Blog

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    57. வெருவந்த செய்யாமை

    குறள் 561:

    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங் கொறுப்பது வேந்து

    செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.

    குறள் 562:

    கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்

    நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.

    குறள் 563:

    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

    மக்கள் பயப்படுதமாரி இருக்க  கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.

    குறள் 564:

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்

    நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.

    குறள் 565:

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து

    கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.

    குறள் 566:

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்

    கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.

    குறள் 567:

    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்

    கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.

    குறள் 568:

    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகுந் திரு

    மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.

    குறள் 569:

    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்

    முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்

    குறள் 570:

    கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை

    கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • குறளின் கதிர்களாய்…(260)

    குறளின் கதிர்களாய்…(260)

    –செண்பக ஜெகதீசன்

    பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
    கழகத்துக் காலை புகின்.

                                                             –திருக்குறள் –937(சூது)

     

    புதுக் கவிதையில்…

    அறம் பொருள் இன்பங்களுக்காகக்
    அளிக்கப்பட்ட காலம்,
    அரசாள்பவனுக்கு
    அற்ப சூதாடு களத்தில் கழிந்தால்,
    அது
    காலம்காலமாய் தொடர்ந்துவரும்
    செல்வத்தையும்
    சொந்தமான நற்பண்புகளையும்
    இல்லாமல் போக்கிவிடும்…!

    குறும்பாவில்…

    சூதாடுகளத்தில் அரசனுக்கான நற்காலம்
    கழிந்தாலது வழிவழிவந்த செல்வத்தையும்
    நற்பண்புகளையும் கெடுத்தழிக்கும்…!

    மரபுக் கவிதையில்…

    அறம்பொரு ளதனுடன் இன்பமென
    அரசன் துய்த்திடும் காலத்திலவன்,
    பொறுப்பது கொஞ்சமும் இல்லாமலே
    பொல்லாச் சூதின் களம்சென்றே
    அறமிலாச் சூததில் கழித்தாலே,
    அதுவே யவன்தன் பரம்பரையின்
    திறமையால் வளர்த்தநற் பண்புடனே
    திரண்ட பொருளையும் கெடுத்திடுமே…!

    லிமரைக்கூ…

    பொழுதுபோக்கினால் சூதாடும் களத்தில்,
    புவியரசனுக்கு அதனாலே வந்திடும் கேடு
    பண்போடு செல்வ வளத்தில்…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
    வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்..
    நல்லதெல்லாம் அனுபவிக்கிற நேரத்தில
    அத மறந்து
    பொல்லாச் சூதுல போய்க்கழிச்சா,
    பெரிய ராசாவுக்கும் அது
    பரம்பரயா வந்த நல்லகொணத்தையும்
    சேத்துவச்ச செல்வத்தயும்
    சேந்தப்புல அழிச்சிடுமே..
    அதால
    வேண்டாம் வேண்டாம் சூதாட்டம்
    வாழ்க்கையக் கெடுக்கும் சூதாட்டம்…!

    Share
  • மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    மாசிலா மணியே! வலம்புரி முத்தே!

    ஔவை நடராசன்

    என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய்மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து, தன் வியர்வையையும் உதிரத்தையும் கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி, ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.

    என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.

    சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது. சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாகத் திகழ்ந்த என் தாத்தா, வேலூருக்குக் குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.

    இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக்கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

    என் துணைவியார் தாரா ஒருவர் தான், எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.

    மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர்கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.

    வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்று உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.

    ஓர் இனத்துக்கு மாசிலாமணி பிள்ளை போன்ற ஒரு கடமையாளர் இருந்தால் அந்த இனம் தலை நிமிர்ந்து நிற்கும்.

    முதலில், என் திருமணம் அவர் மனத்துக்குப் பேரிடியாக இருந்தது. சென்னைக்கு நான் வந்து வாழத் தொடங்கியதும், பழகப் பழக மெல்ல மெல்ல என் மீது பரிவைக் கொட்டினார். என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்கு அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குல தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.

    உலகின் எத்தனை நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று சொல்லி, மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியைப் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.

    “தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம்” என்ற தொடர்தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.

    அவர் வளர்த்த குடும்பக் கொடி, இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும் பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.

    ஒப்பற்ற ஒரு தந்தையாக, உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார்.

    இன்று அவரின் 49ஆவது நினைவு நாளாகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்பெயர் வாழ்வினில் இந்நாட்டு பிரஜைகளாகி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவராகிய எமக்கும், எமது தலைமுறைக்கும் இவ்வரசியல் மாற்றங்கள் எத்தகைய மாற்றங்களை அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கப் போகின்றன எனது ஆதங்கம் மறுபுறம்.

    நாம் பிறந்த மண்ணை விட்டுப் புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் குடியேறி அந்நாட்டிலேயே வாழத் தொடங்கும் நாம் படிப்படியாக நமக்கு வாழ்வளித்த இந்நாட்டை நமது சொந்த நாடாகக் கருதும் நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்வது மிகவும் இலகுவான காரியம் அல்ல. ஆனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்கள், கலாச்சார விழுமியங்கள் ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வாழும் நாட்டிற்கு உளசுத்தியுள்ள ஒரு பிரஜையாக வாழ நமை மாற்றிக் கொள்கிறோம். அத்தகைய மாற்றத்தின்போது நாம் பிறந்த மண் நமக்குக் கொடுத்த மொழியின் மீதான காதலையும், கலாச்சார அடிப்படையையும் தொலைத்து விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகளே ஒரு போராட்டம்தான். இப்படியாக வாழ்ந்து நமது அடுத்த தலைமுறைகளை இங்கே உருவாக்கி அவர்கள் முற்றுமுழுதாக இந்நாட்டு மண்ணின் குழந்தைகளாகி, இந்நாட்டுச் சூழலிலே தமது வாழ்வாதாரத்துக்கான வழிகளைத் தேடி வாழும் வாழ்க்கையின்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்களும், இந்நாட்டின் தொன்மை மக்களின் மனத்தில் ஏற்படும் கசப்பான புரிந்துணர்வுகளினாலும் எமைச் சுற்றி ஏற்படும் மாற்றங்கள் ஒருவகை பயத்தைத் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.

    பதினெட்டிலிருந்து அறுபத்திரண்டு வரை ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கைப் பயணத்தின் தண்டவாளங்களின் திசை இந்தச் சந்தியில் இத்தகையதோர் திருப்பத்தை ஏற்படுத்துவது கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கிறது. பல வருடங்களாக இங்கிலாந்தின் பழம்பெரும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவுகளின் மீதான அபிப்பிராய பேதங்களும், கருத்து மோதல்களும் கூர்மையடைந்து வரும் வேளையில், அது அக்கட்சியின் தலைவர் பலரைக் காலம் காலமாகக் காவு கொண்டு வந்துள்ளது. இந்தக் கருத்து மோதல்களின் அதியுச்சகட்டமாகவே இன்று நாம் எதிர்கொள்ளும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் அரசியல் பூதம் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் கூஜாவிலிருந்து வெளிப்பட்டு, அரசியல் களத்தினில் ஆட்டம் போட்டு, இன்றைய பிரதமர் தெரேசா மே அவர்களையும் பலிகொண்டு நிற்கிறது.

    தெரேசா மே அவர்களுக்குப் பதிலாக, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரையும், இந்நாட்டின் அடுத்த பிரதமரையும் தெரிவு செய்யும் பொறுப்பு, 313 கன்சர்வேடிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் விடப்பட்டு அவர்களின் வடிகட்டலில் மிஞ்சும் இரண்டு உறுப்பினர்கள், கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் சுமார் 1,60,000 பேர்களின் வாக்கெடுப்பினால் அடுத்த தலைவரும், எமது நாட்டின் பிரதமரும் தெரிவு செய்யும் திருவிழா ஆரம்பமாகிவிட்டது. 11 பேர் வாக்களிக்க, இந்தத் தலைவர் தேர்தலில் இன்று இருவர் மிஞ்சி நிற்கிறார்கள். யார் இவர்கள்? முன்னாள் லண்டன் நகர மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் இவர்களிலொருவர் இவரே சக பாராளுமன்ற அங்கத்தவரிடையே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர். இவர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சர் பதவியிலிருந்தவர். தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் உடன்படிக்கையோடு ஒத்துப் போகாமல் தனது பதவியை இராஜினாமா செய்தவர்.

    அடுத்தவர் ஜெர்மி ஹண்ட். இவர் இங்கிலாந்தின் தற்போதைய வெளிநாட்டமைச்சர், முன்னாள் தேசிய சுகாதார அமைச்சர். இவர்களில் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து காலக் கெடுவான அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையுடனோ, அன்றி உடன்படிக்கை இல்லாமலோ விலகுவது என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். ஜெர்மி ஹண்ட் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் உடன்படிக்கையை எட்டக்கூடிய பட்சத்தில், ஒரு சிறிய கால தாமதம் ஏற்பட்டாலும் கூட அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றே என்று கூறுகிறார். ஆனால் தற்போதைய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடான தெரேசா மே அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்பதன் அடிப்படையில் இவர்கள் இருவரினதும் நிலை திரிசங்கு சொர்க்கமே!

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கை இல்லாமல் விலகுவதே சட்டத்திலுள்ளது. ஆனால் அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒரு வழக்கின் தீர்ப்பாக உள்ளது. பாராளுமன்றத்தில் இங்கிலாந்து எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது என்பது பெரும்பான்மை உறுப்பினர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் தெரிவு செய்யப்படும் புதிய பிரதமர், எவ்வகையில் இந்த பிரெக்ஸிட் எனும் பூதத்தைத் திரும்ப ஜாடிக்குள் அடைக்கப் போகிறார் எனது ஒருவராலேயும் புரிந்துகொள்ள முடியாமலே இருக்கிறது.

