தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. நாளொன்றிற்கு 1,75,000 முறைகளுக்கு மேல் வாசிக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் பல்துறை சார்ந்த பங்களிப்பாளர்கள் எழுதி வருகிறார்கள். கட்டுரையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தகவல் களஞ்சியமாக விளங்கும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
இடம்:
டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.
வழி:
மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.
நேரம்:
காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.
பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.
நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.
நிகழ்ச்சி நிரல்
நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி
09.00 – 10.30 – புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் – தமிழ்த் தட்டச்சு, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம், விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
10.30 – 11.15 – ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது என்ன? – இதழாளரும் ஆழி பதிப்பக நிறுவனரும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளருமான செ. ச. செந்தில்நாதன் உரையாடுகிறார்.
11. 15 – 12.00 – சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி? – ஹரி பிரசாத் பயிற்சி அளிக்கிறார். ஹரி பிரசாத் ஒரு ஒளிப்படக்கலை விரும்பி. அவரது படங்களை என்றhttp://www.500px.com/HariNair முகவரியில் காணலாம்.
12.00 – 12.30 – சிறப்பாக பரப்புரைகள் செய்வது எப்படி? – தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அமைப்பினருடன் ஒரு கலந்துரையாடல்
மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம்.
வரவேற்புரை (2 நிமிடங்கள்)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல், நித்யா சீனிவாசன் எழுதிய லினக்சு மின்னூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
வல்லமைக் குழுவினரில் செல்வன் எனும் அன்பர் எனது “ஆண்-பெண் நட்புறவு” எனும் கட்டுரைக்குச் செய்திருந்த விமரிசனத்தையும் அதன் கீழே உங்கள் முத்தாய்ப்பையும் கண்டு வருந்தினேன். திரு செல்வன் அவர்களின் எதிரொலி என்னை வியாபுறச் செய்யவில்லை. யாரேனும் இப்படி எழுதுவார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான். நான் பெண்ணியவாதி என்பதால், என்னைத் தாக்கும் வாய்ப்புக்குச் சிலர் காத்திருப்பார்கள் என்பது அனுபவ வாயிலாக நான் அறிந்ததே! தாக்கட்.டும். அது அவர் உரிமை. ஆனால், சம்பந்தாசம்பந்தமில்லாமல் கருத்துச் சொல்லலாமா? என் கட்டுரைக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தமாம்?
கட்டுரையோடு தொடர்பற்ற முறையில் இப்படிச் சிலர் எழுதுவார்கள் என்பது எனது அனுபவமாதலால், நம் முன்னோர்கள் ஆண்-பெண் நட்பைக் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்றும், ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை ஏற்கெனவே இருக்கக்கூடிய என்னைப்பற்றிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதையும் அதன் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
அப்படியும் இப்படி ஒரு விமரிசனம்! “ஆண்வெறுப்புத்தான் பெண்ணியம் எனும் நிலை மாறவேண்டும்” எனும் அர்த்தமற்ற தலைப்பு! பெரும்பாலான ஆண்களின் குரூர ஆதிக்கத்தையும், ஒருதலைப்பட்சமான சட்டங்களையும் எதிர்த்து நான் எழுதிவருவது பல ஆண்களுக்குப் பிடிக்காமல் போவதில் வியப்படைய ஏதுமில்லை!
”ஆண் நண்பர்கள் அனைவரும் வன்னுகர்வு செய்பவர்கள் என்பது போல் எழுதி இருப்பது சரியல்ல” என்று இந்த அன்பர் எழுதுகிறார். அப்படி எங்கே சொன்னேன்?! அப்படி ஒரு கருத்தே எனக்குக் கிடையாது. அதனால்தான் நல்ல ஆண்களின் மனம் புண்படும் எனக்கருதி, ‘இதுதான் பொதுவாக ஆண்களின்இலட்சணம்” என்று சொன்னேன். ‘பொதுவாக’ என்றால், அனைவரும் என்று பொருளா? நற்சிந்தனையும் உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான் என்றும் கட்டுரையின் இறுதியில் கூறியும் உள்ளேன். ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்யும் ஆண்களும் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தேனே!
என்கட்டுரை பெண்ணுரிமை பற்றியதே இல்லையே.
அடுத்து, பவளா அவர்களே, உங்கள் முத்தாய்ப்புக்கு வருவோம்.
“உண்மைதான், செல்வன். பெண்ணியம் என்பதற்கு ஆண்வெறுப்பு என்பதல்ல பொருள். தகப்பன், கணவன், சகோதரன், மகன் என்ற உறவுகளுடன்தான் ஒரு பெண் பாதுகாப்பாக, அமைதியாக வாழ முடியும் என்பதே சத்தியம். மொத்த ஆண்களையும் குறை சொல்லுவது நியாயமில்லை என்பதே என் கருத்தும்” என்கிறீர்கள். “ஆணாதிக்க வெறுப்பு” என்பது அநீதியாக ஆதிக்கம் புரியும் ஆண் மீதான வெறுப்பாகத்தானே மாறும்? அவ்வாறு செய்யாத ஆண்களை ஏன் வெறுக்க்ப் போகிறார்களாம்? பெண் மீது தகாத முறையில் ஆதிக்கம் செய்பவர்கள்தானே பெண்ணியம் என்பதற்கே ஆட்சேபிப்பார்கள்?
அடுத்து, என் கட்டுரையில் எங்கேனும், தகப்பன், கணவன், சகோதரன், மகன் ஆகியோரின் பாதுகாப்பு ஒரு பெண்ணுக்குத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறேனா? நீங்களே சொல்லியுள்ளது போல் இவர்களுடன் வாழ்வதுதான் பாதுகாப்பானது. துளியும் ஐயமில்லை. ஆனால், யாரிடமிருந்து பாதுகாப்பு, பவளா அவர்களே? பிற ஆண்களிடமிருந்துதானே! உங்களையும் மீறி உண்மை வந்துவிட்டது.
எந்தப் புற்றில் பாம்பு இருக்கும், எதில் எறும்பு. இருக்கும் என்பது தெரியாதாகையால், ஒரு பெண் ஆண் நண்பர்களைத் தொலைவில் வைத்துப் பழகவேண்டும் என்றுதானே சொன்னேன்? இதில் என்ன தப்பைக் கண்டீர்கள்?
வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது. ஆனால் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர் பொருத்தமற்ற தலைப்பில் கூறப்பட்ட – சம்பந்தமே இல்லாத – கருத்துக்குத் தமுக்கு அடிப்பதும், நான் எழுதவே எழுதாத ஒன்றைக் கற்பித்து அதற்குப் பதில் சொல்லுவதும் முறைதானா? செல்வன் அவர்களின் கருத்தோடு நிறுத்தி யிருந்தால், கணினி முன் இடுப்புக்கடுக்க உட்கார்ந்துகொண்டு இதை எழுதும் தொல்லையை மேற்கொண்டிருந்திருக்கவே மாட்டேன். நீங்களும் அதை அங்கீகரித்து, என் கட்டுரையோடு தொடர்பே அற்ற கருத்தைச் சொன்னதால்தான் இந்தக் கடிதம்.
இதை வரி விடாமல் வெளியிட்டால் நல்லது. சுருக்குவதாயின் போடவே வேண்டாம்.
என்னுடைய நெருங்கிய நண்பன் சாமிநாதனுடைய மகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம். ஞாயிற்றுக் கிழமை பகல் 3 மணிக்கு நாமெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறோம்; அங்கே நிச்சயதார்த்தம் நடக்கிறது, நீயும் எங்களோடு வந்துவிடு என்றான் சாமிநாதன். என்னால் தட்டமுடியவில்லை. எனக்குப் பல வழிகளிலும் உதவிகள் செய்திருக்கிறான். அவன் மகள் கல்யாணத்தை நான் முனைந்து செய்ய வேண்டாமா? சரியென்று ஒப்புக் கொண்டேன். ஞாயிறு பகல் உணவுக்கே அவன் வீட்டுக்குப் போய்விட்டேன். உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டபின் எல்லோரும் நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒரு வேனிலும், நாங்கள் சிலபேர் சாமிநாதன், அவன் மனைவி ஆகியோர் ஒரு காரிலும் புறப்பட்டு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டுக்குச் சென்றோம்.
அந்த வீடு மாம்பலத்தில் ஒரு குறுகிய தெருவில் இருந்தது. காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றோம். வாயிற்படியில் மாப்பிள்ளை வீட்டார் நின்றிருந்தனர். அவர்களில் பையனின் அம்மா யார் என்று கேட்டேன். அதோ கருப்பா தலையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருக்காளே ஒரு மாமி அவள்தான் அம்மா. பக்கத்தில் இருக்காரே அவர்தான் அப்பா என்றாள். பார்த்தால், அட! இவர்கள் நம்ம தில் திவானா ஆயிற்றே என்று எனக்கு ஆச்சரியம்.
என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சாமிநாதன். மாமி வழக்கப்படி தலையை ஆட்டி ஆட்டி ‘வாங்கோ, வாங்கோ’ என்றாள். அனைவரும் உள்ளே போய் விரித்திருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்தோம். நடுவில் தட்டுக்கள் நிறைய பழங்கள், சர்க்கரை, கல்கண்டு, ஒரு தாம்பாளத்தில் பருப்புத்தேங்காய், மற்றொன்றில், புதிய ஜரிகை வேட்டி, காஞ்சிபுரம் பட்டுப்புடவை, ஒரு கண்டு மல்லிகைப் பூ இவையெல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அருகில் சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ் இவைகளும் இருந்தன.
எல்லோரும் வந்து அமர்ந்தாகிவிட்டது. சாமிநாதனே பேச்சை ஆரம்பித்தார். தனது வருங்கால சம்பந்தியைக் காண்பித்து “இவர் ஆர்.அண்டு எஸ். கம்பெனியில் மேனேஜிங் டைரக்டர் கிட்டே பி.ஏ.வா இருக்கார். இவர் பையனும் அங்கே அக்கவுண்ட்ஸ் ஆபீசர். பி.காம், சி.ஏ. படிச்சிருக்கார். ரொம்ப நல்ல பையன். யார் கிட்டேயும் அதிர்ந்துகூட பேச மாட்டார். மாமா ரொம்ப பிரபலம். இவாத்துல ஒரு விசேஷம்னா இவா சொந்தக்காரா அத்தனை பேரும் வந்து சேர்ந்துடுவா” என்று சொல்லிக்கொண்டே போனார்.
சம்பந்தி உடனே குறுக்கிட்டு, அருகில் இருந்த இரட்டை மண்டை கிழவனார் ஒருவரைக் காட்டி, இவர் என்னோட அண்ணா. இவர்தான் எங்க குடும்பத்துக்கு எல்லாம். இவர் என்ன சொல்றாறோ அதுக்கு எங்ககிட்டே மறுபேச்சே கிடையாது என்றார்.
அந்த இரட்டை மண்டையும் தலையை இருமுறை ஆட்டிவிட்டு நின்றது. எனக்கு விசித்திரமாக இருந்தது; அவரது தலை. அவர் கொஞ்சம் மிதப்பாக, கர்வத்தோடு இருப்பதாகத் தெரிந்தது.
‘எங்க அண்ணா இருக்காரே, அவருக்கு மூணு பிள்ளைகள், ஒரு பொண்ணு. பொண்ணும் மாப்பிள்ளையும் ஆத்தோடதான் இருக்கா. புள்ளைகள் ஆளுக்கு ஒரு இடம். பெரியவன் சுந்தரம் பெரிய கண்ட்ராக்டர். அடையாறிலே பெரிய பங்களா, அவன் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான். நல்ல சம்பளம். ரெண்டாவது புள்ளை ஆவடிலே பீரங்கியெல்லாம் பண்றாளே அதுல ஆபீசரா இருக்கான். அவனுக்கு ஒரு பெண். அவ கல்யாணம் ஆயி பம்பாயிலே இருக்கா. இவர் அக்கா ஒருத்தி, டெல்லில இருக்கா. அத்திம்பேர் பெரிய ஆபீசர்”,இ ப்படி அவர்கள் பெருமையை அவர் பறை சாற்றிக் கொண்டிருந்தார்.
” மாமா! உங்க சம்பந்தம் கிடைச்சது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நான் சாமினாதனோட நெருங்கிய சிநேகிதன். அவாத்துல எந்த விசேஷமும் என் பங்கு இல்லாம நடக்காது. பாருங்கோ! இந்த நிச்சயதார்த்தத்துக்கும் என்னை வந்து நடத்தும்படி கேட்டுண்டான். இவனும் சரி, இவாத்துல எல்லாரும் ரொம்ப நல்லவா சாது. பொண்ணைப் பத்திதான் உங்ககிட்டே எல்லாம் சொல்லியிருப்பா. தங்கமான பொண்ணு. அடக்கம், புத்திசாலி, நல்ல அழகு, குடும்பத்தை நன்னா அரவணைச்சுக் கொண்டு போவா” என்றேன்.
உடனே ரெட்டை மண்டை என்னைப் பார்த்து “அதெல்லாம் சரிதான் சுவாமி, பெண்ணுக்கு என்ன போடப்போறேள், எவ்வளவு நகை, என்னென்ன சாமான்கள் வாங்கித்தரப் போறேள், அதைச் சொல்லுங்கோ” என்றார்.
சாமிநாதன் என்னை சமிக்ஞை மூலம் சொல்லச் சொன்னதும் நான் சொன்னேன். “மாமா கேட்டபடிக்கு முப்பது பவுன் நகை போடறோம். ஐம்பதாயிரம் ரொக்கம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் முன்னாலயே ஒரு லிஸ்ட் கொடுத்தபடி செஞ்சுடறோம்” என நான் தொடங்கியவுடனே, ரெட்டை மண்டை மறுபடி குறுக்கிட்டு, “பொத்தாம் பொதுவா வெள்ளிப் பாத்திரம்னு சொன்னா எப்பிடி, தட்டு என்ன எடை, சொம்பு, கிண்ணம், பஞ்சபாத்திரம், பன்னீர் சொம்பு, சந்தனப் பேலா, இதெல்லாம் என்ன எடை அப்படின்னு சொல்ல வேண்டாமா? அதோட வரலக்ஷ்மி நோம்புக்கு சொம்பு, அம்பாள் முகம், வெள்ளில மாவிலை தேங்கா இதெல்லாம் பண்ணிடணும்னு சொன்னேனே, அவர் சொல்லலியா?” என்றார்.
உடனே சம்பந்தித் தாத்தா குறுக்கிட்டு, “அண்ணாவைப் பாத்து அப்படியெல்லாம் பேசக்கூடாது. எங்காத்துல அவர் சொல்றதுதான் ஃபைனல். அவர் கேட்கற விவரங்களை இப்பவே டிஸ்கஸ் பண்ணிடறதுதான் நல்லது. சொல்லுங்கோ” என்றார்.
நான் சொன்னேன், “சார்! வெள்ளி தட்டு மட்டும் 900 கிராம் வாங்கிட்டோம். சொம்பும் 600 கிராம். மொத்தமா எல்லாம் அஞ்சு கிலோ. நகை முப்பது பவுனுக்கு என்னென்னன்னு லிஸ்ட் போட்டுத் தந்துடறோம். பித்தளைப் பாத்திரம், நம்ம சம்பிரதாயப்படி என்னென்ன வேணுமோ அதெல்லாம் வாங்கித்தந்துடறோம். பின்னால வரலக்ஷ்மி விரதம், பொங்கல், ஆடின்னு எல்லா சீரும் சரியா வந்துடும் சரியா?” என்றேன்.
உடனே ரெட்டை மண்டை, “வாட்டர் பியூரிவையர் ஒண்ணு வாங்கிடணும், இவாத்துல வெந்நீருக்கு கெய்ஸர் இல்லை. அது ஒண்ணு வேணும். மொதல்லேயே பேசினபடி ஹீரோ ஹோண்டா பைக் ஒண்ணு கல்யாணத்துக்கு முன்னாலயே வாங்கித் தந்துடணும்” என்றார்.
சாமிநாதன் ‘சரி சரி அதுதான் வாங்கிடறேன்னு முன்னமேயே சொல்லிட்டேனே” என்றான்.
‘உங்க பொண்ணு வேலைக்குப் போறதுல எங்களுக்கு ஒண்ணும் தடையில்லை. ஆனா குடும்பத்து வேலைகளை அனுசரிச்சு நடந்துக்கணும். , காலைல ஸ்நானம் பண்ணி, சந்தி, ஜபம் எல்லாம் முடிச்சு சாப்பிட வரத்துக்கு பத்து மணியாயிடும். நேவேத்தியம் ஆனபிறகுதான் யாரும் சாப்பிடமுடியும். அவளுக்கு வேலைக்குப் போறதுன்னா ஆத்துல சாப்பிட்டுட்டு போக முடியாது. வெளிலதான் சாப்பிட்டுக்கணும். நாங்கள்ளாம் ஓட்டல்ல சாப்பிடற வழக்கம் கிடையாது. அதனால சவுகரியம் எப்படின்னு பாத்துக்குங்கோங்கோ” என்றார் ரெட்டை மண்டை.
“கல்யாணத்தை இங்கேயே வச்சுக்கப் போறேளா, உங்க ஊர் கும்பகோணத்துலயா?” என்றார் ரெட்டை மண்டை.
“கும்பகோணம்தான் எங்களுக்குச் சவுகரியம். அங்கே எங்க மனுஷா எல்லாம் நிறைய இருக்கா. காய் கறி, இலை, வாழைப் பழம், தேங்காய் எல்லாம் எங்க நிலத்திலேயே விளையறது. இங்கே கோயம்பேட்டிலே வாங்கி கட்டுப்படியாகுமா?” என்றான் சாமிநாதன்.
“அப்படின்னா, ஒண்ணு செய்யுங்கோ. நாங்க ஒரு அறுபது, எழுபது பேர் வருவோம். எல்லாருக்கும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ல டிக்கட் புக் பண்ணிடுங்கோ, டூ அண்டு ஃப்ரோ” என்றது ரெட்டை மண்டை.
“அறுபது எழுபதா?” என்று சற்று யோசித்துவிட்டு சாமிநாதன், தயக்கத்தோடு “சரி, செஞ்சுடலாம்” என்றான்.
“அதுல பாருங்கோ, எங்களுக்கெல்லாம், காலைல கண் முழித்தா உடனே காப்பி குடிச்சாகணும். காப்பி ஆனவுடனே பசிக்கும். இட்லி பூரி சாப்பிடணும், அதனாலே, சிதம்பரம் இல்லைன்னா மாயவரம் ஸ்டேஷன்ல எங்களுக்கு டிபன் காப்பி சப்ளை பண்ண ஏற்பாடு பண்ணிடுங்கோ” என்றார் ரெட்டை மண்டை.
இது என்னடா இது, புது அதிர்வேட்டு. மாயவரத்துல டிபன் காபி அறுபது எழுபது பேருக்கு எப்பிடிக் கொடுக்கிறது. நான் ஜாடை காட்டி சாமிநாதனை வெளியில் அழைத்தேன். அவனும் வந்தான். “என்னடா இது, இவங்க போற போக்குல, ரயிலிலேயே கல்யாணத்தையும் முடிச்சுடும்மாங்க போல இருக்கே, விட்டா இவா ஊரையே தானமா கொடும்பா போல இருக்கே, நீயும் அவர் கேட்கறத்துக்கெல்லாம் தலையை ஆட்டிண்டு இருக்கே பிரம்மா மாடு போல. கொஞ்சம் கடிஞ்சு பேசுடா” என்றேன்.
சாமிநாதனுக்கு கண்களில் நீர் துளிர்த்தது. “என்னடா செய்யச் சொல்றே. பையன் தங்கமான பையன். ஒரு குறை சொல்ல முடியாது. இந்த ரெட்டை மண்டை உள்ளே புகுந்து ரொம்ப விளையாடறது. வா, சமாளிக்கலாம்” என்றான்.
மறுபடி உள்ளே போய் அவரது டிமாண்ட் எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிவிட்டு தட்டை மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். முகூர்த்தம் கும்பகோணத்தில் ஆவணி மாதத்தில் வைத்துக் கொள்வதாக ஏற்பாடு. அப்போது காவிரியில் தண்ணீரும் இருக்கும். மகாமகக் குளக் கரையில் மண்டபம். அங்கும் குளிக்கலாம். இதையெல்லாம் உத்தேசித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
I prefer Alkyd to traditional oil paints for the following reasons:
I am allergic to turpentine which is used in traditional oil painting.
Alkyd offers the excellent advantage of faster drying times compared to traditional oil colors, meaning that the traditional oil techniques of both impasto and glazing can be done in considerably less time and a painting can be completed in a single session.
Ideal for working indoor or outdoors.
Greater transparency means increased depth and clarity for glazes.
To paint this picture, I set up the wine bottle and the glasses in the basement with proper lighting. I worked for nearly one week to capture all the details I observed.
“உயிர்ப்புவியியல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு உயிரினத்தின் பரவல் நிலையை பற்றி ஆய்வதாகும். இத்துறையின் முதன்மைக் குறிக்கோள் யாதெனில், ஓர் உயிரினம் எங்கெங்கெல்லாம் வாழ்கின்றது மற்றும் எத்தனை எண்ணிக்கை உள்ளது என்று அறிவது” (விளக்கம் உதவி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா).
புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்?
உயிர்ப்புவியியலின் முன்னோடிகளில் (one of the founders of Biogeography) ஒருவர் என்று கருதப்படுபவர் ‘அலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட்’ (Alexander von Humboldt / Friedrich Wilhelm Heinrich Alexander von Humboldt – 1769-1859). இன்றைய அறிவியல் உலகம் இவரையும் இவரது பங்களிப்பையும் மறந்துவிட்டது, காலத்தால் வரலாற்றில் இருந்து மறைந்துபோன ஒரு அறிவியல் அறிஞராக இவர் பெயர் பெரும்பாலும் மறக்கப்பட்டும்விட்டது. ஆனால் இவர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பாவில் இவர் சிறந்த அறிவாளி எனப் பெயர் பெற்று புகழின் முன்னணியில் இருந்தார். உலகில் பற்பல இடங்களுக்கு, மற்ற புகழ் வாய்ந்தவர்களையும் விட இவர் பெயர்தான் அதிகம் சூட்டப்பட்டுள்ளது. பல தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னால் அதிபதி, ‘தாமஸ் ஜெஃபர்சன்’ (Thomas Jefferson, the third President of the United States) “நான் சந்தித்த அறிவியல் அறிஞர்களில் மிக முக்கியமானவர் ஹம்போல்ட்” என்று குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவின் இராணுவ அதிகாரியான ‘சைமன் போலிவர்’ (Simón Bolívar, Venezuelan military leader) “தென்னமெரிக்கக் கண்டத்தை முதலில் கண்டறிந்தவர் ஹம்போல்ட்”தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது புகழைக் கண்டு நெப்போலியன் இவர் மீது பொறாமை கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஹம்போல்ட்டின் நூறாவது பிறந்த நாளன்று அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் முதல் பக்க செய்திகள் அனைத்தும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டு இவர் புகழ் பாடின. அறிவுமேதைகள் பலர் குழுமிய பாரிஸ் (center of intellectual life in Paris) நகரிலும் இவர் புகழ் பெற்றிருந்தார். நான்கைந்து மொழிகளில் நன்கு உரையாடவும், அருமையாக ஓவியங்கள் வரையவும், அத்துடன் அனைவருடன் இசைந்து நன்கு பழகவும் அறிந்து வைத்திருந்தார்.
தனது அறிவியல் பயணத்தைப் பற்றி ‘காஸ்மோஸ்’ (Cosmos) என்ற நூலாக ஹம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, குறிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப் படுத்திய ‘சார்லஸ் டார்வின்’ (Charles Darwin) என்ற உயிரியல் மேதையை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது.
