மு.கோபி சரபோஜி

சுமந்தவர்களின்
சந்தோஷத்திற்காக
சுற்றம் சூழ
வாக்கப்பட்டோம்.

தாம்பத்தியம்
நடப்பதாய் சொல்ல
வாரிசுகளையும்
பெற்றுக் கொடுத்தோம்.

பெற்றதில்
அவர்களுக்கு சந்தோஷம்
கொடுத்ததில்
நமக்கு சந்தோஷமா?

குருதிகளின்
கூட்டல்களுக்காக
குற்றச்சாட்டுகளை ஏன்
பரிசளித்துக் கொள்வானேன்?

ஊருக்கும், உறவுக்குமான
வேஷத்தை கலைக்காமலே
கணவன் ,மனைவியாய்
கட்டிலுக்கு இருப்பதை விட…..

நீ…….நீயாகவும்
நான்……நானாகவும்
தோள் தூங்கும் நம் குழந்தைகளுக்கு
தோழமையாய் இருப்போம்!

படத்துக்கு நன்றி

http://blogs.forbes.com/davidkwilliams/

1 thought on “பரஸ்பரம்

  1. நல்ல முடிவே, தோழமையும் மீண்டும் காதலாக அன்புருவம் கொள்ள வாய்ப்பில்லாமலா போய்விடும்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க