    சரி! தெரிவு செய்யப்படும் பிரதமர் யாராக இருப்பினும் அவர்கள் முன்னால் இருக்கும் பிரெக்ஸிட் எனும் பிரச்சனை ஒரு பிரச்சனையே! அதன் பின்னால் நாட்டின் பல பிரச்சனைகள் இன்னும் முகம் கொடுக்கப்படாமல் இருக்கின்றதே! அதனை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். பிரெக்ஸிட் எனும் இப்பூதம் நாட்டினை இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றது. வெளிநாட்டவர் குடியேற்றம் அல்லது இமிகிரேஷன் எனும் பிரச்சனை

    வெள்ளை இனத்தவர் மத்தியில் பலரின் மனங்களிலே சிறிது இனத்துவேஷ விதைகளைத் தூவியிருக்கிறது. இனத் துவேஷத்தையே கொள்கையாகக் கொண்ட சில கட்சிகள், இந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள். மனத்தில் பட்டதை அப்படியே பேசும் உண்மையான அரசியல்வாதிகளின் மீது தான் நமது அபிமானம் எனும் மக்கள் கூட்டம் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் பெற்ற வெற்றிக்குப்பின் இங்கிலாந்திலும் தலைவிரித்தாடுகின்றது. வெளிநாட்டவரின் வருகை, இந்நாட்டின் மக்களுக்கு ஏற்படுத்தும் இடர்களைப் பகிரங்கமாக விவாதிப்பது ஜனநாயகமே எனும் வாதம் ஒரு சரியான வாதமாகப் பட்டாலும் இந்தப் போர்வையின் கீழ் பல இனத்துவேஷம் கொண்டவர்கள் தமது இனவெறிக்கு நியாயம் கற்பிக்கும் நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.

    இத்தகைய நிலையைச் சரி செய்து, வீழ்ந்துகொண்டிருக்கும் தமது கட்சிகளின் செல்வாக்கை மீண்டும் அதிகரித்துக் கொள்வதற்காக வழமையாக மிதவாதப் போக்குக் கொண்ட இங்கிலாந்தில் பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தமது போக்கினை வெளிநாட்டவருக்கு எதிரான வகையில் கொஞ்சம் கடுமையாக்கிக் கொள்வார்களோ எனும் அச்சம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் தான் இன்றைய எமது கேள்வியான இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி எனைப் போன்ற புலம்பெயர்ந்து வாழும் இங்கிலாந்து நாட்டுப் பிரஜைகளின் மனத்தில் ஆதங்கம் மிக்க கேள்வியாக மேலோங்கி நிற்கிறது. பல சமயங்களில் கட்டுப்பாடின்றி மனத்தில் தோன்றுவதை அப்படியே பேசி பல பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் போரிஸ் ஜான்சன் அவர்களே பிரதமராவர் எனும் எதிர்பார்ப்பு, அரசியல் அவதானிகள் மத்தியில் நிலவுகிறது. தனது பூட்டனார் துருக்கி நாட்டிலிருந்து அகதியாகக் இங்கிலாந்துக்கு தஞ்சம் தேடி வந்தவர். அந்த வழியில் வந்த நான் எப்படி இனத்துவேஷம் கொண்டவராக இருக்கலாம் எனும் வாதத்தை இவர் முன்வைக்கிறார். அதேபோல நான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பது ஒரு சீன நாட்டுப் பெண்ணையே, நான் எப்படி வெளிநாட்டவருக்கு எதிராக இயங்குவேன் என்கிறார் ஜெர்மி ஹண்ட்.

    இதற்கான முடிவு ஜூலை மாதம் 22ஆம் திகதியே எமக்குத் தெரிய வரும். அடுத்து வரும் ஒரு 50 வருட காலத்தின் ஐக்கிய இராச்சியத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் பிரதமரை நாட்டில் வெறும் 1,60,000 மக்கள் மட்டும் தெரிவு செய்வதுதான் உலக ஜனநாயகத்துக்கே முன்னோடியாகத் திகழும் ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகமோ எனும் கேள்வி பல முனைகளில் இருந்து கிளம்பாமலில்லை.

    எதிர்காலம் எனும் கண்ணாடிச் சாளரத்தினூடாக என்ன தெரிக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • யோகம் தரும் யோகா!

    யோகம் தரும் யோகா!

    எம். ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது எல்லோருக்கும் தெரிந்த முக்கியமான விஷயமாகும். ஆனால் அதற்காக நாம் எவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை எவருமே கவனத்தில் கொள்ளுவதில்லை. நோய்கள் வந்தவுடன் வைத்தியரை நாடுவோம். அவர் பல மருந்து மாத்திரைகளை எழுதித் தந்திடுவார். அத்துடன் விடவும் மாட்டார். அந்தப் பரிசோதனை, இந்தப் பரிசோதனை என்று சொல்லி அங்குமிங்கும் இருக்கின்ற நோயியல் ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பிப் படாத பாடு படுத்திவிடுவார். பணமும் செலவழிந்து, நோயும் மாறாத நிலையில், என்ன செய்வது என்று அறியாமல், புரியாமல், வேறொரு விசேஷ வைத்திய நிபுணரைப் பார்ப்பதற்கு ஆயத்தமாகிவிடுவோம்.

    இதுதான் பலரது வாழ்வில் நிகழும் பரிதாபகரமான சம்பவமாகிவிட்டது. இப்படியெல்லாம் நொந்து, வெந்து, போகாமல் இருப்பதற்கு மிகவும் அருமையான வழி ஒன்றை நமது முன்னோர்கள் ஆக்கி அளித்துச் சென்றுள்ளார்கள். அதுதான் யோகம் தருகின்ற யோகாவாகும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அந்தச் சுவரும் இடிந்து விழும் நிலையிலோ, உடைசலாய் ஓட்டையாய் இருக்கும் நிலையிலோ அங்கு சித்திரத்தை வரைய முடியுமா? முடியவே முடியாது!  இங்கே சுவர் என்று சுட்டப்படுவது நம் உடம்பையே! எனவே உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராக வேண்டியது கட்டாயமாகும்.

    நோய்வராமலும் தடுக்க வேண்டும். நோய் வந்தாலும் அதனால் தாக்கப்படாமல்  காத்துக் கொள்ளவும் வேண்டும். இவையெல்லாம் நடை முறைக்குச் சரிவருமா என்ற எண்ணம் கூடத் தோன்றுகிறதல்லவா?  இவற்றுக்கெல்லாம் வழிவகைகளை நமது முன்னோர்களான சித்தர்களும் முனிவர்களும், யோகிகளும் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

    அவை யோகா என்னும் வரமாகும். இந்த யோகம் என்பது மதம், இனம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு மனிதம் சார்ந்தது. இதை உணர வேண்டும். இறைவனது படைப்புகள் எண்ணிறந்தன. அவற்றுள் மனிதப் படைப்பே அரியதும் பெரியதுமாகும். உலகினை அடக்கி ஆளும் ஆற்றலை மனிதன் தனது அறிவாற்றலினால் ஏற்படுத்தி இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன், நோயால் படும் அவஸ்தையும் அதைப் போக்க எடுக்கும் பிரயத்தனங்களும்தான் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன. இதற்குக் காரணம் என்ன? மனம் போன போக்கிலே போவது! மதுவுக்கு அடிமையாவது! அளவுக்கு மிஞ்சி உண்பது! உடலைக் கவனிக்காமல் இருப்பது! ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்துவிடுவது என்று பட்டியலிடலாம்.

    மனிதனுக்குள்ளே தெய்வமும் இருக்கிறது. தேவையற்றவையும் இருக்கின்றன. தேவையற்ற எண்ணங்கள் கூடும்போது மனம், தன்னிலையை இழக்கிறது. வாழ்வு தடுமாறுகிறது. மனத்தினிலே சாந்தியும் சமாதானமும் எழுகின்ற வேளையிலே தெய்வம் அங்கே தோன்றி, சிறப்பு எல்லாம் வந்து ஏறுகிறது!

    யோகம் பற்றிக் கூறவந்துவிட்டு சமயமும் சன்மார்க்கமும் போதிக்கப்படுகிறது என்று தோன்றுகிறதா? யோகம், ஒரு வாழ்க்கை! யோகம், ஒரு வாழ்கலை! யோகம் என்பது வளத்தை, வலிமையை, வாலிபத்தை, மகிழ்ச்சியை, நிம்மதியைத் தரக் கூடியது. இதனால்தான் “யோகக் கலை சாகாக் கலை” என்றார்கள்!

    நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த உடம்பைக் கவனமாகப் பார்க்காவிட்டால் கவலைப்பட்டே ஆகவேண்டும்! ஆகையால் உடம்பினைக் காக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கட்டாயமாகிறது.

    உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
    திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே !

    உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
    உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோவில்கொண் டானென்று
    உடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே !

    இதனை இவ்வாறு கூறியவர் சித்தரும் யோகக் கலையில் வல்லவருமான திருமூலராவார். திருமூலரே இந்த உடம்பின் அருமையை, பெருமையை, உயர்வை, அவசியத்தைக் காட்டிய பின்னாவது நம் உடம்பைப் பேணாமால் விட்டுவிடுவது முறையாகுமா! யாவரும் சிந்திப்பது அவசியம் அல்லவா! ”பிராணாயாமம் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகும். இதனை வழங்கியது யோகமாகும். காற்றை வெளியே விட்டு உள்ளிழுத்துச் சிறிதுநேரம் அடக்கினால்… மனம் சற்று அமைதியடையும். முறையான பிராணாயாமப் பயிற்சியினால் உடலின் வெவ்வேறு இயக்கங்களையும், நரம்பு ஓட்டங்களையும், நாம் அடக்கி ஆளலாம். உடலில் செல்லும் உணர்ச்சி ஓட்டங்களையும் நம் வசப்படுத்தலாம்.

    யோகப் பயிற்சியின் மூலம் உடலில் வேறுபாடுகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு புது எண்ணமும் மூளையில் ஒரு பாதையை உண்டாக்குகின்றது. மானிட அமைப்பை முற்றும் காப்பதற்கு இந்த எண்ணப்  பாதைகளே காரணம். இப்படிப் பாதைகள் அமைவதால்தான் ஞாபக சக்தியே மனித இனத்துக்கு அமைந்திருக்கிறது. உடலைப் பேண, ஆரோக்கியமாக விளங்க, யோகப் பயிற்சிகள் உதவுகின்றன. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. எல்லாவற்றிலும் சமநிலை கடைப்பிடிப்பது யோக சாதனையால் சாத்தியமாகின்றது.” இவ்வாறு சுவாமி விவேகானந்தர் அவர்கள் யோகத்தின் மகத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி இருக்கின்றார்.  உடல் என்பது தனிப்பட்ட பொருள் அன்று. ஐம்பெரும் தத்துவங்களால் ஆன ஒரு தொகுப்பு. இந்தத் தொகுப்பு தனித்து இயங்க முடியாது. அது இயங்க வேண்டுமானால், அதற்கு ஒரு முக்கியமான பொருள் தேவை. அதுதான் உயிர்.

