தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா!

3

வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது. நாளொன்றிற்கு 1,75,000 முறைகளுக்கு மேல் வாசிக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியாவில் பல்துறை சார்ந்த பங்களிப்பாளர்கள் எழுதி வருகிறார்கள். கட்டுரையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தகவல் களஞ்சியமாக விளங்கும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு நிறைவு

விக்கிப்பீடியா அழைப்பிதழ்

இடம்:

டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்.

வழி:

 • மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும்.
 • பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்தும் (15 நிமிடங்கள்) பேருந்து மூலமாகவும் வரலாம்.

நேரம்:

 • காலை 09.00 மணி முதல் 12:30 மணி வரை விக்கிப்பீடியா பயிற்சிகள்
 • மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம்.

பகல் உணவு இடைவேளை 12:30 முதல் 03:00 மணி வரை. அருகில் உள்ள கல்லூரி உணவகத்திலும், அடையாறு பகுதியில் உள்ள உணவகங்களிலும் உங்கள் நண்பர்களுடன் உணவருந்தி விட்டு மாலை நிகழ்வுக்குத் திரும்பலாம்.

நிகழ்ச்சிக்கு உங்கள் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், குழந்தைகள் என்று அனைவரையும் அழைத்து வரலாம். பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 29-09-2013 ஞாயிறு 09.00 மணி முதல் 12:30 மணி

 • 09.00 – 10.30 – புதியவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் – தமிழ்த் தட்டச்சு, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம், விக்கிப்பீடியாவில் உலாவுதல், பயன்படுத்துதல், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், படங்கள் ஏற்றுதல் மற்றும் பிற பங்களிப்பு வாய்ப்புகள்
 • 10.30 – 11.15 – ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது என்ன? – இதழாளரும் ஆழி பதிப்பக நிறுவனரும் தொழில்முறை மொழிபெயர்ப்பாளருமான செ. ச. செந்தில்நாதன் உரையாடுகிறார்.
 • 11. 15 – 12.00 – சிறப்பாக படங்கள் எடுப்பது எப்படி? – ஹரி பிரசாத் பயிற்சி அளிக்கிறார். ஹரி பிரசாத் ஒரு ஒளிப்படக்கலை விரும்பி. அவரது படங்களை என்றhttp://www.500px.com/HariNair முகவரியில் காணலாம்.
 • 12.00 – 12.30 – சிறப்பாக பரப்புரைகள் செய்வது எப்படி? – தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அமைப்பினருடன் ஒரு கலந்துரையாடல்

மாலை 03.00 மணி முதல் 05:30 மணி வரை தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம்.

 • வரவேற்புரை (2 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளை இனிப்பு வழங்கி கொண்டாடுதல் (5 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்த சிறு அறிமுகம் (15 நிமிடங்கள்)
 • முனைப்பான பங்களிப்பாளர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கல் (15 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி பற்றிய சிற்றுரைகள் (15 நிமிடங்கள்)
 • தமிழில் கட்டற்ற உள்ளடக்கம், தமிழிலும் இந்திய மொழிகளிலும் விக்கிமீடியா இயக்கத்தை வளர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் (60 நிமிடங்கள்)
 • தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் துரை மணிகண்டனின் நூல், நித்யா சீனிவாசன் எழுதிய லினக்சு மின்னூல் வெளியீடு (15 நிமிடங்கள்)
 • பங்கேற்பாளர் வாழ்த்துரைகள் (15 நிமிடங்கள்)
 • நன்றியுரை (3 நிமிடங்கள்)

சிற்றுண்டி, தேநீர் வழங்கி நிகழ்வு நிறைவு பெறும்.

தினமணி செய்தி

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா!

 1. தனித்தமிழ் தலிபான்கள் தமிழ் விக்கிபீடியாவை சீரழித்து, கைப்பொம்மையாகி 8 வருஷங்கள் ஆகிரன. முதல் இரு வருஷங்கள் ஒழுங்காக போய் கொண்டு இருந்தது. செல்வா தலமையிலான தனித்தமிழ் தலிபான் கெடுபிடி தமிழ் எழுத்துதுறையின் ஆரோக்கியமற்ற போக்கு.

