Month: September 2016

  • அய்யனார் வீதி

    ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் தயாரிப்பில்
    நட்பையும், பாசத்தையும் சொல்லும்
    அய்யனார் வீதி

    ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அய்யனார் வீதி’.

    1
    முக்கிய கதாபாத்திரத்தில் புரட்சி திலகம் K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.

    2

    பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள்.

    4ஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு தான் உண்டு.

    அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம், அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு…பாசம்… நட்பு…வீரம்…அளவான கோபம்… இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை து£ண்டும் வண்ணம்… இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதுதான் “அய்யனார் வீதி’ படத்தின் வெற்றிக்கான சூட்சமம்.

    இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களை இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    3

    இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர், மேலப்பூங்குடி, குற்றாலம், கொடைக்கானல், சொக்கலிங்கபுரம், சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருந்த இயக்குனர் N. ராஜ்குமாரிடம் படம் பற்றி கேட்டபோது:

    உலகமே பார்த்து வியக்கும் கலாச்சாரத்தை கொண்ட நமது மக்களிடையே இப்போது நாகரீக மோக அதிகரித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நகரங்களில் மறைந்து கொண்டிருக்கும் அன்பு, பாசம், குடும்ப உறவுகளின் கலாச்சார பாரம்பரியம் கிராமங்களில் இன்னும் பல இடங்களில் அழியாமல் இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்வதுதான் ‘அய்யனார் வீதி’ கதை.

    5

    கதையே கேட்டதுமே பாக்யராஜ் சார் மிகவும் மகிழ்ச்சியோடு நடிக்க சம்மதித்தார். அவருக்கும் பொண்வண்ணனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பை ஊரே எதிர்க்கிறது. அப்படி ஊரே எதிர்த்தாலும் நட்புக்காக எல்லாவற்றையும் எதிர்த்து இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.
    ஊரைக் காக்கும் அய்யனார் சாமியை பற்றி 108 மந்திரங்கள் அடங்கிய பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக சாமி படம் என்று நினைக்க வேண்டாம். அழகான கிராமத்து நட்பை சொல்லும் படம். நட்பு, அன்பு, பாசம் அனைத்தும் இன்னமும் கிராமங்களில் மறையாமல் இருக்கிறது என்பதை ரொம்ப அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறேன்.

    பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பதோடு, ஒரு பாடலும் எழுதியிருக்கிறார் தயாரிப்பாளர் செந்தில்வேல். அடுத்த மாதம் பாடல் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். 65 நாட்களில் மிக திட்டமிட்டு முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறோம் என்றார் இயக்குனர் ராஜ்குமார்.

    தொழில்நுட்ப கலைஞர்கள்
    திரைக்கதை, வசனம், இயக்கம் : ஜிப்ஸி N.ராஜ்குமார்
    கதை – – பாஸ்கரன்
    ஒளிப்பதிவு – சக்திவேல்
    இசை – U.K.முரளி
    படத்தொகுப்பு – சுரேஸ் ஆர்ஸ்
    பாடல்கள் – பிரியன்
    நடனம் – சிவராஜ் சங்கர்
    ஆக்ஷன் – நாக்வுட் நந்தா
    மக்கள் தொடர்பு – செல்வரகு

    தயாரிப்பு
    P.செந்தில்குமார்
    விஜயசங்கர்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”துளஸிமா டத்தருகில் தாமோ தரனார்
    அலஸிமாடை ஆச்சாரம் ஆக்கி -கலஸம்
    வழிந்திட கீதகோ விந்தத்தை மத்தாம்
    கழியால் கடைகின்றான் காண்”….

     
    “வாமத்தில் மத்து, வலத்தினில் கோமாதா
    ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய,
    பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக்
    காரனிவன் கேசவ்கா க”….

    ”நீலம்பா ரித்த நவநீதன் கைகளில்,
    பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம்
    கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை
    விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் புறக்கோள் புளுட்டோவில் மாபெரும் நீர்ப்பனி எழுச்சிகள் தீவிர எக்ஸ்ரே வீச்சுகள் கண்டுபிடிப்பு

    pluto-volcanoes

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    +++++++++++++

    புதுத் தொடுவான் விண்கப்பல்
    மெதுவாய் நெருங்கி
    புளுடோ நீர்ப்பனி எழுச்சி காட்டும்.
    அணுசக்தி உந்து ஆற்றலில்
    மிகுந்த வேகத்தில்
    கடந்து செல்கிறது விண்கப்பல்.
    புளுடோ வையும்
    சாரன் துணைக் கோளையும்,
    நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த
    முதலிரு வாயேஜர்
    விண்ணூர்திகள் காணாத புது
    விந்தைகள் காணும் !
    புளுடோ வுக்கும் அப்பால் பறந்து
    கியூப்பர் வளையத்தின்
    கோள்களை உளவச் செல்லும் !
    சூரிய மண்டலத்து
    வால்மீன் மந்தையின்
    வளர்ப்பிடத்தைத்
    தெளிவாக
    ஆய்வுகள்  செய்யும் !
    புறக்கோள் புளுடோவின் புதிர்களைத்
    தீர்க்கும் புது நோக்கில்.
    பரிதி மண்டல வரம்பு தாண்டி
    பக்கத்துப் பரிதி மண்டலத்தில் பறந்து
    புதிய மைல் கல் ஊன்றும்
    நாசாவின்
    புதுத் தொடுவான் ஊர்தி !

    ++++++++++++++++++

    New Horizon Spaceship -1

    கடந்த 2015 ஜனவரியில் புதுத் தொடுவான் விண்கப்பல் புறக்கோள் புளுடோவை நெருங்கி மாபெரும் ஓர் பனிநீர் எழுச்சியைப் படம் எடுத்தது. அது எரிமலைக் குழம்பு இல்லை. சூரிய குடும்பத்தின் புறத்தே குளிர்க் கோள்களில் இத்தகைய பேரளவு நீர்ப்பனிக் கிளர்ச்சியை நாங்கள் இதுவரைக் கண்டதே இல்லை.

    புதுத் தொடுவான் விண்கப்பல் ஒவ்வொரு வாரமும் அனுப்பும் தகவல் குள்ளக் கோள் புளுடோவையும் அதன் துணைகோள்களைப் பற்றி நாம் அறிந்தவை எத்தனை விரைவாய் மாறி விருத்தி அடைகின்றன என்பதைப் எண்ணிப் பார்ப்பதே கடினமாய் இருக்கிறது.  புதிய கண்டுபிடிப்புகள் இப்படிப் பொழியும் போது,  புளுடோ பரிதி மண்டலத்தில் தனிப்பட்ட ஓர் முத்திரைக் கோளாக மிளிர்கின்றது.

    அலென் ஸ்டெர்ன் [புதுத் தொடர்வான் பிரதம ஆய்வாளர்]

    Pluto Surface

    இரண்டு குளிர்த்தள எரிமலைகள் [Cryovolcanoes] 10 மைல் குறுக்களவும், பல மைல் உயரமும் கொண்டவை.  இப்பெரும் மலைகளின் உச்சியில் பேரளவு குழியைக் காண முடிகிறது.  நமது பூமியில் அவை எரிமலை வாய்கள் என்று கருதப்படும்.  ஆனால் புளுடோவில் அம்மலை உச்சியி லிருந்து எரிமலை குழம்பின்றிப் பனிநீர், திரவப் பாறைகள், நைட்டிரஜன், அம்மோனியா அல்லது மீதேன் வாயுக்கள் எழுகின்றன.

    ஆலிவர் ஒயிட் [New Horizon Spaceship Researcher, NASA Ames Centerரொ

    ஓர் முரண்பாடு !  விஞ்ஞானிகள் குள்ளக்கோள் புளுடோவின் சந்திரன்கள் ஓரளவு அசைவாட்டம் புரிய [Wobbling] எதிர்பார்த்தனர்.  ஆனால் இந்த மிகையான அளவில் அல்ல !  புளுடோவின் சந்திரன்கள் பம்பரம்போல் மாறாய்ச் சுழல்கின்றன.  புளுடோவின் நான்கு சிறிய சந்திரன்கள் காட்டுவது என்ன ?  இரண்டோ, இரண்டுக்கு மேற்பட்ட சந்திரன்கள் பிணைந்து பல்வேறு துணைக் கோள்கள் உருவாகியிருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இதிலிருந்து பூர்வ காலத்தில் புளுடோவுக்குப் பல சந்திரன்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

      மார்க் சூவால்டர்  [Investigator, SETI Institute in Mountain View, California]

    pluto-volcanoes-1

    Pluto Mountains with Enormous Volcanoes.

    முதன்முதலாக கியூப்பர் வளையத்திலிருந்து குள்ளக்கோள் புளுடோவி லிருந்து எக்ஸ்ரே கதிர்கள் வெளிவருவதைக் [நாசாவின் சந்திரா எக்ஸ்ரே விண்ணோக்கிக் கருவிகள் மூலம்] கண்டோம். புறக்கோள் புளுடோ பரிதியின்  புயலில் எதிர்ப்பட்டு எதிர்பாராத மின்னாற்ற முறையில் ஈடுபட்டு வருகிறது.  இதுபோல் கியூப்பர் வளையத்தில் மற்ற பெரிய அண்டங்களும் எக்ஸ்ரே கதிர் வெளிவிடுவதாய் எதிர்பார்க்கலாம்.

    புளுடோ போன்ற காந்தமில்லா குளிர்ப்பாறைக் கோள்கள் பொதுவாக எக்ஸ்ரே கதிர்கள் எழுப்புவதில்லை.  ஆனால் சூரியப் புயலில் பாயும் மின்னியல் துகள்களோடு புளுடோ ஈடுபட்டால் எக்ஸ்ரே கதிர்கள் எழலாம்.   ஆனால் சந்திரா எக்ஸ்ரே விண்ணோக்கி கண்டதுபோல் ஒளிமிக்க எக்ஸ்ரே உண்டக்கப் போதிய சூரியப் புயல் வீசவில்லை. இதற்கு முன்பு எக்ஸ்ரே கதிர்கள் சனிக்கோளின் வளையத் தட்டுகளில் காணப்பட்டன.

