Blog

  • காச நோய் கொடுமை ..

    பவள சங்கரி

    டி.பி. எனும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 500 உரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை மத்ய அரசு வகுத்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் இருந்தால் தயவுசெய்து இந்தச் செய்தியை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே. ஆண்டு தோறும் 28 இலட்சம் மக்கள் நம் இந்தியாவில் மட்டும் இந்த காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 17 இலட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுகிறார்களாம். அரசு இலவசமாக இதற்குரிய மருத்துவத்தை ஆரம்பச் சுகாதார நிலையம் மூலமாக வழங்கிவந்தும் பாதிக்கப்பட்ட 11 இலட்சம் பேர்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக்கொள்ள முன்வருவதில்லை. இதில் 25 இலட்சம் பேருக்கு மாதம் 500 உரூபாய் உதவித் தொகையாக அளிக்கவும், 2025க்குள்ளாக 90% காச நோயை ஒழிக்கவும், 2030க்குள் காச நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 95% தடுத்து நிறுத்தவும் மத்ய அரசு முடிவு செய்து திட்டம் வகுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

    Share
  • பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    pongal

    ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா ‘பொங்கல் திருவிழா’ – உழவர் திருநாள். சங்ககாலம்தொட்டு அறுவடைக் காலங்களில், மழையுடன் நாடு செழித்து, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும்பொருட்டும், பயிர்களின் விளைச்சல் அளித்த அன்னை பூமி, கதிரோன், ஏர் உழுத மாடு போன்றனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக இனிமையான சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பாக வழிபடுவது வழக்கம். தொடர்ந்து பல காலங்களாக வழிவழியாக இந்த நிகழ்வு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ்விழா, சமயங்கள் கடந்து அனைத்து தமிழர்களால், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. உழவர் பெருமக்கள் மாரியின் தயவால், ஆடிப்பட்டம் தேடி விதைத்து, அன்று முதல் சோர்வின்றி உழைத்துச் சேர்த்த நெல் மணிகளை மார்கழியில் அறுவடை செய்து களம் சேர்த்து, தங்கள் உழைப்பின் பயனை மகிழ்ச்சியுடன் நுகரத் தொடங்கி அதைக் கொண்டாடும் திருநாளே தைப்பொங்கல். ஏர் உழும் ஆவினத்தின் உழைப்பையும் போற்றி நன்றி நவிலும் திருநாள் இது.

    புத்தாடை உடுத்தி, முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு அதன் நடுவில் புதுப் பானை வைத்து புத்தரிசியிட்டு, பாலும், வெல்லமும், நெய்யும் சேர்த்து பொங்கல் வைப்பார்கள். பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவித்து, புதிய கரும்பையும், பசுமையான காய்கறிகளையும் வைத்துப் படையலிடுவர். தலை வாழையிலையில் வைத்து, விளக்கேற்றி கதிரவனை வணங்கி “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி, குலவையிட்டு மகிழ்ந்துக் கொண்டாடுவர்.

    சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் குறித்த சில பாடல்களைக் காணமுடிகின்றது:

    “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” – நற்றிணை
    “தைஇத் திங்கள் தண்கயம் போல்” – புறநானூறு
    “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” – கலித்தொகை
    “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” – குறுந்தொகை
    “தைஇத் திங்கள் தண்கயம் போல” – ஐங்குறுநூறு

    இந்த உழவர் திருநாள் தொன்று தொட்டு நம் தமிழ் நாட்டைப் போன்றே பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    ஜப்பான் நாட்டில், டோரி நோ ஈச்சி (Tori no Ichi) என்ற இத்திருவிழா ஈடோ காலம் (1603-1868) முதற்கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. நல்ல மகசூல் பெற்று அறுவடை செய்து, அவைகளை வளமாக விற்பனையும் செய்யும் பொருட்டு பிரார்த்தனை செய்வதே இதன் நோக்கமாகும்.டோக்கியோ நகரிலுள்ள ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும் இவ்விழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் 200 கடைகள் அமைக்கப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈடோ காலத்திற்குப் பின்னர் இன்றும் தொடர்ந்து, இரவு முழுவதும் நீடிக்கும் இந்த திருவிழாக்கள் நவம்பர் மாதம் ரூஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.

    கருணைக்கிழங்குத் திருவிழா (Yam festival), ஆப்பிரிக்காவில் அறுவடைக்காலங்களில் விவசாயிகள், கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மூன்று நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடும் திருவிழாவாகும்.

    இசுரேலில், எபிரேய மாதத்தின் 15 வது நாளில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுக்கோத் எனும் திருவிழா நடத்தப்படுகின்றது. அறுவடை நேரத்தில், “அறுவடைத் திருவிழா” எனவும் யூத நன்றி விழா எனவும் பெருவிருந்துடன் கொண்டாடப்படுகின்றது.

    சூசுக் (Chu Suk) என்பது கொரிய நாட்டின் நன்றித் திருவிழா ஆகும், கொரியர்கள் அறுவடைத் திருவிழாவை செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி, அதாவது 8 வது சந்திர மாதத்தின் 15 வது நாளில் கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில், அவர்கள் தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டி தங்கள் மூதாதையர்களுக்கு, அறுவடை செய்த புதிய பயிர்களால் தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் மூலம் மூதாதையர் வழிபாட்டு சடங்கு செய்கின்றனர்.

    இதுபோன்று வியட்நாம், இலங்கை, (உழவர் திருநாள்) அமெரிக்கா (நன்றி நவிலல் நாள்), சீனா (ஆகஸ்ட் – சந்திரன் திருவிழா) பல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும் இதன் அடிப்படை நோக்கம், அறுவடைத் திருநாள் என்பதுதான்!

    பொங்கல் நல்வாழ்த்துகள்!

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

     

    “என்னுள் சும்மா இரு”

    images (4)

    பாற்கடலில் வந்ததென்னவோ

    கொஞ்சம் விஷம்தான்

    போதுமே ஒரு துளி

    அந்தத் துளியை

    நீ குடித்து

    உலகைக் காத்தாய் சிவனே

    நீ

    விஷத்தை உண்டு

    அமுதத்தை உலகுக்கு அளித்தவன்

    பொதுவாழ்வில்

    தீமையைத் தான்கொண்டு

    நன்மையை மற்றவர்க்குத் தரவேண்டும்

    அதைச் செய்து காட்டியதால்

    நீ

    மகாதேவனாய்த் துதிக்கப் பட்டாய்

    உன்னை

    என் நெஞ்சில் சுமப்பதால்

    நச்சு எண்ணங்கள் வருவதே இல்லை

    சிவனே

    நீ என்றும் என்னுள் சும்மா இரு.

    (இன்று (14.01.2018) பிரதோஷம் )

    Share
  •  உளம்மகிழப் பொங்கிடுவோம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    மனங்கவரும் மார்கழியில்
    மகத்தான நாட்கள்வரும்
    இந்துக்கள் கிறீத்தவர்கள்
    எல்லோரும் பங்குகொள்வர்    jayarama
    வைஷ்ணவமும் சைவமும்
    வாழ்த்திநிற்கும் திருவெம்பா
    மார்கழியின் முக்கியமாய்
    மனமாசை அகற்றிநிற்கும்!

    ஒளிவிழா எனும்பெயரால்
    உத்தமராம் யேசுபிரான்
    வழிநிற்போர் அனைவருமே
    வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
    பீடுடைய மாதமாய்
    மார்கழியும் அமைந்துதுநின்று
    பெருமகிழ்ச்சி வருவதற்குத்
    தைதனக்கு வழிகொடுக்கும்!

    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்கின்ற நம்பிக்கை
    தளர்வுநிலை அகன்றுவிடத்
    தானுரமாய் அமைந்திருக்கு
    பொங்கலென்னும் மங்கலத்தை
    பொறுப்புடனே தருகின்ற
    எங்கள்தையை எல்லோரும்
    இன்பமுடன் வரவேற்போம்!

    புலம்பெயர்ந்த நாட்டினிலும்
    பொங்கலுக்குப் பஞ்சமில்லை
    நிலம்பெயர்ந்து வந்தாலும்
    நீங்கவில்லை பண்பாடு
    நலந்திகழ வேண்டுமென்று
    யாவருமே நினைத்தபடி
    உளம்மகிழப் பொங்கலிட்டு
    உவகையுடன் இருந்திடுவோம்!

    வாசலிலே தோரணங்கள்
    வடிவாகக் கட்டிடுவோம்
    வண்ணப் பொடிகொண்டு
    கோலங்கள் போட்டிடுவோம்
    எண்ணமெலாம் இறைநினைவாய்
    எல்லோரும் இருந்திடுவோம்
    எங்கள்வாழ்வு விடிவுபெற
    இணைந்து நின்றுபொங்கிடுவோம்!

    ஆரோக்கியம் ஆனந்தம்
    அனைவருக்கும் வரவெண்ணி
    ஆண்டவனை மனமிருத்தி
    ஆவலுடன் பொங்கிடுவோம்
    வேண்டுகின்ற அத்தனையும்
    விரைவாகக் கிடைத்துவிட
    நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
    நன்றாகப் பொங்கிடுவோம்!

     

     

                     

    Share
  • பொங்கல் விழா – 2018

    வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், வல்லமை உறுப்பினர்களுக்கும், வல்லமை வாசகர்களுக்கும்… என் அகமகிழ்ந்த பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

     

    pongal

    பாண்டவர்கள் புகழுடனாண்ட பழம்பெரும் நாடு..
    ……….பண்டிகைக்கிங்கே பஞ்சமில்லை பலவு முண்டாம்.!

    பாண்டியனும் சேரசோழனும் பார்த்துக் களித்தவிழா..
    ……….பாரத்தின் பெருமை சொல்லும் விழாவிலொன்றாம்.!.

    வேண்டும் வேண்டாமை எனுமெண்ணம் இலாமல்..
    ……….வேற்றுமை சிறிதுமிலா உதட்டிலன்று உவகையெழும்.!.