  வ.கொ.விஜயராகவன்

 2. தனித் தமிழ் ஆர்வலர்களையும் தலிபான்களையும் இணைத்துப் பேசுவது, எந்த வகையில் ஆரோக்கியமானது வ.கோ.வி.? தமிழில் பல்வகையான எழுத்து நடைகள் உள்ளன; வட்டார வழக்குகளும் பல உண்டு. இவை அனைத்துக்கும் தமிழில் இடம் உண்டு. ஆயினும், வேற்றுமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழுக்கு ஏற்ப உள்வாங்க வேண்டும்; அவற்றை அவ்வாறே எழுதுவது கூடாது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும். தமிழர் வாழும் பல நாடுகளின் அரசுகளும் இதையே பின்பற்றி வருகின்றன. அந்த வரிசையிலேயே, தமிழ் விக்கிப்பீடியர்களும் பணியாற்றி வருகிறார்கள். இதில் உங்களுக்கு விமர்சனங்கள் இருக்குமாயின், தமிழ் ஆட்சி மொழியாக உள்ள அரசுகள், தமிழ் கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகள்… உள்ளிட்ட அனைத்திடமும் சென்று, உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். அதை விட்டுவிட்டு, தமிழுக்காகத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் பல்லாண்டுகளாகச் செலவிடும் தன்னார்வலர்களைப் பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது, அடாத செயல். 

  தமிழ் விக்கிப்பீடியர்களின் பணி, மேன்மேலும் சிறக்க, எனது நல்வாழ்த்துகள்.

 3. அண்ணாகண்ணன்

  முதல் பாயிண்ட்: என் பெயர் வ.கோ.வி. இல்லை, வேண்டுமானால் வ.கொ.வி. என எழுதுங்கள்

  நீங்கள் விக்கிபீடியா என்பது என்ன, அதன் அடிப்படை என்ன, எது விக்கிபீடியா இல்லை, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என தெரியால் எழுதுகிறீர்கள். அதைப்பற்றி ஓரளவும் நீங்கள் ஆராய்ச்சி செய்ததில்லை என நினைக்கிறேன்.

  விக்கிபீடியா, எளிய மொழியில் சொல்ல வேண்டுமானால், யாருடைய சொத்தும் இல்லை. அது பொது வெளி. அது எல்லோருக்கும் ,அதாவது தமிழ் படிப்பவர்களுக்கும், உரிய வகையில் சாதாரண தமிழில் எழுத வேண்டும். அங்கு நீங்கள் ”தனித்தமிழ் ஆர்வலராக” இருப்பதால் ஒரு முன் உரிமையும் இல்லை, அபப்டி முன்னுரிமை கேட்பதால்தான், மற்றவர்கள் மேல் திணிப்பதால்தான் நீங்கள் தலிபான் ஆகிறீர்கள். நீங்கள் தனித்தமிழ் ஆர்வலாரக இருந்தால் உங்கள் பிளாகில் அப்படியே எழுதுங்கள், அல்லது நீங்கள் எடிடராக இருக்கும் பத்திரிக்கையில் (வல்லமை??) முழுவதுமாக அமல் செய்யுங்கள் , பொது வெளியில் , எல்லோரும் எழுதும் இடத்தில் தமிழ் என் கொள்கையைத்தான் பின்பற்ற வேண்டும் என்பது அடாவடித்தனம். இந்த வித்யாசம் புரியாவிட்டால் வழிப்பறி கொள்ளையையும் , சட்டபூர்வமாக சம்பாதிப்பதையும் சமமாக பாவிக்கிறீர்கள்.

  தமிழ் விகிபீடியாவில் பல லக்ஷக்கணகான உதாரணங்களிலிருந்து ஒரு சாம்பிள் எடுக்கலாம்.

  பாகிஸ்தான் என்ற தலைப்பில் கட்டுரை ஒருவரால் 2005ல் ஆரம்பிக்கப்பட்டது. அதை தலிபான்கள் பாக்கித்தான் என மாற்றினார்கள்.
  http://ta.wikipedia.org/s/ob

  கட்டுரை இப்படி ஆரம்பமாகிறது
  பாக்கித்தான் அல்லது பாக்கிசுத்தான் (Pakistan, பாகிஸ்தான்..)

  பரவலாக தமிழ் பத்திரிக்கைகளில் பாகிஸ்தான் எனதான் இருக்கும். யாரும் பாக்கிசுத்தான் என எழுதுவதில்லை.

  ஒரே பக்கத்தில் 4 பேர்கள் உள்ளன. பாகிஸ்தான், பாக்கித்தான் , பாக்கிசுத்தான், பாக்கிஸ்தான். ஒரு சின்ன கட்டுரையில் 4 பேர்கள் , கட்டுரை தலைப்பில் இல்லாதவை ? ஏன் இப்படி ? தனித்தமிழ் ஆர்வலர்களின் தலிபானியம் என கூறுவேன். இதில் இன்னொரு விஷயம். அது விக்கிபீடியாவின் Stability கொள்கைக்கு எதிரானது. Stability கொள்கை என்றால் ஒரு கட்டுரையில் ஒரே பெயரை பயன்படுத்துக. இது விக்கிபீடியாவின் Stability மட்டுமில்லை, மொழியின் Stability என்றும் கூறலாம். மொழியின் ஸ்திரம் என்பது ஒரு பொருளை குறிக்க ஒரே வார்த்தையை உபயோகிப்பது. உதாரணமாக லக்ஷக்கணக்கான ஆங்கில ஆவணஙகளில் Pakistan என்ற ஒரே வார்த்தையைதான் பார்க்க முடியும். இந்திய ஆங்கில பத்திரிக்கையோ, இங்கிலாந்து பத்திர்க்கஒயோ, ஆஸ்திரேலிய அரசு ஆவணமோ ஒரே வார்த்தைதான் – Pakistan.

