Blog

  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரிய வடுக்களின் [Sun Spots] காந்த வீச்சுகள் நேரடியாகப் பூமியில் பூகம்பத்தைத் தூண்டுமா ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    காலக் குதிரையின்
    ஆழியைச் சுழற்றுவது சூரியன்.
    ஊழியின்
    ஓவியக் கரம் புரிவது !
    ஓயாத சூரியனும்
    ஒருநாள் ஒளியின்றி முடங்கும் !
    பூமியின் உட்கருவில்
    சங்கிலித் தொடரியக்கம்
    தூண்டும் யந்திரம்
    பரிதி !
    பூமி ஒரு வெங்காயம் !
    உடைந்த தட்டுகள்
    அடுக்கடுக் காய்ப் படிந்த
    பொரி உருண்டை !
    சூரிய காந்தம், கதிர்வீச்சு
    காமாக் கதிர்கள்
    சூழ்வெளி படைப்பவை !
    பூமியின் உட்கரு வெப்பக் கனல்
    அரங்கேற்றம் செய்யும்
    பூகம்ப அடித்தட்டு
    நடனத்தை !
    எரிமலைக் கண்ணைத்
    திறந்து விடும் !
    பரிதி வடுக்களின் காந்தம்
    கைநீட்டிப்
    நிலநடுக்கம் தூண்டலாம் !
    சுனாமி அலைகளை
    எழுப்பி
    மனித இனத்தை அழிக்கலாம்
    மாநிலத்தில் ?
    +++++++++++++

    Fig 1 Sun's Furnace & Process

    “சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே ! பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர் நிகோலா ஸ்கஃபீட்டாவும் ஒப்புக் கொண்டோம்.”

    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)

    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது ! பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன. இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”

    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1E Solar Weather & Atmosphere

    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது ! பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது. துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை ! வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன. இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை. இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.

    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)

    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது. அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும். [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”

    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1A Earth's Internal Structure

    அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?

    பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை ! ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது. கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டுகளையும் நகர்த்தி வருகிறது. பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடுகிறார்கள். இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது.

    இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன ! ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன ! அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது ! இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் ! பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது ! உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.

    Fig 1A The Sun's Core

    ஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது ! இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள். கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன. ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன. அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம். 1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன ! அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் ! உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை ! வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !

    Fig 1C Solar Magnetic Field

    பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்

    பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி ! அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது ! இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ? எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ? ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ? பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும். அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது. மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது. லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன ! அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன. அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    Fig 1D Earthquake Wave Travel

    பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள். நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது. பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது. நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.

    பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு

    பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார். அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :

    Mitch Buttros Equation :

    Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption

    Fig 3 The Equation for Sunspots & Extreme Weather

    மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :

    பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>> பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத் துன்பங்கள்.

    மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகியோருடன் உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.

    Fig 5 Ulysses Solar Probe

    சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்

    பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின் வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத் தெரிகிறது. பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின் கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது. அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே ! சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது ! நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும் (விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின் பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன.

    பூமியில் இடி மின்னல் தாக்குவது போல் பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது. பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகியவற்றை ஆய்ந்து உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின் “கனற் திணிவு வெளியேற்றம்” [Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத் துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும் உண்டாக்குகின்றன !

    Fig 1G The Climate Connection

    பூகாந்த முனைத் திருப்பமும் கண்டங்கள் நகர்ச்சியும்

    1900 ஆண்டுகளில் ஜெர்மன் பூதள விஞ்ஞானி ஆல்·பிரட் வெகினர் (Alfred Wegener) உலகக் கண்டங்களின் வரைப்படங்களைக் கண்டு ஒரு யுகத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கே ஒட்டி இருந்தன என்றும் பிறகு மெதுவாக அவைத் தனித்தனியாக புலம்பெயர்ந்து தற்போதுள்ள இடங்களில் அமைந்துள்ளன என்னும் தனது “உலகக் கண்டங்களின் பிரிப்பு” நியதியை (Continental Drift Theory) அறிவித்தார். அதற்குச் சான்றாக பொருந்திடும் விளிம்புகளில் 1918 இல் அவர் பல்வேறு கண்டத்துப் பாறைகள் ஒத்திருந்ததைக் கண்டார். கடலில் மிதந்து நகரும் பெரும் பனிப்பாறைகள் போல், கண்டங்களும் பூமியின் உலோக திரவத்தில் மிதந்து நகர்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதம் பல மில்லியன் ஆண்டுகள் மெதுவாக நகர்வதற்குச் சக்தி அளித்தது பூமியின் உட்கரு வெப்பமே என்றும் கூறினார். ஆல்·பிரட் வெகினர் கூறிய கண்ட நகர்ச்சி நியதிக்குக் கடும் எதிர்ப்பு பூதள விஞ்ஞானிகளிடம் முதலில் இருந்து, பின்னால் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    Fig 2 The Corona Heating Mystery

    மீளும் பூகாந்த முனைத் திருப்பங்கள்

    எரிமலைக் கண்ணில் பொங்கிக் கசியும் குழம்பு (Lava) பூமியின் மேல்தளத்தில் குளிர்ந்து பாறையாக இறுக்கம் அடைகிறது. பெரும்பான்மையாக அது கறுப்பாக இருக்கும் பஸால்ட் பாறைக் காந்தமாகும் (Magnetic Basalt Rock). அப்பாறைக் காந்தம் குளிரும் போது பூகாந்தத் தளத்தின் துருவத் திசையிலே உண்டானது. காந்த மானிகள் பஸால்ட் காந்த துருவத்தைக் கண்டுவிடும். அவ்விதம் பலதடவைகளில் எரிமலை கக்கும் போது உண்டாகும் பாறைப் படிமானங்கள் வெவ்வேறு (நேர்-எதிர்) திசைக் காந்த முனைகளைக் கொண்டிருந்ததால் பூமியானது தனது காந்த முனைத் திருப்பங்களை எத்தனை முறை செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

    கடற் தளத்தின் மீது சீரான காந்தத் திணிப்புகள்

    1950 ஆண்டுகளில் கடற் தளத்தின் கீழ் பெட்ரோலிய ஆயில் புதையல்களைத் தேடிச் செல்லும் பூதள ஆய்வாளர் காந்தக் கருவிகளைக் கட்டிக் கப்பல் அல்லது விமானம் மூலம் ஆராய்ந்த போது காந்த வலுவற்ற பாறைகளுக்கு அருகில் ஆயில் கிணறு இருப்பதைச் சோதித்தார்கள். பூமியின் தளத்தில் நோக்கிய போது பாறைக் காந்தங்கள் தாறுமாறாய் இங்கும் அங்கும் செம்மை யில்லாது இருந்தன. ஆனல் கடற்தளங்களில் காந்தப் பாறைகள் அவ்விதம் அமையவில்லை ! மாறாக 1960 ஆண்டுகளில் அட்லாண்டிக் கடலில் தேடிய போது கடற்தளப் பாறைகளின் காந்தங்கள் சீராக ஓரினப் பண்பாட்டில் விந்தையாக நீண்ட அளவுத் துண்டங்களாய் “மைய அட்லாண்டிக் பிளவுக்கு” இணையாக (Parallel to the Mid-Atlantic Ridge) அமைந்திருந்தன. அந்த மைய அட்லாண்டிக் கோட்டில்தான் எரிமலைக் கசிவுகள் உண்டாகி எரிமலைத் தீவுகள் எழும்பியுள்ளன ! மற்றும் எல்லைக் கோட்டில்தான் பூகம்பங்களும் பல நேர்ந்துள்ளன.

    Fig 4 The Nature of Solar Flares

    கடற் தளப்பரப்பு விலகி நகர்தல் !

    1962 இல் லாரென்ஸ் மார்லி (Lawrence Morley) என்பவர் கடற்தள விரிவைப் பற்றி முதன்முதல் அறிவித்தைப் பல பூதள விஞ்ஞானிகள் நிராகரித்தார். லாரென்ஸ் மார்லி, அடுத்து டிரம்மண்டு மாத்யூஸ், ·பிரெடெரிக் வைன் ஆகிய மூவரும் கடற்தளம் தொடர்ந்து சீராக ஆண்டுக்கு 2.5 செ.மீடர் வீதத்தில் விலகிக் கொண்டு வருவதாக அறிவித்தனர். அடித்தட்டுகள் விலகும் போது பிளவில் எரிமலைக் குழம்பு கசிந்து பிறகு குளிர்ந்து படிகிறது. அப்போது அவை தமது காந்த முனை அமைப்புகளையும் முத்திரை செய்தன. சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூகாந்தம் முனைத் திருப்பம் செய்கிறது. அதே போல் கடற்தளப் பாறைகளும் தமது காந்த முனைத் திருப்பங்களைப் பதிவு செய்கின்றன. அதாவது பூமியின் கடற்தளம் ஒரு “பூத நாடாப் பதிவு மானி” (Giant Tape Recorder) போல் இயங்குகிறது ! இவ்விதமாக அனைத்துக் கடற்தளங்களும் வெவ்வேறு காந்த முனைகளைப் பதிவு செய்த பாறைத் துண்டங்கள் கொண்டதாக காணப் படுகின்றன. அந்த கடற்தள அடித்தட்டுகளைத் தொடர்ந்து தள்ளிக் கொண்டு நகர்த்துவது பூமியின் உட்கரு வெப்பச் சக்தியே !

    Fig 7 Corona Mass Ejections (CME)

    [தொடரும்]
     +++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By : Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 ( http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
    19 India Daily Technology Team (Aug 8, 2005)
    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)
    29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
    29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website : http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov> (April 25, 2007)
    31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
    32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
    33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    34 National Geographic Picture Atlas of Our Word (1990)
    35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    ******************

    jayabarat@tnt21.com (February 5, 2013) [R-1]

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (2)

    பவள சங்கரி

    நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்

    வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் க்டைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.

    நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த  சரக்கிற்கு பெருத்த  லாபம் கிடைக்கப்போவதாக கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறிவிட, அவர் எதிர்பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்துவிட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை. ஆனாலும் அவர் தாம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு? கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரேதானே பொறுப்பாக முடியும். ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது.

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது. அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித்தீவிலிருந்து  ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை. அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும். அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே? இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை. உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்துவிட்டால் மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா? அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்.

    அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம். நல்ல வாழ்த்துக்களைப் பெற்றுத்தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதை அனுபவிக்கப் பழகிவிட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும்.

    வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி. நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகிவிடும். குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.

    நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?

    பெற்ற சிறிய வெற்றியையும் மனம்கிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா..  அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே. ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம். அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே. இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத்தானே அர்த்தமாகிறது.

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://rishikajain.com/2012/02/01/happiness-will-never-come-to-those-who/

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    உடல் உறுப்பு ஆக்கிய கவிஞன் நான்

    ஓர் ஆத்மீகக் கவிஞன் நான்

    சொர்க்கபுரி இன்பங்கள் பெற்றவன் நான்

    நரகத்தின் துயர்கள் உற்றவன் நான்

    முன்னதை என்னுள் புகுத்தி நான்

    உன்னத மாக்கிக் கொண்டது;

    பின்னதைப் புது மொழியாக நான்

    மொழி பெயர்த்தியது.

    மாதரின் கவிஞன் நான், அதுபோல்

    ஆடவருக்கும் கவிஞன்.

    மாதராய்ப் பிறந்தது மகத்துவம் என்பேன்

    ஆடவர் போல.

    மானிடத் தாயை விட

    பேறு பெற்றவர் வேறில்லை என்று

    கூறுவேன் !

    பரிவுடன் மலரும் இரவிலே நான்

    திரியும் ஒரு மனிதன்;

    கடலும், புவியும் தேவை எனக்கு;

    இரண்டிலும் பாதி நேர ஆட்சி

    இரவு புரியும் !

    மார்பில்லாச் சூனிய இரவைக்

    இறுகத் தழுவிக் கொள் !

    காந்தக் கவர்ச்சி ஊட்டும் இரவைக்

    கட்டித் தழுவிக் கொள் !

    தென்திசைக் காற்றுகள் வீசும் இரவு

    பெருவடிவ விண்மீன்கள்

    சிலவற்றைப்

    பெற்றுள்ளது இரவு !

    நடுங்கும் இரவு மேலும் !

    பித்துப் பிடித்துள்ளது !

    உடுப்பில்லா அமணத்தில் இரவு !

    சிரிப்பாய் புவியே ! காமக் களிப்பொடு

    குளிர் மூச்சை உள்வாங்கி !

    நீர் மய மரங்கள் தூங்கிடும்

    பூமியே !

    அத்தமன மாகிப் பிரிந்த பரிதியின்

    அண்டப் புவியே !

    பனி மூட்டம் உச்சியில் மூடிய

    மலைகளின் பூமியே !

    பூரண நிலவு நீல வானில்

    பொங்கிடும் பளிங்குப் பூமியே !

    ஒளிப்புள்ளி, கரும்புள்ளி பற்பல மின்னி

    ஓடும் நதியின் புவியே !

    தூயப் பழுப்பு முகில் பளிச்செனத்

    தோரணமாய்த் தெரிகிறது

    என் பொருட்டு !

    நீள்கரம் திடீரென நீட்டும் பூமியே !

    ஆப்பிள் செழித்துக் கொத்தாய்ப்

    பூத்துக் குலுங்கும் பூமியே!

    நீ சிரிப்பாய்

    நின் காதலன் வருகிறான் !

    ஊதாரிப் பையன் எனக்குக்

    காதல் அளித்துள்ளாய் நீ !