“I am at present fit only to read Humboldt; he like another sun illuminates everything I behold” ― Charles Darwin
என்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட ஹம்போல்ட்டைப் பற்றி அவரது பேனா/அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர். உலக வரலாற்றிலேயே சிறந்த அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சிறந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டவர். ஆனாலும் காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்களிப்பு மறக்கப்பட்டது. மிகுந்த புகழ் வாய்ந்த ஒருவர் வரலாற்றில் மறக்கப்பட்டது மிகவும் விந்தையானதுதான்.
வாழ்க்கைக் குறிப்பு:
ஜெர்மனி நாட்டின் அறிவியல் அறிஞரான இவர் 1769 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், பெர்லின் நகரில் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் வோன் ஹம்போல்ட் என்ற அரசு அதிகாரிக்கும், மேரி எலிசபெத் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது உடலில் ஏற்பட்ட புண்ணில் மின்முனைகளைப் (electrode) பொருத்தி மின்சாரத்தைச் செலுத்தி உடலில் ஏற்படும் மாறுதலை ஆராயும் அளவிற்கு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
Alexander Von Humboldt
அக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட ‘அறிவியல் தத்துவங்கள்’ (Philosophy of Science) என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று இக்காலத்தில் ‘நிலவியல்’ (Geology) என்று அழைக்கப்படும் துறையின் நிலவியலாளர் /ஜியாலஜிஸ்ட் (Geologist) ஆகப் பணிபுரிந்தார். ஆனால் அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக உயிரியல், நிலவியல், தாவரவியல் (Biology, Geology, Botany) என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.
பெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதானால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப் படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் ‘அய்மி பான்பிளான்ட்’ (Aimé Bonpland, French Botanist) என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா ‘இலத்தீன் அமெரிக்கா’ அல்லது ‘ஸ்பானிஷ் அமெரிக்கா’ என்றும் பரவலாக அழைக்கப் பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார். அக்காலத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த(?) கொலம்பஸ் போன்று ஹம்போல்ட் ‘இரண்டாவது கொலம்பஸ்’ என்ற சிறப்புத் தகுதியை அடைந்திருந்தார்.
அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):
ஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), இக்குவேடார் (Ecuador), பெரு (Peru) நாடுகளிலும், மற்றும் மெக்சிகோ (Mexico), கியூபா(Cuba) நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் இக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள ‘ஆண்டீஸ் மலை’த்தொடரின் (Andes mountains) பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் ‘சிம்பராசோ’ (Mount Chimborazo in Ecuador) என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா(Venezuela) நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள ‘ஆர்நிக்கோ’ ஆற்றிலும் (Orinoquia/Orinoco River) மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.
அப்பொழுது அக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உபயோகப்படுத்திய ‘குரேர்’ தாவரம் (Curare plant) கொண்டு உருவாக்கப்படும் நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறையை அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். மலேரியா (Malaria) நோய்க்கு மருந்தான குயினின் (quinine) தயாரிக்கப் பயன்படும் சின்கோனா (Cinchona tree bark) மரப்பட்டையைப் பற்றிய தகவலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பெரு கடற்கரையை ஒட்டிய பசுஃபிக் கடலில் உள்ள நீரோட்டத்தையும் (Pacific water current), அதனால் பெருவிற்கு கிடைக்கும் மழைப்பொழிவைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் இந்நீரோட்டம் ‘ஹம்போல்ட் நீரோட்டம்’ என்று இவரது பெயராலேயே அழைக்கப் படுகிறது. புதிய வகை மின்சார ஈல் (Electric Eel) மீன் இருப்பதும் இவரால் குறிப்பெடுக்கப்பட்டது. பல விலங்குகளின் தோல்கள், பற்பல பறவைகளின் சிறகுகள், ஏராளமான தாவரங்களின் இலை மற்றும் பூக்கள் என ஒரு பெரிய சேகரிப்பு இப்பகுதியில் ஹம்போல்ட்டிற்குக் கிடைத்தது. பெரு நாட்டின் பகுதியின் ஆண்ட்டீஸ் மலைத்தொடரின் பகுதி இவரால் விரிவாக வரையப்பட்டது.
இக்குவேடார் நாட்டின் பகுதியில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் உள்ள சிம்பராசோ மலையின் சிகரத்தின் பல உயரங்களிலும் காற்றழுத்தம் ஹம்போல்ட்டினால் அளக்கப்பட்டது. இவர் பயணக் காலத்தில் சிம்பராசோ சிகரம்தான் உலகின் மிக உயரமான சிகரம் எனக் கருதப்பட்டது. கடலில் தொலைவில் இருந்து காணமுடிந்த இச்சிகரத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்றழுத்தமும் மற்ற பிற அளவுகளும் இவரால் குறிக்கப் பட்டன. ஒவ்வொரு உயரத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. உயிரினங்களின் வகையும், அவற்றின் இருப்பும் உயரத்திற்கு ஏற்ப வேறுபடுவதை அப்பொழுது அவர் கண்டுகொண்டார். ஆனால் இவரால் சிகரத்தை அடைய முடியாமல் முயற்சியைக் கைவிட்ட பிறகு எழுபது ஆண்டுகள் கழித்தே ‘எட்வர்ட் வைம்ப்பெர்’ (Edward Whymper, 1886) என்ற ஆங்கிலேயர் ஒருவரால் சிம்பராசோ சிகரத்தை அடைய முடிந்தது. ஆனால் ஹம்போல்ட் வரைந்த விரிவான வரைபடங்களும் அதில் குறிக்கப்பட்ட பற்பல அளவீடுகளும் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the theory of unity of nature) என்ற அவரது கோட்பாட்டிற்கு உறுதுணையான ஆதாரங்களாக விளங்கின.
ஒத்தவெப்பநிலை வரைபடங்கள் (Isotherms):
ஹம்போல்ட்டின் மிக முக்கியப் பங்களிப்பு அவர் உருவாக்கிய ஒத்தவெப்பநிலை (Isotherm) வரைபடங்கள். தனது தென்னமெரிக்க ஆராய்ச்சிப் பயணத்தில் பல அறிவியல் சோதனைக் கருவிகளை ஹம்போல்ட் தன்னுடன் எடுத்துச் சென்றார். பதினான்கு கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்லும் அளவுக்கு பெட்டிப் பெட்டியாகக் கருவிகளை எடுத்துச் சென்றார். அக்கால பிரெஞ்சு நிறுவனகள் சுற்றுச்சூழலை துல்லியமாக அளக்கும் பல்வேறு அறிவியல் உபகரணங்களை வடிவமைத்திருந்தன. ஹம்போல்ட்டும் எதையம் முறையாக அளந்து துல்லியமாகக் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தும் பண்பைக் கொண்டவர். எனவே தான் சென்ற இடங்களின், ஆச்சிஜன், வானின் நீலநிறத்தின் அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம் (air pressure), உயரம், வெப்ப நிலை (temperature), நிலத்தின் அமைப்பு (shape of the land), காந்தப்புலத்தின் வலிமை (strength of magnetic field), ஒவ்வொரு இடத்திலும் உள்ள விலங்குகள், தாவரங்கள் அவற்றின் எண்ணிக்கை எனப் பற்பல குறிப்புகளை ஒன்றுவிடாமல் கவனமாகக் குறிப்பெடுத்து தனது வரைபடத்தில் குறித்துக் கொண்டார்.
Isotherms
பிறகு ஒத்த வெப்பநிலை உள்ள இடங்களின் புள்ளிகளை ஒரே கோட்டில் இணைத்தார், இவ்வாறு உருவாக்கிய படங்களுக்கு ‘ஐஸோதெர்ம்’ (Isotherm) வரைபடங்கள் எனப்பெயரிட்டார். இவை வளைந்த கோடுகளை உடைய கோட்டோவிய (contour line maps) வரைபடங்கள். அவ்வாறு ஒத்த இயற்கை தட்ப வெட்ப சூழ்நிலையில் வசிக்கும் உயிரினங்கள் (விலங்குகளும், தாவரங்களும்) யாவும் ஒத்திருப்பதை இக்கோட்டோவிய வரைபடம் தெளிவு படுத்தியது. அதுவரை இந்த அடிப்படைத் தகவலை, வாழுமிடங்களுக்கு ஏற்ப உயிரனங்கள் மாறுபடும் என்ற தொடர்பை (connection with the ‘habitats’ and the species living at that place) அறிவியல் அறிஞர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். முதன் முதலில் தரவுகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் வரைபடங்களாக வரைந்து விளக்கியவர் ஹம்போல்ட்தான். அதற்கு முந்தைய நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட ‘டோப்போக்ராஃபிக்’ (topographic maps) என்றழைக்கப்பட்ட நிலவியல் வரைபடங்கள் இதுபோன்ற தகவல்கள் இன்றியே வரையப்பட்டு வந்தன. மேலும் இவர்காலத்தில் அச்சுகூடங்களின் தொழில் நுட்பம் சிறந்த வளர்ச்சியடைந்து இருந்ததால், வரைபடங்களை அதிக அளவில் குறைந்த விலையில் பிரதிகள் எடுப்பதும் சாத்தியாமாயிற்று.
‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature): “Everything Is Interrelated”—Alexander von Humboldt
அறிவியல் தகவல்களை வரைபடக் காட்சி வழியாக (visual-presentation of scientific data as maps, charts and graphs) ஹம்போல்ட் விளக்கிய முறை அறிவியலில் ஒரு திருப்புமுனை. இதனால் இயற்கை சூழலுக்கேற்ப உயிரினங்கள் வாழ்வதும் இடத்திற்கு இடம் அவை வேறுபடுவதும் தெளிவாகியது. நிலப்புவியியலுக்கு இதுவே அடிப்படை என்பதால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அத்துடன் இந்த பங்களிப்பே சுற்றுச்சூழலியலிலும் (ecology) இவரை முன்னோடியாகக் கருத வைக்கிறது. இயற்கையும், சுற்றுச்சூழலும், உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை (intersconnectedness of all nature, intersconnectedness of geography) அதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும், இயற்கையில் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதும் புலனாகிறது. இயற்கையில் பல்வேறு சக்திகள் உள்ளன (forces make up nature). அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன (interrelated forces in nature). அவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர்பு ஓர் ஒருமைப்பாட்டுடேன் இயங்குவதால் இயற்கை சம நிலையில் இருக்கிறது (balance of forces in nature) என்று ஹம்போல்ட் முடிவிற்கு வந்தார். இதனை ஹம்போல்ட் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature) என்று விளக்கினார்.
ஹம்போல்ட்டின் அறிவியல் பங்களிப்பு:
இவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்முறைகள், பங்களிப்புகள் தற்கால அறிவியலில் பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேதியியல், பொறியியல், இயற்பியல், மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது, அளவுகளை துல்லியமாகக் குறிப்பிடும் ஒத்தவெப்பநிலை வரைபடங்களும் (Isotherm), இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடும் (the unity of nature) ஹம்போல்ட்டினால் அறிவியல் உலகத்திற்கு காட்டப்பட்டதுதான். இதுவே டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற கோட்பாட்டிற்கு தாக்கமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
(1) துல்லியமாக வரைபடத்தில் அளவீடுகளைக் குறிப்பது என்பது அறிவியலில் திருப்புமுனையைக் கொண்டுவரும் அளவிற்கு ஒருமிகப்பெரிய மாற்றம் இல்லை எனவும், (2) ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற டார்வினின் கோட்பாடு போல இவரது முப்பது நூல்களிலும் விரவிக் கிடந்த ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்ற அறிவியல் தகவல்கள் சுருங்க விளக்கப்படவில்லை எனவும், (3) டார்வினின் கோட்பாடு இவரது கோட்பாட்டின் தகவலை மங்கச் செய்து விட்டது எனவும், இதனாலேயே இவரைப் பற்றிய தகவல்கள் நாளடைவில் மறக்கப் பட்டது எனப் பல காரணங்கள் இவர் புகழ் மங்கியதற்குக் கற்பிக்கப்படுகின்றன.
