு சிறு வாழ்வியல் அனுபவத்தில் அவ்வையின் முழுப் பரிமாணங்களையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. அவ்வை என்பவள் இலக்கியவாதி மட்டுமல்ல, மருத்துவத்தில் தலை சிறந்தவளாக, வர்ம மருத்துவக்கலையில் ஒப்பற்ற  நிபுணராக,  மிகப்பெரிய பெண் யோகியாக, பெண்ணின் உடலியல் பற்றிய ஞானங்களில் தலைசிறந்த ரிஷியாக, மக்களோடு மக்களாய் வாழ்ந்து அவர்களுக்குச்  சேவை செய்த மனிதகுல முழுமருத்துவராய் என்னால் அவ்வையைப் பார்க்க முடிகிறது. அந்நாளில் எங்கள் ஊரில் பெண் மருத்துவச்சிகள் இருப்பார்களாம். வீட்டுக்கு வீடு சென்று பிரசவம் பார்ப்பதும் பிள்ளை பேணுவதும் அவர்களது சேவைப் பணியாம். அவ்வை ஒரு மருத்துவச்சியாக இருந்திருக்க வேண்டும். எண்ணற்ற பிரசவங்களை அவள் பார்த்திருக்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    நான் ஏற்கனவே சொன்னது போல, விநாயகர் அகவல் என்பது  முழுக்க முழுக்க ஒரு பெண் மருத்துவ உடலியல் விளக்கம்.  தேர்ந்தெடுத்த – மிகப்பொறுப்பான – மிகப்பொருத்தமான வாசகங்களை மிக எச்சரிக்கையுடன் – மிக நுணுக்கமாக அவ்வை, தனது  விநாயகர் அகவலில்  கையாண்டிருக்கிறாள். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்கிறபடியாய், “சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து” என அவள் இங்கே ஒவ்வொரு சொல்லையும் வெகு நேர்த்தியாக உபயோகிக்கிறாள். எழுத்துலகில், விநாயகர் அகவல் ஒரு இலக்கிய விருந்து என்றால், மருத்துவ உலகில், இது ஒரு மாபெரும் Source Book என்பேன். மருத்துவ பரிபாஷையில் விநாயகர் அகவலை விளக்கப் புகுந்தால் பல மருத்துவ நூற் தொகுப்புக்களை நம்மால் வெளிக்கொணர முடியும். நவீன மருத்துவக்  கல்வியில் விநாயகர் அகவலை இணைக்கும் ஒரு காலம் கனியுமெனில் அது இவ்வுலகின் ஒரு மிகப்பெரிய பொற்காலமாகும்.

    குறிப்பாக, மூலாதாரக்கனல் பற்றி அவ்வை சொல்லியிருப்பது மருத்துவ உலகில் ஆணித்தரமான ஞானக்கருவூலம். உலகில் இதுகாறும் வெளிவந்திருக்கிற எந்த நவீன மருத்துவ அறிவியல் வெளியீடும் வெளிக்கொணர்ந்திராத  அசைக்கவியலாப் பேருண்மைகளை அவ்வை  ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து’ என ஒற்றை  வாசகத்தில் சேர்த்தளிக்கிறாள்” என்றேன்.

    “மூலாதாரத்தில் உண்டாகும் உஷ்ணம்  என்பது எத்தனைப் பெரிய  விஷயம்!  இது தெரியாமல் ஐம்பது வருஷங்களாய் வீண் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேனே!” என்று அவர் தன்னை நொந்து  கொண்டார்.

    “எங்கள் ஆடவர்களில் பலருக்கும் – ஏன் எங்களின் பல   பெண்களுக்கும் – உலகின் எண்ணறிந்த பெண்களுக்கும் கூட  இதே நிலைதான். அவர்களுக்கும் சேர்த்துதான் இந்த விளக்கம் – கவலைப் படாதீர்கள்- அறியாமை விலகிட  வேண்டுமெனில் அறிவுக்கண்களை நாம் நாம் திறக்க வேண்டுமல்லவா!” என்று நான் தொடர்ந்தேன்.

    முதலில் மூலாதாரக்கனலின் இருவேறு நிலைகளைக் காணவேண்டும் – ஒன்று: மூலாதாரத்தில் மூளும் கனல் சரியாக, முழுமையாகக் கனியாமல்  இருக்கும் நிலை; இரண்டு: மூலாதாரக்கனல் நன்கு  கனன்று அங்கேயே செறியும் நிலை ஆகியன.

    இந்த இரு நிலைகளிலும் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை நன்கு அக்கினியாக்கி அதனை ஜ்வாலையுடன் ஒளிறும்படியாய் கனற்றி, அதனை அங்கிருந்து எழுப்பி, அவ்வெப்பத்தைப் பெண்ணின்  உடல் முழுதும் பரப்பி – உடலுக்குத் தேவையானது போக உள்ள மிச்சத்தை உடலினின்று  விட்டு வெளியேறச் செய்ய வேண்டும். இது ஒன்று தான் பெண்ணை – சரியான அளவீடுடைய அப்பு எனப்படும் நெருப்புடன் காக்கும். முதலில் மூலாதார அங்கங்களின் அமைப்பை நாம் கீழ்வரும் படங்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.

    படம் 1 (இடது) முதுகெலும்பும் திருவெலும்பும் இணையும் பாங்கு https://www.studyblue.com/notes/note/n/antphy-181-study-guide-2012-13-torry-/deck/9726113 திரிவெலும்பின் காஸிக்ஸ்  எனப்படும் வால்  எலும்பு; ; நடு: காஸிக்ஸ் எனப்படும் திருவெலும்பின் நுனியின் பின்றத்தோற்றம் –  காஸிக்ஸ் முன்ன்புறமாக வளைகிறது (http://www.healthhype.com/broken-coccyx-causes-and-symptoms-2.html) . (வலது) காஸிக்ஸ் பின்புறம் வளைந்து பெரினியத்தின் உளதளத்தைத்  தாங்குகிறது  (http://i0.wp.com/exhaletomove.com/wp-content/uploads/2011/02/pelvicfloor1-11.jpg).   படங்களின் உதவிக்கு நன்றி; வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். THese pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

     

