”பானை பிடித்தவள் பாக்கிய சாலியாய்
’’நானை’’ உணர்த்திட, நிர்விகல்ப -ஞானத்தை
மந்திக்காய் காட்டியவர், மாயத்தால் கட்டினார்:
சிந்தித்த தாய்க்கு ஜுரம் (யோக மாயா ஜுரம்)’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நான்முகன் எங்கென்றாள்’’ ,நாபியிடம் நந்தகோபி(நந்தகோபன் பத்தினி),
வான்முக விஷ்ணு வயிற்றுக்கு -ஊண்மிகக்(உணவு மிக)
கேட்டான், உரலிழுத்தக் கண்ணன் களைப்புற்று,
ஊட்டும் வரையில் உறவு’’….கிரேசி மோகன்….! -
‘’பார்க்க யாரும் இல்லாத போது ஆகாஸம் நீலமா’’….! ஆதிசங்கரரின் அத்வைத கேள்வி….
‘’பார்க்க யாரும் இல்லாத போது ஆகாஸம் நீலமா’’….!
ஆதிசங்கரரின் அத்வைத கேள்வி….!‘’காண எவரும் கிடையாத போதுவான்,
பூணுமோ நீலத்துப் பட்டாவை:! -ஆனதால்,
பார்க்கும்நாம் உள்ளதால்,பாரும்பூ தங்களும்,
மேற்கும் கிழக்கும் மனசு!’’….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
” மந்தி நெகிழ்ந்து மாதவர் கால்பிடிக்க –
சந்திர வம்சத்து சூரியன்(Ramar) , -சந்திர-
வெண்மையான வெண்ணையை வழங்கிடும் –
தண்மையான தாமோ தரர்”….கிரேசி மோகன் ….! -
பாரதி யார்? – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”
கே.ரவி
நிறுவனர்
வானவில் பண்பாட்டு மையம்
Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண)
அவன் ஒரு அதிசயம்
அவன் ஒரு அதிசயம்
அவன் ஒரு அவசியம்
அவன் ஒரு அவதாரம்
அவன் ஒரு லட்சியம்
முப்பத்தொன்பது வயதிற்குள்ளே முன்னுாறு பேர்களின் வாழ்க்கையை வாழ்ந்தவன்,மூச்சுக்கு மூச்சு தேசமென்ற பாடியவன்,தேசமே தெய்வமென்று வணங்கியவன்,சாதிக்கொடுமைகளை சகிக்காதவன்,மூடநம்பிக்கைகளை சாடியவன்,பராசக்தியின் செல்லமகன்,பாரதத்தாயின் தவப்புதல்வன்,எட்டையபுரத்தில் சுப்பையாகவாகப் பிறந்தவன்,பாரதியாக வளர்ந்தவன்,மகாகவியாக மலர்ந்தவன்.
அருமைத்தமிழை அழகு செய்த நம் பாரதிக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 11ந்தேதி 135 வது பிறந்த நாள்,இந்த நல்ல நாளில் அவரது பெருமையை போற்றும் விதத்தில் சென்னையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அதில் ஒன்றுதான் பாரதி யார்? என்கின்ற நாடகம்
வருகின்ற 09/12/17 ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகம் பாரத் கலாசார் மையத்தில் நடைபெற உள்ளது.
இந்த நாடகத்தினை பாரதிப்பிரியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் திரளாக பார்க்கவேண்டும் ஆகவே நீங்கள் நாடக ஒத்திகையை வந்து பாருங்களேன் என்று நாடகத்தின் வசனகர்த்தாவும், பாரதியாக நடிப்பவருமான இசைக்கவி ரமணன் அழைப்பிதழ் கொடுக்கும் போதே ஒத்திகைக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.
ஒத்திகை சென்னையில் உள்ள அமரர் எஸ்.வீணை பாலசந்தர் வீட்டில் நடந்தது.
‘அந்த நாள்’ படம் பார்த்தது முதல் வீணை எஸ்.பாலசந்தர் மீது அலாதி பிரியம் கொண்டவன் நான் ஆகவே அவர் வாழ்ந்த வீட்டிற்கு செல்வதையே பெருமையாக கருதிச் சென்றேன்.பழம் பெருமையுடன் ஒரு கலைக்கூடம் போல வீடு இருந்தது.
நாடகத்தின் இயக்குனரும் எஸ்.பாலசந்தரின் மகனுமான எஸ்.பி.எஸ்.ராமன்,அவரது தாயார் சாந்தாம்மா,துணைவியார் தர்மா ராமன் மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் காட்டிய அன்பும் விருந்தோம்பலும் சிறப்பாக இருந்தது இது எனக்கானது அல்ல இசைக்கவி ரமணன் நண்பருக்கானது என்பதால் எல்லா நன்றிகளும் அவருக்கே சமர்ப்பணம்.
இனி நாடகத்திற்குள் செல்வோம்…
பாரதியை பல கோணங்களில் எழுத்து சினிமா நாடகம் என்று பல ஊடகங்களில் பார்த்திருப்பதால் இவர்கள் எப்படி பாரதியைப் பார்க்கப் போகின்றனர் என்ற ஆர்வம் நிறையவே இருந்தது.
ஒத்திகை என்றால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் என்பதற்கு நேர்மாறாக மேடையில் நடந்ததைப் போலவே நாடகம் நடந்தது.
ஒட்டு மீசை இல்லாமல் ஒரு காட்சியில் பாரதிதாசன் தோன்ற மீசையோடு வந்தாலே ஆச்சு என்று பிடிவாதமாக இருந்த அந்த ஒரு விஷயத்திலே இயக்குனர் ராமனின் பெர்பக்சன் தெரிந்தது, அது நாடகம் முழுவதுமே தெரித்தது.
பாரதியின் மரணத்தோடு துவங்கும் நாடகம் பிளாஷ் பேக் முறையில் பின்னோக்கி சென்று அவரது வாழ்க்கையின் அனைத்து சாரம்சங்களையும் சுருக்கமாகவும் சுவையாகவும் தருகிறது.
பாரதி பற்றி நமக்கு தெரிந்த விஷயங்களுடன் நமக்கு தெரியாத பல விஷயங்களையும் இந்த நாடகம் தருகிறது உதாரணத்திற்கு ஒன்று சொல்வதனால் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதனின் மரணம் பாரதியாரிடம் எப்படி எதிரொலித்தது என்பது போன்ற விஷயத்தை சொல்லலாம்.
வறுமைக்கும் புலமைக்கும் நடுவே எப்போதும் ஊடாடிக்கொண்டிருந்த பாரதி வேடத்திற்கு மிக பொருத்தமாக இருந்தார் இசைக்கவி ரமணன்.இவருக்கும் சரி பாரதிக்கும் சரி பொதுவானவர் பராசக்தி என்பதாலும், இவர் ஒரு இசைக்கவி என்பதாலும் பாடல்களிலும் வசன உச்சரிப்பிலும் பிரமாதப்படுத்தினார்,அதிலும் மழை நேரத்து கவிதையிலும், மரண நேரத்து கவிதையிலும் பிரமிப்பை ஏற்படுத்திவிட்டார்.இசைக்கவி ரமணனுக்கு இந்த நாடகம் ஒரு மைல்கல்லாகவே இருக்கும்.
வழக்கமாக செல்லம்மாவை அரிசிக்கும் பருப்புக்கும் அல்லாடுபவராக சித்திரித்துவந்த நிலையில், இதில் பாரதியின் கவிதையை கண்டு சிலிர்ப்பவராகவும்,அவர் குழந்தைகளோடு மகிழ்ந்திருப்பதை பார்த்து சிரிப்பவராகவும்,பாரதியின் ஆரோக்கியத்திற்காக துடிப்பவராகவும்,கணவரின் சகல இன்ப துன்பங்களிலும் பங்கேற்பவராகவும்,பாரதியோடு வாதப்பிரதிவாதம் செய்யும் புத்திசாலியாகவும் நாடகம் முழுவதிலும் செல்லம்மாவாக தர்மா ராமன்வருகிறார், மனிதில் நிற்கிறார்.
பாரதியின் வளர்ப்பு மகள் யதுகிரியாக வரும் கிருத்திகாவை ஒரு பெண் பாரதி என்றே சொல்லலாம் நடிப்பிலும் பாட்டிலும் அவ்வளவு ஜீவன், சபாஷ்!
இன்னும் பாரதியின் நண்பனாக துணைவனாக போலீசாக ஜாமீன்தாராக மைத்துனராக வந்த மற்ற நாடகபாத்திரங்கள் யாவரும் குறையின்றி நிறைவுடன் செய்திருந்தனர்.
வீட்டின் கூடத்தில், மேஜை நாற்காலிகளுக்கு நடுவே, ‘லைட்ஸ் ஆன்’ ‘லைட்ஸ் ஆப்’ ‘மெயின் லைட்ஸ் ஆன்’ என்ற ஒத்திகைக்கான சத்தங்களுக்கு நடுவில் நடந்த போதே என்னை மிகவும் நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய இந்த நாடகம், முழுமையான விளக்கு வெளிச்சத்தில் மேடை அலங்கார உச்சத்தில் நடக்கும் போது பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்.
நாடகம் மேடையேறிய பிறகு பார்த்து எழுதுவதால் வாசகர்களாகிய உங்களுக்கு பயன் இருக்கப் போவது இல்லை, நடப்பதற்கு முன்பாகவே சொல்லிவிட்டால் நீங்கள் நாடகம் பார்க்க தயராகிவிடுவீர்கள் ஆகவேதான் ஒத்திகையை பார்த்துவிட்டு இங்கே எழுதுகிறேன்,நாடகம் காணத் தயராகுங்கள்.
இலவச அனுமதியுடன் நடைபெறும் இந்த நாடகம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்க இசைக்கவி ரமணனை தொடர்பு கொள்ளவும் எண்:9940533603.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
நன்றி : http://www.dinamalar.com/news_detail.asp?id=1909506
-
பிட்காயின் அபாயம்!
பவள சங்கரி
தலையங்கம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிட் காயின் மூலமாக நடத்தப்படும் வணிகத்தை ஒழுங்குபடுத்தவில்லை என்றும் அதன் மூலம் முதலீடு செய்வதற்கு எதிராக மக்களை எச்சரித்துள்ளபோதிலும், பிட் காயினின் விலை, 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி, 8,400 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 2013 ஏப்ரல் 28 ஆம் தேதி, இருந்த விலையான 7,304.24 ரூபாயிலிருந்து, தற்போது 6,26,396.07 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கண்மூடித்தனமான விலை உயர்வே இந்திய முதலீட்டாளர்களிடையே ஒரு புதிய அதீதமான கவர்ச்சித் தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.
உண்மையில் பிட் காயின் பயன்படுத்தி எதையும் வாங்க முடியாது. குறைந்தபட்சம் இந்தியாவிலாவது, பிட்காயின் ஏற்றுக்கொள்வது குறைவாக இருந்தாலும் மக்கள் இதை ஒரு அனுமானத்தில் அன்றி பரிவர்த்தனைக் கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் வாங்குவதில்லையாம்..
பங்குச்சந்தையில் இறக்கம் ஏற்பட்டால், முதலீட்டு பணம் போனதுதான். மூலதனச் சந்தை, மியூசுவல் நிதி போன்றவைகள் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இந்திய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (Securities and Exchange Board of India, the Insurance Regulatory and Development Authority of India) ரிசர்வ் வங்கி போன்றவைகள் வங்கி முறைமையை ஒழுங்குபடுத்துவது போன்று பிட் காயின்களுக்கு எந்த கண்காணிப்பும் இல்லை என்பதை மக்கள் கருத்தில் கொள்வது அவசியம். முதலீட்டாளர் ஏதேனும் ஒரு மோசடியான பிட்காயின் பரிமாற்றத்தில் முதலீடு செய்ய நேர்ந்தாலும் எந்தவொரு அரசாங்கத்தையும் அவர்கள் அணுகவோ, பணத்தைத் திரும்பப்பெறவோ முடியாது.
இந்திய அரசினால் தடையுத்தரவு போடப்பட்டால், இந்த பரிமாற்றங்கள் எந்த நேரமும் மூடப்பட வேண்டிய சூழலில் முதலீடு செய்த பணத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)
ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்அங்கம் -7 காட்சி -1
அவளோர் தர்க்க ராணி! வாயாடி மாது!
அவளைப் பற்றிவை இவற்றுள் அடங்கும்:
திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்!
கொதித்தெழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி,
உன் கவனம் கவரும்! போற்ற விழைவாய்!
உண்மை யாய்த் தோன்றும் அவை உனக்கு! …..ஆண்டனி
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
.
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
·பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.
++++++++++++++++++
நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், அடிமைகள், ஐரிஸ், அலெக்ஸாஸ், சார்மியான்.
காட்சி அமைப்பு: ஆண்டனியைக் காணாமல் கிளியோபாத்ரா கவலையுடன் அலைமோதிக் கொண்டிருக்கிறாள்.
அலெக்ஸாஸ்: மகாராணி! ஒரு முக்கியமான செய்தி! ஆண்டனி எகிப்திலில்லை! தளபதி ஆண்டனி ரோமாபுரிக்குப் போயிருப்பாதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கிளியோபாத்ரா: [கவலையுடன்] எப்போது போனார்? எதற்காகப் போனார்? நமது ஒற்றர் படை அறியாமல் எப்படிப் போனர்? என்னிடம் சொல்லாமல் போனாரே!
அலெக்ஸாஸ்: ரோமுக்கு வரும்படி ஆண்டனிக்கு அவசரச் செய்தி வந்திருக்கிறது! பாம்ப்பியின் போர்ப்பலம் அதிகமென்று தெரிந்ததால் அக்டேவியஸ் அவசரத் தூதரை அனுப்பி யுள்ளார். ஆண்டனி போகாவிட்டால், பாம்ப்பியின் படையினர் ரோமாபுரியைப் பிடித்து விடுவார் என்னும் பயம் உண்டாகி விட்டது. போரை முன்னின்று நடத்தி, பாம்ப்பியை முறியடிக்க ஆண்டனி ஒருவரால்தான் முடியும் என்பது அக்டேவியஸ் முடிவு. அதன் விளைவு ஆண்டனி மறைவு!
கிளியோபாத்ரா: [மன வேதனையுடன்] அப்படியானல் ரோமில் போர் நிகழப் போவது உண்மைதானா? போர்க்களத்தின் முன்னணியில் நின்று போரிடும் ஆண்டனிக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்கதி என்னவாகும்? சீஸர் கொல்லப் பட்டதும் என்மனம் இப்படித்தான் அலைமோதியது. சீஸர் மாண்ட பிறகு எகிப்தின் ஆதரவாய் ஆண்டனி இருப்பார் என்று ஆனந்தமாய் இருந்தேன். சீஸர் போனதும் எனக்கு ஆண்டனி உதவியாக இருப்பார் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆண்டனிக்கு எந்த ஆபத்தும் வந்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. சீஸர் காலிசெய்த என்னிதயத்தில் ஆண்டனிக்கு ஓரிடம் வைத்திருந்தேன்! ஆனால் அவரது மனம் வேறிடம் தேடிப் போகிறதே!
அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்குப் போரில் ஒன்றும் நிகழாது. அவர் மகா வீரர்! அப்படி அவருக்கு ஏதேனும் ஆனால் அக்டேவியஸ் உள்ளார். அவர் எகிப்தின் ஆதரவாளர் அல்லவா?
கிளியோபாத்ரா: [சினத்துடன்] இல்லை! சீஸரையும் அப்படித்தான் நினைத்தேன். அவருடைய நண்பன் புரூட்டஸே சீஸர் வயிற்றில் குத்தினார்! அக்டேவியஸ் எகிப்தின் ஆதரவாளி அல்லர்! எகிப்தை உரிமை நாடாகக் கருதாமல், அடிமை நாடாக மிதிக்க எண்ணுபவர் அவர். எகிப்தின் மீது அவருக்குப் பரிவுமில்லை! பகையுமில்லை! ஆனால் சீஸரை நான் மணந்தது அவரது வாரீசான அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! எனக்கும் சீஸருக்கும் ஆண் மகவு பிறந்ததும் அக்டேவியஸ¤க்குப் பிடிக்க வில்லை! நான் ரோமாபுரிக்குச் சென்ற போது, அக்டேவியஸ் என்னைப் பார்த்த அந்த அடாத பார்வை என் நினைவில் பதிந்து போயுள்ளது. என் மகனைப் பார்த்த அவரது கழுகுப் பார்வையை நான் மறக்கவில்லை. அக்டேவியஸ் மெய்யாக என் பகைவர்! அதனால் எகிப்துக்கும் பகைவர்! அக்டேவியஸை நான் நம்ப மாட்டேன்.
அலெக்ஸாஸ்: மகாராணி! நீங்கள் சொல்வதில் ஓர் உண்மை யிருக்கிறது. அக்டேவியஸ் ஆண்டனியை உங்களிடமிருந்து பிரிக்க வழி செய்வதாகத் தெரிகிறது.
கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்? எனக்குப் புரிய வில்லை! எகிப்தின் நண்பரை என்னிட மிருந்து பிரிப்பதால் அவருக்கென்ன அனுகூலம்?
அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனிக்கு மறுமணம் செய்து வைக்க அக்டேவியஸ் முற்படுவதாகக் கேள்விப் பட்டேன்!
கிளியோபாத்ரா: [கையிலிருந்த மதுக் கிண்ணத்தை வீசி எறிந்து] என்ன? ஆண்டனிக்கு அடுத்தோர் திருமணமா? மனைவி புல்வியா செத்தின்னும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை! அவளைப் புதைத்த பூமியில் இன்னும் புல் கூட முளைக்க வில்லை! புல்வியாவுக்கு வடித்த கண்ணீர் ஆண்டனிக் கின்னும் வற்றி உலரவில்லை! அதற்குள் அடுத்தோர் திருமணமா? நம்ப முடிய வில்லை! யாரந்த புதுப்பெண்?
அலெக்ஸாஸ்: அவள் பெயர் அக்டேவியா!
கிளியோபாத்ரா: [கோபத்தில் அலறி] யாரந்த சிறுக்கி? அவளுக்கு ஆண்டனி மேல் காதலா? அல்லது ஆண்டனிக்கு அவள் மீது மோகமா? புல்வியா போனதும் புதுப் பெண் மீது கண் விழுந்து விட்டதா?
அலெக்ஸாஸ்: அக்டேவியஸின் தங்கை அவள்! அக்டேவியா ஓர் அழகியாம்! பதினாறு வயதாம்! பார்த்தவர் மயங்கிப் போகும் பாவையாம்! ஆண்டனிக்கு அவள் மீது ஆசையாம்!
கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு] அப்படி நிச்சயம் இருக்க முடியாது. அக்டேவியஸே ஆண்டனிக்கு வயதில் சிறியவர்! அவருடைய தங்கை எப்படி யிருப்பாள்? ஆண்டனிக்கு அருமை மகளைப் போலிருப்பாள்! மனைவியாக உடம்பு இருக்காது. அந்த சிறுக்கியை மணந்து கொள்ள ஆண்டனி சம்மதம் தந்து விட்டாரா?
அலெக்ஸாஸ்: [மிக்க பயமுடன்] மகாராணி! நானொரு தூதுவன். என் மேல் கோபப் படாதீர்கள்! எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். ஆண்டனி ஒப்புக்கொண்டு விட்டார் என்று அறிந்தேன், மகாராணி!
கிளியோபாத்ரா: [கண்களில் கோபக்கனல் பறக்க] என்னை வஞ்சித்து அவளை மணக்க ஆண்டனி சம்மதித்து விட்டாரா? என்னை நோக வைக்க ஆண்டனி செய்வதாக நான் உணர்கிறேன்! ரோமானியர் அனைவரும் வஞ்சகர், சீஸரைத் தவிர! அலெக்ஸாஸ்! உடனே நமது ஒற்றனை ரோமாபுரிக்கு அனுப்பு! அங்கே என்ன நடக்கிற தென்று நான் அறிய வேண்டும். ஒருத்தன் அல்ல ஒன்பது பேரை அனுப்பு. அனுதினமும் எனக்குச் செய்தி கிடைக்க வேண்டும். போ அலெக்ஸாஸ் போ! [அலெக்ஸாஸ் போகிறான். முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுகிறாள்] ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! [மதுபானத்தைக் கிண்ணத்தில் ஊற்றித் தருகிறாள்] ஐரிஸ்! இப்போது ரோமில் என்ன நடக்கும்? எப்படி இருப்பாள் அந்தக் குமரி அக்டேவியா? என்னை விட அழகானவளா? என்னை விட அறிவானவளா? என்னை விட உயரமாக இருப்பாளா? அல்லது குட்டையாக இருப்பாளா? என்னைப் போல் வெள்ளையாக இருப்பாளா?
ஐரிஸ்: மகாராணி! பதினாறு வயதுப் பேதை எப்படி யிருப்பாள்? பிரபு ஆண்டனிக்கு அவளைப் போல் மூன்று மடங்கு வயது! மகளும், தந்தையும் மணமேடையில் அமர்ந்தால் எப்படி யிருக்கும்? பார்க்கச் சகிக்காது! பல்லாங்குழி விளையாடும் பாவையைப் பைத்தியகாரர் தளபதிக்கு மணமுடிக்கிறார்!
கிளியோபாத்ரா: ஐரிஸ்! ஆண்டனி திருமணத்தை நிறுத்த வேண்டுமே, எப்படிச் செய்வது?
ஐரிஸ்: மகாராணி! திருமணத்தைத் தடுக்க முடியாது! ஆனால் ஆண்டனியின் புதுப் பெண்ணைப் பிரித்து விடலாம். அதைச் செய்வது எளிது! கவலைப் படாதீர்கள், மகாராணி! நான் ஏற்பாடு செய்கிறேன்.
கிளியோபாத்ரா: [தனக்குள் மெதுவாக] வரட்டும் ஆண்டனி! அவரை மயக்க வேண்டும் மதுவைக் கொடுத்து! அவரை மணக்க வேண்டும் நான் மணாளனாக! அக்டேவியா ஆண்டனியின் மனைவியா? கிளியோபாத்ரா உள்ளவரை அது நிகழாது! ரோமுக்கு ஆண்டனி மீளாதபடிச் செய்வது என் கடமை! பார்க்கிறேன், யார் பெரியவள் என்று? வாலிபக் குமரி கிளியோபாத்ராவா? அல்லது இளங்குமரி அக்டேவியா? [ஆங்காரமாக] அக்டேவியா ஆண்டனியின் மனைவியாக எகிப்த் மண்ணில் கால் வைத்தால், தடம்பட்ட தளமெல்லாம் நாகப் பாம்புகளை நடமாட விடுவேன்! அவளை நான் உயிரோட வாழ விடமாட்டேன்! ஆண்டனி எனக்குச் சொந்தம்! அவரை வேறெந்த மாதும் என் முன்பாக முத்தமிடப் பொறுக்க மாட்டேன்!
*********************
அங்கம் -7 காட்சி -2
செம்மைப் போர் கடற்படை என் கைப்பலம்!
எம்மை ரோமாபுரி மிகவே நேசிக்கும்!
எனது பராக்கிரமம் பெருகும்! ஜோதிட
முன்னறிப்பு மெய்யாகும்! என்னாசை நிறைவேறும்!
வெளிப்புற விருந்தில் எகிப்தி லிருப்பார் ஆண்டனி!
போர் புரிய ரோமா புரிக்குப் போகார்.இளைய பாம்ப்பி
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
அக்டேவியஸ், லெப்பிடஸ் எகிப்தி லிருப்பார்,
ஆண்டனி எங்குளார் எனத் தேடிக் கொண்டு !
மையல் மோகினி கிளியோ பாத்ராவின்
மந்திரக் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பார்! …இளைய பாம்ப்பி
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனி ரோமுக்கு வரத் தந்திரம் செய்கிறான்.
நேரம், இடம்: ஸிசிலித் தீவின் மெஸ்ஸினா முனையில் இளைய பாம்பியின் போர்க் கூடாரம்.
நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதி பாம்ப்பி, படை வீரர்கள் மெனாஸ், மெனிகிரேட்ஸ்
காட்சி அமைப்பு: பாம்ப்பி, மேனாஸ், மெனிகிரேடஸ் போருடையில் உள்ளார்கள். போர்முகாமில் போர் செய்யும் முறைகள், பாதைகள் ஆராயப் படுகின்றன.
இளைய பாம்ப்பி: தெய்வங்கள் நியாயமாக நடந்தால், நியாயவாதிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும். தெய்வங்கள் எப்போதும் நியாயமற்ற அயோக்கியருக்குத்தான் உதவி செய்கின்றன! என் தந்தைக்கும் அப்படித்தான் ஆனது. எல்லா தெய்வங்களும் அவரைக் கடைசியில் கைவிட்டன! எகிப்தில் தணித்து விடப்பட்டு அவரது தலையை எகிப்தியர் துண்டாக்கினர்! ஜூலியஸ் சீஸர் அதிர்ஷ்டக்காரர். சென்ற விட மெல்லாம் சீஸருக்குத்தான் வெற்றி மேல் வெற்றிகள்! சீஸரை வரவேற்க, சீஸரை மகிழ்விக்க தந்தையின் தலை காணிக்கையாக தரப்பட்டது! சீஸரை என்னால் கொல்ல முடிய வில்லை! அதற்குள் அவரது செனட்டர்களே அவரைக் குத்திக் கொன்றார்! சீஸரைப் பலிவாங்கா விட்டாலும், நான் சீஸரின் சீடர்களைப் பலிவாங்க வேண்டும்.
மேனாஸ்: உங்கள் கொள்கைப்படி பார்த்தால், வெற்றி வீரர் சீஸர் பக்கம்தான் நியாயம் இருந்ததாகத் தெரிகிறது. உங்கள் தந்தையின் பரம எதிரி சீஸர் அல்லவா? உங்கள் தந்தையை விரட்டிச் சென்றவர் சீஸர் அல்லவா?
பாம்ப்பி: உண்மைதான்! எகிப்தில் என் தந்தை தலை துண்டிப்புக்குக் காரணமானவர் சீஸர்! அந்த அநியாயத் தளபதிக்கு தெய்வங்கள் உதவி செய்தன! நியாதிபதியான என் தந்தைக்குக் கிடைத்த பரிசு மரணம்! நமது பிரார்த்தனைகள் தெய்வத்தின் செவியில் கேட்பதில்லை. இம்ம்முறை நான் முழு ஆற்றலுடன் போரிடப் போகிறேன். ரோமாபுரியை மீட்பதில் வெற்றி பெற்றே தீருவேன்! இதுதான் தக்க தருணம்! நம் கடற்படை பெரியது! நமது கப்பல்கள் ஏவுகணைகள் கொண்டவை! நாம் வெல்ல வேண்டுமென்று ரோமானியர் விரும்புகிறார்! நமது படை வீரர்கள் பகைவர் எண்ணிக்கையை விட அதிகம். நல்ல நேரமிது! ஆண்டனி ரோமில் கிடையாது! சுகவாசி எகிப்தில் கிளியோபாத்ராவின் மோக மயக்கத்தில் கிடக்கிறார். கவர்ச்சி மாது கிளியோபாத்ராவின் மடியில் தலைவைத்து மதுவைக் குடித்துக் கொண்டிருக்கிறார். தக்க தருணம் இதுவே!
மேனாஸ்: பாம்ப்பி! ஆண்டனி எகிப்தில் இல்லை! அக்டேவியஸ் அவரை வரும்படி அழைத்திருக்கிறார். ரோமை நோக்கி ஆண்டனி வருவதாக அறிந்தேன். அவரில்லாமல் அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருமே நமக்கு இணையாகப் போரிடுவர் அல்லவா?
பாம்ப்பி: அப்படியில்லை மேனாஸ்! ஆண்டனிக்குள்ள போர்த் திறமை கோழையான அக்டேவியஸ், லெப்பிடஸ் இருவருக்கும் கிடையாது. ஆண்டனி எகிப்தை விட்டு எப்போது புறப்பட்டார்? மையல் மோகினியின் மந்திர வலையில் சிக்கிய ஆண்டனி மதி மயங்கிக் கிடப்பதாகத்தான் நான் அறிந்தேன். யார் சொன்னது ஆண்டனி ரோமுக்கு வருவதாக?
மேனாஸ்: கழுதை கண்ணுக்குத் தெரியும்படி காரெட்டைக் காட்டி, அக்டேவியஸ் ஒரு தந்திரம் செய்தார். மனைவி புல்வியா மாண்டு போனதும் ஆண்டனி மனநிலை சரியில்லை. தங்கை அக்டேவியாவை மண முடித்துத் தருவதாக ஆண்டனி அழைக்கப் பட்டிருக்கிறார்! எகிப்தில் காதல் மோகினி இருந்தாலும், ரோமில் ஆண்டனிக்கு ஒரு ராணி வேண்டுமல்லவா? அதனால் அவர் ரோமுக்கு வருவதாக நான் அறிந்தேன்.
பாம்ப்பி: பயங்கரத் திட்டமாகத் தெரிகிறது எனக்கு. பால்யத் திருமணம் போலத் தெரிகிறது எனக்கு. ஆண்டனி அதற்கு உடன்படுவாரா என்பது தெரியாது எனக்கு. நம்மைத் தோற்கடிக்க அக்டேவியஸ் செய்யும் மாபெரும் சதியாகத் தெரிகிறது எனக்கு! ஆண்டனியும் அக்டேவியஸ¤ம் ஒட்டிய நண்பர் அல்லர்! வெட்டிக் கொள்ளும் விரோதியர் அல்லர்! உள்ளார ஒருவர் மீது ஒருவருக்கு எதிர்ப்பாடு ஒளிந்துள்ளது. அந்த ஊமைப் போரை முறிக்க அக்டேவியஸின் யுக்தி உன்னதமானது. வெல்ல முடியாவிட்டால் பகவனை நண்பனாக்கிக் கொள் என்பது பழமொழி! ஆண்டனியை ஒருபடி மேலாக மைத்துனன் ஆக்கிக் கொள்கிறார் அக்டேவியஸ்! எல்லாம் நம்மை முறியடிக்கச் செய்யும் அக்டேவியஸ் தந்திரம்!
மேனாஸ்: அக்டேவியஸ் தங்கையை மணந்து கொண்டாலும், ஆண்டனிக்கு எகிப்த் ராணி மீதுதான் கண்ணோட்டம் இருக்கும். மைத்துனர் ஆண்டனி மந்திர வசீகரியின் மையலில் விழாதபடித் தடுக்க முனைகிறார். அது நடக்காது பாம்ப்பி! முதல் நாளே கிளியோபாத்ரா ஆண்டனியைத் தன்னவன் ஆக்கிக் கொண்டாள்! [மெதுவாக] முதல் நாளே ஆண்டனியும், கிளியோபாத்ராவும் மதுவருந்திக் காதல் மயக்கத்தில் ஒரே அறையில்தான் உறங்கி னாராம்! முதல் நாளே …. காதலனைக் கணவனாக்கிக் கொண்டாள் அந்த மோக மாது! கிளியோபாத்ரா … இப்போது … கர்ப்பவதி … என்று கேள்விப்பட்டேன்!
பாம்ப்பி: [அதிர்ச்சியுடன்] என்ன? கிளியோபாத்ரா கர்ப்பவதியா? ஆண்டனியின் மகவு கிளியோபாத்ராவின் வயிற்றில் வளர்ந்து வருகிறதா? அப்படியானால் ஆண்டனியின் திருமணத்தைக் கேள்விப்படும் கிளியோபாத்ரா ஆங்காரியாக மாறிவிடுவாளே! ஆண்டனியின் கழுத்தைத் துண்டித்து விடுவாளே! இந்த அதிர்ச்சி செய்தி அக்டேவியஸ¤க்குத் தெரியுமா? சீஸரின் மகனை கிளியோபாத்ரா பெற்றதும் அக்டேவிஸ் சீறி எழுந்தார்! சீஸரின் வாரிசு ஓர் எகிப்த் ஜிப்ஸியின் பிள்ளை என்றதும், ரோமாபுரியின் தூய கலாச்சாரம் போனது என்று வெகுண்டு எழுந்தார்! ஆண்டனியை வெறுக்கும் அக்டேவியஸ், கிளியோபாத்ராவை வேசியெனத் திட்டும் அக்டேவியஸ் எத்தகைய அதிர்ச்சி அடைவார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை!
மேனாஸ்: அவருக்குத் தெரிந்தால் தங்கை திருமணத்தை ஏற்பாடு செய்வாரா? கிளியோபாத்ராவைப் பற்றி சரியாகச் சொல்கிறேன்! வயிற்றில் வளரும் மகவுக்குத் தந்தையான ஆண்டனி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள் கிளியோபாத்ரா! ஆனால் நிச்சயம் அதிர்ச்சி அடைவாள், திருமணத்தைப் பற்றி அறிந்தால்! கவலைப் படாதீர்! அக்டேவியாவைப் பிரித்து ஆண்டனியை மீண்டும் பிடித்து விடுவாள், கிளியோபாத்ரா! இந்த திருமணச் சதித் திட்டத்தில் வெல்லப் போவது கிளியோபாத்ரா! தோற்கப் போவது அக்டேவியஸ்!
பாம்ப்பி: அதே போல் பார், நமது ரோமாபுரிப் போரிலும் தோற்கப் போவது அக்டேவியஸ்தான்! ஆண்டனியைப் போல் அக்டேவியஸ¤க்கு அனுபவம் போதாது! கிளியோபாத்ராவுக்கு உள்ள அறிவுக் கூர்மை புது மணப்பெண் அக்டேவியாவுக்குக் கிடையாது! ஆண்டனி கிளியோபாத்ராவின் மடியில் கிடந்தால் என்ன? புது மணப்பெண் அணைப்பில் கிடந்தால் என்ன? எனக்குக் கவலை யில்லை! ஆண்டனி போரை நடத்துவதற்கு முன்பு, நாம் போரை நடத்திச் செல்வோம்! ஒன்றாய் அக்டேவியஸையும், லெப்பிடஸையும் முறியடிப்போம். ரோமைக் கைப்பற்றுவோம்! போர் முரசம் தட்டுவோம். புறப்படு ரோமாபுரி நோக்கி! ஆண்டனி கால் வைப்பதற்கு முன்பு நாம் தடம் வைக்க வேண்டும் ரோமில்!
*********************
அங்கம் -7 காட்சி -3
அழகு, ஞானம், பணிவு
ஆண்டனியின் இதயத்தில்
நிலைத்து விட்டால்
அவருக்கு (புது மணப்பெண்)
அக்டேவியா ஓர் அதிர்ஷ்டப் பரிசு! ….மேஸினாஸ்
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
அற்பச் சிறு போரில் நிற்கார் ஆண்டனி!
அவரது அரிய போர்த் திறமை மற்ற
இருவரை விட இரட்டிப் பானது!
ஆழ்ந்த ஊகிப்பைத் தொடர்வோம்!
எகிப்தின் எழில் விதவை மடியை விட்டு
கடத்தி வருவது கடிது கடிது,
மோகக் களைப் பற்ற ஆண்டனியை !வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: போர்த் தளபதிகள் ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா பாதுகாவலர்.
காட்சி அமைப்பு: அக்டேவியஸ், லெப்பிடஸ், அக்கிரிப்பா ஆகிய மூவரும் கூடிப் பேசிக் கொண்டுள்ள போது ஆண்டனி நுழைகிறார்.
லெப்பிடஸ்: அக்டேவியஸ், எனக்குத் தெரியும். நிச்சயம் ரோமுக்கு வருவார் ஆண்டனி! நம்மைத் தனியே போரில் தடுமாற விட்டுவிட்டு அவர் கிளியோபாத்ராவின் அணைப்பிலே கிடக்க மாட்டார். வருவேன் என்று தகவல் அனுப்பியவர் வராமல் எப்படிப் போவார்?
அக்டேவியஸ்: நீ ஏமாறப் போகிறாய் லெப்பிடஸ்! எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்டனி வரமாட்டார், பார். எகிப்தா, ரோமா என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், ஆண்டனிக்கு எகிப்துதான் விழும்! போர், போகம் என்று நாணயத்தைச் சுண்டி விட்டால், போகம் என்றுதான் ஆண்டனிக்கு விழும்! ஏனென்றால் ஆண்டனி நாணயத்தின் இருபுறத்திலும் அச்சாகி யிருப்பது ஒன்றேதான் போகம், போகம்! கிளியோபாத்ரா ஒரு மோகினிப் பிசாசு! ஆண்டனி ஒரு போகப் பிரியர்! புல்வியா செத்ததும் தனித்து விட்ட ஆண்டனிக்கு கிளியோபாத்ராவின் இதழ்கள் ஏன் இனிப்பாக இருக்காது? ஆண்டனியை விடச் செத்துப் போன அவரது மனைவி புல்வியா உண்மையில் ஒரு வீர மாது! என்னுடன் போரிட்ட புல்வியா மெய்யாக ஒரு தீர மங்கை! ஆண்டனி போல் அவள் மோகத் தீயில் மூழ்க வில்லை! ரோமைப் புறக்கணிக்க வில்லை! நாட்டுப் பாதுகாப்பை மறந்து காதலுக்காக மனதைப் பறிகொடுக்க வில்லை!
[அப்போது காவலன் ஒருவன் வந்து ஆண்டனி வருவதை அறிவிக்கிறான். சிறிது வினாடிகள் கழித்து நுழைகிறார் ஆண்டனி]
லெப்பிடஸ்: [மகிழ்ச்சியுடன்] நான் சொன்னதுதான் உண்மையானது. [வணக்கம் செய்து] வாருங்கள் ரோமாபுரித் தளபதியாரே! உங்கள் வருகைக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
[ஆண்டனி முதலில் லெப்பிடஸின் கை, பிறகு அடேவியஸின் கையைக் குலுக்குகிறான்]
அக்டேவியஸ்: [சற்று கடுமையுடன்] வருக, வருக ஆண்டனி! எனது ஆழ்ந்த அனுதாபம், புல்வியாவின் அகால மரணத்துக்கு! நீ வருவாய் என்று அவள் உயிர் உனக்காகக் காத்திருந்தது! நீ வரவில்லை என்று தெரிந்ததும் அவள் உயிர் உடனே நீங்கியது! எகிப்தை வீட்டு ஏன் நீ உடனே வரவில்லை! புல்வியா அடக்கத்தின் போது ரோமாபுரி நகரே நீ வருவாய் என்று காத்துக் கிடந்தது! உன்னை வரவிடாமல் எகிப்தில் எந்த பிசாசு தடுத்தது? உன்னைப் பிடித்த வைத்த மந்திரக்காரியை உதறி விட்டு நீ வந்திருக்கலாம்! அப்படி நீ செய்ய வில்லை! ஏன்? ஏன்? ஏன்? சொல் ஆண்டனி!
லெப்பிடஸ்: கோபப்படாதீர் அக்டேவியஸ்! குற்றம் பார்க்கின் சுற்றமில்லை! பாம்ப்பியை நாம் மூவரும் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும்! நமது பகைவன் நமக்குள் இல்லை. நமக்குள் சண்டை என்று தெரிந்தால் பாம்ப்பி அதைக் கொண்டாடுவான்! நமது பிரச்சனை சிறியது! ஆனால் நமது மனது பெரியது! போரை எவ்விதம் நடத்திச் செல்ல வேண்டும் என்று நாம் சிந்திப்போம்! பாம்ப்பியின் கடற்படை வலுவாகி விட்டது! அதனை வெல்வது சிரமம். அதற்குரிய வழிகளைத் திட்டமிடுவோம்.
ஆண்டனி: [சினத்துடன்] எகிப்தில் நான் ஏன் ஒதுங்கிக் கிடந்தேன் என்று அக்டேவியஸ் ஏன் கேட்கிறார்? அக்டேவியஸ் ரோம் சாம்ராஜியத்தைச் சுற்றிப் பார்வை யிடாது, ரோமிலே ஏன் பதுங்கிக் கிடந்தார் என்று நான் கேட்கிறேனா? கப்பம் கட்டாத எகிப்த் தேசம் ஒப்பிய நிதியைத் திரட்டப் போனது என் தப்பா? படை வீரர்கள் மாதச் சம்பளம் தரப்படாமல் கும்பி குலைவதை அறிவீரா? கிளியோபாத்ரா ரோமுக்கு வாரிசு அளித்த சீஸரின் மனைவி! சீஸர் மாண்டதும் அவளது சிநேகத்தை அற்றுவிட வேண்டுமா? எகிப்த் ரோமாபுரின் ஆக்கிரமிப்பு நாடு! ஆம், கிளியோபாத்ரா என்னினிய காதல் தோழிதான்! என் காதலை இல்லை என்று நான் மறுக்க வில்லை! நாட்டுப் பற்று என்னை ரோமுக்குப் போகச் சொன்னாலும், ஏதோ ஒரு பாசம் என்னை எகிப்தில் கட்டிப் போட்டது!
அக்டேவியஸ்: உனது மனைவி புல்வியாவும், சகோதரனும் சேர்ந்து கொண்டு, என்னை எதிர்த்துப் போர் புரிந்தார். உனக்கு அது தெரியாதா? நீ ஏன் அவர்களைத் தடுத்து நிறுத்த வில்லை? நான் மடிய வேண்டும் என்று நினைத்தாயா? அல்லது அவர்கள் போரில் கொல்லப் படட்டும் என்று விட்டு விட்டாயா?
ஆண்டனி: அப்படி யில்லை அக்டேவியஸ். தப்பான எண்ணம் அது! உன்னுடன் போரிட என் மனைவியை நான் ஏன் அனுப்ப வேண்டும்? என் சொற்படிக் கேட்பவன் அல்லன் என் சகோதரன். அது உனக்கும் தெரியும்! என்னை எகிப்திலிருந்து இழுத்துவர புல்வியா செய்த புரட்சி அது! அதில் அவள் வெற்றி பெறவில்லை. என் சகோதரன் உன்னுடன் போரிட்டதற்கு நான் பொறுப்பாளி அல்லன்.
அக்டேவியஸ்: அலெக்ஸாண்டிரியாவில் கலகம் நேர்ந்த போது, மூன்று முறை நானுனக்குக் கடிதம் எழுதினேன்! அவற்றைப் பையிக்குள் போட்டு விட்டு நீ பதில் போடாமல் பதுங்கிக் கொண்டாய்! ஏன்?
ஆண்டனி: முப்பெரும் அரசர்களுக்கு கிளியோபாத்ரா அளித்த விருந்தில் அப்போது கலந்து கொண்டிருந்தேன்! அச்சமயம் வந்தது முதல் கடிதம். மற்ற கடிதங்களை நான் பெற்றுக் கொள்ள வில்லை!
அக்டேவியஸ்: ஒப்புக்கொள் ஆண்டனி! நமது கூட்டு ஒப்பந்தத்தை நீ முறித்தாய்! பகைவன் ரோமாபுரியின் வாசலில் நின்ற போது நீ கிளியோபாத்ராவின் மாளிகை வாசலில் மயங்கிக் கிடந்தாய்! நாட்டுப் பாதுகாப்பு உன் நாட்குறிப்பில் இடம் பெறவில்லை! நாட்டைத் துறந்து, நட்பைத் துறந்து, நம்பிய மனைவியைத் துறந்து நாசக்காரியின் மடியில் நீ மயங்கிக் கிடந்தாய்!
லெப்பிடஸ்: நமது வீட்டுப் போரை முதலில் நிறுத்தி, வெளி நாட்டு போரைப் பற்றி சற்றுப் பேசுவோமா?
அக்கிரிப்பா: எனக்கோர் நல்ல யோசனை உதயமாகி உள்ளது! ஆண்டனி தற்போது தனிமையாய்ப் போனவர்! அக்டேவியஸ்! உங்கள் தாய் வழிப் பிறந்த சித்தியின் புதல்வி அழகி அக்டேவியாவை …. ஆண்டனிக்கு …
அக்டேவியஸ்: போதும், நிறுத்திக் கொள்! உன் யோசனையைக் கிளியோபாத்ரா கேள்விப் பட்டால், உன் கழுத்தை அறுத்து விடுவாள்! தடாலென மயக்கமுற்று விழுந்திடுவாள்! அக்டேவியா வாலிப மங்கை! ஆண்டனி வயோதிகத் தளபதி! முதலில் அக்டேவியா ஆண்டனியை ஏற்றுக் கொள்வாளா? வயதுப் பொருத்தம் இல்லையே! மனப் பொருத்தம் உள்ளதா? எனக்குத் தெரியாது.
ஆண்டனி: நல்ல யோசனை அக்கிரிப்பா! நீ சொல்ல வந்ததைச் சொல்லி முடி! நான் இப்போது மணமாகாதவன். அக்டேவியா எப்படி இருப்பாள் சொல்? அழகாய் இருப்பாளா? எடுப்பான உடம்பா? ஒடுங்கிய இடுப்பா? எத்தனை வயதிருக்கும்? நானவளைப் பார்த்தில்லை!
அக்கிரிப்பா: ஆனால் அக்டேவியா உங்களைப் பார்த்திருக்கிறாள் ஆண்டனி! இருபத்தியைந்து வயது! பேரழகி! குதிரை போல மதமதத்த தோற்றம்! உங்களுக்கு ஏற்றவள்!
ஆண்டனி: நான் கண்டு பேச வேண்டுமே முதலில்! என்னைப் பற்றி அக்டேவியா என்ன நினைப்பாள்?
அக்கிரிப்பா: கவலைப் படாதீர்! புல்வியா செத்த பின் அக்டேவியா உங்களைப் பற்றித்தான் கனவு காண்கிறாள். உங்களைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறாள். அவளது விருப்பத்தை உங்களுக்குச் சொல்லும் வேளை வந்ததால் சொல்கிறேன். கிளியோபாத்ரா உணர்ச்சியைப் பற்றி நான் கவலைப் படவில்லை! ஆனால் …… அவள் ஒரு ….!
அக்டேவியஸ்: ஆண்டனி! அவள் ஒரு விதவை, தெரியுமா? சமீபத்தில் அவள் கணவர் காலமாகி விட்டார்! அவள் கணவன் செத்த கவலையில் உண்ணாமல், உறங்காமல், ஓடாய்ப் போய் விட்டாள்!
ஆண்டனி: ஆகா! என்ன பொருத்தம்? இப்படி அமைவது எனக்கு ஓர் அதிர்ஷ்டம்! நானும் மனைவி இழந்தவன்! புல்வியா சமீபத்தில் செத்தது அவளுக்குத் தெரிந்திருக்கிறது! நானும் புல்வியா போன துக்கத்தில்தான் மன வேதனை அடைகிறேன்! மனப் பொருத்தம் உள்ளது எங்கள் இருவருக்கும். புல்வியாயை இழந்த எனக்கு ஆறுதல் அளிப்பாள் அக்டேவியா! கணவனை இழந்த அக்டேவியாவுக்கு ஆதராவாய் இருப்பேன் நான்!
அக்டேவியஸ்: ஆண்டனி! கவனகாகக் கேள்! அக்டேவியாவின் கணவன் ஏகதார விரதன்! அவனுக்கு ஒரே ஒரு மனைவி அக்டேவியா! அவனுக்கு ரோமில் ஒரு மனைவியும், எகிப்தில் ஒரு காதலியும் கிடையாது! அவன் விட்டுப் போன இடத்தை நீ நிரப்புவாய் என்று எனக்கு நம்பிக்கை யில்லை!
ஆண்டனி: கிளியோபாத்ராவை நீ நேராகப் பார்த்தால் அப்படிச் சொல்ல மாட்டாய்! கிளியோபாத்ரா என் காதலி யில்லை! கிளியோபாத்ரா என் மனைவி யில்லை! அவள் எனக்கு வெறும் தோழி மட்டுமே! என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சீஸரைப் பற்றித்தான் பேசுவாள்! நான் அவளிடம் கொண்டிருப்பது வெறும் நட்பு! ஆனால் அது கள்ள நட்பில்லை! அவளைக் காதல் தோழி என்று நான் சொல்லியது தப்பு!
அக்டேவியஸ்: நல்ல நட்பு என்று சொல்ல வருகிறாய்! எனக்குத் தெரியும்! உன்னிதயக் கோட்டையில் வசந்த மாளிகை இரண்டு உள்ளன. ஒன்றில் எப்போதும் கிளியோபாத்ராதான் குடியிருப்பாள்! அவளை உன்னால் வெளியேற்ற முடியாது! அடுத்த மாளிகை ஒரு சத்திரம் போன்றது! யாரும் வரலாம், போகலாம், அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம்! அந்த மாளிகைக்கு அக்டேவியா வரமாட்டாள்!
ஆண்டனி: அப்படிக் கேலி செய்யாதே அக்டேவியஸ்! இப்போதே நான் அக்டேவியாவைப் பார்க்க வேண்டும்! ஏற்பாடு செய்வாயா? அவளை நான் மணந்து கொள்கிறேன். என்னால் தனிமையில் நோக முடியாது!
அக்டேவியஸ்: அக்டேவியா ஒரு நற்குண மாது! புல்வியாவை விட்டுவிட்டு நீ எகிப்துக்குப் போனது போல் செய்தால், அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள்! அவள் மென்மையான இதயத்தை உடைத்து விடுவாய்!
அக்கிரிப்பா: ஆண்டனி, நான் நினைத்தபடி செய்து விட்டேன்! முக்கியமான இந்த திருமணத்தால் அக்டேவியஸின் மைத்துனன் ஆகிவிட்டாய் நீ! அதனால் அக்டேவியஸின் பராக்கிரமம் இரட்டிப்பாகிறது! உங்கள் பழைய வெறுப்புகள் கரைந்து போகின்றன! உங்கள் பொறாமைக் குணங்கள் மறைந்து விடுகின்றன. நீங்கள் மூவரும் பகைவன் பாம்ப்பியை விரட்ட ஒன்றுபடுகிறீர்! இந்த திருமணம் அதை நிறைவேற்றி விடும்.
ஆண்டனி: கேளுங்கள்! பாம்ப்பி நமக்குப் பகைவன் அல்லன்! சமீபத்தில் அவன் எனக்கு எழுதிய கடிதத்தில் மதிப்புடன் நடந்து மன்றாடி யிருக்கிறான்! போர் வேண்டாம் என்று என் காலில் விழுகிறான்! நான் போரை முன்னின்று நடத்தில் தான் வெல்ல முடியாது என்று தாழ்ச்சியுடன் முறையிட்டுள்ளான். ஆகவே அவனுக்கு எதிராக நான் வாளுயர்த்த மாட்டேன்!
அக்டேவியஸ்: [அதிர்ச்சி அடைந்து] என்னால் இதை நம்ப முடியவில்லை! பாம்ப்பி ஏமாற்றுகிறானா என்று தெரியவில்லை! ஆண்டனி! நீ சொல்வது உண்மை என்றால், பல மாதங்களாக அவன் ஏன் தன் கடற் படையைப் பலப்படுத்தி வந்தான் என்று விளக்கு! உனக்கும், எனக்கும் பகை உண்டாக்க வழி செய்கிறான்!
ஆண்டனி: காரணம் சொல்கிறேன்! போரை நிறுத்த பாம்ப்பி முயல்வது எனக்கு நன்றாகத் தெரிகிறது. பொறுங்கள் நமது ஒற்றரை அனுப்பி பாம்ப்பியின் மனதை அறிந்து வருகிறேன். நல்ல சமயத்தில்தான் அக்டேவியாவைத் திருமணம் செய்கிறேன். போருக்கு நான் செல்வதைப் புதுமணப் பெண் அக்டேவியா எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? அக்டேவியஸ், போரை நான் நிறுத்த முடியும்! புதுமணப் பெண்ணை நான் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்! திருமணத்துக்கு ஏற்பாடு செய்வீர் என் புது மைத்துனரே!
[சிரித்துக் கொண்டு அக்டேவியஸின் கைகளைக் குலுக்குகிறான்]
*********************
அங்கம் -7 காட்சி -4
(கிளியோபத்ரா) அரசிளங் குமரி!
மாவீரர் சீஸரின் கை வாளையும்
படுக்கை மீது விழ வைத்தவள்!