  ஆனால் தனித்தமிழ் தலிபான்களால் ஒரு சின்ன கட்டுரையில் 4 பேர்கள் ஒரு நாட்டுக்கு. இதுவே ஆங்கில பாகிஸ்தான் கட்டுரைரையை பாருங்கள்.

  ஆங்கில பாகிஸ்தான் கட்டுரை 177520 பைட்
  தமிழ் பாகிஸ்தான் கட்டுரை 15724 பைட்

  ஆங்கில கட்டுரை தமிழ் கட்டுரையைவிட 12 மடங்கு பெரிது. தமிழின் ஸ்திரத்தன்மையை தனித்தமிழ் ஆர்வலகள் கெடுக்கின்றனரே தவிர, தமிழில் அறிவு வளர்க்க பாடுபடுவதில்லை. தமிழ் மெல்ல சாகிறதென்றால் உங்கள் தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

  அதைத்தவிர கட்டுரையை முதலில் எழுதியவர் “தமிழை” எழுதுவில்லை என தானே ஆகிற்து. அது கட்டுரை எழுதுபவரை அவமதிப்பது ஆகாதா?? தலிபான்கள் சலவைப் பட்டாளமாக ஈடுபடுகின்றனர், தமிழில் அறிவை வளர்ப்பதற்க்கு அல்ல. மத்தவங்க எழுதணும், உடனே அவர்கள் போய் தவறுதிருத்தணும்.

  இதைப்பற்றிதான் இன்னொரு இடத்திலும் இப்படி எழுதினேன்

  The first paper that I saw was , “The Tamil Wikipedia: Criteria for Evaluation and Enrichment” by N.Murugaiyan, Chief Resource Person, Central Institute of Classical Tamil.

  Mr.Murugaiyan has pointed out to the poor participation, both qualitatively and quantitatively by Tamil writers in TamilWikipedia. That does not come as a surprise to me . Having been involved in Tamil Wikipedia from 2006 , I have come to realize the heavy and stultifying hand of a group of persons who control the Tamil Wikipedia and who are committed Thaniththamiz ideologists . I have got into verbal matches with them in Wikipedia and outside.

  I have warned about this Thaniththamiz cabal which acts against every letter and spirit of Wikipedia movement many , many times in different fora. This has prevented the qualitative and quantitative enlargement of Tamil wikipedia. I have thousands of examples of the points I raise . It looks like Mr.Murugaiyan is unaware of this “cultural factor” since presumably he has not been a participant himself.

  I have given a summary of my criticism against Tamil wikipedia in a letter to the writer Jeyamohan

  http://www.jeyamohan.in/?p=4249

  All these points still stand with even more evidence. A number of good writers and administrators have left due to this cabal.

  Regards

  V.C.Vijayaraghavan

  மேலும் உங்கள் கருத்தான ”இவை அனைத்துக்கும் தமிழில் இடம் உண்டு. ஆயினும், வேற்றுமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழுக்கு ஏற்ப உள்வாங்க வேண்டும்; அவற்றை அவ்வாறே எழுதுவது கூடாது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும். தமிழர் வாழும் பல நாடுகளின் அரசுகளும் இதையே பின்பற்றி வருகின்றன. அந்த வரிசையிலேயே, தமிழ் விக்கிப்பீடியர்களும் பணியாற்றி வருகிறார்கள். ” என்பதற்க்கு ஆதாரம் இல்லை

  உங்கள் கூற்று “இதில் உங்களுக்கு விமர்சனங்கள் இருக்குமாயின், தமிழ் ஆட்சி மொழியாக உள்ள அரசுகள், தமிழ் கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகள்… ” விக்கிபீடியா ஒழுங்காக இருக்க வேண்டுமானால் , ஏன் அரசு, பல்கலைக்கழகங்கள் என எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அவை அதன் அதிகாரத்தில் நடக்கின்றன. விகிபீடியா அதன் கொள்கையின் நடக்கிறது. இரண்டையும் ஒன்றாக குழப்பாதீர்கள். அறிவுத்தளமும் அதிகாரத்தளமும் ஒன்றல்ல.

  நான் இன்னொரு தளத்தில் வைத்த விமர்சங்களுக்கு உங்கள் பதில் என்ன?

  http://www.jeyamohan.in/?p=4249

  வன்பாக்கம் விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *