Blog

  • இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 2

    –மு. ஜெயலட்சுமி.

     கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    கண்ணதாசனின் கவிதையாளுகை

    “என்றன் பாட்டுத் திறத்தாலே, இவ்வையத்தைப்
    பாலித்திடல் வேண்டும்”
    என்றான் முண்டாசுக் கவிஞன்.  இதற்கு இலக்கணமாக இவ்வுலகம் பயன்பெறக்கூடிய வகையில் தம் பாடல்களால் மக்களை ரசித்து, அவர்கள் நினைவில் நீங்காது இடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞர் கண்ணதாசன் சங்கப்பாடல் முதல் சிற்றிலக்கியம் வரை – தாம் படித்த கவிதைகளின் சாரத்தையெல்லாம் காதல் பாடல்களாகத் திரையில் வடித்துள்ளார்.  இவரது கருத்தாழமிக்க பாடல்கள் ஒலிக்காத விழாக்களே இல்லையென்று சொல்லாம்.  அவற்றை நாம் இங்கு காண்போம்.

    காதல் பெருமை:
    காதல் என்பது “ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதளவில் ஒருவரை ஒருவர் விரும்புவது’’ என்று மட்டும் கூறிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், அந்த காதலுக்குப் பல பரிணாமங்களை வடிவமைத்துக் காட்டிய பெருமை கண்ணதாசனுக்கே உண்டு!
    உலகமெங்கும் ஒரே மொழி
    உள்ளம் பேசும் காதல் மொழி
    ஓசையின்றி பேசும் மொழி
    உருவமில்லா தேவன் மொழி !” —————-(நாடோடி)
    காதல் என்பது புனிதமானது; பெருமைக்குரியது; உலகம் முழுவதும் பரவியது என்பது கவிஞர் கண்ணதாசனின் கருத்து.  காதல் சிறப்பை, “உலகெங்கும் நிலவுவது காதல் என்று அதன் பரப்பினைக்’’ கூறுகிறார்.

    மேலும் மக்களால் போற்றப்படும் காதல், நிலையுடையது என்னும் கருத்தில் அதேப் பாடலில்
    “கோடி மனிதர் பேசிய பின்னும்
    குறைவில்லாமல் வளர்வது காதல்” ————–(நாடோடி)
    என்று காதல் தவறு உடையதன்று; அது ஏற்றுக் கொள்ளக் கூடியது.  என்றெல்லாம் எழுதிக் காதல் பெருமையைக் கவிஞர் கண்ணதாசன் வலியுறுத்துகிறார்.

    காதல் தோற்றம்:
    காதல் தோற்றம் சாட்சியினால் நிகழ்கிறது.  சாட்சி காணும் கண்கள், காதலுக்கு அடிப்படை என்பதைக் கவிஞர் கண்ணதாசன் காதல் என்றால் ஆணும் பெண்ணும் வேண்டும்.  அந்தக் காதலின் துவக்கம் கண்கள் மூலமே நிகழ்கின்றது.  கண்கள் என்ற வாசல் வழியே சென்று கருத்தினில் கலந்து இரண்டு மனங்களையும் வயப்படுத்துகின்றது காதல்.  காதலில் மனதுக்கு முன்னால் கண் செயல்படத் துவங்கி விடும், இருவரின் பார்வையும் சந்தித்த உடனேயே மனமும் அங்கே சென்று விட்டது முதலில் பார்த்தவர் யார் என்ற பேச்சுக்கே இடமின்றி `கண்டபோதே சென்றன அங்கே’ என்ற வரிகள் மூலம் இரண்டும் ஒன்றாலையே நிகழ்ந்ததாகக் கூறுகின்றார்கள்.
    “கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    கண்ட போதே  சென்றன அங்கே’’ ——————–(கர்ணன்)
    கண்ணுக்கும் மனதுக்கும் உள்ள இந்த உறவையும் அந்த உறவின் மூலமாக வெளிப்படுகின்ற காதல் உணர்வையும் இவ்வரிகள் அழகாக காட்டுகின்றன.

    தலைவன் தலைவியைப் பார்க்கிறான்.  அவள் கனிவு முகம் இவனைக் காதல் வயப்படுத்துகின்றது.  நேற்றுவரை இவள் என் கண்ணுக்குத் தோன்றாமல் இருந்தது எப்படி? நேர் வழியாம் காதல் வழியில் செல்ல என்னை மாற்றிவிட்டாளோ என்று மகிழ்கிறான்.
    “கண்ணெதிரே தோன்றிளாள்
    கனிமுகத்தைக் காட்டினாள்
    நேர்வழியில் மாற்றினாள்
    நேற்றுவரை ஏமாற்றினாள்” ——————-(இருவர் உள்ளம்)
    அவள் கனிவுமுகம், தனியாகச் சென்ற இவள் உள்ளத்தைத் தைத்தது; மனம் மகிழ்ந்தது; இனம் புரியாத மயக்கத்தை ஏற்படுத்தியது.  இங்கே காதலை மென்மையாக காட்டுகிறார்.

    காதலின் உணர்வு:
    “சொல்லித் தெரியாது சொல்ல முடியாது
    உள்ளத்திலிருப்பது எது? – வரும்
    உறக்கத்தைக் கெடுப்பது எது?” ———————(கல்யாணியின் கணவன்)
    என்று காதலின் உணர்வை துல்லியமாகச் சொல்லியுள்ளார்.

    “ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
    அந்த உறவுக்குப் பெயர் என்ன?
    காதல்” —————————————(சாரதா)
    இப்பாடலில் ஒருவன் ஒருத்தியை நினைத்துவிட்டால் என்று எழுதி இருந்தாலும் இசைக்கு ஒத்து வந்திருக்கும். ஆனால் ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் என்று அவர் எழுதியிருக்கும் காரணம், கதைப்படி காதல் வயப்பட்ட கதாநாயகிதான் காதலை தொடங்குகிறாள் என்பது ஒரு புறம் இருந்தாலும், ஒருத்தி ஒருவனைத்தான் நினைப்பாள், ஆனால் ஒருவனோ பலரை நினைப்பான் என்று, பெண்ணுக்குரிய கண்ணியத்தை உச்சியில் ஏற்றிவைத்து அழகுப் பார்த்தவர்.

    “உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை
    எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல நீ சொல்லாத சொல்லும்
    சொல்லல்ல நீ இல்லாமல் நானும் நானல்ல
    இங்கு நீ யொரு பாதி நானொரு பாதி
    இதில் யார்பிரிந்தாலும் வேறென்னமீதி” —————-(இதயக் கமலம்)
    மனிதனில் ஆண்பாதி பெண்பாதி, ஒரு பாதி இன்னொரு பாதியை தேடுவது தானே காதல் !

    சுதந்திர உணர்வு:
    “சிட்டு குருவிக்கென்ன கட்டுப்பாடு
    தென்றலே உனக்கெது சொந்த வீடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு” ————————(சவாலே சமாளி)
    சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பாகவும், தென்றலைப்போல சுகமாகவும் மனித இனம் உலகம் முழுவதும் பறந்து திரிந்து இயற்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிறார்.  இன்பத்தை எப்பொழுதும் அடைய வேண்டும் என்ற எண்ணம் நம் உணர்வுகளில் கலந்த ஒன்று.  அதற்கு கட்டுப்பாடு இல்லாது இருக்க வேண்டும்.  இதில் கவிஞரின் சுதந்திர உணர்வை வலுப்படுத்துகிறது.

    இளமைக் காதல்:
    காதலுக்கு நிலைக்களனாகிய இன்பம் எல்லா உயிர்க்கும் உண்டு.  கீழுள்ள இந்த வரி கவிதை கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.  மார்கழி மாதத்தில் பனி இல்லாமலும், மன்னராக இருப்பவன் படைபலம் இல்லாமலும், இனிப்புச் சுவை இல்லாத முக்கனிகளும், இசை இல்லாத முத்தமிழும், கலையில்லாத நாடகமும் எப்படி இருக்க முடியாதோ அப்படித்தான் வாலிபத்திலும் காதல் இல்லாமல் இருக்காது என்று ஒற்றை வரியில் சவால் விடும் அளவிற்கு காதலுக்கு ஆட்படாத வாலிப நெஞ்சமே இல்லை என்று கூறுகிறார்.
    “காதல் இல்லாத வாலிபமா?’’ ————-(ஆனந்த ஜோதி)
    என்றும்,
    உடம்பு தளர்ந்தாலும், தோல் சுருங்கிப் போனாலும், தன் தலைவி மீது அன்பு ஊறிக் கொண்டே இருக்கவேண்டும்.  அதுதான் முழுமையான – செழுமையான காதல் என்கிறார்.  இதையே…

    “இளமையிலே காதல் வரும்
    எதுவரையில் கூட வரும்?
    முழுமைபெற்ற காதலெல்லாம்
    முதுமைவரை ஓடி வரும்” –——————-(திருடாதே)
    என்கிறார். காதல் தலைவி, தன்னுள் காதல் தோன்றிய இரகசியத்தை தன் தலைவனுக்கு உரைக்கிறாள்.  அதில் இளம்பருவத்தை உடைய தலைவனிடம், இளமைப் போய் முதுமை சேர்ந்தாலும், இருவர் காதலும் மாறாது என்று காதல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார்.

    “இளமையின் இன்ப ரகசியம்
    இயற்கையில் வந்த அதிசயம்
    இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
    அதில் நாமும் இன்றொரு காவியம்
    இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
    இருவர் காதலும் மாறுமோ?”——-(காதலிக்க நேரமில்லை)
    என்றும்…

    “காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லையே,
    கண்கள் பேசும் வார்தையிலே பேதமில்லையே
    வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
    மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே?” —-(பாவ மன்னிப்பு)
    என்றும் காதலில் வாய் பேசுவதைவிடக் கண்கள் பேசுவதே அதிகம்.  எந்த ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் இதில் வேறுபாடு இல்லை.  வானில் நீந்திச் செல்லும் மேகங்கள், நம் கற்பனைக்கேற்ற உருவத்தைக் காட்டும்; ஆனால் அந்த உருவங்கள் சற்று நேரத்தில் கலைந்து விடும்.  ஆனால் காதல் அப்படிக் கலைவதில்லை என்கிறார்.

    “இதயம் பொல்லாது
    கண்ணெதிரே பெண்ணழகை
    கண்ட பின்னே இளமைவேகம்
    கொள்ளாமல் நில்லாது”—————————-(இதயம்)
    என்பன போன்று காதல் அற்புதத்தைக் கோடிட்டு; பலவித காதல் கவிதைகளை இயற்றியுள்ள பெருமையும் இவருக்குத்தான் உண்டு.

    கனவாகும் காதல்:
    கவியரசு கண்ணதாசன் 1948-இல் திரையுலக வாழ்க்கைக்கு வந்தார்.  `கன்னியின் காதலி’ என்னும் திரைப்படத்திற்காகத் தம் முதல் பாடலை எழுதினார்.  படத்தின் பெயரிலேயே காதல் அமைந்தக்காரணத்தினால் காதலிலேயேத் தொடங்கினார்.  ஆண் வேடம் தரித்த பெண், மற்றொரு பெண்ணுக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ள சூழலுக்கு,
    “கலங்காதிரு மனமே – நீ
    கலங்காதிரு மனமே – உன்
    கனவெல்லாம் நனவாகும்
    ஒரு தினமே’’ –——————–(கன்னியின் காதலி)
    என்று எழுதினார்.

    தலைவன் தலைவியின் அழகை வர்ணிக்கும் விதம் மென்மையைக் குறிக்க, `அவள் காற்றினில் பிறந்தவள்’ என்று சொன்னதே கற்பனைதான்.  கற்பனையே கற்பனை செய்து இவளை வடித்தது என்பது ஆதிதமான கற்பனை.  பொதுவாக எந்த பெண்ணும் இன்னொருத்தி தன்னை விட அழகானவள் என்று ஒப்புக்கொள்ளமாட்டாள்.  ஆனால் இவளோ, மற்றொரு பெண்ணே இவள் மீது ஆசை கொள்ளும் அளவிற்கு அழகானவளாம்!

    “காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ?
    …………………….
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ?” —————- (மாலையிட்டமங்கை)
    என்று காதலன் தலைவியை வர்ணிக்கும் கவித்திறன் அருமையிலும் அருமை.

    காதலியின் கோபமும் காதலனின் கேள்வியும்:
    நிலவையும், காதலையும் சேர்த்துப்பாடாத கவிஞர்களே இல்லையெனலாம்.  காதலன் நேரம் கழித்து வந்து விட்டான்.  வந்தது மட்டுமல்லாமல், காதலியின் மனதுக்கு விருப்பமில்லாத வகையில் நடந்து கொள்கின்றான்.  காதலிக்கு கோபத்தால் முகம் சிவந்து விடுகிறது.  ஆசையாக தொட வந்தவனையும் தவிர்க்கின்றாள்.  நிலவின் குளிர்சியை உடையவளுக்கு, நெருப்பாக எரியும் கோபமும், மலரைப் போன்ற மென்மையானவள் முள்ளாய் மாறியதற்கு என்ன காரணம் என்று கேட்கிறான்.  இதையே
    “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
    இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது” ———————- (போலீஸ்காரனின் மகள்)
    என்று வளமான கற்பனை உடையவராக கவிஞர் கண்ணதாசன் மிளிர்கிறார்.  சூழலையும் மனோபாவத்தையும் பொறுத்துதான் காதல் கூட இனிமையாய் இருக்கும் என்று சுட்டுகிறார்.

    பண்பாடு மாறாத காதல்:
    காதல் கொள்கிறாள் காதலி. காதலனோ, ஏற்கனவே திருமணமாகி மனையாளைப் பறிக்கொடுக்கிறான்.  அவனை தன் காதலனாக நினைத்து அவனிடம் அன்பாகப் பேசி நெருங்குகிறாள்.  அவனுக்கோ காதலில் மனம் செல்லவில்லை.  இருப்பினும் அவன், அவள் மனதை புண்படாதவாறு தன் கருத்தை வெளிப்படுத்துகிறான்.  எந்த ஒரு சூழ்நிலையிலும், நம் பக்கத்து நியாயத்தையும் மனநிலையையும் எடுத்து வைக்க முடியும் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றது.
    “நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை “—————————-(ராமு)

    நான் நீ யாவது நீ நானாவது:
    காதல் செய்யும் போது கருத்து வேறுபாடுகள் வரலாம்.  அந்த நேரத்தில் நீ நீயாகவும், நான் நானாகவும் இருந்தால் பிரச்சினையை எளிதில் தீர்க்க இயலாது.  அதனால் நான் நீயாகவும், நீ நானாகவும் இருந்தால் பிரச்சினையைப் புரிந்து கொண்டு அதை தீர்க்க முடியும் என்கிறார். கவிஞர் இங்கு “உலகங்கள்” என்று ஏன் சொல்கின்றார் என்றால், சமுதாயத்தில் சொந்தம் பந்தம் போன்று பல்வேறு தளங்களில் மனிதனுக்குக் கடமைகள் உள்ளன.  இப்படி இருவரின் கடமைகளிலும் பொறுப்புகளிலும் ஒன்றாகின்ற நிலைதான் காதலின் உயர்நிலை, நீ எந்த கோணத்தில் புரிந்து கொள்கிறாயோ, அந்தக் கோணத்தில் தான் எனக்கு புரிய வைக்க முடியும்.  நானும் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
    “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
    நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
    நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் “————(பாலும் பழமும்)

    புதுமையான காதல்:
    அங்கம் சிறிது குறையுடைய ஆடவனை மங்கை ஒருத்தி மணக்க நேரிடுகிறது.  ஆனாலும் அவள் மனம் அதற்காக வருந்தவில்லை, மற்றொருவனை நாடி ஓடவில்லை.  உறுப்புக் குறைந்தவர்களை காதலர்களாகப் பாடப்பெறுவதில்லை.  கண்ணதாசன் இதிலும் புதுமையை காட்டுகிறார்.  மங்கையர் உள்ளம் அங்கம் குறைந்தவனைக் காதலிக்க மறுப்பதில்லை என்று அங்கக் குறைவு அன்புமிகு காதலுக்கு தடையில்லை என்றும், உண்மைக் காதலை சமுதாயத்தின் உச்சியில் ஏற்றி வைத்து அழகுப் பார்த்தவர்.
    “தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ? – உங்கள்
    அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ?”————————-(பாகப் பிரிவினை)
    என்றும்,

    “கைகால் விளங்காத
    கணவன் குடிசையிலும்
    காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா” ———-(பாகப் பிரிவினை)
    என்று குழந்தையை தாலாட்டும் போதும், தன்னுடைய மகனுக்கு அங்கக் குறைவினை எடுத்துச் சொல்லி காதல் மனத்தையும் தாலாட்டுப் பாடலுடன் சேர்த்து வெளிப்படுத்திய திறன் கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும்.

    பெண்மை தாய்மையில் நிறைவுறுகிறது:
    ஒரு மனிதன் பிறக்கும் போது இருந்தே அவனுடைய இன்ப துன்பங்கள் ஆரம்பித்து விடுகின்றன. கவியரசரின் கவிதையில் தத்துவக் கருத்துக்கள், பிறப்பிலிருந்து தொடங்குகிறது.
    “தந்தை தவறு செய்தார்
    தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்து விட்டோம்
    வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்”-———(அவன்தான் மனிதன்)
    என்ற வரிகள் பிறப்பையும், பந்தத்தையும் எடுத்துக்காட்டுகிறது.  இங்கே “தாயும் இடம் கொடுத்தாள்” என்பது, தந்தைக்கு மட்டுமல்ல, நாம் இருந்து வளர்வதற்கும் தாய் கருவரை எனும் இடம் கொடுத்தாள் என்கிறார்.  இதில் பெண்மை தாய்மையில் நிறைவு பெறுவதை குறிப்பால் மிக அழகாக உணர்த்துகின்றார்.

    முடிவுரை:
    ‘காதல்’ என்ற பாடுபொருளை கவிஞர் கண்ணதாசன் எங்கனம் தம்முடைய திரையிசைப் பாடல்களில் மிகவும் திறம்பட நயமுடன் எடுத்தாண்டுள்ளார் என்பது தெரிகிறது.  தாம் கற்றறிந்து போற்றிய, தம் உள்ளம் கவர்ந்த இலக்கியத் தொடர்களை எளிய தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கவிஞர் கண்ணதாசன் கவின்மிகு பாங்கு எண்ணியெண்ணி மகிழத்தக்கதாகும்.  தமிழ் இலக்கியத்திற்க்குள் புதைந்து கிடந்த காதல் இன்பத்தை பாமர மனிதரின் சிந்தனைக்கு எட்டும் வண்ணம் செதுக்கிய பெருமை கவிஞர் கண்ணதானையே சாரும் என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன்!

    –நர்கிஸ் பானு.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    விஞ்சியவர்… மிஞ்சியவர்…
    நம் உள்ளங்களின் உணர்வுகளுக்கு
    தன் சொல்லால் உயிர் தந்த வித்தகர்.
    படைப்பாளி.
    படைத்தவனுக்கே
    பட்டம் தரத் தேடுகிற
    உள்ளப் படைப்பாளி.
    தன்னிகரில்லா தமிழ்க்கவியரசர்.
    கட்டுக்கு அடங்கா காட்டாற்று வெள்ளமென
    கவிஞரின் தமிழ்மொழி ஆற்றல், அளவுகோலுக்கு அடங்காதது.
    அவர்தம் தன்னம்பிக்கையோ மரணத்தையும் வென்றது.

    ‘நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை’

    அழியும் மானிடப் பிறவியில் அழியாப் புகழ் பெற்றவர்.

    பல திரைப்படங்களில் ஒலிக்கும் பாடல்கள் கதாநாயகனையும் மீறி, கதையோட்டத்தையும் மீறி, நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வது கவியரசர்தான் என்பது அப்பட்டமான உண்மை. பிறவிக்கவிஞர் அவர். மனிதப் பிறவியில் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் அனுபவங்களை பாடலாக வடித்து நம் ஆன்மாவில் நமக்கே தெரியாமல் இரண்டறக் கலந்தவர்.

    நமது உணர்வுகள் கவியரசரின் வரிகளில் பளிங்கு மாளிகையாய் மணிமண்டபமாய் உயரத்து கோபுரமாய் நாமே உணர தீர்க்க தரிசியாய் அன்னை மொழிதனில் அற்புதமாய் சொல்லிச் சென்றவர். அவர் பாடலை மேற்கோள் காட்டாத நாளில்லை எனலாம்.

    ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழ வேண்டும். ஒரு
    மாற்று குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்’.

    என்னவென்று சொல்வது?
    வேள்விகள் வளர்த்து வணங்கினர் அரசர்கள்
    கேள்விகள் கேட்டு அசத்தியவர் கவியரசர் – கடவுளையே
    கேள்விகள் கேட்டு அசத்தியவர் கவியரசர்.

    ‘கண்ணா கருமை நிறக் கண்ணா’ பாடலில்

    ‘நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா! எந்தக்
    கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?’

    அடுத்து,

    கடவுளை போற்றித் துதிப்போர் மத்தியில்

    ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
    காதலித்து வேதனையில் வாட வேண்டும்
    பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் – அவன்
    பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்’
    என்று சாபமிட்டுவிட்டு,

    அடுத்து,
    ‘அவனை அழைத்து வந்து
    ஆசையில் மிதக்கவிட்டு
    ஆடடா ஆடு என்று
    ஆடவைத்து பார்த்திருப்பேன்’ என்கிறார் கவிஞர்.

    அடடா, அச்சமின்றி ஆண்டவனையே அசாத்தியமாய்ப் பாட கவியரசரைவிட யாருக்கு வந்துவிடும் இத்தனை உரிமையும் தைரியமும்?

    சுடுகின்ற உண்மையைக்கூட விளம்பும் வித்தியாச குணத்தவர். இம்மேதையை மறப்பார் உண்டா? அவர் சாதனையை மறுப்பார்தான் உண்டா?

    நம் வாழ்க்கை எவ்வளவு தூரம்?

    ‘பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
    சேத்தா விறகுக்காகுமா, ஞானத்தங்கமே?
    தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா, ஞானத்தங்கமே?’ என்று கண்களில் நடிகர் திலகம் நிறைந்திருக்கலாம், கதைப்படி அவரே சிவனாகவும் நடித்திருக்கலாம். ஆனால், நம் கருத்தில் விஞ்சி நிற்பதோ கவிஞரின் விஞ்சிய தத்துவமே! தத்துவம் மட்டுமா? சந்தம் இவர் சிந்தனைக்குச் சொந்தம். இலக்கணம் இவருக்கு இலகுவாய் வரும்.

    அந்தாதியில் இவரின்
    ‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்’ என்றும்

    ‘ஆடிவெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
    கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்!
    ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
    ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்’ என்று இன்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டு வருகின்றன!

    படித்தவனும் மறந்துபோன,
    பாமரனுக்கு எட்டாக் கனியான
    பல தமிழ் இலக்கியங்களை எளிமையான
    பாடல்களாக்கிய அற்புதச் சிற்பி கண்ணதாசன்.

    ‘மயக்கமா? கலக்கமா?
    மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?’

    இப்பாடல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் என்றாவது ஒரு சமயம் மௌனகுருவாக, உற்ற தோழனாகத் திகழ்வது சத்தியமே. இவரின் செல்வாக்கு கலையுலகில் மட்டுமா? ஒவ்வொருவர் மனதிலுமல்லவா சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்?

    ஒருசில மாமேதைகளுக்கு மட்டுமே இத்தனை அரிய சிம்மாசனம் காத்திருக்கும். காலத்தைக் கடந்து பல இதயங்களில் வீற்றிருக்கும். சொல்ல சொல்ல இன்னும் சொல்லவே சொற்கள் தவம் கிடக்கின்றன. என் பார்வையில் கண்ணதாசன் நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களைப்போல், இவ்வுலகில் மனித இனம் உள்ளவரை மங்காப் புகழோடு வாழும் இறவாக் கவிஞன். அவரின் பாடல்கள் தமிழ்த்தென்றல் வீசும்வரை தாலாட்டிக் கொண்டிருக்கும். தமிழ் வாழும் காலமெல்லாம் அவரின் புகழ் நிலைகொண்டிருக்கும். அதை அவரே தன் பாடல் மூலம் பதிவும் செய்துவிட்டுப் போயிருப்பதுதான் அவரின் தீர்க்க தரிசனம். என் மனம் கவர்ந்த அவ்வரிகளையே இங்கு பார்வையாக்கி கவியரசருக்கு சமர்ப்பணமாக்கி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

    ‘கவியரசே!
    நீ
    நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த
    நிலையிலும் உனக்கு மரணமில்லை’

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

    –ஜியாவுத்தீன்.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    கண்ணதாசன்!

    காலத்தை வென்ற கவிஞன்!
    ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

    இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே, எழுதும்போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதுதான் நம்மீதான அவரின் தாக்கம் என்றால் மிகையில்லை.

    என் பார்வையில் என்றில்லை, யார் பார்வையிலும் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் அடங்காத மகோன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். பாரதியின் நாவில் சரஸ்வதி குடிகொண்டிருந்தாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரதி மறைந்தபின் குடிகொள்ள இடமின்றித் தள்ளாடிக் கொண்டிருந்த சரஸ்வதி கண்ணதாசன் பிறந்தவுடன் அவரின் நாவில் குடிகொண்டுவிட்டாள் போலும். அதனால்தான் இம்மனிதனின் நா உதிர்த்த வார்த்தைகளெல்லாம் பாடல்களாயின, பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ்மகனின் வேதங்களாயின.

    சோழசபையில் அம்பிகாபதியின் புலமையைப் பரிசோதிக்க பக்திப் பாடல்கள் 100ஐ தொடர்ந்து பாடவேண்டும் என்று கட்டளையிடப்பட்ட கதையைக் கேட்டிருக்கிறோம். அது எப்படி 100 பாடல்கள் பாட முடியும் என்று வியந்து நம்பாமல்கூட இருந்திருப்போம். ஆனால், கண்ணதாசனின் கதையைக் கேட்கும்போது, திறமையாளர்களுக்கு அது ஒன்றும் திணறும் காரியமல்ல என்பதை உறுதியாய் நம்பத் துவங்குகிறோம். ஆம்! இவரிடம் எத்தனை பாடல்கள் கேட்டாலும், எத்தனை விதமாய்க் கேட்டாலும், எந்த நிலையில் கேட்டாலும் சரம்சரமாய்க் கொட்டின என்று இவருடன் பழகிய பலரும் கூறக் கேட்கையில், தமிழுலகில் இவரை ‘பாடல்களின் அமுதசுரபி’ என்று சொல்லத் தோன்றுகிறது.

    அரிய விஷயங்களை, அற்புதமான மனிதர்களை, மனிதர்கள் ஏங்குமளவு அவர்களுக்குப் பிடித்தமானவற்றை இறைவன் எதிர்பாரா தருணங்களில், எதிர்பார்க்கும் காலத்துக்கும் முன்பாகவே பறித்துக் கொண்டுவிடுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறான். அதன் நிதர்சன உதாரணங்கள், பாரதியும் கண்ணதாசனும். இப்பூவுலகில் பாரமாய், மனிதகுலத்தை மாசுபடுத்தும் நச்சுக்களாய் எத்தனையோ ஜீவன்கள் நீண்ட காலம் வாழும் நிலையில், நம் இதயம் கவர்ந்தவர்களை இறைவன் கவர்ந்துவிடும்போது, அவன்மேல் கோபமாய்த்தான் வருகிறது. என்ன செய்வது? இயற்கையின் திருவிளையாடல், இறைவனின் திருவிளையாடல். ஜீரணிக்கக் கஷ்டமாயினும் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்.

    என் பார்வையில் கண்ணதாசனை மனசாட்சியென்றுதான் சொல்லத் தோன்றுகிறது. என் மனசாட்சி மட்டுமில்லை, நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும்தான். ஆம், அவரின் பாடல்களில் ஏதாவதொரு பாடல், நம் ஒவ்வொருவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப பொருந்துகின்றன என்பதை வேறு எப்படிச் சொல்வது? நாம் துவளும்போது தத்துவம் சொல்லி உத்வேகம் தரும், நாம் மகிழும்போது நண்பனாய் நமக்கு வாழ்த்துச் சொல்லும், நாம் கோபப்படும்போது, சகோதரனாய் ஆசுவாசப்படுத்தும், நாம் காதல் கொண்டால், நம் உளமறிந்து லாலி பாடும். நமக்கு சோகம் நேர்ந்தால், சுகமாக்கும் மருந்தாய்த் தோன்றும். இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப கவியரசரின் பாடல்கள் நம்முடன் வரும்போது, அதை ‘மனசாட்சி’ என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?

    இம்மனிதர் பணத்திலும் திளைத்திருக்கிறார், பணமின்றித் தவித்தும் இருக்கிறார். வெற்றி பெற்ற அரசியலிலும் இருந்திருக்கிறார், தோல்வியுற்ற அரசியல்வாதியுடனும் இருந்திருக்கிறார். கட்சிகள் மாறியிருக்கிறார், மாறியபின் வசை பாடியுமிருக்கிறார். போகுமுன்னே தூது விட்டிருக்கிறார், போனபின்னே வாழ்த்தியுமிருக்கிறார். கட்டிய மனைவியிடம் காதலாய்க் கசிந்திருக்கிறார், கன்னியரிடம் மனதைக் காமுறவும் விட்டிருக்கிறார். குழந்தைகளை நேசித்திருக்கிறார், குழந்தையாகவே மாறி குமரிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுமிருக்கிறார்.

    அமைதியாய் சலசலப்பின்றி ஓடும் ஆறாய் இருந்ததில்லை இவரின் வாழ்க்கை. ஆரவாரமாய், மேடுபள்ளங்களைக் கடந்து பாயும் அருவியாய் இருந்திருக்கிறது. கள்ளம் கபடமின்றி வாழ்ந்திருக்கின்றார், உள்ளங்களெல்லாம் வெள்ளை என்று எண்ணி ஏமாந்துமிருக்கிறார். வஞ்சகத்தைக் கண்டிருக்கிறார், தன் வார்த்தைகளால் அவற்றை வென்றிருக்கிறார். அன்பிலே மிதந்திருக்கிறார், அதை பாடல்களாய்த் தொடுத்துமிருக்கிறார். வேதனையில் வெந்திருக்கிறார், அதை சாதனைப் பாடலும் ஆக்கியிருக்கிறார். சோகத்தில் புழுங்கியிருக்கிறார், ஆனாலும் சுகமாகப் பாட்டிசைத்திருக்கிறார். அன்புக்கு ஏங்கி தாகத்தில் தவித்திருக்கிறார். அற்புதமான சொற்களால் வேகமாய்ப் பாடியிருக்கிறார். இப்படி கண்ணதாசனைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

    இந்திய நாட்டைக் குறிப்பிடும்போது, வேற்றுமையில் ஒற்றுமை, வேறுபாடுகள் நிறைந்த நாடு என்று வரலாற்றுப் பாடம் படித்திருக்கிறோம். அதேபோலத்தான், கண்ணதாசனையும் வேற்றுமையில் ஒற்றுமை என்றும், வேறுபாடுகள் நிறைந்த மனிதர் என்றும் மேற்சொன்னவற்றின் மூலம் குறிப்பிடலாம். இத்தனை அறிவார்ந்த மனிதனை, ஆண்டவன் ஏன் சோதனைகளுக்கு உட்படுத்தினான் என்று எண்ணினால், உண்மை விளங்கும். நல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது.

    ஒருவேளை, ஆண்டவன் கண்ணதாசனை சோதனைகளுக்கு உட்படுத்தாமல் இருந்திருந்தால், நமக்கு கண்ணதாசன் என்னும் மகாக்கவிஞன் கிடைக்காமலே போயிருக்கவும் வாய்ப்புண்டு. ஆம்! இறைவன் ஒவ்வொருமுறையும், ஒவ்வொரு விதமாய் கவிஞரை சோதனைகளுக்கு உள்ளாக்கிய போதெல்லாம், சாதனைகள் படைத்த பல நல்ல பாடல்கள் நமக்குக் கிடைத்தன என்பதுதான் உண்மை. அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆளான போதெல்லாம் ஒவ்வொரு பாடலும் வீரியமாய் விழுந்தன. அதற்கு அவரின் திரைப்பட இசையமைப்பாளர்களின் மெட்டுக்கள் உரமிட்டன என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப் போனால், அவர் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போதெல்லாம், உணர்வுபூர்வமாக அழுத்தமாக இன்னும் ஆழமாகப் பாடல்கள் வெளிப்பட்டன. இங்கே அவரின் பாடல்களைத் தனியாகக் குறிப்பிடப் போவதில்லை. அவை இத்தமிழுலகம் அன்றாடம் அள்ளிப் பருகும் தேமதுர கானங்கள். எனவே, அவற்றை எழுதவேண்டிய அவசியமில்லை.

    மேலே குறிப்பிட்டதுபோல், அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆட்படாமல் போயிருந்தால், அப்போது வெளிப்பட்ட சிறந்த பல பாடல்கள் கிடைக்காமல் போயிருக்குமோ என்னும் அச்சம் ஏற்படுவது இயற்கைதானே? இது என்னுடைய (நம்முடைய?) ஒருவித சுயநலம் என்றுகூட தோன்றுகிறது. ஆனாலும் பாவமில்லை, அவரின் சிரமங்களில் தோன்றிய பாடல்களனைத்தும், நமக்கு பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள் என்றால் மிகையில்லைதானே?

    பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட பக்தி இலக்கியங்களை, பத்துவரிப் பாடலில் விளங்க வைத்தார். பல ஆண்டுகளில் கிடைக்கும் அனுபவங்களை, நான்கு நிமிடப் பாடலில் சுருங்க வைத்தார். படித்துப் பட்டம் பெற்று உணரும் கல்வியறிவை, கேட்கும் பாடலிலேயே புரிந்துகொள்ளும் எளிமை விதைத்தார். விதைத்தவனாயினும், வதைப்பவன் ஆண்டவன் என்றால், கேள்வி கேட்கத் தயங்காதே என்று தைரியம் வளர்த்தார். நண்பனாயினும், நயவஞ்சகனாய் மாறிவிட்டால், நடித்துக் கொண்டிராதே, நட்பை முடித்துக்கொண்டுவிடு என்று போதனை ஊட்டினார். வஞ்சகியின் வலையில் விழுந்துவிட்டால், வாழ்க்கை நஞ்சாய் மாறிவிடும் என்பதை அறிவுறுத்தினார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இன்னும் சொல்லப் போனால், அவரவர் மதங்கள் சார்ந்த வேதங்களைக் கூட கற்காமல் இருந்திருப்பார்கள், ஆனால் கண்ணதாசனின் பாடல்களைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். கல்விச்சாலைகளுக்குக் கூட செல்லாமல் இருந்திருப்பார்கள், கண்ணதாசனின் பாட்டுச் சோலைகளில் திளைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மதுக்கடைகளை நாடாதவர் எத்தனையோ பேர், ஆனால், இவர் பாடல்களைக் கேட்டு மதுவுண்ட வண்டுகளாய் மனம் கிறங்கிப் போவார்கள்.

    இக்கவிஞனின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால், அதன்மூலம் அவன் கற்றுணர்ந்து நமக்கு விட்டுப் போயிருப்பது விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். சாலையில் போகும்போது இடறும் கல்லை எடுத்து தூரப் போட வேண்டும் அல்லது இங்கே உள்ள கல்லில் இடறிவிடாதீர்கள், கவனமாயிருங்கள் என்று ஒரு சிறிய அறிவிப்பையாவது அங்கு வைக்க வேண்டும். கண்ணதாசனை இடறிய எத்தனையோ தடைகளை அவரால் எடுத்துப் போட்டிருக்க முடியாது என்று வைத்துக் கொண்டாலும் ‘இத்தடைகள் என்னை இடறின, அடுத்து வருபவர்கள், எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று அழுத்தமாக, ஆழமாக அறிவிப்புப் பலகையை அசைக்க முடியாதவாறு அகிலத்தில் நட்டுச் சென்றிருக்கிறார் அம்மகாக் கவிஞர். அதைப் பின்பற்றுவதும், பின்பற்றாமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனாலும் கவிஞர் ஒரு காலக்கண்ணாடியாய் என்றென்றும் இப்பூவுலகில் நீக்கமற நிறைந்திருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

    அவரைப்பற்றி ஏதேதோ குறைகள் கூறுபவர்கள்கூட, அவர் யாரையாவது ஏமாற்றினார் என்றோ, யாருக்காவது துரோகமிழைத்தார் என்றோ, புறம் பேசினார் என்றோ, யாருக்காவது வஞ்சகம் நினைத்தார் என்றோ எதையும் கூறியதில்லை. அத்தனையும் அவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்கள். அவற்றைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது என்பது நிச்சயம். அறிஞர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ரகசியமான எத்தனையோ பக்கங்கள் இருக்கக்கூடும்தான். அவற்றை ஆராய்வது நம் வேலையல்ல, அவர்கள் சமுதாயத்திற்கும் மனித இனத்திற்கும் அறிவிப்பது என்ன? விட்டுப்போனது என்ன? சொல்ல விரும்புவது என்ன? என்பவை பற்றியதாகத்தான் நம் வேட்கை இருக்க வேண்டும்.

    இந்த பூமியிலே எத்தனையோ கவிஞர்கள் வருகிறார்கள் எழுதுகிறார்கள் போகிறார்கள். ஆனால், யாராவது கண்ணதாசனின் உயரத்தைத் தொட்டார்களா? தொடுவார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் அனைவரும் தமிழில்தான் படிக்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம், தமிழிலேயே வாழ்வதாகக்கூட சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அவனுக்கு மட்டும் வாழ்க்கையின் கடினமான விஷயங்களைக்கூட எளிமையான வார்த்தைகளால் கோர்க்கத் தெரிந்த வித்தையெது? சந்தக்களுக்குள் சொந்தம் ஏற்படுத்தும் வண்ணம் சொற்கள் தைத்த மந்திரமெது? வாய் திறந்தால் வார்த்தைகளாய்க் கொட்டிய வசியமென்ன? தமிழன்னை தன் கரம் நிறைய வரங்கள் வைத்துக்கொண்டு, காத்திருக்க, வரமாய் வந்த கண்ணதாசன் அவ்வரங்களைக் கைகொள்ளும் கலனாய் மாறிப்போனார் என்பதுதானே உண்மை? படித்தவனுக்கும் பாமரனுக்கும் சரிசமமாய்ப் புரிந்தன அவரின் பாடல்கள்! ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தும் வண்ணம் ஆயிரமாயிரம் சங்கதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவை அவரின் நூல்கள்! அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பாடம்!

    அந்த வகையில், கண்ணதாசன் நமக்காக விட்டுப்போயிருக்கும் பொக்கிஷத்தைப் புரிந்துகொண்டு, அவற்றின் அர்த்தங்களைத் தெரிந்துகொண்டு, அவைதரும் பாடங்களை அறிந்துகொண்டு வாழ்வில் உன்னதமடைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    எனவே, மீண்டுமொருமுறை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்,

    என் பார்வையில் கண்ணதாசன் என்னுள்ளிருக்கும் ‘மனசாட்சி’!
    என்றென்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் அவன் பாடல்களின் அரசாட்சி!
    எவரும் என் கூற்றை ஏற்றுக்கொள்வர் என்பதுவே இதற்கு தெளிவான சாட்சி!

    வாழ்க கண்ணதாசன்! ஓங்குக அவன் புகழ்!

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • இசைப்பாடலிலே உன் உயிர்துடிப்பு – பகுதி 1

    –மு. ஜெயலட்சுமி.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    திரையிசைப் பாடல்களில் திருக்குறள்

     

    முன்னுரை:
    கவியரசு கண்ணதாசன் அவர்கள் திரைப்படங்களுக்குப் பாடல்கள் ஏராளமாகப் புனைந்ததன் மூலம் இன்றும் நிலைத்த புகழ் பெற்றவராய் விளங்குகிறார்.  பாமரரும் புரிந்துக்கொள்ளக் கூடிய எளிய தமிழில் நல்ல கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கிப் பாடல்கள் படைத்துள்ளார்.  அவர் எழுதியுள்ள பாடல்கள் பலவும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் வல்லமைப் பெற்றது.  ஒரு கவிஞன் தன் கவிதையைச் சிறப்படையச் செய்ய எண்ணினால் சொற்களை இடமறிந்து கையாளும் திறம் மிக்கவனாக இருத்தல் வேண்டும்.  கவிஞரவர்கள் சொற்களை இடமறிந்து பொருளோடு பயன்படுத்துவதில் திறமைமிக்கவராய்த் திகழ்கிறார்.  கவிஞர் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் ஓங்கி நிற்கின்றன.

    என்னுடைய பேனாவிலிருந்து சிந்தும் மை பணமாகாமற் போனாலும் போகலாம்; சரித்திரமாகாமற் போகாது” என்கின்ற தன்னம்பிக்கை கவிஞருக்கே உரிய தனித்தன்மை.  ஒரு கவிஞனின் சிறப்பை, அவன் வாழ்ந்த காலத்தைக் கொண்டே நிர்ணயிக்க வேண்டும்.  இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் ரசிக்கின்றார்கள்; பாடுகிறார்கள்.  அதைக் கண்ணால் பார்க்கும் போதும், காதால் கேட்கும் போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன் என்று குறிப்பிடுகிறார்.

