கிரேசி மொழிகள்

Crazy Quotes From Crazy கிழிஞ்ச Coat….!

  தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat…. ”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள் ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1) ‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2) ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான் புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான் எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3) ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4) ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5) ‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6) ‘’ஐந்தில் ...

Read More »

க்ரேஸியைக் கேளுங்கள்….முன்னுரை…..!

இந்தத் தொடரில் நான் பதில் சொல்ல மிகவும் கஷ்டப்பட்டக் கேள்வி….முதல் கேள்வி….கேட்டது கல்கி ஆசிரியர் சீதா ரவி….”வாராவாரம் கல்கியில் வாசகர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா….?”….அன்றிரவு கனவில் நான் மகாபாரத ”நச்சுப்-பொய்கை” கரையில் நின்று கொண்டிருக்கிறேன்….கீழே தரையில் தருமன் உட்பட பாண்டவர் ஐவரும் மயங்கி மாண்டுக் கிடக்கின்றனர்….அப்போது ஒரு அசரீரி குரல் ”கிரேஸி….”யக்ஷ ப்ரச்னம்” என்றால் என்ன….?”….” அது ஒரு தீபாவளி பட்சணம்” என்று நான் உளற அப்போது பாண்டவர்கள் சார்பாக என்றும் எதற்கும் மயங்காத பொதிகை வேளுக்குடி கிருஷ்ணன் தோன்றி ”அட! சமத்தே ...

Read More »

நெம்பர்40, ரெட்டைத் தெரு….! by இரா.முருகன்….!

முன்னுரை by கிரேசி மோகன்….! ——————————————————————— கல்கி ”க்ரேஸியைக் கேளுங்களில்” கேட்டு நான் இன்னமும் பதிலளிக்காத கேள்வி….” உங்களுக்குப் பிடித்த வசனம் எது?(நீங்கள் எழுதிய சினிமா வசனமாகவும் இருக்கலாம்)….நான் பார்த்த சினிமா, நாடகங்களில் தேடியதில் சந்துஷ்டியாக ஏதும் அகப்படவில்லை….சினிமா வெண்ணெய்யை விட்டு சிறுகதை-நாவல் நெய்யில் அலைய ஆரம்பித்தேன்….”கண்டேன் வசன சீதையை”…. ”சாமி….இந்த தராசு எளுதின காயிதத்துக்கும் எளுதாத காயிதத்துக்கும் உள்ள எடை வித்யாசம் காட்டும்”-தி.ஜானகிராமனின் சிறு கதையில் வரும் இந்த வசனம் ”எதுக்கு நீயெல்லாம் வசனம் எழுதறே?” என்ற ரீதியில் என்னை விசனமாகப் பார்த்தது….” ...

Read More »

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

சித்திபுத்தி வேழத்தை சாஷ்டாங் கமாய்வணங்க அத்தைக்கு மீசமுளைச்(சு) ஆவாள்பார் -சித்தப்பா(சித் அப்பா) தோத்தாலும் பாஸாவோம்(பரிட்சையில்) தோப்புக் கரணமிட கூத்தாடும் பிள்ளையார் காப்பு…கிரேசி மோகன்…! பிள்ளையார் பதினாறு —————————- ஷோடஸ நாயகர் ———————- பெரியா அருள் வாக்கில் ‘’ஷோடஸ நாயகரைப்’’ பற்றி எழுதியதை வாசித்ததால் விளைந்த வெண்பாக்கள் தங்கள் மேலான பார்வைக்கு….!(முன்பு(2012ல்) எழுதியது…..! ஸுமுகர் ———– சிரித்த வதன ஸுமுகரைப் போற்ற விரித்த வலைவெவ் வினையை -அறுத்து இழைத்திடுவான் அத்தச்சன் எண்ணென் கலையாய் அழைத்திடுவாய் அவ்வை அளவு….(1)….06-03-2012 ஏகதந்தர் ———– சோகம் களைந்து ஸுமுகம் குவித்திடும் ...

Read More »

”கீழ் திருப்பதி சாட்சி கணபதி பெருமாள்’’….!