உடலுறவு கொண்ட சீஸருக் கொரு
மகனைப் பெற்ற மாது அவள்!வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
அந்தோ ஆண்டனி! நில்லாதே
அக்டேவியஸ் அருகில்! உன்னைக் காக்கும்
ஆத்ம தேவதை உன்னத மானது!
அஞ்சாதது! ஈடிணை யற்றது!
அவ்வித மல்ல அக்டேவியஸ் ஆத்மா!
ஆக்கிர மிக்கும், அச்ச மூட்டும்!
ஆதலால் நீ தூர விலகி நில்! …. [ஜோதிடன் எச்சரிக்கை]வில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]
Cleopatra near Nile Resort
ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள்.
++++++++++++++++++
நேரம், இடம்: ரோமாபுரி அரண்மனை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, அக்டேவியா, ஜோதிடர்.
காட்சி அமைப்பு: திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிகள் ஆண்டனி, மனைவி அக்டேவியா உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜோதிடர் வருகிறார்.
ஆண்டனி: [ஒரு கையில் மதுக் கிண்ணமும், மறு கையில் அக்டேவியாவை அணைத்துக் கொண்டு] கண்ணே அக்டேவியா! இன்று நமது பொன்னாள்! எனக்கினி மதுக்கிண்ணம் நீதான்! நீ அருகே உள்ள போது, ஸிஸிலி மதுவும் சுவை அளிப்பதில்லை! புல்வியா காலி செய்த உள்ளத்தை நிரப்பி விட்டாய் நீ! காய்ந்து போன என் நெஞ்சத்தில் மீண்டும் காதல் தேனாறு ஓடுகிறது! நீ வாலிப மாது! உன்னை விட நான் வயோதிகன்! உன்னால் எனக்கு வாலிபம் மீள்கிறது! ஆயினும் என்னால் உனக்கு வயோதிகம் வரக் கூடாது.
அக்டேவியா: இந்த நாளுக்கு நான் காத்திருந்தேன். என் கணவர் மாண்டதும் தனித்துப் போனேன் மீண்டும் நான்! தனிமையில் வாடினேன், வதங்கினேன், வாழ்வதை வெறுத்தேன். அப்போது போர்க்களத்தில் புல்வியா செத்த செய்தி வந்தது! உடனே என்னைப் போல் தனித்துப் போன உங்கள் மீது அனுதாபம் கொண்டேன்! எகிப்திலே ஒட்டிக் கொண்ட ஆண்டனியை எப்படி வெட்டிக் கொண்டு வருவது என்று சிந்தித்தேன்! நண்பன் அக்கிரிப்பா, தமையன் அக்டேவியஸ் உதவியை நாடினேன். தமையன் உங்களை ரோமுக்கு இழுத்து வந்தார்! அக்கிரிப்பா நம்மைப் பிணைத்து வைத்தார்! நாமின்று புதுமணத் தம்பதிகள். ரோமுக்கு மீண்டும் நீங்கள் திரும்பிப் போவீரா? என்னைத் தனியே விட்டுவிட்டு போவீரா?
ஆண்டனி: கண்ணே அக்டேவியா! நானொரு நாடோடி! என் மனம் போல் மாறுவது நான் வாழுமிடம்! வாழ்க்கை முழுதும் நான் ரோமிலே அடைபட்டுக் கிடக்க மாட்டேன். எகிப்துக்கு நான் மீண்டும் போக வேண்டிய திருக்கும்! நான் ஆரம்பித்த சில பணிகள் இன்னும் முடியவில்லை! என்னிதயத்தில் பாதியிடம் ரோமுக்கும், மீதியிடம் எகிப்துக்கும் உள்ளதை நான் தவிர்க்க முடியாது!
அக்டேவியா: [மிக்க கவலையுடன்] அப்படியானால் உங்கள் பாதி உள்ளம் கிளியோபாத்ராவுக்கு என்று சொல்கிறீரா? எனக்குப் பாதியிடம் போதாது ஆண்டனி! உங்கள் உள்ளமும், உடலும் எனக்கு வேண்டும்! கிளியோபாத்ரா செத்துப் போன சீஸரின் மனைவி! சீஸருக்கு ஆண் மகனை அளித்தாலும், மெய்யாக வேசி அவள்! நேற்று சீஸர்! இன்று நீங்கள்! நாளை யாரோ? யாருக்குத் தெரியும்? எனக்கீடாக உங்களை உரிமை யாக்கத் தகுதி அற்றவள் அந்த மந்திரக்காரி!
ஆண்டனி: பாவம் கிளியோபாத்ரா! சீஸரை இழந்து உன்னைப் போல் தனித்துப் போனவள். என்னை நம்பிக் கொண்டிருக்கிறாள்! அவளை வேசி என்று திட்டாதே! அவள் ·பாரோ மன்னர் பரம்பரையில் வந்தவள்! மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் உதித்தவள். பல மொழிகள் தெரிந்த, பராக்கிரப் பாவை அவள்! எகிப்தைச் சீரிய முறையில் ஆண்டு வருபவள் அவள்! அவள் என்னாசைத் தோழி! ஆனால் நீ என்னாசை மனைவி! உனக்கீடாக மாட்டாள்!
அக்டேவியா: [ஆண்டனி கைகளைப் பற்றிக் கொண்டு, கவலையுடன்] நீங்கள் ரோமுக்குப் போகும் போது நானும் உடன் வருவேன்! நீங்கள் எகிப்திலும், நான் ரோமிலும் தனித்திருக்கக் கூடாது! எகிப்த் ரோமுக்குச் சொந்தம்! உங்களுக்குச் சொந்தமில்லை! நீங்கள் எனக்குரிமை யானவர்! ஆனால் கிளியோபாத்ரா உங்களுக் குரியவள் அல்ல. நீங்கள் எகிப்துக்குத் தனியே போகக் கூடாது! கிளியோபாத்ரா உங்களைச் சிறைப் படுத்தி விடுவாள்! சீஸரும் அப்படித்தான் அவளிடம் சிறைப்பட்டுப் போனாள்! வாக்குறுதி அளிப்பீரா?
[அப்போது ஜோதிடர் நுழைகிறார்]
ஜோதிடர்: மாண்புமிகு தளபதியாரே! மாதரசி அக்டேவியா! வந்தனம் உங்களுக்கு! அழைத்தீராமே!
ஆண்டனி: [கேலியாக] ஜோதிடரே, சொல்வீர்! எகிப்தில் குடியிருக்க விரும்புவீரா?
ஜோதிடர்: நான் அந்த நாட்டில் பிறந்தவன் அல்லன். நீங்களும் அங்கே பிறந்தவர் அல்லர். எதற்காகக் கேட்கிறீர் என்னை? கிளியோபாத்ராவின் அரண்மனையில் ஜோதிடருக்கு வேலை கிடைக்குமா? எகிப்த் மொழி தெரியாது எனக்கு! மேலும் எகிப்த் ஜோதிட நிபுணர்கள் என்னை விட சாமர்த்தியசாலிகள்! வேலை தேடிப் போனாலும் நிராகரிக்கப் படுவேன்!
ஆண்டனி: [கையைக் காட்டி] சொல்லப்பா ஜோதிடம்! யாருடைய அதிஷ்டம் உயர்ந்தது? என் அதிர்ஷ்டமா? அல்லது அக்டேவியஸ் அதிர்ஷ்டமா?
அக்டேவியா: [கையைக் காட்டி] ஜோதிடரே! முதலில் எனக்குச் சொல்லுங்கள். நான் எகிப்துக்குச் செல்வேனா?
ஜோதிடர்: மன்னிக்க வேண்டும். முதலில் ஆண்டனிக்குச் சொல்கிறேன்! உங்கள் அதிர்ஷ்டம் தாழ்ந்து போனது! அக்டேவியஸ் அதிர்ஷ்டம் கொடிகட்டிப் பறக்கப் போகிறது!
ஆண்டனி: எப்படி அதைச் சொல்வீர்? என் கையில் அக்டேவியஸ் ரேகை கிடையாது!
ஜோதிடர்: அக்டேவியஸ் கையை நான் பார்த்திருக்கிறேன். ஆண்டனி! அக்டேவியஸ் அருகில் நில்லாதீர்! அவரது ஆத்மா வலிமை மிக்கது! அச்சம் உண்டாக்குவது! ஆக்கிரமித்து அடிமை ஆக்குவது! உங்களின் ஆத்மா உன்னத மானது! அச்சமில்லாதது! ஈடிணை அற்றது. அவரை விட்டுத் தள்ளியே நில்லுங்கள்! அவரை எதிர்த்துச் செல்லாதீர்!
ஆண்டனி: [கவனமுடன்] யாரிடமும் அதைச் சொல்லாதே!
ஜோதிடர்: யாரிடமும் சொல்ல மாட்டேன், உங்களைத் தவிர. இனிமேலும் சொல்ல மாட்டேன், உங்களுக்குத் தேவையான வேளை தவிர. எதிலும் போட்டி என்று வந்தால் நீங்கள் அவரிடம் நிச்சயம் தோற்றுப் போவீர்! அக்டேவியஸின் அதிர்ஷ்ட தேவதை எந்த எதிர்பாரா விளைவிலிருந்தும் விடுவித்து அவருக்கு வெற்றியைத் தருவாள்! உங்களுடைய ஒளி அக்டேவியஸ் அருகிலே மங்கித்தான் போகும்! உங்களுடைய ஆத்மா அவர் அருகில் ஆட்சி செய்ய அஞ்சி ஒதுங்கி விடும்!
ஆண்டனி: [கோபத்துடன்] வாயை மூடிக் கொண்டு வெளியேறு! உன் வாக்குகள் யாவும் அர்த்த மற்றவை.
ஜோதிடர்: ஆண்டனி, மன்னித்து விடுங்கள். அக்டேவியா என்னிடம் கேட்டதைச் சொல்லி விட்டுப் போகிறேன். [அக்டேவியாவைப் பார்த்து] ஆமாம் என்ன கேட்டீர்? எகிப்துக்குப் போவேனா என்று கேட்டீர். காட்டுங்கள் கையை. [அக்டேவியா கையை நீட்டுகிறாள்] போவீர் நிச்சயம் எகிப்துக்கு! நிரம்ப பேரீச்சம் பழங்கள் தின்னுங்கள்! ஆண்டனி எகிப்துக்குப் போவார்! அவரோடு நீங்களும் போகலாம்.
அக்டேவியா: [கெஞ்சலாக] எகிப்தில் நானும் ஆண்டனியும் சேர்ந்து வாழ்வோமா? அல்லது பிரிந்து போவோமா? எனக்குப் பயமாய் இருக்கிறது ஆண்டனி எகிப்த் போவதற்கு!
ஆண்டனி: ஜோதிடரே! உமது வாயிலின்று வருவதெல்லாம் பொய்கள். உமது எச்சரிக்கையில் என்னை மட்டும் குழப்பியது போதும். எதையாவது தப்பாகச் சொல்லி அக்டேவியா தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம். போ, சீக்கிரம் போ! திரும்பிப் பாராமல் போ! [ஜோதிடர் விரைந்து வெளியேறுகிறார்] எகிப்த் நாடுதான் எனக்கு ஏற்றது! மனச் சாந்திக்கு என் திருமணம்! ஆனால் எகிப்தில்தான் என் சொர்க்கம் உள்ளது. நான் எகிப்துக்குப் போகத் தயார் செய். முதலில் நான் மட்டும் தனியே போவேன்! கிளியோபாத்ரா உன்னைக் கண்டால் என்ன செய்வாளோ, எனக்குத் தெரியாது. அவள் மனத்தைப் பக்குவப் படுத்தி உன்னை ஏற்றுக் கொள்ள ஒப்ப வைப்பேன்! அதுவரை அக்டேவியா, நீ பொறுமையாக இருக்க வேண்டும்.
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)
அங்கம் -6 காட்சி -4
எங்கே ஆண்டனி? எவருடன் உள்ளார்?
என்ன செய்கிறார்? என்னைக் கூறாய்
உன்னை அனுப்பிய தென்று! ஆண்டனி
சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம்,
ஆடிப் பாடி உள்ளேன் என்று! அவர்
பூரித்தி ருந்தால் நோயில் துடிப்பதாய்க்
கூறிடு! போய்வா சீக்கிரம் ! …(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
கண்ணியப் பிரபு! ஒரு வார்த்தை புகல்வேன்!
பிரியத்தான் வேண்டும் நீங்களும் நானும்!
அது மட்டு மில்லை!
நேசிப்ப துண்மை நீங்களும், நானும் !
அது மட்டு மில்லை!
நிச்சயம் அறிவீர் நீவீர்! சொல்கிறேன்,
மறக்கும் என் நினைவு, என்னைத்
துறக்கும் ஆண்டனி போன்றது! …(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என்னை மறந்து ஆண்டனி ஒதுங்கினால்
முன்னம் பீடிக்கும் மனநோய் என்னை!
மின்னலாய் நீங்கிப் பொங்கும் உடல்நலம்,
அன்புக் காதலை ஆண்டனி காட்டினால்! …(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
முகத்தைத் திருப்பி அழுவாய் அப்புறம்
மனைவிக் காக நீ ஆண்டனி !
என்னிடம் விடைபெற்று ஏகுவாய், இப்புறம்
எகிப்துக்குக் கண்ணீர் விடுவதாய்க் கூறி ! …(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)
கிளியோபாத்ராரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
நேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்
காட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் தனித்துப் போய் மரணம் அடைந்த மனைவி புல்வியாவை எண்ணிக் கலங்கிய வண்ணம் ஆண்டனி ரோமாபுரிக்கு மீள வேண்டும் என்று அலை மோதிய நிலையில் இருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ் சகாக்களோடு வருகிறாள்.
கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] அலெக்ஸாஸ்! சார்மியான்! எங்கே ஆண்டனி? யாரோ டிருக்கிறார்? தேடிப் பாருங்கள். எகிப்தில் நடமாடிக் கொண்டு என் கண்களில் படாமல் என்ன செய்கிறார் என்று தெரிந்து வாருங்கள். என்னை விட்டுப் போக அவரைக் கவர்ச்சி செய்வது எது?
சார்மியான்: மகாராணி! நாலைந்து நாட்களாக நானும் ஆண்டனியைப் பார்க்க வில்லை.
அலெக்ஸாஸ்: மகாராணி! அவரது மனைவி புல்வியாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.
கிளியோபாத்ரா: [சினத்துடன்] உயிரோடு கிளியோபாத்ரா உள்ள போது, செத்துப் போன புல்வியாவை நினைத்தா புலம்பிக் கொண்டிருக்கிறார்? அவளைத் தனியாகப் போர்க்களத்தில் விட்டு வந்த ஆண்டனிக்கு, அவள் மீது எப்படி அனுதாபம் வந்தது?
அலெக்ஸாஸ்: அவள் தனியே நோயில் சாகட்டும் என்று ஆண்டனிதான் காத்திருந்தார்.
கிளியோபாத்ரா: அப்படி என்றால் அவள் செத்துவிட்டாள் என்று ஆண்டனி ஆனந்தமாகத்தான் இருப்பார்! போய்ப் பார்த்து வா அலெக்ஸாஸ்! அவர் ஆனந்தமாக இருந்தால், கிளியோபாத்ரா திடீரொன நோயால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறாள் என்று சொல்.
சார்மியான்: அப்படி யில்லை மகாராணி! அலெக்ஸாஸ் சொல்வது தவறு. ஆண்டனி மனக் கவலையில் வாடுகிறார் என்பது நானறிந்த உண்மை.
கிளியோபாத்ரா: [ஆர்வமோடு] அப்படியா? போய்ப் பார்த்து வா, சார்மியான்! ஆண்டனி மனக் கவலையில் இருந்தால், கிளியோபாத்ரா ஆடிப் பாடி ஆனந்தமாய் இருக்கிறாள் என்று சொல்.
ஐரிஸ்: மகாராணி, நீங்கள் ஆண்டனி பிரபுவை நேசிப்பது போல், உங்கள் மீது அவர் தீராக் காதல் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.
கிளியோபாத்ரா: எப்படிச் செய்வது சொல் ஐரிஸ். நான் என்ன செய்யாமல் தவறுகிறேன்?
ஐரிஸ்: அவர் கேட்பதை எல்லாம் அளித்து விடுங்கள். எதையும் குறுக்கிட்டு மாட்டேன் என்று எதிர்க்காதீர்கள்.
கிளியோபாத்ரா: முட்டாளைப் போல் பேசுகிறாய் ஐரிஸ்! அவரை இழக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாய்.
ஐரிஸ்: கவர்ச்சியாகப் பேசுங்கள், கனிவாகப் பேசுங்கள், காரமாய்ப் பேசினால் பாராமல் போவார். அதோ அங்கே, ஆண்டனி கோமான் வருகிறார். [ஆண்டனி சோகமாய் நுழைகிறார்]
கிளியோபாத்ரா: [தலையில் கைவைத்து ஆண்டனியைப் பார்க்காது] எனக்குத் தலைவலி! மனவலி! உடல் வலி! ஐரிஸ்! மதுபானம் கொண்டுவா! மருந்தைக் கொண்டுவா! அலெக்ஸாஸ், நீ போய் மருத்துவரை அழைத்து வா! வரும் போது ஜோதிடரைக் கண்டு என்னைப் பார்க்க வரச் சொல். ஏன் என்னை நோய் தாக்குது என்று கேட்க வேண்டும். [ஐரிஸ், அலெக்ஸாஸ் வெளியேறுகிறார்கள்]
ஆண்டனி: [வருத்தமுடன்] அன்பே! கிளியோபாத்ரா! என்ன செய்கிறது உடம்புக்கு? சொல்லி விடக் கூடாதா எனக்கு? நானிங்கே வந்திருப்பது உனக்காக! ரோமை விட்டு வந்திருப்பது உனக்காக! நாட்டை ஆளாது நானிங்கு வந்திருப்பது உனக்காக! வீட்டை, மனைவியை விட்டு வந்திருப்பது உனக்காக!
[ஐரிஸ் மதுக் கிண்ணமுடன் மருந்தைக் கொண்டு வந்து கிளியோபாத்ராவுக்குத் தருகிறாள்]
கிளியோபாத்ரா: ஐரிஸ்! பிடித்துக் கொள் என்னை! தலை சுற்றுகிறது. [ஆண்டனி ஓடி வந்து கிளியோபாத்ராவைப் பிடித்துக் கொள்கிறான்]
ஆண்டனி: நான் உன்னருகில் இருக்கிறேன், கிளியோபாத்ரா! உன் தலை சுற்றாமல் நான் பிடித்துக் கொள்கிறேன். [கிளியோபாத்ராவை மெதுவாக மெத்தையில் படுக்க வைக்கிறான்] ஐரிஸ்! மருந்தை என்னிடம் கொடு! எனக்கும் மது பானம் கொண்டு வா!
கிளியோபாத்ரா: ஐரிஸ்! மருந்தை என் கையில் கொடு. தன் வேளையில் மும்முரமாய் உள்ளவர் எனக்கு உதவி செய்ய வேண்டாம்! பாரா முகமாய்க் காணாமல் போனவர் பரிவு எனக்கு வேண்டாம். [ஆண்டனியைப் பார்த்து] புல்வியாவின் ஈமக் கிரியைக்குப் போக வில்லையா?
ஆண்டனி: போவதா, கூடாதா என்று அலைமோதும் என் இதயம்! போக நினைத்துப் படகில் ஏறி நான் அமர்ந்தேன்! உன் நினைவு வந்தது! கீழே இறங்கி வந்து விட்டேன்! கவலப் படாதே கிளியோபாத்ரா! உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன்!
கிளியோபாத்ரா: நீங்கள் சொல்வது உண்மையா? உங்கள் புல்வியாவை விட முக்கியமானவளா நான்? முறைப்படி உங்களை மணந்தவள் அவள்! எனக்கென்ன பிடியுள்ளது? உங்களை உரிமையாக பிணைத்துக் கொள்ள என்னிடம் என்ன உள்ளது? நீங்கள் நினைத்தால் வருவீர்; நினைத்தால் போவீர்! அலெக்ஸாண்டிரியா அரண்மனை ரோமானியரின் சத்திரமாகி விட்டது! சாவடியாகி விட்டது!
ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! அப்படிச் சொல்லாதே! ஆண்டனிக்கு ரோமாபுரிதான் ஒரு சத்திரமாகி விட்டது. அலெக்ஸாண்டிரியா சொந்த பூமியாகி விட்டது! கிளியோபாரா எனக்குச் சொந்தமாகப் போகிறாள்.
கிளியோபாத்ரா: எகிப்த் எப்படி உங்களுக்குச் சொந்த பூமியானது! செத்துப் போன சீஸரின் மனைவி என்றுதான் எல்லாரும் என்னை நினைக்கிறார்கள். எப்போது நீங்கள் என்னைச் சொந்த மாக்கப் போகிறீர்?
ஆண்டனி: [வருத்தமுடன்] புல்வியா செத்து அவள் ஆத்மா போய் விட்டாலும், அது என்னைச் சுற்றிக் கொண்டுள்ளது இப்போது! அவள் போய்விட்டாலும் அவளது நிழல் என்னைப் பின்பற்றி வருகிறது. அந்த மனக் கனவுகள் என்னை விட்டு அகல வேண்டும். உன்னை நான் ஏற்றுக் கொள்ளும் போது, என்மனம் உன்னைத்தான் முற்றுகையிட வேண்டும். புல்வியாவின் ஆவி என்னைச் சுற்றி வரும்போது, நான் எப்படி உன்னைப் பற்றிக் கொள்வது?
கிளியோபாத்ரா: [ஆத்திரமாக] ஆண்டனி! ரோமுக்குப் போங்கள்! புல்வியா புதைக்கப் பட்ட பூமியில் உங்கள் கண்ணீரைக் கொட்டுங்கள்! எகிப்தில் உங்கள் கண்ணீர் ஒருதுளி சிந்தக் கூடாது! உங்கள் உடல் எகிப்தில் இருந்தாலும் உள்ளம் ரோமில்தான் உலவிக் கொண்டு வருகிறது! புல்வியாவுக்கு புனிதக் கண்ணீரும், கிளியோபாத்ராவுக்கு முதலைக் கண்ணீரும் விட வேண்டாம். அப்புறம் திரும்பி அவளுக்காக அழுவீர் ஆண்டனி! இப்புறம் என்னிடம் விடைபெற்று ஏகுவீர், கண்ணீரை எகிப்துக்கு விடுவதாய்க் கூறி!
ஆண்டனி: [கோபமாக] கிளியோபாத்ரா! என் குருதியைக் கொதிக்க வைக்கிறாய்! போதும் நிறுத்து உன் புலம்பலை!
கிளியோபாத்ரா: [கனிவுடன்] ஆண்டனி! ஒரு வார்த்தை சொல்கிறேன்! நீங்களும் நானும் பிரிய வேண்டும்! அது மட்டு மில்லை! நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். அது போகட்டும்! உங்களைப் போல் எனக்கும் மறதி வரட்டும்! நிம்மதியாக மறந்து நான் தனியாகக் கிடக்கலாம். நீங்கள் என்னருகில் இருந்தாலும், நான் தனிமையில்தான் நோகிறேன். உங்கள் அரசாங்கப் பணிகள் உங்களை அழைக்கின்றன! எனது கனிவு மொழிகளைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். போங்கள்! வெற்றி உங்களுக்குத்தான்! தோல்வி எனக்குத்தான்! பிரிவு எனக்குத்தான்! வேதனை எனக்குத்தான்!
ஆண்டனி: சரி போகிறேன், கிளியோபாத்ரா! போனதும் வந்து விடுகிறேன்! கண நேரப் பிரிவு! கண நேரப் பிணைப்பு! பிணைப்பும், பிரிவும் மாறி மாறி வரும் பகலிரவு போல! கண்ணிமைப் பொழுதில் சேர்கிறோம்! கண்ணிமைப் பொழுதில் பிரிகிறோம்! பிணைப்பு பிரிவுக்கு வழி யிடுகிறது! பிரிவு பிணைப்புக்கு முயல்கிறது! பிணைப்பும், பிரிவும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள்! ஒருமுக நாணயத்தை எங்காவது கண்டிருக்கிறாயா? போய் வருகிறேன், கிளியோபாத்ரா!
[ஆண்டனி வெளியேறுகிறார். கிளியோபாத்ரா கண்ணீருடன் ஆண்டனி போகும் திசையை நோக்குகிறாள்]
*********************
அங்கம் -6 காட்சி -5
தூக்க பானத்தைக் கொடுத்திடு!
காலப் பெரு இடைவெளி கடந்திட!
எனைவிட் டேகினார் என்னினிய ஆண்டனி! …கிளியோபாத்ரா
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தி யுள்ளாரா?
நடக்கிறாரா? அன்றிக் குதிரைமேல் சவாரியா?
ஆண்டனி பளுவைச் சுமக்கும் குதிரையே!
யாரைச் சுமந்தேன் எனும் தீர நடையில் செல்! …(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என்னரும் ராணி அவர் இறுதியாய்ச் செய்தது!
முத்த மிட்டார் இவ்வாசிய முத்தை இருமுறை!
அப்பிக் கொண்டன நெஞ்சை அந்த மொழிகள்!
“அருமை நண்பா! நிமிர்ந்த ஆண்டனி
எகிப்து அழகிக்குச் சிப்பிக் களஞ்சியம்
அனுப்பிய தாக உரைத்திடு” என்பார்.
பிணைப்பேன் அவள் பொன் ஆசனத்துடன்,
பிடித்த என் நாடுகளை எல்லாம்.
ஆசிய நாடுகள் அனைத்தும் அவளை
ஆசை நாயகியாய் அழைக்கும் எனச்சொல்! …(அலெக்ஸாஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
பனித்த குருதியில் என்னறியாப் பருவத்தில்,
நல்லது, கெட்டது புரியாத் தருணத்தில்,
தனித்து அப்பாவி போல் சொல்லியது :
கொண்டுவா தாளையும், மையையும். எகிப்த்
குடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக்
கடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு! …கிளியோபாத்ரா
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
ஃபிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ஃபுல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி.
ரோமாபுரி அரண்மனையில் தளபதி அக்டேவியஸ் எகிப்திலிருந்து ஆண்டனி போரில் கலந்து கொள்ள வரவில்லை என்று செய்தி கொண்டுவந்த கடிதத்தைக் கையில் பார்த்துக் கொண்டு ஆத்திரமோடு உள்ளார். கொல்லப்பட்ட பாம்ப்பியின் மகன் ஸெக்டஸ் பாம்ப்பி தனது படைகளுடன் ரோமைக் கைப்பற்ற வந்து கொண்டிருக்கிறான்.
அக்டேவியஸ்: பார் லெப்பிடஸ்! ஆண்டனி வரவில்லை! எகிப்தில் கட்டாய வேலை யிருப்பதால், ஆண்டனி போரில் கலந்த கொள்ள முடியாதாம். ஸெக்டஸ் பாம்ப்பி ரோமின் எல்லையில் உள்ளதாய் அறிந்தேன்! லெப்பிடஸ்! நீ ஒருவன் மட்டும் பாம்ப்பியை எதிர்க்க முடியாது! ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி! என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு? கிளியோபாத்ரா கண்சிமிட்டும் போது முத்தமிடுவதைத் தவிரக் கட்டாய வேலை வேறு என்ன ஆண்டனிக்கு?
லெப்பிடஸ்: நமது நிதிக் களஞ்சியம் வற்றிப் போனதை மறந்து விட்டாயா, அக்டேவியஸ்! நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா? கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை! நான் உள்ள போது நீயேன் கலங்க வேண்டும்?
அக்டேவியஸ்: சீஸருக்குப் பிறகு ரோமாபுரியின் பராக்கிரமத் தளபதியாய், ஆண்டனி தனித்து நிற்கிறார். அவரிடம் நாம் குற்றம் காணக் கூடாது! ஆனால் மாவீரர் ஆண்டனி யில்லாமலே நான் பாம்ப்பியின் படைகளை நசுக்க முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது!
அக்டேவியஸ்: உன் நம்பிக்கை மட்டும் போதாது லெப்பிடஸ்! நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும்! அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர்! நமது பொறுப்பில் விட்டுவிட்டு ஆண்டனி கிளியோபாத்ரா மடியில் படுத்துக் கிடப்பது எனக்கு வேதனை தருகிறது. பாம்ப்பியை நாமிருவரும் தோற்கடித்தால் அவர் தன் முதுகில்தான் தட்டிக் கொள்வார். மாறாக நாமிருவரும் தோற்றுப் போனால், உன்னையும் என்னையும் திட்டி ஊரெங்கும் முரசடிப்பார்!
லெப்பிடஸ்: ஈதோ போர் முனையிலிருந்து நமக்கு முதல் தகவல் வருகிறது.
[அப்போது ஒரு படைத் தூதுவன் வருகிறான்]
முதல் தூதுவன்: மாண்புமிகு தளபதி அவர்களே! ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா? பாம்ப்பியின் கடற் படைப்பலம் வல்லமை உள்ளது. அக்டேவியஸ் தீரருக்கு அஞ்சியவர் அனைவரும் பாம்ப்பியின் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கிறார். அவரது ஒற்றர் அவருக்குத் தவறான தகவலைக் கொடுக்க வழி செய்தோம் நாங்கள்!
அக்டேவியஸ்: மெச்சினேன் உன்னை! தப்பான தகவல் கொடுங்கள்! தவறான பாதையைக் காட்டுங்கள்! மாட்டிக் கொண்டதும் அவரைச் சுற்றித் தாக்கி ஈட்டியால் குத்துங்கள்!
[முதல் தூதுவன் போகிறான். அடுத்த தூதுவன் நுழைகிறான்]
இரண்டாம் தூதுவன்: மாபெரும் கடற் கொள்ளைக்காரர் பலரைப் பாம்ப்பி படைவீரராய்ச் சேர்த்திருக்கிறார். அந்த பயங்கர வாதிகள் பரிவுள்ள மனிதர் அல்லர். வன விலங்குகள்! நாம் மிகக் கவனமாகப் போரிட வேண்டும்.
அக்டேவியஸ்: முன்பே அறிவித்ததற்கு நன்றி. போய் வா [தூதுவன் போகிறான்] லெப்பிடஸ்! புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை! வாலிபர் நெஞ்சம் வைரம் போன்றது. கடற் கொள்ளைக்காரர் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்துக் கப்பலுக்குள் அவர் நுழைய வேண்டும். திடீரெனத் தாக்கி அவருக்கு மரண அதிர்ச்சி கொடுக்க வேண்டும். ஆண்டனி யிருந்தால் அவரது ஆலோசனை பயன்படும். அவர் கடற்போர் புரியும் நேரத்தில் கிளியோபாத்ராவுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருப்பார்.
லெப்பிடஸ்: ஆண்டனியால் நமக்கும் அவமானம்!, அவருக்கும் அவமானம்! தன்மான மின்றி அடிமையாய்ப் பெண்மானின் காலை வருடிக் கொண்டிருக்கிறார்! ஆண்டனி கிளியோபாத்ராவுக்கு அடிமையா? அல்லது கிளியோபாத்ரா ஆண்டனிக்கு அடிமையா? .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும்! நமது கலப்பு யோசனைகள் சேரட்டும்! நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார்! நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன்! நான் போகட்டுமா? விடை பெறுகிறேன். [வெளியேறுகிறான்]
அக்டேவியஸ்: போய்வா லெப்பிடஸ்! … ஆண்டனி! உனக்கு அழிவு காலம் உதய மாகி விட்டது. அறிவை அடகு வைத்து அணங்கின் பிடியில் வீரன் நீ அகப்பட்டுக் கிடக்கிறாய்! உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன! நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது! [போகிறான்]
கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] ஐரிஸ்! அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா! [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை! நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க! தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும்! அதுவரை எனக்கு உணவில்லை! கனவில்லை! நினைவில்லை! எதுவுமில்லை! ஆண்டனி விழிமுன் நின்றால், கண்ணிமைகள் தானாகவே திறக்கும். சார்மியான்! வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் சொல்! [சார்மியான் போகிறான்]. அலெக்ஸாஸ்! எனக்குத் தெரியாமல், எனக்குச் சொல்லாமல் ஆண்டனி ரோமாபுரிக்குப் போய் விட்டாரா என்று அறிந்து வா! போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா! [அலெக்ஸாஸ் போகிறான்]
[ஐரிஸ் கொண்டு வரும் தூக்க பானத்தை அருந்திப் படுக்கையில் சாய்கிறாள்]
கிளியோபாத்ரா: [எழுந்து] மார்டியான்! ஆண்டனி எங்கே போயிருக்க முடியும் என்று உன்னால் ஊகிக்க முடியுதா? எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா? கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா? ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா? அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா? அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை! எத்தகைய கோமானைச் சுமக்கிற தென்று அக்குதிரை பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!
[அப்போது கையில் சிறு பேழையோடு அலெக்ஸாஸ் நுழைகிறான்]
அலெக்ஸாஸ்: மகாராணி! ஈதோ ஒரு பரிசை ஆண்டனி அனுப்பி யிருக்கிறார்! உள்ளிருப்பது நல்முத்து ! மூன்று முறை முத்தமிட்டு ஆண்டனி அளித்ததாகத் தூதர் சொல்கிறார். இது ஆசிய முத்து! ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ! [கையில் கொடுக்கிறான்]
கிளியோபாத்ரா: ஆண்டனி முத்தமிட்ட முத்தென்றால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு! அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும்! அக்கனவுகளில் முத்தை முத்தமிட்ட ஆண்டனி என்னை முத்தமிட வருவார்!
அலெக்ஸாஸ்: மகாராணி! ஆண்டனி தூதர் மூலம் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் உங்களுக்கு. ஈதோ கடிதம் [கடித்ததைக் கொடுக்கிறான்]
கிளியோபாத்ரா: [கடித்தை வாசிக்கிறாள்] “ஆசியச் சிப்பியின் முத்தை உனக்கு அனுப்பியிருக்கிறேன். அது தனித்துவம் படைத்தது. ஏனெனில் எனதினிய முத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது. கண்ணே கிளியோபாத்ரா! ஈதோ என் மாபெரும் பரிசு! நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும்!” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே! அலெக்ஸாஸ்! தாளும், மையும் கொண்டுவா! நான் ஆண்டனிக்குக் கடிதம் எழுத வேண்டும். எகிப்தில் எழுதத் தெரிந்த அத்தனை பேரையும் தினமொரு முறை எழுத வைத்து, ஆண்டனிக்குக் கடிதம் அனுப்புவேன். முதல் கடிதம் என் கடிதம் என்னாசைக் காதலருக்கு!
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (8)
அங்கம் -6 காட்சி -1
வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு
மீள வேண்டும் வாழ நீ, குருதியில் மூழ்கி
மாள எதிராகப் போரிட்டு! …. (ஆண்டனி)வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்!
ரோம் சாம்ராஜி யத்தின்
தோரண வளையம் குப்புற வீழட்டும்!
என் வசிப்புத் தளம் இதுதான்!
அரசு மாளிகை அனைத்தும் களிமண்!
சாணிப் பூமி யானது,
மானி டனுக்கும் மிருகத் துக்கும்
தீனி யிடுவது வெவ்வேறு முறையில்!
வாழ்வின் புனிதம் இவ்விதம் புரிவது:
ஒருவரை ஒருவர் விரும்பி யிருவர்
ஒன்றாய்ப் பின்னிப் பிணைப்பது ! …(ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என்னை நேசிப்பது நீ உண்மை என்றால்
எவ்வள வென்று சொல்ல முடியுமா ? ….(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
கதைச் சுருக்கம்:
கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)ரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
நேரம், இடம்:
அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்
காட்சி அமைப்பு:
கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.
ஃபிலோ: [வெறுப்புடன்] சகிக்க முடிய வில்லை, டெமிடிரியஸ்! பார், தளபதியின் நிமிர்ந்த தலை தணிந்து விட்டது! தீக்கனல் கக்கி செவ்வாய் போல் செவ்வொளி மின்னிய கண்கள் கறைபட்டு நிலவுபோல் மங்கி விட்டன! அவரது இரும்பு நெஞ்சம் தளர்ந்து, இடையில் கட்டியுள்ள பெல்டும் சூம்பி விட்டது! வெள்ளைப் புறாவைப் போல் மனைவி •புல்வியா ரோமிலே காத்துக் கிடக்க, பளுப்பு மேனி ஜிப்ஸியைத் தேடி வர வேண்டுமா? கிளியோபாத்ரா மோகத்தைத் தணிக்க ஓடி வர வேண்டுமா? சீஸரைக் கவர்ந்த ஜிப்ஸியின் சிலந்தி வலையில் பிடிபடப் போவது அடுத்து ஆண்டனி.
டெமிடிரியஸ்: கிளியோபாத்ரா ஒரு கருப்பு விதவை தெரியுமா? அவளை மணந்தவன் சிறிது நாட்களில் செத்துப் போகிறான். முதல் கணவன் டாலமி, சீஸரின் ஆட்கள் விரட்டி நைல் நதியில் மூழ்கிக் போனான்! இரண்டாம் கணவர் ஜூலியஸ் சீஸருக்கு என்ன ஆனது நமக்குத் தெரியும். அவரும் கொல்லப்பட்டார்! இப்போது ஆண்டனி! அவருக்கு என்ன ஆகுமோ?
[அப்போது வாத்தியக் கருவிகள் முழங்க, அறிவிப்புடன் கிளியோபாத்ரா, அவரது சேடியர், அடிமைப் பெண்கள் பின்சூழ நுழைகிறார். பின்னால் ஆண்டனி அவரது பாதுகாவலர் சூழ வந்து கொண்டிருக்கிறார்]
ஃபிலோ: பார் அங்கே, டெமிடிரிஸ்! எத்தனை கம்பீரமாக கிளியோபாத்ரா நடந்து வருகிறாள்! ஆனால் ஆண்டனி அடிமைபோல் பின்னால் வருவதைப் பார்! வேங்கை போலிருந்த ஆண்டனி, ஜிப்ஸியின் வனப்பில் மயங்கி மது அருந்திய மந்திபோல் நடந்து வருவது எப்படி யிருக்கிறது?
டெமிடிரியஸ்: [கிளியோபாத்ராவுக்கு முன் சென்று] மகாராணி ! ஆண்டனி உங்கள் கவர்ச்சிக்கு அடிமை! அவருக்கு உங்கள் மேல் ……!
கிளியோபாத்ரா: [திரும்பி நோக்கி] யாரது? ரோமானியப் படையாளா? முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு! எகிப்தின் விதிகள் உனக்குத் தெரியாதா? யார் உனது படைத் தளபதி?
டெமிடிரியஸ்: [நின்று கொண்டே] மகாராணி! ஆண்டனிதான் எங்கள் தளபதி!
கிளியோபாத்ரா: [கோபத்துடன், சீறி] அறிவு கெட்டவனே! அகந்தையோடு என்முன் நின்று கொண்டு பேசாதே! என் செவியில் எதுவும் விழாது! முதலில் என்முன் மண்டியிட்டுப் பேசு!
டெமிடிரிஸ்: மகாராணி! ரோமில் யாரும் மண்டியிடுவதில்லை! குடியரசு நாட்டில் யாவரும் சமம்!
கிளியோபாத்ரா: முட்டாள்! நீ நிற்பது எங்கே? ரோமிலா? எகிப்த் பூமியில்! மண்டியிடு அல்லது வெளியேறு! காட்டுமிராண்டிகள் ரோமில் செத்த வேந்தர் சீஸரைக் குப்பைக் கூளம்போல் எரித்தார்! எகிப்தில் மாபெரும் பிரமிட் கட்டி, நாங்கள் செத்தவரைப் புதைக்கிறோம்!
ஆண்டனி: [கோபத்துடன், முன்வந்து] கிளியோபாத்ரா! எப்படி ரோமானியனரை நீ காட்டுமிராண்டிகள் என்று சொல்வாய்?
கிளியோபாத்ரா: [முகத்தில் முறுவலுடன்] ஓ! மார்க் ஆண்டனியா? ரோமாபுரியின் முப்பெரும் தளபதியில் ஒருவரா? வருக, வருக, தங்கள் வரவு நல்வரவாகுக!
ஆண்டனி: போதும் உன் சாது மொழிகள்! மன்னிப்புக் கேள் என்னிடம்! காட்டுமிராண்டிகள் எகிப்தியர்! ரோமானியர் அல்லர்!
கிளியோபாத்ரா: மண்டியிட மறுக்கும் உங்கள் மடையனுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டியது நீங்கள்! சீஸரிங்கே தங்கி யிருந்த போது, எங்கள் மாபெரும் நூலகத்தை எரித்தார் உமது ரோமானியர்! அவர் முன்பாகவும் இப்படித்தான் காட்டுமிராண்டிகள் என்று கத்தினேன்! இப்போது மீண்டும் சொல்கிறேன்! சீஸரைக் குப்பையாக எரித்த ரோமானியர் காட்டுமிராண்டிகளே! மகத்தான பீடத்தில் புதைக்கப்பட வேண்டிய மன்னர் உங்கள் சீஸர்! அவர் சடலம் எகிப்தில் கிடந்தால், அவருக்கொரு பிரமிட் கட்டி நிரந்தமாகப் புதைத்திருப்போம். … சொல்லுங்கள், எதற்காக வந்தீர்கள் இங்கே?
ஆண்டனி: [கனிவுடன், குரல் தடுமாறி] கிளியோபாத்ரா! உன்னைக் காணத்தான் வந்தேன்! மூன்றாண்டுகள் ஓடிவிட்டன! எப்போது உன்னைச் சந்திப்போம் என்று கனவு கண்டேன்! நாளும், பொழுதும் என் மனம் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது!
கிளியோபாத்ரா: [கிண்டலாக] உங்கள் மனைவி •புல்வியாக்கு உங்கள் கனவைச் சொன்னீர்களா? அவளுக்குத் தெரியாமல் என்னை நினைப்பது சரியா? கட்டிய மனைவி உங்களைச் சும்மா விட்டாளா?
ஆண்டனி: [கண்ணீர் கலங்க] கிளியோபாத்ரா! •புல்வியா இறந்துபோய் விட்டாள்! என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள்! நான் தனித்துப் போய்விட்டேன்.
கிளியோபாத்ரா: [கிண்டலாக] ஏன் பிரிந்து போக மாட்டாள், கணவன் பிறமாதைக் கனவில் நினைத்துக் கொண்டிருந்தால் ! …. அடடா, ஆண்டனி! கண்களில் கண்ணீர் கொட்டுகிறதே! •புல்வியா மீது இப்படி பரிவும் நேசமும் கொண்ட நீங்கள், கிளியோபாத்ராவைத் தேடி வந்தேன் என்று சொல்வது முழுப் பொய்யல்லாவா? ரோமில் உமக்கொரு மங்கை கிடைக்க வில்லையா? சொல், எது உண்மை? •புல்வியா மீது உள்ள நேசமா? அல்லது கிளியோபாத்ரா மீதிருக்கும் காதலா? எது உண்மை? சொல், சொல் ஆண்டனி!
ஆண்டனி: [சற்று மனம் தேறி] •புல்வியா மீது எனக்கு வெறும் பரிவுதான்! ஆனால் நான் நேசிப்பது கிளியோபாத்ராவை! அதுதான் உண்மை! செத்துப் போன •புல்வியாவோடு, அவள் மீதிருந்த என் நேசமும் செத்து விட்டது! உன்னைக் கண்டதும் நேச மனம் புத்துயிர் பெற்று மீண்டும் எழுந்து விட்டது!
கிளியோபாத்ரா: ஓ, அப்படியா? ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னை என்றால் எனக்கு நிரூபித்துக் காட்டு!
*********************
அங்கம் -6 காட்சி -2
வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது, வாலிபம்
வரையிலா வெவ்வேறு வனப்பு மாறுபாடு! …..
உடல் நளினத்தை விளக்கிடப் போனால்,
எவரும் வருணித்து எழுத இயாலாது ! …..
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்தி ருந்தாள், அவளது
பொன்னிற மேனி, இயற்கை மிஞ்சியக்
கற்பனைச் சிற்பம்,
வீனஸ் அணங்கினும் மேம்படும் சிலை!வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
படகில் அமர்ந்தது அவள் பொன்மய ஆசனம்!
கடல் நீரும் தங்கமய மாகும் அதனால்!
படகின் மேல்தளம் முழுதும் பொன்தட்டு!
மிதப்பிகள் நிறம் பழுப்பு!
பரவிடும் நறுமணத் தெளிப்பு! அதனால்
தென்ற லுக்கும் காதல் நோய் பற்றும்!
படகின் துடுப்புகள் அனைத்தும் வெள்ளி!
ஊது குழலின் தாளத்துக் கேற்ப
கடல் அலைகளை உதைத்துத் துடுப்புகள்
வேகமாய்த் தள்ளும் காதல் துடிப்பு போல்!
அவள் மேனி வனப்பை விளக்க நினைப்பின்,
எவர்தான் வருணித்து எழுதிட முடியும் ?வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
என்னை நேசிப்பது நீ உண்மை என்றால்
எவ்வளவு என்று சொல்ல முடியுமா ? ….(கிளியோபாத்ரா)வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
ஃபிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)ரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
நேரம், இடம்:
அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்
காட்சி அமைப்பு:
கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ·பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு உள்ளே நுழைகிறார்கள்.
கிளியோபாத்ரா: ஓ, அப்படியா ஆண்டனி! நீ என்னை நேசிப்பது உண்மையானால் எவ்வளவென்று எனக்கு சொல்! நீ நேசிப்பது என்னைத் தவிர வேறு எவருமில்லை என்றால் இப்போது நிரூபித்துக் காட்டு!
ஆண்டனி: கிளியோபாத்ரா! உன்னை நான் நேசித்தது இன்றல்ல, நேற்றல்ல! என் காதல் காலம் கடந்தது! எல்லை கடந்தது! இனம் கடந்தது! நிறுத்துக் கூற முடியாது அதன் அளவை என்னால்! நிரூபித்துக் காட்ட முடியாது என்னால்! பல்லாண்டுக்கு முன் உன் தந்தையைக்கு உதவிட நான் வந்த போது, இளம் மங்கையாக இருந்த நீ அப்போதே என்னை நீ கவர்ந்தாய்! உன்னை நான் நேசித்தேன். சீஸரைக் காண நீ ரோம் வந்த போது உன் கண்கள் சீஸரை நோக்கின; என் விழிகள் உன்னைத் தேடின! சீஸரை நீ முத்தமிட்ட போது, என் உதடுகள்தான் உன் அதரங்களைச் சுவைத்தன! சீஸரை நீ அணைத்த போது உன் ஆலிங்கனம் என் மார்பைத்தான் தழுவிக் கொண்டது! சீஸர் இன்றில்லை! இருப்பது நீயும், நானும்தான் இப்போது!
கிளியோபாத்ரா: [சற்று கவலையுடன்] ஆனாலும் சீஸரை என்னால் மறக்க முடியவில்லை! சீஸர் என் தேவர்! சீஸர் என் அலெக்ஸாண்டர்! சீஸர் என் ·பாரோ வேந்தர்! அவரைப் போலொரு தீரர் ரோமிலினி எப்போது பிறப்பார்? அவரை இழந்தது ரோம் மட்டுமில்லை! எகிப்தும் அவரை இழந்து விட்டது! எகிப்த் ராணி கிளியோபாத்ராவும் அவரின்றி ஏங்கிக் கொண்டிருக்கிறாள் [முகத்தைத் திருப்பி கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள்.
ஆண்டனி: கிளியோபாத்ரா! சீஸருக்காக என் கண்களும் அன்றும் அழுதன! இன்றும் அழுகின்றன! நாளை தினமும் அவை ஏங்கித் தவிக்கும். உண்மையாக உனக்குத்தான் சீஸர் மீது நேசம்! அவருக்கு உன்மீது நேசம் கிடையாது; உன்மீது சீஸர் கொண்டது வெறும் மோகம்!
கிளியோபாத்ரா: [சினத்துடன்] அப்படி நீங்கள் சொல்வது தவறு! என்மீது சீஸருக்கு உயிர்! என் மகன் மீது சீஸருக்கு உயிர்! இப்படி வஞ்சகமாகப் பேசி என்னை நீங்கள் கவர முடியாது!
ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] சீஸருக்கு யார் மீதும் பாசமோ, பற்றோ, நேசமோ உள்ளதாகத் தெரியவில்லை எனக்கு! நிச்சயம் உன் மீது கிடையாது! உன் மகன் மீது பாசம், நேசமிருக்கலாம், அவரது புதல்வன் என்பதால்…!
கிளியோபாத்ரா: [வெடிப்பாக] பிடிக்காத என்னை எப்படி மணம் புரிந்தார் சீஸர்? நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு!
ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! திருமணம் நடந்தது உனக்கும் சீஸருக்கு மில்லை! ரோமுக்கும் எகிப்துக்கும் நடந்த தேசத் திருமணம் அது! சீஸர் செத்ததும் எகிப்த் விதவை ஆகி விட்டது! எகிப்து இனி ரோமைப் பற்றி ஏங்குவது சரியில்லை. [சிரிக்கிறான்]
கிளியோபாத்ரா: [சோகமாக] அப்படியானால் கிளியோபாத்ராவை விதவை என்று கேலி பண்ணுகிறீர்!
ஆண்டனி: ஆண்டனி அப்படிச் சொல்ல வில்லை! கிளியோபாத்ராதான் அப்படிச் சொல்கிறாள்! அறுந்து போன உறவைப் பிணைக்கத்தான் ஆண்டனி எகிப்துக்கு வந்திருக்கிறான்! ஏன் வந்தாய் என்று கேட்டாய் அல்லவா? அதற்குப் பதிலிதுதான்.
கிளியோபாத்ரா: [கவலையோடு] சீஸர் என்னுயிர் நேசர்! அவரின்றி என் மனம் தனிமையில் நோகும்! தனித்துப் போனேன் நான்! பகலிலும் அவர் நினைவு! இரவிலும் அவர் நினைவு! கனவிலும் அவர்தான்! நினைவிலும் அவர்தான்! காலியான என் நெஞ்சிலினிக் குடியேறுவது யார்? எகிப்தின் பாலைவனம் என்னுள்ளத்தில் பரவி விட்டது! பாலை நெஞ்சில் நைல் நதி மீண்டும் என்னை எப்போது தொடும்? சீஸர் உடலைக் கொண்டுவந்து எகிப்த் பிரமிடில் அடக்கம் செய்திருக்க வேண்டும்! ·பாரோ வேந்தரில் ஒருவரான சீஸரின் சடலம் பிரமிடில் புதைக்க வேண்டியது. மடையர்கள் சடலத்தை ரோமில் எரித்துச் சாம்பலாக்கி விட்டார்! அது வேறு என் மனதை வாட்டுகிறது! நான் செய்ய முடியாமல் போன பெரிய தவறாகத் தெரிகிறது.
ஆண்டனி: எனக்கும் ரோமாபுரி சலித்து விட்டது! புல்வியா செத்த பிறகு முற்றிலும் கசந்து விட்டது! உன்னைப் போல் நானும் இப்போது ஒரு தனிமரம், கிளியோபாத்ரா! அதனால்தான் எகிப்துக்கு வந்தேன்! பிரம்மாண்டமான அந்த பிரமிட் ஒன்றில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் கண்துஞ்ச வேண்டும் என்று நான் கனவு கண்டதுண்டு!
கிளியோபாத்ரா: ஆண்டனி! அறிவோடுதான் நீங்கள் பேசுகிறீர்களா? பிரமிடில் நீங்கள் எப்படி உறங்க முடியும்? முழுக்க முழுக்க நீங்கள் ஒரு ரோமன்! ரோமா புரியாளும் முப்பெரும் தளபதிகளில் மூத்தவர் நீங்கள்! நீங்கள் எப்படிப் ·பாரோ மன்னரின் பரம்பரை ஆவீர்?
ஆண்டனி: ரோமானியாரான சீஸருக்கு மட்டும் எப்படி பிரமிட் கோபுரம் சொந்தமாகும்?
கிளியோபாத்ரா: சீஸர் என்னைத் திருமணம் செய்து ·பாரோ மன்னரின் பரம்பரை ஆகிவிட்டார்!