    பொறுமை:
    காலம் காலமாய் பொறுமையைக் கடைபிடித்து ஒரு தாய் இந்த மண்ணின் பெருமையை காப்பாற்றி வருகின்றாள்.  இந்த பண்பு அவளின் பிறப்பிலேயே வந்தது என்பதைக் கவிஞர்
    “மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளாய்
    கண்மலர்ந்த பெண்மயிலை நானடைந்தேன்
    நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம் வரை
    தாய் மனதைக் காத்திருப்பேன் தங்க மகனே” ……………………………. (பாகப்பிரிவினை)
    என்ற வரிகளின் மூலம் தந்தை தன் மகனுக்கு தாயின் பெருமையைச் சொல்லி அவனுடைய கடமையை உணர்த்துவதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.……………………………………………………………. (குறள் – 151)
    என்பது வள்ளுவரின் வாக்கு.

    பலவகை கருவிகளைக் கொண்டு தன்னை அகழ்கின்ற மக்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருள்களையும் கொடுத்துக் காப்பாற்றுகின்ற நிலத்தைப் போன்று, தன்னை அவமதித்துத் துன்புறுத்துபவர்களையும் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே தலையாய பண்பு.

    காதல்:
    சங்க காலம் முதற்கொண்டு அனைத்து இலக்கியங்களிலும் காதல் வரிகள் இல்லாமலில்லை.  இன்னும் சொல்லப்போனால் காதல் இல்லாத இலக்கிய பக்கங்களே இல்லை என்று கூறுமளவிற்கு “காதலை” அழகுபடக்  கையாண்டிருக்கின்றனர். “உலகப் பொதுமறை” என்று சிறப்பித்து கூறப்படும் வள்ளுவம் கூட தன்னுள் மூன்றில் ஒரு பங்கு இடத்தை காதலுக்கு என்று ஒதுக்கி வைத்து புகழ் சேர்க்கிறது.

    காதல் என்னும் மாளிகைக்கான கதவுகளின் திறவுகோல்தான் கண்கள் என்கிறார் கவிஞர்.  கண்கள் பேசுவதாகவும், அப்படி பேசுவதை மொழியாகவும், கண்களின் அசைவை சிரிப்பாகவும் வர்ணித்தவர் கவிஞர்.
    “நிலவென்ன பேசும், குயிலென்ன பாடும்
    மலரென்ன சொல்லும் மனதிலே!
    கதை பேசுமோ, இன்பக்கவி பாடுமோ இங்கு
    கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே”.……………………………… (ராணி சம்யுக்தா)
    இப்பெருமைமிகு காதலின் துவக்கத்திற்கு, கொடியசைத்து வரவேற்பிதழ் அளிக்கும் கண்கள் எந்த அளவு பெருமை கொண்டதாய் இருக்க வேண்டும் என்று சிந்திக்கிறார் கவிஞர்.

    வள்ளுவரோ,
    “எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண் என்பவாழும் உயிர்க்கு”.……………………………………………………………….. (குறள் – 392)
    என்று எண் அறிவு, எழுத்தறிவு, அதாவது கணக்கு, இலக்கியம் இரண்டும் மக்களுக்குக் கண்ணெணப் போற்றிப் பாராட்டத் தக்கவையாகும் என்கிறார் அத்துடன் நில்லாது கண் உடையவர் மட்டுமே அறிவிற்சிறந்தவர் என்றும், அறிவு அற்றவர்கள், கண்கள் பெற்றவராயிருந்தும், அக்கண்கள், முகத்தில் தோன்றிய புண்கள் என்றும் சுட்டுகிறார்.  இதிலிருந்து கண்களின் பெருமை தெரிகிறது.
    “கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையவர் கல்லா தவர்”……………………………………………………………. (குறள் – 392)

    காதலே பெருமை கொண்டது.  அப்பெருமை மிகு காதலைக் கொள்வது கண்கள்! அதனால் தலைவன் தலைவியை கீழ்கண்ட பாடல் மூலம் வர்ணிக்கிறார்.
    “பொன்னென்பேன் – சிறு
    பூவென்பேன் – காணும்
    கண்ணென்பேன் – வேறு
    என்னென்பேன்?”…………………………………………………………………. (போலீஸ்காரன் மகள்)
    என்று தன் காதலியை ‘கண்’  என்று வர்ணிக்கிறார்.
    கண்களின் உயிரே பார்வைதானே! பார்வையற்ற கண்கள் இருந்தென்ன பயன் விளையும்?  அந்த பார்வைதானே தலைவனை காதல் கொள்ளவைத்தது.  அதனால் தலைவி பதில் உரைக்கிறார்.
    “………………கண்கள்
    நானென்றால் – பார்வை
    நீயென்பேன்!”………………………………………………………………………….. (போலீஸ்காரன் மகள்)
    அதாவது, நான் கண் என்றால், நீ அதன் பார்வை என்று! இந்த மேன்மைக்கு பதிலைப் பெற்ற தலைவன், தான் அவள் கண்களில் கலந்திருப்பதாக கூறுகிறான்.

    தலைவியிடம் காதல் பிறந்தது என்பதை உணர்ந்த காதலன், அந்த காதலை எப்படி உறுதி செய்வது என்று தலைவியைப் பார்த்து, தான் கொடுத்த பார்வைக் கேள்விகளுக்குப் பதில் கேட்கிறாள்.
    “எந்தன் – பார்வையின் கேள்விக்கு
    பதிலென்ன சொல்லடி ராதா! ……………………………………………………………….. (சுமைதாங்கி)
    என்று கேட்க, அதற்கு தலைவி, என் பார்வையே, உன் பார்வையின் கேள்விக்குப்பதில் என்று, கூறி தலைவனை காதலில் மூழ்கடிக்கிறாள்.
    “உந்தன் – பார்வைக்குப் பார்வை
    பதிலாய் விளைந்தது ராஜா!”  ……………………………………………………………….. (சுமைதாங்கி)
    காதலின் துவக்கமே பார்வையில் தான்.  அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

    தலைவி, தன் காதலனைப்பார்க்கும் போது, தன் கண்ணைச் சுருக்கிக் கொண்டு, பார்ப்பதை, கவிஞர் கண்ணதாசன் பாதி கண்மூடி, பின் திறந்து பார்ப்பதாகக் கூறுகிறார்.  அந்த பாதிப்பார்வையே தலைவனுக்குக் காதலை ஏற்படுத்தி விருந்து படைக்கிறது.  அந்த பாதிக்கண் பார்வையிலேயே காதல் வலைவீசி, காதல் சிறையில் தலைவனை அடைத்துவிட்டாளாம் அந்த தலைவி,
    “பாதிக்கண்ணை மூடித்திறந்து
    பார்க்கும் பார்வை காதல்விருந்து !
    …………………………..
    சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள் !”……………………………….. (இது சத்தியம்)
    மற்றும்,
    “பாதிகண்களை மூடித்திறந்து பார்ப்பதில் இன்பம்” ……………… (எங்கள் தங்கராஜா)
    என்பன போன்ற பல புதுப்புது பரிமாணங்களை, இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் கண்ணுள்ளே கோடிட்டுக் காட்டியவர் கவியரசு கண்ணதாசன்.

    இக்கருத்தை வள்ளுவபெருமான்,
    “குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்”………………………………………………………….. (குறள் – 1095)
    என்பதன் மூலம், தலைவன், தன் மீது குறிப்பாய் இருப்பதைப் பிறர் அறியுமாறு பார்க்காமல் விடுத்து, நான் மட்டும் அறிந்து கொள்ளுமாறு கடைக்கண்ணைச் சிறிதே மூடி, இமைகளை படபடவென இமைத்து நகைப்பாள், என்கிறான். இதில் நகும் என்ற வார்த்தை, அவளாக நினைப்பதாகப் பொருள் கூறாது.  ஒரு கண் சிறக்கணி ஆவதால், உதடு நகுகிறது.  அதற்குக் காரணம் தலை சற்றே சாய்ந்துள்ளதாம்.  அது, சரசக்கலையில் ஒரு வகையாம்!

    “பாயுது பாயுது கண்ணம்மா
    பதுங்குது பதுங்குது பொன்னம்மா,
    சாயுது சாயுது தலையம்மா
    சரசத்திலே ஒரு வகையம்மா!
    பொண்ணாப் பொறந்தவ நானம்மா
    ஆசை வராதா சொல்லம்மா?” …………………………………………………………….. (மணியோசை)

    இங்கு தலைவி, நான் பெண் என்பதால், ஆசைவரக் கூடாதா?  என்று வினாவும் எழுப்புகிறாள்.  காதலில் சரசத்தின் விளைவால், தலை “சற்றே” சாய்தலையும் குறிப்பிடுகிறார்.
    “தங்கச்சி சின்னப்பொண்ணு
    தலை என்ன சாயுது!” ………………………………………………………………………….. (கறுப்புப் பணம்)
    என்றும்,
    “காற்று வந்தால் தலை சாயும்?
    நாணல்
    காதல் வந்தால் தலை சாயும்?
    நாணம்!” ……………………………………………………………………………………… (காத்திருந்த கண்கள்)
    இவ்வரிகளிலிருந்து, காதல் வரும்போது, கண்ணியர்க்கு நாணமும் உடன் வந்து விடுகிறதென்றும் நாணம் வருவதென்பது காதலில் தலை சாய்வதின் தொடர்ச்சி என்றும் தலைவியின் தவிப்புகளைப் பல பரிமாணங்களில் காட்டிய கவிஞர் கண்ணதாசன் நாணத்தில் தலை சற்றே சரிவதாகக் காட்டி அது காதலின் வெளிப்பாடு என்கிறார்.

    காதல் என்பதை சரிவரப்புரிந்து கொள்ள முதிர்ச்சி இல்லாத நிலையில்,  இச்சமூகம் இருந்த போதும், உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி கவலையே படாமல், தன் உள்ளம் சொல்வதையே வெளிப்படுத்திய உண்மைக் கவிஞன் என்பது மறுக்க இயலா உண்மை!

    குடும்பம்:
    ஒரு குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி என்றால் இருவரும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தினால் அது ஒரு பல்கலைக்கழகத்திற்கு சமம்.
    “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
    அன்புமணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க” …………………………….. (தங்கப்பதக்கம்)
    என்று திரையிசைப் பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையே வள்ளுவப் பெருந்தகை,
    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது”………………………………………………………………………………..(குறள் – 45)
    என்று வலியுறுத்துகிறார்.  இதற்கு மாறாக நடந்தால் குடும்பம் என்பது இன்பத்திலிருந்து மருவி கொடுந்துன்பமாக மாறிவிடும் என்கிறார்.

    மழலைச் செல்வம்:
    “குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்”…………………………………………………………………….(குறள் – 66)
    தம் குழந்தைகளின் மழலைச் சொல் பெற்றோர்க்கு குழல், யாழ் இரண்டின் இசையை விட மிகுந்த இன்பம் பயப்பதாகும்.  குழந்தைப் பேற்றால் மகிழ்ந்தோர் தன் மனம் மகிழுமாறெல்லாம் உருவகப்படுத்தி மகிழ்வர், அவ்வாறே கவிஞரும் மகிழ்கிறார்.

    கவிஞன் என்பவன் வெள்ளை உள்ளமும் உயரிய பண்புகளும் கொண்டவனாவான்.  மக்களின் கண்களுக்கு தெரிகின்ற பொருள்கள் கவிஞரின் கண்களுக்குப் பாடுபொருளாக மாறி, கண்களுக்குத் தனிப்பட்ட உணர்ச்சியைத் தூண்டிக் கவிபாட வைக்கும்.
    “மீட்டாத வீணை இது வீசிவரும் தென்றல்
    வாடாத முல்லை இது பாடிவரும் தேனீ
    தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை
    பளிங்கான பதுமை இது பழகாத இளமை”.……………………………. (தென்றல் வீசும்)
    எனக் கவிஞர் பெண் குழந்தையை உருவகித்துள்ள திறம் புலப்படுகிறது.

    “முத்தான முத்தல்லவோ
    முதிர்ந்து வந்து முத்தல்லவோ
    கட்டான மலரல்லவோ
    கடவுள் தந்த பொருளல்லவோ!” ………………………………………..(நெஞ்சில் ஓர் ஆலயம்)
    எனவும் குறிப்பிடுகிறார்.  கவிஞருக்கு தாய்மை என்ற உணர்வில், தாலாட்டு என்ற முத்துப் பிறக்கின்றது.
    கவியரசரின் நல்ல சொல்லாட்சியோடு தகுந்த வடிவில் கற்பனை மிளிர்ந்திடப் பிறந்தமையால் இன்றும் அவர் படைப்புகள் புகழ் பூத்துத் திகழ்கின்றன.

    கவியரசர் கண்ணதாசன் ஒரு மாபெரும் கவிஞன்.  பண்டிதத் தமிழைப் பாமரர்களுக்கும் சாசனம் செய்தவர்.  தற்போது நாம் வாழும் காலத்தில் கம்பனுக்கு அடுத்தபடியாக கவியரசர் கண்ணதாசன் போன்று மக்கள் மனதை ஈர்த்த கவிஞர் பூவுலகில் நாம் கண்டதில்லை.  எமக்குத் தொழில் கவிதையென்று பாடிய பாரதிபோல்
    “இசைப்பாடலிலே என் உயிர்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு”
    என்று கவியரசர் கண்ணதாசன் தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.  கண்ணதாசனின் உயிர் துடிப்பையும், அவர் கவிதை அழகின் சிரிப்பையும் நாள்தோறும் தமிழ் கூறும் நல்லுலகெங்கும், பட்டித் தொட்டிகளில், கற்றவர் கல்லாதவர் பேதமின்றி அவர் பாடலை கேட்டு மயங்குவதில் இருந்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

    (தொடரும் …)

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 11

    கே.ரவி-

    Picture2

    பகவத் கீதை என்பது மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ள செய்யுட் தொகுதி. கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் என்று அது கருதப்படுகிறது. 18 அத்யாயங்கள் கொண்ட நீண்ட செய்யுட் தொடரைப் போர்க்களத்தின் நடுவே நின்று சொல்லியிருக்க முடியுமா என்ற விமர்சனக் கேள்வியைப் பலர் எழுப்பியுள்ளனர்.

    உபதேசம் என்பதன் பொருள் என்ன? கதைக்குள் உபகதைகள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதாவது ஒரு பெரிய வெளியில், சிறிய பகுதியாக இருக்கும் வெளி அல்லது இடம் உபதேசம். பாரத தேசத்தில் தமிழ்நாடு ஓர் உப-தேசம் என்று சொல்லலாம்.

    எனவே உபதேசம் என்பது ஒரு சீடனை அவன் குரு தன் உள்வெளிக்குள் வரவழைத்துத் தன் அனுபவத்தில் அவனைப் பங்கேற்க வைப்பது என்று புரிந்து கொள்ளலாம். அதற்கு, முதல்கட்டமாக, குரு சீடனுக்குள் நுழைய வேண்டும்; நுழைந்து, அவனுடைய உயிர்நிலையைத் தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதைக் கைப்பிடித்து மெல்ல உயர்நிலைக்கு, தம் அனுபவ நிலைக்கு ஏற்ற வேண்டும்.

    இப்போது புரிகிறதா, “காற்று வந்து கைப்பிடித்துக் கூட்டிச் செல்வது எவ்விடம்” என்ற கவிதை வரியின் பொருள்! அந்தக் காற்று குருநாதனின் ப்ராண சக்தியே! குருவின் ப்ராண சக்தியானது, அவருடைய ஸ்வாஸ கதியின் அதிர்வுகளாக மாறிச் சீடனின் ஸ்வாஸ கதியுள் நுழைவதே உபதேசத்தின் முதற்கட்டம்! வானொலி நிலையத்தில் எழுப்பப்படும் ஒலியலைகள், வெட்டவெளியில் பரவியிருக்கும் மின்காந்த அலைகளின் அதிர்வுகளாக மாறி, மீண்டும் வானொலிப் பெட்டியில் ஒலியலைகளாக மாறி ஒலிக்கின்ற நிகழ்ச்சி அன்றாடம் நடப்பதுதானே?

    அப்படியொரு நிலையில், 1988-ல் என்று நினைக்கிறேன், நான் இருந்த போது, என்னுள் இருந்து ஒருநூறு செய்யுள்கள் ஊற்றெடுத்து வந்தன. அவை, வடிவிலும் சரி, பொருளிலும் சரி, என் மற்ற கவிதைகள் போலன்றி வேறுபட்டிருந்தன. திருமூலரின் திருமந்திரம் சாயலில் இருந்ததால் அவற்றை என் கவிதைத் தொகுப்பில் “குரு மந்திரம்” என்ற தலைப்பில் சேர்த்தேன். அவற்றில் ‘உபதேசம்’ என்ற தலைப்பில் உள்ள ஐந்து செய்யுள்களைப் பொருத்தம் கருதி இங்கே தருகிறேன்:

    அமைதி கொடுத்துப்பே ரானந்தம் தந்து
    சுமையகல வைத்துச் சுழுமுனையுள் செல்லும்
    சமநிலையும் தந்துயிர் சாதிக்கப் பாதை
    அமைத்துத் தருவ(து) உபதேச மாமே

    தன்னுள் விரிந்த தனிவெளியில் தத்துவமாய்
    இன்னொன்றை வைத்திழைத்துத் தானும் அதுவாகி
    முன்சென்(று) உயிர்த்துயிர் மூலத்தை ஆட்கொள்ளும்
    உண்மைப் பிணைப்பே உபதேச மாமே

    வெளியே இருந்துவிளக் கேற்றிவைக் காமல்
    ஒளியாகி உட்புகுந்(து) ஊடுருவிச் சென்று
    வெளியையே உட்கொள்ளும் வித்தை அறிவித்(து)
    ஒளியாக்கும் உண்மை உபதேச மாமே

    மூச்சுக்கு மூச்சு முறையாகி உள்ளத்தின்
    பேச்சுக்குப் பேச்சு பதிலாகி உள்விதியின்
    ஆச்சரிய மாகி அறமாகி அத்தனைக்கும்
    சாட்சி தருவது தானுப தேசமே

    ஓதி உணர்விப்ப(து) ஏதுமில்லை உள்ளுக்குள்
    ஊதி உலைவைத்(து) ஒருகவளம் சோறாக்கிப்
    பாதிநீ பாதிநான் என்று பகிர்ந்துண்ணும்
    பேதமில் லாதது ப்ரம்மோப தேசமே

    எனவே பகவத் கீதையென்பது போருக்கு நடுவே வார்த்தைகளால் செய்யப்பட்ட வாய் உபதேசம் இல்லை; வாயு சம்பந்தத்தால் வாய்த்த உபதேசம்; மேலே சொல்லப்பட்டது போல், கண்ணபிரான் அர்ஜுனனுக்கு ஒருகணத்தில் செய்த ப்ரம்மோபதேசம். அதற்குக் காலச் செலவு தேவையில்லை. ஒரு கணம் போதும்.

    பாரதி, தன் வாழ்நாளிலேயே வெளியிட்ட ஒரு கவிதைத் தொகுப்பைத் தன் குருவுக்குக் காணிக்கையாக ஸமர்ப்பணம் செய்திருந்தான். ஸ்வாமி விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராக இருந்த நிவேதிதா அம்மையார் என்ற அயர்லாந்த் நாட்டுப் பெண்மணிதான் அவனுடைய குருமணி. மிகச்சுருக்கமாக பாரதி தன் காணிக்கையைச் செலுத்துகிறான்:

    “எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும், சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஶ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கின்றேன்.”

    ஒரு கடிகையில் நிகழ்ந்து விடக் கூடியதே உபதேசம். அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். யார்மூலமாக வேண்டுமானாலும் நிகழலாம். யார்மூலமாக உபதேசம் கிடைத்தாலும், அதை அந்த வடிவில் வந்து தந்தது சாட்சாத் பரப்ரும்மமே. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு ஸ்லோகம் இதைத்தான் சொல்கிறது.

    “குரு ப்ரும்மா குரூர் விஷ்ணுஹு குரு தேவோ மஹேஸ்வரா
    குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மைஶ்ரீ குரவே நமஹ”.

    உபதேசம் ஒரு காட்சியாக இருக்கலாம்; ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தருக்குத் தந்தது போல் ஒரு தொடுகையாக (ஸ்பரிஸமாக) இருக்கலாம்; “உலகெலாம்” என்று இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததும் சேக்கிழார் பெருமானின் உள்ளத்திலிருந்து திருத்தொண்டர்கள் வரலாறு கவிதைகளாக ஊற்றெடுத்து வந்ததே, அப்படியொரு சொல்லாகவும் இருக்கலாம். பாரதிக்கு நிவேதிதா தேவி செய்தது போல், ஏன், சனகாதி முனிவர்களுக்குச் சிவபெருமான் செய்ததுபோல், சொல்லாமல் உணர்த்தும் உபதேசமாகவும் இருக்கலாம்.

    அர்ஜுனனுக்குக் கண்ணன் காட்டியது போல எனக்குக் காட்டப்பட்ட சிகா-மணி விஸ்வரூபக் காட்சி அப்படியொரு உபதேசம்தானோ!

