பவள சங்கரி
ஒளிமிகு ஆழ்மனப்பேரலைகளின் திவலைகள்
அமிழ்தென்றெழ சாலத்தருமம் பெறும்!
பவள சங்கரி
Translated by Chae-Pyong Song and Anne Rashid

நாமெல்லோரும் விலகிய பின்பும்,
எமதான்மா உமைக்கடக்க நேர்ந்தால்,
ஒரு நொடியேனும் அது மரக்கிளைகளினூடே
ஊடுறுவும் வளியின் வசந்தமென்றெண்ணிவிடாதே.
இன்றொரு மலரை உன்னையறிய நேர்ந்த
அந்த நிழலினோர் மூலையில்
நட்டுவிடப் போகிறேன்;
அம்மலர் விரிந்து மலர்ந்தவுடன்
நம் அறிமுகத்திலிருந்து உருவான
அத்தனை நெருக்கமும் மொத்தமாய்
மென்னிதழ்களாய் மாறிப் பறந்திடும்.
After all of us leave,
if my spirit passes by you,
don’t think even for a moment it is
the wind that sways the spring boughs.
Today I will plant a flower
on a corner of the shadow
where I got to know you;
when the flower grows to bloom,
all the distress that stemmed from our acquaintance
will turn into petals and fly away.
இதழ்களாய் மாறிப்பறந்திடும் அது.
தாங்கொணத்தொலைவோ
அன்றி பாழ்பட்டதொன்றோ,
பிரபஞ்சப் பிரமாண்டமனைத்தையும் சின்னஞ்சிறு
அளவுகோலால் அளப்பது எங்கனம்?
அவ்வப்போது காற்றடிக்கும் திசைதோறும்
செலுத்துகிறாய் உமது செவிகளை,
எனதன்பே, உம் களைப்பினூடேயும்
தொலைதூர வளியின் வாசகங்களை
மறந்துவிடாதே ஒருபோதும்.
It will turn into petals and fly away.
Though it is unbearably distant
and futile,
how can we measure all the things in the world
with only a small ruler?
When every now and then you turn your ears toward where the wind blows,
my beloved, don’t forget even if you become tired
the word of the wind that comes from faraway.
Korean Poem BY Mah Jonggi
바람의 말 /마종기
우리가 모두 떠난 뒤
내 영혼이 당신 옆을 스치면
설마라도 봄 나뭇가지 흔드는
바람이라고 생각지는 마.
나 오늘 그대 알았던
땅 그림자 한 모서리에
꽃나무 하나 심어 놓으려니
그 나무 자라서 꽃 피우면
우리가 알아서 얻은 모든 괴로움이
꽃잎 되어서 날아가 버릴 거야.
꽃잎 되어서 날아가 버린다.
참을 수 없게 아득하고
헛된 일이지만
어쩌면 세상 모든 일을
지척의 자로만 재고 살 건가.
가끔 바람 부는 쪽으로 귀 기울이면
착한 당신, 피곤해져도 잊지 마,
아득하게 멀리서 오는 바람의 말을.
படங்களுக்கு நன்றி.
Anantha….!
———————-
‘‘அவன்தான் களிறு ,அவன்தான் குமரன்,
அவன்தான் அவன்தங்கை ஆயி -அவன்தான்
சிவன்தான் அயன்தான் தவம்தான் வரம்தான்
அவன்தான்ஆ னந்த அது”….
”முக்திமார்க ஆனந்தம் சத்தான சித்தாகும்
யுக்தியுடன் பூமிக்கு வந்துவிட்டால் -பக்திமார்க
பாதைக்கு அப்பனாகும்; பத்தினியே ஆனாலும்
சீதைக்கு சித்தப்பா சீனு(சீனிவாசர்)’’….
கிரேசி மோகன்….!
பவள சங்கரி
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுப் பொருட்கள் மூலம் சாலை போடும் நவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதன் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அதைப் பயன்படுத்தி மெய்ப்பித்துக் காட்டியிருந்தும் இன்னும் அந்த முறை ஏன் இன்னும் பயன்பாட்டிற்கு வரவேயில்லை? இதையெல்லாம் யாரிடம் சென்று கேட்பது. தார் சாலைகள் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடும். ஆனால் இந்த நெகிழிச் சாலைகள் அதுபோன்று ஆவதில்லை என்கிறார்கள். அதைவிட முக்கியமாக நெகிழிக் கழிவுகளை அழிப்பதற்கு படும் சிரமங்களும் குறைவதோடு பாதுகக்கப்பட்ட சாலைகளும் கிடைக்குமே.. இதில் என்ன பிரச்சனை? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த முறையில் சாலை போட்டு நிரூபித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
‘’HOLYயில்லா மந்திரமும் ஜாலியில்லா இல்லறமும்
வேலியில்லா தோட்டமும் வீணாமே: -ஹோலியில்(HOLIயில்)
ராதையில் லாக்கண்ணன் ராத்திரி கண்விழிப்பு,
சீதனக் கன்றுடன் சேர்ந்து’’….கிரேசி மோகன்….!
”பொய்கையில் பூத்தபக்தி, பூதமதைக் காத்தது,
பொய்கலந்த போதுபேய், ஓட்டியது :-தெய்வமே,
மூன்றாழ்வார் மீதமுள்ள, சான்றோர்கள் போலாக,
தான்தோன்றி மாலே தயவு”….கிரேசி மோகன்….!
இசைக்கவி ரமணன்
எப்போதும் போல் இல்லை காற்று. எல்லாவற்றையும் தடவிவிட்டு நழுவிச் செல்வது காற்றுக்கு வாடிக்கை. அப்படித்தான் இன்றும். ஆனால் நழுவ முடியாமல், ஒரு பனிக்கட்டிச் சிலையின் ஸ்தம்பிதத்தில் நிற்கிறது காற்று.