    கரே லிஸ்ஸி [Astrophysicist, John Hopkins University, Applied Physics Lab]

    pluto-emitting-x-rays

    இது எனக்கோர் விந்தையாய்த் தெரிகிறது.  சூரியனுக்கு வெகு தூரத்தில் புளுடோவிலே பரந்த நீர்மயக் கடல் குடியிருப்புகள் [Habitats] உள்ளதற்கு வாய்ப்புகள்  இருக்க முடியும்.  அதுபோல் வால்மீன் போன்ற கியூப்பர் வளைய அண்டங்களிலும் நீர்மயம் இருக்கக் கூடும் என்பதும் மகத்தான தகவலாகும். நாங்கள் நன்றி கூறுவது தொடர்ந்து, நாசாவின் தொடுவான் விண்ணுளவி அனுப்பிய ஏராளமான தகவல் இலக்கத்துக்கு [Data]. அவற்றில் புளுடோ குள்ளக் கோளில் அடித்தட்டு நகர்ச்சி [Tectonic Features]  இருப்பது தெரிந்தது.  அவற்றை எடுத்துக் கொண்டு எங்கள்வெப்பத் தோற்றக் கணினி மாடலைச் [Thermal Evolution Model]சீர்ப்படுத்த முடிந்ததுஅதனால் புளுடோவில் உறைந்த அடிக்கடல் இருக்கக் கூடும் என்று அழுத்தமாய்க் கருத முடிந்தது.

    நோவா ஹாம்மண்ட் [பிரதம விஞ்ஞானி, பிரௌன் பல்கலைக் கழகம்]

    Pluto with methane

    புளுடோ குள்ளக் கோளில் பரந்த அடித்தளப் பனிக்கடல் கண்டுபிடிப்பு 

    2015 ஜூலை 15 இல் நாசாவின் தொடுவான் விண்ணுளவி புறக்கோள் புளுடோவை நெருங்கிச் சென்ற போது, ஆங்கே அடித்தள நீர்க்கடல் பனிக்கட்டித் தட்டைச் சுற்றிக் கீழே [Liquid Ocean around / under Icy Crust] இருக்கலாம் என்ற ஓர் ஆர்வத்தை  உண்டாக்கியது.  புதிய ஆய்வு களின்படி, இன்றும் அப்படி ஓர் நீர்க்கடல் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. அதற்குப் பயன்பட்டது புதுத் தொடுவான் விண்ணுளவி அனுப்பிய தகவல்  இலக்கத்தை வைத்து உருவாக்கிய வெப்பத் தோற்ற மாடல் [Thermal Evolution Model].  பில்லியன் ஆண்டுகட்கு முன்பே நீர்க்கடல் உறைந்து போய் இருந்தால், புளுடோ முழுக்கோளும் சுருங்கி இருக்கும். ஆனால் அப்படிக் கோள் முழுதும் சுருங்கியதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  மாறாக புளுடோ கோள் விரிவாக அறிகுறிகள் தெரிந்தன. குள்ளக்கோள் புளுடோவில் பரந்த பல்வேறு திரட்சியுடைய அடித்தளப் பனிக்கட்டி, [Icy I & Icy II] நீர்க்கடல், நைட்ரஜன், மீதேன் தென்படுகின்றன. உயர்ந்த மலைகள், சமவெளிகள் உள்ளன.   பல கி.மீ. நீளத் தொடர் பூத அடிதட்டு நகர்ச்சிப் [Giant Tectonic Features] பகுதிகள் இருப்பதை புதுத் தொடுவான் விண்ணுளவி காட்டி யுள்ளது.  புளுடோவின் பனிக்கடலை உருக்கத் தேவையான கனல் தரும் கதிரியக்க தனிமங்கள்  [Radioactive Elements] உட்கருவில் இருக்கின்றன. குள்ளக்கோள் புளுடோவின் அடித்தளப் பனிதட்டின் தடிப்பு 300 கி.மீ. [180 மைல்] மேலிருக்கும் என்று கணிக்கப் படுகிறது.

    Pluto frozen Icy Ocean

    நியூ ஹொரைசன் விண்ணூர்தி புளுடோவையும், அதன் துணைக் கோள்களையும் தேடி ஆய்ந்தது, நாசாவின் கடந்த 50 ஆண்டு வரலாற்றில் நிகழ்ந்த மகுடச் செயலாகும்.  மீண்டும் சாதித்த ஒரு வரலாற்று முதன்மை வெற்றியாகும்.  அமெரிக்கா புளுடோவை நெருங்கி அறிந்த முதல் தேசமாய் முன்னிற்கிறது.  இத்துடன் பரிதி மண்டலக் கோள்கள் அனைத்தையும் சுற்றி முன்னோடி ஆய்வு செய்த தேசமாய், ஈடு இணையற்ற பெயரெடுத்து மகத்தான சாதனை புரிந்துள்ளது.

    சார்லஸ் போல்டன் [ நாசா ஆளுமையாளர்]

    Pluto Like Moons

    புளுடோ போன்ற குள்ளக் கோள்கள் வானியல் உயிர்த்துவ விஞ்ஞானத்தில் ஆழ்ந்தறிய [Astrobiological Potential] மிக்க வாய்ப்புகள் அளிப்பவை.  மனித இனம் இதுவரைப் பல்லாண்டுகளாய் முயன்று, புதுக்கோள் ஒன்றைப் பற்றி விபரங்கள் அறிய இப்படியோர் வாய்ப்பு பிற நாடுகளுக்குக் கிடைத்ததில்லை. புளுடோ பற்றி நாம் இப்போது அறிந்து கொளவது எல்லாம் புதிய வெளிப்பாடே [New Revelation].

    அலன் ஸ்டெர்ன்  [நியூ ஹொரைசன் புளுடோ பிரதம  ஆய்வாளர்]

    Pluto and its moons -1

    புதுத்தொடுவான் விண்கப்பல் புறக்கோள் புளுடோவை நெருங்கிப் பத்தாண்டு பயணச் சாதனை வெற்றி.

    2015 ஜூலை 14 ஆம் தேதி நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி சுமார் பத்தாண்டுகள் பயணம் செய்து 3 பில்லியன் மைல்கள் கடந்து நமது பரிதி மண்டலத்தின் விளிம்பில் சுற்றும் புறக்கோள் புளுடோவை 7750 மைல் [மொம்பை – நியூயார்க் தூரம்] தூரத்தில் முதன்முதல் திட்டமிட்ட படி நெருங்கிப் படமெடுத்துப் புதியதோர் விண்வெளிச் சாதனைப் புரிந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாய் நாசா செய்து காட்டிய விண்வெளித் தேடல் சாதனைகளில், இது ஓர் அசுரச் சாதனையாகக் கருதப்படுகிறது.  2006 இல் ஏவிய இதுவே சூரிய மண்டலத்துக் கோள்களின் இறுதித் தேடலாகக் கருதப்படுகிறது.

    Pluto image -1

    நாசா முதன்முதலாக அணுசக்தியைப் பயன்படுத்தி புதுத்தொடுவான் விண்கப்பல் நீண்ட தூரம், நெடுங்காலம் பயணம் செய்து மணிக்கு 30,000 மைல் துரித வேகத்தில் புளுடோவை நெருங்கத் திட்டமிட்டு மாபெரும் வெற்றி பெற்றது.  15 வருடத் திட்டத்தில் உருவாகிய நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் மேலும் தொடர்ந்து பயணம் செய்து, எண்ணற்ற வால்மீன்கள் உற்பத்தியாகும் கியூப்பர் வளையத்தை [Kuiper Belt] அடுத்து நெருங்கப் போகிறது. 700  மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப் பட்ட புதுத்தொடுவான் விண்கப்பல் கியூப்பர் வளைய அகிலத் துணுக்குகள் [Cosmic Debris] எவையும் தாக்காபடி தப்பியது பெரு வியப்பைத் தருகிறது.

    Pluto core

    புதுத்தொடுவான் விண்ணூர்தி பூமிக்கு அனுப்பிய புதிய தகவல்

    துருவ பனித் தொப்பி பூண்ட புளுடோவின் விட்டம் 1472 மைல் என்று துல்லியமாய்க் கணிக்க முடிந்தது.  மேலும் நைடிரஜன் வாயு புளுடோவி லிருந்து வெளியாவது அறியப் பட்டது.  புளுடோவில் விண்பாறைகள் விழுந்து குழி விழாமல் [Impact Craters] சமவெளித் தளங்கள் [Plateaus] உள்ள வழவழப்பான பகுதிகள் காணப்பட்டன.  பனிக்கோளான புளுடோவின் தள உஷ்ணம் : [-230 டிகிரி C].  புறக்கோள் புளுடோவின் உட்புற வெப்பச் சூட்டில் நீரான அடிக்கடல் ஒன்று இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  புளுடோவில் உள்ள பனிமலைத் தொடர் 11,000 அடி [3400 மீ] உயரத்தில் அமெரிக்க ராக்கி மலைத்தொடர் போல் இருப்பதாகத் தெரிகிறது. சூரிய மண்டலம் தோன்றி  சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆயினும், புளுடோ தோன்றி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்.

    Pluto Core & atmosphere

    புளுடோ உட்கரு, சூழ்வெளி

    நியூ ஹொரைசன் விண்ணுளவி புளுடோவின் புதிய சந்திரன்களையும், வளையங்களையும் கண்டுபிடிக்கும் என்று மெய்யான ஓர் எதிர்பார்ப்பு உள்ளது.  புளுடோவுக்கு ஏற்கனவே  அறிந்த ஐந்து சந்திரன்கள் [சாரன், நிக்ஸ், ஸ்டைக்ஸ்,  ஹைடிரா & கெர்பெரோஸ்].  கணனி எண்ணியல் உருவாக்கத்தில் [Numerical Simulations] விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தூளான துணுக்குகள் புளுடோவை வளைங் களாய்ச் சுற்றி வருவதாகத் தெரிகின்றன !  அந்த வளையங்கள் தோன்றி மறைகின்றன.  புலப்படாத புது விண்வெளி நோக்கிப் போகிறோம் !   பயணத்தில் என்ன காணப் போகிறோம் என்று அறியோம்.   அந்த எதிர்ப்பார்ப்புகள் 2015 ஆண்டு ஜூலையில் நிறைவேறும் !

