Category: Featured

Featured

  • சிந்தாமணிக் கடலில் ஒரு சிறு பயணம்!

    மேகலா இராமமூர்த்தி

    ஐம்பெருங்காப்பியங்களில் கதை அடிப்படையில் காலத்தால் மூத்ததும் காப்பியத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதுமான தலைசிறந்த நூல் ‘சீவக சிந்தாமணி’ ஆகும். சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி இக்காப்பியத்தைச் சமண முனிவரான திருத்தக்க தேவர் தமிழில் இயற்றியுள்ளார். ’சிந்தாமணி’ என்பதற்கு நெஞ்சில் பொதிந்துவைத்துக் காக்கவேண்டிய தேவருலக மணி என்று பொருள் கூறுவர்; அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம் என்னும் பொருளில் இந்நூலுக்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பிய ஆசிரியர் என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்.  இந்நூலின் சிறப்பை நோக்கும்போது இப்பெயர் இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமே என்பதில் சற்றும் ஐயமில்லை.

    இக்காப்பியத்தின் தலைவனாகிய ’சீவகனுக்கு’ அவனுடைய தாயாகிய ‘விசயை’ முதன் முதலாக இட்டு விளித்த பெயர் ’சிந்தாமணி’ என்பதே ஆகும். ’சீவகன்’ என்னும் பெயர்  பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றிய ‘சீவ’ என்னும் வாழ்த்துச்சொல் கேட்டு ’கந்துக்கடன்’ என்னும் வணிகன் (சீவகனின் வளர்ப்புத் தந்தை) இட்ட பெயரே என்பது இக்காப்பியம் கூறும் செய்தியாகும்.

    மனித வாழ்வின் பண்பாகவும், பயனாகவும் கருதப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் இச்சிந்தாமணிக் காப்பியம் இனிதே எடுத்துரைப்பதனால் இதனை ’முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்றும் கூறுவர்.

    சிந்தாமணியை ’விருத்தப்பா’ என்னும் யாப்புநடையில் திருத்தக்க தேவர் அழகுற அமைத்துள்ளார். இவ்விருத்தப்பா சிறந்த ஓசைநயமும், சொல்லழகும் உடையது. செய்யுள் இயற்றுவதிலே ’விருத்தம்’ என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும். அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் தேவரின் பாணியையே (பெரும்பாலும்) பின்பற்றி அதில் வெற்றியும் கண்டன எனலாம்.

    இவ்விருத்தப்பாவை தேவருக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர் கம்பரே ஆவார்; அவருடைய கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் படைக்கப்பட்டு இன்றளவும் பெரும் பாராட்டையும், வரவேற்பையும் தமிழ்கூறு நல்லுலகில் பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கம்பருக்கு ‘inspiration’ திருத்தக்க தேவரே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? ‘சிந்தாமணிக் கடலில் சிறிது முகந்துகொண்டேன்’ என்று கம்பநாடனே கூறியுள்ளதாக ஒரு செவிவழிச் செய்திகூட உண்டு.

    இனி, சீவக சிந்தாமணிக் காப்பியம் குறித்துச் சில செய்திகள் நம் சிந்தனைக்கு…

    சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக மொத்தம் 13 இலம்பகங்கள் உள்ளன. இலம்பகம் என்பது அத்தியாயம் என்பதுபோல் காப்பியத்தின் உட்பிரிவைக் குறிப்பதாகும்; இந்நூலில் மொத்தம் 3145 பாடல்கள் உள்ளன.

    காப்பியத்தின் முதல் பகுதியாக வருவது ’நாமகள் இலம்பகம்’. இவ்விலம்பகத்தில் ’ஏமாங்கதம்’ என்றழைக்கப்படும் நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் (சீவகனின் தந்தை), விசயை (சீவகனின் தாய்) ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் அழகிய பாடல்கள் வடிவிலே விளக்கப்பட்டுள்ளன.

    அரசனாகிய சச்சந்தன் அவனுடைய அமைச்சனான கெடுமதி படைத்த கட்டியங்காரனால் அநியாயமாகக் கொல்லப்பட்டது; கருவுற்றிருந்த அரசமாதேவி ’விசயை’ மயிற்பொறி எனும் வானஊர்தி ஒன்றில் பறந்து சென்று அரண்மனையில் பிறக்கவேண்டிய அரசிளங்குமரனான சீவகனைச் சுடுகாட்டில் ஈன்றது; பின்பு கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தை சீவகனைப் பத்திரமாக எடுத்துச்செல்வதைக் கண்டபின் அவள் துறவறம் பூண்டது எனப் பல துன்பியல் நிகழ்வுகளை வரிசையாகப் பட்டியலிட்டு அவலச்சுவையை நாம் முற்றாகச் சுவைக்குமாறு செய்துவிடுகின்றது இந்நாமகள் இலம்பகம். எனினும் இதில் இடம்பெற்றுள்ள ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் கூறும் பாடல்கள் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைகளாக இனிக்கவே செய்கின்றன; அவற்றிலிருந்து ஒன்று நாம் சுவைக்க:

    ”காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
    பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
    தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
    ஏமாங் கதமென்று இசையால்திசை போயது உண்டே.” (நாமகள் இல: பாடல்: 31)

    நன்றாகக் காய்த்த தென்னைநெற்றானது (தேங்காய்) தான் கீழே வீழும்போது கமுகின் உச்சியிலுள்ள தேன்போலும் இனிய நீரையுடைய குலையைக் கீறி, பலாப் பழங்களைப் பிளந்து பின்னர்த் தேமாங்கனிகளைச் சிதறச்செய்து, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் வளம்பொருந்திய நாடு ஏமாங்கதம் என்று இந்நாட்டின் வளம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

    நாமகள் இலம்பகத்தை அடுத்து வரும் இலம்பகங்களில் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைத் தன் பல்வேறு திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காப்பிய நாயகன் சீவகன் மணம் செய்துகொள்வது விரிவாகப் பேசப்படுகின்றது. இத்தனைத் திருமணங்களை நாயகன் (அலுக்காமல்!) செய்துகொள்வதாலேயே இந்நூலுக்கு ‘மணநூல்’ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பின்னர்த் தன்னருமைத் தந்தையைக் கொன்று ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிய கொடுங்கோலனான கட்டியங்காரனைத் தன் தாய்மாமன் கோவிந்தனின் துணையோடு போரில் வீழ்த்தித் தன் நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்றான் சீவகன்; நாட்டின் மன்னனாகி நல்லாட்சி புரிகின்றான். நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறுகின்றான்.

    image descriptionஇக்காப்பியத்தைப் படிப்போர்க்கு ’ஒரு சமணத் துறவி அறக்கருத்துக்களையும், துறவுநெறியையும் வலியுறுத்திக் காப்பியம் படைப்பதை விடுத்துக் ‘காமச்சுவை’ மிகுந்த ஓர் காப்பியத்தை இயற்றுவானேன்?’ என்ற ஐயம்கூட எழலாம். தேவர் இக்காப்பியத்தை இயற்றியதற்கான காரணமாகச் சொல்லப்படுவது….ஒரு சமயம் திருத்தக்க தேவரிடம் மற்ற புலவர்கள், ’துறவியான உம்மால் துறவறக் கருத்துக்களை மட்டுமே பாட இயலும்; அகப்பொருள்சார் பாடல்களைப் பாட இயலாது’ என்று இகழ்ந்துகூற அதனைப் பொய்யாக்கவே அவர் ‘அகப்பொருள்’ செய்திகள் செறிந்த இக்காப்பியத்தைப் படைத்தார் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள். கவிஞர் என்றானபின் காதலைப் பாடவேண்டிய கட்டாயம் காவியுடை தரித்தவர்க்கும் வந்துவிடுகின்றது பாருங்கள்!

    சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது அஃது திருமால் அவதாரக் கதைகளில் ஒன்றான கண்ணன் கதையையே பெரிதும் ஒத்திருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் ’இராச லீலைகள்’ பல நிகழ்த்தினான்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனைத் தொழில்களும் செய்துகொண்டே அவன் உலகப் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்திக் காட்டினான். அதுபோலவே இக்காப்பியத் தலைவன் சீவகனும் பல மகளிரை மணக்கின்றான்; போர் செய்கின்றான்; அரசாளுகின்றான்; மக்களைத் தீங்கின்றிக் காக்கின்றான். இத்துணைச் செயல்களுக்கு மத்தியிலும் அவன் வாழ்வின் நிலையாமையை நன்குணர்ந்தவனாய் ’படநாகம் எப்படித் தன் தோலை உரிக்குமோ’ அதுபோல் உலகப்பற்றை உரித்துவிட்டுத் தன் மனைவியர் எண்மருடனும் துறவு பூணுவதாகவும், தவமியற்றி வீடுபேற்றை அடைவதாகவுமே காப்பியத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

    இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய ’முத்தி இலம்பகம்’ பல அரிய அறக்கருத்துக்களை, வாழ்வியல் உண்மைகளை எடுத்தியம்பி மனித மனத்தை பக்குவப்படுத்துகின்றது. ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் கூறும் ஓர் இனிய பாடல்..

    ”உள்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம்
    தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
    விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
    ஒள்ளிதின் தரித்தலை யொழுக்கம் என்பவே.” (முத்தி இல: பாடல்: 2845)

    உண்மைப் பொருள் எதுவென உணர்தலே ஞானம் எனப்படும். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சியாகும்; அத்தகைய ஞானத்தையும், தெளிந்த காட்சியையும் ஒருவன் தன் மனத்திலே சிறப்புற நிலைபெறச் செய்வதே ஒழுக்கம் ஆகும் என்கிறார் திருத்தக்க தேவர். ஞானம், காட்சி, ஒழுக்கம் இம்மூன்றினையும் மும்மணிகள் (இரத்தினத்திரயம்) என்பர் சமணர்கள். இப்பாடலின் கருத்தை நோக்கும்போது,

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 355) 

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

    மருளானாம் மாணாப் பிறப்பு. (குறள்: 351)

     

    என்ற இரு குறள்கள் நம் நினைவுக்கு வருகின்றன அல்லவா?

    இவ்வினிய தமிழ்க் காப்பியத்தைக் கற்று அதன் சுவையில் மனத்தைப் பறிகொடுத்த வெளிநாட்டுத் தமிழறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கிரேக்க மொழியின் மாகாவியங்களான ‘இலியட், ஒடிசி’ ஆகியவற்றிற்கு இணையானது இச்சிந்தாமணிக் காப்பியம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ’தேம்பாவணி’ என்னும் தீந்தமிழ்க் காவியம் படைத்த வீரமாமுனிவர், இக்காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் ’தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்’ என்று வியந்து பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்கும், பத்துப்பாட்டிற்கும் அற்புதமான உரை வரைந்தவரும், தமிழ்ச் சான்றோரால் ’உச்சிமேல் வைத்துப் போற்றப்படுபவருமான’ பெரும்புலவர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு எண்ணரும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் ஒப்பற்ற காப்பியமாம் சீவக சிந்தாமணியை நாமும் படித்தின்புறுவோமே!

    படத்திற்கு நன்றி: https://www.nhm.in/shop/978-81-8493-465-6.html

    Share
  • சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

    நூலாய்வு !

    சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

    வில்லவன் கோதை

    நூலாசிரியன் ஜே மு சாலி

    வெளியீடு
    இலக்கியவீதி
    52 சௌந்தர்யா குடியிருப்பு- அண்ணா நகர் மேற்கு சென்னை 600101
    விலை ரூ 200

    sali 02

    சிங்கப்பூர் – மலேசியத் தந்தை தமிழவேள் கோ சாரங்கபாணி என்றொரு நூலை சென்னை இலக்கியவீதி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஐம்பதுகளில் பிரபலமான சிறுவர் இதழ் கண்ணன் கண்டெடுத்த ஜெ மு சாலியை அறுபதுகளில் சாரங்கபாணியின் சிங்கப்பூர் தமிழ் முரசு தத்தெடுத்துக்கொண்டது.எவர்க்கும் கிடைப்பதற்கறிய எழுத்துலக வாய்ப்பு சாலிக்கு கிடைத்தது .தொள்ளாயிரத்து முப்பத்தைந்தில் துவங்கப்பட்ட தமிழ் முரசில் முப்பது வருடங்களுக்குப்பிறகு இணைந்த ஜே மு சாலியை தமிழ்முரசு ஒரு பத்திரிக்கையாளனாக்கிற்று.

    அவர் எழுதிய இந்த நூல் நாடுகடந்து சிதறிக்கிடந்த ஒரு இனத்தை கோ .சாரங்கபாணி என்ற தனிமனிதன் செப்பனிட்ட சீர்திருத்த வரலாற்றை விரிவாக பேசுகிறது.

    தமிழவேள் கோ சாரங்கபாணி என்ற இந்த மனிதர் யார்

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிழவர்களைக்கேட்டால் ஜெமினிகணேசனுடன் மிசியம்மாவில் நடித்த நகைச்சுவை நடிகர் சாரங்கபாணியை சுட்டிக்காட்டுவர். இன்றைய இளைய தலைமுறையோ அனேகமாக தோளை உயர்த்தி உதட்டைப்பிதுக்கக்கூடும்.

    ஊடகங்களின் எழுச்சிக்குபிறகு நிலவரம் சற்றே மாறியிருக்கிறது. தமிழர்கள் இந்தியாவைத்தாண்டி பல்வேறு தகவல்களை இப்போ தெல்லாம் அறிந்திருக்கிறார்கள் இதற்கு இந்தியாவின் கதவுகள் இப்போது திறந்திருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். .அதேசமயம் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கோட்டையிலிருந்து கோடம்பாக்கம்வரை ஒவ்வொருகணமும் நம்மை கூர்ந்து கவனித்துத்தான் வந்திருக்கிறார்கள் அதற்கு பெற்றதாய் நாட்டின் பெரும்பிணைப்பாய்கூட இருக்கலாம்.

    சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றுபட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணிந்திருந்த நேரம். வெள்ளையர் மலாய்காரர் சீனர் யூரேஷியர் ஆகிய கலப்பினத்தாரிடையே தமிழர்கள் சிக்குண்டிருந்த சமயம்.

    தமிழ் நாட்டில் திருவாரூரில் பிறந்த விஜயபுரம் கோ சாரங்கபாணி தனது இருபத்தியோராவது வயதில் பிழைப்பைத்தேடி சிங்கப்பூர் வருகிறார் அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரம் இருந்தவர்களுக்கு அக்கரை புல்வெளிகளாக காணப்பட்டது சிங்கப்பூரும் மலேசியாவுந்தான்.

    கூலிக்கு ஒரு கடையில் கணக்கு எழுத ஆரம்பித்த சாரங்கபாணி எழுத்துலகில் ஈர்க்கப்பட்டு காலப்போக்கில் முன்னேற்றம் வார இதழில் இணைகிறார்.

    அடுத்தடுத்து தமிழ் ஆங்கில ஏடுகளை துவக்கி துவண்டுகிடக்கும் தமிழற்காக தமிழ் முரசொலிக்கிறார்.

    ‘’ பத்திரிக்கை துவங்கி பெரும் பணம் திரட்டுவது எம் நோக்கமல்ல. உலகச்செய்திகளை உடனுக்குடன் தமிழர்கள் அறிந்து கொள்ளச்செய்வது முதல் நோக்கம். வேலையற்று இருக்கும் ஒருசில தமிழற்காவது வேலை கொடுப்பது இரண்டாவது நோக்கம். ஒருவர் வெளியீடு ஒன்றுக்கு 200 தமிழ் முரசு பிரதிகள் விற்றால் அவருக்கு மாதம் 12 வெள்ளி லாபம் கிடைக்கும் ஏறக்குறைய இவ்வளவுதான்ஒரு முனிசிபல் தொழிலாளின் சம்பளமும் ‘’ என்று தமிழ்முரசின் தோற்றத்தை மாதம் மும்முறையாக வந்த முதல் ஏட்டில் சாரங்கபாணி பேசுகிறார்

    சாரங்கபாணியின் சமூக சீர்திருத்தம் அன்னியமண்ணில் சொந்த மக்களிடையே உருவெடுக்கிறது..

    இந்திய தேச விடுதலை வேள்வியை தூண்டிவிட பாரதியாரின் எழுத்து பயன்பட்டது. உறக்கத்திலிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பிட தந்தை பெரியாரின் குடியரசு துணைநின்றது..

    சிங்கப்பூர் மலேசியத்தீவுகளில் சொல்லொண்ணா துயருடன் சிதறிக்கிடந்த தமிழ் சமுதாயத்தை உசுப்பிவிட சாரங்கபாணியின் தமிழ் முரசு துணைநின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழர்களை திரட்டி மொழிக்கும் மக்களுக்கும் அன்னியமண்ணில் கிடைப்பதற்கறிய அங்கீகாரம் பெற்றுத்தருகிறார் சாரங்கபாணி.

    இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவரும் முஸ்லீம் பெருமக்களிற் ஒருசிலர் இன்றும் பாக்கிஸ்தான் கனவுகளில் மிதப்பதை கண்டிருக்கலாம்.

    அதற்கு மாறாக சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர்களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெருவோம் என்ற வழியில் செயல்பட்டவர் சாரங்கபாணி. சாதியற்ற தமிழற்கு ஆண்டுதோரும் தைத்திருநாளை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தவர் தமிழவேள் சாரங்கபாணி. இவர் நடத்திய ஒவ்வொரு தமிழ் இன விழாக்களிலும் பிரதமரையும் மந்திரிகளையும் இழுத்துக்கொண்டது இவரது வெற்றிக்கான யுக்தி. தந்தை பெரியாரின் அடியொற்றி அண்ணாவைப்போல் ஆட்சியாளரை அரவணைத்து மக்களுக்கும் மொழிக்குமான காரியங்களை சாதித்துக்கொண்டவர் இந்த தமிழவேள்

    256 பக்கங்களில் அரிய நிழற்படங்களுடன் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லாம். சாலியால் எழுதப்பட்டது என்பதைக்காட்டிலும் சாலியால் பல்வேறுதகவல்களை மாலையாக தொடுக்கப்பட்டது என்பதே பொறுத்தமாக இருக்கும்

    இது சாரங்கபாணி என்ற தனிமனிதரின் சுய வரலாறல்ல.

    சாரங்கபாணி கப்பலேறி சிங்கப்பூர் வந்தார். கடையில் சம்பளத்துக்கு கணக்கெழுதிய சாரங்கபாணி காலப்போக்கில் பத்திரிக்கை தொழிலில் நுழைந்தார். ஒரு சீன மாதை காதலித்து மணந்தார்.ஆறுமக்களைப் பெற்ற.சாரங்கபாணிக்குப்பிறகு அவர் துவக்கிய தமிழ் முரசை அவர் துணைவியார் தொடர்கிறார்

    இந்த நூலில் சாரங்கபாணியின் சுய வரலாறு இவ்ளவுதான்

    மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி தீவு முழுதும் சிதறிக்கிடந்த தமிழினத்தை மற்ற இனத்தவர்களுக்கிணையாக மாற்றியமைக்க தினம் தினம் அவர் எடுத்த சிரத்தை இந்த புத்தகத்தின் பெரும்பகுதியில் இடம் பிடித்திருக்கிறது. வெள்ளையர் ,மலாய்காரர் ,சீனர் ,யூரேஷியர் என்ற நான்கு வகை இனமக்களைக்கொண்ட ஒரு சமூகத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் உரிய அங்கீகாரத்தை ஆட்சியாளர்களோடு இணக்கமாக பயணித்து பெற்றுத்தந்த்தை இந்த நூல் பெருமளவில் விவரிக்கிறது.

