Blog

  • அதே கதையாய்…

     

     செண்பக ஜெகதீசன்

    காத்திருக்கிறானாம் காதலன்-

    மலைசொன்ன சேதி

    மனதுக்குப் பிடித்துவிட்டது,

    மலையில் தவழ்ந்த சிற்றாறுக்கு..

     

    ஆடி அசைந்து

    அமைதியாய் வந்த ஆறு,

    ஆர்வம் அதிகமாகிக் குதித்தது

    அருவியாக..

    காயம் ஏதும் படவில்லை-

    காதல் என்றாலே

    கடுகுதானே மலைகூட…

     

    தரைக்கு வந்ததும்

    தானாக வந்தது பாட்டு..

    வரப்புக்களின் அணைப்பிலே

    வழிநடைப் பயணம்-

    சல சல சத்தத்துடன்,

    வளம்சேர்க்கும் நதியாக..

     

    துள்ளிக் குதித்தும்,

    தள்ளிக்கொடுத்தும் தடுக்கிவிழுந்தும்,

    சுழித்தும் சுழன்றும்,

    தடைகளைத் தகர்த்தும்

    துடிக்கும் இளமையாய்..

     

    கரையோர மரமெல்லாம்

    வாழ்த்துச் சொல்ல,

    கைமாறாய்த் தாகம் தணித்து

    தாவிச் செல்கிறது

    இலக்கை எட்டிப்பிடிக்க..

     

    மலையரசன் சொன்னது சரிதான்-

    அலைக்கரங்கள் நீட்டிக்

    கடற்காதலன் காத்திருக்கிறான்..

    கண்டுகொண்டது நதி-

    கட்டுப்பாடுகள் கட்டறுந்து

    தாவி விழுந்தது

    தலைவன் கரங்களில்…!

     

    மீண்டும் தொடங்குகிறது

    காதல்கதை,

    அதுவே தொடர்கதையாய்-

    மலைமேலே…!

     படத்துக்கு நன்றி

    http://www.zastavki.com/eng/Widescreen/wallpaper-5159.htm          

    Share
  • தமிழார்வம் திரிகடுகம்: ராஜ தந்திரம்

     

    இன்னம்பூரான்

    தமிழார்வம்

    ராஜ தந்திரம்

     

    7. ராஜ தந்திரம்

    பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

    பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

    காய்வானைக் கை வாங்கிக் கோடலும்,-இம் மூன்றும்

    சாவ உறுவான் தொழில். [4]

     

    7.1. தன் பகைவர் முன்னே செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும்,  தொகுதியாக நின்ற, மாடுகளின் நடுவே,  கோல் இல்லாமல் செல்லுதலும்,  முன்னே (நின்று), தன்னை வருத்துபவனை, முன் விட்டு நீக்கி, பின் அவனை நட்புக் கொள்ளுதலும், ஆகிய இம் மூன்று செயல்களும் சாகவேண்டியவனுடைய, செய்கைகளாம்.

    7.2. அதாவது: பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.

    73. இந்த வெண்பா சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் போல பேசுகிறது, ராஜ தந்திர சூத்திரங்களை பகர்ந்து. பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு போன்ற தீய குணங்களுக்கு, பகை தூபம் போடும். தன்னுடைய செல்வத்தை பகைவனுக்கு முன்னால் விரித்துக்காட்டுவது, அந்த தீய குணங்களுக்கு வித்திடுவது. இத்தாலிய சாணக்யராக கருதப்படும் மாக்கியவல்லி ராஜகுமாரனுக்கு அளிக்கும் அறிவுரை; உன் பகைவனின் தந்தையை கொன்றாலும், அவன் மனைவியையும், சொத்தையும் பறிக்காதே. அவன் மன்னிக்க மாட்டான். பழி தீர்க்க வழி தேடுவான்.  அந்த ராஜ தந்திரத்தின் அலை வரிசை வேறு. அதனுடைய நுட்பம் இந்த வெண்பாவின் துவக்கத்தில் உரைக்கப்படுகிறது.

    7.4. மந்தையும், மாடும், கோலும் என்ற உவமையும் ஒரு போர் யுக்தியே. அடக்கியாளும் தந்திரம். மாட்டு மந்தைக்குள் கோல் இல்லாமல் புகுவது, அபிமன்யு பத்மவியூகத்தில் புகுந்தது போல. பகை, புகையை போல் மண்டிக்கிடக்கும். உள்ளே கனல். அந்த மாதிரி தான் நேற்றைய விரோதியை இன்றைய நண்பனாக, ஆராயாமல் ஏற்றுக்கொள்வது. நல்லாதனார் ‘…சாவ உறுவான்…’ என்ற கொடுஞ்சொல்லை பயன் படுத்தியதற்குக் காரணம், இந்த மூன்று செயல்களும் நல்வழிக்கு ஒவ்வாதவை என்பதே.

    7.5.  மேலே கூறப்பட்டது,உரையையும், விருத்தியுரையும் தழுவி என்னால் எழுதப்பட்டது. அவற்றிலிருந்து சொற்கள் இரவல் வாங்கப்பட்டுள்ளுன. அந்த நூல்களை படிக்க உசாத்துணைக்கு செல்லவும். 

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    18 11 2012

     

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    சித்திரத்துக்குநன்றி:http://1.bp.blogspot.com/-QCNpfDqoeHs/Thxav7Ol5sI/AAAAAAAAAEI/BqaOiy6TX5M/s1600/Sathish0312.jpg

    Share
  • அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளுக்கு, சொந்த நாட்டிலேயே ஒரு ராஜ்யதூதராலயம்

     

    கே.எஸ்.சுதாகர்
     
    வெள்ளையர்கள் (First Fleet) முதன் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு அடியெடுத்து வைத்த தினத்தை ‘அவுஸ்திரேலியா நாள்’ என்று கொண்டாடுகிறார்கள்.
     
    1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று (தை 27), சிட்னியில் இருந்து கன்பராவிற்கு வந்த ஆதிக்குடிகள் நான்கு பேர் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு (தற்போதைய பழைய பாராளுமன்றம்) முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். ‘அவுஸ்திரேலியா அரசு தங்களை  வெளிநாட்டுப் பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை’ என அறிவித்து அந்தக் கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள்.

    அங்கிருந்தபடியே ஆதிவாசிகள் தமது நிலம் சம்பந்தமான உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொண்டார்கள். ஆதிவாசிகள் நிலம் சம்பந்தமாக வலுவான கொள்கை உடையவர்கள். உலகத்தைப் படைத்தவர்கள் முன்னோர்கள் என நம்புபவர்கள். இயற்கையுடன் ஒன்றி வாழ விரும்புபவர்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் நிறையக் கனிமங்கள் இருந்தன. அவற்றை அகழ்தெடுப்பதற்கான உரிமையை அரசு பல நிறுவனங்களுக்கு வழங்கியது. அவர்களது பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக அவர்களுடன், சுதேசிகள் அல்லாதோரும் (Non – Indigenous supporters) நாலாபுறமும் இருந்து வந்து அங்கே கூடினார்கள். அதற்கடுத்த மாதம் அவர்கள் நிலம் சம்பந்தமான பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தார்கள். இவை நிராகரிக்கப்பட்டு, குடில் அகற்றப்பட்டது. எட்டுப்பேர் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்திரேலிய அரசு அந்தக் கூடாரத்தை ஆதிக்குடிகளின் உத்தியோகப்பூர்வ தூதராலயமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
     
    1973 ஒக்டோபரில் மீண்டும் 70 ஆதிவாசிகள் கன்பரா பாராளுமன்றத்திற்கு முன்பாகக் கூடினார்கள். திரும்பவும் தற்காலிகக் கூடாரம் (Tent Embassy) அமைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் காரணங்களால் இது பலமுறை தாக்கப்பட்டது. எரிகுண்டுகள் வீசப்பட்டன. 2003ல், யூனில் நடந்த மோசமான தாக்குதலால், 31 வருடங்கள் பேணிப்பாதுகாத்தத் தரவுகள் அழிக்கப்பட்டன.
     
    நிறுவப்பபட்டு 20 வருடங்கள் பூர்த்தியான நிலையில் அது மீண்டும் புனரமைக்கப்பட்டு 1992ம் ஆண்டு  முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது. அவுஸ்திரேலிய அரசு பலமுறை அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

     இந்த வருடம் தை மாதம் நடந்த 40வது வருட அவுஸ்திரேலிய தினத்தன்று, பிரதமர் ஜூலியா கில்லாட்டும் எதிர்க்கட்சித்தலைவர் ரோனி அபொற்றும் ஆதிவாசிகளின் தூதுவராலயத்திற்கு அண்மையாகவிருந்த (Lobby Restaurant) லாபி விடுதிக்கு வந்திருந்தார்கள். அன்றைய தினம் காலை ரோனி அபொற் அவர்கள் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனமான ABC என்ற தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்முக உரையாடல் சம்பந்தமாக ஆதிவாசிகள் ஆத்திரம் அடைந்திருந்தார்கள்.  ஆதிவாசிகள் ’அவுஸ்திரேலியா நாளை’ எதிர்ப்பதற்கு முடிவெடுத்தார்கள். அதனால் அவர்கள் இருவரும் எதிர்ப்பாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து மீண்டு செல்வதே பெரும்பாடாகிவிட்டது. காவல்துறை பாதுகாப்புடன் ஜூலியா கில்லாட்டும் ரோனி அபொற்றும் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள். அந்த நிகழ்வின்போது பிரதமர் தனது ஒரு கால் பாதணியை இழக்க நேரிட்டது.

    Share
  • பரஸ்பரம்

    மு.கோபி சரபோஜி

    சுமந்தவர்களின்
    சந்தோஷத்திற்காக
    சுற்றம் சூழ
    வாக்கப்பட்டோம்.

    தாம்பத்தியம்
    நடப்பதாய் சொல்ல
    வாரிசுகளையும்
    பெற்றுக் கொடுத்தோம்.

    பெற்றதில்
    அவர்களுக்கு சந்தோஷம்
    கொடுத்ததில்
    நமக்கு சந்தோஷமா?

    குருதிகளின்
    கூட்டல்களுக்காக
    குற்றச்சாட்டுகளை ஏன்
    பரிசளித்துக் கொள்வானேன்?

    ஊருக்கும், உறவுக்குமான
    வேஷத்தை கலைக்காமலே
    கணவன் ,மனைவியாய்
    கட்டிலுக்கு இருப்பதை விட…..

    நீ…….நீயாகவும்
    நான்……நானாகவும்
    தோள் தூங்கும் நம் குழந்தைகளுக்கு
    தோழமையாய் இருப்போம்!

    படத்துக்கு நன்றி

    http://blogs.forbes.com/davidkwilliams/

    Share
  • தொல்லைகாட்சி- நீர்ப்பறவை- ஏ ஆர். ரகுமான் -விஜய் விளம்பரம்

    மோகன்குமார் –

     

    நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி :-

     

    பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீபத்து பாடல்களில் மனதை பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !  

    கலைஞரில் இப்படத்து பாடல்களை நிஜத்தில் பாடியவர்களே வந்து பாடிக்காட்ட,  பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. கூடவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும், மீனவர் பிரச்னையும் கதையில் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. மீனுக்கு சிறு மீனுக்கு  பாடல் திரையாக்கம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களுக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 🙂   

    ரகுநந்தன் இசையில், “பரபர பறவை” என்கிற அட்டாசமான பாட்டு பாடிய  இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார்    ” எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என இந்த பாட்டை செலக்ட் செய்து பாடினேன் ” என்றார் சிரித்தவாறே.  

    விஜய் நடிக்கும் விளம்பரம்:-

    ஒரு நகைக்கடை விளம்பரத்தில் விஜய் நடிக்கிறார். முதல்முறை பார்த்த போது ரசித்தாலும், அடுத்தடுத்து பார்க்கையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிறது. 

    விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்டு நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். காது குத்திய குழந்தைக்கு  இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ? 

    பொது இடத்துக்கு என்னிக்கு விஜய் இப்படி கோட் போட்டுக்கிட்டு வந்தார் ? 

    இரண்டு பக்கமும் மக்கள் கூடி நின்று வாழ்த்த விஜய் ..எம் ஜி ஆரா என்ன ! 

     ரைட்டு விடுங்க ! 

    A.R. ரகுமான் சிறப்பு நிகழ்ச்சி :- 

    தீபாவளியன்று ஜெயா டிவி A.R. ரகுமான் பேட்டியை ஒளிபரப்பியது. பேட்டி எடுத்தது சின்மயி என்றாலும் பல முக்கிய கேள்விகளை நித்யஸ்ரீ உள்ளிட்டோர் ஏற்கனவே கேட்டு அதை வீடியோவில் ரகுமானுக்கு போட்டு காட்டினர். நித்யஸ்ரீ  “முன்பெல்லாம் கர்நாடக சங்கீத பாடல்கள் அடிப்படையில் பாட்டு வைப்பீர்களே இப்போது செய்வதே இல்லையே; பத்து படத்துக்கு ஒரு  முறையாவது அத்தகைய பாடல்கள் வைக்க கூடாதா”  என்றார். ரகுமான் பதில் சொல்லும்போது, கடந்த பத்து வருடத்தில் மக்கள் என்ன மாதிரி பாடல் எதிர்பார்க்கிறார்கள் என்பது மிக மாறி விட்டதாகவும், இத்தகைய பாடல்களை இயக்குனர்கள் அதிகம் ஆதரிப்பதில்லை என்றும் சொன்னார். பேட்டி முழுதும் ரகுமானின் humility  மிளிர்ந்தது. 

