Blog

  • குறுந்தொகை நறுந்தேன் – 17

    -மேகலா இராமமூர்த்தி

    மறுநாட் காலை தோழியும் தலைவியும் கண்விழித்துப் பார்த்தபோது வீட்டில் தலைவனைக் காணவில்லை. அதிர்ந்த அவர்கள் வீட்டுக்கு வெளியேவந்து பார்த்தனர். தலைவனின் தேரையும் காணவில்லை. தான் விரும்பியபடியே பொருள்தேடச் சென்றுவிட்டான் அவன் என்பதை அறிந்து இருவரும் ஏமாற்றத்தோடு வீட்டுக்குள் வந்தனர். அப்போது சாளரத்தின் ஓரமாய் ஓர் ஓலை நறுக்கைக் கண்டனர்.

    ”அன்புக் கண்மணி! பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை நீ அறியாதவள் அல்லள்! கார்காலம் வருவதற்குள் மீண்டிடுவேன் பொருளோடு! அருமைத் தோழி! இயலுமாயின் தலைவியொடு உறை; நான் திரும்பி வரும்வரை!” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

    தலைவனின் செயலறிந்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள் தலைவி.

    தன்னைத் தேற்றிக்கொள்ள அவள் எவ்வளவோ முயன்றும் அம்முயற்சியில் தோற்றுத்தான் போனாள். கணவனைப் பிரிந்த ஏக்கத்தால் அவள் தூக்கம் கெட்டது; துக்கம் தீயாய்ச் சுட்டது! கடத்தற்கரிய துன்ப வெள்ளத்தில் அவள் நீந்திக்கொண்டிருந்த வேளையில், அருமைத் தோழி அருகிருந்தது அவளுக்குப் பெரும் ஆறுதலளித்தது. அவளிடம் தன் வேதனையை மனந்திறந்து வெளிப்படுத்தலானாள்…

    “வைகல் வைகல் வைகவும் வாரார்
    எல்லா
    வெல்லை எல்லையுந் தோன்றார்
    யாண்டுளர்
    கொல்லோ தோழி யீண்டிவர்
    சொல்லிய
    பருவமோ விதுவே பல்லூழ்
    புன்புறப்
     பெடையொடு  பயிரி  யின்புற
    இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
    ஊனசைஇ  யொருபருந்  திருக்கும்
    வானுயர்
     பிறங்கன்  மலையிறந்  தோரே. (குறுந்: 285 – பூதத்தேவன்)

    ”தோழி! இனிய ஆண் புறாவானது  புல்லிய புறத்தை உடைய பெண் புறாவைப் பலமுறையழைத்து, pegeonsஇமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! அவை இங்ஙனம் மகிழ்ந்திருப்பவும், ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தோரது தசையை விரும்பி, ஒற்றைப் பருந்து இருக்கின்ற, வானளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற நம் தலைவர், நாள் தோறும் விடியற் காலம் நீங்கிப் பகல் வரவும் அப்பகல் காலத்தில் வந்திலர்; எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார்; எங்கே இருக்கின்றாரோ? இங்கே அவர் மீண்டு வருவேன் என்று சொல்லிய பருவம் இதுவே” என்றாள் வேதனையோடு.  

    தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் அண்மித்து விட்டதை எண்ணித் தலைவி கவன்று வேறுபட்டாள். அப்பொழுது தோழி, “தலைவர் விரைவில் மீண்டு வருவார்; நீ ஆற்றியிரு” என்று வற்புறுத்தினாள். அது கேட்ட தலைவி “ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் அவர் வரவை எதிர்பார்த்து நிற்கின்றேன். இரவு வந்தால் விடிந்தால் வருவர் என்று எண்ணுவேன்; ஆயினும் விடிந்த பின் அவர் வந்திலர்; அது கண்டு பகல் கழிந்தால் தோன்றுவர் என எண்ணுவேன்; அப்பொழுதும் வந்திலர்” என்று தன் ஆற்றாமையை இப்பாடலில் வெளிப்படுத்துகின்றாள். 

    சின்னாட்கள் சென்றன. கார்காலம் தொடங்கியது.

    கார் வந்துவிட்டது; தலைவனின் தேர் இன்னும் வரவில்லையே என்று வெதும்பிய தலைவியின் விழிகளில் நீர் திரண்டது. கொல்லைப்புறம் சென்றாள். அங்கே அவள் ஆசையாய் வளர்த்திருந்த முல்லைக்கொடி பூத்திருந்தது.

    தலைவி முல்லைப் பூவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதுகண்ட தோழி அவள் தோளைத் தொட்டாள். உடனே தலைவி, “பார்த்தாயாJasmine-Flower தோழி! இளமையின் அருமையை எண்ணிப்பாராமல், பொருளைவிரும்பி என்னைப் பிரிந்துசென்ற தலைவர் இன்னும் இவ்விடம் வந்து சேரவில்லை. எவ்விடத்து உள்ளாரோ… தெரியவில்லையே என்று நான் எண்ணியிருப்ப, நறிய தண்ணிய கார்காலமானது, மழையால் பாதுகாக்கப்பெற்ற பூங்கொடி முல்லையின் தொக்கமுகைகளையே தன் பற்களாகக் கொண்டு “உன் தலைவன் இன்னும் சொன்னபடி இல்லம் திரும்பவில்லையா?” என்று என்னைக் கேலிசெய்வதுபோல் நகைக்கிறது” என்றாள் நாத்தழுதழுக்க.

    இளமை  பாரார்  வளநசைஇச்  சென்றோர்
    இவணும்  வாரார்  எவண  ரோவெனப்
    பெயல்புறந்  தந்த  பூங்கொடி  முல்லைத்
    தொகுமுகை  இலங்கெயி  றாக
    நகுமே  தோழி  நறுந்தண்  காரே.    (குறுந்: 126 – ஒக்கூர் மாசாத்தியார்)

    இதே பொருள்பட வினைமுற்றி மீளும் தலைவன் முல்லைக்கொடியைக் காட்டிடையே கண்டு வினவும் பாடலொன்றும் குறுந்தொகை 162இல் காணக் கிடைக்கின்றது. தலைவன் தலைவி இருவருக்குமே முல்லையின் முகைகள் தமைப்பார்த்து நகைப்பதுபோலவே தோன்றுவது வியப்புக்குரிய உளவொற்றுமையே!

    கார்புறந்  தந்த  நீருடை  வியன்புலத்துப்
    பலர்புகு
     தரூஉம்  புல்லென்  மாலை
    முல்லை
     வாழியோ  முல்லை  நீநின்
    சிறுவெண்
     முகையின்  முறுவல்  கொண்டனை
    நகுவை
     போலக்  காட்டல்
    தகுமோ
     மற்றிது  தமியோர் மாட்டே.   (குறுந்: 162 – கருவூர்ப் பவுத்திரன்)

    ”…முகைவாய் திறந்த நகைவாய் முல்லை” எனும் (அகம்: 244) பாடல் அடியும் இங்கே ஒப்புநோக்கத் தக்கதே.

    கொல்லைப்புறம் அகன்று வாசல் திண்ணையில் வந்தமர்ந்தாள் தலைவி. அப்போது சடசடவென்ற சத்தத்துடன் கார்காலத் தலைப்பெயல் (முதல் மழை) தொடங்கியது.

    கானிடை நின்றிருந்த கவின் மயில்கள் வான்மழைக்கேற்பத் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்கின. வெளிப்புற நிகழ்வுகள் அனைத்துமே தலைவியின்  அகவாட்டத்தை அதிகப்படுத்திவருவதனைக் கண்டாள் தோழி. இனியும் வாளாவிருத்தல் முறையன்று என்று முடிவுசெய்தவளாய்,

    ”கண்ணே! சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சியிருந்த peacockபழைய நீரை, புதிய நீரைக் கொள்ளும் பொருட்டுச் சொரிகின்ற, அயன்மை உடைய மேகத்தினது ஓசையைக் கேட்டு, கரிய மயிற்கூட்டங்கள் கார்ப்பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி, அம் மழைக்கு எதிரே ஆடுதலைச் செய்தன; பிடாச்செடிகளும் மலர்ந்தன. அவை நம்மைப்போல் ஆறறிவு படைத்தவை அல்லவே. அதனால் இவ்வுண்மையை உணராத அறியாமை உடையன. இது மெய்யான கார்காலம் அன்று! ஆதலால் நீ கவலை ஒழி” என்றாள்.

    மடவ  வாழி  மஞ்ஞை  மாயினம்
    கால  மாரி  பெய்தென  அதனெதிர்
    ஆலலு  மாலின  பிடவும்  பூத்தன
    காரன்று இகுளை  தீர்கநின்  படரே
    கழிந்த  மாரிக்  கொழிந்த  பழநீர்
    புதுநீர்  கொளீஇய  வுகுத்தரும்
    நொதுமல்  வானத்து  முழங்குகுரல்  கேட்டே (குறுந்: 251 – இடைக்காடனார்)

    இஃது உண்மையான கார்காலந்தான் என்பது தோழிக்கும் தெரியும். எனினும் தலைவியின் மனத்துக்குச் சமாதானம் தரும்வகையில் ஏதேனும் உரைத்து, அவள் துயரைச் சிறுபொழுதேனும் ஆற்றக்கூடுமானால் நன்றாயிருக்குமே எனும் அவளின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடே இப்பொய்யுரை.

    இதனைப் பொய்யுரை என்று கூறுவதுகூடப் பொருத்தமானதன்று.

    ஆம்,
    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனின்.
    (குறள்: 292) என்று பொய்யில் புலவரே கூறியிருக்க, தலைவியின் நன்மை கருதித் தோழியுரைத்த பொய்யை ’வாய்மை’ என்றே நாமும் நவில்வோம்.

    தோழியின் சாதுரியமொழி கேட்ட தலைவி அவள் கரத்தைப் பற்றி மீண்டும் கொல்லைப்புறம் அழைத்துப் போனாள். அங்கே கொன்றையும் குருந்தும் அரும்பு கட்டியிருப்பதைத் தோழிக்குச் சுட்டிக்காட்டி,

    ”செல்வர்வீட்டுச் சிறு பிள்ளைகளுடைய சிறிய அடியின்கண் விளங்கும் தவளையின் வாய்போன்ற வாயுடைய பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசையொத்த பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றையும் குருந்தும் (காற்றில்) சுழலும், மிக்க தண்மையையுடைய பருவத்தையும் கார் காலமன்று என்று நீ கூறுவாயாயின் பின் இங்ஙனம் தோன்றுவது கனவோ என்று யான் உன்னைக் கேட்பேன்…பதில் கூறுவாயாக” என்றாள்.

    செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
    தவளை
    வாய பொலஞ்செய் கிண்கிணிக்
    காசி
    னன்ன போதீன் கொன்றை
    குருந்தோ
    டலம்வரும் பெருந்தண் காலையும்
    காரன்
    றென்றி யாயிற்
    கனவோ
    மற்றிது வினவுவல் யானே.  (குறுந்: 148 – இளங்கீரந்தையார்)

    தன் சாதுரியம் தலைவியிடம் எடுபடாமல் போனதை அறிந்து பேச்சிழந்து நின்றாள் தோழி.

    [தொடரும்]

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -14

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருதலைச்சங்க நாண்மதியம்

    அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோவில்

     

    OLYMPUS DIGITAL CAMERA

    நல்லதே நடக்கும் நாரணன் நினைப்பால்

    நன்மையைப் பெருக்கிடும் நாண்மதியனே !

    நலங்கிட்ட நங்கை நாச்சியார் துணைவன்

    நாமங்கள் ஆயிரம் கொண்ட நாதமூலனே !

     

    பேதங்கள் இல்லாப் பாற்கடல் மன்னன்

    சேதங்கள் இல்லாச் சிந்தையைத் தருவான்

    வேடங்கள் போடும் வேடிக்கை வாடிக்கை

    வேதங்கள் போற்றும் வைகுந்த நாயகன் !

     

    சந்திரன் சாபங்கள் சடுதியில் விலகிட

    சரணம் அடைந்தான் சாம்பனின் அருளால்

    சாபங்கள் நீக்கிச் சங்கடம் விலக்கிட

    சன்மதி பெற்றே வான்மதி வளர்ந்தான் !

     

    சங்கினைப் பரிசாய் சங்கரன் தந்திட

    அங்கத்தின் ஒளியில் அதுவும் சேரும்

    சமரினில் ஒலிக்கும் சங்கொலி கேட்ட

    அரக்கர்கள் வாழ்வோ விதையின்றி வீழும் !

     

    தலைச்சங்கப்  பெருமாள் தரணியைக் காக்க

    தலைமுதல் தாள்வரை போற்றியே நின்றால்

    அலைமகள் துணையுடன் அருள்தர வருவான்

    நிலமகள் கருணையும் தடையின்றிக் கிடைக்கும் !

     

    மலரும் மாலையும் கனிகளும் வேண்டாம்

    மாதவன் நினைப்பே  மனந்தனில் போதும்

    மாலையும் காலையும் மனதினில் நிறுத்த

    மார்கழி மணாளன் மனநலம் தருவான் !

    Share
  • பெட்டையும் முட்டையும்!

    மீனாட்சி பாலகணேஷ்

    முருகன் குறிஞ்சிமலையின் தலைவன்; அந்நிலத்துக்கு இறைவன். இருப்பினும் ஐவகை நிலங்களிலும் முருகப்பெருமான் செய்த விளையாடல்கள் பற்றிய அழகான பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்களில் நாம் கண்டுகளிக்கலாம்.

    முருகனின் திருவிளையாடலாகப் பாலைநிலத்தில் நடைபெற்ற ஒரு அழகான கதை!

    panpoli

    துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடவே மாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன் அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குறும்புக்காரக் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!

    சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.

    ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

    என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு

    மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

    கானவேள் முட்டைக்குங் காடு.’

    அதாவது கள்ளிச்செடியின் பொன்போன்ற நெருப்புப்பொறி பறக்கும் கானலாகிய சுரத்தே (பாலைநிலத்தே) தலைவனுடன் பேதைப்பெண் செல்ல விரும்பினாளே! அது எப்படிப்பட்ட பாலை நிலம் தெரியுமா? மின்னலைப் போன்ற ஒளிவீசும் வேலினை ஏந்திய முட்டை என்பவனுடைய பகைவர் அவனிடம் தோற்றோடுகின்றனர். அங்ஙனம் ஓடும்போது காட்டிலுள்ள கருவேலமரத்து முட்கள் அவர்கள் பாதங்களில் குத்தி வருத்தும் தகைமைத்தது இக்காடு என்பது பொருள்.

    Poyyamozhi-pulavar-_-murugan-Encounter

    வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) ‘இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ?’ என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.

    “நான் பாடுகிறேன், நீர் கேளும்,” எனப் பாடலானான் சிறுவன்:

    ‘விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

    எழுந்த சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங் கொண்டல்

    பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

    பொய்யா மொழிப் பகைஞர் போல்.’

    ‘மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளியானது தரையை அடையும் முன்பே பாலைவனத்தின் வெம்மையால் ஆகாயத்திலேயே வெந்து ஆவியாகிவிடும்; அம்மேகம் தாழச் சென்றாலோ பாலையினின்று எழும் வெப்பம்- நெருப்பு- தன்னைச் சுட்டுவிடும் என்றும் ஏக்கம்கொண்டு மேகம் ஒருகாலத்திலும் மழைபொழியாது: அத்தகைய கொடிய பாலைவனக் காட்டினிலே கையில் வளையலணிந்த பெண் தனது தலைவனுடன் சென்றாளே! அது பொய்யாமொழிப் புலவர் எனும் பகைவரின் செயல் போலுள்ளதே!’ எனப்பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்து மறைந்தான் வேடச்சிறுவனாக வந்த முருகப்பிரான்.

    14512160555_9aaac54115_b

    வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    ‘எனது பெயர் முட்டையெனப் பாடும்,’ என்று சிறுவன் கூறியபோதிலும் கருத்துணராத புலவர் ‘பொன்போலும்,’ எனப்பாடினார். “இது வெம்மையான பாலைநிலத்திற்குப் பொருந்தாது. உம்பெயர் என்னவென்று கூறும்,” எனக்கேட்டு ‘விழுந்ததுளி’ என அவர்மீது ஒரு பாடலைப் பாடிய முருகனே! அதுகேட்டு ஐயமுற்ற புலவர் ‘நீ யார் அப்பா?’ என வினவ, உன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் உன் வேல்கொண்டு பொறித்து மறைந்த முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.

    ‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்

    புரக்கவெழு நாள்மறவனாய்

    புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்

    பொன்போலு மென்றுபாட

    வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி

    ளம்பென…’

    (திருவிரிஞ்சை முருகன் பி. த.- சப்பாணிப்பருவம்- வரகவி மார்க்க சகாய தேவர்)

    இதே கருத்தினை கவிராச பண்டாரத்தையா அவர்களும் தாமியற்றியுள்ள திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் சிறுபறைப்பருவப் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளது வியப்பினையளிக்கின்றது.