    படம் 2. (இடது) பின்புறம்  வளையும் காஸிக்ஸின் நுனியில் வெப்ப உற்பத்தி நிகழ்தலின் மாதிரிப் படம் ; (வலது) திருவெலும்பில் உஷ்ணம் செறிதலின் மாதிரிப் படம்  . http://www.iatropedia.gr/ygeia/ponos-stin-oura-eties-ke-tropi-anakoufisis/41465/. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படம் 3. திருவெலும்பு யானையின் முகத்தோற்றம் போன்ற வடிவும், நான்கு ஜோடி  தோள்களும்  (shoulders) ஐந்து கரங்களும் (limbs)  உடையது. படத்திற்கு நனறி: http://www.healthhype.com/sacrum-and-coccyx-tailbone-of-the-spine-anatomy-and-pictures.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படம் 4. பெரினியத்தின் உட்புறத்தோற்றங்கள்.  http://www.sspphysio.com.au/coccyx-pain.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

                                           

    படம் 5. (இடது) முதுகெலும்பு வில் போன்ற தோற்றம் கொண்டது  http://www.urgentcarefl.com/bruised-tailbone-see-doctor-pain-falling/. முதுகெலும்பின் நரம்புகள்  ஜோடி ஜோடியாய்ப்  பிரிகின்ற்னhttp://www.urgentcarefl.com/bruised-tailbone-see-doctor-pain-falling/. முதுகெலும்பின்  தொடர்ச்சியாக வரும்  திருவெலும்பின் கடைக்கோடியில் முன்னோக்கி வளைந்தபடி அமையும் வால்  எலும்பு எனப்படும் காஸிக்ஸிலிருந்து ஒரு ஜோடி நரம்புகள் பிரிகின்றன. காஸிக்ஸின் அமைப்பு பாம்பின் பல்லைப்  போன்றும்  அதனிலிருந்து பிரியும் ஒரு ஜோடி நரம்பு தொங்கும் பாம்பின் பிளந்த நாக்கைப்போலவும் இருக்கும். திருவெலுப்பின் அமைப்பு யானையின் முகத்திப்போல இருப்பதைக் காண்க. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    படங்களின் மூலம் அமைப்பைப் புரிந்து கொண்ட நிலையில், மருத்துவ ரீதியாக, பொறியியல் ரீதியாக, பெண்ணின் உடலினைப் பார்க்க வேண்டும்.  உடலில், சிரசுக்கும் கால்களுக்கும் மத்தியில் இடையாக வருவது இடுப்பு. இடுப்பும் மார்புக்கூடும் என்றும் நேராக இணையாது. இரண்டும் அப்படியே தனித்தனியாய்க்  கிடைக்க  – இந்த இரண்டையும் ஒரு  கம்பிச்சுருள் பாலத்தால் இணைப்பது முதுகெலும்பு. முதுகெலும்பின் துவக்கம் சிரசின் பின்பகுதியான் முகுளம் – அதன் முடிவு இடுப்பெலும்பின் பின் மையத் தொக்கலான  திருவெலும்பு.  திருவெலும்பின் அமைப்பு வெகு நுட்பமானது என்றால்  திருவெலும்பின் நுனியானது  வெகு-வெகு நுண்ணிய நுட்ப வடிவ அமைப்பு கொண்டது.  இந்த நுனியை காஸிக்ஸ் என்பர். இந்த காஸிக்ஸில் தான் முதுகெலும்பின் நரம்புத் தொகுதியின் கடைசித் தொங்கு நரம்பிரட்டை முடிகிறது. இது அசப்பில் பார்க்க பாம்பின் நாவைப்போன்று இருக்கும்.

    இந்தத் திருவெலும்பானது   இடுப்புக்குள்  இருப்பது. இங்கே இடுங்கி ஒளிந்து கொண்டு இருப்பது தான் பெரினியம் எனும்  மூலாதார வாயிலும் அதனுள் உள்ளக் குழியும். குறிப்பாக, இடுப்புடன் கால்கள்  இரண்டும் வந்து இணையும் இடைச்சந்தியில் தான் இந்த பெரினியம் மிகப்பொருத்தமாக – மிக பத்திரமாகப்  பொருத்தப்பட்டிருக்கிறது. பெரினியம் முழுக்க முழுக்க திசுஇழைகளால்  ஆக்கப்பட்டிருக்கிறது (சேயிழையார் என்று பெண்கள் அழைக்கப்படுவது பெரினிய அமைப்பில்தான் என்று ஏற்கனவே பார்த்தோம்).

    பெரினிய அமைப்பை உற்றுக்கவனித்தால் நமக்கு ஒன்று புரியும். இரண்டு கால்களின் கடை முடிவுகள் இடுப்புடன் வந்து இணையும் இரு அடிப்பகுதிகளையும் ஒன்றாக தசைநார்களைக் கொண்டு இணைத்துத்  தைத்ததால் ஏற்பட்ட ஒரு   துருத்தியே பெரினியம் என்பது விளங்கும்.

     பெரினியத் தசை நார்கள் பிற உறுப்புக்களில் உள்ள தசைநார்களிலிருந்து வித்தியாசமானவை. மிக அதிக இழுப்பு விசைகொண்ட உறுதியான ரப்பர் நார்கள் இவை. உடலிலுள்ள பிற தசைநார்கள் குறித்த அளவே நீளும் ஆனால் பெரினிய தசைநார்களோ 10 மடங்கு அதிகம் நீளும். அது மட்டுமல்ல விரிந்தபின் மீண்டும் இயல்பாய் சுருங்கி பெட்டகம் போல் மடிந்து கொள்ளும். புடவைக்கு கொசுவம் வைப்பதைப்போல நுண்ணிய மடிப்புக்களில் டக்கென மடிந்து சுருங்கிக்கொள்ளும் தன்மையான இழைநார்கள் இவை. உற்றுப்பார்த்தால் இழைக்கோர்த்து நெய்தாற்போல் – உறுதியான தோலாலான மடல்களைப்போல அத்தனை நேர்த்தியாய் இந்த அமைப்பு இருக்கும். பெரினியத் தசைநார்களின் இன்னுமொரு சிறப்புப் பண்பு என்னவென்றால் எட்டு வெவேறு விதமான தசைநார்கள் ஒன்று சேர்ந்து பெரினியத்தை உருவாக்குகின்றன. மேலும். இது தசைநார்களில் கொழுப்புச் சத்தும் மிகுந்திருக்கிறது – தோல் போன்ற தடிமன் குறைந்த மெலிதான தன்மையும் மீள்விசையும் இந்தக் கொழுப்புச் சத்தால் வருவனவே.