     

    நல்ல நிகழ்ச்சி – திருக்குறள் கதைகள் :-

     

    சித்திரம் டிவியில் வருகிறது திருக்குறள் கதைகள் . ஒரு திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் பாத்திரங்களை வைத்து  ஒவ்வொரு கதையும்  செய்துள்ளனர். ரொம்ப நல்ல கான்செப்ட். சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட விரும்புகிற விதத்தில் உள்ளது நிகழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் ! 

    சிவகுமாரின் நேருக்கு நேர் :-

     

    தீபாவளி காலையிலேயே விஜய் டிவியில் சிவகுமாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சி – வெடி சத்ததிற்கிடையே அவ்வப்போது பார்த்தோம்.     பல்வேறு  தமிழக தலைவர்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசினார். கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லும்போது ” நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் தீப்பற்றி விடுகிறது. பிழைப்போமா இல்லையா எனும் நிலையில் கூட கடவுள் நினைவு வராமல் போகுமா? உங்கள் குழந்தைக்கு மிக பெரிய வியாதி எனில் பிரார்த்தனை செய்யாமல் இருப்பீர்களா? அத்தகைய மனிதன் இருந்தால் காட்டுங்கள்; அவன் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் ” என்றார் சிவகுமார் (நிச்சயம் அத்தகைய நாத்திகர்களும் இருப்பர் என்றே  தோன்றியது)  

    தீபாவளி சிறப்பு படங்கள் 

     

    சன்  டிவி  போக்கிரி மற்றும் காளை என போட்ட படங்களே தீபாவளிக்கு மீண்டும் போட்டு வெறுக்கடித்தது. அதிலும் காளை படத்தை  ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது எப்படி தான் இன்று போட தீர்மானித்தனரோ? இரவு சன்னில் போட்ட மங்காத்தா மற்றும் விஜய்யில் போட்ட நண்பனுக்கு தான் நேரடி போட்டி. நண்பன் விளம்பரம் போட்டு நாலு மணி நேரத்துக்கும் மேல் படத்தை ஓட்டினர். விஜய் டிவி என்பதால் இனி அடிக்கடி நண்பன் படம் டிவியில் ஓடுவதை பார்க்கலாம்  

    உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே !

     

    Share
  • அனுவாவி சுப்பிரமணியன்

     

    விசாலம்

    ஹனுமானின் தாகம் தீர்த்த முருகன்!!

     

    இலக்குமணன் மயக்கமடைந்து கிடக்கிறார் .ராம   ராவண யுத்தம் தான் .எல்லோர் முகத்திலும் கவலையும் வேதனையும் நிறைந்திருக்க விபீஷணர் எப்படியும்  ஸ்ரீராமரின் சகோதரரைக்காப்பாற்ற துடிக்கிறார் பின் ஜாம்பவானிடம் கலந்தாலோசிக்கிறார் . இப்போது ஜாம்பவான் பேசுகிறார் “கவலைப்படாதீர்கள் இமயமலைப்பகுதியிலிருந்து  சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து முகரவைத்தாலே மயக்கமடைந்தவர் எழுந்து விடுவார் .  யோசிக்க  அவகாசமில்லை உடனே யாராவது போய் அந்த மூலிகையைக் கொண்டு வரவேண்டும் .”

    இதோ அனுமான்   எழுந்து நிற்கிறார்  ” நான் போய் அந்த மூலிகையக் கொண்டுவருகிறேன்” என்றபடி விர்ரென்று கிளம்புகிறார். இதோ   சஞ்சீவினி மலை அருகே வந்தாயிற்று . எது மிருத சஞ்சீவினி என யோசிக்க நேரமில்லாததால் அந்தப் பர்வதத்தையே  அலாக்காகத் தூக்கி பறந்து வருகிறார்..அவரது நாக்கு வரண்டு போகிறது .தாகம் தாங்கவில்லை .அப்படியே ஒரு குன்றின் மேல் நின்றபடி தாகத்திற்குத் தண்ணீர் தேடுகிறார் . கண்களை மூடியபடி முருகப் பெருமானைத் தியானம் செய்கிறார். . அடுத்த வினாடியே அங்கு அழகன்   புன்னகை முகத்துடன் நிற்கிறான் .கூடவே தெய்வானையும் நிற்க சுபிரமண்யர்  தன் வேலை எடுத்து அந்தக் குன்றின் இடுக்கில்   பாய்ச்ச அப்படியே   நீர்   கசிந்து  பின் வேகமாக வர அனுமானும்  பக்தியால் கண்கலங்கி  முருகனை வணங்கி தாகச்சாந்தி செய்து கொள்கிறார் . பின் இலக்குமணனைக் காப்பாற்ற பறக்கிறார்

    இந்தப் புனிதமான இடத்திற்குப் போகும் பாக்கியம் எனக்கு சமீபத்தில் கிட்டியது இந்த இடத்தின் பெயர் அனுவாவி  . அனுமன் பெயரால் வந்த குளம் என்ற பொருள் இருக்கலாம் . கனுவாய் , ஆனைக்கட்டி, போகும் ரூட்டில் இந்தக் கோயில் வருகிறது பெரிய தடாகம் என்ற   இடத்தில் அமைந்திருக்கிறது, இக்கோயில். .இந்தகோயிலுக்குப்போகும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலையும் நம்மைத் தொடர்ந்து வாருங்கள் என்று  அழகாக   தன் கைகளை நீட்டி வரவேற்பது போன்ற தோற்றம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. சுற்றுப்புரத்தில் காடு இருப்பது தெரிகிறது அடிக்கடி யானைகளும் நீர் குடிக்க இங்கு வருவதாக இங்கு இருப்பவர்கள் சொன்னார்கள் .   விவசாயமும்  செங்கல் செய்வதும் இந்த கிராம மக்களின் தொழில்  என்று  தெரிய வந்தது

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது சரியாகத்தான் இருக்கிறது மருதமலை ஆகட்டும் .ரத்னகிரி ஆகட்டும்  இந்த முருகன் ஏன் ஒருவரது சௌகரியமும் பார்க்காமல்  மேலே போய் அமர்ந்து விடுகிறார்?

    . வயதானவர்களெல்லாம் எப்படி ஏறி தன்னை வந்து பார்ப்பார் என்று கொஞ்சமாவது யோசிக்கிறாரா? இப்படி உச்சியில் போய் கோயில் கொண்டு  விடுகிறாரே !ஒரு சமயம் “என்னால் முடியும் என்ற எண்ணமும் “எல்லாம்முருகன் பார்த்துப்பான்” என்ற சரணாகதியும்  ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி குன்றின் மேல் போய் அமர்ந்து விடுகிறாரோ என்னமோ ! உயரத்தைப் பார்க்க எனக்கும்  எப்படி ஏறப் போகிறோம் என்ற  பயம் இருந்தது . என் கூட வந்தவர்கள சுமார் 550 படிகளாவது  ஏற வேண்டும் என்று சொல்லுகையில்    உள்ளூர ஒரு கலக்கம் …..எப்படியும் ஏறித்தான் போகவேண்டும் .முருகன் தரிசனம் என்றால் சும்மாவா என்று என் மனம் எண்ண, என்னைச் சுற்றி முருகனின் ஒளியை ஒரு பாதுகாப்பு வட்டம் போல் கற்பனை செய்து கொண்டேன் , எப்போதுமே நான் எதை வாங்குகிறேனோ இல்லையோ தவறாமல் மூச்சு என்னை வாங்கும் அதுவும் மேலே ஏற ஏற .. கழுத்தில் இருக்கும் குழி உள்ளே போய்விட்டு .போய்விட்டு வரும் ஆனாலும் இந்த அனுமானுக்கு அருளிய முருகனை எப்படியும் பார்த்தே தீரவேண்டும் என்ற தாகம் ……..அனுமனுக்கு ஏற்பட்ட தாகத்தை விட அதிகமாக இருந்தது ஆயிற்று கோயில் வாசல் வந்தாயிற்று .  அழகாக  வெல்கம் ஆர்ச் என்பது போல் பாதி வளைந்த வட்டத்துடன் முகப்பு  எங்களை வரவேற்றது ,அதில் சிற்பக் கலையின் நுணுக்கங்களைப் பார்க்க முடிந்தது

    சிறிது தூரம் வந்தவுடன் ஒரு பெரிய கணபதி அங்கு அமர்ந்திருக்க பலர் அவருக்கு தீபமும் கற்பூரமும் ஏற்றுகின்றனர்  நானும் சுறுசுறுப்பாக  ஒரு 200 படிகள்: ஏறிவிட்டேன் அதன் பின் தான் எனக்கு முச்சு விட சிரமம் ஏற்பட்டது . என் கூட வந்த இரு பெண்மணிகள்  ” நாங்கள் இங்கேயே ஒரு மேடையில்
    உட்க்கார்ந்திருக்கிறோம் நீங்கள் போய் வாருங்கள் “என கழண்டு கொண்டனர்

    .நான் மலேசியாவில் இருக்கும் முருகனை அத்தனை படிகள் ஏறிப் பார்த்தேனே இங்கு பார்க்கமாட்டேனா என்ற வில் பவர் .என்னை மேலே ஏற ஊக்கிவித்தது, தவிர முருகன் வழிகாட்டுவான் என அசைக்க முடியாத நம்பிக்கை ஓம் சரவணபவ என்றபடியே மேலே ஏறத் தொடங்கினேன் .இப்போது கடைசி ஐம்பது படிகள் இருக்க   என்  தலைச்சுற்றுவதுபோல் தோன்றி என்  உடம்பை என்னவோ செய்தது    “முருகா  என்னை அழைத்துப்போ ,இன்னும் கொஞ்சம் படிகள் தான் பாக்கி “என்று என் வாய் சொல்ல திடீரென்று உடலில் ஒரு புத்துணர்ச்சி   ஏற்பட்டது அவ்வளவுதான் .ஒரு படியிலும் ரெஸ்ட் எடுக்காமல் நேரே மேலே ஏறிவிட்டேன் , இது  என் முருகன் அருளால் தான் ஏற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை .முருகா  இப்படியும் உன் கருணையா என்றபடி  கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து  மள மளவென்று தண்ணீர் குடித்தேன் ,

    உள்ளே கர்ப்பகிரஹத்தில் சுப்பிரமண்யன் தேவ்யானை  ,வள்ளியுடன்  நின்று புன்னகைத்தபடி அருள் புரிகிறார் பார்க்கப் பார்க்க அத்தனை அழகு.அழகான வடிவம்  .அவனது   கண்கள் நம்மையே பார்ப்பது போன்று தோற்றம் அளிக்க இருகைகளைக்கூப்பியபடி  அவனையே பார்த்து நின்றேன்அப்படி  நின்றதில் கிடைத்த ஆனந்தத்தை   சொல்லி இயலாது அதன் அருகில் அடுத்த பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும்  கம்பீரமாக கைகளில் சஞ்சீவனி மலையைத்தூக்கியபடி காட்சி அளிக்கிறார் .முருகன் கோயிலில் ஆஞ்சநேயர் இருப்பது அபூர்வமாகவும் விசேஷமாகவும் இருக்கிறது முருகன் தன் வேலால் உண்டாக்கிய அனுவாவி சுனை மருத்துவ குணம் கொண்டது அந்தச் சுனையின் நீரை பக்தி சிரத்தையோடு அருந்த எந்த விதமான நோயும் சரியாகிவிடுகிறதாம் சுனையின் நீரும் மிகவும் ருசியாக இருக்கிறது

    வெளிப்பக்கத்தில் மரத்தால் ஆன ரதமும் வைக்கப்பட்டிருக்கிறது தைப்பூசம்,வைகாசி விசாகம் சஷ்டி கிருத்திகைப்போன்ற நாட்களில் இந்த மர ரதத்தில்  முருகன் இரு மனைவியர்களுடன் உலா வருவாராம், இடும்பனுக்கும்  ஸ்பெஷல் இடம்  உண்டு .இந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்த முருகன் தான் குலதெய்வமாம் .முருகன் வேலால் குத்தி வரவழைத்த நீரைத் தான் இந்த கிராம மக்கள் உபயோகப்படுத்துகின்றனர்   இந்த முருகனுக்குப்பூஜை செய்ய வருபவரும் இந்த கிராமத்தைச்சேர்ந்தவர் தான் என்று அங்கு இருந்த ஒருவர் கூறினார் . அந்த ஊர் மக்கள் எத்தனை வயதானாலும் அபிஷேகத்திற்கான பொருட்களைத்தூக்கியபடி அத்தனைப்படிகளையும் ஏறி மேலே வந்து பிரார்த்தனைகள்  செலுத்த வருகின்றனர்  நான் அங்கு இருந்த போது கூட ஒரு வயதானவர் தன் கையில் பெரிய பூமாலை, .பால் நிரம்பிய பாத்திரம்   என்று இரு கையிலும் பல சாமான்களுடன் படிகளைக்கடந்து வந்துக்கொண்டிருந்தார் .  அது அவரது குல தெய்வமாதலால் மிகுந்த சிரத்தையுடன் பூஜைகளை நடத்தினார் .பின் சஷ்டிகவசம் படிக்க ஆரம்பித்தார் .. நாங்களும் அவருடன் சஷ்டி கவசம்
    ஓத அன்றைய தினம் மறக்கமுடியாத தினமாக நினைவில் நின்றது