    பாலகுருவாக, கந்தவேள், சிவபெருமானுக்குக் காதில் உபதேச மந்திரத்தை ஓதினாரா, ஊதினாரா? பகர்ந்தார் என்று சொல்லிவிட்டார் அருணகிரியார்.

    “சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரம் இரு செவிமீதிலும் பகர்செய் குருநாதா” என்பது அருணகிரிநாதர் வாக்கு. இவர் பகர்ந்தார், அவர் மனம் குளிர்ந்தார் என்று சொல்லிவிட்டார். சரிதானே! சிவ பெருமானுடைய அகத்துக்குள் சென்று அவருடைய ப்ராண சக்தியை வேறொரு குரு வந்து வழிநடத்திச் செல்ல வேண்டிய அவசியம் உண்டோ? அதனால் செவிமீது என்றார், பகர்ந்தார் என்றார். மனம் குளிர்ந்தார் என்றும் சொன்னார். தெளிவின் சிகரமான சிவபெருமானின் மனம் தெளியச் சொன்ன மந்திரமா அது? இல்லை, மனம் குளிரச் சொன்ன மந்திரம்.

    ‘பகர்செய்’ என்பதற்கு இரட்டை வினைத்தொகை என்று புது இலக்கணக் குறிப்புத் தரலாமோ?

    பாரதி சொல்கிறானே: “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்”. என்ன பொருள்?

    அப்பப்பா, கொஞ்சம் விட்டால் சிகாமணி கேள்விக் கணைகள் தொடுத்துக் கொண்டே இருப்பான். பதில் உடனே கிடைக்குமா? பொறுத்திருக்க வேண்டும்!

    (தொடரும்)

    Share
  • ஆவக்காய்

    திவாகர்

    ஹெல்லோ.. யெஸ்.. சொல்லும்மா..

    மண்ணாங்கட்டி.. ஒரே ஒரு ரிங்க்’கே இப்படி போனை எடுத்துடுவீங்களா.. உங்களால எனக்கு ஒரு கால் வேஸ்ட்.. வெச்சுட்டு மறுபடி கூப்புடுங்க..

    ஓ யெஸ்.. ஓயெஸ்.. சரி, நீ வெச்சுடு.. நான் உடனே இப்பவே கூப்புடறேன்..

    …………………………………….

    ஹல்லோ.. சொல்லும்மா..

    சரி, அந்த ஆவக்காய் பார்சல் வந்துடுத்தா.. உங்களுக்குன்னு ஸ்பெஷலா பண்ணினேன்.. பாவம் தனியா ஏதுமில்லாம பச்சையா சாப்பிடறீங்களேன்னு.. அந்த பார்சல் வந்துடுச்சா..

    avakaya 033

    ஓ.. கையில கிடைச்சாச்சு ஆவக்காய்..

    ஒழுங்கா ஒழுகாம வந்துதா?..

    அது எப்படின்னா.. அதாவது..

    என்ன.. எண்ணெயெல்லாம் ஒழுகிப்போயிடுச்சா.. அடடே. நல்லாதானே பேக் பண்ணி அனுப்பிச்சேன்.. அது எப்படி ஒழுகும்..

    அத்தை ஏன் கேக்கறே.. கையிலே பிடிக்கறச்சே. கொஞ்சம் வழுக்..

    ஐய்யய்யோ.. வழுக்கிக் கீழே போட்டுட்டிங்களா? எவ்வளவு கஷ்டப்பட்டு சிரமப்பட்டு கையெல்லாம் எரிய பண்ணேன் தெரியுமா.. இப்படி டமால்’னு போட்டு உடைச்சுட்டு நிக்கிறிங்களே.. ஆமா, நான் பிளாஸ்டிக் பாட்டில்ல இல்லே அனுப்பிச்சேன்.. அது உடையாதே.. கீழே எல்லாத்தையும் கொட்டிட்டீங்களா?  ஐய்யோ பாவம்’னு பரிதாபப்பட்டு உங்களுக்கென்னு செஞ்சி அனுப்பி வெச்சேன் பாருங்க..

    இல்லல்லே.. சரியா கேட்காம ஏன் புலம்பறே..

    ஏன் கத்திச் சொல்லறீங்க.. யாராவது கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. பின்ன என்னதான் ஆச்சு..

    கையில பிடிச்சா வழுக்கற அளவுக்கு ஒழுகிருக்குன்னு சொல்ல வர்ரேன்..

    ஓ.. மை காட்.. நீங்க போடற சத்தத்துல எங்க நான் கஷ்டப்பட்டு பண்ண ஆவக்காயை பாட்டிலோட கீழே மண்ணோடு மண்ணா போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களோ’ன்னு பயந்துட்டேன்..

    ஹூம்.. நான் சத்தம் போட்டேனா.. இப்ப வரைக்கும் நீதான் காட்டுக்கூச்சல் போட்டுண்டுருக்கே.. அது சரி, என்ன எண்ணெய் ஊத்தினே..

    ஏன் கேக்கறீங்க..

    இல்லே.. ஆலிவ் ஆயில் ஊத்தினா டேஸ்ட் படு சூப்பரா இருக்குமாம்..

    யார் சொன்னாங்க

    வேற யார் சொல்வாங்க இதையெல்லாம்.. என் தங்கைதான் உன்னோட ஆவக்காய் பார்சல் வர டைமாப் பார்த்து அவ போன்’ல வந்தாளா.. சும்மா கொஞ்சம் பெருமையா இந்த ஆவக்காய் வந்ததைச் சொன்னேன்..

    போன மாசம் அவங்க வீட்ல சாப்பாடு போடறச்சே அவ பண்ணின ஆவக்காய் ஊறுகாயுக்கு பாமாயில் போட்டதா அவளே சொன்னாளே.. ’சீப் அண்ட் பெஸ்ட்’ன்னு சொன்னதுக்கு நான் அவகிட்டே நல்லெண்ணெய்தான் பெஸ்ட்’னு சொல்லிட்டு, அவ போட்ட்தைச் சாப்பிடாமதான் வந்தேனே..

    அப்ப, நீ நல்லெண்ணெய்தான் போட்டுருக்கியா?

    நல்லகாலம், என்னைக் கேட்டிங்களே.. இல்லன்னா நானும் உங்க தங்கை மாதிரியே சீப் பாமாயில் போட்டதாக எல்லார்ட்டயும் சொன்னாலும் சொல்வீங்க…

    அட, இதெல்லாம் எனக்குத் தெரியாதா.. காலத்துக்கு ஏத்த மாதிரி ஆலிவ் ஆயிலும் போடலாம்.. பாமாயிலும் போடலாம்..

    “விட்டா கிரிஸ்னாயிலும் போடலாம்னு சொல்லுங்க.. எது எதுக்கு எது போடணும்னு எனக்குத் தெரியாதா..

    அதுவும் சரிதான்.. சரி, சரி, எல்லாம் நான் பாத்துக்கறேன்..

    என்ன.. உங்க டோன் திடீர்’னு மாறுது.. ஒரு மாதிரி கேக்குது.. எங்க இருக்கீங்க..

    வேறெங்கே.. ஆபீசு’லதான்..ஏன் கேக்கறே?

    அப்ப.. ஆபீஸ் போன்’லேருந்து பேசுங்களேன்..

    அட, பரவாயில்லே.. ஆபிஸ் போன்’லாம் பெர்சனலுக்கு யூஸ் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியாதா என்ன…. என் போன்’லேருந்து பேசறேன்.. .

    ஏன் இப்போ உங்க டோன் கொஞ்சம் சத்தமா கேக்குது.. யாராவது உங்க எதிரே உக்காந்திருக்காங்களோ..

    ஹி ஹி.. எஸ்.. எப்படி கண்டுபிடிச்சே..

    சரி, சரி, யாரது.. அந்த ரோகிணியா..

    ஹய்யோ.. உனக்கு பயங்கர மூளை..

    என் மூளை இருக்கட்டும்.. இப்ப எதுக்கு என்னை இப்படி போட்டுக் கொடுத்தீங்க?

    என்ன.. இப்படி சொல்லிட்டே..

    அதான் ஆபீஸ் போனெல்லாம் பெர்சனலுக்கு யூஸ் பண்ண மாட்டேன்னு பெரிசா சொல்லி அந்த ரோகிணி முன்னாலே ஏன் பீத்திகிட்டிங்க’ன்னு கேக்கறேன்..

    அது.. அது.. அப்படியில்லே..

    எது எப்படியில்லே.. இப்ப பாருங்க அநாவசியமா என் பேரு கெடறது.. ஏதோ நான் எப்பவுமே ஆபீஸ் பணத்தை வேஸ்ட் செய்ய அட்வைஸ் பண்ண யோசனை சொல்லறதா அவ நினைக்கற மாதிரி பண்ணிட்டிங்களே..

    ஐய்யோ.. அது அப்படில்லாம் இல்லே.. ஜஸ்ட் லைக் தட்..

    எல்லாம் அப்படித்தான்.. இருந்தாலும் அந்த எக்ஸ்ட்ரா வார்த்தையை நீங்க சொல்லியிருக்கக் கூடாது..

    ம்..ம்..

    இதோ பாருங்க.. நான் ஏதோ நாலு நல்ல விஷயம் சொல்லலாம்னு போன் பண்ணினா என் மூட் கெடுத்திட்டீங்க..

    அடடா.. நான் சொல்ல வந்தது என்னன்னா..

    எதுவாயிருந்தா என்ன.. இனிமே நான் உங்களுக்கு மிஸ்ஸ்டு கால் கொடுக்கறதா இல்லே.. ஏதாச்சும் பேசணும்னா.. நானே பேசிடறேன்.. ஏதோ என்னாலே முடிஞ்ச அளவு குடும்பத்துக்காக நாலு காசு மிச்சம் பண்ணுவோமே’ன்னு கேட்டா ரொம்பவே பீத்திக்கிறீங்களே..

    நீ தப்பாவே புரிஞ்சுகிட்டே.. நான் எதையும் மனசுல வெச்சுண்டு பேசலே..

    ஓஹோ.. குரல் நார்மலா இருக்கு.. ரோகிணி எழுந்து போயிட்டாளாக்கும்..”

    “நிஜம்மாவே சொல்லறேன்.. நீ ரொம்பவே புத்திசாலி.. அவ இப்பதான் எழுந்து போனா..”

    “அசடு வழியறதை உங்க குரலே சொல்லுதே.. ம்ம்.. உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..

    “சரி.. சரி.. உன்னோட ஆவக்காயை இங்கே லஞ்ச்’ல  ஆளுக்கொரு பீஸ் கொடுக்கலாம்’னு இருக்கேன்.. உங்கிட்டேயிருந்து ஆவக்காய் பார்ஸல்’னு தெரிஞ்சதுமே எல்லாரும் ஆஹா.. ஓஹோ’ன்னு உன்னைப் புகழறாங்க.. இதோ அதையேதான் ரோகிணி கூட சொல்லிண்டே இருக்கறச்சே உன் கால் வந்துது..

    ஓஹோ

    ஆமா.. ரெசிபி என்ன’ன்னு கேட்டுண்டு இருந்தா..

    உங்கள்’ட்டயா..

    ஐ மீன், உன்கிட்டே கேட்டுச் சொல்லச் சொன்னா..

    ரெசிபி கிடக்கட்டும், முதல்ல என் நம்பருக்கு ஒரு 500 ரூபாய் டாப்-அப் பண்ணிடுங்க.. அப்பறம் அந்த ஆவக்காயுல அப்படியே பாதி எடுத்து இன்னொரு புது பாட்டில் வாங்கி சிந்தாம சிதறாம அதுல போட்டு எங்க தம்பி வீட்டுக்கு கொடுத்துடுங்க.. பாவம் எப்பப் பேசினாலும் எப்பக்கா ஆவக்காய் செய்யப்போறே’ன்னு கேட்டுண்டே இருக்கான். அவங்க மாமனாருக்கும் ஆவக்காய்’ன்னா உசிராம். அவர் வீட்டுக்கும் மறக்காம தனியா அனுப்பி வெச்சுடுங்க..

    ஓ.. சரி.. அனுப்பிடறேன்..

    அப்பறம் நம்ம எதிர்வீட்டுக்கும் ‘நான் செஞ்சு அனுப்பிவெச்சுதா’ கொஞ்சமா அழுத்தமா சொல்லி கொஞ்சம் கொடுங்க.. போன வருஷம் அவ ஒரு ஸ்பூன் சின்ன ஆவக்காய் பண்ணிட்டு ஏதோ அவளுக்குத்தான் எல்லாம் தெரியும்’னு ஒரே அலட்டல். சகிக்கமுடியலே.. என்ன நான் சொல்றது காதுல விழுதா..

    விழறது.. விழறது.. அப்ப எனக்கு?

    என்ன உங்களுக்கு?

    அதான் இந்த ஆவக்காய் எனக்கில்லையா.. எல்லாருக்கும் கொடுத்திட்டா நான் சாப்பிட என்ன பண்றதாம்?

    “ஐயோ கஷ்டகாலமே.. ஏன் ஆவக்காய்’னா இப்படி அலையறீங்க? உங்களுக்குன்னுதானே பண்ணி அனுப்பிச்சிருக்கேன்.. அவங்களுக்குக் கொடுத்தது போக மீந்ததெல்லாம் உங்களுக்குதானே.. சரி.. ரொம்ப நேரம் பேசிட்டீங்க.. ஆபீஸ்’ நேரத்துல உங்களை நான்தான் ஏதோ டிஸ்டர்ப் பண்றதா எல்லாரும் தப்பா நினைப்பாங்க.. போனை வெச்சுடுங்க..

    Share
  • விளைநிலம்

    -சீர்காழி செல்வராஜு

    ஆழ்மனமெனும் நிலத்தினிலே நல்
    எண்ணமெனும்
    விதைவிதைப்பின்
    நறுமணக்கும் தூரமெங்கும்
    நன்மை
    செய்தே பெயரெடுக்கும்!

    அரைகுறையாய் மேலோட்ட
    அறிவாற்றல்
    அடித்துச் செல்லும்
    உவர்ப்பு
    நிலம்போல் பயனற்று
    உழைத்த
    பலனை கெடுத்துவிடும்!

    செயல்களை உரங்கள்போலச்
    செவ்வனே
    இட்டு வந்தால்
    செழிப்பாய்க்
    கனிதந்து
    செந்தமிழ்போல்
    இனித்திடுமே!

    சுயமான சிந்தனையும்
    சுயமான
    முயற்சியுமே
    நன்மை
    தரும் விளைநிலம்போல்
    நற்பண்புகளாய்
    மகசூல் தரும்!

    நல்லதொரு சூழலிலே
    நம்குழந்தைகளை
    வளர்த்து வந்தால்
    நல்ல
    குடிமக்களாக
    நானிலத்தில்
    விளங்கிடுவர்!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 124

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை

    தொடர்ந்து பேசலாயிற்று                                                              
    அந்தக் கானகத் தெய்வம்.

    “இங்ஙனம் சொன்னபின் மாதவி
    மயங்கி விழுந்தாள்.
    துறவோர், கற்றறிந்தோர்,
    நன்மை தீமை பலவும் தெரிந்தோர்
    அனைவரும் கணிகையர் என்றாலே
    உள்ளத்தை வருத்திடும் நோய் என்று கருதி,
    முகத்தைக் கூட நோக்காது விலகி விடுகின்றனர்.
    இக்கணிகையர் வாழ்வு மிக இழிந்ததுதான்!

    இவ்வாறெல்லாம் கூறிய மாதவி
    தன் செவ்வரி படர்ந்த செழுமையான கண்களில்
    வெண்முத்துக்களைப் போலக் கண்ணீர் சிந்தினாள்.

    வெள்ளிய நிலாப்போலத் திகழும் முத்து வடத்தையும்
    தன் கைகளாலேயே அறுத்து எறிந்தாள்.
    ஒரு போதும் அவளைப் பிரிந்திடாத என் மீதும் சினமுற்று
    என்னை விலகியிருக்கும்படிக் கூறினாள்.

    வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல் 

    வழிப்பட்டோர் மூலமாய்
    நீங்கள் மதுரை மூதூர் நோக்கிச் சென்றிட்டதாக அறிந்து,
    வணிகச் சாத்தோடு நான் இங்கே வந்தேன்.
    தனிமையில் துயருற்றேன்.
    இப்போது உம்மைக் கண்டேன்.
    நன்மை தீமை பகுத்து அறிபவரே,
    நீவிர் எமக்கு இடும் கட்டளை யாது?”
    என்று வினவியது
    வசந்தமாலை வடிவில் வந்த கானுறைத் தெய்வம்.

    கோவலன் மந்திரத்தால் உண்மையை அறிய முயலுதல்

    ‘அறிவை மயக்கும் தெய்வம்
    இக்கானகத்தில் உள்ளது’ என்று முன்பு
    மறையோன் உரைத்த மொழி

    நினைவுகூர்ந்த கோவலன்,
    மாயம் நீக்கும் மந்திரத்தின் மூலம்,
    கூந்தலை ஐந்தாகப் பிரித்துப் பின்னலிட்ட
    இப்பெண்ணின் தன்மையை நான் அறிவேன் என்று எண்ணினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  180 –  194
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

     

    Share
  • மேடவாக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

    கவிஞர் ஆர். கண்ணன்

    சென்னையில் வேளச்சேரி தாம்பரம் இடையில் மேடவாக்கத்தில் உள்ளது மேலத்திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள்  திருக்கோவில். இந்தத் தொன்மையான  கோவில் ஒரு சிறு குன்றஸ்தலம். ஏழு மலையில் இருந்து பெருமாள் சாக்ஷாத் இறங்கி வந்தது போல் திவ்ய ஸ்வரூபம்.  மேன்மை பல தரும் ஸ்ரீ வேங்கடேசன் கேட்ட வரம் தரும் வள்ளல். இந்த கோயில் சந்நிதியின் கீழ் நரசிம்ஹர் வாசம் செய்வதாக ஒரு பக்தர் கூறுகிறார். உடனுறை பத்மாசினித் தாயார், நரசிம்ஹர், அனுமன், ராமர், வராஹர், சுதர்சனர், ஹயக்ரீவர் சந்நிதிகளையும் இங்கு சேவிக்கலாம். இங்குள்ள மஹா  மூர்த்தியை மனதில் நிறுத்தி இந்த திருவிருத்தம்  சொல்லும் யார்க்கும் பேரருள் கிடைக்கும் என்பது அடியேனுடைய பலத்த நம்பிக்கை.
                                                                               ஆச்சார்ய சமர்ப்பணம்
    வேதசாத்திர மறியேன் சிறியேன் கண்ணன் 
    நாதமுனி ஆளவந்தான் எதிராசன் கவிச்சிங்க  
    வேதாந்தன் மணவாளன் தாதகுரு மற்றடியார்
    பாதத்துகளருளால் கவிசொன்னேன் வேங்கடன்மேல் 
    Not versatile in Vedas or sastras adiyen Kannan just brimming with Bhakthi alone
    On Venkatesan made a poetic attempt. A small dust from the feet of the great
    Acharyas Nathamuni, Alavandaan, Ramanujan, Poetic lion vedhantha desikan
    Great Manavala Mamuni, adiyen kula guru Dadacharyan and other Acharya Mahapurush
    blessed me on this immature Attempt.
                                                              திருவிருத்தம்      
    வேங்கட மாமலை மேவும் திருமால்  E_1294046631
    இங்குளர் அன்பர் அனுதினம்  காண  
    பாங்கொடு வந்தெம் மேடவாக்கம் அமைந்தான்
    தாங்குவ  தெம்மைத் தாயினு மேலாய் 
     
    It appears that the seven hills pervading divya mangala perumal to
    bless the bhakthas here for daily darshan descended and seated at
    Medavakkam, a small hamlet in Chennai. A single thought on
    him, takes total care of us more than a mother.
    சத்திய  யுகத்தில் எழிலுறுக் கயலாய்  
    புத்துல கீந்துவேதங் கள்மீட்ட வள்ளல்    
    நித்திய வாழ்வில்யாம்  நிமலனருள் கோர  
    மெத்தகுக் குன்றமர் மேடவாக்கச் செம்மல் 
     