    இந்த உயிர் இருந்தால் மாத்திரம் போதாது. உயிர் இருப்பதை உணர்த்தும் கருவியாக மனமும், அதிலே தோன்றக்கூடிய எண்ணங்களும், அந்த எண்ணங்களுக்கு ஏற்ப இயங்கும் உடல் உறுப்புக்களும் இருந்தால்தான் உடலின் இயக்கம் முழுமை பெறும். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் எந்தவொன்று பழுதானாலும், இன்னொன்றின் இயக்கம் பாதிக்கப்படும். உடலும், அதன் உறுப்புக்களும் சரியாக இயங்க வேண்டுமானால், மனமும், அதன் எண்ணங்களும் சீராக இருக்க வேண்டும். மனம் சீர்கெட்டு நோயுறும்பொழுது உடலும் அதன் உறுப்புகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

    எனவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நமது மனமும் எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதுதான் அடிப்படை. இங்குதான் யோகம் என்பது எமது வாழ்வுக்குள் வந்து சேர்கிறது. நோய்களை அணுக விடாது, நோயெதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தி, பஞ்ச பூதங்களாலான இந்த உடம்பைக் காக்கும் பாரிய பணியினை யோகம் ஏற்று நிற்கிறது. இதனால் எங்கள் வாழ்க்கையில் யோகம் தரும் நிலையில் யோகா அமைந்திருக்கின்றது என்பதை எவராலுமே மறுத்துவிட முடியாது. வெளியில் உடம்பை முறுக்கேற்றுவதில் பலர் நாட்டமுடையவர்களாக இருக்கின்றார்கள். அதற்காகப் பலவிதமான பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். குஸ்தி போடுவது, கராத்தே பழகுவது, இன்னும் பல விநோதமான விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும், பணத்தைச் செலவு செய்து தமது வெளித் தோற்றத்தைப் பேணி நிற்பதை நடைமுறையில் காண்கின்றோம். ஆனால் இவற்றால் எல்லாம் உள்ளுறுப்புகளுக்கு எந்தவித நலன்களும் ஏற்பட்டுவிடாது. இந்தப் பயிற்சிகளால் பிரச்சினையை உருவாக்கும் மனம் கூட அமைதியைப் பெற்றுவிடாது.

    பணத்தின் அவசியமே இல்லாமல் உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்தி ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும் ஒரே வழி யோகம் மட்டுமே. ஏழைகளுக்கும் ஏற்றது. வசதி படைத்தவருக்கும் ஏற்றது இந்த யோகம் ஆகும். மற்றைய பயிற்சிகளுக்குக் கூடுதலான உணவுகள் தேவை. யோகப் பயிற்சிக்கோ குறைந்த சாதாரண உணவுகளே போதும். யோகம் பயின்றால் கோபம் குறையும். நிதானம் ஏற்படும். சமநிலை பேணும் எண்ணம் உருவாகும். பதற்றம் குறையும்.

    யோகத்தின் அருமை கருதி அதனைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கொண்டுசெல்லும் வகையிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலை நாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கே யோகாவை பயிற்றுவிக்கின்றனர். யோகாவைக் கடைப்பிடிப்பது என்பது மிகவும் இலகுவானது. யோகா செய்வதற்கெனப் பிரத்தியேகமான இட வசதிகள் எல்லாம் தேவையில்லை. சாதாரணமான காற்றோட்ட வசதியுள்ள இடமே போதுமானதாகும். மற்ற பயிற்சிகளின் போது களைப்பைப் போக்க, விதம்விதமான குளிர்பானங்களை அருந்துவார்கள். அல்லது காப்பியோ, தேநீரோ, போன்விட்டா, மைலோ போன்றவற்றையோ வைத்திருந்து நன்றாக அருந்தி மகிழ்வார்கள். பயிற்சி செய்வதுகூட இவற்றை எல்லாம் குடிப்பதற்கோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இவற்றைக் குடிப்பதால் செய்த பயிற்சியின் பலன்கூட அவர்களுக்குக் கிடைக்காமல் போனாலும் போகலாம்.

    இவை எதுவுமே இல்லாமல் நல்ல காற்றோட்டமான இடத்தில் அமைதியாக இருந்து செய்வதுதான் யோகா. காசுச் செலவும் இல்லை. கண்டவற்றைக் குடித்து ஆரோக்கியத்தைப் பாழாக்கவும் தேவையில்லை. குறைந்த உணவும் நிறைந்த திருப்தியும் யோகாவின் முக்கியமான அம்சம் எனலாம்.

    இராமகிருஷ்ண மிஷனால் நிர்வகிக்கப்படும் பள்ளிக் கூடங்களில், யோகா மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இலங்கையிலே சுவாமி விபுலானந்த அடிகளாரின் கீழியங்கிய மட்டக்களப்பு, கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்தில் விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கும் ஏனையவர்களுக்கும்கூட ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னரே யோகத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அங்கு கல்வி கற்றவர்கள் நல்ல திறமையானவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

    மனித வாழ்க்கை, அகவியல் புறவியல் என்று இருகூறுகளைக் கொண்டது. அக ஆரோக்கியத்துக்குத் தியானப் பயிற்சி உதவுகிறது. புற ஆரோக்கியத்துக்கு யோகப் பயிற்சி உதவுகிறது. ஒவ்வொரு மனிதனின் உடம்பில் ஏற்படும் நோயை – தலையில் இருந்து பாதம்வரை, எலும்புக்கும் தசைக்கும் நரம்புக்கும் நாடிக்கும் குருதிக்கும் குடலுக்கும் பல்லுக்கும் பார்வைக்கும் மனத்துக்கும் தொண்டைக்கும் தோலுக்கும் மூச்சுக்கும் மூளைக்கும் கைக்கும் வருகின்ற அனைத்து நோய்களையும் மருந்தின் துணையில்லாமலேயே யோகா குணப்படுத்தும் வல்லமை பெற்றது. இது இத்துறையில் ஆய்ந்தவர்கள் மற்றும் அனுபவப்பட்டவர்களின் கருத்தாகும்.

    இளமை வரும். சுறுசுறுப்புடன் நினைவாற்றலும் வரும். மனோசக்தியும் மன அமைதியும் உண்டாகும். வீரம் உருவாகும். ஆற்றல் விருத்தியடையும். ஆயுள் பலப்படும். புலமை, நுண்ணறிவு, பழுதில்லா வாழ்க்கை என அத்தனையும் தருவது யோகா ஆகும். இவையாவும் அமைய வேண்டும் என்பதுதானே அனைவரதும் ஆசையும் கனவும்! இவற்றை நமக்கு அள்ளித் தரும் யோகா, வரம் தரும் யோகமாக நம் வாழ்வில் திகழ்கிறது.

    சிரித்து வாழவேண்டும். சிறக்கவும் வாழவேண்டும். சதைபெருத்த உடல் பெற்று, சங்கடங்கள் பல பெற்று சந்தோஷம் இழந்து வாழ்வது வாழ்க்கையல்ல. இளமையுடன், வளமையும், இனிமைநிறை எண்ணமும், பொறுமைநிறை உள்ளமும், பொங்கிவரும் சுகமுமே வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் என்பதாகும். இந்தச் சிறந்த வாழ்வை நமக்கு அளிக்கவல்ல சஞ்சீவியாக  அமைந்திருப்பது யோகா.

    Share
  • சிறுவனுக்குச் சிரச்சேதமா?

    சிறுவனுக்குச் சிரச்சேதமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் அவர்களுடைய குடிமக்களுக்கே மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு.  சென்ற வருடம் அரசை எதிர்த்து எழுதிய, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் வாழ்ந்துவந்த, சவூதி அரேபியாவின் குடிமகனான கஷோகி என்னும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிருபரை துருக்கியில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தில் கொலைசெய்து அவர் உடம்பை துண்டு துண்டாக்கி அதை யாரும் கண்டுபிடிக்காதவாறு வீசி எறிந்திருக்கிறார்கள்.  சவூதி அரசு அதை மறுத்தாலும் உலகம் ஒப்புக்கொள்வதாக இல்லை. இப்போது ஐ.நா.வின் விசாரணைக் குழு, இதை ஆதாரத்தோடு உறுதிப்படுத்தியிருக்கிறது.

    இந்த வருடம் 37 பேர்களை அரசுக்கு எதிரான பயங்கரவாதக் கொள்கைகள் உடையவர்களாக இருந்தவர்கள் என்றும் அரசுக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டி அவர்களின் தலைகளைச் சீவி மரண தண்டனை கொடுத்தார்கள்.  அது மட்டுமல்ல அந்தத் தலைகளை பொதுமக்களின் பார்வைக்காகவும் வைத்தார்கள்.  2016-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவர் உட்பட அரசை விமர்சித்த 47 பேரைத் தண்டித்தது.  சவூதி அரசைப் பொறுத்தவரை அரசை விமர்சிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள்.

    இப்போது இதைவிடக் கொடிய பாவச்செயல் ஒன்றைப் புரியக் காத்திருக்கிறார்கள்.. பத்து வயது சிறுவன் ஒருவன் அரசுக்கு எதிராக நடந்த பிரச்சாரத்தில் பங்குகொண்டான் என்றும் துப்பாக்கி வைத்திருந்தான் என்றும் ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருந்தான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டி, 13 வயதில் அவனைக் கைதுசெய்து தனிமைச் சிறையில் அடைத்து அவனுக்குப் பதினெட்டு வயதாகியதும் விசாரணை என்ற ஒன்றை நடத்தி அவன் செய்த ‘குற்றங்களுக்கு’ அவனுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள்.  சீக்கிரமே அது நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.  இவன் சார்பில் வாதாட வழக்கறிஞர் யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்தக் குற்றங்கள் புரிந்ததாக அவனைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கியிருக்கிறார்கள்.  மனித உரிமைகள் மீறப்படும் சவூதி அரேபியாவிலேயே கூட ஒரு சிறுவனைக் கொலைக் குற்றத்திற்கு ஆளாக்கிய கொடுமை இதுவரை நிகழவில்லை.