    சாரங்கபாணி ஒரு நாத்தீகர் இல்லையென்றாலும் கோவில் குளங்களை சுற்றுபவரும் அல்ல. மொழி இனம் பண்பாடு இவையனைத்திலும் தந்தை பெரியாரின் கருத்துகளையே எதிரொலித்தார்..புலம் பெயர்ந்த தமிழற்கு ஆட்சியாளருடன் இணக்கமாக இருந்து குடியுரிமை பெற்றது, தமிழுக்கு கல்விக்கூடங்களிலும் ஆட்சியிலும் சமமான அங்கீகாரத்தை பெற்றது இவரது சாதனைகள்.தந்தை பெரியாரைப்போல் சரங்கபாணி தமிழர் வாழ்வில் நுழையாத இடமே இல்லை.சாரங்கபாணியின் சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் பேசுகிற இந்த புத்தகம் அதற்கான ஆவணங்களாக நாற்பதாண்டு தமிழ்முரசு தலையங்க எழுத்துகளையே சாட்சியாக்கியிருக்கிறது. இந்த சாதனை சரித்திரத்தில் அவருக்கு தோள்கொடுத்த பல்வேறு பிமுகர்களின் வாக்குமூலங்கள் கூட ஆவணமாகியிருக்கிறது.சாரங்கபாணியின் தமிழ்முரசு தலையங்கங்கள் பிரமிக்கத்தக்கவை. இன்றைய கல்விக்கூடங்களில் இடம் பெறவேண்டியவை. எளிய நடையில் ஏரளமான தகவல்களுடன் எழுதப்பட்ட இந்தநூல் முக்கியமாக படிப்பதற்கு நாவலைப்போன்று சுவாரஸ்யமானது.

    உலகளாவிய பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வழியேற்பட்டிருக்கும் இந்த காலங்களில் நம் பக்கத்து தேசங்களான சிங்கப்பூர் மலேசியாவின் கடந்த கால நிகழ்வுகளை நாம் அறிந்திருப்பது நல்லது. அதற்கு சாலியின் நூல் துணை நிற்கும்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 11ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    (அவருடைய அன்னை மறைந்தபோது அவருக்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடியவை.)

    ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப்
    பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
    கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை
    எப்பிறப்பிற் காண்பேன் இனி. 1.

    பத்து மாதங்கள் சுமந்து, அங்கம் தளர்ந்து வருந்திப் பெற்று, ஆண் குழந்தை என்றுணர்ந்து தன் உடல் நோவெல்லாம் மறைந்து மனம் களிப்புற்று, குழந்தையைத் தன்னிரு கரங்களில் ஏந்தித் தாய்ப்பால் அளித்து என்னைப் போற்றி வளர்த்த அந்தத் தாயை இனி நான் எந்தப் பிறவியில் மீண்டும் காண்பேன்.

    முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாட்சுமந்தே
    அந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
    சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
    எரியத் தழம் மூட்டுவேன். 2.

    தனக்கொரு மகவு வேண்டுமென்று பலகாலம் தவமாய்த் தவமிருந்து முன்னூறு நாட்கள் வயிற்றில் சுமந்து, அந்தி, பகலென்று பாராமல் சிவபெருமானை வழிபட்டு, வயிறு முட்டக் குழந்தையைச் சுமந்து பெற்ற தாய்க்கோ நான் அவள் உடலை தீக்கு இரையாக்குவேன்.

    வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
    கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து – முட்டச்
    சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
    விறகிலிட்டுத் தீ மூட்டுவேன். 3.

    தூளியிலும், மரத் தொட்டிலிலும், தன் மார்பின் மேலும், தோள்மீதும், கட்டிலிலும் வைத்து என்னை அன்பு செலுத்தி பறவைகள் தன் குஞ்சுகளைத் சிறகுவிரித்துக் காப்பதுபோல் காப்பாற்றி என்னைச் சீராட்டிய அன்னையை விறகுகளை அடுக்கி எப்படி நான் தீ மூட்டுவேன்.

    நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
    தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்திபகல்
    கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
    மெய்யிலே தீ மூட்டுவேன். 4.

    உடல் வருந்தி என்னைச் சுமந்து பெற்று, என் உடல் வருந்தாமல் என்னைத் தன் கரங்களிலே ஏந்தித் தாய்ப்பால் அருந்தக் கொடுத்து வளர்த்தெடுத்து, காலை மாலை பாராமல் எப்போதும் என்னைக் கீழே விடாமல் கைகளிலே வைத்துக் காப்பாற்றிய என் தாய்க்கோ உடலில் தீ மூட்டுவேன்.

    அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
    வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
    தேனே அமிழ்தமே செல்வத் திரவியமே
    மானே என அழைத்த வாய்க்கு. 5.

    என்னை இனிய தேனே, அமிழ்தே, செல்வமே, திரவியமே, மானே என்று அனை அன்போடு அழைத்த அன்னைக்குப் பெருமைகள் செய்யாமல் அவள் வாய்க்கு நானே வாய்க்கரிசி போடுவதோ.

    அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
    கொள்ளி தனை வைப்பேனோ கூசாமல் – மெள்ள
    முகம்மேல் முகம் வைத்து முத்தாடி என்றன்
    மகனே என அழைத்த வாய்க்கு. 6.

    சின்னக் குழந்தையாய்த் தரையில் படுத்து கைகால்களை நான் அசைத்து விளையாடியபோது என்னை மெள்ள எடுத்து முகத்தின் மேல் தன் முகம் வைத்து முத்தம் கொடுத்து, என் அருமை மகனே என அழைத்தத் தாயின் வாயில் நான் இப்போது அரிசியிட்டுத் தலைமேல் கொள்ளியையும் வைப்பது எங்ஙனமோ.

    முன்னையிட்ட தீ முப்புரத்திலே
    பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
    அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
    யானுமிட்ட தீ மூள்க மூள்கவே. 7.

    முற்காலத்தில் சிவபெருமான் இட்ட தீ திரிபுரங்களையும் எரித்தது; பின்னர் அனுமன் இட்ட தீ தென் இலங்கையைச் சுட்டெரித்தது; என் உடலில் தாய் வைத்த உயிர்த்தீ இப்போது பற்றி எரிகிறது; நான் இப்போது அவள் உடலுக்கு இடும் தீயும் பற்றி எரியட்டும்.

    வேகுதே தீ அதனில் வெந்து பொடி சாம்பல்
    ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
    குருவி பறவாமல் கோடாட்டி என்னைக்
    கருதி வளர்ந்தெடுத்த கை. 8.

    வெட்ட வெளியில் என்னை எடுத்துச் சென்றால் வானில் பறக்கும் பறவை தோஷம் எனக்குப் பட்டுவிடும் என்று எச்சரிக்கையோடு என்னை எடுத்து வளர்ந்த அன்னையின் இரு கரங்களும் தீயினால் பற்றி எரிகிறதே, பொடிப்பொடியாய் சாம்பலாய் ஆகின்றதே, அந்தோ என் செய்வேன்.

    வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
    வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
    உன்னையே நோக்கி உகந்து வரங்கிடந்து என்
    தன்னையே ஈன்றெடுத்த தாய். 9.

    திரு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபனாய் எழுந்தருளியிருக்கும் பரஞ்சோதிச் சுடரே! சதாகாலமும் உன்னையே எண்ணி பூசித்து வணங்கி வரம்பெற்று என்னை இப்பூவுலகில் மகவாகப் பெற்ற என் அன்னை தீயினில் வெந்தாளோ, வெந்து உந்தன் திருவடிகளை அடைந்தாளோ, என்னையும் தன் மகவு என்பதை மறந்தாளோ.

    வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
    நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால் தெளிக்க
    எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
    எல்லாம் சிவமயமே யாம். 10.

    உயிரோடும் உயிர்ப்போடும் ஜீவகளையோடும் இருந்தாள் என் தாய், வீதிகளில் சென்று உலாவித் தன் வேலைகளைச் செய்தாள், நேற்று இருந்தாள், இன்றோ தீயில் வெந்து சாம்பரானாள். ஆகையால் அவளுக்குப் பால் தெளிக்க எல்லோரும் வாருங்கள், என்ன ஏது என்று எண்ணி வருந்தாதீர்கள், உலகமே சிவமயம், அவனன்றி ஓரணுவும் அசையாது.

    (இன்னும் வரும்)

    Share
  • நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.

    Saturn Portrait 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    நாசாவின் விண்ணுளவி
    சனிக்கோளின் துருவங்களில்
    நர்த்தனம் செய்யும்
    வண்ணத் தோரணங்கள்
    வடிவம் காணும் ! முன்பு
    சனிக் கோளின்
    வட துருவத்தில்
    தனித்துச் சுழல்கின்ற
    ஆறுகரச் சட்ட
    முகில் வடிவம் கண்டது !
    அது வாயு முகில் கோலமா ?
    பூதக்கோள் வியாழன் முகத்தில்
    செந்திலகம் போலொரு
    விந்தை முகில்
    குந்தி உள்ளது
    பல்லாண்டு காலமாய் !
    நாசாவின் விண்ணோக்கி
    பரிதி மண்ட லத்திலே
    உருவில் பெரிதான
    ஒளி வளையம் கண்டது
    சனிக் கோளில் !
    துருவங்கள் மேல் சுற்றி
    விண் ணுளவி
    சனிக்கோளின்
    முழு வட்ட  வடிவை
    முதன்முறைப் படம் எடுத்து
    பூமிக்கு அனுப்பும்
    பொன்னிற வண்ணத்தில்  !

    ++++++++++

    “காஸ்ஸினி விண்ணுளவி அனுப்பிய தகவல் இலக்கம் (Data) ஏறக்குறைய சனிக் கோளின் முழுப்படத்தைக் காட்டுகிறது.  அதன் மூலம் பூதக் கோளில் ஒன்றான சனிக் கோளானது வெளியேற்றும் சக்தியை முதன்முதல் நாங்கள் அறிய முடிந்தது.”

    லிமிங் லி (Liming Li – Cornell University, Ithaca, New York)

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

     

    நாசாவின் விண்ணுளவி  முதன்முறை அனுப்பிய சனிக்கோளின் வடதுருவ முகத்தோற்றம்

    2013 அக்டோபர் 10 ஆம் தேதி நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வடதுருவத்துக்கு மேல் பறந்து பொன்னிறத்தில் தோன்றும் முழுவட்டத் தோற்றத்தை முதன்முதலில் படமெடுத்து அனுப்பியுள்ளது.   நாசா சமீபத்தில் வெளியிட்ட அந்தப் படத்தில் சனிக்கோள் முழு வட்டமாகவும், சாய்ந்துள்ள  சனியின் வளையங்கள் நீள்வட்டத்திலும் பதிவாக்கி இருக்கிறது. [முதல் படத்தைப் பார்க்கவும்].   படத்தில் தெரியும் சனிக்கோளின் படம் இயற்கையான நிறத்தில் வெளியாகி இருக்கிறது.   சனிக்கோளின் வட துருவத்தில் திரண்டெழுந்த ஆறுகர முகில் புயலும் [Hexagonal Gas Storm] தெரிகிறது.

    நாசாவின் காஸினி விண்ணுளவி 2004 ஆண்டு ஜூலை முதல் தேதி சனிக்கோளை வட்ட மிடத் துவங்கியது.   அப்போது சூரிய ஒளி பெற்று, சனிக்கோளின்  பொன்னிறத் தோற்றம்  தென் கோளத்தில் தெரிந்தது.   பிறகு கால நிலை மாறும் போது பொன்னிறம் வட கோளத்தின் மீது காணப் பட்டது.   தற்போது காஸ்ஸினி விண்ணுளவி சரிந்த சுற்று வீதிகள் [Inclined Orbits] எனப்படும் சாய்ந்த சுற்று வழிகளில் [Tilted Orbits] பயணம் செய்கிறது.   இந்த வருடம் [2013] ஏப்ரல் மாதம் முதல் விண்ணுளவி சனிக்கோளின் மத்திய கோடுக்கு 62 டிகிரி சாய்ந்த மட்டத்தில் சுற்றி வருகிறது.   அப்பயண முறை 2015 ஆண்டு ஆரம்ப மாதங்கள் வரை நீடிக்கும்.   காஸ்ஸினி விண்ணுளவியின் பெரும்பானமைக் குறிப்பணி சனிக்கோளின் மத்தியக் கோடுப் பகுதியில் இயங்கும் சனிக்கோள் வளையங்கள், மற்றும் அதன் பல்வேறு  சந்திரன்கள் அரங்குகளைச் சுற்றி வருவதே.

    Cassini Path thru Saturn Rings

    ஒளித் தோரண நீள்வட்ட நகர்ச்சியைச் (Auroral Oval Movement) சனிக்கோள் சுழற்சியுடன் சேர்த்துக் காணும்போது அதே சமயத்து நகர்ச்சியாய் மின்சார ஓட்டத்தைச் சூழ்வெளியுடன் காந்தக் கோளம் (Magnetosphere) இணைத்துக் கொண்ட தொடர்புகளையும் நாங்கள் கண்டோம்.  முடிவாக, இவ்வகை நோக்குகள சனிகோளின் காந்தக் கோளச் சிக்கல் களையும் அதன் குழப்பமான சுழற்சிக் காலத்தையும் (Rotation period) எங்கள் அறிவுக்கு எட்டும் படிக்கு அருகில் எம்மைக் கொண்டு வருகின்றன.

    டாக்டர் எம்மா பியூன்ஸ் (Dr. Emma Bunce, Team Leader, University of Leicester, England)

    “இது ஓர் நூதன நிகழ்ச்சி !  துல்லிய வடிவ அமைப்பில் ஏறக்குறைய சமமான ஆறு நேர்கோட்டுப் பக்கங்கள் கொண்ட அமைப்பகம் இது !  வேறெந்தக் கோளிலும் இது போல் நாங்கள் கண்ட தில்லை. வட்ட வடிவில் அலைகளும், வெப்பச் சுழற்சி முகில்களும் தலை தூக்கிச் சனிக் கோளின் அடர்ந்த வாயுச் சூழ் மண்டலம் வட துருவத்தில் ஆறுகர வடிவத்தை உண்டாக்கி இருப்பதை எவரும் எதிர்பார்க்க முடியாது.”

    கெவன் பெயின்ஸ் (NASA-JPL Cassini Probe Visual & Infrared Mapping Team)

     

    “பெறும் ஒளியை விடத் தரும் ஒளி சனிக்கோளுக்கு இரு மடங்கு மிகையாய் உள்ளது என்பது பல்லாண்டுகளாய் ஒரு புதிராக விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வருகிறது. எவ்விதம் சனிக்கோளில் அவ்வித மிகையான சக்தி உண்டாகிறது என்னும் வினா எழுகிறது.”

    கெவன் பெயின்ஸ் (NASA-JPL Cassini Probe Visual & Infrared Mapping Team)

    “ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ·போய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது.  நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.  அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.”

    ஆனி வெர்பிஸெர் (Anne Verbiscer, Scientist, University of Maryland)

     

    Saturn's Northern Hurricane

    “அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவுக் கணிப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலைநோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத் துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன.  அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும்.  அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன் களை ஆராயக் கூடும் !  அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”

    மிசியோ காக்கு, பௌதிகப் பேராசிரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)

     

    பரிதி மண்டலத்தில் சனிக்கோளின் வியப்புறும் புதிர்த் தோற்றம்

    பல்வேறு பெரிய எழில் வளையங்கள் அணிந்த சனிக்கோள் சூரியனைச் சுற்றிவரும் கோள்களிலே மிகப் புதிரான நூதன அமைப்புக் கோளாகும்  !  2009 ஆண்டின் ஆரம்ப காலத்தில் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்தனுப்பிய படக் காட்சிகளில் தெளிவாக வளையங்களின் விளிம்பையும், சனிக்கோளின் இரு துருவப் பகுதிகளையும் ஒருங்கே காண முடிந்தது.  அப்போது முதன் முறை யாக துருவங்களில் கண்கொள்ளா இரட்டைக் காட்சியாக அசைந்தாடும் ஒளி வண்ணத் தோரணங்கள் வானியல் விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தன !  சனிக்கோளில் துருவ ஒளித் தோரணங்கள் எப்படி உண்டாக்கப் படுகின்றன ?  அவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன ?  அவை பரிதிப் புயலில் (Solar Wind) எழும் பரமாணுக்கள், சனிக் கோளின் காந்த தளங்களைத் தாக்கும் போது ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார்கள் . பூமியின் துருவ வானில் கோலமிடும் ஒளி வண்ணத் தோரணங் களை ஒத்தவை அவை என்றும் தெரிய வருகிறது.


    காஸ்ஸினி விண்ணுளவி ஒளித்தோரண ஓவியத்தைப் படமெடுத்த போது பரிதியின் சமநோக்கு நிலை (*Equinox) சனிக்கோள் மீது விழுந்தது.  அந்த மட்ட நிலை வரும் போது இரு முக்கிய நிகழ்வுகள் நேருகின்றன.  பரிதியின் ஒளிவீச்சு சனிக்கோள் வளையங்களை நேராக ஒரே மட்டத்தில் தொடுகிறது.  அதாவது வளையங்களின் மேற்தளமும், கீழ்த்தளமும் ஒரே சமயத்தில் தெரிகின்றன.  இருதுருவப் பகுதிகளையும் ஒரே சமயத்தில் விண்ணுளவி காண முடிகிறது. இந்த அரிய காட்சியை சனிக்கோளில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் நோக்க முடிகிறது.  சனிக்கோள் பரிதியை ஒருமுறை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகின்றன.  சமநோக்கு நிலையில் பரிதியானது சனிக் கோளின் மத்திய ரேகைக்கு (Equator) மேல் நிற்கிறது.  அப்போதுதான் காஸ்ஸினி விண்ணுளவி 2009 இல் முதன் முறையாக சனிகோளின் துருவங்கள் இரண்டிலும் நடனமிடும் அற்புத ஒளிவண்ணத் தோரணங்களைப் படமெடுத்

    ​ ​

    துள்ளது. அப்போது பரிதியின் ஒளி இரு துருவங்களையும் சமநிலை வெளிச்சத்தில் காட்டுகிறது.  மேலோடியாகப் பார்த்தால் சனிக்கோளின் ஒளித் தோரணங்கள் சம வடிவத்தில் (Symmetric Shape) துருவப் பகுதியில் தெரிந்தன.

    சனிக்கோள் துருவ ஒளித் தோரணங்களின் வேறுபாடுகள்.