சிந்தனைக்கு:
இயற்கை சூழலுக்கேற்ப, தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப உயிரினங்கள் வாழ்ந்திருப்பதும் இடத்திற்கு இடம் வேறுபடுவதும் (role of environment on diversity of life) அதனால் உயிர்ப்புவியியலுக்கு ஹம்போல்ட் முன்னோடியாகக் கருதப்படுகிறார் என்ற தகவலையும் நாம் அறிந்து கொள்ளும் வேளையில்; தவறாமல் சிந்தனையில் குறுக்கிடும் ஒரு கேள்வி இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லையா என்பதே.
முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
(காடுகாண் காதை, 64-66)
என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
அது போலவே சங்கல கால இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு திணைப்புலதிற்கும் சிறப்பான பறவைகளை, விலங்கினங்களை, மரங்களை, பூக்களை என விலங்கின, தாவரக் குறிப்புகள் யாவற்றையும் தருவது இங்கு தேவையற்றது என்ற காரணத்தினால் கீழ்கண்ட சுருக்கமானப் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. காப்புரிமை பெறாத, பலரும் அறிந்த எளிய உண்மைகள் மீண்டும் மேலைநாட்டினர் வசமானதாகத் தோன்றுவதை ஏனோத் தவிர்க்க இயலவில்லை.
கிட்டத்தட்ட கென்யர்கள் எல்லோரும் தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. தங்க நகை அணிந்து நாங்கள் பார்த்த ஒரே பெண் நாங்கள் தங்கியிருந்த ஓட்டல் வரவேற்பாளர் மட்டுமே. இவரும் ஒரு மெல்லிய செயினைக் கழுத்திலும் சிறு வளையம் போன்ற காதணிகளைக் காதுகளிலும் அணிந்திருந்தார். எங்களைப் பார்க்க வந்திருந்த மாணவ நண்பனின் மனைவி காதில் சிறிய காதணி அணிந்திருந்தார். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் தங்க நகைகள் அணிந்திருக்கவில்லை.
பாரம்பரிய உடைகளை நைரோபியில் யாரும் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் மேற்கத்திய உடைகளுக்கு மாறியிருக்கிறர்கள். தினம் தினம் நைரோபியின் பல இடங்களில் கூடும் சந்தை போன்ற இடங்களில் மட்டும் சிலர் பாரம்பரிய உடைகள் அணிந்திருந்தார்கள்.
இன்னும் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து மாறாமல் வாழும் பழங்குடி மக்களைத் தவிர மையநீரோட்டத்தில் சேர்ந்துவிட்ட கென்யர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். இது ஆங்கிலேயர்கள் இவர்களை ஆண்டதின் காரணமாக இருக்கலாம். பலர் தீவிர கிறிஸ்துவர்கள். எல்லோருக்கும் பெற்றோர் கொடுத்த பெயர்கள் பால், ஜேக்கப், பாலின், கேத்தி, மெர்சி, டிக்கன்ஸ், கெல்வின், பிலிப் போன்ற கிறிஸ்தவப் பெயர்களே. எங்கள் வீட்டு யூனிட்டில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீட்டின் வாசலில் இயேசு இந்த வீட்டின் அதிபதி (Jesus is the Lord of this house) என்று ஒரு அட்டையில் எழுதித் தொங்கவிட்டிருப்பார்கள். அடிக்கடி கென்யாவிலிருந்து இங்கு வந்திருக்கும் மாணவர்களைக் கூட்டி கிறிஸ்தவப் பாடல்களைப் பாடுவார்கள். பிரார்த்தனை பண்ணுவார்கள். சில சமயங்களில் சில இந்தியர்கள் கூட இக்கூட்டங்களில் கலந்துகொள்வதுண்டு.
இவர்களுடைய திருமண பழக்க வழக்கங்களும் மேற்கத்திய நாகரீகத்தைத் தழுவியே இருக்கின்றன. ஒரு முறை எங்கள் யூனிட்டில் இருந்த மாணவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘இந்தியாவில் 90 சதவிகிதத் திருமணங்கள் பெற்றோர்களால்தான் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று நான் சொல்லப் போக அந்த மாணவர் ‘நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்டுதான் திருமணம் செய்துகொள்கிறோம்’ என்றார். கென்யாவில் விவாகரத்துக்கள் எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை. நாங்கள் முஸ்லீம்கள் யாரையும் சந்திக்கவில்லையாதலால் அவர்களிடம் இன்னும் ஒருவன் நான்கு பெண்களை மணந்துகொள்ளும் பழக்கம்இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்னும் அந்தப் பழக்கம் இருப்பதாக கென்ய மாணவி ஒருத்தி கூறினாள். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் தந்தை முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர். அந்த வழக்கம் இருந்ததால்தான் அவர் கென்யாவில் மனைவி இருந்தும் பாரக் ஒபாமாவின் தாயை மணந்துகொண்டார்.
இன்னொரு முக்கிய விஷயம். எல்லோரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை காலணிகள் அணிந்திருந்தார்கள். மசாய் இன குடும்பத்தின் குழந்தைகள் கூட தோலில் செய்த ஒரு வகையான காலணிகளை அணிந்திருந்தார்கள். காலில் காலணிகள் இல்லாமல் – குழந்தைகள் உட்பட – நாங்கள் யாரையும் பார்க்கவில்லை.
இதை விட முக்கியமான இன்னொரு விஷயம் பள்ளிக்குச் சென்ற கென்யர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவது. மசாய் இன குடும்பத்தைச் சேர்ந்த ஆறாவது வகுப்புப் படிக்கும் ஜேக்ஸனின் அண்ணன் மகள் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தயங்காமல் பதில் கூறினாள். எங்கள் ஓட்டலில் அறையைச் சுத்தம் செய்யும் பெண்ணும் அப்படியே. பிரயாண வழிகாட்டிகள் (இவர்களையாவது அது அவர்கள் தொழில் என்று விட்டுவிடலாம்), டாக்சி ஓட்டுநர்கள், கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் என்று இப்படி யாரை எடுத்துக்கொண்டாலும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள். ஒரு மொழியை ஒருவர் நன்றாகக் கற்க வேண்டுமென்றால் ஓரளவு அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும், அந்த மொழி பேசப்படும் சூழ்நிலையில் இருக்க வேண்டும், அந்த மொழியில் நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்ததெல்லாம் கென்யவில் சரி வரவில்லை. பள்ளிக்குச் செல்லும் எல்லோருக்கும் ஆங்கிலம் பேச வருகிறது என்ற விஷயத்தைக் கென்யாவில் தெரிந்துகொண்டேன்.
நம் நாட்டில் பி.ஏ. படித்தவர்களால் கூட சரியாக ஒரு வாக்கியம் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. ஒரு விஷயத்தை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட ஆங்கிலத்தில் உரையாடத் திணறுகிறார்கள். இது ஏன் என்று கண்டுபிடிக்க வேண்டும். தாய் மொழிப் பற்று என்று ஆங்கிலத்தை ஒதுக்கிவிட்டோமெயொழிய தாய் மொழியிலும் பாண்டித்யம் பெறவில்லை. என் கணவர் ஒரு மொழியியல் வல்லுநர். நான் அவரிடம், ‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. இந்தியாவிலும் கென்யர்கள் போல் எல்லோரும் நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும். கென்யாவில் என்ன செய்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள்’ என்று கூறியிருக்கிறேன். கென்யா ஆங்கிலேயரின் கீழ் இருந்தது காரணம் என்றால் நம்மையும் அவர்கள்தானே முன்னூறு வருடங்கள் ஆண்டார்கள். பள்ளியில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படும் முறையில்தான் நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். இதை நாமும் எளிதாகச் செய்யலாமே.
ஆங்கிலம் அகில உலக மொழியாக வளர்ந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால் இந்தியர்களாகிய நாமும் தாய் மொழியோடு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி பெற வேண்டும். இதில் கென்யா நமக்கு முன்னால் இருக்கிறது.
நைரோபியின் தெருக்களில் மட்டுமல்ல, நாங்கள் பார்த்த சிறிய ஊர்களின் தெருக்களிலும் ஆடு, மாடுகளோ, நாய்களோ காணப்படவில்லை. தெரு நாய்களை ந்கராட்சி கொன்றுவிடும் என்று கூறினார்கள். வீட்டில் நாய் வளர்க்கலாம். நாங்கள் பார்க்கச் சென்ற மசாய் இன மக்களிடம் இரண்டு நாய்கள் இருந்தன. நம் நாட்டில் போல் மாடுகளைத் தெருவில் அலையவிடுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். அது சட்டப்படி குற்றம். இரண்டாவது, அவை திருட்டுப் போகும் அபாயம் இருக்கிறது.
சிறு கிராமங்களில் வசிப்பவர்கள் மாடுகளை வளர்த்தால் அந்த மாடுகளின் பாலைப் பக்கத்தில் உள்ள பால் பண்ணைகளுக்கு விற்பார்களாம். அங்கு அதிகமாக பால் சேர்ந்துவிட்டால் நைரோபியில் இருக்கும் தேசிய பால பண்ணைக்கு அனுப்பிவிடுவார்களாம். அங்கு பாக்கெட்டுகளாகத் தயாரிக்கப்பட்டுப் பல இடங்களுக்கும் அனுப்பப்படும். பெரிய டிபார்ட்மெண்ட் கடைகளில் இந்த பால் பாக்கெட்டுகள் கிடைக்கின்றன. சிறிய கிராமங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீடுகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் இருந்தால் அவர்களிடம் தங்களுக்குத் தேவையான பாலை வாங்கிக்கொள்வார்களாம்.
டாக்சி ஓட்டுநர்களைப் பற்றிக் கூறாவிட்டால் கென்யா பற்றிய வர்ணனை முடிவு பெறாது. நாம் ஓட்டலுக்கு வரச் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுகிறார்கள். இங்கும் பேரம் உண்டு. ஆனால் பேரம் பேசிய பிறகு கடைசியில் அதிகம் கொடுங்கள் என்று கேட்பதில்லை. ஒரு ஓட்டுநர் செய்த காரியம் இன்னும் நினைவில் நிற்கிறது. எங்களை ஹாண்டி உணவகத்திற்குக் கூட்டிச் சென்று, அங்கேயே காத்திருந்து பின் ஓட்டலுக்கு அழைத்து வருவதற்கு ஒரு தொகையைப் பேசிக்கொண்டோம். உணவகத்திற்குப் பக்கத்தில் டாக்சியை நிறுத்தினால் அதற்கு ஒரு கட்டணம் உண்டு. அதையும் நாங்களே கொடுப்பதாக ஏற்பாடு. இருப்பினும் இந்த ஓட்டுநர் என்ன செய்தார் தெரியுமா? எங்களை உணவகத்தின் வாசலில் இறக்கிவிட்டுவிட்டு டாக்சியை நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத தெருவிற்குச் சென்று காத்திருந்திருக்கிறார். எங்கள் பணத்தை மிச்சப்படுத்த அவர் செய்த காரியம் இது.
எல்லா நாடுகளிலும் போல் கென்யாவிலும் சமூகத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல் தெரிகிறது. ஒரு புறம் பரந்த இடங்களில் பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் பெரிய கோட்டை மாதிரி மதில் சுவரைக் கட்டிக்கொண்டு காவலர்களை வைத்துக்கொண்டு வாழும் கென்யர்கள். இன்னொரு புறம் கால் கடுக்கப் பன்னிரெண்டு மணி நேரம் ஓட்டலின் வாசலில் நின்றுகொண்டு ஓட்டலுக்கு வருபவர்களை வரவேற்று அவர்கள் கொண்டுவரும் சூட்கேசுகளை அவர்களுடைய அறைகளுக்கு சுமந்துசெல்லும் பணியாளர்கள். இவர்கள் சம்பளம் மாதத்திற்கு 8,000 ஷில்லிங்குகள்தானாம். இந்தச் சம்பளம் ஒருவருக்கே போதாது. அமெரிக்க மாடல் மால்களில் பொருள்களை வாங்கிக் குவிக்கும் கூட்டம் ஒரு புறம்; தெருக்களில் கடை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டம் இன்னொரு புறம். தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் பல மைல்கள் நடந்தே வேலைக்குச் செல்வதைக் கென்யாவில் பார்க்கலாம். எல்லோருக்கும் கட்டாயம் கொடுத்தாக வேண்டிய குறைந்த சம்பளமாக 7500 ஷில்லிங்கை அரசு நிர்ணயித்திருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லையாம்.