    2017-இல் ஐ.நா. சபையின் மனித உரிமை ஹைகமிஷனர் அலுவலகத்திலிருந்து வந்த மனித உரிமைகள் பற்றிய கேள்விகளுக்கு சவூதி அரசு பதிலளிக்கையில் மிகக் கொடிய குற்றங்களுக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று கூறியது.  ஆனால் மனித உரிமைக் கழகம், சிறு குற்றம் புரிந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் அரசை எதிர்ப்பவர்களுக்கும் சிறுபான்மையரான ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறது

    சவூதி அரேபியாவில் குற்றம் புரிந்தவர்களுக்கு அவர்களுடைய தலைகளைச் சீவி மரண தண்டனை வழங்குகிறார்கள்.  சவூதி அரேபியா, ஒரு முடியரசு.  அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமீர்தான் எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கிறார்.  இப்போது இருக்கும் அரசருக்கு வயதாகிவிட்டதால் அடுத்து அமீராக வரப் போகிற முகம்மது பின் சல்மான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்.  இவர்தான் கஷோகியின் கொலைக்குக் காரணமானவர்.  பல நாடுகளில் இப்போது எந்தவிதக் குற்றங்கள் புரிந்தோருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமா என்ற சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது.  ஆனால் சவூதி அரேபியாவோ அமீர்,  யாராவது குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானித்தால் அதுதான் தீர்ப்பாகிவிடுகிறது.  நீதிமன்றங்களோ குற்றம் புரிந்தவர்களுக்கு சாதகமாக வழக்காடுவதற்கு வழக்கறிஞர்களோ இருப்பதாகத் தெரியவில்லை.  அப்படியே இருந்தாலும் அவர்கள் பெயருக்குத்தான் இருக்கிறார்கள்.  குற்றம் புரிந்தவர்களைக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிப்பது அமீர்கள்தான்.  இப்படிக் குற்றம் புரிந்தவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் ஷியா என்ற முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சவூதியில் சன்னி என்னும் முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர்.

    பத்து வயதில் இந்தப் பையனுக்கு என்ன புரிந்திருக்கும்?  பதிமூன்று வயதிலேயே கைதுசெய்யப்பட்டுத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோது இவனுடைய மனது எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும்?  அதன் பிறகு அவனுடைய மன, உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படிருக்குமே.  இப்போது அவனுக்கு மரண தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்பதை எவ்வளவு தூரம் அவன் உணர்ந்திருப்பான்?  இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்.

    கஷோகி கொல்லப்பட்டு அவருடைய உடலைச் சின்னாபின்னமாக்கித் தூர வீசிய பிறகு அமெரிக்கா, சவூதி அரேபியாவோடு எந்த வர்த்தக உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்தது.  ஆனால் ட்ரம்ப் அந்த எதிர்ப்புக்கெல்லம் செவிசாய்க்கவில்லை.  ஆயிரம் கோடி டாலர் பெறுமான ஆயுதங்களை சவூதி அரேபியாவுக்கு விற்காவிட்டால் அமெரிக்காவுக்குத்தான் நஷ்டம் என்பதுபோல் பேசிவந்தார்.  சவூதி அரேபியா தலைவர்களும் புஷ் குடும்பமும் தனிப்பட்ட முறையிலும் நண்பர்கள்.  இப்போது ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பமும் சவூதியின் தலைவர்களோடு நெருக்கம் காட்டிவருகிறார்கள்.  ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரும் சௌதியின் வருங்கால அமீரும் நெருங்கிய நண்பர்கள்.  இதுவரை இவர்கள் யாரும் 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது பற்றி வாயே திறக்கவில்லை.

    இப்போது உலகெங்கிலுமிருந்து கண்டனக் குரல்கள் எழுந்திருப்பதால் சவூதி அரேபியா, பையனின் சிரச்சேதத்தைப் பன்னிரண்டு வருஷ சிறைவாசமாக மாறியிருக்கிறது.

    மனித உரிமைகளைக் காக்கும் நாடுகளின் தலைவன் (leader of the Free World) என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, மனித உரிமைகளைத் காலில் போட்டு மிதிக்கும் சவூதி அரேபியாவைப் பற்றி என்ன சால்ஜாப்பு சொல்லப் போகிறது?

    ====================================================================

    More: https://theintercept.com/2019/06/16/saudi-crown-prince-child-execution/

    Pic courtesy: https://en.wikipedia.org/wiki/Mohammad_bin_Salman

    Share
  • ஐயப்பன் காவியம் – 1

    ஐயப்பன் காவியம் – 1

    -இலந்தை சு. இராமசாமி

    முன்னுரை

    முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நங்கநல்லூரிலுள்ள அர்த்த நாரீஸ்வர் கோவிலில் பிரபல உபன்யாசகர் இராமகதா ரத்னம் புதுக்கோட்டைத் தியாகராஜன் அவர்கள் கம்பராமாயணம் உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். உபன்யாசத்தின் நடுவில் அவர் சொன்னார்: ”ஐயப்பன் கதையை உபன்யாசம் செய்ய முறைப்படியான காவியம் எதுவுமில்லை. இங்கே கவிமாமணி இலந்தை இராமசாமி வந்திருக்கிறார். அவர் ஐயப்பன் காவியம் ஒன்று எழுதவேண்டும். அதற்குரிய தகுதி உள்ளவர் அவர். கோயிலில் சுவாமி முன்னால் சொல்லியிருக்கிறேன். அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். 500 பாடல்களுக்குள் அமைந்தாலும் போதும்” என்றார். நான் எழுந்து ஒத்துக்கொண்டேன். உடனே என் மனத்தில் கதை பாண்டி நாட்டில் நிகழ்வதாக அமைக்கவேண்டும் என்று தோன்றியது. அதன்படி ஆற்றுப்படலமாகப் பொருநை நதியைக்கொண்டு எழுத் தொடங்கினேன்,. பிறகு புத்தகங்களைப் படிக்கும் போது கதை சேரநாட்டில் நடப்பதாகப் பல புத்தகங்களில் பார்த்தேன். காவியத்தில் பிழை வரக்கூடாதென்பதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டேன். பிறகு ஐயப்பன் வரலாற்றை வழிநடைச்சிந்தாக 64 ஆனந்தக் களிப்பு பாடல்களில் எழுதினேன். ஐயப்பன் வில்லுப்பாட்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நிகழ்த்தும் மாதிரி எழுதி நிகழ்ச்சிகள் நடத்தினேன். எனினும் மனம் சமாதானமாகவில்லை. சென்ற மாதம் ஒரு ஆங்கிலக் கட்டுரையைப் படித்தபோது திருவாங்கூர் மகாராஜா பந்தள ராஜாவைப் பாண்டியராஜன் என்றுதான் அழைப்பார் என்று எழுதப்பட்டிருந்தது. உடனே விழித்துக் கொண்டேன். ஐயப்பன் காவியத்தை மீண்டும் தொடங்குவது என்று முடிவெடுத்தேன். பூதநாதோபாக்கியானம் ஐயப்பன் கதையை விரிவாகச் சொல்கிறது. ஸ்காந்தம் மாஹாசாஸ்தா கதையைப் பேசுகிறது. சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன. அப்பர் சாத்தனை மகனாய்ப் பெற்றான் என எழுதியிருக்கிறார்.

    என்றாலும் காலபேத குழப்பங்கள் ஏற்பட்டன. ஐயப்ப பக்தர் திரு அரவிந்த சுப்ரமணியம் ஸ்ரீ மஹாசாஸ்தா விஜயம் எனும் ஒரு ஆய்வுப் பதிப்பு வெளியிட்டிருக்கிறார். அப்புத்தகம் தற்செயலாகக் கையில் கிடைத்தது. முதலில் படித்தபோது குழப்பம் அதிகரித்தது. பிறகு மீண்டும் ஆய்வு செய்த போது குழப்பங்கள் ஒவ்வொன்றாக விலகின. கதையில் தெளிவு கிடைத்தது. எழுதத் தொடங்கிவிட்டேன். கவிஞர் விவேக்பாரதி வல்லமையில் வெளியிடுகிறோம் என்றார். அதைப் பேறாகக் கருதினேன். வல்லமை மதிப்பு மிக்க ஒரு தளம் என்பதை அறிவேன்.

    நான் எழுத எழுதக் காவியம் இங்கே தொடர்ந்து வெளியாகும். பொதுவாக விருத்தத்தில் எழுதுவது வழக்கம். நானும் அப்படித்தான் செய்யப்போகிறேன்,பாரதி பாஞ்சாலி சபதம் குறுங்காவியத்தைச் சிந்துப்பாடலில் எழுதி இடையிடையே விருத்தங்களைக் கொணர்ந்தார். நான் விருத்தப்பாக்களில் எழுதி இடையிடையே சிந்துப்பாடல்களைக் கொணரப் போகிறேன். வண்ணப்படல்கள், சந்தப்பாடல்களும் வரும். இயன்ற அளவு விருத்தத்தின் பல வகைகளைப் பயன்படுத்த முயல்வேன்,

    சாமியே சரணம் ஐயப்பா!

    அன்புடன்,
    இலந்தை சு இராமசாமி
    17-6-2019

    ஐயப்பன் காவியம்

    காப்பு

    வானின் றிறங்கியிந்த வையத்திற் போந்தவருள்
    ஞானத் திருசாஸ்தா நற்கதையை – ஆனநறுங்
    காவியமாய்ப் பாடக் கணபதியே காத்தருள்க
    பாவியக்கப் பாடும் படி.