    ஆண்டுதோறும் நிறையும் அளவிலா மகிழ்ச்சியும்..
    ……….அனைத்துயிரும் இன்புற்றிருக்கும் பொங்கல் விழா.!

    வீண்போக்கு போக்காமை வீடெலாம் சுத்தம்செய்து..
    ……….விளைந்த தானியத்தால் விருந்தினரை உபசரிப்பர்.!.

    ஆண்பெண் எனும்பாகுபாடு இல்லா இனியவிழா..
    ……….அளவில்லாமல் தானம்செயும் எண்ணமெழும் விழா.!.

    மீண்டும் மீண்டும் வரவேண்டுமிப் பொங்கல் விழா..
    ……….மாண்டாலும் பெருமை சொல்லுமவ் மஞ்சுவிரட்டு.!.

    யாண்டும் நிலையாய் பொங்கலின் புகழோங்கவே..
    ……….ஈண்டிய பெருந்தகையும் பெருமையுடன் வாழ்த்துவர்.!

     

     

    Share
  • பொங்கலோ பொங்கல்

    2018 பொங்கலோ பொங்கல்

    இன்று பொங்கல் திருநாள்

    என் துணைவியார் விடியற்காலையிலே எழுந்து பொங்கல் பானை வைக்க எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டார், நானும் சீக்கிரம் எழுந்து கூடமாட உதவி செய்வோம் என்று ஏதேனும் உதவி வேண்டுமா என்றேன்,

    ” முதல்லே பல் தேச்சுட்டு காப்பி மேசைமேலே வெச்சிருக்கேன் அதைக் குடிச்சிட்டு கரும்பை எடுத்து நறுக்கி அதை சின்னஞ்சிறிய துணடுகளாக நறுக்கி குடுங்கோ, அதோட அங்கே மஞ்சள் கொத்து வெச்சிருக்கேன் அதையும் சேர்த்து ஒரு கரும்புத் துண்டையும் வெச்சி நன்னா கட்டி அதை அந்தப் பொங்கல் பானையிலே கட்டிக் குடுங்கோ, சீக்கிரம் குளிச்சிட்டு வந்தா நல்லது, இன்னிக்கு பொங்கல் விசேஷமான திருநாள் , சூரியபகவானுக்கு உகந்த நாள் அதுனாலே சூரியனையும் நம்ம முன்னோர்களையும் மனப்பூர்வமா நெனைச்சுக்கற நாள் ,

    குளிச்சிட்டு நீங்க வழக்கமா செய்யற தர்ப்பணம் செஞ்சு முன்னோர்கள் கிட்டே வேண்டிக்கோங்க. அதுக்கு தட்டு டம்ளர் எல்லாம் தயாரா வெச்சிருக்கேன், அதுக்கப்புறம் பெருமாள் சேவிக்கலாம், பெருமாள் அறையை நன்னா சுத்தம் பண்ணி பூவெல்லாம் பறிச்சு தட்டிலே வெச்சிருக்கேன் , வெற்றிலை பாக்கு மஞ்சள் பழம் எல்லாம் வெச்சிருக்கேன் , கரும்புத் துண்டத்தை அதிலே வையுங்கோ, அக்‌ஷதை கலந்து வெச்சிருக்கேன்,

    சந்தனம் கரைச்சு வெச்சிருக்கேன், தேங்காயை எடுத்து சமபாகமா உடைச்சு அதிலே வையுங்கோ , பூஜைக்கு ரெடியா வெச்சிக்கலாம் , உங்களுக்கு பாத்ரூமிலே துண்டு எல்லாம் போட்டிருக்கேன் நேத்து உடுத்திண்ட பழசோட போயி தொடாதீங்கோ, நம்மோட முன்னோர்களுக்கு மடி ஆசாரத்தோட செய்யணும், பெருமாளுக்கும் சாளிக்ராமத்துக்கும் ஆசாரத்தோட பூஜை புனஸ்காரம் செய்யணும், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ வந்து உதவி செய்யுங்கோ என்றாள். மூச்சுவிடாமல் ”
    நினைத்துப் பார்த்தேன் நாம செய்யறதுக்கு என்ன இருக்கு எல்லாத்தையும் இவளே செஞ்சு தயாரா வெச்சிட்டு நான் ஏதோ உதவறா மாதிரி பேசறாளே இந்தப் பாங்கு நம்ம குடும்பத்திலே நம்மோட இந்திய மண்ணிலே பிறந்து வளர்ந்த இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பதிவிரதாத் தனமில்லையோ என்று எண்ணும் போது மனம் விகசிக்கிறது.

    நம்மைத் தாய்க்குப் பின் தாரமாய் தாங்கி வழிநடத்தி ஆதரவாய்த் தலை தடவி (இந்த தலை தடவிங்கறதுக்கு வேற அர்த்தம் நீங்க எடுத்துண்டா நான் பொருப்பில்லே) சரி அப்பிடியே அர்த்தம் எடுத்துண்டாலும் இதுக்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்னு நாம அதுக்காகத்தானே ஏங்கி ஏங்கி எல்லாப் பொண்ணையும் பாத்து அதெல்லாம் கிடைக்காம கடைசியிலே இவளை ( ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டோம் ) ன்னு நெனைப்பு ஓடறது .

    அழகாயிருப்பவர்கள் எல்லோரும் கற்பை விலை பேசுகிறார்கள், அமெரிக்காவைச் சேர்ந்த கிசெல்லே வயது 19, மாடல் அழகியான இவர் ஜெர்மன் நாட்டை மையமாக வைத்து இயங்கும் இணைய தளத்திலே தன் கற்பை ஏலம் விட்டிருக்கிறார். அந்தக் கற்பை விலைக்கு வாங்க ப்ரபலமான ஹாலிவுட் நடிகர்கள் தொழிலதிபர்கள், எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்திருக்கின்றனர்.

    ஆனால் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியைச் சேர்ந்த ஒரு ஷேக் 15 கோடிக்கு ஏலம் எடுத்து அந்தப் பெண்ணின் கற்பை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார், இதன் மூலம் அறிவது என்னவென்றால் கற்பின் விலை இன்றைய நிலவரப்படி 15 கோடி இன்னும் உயரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.. எனும் செய்தியை தினமலர் வாரமலரில் பார்த்தேன்,

    ஆக கற்பு என்பது கயவர்கள் மெல்லும் அவலாகிப் போனதில் வியப்பில்லை. ஆண்டாளையும் சாடுவர் எல்லோரையும் சாடுவர் , பாவம் அவர்களுக்கு கற்புள்ள பெண்கள் கிடக்காத ஏக்கத்தை எப்படித்தான் சரிசெய்துகொள்வது.

    சரி அதைவிடுவோம் பொங்கல் நன்நாளில் நாம் பொங்கல் பானைக்கு கரும்பும் மஞ்சளும் கட்டுவோம் என்று முடிவுக்கு வந்து ஒரு கயிறை எடுத்து சுத்தம் செய்து பொங்கல் பானையில் மஞ்சளையும் கரும்பையும் கட்டினேன்.

    ஏனோ தெரியவில்லை “மாங்கல்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனா” மந்திர கோஷமும் நாதஸ்வரமும் என் மனதிலே உச்சகட்டத்தில் ஒலிக்கிறது,

    நமக்கு அழகும் நளினமும் கவர்ச்சியும் நிறைந்த நயன்தாரா, போன்ற பெண்களை காதலிக்க முடிகிறது ஆனால் கல்யாணம் செய்து கொள்ள பாமா ருக்மணி ரேவதி,  வசந்தா ஆனந்தி போன்ற பெண்களே கிடைக்கின்றனர், ஆனாலும் இவர்கள் போதுமைய்யா நமக்கு , (காலத்துக்கும் கஞ்சி ஊத்துவாங்க) நம்மைத் தூக்கிப் போடாமல், இப்போது புரிகிறதா ஆண்டாளின் கற்பு அரங்கன் மேல் காதல் ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் என்னவென்று.

    காலம் முழுவதும் நாம் கட்டிய மஞ்சள் கயிற்றுக்காக நம்மையேக் கணவனாக வரித்து அடித்தாலும் அணைத்தாலும் நம்மையே அடித்து நம்மையே அணைக்கும் இவர்கள்தானே கற்புள்ளவர்கள், ஒப்பனை செய்து கற்பை விற்கும் பெண்கள் நமக்குத் தேவையா ,

    வேண்டவே வேண்டாம் என்று இந்தப் பொங்கல் திருநாளில் ஒரு நல்ல முடிவெடுத்து, இவர்கள் செய்யும் பொங்கலில் பால் பொங்கியவுடன் பொங்கலோ பொங்கல் என்று உரக்க கோஷமிட்டு ஆண்டாளையும் அரங்கனையும் விநாயகரையும் வேங்கடவனையும் சூரியனையும் விவசாயிகளையும் எருதுகளையும், பசுக்களையும் , ஏரையும் வயலையும், நெல், அரிசி மஞ்சள் கரும்பு என்று எல்லாவற்றையும் மனதுக்குளே பசுமையாய் நினைத்துக் கொண்டு கொ

    கொண்டாடுவோம் பொங்கலோ பொங்கல்
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    போகியின்று ஆண்டாள் திருக்கல்யாணம்….

