Tag: ரா. பார்த்தசாரதி

  • அயல்நாட்டு மோகம்!

    -ரா.பார்த்தசாரதி

    வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம்
    புதிய தேசம் புதிய மனிதர்களின் நேசம்
    மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே
    உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

    அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை
    ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை
    பெற்ற மகன் மகளின் ஸ்பரிசம் இல்லை
    அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

    அன்னமில்லை நேரத்திற்கு நமக்கு ஆகாரமில்லை
    பண்டிகை இல்லை அன்புகாட்ட  யாருமில்லை
    உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை
    வேதனையையும் துன்பத்தையும் வெளிக்காட்டாத நிலை !

    பணமிருக்கும் நாட்டில் நல்ல மனதிற்கு இடமில்லை
    குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை
    வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள்
    வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

    கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
    வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
    காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
    கலைமகளை ஒதுக்கிக் காசினைப் பூஜிக்கின்றாயே !

    பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
    பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
    நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
    மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

    வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
    பண்பு கலாசாரம் இவற்றின் மதிப்பு தெரியும்
    பணத்திற்காகப் பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
    அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

    பிள்ளைகளைப் பணத்திற்காகப் புதைகுழியில் தள்ளுகின்றோம்
    பாசத்தையும் அன்பையும் தள்ளிவைத்துத் துயரப்படுகின்றோம்
    பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
    தாய்நாட்டின்  வளர்ச்சியைத் தடை செய்கின்றோம் !

    பணம் எட்டிப் பார்க்கும் பாசம் பக்கத்தில் இருக்காதே
    பணத்திற்காக ஆசைப்பட்டு உறவுகள் துரத்தப்படுகிறதே
    தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
    எண்ணியே வாழ்க்கை  இருதலைக் கொள்ளியாய் இருக்கிறதே!

    என்றும் காலங்கள் மாறித்  தன்னிறைவு  பெற்றாலும்
    பணம் இருந்தாலும் வசதிகள்  இருந்தாலும்
    மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும்
    என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம்?!

     

    Share
  • எல்.கே. ஜி மாணவன்

    ரா.பார்த்தசாரதி

    பசி,  தூக்கம்  வந்தால்  எங்களுக்கு  அழத்  தெரியும் !
    உங்கள்  கஷ்டங்கள் பற்றியும், வரவு செலவு பற்றியும் எங்களுக்குத் தெரியாது !

    நாங்கள் கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கவேண்டும் !
    எங்களுக்குச் சாப்பிடும் பொருளின் விலை பற்றித் தெரியாது !

    எங்களுடைய  சிரிப்பினைத் தானமாகக் கொடுக்கத்தெரியும் !
    எங்களுக்குப் பயம் கவலை என்பது என்னவென்று தெரியாது !

    எங்களுக்கு எந்தப் பொருளையும் கடிக்கவும் உடைக்கவும்  தெரியும் !
    நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும் விலையும் தெரியாது !

    உங்கள்  வேலையே  உங்களுக்கு  முக்கியம் !
    எங்கள்  விளையாட்டே  எங்களுக்கு முக்கியம் !

    வேலைக்குச் செல்லாத அம்மாவே  ’நல்ல அம்மா’ என்று தெரியும் !
    டிவியிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்குத் தெரியாது !

    எல்லாக்  குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழந்தைகளே !
    அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தாய், தந்தை  வளர்ப்பினிலே !

     

    Share
  • பெண்ணே பொங்கி எழு!

    -ரா.பார்த்தசாரதி 

    வயது  வந்த  பெண் அவள்,
    வரதட்சணை  இன்றி அழுகிறாள் !
    வரதட்சணை  தந்து  மணப்பவளோ
    வரட்டி  போலங்கு  எரிகிறாள் !

    நங்கை எனும் பெண்  அழுகிறாள்,
    கண்ணீரை ஏனோ கங்கையாகக் கொட்டுகிறாள்
    ஏனோ இவ்வுலகில் ஆயிரம் பொன் தந்தாலும்
    இவ்வுலகில் மங்கை மண்ணெண்ணெய்க்குள்   மறைகிறாள்!