    நூல்

    கலிவிருத்தம்

    உலகி லேயறம் ஓங்கி நிலைக்கவும்
    இலகு பக்தியின் ஏற்றம் சிறக்கவும்
    தலமொ ளிர்ந்திடத் தாரணி வந்தவன்
    மலர்ந றும்பதம் வாழ்த்தி வணங்குவாம்

    அவையடக்கம்

    பூத நாதனின் பொற்புடை மாக்கதை
    நீத மாய்த்தமிழ் நேர்ந்து கொடுத்திடப்
    போத மில்லெனும் போது மிறங்கினேன்
    சோதி மாமலை சுண்டெலி தூக்குமோ?

    ஈர நத்தையி ழுத்திடும் கோட்டிலே
    சார மாய்மொழி தானுள தாகுமோ?
    ஆர மாய்த் தமிழ் ஆய்ந்தவர் என்னையும்
    வார மாகவே வாழ்த்திய ருள்கவே!

    வேண்டும் காவியம் என்று விளம்பியே
    தூண்டி விட்டநல் தூயவர் ஆசியால்
    ஈண்டிம் மாக்கதை ஈசன் வரத்தினால்
    பாண்டி யன்மர பேந்தலைப் பாடுவேன்!

    அறம் நிறுத்திடும் ஆண்டவன் சாத்தனை
    மறம்வி ளைத்தொளி வார்த்தருள் ஐயனை
    திறம்ப லப்பல சேர்த்திடும் நாதனை
    பெறுந்த மிற்சொலில் பேசுவன் பாட்டிலே!

    கரணம் போட்டிடக் கைவராக் காவியம்
    சரணம் கூவிடத் தன்வச மாகுமே
    திரண மாத்திரம் செப்பிடப் போதுமே
    மரணப் போதிலே வந்தருள் கூட்டுமே!

    ஐயன் பெருமை

    மோகி னிக்கொரு முத்தனாய் வாய்த்தவன்
    பாகம் தந்தவன் பாலனாய் ஆனவன்
    போகி பூரண புஷ்கலா நாயகன்
    யோகி ஆனவன் ஓங்கெழில் ஐயனே!

    நீதி காக்கிற நேர்மை யுடையவன்
    சாதி பேதங்கள் தாண்டிய சத்தியன்
    சோதி யாகிடும் சுந்தரன் சூக்குமன்
    ஆதி யானவன் அற்புதன் காந்தனே!

    ஊர்ப்பு றங்களில் ஓங்கருள் செய்பவன்
    கார்க்கு லங்களைக் கட்டியே மேய்ப்பவன்
    பேர்ப டைத்தவன் பிள்ளையாய் வந்தவன்
    சேர்த்தி டுங்கரச் செண்டலங் காரனே!

    சபரி மாமலை தங்கி யருள்பவன்
    அபயம் நல்கிடும் அண்ணல ருந்தவன்
    இபத்தி லூர்பவன் என்றுமி ளையவன்
    சுபங்கொ டுத்திடும் தூமணி கண்டனே!

    பாண்டி நாட்டிலே பையனாய் வந்தவன்
    வேண்டிச் செந்தமிழ் வித்தகம் கொண்டவன்
    ஆண்ட வன்மகன் ஆரியங் காவினன்
    யாண்டும் உள்ளவன் ஐயனைப் போற்றுவோம்

    இலந்தை யூரன் இராமனின் பேருளோன்
    நலந்தி கழ்ந்திட நாயகன் ஐயனின்
    வலந்தி கழ்ந்திடு மாத்தமிழ்க் காவியம்
    சிலந்தி நெய்வதைத் தேர்ந்திவண் செய்வதே!

    பின் குறிப்பு: ஒரு காவியத்தின் பாயிரத்தில் யார் எழுதச்சொன்னது, யார் எழுதியது என்பதைக் கவிஞனோ வேறு பிறரோ சொல்லலாம். எழுதப்போகும் தெய்வத்தின் தன்மையையும் கோடிட்டுக் காட்டியும் எழுதலாம். கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் அவற்றுள் அடக்கம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    56. கொடுங்கோன்மை

    குறள் 551:

    கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
    டல்லவை செய்தொழுகும் வேந்து

    நாட்டு மக்களத் துன்புறுத்துத ராசா கொல செய்யுதவனக் காட்டிலும் கொடுமக்காரன்

    குறள் 552:

    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு

    ஆட்சி நடத்துத ராசா அதிகாரத்த ஒபயோகிச்சு மக்கள்கிட்ட பொருள் கேக்குதது, வழிப்பறி கொள்ளக்காரன் கொள்ளையடிக்கதுக்காவ மிரட்டுததுக்கு சமானம்.

    குறள் 553:

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்

    தெனைக்கும் நாட்டுல நடக்குதத அறிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிடாத ராசா பைய பைய தன் நாட்ட இழந்துகிட்டே வருவான்.

    குறள் 554:

    கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு

    நாட்டு நெலமயத் தெரிஞ்சுக்கிடாம கூறுகெட்டு நாட்ட ஆளுத ராசாவவிட்டு செல்வமும் , குடிமக்களும் சேந்தாப்ல வெலகிப் போயிடுவாக.

    குறள் 555:

    அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை

    தப்பான ஆட்சிமொறையால நொந்து போயி மக்கள் உடுத கண்ணீர் தான் ஒரு ராசாவோட செல்வத்த அழிக்குத ஆயுதம்.

    குறள் 556:

    மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி

    ராசாவோட புகழ் நெலச்சி நிக்கதுக்குக் காரணம் அவரோட நேர்மையான ஆட்சி.  அது இல்லன்னா புகழ் இல்லாமப் போவும்.

    குறள் 557:

    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு

    மழை இல்லாமப் போவுச்சுன்னா எங்ஙன சங்கடத்த அனுபவிப்பாகளோ அங்ஙன நேர்மையில்லாத ஆட்சிலயும் அனுபவிப்பாக.

    குறள் 558:

    இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்

    மொற தவறி தப்பா ஆட்சி நடத்துதவனுக்கு கீழ ஏழையா வாழுதத விட பணக்காரனா வாழுதது ரொம்ப சங்கடமான விசயம்.

    குறள் 559:

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்

    ராசா மொற தப்பி ஆட்சி செஞ்சாம்னா அந்த நாட்டுல பருவம் தப்பி மழை பெய்யாமலே போவும்.

    குறள் 560:

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்

    நாட்டக் காக்க வேண்டியவன் மொறப்படி காக்கலேன்னா பசு மாடு பால் கொடுக்காது. ஞானிங்க அவுக படிச்ச அறநூல்கள அயத்து (மறந்து)  போவாக

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • அப்பாவின் வாசனை

    அப்பாவின் வாசனை

    -பாஸ்கர் சேஷாத்ரி 

    கொஞ்ச நாட்களாக என் தந்தையின் நினைவு என்னை வாட்டுகிறது. அவர் அமர்ந்த இடம், ஒட்டிய சைக்கிள், வெற்றிலை பாக்கு பெட்டி, அதில் பொறிக்கப்பட்ட ”சேஷாத்ரிநாதன்” என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

    அவர் ஃபோனை எடுத்துச் சொல்லும் குட் மார்னிங்கில் அவ்வளவு கனிவு. உறவுகள் தொலைவதற்கு இடைவெளி வருவதற்கும் முக்கிய காரணம் தன்னைத் தனிமைபடுத்திக் கொள்ளல். தனி உலகமாகப் போதல்தான். தன்னைச் சுற்றி உலகத்தை வைத்துக் கொண்டு தான் பார்ப்பதுதான் உலகம் என்றால் எந்த உறவு நிற்கும்?

    பரபரவென இருந்த வாழ்க்கையில் பத்து நிமிடங்கள் அமர்ந்து பேசியிருக்கலாம். அல்லது ஏதாவது நிகழ்வைப் பற்றி சம்பாஷனை செய்து இருக்கலாம். ஓடி போய், தன் உலகம் காண விழைந்த எனக்குப் பின்னர்தான் இழப்பு புரிந்தது. கெட்ட பின்பு ஞானி என்பது போல.

    அவர் விரல் பிடித்து அழைத்து போன பள்ளிக்கூடங்கள் அப்படியே இருக்கின்றன. அட்டை போட்டு ஒட்டித் தரும் லாகவம், அந்தப் புத்தக வாசனை, அந்தக் கோந்தின் பிடிப்பு. அதில் லேபிளை ஒட்டிக் கூர்ப்பாய் எழுதித் தந்த ஸ்டைலான ஆங்கிலம். அடடா. எந்தப் பையனும் என் புத்தகத்தை மட்டும் கிழிக்க மாட்டான்.

    ஒரு கடையில் இன்று மாலை சென்ட் ரப்பர் கேட்ட ஒரு பையனைப் பார்த்தபோது, நான் அழிப்பதற்காகவே தப்பாய் எழுதி அந்த மணத்தை முகர்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த ரப்பரைப் போல என் அப்பாவும் தேய்ந்து கரைந்து போனார். சென்ட் வாசனை போய்விட்டது. என் அப்பாவின் வாசனை என் சொத்து. என் மனம் நினைத்தால் அதனைக் கொண்டுவரும் லாகவம் தெரிந்து வைத்து இருக்கிறது.

    இப்போது என் முகமும் மாறிக்கொண்டு இருக்கிறது. பாதி அப்பா முகம். குரலும் அப்படி அந்த கோரோஜனை சக்தி. நான் அவராகி விட்டேன். இது எரிமலை போல. என்று வெடிக்கும் எனத் தெரியாது. ஆனால் இந்த உணர்வு தூண்டி வாழச் செய்கிறது ஆயுள் நேரத்தை மொத்தமாய் இழுத்துக் கரைத்துக்கொள்ள முடியுமா….?.

    ஒரு வேண்டுகோள்- . அப்பாவின் சுண்டு விரலை விட்டுவிடாதீர்கள்.

    Share
  • புகுஷிமாவில் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் நீக்கப்பட்டன

    புகுஷிமாவில் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் நீக்கப்பட்டன

    புகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன

    –சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    [ கட்டுரை – 3 ]

    +++++++++++++++++

    1. https://youtu.be/-pZVPux-bzs
    2. https://youtu.be/6ae4GZ9t6Vs
    3. https://youtu.be/c_gVEZi_xSc
    4. https://www.fairewinds.org/nuclear-energy-education/new-tepco-report-shows-damage-unit-3-fuel-pool-much-worse-unit-4

    முதன்முதல் யூனிட் -3 இன் கதிரியக்க அணு உலை எரிக்கோல்கள் நீக்கப் பட்டன.