ஒரு மோகினியின் முத்தத் தறுவாயில் குவிந்த இதழ்கள் போல, ஊரைப் போர்த்திக் கவிழ்ந்திருக்கும் கார்முகிலை அது கவனிக்கவில்லை. மலர்களின் நிர்வாணத்தை, அந்தரங்கத் தேன்வரையில் வருடிய எக்களிப்பில், அது எதனைத் தொட்டோம் என்பது புரியாமல் இதனைத் தொட்டுவிட்டது.
மனிதன் தெய்வமாவதுபோல், மண்ணின் தண்ணீரே மழைமுகிலாய் மாறிவருகிறது. தெய்வமாய் உயர்வதே மனிதனின் சாதனை. மனிதனாய்த் தீர்வதே தெய்வத்திற்கு கெளரவம்.
மண்ணின் தண்ணீர், முகிலாக மாறிவிட்ட போது, அதனுடைய மண்ணைத் தொட்ட தன்மை ரத்தாகிவிடுகிறது. ஞானம் விடியும்போது, அறியாமையின் நினைப்பும் அகன்று, எப்போதுமே இப்படி இருந்ததைப் போலத் தோன்றுவதைப் போல.
அமிழ்தம் ததும்பி நிற்கிறது. அது விண்ணின் பிரசாதமாக அல்ல. தெய்வத்தின் உத்தேசமாக.
அதைப்போய், இன்னதென்று தெரியாமல் தொட்ட காற்று ஸ்தம்பித்துவிட்டது. காற்றை ரொம்ப நேரம் கட்டிப்போட முடியாது. கடவுளின் ராஜாங்கத்தில் காற்றின் தயவு தேவை. எனவேதான், ’காற்றே! நேரடி அனுபவமாக உணரப்படும் கடவுள் நீயே!’ என்று வேதம் கோஷிக்கிறது. தொட்டவுடன் கட்டு கழன்றுவிடுகிறது; நாம் தொட்டது நம்மையும் தொட்டதே என்ற உணர்வில் காற்று, தாளம் விட்டுப் பாடுவதுபோல் ஒரு கள்ளுக் காவடி ஆடத் தொடங்குகிறது.
அதீதமான ஒரு குளுமை, முதலில் உயிரை வருடி, பிறகே உடலைத் தொடுவதால், உலகே சிலிர்க்கிறது. சிட்டுக் குருவியிலிருந்து, சீட்டாடும் சூதாடிவரை, எல்லோரும் ஒருகணம் தெய்வப் பிரசன்னம் கொள்கிறார்கள். சாலையோரம் கிடக்கும் சரளைக் கற்களெல்லாமும், ஒரு கணம், சந்நிதியற்ற கடவுள்களாகப் பளபளக்கின்றன.
ஒருதுளி கூடக் கீழே விழாமல், ஊரெல்லாம், உள்ளமெல்லாம் ஈரமாகிவிட்டது. மனமாற்றம் போல; அது கணப்பொழுதில் நிகழ்ந்துவிடும் ரசவாதம்.
முகில், இன்னும் மழையாகவில்லை.
எதற்கோ காத்திருக்கிறது மேகப்பொதி.
ஒரு சின்னஞ் சிறுமி. அவள் துள்ளலைப் பார்த்தால், அது பரவசத்தின் விள்ளல் போல இருக்கிறது. மேலே பார்க்கிறாள், மேகம் சிலிர்க்கிறது. ஒரு வெள்ளைக் கொக்கு குறுக்கே பறக்கிறது. இவள், ஒரு குவளையில் நீரெடுத்துச் செடிக்கு ஊற்றுகிறாள். சிறகு சீண்டுகிறது. ஒரு துளி அவளுடைய கன்னக் கதுப்பின் மின்னல் முனையில் கைநழுவி விழுந்துவிடுகிறது.
குடையை வீசி எறிந்துவிட்டுக் கூத்தாடுகிறாள் குழந்தை. அவளைப் பார்த்துப் பார்த்துப் பாதம் நனைக்கப் பரபரவென்று வருகிறது மழை.
தொடருவோம்
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
அவினாஷ் சேகரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
-மேகலா இராமமூர்த்தி
இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான படம் இது. இதனை ஒளிப்பதிவு செய்தவர் திரு. முத்துக்குமார். போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.
”பனைமரத்தின் பாதியில் அமர்ந்து அலைபேசியை ஆர்வத்துடன் படிக்கும் அன்புத் தம்பி! சற்றே உன் பிடி நழுவினால் என்னாகும் நீ யோசி! மரத்தைவிட்டு இறங்கியபின் அலைபேசிச் செய்திகளை நீ வாசி!” என்று இந்தத் தம்பிக்கு அறிவுரை சொல்லவேண்டியது அவசியமாய்ப்படுகின்றது.
மனிதர்களைத் தாங்கி நிற்கும் பனையே! புல்வகையைச் சேர்ந்த நீ மரமாய் உயர்ந்து மலைக்க வைக்கிறாய். அத்தோடு பல்வகைப் பயன்களையும் மனிதர்க்குக் குறைவின்றி நல்குகிறாய். பெண்ணையாகிய உன்னையே சிறந்த நட்பிற்கு இலக்கணமாய் நாலடியும் நவில்கின்றது.
கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு. (நாலடியார்)
இனி, கவிஞர்களின் முறை! பனையினும் உயர்ந்த சிந்தனைகளை அள்ளிவழங்கக் காத்திருக்கும் அவர்களை வரவேற்றுக் கவிபாட வைப்போம்!
*****
தம்பி! பனையில் ஏறிப் பாதுகாப்பின்றித் தன்படம் (selfie) எடுப்பது உனக்கே வினையாய் முடியும்; வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
நன்றியா…
வாலிபம் என்பது
விளையாட்டுக் களம்தான்,
விளையாட்டு வினையாகாதவரை..