    ‘மக்கள் நடமாட்டமற்ற சுரமாகிய பாலை நிலத்தில் பொய்யாமொழிப்புலவருக்கு முன்பு தோன்றி அவர்பாடிய பாடலில் குற்றங்கண்டு பின்பு நீயொரு செழுங்கவிதை பாடினாய்!’ என்கிறார் பண்டாரத்தையா. அத்தகைய முருகனை, மறைகள் முழங்கும் திருமலையிலுறைபவனைச் சிறுபறைகொட்ட வேண்டுகிறார்.

    மருவாத பாலையில் பொய்யா மொழிக்குமுன்

    வந்தொரு செழுங்கவி தையு

    ………………………………………………

    செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர

    சிறுபறை முழக்கியருளே.

    (திருமலை முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- கவிராச பண்டாரத்தையா)

    எத்தனை விதமான நயங்கள்! அழகுகள்; கற்பனைகள். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் நற்றமிழின் இனிய வளங்களைக் காட்டி மகிழ்விக்கும் இலக்கியச் சுரங்கங்கள் அல்லவோ?

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,

    தமிழ்த்துறைத் தலைவர்,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

    கோயம்புத்தூர்- 21.}

    ************

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(258)

    அன்பினியவர்களே!

    அன்பினிய வணக்கங்கள். 2017ஆம் ஆண்டின் இறுதி மடலில் உங்களிடையே வந்து விழுகின்றேன். ஆம், அடுத்த எனது மடல் வரும்போது நீங்களனைவரும் 2018ஆம் ஆண்டின் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பீர்கள். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இதோ இவ்வருடத்தின் முடிவில் வந்து நிற்கிறோம். தைவ்வருடத்தின் முன்றிலில் நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ விதமான வித்தியாசமான அனுபவங்களினூடாக ஊர்ந்து வந்திருக்கிறோம். அடுத்த ஆண்டினுள் நாம் நுழையும்போது எமது அகவையில் மட்டுமல்ல எமது அனுபவத்திலும் நாம் முதிர்வடைந்தவர்களாகின்றோம்.

    கடந்து கொண்டு முடிவில் வந்துநிற்கும் இந்த ஆண்டில் நாம் பெற்றவை பல. இழந்தவை பல. பொருளையிழந்திருக்கிறோம், உறவுகளை இழந்திருக்கிறோம், நட்புகளை இழந்திருக்கிறோம் அதேபோல உறவுகளைப் பெற்றிருக்கிறோம், பொருளீட்டி இருக்கிறோம். ஆம் வரவும், செலவும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள். வரவில் மகிழ்வதும், செலவில் அழுவதும் மனிதவாழ்வின் இயற்கை நியதி. 2000 எனும் மைல்கல்லைத் தொட்டு இப்போது 17 வருடங்கள் ஓடி முடிந்துவிட்டன. ஓடியதில் வருடங்கள் களைத்து விட்டனவா? இல்லையே! ஒவ்வொரு வருடமும் ஒரு புது மலரைப் போல பல வர்ணங்களைத் தன்னுள் அடக்கிய வண்ணம் மலர்கின்றது. அவற்றினுள் நாம் அறிந்திடாத, இனிமேல் அறியப் போகும் பல புதுமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. அவை காலம் கனியும் போது எம்முன்னே மலர்ந்து விரிகின்றன. அதேபோல பல துயர்தரும் நிகழ்வுகளையும் அது தன்னுள் வைத்துக் கொண்டுதான் மலர்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் வாழ்வை நாம் மகிழ்ச்சிகரமாக புதுவருடத்தில் தொடங்க வேண்டுமேயானால் நேரிய நம்பிக்கைகளை எதிர்நோக்கியே புது ஆண்டினுள் பிரவேசிக்க வேண்டும்.

    எத்தனையோ விதமான மனிதர்களையும், பல்வேறு கலாசாரங்களையும் கொண்டுள்ள இப்பூகோள உருண்டை எப்போதும் போலத்தான் உருண்டு கொண்டிருக்கிறது. அதனுள் வாழும் நாம்மட்டும் எமது உணர்வுகளின் மாற்றம்தரும் தாக்கத்தினால் எமக்குள்ளே பல பேதங்களை வளர்த்து எம்மை நாமே துயருக்குள்ளாக்குக்கிறோம். ஆணவம், அகங்காரம், மமதை எனும் அதீத குணங்களை ஏனோ அதிக வேகத்துடன் வளர்த்துக் கொள்கிறோம்.

    இருப்பவர், இல்லாதவர் எனும் பேதத்தின் அடிப்படையில் எமது வாழ்வின் தராதரங்களை நிர்ணயித்துக் கொள்கிறோம். போகும் பாதை வெவ்வேறாயினும் நாம் போகுமிடம் ஒன்றுதான் என்பதை நினைவிற் கொள்ள மறந்துவிடுகிறோம். நாம் விரைந்து அவசரமாக ஓடுவது எமது வாழ்வின் முடிவு எனும் கரையைத் தொடவே என்பதுவே உண்மை. ஆனால் அவ்வெல்லையைத் தேடிஓடும் பயணத்தில் சிலர் மாபெரும் செல்வந்தர்களாக, பலவிதமான வசதிகளுடன் பயணிக்கிறார்கள். பலர் பசியுடனும், தாகத்துடனும் வாழ்வின் அடிப்படை வசதிகளற்ற நிலையில் அப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வோட்டப் போட்டியில் வசதியற்ற சிலர் வசதியற்ற காரணத்தினால் விரைவாக எல்லையைத்தொட்டு வெற்றி கொள்கிறார்கள். ஆனால் அதை வெற்றியாக யாரும் பார்ப்பதில்லை. இதுவே வாழ்க்கையின் யதார்த்த நிலையாகிறது.

    சாதனைகள் எதுவுமின்றி, சோதனைகளைத் தாங்குவதை மட்டுமே சாதனையாக்கிக் கொண்ட பலர் ஒருவராலும் அறியப்படாமலே புதைக்கப்படுகிறார்கள். சரித்திரப் புத்தகத்தில் ஒருவரி கூட இவர்களைப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படுவதில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்வோடு தாம் தினமும் நடத்தும் போராட்டத்தைக் கைவிட்டு விடுகிறார்களா? அளவுக்கதிகமான செல்வத்தில் திளைத்துச் செய்வதறியாது மகிழ்ச்சி எனும் பெயரில் பணத்தைத் தண்ணீர்போல வாரியிறைக்கும் கூட்டம் ஒரு புறம், உயிரை உடலோடு தக்க வைத்துக் கொள்வதற்கு குடிப்பதற்கு இரு குவளை சுத்தமான நீர் கிடைக்காமல் கண்ணீரும் வறண்டு போன நிலையில் வாடும் கூட்டம் மறுபுறம். இவர்கள் இருவரையும் வைத்துப் பிழைப்புநடத்தி வாழ்வை ஓட்டு கூட்டம் இடையில் இவர்கள் அனைவரையும் தன்னோடு சுமந்து கொண்டுதான் 2017ஆம் ஆண்டு தன்னுடைய முடிவில் வந்து நிற்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கையில் தன் மடியில் கிடக்கும் அனைவரையும் 2018இன் மடியில் தள்ளிவிடக் காத்து நிற்கிறது.

    இவர்களுக்கெல்லாம் 2018 எவ்வகையில் விடியப் போகிறது என்பதனை ஒருவரும் வரையறுத்துக் கூற முடியாது. ஆயினும் வென்று விடுவோம் எனும் நம்பிக்கையில் தான் அனைவரும் அடுத்த வருடத்தினுள் கால் வைத்தாக வேண்டியிருக்கிறது. இருப்பவரோடு இல்லாதவர் சமதளத்தில் நின்றுதான் போராட வேண்டி இருக்கிறது. நம்பிக்கை இருக்குமட்டும் அனைவருக்கும் அடுத்த ஆண்டு ஆறுதலைக் கொண்டு வரட்டும் என்னும் பிரார்த்தனையோடு 2018இல் உங்களிடையே வருவேன்.

    அன்பினிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    உருண்டு போகுது
    வருடமொன்று
    உள்ளே அழைக்குது
    வருடமொன்று

    போனது தந்த
    ஏக்கத்தினால்
    போவதா? இல்லையா?
    என்றே தயங்கும்
    எளியோர் கூட்டமொன்று

    கண்டது எல்லாம்
    மகிழ்ச்சி என்றே
    கதவைத் தள்ளித்
    திறக்க முயலுது
    அடுத்தொரு கூட்டம்

    வந்ததும் போனதும்
    போதும் என்றே
    பந்தங்கள் அறுத்து
    விடுதலையான
    பிறவிகள் சில
    சிரிக்குது
    சிலரின் வெறுமையைக்
    கண்டே . . .

    புதிதாய்ப் பிறந்த
    மழலைகள்
    அறிவரோ . . .
    வருடங்கள் தம்முள்
    வைத்திருக்கும் விந்தைகளை?

    பிரியப் போகுது
    வருடமொன்று
    பிறக்கப் போகுது
    வருடமொன்று
    பிரியும் வருடத்தோடு
    பிரியட்டும் சோதனைகள்
    பிறக்கும் வருடத்தோடு
    பிறக்கட்டும் சாதனைகள்

    உள்ளத்தோடு
    உறைந்திட்ட என்
    உன்னத உறவுகளுக்கு
    உளமார ஊறிடும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கனவுகள் சிறக்கட்டும்
    காவியங்கள் மலரட்டும்
    வாழிய! வாழிய!
    மகிழ்வு நிறைந்திட வாழ்ந்திடுக!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • மலேசியாவில்  விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி

    -முனைவர் மு.இளங்கோவன்

    மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் SRI_5878வெளியீட்டு நிகழ்ச்சி 26.12.2017 மாலை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாசார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    SRI_5898மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவுநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    திரு. ம. மன்னர் மன்னன் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். SRI_5915தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். தான்ஸ்ரீ  குமரன் அவர்கள் ஆவணப்படதின் சிறப்பினைக் குறித்து உரையாறிறனார்.

    மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு.SRI_5928 நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர்SRI_5958 முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபுவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.

    *****

    இந்தியாவில் ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: muelangovan@gmail.com
    0091 9442029053

    Share
  • தூக்கும் பாவும்: சிறப்பும் பொதுவும்

    – முனைவர் ம.பிரபாகரன்

    யாப்பிலக்கண வரலாற்றில் முதன்முதலில் யாப்பருங்கல விருத்தியுரை, சங்கயாப்புடையார்,  செப்பலோசை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும் என்று கூறுவதாகக்  கூறுகிறது.  இது குறித்த சங்க யாப்பு சூத்திரங்களாவது:
                       “வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
                          ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் ” 

                           இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
                          தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர் ”     

                         வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
                         ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல் ”

     என்றார் சங்க யாப்புடையார். (பக். 227, யாப்பருங்கலம் விருத்தியுரையுடன், இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976)  இவ்விடத்தில்  ஓசை தொடர்பாகச் சில செய்திகள் விவாதிக்கப்படவேண்டியுள்ளது. இவ்விவாதமே இக்கட்டுரையின் பொருளாகிறது.  ஏந்திசைச் செப்பல் முதலான ஓசைகள் தளை அடிப்படையில் அமைந்தவை. இவ்வோசை குறித்த செய்திகளை யாப்பருங்கலம் தளை ஓத்தில் அமைக்காமல் செய்யுளியலில் எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு உரைவரைந்த யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் இந்த ஏந்திசை முதலான ஓசைகளைத் தளை ஓத்தில் சிறிதும்  குறிப்பிடாமல் செய்யுளியலில் வைத்தே விளக்குகிறார்.  எழுத்தோத்தில் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும்போது அமிதசாகரர், 

          ”எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
           இழுக்கா நடைய தியாப்பென மொழிப” (சூ.1)   என்று கூறுவார்.  இச்சூத்திரத்தில் கூறியவற்றுள்ளுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றிற்கு முறையே எழுத்தோத்து, அசையோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்று தனித்தனி ஓத்து அமைக்கும் அமுதசாகரர் ஏன் தூக்கு என்னும் உறுப்பிற்கு தூக்கோத்து என்று தனி ஓத்து அமைக்கவில்லை என்பது இத்தொடர்பில் எழும் மற்றொரு வினாவாகும். தளையைக் கூறும் இடத்திலேயே ஓசையைக் கூறுவது பொருத்தமானதாகும். தளையோத்தில் ஓசையை விளக்காததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழும்பினால்   தூக்கு என்ற ஓர் உறுப்புக் கூறியுள்ளதால் தூக்கோத்தில் ஓசையை விளக்குவார் என்று சமாதானம் கூறிக்கொள்ளலாம். ஆனால் தூக்கோத்து என்று  ஒரு ஓத்தே நூலில் இல்லை. அப்படியெனில் அமிதசாகரர் ஏன் தூக்கை செய்யுள் உறுப்பில் ஒன்றாகக் கூறினார்?

    நிற்க. யாப்பருங்கலத்தை எழுதிய அமிதசாகரர்தான் யாப்பருங்கலக் காரிகையையும் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறு உறுப்புக்களையே கூறியுள்ளார். அமிதசாகரிடம் ஏன் இந்த மாற்றம் காணப்படுகிறது? யாப்பருங்கலத்தில் செய்யுள் உறுப்பு எழுத்து முதலாக தூக்கு ஈறாகக் மொத்தம் ஏழு உறுப்புக்களைக் கூறும் அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகையில் ஏன் எழுத்து முதலாக தொடை ஈறாக ஆறு உறுப்புக்களையே கூறுகிறார்?  அவர் ஏன் இப்படி குழப்புகிறார்? உண்மையில் அவர் குழப்பவில்லை. யாப்பருங்கலத்தில் அவர் செய்யுள் உறுப்புக்களுள் தூக்கை ஒன்றாகக் கொண்டதற்குக் காரணம்  நற்றத்தனாரும், பல்காயனாரும் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறியுள்ளதனால் ஆகலாம். யாப்பருங்கல விருத்தியின் மூலம் அறிய வரும் இது குறித்த இவ்விருவரின் சூத்திரங்களாவன:

                 ”யாப்பெனப் படுவ தியாதென வினவின்
                   தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
           நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”   என்றார் நற்றத்தனார்.

                 ”இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
                   தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி
                   யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
                  எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
                  இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
                  ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே ” என்றார் பல்காயனார். (பக். 16, 17; மேலது)

     மேலே கண்ட  இருசூத்திரங்களில் தூக்கு ஓர் உறுப்பாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இரண்டாவது சூத்திரமான பல்காயனாரின் உறுப்புக் கோட்பாடே யாப்பருங்கலத்தோடு ஒத்து அமைகிறது. ஏனெனில் பல்காயனாரே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழ் உறுப்புக்களையும் கூறுகிறார். இவ்வேழு உறுப்புக்களும்தான் யாப்பருங்கலத்திலும் கூறப்பெற்றுள்ளது. இத்தொடர்பில் பல்காயனாரை அமிதசாகரர் பின்பற்றினாரா? அல்லது அமிதசாகரைப் பல்காயனார் பின்பற்றினாரா?.  யாப்பருங்கலம் 10-ஆம்  நூற்றாண்டைச் சார்ந்தது; ஆனால் யாப்பருங்கல விருத்தியுரை 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது  என்பதால் இவ்வுரையில் எடுத்துக்காட்டபெற்றுள்ள நற்றத்தனார், பல்காயனார் ஆகியோர் சூத்திரங்கள் யாப்பருங்கலத்திற்குப் பின்னரும் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அல்லது யாப்பருங்கலத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது யாப்பருங்கலத்தாரும், பல்காயனாரும், நற்றத்தனாரும் சமகாலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்புண்டு. அங்ஙனம்  அமிதசாகரரும் பல்காயனாரும் சமகாலத்தவராக (நற்றத்தனார் குறித்து தனியே விவாதிக்கிறோம்) இருந்தவர்களாக நாம் கொண்டால் இவர்கள் இருவரும்  தூக்கையும் சேர்த்து யாப்பு  உறுப்புக்கள் ஏழு என்று வேறு ஏதேனும் பொதுமூலத்தைப் பின்பற்றிக்  கூறிருக்கலாம்.