    அலன் ஸ்டெர்ன் [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto & Charon Cores

    ஹப்பிள் விண்ணோக்கியில் மங்கலாகத் தெரியும்  புளுடோவின் தளவியல் முற்றிலும் இதுவரைத் தேர்வு செய்யப் படாதது ! வானியல் விஞ்ஞானிகள் புளுடோவைக் குள்ளக் கோள் என்று ஒதுக்கினும், தள இயக்கங்கள் எவ்விதத்திலும் தாழ்ந்தவை அல்ல.   ஒரு கார் புளுடோவின் மத்திய ரேகையில் சுற்றி வந்தால் 5000 மைல் தாரம் என்று தொலைக் கருவி [Odometer] காட்டிவிடும்.    அது நியூயார்க் மன்ஹாட்டன் -மாஸ்கோ தூரம் ஆகும்.   அந்தப் பயணத்தில் ஒரு பயணி குளிர்ந்த நீரெழுச்சிகள், பள்ளக் குழிகள், முகில்கள் [Icy Geysers, Craters, Clouds] காண நேரிடலாம்.

    அலன் ஸ்டெர்ன்  [Alan Stern, Principal Investigator, New Horizon Mission to Pluto]

    Pluto Satellites

    புளுடோ குள்ளக் கோளின் ஐந்து துணைக்கோள்கள்

    புளுடோவில் அடிக்கடல் இருக்க வாய்ப்புள்ளதற்கு இரண்டு சார்பு அளவுகள் முக்கியம்  : முதலாவது அதன் பாறை உட்கருவில்  உள்ள கதிரியக்கப் பொட்டாசியத்தின் அளவு [Radioactive Potassium Quantity] [75 parts per billion]. இரண்டாவது  அதை மூடியுள்ள பனிக்கட்டியின் உஷ்ண அளவு [-230 டிகிரி C].  புளுடோவின் திணிவு [Density] கணிப்புப்படி 40% பாறைக் கொள்ளளவு.  தேவையான அளவு கதிரியக்கப் பொட்டாசியம் இருந்தால், தேய்வு வெப்பமே பனிக்கட்டி [Mixure of Nitrogen & Water] நீராக உருகத் தகுதி அளிக்கும்.

    கியில்லமேம் ரோபூச்சன் & ஃபிரான்சிஸ் நிம்மோ [காலிஃபோர்னியா பல்கலை கழகம்]

    “பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றல் சுழற்சி விசையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டது எமது பயங்கரக் கனவுகளுக்கு அப்பாற் பட்டது.  அது நமது புதுத் தொடுவான் விண்கப்பல் தயாரிப்பை மெய்ப்படுத்திய தோடு 2015 ஆண்டில் புளுடோவை நெருங்கி விடும் நேரிய விரைவுப் பாதையில் திருப்பப் பட்டது.  இதுவரைப் பிற விண்கப்பல்கள் புக முடியாத வியாழ மண்டலத்தைச் சீராக ஆராயப் புது யுக நவீனக் கருவிகளைக் கொண்டு போகும் அந்த விண்கப்பல் திருப்பம் ஓர் எதிர்பாராத நிகழ்ச்சியே !  மேலும் அப்பயணம் சூரிய மண்டலத்தின் மிகப் பெருங்கோள், அதன் துணைக் கோள்கள், வளையங்கள், சூழ்வெளியை ஆழ்ந்துளவித் தகவல் அனுப்பும் தகுதியும் கொண்டது.”

    அலன் ஸ்டெர்ன், நியூ ஹொரைஸன் பிரதம ஆய்வாளர், நாசா தலைமையகம், வாஷிங்டன். டி.சி.

    நாசாவின் விண்ணுளவி புது தொடுவான் இப்போது எங்கே பயணம் செய்கிறது ?

    2006 ஜனவரியில் ஏவப்பட்ட நாசாவின் விண்கப்பல் “நியூ ஹொரைசன்” இப்போது [மார்ச்சு 15, 2015] சூரிய மண்டலத்தின் கடைசிக் கோளான நெப்டியூன்  புறக்கோளை நெருங்கப் போகிறது.  நாளொன்றுக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் பயணம் செய்து,  சுமார் 3 பில்லியன் மைல் கடந்து, அடுத்து 2015 ஜூலையில் முதன் முதலாய்க் குள்ளக் கோள் புளுடோவை மிக நெருங்கிப் படமெடுக்கும்.  பிறகு 2015 ஜூலை 15 புளுடோவை 6000 மைல் [10,000 கி.மீ] தூரத்தில் உளவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

    புளுடோவின் தள உஷ்ணம் (-230 டிகிரி C) ஆக இருப்பதால், பனித் தரைக்குக் கீழே உள்ள நிரந்தர வெப்ப எழுச்சியால் நீர் மயக் கடல் ஒன்று இருக்குமா என்ற ஐயப்பாடு இருந்து வந்தது.  புளுடோ உட்கருவில் தொடர்ந்து வெப்பம் தர பாறையில் கதிரியக்கப் பொட்டாசியம் குறைந்தது [75 ppb] [parts per billion] அளவு இருக்க வேண்டும்.

    Eris and Moon

    இதுவரை குள்ளக் கோள் புளுடோ ஆழ்ந்து ஆராயப்பட வில்லை.  முன்பு நெருங்கிச் சென்ற வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] இத்துணை அருகில் புளுடோவை நோக்கிச் செல்லவில்லை.  குள்ளக் கோள் புளுடோவில் பல மர்மங்கள் / புதிர்கள் உள்ளன வென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.   புளுடோவின் பனிக்கடியில் கடல் ஒன்று இருக்கலாம் என்றும் நீரெழுச்சிகள் [Geysers] பல  இருக்கலாம் என்றும் யூகிக்கப் படுகின்றன.  இப்போது ஐந்து சந்திரன்களை [Charon, Styx, Nix, Kerberos & Hydra] புளுடோ கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.   மேலும் புதிதாகச் சந்திரன்கள் கண்டுபிடிக்கப் படலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.   பல்லாண்டுகளாக, விண் எறிகற்கள் சந்திரன்களை மோதித் தெறித்த துணுக்குகள், தூசிகள் புளுடோவை வளையங்களாகச் சுற்றி வரலாம் என்றும் யூகிக்கப் படுகிறது !  2015-2016 ஆண்டுக்குப் பிறகு நாசாவின் நியூ ஹொரைசன் விண்ணுளவி வால்மீன்கள் தோன்றும் கியூப்பர் வளையத்தைப் படமெடுத்துக் கடந்து செல்லும்.   இறுதியாக 2020 ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி, முந்தி அனுப்பிய வாயேஜர் விண்கப்பல்கள் போல், புது சூரிய மண்டலத்தின் ஊடே பயணம் செய்யும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

    New Horizon Travel Path

    இந்த சொற்பச் செலவு புறக்கோள் உளவு விண்வெளிக் குறித்திட்டம்  வெற்றிக் கதை சொல்வது.   நியூ ஹொரைஸன்  விண்கப்பல் கூட்டுறவுக் குழுவினர் புளுடோ  உளவு முயற்சியில் பெற்ற இரட்டை வெகுமதி இவை.   முதலாவது பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு விசை உதவியால்  புளுடோவின் உந்து வேகம் மிகைப்பாடு.   இரண்டாவது  பல மில்லியன் மைல்களுக்கு அப்பால் ஓய்வில் முடங்கிக் கிடக்கும் விண்கப்பலின் கருவிகள் சோதிப்பு இயக்க வெற்றி.   அதாவது “ஓய்வு முடக்கப் பயண விஞ்ஞான முத்திரைச் சான்றிதழ்”  (Certification of  Hibernation Cruise Science).   புளுடோவை நோக்கிப் பயணம் செய்வதில் பரிதிக் கோளப் பாதை நெடுவே என்னென்ன விந்தைகள் கண்டுபிடிக்கப் போகிறோம் என்று காத்திருக்கிறோம்.”

    அலன் ஸ்டெர்ன்  (Alan Stern, New Horizons Principal Investigator)

    “சூரிய மண்டலத்தின் தூசி உளவியான ( SDC – Student Dust Counter) கருவி விண்வெளித் தூசிகளை எண்ணித் தகவல்  அனுப்பும்.  இந்தத் தகவல் பரிதிச் சூழ்வெளித் தூசி மய அடுக்கின் பண்பாடுகளை அறிய உதவும்.   அதன் மூலம் மற்ற பரிதி மண்டலப் புதிர்களையும், மர்மங்களையும் விஞ்ஞானிகள் விடுவிக்க முடியும்.”

    ஜேம்ஸ் ஷாலே  (James Szalay, University of Colorado Graduate Student & SDC Instrument Leader )

     

    “சனிக்கோளுக்கு அப்பால் தீரச் சாதனை செய்த விண்வெளிக் கப்பல் சென்று 30 ஆண்டுகள் கடந்து, முதன்முதல் சூரிய மண்டலம் தாண்டிய வாயேஜர் 1 & 2 (Voyager 1 & 2) விண்ணுளவிகளுக்குப் பிறகு, தனித்துப்  புளுடோ கோளை உளவ நியூ ஹொரைசன் விண்ணுளவி அனுப்பப் படுகிறது.”

    “இப்போது சூரிய ஒளிப்பிழம்பு புயல்களின் (Solar Wind Plasma) மூலம் வெளிப்படும், கனல் வீச்சுகளையும் (Solar Flares), கதிர் நிறை வீச்சுகளையும் (Coronal Mass Ejections) முன்பை விடக் கருவிகளின் மூலம் தெளிவாக நோக்கப் படுகிறது.   சூரிய இயக்கங்கள் மிகை யாகும் இத்தருணத்தில் நியூ ஹொரைசன் விண்ணுளவியின் நவீன நுண்திறன் கருவிகள் பரிதி மண்டலத்தைக் கூர்ந்து நோக்குவது  அவசியப் படுகிறது.”

    மாத்யூ ஹில்  (New Horizon PEPSSI Instrument Scientist, Johns Hopkins University, Md)

    aj

    “இதற்கு முன்பு விண்வெளித் தேடல்களில் காணாமல் விட்டவற்றை அறிவதற்குக் கவனமாகக் கருவிகளைத் தயார் செய்து மேற்பட்ட விஞ்ஞான நோக்கங்களுக்கு வழி வகுத்தோம்.  வியாழ மண்டலம் தொடர்ந்து மாறி வருகிறது.  புதுத் தொடுவான் விண்கப்பல் மனத் துடிப்பு உண்டாக்கும் கண்டுபிடிப்புகளைக் காணச் சரியான காலத்தில் சரியான இடத்தில் பயணம் செய்துள்ளது.”