    ஆதலால் அளிப்பேன் நானுனக்கும்

    காதல் ! அந்தோ

    தாகமான மௌனக் காதல் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 6, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • குடதிசை மருங்கில் – 5

    தேமொழி

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

    சூர்யா

    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

    இந்து தெய்வம் சூரியா ஆகாயத்துடன் தொடர்புடையவர்,  குறிப்பாக சூரியனைக் குறிப்பவர். இங்கு காணப்படும் சிலையில் ஒளிவீசும் இரு பெரிய தாமரை மலர்களைக் கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.  அவரது மேலாடை பக்கவாட்டில் காற்றில் படபடப்பது போல அமைக்கப் பெற்றுள்ளது. சூரியாவின் ஒருபுறம் தாடி வைத்த, பிங்கள என அழைக்கப் படும் அவரது எழுத்தர், எழுதுகோலும் மைக்கூடும் வைத்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. சூரியாவின் மறுபுறம் கையில் தண்டமேந்திய தண்டா என்னும் உதவியாளர் உருவம் அமைக்கப் பட்டுள்ளது. தண்டம் என்பதற்குக் கோல் என்பது பொருள்.

    ஆராய்ச்சியாளர்கள் சூரிய தெய்வத்தின் தோற்றத்தின் தொன்மையை, சூரிய வழிபாடு பிரபலமான, இந்தியாவின் மேற்கே, தற்கால ஈரான் நாட்டின் பகுதியுடன் தொடர்பு படுத்துவார்கள்.  இதைப் போன்று இந்தியாவின் மற்ற பகுதிகளில் உருவாக்கப் பட்ட மேலும் சில சிலைகளும் பாதம் வரை நீண்ட ஆடைகளையும் காலணிகளையும் அணிந்திருப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. பாதம் வரை நீளும் நீண்ட ஆடையும், காலணிகளும் ஈரான் பகுதியில் வாழ்வோரின் கலாச்சார உடையாகக் கருதப் படுவதால் இவ்வாறு தொடர்பு படுத்தப் படுகிறது.  இச்சிலையில் சூரியாவின் ஆடை உடல் வடிவத்துடன் ஒட்டி அமைத்திருப்பதாகக் காட்டப் பட்டாலும், ஆடையின் கரை பாதத்தின் அருகே அமைந்துள்ளதாக காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

    இந்து தெய்வம் சூர்யா, அருகே பிங்கள தண்டர்களுடன், இந்தியாவின் பீகார் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 6 – 7 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B63S36+L2012.0801.033

     

     

    இறைவிகள்

    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

    சிதைவிற்கு முன் இந்தக் கற்பாளத்தில் ‘அன்னையர்’ என அழைக்கப் படும் ஏழு இந்துப் பெண் தெய்வங்களின் உருவங்கள் இருந்திருக்க வேண்டும். ஆண் கடவுள்களுடன், அவர்களது பெயர்கள் மூலம் இணைத்து அறியப்படும் இந்த இறைவிகள் அந்த ஆண் தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கியவர்கள். அத்துடன் இந்த இறைவிகள் தங்களது துணையான ஆண் கடவுள்களின் ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி, அந்த ஆண் தெய்வங்கள் வாகனமாகக் கொண்ட விலங்குகளின் மேலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

    இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

    சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

    ஏழு தாய் இந்து தெய்வங்களில் நால்வரின் சிலை, இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம்  பகுதிகளைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 7 – 8 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. டாக்டர். ஸ்டீபஃன்  எ. ஷெர்வின் மற்றும் மெரில் ராண்டல் ஷெர்வின் (Dr. Stephen A. Sherwin and Merrill Randol Sherwin) அருங்காட்சியத்திற்குப் பரிசாக அளித்த சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: 2010.329 L2012.0801.029

     

     

    கருடன்

    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

    கருடன் என்னும் புராணக் கடவுளுக்கு மனித உடலும், பறவையின் உடலமைப்பினைப் போல இறகுகள், அலகு, காலில் கூர் நகங்களும் அமைந்திருக்கும். கருடனுக்கு சூரியக் கதிர்களின் சக்தியும், நாகங்களை அழிக்கும் சக்தியும் இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறது. இந்திரனின், மரணத்தை நீக்கும்தேவாமிர்தத்தைக் காக்கும் இரு நாகங்களைக் கருடன் கொன்றழித்ததாகவும் கருதப் படுகிறது. பெரும்பாலும், எட்டு நாகங்களை அணியாக அணிந்து, பணிவுடன் மண்டியிட்டு, கரம் கூப்பிய வடிவுடன் கருடனின் உருவம் அமைக்கப் பட்டிருக்கும். ஆதிகால விஷ்ணுவின் கோயில்களின் முன்புறத் தூண்களில் கருடனின் உருவம் செதுக்கப் பட்டிருக்கும். கருடனை விஷ்ணுவின் வாகனமாக இந்துமத வேதங்கள் குறிப்பிடுகிறது.

    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

    இந்து தெய்வம் தீரமிகுந்த பறவை-மனித வடிவுடைய கருடன்,  இந்தியாவின் மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் பகுதியைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B62S44+L2012.0801.006

     

    ஆகஸ்ட் 25, 2012 இல் துவங்கிய “இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்னும் இந்த  சிறப்புக் கண்காட்சி பிப்ரவரி 25, 2013  ஆம் தேதிவரை ஸான் ஃபிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்தில் இடம் பெற்றதால் அப்பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு கண்காட்சியைக் காண ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியது.

    இந்த சிறப்புக் கண்காட்சியைப் பற்றிய இக்கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது. படங்களுடன் கட்டுரையை வெளியிட இசைவளித்த ஆசிய அருங்காட்சியகத்தினருக்கு, குறிப்பாக அருங்காட்சிய அதிகாரி அமீலியா பன்ச் (Amelia Bunch) அவர்களுக்கு நன்றி.

     

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013
    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    குடதிசை மருங்கில் – 4 >>

    Share
  • அவனை மறக்காதே…

    செண்பக ஜெகதீசன்

    ஆடுகள் அடித்துக்கொண்டால்,
    அதிலே ஆதாயம்
    அடுத்துவரும் ஓநாய்களுக்குத்தான்..

    காய்ந்த எலும்பைக் கடிக்கும்
    வேட்டைநாய் ருசித்திடும் இரத்தம்
    வேறல்ல-
    அதனுடையதுதான்..

    தனிமரங்களின் கூட்டம்தான்
    தோட்டம்-
    தாக்குதல் அதிகம்தான் தனிமரத்திற்கு..

    நாணல்கள் வளைவது
    நாணமுற்று அல்ல-
    நாளை வாழ்வை
    நலமுடன் தொடரத்தான்..

    நாணலானாலும், நெடுமரமானாலும்,
    ஆடுகளானாலும்,
    அடித்திடும் ஓநாயானாலும்,
    படைத்தவன் இறைவன்..
    அவனை மறந்திடில்,
    ஆவது ஒன்றுமில்லை…!

    படத்துக்கு நன்றி

    http://templetonpress.org/content/hand-god   

    Share
  • ​ இந்திய அணுவியல் துறையை விருத்தி செய்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி பாபா

    Dr. Homi J. Bhabha

    (1909 – 1966)

    சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா

    “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்”

    தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

    “விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன! அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !”

    ஜவஹர்லால் நேரு.

    “இன்னும் 20 ஆண்டுகளுக்குள் உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும், இந்தியாவின் தொழில்வள நிதிப்போக்கிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது! முற்போக்கு நாடுகளின் கண்முன் தொழிற் துறைகளில் பிற்போக்கு அடைவதை வேண்டாதிருந்தால், பாரதம் அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் முற்பட வேண்டும்”.

    டாக்டர் ஹோமி பாபா [1948]


    “சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது”

    டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுதச் சோதனை செய்ய முடியும்.”

    டாக்டர் ஹோமி பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


    இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள்

    பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ஆராய்ச்சி உலைகள் [Atomic Research Reactors] முளைத் தெழுந்தன. மேலை நாடுகளில் அதற்குப் பிறகு 1950-1960 ஆண்டுகளில் அணுசக்தியை ஆக்க வினைகளுக்குப் பயன்படுத்தச், சோதனை அணு மின்சக்தி உலைகள் [Test Atomic Power Reactors] கட்டப் பட்டன. அவை வெற்றிகரமாய் இயங்கி, வாணிபத்துறை அணுசக்தி நிலையங்கள் [Commercial Atomic Power Stations] தலை தூக்கத் தொடங்கின.

    இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் பண்டித நேரு வேட்கை கொண்டு அப்பணிகளைச் செய்ய ஓர் உன்னத விஞ்ஞானியைத் தேடினார். அப்போதுதான் டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் மொம்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார்.

    1958 மார்ச் 14 இல் நேரு இந்திய அணுசக்தி ஆணையகத்தை [Indian Atomic Energy Commission] நிறுவனம் செய்து ஹோமி பாபாவுக்குத் தலைவர் [Chairman] பதவியை அளித்தார். நேருவைப் போன்று டாக்டர் ஹோமி பாபாவும் ஓர் தீர்க்க தரிசியே.

    நேரு விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அணுசக்தி நிலையத்தை நிறுவனம் செய்ய ஏறக் குறைய எல்லாச் சாதனங்களும் இந்தியாவிலே இப்போது உற்பத்தி யாகின்றன! அதுபோல் அண்டவெளி ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு. 1974 இல் பாரதம் தனது முதல் அடித்தள அணுகுண்டு வெடிப்பைச் [Underground Atomic Implosion] செய்து, உலகில் அணுகுண்டு வல்லமை யுள்ள ஆறாவது நாடாகப் பெயர் பெற்றது! அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! அப்புதிய பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர், டாக்டர் பாபா.

    பாரத நாட்டு அணுவியல் துறைகளின் பிதா

    டாக்டர் பாபா ஓர் உயர்ந்த நியதிப் பௌதிக விஞ்ஞானி [Theoretical Physicist]. விஞ்ஞான மேதமையுடன் தொழில் நுட்பப் பொறியியல் திறமும் [Engineering Skill] பெற்றவர். மேலும் அவர் ஓர் கட்டடக் கலைஞர் [Architect]. கலைத்துவ ஞானமும், இசையில் ஈடுபாடும் உள்ளவர். மொம்பையில் பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தை [Bhabha Atomic Research Centre] நேரில் பார்ப்பவர், பாபாவின் கலைத்துவக் கட்டட ஞானத்தை அறிந்து கொள்வர். விஞ்ஞானத்தில் அகிலக் கதிர்களைப் [Cosmic Rays] பற்றி ஆய்வுகள் செய்தவர். பரமாணுக்களின் இயக்க ஒழுக்கங்களை [Behaviour of Sub-atomic Particles] நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றுக்கு அநேக விஞ்ஞான விளக்கங்கள் அளித்துத் தெளிவாக்கியவர். இந்தியாவில் முற்போக்குப் பௌதிகக் [Advanced Physics] கல்விக்கு விதையிட்டு, அதன் விருத்திக்கும், ஆராய்ச்சிக்கும் ஆய்வுக் கூடங்கள் அமைத்தவர்.

    பாரதத்தில் அணுவியல் விஞ்ஞான ஆய்வுக்கும், அணுசக்தி நிலையங்கள் அமைப்புக்கும் திட்டங்கள் வகுத்து அவற்றை நிறைவேற்ற ஆராய்ச்சிக் கூடங்கள், இரசாயனத் தொழிற் சாலைகள் ஆகியவற்றைப் பக்க பலமாக நிறுவனம் செய்தவர். அவரது விஞ்ஞான ஆக்கத்திற்கும், நிறுவன ஆட்சித் திறமைக்கும், அகில நாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பைப் பெற்றவர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விஞ்ஞானப் பேரவைகளில் பொறுப்பான பெரிய பதவிகள் ஏற்றவர். குறிப்பாக ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன் படுத்தும் அகிலச் சபைகளில் [Organizations for the Peaceful Uses of Atomic Energy] உயர்ந்த பதவி வகித்தவர். இந்தியாவின் பாரத ரத்னா விருதையும், இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] கௌரவ அங்கிகரிப்பையும் பெற்றவர். எந்த ஆசிய நாட்டிலும் இல்லாத மாபெரும் அணுசக்தித் துறைகளை இந்தியாவில் நிறுவி, பாரத நாட்டை முன்னணியில் நிறுத்திய டாக்டர் பாபா, பாரதத்தின் அணுவியல் துறைப் பிதாவாகப் போற்றப்படுகிறார்.

    ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

    ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார். அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார். அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)]. பால் டிராக் கணிதத்திலும் நியதிப் பௌதிகத்திலும் [Theoretical Physics] வல்லுநர். அவர்தான் முதன் முதலில் ஒப்புமை மின்னியல் நியதியைப் [Relativistic Electron Theory] படைத்தவர். அந்த நியதி எதிர்த்-துகள்களின் [Anti-Particles] இருப்பை முன்னறிவித்துப் பின்னால் பாஸிடிரான் [Positron] கண்டு பிடிக்க உதவியது. 1933 இல் அலை யந்திரவியல் [Wave Mechanics] துறைக்கு ஆக்கம் அளித்தற்கு இன்னொரு விஞ்ஞானியுடன், டிராக் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். அவரது கல்விப் பயிற்சி பாபாவைக் கணிதத்திலும், நியதிப் பௌதிகத்திலும் தள்ளி, விஞ்ஞானத்தில் வேட்கை மிகுந்திடச் செய்தது.