சரித்திரம் படைப்பது
சாதனைதான்,
சறுக்கல் வராதவரை..
பாதுகாப்பு ஏதுமின்றி
பனைமரத்தில் ஏறி,
பலரும் பார்க்கத்
தன்படம் எடுக்கையில்
தவறி வீழ்ந்தால்,
உன்படம் வருமே
கறுப்புக் கட்டத்தில்..
கதறும் பெற்றோரைக்
காணநீ இல்லாமல்போவதா
காட்டும் நன்றி…!
*****
சா’தீ’யம் கருக்கிய உன் காதலுக்கு நீதி கேட்டா? மனிதரின் குடியைக் கெடுக்கும் குடியை ஒழிக்கவா? ஏறுதழுவுதலுக்குக் குரல்கொடுத்த வீரர்களுக்கு ஆதரவாகவா? எதற்காகப் பனைமீது பாய்ந்தேறினாய் தம்பி? காரணம் எதுவாயினும் ’கரணம் தப்பினால் மரணம்’ எனும் நிலையிலா போராடுவது? புவியில் நின்று முழங்கு; மாந்தருக்கு நீதி வழங்கு!” என்கிறார் திரு. இளவல் ஹரிஹரன்.
அருகிவரும் பனைமரத்தை
அணைத்தபடி ஏறிநிற்கும்
திருமகனே இளைஞனே..நீ
சேதிசொல்ல உள்ளதென்ன…
உருகியுனைக் காதலித்த
உத்தமியைக் கௌரவமாய்க்
கருவமிகு சாதீயம்
கொலைசெய்த காரணத்தால்…
நீதிகேட்டு மரமேறி
நிற்கின்றாயோ..அல்லால்
[……..]
மாறாக டாஸ்மாக்கில்
மதுமயக்கம் கொண்டுமக்கள்
சீரழியும் செயலதனால்
மதுக்கடைகள் மூடுதற்கே
போராட ஓங்கிநின்ற
பனைமரத்தில் ஏறினாயோ…
வீறுகொண்டு வெறும்வார்த்தை
வீணரினை நம்பாமல்
ஏறுதழுவல் என்றதமிழ்ப்
பண்பாட்டு விளையாட்டு
மாறுபாடு ஏதுமின்றி
மாநிலத்தில் நிகழ்வதற்குப்
போரிட்ட மெரீனாவின்
புரட்சியாளர்க் கென்றுதவ
வேர்கொண்ட பனையேறி
விரைவாக நின்றாயோ…
உனக்குமுன்னே ஒருவனேறி
உதவுதற்கு நிற்கின்றான்
உனக்குவந்த குறுஞ்செய்தி
உரைப்பதற்கு முயல்கிறாயோ…
[…….]
எதுகார ணமென்றாலும்
இளைஞருயிர் பணயமாக்கும்
புதுமையினைத் தவிர்த்துவிடு..
பூமிநின்று போராடு…..
பதுமையென மக்களினைப்
பார்க்கின்ற ஆட்சியரின்
பொதுமையினைப் புறந்தள்ளிப்
புதுப்பிப்பாய் விழிப்புணர்வை!
*****
தனை நனைக்க எப்போது வருவாள் தன் மழைக்காதலி என்று ஏங்கிநிற்கும் பனைமரக்காதலனின் காதல் உணர்வுகளை அழகாய்க் கவிவடித்திருக்கின்றார் திருமிகு. சுபிக்ஷா.
ஒற்றை முத்தத்தில் தொடங்கிய பந்தம்
ஆயிரம் முத்தங்களில் அௗவளாவி
என் அங்கமெல்லாம் ஆரத் தழுவி
என்னை ஆர்ப்பரித்தவள்
வாரம் ஒரு முறையாவது வந்து விடுவாள், நான்
வாடி விடக்கூடாது என்பதற்காக
அவளில்லாமல் நானில்லை
அறிவாள் அவள்
சொல்லித்தான் தெரிய வேண்டுமோ.., எனச்
சொல்லாமல் விட்டு விட்டேன்
சொத்தாய் மதிக்கும் அவளிடம்
சொர்க்கமென நினைக்கும் என் காதலை..
என்ன நினைத்தாளோச் தெரியவில்லை
என்னைப் பார்க்க வந்து பல நாட்களாகிவிட்டது
எட்டி பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்
எதுவும் தெரியவில்லை
உற்றானாக நினைத்துக் கேட்கிறேன்
உதவி வேண்டும் தம்பி
உன் கையில் இருக்கும் பெட்டியில் எல்லாம் தெரியுமாமே!
உற்றுப் பார்த்து சொல்
எப்பொழுது வருவாள்
என்னவௗ் என்று…
மழைக்காக…,
மரம்
*****
”உன்னைப் போல் பிறர்க்குதவும் மரமொன்று பாரிலில்லை பனையே! ஈகைக்கு இலக்கணம் நீ! நட்புக்குச் சான்று நீ! உன் ஓலையன்றோ எம் அமிழ்தனைய தமிழ் காத்தது. புல்லினத்தில் தோன்றி விண்ணுயர நிற்கும் உன் சாதனை வியக்கவைப்பது. உன் சேவைகள் எம்மை நயக்கவைப்பது! வாழ்க எம் பனை நண்பனே!” என்று உளந்தோய்ந்து பனையின் பெற்றியைப் பாடுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
பனை நண்பன்
பாதி மரமேறிப் பக்குவமாய்ப் படமெடுத்து
பனைமரத்தின் பயனையெலாம் பார்புகழச் செய்தாயோ!
பலவித மரங்களிலே பனைமரம் போலாகுமா!