    ஜெஃப்ரி மூர், வியாழக் கோள் ஆய்வுக்குழுத் தலைவர், நாசா அமெஸ் ஆய்வகம், காலிஃபோர்னியா

    நியூ ஹொரைஸன் ஓய்வு முடக்கக் கருவிகள் பயணத்தின் போது தூண்டிச் சோதிக்கப் பட்டன

    2006 ஜனவரி மாதம் புளுடோவை நோக்கிப் பயணம் துவங்கிய நியூ ஹொரைஸன் விண்வெளிக் கப்பல் பல மில்லியன் மைல் கடந்து 2015 ஜூலை 14 ஆம் தேதி புளுடோவின் ஈர்ப்பு வலையில் நழுவிச் சுற்ற ஆரம்பிக்கும் என்று நாசாவின் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.    தற்போது ஏறக்குறைய முக்கால் பங்கு தூரத்தைக் (22.65  AU) (1 AU =  One Earth Distance from Sun] [One AU = 150 million Kms or 90 millian miles]  கடந்து நியூ ஹொரைஸன் விண்கப்பல்  புளுடோவை நெருங்க இன்னும் 8.76 AU தூரம் உள்ளது.

    விண்கப்பல் பயணத்தின் போது இடைத்தூரம் மில்லியன் கணக்கில் இருப்பதால் பல கருவிகள் தம் ஆயுளை நீடிக்க “ஓய்வு முடத்துவம்” [Hybernation ] செய்யப் படுகின்றன.   இப்போது அப்படி உறங்கும் கருவிகள் எழுப்பப் பட்டு இயங்கப் பூமியிலிருந்து தூண்டப் பட்டன.   இந்த விழிப்பு இயக்க நிலை 2013 ஜனவரி வரை நீடிக்கப் படும்.   அவை மீண்டும் இயங்கு நிலைக்கு மாறி அண்டவெளிச் சூழ்வெளியின் நிலைகளைப் பதிவு செய்யும்.

    சூரிய மண்டலம் அடக்கிக் கொண்டுள்ள பரிதிக் கோளம் [Heliosphere]  என்பது, அதி வேகச் சூரியப் புயல்  அடித்து உட்புறம் ஊதிய ஒரு வகையான பலூனே.    தூரம் மிகையானதால் நியூ ஹொரைஸன் விண்கப்பலின் மின்னியல் கருவிகள் நிறுத்த பட்டு பெரும்பாலும்  ஓய்வு முடக்க உறக்கத்தில் தணிந்த உஷ்ணத்தில் பயணம் செய்கின்றன.    அவ்விதம் நாசா செய்வதால் விண்கப்பல் கருவிகளின் ஆயுள் நீடிக்கப் படுகிறது.   அதுபோல் விண்கப்பலைத் திசை திருப்பிச் செலுத்தும் உந்துவிசை ஏவிகளும் (Thrusters) தணிந்த நிலையில் இயங்கி வருகின்றன.

    முதலில் திட்டமிடப் பட்ட நியூ ஹொரைஸன் ஒரே ஒரு கருவி [(SDC) Student Dust Counter in Heliosphere] மட்டும் இயங்கும் விண்கப்பலாய்த் தீர்மானிக்கப் பட்டது.   அந்த SDC  கருவியைத் தயாரித்தவர் கொலராடோ பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவரே.  முதன்முதல் அகிலவெளி ஆழத்தில் பணி புரிய அனுப்பப் பட்ட உளவுக் கருவியே அது.   ஓய்வு முடக்கத்தில் விண்கப்பல் பயணம் செய்யும் போது  SDC  கருவி சுயமாய் இயங்கிச் சூரிய மண்டலச் சூழ்வெளியில் தாக்கும் தூசிகளை  எண்ணிக் கணக்கிட்டுப் பில்லியன் மைல் தூரத்தில் இருக்கும் பூமிக்கு  அனுப்புகிறது.   பரிதி மண்டலத்தின் அந்தத் தகவல் பிற சூரிய மண்டலத்தின் மர்மங்களை விடுவிக்க உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    விண்கப்பல் கருவிகள் [SWAP -Solar Wind Around Pluto  &  PEPSSI – Pluto Energetic Particle Spectrometer Science Investigation] 1970 ஆண்டுகளில் அனுப்பப் பட்ட பயோனிர் 10 & 11,  வாயேஜர் 1 & 2 கருவிகளை விட நவீனமானவை,  சிறப்பானவை.  இந்தக் கருவிகள் பயண வழியில் மிதக்கும் சூரிய கதிரியக்க மின்னியல் துகள்களை எண்ணிக் கணக்கிடும்.    விநாடிக்கு 500 கி.மீ. வேகத்தில் (விநாடிக்கு 1 மில்லியன் மைல் வேகம்) வீசும் பரிதியின் புரோட்டான் புயலில் மாதிரி எடுக்கும்.  2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 80 நாட்கள் SDC, SWAP &  PEPSSI  ஆகிய மூன்று கருவிகளும் தகவல் பயிற்சியில் செம்மை யாகத் தகவல் அனுப்பியுள்ளன.

    New Horizon Spaceship

     புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோக்கு அப்பால் பயணம்

    1977 ஆம் ஆண்டில் அனுப்பிய இரட்டை வாயேஜர் -1 & -2 விண்கப்பல் களைப் பின்பற்றி 2006 ஜனவரி 19 இல் ஏவப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் (New Horizon Spaceship) முதன்முதல் புளுடோவைக் குறிவைத்து இப்போது பூதக்கோள் வியாழனையும், வளையக் கோள் சனியையும் தாண்டி முக்கால் தூரத்தைக்  கடந்து விட்டது.  2007 பிப்ரவரி 28 இல் வியாழனைச் சுற்றி அதன் ஈர்ப்பாற்றால் உந்தி விண்கப்பல் வேகம் மிகையாகி (Jupiter Flyby Swing) புளுடோவுக்குச் செல்லும் நேரிய பாதையில் திருப்பப் பட்டது.  அப்போது விண்கப்பல் வியாழக் கோளையும் அதன் துணைக் கோள் லோவையும் (Satellite Lo) புது யுக நவீனக் கருவிகள் மூலம் புது விபரங்களை உளவி அனுப்பியது.  நவீன வேக ராக்கெட் வசதிகள் அமைக்கப் பட்ட விண்கப்பல் வியாழனைக் குறுக்கிட 13 மாதங்கள் எடுத்துள்ளது.  விரைவான வேகத்தில் செல்லும் புதுத் தொடுவான் விண்கப்பல் புளுடோவை 2015 ஜூலை 14 ஆம் தேதியில் நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அத்துடன் பயணம் நிறுத்தம் அடையாது முதன்முறை விண்கப்பல் பனி அண்டங்கள் நிரம்பிய குயூப்பர் வளையத்தை (Kuiper Belt) நெருங்கி ஆராயும்.

    Current Location

    2006 ஜனவரி 19 ஆம் தேதி புதுத் தொடுவான் விண்கப்பல் பிளாரிடா கேப் கனாவரல் முனையிலிருந்து அட்லாஸ் -5 முதற்கட்ட ராக்கெட், சென்ட்டூர் இரண்டாம் கட்ட ராக்கெட், ஸ்டார் 48B மூன்றாம் கட்ட ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  இதுவரை உந்தப்படாத ஓர் வேக ராக்கெட் விண்கப்பலாகக் கருதப்படுகிறது புதுத் தொடுவான்.  சின்னக் கோள் புளுடோவைக் குறிவைத்து ஏவப்பட்டாலும் திட்டப்படி அது பரிதி மண்டலத்தின் விளிம்பில் கியூப்பர் வளையத்தையும், வால்மீன்கள் வெளிவரும் ஓர்ட் முகில் கோளத்தையும் ஆராயப் போகிறது.  விண்கப்பல் பின்பற்றும் வீதி ‘பரிதி-புவி விடுவிப்புப் பாதை’ (Earth -Solar Escape Trajectory). எனப்படுவது.  விண்கப்பல் உந்தப்பட்ட வேகம் விநாடிக்கு 10 மைல் வீதம் (மணிக்கு 36,370 மைல் வேகம்) (16.3 கி.மீ/விநாடி) (மணிக்கு 58,500 கி.மீ வேகம்) என்று அறியப் படுகிறது.  இந்த வேகத்தில் பயணம் செய்து பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றலில் முடுக்கப்பட்டு புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் (Charon) முதன்முதல் நெருங்கி ஆராயும்.  வியாழக் கோளையும் அதன் துணைக்கோள் லோவையும் (Lo) மெல்லிய வளையங்களையும் இதுவரை உளவிப் புதுத் தகவலை அனுப்பியுள்ளது.  அடுத்து சனிக்கோளின் பாதையை 2008 ஜன் 8 ஆம் தேதி குறுக்கிட்டுக் கடந்து இப்போது யுரேனஸ் நெப்டியூன் கோள்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

    புதுத் தொடுவான் பயணத்தின் குறிக்கோள் என்ன ?

    புதுத் தொடுவான் திட்டம் நிறைவேற 15 ஆண்டுகளுக்கு (2001–2016) ஒதுக்கிய நிதிச் செலவு 650 மில்லியன் டாலர்.  இச்செலவில் விண்கப்பல் கட்டமைப்பு, கருவிகள், ராக்கெட் ஏவல், திட்டக் கண்காணிப்பு, திட்ட இயக்கம், தகவல் ஆய்வுகள், விளம்பரம், பயிற்சி ஆகியவை அடங்கும்.  புதுத் தொடுவான் விண்கப்பல் குறைந்த எடையில் தயாரிப்பாகி வேகமாகச் செல்ல டிசைன் செய்யப்பட்டது.  ஏவப்படும் போது விண் கப்பலின் எடை 478 கி.கி (1054 பவுண்டு). புதுத் தொடுவான் திட்டமிட்ட போது புளுடோ பரிதி மண்டலத்தின் ஒரு கோளாகக் கருதப் பட்டிருந்தது.  சமீபத்தில் அது ஒரு குள்ளக் கோள் (Dwarf Planet) என்று அகில வானியல் ஐக்கியப் பேரவை உறுப்பினரால் (International Astronomical Union) புறக்கணிப்பானது.  இதுவரை செய்த பயணத்தில் விண்கப்பல் பூதக்கோள் வியாழனையும், அதன் துணைக் கோளையும், சனிக் கோளையும் நவீனக் கருவிகளால் ஆராய்ந்துள்ளது.