    1930 இல் யந்திரப் பொறியியலில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு, கேம்பிரிடிஜ் காவென்டிஷ் ஆய்வகத்தில் [Cavendish Laboratories] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார். அப்போது ஈரோப்புக்கு விஜயம் செய்து, உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli], அணுவியல் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மி [Enrico Fermi], அணுவின் அமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr], பளு சக்திச் சமன்பாடு [Mass Energy Equation] படைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein] போன்ற ஒப்பற்ற விஞ்ஞான மேதைகளைக் கண்டு உரையாடி, அவர்களது நட்பைத் தேடிக் கொண்டார். பாலி, ஃபெர்மி, போஹ்ர், ஐன்ஸ்டைன் அத்தனை பேரும் பௌதிகப் படைப்புகளுக்காக நோபெல் பரிசு பெற்றவர்.

    1935 ஆம் ஆண்டு பௌதிக விஞ்ஞானத்தில் டாக்டர் ஆஃப் ஃபிளாஸ்ஃபி [Ph.D.] பட்டம் பெற்று, 1939 ஆண்டு வரை கேம்பிரிட்ஜில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வந்தார். அப்போது இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] அங்கிகரிப்பும் பாபா பெற்றார். அதே சமயத்தில் F.R.S. பெற்ற கனடாவின் அணுவியல் மேதை, டாக்டர் W.B. லூயிஸ் [Dr. W. B. Lewis], பாபாவின் நெருங்கிய நண்பர். 1957 இல் கனடா இந்திய அணு உலை, சைரஸ் [Canada India Reactor, CIRUS] மொம்பையில் நிறுவனம் செய்யவும், ராஜஸ்தான் கோட்டா, சென்னைக் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கான்டு [CANDU] அணுசக்தி மின்சார நிலையங்கள் தோன்றுவதற்கும், பாபா-லூயிஸ் கல்லூரி நட்பு அடிகோலியது.

    அகிலக்கதிர் பற்றிய அடிப்படை விஞ்ஞானச் சாதனைகள்

    உயர் சக்தி பௌதிகத்தின் [High Energy Physics] பாகமான குவாண்டம் மின்னியல் கொந்தளிப்பின் [Quantum Electrodynamics] ஆரம்ப விருத்திக்கு, டாக்டர் பாபா மிகுந்த படைப்புகளை அளித்துள்ளார். அவரது முதல் விஞ்ஞான வெளியீடு, பிண்டத்தில் உயர் சக்திக் காமாக்கதிர்கள் விழுங்கப் படுவதைப் [Absorption of High Energy Gamma Rays in Matter] பற்றியது. ஒரு பிரதமக் காமாக்கதிர் எலக்டிரான் பொழிவாக [Electron Showers] மாறித் தன் சக்தியை வெளியேற்றுகிறது. பாஸிடிரானைச் [Positron] சிதறும் எலக்டிரானின் முகப் பரப்பை [Cross Section], 1935 இல் முதன் முதல் கணக்கிட்ட விஞ்ஞானி, டாக்டர் பாபா. [முகப் பரப்பு என்பது மிகச் சிறிய அணுக்கருப் பரப்பளவு. அந்தப் பரப்பளவு ஓர் அணுக்கரு இயக்கம் நிகழக் கூடும் எதிர்பார்ப்பைக் (Probabilty) கணிக்கிறது]. அந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பு “பாபாச் சிதறல்” [Bhabha Scattering] என்று இப்போது பௌதிக விஞ்ஞானத்தில் அழைக்கப் படுகிறது.

    டாக்டர் பாபா அகிலக் கதிர்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பூமியின் மட்டத்திலும், தரைக்குக் கீழும் காணப்படும் ஆழத்தில் ஊடுறுவும் துகள்கள் [Highly Penetrating Particles] எலக்டிரான்கள் அல்ல, என்று 1937 இல் பாபா எடுத்துக் கூறினார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1946 இல் அக்கூற்று மெய்யானது என்று நிரூபிக்கப் பட்டது. ஆழமாய் ஊடுறுவும் அந்தத் துகள்கள் மியூ-மேஸான் [Mu-Meson] என்று பின்னால் கண்டு பிடிக்கப் பட்டன. வெக்டர் மேஸான் [Vector Meson] இருப்பதை, டாக்டர் பாபா ஒரு நியதி மூலம் எடுத்துரைத்தார்.

    1938 இல் பூமியின் வாயு மண்டலத்தை அதி வேகமாய்த் தாக்கும், அகிலக் கதிர்களின் ஆயுளைக் கணித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகுத்த “சிறப்பு ஒப்புமை நியதியின்” [Special Theory of Relativity] காலக் கொள்ளளவு மாறுபாட்டை [Time Dilation Effect] உறுதிப் படுத்தினார். அந்த முறைக்கு ஒரு பூர்வீக வழியையும் வகுத்தார். ஒப்புமை நியதி உரைத்தது போல் அதே துள்ளிய அளவு அகிலக் கதிர்களின் ஆயுட் காலம் நீடிப்பதாகக் காணப் பட்டது.

    பாரத தேசத்தில் பாபா தோற்றுவித்த விஞ்ஞான ஆய்வகங்கள்

    1939 இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த பாபா, யுத்தம் நடந்த காரணத்தால், மீண்டும் இங்கிலாந்துக்குப் போக முடியவில்லை. டாக்டர் பாபாவுக்குப் பெங்களூர், இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Bangalore, Indian Institute of Science] அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஓரிடம் காத்திருந்தது. அப்போது அதன் ஆணையாளர், நோபெல் பரிசு பெற்ற பாரத விஞ்ஞான மேதை, டாக்டர் சி. வி. ராமன் [Director Dr. C.V. Raman (1888-1970)]. டாக்டர் ராமன் மீது டாக்டர் பாபாவுக்கு அளவு கடந்த மதிப்பு. அவரது விஞ்ஞான மேதமை, ஆழ்ந்த முறையில் பாபாவை ஊக்கியது. பாபா பாரதத்திலே தங்க முடிவு செய்து விஞ்ஞான முற்போக்கிற்கும், பொறியியல் தொழில் விருத்திக்கும் பணிசெய்ய முற்பட்டார்.

    1944 இல் தொழிற்துறை வளர்ச்சி அடைய விஞ்ஞானிகளுக்கு முற்போக்கான பௌதிகப் பயிற்சி அளிக்க ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டார். அதைப் பின்பற்றி டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் [The Tata Institute of Fundamental Research] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை டாக்டர் பாபா அதன் ஆணையாளராகப் [Director] பணியாற்றி வந்தார். ஆசியாவிலே அதி உன்னத விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடம் அது. 1952 ஆம் ஆண்டில் அடிப்படைத் துகள் மேஸான்களில் [Fundamental Particle, Mason] ஒன்றைக் கண்டு பிடித்து “மேனன் மேஸான்” [Menon Mason] என்று பெயரிட்ட பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், இந்தியப் படைத்துறை ஆலோசகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகிய விஞ்ஞான மேதைகளை உருவாக்கியது, டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம்.

    இந்தியாவில் அணுவியல் விஞ்ஞானத் துறைகள் வளர்ச்சி

    டாக்டர் பாபாவின் உன்னதப் படைப்பு, பாரத தேசத்தில் நிலையாக வளர்ச்சி பெறும், உயர்ந்த ஓர் அணுவியல் துறைத்தொழில் அமைப்பு. அணு ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி மின்சார நிலையங்கள், அவற்றுக்கு ஒழுங்காக எரிப்பண்டங்கள் ஊட்டும் யுரேனியம், தோரியத் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], கான்டு அணு உலைகளுக்கு வேண்டிய மிதவாக்கி [Moderator] கனநீர் உற்பத்திச் சாலைகள் , கதிரியக்கப் பிளவுக் கழிவுகளைச் [Radioactive Fission Products] சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை [Spent Fuel Reprocessing Plant], தாதுப் பண்டத்தை மாற்றி அணு உலைக்கேற்ற எரிக்கோல் கட்டுகள் தயாரிப்பு [Nuclear Fuel Bundle Fabrication], அணுசக்தி நிலையங் களை ஆட்சி செய்ய மின்னியல் கருவிகள், மானிடர் உடல் நிலையைக் கண்காணிக்கக் கதிரியக்க மானிகள் [Control System Instrumentations, Radiation Monitors], மின்சாரச் சாதனங்கள், கன யந்திரங்கள், கொதி உலைகள், பூதப் பம்புகள், வெப்ப மாற்றிகள் போன்று ஏறக் குறைய எல்லா வித பாகங்களும் பாரத நாட்டிலே தயாராகின்றன. அணு உலைகளை இயக்கும் இளைஞர் பயிற்சி பெற அணுவியல் துறைக் கல்வி, மற்றும் பயிற்சிப் பள்ளிகள் பாரதத்தில் உள்ளன.

    இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன. அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை. 1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது! சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா. இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!

    பாரதத்தில் அணுசக்தி மின்சார நிலையங்கள் அமைப்பு

    டாக்டர் பாபா முதலில் ஆராய்ச்சிகள் புரிய ஆய்வு அணு உலைகளை [Research Reactors] நிறுவினார். இந்திய விஞ்ஞானிகள் அமைத்த “அப்ஸரா” நீச்சல் தொட்டி அணு உலையும் [Swimming Pool Reactor, Apsara], கனடா இந்தியக் கூட்டுறவில் கட்டப் பட்ட “ஸைரஸ்” வெப்ப அணு உலையும் [Canada India Reactor Utility & Service, Cirus] டிராம்பே அணுசக்திக் கூடத்தில் [Atomic Energy Establishment, Trombay, Now Bhabha Atomic Research Centre] அமைக்கப் பட்டன. ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையை இயக்க 1957 இல் பல எஞ்சினியர்கள், விஞ்ஞானிகள் கனடாவில் உள்ள NRX ஆய்வு உலையில் பயிற்சி பெற அனுப்பப் பட்டார்கள். 1960 இல் இயங்க ஆரம்பித்த ஸைரஸ் அணு உலையை, பிரதமர் நேரு திறந்து வைத்தார். துவக்க விழாவிற்கு அகில நாட்டு விஞ்ஞானிகள் பலர் (குறிப்பாக அணுவின் உள்ளமைப் விளக்கி நோபெல் பரிசு பெற்ற நீல்ஸ் போஹ்ர், Niels Bohr) வந்திருந்தனர்.

    அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இரண்டாவது அணுவியல் ஆய்வுக் கூடம் [Indira Gandhi Atomic Research Centre] தோன்றியது. அங்கு வேகப் பெருக்கிச் சோதனை அணு உலையும் [Fast Breeder Test Reactor], காமினி அணு உலையும் [Kamini Reactor], இரட்டை அணுசக்தி மின்சார நிலையமும் [CANDU Model] உள்ளன. அணுசக்தி ஆராய்ச்சிக் கூடங்கள், மற்றும் அணுவியல் துணைத் தொழிற்சாலைகள் எல்லாம் அணுசக்தித் துறையகத்தின் [Dept of Atomic Energy] கீழ்ப் பணி புரிகின்றன.

    அடுத்து பாபா அணுமின் சக்தி நிலையங்களை [Atomic Power Station] அமைக்க அடிகோலினார். முதலில் அமெரிக்காவின் ஆதரவில், தாராப்பூரில் கொதிநீர் அணுசக்தி மின்சார நிலையம் [Boiling Water Reactor, BWR] இரண்டை, ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி கட்டியது. ஒப்பந்தப்படி இதற்கு வேண்டிய செழிப்பு யுரேனிய [Enriched Uranium] மூலத் தாது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஹைதராபாத் எரிக்கோல் தயாரிப்புத் தொழிற்சாலையில் [Fuel Fabrication Plant] உருவானது. கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் தீவிரக் கதிரியக்கத் தீண்டல்கள் [Radioactive Contaminations] உண்டாவதால், அம்மாடல்கள் பிறகு இந்தியாவில் பெருகவில்லை. கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் பயிற்சி பெற பல எஞ்சினியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டார்கள்.

    அடுத்து கனடாவின் கூட்டுறவில், கனடாவின் கான்டு [Canadian Deuterium Uranium, CANDU] மாடலில் இரட்டை அணுசக்தி மின்சார நிலையங்கள் ராஜஸ்தானில் கோட்டாவுக்கு அருகிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றுக்குத் தேவையான இயற்கை யுரேனியம் [Natural Uranium] பாரதத்தில், மிஞ்சிய அளவில் கிடைக்கிறது. கனடா இந்திய ஒப்பந்தத்தின் போது, டாக்டர் பாபா இந்தியாவிலே கான்டு எரிக்கோல் [CANDU Fuel Bundles] தயாரிக்கவும், கான்டு அணு உலைக் கலன்களைப் புதிதாய் உற்பத்தி செய்யவும், அந்த மாடல் நிலையங்களைப் பெருக்கும் உரிமைகளையும் கனடாவிட மிருந்து முதலிலேயே வாங்கிக் கொண்டார்.

    அணுமின் சக்தி உற்பத்திக்கு ஆதரவான தொழிற்சாலைகள்

    2002 இல் தற்போது புதிதாக எட்டு கான்டு அணுசக்தி நிலையங்கள் இந்தியரால் கட்டப் பட்டு, அவை இயங்க ஆரம்பித்து மின்சாரத்தை பரிமாறிக் கொண்டு வருகின்றன. மேலும் புதிதாக ஆறு கான்டு அணுசக்தி நிலையங்கள் நிறுவனமாகிக் கொண்டிருக்கின்றன. மொத்தம் 13 அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. முதல் ராஜஸ்தான் கான்டு நிலையத்தில் பக்கப் பாதுகாப்புறை [End Shields] ஒன்றில் கதிரியக்க நீர் தொடர்ந்து கசிவதால், அணுஉலை இயக்கம் நிரந்தரகாக நிறுத்தப் பட்டுள்ளது.