ஆண்டனி: [சிந்தித்து] கிளியோபாத்ரா! சீஸரின் நிழல்தான் நான்! சீஸர் சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன் நான்! சீஸர் வழியே என் வழி! சீஸர்தான் என் குரு!
கிளியோபாத்ரா: [சட்டெனக் குறுக்கிட்டு] அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறீரா ஆண்டனி? … நீங்கள் சீஸர் ஆக முடியாது, அவர் வழியைப் பின்பற்றினாலும்.
ஆண்டனி: கிளியோபாத்ரா! சீஸர் வயதானவர்! நான் வாலிபன்! சீஸருக்குக் காதலிகள் பலர்! எனக்குக் காதலர் யாருமிலர்! நான் தனித்துப் போனவன்! நீயும் தனித்துப் போனவள்! உன்னை மணக்க என்ன தகுதி யில்லை எனக்கு? சொல்!
கிளியோபாத்ரா: [சினத்துடன்] என்னைத் திருமணம் செய்த சீஸருக்கு என்னவாயிற்று என்று தெரியும் உங்களுக்கு! சீஸரைப் பற்றி ரோம் என்ன சொல்லியது என்று தெரியும் உங்களுக்கு! என்னைப் பற்றி அசிங்கமாக ரோமாபுரி என்ன சொன்னது என்று தெரியும் உங்களுக்கு! ரோமைப் பற்றி ஏதும் கவலைப் பட வில்லையா நீங்கள்?
ஆண்டனி: [வெகுண்டு] தைபர் நதி ரோமா புரியில் உருகினால் என்ன? வெற்றி வளையம் ரோமில் குப்புற வீழ்ந்தால் என்ன? எனக்கொரு கவலை யில்லை! நான் வாழப் புகுந்த தளம் எகிப்துதான்! ராஜ மாளிகை வெறும் களிமண்! சாணிப் பூமி மானிடனுக்கும், மிருகத்துக்கும் தீனி அளிப்பது வெவ்வேறு விதங்களில்! நான் மனிதன்! தனிமைத் தளையை அறுத்துப் பாசமுடன் ஒருத்தியை நேசித்துப் பிணைத்துக் கொள்ள விரும்புபவன்! ரோமா புரியில் மிருகங்கள் பெருத்து விட்டன! ஒரு காலத்தில் மனிதர் மிருகத்தை வேட்டை ஆடினார்! இப்போது ரோமில் மிருகங்கள் மனிதரை வேட்டை ஆடுகின்றன! நான் எனது துணைப் பறவையைத் தேடி வந்திருக்கிறேன்!
கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] உன் துணைப் புறா எகிப்தில் இருக்கிறதா? … ஆமாம் ஒன்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் முதலில். … நேச விருப்பமின்றி பாசம் மட்டும் கொண்டு புல்வியாவை எப்படி மணந்தீர்?
ஆண்டனி: திருமணம் கணநேரத்தில் முடிவில் செய்தது! திருமணம் முடிந்து உடல்கள் முத்தமிட்ட பிறகு ஏமாற்றம் என்னைத் தொடர்ந்தது! புல்வியாக்கு ஏற்ற கணவனில்லை நான் என்று கண்டு கொண்டேன்! ஆமாம், என் துணைப்புறா எகிப்தில்தான் உள்ளது.
கிளியோபாத்ரா: தப்பு! தப்பு! தப்பு! புல்வியா உமக்கேற்ற மனைவி யில்லை என்பதைத் தானே கண்டு கொண்டீர்! நீவீர் மணக்க விரும்பும் துணைப்புறா ரோமுக்குக் குடிப்பெயராது என்று தெரியுமா?
ஆண்டனி: தெரியும்! அதனால்தான் ஆண்டனி எகிப்துக்குக் குடிப்பெயர்ப்பு செய்யத் துணிந்து விட்டான். கிளியோபாத்ரா! ஏனிப்படிக் கண்ணாமூச்சி விளையாடுகிறாய்?
கிளியோபாத்ரா: ஆண்டனி! நீங்கள் என்னைத் தேடி எகிப்துக்கு வருவீரா என்று நான் ஏங்கியதுண்டு! நீங்கள் வரும் வழிமேல் விழி வைத்திருந்தேன்! நீங்கள் வருவீர் என்று அறிவேன் நான்! சீஸர் விட்டுப் போன என் நெஞ்சக் கூண்டை ஆண்டனிக்காகத் திறந்து வைத்தேன்! நீங்கள் என் நெஞ்சக் கதவைத் தட்டுவீர் என்று தெரியும் எனக்கு! என் கனிந்த உதடுகளைத் தேடி உங்கள் உலர்ந்த உதடுகள் ஓடி வருவதைக் கனவில் கண்டேன்! என் கனவில் இப்போதெல்லாம் சீஸர் வருவதில்லை! நீங்கள் சொன்னது உண்மைதான்! சீஸர் என்னை நேசித்திருந்தால் அவரல்லவா என் கனவில் வர வேண்டும்? உங்கள் கனவில் கிளியோபாத்ரா வருகிறாளா? தினமும் வருகிறாளா? அப்படி வந்தால் என்றைக்கு வந்தாள் என்பது நினைவிருக்கிறதா?
ஆண்டனி: கண்ணே, கிளியோபாத்ரா! கனவில் நீ! நினைவில் நீ! என் கண்ணில் படும் பெண்கள் எல்லாம் உன்முகம் கொண்டுள்ளத்தைக் கண்டேன்! காட்சி எல்லாம் நீ! ரோமை விட்டு நீ போனதும் என் நெஞ்சம் காலியாய்ப் போனது! மெய்யாகப் பாதி உயிர் போனது! எனது மறுபாதியைத் தேடி எகிப்துக்கு வந்திருக்கிறேன். எனக்கு எகிப்த் வாசல் கதவுகள் வரவேற்பு அளிக்கும் என்று தெரியும். ரோமாபுரிக்கு நான் மீளப் போவதில்லை! எகிப்தே நாடே என் சொர்க்கபுரி! கடைசிக் காலத்தைக் கடத்தப் போகும் புனிதத் தளம்!
*********************
அங்கம் -6 காட்சி -3
(ஆண்டனி, பிரிந்து செல்லும்)
மெல்லோசை கேட்டால் (கிளியோபாத்ரா)
அக்கணமே உயிரை விடுவாள்!
ஒன்று மில்லா சிறு நிகழ்ச் சிக்கும்
பன்முறை அப்படிச் சாவதை நான்
கண்டுளேன் ; மரணம் மீதவள்
கொண்டுள்ள மோகம் மிகைதான்.எனோபரஸ்
வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)
நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி
எனோபரஸ் (ஆண்டனியின் பாதுகாவலன்),
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
ஃபிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.
நேரம், இடம்:
அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்
காட்சி அமைப்பு:
கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் •பிலோ, டெமிடிரியஸ் இருவரும் தமது தளபதி ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கிளியோபாத்ராவும், ஆண்டனியும் தம் சகாக்களோடு நிற்கும் போது, எனோபரஸ், சார்மியான், அலெக்ஸாஸ், ஜோதிடர் உள்ளே நுழைகிறார்கள்.
சார்மியான்: அலெக்ஸாஸ் பிரபு! என்னருமைப் பிரபு! அன்றைக்கு மகாராணி கிளியோபாத்ராவிடம் நீங்கள் புகழ்ந்த அந்தப் பெயர் போன ஜோதிடரை எங்கே? என் கையைக் காட்ட வேண்டும். என் திருமணத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். எத்தனை மனைவிகள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்? செல்வந்த மாதரா அல்லது சிங்கார மாதரா என்று அறியவும் ஆசை!
அலெக்ஸாஸ்: நம்மை நோக்கி அந்த ஜோதிட மேதை அதோ வருகிறார்!
ஜோதிடர்: [சிரித்துக் கொண்டு] மாளிகை ராணி, மன்னர் தேடும் என்னை எந்த வழிப்போக்கனும் காண முடியாது! யார் நீங்கள்? பொற் காசுகள் உள்ளனவா?
சார்மியான்: இவரா அந்த ஜோதிடர்? ஏதோ வட்டிக் கடைக்காரர் போலிருக்கிறது! இவரா புகழ்பெற்ற ஜோதிடர்? ஜோதிட சிகாமணியே! உங்களுக்கு மட்டும் எப்படி எதிர்காலம் தெரிகிறது? கடந்த காலம் தெரிகிறது! உங்களுக்கு நிகழ் காலம் தெரியுமா?
ஜோதிடர்: [சினத்துடன்] எக்காலமும் அறிந்தவன் நான்! உங்களுக்கு வேண்டியது போனதா? வருவாதா? அல்லது நிகழ்வதா? இயற்கையின் முடிவில்லா மர்ம, மாய நூலில் அடியேன் அறியாதன எதுவு மில்லை!
அலெக்ஸாஸ்: சார்மியான்! உன் கையைக் காட்டு, ஜோதிடர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.
சார்மியான்: [கையை நீட்டி] ஜோதிட சிகாமணி! எனக்கு நல்ல சேதிகளைக் கொடுங்கள்! எனக்குத் திருமணம் எப்போது? செல்வப் பெண்ணா? அல்லது சிங்காரப் பெண்ணா?
ஜோதிடர்: அட, கடவுளே! என்னால் கொடுக்க முடியாது! செல்வப் பெண்ணைத் தேடிப் போனால் சிங்காரப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண்ணைத் தேடிப் போனால், செல்வப் பெண் கிடைப்பாள்! சிங்காரப் பெண் உன் பையில் கையை விடுவாள்! செல்வப் பெண் பார்க்க அசிங்கமாய் இருப்பாள்! கடந்த காலம் ஓர் சதுராட்டம்! எதிர்காலம் ஒரு புதிராட்டம்! நிகழ் காலம் ஓர் அரங்கேற்றம்! எதைப் பற்றியும் நான் சொல்வேன்!
சார்மியான்: சொல்லுங்கள், சொல்லுங்கள்! எனக்கு நல்லதாகப் பார்த்துச் சொல்லுங்கள்.
ஜோதிடர்: இப்போது இருப்பதை விட நீ வெள்ளையாக இருக்க வேண்டியவன்.
சார்மியான்: [முகத்தைச் சுருக்கி] என் தோலின் நிறத்தைச் சொல்கிறீரா? யாரதை உம்மிடம் கேட்டது? வெள்ளையாக இருந்தால் என்ன? கருப்பாக இருந்தால் என்ன? காசு நிரம்பச் சம்பாதிப்பேனா? பணமில்லாமல் இருந்தால், மனைவியாவது கொண்டு வருவாளா?
ஜோதிடர்: [கைரேகையை உற்று நோக்கி] முகத்தில் சுருக்கு விழாமல் பார்த்துக் கொள்.
சார்மியான்: ஜோதிடரே! நீர் என் முகத்தைப் பார்த்தா சொல்கிறீர். கைரேகையைப் பார்க்கப் பணம் கொடுத்தால் முகரேகையைப் பார்ப்பதா?
அலெக்ஸாஸ்: அவமரியாதை செய்யாதே அவரை! ஜோதிடர் மகாராணிக்கு ஜோதிடம் சொல்பவர். கோபம் உண்டாக்கினல் எதுவும் சொல்லாமலே போய்விடுவார். அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்.
ஜோதிடர்: உன் காதலி மீது நீ அன்பைச் சொரிய வேண்டும். மனைவி இருந்தால் அவளை மிகவும் நேசிக்க வேண்டும் நீ.
சார்மியான்: [சிரித்துக் கொண்டு] மதுபானம் குடித்து என் கல்லீரலைச் சூடாக்கலாம் காதல் புரிய. எனக்கு மனைவியு மில்லை, காதலியு மில்லை! நல்ல ஜோதிடமிது. பேரதிர்ஷ்டம் வருவதுபோல் தெரியுது! மூன்று அரசிளங் குமரிகளைக் காலையில் மணந்து மாலையில் விதவை ஆக்க வேண்டும்!
அலெக்ஸாஸ்: மனைவி எப்படி விதவை ஆவாள், நீ சாகாமல்? அதுவும் மூன்று தரம் எப்படிச் சாவாய் நீ? கொஞ்சம் யோசித்துப் பேசு!
ஜோதிடர்: [கூர்மையாக நோக்கி] நீ எந்த ராணிக்குப் பணிபுரிகிறாயோ, அவளை விட நீண்ட ஆயுளோடு வாழ்வாய்!
ஆண்டனி
சார்மியான்: [சிரித்துக் கொண்டு] ஓ! எனக்கு நீண்ட ஆயுளா? பெருமகிழ்ச்சி! இரண்டு அல்லது மூன்று தரம் திருமணம் செய்து கொள்ளலாம்.
அலெக்ஸாஸ்: ஜோதிட சிகாமணி! என்ன சொல்கிறீர்? அப்படியானால் கிளியோபாத்ராவுக்குக் குறைந்த ஆயுளா? சார்மியான் ஆயுளைப் பற்றி யார் கவலைப் படுகிறார்? கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றி சார்மியான் கைரேகை எப்படிக் காட்டும்? ஜோதிடரே! நீவீர் சொல்வது உண்மைதானா?
சார்மியான்: சத்தமாகப் பேசலாமா பிரபு! அரண்மனைக்குச் சுவரிலும் காது! தரையிலும் காது! ராணியின் காதில் விழுந்தால், உங்கள் கழுத்தல்லவா துண்டிக்கப்படும்! மகாராணியைப் பற்றி நாம் பேச வேண்டாம்.
அலெக்ஸாஸ்: ஐரிஸ் சீமாட்டி! வா, வந்து உன் கையை ஜோதிட சிகாமணியிடம் காட்டு!
ஐரிஸ் சீமாட்டி: [ஜோதிடரிடம் கையைக் காட்டி] எனக்கு எத்தனை கணவர் சொல்லுங்கள்?
சார்மியான்: [வியப்புடன்] ஐரிஸ் கண்மணி! எப்போது நீ உன் கணவனை விலக்கப் போகிறாய்?
ஐரிஸ்: அதை எல்லாம் நான் சொல்ல மாட்டேன்! என் வீட்டு ரகசியம் கூரையைத் தாண்டி வராது.
சார்மியான்: அந்த ரகசியம்தான் உன் வாயிலிருந்து உதிர்ந்து விட்டதே! எத்தனை திருமணம் என்று கேட்பதின் அர்த்தம் என்ன? …. இப்போதே என் பெயரைப் போடுகிறேன், அடுத்த கணவன் பட்டியலில்! உன்மீது எனக்கு மோகம் உண்டு சிறு வயது முதலே! எனக்கு வீடு, வாசல், தோட்டம், வயல் எல்லாம் உள்ளன! 40 வயது எனக்கு! இது என் அரை ஆயுள்! முழு ஆயுள் எனக்கு 80 வரை என்று வேறு ஜோதிட சிகாமணி சொல்லி யிருக்கிறார். ஐரிஸ், கண்மணி! ஏற்றுக் கொள்வாயா என்னை அடுத்த கணவனாக?
ஐரிஸ்: [சிரித்துக் கொண்டு] அடாடா! எப்படிப் பொருத்தம் இருக்கும்? உமது வயதில் பாதி வயது நான்! தகப்பனுக்கு மகள் தாரம் போலிருக்கும்! உமது மகளுக்குத் தர வேண்டிய சீதனங்களை எனக்கு ஏன் அளிக்க வேண்டும்?
ஜோதிடர்: ஐரிஸ் சீமாட்டி! நீண்ட காலம் வாழ்வாய் நீயும்! உன் ராணி காலத்துக்கும் பிறகும் வாழ்வாய்.
சார்மியான்: ஜோதிடரே! மகாராணி கிளியோபாத்ரா ஆயுளைப் பற்றிப் பேசக் கூடாதென்று சொன்னேன். உன் காதில் விழவில்லையா? மெதுவாகப் பேசுங்கள் என்றேன்! அதுவும் உம் காதில் விழவில்லை. .. ஐரிஸ் கண்ணே! பார்த்தாயா? நீயும் நானும் நீண்ட காலம் வாழப் போகிறோம். மகாராணி ஆயுளுக்குப் பிறகும் ஒன்றாய் வாழலாம்!
ஐரிஸ்: ஏன் முடியாது? தனித் தனியாக மணந்து வெவ்வேறு குடும்பங்கள்! [உஷ்] ஈதோ மகாராணி வருகிறார். வாயை மூடு!
[அப்போது கிளியோபாத்ரா, தன் சகாக்களுடன் நுழைகிறாள்]
கியோபாத்ரா: [கோபமாக] ஐரிஸ்! என் சீமான், ரோமானியக் கோமான் எங்கே என்று தெரியுமா? இங்கே இல்லையா?
ஐரிஸ்: [சிரம் தாழ்த்தி வணங்கி] மகாராணி! அவரை அடியாள் காண வில்லை! பார்த்து வருகிறேன்.
கிளியோபாத்ரா: தேடி வந்து எனக்குச் சொல்! உடனே சொல்! போ விரைவில். [ஐரிஸ் ஓடிச் செல்கிறாள்] ஆண்டனிக்கு மோகமுண்டு, போகமுண்டு! ரோமின் மீது தாகமுண்டு! ஏதாவது தகவல் வந்ததா ரோமிலிருந்து? என்னை தேடி எகிப்துக்கு வந்து என்னிடம் கண்ணாம்மூச்சு விளையாடுகிறார்! எங்கே ஆண்டனி! எனோபரஸ்! போ நீ ஒரு பக்கம்! தேடிப் பிடித்து வா, ஆண்டனியை!
அலெக்ஸாஸ்: ஈதோ எமது சீமான் வருகிறார். உங்களை நோக்கித்தான் வருகிறார். [ஆண்டனி, ஒரு தூதுவன் பின்வர நுழைகிறான்]
கிளியோபாத்ரா: [வேகமாக] நம்மை ஆண்டனி பார்க்கக் கூடாது; வாருங்கள் போவோம். [கிளியோபாத்ரா, அலெக்ஸாஸ், ஐரிஸ், சார்மியான், ஜோதிடர் அனைவரும் விரைவாக வெளியேறுகிறார்]
ஆண்டனி: [உணர்ச்சியோடு, கவலையுடன்] என்ன ஆனது என் மனைவிக்கு? விபரமாகச் சொல்! புல்வியா எப்படிச் செத்தாள்? எங்கே செத்தாள்?
தூதுவன்: உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்துக்கு வந்தார் முதலில்!
ஆண்டனி: என் சகோதரன் லூஸியஸை எதிர்த்துத்தானே!
தூதுவன்: ஆமாம் பிரபு. ஆனால் பிறகு அவர்களுடன் சேர்ந்து கொண்டு புல்வியா அக்டேவியஸைத் தாக்க முனைந்தார். முத்தளபதிகளில் மூர்க்கரான அக்டேவியஸின் ரோமானியப் படை முன்பாக யாரும் நிற்க முடியுமா?
ஆண்டனி: என்ன கோர விளைவுகள் நிகழ்ந்தன வென்று சொல்? புல்வியாவுக்கு என்ன ஆனது என்று முதலில் சொல்? அக்டேவியஸ் வல்லமையைப் பற்றி யார் கேட்டார்?
தூதுவன்: சொல்லத் துணிவில்லை எனக்கு. எப்படிச் சொல்வேன் பிரபு? உங்கள் மனைவிக்கு என்ன ஆனது என்று முழுவதும் தெரிய வில்லை பிரபு!
ஆண்டனி: யாரங்கே வருகிறார்? சரி நீ ரோமுக்குப் போய் என் வீட்டில் நான் சொன்னதாகச் சொல்! எகிப்தில் நலமாக உள்ளேன் என்று சொல்! கிளியோபாத்ரா மாளிகையில் விருந்தினன் ஆக இருப்பதாகச் சொல். எனக்கு எல்லா வசதிகளும் உள்ளதாகச் சொல்!
முதல் தூதுவன்: அப்படியே செய்கிறேன் பிரபு.
[முதல் தூதுவன் போகிறான். இரண்டாம் தூதுவன் வருகிறான்]
இரண்டாம் தூதுவன்: [அழுதுகொண்டே] பிரபு! பிரபு! உங்கள் மனைவி புல்வியா போர்க்களத்தில் இறந்து போனார்.
ஆண்டனி: கேள்விப்பட்டேன். எங்கே இறந்தாள்? எப்படி இறந்தாள்? அதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். விபரமாகச் சொல்!
தூதுவன்: ஸிசியான் என்னும் இடத்தில் இறந்து போனார், பிரபு. போர்க்களத்தில் கடும் நோய் தாக்கியது. வந்த நோயிக்கு மருந்து எடுத்துக் கொள்ள மறுத்தார் என்று தெரிகிறது. சாகும் போது உங்கள் நினைவில் புலம்பினார். உங்களைத் தேடினார்! உங்களைக் காண விரும்பினார்! ஆண்டனி எங்கே? ஆண்டனி எங்கே என்று அலறினார்.
ஆண்டனி: [மிக்க வருத்தமுடன்] போய்விட்டாயா புல்வியா? உன்னைத் தனித்துப் போகவிட்டேன்! நானிப்போது தனித்துப் போய்விட்டேன்! புல்வியாவின் மரணத்துக்குப் பாதிக் காரணம் நான்! என் அரசியல் வாழ்க்கையில் முழுப் பங்கு எடுத்தாள். அவள் அடுப்பறையில் குழல் ஊதும் மாதில்லை! ஈட்டி எடுத்துப் போரிடுபவளும் இல்லை! போர்த் தளபதிகள் அருகிலிருந்து உதவி புரியும் மந்திரி அவள்! அவள் இப்போதில்லை. உயிருடன் உள்ள போது அவள் மீது எனக்கு வெறுப்பு மிகுதி. செத்த பிறகு அவள் மீது பரிவு பாசம் ஏற்படுகிறது. கள்ளி கிளியோபாத்ரா மேல் கொண்ட மோகத்தில் புல்வியாவை மறந்தேன். அவள் மன நோயிக்கும், நிஜ நோயிக்கும் காரணம் நான்தான். புல்வியா! மன்னிப்பாயா நீ? அவள் அருகிலிருந்து அவளை நோயிலிருந்து காப்பாற்றி இருக்கலாம் … ஆனால் கட்டழகி கிளியோபாத்ராவை எப்படி மறப்பது? மோகினியை எப்படித் துறப்பது? புல்வியாவை மறக்க வைத்தவள் இந்தக் கள்ளி! இவளை விட்டுவிட்டு ரோமா புரிக்கு நான் மீள வேண்டும்.
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (7)
அங்கம் -5 காட்சி -11
சீஸரின் புண்கள் பேசா வாய்கள்!
எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர்! …..
இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா!
இனிய புரூட்டஸ் குத்தியது இங்கே !…பாம்ப்பியின் சிலைக் காலடியில்
சீறிடும் குருதி சிந்தச் சிந்த
சீஸரும் வீழ்ந்தார் !
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! ….(ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்:
தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம், கட்டம்:
சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.
காட்சி அமைப்பு:
அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.
இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார்.
ஆண்டனி: [மேடையில் நின்று தொடர்கிறார்]
நேற்று சீஸரின் வாய்ச்சொல் வலுத்து நின்றது
உலகின் முன்பு ! ஈதோ கிடக்குது அவர் உடல்,
எளியோர் கூட நோக்கி மதிக்கா வண்ணம்!
என் மேலதி பதிகளே! நான்பழி வாங்கிக்,
கலகம் விளைந்திட மக்கள் மனதை
உசுப்பி விட்டால், தவறி ழைப்பேன்
புரூட்டஸ், காஸ்ஸியஸ் ஆகி யோர்க்கு!
இருவரும் அறிவீர் மாபெரும் ரோமர் !
ஈதோ பாரீர் ! சீஸரின் சாசனம் !
கையெழுத் தோடு கண்டேன் பெட்டியில்!
ஆயினும் மன்னிப்பீர் என்னை,
அதைப் படித்திட விரும்பேன்!
அதனைக் கேட்டால் அனைவரும் சீஸரின்,
செத்த புண்களை முத்தமிட வருவீர்!
புனிதக் குருதியில் துணிகளை மூழ்க்கிச்
சீஸரின் மயிரைச் சிறிது கொடுவென
நேசமாய்க் கேட்பீர் நினைவில் வைத்திட!
சாகும் சமயம் உமது உயில் எழுதி
சந்ததி களுக்கும் சொந்தப் படுத்துவீர்!முதல் நபர்: வாசிப்பாய் உடனே அந்த சாசனத்தை, ஆண்டனி!
இரண்டாம் நபர்: சாசனம்! சாசனம்! சீஸரின் சாசனம்! வாசிப்பாய் சீஸரின் சாசனம்!
ஆண்டனி:
பொறுப்பீர் அன்பு நண்பர்களே, பொறுப்பீர்!
நான் அதைப் படிப்பது தவறு!
சீஸர் உம்மை நேசித்த பாங்கை
நீவீர் அறிவது சரி யில்லை !
மரமில்லை நீவீர்! கல்லில்லை நீவீர்!
மக்களே நீவீர்! சீஸரின் உயிலை
மனிதராய்க் கேட்பின், உம்மைக்
கொதித்தெழச் செய்யும், பித்தராய் ஆக்கி!
தெரியா திருப்பதே உமக்கு நல்லது,
நீவீர் அவரது வாரிசு என்று!
அறிந்தால் உமக்கு ஆவது என்னவோ ?முதல் நபர்: உயிலை வாசிப்பாய்! உடனே வாசிப்பாய்! சீஸர் உயிலை வாசி!
பலரது கூக்குரல்: சாசனம் வாசி! சீஸரின் சாசனம்! யாமதைக் கேட்போம்!
ஆண்டனி:
அமைதி! அமைதி! பொறுப்பீர் ஒருகணம்!
எல்லை மீறிச் சென்று விட்டேன்!
குத்திக் கொன்ற உத்தமர்க் கெதிராய்
பேசி விட்டேன், பெரும்பிழை செய்தேன்!
சீஸரின் சாசனம் வாசிக்க மறுப்பேன்!
மன்னிப்பீர் என்னை, அன்புடை மக்காள்!இரண்டாம் நபர்: துரோகிகள் அவர்! உத்தமரா அவர்?
அடுத்தவன்: கொலைப் பித்தர்கள் அவர்! குணவாளரா அவர்?
முதல் நபர்: முதலில் படியப்பா உயிலை! என்னதான் எழுதி வைத்திருக்கிறார் சீஸர்?
ஆண்டனி:
அப்படி யானால் கேட்பீர் அவரது உயிலை!
கட்டாய மாக வாசிக்க வைத்தீர்!
எனது சொற்படிச் செய்வீர் முதலில் !
வட்டமாய்ச் சவத்தைச் சுற்றி நிற்பீர்!
சாசனம் வடித்த சீஸரைக் காண்பீர்!
கீழிறங்கி நானவர் அருகில் வரவா?
அனுமதி தருவீரா?முதல் நபர்: அனுமதி உண்டு, ஆண்டனி உனக்கு!
இரண்டாம் நபர்: சீஸர் சவத்தைச் சுற்றி வட்டமாய் நிற்பீர்!
முதல் நபர்: இடம் அளிப்பீர் ஆண்டனி நுழைய.
[சீஸர் உடலைச் சுற்றி வட்டமாக நிற்கிறார்கள்]
ஆண்டனி:
கண்ணீர் இருந்தால் சொட்டுவீர் இக்கணம்!
இந்த அங்கியை யாவரும் அறிவீர்!
கோடை மாலையில் முதல்முறை அணிந்தார்!
நெர்வியை வென்றது போது கிடைத்தது.
காண்பீர், இங்குதான் ஆழமாய்க் குத்திக்
கிழித்தான் ஆங்காரக் காஸ்ஸியஸ்!
இங்குதான் குத்தினான், வஞ்சகக் காஸ்கா!
இங்கே குத்தினார் இனியர் புரூட்டஸ் !
கத்தியை புரூட்டஸ் எடுத்ததும் பீறிட்டு
கதவை உடைத்தது போல் விரைந்து
வெளியே குருதி வந்ததைப் பாரீர்!
ஏனெனில் புரூட்டஸ் சீஸரின் நேசன்!
உத்தமன் புரூட்டர் குத்துதல் முறையா?
செப்பிடு நீதி ! தீர்ப்பளி தெய்வமே!
எப்படி நேசித்தார் புரூட்டஸை சீஸர்?
அனைத்திலும் கொடூரக் குத்து தான்அது!
குணவான் சீஸர் புரூட்டஸ் குத்தவும்
பலத்தை இழந்தார்! பலிக்கிரை யாகிப்
பாம்ப்பியின் சிலைக் காலடியில்
சீறிடும் குருதி
சிந்தச் சிந்த சீஸரும் விழுந்தார்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்!
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட,
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
அந்தோ நீவீர் இக்கணம் அழுகிறீர்!
பரிவுக் கண்ணீர் பெரிதாய்ப் பொழிகிறீர்
கரையுள அங்கியைக் கண்டே அழுகிறீர்!
கனிவு ஆத்மா கதறும் இங்கே!
பாரீர் சீஸரின் பரிதாப நிலையை!
நாட்டுத் துரோகிகள் காட்டுத் தனமாய்க்
குத்திக் கிழித்து கூறாக்கியசீஸரின் உடலைப் பாரீர் !
ஆண்டனி
[அங்கியை சீஸர் மேனியிலிருந்து நீக்கி வெளியே எறிகிறான்]
முதல்வன்: ஐயோ பாரிதாபம்! கண்கொளாக் காட்சி!
அடுத்தவன்: குணாளர் சீஸர்! உத்தமர் சீஸர்! துரோகி புரூட்டஸ்! துரோகி காஸ்கா, காஸ்ஸியஸ், சின்னா. அனைவரும் நாட்டுத் துரோகிகள்!
ஆண்டனி: அப்படிச் சொல்லாதீர்! அனைவரும் விடுதலைத் தீரர்கள்! முடியாட்சி ஒழித்தவர்! குடியாட்சியை நிலை நாட்டியவர்! அடிமையாகப் போகும் நம்மைப் பாதுகாத்த பிதாக்கள்! புரூட்டஸைப் போல் நானொரு பெரும் பேச்சாளன் அல்லன்! சாதா மனிதன்! சீஸரின் ஈமக் கிரியை செய்ய வந்திருக்கிறேன்.
சீஸரின் புண்கள் பேசா வாய்கள்!
எனக்காய் நீவீர் பேசிட வைப்பீர்!
நானும் புரூட்டஸ் போல் பேச்சாளி ஆயின்,
ஊனை உருக்கி உலகைக் கலக்கி சீஸர்
ஊமைப் புண்களில் ஒரு வாய் வைத்து
ரோமின் கற்களும் நிமிர்ந்து தாக்கிடப்
புரட்சி செய்வேன், இரங்கற் பேச்சிலே!எல்லோரும்: புரட்சி செய்கிறோம் ஆண்டனி! உன் பேச்சே போதும்! துரோகி புரூட்டஸ் ஆக வேண்டாம்!
முதல்வன்: முதலில் புரூட்டஸ் வீட்டுக்குத் தீ வைப்போம்! [தீப் பந்தத்தைத் தூக்குகிறான்]
இரண்டாம் நபர்: சீஸரைப் புண்படுத்திய புரூட்டஸ் வயிற்றைக் கிழிப்போம்! [வாளை உயர்த்துகிறான்]
மூன்றாம் நபர்: துரோகிகள் அத்தனை பேர் வீட்டிலும் தீ வைப்போம்! கொலைகாரருக்குக் கொள்ளி வைப்போம். [தீக் கம்பத்தைத் தூக்குகிறான்]
முதல்வன்: அமைதி, அமைதி, அமைதி! பண்பாளர் புரூட்டஸ் ஏதோ சொல்கிறார். என்ன வென்று கேட்போம்!
ஆண்டனி: நண்பர்களே! புரூட்டஸ் வீட்டில் தீ வைக்காதீர்! காஸ்ஸியஸ் வீட்டில் தீவைக்காதீர்! காஸ்கா வீட்டில் தீ வைக்காதீர்! சின்னா வீட்டில் தீ வைக்காதீர்! அத்தனை பேரும் உத்தமர்! செத்த சீஸருக்காக உத்தமர் உயிரைப் பழிவாங்க வேண்டாம்! சீஸரின் சாசனத்தைக் கேட்க மறந்து விட்டீரே!
எல்லோரும்: ஆம், ஆம் மறந்து விட்டோம். வாசிப்பாய் ஆண்டனி சாசனத்தை. முதலில் அதைக் கேட்போம்.
முதல்வன்: ஆண்டனியின் பட்டியலைக் கேட்டால் யார் யாரை முதன் முதலில் தாக்க வேண்டும் என்று சொல்வது போல் அல்லவா உள்ளது.
ஆண்டனி: கேளுங்கள், சீஸரின் சாசனத்தை. வாசிக்கிறேன். ரோமா புரியில் ஒவ்வொரு நபருக்கும் 75 நாணயங்கள் அளிக்கப்படும்.
இரண்டாம் நபர்: [ஆனந்தம் அடைந்து] அடடா! ரோமானியர் மீது எத்தனை பரிவு, கனிவு, அன்பு!
ஆண்டனி: மேலும் கேளுங்கள்! சீஸரின் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப் படுகின்றன. அதுபோல் தைபர் நதிக்கரை அருகே உள்ள அவரது வயற்காட்டுக் குடில்கள், வயல்கள் பொது நபருக்குப் போகும். அவை எல்லாம் உங்களுக்கும், உங்கள் சந்ததியார்க்கும் சொந்தம். அவற்றை உமக்கு எழுதி வைத்த சீஸருக்கு வாழக் கொடுத்து வைக்க வில்லை! ஈதோ கிடக்குது அவர் சடலம்! சீஸரைப் போலொரு அதிபதி இனிமேல் ரோமா புரியில் பிறப்பாரா?
எல்லோரும்: இல்லை, இல்லை ஆண்டனி! சீஸர் போலொரு வேந்தரினிப் பிறக்கப் போவதில்லை!
முதல்வன்: வாரீர், சீஸர் உடலைத் தூக்குவீர்! அவரது உடலைப் புண்ணிய தளத்தில் வைத்துத் தகனம் செய்வோம். துரோகிகள் வீட்டெரித்தத் தீயைக் கொண்டு வந்து கொள்ளி வைப்போம் அவருக்கு, அவரது பிள்ளைகளாய்!
எல்லாரும்: தீப்பந்தம் ஏந்தி புரூட்டஸ் இல்லத்துக்குச் செல்வோம். மரப் பலகணிகளை உடைத்துக் கொண்டு வாருங்கள்! மேஜை, நாற்காலி, கட்டில் எதுவாயினும் பரவாயில்லை! கொண்டு வாருங்கள்.
[சீஸர் சடலத்தைக் தூக்கிக் கொண்டு சிலர் விரைகிறார்கள். கத்திகளை, தீக் கம்பங்களை ஏந்திக் கொண்டு புரூட்டஸ் வீட்டுக்கு ஓடுகிறார் மற்றவர் எல்லோரும்.]
*********************
அங்கம் -5 காட்சி -12
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! ….(ஆண்டனி)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
புரூட்டஸின் இறுதிக் காலம்
நேரம், இடம், கட்டம்:
சீஸர் கொல்லப்பட்ட மறுநாள். அங்காடிப் பொதுமனை அருகில் சீஸரின் சடலம் எரிக்கப் படுகிறது. ரோமாபுரிப் பொதுமக்கள் ஆண்டனியின் மரணப் பேருரை கேட்டதும் கோபத்துடன் கிளம்பிப் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் வீடுகளில் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சதிகாரர் அனைவரும் தப்பிக்கொண்டு ரோமை விட்டு ஓடி வெளியேறுகிறார். ஆண்டனி, அக்டேவியஸ் [சீஸருடைய சகோதர் மகன்], தளபதி லெபிடஸ் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ரோமானியப் படையுடன் கொலைகாரர்களைப் பிடிக்க விரட்டிக் கொண்டு செல்கிறார்கள். படையினரில் ஒரு சிறு பகுதி புரூட்டஸைப் பின்பற்றிச் செல்கிறது. அனைவரும் ·பிலிப்பி [Philipi] என்னும் பகுதிக் காட்டில் சந்தித்துப் போரிடுகிறார்.
நாடகப் பாத்திரங்கள்:
ஆண்டனி, அக்டேவியஸ், லெபிடஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஏராளமான ரோமானியப் படையினர்.
காட்சி அமைப்பு:
ஆண்டனி, அக்டேவியஸ், லெபிடஸ் படையினர் மலைக் காடுகளில் ஒருபுறமும், புரூட்டஸ், காஸ்ஸியஸ் சதிகாரர் படையினர் மறுபுறமும் கூடாரத்தில் தங்கி உள்ளனர்.
ஆண்டனி துரோகிகளைத் துரத்துகிறான்
ஆண்டனி: [கையில் தாளை வைத்துக் கொண்டு] அக்டேவியஸ்! இந்தப் பெயர்கள் எல்லாம் உன் குறிப்பிலும் உள்ளனவா? முதலில் நட்புத் துரோகி புரூட்டஸ்! அடுத்து நிஜத் துரோகிகள் காஸ்ஸியஸ், கஸ்கா, சின்னா …. பட்டியல் நீள்கிறது! சதிகாரர் எந்த சந்து பொந்தில், மலைக் குகையில் பதுங்கிக் கிடந்தாலும் பிடித்துக் கொல்லப் படவேண்டும்.
அக்டேவியஸ்: ஆம்! அந்த அயோக்கியர் பெயர் அத்தனையும் உள்ளன! … லெப்பிடஸ்! உன் சகோதரன் பெயரும் பட்டியலில் உள்ளது தெரியுமா? அதற்கு உன் ஒப்புதல் தேவை.
லெப்பிடஸ்: [சற்று மனக் கசப்புடன்] ஒப்புக் கொள்கிறேன்! என் தமையன் புரட்சிக் குழுவோடு ஏன் சேர்ந்தான் என்பது வியப்பாக உள்ளது எனக்கு! என்னருமை மைத்துனியை எப்படி விதவைக் கோலத்தில் பார்ப்பது என்று தெரியவில்லை! பாவம் அவள். வருவாயின்றி எப்படித் தனியாக அவள் வாழப் போகிறாள் என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது! ஐயோ, அவளும் உயிரைப் போக்கிக் கொள்வாள்!
அக்டேவியஸ்: [ஆத்திரமாக] ஆண்டனி! உன் தங்கையின் மகன் பப்ளியஸ் பட்டியலில் உள்ளதா?
ஆண்டனி: மறந்து விட்டேன், அந்த மூடனை, அக்டேவியஸ்! எழுதிக் கொல்வோம்! அப்புறம் வேறு யாரும் நம் பட்டியலில் விடப் பட்டுள்ளனவா?
லெப்பிடஸ்: சரி! மன்னிக்க வேண்டும். என்னகொரு அவசரப் பணி உள்ளது! உங்களை மக்கள் மன்றத்தின் வாசலில் பிறகு சந்திக்கிறேன்.
[லெப்பிடஸ் போகிறான்]
ஆண்டனி: போகட்டும் லெப்பிடஸ்! நமது தளபதிதான், ஆனால் தலையில் மூளையைத் தவிர மற்றவை எல்லாம் உள்ளன! முரட்டுப் பலம் மட்டும் உள்ளது! ஆனால் மூளை காலி!
அக்டேவியஸ்: ஆம், ஆம் ஆனால் அவனொரு பராக்கிரமத் தளபதி, சீஸரைப் போல்! உனக்குத்தான் பிடிக்க வில்லை அவனை! அவன் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. தளபதிகள் அறிவுச் சுடராக இருக்கக் கூடாது. மூர்க்கமும், முரட்டுத்தனமும் பராக்கிரமமும்தான் ஒரு தளபதிக்குத் தேவை. அவை அனைத்தும் கனலாய்க் கொதிக்கிறது லெப்பிடஸ் நெஞ்சில்! அவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்!
ஆண்டனி: அதுபோல் என் குதிரையும் படைத்தது அஞ்சா நெஞ்சம், அக்டேவியஸ்! போரில் பயமின்றி என் குதிரை பாயும் தெரியுமா! சரி அவனை விட்டுத் தள்ளு! ஆக வேண்டிய போர்த் தயாரிப்புக்குச் சிந்திப்போம்! மலைக்கு அப்புறம் புரூட்டஸ், காஸ்ஸியஸ் படை திரட்டி நம்மைத் தாக்கப் போவதாக ஒற்றர் மூலம் அறிந்தேன். உனக்குத் தெரியுமா?
அக்டேவியஸ்: தெரியும். நாமிருவரும் முதலில் அந்தக் காட்டு நரிகளை வேட்டையாட வேண்டும். அவர்கள் யாரும் உயிருடன் ரோமுக்குத் திரும்பக் கூடாது.
[இருவரும் போகிறார்கள். மலைக்கு அப்புறம் உள்ளக் கூடாரத்தில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் காரசாரமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்]
காஸ்ஸியஸ்: [கோபத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டு] பாருங்கள் புரூட்டஸ்! எல்லாம் உங்களால் நேர்ந்தது! மாளிகையில் ஆள வேண்டிய நாம் இப்போது, மலை அடிவாரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறோம். சீஸரைக் குத்திய அதே கத்தியால், ஆண்டனி குடலையும் உருவி யிருந்தால் இப்படி ஆகுமா? நீங்கள் வேண்டாமெனத் தடுத்தீர்! பிரேதப் பேச்சுரையில் ஆண்டனி பேசக் கூடாதெனத் தடுத்தேன்! கேட்க வில்லை நீங்கள்! பொதுமக்கள் யாவரும் மெழுகுப் பொம்மைகள்! களிமண் சட்டிகள்! ஆட்டுக் குட்டிகள்! ஆண்டனி வில்லைக் காட்டியது ஆடுகளுக்குப் புல்லைக் காட்டியது போல்! சாய்ந்தால், சாயிறப் பக்கமே சாயிற செம்மறி ஆடுகள் மக்கள்! புல்லைக் காட்டி ஆடுகளைப் புலியாய் ஆக்கி விட்டான், ஆண்டனி! புலியாய் இருந்த நாம் இப்போது ஆடுகளாய்ப் போய்விட்டோம்!
புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! என்னை நீ மன்னிக்க வேண்டும்! மாபெரும் தவறு செய்து விட்டேன் நான்! ஆண்டனியை உயிரோடு விட்டது தப்பு! மேடையில் ஆண்டனியைப் பேச விட்டது தப்பு! ஆண்டனி, பசுத்தோல் போர்த்திய புலியெனத் தெரியாமல் போனது எனக்கு! என்னைப் பண்பாளன் என்று பாராட்டிப் பாராட்டி, மக்களிடம் பாசாங்கு பண்ணினான்! சிறிது நேரத்துக்குள் நம்மை வரவேற்ற கும்பல், சீஸரைப் பாராட்டத் துவங்கியது. நம்மை ஆதரித்த கைகள், தீப்பந்தம் ஏந்தி நம் வீட்டுக்கே தீயிட்டது! …[கண்ணீருடன்] … காஸ்ஸியஸ்! எப்படித் தாங்கிக் கொள்வேன் இதை! நேற்று மனைவி போர்ஷியா மாண்டு போனாள்! கும்பல் வீட்டுக்கு வைத்த தீ அவளது உடலுக்கும் வைத்த கொள்ளி ஆயிற்று!
காஸ்ஸியஸ்: [வருத்தமுடன் தோள் மீது கை வைத்து] எத்தகைய அதிர்ச்சி, புரூட்டஸ்! எப்படி இதுவரை பொறுத்துக் கொண்டாய்? ஆட்டு மந்தையை அரக்கர் மந்தையாய் ஆக்கியவன் ஆண்டனி! [கை வாளை உருவி] சீஸரைக் குத்திய இதே வாளால், பார்ப்பீர் ஆண்டனி வயிற்றையும் கிழிப்பேன்! ·பிலிப்பி போர்த் தளத்தில் இந்த வாளால் ஒன்று ஆண்டனி மடிவான், அல்லது நான் உயிரைப் போக்கிக் கொள்வேன். புரூட்டஸ்! போரில் நான் மாண்டு போனால், உங்களுக்குத் தவறு செய்த என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்! சீஸரின் உயிர் நண்பனான உங்களை மாற்றிய வஞ்சகன் நான்! சீஸர் மீது வெறுப்பு உண்டாக நான் முற்பட்டது மாபெரும் தவறு! என்னால் உங்கள் மனைவி போர்ஷியாவும் மாண்டு போக நேர்ந்தது! உங்கள் குடும்ப வாழ்வைச் சீர்குலைத்தது நான்! என்னை மன்னிப்பீர்களா புரூட்டஸ்?
Final War at Philipi
புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நம் முடிவு நெருங்கி விட்டதாய், என் மனதில் ஓர் உணர்வு எழுந்து விட்டது! நேற்றுக் கனவில் சீஸர் வந்து என்னை ·பிலிப்பியில் சந்திக்க வா என்று அழைப்பு விடுத்துள்ளார்! நம்மால் ஆற்றல் மிக்க ரோமானியப் படையை எதிர்க்க முடியாது. அவரது எண்ணிக்கை மிகுதி! காஸ்ஸியஸ்! நீ மாற்ற முயன்றாலும், என்னை மாற்றிக் கொண்டவன் நான்தான்! ஓர் உன்னத செயலைச் செய்து முடித்ததாகத்தான் தோன்றுகிறது எனக்கு! முடியாட்சி ஒழித்தோம் நாமிருவரும்! குடியாட்சிக்கு விடிவு தந்தோம் நாமிருவரும்! கவலைப்படாதே! நீ என் தோழன்! யார் யாருக்கு மன்னிப்பு அளிப்பது? ..அதை எல்லாம் மறப்போம்! இப்போது நாம் செய்ய வேண்டியது இறுதிப்போர். ஓடி ஒளிய வேண்டாம் நாம்! கூடிப் போரிட்டு மாய்வோம். [இருவரும் கைகோர்த்துக் குலுக்கித் தழுவிக் கொள்கிறார்கள்.]
- பிலிப்பியில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டுப் பிடிபடாமல் காஸ்ஸியஸ், புரூட்டஸ் இருவரும் தமது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்கிறார்கள். ஆண்டனி, அக்டேவியஸ் சதிகாரர் அனைவரையும் கொன்று பலரைக் கைது செய்து ரோமுக்கு மீள்கிறார்கள்.]
[இரண்டாம் பாகம் முற்றும்]
+++++++++++++++
- முதல் பாகம்: சீஸர் & கிளியோபாத்ரா [முற்றிற்று]
- இரண்டாம் பாகம்: ஜூலியஸ் சீஸர் [முற்றிற்று]
- மூன்றாம் பாகம்: ஆண்டனி & கிளியோபாத்ரா [ ஆரம்பம்]
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (6)
அங்கம் -5 கட்சி -4
வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல்
வைர நெஞ்சில் அடிக்குது பேரிடிச் சத்தம்
நாட்டின் வடிவைச் சிதைக்குது பேய்ப்புயல்
நகர்த் தெருவை நிரப்புது பெருமழை!**************
பாதிக் கோளத்தில் (பரிதியின் மறைவால்)
இறந்து விட்டன இயற்கை நிகழ்ச்சிகள்!
வேதனைக் கனவுகள் சீரழிக் கின்றன,
திரைமறைவில் எழுந்திடும் துக்கமதை.வில்லியம் ஷேக்ஸ்பியர் [மாக்பெத்]
(சீஸர்) மரணத்தால் மட்டும் தீரும் சிக்கல்.
சினமில்லை எனக்குத் தனித்த முறையில்
குடிமக்கள் நலத்தை எண்ணுபவன் நான்
முடி சூட்டுவார் பேராசைச் சீஸருக்கு.
முடி சூட்டுவீர் சீஸருக்கு! பிறகு அவரை
உடை வாளால் குத்தி நான் ஊடுருவ
விடை தருவீர் எனக்குடனே அனுமதி! ….(புரூட்டஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
“உறங்கு கின்றாய், விழித்தெழு புரூட்டஸ்!
நோக்கிடு உன்னை நீயே, ரோமுக் காகப்
போராடு! உரையாடு! தீர்த்திடு பிரச்சனை
ஓர் வேந்தர் ரோமை ஒடுக்கி ஆள்வதா?” …(காஸ்ஸியஸின் கடிதம்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
சதியே! புன்சிரிப்பில் ஒளிந்து கொள். பாயப்
பாயப் பதுங்கிக் கொள், பணிவுத் தன்மையில்,
பாதையில் நடந்தால் மெய்யுரு தெரிந்திடும்
காரிருளும் உன்னை காட்டிக் கொடுத்திடும்! ….(புரூட்டஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
சீசரின் ஒற்றை உறுப்பே ஆண்டனி! …
தேச நேசர் நாமெல்லாம் அறிவீர்!
நாசக் கொலைஞர் அல்லர் நாம்!
சீசரின் பேரா சைக்கு எதிரிகள் நாம்!
உறுப்பை அறுப்பது நம்பணி யன்று! …..
மறுக்க வேண்டும் மார்க் ஆண்டனி!
சீசரின் சிரம் அறுக்கப் பட்ட பிறகு
செய்வ தென்ன வீண் உறுப்புகள் ?வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ரோமாபுரியில்:
தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.
நேரம், இடம்:
சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். நள்ளிரவு வேளை. ரோமாபுரியில் புருட்டஸின் மாளிகைத் தோட்டம்.
நாடகப் பாத்திரங்கள்: புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா. புரூட்டஸின் பணியாள் லூசியஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மற்றும் சில சதிகாரர்கள்,
காட்சி அமைப்பு:
மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. புரூட்டஸ் தோட்டத் தாழ்வாரத்தின் கீழ் உலாவி வண்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தாழ்வாரத்தில் மெழுகுவர்த்திகள் எரிந்த வண்ணம் உள்ளன.
புரூட்டஸ்: [தனக்குள் பேசியபடி] எப்படி அந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பது? சீஸரின் மரணத்தால்தான் ரோமுக்கு விடுதலை என்றால் அப்படியே ஆகட்டும்! எனக்குச் சீஸர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லை! பகையில்லை! வேற்றுமை யில்லை! குடிமக்கள் நலமே எனது குறிக்கோள்! ஆதலால் வேந்தராகச் சீஸரை முடிசூட்டுவது முறையன்று. அவரைக் கொன்றுதான் அதைத் தடுக்க வேண்டும் நான்!
[அப்போது பணியாள் லூசியஸ் ஒரு சுருள் கட்டோடு வருகிறான்]
லூசியஸ்: பலகணி வழியாகப் போகும் போது என் கண்ணில் தெரிந்தது. யாரோ சொருகி வைத்த காகிதச் சுருளிது. ஏதோ அவசரசத் தகவல் போல் தெரிகிறது. [சுருளைப் புரூட்டஸ் கையில் கொடுத்து உள்ளே போகிறான்]
புரூட்டஸ்: [மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் படிக்கிறார்] “புரூட்டஸ்! நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்! விழித்தெழு! உன்னையே நீ ஆராய்ந்து செய்! ரோமுக்காக உரையாடு! குடியாட்சிக்குப் போராடு! செம்மைப் படுத்து ரோம் ஆட்சியை! விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!”
[கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது]
புரூட்டஸ்: “விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!” விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். யாரோ கதவைத் தட்டுகிறார்! லூசியஸ்! கதவைத் திறந்து யாரென்று பார்! .. காஸ்ஸியஸ் என் நெஞ்சின் கதவைத் தட்டியது முதலாக சரிவரத் தூக்க மில்லை எனக்கு!
[லூசியஸ் மீண்டும் வருகிறான்]
லூசியஸ்: காஸ்ஸியஸ் வந்திருக்கிறார். உங்களைக் காண விரும்புகிறார்.
புரூட்டஸ்: தனியாக வந்திருக்கிறாரா?
லூசியஸ்: இல்லை! கூட்டமாக வந்திருக்கிறார்கள். முகத்தை மூடியிருப்பதால் மற்றவர் யாரென்று தெரியவில்லை!