    ஒளித் தோரணங்கள் மேலோடியாக ஒன்றுபோல் தோன்றினாலும் கூர்ந்து நோக்கின் இரு துருவ ஒளித் தோற்றங்களில் சில வேறுபாடுகள் தென்பட்டன.  அவற்றின் மூலமாகச் சனிக்கோளின் காந்த மண்டலப் பண்பாட்டின் முக்கிய விளக்கம் வெளியானது. வட துருவத்தில் தெரிந்த ஒளித்தோரண நீள்வட்டம் தென் துருவத் தோரணத்தை விடச் சற்று சிறிதாகவும், திரட்சி மிக்கதாகவும் இருந்தது.  அதன் மூலம் சனிக் கோளின் காந்த மண்டல ஆற்றல் எல்லாப் பகுதிகளிலும் சமநிலை படைத்த அளவில இல்லை என்பது தெளிவானது.  தென் துருவத்தை விட காந்த மண்டல ஆற்றல் வட துருவத்தில் வலு மிக்கதாய் சமச் சீர்மை இல்லாமல் (Strong & Uneven) உள்ளதை அறிய முடிந்தது.

    சனிக்கோள் ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவரச் சுமார் 30 வருடங்கள் ஆகும்.  அந்தக் கால இடை வெளியில் இருமுறைகள் சனிக்கோளின் துருவப் பகுதிகள் தெளிவாய்த் தெரியும்படி இரண்டுக்கும் சூரிய ஒளி பூரணமாய் விழுகிறது.  ஹப்பிள் விண்ணோக்கி 1990 ஆண்டு முதல் சனிக்கோளைப் பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பியிள்ளது.  ஆனால் 2009 ஆண்டில்தான் ஹப்பிள் தொலைநோக்கி நூதனமாய்ச் சனிக்கோளின் அற்புத வளையங்களை நேர்மட்ட நிலையில் நோக்க முடிந்தது.  அதன் இரு துருவஙகளை ஒரே சமயத்தில் பார்த்துப் பரிதி வெளிச்சத்தில் ஒளித் தோரணங்களைப் படமெடுக்க முடிந்தது.  அப்போது வானியல் ஆய்வாளருக்குச் சனிக்கோளின் இரு துருவங்களைக் கவனித்து ஆராய நீண்ட நேரம் கிடைத்தது.  ஒரே பட நோக்கை நெடு நேரம் பதிய வைத்து நுணுக்கமாய் ஆய்வு செய்ய ஏதுவானது.  2009 ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சனிக்கோள் துருவத் தோரணங்களில் தொடர்ந்து மாறுதலைக் காண முடிந்தது.

     

    பரிதியின் தூர ஒளிவீச்சு பாயும் சனிக்கோள் எவ்விதம் பாதகம் அடைகிறது ?

    வெகுதூரத்தில் இருந்தாலும் சூரியனின் அழுத்தமான கதிரொளித் தாக்குதல் சனிக்கோளில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.  பரிதியிலிருந்து கிளம்பும் கதிர்த் துகள்கள் சூரிய மண்டலக் கோள்கள் அனைத்திலும் பரிதிப் புயலாய்ப் (Solar Wind) பாய்கின்றன.  பரிதியின் மின்னேறிய பரமாணுக்கள் (Electrically Charged Sub-atomic Particles) காந்த தளமுடைய சனிக்கோள் அல்லது நமது புவியை நெருங்கும் போது, காந்த தளம் அவற்றைக் கவ்விக் கொள்ள, அவை துருவங்களின் இடையே பந்துபோல் அங்கு மிங்கும் எறியப் படுகின்றன.  அதன் இயற்கை விளைவுகள் என்ன ?  கோளின் காந்த மண்டல வடிவமைப்பு, இரு துருவங்களுக்கு இடையே புலப்படாத காந்தப் போக்கு வீதிகள் (Invisible Magnetic Traffic Lanes).  அந்த வீதிகளில் முடக்கமான மின்னேறிய துகள்கள் அசைந்தாடி வருகின்றன !  துருவப் பகுதியில் காந்த மண்டல் ஆற்றல் வலுவானதால் மின்னேறிய துகள்கள் பேரளவில் சேமிப்பாகின்றன !  சனிக்கோளின் மேலடுக்கு மட்டத்தில் உலவி வரும் அணுக்களோடு அத்துகள்கள் மோதிப் பூமிபோல் வட தென் துருவங்களில் வண்ண மயமான ஒளித் தோரணத்தை உருவாக்குகிறது.

    2004 ஆண்டில் காஸ்ஸினி- ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக்கோளைச் சுற்ற ஆரம்பித்தது முதல் இந்த ஆய்வு முயற்சிகளை நாசா, ஈசா (NASA & ESA -American & European Space Agencies) இரண்டும் இணைந்தே செய்து வருகின்றன.  இந்த ஆய்வுக் குழுவின் தலைவி டாக்டர் எம்மா பியூன்ஸ் (Dr. Emma Bunce). 2012 மார்ர்ச் 27 இங்கிலாந்து மான்செஸ்டரில் ஏற்பாடான தேசீய வானியல் விஞ்ஞானக் கூட்டரங்கில் (National Astronomy Conference) குழுத் தலைவி எம்மா ஓர் ஆய்வுரையை வாசித்தார்.

    2009 ஆண்டில் முதன்முதல் காஸ்ஸினி விண்ணுளவி இருட்புறச் சனிக்கோளின் துருவத் தோரணம் இணைக்கும் காந்த வீதிகளைக் குறுக்கிட்டுச் சென்றது.  அப்போதுதான் டாகடர் எம்மா பியூன்ஸும் அவரது சகாக்களும் இரு துருவ ஒளித் தோரணங்களின் புறவூதாப் படங்களை (Ultraviolet Images) அழகாக எடுக்க முடிந்தது.  சுற்றி வரும் வீதி அமைப்புக் காலப்படி காஸ்ஸினி விண்ணுளவி மத்திய ரேகைப் பகுதியைச் சுற்ற 11 மணிநேரம் பிடித்தது.

     

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் வானியல் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலைநோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்

    ​ ​

    கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்த

    ​ ​

     வரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

    1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை

    ​ ​

    நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

     

    சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

    காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

    வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

    காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

    பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார். வியாழனுடைய பட்டைகளையும், புள்ளிகளையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

    Northern Hurricane

    ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங் களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப் படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச்‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினியின் வளை கோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

    வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

    [தொடரும்]

    ++++++++++++++

    * Equinox of Solar Planets

    Equinox on Earth, when the Sun is positioned directly over our equator, happens twice a year. Due to Earth’s tilted rotational axis, as we orbit the Sun the latitude over which the Sun shines directly cycles north and south between the latitudes of the Tropics. On its way north to warm our (Northern Hemisphere) summers or south to leave us in the chill, the Sun crosses the equator on the equinoxes (Fall and Spring).

    The same thing happens on Saturn, with two differences. First, Saturn takes nearly 30 years to orbit the Sun, so equinox comes only about every 14 years. Second, Saturn has its system of rings that encircle the planet directly above its equator, serving as a visible extension of the equator. At Saturn’s equinox, the Sun is not only directly over the equator, but sunlight strikes the rings edge-on, like a flashlight shining on a flat piece of paper from the edge, the light just grazing over the surfaces on either side.

    +++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, ESA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)
    15 Skymania.com : Saturn’s Biggest Ring is Out of Hiding By : Paul Southerland (October 7, 2009)
    16 Associated Press : NASA Telescope Discovers Giant Ring Around Saturn (October 6, 2009)
    17 The Cavalier Daily : University Researchers Find Large Saturn Ring By : Katherine Raichlen (October 8, 2009)
    18 NASA Release : NASA Space Telescope Discovers Largest Ring Around Saturn By : Whitney Clavin (October 6, 2009)
    19 Astronomers Discover Solar System’s Largest Planetary Ring Yet Around Saturn (Update) By : John Matson (October 7, 2009)
    20 NASA Report : The King of Rings – Saturn’s Infrared Ring (October 6, 2009)
    21 Natural News : Giant Hexagon of Clouds Spins on Saturn While Clouds disappear from Jupiter By Mike Adams  (May 15, 2010)
    22 Saturn’s Hexagon Recreated in the Laboratory By : Emily Lakdawalla (May 3, 2010)
    23 Daily Galaxy – Cassini Spacecraft Delivers a New View of Saturn (November 11, 2010)
    24 Daily Galaxy – The Unsolved Mystery of Saturn Hexagon – Four Times the Size of Earth (November 12,  2010)
    25 Wikipidea : Saturn – North pole hexagonal cloud pattern  (November 18, 2010)
    26 http://jayabarathan.wordpress.com/2010/12/10/astronomer-giovanni-cassini/
    27. Science Daily : Saturn’s Aurora Offer Stunning Double View By Hubble Telescope (February 11, 2010)
    28. Saturn Daily : Cassini Spaceship Makes Simultaneous Measurements of Saturn’s Nightside Aurora &  Electric Current System (April 5, 2012)

    29.  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2013-311  [October 25, 2013]

    30.  http://www.saturndaily.com/reports/Cassini_Swings_Above_Saturn_to_Compose_a_Portrait_999.html  [October 31, 2013]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) November 2, 2013
    http:jayabarathan.wordpress.com/

    Share
  • இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்! (2013)

    round

    தீபாவளி தீபாவளிதான்!Ha. Di

    தீபாவளி சிந்தனைகள்

    சிறு வயது குறும்புகள்

    தேடுமிடம்!

     

    அருளுடை அன்னை சாரதா தேவியார்

    Fall colors in Shade’s Mill – Cambridge, Acrylic

    இசைபட வாழ்தல்

    காப்பு 

    நடராஜன்

    குல தெய்வம்

    diwa

    புஜ்ஜியும் பொம்மைகளும்

    நேயம் ம​றைவதில்​லை

    ஓசை

    உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

     

    மனித நேயம்!buss

    கரையாக் காகங்கள்

    அரசியல் தீபாவளி…

    பட்டாசு வெடிக்கலாமா செல்லம்?

    நாக்பூரின் புதிய ஐயப்பன் கோவில்

    யம தீபம்

    ஓய்வு பெறும் ஒரு கிரிக்கெட் சகாப்தம் (ஸச்சின் டெண்டுல்கர்)

    ஜோதிடத்தில் ஐப்பசியின் சிறப்பு!20101106014834_dsc_0842-300x200

     பண்டிகை தந்ததொரு  பாடம் 

     

    தீபநாள் வேண்டுதல்…

     

    தீபாவளி நல்வாழ்த்துகள்

     

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 10ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    அடியார் உறவும், அரன் பூசை நேசமும், அன்பும் அன்றிப்
    படிமீதில் வேறு பயன் உளதோ, பங்கயன் வகுத்த
    குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக் கலங்கள்
    தடியால் அடியுண்ட வாறொக்கும் என்று இனம் சார்ந்திலரே. 1.

    சிவநேசச் செல்வர்களான அடியார்களின் நட்பும், சிவபெருமானுக்குச் செய்கின்ற பூஜைகளும், அவர் மீது செலுத்துகின்ற அன்பையும் உள்ளடக்கிய பக்தி மார்க்கத்தை விட இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு வேறு நல்ல செயல் ஏதேனும் இருக்கிறதா என்ன? பிரமன் படைப்பில் நமக்கென்று அமைந்த சுற்றத்தார், மனைவி முதலான உறவினர்கள், அவர்களோடு இனிது வாழ்கின்ற வாழ்க்கை இவைகள் யாவுமே குயவன் செய்த மட்பாண்டங்களைத் தடியால் அடித்தால் என்னவாகுமோ அதைப் போல ஆகும் என்பதை எண்ணி நல்லோர் நட்பை சார்ந்திருக்கவில்லையே.

    ஆங்காரப் பொக்கிசம், கோபக் களஞ்சியம், ஆணவம்தான்
    நீங்கா அரண்மனை, பொய்வைத்த கூடம், விண் நீடிவளர்
    தேங்கார் பெருமதிற் காம விலாசம், இத்தேகம் கந்தல்
    பாங்காய் உனைப் பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே. 2.

    என்னுடைய இந்த உடல் இருக்கிறதே இது கிழிந்து போன தோலால் ஆன பை. இது எப்படி இருக்கிறது தெரியுமா, அகங்காரத்தை உள்ளடக்கிய பொக்கிஷம், கோபத்தைத் தேக்கி வைத்த களஞ்சியம், ஆணவம் குடிகொண்ட அரண்மனை, பொய் கோலோச்சுகின்ற கூடம், விண்ணை முட்டும் பெரிய மதிற்சுவரைக் கொண்ட காமவிலாச மாளிகை. இவை அத்தனையையும் நீக்கிவிட்டு இறைவா உன்னைப் பணிந்து வணங்கி நற்கதி அடைகின்ற ஞானத்தைப் பெறுவது எங்ஙனம்?

    ஒழியாப் பிறவி எடுத்து ஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே
    அழியாப் பதவிக்கு அவுடதம் கேட்டி, அனாதியனை
    மழுமான் கரத்தனை மால் விடையானை மனத்தில் உன்னி
    விழியால் புனல் சிந்தி விம்மி அழு; நன்மை வேண்டும் என்றே. 3.

    ஓயாமல் திரும்பத் திரும்பப் பிறந்து, பின் இறந்து இப்படி எத்தனையோ பிறவி எடுத்து மனம் வருந்தி தவிக்கின்ற என் நெஞ்சே! அழிவற்ற முக்தி நிலையை அடைய உனக்கு ஒரு மருந்தைச் சொல்கிறேன் கேள்! தொடக்கமோ முடிவோ இல்லாத ஆதி அந்தமில்லாப் பெருமானை, மழு, மான் இவற்றைத் தன் கரங்களில் தாங்கியவனும், திருமாலை ரிஷபமாகக் கொண்ட சிவபெருமானை மனத்தால் தியானித்து, கண்ணீர் விட்டு அழுது அரற்றி, அவனது அருட்கருணை வேண்டுமென்று வரம் கேட்டு உய்வாயாக.

    நாய்க்கொரு சூலும், அதற்கோர் மருத்துவம் நாட்டில் உண்டோ?
    பேய்க்கொரு ஞானம் பிடிபடுமோ பெரும் காஞ்சிரங்காய்
    ஆக்குவார் ஆர் அது அருந்துவர் ஆர் அதுபோல் உடம்பு
    தீக்கிரை ஆவதல்லால் ஏதுக்காம் இதைச் செப்புமினே. 4.

    *நாய் கர்ப்பமாக இருந்தால் அதை வைத்தியம் செய்து பிரசவம் எல்லாம் பார்க்கிறோமா என்ன? பேய்களுக்கு நல்ல ஞானம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமா என்ன? எட்டிக் காயை பயிராக்கி காய்த்தால் அதை உண்பார் உண்டா என்ன? அதுபோலத்தான், இந்த நம்முடைய உடல் இருக்கிறதே இதிலிருந்து ஆவி நீங்கிவிட்டால் தீக்கு இரையாவதைத் தவிர வேறு பயன் உண்டோ சொல்.

    *அந்தக் காலத்தில் நாய் சினை கொண்டிருந்தால் அதற்கு மருந்து கொடுத்து மருத்துவம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறார். இபொழுது வளர்ப்புப் பிராணிகளாக நாய் வளர்ப்போர் அதையும் செய்யலாம்.

    கச்சிற் கிடக்கும் கனதனத்திற் கடைக்கண்கள் பட்டே
    இச்சித்திருக்கின்ற ஏழை நெஞ்சே, இமவான் பயந்த
    பச்சைப் பசுங்கொடி உண்ணாமுலை பங்கர் பாதத்திலே
    தைச்சுக்கிட மனமே ஒருக்காலும் தவறில்லையே. 5.

    பெண்களின் மார்பில் கச்சைக்குள் அடங்கிய கனத்த தனங்களின் மீது இச்சைகொண்டு அலையும் பேதை நெஞ்சே! மலையத்துவஜனின் மகளான பச்சைப் பசுங்கொடியன்ன விளங்கும் அந்த உமாதேவியாம் உண்ணாமுலை அம்மையைத் தன் உடலின் வாமபாகத்தில் கொண்ட சிவபெருமான் பாத கமலங்களில் மனத்தைச் செலுத்திக் கிடந்தால் உனக்கு ஒரு துன்பமும் வாராதே.

    மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவுங்
    கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லை
    போனாலும் பேறிருந்தாலும் நற்பேறிது பொய்யன்று காண்
    ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே. 6.

    மானின் விழிகளையொத்த வேல்விழி மாதர்களின் மோகவலையைக் கடந்து அதிலிருந்து விடுபட்டு வந்துவிட்டேன், ஞானகுருவாக வந்து இறைவன் அருள்பாலித்து என்னை ஏற்றுக் கொண்டனன்; ஆகையால் எனக்கு இனி ஒரு குறையுமில்லை. இந்த பூத உடல் இருந்தாலும் சரி, இல்லை அழிந்தாலும் சரி எனக்கு எந்தக் குறையுமில்லை; அப்படிப்பட்ட நற்பேற்றினை நான் பெற்றுவிட்டேன், இஃது உண்மை. இருந்தாலும் இந்த இழிவான உடலைத் தாங்கிக் கொண்டிருப்பது எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது.

    சற்றாகிலும் உந்தனைத் தானறியாய் தனை ஆய்ந்தவரை
    உற்றாகிலும் உரைக்கப் பொருந்தாய் உனக்கான நிலை
    பற்றாய் குருவைப் பணியாய் பரத்தையர் பாலிற் சென்று என்
    பெற்றாய் மட நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தனுமே. 7.

    ஏ மட நெஞ்சமே! ஒரு சிறிதாவது உன்னைப் பற்றி நீ யார் என்பதை ஆராய்ந்தறிந்து பார்த்திருக்கிறாயா? இல்லையே! போகட்டும் அப்படித் தன்னைத் தானே யார் என்று வினா எழுப்பி ஆய்ந்து அறிந்து ஞானம் பெற்றவரை அணுகி அவர் உரையையாவது கேட்டதுண்டா? இல்லையே. ஆகையால் உனக்கு ஏற்ற நிலை எது என்பதை எண்ணி அதனைப் பின்பற்றுவாயாக. சற்குருநாதரைக் கண்டு அவர் பாதங்களைப் பணியாமல், பொதுப் பெண்டிர் இல்லம் சென்று நீ பெற்றதென்ன? உன்னைப் போன்ற பித்தன் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை.

    *உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
    புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன் உயர் பொன் எனவே
    ஒளியிட்ட தாள் இரண்டுள்ளே இருத்துவது உண்மையென்று
    வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலனே. 8.

    கல்லை உளியால் செதுக்கிச் சிற்பமாக ஆக்கிய விக்கிரகத்தையும், மிக அழகாக உருவாக்கிய சுண்ணாம்பினால் ஆன சிலையையும், புளியினால் தேய்த்துப் பளபளக்கும் செம்பினால் ஆன விக்கிரகத்தையும் நான் போற்றி வணங்க மாட்டேன். பொன்மேனி அமைந்த பரமேஸ்வரனின் தாமரைப் பாதங்கள் இரண்டையும் என் நெஞ்சத்துள் பதித்து வைத்து விட்டேன், எனவே இனி எனக்கு ஒன்றும் வேண்டியதில்லை.