    அணு உலைகளுக்குத் தேவையான மூலத் தாதுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], [Uranium Corporation of India Ltd], எரிக்கோல் தயாரிக்கும் கூடங்கள் [Nuclear Fuel Complex], கழிவு எருக்களைச் சுத்தீகரிக்கும் தொழிற்சாலைகள் [Fuel Reprocessing Plants], கனநீர் உற்பத்திச் சாலைகள் , உலைக்கலன், உலைச் சாதனங்கள் உற்பத்திக்கு கன மின்சாரச் சாதனத் தொழிற்கூடம் [Bharath Heavy Electricals, Bhopal], [Larson & Tubro], [KSP Poona], அணுஉலை இயக்கக் கருவிகள், கதிரியக்க மானிகள் தயாரிக்கும் கூடங்கள் [Electronic Corporation of India Ltd] போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.

    1955 இல் ஜெனிவாவில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவைக்கு [United Nations Conference on the Peaceful Uses of Atomic Energy] டாக்டர் பாபா தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பட்டார். 1960 முதல் 1963 வரை அகில நாடுகளின் தூய & பயன்படும் பௌதிக ஐக்கிய அவைக்குத் [International Union of Pure & Applied Physics] தலைவராகப் பணியாற்றினார். 1964 இல் நடந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவையில், முன்னேறும் நாடுகளைப் பார்த்து, “மின்சக்தி இல்லாமைப் போல் செலவு மிக்க எந்த மின்சக்தியும் இல்லை” [No power is as costly as no power] என்று பாபா கூறிய ஒரு பொன்மொழியை உலக நாடுகள் எடுத்துப் பறைசாற்றின.

    பாரதத்தின் அணுவியல் மேதை பாபாவின் மரணம்

    1962 அக்டோபர் 26 இல் சைனா இந்தியாவின் மீது படையெடுத்து வடக்கே சில பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு போனது. பாரதம் எதிர்க்க வலுவற்றுத் தோல்வி யுற்றுக் தலை குனிய நேரிட்டது! பண்டித நேரு 1964 மே 27 இல் காலமாகி, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அடுத்து சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவைப் பயமுறுத்தியது!

    டாக்டர் பாபா, பாரதம் வலுவடைய பிரதமரை ஒப்ப வைத்து, அணு ஆயுதம் உண்டாக்க அடிகோலினார். பின்னால் ஹோமி சேத்னா [Homi Sethna] காலத்தில் அணுகுண்டு தயாரிக்கப் பட்டு கீழ்த்தள வெடிப்புச் [Underground Implosion] சோதனை 1974 மே மாதம் 18 இல் ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் நிறைவேறியது.

    1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடர் மான்ட் பிளாங்கில் [Mont Blanc] விமானம் மோதி, டாக்டர் பாபா தனது 57 ஆம் வயதில் அகால மரணம் எய்தினார். பாரதம் ஓர் அரிய விஞ்ஞான மேதையை இழந்தது. அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன. 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இந்திய அணுசக்தித் துறையின் மாபெரும் புதிய காண்டு 540 MWe அணுமின் நிலையம் தாராப்பூரில் “பூரணம்” [Criticality] அடைந்துள்ளது, மகத்தான சாதனை யாகக் கருதப்படுகிறது.

    தற்போது 17 அணுமின் நிலையங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. தாராப்பூரின் இரட்டைப் புதிய நிலையங்கள் (2 x 500 MWe) மின்னாற்றல் இன்னும் சில மாதங்களில் பரிமாறும் போது, மொத்தம் 3960 MWe மின்சாரம் அனுப்பப்படும். அடுத்து 8 அணுமின் நிலையங்கள் பாரதத்தில் கட்டுமானமாகி வருகின்றன. அவை எதிர்பார்க்கும் 2008 ஆம் ஆண்டில் மின்சக்தி உற்பத்தி செய்யும் போது மொத்த ஆற்றல் 6780 MWe ஆகப் பெருகி, கி.பி. 2020 இல் 20,000 MWe மின்சார ஆற்றலை அடையும் குறிக்கோள் நிறைவேறும்.

    டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை. அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்! நேரடிப் பார்வையில் அவர் மொம்பையில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது. இந்திய அணுவியல் தொழிற் துறைகளின் பொற்காலத்திற்கு, டாக்டர் பாபாவின் பணிகள் பேரொளி அளித்துள்ளன என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

    ++++++++++++++++++++

    ********************

    India’s operating nuclear power reactors:

    Reactor State Type MWe net, each Commercial operation Safeguards status
    Tarapur 1 & 2 Maharashtra BWR 150 1969 item-specific
    Kaiga 1 & 2 Karnataka PHWR 202 1999-2000
    Kaiga 3 & 4 Karnataka PHWR 202 2007 /2011
    Kakrapar 1 & 2 Gujarat PHWR 202 1993-95 in 2012 under new agreement
    Kalpakkam 1 & 2 (MAPS) Tamil Nadu PHWR 202 1984-86
    Narora 1 & 2 Uttar Pradesh PHWR 202 1991-92 in 2014 under new agreement
    Rajasthan 1 Rajasthan PHWR 90 1973 item-specific
    Rajasthan 2 Rajasthan PHWR 187 1981 item-specific
    Rajasthan 3 & 4 Rajasthan PHWR 202 1999-2000 early 2010 under new agreement
    Rajasthan 5 & 6 Rajasthan PHWR 202 Feb / Mar 2010 Oct 2009 under new agreement
    Tarapur 3 & 4 Maharashtra PHWR 490 2006, 05
    Total (20) 4780  MWe

    Kalpakkam also known as Madras/MAPS
    Rajasthan/RAPS is located at Rawatbhata and sometimes called that
    Kaiga = KGS, Kakrapar = KAPS, Narora = NAPS
    dates are for start of commercial operation.

    India’s nuclear power reactors under construction:

    Reactor Type MWe net, each Project control Commercial operation due Safeguards status
    Kaiga 4 PHWR 202 MWe NPCIL 3/2010
    Rajasthan 6 PHWR 202 MWe NPCIL 2/2010 Oct 2009 under new agreement
    Kudankulam 1 PWR (VVER) 950 MWe NPCIL 9/2010 item-specific
    Kudankulam 2 PWR (VVER) 950 MWe NPCIL 3/2011 item-specific
    Kalpakkam PFBR FBR 470 MWe Bhavini 9/2011
    Total (5) 2774 MWe

    Rajasthan/RAPS also known as Rawatbhata
    dates are for start of commercial operation.

    Power reactors planned or firmly proposed

    Reactor State Type MWe net, each Project control Start construct Start operation
    Kakrapar 3 Gujarat PHWR 640 NPCIL 2010? 2014
    Kakrapar 4 Gujarat PHWR 640 NPCIL 2010? 2014
    Rajasthan 7 Rajasthan PHWR 640 NPCIL 2010? 2014
    Rajasthan 8 Rajasthan PHWR 640 NPCIL 2010? 2014
    Kudankulam 3 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL late 2010? 2017
    Kudankulam 4 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL 2011? 2017
    Jaitapur 1 & 2 Maharashtra PWR – EPR 1600 NPCIL by 2012 2017-18
    Kaiga 5 & 6 Karnataka PWR 1000/1500 NPCIL by 2012
    Kudankulam 5 & 6 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL 2012? 2017
    Kudankulam 7 & 8 Tamil Nadu PWR – AES 92 or AES-2006 1050-1200 NPCIL 2012? 2017
    ? PWR x 2 1000 NPCIL/NTPC by 2012? 2014
    Jaitapur 3 & 4 Maharashtra PWR – EPR 1600 NPCIL by 2016
    Kumharia Haryana PHWR x 4 640 NPCIL by 2012?
    Bargi Madhya Pradesh PHWR x 2 640 NPCIL
    Kalpakkam 2 & 3 Tamil Nadu FBR x 2 470 Bhavini 2017
    ? ? FBR x 2 470 Bhavini 2017
    ? AHWR 300 NPCIL by 2012 2020
    Subtotal 29 units 25,800 MWe
    Jaitapur 5 & 6 Maharashtra 6 x EPR 1600 NPCIL
    Markandi (Pati Sonapur) Orissa PWR 6000 MWe
    Mithi Virdi 1-6, Saurashtra region Gujarat 6 x AP1000 1250
    Pulivendula Andhra Pradesh PWR? 2×1000 NPCIL 51%, AP Genco 49%
    Kovvada 1-6 Andhra Pradesh 6 x ESBWR 1350-1550
    Haripur 1-4 West Bengal PWR x 4 VVER-1200 1200 2017 2022?

    For WNA reactor table: first 23 units ‘planned’, next (estimated) 15 ‘proposed’.
    The AEC has said that India now has “a significant technological capability in PWRs and NPCIL has worked out an Indian PWR design” which will be unveiled soon – perhaps 2010.

    Nuclear Energy Parks

    In line with past practice such as at the eight-unit Rajasthan nuclear plant, NPCIL intends to set up five further “Nuclear Energy Parks”, each with a capacity for up to eight new-generation reactors of 1,000 MWe, six reactors of 1600 MWe or simply 10,000 MWe at a single location. By 2032, 40-45 GWe would be provided from these five. NPCIL says it is confident of being able to start work by 2012 on at least four new reactors at all four sites designated for imported plants.

    The new energy parks are to be:

    Kudankulam in Tamil Nadu: three more pairs of Russian VVER units, making 9200 MWe.

    Jaitapur in Maharashtra: Preliminary work at is likely soon with six of Areva’s EPR reactors in view, making 9600 MWe.

    Mithi Virdi (or Chayamithi Virdi) in Gujarat: to host US technology (Westinghouse AP1000).

    Kovvada in Andhra Pradesh: to host US technology (GE Hitachi ESBWR – possibly ABWR).

    Haripur in West Bengal: to host four further Russian VVER-1200 units, making 4800 MWe.

    At Markandi (Pati Sonapur) in Orissa there are plans for up to 6000 MWe of PWR capacity. Major industrial developments are planned in that area and Orissa was the first Indian state to privatise electricity generation and transmission. State demand is expected to reach 20 billion kWh/yr by 2010.

    At Kumharia in Haryana the AEC had approved the state’s proposal for a 2800 MWe nuclear power plant and the site is apparently earmarked for four indigenous 700 MWe PHWR units. The northern state of Haryana is one of the country’s most industrialized and has a demand of 8900 MWe, but currently generates less than 2000 MWe and imports 4000 MWe. The village of Kumharia is in Fatehabad district and the plant may be paid for by the state government or the Haryana Power Generation Corp.

    Bargi in Madhya Pradesh is also designated for two indigenous 700 MWe PHWR units.

    The AEC has also mentioned possible new nuclear power plants in Bihar and Jharkhand.

    *********

    Information :

    1. Bhabha Atomic Research Centre, Trombay, Mombai (BARC)

    http://en.wikipedia.org/wiki/Bhabha_Atomic_Research_Centre

    2. Dept of Atomic Energy, Mombhai. (DAE)

    http://en.wikipedia.org/wiki/Department_of_Atomic_Energy_(India)

    3. Indira Gandhi Centre for Atomic Research, (IGCAR)

    (http://en.wikipedia.org/wiki/Indira_Gandhi_Centre_for_Atomic_Research)

    4. Nuclear Power Corporation India Ltd (NPCIL) http://www.npcil.nic.in/

    http://en.wikipedia.org/wiki/Nuclear_Power_Corporation_of_India

    ++++++++++++++++

    S. Jayabarathan [jayabarath@tnt21.com] (February 4, 2013) (R-2)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நம்பிக்கை

     

    தமிழ்முகில் நீலமேகம்

     

    விழுந்து விடுவோம் என்று

    ஓர் நாளும் வித்துக்கள்

    வீண் பயம் கொள்வதில்லை !!!

    எழும் போது விருட்சமாய்

    வீரியத்துடனே எழுவோம் என்ற

    நம்பிக்கையுடனே  மண்ணில்

    தம்மை ஐக்கியமாக்கிக் கொள்கின்றன !!!

    படத்திற்கு நன்றி:

    http://www.hgtv.com/landscaping/tips-for-growing-plants-from-seed/index.html

    Share
  • முதல் நாள்

    கணேஷ் வெங்கட்

    விஷால் ஒரு தொழிலதிபரைப் பற்றிய புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தான். அவன் படிக்கும் மேனேஜ்மெண்ட் பள்ளியில் நடைபெறும் ஒரு செமினாரில் சிறப்புரை ஆற்ற அந்தத் தொழிலதிபர் வருவதாக திட்டம் இருந்தது. க்ரக்ஸ் திரிவேதி என்று பரவலாக அறியப்படுகிற தொழிலதிபர் அவர். பிளாஸ்டிக் பைகள் மற்றும் குட்கா போன்றவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர். மீரட்டில் சாதாரண அச்சகமொன்றில் ஆபரேட்டராக இருந்த திரிவேதி இருபது ஆண்டுகளில் இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர் என்ற ஸ்தானத்தை எட்டியவர். மத்தியிலும் உத்திரப் பிரதேச மாநிலத்திலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் எல்லா அரசியல்வாதிகளுடன் உறவு பேணி தன் நிறுவனத்துக்கும் தன் தொழில் துறைக்கும் சாதகமான கொள்கைகளை அமல் படுத்த வைப்பதன் வாயிலாக அசாதாரண முன்னேற்றத்தை பதிவு செய்தவர். இந்தியாவெங்கும் பத்துக்கும் மேலான தொழிற்சாலைகள் ; கூட்டு முதலீடுகள் மற்றும் துணை நிறுவனங்கள் மூலம் போலந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் எல்லாம் கிளை பரப்பியிருந்தது அவருடைய “க்ரக்ஸ்” நிறுவனம். அவர் வந்து தலைமையுரை ஆற்றப் போகும் கருத்தரங்கை தொகுத்தளிக்கும் பொறுப்பு விஷாலுக்கு தரப் பட்டிருந்தது. விஷால் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்தான். அவருடன் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் அமைந்தால் எதைப் பற்றி பேசுவது என்றெல்லாம் ஒத்திகையெல்லாம்  பார்த்து வைத்திருந்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திரிவேதி கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையென்று சொல்லி விலகிக் கொண்டார்.