  ’’சாட்சி கணபதி பெருமாள்’’…. ————————————————— ‘’காட்சி அளிக்கின்றார் கீழத் திருப்பதியில் மாட்சிமை மாம(ன்)அல மேலுமண, -சாட்சியாய்: நாம கணபதியை நாம வணங்கினால், ஷேமம் ஜரகண்டி ஸ்பீட்’’….கிரேசி மோகன்….!

Read More »

’’சக்தி கொழுக்கட்டை’’….!

படமும் பாடலும்….! ——————————————– பிஸியாகப் பார்வதி பூரணம் செய்ய பசியோடு பிள்ளையார் பார்க்க -ருஸியான மோதகம் ஏனுனக்கு மைந்தா பஸியென்றால் போதகப்பன் கையில் பழம்….கிரேசி மோகன்….! பூரணத்தை தாயார் பூரணமே செய்திடும் காரணத்தைக் காணும் கணேச -வாரணமே நாளை சதுர்த்தி நலமாய் நிகழ்ந்ததும் வேலையில்(கடலில்) மூழ்த்துவோம் வா….கிரேசி மோகன்….!

Read More »

பிள்ளையார் பிறப்பு

  நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள் ஞானி வினாயக னை….! ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில் பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில் தள்ளிய பிள்ளைத் தலையைத் தகப்பனீசர் கிள்ளியங்கு வைத்தார் கஜம்…கிரேசி மோகன்….!   அட்வான்ஸ் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்….!   பிள்ளையார் வெண்பாக்கள் ——————————————— சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன் சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை வக்கிர துண்டனை வாழ்த்து….(1) தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே ...

Read More »

HAPPY GOKULASHTAMY….!

  மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம் தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம் விழித்துளி விழித்துளி கலையினில் மனனம் கனித்துளி கலந்து கவித்துளியாய் மலருது! நள்ளிரவில் தோன்றிய கண்ண பெருமாளை நள்ளிரவில் அழைத்தல் தானே முறை….! பெருமாள் திருப் புகழ்….! காப்பு ————— பெருமாள் திருப் புகழ்….! ———————————————————- “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில் மந்த்ர வடிவ உபதேசம ருளிய கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம அந்த ரிவயி ரவிவாமமி றைவனின் பங்கு திரும யிலைவாழுமை இளைய தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால ...

Read More »

ரமணாயனம்-சுபம்,முடிவு,மங்களம்….!

  முக்தி காண்டம் —————— திருச்சுழி தோன்றி திருக்கூடல் காய்த்து திருவருணை நின்ற தருவாம் -குருச்சுவை ஞானப் பழத்தை நுகர நினைப்பது வானத்தை வில்லாய் வளைப்பு….(351) அருந்தி, உறங்கி, அளவளாவும் அன்பு நெருங்கி இருப்போர்க்கே ஞானம் -பெருந்தீ அருணை ரமணர் அணைப்பில் குளிர அருகதை அன்பே அரன்….(352) மேடிட்ட நெற்றியில் மேதமை இட்டவர் தோடுற்ற காதோன் திருவுரு -சாடுவிக்கின் ‘’கைகளால் பேசுவார் செய்கையால் சிந்திப்பார்’’ பொய்கையாம் வர்ணிப்பைப் பார்….(353) சாது சிரிப்பிற்கிங்(கு) ஏது உவமானம் பாதுகாப் பேயதன் பாவமாம் -வேத மறைபொருளாய் வார்த்தை மனயிருளைப் ...