    அடுத்து 2011 மார்ச்சில் யுரேனஸ் கோள் பாதையைக் கடக்கும்.  அதற்கு அடுத்து 2014 ஆகஸ்டில் நெப்டியூன் கோள் வீதியைத் தாண்டும்.  2015 இல் புளுடோவை நெருங்கியதும், அது புளுடோவையும் அதன் துணைக்கோள் சேரனையும் உளவித் தகவல் அனுப்பும்.  2015 ஆண்டு ஜூலை 14 இல் புளுடோவைத் தாண்டிச் செல்லும் புதுத் தெடுவான் விண்கப்பல் 5 மாதங்கள் அதையும் அதன் துணைக்கோள் சேரனையும் ஆராயும்.  பிறகு சுமார் 100,000 எண்ணிக்கை யுள்ள குள்ளப் பனிக் கோள் அகிலத்தையும் (Icy Dwarf Worlds) பில்லியன் கணக்கில் இருக்கும் வான்மீன் மந்தை களையும் கொண்ட கியூப்பர் வளையத்தை (Kuiper Belt Globe) விளக்கமாக நோக்கும் !

    பூதக்கோள் வியாழனில் விண்கப்பல் கண்டது என்ன ?

    முதன்முதலில் வியாழனை நோக்கிச் சென்ற கலிலியோ விண்ணுளவி ஆறு ஆண்டுகட்கு மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  அதற்குப் பூமியால் இருதரம் ஈர்ப்பாற்றல் உந்தும், வெள்ளிக் கோளால் ஒருதர உந்தும் பெற்றது.  அதற்குப் பிறகு சென்ற காஸ்ஸினி விண்ணுளவி வியாழனை அண்ட வெள்ளிக் கோளால் இருமுறை ஈர்ப்பாற்றல் உந்தும், ஒருமுறை பூமியால் ஈர்ப்பாற்றல் உந்தும் பெற்று 3 வருடங்கள் எடுத்தது.  சனிக்கோளை நெருங்க மேலும் மூன்றரை ஆண்டுகளும் எடுத்தது.  ஆனால் வேகமாக உந்தப்பட்ட புதுத் தொடுவான் விண்கப்பல் பூமி யிலிருந்து 13 மாதங்களில் (பிப்ரவரி 28, 2007) வியாழனை நெருங்கி ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் புரிந்தது.  அடுத்து 15 மாதங்களில் (ஜூன் 8, 2008) சனிக்கோளைக் கடந்ததும் அடுத்தோர் வரலாற்றுச் சாதனையே.

    வியாழனையும் அதன் நான்கு துணைக் கோள்களையும் விண்கப்பல் நெருங்கும் போது, பூமியிலிருந்து விண்கப்பலின் நவீனக் கருவிகள் ஆராய இயக்கப் பட்டன.  கலிலியோ விண்ணுளவி 2003 இல் ஓய்ந்த பிறகு அடுத்துப் புதுத் தொடுவான் 2007 இல் உளவி புதிய தகவலை அனுப்பியது.  வியாழனில் நிறம் மாறிவரும் ‘செந்நிற வடுவில்’ (Jupiter’s Red Spot) எழும்பும் ஒலிவேகத்தை மிஞ்சும் சூறாவளியை (Supersonic Winds) அளந்து அதன் போக்கை மிக்க விளக்கமாகப் படம் எடுத்தது.  2005 ஆண்டுவரை செந்நிற வடுக்களில் ஒரு வெள்ளை நீள்வட்ட முகில் (White Oval Cloud) தெரிந்தது.  மேலும் வியாழனின் மங்கிய வளையத்தைப் படம் பிடித்தது.  அந்த வட்ட வளைய அமைப்பில் வெகு சமீபத்தில் உண்டான மூன்று தூசிக் கொத்துகளைப் (Clumps of Fine Dust Particles) படம் எடுத்தது.

    Project Details

    வியாழன் துணைக்கோளில் விண்கப்பல் கண்டவை என்ன ?

    புதுத் தொடுவான் விண்கப்பலின் கூரிய காமிரா வியாழனின் எரிமலைத் துணைக்கோள் “லோவை” (Jupiter Moon Lo) சீரிய முறையில் முதன்முதல் ஆராய்ந்து தகவல் அனுப்பியது.  விண்கப்பலின் தொலை நீட்சி உளவுக் காமிரா ‘லோர்ரி படம் பிடிப்பி’ (LORRI – Long Range Reconnaissance Imager) வாஸ்தர் எரிமலைப் புகை கொதித்தெழும் (Tvashtar Volcano) காட்சியை விளக்கமாகப் படம் பிடித்து அனுப்பியது.  அதன் கோரப் புகை முகில் 200 மைல் (320 கி.மீ) உயரத்துக்கு எழுவதைக் காட்டியது.  அத்துடன் புதிய இரண்டு எரிமலைகளின் எழுச்சிகளையும், 20 மேற்பட்ட தளவியல் மாறுபாடுகளையும் கண்டுபிடித்தது.

    புதுத் தொடுவான் விண்கப்பல் பயணத்தில் இரண்டு முக்கிய விஞ்ஞானத் திட்டக் குறிக்கோள்கள் வெற்றி அடைந்தன.  முதலாவது ஓர் அண்டக் கோளின் ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்தி எப்படி நெருங்கிச் சென்று வேகத்தை விரைவாக்குவது என்று பயிற்சி மூலம் செய்தறிந்தது.  அதனால் விண்கப்பலின் வேகம் அதிகரித்துப் பயணக் காலம் குறைந்தது.  இரண்டாவது வியாழனுக்கு அருகில் ஈர்ப்புச் சுழல்வீச்சைப் பயன் படுத்தியதால், பேரளவு சுற்றியக்கச் சக்தியை (Jupiter’s Orbital Energy) விண்கப்பல் களவாடிக் கொள்ள முடிகிறது என்பது அறியப் பட்டது.  அவ்விதம் செய்ததில் பூதக்கோள் வியாழனின் ஈர்ப்பாற்றல் சுழற்சியால் (Gravitational Slingshot) விண் கப்பலின் வேகம் மணிக்கு 9000 மைல் (150000 கி.மீ/மணி) மிகையானது ! பூமி யிலிருந்து சமிக்கை அனுப்பி நாசா நிபுணர் புளுடோ கோளுக்குச் சீக்கிரம் செல்லும் வேகப் பாதையில் விண்கப்பலைத் திறமையாகத் திருப்பினர் !  வியாழக்கோளின் ஈர்ப்பாற்றல் உந்துசக்தி களவாடப் படவில்லை யென்றால் விண்கப்பல் புளுடோவை அண்ட மூன்று ஆண்டுகள் இன்னும் அதிகமாய் எடுக்கும் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA

    தகவல்:

    a)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html(Jupiter)

    b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html(Saturn)

    c)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)

    d)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=41005231&format=html(Voyager 1 & 2 Travel Beyond the Solar System.

    1.  National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 2005)

    2.  National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)

    3.  NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)

    4.  NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)

    5.  From Wikipedia – Voyager 2 (May 16, 2010)

    6.  Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)

    7.  NASA Report – Pluto-Bound New Horizon Spacecraft Sees Changes in Jupiter System (September 10, 2007)

    8.  Wikipedia Report : New Horizons Spacecraft (May 26, 2010)

    9.  Astronomy Magazine :  How We Will Explore Pluto ?  NASA’s New Horizon Probe By : Richard Talcott (July 2010)

    10.  Pluto-Bound NASA Spacecraft to Collect More Data When Hibernating During Travel  (July 9, 2012)

    11.  Outer Planets :  New Horizons Doing Science in its Sleep (July 10, 2012)

    12.  http://www.decodedscience.com/new-horizons-nasas-pluto-bound-spacecraft-keeps-going-going/39941  [December 4, 2013]

    13. http://www.redorbit.com/news/space/1113047356/new-horizons-approaching-pluto-011514/  [January 13, 2014]

    14.  www.dailygalaxy.com/my_weblog/2014/01/the-unexplored-planet-nasas-fastest-spaceship-on-approach-to-pluto-1.html?  [January 18, 2014]

    14 a.  http://www.davidreneke.com/hubble-to-search-beyond-pluto-for-a-new-horizons-target/#  [June 20, 2014]

    15. http://www.planetary.org/blogs/emily-lakdawalla/2015/02041311-new-horizons-returns-first.html  [February 4, 2015]

    16.  http://blogs.scientificamerican.com/observations/2015/03/06/dawn-spacecraft-arrives-at-ceres-becomes-first-to-orbit-a-dwarf-planet/  [March 6, 2015]

    17. http://www.nasa.gov/newhorizons/homes-on-pluto/  [March 10, 2015]

    18.  http://www.nytimes.com/interactive/2015/01/13/science/space/photos-of-pluto-from-nasa-new-horizons.html?_r=0   [March 11, 2015]

    19. http://en.wikipedia.org/wiki/New_Horizons, [March 24, 2015]

    20.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/03/naming-the-mysterious-features-of-pluto-and-charon-an-open-invitation-to-the-world-community.html?  [March 24, 2015]

    21.  https://en.wikipedia.org/wiki/Moons_of_Pluto  [July 17, 2015]

    22.  http://www.dailygalaxy.com/my_weblog/2015/07/nasa-pluto-mission-charons-strange-mountain-has-geologists-stunned-and-stumped.html?  [July 17, 2015]

    23. https://www.nasa.gov/audience/forstudents/k-4/stories/nasa-knows/what-is-pluto-k4.html  [August 4, 2015]

    24.  http://www.space.com/68-inside-dwarf-planet-pluto-infographic.html  [November 15, 2010]

    25.  http://www.space.com/11431-photos-pluto-charon-moons-dwarf-planet.html  [July 14, 2015]

    26.  http://cseligman.com/text/planets/pluto.htm  [November 21, 2015]

    27. https://www.theguardian.com/science/2015/dec/05/pluto-new-horizons-sharpest-ever-images-space [December 5, 2015]

    28.  https://en.wikipedia.org/wiki/Pluto  [June 14, 2016]

    29. http://www.wired.com/2015/07/nasa-releases-stunning-color-images-pluto-charon  [July 14, 2015]