    இங்கு   வைகாசி விசாகம் .ஆடி கிருத்திகை .தைப்பூசம் போன்ற முருகனின திருநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர் .ஆனால் சூரசம்ஹாரம் இங்கு நடப்பதில்லை என நினைக்கிறேன் திருத்தணி போல் இங்கும் சுப்பிரமண்யன் வள்ளி தேவானையுடன்  சேர்ந்து  நாடி வந்த பக்தர்களுக்கெல்லாம் அருள் புரிகிறார் . மேற்குதொடர்ச்சி மலையின் சூழலில் அதிரம்யமான இயற்கையின் நடுவே அவர் அமைதியுடன் ஆனந்தமாக இருப்பதைப்பார்த்தாலே நம் வாழ்க்கையிலும் பேரானந்தம் தான் என்று நமக்கும்  ஏதோ ஒரு புல்லரிப்பு உண்டாகிறது ,

    ஓம் சரவணபவ

    Share
  • வார ராசி பலன்கள்: (18- 11-02 முதல் 24-11-92 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: இந்த வாரம் மாணவர்கள் நினைத்த இலக்கை அடைய அதிக தன்னம்பிக்கையும், உற்சாகமும் கொண்டு செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகளின் தாக்கம் குறைவதால்  மகிழ்ச்சிக்கு குறைவிராது.  வேலையில் இருப்பவர்கள் பண விஷயங்களில் யாருக்கும் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்து விட்டால், பிரச்சனைகள் வராமலிருக்கும். வீடு, மனை வாங்கி விற்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம்.  கலைஞர்கள் விரும்பிய ஆடை வகைகள் , வாசனைத் திரவியம் ஆகியவற்றை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும்.

    ரிஷபம்: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நலம். . சுய தொழில் செய்பவர்கள் வீண் விரயம் ஏற்படாமல் செயல்பட, இந்த வாரம் இரட்டிப்பு லாபம் வந்து சேரும் . பொது வாழ்வில் இருப்பவர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்த்து  பொறுப்பாக நடந்து கொள்வது அவசியம். .வியாபாரிகள்  பங்குச் சந்தையில், நிலவரத்திற்கேற்றவாறு சமயோசிதமாகச் செயல்பட்டால், போட்ட பணத்தை எடுத்து விடலாம்.  பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒரு வரைமுறை வைப்பது அவசியம்.

    மிதுனம் கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது  பெண்கள் குடும்பத்தில் ஏற்படும் சிறு உரசல்களைப் பெரிது படுத்த வேண்டாம்.  நிதானமான போக்கை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, பண நெருக்கடிகள் தானே குறைந்து விடும்.   பணியில் இருப்பவர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.  தொடர்ந்து மேற்கொள்ளும் பயணங்களால், சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தலை காட்டுவதைத் தவிர்க்க கலைஞர்கள் சத்தான உணவைச் சாப்பிடவும். ஞாபக மறதிக்கு இடமளிக்காமலிருந்தால், மாணவர்களின் கைப்பணம் கரையாது.

    கடகம் : இந்த வாரம் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு ஏற்படும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் வாக்குறுதி கொடுக்கும் முன் யோசிப்பது அவசியம். புதிதாக வேலையில் சேர்பவர்கள் அதிக  வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களும் பாராட்டும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள்.  சுய தொழில் புரிபவர்கள்  புதிய ஒப்பந்தம் பெற அதிக முயற்சி தேவைப்படும்.  .  பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.  அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வியாபாரிகள் சிறிது பாடுபட வேண்டி வரும்.

    சிம்மம் இந்த வாரம்  கலைஞர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவதோடு, தன் திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள். . மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால், அதிக மதிப்பெண்கள் பெறலாம். பணப் பிரச்னை காரணமாக கணவன்-மனைவி இடையே பிணக்குகள் வரலாம். வியாபாரிகள் நல்ல வருமானம் கண்டாலும் அதற்காக ஓய்வின்றி உழைக்க வேண்டியது இருக்கும் . பொதுவாழ்வில் இருப்பவர்கள் பங்கேற்கும் விழா, விருந்து ஆகியவற்றில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால், ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    கன்னி: இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  அவ்வப்போது, குழப்பம் வந்து போகும் என்றாலும், தைரியம் குறையாமல் செயலாற்றினால், பிரச்சனைகள் பெரிதாகாமலிருக்கும். மாணவர்கள் புறம் கூறுபவர்களை அருகில் சேர்க்காமலிருப்பது புத்திசாலித்தனம் . கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் செல்லும் கலைஞர்கள் பழக்க வழக்கங்களிலும், உணவு வகைகளிலும், கட்டுப்பாடாய் இருப்பது அவசியமாகும்.  பெண்களுக்கு பொருளாதார நிலை சற்று இறுக்கமாக இருந்தாலும், மனம் தளராமல் செயல்பட்டால், நிலைமையை ஓரளவு சமாளித்து விடலாம்.

    துலாம்: இந்த வாரம் வியாபார வட்டத்தில்  கருத்து வேறுபாடு கொண்டு விலகிய பங்குதாரர்கள் மீண்டும் இணையும் சூழல் உருவாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பேச்சுகளைத் தவிர்த்து செயலில் இறங்கினால் எடுத்த காரியங்களில் வெற்றி விளையும் . .தொழில் தொடர்பான பிரச்சனைகள் பெருமளவு தீரும் வாய்ப்பிருப்பதால்,சுய தொழில் புரிபவர்கள்  தெளிந்த மனதுடன் செயல்படலாம்.   கலைஞர்கள் ஆடம்பரச் செலவுக்கான தொகையை சேமிப்பாய் மாற்றி வைத்தால், வருங்காலம் வளமாகவும், நலமாகவும் இருக்கும்.

    விருச்சிகம் புதிய சொத்து வாங்க இருப்பவர்கள் சிறிது காலம் பொறுத்திருந்தால் மனம் விரும்பியபடி மனை அமையும்.  உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் உயர்வான நிலையில் இருப்பார்கள். . ஆனால் வேலைப் பளு அதிகரிக்கும் . இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. எனவே பொறுமையாக இருப்பது அவசியம் . வியாபாரிகளுக்கு வெளியுலகத் தொடர்பு மூலம் புது அறிமுகங்கள் கிட்டும் பெற்றோர்கள்  பிள்ளைகள் வகையில் தொல்லைகளைச் சந்திக்கலாம்.  சுய தொழில் புரிபவர்களுக்கு ஓரளவு தடைகள் விலகும்.

    தனுசு: பெண்களுக்கு எதிர்பார்த்தது போல் வேலைகள் நடக்காததால், சில ஏமாற்றங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.  இந்த வாரம் கலைஞர்கள்  எதிர்பாராமல் சந்திக்கும் திருப்பங்கள் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாக அமையும்.  வியாபாரிகளுக்கு  வேலையாட்கள் பிரச்சினை, கடன் போன்ற  தொந்தரவுகள் வந்து  விலகும்.  மாணவர்களின்  எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெற உழைப்பு கை கொடுக்கும். வேலையில் இருப்பவர்கள்  சில நேரங்களில் ஆரோக்கியக் குறைவையும் சந்திக்க நேரும். என்றாலும், உடன் இருப்பவர்கள் தரும் ஒத்துழைப்பால்  வேலைகள் யாவும் சீராய் நடந்து விடும்

    மகரம்: வேலையில் இருப்பவர்கள் சிரமங்களுக்கிடையில், உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற வேண்டியிருக்கும். மனைக் கடனுக்கான விண்ணப்பங்களைக் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்.  கலைஞர்கள் எதிர்பார்க்கும்  சலுகை என்பது பெயரளவிலேயே இருக்கும். கருத்துப் பரிமாற்றத்தில் இனிமை இருக்குமாறு பார்த்துக் கொண்டால், பெண்கள் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள்  வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கவனமாய் இருந்தால், வேண்டிய பணப் புழக்கம் கையில் இருக்கும். இந்த வாரம் வேலையில் இருப்பவர்கள்  சிறிய சச்சரவுகளுக்காக மனம் வருந்தும் சூழல் உருவாகும்.

    கும்பம்:: பிள்ளைகளால் பெற்றோரின்  மகிழ்ச்சி பெருகும்.  இந்த வாரம் வியாபாரிகள் , கூட்டு முயற்சி மூலம் செய்யும் செயலில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டாமல் போகலாம். வேலையில் இருக்கும் பெண்கள் அலுவலக அள்வில் தேவையற்ற விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால், உங்கள் நிம்மதி குலையாமலிருக்கும். கலைஞர்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சபலங்களுக்கு இடம் கொடுக்காமலிருப்பது அவசியம். சிறு தொழில் புரிபவர்கள் வெறும் வார்த்தைகளை நம்பி பிறருக்கு  பணம் கொடுப்பதை தவிர்த்துவிடவும்.

    மீனம்; இது வரை உதவிகரமாய் இருந்தவர்கள் சற்றே விலகிச் செல்ல ஆரம்பிக்கும் சூழல்  இருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது . கலைஞர்களின் திறமைக்கு உரிய வாய்ப்புகள் வந்தாலும், அதைத் தக்க வைத்துக் கொள்ள சற்றே அதிக முயற்சி வேண்டியிருக்கும். மாணவர்கள்  நல்ல நட்புக்கு  நடுவே வீண் சந்தேகத்திற்கு இடமளிக்க வேண்டாம் வியாபாரிகள் ஒப்பந்தங்களில் உள்ள விதி முறைகளை அறிந்து கொண்டு திட்டமிடுதல் மூலம் வீண் பணக் கஷ்டத்தைத் தவிர்த்து விடலாம். பெண்கள்  பயணங்களின் போது புதியவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பது  அவசியம் .

    Share
  • இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?

     

     

                                                                                                                     (கட்டுரை -1)

     

                                                                          சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


    முன்னுரை: “சில வருடங்களுக்குமுன் செல்வி அவர்கள் திண்ணையில் எழுதியதைப் போல, “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படி யென்றால்” என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தப் படாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது.

    அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணு ஆற்றல் தொழில் நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப் படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தப் பட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில் கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.

     

    மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டு மட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளையும் கவனித்தில் கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக்காண ஆவலுடன்.” என்று ஆகஸ்டு 9, 2007 திண்ணைக் கடிதம் ஒன்றில் நண்பர் R. பாலா குறிப்பிட்டிருந்தார்.

    அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?

    என்ற அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறவே இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன். அணு ஆயுத சம்பந்தமான அணுக்கருப் பிளவு எருக்களைத் [Nuclear Fissile Materials Uranium-235, Uraniuam-233 & Plutonium-239] தயாரிக்கும் அணு உலைகளின் கண்காணிப்புகளை இராணுவமும், அரசாங்கமும் தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரகசியமாக நடத்தி வருவதால் அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் எதுவும் நான் குறிப்பிட விரும்பவில்லை.

    Fig. 1

    IAEA Safeguard Programs

    யந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்

    யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

    Fig. 1A

    Nuclear Chain Reaction

    யந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன ! செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை ! அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன. ஆஃபிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை ! 2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது. பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன. யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது. அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது !

    Fig. 1B

    Pressurized Water Reactor

    Schematic

    தொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றன. அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில் இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.. கடந்த நூறாண்டுகளாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது. அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சிகளையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].

    Fig. 2

    IAEA Vienna

    1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது. அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன. அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தினார்கள். அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.

    Fig. 3

    IAEA Inspectors Inspect the Reactor Core

    அணுமின் உலைப் பாதுகாப்புகள் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றன ?