    In ‘Satya Yukam’ he assumed an avatar as a fish  ‘Matsya’  and saved
    the  earth and recovered great Vedas lost in pralaya. Such a master, to
    justify our daily life and to shower blessings, is seated on this gracious
    Medavakkam hill.
    மந்திரமலை தாங்கி   மாதவ ரமுதேற்கச்  
    சுந்தரச் செதிளாமை  சீர்கோலம் பூண்டான் 
    வந்தார் செல்லும் வாழ்வுச் சுழலூற்றில்    
    சொந்த மவனே  சுடர்மணி வேங்கடத்தான்  
    Lord Koorma bore the ‘Mandira Mountain’ and facilated the churning
    of the ocean to bless the devas with ‘amrut’ by assuming the shape of a tortoise
    with a beautifully tiled body. In this impermanent human life he the
    glittering gem is the only permanent support.
    பன்றிமுகம் துளிர்த்த  பால்வண்ணத் தெயிரிடை  
    அன்றெம் பூமித்தாய்  ஆழ்கடல்அமிழ்ந் துமீட்டான்     
    பொங்கும் நீர்க்குமிழி போல்நம்  சிறுவாழ்வில்   
    தங்கும்  பேரன்பன் தண்பொழில் குன்றமர்ந்தான்
    In between the milk white horns emerging from a boar face, Lord Varaha
    delved deep into the sea and recovered our mother earth. In our life
    short like a water bubble, he is the only solace and the dear to our soul
    which again is a part of his eternality. Such a serene lord is seated on
    this cool hill.
    பத்திக்கு வித்தாம் பாலகன் சொல்மடுத்து
    சத்தியம் ஆக்கப்  பெருந்தூண்  பிளந்துயிர்த்த 
    வெந்தணல் கனல்விழிகள் வெள்ளெயிறு நரசிங்கம்
    அகந்தைக் கிழங்கையறு ஆலயமாம் குன்றமர்ந்தான்  
    To make true the words of Prahlad the best role model and embodiment of bhakthi,
    Lord cracked a giant pillar and emerged out with burning eyes and threatening white
    teethed man-lion Narasimha and tore apart ‘hiranya’ whose bloated ego shielded his
    vision from the almighty’s existence. For deep plucking of our ego, the root cause for
    many troubles, he is seated on this divine hill.
    சிற்றுருவம் தாங்கித் த்ரேதாயுகத்  தோன்றி
    செற்றான் மாபலியை  மூன்றடி மண்ணளந்தான்       
    சிற்றறி  வெங்கள்  சிறுமதிக்குறை கொய்ய  
    நெற்றுயர் மேடவாக்கக் குன்றமர் வேங்கடத்தான்
    By assuming the shape of a short Brahmin ‘in ‘thretha’ yuka lord Vamana won over
    ‘Mahabali’ a rakshas, out of his sheer intelligence and three foot measurement of the
    three worlds, He is here on this hill only to sharpen our skills and to correct our
    mental deficiencies.
    சிறுவாள்  கரமேந்திச்  சீற்றம் அடங்காது
    உறைவாள் மன்னர்முடி பலமுறைக்  கொன்று
    திருமாலன்  பரசுராமன்  தீயமுறை ஆட்சிகளை  
    அரிவாளால்  கொன்றழிக்கக் குன்றமர்ந்தான் வாரீர் 
    With a small sword gracing his hand, Lord Parasurama  destroyed
    the kings clan again and again  to establish that a ruler is to behave
    like the most responsible representative of the god himself. He is
    seated on this divine  hill to correct and eliminate the misrulers and
    their evil deeds even today
    கானகம் நடந்த செம்மல் காகுத்தன்,  தம்பியொடும்
    ஜானகி அன்னையொடும்  மாருதி  அருகினொடும்
    ஆணவம் அழித்தெங்கள் மனக்குறை  முழுதகல 
    மானவம்  மகிழ்ந்துய்ய மாதவக் குன்றமர்ந்தான்
    Lord Rama tread in deep forests with ‘mother’ Janaki and
    his lovely brother Lord Lakshmana and late raccompanied by
    great Hanuman is seated on this holy hill, to correct us, to
    ward off our worries and to uplift the human race.
    கார்வண்ணன் கருமுகில் கருணைக்  கோவிந்தன்
    பார்வண்ணம்  சிறுவாயில்  அன்னைக்குக் காட்டியவன்
    சீர்பாடும்  மேடவாக்கச்  சிறுகுன்றம்  அமர்ந்து  
    வேரோடு வேதனைகள் அகழ்வான்  வேங்கடனாய் 
     
    Lord Krishna the cloud colored is ever blessing us, who showed
    the universe to his mother Devaki in his small mouth. He is seated
    on this holy Medavakkam as Venkatesan to release our deep
    rooted eternal worries.
    தொட்டில் கண்ணலர்ந்த   ஆயர்குலக் குழந்தை
    கத்தும் கன்றாம் நமைப்பற்றி யுய்விக்க   
    பற்றறுத்துப் பாதநிழல் சேர்க்கும் பரமபதன் 
    மெத்தை மேடவாக்கக் குன்றமர் வேங்கடத்தான்
    Lord krishna blossomed on cradle and the great
    master of cattle and herds is seated here on
    this soft mattress hill. He totally detaches us from our
    meaning less longings by hearing our prayers
    resembling the weak voice of a new born calf
    பாரதத்தில் பார்த்தனுக்குச் சாரதியாய் பாந்தவனாய் 
    மாரதமோட்டி வென்று  கீதைமறை பகன்று 
    சீரகமாக்கு மெங்கள்  சிற்றுள்ளத்  தேரோட்டி
    பாருய்ய மேடவாக்கக் குன்றமர் வேங்கடத்தான் 
    The driver of this  universe humbled and drove his
    friend Arjuna’s great chariot, won over the enemies
    tactfully and illuminated Arjuna through his ever mortal
    ‘Gita’. To enliven the mother earth and to ever steer our
    punic mental chariots, he is graciously seated on this holy
    hill
    வேதத்தின் நெறியை  வெற்றுச் சடங்காக்கி  
    ஓதும்  சிறுமாந்த ருள்ளம் தெளிவாக்க 
    திருவதரி மலைமுடி  சோதித் திருப்புத்தன் 
    அரும்பாதம் பதித்து மேன்மைக்  குன்றமர்ந்தான்
    Those who just memorise and recite the great vedas
    like baby school rhymes without understanding the nuances,
    is corrected by the Lord yogic Buddha seated on the holy top
    of Himalayas at ‘Badrinarh’. The same lord is seated on this
    hill to spread his radiance and brilliance.
    பிறப்பு மிறப்பும்  பிணைநூலாம்  வாழ்க்கை
    துறந்தும் மறந்தும்  அகலா துறவுவலை 
    அறுத்தெமக்  காதரவாய் ஆசிதரும்  கண்ணன்
    சிறுதாமரைக் குன்றாம்  மேடவாக்கம்  அமர்ந்தான் 
    Birth and death are intertwined. Even fully foregoing all
    relationships and practicing to forget the worldly chores
    we are helpless. Only the great lord Krishna cuts and
    relieves us from the worldly bondages. He is seated on
    this small lotus hill to grace us.
    கண்பொழிக் கருணை கவலைகள் நீக்கும்
    வண்ணமேல்  வேங்கடம் வலமிட ஈர்க்கும்  
    திண்ணம் அவன்திருப் பாதம் முடிவெனும்
    எண்ண முறைய மாமலை வாரீர்
    His beutiful eyes showering continuous grace clears our worries
    Superb holy hills lures us to visit and to do pradakshanam around.
    To concretise our understanding that  his ‘Tiruvadi’ alone is the
    final solace we should visit this lord of the great hill quiet often
    சுருள்பாம் புறையும் காரோளிச் சுடர்விழி  
    அருள்மழை வீசும் அன்னையாய்க்  காக்கும்  
    பொருளிகச் சுகமதே நிஜமெனும் அறியார் 
    மருள்மதி மாற்றும் குன்றமர் வேந்தன்
    Lying on a spiralled snake with glittering black eyes
    he pours his constant grace and guards us like our mother
    Innocent humans who still  beleive that the material pleasures
    are everything ,are made to realize the truth of our existence
    by this hill seated king.
    புத்திவழிச் செம்மல்  பக்திப் பொய்கை
    நித்தில மாமணி  நிகரில்  பூதம்
    சித்திர மயிலைச்  சீர்கவிப்  பேயும்
    முத்தெனச் சொன்ன மாலகம்  வாரீர்
     
    Poigai alwar preached to think, realize and practise bhakthi.
    Bhoodath alwar was a global gem, Peyalwar was born in
    artististic Thirumayilai. These Mudalwars preached the humans
    to be at the lord’s alm for continued happiness
     
    கச்சிப்பாம் புறைவன் பாய்சுருட்டிப் பின்திரும்ப    
    மெச்சும்கவி சொன்னான் திருமழிசை;  திருமங்கை
    இச்சகம் இன்புறத் திருமந்திரம் சொன்னான்     
    பச்சைமா மரகதக்  குன்றுற்றான் நம்பெருமான்  
    Once Lord acted per instructions of Thirumazhisai Alwar
    and vacated Kanchipuram, when the king constantly pressurised
    the alwar to sing praise on him. The town lost all charms, the king realised
    his mistake and pleaded the Alwar, on whose instructions our lord came back.
    Thirumangai Mannan graced this world with Thirumandiram. Our superb
    lord is seated on this green endowed hill only for our sake
    கவியரசன் சித்தன் அருள்மொழிக்  கோதை
    புவிப்புகழ் நம்மாழ்வான்  தொண்டரடிப்  பாணன்
    சுவைஊற்றுச் சேகரன்  மதுரகவி கூரநெந்தை 
    செவிநிறைக் கோமானம் குரல்கேளக் குன்றமர்ந்தான்
    The great king of poetry Perialwar, Goddess Andal’s
    Unrivalled gracious words, much adorned Nammalwar,
    Thondaradipodi alwar, Thirupanalwar , Sweet worded kulasekaran,
    Madura kavi and Koorathalwar enriched Lord’s ears with best of
    the words. However our lord is equally happy to hear our ordinary
    prayers too
    அலர்மகள் தாய்க்கருணை அருகில் ஆதித்தன்    
    மலர் தூவும் கருடன் மாருதி மாமணி 
    பெருங்குரு தேசிகன் கவிமழைச் செவியுறும் 
    ஒருங்கிணைக் கோலம் நலம்தரும் காண்பீர் 
    Our lord is sided by the lotus seated Mahalakshmi.  Garuda and
    Hanuman shower the rarest of the flowers on him. Unparalleled
    poet Desikan  adorns and the lord eagerly hears him. For a rare
    unified sight of all these please visit our lord of hill
    மனமுடல் பொருந்தி வேங்கடத்தாய் முன்நின்று      
    தினமிந்தப் பாடல்  இருபதுமுரு  கிச்சொல்வார் 
    மனக்குறை மாறும் தனமினம்  பெருகியேத்தும்  
    நிலம்பொதி வாழ்நாளென் றும்நிர்மல மாகமாறும்  
     
    With mind and body unified, standing before
    Elumalayan and reciting this 20 bhakthi verses
    shall clear all worries, multiply  wealth and offsprings
    and make the life pure and serene till this universe lasts.
    Share
  • தி.க.சி. யின் நினைவில்

    வெங்கட் சாமிநாதன்

    tkc1

    என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்[போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு ;பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான்.  இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல.  அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்த மானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல.

    ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே,  கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல.  வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை  அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான  சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம்  எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.

    விஜய பாஸ்கரன் தன் சரஸ்வதி இதழில் தன்னை ஒரு செஞ்சட்டை அணிந்த தெருக்களில் கட்சி கோஷமிட்டுச் செல்பவராகக் காணவில்லை. அதில் க.நா.சு. சி.சு. செல்லப்பா, ஈழத்து கே டேனியல், டொமினிக் ஜீவா, என எல்லோருக்கும் இடமிருந்தது. மறக்கப்பட்டிருந்த மௌனியின் கதைகள் தொகுக்கப்பட்டதே கூட மௌனி வழிபாடாகிவிட்டதாக குற்றம் சாட்டிய ஈழத்துப் பேராசிரியர் ஏ ஜெ. கனகரத்னா வின் மௌனி வழிபாடு என்ற ஒரு கண்டன கட்டுரைக்குக் கூட இடம் இருந்தது. சரஸ்வதியில் வெளிவந்த ரகுநாதனின் எழுத்துக்களில்  கட்சி கோஷங்கள் இருக்கவில்லை.

    ஏன், முதன் முதலாக செல்லப்பா என்னை சரஸ்வதி காரியாலயத்துக்கு அழைத்துச் சென்ற போது (1961) விஜய பாஸ்கரன் என்னையும் சரஸ்வதிக்கு எழுதச் சொன்னார். யாரை? யாருக்கு அந்த அழைப்பு? அமெரிக்க முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்யத்துக்கும் அடிவருடியும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட்டும், ஆன என்னை, அமெரிக்காவிலிருந்து மணிஆர்டரில் பணம்  பெற்றுவருவதாக முற்போக்குகள் எல்லாம் ஒரே குரலாக விடாது குற்றம் சாட்டி வந்த என்னைத் தான் எழுதச் சொன்னார். அது ஆரம்ப காலம். நான் என்னங்க எழுதப் போறேன்?” என்று சொல்லி என்னை அறியாதே பின்னர் அந்தக் கட்சிக்குள் ஒரு பயங்கர சுனாமி புயல் வீசக்கூடும்  அபாயத்தைத்  தடுத்துவிட்டேன்.

    அப்படியும் கூட, ஜீவா ஒன்றும் ஒரு பயங்கர புரட்சித் தீ கக்கும் கோஷங்களே அறிந்த கட்சிக் காரர் இல்லை. இலக்கியத்தில் தோய்ந்தவர். பாரதி பற்றி மணிக்கணக்கில் பேசுபவர். கட்சிப் பிரசாரம் என்று வந்து விட்டால், அது வேறு விஷயம். ஏழை விவசாயியின் வாழ்க்கையில் ஒரு ட்ராக்டரின் வருகை எத்தகைய முக மலர்ச்சியைத் தரும் என்று கிட்டத்தட்ட கருணாநிதி பாணி வசனத்தில் வர்ணித்து மாய்ந்து போவார். இப்படி அவர் எழுத்தைப் படித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு. சின்னப் பையன் சுந்தர ராமசாமியை, “நீ பூணூல் போட்டுக்கணும்” என்று உபதேசித்து, ”எங்கே, நீ சந்தியா வந்தன மந்திரம் சொல்லு பாப்பம்” என்றும் கேட்பார். நல்ல மனிதர் ஆனால் அப்பப்போ கட்சி தான் அவரை சாமியாடச் சொல்லும் போலும். என்ன செய்ய?, வல்லிக்கண்ணன் சொல்வதை நம்பித் தான் ஆகணும்.

    ஆனால், தி.க.சியின் ஆசிரியத்வத்தில் வந்த தாமரை தன்னை ஒரு கட்சித் பத்திரிகை என்று பிரகடனப்படுத்துவதற்கான சமாசாரங்களையும் தவறாது பிரசுரித்து வந்தாலும்,(அச்சாவது ஜனசக்தி பிரஸ்ஸிலாக்கும்) பூமணி, பா. செயப்ரகாசம், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், ஆ.பழனியப்பன் (பெயர் சரிதானா?) சார்வாஹன், வண்ணநிலவன், இப்படி பலர், அதில் எழுதினார்கள். தஞ்சை பிரகாஷ் நாடோடிக் கதைகள் நிறைய எழுதினார் என்று நினைவு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எழுத்து பத்திரிகையும் க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் புதுக்கவிதைக்கு களம் தந்ததும் அதை தீவிரமாக எதிர்த்து வந்த சிதம்பர ரகுநாதன், நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஹெச் டி ஆகியோரின் புதுக்கவிதைக்கு எதிரான தொடர்ந்த பிரசாரத்துக்கும் இடம் தந்தது. அத்தோடு, நிற்கவில்லை. வானம்பாடிகளின் “புதுக்கவிதைகளும்(?):” அதில் பிரசுரமாயின. சி.மணி நா.வானமாமலையின் புதுக்கவிதை எதிர்ப்புக்கு பதிலளித்த கட்டுரையையும் தாமரை பிரசுரித்தது. தருமு சிவராமூவின் E = mc2 என்னும் கவிதைக்கு வானம்பாடிகளின் ஆசிரியக் குழுவினரும் முற்போக்கு கவிஞருமான சிற்பி அவர்களின் நீண்ட பாஷ்யத்தையும் பிரசுரித்தது. யாருடைய கவிதையை?, அராஜக வாதியும், இருள்மய வாதியும் மாயாவாதியும் இன்னும் என்னென்னவோ வாதியும் மட்ட ரக புளுகனும், அற்ப புத்தி படைத்த அவதூறுக்காரனும், (எல்லாம் திகசி அவர்கள் கொடுத்த பட்டங்கள் தாம்) ஆன, அரூப் சீவராம் என்று தனக்கு அந்த சில நாட்களில் பெயர் சூட்டிக்கொண்ட இன்றைய பிரமிள் கவிதையை. பிரமீள்  ஒவ்வொரு முறையும் எழுத உட்காரும்போது தன் பெயரை, அல்லது அதன் உச்சரிப்பை மாற்றிக் கொள்வார். வேறு வழியின்றி பிரமிள் என்ற பெயர் நிலைத்தது அவர் மறைவுக்குப் பிறகு தான்.

    tkc

    இதற்கிடையில் புதுக்கவிதையை ஏதொ கொள்கை என்று அவர் கற்பித்துக் கொண்டவகையில் எதிர்த்து வந்த கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஎச் டி அவர்கள், வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரான தமிழன்பனின்  தோணி  என்ற தலைப்பின் ”புதுக்கவிதை” தொகுப்புக்கு பாராட்டுக்களும் தன் ரசனையும் நிறைந்த நீண்ட முன்னுரை ஒன்று எழுதி ஆசீர்வதித்து இருந்தார்.  தமிழன்பனுக்கும் அவர் கட்சியின் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த சந்தோஷம். ஆனால் யாருமே தாமரை பிரசுரித்த சார்வாகனின் கவிதைகளைப் பற்றி மூச்சு விடவில்லை. தாமரையில் எழுதுவதால் அவர் முற்போக்காகத் தானே இருக்க வேண்டும், திகசி யும் தீர விசாரிக்காமல் போட்டிருக்க மாட்டாரே  என்ற நினைப்பில்  கட்சிப் பெரியவர்கள் ஏதும் மறுப்புச் சொல்லவில்லை. கா. சிவத்தம்பிக்கு கலாநிதி கைலாசபதி எம். ஏ. பிஹெச். டியின் புதுக்கவிதை எதிர்ப்புப் பிரசாரத்தையும் ஆதரித்துப் பேசவேண்டும்.  தாமரையில் புதுக்கவிதைத் தோற்றம் தரும் சமாசாரங்களுக்கும் சமாதானம் சொல்லவேண்டும் என்னும் திக்குமுக்காடலில் தவிப்பு. இப்படியா?, அப்படியா? என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவித்தார். தாமரை ஆசிரியர் தி.க.சியைச் சாடமுடியுமோ? அல்லது தன் சித்தாந்த மூலவரான கலாநிதி கைலாசபதிக்குத் தான் எதிராக ஒரு நிலை எடுக்கமுடியுமோ? எனவே,”முன்னாலே பாத்தா செட்டியார் குதிரை, பின்னாலே பாத்தா கௌண்டர் குதிரையாட்டும் தெரியுது? என்ற அவரது ஒரு சமாளிப்பைக் கீழே பார்க்கலாம்.

    “எனவே, முற்போக்குக் கடப்பாடுடைய தாமரை புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்படவேண்டியதொன்றாகும். தமிழ் நாட்டில் கிராமீயக் கலை ஆய்வுக்கு இலக்கியத் தளம் அமைத்துக்கொடுத்த தாமரை, இன்று புதுக்கவிதை பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா (elitism-ஆ) அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 1973 மல்லிகை இதழில் கா.சிவத்தம்பி)

    கா. சிவத்தம்பி நல்ல படிப்பாளி, கைலாசபதி எம்.ஏ.பிஎச் டிக்கு இல்லாத இலக்கிய உணர்வும் ரசனையும் வாய்க்கப் பெற்றவர் என்றாலும் கலாநிதிக்கு ஒத்து ஊதியே பழக்கப் பட்டவர். அந்தப் பழக்கத்தின் காரணமாக, செம்மொழி மாநாட்டுக்கு வந்து கருணாநிதி புகழ்பாடியும் சென்றார். கருணாநிதி சாதாரண பாராட்டுக்களில் திருப்தி அடைபவரில்லை என்பது உலகம் அறியும்.

    என்னமோ என்று நான் நினைத்திருந்த தி.க.சி. தன் தாமரை ஆசிரியத்வத்தில் பெரிய பெரிய அறிஞர் பெருமக்களை எல்லாம் கழைக்கூத்தாட வைத்துள்ளார் என்று பார்க்கும் போது, எனக்கு எல்லாம் தமாஷாகத் தான் இருந்தது. நான் ரசித்தேன். வேறு யாரும் நினைவு படுத்தாதையெல்லாம் நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.