    180113 -Tiruppavai 29-sitranchirukale lr- watercolour - 24x32cms  (Eternal servitude -ezhezh piravikkum - multiple forms not multiple lives. mukkur azhagiyasingar)
    180113 -Tiruppavai 29-sitranchirukale lr- watercolour – 24x32cms
    (Eternal servitude -ezhezh piravikkum – multiple forms not multiple lives. mukkur azhagiyasingar)

    “ஏகபோகம் ஆகிறாள் ஏரார்ந்த கண்ணியவள்
    நாகமிசை நர்த்தன நாரணன் -பாகமாக;
    போகியன்று ஆண்டாள் பெருமாளை சேர்கிறாள்
    வாகீச பெண்மைக்கு வாழ்த்து”…

    ஆகிறது ஆகட்டும் போகிறது போகட்டும்
    பாகிரதி போலின்பம் பொங்கட்டும் -போகியின்று
    நன்மையை சாக்கிட்டு தீமையைத் தீக்கிட்டு
    உண்மை கசந்தாலும் உண்….
    ’’நாச்சியார் கோயிலில் நம்பெருமாள் தங்கிட
    ஆச்சது நாச்சியார் ஆலயம்: -பேச்சியவள்(பேச வைத்த திருப்பாவை பாடியவள்)-
    மெத்தை, தலையணை மந்திரத்தால் சீனுவாசர்
    தத்தையவள் ஆத்தில் திகழ்வு’’….கிரேசி மோகன்….
    “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி நாச்சியார்
    பாடி இடம்பிடித்தாள் பாற்கடலில்; -ஆடிப்பூ
    ரத்தாள் பதம்பிடிக்க, ரங்கன் அணைக்கின்றார்
    அத்தாளை அம்மிக்(கு) அழைத்து “….

    ”மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
    நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
    ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
    வாவிதான் பாலாழி விஷ்ணு’’….

    “ஆடிப்பூ ரத்தில் அவதரித்த ஆண்டாளின் ,
    சூடிக் கொடுத்த சுடர்கொடியின், -ஜோடித்து
    பாக்களாய் ரங்கமன்னார் பாதத்தில் இட்டநறும்
    பூக்களே நம்பாது காப்பூ”….

    “சாரங்க மன்னார்க்கு சொல்லித் திருப்பாவை
    பாரங்க மன்னாராய் பாதித்து, -சீரங்கம்
    தாதை யுடன்சென்று தாரமாய் மாறிய
    கோதைமுகம் பூசுமஞ்சள் காப்பு”….

    “பழையன விட்டு புதியன பூண
    மழையன்ன மாலின் மனையாய்-விழைகிறாள்
    புள்ளேறி வைகுந்த புக்ககம் போவதற்கு
    கள்ளுறும் பாசுரத்தாள் காண்”….கிரேசி மோகன்….!

    Share
  • தடுமாறும் நீதித்துறை?

    பவள சங்கரி

    தலையங்கம்

    நீதித் துறையில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் வருந்தத்தக்கது, தவிர்க்கப்பட வேண்டியது. உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது அல்லவா? தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட அவர்கள் சுட்டிக்காட்டிய கருத்துகள் அடங்கிய கடிதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு களையப்பட வேண்டியது அவசியம். இந்தப்பிரச்சனையிலிருந்து நடுவண் அரசு அவர்களேத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒதுங்குவது சரியா? அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்பதாலேயே அவர்கள் மக்கள் மன்றத்திற்கு வந்துள்ளனர். இந்த நால்வரோடு மேலும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூறியுள்ள கருத்தின்படி இந்த நிலை ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என்ற எச்சரிக்கை மிகவும் கவனம் கொள்ளத்தக்கது. இந்திய அரசு நிர்வாகத்தின் தலைவராகிய குடியரசுத் தலைவர் இப்பிரச்சனையைக் கையில் எடுத்து இதற்கான சரியானத் தீர்வு காணவேண்டியது அவசியம். தமிழக ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு செய்வது சரியாக இருக்கும்பொழுது, குடியரசுத் தலைவர் நம் ஜனநாயகத்தையே ஆட்டம் காணச்செய்யும் இந்த முக்கியமானப் பிரச்சனையில் ஆய்வு செய்து தீர்வு காணவேண்டியது அவருடைய முக்கியமான கடமை அல்லவா? இப்படிப்பட்ட நேரத்திலும் அவர் மௌனம் காப்பது சரியாகுமா?

    Share
  • மகர சங்கராந்தி வாழ்த்து!

    sa
    ”புதியன ஏற்று பழையன போற்றி
    கதிரை குணதிசை காண்போம் -மதிநிறை
    திங்கட் தவம்முடிந்து தைப்பலன் தந்தது
    பொங்கலோ பொங்கலெனப் பாடு’’….

    ”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்
    பொங்கலை வைத்துப் பணிகின்றோம் -எங்களுள்
    பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு
    சங்கராந்தி சூர்யா சரண்’’….கிரேசி மோகன்….

    “தூரத்தே தீவைத்து சாரத்தை சேர்க்கின்ற
    வாரக் கடைசியில் வந்துதித்த ,-நேரத்தில்
    பொங்கல் படைக்கின்றோம், கங்குலை போக்கிடும்
    சங்கராந்தி சூர்யா சரண் “…..கிரேசி மோகன் ….!

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 19

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவனின் வரவை மகிழ்ச்சியின் வரவாகவே தலைவி எண்ணி மகிழ்ந்தாள். அவனை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உண்டியிட்டாள்.

    தான் வருமட்டும் தலைவிக்குத் துணையாயிருந்து அவளை ஆற்றியமைக்காகத் தோழியை வெகுவாய்ப் போற்றினான் தலைவன்.

    தோழியோ முறுவலித்தவாறே, ”ஐய! தலைவியை ஆற்றுவித்த பெருமை என்னைச் சாராது; அதனை ஒரு காக்கைக்குச் சாற்றுதலே முறை” என்றாள் பொடிவைத்து!

    தலைவன் வியந்து, ”அப்படியா? அது எப்படி?” என்றான்.

    ”ஆம், சின்னாட்களுக்குமுன் நம் வீட்டு வாயிற்பக்கம் ஒரு காக்கை வந்தமர்ந்தது. கா…கா என்று வெகுநேரம் கரைந்துவிட்டுச் சென்றது. இதோ… நீங்களும் வீடுவந்து சேர்ந்துவிட்டீர்கள்!

    உம் பிரிவால் தோள்நெகிழ்ந்து வாடியிருந்த என்னருமைத் தோழிக்கு நும் நல்வரவை முன்கூட்டியே அறிவித்த அந்தக் காக்கைக்குப் பலியாக, திண்ணிய தேரையுடைய வள்ளலான நள்ளியின் கானகத்தில் வாழும் இடையரின் பலபசுக்கள் பயந்த நெய்யுடன், தொண்டி எனும் ஊரில் நன்கு விளைந்த வெண்ணெல்லரிசியால் சமைத்து வெம்மையுற்ற சோற்றை ஏழுகலங்களில் ஏந்திக் கொடுத்தாலும் அது குறைவே” என்றாள். (காக்கைக்கு இடும் உணவைப் பலி என்று கூறல் மரபு.)

    காக்கையைச் சிறப்பித்துப் பாடல் பாடியமையால் நச்செள்ளையார் எனும் பெயரிய இப்புலவர் ’காக்கைபாடினியார் நச்செள்ளையார்’ எனும் அடையோடு சிறப்பிக்கப்படுகின்றார்.

    திண்தேர்  நள்ளி  கானத்  தண்டர்
    பல்லா
     பயந்த  நெய்யின்  தொண்டி
    முழுதுடன்
     விளைந்த  வெண்ணெல்  வெஞ்சோறு
    எழுகலத்
     தேந்தினுஞ்  சிறிதென்  தோழி
    பெருந்தோள்
     நெகிழ்த்த  செல்லற்கு
    விருந்துவரக்
     கரைந்த  காக்கையது  பலியே.  (குறுந்: 210 – காக்கைபாடினியார் நச்செள்ளையார்)

    காகத்தைப் புகழ்ந்த தோழியின் நன்மொழியை இரசித்துச் சிரித்தான் தலைவன்.

    crow”குற்றமற்ற சிறகுடைய காக்கையே! தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்ட என் மகள் திரும்பிவந்தால் இறைச்சியொடு கலந்த சோற்றை உனக்குப் பொற்கலத்தில் தருவேன்; அவர்கள் வரவுக்காக நீ கரைவாயாக!” என்று மகட்போக்கிய தாயொருத்தி, காக்கையிடம் வேண்டும் ஐங்குறுநூற்றுப் பாடலை மேற்கண்ட குறுந்தொகைப் பாடலோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    மறுவில்  தூவிச்  சிறுகருங்  காக்கை
    அன்புடை  மரபின்நின்  கிளையோடு  ஆரப்
    பச்சூன்  பெய்த  பைந்நிண  வல்சி
    பொலம்புனை  கலத்தில்  தருகுவென்  மாதோ
    வெம்சின  விறல்வேல்  காளையொடு
    அம்சில்  ஓதியை  வரக்கரைந்  தீமே.  (ஐங்: 391 – ஓதலாந்தையார்)

    காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் எனும் நம்பிக்கை பன்னெடுங் காலமாகவே தமிழரிடம் இருந்துவரும் தொல்நம்பிக்கை என்பதை இப்பாடற்செய்திகள் நமக்குத் தெள்ளிதின் உணர்த்துகின்றன.

    தலைவனைக் காணாது தலைவிகொண்ட பிரிவெனும் தாகத்தைத் தணித்த காகத்தை நாமும் கொண்டாடுவோம்.

    தலைவன் பொருள்வயிற் பிரிந்ததால் சிலகாலம் தடைப்பட்டிருந்த தலைவன் தலைவியரின் இல்லறம் மீண்டும் இனிதே தொடங்கிற்று.

    செய்வினை முற்றுவித்த செம்மல் உள்ளத்தொடு தலைவியை விரும்பிப் பொருந்திய தலைவன், ”குறிய காம்பையுடைய குவளையின் அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற தலைவியின் நல்ல மெல்லிய கூந்தலெனும் பாயலின்கண்ணே யாம் இருந்தோம்; பெரிய மேகமே! தங்கிய இருள்கெடும்படி மின்னி, குளிர்ந்த நின் துளிகளுள் இனியவற்றைச் சிதறி, குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப்போல் முறையாய் முழங்கி, பன்முறை இடித்து மழைபெய்து வாழ்வாயாக!” என்று வானை வாழ்த்தினான்.

