திவாகர்

ஹெல்லோ.. யெஸ்.. சொல்லும்மா..

மண்ணாங்கட்டி.. ஒரே ஒரு ரிங்க்’கே இப்படி போனை எடுத்துடுவீங்களா.. உங்களால எனக்கு ஒரு கால் வேஸ்ட்.. வெச்சுட்டு மறுபடி கூப்புடுங்க..

ஓ யெஸ்.. ஓயெஸ்.. சரி, நீ வெச்சுடு.. நான் உடனே இப்பவே கூப்புடறேன்..

…………………………………….

ஹல்லோ.. சொல்லும்மா..

சரி, அந்த ஆவக்காய் பார்சல் வந்துடுத்தா.. உங்களுக்குன்னு ஸ்பெஷலா பண்ணினேன்.. பாவம் தனியா ஏதுமில்லாம பச்சையா சாப்பிடறீங்களேன்னு.. அந்த பார்சல் வந்துடுச்சா..

avakaya 033

ஓ.. கையில கிடைச்சாச்சு ஆவக்காய்..

ஒழுங்கா ஒழுகாம வந்துதா?..

அது எப்படின்னா.. அதாவது..

என்ன.. எண்ணெயெல்லாம் ஒழுகிப்போயிடுச்சா.. அடடே. நல்லாதானே பேக் பண்ணி அனுப்பிச்சேன்.. அது எப்படி ஒழுகும்..

அத்தை ஏன் கேக்கறே.. கையிலே பிடிக்கறச்சே. கொஞ்சம் வழுக்..

ஐய்யய்யோ.. வழுக்கிக் கீழே போட்டுட்டிங்களா? எவ்வளவு கஷ்டப்பட்டு சிரமப்பட்டு கையெல்லாம் எரிய பண்ணேன் தெரியுமா.. இப்படி டமால்’னு போட்டு உடைச்சுட்டு நிக்கிறிங்களே.. ஆமா, நான் பிளாஸ்டிக் பாட்டில்ல இல்லே அனுப்பிச்சேன்.. அது உடையாதே.. கீழே எல்லாத்தையும் கொட்டிட்டீங்களா?  ஐய்யோ பாவம்’னு பரிதாபப்பட்டு உங்களுக்கென்னு செஞ்சி அனுப்பி வெச்சேன் பாருங்க..

இல்லல்லே.. சரியா கேட்காம ஏன் புலம்பறே..

ஏன் கத்திச் சொல்லறீங்க.. யாராவது கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. பின்ன என்னதான் ஆச்சு..

கையில பிடிச்சா வழுக்கற அளவுக்கு ஒழுகிருக்குன்னு சொல்ல வர்ரேன்..

ஓ.. மை காட்.. நீங்க போடற சத்தத்துல எங்க நான் கஷ்டப்பட்டு பண்ண ஆவக்காயை பாட்டிலோட கீழே மண்ணோடு மண்ணா போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களோ’ன்னு பயந்துட்டேன்..

ஹூம்.. நான் சத்தம் போட்டேனா.. இப்ப வரைக்கும் நீதான் காட்டுக்கூச்சல் போட்டுண்டுருக்கே.. அது சரி, என்ன எண்ணெய் ஊத்தினே..

ஏன் கேக்கறீங்க..

இல்லே.. ஆலிவ் ஆயில் ஊத்தினா டேஸ்ட் படு சூப்பரா இருக்குமாம்..

யார் சொன்னாங்க

வேற யார் சொல்வாங்க இதையெல்லாம்.. என் தங்கைதான் உன்னோட ஆவக்காய் பார்சல் வர டைமாப் பார்த்து அவ போன்’ல வந்தாளா.. சும்மா கொஞ்சம் பெருமையா இந்த ஆவக்காய் வந்ததைச் சொன்னேன்..

போன மாசம் அவங்க வீட்ல சாப்பாடு போடறச்சே அவ பண்ணின ஆவக்காய் ஊறுகாயுக்கு பாமாயில் போட்டதா அவளே சொன்னாளே.. ’சீப் அண்ட் பெஸ்ட்’ன்னு சொன்னதுக்கு நான் அவகிட்டே நல்லெண்ணெய்தான் பெஸ்ட்’னு சொல்லிட்டு, அவ போட்ட்தைச் சாப்பிடாமதான் வந்தேனே..

அப்ப, நீ நல்லெண்ணெய்தான் போட்டுருக்கியா?

நல்லகாலம், என்னைக் கேட்டிங்களே.. இல்லன்னா நானும் உங்க தங்கை மாதிரியே சீப் பாமாயில் போட்டதாக எல்லார்ட்டயும் சொன்னாலும் சொல்வீங்க…

அட, இதெல்லாம் எனக்குத் தெரியாதா.. காலத்துக்கு ஏத்த மாதிரி ஆலிவ் ஆயிலும் போடலாம்.. பாமாயிலும் போடலாம்..