    *பத்ரகிரியாரும் தன் பாடலொன்றில் இப்படிச் சொல்லுகிறார்: “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும் புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்”.

    கல்லால் எறியுண்டும் காலால் உதையுண்டும் காளை கையில்
    வில்லால் அடியுண்டும் முன்னாள் விடம் உண்டு மேவிளித்துப்
    பல்லால் புரமெரி ஏகம்பவாணர் பதாம் புயத்தின்
    சொல்லார் செவியினிற் கேளாதிருந்தது என் தொல்வினையே. 9.

    சாக்கிய நாயனார் எறிந்த கல்லால் அடிபட்டும், காளத்தி வேடன் கண்ணப்பன் தன் காலால் உதையுண்டும், இளையவனான அர்ஜுனனிடம் வில்லாம் அடிபட்டும், அந்த நாளில் பாற்கடலைக் கடந்தபோது எழுந்த ஆலகால விடத்தை உண்டு கண்டத்தில் தாங்கியும் இப்படி சிரமங்களையெல்லாம் பட்டபோதும், பற்கள் தெரிய புன்னகைத்த ஏகம்பவாணருடைய பொன்மலர் பாதங்களைப் பாடிய பனுவல்களைக் காதால் கேளாமலே இருந்தது என் முன்வினைப் பயனே.

    ஒருநான்கு சாதிக்கு மூவகைத் தேவர்க்கும் உம்பருக்கும்
    திருநாளும் தீர்த்தமும் வேறுளதோ அத்திசைமுகனால்
    வருநாளில் வந்திடும் அந்தக் கண்ணாளன் வகுப்பொழியக்
    குருநாதன் ஆணை கண்டீர் பின்னை ஏது இக்குவலயத்தே. 10.

    நான்கு வருணத்தார்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும், இவர்கள் அல்லாத மற்ற தேவர்களுக்கும் திருவிழாவோ அல்லது புண்ணிய தீர்த்தமோ வேறு ஏதேனும் உண்டோ? பிரம்ம தேவன் வகுத்தபடி அதது அந்தந்த நாட்களில்தான் வரும். பிரம்ம சிருஷ்டிப் பணி முடியும் காலத்தில் பரமகுருவான பரமேஸ்வரனின் பாதரவிந்தங்களே கதி என்பதைத் தவிர வேறு என்ன உண்டு இந்த உலகத்தில்.

    (இனி வருவது பட்டினத்தார் தன் அன்னைக்கு அந்திமத் தீயிட்டபோது பாடிய பாடல்கள்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்! …81

    சக்தி சக்திதாசன்

    scl3 scl2 scl1

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    வாயுபகவானின் சீற்றத்துக்கு இலக்காகி சூறாவளியினுள் சுழன்றடித்து விட்டு ஓரளவு நிலையாக நிற்கின்ற இங்கிலாந்தின் தென்பகுதியில் இருந்து மீண்டும் ஒரு மடலின் வாயிலாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இல்லங்கள் அனைத்தும் ஒளிமயமாக தீபாவளி எனும் இத்திருநாள் இதோ மிக அருகில் நெருங்கி விட்டது.

    இல்லங்களின் சூழ்ந்துள்ள கருமையை மட்டுமல்ல மனித உள்ளங்களின் கருமையையும் ஓட்டிவிட அனைத்து உள்ளங்களும் ஒளிமயமாக மனிதாபிமானம் எனும் இனிய உணர்வின் அடித்தளத்தில் அனைவரது வாழ்விலும் இனிய நிகழ்வுகள் பொங்கட்டும்.

    சமீபத்தில் இங்கிலாந்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு நிகழ்ச்சி மனதில் பல எண்ணங்களை அலை மோதப் பண்ணியது.

    சுகாதாரம் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. இச்சுகாதாரத்தைச் சரியாகப் பேணாததினால் நோய்வாய்ப்ப்படுவோர் பலர்.

    நாமும் நாம் சார்ந்த இடமும் மட்டுமே எமது வாழ்க்கைக்குப் போதுமானது என்று எண்ணும் மனப்பான்மையே இன்றைய அவசர உலகத்தில் நிலவுவது போலத் தெரிகிறது.

    என்னருகில் இருக்கும் குப்பையை அப்புறப் படுத்தி விட்டால் போதும் அக்குப்பை மற்றொருவர் அருகில் போய் விழுந்து அவர் அதனால் அருவருப்படைவதைப் பற்றிய கவலை எமக்கில்லை என்னும் மனப்பாங்கிலேயே பலர் நடந்து கொள்வது போன்று தென்படுகிறது.

    இன்றைய இங்கிலாந்தின் தெருக்களில் காணப்படும் குப்பைகள் எப்படி அங்கே வருகின்றன ? அதற்குக் காரணம் யார்?  எனும் கேள்விகள் எழும்போது அதற்கான விடையும் தயராக எமது மனங்களினுள் இருக்கிறது.

    இத்தகைய தெரு அசுத்தங்களின் பொறுப்பும் எமது தலைகளிலேயே விழுகிறது. நாம் ஒவ்வொருவரும் இந்நாட்டின் பிரஜைகள் நாம் வாழும் நாடு மிகவும் சுத்தமான நாடாக இருப்பது நாம் வாழும் வீட்டின் சுத்தத்தினால் நாம் எத்தனை பெருமையடைகிறோமோ அத்தகிய பெருமையை எமக்கு அளிக்க வேண்டும்.

    ஆனால் அப்படி பெருமை கொள்பவர்கள் எத்தனை பேர் எனும் கேள்வி எழுந்தால் அதற்கான பதில் வேதனையைத்தான் தரும்.

    இதன் காரணம் என்ன ?

    சொந்த வீட்டில் வசிப்பதற்கும் வாடகை வீட்டில் வசிப்பதற்கும் இடையிலான வேறுபாடே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது.

    தமது சொந்த வீடுகளில் வாழ்பவர்கள் அவ்வீட்டை சுத்தமாக எடுக்கும் முயற்சிகளை தாம் வாடகைக்கு இருக்கும் வீட்டைச் சுத்தப்படுத்துவதில் எடுப்பார்களா ?

    சந்தேகமே !

    இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையானோர்தாம் வாழும் நாட்டை தமக்கு உரிமையுள்ள ஒரு நாடாக எண்ணிப்பார்பதில்லை.

    இம்மனப்பான்மையை நான் பல புலம் பெயர்ந்த மக்களிடையே காண்கிறேன். தமக்கு வாழ்விடமும், வாழ்வாதரத்திற்கான வசதிகளையும் செய்து தந்த இப்புகலிட நாட்டிற்கு தமது தாய்நாட்டை விட அதிக கெள்ரவமளிக்க வேண்டிய தேவையிருந்தும் ஏதோ வாடகை வீட்டில் வாழ்வது போன்ற ஒரு மனப்பான்மையில் வாழ்வதைக் காணும்போது உள்ளத்தில் கொஞ்சம் வேதனை எழத்தான் செய்கிறது.

    இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பிரதான சாலையில் ஒரு பக்க நடைபாதையை சாலையைத் துப்பரவு செய்யும் மாநகரத் தொழிலாளிகள் துப்பரவு செய்த அதேநேரத்தில் மறுபக்கத்தை 24 மணி நேரம் துப்பரவு செய்யாமலே விட்டு விட்டார்கள்.

    விளைவு !

    துப்பரவு செய்யப்படாத நடைபாதையோரம் குப்பை கூழங்களால் நிறைந்து காணப்பட்டது.

    அருகில் குப்பைத் தொட்டிகள் இருக்கக்கூடியதாக குப்பைகளை நடைபாதையில் போட்டு விட்டு எதுவித அக்கறையுமில்லாமல் நடக்கும் பலரைக் காணக்கூடியதாக இருந்தது.

    இச்சாலை துப்பரவிற்காக வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் வரையில் செலவு செய்யப்படுகிறது.

    இதர்காகச் செலவிடப்படும் பணத்தில் சுகாதாரச் சேவையில் மேலும் எத்த்னையோ ஆயிரம் தாதிகளையும், டாக்கடர்களையும் நியமிக்கலாம்.

    பாடசாலைகளின் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தலாம். வேலையர்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை உயர்த்தக்கூடிய வகையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்க இப்பணத்தை உபயோகிக்கலாம்.

    ஆனால் பொறுப்பர்ர தன்மையில் நாம் நடந்து கொள்வதால் எமது குப்பைகளை அகர்றுவதர்காக இப்பணம் செலவிடப்படுவது மிகவும் பரதூரமான கண்டனத்துக்குரியது என்றார் அந்நிகழ்ச்சியை நடத்தியவர்.

    இதைத்தான் அழகாக எமது புரட்சித் தலைவர் தனது பாடல் ஒன்றில்,

    “நாடென்ன செய்தது நமக்கு

    எனக் கேள்விகள் கேட்பது எதற்கு

    நீயென்ன செய்தாய் அதற்கு என

    நினைத்தால் நன்மை உனக்கு ” என்றார்.

    ஒரு நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் அந்நாட்டின் பாராமரிப்பில் பங்குண்டு. குறிப்பாக தமது நாட்டின் சுத்தத்தைப் பேணுவதில் நாம் ஒவ்வொருவருமே பலவிதமான் பங்களிப்புகளைச் செய்யலாம். செய்ய வேண்டியது எமது தார்மீகப் பொறுப்பு.

    அனைத்து இல்லங்களிலும் ஒளிரும் தீபாவளித் தீபங்கள் அவ்வில்லங்களின் கருமையை மட்டுமல்ல மனித மனங்களில் உள்ள கருமைகளையும் விரட்டட்டும்.

    என் இனிய வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி – 9

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

    அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில். சைவ சமயம் வலியுறுத்தும் கருத்து இது. இக்கருத்தையே இக்கால அறிவியல் அறிஞர்
    Neil DeGrasse Tyson ““We are part of this universe; we are in this universe, but perhaps more important than both of those facts, is that the universe is in us,” என்கிறார்.(Neil DeGrasse Tyson is the director of the Hayden Planetarium at the American Museum of Natural History and host of NOVA scienceNOW.) இந்த அறிவியல் உண்யையை அக்காலத்திலேயே உணர்த்தியது சைவ சமயமே!

    நமக்குள்ளே இருக்கும் அண்டம்தான் உடல் என்ற பிண்டம். இது வரை இப்பிண்டம் பற்றித் திருமூலர் கூறிய செய்திகளைத் தற்கால அறிவியல்கள் உறுதி செய்வதைக் கண்டோம். இந்தப் பிண்டத்துக்கு வெளியே இருப்பது அண்டம். இது பற்றி மணிவாசகப் பெருமான் உரைப்பதை இனிப் பார்ப்போம். இவரைப் பற்றிய சிறு குறிப்பு ஏற்கனவே இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர் இயற்றிய திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில் அண்டம் பற்றிய தன் கருத்துகளைப் பொதிந்து வைத்துள்ளார் :

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
    நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
    இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச்
    சிறிய ஆகப் பெரியோன் தெரியின். “.

    இதன் பொருள் :

    பிரமாண்டம் எண்ணற்ற கோள்களையுடையது. அக்கோள்களின் தன்மைகளை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள முடியாது.அவற்றின் அழகும் சீரமைப்பும் கண்டு வியப்பதற்கும் ஆராயுமளவிற்கும் உரியவையாய் இருக்கின்றன.ஒவ்வொரு கோளிலும் தனியழகு சிறக்கிறது. விளக்கிச் சொன்னால் கோடிக் கணக்கில் அவை விரிகின்றன.ஓர் ஓட்டையின் வழியாக வீட்டுக்குள் வருகின்ற சூரிய வெளிச்சத்தில் அணுப்போன்ற தூசிகள் அலைந்து திரிவது காணப்படுகிறது. அது போன்று கோள்கள் வானில் மிதந்து கொண்டிருக்கின்றன. அளவில், சிறிய அணுவுக்கும், பெரிய அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும்.ஆராய்ந்து பார்ப்பவர்க்கு இவ்வுண்மை விளங்குகிறது…என விளக்கம் தருவர் சைவ சமயப் பெரியோர்.

    இனிச் சொல்லுக்குச் சொல் பொருள், உட்பொருள் காண்போம்:

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் “

    அண்டம் என்பது முட்டையைக் குறிக்கும். முட்டையின் வடிவம் நீள்கோளம் (ellipse) ஆகும் . எனவே அண்டம் பேரண்டம்’ universe’ என்றெல்லாம் அழைக்கப்படும் அது நீள் கோள வடிவு உடையது என்பதற்காகத்தான் ‘அண்டம்’ என மாணிக்கவாசகர் அழைத்தார் (அல்லது அவருக்கு முன்பிருந்தோர் அழைத்தனர் ) .

    அண்மைக்கால விண்வெளி ஆய்வு அறிஞர்கள் (astrophysicists) இதே கருத்தை இப்போது வெளியிட்டு உள்ளனர். 2001 -இல் NASA அனுப்பிய Wilkinson Microwave Anisotropy Probe (WMAP). என்னும் விண் வெளிக்கலம் ஒன்பது ஆண்டுகளாக விண்வெளியைச் சுற்றி வந்து பல கோடி அரிய தகவல்களை அனுப்பிவைத்தது. அவற்றை அலசி ஆய்ந்த இத்தாலி நாட்டு அறிஞர்கள் அண்டம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர்.

    – அண்டத்தின் வயது 13.75 பில்லியன் ஆண்டுகளாம்

    (http://wikipedia.orange.fr/wiki/Wilkinson_Microwave_Anisotropy_Probe). ;
    – 4 % அளவில்தான் அண்டத்தில் ‘பொருள்’ (matter) சிதறிக் கிடக்கிறதாம் ;
    – 22 % கரும் பொருளாம்.

    இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியிட்ட கருத்து :
    மிகச் சரியான கோள வடிவில் அமையாமல் அண்டம் சற்றே (நீள் வட்ட) மாத்திரை போல அமைந்துள்ளது என்பதே. முட்டை வடிவமே அண்டத்துக்குப் பொருத்தம் என இத்தாலி பெரேரா பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆய்வு அறிஞர்கள் லெயோனார்டொ காம்பனெல்லி பாரி பல்கலைக்கழக ஆய்வு அறிஞர்கள் பவோலா செயா, லுய்ழி டெடெஸ்கோ முதலியோர் கருதுகின்றனர்.

    (Instead of being perfectly round like a globe, the universe might be a bit stretched in shape like a pill. Now astrophysicist Leonardo Campanelli of the University of Ferrara and his colleagues Paolo Cea and Luigi Tedesco at the University of Bari, all in Italy, have found that a universe shaped a bit like an oval can explain this so-called “quadrupole anomaly.”http://www.space.com/2988-bursting-spherical-bubble-universe-pill-shaped.html http://www.nbcnews.com/id/15197712/ns/technology_and_science-space/t/universe-might-be-oval-shaped/#.Umj8iRAlTrY
    எனவே, மாணிக்கவாசகர் பயன்படுத்திய ‘அண்டம்’ என்ற சொல்’ universe’ என்னும் சொல்லுக்குப் பொருத்தமாகவே உள்ளது.

    அடுத்த சொல் : பகுதி. அண்டத்தின் பகுதி எனக் குறிப்பிடும் மாணிக்கவாசகரின் கருத்தில் பகுதி என்ற சொல்லைப் பன்மையாகக் கொண்டால், அறிவியல் பொருள் அதில் புதைந்து இருப்பதை உணரலாம். (பண்டைக் காலத்தில் ‘கள் ‘ விகுதி அதிகம் பயன்படுத்தப்படவில்லை ; ஒருமையே பன்மைக்கும் வரும் ). ஆகவே அண்டத்தில் பல பகுதிகள் உண்டு என்ற பொருள் தொக்கி நிற்கிறது. இக்கால அண்ட ஆய்வறிஞர்கள் (cosmologists) அண்டத்தில் நான்கு பகுதிகள் உண்டு என்கிறார்கள். அவை காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும்சக்திகள், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி. (காண்க :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D).

    அதனைத் தொடர்ந்து வரும் சொல் ‘உண்டை’. உண்டை உருண்டை இரண்டும் ஒரு பொருள் குறித்த இரு சொற்கள் உருள்வது உருளை ; வட்டம்தான் உருளும் எனவே உண்டை என்பதன் வடிவம் வட்டம் அதாவது கோள வடிவம். அண்டப் பகுதியில் உள்ளவை யாவும் கோள வடிவின. நம் உலகமும் அண்டத்தில் உள்ள பகுதிதானே. ஆகவே நம் உலகமும் கோள வடிவிலேயே உள்ளது என்பது பெறப்படும்.இந்த உண்மையை எட்டாம் நூற்றாண்டு மணிவாசகப் பெருமான் வரிகள் எடுத்துரைக்கின்றன. உலகம் தட்டையானது என்றே மக்கள் கருதி வந்த மிக முற் காலத்திலேயே உலகம் உருண்டை என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். புறநானூறு 17 -ஆம் பாடலில் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை

    “இனிது உருண்ட சுடர் நேமி
    முழுது ஆண்டோர் வழிக் காவல” என விளிக்கிறார் குறுங்கோழியூர்க் கிழார்.

    கோள்கள் வடிவத்தால் உருண்டையானது என்பதை இப் புறநானூற்றுப்பாடல் உணர்த்துகிறது. இந்த உண்மையை மேனாட்டார்க்கு உணர்த்த கலிலேயோ கலிலேயி (கி.பி. 1564-1642) வரவேண்டி இருந்தது. மேலும் கதிரோனைச் சுற்றியே கோள்கள் சுற்றுகின்றன என்ற உண்மையும் தமிழர்களுக்குத் தெரிந்து இருந்தது.

    “வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
    இளங்கதிர் ஞாயிறு” எனச் சிறுபாணாற்றுப்படை (242-243) கூறுகிறது காண்க.

    மாணிக்கவாசகரின் இந்தப் பாடலின் நான்காம் சீர் ‘பிறக்கம்’ . இச்சொலுக்குப் பொருள் என்ன? ‘ஒளி ‘ என்றொரு பொருள் உண்டு. திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பதினொன்றாந் திருமுறை யில் இடம் பெறுவது. அருளிச் செய்தவர் பட்டினத்து அடிகள். இந் நூலில் 992 ஆம் பாடலில்

    “மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே
    மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே”

    என்று பாடுகிறார்.இங்கே மின்னலின் ஒளி என்னும் பொருள் தருகிறது ‘பிறக்கம்’ என்ற சொல். ஒளி என்னும் பொருளில் இச்இசால்லைப் பயன்படுத்தும் கம்பர்

    “மணியால் ஓங்கல்
    பிறக்கம் உற்ற மலை நாடு” என்று பாடுவார் :
    காண்க : கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலம்
    (பாடல் 30 வை மு கோ பதிப்பு)

    பிறக்கம் என்பதற்குப் பெருக்கம்,பெரு(க்)குதல் என்றும் பொருள் உண்டு. இதனை “மரகதம் குவால் மாமணி பிறக்கம்” – (திருவண்டப் பகுதி). இதன் பொருள் :பச்சை மணியின் குவியலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும், இப் பொருளில் கம்பரும் ,
    ” வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின” எனச் சுந்தர காண்டம் சூளாமணிப் படலம் 58 ஆம் பாடலில் பாடினார்.