    இதற்கெல்லாம் நடுவில் ஒரு நாள் திரிவேதியை சந்தித்துப் பேசியதாக ஆர்த்தி வந்து சொன்ன போது அவனால் துளி கூட நம்ப முடியவில்லை.

    “அவ்வளவு பெரிய ஆளை எப்படி நீ சந்திக்க முடியும்…சும்மா கதை அடிக்காதே” என்றான்.

    ஆர்த்தி தன் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தில்லி வந்து விஷாலுடன் வசிக்கிறாள். புலந்த்ஷஹரில் வசிக்கும் அவளுடைய பெற்றோரைப் பொறுத்த வரை அவள் நொய்டாவில் ஒரு கால்-சென்டரில் வேலை செய்கிறாள் என்றும். தன் நண்பிகளுடன் காஜியாபாதில் தங்கியிருக்கிறாள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஹவுஸ்-கீப்பிங் கம்பெனியில் ஒரு சாதாரண வேலை அவளுக்கு கிடைத்திருந்தது.

    “இல்லை நிஜமா அவரைப் பார்த்தேன்….இன்னிக்கு கன்னாட்பிளேசில் இருக்கிற ஸ்டார் பிளாசா ஓட்டலில் வேலை செய்ய என்னை அனுப்பியிருந்தாங்க…அங்க இருந்த பார்-இன் நாற்காலிகளை நான் துடைத்துக் கொண்டிருக்கும் போது அவர் பாரில் தனியாக உட்கார்ந்து கொண்டு குடிச்சிட்டிருந்தார்”

    ”அப்புறம்”

    “அவரே என்னிடம் பேச ஆரம்பிச்சார்….அவருடைய அம்மாவின் சொந்த ஊரும் நம்ம ஊர் தான்….நம்ம ஊர்ப் பெண் என்று சொன்னார்….எங்க வேலை செய்றேன்னு கேட்டார்…சொன்னேன்…ஆசையிருந்தா அவர் கம்பெனியில் அவருடைய பெர்சனல் அசிஸ்டெண்டாக சேர்கிறாயான்னு கேட்டார்…என்ன சொல்றதுன்னு தெரியாம நின்னேன்….ஒரு கார்டில் அவருடைய எக்ஸிக்யூடிவ் ஒருத்தர காண்டாக்ட் பண்ணச் சொன்னார்”

    நோய்டாவில் செக்டர் 62-இல் க்ரக்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. கார்ப்பரேட் ஆஃபீஸ் பத்து மாடி கட்டிடம். கார்ப்பரேட் ஆஃபீசின் பின்புறம் சேர்மன் ஆஃபீஸ் இருக்கும் கட்டிடம் இருந்தது. மூன்று மாடிக் கட்டிடம். இக்கட்டிடத்தில் திரிவேதியும் அவருடைய பர்சனல் ஸ்டாஃபும் மட்டும் வேலை செய்தார்கள்.

    ஆர்த்தியின் நேர்முகத்தை ஜோஷி மேடம் என்று அழைக்கப்பட்ட ஒருத்தி எடுத்தாள். ஜோஷி மேடத்துக்கு நாற்பது வயது இருக்கலாம். மிகக் கவர்ச்சியான பாணியில் புடவை அணிந்திருந்தாள். தலையை குட்டையாக வெட்டியிருந்தாள். ஆர்த்தி தேர்வு செய்யப்பட்டாள். அன்றே வேலை நியமனக் கடிதம் வழங்கப் பட்டது. தற்போதைய வருவாயை விட மூன்று மடங்கு அவளுடைய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    அவளுடைய சிறு வருவாய் மற்றும் விஷாலின் தந்தை அனுப்பிவைக்கும் பணம் – இவற்றினால் அவர்களிருவரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இச்சூழ்நிலையில் ’க்ரக்ஸ்’ தரும் சம்பளம் கூரையைப் பொத்துக்கொண்டு விழும் தங்கம்!

    அன்றைய தினம் ஆர்த்தியின் ஆச்சரியம் நிற்பதாகத் தெரியவில்லை. ஜோஷி மேடம் “சேர்மனைப் பார்க்க பல்வேறு உயர்பதவியாளார்கள் மற்றும் பெரும்புள்ளிகள் வந்து போகும் இடம் இது. கீழ் வேலை செய்பவர்கள் எல்லாம் அழகாக உடை அணிய வேண்டும் என்று சேர்மன் விரும்புவார். கூந்தலை அழகாக வைத்துக்கொள்ளுதல் அவசியம். புதிதாக நாகரீகமாக உடை வாங்கிக் கொள்ள உனக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும். நாகரீக ஆடைகளில் எதை வேண்டுமானாலும் அணியலாம். கர்நாடகமான உடைகள் தவிர்க்கப்படல் வேண்டும்” என்றாள். இருபதாயிரம் ரொக்கமும் உடன் கிடைத்தது. கம்பெனி விதிகளின் படி எல்லா ஊழியர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆர்த்திக்கு ஒரு தனியார் மருத்துவமனையின் முகவரி தரப்பட்டது.

    அடுத்த நாள் மாலை ஆர்த்தியும் விஷாலும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்று நவநாகரீக உடைகள் வாங்கினார்கள். ஆர்த்திக்கான உடைகள் வாங்கிய பின் மிச்சமான பணத்தில் விஷாலுக்கும் உடை வாங்கி பரிசளித்தாள்.

    புதிதாக வாங்கிய உடை இறுக்கமாக இருந்தது. தோள்கள் தெரியும் உடை அணிவது அவளுக்கு இதுவே முதல்முறை. புலந்த்ஷஹரில் இருந்த நாட்களில் சல்வார்-கமீஸ் தான் அணிவது வழக்கம். தில்லி வந்த பிறகு ஜீன்ஸ்-டாப்ஸ் என்று ஆகி விட்டது. ஊரிலிருந்து கொண்டு வந்த உடைகளை எல்லாம் வீட்டை சுத்தம் செய்ய வரும் வேலைக்காரிக்கு கொடுத்து விட்டாள். விஷாலுக்கு அன்று கல்லூரி இல்லை. அவள் உடை அணிந்து காட்டிய போது, அவன் வாய் விரிய பார்த்துக்கொண்டிருந்தான். “ஏய்..ஏய்” என்று கண்ணடித்தவாறு நெருங்கினான். அவள் “போடா” என்று சொன்னவாறு பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அவன் அவள் கையை இழுத்து அவளை வீட்டுக்குள் இழுத்தான். இருவரும் முத்தமிட்டுக்கொண்டார்கள். “சரி…நான் போகணும்” என்று விலகினாள். ”சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவேன் என்று தெரியவில்லை. உனக்கு போன் பண்ணுகிறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

    காலையில் நடந்தததை நினைத்ததும் அவள் இதழில் புன்னகை ததும்பியது. உதட்டை மடித்து புன்னகையை அடக்கிக் கொண்டாள். மார்புப் பகுதியை அடிக்கடி தொடும்படியாக இருந்தது. பிரா அணியாமல் இருப்பதும் முதல் தடவை. ரொம்ப சின்ன வயதிலிருந்தே அவளுக்கு பிரா அணியும் பழக்கம். பருவமெய்துவதற்கு சில வருடங்கள் முன்னரே அவளுடைய அம்மா அவளை பிரா அணிய வலியுறுத்தினாள். தோள் தெரியும் உடையை வாங்குவதற்கு முன்னர் ட்ரயல் ரூமில் பிராவைக் கழட்டாமலேயே போட்டுப் பார்த்தாள்.

    சேர்மனின் இரண்டு சீனியர் காரியதரிசிகளில் ஒருத்தியான அஞ்சலி மேடம் (இன்னொருத்தி ஜோஷி மேடம்!) “என்ன அடிக்கடி தொட்டுப் பார்த்துக்கறே? எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு” என்று கேலி பண்ணினாள். “ஒண்ணும் இல்லக்கா…..” என்று வெட்கத்துடன் புன்முறுவலித்தாள் ஆர்த்தி.

    ஜோஷி மேடம் ரொம்ப நேரம் கழித்து திரிவேதி சாரின் அறையிலிருந்து வெளியே வந்தாள். “அஞ்சலி! எனக்கு தலைவலிக்கிறது. டாக்டர் பிரசாத்திடமிருந்து மாத்திரை வாங்கிவரப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு. எங்கோ கிளம்பிச் சென்றாள். அஞ்சலி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை ஆர்த்தி பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்து விட்டாள். அஞ்சலி மேடமும் மற்ற பெண்களும் வேலையெதுவும் செய்வதாகத் தெரியவில்லை. மேக்-அப்பை சரி பார்ப்பதும், கம்ப்யூட்டரில் சாட் செய்வதுமாக இருந்தார்கள்.

    “சிகரெட் குடிப்பியா?” என்று அஞ்சலி மேடம் கேட்டாள்.

    “பழக்கம் இல்லக்கா” என்றாள் ஆர்த்தி.

    “வாயேன் உலாத்திவிட்டு வருவோம்” என்று அஞ்சலி அழைக்கவும் ஆர்த்தி அவளுடன் சென்றாள். மொட்டை மாடிக்கு வந்ததும் அஞ்சலி சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டாள்.

    “ஹ்ம்ம் என்ன பாக்கேஜ்ல வந்திருக்க” என்று ஒரு தோரணையாகக் கேட்டாள்.

    தயக்கத்துடன் தன் சம்பளம் எவ்வளவு என்ற தகவலைச் சொன்னாள்.

    “ஹ்ம்ம்…இதுக்கு முன்னாடி எவ்வளவு சம்பாதிச்சிட்டிருந்தே”

    “____ அக்கா”

    “லேட் நைட் வோர்க் இருக்கும்னு ஜோஷி மேடம் சொன்னாங்களா”

    ஏதோ ஆஃபீசர் மாதிரி அஞ்சலி மேடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது ஆர்த்திக்கு பிடிக்கவில்லை. ஆர்வமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “என்ன சைஸ்?” என்று அஞ்சலி மேடம் கேட்டதும் அதிர்ச்சியானாள்.

    “என்ன மேடம் இப்படியெல்லாம் கேட்குறீங்க”

    “ஏன்….ஜோஷி மேடம் கேட்கலியா?”

    “இல்ல மேடம்…அப்படி கேட்டாலும் பதில் சொல்லணுமா என்ன?”

    அஞ்சலி வாயை மூடிக் கொண்டாள். மேலே எதுவும் பேசவில்லை. சிகரெட் புகைத்து முடித்ததும் தன் சேலையை சரி செய்து கொண்டாள். பிரக்ஞையின்றி சேலை கொசுவத்தைப் பிரித்து கட்டிக் கொண்டாள். ஆர்த்திக்கு வெட்கமாக இருந்தது. வேறு திசையில் பார்த்தாள்.

    காரியதரிசிகளின் அறைக்கு திரும்பியவுடன், ஜோஷி மேடம் இண்டர்காமில் போன் செய்து ஆர்த்தியை முதல் ஃப்ளோரில் இருக்கும் மெடிக்கல் ஆஃபீசரின் அறைக்கு வருமாறு அழைத்தாள். அறைக்கு வெளியே டாக்டர் பிரசாத் என்று எழுதியிருந்தது. கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள். டாக்டர் பிரசாதிற்கு ஐம்பது வயது இருக்கலாம். தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, “வெல்கம் டு க்ரக்ஸ் க்ரூப்” என்று கை குலுக்கினார் பிரசாத். ஜோஷி மேடம் “பிரசாத் டியர், ப்ரோசிஜர் படி ஆர்த்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்யணும்..நேத்து பிளட் சாம்பிள் கொடுத்துட்டு வந்துட்டா” என்றாள்.

    டாக்டர் பல்ஸ் செக் செய்தார். ரத்த அழுத்தத்தை மெஷர் செய்தார்.

    “லேப்பில் இருந்து ரத்த டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடுச்சி…எல்லாம் நார்மல்…” என்று சொன்னார். ரிப்போர்ட் இருந்த உறையை ஜோஷி மேடத்திடம் தந்தார்.

    மூன்று மணியளவில் திரிவேதி ஆர்த்தியை கூப்பிட்டனுப்பினார். அவருடன் ஆங்கிலேயர் ஒருவர் அமர்ந்திருந்தார். திரிவேதி ஆர்த்தியை கூர்ந்து பார்த்தார். பின்னர், ”உட்கார்” என்றார். ஆங்கிலேயர் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் மெள்ள உட்கார்ந்தாள். ஆங்கிலேயருக்கு ஆர்த்தியை அறிமுகம் செய்து வைத்தார். திரிவேதியும் ஆங்கிலேயரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். ஆர்த்திக்கு அவ்வளவாகப் புரியவில்லை. பசையெடுத்து ஒட்டிக்கொண்ட புன்னகையை வீசியவாறே உட்கார்ந்திருந்தாள். திரிவேதி டீ பாட்டில் இருந்த டீயை சர்வ் செய்யச் சொன்னார். கோப்பைகளில் டீயை பதவிசாக ஊற்றி இருவருக்கும் தந்தாள். சந்திப்பு முடிந்து ஆங்கிலேயர் கிளம்பு முன் கோட் ஸ்டாண்டில் இருந்த கோட்டை எடுத்து வருமாறு பணிக்கப்பட்டாள். அந்த ஆங்கிலேயரை லிஃப்ட் வரை வந்து திரிவேதி வழியனுப்பிவிட்டார். “அவரை கேட் வரை விட்டுவிட்டு வா!” என்று ஆர்த்தியிடம் சொல்லப்பட்டது, “ஒக்கே சார்” என்று புன்னகை மாறாமல் சொன்னாள். ஆங்கிலேயர் லிஃப்ட்டுக்குள் புன்னகைக்கவும், அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். காரில் ஏற்றி விடும் போது “தேங்ஸ் ப்ரெட்டி கேர்ள்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார் ஆங்கிலேயர்.