“விட்டா கிரிஸ்னாயிலும் போடலாம்னு சொல்லுங்க.. எது எதுக்கு எது போடணும்னு எனக்குத் தெரியாதா..

அதுவும் சரிதான்.. சரி, சரி, எல்லாம் நான் பாத்துக்கறேன்..

என்ன.. உங்க டோன் திடீர்’னு மாறுது.. ஒரு மாதிரி கேக்குது.. எங்க இருக்கீங்க..

வேறெங்கே.. ஆபீசு’லதான்..ஏன் கேக்கறே?

அப்ப.. ஆபீஸ் போன்’லேருந்து பேசுங்களேன்..

அட, பரவாயில்லே.. ஆபிஸ் போன்’லாம் பெர்சனலுக்கு யூஸ் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியாதா என்ன…. என் போன்’லேருந்து பேசறேன்.. .

ஏன் இப்போ உங்க டோன் கொஞ்சம் சத்தமா கேக்குது.. யாராவது உங்க எதிரே உக்காந்திருக்காங்களோ..

ஹி ஹி.. எஸ்.. எப்படி கண்டுபிடிச்சே..

சரி, சரி, யாரது.. அந்த ரோகிணியா..

ஹய்யோ.. உனக்கு பயங்கர மூளை..

என் மூளை இருக்கட்டும்.. இப்ப எதுக்கு என்னை இப்படி போட்டுக் கொடுத்தீங்க?

என்ன.. இப்படி சொல்லிட்டே..

அதான் ஆபீஸ் போனெல்லாம் பெர்சனலுக்கு யூஸ் பண்ண மாட்டேன்னு பெரிசா சொல்லி அந்த ரோகிணி முன்னாலே ஏன் பீத்திகிட்டிங்க’ன்னு கேக்கறேன்..

அது.. அது.. அப்படியில்லே..

எது எப்படியில்லே.. இப்ப பாருங்க அநாவசியமா என் பேரு கெடறது.. ஏதோ நான் எப்பவுமே ஆபீஸ் பணத்தை வேஸ்ட் செய்ய அட்வைஸ் பண்ண யோசனை சொல்லறதா அவ நினைக்கற மாதிரி பண்ணிட்டிங்களே..

ஐய்யோ.. அது அப்படில்லாம் இல்லே.. ஜஸ்ட் லைக் தட்..

எல்லாம் அப்படித்தான்.. இருந்தாலும் அந்த எக்ஸ்ட்ரா வார்த்தையை நீங்க சொல்லியிருக்கக் கூடாது..

ம்..ம்..

இதோ பாருங்க.. நான் ஏதோ நாலு நல்ல விஷயம் சொல்லலாம்னு போன் பண்ணினா என் மூட் கெடுத்திட்டீங்க..

அடடா.. நான் சொல்ல வந்தது என்னன்னா..

எதுவாயிருந்தா என்ன.. இனிமே நான் உங்களுக்கு மிஸ்ஸ்டு கால் கொடுக்கறதா இல்லே.. ஏதாச்சும் பேசணும்னா.. நானே பேசிடறேன்.. ஏதோ என்னாலே முடிஞ்ச அளவு குடும்பத்துக்காக நாலு காசு மிச்சம் பண்ணுவோமே’ன்னு கேட்டா ரொம்பவே பீத்திக்கிறீங்களே..

நீ தப்பாவே புரிஞ்சுகிட்டே.. நான் எதையும் மனசுல வெச்சுண்டு பேசலே..

ஓஹோ.. குரல் நார்மலா இருக்கு.. ரோகிணி எழுந்து போயிட்டாளாக்கும்..”

“நிஜம்மாவே சொல்லறேன்.. நீ ரொம்பவே புத்திசாலி.. அவ இப்பதான் எழுந்து போனா..”

“அசடு வழியறதை உங்க குரலே சொல்லுதே.. ம்ம்.. உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..

“சரி.. சரி.. உன்னோட ஆவக்காயை இங்கே லஞ்ச்’ல  ஆளுக்கொரு பீஸ் கொடுக்கலாம்’னு இருக்கேன்.. உங்கிட்டேயிருந்து ஆவக்காய் பார்ஸல்’னு தெரிஞ்சதுமே எல்லாரும் ஆஹா.. ஓஹோ’ன்னு உன்னைப் புகழறாங்க.. இதோ அதையேதான் ரோகிணி கூட சொல்லிண்டே இருக்கறச்சே உன் கால் வந்துது..