    இல்லறம் நடாத்துதற்கு வேண்டிய பொருள் கைவந்தமையால் இனி அறஞ்செய்தற்குத் தடையில்லை. தலைவியைச் சேர்ந்தமையால் இன்பத்துக்கும் குறைவில்லை. ஆதலால்  உளம் நிறைவுற்ற தலைவன் அம் மூன்றும் நடத்தற்கு ஏதுவாகிய வானை வாழ்த்துகின்றான்.

    தாழிருள் துமிய  மின்னித்  தண்ணென
    வீழுறை
     இனிய  சிதறி  ஊழிற்
    கடிப்பிகு
     முரசின்  முழங்கி  இடித்திடித்துப்
    பெய்தினி
     வாழியோ  பெருவான்  யாமே
    செய்வினை
     முடித்த  செம்மல்  உள்ளமோடு
    இவளின்
     மேவின  மாகிக்  குவளைக்
    குறுந்தாள்  நாள்மலர்  நாறும்
    நறுமென்  கூந்தல்  மெல்லணை  யேமே.  (குறுந்: 270 –  பாண்டியன் பன்னாடு தந்தான்)

    தலைவியின் கூந்தல் மணம் குவளைமலரின் மணத்தைblue lily யொத்தது என்பதைப் பிறிதொரு தலைவனும் ஒரு குறுந்தொகைப் பாடலில் கூறக் காண்கிறோம்.

    குவளை நாறுங் குவையிருங் கூந்தல் (குறுந். 300:1)

    இவற்றை நோக்குகையில் அற்றைப் புலவரில் நக்கீரர் தவிர்ந்த மற்றையோர் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு எனும் கருத்துடையோராய் இருந்திருப்பரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    மனையறத்தின் நற்பயனாய்ப் பெறற்கரிய பேறாகிய மக்கட்பேற்றினைத் தலைவி பெற்றாள். இன்பப் புதையலாய்க் கிடைத்த மகவினைத் தலைவனும் தலைவியும் ஊச்சிமோந்து கொண்டாடினர்.

    அக்குழந்தை, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்சோற்றை உண்ணும் அழகினைக் கண்கள் விரிய, சிந்தை நிறையப் பார்த்திருந்தனர்.

    குழந்தை பிறந்ததிலிருந்து அதனைக் கவனிக்கவேண்டிய பெரும்பொறுப்பும் பணியும் தலைவிக்கு வாய்த்தது. அப்பணியிலேயே மூழ்கித் திளைத்த அவளுக்குத் தலைவனுடனான இன்ப வாழ்வில் நாட்டம் குறைந்தது. குழந்தையைக் கண்ணும் கருத்துமாய்ப் பராமரிப்பதிலும் பேணுவதிலுமே கழிபேருவகை கொண்டாள்.

    தலைவனும் புதல்வன்பேரில் அன்பும் பாசமும் கொண்டவன்தான் என்றாலும் தலைவியைப்போல் எப்போதும் குழந்தையுடனேயே இருக்கவேண்டிய அவசியமும் தேவையும் அவனுக்கு இருக்கவில்லை. ஆதலால் வீட்டைவிட்டு வெளியிடங்களில் சுற்றிவரலானான்.

    விழாக்கள், ஆடல் பாடல் நிகழ்வுகள் என்று ஒவ்வொரு நாளும் புலன்களுக்கு இன்பம்தரும் வகையில் பொழுதைக் கழித்துவந்தான். விரைவிலேயே அவ்வூரின்கண் வாழ்ந்துவந்த பரத்தை ஒருத்தியோடு அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவளுடனேயே அல்லும் பகலும் காலம் கழிக்கத் தொடங்கியவன், தன் மனை மறந்து, விடுதல் அறியா விருப்பினனாக, அவளுடன் அவள் மனையிலேயே தங்கிவிட்டான்.

    தலைவனின் கூடா ஒழுக்கம் தலைவிக்குத் தெரிந்தது. வேதனையின் வெம்மையில் அவள் உள்ளம் எரிந்தது.

    தன் கணவனைப் பரத்தையொருத்திக் கண்ணியமின்றிக் கவர்ந்துகொண்டாளே என்று தோழியிடம் கூறி வருந்தினாள் அவள். தலைவி தன்னை பழித்துரைப்பதும், புறங்கூறுவதும் அந்தப் பரத்தையின் காதுக்கும் எட்டியது.

    வெகுண்டாள் அவள்!

    “தலைவி தன் அறியாமையின் காரணமாய் என்னைvaalai வெறுக்கும் வகையில் தலைவன் மகிழ்தற்குரியவளாய் யான் இருப்பேனாயின், திரண்ட கொம்பையுடைய வாளைமீனின் கருமுதிர்ந்த பெட்டையானது கொத்தினையுடைய தேமாவின் உதிர்ந்த இனிய கனியைக் கவ்வுதற்கு இடமாகிய மிகப் பழைய வேளிருடைய குன்றூர்க்குக் கிழக்கேயுள்ள குளிர்ந்த பெருங்கடல் எம்மை வருத்துவதாக” என்று ஆவேசத்தோடு  சூளுரைத்தாள்.

    கணைக்கோட்டு  வாளைக்  கமஞ்சூல்  மடநாகு
    துணர்த்தேக்
     கொக்கின்  தீம்பழங்  கதூஉம்
    தொன்றுமுதிர்
     வேளிர்  குன்றூர்க்  குணாது
    தண்பெரும்
     பவ்வம்  அணங்குக  தோழி
    மனையோள்
     மடமையிற்  புலக்கும்
    அனையே
     மகிழ்நற்கியா  மாயின  மெனினே. (குறுந்: 164 – மாங்குடி மருதன்)

    தலைவனின் காதற் பரத்தை சொல்லுகின்ற செய்தியின் உள்ளுறை இதுதான்:

    மனையிலேயே உறையும் தலைவி வீட்டுக்கு வெளியில் நடப்பவற்றை அறியாதவளாய் இருக்கின்றாள். அதனால்தான் வாளையின் பெட்டை எவ்வித முயற்சியுமின்றி மாங்கனியைப் பெற்றதுபோல் யான் தலைவனை அடைய எவ்வித முயற்சியும் செய்யாதபோதும் அவனாகவே வலியவந்து என்னைப் பற்றிக்கொண்டதை அவள் அறியவில்லை. ஆகவே என்மீது பழியில்லை; என்னைத் தூற்றுவதும் முறையில்லை” என்கிறாள்.

    ”யாருக்குமே தீங்கு நினையாத நல்லுளம் படைத்தவர் யாம்” என்றுதான் மானுடர் அனைவரும் தம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்கின்றனர். காதற் பரத்தை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

    [தொடரும்]

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 29

    க.பாலசுப்பிரமணியன்

     

    திருப்புலியூர் – அருள்மிகு மாயபிரான் திருக்கோவில்

     

    images (3)

    மார்கழிக் காலையிலே மனதெல்லாம் நீயிருக்க

    ஊர்வழிச் சாலையிலே உன்புகழைப் பாடிச்செல்ல

    ஊழ்வழி வந்தவினை உனைக்கண்டே ஒதுங்கிவிட

    பூவிழி மணாளனே புவிக்காக்க வந்திடுவாய் !

     

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைச் சொந்தமெனே ஏற்றவனே

    சூதுகொண்ட கௌரவரைக் குலத்தோடு அழித்தவனே

    சூதின்றித் தூணினிலும் துரும்பினிலும் இருப்பவனே

    சூதுடைய எண்ணங்களைச் சுட்டெரிக்கும் வல்லவனே

     

    நாடிவரும் நல்லவர்க்கு நாள்தோறும் அருள்பவனே

    பாடிவந்த பாசுரங்கள் பரவசமாய்க் கேட்பவனே

    பாவையிலே கோதையின் உள்ளத்தை உணர்ந்தவனே

    பாவையர்கள் நோன்பிற்குப் பலனாகி நிற்பவனே

     

    தாள்பணிந்த பீமனுக்கு அருள்செய்த மாயவனே

    தவமுனிகள் தானத்தை ஏற்றிடவே மறுத்துவிட

    தவறறியா மன்னவனும் அரக்கனையே ஏவிவிட

    தவத்தோரைக் காத்த தன்னிகரில்லாத தயாளா !

     

    நேசமுடன் உனைப்பாடி நாள்கழித்தேன் மார்கழியை

    வாசமுள்ள மலராக நெஞ்சிருந்து மலர்ந்திருந்தாய்

    பாசமுள்ள தாய்த்தமிழில் பாடிவந்தேன் புகழனைத்தும்

    தேசங்கள் நூற்றெட்டும் நினைவினில் சுழன்றிடவே !

     

    ஆழ்வார்கள் உள்ளத்தில் அருட்கனியாய் பழுத்தவனே

    ஆண்டாளின் இசைகேட்டு அனுதினமும் எழுந்தவனே

    காசினியில் உனைப்போலக் கருணையைக் கண்டதில்லை

    காத்தருள்வாய் அரங்கத்தானே அலைமகளின் அருள்சேர்த்து !

     

    (நிறைவு)

     

     

     

     

     

     

    Share
  • திவாகரின் இமாலயன் – நூல் விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    Himalayan - இமாலயன்
    Himalayan

    இந்தோ சீன எல்லையில் உள்ள புலிக்குன்று (டைகர் ஹில்ஸ்) என்ற இடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா நிமித்தம் சென்றேன். எங்கும் பனி, எதிலும் குளிர். உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டுதான் சில மணி நேரங்கள் அங்கே செலவிட்டேன். அதற்குள் உடல் வெடவெடத்தது. சிறிது நேரம் இருந்த எனக்கே இப்படி இருந்தால், அங்கேயே காலம் முழுவதும் நின்று காவல் காக்கும் வீரர்களின் நிலையை என்னவென்று சொல்வது? அந்தப் பனி மலையில், போரும் செய்ய வேண்டுமானால் அது எத்தனை கடினமானது? ஆனால், 1962ஆம் ஆண்டு அப்படித்தான் இந்திய – சீனப் போர் நடைபெற்றது. இந்தப் பகீர், திடீர், ஜிலீர் அனுபவத்தைத்தான் ஒரு புதினமாக வடித்துள்ளார் திவாகர்.