    பிறக்கம் என்ற சொல்லுக்குக் குவியல் என்னும் பொருளும் உண்டு என்கிறது வலைத் தமிழ். (http://www.valaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D–tamil-dictionary109230.html). அது மட்டும் அன்று ; brightness , heap , splendour பிரகாசித்தல் ஒளிப்பிறக்கம் இருண்ட பின்னணியில் ஒளியார்ந்த பொருளின் விளிம்பு பெரிதாகத் தெரியும் நிலை, அவிரொளிக்காட்சி.என்றெல்லாம் பொருள் கொள்ளலாம் என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது.

    (http://glosbe.com/ta/en/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

    http://www.tamillexicon.com/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&option=glossary&act=findout)

    இவற்றைத் தொகுத்துச் சொன்னால், ஒளி, பெருக்கம், குவியல், மாட்சிமை (splendour)…என்று பொருள் தரும் சொல்தான் ‘பிறக்கம்’ என்னும் சொல் என்பது தெளிவு. இத் தெளிவுடன் அண்டப் பகுதி உண்டைப் பிறக்கம் என்னும் சொற்றோடரைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

    அண்டத்தில் உள்ளவை கோள வடிவை உடையவை ; ஒளி தருபவை / பெறுபவை/விடுபவை , குவியலாக இருப்பவை, காட்சிக்கு மாட்சிமையுடன் விளங்குபவை…அண்டம் இப்படி இருப்பதாகத்தான் இக்கால அண்டவியல் உரைக்கிறது. அண்டப் பகுதியில் குவியலாக, தொகுதியாக உள்ளவற்றை ‘galaxy clusters’ என்பர். (காண்க : http://en.wikipedia.or/wiki/List_of_galaxy_clusters). இவற்றைத் தானே மாணிக்கவாசகரும் ‘”அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ” எனப் பாடுகிறார்.

    அண்டத்தின் இன்னொரு தன்மையை அடுத்த வரியில் அவர் வெளிப்படுத்துவதைப் பாருங்கள் : “அளப்பருந் தன்மை”. அளக்க இயலாத தன்மையை உடையதாம் அண்டம். வலிமை வாய்ந்த தொலை நோக்கிகள், நவீன விண்வெளிக் கலங்கள், நெடுந்தொலைவு பாயக் கூடிய உந்தூர்திகள் (rockets) …என நாலு கால் பாய்ச்சலில் அறிவியல் முன்னேறி வந்தாலும், அண்டத்தின் அகல(ம்) நீள(ம்) ஆழங்களையோ காலத்தையோ இன்னும் துல்லியமாக் கணிக்க முடியவில்லையே! அதனால்தான் போலும் மாணிக்கவாசகர், ‘அளக்க முடியாத அண்டம்’ என விளக்குகிறார். நம் நாட்டு ஞானி மாணிக்கவாசகரின் இக்கருத்துக்கு அரண் அமைக்கிறார் அமெரிக்க அரசியல்வாதி ரிச்சர்ட் ஹெச் பேக்கர் :”For most people, we often marvel at the beauty of a sunrise or the magnificence of a full moon, but it is impossible to fathom the magnitude of the universe that surrounds us.” புகழ் பெற்ற எழுத்தாளரும் பெரும் பேச்சாளரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான இன்னோர் அமெரிக்கர் கர்ட் கோப் (Kurt Kobb ) கூறுகிறார் :

    “The one thing we know for certain about the universe is that it is unfathomable. …. No matter how many narratives we construct, literary, historical, scientific or religious, the universe will remain unfathomable.” அளப்பரியது என்னும் பொருளைத் தரும் ‘ ‘unfathomable’ என்னும் சொல்லையே பெய்கிறார்கள்!, மாணிக்கவாசகரைப் போலவே! அமெரிக்கக் கவிஞரும் மெய்ப்பொருள் அறிஞருமான என்றி டேவிட் தோரோ ‘The universe is wider than our views of it’ என்கிறார்.

    மாணிக்கவாசகர் பாடலின் அடுத்த சீர்கள் : “வளப் பெருங் காட்சி” அசர வைக்கிறது. அண்டம் தரும் காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் மாட்சியாம்! 21 -ஆம் நூற்றாண்டு NASA வின் விண்வெளிக்
    கலங்களும் செயற்கைக் கோள்களும் எடுத்து அனுப்பிய வண்ணப் படங்கள் எட்டாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் கூற்று எத்துனை உண்மையானது என்று சான்று பகருகின்றன. Google, Filckr, youtube…போன்ற தளங்களில் அண்டம் பற்றிய படங்களைத் தேடிப் பாருங்கள். சில எடுத்துக்காட்டுகள் :

    http://www.pinterest.com/szokiadams/our-unfathomable-universe/
    (https://www.google.fr/search?q=universe&source=lnms&tbm=isch&sa=X&ei=A_FrUpitJs3whQeysIG4Aw&ved=0CAcQ_AUoAQ&biw=1680&bih=870)
    http://www.flickr.com/search/?q=the+universe%2C+nasa+images
    http://www.youtube.com/watch?v=8Jw27YHrugg&hd=1

    அண்டம் தரும் காட்சியை அதன் அளப்பரும் மாட்சியைக் கவிஞர் வால்ட் விட்மன், “Every cubic inch of space is a miracle” என்று வியக்கிறார்.”Space is the breath of art.” என இன்னொருவர் – Frank Lloyd Wright (கட்டிடக் கலை நிபுணர்) வருணிக்கிறார். ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர், John Muir

    “…flying through space with other stars all singing and shining together as one, the whole universe appears as an infinite storm of beauty.” என எழுதுகிறார்.

    இப்படி அறிவியலார், அவர் அல்லாதவர் என அனைவரையும் கவரும் அண்டத்தின் காட்சி மாட்சிமை உடையதுதானே.

    மணிவாசகர் பாடலின் இரண்டு அடிகளை மட்டுமே பார்த்திருக்கிறோம். நான்கு வரிகளையும் அடுத்த வாரம் காண்போம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 95

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்

     

    காத தூரம் கடந்து சென்று
    பூக்கும் மரங்கள் இருந்த சோலையில்
    கவுந்தியடிகள் எழுந்தருளிய
    தவச்சாலையைக் அடைந்து

    அங்கிருந்த பூஞ்சோலையில்

    இருவரும் தங்கினர்.

     

    கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும்

    இற்றுவிடுமோ என்று ஐயப்படும்படி
    கொடி போன்ற இடையையும்
    நடந்து வந்த களைப்பால்
    மிகவும் வருந்திய பாதங்களையும் கொண்ட
    கருங்கூந்தல் கண்ணகி பெருமூச்செறிந்தனள்.

    தன் கூரிய பற்கள் வெளியே தெரியும்படி
    முற்றாத தன் மழலைச் சொல்லாலே

    கோவலனை வினவினள்:
    “மதுரை மூதூர் இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?”

    கண்ணகியின் அறியாமையும் துயரும் கண்டு
    வருந்திய கோவலன் தானும் வருந்தி,
    “நறுங்கூந்தல் உடையவளே!
    மதுரை மாநகர் இன்னும்
    முப்பது காத தூரத்தில் உள்ளது” என்றனன்.

     

    கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த கவுந்திஅடிகளைத் தொழுதல்

    அதன் பின்னர்,
    தேன் போன்ற மொழியுடைய கண்ணகியோடு
    தவச்சாலைக்குச் சென்று
    கவுந்தியடிகளின் திருவடிகளில்
    வீழ்ந்து வணங்கினன் கோவலன்.

     

    கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்

     

    “அழகும் உயர்குடிப் பிறப்பும்
    பெருமை தரும் ஒழுக்கமும்
    அருக தேவனின் ஆகமவிதிகள்
    பிறழாமல் கடைப்பிடிக்கும் நீங்கள்
    தீவினை செய்தவர்களைப்போல்
    உங்கள் நாட்டை விட்டு நீங்கி
    இங்கே வருவதற்குக் காரணம் யாது?” எனக்
    கவுந்தியடிகள் கேட்க,
    கோவலனும்,
    “அருந்தவத்தை உடையீர்!
    மதுரை நகர் சென்று
    வாணிகம் செய்து
    பொருளீட்ட விரும்புகிறேன்
    என்பதைத் தவிர
    வேறொன்றும் சொல்லும்

    நிலையில் நான் இல்லை…”
    என மறுமொழி பகர்ந்தனன்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (12)

    12. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஸ்பெயின்

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை கவனிக்கும் போது ஒவ்வொரு நாடும் அதன் இப்போதைய நாட்டு எல்லையை அடைய குறிப்பிடத்தக்க போர்களை சந்தித்து வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி அனுபவித்து அவை கடந்து வந்திருக்கும் பாதையை ஒதுக்கி வைத்துப் பார்த்து விட முடியாது. சரித்திரத்தில் மிகப் பல மாற்றங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் அடங்குகின்றது.

    ஸ்பெயினின் எல்லை நாடுகளாக இன்று இருப்பவை போர்த்துக்கலும் பிரான்சும். ஏறக்குறைய 35,000 ஆண்டுகளாக மனித வாழ்க்கை இருந்திருப்பதற்கான தடயங்கள் இங்கு தென்படுகின்றன. ரோமானிய பேரரசு தனது ஆளுமையை விரிவாக்கிய போது இன்றைய ஸ்பெயினின் எல்லைக்குள்ளும் வந்தது இந்தப் பேரரசு. சில நூறு ஆண்டுகள் ரோமானிய ஆட்சி, பின்னர் 8ம் நூற்றாண்டு தொடக்கம் மூரிய இஸ்லாமியர்களின் கைக்குள் ஸ்பெயின் வந்துவிட இஸ்லாமிய கலைகள் பெருகி வளர்ந்த ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாக அக்கால கட்டத்தில் ஸ்பெயின் விளங்கியது. அக்காலகட்டத்தில் நாடெங்கிலும் பதிந்து போன இஸ்லாமியக் கலைகளும் கலாச்சாரமும் கட்டிடக் கலையும் இன்றும் மறையாமல் ஸ்பெயினின் சில நகரங்களில் இருக்கின்றன.

    12ம் நூற்றாண்டு தொடங்கி, 13, 14ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற பல போர்களில் ஆயிரக்கணக்கான போர் வீரர்களின் மரணத்தைத் தாண்டி இஸ்லாமிய ஆட்சி முற்றிலுமாக ஸ்பெயினிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. மீண்டும் கத்தோலிக்க கிறிஸ்துவ ஆட்சி ஸ்பெயினைக் கைப்பற்றி மிகுந்த ஆளுமையுடனும் தீவிரத்துடனும் நாடு முழுமைக்கும் கத்தோலிக்க மதம் சார்ந்த அரசாக உருவாகியது. மூரிய இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட மறைக்கப்பட்ட தனது முந்தைய பாரம்பரியத்தை மீட்டெடுத்தது இந்தப் புதிய அரசு. இந்த முயற்சிகளோடு இப்புதிய அரசின் செயல்பாடுகள் நின்று விடவில்லை.

    கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013)
    கடல் போரினை விளக்கும் ஒரு 17ம் நூற்றாண்டு ஓவியம் (2013)

    ஸ்பெயின் இப்போதைய போர்த்துக்கலையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்ததோடு உலகம் முழுதும் தனது பராக்கிரமத்தை நிலை நாட்ட கடல் வழி பயணத்தில் கவனம் செலுத்தி மிகத்தீவிரமாக பல மாலுமிகளையும் ஆய்வாளர்களையும் இப்பணியில் அமர்த்தியது. வணிகம், புதிய நிலப்பரப்பை கண்டு பிடித்தல் அங்கு தனது ஆளுமை விரிவாக்கம் செய்தல் என்பவை இதன் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையும் அதன் தலையாய நோக்கமாகக் கொண்டு இயங்கியது இந்தப் புதிய அரசு. ஸ்பெயின் அரச பரம்பரையினர் போர்த்துக்கல் மாலுமிகளுக்கு மிகுந்த பொருளுதவியும் தேவையான அனைத்து ஏற்பாட்டு வசதிகளையும் செய்து கடல் வழி பயணத்தை ஊக்குவித்தது. அந்த முயற்சிகளின் பின்னனியில் அமைந்த பயணத்தின் காரணத்தினால் தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்வு நடபெற்றது; வாஸ்கோ ட காமா இந்தியா வந்ததும் நிகழ்ந்தது. கடல் வழி பயணத்தில் ஏனைய ஐரோப்பிய முயற்சிகள் மீண்டும் ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியா வந்து பின்னர் மலாயா தீபகற்ப இந்தோனேசிய தீவுகளை அடைந்ததும் பின்னர் மேலும் பயணத்தை விரிவாக்கி கொரியா, சீன வழிப் பயணங்களை மேற்கொண்டதும் என புதிய பாதைக்கு ஆதாரமாக அமைந்தது இந்த முயற்சிகளின் தொடர்ச்சிகள். இந்த மாலுமிகள் ஈடுபட்ட கடல் வழி பயண ஆய்வுகளின் வழியாக ஆய்வு உலகில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. மிக முக்கியமாக இன்றைய உலகின் பல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு தாக்கமும் அடிப்படையும் கொடுத்த பெருமை இந்த வகை முயற்சிகளையேச் சாரும்.

    கடல் வழி பயணம் மேற்கொண்டு இந்த மாலுமிகளும் ஆய்வாளர்களும் மேற்கொண்ட பயணங்களினால் ஸ்பானிஷ் மொழி உலகின் சில குறிப்பிடத்தக்க நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆகியிருக்கின்றது. உருளைக்கிழங்கு, மிளகாய், முந்திரி, தக்காளி போன்ற தாவர உணவுகள் ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகின. கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் அமெரிக்கா முழுமைக்கும், ஆசிய நாடுகளில் அதிலும் குறிப்பாக இந்தியாவிலும் காலூன்றியது.

    ஸ்பேனிஷ் மாலுமிகள் இவ்வகைப் பயணங்களில் செல்லும் போது தமது கப்பலில் கத்தோலிக்க மத குருமார்களையும், போர் வீரர்களையும், அரச பிரதி நிதிகளையும், வணிகர்களையும் சேர்த்தே அழைத்துச் செல்வார்களாம். ஓரிடத்திற்கு வணிக நோக்கமாகச் சென்று, உள்ளூர் அரசியல் பிரமுகர்களிடம் ஸ்பேனிஷ், போர்த்துக்கீஸிய அரச தூதுவர் வழியாக நட்புறவை உருவாக்கிக் கொண்டு பின்னர் அங்கே உள்ளூர் மக்களை ஏதாவது ஒரு காரணத்தினால் கத்தோலிக்க மதத்திற்கு மதம் மாற்றுவதும் பின்னர் தக்க வாய்ப்பு அமைந்தால் அரசியல் ரீதியாக தமது முயற்சிகளைத் துவக்கி நாட்டை கைப்பற்றுவதும் என்பது குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்துள்ளன. இவர்களின் இந்த திட்டமிட்ட பயணத்தினால் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தது ஸ்பேனிஷ் அரசு. தாம் போரிட்டு வென்றோ அல்லது தந்திரமாகவோ கைப்பற்றும் நாடுகளிலும் நகரங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பொன்னும் மணியும் வைரங்களும் வைடூரியங்களும் ஸ்பேனிஷ் அரச மாளிகையில் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஸ்பெயின் நாட்டின் வளத்தை இவை பெருக்கிக் கொண்டிருந்தன.

    15ம் நூற்றாண்டு தொடங்கி ஸ்பேனிஷ் அரசின் பொருளாதார உதவியுடன் போர்த்துக்கீஸிய மாலுமிகள் மேற்கொண்ட கடல் பயணங்களின் போது உலகின் வெவ்வேறு பூகோளப்பகுதிகளிலிருந்து தேடிக் கொண்டு வந்து சேர்த்த விலை மதிக்க முடியாத பொருட்கள் அனைத்தும் இப்போது ஸ்பெயினின் பல நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களை நிரப்பியிருக்கின்றன. இந்த வரலாற்று தொன்மை மிக்க பொருட்களையெல்லாம் அதன் அருமை பெருமை உணர்ந்து உலகத்தரம் நிறைந்த ஆய்வுத்தரம் பொருந்திய பிரமாண்டமான அருங்காட்சியகங்களை ஸ்பெயின் நிருவியுள்ளது. தனது ஆளுமை எந்தெந்த நாடுகளிலெல்லாம் நிருவப்பட்டதோ அங்கிருந்தெல்லாம் கொண்டு வரப்பட்டு தனியார் சேகரிப்பாகவும் அரச சேகரிப்பாகவும் அமைந்த அனைத்து பொருட்களும் அதனதன் நோக்கத்திற்கேற்ற வகையில் இனம் பிரிக்கப்பட்டு வெவ்வேறு பிரத்தியேக அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டு இப்பொருட்கள் எல்லாம் இப்பிரமாண்டமான எழில் நிறைந்த கட்டிடங்களில் காட்சிக்கு வைக்கப்ப்பட்டுள்ளன.

    ஸ்பெயினில் இதுவரை நான் ரோண்டா, மலாகா, கோர்டோபா, டொலேடோ, ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட் ஆகிய பெரும் நகரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன். ஸ்பெயினுக்குச் சொந்தமான கனேரித் தீவுகளை இங்கு தற்சமயம் குறிப்பிட அவசியமில்லை என்பதாலும் அதன் சிறப்புகள் ஸ்பெயின் தீபகற்பத்திலிருந்து வேறுபடுவதாலும் கனேரித் தீவுகளில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றி வேறொரு முறை குறிப்பிட நினைத்திருப்பதாலும் இத்தீவுகளின் அருங்காட்சியகங்களை இப்பதிவில் ஒதுக்கிவிடுவது சிறப்பு என்றே கருதுகிறேன். அந்த வகையில் இந்த நான்கு மிகப் பெரிய நகரங்களிலும் நான் சென்று பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்த அருங்காட்சியகங்கள் 30க்கும் மேற்பட்டவை.

    இந்த 30க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களில் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பது என்பது எனக்கு ஒரு சோதனைதான். ஆனாலும் ஸ்பெயின் நாட்டினை என் மனதில் நினைத்தால் கடல் பயணமும் அதன் தொடர்பான நிகழ்வுகளும் தான் மனதில் வந்து அலை மோதுகின்றன. ஆக மட்ரிட்டில் அமைந்திருக்கும் Museo Naval அதாவது (Naval Museum) கடல்வழிப்பயண அருங்காட்சியகம் முதலாகத் தொடங்கி இந்த நாட்டின் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்துவதே தகும் என்று கருதுகிறேன்.

    அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)
    அருங்காட்சியகத்தின் வாசல் பகுதி (2013)

    பயணம் செல்ல ஆயத்தமாகி விட்டீர்களா..? நம் பயணத்திற்கான கப்பலும் அதன் மாலுமியும் காத்திருக்கிறார்கள். வாருங்கள் செல்வோம்..!

