நினைவாற்றலும், நினைவகமும்
-க.பிரகாஷ்
ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்ததால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளைச் சேமித்துக் கொள்ளலாம். என விஞ்ஞான வளர்ச்சி குறிப்பிடுகின்றது. ஆனால் அத்தனையும் நினைவில் நிறுத்துவது கடினம் என்கின்றனர்.
நினைவு
நமது நினைவாற்றலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மூளையாகும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் போன்ற பகுதிகள் இருந்தாலும், பெருமூளையின் பெரும்பங்கே நினைவாற்றலின் சேமிப்பு வங்கியாக விளங்குகிறது.
நினைவாற்றல் என்பது ஒருவர் தன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் வாயிலாகப் பார்த்து, படித்து, கேட்டு, நுகர்ந்து, உணர்ந்து, சுவைத்து, அறிந்து அனுபவங்கள் பலவற்றையும் மனத்தில் பதியவைத்து வேண்டியபோது அதை நினைவில் கொண்டுவரும் ஆற்றல் ஆகும். அனுபவங்கள் மூளையில் இலேசான பதிவை உண்டாக்குவதும், ஆழமான பதிவை உண்டாக்குவதும் அவரவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, காட்டும் ஆர்வம், மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொறுத்து இருக்கிறது. நினைவாற்றலுக்கு அடிப்படைகள் கற்றல், நினைவிலகுதல், மீட்டழைத்தல் மற்றும் மீட்டறிதல் என்ற நான்கு நிலைகளாகும்.
மீட்டழைத்தல் (Recall )
கற்றறிந்த ஒன்றை நினைவில் நிறுத்திவைக்க, மூளையில் பதிந்துள்ளதை அவ்வப்போது நினைத்துப் பார்ப்பதுதான் மீட்டழைத்தலாகும். பல மணிநேரம் படித்ததைச் சில நிமிடங்களில் மீட்டழைத்து மனக்கண்முன் காணமுடியும்.
மீட்டறிதல் (Recognition)
மூளையில் பதிந்திருப்பதை மீட்டழைத்து நன்கு யூகித்து நேற்றுப் பார்த்தது இதுதான், முந்தியநாள் வந்தவர் இவர்தான் என்று இப்படித் தீர்மானமாக உணர்வதைத்தான் மீட்டறிதல் என்கிறோம்.
நினைவாற்றலின் வகை
குறுகிய கால நினைவாற்றல்
நீண்டகால நினைவாற்றல்
குறுகிய கால நினைவாற்றல்
நம் மூளையில் அத்துணைத் தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்தத் தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்தும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இவ்வகை நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல் என்கின்றனர்.
நீண்ட கால நினைவாற்றல்
நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனத்தை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சில நேரங்களில் சிரமப்படுவதை நாம் உணரமுடியும்.
மூளை பல செய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன் புதிய தகவல்களையும் சேர்த்துப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்தத் தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.
குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பதும், கேட்பதும் அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை மூன்று வயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.
ஒரு மனிதனின் மூளையில் பதிவு செய்யப்படும் இவ்வகை நினைவுகளை நினைவாற்றல் என்று குறிப்பிடுகின்றேன்.
நினைவகம்
மனித மூளையைப் போலவே பல தகவல்களைச் சேமிப்பதற்குக் கணினியில் நினைவகம் என்ற ஒன்று தேவையாகிறது. நினைவகம் பல தகவல்களைச் சேமித்து வைக்கப் பயன்படுவது ஆகும்.
சார்பிலாத் தெரிவு நினைவகம் கணினி நினைவக வகையாகும். அது ஒருங்கிணைச் சுற்று ஒன்றின் வடிவத்தில் அமைவதுடன், சேமிக்கப்படும் தரவுகள் எந்த ஒழுங்கிலும் பெறதக்க வகைகளில் அமையும். சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப்பட்ட ஒழுங்கு தவிர்த்த வேறு சார்பிலா ஒழுங்குகளிலும் தரவுகளைத் தெரியப்படுத்தலாம்.
சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா, காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் மூலமே தரவுகள் வாசிக்கப்படும். இதனால் இவற்றில் வாசிப்பு நோக்கத்தைவிட தரவுள்ள இடத்தை அடைவு நேரமே அதிகமாகும்.
RAM என்னும் சொற்பதம் பெரும்பாலும் தற்காலிக நினைவகத்துடனேயே தொடர்புபடுத்தப்படுகிறது. இவற்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்படுவிடும். வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும். நிரந்திர நினைவகம் ROM போன்றனவும் சார்பிலாத் தெரிவு நினைவகம் என்று வகைப்படுத்தப்படும். சார்பிலாத் தெரிவு என்பது வாசிப்பு முறை மட்டுமே.