    அணுமின் நிலையப் பாதுகாப்பு நியதி எங்கிருந்து ஆரம்பிக்கிறது ? முதலில் விஞ்ஞானப் பொறியியற் துறை நிபுணர்கள் பயிற்சியிலிருந்து துவங்குகிறது. அணு உலைக்கெனத் தனித்தனி டிசைன், கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார். 1957 ஆகஸ்டில் பாம்பே அணுவியல் துறைக்குச் சேர்ந்த என்னைப் போல் 250 விஞ்ஞானி, பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓராண்டு அணுவியற் பயிற்சி அளிக்கப்பட்டது. அணு உலை இயக்கத்துக்குச் சேர்க்கப் பட்ட எனக்கு பெங்களூர் இந்திய விஞ்ஞான கழகத்தில் [Indian Institute of Science, Bangalore] ஆறு மாதங்களும், பாம்பே அணுவியற் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாதங்களும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவ்விதம் ஒவ்வோர் ஆண்டும் 200-250 பட்டதாரிகள் மொம்பை அணுவியல் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பௌதிகம்., இரசாயனம், மேம்பாட்டுக் கணிதம், மற்றும் அணு உலைகளின் பண்பாடு, இயக்கம், பராமரிப்பு, கதிரியக்கம், அணுக்கழிவுகள் பற்றிக் கல்வி புகட்டப் படுகிறது. இந்தியாவிலே அணுவியல் சம்பந்தப்பட்ட எந்தப் பணிக்கும் பயிற்சி இல்லாத பட்டதாரிகளோ, அல்லது பணியாட்களோ வேலையில் புகுத்தப் படுவதில்லை !

    Fig. 4

    Reconstruction After IAEA Advice

    அணுமின் உலைகள் நிறுவனமாகத் தகுதியுள்ள பல இடங்கள் முதலில் உளவாய்வு செய்யப்பட்டு அவற்றில் தகுதி மிக்கத் தளமே தேர்வாகி முடிவு செய்யப்படுகிறது. அத்தகைய தேர்வு ஆய்வுகளில்

    நீர் வசதி, நில அமைப்பு, ஜன நெருக்கம், காலநிலை, மழைப் பொழிவு, சூழ்வெளி, வேளாண்மை விருத்தி, நிலநடுக்கம், வாகனப் போக்குவரது வசதி, கப்பல் வரத் துறைமுக வசதி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்திய அணுசக்தித் துறையகம் [Indian Dept of Atomic Energy (DAE)], இந்திய அணுசக்தி கார்பொரேஷன் [Nuclear Power Corporation India Ltd (NPCIL)] ஆகிய துறையகங்களில் அனுபவமும், பயிற்சியும் பெற்ற டிசைன், கட்டுமான, இயக்கக் குழுவினர் பலர் இருக்கிறார்கள்.

    Fig. 5

    IAEA Director General

    அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

    அணுமின் நிலையத்தில் இயங்கும் முக்கிய ஏற்பாடுகள் [Plant Operating Systems] எவை ? அனல் மின்சார நிலையத்தைப் [Thermal Power Station] பல முறைகளில் ஒத்ததே அணுமின் நிலையமும்.. அனல்மின் நிலையத்தில் நிலக்கரி எரிசக்தியாகப் பயன்படுகிறது. அதன் கனல் நீராவியை உண்டாக்க ஒரு கொதிகலன் [Boiler] உள்ளது. ஆனால் அணுமின் நிலையத்தில் எரிபொருள் யுரேனியம். அதிலிருந்து வரும் வெப்பத்தால் நீராவி உண்டாக்க அணு உலை அமைக்கப் பட்டுள்ளது ! நீராவி அணு உலையில் நேராக உண்டாக்கப் படலாம். அல்லது ஒரு வெப்ப மாற்றிக் கொதிகலன் மூலம் [Heat Exchanger & Boiler] நீராவி உற்பத்தி செய்யலாம். அவ்விதம் உண்டான அழுத்தமடைந்த நீராவி டர்பைன் சுழலிகளை ஓட வைத்து மின்சார ஜனனி மின்சக்தியை உற்பத்தி செய்து பரிமாறப் படுகிறது.

    Fig. 6

    Reactor Fuel Core

    அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள், சாதனங்கள்

    1. வெப்பசக்தியை உண்டாக்கும் யுரேனியக் கோல்கள் நீரில் மூழ்கிய அணு உலை

    2. வெப்பத்தைக் கடத்தும் வெப்பமாறி நீராவிக் கொதிகலன்.

    3. அணு உலை, கொதிகலன் அடங்கிய கோட்டை அரண் (Containment).

    4. மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன் ஜனனி.

    5. மின்சார அழுத்த மாற்றி & பரிமாறும் மின்சக்திக் கோபுர வடங்கள். [Transmission Tower Cables]

    Fig. 7

    Spent Fuel Bay Inspection

    By IAEA

    அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான பாதுகாப்புகள்

    1. அணு உலை இயக்கச் சாதனங்களுக்கு வேண்டிய காப்பு முறைகள்

    அணு உலையில் முக்கியமாக யுரேனியக் கோல்கள் நீர் நிரம்பிய அழுத்த உலைக்கலனில் (Pressure Vessel) புகுத்தப்பட்டுள்ளன. யுரேனியம் அணுக்கருவை ஒரு நியூட்ரான் பிளக்கும் போது, வெப்பசக்தியும் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்களும் எழுகின்றன. பிறகு அவ்விரண்டு நியூட்ரான்கள் யுரேனியத்திப் பிளந்து அதிக வெப்பமுடன் நான்கு நியூட்ரான்கள் தோன்றுகின்றன. புதிதாக உண்டான நியூட்ரான்களின் வேகத்தைக் குறைத்தால்தான் அணுக்கருப் பிளவு தொடர்ந்து ஏற்பட வசதி பிறக்கும். உலைக்கலனில் உள்ள நீர் நியூட்ரான்களின் வேகத்தை மிதமாக்கும் (Water Moderater]. அவ்விதம் தொடரிக்கம் நிகழ்ந்து வெப்பசக்தி மிகுதியாகவும் நியூட்ரான் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உலைக்கலனில் பெருக்கம் அடையும்.

    Fig. 8

    PWR Reactor Schematic

    நியூட்ரான் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் அணு உலை வெடித்து விடும். யுரேனியத்தில் எழுகின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த “ஆட்சிக் கோல்கள்” (Control Rods) தேவைப் படுகின்றன. அணு உலை நியூட்ரான்கள் பெருகாமல், வெப்பசக்தி ஆக்கத்தை நிறுத்த வேண்டுமானால், “நியூட்ரான் விழுங்கிகள்” [Neutron Absorbers] அல்லது “தடுப்புக் கோல்கள்” (Shut-off Rods) உலைக் கலனில் நுழைக்கப்பட வேண்டும். மிதமிஞ்சி நியூட்ரான் எண்ணிக்கை பெருகி வெப்பசக்தி வேகமாக ஏறும் போது அணு உலையை உடனே நிறுத்த “அபாயப் பாதுகாப்பு ஏற்பாடு” [Emergency Shutdoen System] ஒன்று தேவைப்படுகிறது. அதை நிறைவேற்ற இரண்டு விதமான முறைகள் உள்ளன. நியூட்ரான் மலை விழுங்கி எனப்படும் “கடோலினியம்” திரவ மூலமாக அணு உலை நீரில் பாய்ச்சப்பட வேண்டும் [Gadolenium Poison Injection System]. அல்லது அதிகமான நியூட்ரான் விழுங்கிக் கோல்கள் உலைக்கலனில் புகுத்தப்பட வேண்டும்.

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    Picture Credits:  IAEA, DAE, NPCIL

    1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

    2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

    3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

    4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

    5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.

    6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

    7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

    8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

    9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

    10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants.

    11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    13. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

    14. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

    15.  IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com]  November 16, 2012

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு

     

                                                   சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

                             [ http://www.space.com/13180-titan-surprisingly-earth-surface-revealed-color.html  ]

     

     

    சனிக்கோளின் சந்திரன்களில்
    பூதச் சவ்வுருண்டை போன்ற டிடான்
    பூமியை ஒத்தது !
    தடம் வைத்தது ஹியூஜென்ஸ்
    தளவுளவி டிடானில் !
    சூழ்வெளி வாயு, ஒளிந்திருக்கும்
    ஆழ்கடல் பனிச் சிகரம் கொண்டது !
    சனிக்கோளின் மற்ற சந்திரன்
    என்செலாடஸில்
    பனித்தளம் முறியக்
    கொந்தளிக்கும் தென் துருவம் !
    தரைத்தளம் பிளந்து
    வரிப்புலி போல் வாய்பிளக்கும் !
    முறிவுப் பிளவுகளில்
    பீறிட்டெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள் !
    முகில்மய வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும், மீண்டும் திறக்கும் !
    எழுச்சியின் வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    பனித்தட்டு உருகிப் போய்
    தென் துருவத்தில்
    திரவமானது எப்படி ?
    ஊற்று நீர் வெடித்து வெளியேற
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை யான எழுச்சி !
    புரிந்தும் புரியாதப்
    பிரபஞ்சப் புதிர்களில் ஒன்று !

    +++++++++++++++++

     

    பூமியில் தோன்றிய உயிரினத் தோற்றத்தின் மூலத்தை அறிய, டிடான் துணைக்கோள் உன்னத உயிரியல் குறிப்பீடு அறிந்து கொள்ளும் ஒரு பசுஞ் சோலையாக எங்களுக்குத் தெரிகிறது.  கார்பன் மனாக்ஸைடு, மீதேன் [CO & CH4] போன்ற  சாதாரண உபரி மூலக்கூறுகள் மூலமாய் அடர்த்தியான வாயு மண்டலம் தோன்றியதாகத் தெரிகிறது.   அந்த இயக்கங்களுக்கு ஆர்கானிக் பனிமுகில் துகள்கள், [Organic Hase] எரிகற்களின் உலோகங்கள் வினையூக்கியாய்  [Catalysts] உதவியுள்ளன.

    ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் [Institute of Space Sciences, Barcelona, Spain]

    காஸ்ஸினி விண்ணுளவி சனியின் துணைக்கோள் டிடானில் பெரும் ஏற்ற இறக்க அலையடிப்புகளைக் [Tides] கண்டது, மறைந்துள்ள ஓர் அடிக்கடலைக் காட்டுகிறது.  இப்போது சூரிய மண்டலத்தில் பூமிபோல் இத்தகைய பேரளவு நீர் நிலை இருப்பை இரண்டாவதாக அறிந்துள்ளோம்.  [முதலாவதாக நீர் பீச்சும் ஊற்றுகள் சனிக் கோளின் சந்திரன் என்செலாடஸில் இருப்பது அறியப் பட்டது]

    லூஸியானோ ஐயஸ் [Cassini Spcecraft Lead Member]

     

    டிடானில் திரவ நீரடுக்கு இருப்பது, டிடான் உட்பகுதியில் எப்படி மீதேன் வாயு சேமிப்பாகிறது, எப்படி அது மேற்தளத்துக்குக் கசிகிறது என்று அறிய எமக்கு உதவப் போகும் முக்கியமான ஒரு தகவல்.  ஏனெனில் டிடானின் தனித்துவப் பண்பாடு பேரளவுள்ள மீதேன் மூலமாகவே உண்டாகுகிறது.   ஆயினும் அந்த மீதேன் பரிமாண அளவு டிடான் சூழ்வெளியில்  நிலையற்றது.  பிறகு குறுகிய கால வரையறையில் அழிக்கப் பட்டு மறைந்து போகிறது !

    ஜொனாதன் லுனைன் [Cassini Spacecraft Team Member, Cornell University Ithaca,  N.Y.]

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டு பிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்ப ளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    பூமியில் உயிரினதோற்றம் உருவாக நேர்ந்த ரசாயன இயக்கங்களைப் புரிந்து கொள்ள டிடான் துணைக்கோள் ஒப்பற்ற ஒரு சூழ்வெளியை அறியத் தருகிறது.   அந்த விதத்தில் டிடான் சூழ்வெளி, பூமியின் உயிரின முன்னிருப்பு ரசாயன மண்டலத்தை [Pre-biotic Atmosphere]  எங்களுக்குப் பல வழிகளில் காட்ட ஓர் இயற்கை ஆய்வகமாக உதவுகிறது.

    ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ்.

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலிஃபோர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனி வெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கை யான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    பூமியின் சூழ்வெளியை ஒத்தது டிடானின் வாயு அடுக்கு மண்டலம், நீர் செழிப்பு

    சனிக்கோளின் மிகப் பெரிய துணைக்கோள் டிடான் பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை ஒத்திருந்தே வந்துள்ளது.  பூமிக்கும், டிடானுக்கும் இடையே 800 மில்லியன் மைல் தூரம் இருப்பினும் அவற்றின் ஈர்ப்பு விசையால் அடுக்கடுக்காக வாயு மண்டலமும், நீர்ச் செழிப்பும் வால்மீன்கள், முரண் கோள்கள் [Comets & Asteroids] ஆகியவற்றின் தாக்குதலால் உண்டானவை என்பது தெரிகிறது.

    பூமியில் தோன்றிய உயிரினத் தோற்றத்தின் மூலத்தை அறிய, டிடான் துணைக்கோள் உன்னத உயிரியல் குறிப்பீடு அறிந்து கொள்ளும் ஒரு பசுஞ் சோலையாக எங்களுக்குத் தெரிகிறது.  கார்பன் மனாக்ஸைடு, மீதேன் [CO & CH4] போன்ற  சாதாரண உபரி மூலக்கூறுகள் மூலமாய் அடர்த்தியான வாயு மண்டலம் தோன்றியதாகத் தெரிகிறது.   அந்த இயக்கங்களுக்கு ஆர்கானிக் பனிமுகில் துகள்கள், [Organic Hase] எரிகற்களின் உலோகங்கள் வினையூக்கியாய்  [Catalysts] உதவியுள்ளன என்று ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் [Institute of Space Sciences, Barcelona, Spain] கூறுகிறார்.