புரூட்டஸ்: உள்ளே தோட்டத்துக்கு அழைத்து வா. [லூசியஸ் போகிறான்] ஓ சதியே! நீ ஒளிவ தெங்கே? புன்னகையிலும், பணிவுப் போர்வைக் குள்ளேயும் பதுங்கிக் கொள்! வெளியே நீ தலை நீட்டினால், காரிருள் கூட உன்னைக் காட்டிக் கொடுத்திடும்!
[காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, தீசியஸ், மெத்தலஸ், திரிபோனியஸ் ஆகிய சதிகாரர் அனைவரும் முக்காடு முகத்துடன் நுழைகிறார்கள்]
காஸ்ஸியஸ்: அர்த்த ராத்திரியில் உங்களை எழுப்பி விட்டோமா? மன்னிக்க வேண்டும் புரூட்டஸ்!
புரூட்டஸ்: நட்ட நிசியானாலும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனோ இன்று உறக்கம் வரவில்லை எனக்கு! அறிமுகப் படுத்துவீர் காஸ்ஸியஸ். இவர்களில் பலரைத் தெரியாது எனக்கு!
காஸ்ஸியஸ்: பயங்கர இந்த இரவில் பண்பாளர் யாரும் தூங்க முடியாது. அறிமுகம் செய்கிறேன் புரூட்டஸ். யாவரும் உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பவர். இவர் திரிபோனஸ், இவர் தீசியஸ், இவர் காஸ்கா, இவர் சின்னா, இவர் மெத்தலஸ்.
புரூட்டஸ்: வரவேற்கிறேன் அனைவரையும். கைகளை நீட்டுவீர். [ஒவ்வொருவருவர் கையையும் குலுக்கிறார்]
காஸ்ஸியஸ்: [எல்லோரையும் பார்த்து அழுத்தமாக] நாமெல்லாம் இன்று உறுதிமொழி உரைப்போம்.
புரூட்டஸ்: வேண்டாம், உறுதி எடுக்கத் தேவை யில்லை! எல்லாரது துணிச்சலை நம்புவோம். நமது பணிக்கு யாரும் உறுதி கூறத் தேவை யில்லை! கோழைகள்தான் உறுதிமொழி கூற வேண்டும்! நெஞ்சில் உரமில்லாதவர்தான் உறுதி எடுக்க வேண்டும். உன்னத மானது நமது நாட்டுப் பணி! உறுதி எடுக்கத் தேவை யில்லை அதற்கு! நம்பத் தக்க தீரர் அனைவரும், காஸ்ஸியஸ்!
காஸ்ஸியஸ்: சிசேரோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்! சேர்த்துக் கொள்ளலாமா நம்முடன்?
காஸ்கா: சேர்த்துக் கொள்ள வேண்டும் சிசேரோவை. முதிய நபர் அவர். அவரது நரைத்த முடி அனுபவம் நமக்கு உதவும். அவரைச் சேர்ப்பதால், அவரைப் பின்பற்றுவோர் ஆதரவும் கிட்டும் நமக்கு.
புரூட்டஸ்: வேண்டாம் நமக்கு சிசேரோ. நம் சதித் திட்டம் அவர் காதில் விழக் கூடாது! செவிடன் காதில் ஊதிய சங்கொலி ஆகும் அது. வீண் முயற்சி! பிறர் சொல்வதைப் பின்பற்றுபவர் அல்லர் சிசேரோ!
காஸ்ஸியஸ்: சரி வேண்டாம், விட்டுத் தள்ளுங்கள் சிசேரோவை.
தீசியஸ்: சீஸர் ஒருவரைத்தான் தீர்த்துக்கட்ட வேண்டுமா? வேறு யாரையும் கொல்ல வேண்டுமா?
காஸ்ஸியஸ்: [சிந்தித்து] சீஸரின் ஆருயிர்த் தோழர் மார்க் ஆண்டனியை விட்டுவிடுவது சரியா? ஆண்டனி சூட்சிக்காரர்! நம் திட்டத்தைப் பற்றித் தெரிந்தால், நிச்சயம் நிறுத்த முயல்வார் ஆண்டனி! அவரை விட்டுவிடுவது சரியில்லை! சீஸரோடு ஒன்றாகச் செத்து வீழட்டும் ஆண்டனியும்!
புரூட்டஸ்: அது பெரும் குருதிப்போர் ஆகிவிடும், காஸ்ஸியஸ்! நாம் கசாப்புக் கடைக் கொலைகாரர் அல்லர்! நாட்டு நேசர் நாமெல்லாம்! தலையைத் துண்டித்த பிறகு அங்கத்தை வெட்டுவதில் என்ன பலன்? மார்க் ஆண்டனி சீஸருக்கு வெறும் உறுப்புதான்! நாமெல்லாம் எதிர்ப்பது சீஸரின் பேராசைக் குணத்தை! சீஸரின் அங்க உறுப்புகளைத் துண்டு துண்டாக்குவது நம் தொழிலில்லை! சீஸரின் குருதி ஆறாய் ஓடப் போகிறது! அருமை நண்பர்களே! அஞ்சாமல் துணிச்சலோடு சீஸரைத் தீர்த்துக் கட்டுவோம்! ஆங்காரமாய்க் கொல்ல வேண்டாம்! பண்பாடு படைத்துவர் நாமெல்லாம்! கோரக் கொலைகாரர் அல்ல நாம்! மார்க் ஆண்டனியை மறந்து விடுங்கள்! சீஸர் தலை கீழே உருண்ட பிறகு, அவரது வலது கரமான ஆண்டனி என்ன செய்வான்? அழுவான்! தொழுவான்! ஏன் சீஸரோடு தானும் விழுவான்!
காஸ்ஸியஸ்: [சற்று அழுத்தமுடன்] ஆயினும் ஆண்டனிக்கு அஞ்சுகிறேன் நான்! அவர் சீஸர் மீது கொண்டுள்ள அன்பு ஆழமாக வேரூன்றியது! ஆண்டனியை நானென்றும் நம்புவதே யில்லை, புரூட்டஸ்! சீஸர் மாண்டதும் ஆண்டனி என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது!
புரூட்டஸ்: அருமைக் காஸ்ஸியஸ்! ஆண்டனியைப் பற்றிக் கவலைப் படாதீர்! சீஸர் செத்ததும் உடலை வைத்து அழுவதற்கு ஆண்டனி போவான்! அப்புறம் மனமுடைந்து ஆண்டனியும் சாவான்.
திரிபோனியஸ்:னாம், புரூட்டஸ் சொல்வதே சரி, அஞ்ச வேண்டாம் ஆண்டனிக்கு! அவர் மடியத் தேவையில்லை! நமது குறி சீஸர் மட்டுமே.
[அப்போது டங், டங் கடிகார மணியோசை கேட்கிறது]
புரூட்டஸ்: [சற்று தயங்கி] கேளுங்கள் மணியோசையை!
காஸ்ஸியஸ்: மூன்று மணி ஆகிறது. கிழக்கு வெளுப்பதற்குள் நாம் கலைய வேண்டும்.
திரிபோனியஸ்: போகும் நேரம் வந்து விட்டது.
காஸ்ஸியஸ்: [சற்று கவலையுடன்] சீஸர் காலை மக்கள் மன்றத்துக்கு வருவாரா என்பது சந்தேகமே! பேரிடி, பெருமழை, பேய்ப்புயல், மின்னல் ஆகியவற்றைப் பார்த்துப் பயப்படுவார் சீஸர்! நிரம்ப சகுனம் பார்ப்பவர் சீஸர்! இன்று ராத்திரி வானத்தில் நடக்கும் கோர நாட்டியங்கள் அவரை வெளியில் வராமல் நிறுத்தி விடலாம்! அல்லது அஞ்சிவிடும் கல்பூர்ணியாவே அவரைத் தடுத்து விடலாம். என்ன செய்யலாம்?
தீசியஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நானவரை இழுத்துக் கொண்டு வருவேன். அவரிடம் சக்கரையாகப் பேசி அழைத்து வருவேன்! உயர்வு நவிற்சியில் அவரைப் புகழ்ந்தால், மனிதர் மெழுகாய் உருகிடுவார்! முகத்துதியில் அவரைக் கவர்வது எளிது! சீஸர் முகத்துதிவாதிகளை அறவே வெறுப்பவர்! ஆனால் முகப் புகழ்ச்சி செய்தால் வேம்பாய் இருப்பவர் கரும்பாய் மாறுவார்!
காஸ்ஸியஸ்: கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பவன் அல்லவா நீ? சீஸரை மக்கள் மன்றத்துக்கு இழுத்து வரும் பணி உன்னுடையது! அதே சமயத்தில் சீஸர் அருகில் வராமல் ஆண்டனியை ஒதுக்க வேண்டுமே? யார் செய்ய முடியும் அதை?
மெத்தலஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! அழகியைக் கண்டால் மெழுகாகிப் போவார் ஆண்டனி! எனக்குத் தெரிந்த பேரழகி ஒருத்தி ஆடல் புரிய வந்திருக்கிறாள். அவளது காந்த விழிகளைக் காட்டிச் சில மணிநேரம் ஆண்டனியைத் தாமதிக்க வைக்கிறேன்! அவள் மேனி அழகு ஆண்டனியைக் கட்டிப் போட்டுவிடும்! அந்த பணியை நான் அழகாகச் செய்து முடிப்பேன்.
காஸ்ஸியஸ்: விடியப் போகிறது! கிழக்கு வெளுத்து விட்டது! நமது திட்டமும் தலைதூக்கி விட்டது! நாமெல்லாம் நீங்கும் வேளை வந்து விட்டது! மெய்யான ரோமானியராய் நம்மைக் காட்டிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது! போய் வாருங்கள் தோழர்களே! வாயைத் திறக்காதீர்! வாளைக் கூர்மை ஆக்குவீர்!
புரூட்டஸ்: ஆம் அருமை நண்பர்களே! உங்கள் முகமும், வாயும் நம் திட்டத்தைக் காட்டி விடக் கூடாது!
[அனைத்துச் சதிகாரரும் புரூட்டஸ் தோட்டத்தை விட்டுப் போகிறார்கள். தூக்கம் கலைந்து புரூட்டஸின் மனைவி போர்ஷியா வருகிறாள்.]
போர்ஷியா: [கவலையுடன்] முக்காடு போட்டு முகத்தைக் காட்டாமல் போகும் அவர்கள் யார்? விடிந்தும், விடியாத இந்தக் காலை வேளையில் நமது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் யார்? என்னைப் பார்த்தும், பாராமல், வாய்மூடி வணக்கம் கூடச் சொல்லாமல் நழுவிச் செல்லும் அந்த அநாகரீக மனிதர்கள் யார்? என்ன சொல்ல வந்தார் அனைவரும்? ஏன் நீங்கள் அதிகாலையில் எழுந்து வந்தீர்? ஏன் உங்கள் முகம் கரிந்து போய் உள்ளது? மின்னல் அடித்து விட்டதா உங்கள் முகத்தில்?
புரூட்டஸ்: [ஆச்சரியம் அடைந்து] நீ ஏன் அதிகாலையில் எழுந்து வந்தாய்? தூக்கம் ஏன் கலைந்தது உனக்கு? காலைத் தூக்கம் கலைந்தால், உனக்குத் தலை சுற்றுமே?
போர்ஷியா: அதே கேள்விகளை நான் உங்களைக் கேட்கிறேன்? நள்ளிரவுத் தூக்கம் இல்லா விட்டால், உங்களுக்கும் நல்ல தில்லையே! உறக்க மில்லாத உடம்பு வலுவின்றிப் போகுமே! உங்கள் முகம் சோகத்துடன் காணப் படுவதின் காரணம் என்ன? சொல்லுங்கள் எனக்கு!
புரூட்டஸ்: போர்ஷியா! உடம்புக்கு நலமில்லை எனக்கு. உறக்கம் வரவில்லை எனக்கு.
போர்ஷியா: என்ன? உடம்புக்கு நலமில்லையா? உடம்புக்குச் சுகமில்லை என்றால் படுக்கையில் அல்லவா ஓய்வெடுக்க வேண்டும்? பத்து ஆட்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக்கிறது? புரூட்டஸ¤க்கு நலமில்லையா? நலமில்லாதவர் அதிகாலைக் குளிரில் நடமாடினால் என்ன ஆகும்? உடல்நலம் மேலும் குறையுமே! உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒரு நோய் உள்ளது! எனக்கது தெரிந்தாக வேண்டும். உங்கள் ஆருயிர் மனைவிடம் உங்கள் சிரமத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? ஏழெட்டுப் நபர்கள் ஏன் முகத்தை மூடி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார்? சொல்லுங்கள் நடந்ததை? நான் உங்கள் மனைவி அல்லவா? [மண்டியிட்டு மன்றாடுகிறாள்]
புரூட்டஸ்: கண்மணி போர்ஷியா! மண்டி யிடாதே! மன்றாடாதே! எனக்கொன்றும் கொடிய நோயில்லை! வெறும் தலைவலிதான்!
போர்ஷியா: [வியப்புடன்] வெறும் தலைவலியைச் சொல்லவா இத்தனை தயக்கம்? நம்ப முடியவில்லை என்னால்! எதையோ சொல்ல மறுக்கிறீர்! எதையோ சொல்லக் கூடாதென்று மறைக்கிறீர்! நான் உங்கள் மனைவி என்பதையும் மறக்கிறீர்! உண்டி படைப்பதற்கும், படுக்கையில் ஒட்டி உறங்குவதற்கும் மட்டுமா உங்களுக்கு மனைவி? போர்ஷியா மனைவில்லை! வெறும் உடல் விருந்தாளி உங்களுக்கு!
புரூட்டஸ்: [போர்ஷியாவை அணைத்துக் கொண்டு] அப்படி சொல்லாதே போர்ஷியா? ஆருயிர் மனைவி நீ! அன்பு மனைவி நீ! ஆசை மனைவி நீ! அழகிய மனைவி நீ! அறிவுப் பெண்மணி நீ! போகப் போக நீயே தெரிந்து கொள்வாய்!
போர்ஷியா: அன்பு மனைவி, அழகு மனைவி, அறிவு மனைவி என்றெல்லாம் அடைமொழி கொடுத்து என்னை நீங்கள் ஏமாற்றுகிறீர்! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தராமல் மறைக்கிறீர். அவர்கள் யாரென்று சொல்லுங்கள்! யாரிடமும் நான் கூறப் போவதில்லை.
புரூட்டஸ்: போகப் போகத் தெரிந்து கொள்வாய் போர்ஷியா! [அப்போது கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது] பார்! போர்ஷியா உள்ளே போ! யாரோ வருகிறார்? உள்ளே போ! நிம்மதியாக இரு!
[போர்ஷியா உடனே உள்ளே போகிறாள். லூசியஸ் ஆழ்ந்து தூங்குகிறான். புரூட்டஸ் கதவைத் திறக்கச் செல்கிறார்]
புரூட்டஸ்: யாரது மீண்டும் என்னைக் கலக்க வருகிறார்? முதலில் சதிக் கூட்டம்! அப்புறம் போர்ஷியா! அடுத்தினி என்னை யார் ஆட்டி வைக்க வருகிறார்? ஒருநாள் உறக்கம் போனது உயிர் போனது போல் உணர்கிறேன்! விதியே! சதி யாரை விழுங்கப் போகிறது? சீஸரையா? அல்லது புரூட்டஸையா? விதவை ஆகப் போவது கல்பூர்ணியாவா? அல்லது போர்ஷியாவா? சதி கால் முளைத்து நடக்க ஆரம்பித்து விட்டது! அந்த பூதத்தை யாராலுமினி நிறுத்த முடியாது!
*********************
அங்கம் -5 காட்சி -5
மகத்தான மரணம், மர்மமான மரணம்
புகட்டலாம் அதனை இரு விதங்களில்
என்றோ ஒருநாள் சாவது உறுதி
எப்படிச் சாவு வரும் நமக்கு
எப்போது சாவு வரும் நமக்கு
என்பதி லில்லை உறுதி!ஸொகியால் ரின்போச், திபெத் வேதாந்தி
கடலில் பயணிக்க ஒரு படகையும்,
குடியிருந்து வாழ ஒரு வீட்டையும்
முடிவு செய்வது போல நான்
வாழ்வு யாத்திரை முடிக்க
தேர்ந்தெ டுப்பது மரணத்தை!செனேகா, ரோமன் வேதாந்தி
வானும், பூமியும் வாழ்த்திடும் சீஸரை!
வீணாய்க் கலக்கம், ஏனோ அறியேன்?
நற்கனவே கல்பூர்ணியா கண்டது நேற்று!
முற்றிலும் தவறு துர்க்கனா வென்பது! …தீஸியஸ்
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். அதிகாலை வேளை. ரோமாபுரி சீஸரின் மாளிகையில் படுக்கை அறை.
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், சீஸரின் மனைவி கல்பூர்ணியா, பணியாள், செனட்டர் தீஸியஸ்
காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி அதிகாலைப் பொழுது. இராப்பகலாய்ப் பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சீஸர் மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அருகில் உறங்கும் கல்பூர்ணியா பயங்கரக் கனவுகள் கண்டு கலங்கிப் புரண்டு அலறுகிறாள். சீஸர் தூக்கம் முறிந்து அதிர்ச்சியுடன் எழுந்து ஒன்றும் புரியாது நடமாடுகிறார்.
ஜூலியஸ் சீஸர்: வானமும், பூமியும் ஏனின்று கொந்தளித்துக் கூக்குரல் போடுகின்றன? மூன்று தரம் கல்பூர்ணியா தூக்கத்தில் அலறி விட்டாள்! “ஐயோ சீஸரைக் கொல்கிறார்” என்று மும்முறைக் கத்தி விட்டாள், கல்பூர்ணியா! பாழாய்ப் போன ராத்திரி அவளுக்குப் பயங்கரக் கனவுகளைக் காட்டி உலுக்கி விட்டது! யாருக்கு நெஞ்சுறுதி உள்ளது சீஸர் மீது வாளை வீசிட? அஞ்சாதே கல்பூர்ணியா! நான் உயிரோடுதான் உள்ளேன்! உன் கனவுக்கு ஓர் அர்த்த மில்லை! உன் கணவரைக் கொல்லும் எந்தப் பகைவனும் ரோமாபுரியில் இல்லை? அஞ்சாதே கண்ணே! அலறாதே கல்பூர்ணியா! …. யாரங்கே?
பணியாள்: [உள்ளே விரைந்து] பிரபு! நான்தான் உங்கள் பணியாள். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?
ஜூலியஸ் சீஸர்: போ! ஆலயப் பாதிரிகளைக் கண்டு விலங்குகளைப் பலியிடச் சொல்! குருதியைத் தொட்டு பின்னால் என்ன நடக்கப் போகுதென்று அவரை அறியச் சொல்! சொல்லும் தகவலைக் கேட்டு வா! சீக்கிரம் போ!
பணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு!
[பணியாள் போகிறான். கல்பூர்ணியா கண்விழித்துப் பயமுடன் எழுந்து கவலையுடன் சீஸரை அண்டுகிறாள்]
கல்பூர்ணியா: [சோக முகத்துடன்] என்ன சொல்கிறீர் பிரபு? வெளியே போகக் கூடாது நீங்கள்! வீட்டுப் படியைத் தாண்டி வெளியேறக் கூடாது நீங்கள்! வெளியேற விடமாட்டேன் நான்! நான் கண்ட தீக்கனா என் நெஞ்சைப் பிளந்து விட்டது!
ஜூலியஸ் சீஸர்: ஏனப்படிச் சொல்கிறாய்? எனக்கென்ன நேரப் போகுது? என்னை பயமுறுத்துபவை முதுகுப் புறத்தில்தான் நிகழும். முகத்தைப் பார்த்தால் பயந்து ஓடிவிடும்.
கல்பூர்ணியா: பிரபு! சகுனங்களைப் பொருட் படுத்தாதவள் நான். ஆயினும் அவையின்று எனக்கு அச்சம் ஊட்டுகின்றன. பயங்கரக் கனவுகள் வந்து என்னை வாட்டுகின்றன. குழந்தை யில்லாத எனக்கு நீங்கள் ஒருவர்தான் உறவு! அந்த உறவு பறிபோவதாய்க் காட்டுது என் கனவு! என்ன சொல்வேன் என் அன்புக்குரியவரே! எப்படிச் சொல்வேன் என் ஆருயிரே! உங்கள் உயிருக்கு ஆபத்து என்றெண்ணும் போது என் எலும்பும், சதையும், ஆத்மாவும் ஆடுகின்றன! என்னிதயம் வில்லடி பட்ட பறவைபோல் துடிக்கிறது! கனவிலே உங்களைச் சுற்றிக் கூரிய கத்திகள் நெருங்கிடக் கண்டேன்! வீதியில் ஒரு வேங்கை குருதி
சிந்தி வீறிட்டு ஓடுவதைக் கண்டேன்! பிரேதக் குழிகளில் எழுந்த பிணங்கள் உம்மைத் தழுவிக் கொள்வதைக் கண்டேன்! வானத்தில் பிசாசுகள் போரிட்டு மக்கள் மன்றத்தில் குருதி பொழியக் கண்டேன்! பேய்களும், பிணங்களும் தீயைக் கையில் ஏந்தித் தெருவெல்லாம் சுற்றி வரக் கண்டேன்! அவை எல்லாம் அடிவயிற்றைக் கலக்கி அச்சமும் பீதியும் அடைகிறேன்! மக்கள் மன்றத்துக்கு நீங்கள் போக வேண்டாம்! போகக் கூடாது! போக விடமாட்டேன்!ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] வரப் போகும் முடிவை யாரால் தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும்! வராததைக் கனவில் கண்டு வருமென நீ வருந்தலாமா? வரும் என்று நீ எதிர்பார்ப்பது வராது! வராது என்று வாளா விருக்கும் சமயம் வந்திடும் அது! விதியின் விளையாட்டு வேடிக்கையானது, மர்மமானது! பராக்கிரமன் சீஸர் அவற்றுக் கெல்லாம் பயந்தவனில்லை! அழைப்பை ஒப்புக் கொண்ட நான், மன்றத்துக் கின்று போகத்தான் வேண்டும், கல்பூர்ணியா! நீ கண்ட அபசகுனங்கள் சீஸருக்கு மட்டுமல்ல! ரோமானியர் அனைவருக்கும் எச்சரிக்கை அவை!
கல்பூர்ணியா: உண்மை! முற்றிலும் உண்மை! உங்களுக்கு ஆபத்தென்றால் அது ரோமா புரிக்குத்தானே எச்சரிக்கை! பிச்சைக்காரன் செத்தால் வான்மீன் வருவதில்லை! சாவு மணி அடிப்பதில்லை! ஆனால் ஓர் வேந்தன் மாண்டால், வான மண்டலமே வெடித்துப் பிளக்கிறது!
ஜூலியஸ் சீஸர்: கல்பூர்ணியா! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! பிறப்பும், இறப்பும் நாணயத்தின் இரு முகங்கள்! கோழையர் மரணம் வருவதற்கு முன்பாகப் பன்முறை மடிவார்! வல்லவன் ஒருமுறைதான் சுவைக்கிறான் மரணத்தை! ஆச்சரியமாக உள்ளது! மரணம் மனிதனின் முடிவென்று அறிந்தும் ஏனவன் அதற்கு அஞ்சி ஒளிய வேண்டும்! அஞ்சி ஒளிந்தாலும், அவரை மரணம் தேடிப் பிடித்திடும்! யார் அதைத் தடுப்பார்? யார் அதிலிருந்து தப்புவார்? யார் அவரைக் காக்க முடியும்?
[பணியாள் அப்போது ஓடி வருகிறான்]
பணியாள்: பிரபு! சகுனத்தை விளக்கும் ஆலய ஜோதிடர் பலியிட்ட பிறகு சொன்னார், மன்றத்தில் உங்களுக்கு ஆபத்து வரலாம் என்று!
ஜூலியஸ் சீஸர்: [அலட்சியமாக] ஆபத்து வரும் என்று உறுதியாகச் சொல்ல வில்லையே! வரலாம் என்றால் ஐயப்பாடு அல்லவா தொனிக்கிறது! தெய்வப் பீடாதிபதிகள் என்னைக் கோழையாக்க முயல்கிறார். சீஸர் ஒருபோதும் அஞ்சி ஒளிவ தில்லை! அபாயத்துக்குத் தெரியுமா, அபாயத்தை விட நான் அபாயமானவன் என்று! பராக்கிரம சீஸர் பயந்து பின்தங்க மாட்டான்.
கல்பூர்ணியா: [கெஞ்சலுடன்] பிரபு! ஊக்கமும், உறுதியும் உங்கள் அறிவை மீறுகிறது! துணிவும், பலமும் உங்களைக் குருடாக்குகிறது! சீஸரை நிறுத்தியது, கல்பூர்ணியாவின் அச்சம் என்று எண்ணிக் கொள்வீர்! அது என் முடிவாகட்டும்! மார்க் ஆண்டனியை அனுப்பி, சீஸருக்கு உடல்நல மில்லை என்று மன்றத்தில் அறிவிக்கச் சொல்வீர்! உங்கள் காலில் விழுந்து மன்றாடுகிறேன். [சீஸர் முன்பு மண்யிட்டு அழுகிறாள்]
ஜூலியஸ் சீஸர்: [கேலிச் சிரிப்புடன்] “சீஸருக்கு நலமில்லை! மன்றத்துக் கின்று வரமாட்டார்!” என்று மார்க் ஆண்டனி சொன்னால், என்ன கேலிக் கூத்தாக இருக்கும்? செனட்டர் எல்லாரும் அதைக் கேட்டுச் சிரிக்காமல் இருப்பாரா?
[பணியாள் வந்து செனட்டர் தீஸியஸ் வந்துள்ளதாக அறிவித்த பிறகு, தீஸியஸ் உள்ளே நுழைகிறார்]
தீஸியஸ்: வணக்கம், மேன்மை மிகு தளபதியாரே! வணக்கம், மாண்பு மிகு கல்பூர்ணியா அம்மையாரே! நான் தளபதியை மக்கள் மன்றத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்! நீங்கள் தயாரானதும் உங்களுடன் வர புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சில செனட்டர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] நன்றி தீஸியஸ், நல்லது, பூரிப்படைகிறேன்! சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்! செனட்டருக்கு என் நன்றியை எடுத்துரை! ஆனால் மன்றத்துக்கு நான் வர முடியா தென்று சொல்! முடியா தென்பது சரியல்ல! மன்றத்துக்கு வரப் போவதில்லை என்று சொல்!
கல்பூர்ணியா: [சட்டென] சீஸருக்கு உடல்நல மில்லை என்று சொல். சுகமின்றி சீஸர் வீட்டில் படுத்திருக்கிறார் என்று சொல்!
ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] சீஸர் பொய் சொல்லாமா? கூடாது! கூடவே கூடாது! பேரவைக்கு சீஸர் வரப் போவதில்லை என்று சொல்!
தீஸியஸ்: [தயக்கமுடன், கெஞ்சலில்] பராக்கிரம பிரபு! ஏதாவது ஒரு காரணம் நான் சொல்ல வேண்டாமா? அல்லது மன்றத்தில் என்னைப் பார்த்து எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டாரா?
ஜூலியஸ் சீஸர்: காரணம் என்ன? என் மன விருப்பம் என்று சொல்! செனட்டருக்கு அது போதும். ஆனால் உனக்கு மட்டும் உண்மைக் காரணம் சொல்கிறேன், நீ எனக்கு விருப்பமானன் என்னும் முறையில். கல்பூர்ணியா கெட்ட கனவு கண்டு என்னைத் தடுத்து விட்டாள்! நிறுத்தி என்னை வீட்டில் தங்க வைத்திருக்கிறாள். அவளது பயங்கரக் கனவில் என் சிலையைக் கண்டாளாம்! சிலை மீதிருந்து பல குருதி ஊற்றுக்கள் பீச்சி எழுவதைக் கண்டாளாம்! ரோமானிய மூர்க்கர் சிரித்துக் கொண்டு அந்தக் குருதியில் கைகளைக் குளிப்பாட்டினாராம்! அவற்றைக் கண்டதில் அச்சம் கொண்டு என்னை போக வேண்டாமெனத் தடுத்து மன்றாடுகிறாள்!
தீஸியஸ்: [சிரித்துக் கொண்டு] வானமும், பூமியும் முன்கூட்டி சீஸரை வாழ்த்துவதைத் தவறாகப் புரிந்திருக்கிறார்! வானம் கொட்டி முழக்குது! பூமி புயலடித்துப் பூரிக்குது! மழை நீர்ப் பூக்களைத் தெளிக்குது! நீரும், நிலமும், வானும் ஒருங்கே சீஸரை வேந்தராக வரவேற்குது! சீஸர் சிலையில் பீறிட்டெழும் குருதி, ரோம சாம்ராஜியத்தை விரிவாக்க அவர் செய்த தியாகத்தைக் காட்டுகிறது! பராக்கிரமப் பிரபு! கல்பூர்ணியா நேற்று கண்டது நற்கனவே! துர்க்கனவாய் எடுத்துக் கொள்வது சரியல்ல!
ஜூலியஸ் சீஸர்: [பேருகையுடன்] பார்த்தாயா கல்பூர்ணியா! தீஸியஸ் கூறும் விளக்கமே சிறந்ததாய்த் தெரியுது எனக்கு! உன் பயங்கர விளக்கம் தவறு! ஆலயப் பீடாதிபதிகள் சொன்னதும் தவறு! தீஸியஸ் சொல்வதே சரி. … தீஸியஸ்! நான் மன்றத்துக்கு வருவதாகச் செனட்டாரிடம் சொல்!
கல்பூர்ணியா: [கண்ணீர் வடித்து] மகா பிரபு! தீஸியஸ் சொல்வதுதான் தவறு! என் மனதில் அப்படித் தோன்ற வில்லை! வல்லமை மிக்க விதி உங்களை வலை போட்டுப் பிடிக்கிறது! தீயஸிஸ் சொல்வதில் தீமை ஒளிந்துள்ளதாகத் தெரியுது எனக்கு! போகாதீர் பிரபு, போகாதீர்!
தீஸியஸ்: பிரபு! செனட்டார் யாவரும் சீஸருக் கின்று பொற்கிரீடம் அணிவிக்கப் போவதாய்த் தீர்மானம் செய்துள்ளார்! தாங்கள் வரப் போவ தில்லை என்றால் அனைவரும் வருந்துவார்! பிறகு மனம் மாறி விடுவார். பெருஞ்சினங் கொண்டு மன்றத்தைக் கலைத்து விடுவார்! “தள்ளிப் போடுங்கள் பட்டாபிசேக நாளை, கல்பூர்ணியா நற்கனவு காணும் வரை!” என்று எள்ளி நகையாடுவார்! பிரபு! தங்கள் தலையை ஒப்பனை செய்த தங்கக் கிரீடம் தயாராக உள்ளது, மன்றத்தில்! தங்களை வேந்தராக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார் செனட்டார்! வாருங்கள் மன்றத்துக்கு! வந்து ஏற்றுக் கொள்வீர் வெகுமதியை! பராக்கிரம சீஸரே! உமது பொற்காலமிது! உமது மகத்தான பாராட்டு விழா இது! ஒருமுறைதான் வருமிது! விட்டுவிடாதீர் வீராதி வீரரே!
ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] எத்தகை அவமானத்தை எனக்கு உண்டாக்கி விட்டாய் கல்பூர்ணியா? உன் கனவைக் கேட்டு நான் ஒளிந்து கொள்வதா? தீஸியஸ்! வருகிறேன் மன்றத்துக்கு! மகிழ்ந்திடு கல்பூர்ணியா! …. யாரங்கே? கொண்டுவா எனது மேலங்கியை! குளித்து, முழுகி, ஆடை அணிந்து நான் தயாராக வேண்டும்! ….(மெதுவாக) ஆனால் தீஸியஸ்! இங்கு நடந்த அர்த்தமற்ற வாதங்களை வெளியில் எவருக்கும் சொல்லாதே! கல்பூர்ணியா என்னைத் தடுத்து நிறுத்தினாள் என்று யாரிடமும் கூறாதே! கெட்ட சகுனங்களைக் கண்டு சீஸர் அஞ்சினார் என்று எள்ளி நகையாட எவருக்கும் இடங் கொடாதே! … போ! சீஸர் மன்றத்துக்கு வருகிறார் என்று பறைசாற்று! என் பொற்காலம் உதயமாகட்டும்!
[தீஸியஸ் போகிறான்]
*********************
அங்கம் -5 காட்சி -6
பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்!
மரணம் அறிவிக் காது வரும் தருணம்!
வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ,
இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ
முடிவில் சாவது முன் தெரி யாது!*************
உலகப் பகட்டினில் உழலும் போது,
நிழலாய்ப் பின்வரும் சாவினை அறியாய்!
இடிபோல் தாக்கும் மனிதனை மரணம்,
தடாலெனத் தலையில் அடித்து! ….மரணப் படுக்கையில் புரள்வோன் ஆயுளை
மருத்துவர் நீட்டலும் அரிதே! உந்தன்
குருதேவர் கூட்டலும் அரிதே!ஜெட்ஸன் மிலரேப்பா, திபெத் கவியோகி
இலையுதிர் காலத்து முகில்போல்
நிலை யிலாதது நமது வாழ்வு!
கதக்களி போல் துவங்கி முடிவது,
மனிதரின் பிறப்பும் இறப்பும்!
வானில் அடிக்கும் மின்னல் வீச்சே,
மானிடக் கால இறுதிக் காட்சி !
செங்குத் தான மலைமே லிருந்து
உருண்டு வீழும்,
நதி போன்றதே நமது வாழ்வு!கௌதம புத்தர் (கி.மு.560-480)
கவனம் வைப்பீர் சீஸர்! புரூட்டஸ் மீதும்,
காஸ்ஸிஸ் மீதும் நம்பிக்கை வேண்டாம்.
காஸ்கா அருகிலே வராதீர்!
தீஸியஸ் உம்மை நேசிக்க வில்லை!
சின்னா மீது ஒருகண் வைப்பீர்!
அன்னார் மனத்திலும் உள்ள தொன்றே!
கடவுள் உம்மைக் காத்திட வேண்டும்! ……
என் மடலைப் படித்தால் சீஸர் தப்புவார்!
இன்றேல் விதியால் சதிக்கிரை யாவார்! ..[ஆர்டிமிடோரஸ், சீஸரின் நண்பன்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
நெஞ்சுக்கும், நாவுக்கு மிடையே,
நிற்குது மாபெரும் மலையே!
ஆடவன் உள்ளமும், ஆயிழை உறுதியும்
கூடவே என்னுடன் கொண்டுள்ளேன்!
எத்தனைக் கடினம் இரகசியம் காப்பது
உத்தமப் பெண்ணான ஒருத்திக்கு? ..[போர்ஷியா, புரூட்டஸின் மனைவி]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம்:
சீஸர் பட்டாபிசேக தினம். காலை வேளை. ரோமாபுரியில் கிளியோபாத்ரா தங்கி இருக்கும் அரசாங்க விருந்தினர் மாளிகை.
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, சிறுவன் சிஸேரியன், சேடிகள், ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர்கள்.
காட்சி அமைப்பு:
மார்ச் பதினைந்தாம் தேதி காலைப் பொழுது. கிளியோபாத்ரா தன்னையும், மகனையும் ஒப்பனை செய்து கொண்டு மக்கள் மன்றத்துக்குச் செல்லத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.
கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] கண்மணி! இன்றைக்குக் கொண்டாட்ட நாள்! உன் தந்தை ரோம் சாம்ராஜியத்துக்குச் சக்கரவர்த்தியாக மகுடம் சூடப் போகிறார்! ஒருகாலத்தில் இப்படி நீயும் ரோமாபுரிக்குப் பெரு வேந்தனாய் முடிசூட்டப் படுவாய்! நீயும், நானும் அந்த கோலாகல விழாவை நேராகக் காணப் போகிறோம். உன் தந்தை முதலில் நம்மைக் காண வருகிறார். அவருக்குப் பின்னால் நாமும் போகப் போகிறோம்!
சிஸேரியன்: [தாயைச் சுட்டிக் காட்டி] நீங்கள் எகிப்துக்கு மகாராணி! தந்தை ரோமாபுரிக்கு மகாராஜா! நான் எகிப்துக்கும் மகா இளவரசன்! ரோமுக்கும் இ ளவரசன் அல்லவா?
கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] சரியாகச் சொன்னாய் கண்மணி! [கன்னத்தில் முத்தமிடுகிறாள்] உலகை ஆளப்போகும் நீ எதிர்கால அலெக்ஸாண்டர்! மகா, மகா இளவரசன்! நீ சைனாவைப் பிடிக்க வேண்டும் தெரியுமா?
சிஸேரியன்: சைனாவுக்கு வழி தெரியாதே எனக்கு! அரிஸ்டாடில் மாதிரி எனக்கொரு குரு, முதலில் பாதை காட்டிக் கொடுக்க வேண்டுமே! கத்திச் சண்டை தெரியும் எனக்கு! ஏற்றி விட்டால் குதிரை ஓட்டத் தெரியும் எனக்கு!
கிளியோபாத்ரா: அலெக்ஸாண்டிரியாவில் ஏற்பாடு செய்திருக்கிறேன், உனக்கொரு குருவை. கணித மேதை பித்தகோரஸ் வம்சாவளியில் வந்தவர்! உனக்குக் கணிதம், வான சாஸ்திரம், வரலாறு, பூகோளப் பாடம் அனைத்தும் சொல்லிக் கொடுப்பார்!
[அப்போது சேடி ஒருத்தி சீஸர் வருவதை அறிவிக்கிறாள். சீஸர் செனட்டர்களை வாசலில் நிறுத்தி விட்டு கிளியோபாத்ரா மாளிகைக்குள் நுழைகிறார். கிளியோபாத்ரா எழுந்து சென்று சீஸரை வரவேற்கிறாள். சிஸேரியன் ஓடிச் சென்று சீஸர் கையப் பற்றுகிறான். மகனைத் தூக்கி முத்தமிடுகிறார் சீஸர். கிளியோபாத்ராவையும் முத்தமிடுகிறார்.]
ஜூலியஸ் சீஸர்: கண்ணே! கிளியோபாத்ரா! மன்றத்துக்குப் போகிறேன் நான். நீ மகனைக் கூட்டிக் கொண்டு வருகிறாயா, என் முடிசூட்டு விழாவைக் காண!
கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] நானும், மகனும் வந்திருப்பது கோலாகல விழாவில் கலந்து கொள்ளத்தானே! உங்கள் பின்னால் என் தூக்கு ரதமும் வரும். நான் வராமல் போவேனா? என்ன கேள்வி யிது?
ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] ஆனால் கல்பூர்ணியா வரப் போவதில்லை மன்றத்துக்கு! நானங்கு போவதும் பிடிக்க வில்லை அவளுக்கு!
கிளியோபாத்ரா: [ஆச்சரியமுடன்] ஏன் கல்பூர்ணியா வரப்போவ தில்லை? நீங்கள் போவது ஏன் அவளுக்குப் பிடிக்க வில்லை? நான் உங்களுக்கு அருகில் இருப்பேன் என்று வருந்துகிறாளா?
ஜூலியஸ் சீஸர்: என்னருகில் நீ இருப்பது அவளுக்கு வெறுப்பூட்ட வில்லை! நேற்றடித்த பயங்கரப் புயலிடி, மின்னல் அவள் மனதைப் பாதித்து விட்டது! படுக்கையில் பயங்கரக் கனவு கண்டு பலமுறை அலறி விட்டாள்! அந்தக் கனவில் என் சிலை மீதிருந்து குருதி பீறிட்டெழுவதைக் கண்டாளாம்! ரோமாரியில் பலர் தீப்பந்தங்கள் ஏந்தி வீதியெங்கும் பதறி ஓடுவதைக் கண்டாளாம்! வானிலிருந்து மலர் வளையம் ஒன்று பாம்ப்பியின் சிலைக் காலடியில் விழுவதைக் கண்டாளாம்! என்னுயிருக்குப் பயந்து என்னைத் தடுத்து நிறுத்த முயன்றாள்!
கிளியோபாத்ரா: [ஆச்சரியமும், அச்சமும் கலந்து] அப்படியா! இப்போது நினைவுக்கு வருகிறது. எனது சூனியக்காரியும் ஒருமாதிரியாகச் சொன்னாள்! இப்போது புரிகிறது எனக்கு! பாம்ப்பியின் சிலை அடியில் மலர் வளையம் விழுந்ததா? அப்படி என்றால் உங்கள் பகைவர், உயிரிழந்த பாம்ப்பி உங்களைப் பலி வாங்கப் போவதாகத் தெரிகிறது எனக்கு! அவள் அஞ்சியது சரியே! சீஸர்! நீங்கள் மன்றத்துக்குப் போவதில் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது எனக்கு!
ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] எனக்கு கனவில் நம்பிக்கை யில்லை! ஆனால் உன் சூனியக்காரி என்ன சொன்னாள்? எனக்குச் சகுனத்தில் நம்பிக்கை யில்லை! ஆனால் அவள் கூற்றை விளக்கமாய்ச் சொல்!
கிளியோபாத்ரா: இன்று காலை கடவுளைத் தியானிக்கத் தீ வளர்த்த போது சூனியக்காரி கண்மூடிச் சொன்னது: “ரோமுக்குக் கெட்ட காலம் வருகுது! ரோமானியர் தீ ஏந்தி தெருவெங்கும் ஓடப் போகிறார்! ரோமா புரியை விட்டுச் சிஸேரியனை அழைத்துப் படகில் போவேன் என்றாள்!” எனக்கு அப்போது ஒன்றும் புரிய வில்லை! சீஸர்! என் நெஞ்சில் அச்சம் உண்டாகுகிறது. நீங்கள் மன்றத்துக்குத் தனியாகப் போவது சரியாகத் தெரிய வில்லை! ஆண்டனியை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். சீஸர்! எனக்கும், நமது மகனுக்கும் கூட ஆபத்து உண்டாகலாம்! பாதுகாப்போடு இருக்க வேண்டும் நீங்களும், நாங்களும்!
ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அஞ்சாதே கிளியோபாத்ரா! எனக்கும் அச்சத்தை உண்டாக்காதே! உனக்கொன்றும் நேராது. எனக்கொன்றும் விளையாது! கல்பூர்ணியா போல் பேசி நீயும் என்னைத் தடுக்கிறாய்! சகுனங்களைக் கண்டு நான் அஞ்சி ஒளிபவனில்லை! கிளியோபாத்ரா! போர்க் களத்தில் நாற்புறத்திலும் பகைவர் முன்பாகவே நடமாடிய நான், யாரைக் கண்டும் அஞ்சுபவனில்லை! ரோமானிய செனட்டர் யாவரும் என்னாட்டு மாந்தர்! அன்னியர் அல்லர்! ஏனவர்க்கு நான் அஞ்ச வேண்டும்? நான் தினமும் அஞ்சி அஞ்சிச் சாகும் தெரு மனிதன் அல்லன்!
கிளியோபாத்ரா: எனது தெய்வத்தை நான் வணங்குகிறேன்! உங்கள் தெய்வத்தை நீங்கள் வழிபடுங்கள்! உங்கள் உயிருக்கு ஆபத்தென்றால், எங்கள் கதி என்னவாகும்? மன்றத்தில் எங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் அல்லவா? அன்னியரான நானும் மகனும் கவனமாகக் கண்விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் உங்களுக்கு நேர்ந்தால், எங்களுக்கும் ரோமில் ஆபத்து விளையலாம்! மன்றத்துக்கு நான் மகனுடன் செல்வதைப் பற்றி இப்போது சிந்திக்கிறேன்!
ஜூலியஸ் சீஸர்: [கம்பீரமாக] கிளியோபாத்ரா, எனக்கொன்றும் நேராது! உனக்கொன்றும் நேராது! பட்டம் சூட்டும் விழாவில் நீ பங்கெடுக்காமல் போனால், மிக்க வேதனைப் படுவேன் நான்! மனதை மாற்றாதே கிளியோபாத்ரா! நீ வர வேண்டும். என் புதல்வன் வர வேண்டும்.
[அப்போது தீஸியஸ் உள்ளே நுழைகிறான்]
தீஸியஸ்: மேதகு அதிபதி அவர்களே! நேரம் நெருங்கி விட்டது! நீங்கள் போகும் நேரம் வந்து விட்டது! செனட்டார் மன்றத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள் போகலாம்!
ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவையும், மகனையும் முத்தமிட்டு] நான் போகிறேன் கல்பூர்ணியா! பின் தொடர்ந்து நீயும், மகனும் வாருங்கள்!
[தீஸியஸ் உடன் வர, புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் செனட்டார் பின்வர சீஸர் மக்கள் மன்றம் நோக்கிச் செல்கிறார்]
*********************
அங்கம் -5 காட்சி -7
ஜூலியஸ் சீஸர் கொலை.
சீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில்,
சீஸர் செத்து வீழும் முன்பாக,
பிரேதங்கள் குழியைக் காலி செய்து
ஆடை உடுத்தி வீதியில் ஆடின,
வானில் காணும் விண்மீன் ஒளிபோல்!
பரிதியில் சிதறிய குருதித் துளிபோல்!
கடல் தேவன் நெப்டியூன் கடாட்சம் படும்
கிரகணப் பரிதியின் பிரளய நாள்போல்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஹாம்லெட் நாடகம்]
தேடிச் செல்லாதே உன் மரணத்தை!
தேடி வருதே உன்னை மரணம்!
தேடிச்செல், மரணம் பூரணமாகும்
திக்கினை நோக்கி!டாக் ஹாம்மர்ஷோல்டு.
மரணம் என்பது என்ன?
உணர்ச்சி அதிர்வு கட்கு ஓய்வு!
ஆசைகளின் அந்திமப் பிரிவு!
சிந்தனைக் கோலங் கட்கு முடிவு!
உடலின் உழைப்புக்கும் விடுப்பு!மார்கஸ் அரேலியஸ்
அஞ்சா நெஞ்சன் என்பவன் மெய்யாய்
அஞ்சாத மனிதன் அல்லன், என்பேன்!
அது மடமை, தர்க்க ரீதியில் தவறு!
மகத்துவ மனம் பயத்தைத் தணித்து,
இயற்கையில் நேரும் விபத்தை ஏற்று,
தயங்காது செல்பவன் அஞ்சா மனிதன்!ஜோவானா பைல்லி, நாடக மேதை, கவிஞர்
அந்தோ! செத்ததும் செல்வ தெங்கோ?
புதைந்து பனிமூடி முடங்குவ தெங்கோ?
கண்காணா, காற்றிலாச் சிறையுட் பட்டு,
பயங்கர மரண மென்று அலறுவதோ?
கொடுமையிலும் மிகக் கோரம் அந்தோ!வில்லியம் ஷேக்ஸ்பியர் [Measure for Measure]
ஏற்றி வைத்த மெழுகு வர்த்தி ஒருநாள்,
காற்றில் அணைந்து விடும் குப்பென!
நேற்று சுவாசித்து வாழ்ந்தவன் சாம்பல்,
ஆற்றில் கரைந் தோடு மின்று!ரோமாபுரியில்:
தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம்:
சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடுகிறது. பாம்ப்பியின் சிலைக்குக் கீழ் பெரிய ஆசனம் போடப்பட்டு உள்ளது. பக்கத்து மேடையில் தங்க மகுடம் ஒன்று வைக்கப் பட்டுள்ளது. மன்றத்துக்குப் போகும் மேற்படிக் கருகில் கிளியோபாத்ராவின் புதிய சிலை ஒன்று உருவாக்கப்பட்டு மன்றத்துக்கு வருவோரை வரவேற்க நிறுத்தப் பட்டுள்ளது.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.
காட்சி அமைப்பு:
மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். வழியில் ஜோதிட நிபுணன் சீஸர் முன்பாக எதிர்ப்படுகிறான்.
ஜூலியஸ் சீஸர்: [மன்றத்தின் அருகில் நின்று ஜோதிட நிபுணனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்து] என்னப்பா! மார்ச் பதினைந்தாம் தேதி வருது, வருது என்று எனக்குப் பயமூட்டினாயே! அதுவும் வந்தாயிற்றே! ஒன்றும் நேர வில்லையே எனக்கு!
ஜோதிடர்: மேதகு சீஸரே! பதினைந்தாம் தேதி இன்னும் கடந்து செல்ல வில்லை என்பதை மறக்காதீர்!
ஜூலியஸ் சீஸர்: ஜோதிடரே! நான் எதற்கும் அஞ்சி ஒளிய மாட்டேன். பயங்காட்டியே பிழைக்கும் நீ இனி என்கண் முன் எதிர்ப்படாதே! எதிரே கண்டால் உன்னைக் காலால் எற்றி விடுவேன்! கண்முன் நில்லாமல் ஓடிப் போய்விடு!
ஜோதிடன்: [விரைந்து போய்க் கொண்டே] இதுதான் கடைசி முறை. நானினி உங்களைக் காணப் போவதில்லை! நீங்களும் என்னைக் காண மாட்டீர் இனிமேல்! [ஓடிப் போகிறான்]
ஆர்டிமிடோரஸ்: [சீஸரை நிறுத்தித் தலை வணங்கி] மேதகு அதிபதி! வாழ்க நீடூழி! என் பட்டியலைத் படித்துப் பாருங்கள்! கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும்! உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்னும் அட்டவணை இது. தயவு செய்து படியுங்கள்!
தீஸியஸ்: [சீஸர் முன் தலை வணங்கி] தளபதி வாழ்க! முதலில் என்னுடைய விண்ணப்பத்தை படியுங்கள். அவசர மில்லை அவன் பட்டியலுக்கு! என் பிரச்சனை முக்கிய மானது! படியுங்கள் இதை முதலில்! யார் உங்கள் நண்பர் என்று ஒருவன் எழுதிக் காட்ட வேண்டுமா? ரோமில் உங்களுக்குப் பகைவர்கள் கிடையா.
ஆர்டிமிடோரஸ்: வாசிக்க வேண்டாம் அதை! உங்களை முதலில் அண்டியவன் நான்தான்! முதலில் வந்தவனுக்கு முதலிடம் அளிப்பீர்! தீஸியஸ் பிரச்சனையை தீர்க்க முடியாதது! என் பட்டியல் உங்களைப் பாதிக்கும்! ஏன் ரோமாபுரியையே பாதிக்கும்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை! எனது பட்டியல் பாதுகாப்பு நபர்களைச் சுட்டிக் காட்டும்! அவசரம் பாருங்கள்! அவசியம் பாருங்கள்! அலட்சியம் வேண்டாம்!
காஸ்ஸியஸ்: போடா போ! உன் பட்டியலுக்கு என்ன அவசரம்? பாதையில் சீஸரை நிறுத்தி பட்டாபிசேக நேரத்தை வீணாகக் கடத்துகிறாய்! உன் விண்ணப்பத்தை மன்றத்துக்கு வந்து பின்னர் காட்டு!
[சீஸர் தொடர்ந்து நடக்கிறார். மன்றத்தை அடைந்து பாம்ப்பியின் சிலைக்கருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் அமர்கிறார்.]
பொப்பிலஸ்: [சீஸரை நெருங்கி மண்டியிட்டு] மேதகு மன்னா! அடியேன் வணக்கம்! நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும்! எனக்கொரு கோரிக்கை! நிறைவேற்ற வேண்டும்! உங்கள் பட்டாபிசேக நாளென்று எனக்கோர் வேண்டுகோள் உள்ளது!
காஸ்ஸியஸ்: [புரூட்டஸிடம் மெதுவாகத் தடுமாறி, ஆங்காரமாய்] புரூட்டஸ்! நமது ரகசியம் கசிந்து யார் காதிலும் பட்டுவிடக் கூடாது! நமது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும்! நமது மர்மச் சதி சீஸர் காதுக்கு எட்டுவதற்குள், நம் கத்திகள் முந்திக் கொள்ள வேண்டும். நமது சதித் திட்டம் வெளியானால், குத்திக் கொண்டு நான் செத்து வீழ்வேன்! புரூட்டஸ்! கால தாமதம் கூடாது! கத்திகள் விஷ நாக்குகளை நீட்ட வேண்டும், சீக்கிரம்!
