எல்.கே. ஜி மாணவன்
ரா.பார்த்தசாரதி
பசி, தூக்கம் வந்தால் எங்களுக்கு அழத் தெரியும் !
உங்கள் கஷ்டங்கள் பற்றியும், வரவு செலவு பற்றியும் எங்களுக்குத் தெரியாது !
நாங்கள் கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கவேண்டும் !
எங்களுக்குச் சாப்பிடும் பொருளின் விலை பற்றித் தெரியாது !
எங்களுடைய சிரிப்பினைத் தானமாகக் கொடுக்கத்தெரியும் !
எங்களுக்குப் பயம் கவலை என்பது என்னவென்று தெரியாது !
எங்களுக்கு எந்தப் பொருளையும் கடிக்கவும் உடைக்கவும் தெரியும் !
நாங்கள் உடைக்கும் பொருளின் மதிப்பும் விலையும் தெரியாது !
உங்கள் வேலையே உங்களுக்கு முக்கியம் !
எங்கள் விளையாட்டே எங்களுக்கு முக்கியம் !
வேலைக்குச் செல்லாத அம்மாவே ’நல்ல அம்மா’ என்று தெரியும் !
டிவியிலும், செல்போனிலும் நேரம் கழிப்பது எங்களுக்குத் தெரியாது !
எல்லாக் குழந்தைகளும் மண்ணில் பிறக்கையில் நல்லகுழந்தைகளே !
அவர்கள் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் தாய், தந்தை வளர்ப்பினிலே !