    பூமியில் உயிரினதோற்றம் உருவாக நேர்ந்த ரசாயன இயக்கங்களைப் புரிந்து கொள்ள டிடான் துணைக்கோள் ஒப்பற்ற ஒரு சூழ்வெளியை அறியத் தருகிறது.   அந்த விதத்தில் டிடான் சூழ்வெளி, பூமியின் உயிரின முன்னிருப்பு ரசாயன மண்டலத்தை [Pre-biotic Atmosphere]  எங்களுக்குப் பல வழிகளில் காட்ட ஓர் இயற்கை ஆய்வகமாக உதவுகிறது என்றும் ஜோஸஃப்  டிரிகோ ராட்ரிகஸ் கூறுகிறார்.  சூரியனுக்கு சற்று நெருங்கிய அகக்கோள் பூமியிலும், அப்பால் உள்ள புறக்கோள் டிடானிலும் இவ்வாறு வெவ்வேறு மூலப் பொருட்களால் நேர்ந்த  இந்த உடன்பாடு, ஒரு மகத்தான நிகழ்ச்சி, என்றும் அவர் கூறுகிறார்.

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக் கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது !

    fig-1g-saturns-moons

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.

    பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ?

    fig-3-cassini-space-probe-orbiting-saturn

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத்துக்கு உந்து சக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.  காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.

    fig-1c-how-the-geyser-does-function

    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.

    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப் படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

    fig-1f-cassini-huygens-mission

    காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:

    1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்தி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?

    2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது ?

    3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன ?

    4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா ? [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]

    fig-5-saturns-moons

    5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது ? சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா ?  பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா ?  2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன ?

    6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது ? அதன் மூலப் பிறப்பிடம் எது ?

    7. டிடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை ?

    8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது ?

    9. டிடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா ?

    10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா ?

     

    fig-7-sea-floor-shape-comparision

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31.  NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32.  http://www.space.com/14247-saturn-moon-titan-atmosphere-earth.html  [Saturn’s Moon Titan May be more Like Earth]  [January 16, 2012]

    33.  http://m.phys.org/news/2012-06-saturn-moon-titan-harbor-ocean.html   [June 28, 2012]

    34.  http://en.wikipedia.org/wiki/Titan_(moon)  [Saturn’s Lagest Moon Titan] [November 14, 2012]

    35.  Saturn’s Moon — Mirrors the Conditions that Led to the Origin of Life on Earth”  [November 11, 2012]

     

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) [November 15 2012]

     

    Share
  • அவன்

    விசாகை மனோகரன்
     

    வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில்

    வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில்

    நிரந்தரம் என்பது ஏதடா?

    அதை நினைத்து மாய்வது ஏனடா?

     

    ஆட்டத்தின் நாயகன் அவன்

    ஆட்டுவிப்பனும் அவன்

    ஆடாது நிற்க முயன்றால்

    ஆட்டாது விடுவானோ அவன்

     

    ஆட்டுவதும் அவனே

    அரவணைப்பதும் அவனே

    அவன் ஆடாத ஆட்டமா?

    அவன் இல்லாமல் நாமா?

     எல்லாம் அவனே!!!!!!!!

     

     படத்துக்கு நன்றி

    http://www.puppetryindia.org/page1/page7/page7.html

     

    Share
  • வரிவடிவங்கள்-பல்லில்லி்!

     

    சேட்டைக்காரன் (எ) வேணுகோபாலன்

    அவன் பெயர் ஒன்றும் எல்லாரும் அழைப்பதுபோல ‘பல்லில்லி’ இல்லை; பாலகிருஷ்ணன் என்று அழகான பெயர். இந்த ‘பல்லில்லி’ என்ற பெயரை யார், எந்தக் காரணத்திற்காக வைத்தார்கள் என்பதையெல்லாம் சரியாக நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லையென்றாலும், அப்படித்தான்  எல்லாராலும் அழைக்கப்பட்டான். இல்லாவிட்டாலும் அவனை யார் எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அவன் திரும்பிப் பார்த்திருப்பான். ஒரு விசில்; ஒரு கைதட்டல் அல்லது ஒரு ‘டேய்’ அவனைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அனேகமாக அவனுக்கே தனது இயற்பெயர் பாலகிருஷ்ணன் என்பது மறந்திருக்கலாம். ஒருவேளை, அவனுக்குப் பெயரே வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சொன்னாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவன் போன்றவர்களுக்கு எப்படி உயிரும் உணர்ச்சியும் இருக்கிறது என்பதை பலரால் உதாசீனப்படுத்த முடிகிறதோ, அதே மூர்க்கத்தனத்துடன் அவனது பெயரையும் அலட்சியப்படுத்த முடிந்திருந்தது. பெரும்பாலானோர் அதைத்தான் செய்தார்கள்

          அவனுக்கும் ஒரு இயல்பான கடந்தகாலம் இருந்தது. பாலகிருஷ்ணன் ஐந்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான். வயதுக்கு மீறிய உயரம்; மாநிறம்; சுருள்முடியில் அழகாக வகிடெடுத்துக் கொண்டு வருவான். பெரிய படிப்புக்காரனெல்லாம் கிடையாது என்றாலும், தினசரி முதல் மணியடிப்பதற்குள் வகுப்புக்குள் உட்கார்கிற மாணவர்களுள் அவனும் ஒருவனாய்த் தானிருந்தான். பள்ளிக்கூடத்தின் வாசலில் ஈ மொய்க்கிற சவ்வு மிட்டாய், வெள்ளெரிப்பிஞ்சு, மாங்காய் ஆகியவற்றின் மீது ஈர்ப்பில்லாமல், பள்ளி முடிந்ததும் அமைதியாக வீடுதிரும்புவான். கிரிக்கெட், கபடி, கோகோ எதிலும் கலந்து கொள்ள மாட்டான். இயல்பாகவே, அவனுக்கு சினேகிதர்களே இல்லாமல் போனதில் வியப்பொன்றுமில்லை

          ஆனால், அது கடந்தகாலம்!

          இப்போது அவன் முன்னைக் காட்டிலும் உயரம்; உடம்பு கொஞ்சம் மெலிந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போன காலங்களில் அவனது தோற்றத்தில் தென்பட்ட பொலிவு இப்போது கிடையாது. சில சமயங்களில் ஒரே சட்டை, கால்சராயைப் போட்டுக்கொண்டு அவன் நாட்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்கிச் செல்வார்கள் என்றாலும் அவன் எவருக்கும் எந்த இடையூறும் செய்ததில்லை. சொல்லப்போனால், அவன் தான் பற்பல இடையூறுகளுக்கு இலக்காகி விட்டிருந்தான்.

          இப்போது பல்லில்லியை எந்தத் திண்ணையில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உட்கார வைத்து அவனைப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கலாம். மீசை அரும்பத் தொடங்கியவர்கள் முதல் அவனைக் காட்டிலும் இளையவர்கள் வரையில் நிறைய பேர், பேதமில்லாமல் அவனை அழைத்து அருகில் உட்காரவைத்து, அவனைத் தங்களது கேளிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்வர்.

          ”டேய் பல்லில்லி! கண்ணன் சித்தப்பா பாட்டுப் பாடுறா…”

          இந்த நேயர் விருப்பம் அடிக்கடி நிகழ்ந்தேறும். அழைத்ததும் ஓடிச்சென்று, கேட்டவுடன் தயக்கமின்றிப் பாடுவான் பல்லில்லி!

          ”கண்ணன் சித்தப்பா!

         கருப்பட்டி தின்னாரு

         எப்படித்தின்னாரு…..

         ட்ச்..ட்ச்..ட்ச்…ட்ச்…..” என்று கண்ணன் சித்தப்பா கருப்பட்டி தின்னதை அபிநயித்துக் காட்டுவான்.  நேயர் விருப்பம்  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ‘இன்னொரு வாட்டிப் பாடிக்காட்டுறா…’ என்று ஒன்ஸ் மோர் கேட்பவர்களும் உண்டு. எத்தனை பேர், எத்தனை முறை கேட்டாலும் சங்கோஜப்படாமல், சந்தோஷமாகப் பாடுவான் பல்லில்லி.

          ”டேய், வாசு சித்தப்பா பாட்டு பாடுறா…!” என்று யாராவது கேட்பார்கள். உடனே சுற்றியமர்ந்திருக்கும் பட்டாளமே விசிலடிக்கும்; உற்சாகக்கூச்சலிடும்.

          ”மாட்டேன்!” என்று நாணுவான் பல்லில்லி. எல்லாரும் அவனை வற்புறுத்துவார்கள்; ஆசை வார்த்தை சொல்லுவார்கள்.

          ”பாடுறா டேய்! கதலிப்பழம் வாங்கித்தர்றேண்டா!”

          ”கடலை மிட்டாய்…?”

          ”சரி, கடலை மிட்டாய் வாங்கித்தர்றேண்டா…..!”

          ”ஒரே ஒரு வாட்டிதான் பாடுவேன்…!” பல்லில்லி நிபந்தனை விதிப்பான்.

          ”சரி, பாடு!”

          ”வாசு சித்தப்பா…

          $@!#*&$%^@!#!@#$&@!

          $@!#*&$%^@!#!@#$&@ “

          சுற்றியிருக்கும் கூட்டம் குபீரென்று சிரிக்கும். அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு, அந்தந்தத் திண்ணைக்குரிய வீட்டிலிருந்து எவராவது வெளிப்படுவார்கள்.

          ”டேய், என்னடா சத்தம் இங்கே? டேய் பல்லில்லி, கிறுக்கா, எந்திரிச்சிப் போடா…போடா அறிவுகெட்டவனே….!”

          பல்லில்லி போகாமல், சிரித்துக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து தானும் விழுந்து விழுந்து சிரிப்பான். அவனுக்கு சற்றுமுன் தான் பாடிய பாட்டின் விபரீதமான பொருள்பற்றிக் கிஞ்சித்தும் தெரியாது. பொழுதுபோகாமல் ஊர்சுற்றித்திரிகிற கும்பல்களுக்கு, தான் ஒரு இலவசமான கேளிக்கையாக இருப்பதும், அவர்களில் சிலர் தனக்குக் கற்றுத்தருகிற சில சங்கதிகளில் வக்கிரம் தோய்ந்து கிடப்பதும், அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, அந்த அருவருப்புகளையே தனது அடையாளங்களாக்குவதும் – எதுவும் தெரியாது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது. காரணம் எதுவென்றால், மருத்துவ விபரங்களுக்குள் போகாமல் ஒற்றை வார்த்தையில், அவனுக்கு ‘கிறுக்கு’ பிடித்திருந்தது; அவ்வளவுதான்!

          மாசி மாதத் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஏழாவது நாளன்று ’சப்பரம்’ என்று சொல்லப்படுகிற அலங்கரிக்கப்பட்ட மேடையில், நடராஜரின் திருவுருவத்தை வைத்துக் கொண்டு ‘தில்லையம்பலம்… திருச்சிற்றம்பலம்… ஆடினாரே… ஆடினாரே..’  என்று சுமந்து வருகிறவர்களும் ஆடியவாறே தேரோடும் வீதிகளில் ஓடோடி வருவார்கள். ஒரு வருடம் தெருமுனை வரைக்கும் வந்த ஊர்வலம் உள்ளே வராமல் மாற்றுப்பாதையில் சென்றபோதுதான், பாலகிருஷ்ணனின் அம்மா இறந்த தகவல் பலருக்குத் தெரிய வந்தது.

          அன்று அதிகாலை எழுந்து, கோவில் குளத்தில் குளித்துவிட்டு, அரசமரத்தை வழக்கம்போல் சுற்றிவந்துவிட்டு, முத்தாரம்மன் கோவிலில் எண்ணை விளக்கேற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தன் மேல் மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு இறந்துபோனார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. ‘ஏன்?’ – இந்த ஒற்றைக் கேள்விக்கு அவரவர் தங்களது அனுமானங்களுக்கேற்ப பல பதில்களைப் பரப்புரை செய்து கொண்டிருந்தனர் என்றாலும், அந்தத் துயரசம்பவத்தின் உண்மையான காரணம் எதுவென்று யாராலும் சரிவர ஊகிக்க முடியவில்லை. அன்றுமுதல் பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டான் என்பது மட்டும் சகமாணவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவன் வீட்டை விட்டு வெளியே வராமலிருந்ததுதான் அவன் தாயாரின் மரணத்தைக் காட்டிலும் பெரிய மர்மமானது.