புரூட்டஸ்: சற்று பொறு காஸ்ஸியஸ்! புறாவைக் கூண்டில் அடைத்தாகி விட்டது! கையில் பிடிபட்ட புறா நம்மிட மிருந்து தப்ப முடியாது! நாம் அனைவரும் சீஸரைச் சுற்றி முற்றுகை இட வேண்டும்! நேரம் வந்து விட்டது, காஸ்ஸியஸ்! உறங்கும் வாளை ஓசையின்றி உருவுங்கள்!
காஸ்ஸியஸ்: [மெதுவாக] புரூட்டஸ்! அதோ பாருங்கள்! நமது முதல் திட்டம்! காலத்தை அறிந்தவன் திரிபோனஸ்! ஆண்டனியைப் பின்புறமாய்க் கடத்திப் போகிறான்! … [காஸ்காவை நெருங்கி] சரியான சமயம்! சட்டெனச் செய்! சீஸரின் பின்பக்கம் செல்! அங்கே காத்து நில்! முதலில் நீதான் சீஸரின் முடிவு விழாவைத் துவங்க வேண்டும்! போ, காஸ்கா போ! பூனைபோல் நடந்து புலிபோல் தாக்கு! யானை சாகாது ஓரடியில்! அடுத்து அடிமேல் அடி வைப்பது நாங்கள்! போ, காஸ்கா போ! கால தாமதம் வேண்டாம்!
மெத்திலஸ்: [திடீரென சீஸர் காலில் விழுந்து] பராக்கிரமச் சக்கரவர்த்தி! பாராளும் வேந்தே! வல்லமை மிக்க பிரபு! உலகம் சுற்றிய உங்கள் உன்னத பாதங்களில் விழுகிறேன்! என் தமையன் மீது பரிவு கொள்ள வேண்டும்!
ஜூலியஸ் சீஸர்: சக்கரை மொழிகளில் என்னை மெழுகாக்க முனையாதே! கூழைக் கும்பிடு போட்டு வாளை நீட்டாதே! நீ எதற்கு என்னை நெருங்கி வருகிறாய் என்று தெரியும் எனக்கு! நாடு கடத்தப் பட்ட உன் தமையனுக்காக எதுவும் என்னிடம் கேளாதே! அவன் தேசத் துரோகி! தேசத் துரோகிகளை விலங்குபோல் வேட்டையாட வேண்டும்! உயிரோடு அவனை நான் விரட்டியதற்கு நீ பூரிப்படைய வேண்டும்! சீஸர் அவனைத் தண்டித்தது காரணமோடுதான்! போய்விடு!
மெத்திலஸ்: [தலையைத் திருப்பி] மாபெரும் மக்கள் மன்றத்தில் என் குரலுக்கு வேறு ஆதரவு கிடையாதா? என் சகோதரனை மீண்டும் அனுமதிக்க எனக்கு வழிமொழிபவர் எவரு மில்லையா? [எழுகிறான்]
புரூட்டஸ்: [தலை குனிந்து] உங்கள் கரத்தை முத்த மிடுகிறேன் சீஸர், முகத்துதிக்காக இல்லை! மெத்தலஸ் தமையனை நீங்கள் மன்னித்து, மீண்டும் ரோமானிய பிரஜையாக மாற அனுமதிப்பீர்!
ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியத்துடன், சினத்துடன்] புரூட்டஸ்! தேசத் துரோகியை நீயுமா மன்னிக்கச் சொல்கிறாய்? மெத்தலஸ் அயோக்கியன்! அவன் தமையன் அவனை விட அயோக்கியன்! அவனை நீ ஆதரித்து மன்னிக்கச் சொல்வது அதை விட அயோக்கியத்தனம்! [புரூட்டஸ் எழுந்து பின் செல்கிறான்]
காஸ்ஸியஸ்: [சட்டென முன் வந்து தலைவணங்கி] மன்னிக்க வேண்டும் சீஸர்! மெத்தலஸ் தமையனை மன்னிக்க வேண்டும் நீங்கள்! தவறுவது மனித இயல்பு! மன்னிப்பது தெய்வ இயல்பு! ஆனால் தண்டிப்பது அரச இயல்பு என்று சொல்ல மாட்டேன் நான்! மெத்தலஸ் தமையனின் தண்டனையை நீக்கி நாடு திரும்ப அனுமதிப்பீர்!
ஜூலியஸ் சீஸர்: காஸ்ஸியஸ்! உன்னைப் போல் நானிருந்தால், உருகிப் போவேன் நானும் ஒருகணம்! பிறரை மாற்ற உன்னைப் போல் பிரார்த்தனை செய்தால், நானும் மெழுகாய்ப் போவேன்! ஆனால் நானொரு துருவ நட்சத்திரம்! அதன் நிலைப்பு மாறாது! அதன் இருப்பிடம் மாறாது! அதன் ஒளிவீச்சு மாறாது! அதுபோல் என் மனமும் மாறாது! அவன் தமையன் வாழ்நாள் முழுதும் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்! ¡வனுக்கு விடுவிப்பில்லை!
சின்னா: [காஸ்ஸியஸ் எழுந்து நகர, மண்டியிடுகிறான்] சீஸர்! சீஸர்! சீஸர்! பரிவு கொள்வீர்! மன்னிப்பீர்! பரிதவிக்கும் பாபியை வர அனுமதிப்பீர்!
ஜூலியஸ் சீஸர்: ஒலிம்பஸ் மலையை யாரும் நகர்த்த முடியாது! அலை, அலையாய் படை எடுத்தாலும், மலையை யாரும் தள்ள முடியாது! ஓநாயை வேங்கை வேட்டையாடத்தான் செய்யும்.
[திடீரெனப் பின்னாலிருந்து கத்தியால் முதுகில் குத்துகிறான் காஸ்கா. ஆவென அலறுகிறார் சீஸர். செனட்டார் அனைவரும் ஆவேசமுடன் எழுந்து, பயந்துபோய் ஆரவாரம் செய்கிறார்கள்.]
காஸ்கா: [ஆங்காரமாய்க் கத்தியை உருவி] ஏன் முடியாது? வேங்கையின் மூச்சை நான் நிறுத்த முடியும்!
[அடுத்தடுத்து தீஸியஸ், சின்னா, காஸ்ஸியஸ், திரிபோனஸ், மெத்தலஸ் ஆகியோர் சீஸர் உடம்பைக் குத்திக் கிழிக்கிறார். சீஸர் தடுமாறிக் கொண்டு புரூட்டஸ் உதவியை நாடி மெதுவாய்ச் செல்கிறார். சட்டெனத் திரும்பிய புரூட்டஸ் தன் கைவாளை உருவி, சீஸரின் வயிற்றில் பாய்ச்சுகிறான்.]
ஜூலியஸ் சீஸர்: [கண்ணீர் சிந்தச் சிந்த] நீயுமா புரூட்டஸ்? பிறகு சீஸர் சாக வேண்டியதுதான்! [பொத்தென பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீஸர் விழுந்து உயிரை விடுகிறார். மக்கள் மன்றத்தில் கூச்சலுடன் செனட்டர்கள் அங்குமிங்கும் பயந்து ஓடுகிறார்கள்.]
சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! செத்தொழிந்தான் சீஸர்! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! தேச நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு!
[தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் அனைவரும் குருதி சொட்டும் வாளை உயர்த்திக் கொண்டு செத்து வீழ்ந்த சீஸரின் உடலைச் சுற்றி வருகிறார்]
*********************
அங்கம் -5 காட்சி -8
மன்னித் திடுவாய் என்னை!
மண்ணில் துவளும் குருதித் துண்டமே!
கசாப்புக் கடை கொலைஞர் முன்னே
கனிவாய், கோழைபோல் காட்டிக் கொண்டேன்!
காலச் சரித்திர அலை யடிப்பில் என்றும்
மேலாய் நிமிர்ந்து வீழ்ந்த சிதைவுப் பிண்டமே! …[ஆண்டனி]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ஓ! பராக்கிரம சீஸரே!
இந்தக் கீழ் மண்ணிலா கிடக்குதுன் மேனி?
உந்தன் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை
சிறுத்துப் போய் இப்படிச் சீரழிந்ததோ?
எந்த உலகும் எனக்குவப் பூட்டா,
இந்த யுகத்தின் உயர்ந்த ஆத்மா ஏகிச்
சிந்திய குருதி ஓடிய தளம்போல்! …[ஆண்டனி]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
சீஸரை எதிர்த்தது ஏனெனக் கேட்பின்
நான் தரும் பதில் இதுதான்: நான்
சீஸரைக் குறைவாய் நேசிக்க வில்லை!
நேசித்தேன் ரோமைச் சீஸர்க்கும் மேலாய்!
சீஸர் வாழ்ந்து நாம் அடிமையாய்ச் சாவதினும்,
சீஸர் செத்து ரோமர் விடுதலை மேலாம்!
நேசித்த சீஸரை நினைத்தழு கின்றேன்!
பராக்கிர சீஸரைப் பாராட்டு கின்றேன்,
பேராசை பிடித்ததால், குத்தினேன் வயிற்றில்!
மதிப்பு வல்லமைக்கு! மரணம் பேராசைக்கு!
நாட்டை நேசிக்கா நபரிங்கு உளரோ? ….(புரூட்டஸ் சொற்பொழிவு)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
விதியின் கொடுமை அறிவோம்.
ஒருநாள் நாம் சாவது உறுதி!
காலத்தை நீடிக்க மனிதர் ஏன்
கவனம் திருப்பிட வேண்டும் ? ….(புரூட்டஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
மானிட துயர்த்தீ ஓர் பயங்கரச் சக்தி
செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை!
புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை!
அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்!
ஆக்கப் படுவது அருக முடியாது
அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்!
முரணாய், முறிவாய், புரட்சியாய்த் தோன்றலாம்!பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை
நினைவில் வைத்திடு நடக்கும் நண்பனே!
உனைப் போல்நான் இருந்தேன் ஒருநாள்!
எனைப்போல் நீயும் ஆவாய் ஒருநாள்!
எனைத் தொடர்ந்து வரத் தயாராய் இரு!ஒரு கல்லறை வாசகம்
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடியுள்ளது. பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டு குருதி ஓட விழுந்து கிடக்கிறார்.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.
காட்சி அமைப்பு:
மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள், குத்தப்பட்டுச் செத்துக் கிடக்கும் ஜூலியஸ் சீஸர் உடலைச் சுற்றிலும் நிற்கிறார்கள். செனட்டரும், பொது மக்களும் பயந்து போய் ஓடுகிறார்கள்.
சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! செத்தொழிந்தான் சீஸர்! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! நாட்டு நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு!
காஸ்ஸியஸ்: மேடையில் ஏறிப் பேசு சின்னா! [வாளை உயர்த்தி] விடுதலை முழக்கம் ரோமாபுரி முழுவதும் ஒலிக்க வேண்டும்! குரலை உயர்த்து! கதவுகளை ஊடுறுவி உன் விடுதலை முழக்கம் செல்ல வேண்டும்!
புரூட்டஸ்: செனட்டர்களே! பொதுமக்களே! பயந்து ஓடாதீர்! உங்கள் உயிருக்குப் பங்கமில்லை! நமது பகைவர் செத்து வீழ்ந்தார்! எங்கள் கடமை முடிந்தது! ஓடாதீர்! உங்களை யாரும் தாக்கப் போவதில்லை! உங்களுக்காக, ரோமா புரிக்காகச் சீஸரை வீழ்த்தினோம்.
காஸ்ஸியஸ்: மேடையில் நின்று பேசுங்கள் புரூட்டஸ்! பண்பாளர் உங்கள் மொழிக்கு மதிப்புண்டு!
புரூட்டஸ்: [திடீரென] எங்கே ஆண்டனி? கடத்திப் போனவர் என்ன ஆனார்? சீஸர் செத்து வீழ்ந்தது தெரியுமா ஆண்டனிக்கு?
திரிபோனஸ்: புரூட்டஸ்! ஆண்டனி தன் இல்லத்துக்கு ஓடி விட்டதாய் அறிந்தேன்! சீஸர் கொல்லப் பட்டதை யாரோ சொல்லி யிருக்க வேண்டும்! பிரளயம் வந்து விட்டதாய் எண்ணி வீதியில் ஆண், பெண், சிறுவர், முதியோர் அலறிக் கொண்டு ஓடுகிறார். ஆண்டனியும் அப்படி ஓடிவிட்டார்.
புரூட்டஸ்: விதியின் விளையாட்டை நாம் அறிவோம். ஒருநாள் நாம் சாவது உறுதி! ஆயுளை நீடிக்க மனிதர் கனவு காண்பது விந்தையே!
காஸ்கா: ஏன் புரூட்டஸ்? இருபது வருட ஆயுளை ஒருவன் வெட்டி விட்டால், அத்தனை வருட மரணப் பயம் அகற்றப் படுகிறது!
புரூட்டஸ்: அப்படியானால் மரணம் வரவேற்கப்பட வேண்டிய நன்மையாயிற்றே! சீஸருக்கு அத்தகைய வெகுமதி அளித்ததைக் கொண்டாடுவோம். அவரது மரணப் பயத்தைக் குறைத்தோம்! நண்பர்களே! சீஸரைச் சுற்றி வட்டமாய் வாருங்கள்! நமது கரங்களைச் சீஸர் குருதியில் குளிப்பாட்டுவோம்! முழங்கை வரையிலும் பூசிக் கொள்வீர்! கை வாளையும் குருதியில் மூழ்க்குவீர்! குருதி சிந்தச்சிந்த அவ்வாளை உயர்த்திக் கொண்டு அங்காடித் தெருவில் நாம் நடந்து செல்வோம்! எல்லாரும் ஒருங்கே முழக்குவோம்: ரோமுக்கு விடுதலை! சமாதானம்! குடியரசு!
காஸ்ஸியஸ்: ரோமாபுரிக்கு விடுதலை அளித்த வீரரென்று நம்மை வருங்காலம் பாராட்டும்! வரலாற்று நூல்களில் நமது பெயரைப் பதிவாக்கி நிரந்தர மாக்கும்! ரோமாபுரி நகரில் நமது சிலைகளை நட்டு மதிப்பளிக்கும்! நம் எல்லாரையும் புரூட்டஸ் வழிநடத்த, அவருக்கு ஆதரவு அளிப்பீர்! ஒதுங்கி நிற்பீர்! முன்னே செல்லட்டும் புரூட்டஸ்! பின்பற்றிச் செல்வோம் நாமெல்லாம்! ரோமாபுரி பெற்றெடுத்த பண்பாளர், பராக்கிரசாலி நமது புரூட்டஸ்! அங்காடி வீதிக்கு அவர் பின்னால் செல்வோம்.
புரூட்டஸ்: [மெதுவான குரலில்] அமைதி! பேச்சை சற்று நிறுத்துவீர்! … யாரிங்கே வருவது? அதோ ஆண்டனியின் வேலைக்காரன்.
[ஆண்டனியின் வேலையாள் நுழைகிறான்]
வேலைக்காரன்: [புரூட்டஸ் முன் மண்டியிட்டு] என் பிரபு இப்படித்தான் உங்களை வணங்கச் சொன்னார். புரூட்டஸ் பண்பாளர், உண்மையாளர், வல்லவர், அறிவாளி என்று பாராட்டுகிறார். சீஸரைத் தைரியசாலி, பராக்கிரசாலி, திறமையான ஆட்சியாளர் என்று போற்றுகிறார். புரூட்டஸை நேசிப்பதாகவும், மதிப்பதாகவும் சொல்கிறார் அவர். சீஸருக்கு அவர் பயந்ததாகவும், ஆனால் நேசித்ததாகவும், மதித்ததாகவும் சொல்கிறார். உங்களைச் சந்திக்க அவர் வருவதில், உங்களுக்கு விருப்பம் உண்டா என்று கேட்கச் சொன்னார். பிரச்சனைகளைத் சமாதானமாய்த் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். சீஸரைக் கொலை பண்ணியது சரியா என்று மனமுடைகிறார். சீஸர் வீழ்ந்ததை மார்க் ஆண்டனி விரும்ப வில்லை! ஆயினும் நன்னம்பிக்கையுடன் உங்களிச் சந்திக்க விழைகிறார் என் அதிபதி! அவர் வருவதற்கு அனுமதி தருவீரா?
புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனிக்கு! உன் அதிபதி உயர்ந்த ரோமன்! அழைத்து வா எங்களிடம்! அவருக்கு ஒரு தீங்கும் நேராது! எந்த இடரின்றி அவர் திரும்பிச் செல்லலாம்! போ, அவரை உடனே அழைத்து வா! அன்றும் அவர் எங்கள் நண்பர்தான்! இன்றும் அவர் எங்கள் நண்பர்தான்!
[வேலைக்காரன் போகிறான்]
காஸ்ஸியஸ்: [கவனகாக] புரூட்டஸ்! பழைய ஆண்டனி வேறு! புது ஆண்டனி வேறு! ஆண்டனி எப்படி மாறிப்போய் உள்ளார் என்று நமக்குத் தெரியாது! குத்துப்பட்டு செத்துக் கிடக்கும் சீஸரைப் பார்த்தால், ஆண்டனி இதயம் கொதித்து நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? தனியாக வராமல், ரோமானியப் படையுடன் வந்து நம்மைத் தாக்கினால் என்ன ஆவது? சிந்திக்காமல் சீஸரின் தோழனை நாம் நண்பன் என்று எதிர்பார்க்கலாமா?
புரூட்டஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நம்மைத் தாக்கும் திட்டம் உடையவன் முதலில் தன் பணியாளை அனுப்பி நம்மிடம் அனுமதி கேட்க மாட்டான்! திடீரென நம்மைத் தாக்க மாட்டானா? … அமைதி! ஆண்டனி வருவது போல் தெரிகிறது.
[ஆண்டனி தனியாக நுழைகிறார். அவரது விழிகள் கீழே வீழ்ந்து கிடக்கும் சீஸரை முதலில் காண்கின்றன]
ஆண்டனி: [சீஸர் உடலை நெருங்கி மண்டியிட்டுக் கண்ணீருடன்] அந்தோ, பராக்கிரம சீஸரே! படுத்துள்ள இடம் இத்தனைக் கீழான மண் தளமா? உங்கள் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை எல்லாம் குறுகிப் போய் இத்தனை கீழான நிலைக்குச் சிறுத்து விட்டதா? [புரூட்டஸை நோக்கி] பெருந்தன்மை கொண்டவரே! யார் யாரெல்லாம் இன்னும் தம் உயிரைப் போக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளீர்? யார் யார் குருதி எல்லாம் சீஸர் குருதியுடன் கலக்க வேண்டும் என்று வரிசைப் படுத்தியுள்ளீர்? உமது வாளில் குருதி உலர்வதற்குள் வேலையை முடித்து விடுவீர்! ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும், இப்படி ஒரு தருணமும், தளமும் வாய்க்கா எனக்கு! இந்த யுகத்தின் மகத்தான ஆத்மாவின் அருகிலே நானும் அடங்கிப் போவது, பூரிப்பு அளிக்கும் எனக்கு!
புரூட்டஸ்: [பரிவுடன்] அப்படி எண்ணாதே ஆண்டனி! உன் மரணத்தை எங்களிடம் கேட்காதே ஆண்டனி! நீ ஓர் உயர்ந்த ரோமன்! சீஸரை வீழ்த்தி நாங்கள் ரோமின் விடுதலையைக் காத்தோம்! எங்கள் கைவாள் விடுதலை அளிப்பது! கசாப்புக்கடை அரிவாள் போல் ஆடுகளின் கழுத்தை அறுப்பபை அல்ல! குருதி சிந்திடும் எங்கள் கத்தியைப் பார்க்காதே! குணமுள்ள எமதினிய இதயத்தைப் பார்! எமக்கு நீ பகைவன் அல்லன்! நாங்கள் உனது நண்பர்! நம்பிடு எங்களை! நாங்கள் உன்னை மதிக்கிறோம்! எங்கள் புரட்சியை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்! எங்கள் நாட்டு பணிக்கு நீ நல்லாதரவு அளிக்க வேண்டும்.
ஆண்டனி: [கண்ணீர் சொரிய] சீஸர் ஓர் உன்னத ரோமானியர்! உயர்ந்த ரோமானியர் எல்லாம் உயிரைக் கொடுக்க நேரிடுதே! அதனால் உங்கள் கையாலே நானும் உயிரிழக்கத் தயார். சீஸருக்கு நான் வாழ்விலும் தோழன்! சாவிலும் தோழனாக விழைகிறேன்! ஆனால் சாவதற்கு முன்னொரு வேண்டுகோள்! ..[தயக்கமுடன்] .. நீங்கள் ஏன் சீஸரை வீழ்த்தினீர் என்று காரணம் சொல்வீரா?
புரூட்டஸ்: கவலைப் படாதே ஆண்டனி! காரணத்தைச் சொல்கிறேன் உனக்கு! அங்காடி மேடையில் நானின்று பேசப் போகிறேன்! கேட்டுக்கொள் ஆண்டனி! ஆனால் கேட்ட பிறகு நீ உன்னுயிரைக் கொடுக்க வேண்டாம்! உன்னுயிர் எம்மால் நீக்கப் படாது! சீஸரைத் தீர்த்துக் கட்டிய பிறகு, எங்கள் கடமை தீர்ந்தது! நாட்டுக்கு விடுதலை! நாட்டுக்குக் குடியரசு! நாட்டுக்கு நல்ல காலம்!
ஆண்டனி: சீஸர் மடிந்ததால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குதா? எனக்குப் புரிய வில்லை! உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்! குருதி கலந்த உங்கள் கரங்களை நீட்டுங்கள்! ஒவ்வொன்றாக நான் குலுக்க வேண்டும்! நாட்டுக்கு நீங்கள் செய்த நற்பணிக்கு நன்றி! புரூட்டஸ்! பொன்னான உன் கரத்தை முதலில் கொடு! [குலுக்குகிறான்] அடுத்து காஸ்ஸியஸ் உன்கரம். [குலுக்குகிறான்] அடுத்து தீஸியஸ், மெத்தலெஸ், சின்னா, காஸ்கா. உங்கள் மகத்தான செயலுக்கு நன்றி! நண்பர்களே! சீஸரை நேசித்த நான், அவரைக் கொன்ற உங்கள் கைகளைக் குலுக்குவது சரியில்லைதான்! அவரது சடலத்துக்கு அருகில், குருதி உலர்வதற்குள் அவரது எதிரிகளுடன் உடன்படிக்கை செய்கிறேன். [கதறி அழுகிறான்]
காஸ்ஸியஸ்: ஆண்டனி! என்ன சொல்கிறாய் நீ? முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே!
ஆண்டனி: மன்னித்துடு காஸ்ஸியஸ்! தெரியாமல் உளறிவிட்டேன்! நண்பர்கள் நீங்கள்! சீஸர் போனபின் நீங்கள்தான் என் நண்பர்! மறந்து விட்டேன், மன்னிப்பீர்!
காஸ்ஸியஸ்: சீஸரைப் பற்றி நீ புகழ்வதை யாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் எம்மை மட்டும் திட்டாதீர்! நாங்கள் அனைவரும் ஆழ்ந்து தர்க்கம் செய்து எடுத்த முடிவிது! உனக்குத் தெரியாது!
ஆண்டனி: ஆம், தெரியாது எனக்கு! சீஸரை நீவீர் கொன்றதுக்குக் காரணம் சொல்வீரா? சீஸரால் ரோமுக்கு என்ன அபாயம் நேரும் என்பதை விளக்குவீர் எனக்கு!
புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் புதல்வன் நீ! நிச்சயம் சொல்வேன் உனக்கு! அங்காடி மேடைக்கு வா!
ஆண்டனி: [தயக்கமுடன்] முதலில் ஓர் அனுமதி வேண்டும், புரூட்டஸ்! சீஸரின் உடலை மேடையில் கிடத்திப் பேச வேண்டும் நண்பன் என்ற முறையில்! அனுமதிப்பீரா?
புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! சீஸரின் பிரேதப் பேச்சை நிகழ்த்த நீயே தகுதி யானவன்! அவரது ஈமக் கிரியைகளை நீ செய்! அனுமதி அளிக்கிறோம்!
காஸ்ஸியஸ்: [மிக்க கவனமாக] பொறு புரூட்டஸ்! தனியாகப் பேச வேண்டும் நான் உன்னுடன்! [தனியாக ஒதுக்குப் புறத்தில் இருவரும் போய்] என்ன செய்கிறீர் என்று தெரிகிறதா? ஆண்டனி அங்காடி மேடையில் பேசுவதற்கு ஒப்புக்கொள்ளாதீர்! சீஸர் பிரேதத்தை முன்வைத்து, ரோமானியர் கல்நெஞ்சைக் கூடக் கரைத்து விடுவான் ஆண்டனி!
புரூட்டஸ்: முதலில் நான் பேசிச் சீஸரைக் கொன்றதின் காரணத்தைக் கூறுவேன்! நம் அனுமதியில் பேசும் ஆண்டனி தடம் மாறினால், தடுப்பேன் நான்! சீஸருக்குப் பிரேத அடக்கம் செய்ய சட்டப்படி ஆண்டனிக்கு அனுமதி அளிப்பதில் நமக்குத்தான் பாராட்டு.
காஸ்ஸியஸ்: என்ன நேருமோ என்பது தெரியாது! புரூட்டஸ்! உமது கூற்றில் நம்பிக்கை யில்லை எனக்கு! ஊமையாகத் தோன்றும் ஆண்டனி ஓர் எரிமலை என்று உமக்குத் தெரியாது!
புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் உடலை நீ தூக்கிச் செல்! அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! மேடையில் சீஸரின் மேன்மையைப் பற்றிப் பேசு! பிரேதப் பேச்சில் விடுதலை வீரரைத் திட்டிப் பேசாதே! பேச்சு மீறினால், பிரேத அடக்கம் நிறுத்தப்படும்! உன்னக்கோர் எச்சரிக்கை அது! கவனம் வை! நான் பேசிய அதே தளத்தில் நின்றுதான் நீ உரையாற்ற வேண்டும்! குருதியில் ஊறிய உடலைத் துடைத்துத் தூக்கிக் கொண்டு வா! அல்லாவிட்டால் பார்ப்போர் மயங்கிப் போய் விழுவார்! நாங்கள் போகிறோம். எம்மைத் தொடர்ந்து வா!
[அனைவரும் ஆண்டனியைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள்]
ஆண்டனி: [சீஸரின் உடலை உற்று நோக்கி] குருதியில் துவண்ட மண் துண்டமே! மன்னிப்பாய் என்னை! கசாப்புக் கடைக் கொலைஞர் முன்னே, கனிவாகக் கோழையாகக் காட்டிக் கொண்டேன்! மேலாக வாழ்ந்து சிதைக்கப் பட்ட மேதை மனிதரே! காலச் சரித்திரம் செதுக்கி வைத்த சிலையே! விலை மதிப்பில்லா உன் குருதியை வெளியாக்கிய கரங்களைக் கைகுலுக்கியதற்கு வேதனைப் படுகிறேன். இந்தக் கொடுமையான நாற்றம் பூமிக்கு மேலே போகும்!
[அப்போது செனட்டர் அக்டேவியஸின் பணியாள் வருகிறான்]
ஆண்டணி: [சட்டென எழுந்து] நீ அக்டேவியஸின் வேலைக்காரன் அல்லவா?
பணியாள்: ஆம், மார்க் ஆண்டனி!
ஆண்டனி: அக்டேவியஸ் ரோமுக்கு வரவேண்டும், பட்டாபிசேகத்தில் பங்கு ஏற்க வேண்டும் என்று சீஸர் அழைப்பு விட்டிருந்தார்.
பணியாள்: ஆம், அந்தக் கடிதம் கிடைத்தது. அக்டேவியஸ் ரோமை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். [அப்போது குனிந்தவன் குருதியில் துவண்ட சீஸரின் உடலைக் காண்கிறான்; ஆ வென்று அலறி] மேதகு சீஸர்! என்ன! செங்கோல் வேந்தருக்குச் செங்குருதிப் பட்டாபிசேகமா இது? [கதறி அழுகிறான்]
ஆண்டனி: அழாதே! திரும்பிப் போ! அக்டேவியஸ் ரோமுக்கு வருவதை நிறுத்து! ரோமில் பயங்கரப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது! அதற்கு முதற்பலி ஆகிவிட்டார் சீஸர்! அடுத்தது நானாக இருக்கலாம்! அப்புறம் அக்டேவியஸ்! போ! ஓடிப் போ! அக்டேவியஸ் ரோமில் தடம் வைத்தால், அவர் தலை துண்டிக்கப் படலாம்! போ! போ! போ!
[பணியாள் ஓடுகிறான்]
ஆண்டனி: ரோமில் காட்டு மிருகங்கள் வேட்டையாட நுழைந்து விட்டன! ரோம் ஒரு பயங்கர நகரம்! சீஸருக்கு பிறகு ஆண்டனி! ஆண்டனிக்குப் பின்னே அக்டேவியஸ்! சீஸர் சடலத்தின் மீது பேசும் உரையில் நான் கேட்கப் போகிறேன்! சீஸர் உடலைக் குத்திக் குத்திக் கூறாக்கியது ஏனென்று கேட்கப் போகிறேன்! யாரெங்கே? சீஸரை என் கரங்களில் தூக்கிச் செல்ல வேண்டும்! என் கடைசி உரைகள் அவர் காதில் விழவேண்டும்! அவரது ஈமக் கிரியைகளை என் கரங்கள் செய்ய வேண்டும். சீஸரின் புதல்வன் எனப்படும் நான் அவர் உத்தம உடலுக்குத் தீ வைக்க வேண்டும்!
[பணியாள் வந்து உதவி செய்ய, ஆண்டனி சீஸர் சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்]
*********************
அங்கள் -5 காட்சி -9
உறவு என்றொரு விதி இருந்தால்
பிரிவு என்றொரு முடி விருக்கும்!
கனவுக்குப் பின்னோர் கதை பிறந்தால்,
சிதைவுக்கு வாசல் திறந்தி ருக்கும்!
உலகுக்கு வழங்கும் ஈசன்,
கொடுத்த வற்றை எல்லாம்
எடுத்துக் கொள்வான் மீண்டும்!
தொட்ட பணிகளை
அற்று விடுவான் முடிக்க விடாமல்!******
கதறி அழும் ரோமிங்கே!
பயங்கர ரோமிங்கே!
எனது மரண உரையைக் கேட்ட பின்
எப்படி ஏற்பர் மக்கள்,
இரத்த வெறியர் கோரச் செயலை?வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்:
தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கிறார். ஆண்டனி சீஸர் உடலை ஏந்திக் கொண்டு அங்காடி மேடைக்குப் போகிறார். மனமுடைந்த கல்பூர்ணியாவைக் காண கிளியோபாத்ரா மகனுடன், பாதுகாவலருடன் அவளது மாளிகைக்குச் செல்கிறாள்.
நாடகப் பாத்திரங்கள்:
கல்பூர்ணியா, அக்டேவியா, போர்ஷியா கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், பாதுகாவலர், மற்றும் சேடியர்.
காட்சி அமைப்பு:
மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. கண்ணீரும் கம்பலையுமாய்ப் படுக்கையில் கல்பூர்ணியா அழுது கொண்டிருக்கிறாள். ஆண்டனியின் மனைவி அக்டேவியா, புரூட்டஸின் மனைவி போர்ஷியா ஆறுதல் கூறி அருகில் நிற்கிறார்கள். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.
அக்டேவியா: [மிகக் கனிவோடு] கல்பூர்ணியா! அழுது, அழுது கண்ணீர் ஆறாய் ஓடுகிறது! கண்ணீர் சுரப்பிகள் காய்ந்து போய் விட்டன! தொண்டை நீர் வரண்டு போனது! ராத்திரி உறக்க மில்லாததால் கண்விழிகள் வெளியே வந்து விட்டன! புலம்பிப் புலம்பி உன் நெஞ்சும் குழிந்து போனது. வயிற்றில் உணவின்றிக் கிடக்கிறாய்! எழுந்து சிறிது பழரசத்தைக் குடி! அல்லாவிட்டால் நீயும் சீஸரோடு சேர்ந்து போய் விடுவாய்.
கல்பூர்ணியா: [சிறிது தெளிவுடன்] சீஸரோடு போகத்தான் ஆசை! எப்படி உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்றொரு வழியைக் காட்டு! நான் எதற்கினி உயிர் வாழ வேண்டும்? பிள்ளையும் கிடையாது! பதியும் கிடையாது. நஞ்சைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். எத்தனை முறை தடுத்தேன் அவரை? மன்றத்துக்குப் போக வேண்டாம், போக வேண்டாம் என்று மன்றாடினேன்! கேட்டாரா? பாவிச் செனட்டர் தீஸியஸ் பதியை ஏமாற்றி இழுத்துச் சென்றான்! இடி, மழை, புயல், மின்னல் எதுவும் அவரை நிறுத்த முடிய வில்லை.
போர்ஷியா: [கண்ணீருடன்] உன் துயருக்கு என் கணவரும் ஒரு காரண கர்த்தா என்று அறிந்து வருந்துகிறேன், கல்பூர்ணியா! நான் கேட்கக் கேட்கச் சொல்லாமல் மர்மாய்ச் செய்த படுகொலை இது! என் பதிக்குக் கிடைக்கும் தண்டனை எனக்கும் கிடைக்க வேண்டும்! செனட்டார் சேர்ந்து படுகொலை செய்ய சீஸர் செய்த குற்றம்தான் என்ன?
கிளியோபாதா: [அழுது கொண்டு] கல்பூர்ணியா! நானும் சீஸரைத் தடுத்தேன்! என் எச்சரிக்கையையும் மீறித்தான் சென்றார்! ரோமாபுரிக்கு மீள வேண்டாம், சற்று பொறுங்கள் என்று எகிப்திலேயே தங்க வைக்க முயன்றேன். கேட்க வில்லை சீஸர்! [போர்ஷியாவை முறைத்து] எதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறாய் நீ? நீ புரூட்டஸைத் தடுக்க நிறுத்தி இருக்கலாம். ஆனால் தடுக்க வில்லை! சதியைப் பிறருக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால் தெரிவிக்க வில்லை! புரூட்டஸ் தலைமையில் பல நாட்களாய்ச் சதிக் கூட்டம் மர்மமாய் நடமாடியது உனக்குத் தெரியாதா?
போர்ஷியா: கிளியோபாத்ரா! நான் விடும் கண்ணீர் மெய்யானது! உண்மையைச் சொல்கிறேன்! என் வீட்டில்தான் செனட்டர் கூட்டம் நேற்று நடுநிசியில் குசுகுசுவெனப் பேசி முடிவெடுத்தது! என்ன பேசினார்கள் என்பது மெய்யாகத் தெரியாது எனக்கு! கூட்டம் சென்றபின் புரூட்டஸைக் கேட்டேன். மன்றாடிக் கேட்டேன். பலனில்லை கிளியோபாத்ரா [அழுகிறாள்]. நான் சீஸரைக் காப்பாற்றி யிருக்க முடியும். ஆனால் முடியாமல் போனதே! [கதறி அழுகிறாள்]
கிளியோபாத்ரா: கல்பூர்ணியா! என் பதியாக சீஸர் எகிப்தில் வாழ்ந்தாலும், மெய்யாக சீஸர் உன் பதி! நீ பறிகொடுத்தது என் பதியில்லை! அவர் உன் பதி! சீஸர் எனக்கோர் விருந்தாளி! இப்போது நான் கண்ணீர் விடுவது, என் பதிக்கில்லை! உன் பதிக்கு!
கல்பூர்ணியா: அப்படியானால் சீஸரின் அருமைப் புதல்வன் சிஸேரியன் கதி என்ன? அவன் உன் மகன் அல்லவா? நானிழந்தது போல் சீஸரை நீ யிழக்க வில்லையா?
கிளியோபாத்ரா: எகிப்தை விட்டுச் சீஸர் எப்போது நீங்கினாரோ, அப்போதே எங்கள் உறவும் அற்று விட்டது, கல்பூர்ணியா! ஆனால் சிஸேரியன் என் மகனாயினும் அவன் சீஸரின் வாரிசு! ரோமா புரியின் எதிர்கால வேந்தன்! சீஸர் போனாலும், அவனை உன்னிடம் விட்டுச் செல்லலாமா என்று சிந்திக்கிறேன்!
கல்பூர்ணியா: ஐயோ வேண்டாம் கிளியோபாத்ரா! வேண்டாம்! ரோமா புரியில் வேந்தராய் மகுடம் சூடப் போன சீஸருக்கு என்ன கதி ஆகி விட்டது? அதே கதிதான் சீஸரின் வாரிசுக்கும் கிடைக்கும்! நான் சொல்வதைக் கேள்! சீஸர் போனபின் சிறுவன் உன் மகன் என்பதை மறவாதே! உனக்குப் பகைவர்கள் மிகுதி ரோமா புரியில்! நீயினித் தங்குவது உனக்கு அபாயம்! சிறுவன் சிஸேரியனுக்கும் அபாயம்! சீக்கிரம் போய்விடு கிளியோபாத்ரா! போய்விடு! உன்னுரைக் காப்பாற்றிக் கொள்! உன் மகன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! சீஸருக்கு வந்த கத்திகள் அடுத்துச் சீஸரின் நேசருக்கும் வரும் என்பதை மறவாதே!
கிளியோபாத்ரா: [சிந்தித்துக் கவலையோடு] நல்ல யோசனை கல்பூர்ணியா! ஆம், நாங்கள் தங்கி யிருப்பது நல்லதல்ல! செல்கிறோம் இப்போதே! யாருக்கும் தெரிய வேண்டாம்! ஆனால் ஆண்டனிக்கு மட்டும் சொல்லலாம். நான் வருகிறேன். கடவுள்தான் உனக்கும், ரோமா புரிக்கும் பரிவு காட்ட வேண்டும். [கிளியோபாத்ரா மகனுடன் விரைவாக வெளியேறுகிறாள்]
*********************
அங்கம் -5 காட்சி -10
ஆண்டனி ஆற்றிய மரணப் பேருரை
பிறந்தவன் எவனும் மரணத்தின்
பிடியிலிருந்து தப்ப முடியாது !
மரணம் அனைவ ருக்கும் நண்பன்!
எல்லா விதத் துயர்களி லிருந்தும்
நமக்கு அது விடுதலை அளிப்பதால்,
நம் நன்றி உணர்வுக் குரியது!மகாத்மா காந்தி (1869-1948)
சீஸரை சிறிதுதான் நேசித்தேன் எனச்
சிந்திக் காதீர், ரோமர்காள்! நான்
நேசித்தது மிகையாய் ரோமா புரியென
நினைத் திடுவீர் அன்பர்காள்!
சீஸர் வாழ்ந்து நீவீர் எல்லாம்
அடிமையாய் மடிவதை விட,
சீஸர் செத்து நீவீர் எல்லாம்
விடுதலை அடைவது மேலானது!
சீஸருக்கு விடுகிறேன் கண்ணீர், நெருங்கி
நேசித்ததால் அவர் என்னை! ஆயினும்
சீஸரைக் குத்தினேன் வாளால், அவர்
ஆசை தன்னை அழித்திட ! ….(புரூட்டஸ்)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ரோமாபுரியில்:
தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம், கட்டம்:
சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.
நாடகப் பாத்திரங்கள்:
புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.
காட்சி அமைப்பு:
அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.
பொதுமக்கள்: [கூக்குரலில்] பேசுங்கள்! புரூட்டஸ் பேசுங்கள்! சீஸரைக் கொன்றதின் காரணம் சொல்வீரா? காத்திருக்கிறோம் உங்கள் பேச்சைக் கேட்க.
புரூட்டஸ்: [கையை உயர்த்தி] அமைதி! ரோமானியரே! அமைதி! என்னுரையைக் கேட்பீர்! சீஸரைக் கொன்ற எமது காரணம் கேட்பீர். என்னுரையைக் கேட்பவர் என்முன் தங்குவீர்! அதோ காஸ்ஸியஸ்! அவர் உரையைக் கேட்க அவர் பின்னால் செல்வீர்.
பொதுநபர் ஒருவர்: உங்கள் பேச்சைக் கேட்பேன் நான். நீங்கள்தான் பிரதானத் தலைவர் சதிக்கு!
புரூட்டஸ்: ரோமர்களே! குடிமக்களே! அன்பர்களே! பொறுமையாய் இருப்பீர் இறுதிவரை. அமைதியாய்க் கேட்பீர்! எனது பண்பான தேசப் பணிக்கு மதிப்பளிப்பீர்! உங்கள் தெளிந்த ஞானத்தால் என்னை எடை போடுங்கள்! உங்கள் அறிவு விழித்து எழட்டும்! உங்களில் ஒருவர் சீஸரைக் கொன்றது ஏனென்று கேட்டால் என் பதிலிதுதான்! சீஸர் மீது நான் கொண்ட நேசிப்பு சிறிதில்லை! ஆனால் ரோமின் மீது நான் கொண்ட பற்று மிகுந்தது! அதுதான் காரணம்! சீஸர் ஏதேட்சைவாதியாய்த் தலைதூக்கி, ரோமானியர் அடிமைகளாய்க் கிடப்பதை விட, சீஸர் செத்து மடிந்து நீவீர் விடுதலை அடைவது மேல் அல்லவா? என்னை நேசித்த சீஸர் இறந்து போனதற்குக் கதறி அழுகிறேன்! ஆனால் அவரது பேராசையை ஒழிக்க அவரைக் கூரிய வாளால் குத்தினேன்! சீஸரின் பராக்கிரமத்திற்கு மெச்சுகிறேன்! ஆனால் அவரது பேராசைக்கு முடிவு அவரின் மரணம்தான்! யாரிங்கே உள்ளார் அடிமைகளாய் வாழும் ஆசையோடு? வாரீர் என் முன்னே! உங்களை நான் அவமதித்து விட்டேனா? யாரிங்கே உள்ளார் நாட்டின் மீது வாஞ்சை யில்லாதவர்? சொல்லுங்கள் பதில்! காத்திருக்கிறேன் உமது கருத்தறிய!
கூட்டத்தில் சிலர் குரல்: இல்லை புரூட்டஸ்! இல்லை! நீவீர் செய்தது நியாயமே! சீஸருக்கு உகந்த வெகுமதி கிடைத்தது! நாட்டுக்கு செய்த உமது பணி உயர்ந்தது! ஈடு இணை அற்றது! பாராட்டுகிறோம் உம்மை! உன்னத தேச நேசர் சீஸரில்லை! உண்மையான தேச நேசர் நீங்கள்தான், புரூட்டஸ் நீங்கள்தான்! யாரையும் அவமதிக்க வில்லை நீங்கள்!
புரூட்டஸ்: அப்படியானால் எவரையும் நான் அவமதிக்க வில்லை! கேட்கப் பூரிப்பாக உள்ளது. சீஸருக்கு நான் செய்தது போல்தான், நீங்கள் புரூட்டஸ¤க்குச் செய்கிறீர். நல்லது. கேளுங்கள்! சீஸரின் மரணச் சம்பவம் மக்கள் மன்றத்தில் பதிவாகி விட்டது! அவரது வெற்றிகள், சாதனைகள் எவையும் புறக்கணிக்கப்பட வில்லை! அதுபோல் சீஸரின் தவறுகள் எவையும் உயர்த்தப்பட்டு மேலாக எழுதப்பட வில்லை! சீஸர் செத்ததால் ரோமாபுரிக்கு விடுதலை! எங்கள் கடமை தீர்ந்தது!
[அப்போது ஆண்டனி சீஸரின் உடலைத் தாங்கிய வண்ணம், கண்ணீர் சொரிய மேடை நோக்கி வருகிறார்]
புரூட்டஸ்: ஈதோ! பாரீர்! துக்கப்படும் ஆண்டனியின் கரங்கள் ஏந்தி, சீஸரின் சடலம் வருகிறது! ஆண்டனி ஓர் உத்தமர்! சீஸரின் மரணத்தில் எங்களுடன் பங்கேற்க வில்லை ஆண்டனி! ஆனால் சீஸர் மரணத்தின் பலாபலனை முற்றும் அடைவார்! விடுதலை அடைந்த ரோமின் குடிமக்களில் ஒருவராய் இடம் பெறுவார்! சீஸர் மரணத்தால் உமக்குக் கிடைக்கும் வெகுமதி, நண்பர் ஆண்டனிக்கும் கிடைக்கும்! இத்துடன் என்னுரை முடிக்கிறேன், அன்பர்களே! நினைவில் வைப்பீர்! மீண்டும் ஒருமுறை உரைப்பேன்! அழுத்தமாய்ச் சொல்கிறேன்! என் ஆத்ம நண்பர் சீஸரை நான் கொன்றது, ரோமா புரியின் மேன்மைக்காகச் செய்தது! எனக்காகச் செய்ய வில்லை! உமக்காகச் செய்தேன்! மறக்காதீர்கள் அன்பர்களே! சீஸரைக் குத்திய அதே கத்திதான் என் கையில் உள்ளது! நாட்டுக்குத் தேவையானல் என்னுயிரையும் போக்கிக் கொள்ள நான் தயார், அதே கத்தியால்!
[புரூட்டஸ் மேடையிலிருந்து கீழே இறங்குகிறார்]
பொதுமக்கள்: [ஒன்றாகக் கூக்குரலில்] வாழ்க, வாழ்க, புரூட்டஸ் வாழ்க! நீண்ட காலம் புரூட்டஸ் வாழ்க!
பொதுநபரில் ஒருவர்: சிலை வைப்பீர் புரூட்டஸ¤க்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மனைவிக்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மூதாதையருக்கும், புரூட்டஸின் சந்ததியாருக்கும்!
மற்றொருவர்: ரோமுக்குப் புரூட்டஸை அதிபதி ஆக்குவீர்! புரூட்டஸை அரசர் ஆக்குவீர்! சீஸரின் ஆசனத்தில் பண்பாளர் புரூட்டஸ் அமரட்டும்! ரோமா புரியை நேசிக்கும் புரூட்டஸ்தான் அதன் ஆட்சிப் பீடத்தில் அமரத் தகுதி பெற்றவர்! சீஸர் செத்தது நாட்டுக்கு நல்லது! நமக்கு நல்லது! நம் சந்ததிக்கும் நல்லது!
மற்றொருவர்: ரோமைக் காப்பாற்றிய புரூட்டஸ¤க்கு சீஸரின் மகுடத்தைச் சூட்டுவீர்! புரூட்டஸ் நமது அடுத்த தளபதி!
புரூட்டஸ்: [திரும்பிப் பார்த்து, தயக்கமுடன்] என்னருமை நாட்டவர்களே! என்ன சொல்கிறீர்? ரோமின் அரசியல் நியதி குடியாட்சி! முடியாட்சி வேண்டாம் உமக்கு! நீங்கள் என்னை மன்னராக்கி மகுடம் அளித்தால் அது செல்லாது! செனட்டார் முடிவு செய்ய வேண்டிய தீர்வுப் பதவி அல்லவா அது? ரோமர்களே! என்னைத் தனியே போக விடுவீர்! நான் சீஸரைப் போல் ஆளப் பிறந்தவன் அல்லன்! போய் வருகிறேன், மேடைக்கு ஆண்டனி ஏறிவரட்டும்! முடிந்து விட்டதென் பணி! ஆண்டனியின் உரையைக் கேளீர்! அவர் எங்கள் அனுமதியில் பேச வருகிறார்! சீஸருக்கு மூத்த மகனாகக் கருதப்படும் ஆண்டனி சீஸருக்கு மரண உரையாற்றி ஈமச் சடங்குகளைச் செய்யப் போகிறார்! எங்களைச் சேராத அவருக்குப் பேச அனுமதி தாருங்கள்!
[புரூட்டஸ் சீஸர் சடலத்தைக் காணச் சகிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியேறுகிறார்]
கூட்டத்தில் ஒருவன்: அமைதி! அமைதி! ஆண்டனி பேச்சைக் கேட்போம்.
அடுத்தவன்: மேடைக்கு ஏறிச்செல் ஆண்டனி! சீஸர் உடலைத் தரையில் இறக்கி வை! சீஸரைச் சுமந்தது போதும்! சீஸருக்கு நீங்கள் கண்ணீர் விட்டது போதும்! செத்த சீஸர் புதையப் போவது பூமியில்! பேச்சைத் துவங்குவீர்!
[சீஸரின் சடலத்தைப் பூமியில் கிடத்தி, ஆண்டனி மேடைக்குச் செல்கிறான்]
ஆண்டனி: [கண்ணீரைத் துணியில் துடைத்துக் கொண்டு] மிக்க நன்றி புரூட்டஸ்! நான் புரூட்டஸ் அனுமதி பெற்றுப் பேச வந்திருக்கிறேன். தனியே வந்திருக்கிறேன், சீஸர் சடலத்துடன்! [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] நான் நின்றாலும், பாரீர் என் கண்ணீர் நிற்க மறுக்கிறது! உங்களைக் காணத் தடையாய் என் கண்ணீர் திரையிடுகிறது! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், கண்ணீர் நிற்கும் வரை!
முன்னிற்கும் ஒருவன்: அந்தோ பாவம் ஆண்டனி! கண்ணீர் தைபர் நதிபோல் கரை புரண்டு ஓடுகிறது! மங்கலான கண்களால் எப்படி நம்மைக் காண முடியும்? என் கண்களைக் கொடுக்கத் தயார், ஆனால் எப்படிக் கொடுப்பது? … அமைதி! அமைதி! ஈதோ ஆண்டனி பேசப் போகிறார்!
ஆண்டனி: [தழுதழுத்த குரலில், சீஸர் சடலத்துக்கு அருகில் நின்று துக்கமோடு]
நண்பர்காள்! ரோமர்காள்! நாட்டு மக்காள்!
சீஸரை நான் புதைக்க வந்துளேன்!
புகழ்த்த வந்திலேன்!
மனிதரின் தீங்குகள் மறைந்தபின் நிலைபெறும்!
நற்பணி யாவும் புதைபடும் எலும்புடன்!
சீஸரைப் பேராசை யாளராய்
ஏசினார் புரூட்டஸ்! பண்புள்ள புரூட்டஸ்!
அப்படி யாகின் அது வருத்திடும் தவறு!
அதற்குச் சீஸர் தன்னுயிர் நீத்தார்!
புரூட்டஸ் மற்ற புரட்சியர் அனுமதிக்க
உரைதனை ஆற்ற வந்துளேன் ஈங்கு!
புரூட்டஸ் மிக்க பண்பாடு உடையவர்!
அத்தனை பேரும் பண்புடை மாந்தர்!
சீஸரின் அகால மரணச் சடங்கில்
பேச வந்துளேன்! அவரென் நண்பர்,
நம்பிக்கை யானவர், நியாய வாதி!
ஆனால் ஆசையாளி என்றார் புரூட்டஸ்!
புரூட்டஸ் உன்னதப் பண்பாடு உடையவர்!பன்னாடுகள் வென்று பொற்காசுகள் திரட்டி
அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் உருட்டி
ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா
பேராசை மனிதர்? பேராசை மனிதர்?
ஏழையர் கதறிடச் சீஸரும் அழுதார்!
கல்நெஞ் சாளர் கைக்கொளும் வேட்கை!
சீஸரை ஆசை யாளியாய்க் காட்டுமா?
ஆயினும் கூறினார் அரிய புரூட்டஸ்
சீஸர் ஓர் பேராசைக் காரர் என்று!
உன்னத பண்பாடு உடையவர் புரூட்டஸ்!
அன்று நான் மும்முறை சீஸருக்கு
மகுடம் சூட்டப் புகுந்த வேளை
ஏற்றிலர் சீஸர்! இதுவா பேரவா?
ஆயினும் சொன்னார் பேராசை என்று,உன்னத புரூட்டஸ் ! உண்மையா அது ?
மெய்யாய்ப் புரூட்டஸ் மேன்மை யானவர் !
புரூட்டஸ் உரைத்ததைத் தவறெனக் கூறி
நிரூபிக்க வர வில்லை நானிங்கு!
எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்!
காரண மோடுதான் ஒருகா லத்தில்
நீவீர் யாவரும் நேசித்தீர் சீஸரை!