    நற்றத்தனாரைப் பொறுத்தவரை தூக்கு, தொடை, அடி ஆகிய மூன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதில் தூக்கு என்ற உறுப்பை அவர் முதலில் வைத்துக் கூறுவதைக் கவனிக்க. தூக்கு என்னும் உறுப்பிற்கு முதன்மை கொடுத்து முதலில் நூல் இயற்றியவர் நற்றத்தனாரா? அல்லது அவர் வேறு ஏதேனும் ஒரு மூலநூலை பின்பற்றிக் கூறினாரா? யாப்பருங்கல விருத்தி தரும் சூத்திரங்களை மட்டும்  வைத்துக்கொண்டு நம்மால் இவற்றையெல்லாம் உறுதியாகக் கூற இயலாது. அமிதசாகரர் தூக்கை நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரைப் பின்பற்றித்தான் யாப்பு உறுப்பாகக் கூறினாரா? நற்றத்தனார் தூக்கை முதல் உறுப்பாகக் கூறியிருக்க ஏன் அமிதசாகரர் பல்காயத்தைப் போலத் தூக்கைக் கடைசி உறுப்பாகக் கொள்கிறார்? எங்கனமாயினும் தூக்கை ஓர் உறுப்பாக அமைத்துக் கொள்வதில் அமிதசாகருக்கு நற்றத்தம் ஓர் உந்துதலாக இருந்திருக்கலாம்; அல்லது யாப்பருங்கலம் நற்றத்ததிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். ஆனால் தூக்கையும் சேர்த்து யாப்பு உறுப்புக்கள் ஏழு என்று கூறுவதில் யாப்பருங்கலம் பல்காயத்தையே பின்பற்றுகிறது அல்லது பல்காயம் யாப்பருங்கலத்தையே பின்பற்றுகிறது. ஆக இங்கு நமக்கு எழும் சிறிய குழப்பம் பல்காயம் முந்தையதா? யாப்பருங்கலம் முந்தையதா? (நற்றத்தம் முந்தையதா?) என்பதாகும். பல்காயம் முந்தையது என்று ஒத்துக்கொண்டு ஆய்ந்தால் நாம் யாப்பருங்கலத்திற்குப் பதிலாக பல்காயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தூக்கு பற்றிய ஆராய்ச்சியை நடத்தலாமே? என்ற கேள்வி எழும். யாப்பருங்கலம்தான் முந்தையது  என்றால் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தூக்கு குறித்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஏனென்றால் காலநோக்கில் தூக்கையும் சேர்த்து ஏழு உறுப்புகள் என்று கூறும் முதல் நூல் எது என்பதே முக்கியமானது. ஏனெனில் அம்முதல் நூலே இவ்வுறுப்புக் கோட்டை முதன்முதலில் உருவாக்கியிருக்கும். இது ஒரு பக்கம் இருக்க இக்கட்டுரை தூக்கு பற்றியதாக இருப்பதால் நற்றத்ததையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. தூக்கைக் கடைசி உறுப்பாகச் சேர்த்து பல்காயமும், யாப்பருங்கலமும் கூறுகின்றன என்பது முக்கியமானததுதான். ஆனால் தூக்கை முதல் உறுப்பாகக் கூறும் நற்றத்தம் இவ்விரு நூல்களைவிட முதன்மை பெறுகிறது என்பதில்  ஐயமில்லை.  நற்றத்தம் யாப்பருங்கலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அமைய வாய்ப்புண்டு என்பதை முன்னர் பார்த்தோம். எனினும் யாப்பருங்கலத் தூக்குக் கோட்பாட்டைக் கணிப்பதில் நற்றத்தம் துணைமைச் சான்றாகவே நமக்குப் பயன்படும். நாம்  தூக்கு பற்றிய இந்த ஆராய்ச்சியை யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே செய்கிறோம். ஏனெனில் பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது; யாப்பருங்கலம் அதைப் பின்பற்றியது என்ற ஒரு வாய்ப்பை (Possibility) நாம் ஏற்றுக்கொண்டு ஏன் பல்காயம் தூக்கை ஏழு உறுப்புக்களில் ஒன்றாகக் கூறிவிட்டு, அதை விளக்க தூக்கோத்து என்ற ஒன்று அமைக்காமல் செய்யுளியலில் வைத்து விளக்குகிறது? என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் பல்காயம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழு உறுப்புக்களைக்  கூறியுள்ளமை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. அந்நூலில் யாப்பருங்கலத்தைப் போல எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து முதலியவையும், இயல்களும் அமைந்திருந்ததா என்று அறிய முடியவில்லை. எனவே நாம் பல்காயத்தை அடிப்படையாக வைத்து இவ்வாராய்ச்சியை செய்ய இயலாது. பல்காயமும், யாப்பருங்கலமும் தூக்கை விளக்குவதில்  ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்பை நாம் ஏற்றுக் கொண்டாலும் பல்காயத்திற்கு நாம் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலும் அந்தப் பொது மூலத்திற்கும் பொருந்துகிறது அதாவது  அந்தப் பொது மூலம் எது? அவற்றில் எத்தனை இயல்கள் அமைந்திருந்தன? என்பன  போன்ற பிரச்சனைகள் வரும். பல்காயத்திற்காவது சூத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஊகம் செய்த பொது மூலத்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே நாம் தூக்குப் பற்றிய ஆராய்ச்சியை நமக்கு கிடைக்கும் யாப்பருங்கலத்தில் இருந்துதான் செய்ய வேண்டியிருக்கிறது; செய்ய முடிகிறது.   யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த ஆராய்ச்சியை செய்தாலும், தூக்குப் பற்றிய யாப்பருங்கலத்தின் சிந்தனை- பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது அல்லது இரண்டும் ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்புக்களின் நோக்கில்-   பல்காயத்தின் சிந்தனையையோ அல்லது நாம் கருதிய  பொது மூலத்தின் சிந்தனையையோ  மீட்டுருவாக்கப் பயன்படும் என்று நாம் கருதுகிறோம்.

    யாப்பருங்கலமே தூக்கு பற்றிய இச்சிந்தனையை முதலில் கூறியது என்ற வாய்ப்பை நாம் ஏற்றுகொண்டாலும் தூக்கு குறித்த யாப்பருங்கல மரபின் நுட்பமான சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிடிலும் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே அதாவது யாப்பருங்கலத்தை முதல் நூலாகக் கொண்டே இவ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கிறது; செய்கிறோம்.

    யாப்பருங்கலத்தில்  ‘தூக்கை’ச் செய்யுள் உறுப்பாகக் கூறும் அமிதசாகரர்  அதை ஏன் செய்யுளியலில் விளக்குகிறார் என்பதை  யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எழுத்தோத்து உரையில் தரும், (இக்கட்டுரையில் முன்னர் கண்ட   ஆசிரியர்களான)   நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரின்   சூத்திரங்கள்  உணர்த்துகின்றன:

    தூக்கு எனினும் பாட்டு எனினும் ‘ பா ‘ எனினும் ஒக்கும்.

                      ”தூக்கு பாட்டும் பாவும் ஒன்றென
                        நோக்கிற் றென்ப நுணங்கி யோரே ”  என்றார் பல்காயனார் ஆகலானும்,

                     ” பாவென மொழியினும் தூக்கினது பெயரே ”    என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. (பக். 17,18; மேலது)

    இங்கு தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்று விருத்தியுரைகாரர் பல்காயனார் மற்றும் நற்றத்தனார் ஆகியோரது சூத்திரங்களை எடுத்துக்காட்டி விளக்குவதைக் காண்க. எனவே அமிதசாகரர் தூக்கை ஒரு செய்யுளுறுப்பாக எடுத்துக்கூறியிருந்தாலும்  தூக்கு என்பது பாவே என்பதனால் தூக்கோத்து என்று ஒரு தனி இயல் அமைக்காமல் ‘ பா ‘வை விளக்கும் செய்யுளியலிலேயே தூக்கையும் அதாவது பாக்களுடைய ஓசையையும் விளக்குகிறார் என்று கொள்ள வேண்டும். இத்தொடர்பில் எழும் மற்றொரு கேள்வி  தூக்கைச் செய்யுளுறுப்பாக விளக்காமலேயே அதைச் செய்யுளியலில்  விளக்கியிருக்கலாமே? என்பதாகும்.  விளக்கியிருக்கலாம்.  ஆனால் செய்யுளில் ஓசை என்பது மிகவும் முக்கியமானதாகையால் அதன் முக்கியத்துவத்தைக் காட்ட முன்னோர்களைப் பின்பற்றி அமிதசாகரர் தூக்கைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகச் சுட்டிக்காட்டினார் எனலாம்.

    யாப்பருங்கலத்திற்குப் பிறகு யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகச் சுட்டாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் இத்துடன் எழும். அமிதசாகரர்  ஏற்கெனவே யாப்பருங்கலத்தில் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறிவிட்டதால் யாப்பருங்கலக்காரிகையில் அதனை மீட்டும் ஓர் உறுப்பாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று கருதியிருக்க வேண்டும். அப்படியெனில் எழுத்து முதலான பிற உறுப்புக்களையும் அவர் யாப்பருங்கலக்காரிகையில் விளக்காமல் விட்டிருக்கலாமே என்று ஒருவர் கேட்கலாம். எழுத்து முதலான ஆறு உறுப்புக்களும் தனித்தனி உறுப்புக்கள்; ஓசை என்பது இவை அனைத்தும் சேர்வதால் உருவாவதாகும். அதாவது எழுத்து முதலானவை பகுதிகள் எனில் ஓசை என்பது முழுமையாகும். எனவேதான் அமிதசாகரர்  தூக்கு என்பதைப் பிற உறுப்புக்களைப் போல கொள்ளவில்லை. இதை அறிய அமிதசாகரின் தூக்கு பற்றிய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    யாப்பருங்கல முதற்சூத்திரத்தில், தூக்கு என்பது மற்ற உறுப்புக்களைப் போலாது ஓசையின் முழுமை நோக்கிய ஒன்றாக  இருப்பதால்  முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும் என்று கருதிய அமிதசாகரர் தூக்கை ஓர் உறுப்பாக அறிவிக்கிறார்.  பாவே ஓசையாக இருப்பதால் தனி உறுப்பாக கூற வேண்டிய அவசியம் இல்லை  என்று அவர்  நினைத்திருந்தாலும் எல்லா பாக்களது ஓசையும் ஒரே ஓசை அன்று. எனவே பொதுவாகத் தூக்கைப் பா என்று கூறினாலும் அது வேறுபாட்டைத் தம்முள் அடக்கியதாகும். எனவே சிறப்புநிலையில் தூக்கு பாக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அறிவுறுத்த தூக்கை முதலில் உறுப்பாகக் கூறுகிறார். இது அவரின் முதல்நிலை. அடுத்து,  தூக்கோத்து அமைத்தாலும் செய்யுளியலில் மீண்டும் அவற்றைக் கூறவேண்டிய நிலை ஏற்படும்; எனவே இது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். எனவே தூக்கோத்தைத் தன் நூலில் ஒரு தனி இயலாக அமைப்பதைத் தவிர்க்கிறார். இது இரண்டாம் நிலை. மூன்றாவது யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது யாப்பருங்கலத்தின் பயிற்றுமுறைக்கும்  யாப்பருங்கலக்காரிகையின் பயிற்றுமுறைக்கும் இடையேயுள்ள  வேற்றுமையினாலும் அதாவது   யாப்பருங்கலக் காரிகை தொன்மை யாப்புநூலில் பயிற்சி இல்லாதவர்களுக்குப் பயிற்சி ஏற்பட  எழுதப்பட்டமையால் அதில்  செய்யுள் உறுப்புக்களில் நுட்பமான  தூக்கை ஒன்றாகக் கூறவேண்டிய தேவையின்மையாலும், அவர்   தூக்கை ஓர் உறுப்பாகக் கூறாமல் விடுவது மூன்றாவது நிலை.  (யாப்பருங்கலம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களிருந்தும், யாப்பருங்கலக் காரிகை படித்த மாணவர்கள் வேறானவர்கள்  அதாவது யாப்பருங்கலம் யாப்பு தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கும், யாப்பருங்கலக்காரிகை யாப்பு தொடர்பான தொடக்கநிலை மாணவர்களுக்கும் எழுதப்பட்டிருக்க வேண்டும்). இதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  இத் தொடர்பில்  யாப்பருங்கலத்தில் விளக்கப்பட்டு யாப்பருங்கலக்காரிகையில் விளக்கப்பாடாத கூறுகள் எவை எவை என்பதும் யாப்பருங்கலத்தின் விளக்குமுறையும் யாப்பருங்கலக்காரிகையின் விளக்குமுறையும் எத்தன்மையன என்பதும்  ஒப்பிட்டு  விளக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. இது வேறொரு கட்டுரைக்கான செய்தி ஆதலால் இதை இங்கு விரிவாகச் செய்ய முடியாது. எனினும் இங்கு   யாப்பருங்கலத்தையும், யாப்பருங்கலக்காரிகையையும்  ஒப்பிட்டு ஓர் உதாரணத்தை மட்டும்  சுட்டிக்காட்டமுடியும். அமிதசாகரர் யாப்பருங்கலக் காரிகையில்  முதற்காரிகையில்  அசைக்கு உறுப்பாகும் 13 எழுத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அடுத்து அசைகளின் வகைகளாகிய நேரசை, நிரையசை ஆகியவற்றை விளக்கச் சென்றுவிடுகிறார். ஆனால் அவர் யாப்பருங்கலத்தில் அப்படி அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் கூறிவிட்டு அசைகளை விளக்கச் சென்று விடாமல்  சில எழுத்துகளுக்குரிய சிறப்புவிதிகளையும் கூறுகிறார். இதை யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் ஆகியவற்றின் எழுத்துக்கள் குறித்த காரிகையையும் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டுவதின் வழி தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

    யாப்பருங்கலக் காரிகை:

    குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே              மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்           சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
    அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே (கா.4)

    இங்கு அசைக்கு உறுப்பாக மொத்தம் 13 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. எழுத்துக்களின் விளக்கம்  பற்றிய சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையில்  இது ஒன்றே ஆகும்.

    யாப்பருங்கலம்:

                        உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
                        குறிலே நெடிலே அளபெடை யென்றா
                        வன்மை மென்மை இடைமை யென்றா
                       சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
                       ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
                       ஐம்மூ வெழுத்தும் ஆம்அசைக் குறுப்பே (சூத்.2)

    இங்கு அசைக்கு உறுப்பாக 15 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. இச்சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையைப் போல அசைக்கு உறுப்பாக உள்ள எழுத்துக்களைத் தொகுத்துகூறும் சூத்திரம் ஆகும். இதற்குப் பிறகு  யாப்பருங்கலம்  சில எழுத்துக்களின் சிறப்பு விதிகளை மேலும் இரண்டு சூத்திரத்தில் கூறுகிறது:

                     தனிநிலை ஒற்றிவை தாமல  கிலவே
                     அளபெடை அல்லாக் காலை யான (சூத். 3)

                     தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
                    குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
                   அளபெடை ஆவியும் அலகியல் பிலவே (சூத்.4)

    இவ்விரு சூத்திரச் செய்திகளும் யாப்பருங்கலக் காரிகையில் இல்லாததை கண்டு கொள்ள முடிகிறது. இதற்கான காரணம் மேலே விளக்கப்பெற்றது.  நாம் மேலே காட்டியுள்ளமை போன்று  யாப்பருங்கலத்தில் வரும்  அனைத்து இயல்களையும் யாப்பருங்கலக் காரிகையில் உள்ள இயல்களோடு  ஒப்பிட்டுக் காண வேண்டியது முக்கிய தேவையாகும்.

    தூக்கு, பா– தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு ஒப்பீடு:

     தொல்காப்பியத்தில் தூக்கு என்பதும் பா என்பதும் தனித்தனி உறுப்புக்களாகச் சுட்டபெற்றிருக்க, யாப்பருங்கலத்தில் பா என்பதை விடுத்து தூக்கை மட்டும் உறுப்பாக ஏன் அமிதசாகரர் கொண்டிருக்கிறார்? என்பதும் இத்தொடர்பில் முக்கியத்துவம் பெறும் வினாவாகும். தூக்கு குறித்தும் பா குறித்தும் தொல்காப்பியத்தில் என்ன கூறப்பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்:

                    அகவ லென்ப தாசிரிய யம்மே (செய். சூத். 79)
                    அஃதன் றென்ப வெண்பா யாப்பே  (80)
                  துள்ளலோசை கலியென மொழிப     (81)
                     தூங்க லோசை வஞ்சி யாகும்          (82)
                     மருட்பா வேனை யிருசா ரல்லது
                    தானிது வென்னுந் தன்மை யின்றே  (83)
                   அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார் (84)
                  தூக்கியல் வகையே யாங்கென மொழிப ( 85)

                மேற்கண்ட நூற்பாக்கள் தூக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள். தொல்காப்பியம் தூக்கு என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை. மேலேகண்ட வண்ணம் தூக்கு என்பதன் வகைகளையே தருகிறது. அதாவது ஆசிரியத்திற்கு அகவல் ஓசை; வெண்பாவிற்கு அகவல் அல்லாத ஓசை; கலிக்குத்துள்ளலோசை; வஞ்சிக்குத் தூங்கலோசை; மருட்பாவிற்கு ஆசிரியம், வெண்பா ஆகியவற்றின் கலப்பு ஓசையே யன்றி அதற்கென்று தனித்த ஓசை இல்லை; இதோடு கூட  இவ்வோசைகள் இல்லாமல் பாட்டினை யாரும் கூற மாட்டார்கள் என்ற ஒரு கூடுதல் குறிப்பினையும் (84) தொல்காப்பியம் தருகிறது. தூக்கு என்பதற்கு ஏன் தொல்காப்பியம் வரையறை தரவில்லை. அப்படித் தராமல் ஏன் தூக்கின் வகைகளை மட்டும் கூறிச் செல்கிறது? இது குறித்து,  பா என்பதற்கு தொல்காப்பியம் என்ன விளக்கம் தருகிறது என்பதைப் பார்த்துவிட்டு அவ்விளக்கத்தையும் உட்படுத்தி விவாதிப்போம்; பா குறித்து தொல்காப்பியம் என்ன கூறுகிறது?:

    தொல்காப்பியம்,

    ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
     நாலியற் றென்ப பாவகை விரியே (செய். 103)

    என்று நான்குவகைப் பாக்களின் விரியைக் கூறிவிட்டு,
    பாக்களின் பொருண்மை பற்றி அடுத்த சூத்திரத்தில்,

    அந்நிலை மருங்கின் னறமுத லாகிய                         மும்முதற் பொருட் முரிய வென்ப (104)

                        என்று கூறுகிறது. அடுத்த இரு சூத்திரங்களில் விரித்துக் கூறிய பாவகையை தொகுத்துக் கூறுகிறது:

                  பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்                        ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்கு                                        ஆயிரு பாவினு ளடங்கு மென்ப ” (105)                                  ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
                வெண்பா நடைத்தே கலியென  மொழிப” ( 106)

    இதற்கடுத்தடுத்த  சூத்திரங்கள் பாக்களின் பொருண்மைகுறித்துப் பேசி செல்கின்றன. தூக்கிற்கு எழுப்பிய அதே வினாவை நாம் பாவிற்கும் எழுப்ப வேண்டியதிருக்கிறது: ஏன் தூக்கினைப் போல் தொல்காப்பியம் பாவிற்கும் விளக்கம் தராமல் பாவின் விரியையும், தொகையையும் தருகிறது. தொல்காப்பியர் தூக்கு என்பதற்கும் பா என்பதற்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காட்டுகிறார்? தூக்கு என்பதையும் பா என்பதையும் ஏன் தனித்தனி உறுப்பாகக் காட்டினார்? ஏனெனில்  தொல்காப்பியர் செய்யுட்களில்  ஓசைகளின் வேறுபாட்டைத் அதாவது செய்யுளின் ஓசைகளைச் சிறப்புத்தன்மையில் குறிக்கத் தூக்கு என்பதையும் பொதுத் தன்மையில்  குறிக்கப் பா என்பதையும் பயன்படுத்துகிறார்.  அதாவது அகவல், அகவல் அல்லாதவை, துள்ளல், தூங்கல் ஆகிய ஓசையின் வெவ்வேறு வகைகளைத்  தனித்தனியே சுட்ட  தூக்கு என்ற உறுப்பைப் படைக்கிறார்; இதனையே நாம்  ”சிறப்பு நிலை” என்கிறோம். ஓசைகளை அகவல் முதலிய தனித்தன்மை கொண்டல்லாமல் அதாவது சிறப்புநிலையில் சுட்டாமல்  ஓசையின் வெவ்வேறு வகைகளின் மொத்தத்துவத்தைக் குறிக்க  ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயர்களைக் கையாள்கிறார்  . இதை நாம் ”பொதுநிலை” என்று கூறுகிறோம்.   தூக்கு ஓசையின் தனித்தன்மையை அறிவுறுத்த உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், பா செய்யுளின் மொத்தத் தன்மையை அறிவுறுத்த படைக்கப்பட்டது என்பதையும்  பேராசிரியர் தரும் விளக்கங்கள் மூலம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூறுவதாவது:

     தூக்கு:

     அகவலோசைக்கண் தூக்குவருங்கால் இருசீர் முதலா எண்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க்கண்ணே துணித்துக்கொள்ள, அஃது ஆசிரியத் தூக்காமென்றவாறு. இருசீரால் துணிப்ப ஆசிரிய வோசையாகாது; முச்சீரால் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தாமெனவும் இடையும் வரையாரெனவும் கூறினமையின் அஃதேல் அடிவகையானே அறுதியுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யுமெனின் – அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்தலாகாது; என்னை? இருசீர் முதலாகப் பலசீர் தொடர்ந்த வழித் தூக்கு அறுப்புக்கொண்டன்றி இத்துணைச்சீர்கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூஉம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்தும் பாச்சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க. அல்லாக்கால் 

             உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
             யலங்குகுலை யிந்தின் சிலம்பிபொதி செங்காய்

    என்றவழி, ‘ உள்ளார்’, ‘ முள்ளுடை ‘ என்பன அடியெதுகையாக முச்சீரடியும் ஐஞ்சீரடியு மெனக்கொண்டு மயக்கமாமென்பது.

       நரந்த நாறுந் தன்கையாற்
       புலவுநாறு மென்றலை தைவரு மன்னே

        என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது (பக். 379, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பியம் செய்யுளியல் பேராசிரியர் உரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007)

     இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் துணித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடிகளைத் துணித்து நிறுத்துதல் என்பது பாக்களின் ஓசைக்கு மிகவும் இன்றியமையாதது. அடிகளைத் துணித்து நிறுத்துவதன் மூலமே குறிப்பிட்ட ஓசைகளைப் பெற முடியும் என்று பேராசிரியர் மேலே கண்ட பகுதியில் கூறுவது ஓசையின் சிறப்பு நிலையைக் குறிப்பதாகும். எண்சீர் தொடர்ந்து  அகவற்பா சென்ற வழித் தூக்கு என்ற உறுப்பு இல்லை என்றால் அங்கு ஆசிரிய ஓசையைப் பெற முடியாது.  அங்கு நான்கு சீரில் துணித்து அகவலோசையைப் பெற தூக்கு முக்கியம்.  அடிகளைத் துணித்தல் என்பதே தூக்கின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மை அதனாலேயே தூக்கு தனி உறுப்பாகத் தொல்காப்பியராலும் நற்றத்தனாராலும், பல்காயனாராலும், யாப்பருங்கலத்தாராலும் கருதப்பட்டது. எனினும் பின்னால் நற்றத்தனாரும் பல்காயனாரும் தூக்கும் பாவும் என்ற ஒன்றே என்று முரண்படுவதையும் யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகிறது. அது ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது. 

    பா என்பதற்கான பேராசிரியர் விளக்கம்: 

    பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (பக்.205; மேலது)

     இவ்விளக்கம் நமக்கு உணர்த்துவது:  சேட்புலத்தில் இருந்தில் இருந்து   ஒருவர் பாடம் ஓதும்போது  அவர் பாடம் ஓதுவது   இன்னச் செய்யுள் என்பதை ஓசையின் மொத்ததுவத்தை வைத்துப்   அதைக் கேட்பவர் புரிந்து கொள்கிறார் . இவ்விளக்கத்தில்   பேராசிரியர் ஓசையின் மொத்தத்துவமாகிய ‘ பா’ வைப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்று குறிக்கிறார். இது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஓசைக்குரிய பொது நிலையாகும்.

    இறுதியாக,  தொல்காப்பியர் ஓசையின் சிறப்புத்தன்மையையும், பொதுத்தன்மையையும் விளக்கப் பயன்படுத்திய  உத்தியைத்தான் அமிதசாகரர் தன் யாப்பருங்கல நூலில் பின்பற்றுகிறார். தூக்கும், பாவும் வேறு என்ற சிந்தனையை அவர் தொல்காப்பியர் வழியாகப் பெற்றிருந்தாலும் தூக்கையும் பாவையும் குறிக்க ஏன் இரு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இரண்டையும் இரண்டாகக் கருதி ஏன் தனி விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டும்? அதனால் பயன் என்ன? அதனால்  கால விரயம்தான் மிஞ்சும்;  பாக்களைக் கூறும் போதே தூக்கு கிடைக்கும் அதனால் தூக்கிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை; அதை ஓர் உறுப்பாகவும் குறிக்கத் தேவையில்லை; தூக்கை ஓர் உறுப்பாகக் கூறி யாப்பு உறுப்புக்களின் எண்ணிக்கையைப் பெருக்காமல் தூக்கே பா என்று கூறுவதே சிறந்தது என்ற சிந்தனை வலுபெற்ற காலக்கட்டத்தைச் சார்ந்தவராக அவர் இருந்ததால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் தூக்கு பற்றிய தர்க்கத்தையும் புறக்கணிக்க முடியாமலும் அதே நேரத்தில் தூக்கை முற்றிலும் விட முடியாமலும் இரண்டிற்கும் நடுவே ஊஞ்சல் ஆடிய அமிதசாகரரின் தூக்கு பற்றிய சிந்தனையைத்தான் அவரது நூலில் நாம் காண்கிறோம்.  அதாவது தூக்கு ஓர் உறுப்பாகக் குறிக்கப்பட வேண்டும் அதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த நியாயம் அவரை தூக்கைச் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாக யாப்பருங்கலத்தில் குறிக்கச் செய்தது; ஆனால் தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்ற அவரது காலகட்டத்தின் தர்க்கம் அவரை தூக்கிற்கென்று ‘ தூக்கோத்து’ என்ற தனி ஓத்து அமைக்கவிடாமல் தடுத்து, அதனை செய்யுளியலிலேயே விளக்கும்படிச் செய்தது. எனினும் இது ஆய்விற்குரியது.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

    1. அமிதசாகரர் – யாப்பருங்கலம் விருத்தியுரையுடன் , இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976.
    2. அமிதசாகரர் – யாப்பருங்கலக்காரிகை, குணசாகரர் இயற்றிய உரையுடன், உல்ரிக்கே நிகோலஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு, EFEO, புதுச்சேரி: 1993.
    3. தொல்காப்பிய மூலம் பாடவேற்பாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடசுப்பையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, திருவனந்தபுரம்: 1996.

        4. தொல்காப்பியர் – தொல்காப்பியம் செய்யுளியல்
    பேராசிரியர் உரை, சி.கணேசய்யர் பதிப்பு,  உலகத்
    தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007

    *****

    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO),
    புதுச்சேரி.

     

     

     

     

     

     

     

    Share
  • புது வாழ்க்கை!

    -த.ஆதித்தன் 

    கனகத்திற்குத் துக்கம் தாங்கவில்லை. நகரத்தில் இருந்து ஊருக்கு வந்திருந்த மருமகள் தனது வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு கவலைப் பட்டிருக்கமாட்டாள். எதிர்வீட்டு பாலு, பக்கத்துக் கடை அண்ணாச்சியிடம் எல்லாம் வந்து நலம் விசாரித்தவள் அப்படியே ஒரு எட்டு வந்து தன்னையும் பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஆதங்கம்தான் அவளை வாட்டியது. பேரக்குழந்தைகளை வேறு பார்க்கவேண்டும் போல் இருந்தது.

    மருமகள் திலகாவைத் தனது மகள்போல் தான் பார்த்துக்கொண்டாள் கனகம். வறுமை வாட்டிய போதும் மருமகள், பேரக்குழந்தைகளுக்குத் துன்பம் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். ஊரார் மெச்சும் மாமியார் மருமகளாகவே வாழ்ந்தனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விபத்தில் இறந்தபிறகு வேறு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவந்தாள் திலகா. பக்கத்து வீட்டுச் சித்ரா சென்னையில் வேலைபார்க்கும் செல்வத்தை நல்ல பையன் எனத் திலகாவிற்கும் கனகத்திற்கும் அறிமுகப்படுத்தினாள். சென்ற மாதம்தான் அனைவரும் சேர்ந்து செல்வத்தோடு திலகாவிற்கு மறுமணம் செய்து வைத்தனர்.

    ஒரு மாதத்திற்குள் திலகா மாறிவிட்டதைக் கனகத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. புது வாழ்க்கையும், சுகமும் இந்த அளவிற்கா மாற்றிவிடும். திலகாவிற்கு ஃபோன் பண்ணினாள், “மாமி நல்லா இருக்கிறீங்களா?” என்றாள் திலகா.

    “நல்லா இருக்கிறோம். பேரப்பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்தால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா? இந்த வயசான உசிரையும் பார்த்துட்டு போயிருக்கலாம்ல்ல….” என்றாள்.

    “நேரமில்ல மாமி அதுதான் வந்துட்டோம்…. அப்புறமா ஃபோன் பண்ணுறேன் மாமி” என்றபடி ஃபோனை வைத்த திலகாவிற்கு அழுகை பீறிட்டது. ஊருக்கு சென்றிருந்தபோது மாமியார் வீட்டிற்கும் போய் வரலாம் என்று புது கணவனிடம் சொன்னதும்,” பழைய நினைப்பும் அவன்மேலுள்ள பாசமும் இன்னமும் மாறல போல…….” என்று அவன் கூறிய வார்த்தைகள் என்னமோ செய்தது அவளை.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171228 - Krishna anubhava -Tiruppavai 13 -wm watercolour #KrishnaforToday (Pullin vay keendanai —Kulirakkudainthu neeradu)
    171228 – Krishna anubhava -Tiruppavai 13 -wm
    watercolour #KrishnaforToday
    (Pullin vay keendanai —Kulirakkudainthu neeradu)

     

    ”கிருஷ்ண லீலையைக் கூறும் பாகவதம் எழுதிய சுகமுனி கிளிரூபம் கொண்டவர்….ஆண்டாள் கரத்தில் ஏந்தியதும் கிளி(சுகர் என்றும் கூறலாம்)….திருப்பாவை பாகவதம் PART -2….!

    ’’பாக வதப்பழமது ஏகருசி ஆனது
    தேகம் ஒழித்தசுக தேவனவர் -நாகவண்ண
    மேனியர் லீலையை முன்னமே உண்டவராம்:
    தோணியவர் ஆண்டாள் துடுப்பு’’….கிரேசி மோகன்….!

    (OR)
    ”சீனியவர்(தித்திக்கும் பழம்) ஆண்டாள் சிரப்பு’’(SYRUP-ஜூஸ் -கோதைபோல் கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு)….!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -13

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருத்தஞ்சை மாமணிக்  கோவில்

    thanjai-Maamani-kovil-copy

    பாற்கடலில் கடைந்தெடுத்த நல்லமுதைப் பராசரனும்

    பக்குவமாய் மணிமுத்த நதியிலே தெளித்துவிட்டே

    பார்வியக்கும் தவத்தினில்  பக்தியுடன் அமர்ந்திருக்க

    பார்த்திருந்த வானவரும் பராசரனைப் பணித்தனரே !

     

    தஞ்சகனும் தாரகனும் தண்டகனும் ஆணவத்தில்

    தவத்தோனின் நிலைகுலைக்கத்  தயங்காமலே முயன்றிடவே

    தவம்காக்கத் திருமாலும் முன்வந்தார் முக்கோலம்கொண்டு

    தஞ்சகனைத் தாரகனைத் தாடகனை வென்றிடவே !

     

    கனல்பறக்கும் சினத்தோடு கருடன் மேலமர்ந்தே

    கண்ணனும் வந்தான் கதைமுடிக்க வீரநரசிம்மனாய் !

    களமிழந்த தஞ்சகனும் தலைகுனிந்து வேண்டிடவே

    தஞ்சையெனப் பெயரெடுத்துத் தானமர்ந்தான் தயாளனே !

     

    கலக்கமுற்றுக் கடலினிலே மறைந்திட்ட தண்டகனும்

    களமிழக்கச் செய்தான் கண்ணனும் காட்டுப்பன்றியாய் !

    காளியுடன் போரிட்டுக் கலையிழந்தான் தாரகனும்

    தவத்தோனின் அன்பினிலே கண்ணனும் கட்டுண்டான் !

     

    வீரத்திலே  ஈடில்லா விவேகன் வீரநரசிம்மன்

    திருமகளைத் துணைகொண்ட இலக்குமிநரசிம்மன்

    நீர்வண்ணன் கார்மேகன் நினைவாளும் நீலமேகன்

    பார்போற்றும் பராசரனின் முன்வந்தே அருள்தந்தான் !

     

    நிலமகளும் அலைமகளும் அன்போடு துணையிருக்க

    நினைவெல்லாம் அடியார்கள் கொண்ட துயர்துடைக்க

    நிலையில்லா வாழ்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கே !

    நீலமேகா ! நித்தியமே ! சத்தியமே ! போற்றுகின்றேன் !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Manathukkuniyan. Ramayati iti Ramah— priority of Service - Bharata - The grace to Ravana in the battlefield when he was unarmed and his chariot broken.
    Manathukkuniyan. Ramayati iti Ramah— priority of Service – Bharata – The grace to Ravana in the battlefield when he was unarmed and his chariot broken.

    ”இன்றுபோய் நாளைவா என்றதற்கு ராவணன்
    சென்றன்று நாளையில் ஜானகிக்காய் -கொன்றமால்
    கார்முகில் கண்ணனாய், காதலித்தக் கோதையாய்
    மார்கழி நன்நாளில் மாறு’’…..கிரேசி மோகன்….!

    Share
  • விலகுமோ வன்மம்?

    நிர்மலா ராகவன்

    தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. `இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவுகாலமாகிவிட்டது!’ 

    அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ஆகக் கெட்டது எது தெரியுமா?”

    `சே! இந்த அம்மா ஏன்தான் இப்படிப் பண்றாங்களோ! நல்ல ருசியா ஆக்கிப்போட்டுட்டு, அதை அனுபவிச்சு சாப்பிட முடியாம!’ என்ற மனத்துள் சலித்துக்கொள்ளத்தான் அவளால் முடிந்தது. வந்ததிலிருந்து இதே பாடம்தான்!

    ரமா எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர் பாராதவளாக, தனது கேள்விக்குத் தானே பதிலும் அளித்தாள் அம்மா, ஒரு மட்டமான ஆசிரியையை ஒத்தவளாக. “நன்றி கொல்றதுதான்பாவத்திலேயே பெரிய பாவம்!”