    மண்ணாய் என்றும் இருந்துவிடாதே  கண்ணே!
    புதுமைப்  பெண்ணாய் மாறிட வேண்டும்
    பொன் பொருள் ஊதியம் தந்து வாழ்கின்றாய்
    என்றுதான் உன் சுதந்திரத்தை  நிலைப்படுத்துவாய்?

    ஆணுக்கு நிகராய்ப் படித்து பட்டம் பெற்றாய்
    உன் பெற்றோரைத் திருமணத்தோடு  மறந்தாய்
    உனக்கு உயிரும் உருவமும்  தந்தவளை
    உதாசீனம்  செய்ய  எண்ணி விடாதே!

    மதிப்பும் மரியாதையும் மனதிலே மட்டும்தானா?
    பிறந்த வீட்டையும் சற்றே  நினைக்க வேண்டாமா?
    பல்லாயிரம்  தொலைவில் இருந்தாலும்  தாய்ப்பாசம் மாறுமா?
    அவள் நிலைமை என்றும் உயர்த்த வேண்டமா?

    ஆணுக்கு  நிகராய் என்றும் இருந்திடுவாய்
    தர்மத்தையும் நியாயத்தையும் என்றும் நிலைநாட்டிடுவாய்
    பெண்ணடிமை   என்பதை  வேரோடு அறுத்திடுவாய்
    ஞாலத்தில்  புதுமைப் பெண் என்பதைப் பறைசாற்றிடுவாய்!

     

    Share
  • நட்பும் உறவும்!

    -ரா. பார்த்தசாரதி 

    நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
    மனிதனே!  நட்பையும்  உறவையும்   உதறிவிடாதே !
    பழகும்  விதத்தில்  பழகினால்  பகையும் நட்பாகும்  !
    சொந்தம்  என  வாழ்ந்தால்  என்றும்  சுகமாகும் !

    மண்  எனப்  பிரித்தால்  மனிதநேயம்  மறைந்துபோகும் !
    இனம்  எனப்  பிரித்தால்  இனிமை இல்லாமல்போகும்  !
    மனித  நேயத்துடன்  வாழ்ந்தால், என்றும்  நலமாகும் !
    பாசத்தையும்   நேசத்தையும், பாலமாக  அமைத்துடு !

    சாதிமத   பேதத்தை  வேரோடு அழித்துவிடு !
    வயதிற்கும் படிப்பிற்கும் என்றும் மரியாதைக் கொடுத்திடு !
    நட்பும் உறவும் உன் உடன்பிறப்பு என நினைத்திடு !
    மன்னிக்கத் தெரிந்த  மனிதனே  நல்லவன்  எனக்  கருதிடு  !

    கோபத்தையும் ஆணவத்தையும் அடக்கி உறவினைக் காத்திடு !
    மனிதனே! உறவும் நட்பும் ஓர்  இருசக்கர  வண்டிதானோ ?
    இரண்டுமே, ஓர்  நாணயத்தின்  இரு பக்கங்கள்தானோ ?
    நட்பையும் உறவையும் நீ  பணத்தினால் மதிக்காததும் ஏனோ ?

     

    Share
  • முதுமை

    -ரா. பார்த்தசாரதி 

    முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
    உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
    துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
    வீ ழ்ந்தாலும்  கைகொடுத்துத் தூக்கிவிடும் முயற்சி!

    அனுபவத்திற்கும் வயதிற்கும் மதிப்பு  இல்லை
    பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை
    ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இங்கே
    உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே?

    அடிபட்டு இடம் தேடித் தட்டுத்தடுமாறும் நெஞ்சங்கள்
    பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
    இளம் ஜோடிகள் போல் காதலும் காமமும்  இல்லை
    முதிர்ந்த காதல்தான் ஆனால்  காமம் இங்கில்லை!

    முதுமைக் காதல் என்பது தாஜ்மஹாலின்  நினைவு
    இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு
    இன்றுமுதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
    இதனை மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள்?

    தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
    என்றும் உறவுக்கும் பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
    இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
    தன் வினை தன்னைச் சுடும் என்பதுதான் பொதுவுடைமை!

     

    Share
  • அயல்நாட்டு நிச்சயதார்த்தம்!

    -ரா.பார்த்தசாரதி

    தாயும் தந்தையும்  ஜாதகம் பார்த்தார்கள்
    உன்னை எனக்கு  முடிவு  செய்கிறார்கள்
    ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன்
    உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்பு கொண்டேன்!

    நான்  கடின உழைப்பால் முன்னேறினேன்
    பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்
    நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்
    எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென  எதிர்பார்ப்பேன்!

    உரையாடும்போது  உன் குடும்ப நிலையைக் கூறுகின்றாய்
    உன் எதிர்காலப் படிப்பிக்கும் அடி போடுகின்றாய்
    உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்
    நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய்!

    வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள்
    இதற்கெல்லாம்  ஒத்துக்கொண்டால்தான்  திருமணம்
    நிச்சயிக்கப்பட்டும்  நின்றுபோன திருமணங்கள்
    எதையும் சாதரணமாகக் கருதும் இக்காலத் திருமணங்கள்!

    திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகிறதா?
    தாய் தந்தையர் பார்த்து  நிச்சயிக்கப்படுகிறதா?
    ஆண், பெண்  நேரிடை    சந்திப்பில் முடிவாகிறதா?
    ஜாதகத்தால்  நல்ல ஜோடிகள் புறக்கணிக்கப்படுகிறதா?

    திருமண  வயது வந்தாலே  ஆண், பெண்ணிற்குப் பல எண்ணங்கள்
    எதையும் பிறர் நிலையில் நின்று நினைக்காத  மனிதர்கள்
    இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணர்ந்தவர்கள்
    வரதட்சணை இல்லாத திருமணங்களே சிறந்த திருமணங்கள் !

     

    Share
  • ஆறாம் ஆண்டு தொடக்கம்

     
    நான்கு எழுத்திற்கு ஓர் சிறப்புண்டு,
    வல்லமை என்கிற பெயருண்டு

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து,
    ஒப்பற்ற மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

    கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பினை நல்கட்டும்
    நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

    ரா.பார்த்தசாரதி

    Share
  • அன்னையே தெய்வம்!

    –ரா.பார்த்தசாரதி

    தாயே விளைநிலமாம் தந்தையே  வித்தாம்
    குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம்!
    பெண்முழுமை அடைவதும்  தாய்மையாலே
    தாயாக  மாறுவதும்  அந்தத்  தாய்மையாலே!

    கருவறையில் உன்னை  வைத்துக்   காக்கின்றாள்
    தனக்கென்று உண்ணாது  உனக்காக உண்கிறாள்
    பெண்ணிற்குப் பிரசவம்  என்பதே மறுபிறப்பு
    இதனை  அறியாத  மானிடப்  பிறப்பு !

    பிறந்த மேனியுடன்  வெளிஉலகிற்கு  வந்தாய்
    தாய், தந்தைக்கு  மட்டற்ற மகிழ்ச்சி தந்தாய்!
    உனக்காகக்  கண்விழித்துத் தூக்கத்தை மறந்தேன்
    உனக்காக  என் குருதியைப்  பாலாக பொழிந்தேன் !

    தோளையே  தூளியாக்கி உன்னைச் சுமந்து செல்கின்றேன்
    நீ பிறக்கும்போது  நான் சுமந்த  வலியை  விடவா?
    நீ    பசி தூக்கத்தை  அழுது வெளிப்படுத்துகின்றாய்
    உன் கள்ளமில்லச் சிரிப்பாலே கவலைகள்  போக்குகின்றாய் !

    உன் அன்னைக்கு ஆயிரம் பிரச்சனை  இருப்பு
    உன்னைக் கட்டியணைப்பதில்தான் ஆனந்தக் களிப்பு !
    உன் வளமே  எங்கள்  சிறப்பு
    உன் நினைவே பாசத்தின் பிணைப்பு !