எந்தக் காரணம் உமது துயரை
இந்தக் கணத்தில் நிறுத்திட முடியும் ?
நீதியே! நீ எங்கே போனாய் ?
விலங்கின மூர்க் கத்தை நோக்கி
ஓடிவிட் டாயா?
மனிதர் இங்கே நன்னெறி மறந்தார்!
மன்னித் திடுமின்!
சீஸரின் சவத்தொடு சேர்ந்துள தென்மனம்!
திரும்பிடும் வரைநான் இருந்திட வேண்டுமே!முதல் நபர்: ஆண்டனி பேசுவதில் அர்த்தம் உள்ளது! கேட்டீரா? மும்முறை கிரீடத்தை அணிவித்த போது அம்முறை ஏற்றுக் கொள்ள வில்லை சீஸர்! நிச்சயம் அவர் ஒரு பேராசைக்காரர் இல்லை!
அடுத்த நபர்: பாருங்கள்! அழுது, அழுது ஆண்டனி கண்களில் செந்நிறம் பூத்துக் கனல் பறக்கிறது!
முதல் நபர்: ஆண்டனி போன்ற ஓர் புனித மனிதன் ரோம் எங்கிலும் கிடையாது!
இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார்.
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (5)
அங்கம் -5 காட்சி -1
ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
கிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும்,
கிளியோ பாத்ராவின் மேனிக் கவர்ச்சி!
வானத்து நிலவையும் கவ்வி வசப்படுத்திடும் !
தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்!
பேசத் தொடங்கின் இரவு பகலை நீடிக்கும் !
வயது அவளைப் பார்த்து மொட்டு விடும்!
வாலிபத்தைக் கண்டு பொங்கி எழும்!
பாதிரியும் வைத்தகண் வாங்காமல் பார்ப்பார்,
பாவையின் புன்சிரிப்பு இதழில் மின்னிலால்!ஆங்கில நாடக மேதை: ஜான் டிரைடன் [John Dryden (1631-1700)]
வயது ஏறினும் வதங்காது அவள் மேனி!
வழக்க மரபுகளால் குலையாது அவள் வனப்பு!
வரம்பற்றது அவள் விதவித வனப்பு மாறுபாடு! …
அவளது உடல் வனப்பை விளக்கிடப் போனால்,
எவரும் எழுத இயாலாது எழுத்தால் வர்ணித்து!
தோரணம் தொங்கும் அலங்காரப் பந்தலில்
ஆரணங்கு படுத்திருந்தாள், பொன்னிற மேனி!
இயற்கை மிஞ்சியக் கற்பனைச் சிற்பம்!
வீனஸ் அணங்கினும் மேம்பட்ட சிலையவள்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]
வாடா மல்லிகை அவள்! விழி வீச்சின்
வலையில் வீழ்ந்தவர்,
சூடா மலருக்குள் தேனாகி விடுவார்!
கண்ணால் கண்டவர் எவரும் பின்னால்
மூடார் தமது கண்களை மீண்டும் !
ஒருமுறை அவளைப் பார்த்தவர், மனத்தில்
திரும்பித் தேடார் வேறோர் அழகிய மாதை!நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது],
மற்றும் செனட்டர்கள்:
புரூட்டஸ் [35 வயது],
காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)].
காஸ்கா [40 வயது],
கவிஞர் சின்னா [35],
சிசெரோ [50 வயது],
அக்டேவியன் [24]
டிரிபோனஸ்
மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம்: பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் ரோமானியப் பொதுமக்கள், எகிப்திய விருந்தாளிகள். கல்பூர்ணியா, புரூட்டஸ்ஸின் மனைவி போர்ஷியா, காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ மற்ற செனட்டர்கள். கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் [வயது 4]
காட்சி அமைப்பு:
ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் மேடை ஆசனத்தில் கல்பூர்ணியாவுடன் அமர்ந்திருக்கிறார். அருகில் ஆண்டனி, புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா, அக்டேவியஸ் மற்றும் செனட்டர் சூழ்ந்திருக்கிறார். எகிப்தின் எழில் ராணி கிளிபாத்ராவின் வருகை அறிவிக்கப் படுகிறது. அரசாங்கப் பிரமுகர் அனைவரும் கிளியோபாத்ராவையும், சீஸரின் மகன் சிஸேரியனையும் வரவேற்கக் காத்திருக்கிறார்கள். எகிப்தின் நர்த்தகிகளின் ஆட்டம், பாட்டுகளுடன், எகிப்த் ஆடவர், அலங்காரிகள் அணிவகுப்புடன் கிளியோபாத்ரா [ஸ்·பிங்ஸ்] மனிதத் தலைச் சிங்க ரதத்தில் கோலாகலமோடு வருகிறாள். வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது.
ஜூலியஸ் சீஸர்: என் மகனைப் பார்த்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன! அவனுக்கு என்னை அடையாளம் தெரியாது! அவனைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் நான். கிளியோபாத்ரா என்றைக்கும் வாடா மல்லிகை!
ஆண்டனி: கிளியோபாத்ராவை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன! அவளைப் பார்க்க ஆவலோடிருக்கிறேன் நான். பதினாறு வயதினிலே பார்த்தது! அப்போதே அவளது உருட்டு விழிகளும், துடுக்கு மேனியும் என்னை மயக்கின! சீஸர்! நீங்கள் மிக்க அதிர்ஷ்டசாலி! அவளைப் போன்ற பாவைக்கு வாழ்நாள் முழுதும், ஓர் ஆடவன் பக்கத்தில் அடிமையாக இருக்கலாம். உங்களுக்கு அப்படி ஓர் வாய்ப்பு கிடைத்தது!
ஜூலியஸ் சீஸர்: கவலைப் படாதே ஆண்டனி! உனக்கும் அப்படி ஓர் வாய்ப்பு வரும்! கிளியோபாத்ரா உன்மீது ஒரு கண் வைத்திருக்கிறாள்! அலெக்ஸாண்டிரியாவில் அவளுடன் படுக்கையில் நானிருந்த போதும், அவள் உன்னைத்தான் நினைத்தாள்! அவள் அதரங்களை நான் முத்தமிட்ட போதும், அவள் மனக்கண்ணில் நீதான் காட்சி அளித்தாய்! எனது வயதான முகத்தில், உன் வாலிப முகத்தைத் தேடினாள்! அவள் வருவது என்னைக் காண்பதற்கு மட்டுமில்லை! என்னைக் காரணமாக வைத்து உன்னையும் காணத்தான். நான் விரும்பியபடி எனக்கோர் ஆண்மகவைக் கொடுத்தாலும், அவளுக்கு வேண்டியவன்
நீதான்! என்னை அவள் மகனுக்காக மணந்தாலும், உன்னைத்தான் அவள் உயிராய் நேசிக்கிறாள்.ஆண்டனி: அப்படியா? என்னால் நம்ப முடியவில்லையே! அவள் என்னை நேசித்தாலும், நானவளை நேசிக்க வில்லை! அவளின்று சீஸரின் மனைவி. சீஸருக்கு ஆண்மகனை அளித்த எகிப்த் மாது! அவளை நான் பார்க்க விரும்புவது உண்மை. ஆனால் எனது ஆசை நாயகியாக எண்ண முடிய வில்லை!
கல்பூர்ணியா: [காதுகளை மூடிக் கொண்டு] நான் அருகில் உள்ளது தெரியவில்லையா! சீஸர்! ஆண்டனி! போதும் உங்கள் காதல் பேச்சுகள்! கிளியோபாத்ராவை நீங்களிருவரும் பங்கிட்டுக் கொள்வது எனக்குக் கேட்பதற்குச் சங்கடமாக உள்ளது! உங்கள் அருமைப் புதல்வனைக் காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன்! அவனை என்னிரு கரங்களில் தூக்கி அணைத்துக் கொள்வேன்! கிளியோபாத்ராவைப் பற்றி என் முன்னால் பேச வேண்டாம்! அருவருப்பாய் உள்ளது! வெந்நீர்க் குளியறையில் பேசிக் கொள்வீர்.
[அப்போது சிரித்துக் கொண்டு போர்ஷியா கல்பூர்ணியாவுக்கு அருகில் வருகிறாள். சீஸரும், ஆண்டனியும் மெதுவாக வேறிடத்துக்கு நழுவுகிறார். வீதியில் மக்களின் பலத்த ஆரவாரம் கேட்கிறது.]
போர்ஷியா: எதற்காக மந்தைக் கூட்டம் இப்படிக் கூச்சல் போடுகிறது? கல்பூர்ணியா! சீஸரை மயக்கிய அந்தச் சிறுக்கி கிளியோபாத்ராவுக்கு ரோமாபுரியில் கோலாகல வரவேற்பா? ஆனால் அவளைப் பார்க்க சீஸர் முகத்தில் மலர்ச்சியைக் காணோம்! ஆண்டனியின் கண்கள் இரண்டும் அவள் வரும் திக்கையே நோக்கி யுள்ளன! ரோமானிய செனட்டர் அத்தனை பேரும் அலங்காரமாக வரவேண்டுமா? கிளியோபாத்ராவை மயக்கவா? மாதரெல்லாம் ஒய்யார உடையில் வாசனைத் திரவத்தை வீச வேண்டுமா? மூக்கைத் துளைக்கும் அவை! ரோமானிய ஆண்கள் யாருமே பெண்ணைப் பார்த்ததில்லையா? அவள் என்ன அப்படி ஓர் அதிசயப் பெண்ணா? அவள் மூக்கு சற்று கோணியது என்று கேள்விப் பட்டேனே!
கல்பூர்ணியா: கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் தெரியுமாம்! போர்ஷியா! உனக்கு இத்தாலிய மொழியைத் தவிர வேறென்ன தெரியும்? நீள நைல் ஓடும் மாபெரும் எகிப்த் நாட்டின் மகாராணி அவள்! நீ எந்த நாட்டுக்கு ராணி? சொல், போர்ஷியா! எனக்குப் பிள்ளை உண்டாவதில்லை! சீஸருக்கு ஆண்மகனைப் பெற்றுத் தந்திருக்கிறாள், கிளியோபாத்ரா! எல்லாவற்றிலும் உன்னை விடப் பெரியவள் மட்டுமில்லை, கிளியோபாத்ரா என்னை விடவும் பலபடி உயர்ந்தவள்! ஆம், அவள் ஓர் அதிசயப் பெண்! ஓர் அற்புதப் பெண், ஐயமின்றி.
போர்ஷியா: நிறுத்து கல்பூர்ணியா! என்ன அடுக்கிக் கொண்டே போகிறாயே! கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவளை ஓர் அற்புதப் பெண் என்று நீ புகழ்வது தவறாகத் தெரிகிறது எனக்கு! ஏற்கனவே அவள் கூட்டாகப் பட்டம் சூடிக் கொள்ளத் தமையன் டாலமியை மணம் புரிந்து கொண்டவள்! பிறகு டாலமியைக் கொல்வதற்கு சீஸர் உதவியை நாடியவள்! ஆண்மகவைப் பெற்றுத் தருகிறேன் என்று சீஸரைக் கவர்ந்து திருமணம் செய்து கொண்டவள்! கல்பூர்ணியா! சட்டப்படி நீ சீஸரின் மனைவி! அவள் உண்மையாகச் சீஸரின் மனைவி யில்லை! வைப்பு மாது அவள்! உன்னிடத்தில் அவள் அமர்ந்து சீஸரின் பிரதான மனைவி என்று முரசடிப்பதில் உன் உதிரம் கொதிக்க வில்லையா? என்னுதிரம் கூடக் கொதிக்கிறதே!
கல்பூர்ணியா: என் கொதிப்பெல்லாம் அடங்கி என்னாவி திரும்பி விட்டது! கிளியோபாத்ரா மீது துளியும் பொறாமை இல்லை எனக்கு! துளியும் வெறுப்பில்லை எனக்கு! ஆயிரம் இருந்தாலும் அவள் என்னிடத்தைப் பிடிக்க முடியாது! ஆயிரம் இல்லா விட்டாலும் முதல் மனைவி நான் என்பதை யாரும் மாற்ற முடியாது. சீஸருக்கு ஆண்மகனை அளித்த கிளியோபாத்ரா என் மதிப்புக்கு உரியவள்! சீஸர் நேசித்து மணந்தவள் என் பரிவுக்கு உரியவள்!
போர்ஷியா: கல்பூர்ணியா! சீஸருக்கும், காதலுக்கும் வெகு தூரம்! கண்டதும் காதல் கொள்பவர் சீஸர்! சீஸருக்கு ஆசை நாயகிகள் எத்தனை என்பதே அவருக்கே தெரியாது! வனப்பில் மயங்குபவர் சீஸர்! வயிற்றுக்குத் தேவை உணவு! உடலுக்குத் தேவை ஒரு பாவை! அதுதான் அவரது காதல் விதி! பாலை வனத்தில் அவரது தாகத்திற்கு நீர் அளித்த பசுஞ்சோலை அந்த கிளியோபாத்ரா! பஞ்ச வர்ணக் கிளியான கிளியோபாத்ரா வயதான சீஸரை நேசிப்பதாக நீ கனவு காணாதே! உன்னை நேசித்தா சீஸர் திருமணம் புரிந்தார்? ரோமாபுரியில் உன்னில்லம் மேல்தட்டுக் குடும்பம்!
[வீதியில் மக்களின் ஆரவாரம் கேட்கிறது. தங்கக் கிரீடம் ஒளிவீச மகாராணி கிளியோபாத்ரா, மகனைக் கையில் பற்றிக் கொண்டு ரதத்திலிருந்து இறங்கிச் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருகிறாள். ரோமானியர் அவள் மீது மலர்களைத் தூவி ஆரவாரம் செய்கிறார்]
கல்பூர்ணியா: [எழுந்து நின்று] அதோ வருகிறாள் கிளியோபாத்ரா! அதோ வருகிறான் சீஸரின் அழகு மகன்! தாமரை மலர்போல் தெரிகிறாள், கிளியோபாத்ரா! மல்லிகை தண்டுபோல் வருகிறான் மகன்!
ஜூலியஸ் சீஸர்: [எழுந்துபோய் முகமலர்ச்சியுடன் வரவேற்கிறார். சீஸர் கிளியோபாத்ராவைத் தழுவிக் கொள்கிறார். மகனைத் தூக்கிக் கொண்டு கன்னத்தில் முத்தமிடுகிறார். அருகில் கல்பூர்ணியா, போர்ஷியா, ஆண்டனி, புரூட்டஸ் வருகிறார். சீஸர் அனைவரையும் அறிமுகம் செய்கிறார்] வருக! வருக! கிளியோபாத்ரா! ரோமாபுரி உன்னையும், என் செல்வனையும் வாஞ்சையோடு வரவேற்கிறது. பார்! உங்களை வரவேற்க ஆயிரக் கணக்கான மக்கள் மணிக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்! … இதோ கல்பூர்ணியா! .. ஆண்டனி! .. புரூட்டஸ்! .. புரூட்டஸின் மனைவி போர்ஷியா! அக்டேவியஸ்! என் சகோதரனின் மகன் [கிளியோபாத்ரா அனைவருக்கும் முறுவலுடன் கை கொடுக்கிறாள்]
கல்பூர்ணியா: [சீஸரிடமிருந்து மகனை வாங்கி, பாசமோடுக் கன்னத்தில் பலமுறை முத்தமிட்டு] வாடா கண்ணே வா! நானும் உன் அன்னைதான்! உன் பெயர் என்ன சொல்!
சிஸேரியன்: என் பெயர் சிஸேரியன்! நீங்களும் எனக்கு ஓர் அன்னையா? எனக்கு ஓர் அன்னைதானே! ரோமிலும் ஓர் அன்னை உள்ளது தெரியாது!
போர்ஷியா: [அருகில் வந்து சிறுவன் கன்னத்தைத் தடவி] என்ன அழகாக இத்த்தாலிய மொழியில் பேசுகிறான்? உனக்கு யார் இத்தாலி பேசக் கற்றுக் கொடுத்தது?
சிஸேரியன்: என் தாய்தான்! அம்மாவுக்கு ஏழு மொழி தெரியும்! எனக்கு மூனு மொழி தெரியும். சொல்லட்டுமா? எகிப்து மொழி, இத்தாலிய மொழி, ஹீப்ரூ மொழி!
கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] அரண்மனை ஆசிரியர் சொல்லித் தருகிறார். நான் அவனுடன் இத்தாலிய மொழியிலும் பேசுவேன்.
ஜூலியஸ் சீஸர்: அப்படியா, எனக்குத் தெரியாதே! என் மகன் இத்தாலியில் எப்படி எளிதாகப் பேசுகிறான்! [மகன் கன்னத்தில் முத்தமிடுகிறார்]
அக்டேவியஸ்: [சற்றுத் தள்ளிச் சென்று, காஸ்ஸியஸைப் பார்த்து] காஸ்ஸியஸ்! பார்த்தாயா, சீஸரின் எதிர்கால வாரிசை! இத்தாலிய மொழி எல்லாம் சொல்லிக் கொடுத்துத் தயாராக அழைத்து வந்திருக்கிறாள் கிளியோபாத்ரா! அரை இத்தாலியன் முழு இத்தாலியனை ஆளப் போகிறானா? சிஸேரியன் ஓர் அரைப் பிறவி [Half Breed] தெரியுமா? நானும்தான் பார்க்கப் போகிறேன். ரோமாபுரியைக் கைக் கொள்ளப் போவது ஓர் அரைப் பிறவியா? அல்லது ஒரு முழுப் பிறவியா? அந்த அரைப் பிறவியை நசுக்கிக் குறைப் பிறவியாக ஆக்கா விட்டால், நானோர் ரோமானியன் அல்லன்!
காஸ்ஸியஸ்: அக்டேவியஸ்! நமது பகைவன் நான்கு வயதுப் பாலகனா? [சிரிக்கிறான்] வேடிக்கையாக உள்ளது, நீ உறுதி மொழி உரைப்பது! யானை எதிரியாக உள்ள போது, யாராவது பூனையை விரட்டிச் செல்வாரா?
அக்டேவியஸ்: [வியப்புடன்] யாரை யானை என்று கூறுகிறாய்?
காஸ்ஸியஸ்: நமக்குக் குறி சீஸர்! சிஸேரியன் அல்லன்!
அக்டேவியஸ்: [ஆச்சரியமாக] என்ன பிதற்றுகிறாய்? சீஸர் எனது சித்தப்பா! எனக்கோர் வழிகாட்டி! எனது பகைவன் ஐயமின்றி அந்த நான்கு வயது எகிப்த் பாலகன்தான்! ரோமின் எதிர்கால மன்னன்… ! கிளியோபாத்ரா எதற்கு வந்திருக்கிறாள் என்று தெரியுமா? எதிர்கால ரோமாபுரியின் வேந்தன் சிஸேரியனைக் காட்ட வந்திருக்கிறாள் நமக்கு! எத்தனை நாளைக்கு சீஸரோடிருப்பாள் என்பதை நானும் பார்க்கத்தான் போகிறேன்! அவள் சீஸருக்கு மனைவி யானாலும், எகிப்தின் ராணி! ரோமின் அடிமை ராணி!
காஸ்ஸியஸ்: மார்ச் பதினைந்தாம் தேதி ஒரு பெரும் மாறுதல் வருமென்று ஜோதிடன் எச்சரிக்கை விட்டிருக்கிறான்! என்ன நடக்கும் என்பது தெரியாது எனக்கு! எச்சரிக்கை விட்டது நமக்கல்ல! சீஸருக்கு! சீஸரின் ஆசைநாயகி கிளியோபாத்ராவுக்கு! சீஸரின் வாரிசான சிஸேரியனுக்கு!
காஸ்கா: [கிளியோபாத்ராவின் வனப்பில் மயங்கி] சீஸர் அருகில் நிற்காமல் இருந்தால், கிளியோபாத்ராவை நானே தூக்கிக் கொண்டு போயிருப்பேன்! என்ன எடுப்பான உடல்! என்ன மிடுக்கான தோற்றம்! மயில் போன்ற நடை! உடுக்கை போன்ற இடுப்பு! கண்களைக் குத்தும் தூக்கிய மார்புகள்! சீஸர் அதிர்ஷ்டக்காரர்!
காஸ்ஸியஸ்: காஸ்கா! காமம் உன் கண்களைக் குருடாக்குகிறது! ஆண்டனியும் அந்த மாயக்காரி வனப்பில் மயங்கிப் போய் விட்டார்! பார்! அவள் தங்கக் கிரீடத்தில் உள்ளவை என்ன? ஒரு நாகமில்லை! பல நாகங்கள்! கருநாகங்கள்! கவனம் வைத்துக் கொள்! அவளது நச்சு அதரங்களை முத்தமிட்டவர் யாரும் உயிருடன் வாழ்வதில்லை! விரைவில் செத்து விடுவார்! அவளை மணந்த டாலமி நைல் நதியில் மூழ்கினான்! அடுத்து அவளை மணந்த சீஸருக்கு என்ன ஆகுமோ தெரியாது எனக்கு! அடுத்து ஆண்டனி வேறு அதே கோட்டைப் பின்பற்றிப் போகிறார்! கிளியோபாத்ரா, எழில்ராணி யில்லை! விதவை ராணி அவள்! அவள் ஒரு கரும்விதவை! யாரைத் திருமணம் செய்கிறாளோ, அவர் செத்துவிடுவார்! சீக்கிரம் செத்துவிடுவார்!
*********************
அங்கம் -5 காட்சி -2 பாகம் -1
ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு
“காதல் நோக்குவது கண்கள் மூலமன்று!
உள்ளத்தின் மூலமே ஊடுருவும்!”“காதலின் மெய்யான போக்கு கரடு முரடு.”
வில்லியம் ஷேக்ஸ்பியர் [வேனிற்காலக் கனவு]
பண்ணிசை உள்ளம் பெறாத மனிதன்,
இன்னிசைத் தொனிக்கு உருகாத மனிதன்,
பாழானவன்! வஞ்சகம் செய்பவன்!
பகைவனாய் ஏமாற்றும் பாதகன்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]
வெளிச்சம் பொழியும் வெண்ணிலவு!
இம்மாதிரி இரவு வேளையில் தான்
மரங்களை அணைத்து
முத்த மிடும் மிருதுவாய்,
சித்தம் குளிரும் தென்றல்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [வெனிஸ் வர்த்தகன்]
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.
நேரம், இடம்: பகல் வேளை.
ரோமாபுரியில் சீஸரின் தனி மாளிகை.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், ஆண்டனி, புரூட்டஸ், அக்டேவியன், காஸ்ஸியஸ், காஸ்கா, சிசெரோ, மற்றும் சில செனட்டர்கள்.
காட்சி அமைப்பு:
ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸர் தன் தனி மாளிகையில் ஆசன மெத்தையில் மகனுடன் அமர்ந்திருக்கிறார். கிளியோபாத்ரா சற்று தூரத்தில் நின்று சீஸரையும், மகனையும் கவனிக்கிறாள். அறையில் வரப் போகும் செனட்டர்களுக்காக பல நாற்காலிகள் போடப் பட்டுள்ளன.
ஜூலியஸ் சீஸர்: [மகனை மடிமேல் அமர்த்தி] கண்மணி! ரோமாபுரி அலெக்ஸாண்டிரியா போல் உள்ளதா? ரோம் தலைநகரம் உனக்குப் பிடித்திருக்கிறதா? நீச்சல் கற்றுக் கொண்டாய் என்று உன் அன்னை சொன்னாள்.
சிஸேரியன்: [முகத்தைச் சுழித்து] ரோம் எனக்குப் பிடிக்க வில்லை அப்பா! என்னைப் பார்ப்பவர் எல்லாம் ஒருமாதிரி விழிக்கிறார்! பரிவும், பாசமும் என்மேல் யாருக்கு மில்லை! முகத்தை உம்மென்று வைத்து ஆந்தை போல் கூர்ந்து பார்க்கிறார்! அலெக்ஸாண்டிரியாவில் புன்னகை முகத்தையே பார்ப்பேன். சேடியர் எனது கன்னத்தில் முத்தமாய்ப் பொழிவார்! யாரும் என்னருகில் வராமல் தள்ளியே நிற்கிறார்! எனக்கு ரோம் அறவே பிடிக்க வில்லை அப்பா! அலெக்ஸாண்டிரியாவுக்குத் திரும்பிப் போக விரும்புகிறேன்.
ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரிமுடன்] அப்படிச் சொல்லாதே கண்மணி! எகிப்த் உன் அன்னை ஊர்! ரோமாபுரி உன் தந்தை ஊர்! நீ ஒருநாள் ரோமாபுரிக்கு ராஜாவாகப் போகிறாய்! ரோம் பிடிக்க வில்லை என்று சொல்லக் கூடாது! ரோமானியர் வெளிப்புறத்தில் கடூரமாய்த் தோன்றினாலும், உள்ளத்தில் அன்பு கொண்டவர். ஆயிரக் கணக்கான் ரோமானியர் உன்னையும் உன் தாயையும் ஆரவாரமோடு வரவேற்க வில்லையா? நீ வந்து சில தினங்கள்தான் ஆகின்றன. போகப் போக ரோமானியரின் பரிவு தெரியும் உனக்கு. பார், கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ரோமானியர், உன்னைத் தோளில் தூக்கி வைத்து ஆடுவார்! பாடுவார்! நாடுவார்!
சிஸேரியன்: அப்பா! எனக்குக் கத்திச் சண்டை போட ஆசை. வில்லம்பு ஏவிட ஆசை. பயிற்சிக்கு ஏற்பாடு செய்வீரா? தினமும் அலெக்ஸாண்டிரியாவில் எனக்கு மொழிப்பயிற்சி உண்டு. கிரேக்க மொழி கற்றுக் கொள்ள ஆசை எனக்கு. அதற்கும் ஏற்பாடு செய்வீரா? கிரேக்க வீரர் அலெக்ஸாண்டர் கதையை அம்மா எனக்குச் சொல்லி யிருக்கிறார்.
ஜூலியஸ் சீஸர்: ஈதோ, ஏற்பாடு செய்கிறேன். [மணி அடித்துக் காவலனை அழைக்கிறார். காவலன் சிறுவனைக் கூட்டிச் செல்கிறான்.]
[கிளியோபாத்ரா புன்னகையுடன் சீஸர் வருகிறாள். சீஸர் அவளை முத்தமிடுகிறார்]
கிளியோபாத்ரா: சிஸேரியன் கிரேக்க மொழி கற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாய் உள்ளான். ரோமில் அதைக் கற்றுக் கொள்ள அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. .அது சரி, நாளை ரோமாபுரியின் மக்கள் மன்றத்தில் உங்களுக்குப் பட்டாபிசேக விழா அல்லவா? வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி அல்லவா அது? சீஸரின் பொற்காலம் என்று என் குருநாதர் சொல்கிறார்! செனட்டர் செய்த முடிவுதான் என்ன? எப்படிப் பட்டம் சூடப் போகிறார் உங்களுக்கு?
ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] ரோமாபுரிக்கு வெறும் ஏகாதிபதியாக என்னை நியமிக்கப் போகிறார்! பெருத்த ஏமாற்றம் எனக்கு! எதிர்பாராத அடி எனக்கு! வெற்றிமேல் வெற்றி பெற்ற எனக்கு ரோமானியர் அளிக்கும் வெகுமதி வெறும் அதிபதி! அதுவும் ஏகாதிபதி!
கிளியோபாத்ரா: [ஆத்திரமுடன்] என்ன ஏகாதிபதியா? ஏமாற்றம் எனக்கும்தான்! ரோமாபுரிக்கு வேந்தரில்லையா நீங்கள்? வேடிக்கையாக உள்ளதே உங்கள் விநோத செனட்டர் முடிவு! அதை ஏற்றுக் கொள்ளப் போகிறீரா? தளபதியை அதிபதியாக ஆக்கியதில் என்ன மதிப்பிருக்கிறது? ரோமானிய செனட்டர்கள் கோமாளிகள்!
ஜூலியஸ் சீஸர்: நிச்சயம், ஒப்புக் கொள்ளப் போவதில்லை நான்! வேறு வழி என்ன என்று சிந்திக்கிறேன்.
[அப்போது செனட்டர்கள் வருகையைக் காவலன் அறிவிக்கிறான். சீஸர் அனுமதி அளிக்க ஆண்டனி, சின்னா, புரூட்டஸ், அக்டேவியன், சிசெரோ, காஸ்ஸியஸ், காஸ்கா ஆகிய செனட்டர் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்கிறார்கள். சீஸரும், கிளியோபாத்ராவும் ஆசனத்தில் அமர்கிறார்.]
ஆண்டனி: [எழுந்து நின்று] மாண்புமிகு தளபதி அவர்களே! செனட்டாரின் ஏகோபித்த முடிவை நான் அவர்கள் சார்பாக உங்களுக்குக் கூற விரும்புகிறேன். நாளை நடக்கும் பட்டாபிசேக விழாவில் ரோமாபுரியின் ஏகாதிபதியாக ஏற்றுக் கொள்ளப் படுவீர் தாங்கள். [செனட்டர் யாவரும் ஆரவாரமுடன் கைதட்டுகிறார்கள்]
ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன் எழுந்து] நிறுத்துங்கள் கைதட்டலை! நிராகரிக்கிறேன் உமது முடிவை! முதலில் நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன், உமது ஏகோபித்த முடிவை! புறக்கணிக்கிறேன் உமது போலித் தனமான வேடிக்கை முடிவை!
புரூட்டஸ்: [எழுந்து நின்று கண்ணியமாக] மாண்புமிகு தளபதியாரே! மாபெரும் மத்திய கடற்கரை வெற்றி வீரருக்கு வேறென்ன வேண்டும்? ஏகாதிபதி என்பது ரோமாபுரியின் உன்னதப் பட்டமல்லவா? சீஸர் அதை வேண்டாம் என்று வெறுப்பதின் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?
ஜூலியஸ் சீஸர்: [சற்று குரலைத் தணித்து] அருமை புரூட்டஸ்! என்னை நீ அறிவாய்! என் போர் வல்லமையை நீ அறிவாய்! பல்லாண்டு போரிட்டுச் சலிக்காதவன் நான்! ஸ்பெயின் முதல் எகிப்த் வரைக் கைப்பற்றியதை நீ அறிவாய்! பன்முறைப் போரிட்டு ரோமானிய சாம்ராஜியத்தைப் பல்லாயிரம் சதுர மைல் விரித்தவன் நான்! பார்புகழும் ஓர் மாவீரருக்கு அளிக்கும் வெகுமதியா இது? ஏமாற்றம் அடைந்தேன் புரூட்டஸ்! பெருத்த ஏமாற்றம் அடைந்தேன்! நான் எதிர்பார்த்தது இதுவன்று!
காஸ்ஸியஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதியாரே! நீங்கள் எதிர்பார்த்தது என்ன வென்று தெளிவாகச் சொல்வீரா? உங்கள் பேராற்றலை செனட்டார் யாரும் குறைக்க வில்லையே! வெறும் பட்டப் பெயரில் என்ன உள்ளது?
ஜூலியஸ் சீஸர்: [அழுத்தமுடன்] ஏகாதிபதியாக இருக்க விருப்ப மில்லை எனக்கு! ரோமாபுரியின் ஆற்றல் மிக்க ஏகச் சக்ரவர்த்தியாக விளங்க விழைகிறேன்! ரோமின் வேந்தராகப் பட்டாபிசேகம் ஆக விரும்புகிறேன். ரோமானிய சாம்ராஜியத்தின் முடி சூடிய மாமன்னராக அறிவிக்கப்பட வேண்டுகிறேன்!
[செனட்டருக்குள் பல முணுமுணுப்புகள் எழுகின்றன]
காஸ்ஸியஸ்: [ஆத்திரமுடன்] வேந்தராக ஒருவர் ரோமுக்கு ஆகிவிட்டால், செனட்ட ராகிய எமக்கு வேலை யில்லை! குடியாட்சியைப் புதைத்து முடியாட்சியைப் புகுத்த விழைகிறீர்! எமது ஆற்றல் மங்கிப் போகும்! எமது குரல் மதிப்பற்றுப் போகும்! நூற்றுக் கணக்கான செனட்டர்களைக் கீழே தள்ளிவிட்டு நாங்கள் எதற்கு ஓர் வேந்தரை நியமிக்க வேண்டும் ரோமுக்கு?
ஜூலியஸ் சீஸர்: [சீற்றத்துடன்] பேராற்றல் படைத்த எனது அரசியல் உரிமையைச் செனட்டர் அபகரித்துக் கொள்வதை ஏற்கப் போவதில்லை நான்! என்றைக்கும் உடன்படப் போவதில்லை நான்!
புரூட்டஸ்: [சற்று யோசனையுடன்] மேன்மைமிகு தளபதியாரே! நாங்கள் அதைப் பற்றித் தனியாகச் சிந்திக்க வேண்டும்! சற்று அவகாசம் தேவை. கொடுப்பீரா? ரோமாபுரிக்கு ஒரு வேந்தர் தேவையா என்று செனட்டர்கள் ஆராய வேண்டும்! தர்க்கத்துக்குரிய பிரச்சனை அது! கூடிப் பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்சனை அது!
காஸ்ஸியஸ்: [கோபத்துடன்] செனட்டர் தீர்மானம் செய்ய வேண்டாம் அதை! ரோமாபுரிக்கு மன்னர் பதவி தேவை யில்லை. மன்னர் ஆட்சியில் செனட்டருக்கு என்ன வேலை?
சிசெரோ: [எழுந்து நின்று] மன்னிக்க வேண்டும், சீஸர் நான் குறுக்கீடு செய்வதற்கு! செனட்டர்கள் கூடிப் பேச சில மணிநேரம் அவகாசம் வேண்டும். அடுத்த அறையில் உடனே முடிவு செய்கிறோம் நாங்கள்!
ஜூலியஸ் சீஸர்: அப்படியே செய்யுங்கள். அனுமதி அளிக்கிறேன். [ஆண்டனி, புரூட்டஸ் மற்றும் ஏனைய செனட்டர் அனைவரும் வெளியேறுகிறார். மூடிய அடுத்த அறையில் கூடி அளவளாவுகிறார்கள்]
கிளியோபாத்ரா: [ஆத்திரமோடு அருகில் வந்து] மகா அலெக்ஸாண்டருக்குப் பிறகு மாவீரர் பரம்பரையில் சீஸரை மிஞ்சியவர் யார்? பல்லாயிரம் சதுர மைல் நாடுகளைப் பிடித்து ரோமானியப் பேராற்றலைக் காட்டியது யார்? உங்களை வேந்தர் என்று உங்கள் ரோமானியரே ஏற்றுக் கொள்ளாதது வியப்பாக உள்ளது எனக்கு! உங்கள் செனட்டார் அனைவரும் மூடர்கள்!
ஜூலியஸ் சீஸர்: ஆத்திரப் படாதே, கிளியோபாத்ரா! எகிப்திய மகாராணி ரோமானிய கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது கடினம்! நான் தளபதி ஆயினும், ரோமானிய செனட்டரைப் புறக்கணிக்க முடியாது. அத்தனை பேரது பகையையும் நான் தேடிக் கொள்ளலாகாது!
கிளியோபாத்ரா: [சினத்துடன்] சீஸர்! ·பாரோவின் பரம்பரை வாரிசைப் பெற்ற நீங்கள் தேவனுக்குச் சமமானவர்! என்னை மணந்ததால் எகிப்த் உங்களை மன்னராக ஏற்றுக் கொண்டது! ஆனால் ரோமாபுரி ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது? என்னை மணந்த காரணமா? அல்லது உங்களுக்கு ஓர் மகன் பிறந்த காரணமா? பரம்பரை முடியாட்சியை செனட்டார் வெறுக்கிறாரா? சொல்லுங்கள். குழப்பமாய் உள்ளது எனக்கு!
ஜூலியஸ் சீஸர்: அப்படி எல்லாம் சந்தேகப் படாதே கிளியோபாத்ரா.
[அப்போது செனட்டர்கள் யாவரும் உள்ளே நுழைகிறார். நாற்காலியில் அமர்கிறார்]
புரூட்டஸ்: [எழுந்து நின்று] மேன்மைமிகு தளபதி அவர்களே! செனட்டார் யாவரும் செய்த முடிவு இதுதான். ரோம் சாம்ராஜியத்துக்கு வேந்தர்! ஆனால் ரோமுக்கு நீங்கள் ஏகாதிபதி! ரோமாபுரியின் ஆட்சியில் செனட்டரின் முடிவு முதலிடம் பெறும்! ரோமாபுரிக்கு வெளியே நீங்கள் வேந்தராக அறிவிக்கப் படுவீர்.
ஜூலியஸ் சீஸர்: [ஆங்காரச் சிரிப்புடன்] என்ன? சீஸர் வெளி உலகுக்கு மட்டும் வேந்தர்! ஆனால் உள்ளூருக்குள் வெறும் தளபதி, அதாவது ஏகாதிபதி! வேடிக்கையான பட்டாபிசேகம்! உள் நாட்டில் வெறும் பீடம்! வெளிநாடு போகும் போது ராஜ கிரீடம்! உள்ளூரில் பொம்மை ராஜா! வெளியூரில் உண்மை ராஜா! வேண்டாம் எனக்கு இந்த இரட்டை வேடம்! எனக்குத் தேவை ஒரே வேடம்! ராஜக் கிரீடம்! ரோமாபுரியின் ஏகச் சக்ரவர்த்தி!
காஸ்ஸியஸ்: தளபதியாரே! செனட்டர் ஏகோபித்த முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்! அவமானம் எங்களுக்கு! எகிப்த் ராணியின் முன்பாக அனைத்து செனட்டரை அவமதித்தால் வெளியேறுகிறோம் நாங்கள்! உங்களுடன் பேச்சில்லை எமக்கு!
காஸ்கா: [சினத்துடன்] கிளம்புங்கள் வெளியே! நமக்கினிப் பேச்சில்லை! முடியாட்சி ரோமில் முளைத்திட யாம் அனுமதிக்க மாட்டோம்!
காஸ்ஸியஸ்: செனட்டர் கடமை ரோமாபுரியைக் காப்பாற்றுவது! குடியாட்சியைக் கீழே தள்ள நாம் எப்படி உடன்படுவோம்?
[ஆண்டனி, புரூட்டஸைத் தவிர அனைத்து செனட்டரும் வேகமாக வெளியேறுகிறார்]
புரூட்டஸ்: [கண்ணியமாக] செனட்டார் சொல்வதைச் சீஸர் கேட்பது சாலச் சிறந்தது. செனட்டர் சினத்துக்குச் சீஸர் தீனி போடுவது நல்லதன்று! செனட்டர் நெஞ்சில் கனலை வளர்ப்பது எரிமலையைத் தூண்டுவது போலாகும்.
ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] புரூட்டஸ்! உனக்கு உலகம் தெரியாது! நீ வாலிபன்! உன் அறிவுரை தேவை யில்லை எனக்கு! செனட்டர் பக்கம் சேரும் நீயும் அவருடன் வெளியேறிச் செல்!
[புரூட்டஸ் தலைகுனிந்து கொண்டு பரிதாபமாக வெளியேறுகிறார்]
ஆண்டனி: [கனிவாக] சீஸர்! கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் கோட்டையைப் பிடிக்கலாம்! ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! நீங்கள் கேட்டதில் முக்கால் பாகம் கிடைத்துள்ளதே! அது போதாதா? ரோம் ராஜியம் உங்கள் நேரடி ஆட்சிக்குக் கீழ்! ரோமாபுரி மட்டும் செனட்டர் ஆட்சிக்குக் கீழ்! ஏற்றுக் கொள்ளுங்கள் சீஸர் முதலில்! மாற்றிக் கொள்ளலாம் அவரைப் பின்னால்!
ஜூலியஸ் சீஸர்: [சற்று யோசனையுடன்] சிந்தித்துச் சொல்கிறேன் ஆண்டனி! அவகாசம் தேவை எனக்கும்! நன்றி உன் ஆலோசனைக்கு!
ஆண்டனி: [கிளியோபாத்ரா அருகில் சென்று] ரோமாபுரியின் கொந்தளிப்பில் உங்களைச் சந்தித்தது என் துர்பாக்கியமே! எத்தனை நாட்கள் ரோமில் தங்குவதாக உங்கள் திட்டம்? தனியாகப் பேச வேண்டும் நான் உங்களுடன்! உங்கள் வருகையால் ரோமாபுரியில் ஒளி வெள்ளம் பரவி உள்ளது! சீஸருக்கு ஆண்மகவைக் கொடுத்த கிளியோபாத்ரா ரோமாபுரியின் வரலாற்றைச் செழிப்பாக்கியவர்.
கிளியோபாத்ரா: [புன்னகையுடன்] மிக்க நன்றி ஆண்டனி! மூன்று மாதங்கள் ரோமில் நான் தங்குவேன்! எகிப்துக்கு நீங்கள் ஒருமுறை விஜயம் செய்ய வேண்டும்! அங்கே அரசாங்க விருந்தாளியாக நீங்கள் என் அரண்மனையில் தங்க வேண்டும்.
ஆண்டனி: மார்ச் பதினைந்தாம் தேதி சீஸருக்குப் பட்டாபிசேக விழா! என் அரசியல் பொறுப்புகளை அவர் மீது போட்ட பிறகுதான் எனக்கு விடுதலை! எகிப்துக்கு நான் வருவதை உறுதியாகச் சொல்ல முடியாது! அழைப்புக்கு மிக்க நன்றி, கிளியோபாத்ரா! [அருகில் வந்து கிளியோபாத்ராவின் வலது கரத்தில் முத்தமிடுகிறார்.] … போய் வருகிறேன் சீஸர்! கிளியோபாத்ரா! [ஆண்டனி வெளியேறுகிறார்]
கிளியோபாத்ரா: [அழுத்தமுடன்] ஒப்புக் கொள்ளுங்கள் சீஸர்! புரூட்டஸ் சொல்வதிலும், ஆண்டனி சொல்வதிலும் பொருள் உள்ளதாகத் தெரிகிறது எனக்கு! சிறுகச் சிறுகப் பிடி என்று ஆண்டனி கூறியது ஒரு வேத வாக்கு! செனட்டரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டாம்! வயதில் சிறியவள் ஆயினும், என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். வயதில் பெரியவர் ஆயினும், ஒப்புக் கொள்வதில் உங்களுக்குத் தாழ்மை யில்லை! மகா அலெக்ஸாண்டரின் வெற்றிப் பாதை உங்களுக்குத் திறந்து விட்டது! அவர் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்! இந்தியாவின் சிந்து நதியைத் தாண்டி, கங்கைக் கரையைத் தாண்டிச் சென்று சைனாவைக் கைக்கொண்டு புது வரலாற்றைப் படைக்க வேண்டும் சீஸர். இது ஒருபெரும் வாய்ப்பு. இழந்து விடாதீர் அதனை!
ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முதலில் நீதான் என்னுடன் வாதாடினாய்! ஏற்றுக்கொள் என்று மாறாக நீ வழக்காடு கிறாய்! ஒரு கணத்தில் 180 டிகிரி கோணத்துக்குத் திரும்பி விட்டாய்! ஆனால் நான் அப்படி ஒரு கணத்தில் மாறுபவன் அல்லன்! நான் போர்த்தளபதி! பிடித்துக் கொண்டதை எளிதில் விட்டுவிடுபவன் அல்லன்! ரோமாபுரிக்கு வேந்தர் பட்டாபிசேகம்! அதை வேண்டி நின்ற பின்னர், வேறு எதனையும் விரும்ப மாட்டேன் நான்! நாளை நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!
*********************
அங்கம் -5 காட்சி -3
நேற்றைய தினம் பட்டப் பகலிலே
அங்காடிச் சந்தையில் குந்தி
அலறிக் கொண்டு
ஊளை யிட்டது ஓர் ஆந்தை!
இயற்கைக்குப் புறம்பான நிகழ்ச்சிகள்
அவ்விதம்
ஒருங்கே கூடி முழங்கினால்,
மனிதர் சொல்லக் கூடாது :
“அது இயற்கை என்று
அபாய நிகழ்ச்சிக்கு
அஞ்ச வேண்டாம் என்று !”வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
வால்மீன்கள் தெரியா பிச்சைக்காரர் செத்தால்!
வானமே தீப்பற்றும் இளவரசன் மாண்டால்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
கோழையர் மடிவதற்கு முன் பன்முறைச் சாவார்!
வல்லவர் ஒருமுறை தான் சாவைச் சுவைப்பார்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
எல்லாம் வல்ல தெய்வங்களே
கொல்லும் முடிவைத் தீர்மானித்த பின்,
எவர்தான் அந்த பயங்கர விளைவைத்
தவிர்த்து நிறுத்த முடியும்?வானத்தின் வயிற்றைக் கிழிக்குது மின்னல்
நெஞ்சைக் கீறி அடிக்குது இடி மின்னல்
நாட்டுருவைச் சிதைக்குது புயல்
நகர்த் தெருவை துடைக்குது மழை!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.
நேரம், இடம்:
சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மாவீரன் பாம்ப்பியின் நினைவு மாளிகை.
நாடகப் பாத்திரங்கள்:
காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, சிசேரோ மற்றும் சில சதிகாரர்கள், புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா.
காட்சி அமைப்பு:
மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சிசேரோவும், காஸ்காவும் எதிர்த் திசையிலிருந்து நெருங்கி வருகிறார். அவரது உடம்பெல்லாம் மழையில் நனைந்துள்ளது. துணியால் தலை, முகத்தை மூடி நடக்கிறார்கள்.
சிசேரோ: [வியப்புடன்] யாரது? … காஸ்காவா? எங்கிருந்து வருகிறாய்? சீஸரைக் கோலாகலமாய் வரவேற்று ரோமாபுரி மாளிகையில் விட்டுவிட்டு வருகிறாயா? நல்லது! … அடடா! ஏனிப்படி உனக்கு மூச்சு வாங்குகிறது? ஏனிப்படி உன் கண்களில் ஆத்திரம் பொங்குகிறது? யாரை உற்று உற்றுப் பார்க்கிறாய்?
காஸ்கா: [ஆங்காரமாய்] சிசேரோ! நீ என்ன? கல்லா? களிமண்ணா? அல்லது மரக்கட்டையா? எதுவும் உன்னைப் பாதிக்க வில்லையா பூமியே குப்புறக் கவிழ்ந்து ஆடும்போது? நானிதுவரை ரோமில் பார்க்காத பிரளயமிது! நானிதுவரைக் கண்ட புயலில்லை இது! நானிதுவரைப் பார்த்த கடல் பொங்குதலில்லை இது! நானிதுவரைக் கேட்ட பேரிடி ஓசையில்லை இது! ரோமாபுரி ஏனின்று பேயாட்டம் ஆடுதென்று தெரியவில்லை எனக்கு! யாரோ தெய்வங்களுக்குத் ஆராதனை செய்துப் பேரழிவு நாசம் புரியப் புயலை அனுப்பி யுள்ளது தெரிய வில்லையா உனக்கு?
சிசேடோ: [சிந்தனையுடன் தடுமாறி] எனக்குத் தெரியவில்லை காஸ்கா? நீ ஏதாவது விபரீதத்தைக் கண்டாயா?
காஸ்கா: விபரீதமா? ரோமாபுரியின் வீழ்ச்சியைக் கண்டேன்! ரோமானியர் அடிமைகள் ஆவதைக் கண்டேன்! வேறென்ன விபரீதத்தைக் காண வேண்டும் என் கண்கள்? வானம் துடிப்பதுபோல் என் மனமும் துடிக்கிறது! சிசேரோ! உன் மனது பாறாங்கல்லா? ஒரு துடிப்பு மில்லாமல் நட்ட கல்போல் நிற்கிறாயே! நேற்றைய தினம் பட்டப் பகலிலே நமது அங்காடிச் சந்தையில் ஆந்தையின் அலறைக் கேட்டேன்! புயலும், மழையும், இடியும், மின்னலும், ஆந்தை அலறலும் ஒன்று மில்லை என்று புறக்கணிக்காதீர்! அவை நமக்கு எச்சரிக்கை செய்யும் அபாயத்தை எல்லாம் பொய்யென்று ஒதுக்காதீர்!
சிசேரோ: [சற்று கவலையுடன்] விநோத எச்சரிக்கைதான்! என்ன அபாய எச்சரிக்கையாக நினைக்கிறாய் நீ? நாளை மக்கள் மன்றத்துக்கு மன்னராய்ப் பட்டம் சூட சீஸர் வருகிறாரா?
காஸ்கா: [தலையில் அடித்துக் கொண்டு] ஆமாம். நிச்சயம் சீஸர் மன்றத்துக்கு வருவார்! ஆனால் மன்னராக்கப்பட மாட்டார்! நீவீர் என்ன செய்ய வேண்டும் என்று ஆண்டனி மூலம் உனக்குச் செய்தி அறிவிக்கப் படும்.
சிசேரோ: அப்படியா, சரி! நான் போய் வருகிறேன்! நீ பயங்கர ராத்திரி நேரத்தில் பசிக்கலையும் கரடி போல் திரியாதே! நீயே பேரிடிக் கிரையாகி விடுவாய்! [வெளியேறுகிறார்]
காஸ்கா: போய்வா சிசேரோ! [தனக்குள்] பேரிடிக் கிரையாவது நானா அல்லது சீஸரா என்பது நாளை தெரியும்! உனக்குத் தலையும் புரியாது! வாலும் புரியாது!
[வேறு திசையிலிருந்து காஸ்ஸியஸ் நுழைகிறான்]
காஸ்ஸியஸ்: [காரிருளில் சரிவரத் தெரியாது] யாரங்கே, தலையில் துணியுடன் நடமாடுவது?
காஸ்கா: ஒரு ரோமன்! குடியாட்சி விரும்பும் ரோமன்! குடிமகன்!
காஸ்ஸியஸ்: [புன்னகையுடன்] வருக, வருக குடிமகனே! … ஆம் காஸ்காவின் குரல்!
காஸ்கா: உன் செவியின் கூர்மையை மெச்சுகிறேன். என்ன மாதிரிக் கோர ராத்திரி இது?
காஸ்ஸியஸ்: உத்தமரை மகிழ வைக்கும் ராத்திரி! உலுத்தரை கலக்கிவிடும் ராத்திரி! உனக்கு எப்படித் தெரியுது காஸ்கா?
காஸ்கா: எனக்குச் சூனியக் காட்சிதான் தெரியுது! ரோமாபுரியின் அத்தமனம் தெரிகிறது! நாளை பட்டாபிசேக விழாவில் என்ன நிகழப் போவது என்று தெரியவில்லை எனக்கு?
காஸ்ஸியஸ்: [அழுத்தமாக] நீ ஓர் பயந்தாங் கொள்ளி! இடி மின்னலுக்கு அஞ்சி ஒடுங்குகிறாய்! அச்சமில்லை எனக்கு! ரோமாபுரியின் குடியாட்சி தொடுவானில் தெரியுது! ஏன் வெளுத்து விட்டது உன் முகம்? ஏன் விறைத்து விட்டன உன் விழிகள்? பயப் போர்வையைப் போர்த்திக் கொண்டு நடுங்குகிறாய் நீ! அதற்கெல்லாம் காரண கர்த்தா யார் தெரியுமா? இந்தப் பயங்கரப் புயலுக்கும், இடி மின்னலுக்கும், பேய் மழைக்கும் யார் காரண கர்த்தா சொல்லட்டுமா? உன்னை விட அவர் வல்லவரில்லை! என்னை விட அவர் பராக்கிரமனில்லை!
காஸ்கா: யாரைச் சொல்கிறாய்? சீஸரைச் சுட்டிக் காட்டுகிறாயா?
காஸ்ஸியஸ்: யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்! ரோமானியரின் உறுப்புகள் பூர்வீகமாகித் துருவேறி விட்டன! கெட்ட காலம்! நம் முன்னோரின் வீர நெஞ்சங்கள் செத்து விட்டன! நமது அன்னையாரின் உணர்ச்சிகள் நம்மை ஆட்கொண்டன! ஆதலால் அடிமைத்தனம் சுற்றிக் கொண்டு, நம்மைப் பெண்டிராக்கி விட்டது!