    தொடருவோம்

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 9ம் பகுதி

    தஞ்சை வெ.கோபாலன்

     

    பட்டினத்தார் பாடல்கள் – பகுதி- 9

     

    நேமங்கள், நிட்டைகள், வேதங்கள், ஆகம நீதிநெறி

    ஓமங்கள், தர்ப்பணஞ் சந்தி செப மந்த்ர யோகநிலை

    நாமங்கள், சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

    சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே.   1.

     

    நித்ய கர்மாணுஷ்டானங்கள் என்று சொல்லி, ஸ்நான, பான, போஜன விதிமுறைகளைச் சொல்லி, நேம நிஷ்டையோடு வாழ்வதாகப் பிறர் உணரும்படி காட்டிக் கொண்டு, தினசரி வேதபாராயணம் செய்வதாய்ச் சொல்லிக் கொண்டு, ஆகம சாஸ்திரம், நியாயம் போன்ற வழிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, மாதாந்தர, அமாவாசை திதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு, காலை, பகல், சந்தி ஜெபம் செய்து கொண்டு, மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டு, சகஸ்ரநாமம், அஷ்டோத்தரம் என்று இறைவன் புகழைப் பாடிக் கொண்டு, நெற்றியில் சந்தனமென்ன, திருநீறு என்ன என்று பளிச்சென்று பிறர் பார்த்து அதிசயிக்க அணிந்து கொண்டு ஒவ்வொரு ஜாமத்திலும் ஆத்மார்த்தமில்லாமல் நாம் செய்யும் பூசனைகள் அனைத்தும் போலித்தனமே.

     

    நான் எத்தனை புத்தி சொன்னாலும் கேட்டிலை நன்னெஞ்சமே

    ஏன் இப்படி கெட்டு உழலுகின்றாய் இனி ஏதுமிலா

    வானத்தின் மீனுக்கு வன்றூண்டிலிட்ட வகையதுபோல்

    போனத்தை மீள நினைக்கினையே என்ன புத்தியிதே.  2.

     

    எத்தனை முறை உண்மைகளை எடுத்துரைத்தாலும் ஏ மனமே! நீ கேட்பதாயில்லை. ஏன் இப்படி கெட்டு அலைகிறாய்? வானத்தில் கணக்கின்றிக் கொட்டிக் கிடக்கும் விண்மீன்களை (நட்சத்திரங்களை) பிடித்து விடவேண்டுமென்று தூண்டிலைப் போடுவதைப் போல் நடந்ததையே மீண்டும் மீண்டும் நினைத்துருகி வருந்திடுகிறாயே, என்ன புத்தியப்பா இது.

     

    (மகாகவி பாரதியின் இந்தப் பாடலை நினைவில் கொள்ளுங்கள்:–

     

    “சென்றதினி மீளாது மூடரே! நீர்

    எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

    கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

    எண்ணமதைத் திண்ணமுறை இசைத்துக் கொண்டு

    தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

    தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா!”)

     

    இன்னுமொரு பாடலையும் படியுங்கள்:–

     

    “சென்றதைக் கருதார், நாளைச் சேர்வதை நினையார் கண்முன்

    நின்றதைப் புசிப்பார் வெய்யினிலவாய் விண் விழுது வீழ்ந்து

    பொன்றின சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார்,

    நன்று தீதென்னார் சாட்சி நடுவான் ஜீவன்முத்தர்”

     

    அஞ்சக்கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம்

    வஞ்சப் புலக்கட்டை வேரற வெட்டி வளங்கள் செய்து

    விஞ்சத் திருத்திச் சதாசிவ மென்கின்ற வித்தையிட்டுப்

    புஞ்சக்களை பறித்தேன் வளர்த்தேன் சிவபோதத்தையே. 3.

     

    ‘அஞ்சக்கரம்’ எனும் பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்துக் கோடாலியைக் கொண்டு ஐம்புலன்கள் எனும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றாலும், அவை உணரும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐவகையாலும் உணருகின்ற போகங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எடுத்துவிட்டு, மனத்தை வளம்பெறச் செய்து, உரமிட்டு தயார் செய்து அதில் சதாசிவம் எனும் மந்திர வித்தை விதைத்துப் பின் விளையும் களைகளை நீக்கி மனதில் சிவானந்தப் பயிரை நன்கு வளர்த்தேன்.

     

    தாயாரும் சுற்றமும் பெண்டிரும் கைவிட்டுத் தாழ்ந்திடுநாள்

    நீயாரு நானார் எனப் பகர்வார் அந்த நேரத்திலே

    நோயாரும் வந்து குடிகொள்வரே கொண்ட நோயும் ஒரு

    பாயாரு நீயும் அல்லாற் பின்னை ஏது நட்பாம் உடலே.     4.

     

    உன்னைப் பெற்ற தாயாரும், சுற்றத்தாரும், தாலிகட்டி மணம் செய்த மனைவியரும் இவர்கள் எல்லாம், நீ உன் வாழ்வின் இறுதி கட்டத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், இனி வேறு வழியில்லை நீ இவ்வுலக வாழ்வை நீத்திடப் போகிறாய் எனத் தெரிந்ததும், நீ யார், நான் யார் என்று விரக்தி நிலைக்கு வந்து விடுவார்கள். அந்த நேரம் பார்த்து நோய்கள் இருக்கின்றனவே, அவை உன்னை வந்து பற்றிக் கொண்டுவிடும். அந்த நோயும், நீ படுத்துக் கிடக்கும் பாயும் அன்றி பின் உனக்கும் உன் உடலுக்கும் யார் உறவு சொல்.

     

    ஆயும் பொழுது மயிர்க்கால்கள் தோறும் அருங்கிருமி

    தோயும் மலக்குட்டையாகிய காயத்தைச் சுட்டி விட்டாற்

    பேயும் நடனமிடும் கடமாமென்று பேசுவதை

    நீயும் அறிந்திலையோ பொருள் தேட நினைந்தனையே.     5.

     

    ஏ நெஞ்சமே! இந்த உடலைப் பற்றி நன்றாக ஆய்ந்து உணர்ந்து பார்! உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஏராளமான கிருமிகள் மலிந்து கிடக்கின்றன; உடலோ கழிவுகளைத் தாங்கிய பண்டம்; இந்த உடலில் ஊசலாடும் உயிர்மட்டும் இவ்வுடலை விட்டு நீங்கி விட்டால் இதைக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவர். அந்த இடம் பேய்கள் ஆடுகின்ற மேடை என்று மக்கள் பேசுவதை நீ கேட்டதில்லையோ? அப்படிப்பட்ட இந்த உடலை வளர்க்க, இதனை வாசனை திரவியங்களிட்டு பாதுகாக்கப் பொருள் தேட நினைக்கின்றனையே, அது சரியா?

     

    பூணும் பணிக்கல்ல, பொன்னுக்குத் தானல்ல, பூமிதனைக்

    காணும் படிக்கல்ல, மங்கையர்க்கு அல்ல, நற் காட்சிக்கல்ல,

    சேணும் கடந்த சிவனடிக்கல்ல என் சிந்தை கெட்டுச்

    சாணும் வளர்க்க அடியேன் படும் துயர் சற்றல்லவே.   6.

     

    என் உடலைப் பேணி பாதுகாப்பது எதற்காகத் தெரியுமா? பொன்னும், மணியுமாக இழைத்த அழகிய ஆபரணங்களை அணிந்து அலங்காரம் செய்து கொள்வதற்காக அல்ல; பொன்னும் பொருளும் தேடி செல்வச் சீமானாக விளங்குதற்கும் அல்ல; ஏராளமான நிலம் நீச்சை வாங்கிச் சேர்ப்பதற்காகவும் அல்ல, பெண்களுக்காகவும் அல்ல; ஊர் சுற்றிப் பார்த்து இயற்கை வளங்களைக் கண்டு களிக்கவும் அல்ல; அண்டங்களைக் கடந்த சிவபெருமானின் சேவடிகளைத் துதித்து வாழ்ந்திடவும் அல்ல; புத்தி கெட்டுப் போய் என்னுடைய ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்காகவன்றோ நான் இத்தனை கஷ்டங்களையும் பட்டுக் கொண்டிருக்கிறேன்.

     

    வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவர்க்கு

    எட்டாத புட்பம், இறையாத தீர்த்தம் இனி முடிந்து

    கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே

    முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே.    7.

     

    செப்புத் தகட்டில் பதிந்து வைக்காத மந்திரித்த சக்கரங்கள், வாயினால் உச்சரிக்காத மந்திரங்கள், எவர்க்கும் கிட்டாத மலர்கள், பிறர்க்கு அர்க்கியம் தராத புனித நீர்; துணியில் சுற்றிப் பெட்டியில் வைத்து மூடாத சிவலிங்க விக்ரகம்; நினைத்த காரியத்தை செய்து முடிக்காத நெஞ்சம் என்று இத்தகு நிலையில் உள்ள நிலை எதுவோ அதுவே எனது குருநாதர் எனக்கு உபதேசித்த மந்திரம்.

     

    எருமுட்டை பிட்கின் உதிர்ந்திடும் செல்லுக்கு எவர் அழுவார்

    கருமுட்டை புக்குக் கழல் அகன்றாய் கன துக்கமதாய்ப்

    பெருமுட்டுப் பட்டவர் போல அழும் பேதையீர்! பேத்துகிறீர்

    ஒருமுட்டும் வீட்டு மாநாமம் என்றைக்கும் ஓதுமினே.  8.

     

    அன்பர்களே! ஒரு சொல் கேளீர்! அன்னையின் கருவில் உதித்து, அங்கு வசித்து வெளிவந்து வந்த இடத்தில் ஏராளமான துன்பங்களைப் பட்டு துக்கப்பட்டு வருந்தி அழும் பேதைகளே, நீங்கள் கலங்கி மனம் வருந்துவதால் என்ன பயன்? இந்த உடல் அழியப் போவது. அதை சிந்தை செய்வதை விட்டு மனம் தேறுவீர். எருமுட்டை எனப்படும் விராட்டி உதிர்ந்து பொலபொலவென்று கொட்டும் நிலைகண்டு யார்தான் அழுது புலம்புவார். இவ்வுடல் இருக்கும் வரைக்கும் இறைவனின் திருநாமத்தை எண்ணி வழிபட்டு மகிழ்ந்து இருப்பாயாக.

     

    மையாடு கண்ணியும், மைந்தரும் வாழ்வு மனையும் செந்தீ

    ஐயா நின்மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துளே

    மெய்யாயிருந்து நாட்செல நாட்செல வெட்ட வெறும்

    பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.     9.

     

    உடல் செந்தீ போன்ற ஜொலிப்போடும், மாலை நேர செவ்வானம் போன்று தோற்றமளிக்கும் சிவபெருமானே! மாயையாய் உருவான இந்த பூவுலகில் மாயை வடிவில் இங்கிருக்கும் அனைத்துமே உண்மை என நம்பும்படியாக, மாடு, மனை, வீடு, இல்லாள், பிள்ளை என்று பல வடிவில் தோற்றமளித்து, பின்னர் நாளாக ஆக மெல்ல அனைத்துமே பொய்யாய், இல்லையெனும்படியாகவும், கனவு போலவும் மெல்லக் கரைந்து போயிற்றே.

     

    ஆயாய் பலகலை ஆய்ந்திடும் தூய அருந்தவர்பால்

    போயாகிலும் உண்மையைத் தெரிந்தாய் இல்லை, பூதலத்தில்

    வேயார்ந்த தோளியர் காம விகாரத்தில் வீழ்ந்து அழுந்தி

    பேயாய் விழிக்கின்றனை மனமே என்ன பித்துனக்கே.  10.

     

    ஏ மனமே! பற்பல கலைகளை ஆய்ந்து நன்கு தேறிய தூய்மையான தவசிகளிடம் சென்றாவது வாழ்வின் உண்மையை அறிந்து கொள்ளவில்லை, அதை விடுத்து இளம் மூங்கிலைப் போன்ற தோளை உடைய அழகுப் பெண்களின் பால் உள்ள ஈர்ப்பால் விழுந்து, அதிலேயே மூழ்கி பேய்போல விழிக்கின்றாயே. உனக்கு என்ன பைத்தியமா?

     

    (மேலும் வரும்)

    Share
  • நமது பிரபஞ்சத்தைப் புலப்படாத மற்ற இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்புவிசை இழுக்கின்றதா ?

     

    Multiverse Theorem 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=39qmbl7mpJQ

    From Universe to Multiverse

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RGUD-HA9jaE

    The Multiverse Theory (Full Video)

    முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “பெருவெடிப்பு நியதிக்கு” கிடைத்த மாறுபட்ட வரவேற்பு போல் இப்போது இணைப் பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை நமது பிரபஞ்சத்தை இழுப்பதால் முரண்பாடுகள் தோன்று கின்றன என்னும் கருத்தும் குழப்பம் உண்டாக்குகிறது.   ஆனால் எமக்குப் புதிய சான்றுகள் கிடைத்து, பிரபஞ்சம் பற்றிய எங்கள் கருத்து முழுவதும் இப்போது மாறி விட்டது.

    ” ஜார்ஜ் எஃப்ஸ்தாதியு  [George Efstathiou] வானியல் பௌதிகப் பேராசிரியர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம். 

    மற்ற பிரபஞ்சங்களின் இழுப்பால், நமது பிரபஞ்சக் கதிர்வீச்சில் [Radiation] முரண்பாடுகள் இருப்பதை நான் 2005  ஆண்டிலே  அறிவித்தேன்.  அந்தக் கோட்பாடு பிளாங்க் விண்ணோக்கிப் பதிவு மூலம் 2013 இல் நிரூபணம் ஆனது.   இந்த முரண்பாடுகள் யாவும் பெருவெடிப்பு விளைவில் பிரபஞ்சம் தோன்றிய போதே  உண்டானவை.

    டாக்டர்  லாரா மெர்சினி – ஹௌடன்,  சித்தாந்த பௌதிகவாதி,  நார்த் கரோலினா பல்கலைக் கழகம்.  

    Multiverse -4

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

    “கவிஞன் அண்டக் கோள்களில் மண்டையை நுழைக்க வேண்டுகிறான். தர்க்கவாதி தன் மண்டைக்குள் அண்டங்களைத் தேடிச் செல்கிறான். அப்புறம் அவன் தலைதான் பிளக்கிறது.”

    ஜி.கே. செஸ்டர்ஸன் (G.K. Chesterson) (1874-1936)

     

    Multiverse -1

    புலப்படாத மற்ற பிரபஞ்சங்கள் நமது பிரபஞ்சத்தைத் தம் வசம் நோக்கி இழுக்கின்றன.

    நமது பிரபஞ்சம் கோடான கோடிப் பிரபஞ்சங்களில் ஒன்றா ?  ஆமாம், நமது பிரபஞ்சம் போல் இணையாகப் புலப்படாமல் வேறு பல பிரபஞ்சங்களும் உள்ளன.  2013 இல் முதன்முதல் பிளாங்க் விண்ணோக்கி [Plank Telescope] அகிலப் பின்புலக் கதிர்வீச்சு வரைப்பட வடிப்பின் [Cosmic Map of Background Radiation] மூலம், பன்மடங்கு பிரபஞ்சங்கள் [Multiverse] இருப்புக்குச் சான்றுகள் காட்டியுள்ளது.   இந்த பிளாங்க் விண்ணோக்கி மூலம் உறுதியான  அறிவிப்பு 2013 ஜூன் மாதம் வெளியாகி இருக்கிறது.   மேலும் மற்ற பிரபஞ்சங்களின் ஈர்ப்பு விசை இழுப்பால் கதிர்வீச்சில் முரண்பாடுகள் [Anomalies in Radiation] இருப்பதும் முதன்முதல் முடிவு செய்யப் பட்டது.

    அந்த அறிவிப்பில் ஒரு முக்கியவிதி விலக்கு : பிளாங்க் விண்ணோக்கி மூலம் விளைந்த புதிய கோட்பாடான, “கருமை ஓட்டத்துக்கு” [Dark Flow, like Dark Energy, Dark Matter] சான்று தேடியது.   அதற்குச் சான்று கிடைக்க வில்லை. கருமை ஓட்டம் பற்றிக் கருத்து இல்லாவிடில் பிற பிரபஞ்சங்களைப் பற்றி விளக்கம் தேவை யில்லை.   கருமை ஓட்டம் என்பது ஒரு விஞ்ஞானப் புனைகதை யூகிப்பில்லை.   பிரபஞ்சத்தில் உள்ள பிண்டப் பரவல் அதற்கு ஓர் எண்ணிக்கை தர முடிய வில்லை.  அதனால் அதன் இருப்பு தர்க்கத்துக்கு உட்பட்டது. கருமை ஓட்டத்தின் இருப்பே, நமது கண்ணோட்ட வரம்புக்கு அப்பாற் பட்ட வெளி விளிம்பில் நமக்கருகில் உள்ள பிண்டத்தை இழுக்கிறது.

     

    Multiverse -2

     

    பிரபஞ்சம் தோன்றி 380,000 ஆண்டுக்குப் பிறகு எழுந்த ஒளிவீச்சைக் காட்டும் பிரபஞ்ச நுண்ணலைப் பின்புலம் [Cosmic Microwave Background – (CMB)] ஓர் முடிவான அகிலவியல் ஒப்புமை அரங்கமாக [Ultimate cosmic Reference Frame] எடுத்துக் கொள்ளப் படுகிறது.   2010  ஆண்டு ஆய்வுப்படி புதிரான கருமை ஓட்டம் முதலில் வெளியிட்ட தூரம் இரட்டித் திருப்பதாக அறியப்பட்டுள்ளது.  கருமை ஓட்டம் என்பது காலக்ஸி கொத்து  ஒளிமந்தை களின் [Galaxy Clusters] வியப்பான, குறிப்பிட்ட திசைவேகம் [600 -1000 km/s].

    நமது பிரபஞ்சம் போல் இணைப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் உள்ளனவா ?

    விஞ்ஞானிகள் இப்போது நமது பிரபஞ்சத்தைப் போல ஓர் இணையான பிரபஞ்சம் (Parallel Universe) இருக்கலாம் என்று மெய்யாக நம்புகிறார்கள். புத்தகத்தில் படிக்கும் விஞ்ஞானப் புனைகதை இல்லை இது ! “Multiverse” என்னும் சொல்லை முதலில் ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). சொல்லப் போனால் நமக்குத் தெரியாமல் குறிப்பிட முடியாத எண்ணிக்கையில் இணையான “பல்லரங்கப் பிரபஞ்சங்கள்”  (Multiverses) இருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறார்கள் ! நாம் அவற்றில் ஒன்றான நமக்குத் தெரியும், உப்பி விரியும் ஒரு பெருவெடிப்புப் பிரபஞ்சத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். அந்தப் பிரபஞ்சங்கள் கால வெளியும், மர்மமான, புதிரான பண்டங்களும் கொண்டிருக்கலாம் ! மெய்யாக நமது பிரபஞ்சத்தில் உள்ள ஈர்ப்பாற்றல் வலுவற்ற சமிக்கை மற்ற இணைப் பிரபஞ்சத்திலிருந்து கசிந்து புகுந்து விட்ட ஒன்றுதான் ! இதில் வியப்பென்ன வென்றால் இந்த இணைப் பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்துக்கு மிக்க அருகில் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

    Multiverse Raising

    பிரபஞ்சத்தின் பரிமாணங்கள் நான்கு அல்ல பதினொன்று !