    குழந்தையின்  வளர்ப்பு தாய் தந்தையின் கடமையே
    அன்னையின்  வார்த்தைகள் குழந்தைக்கு இனிமையே
    அன்னையைப்  போல்  ஒரு தெய்வம் இல்லை
    திசை நான்கும்  அவள் போல்  எவருமில்லை !

     

    Share
  • தாயும், தாய்மையும் !

    -ரா.பார்த்தசாரதி

    ஆணிற்குக் கிடைக்காத  ஓர்  பரிசு
    பெண்ணிற்கு மட்டும் கிடைக்கும் பரிசு
    தன் வயிற்றில் ஓர் உயிரை வளர்கின்றாள் Picture 1551
    கவள உணவையும் குழந்தைக்காக  உண்கின்றாள் !

    என்னதான்  விஞ்ஞானம், வசதிகள் வளர்ந்தாலும்
    ஆண்  தன்னைப் பற்றியே  நினைத்திருந்தாலும்
    பத்து நிமிடங்கள் நின்றாலும் கால் கனத்து வலிக்கும்
    பத்து மாதம் சுமந்தாலும் கருவறைச்சுமை வலிப்பதில்லை!

    வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்
    இந்த வலியால் மற்றொரு உயிர் வருவதைக் காண்பார்கள்
    குழந்தை, சிறுமி, குமரி,மனைவி என்கிற பல உறவானதே
    தாய்மையில்தான்  ஒரு பெண் தன்னிறைவு பெறுகின்றதே!

    குழந்தையைக் கொஞ்சுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பேரின்பம்
    குழந்தையைக்  கட்டி அணைப்பதில்தான் தாய்க்குத் தனி இன்பம்
    தாய்மையின் மகத்துவம் என்பது பெண்ணின்  பெருமை
    தத்ரூபமாகவும் தத்துவமாகவும் இருப்பதே உண்மை!

     

    Share
  • சொல்லும் செயலும்!

    -ரா.பார்த்தசாரதி

    எழுதுக்களின்  சேர்க்கையே  சொல்  எனப்படும்
    சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன்  சத்தியவான்
    சொல்லும் சொற்களில் இரட்டை அர்த்தங்கள்
    துச்சமாய் அசிங்கமாய் நினைக்க வைக்கின்றதே !

    சொன்ன சொற்களை என்றும் அரசியில்வாதிகள் காப்பதில்லை
    அவர்கள் கவரிமான் என்று நினைக்கத் தேவையில்லை
    சொற்களை அலங்கரித்து மக்களை மயக்கும் அரசியல்வாதிகள்
    தன் முன்னேற்றத்தையே கருதுபவர்கள் பிறர் நலத்தைக் கருதமாட்டார்கள்!

    வாழ்விற்கு  வழிகாட்டும் சொல்லைச் சொல்பவர்கள் ஞானிகள்
    அர்த்தமற்ற  சொற்களைச் சொல்பவர்களே அஞ்ஞானிகள்
    சொன்ன சொல்லைத் திரும்பத்திரும்பச் சொல்பவன்  பித்தன்
    சொல்லின்  அர்த்தம் தெரியாமல் சிரிப்பவன்  முட்டாள் !

    சொற்களை அலங்கரித்துக்  கவிதைபாடும்  கவிஞன்
    ஒரு சொல் ஒரு செயல் செய்பவன் சராசரி மனிதன்
    சொற்களைக் கொண்டு பணம் சம்பாதிப்பவன் வியாபாரி
    சொல்லின் வல்லமை கொண்டு வாதாடும் வழக்கறிஞர்கள் !

    சொல்லிலே கலைவண்ணம் காண்பவன் கலைஞன்
    கல்லிலே கலைவண்ணம் காண்பவன்  சிற்பக் கலைஞன்
    காண்பதைத் தத்ரூபமாக வரைபவன்  ஓவியக் கலைஞன்
    காதலில்  ஈடுபடும்  காதலனும் ஒரு காதல் கலைஞன்!

     

    Share
  • விவசாயியும் ஒரு தொழிலாளி!