    Inline image 1

    படம் 6. பெரினியத்தை இணைந்து உருவாகும் வலுவான தசைநார் இழைமடல்களின் மாதிரி. இந்த இழைமடல்கள் மிகுந்த இழுப்பு விசையும் மீள் வீசையும் கொண்டவை. http://www.buyamag.com/pelvis_model.php. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன. இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    பெரினியத்தின் ஒட்டுமொத்த வடிவம் அகலின் தீபம் போல் இருக்கும். அகல் விளக்கும் கூட பெண்ணின் பெரினியத்தின் அமைப்பையையும், அதனுள் எழும் அனலையும் குறிப்பிடவே உருவாக்கப்பட்டதாக ஐதீகம் உண்டு.

    இது நிற்க. பெரினியத்தைத் துருத்தியை ஒத்த ஒரு கருவி என்றோம். துருத்தி என்றால் அதற்கு சுருங்கி விரியும் வாய் உண்டு. பெரினியத்தின் பெண்ணுறுப்புத் துளை அளப்பரிய விரிந்து சுருங்கும் ஆற்றல் உடையது என்கிற விஷயம் நாமெல்லாம் அறிந்த ஒன்று தானே!- ஒரு குழந்தையின் தலை அந்தத்  துளையில் வழியே தானே வெளிவருகிறது! பிரசவமான  பின்பு சுருங்கி மீண்டும் சாதாரண இயல்பு நிலைக்குத் திரும்பும் அசாத்திய ஆற்றல் அதற்கு உண்டு அல்லவா?

    படம் 7. பிரசவத்தின் போது பெரினியத் தசை நார்கள் விரிய, உள்ளிருந்து வெளியே பிரவேசிக்கும் சிசு. http://sydney.edu.au/medicine/nepean/research/obstetrics/pelvic-floor-assessment/English/sydney%20pelvic%20floor%20body/After%20Birth/Anal%20Sphincter%20Muscle/Anal%20Sphincter%20Muscle%20html.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.

    இப்போது பொறியியலில் கவனம் செலுத்துவோம். கருவி எனும் வகையில், துருத்தி என்பது காற்றுக்  கருவி. கொல்லர்கள் பயன்படுத்துவது. சிறு அடுப்பில், இரும்பையும் கூடப் பழுக்கக் காய்ச்சும் அளவுக்கு உஷ்ணத்தை உருவாக்க துருத்தியைக்  கொல்லர்கள் பயன்படுத்துவார்கள். விரிந்து சுருங்கும் தோல் வாயும் – அவ்வாயை விரித்துச் சுருக்க இரு கால்களும் துருத்திக்கு உண்டு. துருத்தியில்   காலிரண்டும் இணைந்து ஒற்றைக் கண்மாயாயாக மாறி ஒரு துவாரத்தில் சென்று பொருந்தும். துருத்தியின் கால்களை அசைக்க, துருத்தி காற்றை உள்ளிழுத்து, அக்காற்றை, கண்மாயின் துவாரம் வழியே அடுப்புள் இருக்கும்  தணலில்  மீது குவித்து அத்தணலைக்  கனன்று எரியவைக்கும்.

    படம் 8. துருத்தி எனும் தோல் கருவியைபப்  பயன்படுத்தி அடுப்பில் உள்ள கனலை  கொழுந்துவிட்டு  எரியவைக்கும் காட்சி. http://warehamforgeblog.blogspot.com/2008_07_01_archive.html. வணிகமில்லாக் கல்வித் தொண்டிற்காக இப்படங்கள் அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.                 இவற்றை காப்பி செய்து  வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை. இப்படங்களின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்ற பின்பே இதனை எவரும் வெளியிடமுடியும். These pictures are protected by Copyright Law by the respective owners. These are used here with permission and acknowledgement purely for noncommercial educational purposes. Copying and using these pictures is prohibited by copyright laws.


    இவ்வகையில் விரிந்து சுருங்கும்  துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்கி, பெரினியக்குழியாம் அடுப்பைபோன்ற இடுப்புக்குழி எனும் அக்கினிக் குண்டத்தில் மூளும் நெருப்பை அங்கே தாங்காமல் எழுப்பி அவளது உடல் பூராவும் பரப்பும் வித்தையை எங்கள் தமிழ்ச்சமுதாயம் நடத்திக் காட்டியது” என்றேன்

    “ஒரு சந்தேகம்” என்றார். தொடர்ந்தார். “பெண்களுக்கு கால்கள் பலவீனமாயிற்றே – அவர்களால் இது எப்படி முடியும்? ஒரே குழப்பமாய் இருக்கிறதே” என்றார்.

    இதிலே குழம்ப ஏதுமில்லை. பிற கலாச்சாரங்களால் சாதிக்கமுடியாததைச் சாதித்தது எங்களுடைய கலாச்சாரம். எங்கள் பெண்கள் மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கலை தெரிந்தவர்கள். இந்தக் கலையை அவர்களது அனுதின வாழ்வாக்கி, அக்கலையை அவர்களது நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் இழைத்தும் குழைத்தும் நிறுத்தியது எங்கள் கலாச்சாரம். உலகின் வேறெந்த  சமுதாயமும் காணாத மாபெரும் வெற்றி இது என்றேன்.

    மேலும் பேசுவோம் .

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-24

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆராரெனத் தாலாட்டுகின்ற அரசே!

    வாழ்வின் மிகப்பெரிய அதிசயம் குழந்தைகள்தாம். ஒரு சிறுகுழந்தை நம்முடன் இருந்துவிட்டால் போதும், நேரம்போவதே தெரிவதில்லை. அதன் குறும்புகளும், மழலையும், விளையாட்டுகளும் சொல்லொணா இன்பத்தை வாரிவாரி வழங்க, அதனையெல்லாம் நாமும் மாந்திமாந்திக் களித்திருப்போம். எப்படி ஒவ்வொரு சிறுகுழந்தையும் ஒவ்வொருவிதமான அழகில் திகழ்கின்றதோ, அதே போன்று ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் புதுப்புதுக் கருத்துக்களில், நயத்தில், சொல்லாடலில் ஒளிர்கின்றது எனலாம். கீழே நாம் காணப்போகும் முருகப்பெருமான் மீதான பழனிப்பிள்ளைத்தமிழும் இவற்றுள் ஒன்றாகும்.