          அவனது வயதுக்காரர்கள் அவனை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில், திடீரென்று பாலகிருஷ்ணன் வெளியே மீண்டும் நடமாட ஆரம்பித்தான். அந்தக் காலகட்டத்தில் தான், முதலில் அதிர்ச்சியூட்டினாலும் நாட்பட நாட்பட பலரின் அனுதாபத்துக்கும் சிலரின் எள்ளலுக்கும் ஆளான அவனது நடவடிக்கைகள், அவனை பாலகிருஷ்ணனிலிருந்து பல்லில்லி ஆக்கின என்று சொல்லலாம். உண்மையில், அந்தப் பெயருக்கு எந்தப் பொருளும் கிடையாது. அவனுக்குச் சூட்டப்பட்ட பட்டப்பெயரும் அவனைப்போலவே குறிக்கோளற்றதாக அமைந்தது.

          திருமணமோ, திருவிழாவோ, ஊர்வலமோ எதுவாயிருந்தாலும் சரி, மேளக்காரர்களுக்குப் பின்னால் சிரித்தபடி ஆடிக்கொண்டே போவான். தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் வாலைத்தூக்கி அசுத்தம் செய்யும்போது குலுங்கிக் குலுங்கி உரக்கச் சிரிப்பான். காய்கறி விற்பவர்கள் பின்னாலேயே சென்று அவர்களைப் போலவே குரலெழுப்பியபடி தொடர்வான். தபால்காரருடன் தெருவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ‘சார் போஸ்ட்’ என்று குரல் கொடுப்பான். இப்படி, இன்னும் அவனது வினோதமான நடவடிக்கைகளின் பட்டியலின் நீளம் மிகவும் அதிகம். ஆரம்பத்தில் அனுதாபம் காட்டியவர்களும் பின்னாளில் ஏனோ அவனை அயர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

          அன்று தெருவில் விறகுவண்டிகள் வந்து போயிருந்தன. பல வீடுகளின் வாசலில் விறகுத்தடிகள் இறக்கப்பட்டிருக்க, கோடாரியால் பெரிய பெரிய தடிகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கள் வீட்டு வாசலிலும் விறகு வந்து இறங்கியிருந்தது. விறகுவெட்டி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருப்பதை பல்லில்லி வேடிக்கை பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.

          விறகுவெட்டி ஒவ்வொரு முறையும் கோடாரியை உயர்த்தும்போது தலையைத் தூக்கி, அது வேகமாக விறகின் மீது விழும்போது தலையை அதே வேகத்தில் இறக்கி, வாய்விட்டுச் சிரித்து, கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான். அவனது நடவடிக்கைகள் புரியாமல் முதலில் சிரித்தபோது ‘ஐயோ பாவம், சிரிக்காதேடா’ என்று என் பாட்டி கண்டித்திருந்தார் என்பதால் குழப்பத்துடன் அவனையே ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

          ”லேய், தள்ளி உட்காருலே! “ விறகுவெட்டி எச்சரித்துக் கொண்டிருந்தார். “கண்ணுலே சிலாம்பு ஏறுனா பெறகு கதை கந்தலாயிரும்…தள்ளி உட்காருலே!”

          பல்லில்லி தள்ளி உட்காராமல் சிரித்துக் கொண்டிருக்கவே, அந்த விறகுவெட்டி பொறுமையிழந்து அவனை வசைபாட ஆரம்பித்தார்.

          ”ஐயோ பாவம்!” என்றாள் பாட்டி. “தாயில்லாப் புள்ளே எப்படிச் சீரழியுது பாரு!”

           நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் விறகு வெட்டப்படுவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, விறகுவெட்டியின் கோடாரியின் அதிரடியில் ஒரு பெரிய விறகுத்துண்டு ஜிவ்வென்று காற்றில் பறந்து பின்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லில்லியின்  நெற்றியை ஒரு ஏவுகணை போலத் தாக்கியது.

          ”அம்மா!”

          புத்தி சுவாதீனமில்லாதவன், வலியில் அலறியதைக் கேட்டதும், ‘அம்மா’ என்ற அந்த ஒரு ஒற்றை வார்த்தையின் பொருள் எனக்கு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிக அழுத்தமாய்ப் புரிந்தது போலிருந்தது.

                   ***********

    படங்களுக்கு நன்றி:

    http://natarajar.blogspot.in/2008_06_01_archive.html

    Share
  • யாருக்காக அழுதாள்?

    தேமொழி

    இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டு பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையை சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள ஒரு பக்க பையில் செருகிக் கொண்டேன்.  அடுத்த பக்கப் பையில் சில்லறைகள் வைத்திருக்கும் சிறிய பர்ஸும் வீட்டுச் சாவியும் இருக்கிறதா என நிச்சயப் படுத்திக் கொண்டேன். நாற்காலியின் சாயுமிடத்தில் தொங்கிய, பெரிய, மஞ்சள் கரடியின் பாதத்தில் “cal” எனப் படம் போட்ட நீல நிற ஹூடி அங்கியை மாட்டிகொண்டு வகுப்பறைக்கு வெளியே வந்தேன். வகுப்பு முடிந்து இரண்டு நிமிடத்திற்குள் வகுப்பும், நீண்ட தாழ்வாரமும் காலியாகி இருந்தது.

    பல்கலைக்கழகத்தை விட்டு வெளியில் வந்ததும் நவம்பர் மாத முதல் வாரமாக இருந்தாலும் பளீரென அடித்த மதிய வெய்யிலும்,  நீலவானமும், இதமான வெப்பத்துடன் இருந்த சூழ்நிலையும், வரப்போகும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களும் மனதுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  பார்ட் (BART) இரயில் நிலையத்தை நோக்கி நடந்த பொழுது இப்பொழுதே வீட்டிற்கு போய் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது.  ரஹீம் ஏதோ ஒரு கருத்தரங்கு என்று சியாட்டில் சென்று இரண்டு நாளாகிவிட்டது.  மீண்டும் திங்களன்றுதான் வீட்டுக்கு வருவார்.

    இம்முறையும் அவர் உருவத்தையும் பெயரையும் பார்த்து, விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்பவர்கள் அவரைத் தனியே அழைத்து தட்டித் தடவி, உடமைகள் மற்றும் பெட்டிகளைக்  கொட்டிப் பார்த்து அலைக் கழித்திருக்கிறார்கள். ஒருமுறை கூட விமான பயணத்தில் அவருக்கு இது நடக்கத் தவறியதில்லை. சியாட்டில் போய் சேர்ந்ததும் தொலை பேசியில் அழைத்து ஆற்றாமை தாங்காமல் அதைப் பொரிந்து தள்ளிய பொழுது அமைதியாகக் கேட்டுக் கொண்டேன். மனக் குமைச்ச்சலை வெளியிட்டால் ஆறுதலாவது கிடைக்கும் அல்லவா? மீண்டும் திரும்பி வரும்பொழுதும் நிச்சயம் இந்தக் கூத்து  நடக்கும்.  இதனை “ராண்டம் செர்ச்” என்று வேறு சொல்லிக் கொள்வார்கள்.  ரஹீம் சொல்வது போல இந்த ராண்டம்னஸ் பரிசுச் சீட்டு வாங்கும்பொழுதும் இருந்தால் அவர்கள் இப்பொழுது மில்லியனர்களாக இருந்திருப்பார்கள். இந்த வெள்ளியன்று குலுக்கும் மெகாமில்லியன் பரிசுத் தொகை இருபத்தியைந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அப்பொழுது மட்டும் இந்த ராண்டம்னஸ் வேலை செய்வதில்லையே அது ஏன்?

    யோசித்தவாரே சாலையில் இருந்து படி இறங்கி சுரங்கப் பாதையில் இருக்கும் பார்ட் இரயில் நிலையத்தை அடைந்தேன், பயண அட்டையை கதவு போட்ட வேலியின் இயந்திரத்தில் நுழைத்து அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். ஆரஞ்சு வண்ண வழித்தடத்தில் தெற்கு நோக்கி செல்லும் வண்டி வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று அறிவிப்பு பலகையில் மாறி மாறி மின் எழுத்துக்களில் வரும் அறிவிப்பை பார்த்துக்கொண்டே நடந்த பொழுது “ஹாய் மேடி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் வகுப்புத் தோழன் ஸ்டீவ். வாட்டசாட்டமான உருவமும் மொட்டைத் தலையும் உள்ள அவன் கருப்பு இன வழி வந்தவன்.  அவன் மிதிவண்டியைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தான்.  அந்த சைக்கிள் அவன் உருவத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு பொம்மை போல இருந்தது.  பளீர் என்ற வழக்காமான சிரிப்பு அவனிடம்.

    மாதவி என்ற என் பெயரை பலருக்கு இங்கே சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை.  பெரும்பாலும் ‘மதாவி’ என்று நெடிலைத் தூக்கி தேவையட்ற இடத்தில் போட்டு என் பெயரை ‘சதக்’ ‘சதக்’ செய்யும் கொடுமையைத் தாங்காமால் ‘மேடி’ என எல்லோரையும் அழைக்கச் சொல்வேன்.  ‘ஆர்னால்ட் ஷுவிஷனைகர்’ என்ற நீண்ட, கடுமையான அவர்களது மாநில ஆளுநர் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களுக்கு, எனது குட்டிப் பெயரை சரியாக உச்சரிப்பதில் ஏனிந்த சிரமமோ தெரியவில்லை. எம்மிற்கு அடுத்து டபுள் ஏ போட்டால் சரியாக உச்ச்சரிப்பார்களோ என்னமோ?

    அந்தக் கருப்பழகனுடன் அவன் தோழி மஞ்சளழகியும் நின்று கொண்டிருந்தாள்.  எனக்கு இன்னமும் ஒருவரின் முகவெட்டைப் பார்த்து அவர்கள் ஃபிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளில் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லத் தெரிவதில்லை.  எல்லோருமே சீன நாட்டவர்கள்தான் எனக்கு. அந்த மஞ்சளழகியும் சீன நாட்டவள்தான் என்னைப் பொறுத்தவரை.  அவளுடைய மூதாதையர்கள் அங்கே இருந்து குடி பெயர்ந்திருக்கலாம்.  இவள் பேசும் ஆங்கிலம் அமெரிக்கர்கர்கள் ஆங்கிலம்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன்  காதில் வந்து விழும் ஐ பாட் இசைக்கு தலையைத் தலையை ஆட்டியவாறு இருந்தாள்.  நான் வீட்டுக்குப் போகும் வழியில் வழக்கமாக இருவரும் ஓக்லாண்ட் நிலையத்தில் இறங்கிவிடுவார்கள்.

    நடைபாதையில் போடப்பட்ட கோடுகளுக்கு நேர் எதிரே கதவுகள் சரியாகப் பொருந்துவது போல வண்டி நிறுத்தப்பட்டது. இறங்குபவர்களுக்கு வழி விட்ட பின்பு ஏறுபவர்கள்  ஒழுங்காக வரிசையாக ஏறினார்கள்.  ஸ்டீவ் தன்  தோழியுடனும் சைக்கிளுடனும் இறங்க வசதியாக கதவு பக்கமே உட்கார்ந்து கொண்டான்.  நான் போகும் ஹேவர்ட் நிலையத்திற்கு அரைமணிக்கும் மேல் பயணம்.  உள்ளே தள்ளி வசதியாக ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து, எனது ஐ பேட் மின்பலகையை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைத் தொடர்ந்தேன். ‘டிங் டிங்’ என்று கைபேசி ஒலி எழுப்பியது. அது குறுஞ்செய்தியின் அறிவிப்பு ஒலி. லீலா அனுப்பியிருந்தாள். “என் வீட்டிற்கு உடனே வர முடியுமா?”, “ஒகே” என்று அனுப்பிவிட்டு வெளியே பார்த்தேன். வண்டி ஆஷ்பி நிலையத்தை அடைந்திருந்தது.  அடுத்து வரும் மெக்கார்த்தர் நிலையத்தில் இறங்கி வண்டி மாறினால் லீலாவின் வீட்டிற்குப் போகலாம். எழுந்து கதவருகில் வந்து தயாராக நின்று கொண்டேன்.  ஏன் இங்கேயே இறங்குகிறாய் என்ற கேள்வியை பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கண்களால் ஸ்டீவ் கேட்டான். தோழியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்.  வண்டி நகர்ந்த பொழுது புன்னகையுடன் “ஹாவ் எ நைஸ் வீக்கெண்ட்” என்று அவனும் மஞ்சளழகியும் கையசைக்கவே நானும் வாழ்த்திக் கையசைத்தேன்.

    அறிவிப்புப்  பலகை குறிப்பிட்டபடி வடக்கு நோக்கி செல்லும் மஞ்சள் வழித்தடத்தின் வண்டி வரும் நேரத்தையும், வால்நட்க்ரீக்கில் இருக்கும் லீலாவின் வீட்டிற்கு உள்ள பயண தூரத்தையும் கணக்கிட்டு, அரைமணி நேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.  வண்டி வந்து ஏறி உட்கார்ந்ததும் லீலாவைப் பற்றிய சிந்தனை ஓடியது.  இம்முறை லீலாவைப் பார்த்து மூன்று நான்கு மாதங்கள்  ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. அவள் தாய் மொழி தெலுங்கு, ஒரே நாட்டில் இருந்து வந்திருந்தாலும் ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் நிலை.  இருவரும் ஒன்றாகப் படித்து பட்டம் வாங்கினோம். அவள் திருமணம் குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிட்டாள், மேற்கொண்டு படிக்க சிறிது பணம் சேர்ப்பதற்காக நான் மூன்றாண்டுகள் வேலை செய்த பின்பு மீண்டும் முது நிலை பட்டம் வாங்க பல்கலைக் கழகத்தில் நுழைந்து, வாழ்க்கை இன்னமும் மாணவப் பருவத்திலேயே இருந்தது.  லீலாவிற்கு இரண்டு மகன்கள், மூன்றாவதாக ஒரு பெண் வேண்டும் என்று முயற்சி செய்கிறாளாம்.