பிறர்வாழநீ வாழுமுன் குணத்துக்கது ஈடாமோ!
பெற்றோர் வளர்த்த பிள்ளைகூட உதவாதானால்..
வளர்க்காமலே நீவளர்ந்து பிறருக்கு உதவுகின்றாய்!
நண்பரைத் தேர்ந்தெடுக்க முக்குணத்தில் ஒன்றாக..
தென்னை வாழையோடு உன்குணமு மொன்றாகும்!
நண்பனுக்குகந்த குணமென உத்தமநண்பணுக்கு..உன்
பனைக்குணமே பெரிதென்றான் அர்த்தமுள்ளகவியரசன்!
முக்குணத்தில் சிறந்த சாத்விக குணம்பெற்று..
பூவுலகக் கற்பகத் தருவெனத் தாரணியில் புகழடைந்தாய்!
கயவர்களை இனம்கண்டு பனைமரத்தி லொருமுறை..
கட்டிவைத்து உதைத்தால் திருந்திவாழ வழியுண்டாம்!
நெட்டைப் பனையென்றும் நெடியமரமென்றும்..
நேர்மைக் கோர் உதாரணமாய் திகழுகின்றாய்!
பனைமரமேறிப் பரிசுப்பெற்ற வாலிப இளைஞனுக்கு..
பெண்கொடுத் தாருண்டென்ப தோர்க் காலமுண்டாம்!
பழுத்துக் கனிந்தால் பனம் பழமாகவும்..
பழுக்கா விட்டால் நுங்கெனவும்..பல்வகையில்
பித்தர்களுக்கு மருத்துவம் வேண்டா மவன்..
பித்தம்தெளிய யுன்பழம் கொடுத்தால் போதுமாம்!
உயிரின முண்ணக் கிழங்குவெல்லம் கருப்பட்டியென..
புல்லினத்தில்பிறந்து பேரினமாய் நின்று உதவுவாய்!
வெட்டி வீழ்ந்தாலும் வீணாகாமல்..உத்திரமாக..
கட்டிவாழும்எம் குடிலுக்கு வலிமை சேர்த்தாய்!
சித்தர்களின் சிந்தனைகள் சித்திரஎழுத்துவடிவமாக..
சிறந்த இலக்கியங்களுக்கு ஏடாகிப் படிவம்கொடுத்தாய்!
தமிழ் வளர்ச்சிக்கு உதவிய ஒரேமரமென்றும்..
மொழிக்குதவிய முதல் மரமெனவும்நீ உலகறிவாய்!
வெப்பக்கதிர் வீச்சைத் தணிக்க..விரிந்துபரந்த..
விசிறியாகி வெங்கதிர் தவிர்த்தாயோர் காலத்தில்..
மரம்தானனென இகழ்சொன்னா லதைமறுத்து..வீரமுடன்..
தனிமரமாய்த்தோன்றி மரமினத்துக்கு மங்காப்புகழ்சேர்த்தாய்!
காய்ந்து கயிறாகிநீ கால்நடையைக் கட்டினாலுமுன்..
கட்டுக்கடங்காப் பயன்புகழ் வாழிய வாழியவே!
மாநிலமரமென தமிழ்மரபை தமிழ்குடியைப் பறைசாற்றும்
பனைநண்பனுனை மானுடர்கள் நினையாத நாளில்லையே!
*****
படத்திலிருக்கும் ’பனை’ நம் கவிஞர்களின் கற்’பனை’க்கு நல்லதோர் விருந்து படைத்திருப்பதை அவர்தம் கவிதைகள்வழி உணரமுடிகின்றது. பனம்பழமென இனிமையாய்க் கவிவடித்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
என் சிந்தை கவர்ந்து இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கவிதை இதோ…
தடம் மாறும் போராட்டம்
தையல் நாடி மையல் கொண்ட திராவிடப் பண்பாட்டில்
பனைமடலேற்றம் கண்டான் பண்பாட்டுத் தமிழன்
அடல் கொண்டதே மடலேற்றம்
மடல் வென்றதே மனமாற்றம்
மடல்மா ஏறிய ஆண்மை
மனம் மாறியதே பெண்மை
மனம் மாறாப் பெண்மைக்குக் காட்டிய போராட்டம்
காலமாற்றத்தில்
காதலில் புகுந்ததே கள்ளத்தனத்தின் ஊடாட்டம்
கைபேசியின் காட்சிப் பதிவுகளில்
காதல் களியாட்டம்
கைகூடாக் காதலருக்கோ
காட்சிகளின் சாட்சிகளே வெறியாட்டம்
போராட்ட முறை மாறலாம்
போராட்ட அறம் மாறலாமா?
அன்று, தன்காதல் கைகூடாக் காதலன், உடல்கிழிக்கும் பனங்கருக்கில் ஏறித் தன்னை வருத்திக் காதலியின் அன்பையும், ஊராரின் அருளையும் பெற்று அவளை மணமுடித்தான். இன்றோ… காதலி தன்னை விரும்பாவிட்டால், ஆபாசப் படமெடுத்து அவளைப் பழிவாங்கவும், அவள் வாழ்வோடு அவளையும் சேர்த்துக் கருக்கவும் துணிந்துவிட்டனர் காதலென்று சொல்லித் திரியும் கயவர்கள். காலம் மாறலாம்; காதல் அறம் மாறலாமா? என்று வேதனையோடு வினவும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன்.
நிர்மலா ராகவன்
யாவரும் வெல்லலாம்
“எனக்கு சுறுப்பே கிடையாது. எந்தக் காரியத்தையும் ஒத்திப்போட்டுவிடுவேன்!”
நம் பலவீனங்களை நாமே வெளிப்படையாகச் சொல்லாவிட்டால், பார்த்தவுடனேயே பிறருக்குத் தெரியவா போகிறது! அடக்கம் என்று (தவறாக) எண்ணுவதால் வரும் வினை இது.