    வெகு ஆச்சரியமான நிகழ்வுகள் இவை. க.நா.சுவின் இலக்கிய வட்டம்  1948 – 1964 கால கட்டத்திய இலக்கிய நிகழ்வுகள் குறித்து சாதனை இதழ் என்றோ என்னவோ பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் நானோ, நகுலனோ, க.நா.சு. வோ எழுதியது பெரிய விஷயம் இல்லை. எனக்கு ஆச்சரியம் தந்தது தி.க. சியும் அதில் ஒரு மிக மிக நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நினைவிலிருந்து எழுதுகிறேன். அதில் வணிக பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் செய்யும் நாசவேலைகளுக்கு ”மரண அடி” தந்தது மட்டுமல்லாமல் முதலாளித்துவத்துக்கு எதிராக, சோஷலிஸ சமுதாய உருவாக்கத்துக்கு எழுத்தாளர் பாடு படவேண்டும் என்றோ என்னவோ எழுதி, சில நல்ல எழுத்துக்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர் பாராட்டுக்கள், எழுத்து மக்களுக்காகவே தானே ஒழிய, வணிகத்துக்காக அல்ல, கலையும் உழைக்கும் பாட்டாளி மக்களின் எழுச்சிக்காக…….வகையறா வகையறாவாக வே இருந்ததாக என் நினைப்பு.  பிராபல்யங்களை எதிர்த்த வரையில் சரி என்பது என் நினைப்பாக இருந்தது. கூரான இலக்கியப் பார்வை இல்லாத ஒரு நீண்ட கட்டுரைக்கு க.நா.சு இடம் கொடுத்ததும், அதிகப் பேர் எழுதாத போது எழுதக் கேட்டு வந்ததை மறுப்பானேன் என்றும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மாறாக, தி.க.சி. எல்லோரிடமும் சகஜ பாவத்தோடு பழகி வந்தவர் தன்னோடு கொள்கையளவில் மாறுபட்டு விரோதம் கொண்டவர்களுடனும் சினேகம் கொண்டிருந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

    கடுமையான, காரசாரமான  வாத விவாதங்கள் புதுக்கவிதை பற்றி நிகழ்ந்து வந்த கட்டம் அது. வானமாமலைக்கு எழுத்து பத்திரிகையிலும் அவரது புதுக்கவிதை எதிர்ப்புக்கு நீண்ட பதில் தந்திருந்தார் செல்லப்பா அதற்கு முன்னோ பின்னோ நான் விடுமுறையில் தெற்கே வந்திருந்த போது சென்னையில் செல்லப்பாவைப் பார்க்க வந்த போது அங்கு அவர் வீட்டில் சார்வாகனையும் தி.க.சியையும் செல்லப்பாவுடன் வெகு கால சினேகிதர்கள் போல உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். செல்லப்பா அவர்கள் இருவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அப்போது நான் சார்வாஹனிடம் சொன்னேன். “ இங்கு தி.க.சியை இங்கு பார்ப்பதும் அவர்  வெகு சகஜ பாவத்தோடு உங்களோடும் செல்லப்பாவோடும் உரையாடிக்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. சந்தோஷமாக இருக்கிறது” என்றேன். அதற்கு சார்வாஹன் சொன்னார். “தாமரையே இப்போதெல்லாம் அவ்வளவு கடுமையாக இல்லையே” என்றார். “ஆமாம், கட்சியையும் மீறி சில விஷயங்கள் அதில் வருகின்றன, பார்த்தேன்” என்றேன்

    ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர்களின் கட்சிக்காரர்களின் சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே அவரை ஆதரித்தவர்கள் அவர்கள் தான்.

    உன்னைப் போல் ஒருவன் படம் தில்லியில் ஷீலா தியேட்டரில் ஒரு நாள் திரையிடப்பட்டது. பார்த்தேன். வெகு தைரியமான தீவிர முயற்சி என்று எனக்குப் பட்டது. அதற்கு உதவியவர்கள், படத்தில் பேராசிரியராக நடித்தவர் எல்லோரும் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். தில்லியில் இருந்தவர் ஒருவர் சோவியத் லாண்ட் பத்திரிகையில் வேலை பார்த்தவர். அவர் வீட்டில் தான் ஜெயகாந்தன் கரோல்பாகில் தங்கியிருந்தார். அவரை வரவேற்றுப் பாராட்டிப் பேசிய கூட்டத்தில் தலைமை தாங்கிய பால தண்டாயுதமும் இருந்தார். ஜெயகாந்தன் பேசும் போது, ஏதோ ஒரு கட்டத்தில் ”பாலா அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம்”. என்று தன்னை அன்னியப்படுத்திக் கொண்டு பேசினார். எனக்கு இது என்ன புதிர் என்று பட்டது. சில வருடங்களுக்குப் பின் கசடதபற இதழில் நான் ஜெயகாந்தனைக் கடுமையாகத் தாக்கி எழுத நேர்ந்தது. அப்போது திகசி எனக்கு எழுதிய கடிதத்தில் “இதற்கெல்லாம் காரணம் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான். நீங்கள் வளர்த்து விட்ட ஜெயகாந்தன் வேறு எப்படி நடந்து கொள்வார்?” என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். ஜெயகாந்தன் தன்னை முற்போக்கு முகாமிலிருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் என்று தெரிந்தது. ஆனந்த விகடனிலும் சாவியின் ஆசிரியத்வத்தில் இருந்த தினமணிக் கதிரிலும் வெகுவேகமாக ஜெயகாந்தன் வளர்ந்துவிட்டதன் விளைவு என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கடிதம் கசடதபற பத்திரிகையோடு நிகழ்ந்த சர்ச்சையில் அதற்கு எதிராக தருமு சிவராமு எழுதிய “கோணல்கள்” கட்டுரையில் பிரசுரமானது. கட்சியின் தலைமைக்கு திகசி எழுதிய கடிதம் சம்மதமாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது பேச்சு வாக்கில் தான்.

    இதெல்லாம் பெரிய விஷயமில்லை. சின்ன சின்ன உரசல்கள். திகசியையும் கட்சியின் தலைமையையும் பொருத்த வரை. திகசியின் பொறுப்பில் தாமரை கட்சிப் பத்திரிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும், கட்சி சார்பும் கொள்கை விளக்கங்களும் நன்கு வெளித்தெரிய இருந்தாலும், திகசி அவர் காலத்திய இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே தம்மை ஊக்குவிக்கும் பெரியவர் என்ற ஸ்தானம் பெற்றவராக இருந்தார். வல்லிக்கண்ணனிட மிருந்தும் கூட தன்னை ஊக்குவிக்கும்  ஒரு கார்டு கட்டாயம் வந்து விடும் தான். ஆனால் திகசி தாமரையில் இடமும் கொடுப்பாரே. பிரசுரமும் ஆகுமே.

    ”நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாட்டாளி மக்கள் புரட்சிக்கு உங்கள் எழுத்து வித்திடும்”, என்று வேறு ஊக்குவித்து நேரிலும் சொல்வார். ஒரு கார்டும் வந்து சாட்சியம் சொல்லுமே. அவரை நன்றியுடன் பார்க்கும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே உருவானது அவர் காலத்தில். அந்த பழக்கம் அவர் தாமரை ஆசிரியத்வத்தில் இல்லாத போதும் தொடர்ந்தது. அதிலும் திருநெல்வேலி இளைஞர் கூட்டத்துடன் திர்நேலி தமிழில் பேரப்புள்ளைகளை உற்சாகப் படுத்துவது இருக்கே அது மிக இனிமையும் வாத்சல்ய பாவமும் கொண்டது. பின்னாட்களில் அவரைச் சந்தித்தவர் தரும் புகைப்படங்களில் அவர் தன் சுடலை மாடன் தெரு வீட்டின் தாழ்வாரத்தில் தன் அறைக்கு எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்த வண்ணம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் காட்சியே காணக் கிடைக்கும். காந்தி என்றால் சர்க்காவில் நூல் நூற்கும் காட்சி. சிவாஜி என்றால் முறுக்கிய மீசையும்  வாளேந்திய கையுமாக நிமிர்ந்து நிற்கும் கட்டபொம்மன் வேஷம் தரித்து, தி.க.சி.க்கு தன் இளைய தலைமுறைக்கு கடிதம் எழுதும் காட்சி.

    தி.க.சியின் ஆரம்பங்கள், நாற்பதுகளில், தாமரையில் நாம் கண்ட தி.க.சி உருவாவதற்கான ஆரம்பங்கள் இல்லையென என் நினைப்பு. அப்போது அவர் தொடர்புகள், கு.ப.ரா. கிராம ஊழியன் என்று எப்படி இருந்திருக்க முடியும்?.  வென்றிலன் என்ற போதும், ஐந்தாம் படை போன்ற கதைகள் எழுதிய ரகுநாதன் தான் பின்னர் தீவிர முற்போக்கு ஆனார்.  இந்த மாயம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆராய்வது கஷ்டம். சோமன துடி மாதிரி ஏன் தமிழில் ஒரு திரைப்படம் வருவதில்லை என்று ஒரு இடத்தில் ஏங்கும் தி.க.சி. தான், அகிலனின் சித்திரப் பாவை நாவலுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததும்,  “இது தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பது, என்றும், அகிலன், சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் சோஷலிஸம் ஆகிய லட்சியங்களுக்காக போராடுகிறவர்” என்று பாராட்டுக்களை அள்ளிச் சொரிந்தார். வேடிக்கை இல்லை. சிரிக்க வேண்டாம். நிஜமாகவே தான். ஒரு வேளை இடைப்பட்ட காலத்தில் அகிலனுக்கு சோவியத் ரஷ்ய அழைப்பு விடுத்து அவருக்கு ரஷ்ய சுற்றுப் பயணத்துக்கு உதவியதால் ஒரு வேளை திடீரென அகிலனை இந்த புஷ்பார்ச்சனைக்கு தகுதியாக்கியிருக்கலாம். அகிலனும் தன் பங்குக்கு தன் ரஷ்ய பயணம் பற்றி வெகு பரவசம் அடைந்து ரஷ்ய புகழ் பாடி கட்டுரைகள் எழுதினார். ஆனால் அத்தோடு அந்தக் கதை சரி.

    ஆனாலும் தன் கட்சி ஆசான்களும் கட்சியும் புதுக்கவிதைக்கு எதிராக தொடர்ந்த பிரசாரம் நடத்திக்கொண்டிருக்கு போது தாமரையில் புதுக்கவிதை தோற்றம் அளிக்கும் வானம்பாடிகளுக்கும் இன்னம் மற்றோருக்கும் தொடர்ந்து இடமளித்து அதுபற்றி விவாதங்களுக்கும் களம் தந்த ஆசிரியரின் தாராள மனதை என்னவென்று சொல்வது? அது மட்டுமல்ல. பூமணி, வண்ணநிலவன், சார்வாகனுக்கெல்லாம் இடமென்றால், பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தை எப்படி கொணர இயலும்? இதையெல்லாம் எதிர்த்து கட்சி எழுத்தாளர்களும் தலைமையும் போராடிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டாமா? கட்சித் தலைமையிடமிருந்து கேள்விகளும் எதிர்ப்பும் எழவே, தி.க.சி என்ன செய்தார்?. தாமரையை விட்டு விலகினார் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். திகசி பற்றிய இந்த உள் விவகாரங்களில் வல்லிக்கண்ணனை நம்பாமல் வேறு யாரை நம்புவது?. தன் பதவியைத் துறந்த திகசி யை நாம் பாராட்டவேண்டும். இன்னொன்றுக்கும்  நாம் திகசி யை பாராட்டவேண்டும். தன் மகன், வண்ணதாசன், பின் தன் திர்நேலி சீட இளவல்கள், கலாப்ரியா, வண்ணநிலவன் யாரையும் அவர் முற்போக்கு ப்ராண்ட் எழுத்தை வற்புறுத்தவில்லை. அவர்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டு விட்டது பெரிய விஷயம் இல்லையா? யாருக்கும் இதில் சந்தேகமிருப்பின், சு.கா. வுக்கு திகசி அவ்வப்போது தரும் பாராட்டுக்களையும் உற்சாகத்தையும் சுகாவே எழுதியிருப்பதைத் தான் நான் சுட்டவேண்டும். எந்த வகைக்கும் உட்படாத சுகாவின் எழுத்தைப் பாராட்டுவது என்றால், அதில் முற்போக்கு எங்கே என்று தேடத்தான் வேண்டும். கிடைக்காது.

    தி.க.சி யின் ஆசிரிய பீடத்தில் தொ.மு.சி. ரகுநாதன் வந்து அமர்ந்தார். திகசியின் காலத்திலும் சரி, பின்னரும் சரி, தாமரை இதழ்களை அவ்வப்போது பார்க்கத் தான் எனக்குக் கிடைக்குமே தவிர, தொடர்ந்து அதை நான் கவனித்தவனில்லை.

    நவீன விருட்சம் பத்திரிகைக்கு மதிப்புரை எழுதச் சொல்லி எனக்குக் கிடைத்த புத்தகம் திகசி யின் கட்டுரைகளையெல்லாம் தொகுத்திருந்த விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள். அப்புத்தகம் என்னிடம் இல்லை. நவீன விருட்சம் இதழும் இல்லை. என் பார்வையில் நாவல்கள், சிறுகதைகள்………….. ……….. என்ற என் கட்டுரைத் தொகுப்பு 2000-ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது, அதில் சேர்க்கப்பட்டுள்ள, தி.க.சியின் புத்தகத்துக்கு நான் எழுதிய மதிப்புரையிலிருந்து (பக்கம் 201 – 204) எழுதுகிறேன். மேலே தரப்பட்டிருக்கும் மற்ற மேற்கோள்களும் சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை தான்.

    திகசி யின் இத்தொகுப்பு பல ஆச்சரியங்களைத் தந்தது. ஆச்சரியம் என்ன. முற்போக்கும், கட்சி சேவகமும் திகசியை முற்றாக மாற்றிவிடவில்லை என்று எண்ணத்தை ஏற்படுத்தியது.

    அதிலிருந்து என் வார்த்தைகள் சிலவற்றையும் திகசி யின் வார்த்தைகள் சிலவற்றையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அனேகமாக பலருக்கு இது திகசி யின் கேட்காத குரலாக இருக்கும்.

    (இப்புத்தகத்தின்) 330 பக்கங்களும் படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன. வெளித்தெரிந்த திகசியை விடுங்கள். உண்மையான திகசி யாரென்பது  சுவாரஸ்யமான புதிராக இருக்கிறது. கட்சி நிர்ப்பந்தங்களை மீறி, ஒதுக்கி, ஒரு நெருக்கம் ஏற்படும் எனில், திகசி பழகுவதற்கு மிக நல்ல மனிதராக இருக்கவேண்டும்.

    இனி ஒரு நேர்காணல் (ப. 303)

    கேள்வி:  ஒரு நல்ல படைப்பை நீங்கள் எப்படி இனம் கண்டு கொள்வீர்கள்?

    திகசி: கலாபூர்வமாக மனசுக்கு நிறைவு அளிக்கும்படியான படைப்பு எதுவும் மிகச் சிறந்த படைப்பு தான். ஒரு தனித்தன்மை இனம் காட்டிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக அது நம் நெஞ்சை நெருட வேண்டும். (it must disturb) படித்தபின் என்னவோ பண்ணுகிறது. அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. படிக்குமுன் இருந்த நான் வேறு.  இப்போதைய நான் வேறு என்கிற மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய ரஸவாதம் எல்லா கலைகளுக்கும் உண்டு.”

    இன்னும் சில கருத்துக்கள் வெவ்வேறு பக்கங்களிலிருந்து:

    ”சமூக சீர்திருத்த வேட்கை நிரம்பிய இவற்றில் (40 வருட திராவிட இயக்க படைப்புகளில்) பிரசார அம்சம் அதிகம். கலை அம்சம் குறைவு (ப. 29). கலை அம்சத்தைவிட கருத்து வலியுறுத்தலுக்கே சிறப்பிடம் (ப. 57). உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்திருப்பாராயின்  (ப. 73). சில கவிதைகளில் பிரசார நெடி பலமாக அடிக்கிறது. (ப.146)  படைப்புகளில் கலை அம்சம் இருக்க வேண்டும்……சமூக நீதி கேட்கும் மக்கள் பகுதியின் வாழ்க்கையும் குரல்களும்……..படைப்புகளாகும் போது எவ்வளவு தூரம் கலை மதிப்பும், கலைத் தரமும் கொண்டதாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் தகுதி நிர்ணயிக்கப்படும் (ப. 309)

    இவையெல்லாம் எப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் என்பது தெரியவில்லை. இந்தத் திகசியை பொதுவாக அறியப்பட்ட திகசியில் அடையாளம் காணமுடியாது. ஆனல்,  இதற்குப் பின்னும் திகசி கட்சி கோஷங்களை விட்டவரில்லை.

    அதற்கு ஒரு சோறு பதமாக அவர் பாராட்டும் ஒரு கவிதையையும் அவர் பாராட்டையும் தரவேண்டும்.

    எங்கள் இலக்கியப் படைப்புகள் யாவும்

    அறுசுவை கொண்ட

    அரிசியின் சிற்றுண்டிகளை

    நினைவுறுத்த வல்லவை. ஆம்

    அவை யாவும் அடிப்படையில்

    அரிசிக் கவிதை கதை கட்டுரைகளே!

    அவற்றைப் படைக்கும் நாங்களும்

    அரிசிப் படைப்பு பண்பாட்டாளர்களே!”

     

    இது கவிதை எனவும், இவற்றில் நயம் அழகு, அருமையான முத்தாய்ப்பு எல்லாம் இருப்பதாக திகசி பாராட்டுகிறார்.(ப. 319) ஆனால் ஒன்று, கட்சியும் அது தந்த கொள்கைகளும் திகசி என்ற மனிதரை முற்றிலுமாக மாற்றிவிடவில்லை. ஆனால் சுமார் ஐம்பது வருட காலம் நீடித்து வந்துள்ளது.

    திகசி யின் இந்த கட்டுரைத் தொகுப்பு 1999- ஆண்டுக்கான  சாஹித்ய அகாடமியின் தமிழ் விருது பெற்றது. நான் நிரந்தரமாகச் சென்னைக்குத் திரும்பியதும், பங்கு பெற்ற முதல் இலக்கியக் கூட்டம் திகசி-க்கான பாராட்டு விழா தான். திகசி தன் நன்றியுரையில் மேடையில் இருந்த சிவகாமி பக்கம் பார்த்த வாறே அடுத்த ஆண்டு விருது ஒரு பெண் எழுத்தாளருக்குத் தரப்படவேண்டும் என்பது தன் விருப்பம் என்று சொல்லி அகாடமியின் செயலர் சச்சிதானந்திடம், “இதை ப்ரெசிடெண்ட் ரமா காந்த் ராத்திடம்  ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்றார். இந்த விருது அவருக்கு மன நிறைவைத் தந்த ஒன்று என எனக்குத் தோன்றியது. எண்பது வருட வயதினருக்கு 60 வருட கால உழைப்பிற்குப் பிறகு வந்த அந்த சந்தோஷத்திற்கு உரியவர் தான் அவர்.

    பல சமயங்களில் அவர் கட்சிக்காரராகவே நடந்து கொள்வதில்லை. அந்த சமயம் திகசியின் நினைப்பும் பேச்சும், ஐந்து சித்தாந்தங்களை ஒரு சேர பிரகடனம் செய்து வந்தது. “பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழியம். என்பன அந்த ஐந்து சித்தாந்தங்கள்.  அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு பொதிகை தொலைக்காட்சியின் நேர்காணலில் தனக்கு வழிகாட்டியாக,தம் வாழ்க்கையை வடிவமைத்தவர்களாக, திருவள்ளுவரிலிருந்து தொடங்கி கம்பன், வள்ளலார் என்று எல்லாரையும் கடந்து வந்து பாரதி, ஜீவா வரை ஒரு நீண்ட பட்டியலையே வாசித்தார். வம்பற்ற பாடு. தவறிப் போய்க்கூட மார்க்ஸிலிருந்து தொடங்கி, ஸ்டாலின், ராமமூர்த்தி நம்பூதிரிபாத் பாட்டையில் அவர் செல்லவில்லை.

    தாமரையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவரை ஒரு கூண்டுக்குள், என்ன, எந்தக் கூண்டுக்குள்ளும் அவர் அடைபடவில்லை.  90 வயதை எட்டிப் பார்ப்பவரிடம் கட்சியும் அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள். ஓய்வு பெற்றுவிட்டவரை எந்த நிர்வாகம் தான் என்ன செய்யும்?