    *****

    amu

    நடைபழகக் கற்றுக் கொண்டுவிட்ட முருகன் எனும் சிறுகுழந்தையை, “வா ஐயா, வருக வருகவே!” எனத் தாயரும் செவிலியரும் அழைக்கும் அழகான காட்சி. பக்தியிலும் அன்பிலும் தோய்ந்து வெளிப்படும் ஆசைநிறைந்த சொற்கள்:

    “முருகையா, வளங்களும் நலங்களும் நிறைந்த இந்தப்பூவுலகில் தேவர்கள், அசுரர்கள் மற்ற எல்லோரும் தினந்தோறும் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கும் உந்தன் கொலுவைக் காணச் செல்லாதவர்கள் யார் உளர்? செல்லாதார் ஆர்?(எவரும் இல்லை எனப் பொருள் கொள்ள வேண்டும்)

    “காணிக்கையாக உந்தனுக்கு அரிய பொருட்களைத் தராதவர்கள் எவர் உளர்? தாராதார் ஆர்? (இல்லை)

    “உனது பாதங்களை வணங்கித் தொழவேண்டி அவற்றினைத் தழுவிக் கிடக்காதவர்கள் யார் தான் இல்லை? தழுவாதார் ஆர்?

    “உன்னைக்காண எப்போது சமயம் கிட்டுமோவென மனதில் எண்ணிக்கொண்டு வராதவர்கள் தான் யார்? வாராதார் ஆர்? ( யாருமில்லை; எல்லோரும் வந்துள்ளனர் எனப்பொருள்)

    “அடியார்களை என்றும் காத்தருளும் உனது தகைமையை வாழ்த்திப் புகழ்ந்து பரவித் துதிக்குமாறு தமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரும் உண்டோ? வசியாதார் ஆர்?

    “உனக்குண்டான பூசை முதலானவற்றை (வரிசைப்படி), முறைப்படி நடத்திவைக்க அனைவரும் காத்துக்கொண்டுள்ளனரே! வரிசைப்படியே நடத்தாதார் ஆர் உளர்?”

    இவ்வாறெல்லாம் ‘ஆரார்’- ஆர் ஆர்? யார் யார்? (எவர் எவர் எனப்பொருள் கொள்ள வேண்டும்) எனச் செவிலியர் கேட்டு, ‘ஆராரோ ஆரிரரோ’ எனப் பாடித் தொட்டிலில் இட்டு உன்னைத் தாலாட்டுகின்றனர். அவ்வாறு தாலாட்டப்படும் அரசே வருவாயாக! பழனிமலை எனும் சிவகிரியில் வாழும் ஐயனே வருக வருகவே!

    ‘ஆராரோ ஆரிராரோ’, என்பது அன்னையர் குழந்தைகளுக்கு வழக்கமாக இசைக்கும் தாலாட்டாகும். அதன் முக்கியச் சொல்லான ‘ஆரார்’ என்பதனையே பலவிதமான வினாக்களில் ‘யார் யார்?’ எனத்தொகுத்திசைத்திருப்பது மிக்க அருமையாக உள்ளது. பாடிக்கேட்போர் செவிக்கு இன்பமாகவும் உள்ளது.

    சீரார் நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்
    றினமு முனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்
    தாரா தாரா ருனது பதந் தனையே வணங்கித் தொழவேண்டித்
    தழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து
    வாரா தாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்
    வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்
    ஆரா ரெனத்தா லாட்டுகின்ற வரசே வருக வருகவே
    அருள்சேர் பழனிச் சிவகிரிவா ழையா வருக வருகவே.

    (பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

    திரு ஆவினன்குடி, சிவகிரி எனப்போற்றப்படும் பழனிமலையிலுறை முருகப்பெருமான் மீது சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப்பட்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

    பிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப்படும் பருவங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இரண்டு அல்லது மூன்று பருவத்து நிகழ்வுகள் கலந்துவரும். எடுத்துக்காட்டாக, இப்பாடலையே எடுத்துக் கொள்ளலாம். வருகைப்பருவத்துப் பாடல்- இதில், இந்த வருகைப்பருவப் பாடலில் அன்னையர் தாலாட்டு இசைப்பது அழகுற, நயமுற, சந்தத்துடன் புனையப்பட்டுள்ளது பயிலுவோருக்கு இனிமை பயக்கின்றது.

    *****

    சின்னஞ்சிறு குழந்தை முருகன்; செவிலியரும் தாயாரும் கைநிறைய, தட்டு நிறைய அணிமணிகளை ஏந்திக்கொண்டு, குழந்தையை அலங்கரித்து அழகுபார்க்கக் காத்து நிற்கின்றனர். ‘ஐயனே வா,’ எனக் கைகளை நீட்டி அழைக்கின்றனர்.

    “பொன் போன்றவனே வா, உனக்குப் பொன்னாலான அரைஞாணினைப்பூட்டுகிறேன், வா,” என்கிறாள் செவிலித்தாய்.

    “சிறிய அழகான பொற்சதங்கையை உன் கால்களில் அணிவிக்க வேண்டாமோ?” என்கிறாள் அன்னை பார்வதி!

    “மணிகளாலானதும், ஓம் எனும் வடிவிலமைந்ததுமான பதக்கத்தினை பூட்டிவிடுகிறேன், வா ஐயா,” என்பாள் இன்னொருத்தி.

    குழந்தை, அழைப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சிகொண்டு தவழ்ந்தோடி அவர்களிடம் செல்கின்றதாம். அந்தப் பூவனைய மகவினை வாரியணைத்து உச்சிமுகர்ந்து, அவனை முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி முத்தமிடுகிறார்கள். “அம்மா, அத்தா,” என மழலைச்சொல் பேச்சினைச் செவிமடுத்து உள்ளம் பூரிக்கின்றனராம்.

    எதற்குமே ஒப்பாகாத (தன்னேரில்லா) அவனுடைய அழகான நெற்றியில் திருநீற்றினைப்பூசி, அழகான திலகத்தினையும் இடுகின்றனர். இன்னொருத்தி அவன் விழிகளுக்கு மைதீட்டுகிறாள்.

    “சுவர்க்கத்தில் வாழ்பவனே! மேலாகத்தானே! (சுவர்க்கத்தை அளிப்பவனே எனவும் பொருள் கொள்ளலாம்)! தேவர்கள் தொழுதேத்தும் தேவசேனாபதியே வருவாய்! பெருமை பொருந்திய திருமாலின் மருமகனே வருவாயாக!” என்றெல்லாம் முருகனைக் கொஞ்சி அழைக்கின்றனர்.