    உன்னத இழை நியதி (Superstring Theory) பெருவெடிப்புக்கு முந்தய சில அடிப்படை விளைவுகளையும் விளக்க உதவுகின்றது ! ஒற்றை நியதியில் இழை நியதி பராமாணுக்கள், அடிப்படை இயற்கை உந்துவிசைகள் (Particles & Fundamental Forces of Nature) யாவும் உன்னத சீரான நுண்ணிழைகளின் அதிர்வுகள் (Vibrations of Tiny Supersymmetric Strings) என்று தெளிவாகக் கூறுகிறது. பரமாணுக்களின் அணுக்கூண்டில் இயங்கும் “நுண்துகள் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) தன்மைகளை விளக்கும் மகிமை கொண்டது இந்த உன்னத இழை நியதி !  ஏறக்குறைய உயிரியல் பிறவி மூலமான “டியென்னே” (DNA) போன்றது பிரமஞ்சத்தின் ஒற்றை உன்னத இழை நியதி என்று வைத்துக் கொள்ளலாம் ! புரட்சிகரமான இந்த இணைப் பிரபஞ்சக் கோட்பாடு எப்போது உதயமானது என்னும் கேள்வி எழுகிறது இப்போது ! உன்னத இழை நியதி, பெருவெளி, கருமைப் பிண்டம் (Superstring Theory, Hyperspace & Dark Matter) ஆகிய புதிய கோட்பாடுகள் எழுதப்பட்டதும் பௌதிக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தை விளக்க நாமறிந்த நான்கு காலவெளிப் பரிமாணங்கள் மட்டும் போதா வென்றும், அவை மெய்யாகப் பதினொன்று எண்ணிக்கைகள் என்றும் உணர்ந்தார்கள் ! அவ்வித முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்ததும், அடுத்தோர் முடிவும் உதயமானது ! அதாவது நாமறிந்த பிரபஞ்சமானது எண்ணிற்ற  “சவ்வியல் குமிழிகளில்”  (Membraneous Bubbles) ஒன்றானது ! சவ்வுக் குமிழிகள் பதினொன்றாம் பரிமாணத்தில் கொந்தளிக்கும் போது அலைகள் எழுகின்றன !

     

     

    பெருவெடிப்பு மீளும் காலவெளித் தொடர் நிகழ்ச்சி

    இப்போது குமிழிப் பிரபஞ்சங்கள் இரண்டு ஒன்றை ஒன்று தொட்டால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள் ? பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானி நீல் துராக் (Neil Turok), அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பர்ட் ஓவ்ரட் (Burt Ovrut), & பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி பால் ஸ்டைன்ஹார்ட் (Paul Steinhardt) ஆகிய மூவரும் அவ்விதம் இரண்டு குமிழிப் பிரபஞ்சங்கள் ஒரு யுகத்தில் தொட்டன என்று நம்புகிறார்கள் ! அதன் விளைவென்ன ? மெய்யாக ஒரு மிகப் பெரும் வெடிப்பு நேர்ந்து ஓர் புதிய பிரபஞ்சம் << நமது பிரபஞ்சம் >> பிறந்ததாம் ! அப்படி அவர்கள் அறிவித்ததும் உலக விஞ்ஞானச் சமூகத்திற்கு ஓர் அதிர்ச்சி உண்டானது ! அந்த விளக்கவுரை சம்பிரதாய பெருவெடிப்பு நியதியின் முகத்தைத் திருப்பி விட்டது !

     

     

    அதாவது நாமறிந்த பெருவெடிப்பு மெய்யாக பிரபஞ்சத்தின் ஆரம்பகால முதற் தோற்றமில்லை. காலவெளிப் படைப்பு அதற்கும் முற்பட்டது; மேலும் பெருவெடிப்பு அடுத்தும் தொடராய் நிகழலாம் என்னும் புரட்சி கரமான ஓர் அதிசய பிரபஞ்சத் தோற்றங்களின் “காலவெளித் தொடர் நிகழ்ச்சியை” (Space-Time Chain Event) அவர்கள் எடுத்துக் கூறினார். பெருவெடிப்புகள் எப்போதும் நிகழலாம் ! இப்போது பிரபஞ்சத்தின் மூலத் தோற்றத்தை வைத்து நமக்கு எச்சரிக்கையாய்ப் பூதகரமான ஒரு பயங்கரக் கேள்வி எழுகிறது ! பிரபஞ்சக் குமிழிகள் ஒன்றை ஒன்றை மோதி நமது பிரபஞ்சம் தோன்றிய தென்றால் மீண்டும் அவ்விதம் மோதும் ஒரு வாய்ப்புள்ளதா ? பதினொன்று பரிமாணமுடைய அகில வெளியில் எந்த நிகழ்ச்சியும் ஏற்படலாம் !

     

     

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேநிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes). அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும். அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் ! பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை. “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910). அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

     

    clipboard012.jpg

     

    பல்லரங்க பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் : 1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis). 2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger). அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்”  (Tegmark Classification) என்பது பெயர்.

    1. பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்) யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது. அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

     

     

     

    2. வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory) கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது. (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content. Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3. பன்மடங்கு பிரபஞ்சங்கள் (Multiverses)

    வகுப்பு : 3 நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது. 2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார் (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4. முடிவான முழுத் தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன. (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

    எண்ணற்ற பிரபஞ்சங்களின் குமிழ்க் கோட்பாடு (Bubble Theory of Infinite Universes)

    வகுப்பு -2 இல் வரும் அகிலவெளி வீக்கத்தில் தோன்றும் பொருத்தமான குமிழ்ப் பிரபஞ்சங்களைப் பற்றி ஆன்ரி லிண்டே எடுத்து விளக்கினார். விஞ்ஞானிகள் பலர் ஒப்புக்கொண்ட கோட்பாடி இது. இந்த கோட்பாடு கூறுவது என்ன ? நுண்துகள் திரட்சி நுரையிலிருந்து (Quantum Foam) ஒரு “தாய்ப் பிரபஞ்சத்திலிருந்து” (Parent Universe) மற்ற பிரபஞ்சங்கள் உதித்தன என்பதே !

    “இணையான உலகங்கள்” என்னும் நூல் எழுதிய மிச்சியோ காக்கு

    ஜப்பானிய அகிலவியல் மேதை மிச்சியோ காக்கு (Parallel Worlds By : Michio Kaku) தான் 2004 இல் வெளியிட்ட கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்: நான் எழுதிய “இணையான உலகங்கள்” நூலில் காலவெளி அமைப்புகளை விளக்குவதற்குப் பதிலாக கடந்த பல ஆண்டுகளில் வளர்ந்த அகிலவியல் உளவுப் புரட்சிகளைக் குறிப்பாகக் காட்டுகிறேன். முதல் பாகத்தில் பிரபஞ்சத்தைப் பற்றியும், முற்போக்கான அகில வீக்கம் பற்றியும் கூறி முடிவில் பெருவெடிப்புடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் பல்லரங்கப் பிரபஞ்சங்கள் பற்றி எழுந்த கோட்பாடுகளை விளக்கி பரிமாண எண்ணிக்கை விரிவானது பற்றியும், உன்னத இழை நியதி பற்றியும் கூறுகிறேன். மூன்றாவது பாகத்தில் எப்படிக் கோடான கோடி ஆண்டு களுக்குப் பிறகு பிரபஞ்சம் குளிர்மயமாகி முடிவடையும் என்பதை விளக்கம் செய்கிறேன்.

     

     

    (தொடரும்)

    *****************************

    Image Credits : Scientific American (May 2003)

    தகவல்:

    1. Astronomy’s Explore the Universe 8th Edition (2002) December 31, 2001

    2. National Geographic Magazine (1982) Frontiers of Science The Family of the Sun By: Bradford Smith Ph. D. Professor of Planetary Sciences, The University of Arizona.

    3. National Geographic Magazine (1975) Amazing Universe, The Family of Stars By: Herbert Friedman.

    4. Internet Article “Stellar Evolution”

    5. Majestic Universe By: Serge Brunier (1999)

    6. Neutron Stars & Pulsars -From the Internet Sources (December 2006)

    7. Parallel Universe – BBC Information (February 14, 2002)

    8. Scientific American “Parallel Universes” By Max Tegmark, Professor of Physics & Astronomy, University of Pennsylvania (May 2003)

    9. Parallel Worlds (The Science of Alternate Universes & Our Future in the Cosmos) By : Michio Kaku (2005)

    10.   50 Greatest Mysteries of the Universe – Astronomy Magazine (August 21, 2007)

    11.  http://www.space.com/18811-multiple-universes-5-theories.html   [December 7, 2012]

    12.  http://en.wikipedia.org/wiki/Multiverse   [October 24, 2013]

    13.  http://nautil.us/issue/6/secret-codes/beyond-the-horizon-of-the-universe

    14.  http://www.scientificamerican.com/article.cfm?id=new-physics-complications-lend-support-to-multiverse-hypothesis [June 1, 2013]

    15.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/is-our-universe-one-of-billions-new-planck-data-has-anomalies-caused-by-unknown-gravitational-pull-t.html  [October 23, 2013]

    *******************************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  (October 26, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (80)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிமையான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கலப்பதில் மகிழ்கிறேன்.

    இன்றைய உலகம் அவசரமான வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விஞ்ஞான முன்னேற்றங்கள் கன வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

    இவைகளில் எத்தனை மனித வாழ்க்கையை மேம்படச் செய்வதற்கு உதவுகின்றன என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    பேருந்திலே பிரயாணம் செய்து கொண்டிருப்பவர்கள், புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள், ஆகாயவிமானத்திலே மிதந்து கொண்டிருப்பவர்கள் ஏன் சாலையோரமாக நடந்து கொண்டு பயணிப்பவர்கள் என பலவகையான பிரயாணிகளின் கைகளில் பெரும்பான்மையாக நாம் காண்பது கைத்தொலைபேசிகளோ அன்றி சிறிய அளவிலான “ஜ பாட்(I Pad)” அன்றி “டாப்லெட்(Tablet)” எனப்படும் கையளவிலான கனிணிகளேயாகும்.

    இன்றைய தொடர்பு சாதனங்களில் முன்னணியில் இருப்பவை இவைகளாகும். இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை ஏன் முதிய தலைமுறை கூட சமூகத்தில் மற்றையோர்களுடனான தொடர்புகளைப் பேணி வருவது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

    இச்சமூகத்துடனான தொடர்பு சாதனங்கள் இளைய தலைமுறையின் அபிப்பிராயங்களில் , கருத்துக்களில் பல மாற்றங்களுக்குக் காரணமாகின்றன என்பதுவும் மறுக்கப்பட முடியாத உண்மையே

    இவற்றில் சில நன்மைகளை நோக்கியும், சில தீமைகளை நோக்கியும் இத்தலைமுறையை வழிநடத்துவதற்குக் காரணங்களாகின்றன என்பதுவும் உண்மையே.

    ஆனால் இவைகளின் இயக்கத்தை அதற்காக முற்று முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டு வாழ்ந்து விட முடியுமா?

    இம்முன்னேற்றங்கள் பலரின் வாழ்வில் பலரது முன்னேற்றங்களுக்கு வழிகோலியுள்ளது என்பதை மறுத்து விட முடியாது.

    இத்தொடர்பு சாதனங்கள் வழங்கும் இருபத்திநாலு மணிநேர சேவையினால் இன்று அரசியல் உலகில் கூட பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களின் முன்னே நிறுத்தி அலசப்படுவதற்கு மிகக் குறைந்த நேரமே தேவைப்படுகிறது.

    பல முன்னனி நாடுகளின் அரசியல் தலைவர்கள் இன்று சமூக வலைத்தளங்களின் மூலமாகவே தமது கொள்கைப் பிரகடனங்களைச் செய்வதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

    அது மட்டுமின்றி என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது எழுத்துலகில் நான் காலூன்றி நிற்பதற்கு மூலகாரணமே இணையத்தளங்களும், இணையமுமே காரணம்.

    அது தவிர இளம் படைப்பாளிகள் பலர் பெயர் பெற்ற எழுத்தாளர்களோடு ஒரே தளத்தில் எழுதுவதன் மூலம் தமது கலையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    இதை நான் பகிர்ந்து கொள்வதன் பிரதான நோக்கம் சமீபத்தில் முகநூல் வலையத்தளத்தின் மீது எழுந்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய செய்தியே.

    சிறிது காலத்தின் முன்னால் முகநூல் தம்முடைய இணைய தளத்தில் ” பயங்கரவாதிகளாலும், மத்திய கிழக்கு நாடுகளின் சில அரசுகளினாலும் நடத்தப்படும் கழுத்து வெட்டி நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் வீடியோக் காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதைத் தடை செய்திருந்தது.

    ஆனால் சமீபத்தில் சில நாட்களின் முன்னால் இக்காட்சிகள் அதைப்பற்றிப் பீற்றிக் கொள்வதற்கல்லாமல் அதன் கொடூரத்தைச் சித்தரிக்கும் நோக்கத்திற்காகப் பகிரப் படுமானால் அதைத் தடைசெய்யப் போவதில்லை என்று அறிவித்தது.

    இது சமூகத்தில் பலவிதமான சர்சைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது .

    முகநூல் வலைத்தளம் இளையோர் மத்தியிலும், முதியோர் மத்தியிலும் மிகவும் பரவலாக தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு சாதனம். இதிலே இத்தகைய விளம்பரங்களுக்கு இடம் கொடுப்பது ஒரு பொறுப்பற்ற தன்மை என்று சமூகத் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

    எது எக்காரணத்திற்காக நடத்தப்பட்டாலும் இவை மனிதக் கொலைகளே இவைகளைப் பகிரங்கமாக இணைய தளங்களிலே பகிர்ந்து கொள்வது மனித தர்மத்திற்குப் புறம்பானது என்கிறார்கள்.

    fb3

    மார்புப் புற்றுநோய் காரணமாக மார்பகங்களைச் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கி அப்புற்று நோயிலிருந்து பூரண குணமடைந்த பெண்கள் தமது அறுவை சிகிச்சையின் ரணங்களின் படங்களை தமது இணைய தளத்தில் முகநூல் தடை செய்திருக்கிறது.

    மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் படங்களைத் தடை செய்து விட்டு இப்படியான மனிதக் கொலைகளின் வீடியோக்களை அனுமதித்திருப்பது எப்படி நியாயமாகலாம் எனச் சில பெண்ணுரிமை வாதிகள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமே ! முகநூல் வலைத்தளம் ஒரு பிரத்தியேகமான வலைத்தளம். தமது வலைத்தளத்தில் எவற்றை அனுமதிப்பது, எவர்றை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

    ஆனால் சமுதாயத்தில் பல இளவயதினரின் மனதில் தீவிரமான் கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு முன்னனி சமூகத் தொடர்பு இணைய தளம் தாம் தமக்கு சமுதாயத்தில் உள்ள பொறுப்பை உணர்ந்து தமது கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது தார்மீகக் கடமையாகும் .

    சமுதாயம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல பல வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள் மனித நலனை முன்வைத்து இணைந்து உருவாக்கும் ஒரு கட்டமைப்பே சமுதாயமாகும்.

    இங்கு நாம் ஒவ்வொருவரும் எமது கடமையை உணர்ந்து செயலாற்றத் தவறினால் ? . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 8ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டை இது என்றறிந்து
    போதப் பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல்லறிவால்
    வாதைப் பட்டாய், மடமானார் கலவி மயக்கத்திலே
    பேதைப் பட்டாய் நெஞ்சமே! உனைப் போல் இல்லை பித்தருமே. 1.

    என் நெஞ்சே! கேடு கெட்ட என் மனமே! பெரியோர்களைத் துணை கொண்டு நல்வழிப் படவில்லை; உன்னுடைய பேதமையால் நல்லவர்களிடம் சென்றடைந்தும் தவறுகளைச் செய்து வேதனைப் பட்டாய்; மான்போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்களின் கலவி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாய்; உன்னைப் போல வேறு பித்தர் எவரும் உண்டோ?

    பேய்போல் திரிந்து பிணம் போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
    நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
    தாய்போல் கருதித் தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
    சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே. 2.

    மெய்ஞானம் கைவரப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? பேய் போல அங்குமிங்குமாய் அலைந்து திரிவர்; உயிரற்ற உடல்போல கிடைத்த இடத்தில் படுத்துப் புரண்டு கொண்டும்; பிக்ஷை பாத்திரத்தில் எவர் உணவு இட்டாலும் அதனை வாங்கி நாயைப் போல உண்டு கொண்டும்; நரியைப் போல ஒளிந்து மறைந்து ஓடி ஒளிந்து கொண்டும்; பெண்களைக் கண்டால் தாய் என்ற உணர்வோடு வணங்கிப் போற்றிக் கொண்டும்; ஊரார் அனைவரையும் சுற்றத்தார் போலக் கருதிக் கொண்டு அன்போடு பழகியும்; சின்னக் குழந்தையைப் போல கல்மிஷம் இல்லாமல் தெளிந்த அறிவோடு இருப்பர்.

    விடக்கே, பருந்தின் விருந்தே, கமண்டல வீணின் இட்ட
    முடக்கே, புழு வந்து உறைவிடமே, நலமுற்றும் இலாச்
    சடக்கே, கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
    தொடக்கே, உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகம் எனக்கே. 3.

    அட மாமிசப் பிண்டமே! (விடக்கு = மாமிசம்); பருந்துகளுக்கு இனிய விருந்தே! கையில் கமண்டலம் சுமக்கும் பிரம்மன் படைத்த கோணலே (முடக்கு = கோணலான); புழுக்களுக்கு உணவாகி, அவை வந்து குடியேறும் மாமிசப் பிண்டமே; நன்மை எதையும் செய்யாத உடலே (சடக்கு = உடல்); உடலின் அங்கங்கள் செயல் இழந்தால் அன்னை கூடத் தொடத் தயங்கும் மிருகமே (தொடக்கு = மிருகம்); உன்னை இது வரை சுமந்துகொண்டிருக்கின்றேனே, உன்னால் என்ன சுகத்தைக் கண்டேன்? சொல்.
    (தன் உடலைத் தானே விமரிசித்து அதற்காக வருந்துவதாக அமைந்த பாடல்)

    அழுதால் பயன் என்ன, நொந்தால் பயன் என்ன ஆவதில்லை
    தொழுதால் பயன் என்ன, நின்னை ஒருவர் சுட உரைத்த
    பழுதால் பயன் என்ன, நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
    எழுதாப்படி வருமோ? சலியாது இரு என் ஏழை நெஞ்சே! 4.