    1. https://gizmodo.com/nuclear-fuel-rod-removed-from-stricken-fukushima-reactor-1834048278  [April 15, 2019]

    2019 ஏப்ரல் 15 டெப்கோ [TEPCO]  [Tokyo Electric Power Company] பொறியியல் நுணுக்கவாதிகள் முதன்முதல் தூர இயக்குச் சாதனங்களைப் பயன்படுத்தி புகுஷிமாவின் சிதைந்த யூனிட் -3 அணு உலைத் தடாகத்தில் உள்ள  தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்களை  எடுத்து அப்புறப்படுத்த ஆரம்பித்தார்.  அந்த சேமிப்புத் தடாகத்தில் இருந்த எரிக்கோல்க/ள் : 566.  அனைத்து எரிக்கோல்களை நீக்க 2021 மார்ச்சு இறுதிவரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அடுத்துச் சிதைந்த யூனிட் 1 & 2 கதிரியக்க எரிக்கோல்களை 2023 ஆண்டில் நீக்க, டெப்கோ திட்ட மிட்டுள்ளது.  ஜப்பான் அரசாங்கம் அனைத்து கதிரியக்கக் கழிவுகளை நீக்கி, நிலத்தைத் துப்புரவாக்கி, புகுஷிமா தளத்தை சீக்கிரம் மீட்டுவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.   அதற்கு  இரு ஆதாரங்கள் : 1945 இல் அணு குண்டுகள் தாக்கி நாசமான பிறகு, தற்போது புதுப்பிக்கப்பட்டு மக்கள் நடமாடி வசிக்கும் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள்.

    ++++++++++++++

     

     

     

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை:

    2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் வழியே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் பல தகர்ந்து போயின.  சுமார் 18,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் சிதைந்த நான்கில் மூன்று அணுமின் உலை களின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, உருகி, இறுகிப் பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் பல அணுமின் உலைகள் நிறுத்த மாகி 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    கடல் உப்புநீர் கரையேறி, கவசச் சுவர் தாண்டினும் அணு உலைக் கட்டடம் தப்பி, டர்பைன் கட்டடங்கள் உள்ளே புகுந்து விட்டது.  நிறுத்தமான யூனிட் 1, 2, 3 மூன்றிலும்  பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீரின்றி, அணு உலையில் உள்ள எரிக்கோல் கள் கனல்மீறி உருகிப் போயின.   நிறுத்தமாகி இருந்த யூனிட் -4 வெடிப்பில்  சிதைவானது.  யூனிட்  4, 5, 6 மூன்றிலும் அணு உலை எரிக்கோல்கள்  உருகவில்லை.  2014 டிசம்பரில் யூனிட் -4  சேமிப்புத் தடாகத்தில் இருந்த தீய்ந்த யுரேனிய எரிக்கோல்கள் [1535]  நீக்கப்பட்டன.

    உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங் கள் தேவைப்படு கின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    கட்டுரை ஆசிரியர்

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1.  புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.

    Country

    IN OPERATION

    UNDER CONSTRUCTION

    Number

    Electr. net output
    MW

    Number

    Electr. net output
    MW
    Argentina

    3

    1.632

    1

    25

    Armenia

    1

    375

    –

    –

    Belarus
    –
    –

    2

    2.218

    Belgium

    7

    5.913

    –

    –

    Brazil

    2

    1.884

    1

    1.245

    Bulgaria

    2

    1.926

    –

    –

    Canada

    19

    13.524

    –

    –

    China

    36

    31.402

    20

    20.500

    Czech Republic

    6

    3.930

    –

    –

    Finland

    4

    2.752

    1

    1.600

    France

    58

    63.130

    1

    1.630

    Germany

    8

    10.799

    –

    –

    Hungary

    4

    1.889

    –

    –

    India

    22

    6.225

    5

    2.990

    Iran

    1

    915

    –

    –

    Japan

    43

    40.290

    <td style=”border-width:1px 0px 0px;border-top-style:s

    Nuclear power plants world-wide, in operation and under construction, IAEA as of 27 November 2016

    அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

    புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப் பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகுஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.   எதிர்காலத்தில் கட்டப்படும் அணுமின் உலைகள் கட்டுவதற்கு IAEA, WANO, அரசாங்கம் கடுமை யான விதி முறைகளை அறிவிக்கும்.  அதனால் உலகில் புதிய அணுமின் நிலையங்கள் நிறுவி இயக்க நெடுங்காலம் ஆகலாம்.  பெரும் நிதிச் செலவு நேரிடலாம்.

    +++++++++++++++++++++++++

     

    1. https://youtu.be/CPeN7GhTpz4
    2. https://www.thegreenage.co.uk/cos/nuclear-power-in-france/
    3. https://youtu.be/4YgmCu7dfS4
    4. https://www.dw.com/en/france-sticking-with-nuclear-power/av-38397323
    5. https://www.businessinsider.com/countries-generating-the-most-nuclear-energy-2014-3
    6. https://www.youtube.com/watch?v=TZV2HRKNvao
    7. https://www.youtube.com/watch?v=HMrQJoN-Ks4
    8. https://www.youtube.com/watch?v=kr4mFLws3BM
    9. https://www.youtube.com/watch?v=YfulqRdDbsg
    10. https://www.youtube.com/watch?v=Hn-P3qnlB10
    11. https://en.wikipedia.org/wiki/Fukushima_Daiichi_units_4,_5_and_6
    12. https://www.theguardian.com/world/2019/apr/15/fukushima-removal-of-nuclear-fuel-rods-from-damaged-reactor-begins
    13. https://learningenglish.voanews.com/a/fukushima-plant-begins-removing-fuel-from-melted-reactor/4876487.html
    14. https://daily.jstor.org/how-to-clean-up-after-a-nuclear-disaster/
    15. http://world-nuclear-news.org/Articles/IAEA-reports-on-progress-at-Fukushima-Daiichi
    16. https://www.cnet.com/features/for-fukushimas-nuclear-disaster-robots-offer-a-sliver-of-hope/

    Share
  • படக்கவிதைப் போட்டி 216-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 216-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பார்வையாளரை ஆர்வத்தோடு உற்றுநோக்கும் இந்த அழகிய ஓணானைத் தன் படப்பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வந்தவர் ராமலக்ஷ்மி. இந்தப் படத்தை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 216க்கு அளித்தவர் சாந்தி மாரியப்பன். மங்கையர் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த கைகூப்பு!

    இன்று நாம் ஓணான் என்று குறிப்பிடுவதை அன்று ’ஓந்தி’ என்று குறித்திருக்கின்றனர் நம் மக்கள். பின்வரும் குறுந்தொகைப் பாடலில் அது இடைக்குறையாக ’ஓதி’ என்று வந்திருப்பதைக் காணலாம்.

    ”வேதின வெரிநின் ஓதி முதுபோத்து
      ஆறுசெல் மாக்கள் புள்கொள பொருந்தும்… “ (குறுந் 140:1-2)

    கருக்கரிவாளைப் போன்ற முதுகைக் கொண்ட ஆண் ஓந்தியை (ஓணான்) காண்பதை ஒரு சகுனமாக (நிமித்தம்) நினைத்திருந்தார்கள் அன்றைய வழிப்போக்கர்கள் என்பதை இப்பாடல்வழி அறிகிறோம். ஓந்தி வலப்புறம் தென்பட்டால் வழிப்பயணம் நன்றாகும் என்ற மக்கள் நம்பிக்கையை ’அறப்பளீசுர சதகம்’ என்ற நூல் அறியத்தருகின்றது.

    இனி, ஓணான்மீது பண்பாட நம் பாவலர்களை அன்போடு அழைக்கிறேன்.

    *****

    ”வேலிக்கு ஓணான் சாட்சியா?” என்று மானுடம் தன்மீது மகத்தான பழி சுமத்தியதுகண்டு வருந்திய ஓணான் ஒன்று, அந்தச் சொலவடையின் உண்மைப்பொருளை உலகறிய உரைப்பதனைச் சுவையான பாடலாக்கியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    ஓணானின் மனக்குறை..

    வேலிக்கு ஓணான் சாட்சியாவென்று..
    வேலையற்ற வீணர் சொல்லக்கேட்டு..
    ஓட்டமாய் ஓடி வந்தேன்..
    ஓருண்மை உரைக்க வந்தேன்..!!

    நில அளவை இல்லாத ஓர் காலம்..
    நிலவுலகில் வாய்மையே வாழ்ந்த காலம்..
    அருகருகே அமைந்த நிலங்கள்..
    அதனதன் உரிமையாளர் தம்முள்..
    இருந்தது தீராத வழக்கொன்று..
    இடம்பெயர்த்து நட்டான் கல்லையென்று..

    இவ்வழக்கு வந்தது வழக்காடு மன்றத்திற்கு..
    இசைந்தான் தலைவன் இறுதியாயொரு தீர்ப்புரைக்க..
    சாட்சியெனப் பொய்யுரைக்க வந்தான் ஒருவன்..
    சற்றே சொல்லிடு கல்நட்டது நீயாவென்று..
    உரக்கக்கேட்டான் தலைவன்.. உளறினான் பொய்யன்..
    உண்மையில் நானில்லை.. உண்மையில் நானில்லை..

    வேலிக்கு ஊன்றான் சாட்சி செல்லாது..
    வெளியேறு உடனே அவன் நிலத்தைவிட்டு..
    உத்தமன் இவனே.. தீர்ப்பளித்தான் தலைவன்..
    ஊன்றானை ஓணானாக்கியது உள்ளபடியே சரிதானா..?
    உணர்ந்திடுவீர் உண்மைப்பொருள்.. தவிர்த்திடுவீர் உளறல்களை..

    குறிப்பு:- ஊன்றான் – ஊன்றாதவன்(எல்லைக் கல்லை)
    பேச்சு வழக்கில் மருவி ஊனான் ஆகிப் பின்னர் ஓணான் ஆனது.