உண்மையில், இவ்வாறான நடத்தை ஒருவரது தாழ்வு மனப்பான்மையைத்தான் குறிக்கும்.
நீண்ட கதை
தன்னை ஒரு பயந்தாங்கொள்ளி என்று வாய்க்குவாய் சொல்லிக்கொண்ட எனது சக ஆசிரியை, மேரி, அப்படியில்லாத என்னை எப்போதும் வலுச்சண்டைக்கு இழுக்க, நான் அவளுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டேன்.
ஒரு நாள், பாவமன்னிப்புபோல மேரி என்னிடம் அவளுடைய தாயைப்பற்றிக் கூறினாள். ”எங்கம்மா சொல்றதைத்தான் நான் கேட்டாகணும். வீட்டிலே எல்லார்மேலேயும் ரொம்ப அதிகாரம் செலுத்துவாள். அப்பாவும் அம்மாவை எதிர்த்து ஒன்றும் கூறமாட்டார்!” இதைச் சொல்லி முடிப்பதற்குள் படபடப்பு அதிகரிக்க, பல்லிடுக்கில் விரலை வைத்து அழுத்தினாள்.
பல குழந்தைகள் இருக்கும் இல்லத்தில், அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை மனைவியிடமே விட்டுவிடுவார்கள் சில ஆண்கள். அப்போது ஒரு தாய் கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்க நேரிடும். இல்லாவிட்டால் எல்லாரையும் எப்படி கட்டி மேய்க்க முடியும்?
சில குழந்தைகள் தைரியமாக அப்போக்கை எதிர்ப்பார்கள், இல்லாவிட்டால் அலட்சியம் செய்து தம் போக்கில் நடப்பார்கள். இவர்களுக்குத் தண்டனையோ, திட்டோ ஒரு பொருட்டல்ல.
மேரியைப்போன்ற சிலர் பயந்துபோய், `எனக்கு அம்மாவை எதிர்க்கத் தைரியம் இல்லையே!’ என்று தமக்குள் குமைந்து, சுயவெறுப்பை வளர்த்துக்கொள்வார்கள். அம்மாவைப்போல் இருப்பதாகத் தாம் நினைக்கும் பிற பெண்களை வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன். இதை Transference என்கிறார்கள் மனோதத்துவத்தில்.
நான் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கே புகுந்து மேரி சண்டைபோட்டதன் காரணம் புரிய, அவள்மீது எனக்குப் பரிதாபம் ஏற்படவில்லை.
குழந்தைப்பருவத்தில் எத்தனையோ இடர்கள். அவைகளைச் சமாளிக்கத் தெரியாததால் அப்போது குழப்பமும் வேதனையும் ஏற்பட்டிருக்கலாம். எப்போதோ நடந்தவற்றை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! வயது வந்ததும், அவைகளை அலசி, சமாதானம் அடைந்திருக்கலாமே!
நடந்தது பத்து சதவிகிதமாக இருக்கும். ஆனால், மேரி போன்ற சிலர் அவைகளை நினைத்து, நினைத்து ஆத்திரத்தை வளர்த்துக்கொள்வது மீதி. இப்படிப்பட்ட மனப்போக்கினால், மனம் எளிதாகத் தளர்ந்துவிடும். இந்த தளர்ச்சி பயமாக, அல்லது நாணமாக எல்லாக் காரியங்களிலும் வெளிப்படுவதுதான் சோகம்.
மேரியின் தாழ்மை உணர்வு அவளுடைய கூனலிலும், சாயம்போன பழைய புடவைகளையே உடுத்திவந்து, `ஏன் என்னை மாணவிகள் மதிப்பதில்லை?’ என்ற குழப்பத்திலும் வெளிப்பட்டது. (பட்டதாரி ஆசிரியையான அவளுக்கு பணப்பிரச்னை எதுவுமில்லை).
ஒரு நாள், “என் அக்கா மகள், `இந்தமாதிரிப் புடவைகளையா கட்டிக்கொண்டு வேலைக்குப் போகிறாய்!’ என்று அதிசயப்பட்டுக் கேட்டாள்,” என்று என்னிடம் பேச்சுவாக்கில் சொன்னாள்.
“நான் சொல்லவேண்டாம் என்று பார்த்தேன்!” என்றேன், சிறு சிரிப்புடன்.
“அரதல் பழசா?”
`ஆள் பாதி, ஆடை பாதி’ என்பதுபோல், நம் நடை உடை பாவனைகளை வைத்துத்தான் உலகம் நம்மை எடைபோடுகிறது. நம் மனம் குழம்பியிருக்கும்போது ஆடையிலோ, நிமிர்ந்து நடப்பதிலோ நாம் கவனம் செலுத்தத் தவறிவிட்டுகிறோம். நம்மைக் கவனிப்பதில் நாமே அலட்சியமாக இருந்தால், பிறர் எப்படிக் கவனிப்பார்கள், அல்லது மதிப்பார்கள்?
`ஆம்,’ என்பதுபோல் தலையாட்டிவிட்டு, “இவை உன்னுடைய வார்த்தைகள். நான் சொல்லவில்லை,” என்றேன் அவசரமாக.
அன்றையிலிருந்து புதிய புடவைகளை உடுத்திவந்தாள்.
தாழ்ந்தவர்களா?
`தலித்’ என்றால் என்ன?
`ஒடுக்கப்பட்டவர்கள்,’ என்று எனக்கு விளக்கமளித்தாள் ஒரு தலித்திய பெண் எழுத்தாளர்.
நான் சற்று யோசித்துவிட்டு, “நாடுவிட்டு நாடு செல்பவர்கள் எல்லாருமே தலித்துகள்தாம்,” என்றேன்.