    இந்திய – சீனப் போர் என்பது, வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் ஒரு வரியில், வாக்கியத்தில் நாம் கடந்து செல்லும் ஒன்று. ஆனால், அதற்குப் பின்னே எத்தனை சதிகள், சம்பவங்கள், சாகசங்கள் நடைபெற்றுள்ளன? எந்தக் காரணத்திற்காக இந்தப் போர் நடைபெற்றது? இரு தரப்பின் பலம், பலவீனம் யாவை? யாரெல்லாம் யாருக்குப் பின் அணி திரண்டார்கள்? யாருடைய ஆதரவு யாருக்கு? போர் நடவடிக்கைகளின் போது, உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் நடந்தவை என்னென்ன? எனப் பலவற்றையும் இந்தப் புதினம், போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது.

    இவ்வளவு சம்பவங்களுக்கு இடையில் ஒரு விறுவிறுப்பான கதையைப் பின்னி, உண்மையிலேயே பின்னிப் பெடலெடுத்து விட்டார் திவாகர். இந்தக் கதையின் நாயகன், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு குரூப் கேப்டன். அவர் மூலமாக முன்னகரும் கதையில் பல்வேறு திருப்பங்கள், இணையாக அவரது காதல், அவருக்கு நடக்கும் விபத்து, அதற்குப் பிறகான ஆள் மாறாட்டம் என அந்தக் காலத்துத் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

    இமயமலை, திபெத், சீனப் பகுதிகளின் பெயர்கள், அங்கு வாழும் பழங்குடி இனங்களின் பெயர்கள், அவர்களது மொழிகளின் பெயர்கள், அந்தந்த இடத்துக்கு ஏற்ப, பின்புலத்துக்கு ஏற்ப நபர்களுக்குச் சூட்டப்பெற்ற பெயர்கள் என ஒவ்வொன்றும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதே காலத்தில் இந்தியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் உதிர்த்த மொழிகள், பொருத்தமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இது, புதின ஆசிரியரின் கடின உழைப்பைக் காட்டுகிறது.

    கதையில் இமயமே ஒரு பாத்திரமாக இடம் பெற்றுள்ளது. அதன் அமைப்புகள், பாதைகள், நீரோட்டங்கள், அங்குள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை என அனைத்தும் நேரில் பார்ப்பது போலவே விவரிக்கப் பெற்றுள்ளன. இந்தக் கதையின் நாயகி, பாறைகளைப் பற்றிப் படித்தவள் என்ற விவரம், கதையில் சரியானபடி பயன்படுத்தப் பெற்றுள்ளது. அவளே பின்னர், ஆண் பாறை, பெண் பாறை எனக் கண்டறிந்து, ஒரு புதிய நீர்த்தடத்தை உருவாக்குவது, ஆசிரியரின் செம்மையான கதைப் பின்னலைக் காட்டுகிறது.

    இந்திய ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்த காரணத்தால், கடல் போன்ற சீன ராணுவத்தைச் சமாளிக்க, நம் எல்லையோரப் பழங்குடியின இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது, அவர்கள் உள்பட, இந்திய வீரர்கள் போர்க் களத்தில் நிகழ்த்திய துணிகரச் செயல்கள், இயற்கையின் அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சாதுர்யம் எனப் பலவும் புதினத்தின் இறுதிப் பக்கங்களைப் பரபரப்பாக்கிவிடுகின்றன. துணிகரமாகப் போரிட்ட இந்திய வீரர் ஒருவருக்குச் சீனப் படையினர் சிலையெடுத்ததும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

    சீனப் படைகளால் இழப்பைச் சந்தித்த போதும், இந்தியாவின் விமானப் படையைப் பயன்படுத்திக் குண்டு வீசும் யோசனையைக் கதையின் நாயகர் தவிர்க்கிறார். அதற்கு அவர் கூறும் காரணத்தைப் புதினத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    போருக்கு முந்தைய காலக்கட்டத்தைப் பற்றியும் அதற்கு எவ்வாறு இரு நாடுகளும் தயாராயின என்றும் அக்காலத்திய உளவு நடவடிக்கைகள் குறித்தும் புதினம் விரிவாகப் பேசுகிறது. இதே புதினத்தை நேரடியாகப் போர்க் களத்திலிருந்து தொடங்கி, போர் விவகாரங்களை மேலும் விரிவாகக் காட்டியிருந்தால், அது மேலும் பரபரப்பாக இருந்திருக்கும். ஆயினும் நூலாசிரியர் முன்னுரையில் தெரிவித்தபடி, அவர் வேண்டுமென்றே தான் அதனைத் தவிர்த்திருக்கிறார்.

    வாசிப்புச் சுவாரசியத்தை விட, தேர்ந்த அற நெறிகளைப் பின்பற்றும் பாத்திரங்களைப் படைத்ததற்காகத் திவாகர் பெருமைப்படலாம். வரலாற்றை இப்படிக் கதையாகப் படிக்கும் போது, அது மனத்தில் சட்டெனப் பதிந்துவிடும். அந்த வகையில் இமாலயன், யாரும் அதிகம் தொடாத கருவைத் தொட்டுச் செல்கிறது. புதின ஆசிரியர் திவாகர் அவர்களுக்கும் வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தாருக்கு வாழ்த்துகள்.

    நூல் கிடைக்குமிடம்:

    இமாலயன் (வரலாற்றுப் புதினம்)
    ஆசிரியர் – திவாகர்
    வெளியீடு – பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
    பக்கங்கள் – 363
    விலை – 480
    இணையத்தில் வாங்க – https://www.udumalai.com/imalayan.htm

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180112 - Tiruppavai 28 -  lr - katrukkaravaigaL- Oh, Krishna! You were born as a cowherd with us, so we did not know your greatness.  In our ignorance, we have taken liberties with you. Pl forgive us. We realise this relationship with you is forever.
    180112 – Tiruppavai 28 – lr – katrukkaravaigaL-
    Oh, Krishna! You were born as a cowherd with us, so we did not know your greatness. In our ignorance, we have taken liberties with you. Pl forgive us. We realise this relationship with you is forever.

    ’’பாற்கடல் பள்ளி, பரமபத சோபானர்
    நூற்கடல்நா லாயிர நாயகர், -பாற்குடல்
    கன்றுகள் மேய்த்தவர், கண்ணனென் காதலர்,
    என்றுமவர் கேள்வர் எனக்கு’’…..!
    கேள்வர் -கணவர்

    எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தோனை
    சங்குசக்ர சார்ங்கரை சாமியை, -சிங்கத்தை,
    முன்நீர் கடைந்த முராரி, இடையனென்(று)
    எண்ணியே மாந்தாள் இவள்(ஆண்டாள்)’’….!
    ‘மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
    நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
    ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
    வாவிதான் பாலாழி விஷ்ணு’’….

    ‘’பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
    கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
    பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
    சரணத்தில் பல்லவியாய் சேர்’’….
    “கீதைக்(கு) இணையான ,கோதை திருப்பாவை
    போதை தலைக்கேற புள்ளேறி -தாதை
    பெரியாழ்வார் இல்லம் பறந்துபோய் கேட்டான்
    தரியாஓய்! பெண்ணை தனக்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • மாணிக்கவாசகரின் பக்தி

    ஒரு அரிசோனன்

     

    Image result for சைவ குரவர்

    சைவக் குருமார் நால்வரின் பக்தி நோக்கு:

    சிவபெருமானின்மீது சைவக் குருமார் நால்வரும் நான்குவிதமாகப் பக்திசெலுத்தினார்கள்.  சிவபெருமானைத் தந்தையாக எண்ணிய திருஞானசம்பந்தர் அவ்விதமாகவே அவர் இயற்றிய தேனினுமினிய தேவாரப் பாக்களில் தன்னுடைய பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினார்.  பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானையும், உமையவளையும் தனது தாய்தந்தையராகவே ஏத்தி உயர்த்துகிறார்.  தந்தையால் குளக்கரையில் தனித்துவிடப்பட்டு, ஏங்கியழுதபோது, உலகத்தாய் பார்வதி கருணைகொண்டு அவருக்கு ஞானப்பாலைப் புகட்டியது அவரைச் செல்லப் பிள்ளையாக்கியதுடன் காழிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பட்டத்தையும் தேடித்தந்தது போலும்!

    சுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபிரானைத் தமது தோழனாகவே கருதினார்.  அந்தத் தோழமையே எம்பெருமானைப் பித்தா என்று அழைக்கவும், பரவை நாச்சியாருக்கு தன்னுடைய காதலை எடுத்துச்சொல்ல ஒரு தூதுவனாகவும் அனுப்பவும் வைத்தது. எனவே, அவர் தம்பிரான் தோழர்[1] என்ற தனிச் சிறப்பையும் பெற்றார்.  மேலும், அவரது தேவாரப் பாக்கள் அவர் சிவபிரானின்மீது எடுத்துக்கொண்டிருக்கும் உரிமையை உள்ளங்கனி நெல்லிக்காயாக்குகின்றன.

    நீலகண்டப் பெருமானின் பணியாளராகவே பக்திசெலுத்தினார், நாவுகரசரான அப்பர் பெருமான்.  பெருமான் தரிசனத்திற்கு வரும் அடியார்களின் கால்களின் குத்தாமலிருக்கவேண்டும் என்று கோவில் பிரகாரங்களில் இருக்கும் முட்களைக் களைய எப்பொழுதும் தன் கையில் உழவாரத்தை ஏந்தி உழவாரப் பணிசெய்து சிறந்தவர் அவர்[2].  இந்த மனப்பாங்கு அவருடைய மிகவும் புகழ்பெற்ற, “தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே,”[3] என்னும் வரிகள் எம்பெருமானிடம் எப்படிப்பட்ட பக்திநிலையைக் கொண்டிருந்தார் என்று காட்டுகிறது.