    30. http://www.dailygalaxy.com/my_weblog/2016/06/vast-water-ocean-detected-on-pluto-absolutely-incredible.html?  %5B  [June 27, 2016]

    31. http://www.iflscience.com/space/pluto-might-have-biggest-volcano-outer-solar-system/

    32.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/08/enormous-volcano-detected-on-pluto-that-spews-ice-not-lava-nothing-like-this-has-been-seen-in-the-de.html [August 11, 2016]

    33.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/09/-nasa-mystery-scientists-baffled-by-plutos-intense-x-ray-emissions-no-natural-means-for-emitting-x-r.html?  [September 18, 2016]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 23, 2016 [R-2]

    [http://jayabarathan.wprdpress.com]

    Share
  • உந்து தமிழ் கந்தன் களிப்பு

     

    கிரேசி மோகன்
    ————————————————–

    vallidevyani_murugan_02

    ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ
    மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம்
    அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு
    திமிர்ந்த ஞானத் துணிவு….(1)

    மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி
    மானை மணந்த தமிழழகா -சேனை
    தளபதியே சூரன் தலைபறித்த சூரா
    உளமதிலே உட்கார் உவந்து….(2)

    வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும்
    வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும்
    ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு
    வான்வசம் ஆக்கிட வா….(3)

    விடையேறு பாகன் விழிவந்த வேலா
    படையேறி வாழ்கின்ற பிள்ளாய் -கடையோரம்
    வைத்தேன் கவியெழுதி விற்றுன் அனுபூதி
    துய்த்தேன் தமிழ்வணிகத் தில்….(4)

    உடைந்தாலும் கண்ணாடி உள்ளதைக் காட்டும்
    குடைந்தாலும் கற்பாறை கோயிலாகும் -அடைந்தாலும்
    ஆறு கடலைத்தான் சேறும் அதுபோல
    ஏறு மயிலோன்கண் ஏகு….(5)

    பாம்பன் ஸ்வாமிகள் கோயில்….
    —————————————-
    உப்பு மிளகிட்டு சுப்பனின் சன்னிதியில்
    தப்புத்தப்(பு) என்றுகன்னத் தாளமிட்டு -அப்புறம்
    பாம்பன் சுவாமிகள் பாதம் பணிந்தளிக்கும்
    சாம்பலை நெற்றியில் சூடு….(6)….கிரேசி மோகன்….!

    Share
  • பஞ்ச பூத சக்தி

     

    மீ.விசுவநாதன்

    எவ்வுரு வானால் எனக்கென்ன – உனை
    எளிதினில் உணர்ந்திட முயல்கின்றேன்
    ஒவ்வொரு பாவாய் “நா”வைத்து – உன்
    ஒளிமிகு அடிகளில் பயில்கின்றேன் !

    சப்தமாய் வாக்கில் வரும்போது – உன்
    சத்திய ஒலிதனைக் கேட்கின்றேன்
    கொப்பெலாம் சாயக் காற்றடித்தால் -உன்
    குரல்தரும் இசையென ரசிக்கின்றேன் !

    தீபமாய் நின்று எரிகையிலே – உன்
    தெளிவுரு அழகினைத் தொழுகின்றேன்!
    கோபமாய்க் கடலாய்க் குதிக்கையிலே -வன்
    கொடுமையை எதிர்க்கிற குணங்கண்டேன் !

    மண்ணிலே வாழும் உயிரெல்லாம் – உன்
    வடிவிலே இருக்கிற அழகென்பேன்
    எண்ணிலே பஞ்ச பூதமெலாம் – உன்
    இருவிழி வழிகிற அமுதென்பேன் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”’ஆலா பனைசெய்து , ஆவை மடியிறுத்தி
    தாலேலோ பாடுகிறான் தூங்கவைக்க , -மாலோலன்:
    வண்ணமிகு கேசவ் வரைந்தனுப்பும் வாத்ஸல்யக்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

    Share
  • எல்லோரும் விரும்பிடுவோம்!

    – எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா 

    மழையின் பொறுமையினால்
    மாவெள்ளம் தான்குறையும்
    மாபூமி  பொறுமையினால்
    மக்களெலாம் வாழுகிறார்
    இரவின் பொறுமையினால்
    இன்பமெலாம் விளைகிறது
    இறைவனது பொறுமையினால்  jeya
    இயக்கமே நடக்கிறதே!

    தாயின் பொறுமையினால்
    தான்குழந்தை வளர்கிறது
    தந்தையின் பொறுமையினால்
    தான்நிமிர்ந்து நிற்கிறது
    குருவின் பொறுமையினால்
    குணம்பெற்று உயர்கிறது
    குவலயத்தில் பொறுமையது
    கொடையாக விளங்குதன்றோ!

    தருமனது பொறுமையினால்
    சன்மார்க்கம் உயர்ந்ததுவே
    சகுனியது பொறையின்மை
    சதியாகக் குவிந்ததுவே
    இமயமாய்ப் பாண்டவரை
    எல்லோரும் மதிப்பதற்கு
    ஏற்றதொரு வலிமைதந்த
    இலக்கணமே பொறுமையன்றோ!

    காந்தியது பொறுமையினால்
    கண்டுநின்றார் சுதந்திரத்தை
    சாந்தியுடன் வாழ்வதற்கும்
    தத்துவமே பொறுமையன்றோ?
    நீதிநேர்மை அத்தனையும்
    நெறிதவறிப் போவற்குப்
    பொறுமைபற்றி உணராதார்
    பொறுப்புதான்  காரணமே!

    தலைவர்க்கும் பொறுமையில்லை
    தொண்டர்க்கும் பொறுமையில்லை
    தலைநிமிர்ந்த  ஆணவத்தின்
    தாள்பணிந்தே நிற்கின்றார்
    நிலைகுலைந்து பலபோயும்
    நினைத்துமே பார்க்காமல்
    நிற்பதற்குப் பொறுமையிலா
    நிற்பதுவே காரணமே!

    புத்தபிரான் பொறுமையும்
    புனிதநபி பொறுமையும்
    உத்தமராம் யேசுபிரான்
    உயர்ந்துநின்ற பொறுமையும்
    சத்தியத்தாய் ஈன்றெடுத்த
    வள்ளுவரின் பொறுமையும்
    இத்தரைக்கு வந்திருந்தும்
    ஏன்பொறுமை வரவில்லையோ!

    பொறுத்தாரே அரசாள்வார்
    பொங்கினார்க் காடுறைவர்
    புவிதனிலே சிறந்தசெல்வம்
    பொறுமையே எனவறிவோம்
    நினைத்துமே எண்ணிவிட்டால்
    நெஞ்சமதில் பொறுமையினை
    இருத்தியே வைத்துவிட
    எல்லோரும் விரும்பிடுவோம்!

     

     

    Share
  • நினைவாற்றலும், நினைவகமும்

    -க.பிரகாஷ்

    ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்ததால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளைச் சேமித்துக் கொள்ளலாம். என விஞ்ஞான வளர்ச்சி குறிப்பிடுகின்றது. ஆனால் அத்தனையும் நினைவில் நிறுத்துவது கடினம் என்கின்றனர்.

    நினைவு

        
    நமது நினைவாற்றலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மூளையாகும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் போன்ற பகுதிகள் இருந்தாலும், பெருமூளையின் பெரும்பங்கே நினைவாற்றலின் சேமிப்பு வங்கியாக விளங்குகிறது.

         brain-pictureநினைவாற்றல் என்பது ஒருவர் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வாயிலாகப் பார்த்து, படித்து, கேட்டு, நுகர்ந்து, உணர்ந்து, சுவைத்து, அறிந்து அனுபவங்கள் பலவற்றையும் மனத்தில் பதியவைத்து வேண்டியபோது அதை நினைவில் கொண்டுவரும் ஆற்றல் ஆகும். அனுபவங்கள் மூளையில் இலேசான பதிவை உண்டாக்குவதும், ஆழமான பதிவை உண்டாக்குவதும் அவரவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, காட்டும் ஆர்வம், மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொறுத்து இருக்கிறது. நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல், நினைவிலகுதல், மீட்டழைத்தல் மற்றும் மீட்டறிதல் என்ற நான்கு நிலைகளாகும்.

    மீட்டழைத்தல் (Recall )

         கற்றறிந்த ஒன்றை நினைவில் நிறுத்திவைக்க, மூளையில் பதிந்துள்ளதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுதான் மீட்டழைத்தலாகும். பல மணிநேரம் படித்ததைச் சில நிமிடங்களில் மீட்டழைத்து மனக்கண்முன் காணமுடியும்.

    மீட்டறிதல் (Recognition)

         மூளையில் பதிந்திருப்பதை மீட்டழைத்து நன்கு யூகித்து நேற்றுப் பார்த்தது இதுதான், முந்தியநாள் வந்தவர் இவர்தான் என்று இப்படித் தீர்மானமாக உணர்வதைத்தான் மீட்டறிதல் என்கிறோம்.

    நினைவாற்றலின் வகை
    குறுகிய கால நினைவாற்றல்
    நீண்டகால நினைவாற்றல்

    குறுகிய கால நினைவாற்றல்

         நம் மூளையில் அத்துணைத் தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்தத் தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்தும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இவ்வகை நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல் என்கின்றனர்.

    நீண்ட கால நினைவாற்றல்

         நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனத்தை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சில நேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.

         மூளை பல செய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்துப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்தத் தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.

         குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பதும், கேட்பதும் அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை மூன்று வயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.

         ஒரு மனிதனின் மூளையில் பதிவு செய்யப்படும் இவ்வகை நினைவுகளை நினைவாற்றல் என்று குறிப்பிடுகின்றேன்.

    நினைவகம்

     மனித மூளையைப் போலவே பல தகவல்களைச் சேமிப்பதற்குக் கணினியில் நினைவகம் என்ற ஒன்று தேவையாகிறது. நினைவகம் பல தகவல்களைச் சேமித்து வைக்கப் பயன்படுவது ஆகும்.

         சார்பிலாத் தெரிவு நினைவகம் கணினி நினைவகcomp-memory வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன், சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெறதக்க வகைகளில் அமையும். சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப்பட்ட ஒழுங்கு தவிர்த்த வேறு சார்பிலா ஒழுங்குகளிலும் தரவுகளைத் தெரியப்படுத்தலாம்.

         சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் மூலமே தரவுகள் வாசிக்கப்படும்.  இதனால் இவற்றில் வாசிப்பு நோக்கத்தைவிட தரவுள்ள இடத்தை அடைவு நேரமே அதிகமாகும்.

         RAM  என்னும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும். நிரந்திர நினைவகம் ROM போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்று வகைப்படுத்தப்படும். சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே.

    சார்பிலாத் தெரிவு வகை நினைவகம்

    சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட (Magnetic Core Memory ) காந்த உள்ளக நினைவகம் ஆகும். இதற்குப்பின் 1960ஆம் ஆண்டு மற்றும், 1970ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்பட்ட அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    நினைவகம் இரண்டு வகை

    நிலையான நேரடி அணுகல் நினைவகம்

    மாறும் நேரடி அணுகல் நினைவகம்

    நிலையான அணுகல்

         நிலையான நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது ஆறு டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்த வகை நினைவகங்களைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். ஆனால் இவை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி அதிவேகமாக செயல்படுகின்றன.

    மாறும் அணுகல்

         மாறும் நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது டிரான்சிஸ்டர் மற்றும் மின்தேக்கிகளைத் தயாரிக்கக் குறைந்த பொருட் செலவு ஆகும். தற்போதைய நவீனக் கணினிகளில் அதிகமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.

         இவ்விரு நினைவகங்களிலும் ஆற்றல் இல்லாதபோது தகவல்களைச் சேமித்துவைக்க முடியாது. ஆற்றல் இல்லாதபோது மீட்டமைக்கப்படும் மாறாத  ( ROM ) தகவல்களை நிரந்தரமாகப் பதிவு செய்கிறது.

    கணினியின் நினைவகம்
    தற்காலிக  நினைவகம்
    DRAM
    SDRAM

    Upcoming

    Z-RAM
    TTRAM

    Historical

    Williams’s tube
    Delay sine Memory

    நிரந்தர நினைவகம்

    ROM
    PROM
    EAROM
    EPROM
    EEPROM

    Flash Memory

    Upcoming

    FE RAM
    MRAM
    CBRAM
    PRAM
    RRAM

    Racetrack Memory

    NRAM

    Historical

    Drum Memory
    Magnetic Core Memory
    Plated wire Memory
    Bubble Memory
    Twist or Memory

    கணினி நினைவகம்

    Computer Memory:

    Primary Memory
    Secondary Memory

    பிரதான நினைவகம்           துணை நினைவகம்

    Bipolar                                             Magnetic                                       Bubble                                            Magnetic tapes
    Mos                                                 Floppy Disk
     RAM                                              Optical
    ROM                                                DVD
    PROM – EPROM – EAPROM      CD

    நினைவகத்தின் கணக்கீடுகள்

    8Bit                       –              1Byte

    1024Byte             –              1KB – Kilo Byte

    1024KB                –              1MB – Mega Byte

    1024MB               –              1GB – Giga Byte

    1024GB                –              1TB Tera Byte

    1024TB                –              1PB Peta Byte

    1024PB                –              1EB Exa Byte

    1024EB                –              1ZB Zetta Byte

    Floppy                  –              1.44 MB

    CD                         –                700 MB

    DVD                      –                4.0 , 8.5 GB

    ஒரு மனிதன் தன் மூளையில் பல்லாயிரம் கணக்கான பதிவுகளை சேமித்து வைத்துக் கொண்டு தனக்குத் தேவையான நேரங்களில் நினைவுப்படுத்தி அதனை பயன்படுத்திக்கொள்கிறான். ஒரு சில காலங்களில் பதிவான தகவல்களை இழக்க நேரிடலாம். அதிர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ இந்த வகைச் சிக்கல் ஏற்படலாம்.

         மனித மூளையிலுள்ள நினைவகம் போலவே நினைவகங்கள் கணினி, செல்பேசி, கையடக்கக் கருவி எனப் பல மின்னணுக் கருவிகளில் தரவுகளைச் சேமிக்கப் பயன்படுகின்றன. இந்தச் செயற்கை நினைவகத்திற்கு வரையறை கொண்டு சேமிக்கவேண்டிய சூழல் இருக்கின்றது. ஆனால் மனிதனின் நினைவாற்றல் அவ்வாறு இல்லை. அவனுக்குத் தேவையான நேரங்களில் எத்தகைய தகவல்களையும் சேமிக்கும் ஆற்றல் பெற்றவன். ஆனால் நினைவகத்திற்கு 1GB. 2GB, 4GB, 8GB, 16GB. 32GB, 64GB என அளவுகள் உள்ளதால் இவ்வகை அளவுக்கு ஏற்ற தகவல்களைப் பதிவு செய்யமுடியும்.

         மனித மூளை ஒரு சில விபரீதங்களால் நினைவாற்றலை இழப்பது போல் மின்னணுக் கருவிகளிலுள்ள நினைவகங்களும் நினைவை இழக்கின்றன. ஆம், வைரஸ் என்கின்ற ஒன்று தகவல்களை மறைக்கவும் அழிக்கவும் செய்துவிடுகிறது.

    குறிப்புகள்:

    இணையம்
    க.பிரகாஷ் – இணையத்தில் தமிழ் மின்னூல்கள் –     ஆய்வு

    *****

    க.பிரகாஷ்
    தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது
    மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும்
    மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால்
    மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது!

    யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும்
    ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோஅழித்துவிடும்
    நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது
    நம்பினார்க் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது!

    பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும்
    பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தைப் பகரவில்லை
    பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று
    பக்குவமாய்ச் சொல்லுவதைப் பலருமே கேட்பதில்லை!

    எந்த மதமானாலும் சொந்தம் கொண்டாடிடுங்கள்
    பந்தமுடன் மதம்சொல்லும் வழியினிலும் சென்றிடுங்கள்
    வெந்தழலில் வீழ்த்துகின்ற வேதனைகள் தவிர்த்துவிடின்
    எந்தமதம் ஆனாலும் எல்லோரும் போற்றிடுவார்!

    நதிகள் பலவிருந்தாலும் கலக்குமிடம் கடலன்றோ?
    நம்மதங்கள் பலவிருந்தும் உணர்த்துமிடம் இறையன்றோ?
    நாமதனை உணராமல் நாளுமே மதம்கொண்டால்
    நம்மனத்தில் மதமின்னும் நாளுமே வளருமன்றோ!

    விலங்கினுக்கும் மதமில்லை பறவைக்கும்
    மதமில்லை
    விளக்கதனில் விழுகின்ற விட்டிலுக்கும் மதமில்லை
    விவேகநிறை மனிதனுக்கோ மதம்நிறைய இருந்தாலும்
    விவேகமதைக் கைவிட்டு வேற்றுமையே காணுகிறான்!

    மதங்கள் பலவிருந்தாலும் மனம்சிறக்க வேண்டாமா?
    மதவெறியை ஊட்டுவதால் மானிடமே மாண்டிடுமே!மதமென்னும் கருவதனைப் புனிதமாய்க் கொண்டுவிடின்மதம்பிடிப்பார் நிலைமாறி
    வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்!

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 210 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்புடன் கூடிய வணக்கங்கள். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு பிறப்பதில்லை. காலநதியின் ஓட்டத்தில் நாம் வகுத்துக் கொண்டு செல்லும் இலக்கைச் சிலர் அடைகிறோம். சிலர் தாம் போட்ட இலக்கை விட்டு காலத்தின் வேகத்தினால் வேறு பாதையில் இழுத்துச் செல்லப்பட்டு தாம் எதிர்பார்த்திராத இலக்கினை எட்டுகிறார்கள். இதுதான் நம் வாழ்க்கையின் எளிமையான யதார்த்தம்.

    இவ்வுலகத்தில் நம் மத்தியில் பலர் ஊடல் ஊனமுற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் பிறப்பினாலும், சிலர் வியாதிகளினாலும், சிலர் விபத்துகளினாலும், சிலர் கொடிய போரில் ஈடுபடுவதினாலும் இத்தகைய ஒரு துரதிருஷ்ட நிலையை அடைகிறார்கள். இவர்களை நாம் ” மாற்றுத் திறனாளிகள் – Physically chalanged “ என்று அழைக்கிறோம். ஆனால் மற்ற அனைவரிடத்தில் இருக்கக்கூடிய திறமைகள் என்று கருதப்படுபவை இவர்களிடமும் எந்த விதத்திலும் குறைவதில்லை. அதேபோல அவர்களது இலட்சிய வேட்கைகளும் குறைவதில்லை.

    உடலில் எந்தக் குறைபாடுகளும் அற்றவர்கள் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இம்மாற்றுத்திறனாளிகள் தம்முடைய இலட்சியத்திற்காக அயராது உழைப்பவர்களாகக் காணப்படுகிறார்கள்.
    சமீபத்தில் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். அது ஒரு ஆங்கில நிகழ்ச்சி DIY SOS – Big Build என்று அந்நிகழ்ச்சி அழைக்கப்படும். வாழ்வில் மிகவும் இடர்களைச் சந்திப்பவர்கள் தாம் வாழும் இல்லத்தில் பல குறைபாடுகளுடன் வாழ்வதைக் கண்டு அவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் பி.பி.ஸிக்கு எழுதுவார்கள் அவர்களும் அவ்வில்லத்தை அக்குடும்பத்தினருக்கு வேண்டிய வகையில் அமைத்துக் கொடுப்பார்கள். இத்திருத்த கட்டிட வேலையில் ஈடுபடுவோர்கள் அனைவரும் எதுவித ஊதியமும் பெறாமல் நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவே தமது சேவையை அளிப்பார்கள்.

    சமீபத்தில் நான் பார்த்த அந்நிகழ்வு நெஞ்சைத் தொடுவதாக அமைந்திருந்தது. 16 வயதே நிறைந்த ஒரு மாணவன் 6 அல்லது 7 வயதுவரை சாதரணமாக நடமாடிக் கொண்டிருந்தவன் காதிலே ஏற்பட்ட ஒரு கட்டியினால் இரண்டுமுறை ஆபரேஷனுக்குட்படுத்தப்பட்டான். விளைவு அதுவரை நடந்து கொண்டிருந்தவன் இடுப்புக்குக் கிழே பாரீசவாதத்தினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டான். ஆனாலும் அவன் தன் இலட்சிய வேட்கையைக் கைவிடவில்லை. விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவனாக இருந்த அவன் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு ஈடுபடக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான்.