    *****

    ”வேலிகளெல்லாம் மதிலாகிப் போய்விட்டபடியால் இனி ஓணான்கள் தேவையில்லை பொய்சாட்சி சொல்வதற்கு! மனிதர்களே போதும் அத்திருப்பணிக்கு!” என்று வெகுண்டுரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனே…

    வேலி யெல்லாம் மதிலாகி
    வேற்றுமை மனிதரில் நிலைத்ததாலே
    காலி பண்ணின ஓணான்கள்
    காட்டுப் பக்கம் நோக்கியேதான்,
    வேலி யதற்குச் சாட்சிசொல்ல
    வேண்டாம் இனிமேல் ஓணானே,
    நாலும் தெரிந்ததாய் மனிதர்களே
    நன்றாய்ச் சொல்கிறார் பொய்ச்சாட்சியே…!

    ஓணானை வைத்துச் சில உண்மைகளை விண்டுரைத்திருக்கும் நற்கவிகளுக்கு நவில்கிறேன் பாராட்டு!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    பதின் பருவப் பள்ளியாய்ப் போன
    முள் மரங்களின் குத்தகைதாரர் நீ
    ஆடுகளின் ஓய்விடங்கள்
    கவட்டையோடு உன்னை அடிக்க
    அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்!

    தலை தூக்கிச் சூரியனோடு நீ பேசும்
    உரையாடல் கேட்கக் காத்திருந்த மணித்துளிகள் பல!
    எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
    என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
    சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்!

    என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
    உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
    பேசிக் கொண்டே இருக்கிறார்கள்!

    நீ வாழ்ந்த இடமெல்லாம் வீடுகளாய்
    உன்னைப் பார்த்து ஆண்டுகள் பல…
    எங்களைப் போல வாழ்வாதாரம் தேடி
    எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பாய் என்ற
    நம்பிக்கையில் உனது நினைவுகளோடு பூமியில்
    உனக்குப் பின் பிறந்த ஒரு விலங்கு!

    ஓணான்களுடனான தன் கடந்தகால உறவை, கவட்டைக் கல்லால் அவற்றை அடித்துக் கொன்றதால் வரும் தீக்கனவுகளை, விலங்குகளினும் கீழ்ப்பட்ட விலங்காய் மனிதன் மாறிவிட்ட அவலத்தை நேர்த்தியாய்த் தன் கவிதையில் வார்த்திருக்கும் முனைவர் ம. இராமச்சந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகிறேன்.

     

     

     

     

     

     

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் – ஆர்த்தி நிதி

    இந்த வார வல்லமையாளர் – ஆர்த்தி நிதி

    நாங்குநேரி வாசஸ்ரீ

    சுவீடன் நாட்டின் ஹெல்சின்பர் (Helsingborg) நகரில், 2019 ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெற்ற ஏழாவது உலக பவர்லிஃப்ட்டிங் போட்டியில் 63 கிலோ எடைப் பிரிவில் ஆர்த்தி நிதி, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங், மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Dead lift) ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையைத் தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

    ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற தொடரில், 20-22 வயதுக்கு உட்பட்ட, 63 கிலோ எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி, வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த பவர்லிஃப்ட்டிங் போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலகச் சாதனையோடு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

    அமெரிக்காவிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்த ஆர்த்தி, எப்படி கல்லூரிக்குச் சென்ற பிறகு பவர்லிஃப்ட்டிங் துறைக்குள் நுழைந்தார் என்று பிபிசி செய்தியாளரிடம் அவர் பேசியுள்ளார். “மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்ற நான், இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தியதால் உடல் எடை அதிகமானது. அதைத் தொடர்ந்து, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றேன்; உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றியமைத்து உடற்கட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு, பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த அறிவுரையின்படி, பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினேன்” என்று தனது பயணத்தின் தொடக்க காலத்தை விவரிக்கிறார்.

    தனது வெற்றியைக் குறித்து அவர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பவர்லிஃப்ட்டிங் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான், இவ்வளவு விரைவில், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டின் ஒலிம்பிக்காகக் கருதப்படும் இந்தத் தொடரில் அமெரிக்காவுக்காகப் பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுக் கால கனவை நிறைவேற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

    தான் ஒரு தமிழ்ப் பெண் எனப் பெருமை கொள்ளும் ஆர்த்தியின் தந்தை முனைவர் கருணாநிதி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தாயார் சாந்தி அம்மையார், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தத் தம்பதிகள், நம் தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் ஊட்டி வளர்த்துள்ளனர்.

    இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களை அவர்களது சொந்தக் குடும்பத்தினர், குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சமூகம் நினைப்பதைப் போன்று பெண்கள் வலுவற்றவர்கள் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தைச் செய்ய பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவளிக்க
    வேண்டும், நினைத்ததைச் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்று கூறும் ஆர்த்தி, பவர்லிஃப்ட்டிங் வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும் பணிபுரிகிறார்.

    தற்போது வரை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத பவர்லிஃப்ட்டிங், வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு என்கிறார் ஆர்த்தி.

    வீரத் தமிழ்ப் பெண் ஆர்த்தியை இந்த வாரத்தின் வல்லமையாளராக அறிவித்து மகிழ்கிறோம். அவரது சாதனைப் பயணம் தொடர, வல்லமை மின்னிதழ் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.

    நன்றி – பிபிசி

    Share
  • ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு

    ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு

    ANNOUNCING SPARROW LITERARY AWARD 2019
    (Instituted by R Thyagarajan, Founder, Sri Ram Groups)

    The SPARROW panel of judges (D I Aravindan, Ambai, Dr Charanjeet Kaur) took up the genre of poetry this year for consideration for the SPARROW-R THYAGARAJAN Literary Award 2019. Two awards are normally given for Tamil writers and one for a non-Tamil writer. In Tamil, one award is for acknowledging and honouring a writer who has been in the field for many years and another award is for a younger writer for literary work done in the recent past. The SPARROW-R Thyagarajan Literary Award 2019 for Tamil will go to Yuvan Chandrasekhar for his significant contribution to poetry and Geetha Sukumaran for the promising work she has done in the genre of poetry. This year for the non-Tamil award the language chosen was Punjabi. Simrat Gagan who has made a place for herself in Punjabi literature with the depth and sensitivity of her poetry, has been chosen for this award this year. The writers have honoured SPARROW and the panel by accepting the award. The award function will be sometime in the third week of December this year.

    ஸ்பாரோ இலக்கிய விருது 2019 அறிவிப்பு

    ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் இலக்கிய விருது தேர்வுக் குழு (டி. ஐ. அரவிந்தன், அம்பை, டாக்டர். சரஞ்சித் கௌர்) இந்த ஆண்டு கவிதை வகைமையைக் எடுத்துக்கொண்டது. தமிழில் இரு விருதுகளும் வேறு மொழிகளில் ஒரு விருதும் வழக்கமாக வழங்கப்படுகின்றன. தமிழில் ஒரு விருது இலக்கியத்துக்குப் பல ஆண்டுகளாகக் கணிசமானப் பங்களித்த ஓர் எழுத்தாளருக்கும் இன்னொரு விருது சிறப்பான எழுத்தை வழங்கியுள்ள இளம் எழுத்தாளருக்கும் என்று வழங்கப்படுகிறது. ஸ்பாரோ-ஆர். தியாகராஜன் விருது 2019 தமிழில் கவிதை வகைமைக்குச் சிறப்பைச் சேர்த்த யுவன் சந்திரசேகரின் பல்லாண்டுக் கவிதைப் பங்களிப்புக்கும் மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் கவிதை எழுதிவரும் கீதா சுகுமாரனுக்கும் வழங்கப்படுகின்றன. வேற்றுமொழி விருதுக்கு இந்த ஆண்டு பஞ்சாபி மொழி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆழமும் நுன்னுணர்வும் கூடிய கவிதைகளை எழுதி பஞ்சாபி மொழி இலக்கியத்தில் தனக்கென இடம் அமைத்துக்கொண்டிருக்கும் ஸிம்ரத் ககனுக்கு இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. அனைத்து எழுத்தாளர்களும் விருதுகளை ஏற்று ஸ்பாரோவையும் தேர்வுக் குழுவையும் கௌரவப்படுத்தியுள்ளார்கள். விருது விழா இந்த ஆண்டு டிசம்பர் மூன்றாம் வாரம் நடைபெறும்.

    Poems of Yuvan Chandrasekar
    யுவன் கவிதைகள்

    கொண்டுவந்த கடல்

    இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
    சென்ற முறை சிப்பி.
    அதற்கு முன்னால் சோழி
    பாலிதீன் பைகளில்
    செதில் கலந்த மணலும்,
    கரைக்கோயில் குங்குமமும்
    கொண்டு வந்ததுண்டு.
    ஒரு முறைகூட
    கடலின் பரிதவிப்பை
    பரிவை ஆறுதலை
    கொண்டு வர முடிந்ததில்லை.
    சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
    பாதியாகிச்
    செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

    The Sea That I Brought

    I got a conch this time
    Last time it was a shell.
    Before that it was a cowrie
    I have also brought in polythene bags
    Sand mixed with fish scales
    And vermillion powder of the shore temple
    Not a single time
    Have I been able to bring
    The desperation of the sea
    Nor its care or its comfort.
    The baby sea that I brought in a bottle
    Has half dried up and died
    In the cupboard.

    கிளியென்று சொன்னால்
    பறவையைக் குறிக்கலாம்
    பச்சையைக்
    குறிக்கலாம்.
    மூக்கைக் குறிக்கலாம்
    பெண்ணைக் குறிக்கலாம்
    கூண்டுச் சிறையைக் குறிக்கலாம்
    சமயத்தில் அது
    கிளியையும் குறிக்கலாம்

    When you say a parrot
    It may mean the bird
    Or the colour green
    Or the nose
    Or a woman
    Or a prison of a cage
    Sometimes
    It may even mean a parrot.