    தெய்வத்தைக் குழந்தையாக்கிக் கொஞ்சி அழைத்து அலங்காரமும் செய்து கண்டு களிக்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நாம் பாடலிலாவது அந்த உணர்வினைப் பெற்று மகிழலாமல்லவா?

    பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி
    முன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி
    முத்த மிடற்கு வருகவெதிர் மொழிகண் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினின்மை
    சாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு
    மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே.

    (பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

    முந்தைய பாடலைப்போலவே இதிலும் வருகைப்பருவத்தில், முத்தமிடும் நிகழ்வும் போற்றியுரைக்கப்படுகின்றது. ‘தவழ்ந்தோடி வருக,’ எனுங்கால், செங்கீரையாடும் பருவமும் சுட்டப்படுகின்றதல்லவா? மிகவும் இனிமையான பாடல். சீர்காழி திரு. கோவிந்தராஜன் அவர்கள் பக்தி பெருகும் குரலில் மிக இனிமையாகப் பாடியுள்ளார்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (13)

    இசைக்கவி ரமணன்

    முடிவுரை

    kural-4-1-1

    இப்படி, மனதால் நினைத்தல், வாயாற் புகழ்தல், உடம்பால் வணங்குதல் மூன்றையும் சேர்த்துக் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வைத்தார். இறைவன், இறை, தெய்வம் என்னும் சொற்களைப் பயன்படுத்தும் வள்ளுவரின் குறளில் கடவுள் என்னும் சொல் இல்லை. மன்னனும் இறை, இறைவன் போன்ற சொற்களால் குறிக்கப்படுகிறான். (உ-ம் இறைமாட்சி) `விஷ்ணுவின் அம்சம் உடையவனே மன்னன், ரிஷியின் அம்சம் உடையவனே கவிஞன்,` என்பது நமது பண்டைய கூற்று. அரசன் என்பவன், இறைவனின் பிரதிநிதியாகவே பிற நாடுகளிலும் கருதப்பட்டான். ஆனால், இங்கே, முதல் அதிகாரத்தில் அவர் மன்னனைக் குறிக்கவில்லை, கடவுளைத்தான் சொல்கிறார். எனவேதானோ, இது, கடவுள் வாழ்த்து என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் போன்ற நூல்களிலும் நூலுக்கு முகமனாகக் கடவுள் வாழ்த்து உண்டு. இங்கே. நூலின் ஓர் அங்கமாகக் கடவுள் வாழ்த்து அமைந்திருக்கிறது. இதைப் பனுவலாகக் கொள்ளலாம். ஏனெனில், நூல் முழுதும் அவர் அறிவுறுத்த விழைவது கடவுளைப் பணிவதே.

    `கடவுள்` என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பதால் அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், அல்லது, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லை எனலாகாது. `தமிழ்` என்ற சொல் குறளில் ஓரிடத்திலும் இல்லை. `தாய்` என்றார், `அம்மா` என்றார், `தந்தை` என்றவர் `அப்பா` என்று சொல்லவில்லை. இவற்றை வைத்து ஏதேனும் முடிவுக்கு வரவேண்டுமா என்ன?

    மேலும், நூலின் வேறுபல இடங்களிலும் அவர் கடவுளைக் குறிப்பிடுகிறார்:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

    இறையென்று வைக்கப் படும் (39:இறைமாட்சி:388) என்னும்போது இறை என்ற சொல்லால் கடவுளைக் குறிக்கிறார்.

    தென்புலத்தார் தெய்வம்..(43) தெய்வம் தொழாஅள் (55) தெய்வத்தான் ஆகாதெனினும் (619) தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் (1023) என்ற குறள்களில் கடவுளை தெய்வம் என்கிறார். பல இடங்களில், தெய்வம் என்பது விதி என்னும் பொருளிலும் வருகிறது. தென்புலத்தார் (43) என்று தொடங்கும் குறள், தீயினாற் சுட்டபுண்.. குறளைப் போல மஹாபாரத வாசகத்தின் மொழிபெயர்ப்பு போலவே தெரிகிறது. யக்‌ஷ ப்ரச்னத்தில், யக்‌ஷன், `எவன் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும், உலகத்தால் துதிக்கப்பட்டாலும், வெறுமே சுவாசிக்கும் ஜீவனாகக் கருதப்படுகிறான்?` என்று கேட்கிறான். அதற்கு தருமர், `தேவ, அதிதி, ப்ருத்யானாம், பித்ருனாம், ஆத்மன: ச ய: ந நிர்வபதி,` என்கிறார். அதாவது, `எவன் தேவர்கள், விருந்தினர்கள், தன்னைச் சார்ந்தவர்கள், பித்ருக்கள், ஆன்மா இவற்றுக்குச் சேவை செய்யவில்லையோ, அவன் வெறுமே சுவாசிக்கும் ஜீவி,` என்று பதில் கூறுகிறார்.  மேலும்,

    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

    எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்

    என்று புறநானூற்றுப் பாடல் (9) பேசுகிறது.  தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுத்தல் என்பது தொன்மையான தமிழ் மரபே என்பது இதனாலும் உறுதியாகிறது.

    எனவே, தென்புலத்தார் என்பது பித்ருக்களைக் குறிக்கவில்லை என்ற வாதம் சரியில்லை.

    செம்பொருள் காண்ப தறிவு (358) மெய்ப்பொருள் காண்பதறிவு (356) தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் (249), கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டவர்தான் பிறவாத பெருநிலையை எய்துவர் என்று, பொருள், செம்பொருள், மெய்ப்பொருள் போன்ற சொற்களின் மூலமும் அவர் கடவுளையே சுட்டுகிறார்.

    உள்ளது (357) என்றும் கடவுளையே என்றும் உள்ளவன் என்கிறார். உள்ளது நாற்பது என்று ரமண மகரிஷி அருளியதை நினைவில் கொள்க. வேண்டுதல் வேண்டாமை இலானுக்கு விளக்கம்போல் அமைந்திருக்கும் பற்றற்றான் (350) என்னும் சொல்லாலும் கடவுளையே சுட்டுகின்றார். சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (359) என்னும் குறளில் எவ்வுயிர்க்கும் நிலையான சால்பு என்று கடவுளைத்தான் சொல்கிறார். வகுத்தான் (377) என்னுங்கால் இன்ப துன்பங்களை வகுத்த கடவுளைத்தான் பேசுகிறார். ஒருபடி மேலே சென்று, மற்றவர் வறுமையைத் தாங்க மாட்டாது பரந்து கெடுக உலகியற்றியான் (1062) என்றும் கடவுளைச் சாடுகிறார். பாரதியின், `தனியொருவனுக் குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,` என்னும் கர்ஜனை இந்தக் குறளின் எதிரொலியே.