    அவள் கணவனுக்கு நல்ல வேலை, நல்ல வருமானம்.  அவளுக்கும் வேலைக்குப் போக விருப்பம்தான், ஆனால் மற்றொரு கார் செலவு, வேலைக்கேற்ற உடை, குழந்தைளைக் காப்பகத்தில் விடும் செலவு என எல்லாமும் சேர்ந்து “தானிக்கு தீனி” என செலவழிந்து கடைசியில் ஒன்றும் மிஞ்சாது.  எனவே பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டால் வீட்டிலிருப்பதே மேல் என முடிவு செய்திருந்தாள்.  பிள்ளைகள் வளர்ந்த பின்பு வேலைக்குப் போவாளாம். புஷ் ஆட்சி காலத்தில் மட மடவென வீழ்ந்த வீடுகளின் விலை சரிவினால், இப்பொழுது வீடு வாங்கி கையைச் சுட்டுக் கொள்வதைத்  தவிர்க்க ஒரு அப்பார்ட்மெண்ட் தொடர் குடியிருப்பில் வசிக்கிறாள்.

    இரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு பக்கம்தான். அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரத்தில் கதவு திறந்தது.  அழுது சிவந்த கண்களுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நின்ற லீலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். பேசும் பொழுது புரிவது போல குறுஞ்செய்தி வழியே செய்தி அனுப்புபவரின் உணர்ச்சிகள் அவ்வளவாகப் புரிவதில்லையே.  என்ன ஆச்சு லீலா? என்றேன், என்னையும் அறியாமல் என் குரலில் பதட்டம் வந்துவிட்டது.  “மேடி” என்று கூச்சலிட்ட வண்ணம் அவள் மகன்கள் ஓடி வந்து என் காலைக் கட்டிகொண்டார்கள்.  அவர்களிடம் என்னை ‘ஆண்ட்டி’ என்று அழைக்கக் கூடாது ‘மேடி’ என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறேன்.  இன்னொரு இந்திய ஆண்ட்டியாக என்னை அடையாளம் காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

    லீலா சமையலறையை நோக்கி நடந்தாள், நானும் பின் தொடர்ந்தேன்.  அவள் மகன்கள் மீண்டும் தொலைக்காட்சி பார்க்க ஓடி விட்டார்கள்.  இப்பொழுதுதான் பார்த்தேன், அந்த சிறுவர்களின் வயதை ஒத்த இரு சிறுமிகளும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இவள்தான் எங்கள் மேடி  ‘ஆண்ட்டி’ என்று மூத்தவன் அந்த சிறுமிகளுக்கு என்னைப் பெருமையுடன் அறிமுகப் படுத்தினான். அதில் என்ன பெருமை என்பது எனக்கு விளங்கவில்லை. அந்த இரண்டு சிறுமிகளும் அழகான கொழுக் மொழுக் செல்லுலாயிட் பொம்மைகள்.  புன்னகை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.  மீண்டும் மழலைப் பட்டாளம் ‘டோரா’ தொலைக் காட்சியில் சொல்லிக்கொடுப்பதை ஆவலுடன் சேர்ந்து கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  நான் சமையலறைக்குப் போனதும் லீலா எனக்கு விருந்தோம்பலாக கொடுத்த கோக் டப்பாவைத் தள்ளி வைத்துவிட்டு “என்ன ஆச்சு சொல்லு” என்றேன்.

    உணவருந்தும் மேஜையின் நாற்காலில் அமர்ந்த வண்ணம் “அந்த பெண்குழந்தைகளைப் பார்த்தாயா?” என்றாள்.

    “உன் பக்கத்துக்கு வீட்டிற்கு டெக்ஸ்சாசில் இருந்து புதிதாக ஒரு இந்தியக் குடும்பம் வந்திருக்கிறது, அவள் பெயர் நிஷா என்று நீ தொலைபேசியில் சொன்ன ஞாபகம். அவர்களுக்கு இரண்டு பெண்கள் என்று நீ சொன்னதும் நினைவிருக்கிறது, அந்தக் குழந்தைகளா இவர்கள்?”

    “ஆமாம், நீ யூகித்தது சரிதான்”

    “அதற்கும் உன் அழுகைக்கும் என்ன தொடர்பு?”

    “குழந்தைகளுடைய பெற்றோர்கள் நேற்று இரவு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள், குழந்தைகளுக்கு இன்னமும் அந்த விபரம் தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தவாறே விம்மினாள்.

    லீலா விரிவாக சொல்லத் தொடங்கினாள்.  சமீபத்தில் அங்கு குடி வந்த நிஷாவின் குடும்பம் மிகச் சிறிய மகிழ்ச்சியான குடும்பம். திருநெல்வேலி பக்கம் ஏதோ ஒரு சிறிய கிராமம் நிஷாவின் கணவனுக்கு, நிஷா மும்பையில் வளர்ந்தவள். வந்த சில நாட்களிலேயே குழந்தைகளும் நிஷாவும் லீலா குடும்பத்துடன் நன்கு பழகி விட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு  நிஷாவும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறாள்.  குழந்தைகளை இரவில் கணவனும், பகலில் அவளும் பார்த்துக்கொள்ள வசதியாக ஒரு இரவு நேர வேலை கிடைத்தது. இரவு எட்டு மணிக்கு கிளம்பினால் காலையில் ஆறு மணி போல வீடு திரும்பும் வகையில் ஒரு மருத்துவமனையில் வேலை.

    நேற்று இரவு நிஷாவின் கணவன் லீலா வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான்.  நிஷா வேலைக்கு கிளம்பும் முன்பு பார்த்த பொழுது அவள் காரின் சக்கரம் பழுதடைந்திருக்கிறது, காற்று இல்லை.  எனவே தன் காரில் கொண்டு விட்டு வர நினைத்திருக்கிறான்.  அவன் குழந்தைகள் லீலாவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், ஒரு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு மனைவியுடன் சென்றுவிட்டான்.  இரவு மணி பத்திற்கும் மேலாகி குழந்தைகளும் லீலாவின் வீட்டிலேயே தூங்கி விட்டார்கள்.  என்னவோ, எதுவோ சரியில்லை என லீலாவின் கணவன் நிஷாவின் கணவனை அவனது  கைபேசியில் அழைத்திருக்கிறான்.  ஆனால் மறுமுனையில் பேசியதோ போலீஸ்.  குடிகாரன் ஒருவன் தாறுமாறாக வண்டி ஓட்டி இவர்கள் காரில் மோதி பெரிய விபத்து.  வண்டி உருண்டு தீப்பிடித்துவிட, இறுகிப்போன காரின் கதவையும் உடனே திறந்து அவர்களை வெளியே இழுக்க முடியாமல் கால தாமதமாகிப்போன காரணத்தினால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. போலீஸ் அந்த கைபேசியின் வழியே உறவினர் யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

    நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது இடையில் லீலாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.  அவளது மொழியில் பேசினாள்.  அவளது கணவன் போலிருக்கிறது.  பேசி முடித்தவுடன் மீண்டும் அழுதாள், அவளைச் சுற்றி மூக்கை சிந்திய டிஷ்யூ காகிதம் குவிந்திருந்தது. கொஞ்ச நாள் பழக்கத்தில் அந்த நிஷா தம்பதியினரின் மறைவுக்கு எப்படி அழுகிறாள், என்ன ஒரு இளகிய மனம் இவளுக்கு என்று லீலா மீது இரக்கமாக இருந்தது.  அவளாகவே மேலும் பேசட்டும் என மெளனமாக திரும்பி அந்த சிறுமிகளைப் பார்த்தேன்.

    இப்பொழுது அவர்கள் சின்னத் திரையில் டோரா விடுத்த வேண்டுகோளின்படி “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”,  “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்” என்று கூச்சலிட்டார்கள்.  அவர்கள் அதை அந்தக் கதையில் வரும் சூழ்ச்சிக்கார நரியிடம் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை.  தங்கள் பெற்றோரைக் கொண்டு சென்ற விதியிடம் சொல்வதாகத் தோன்றியது.  பெரும்பாலும் தோல்வியடைந்து “ஓ மேன்” என சலித்துக் கொள்ளும் கார்ட்டூன் நரி இந்த முறை “யு ஆர் டூ லேட்” என்று கூறி “ஹெக் ஹெக் ஹே” என்று சிரித்து டோராவின் பொருளைத் திருடிக் கொண்டு ஓடியது.  அது அந்த சிறுமிகளின் விண்ணப்பத்திற்கு நரியின் வழியாக விதி சொன்ன பதிலாகத் தோன்றியது.  இந்த அழகுக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போன, இதுவரைப் பார்த்திராத நிஷா தம்பதியரின் மீது எனக்கும் பரிதாபமாக இருந்தது. எதேச்சையாக திரும்பி என்னைப் பார்த்த சிறுமிகளில் ஒருத்தியிடம் இங்கே வா என சைகை செய்தேன்.  அவள் வந்து என் மடியில் உட்கார்து கொண்டாள்.

    அவளைப் பார்த்தவாறே, “இவர்களை இவளது உறவினர்கள் வந்து பெற்றுக்கொள்ளும் வரை எங்களுடன் வைத்துக்கொள்ள போலீஸ் அனுமதி கொடுத்துள்ளார்கள்” என்றாள் லீலா.

    “இதைத்தான் உன் கணவர் இப்பொழுது சொன்னாரா?”

    ஆமாம் என்று தலையாட்டிய லீலா, “நிஷாவுக்கு உறவுகள் யாரும் இல்லை, அதனால் நிஷாவின் கணவனது தம்பியைத் தொடர்பு கொண்டு செய்தி சொன்னாராம்.  அந்த தம்பி இந்தியாவில் இருந்து உடனே புறப்பட்டு வந்து குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னாராம்.  அந்த சின்னக் கிராமத்தில் இவர்கள் எதிகாலம் என்னவாகுமோ தெரியவில்லையே” என்றாள்.

    “என்ன இருந்தாலும் அப்பா அம்மா பார்த்துப் பார்த்து இவர்களை வளர்ப்பது போலாகுமா?” என்று உடைந்த குரலில் சொன்ன லீலா, திடீரென அந்த சிறுமியிடம் கைநீட்டி “பாவி, பாவி,  உங்களை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டாள் உன் அம்மா, இப்படி நட்டாற்றில் விட்டு விட்டுப் போனாளே அந்தப் பாவி,” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள்.  அந்தக் குழந்தைக்கு எதுவும் புரியாமல் திரு திருவென விழித்து அழுது விடுவது போல முகம் மாறியது.

    நான் உடனே சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு டிவி முன் உட்காரவைத்து அதன் கவனத்தை திசை திருப்பிவிட்டு அங்கிருந்தே லீலாவைத்  திரும்பிப் பார்த்தேன். இப்பொழுது அவள் இந்தக் குழந்தைகளுக்காக, இவர்களது எதிர்காலத்தை எண்ணி அழுவது புரிந்தது.  இது போன்று அடுத்தவர்களின் குழந்தையின் எதிர்காலாத்தை எண்ணித் துடிக்க ஒரு பெண்ணால் அவள் தாயான பின்புதான்  முடியுமோ என்று தோன்றியது. இந்த நிலையில் லீலாவின் உடனிருப்பதுதான் அவளுக்கு நல்லது, இன்றிரவு இங்கேயே தங்கி விடலாம் எனத் தீர்மானித்தேன்.

    லீலாவின் இளைய மகன் சமயலறைக்கு ஓடி மேஜையடியில் உட்கார்ந்திருந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.  பிறகு சமயலறையில் உள்ள மேடையைப் பார்த்தான், பிறகு மீண்டும் திரும்பி அம்மாவைப் பார்த்தான்.  அவனுக்கு என்னவோ வேண்டும் ஆனால் அழும் அம்மாவிடம் கேட்க தயக்கம் எனப் புலப்பட்டது.  அவனிடம் சென்று தோளைத் தட்டி “ஹாய் ஹாண்ட்ஸம்,  என்ன வேண்டும் உனக்கு?” என்றேன்.

