தலைகுனிவாய்…
-செண்பக ஜெகதீசன்
ஆண்டவன் படைப்பு
அலட்சியப்படுத்ப்படுகிறது..
தொப்புள்கொடி உறவும்
தொலைந்து போகிறது..
இரத்த பாசத்தை
இயலாமை வென்றுவிடுகிறது..
அவசர ஆசை
அவமானச் சின்னமாகிவிடுகிறது..
கண்ணியம் என்பது
காற்றில் பறந்துவிட்டது..
ஏமாந்ததற்கு ஓர்
எடுத்துக்காட்டாகி விட்டது..
தவறு செய்ததற்கு
தண்டனை மாறிவிட்டது..
தாய்மை என்பது
தலைகுனிவாகிவிட்டது-
குப்பைத் தொட்டியில்
குழந்தை…!
இதில் ஆணின் பங்கே அதிகம். ஒவ்வொரு வரியும் தலையில் அடித்து தலை குணிய வைக்கிறது அருமை,சபாஷ்.
கவிதையின் இறுதி வரிகளைப் படித்த பிறகு மீண்டும் முதலில் இருந்து படிக்கத் தொடங்கினால், ஒவ்வொரு வரியும் ஆழப் பாய்கிறது இதயத்தில். நன்றி!
திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோரின்
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி…!