    இருப்பினும், திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது.  அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.  சிவபுராணத்தில், நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.

    இவண், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள முயல்வோம்.

    சிவனின் கருணையைப் பெறும் வழி:

    தினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை முணுமுணுக்கிறோம்.  இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா?  வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா? சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன? மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:

    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்

    பல்லோருமேத்தப் பணிந்து[5].        — சிவபுராணம்: 93-95

    சிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல குருட்டுநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன.  கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து.  ஒரு டேப் ரிகார்டரோ, ஐபாடோ, டாப்லெட்டோ, சி.டி. பிளேயரோ நம்மைவிடச் சிற்ப்பாக துதிப்பாடல்களைப் பிழையேதுமின்றிப் பல்லாயிரம்முறை சொல்லும் திறன்படைத்தவை. பொருளறியாமல் சொல்லும் அவற்றிற்குக் கிடைக்காத முக்தியா, பிழையுடன் பொருளறியாது சொல்லும் நமக்குக் கிட்டிவிடும்?

     எப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார்.  எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.

    எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தால் அவரால் இப்படி வழிகாட்டமுடியும்!

    அவரின் அறிவியல் திறன்:

    எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது.  சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம்.  ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம்.  பள்ளிகளில் கற்பிக்கப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6]                        சிவபுராணம்– 26-31

    Image result for டார்வின்

    உயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார்.  ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார்.  அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது.  இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்?

    மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

    அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி

    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

    இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

    சிறியவாகப் பெரியோன்; — 1-6

    இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே  நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம்.  பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

    maxresdefault

    சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார்.  அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம்.  நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால், கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் எயிற்றியிருப்பதைக் கண்ணுறும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

    அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம்.  ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.

    யானை முதலா எறும்பு ஈறாய

    ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்

    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)

    ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்

    ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

    இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

    ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

    ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்

    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

    தக்க தசமதி தாயொடு தான்படும்

    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்                                 போற்றித் திருவகலல்11-25

    மிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்;  அப்படி வளரத் துவங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:

    தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது.  அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும்.  அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும்.  மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும்.  நாங்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும்.  ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும்.  ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும்.   ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும்.  எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும்.  பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பாய்யும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.

    மனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.

    ஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே.  மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.

    கவி வன்மை:

    திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை.  அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.

    அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன.  இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்!

    பலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார்.  இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.

    சிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.

    கீர்த்தித் திரு அகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப்பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார்.  அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு.  இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.

    திருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தைவிடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.

    மரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.

    மார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம்.  தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்கவேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின் நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமைபெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக்கவிதைகளில் மாறிவிடுகிறார்.

    இதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமைமூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியைழுச்சியில் மாறுகிறார்.  கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காக்கக் காத்திருக்கும் அடியார்களைப்பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப்பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.

    நாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.

    ஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப்பெற்று, சிவபெருமானைத் துதிக்கவேண்டும்.  இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.

    தென்னாடுடைய சிவனே போற்றி1 எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!! போற்றி, போற்றி!!!!

    ***

    நூல் உதவி:

    1. திருவாசகம் – மூலமும் உரையும், கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகம், 1997
    2. திருவாசகம் – மூலமும் உரையும், சுவாமி சித்பவானந்தா, ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

    [1]    Sundarar:  http://www.skandagurunatha.org/deities/siva/nayanars/63.asp

    [2]   Thirunavukkarasar Darisanam:  https://www.dharisanam.com/pages/thirunavukkarasar-appar

    [3]   அப்பர் தேவாரம்.

    [4]   மாணிக்கவாசகரின் திருவாசகம்:  சிவபுராணம் வரிகள்: 60-61

    [5]   Ebid. வரிகள்: 93-95

    [6]   Ebid. வரிகள்:26-31

    Share
  • விவிலியம் உணா்த்தும் வாழ்வியல் தன்மைகள் 

    -டே. ஆண்ட்ரூஸ்

    முன்னுரை 

    இன்றைய உலகில் விஞ்ஞான அறிவியல்களும், சமூக, பொருளாதார அறிவியல்களும் தோன்றி வளா்ந்து வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக மனித வாழ்வில் “வாழ்வியல்” என்பது மனிதனின் வாழ்க்கை பற்றிய பரந்த அறிவை நமக்குத் தருகிறது. மனிதன் எவ்வாறு வாழவேண்டும்? என்ற வழிமுறைகளை அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து முடிக்கிறான். மனிதன் விலங்குகளைப் பார்த்து கற்றுக்கொள்ளக்கூடிய சூழல் வந்துவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது. மிருகங்கள் மனிதநேயத்திற்கு மாறிவருகின்றன. ஆனால் மனிதா்கள் மிருக குணத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனா் என்பதை இன்றைய உலகில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. உலக எதார்த்தங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடா்புடையவை. அவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் பார்வையே ஆன்மிகம். அவற்றில் ஒன்று பாதித்தாலும் மற்ற அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். எனவே அவை அனைத்தையும் நல்லுணா்வுடன் நோக்கும்போது மனிதனின் செயல்பாடுகளும் நல்லவையாக மலரும். உலகில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை, அறியாமை அனைத்தும் ஒழிய இந்நல்லுணா்வுப் பார்வை அவசியமாகும். இப்பார்வை இப்பூவுலகு முழுவதும் பரவவேண்டும். மனித உணா்வுகளையும், மனித மனங்களையும் ஆழமாகத் தொடுகின்ற சிந்தனைகள் விவிலியத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றன. விவிலியம் வழிகாட்டும் நூலாக மட்டுமல்லாமல் “வழிநடத்திச் செல்லும் நூலாகவும் இருக்கிறது. வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிற மனிதனுக்கு உள்ளேயும், வெளியேயும் வெளிச்சம் காட்டுகிற புத்தகமாகவும் உள்ளது.

    தன்னையறிதல் 

    “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னையே அா்ச்சிக்கத் தானிருந்தானே” (1) – திருமந்திரம்

    ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப்புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின் அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது, தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால் அறிவுகெட்டு அலைகிறான். அதனால் ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றிடுவானாயின், அவன் தன்னையே பிறா் வழிபடும் அளவிற்கு உயா்ந்து நிற்பான்.

    “நீருக்குள் முழ்கி உயிருக்குப் போராடும் நிலையில் எவ்வளவு தீவிர முயற்சியில் நீ செயல்படுவாயோ, அதே முயற்சி தன்னையறிதலிலும் இருக்கட்டும்”, என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சா். “ஆன்மா அழிவதில்லை” என்றார் சாக்ரடீஸ்.  “ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஜீவ ஆன்மா, அழியாத பேரின்பத்தின் ஒரு பகுதியே” என்கிறார் சுவாமி விவேகானந்தா். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்றார் கவியரசு கண்ணதாசன்.

    தன்னைத்தானே உணா்தல் என்பது நம்மைப்பற்றிய ஞானம். இந்த சுயஞானம் இருந்தால்தான் ஆன்மிக ஞானம் விளங்கும். எல்லா மகான்களும், சான்றோர்களும் தன்னையறிதலே தன் வாழ்வின் இலட்சிய எல்லை என்பதை வரையறுத்திருக்கிறார்கள்.

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
    இறைவ னடிசேரா தார்”(2)  என்றார் திருவள்ளுவா்.

    மனிதனின் தன்மைகள் 

    மனிதனில் ஆவி, ஆன்மா, உடல் என்ற மூன்று பகுதிகள் இருக்கின்றன. அந்த மூன்று பகுதிகளும் முற்றிலும் வேறுபட்டவைகள். மனிதன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவன் ஆவி, ஆன்மா, உடல் தனித்தனியாக பிரித்துவிட முடியாது. மனிதனில் இவை இணைந்தே செயல்படுகின்றன. மரண நேரத்தில் மனிதனின் ஆவி தனியாகவும், ஆன்மா தனியாகவும், உடல் தனியாகவும் பிரிகிறது. பிறகு அவைகள் ஒருநாளும் ஒன்று சோ்வதில்லை. மனிதன் மனிதனாக வாழ இம்மூன்று தன்மைகளையும் உணா்ந்து தன்னிலை அறிந்து வாழ்ந்தால் தூயவாழ்வு வாழ்ந்து இறைவனின் பேரின்ப வீட்டை அடையலாம் என்பது தெளிவு திருத்தூதா் பவுல்.  மனிதனை உடல், உள்ளம், ஆன்மா உடையவனாய்க் காண்கின்றார்.(3)  இதில் உள்ளம் என்பது மனிதனின் உயிரோடு செயல்படச் செய்கிறதாகவும், ஆத்மா என்பது மனம் உணா்வுகள் கொண்ட ஆள் தத்துவமாகவும் உடல், என்பது உள்ளம், ஆத்மா இரண்டும் வாழும் இல்லமாகவும் உள்ளன.

    ஆவி 

    மனிதனின் ஆவி எப்படி தோற்றமளிக்கிறது? மனிதா்களுக்குத் திட்டமாய்த் தெரியவில்லை. எனினும் விவிலியம் “மனிதனுடைய ஆவி கடவுள் தந்த தீபமாயிருக்கிறது”(4) என்று கூறுகிறது.