இவர்களைப் பிறர் சரிசமமாக ஏற்பதில்லை. ஊடகங்களிலும், ஏன் பாட புத்தகங்களிலும்கூட தாழ்மையானவர்கள் என்பதுபோல்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.
கதை
மலேசிய ஆரம்பப்பள்ளியில், ஆங்கிலப் பாட புத்தகங்களில், `அகமது புத்திசாலி. ஆசிரியர் பாராட்டுகிறார்,’ என்ற ரீதியில் ஆரம்பித்து, சீனர்களுக்கு இரண்டாவது இடம் கொடுத்து, `முத்து முட்டாள், சோம்பேறி,’ என்று எழுதப்பட்டிருந்தது.
என் மகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில், அவள் ஏன் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மறுத்தாள் என்பது புரிந்தது.
என் பள்ளியின் சார்பில் பாடத்திட்டத்துறைக்கு (Curriculum Department) அனுப்பப்பட்டிருந்தேன்.
“ஏனோ, இந்திய மாணவர்கள் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள்,” என்று அங்கிருந்த ஓர் அதிகாரி சலிப்புடன் கூறினார்.
“பாட புத்தகங்களில் இப்படித் தாறுமாறாக எழுதியிருந்தால், பின் எப்படி அவர்கள் சுயகௌரவம் வளரும்?” என் குரலிலிருந்த ஆத்திரம் அவரை அதிரவைத்தது.
என்னிடம் வெகுவாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு, “இனிமேல் இப்படி நடக்காது பார்த்துக்கொள்கிறேன்! பதிப்பகங்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்,” என்று உறுதி அளித்தார்.
அடிக்கடி `நீங்கள் தாழ்மையானவர்கள்!’ என்று பிறர் ஒதுக்கினால், ஒருவர் அதை நம்பத் துவங்கி, தன்னையே மட்டமாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறார். (அந்த இயலாமை ஆத்திரமாக மாறி, தம் குடும்பத்தினரிடம் பாய்வதும் உண்டு).
தாழ்மை உணர்ச்சி ஏன்?
உயர்கல்வி, செல்வச்செழிப்பு, அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒரு தன்மை இல்லாதவர்கள் தம்மை மட்டமாக எடைபோட்டுக்கொள்கிறார்கள். தமக்குள் ஏதோ திறமை இருக்கலாம் என்று அவர்கள் நினைத்துப் பார்ப்பதுகூடக் கிடையாது.
சமீபத்தில், “பரதநாட்டியத்தால் என்ன நன்மை?” என்று சில பெண்களிடம் கேட்டேன். அக்கலையில் பதினைந்து வருடங்கள் இடைவிடாது ஈடுபட்டிருந்தார்கள்.
`மன இறுக்கம் கிடையாது,’ என்றாள் அர்ச்சனா.
`Posture! (தோற்றப்பாங்கு)’ என்றாள் சவிதா.
அவளைப் பல காலம், `கூனாதே! தலையில் கனமான புத்தகத்தை வைத்துக்கொண்டு நிமிர்ந்து நட!’ என்று விரட்டியிருக்கிறேன். இருந்தும் அவளால் மாற முடியவில்லை.
விரக்தியுடன், `உனக்கு எவ்வளவுதான் சொல்வது! பிழையில்லாமல் எவ்வளவு அழகாக நீ ஆடினாலும், கூனல்தான் கண்ணுக்குத் தெரிகிறது; அதனால் பாராட்டத் தோன்றவில்லை,’ என்று நான் இறுதியாகக் கூறியபின், சவிதா விழித்துக்கொண்டாள். ஏழ்மை தன் குற்றமில்லை என்று தெளிந்தாள். நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தாள். உடலைப்போலவே தன்னம்பிக்கையும் உயர, கல்வியிலும் உயரமுடிந்தது.
தோல்வியா? ப்பூ!
தோல்வியைக் கண்டு சிரிக்கப் பழகினால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள மாட்டோம். பிறரையும் அப்படிச் செய்ய விடமாட்டோம்.
நான் ஏதோ விளையாட்டுப்போட்டியில் கலந்து வெற்றி பெறாதபோது, ஒரு மலாய் ஆசிரியை, “ஐயையே! தோத்துட்டியே!” என்று கேலிசெய்தாள். அவளை எனக்குப் பரிச்சயமில்லை. என்னுடன் முதன்முறையாக அன்றுதான் பேசினாள்.
நான் உடனே, “நானாவது தைரியமாகப் பங்குகொண்டேன். நீ அதுகூடச் செய்யவில்லையே!” என எதிர்த்தேன்.
என் முகம் அவமானத்தில் சுருங்கும் என்று அவள் எதிர்பார்த்தது நடைபெறாததால், அவளுக்கே அது திரும்பியது.
வெற்றி தோல்வியை சமமாகப் பாவித்து நடப்பவர்களின் பலமே அவர்களது துணிச்சல்தான். இதனால் பல புதிய காரியங்களில் ஈடுபடமுடிகிறது. அவர்கள் பல துறைகளில் கொண்ட ஈடுபாடும், அவைகளில் பெறும் வெற்றியும், `இவர்களுக்கு என்ன, ஒரு நாளில் இருபத்து நாலு மணிக்குமேல் இருக்கிறதா!’ என்று பிறரை வியக்கவைக்கும்.
வெற்றியா! எப்படி?
தோல்வியை அஞ்சி ஒரு காரியத்தில் இறங்காதிருப்பது கோழைத்தனம். அதை வெற்றிகரமாக முடிக்க நம்மால் முடியுமா, முடியாதா என்று பின் எப்படி அறிந்துகொள்ள முடியும்? `இது இல்லாவிட்டால் இன்னொன்று!’ என்று வேறொரு காரியத்தில் இறங்கி, நம் திறமையைப் பரீட்சை செய்துகொள்ளலாம்.