    -ரா.பார்த்தசாரதி

    நமது நாட்டின் முதுகெலும்பே   விவசாயம்
    அதனைத் தொழிலாகச் செய்பவன் விவசாயி
    இறைவன் கண்டெடுத்த சிறந்த உழைப்பாளி
    மக்கள் பசிதீர்க்கும் உலகின்  பாட்டாளி !

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
    விவசாயியை  ஏமாற்றுபவர்களை  நிந்தனை செய்வோம்
    நிலத்தில் வியர்வை சிந்திப் பாடுபடும் விவசாயி,
    அவர்கள் நலம்கெட வழி செய்தல் நியாயமா?

    விவசாயம் செய்யமுடியாமல் வெறுத்துத் தற்கொலை
    இதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அவலநிலை
    பேருக்காக உதவித் தொகை என்ற  மான்யம்,
    அரசாங்கமும் அரசியல்வாதிகளும் நடத்தும் நாடகம்!

    விவசாயம்  பாடுபட்டுப் பலன்பெறாமல் இருக்கின்றதே
    கூறுபோட்டு வீடுகட்டும் நிலைமை மாறிவிட்டதே!
    அரசாங்கமும் அரசியலும் இதற்கு ஒத்துழைக்கின்றதே
    விவசாய நிலங்கள் முழுதும் அழிக்கப்படுகின்றதே!

    சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றார் வள்ளுவர்
    விவசாயையும் தொழிலாளர்களையும் முன்னேறச் செய்வோம்
    உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுப்போம்
    நல்மனம்கொண்டுப் பறைசாற்றிடுவோம் உலகத் தொழிலாளர் தினத்தில்!

     

    Share
  • ஒரு பேருந்தின் கதறல்!

    -ரா. பார்த்தசாரதி

    மூலை  முடுக்கெல்லாம் ஏற்றிச் செல்கின்றேன்
    ஏழைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் சிறந்த வாகனம்   bus-blue
    ஓய்வின்றி எந்நாளும் உங்களுக்கு உதவுகிறேன்
    மாணவர்களை இலவசமாக ஏற்றிச்செல்கின்றேன்!

    நான் சுமக்கும்போது  ஜாதி மதம் பார்ப்பதில்லை
    தடவழிப் பலகையும் திருக்குறளையும் சுமக்கின்றேன்
    நடத்துனரும், ஓட்டுனரும்  என்னை  ஆளுபவர்களே
    இடை இடையே ஏறி இறங்கும் பயணிகளும் நண்பர்களே !

    என் அருமையும் சிறப்பும் பொது மக்களுக்குத் தெரிவதில்லை
    பொதுநலப்  போராட்டத்திலும் மொழிப் போராட்டத்திலும்
    உங்கள் நண்பன் என்று நான் கூறிக் கொண்டாலும்
    கோபம் கொண்டு உடைத்துத் தீயும் வைக்கிறார்கள் !

    உங்கள் சொத்தினை  நீங்களே  அழிக்கலாமா?
    நான் கதறினாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா?
    என்னை உங்கள் நண்பனாய்க்  கருதுங்கள் !
    நான் உங்கள் நாட்டின்  சொத்தென நினையுங்கள் !

     

    Share
  • இன்றும் உலகம் மாறவில்லை!

    -ரா.பார்த்தசாரதி

    பிள்ளை  பிறந்தால் என்றும் பேரின்பம்
    குலம் தழைக்க வந்தத்  திருமகன்
    பெண் பிறந்தால்  ஏனோ பெருமூச்சு
    பெற்றோர்கள் வெளிபடுத்தும் ஓர் தனிப்பேச்சு!

    இன்றும் பெண் சிசுவதை நடக்கின்றது
    இதனை அரங்கேற்றுவதும்  பெண் இனமே!
    குழந்தையும் தெய்வமும்  ஒன்றுதானே…
    பெண் குழந்தைகளைப் புறக்கணிப்பதும் ஏனோ?

    தன்னைப்போல் பிறரையும்  நினை
    ஆண், பெண் பாகுபாடின்றி  நினை
    பெண்ணே  உன்வீட்டின் செல்வம்
    உன் குடும்பத்தில் அவளொரு சேமக்கலம்!