    “மேடி, சாக்லேட் டோநட் கொடு”, என்று ஒரு பெட்டியைக் காட்டிக்  கேட்டான். அதிலிருந்து ஒரு  டோநட்டை அவனிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, தொலைக்கட்சியில் மூழ்கிவிட்ட மற்ற குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.  இளையவன் டோநட் சாப்பிட்ட வண்ணம் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனைத் தூக்கி மேஜையில் லீலாவின் அருகில் உட்கார வைத்தேன்.  இவனைப் பார்த்தாவது சமாதானம் அடைவாள் இல்லையா?  சப்புக் கொட்டியவாறு டோநட் சாப்பிட்டுக் கொண்டு, அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தலையைத் தடவிக் கொடுத்த மகனை அமைதியாக சிறிது நேரம் பார்த்தாள் லீலா. பிறகு மீண்டும் பெரிதாக விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

    இப்பொழுது அந்த அழுகையில் ஒரு அச்சமும் கலந்து இருந்தது.  நிஷாவின் குழந்தைகள் இடத்தில் இப்பொழுது தன் குழந்தைகளை வைத்துப் பார்ப்பாளோ? தானும் தன்  கணவனும் திடீரென ஒருநாள் இதுபோலவே சாலை விபத்தில் இறந்துவிட்டால் தன்  மகன்களின் கதி என்ன ஆகும்? அவர்கள் அனாதைகளானால் அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்? என்ற அவளது அச்சம் அவள் அழுகையின் ஊடே வெளிப்படுவதாகத் தோன்றியது, அவள் இப்பொழுது அழுவது அவளது மகன்களுக்காகவோ?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
     
    ஒரு நாட்டின் ஊடகம் என்பது அந்நாட்டின் முதுகெலும்பைப் போன்றது. ஊடகங்கள் சர்வாதிகார அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் அந்நாட்டுப் பிரஜைகளின் குரல்வளை நெரிக்கப்படுவது போன்ற ஒரு நிலையே தோன்றுகிறது.
     
    ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஊடகங்களின் சுதந்திரத்திலேயே நாடுகளின் சுபீட்சமும், தன்மானமும் காக்கப்படுகிறது.
     
    ஊடகங்களுக்கே பதவியிலிருப்போர் அப்பதவியின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகிக்கும்போது அதைத் தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. நாட்டின் முன்னனிப் பிரஜைகள் தவறான பாதையில் போகும் போது அதைச் சுட்டிக் காக்கும் கடமை சுதந்திரமான ஊடகங்களின் கைகளில் தங்கியுள்ளது.
     
    ஆனால் அச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களுக்கு அவ்வூடகங்கள் தரும் செய்திகளில் உள்ள உண்மையின் மீது நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் அதைப் பாதுகாக்கும் கடமை கூட அவ்வூடகங்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. சுதந்திரத்திர்கும், தாந்தோன்றித்தனத்திற்கும் இருக்கும் எல்லையைக் கடந்து விடாமல் இருக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகிறது.
     
    என்ன சக்தியின் இம்மடலின் பீடிகை நீண்டு கொண்டே போகிறது ? என்ன விடயமாக இருக்கும் என்னும் ஆவல் உங்களுக்கு ஏற்படுவது எனக்குப் புரிகிறது.
     
    பி.பி.ஸி உலக ஊடகத்துறையினருக்கே ஒரு முன்னுதாரணமாக, பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பிரித்தானிய நாட்டின் தேசிய ஊடகத்தின் மீது படிந்த கறைகளைப் பற்றிய ஒரு அலசலுக்கான பீடிகையே நீங்கள் மேலே கண்டது.

    பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பெனி (British Broadcasting Company) 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி ஆறு பிரத்தியேக கம்பெனிகளினால் பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இதன் முதலாவது ஒலிபரப்பு 2LO எனும் ஸ்டேசனுக்காக லண்டனில் உள்ள மார்க்கோனி ஹவுஸ் எனும் இடத்தில் இடம்பெற்றது.

    இதனுடைய விரிவாக்கம் தம்முடைய பத்திரிக்கைகளின் விற்பனையைத் தாக்கிவிடும் எனும் பீதியால் பிரித்தானிய பத்திரிக்கைத்துறையினர் அன்றைய அரசாங்கத்தினூடாக இவ்வானொலிச் சேவைச் செய்திகளை மாலை 7 மணிக்குப் பின்னரே ஒலிபரப்பலாம் எனும் நிபந்தனையைக் கொண்டுவந்தார்கள்.
     
    இப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌ இவ்வூட‌க‌த்தின் முக்கிய‌ ஸ்தாப‌ன‌ங்க‌ளில் ஒன்று பிரித்தானிய‌ தேசிய‌ தாபாற் சேவை இலாகாவாகும். தேசிய‌ச் சேவையான‌ தாபாற்சேவை இலாகா ஒரு த‌னியாருட‌ன் இணைந்த‌ கூட்டுத்தாப‌ன‌த்திற்காக‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து வ‌ரி வ‌சூலிக்கத் த‌ய‌ங்கிய‌தால் இக்கூட்டுத்தாப‌ன‌த்தில் அங்க‌ம் வ‌கித்த‌ த‌னியார் நிறுவ‌னங்க‌ள் வில‌கின‌. 1926ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ பிரித்தானிய‌ பொது வேலை நிறுத்த‌ம் ப‌த்திரிக்கைக‌ளின் வெளியீட்டில் இடையூறு ஏற்ப‌டுத்த‌ இக்கூட்டுத்தாப‌ன‌த்தின் மீது விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ நேர‌த்த‌டை அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து. இப்பொது வேலை நிறுத்த‌த்தின் போது இவ்வொலிப‌ர‌ப்பு ஊட‌க‌ம் எடுத்த‌ ந‌டுநிலையான‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இக்கூட்டுத்தாப‌ன‌த்திற்கு ஒரு உய‌ரிய‌ இட‌த்தை அளித்த‌து.
     
    விளைவாக பிரித்தானிய அரச முத்திரையுடன் 1926ம் ஆண்டு இன்றைய பி.பிஸியின் அமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டு நிறுவனராக சார் ஜான் ரீத் நியமிக்கப்பட்டார்.
     
    இத்தகைய ஒரு சூழலில் ஆரம்பிக்கப்பட்ட பி.பி.ஸியே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் முத‌லாவதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஊடக சேவையாகும்.
     
    இதன் முதலாவது தொலைக்காட்சிச் சேவை 1936ம் ஆண்டு லண்டனில் அலெக்ஸாண்ரா மாளிகையில் இருந்து ஒலிபரப்பப்பட்டது.
     
    இச்சேவையில் நடுநிலைமையான ஊடகச் சேவையின் மதிப்பு பலநாடுகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக தற்போது உலகெங்கும் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி உலக தொலைக்காட்சி, வானொலி சேவை உலகநாடுகளின் பல செய்திகளை உடனுக்குடன் எம்மை வந்தடையச் செய்கிறது.
     
    இத்தகைய ஒரு முன்னணி ஊடகத்துறை இன்று ஒரு அவதூறுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு தத்தளிக்கிறது. இதுவரை இதன் தலைவரான ஜார்ஜ் என்ட்விசில் (George Entwistle ) அவர்களது பதவியைக் களைந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இன்னும் பல முக்கிய பதவியிலிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

    இந்நிலை தோன்றக் காரணமென்ன ?
     
    நான் ஒருவாரங்களுக்கு முன்னால் தீட்டியிருந்த மடலில் குறிப்பிட்டிருந்த ஜிம்மி சவைல் (Jimmy Saville) அவர்களின் மீதான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியதோர் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம் தடை செய்தமை தொடர்பாக மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு பி.பி.ஸி உள்ளாகியிருந்தது.
     
    அதனால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தீவிரமாக விசாரிக்காமல் தம்மீது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னனனி அரசியல்வாதி பலவருடங்களுக்கு முன்னால் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டிய ஒருவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தமது நியூஸ் நைட் (News night) என்னும் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பான செய்தியை ஒலிபரப்பிவிட்டார்கள்.
     
    விளைவு ஒரு முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதியான லார்ட் மக் அல்ப்பைன் (Lord McAlpine) என்பவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.
     
    பி.பி.சி நிகழ்ச்சியில் அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்மீது தேவையற்ற அவதூரு சுமத்தப்படுவதற்கு தீர ஆராயப்படாமல் ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியே காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட்டது. பி.பி.சியின் நடுநிலைமையான ஊடகத்தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்பதே பெரும்பான்மையோரின் ஏகோபித்த அபிப்பிராயம்.
     
    பிரித்தானிய பத்திரிக்கை ஊடகத்துறையினர் கையாண்ட சில கபடத்தனமாகச் செய்தி சேகரிக்கும் முறையினால் பத்திரிக்கைகளின் மீது தணிக்கை அவசியமா என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அதன் முடிவுகள் வெளியாகப்போகும் தருணத்தில் தம்மீது விழப்போகும் பழியைத் திசைதிருப்ப, பத்திரிக்கைத் துறையினருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலான சந்தர்ப்பம் ஆகி விட்டது எனச் சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
     
    அது மட்டுமின்றி இத்தகைய ஒரு அனர்த்தத்தினால் முன்னணி நிறுவனமான பி.பி.சி உட்ப்பட ஊடகத்துறையினரின் சுதந்திரத்திர்கு வேட்டு விழுந்து விடுமோ என்றும் பழுத்த‌ அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.
     
    தொடர்ந்து எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகள் தான் பிரித்தானிய ஊடகத்துறையினரை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கப் போகிறது என்று உணர்த்தப் போகிறது.
     
    ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானல் அது அந்நாட்டின் ஊடகத்துறையினருக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. ஆனால் அதைப்பாதுகாக்கும் கடமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது அவ்வூடகத் துறையையும் அதை சார்ந்தவர்களையுமே சேர்ந்துள்ளது.
     
    இதை உணர்ந்துதான் எமது தமிழ்ப்பாட்டன் பாரதி ” தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது ” என்றானோ ?
     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     

     

    Share
  • Diwali celebrations at Sevalaya

     

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Phone: 04424484009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

     

    Please publish the following matter in your esteemed newspaper.

     

                                                          Press Report                                                              10.11.2012

    ‘Sevalaya’s Diwali Lights overwhelmed the Darkness’

     

    ‘Diwali Day’ was celebrated on 10th of November in Sevalaya’s Service centre at Kasuva at 10.00 AM.  The chief guest Ms. Srimathi Shivashankar (Associate Vice President – Diversity & Sustainability, HCL Technologies) has presided over the devotional function, to invoke the blessings of the God Almighty to the residents that include Orphan children, Destitute Senior Citizens & Balwadi Kids. In order to inculcate the ‘Religious Harmony’ in the tender minds of the kids, Sevalaya has a reputation of celebrating all auspicious days of every religion.

    Students of Mahakavi Barathiyar Hr Sec School have given a spectacular cultural program by many forms that included a small skit about the concept of Diwali, poetry and a dance sequel.  Mr. Ram of HCL Technologies felt triumphant by visiting an Organization whose main agenda was educating the poor kids.  He has jovially compared the school kids to the stars and the Teachers to the Moon.  He also told the audience that the HCL Team’s quest for social responsibility is satisfied by the involvement in the activities of Sevalaya.  Colorful posters depicting the Diwali were displayed in the stage by the HCL staff.  Students and staff from Saraswathi   Matriculation School have donated new cloths to the resident children of Sevalaya.

                 Delivering her address, the chief guest Ms. Srimathi Shivashankar said that it gave immense pleasure to see the transformation of cultural heritage of our past to the present generation. She appreciated the students who have performed culturals like songs and dances. She has announced on behalf of the Staff of HCL Technologies, to donate Solar Lights and Equipments to the entire campus of Sevalaya.  Ms. Srimathi has emphasized the significance of Dreams to the children that would one day will be realized.  During her speech, which was very participating from the audience, advised the students to write down their specific dreams in a paper and to get motivated by reading it twice a day.  She promised the applauding audience, she would personally come and collect all the ‘Dream Lists’ from the Kids in her next visit.   She also started a Leadership Training Program to the Heads of Departments of Sevalaya, which is likely to be continued for the next four months.

                 New cloths for Diwali were distributed to the Senior Citizens of the Old Age Home and to the destitute Children Home.

    Earlier Mr.V.Muralidharan (Founder and Managing Trustee, Sevalaya) welcomed the guests, and Mrs. Annapoorna (Head Mistress, Mahakavi Barathiyar Hr Sec School) has proposed the vote of thanks.

     

    Thanks & Regards

    For Sevalaya

    (V.Muralidharan)

    Founder & Managing Trustee             

    Board of Trustees:

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram

    Advisory ommittee: Dr.G.Nammalvar,

    Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj IPS (Retd), Mr. Amarchand Jain, Dr. Malavika Vinothkumar

    Hony, Co-Ordinator:                                                                                         Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                                            Mrs. Bhuvaneshwari Muralidharan

     

    Share
  • மாநகர காவல் ஆணையரை சந்தித்தது TUJ

     

    செல்வரகு

    நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை

     

    தமிழ்நாடு  பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DSR சுபாஷ் அவர்கள் சிக்கிமில் நடைபெறும் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IJU)தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சில விஷமிகள் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த பொய் புகார் கொடுத்ததை கண்டித்து சங்கத்தின் மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி இன்று 10-11-12 —மாலை  5.30 மணிக்கு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து  நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை அளித்துள்ளனர் . அதன் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

     

    Share