எந்த ஒரு காரியம் செய்ய ஆரம்பித்தாலும் அதில் ஆர்வம் காட்டவேண்டும். `இன்னும் எப்படி இதில் சிறப்பது?’ என்று சிந்தித்து, தேவையானால், ஆராய்ச்சியும் செய்யவேண்டும்.
`இந்தக் காரியத்தைச் செய்வதால் என்ன லாபம்?’ என்ற சிந்தனை எழுந்தால் விளைவு எப்படி திருப்திகரமாக இருக்கும்?
`ஏனோ எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியவில்லையே!’ என்ற தளர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும்தான் மிகும்.
தொடருவோம்
க. பாலசுப்பிரமணியன்
சுயஅடையாளம் முன்னேற்றத்தின் முதல் படி
லெபனோனைச் சேர்ந்த தத்துவ மேதையும் கவிஞருமான கலீல் கிப்ரானின் குழந்தைகளை பற்றிய கீழ்க்கண்ட வரிகள் உலகம் முழுதும் பேசப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றன.
Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them,
but seek not to make them like you.
For life goes not backward nor tarries with yesterday.
You are the bows from which your children
as living arrows are sent forth.
The archer sees the mark upon the path of the infinite,
and He bends you with His might
that His arrows may go swift and far.
Let your bending in the archer’s hand be for gladness;
For even as He loves the arrow that flies,
so He loves also the bow that is stable.
“உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் வாழ்க்கையும் காலமும் தங்கள் மேன்மைக்காக வகுத்துக்கொண்ட இலட்சிய பிறப்புக்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைக்கொடுங்கள் உங்கள் எண்ணங்களை அல்ல. ” என்ற சீரிய கருத்தை முன் வைத்து எழுதப்பட்ட இந்த வரிகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் விழிப்புணர்வைக் கொடுக்கக் கூடிய வார்த்தைகளின் தொகுப்பு.
ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்ற காலப் பரிமாணமும் சமுதாய மற்றும் பூகோளப் பரிமாணங்களும் மாறுபட்டவை. அதனால் அவர்கள் சிந்தனைகளும் உணர்வுகளும் மாறுபடுகின்றன. பல நேரங்களில் பெற்றோர்களின் கனவுச் சுமைகளை அவர்கள் தாங்குவதால் அவர்களுடைய சொந்தச் சிந்தனைகள் உயிர்பெறவோ அல்லது பிரகாசிக்கவோ வழியில்லாமல் போய்விடுகின்றது. இது அவர்களுடைய தனித்தன்மையையும் சுய- அடையாளத்தையும் வெகுவாக பாதிக்கின்றது.
சுய- அடையாளம் ஒரு மனிதனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அதன் தனித்தன்மையுடன் சீராக வெளிப்படுத்த உதவுகின்றது. ஒரு மாணவனின் வாழ்க்கைப் பாதையில் அவர்களது சொந்த விருப்பங்கள் ஆர்வங்கள் மற்றும் தேடல்கள் ஆகியவற்றை அடித்தளமாக்கி அர்த்தமுள்ள மேன்மையான வாழ்க்கை வாழ்வதற்கு உதவுகின்றது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிர்பந்தத்தால் தங்களது சுய அடையாளங்களை இழக்கும் அல்லது அடகு வைக்கும் இளைஞர்கள் முன்னேற்றப்படியிலிருந்து வெகு சீக்கிரம் கீழே விழுந்துவிடுகின்றார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் கருத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் அடிபணிந்து தங்களுடைய படைப்பாற்றல்களையும் இழந்து விடுகின்றனைர் இது மிக வருந்தத்தக்க நிலை. இது அந்த தனி மனிதருக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒரு இழப்பு. இதனை உணர்ந்து வீடுகளிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களது சுய அடையாளங்களை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உரிய கல்விமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம்.
சுய அடையாளங்களை குழந்தைகளிடம் வளர்ப்பதற்கான உத்திகள் :
7.அவர்களுடைய தோல்விகள், இயலாமை மற்றும் அறியாமைகளை முன்னிறுத்தி அவர்களை அச்சுறுத்தவோ அல்லது தாழ்வு மனப்பான்மைக்கு வித்திடவோ கூடாது.
வாழ்க்கையில் அடையாளாச் சிதைவுகளும் அடையாள நெருக்கடிகளில் தவிக்கும் பலருக்கு அவர்களுடைய இளைய காலத்து வளர்ப்பு முறையிலும் கற்றல் பாதையிலும் தேக்கங்களும் நெருக்கடிகளும் தவறுகளும் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கற்றல் ஒரு வாழ்க்கையின், ஒரு உயிரின் தொடர் முயற்சி. சுய-அடையாளங்களை இழந்த உள்ளங்கள் வாழ்க்கையில் கற்றலை ஒரு காலத்தின் செயலாக மட்டும் கருதி தங்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒளியை இழந்து விடுகின்றன. இதைக் கருத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.
(தொடரும்)
G. Balasubramanian
“A Teacher impacts Eternity” is an age old saying. But the truth of the statement can never be debated. The impact a teacher makes on the lives of a learner is so significant that it shapes the learners’ thoughts, perceptions, life styles, thinking and activities. However, from the perception of a teacher as the fountain-head of all knowledge from where the wisdom flows have undergone a tremendous change and in the instant knowledge society, where there is mind-boggling flow and dynamics of knowledge, the teacher is required to be competent, contextual and relevant. (S) he needs to have a more focused professional approach to deliver the defined, required curricular competencies to a challenging classroom. The teacher is required to be more than an information broker but a guide, facilitator, mentor, counsellor and motivator.