    மனிதனுடைய ஆவி, ஆன்மா, உடல் ஆகிய மூன்று பகுதிகளில் முதலில் படைக்கப்பட்டது மனிதனுடைய ஆவிதான். “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும், தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத்  தோ்ந்தெடுத்தார்”.(5)

    அதே கிறிஸ்து உலகத்தோற்றதுக்கு முன்பாகவே தம்மைத்தாம் அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியாக நமக்காக ஒப்புக்கொடுத்தார்.(6) இந்த உலகத்தில் ஒரு மனிதன் வாழவேண்டுமென்றால் அவனுக்கு ஓர் உடல் தேவை. ஆகவே தாயின் வயிற்றிலே மனிதனுக்கு ஓர் உடலைக் கடவுள் படைக்கும்படித் தீா்மானித்தார். அந்த உடலுக்குள் அந்த ஆவியையும், ஆன்மாவையும் வைக்கும்படி அவா் விரும்பினார்.

    ஆகவே மனிதன் ஆவி, ஆன்மா, உடல் உள்ளவனாக விளங்குகிறான். மனிதனின் மரணத்தில் ஆவி உடலிலிருந்து பிரிந்து கடவுளிடம் செல்கிறது. இந்த ஆவிதான் மனிதனை உயிருள்ளவனாய் செயல்படச் செய்கிறது. ஆவி முடிவில்லா வாழும் தன்மையுடையது. ஆன்ம மீட்பின்போது மனிதன் கடவுளிடமிருந்து புதிய பிறப்பைப் பெறுகின்றான். இயேசு சிலுவைச் சாவில் தம்மையே கையளிக்கும்போது, “தந்தையே, உம்கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்”.(7) என்று கூறி உயிர்த்துறந்தார். இவ்வாறு மனிதனாகப் பிறந்த இயேசுவின் இறப்பு பிற மனிதா்களுக்கு முன்மாதிரி காட்டப்பட்டது. ஒவ்வொரு மனிதனின் ஆவியும் கடவுளிடம் செல்லும் என்பதை இது உணா்த்துகிறது.

    மனிதா்கள் இறக்கும்போது மிகவும் அன்புக்குரியவா்கள் கண்ணீா்விட்டு அழுகின்றனா். “பெயரைத்” தாங்கிய அம்மனிதனின் உடல் அசைவற்று “பிணமாகக்” கிடக்க அவரின் உயிர் மூச்சாகிய ஆவி தன்னைப் படைத்த கடவுளிடம் செல்கிறது. உயிரற்ற உடலாகிய பிணத்தை யாரும் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. உடல் மண்ணுக்கு செல்கிறது. கடவுள் ஆவியாய் இருக்கிறார் மனிதனும் ஆவிக்குரியவனாய் இருக்கிறான்.

    ஆன்மா

    ஆன்மா என்பது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றது.  ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. அதாவது ஆன்மா என்பது மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு விஷயம். மற்ற உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது. அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் இருக்கின்றது. ஆனால் ஆன்மா மனிதனுக்கு மட்டுமே இருப்பதால் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமே ஆன்மா உள்ளதால் உயர்திணை என்று தமிழால் உயர்த்தப்பட்டுள்ளனர். ஆன்மாவின் வாயிலாக இறைவனை அறியலாம் என்றும் இதன் மூலம் உணரமுடிகிறது.

    “உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்பு உளேஉத்தமன் கோயில் கொண்டான் என்று
    உடம்பினை யான் இருந்து ஓம்பு கின்றேனே”.  (8)

    இது திருமூலாரின் கூற்று.

    ஆன்மாவானது தன்னையும் இறைவனையும் அறியாத நிலையில் இயல்பாகவே ஆன்மா இல்லை என்றும் இறைவன் இல்லை என்றும் கருத்துக்கள் உலகில் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எப்பொழுது ஆன்மாவினைச் சூழ்ந்து இருக்கும் மாயையினை இறைவன் அகற்றுகின்றாரோ அப்பொழுது ஆன்மாவானது இறைவனை உணா்ந்து கொண்டு மெய்யுணா்வு பெறும் என்பதே தமிழ்கூறும் ஆன்மவியலின் கருத்து.

    இதையேத்தான் மெய்கண்டார்,

    “உனைக்கண் பாசம் உணராப் பதியை
    ஞானக் கண்ணினில் சிந்தை நாடி”(9) என்றார்.

    ஐம்புலன்களில் ஒன்றான கண்ணைக் கொண்டு காண இயலாத இறைவனை  ஞானக்கண் கொண்டு காணலாம் என்றும்,

    திருவள்ளுவா்,

    “ஐயுணா்வு எய்திய கண்ணும் பயமின்றே
    மெய்யுணா்வு இல்லா தவா்க்கு”(10) 

    என்றும்

    “இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசனறு காட்சி யவா்க்கு”(11) என்றும் கூறிச்சென்றுள்ளார்.

    ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளைச் செய்கிறான். இறைவன் மனிதனுக்கு உணா்த்தும் தருணத்தில் அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான். மனிதனுடைய ஆன்மா விலையேறப்பெற்றது. என்றென்றும் வாழக்கூடியது. ஆன்மா முடிவில்லாத பேரின்ப வீட்டையோ முடிவில்லாத வேதனையான நரகத்தையோ அடையக்கூடியது. இப்பூமியில் மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதைக் கொண்டுதான் அவனுடைய முடிவில்லா வாழ்வு அமையும்.

    உடல் 

    அழிவுள்ளதையும், அழிவில்லாததையும் மனிதனிலே கடவுள் இணைத்து வைத்தார். உடல் அழிவுள்ளது. ஆனால் ஆவியும், ஆன்மாவும் அழிவில்லாதது. தாயும் தந்தையும் இணைந்து குழந்தையை உருவாக்கிவிட்டார்கள் என்று மக்கள் எண்ணுகிறார்கள். கடவுளின் ஆசீா்வாதம் இல்லாமல் குழந்தை உருவாகாது. “பிள்ளைகள் ஆண்டவா் அருளும் செல்வம், மக்கட்பேறு, அவா் அளிக்கும் பரிசில்”(12) என்பதை மனிதா்களில் சிலா் மட்டுமே உணா்ந்துகொள்கின்றனா். “காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது. அவ்வாறே அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறிய முடியாது”(13) குழந்தையின் உடல் தாயின் கருவறையில் கடவுளால் உருவாக்கப்பட்டதே தவிர. எந்த மனிதனாலும், எந்த விஞ்ஞானியாலும் உருவாக்கிடமுடியாது. “மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது”. வயல்வெளிப் பூவென அவா்கள் மலா்கின்றார்கள். அதன் மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது. அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது”.(14) என்ற இறைவார்த்தை மனித வாழ்நாளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. ஆகவே மனிதனின் ஐம்புலன்களையும் அடக்கிக் காத்துக்கொள்ள வேண்டும். மனிதரின் உடல் கடவுள் வாழும் ஆலயமாய் இருக்க வேண்டும். உடலைத் தீமையான காரியங்களுக்குப் பயன்படுத்தாமல் நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்தும் போது இறைவனின் பிரசன்னத்தை மனிதா் தம் உடலில் உணரலாம்.

    “மனித உடல் பூமிக்குரியது. அழியக்கூடியது இயற்கைத் தன்மை கொண்டது. சாவுக்குள்ளாகும் தன்மையுடையது. “கூடாரம்” போன்றது. மண்பாண்டம், உடல் தன்மையுடையது”.(15) என்றெல்லாம் மனித உடலை விவிலியம் வா்ணிக்கிறது. இறுதியில் மனித உடல் ஆவிக்குரிய தன்மையுடையதாய் மாற்றப்படும் உயிர்த்தெழுதலில் நன்மைகள் செய்து தூய வாழ்வு வாழ்ந்தவா்கள் இறைவனின் பேரின்ப வீட்டிற்கும், பாவம் செய்து தீமைகள் செய்தவா்கள் வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்குமான தண்டனைத் தீா்ப்பும் பெறுவா்”.(16) என விவிலியம் கூறுகிறது.

    வாழ்வின் தன்மைகள் 

    வாழ்க்கையைக் குறித்துச் சிந்திக்க சிந்திக்கப் பல உண்மைகள் புலப்படும். நான் யார்? என் வாழ்வின் நோக்கம் என்ன? நான் எப்படி இந்த உலகிற்கு வந்தேன்? இந்த பூமியில் ஏன் வாழ்கிறேன்? என்பதை ஆழமாகச் சிந்தித்தால் பல உண்மைகளை தத்துவங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

    வாழ்வியலின் உயா்ந்த பரிணாமமே தன்னை உணா்கின்ற உணா்வியல் ஆகும். அதில் மூன்று தன்மைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு தன்மையும் அனைத்து உயிர்களும் கடந்தாக வேண்டும்.

    வாழ்வின் தன்மைகளாவன

    1. பிறப்பு
    2. வாழ்க்கை
    3. இறப்பு

    இம் மூன்று தன்மைகளையும் கடந்திருப்பதே இறைவனின் பேரின்ப வீட்டை அடையும் நிலையாகும்.

    பிறப்பு 

    பிறப்பு என்பது இவ்வுலகில் ஏற்பட்ட ஒரு கலைநிகழ்வு; அது தெய்வீகமாக நிகழ்ந்தது. அது பூவின் மலா்ச்சிபோல் தெய்வீகமாக நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்போவது. அதில் எவ்வித வேறுபாடும் இல்லை. பிறப்பினால் அனைவரும் சமம். பிறப்பில் மகிழும் மனிதன் இறப்பில் துயருறுகிறான். பிறக்கும்போதும் மனிதன் அழுகிறான். இறக்கும் போது அம்மனிதனைச் சுற்றிப் பலா் அழுகின்றனா். இவ்வருகைக்கு இடையே மகிழ்ச்சியோடு வாழ்வதே மனித வாழ்க்கை.  