    மேலும், அப்படிப்பட்ட கடவுளைப் பணிவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பொருள்சார்ந்த பட்டியலிடாமல், நாம் என்ன ஆவோம் என்பதையே சொல்லத் தலைப்படுகிறார். இறைவனைப் பணிவது, பிறவித் துன்பத்திலிருந்து நீங்குவதற்காகவே என்பதை வலியுறுத்துகிறார்:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் (10) மற்றீண்டு வாரா நெறி (356) பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357) பிறப்பென்னும் பேதைமை நீங்க (358) என்கிறார். பிறப்பு, அதனால் இறப்பு இவற்றுக்குக் காரணமான பற்று அறுபடுவது அவனைப் பற்றினால் மட்டுமே (350) என்பார்.

    இவ்விதம், பல்வேறு இடங்களில் அவர், கடவுளையும், அவனைப் பணிய வேண்டிய அவசியத்தையும், அந்தப் பணிதலால் நேரும் அறுதி விளைவையும் எடுத்துச் சொல்கிறார் – தாயனைய கருணையுடன், தந்தையின் கண்டிப்புடன், தோழனின் வாஞ்சையுடன்.

    இது மட்டுமல்லாமல் இந்திரன் போன்ற தேவர்களைக் குறிப்பிடுகிறார் : இந்திரனே சாலும் கரி (25) வேந்தனும் வேந்து கெடும் (899) என்பார். `வேந்தன் மேய தீம்புனல் உலகமும்..` என்னும் தொல்காப்பியம் (அகத்திணை, 5) வேந்தன் என்னும் சொல்லால் இந்திரனைக் குறிக்கும். (சாலும் கரி என்றால், போதுமான பிரத்யக்ஷமான சாட்சி)

    பெண்ணின் மெல்லிய தோள்களில் தூங்கும் இனிமைக்கு, திருமால் வாழும் வைகுண்டமும் நிகரோ என்று தாமரைக் கண்ணான் உலகு (1103) என்கிறார்.

    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு (179) வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு (519) இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) என்னும் இடங்களில் இலக்குமியைத்தான் சொல்கிறார். அவளையேதான், அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல் (84) அவ்வித்து அழுக்காறு உடையவனைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும் (169) என்னும் இடங்களில் பேசுகிறார். அவளையேதான் மடியிலான் தாளுளாள் தாமரையினாள் (617) என்பார். அவளுக்கு நேர்மாறான மூத்தவளான மூதேவியைத்தான் தவ்வையைக் காட்டிவிடும் (169) மடியுளாள் மாமுகடி (617) அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936) என்று காட்டுகிறார். அதுபோல, நிலமென்னும் நல்லாள் (1040) என்று பூமி தேவியைச் சொல்கிறார்.

    காமத்துப் பாலைப் பாடியவர் மன்மதனைச் சொல்லாமல் விடுவாரா? பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197) என்று அங்கே மன்மதனைச் சொல்கிறார்.

    குறளின் குறிக்கோளே அறத்தை வலியுறுத்துதல்தான். அறம்தான் இந்த நூலின் கதாநாயகன். அறம் என்பது நல்வினை, புண்ணியம். மறம் என்பது, அறமல்லாதது, தீவினை, பாவம், பொருளல்லாதது. எனவே, எல்லோரையும் ஒரேவிதமாக நோக்கி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான விளைவுகளை இம்மியும் பிசகாமல் வழங்கும் அறத்தைக் கடவுளாகக் காட்டுகிறார். வடமொழியில், இந்த அறம் என்னும் சக்தி, மூன்று விதமாகச் செயல்படுவதைக் குறிப்பார்கள்:

    1. ம்ருத்யு : உயிரை உடலிலிருந்து எடுத்துச் செல்லும் சக்தி. இதைக் கூற்றுவன் எனலாம். ஏனெனில், உடலிலிருந்து உயிரைக் கூறு செய்பவன் கூற்றுவன் என்பது விளக்கம். கூறு என்றால் பங்கு, பிரிவு, பாதி, அம்சம், வகை, கூறிட்ட பொருள் என்றெல்லாம் பொருள்படும்
    2. காலன் : உடம்பில் உயிர் நிலவும் காலத்தை, அதாவது ஆயுளை நிர்வகிக்கும் சக்தி
    3. எமன் : இவனே தர்மராஜன் எனப்படுகிறான். இவனே இருவினைப் பயனை, உயிர்களுக்கு, உரிய விதத்தில், உரிய காலத்தில் சேர்ப்பிப்பவன்

    இந்த விளக்கத்தை மனத்தில் கொண்டு, திருவள்ளுவர் அறக்கடவுளைப் பற்றியும், கூற்றுவனைப் பற்றிச் சொல்வதையும் கூர்ந்து நோக்குவது சுவாரசியமானது.

    என்பிலதனை வெயில்போலக் காயுமே

    அன்பிலதனை அறம் (77)

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து (130)

    மனத்தில் சினம் உண்டாகாமல் தடுத்துக் கற்க வேண்டியவற்றைக் கற்று அடக்கம் உடையவனாக இருப்பவனிடம், அறக்கடவுள் சென்றடையும் சமயத்தை எதிர் பார்த்திருக்கும்.

    மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின்

    அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)

    இவற்றில், அறக்கடவுளின் கடுமையை, சமாதானமற்ற கூர்ந்த பார்வையை, பிழைசெய்வோரை தண்டிக்கும் கண்டிப்பைச் சொல்கிறார்.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் (269) கொல்லாமை மேற்கொண்டொழுகுவான் வாழ்நாள் மீது செல்லாது உயிருண்ணுங் கூற்று (326) கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை (765) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் (894) உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) என்கிறார். சுருங்கச் சொன்னால்,

    1. தவவலிமையால் கூற்றுவனை வெல்லக் கூடும்
    2. கொல்லாமை விரதம் பூண்டவன் அற்ப ஆயுளில் இறப்பதில்லை, துர்மரணம் அவனுக்கில்லை
    3. படைவீரம் என்பது கூற்றுவனே எதிர்நின்றாலும் தீரத்துடன் போரிடுவது
    4. ஆற்றலுள்ள நல்லோருக்குத் தீங்கிழைத்தல், கூற்றுவனைக் கைதட்டிக் கூப்பிடுவதற்கு நிகர்
    5. பொருளே இல்லாத போதும் மனதில் துறவு மனப்பான்மை வரவில்லையென்றால், அவன் அண்டை வீடுகளிலுள்ள பொருட்களுக்குக் கூற்றுவனாவான்

    என்று பலவிதமாகக் கூற்றுவனைக் குறிப்பிடுகிறார்.