ஓஹோ

ஆமா.. ரெசிபி என்ன’ன்னு கேட்டுண்டு இருந்தா..

உங்கள்’ட்டயா..

ஐ மீன், உன்கிட்டே கேட்டுச் சொல்லச் சொன்னா..

ரெசிபி கிடக்கட்டும், முதல்ல என் நம்பருக்கு ஒரு 500 ரூபாய் டாப்-அப் பண்ணிடுங்க.. அப்பறம் அந்த ஆவக்காயுல அப்படியே பாதி எடுத்து இன்னொரு புது பாட்டில் வாங்கி சிந்தாம சிதறாம அதுல போட்டு எங்க தம்பி வீட்டுக்கு கொடுத்துடுங்க.. பாவம் எப்பப் பேசினாலும் எப்பக்கா ஆவக்காய் செய்யப்போறே’ன்னு கேட்டுண்டே இருக்கான். அவங்க மாமனாருக்கும் ஆவக்காய்’ன்னா உசிராம். அவர் வீட்டுக்கும் மறக்காம தனியா அனுப்பி வெச்சுடுங்க..

ஓ.. சரி.. அனுப்பிடறேன்..

அப்பறம் நம்ம எதிர்வீட்டுக்கும் ‘நான் செஞ்சு அனுப்பிவெச்சுதா’ கொஞ்சமா அழுத்தமா சொல்லி கொஞ்சம் கொடுங்க.. போன வருஷம் அவ ஒரு ஸ்பூன் சின்ன ஆவக்காய் பண்ணிட்டு ஏதோ அவளுக்குத்தான் எல்லாம் தெரியும்’னு ஒரே அலட்டல். சகிக்கமுடியலே.. என்ன நான் சொல்றது காதுல விழுதா..

விழறது.. விழறது.. அப்ப எனக்கு?

என்ன உங்களுக்கு?

அதான் இந்த ஆவக்காய் எனக்கில்லையா.. எல்லாருக்கும் கொடுத்திட்டா நான் சாப்பிட என்ன பண்றதாம்?

“ஐயோ கஷ்டகாலமே.. ஏன் ஆவக்காய்’னா இப்படி அலையறீங்க? உங்களுக்குன்னுதானே பண்ணி அனுப்பிச்சிருக்கேன்.. அவங்களுக்குக் கொடுத்தது போக மீந்ததெல்லாம் உங்களுக்குதானே.. சரி.. ரொம்ப நேரம் பேசிட்டீங்க.. ஆபீஸ்’ நேரத்துல உங்களை நான்தான் ஏதோ டிஸ்டர்ப் பண்றதா எல்லாரும் தப்பா நினைப்பாங்க.. போனை வெச்சுடுங்க..

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆவக்காய்

 1. அன்பு  திவாகர்ஜி   வழக்கம் போல் இதுவும் சூப்பராக இருந்தது.உங்கள் மனைவி போட்ட ஆவக்காயும் சூப்பர்ன்னு சொல்லிவிடுங்கோ .சந்தோஷப்பட்டுப்பா . ஆவக்காய்ன்னாலே    நல்லெண்ணெய் வாசனைதான் வரணும் . உங்க மனைவி ரோஹிணி இருப்பதைக் கண்டுபிடிச்சதுக்கு  ஒரு சி ஐ டி வேலைதான் தரணும் 
  வாழ்த்துகள்

 2. திவாகர், கதை பிரமாதம். அன்பான மனைவிக்குப் பாராட்டு! எந்த ஊறுகாய்க்கும், அதிலும் ஆவக்காய்க்கு, நல்லெண்ணெய்-தான் நல்லாருக்கும். ஊருக்கெல்லாம் கொடுத்த கையோட … இங்கேயும் ஆவக்காயும் நார்த்தங்காயுமா ரெண்டு சின்ன ‘பார்சல்’ அனுப்பிடுங்கோ. வயசான காலத்துலெ நம்மூர் ஊறுகாய்களுக்கு நாக்கு வெண்டிக்கிடக்கு. 😉

  அப்றம் … அப்றம் … ஆண்கள், அதிலும் தன் கணவர் எப்படியெல்லாம் அசடு வழிவார் என்பதை மோப்பம் பிடித்துவிடும் திறமை மனைவியருக்குப் பிறவியின் பரிசு!

  ஆனாலும், அந்த ரோஹிணி, ராகினி சமாச்சாரத்தை அப்படியே கத்திரித்துவிடுங்கோ! பட்டவள் சொல்றேன். 😉

  சிரிப்புடன்,
  ராஜம்

  http://www.letsgrammar.org
  http://mytamil-rasikai.blogspot.com
  http://viruntu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.