மருத்துவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ஷில்லிங் சம்பளமாம். இதற்குமேல் தனியாக கிளினிக் நடத்தலாம். பேர்பெற்ற வழக்கறிஞர்களுக்கு மாதம் ஐந்து லட்சம் ஷில்லிங் வரை வருமானம் இருக்குமாம்.. அதனால்தான் இங்கு வரும் கென்ய மாணவர்களில் முக்கால்வாசிப் பேர் சட்டம் படிக்கிறார்கள் போலும்! இந்தியாவும் கென்யாவும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் கிட்டத்தட்ட இரண்டு நாட்டு அரசியல் சட்டங்களுக்கும் ஒற்றுமை இருந்தபோதிலும், இந்தியாவில் சட்டம் படித்துவிட்டுப் போகும் மாணவர்கள் கென்யாவில் இன்னொரு தேர்வு எழுத வேண்டுமாம். கென்யாவில் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் பழக்கம் இல்லையாம். ஒரு முறை ஒரு மாணவனிடம் ‘இந்தியக் கல்வித் திட்டத்தில் மனப்பாடம் செய்வதுதானே முதன்மையாக இருக்கிறது. அதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது ‘விரிவுரையாளர்கள் பாடக் குறிப்புகளை ‘டிக்டேட்’ செய்யும்போது அதை எழுதிக்கொள்வோம்;. அதன் துணையைக் கொண்டு பின் பாடப் புத்தகங்களைப் படித்துக்கொள்வோம்’ என்றான். தேர்வுகளில் விரிவுரையாளர் ‘டிக்டேட்’ பண்ணியதை அப்படியே எழுதுவதில்லை. அப்படி எழுதாவிட்டால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்காது என்று இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இருப்பினும் டிக்டேட் பண்ணியதை இவர்களால் எழுத முடியவில்லை. மேலும் இவர்கள் தேர்வுகளில் தொண்ணூறு, நூறு சதவிகிதம் மதிப்பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் இவர்கள் இந்தியாவில் உள்ள நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்பதில்லை. ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி பட்டம் பெற்றுவிட்டால் போதும். அவர்கள் நாட்டிற்குப் போய் அங்குள்ள தேர்வுகளை எழுதிக்கொள்வார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கலவியின்மூலம் பெறும் பட்டத்திற்கும் கென்யாவில் மதிப்பு உண்டாம்!
கென்யாவில் சுதந்திரத்திற்குமுன் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் இருந்ததாம். இப்போது பத்துக்குமேல் இருக்கின்றனவாம். இவற்றொடு இணைந்த் கல்லூரிகளும் இருக்கின்றன. அங்கு கல்லூரியில் சேருவதற்கே பெரிய போட்டி இருக்கும். ம்திப்பெண் குறைவாக இருந்தால கல்லூரிக் கட்டணமும் மிகவும் அதிகம். இக்காரணங்களால் கென்ய மாணவர்கள் இந்தியாவிற்குப் படிக்க வருகிறார்கள். இங்கு ஆங்கிலம் வழி கல்வி பயில முடிவதும் ஒரு காரணம். சில கென்ய மாணவர்கள் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நாடு உதவித்தொகை தருவதால் செல்கிறார்களாம். அங்கு முதல் ஆண்டு கொரிய மொழியைக் கற்க வேண்டும். அந்த நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்காக ஆங்கில மீடியம் உள்ள பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. பணவசதி உள்ள கென்யர்கள் அங்கு சேர்ந்து படிப்பார்கள்.
நான் இது வரை பார்த்த நாடுகள் பலவும் வளர்ந்துவிட்ட நாடுகள். இந்தியாவைப் போல் வளர்ந்துகொண்டிருக்கும் கென்யாவைப் பார்த்தது ஒரு புதிய அனுபவம். இந்தியாவில் உள்ளதைப் போல் வறுமை, லஞ்சம், அரசியல் அடிதடிகள் போன்ற சில கூறுகள் இருந்தாலும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற அநாகரீகப் பழக்கங்கள் கென்யாவில் இல்லை. இது கென்ய கலாச்சரத்தின் வெளிப்பாடு.
வாரம் ஒன்று ஓடி விட்டது. வாழ்வின் நீளம் கூடி விட்டது. இதோ உங்களுடன் அடுத்த மடலில் கலப்பது மகிழ்வைத் தருகிறது.
காலத்தின் நீரோட்டத்தோடு மக்களின் வாழ்வின் தேவைகளும் மாறுதலடைந்து கொண்டு வருகிறது.
உலகப் பொருளாதார மாற்றம், சர்வதேச வியாபாரத் தொடர்புகள். நாடுகளுக்கிடையேயான பயண இலகுவாக்கல் என்பன மக்களின் தேவைகளையும் திரிபடையப் பண்ணி இருக்கிறதே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.
மக்களின் தேவைகளை மையப்படுத்தியே நாட்டின் அரசியல் களம் வகுக்கப்படுகிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் பூர்த்திகளை வெவ்வேறு அரசியல் கட்சிகள் தாம் எவ்வகையில் கையாளப் போகின்றன என்பதை எவ்வகையில் அம்மக்களுக்குத் தெளிவு படுத்துகிறார்கள் என்பதிலும், அவ்வரசியல் விஞ்ஞாபனத்தை மக்கள் எவ்வளவு தூரம் நம்புகிறார்கள் என்பதிலும்இவ்வரசியல் கட்ச்சிகள் தம் பிரச்சாரத்தை மையப்படுத்துகிறார்கள்.
இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்துப் பிரதான அரசியல் கட்சிகளின் வருடாந்த மகாநாடு நடைபெறும். அம்மகாநாட்டில் அக்கட்ச்சிகள் தாம் தமது கட்ச்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் செய்வது வழக்கம்.
அவ்வாறே ஈவருடமும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தனது அரசியல் மகாநாட்டை நடத்தி இதனை ஆரம்பித்து வைத்தது.
தற்போதைய இங்கிலாந்து அரசு கன்சர்வெடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும் இணைந்து நடத்தும் ஒரு கூட்டரசாங்கம் என்பது யாவரும் அறிந்ததே.
இக்கூட்டரசாங்கம் பதவியேற்று ஏறத்தாழ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. பொருளாதார இக்கட்டான சூழலில் உலகப் பொருளாடஹரம் ஆட்டம் கண்டிருந்த நிலையில் பதவிக்கு வந்த இவ்வரசாங்கம் மக்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டிய பல சிக்கலான சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
தர்போது ஓரளவு சீரடைந்து வரும் இங்கிலாந்துப் பொருளாதார நிலை இன்னமும் மக்களின் வாழ்க்கைத் தர்த்தை உயர்த்தக்கூடிய ஒரு நிலைக்குத் திரும்பவில்லை.
இந்த நிலைமையானது எதிர்க்கட்சியான லேபர் கட்ச்சியை மிகவும் முன்னோக்கித் தள்ளக்கூடிய ஒரு கட்டமாகும். இருப்பினும் அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புகளின் நிமித்தம் லேபர் கட்ச்சி இந்நிலைமையத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்லத் தவரி விட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
கருத்துக் கணிப்பில் ஆளும் அரசியல் கட்சிகளின் கூட்டில் முக்கியமான் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட ஒரு சிறிய அளவிலேயே லேபர் கட்சி முன்னிலை வகிக்கிறது..
இதற்குக் காரணம் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் என்பதே பலருடைய கணிப்பாகும். இவர் பலரின் எதிர்பார்ப்பிற்கு எதிராக தனது மூத்த சகோதரரை எதிர்த்து இத்தலைமைப் பதவியை இவர் பெற்றுக் கொண்டது பலருக்கு இவரின் மீது ஒரு தப்பபிப்பிராயத்தைத் தோற்றுவித்திருந்தது என்பது உண்மையே.
அது மட்டுமின்றி ஆளும் கூட்டரசாங்கத்தின் பல இக்கட்டான சூழல்களில் இவர் தனது திறமையினால் அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தவறி விட்டார் என்பதுவும் இவர் மீதுள்ள மற்றுமோர் குற்றச் சாட்டாகும்.
இத்தகைய ஒரு இக்கட்டான நிலையில் லேபர் கட்சி தனது முன்னில்லையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், அதன் தலைவரது பதவியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தனது வருடாந்த மகாநாட்டை மிகவும் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது.
ஆனால் இம்மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அம்மகாநாட்டின் முக்கியத்துவத்தைத் திசை திருப்பும் வகையிலே ஒரு நிகழ்வு நடந்தேறியது.
அப்படி என்ன நிகழ்வு என்று எண்ணுகிறீர்களா?
விஷயத்திற்கு வருகிறேன். கடந்த லேபர் அரசாங்கத்தில் இறுதியாக பதவி வகித்த பிரதமர் கோர்டன் பிறவுண் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவர் தனது அரசியல் ஆலொசகராகவும், ஊடகத் தொடர்பாளராகவும் நியமித்து பின்னர் 2009ம் ஆண்டு பதவி நீக்கம் செய்த டாமியன் மக்பிறைட் என்பவர் வெளியிட்ட நூலே லேபர் கட்ச்சிக்கு தலையிடியைக் கொடுத்தது.
ஆமாம் இந்நூலிலே இவர் தான் எவ்வாறு அன்றைய பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களது பிரதமர் பதவிக்கு இடையூறு விளைவிப்பவர்களை வீழ்த்தினார் என்பதையும் அதற்குத் தான் எடுத்த அடிகளையும், பின்னிய சீழ்ச்சி வலைகளையும் பற்றி மிகவும் விளக்கமாக குறிப்பிடிருக்கிறார்.
இந்நூலில் இவர் தனது செய்கைகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இவர் தான் இந்நூலை வெளியிட்ட காரணம் அரசியலில் நிகழும் முறையற்ற செயல்களை வெளிக்கொணர்வதன் மூலம் இந்நாட்டின் அரசியல்வாதிகளைச் சுத்தப்படுத்துவதே என்று கூறியிருக்கிறார்.
இந்நூலில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி இத்தகைய நடவடிக்கைகளில் தற்போதைய லேபர் கட்ச்சித் தலைவர், மற்றும் நிதித்துறை பேச்சாளர் ஆகியவர்களுக்கு இருந்த பங்கினைப் பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர்களுக்கு நேரடியாக பங்கு இருந்திருக்காவிட்டாலும் இதுபற்றி எந்த அளவிற்கு அவர்களுக்குத் தெரிந்திருந்தது, அப்படித் தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் கேள்விகளே தற்போதைய லேபர் கட்ச்சித் தலைமைத்துவத்துவதற்கு தலையிடியைக் கொடுத்துள்ளன.
சாதாரண வாக்காளப் பொதுமக்கள், எந்தக் கட்சியிலும் அங்கத்துவம் வகிக்காதவர்கள் ம்னங்களில் இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும் என்தில் எதுவித ஜயமுமில்லை.
அரசியல்வாதிக்க்க்கள் மக்களுக்குச் சேவை வெய்ய மக்களிடையே இருந்து புறப்பட்டவர்கள் என்னும் வகையில் அவர்கள் மீது மக்களுக்கு பெரும் மதிப்பு இருந்து வந்தது உண்மையே.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அது மேலைத்தேசமாகட்டும் அன்றிக் கீழைத் தேசமாகட்டும் தாங்கள் மக்களுக்காக என்பதை மறந்து அரசியல்வாதிகள் மக்கள் தங்களுக்காக எனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.
தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் எத்தகைய மட்டத்திற்கும் கீழிறங்கிச் செல்லத் தயங்க மாட்டார்கள் எனபது போலத் தென்படுகிறது.
ஒவ்வொரு அரசியல் கட்ச்சியும் தாம் மக்களின் நன்மை கருதி கொண்டுள்ள கொள்கைகளை வழிநடத்த தமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. அதுதான் யதார்த்தமும் கூட.
ஆனால் அவ்வதிகாரத்தை அடைய அன்றி அடைந்த அவ்வதிகாரத்தைத் தக்க்க்க வைத்துக் கொள்ள அவர்கள் எத்தகிய கீழான செய்கைகளையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்று எண்ணும் போது நெஞ்சம் கொஞ்சம் பதறத்தான் செய்கிறது.
காலம் அரசியலைச் சுத்தம் செய்யுமா?… இளம் நெஞ்சங்கள், எமது அடுத்த தலைமுறைதான் இதற்கு விடையளிக்க வேண்டும்.
இந்தத் திருக்குறள் சொற்பொருள் நிறைந்தது. பொருளில் தத்துவமும் அறநெறிக் கோட்பாடும் பொதிந்த திருக்குறள் இது!
‘நடுவுநிலை’ என்பது ஓர் உயர்ந்த வாழ்வியல் தத்துவம்; கொள்கை; கோட்பாடு! நியாயம்-அநியாயம், நீதி-அநீதி ஆகியவற்றுக்கிடையில் யார் பக்கமும் சாராது நிற்றல் என்பது பொருளல்ல. இங்ஙனம் நிற்றல், அதாவது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடுநிலையாக நிற்றல் என்பது அறியாமை; கோழைத்தனம்! இல்லை, அநீதிக்கே துணை போவது போலத்தான்!
ஆதலால் அநீதி-நீதி இவற்றுக்கிடையே மோதல் வந்தால் தற்சார்பு, அச்சம், அவா ஆகியவற்றின் காரணமாக எது நீதியெனத் தெரிந்து கூறாது, சார்ந்து நில்லாது விடுதல் நடுவுநிலையன்று. அதுபோலவே பொருள், உழைப்பால் படைக்கப்படுவது; உரிமையால் பேணப்படுவது.
உழைப்பவர் படைத்த பொருளை உழைக்காமல் அடைய நினைப்பது, உரிமை கொண்டாடுவது நடுவு நிலைமையுடைய சார்பல்ல. உழைப்பவர்க்கே பொருள் உரிமை! உண்ணும் உரிமை!
“நன்பொருள்” – பரிசுச் சீட்டில் கிடைத்த பொருளல்ல; பிறர் பங்குப் பொருள் அல்ல; சலத்தால் செய்த பொருளும் அல்ல. உழைப்பில் உருவாய பொருள். அதனால் ‘நன்பொருள்’ என்றார்.
ஒருவருடைய உழைப்பின் பொருளை, ஒருவர் திருடிக் கொண்டால் அந்தக் குடும்பம் வளர்ந்து விடாது. ஏன்; பொருளைவிடப் பொருளைப் படைக்கும் உழைபாற்றல் விலை மதிப்புடையது, மாறாத் தன்மையுடையது; ஊற்று வளம் நிகர்த்தது. சுரண்டுதல் மூலம் பிறர் பொருள் கிடைப்பின் வாழ்க்கையின் தேவைக்குக் கிடைத்து விடுவதால் உழைக்கும் உணர்வு தலையெடுக்காது.
அதனால் உழைப்பாற்றல் மிக்க புலன்கள், பொறிகள் காலப்போக்கில் தம்முடைய உழைக்கும் தகுதியை இழக்கும். நோய் கொள்முதல் ஆகும்! ஏமாற்றப்படுபவன் விழித்துக் கொண்டால் சுரண்டவும் இயலாமல் போய்விடும்! அப்புறம்?
வாழ்க்கை திண்டாட்டம்தான்! அதனால், வாழ்வு கெடும்! உழைக்கும் இயல்பின்மையால் குற்றங்கள் செய்து வாழும் நிலை உருவாகும். அதனால் திறமை, ஒழுக்கம், பண்பாடு வளர உழைப்பு தேவை! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே வாழ்வு! உழைக்கும் வாழ்வே அறவாழ்வு! நலவாழ்வு!
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
தன்வலி அறியா தாமச நிலையில்
ஆன்ம பலத்தை அறவே இழந்து
மேனாட்டு மோகம் தானாட்டுவிக்க
வேத மதத்தின் வேர்கள் வெம்பி
மூட மேகங்கள் மூடிக் கவிந்து
“பாரதம் என்றால் பாமர தேசம்
பாம்புகள் நெளியும், பட்டினி மலியும்”
என்றே உலகம் நம்பிய நேரம்-
கூடப் பிறந்த பிறப்புகளைப் பற்றி எதுவுமே அறியாத பாண்டிக்கு அண்ணே….என்று அவள் அழைத்ததும், மனசுக்குள் எதுவோ என்னவோ செய்தது அவனுக்கு. இருந்தாலும் மலரை முறைத்துத் திட்டினான்.
என்னா ….புதுசா அண்ணே….நொண்ணேன்னு உறவு கொண்டாடுற….ஒங்கூடப் பொறந்தவனா நானு….ஓய்யாரத்தப் பாரு…அதட்டினான்.
ஓட்டிக்கிட்டுப் பொறந்தாத் தான் அண்ணனா….ஆபத்துல வந்து உதவினாக் கூட அண்ணேன் தான். பின்ன எதுக்கு இப்ப ஓடியாந்தியாம்.? பாத்துப்போட்டு கண்டும் காணாத மாதிரி போயிருக்க வேண்டியது தான…இவளும் அவனை விடவில்லை. பேச்சில் மடக்கி விட்டதாக நினைத்தாள் .
போயிருப்பேன்…ஆனா எனக்கு உன் மேல ஒரு இது..?
எது….?
அதான்…சொல்லத் தெரியல புள்ள.
உனக்குச் சொல்லத் தெரியல…நான் சொல்லிப்புட்டேன்….அண்ணேன்னு…! அவள் தனது முத்து மாலையை கைவிரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றிக் கொண்டே சொன்னாள் . ஷீலா கூட என்கிட்டே அப்படித் தான் சொல்லிச்சு….பாண்டி உனக்கு அண்ணன் முறையினிட்டு.. மலர் அவன் முகத்தை ஆராய்ந்து மனசுக்குள் சிரித்துக் கொண்டாள் .
சரி…ஒண்ணும் பேசாமே வா….அந்த ரூம்பு வந்திருச்சு.
ரோஸ் வுட்டில் வழ வழப்பாக பாலிஷ் போட்ட கதவின் வெண்கலக் கைபிடியில் கை வைத்ததும் அது திறந்து கொண்டது. உள்ளே, யாரோ ஒருவன் கம்பீரமாக சாய்ந்து கொண்டு சுழல் நாற்காலியில் உட்காந்தபடி முன்னும் பின்னும் ஆடியபடி தலையையும் ஆட்டிக் கொண்டிருந்தார்.
மலருக்கு, அவன் ஏதோ ஒரு படத்தின் வில்லனாக நடிக்கிறவர் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டாள் .
அருகில் மேனஜர் தனது மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி இவர்களைப் பார்த்து, மெதுவா..மெதுவா..என்று கண்களால் சமிக்சை செய்து கொண்டிருந்தான்.
அட மானேஜரே நடுங்குறாரு…..ஆச்சரியமானாள் மலர்.
லேசாக நொண்டி நொண்டி உள்ளே வந்தவள்….புரியாத ஒரு மொழியில் அந்த வில்லன் பேசியது கண்டு திகைத்து சிலை போல நின்றாள் .
ஏ சோக்கிரி கோ இதர் க்யா காம் ஹை …? கிதர் ஸெ ஆரே …? க்யா நாம் ? ஓ ஆத்மி கௌன் ஹை ..?
(இந்தப் பெண்ணுக்கு இங்கு என்ன வேலை? எங்கேர்ந்து வருகிறாள்? பெயர் என்ன? அவன் யார்?)
அது மலர்விழி….அமீர்பெட் ஆஞ்சநேயுலு சொல்லலியா..?என்று மேனேஜர் கேட்டதும்,
இந்த வில்லனோட பெயர் என்னவாயிருக்கும்..? மலர் யோசிக்கலானாள்.
சொல்லிச்சு…சொல்லிச்சு..பஹுத் அச்சா ஹை …பஹுத் சுந்தர் திக்ரா….! என்று கனைத்தது வில்லன்.
அபி தூ ஜா…! என்ற வில்லன், தனது கைபேசியை எடுத்து புத்தகத்தைத் திறப்பது போலத் திறந்து கைகளால் மெதுவாகத் தட்டிக் கொண்டே, லேகே ஜாவ் , தோனோங் கோ…!
(இப்ப இந்த இரண்டு பேரையும் அழைத்துச் செல்..)
எலே பாண்டி…நாம வந்த எடம், அம்புட்டும் படம் புடிக்கும்….பேசுறதெல்லாம் கூட கேட்கும்.அம்புட்டையும் நமக்கு முன்னாடியே அவரு அதான் பாஸ்…பார்த்துருவாரு. நீ இருவதாயிரம் வாங்கி இருக்கே….தைரியமா இரு…என்று கூடவே எச்சரித்தபடி…..
ஏய் மலரு இங்க என்ன நடக்குதுண்டு மூச்சு விடக் கூடாது யாருக்கும். ஏதாச்சும் போன் மூலமாச் சொன்னே…அம்புட்டு தான். ஊரு போய் சேர மாட்டே..! இங்கனக் குள்ளாரயே தீர்த்துக் கட்டீருவாங்க. இப்பமே சொல்லிப்புட்டேன்.
இவள் உறைந்து போனவள், மனத்துக்குள் “பேச்சியம்மா, முத்து மாரியம்மா, படை வீட்டு பகவதியம்மா, பாடைகட்டி மாரியம்மா….” அம்புட்டு பேரும் ஓடியாந்து என்னியக் காப்பாத்தி, இங்கிட்டு தவிக்கிற என்னிய மாதிரி புள்ளங்களையும் காப்பாத்திரும்மா தாயீ ….நான் வந்து மாவிளக்குப் போட்டுப் படைக்கிறேன் தாயீ ….உசுரோட நான் திரும்பிருவேனா…” தப்பு கிப்புப் பண்ணீட்டேனா ….இங்கிட்டெல்லாம் பணத்துக்கு ஆசைப் பட்டு வந்திருக்கப் படாதோ…அம்மா எம்புட்டு சொல்லிச்சு..பாவி மவ நான் பெரியவுக பேச்சைக் கேக்காமப் பொறப்பட்டு வந்தேனே…! நல்லா மாட்டிக்கிட்டேன்…..! பயம்ன்னா இப்படித் தான் இருக்குமா..? வவுத்தை பிணைஞ்சு வலிக்குது…முதுகுத் தண்டுக்குள்ளார ஜிவ்வுன்னு ரத்தம் ஏறுது …..தொண்டை உள்ளுக்குள்ளார இழுக்குது…..தொண்டைத் தண்ணி வத்திப் போவுது….நெஞ்சுக்குள்ள கிடு கிடுங்குது….தொடை கூட நடுங்குது…இம்புட்டும் ஒண்ணாச் செஞ்சா பயமா..? அப்ப …..நான் இவனுங்களுக்கு பயப்படுறேனா…? நடுங்கினாள் மலர்விழி.
உள்ளுக்குள் எழுந்த பயத்தை விரட்டி அடிக்கும் வழி தெரியாமல், இங்கன எங்கிட்டு காமெராவெச்சுருப்பானுங்க… என்று நோட்டம் பார்த்துக் கொண்டே பூனை போல நடந்தான் பாண்டி. நான் ஏதாச்சும் பேசப் போக அதும் பாட்டுக்கு ஓரமா இருந்துகிட்டு போட்டுக் கொடுத்துடுச்சின்னா, பெறவு இங்கிட்டிருந்துவெளியேற முடியாதாமே..! மனது எச்சரித்தது.