Read More »

ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

  தவரச காண்டம் —————- சீதைக்(கு) இருப்பிடம் ஸ்ரீராமன் தங்குமிடம் கீதைக்(கு) இருப்பிடம் கண்ணனே -தாதையும் கூடியிருந்து அன்பருடன் காகுத்தன் ராமனாய் தேடிவந்தோர்(கு) ஊட்டினார்கீ தை….(299) பனியோ, குளிர்மழையோ பல்துலக்கும் நேரம் தனியேவோர் பாறையில் தாவி -கனிவாய் செளபாக்கியம்மா கீழிருந்து சாமியைக் காண தவபாக் கியத்தார் தயவு….(300) கண்கெட்ட பின்னுமேன் காணவந்தாய் என்னையென பண்பட்ட சாமி பரிந்திட -உன்பட்டு பார்வை முதலியார் பாட்டியிவள் மேல்பட்டால் தீர்வைத் தருமென்றாள் தாய்….(301) இந்தநேரம் பார்த்திந்த ஏழையிடம் ஏதுமில்லை வந்தய்யர் நொந்தவண்ணம் வாடிட -‘’இந்தரோஷம் சுந்தரேசா ஏனுனக்கு உந்தனையே ...

Read More »

ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

  ஞான காண்டம் —————- பிறவிப் பிணியை அறவே அகற்றி துறவுக்கும் அப்பால் திகழ்ந்த -பரிசுத்த ஆவியைக் கண்டதால் அர்ச்சிப்பீர் ‘’பகவானாய்” காவிய கண்டமுனி கூற்று….(26) இகவாழ்வின் அச்சம் இயலாமை கோபம் புகவொண்ணா சாத்வீகம் பெற்றும் -பகவானை மண்ணிட்ட மீனாக மாற்றியது , தண்ணீராம் அண்ணா மலையார் அழைப்பு….(27) நானாட்சி போனதால் நாடுடல் நாட்டம்போய் வானாச்சு, மண்ணாச்சு வீரமெலாம் -மீனாட்சி சுந்தரேஸர் முன்பு சிலிர்த்துகுக்கும் கண்ணீரை இந்தரோஷம் ஆன்மன் இயல்பு….(28) வந்தான்ம வெள்ளத்தில் தன்தேகம் ஆட்டமுற சந்தேகம் கொண்டார் சுரமென்று -பிந்தையோர் போதில் ‘’ ...

Read More »

”ரமணாயனம்’’….!அமுத சுரபியில் வெளிவந்தது….!

  ரமணாயனம்’’….! ————————– ”பால காண்டம்” ———————— திருவா திரையில் திருச்சுழி ஊரில் கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய் பெருந்தவம் செய்த பகவான் ரமணர் பிறந்து துறந்தார் பிறப்பு….(1) பேரூழி காலத்தில் பாராழி புக்காது நீரோய சூலன் நிறுத்திய -ஊராம் திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை கருக்குழியில் கர்மம் கழித்து….(2) மகப்பேறு கண்ட முழியற்ற மாது சுகப்ரஸவம் ஆனதும் சொன்னாள் -தகப்பனார் சுந்தரம் அய்யரிடம் ஜோதியைக் கண்டதாய் வந்தசேய் வானத் துறவு….(3) அன்னாளில் சுந்தரம் அய்யரின் முன்னோர்க்கு சன்யாசி இட்டதோர் சாபத்தால் -பெண்ணாசை துச்சமென்றோர் ...

Read More »

கடவுளைக் கண்டேன்….!

  காணாத காட்சியில் நானாக நானின்றி தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான் நெய்யிருக்கும் பாலில் நுழைந்து….(1)….! எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும் பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும் செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும் தெய்வதம் கண்டேன் திகைத்து….(2)….! ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும் வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும் கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில் கடவுளைக் கண்டேன் களித்து….(3)….! காலை மழலையில் ,மாலை கிழவனில் சேலை இரவு சுகத்தில் -தோலாம் உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன் இறையின் இரவல் ...

Read More »

திருவோணத் திருமால்….!

  பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய் அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை. பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய் ஓணத்தில் சேயாய் உதிப்பு….! சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன் வாத புரீசன் வடமதுரா மன்னவன் கீதகோ விந்தந்தாள் காப்பு….! களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன் ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி ஓணத்தில் கொள்வோம் உவப்பு….! வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து வாமனக் குட்டனை வாத புரீசனை நீமனக் கட்டில் ...

Read More »