காஸ்கா: [அழுத்தமாக] நான் கேள்விப் பட்டேன்! நாளைய தினம் செனட்டர் சிலர் சீஸருக்கு, நிலத்துக்கும், கடலுக்கும் வேந்தராகக் கிரீடம் சூடப் போகிறாராம்! அவர் வெற்றிமாலை சூடிய எல்லா நாடுகளுக்கும் மாமன்னர், இத்தாலிய நாட்டுக்குத் தவிர!
காஸ்ஸியஸ்: [கைவாளை உருவி] அப்போது எனக்குத் தெரியும் வாளை எவ்விடத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்பதை! அடிமைப் பந்தத்திலிருந்து நீங்கிக் காஸ்ஸியஸ், விடுதலை அளிப்பான் காஸ்ஸியஸ¤க்கு! கொடுங் கோன்மை ஆட்சிக்கு விடுவிப்பு அளிப்பான், காஸ்ஸியஸ்.
காஸ்கா: காஸ்ஸியஸ்! அவ்விதமே நானும் செய்வேன். அடிமைத் தளையை உடைக்க ரோமன் ஒவ்வொருவன் கரத்திலும் ஆற்றல் உள்ளது!
காஸ்ஸியஸ்: பிறகு ஏன் சீஸர் கொடுங்கோலனாய் நெஞ்சை நிமிர்த்துகிறார்? பாவம் சீஸர்! ஓநாயா சீஸர்? ஆயினும் அவர் கண்களுக்கு ரோமானியர் ஆட்டுக் குட்டிகளய்த் தென்படுகிறார்! சிங்கமாக இருக்கலாம் சீஸர்! ஆனால் ரோமானியர் பெண்மான்கள் அல்லர். நான் தீர்மானிக்க வேண்டும்! நான் தயாராக வேண்டும். நான் துணிந்து விட்டேன்! என் கத்தியைக் கூர்மைப் படுத்த வேண்டும்! என் குறிக்கோள் நிறைவேறும் வரை உறக்க மில்லை எனக்கு! மதுபானக் குடியில்லை எனக்கு! மனைவியுடன் சல்லாபமில்லை எனக்கு! குழந்தையுடன் விளையாட்டில்லை எனக்கு!
காஸ்கா: [அருகில் சென்று வலது கரம் நீட்டி] காஸ்ஸியஸ்! உன் துணிச்சலை மெச்சுகிறேன்! உதவிக்கு நானுடன் வருவேன்! எங்கு நீ அழைத்தாலும் வருவேன்! எதைச் செய்யென்றாலும் செய்வேன்! உன் வாளோடு என் வாளும் ஒரே உடலைக் குத்தும்! ஒரே இடத்தில் குத்தும்!
காஸ்ஸியஸ்: [காஸ்ஸியஸ் கையைக் குலுக்கி] உன்னை நம்புகிறேன் காஸ்கா! ஒப்பந்தம் செய்து கொள்வோம்! ரோமாபுரியில் நகராத பெரும் குன்றுகளை நகர்த்தி விட்டேன் நான்! ரோமின் பண்பாள மேதைகள் சிலரை வசப்படுத்தி விட்டேன் நான். என் அபாயத் திட்டங்களுக்கு ஆதரவு தருவதாய் அவர்கள் வாக்களித்துள்ளார்! நாம் புரியப் போகும் நாளைக் கோர நிகழ்ச்சிக்கு இடி முரசு தட்டுகிறது! மின்னல் வழிகாட்டுகிறது! புயல் புல்லாங்குழல் வாசிக்கிறது! மழை மனதைக் குளிர வைக்கிறது!
காஸ்கா: [வியப்புடன்] இடி, மின்னல், மழை, புயல் எழுவது என்மனத்தில் வேறுவித முடிவை எச்சரிக்கின்றது! நமக்கு ஏதாவது ஆபத்து நாளை ஏற்பட்டு விடாமா வென்று ஐயப்பாடு உண்டாகிறது!
காஸ்ஸியஸ்: அஞ்சாதே! அந்த அபசகுனங்கள் நமக்கில்லை! அவை எச்சரிப்பது சீஸரை! ஏற்கனவே மார்ச் பதினைந்தாம் நாள் அபாயத்தை சகுன ஞானி ஒருவன் சீஸர் நெஞ்சில் பொறித்து வைத்துப் போயிருக்கிறான்! நீ நினைவில் வைத்துக்கொள்! தூங்கிப் போய் விடாதே! நாளைதான் நமது தீர்வு நாள்!
காஸ்கா: போய் வருகிறேன் காஸ்ஸியஸ்! நாளை தினத்தில் நான் எழுந்திட மறந்தாலும், காலைப் பரிதி என்னை எழுப்பி விடும்! கவலைப் படாதே!
[காஸ்கா போகிறான். அப்போது சின்னா நுழைகிறான்]
காஸ்ஸியஸ்: யாரது வருவது? ஓ கவிஞர் சின்னாவா?
சின்னா: ஆம். ஆம் காஸ்ஸியஸ். என்ன பயங்கர ராத்திரி யிது? வானத்தின் வயிற்றைக் கிழிக்குது மின்னல்! நெஞ்சில் வெடிக்குது இடி! நகரைச் சிதைக்குது புயல்! தெருவை வழித்துப் போகுது மழை! நம்மில் மூவர் அல்லது நால்வருக்குத்தான் அவற்றின் எச்சரிக்கை புரிகிறது. காஸ்ஸியஸ்! ஆண்டனியை வசப்படுத்த முடியாது! அவர் சீஸரின் வலதுகை! ஆனால் புரூட்டஸை நாம் வசப்படுத்த வேண்டுமே.
காஸ்ஸியஸ்: கவலைப் படாதே சின்னா! புரூட்டஸ் சீஸரின் மூத்த மகன்! ஏற்கனவே நான் புரூட்டஸ் மனதில் விதையை நட்டுவிட்டேன்! எப்போது அது முளைக்கும் என்று தெரியாது! அவரை நம் திக்கில் திருப்புவது கடினம்! ஆனாலும் நான் தொடர்வேன்! அடிமேல் அடி வைத்தால் பிரமிடையும் உடைக்கலாம்! சின்னா! நான் சொல்வதைச் செய்! [கையில் கட்டான காகிதத் தகவலை எடுத்து] … பார்! இந்த தகவல் சுருளைப் புரூட்டஸ் வீட்டுப் பலகணி வழியே வீசி எறி! அப்புறம் இதை வீட்டு முன்பு புரூட்டஸ் சிலைக்கு அருகில் வைத்திடு! .. சீக்கிரம் செல் சின்னா!
[கையில் சுருள்களை வாங்கிக் கொண்டு சின்னா வெளியேறுகிறான்]
காஸ்ஸியஸ்: [தனிக்குரலில்] ஓ புரூட்டஸ்! நீயின்றி அத்துணிகர நிகழ்ச்சி நிகழாது! நீயின்றி ரோமாபுரிக்கு விடுதலை கிடையாது! நீயின்றி முடியாட்சியைத் தடுக்க முடியாது! நீயின்றிக் குடியாட்சியை நிலைநாட்ட முடியாது! தூங்கிக் கொண்டிருக்கும் புரூட்டஸை நான் எழுப்பியாக வேண்டும் இன்றிரவு! குழம்பிப் போன புரூட்டஸை இன்றே மாற்றியாக வேண்டும்! தயங்கிக் கொண்டிருக்கும் புரூட்டஸை இன்று தைரியசாலி யாக்க வேண்டும்!
[காஸ்ஸியஸ் விரைவாக வெளியே போகிறான்]
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (4)
அங்கம் -4 காட்சி -1
பூரிப்பு அடைகிறேன், எனது
வலுவிலாச் சொற்கள் தீப்பற்ற வைத்தன,
புரூட்டஸ் நெஞ்சிலே!காஸ்ஸியஸ்
பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்தில் வரட்டும்,
மென்மை மூளையோடு ஓய்வும் எடுப்போர் !
அதோ பார் ஆண்டனி!
பசித்த பார்வையும், நலிந்த மேனியும்
படைத்த காஸ்ஸியஸ் !
ஆழ்ந்து உளவிடும் அத்தகை மாந்தர்
அபாய மனிதர்கள்!ஜூலியஸ் சீஸர்
வில்லியம் ஷேக்ஸ்பியர்
என்ன சாதித்து விட்டார் சீஸர்?
எந்த வெற்றியோடு ரோமுக்கு வருகிறார்?
அறிவில்லா மூடர்களே! கல் நெஞ்சர்களே!
பாம்ப்பியை நினைவில்லையா?
பாம்ப்பியின் புதல்வரைக் கொன்று, சீஸர்
ரோமுக்கு மீள்கிறார்!
மரத்தின் மீதும், வீட்டின் மீதும் ஏறி
மாவீரர் பாம்ப்பி வந்ததைப் பார்த்தீர்!
இரதத்தில் அவர் சென்ற போது,
தைபர் நதி தாளமிட வில்லையா?
புத்தாடை அணிந்து சீஸரை வரவேற்பதா?
விடுமுறை என அறிவித்துப்
பாம்பியின் குருதியில் மிதித்த
பாவி மனிதர் சீஸரை வரவேற்பதா?
பாதை யெல்லாம் வண்ணமலர் வீசுவதா?
ஒழிந்து போவீர்! ஓடிச் செல்வீர்!
உமது வீட்டில்
மண்டி யிட்டு மன்னிப்புக் கேட்பீர்![மாருல்லஸ் பாம்ப்பின் அனுதாபி]
ஓடுவீர்! கூடுவீர் ! நல்லோரே!
நாடுவீர் தைபர் நதிக்கரை!
கண்ணீர் விடுவீர், நதியில் கலந்திட,
ஆறாய்ப் பெருகிச் சங்கமம் அடைய!
நிறுத்துவீர் சீஸரை வரவேற்கும்
தெரு விழாக்களை!
சீஸர் சிலைக்குப் பொன்னாடையா?
நீக்குவீர் அதைச் சீக்கிரம்!
முளைத்தெழும் சீஸரின் சிறகை
அறுத்து விடுவீர் !
கீழே விழட்டும் ஈசல்!
அடிமையாய் நாம் உழல
வானில் எப்படிப் பறப்பார் சீஸர்?[ஃபிளாவியஸ் பாம்ப்பின் அனுதாபி]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
Julius Caesar Arrives in Romeநாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம்:
பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் வரவேற்கும் பொதுமக்கள்
காட்சி அமைப்பு: ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி விழாக்களைத் தடை செய்து வருகிறார்கள். சீஸரின் பகைவர் மற்றும் செனட்டர் சிலர் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார்கள். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கை செய்கிறான். கல்பூரினியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா ஆகியோர் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸர் இரதத்திலிருந்து கீழிறங்கி கல்பூர்ணியாவிடம் வருகிறார்.
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன், கைகளை நீட்டி] கண்ணே! கல்பூர்ணியா! உன்னைக் காண வந்து விட்டேன். உன்னைப் பிரிந்து எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன? எனக்கே மறந்து விட்டது.
கல்பூர்ணியா: [சீஸரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் பெருக] என்னை மறந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது எப்படி நினைவில் இருக்கும், உங்களுக்கு? நான் புறக்கணிக்கப் பட்ட மாது! உங்களுக்கோ அடுத்தடுத்துப் பல போர்கள்! அடுத்தடுத்து பல நாடுகள்! அடுத்தடுத்துப் பல மாதர்கள்! என்னை எப்படி நினைவிருக்கும் உங்களுக்கு? நாளும், கிழமையும் நினைவில் தங்காத உங்களுக்கு எப்படி மாதம், வருடம் ஞாபகம் இருக்கும்? மெலிந்து போன என் உடம்பு கூட உங்களுக்குத் தெரிவில்லை!
நீங்களோ தலை வழுக்கையாகி வயதான வாலிபராய்க் காணப்படுகிறீர்!ஜூலியஸ் சீஸர்: வயதான வாலிபரா நான்? நல்ல கணிப்பு, கல்பூர்ணியா! .. சரி சரி! பார் ஆடவர் நிர்வாணப் பந்தயம் தொடங்குகிறது! அதோ ஆண்டனி ஓடிவரும் பாதையில் நில்! … ஆண்டனி! என்னைப் பார்!
ஆண்டனி: அழைத்தீரா என் மதிப்புக்குரிய அதிபதி அவர்களே?
ஜூலியஸ் சீஸர்: ஆமாம் ஆண்டனி! ஓடிவரும் வேகத்தில் உனது கை, கல்பூர்ணியா மீது படட்டும்! நம் மூதாதையரின் பண்டை நடப்புப்படி, நிர்வாண ஆடவர் புனித விரட்டலின் போது மலடியர் மீது கரங்கள் பட்டால், அவரது மலடு நீங்கிச் சாபம் ஒழிந்து போய்விடும்!
கல்பூர்ணியா: [உரத்த குரலில் சினத்துடன்] பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னை மலடியெனப் பழி சுமத்தும் உங்கள் பழக்கம் இன்னும் போக வில்லையே! ரோமானியர் முன்பாக என்னை மீண்டும் மலடி என்று முரசடிக்கலாமா? [அழுகிறாள்]. .. ஆண்டனி! என்னருகில் வராதே! உன் கையால் என்னைத் தொடாதே! என் மலட்டுத் தன்மை உன் முரட்டுக் கரங்கள் படுவதால் நீங்காது! போதும் உமது மூட நம்பிக்கை! [சீஸரிடமிருந்து விலகிக் கொள்கிறாள்]
ஆண்டனி: [முறுவலுடன்] என் அதிபதி சீஸர் சொல்லி விட்டார். அதை நிறைவேற்றுவது என் பணி!
Caesar & Calpurnia in Rome
[கூட்டத்திலிருந்து சீஸர், சீஸர் என்றோர் உரத்த குரல் கேட்கிறது]
ஜூலியஸ் சீஸர்: [காதைத் திருப்பி, கவனமுடன்] யாரென் பெயரைச் சொல்லி அழைப்பது?
காஸ்கா: நிசப்தம்! அமைதி! யாரோ அழைக்கிறார், சீஸரை? அமைதி! அமைதி!
ஜூலியஸ் சீஸர்: கூட்டத்தில் யாரென்னைக் கூப்பிடுகிறார்? குரலில் ஏதோ சோகத் தொனி ஒலிக்கிறது! யாரங்கே? அவரை என் முன்னே அழைத்து வா!
ஜோதிடன்: எச்சரிக்கை உமக்கு! வருகிற மார்ச் 15 ஆம் தேதி!
ஜூலியஸ் சீஸர்: நீ என்ன சொல்கிறாய்? சரியாகக் காதில் விழவில்லை! மீண்டும் ஒருமுறை சொல்!
ஜோதிடன்: கவனம், வருகிற மார்ச் 15 ஆம் தேதி! எச்சரிக்கை உமக்கு!
ஜூலியஸ் சீஸர்: [புறக்கணிப்புடன்] அவன் கனவு காண்பவன்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை!
காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! மலடிப் பெண்களை நிர்வாண வாலிபர் அடிக்கும் வேடிக்கையை நீங்கள் பார்க்கப் போக வில்லையா?
புரூட்டஸ்: அந்தக் கோமாளித்தனத்தை நான் பார்க்கப் போவதில்லை! எனக்கு வேலைப் பளு மிகுதி. சீஸரை நான் வரவேற்று நேராக உரையாட வேண்டும்.
காஸ்ஸியஸ்: நீங்கள் முன்போல் இல்லை இப்போது! உங்களிடமிருந்த பரிவும், பாசமும் தற்போது மைத்துனன் என்மீதில்லை! நீங்கள் ஒதுங்கிச் செல்வதை நான் பார்த்தேன். என்னைப் புறக்கணிக்கக் காரணம் என்ன, புரூட்டஸ்?
புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நீ ஒரு பயங்கரவாதி! என்னை நீ அண்டுவதே ஏதோ ஒரு சுயநலத் தேவைக்கு! எனக்குத் தெரியும் அது! ஆனால் உன் உள்மனதை அறிவது கடினம். என்ன வினை புரிய என்னை வசப்படுத்துகிறாய்?
காஸ்ஸியஸ்: புரூட்டஸ், பேரதிபதி சீஸர் ரோமாபுரிக்கு வந்திருப்பது ஏனென்று தெரியுமா? ரோம் ஏகாதிபத்தியத்துக்குச் சக்கரவர்த்தியாக! நம்மை யெல்லாம் அடிமையாக்க! ரோமை ஏகாதிபத்திய நாடாக்க!
[அப்போது சீஸரைச் சுற்றிலும் நிற்கும் கூட்டத்தின் ஆரவாரம் கேட்கிறது]
புரூட்டஸ்: [சட்டெனத் திரும்பி] என்ன கூக்குரல் அது? ரோமானியர் சீஸரை வேந்தராக்கத் தேர்ந்தெடுக்கிறார் என்று ஓர் அச்சம் எழுகிறது எனக்கு.
காஸ்ஸியஸ்: அப்படியானால் அதை நாம் தடுக்க வேண்டும் புரூட்டஸ்! சீஸர் வேந்தராவது உங்களுக்கும் பிடிக்க வில்லை என்று தெரிகிறது எனக்கு! என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது! எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ராவைத் திருமணம் புரிந்தபின், சீஸர் ·பாரோ மன்னர் பரம்பரையாகி விட்டார்! ·பாரோ மன்னர் போல் கடவுள்களில் ஒருவராகி விட்டார்! மேலும் ·பாரோ பரம்பரையில் ஓர் ஆண்மகவைப் பெற்றுக் கொண்டு விட்டார்! தற்போது ரோமாபுரியில் அவரைக் கடவுளாகவே வணங்கி வருகிறார்! நான் குனித்து வளைந்து அந்த சீஸருக்கு வணக்கம் செய்ய வேண்டும்! சீஸர் நீட்டி நிமிர்ந்து தலை அசைத்து என்னை ஆசீர்வதிப்பார்! எனக்குத் தெரியும் அவரது நோயைப் பற்றி! ஸ்பெயினில் போரிடும் போது காக்கா வலிப்பு வந்து வாயில் நுரை தள்ளி, அந்த கடவுள் தரையில் வீழ்ந்தார்! துடித்தார்! புரண்டார்! மனிதர் மடிந்தாரா? அதுதான் கிடையாது. விழுந்தும், விழாமலும், மடிந்தும் மாளாமலும் வாழும் நோயாளி சீஸர். நோயாளி சீஸரா நமக்கு தேவன்? நமக்கு வேந்தன்?
[மறுபடியும் கூட்டத்தின் ஆரவாரமும், கைதட்டலும் கேட்கின்றன]
புரூட்டஸ்: மீண்டும் ஆரவாரம், கைதட்டல்! சீஸருக்குப் புதுப்புது விருதுகள் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். பாராட்டுகிறேன் அவரை! நேசிக்கிறேன் அவரை!
காஸ்ஸியஸ்: பரிசுக்கும், பதவிக்கும் உயிரைக் கொடுப்பவர் சீஸர்! ரோமாபுரிக்கு ஏகாந்த வேந்தனாவதே அவரது குறிக்கோள்! சீஸரின் பிரதமச் சீடர் ஆண்டனி அதைத்தான் செய்வார்! ஆண்டனியின் உன்னத அதிபதி சீஸர் அதைத்தான் நாடி வருகிறார்! புரூட்டஸ்! அதை நான் தடுப்பேன்! நிச்சயம் தடுப்பேன்! அதை நீங்களும் தடுப்பீரா? சீஸர் என்னும் பூத மனிதர் நம்மை எல்லாம் மிதிக்க இடம் கொடுக்கலாமா?
புரூட்டஸ்: மெய்யாக நீ என்னை நேசிப்பது தெரிகிறது எனக்கு! மெய்யாக என் உதவியை நீ நாடுவது புரிகிறது எனக்கு! நீ சொல்லியதில் உண்மை இருக்கிறது! சீஸரின் போக்கு வரவேற்கத் தக்கதாக இல்லை! ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன்! கிரேக்க வீரர் மகா அலெக்ஸாண்டருக்கு நிகராக ரோமாபுரியில் தோன்றியவர் சீஸர்! அவருக்கு இணை அவரே! அவரை ரோமாபுரியின் அதிபதியாகப் பெற்றதில் நான் பெருமைப் படுகிறேன். உனது கருத்துக்களைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். உனது கூற்றுக்களை ஒருவர் ஒதுக்கவும் முடியாது! அதுபோல் ஒப்புக் கொள்ளவும் முடியாது! எனக்கு அவகாசம் தேவை!
காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! எனது வலுவற்ற சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்யுங்கள்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்! நாமெல்லாம் அதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்.
++++++++++++++++++
அங்கம் -4 காட்சி -1 பாகம் -2
புரூட்டஸ்!
விழும் நோய் சீஸருக் கில்லை!
உனக்கும், எனக்கும் உள்ளது!
உத்தமன் காஸ்கா வுக்கும் உள்ளது!காஸ்ஸியஸ்
குறுகிய நம் நாட்டின்மேல் காலைப் பரப்பி,
பெரும் பூதம்போல் நிற்கிறார் சீஸர்!
நீண்ட கால்களின் கீழ் நடந்து நம்,
பிரேதக் குழிகளை எட்டிப் பார்க்க வைப்பார்!
விதிக்கு மனிதர் சில வேளையில்
அதிபதியா யிருப்பார்!
அருமை புரூட்டஸ் ! தவறு,
நாம் பிறக்கும் போதிருக்கும்
விண்கோளிட மில்லை! நம்
வினைக்கு நாமே காரண கர்த்தா!காஸ்ஸியஸ்
ஆண்டனி !
காஸ்ஸியஸைக் கண்டு அஞ்ச வில்லை நான்!
சீஸர் என்னும் பெயர் அச்சம் ஊட்டுவதா?
காஸ்ஸியஸ் போல் விரைவில் யாரை
ஒதுக்க வேண்டும் என்றறியேன்! காஸ்ஸியஸ்
மெத்தப் படித்தவன்! உற்று நோக்குவன்!
மனிதர் போக்கை நுணுக்கி ஆய்பவன்!
நாடகம் விரும்பான்! பாடலைக் கேளான்,
நகைப்பது அவன் அபூர்வம்! நகைப்பினும்
தன்னை ஏளனப் படுத்தும் தன்மைதான்!
அமைதியில் ஆறாது அவனது இதயம் !
அத்தகையோர் ஆதலால் அபாய மாந்தர்!ஜூலியஸ் சீஸர்
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.
நேரம், இடம்:
பகல் வேளை. செனட் மாளிகைக்கு அருகில் ரோமாபுரியின் பெருவீதி.
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர், படை வீரர்கள், தெருவின் இருபுறமும் பொதுமக்கள்
காட்சி அமைப்பு:
ரோமாபுரியில் ஒரு பொதுத்தளம். நகர மக்கள் ஆரவாரம் செய்ய, படையினர் வாத்தியங்கள் முழங்க ஜூலியஸ் சீஸர் கையை உயர்த்தி அசைத்துக் கொண்டு குதிரை வாகனத்தில் ரோமாபுரிக்குத் திரும்பி வருகிறார். ஒரு ஓரத்தில் பாம்ப்பியின் அனுதாபிகள் சீஸருக்கு எதிராக உரையாற்றி வருகிறார். சீஸரின் பகைவர், சில செனட்டர்கள் அடுத்தொரு பகுதியில் சீஸர் வரவேற்பைத் தடை செய்து வருகிறார். ஜோதிடன் ஒருவன் வரப் போகும் அபாயத்தை சீஸருக்கு எச்சரிக்கிறான். கல்பூரிணியா, ஆண்டனி, புரூடஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, ஒரு ஜோதிடன் கூட்டத்தில் காணப் படுகிறார். சீஸருக்கு மார்ச் 15 ஆம் நாள் வரப் போகும் அபாய எச்சரிக்கையை ஜோதிடன் உரக்கக் கூறுகிறான்! அவன் கனவு காண்பவன் என்று ஒதுக்கிறார் சீஸர்! அவருடைய நிழலில் ஒளிந்து கொண்டு சில சதிகாரர் ஓர் பயங்கர நிகழ்ச்சிக்கு விதையிடுகிறார்.
காஸ்ஸியஸ்: மிக்க மகிழ்ச்சி புரூட்டஸ்! வலுவற்ற எனது சொற்கள் உங்கள் வைர நெஞ்சில் தீப்பொறி உண்டாக்கியதே போதும். ஆனால் அந்த தீப்பொறி அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வீர். பண்பு மிகும் புரூட்டஸ்! சீக்கிரம் முடிவு செய்வீர்! சீஸர் முடிசூடி ரோமின் வேந்தனாய் ஆசனத்தில் அமரக் கூடாது! நாம் அதைத் தடுக்க வேண்டும்! உடனே நிறுத்த வேண்டும்!
புரூட்டஸ்: ஆரவாரம் குறைந்து விட்டது, அரங்கத்தில். அதோ சீஸர் எழுந்து வெளியே வருகிறார்.
காஸ்ஸியஸ்: புரூட்டஸ்! கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாமறிய வேண்டும்! சீஸரை முந்திக் கொண்டு காஸ்கா வருகிறான்! அவனைப் பிடித்து நம்பக்கம் இழுக்க வேண்டும். கைதட்டலுக்கும், எதிரான கூச்சலுக்கும் என்ன காரணம் என்று தெரிய வேண்டும். காஸ்கா கையைப் பற்றி விக்கென இழுப்பீரா புரூட்டஸ்?
புரூட்டஸ்: நிச்சயம் செய்கிறேன். ஆனால் சீஸரை பார்த்தாயா? கோபக் கனல் அவர் கண்களில் சுடர்விட்டு எரிகிறது! பின்னால் வரும் சீஸரின் ஆட்டு மந்தை பொறுமை யிழந்து ஏமாந்த முகத்துடன் தொடர்கிறது! கல்பூர்ணியாவின் கன்னங்கள் ஏன் வெளுத்துப் போயுள்ளன? மாமேதை சிசெரோ ஆந்தை விழியில் பேதலித்துக் காணப் படுகிறார்! ரோமாபுரி மன்றத் தர்க்கத்தில், செனட்டர் அவரை குறுக்கிட்டு எதிர்க்கும் போது, அப்படித்தான் சிசெரோ ஆந்தை விழியில் விழித்துக் கொண்டு நிற்பார்!
காஸ்ஸியஸ்: அதைத்தான் ஏனென்று காஸ்காவிடம் கேட்கப் போகிறோம். அவனைத் துளைத்து நாம் வினவ வேண்டும்! அவன் வாயிலிருந்து வார்த்தைகளைக் கறப்பது மிகக் கடினம், புரூட்டஸ்!
[போட்டி முடிந்து பிறகு, ரோமானியர் சூழ சீஸர் கல்பூர்ணியாவுடன் வீதியில் நடக்கிறார். ஆண்டனி கூடவெ வருகிறார்]
ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! ஆண்டனி!
ஆண்டனி: [சற்று பின்னிருந்து முன் தாவி] சீஸர், எதற்காக அழைத்தீர் என்னை?
ஜூலியஸ் சீஸர்: ஆண்டனி! என்னைச் சுற்றிலும் பருத்த உடலுடைய ரோமானியர்தான் நிற்க வேண்டும்! அதோ! அங்கே பார்! பசித்த பார்வையும், மெலிந்த மேனியும் கொண்ட காஸ்ஸியஸ்! கழுகுக் கண்களுடன் யாரையோ கொத்தித் தின்னக் காத்துக் கொண்டிருக்கிறான்! ஆழமாய்ச் சிந்திக்கிறான்! அதிகமாய் யோசிக்கிறான்! எதையும் குதர்க்கமாய் ஆராய்கிறான்! அங்குமிங்கும் அலை மோதுகிறான்! அத்தகைய மனிதர் அபாயகரமானவர்!
ஆண்டனி: அஞ்ச வேண்டாம் சீஸர், அவனுக்கு! பயங்கரவாதி யில்லை காஸ்ஸியஸ்! பண்பு மிக்க ரோமானியன் அவன்! பரிவு மிக்கவன் அவன்! பயப்பட வேண்டாம் அவனுக்கு!
ஜூலியஸ் சீஸர்: அவனிடம் பயமில்லை எனக்கு! ஆனால் அவனது மனக் கொந்தளிப்பால் ரோமாபுரிக்கு என்ன தீங்கு நேரப் போகிறது என்று தெரியவில்லை! பூமிக்குள் பதுங்கி யிருக்கும் எரிமலை போல் அவன் நெஞ்சத்தில் புகையும் தீப்பொறி என் கண்களுக்குத் தெரிகிறது! காஸ்ஸியஸ் நிரம்பப் படிக்கிறான்! ஆவேசமாய்த் தர்க்கம் புரிகிறான்! தன்னெஞ்சில் எரியும் தீயை அவன் பிறர் உள்ளத்திலும் ஏற்றுகிறான்! அமைதியாக அமர்ந்து அவன் நாடகம் பார்ப்பதில்லை! காதுக்கினிய கீதம் ஒன்றைக் கேட்பதில்லை! முகத்தில் புன்முறுவல் கிடையாது! சிரித்தாலும் அதிலும் தன்மீது ஓர் ஏளனம் கொக்கரிக்கும்! அம்மாதிரி நபரின் மனம் எப்போதும் கொந்தளிப்பில் குமுறும்! .. எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை! புரூட்டஸை நான் என் புதல்வனாய்க் கருதுகிறேன்! அவன் காஸ்ஸியஸ் அருகே ஏன் நிற்கிறான்? காஸ்ஸியஸ் கூறுவதைக் காது கொடுத்து ஏன் கேட்கிறான்? ஆண்டனி! நீ பேசும் போது எனது வலப்புறம் வந்துவிடு! என்னிடது காது செவிடு! .. வலப்புறம் வந்து காஸ்ஸியஸைப் பற்றி உன் கருத்தைச் சொல்! புனிதன் புரூட்டஸைப் பற்றி எனக்குத் தெரியும்.
[ஜூலியஸ் சீஸர், கல்பூர்ணியா, ஆண்டனி அனைவரும் வெளியேறுகிறார். அச்சமயம் இடையில் செல்லும் காஸ்காவின் கையைப் பற்றி புரூட்டஸ் இழுக்கிறார்.]
காஸ்கா: [சற்று சீற்றமுடன்] புரூட்டஸ்! எதற்காக என்னை இழுத்தீர்? ஏதாவது என்னுடன் நீ பேச வேண்டுமா? [புரூட்டஸை நேராக நோக்கி அருகில் வருகிறான்]
புரூட்டஸ்: ஆமாம் காஸ்கா! அங்கே பெருங் கூச்சலில் என்ன நடந்தது? எனக்கும் காஸ்ஸியஸ¤க்கும் எதுவும் தெரியாது. நடந்ததை எமக்குச் சொல்வாயா? ஏன் சீஸர் முகத்தில் புன்னகை யின்றிச் சிடுசிடு வென்று கடூரம் காணப் படுகிறது? கல்பூர்ணியா பேய் அறைந்தவள்போல் ஏன் காணப்படுகிறாள்?
காஸ்கா: ஏனென்றா கேட்கிறீர்? சீஸருக்கு முடிசூட ஓர் மகுடம் அளிக்கப் பட்டது! ஆனால் தலையில் வைத்துக் கொண்ட சீஸரோ அதைக் கையால் தடுத்து நிராகரித்தார்! உடனே கூட்டத்தார் கூச்சலிட்டனர்! எல்லார் முன்பாக மலடி என்று சீஸர் மறைமுகமாகக் காட்டியது, கல்பூர்ணியாவுக்கு அறவே பிடிக்க வில்லை! அதனால் கல்பூர்ணியா உம்மென்று முகத்தைக் காட்டிக் கொண்டு நடந்தாள்!
புரூட்டஸ்: இரண்டாவது கூச்சல் ஏன் கேட்டது?
காஸ்கா: அதுவும் அதே காரணத்துக்குத்தான்! மகுடம் சூடப் போன இரண்டாம் தடவையும் சீஸர் தடுத்தார்!
காஸ்ஸியஸ்: மூன்று முறை கூச்சல் கேட்டதே! கடைசி ஆரவாரம் எதற்கு?
காஸ்கா: அந்தக் கூச்சலும் அதற்குத்தான், புரூட்டஸ்!
காஸ்ஸியஸ்: என்ன? மூன்று முறையா சீஸருக்கு மகுடம் அளிக்கப் பட்டது? யாரளித்தார் மகுடத்தை?
காஸ்கா: ஆமாம் மெய்யாக மூன்று தரம் முடிசூடினர் சீஸருக்கு! மூன்று முறையும் முறுவலுடன் சீஸர் கிரீடத்தை ஏற்றுக் கொண்டார்! கூட்டத்தார் பூரித்துப் போய் கை தட்டினர்! அடுத்த சிறிது கணத்தில் சீஸர் மகுடத்தை நிராகரித்துக் கீழே வைத்தார்! உடனே கூட்டத்தார் அதை விரும்பாது கூச்சலிட்டார்! யார் துணிச்சலுடன் சீஸருக்கு அப்படி மகுடம் சூடுவார்? ஆண்டனிதான்! சீஸரின் தாசர் ஆண்டனி!
புரூட்டஸ்: அருமை நண்பனே! அந்த வேடிக்கையைச் சற்று விளக்கமாகக் கூறுவாயா?
Calpurnia helping Caesar
காஸ்கா: [கேலியாக] நான் தூக்கில் தொங்கலாம், அந்த கூத்தை விளக்குவதற்குப் பதிலாக! அது ஒரு நகைச்சுவை நாடகம்! விருப்பமுடன் ஆண்டனி சீஸருக்கு கிரீடம் வைப்பது! வேண்டாம், வேண்டாம் என்று சீஸரின் வாயில் வெறும் வார்த்தைகள்தான் வரும்! ஆனால் சீஸரின் கரங்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும்! சீஸரின் வாய் உண்மை பேசுகிறா? அல்லது அவரது உடல் உண்மை பேசுகிறதா என்பதி அறிவது கடினம்! அது மெய்யாக ஓர் அரச கிரீடமில்லை! நாடகக் கிரீடம் மாதிரி தெரிந்தது! நடுத் தெருவில் யாரோ தயார் செய்தது! மூன்று முறை ஆண்டனி முடிமேல் சூடினார்! மூன்று தரமும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்! ஆனால் ஏனோ அவரது தலை நடுங்கும்! அடுத்த கணம் சீஸர் மகுடத்தை எடுத்து ஆண்டனி கரங்களிலே கொடுத்து விடுவார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை! ஆனால் மூன்றாம் தடவை மகுடத்தைக் கொடுத்த பிறகு கை கால்கள் ஆடிக், கண்கள் மூடி, தடாலெனச் சீஸர் மயக்கமுற்றுக் கீழே வீழ்ந்தார்!
காஸ்ஸியஸ்: [கண்களை அகல விரித்து] என்ன? முடிசூட்டு விழாவில், சீஸருக்குக் காக்காய் வலிப்பு வந்து விட்டதா? எல்லார் முன்பும் பரிதாபமாகக் கீழே வீழ்ந்தாரா? என்ன அவமானம் ரோமுக்கு? வயதாகி முதிர்ந்த கிழட்டு மரம் அப்படி எத்தனை தரம் விழப் போகிறதோ? சீஸர் தளபதியா? அல்லது கிழபதியா?
புரூட்டஸ்: ஆமாம்! சீஸருக்கு வீழும் நோய் உள்ளது உனக்குத் தெரியாதா?
காஸ்ஸியஸ்: [சினத்துடன்] சீஸருக்கு வீழும்நோய் கிடையாது புரூட்டஸ்! உனக்கும், எனக்கும், உத்தமன் காஸ்காவுக்கும்தான் உள்ளது, வீழும்நோய்! நிமிர்ந்து நோக்கும் எதேட்சை அதிபதி சீஸர்! நாமெல்லாம் கூன் விழுந்து அவருக்குப் பணிசெய்யும் அடிமைகள்!
காஸ்கா: நீ என்ன உட்பொருளில் பேசுகிறாய் என்று புரியவில்லை எனக்கு! சீஸர் எல்லார் முன்பும் தடலாலென விழுந்து மண்ணில் புரண்டார்! பற்களை நறநற வென்று அரைத்தார்! கல்பூர்ணியா மண்டி யிட்டு அமர்ந்து, மடிமேல் சீஸர் தலையை வைத்துக் கொண்டாள். ஆண்டனி தன் வாளுறையை சீஸர் வாயில் நுழைத்தார். நுரை தள்ளிய சீஸரின் வாய் பிறகு ஓய்ந்து உலர்ந்தது! என்ன பயங்கரமான காட்சி அது! காஸ்ஸியஸ்! நான் உத்தமன் அல்லன்!
புரூட்டஸ்: நினைவு பெற்று எழுந்ததும் சீஸர் என்ன சொன்னார்?
காஸ்கா: உயிர் பெற்றுக் கண்விழித்த சீஸரைத் தூக்கியவர் ஆண்டனியும், கல்பூர்ணியாவும்! சீஸரின் பேச்சு பரிதாபமாக இருந்தது. தழுதழுத்து குரலில் ஏதோ பிதற்றினார்! மயக்கமுற்ற தருவாயில் தான் ஏதாவது உளறி யிருந்தால், தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்!
காஸ்ஸியஸ்: கண்ட விடமெல்லாம் கவிழ்ந்து வீழும் சீஸரா நமக்கு வேந்தர்? ரோமுக்கு ராஜா? வியாதியில் வேதனை அடையும் சீஸர் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும்! சீஸருக்கு வேறு ராஜ மகுடமா? தகுதியற்ற தளபதிக்கு மூன்று தரம், ஆண்டனி முடிசூட வேண்டுமா? அறிவு கெட்ட ஆண்டனி! ஆசை மிக்க சீஸர்! அடிமை ஆகப் போகிறவர் நாம்! ரோமானியர்!
புரூட்டஸ்: மாமேதை சிசெரோ என்ன பேசினார்? சீஸர் மகுடம் ஏற்பதை ஒப்புக் கொண்டாரா?
காஸ்கா: அவர் கிரேக்க மொழியில் ஏதோ பேசினார்! கிரீடம் வைக்கப் போகும் போது, கை தட்டவில்லை சிசெரோ! கிரீட்டத்தை சீஸர் புறக்கணிக்கும் போது ஆரவாரம் செய்ய வில்லை! ஆதலால் சிசெரோ மனதில் என்ன நினைத்தார் என்பது தெரியாது எனக்கு!
காஸ்ஸியஸ்: காஸ்கா! என் வீட்டுக்கு இன்றிரவில் வருவாயா? என்னுடன் விருந்துண்ண வருவாயா? உன்னுடன் பேச வேண்டும் நான்.
காஸ்கா: உணவருந்த வருகிறேன்! உயிரோடிருந்தால் வருகிறேன்! உம்மில்ல உணவு அறுசுவையோடிருந்தால் வருவேன்!
காஸ்ஸியஸ்: நாங்கள் வீட்டில் காத்திருப்போம் உனக்கு.
காஸ்கா: போய் வருகிறேன், புரூட்டஸ்! காஸ்ஸியஸ்! [போகிறான்]
புரூட்டஸ்: என்ன கேலித்தனமாய்ப் பேசுகிறான், இந்த காஸ்கா! வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று மொட்டையாக அல்லவா பேசுகிறான் காஸ்கா! எந்தக் காட்டுப் பள்ளியில் படித்தவன் இந்த காஸ்கா! பண்பில்லாமல் உளறுகிறான்! உயிரோடிருந்தால் வருவானாம்! உணவு அறுசுவையாய் இருந்தால் வருவானாம்! கோமாளி மாதிரி அல்லவா பிதற்றுகிறான்!
காஸ்ஸியஸ்: காஸ்கா எப்போதும் அப்படித்தான் யாரையும், தன்னையும் ஏளனம் செய்வான். முக்கியமான ஒரு திட்டத்தைப் பற்றிப் பேச வேண்டும், புரூட்டஸ்! விருந்தில் நீங்களும் கலந்து கொள்வீரா?
புரூட்டஸ்: முக்கியமான திட்ட மென்றால் நீ என் வீட்டுக்கு வா! நான் பலரது முன்பாக ரகசியம் பேசுபவன் அல்லன். நீயும் நானும் என்னிலத்தில் பேசுவோம். எதை வேண்டுமானாலும் பேசலாம்! எத்தனை நேரமானாலும் பேசலாம்! நாளைக்கு வருகிறாயா? நானிப்போது போயாக வேண்டும். போய் வருகிறேன், காஸ்ஸியஸ்!
காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நாளை இரவில் வருவேன் உன்னிலத்துக்கு. நானும் காஸ்காவும் இன்றிரவு பேசுவோம்! முக்கியத் திட்டம் என்பதை விட ரகசியத் திட்டம் என்பது தகுதியான தலைப்பு! …. போய் வருவீர், புரூட்டஸ்! பேய் உலகைப் பற்றிச் சிந்திப்பீர்! பேய்கள் நம்மைத் தின்பதற்கு முன்பு, நாம் பேய்களை ஓட்ட வேண்டும்!
[புரூட்டஸ் வெளியேறுகிறார்]
காஸ்ஸியஸ்: நல்லது புரூட்டஸ்! நீ ஒரு பண்பாளன்! அரசியல் சந்தையில் மந்தை ஆடுகள் குழிக்குள் விழுப் போவதை அறியாதவன் நீ! ஆட்டிடையன் அரசனாக ஆவப் போவதையும் அறியாதவன் நீ! சீஸர் புரூட்டஸை மிகவும் நேசிக்கிறார்! புரூட்டஸ் சீஸர் மீது தீராத மதிப்பை வைத்துள்ளார். அந்த பிணைப்புச் சங்கிலியை உடைப்பது எப்படி? சீஸர் மீதுள்ள பாசத் தீயில் புரூட்டஸ் என்னை உருக்கி விடக் கூடாது! என் வைர நெஞ்சை மாற்றி விடக் கூடாது! பேராசைக்காரன் சீஸர்! அவரது இறக்கைகளை நறுக்கப் போவது உறுதி! அவரது கொடி ரோமாபுரியில் பறப்பப் போவதில்லை! எவர் தடுப்பினும் நில்லேன், அஞ்சேன்! சீஸர் ஆசனத்தில் அதிபதியாய் அமர்வதை ரோமாபுரி காணப் போவதில்லை!
*********************
-
எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (3)
அங்கம் -3 காட்சி -1
கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப்பொழுதில் மலர்ந்து கருகுவது! ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல!”
ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]
“உலகத்தின் வாக்குறுதிகள் பெரும்பான்மையாக வீண் மாயைகள்தான்! ஒருவன் தன்மீது உறுதியாக நம்பிக்கை கொண்டு, ஒரே ஒரு வினையில் தகுதியும், மதிப்பும் பெறுவதே மானிடத்தின் மிகச் சிறந்த நடைமுறைப் போக்கு.”
மைக்கேலாஞ்சலோ [1474-1564]
“இயற்கை நியதிகள் யாவும் மூல காரணங்களால் எழுப்பப் பட்டு, அனுபவ முடிவுகளாய் எழுதப்பட்டாலும், நாம் அதற்கு நேர்மாறாகச் செய்ய வேண்டும். அதாவது நாம் நமது அனுபவத்திலிருந்து ஆரம்பித்து, காரணத்தை உளவ முனைய வேண்டும்.”
லியானார்டோ டவின்ஸி [1452-1519]
அண்டனி அழைப்பது எனக்குக் கேட்கிறது!
என் பணியைப் பாராட்டத்
தன்னைத் தூண்டிக் கொள்கிறார்!
சீஸரின் அதிர்ஷ் டத்தைக்
கேலி செய்யும் அவர் குரல்
கேட்கிறது எனக்கு!
கோபத் தணிப்பை மனிதர்
முடக்கிக் கொள்ள
கடவுள் தந்த விடுவிப்பு அது!
எந்தன் பதியே ! நானுடன் வருவேன்!
அந்தப் பெயரின் தகுதிக்குச்
சான்ற ளிக்கும் என் நெஞ்சழுத்தம்!
நான் அக்கினி! நான் வாயு!
நான் அனைத்து மூலகங்கள் ஆவேன்!
நான் உயிர் மூலத்தை அளிப்பவள்!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [40 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].
நேரம், இடம்:
ரோமாபுரியில் ஜூலியஸ் சீஸரின் மாளிகை. காலை வேளை
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா, மார்க் ஆண்டனி
காட்சி அமைப்பு:
[கல்பூர்ணியா கவலையுடன் அமர்ந்திருக்கிறாள். அப்போது ரோமாபுரியின் ஆட்சி அதிபதி மார்க் ஆண்டனி விரைவாக உள்ளே நுழைகிறான்.]
கல்பூர்ணியா: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] வா, ஆண்டனி! உன் வருகைக்கு நான் காத்திருக்கிறேன். [எழுந்து வரவேற்கிறாள்] உட்கார், சிஸிலி மதுபானம் தருகிறேன். உன்னுடன் நான் பேச வேண்டும்.
ஆண்டனி: [தலைகுனிந்து வந்தனம் செய்து] வந்தனம், கல்பூர்ணியா! என்ன நடந்தது? கண்களில் நீர் கொட்டுகிறதே! உனக்கென்ன கவலை?
கல்பூர்ணியா: ஆண்டனி! இன்னமும் என்ன நடக்க வேண்டும்? நடக்கக் கூடாதது நடந்து விட்டது! நான் உயிரோடு வாழ வேண்டுமா? யாருக்காக வாழ வேண்டும்? நான் அனாதை ஆகி விட்டேன்! என்னைத் துறந்து விட்டார் சீஸர்! மறந்து விட்டார் சீஸர்! என் கணவர் கிளியோபாத்ராவின் காலடியில் கிடக்கிறார்! ரோமாபுரியை அவர் மறக்கும்படி, மகுடி ஊதி மயக்கி விட்டாள் அந்த மாயக்காரி. அவரது அன்பு மனைவியைக் கூட துறக்க வைத்து விட்டாள் அந்த மாதரசி! வருகிறேன், வருகிறேன் என்று சொல்லிச் சீஸர் என்னை ஏமாற்றி வருகிறார்! கணவரின் காலைக் கட்டி, கதவைப் பூட்டிச் சிறை வைத்திருப்பவள் அந்த காதகி! என்னை இராப்பகலாய்த் துடிக்கச் செய்பவள் அந்த நடிப்பரசி! என் கணவர் மருமகனைத் தேடி எகிப்துக்குப் போயிருக்கக் கூடாது!
ஆண்டனி: [ஆறுதலாக] கல்பூர்ணியா! கவலைப் படாதே! சீஸர் வந்து விடுவார்! கண்டதும் கொள்ளும் காதல் நிலையற்றது! கருகிக் காய்ந்து போவது! தீப்பிடிக்கும் அந்த பாலை வனத்தில் மனிதர் நீண்ட காலம் வசிக்க முடியாது! சீஸரின் பெண் மோகம் நீடிக்காது! அவருக்கோ வயது 52. அவளுக்கு வயது 20. அந்த கிழவர் குமரி மோகம் தளர்ந்து போகும் காமம். சீஸரின் பிரதம மனைவி கல்பூர்ணியாவின் இடத்தை அந்தக் கன்னி என்றும் பிடிக்க முடியாது! கிளியோபாத்ரா ஒரு விளையாட்டுக் கன்னி!
கல்பூர்ணியா: [வெகுண்டு சீற்றமாய்] என்ன அவளொரு கன்னியா? அவள் கன்னி கழிந்து மாதங்கள் கடந்து விட்டன! அது, உனக்குத் தெரியாதா? சீஸரின் குழந்தையை எகிப்த் ராணி சுமப்பதாக நான் கேள்விப் பட்டேன். [சட்டெனக் கண்ணீர் பொங்கி அழுகிறாள்] நான் பெற முடியாத பிள்ளையைக் கிளியோபாத்ரா சீஸருக்குப் பெற்றுத் தருகிறாள்! சீஸர் எதற்காக இனி எனை நாடி வரப் போகிறார்? இங்கே இல்லாத குடும்பம், எகிப்தில் உள்ள போது ஏன் சீஸர் எனைத் தேடி வருவார்?
ஆண்டனி: [சினத்துடன்] கிளியோபாத்ராவின் குழந்தையைச் சீஸர் தன் மகவாகத் தாலாட்டினாலும், ரோமாபுரி அதை ஏற்றுக் கொள்ளாது! கல்பூர்ணியா! அதைக் கள்ளப் பிள்ளையாகத்தான் ரோம் புறக்கணிக்கும்!
கல்பூர்ணியா: இ ல்லை ஆண்டனி இல்லை! அது கள்ளப் பிள்ளை இல்லை! கிளியோபாத்ராவை சீஸர் எகிப்த் வழக்கப்படி மணந்து கொண்டதாக நான் கேள்விப் பட்டேன்! நான் முதல் மனைவி யானாலும், அவள் சட்டப்படி இரண்டாம் மனைவி! அதுவும் சீஸரின் எதிர்கால வாரிசை வேறு வயிற்றில் தாங்கிக் கொண்டிருக்கிறாள்! பிள்ளை யில்லாமல் போன வரண்ட பாலை என் வயிறு! பிள்ளையைப் பெற்றுத் தன்னைப் பெண்ணென்று நிரூபித்த கிளியோபாத்ரா ஒரு பாலைவனப் பசுஞ்சோலை! அவர் வராமல் ஏன் காலம் கடத்துகிறார் என்று தெரிகிறதா ஆண்டனி? கிளியோபாத்ரா ஒரு மாது! நானொரு மலடி!
ஆண்டனி: எல்லாம் எனக்குத் தெரியும் கல்பூர்ணியா! ஆனாலும் அந்தத் திருமணம் ரோமாபுரியில் செல்லாது. ரோமானியர் ஒப்புக் கொள்ள மாட்டார்! அது போலித் திருமணம்! கிளியோபாத்ராவை ஏமாற்ற சீஸர் புரிந்த கேலித் திருமணம் அது! கீழ்நாட்டுக் குடியினர் காட்டுத்தனமாய்ப் புரிந்து கொள்ளும் திருமணம் மேல்நாட்டு மாந்தர் ஏற்றுக் கொள்வதில்லை! அந்தப் போலி மனைவிக்காக மனதை வாட்டிக் கொள்ளாதே, கல்பூர்ணியா!
கல்பூர்ணியா: [சூதாக] கிளியோபாத்ரா வயிற்றுக்குள் உதைக்கும் சீஸரின் குழந்தையும் போலியா? கிளியோபாத்ராவைப் போலி மனைவி என்று நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை! சீஸர் அவளுடன் செய்த திருமணமும் போலித் திருமண மில்லை! உண்மையாகச் சொல்லப் போனால், நான்தான் சீஸரின் போலி மனைவி! பிள்ளை பெற்றுத் தரமுடியாத கல்பூர்ணியா போலி மனைவியா? அல்லது கர்ப்பவதியான கிளியோபாத்ரா போலி மனைவியா?
ஆண்டனி: கல்பூர்ணியா! நீ தெளிந்த அறிவு கொண்டவள்! கிளியோபாத்ரா உன்னைப் போல் அறிவாளி யில்லை! கீழ்நாட்டுக்காரி மேல்நாட்டுக்காரி உனக்கீடு ஆவாளா? நீ எங்கே? அவள் எங்கே? உன் வயதும், உலக அனுபவமும் அவளுக்கில்லை! அவளொரு சிறுமி!
கல்பூர்ணியா: ஆண்டனி! என்ன பேசுகிறாய்? உனக்குக் கிளியோபாத்ராவைப் பற்றிச் சரிவரத் தெரியவில்லை! அவளுக்கு ஒன்பது மொழிகள் நன்றாகத் தெரியும்! ·பாரோ வேந்தர் பரம்பரையில் பிறந்தவள்! பதினெட்டு வயதிலேயே எகிப்திய ராணியாய்த் தமையனுடன் பட்டம் சூடியவள்! ஒருபுறம் அலெக்ஸாண்டரின் சந்ததி என்றும் கேள்விப் பட்டேன்! அவளுக்கு யாரோ, பித்த .. பித்த..கோரஸ் கோட்பாடு கூடத் தெரியுமாம்! யாரவன் பித்தகோரஸ்? உனக்குத் தெரியுமா? அவன் என்ன கோட்பாடைக் கூறினான்?