A professional degree in education may be an added advantage but does not necessarily incorporate in an individual a professional attitude to teaching. What are the required competencies from a professional teacher? They may be many but certain core competencies are as under:
With the speed of knowledge dynamics, the teacher is required to be an eternal learner. Emerging systems of knowledge, skills, applications impact life styles and skills so much, that the learners are in constant touch with these changes and absorb them more easily than their elders. The teacher has, therefore, to be well aware of the emerging knowledge and participate in the learning process along with their students. The role of a teacher is becoming a “co-learner.”
The emerging tools and appliances in technology and their integration with the content and the methods of learning has taken away the formal learning methods to an ‘informal learning’ platform. The cognitive psychologists claim that a near 90 percent of learning of students is from ‘informal learning’ environments, rather than the formal ones. The ‘search’ for knowledge is leading to ‘research’ about their validity, use and contextuality to life. Technology as a learning tool has manifested in multi-dimensional ‘avatars’ and hence the teacher has to be not only ‘technology literate’ but ‘technology competent’
With a wide-based research in the role and function of the human brain, the understanding of cognition is getting redefined. Neuro-cognitive researches claim that it is only ‘learning ‘that happens in the brain and hence the approach to pedagogy to enable and empower learning must be more focused, appropriate and learner-friendly. The understanding of differentiated learning skills calls for application of a wide-variety of delivery modes and better use of space and time in a classroom environment. The understanding of ‘multiple intelligences’ and the need to enlarge the spectrum of learning experiences in formal and informal spaces in learning calls for more creative and diverse approach to methods of classroom transactions. The success of a professional teacher is related to the ‘pedagogical intelligence’ of the individual.
The ‘one-way’ traffic of information flow where the learner is a mute learner in a silent classroom is no more acceptable. A teacher is required to be an effective communicator engaging with the learners using a wide variety of communication skills both verbal and non-verbal. The understanding about NLP (Neuro-linguistic programing) and its use to motivate, engage and facilitate a conducive and creative learning environment in a classroom is being debated worldwide. Teachers need to understand their effective implementation in a classroom. The ‘body-language’ of the teachers in a classroom needs validation, professionalism and finetuning for enhanced performance.
Learning is a unique individualized activity. No two learners learn the same way. The aptitude, attitude and the socio-economic environment of the learners impacts their purpose, destination and objectives of the learning. It is important that teachers need to understand, appreciate and mentor the learning curve of each of the learners in their orbit and mentor them more closely and effectively. The ability to counsel them both for their academic and emotional growth profile becomes an engaging responsibility of a teacher. Finding time and space for engagement with each of their learners is indeed a challenging proposition, but becomes an unavoidable one.
While a ‘passionate teacher’ is a great asset to the system, absence of ‘professionalism’ derails their journey to the ever-changing destination. Mere ‘professionalism’ might provide all the required concurrent skills, but a human touch to the environment is empowered by a ‘passionate approach’.
The learning curve appears to be a marathon and hence better and effective use of mental, emotional and intellectual competencies of the teachers is required to be a meaningful participant in this race!
–செண்பக ஜெகதீசன்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவுந்
தீரா இடும்பை தரும். (திருக்குறள் -510: தெரிந்து தெளிதல்)
புதுக் கவிதையில்…
ஆட்சியில் மன்னன்
ஆராய்ந்திடாது ஒருவரைத்
தெரிந்தெடுப்பதும்,
தெரிந்தெடுத்த ஒருவர்மீது
ஐயம் கொள்வதும்,
அல்லலை
அதிகமாகவே கொண்டுவரும்…!
குறும்பாவில்…
ஆராயாமல் ஒருவரைத் தெரிந்தெடுப்பதும்,
தெரிந்தெடுத்தவர் மீது சந்தேகப்படுவதும்,
தீங்கைத்தான் தரும் தொடர்ந்து…!
மரபுக் கவிதையில்…
நல்லதாய் ஆட்சி நடைபெறவே
-நற்றுணை பெற்றிட மன்னனவன்,
வல்லவர் ஒருவரைத் தெளியுமுன்னே
-விபரம் முற்றிலும் அறியவேண்டும்,
எல்லாம் அறியாத் தேற்றிடுதலும்
-எடுத்தவர் மீதி லையுறுதலும்,
தொல்லைதான் தருமே என்றென்றும்
-தீரா யிடர்தான் அரசினுக்கே…!
லிமரைக்கூ…
ஆராய்ந்து தெரிந்தெடுத்தலை விட்டு,
தெரிந்தெடுத்தபின் ஒருவர் மீது ஐயுறுதல்
தொல்லையரசுக்கு அல்லல்பல பட்டு…!
கிராமிய பாணியில்…
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்
ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…
அரசாச்சி நல்லாயிருக்க
அதுக்குத் தொணயானவர
நல்லா
ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…
ஆராஞ்சி தெரிஞ்செடுக்காமலும்,
ஆராஞ்சி தெரிஞ்செடுத்தபின்னே
அவரமேல சந்தேகப்பட்டாலும்,
அதுதீரா தும்பந்தான்தரும்
அந்த அரசாச்சிக்கே…
அதால,
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்
ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…!
கிரேசி மோகன்
—————————————————-
‘’கண்ணினுண் தாம்பினால் கட்டுண்ட கண்ணன்
கன்னிஉன் கயிறுக்கு கட்டுப்படுவான்’’….!
”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான்
பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்:
சீரடைவில் சேர்ப்பான், சுமங்கலியா கக்கட்டு
காரடையான் நோன்பில் கயிறு”….கிரேசி மோகன்….!
’வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்:
பாரதன்பின் உன்பர்த்தா பல்லாண்டு வாழ்ந்திடுவார்
காரடையான் நோன்பவள் காண்’’….கிரேசி மோகன்…!
(OR)
காரடையான் நோன்பு ‘’கலை’’….கிரேசி மோகன்….!