    மகளின் முகம் இறுகியது கண்டு, தாய்க்கே பரிதாபம் எழுந்திருக்க வேண்டும். அல்லது, இவளை இப்படியெல்லாம் வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால், சற்றுமுன் காட்டிய மிரட்டலிருந்து மாறினாள்.

    “புவனா சித்தி ஒனக்கு சாப்பாடு போட்டு, படிக்க வெச்சிருக்காங்க. இப்ப அவங்க ஒடம்பு முடியாம கெடக்கறப்போ, நீ பாக்கப் போகாட்டி, நல்லாவா இருக்கு?” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

    ஒருவழியாக வாயைத் திறந்தாள் ரமா. “சித்தி ஒண்ணும் என்னைப் படிக்க வைக்கலே. நான் புத்திசாலி! அதனால உபகாரச்சம்பளம் குடுத்தாங்க அரசாங்கத்திலே! பாட்டி சமைச்சுப்போட்டாங்க!”

    அம்மாவின் முகத்தில் ஒரு புன்னகைக்கீறல்.

    “இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” என்று மகள் எரிந்துவிழ, “ரமா! ஒன்னோட திமிர் இருக்கே, அது அப்படியே சித்திகிட்டேயிருந்து வந்திருக்கு!” என்றாள். புன்னகை விரிந்தது.

    ரமாவுக்கு எரிச்சலும், அவமானமும் ஒருங்கே எழுந்தன. சித்தியைப்போலவா ஆகிவிட்டோம்! சீ! தலையை அதீதமாகக் குனிந்துகொண்டவளின் கை சோற்றை அடைபோல்தட்டிக்கொண்டிருந்தது.

    “சாப்பாட்டுமேல கோவிச்சுக்கிட்டு என்ன புண்ணியம்? இப்பவாச்சும் நல்லா, நிதானமா சாப்பிடு. அங்கேதான் வெந்ததும் வேகாததுமா நீயே ஆக்கிக் கொட்டிக்கறே!” தாய்க்கே உரிய பரிவுடனும், கரிசனத்துடனும் வந்தது குரல். ஆனால், ரமாவின் காதிலோ வேறொரு குரல்தான் ஒலித்தது.

     

    “சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திருடி. எப்பப் பாத்தாலும், பாட்டிகூட என்ன கதை?”

    அவளக்குப் பதினெட்டு வயதாகி இருந்தபோது கேட்ட வசவு. அதற்குப் பிறகு பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அந்தக் குரல் அப்போதுதான் ஒலிப்பதுபோல் கேட்டு, அதேபாதிப்பை ஏற்படுத்தியது.

    `இவளையும் என்னைமாதிரி ஒரு டாக்டரா ஆக்கிடறேன்கா. எனக்கு ஒரு மக இருந்தா செய்ய மாட்டேனா?’ என்று புவனா அவளைத் தன்னுடன் கோலாலம்பூர் அழைத்துப் போனபோது ரமாதான்எவ்வளவு சந்தோஷப்பட்டாள்!

    அதே மூச்சில் அவள் சொன்னதோ! `இந்த தோட்டப்புறத்திலே இருந்தா, ஒன்னைமாதிரி பால்மரம் வெட்டத்தான் போகணும்!’

    அம்மாவை அவள் மட்டம் தட்டிப்பேசியது ரமாவுக்கு என்னமோபோல் இருந்தது. ஆனால் அம்மா அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பெரிய படிப்பு படித்து, தான் எட்ட முடியாதஉயரத்துக்குப் போய்விட்ட தங்கை எது சொன்னாலும், செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. மகளும் இந்தப் பட்டிக்காட்டில் அல்லல் படவேண்டாம் என்றுமகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

     

    “இந்தாடி, பட்டிக்காடு! இப்படி கைலியைக் கட்டிட்டு நிக்காதே! ஒனக்காக மூணு ஹவுஸ்கோட் வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு!” அவள்மீது வீசாத குறையாக எறியப்பட்டது ஒரு பிளாஸ்டிக் பை.

    பாட்டியைக் குற்ற உணர்வோடு பார்த்தாள் ரமா. எப்போதும் கைலியும், மேலே தொளதொளவென ஒரு சீட்டிச் சட்டையும் அணிந்தவளாகத்தானே பாட்டி வளையவருவாள்! ஒருவேளை, `பட்டிக்காடு’ என்று அவளை மறைமுகமாகத் தாக்குகிறாளோ?

    `ஒங்க சித்திக்கு நாக்கிலே விஷம்!’ என்று பாட்டி அடிக்கடி சொல்வது லேசாகப் புரிய ஆரம்பித்தது.

    யாருக்காவது ஏதாவது நல்லது செய்தால், அது தன்னைத் தாழ்த்திக்கொள்வதுபோல் ஆகிவிடுமோ என்று அஞ்சியவள்போல், வார்த்தைகளிலேயே நஞ்சைக் கலந்து, யாரையாவது மட்டம்தட்டிக்கொண்டே இருக்க வேண்டும் புவனாவுக்கு. பிறரைத் தாழ்த்துவதால் தான் உயர்ந்துவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிற சிறுபிள்ளைத்தனம்.

    குழந்தைகளின் மருத்துவர் ஆனதால், அவர்களுடனேயே பழகிப் பழகி, சித்தியும் அவர்களைப்போல் ஆகிவிட்டாள் என்று அனுமானித்தாள் ரமா, பல ஆண்டுகள் கழித்து.

    புவனாவின் பெரிய படிப்போ, வாயோ, எதுவோ ஆண்களை மிரள வைத்தது. எதற்கும் அஞ்சாத மகளின் போக்கு பாட்டிக்கு அச்சத்தைத்தான் விளைவித்தது.

    “இந்த ராத்திரியிலே தனியா எங்கம்மா போறே?” பயந்து, பயந்து அவளைத் தடுக்கப்பார்த்தாள் ஒரு முறை.

    “படத்துக்கு. தனியா என்ன! அதான் ரமாவையும் கூட்டிட்டுப் போறேன்ல?” வீறாப்பும், எரிச்சலும் கலந்து வந்தன அக்குரலில். தன்னை ஒருத்தர் — அது அம்மாவே ஆனாலும் — தட்டிக்கேட்பதா!

    “சின்னப்புள்ள! அதெல்லாம் ஒரு துணையா! ஆம்பளைத்துணை இல்லாம..!” பாட்டி முணுமுணுத்தாள்.

    “ஆம்பளை என்ன, பெரிய ஆம்பளை! ஒங்க காலத்திலே பொம்பளைங்களுக்கு சோத்துக்கு வழியில்லே. அதனால், புருஷன்காரன் எப்படி அடிச்சு ஒதைச்சாலும், ஒங்களை என்ன கேவலமாபேசினாலும் பொறுத்துப்போனீங்க!” என்று நேரிடையாகவே தாக்கிவிட்டு,  “நான் கைநிறைய சம்பாதிக்கறேனே!” என்று தலையை நிமிர்த்திக்கொண்டாள்.

    படம் முடிய சில நிமிடங்களே இருந்தன. ரமாவின் யோசனை, `தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டாவது இப்படி ஒரு பாடாவதிப் படத்தைப் பார்க்காவிட்டால் என்ன!’ என்று போயிற்று.

    திரைப்பட கதாநாயகன் தன்னைவிட இருபது வயது இளையவளாக இருந்த கதாநாயகியைக் கண்ட கண்ட இடங்களில் தொட்டுக் கொஞ்சியதைவிட வேறு எதுவும் உருப்படியாகச் செய்ததாகத்தெரியவில்ல.

    சித்தி மட்டும் எப்படி இந்தக் கண்ராவியையெல்லாம் இவ்வளவு ரசிக்கிறாள், ரகசியச் சிரிப்புடன்?

    ஒரு வேளை, தன்னையே அந்த கதாநாயகியாக உருவகப்படுத்திக்கொண்டாளோ?

    இந்த நரகத்திலிருந்து கொஞ்சநாட்களாவது விடுதலை பெற வேண்டும்.

     

    “லீவு வருதே! அம்மாவைப் பாக்கப் போகட்டுமா, சித்தி?”

    “அங்கே போய் என்ன கிழிக்கப்போறே? காலை நீட்டி படுக்கக்கூட எடம் கிடையாது. ஒங்கம்மாவுக்கும் சாப்பாடு மிச்சம்!” என்று, தான் வளர்ந்த சூழ்நிலை என்றும் பாராமல் பழித்துவிட்டு, “இங்கேயே இருந்தா, லைப்ரரிக்குப் போய் படிக்கலாம்!” என்று புவனா சொன்னதை வாய்திறவாது ஏற்றுக்கொண்டாள் ரமா. சித்தியுடன் யாரால் தர்க்கம் பண்ண முடியும்! ஆண்களே அவளிடம்எவ்வளவு பணிவாகப் பேசுகிறார்கள்!

    இரண்டு நாட்கள் கழிந்ததும், “பஸ் காசு செலவழிச்சுக்கிட்டு, நாள் தவறாம வெளியே போகாட்டி என்ன!” என்றாள் புவனா.

    “நீங்கதானே சித்தி,” என்று ஆரம்பித்தவளை, “எதிர்த்துப் பேசாதே. ஒனக்காக எவ்வளவு செலவு, தெரியுமா? இந்த ஒலகத்திலே எதுவுமே இலவசமா கிடைக்காது. தெரிஞ்சுக்க. வீட்டைக் கூட்டி, சுத்தம் பண்ணு. பாட்டிகிட்ட சமைக்கக் கத்துக்க. மல்லி, கனகாம்பரம், கத்தரி, எல்லாச் செடிங்களையும் கொத்திவிட்டு, தினம் ரெண்டு வேளையும் தண்ணி விடு,” என்று அடுக்கினாள். வேலைக்காரி நிறுத்தப்பட்டாள்.

    ரமா முதலில் விழித்துக்கொண்டது அப்போதுதான். சித்திக்கு தன் காலில் விழுந்துகிடக்க, போட்டு மிதிக்க, யாராவது வேண்டும். தான் வசமாக மாட்டிக்கொண்டோம்!

    மீண்டும் கல்லூரி திறக்கும் நாளை ஏக்கத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

    அன்று கல்லூரி முடிந்ததும் நல்ல மழை. இரண்டு பஸ்களைத் தவறவிட்டு, இருட்டியபின் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

    முகமெல்லாம் இறுகிப்போய், இடுப்பில் கைவைத்து, வாசலிலேயே காத்திருந்தாள் புவனா. “எவனோட சுத்திட்டு வரே?”

    ரமா வாயடைத்துப்போனாள், இப்படி ஒரு சொற்கணையை எதிர்பார்த்திராததால்.

    “சொல்லேண்டி!”

    “மழை..பஸ்..!” என்று குழறினாள்.

    “என்ன அளக்கறே? நீ எவனோ ஒருத்தன்கூட ஹோட்டலுக்குள்ளே நுழைஞ்சதைப் பாத்ததா யாரோ சொன்னாங்களே!”

    பன்னிரண்டு பிராயம் வந்ததும், `இனிமே ஆம்பளைப் பசங்களோட விளையாடாதே. அனாவசியமா பேசவும் கூடாது!’ என்ற அம்மா விடுத்த எச்சரிக்கையின் அர்த்தம் புரியாதுபோனாலும், இன்னமும் ஆண்களைக் கண்டாலே அஞ்சி விலகும் தன்னைப் பார்த்து, இப்படி ஒரு பழிச்சொல்! 

    வீட்டின் வெளியிலேயே நின்றபடி ரமா அழ ஆரம்பித்தாள். திரும்பவும் மழை பொழிய ஆரம்பித்து, அதில் தான் நனைவதுகூட அவளுக்கு உறைக்கவில்லை.

    அவளடைந்த திருப்தி முகத்தில் வெளிப்படையாகவே தெரிய, உதடுகளை வெற்றிச்சிரிப்புடன் இறுக்கிக்கொண்டு, உள்ளே நடந்தாள் புவனா.

    எங்காவது ஓடிவிடலாமா?

    எங்கு போவது?

    மாமாவின் வீட்டில் தங்கிப் படித்த அண்ணன் ரமாவின் நினைவில் எழுந்தான்.

    `அத்தை எங்கிட்ட தப்பா பழகப் பாக்கறாங்க, ரமா!’ என்று அவளிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டு, மீண்டும் தோட்டப்புறத்துக்கே வந்து ஒளிந்துகொண்டானே!

    `அண்ணன் செய்த தவற்றை நானும் செய்ய மாட்டேன்!’ என்று உறுதி எடுத்துக்கொண்டாள் ரமா. `சித்தியைவிட வாழ்வில் உயர்ந்து காட்டுகிறேன்!

    இறுதிப் பரீட்சைக்குச் சில மாதங்களே இருக்க, படிக்கும் சாக்கில், சித்தியுடன் பேசுவதைத் தவிர்த்தாள். பரீட்சை முடிந்தபின் எங்கு வேண்டுமானாலும் தொலையலாம். சுதந்திரமாகஇருக்கலாம்.

    “பாட்டி! பரீட்சை முடிஞ்சிடுச்சு. அம்மா,  மத்த எல்லாரையும் பாக்கணும்போல இருக்கு. காலையிலே போறேன்!” என்று யாருக்கோ அறிவிப்பதுபோல், பெரிய குரலெடுத்துச் சொன்னாள்.

    `இவ்வளவு செஞ்சிருக்கேன். கொஞ்சமாவது நன்றி இருக்கா, பாரு!’ என்று சித்தி முணுமுணுத்ததை லட்சியம் செய்யவில்லை.

    நன்றியாமே, நன்றி!

    பாட்டி சமைத்துப்போட்டு, ஆதரவாக இருந்தாள். திட்டியதையும், மிரட்டி வேலை வாங்கியதையும் தவிர சித்தி என்ன கிழித்துவிட்டாள்!

    அதற்குப் பிறகு அமெரிக்காவில் மேலும் இரண்டு பட்டங்கள் பெற்று, அங்கேயே வேலையும் தேடிக்கொண்டு விட்டாள். அன்பான கணவரும் அவளுக்கு வாய்த்திருந்தார். சித்திபோல்படங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட வேண்டியதில்லை. 

    நீண்ட காலத்துக்குப் பிறகு மலேசியா திரும்பியபோது, அனைத்துலக விமான நிலையத்தின் அருகே, கோலாலம்பூரிலேயே இருந்த சித்தியை, ஒரு மரியாதைக்குக்கூடப் பார்க்கத்தோன்றவில்லை ரமாவுக்கு.

    அதுதான் அம்மாவுக்குப் பொறுக்கவில்லை. `நன்றிகொன்றவள்’ என்று வசைபாடுகிறாள்.

    அந்த புவனா சித்தி — நாவிலேயே தேளின் கொடுக்கை வைத்துக்கொண்டிருந்தவள் — இன்று சாகக் கிடக்கிறாளாம்.

    `செத்துத் தொலையட்டுமே! இந்த மாதிரி ஒருத்தி போய்ச்சேர்ந்தா, ஒலகத்துக்கு என்ன நஷ்டம்?’ என்றுதான் எண்ணத் தோன்றியது ரமாவால். கூடவே, பாட்டி உயிருடன் இல்லாத நிலையில், தனியாக என்ன பாடுபடுகிறாள் அந்த ராட்சசி எனபதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஒரு குரூரமான எண்ணமும் அவளுக்கு உதித்தது.

    “நாளைக்கு கே.எல் போகணும்மா. அங்கே எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் இருக்காங்க!” என்ற மகளைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டாள் தாய்.

    `சித்தியைப் பார்க்கப் போகிறேன்,’ என்று உண்மையை ஒத்துக்கொண்டால், மதிப்பு குறைந்து விடுமோ!

    அப்படி என்ன வன்மம்?

     

    `இந்த பரிதாபகரமான ஜீவன்மேலா இத்தனை காலமும் வன்மம் வைத்துக்கொண்டிருந்தேன்!’ அதிர்ச்சியாக இருந்தது ரமாவுக்கு.

    இதுவா சித்தி?

    மூன்று வயதுக் குழந்தை படுத்திருந்ததுபோல் இருந்தது. முழு நீள அங்கி அந்த சொற்ப உடலையும் மறைத்திருந்தது. ஒட்டிய கன்னம். நீளமான முடி கழுத்தளவே கோணல்மாணலாகவெட்டப்பட்டிருந்தது. இடுப்புக்குக்கீழ் மட்டும் சற்றுப் பருமன். டயபர் கட்டியிருக்க வேண்டும்.

    `உலகமே என் காலடியில்!’ என்று இறுமாப்பாக இருந்தவள் தனது அடிப்படைத் தேவைகளுக்குக்கூட இன்னொருவர் கையை எதிர்பார்க்கும் அவல நிலை!

    `எனக்கு யார் நிகர்!’ என்று எல்லாரையும் அலட்சியமாகப் பார்த்த கண்களில் இப்போது எந்தவித ஒளியோ, சலனமோ காணப்படவில்லை.

    “புவனா அம்மாவால பேசத்தான் முடியாது. ஆனா, நாம்ப சொல்றது எல்லாம் விளங்குது,” என்று தெரிவித்தாள் தாதி. “பெரிய வேலையிலே இருந்தவங்களாமே!”