    பெண்ணை  ஆணுக்கு நிகர் என நினை
    தங்கமெனத்  தன்பெண்ணை வளர்த்தான்
    தங்கத்தைத் திருமண பந்தத்தில் தொலைத்தான்
    பிறந்த வீடு விட்டு புகுந்தவீடு புகுந்தாள்!

    பிரித்துப் பாகுபடுத்தும் பெண்ணின் வாழ்க்கை,
    எதிர்காலம் எப்படியோ என நினைக்கும் வாழ்க்கை
    தன்னலமின்றிப்  பிறர் நலனுக்காகப் புகுந்தாள்
    தன் முன்னேற்றத்தைக் காணத் துடித்தாள்!

    பிறந்த வீட்டில் கொடிகட்டிப்   பறந்தாள்
    கொம்பைச் சுற்றிப் படரும் கொடியானாள்
    இன்று உரிமைக்காகச் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறாள்
    விட்டுகொடுக்கும் வாழ்க்கையே உயர்வென நினைக்கிறாள்!

    பிள்ளை வீட்டில் பிச்சை எடுக்கும்  பெற்றோர்
    பெண் வீட்டில் மரியாதையாக நடத்தப்பட்டாலும்
    பழமை பேசி, தன்னுக்குள் போட்டுக்கொண்ட வேலி
    என்று மாறுமோ இந்தத் தேவையற்ற வேலி?

    மருமகனை, மகனாக நினைக்கத் தெரிந்தாலும்
    மருமகளை, மகளாக நினைக்கத் தெரிந்தாலும்
    பழமை நீக்கி, காலத்திற்கேற்ப வாழத் தெரிந்தாலும்
    பெண்ணே! இன்றும் உலகம் மாறவில்லை!

     

    Share
  • தாய்மை என்னும் தூய்மை!

    -ரா.பார்த்தசாரதி

    மலையிலிருந்து நதிகள்  பல  பிறக்கின்றன
    நதிகளை  அன்னைக்கு  நிகர்  எனச் சொல்கிறோம்!
    நன்முறையில் அணை போடுவது நல்லதே
    கழிவுநீரைக் கலக்குவது என்றும் தீமையானதே!

    வாழும் உயிரினம்  வாழா  வேண்டுமே
    நீரைக் குடிபவர்களுக்கும் கேடு விளையுமே
    பயிர்களை  அழிப்பதா? மக்கள்நலம்கெட வைப்பதா?
    தெரிந்தும்  தண்ணீரை அசுத்தபடுத்துவதா?

    இன்று நதி நீரை மனசாட்சியின்றி களங்கப்படுத்துகிறோம்
    தூய்மை  என்பது  தாய்மையின்  வடிவமே!
    தாய்மை  என்னும் தூய்மை  காக்கப்படவேண்டுமே
    இதனை நன்முறையில் அரசாங்கமே  நிறைவேற்றவேண்டுமே!

     

    Share
  • ஆரோக்கிய தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    உலகில் அனைவரும் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் நல்லது
    நல்ல உணவும் உடற்பயிற்சியும் ஆரோக்கியத்திற்கு நல்லது
    சோம்பேறித்தனமும், முயற்சியின்மையும் ஆரோக்கியத்திற்குக் கேடாகும்
    தீய பழக்கங்கள் என்றும் ஆரோக்கியத்திற்குக்  கேடாகும்!

    உடலில் ஆயிரம் வியாதி பெயரோ ஆரோக்கியசாமி!
    நோயின்றி வாழ நல்ல ஆரோக்கியம்  தேவை
    உடல்  ஆரோக்கியம் பெறச் சத்துணவு  தேவை
    உடல் வலிமை பெற  நல்ல உடற்பயிற்சி  தேவை!

    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத  முடியும்
    ஆரோக்கியமாய் இருந்தால் வாழ்க்கை வளர்ச்சியடையுமே
    நல்ல உணவும் உடற்பயிற்சியும் மேற்கொள்வோமே
    மனதில் இறுக்கம்இன்றி ஆரோக்கியத்தைப் பேணுவோமே!

     

    Share