சார்பிலாத் தெரிவு வகை நினைவகம்
சார்பிலாத் தெரிவு வகை நினைவகம் 1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட (Magnetic Core Memory ) காந்த உள்ளக நினைவகம் ஆகும். இதற்குப்பின் 1960ஆம் ஆண்டு மற்றும், 1970ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைச் சுற்று நினைவகம் உருவாக்கப்பட்ட அனைத்து கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நினைவகம் இரண்டு வகை
நிலையான நேரடி அணுகல் நினைவகம்
மாறும் நேரடி அணுகல் நினைவகம்
நிலையான அணுகல்
நிலையான நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது ஆறு டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகிறது. இந்த வகை நினைவகங்களைத் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகும். ஆனால் இவை குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி அதிவேகமாக செயல்படுகின்றன.
மாறும் அணுகல்
மாறும் நேரடி அணுகல் நினைவகத்தில் ஒருபிட் தகவல் ஆனது டிரான்சிஸ்டர் மற்றும் மின்தேக்கிகளைத் தயாரிக்கக் குறைந்த பொருட் செலவு ஆகும். தற்போதைய நவீனக் கணினிகளில் அதிகமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.
இவ்விரு நினைவகங்களிலும் ஆற்றல் இல்லாதபோது தகவல்களைச் சேமித்துவைக்க முடியாது. ஆற்றல் இல்லாதபோது மீட்டமைக்கப்படும் மாறாத ( ROM ) தகவல்களை நிரந்தரமாகப் பதிவு செய்கிறது.
கணினியின் நினைவகம்
தற்காலிக நினைவகம்
DRAM
SDRAM
Upcoming
Z-RAM
TTRAM
Historical
Williams’s tube
Delay sine Memory
நிரந்தர நினைவகம்
ROM
PROM
EAROM
EPROM
EEPROM
Flash Memory
Upcoming
FE RAM
MRAM
CBRAM
PRAM
RRAM
Racetrack Memory
NRAM
Historical
Drum Memory
Magnetic Core Memory
Plated wire Memory
Bubble Memory
Twist or Memory
கணினி நினைவகம்
Computer Memory:
Primary Memory
Secondary Memory
பிரதான நினைவகம் துணை நினைவகம்
Bipolar Magnetic Bubble Magnetic tapes
Mos Floppy Disk
RAM Optical
ROM DVD
PROM – EPROM – EAPROM CD
நினைவகத்தின் கணக்கீடுகள்
8Bit – 1Byte
1024Byte – 1KB – Kilo Byte
1024KB – 1MB – Mega Byte
1024MB – 1GB – Giga Byte
1024GB – 1TB Tera Byte
1024TB – 1PB Peta Byte
1024PB – 1EB Exa Byte
1024EB – 1ZB Zetta Byte
Floppy – 1.44 MB
CD – 700 MB
DVD – 4.0 , 8.5 GB
ஒரு மனிதன் தன் மூளையில் பல்லாயிரம் கணக்கான பதிவுகளை சேமித்து வைத்துக் கொண்டு தனக்குத் தேவையான நேரங்களில் நினைவுப்படுத்தி அதனை பயன்படுத்திக்கொள்கிறான். ஒரு சில காலங்களில் பதிவான தகவல்களை இழக்க நேரிடலாம். அதிர்ச்சி ஏற்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ இந்த வகைச் சிக்கல் ஏற்படலாம்.
மனித மூளையிலுள்ள நினைவகம் போலவே நினைவகங்கள் கணினி, செல்பேசி, கையடக்கக் கருவி எனப் பல மின்னணுக் கருவிகளில் தரவுகளைச் சேமிக்கப் பயன்படுகின்றன. இந்தச் செயற்கை நினைவகத்திற்கு வரையறை கொண்டு சேமிக்கவேண்டிய சூழல் இருக்கின்றது. ஆனால் மனிதனின் நினைவாற்றல் அவ்வாறு இல்லை. அவனுக்குத் தேவையான நேரங்களில் எத்தகைய தகவல்களையும் சேமிக்கும் ஆற்றல் பெற்றவன். ஆனால் நினைவகத்திற்கு 1GB. 2GB, 4GB, 8GB, 16GB. 32GB, 64GB என அளவுகள் உள்ளதால் இவ்வகை அளவுக்கு ஏற்ற தகவல்களைப் பதிவு செய்யமுடியும்.
மனித மூளை ஒரு சில விபரீதங்களால் நினைவாற்றலை இழப்பது போல் மின்னணுக் கருவிகளிலுள்ள நினைவகங்களும் நினைவை இழக்கின்றன. ஆம், வைரஸ் என்கின்ற ஒன்று தகவல்களை மறைக்கவும் அழிக்கவும் செய்துவிடுகிறது.
குறிப்புகள்:
இணையம்
க.பிரகாஷ் – இணையத்தில் தமிழ் மின்னூல்கள் – ஆய்வு
*****
க.பிரகாஷ்
தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46