    ரமாவின் நினைவு எங்கோ தாவியது.

    ஒரு நாள் பாட்டி தன் கையாலேயே சோற்றை எடுத்து சித்தியின் தட்டில் போட, `அசிங்கம்! கரண்டியால போடாட்டி நான் சாப்பிட மாட்டேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!’ என்றுஆங்காரமாகக் கத்தியவள், தட்டை பாட்டியின்மேல் வீசினாள்.

    பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரமா விறைத்துப்போனாள். `வெளியிலே வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்குமா?’ என்று சொல்லியபடியே அன்பையும், கவனத்தையும் செலுத்தி, குனிந்து நிமிர்ந்தால்வலிக்கும் இடுப்பைப் பிடித்தபடி  பாட்டி சமைத்திருந்ததை அவள் அறிவாள்.

    சோறு பாட்டியின் கைலியில் படிந்தது. ஆனால், பாட்டி அதைப் பொருட்படுத்தவில்லை. “நாள் பூராவும் ஒழைச்சுட்டு வந்திருக்கேடி, கண்ணு. ஒன் கோபத்தை சோத்தின்மேலே காட்டாதே!” என்றுதரையில் கிடந்ததைக் கையால் திரட்டியபடி அழுதது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

    இன்றோ, திரவப்பொருட்கள்தாம் சித்திக்கு ஆகாரமாம். அதுவும், கைப்பிள்ளைக்கு ஊட்டுவதுபோல, சொட்டுச் சொட்டாக, ஒரு சிறு ஸ்பூனால்.

    `தெய்வம் நின்று கொல்லும்!’ என்று இதைத்தான் சொல்லிவைத்தார்களோ?

    `நல்லவேளை, நானும் நன்றி கொன்ற பாவத்திற்கு ஆளாகவில்லை!’ தன்னை விரட்டிய அம்மாவின்மேல் நன்றிகூட எழுந்தது.

    சித்தி ஆக்கிரமித்ததுபோக, கட்டிலில் நிறைய இடம் இருந்தது. அவள்மேல் இடிக்காத குறையாக அதன்மேல் உட்கார்ந்துகொண்டாள் ரமா.

    எதனாலேயோ உந்தப்பட்டவள்போல, சித்தி வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து, அண்மைக்காலம்வரை தன் வாழ்க்கையில் நிகழ்ந்ததை எல்லாம் தன்பாட்டில் சொல்லிக்கொண்டே போனாள். ஒவ்வொரு வார்த்தையாலும் அவளுடைய மனத்தடியில் படிந்திருந்த கசப்பு, அதனால் எழுந்திருந்த வன்மம், விலகியதுபோல் ஒரு நிம்மதி.

    அசைவே இல்லாது, படுக்கையே கதியென்று இருந்தவளின் கண்களில் நீர் நிரம்பியது. ஏதோ சொல்ல முயன்றாள். கரடுமுரடான ஓசைதான் வெளியே வந்தது.

    அவளுடைய நிலையைப் பொறுக்காது, “ஒங்களுக்கு நல்லா ஆயிடும், சித்தி!” என்று அவசரமாகச் சொன்ன ரமா,  கைகளைச் சிறகென விரித்து சித்தியின் தோளில் போட்டு, தன் தலையை அவள்மார்பில் பதிய வைத்துக்கொண்டாள் — மிக மிக லேசாக.   

    (2008-ல் மலாயா பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்றது)விலகுமோ வன்மம்?

    Share
  • தனிமையில் ஒரு தமிழ்க்குரல்

    நிர்மலா ராகவன்

    `நீங்க மட்டும் தனியா எதுக்குப்பா இங்க இருக்கணும்? வீணா கஷ்டப்படாம, எங்களோட வந்துடுங்க!’ ரகு கேட்டபோது, கிருஷ்ணனுக்கும் அது சரியான யோசனை என்றுதான் தோன்றியது.

    மனைவி இருந்தவரை சமையலறைப்பக்கமே போகாதிருந்தவர். இப்போது தானே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதை நினைத்தாலே பயமாக இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் குக்கரை உடனே திறந்து, நீராவி முகத்தில் அடித்ததும், `கத்தி என்ன,இவ்வளவு மொக்கை!’ என்று ஒரேயடியாகத் தீட்டி, முருங்கக்காயை நறுக்கும்போது விரலையும் சேர்த்து நறுக்கி, ரத்தம் கொட்டியதும் நினைவில் எழுந்தது. அப்போது, `உங்களுக்கு ஏன் இந்த வேலையெல்லாம்!’ என்று ஆறுதலாக ஓடி வர எவரும் இல்லை என்று உரைத்தபோது, தான் ஏன் இப்படித் தனித்துப்போனோம் என்று அழுகை வந்ததே!

    இருபதாண்டு மண வாழ்க்கைக்குப்பின் மனைவியிடம் என்ன பேசுவது என்று புரியாது, தான் ஒரு பக்கம், மனைவி சமையலறையில் என்று வாழ்ந்த சராசரி தம்பதிகள் அவர்கள். ஏதோ, அவள் இருந்தவரை சாப்பாட்டுக்காவது கஷ்டமில்லாது இருந்தது.

    இருக்கிற சொத்தை ஏதாவது அனாதை ஆஸ்ரமத்திற்கு எழுதிவிட்டு, மகனுடன் ஒரேயடியாக வெளிநாட்டுக்குப் போய்விடலாம். மருமகள் ஒரு வேளை சோறு போடமாட்டாளா, என்ன! பேரனுடன் பொழுதை ஆனந்தமாகக் கழிக்கலாம்.

    ஆனால் ரகு ஒப்பவில்லை. `வீட்டை விக்க வேண்டாம். நாம்ப இங்க வராமலேயாவா போயிடுவோம்? அம்மா தன்னோட நகையையெல்லாம் வித்து, எவ்வளவு ஆசைப்பட்டு இந்த வீட்டை வாங்கினாங்கன்னு எனக்குத் தெரியும்,’ என்று சொன்னபோது, அவருக்கு மறுத்துப்பேசத் தோன்றவில்லை.

    அயல்நாட்டில் அக்கம்பக்கத்தில் யாருமே தமிழ் பேசவில்லை என்பது முதல் அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு ஏன், பேரனுக்கே தமிழ் புரியவில்லை.

    இரண்டு வயதிலிருந்தே தன் அருமைப்பிள்ளை தொலைகாட்சியிலிருந்து ஆங்கிலம் பயின்ற பெருமையை ரகு கூறியபோது, அவருக்குப் பாராட்டத் தோன்றவில்லை.

    “இங்கிலீஷ் என்னடா, இங்கிலீஷ்! நம்ப பாஷையைக் கத்துக்குடு மொதல்லே!” என்றார் அலட்சியமாக.

    ரகு சுற்றுமுற்றும் பார்த்தான், அவர் கூறியது எங்காவது மனைவி காதில் விழுந்து தொலைத்துவிடப் போகிறதே என்று பயந்தவன்போல்.

    “தமிழிலே பேசினா, இங்க அவன் வயசுப் பசங்களோட பழகவே முடியாதுப்பா,” என்று அவர் வாய்க்கு ஒரு பூட்டு போட்டான்.

    அவர் முகம் போனபோக்கைப் பார்த்து, “அதான் தேவாரம் கிளாசுக்குப் போறானே!” என்றான், சமாதானப்படுத்தும் விதமாக.

    கிருஷ்ணன் மென்று விழுங்கினார். `தேவாரம்’ என்ற பெயரில், என்ன சொல்கிறோம் என்றே புரியாது, அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இன்ன மொழி என்றுகூட நிர்ணயிக்க முடியாது இருந்ததை வெளிப்படையாகச் சொல்லவா முடியும்!

    தான் வாழ்ந்த சிற்றூரில், சாயங்கால வேளைகளில் காய்கறி வாங்கிவரும் சாக்கில் மார்க்கெட்டுக்கும், அதன்பின் கோயிலுக்கும் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் அவர்.

    “இங்க.. பக்கத்திலே கோயில் எதாவது இருக்கா ரகு?” என்று கேட்டபோது, “கோயிலுக்குப் போக இருநூறு மைல்! மலைமேலே, ரொம்ப அழகா இருக்கும். எப்பவாவது லீவு நாளிலேதான் போகமுடியும். அதான் வீட்டிலே முருகன் படம் மாட்டி வெச்சிருக்கேனே!” என்றபோது, அவன் குரலில் சிறு எரிச்சல் இருந்ததோ?

    முன்பு அவரையொத்த நண்பர்களுடன் கூடி, அரசியல், சினிமா, சமூகம் என்று அலசியதை எண்ணினார். எதையோ இழந்துவிட்டது போலிருந்தது. முன்பிருந்ததைவிட இன்னும் தனித்துவிட்டதைபோல் இருந்தது. யாரோ தன்னை ஏமாற்றிவிட்டதுபோன்ற உணர்வு.

    `ரகு என்ன, என் கையைப் பிடிச்சு இழுத்தானா? நானேதானே வந்தேன்!’ தன் முட்டாள்தனத்துக்காக வருத்தம் ஏற்பட்டது.

    “அப்பா! கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வர்றீங்களா?”

    `இவனுக்கு நான் எடுபிடியா!’ எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மகன் நீட்டிய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். இப்போதெல்லாம் பசிகூட மந்தமாகியிருந்தது.

    “குளிரும்பா. மஃப்ளர் கட்டிட்டுப் போங்க!” என்ற குரலை அலட்சியம் செய்தார்.

    அங்குதான் சந்தித்தார் தேவியை.

    “யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க ஸார்?” தமிழ்க் குரல் கேட்டு மெய்சிலிர்த்துப்போனார் கிருஷ்ணன்.

    அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. `என்ன நாகரிகமோ!’ என்று மனதுக்குள் ஒரு சிறு வெறுப்பு.

    மரியாதையை முன்னிட்டு சிறிது நேரம் பேசிப் பிரிந்தார்கள். இல்லை, அவளேதான் பேசினாள் — தான் படிப்புக்காக இருபது வயதில் வந்தது, கல்யாணம் செய்து ஒரு வருடத்துக்குள் கணவர் இறந்தது – என்று பல தகவல்களை மூச்சுவிடாமல் சொன்னாள். `தமிழ் பேசுகிறவர்களைப் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது,’ என்றாள், தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று நினைத்தவளாக.

    விதவை, பாவம்! இவளைப்போய் திட்டி வைத்தேனே! தன்னைத்தானே வைதுகொண்டதில், அவள்மீது ஏதோ பிடிப்பு ஏற்பட்டது போலிருந்தது.

    அடுத்த முறை, “எங்க வீட்டுக்கு வாங்களேன். பக்கத்திலேதான். நான் ஃபில்டர் காபி போட்டுத் தரேன்,” என்று தேவி சிரித்தபோது, “வரேன். ஆனா, சர்க்கரை வேண்டாம்,” என்றபடி அவரும் அவள் சிரிப்பில் கலந்துகொண்டார்.

    `இந்தப் பெண்ணுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச முடிகிறதே!’ பிறர் சொல்லக்கூட கூச்சப்படும் விஷயங்களைக்கூட அறிவுபூர்வமாக, தைரியமாக, தேவி பேசியபோது பிரமிப்புதான் எழுந்தது.

    `எனக்கும் ஒன்று வாய்த்திருந்ததே! வடிகட்டின முட்டாள்! எதைப்பற்றியும் எதுவும் தெரியாது!’

    `தேவியும் தன்னைப்போல் தனிமையில் வாடுகிறவளோ? அதுதான் இவ்வளவு சீக்கிரத்திலேயே என்னுடன் நெருங்கிவிட்டாளோ?’

    மனைவிக்கும் தேவிக்குமாக அவர் மனம் தாவியது.

    இப்படி ஒரு படித்த பெண்ணை மணந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் என்று ஓர் எண்ணம் எழ, அதை அடக்க முடியாது பாடுபட்டார். குற்ற உணர்ச்சி மிகுந்தது.

    மகனது வீட்டில் தொலைகாட்சியைத் தவிர வேறு துணை இல்லாதவராக இருந்தபோது எழுந்த விரக்தி சிறிது சிறிதாக மறைந்தது. முன்பு ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தபோது எழுந்திருப்பதுகூட பெரும் பிரயத்தனமாக இருந்தது. இப்போதோ, தினமும் காலார நடந்துபோனார்.

    வழியில் தேவியைப் பார்க்க முடியுமா என்று மனம் துடிக்க, ஏதோ குற்றம் செய்வது போலிருந்தது. மனைவிக்குத் துரோகம் செய்கிறோமோ?

    அந்த மனமே சமாதானப்படுத்தியது: மனைவிதான் போய் சேர்ந்துவிட்டாளே! இன்னும் எத்தனை காலம்தான் தனிமையிலேயே கிடந்து தவிப்பது!

    அவரிடையே தோன்றியிருந்த மாறுதல்களை மகன் கவனிக்கத் தவறவில்லை. புன்னகையுடன், “யாருப்பா ஒங்க புது ஃப்ரெண்ட்?” என்று கேட்டான்.

    விழிகள் விரிய, “தமிழ் பேசறாங்க!” என்று அவளைச் சந்தித்ததுபற்றி விவரித்தார்.

    ரகு யோசனையுடன், “பொண்ணா! எத்தனை வயசிருக்கும்?” ன்று கேட்டான்.

    அவருக்கு என்னமோ போலிருந்தது. அவனது கேள்விக்கு நேரிடையாகப் பதிலளிக்காது, “போடா! நான் என்ன, சின்னப்பையனா?” என்று தன் தடுமாற்றத்தை மறைக்கப்பார்த்தார்.

    அன்று சாயந்திரம் வீடு இரும்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. வீட்டுக்குள் நுழைய இருந்தவர், மருமகளின் குரல் உரக்க ஒலிப்பது கேட்டுத் தயங்கி நின்றார்.

    “ஆனாலும், ஒங்கப்பாவுக்கு இந்த வயசிலே புத்தி இப்படிப் போகவேண்டாம். அவளோட அப்படி என்ன பேச்சும், சிரிப்பும்! என்னடா, தினமும், `கடைக்குப் போறேன். ஒனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணுமா?’ன்னு கரிசனமா கேக்கறாறேன்னு பாத்தேன். இந்த சாக்கிலே அவ வீட்டுக்குப் போறாருன்னு இப்பத்தானே தெரியுது!”

    கிருஷ்ணன் திகைத்துப்போனார். யார் இவளிடம் ஒன்றுக்குப் பத்தாக வத்தி வைத்திருப்பார்கள்?

    `இந்நாடு நாகரிகத்தின் உச்சம்!’ என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், சிலருடைய மனப்போக்கு பின்தங்கியே இருக்கிறது!

    இனியும் தான் இங்கு இருப்பதோ, தேவியுடன் பேசிப் பழகுவதோ தனக்குத்தான் கேவலம்.

    தேவி!

    சின்னப்பெண், பாவம்!

    அவளுடைய எதிர்காலம் தன்னால் பாழாகக் கூடாது.

    “எதுக்குப்பா இவ்வளவு அவசரமா திரும்பப் போகணும்னு துடிக்கறீங்க? எனக்கு லீவு வருது. ஒங்களைக் கோயிலுக்குக் கூட்டிப்போகலாம்னு இருந்தேனே!” மகனது குரலில் உண்மையான ஆதங்கம் இருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய முடிவால் ஏற்பட்ட நிம்மதியை மறைத்துக்கொள்ள அப்படிச் சொல்வதாகத்தான் நினைத்தார். கசப்பு ஏற்பட்டது.

    “நம்ப ஊருக்குப் போனா, தினமுமே கோயில் குளம்னு இருக்கலாம். பாக்கறவங்ககிட்டே எல்லாம் தமிழிலே பேசலாம்,” என்றவரின் குரலில் ஆதங்கம். “அங்கே வயலும், மரமுமா பச்சைப்பசேலுன்னு எப்படி இருக்கும்! இந்த கான்க்ரீட் காட்டிலே என்னால இருக்க முடியாது, ரகு!” என்றவரின் குரலில் தீர்மானம்.

    தான் செய்த காரியத்துக்கு அவன் மனம் நோவானேன் என்ற அலுப்புடன், “நல்லவேளை, நம்ப வீட்டை விக்கக்கூடாதுன்னு நீ சொன்னே!” என்று சப்பைக்கட்டு கட்டினார் கிருஷ்ணன்.

    Share
  • இலங்கைப் பயணம் சில குறிப்புகள்

    சுப்ரபாரதிமணியன்

    சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர்.

    – இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய விமர்சனத்தடத்தில் சென்றது தமிழுக்கு வளம்தந்தது. டொமினிக் ஜீவா முதல் மு. தளயசிங்கம் வரை பலர் என்னை பாதித்திருக்கிறார்கள். மல்லிகை முதல் இன்றைய தாயக ஒலி, ஞானம், படிகள் வரை இதழ்கள் பயன்படுகின்றன.

    இலங்கையின் கடற்கரையும் சுற்றுச்சூழலும் இயறகை வளமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. –

    – யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்

    – துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது

    – துரோகத்தின் சாட்சியம் : 2

    வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன

    துரோகத்தின் சாட்சியம் : 1

    கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.

    – கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித் தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்

    – சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர் தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்

    – கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும் உள்ளது.

    – கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல் விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த பொற்காலமும் இருந்திருக்கிறது

    – பிறரின் கண்டனம் 3

    முல்லைவாய்க்காலுக்குப் போகாமல் கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.

    ..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே செக்கிங் வெகு அதிகம்

    – இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில் விளம்பரம்

    – ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம் பாஸ்பரஸ்

    – கொழும்பு காலி கடற்கரை.தூர

    -இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.

    – அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும். ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே.wp

    பாதித்தது :

    கிளினொச்சியில் சந்தித்த தாய்மார்கள்:

    – இலங்கையில் காணாமல் போனவர்கள் போர்க்காலங்களிலும் முன்னும் கால் லட்சம் பேர் . அவர்களின் தாய்மார்கள் ஓராண்டாய் நடத்தும் போராட்டத்தை கிளி நொச்சியில் பார்த்தேன்.

    இந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

    16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    லங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர். பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி குடிநீர் குழாய் பதிக்கஅரசு குடிநீர் வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிய போது 4 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் நீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அங்கு வசிக்கும் தமிழர்கள் தெரிவிக்கையில்:இலங்கை போரின் போது காணாமல் போனவர்களைதான் ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால்விடுதலை புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர்கள்தான் அங்கு புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்துள்ளார். இதனால் அங்கு சர்ச்சை உண்டாகியுள்ளது.wp

    – இலங்கை வவுனியா.பண்டாரவன்னியன் சிலை..இவரைப் பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ரொம்ப சுமாராய்..முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில்

    – யாழ்ப்பாணம் நூலகத்திற்கு என் 30 நூல்களைப் பரிசளித்தேன்

    – துரோகத்தின் சாட்சியம் : 3. விடுதலைிப்புலிகளால் பிடிக்கப்பட்ட ராணுவ டாங்கை இப்போது கதையை மாற்றி இலங்கை அரசு காட்சியகம் நடத்துகிறது

    – துரோகத்தின் சாட்சியம் : 2

    வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன் அவை மீண்டும் கட்டப்படுகின்றன

    துரோகத்தின் சாட்சியம் : 1

    கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த தண்ணீர் தொட்டி இராணுவத்தால் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாகக்.

    – கொழும்பு.மியூசியம்..ஒரு முஸ்லீம் இடம் கொடுத்து கட்டிடம் கட்டித் தந்தாராம்.அவர் பற்றிய குறிப்பே இல்லை என்றார் ஒரு விசயம் அறிந்தவர்

    – சிங்கள இளைஞன் ஒருவன் புத்தர்

    தலைமயிரை பீடத்தில் வைக்கும் ஒரே நாள் .வெகு அபூர்வம் இன்று கூட்டிப்போயி அலைக்கழித்து ஜெம் கடையில் விட்டு வேடிக்கை காட்டிய வேதனை குறித்து பல கொழும்பு நண்பர்களிடம் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன்.அதை எழுதித் தீர்க்கணும்

    – கொழும்பு தமிழ்ச்சங்கம்..யாழ் கந்தசாமி கோவில்.. இவற்றுடன் ஏகமாய் ஆறுமுக நாவலருக்குச் சிலைகள்..அவரின் தமிழ்ப்பணிகள மீறி சாதி வெறியர் என்ற பட்டமும் உள்ளது.

    – கொழும்பு பேட்டா பகுதியில் குணசேனா நூல் விற்பனையகம்..மால் போல் விஸ்தாரம்.கூட்டமும் கூட.தமிழ்நூல்களை இவர்கள் பதிப்பித்த பொற்காலமும் இருந்திருக்கிறது

    – பிறரின் கண்டனம் 3

    முல்லைவாய்க்காலுக்குப் போகாமல் கடற்கரை அழகை ரசிதததை எழுதியிருக்கக் கூடாது.

    ..எங்க போக. ஆமிக்காரன் வுட்டாதனே.ஏ9 நெடுஞ்சாலை..கிளிநொச்சியிலேயே செக்கிங் வெகு அதிகம்

    – இலங்கை.கல்வி இலவசமாய் கலாநிதி பட்டம் வரை.உடுப்பு காலணி இலவசம் கடைகளில் விளம்பரம்

    – ரஷ்யா இலங்கை தேயிலைக்குத் தடை.இலங்கை ரஷ்ய ஆஸ்பெஸ்டாசுக்குக் தடை.பரஸ்பரம் பாஸ்பரஸ்

    – கொழும்பு காலி கடற்கரை.தூர எல்லையில் 14மில்லியன் டாலர் செலவில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா.99 ஆண்டு ஒப்பந்தம்.இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்.வி.புலிகளை ஏன் அழிக்க உதவினோம் என்று நொந்து கொள்ளும் இந்தியா.

    – வவுணியா..உணவுப்பட்டியலில் மிதிவெடி என்ற பலகாரம் உள்ளது

    – அரசு ஆணை போர்டில் கொழும்பு.நீண்ட சுத்தமானக் கடற்கரை.அசுத்தப்படுத்தினால் குறைந்தது 4 மில்லியன் அபராதம்.அதிகபட்சமாய்15 மில்லியன்.யோசிக்க..திருப்பூர் நொய்யல்..

    – இன்று கொழும்பு தமிழ்ச் சங்க நூலகத்திற்கு என் நூல்களை அன்பளிபபாக வழங்கியதைப் பெற்றுக் கொண்ட இலக்கிய பிரிவு பொறுப்பாளர் சுகந்தியுடன்..

    – யாழ்ப்பாணம் சந்தித்தேன் .போர்க்காலத்தில் பாதிக்கப்படடவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் தன்னார்வலர் அன்பு ராசாவின் இலக்கியப் பதிவுகள் நூல்களாய்..

    – போர்க்காலத்தில் கை.கால் சேதமடைந்தவர்களுக்கு செயற்கை உறுப்பு வழங்கும் தன்னார்வக்குழு வருடம் 300 பேருக்கு வழங்குகிறது.

    – வவுணியா டு யாழ்ப்பணம்.150கிமீ அதிகமான வெகு நேரான a 9 நெடுஞ்சாலை பல பல ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டு..இருபுறமும் பச்சை பசேல் வயல்கள்.ஒரு காலததுப் போர்க்கால பூமி

    – வவுணியா.முகநூலிலிருந்து வாசிப்பிற்கு புதிய தலைமுறை நகரவேண்டும்.லண்டன் உதயணன் உரையில்..

    – இலங்கை கவிஞர் யோ.புரட்சி.1000கவிதைகள் தொகுப்பு. 1000 கவிஞர்கள் 420 தமிழகக்கவிஞர்கள்.யோவ் புரட்சிதான் தம்பி

    – வவுனியா.தமிழ்உதயாவின் 5கவிதைநூல்கள் ஒரே நாளில் வெளியீடு.இத்தொகுப்புகளின் ஆக்கத்தில் முருகதீட்சண்யா.தம்பி.இளம்பரிதியின் முத்திரைகள் அபாரம்

    – கொழும்பில் மேமன்கவியுடன்..பின்நவினத்துவம்.பொதுவுடமைக்கட்சிகளின் பலவீனம்..தமிழ்ஈழம் அழிப்பின் முன்னணி..என்று தொடர்ந்த உரையாடல்

    இலங்கை.சு.சுழலை மாசு படுத்தினால் 4 மில்லியன் அபராதம் .விபத்து இன்சுரன்ஸ்4 மில்லியன்.இலங்கையில் 4மில்லியன் சாதாரணத் தொகையா

    -யாழ்ப்பாணம். கீரி மலை. இராணுவ ஆக்கிரமிபில் இருந்து விலகியதால் மக்கள் நடமாட்டம் இப்போதெல்லாம். போர்க்காலங்களில் வீடுகளைக் கைவிட்டுப் போனதால் அவை சிதைலமடைந்து கிடப்பது துயரமான காட்சி.நூற்றுக்கணக்கான வீடுகள். இன்னும் யாழ் விமான நிலையம் கூட இராணுவ ஆக்கிரமிபில் தான்.்ாயாழ்ப்பாணம்.கீரிமலை .கேணி புண்ணியஸ்தலமாக உள்ளது.அழகிய கடற்கரை… நீர் உள்ளே வந்து ..

    –

    யாழ்ப்பாணம் . நல்லூர் கந்தசாமி கோவில்.மேல் சட்டை போடாமல்தான் உள்ளே போகவேணும். தேங்காய் தட்டு இல்லாமல் போனால்… ஒரு தேங்காய் விலை ரூ 150. தென்னை மர நோய், உற்பத்தி குறைவு . 75 ரூபாய்க்கு மேல் தேங்காயை விறகக் கூடாது என்று அரசு உத்தரவு மீறி….இலங்கை இடியாப்பம் தேங்காய் சட்டினி இன்றி தொண்டையில் இறங்குமா . கந்தா கருணை வை.

    –

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம். மார்சிய விமர்சன அணுகுமுறையை வளப்படுத்திய அமரர்கள் கைலாசபதி, சிவத்தம்பி முதல் பலரின் நினைவைக் கிளப்பியது. போர்க்காலத்தில் முக்கிய களம் இது

    -யாழ்ப்பாண நூலகம். முழுக்க எரிக்கப்பட்டு அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்டதைப் பார்த்துமார் அடைப்பு ஏற்பட்டு இறந்த பாதிரியார் படம் இது. பின் புணரமைக்கப்பட்டுள்ளது.சுஜாதா அது எரிக்கப்பட்ட அடுத்த வாரம் அதுபற்றி எழுதியிருந்த ஒரு கதை : ஒரு லட்சம் புத்தகங்கள்

    – யாழ்ப்பாணம் தமிழ் நூல்கம். ,

    துரோகத்தின் சாட்சியம் : 2

    வவுனியாவிலிருந்து யாழ்., கிளினொச்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்்காக இருந்த பாலங்கள் இராணுவத்தால்/போராளிகள் போர்க்காலத்தில் இடிக்கப்பட்டது சாட்சியாக பல பாலங்களைக்கண்டேன்

    முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான்.

    பண்டாரவன்னியன் நினைவுநாளும், வரலாற்றுத் திரிபும் .

    ——————————————————————————————-

    இலங்கையின்; வடபாகம் நாக நாடு, நாகதீபம் எனவும் ஆரம்பகாலம் தொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்பதனை மகாவம்சம், தொலமியினுடைய குறிப்பு, வல்லிபுரம் பொற்சாசனம், மணிமேகலை, சோழர்காலக் கல்வெட்டுக்கள் ஆகியன உறுதிப்படுத்துகின்றது. இது இலங்கையின் தென் பிராந்தியங்களில் இருந்து வடபாகம் தனித்த பண்பாட்டு விழுமியங்களுடன்வாழ்ந்திருக்கிறது என்பதனை உறுதி செய்கின்றது.

    அத்துடன் இலங்கையில் கிடைத்திருக்கும் ஆதி இரும்புக்கால தொல்லியற் சான்றுகளை ஆய்வுசெய்தால் வடபாகத்திற்கும்,தென்பாகத்திற்கும் இடையேயான வேறுபாட்டை காணமுடியும். இவ் ஆதி இரும்புக்கால பண்பாட்டின் கூறுகளான தாழி, அடக்கங்கள்,கற்கிடை அடக்கங்கள், கரும் – செம் மட்பாண்டம், இரும்புக்கருவிகள், பிராமி எழுத்துக்கள் முதலான தொல்லியற் சான்றுகள்வடபாகத்தில் கூடுதலாகக் காணப்படுகின்றன. ஆனால் தென்பாகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் இச்சாசனங்களைக் காணமுடிகிறது.

    இதை அண்மையில் இலங்கை தொல்லியற்திணைக்களத்தின் சிரான் தெரணியகல, புஸ்பரட்ணம் ஆகியோர் இரணைமடுப்பகுதியில்நடத்திய ஆய்வுகளின் ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 1,25,000 கற்கால மக்கள் வாழ்ந்தார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. இதுகி.மு.3700 ஆம் ஆண்டளவில் நுண்கற்கால மனிதன் இப்பகுதியில் வாழ்ந்தான் என்பதனை இற்குகிடைத்த கல்லாயுதங்கள்உறுதிசெய்கின்றன. இதன் மூலம் இரணைமடுவே இலங்கையில் காணப்பட்ட ஆதி கற்கால குடியிருப்பாக காணப்படுகிறது. அத்துடன்பூநகரி, குஞ்சுப்பரந்தன் (டி8 குடியிருப்பு), ஈழவூர் (பொன்னாவெளி) ஆகியவற்றிலும் தொல்லியற்சான்றுகள் பல கிடைத்துள்ளமையானதுமகாவம்சத்தின் வரலாற்றை மீள்ஆய்வு

    – உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் முறிவு நாவலுக்கும். தெளிவத்தை ஜோசப்பின் ஈழ நாவலுக்கும் கொழும்பில் பரிசளிக்கப்பட்டன.தெளிவத்தை ஜோசப் முன்பு விஷ்ணுபுரம் விருது பெற்றதால் தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவர்

    Share
  • நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சங்க இலக்கியம் கற்பித்தல்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    நவீன உலகில் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்து உறவாடிக்கொண்டிருக்கும் கருவியாகத்  தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குவது மனிதனின் ஆறாம் விரலாகக் கருதப்படும் தொலைபேசி. தொழில்நுட்பங்கள்  நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்குத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாத் துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டன.  இத்தகைய தொழில்நுட்பங்களும் தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கமும் ஒருபுறமிருந்தாலும் அவ்வளர்ச்சியில் பங்குபெறாத, கண்ணேறிட்டுப் பார்க்காத சமூகமும் நம்மைச் சுற்றி காணப்படத்தான் செய்கின்றது.  தொழில்நுட்பங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கல்வித்துறையும் இத்தொழில்நுட்பங்களுடன் இணைந்து பல எட்டாக்கனிகளைத் தனதாக்கியுள்ளன. மொழிதவிர்த்த ஏனைய கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் வேரூன்றிக் காய்காய்த்துக் கனியத் தொடங்கிய நிலையில் தமிழ்மொழியும் இதில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பழம்பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நாம் அப்பழமையான இலக்கியங்களைப் பழமையான கல்விமுறையிலேயே கற்றும் கற்பித்தும் வருகின்றோம். பழமையான இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் என்பது கசப்பான உண்மையாகும்.  இக்கட்டுரை சங்க இலக்கியத்தை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை எடுத்தியம்புகிறது.

    மரபுசார்ந்த  கல்வி முறைகள்

    கல்வி முறைகளில் சிறந்திருந்த ஆதிமனிதன் குருகுலக் கல்வி முறையை மேற்கொண்டான்.  மன்றங்களில் தொடங்கிய கல்வி முறையில் சாதியம் புகுந்து கோயில்களில் வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டது.  எல்லாருக்குமாக இருந்த கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எனச் சுருங்கியது.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இது ஒழிக்கப்பட்டு எல்லாரும் கல்வி கற்கும் முறை உருவானது.  நன்னூல் கூறும் கல்வி முறையைப் பார்க்கும்போது( நன் 40, 41 )  சோழர் காலத்துக் கல்வி முறை இதில் பதிவாகியுள்ளது என்பது உறுதி.  அதாவது, வினாவை எழுப்பி அதற்கு பதில்கூறும் ஒருவகைக் கல்வி முறையே இருந்தது.  சான்றாக  மு.வை அரவிந்தன் உரையாசிரியர்கள் என்னும் தம் நூலில் ( 1996:6,7) மேற்கோளாகக் காட்டும் உரைப்பகுதி இதற்குத் தக்க சான்றாக அமையும். “கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதவள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். என்னை? வரைவு பொருட்டுத் தலைமகன்போக அவன் வரைவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று வினவலாமோ? இஃது அங்ஙனம் ஆயின் குறி என்பது பொய்யேயாம் என்பது கடா. அதற்கு விடை : குறியும் பொய்யன்று இவளும் பொய் கூறினாள் அல்லள்”  என்னும் திருக்கோவையார் பேராசிரியர் உரையைப் பார்க்கும்போது கேள்வி கேட்டு விடையளிக்கும் கல்வி முறையே அன்றைய சமூகத்தில் இருந்தது எனத் தெரிகின்றது.