    கூற்றுவனின் கொடுமையை அவர் காமத்துப் பாலிலும் காட்டுவது அற்புதமான உத்தி:

    பண்டறியேன் கூற்றென்பதனை; இனியறிந்தேன்

    பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

    கூற்றமோ? கண்ணோ? பிணையோ? மடவரல்

    நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)

    என்று பெண்ணின் கண்ணுக்குக் கூற்றுவனை இணையாகப் பேசுகிறார். கூறு என்றால் பிரிவு, பங்கு, அம்சம், பாதி, வகை என்றெல்லாம் பொருள்படும்.

    சரி. பிறப்பு, இருவினை, அறம், கூற்றுவன், இறப்பு என்றெல்லாம் பேசுபவர், இறந்து போன முன்னோர்களாகிய பித்ருக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரா என்றால், அவர்களைத் தென்புலத்தார் (43) என்கிறார். ஞானியர், யோகியர், பேரடியார் இவர்களெல்லாம் வடபுலம் ஏகியவர்கள். மற்றை மானிடர்கள், தென்புலத்தார். அவர்கள், பூமியில் வாழும் மனிதர்களின் சடங்குகளின் மீது ஆதாரப்பட்டிருக்கிறார்கள்.

    மனிதர்களில் கயவர்கள், பதடிகளைப் பற்றிச் சொன்னவர், மனிதரல்லாத அமானுஷ்ய ஜீவிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்:

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை

    மாதர்கொல்? மாலும் என் நெஞ்சு (1081)

    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

    தானைக்கொண் டன்ன துடைத்து (1081)

    அணங்கைப் பெண் எனலாம்; பேயெனலாம்; பெண் தெய்வம் எனலாம். தாக்கணங்கை மோகினி எனலாம்! இவை போதாதென்றோ,

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்

    பேஎய்கண் டன்ன துடைத்து (565)

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து

    அலகையா வைக்கப் படும் (850)

    என்று, பேயைக் கொண்டு வருகிறார்.

    உடனே, வள்ளுவருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்று வினாவெழுப்ப வேண்டா! `என்னடா பேயறைந்தாற்போல் இருக்கிறாய்?` என்றால் கேட்டவர் அதற்கு முன்பு தன்னையோ பிறரையோ பேயறைந்து பார்த்திருக்கிறார் என்று பொருளல்ல! அது ஒரு manner of expression.

    ஆனால், அவர் தேவர்களைப் பற்றிச் சொல்வது, பேய்களைப் பற்றிச் சொன்னதுபோல் ஒரு பேச்சுக்காக இல்லை.

    சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)

    அகல்விசும்புளோர் கோமான் இந்திரன் (25)

    வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (50)

    நல்விருந்து வானத்தவர்க்கு (86)

    புத்தேளுலகத்தும் (213)

    புலவரைப் போற்றாது புத்தேளுலகு (234)

    கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு (290)

    அவியுணவின் ஆன்றார் (413)

    தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

    தேவர் அனையர் (1073)

    புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ (1323)

    இவைபோன்ற குறள்களைப் பார்க்கும்போது, தேவர்கள், வானுலகம் இவை, வள்ளுவரின் வெறும் நம்பிக்கையாக இல்லாமல் அவர் அறிந்த நிதர்சனமாக இருந்தனவோ என்று தோன்றுகிறது.

    தேவர்களைக் குறிப்பிட்டால் அமிழ்தத்தைக் குறிப்பிடாமல் இருப்பாரோ?

    தான் அமிழ்தம் (11)

    சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று (82)

    அமிழ்தினும் ஆற்ற இனிதே (64)

    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720)

    மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை (968)

    அமிழ்தின் இயன்றன தோள் (1106)

    தேவர்கள், அவர்கள் உறையும் சுவர்க்கம், அமிழ்தம் இவற்றைச் சொன்னவர், நரகத்தையும் குறிப்பிடத் தவறவில்லை:

    அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் (121)

    ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

    தான்புக் கழுத்தும் அளறு (835)

    புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு (919) என்றெல்லாம் சொல்லி, அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்:சேர்ந்த இன்னா உலகம் புகல் (243) என்பார்.

    இம்மையை மாயையென்று கொண்டவரில்லை வள்ளுவர். அங்ஙனம் கொண்டிருந்தால், வாழ்வின் எல்லாத் தளங்களுக்கும் பொருத்தமான அறங்களை ஏன் சொல்வார்? தேவர்கள், அவர்கள் வதியும் இடம் என்பவற்றைப் பற்றியும் பேசுவாராதலின், அவர் மறுமையை நம்பியவர் என்றே உறுதியாய்ச் சொல்லலாம். இங்கு வாழ்ந்து உயிர் நீத்தபின் எய்தும் நிலையும் அதன்பிறகு நேரும் பிறப்புமே மறுமை.

    மனநலத்தின் ஆகும் மறுமை (459)

    மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் (904)

    மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

    என்ற குறள்களில் மறுமையைச் சுட்டுபவர், இம்மை, மறுமை இரண்டையும் சேர்த்தே இரண்டு இடங்களில் கையாள்கிறார்:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

    இம்மையும் இன்பந் தரும் (98)

    இன்மை எனவொரு பாவி மறுமையும்

    இன்மையும் இன்றி வரும் (1042)

    இம்மையும் மறுமையும் சொன்னவர், மனித வாழ்வின் நோக்கமான வீடு பேற்றையும் அவருக்கே உரிய முறையில் கச்சிதமாகச் சொல்கிறார்.

    அதை,

    வானென்னும் வைப்பு (24)

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை (247)

    புக்கில் (340)

    வானோர்க்கு உயர்ந்த உலகம் (346)

    வையத்தின் வானம் நணிய துடைத்து (353)

    என்றெல்லாம் வீட்டை விவரித்து மற்றீண்டு வாரா நெறியே (356) மனிதன் கடைபிடிக்க வேண்டியது என்று அறிவுறுத்துவார்.