    Geetha Sukumaran’s Poem
    கீதா சுகுமாரனின் கவிதை

    பெண் மொழி

    மொழியைப் பதியவென்று
    மலைசூழ் இடமோ
    கடல்புறமோ
    ஒரு துளி வாட்காவோ
    சிலிர்க்குமிசையோ
    அல்லது
    குறைந்தபட்சம் ஒரு
    மேசை நாற்காலியோ
    எதுவுமில்லையென்றாலும்
    தெருவோரம் அழும் பிள்ளையில்
    விசிறி எறியப்பட்ட கிழங்கின் சதையில்
    கழிப்பறை சுத்தம் செய்யும்
    அமிலத்தில்
    அகாலத்தில்
    எங்கும் எதொனொடும்
    எதனையும் தகர்த்தெழும்
    சேறு பூசி உதிரம் நிறைத்து
    கொதிக்கும் உலை
    உலோகமும் வேரும் கல்லும் தோலும்
    மணத்து
    எல்லா நாவுகளையும்
    விழுங்கிப் பிளிரும்
    ஆதிகுகை முன்னோளின்
    ஓசை
    காதுகள் கூடத் தேவையிரா

    Women’s Language

    To inscribe a language
    Even if there is no
    place surrounded by mountains
    Seaside
    A drop of vodka
    Or at least
    a table or a chair
    In the child crying in the corner of the street
    In the flesh of the root thrown away
    In the acid used
    to clean toilets
    In time that is not bound
    Everywhere with anything
    It will rise
    Demolishing anything
    Smeared with slush and
    Filled with blood
    Water boiling in the pot
    Smell of metal, roots, stone and skin
    The sound of the scream of the
    ancestral woman of the caves
    that has swallowed all tongues
    You don’t even need to hear.

    Simrat Gagan’s Poem
    ஸிம்ரத் ககனின் கவிதை

    Maa jadon tere ander meri khushboo bhari si
    Sabh toh pehlen tu hi tan dari si
    Main sash hi tan lei rahi si
    Main saah hi tan laina chauhndi si
    Hauli hauli sirjana si main ik biggha jeha rishta
    Sun tan laindi Ikk var Apni channo di aahat
    Main tere pichhle janam di kamai saan
    Jo koi janman da safar tei karke teri kukhe aai saan
    Tuhadi tan marzi si majboori nahin si
    Do guddian lai ke main khedadi rehna si
    Tainu kamm ch rujhi nu vekhdi rehna si.

    My mother! When I filled your being with my fragrance,
    You were the first to feel frightened.
    I was simply breathing
    And I simply wanted to keep breathing.
    I had to create with you a warm relation,
    slowly and steadily.
    At least, you should have heard the sound
    of my footsteps.
    I was the fruit of your earlier lives that
    meandered its way into your womb
    Through several lives.
    It was your will, no coercion.
    I was but to keep playing with a pair of dolls
    And watch you engaged in your work.

    Translated by Sidhu Damdami

    அம்மா!
    உன்னை நான் என் நறுமணத்தால் நிரப்பிய போது
    பயந்துபோனது முதலில் நீதான்.
    நான் வெறும் மூச்சாகத்தான் இருந்தேன்
    என் பாட்டுக்கு மூச்சு விட்டபடி இருக்கத்தான் விரும்பினேன்
    உன்னுடன் ஒரு வெதுவெதுப்பான உறவை
    நிதானமாக, தொடர்ந்து கொள்ள விரும்பினேன்
    என் காலடி ஓசையையாவது நீ கேட்டிருக்க வேண்டாமா?
    உன் கடந்த சன்மங்களின் பலன் நான்
    பல சன்மங்களைக் கடந்து
    உன் கருப்பையைத் தேடி அலைந்து வந்தவள்
    உன் விருப்பம்தான் இது
    யாரும் உன்னை வற்புறுத்தவில்லை
    நீ வேலை செய்வதைப் பார்த்தபடி
    இரண்டு பொம்மைகளுடன் நான் விளையாடிக்கொண்டு இருந்திருப்பேனே?

    Share
  • சேக்கிழார் பா நயம் – 41

    சேக்கிழார் பா நயம் – 41

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    தில்லையம்பலத்தில் மெய்யுணர்வுக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அந்நகரில் அம்பலவனை வழிபட்டார். பின்னர், அங்கிருந்து கொள்ளிட ஆற்றினைக் கடந்து ‘’திருவாரூரில் எம்மைக் காண வருக’’ என்ற இறைவன் அருள்வாக்கினைச் சிந்தித்தவாறே திருவாரூர் எல்லைக்குச்சென்றார். திருவாரூர், திருக்கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய திருத்தலம் ஆகும். வந்தடைவோரின் மும்மலங்களையும் கழுவிக் களையும் தலம் ஆதலால் அப்பெயர்வந்தது. அங்கே திருஞான சம்பந்தப் பிள்ளையார் அவதாரம் செய்தருளினார். அவர் உமையம்மையின் திருமுலைப்பாலை அழுது பெற்றமையால் ‘பிள்ளையார்’ என்றுசிறப்பிக்கப்பெற்றார். இறைவனை அடையும் மார்க்கங்களாகிய சன்மார்க்கம் , தாசமார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம் என்ற நான்கனுள் ‘சற்புத்திர மார்க்கத்தை’ உடையவராய் மகன்மை நெறியில் இறையருளை இயல்பாகப் பெற்றவர் திருஞான சம்பந்தர் ஆவார் . அதனாலும் அவர் பிள்ளையார் என்று அழைக்கப்பெற்றார்

    சைவநெறியில் ஞானகுருவாக வழிகாட்டிய திருஞான சம்பந்தர் அவதரித்த திருத்தலம் ஆதலால் , இத்தலத்தின் புறத்தே நின்ற சுந்தரர், அத்திருவாரூரின் பெயர்களை சிந்தித்து , ‘’பிள்ளையார் திரு அவதாரம் செய்த ‘பெரும்புகலி’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற திருவாரூரின் உள்ளே காலை வைத்து மிதிக்க மாட்டேன்’’ என்று தம் சிறுமையையும், பிள்ளையாரின் பெருமையையும் எண்ணி , ஊருக்குள் புகாமல் எல்லையில் நின்று வலம் வந்தார்.

    முன்பு சூரபன்மன் ஆளுகையால், அஞ்சி இந்திரன் செய்த நந்தவனத்தைப் புகலிடமாகக் கொண்டு இந்திராணி முதலானோர் வாழ்ந்த ஊர், திருப்புகலி என்னும் திருவாரூராகும். அதுமட்டும் அல்ல, உலகின்மற்ற இடங்களை விடவும் பெரிய புகலிடம் ஆதலால் பெரும்புகலி எனப்பெற்றது. ஆதலால்,

    ‘’பிள்ளையார் திருஅவதா ரம்செய்த பெரும்புகலி
    உள்ளும் நான் மிதியேன்’’ என்று ஊர் எல்லைப் புறம் வணங்கி’’

    என்றுசேக்கிழார் பாடினார். பொதுவாக சிறந்த சான்றோர் தொடர்புடைய திருத்தலங்களின் எல்லையில் நின்று , உட்புகாமல் வணங்கிய பெருமக்கள் உள்ளனர். திருஞான சம்பந்தர் பாடிய திருவையாற்றுள் அப்பரடிகள் மிதியாமையும், காரைக்காலம்மையார் இறைவன்ஆட , தாம் அதனைக் கண்டு மகிழ்ந்த ‘’ திருவாலங்காட்டுள், திருஞானசம்பந்தரும் , சுந்தரரும் மிதியாமல் ஊரின் எல்லையில் , புறத்தே நின்று வழிபட்டதும் இங்கே நினைக்கப் படுவதாகும் . ஆதலால் சுந்தரரும் ‘’ஊர் எல்லைப் புறம் வணங்கி’’ச் சென்றார், என்று சேக்கிழார் பாடுகிறார் . அவ்வாறு அந்த திருத்தலத்தை வலமாக வந்து வழிபட்டார். அப்போது தம் இடப்பாகத்தில் உறையும் மங்கையாகிய பார்வதி யுடன், அழகிய இடப வாகனத்தில் அமர்ந்தருளும் சிவபிரான், மங்கைபாகராகக் காட்சிகொடுத்தார் .

    மங்கை இடங்கொள்ளு மால்விடையான் – என்றது நம்பிகளுக்குக் காட்டிய எதிர்காட்சியின் திருக்கோலத்தை யாகும் இவரே திருத்தோணியிலே பெரிய நாயகியாருடன் வீற்றிருக்கும் அம்மையப்பராம். திருஞானசம்பந்த சுவாமியினிடத்து வைத்த அன்பினாலே தலத்துட்புகாது நம்பிகள் வெளி நின்றாராதலின் அவரை ஆட்கொண்ட திருக்கோலமாகிய ‘’தோடுடைய செவியனாய் விடையேறி’’ நம்பிகளுக்கு எதிரே வந்து காட்சியருளினார் என்பது குறிப்பு. இதனால் சுந்தரர் முன்பு கைலையிலே கண்ட அம்மையப்பர் திருக்கோலத்தை பதிகமாகப்பாடினார். இனிஇப்பாடல் முழுவதையும் கற்றுணர்வோம்

    ‘’பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
    உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லைப் புறம் வணங்கி
    வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
    கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள.’’

    என்பது பாடல். இத்திருவாரூர் தன்னை அடைந்த மானிடரின் மும்மலங்களையும் நீக்கிக் கழுவும் தகுதி படைத்தது. ஆனால், பிள்ளையார் அவதரித்த இத்தலத்தின் உள்ளே சென்று தம் மலங்களைக் கழுவிக்கொள்ள மாட்டேன், என்று சுந்தரர் ஊர் எல்லையில் நின்ற எளிமை புலப்படுகிறது.

    எல்லைக்குள்ளேயும் அடி வைக்கமாட்டேன்.என்றார் சுந்தரர். தன்னுட் புகலுற்றாரைக் காக்குந் தன்மையுடையது இப்புகலியேயாயினும், அப்பேறு பெறாவிடினும் விடுக – பிள்ளையார் அவதரித்த தலத்தைமிதியேன் என்று துணிந்து நின்றமை நம்பிகள் பிள்ளையாரிடத்தே வைத்த பேரன்பின் உறைப்பினை விளக்குகின்றது.

    சுந்தரர் ஊருக்குள் வந்து தம்மை தரிசனம் செய்து மகிழும் முன்னர், சிவபிரான் தாமே எதிர்காட்சி நல்கிய திருவருட் சிறப்பையும் இப்பாடல் காட்டுகிறது.

    Share