    நான் இங்கு பங்களூருக்கு குடி பெயர்ந்த பிறகு ஒரு நாள் திடீரென்று சித்தன் பிரசாதிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் யுகமாயினியில் என்னை எழுத அழைத்ததிலிருந்து பழக்கம். நேரில் பார்த்ததுமில்லை. பழகியதுமில்லை. உறவை வளர்த்தது தொலைபேசிதான். தமிழை இனி உய்விக்கவேண்டிய அவசியம் தனக்கில்லை யுகமாயினி கடையைப் பூட்டிவிட்டு தமிழ் சினிமாவுக்கு ஏதாவது சேவை செய்யமுடியுமா? என்று கிளம்பிவிட்டார். 2012 வருட இடைப்பட்ட  மாதஙகளில் ஒரு நாள் முன்னிரவு நேரம் என்று நினைவு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சித்தன் பிரசாத் பேசறேன், சாமிநாதன். திருநெல்வேலியிலே இருக்கேன் இப்போது. திகசி வீட்டில் அவர் என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கார். அவருக்கு உங்களோட பேசணுமாம். பேசுங்க” என்றார். திகசி பேசினார். எனது சௌக்கியம் பற்றி விசாரணையோடு, “அங்கே நீங்க என்ன பண்றீங்க. இங்கே ஒருக்கா வாங்களேன். நானும் தனியாத் தான் இருக்கேன். நீங்களும் இப்போ தனி ஆளாப் போயிட்டிங்க. நீங்க வாங்க இங்கே. என்னொடு பத்து நாள் இருங்க” என்றார். ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. அதிலும் ஒருவர் பெயர் இன்னொருவருக்குத் தெரிந்த காலத்திலிருந்தே சண்டை தான்  போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்த சிஐஏ ஏஜெண்டை இவ்வளவு பரிவுடன், சினேக பாவத்துடன் அழைக்கிறாரே. மனித ஹிருதயம் தான் எத்தனை விசித்திரமான ஒன்று! எனக்கு அவரைக் கொஞ்சம் சீண்டத் தோன்றியது. “எதுக்கு ஐயா. நாம எழுத்திலே ஐம்பது வருஷமா சண்டை போட்டதை நேரிலேயே தொடரலாம்னா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சளைக்கவில்லை. “வாங்க நிறைய பேசலாம் .சண்டையும் போடலாம். திரும்பிப் போய் திகசி இன்னமும் அதே முட்டாளாத் தான் இருக்கான்னு எழுதுங்க” என்றார். சிரித்துக் கொண்டோம். இந்த வயசிலே எவ்வளவு உரக்கவும் சௌஜன்யத்துடனும் பேசமுடிகிறது அவரால்!

    ”சந்திக்கலாம் வரேன் எப்போ வாய்க்கிறதோ பார்க்கலாம்” என்றேன். சரி மனசிலே வச்சுக்கங்க. இப்போ வேண்டாம். ஒரே வெக்கையா இருக்கு. பவர் கட் வேறே நாள்முழுக்க. இது கொஞ்சம் சீரானதும் சொல்றேன். வாங்க” என்றார்.

    இதற்கு கொஞ்ச நாள் பிறகு ஃபேஸ் புக்கில் சு.கா. திடீரென அசரீரியாக தரிசனம் தந்தார். அது தான் அவரோடு முதல் பரிச்சயம். அவரது குரல் அல்ல. எழுத்து தான் பேசிற்று. உலகத்து எழுத்தாளர்கள் எல்லோரையும் நாம் அப்படித்தானே தெரிந்து பரிச்சயம் கொள்கிறோம், அந்த மரபு கெட்டு விடக்கூடாது என்றிருப்பவர் சு.கா. என்று தெரிந்து கொண்டேன்.  அதற்கு ஒரு வருடத்திற்கு முன் “வாதங்கள், விவாதங்கள்” வெளியீட்டின் போது அவர் வந்திருந்ததாகச் சொன்னார்கள். அப்போது தரிசனம் தருவதற்கு இன்னம் வேளை வரவில்லை என்று நினைத்திருக்கலாம். பிறகு ஒரு நாள் அவர் குரலையும் கேட்டேன். அவரும் சொன்னார்,  ”நீங்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து அவருடன் சில நாட்கள் இருக்கவேண்டும் என்று திகசி உங்களிடம் சொல்லச் சொன்னார்.  இதற்கு முன்னரே  அவர் அழைப்பு எனக்கு தொலைபேசியில் வந்ததைச் சொன்னேன்.  எனக்கு துணையாக யாராவது வந்தால் தான் நான் எங்கும் செல்ல முடியும்.  எல்லோரும் சேர்ந்தே போகலாமே, நான் நீங்கள், சொல்வனம் சேது, பாரதி மணி எல்லோரும் சென்னை வழியாகவே போகலாம். எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டே பயணம் செல்வது சுகமாகவும் இருக்கும். எனக்கும் துணை இருக்கும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். நாட்கள் கடந்தன. சேது ஃபின்லாந்து போய்விட்டார். பாரதி மணி தில்லிக்கோ குர்காவ்ன்க்கோ போய் விடுவார். சுகா வுக்கு அவரது நிர்பந்தங்கள். இப்படி நாட்கள் கடந்தன.

    இடையில் சொல்வனத்தில் சுகா அவர் தனக்கென அவரே உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு புதிய சுவாரஸ்யமான வடிவில் திகசியைப் பற்றிய பாசமும் வியப்பும் நிறைந்த ஒரு அழகான சித்திரம் வரைந்திருந்தார். அதில் மறுபடியும் திகசியின் அழைப்பு பற்றி. அதை சுகாவே அவரது எழுத்திலேயே சொல்லட்டும். என் வார்த்தைகளில் சொவது சுகாவின் எழுத்து அழகைக் கெடுத்துவிடும். சுகா எழுத்துக்கு நான் நியாயம் செய்ய வேண்டும்.

    தி..சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தாஎன்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யாஎன்றார்.

    உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி..சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.

    என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’

    நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

    சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி..சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.

    சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.

    (மூத்தோர் – சுகா – சொல்வனம் 21.10.2012)

    எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு.  நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள்.  காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம். நான் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தேன். எவ்வளவு காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்தது நடவாதது, திடீரென திட்டமிடாமலேயே எல்லாம் நடந்து விடுகிறது!! சின்ன குறுகிய தெருதான். ஆனால் நீண்ட தெரு. திகசியின் வீட்டு வெளிக்கதவைத் தாண்டி உள்ளே காலடி வைத்தால், சுகா தந்திருந்த புகைப்படத்தில் காணும் அதே காட்சி. தாழ்வாரத்தின் கோடியில் தன் அறைக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மெதுவாக உள்ளே சென்று அவர் அருகில் நிற்பதற்குள் ஏதோ நடமாட்டம் அறிந்து தலை நிமர்கிறார்.  சீனுவாசனுக்கு திகசியையும் அவரது திருநேலி சகாக்கள் வண்ணதாசன் கலாப்ரியா, எல்லோரையும் தெரியும். எங்களையெல்லாம் பார்த்ததும் அவரது முகக் களிப்பைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.  மனித உறவுகளும் பாசமும் அந்த வயதில் அபரிமிதமாகப் பொங்கி எழும்.  இல்லாத போது ஏக்கம் சூழும். பேச்சு, படிப்பு, உற்சாகப்படுத்தி எழுதும் கடிதங்கள் இவை தான் அவரது தினசரி வாழ்க்கை. தனி மனிதர். தனித்து வாழவே ஆசை. பக்கத்தில் சில வீடுகள் தள்ளி ஒருவர் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறார். தினசரி பத்திரிகைகள் செய்தித் தாள்கள் வந்து சேர்ந்து விடுகிறது இன்னொரு நெடுங்கால அன்பரின் தயவில். போன உடன் பெரிதாக கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப் பட்டுள்ள அட்டையைக் காண்பிக்கிறார். அதிகம் அவரைப் பேச விடவேண்டாம். என்று ஒரு எச்சரிக்கை அதில் .  காது அவ்வளவாகக் கேட்பதில்லை. உரத்துப் பேசியும் பயனில்லை. எச்சரிக்கை அட்டையைக் காண்பித்து கீழே வைத்தவர் தான். அவர் தான் பேசிக்கொண்டிருக்கிறார். பயந்து பயந்து சில வார்த்தைகள் பேசியும் தலையை ஆட்டி பதில் தந்து கொண்டும் இருந்தோம் பக்கத்தில் உள்ள அன்பர்களும் வந்து சேர்ந்தார்கள். வயோதிகத்தையும் உடல் பலஹீனத்தையும் மீறி அவர்தான் எங்கள் எல்லொரையும் விட அதிக உற்சாகத்துடன் ஜீவனுடன் இருந்தார். (He was more lively and active than any of us there) பக்கத்துச் சிறிய அறை முழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள். ஏதோ பழைய பத்திரிகைக் கடை மாதிரி. வெளியே வராந்தாவில் அவர் காலடியிலும் பத்திரிகைகள் பரவிக் கிடந்தன.  அன்றாட உலகின் அக்கறை கொண்டும் அதே சமயம் விலகியும் தனித்து ஏதோ ஆஸ்ரமத்தில் வாழும் ரிஷி மாதிரி திகசி தந்த அந்த 2013 டிஸம்பர் காட்சி. சில மைல் தூரத்தில் வாழும் வண்ணதாசன் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார்.  திகசி பிடிவாதமாக தனித்து வாழவே தேர்ந்து கொண்டுள்ளார். அதுவும் என் மனதில் அவரிடம் மரியாதை உணர்வையும்  வியப்பையும் உண்டாக்கியது. இந்த அமைதியும் தைரியமும் எனக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தனிமை தான். இருப்பினும் உலகோடு உறவு அறவில்லை. நிறைய அன்பர்களும் நண்பர்களும் சிஷ்யகோடிகளும் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

    இரண்டு மணிநேரம் அங்கு இருந்திருப்போமா? இருக்கலாம். அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டோம். திருநெல்வேலியிலிருந்து அரவிந்தன் நீலகண்டனையும் அவரது அப்பாவையும் பார்க்க அவரைப் பார்த்து வருடங்கள் பல ஆகிவிட்டன. இனி எப்போது வாய்ப்பு கிட்டுமோ. நாகர் கோயில் போய்க்கொண்டிருந்தோம். சுபாஷிணி திகசியின் வீட்டில் இருப்பதாகவும் அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. நாங்கள் திருநெல்வேலியிலிருப்பதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

    நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சிலமணி  நேரத்துக்குள் சென்னையிலிருந்து சுபாஷிணி திகசியைப் பார்க்க அவர் வீட்டில். மனித உறவின் நெருக்கத்தை விடாத நிறை வாழ்வு தான். இதை விட வேறென்ன வேண்டும்

    2014 மார்ச் 25ம் தேதி அவர் மறைந்து விட்டார். இன்னம் ஐந்து நாட்களில் அவரது  90 வயது பூர்த்தியாகி, 91 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இலக்கிய மற்றும் பத்திரிகை உலகினர் கூட்டம் ஆச்சரியம் இல்லை வை.கோவும் நல்லகண்ணுவும் கூட ஈர்க்கப்பட்டனர் என்பது திகசியின் ஆளுமையின் வியாபகத்தைச் சொல்லும். அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் அவர் காலத்தில் காய்ச்சி வறுத்தெடுத்த வணிகப் பத்திரிகைகளும் இருந்தன.

    எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாட்டிலும், மனித உறவுகளை அவர் மறக்கவில்லை. எந்த வகைப் பாட்டிலும் அடங்காத சுகாவின் எழுத்தை உடன் இனம் கண்டு பாராட்டினார் என்றால், கட்சி வாய்ப்பாடு அவரது உணர்வுகளை மழுங்கடிக்கவில்லை என்று தானே அர்த்தம்? தாமிரபரணி தண்ணீரின் ஈர்ப்பும் இருக்கும் தான். ஆனால், பொது உலகில் அவருக்கு கட்சிரீதியாக எதிர்த் தரப்பில் நான் இருந்தாலும் மனதிற்குள் என்னிடம் அவர் சினேக உணர்வும் பாராட்டுமே கொண்டிருந்தார்.  நான் அவர் விருப்பப்படியே நேரில் சென்று அவருடன் சில மணி நேரங்களாவது சக மனிதர்களாக சந்தோஷத்துடன் கழித்தது அவருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்கும். எனக்கும் கட்சி மறைத்து வைத்திருந்த ஒரு சக மனிதரைக் கண்டதில் சந்தோஷம்.

    வெங்கட் சாமிநாதன்/6.6.2014

    Share
  • நம்பிக்கை…

    -செண்பக ஜெகதீசன்

    உறவுகள் சங்கிலிகள்,
    உணர்ச்சிகள் வேதனைகள்,                                              holding-my-hand
    உணர்ந்துவிட்டால் ஞானம்தான்…

    திறவுகோல்-
    அறிவு,
    மாயை வெப்பத்தில்
    ஆவியாகிவிடுகிறதே அறிவு…

    அந்த வெப்பம்
    தணுப்பாகிடத் தேவை ஒரு
    கை-
    நம்பிக்கை…

    இருக்கட்டுமே அது
    இறையாக…!

     

    Share
  • அன்புள்ள கணவா!

    -ரா. பார்த்தசாரதி

    அன்புள்ள  கணவா! உன் நெஞ்சில் நான்  நிறைந்திருந்தாலும்,
    என் பெண்ணுள்ளம் எதிரொலியாய்  இருந்தாலும்,
    நான் என்றும் நீ என்றும் இருவராக இருந்தாலும்,
    நான்  வேறு,  நீ வேறு யார் சொன்னாலும்,

    உந்தன் மனதினிலே நான்  என்றும்  இருந்தாலும்,
    சுகமும், துன்பமும் சரிபாதியாய்  இருந்தாலும்,
    பூவாகி, காயாகி, கனியாய்  இருந்தாலும்,
    நீயாகி, நானாகி, நாமாய் இருந்தாலும்,

    சுகம் சுகம் அது துன்பமான இன்பமாய் இருந்தாலும்,
    மனம், பேதை மனம் மாறாத சொந்தம் இருந்தாலும்,
    இனமாகிய பெண் உனக்கே உரிமையாய் இருந்தாலும்,
    அது பூப்போல மென்மையாய்ப் பூத்திருந்தாலும்,

    உந்தன்  நிழலாக  நான் மாறும் நாள் வந்தாலும்,
    தேன் உண்ணும் வண்டாய் நீ இருந்தாலும்,
    தெம்மாங்கு பாட நீ நினைத்திருந்தாலும்,
    தொலைவில் இருந்தும் என் நெஞ்சத்தில் மறைந்திருந்தாலும்,

    கல்யாணம் முடிந்து காதல் மறைந்தாலும்,
    பழமையான காதல் நினைவுகள் மறக்காமல் இருந்தாலும்,
    நமது வாழ்க்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருந்தாலும்
    பொங்கும் நமது உள்ளமே வாழ்வின் புது வெள்ளமே!

                                       

    Share
  • மதுரையில் பறந்த மீன்கொடியை.. – கவிஞர் வாலி…

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞர்களின் கற்பனையில் பாடுபொருள் ஒன்றுதான் என்றாலும் புதிய யுக்தி, புதிய சிந்தனை, புதிய பார்வை – இவைதான் மக்களின் கவனத்தை ஈர்க்கும். காதலைப் பற்றியும், காதலியின் அழகைப் பற்றியும் பாடாத கவிஞர்கள் இல்லை! இது தொன்றுதொட்டு நடந்துவரும் ஒன்றுதான் என்றாலும், கவிஞர்கள் தங்கள் கற்பனையை பலநூறு முறை கொட்டிக்கவிழ்த்தாலும், இன்னுமின்னும் மிளிர்கிறதே! அதுதான் நம் தமிழ் மொழியின் மேன்மை! சொல்லாட்சி! கற்பனா வளம் மிக்க கவிஞர்களின் கையில் தமிழ் கிடைத்துவிடும்போது எத்தனை அற்புதமாய் கவிதை பிறந்துவிடுகிறது! திரைப்பாடலென்பது ஒரு பல்லவி – மூன்று சரணங்கள் என்கிற அளவுகோலுக்குள் அடடா ஒரு ஜீவசிற்பத்தை செதுக்குவதுபோல் கவிஞரின் பேனா நகர்கிறது! நாம் விரும்பி நனையும் கவித்துவமழையும் பொழிகிறது! இதோ கவிஞர் வாலியின் புகழ்க்கொடி பறக்கிறது!

    பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை
    திரைப்படம்: பூவா? தலையா?
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1969

    sddefault
    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
    தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
    தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே – இவை
    மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
    உன்னை தமிழகம் என்றேனே

    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

    காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ
    குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ
    சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
    தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?

    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

    பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
    பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
    புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
    கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
    குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
    இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
    உன்னை தமிழகம் என்றேனே

    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்
    புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே

    ஒரு பெண்ணை வர்ணிக்க இவர் ஒட்டுமொத்த தமிழகத்தையே தனது உவமைக் களமாக்கியிருக்கிறார்! இப்படியெல்லாம்கூட வர்ணிக்க முடியுமா என்று நம் உள்ளத்திலும் உயர்கிறார்! பொருத்தமான வார்த்தைகளை எடுத்து அதற்கான அங்கங்களோடு அழகுபார்த்து சேர்த்திருக்கும் கவிஞரின் திறன் போற்றத்தக்கது! புகழத்தக்கது! டி.எம்.செளந்திரராஜன் குரலில் கம்பீரமாக ஒரு காதல் ஆலாபானை கற்பனைக் கொடி பறக்க காற்றில் தவழ்கிறது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பூவா தலையா – இது இயக்குனர் கே.பாலச்சந்தர் படம்! காதல் பாடல்கள் வரிசையில் ஒரு கானாமிர்தம்! கவிதை வகையில் சொன்னால் தேனாமிர்தம்! அண்மைக் காலத்தில் வெளியான பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற பா.விஜய் அவர்களின் கற்பனையிலும் இந்த யுக்தி எதிரொலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..- தஞ்சாவூரு மண்ணை எடுத்து… ..

    கலைஞரும் கவிஞரும்

    இத்திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருதுகள் வழங்கிய பெருமகனார் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். வாழ்த்துரை வழங்க கலைஞரின் பின்பக்கம் அமர்ந்திருந்த கண்ணதாசன் கண்களில் கலைஞரின் தலைப்பாகம் பட்டிருக்க, தனது பேச்சின்போது.. கண்ணதாசன், நான் பின்னிருந்து பார்க்கையிலே கலைஞரின் தலை பூவா.. தலையா என்றே சந்தேகம் எழுந்தது என்றார். கலைஞர் தனது சிறப்புரையில்.. இதைக் குறிப்பிட்டு.. நல்லவேளை நண்பர் கவிஞர் கண்ணதாசனுக்கு எந்தன் தலை பூவா.. தலையா என்று சந்தேகம் மட்டும் வந்தது. பூ என்று நினைத்து பறிக்க வந்துவிடவில்லை என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டார் என்பது ஒரு சுவையான தகவல்!

     

    http://www.youtube.com/watch?v=1Px2HmGehSM

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (120)

    கிரேசி மோகன்

    Gitacharya. Oil on canvas. #krishnafortoday - Keshav
    Gitacharya. Oil on canvas. #krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————–
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-

    Bhagavatha -- Kaliyamardhana - Keshav
    Bhagavatha — Kaliyamardhana – Keshav

    ஆபாசம், அச்சம், அழுக்கா(று), அகங்காரம்,
    நாபேசும் இன்னா நயவஞ்சா! -ஏபாவா!
    என்பக்கம் வாராதே, உன்னுருவைப் புண்ணியமாய்,
    கண்ணப்பன் மாற்றிடுவான் காண்….(233)

    காணல் அவன்ரூபம், பூணல் அவன்நாமம்,
    நாணல் யமுனா நதிதீரம், -சாணப்,
    புரவிக்கு நீரூற்றி, புல்வார்க்கும் கண்ணன்,
    கருமமே கண்ணான வன்….(234)

    அந்தரங்க சுத்தியுடன், அந்தணங்கு ஆண்டாள்போல்,
    அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க, -வந்திறங்கி,
    வைகுண்டம் வாவென்று, கைகொடுத்து தூக்கிவிடும்
    பைகொண்ட நாகமுற்ற பொற்பு….(236)

    நீராடை பூண்ட, நிலத்தை உண்டன்று,
    ஓரா லிலையில் உறங்கிய, -சீராளன்,
    போரானை கொம்பொசித்து, நூறோர் கதைமுடித்த,
    நாரா யணனே நெறி….(237)

    கருந்தா மரையின்கீழ், செந்தா மரைபோல்,
    புறங்கை அடியில் புலர்ந்த, -வரங்கை,
    கோலும் குழலுமேந்த, கோகுலம் காத்தவனாம்,
    மாலோன் மலர்த்தாள் மருவு….(238)

    திருவிருந்த மார்பன், திருத்துழாய் மார்பன்,
    மருவிருந்த மார்பன், மகனாய்ச் -சிறையில்,
    கருவிருந்த மார்பன், தெருவிருந்த மண்ணை,
    பெருவிருந்தாய் உண்ட புதிர்….(239)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • முரண்கோள் [Asteroid] தாக்குதலைப் புவி மீது தடுக்கத் திசை திருப்பும் நாசாவின் பெருஞ் சவால் சுயநகர்ச்சி விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]

    Asteroid hunting -2

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y0bkYH1Y3cQ

    http://www.space.com/25589-asteroid-impacts-on-earth-more-powerful-than-nuclear-bomb-video.html

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ex00D-IvauM

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XLqj1P7psyU

    http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded

    [Meteor Strike Injures 1200 People in Russia]

    வக்கிரக் கோள்கள் வழிதவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாக்கப்
    பக்கத்தில் வருகின்றன !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை ஆய்ந்தார்
    நாசா பொறியியல் விஞ்ஞானிகள் !
    விண்வெளியில் வால்மீனை
    விரட்டி வாலின்
    தூசியைப் பற்றி
    காசினிக்குக் கொண்டு வந்தார் !
    வக்கிரக் கோள் மாதிரியை
    வையத்தில் இறக்கி வைத்தது
    ஜப்பான் ‘கழுகு’ !
    முரண்கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டது
    நாசாவின்
    “புலர்ச்சி” விண்ணுளவி
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !
    இரு விண்வெளி விமானிகள்
    2025 ஆண்டுக்குள் பயணம் செய்து
    முரண்கோள் ஒன்றில்
    தடம் வைப்பார்
    தளவுளவி இறக்கி
    உளவு செய்யப் பயிற்சி
    அளிக்கிறது நாசா,
    வையத்தை மோத வரும்
    வக்கிரக் கோளை நாசா குழு
    திக்கு மாற்றி
    பூமி காக்கப் போகுது !