    என் அருமை ஏழை நெஞ்சமே! உன் அறியாமையால் நீயாகவே தேடிக்கொண்ட துன்பங்களை எண்ணி அழுது வருந்துவதால் என்ன பயன்; அதற்காக மனம் நொந்து போவதாலும் என்ன பயன்; அந்த நிலையில் போய் தொழுவதாலும் என்ன பயன்; உன் மனம் வருந்தும்படி தவறுகளை எடுத்துக் காட்டிப் பேசுவதாலும் என்ன பயன்; இவற்றால் எல்லாம் ஆவது எதுவும் இல்லை. இவைகள் எல்லாம் முன்பே பிரம்மன் உன்னைப் படைக்கும்போது உனக்கென்று எழுதிவைக்கவில்லை யென்றால் இவற்றால் எல்லாம் எந்தப் பயனும் இல என்பதை உணர்ந்து மனம் வருந்தாமல் இரு.

    ஊரீர்! உமக்கோர் உபதேசம் கேளும்! உடம்பு அடங்கப்
    போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற்
    சாரீர், அனதலைச் சுற்றத்தை நீங்கிச் சகம் நகைக்க
    வேரீர், உமக்கவர் தாமே தருவர் இணையடியே. 5.

    ஊராரே கேளுங்கள்! உங்களுக்கெல்லாம் நான் செய்யும் உபதேசம் இதைக் கேளும்; முன்பு சமணர்களைக் கழு மரத்திலேற்றிய சைவர்கள் அணியும் திருநீற்றினை உடலெங்கும் பூசிக்கொண்டு வீட்டின் முன்புறத் திண்ணையிற் படுத்து உறங்குங்கள்; கூட்டம் கூடி உறவென்று சொல்லியும், சுற்றம் என்று சொல்லியும் திரியும் கூட்டத்தை விட்டு நீங்கி உலகம் சிரித்தாலும் இரந்துண்டு வாழ்வாயாக! அப்படிச் செய்வாயானால் எம்பெருமான் உம்மை ஆட்கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வார்.

    நீற்றைப் புனைந்தென்ன, நீராடப் போயென்ன நீ மனமே
    மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை மாமறை நூல்
    ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
    ஆற்றிற் கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றதே. 6.

    உடலெங்கும் திருநீற்றைப் பூசியென்ன; புனிதத் தலங்களுக்குச் சென்று நதிகளில் நீராடியதால் என்ன; ஏ மனமே! இப்படி அஞ்ஞானியாக அன்றி மெய்ஞானியாக மாறிப் பிறக்க வழி அறிந்திருக்க வில்லை; சதுர் வேதங்களைப் படித்து உணர்ந்து கொள்ளவோ, ஏழுகோடி மந்திரங்களின் பெருமையை உணரவோ உன்னால் முடியவில்லையே, என்ன பயன். ஆற்றிலேயே மிதந்து கொண்டிருந்தாலும் தோணி தான் ஒதுங்க வேண்டிய துறை அறியாமல் தத்தளிக்கின்றதே! என்ன செய்ய.

    செல்வரைப் பின் சென்று உபசாரம் பேசித் தினந்தினமும்
    பல்லினைக் காட்டிப் பரதவியாமற் பரானந்தத்தின்
    எல்லையில் புக்கு நல் ஏகாந்தமாய் எனக் காமிடத்தே
    அல்லல் அற்று என்றிருப்பேன் ஆலநீழல் அரும் பொருளே. 7.

    ஆல விருட்சத்தின் கீழமர்ந்த குரு தட்சிணாமூர்த்திப் பெருமானே! செல்வந்தர்களைத் தேடிச் சென்று அவர்கள் மனம் மகிழும்படி பேசி மகிழ்வித்து, பல்லெல்லாம் தெரியக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடி வாணாளை வீணாளாக ஆக்காமல் பரமானந்த வாழ்வின் எல்லை கண்டு ஏகாந்தமாய் அமர்ந்து அல்லல் நீங்க ஆனந்த வாழ்வை என்று பெற்று வாழ்வேன் சொல்.

    ஓங்காரமாய் நின்ற வத்துவிலே ஒரு வித்து வந்து
    பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதினாலு உலகும்
    நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
    ஆங்காரமானவர்க்கு எட்டாக்கனி வந்து அமர்ந்திடுமே. 8.

    ஓங்காரமாய் விளங்கும் பிரணவப் பொருளதனுள் வந்து விழுந்த வித்தொன்று முளைத்து செடியாகி மரமாகி செழித்தோங்குவதன் நோக்கம் என்னவென்ற உண்மையை அறிந்து கொண்டால், ஈரேழு பதினான்கு உலகத்திலும் நீக்கமற நிறைந்து பரிபூரணமாக விளங்குகின்ற நிறைந்த ஆனந்தம் எதுவோ, மனதில் மமதை எனும் அகங்காரம் கொண்டவர்க்கு எட்டாத கனி எதுவோ அந்தப் பரம்பொருள் எனும் கனி வந்து நம் மனதில் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கும்.

    விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
    பதியார் துடைப்பும் நம்பால் அணுகாது பரானந்தமே
    கதியாகக் கொண்டு மற்றெல்லாம் துயிலிற் கனவென நீ
    மதியாதிரு மனமே இதுகாண் நன் மருந்து உனக்கே. 9.

    முத்தொழில் புரியும் தெய்வங்களில் பிரம்மனின் படைப்பினால் உண்டாகும் இன்ப துன்பங்களும், காத்திடும் கடவுளாம் ஹரியின் கொடைகளும், கயிலையங்கிரி வாழ் பரமேஸ்வரனின் அழிக்கும் தொழிலும் அவற்றால் உருவாகும் விளைவுகளும் நம்மை என்றும் அண்டவே அண்டாது மனமே, பரம்பொருளை மனதில் தியானித்துக் கொண்டு அவனே எல்லாம் என்று இருந்தால், உலகில் மற்றெல்லாமுமே உறக்கத்தில் காணும் கனவு போல நீ அவற்றைப் பற்றி கவலை கொள்ளாதிரு மனமே, இதுதான் உனக்கு நல்ல மருந்து.

    (மகாகவி பாரதியும் “உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்; இதனிடை சில தினங்கள் உயிர்க்கமுதாகியே செப்புதற்கரிதாக மயக்குமால்; திலக வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவன்னது வாழ்கவே” எனும் வரிகளை நினைவு கொள்ளலாம்.)

    நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
    வாய்க்குண்டு மந்திர பஞ்சாக்ஷர மதியாமல் வரும்
    பேய்க்குண்டு நீறு, திகப்புண்டு நின்ற பிறவிப் பிணி
    நோய்க்குண்டு தேசிகன் தன்னருள் நோக்கங்கள் நோக்குதற்கே. 10.

    குப்பை மேடுகளில் நாய்களுக்கு உணவாக மனிதர் வீசியெறிந்த எச்சில் இலைகள் இருக்கின்றன; மனிதருக்கோ வீடுதோறும் சென்று கேட்டுப் பெறும் பிக்ஷை உணவு கிடைக்கும்; நம்மைக் கொண்டு போக வருகின்ற நமனை வெல்ல நம் வாய் உச்சரிக்க பஞ்சாக்ஷர மந்திரமும் உண்டு; நாம் அந்த சிவபெருமான் அடிமை என்று உணராது நம்மை பீடிக்க வரும் பேய்களை விரட்ட நெற்றியில் பூசும் திருநீறு உண்டு; பிறவிப் பிணி நீங்கப் பெம்மான் அருட்பார்வை நமக்கு எப்போதும் உண்டு என்பதை தெளிந்திரு.

    (இன்னும் வரும்)

    Share
  • இந்திய அமெரிக்கர்களின் இன்னும் சில முறையற்ற செயல்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்தாலும் நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றன. நீதிபதிகள் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றன. அமெரிக்காவிலும் 150 வருஷங்களுக்கு முன்னால் நிறைய ஊழல் இருந்தது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவையெல்லாம் மறைந்துவிட்டன. இப்போது பொதுமக்களில் பலர் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கை மதிக்கிறார்கள். சட்டத்தை மீறிச் செயல்படத் துணிவதில்லை. சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும், காவலர்களுக்கோ அதிகாரிகளுக்கோ லஞ்சம் கொடுத்துத் தப்பித்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் இல்லை என்பதும் காரணங்களாக இருக்கலாம். ஆயினும் அறமற்ற செயலைச் செய்யும் மனப்பாங்கு இப்போது அமெரிக்கர்களிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்களுக்கு அறமற்ற செயலைச் செய்யக் கூடாது என்ற மனப்பாங்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

    பல வருடங்களுக்கு முன்னால் தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்த காலம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உறவினர்களைக் கூப்பிட வேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு மூன்று டாலர் கட்டணம். அதிலும் மாணவர்களாக வந்தவர்களுக்குப் பண நெருக்கடி அதிகம். இந்தியாவிலிருந்து பெற்றோரோ மற்ற உறவினர்களோ கூப்பிட்டாலும் அதற்கும் நிறையச் செலவாகும். அதனால் அதுவும் கட்டுப்படியாகாது. தாங்கள் நலமாக இருக்கிறோம் என்பதைப் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரே வழி (கடிதங்கள் எழுதுவதைத் தவிர) அமெரிக்காவிலிருந்து பெற்றோர்களைக் கூப்பிடுவதுதான். தொலைபேசியில் பேச ஆரம்பித்து 59 நொடிகளுக்குள் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தொலைத்தொடர்பைத் துண்டிக்க நேர்ந்தால் தொலைபேசிக் கம்பெனிக்குப் பணம் எதுவும் கட்டத் தேவையில்லை. இதைப் பயன்படுத்திப் பல மாணவர்கள் 58 நொடிகள் பேசிவிட்டு ஏதோ கோளாறு என்று கம்பெனியிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிடுவார்கள். இப்போது இதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. ஒரு மாதத்திற்கு $35 கட்டிவிட்டால் இந்தியாவில் உள்ளவர்களோடு மட்டுமல்ல, உலகின் 60 நாடுகளில் இருப்பவர்களோடு காலவரையின்றிப் பேசலாம்.

    அமெரிக்காவில் கார்ப்பரேட்டுகள் எத்தனை தகிடுதத்தங்கள் புரிந்தாலும் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் கொடுப்பார்கள். அவற்றில் ஒன்று வாங்கிய சாமான்களை பொருட்களைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் திருப்பிக் கொடுக்கலாம் என்பது. பொருள் வாங்கியதற்குரிய ரசீதை வைத்திருந்தால் முழுப் பணமும் திரும்பக் கிடைத்துவிடும். (உணவுப் பொருட்களுக்கும் இந்தச் சலுகை உண்டு; ஆனால் ஒரு சில நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.) ஒரு முறை ஒரு பெண் டிபார்ட்மெண்ட் கடையில் பனிச்சறுக்கு விளையாடும்போது போட்டுக்கொள்ளும் உடையை வாங்கிக்கொண்டு ஸ்விட்ஸர்லாந்திற்குப் போய் அங்கு அதை உபயோகித்துவிட்டு நான்கு மாதங்கள் கழித்துக் கடைக்கு வந்து தான் அதைப் போட்டுக்கொண்டு விளையாடியபோது அதில் இருந்த நிறைய மினுக்குத் துகள்கள் உதிர்ந்துவிட்டதாகவும் தனக்கு அது மிகவும் சங்கடத்தைக் கொடுத்ததாகவும் கூறித் திருப்பிக் கொடுக்க முயன்றார். கடையின் அந்தப் பொருள் விற்கும் பகுதியின் மேனேஜர் மறுப்பு எதுவும் சொல்லாமல் திருப்பி வாங்கிக்கொண்டார். இப்படி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் கம்பெனிகள் அவர்கள் தலையில் வேறு விதமாக மிளகாய் அரைப்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. இது ஒரு அதீத உதாரணம் என்றாலும் அமெரிக்காவில் வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுப்பது என்பது சாதாரணமாக நடைபெறும் விஷயம். குறிப்பாக கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் பரிசு பெற்றவர்கள் பரிசு தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைக் கடையில் கொடுத்துவிட்டு தங்களுக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். தாங்கள் வாங்கும் பொருள் பரிசின் விலையை விடக் கூடுதலாக இருந்தால் அதற்குரிய பாக்கிப் பணத்தைக் கொடுத்து வாங்கலாம். விலை குறைவாக இருந்தால் அந்தப் பணத்தைக் கடை, கார்டாக கொடுத்துவிடும். அப்போதைக்கு எதுவுமே பிடிக்கவில்லையென்றாலும் பரிசுப் பொருளுக்குரிய பணத்தை கடை கொடுக்கும் கிரெடிட் கார்டாக வாங்கிக்கொண்டு எப்போதாவது அதை உபயோகித்துக்கொள்ளலாம். அதற்குக் காலவரையறை இல்லை. பரிசாகக் கொடுப்பதற்காக அல்லாமல் தங்களுக்காக வாங்கினாலும் அதைத் திருப்பிக் கொடுக்கலாம். ஆனால் அமெரிக்கர்கள் பொருள்கள் வாங்கும்போது திருப்பிக் கொடுப்பதற்காகவென்றே வாங்குவதில்லை. பிடிக்காவிட்டால் திருப்பிக் கொடுக்கிறார்கள் அவ்வளவே. ஆனால் இந்தியர்கள் கணினி, கேமரா போன்ற சில சாமான்களை வாங்கி உபயோகித்துவிட்டு தவணைக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இது பிடிக்காமல் திருப்பிக்கொடுக்கும் ரகத்தில் வருவதில்லை. உபயோகிப்பதற்காகவென்றே வாங்கிவிட்டு, உபயோகித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது. இது அறநெறியற்ற செயல் அல்லவா?

    இப்போது அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதிலும் கணினிக் கம்பெனிகளுக்காகச் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுத் திரும்பிப் போகும் கணினி வல்லுநர்கள் நிறையப் பேர். இப்படித் தற்காலிகமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கு அமெரிக்க உணவு அவ்வளவு பழகியிருக்காது. இங்கேயே நிறைய வருடங்கள் தங்கிவிட்ட இந்தியர்களும் அமெரிக்க, மற்றும் மற்ற நாட்டு உணவு வகைகளைச் சாப்பிடப் பழகிக்கொண்டாலும் இந்திய உணவுகளையும் இன்னும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள் இந்தியாவிலிருந்தும் காய்கறிகள் அமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்தும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் வருகின்றன. அமெரிக்க இந்தியர்களின் இந்த உணவுத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த உணவுகளை அமெரிக்காவில் வினியோகம் செய்யும் கம்பெனிகள் – இவை இந்தியர்களால் நடத்தப்படுபவை – சில சாமான்களில் அதை விட விலை குறைவான சாமான்களைக் கலந்துவிடுகிறார்கள். உதாரணமாக கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்துவிடுகிறார்கள். பார்க்க அவை இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். உற்றுப் பார்த்தால்தான் அவற்றுக்குரிய வித்தியாசம் தெரியும். ஓடிக்கொண்டே இருக்கும் அமெரிக்கர்களுக்கு இடையே வாழும் இந்தியர்களுக்கும் இதெற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அதே மாதிரி கடலை மாவில் பட்டாணிப் பருப்பு மாவைக் கலந்துவிடுகிறார்கள். அமெரிக்காவிற்குள் வரும் எல்லா உணவுப் பொருள்களின் தரத்தையும் பரிசீலித்து அனுப்ப அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை (Food and Drug Administration) இயங்கி வருகிறது. அரிசியில் மணலைக் கலந்தாலோ அல்லது புழுக்கள் இருந்தாலோ இந்தத் துறை அதைக் கண்டுபிடித்துத் தடைசெய்துவிடும். ஆனால் கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்தால் இவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

    இந்தியாவிலிருந்து முருங்கைக் காய்களைப் பனிக்கட்டியில் உறையவைத்துக் (freeze) கொண்டுவருகிறார்கள். ஒரு முறை நான் முருங்கைக்காய்களை வாங்கியபோது அவை மிகவும் முற்றிப் போயிருந்தன. இன்னொரு முறை வாங்கியபோது மிகவும் பிஞ்சாக இருந்தன. இரண்டு முறையும் உபயோகத்திற்கு லாயக்கற்றவையாக இருந்தன. மொத்தத்தில் ஒன்றிரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை. அதில் இருந்த எல்லாமே முற்றலாகவோ அல்லது மிகவும் பிஞ்சாகவோ பார்த்துப் பார்த்துத் தேர்தெடுத்தவை போல் இருந்தன. இது ஒரு வகை ஏமாற்று. உறையவைத்துப் பாக்கெட்டுகளில் வருவதால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து வாங்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு முற்றல் எது, பிஞ்சு எது என்பதெல்லாம் மறந்திருக்கலாம். மேலும் இந்தியாவிற்கு அடிக்கடி போகாதவர்கள் பலருக்கு இதுவாவது கிடைக்கிறதே என்ற மனப்பான்மைதான் இருக்கிறது. மேலும் இதையெல்லாம் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நான் ஒரு முறை அந்தக் கம்பெனி ஆட்களிடம் முறையிட்டேன். எங்கள் கம்பெனியில் உள்ள தர மதிப்பீடு செய்யும் குழுவிடம் கூறியிருகிறேன். இனி நன்றாக இருக்கும் என்றார்கள். அத்தோடு சரி. எந்த வித மாற்றமும் இல்லை. தரம் குறைந்த சாமான்களை வாங்காமல் இருப்பதே இவர்களுக்குப் பாடம் கற்பிக்கச் சிறந்த வழி. அதைச் செய்ய யாரும் தயாராக இல்லாத வரை இவர்களும் இப்படித் தரம் குறைந்த சாமான்களைத்தான் அமெரிக்காவில் விற்பார்கள்.

    அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக சேர்ந்து பழகுவார்கள். இதற்கு ‘dating’ என்று பெயர். முதல் தடவை பார்த்த பெண்ணையோ ஆணையோ பிடித்துப் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கொஞ்ச நாட்கள் பழகிவிட்டுப் பிடிக்கவில்லையென்றால் இன்னொரு துணையைத் தேடலாம். ஆனால் பழகுவதற்காக மட்டும் அமெரிக்கர்கள் ‘dating’ பண்ணுவதில்லை. இப்போது ‘dating’ பண்ணிக்கொண்டிருக்கும்போதே கணவன், மனைவி போல் நிறைய ஜோடிகள் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனாலும் அமெரிக்கர்கள் எப்படியும் இந்த உறவை விட்டுப் போகப் போகிறோம் என்று ‘dating’ பண்ணுவதில்லை. இதிலும் சில இந்தியப் பையன்கள் முறையற்ற செயலில் இறங்குகிறார்கள். அமெரிக்கப் பெண்களுடன் கொஞ்ச நாட்கள் ஜாலியாக இருந்துவிட்டுப் பின் இந்தியாவிற்குப் போய் பெற்றோர் பார்த்து முடித்துவைக்கும் பெண்ணை மணந்து கொண்டுவிடுகிறார்கள். அமெரிக்கப் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல. பெண்மை, கற்பு என்பதற்கெல்லாம் அமெரிக்க அகராதியில் அர்த்தங்களே வேறு. ஆனாலும் எப்படியும் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் மணமுடிக்கப் போகிறார்கள் என்று உறுதியாக இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட செயல்களில் இறங்க வேண்டும்?

    Share