    ஐந்து மணி வாக்கில் ஜோஷி மேடம் ஆர்த்தியிடம் வந்து “ஏற்கெனவெ சொன்னா மாதிரி, பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை லேட் சிட்டிங் இருக்கும். நாளைக்கு பாஸ் நியூயார்க் போறதாலே அவருக்குன் இன்னிக்கு லேட் நைட் உட்காருவாரு….இன்னிக்கு உன்னை லேட் சிட்டிங் பண்ணச் சொல்லியிருக்காரு…உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை தானே!”

    “இல்லை மேடம்”

    ஆறு-ஆறரை வரை எல்லாக் காரியதரிசிகளும் சென்று விட்டார்கள். சேர்மன் ஃப்ளோரில் ஒரு ஈ-காக்கை இல்லை. அவ்வப்போது பட்லர் ஒருவன் பானங்களை சேர்மனின் அறைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தான். சேர்மன் அறையில் இருந்து ஆங்கில இசை சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஆர்த்தி தனியே உட்கார்ந்திருந்தாள். ஃபெமினா பத்திரிக்கையின் பழைய இதழ்கள் அஞ்சலி மேடத்தின் மேஜையில் இருந்தன. அவற்றை புரட்டி அதனுள்ளில் இருந்த புகைப்படங்களில் மாடல்கள் அணிந்து கொண்டிருந்த உடைகளை ரசித்துக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் விஷாலுடன் எஸ் எம் எஸ்-சில் உரையாடலும் நடத்திக் கொண்டிருந்தாள். அன்று காலை முதல் அவளுக்கு பல தடவை ஐ லவ் யூ சொல்லிவிட்டான். போனில் முத்தமழை வேறு. சேர்மனின் அழைப்புக்காக காத்திருக்கையில் வந்த விஷாலின் குறுஞ்செய்திகள் ஆர்த்தியை அன்றிரவு கோடு தாண்டும் ஆசையை பிரகடனப்படுத்தின. விஷாலின் ஆர்த்தியின் காதல் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு வருடமாக இருவரும் சேர்ந்து வேறு வசிக்கின்றனர். ஆர்த்தியின் அன்புக்கட்டளைக்கு இதுவரை கீழ்ப்படிந்து வந்திருக்கிறான் விஷால். இன்றைய நாள் வரை அவர்களுடைய காதலின் உடலியல் பரிமாணங்கள் ஒர் எல்லைக்கோட்டுக்குள் அடங்கியிருக்கின்றன. ஆர்த்திக்கு எல்லை மீறும் ஆசை வந்ததில்லை. அவனின் கோரிக்கையை “அப்புறம் பார்க்கலாம்” “உன் படிப்பு முடியட்டும்” “பொறுமை காத்தோரின் கையில் அவனியே வந்தமரும்” என்றெல்லாம் கூறி அன்புடன் மறுதளிப்பாள் ஆர்த்தி.

    பட்லர் வந்து திரிவேதி சார் கூப்பிடுகிறார் என்று கூறவும் விஷாலுக்கு “சார் கூப்பிடுகிறார்” என்ற குறுஞ்செய்தி அனுப்பி விட்டு சேர்மன் அறைக்குள் நுழைந்தாள். திரிவேதி குர்த்தா-பைஜாமா அணிந்திருந்தார். அமருமாறு ஜாடை செய்தார். போனில் யாருடனோ ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். டாக்டர் பிரசாத் ஜோஷி மேடத்திடம் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்ட் இருந்த என்வலப் திரிவேதியின் மேஜையில் கிடந்தது. போனை கீழே வைத்ததும், ஐஸ் பாக்ஸிலிருந்து ஒர் ஐஸ் துண்டத்தை பானம் நிரம்பியிருந்த கோப்பையில் போட்டார்.

    புலந்த்ஷஹர், ஆர்த்தியின் குடும்பம், – இவை பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தவர் “பத்துப்பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை லேட் சிட்டிங் செய்யணும் என்று ஜோஷி மேடம் சொன்னார்களா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

    “சார், நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லவேயில்லையே?” என்று கேட்டாள்.

    ”கான்பரன்ஸ் ரூமுக்குப் போவோம்”

    வராண்டாவின் கடைசியில் இருந்த கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றார்கள். கான்பரன்ஸ் ரூமுக்குள் ஒரு கதவு இருந்தது. அதைத் திறந்தால் உள்ளே படுக்கையறை. ஆர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “வேலை அதிகமாக இருந்தால், வீட்டுக்குப் போகாமல் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளத்தான் இந்த அறை”

    கட்டிலில் திரிவேதி உட்கார்ந்தார். “ஹ்ம் உட்கார்” என்று சொன்னார். “இல்லை சார் பரவாயில்லை” என்று நின்றுகொண்டிருந்தவளை, அவள் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்தார் ;, ஆர்த்தியின் கையை பிடித்து இழுத்து கட்டிலின் மேல் விழும்படி செய்தார். அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் லாவகமாக ஆர்த்தி அணிந்திருந்த உடையின் பின்புற ஜிப்பை திறந்து இழுத்துவிட்டார். உடையை இடுப்புக்கு கீழ் இறக்கிவிட்டு, ஆர்த்தியின் மேலாடையில்லாத உடம்பை வேட்கையுடன் பார்த்தார்.

    “வேண்டாம் சார்” என்று எழ எத்தனித்தவளை, திரும்ப கட்டிலில் இழுத்து தன் மடியில் கிடத்திக்கொண்டார். தலைகீழாக அவள் மேல் படுத்து, அவளின் உடையை முழுக்க உருவி தரையில் எறிந்தார். சில வினாடிகளில் அவளை வெறியுடன் அனுபவிக்க ஆரம்பித்தார். ஆர்த்தி கண்ணை மூடி ஒர் இயந்திரம் போல கிடந்தாள். வெண்ணிற மீசை அவளின் மூக்கில் உரசும் படி, தன் வாயால் ஆர்த்தியின் வாயை மூடி, மூர்க்கமான விசையுடன் இயங்கினார். இச்சை  தீர்ந்ததும், களைத்து விழுந்தார். தஸ்புஸ்ஸென்று மூச்சை வெளியேற்றினார். ஆர்த்தி கண்ணை திறக்காமல் சில நிமிடங்கள் படுத்திருந்தாள். சத்தம் ஓய்ந்தது மாதிரி இருந்த போது, கண்ணைத்திறந்தவள், திரிவேதியின் கண்கள் அவளையே மறு உயிர் பெற்ற இச்சையோடு நோக்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள். உடையை எடுக்க எழுந்தவளை அவரின் கரங்கள் மீண்டும் இழுத்தன. “கொஞ்ச நேரம் இரு…இன்னும் வேலை இருக்கு” என்றவர் ஆர்த்தியின் உடலை படுக்கப் போட்டு இறுக்கிக் கட்டிக்கொண்டார். அடுத்த நிமிடம் அவளின் மேல் படுத்துக் கொண்டு இன்னொரு முறை அனுபவித்தார்.

    திருப்தியுடன் பக்கவாட்டில் படுத்து திரிவேதி கண்ணை மூடிய அடுத்த கணம், ஆர்த்தி அவசரமாக அவசரமாக உடையால் தன் உடலை மறைத்துக் கொண்டு வராண்டாவில் ஓடினாள். வராண்டாவில் ஒருவரும் இல்லை. அவளுடைய இருக்கையை அடைந்து கைப்பையை எடுத்துக் கொண்டு வாஷ்-ரூமுக்கு சென்றாள். வாஷ்-ரூமில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தை வெறித்துப் பார்த்த வாறே நின்றிருந்தாள். முகம் அலம்பி, உடைகளை அணிந்து, கூந்தலை சரி செய்து கொண்டு கிளம்பினாள். வராண்டாவில் திரிவேதி சுருட்டு பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

    “கிளம்பிவிட்டாயா?

    ஆர்த்தி மவுனமாக இருந்தாள்.

    “ஜோஷி மேடம் இண்டர்வியு அன்னிக்கு கொடுத்த பணத்துல எத்தனை ட்ரெஸ் வாங்கிக்கிட்டே”

    “இரண்டு”

    ”இப்போ போட்டுட்டிருக்கிறது அதுல ஒண்ணா?

    “ஹ்ம்”

    பைஜாமாவுக்குள் கைவிட்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிலவற்றை அவளுக்கு கொடுத்தார்.

    “இதே மாதிரி இன்னும் ரெண்டு-மூணு ட்ரெஸ் வாங்கிக்க…..என் ட்ரைவர்ல யாராவது ஒருத்தர் உன்னை வீட்டுல விட்டுடுவாங்க…நீ காஜியாபாதில தானே இருக்க?”

    ஆர்த்தி தலையாட்டினாள்.

    “சார் நான் நாளைக்கு…..” என்று இழுத்தாள்.

    “பரவாயில்லை…லீவு எடுத்துக்கோ….நாளை மறு நாள் வந்தா போதும்,,,,ஜோஷி மேடத்துக்கு நான் சொல்லிடறேன்”

    வீடு திரும்பிய போது விஷால் அவளை அணைத்துக் கொண்டான். “யோசிச்சியா?” என்று கேட்டவனின் கண்களில் எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. ஆர்த்தி பதில் சொல்லவில்லை.

    பேச்சை மாற்றி “முதல் நாள் எப்படி இருந்தது?” என்று கேட்டான்.

    “முப்பதாயிரம் இலாபம்…..இன்னும் ரெண்டு மூணு டீசெண்டான ட்ரெஸ் வாங்கிக்க சொல்றாங்க….”

    தன் அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்தாள். அதற்குள் அவளுடைய கைப்பையில் இருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டான் விஷால்.

    டிபன் காரியரை எடுத்து அவள் சாப்பிடத்தொடங்கியதும் பேண்ட் மாட்டிக் கொண்டு எங்கோ கிளம்பினான்.

    “எங்க போறே?”

    ”கொஞ்சம் வேலையிருக்கு”

    “பார் மூடியிருக்குமே”

    “பாருக்கு போகலை”

    “பொய்”

    “நான் என்ன பண்ணினா உனக்கு என்ன?” – அவன் குரலில் கோபம் தெறித்தது.

    “எதுக்கு கோபம்?”

    “அதைப் பத்தி உனக்கென்ன?”

    ”என் ராசாவுக்கு என்ன கோபம்னு எனக்கு தெரியாதா?”

    பாதி சாப்பாட்டில் எழுந்து அவனருகில் ஓடி வந்து அவன் இதழில் அழுத்தி முத்தமிட்டாள்.  சாப்பாடு முழுக்க சாப்பிடப்படாமல் மிச்சம் வைக்கப்பட்டு டிபன் கேரியரிலேயே அடைத்து வைக்கப்பட்டது. நாளைக்கு சூடு பண்ணி சாப்பிட்டுக் கொள்ளலாம் ! விஷாலின் கோபம் அன்றிரவே தணிந்தது. அன்றைக்குப் பிறகு விஷால் மாலை நேரங்களில் கோபம் கொள்வது நிரந்தரமாக நின்று போனது.

    Share
  • பாரதி கண்ட கோதை

    விசாலம்

    ஒரு  நாள் மஹா கவி பாரதியார் திருவல்லிக்கேணி  ரோட்டில்  நடந்துக் கொண்டிருக்க ஒரு அருமையான  அவர் இயற்றியப் பாடல் ஒன்று காற்றினில் மிதந்து  வந்தது.

    “ஜயபேரிகைக் கொட்டடா”  …… ஒரு இனிமையானக் குரல்  அவரை இழுத்தது . மெய் மறந்து நின்றார் அவர் . அப்போது  அவர் சுதேசமித்திரனின்  துணை ஆசிரியராக இருந்தார். போகும் போது திரு வெங்கடாசாரியாரின்  வீட்டுத் தெரு வழியாக்கத்தான் போவார் ,ஆம்  அந்தப்பாடலைப் பாடியவர்  ஒரு சிறு  பெண், பெயர் கோதை நாயகி, பாரதியாரின் வீட்டிலும்  அவரது இரு பெண்கள்  { தங்கம்மாள் சகுந்தலா} இருந்தனர், கோதை பாடியப் பாட்டில் மயங்கி கோதை வீடு நுழைந்து அந்தப்பெண்ணை வாழ்த்தினார். அன்றைய தினத்திலிருந்து பாரதியார் தாம் புனைந்த பாடல்களைத் தருவதும்  கோதை  அதைப் பாடிக்காட்டுவதும்  வழக்கமாயிற்று . ஒரு  நாள் கோதையை பாரதி தன் வீடு அழைத்தார். கோதை  மிகச் சங்கோசத்துடன்  தலையைக் குனிந்துக் கொண்டாள் ஆனால்  பிற்காலத்தில் அவர்  ஒரு பெரிய நாடக ஆசிரியர்  எழுத்தாளர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்  என்று  பல திசைகளில்  முன் நிலையில் நின்றவர், நம் மனதில்  அவர்  பெயர் பதிந்து விட்டது     அவர்தான் திருமதி  வை. மு கோதை நாயகி அம்மாள.