    மேலும் நன்னூலில் இடம்பெரும் “செவி வாயாக நெஞ்சு களனாக” பாயிரம் 49 என்னும் தொடர், காதால் கேட்டு மனத்தில் நிறுத்தும் முறையை உணர்த்துகிறது. அதாவது மனப்பாடம் செய்யும் முறை வழக்கில் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  இம்மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்ததையும் இதற்கான காரணத்தையும் சீனி வேங்கடசாமி பின்வருமாறு விளக்குகிறார். “கணக்காயரிடம் பொருள்அறியாது மனப்பாடம் செய்த மாணவர்கள் பிறகு தகுந்த புலவரிடம் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடம் செய்த நூல்களுக்கு உரை கேட்பர்.  அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில்  இம்முறை ஏற்றதாக இருந்தது. மாணவர்கள்  உருப்போட்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னூல், நிகண்டு போன்ற  நூல்களைக் கற்றனர்” என்று குறிப்பிடுகிறார்.  (2001:51) மாணவர்கள் ஆசிரியனிடம் பாடம் கேட்கும்போதும் ஒருவகையான கசப்பு உணர்வை பெற்றனர் என்பதை உ.வே.சா தமது என்சரிதம் என்னும் நூலில் ’அம்பலவாண முனிவரிடம் தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெற்ற கசப்பான அனுபவத்தைப்          ( 1956:44) பதிவாக்கியுள்ளார்.  ஆங்கிலேயர் ஆட்சியில் பல கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் அச்சுக்கூடங்களும் தோன்றின.  அச்சுநூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இதனால் மனப்பாடக் கல்வி மறைந்தது. சமய எல்லைகளைக் கடந்து பலவகையான இலக்கண இலக்கியங்களைப் பயிலவும் அவற்றைப் பிற இலக்கியங்களுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் கல்வி முறையும் நடைமுறைக்கு வந்தது.

    கல்வித்துறையில் நவீன தொழில் நுட்பங்கள்

    பழங்காலக் கல்விமுறை ஆசிரியனை மையமிட்ட கல்விமுறையாக இருந்தது.  நவீனக் கல்வி முறை  ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும்போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும், ஆசிரியரின் இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கிறோம். மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகைகளும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக்களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனத்தில் பதியவைக்க முடியாத நிலையில் கரும்பலகையும் வெண்கட்டிகளும் பயன்பாட்டில் வந்தன.  இந்நிலை தற்காலம்வரை தொடர்கிறது. ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர்ப் பயன்பாட்டுக்கு வந்தன.

    இன்று கற்றல் கற்பித்தலில்  தொழில் நுட்பக்கருவியான  கணினி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இக்கணினி வகுப்பறைகளில்  புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவை இலகுவாக்குவதோடு கற்பித்தல் உத்தியையும் மாற்றி மாணாக்கர்களின் கற்றல் முறையையும் மாற்றிவிடும் கருவியாகவும் செயல்படுகிறது.

    ஓர் ஆசிரியன் ஒரு மடிக் கணினியையும் தனது பயன்பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), தகவல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக்கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்துவிட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பிவிடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.

    அது மட்டுமல்லாமல் இப்போது கற்பித்தலில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம்கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம். தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாடமாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றிவிட்டால், அவரது இன்மைக்குப் பின்வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும்.

    கற்பித்தலின் மற்றொருகூறு சக்தி மையம் அல்லது பவர் ஆகும். இது கறபித்தல்-கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப்போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண்திரையில் வழங்கலாம். தேவையான காலஅளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.  இத்தகைய தொழில் நுட்பங்களை நாம் எட்டிவிட்டோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். 

    தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சங்க இலக்கியத்தைக் கற்றல்

    தொழில்நுட்பச் சாதனங்கள் கல்வித்துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்டோம்.  இனி இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சங்க இலக்கியத்தைக் கற்கலாம் என்பதைக் காண்போம். இன்று இணையம் வழியாகக் கல்வி கற்கவும் தேர்வு எழுதவும் பட்டம் பெறவும் உதவும் வழியில் பல திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தோன்றியுள்ளன. அவ்விணையம் வழியாகப் பாடம்கேட்கும்போது ஆசிரியர் ஒருவர் நின்று பாடம்எடுக்கும் முறை காணப்படுகிறதே ஒழிய நாம் மேற்கூறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரு வகுப்பைக் காண்பது இயலாத ஒன்றாகப் காணப்படுகிறது.. அதாவது அவ்விணையம் வழியாகவும் மரபுசார்ந்த கல்வி முறையே புகுத்தப்படுகிறது. ஆசிரியர் தகவலாளராகவும் மாணவர்கள் தகவல் பெறுபவர்களுமாகவே காணப்படுகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய வகுப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அரசின் உதவித்தொகையில் பல ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று அரசு கல்லூரிகளில் பள்ளிகளிலும்  நிறுவப்பட்டிருப்பினும் அது பயன்படுத்துவாரின்றியே காணப்படுகின்றன. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.  இதற்குக் காரணம் முறையான பயிற்சி இல்லாமையும் ஆங்கிலப் புலமை இல்லாததுமே காரணமாகும்.

    கான்பூசியசின் கருத்துப்படி “நான் கேட்கிறேன் மறக்கிறேன், நான் பார்க்கிறேன் நம்புகிறேன், நான் செய்கிறேன் புரிந்து கொள்கிறேன்” மாணவர்கள் கண்டு, கேட்டு, உணர்ந்து கற்கும் ஒரு கல்வி முறை அவசியமாகிறது.  அத்தகைய ஒரு கல்வி முறையைக் கொடுக்க நவீனத் தொழில்நுட்பங்கள் பெருமளவிற்கு உதவிசெய்கின்றன. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சங்க இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை இங்குக் காண்போம்.சங்க இலக்கியப் பாடல்களை இசையோடு பாடி மாணவர்களைக் கேட்க வைக்கலாம்.

    • சங்கப்பாடல்களில் வரும் காட்சிகளை வரைந்து ஓவியங்களாக்கிக் காட்சிப்படுத்தலாம்.
    • இணைய நூலகம் வழியாகச் சங்க மொழியை, அதன் பொருளைப் புரிந்துகொள்ள வைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் காட்சிகளை மாணவர்களை வைத்தே நடித்துக் காட்டலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் வரலாற்றுப் பதிவுகளைக் கதை போன்று கூறி மாணவர்களுக்குப் புரியவைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் பயின்று வரும் அணி, உவமைகளை எடுத்துவிளக்கி தொடர்களில் பயின்றுவரும் இலக்கண அமைதிகளையும் அக்கால மொழி அமைப்பையும் எடுத்துரைத்து விளக்கலாம்.
    • சங்கப்பாடல்களில் பயின்றுவரும் மரம், செடிகொடிகள், பூ வகைகள் விலங்குகள் இவற்றைக் காட்சிப்படுத்தி கற்பிக்கலாம்.
    • சங்கப் பண்பாடுகளையும் கலைகளையும் நிகழ்த்திக்காட்டலாம்.

    இம்முறைகளைப் பயன்படுத்தினால் சங்கப்பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதோடு அப்பாடல்களின் பொருளும் காட்சிகளும் மாணவனின் மனத்தைவிட்டு நீங்காமல் என்றும் நின்று நிலைக்கும் தன்மையோடும் காணப்படும் என்பதில் ஐயமில்லை.

    தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபு நிலையில் கற்பித்தல்

    மரபு முறையாகக் கற்பித்தலில் சங்க இலக்கியப் பாடல்களைக் கூறி அதன் திணை, துறை ஆகியவற்றை விளக்கி சிறப்புக்கூறுகளான முன்னம், உள்ளுறை, இறைச்சி, அணிநயம் போன்றவற்றை எடுத்தியம்பி இலக்கியத்தின் ரசனையைப் பெருக்கலாம். 

    முன்னம்

    சங்க அகத்திணைப் பாடல்களுக்கு யார் கூற்று, யாரிடம் கூறியது என்ன காரணத்திற்காகக் கூறியது என்பனவற்றை விளக்கிக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பே முன்னம் எனப்படுகிறது. இதைத் தொல்காப்பியர்,

    இவ்விடத்து இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று
    அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பதை முன்னம் (தொல் 1463)

    என்று விளக்கியுள்ளார். குறுந்தொகையில் வரும் பாடல்கள் அனைத்தும் கூற்றுகளாக வருவதால் ‘முன்னம்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கற்பித்தல் மிக மிக அவசியமாகிறது.  குறுந்தொகையில் தலைவன் கூற்றாக 61 பாடல்களும் தலைவி கூற்றாக 180 பாடல்களும் தோழி கூற்றாக 141 பாடல்களும்  நற்றாய் கூற்றாக 9 பாடல்களும் பரத்தை கூற்றாக 5 பாடல்களும் பிறர் கூற்றாக 5 பாடல்களும் அமைந்துள்ளன. முன்னம் பற்றிய அடிக்குறிப்புகள் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் எழுதி இருக்கலாம். பாடலைப் படிக்கும்போது யார் யாரிடம் கூறியது என்ற முன்னம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    எ.கா:

    செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
    செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
    கழல் தொடிச் சேஎய் குன்றம்
    குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. ( குறு.1)

    போர்களத்தில் இரத்த வெள்ளம் பெருக அவுணர்களைக் கொன்றழித்த, குருதிதோய்ந்த அம்பினையும் குருதிபடிந்த கொம்புகளுடைய யானையையும் உடைய முருகன் இருக்கும் குன்றம் இரத்தம் போன்ற காந்தள் பூக்கள் நிறைய உடையது என்று கூறி தலைவனிடம் தோழி கையுறை மறுத்தது என்று துறை வகுத்தனர் சான்றோர்கள். இப்பாடலின் காட்சிகளைக் கண்களுக்குப் புலப்படும் காட்சிகளாகக் காட்டலாம்.

    இதே பாடலுக்கு நச்சினார்க்கினியர் ‘இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’  என்ற துறை வகுத்துள்ளார்.  அதாவது முருகனது குன்றின் மேல் குருதிபோலப் பூக்கும் காந்தள் பூக்கள் நிறைய உள்ளன.  நான் அப்பூக்ளைப் பறித்துவரச்செல்கிறேன் நீ இங்கேயே இரு” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிகிறாள்.  எனக் கூறியிருப்பதும் பொருத்தமே ஆகும்.  இவ்வாறு ஒவ்வொரு பாடலையும் வேறுபட்ட முன்னத்தின் அடிப்படையில் கற்பித்தால் பாடலின் நயம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. பல உரையாசிரியர்களின் உரைகளைக் கொண்டு ஒரேஇடத்தில் இவ்வுரைகளைக் கண்டும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.

    உள்ளுறை

    உள்ளுறை என்பது தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறுத்துக் கூறும் உவமையாகும்.  அதாவது புலவன் தான் கருதிய பொருளை உட்பொருளாக வைத்து வெளிப்படையாக உவமையை மட்டும் கூறுதலாகும். குறுந்தொகையில் பல பாடல்களில் இதுபோன்ற உள்ளுறை உவமம் வந்துள்ளமையைக் காணலாம்.

    வேரல் வேலி வேர்கோட் பலவின்
    சாரனாட செவ்வியை யாகுமதி
    யாரஃ தறிந்திசி னோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. ( குறு.18)

    சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல இத்தலைவியின் உயிர் மிகச் சிறுமையை உடையது காமநோய் மிகப் பெரியது. அதனை அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை. இவள் உயிர்விடுதல் நேரவும் பெறும் அல்லாமல் பிறர் வரைந்தும் கொள்வர் என்ற உள்கருத்தை மிகத் சாதுரியமாகச் சொல்லிச் செல்கிறார் புலவர்.  இதேபோன்ற குறுந்தொகைப் பாடல் ஒவ்வொன்றிலும் மேம்போக்காகக் கூறப்பட்டிருக்கும் உவமைகளுக்குள் ஓர் ஆழ்ந்த பொருள் மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து கற்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இறைச்சி

    இறைச்சி என்பது கருப்பொருள்களின் ஒரு பகுதியாகிய ஆடு, மாடு, மான், மயில் முதலிய விலங்குகளையும் பறவைகளையும் குறிப்பதாகும்.

    எ.டு:

    நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்க வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின் தோழி அவர் சென்ற ஆறே. (குறு: 37)

    தலைவன் சென்ற வழியானது யானை தன் பிடியின் பசியை நீக்குவதற்காக யாமரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தும் காட்சிகளை உடையது.  என்று கூறுவதன் மூலம் தலைவன் அந்தக் காட்சிகளைக் கண்டு தலைவியின் நினைவு ஏற்பட்டு விரைவாக வந்து சேர்வான் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இப்பாடலில் வரும் யாஅ மரத்தின் தன்மைகளை விளக்கியும் அதன் சிறப்புக்களைத் தொழில்நுட்பம் வாயிலாக எடுத்துரைத்தும் இப்பாடலைக் கற்பிக்கலாம்.

    இன்று வளர்ச்சி அடைந்துள்ள பல துறைகளின் அடிப்படையிலும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.  இலக்கியக் கல்வியின் நோக்கம் மாறுபடுவதற்கேற்ப இலக்கியத்தின் பொருளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.  மக்களின் வாழ்க்கைத்தரம் சமூக உறவுநிலை பொருளாதாரம் நாடுகள் பற்றிய செய்திகள் போன்ற சமூகவியல் செய்திகளும் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

    எ.டு:

    கோடுஈர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
    பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
    ஈங்கிவ ணுறைதலும் உய்குவமாங்கே. ( குறு: 11)

    என்ற பாடலில் வடுகர் பற்றிய செய்திகளும் கட்டி என்ற மன்னன் பற்றியும் மொழிதெரியாத நாட்டின் குறிப்புக்களும் பொருள்தேடி வேற்று நாட்டிற்குச் செல்லும் குறிப்பும் உள்ளன.  மேலும் இப்பாடலில் முல்லைநில மக்களின் சமூக வரலாற்றுச் செய்திகளும் பதிவாகியுள்ளன.  நிலவியல் அமைப்புகளைக் காட்சிப்படுத்தி விளக்கலாம்.

    உளவியல்

    இலக்கியங்களை உளவியல் அடிப்படையில் அணுகி பல முடிவுகளைக் கண்டறிந்து கூறுவது புதிய ஆய்வு முறையாகும். குறுந்தொகையில் மனித உணர்வுகளை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் பல பாடல்கள் உள்ளன.  நீண்ட நாள் பிரிவு கழிந்து தலைவன் வந்துவிட்டான் என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். அந்த இன்ப அதிர்ச்சியை ஒரு தலைவி எப்படி வெளியிடுகிறாள் என்பதை மிக அருமையாக இப்பாடல் காட்டுகிறது.

    நீ கண்டனையோ? கண்டோர்க் கேட்டனையோ?
    ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
    வெண்கோட் டியானை சோணை படியும்
    பொன்மலி பாடலி பெறீஇயர்
    யார் வாய் கேட்டனை காதலர் வரவே.  (குறு: 75)

     நீ பார்த்தாயா? பார்த்தவர்கள் கூறக் கேட்டாயா? யாராயிருந்தாலும் அவர்களுக்கும் பாடலிபுரத்தைப் பரிசாக அளிப்பேன் என் காதலர் வரவை யார் கூறினார்கள் என்று ஒரு பெண் ஆர்வமாகக் கேட்கும் வடிவில் அமைந்துள்ளதைக் காணலாம்.  தலைவியின் மன நிலையைக் காட்சிகளாக எடுத்துரைக்கலாம்.

    தொழில் நுட்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அவற்றைப் பயன்படுத்தி விளக்குவதால் சங்க இலக்கியத்தைக் கற்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வுபெறும். தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எளிதில் கற்கலாம். சங்கத்தமிழின் மொழி நடையையும் எளிதில் புரிந்துகொள்ள இவை வழிசெய்யும். பழமையான இலக்கியங்களைக் கற்பிப்பதற்குத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அதன் சாத்தியங்கள் விரிவடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    பயன்பட்ட நூல்கள்

    1. உ.வே.சா- குறுந்தொகை, உவேசா நூல் நிலையம், சென்னை
    2. சுப்பிரமணியன். நா – சங்ககால வாழ்வியல், நீயூ சென்சுரி புக் , சென்னை.
    3. ராமசாமி. அ – தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -12

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவானவண்டூர் – அருள்மிகு கோசாலப்பன் பெருமாள்

    madhava-Perumal1o

    வாழ்க்கைப் போரின் வசந்தங்கள் முடிய

    வந்தனர் பாண்டவர் வனங்களைத் தேடி

    வேதவன் கண்ணன் காட்டிய வழியில்

    விடுதலை பெற்றிட வாழ்வை வென்றிட !

     

    கோவினம் காத்த கோவிந்தன் நினைவில்

    கோவிலைக் கட்டினான் பம்பையின் கரையில்

    கோமகன் நகுலனும் கோசாலக் கண்ணனனை

    கோவிலில் வைத்துக் குறைகள் சொல்லிட !

     

    பம்பையின் கரையில் பாம்பணை அப்பனாய்

    பண்டரிபுரத்திலே பாசத்தில் புண்டரி காட்சனாய்

    பாதங்கள் போற்றிட கயையிலே விஷ்ணுவாய்

    பாலங்கள் அமைத்தாய்  பக்தர்கள் நெஞ்சுடன் !

     

    கண்களில் நிறைந்ததோ கருணையின் கடலே

    சொற்கள் படைத்ததோ அமுதெனும் கீதை

    கைகளில் அபயம்  காலங்கள் காத்திடும்

    கண்ணனின் நெஞ்சமோ காதலின் சுரங்கம் !

     

    வெம்பிய நெஞ்சங்களின் வேதனை களைந்திட

    நம்பிய உள்ளங்கள் நலமுடன் வாழ்ந்திட

    மங்கிய பாதைகளில் மங்களம் பெருகிட

    மறவாமல் வணங்குவோம் மாதவன் மலரடி !

    Share