    +++++++++++++++++

     

    Grand Challenge Spacecraft

     

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண்பாறைகள், முரண்கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”

    டிமிட்ரி ரோகோஜின்  [Dmitry Rogozin, ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி]

    எதிர்பாராத சிதைவுகளைப் பூமியில் உண்டாக்கும் முரண்கோள்களின் அபாயத்தைக் கண்டறிய பொதுநபர்  பேரளவில் எங்களுக்கு உதவி செய்ய வழிகள் உள்ளன.  உலக மாந்தரின் ஆக்கபூர்வச் சிந்தனைகள், செயற்பாடுகளைப் பயன்படுத்தி,  முரண்கோள் தகவல் அறிவிப்பில் கலந்து கொண்டு, நமது பூமியை ஓர் பாதுகாப்பு அரங்கமாகச் செய்திடப் பங்கேற்க வேண்டும்.

    ஜேஸன் கெஸ்லர்  [Program Executive, NASA Asteroid Grand Challenge [AGC] Spacecraft] 

     

     

    NASA ARM BOOK

    “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப்பொழியும்.இந்தநிகழ்ச்சியில்பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக்கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 25 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.”

    நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program]

    முரண்கோள் திசை திருப்புத் திட்டங்களோடு அடுத்து 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் அனுப்பும் ஆழ்வெளி முயற்சிகளையும் விருத்தி செய்து,  முரண்கோள் மோதுதலிலிருந்து பூமியைக் காக்கும் செயல்களைத் தீவிரமாக மேற்கொள்ளப் போகிறோம்.

    வில்லியம் கெர்ஸ்டென்மையர் [NASA Human Exploration & Operation Mission]

    சூரிய மண்டலத் தோற்ற காலத்தின் எச்சத் துண்டுகள் நமது பூமியை நோக்கி நெருங்கி வரும் போது தொலைநோக்கிகள் மூலம் கூர்ந்து ஆராய்வது நம் அறிவைப்பெரிதும்  விரிவாக்கி யுள்ளது. முரண்கோள்களை நெருங்கி உளவுசெய்து, சோதிப்பது, நமது புவியைப் பாதுகாக்க உதவும் சவாலான சாதனைக்கு நம்மைத் தயார் செய்யும்.  அத்தகைய அரியபணிகளுக்கு ஏற்ற சாதனங்களில் ஒன்றுதான், ஸ்பிட்ஸர் விண்ணோக்கி. [Spitzer Observatory]

    ஜான் குருன்ஸ்ஃபெல்ட் [NASA Science Mission Directorate] 

    Mission Planning

    பூமியைத் தாக்கவரும் முரண்கோள் போக்கைத் திசைமாற்றும் நாசா விண்ணுளவி

    2014 ஜூன் 19 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பூமியை நெருங்கும் முரண்கோள்கள் [Asteroids] போக்கைத் திசை திருப்பும் சுயத்தடுப்பு விண்கப்பலைத் [Robotic Spacecraft] தயாரிக்கத் திட்ட மிட்டிருப்பதாய் வான்பௌதிக வெளியீட்டில் [Astrophysical Journal] அறிவித்துள்ளது.  தயாராகும் அந்த விண்கப்பலின் பெயர் : முரண்கோள் பெருஞ்சாதனைச் சவால்விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft].   அத்திட்டப்படி நாசா தான் ஏவிய சுயத் தவிர்ப்பு விண்ணுளவி [Robotic Spacecraft]  மூலம் பாதை தவறிப் பூமியைத் தாக்க நெருங்கி வரும் முரண்கோளைத் திசைமாற்றி நமது நிலவை நிரந்தச் சுற்றுவீதியில் வலம்வரச் செய்கிறது.  நாசாமுரண்கோள்திசைமாற்றுத் திட்டத்தின் பெயர்  [Asteroid Redirect Mission (ARM)].  2019  ஆம் ஆண்டில் நாசா அந்தச் சுயத் தவிர்ப்பு விண்கப்பலைத் தயாரித்து ஏவத் திட்ட மிட்டுள்ளது. அதற்குச் செல்வாகும் நிதித்தொகை 4.9 மில்லியன் டாலர் [2014 நாணய மதிப்பு].  அப்போது சோதனைக் கோர் முரண்கோளை நாசா தேர்ந்தடுக்கும்.  முதலில் சிறிய முரண்கோளை விண்வெளியில் கண்டுபிடித்து, திசை திருப்பச் சோதிக்கும்.  பின்னர் பெரும்முரண்கோளைத் தொட்டுமாதிரி எடுத்துச் சோதித்து, பூமிக்கு நெருங்கி வருவதை, வசப்படுத்தி திசைமாற்றும்.

    2014 ஜூன் 9 ஆம் தேதிவரை  11,140 மேற்பட்ட முரண்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பூமிமேல் மோதி அபாயம் விளைவிக்கலாம் என்று கருதப்படுபவை :  1483.  சிறுநிறை, பெருநிறை முரண் கோள்களைத் திசை திருப்ப  இவ்விருமுறைகளும்32 அடி [10 மீடர்] அளவுக்குக் குன்றிய விண்கற்களையே தேர்ந்து, நமது  நிலவைச் சுற்றிவரக் கட்டுப்படுத்தும். 2014 ஆண்டில் தான் நாசா விஞ்ஞானிகள் இவ்விரு முறைகளில் [சிறுநிறை அல்லது பெருநிறை முரண்கோள் திசை திருப்பல்] ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். 2013 ஜூனில்தான் நாசா முரண்கோள் பெருஞ்சவால் விண்கப்பல் [Asteroid Grand Challenge Spacecraft] திட்டத்தைத் தீவிரமாக மேற்கொள்ள தீர்மானித்து, இப்போது விருத்தி செய்து வருகிறது.

    Arizona Crater

     ரஷ்ய தேசத்தில் நேர்ந்த விண்கல் பாய்ச்சல் அபாயம்

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் 2013 பிப்ரவரி 15 இல் வானிலிருத்து ஒலி மிஞ்சிய வேகத்தில் [வினாடிக்கு 20–30 கி.மீ] [40,000 mph] பாய்ந்து விழுந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது ! எதிர்பாரத விதமாக நேர்ந்த இந்த விண்வெளி நிகழ்ச்சி ஓர் அதிசயச் சம்பவமாகக் கருதப் படுகிறது.  30-50 கி.மீ. [10 -15 மைல்] உயரத்தில் நேர்ந்தது அந்த வெடிப்பு.  வெடிப்பு ஆற்றல் : 470 கிலோ டன் டியென்டி [TNT].   வெடிப்பொலி அதிர்ச்சியில் சுமார் 1200 பேர் காயமுற்றதுடன், 2960 வீடுகளில் சேதங்களும் கண்ணாடி ஜன்னல்கள் உடைப்புகளும் நேர்ந்துள்ளன.  50 பேர் மருத்துவ மனையில் சிகிட்சை பெற்றார்.  விளைந்த சேதாரச் செலவு:  சுமார் 33 மில்லியன் டாலர்.  பூமி நோக்கி வந்த அந்த விண்கல்லின் நீளம் சுமார் 30 அடி, எடை 10 டன் என்று கணிக்கப் படுகிறது. ரஷ்யா நகரத்தில் சிதறி விழுந்து பாதகம் விளைவித்த அந்தப் பயங்கர விண்கல் அசுர வெடிப்பு ஏற்கனவே ஓர் விண்வெளித் துண்டுடன் மோதியதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ரஷ்யப் பேராசிரியர் எரிக் காலிமாவ் [Eric Galimov of Vernadsky Institute of Geochemistry]  கூறுகிறார்.

    Asteroids-1

    அதாவது அந்த அசுர வெடிப்பு மோதல் விண்வெளியில் நேர்ந்த பிறகே அவற்றின் சிதறல் துண்டுகள் பூமியின் சூழ்வெளியில் இறங்கி எரியத் தொடங்கின என்பது அறியப் படுகிறது.  வான மண்டலத்தில் உடைந்து தூளாகிச் சிதறி விண்கல் தூசிகள் அயனிகளாகி எரிந்து பேரொளி யோடு பிரகாசித்தது.  அந்தஒளிமயமானதோரணக்காட்சிபூமியின்ஈர்ப்புவிசையால் குவிந்து வளைந்து வந்தது.  இறுதியில் முறிந்து ஒளிச்சக்தி ஒலிச் சக்தியாய் வெடித்து பேரதிரவை உண்டாக்கியது !  150 அடி நீளமுள்ள பெரிய முரண் கோளின் போக்கைக் கண்காணித்து வந்த வானியல் விஞ்ஞானிகள், 30 அடி நீளம் உள்ள சிறிய விண்கல்லைக் காணத் தவறி விட்டனர். அதனால் எச்சரிக்கை செய்ய முடியாமல் போனது !   இப்போது ரஷ்ய அரசாங்கமே முன்வந்து, விண்கல் வீச்சைக் கண்காணிக்க வேண்டும் என்றும், விழுவதற்கு முன்னே மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், ஐக்கியக் கூட்டுப் பணியாகப் விண்வெளிப் பாதுகாப்பு முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வெளிவந்துள்ளது !

    Location of Impact
    Russian Meteor piece

    விண்கற்கள் தாக்குதலைத் தடுக்கும் உலகக் கூட்டியக்கப் பாதுகாப்பு:

    “பூமியைப் பயமுறுத்திக் கொண்டு வானிலிருந்து வீழப் போகும் விண்பாறைகளைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிலைநிறுத்த உலக நாடுகள் ஒன்று கூடி ஐக்கியப் பட வேண்டும்.   விண் பாறைகள், முரண் கோள்கள், வால்மீன்கள், மற்றும் சின்னஞ் சிறிய விண்சிதறல்கள் ஆகியவை  பயமுறுத்தி வரும், பொதுப் பகைகளை எதிர்த்து நிற்க, உலக மாந்தரை ஒன்று படுத்த வேண்டும்.”  என்று  ரஷ்யத் துணைப் பிரதம மந்திரி,  டிமிட்ரி ரோகோஜின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்தச் சிறப்பு அறிவிப்பு  மாஸ்கோவில் “தந்தையர் நாட்டு நினைவு “நாளில் அவர் அறிவித்தார். மேலும் இந்த விண்கல் விண்வெளிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஐக்கிய நாடுகள் பேரவைக் குடையின் கீழ் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  இத்தகைய மாபெரும் பாதுகாப்புத் திட்டம் அமெரிக்கா போன்ற ஆற்றல் மிக்க பெருநாடும் தனித்துச் செய்து முடிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Meteor hits Russia

    2013 பிப்ரவரி 15

    ரஷ்ய நாட்டின் மையப் பகுதி யூரல்ஸ் அரங்கில் [Urals Region] உள்ள தொழிற்துறை நிரம்பிய செலியாபின்ஸ்க் [Chelyabinsk] நகரத்தில் ஒலி மிஞ்சிய வேகத்தில்  பாய்ந்த விண்கல் [Meteor] ஒன்று பேரொளி வீசி வெடித்தது !

    Meteor damage -2

    தற்போது உலக நாடுகளிலுள்ள ஏவுகணை முறிப்பு ஏற்பாடு & வான வெளி எதிரடிப்புப் பொறி நுணுக்கங்கள்  [Anti-Missile System & Aerospace defense Technologies] பூமியி லிருந்து ஏவுகணை ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பிறகு தாக்கப் போவதை மட்டுமே தடுப்பவை.   அவை விண்வெளியி லிருந்து வீழும் விண்கற்களின் பயணத் திக்கைக் கண்காணித்து, மாற்றி அமைத்து, மாந்தரைப் பாதுகாக்கமுடியா.   விண்கல், விண்பாறை, முரண்கோள், வால்மீன்கள் எனப்படும் அகிலவெளிப் பகைத் தூள்கள் செல்லும் திக்குகளை நுணுக்கமாய்க் காண முடியா !   விண்பாறை வீழ்ச்சிப் பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைக்க மாந்தரை எச்சரிக்கை செய்யவோ, அபாயத்தி லிருந்து பாதுகாக்கவோ வேண்டு மென்றால், ரஷ்யா, அமெரிக்கா, சைனா, ஐரோப்பிய நாடுகள் போன்ற வல்லரசு நாடுகள் பல பங்கெடுக்க வேண்டும்.   மேலும் உலக நாடுகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் துணைக் கோள்கள், விண்வெளிப் பொறி நுணுக்கக் கருவிகள்  மேன்மைப் படுத்த வேண்டும்.

    Damage Potential

    இந்தப் பிரச்சனை மிகவும் சிக்கலானது.   வெகு தூரத்தில் பயணம் செய்து கொண்டு, வேகமாய்ப் பாய்ந்து வரும் விண்கல்லின் பளு, பரிமாணம், வேகம் அறிவதுடன், சூரியனைச் சுற்றும் வீதி [Solar Orbit], திசைப்போக்கு, நகர்ச்சி ஆற்றலும் தொடர்ந்து கருவிகளால் கண்காணிக்கப் படவேண்டும்.   அதற்குப் புவியிணைப்புச் சுற்றில் சுற்றி வரும் [Geosynchronous Orbit] மூன்று அல்லது நான்கு துணைக்கோள்கள் ஏவப் பட வேண்டும்.   அந்தத் துணைக்கோள்கள் பூமியைத் தாக்கப் போகும் ஒரு விண்கல் நகர்ச்சியைத் தொடர்ந்து நோக்கி வந்தால், அதைத் தகுந்த நேரத்தில் தாக்கித் திசை திருப்பவோ, முறிக்கவோ பூமியிலிருந்து ஏவுகணைகள் அனுப்ப வேண்டும்.   அந்த விண்வெளி நுணுக்கச் சாதனையில் அபாய எச்சரிக்கை செய்யவும்,  பூமியில் விழும் இடத்தை முன்பே அறிவதும் அவசியம் ஆகிறது.  விண்கல்லின்திசைமாற்றஏற்றகாலப்பொழுதும், மனிதரற்ற கணைகள் அனுப்பித் திசை திருப்பவும் தேவையான கால நேரம்  பூமி வல்லுநருக்கு அதிகம் கிடைப்பதில்லை.

    ஒலியதிர்ச்சி விபத்தில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் குத்திய மனித உடற் காயங்கள்தான் மிகுதி.  சில வீடுகளின் சுவர்கள் பிளந்தன, முறிந்து விழுந்தன. சில வீடுகளில் கதவுகள் தூக்கி எறியப் பட்டன. கட்டங்கள் இடிந்தன. மருத்துவ மனைகளில் இன்னமும் 50 பேர் முதலுதவிச் சிகிட்சைகள் பெற அனுமதிக்கப் பட்டுள்ளார்.  நகர மாந்தர் உதவிக்கு 20,000 உதவிப் படை ஊழியர்கள் அனுப்பப் பட்டிருப்பதாக ரஷ்ய அபாயநிலை அமைச்சர் விலாடிமிர் புக்கோவ் கூறியிருக்கிறார்.  முடிவில் விண்கல் சிதறல் விழுந்த ரஷ்ய ஏரி செபார்குள்ளில் [Chebarkul] அரசாங்க நீர்மூழ்கி ஊழியர் ஆறு பேர் குதித்து மூன்று மணிநேரம் சிதறிய விண்கற்களைத் தேடிச் சேகரிக்க  முயன்றார்.  இதுவரைஎதுவும் கிடைத்தாகத் தெரிய வில்லை.

    Antarctica Meteorite
    Impact of a Meteor

    1908 ஆண்டு சைபீரியாவில் நேர்ந்த “துங்கஸ்கா நிகழ்ச்சி” [Tunguska Event] எனப்படுவதில் ஏதோ ஓர் முரண்கோள் அல்லது வால்மீன் [Asteroid or Comet] விழுந்து பெருங்குழி  ஏற்பட்டுள்ளது.  அதற்குப்பிறகு2013 இல் அடுத்த அதிர்ச்சி நிகழ்ச்சி இது.  “இம்மாதிரி ஒளிக்கோளம் மின்னும் விண்கல் வெடிப்பு முறிவுகள் பேரளவு எண்ணிக்கைச் சிதறல்களைப் [Meteorites] பூமியில் பரப்பிப் பொழியும்.  இந்த நிகழ்ச்சியில் பெருவடிவுச் சிதறல்கள் சிலவும் விழுந்திருக் கின்றன. சூழ்வெளியில் இந்த விண்கல் வெடிப்புச் சக்தியின் ஆற்றல் 30 ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பை விட மிகையானது என்று கணிக்கப் படுகிறது. பூமியில் சராசரி 100 ஆண்டுக்கு ஒருமுறை இம்மாதிரி விண்கல் அல்லது முரண் கோள் விபத்துகள் நேரலாம்.” என்று நாசா விஞ்ஞானி பால் சோடாஸ் [NASA Near-Earth Object Program] கூறுகிறார்.

    இம்மாதிரி விண்வெளி விபத்துக்களைத் தடுக்கவோ, எச்சரிக்கை செய்யவோ, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து, குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா, சைனா “முரண்கோள் தடுப்பு ஏற்பாடு” [Anti-Asteroid Defense System (AADS)] ஒன்றை அமைக்க வேண்டும் என்று ரஷ்யப் பாராளுமன்றத்தின் அயல்நாட்டுத் துறை அமைச்சகத் தலைவர், அலெக்ஸி புஸ்காவ் கூறியிருக்கிறார்.

     

    unnamed (1)
    ++++++++++++++++++++
    தகவல்:  

    1. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/russia/9872020/Meteoroid-falling-over-Russia-caught-on-camera.html
    2. http://www.telegraph.co.uk/news/newsvideo/9872507/The-science-behind-Russian-meteor-strike.html
    3. http://www.telegraph.co.uk/science/space/9872991/Asteroid-passing-Earth-is-closest-ever-of-this-size.html
    4. http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded 
    5. http://www.dailygalaxy.com/my_weblog/2013/02/10-ton-meteor-explodes-over-russia-injuring-hundreds-this-am.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+TheDailyGalaxyNewsFromPlanetEarthBeyond+%28The+Daily+Galaxy+–Great+Discoveries+Channel%3A+Sci%2C+Space%2C+Tech.%29
    6.  http://rt.com/news/meteorite-crash-urals-chelyabinsk-283/
    7.  http://rt.com/news/scientists-explain-chelyabinsk-bolide-337/
    8. http://en.wikipedia.org/wiki/Tunguska_event  [February 19, 2013]
    9. Russia Calls for United Meteor Defense [February 26, 2013
    10. Meteorite’s Powerful Blast Explosion Due to Space XCollisions [February 28, 2013]
       Antarctica Team Finds Largest Chondrite Meteorite in Past 25 Years [March 1, 2013]
    11. http://www.mnn.com/earth-matters/space/stories/asteroid-hunting-group-says-powerful-asteroids-strike-earth-surprisingly#  [April 24, 2014]
    12. http://phys.org/news/2013-06-nasa-asteroid-grand.html  [June 18, 2013]
    13. http://www.huffingtonpost.com/2013/06/19/nasa-asteroid-grand-challenge-space-rocks_n_3461730.html  [June 19, 2013]
    14. http://www.nasa.gov/mission_pages/asteroids/initiative/#.U6XmOjC_gcE [Jnue 19, 2014]

    +++++++++++++++++

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  June 21, 2014

    Attachments area
    Preview YouTube video NASA’s Asteroid Grand Challenge

    NASA’s Asteroid Grand Challenge

    Preview YouTube video NASA Seeks Bounty Hunters for Asteroids – $35K in Awards | Video

    NASA Seeks Bounty Hunters for Asteroids – $35K in Awards | Video

    Preview YouTube video Planetary Society Hangout: Asteroid Astronomy with Andy Rivkin

    Planetary Society Hangout: Asteroid Astronomy with Andy Rivkin

    Preview YouTube video Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region

    Meteorite crash in Russia: Video of meteor explosion that stirred panic in Urals region
    Share