    நான்கு வகைப் பிறப்பு 

    1. மண்ணிலிருந்து ஆதாம் (17)
    2. எலும்பிலிருந்து ஏவாள் (18)
    3. தாயும் தந்தையும் சோ்ந்து பிள்ளைகள் (19)
    4. கன்னியின் மூலமாய் பிறந்த இயேசு கிறிஸ்து (20)

    வாழ்க்கை 

    வாழ்க்கை என்பது இணக்கமான நிகழ்வு. உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் இணைந்த பகுதியே மனித வாழ்வு. தசைகள், எலும்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், தண்டுவடம், குடல், மூளை, கல்லீரல், கணையம் என பற்பல உறுப்புகள் சோ்ந்த தொகுப்பே மனித உடல். வாழ்க்கை என்பது ஒரு பயணம் – அகப்பயணம் – ஆன்மாவின் பயணம். மூலப்பொருளை நோக்கி அல்லது தாய்வீட்டைத் தேடிச்செல்லும் பயணம். முழுப்பொருளோடு ஐக்கியமாவதற்கு இந்த ஜீவன் மேற்கொள்ளும் பயணத்தின் முடிவு இறைவனின் திருவடிநிலை ஆகும். இந்நிலையை வாய்க்க தன்னை அறிதலே முக்கியம். மனிதருக்கு உடல்நலமும் மனநலமும் நன்றாக அமைந்தால்தான் ஆன்மிக மேம்பாடு பெறமுடியும். இதுவே வாழ்வின் நோக்கம். அந்த இலக்கை அடைய விவிலியம் வழிகாட்டுகிறது. ஒரு மலரின் மலா்ச்சி எப்படி இயற்கையானதோ, அதுபோல மனிதரின் வாழ்க்கை மலா்ச்சியும் இயற்கையானதே. பிறப்பு ஓா் இயற்கை நிகழ்வு. ஆகவே மனித வாழ்வை வாழும் காலம் முழுவதும் வசந்த காலமாய், பல மனநிறைவான வெற்றிகளுடனும், வாழ்வாங்கு வாழ்ந்து செம்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டிய கடமை மனிதருக்கு உண்டு. கடல்போன்று பரந்து விரிந்து கிடந்த அன்பை, சமூக நட்பை, ஒரு குவளை அளவு நீராக மனிதன் மாற்றிவிட்டான். குடும்பத்திலே நிறைய துவாரங்கள் காணப்படுகின்றன. மனிதகுல மகிழ்ச்சிக்கு இடையூறாக இருப்பவை துன்பங்கள். அந்த துன்பங்களின் தொகுப்பில் தன்னால் இறைநிலையை உணரமுடியாத நிலையும் மனிதரின் ஏக்கமும் தலையாய பங்கு வகிக்கிறது.

    இறப்பு 

    மனிதா்கள் உணா்ந்து கொள்வதில் முக்கியமான தன்மை இறப்பு ஆகும். “இறப்பு” என்ற வார்த்தை மனிதனைக் கலங்கச் செய்கிறது. வாழ்வுக் காலத்தில் முழுமனநிறைவோடு வாழ்ந்தவா்கள் முதுமையில் தன் இறப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனா்.

    இறப்பு நிகழ்வை இருவகைப்படுத்தலாம்.

    1. விரும்பிய இறப்பு நிலை
    2. விரும்பாத இறப்பு நிலை

    விரும்பிய இறப்பு நிலை

    பிறப்பால் உயிரோடு கூடிய 3 கிலோ எடையுள்ள குழந்தையாக, உடலாகப் பிறந்த மனிதன் இறக்கும்போது அவன் உண்ண உணவின் காரணமாக உண்டான வளா்ச்சியில் அதிக எடையுள்ளவனாகிறான். முதுமை வரை வாழ்ந்து வளா்ச்சியடைந்த உணவால் அதிக எடையுள்ளவனாகி சேகரித்த உடலை பூமிக்குத் திருப்பிக் கொடுத்தலே இணக்கமுள்ள விரும்பிய இறப்பு நிலை ஆகும். இதை இறைவனடி சோ்ந்தார் எனலாம். வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து முழுமனத்தோடு தன் இறப்பை எற்றுக்கொள்வது என்றும் கூறலாம்.

    விரும்பாத இறப்பு நிலை 

    மனிதன் பிறந்து உணா்வுள்ளவனாகி சில சூழ்நிலைகளில், விபத்தில் அகாலமரணமடைவது அல்லது இளமையில் நோய்வாய்ப்பட்டு இறப்பது அல்லது பிரச்சனைகளின் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்வது போன்றவை இணக்கமற்ற விரும்பாத இறப்பு நிலை ஆகும்.

    முதல் கலையான பிறத்தல்கலை தெய்வீகமாக நிகழ்கிறது. அத்தெய்வீகக்கலை இயல்பாக உள்ளது. மற்ற இரு கலைகளும் வாழ்தல் கலை மற்றும் இறத்தல் கலை இயல்பாக இருக்கும்படி தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதலே தன்னையறிதல் ஆகும். தன்னையறிதல் கடவுளையறிதலில் நிறைவு பெறுகிறது.

    வாழ்வின் நோக்கம் 

    தன்னை அறிதலே வாழ்வின் மிக உயா்ந்த நோக்கம் ஆகும். ஆனால் இன்றைய உலகவாழ்வை ஆராய்வோமானால், அனைத்து மக்களின் நோக்கமும் உழைப்பதும், உண்பதும், குடித்து மகிழ்ந்திருப்பதுமாக வாழ்வை வாழ்வாக்காமல் வாழ்கின்றனா். மனிதன் நல்வழியில் தன் மனதைச் செலுத்தி உடல், உள்ளம், ஆன்மாவை தூய்மையாய்க் காத்து, பேரின்ப வாழ்வு எய்துவதே மனித வாழ்வின் நோக்கமாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு செயல்படின் நிறைவாழ்வை வாழ்ந்து பேரின்ப நிலையை அடைய முடியும்.

    முடிவுரை 

    மனித வாழ்வு ஒரு “நீா்க்குமிழி” போன்றது என்றார் ஓர் எழுத்தாளா். நீா்க்குமிழியானது வண்ண ஜாலத்துடன் தோன்றி திடீரென்று உடைந்து மறைந்துவிடுகிறதுபோல, மனிதனுடைய வாழ்க்கையும் திடீரென்று மறைந்துவிடுகிறது. “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” என்று தத்துவஞானி பாடினார்.“ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு, செய்ய வேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்ய முடியும்? ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது, அது எப்படி நடக்கும் என்று அவனுக்கு சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவென்னும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்து தப்ப முடியாது”.(21) புல்லைப் போன்று தோன்றி மறையும் இவ்வாழ்க்கைப் பயணத்தில் மனிதன் நேரிய வழியில் பயணித்து இறைவனை அடைய விவிலியம் வழிகாட்டுகிறது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் தன்னிலையறிந்து செயல்படவேண்டும்.

    பழையன களைதலும், புதியன புகுதலும் மனித வாழ்வின் மாற்றத்திற்குரிய இயல்புகள். மனிதா் தம் பழைய தீமையான பழக்கவழக்கத்திலிருந்து விடுபட்டு, ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் காத்துக்கொண்டு, தன்னிலையறிந்து புதிய மனத்தையும், புதிய உள்ளத்தையும் படைத்துக் கொண்டு புதிய படைப்பாகவே மாறிவிட வேண்டும். ஆகவே மனிதன் முதலில் தன்னிலையறிந்து உணா்ந்து வாழவேண்டும் என்பதை விவிலியச் சான்றுகளும், பிற அறிஞா்களின் சான்றுகளும் வழிகாட்டுகிறது.

    “புதிய படைப்பாவதே இன்றியமையாதது”(22)

    *****

     

    அடிக்குறிப்புகள்  

    1. திருமூலா், திருமந்திரம், எட்டாம்தந்திரம் – 14 அறிவுதயம் பாடல் எண்- 1
    2. திருவள்ளுவா், திருக்குறள், அறத்துப்பால், குறள் எண்.10
    3. விவிலியம், புதிய ஏற்பாடு, 1 தெசலோனிக்கா் 5.23   ப.386
    4. விவிலியம், பழைய ஏற்பாடு, நீதிமொழிகள் 20.27 ப.962.
    5. விவிலியம், புதிய ஏற்பாடு, எபேசியா் 1.4 ப.357
    6. விவிலியம், புதிய ஏற்பாடு, திருவெளிப்பாடு 13.8 ப.484
    7. விவிலியம், புதிய ஏற்பாடு, லூக்கா 23.46 ப.159
    8. திருமூலா் திருமந்திரம் மூன்றாம் தந்திரம் – 13.

    காரிய சித்தி உபாயம் பாடல் எண்.2

    1. மெய்கண்டார், சிவஞான போதம் -9.
    2. திருவள்ளுவா், திருக்குறள், குறள் எண்.354.
    3. திருவள்ளுவா், திருக்குறள், குறள் எண்.352.
    4. விவிலியம் பழைய ஏற்பாடு, திருப்பாடல்கள் 127.3 ப.925
    5. விவிலியம், பழைய ஏற்பாடு, சபை உரையாளா் 11.5 ப.990
    6. விவிலியம், பழைய ஏற்பாடு திருப்பாடல்கள் 103.15, 16 ப.899
    7. விவிலியம், புதிய ஏற்பாடு 1 கொரிந்தியா் 15.45-54 பக்.323-324
    8. விவிலியம், பழைய ஏற்பாடு, தானியேல் 12.2 ப.1313
    9. விவிலியம், பழைய ஏற்பாடு தொடக்க நூல் 2.7 ப.2
    10. மேலது தொடக்கநூல் 2.22 ப.3
    11. மேலது தொடக்கநூல் 4.1 ப.5
    12. விவிலியம் புதிய ஏற்பாடு மத்தேயு 1.18-25 பக்.5-6
    13. விவிலியம் பழைய ஏற்பாடு சபை உரையாளா் 8.6-8 ப.986
    14. விவிலியம் புதிய ஏற்பாடு கலாத்தியா் 6.15 ப.354

    *****

    பயன்படுத்திய நூல்கள்

    1. திருமூலரின் “திருமந்திரம்”
    2. திருவள்ளுவரின் “திருக்குறள்”
    3. திருவிவிலியம்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவா் பட்ட ஆய்வாளர்
    அரசு கலைக்கல்லூரி
    சேலம்-7.

     

     

    Share