    திருமதி வை மு கோதை நாயகியை எனக்கு நன்றாக தெரிய வைத்தது என் அத்தைதான் . அவர்   இவருடைய பல நாவல்கள் புத்தகாலயத்திலிருந்து  எடுத்து வருவார். .ஆனால் கண் பார்வை குன்றியதலால்  அவர் ப்டுத்தி ருக்க அவர் தலைமாட்டில் அமர்ந்து நான் தான்  அவருக்குக் கதைகளைப் படித்துச் சொல்லுவேன் .அப்படி படித்தே  அவருடைய எழுத்தும்   கற்பனையும் என்னை மிகவும் கவர்ந்தன . அவருடைய பல நாவல்கள் சினிமாவாக வந்து சக்கைப்போடு போட்டு அவருக்கு விருதுகளும் வங்கித்தந்துள்ளன  .அதில் எனக்கு மிகவும் பிடித்தது “சித்தி’  திருமதி பத்மினி நடித்த படம்.
    பாரதியாரைப் போலவே  ஆவேசமாக  வீரமாகப்    பாடும்  ஒருவர்  இருந்தார் ,அவர் பெயர் திரு சங்கு சுப்பிர மண்யம் ” சுதந்திரச்சங்கு”  என்ற பத்திரிக்கையை நடத்தி வந்ததால் அவரை எல்லோரும் ” சங்கு  சுப்பிர மணியம்”  என்று அழைத்தனர். பாரதியாரின் பாடல்களை   அந்தக்காலத்தில்   பரப்பிய புகழ் திருமதி  கோதை நாயகிக்கும்    சங்கு சுபிரமண்யத்திற்கும்   சேரும் ….. கோதைக்கு சுமார் பத்து  வருடம் இருக்கும்    அப்போதே
    அவருக்கு  பாலவிவாஹம்  நடந்து விட்டது  அவரது  கணவர்  திரு பார்த்தசாரதி, அவரை இசைக்   கச்சேரிக்கு அழைத்துச் செல்வார் அந்தக்காலத்தில்  வைதீகக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் வீட்டை விட்டு  வெளியே கச்சேரி போன்றவைகளுக்குப்  போகமாட்டார்கள். ஆனால் கோதைநாயகியின் கணவர்  இளமையிலேயே புரட்சி , சீர்த்திருத்தம் என்ற முற்போக்குக் கொண்டிருந்தவர். அவர் தன் மனைவியை  நன்கு  பாட வைத்தார். ஒரு நாள்  மேடைக் கச்சேரியில்  தன்னை மறந்து அவர்  “மருவேறேதிக் கெவரையா  ராமா” என்று பாட  முதல் வரிசையில்  உட்கார்ந்திருந்த  ஒரு வித்துவான் அகமகிழ்ந்து உள்ளே வந்து வாழ்த்திவிட்டுப் போனார் .  அவர் தான் பாலக்காடு  அனந்தராம பாகவதர் பின்னால்  கோதையின்  குருவானார்  திருமதி கோதை நாயகியின்  இசைப் பயணம் இப்படித்தான்  ஆரம்பித்தது .கவிக்குயில் சரோஜினி தேவி அவர்கள்  அடிக்கடி   கோதை வீட்டுக்குச் செல்வாராம். அவரைச் செல்லமாக அணைத்துக்கொண்டு   அவர் விரும்பும்   பாடல்களெல்லாம் கேட்டு அக மகிழ்வாராம்  அவர்  மிகவும்  விரும்பியப் பாடல் “பாரத சமுதாயம்  வாழ்கவே …. “வந்தே மாதரம்   என்போம் …….. “சென்னை  வானொலி  நிலயம் 1938ல்  தொடங்கப்பட்டது . அதன்  திறப்பு   விழாவில் திரு  ராஜாஜி அவர்கனின் முன்னிலையில்  பாடிய பெருமை திருமதி  வை மு கோதை நாயகிக்குக்  கிடைத்தது. ஆண்டுதோறும் பாரதியாரின் நினைவு நாளில் கோதைநாயகியின்  பாட்டு  வானொலியில் நிச்சயம் ஒலிக்கும் ,இதன் நடுவே  ” அன்பின் சிகரம் “என்ற நாடகம்  எழுதி  அவரே  நடித்தார் . டைரக்டரும்  அவரே.  அவர்  அறிவு  மேலும்  மேலும் வளர்ந்தது . அவர்  மாமியார் .அந்தக்காலத்தில் “கன்னையா கம்பெனி ” என்று ஒரு நாடகக் கம்பெனி  இருந்தது, அதில் தான்  திருமதி கேபி சுந்தராம்பபள்  திரு கிட்டப்பா போன்றவர் இருந்து நடித்தனர். திரு,பார்த்தசாரதி தன் மனனவியை பல   நாடகங்களுக்கும்      அழைத்துச் சென்றதின் பலனாக கோதைக்கு  கற்பனாசக்தி   ஊற்றுப்போல் பெருக்கெடுத்தது. அவரின்   முதல்  நாடகம் “இந்திரமோகனா “வெளிவந்து அதற்கு  நல்ல வரவேற்பும்  கிடைத்தது.

    இவரைப் பற்றிச் சொன்னால்  எழுதி கொண்டே போகலாம். இவரது தாயார்  இவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்

    ஆரம்பத்தில்  கோதைக்கு எழுத வாரத நிலையில்   கோதை  தன் கற்பனையில் கதைசொல்ல அவரது  தாயார்  அத்தனையும் எழுதிவிடுவாராம்   அவர் சொல்லி திருமதி பட்டம்மாள் எழுதிய  முதல் நாவல்   “இந்திரமோஹனா ” இவர் கதை அல்லது நாவல்களில்  தேசப்பக்தி  . விதவை திருமணம் , மதுவிலக்கு , ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை எல்லாம்  மிகவும் அழகாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கும்   இவர்   இயல், இசை  ,நாடகம்  என்று எல்லா இடத்திலும்    முதல் இடம்  பெற்றார் தேசத்தொண்டிலும்  ஈடுப்பட்டு  ஒளிவீசினார்,,இராஜாஜி அவர்கள் மேடையில் பேசும்  போது  இவரையும் அழைத்து
    பேசச்சொல்லுவாராம் .. நாட்டுக்காக   ஜெயிலுக்கும் சென்றிருக்கிறார். அங்கிருந்த போது கைதிகளிடம் பேசி  “சோதனையின் கொடுமை ”
    எழுதினார் துப்பறியும் நாவலையும் இவர் விட்டுவைக்கவில்லை  துப்பறியும் நாவலை  எழுதிய முதற்பெண்மணி இவர் எனலாம் தெலுங்கு மொழியையும் கற்றுக்கொண்டு  பேச ஆரம்பித்தார்

    நாட்டுப்பற்று மிக  கதரையே  உடையாகக்  கொண்டாள்,  விடுதலைப்போரில் பங்குப்பெற்றுச்  சிறையும்  சென்றாள், இன்னிசைக் க்லைஞர், மேடைப்பேச்சினால் நாட்டின் விடுதலை உணர்வு வீசிய பெண்மணி, பெண்கள் விடுதலைப் பற்றி முழக்கம்  செய்து அதன்படி நடத்தியும்   காட்டினாள்,
    “வைஷ்ணவ ஜனதோ “வுக்கு  தமிழ் உருவம்  தந்தாள்,  மாதப்பத்திரிக்கை “நந்தவன்ம்  தொடங்கியப்  புதுமைப் பெண், “கலா ரத்னம் “என்ற  பட்டம்  பெற்றவர்.

    பெண்கள் வெளியே வருவதே  தவறு என்ற காலக்கட்டத்தில் சமூகக் கட்டுப்பாட்டை தவிர்த்து,  உடைத்து தான் நன்கு படித்து  வெள்யில் வந்து   மேடை ஏறிநாடகங்களில் நடித்து  இசைக்கச்சேரிகளும் செய்து தமிழ்ப்பெண்மணிகளிலேயே ஒரு சிறந்த இரத்னமாக விளங்கினார்ர்  திருமதி  வை. மு கோ.
    இவரது  நாவல் எளிமையுடன்  மனதைத் தொடும் . இலக்ண்த்திற்கு முக்கியத்வம்  இல்லை  , எலலா நாவல்களும்  ஆத்மாவைத் தொடும் . சொற்களில்  ஒரு ஆழம்  இருக்கும் , நிரம்பச் சுவை,  இருக்கும் காதல் இருக்கும் ஆன்மீகமும் இருக்கும்  நாவலை ஒரு முறை எடுத்துவிட்டால்  கீழே வைக்கத் தோன்றாது அவ்வளவு  விறுவிருப்பு.

    அவருடைய் ஒரே மகன்  வை மு ஸ்ரீனிவாசன் திடீரென்று  காலமாக அந்தத் துயரம் தாங்காமல் ஜெகன் மோஹினி பத்திரிக்கையை நடத்த  இயலாமல்   அதை விட்டு வந்தார் ஆனாலும் உள்ளேத் துயரம்  அழுத்த உடல் நிலைக் குன்றிப்போனார் , 1960ஆண்டு இந்த பேரொளி அணைந்து விட்டது. இருபது வயதில் கையில்  எடுத்த பேனா கடைசிவரையிலும் துணை தந்தது , தேசிய நாயகி  ,,இன்னிசை நாயகி , நாடக நாயகி  நாவல் நாயகி எழுத்துலக நாயகி
    தெய்வ நாயகி ஆகி நம் அனைவர் மனத்திலும் நிறைந்திருக்கிறார் இவர்.

    படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF

    Share
  • மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா

    செல்வரகு

    சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் “மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா” தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க இருக்கிறது . இந்தப் பிரமாண்டமான நிகழ்விற்குத் திரையுலக முன்னணி பிரபலங்கள் பெறும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

     

    நடிகர் ஆரியா , “மெகா இண்டர் காலேஜ் திருவிழா”வில் கலந்து கொள்வாதகத் தெரிவித்துள்ளார்.  “விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிக்கின்ற வயதில் இம்மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கு நல்ல அங்கிகாரத்தைக் கொடுக்கும் . இந்தச் சாதனையாளர் திருவிழாவில் கலந்து கொண்டு , நாம் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிப்போம்” என நடிகர் ஆர்யா கூறினார் . அவரைத் தொடர்ந்து,  நடிகை அஞ்சலி மற்றும் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் இந்த உலக சாதனையாளர் திருவிழாவில் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளார்கள் .

    ஒரே நிகழ்வில் 100 விதமான போட்டகளைத் –  தனித்தனித் துறைகள் வாரியாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் . கல்லூரிப் பேராசியர்களுக்கும் தனித்துவமான போட்டிகள் உண்டு .

    கல்லூரிப் பருவத்தில் போராடத் துடிக்கும் இளைய தலைமுறைகளுக்குத் தமிழக அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றியாளர்களை இந்தியளவிலும் – உலகளவிலும் மேடை ஏற்ற பல விதமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் . ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெறும் கல்லூரிக்குக் கேடயமும் , பதக்கமும்  வழங்கப்படும் .

    மாணவர்களே ..! திறமையிருந்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று புலம்ப தேவையில்லை .  வெறும் ஆர்வமும் , வெற்றுக் கரிசனும் மட்டும் இருந்தென்ன செய்வது …? உங்களைத் தேடி விருதுகள் கொடுக்க வருகிறார்கள் . உங்களை நீங்கள் தகுதிப்படுத்துங்கள் . 10 லட்சத்திற்கும்  அதிமான மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் இந்தச் சாகச நிகழ்வுகளில்  உங்களுக்கான இடத்தை நீங்களே தேர்ந்துக் கொள்ளுங்கள் . சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் இந்த மாபெறும் முயற்சியின் வழி , உலக அரங்கில் உங்களுடைய  நாற்காலியை வந்து பாருங்கள்

    மேலும் விவரங்களுக்கு : www.micrf.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    விசாகப்பட்டினத்தில் வாழும் பழமையான தமிழர் திரு ராஜேஸ்வரன் இந்த நகரத்து மக்களுக்காக நகரின் மையத்தில் அழகான கோயில் ஒன்று விநாயகருக்கு எடுத்துச் சிறப்பித்தவர், அந்தக் கோயிலுக்கு தமிழிலும் சம்பத் விநாயகர் என்று பெயரிட்டதுடன் தமிழர்களாலேயே பூசனை செய்யும் விதானத்தையும் கொண்டு வந்தவர். கேட்டவர்களுக்கெல்லாம் கேட்பவற்றை அள்ளித் தரும் இந்த சம்பத் விநாயகருக்கு வரும்படி அதிகம். இதை அரசாங்கம் கவனித்து விட்டது. விடுமா இப்படி பணம் பெறும் இயந்திரத்தை.. அப்படியே தத்து எடுத்துக் கொண்டார்கள். ஆனால் நமது தலைவர் இந்தத் தத்துக்கு முன்பே நகரத்தை அடுத்த கிராமப்புறத்தில் விநாயகர் டிரஸ்டில் சில ஏகராக்கள் நிலத்தை வாங்கிப் போட்டார். அங்கே சிறு விநாயகர் கோயில் ஒன்றையும் அந்த விசாலமான பகுதியில் எடுப்பித்தவர் மீதி உள்ள இடங்களில் எல்லாம் முதியோர் தங்கும் விடுதிகள் அனைத்து வசதிகளையும் கொண்டவைகளாக நிர்மாணித்தார்.

    முதியோர் விடுதி என்று பேச்சுக்கே தவிர அங்கே இந்த இருப்பிடங்களைக் கவனித்தால் ஏதோ ஒரு கார்பொரேட் கஸ்ட் ஹவுஸ் சூழ்நிலையைத் தான் உணர்த்தும். இத்தனைக்கும் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாகவும் இருப்பதால் நகரத்துக்கே உரிய பரபரப்பும், பொல்லூஷனும் அறவே அங்கே கிடையாது. வசதிகள் உள்ள அந்த விடுதிகள், வயோதிகர்களின் கடைக் காலங்களில் நிச்சயமாக ஒரு நிம்மதியை ஏற்படுத்தித் தந்து விடும். சிறிது காலம் தங்கினால் அங்கிருந்து வெளியே வர யாருக்குமே மனம் வராது.