    அவனுடைய இலட்சியத்திற்கு அவனுடைய தாய் தந்தை தம்மாலான முழு ஒத்தாசையையும் நல்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களின் நிதி நிலைமை அவர்கள் வாழும் இல்லத்தை அவனுடைய வசதிகளுக்கேற்ப மாற்றியமைக்க முடியவில்லை. அவனுடைய நண்பர்கள் தொலைக்காட்சி நிலையத்திற்கு விண்ணப்பிக்க அவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் அவனது இல்லத்தை அவன் வாழ்வதற்கு வசதியான வகையில் மாற்றிக் கொடுத்தார்கள். அவன் உடற்பயிற்சி செய்வதற்காக ஒவ்வொருநாளும் இரண்டுமுறை ஜிம்முக்கு அவனது தாய் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இந்நிகழ்ச்சியின் திருத்த வேலைகளின் போது அவனது இல்லத்திலேயே அவனுக்கு ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துக் கொடுத்தார்கள். அவ்வில்லத்தில் அவன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே தனக்குத் தேவையான உணவு வகைகளைச் சமைப்பதற்கான உபகரணங்களை அமைத்துக் கொடுத்தார்கள்..

    அவ்விளைஞன் 2020 மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து தங்கப்பதக்கம் வெற்றி பெறுவதே தனது இலட்சியமாக வகுத்து அதற்காக முழுமூச்சுடன் உழைத்து வருகிறான். இம்முறை ரியோ நகரில் நடந்து முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சீன தேசத்திற்கு அடுத்த அளவிலான பதக்கங்களைப் பெற்று , அதிக பதக்கம் பெற்ற நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கின்றது. இங்கிலாந்தில் இம்மாற்றுத்திறனாளிகளின் பயிற்சிக்காக, ஒலிம்பிக் , மற்றும் சர்வதேச போட்டிகளில் அவர்கள் பங்கு பற்றி வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளுக்கான ஊக்கம் பல இடங்களிலிருந்து வழங்கப்படுகிறது. அவர்களின் போட்டிகளுக்கு தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    மக்கள் மிகவும் ஆர்வத்துடன் அவர்களது போட்டிகளில் பார்வையாளர்களாகக் கலந்து அவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். காலம் அவர்களின் மீது போட்ட சவால்களை எதிர்ப்பது என்பது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் அவ்வெதிர்ப்புக்கு சமுதாய முழு உணர்வுடன் கைகொடுக்க வருமானால் அவர்களது பாதை இலகுவாகிறது. அன்று நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் முடிவில் சமூகம் தனக்கு நல்கிய உதவிகளைக் கண்ணுற்ற அவ்விளைஞனின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது.

    எமது பின்புல நாடுகளில் உடல் ஊனமடைந்தவர்களை கெளரவமான பெயர்களால் அழைத்து வருகிறோம் ஆனால் அவர்களை நோக்கிய சமுதாயப் பார்வை எத்தகையது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் தனித்திறமை அவர்களது குறைபாடுகளால் முடங்கிப் போய்விடாமல் வெளிக்கொணரப்படக் கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா ? இவைகள் இனி வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினால் ஒரு முக்கிய பிரச்சனையாக அணுகப்படுவது ஒன்றே எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வு மாற்றமடையக்கூடிய வழிவகைகளை அவர்களுக்கு வகுத்துத்தரும். அனைவருமே ஒலிம்பிக் போட்டியில் வெற்றியாளர்களாக முடியாது ஆனால் வாழ்வுப் போட்டியின் வெற்றிக் கோட்டினைத் தட்டிப்பார்க்குமளவிற்கு அவர்களின் பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கலாமல்லவா ?

    ஒலிம்பிக் போட்டியில் கலந்து விட்டுத் திரும்பிய ஜக்கிய இராச்சிய மாற்றுத் திறனாளிகள் குழுவிற்கு விமானநிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு இங்கிலாந்து மகாராணி தானே அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளமை இந்நாட்டின் முதிர்ச்சியை நன்கு எடுத்துக் காட்டுகிறது.
    மீண்டும் அடுத்த மடலில்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • ”குமார சம்பவம்”….!

    கிரேசி மோகன்
    ——————————–

    ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
    பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
    போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
    போதணிந்தாள் பார்வதிஅப் போது….(176)

    மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
    தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
    செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
    கொங்கையாள் ஆனாள் கொடி….(177)

    மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ
    நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
    பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
    தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178)

    வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும்
    வாசம் முகர்ந்திட வண்டுவந்து -மூச
    இதழ்கனியைச் சுற்றி, இளங்கமல மொட்டால்
    அதைவிரட்டும் பார்வதி அங்கு….(179)

    மாசிலா அங்கங்கள் மன்மதன் பத்தினியே
    கூசுவாள் வெட்கி குனிந்துதலை -ஈசன்
    தவதனுசை வெல்ல இவள்மனசே வாளி
    சவமணலில் காமன் செருப்பு….(180)

    பதியாகப் போகின்ற பாதியின் வாசல்
    சதியாய்ப் பிரிந்தவள் சேர்ந்து -மிதித்தாள் (OR) விதியால்
    உவப்புடன் தன்னுள் சிவபிரான் ஆன்ம
    தவப்பலன் கண்ட தினம்….(182)….கிரேசி மோகன்….!

    வாசி அடக்கிய ஈசனார் பாரத்தால்
    காசினியை ஆயிரம் கைத்தலையால் -தூசென
    தாங்கிடும் சேடன் தவித்திட அன்புசிவம்
    ஓங்கு தவம்கலைத்தார் ஓம்….(183)

    பணிவிடை செய்துவந்த பார்வதியைப் பற்றி
    பனிவிடை ஈசரிடம் போற்ற -கனிவாய்
    புருவத்தைத் தூக்க புரிந்துகொண்ட நந்தி
    வரவேற்றான் கன்றாய் வளைந்து….(184)

    ஆர்வமுடன் அங்குற்ற பார்வதியின் தோழிகள்
    தேர்வுசெய்த பூக்கள் தொகுதியை -நீர்விளங்கும்
    வார்சடையோன் பாதத்தில் வைத்து வணங்கியபின்
    கார்சிதைவாய் தூவிக் களிப்பு….(185)

    கூந்தலில் சூடிய கோங்குமலர் காதணி
    மாந்தளிர் மண்ணில் மயங்கிவிழ -பாந்தமாய்
    உச்சந் தலைதரையில் உற்றிட பார்வதி
    அச்சிவன் பாதம் அடைவு (OR) அணைப்பு….(186)

    உன்னையன்றி வேறோர் பெண்ணை மனைவியாய்
    எண்ணாத கேள்வனை ஏற்றிடுவாய் -திண்ணமாய்
    மெய்யதைச் சொன்னான் மகாதேவன், மூத்தோர்கள்
    பொய்யுரைப் பாரோ புகல்….(187)

    மூளும்தீ வாயில் முழுகப்போம் விட்டிலாய்
    வேளவன் பார்வதி வந்ததால் -தோளின்வில்
    நாணை வருடி நமச்சிவாயர் நெஞ்சென்ற
    தூணை இலக்காய்த் துணிபு….(188)….கிரேசி மோகன்….!

    Share
  • ‘கந்தன் களிப்பு”….!

    கிரேசி மோகன்

    ————————————

    அறுபடையோன் புகழ்….
    ——————————————

    034
    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து….(1)

    பழமுதிர்சோலை
    ——————–
    கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு….(2)

    திருத்தணி
    ————–
    விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு….(3)

    திருச்செந்தூர்
    ——————-
    மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்….(4)

    பழனி
    ——–
    மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு….(5)

    திருப்பரங்குன்றம்
    ——————————
    குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு
    காந்தள்(ல்)தான் எனக்குப் பிடிச்ச மலரு
    கண்ணன்தான் எனக்குப் பிடிச்ச பவரு”

    “பேய்ந்த மழைக்கு பத்திரமாய் மானத்தில்,
    வேய்ந்தனன் குன்றுகோ வர்த்தனம், -காந்தல்,
    ருசிகண்ட கோகுலக் கன்று, கண்ணன்
    பசிகொண்டு பாயுது பார்”…..கிரேசி மோகன்….

    Share
  • ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…

    பவள சங்கரி

    e_1363937474

    ஆராரோ ஆரிரரோ
    ஆராரோ ஆரிரரோ…

    குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்!

    தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) இதுவே குழந்தைகளை அமைதியாக உறங்கச்செய்து, மூளை வளர்ச்சியையும் ஊக்குவித்து, குழந்தையை அமைதியான சூழலில் வளரச்செய்கிறது. வன்மையான வல்லினப்பாடல் குழந்தையை அச்சுறுத்தும். மென்மையான மெல்லினப்பாடல் குழந்தையின் அழுகைச்சத்தத்தில் அமிழ்ந்துவிடக்கூடும். ஆகவே இடையினத்தில் இசைக்கும் பாடலே குழந்தைக்கு ஏற்றதாகும்.  தமிழரின் தன்னிகரில்லா தாலாட்டு, தரணியில் தனித்து நிற்பதன்றோ! வாழ்க தமிழ்! வாழ்க தமிழர் தம்பெருமை!

    ஆராரோ ஆரிரரோ
    ஆராரோ ஆரிரரோ…
    கண்ணே கண்மணியே
    ஆரடிச்சு நீ அழுதே
    அடிச்சாரை சொல்லியழு
    ஆராரோ ஆரிரரோ…
    ஓடும் மான் கண்ணோ என் கண்ணே
    நீ கவரிமான் பெற்ற கண்ணோ
    புள்ளி மான் கண்ணோ என் கண்ணே
    நீ புத்திமான் பெற்ற கண்ணோ
    முத்தோ ரத்தினமோ என் கண்ணே
    நீ தூத்துக்குடி முத்தினமோ…
    முல்லை மலரோ என் கண்ணே
    நீ அரும்புவிரியா தேன்மலரோ..
    கண்ணே கண்ணுறங்கு
    கனியமுதே நீ உறங்கு….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    kesav

    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
    நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை)
    அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட
    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)KEY….கிரேசி மோகன்….!

    KEY -SOLYUTION….!

    Share