இலக்கியம்கவிதைகள்

வளியின் வாசகம்! – The Word of the Wind by Mah Jonggi (1939-)

பவள சங்கரி

 

  Translated by Chae-Pyong Song and Anne Rashid

autumn_girl_leaves_nature_3617_1920x1080
நாமெல்லோரும் விலகிய பின்பும்,
எமதான்மா உமைக்கடக்க நேர்ந்தால்,
ஒரு நொடியேனும் அது மரக்கிளைகளினூடே
ஊடுறுவும் வளியின் வசந்தமென்றெண்ணிவிடாதே.
இன்றொரு மலரை உன்னையறிய நேர்ந்த
அந்த நிழலினோர் மூலையில்
நட்டுவிடப் போகிறேன்;
அம்மலர் விரிந்து மலர்ந்தவுடன்
நம் அறிமுகத்திலிருந்து உருவான
அத்தனை நெருக்கமும் மொத்தமாய்
மென்னிதழ்களாய் மாறிப் பறந்திடும்.
After all of us leave,
if my spirit passes by you,
don’t think even for a moment it is
the wind that sways the spring boughs.
Today I will plant a flower
on a corner of the shadow
where I got to know you;
when the flower grows to bloom,
all the distress that stemmed from our acquaintance
will turn into petals and fly away.

 

2

leaffall

இதழ்களாய் மாறிப்பறந்திடும் அது.
 தாங்கொணத்தொலைவோ
அன்றி பாழ்பட்டதொன்றோ,
பிரபஞ்சப் பிரமாண்டமனைத்தையும் சின்னஞ்சிறு
அளவுகோலால் அளப்பது எங்கனம்?
அவ்வப்போது காற்றடிக்கும் திசைதோறும்
செலுத்துகிறாய்  உமது செவிகளை,
எனதன்பே, உம் களைப்பினூடேயும்
தொலைதூர வளியின் வாசகங்களை
மறந்துவிடாதே ஒருபோதும்.

It will turn into petals and fly away.
Though it is unbearably distant
and futile,
how can we measure all the things in the world
with only a small ruler?
When every now and then you turn your ears toward where the wind blows,
my beloved, don’t forget even if you become tired
the word of the wind that comes from faraway.

 

Korean Poem BY Mah Jonggi

바람의 말 /마종기

 

우리가 모두 떠난 뒤
내 영혼이 당신 옆을 스치면
설마라도 봄 나뭇가지 흔드는
바람이라고 생각지는 마.
나 오늘 그대 알았던
땅 그림자 한 모서리에
꽃나무 하나 심어 놓으려니
그 나무 자라서 꽃 피우면
우리가 알아서 얻은 모든 괴로움이
꽃잎 되어서 날아가 버릴 거야.

꽃잎 되어서 날아가 버린다.
참을 수 없게 아득하고
헛된 일이지만
어쩌면 세상 모든 일을
지척의 자로만 재고 살 건가.
가끔 바람 부는 쪽으로 귀 기울이면
착한 당신, 피곤해져도 잊지 마,
아득하게 멀리서 오는 바람의 말을.

 

படங்களுக்கு நன்றி.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க