ஆண்டனி: [தலைகுனிந்து] யாரோ ஒரு மடையன்! எனக்குத் தெரியாது!
கல்பூர்ணியா: [சிரித்துக் கொண்டு] பார், உனக்கே தெரியவில்லை! அவனொரு .. கணித மேதையாம்! அவன் கொள்கையைப் பயன்படுத்தித்தான் பிரமிட் கோபுரங்களே எகிப்தில் கட்டப் பட்டனவாம்!
ஆண்டனி: [சிரித்துக் கொண்டு] எகிப்தில் நான் அந்த பிரமிட்களைப் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமான கோபுரங்கள்! செத்துப் போன ·பாரோ மன்னரைப் புதைக்க அத்தனைப் பெரிய பீடங்கள் கட்ட வேண்டுமா? அதன் அடிப்படைப் பித்தகோரஸின் கோட்பாடு என்று நீ சொல்லித்தான் கற்றுக் கொண்டேன்! பார்த்தாயா? நான் சொன்னபடி நீதான் தெளிந்த அறிவுள்ளவள்.
கல்பூர்ணியா: எனக்கு என்ன இருந்தாலும், நான் கிளியோபாத்ராவுக்கு ஈடானவளில்லை! அவள் ஒரு ஞானப் பெண்! எகிப்தின் எழிலரசி! சீஸர் அவளது அழகிலும், அறிவிலும் மயங்கியதில் வியப்பில்லை! அவளை ஆசை நாயகியாக அவர் வைத்துக் கொள்ளட்டும்! சீஸருக்கு எத்தனையோ ஆசை நாயகிகள் உள்ளார்! ஆனால் கிளியோபாத்ராவை மட்டும் ஏன் மணந்து கொள்ள வேண்டும்? என்னை எதற்காக அவர் ஒதுக்க வேண்டும்? என்னை ஏன் அவர் மறக்க வேண்டும்? என்னை ஏன் அவர் துறக்க வேண்டும்? வயதாகிப் போன கிழ மாதால் அவருக்கு ஏது பயனுமில்லை! அவரைப் பிடித்து வைத்துக் கொள்ள ஒரு பிள்ளையாவது பெற்றேனா? அவரைக் கவர்ந்து கொள்ள ஆண்டவன் எனக்கு அழகை யாவது கொடுத்தானா? நான் எதை வைத்தினி என்னவராய் ஆக்கிக் கொள்வேன்? என் சீரும், செல்வமும், மாளிகையும் அவரை என்னிடம் மீட்டுக் கொண்டு வரவில்லை! என் ஆடம்பர வாழ்க்கை என் கணவரைக் கவரவில்லை!
ஆண்டனி: [ஆர்வமுடன்] கல்பூர்ணியா! கண் கலங்காதே! நான் சீஸரை அழைத்து வர ஏற்பாடு செய்கிறேன். நிச்சயம் நான் உனக்குச் செய்வேன். கவலைப் படாதே!
கல்பூர்ணியா: ஆண்டனி! என் பெயரைச் சொல்லி நீ அவரை அழைக்க வேண்டாம்! என் கண்ணீரைக் காட்டி அவரை நீ விளிக்க வேண்டாம்! என் தூங்காத நாட்களை கூறி நீ அவரை இழுத்து வரவேண்டாம்! அவர் தானாக என்னைத் தேடி வரட்டும்! ஏனென்றால் என் பெயரைக் கேட்டால், சீஸர் வந்த பாதையில் மீண்டும் திரும்பி விடுவார்! என்னைத் தேடி வராதவர் எனக்கு வேண்டாம்! நான் போலி மனைவியா அல்லது கிளியோபாத்ரா போலி மனைவியா என்பதை நான் அறிந்தாக வேண்டும்! ஆண்டனி! என் பெயரைச் சொல்லி அவரை அழைக்காதே! வேண்டாம், அவரை அந்தக் கள்ளியிடமே விட்டுவிடு! அவளைக் கட்டிய மனைவியாக ரோமாபுரி அறிந்த பிறகு, நானினி அவரது மனைவி என்று சொல்ல நாணம் அடைகிறேன்! அவளது அதரங்களை முத்தமிட்ட சீஸர், பிறகு என் வாயில் முத்தமிடுவதை நான் அறவே வெறுக்கிறேன்!
*********************
அங்கம் -3 காட்சி -2
“ஒருவரை நேசிப்பது, திருப்பி அவரால் நேசிக்கப்படுவது ஒன்றுதான் நமது வாழ்க்கையில் இன்பம் அளிப்பது. .. வயதாகி மூப்புநிலை அடையும் வரைத் துடிப்புடன் உன் ஆத்மாவை இளமையாகவே வைத்திரு. மாதர் எப்போதும் நேசிக்கிறார். ஆனால் அவர் நிற்கும் பூமி தடத்தை விட்டு அகலும் போது, அவர்கள் மேலுலகை நோக்கிச் சரண் அடைகிறார்.”
ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]
“ஒரு நாட்டில் உன்னத ஒழுக்கமாகக் கருதப்படும் ஒரு பண்பு, மற்றோர் நாட்டில் மிகச் துச்சமாக எண்ணப் பட்டு ஒதுக்கப் படலாம். .. மனித இச்சை வாழ்க்கைப் போக்கில் ஒரு பாதியாவைப் போல், கவனமின்மை என்பது மரணத்தின் ஒரு பாதியாகும். .. இரவின் பாதை வழியாக நடக்காது, ஒருவன் காலை உதயத்தை அணுக முடியாது.”
கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]
“மெய்யான ஒரு கலைப் படைப்பு, தெய்வீகப் பூரணத்தின் ஒரு நிழலே தவிர வேறில்லை. என் கையில் உளி ஒன்று உள்ள போதுதான், என் மனம் எனக்குக் குளிர்ச்சியை அளிக்கிறது. … செதுக்கப் படாத ஒரு பளிங்குக் கல், மகத்தான ஒரு சிற்பியின் பல்வேறு கற்பனை வடிவங்களைக் காட்டுகிறது!”
மைக்கேலாஞ்சலோ [1474-1564]
“எனது படைப்பு பெறக் கூடிய உன்னத தரத்தை எட்டாது போனால், கடவுளையும், மனித சமூகத்தையும் அவமதித்தாக நான் கருதுகிறேன்!”
லியானார்டோ டவின்ஸி [1452-1519]
“புலால் உண்ண மாட்டேன் !
மதுபானம் அருந்த மாட்டேன் !
பொருளற்ற வார்த்தைகள் புகல நேர்ந்தால்,
உறக்கம் வாரா தெனக்கு!
என் அரண்மனைப் பேர் நாசமாகும்!
எது வேண்டினும் செய்யட்டும், அக்டேவியஸ்!
உன் அதிபதியின் நீதி மன்றத்தில்
என் கால்கள் ஒருபோதும் நிற்க மாட்டா!” …(கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].
அங்கம்: 3 காட்சி: 2
நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் அரண்மனையில் தனியிடம். காலை வேளை.
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, மருத்துவச்சி, சேடியர், மற்றும் ஜோதிடர் எதிர்பார்ப்போடு பரபரப்பில் உள்ளார். கிளியோபாத்ராவின் ஆயா பிதாதீதா இங்கும் அங்கும் கவலையோடு ஓடிக்கொண்டிருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, ரோமானியப் போர்த் தளபதிகள் வெளியே காத்திருக்கிறார்.
காட்சி அமைப்பு:
[கிளியோபாத்ரா தனிப்பட்ட பிரசவ அறையில் படுத்திருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறக்கப் போவதை எதிர்பார்த்து ஜூலியஸ் சீஸர் ஆர்வமுடன் அறை வாயிலில் நின்று கொண்டிருக்கிறார். கிளியோபாத்ராவைச் சுற்றி மருத்துவச்சி மூன்று பேர் அருகில் கண்காணிப்புடன் நிற்கிறார். திரைமறைவுக்கு அடுத்த அறையில் எகிப்திய ஜோதிட நிபுணர் வானநூல் ஏடுகளுடன் குழந்தை பிறக்கும் நேரத்தின் அம்சங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். ரோமானிய தளபதிகள் வெளியே மதுவருந்திய வண்ணம் கேலிக்கையில் உரையாடிக் கொண்டுள்ளார்.]
பிதாதீதா: [ஆவேசமாய் அறை வாசல் முன்பு] மாண்புமிகு அதிபதி அவர்களே! கிளியோபாத்ராவுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. மகாராணிக்கு வேதனை அதிகம். எனக்குப் பயமாய் உள்ளது! அவருக்கு முதல் குழந்தை அல்லவா? ஐஸிஸ் தெய்வம் அருகில் நின்று மகாராணிக்குச் சுகப் பிரசவத்தை அளிக்கும். [மேலே நோக்கி கைகளை உயர்த்தி] ஐஸிஸ் தெய்வமே! எங்கள் ராணிக்குச் சுகப் பிரசவத்தைக் கொடு. தாயும், சேயும் நலமாக வேண்டும்.
ஜூலியஸ் சீஸர்: மாதே, நீ யார்? அநேக முறை உன்னை அரண்மனையில் பார்த்திருக்கிறேன். நீ யார்? உன் வேலை என்ன? நீ தந்த தகவல் இனிய தகவல். கிளியோபாத்ராவுக்கு எப்போது குழந்தை பிறக்கும், சொல்?
பிதாதீதா: மதிப்புக்குரிய அதிபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! மகாராணியின் வளர்ப்பு ஆயா நான். பொழுது சாய்வதற்குள் குழந்தை பிறந்து விடும்.
ஜூலியஸ் சீஸர்: பேத்தா தூத்தா, என்ன பெயரிது? வாயிலே கூட வரமாட்டாது போல் தெரியுது! நீ வளர்ப்புத் தாயா?
பிதாதீதா: என்னை பிதாதீதா என்றுதான் அழைக்கிறார்! எனக்கு வைத்த உண்மையான பெயர் ·பிடாடாடீட்டா! என் வயிலே கூட என் உண்மைப் பெயர் வருவதில்லை! அதனாலே என்னை பிதாதீதா என்று விளித்தாலே போதும், நான் துள்ளி ஓடி வந்து விடுவேன்! ஆமாம் நான் வளர்ப்புத் தாய். மகாராணி குழந்தையாக உள்ள போதே நான் தாலாட்டுப் பாடி வளர்த்தவள்.
ஜூலியஸ் சீஸர்: நானுன்னைச் சுருக்கமாக எப்படி அழைப்பது? உன் உண்மைப் பெயரை நீ நூறு முறைச் சொன்னாலும், என் நாக்கால் அதைக் கூற முடியாது! … அது சரி, கிளியோபாத்ரா எப்படி இருக்கிறார்? குழந்தை பிறக்கும் வேளை நெருங்கி விட்டதா?
பிதாதீதா: குழந்தை மெதுவாகத்தான் இறங்குகிறது. மகாராணியாருக்கு வேதனை மிகுதி! ஐஸிஸ் தெய்வம்தான் அருள் புரிய வேண்டும்.
[அப்போது பிரசவ அறையிலிருந்து சேடி ஒருத்தி ஓடி வருகிறாள்]
சேடி: பிதாதீதா! வா, சீக்கிரம் உள்ளே வா! மகாராணி உன்னை அழைத்து வரச் சொன்னார். மிக்க அவசரம். வா!
[பிதாதீத்தா சேடியுடன் பிரசவ அறைக்குள் விரைவாக நுழைகிறாள்]
கிளியோபாத்ரா: [கட்டிலில் படுத்துக் கொண்டே, சற்று வேதனையுடன்] பிதாதீதா! வா என்னருகில். சொல்வதைக் கவனித்துக் கேள்! குழந்தை பிறந்ததும், அதைத் துடைத்து ஆடை, ஆபரணம் எல்லாம் அணிந்து தூக்கிக் கொண்டு சீஸரிடம் செல்ல வேண்டும்! அவரது அருகில் நிற்கும் ரோமாபுரி அதிகாரிகள் அனைவர் கண்களில் தெரியும்படிக் குழந்தையைக் காட்ட வேண்டும். அனைவர் காதிலும் கேட்கும்படி உரக்கக் குழந்தை, சீஸரின் குழந்தை என்று சொல்ல வேண்டும். குழந்தை ஆண்மகவு என்று உரைக்க வேண்டும். உலகை ஆளப் பிறந்த குழந்தை என்று மொழிய வேண்டும். புரிகிறாதா உனக்கு!
பிதாதீதா: மகாராணி! உங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன். [வெளியே போகிறாள்]
கிளியோபாத்ரா: [அருகில் நின்ற ஜோதிடரைப் பார்த்து] ஜோதிட குருவே! பிள்ளை பிறக்கும் நேரத்தைக் குறித்து, அலெக்ஸாண்டர் போல அவன் உலகை ஆளுவானா என்பதைப் பார்க்க வேண்டும்.
[ஜோதிடர் வெளியே போகிறார்]
ஜூலியஸ் சீஸர்: [அறை வெளியே முணுமுணுப்புடன், பரபரப்புடன்] கிளியோபாத்ரா வுக்கு என்ன மகவு பிறக்கப் போகிறதோ? பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அவனை ரோமில் வைத்து நான் வளர்க்கலாம். அப்படி யில்லாமல் பெண் குழந்தையாகப் போனால் என்ன செய்வது? எகிப்திலே விட்டுச் செல்வேன்! கிளியோபாத்ராதான் அவளை வளர்க்க வேண்டும். பெண் குழந்தைக்குத் தாயின் துணை வேண்டும் எப்போதும். ஆனால் ஆண் மகனை என் கண்காணிப்பில் நான் வளர்த்து வருவேன். கிளியோபாத்ராவின் மன உறுதி, ஞானம், ஆட்சித் திறம் அவனுக்கு உடன்பிறக்கும்! சீஸரின் கம்பீரத் தோற்றம் அவனுக்கு முகக்களை உண்டாக்கும்! அலெக்ஸாண்டரின் பேராசைக் குணம் அவனுக்கு உண்டாக வேண்டும்! என் மகன் இந்தியாவையும் தாண்டிச் சென்று சைனாவின் மீது படையெடுப்பான்! உலக வரலாற்றில் எனக்குக் கிடைக்காத புகழை அவன் பெறுவான். அலெக்ஸாண்டரைப் போல உன்னதப் போர்வீரன் என்று பெயர் எடுப்பான்.
[அப்போது ஓர் எச்சரிக்கை மணியோசை கேட்க சீஸரும், ரோமானியப் போர் அதிகாரிகளும் திரும்பிப் பிரசவ அறைமீது கண்ணோட்டம் விடுகிறார்கள். பிதாதீதா தனது கைகளில் அலங்கரித்த குழந்தை ஒன்றைத் தொட்டிலில் தூக்கி வருகிறாள். அவளைப் பின் தொடர்ந்து குலாவிப் பாடிக் கொண்டு சேடியர் பலர் வருகிறார். அனைவரும் சீஸரை நோக்கி அருகில் வருகிறார்.]
பிதாதீதா: மாண்புமிகு சீஸர் அவர்களே! உங்களுக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது! விலை மதிப்பில்லா வெகுமதியை எங்கள் மகாராணி தந்திருக்கிறார். மகுடத்தைச் சூட்டினீர் எங்கள் மகாராணிக்கு! அந்த மகத்தான செயலுக்கு, ஆண் மகனைப் பரிசாக அளித்துள்ளார் உங்களூக்கு! உலகாளப் பிறந்த குழந்தை இது! ·பாரோ மன்னரின் பரம்பரைக் குழந்தை இது!
ஜூலியஸ் சீஸர்: [முன்னோக்கி வந்து இரு கரங்களில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பெரு மகிழ்ச்சியுடன்] ஆண்மகவு! எல்லோரும் பாருங்கள் ஆண்மகவு! எனக்கு மகன் பிறந்திருக்கிறான்! [கைகளில் பிள்ளையை மேலே தூக்கிய வண்ணம் சுற்றுகிறார். அருகில் நிற்கும் ரோமானியர் அவைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.]
பிரிட்டானஸ்: [பூரிப்புடன்] களிப்புடன் வாழ்த்துக்கள். வாழ்க, வாழ்க உங்கள் ஆண் குழந்தை நீடூழி வாழ்க!
ரூஃபியோ: ரோமின் எதிர்காலப் போர்த் தளபதி! ரோமின் வருங்கால அதிபதி! வாழ்க! வாழ்க! நீடூழி வாழ்க!
ஜூலியஸ் சீஸர்: [குழந்தையைத் தொட்டிலில் வைத்து விட்டு, மகிழ்ச்சியுடன்] பெயர் மறந்து போச்சே! தீத்தா பீத்தா! மகாராணி கிளியோபாத்ரா எப்படி உள்ளார்? நான் பார்க்கலாமா?
பிதாதீதா: மகாராணி நலமாக உள்ளார்! ஐஸிஸ் தெய்வீகமுள்ள எங்கள் அரசிக்குச் சுகப் பிரசவமே! கவலை கொள்ளாதீர் தளபதி. ஆனால் இப்போது நீங்கள் பார்க்க முடியாது. நான் கேட்டு வந்து உங்களை அழைத்துச் செல்வேன். … என் பெயர், பிதாதீதா. … பிதா..தீதா!
ஜூலியஸ் சீஸர்: சீக்கிரம் உள்ளே போய்க் கேட்டுவா, பீத்தா தீத்தா!
பிதாதீதா: உடனே உள்ளே போய்க் கேட்டு வருகிறேன் தளபதியாரே! சிறிது பொறுங்கள். [குழந்தையைத் தூக்கிக் கொண்டு எல்லாரும் திரும்பி உள்ளே போகிறார்.] (முணுமுணுத்துக் கொண்டு) அட தெய்வமே! ரோமானிய தீரருக்கு என் பெயரைக் கூட உச்சரிக்க முடிய வில்லையே! …. (பிரசவ அறைக்கு முன்னால் நின்று திரும்பி உரத்த குரலில்) தளபதி அவர்களே! என் பெயர் பிதாதீதா! பிதாதீதா! பிதாதீதா! (உள்ளே நுழைந்து முணுமுணுத்துக் கொண்டு) படுக்கும் போது பத்துத் தடவைச் சொல்லிப் பழகுங்கள் தளபதி! பிதாதீதா வென்று சொல்லத் தெரியாதா? ரோமானியர் நாக்கிலே என்ன நரம்புதான் நெளியுமோ? என் பெயரை விட நீளமான மகாராணி பெயரை எப்படிக் கிளியோபாத்ரா வென்று நாக்கு விளிக்கிறது! ஆடவர் ஒரு பெண்ணை நேசித்தால் கனவில் கூட அந்தப் பெயர் சரியாக வந்துவிடுதே! [குழந்தையுடன் உள்ளே நுழைகிறாள்]
[சிறிது நேரம் கழித்து பிதாதீதா வெளியே சீஸரிடம் ஓடி வருகிறாள்]
பிதாதீதா: மாண்புமிகு தளபதியாரே! வாருங்கள் உள்ளே! வாருங்கள்! எங்கள் மகாராணியை இப்போது காணலாம். என்னுடன் வாருங்கள். மகாராணி காத்திருக்கிறார்.
ஜூலியஸ் சீஸர்: என் ஆண்மகவின் அன்னைக்கு நன்றி கூற வேண்டும். என் மனைவி கல்பூர்ணியா பெற்றுத் தர முடியாத உயிர்க்கனியை கிளியோபாத்ரா எனக்குத் தந்திருக்கிறாள். நான் வழிதவறி எகிப்துக்கு வந்தது நல்லதாய்ப் போயிற்று! மருமகன் பாம்ப்பியை விரட்டி எகிப்துக்கு வந்தது பலனை அளித்து விட்டது. சீஸரின் பெயரைச் சொல்ல ஓர் ஆண்மகன் பிறந்து விட்டான்! வருகிறேன் பீத்தா தீத்தா [சீஸர் பிதாதீதாவின் பின்னே செல்கிறார்]
*********************
அங்கம் -3 காட்சி -3
“எனக்குத் தொழில் சுதந்திரமாக வாழ்ந்து வருவது.”
“நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!”
ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]
“நீ தெரிந்த கொள்ள வேண்டியவற்றின் முடிவை நெருங்கும் போது, நீ உணர்ந்து கொள்ள வேண்டிவற்றின் ஆரம்பத்திற்கு வருகிறாய்!”
கலில் கிப்ரான் ஓவியர், கவிஞர் [Kahlil Gibrahn (1883-1931)]
விதியே! அறிவோம் நினது கேளிக்களை!
ஒருநாள் மடிவோம் என்று அறிவோம்!
நேரம் வரும் தருணம் ஒன்றை அறியோம்!
நீடிக்கும் ஆயுளை மிதித்து முறிப்போம்! …[புரூட்டஸ்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
ஆண்டனி குழப்ப மடைந்து வீட்டுக்கு ஓடினார்!
மானிடரே! மாதரே! சிறுவரே! நீவீரும் ஓடுவீர்!
வானை நோக்கிக் கதறுவீர், அழுவீர், அலறுவீர்,
வையக மின்று அழியப் போகுதென! ..[செனட்டர்: டிரிபோனஸ்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
மண்டியிட வைத்தார் என்னை என்பிரபு புரூட்டஸ்!
மண்ணில் விழ வைத்தார் என்னை மார்க் ஆண்டனி!
நேர்மையாளி, பண்பாளி, அறிவாளி, தீரர் எனக்கூற
ஆணை யிட்டவர் புரூட்டஸ், நான் பணிபவன் ஆதலால்!
வல்லவர், வாஞ்சை உள்ளவர், அஞ்சாதவர் சீஸர்
மாட்சிமை மிக்க அரச கம்பீரம் கொண்டவர், சீஸர்!
புரூட்டஸை நேசிப்பவன் ! மதிப்பவன் நான்!
ஆனால் சீஸர் ஒருவருக்கு அஞ்சுகிறேன்! ….[புரூட்டஸின் வேலையாள்]
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
நாடகப் பாத்திரங்கள்:
ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸியஸ் [30 வயது]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது].
நேரம், இடம்:
பகல் நேரம், ரோமாபுரியின் செனட் மாளிகை.
நாடகப் பாத்திரங்கள்:
புரூட்டஸ், ஆண்டனி, காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன், கல்பூர்ணியா.
காட்சி அமைப்பு:
ரோம் செனட் மாளிகைப் படிகளில் செனட்டர்கள், புரூட்டஸ், காஸியஸ், காஸ்கா, சின்னா, சிசெரோ, அக்டேவியன் ஆகியோர் நின்று உரையாடிக் கொண்டிருக் கிறார். காஸியஸ், காஸ்கா இருவரும் ஆங்காரத்துடன் காணப்படுகிறார். சீஸரை அறவே வெறுக்கும் காஸியஸ், காஸ்கா ஆகியோர் வாக்குவாதத்தில், சீஸரின் நெருங்கிய ஆதரவாளிகளை, எதிர்ப்பாளிகளாய் மாற்ற முனைகிறார்கள். சற்று தொலைவில் ஆண்டனியும், கல்பூர்ணியாவும் செனட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
காஸியஸ்: [கோபத்துடன் நடந்து கொண்டு] பண்புமிகு புரூட்டஸ்! ரோமிதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது! கேட்டீரா சீஸருக்கு ஆண்மகவு பிறந்துள்ளதாம்! எகிப்தை ஆளப் போகும் எதிர்கால ஆண்வாரிசு! ரோமானியரை ஆளப் போகும் அடிமை ராணியின் அற்புத மகன்! ஆண்பிள்ளைக்கு வெகுநாட்களாய் ஆசைபட்டார் சீஸர்! கல்பூர்ணியா பெற்றத் தர முடியவில்லை! ரோமானியப் பெண் பெற்றுத் தர முடியாத பிள்ளைச் செல்வத்தை, எகிப்த் ஆசைக் காதலி பெற்றுத் தந்தாள்! அடிமை நாட்டு எழிரசி பெற்றுத் தந்திருக்கிறாள்! புரூட்டஸ்! உங்களைத் தன் மகனாகப் பாவித்தார் சீஸர்! அந்த மதிப்பு உங்களை விட்டு நீங்கப் போகிறது! அந்த அடிமையின் பிள்ளை உங்களுக்கு ஈடாகுமா?
புரூட்டஸ்: [மனம் கலங்காமல்] ஆத்திரப் படாதே, காஸியஸ்! பிறந்து பல் முளைக்காத பிள்ளைக்கு யாராவது அஞ்சுவாரா? சீஸருக்கு ஆண்மகவு பிறந்த செய்தி எனக்குப் பூரிப்பை அளிக்கிறது! சீஸர் என்னைத் தன் மகன் என்று மதிப்பது என்றும் மாறப் போவதில்லை! சீஸரின் மூத்த மகன் நான்! கிளியோபாத்ராவின் மகனை என் செல்லத் தம்பியாகக் கருதுகிறேன்!
காஸ்கா: [ஆங்காரமாக, துச்சமாக] கிளியோபாத்ரா ஒரு பரத்தை! அவள் பெற்ற பிள்ளைக்கு நீ எப்படித் தமையன் ஆவாய்! அவன் பாதி எகிப்தியன்!
புரூட்டஸ்: [வெகுண்டு] அவன் பாதி ரோமானியன் என்பதை மறக்காதே, காஸ்கா! கிளியோபாத்ரா சீஸரின் மனைவி! எகிப்த் ராணியைப் பரத்தை என்று எள்ளி நகையாடுவது, ரோமானியத் தளபதிச் சீஸரைப் பழிப்பதாகும்! அப்படிச் சொன்ன அந்த நாக்கை அறுப்பது சட்டப்படிக் குற்ற மாகாது! உன் நாக்கைக் கட்டுப்படுத்து! காஸ்கா! நீ எப்படிப் பட்டவன் என்பதை மறந்து விட்டாயா? சூதாடி! கொலைகாரன்! களவாடி! புளுகன்! போதுமா, இன்னும் நான் அடுக்கவா?
காஸியஸ்: காஸ்கா! நீ கவனத்துடன் பேச வேண்டும்! கிளியோபாத்ராவை எகிப்தின் ராணியாக ஆக்கியவர் சீஸர்! சீஸரை எகிப்தின் மன்னராய் ஆக்கியவள் கிளியோபாத்ரா! அவளை நீ தாழ்வாகப் பேசலாமா? புரூட்டஸ் சொன்னதில் பொருள் உள்ளது!
சிசெரோ: [குறுக்கிட்டு] எகிப்துக்கு வேந்தரான சீஸர் ரோமாபுரிக்கும், ரோமானிய சாம்ராஜியத்துக்கும் பேரரசனாக முடிசூட்டிக் கொள்ளப் போவதாக அறிந்தேன்! அந்தப் பேராசைக்கு விதை யிட்டவள் கிளியோபாத்ரா! ரோமின் குடியரசை ஒழிக்க சீஸர் முடிவெடுத்து விட்டார்! அறிந்து கொள்வீர்!
காஸியஸ்: ஆமாம், புரூட்டஸ்! சீஸரின் பேராசைக்கோர் அளவில்லை! எல்லை யில்லை! அரணில்லை! அதை முளையிலே களை எடுப்பது செனட்டரின் கடமை! அதைத் தடுத்து நிறுத்துவது நமது பணி! சீஸர் மன்னரானால், செனட்டர்களை ஆட்டுக் குட்டிகளாய் ஆக்கி விடுவார்! செனட்டரின் சொற்கள் அவரது செவியில் ஏறா!
புரூட்டஸ்: [கேலியாக] அதென்ன நமது கடமை என்று சொல்கிறீர்! உங்கள் சதிக் கூட்டத்தில் என்னைச் சேர்க்காதீர்! அதோ வருகிறார், ரோமானிய ஆட்சித் தளபதி, ஆண்டனி! அவர் காதில் உமது சங்கொலி முதலில் ஒலிக்கட்டும்!
[ஆண்டனி சீஸர் பெயரைக் கேட்டதும் செனட்டர் அருகே வருகிறார். கூடவே கல்பூர்ணியாவும் வருகிறாள்]
காஸ்கா: [கேலியாக] ஆண்டனி! நினைவில் வைத்துக்கொள்! உனது பொற்காலம் கற்காலமாகப் போகுது! சீஸர் வரப் போவதாய்க் கேள்விப் பட்டோம்! சீக்கிரம் நீ ரோமாபுரித் தலைமை பதவியைத் துறக்க வேண்டி திருக்கும்! சீஸர் வருகிறார்! எப்போதென்று தெரியுமா? எகிப்தின் கடவுள் வரப் போகிறார்! வரவேற்பு பலமாய் இருக்கட்டும்!
கல்பூர்ணியா: [மிக்க மகிழ்ச்சியுடன்] என் பதி வரப் போகிறாரா? எப்போது வருகிறார்? காஸ்கா! அவரை ஏன் எகிப்தின் கடவுள் என்று ஏளனமாகச் சொல்கிறாய்?
காஸ்கா: கல்பூர்ணியா! சீஸர் வரப் போகிறார். எப்போதென்று என்னைக் கேட்காதே! கிளியோபாத்ராவைக் கேட்டால் தெரியும்! அந்த நாள் சீஸருக்கே தெரியுமா என்பது என் சந்தேகம்! கிளியோபாத்ரா ஐஸிஸ் தெய்வத்தின் அவதாரமாம்! அவளைத் திருமணம் செய்த சீஸரை எகிப்தியர் தேவனாகக் கொண்டாடுவதில் தவறில்லை! மேலும் ·பாரோ பரம்பரையில் வந்தவள் கிளியோபாத்ரா! அவளை மனைவியாக ஏற்றுக் கொண்ட சீஸருக்கு, ஃபெரோ சந்ததியைப் பெற்றவர் என்று வரலாறு பாராட்டும்!
கல்பூர்ணியா: என் பதி முழுக்க முழுக்க ஒரு ரோமானியர்! எத்தனை மத்திய ஆசியப் பெண்களை அவர் மணந்தாலும், அவரது முகவரி மாறாது! அவரை எகிப்தியக் கடவுள் என்று ஏளனம் செய்யாதே!
காஸியஸ்: கல்பூர்ணியா! சீஸர் ரோமாபுரிக்கு மீளாத வேளையில், ரோமானியரும் அவரைக் கடவுளாக மதிக்கிறார் தெரியுமா? பிற்கால வரலாறு சீஸர் கிளியோபாத்ராவின் பதி என்று சொல்லுமே தவிர, கல்பூர்ணியாவின் பதி என்று சொல்லப் போவதில்லை!
ஆண்டனி: காஸியஸ்! உன்னைப் போல் ஒருவனும் சொல்லப் போவதில்லை! சீஸரின் முதல் மனைவி கல்பூர்ணியா வென்பதை வரலாறு மாற்ற முடியாது! சீஸரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் நான்! அவர் வெற்றியைப் பங்கீட்டு ஆளுபவன் நான்! எங்கிருந்தாலும் அவர்தான் ரோமானிய சாம்ராஜியத்தின் அதிபதி!
சிசெரோ: ஆனால் அவர் ரோமாபுரியின் ஏதேட்சை அதிகாரி என்பது உனக்குத் தெரியாதா? ரோமானிய சாம்ராஜியத்தின் வேந்தர் அவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் குடியரசை சிதைக்கப் பிறந்தவர் என்பது உனக்குத் தெரியாதா? ரோமாபுரியின் மன்னராக சீஸர் முடிசூடப் போவது உனக்குத் தெரியாதா?
ஆண்டனி: தெரியாது! ரோமாபுரியின் மன்னராகப் பதவி ஏற்கச் சீஸர் எப்போதும் விரும்பிய தில்லை! நான் சொல்கிறேன், கேட்பீர்! ரோமின் குடியரைச் சீஸர் ஒருபோதும் முறிக்கப் போவதில்லை! மாற்றப் போவதில்லை! செனட்டர்களை எப்போதும் வரவேற்பவர் சீஸர்!
சிசெரோ: ஆண்டனி! நீ சீஸரை மிகவும் நேசிப்பதால், உன் கண்ணுக்கு அவரது சூழ்ச்சிகள் புரிவதில்லை! அவரது தவறுகள் தெரிவதில்லை! வெளிநின்று நோக்கும் எங்களுக்குப் பளிச்செனத் தெரிகிறது!
அக்டேவியன்: நான் ஒன்று கேட்கிறேன், கல்பூர்ணியா! கிளியோபாத்ராவுக்குப் பிறந்த சீஸரின் மகனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
கல்பூர்ணியா: ஆண்மகவைப் பற்றி எனக்குப் பூரண திருப்தியே! என் பதியின் ஆண்பிள்ளை அது! என் பதியின் அன்புக் குழந்தை அது! என் பதி ஏற்றுக் கொண்ட ஆண்மகவு யாருக்குப் பிறந்திருந்தால் என்ன! அந்த பிள்ளை எனக்கும் சொந்தப் பிள்ளைதான்! சீஸரின் பெயரைச் சொல்லப் பிறந்த ஆண்பிள்ளை அது! என் பதியின் காதலி என் மதிப்புக்கும், வரவேற்பிற்கும் உரியவள்! சீஸரின் வாரிசு அந்த சிறுவன் என்பது நன்றாகத் தெரியும் எனக்கு. அந்தச் சின்னஞ் சிறு குழந்தை மீது உங்களுக்கு ஏன் வெறுப்பென்று தெரியவில்லை எனக்கு!
அக்டேவியன்: எனக்கு அதிகாரம் கிடைக்கும் போது, சீஸரின் வாரிசை ஒழிக்க நான் முனைவேன் என்பதை அறிந்துகொள், கல்பூர்ணியா? யானைகொரு காலம்! பூனைக்கொரு காலம்! பூனை ஆட்சிக்கு வரும்போது அந்த எலியைப் பிடித்து விழுங்கி விடும் என்று அறிந்துகொள் கல்பூர்ணியா! அது ஒரு விஷப் பாம்பு! பாலைவன நச்சுப் பாம்பு! கிளியோபாத்ராவே ஒரு நாகப் பாம்பு! அவள் வயிற்றில் பாம்பு பிறக்காமல் பிறகு வேறென்ன பிறக்கும்? ஒருநாள் என் வாளுக்கிரையாகும் அந்த நாகம்! அந்த நாகத்தின் குட்டியை நான் விட்டு வைக்கப் போவதில்லை.
*********************
அங்கம் -3 காட்சி -4
“லிஸ்ஸட் [Liszt] சொல்கிறார்: கடவுள் ஒன்றுதான் ஒருவர் நேசிக்கப்பட உகந்தது. உண்மையாக இருக்கலாம் அக்கூற்று. ஆனால் ஓர் ஆடவனை ஒருத்தி நேசிக்கும் போது, கடவுளை நேசிப்பது என்பது வேறுபட்ட தன்மை யானது.”
“எளிமைப் பண்பு என்பது உலகிலே கைவசப் படாத மிகக் கடினமான நடப்பு! அது ஒருவர் அனுபவத்தின் எல்லையில் வரக் கூடியது. மாமேதைகள் கைக்கொள்ளும் இறுதியான முயற்சி.”
ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-18 76)]
“உன்னத படைப்புகள் [Masterpieces] என்பவைத் தனிப்பட்ட ஆக்கமோ அல்லது ஒற்றை உதயமோ அல்ல. ஒருவரின் பல்லாண்டு காலச் சிந்தனையில் எழுந்து, மற்றும் மானிடக் குழுக்களின் பங்கீட்டுச் சிந்திப்புக்களில் பின்னி உதயமானவை அவை; பொது மாந்தர் அனுபவத் தொகுப்புகளைப் பின்னணியாகக் கொண்டு, ஒருவரது வாக்கு மூலமாக வடிக்கப் படுபவை.” [Example: Leo Tolstoy’s War & Peace]
வெர்ஜினியா ஊஃல்ப், ஆங்கில எழுத்தாளி [Viginia Woolf (1882-1941)]
விடுதலை நாட்டில்
சீஸரைப் போல வாழ்ந்தவன் நான்!
நீயும் அப்படித்தான்!
நானும், நீயும்
நன்றாகத் தின்று, கொளுத்து,
குளிர் காலத்துக் கடும்பனியும் தாங்குவோம்,
சீஸரைப் போல!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
கானப் பாக்கள் சிலவற்றை எழுப்பிடு!
மோன முகக் கோணல் நிமிர்த்தி,
காதலை வணிக மாக்கிடத் துணியும்! ….
நானவளை ஒருதரம்தான் நோக்கினேன்,
நாற்பது எட்டுகளில் தடம் வைத்தாள்,
தெருவினில் மாந்தர் நடமாடும் போது!
பெருமூச்சுடன் அவள் பேசினாள்,
செம்மை நெறியைப் பழுது படுத்தியதாக,
விம்மினாள் மூச்சுத் திணர!வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]
நாடகப் பாத்திரங்கள்:
நேரம், இடம்:
அலெக்ஸாண்டிரியா அரண்மனையில், கிளியோபாத்ராவின் தனியறை. பகல்வேளை
நாடகப் பாத்திரங்கள்:
கிளியோபாத்ரா, ஜூலியஸ் சீஸர், அவரது மகன், சேடிகள்
காட்சி அமைப்பு:
ஜூலியஸ் சீஸர் ரோமாபுரிக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். புதல்வனோடு கிளியோபாத்ரா வருந்திய வண்ணம் நிற்கிறாள்.
ஜூலியஸ் சீஸர்: [விறுவிறுப்பாக] கண்ணே! கிளியோபாத்ரா! என்னைத் தடுத்து நிறுத்தாதே! தங்கச் சொல்லி வற்புறுத்தாதே! நமது செல்வ மகனுக்கு ஒருவயது வந்ததும் போகலாம் என்று கூறியதை மறந்து விட்டாயா? ஓராண்டு நானிங்கு தங்கி விட்டேன்! என்னாசை மகனுடன் விளையாடி விட்டேன்! இனி ஒருநாள் தாமதித்தால், ரோமானிய செனட்டரின் சினத்துக்கு ஆளாவேன் நான். எனக்குச் செனட்டில் பகைவர் பெருக என் தாமதப் பயணம் தூண்டிவிடும். முடிவாகச் சொல்கிறேன்! விடைகொடு கண்ணே! நான் ரோமாபுரியின் பொறுப்பையும், ரோம சாம்ராஜியத்தின் பொறுப்பையும் செனட்டர் முன்பாக நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ரோமாபுரி ஏகாதிபத்திய அதிபதியாக என்னை முடிசூட்ட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது!
கிளியோபாத்ரா: [சீஸரின் கைகளைப் பற்றிக் கொண்டு] என்னைத் தனியே விட்டுச் செல்வது நியாயமாகுமா? தந்தையைத் தேடுவானே நம் அன்புப் புதல்வன்! அன்புச் செல்வனுக்குத் தம்பி, தமக்கை வேண்டாமா? நமக்கொரு மகன் போதாது! நானொரு வளமை மிக்க நைல் நதி! அநேக ஆண்மகவை உங்களுக்குப் பெற்றுத் தருவேன்! என்னைத் தவிக்க விட்டுப் பிள்ளையே பெறாத கல்பூர்ணியாவை நாடிப் போவதா? என்னைச் சுற்றிலும் பகைவர் சூழ்ந்திருக்கிறார்! பயமின்றித் தனியாக நான் எப்படி வாழ்வேன்? இன்னும் ஓராண்டு எங்களுடன் தங்க வேண்டும். ரோமாபுரிக்கு உங்களுக்குப் பொறுத்திருக்கும்! நம்பத் தக்க ஆண்டனி உங்கள் துணை ஆளுநர்! நீங்களின்றிச் சாமர்த்தியமாய் ரோமாபுரியை ஆண்டனி ஆட்சி செய்து வருகிறார்! நீங்கள் ரோமின் தளபதி மட்டுமில்லை! இப்போது என் பதி! எகிப்தின் வேந்தர்! ரோமாபுரி மீதுள்ள பரிவு உங்களுக்கு எகிப்து மீதில்லையா? [கைகளைப் பற்றி நெஞ்சோடு வைத்துக் கொள்கிறாள்]
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கிளியோபாத்ரா! ஆம் நான் உன் பதிதான்! அதை உலகே அறியும்! எகிப்தின் பெயரை எண்ணும் போதெல்லாம் எழிலரசி கிளியோபாத்ரா என் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறாள். முதல் மனைவி கல்பூர்ணியா ஆயினும், இளம் மனைவி கிளியோபாத்ராதான் என்னை ஆட்டிப் படைப்பவள்! ரோமாபுரியில் கல்பூர்ணியா ஆளுக்கு மேல் ஆளாக அனுப்பி, என்னை ஆங்கு வரும்படி அழைக்கிறாள்! பல்லாண்டுகள் நானவளைப் பார்க்க வில்லை. இம்முறை நான் போகாவிட்டால், அவள் கண்ணாடி இதயம் துண்டாக உடைந்து விடும்! பிறகு அவள் என்னை விலக்கிப் போய் விடுவாள்! நான் ரோமில் எப்படித் தனியாக வாழ்வது?
கிளியோபாத்ரா: [மிக்க ஆர்வமுடன்] நானங்கு வந்து விடுகிறேன், உங்கள் தனிமையைப் போக்க! நானும் தனி மாதாக எகிப்தில் தவிக்க வேண்டாம்! நீங்களும் தனி ஆணாக ரோமில் நோக வேண்டாம்! நானும் நம் செல்வனும் உங்கள் கண்ணெதிரிலே வாழ்வோம். நாங்கள் ரோமுக்கு உங்களுடன் வரலாமா?
ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] வேண்டாம் கிளியோபாத்ரா! தக்க தருண மில்லை இது! ரோமாபுரி உனக்கும், நம் மகனுக்கும் எந்த முறையில் மதிப்பளிக்கும் எனத் தெரியாது எனக்கு. உன்னை அவமதித்தால் உனக்கும் தாங்காது! எனக்கும் தாங்காது! அதோடு என் முதல் மனைவி கல்பூர்ணியா எப்படி உன்னை வரவேற்பாள் என்பதும் தெரியாது எனக்கு! நீ எகிப்தை ஆளப் பிறந்தவள். இங்கு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய். ரோமாபுரியில் நீ அடைப்பட்டுப் போவாய்! ஒருமாதிரியாக உன்னைப் பார்ப்பார் ரோமானியர்! நீ வேதனைப் படுவாய்! இப்போது வேண்டாம். ஓரிரு வருடம் கழித்து வா! நான் முதலில் சென்று மக்கள் மனதை அறிய வேண்டும். உன்னைப் பற்றிச் செனட்டர் என்ன நினைக்கிறார் என்று நான் உளவு செய்ய வேண்டும்.
கிளியோபாத்ரா: [சினத்துடன், உரத்த குரலில்] சீஸர்! செனட்டர் அனுமதி கேட்டா என் உதட்டில் முத்த மிட்டீர்? செனட்டர் அனுமதி கேட்டா என் மெத்தையில் படுத்தீர்? செனட்டர் அனுமதி கேட்டா எனக்குப் பிள்ளை உண்டாக்கினீர்? பிறகு செனட்டர் அனுமதி கேட்டா என்னைத் திருமணம் செய்தீர்? ரோமாபுரிக்கு வரும் எனக்கு செனட்டார் வாசற் கதவு திறப்பாரா என்று உங்கள் வாய் பிதற்றுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்! சீஸருக்கு ஆண்மகவை முதலில் அளித்த கிளியோபாத்ரா பெரியவளா? உங்கள் தனி உரிமைக் கட்டுப்படுத்தும் ரோமாபுரிச் செனட்டர் பெரியவரா?
ஜூலியஸ் சீஸர்: [சற்று அழுத்தமுடன்] கிளியோபாத்ரா! ஐயமின்றி நான் செனட்டர் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டவன்! செனட்டர் பேரவைக்கு நான் அதிபதி ஆனாலும், அவரது பெரும்பான்மைக் குரலுக்குத் தலை சாய்க்க வேண்டும் நான்! நீ என் மனைவிதான்! ஆனாலும் செனட்டர் தணிக்கைக்கு நீயும் தலை வணங்க வேண்டும்! ஆண்மகவை ஈன்ற நீ வீட்டுக்கு பெரியவள்தான்! ஆனால் குடிமக்களின் பிரதிநிதிகள் நாட்டுக்குப் பெரியவர்!
கிளியோபாத்ரா: [சீற்றத்துடன்] கிளியோபாத்ரா கீழ்நாட்டுக்காரி என்பதாலா? அல்லது எகிப்த் ரோமின் அடிமை நாடு என்பதாலா? நான் எகிப்தின் மகாராணி! நான் சீஸரின் மனைவி! உங்கள் செனட்டாருக்கு நான் கீழ்ப்படிய முடியாது! நான் அன்றும் விடுதலை ராணி! இன்றும் விடுதலை ராணி! என்றும் விடுதலை ராணி!
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] ஆமாம் கிளியோபாத்ரா! நீ என் மனைவிதான்! அதுபோல் கல்பூர்ணியாவும் என் மனைவிதான். ஆனால் கல்பூர்ணியா செனட்டார் கட்டுப்பாட்டுக்கு உட்பட வேண்டும், தெரியுமா? செனட்டார் கண்முன்பாக ரோமும் ஒன்றுதான்! எகிப்தும் ஒன்றுதான்! அந்த முறையில் எந்த ஓரவஞ்சகமு மில்லை, செனட்டருக்கு! கண்ணே கிளியோபாத்ரா! உன்னுயிருக்கு அஞ்சுகிறேன் நான்! ரோமானியர் அன்னியப் பெண்ணென்று உன்மீது வெகுண்டு உன்னைக் கொன்று விடக் கூடாது! செனட்டார் சினங்கொண்டு நம் சிறு பாலகனைக் கொன்று விடக் கூடாது! குறைந்தது ஓராண்டு கூடியது ஈராண்டாடு நீ காத்திருப்பது நல்லது. மகனுக்கும் மூன்று வயதாகும். ரோமில் ஓடியாடி மகிழ்வான்.
கிளியோபாத்ரா: [சற்று சமாதானம் அடைந்து] சீஸர்! நாட்களை நான் எண்ணிக் கொண்டிருப்பேன்! ரோமாபுரியில் உங்களைச் சுற்றிலும் கன்னியர் முற்றுகை யிடுவார்! கண்களைச் சுழற்றி, உடம்பைக் குலுக்கி மன்மதக் கணைகளை உம்மீது ஏவி விடுவார்! கல்பூர்ணியா மீது துளியும் உங்களுக்குக் காதல் கிடையாது! ஆகவே உங்கள் நெஞ்சக் கவசம் உறுதியாக இருக்கட்டும்! உங்கள் மனது கல்லாகட்டும்! சீஸருக்குச் சென்ற விடமெல்லாம் காதற் பெண்டுகள் என்பது பழமொழி! பெண்களைக் கண்டால் கண்களை மூடிக் கொள்வீர்! கண்கள் வழியாகத்தான் ஆடவருக்கு வலை வீசுவர் பெண்கள்! அந்த வலையில் சிக்கிக் கொண்டு தவிக்காதீர்! உள்ளே இடம் பிடித்துக் கொண்ட பெண்டிரை வெளியே விரட்டுவது கடினம்!
ஜூலியஸ் சீஸர்: [பெரிதாகச் சிரித்து] எகிப்த் எழிலரசி வலையில் சிக்கிக் கொண்டு தப்பிக் கொள்ள முடியாமல் நான் திண்டாடுவது போதாதா? பெண்டிரைக் கண்டால் கண்களை எப்படி மூடிக் கொள்வது? பெண்களின் கவர்ச்சி மின்னல் போல் நெஞ்சைத் தாக்கும் போது, என்னிரும்புக் கவசம் அதைத் தடுக்க முடியாது! அவ்விதம் தடுக்கும் நெஞ்சக் கவசத்தை யார் செய்ய முடியும்? சீஸர் மகாவீரன் ஆயினும், பெண்டிரின் கணைகளின் முன் பலமற்றவனே! எனது எ·கு நெஞ்சிக்குள் உள்ளது பஞ்சுப் பொதி!
கிளியோபாத்ரா: [கேலியாகச் சிரித்து] எந்த ஆடவன்தான் பாவையைக் கண்டால் பாகாய் உருகா திருக்கிறான்? என்னாசை நம் செல்வனை ரோமானியர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதே! அவன் உலகாளப் பிறந்தவன்! அலெக்ஸாண்டரைப் போல ஆவேச வேட்கை கொள்பவன்! சீஸரைப் போல பல தேசங்கள் வெல்பவன்! ஆனால் என்னையும், புதல்வனையும் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்பது எனக்குத் தெரிந்ததே! என்னால் நீங்கள் செனட்டர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். நான் காத்திருக்கிறேன். போய் வாருங்கள்.
ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] கிளியோபாத்ரா! மாறாக நம் புதல்வனைக் காண கல்பூர்ணியா காத்துக் கொண்டிருக்கிறாள். சீஸரின் மகன் என்று கல்பூர்ணியா ஏற்றுக் கொள்வது வியப்பாக இருக்கிறது.
கிளியோபாத்ரா: [சற்று விரக்தியுடன்] அப்படியானல் என்னைக் கல்பூர்ணியா வரவேற்க மாட்டாள் என்று மறைவாகக் கூறுகிறீரா? அதாவது அவளுக்கு என் மகன் வேண்டும், ஆனால் அவனைப் பெற்ற அன்னை வேண்டாம்! உண்மைதானே!
ஜூலியஸ் சீஸர்: உண்மைதான் கிளியோபாத்ரா! சற்று சிந்தித்துப் பார்! நான் வேறொரு வாலிப மாதை உன் மாளிகைக்கு அழைத்து வந்தால், நீ அவளை வரவேற்பாயா? அல்லது வாசற் கதவை மூடித் துரத்துவாயா?
கிளியோபாத்ரா: [ஆங்காரமாக] நிச்சயம் நானவளை வரவேற்க மாட்டேன்! வாசலில் நிறுத்தித் துரத்தவும் மாட்டேன்! வாளால் தலையைத் துண்டித்து, உடலைக் கழுகுக்கிரை ஆக்குவேன்!
[அப்போது பிரிட்டானஸ், ரூஃபியோ விரைவாக உள்ளே நுழைகிறார்கள்]
பிரிட்டானஸ்: சீஸர்! கப்பல் தயாராக உள்ளது ரோமாபுரிக்கு. நீங்கள் கிளம்ப வேண்டிய தருணமிது. அலைகள் நமக்குச் சாதகமாக அடித்துக் கொண்டிருக்கின்றன. காற்றடிக்கும் திசையும் பாய்மரக் கப்பலுக்கு அனுகூலமாய் வீசுகிறது! புறப்படுங்கள்! உங்கள் பெட்டிகள் எல்லாம் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டன!
ஜூலியஸ் சீஸர்: [கனிவுடன்] கண்ணே! கிளியோபாத்ரா! கண்ணீரைத் துடைத்துக் கொள்! நான் போய் வருகிறேன். பூரிப்புடன் விடை கொடு எனக்கு! [சீஸரைக் கிளியோபாத்ரா அணைத்துக் கொள்கிறாள். சேடி தூக்கி யிருக்கும் மகனின் நெற்றியில் சீஸர் முத்தமிடு கிறார். கிளியோபாத்ராவை நோக்கி] கிளியோபாத்ரா! நீ அஞ்ச வேண்டாம்! ரூ·பியோவை எனது சார்பில் எகிப்தின் பாதுகாப்புக்கு விட்டுச் செல்கிறேன். அவருடன் உள்ள ஐயாயிரம் ரோமானியப் படையினர் உன் ஆணைக்கு அடி பணிவர். அவர் உன்னையும் பாதுகாப்பார். எகிப்தையும் பாதுகாப்பார். சென்று வருகிறேன்.
[கிளியோபாத்ராவை முத்தமிடுகிறார்]
கிளியோபாத்ரா: [கண்ணீர் கலங்க] மிக்க நன்றி சீஸர்! சென்று வாருங்கள். ஈராண்டுகள் கழித்து ரோமாபுரிக்கு நானும், நம் மைந்தனும் வருவோம். நிச்சயம் வருவோம்.
ஜூலியஸ் சீஸர்: நானங்கு காத்திருப்பேன் உங்களுக்கு.
[சீஸர் பிரிட்டானஸ் பின்னால் தொடர மாளிகையை விட்டு வெளியேறுகிறார்]
*********************