சின்ன வயதில் பாரதியார் பாடலைத் தலைகீழாகப் கேலி செய்து பாடிச் சிரித்ததை நினைவு படுத்தியபடி, இப்போதும் பயத்தை மீறி சிரித்துக் கொண்டாள். இவள் தனக்குள் சிரித்துக் கொண்ட போது பயம் விலகி நின்றது.
திடீரென ஒரு கதவு திறக்கப் பட்டு அழகான வாலிபன் இவர்களைப் பார்த்து “வெல்கம்’…என்றவன்….ப்ளீஸ். கமின்..என்றான்.
தயங்கிய பாண்டி உள்ளே நுழைந்ததும் , அவனைப் பின் தொடர்ந்தாள் மலர்விழி. விழுந்ததனால் ,கால் நரம்பு சுளுக்கி வீங்கிக் கொண்டு நடக்க விடுவேனா பார்…! என்று அவளைப் பிடித்து இழுத்தது.பாண்டிண்ணே, காலு ரொம்ப வலிக்கிது, என்று முனகினாள். அவன் கொஞ்சம் கூட அதைக் கண்டுகொள்ளவில்லை. அவன் பயம் அவனுக்கு.
இவர்கள் உள்ளே நுழைந்த அறை முழுவதுமாக குளிரூட்டப்பட்டு ஜில்லென்று இருந்த போதிலும் மலருக்கு முகமெல்லாம் முத்து முத்தாக வேர்தது. அவள் கண்கள் அதிசயத்தில் மிக மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டிருந்த பாட்டில்களை ஆவலோடு பார்க்கிறாள்.
அத்தனையும் இறால் ஊறுகாய் பாட்டில்கள், விற்பனைக்குத் தயாரான நிலையில் அடுக்கி வைக்கபட்டிருந்ததைக் கண்டதும் மனத்துள் நம்பிக்கை கை நீட்டியது.இந்த இடத்தில் பயமில்லை என்ற நம்பிக்கை உணர்வு அவளுக்குள் விழித்துக் கொண்டது. இப்போது அவளை ஆட்கொண்ட பயம் விலகிச் சென்றது.அப்பாடா….இறால் படங்களைப் ஏதோ தன் உயிர் தோழியைப் பார்த்தது போல மகிழ்ந்தாள் அவள்.
இவளைப் போன்ற பல பெண்கள் கைகளில் பிளாஸ்டிக் பைகளை நுழைத்துக் கொண்டு, தலையை பிளாஸ்டிக் தொப்பியை கவிழ்த்தி மூடியவாறு மும்முரமாக வேலைகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்கு கைகள் பரபரத்தது. இங்கன இதே வேலை கெடைச்சா எம்புட்டு நல்லாருக்கும். இப்படி ஜிலு ஜிலு ரூமுக்குள்ளார இருந்தா நான் “சீர்காழி கோயில கோயிலச் சுத்திப் பார்க்க வர வெள்ளக்காரியாட்டமா ஆயிடுவேன்……பெறவு அம்மாவுக்கு அடையாளமே தெரியாது…மனசு ரெக்கை கட்டிப் பறந்தது.
சுவர் முழுதும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒரு சுவர் போல இவளை உள்ளிருந்து வரவேற்றது.அடுத்த நிமிடம் அந்த அறையின் கதவு வெளிப்புறத்திலிருந்து சார்த்தப் பட்டது. அந்தப் பெரிய அறையில் பல பெண்கள் சோபாவில் சாய்ந்து கொண்டு, சேரில் அமர்ந்தபடி நகத்துக்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் முகத்தில் வெள்ளையாய் மாவைப் பூசிக் கொண்டு, கண்களுக்கு பதில் வெள்ளரிக்காய் வில்லைகள் உருட்டி முழித்துக் கொண்டிருந்தது.
சிரிப்புதான் வந்தது அவளுக்கு. இது ..வீடா.? ஆபீசா? சினிமா சூட்டிங் எடுக்குற எடமா? சொர்கமா…நரகமா..? ஒண்ணுமே வெளங்கலையே…இந்தப் பாண்டி எங்கிட்டுப் போனான்…கதவை இழுக்கிறாள்..அது மெளனமாக இவளை அடக்கியது. திரும்பிப் பார்த்து ஒரு பெண்ணிடம் , நான் வெளிய போகணும்…..!
…………..
நான் வெளிய போகணும்…….! இரண்டாவது முறையும் சொல்கிறாள்.
…………
ப்ளீஸ்….நான் பேசறது உங்க காதுல யாருக்குமே கேக்கலையா….? நான்….வெளியே….போகணும்…! தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சத்தமாகவே சொல்கிறாள். அந்த அமைதியில் இவளது குரல் எதிரொலித்தது.
அடுத்த சில நொடிகளில்…..”எங்களுக்கும் தான்….” ஒரு பெண்ணின் முனகல் இவளருகில் கேட்டது.
மலர்விழியின் மூளைக்குள் மின்னல் வேகத்தில் ஏதோ செயல்பட்டது.
அமெரிக்காவில் வருஷத்தில் ஒன்பதரை மாதங்கள் இருந்துவிட்டு வரும் எங்களுக்கு இந்தியா வந்தவுடன் பல அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. அமெரிக்கர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள், இந்தியர்கள் எல்லாம் கெட்ட மனிதர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அமெரிக்காவில் உள்ள சட்டம், ஒழுங்கு இந்தியாவில் இல்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது. அமெரிக்கா உலகின் பாதுகாவலன் என்று தன்னைப் பறைசாற்றிக்கொள்வதும் தன் நலன்களுக்காக எல்லா நாடுகளையும் ஆட்டிப்படைப்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆயினும் தினசரி நடவடிக்கைகளில் ஊழல், லஞ்சம், உருட்டு, புரட்டு என்று எதுவும் இல்லாமல் இருப்பது அந்நாட்டின் மிகப் பெரிய சிறப்பு அம்சம். அமெரிக்காவை வெறுப்பவர்கள் கூட இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவில் எங்களுக்குப் பல இடங்களுக்கும் சென்று வர வாகனங்கள் எதுவும் இல்லை. மைசூர் போன்ற ஊர்களில் ஓரளவு பேருந்துகள் வசதி இருக்கிறது உண்மைதான் என்றாலும் அவற்றில் சென்று வர நிறைய நேரம் எடுக்கிறது. அதிலும் சில இடங்களுக்குக் கொஞ்ச தூரமாவது நடக்க வேண்டியிருக்கிறது. இதை விட முக்கியமான விஷயம் பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஏறி இறங்கும் பயணிகளுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதில்லை. பயணிகள் இறங்குமுன்பும் ஏறுமுன்பும் அவர்கள் பாட்டுக்குப் பேருந்துகளை இயக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அமெரிக்காவில் பயணிகள் எல்லோரும் ஏறி இறங்கிப் பேருந்தின் கதவுகளை மூடிய பிறகுதான் ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியும். அப்படிப்பட்ட பேருந்துகள் எப்போது இந்தியாவில் புழக்கத்திற்கு வருமோ? பேருந்தில் செல்வதால் இப்படிச் சில அசௌகரியங்கள் இருப்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் ஆட்டோக்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு முறை ஆட்டோவில் ஏறும்போதும் ‘இந்த ஆட்டோ ஓட்டுநர் என்ன தில்லுமுல்லு செய்வாரோ?’ என்ற பயத்துடன்தான் பயணிக்கிறோம். எங்கள் ஊரான இராமநாதபுரம் மாவட்டத் தலைநகரம் என்றாலும் ஊர் சிறியதுதான். ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்குப் போக ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்ய வேண்டியதில்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போக இரண்டு கி.மீ. தூரம் என்றாலும் ஐம்பது ரூபாய் கேட்கிறார்கள். மூன்று கி.மீ. என்றால் குறைந்தது அறுபது ரூபாயாவது கேட்கிறார்கள். அதிலும் கொஞ்சம் லக்கேஜ் வைத்திருந்தாலும் இன்னும் அதிகமாகக் கேட்கிறார்கள். நகரப் பேருந்துகள் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆட்டோக்களில் கட்டணத்தைக் குறிக்கும் மீட்டர் உபயோகத்தைக் கட்டாயமாக்கப் போகிறோம் என்று அரசு கூறி வந்தாலும் – அப்படியே அவர்கள் அதைச் செய்தாலும் – பெரிய ஊர்களில்தான் இதைச் செயல்படுத்துவார்கள். இராமநாதபுரம் போன்ற சிறிய ஊர்களில் அது எப்போதும் வரப் போவதில்லை.
மைசூரில் நாங்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதி ஊரின் மையப் பகுதியிலிருந்து ஆறு மைல் தூரம் இருக்கும். ஊருக்குள் சென்றுவிட்டு வீடு திரும்ப எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஆட்டோ கிடைப்பது கடினம். சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவ்வளவு தூரம் வர விரும்ப மாட்டார்கள். சிலர் ஒன்றரைக் கட்டணம் கேட்பார்கள், ஒன்றரைக் கட்டணம் பத்து மணிக்கு மேல்தான் என்றாலும். ஆட்டோவில் ஏறும்போது அப்படிக் கேட்கவில்லையென்றாலும் வீடு வந்து சேர்ந்த பிறகு சிலர் அதிகம் கேட்பார்கள். மைசூரில் மீட்டர் போடும் முறை இருந்தாலும் நிறையப் பேர் போடுவதில்லை. போடாமல் நம்மிடம் ஒரு தொகையைக் கேட்பார்கள். ஒரு முறை ஒரு ஆட்டோ ஓட்டுநர் இப்படித்தான் 30 ரூபாயைப் பேசிக்கொண்டு ஆட்டோவை ஓட்டத் தொடங்கினார். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு காவலரைப் பார்த்ததும் வேகமாகப் பின்னால் திரும்பி மீட்டரைப் போட்டுக்கொண்டார். மீட்டர் போட்டாலும் கிடுகிடுவென்று வேகமாகப் போகும் மீட்டர்கள்தான் அதிகம்.
ஒரு முறை ஒரு இளம் ஆட்டோ ஓட்டுநரை மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு இடத்திற்குச் செல்ல அணுகினோம். அவர் ஆட்டோவும் புதிது. அதில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள ஒரு ஸ்டாண்ட் இருந்தது. அப்படி ஒன்றை அன்றுதான் நான் ஆட்டோவில் பார்த்ததால் ‘அது என்ன?’ என்று கேட்டேன். ஓட்டுநருக்கு அது பிடித்ததாகத் தெரியவில்லை. ‘என்னடா இது, இந்த அம்மாள் இதைப் பற்றியெல்லாம் கேட்கிறார்கள்?’ என்று நினைத்த மாதிரித் தெரிந்தது. ஆனால் உடனேயே நான் கேட்டதின் காரணத்தைப் புரிந்துகொண்டு ‘ஆமாம். புது ஆட்டோக்களில் இம்மாதிரி இருக்கிறது’ என்று பிரியமாகப் பதில் கூறினார். அவருடைய மீட்டரும் ஒழுங்காக ஓடியது! அன்று முதன் முதலாக சரியான கட்டணம் கொடுத்துப் பிரயாணம் செய்தோம்.
இன்னொரு முறையும் அதே இடத்திற்கு ஆட்டோவில் சென்று வந்தோம். இந்த முறையும் அதே கட்டணம்தான் வந்தது. திடீரென்று மைசூர் ஆட்டோக்காரர்கள் எல்லோரும் நியாயமாக நடந்துகொள்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நாங்கள் அப்படி நினைத்தது சரியில்லை என்பது போல் இன்னொரு ஆட்டோக்காரர் நடந்துகொண்டார். அதே இடத்திற்கு மறுபடி சென்றபோது முதல் இரண்டு ஆட்டோக்காரர்களையும் விட இவர் ஒன்பது ரூபாய் அதிகமாகக் கேட்டார். ‘இதே இடத்திற்கு நாங்கள் இரண்டு முறை வந்தபோது 22 ரூபாய்தானே ஆகியது. இப்போது எப்படி 31 ரூபாய் ஆகிறது?’ என்று கேட்டோம். இத்தனைக்கும் மீட்டர் புது மீட்டர். ஆட்டோ ஓட்டுநர் சரியான பதில் எதுவும் கூறவில்லை. ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நான் இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும்’என்று எங்களை அவசரப்படுத்தினார். இதற்கு மேல் அவரிடம் வாதாட முடியாது என்று அவர் கேட்ட கட்டணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். மீட்டர் புதிதாக இருந்தால் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று நினைத்திருந்த எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
ஒரு முறை எங்கள் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள ஒரு கோவிலுக்குச் சென்றோம். போகும்போது கட்டணம் 35 ரூபாய் ஆனது. ஆனால் சென்ற அதே வழியில் இன்னொரு ஆட்டோவில் வீடு திரும்பியபோது மீட்டர் கட்டணம் ரூபாய் 51 என்று காட்டியது. எனக்குக் கோபமான கோபம். ‘போகும்போது இதே வழியில்தான் சென்றோம். 35 தானே ஆயிற்று. இப்போது மட்டும் ஏன் 51 ரூபாய்?’ என்று கேட்டேன். கூடவே ‘நான் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறேன்’ என்று கூறிக்கொண்டே ஆட்டோ எண்ணை மனப்பாடம் செய்யத் துவங்கினேன். மைசூரில் ஒவ்வொரு ஆட்டோவுக்கும் லைசென்ஸ் பிளேட் நம்பரைத் தவிர ஓட்டுநரை அடையாளம் காட்டும்வகையில் ஒரு தனி எண் எழுதப்பட்டிருக்கும். அதை வைத்துப் புகார் செய்யலாம். ஏன் 51 ரூபாய் ஆயிற்று என்று கேட்ட போது ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று கூறிய ஓட்டுநர் நான் புகார் கொடுக்கப் போகிறேன் என்றதும் என் கணவரிடம் 40 ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டார்.
அவர் நாற்பது ரூபாய் மட்டும் பெற்றுக்கொண்டு சென்ற பிறகு ஆட்டோ ஓட்டுநர்களின் நிலையையும் நான் எண்ணிப் பார்த்தேன். அவர் கேட்ட அதிகப்படியான பதினொருரூபாயையும் சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. அவர்களும் ஒரு நாளைக்கு என்ன சம்பாதித்துவிடப்போகிறார்கள்? நாள் பூராவும் இரவு பகல் என்று பார்க்காமல் உழைக்கிறார்கள். இடையிடையே காத்திருக்கும்போது எவ்வளவு ‘போர்’ அடிக்கும்? என்று எண்ணினேன். ‘ஆனாலும்அவர்கள் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் அல்லவா?’ என்ற எண்ணமும் ஏற்பட்டது. இருபது வருடங்களுக்கு முன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த அஸ்வத் என்னும் கன்னட எழுத்தாளர் ஞாபகம் வந்தது. காந்திஜியை நான் நேரில் பார்த்ததில்லை. இவர்தான் நான் அறிந்த காந்திஜி. அவர் 1994-இல் இறக்கும்போது தன்னுடைய வீட்டையும் பதினாறு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் தன் ஒரே மகனுக்குக் கூட கொடுக்காமல் பொதுப் பணிக்காக விட்டுச் சென்றவர். 1994-இல் பதினாறு லட்சம் என்பது இப்போது நாற்பது லட்சத்திற்கு மேல். ஒரு முறை நானும் அவரும் ஆட்டோவில் சென்று வந்தபோது இருட்டிவிட்டது. ஓட்டுநர் கேட்ட தொகையை அவர் கொடுக்கவில்லை. தானாகக் கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்து மீட்டரைப் பார்த்துவிட்டுப் பின் தொகையைக் கொடுத்தார். தன்னுடைய எல்லா உடமைகளையும் பிறருக்காகக் கொடுத்தாலும் அந்த ஆட்டோ ஓட்டுநர் நாணயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதே போல்தான் நானும் இப்போது நடந்துகொண்டேன் என்று சமாதானம் செய்துகொண்டேன்.
ஆட்டோ ஓட்டுநர்களோடு இப்படிக் கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் சில இனிமையான அனுபவங்களும் உண்டு.
ஒரு முறை பெங்களூரிலிருந்து மைசூர் திரும்ப இரவு ஒன்பதரை மணியாகிவிட்டது. அன்று ஆட்டோ கட்டணம் ரூபாய் நூறாவது கொடுக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மைசூர் பேருந்து நிலையத்தில் காவலர்கள் நாம் செல்லும் இடத்திற்கான கட்டணத்தை நிர்ணயித்து நம்மை ஆட்டோவில் ஏற்றிவிடஒரு கவுன்டர் இருக்கிறது. அதில் ஒரு ரூபாய் கொடுத்து ரசீது வாங்கிவிட்டால், சேரும் இடத்தில் அவர்கள் விதித்துள்ள கட்டணத்தை ஆட்டோக்காரரிடம் கொடுத்துவிடலாம். அன்று நாங்கள் ஆட்டோவிற்குக் கொடுத்த கட்டணம் 64 ரூபாய்தான். எந்த வித ஆட்சேபமும் தெரிவிக்காமல் அதைப் பெற்றுக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் சென்றுவிட்டார். முன்கூட்டிக் கட்டணத்தை நிர்ணயித்துப் பயணிப்பவர்களை ஏற்றிச்செல்லவும் பல ஆட்டோக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.
இன்னொரு முறை ஊரின் மையப் பகுதியிலிருந்து வீட்டிற்கு வருவதற்காக நாங்கள் ஆட்டோவில் ஏறினோம். அரை மைல் தூரம் சென்றவுடன் திடீரென்று என் கணவருக்கு அந்த இடத்தில் ஏதோ சாமான் வாங்க வேண்டும் என்ற ஞாபகம் வந்தது. ஆட்டோ ஓட்டுநரைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லி அந்தச் சாமானை வாங்கச் சென்றுவிட்டார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கடையில் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆட்டோ கட்டணத்தோடு கொஞ்சம் அதிகம் சேர்த்துக் கொடுத்துவிடலாம் என்று நினைத்தார். வீட்டிற்கு வந்ததும் கட்டணம் 52 ரூபாய் ஆகியிருந்தது. என் கணவர் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து ‘நாற்பது ரூபாய் மீதி கொடுங்கள்’ என்றார். அதற்கு அந்த ஓட்டுநர் ‘மீட்டர் கட்டணம் 52 தானே ஆகிறது?’ என்றார். ‘உங்களைக் காக்க வைத்ததற்கு வெயிட்டிங் சார்ஜ் எட்டு ரூபாயை அதிகமாக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றதும் பிரியமாக வாங்கிக்கொண்டார். இப்படியும் சில ஆட்டோ ஓட்டுநர்கள்!
ஒரு முறை மதுரையிலிருந்து மைசூர் திரும்புவதற்காக ஆட்டோவில் மதுரை பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தோம். திடீரென்று அந்த முறை மதுரையிலிருந்து காய்கறிகள் வாங்கவில்லை என்று எனக்கு ஞாபகம் வந்தது. சிறு வயதிலிருந்தே தென் தமிழ்நாட்டில் கிடைக்கும் காய்கறிகளைச் சாப்பிட்டுப் பழகிய எனக்கு அடிக்கடி அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். அதனால் தமிழ்நாடு செல்லும் போதெல்லாம் முடிந்த வரை அங்கிருந்து காய்கறிகளை வாங்கி வருவோம். அந்த முறை மற்ற பல வேலைகள் இருந்ததால் காய்கறிகள் வாங்கி வர வேண்டும் என்பது முழுவதுமாக மறந்துவிட்டது. நாங்கள் ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த போது இரவு மணி எட்டு. இதற்குப் பிறகு எங்கு போய் காய்கறிகள் வாங்குவது, அதுவும் பேருந்துநிலையத்திற்குச் செல்லும் வழியில்? இருந்தாலும் ஆட்டோ ஓட்டுநரைக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தோம். அவர் எங்கள் ஆசையைப் புரிந்துகொண்டு,‘இவ்வளவு நேரத்திற்குப் பிறகு நாம் போகும் பாதையில் எந்த மார்க்கெட்டும் இருக்காது. சென்ட்ரல் மார்க்கெட் திறந்திருக்கிறதா என்று வேண்டுமானால் பார்ப்போம்’ என்று எங்களை அங்கு அழைத்துச் சென்றார். நல்ல வேளையாக அங்கு பல கடைகள் மூடப்பட்டுக்கொண்டிருந்தாலும் சில கடைகள் திறந்திருந்தன. அவற்றில் எங்களுக்கு வேண்டிய காய்கறிகள் கிடைத்தன. எங்களுக்கு மிகவும் சந்தோஷம். பேருந்து நிலையம் வந்து சேர்ந்ததும் ஆட்டோ மீட்டர் காட்டிய தொகைக்கு மேல் மிகவும் அதிகமாகவே அவருக்குக் கொடுத்தோம். அவருக்கும் சந்தோஷம். நாங்கள் அதிகமாகக் கொடுப்போம் என்று தெரியாமலேயே அவர் எங்களைக் கூட்டிச் சென்றது அவரது பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையைக் காட்டுகிறது.
ஒரு முறை மைசூரில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தி நடைபாதைக் கடையில் இட்லி வாங்கினோம். அங்கு விற்கும் இட்லியும் சட்னியும் மிகவும் பிரசித்தம். அது அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தெரியாது போலும். என் கணவர் ஆட்டோவிலிருந்து இறங்கி இட்லி வாங்கச் சென்றதும் என்னிடம் ‘இங்கு இட்லி நன்றாக இருக்குமா?’ என்று கேட்டார். அவருக்கும் இரண்டு இட்லிகள் வாங்கிக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆட்டோவிலிருந்து இறங்கி என் கணவரிடம் சென்று ஆட்டோ ஓட்டுநருக்கு இரண்டு இட்லிகள் வாங்கி வருமாறு கூறினேன். ஓட்டுநர் மனம் நெகிழ இட்லிகளைப் பெற்றுக்கொண்டார்.
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த விசாலம் எதிர்ப் பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டிருந்த சரவணனைக் கண்கொட்டாமல் பார்த்தாள். அவன் தலை திரும்பியதும் கவனியாதவள் போல் தலையைத் திருப்பிக்கொண்டாள். ‘பெண்டாட்டி படுத்த படுக்கை! இவன் யாருக்காகத் தினமும் பூ வாங்குகிறான்’ என்னும் கேள்விக்கு விடை தெரியாவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்துவிடும் போல் ஆயிற்று. அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் இடைவெளி விட்டு அவனைப் பின் தொடர்ந்தாள். அவன் முகத்தில் பாதிக்கு மேல் மறையும்வண்ணம் குடையைத் தாழ்த்திக் கொண்டாள்.
தெரு முக்கில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் சரவணன் நுழைந்தான். அர்ச்சகரிடம் பூவைக் கொடுத்துப் பிள்ளையாருக்குச் சாற்றச் சொன்னதன் பிறகு விநிதாவின் பெயரில் அவன் அர்ச்சனையும் செய்யச் சொன்னதை இதற்குள் விரைந்து வந்து ஒரு தூணுக்குப் பின்னால் நின்று விட்டிருந்த விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். இன்ப அதிர்ச்சிக்கு ஆளானாள்.
“தினமும் அர்ச்சனை பண்றீங்களே, சாமி?” என்ற அர்ச்சகரின் வியப்பான வினாவுக்கு, “அவங்க என் சம்சாரம். அவங்களுக்கு உடம்பு சரியில்லை. சீக்கிரம் குணமாகணும்னுதான்!” என்ற சரவணனின் பதிலையும் விசாலம் காதில் வாங்கிக்கொண்டாள். நிம்மதிப் பெருமூச்சுடன் விரைவாக அங்கிருந்து நீங்கினாள். உடனே வினிதாவைப் பார்த்து அதைச் சொல்லிப் பாராட்டாவிட்டாலும் அவளுக்குத் தலை வெடிக்கும் போலாயிற்று!