    ஆக, உறங்குவதும் விழிப்பதும் போலத்தான் இறப்பும் பிறப்பும் (339) என்றும், பிறவி என்பது பெருங்கடல் (10) என்றும், அதில் நாம் உழல்வதற்குக் காரணம் பிறப்பென்னும் பேதைமை (358) (அறியாமை) அதற்குக் காரணம் அவா என்னும் வித்து (361) என்றும், அதற்குக் காரணம் பற்று (347) என்றும், பற்றுக்குக் காரணம் யான் எனது என்னும் செருக்கு என்றும், (346) காமம், வெகுளி, மயக்கம் (360) உள்ளமட்டும் பிறவி என்பது தொடரும் என்றும், ஒரு பிறவியில் செய்த வினையின் விளைவு ஏழு பிறவிகளில் தொடரும் என்றும், (107, 126, 398, 538) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை (360) என்றும் சொல்லி, பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349) என்றும் படிப்படியாக விவரித்துச் சொல்கிறார்.

    பற்று நீங்கினால், இந்த உலகத்தில் இந்த உடலில் இருக்கும்போதே விடுதலை எய்தி வீடு பேற்றை அடையலாம் என்பதை,

    இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்

    துன்பத்துள் துன்பம் கெடின் (369)

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நினைவே

    பேரா இயற்கை தரும் (370)

    என்னும் குறள்களில் உறுதிமொழி தருவதுபோல் விளக்குகிறார்.

    திருவள்ளுவர் காட்டும் நெறியில் நின்றால், யாண்டும் இடும்பை இல என்பதே உறுதி.

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (12)

    இசைக்கவி ரமணன்

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11)

    kural-4-1-1

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

    இறைவ னடிசேரா தார் (10)

     

    கடவுளின் திருவடியை அடைந்தவரால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது.

    யார் இறைவனடியைச் சேர்கிறார்களோ அவர்களே பிறவியாகிய பெருங்கடலைத் தாண்டுகிறார்கள். அறம், பொருள், இன்பம் என்னும் கடல்களைக் காட்டிலும் விரிந்ததும் மருட்சி தருவதுமானது பிறவி என்னும் பெருங்கடல். அதனால்தான் அதனை சம்சார சாகரம் என்கிறோம்; பவக்கடல் என்கிறோம்; ஏன், கவலைக் கடல் என்றுகூடச் சொல்கிறோம்.

    இந்தக் கொடுங்கடலை எப்படிக் கடப்பது? முயற்சியின்றி மூழ்கிப் போவதா? மணலைத் தூவித் தூர்க்க முனைவதா? கரை எங்கோ அதுவரை பாலம் கட்டப் புறப்படுவதா?

    கடலைத் தாண்டப் பாலம் எதற்கு, படகே போதாதா?

     

    ஆம், அந்தப் படகுதான் இறைவனின் தாள்கள்; இறைவனின் திருநாமம்.

    கடவுளின் தாளைப் பணிவதால் மட்டுமே அதைக் கடக்கமுடியும், மீண்டும் பிறவாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறார் வள்ளுவர். இல்லையெனில், மறுபடி மறுபடிப் பிறவிக் கடலில் அழுந்தும் துயரே தொடரும் என்பது முடிவு. ஆயின், வினை, அதன் விளைவாகிய பிறப்பு, முற்பிறவி இவை உண்டு என்றுதான் திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

    `என்பால் சித்தத்தை வைத்தோரை, விரைவில் பிறவிப் பெருங்கடலிலிருந்து மீட்கிறேன்,` என்கிறான் கண்ணன். (கீதை:12:07)

    இறைவனைப் பணிதலே துவக்கமும், முடிவும், ஒவ்வொரு மனிதனின் பணியும் என்பதை மிக உறுதியாகவும் அன்போடும் கருணையோடும் எடுத்துச் சொல்கிறார்.

    இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்றார். நீந்துவர் என்னும் சொல் தனியே நிற்பதுபோல் தோன்றுகிறதல்லவா? இங்கே உவமை சொல்லப்படவில்லை. ஒன்றைச் சொல்லி, இன்னொன்று சொல்லாமல் சொல்லப் படுகிறது. இதை இசையெச்சம் எனலாம். இது ஏகதேச உருவகம் அல்லது ஏகாங்க உருவகம் எனப்படும்.

    இன்னொரு சிறப்பையும் காண்போம்:

    இந்தப் பத்துக் குறள்களில், அனைத்துக்கும் ஆண்டவனே முதல் என்பதை முதலிலேயே முடிவாகச் சொல்லிவிடுகிறார். அவனுடைய புகழைப் பாடுவதே இருவினைகளில் இருந்து மீளும் வழி என்பதை ஓரிடத்தில் சொல்கிறார். ஒழுக்க நெறியில் நின்றார் நீடு வாழ்வார் என்று ஓரிடத்தில் கூறுகிறார். ஆக, எவன் அனைத்துக்கும் துவக்கமோ அவன் புகழைப் பாடுவதும், அவனை அடைய விதிக்கப்பட்ட ஒழுக்க நெறியில் நிற்பதுமே வேலை என்கிறார்.

    இஃதல்லாமல், பத்து குறள்களில் ஏழு குறள்கள் இறைவனுடைய தாள்களைப் பணியச் சொல்கின்றன:

    1. வாலறிவன் நற்றாள்
    2. மலர்மிசை ஏகினான் மாண் அடி
    3. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி
    4. தன்க்குவமை இல்லாதான் தாள்
    5. அறவாழி அந்தணன் தாள்
    6. எண்குணத்தான் தாள்
    7. இறைவன் அடி

    தாளைப் பணியவே தலை. தாளில் ஆளில்லை. அதில் தலைவைத்துத்தான் நமது அடையாளங்கள் யாவும் தீர்ந்து நாம் ஆளாவோம்! அவனுக்கே ஆளாவோம்! தாளில், புகலிடம் என்பதைத் தவிர வேறு அடையாளம் இல்லை. முக பாவனை இல்லை. கைகளும் ஆயுதங்களும் இல்லை. வாழ்வில் தள்ளாடி வரும் நம்மை ஒருபோதும் தள்ளாது தாள்!

    இறையருளே இணையடி!

    அவனே அனைத்தும் என்பதால், அவனைப் பணிதலே அனைத்துக்கும் வழி என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

     தொடருவோம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share