    இதைப் பற்றி ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் எடுத்துச் சொன்னேன்.. ஏன் இந்த அழகான விடுதிகளை முதியோர் விடுதி என்கிறீர்கள். முதியோர் விடுதி என்றாலே ஏறத்தாழ அநாதை விடுதிகள் போலத்தானே என்றேன்.. அதற்கு அவர் அப்படி இல்லை.. இதை வயோதிகர் உல்லாச உலகம் என்று பொருள்படும் விதத்தில் ரிசார்ட் என அழைக்கிறோம், இங்கே அவர்கள் உல்லாசமாக உற்சாகமாக இருக்கும் விதத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்றார். பேருக்கு வாடகை என்றாலும் மிக மிகக் குறைந்த விலையில்தான் ஏழை எளியவர்களுக்காகத்தான். அவர்கள் எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் ஆழ் மனதில் கொண்டு  நிர்மாணித்தோம், என்கிறார் இவர். எனக்கு இவரைப் போன்றவர்கள் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது இந்த நாட்டுக்குத் தேவை எனத்தான் பட்டது.

    சமீபத்தில் (இந்த வார வல்லமையில்) திரு கோபி சரபோஜி எழுதிய  ‘விதையின் குணம்’ என்ற ஒரு கவிதை படித்தேன்.

    பெற்றோர்களே….
    வயது போனதற்காய்
    நீங்கள்
    உதிரமும்,உணவும் தந்து
    கை தூக்கி விட்ட பிள்ளைகள்
    உங்களை
    கை விட்டு விட்டதை எண்ணி
    வருந்தாதீர்கள்.

    நீங்கள் – விருட்சம்
    அவர்கள் – விதை.

    விழுந்து எழுவது தானே
    விதையின் குணம்.

    விட்டு விடுங்கள்
    எழும்போதாவது
    வீரியமாய் எழட்டும்.

    கை விட்ட நிலையில் முதியவர்கள் வருத்தத்தைத் துடைக்கும் ஒரு கவிதை. எனக்கு ஏனோ இந்தக் கவிதை திரு ராஜேஸ்வரனின் ‘ரிஸார்ட்’ விஷயத்தை ஞாபகப்படுத்தியது. விருட்சமான முதியவர்கள் இனி வரும் கால கட்டத்தில் சற்று புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால்தான் உண்டு. விதைகளான உதிர்த்தபின் தனக்குப் பாந்தமான முறையில் கிடைக்கும் இடங்களில் இடம் பெயரத்தான் வேண்டும் எனவும் போன்றியது. கிடைக்கும் இடம் நல்ல விதமாக, ’ரிஸார்ட்டாக’ அமைந்தால் விருட்சத்துக்கு  மகிழ்ச்சிதானே. இன்று விதையாகக் காணப்படும் பிள்ளைகள் நாளைய விருட்சங்கள் அல்லவா.. அவர்களுக்கும் இது ஒரு பாடம் மட்டுமல்ல.. எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்ள வழியாகவும் இருக்கும்.

    யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா.. இப்படி யோசிக்க வைத்த திரு கோபி சரபோஜி அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்த்டுக்கிறது. அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாராவில் இந்த வாரம் முழுவதும் என் நினைவில் நிற்பது தூத்துக்குடி துரைதான். முகத்தில் ஆசிட் வீசப்பட்டு கொடுமைக்கு ஆளான அந்த இனிய இளம்பூவான வினோதினிக்கு ஆறுதலாக முன்வந்து உதவித்தொகை சேகரித்துக் கொடுத்ததும், அவரை ஊக்கப்படுத்த முயற்சிகள் எடுத்து வருவதும் சாதாரண செயல் அல்ல.பெரிய மனசு கொண்ட துரை வாழ்க!

    Share
  • யாவரும் கேளிர்

     

    சுவர்ப்பலகையில்
    தான் வரைந்திருந்த
    கோணல்மாணல் குலதேவதையை
    அவள் வணங்கிக் கொண்டிருக்க
    என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு
    தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
    கும்பிடுறன்ப்பா என்றதும்
    தூக்கிவாரிப் போட்டது நமக்கு!
    உனக்கேதடா தங்கச்சிப் பாப்பா?
    மறுவினவலுக்குச் சொல்கிறாள்
    எனக்கு சிறுசாயிடிச்சுன்னு
    டொனேசன்ல போட்ட
    பட்டுப் பாவாடையப் போடுற பாப்பா
    எனக்குத் தங்கச்சிதானேப்பா?
    அதான் அந்தப்பாப்பா நல்லாயிருக்கணும்னு
    சாமிகிட்ட சொல்லிட்டு இருக்கேன்ப்பா!
    மனம் மகிழ்ந்து நாசி திளைக்க
    முகமறியா அக்குழந்தைமணம்
    வீடெங்கும்!!

    Share
  • இஸ்ரேல் பயணம் 8

    நாகேஸ்வரி அண்ணாமலை

    புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன.  சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன.  அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன.  அவற்றில்தான் கடைகளுக்குச் சரக்குக் கொண்டு செல்பவர்கள் நம் கைவண்டி போன்ற வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்படியே சருக்கிக்கொண்டு போகிறார்கள்.  ஆங்காங்கே மார்க்கெட்டுகள் இருக்கின்றன.  காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளும் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்து கொடுக்கும் கடைகளும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடைகளும் சிற்றுண்டி விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன.  இந்த நகரத்திற்குள் புதிதாக வருபவர்கள் எளிதாகத் தொலைந்துவிடலாம்.  ஏனெனில் அத்தனை சிறிய தெருக்கள், சந்துகள் இருக்கின்றன.  பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்ட, உணவுக்குச் சுவை கூட்டும் பல பொருள்கள் (spices) விற்கும் கடைகளும் இந்த மார்க்கெட்டிற்குள் இருக்கின்றன.  புராதன நகரத்திற்குள் எந்தக் கடையிலும் அரிசியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை.  ஆனால் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate-ஏழு வாயில்களில் இதுவும் ஒன்று) வெளியே நம் நாட்டில் இருப்பது போன்ற சிறிய பலசரக்குக் கடைகள் நிறைய இருக்கின்றன.  அங்கு மிக உயர்ந்த தரமுடைய நம் நாட்டு பஸ்மதி அரிசி கிடைத்தது.  அமெரிக்காவிலும் பல வகையான பஸ்மதி அரிசிகள் கிடைக்கின்றன.  இது அப்போதுதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் போலும்.  புதுக்கருக்கு மாறாமல் இருந்தது.  அமெரிக்காவிலிருந்து ஒரு மாதம் இஸ்ரேலில் தங்கியிருக்க வந்திருந்த யூத நண்பருக்கு என் சமையல் என்றால் பிடிக்கும்.  அவருக்குச் சமைப்பதற்காக அரிசியைத் தேடிக்கொண்டிருந்த போது இது கிடைத்தது.

    புராதன நகருக்குள் தனியாகச் சென்றால் எல்லா  இடங்களையும் அவற்றின் தொன்மையையும் சிறப்புக்களையும் நம்மால்  புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஒரு பயண வழிகாட்டியை (guide) ஏற்பாடு செய்துகொண்டோம்.  அவர் ஒரு அரேபிய முஸ்லீம்.  முந்திய தினமே தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு மறு நாளைக்கு எங்கு, எத்தனை மணிக்குச் சந்திப்பது என்று முடிவுசெய்துகொண்டோம்.  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவர் எங்களைப் புராதன நகருக்கும் அதற்கு வெளியேயுள்ள ஜெருசலேமின் மற்ற இடங்களுக்கும் கூட்டிப் போவதாக ஏற்பாடு.  அரேபியர்கள் முதலில் இருந்த இடங்களைச் சுற்றி இஸ்ரேல் அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகளும் இதில் சேர்த்தி.

    நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் புராதன நகருக்கு மிகவும் அருகில்  இருந்தது.  மொத்த தூரம்  அரை மைல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களையுடைய அந்தத் தெருக்களைக் கடப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.  சில சமயங்களில் அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரர் யோசியின் (Yosi) உதவி கிடைத்தால் டாக்ஸி கிடைத்துவிடும்.  பக்கத்து இடங்களுக்குச் செல்ல ஜெருசலேமிலும் டாக்ஸிக்காரகள் வர விரும்புவதில்லை.  அந்த மாதிரி நேரங்களில் நடந்துதான் சென்றோம்.  இந்த நடையோடு புராதன நகருக்குள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்லவேண்டும்.  மதிய உணவைப் பயண வழிகாட்டியே எங்களுக்கு, அவருக்குத் தெரிந்தவர் கடையில் வாங்கிக் கொடுத்தார்.  நம் நாட்டு இட்லி, தோசை போன்றது ஃபலாஃபல் (Falafel) என்னும் பலகாரம்.  இது எல்லாத் தெருக் கடைகளிலும் கிடைக்கும்.  இது காபூல் சன்னா என்று அழைக்கப்படும் பெரிய வெள்ளைக் கொண்டைக்கடலையை நனையவைத்து, வெங்காயம், வெள்ளப்பூடு, சீரகம், கொத்தமல்லித்தழை, பார்ஸ்லி கீரை (Parsley) ஆகிய சாமான்களைச் சேர்த்து ஒரு விதப் பக்குவத்தில் அரைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவது. இன்னொரு பலகாரம் நம் சப்பாத்தி போன்றது. அது பீட்டா ரொட்டிக்குள் தக்காளி, வெங்காயம், லெட்டஸ் என்னும் கீரை, மற்றும் ஃபலாஃபல் ஆகியவற்றை உள்ளே வைத்துத் தயாரிப்பது.  சில இடங்களில் பயண வழிகாட்டிகள் இதையும் மதிய உணவாகக் கொடுத்தார்கள். ஃபலாஃபல்லோடு ஆரஞ்சுப் பழச்சாறும் எல்லா இடங்களிலும் உணவோடு பரிமாறப்படுகிறது.  ஜெருசலேமை ஒட்டியுள்ள இடங்களில் நிறைய ஆரஞ்சு விளைகிறது.  பயண வழிகாட்டி புராதன நகரில் ஒரு கடையில் ஆரஞ்சுப் பழச்சாறு வாங்கிக் கொடுத்தார்.  ஒரு பெரிய தம்ளர் சாற்றின் விலை பத்து ஷெக்கல் (shekel).  ஷெக்கல் இஸ்ரேலின் நாணய முறை.  நான்கு ஷெக்கல் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். அதாவது ஒரு ஷெக்கல் 13 ரூபாய்க்குச் சமம்.

    மதியம் ஒரு மணிக்கு புராதன நகரப் பயணத்தை முடித்துக்கொண்டு (புராதன நகரைப் பார்ப்பதற்கு அரை நாள் போதாது.  மறுபடி நாங்களாக ஒரு முழு நாள் முழுவதும் அதற்குள் சுற்றினோம்.  ஆனால் அங்கு நடப்பதற்கு நிறையத் தெம்பு வேண்டும்.)  பயண வழிகாட்டி வாங்கிக் கொடுத்த உணவை உண்டுவிட்டு, சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடி புராதன நகருக்கு வெளியேயுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம்.

    ஜெருசலேம் நகரம் இப்போது  மிகவும் விரிந்திருக்கிறது.  1948-இல் ஐ.நா. செய்த பிரிவினையின் போது ஜெருசலேமை இஸ்ரேலுக்கும் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்திற்கும் கொடுக்கவில்லை.  அது ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால் 1967 சண்டையில் இஸ்ரேல் ஜெருசலேமைப் பிடித்துக்கொண்டதால், அதைத் தன் தலைநகரம் என்று கூறிக்கொண்டு அங்குதான் தன்னுடைய நெஸ்ஸெட் (Knesset) என்று அழைக்கப்படும் பார்லிமெண்டைக் கட்டியிருக்கிறது.  ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் அங்குதான் இருக்கின்றன.  இஸ்ரேலின் பழைய, பெயர்பெற்ற ஹீப்ரு பல்கலைக்கழகமும் இஸ்ரேலில்தான் இருக்கிறது. ஆயினும், தென் அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா, எல் சல்வடார் என்ற இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் – அமெரிக்கா உட்பட – டெல்விவ்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது போல் அங்கு தங்கள் தூதரகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.

    1948-இல் பாலஸ்தீனத்தில் ஐ.நா. தனக்குப் பிரித்துக் கொடுத்த இடங்கள் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மேலேயே இருந்ததால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாளே – 1948 மே மாதம் பதினாலாம் தேதியே – வேக வேகமாக பென் குரியன் போன்ற, இஸ்ரேலை உருவாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்த யூதத் தலைவர்கள் இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டது என்று பிரகடனப்படுத்திவிட்டனர்.  ஐ.நா.வின் இந்தப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் சிரியாவில் கூட்டம் போட்டு ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்தனர்.  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தவர்களுக்கு அதை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு அதில் ஒரு பகுதியைக் கொடுத்து யூத நாடு உருவாக ஆதாரமாக இருந்த ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இஸ்ரேல் உருவான மறு நாளே எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்தன. முதலில் அரபு நாடுகள் யுத்தத்தில் ஜெயிப்பது போல் தோன்றினாலும் இஸ்ரேல் சண்டையில் வெற்றிபெற்றதோடு 1949 ஜனவரி ஏழாம் தேதி சண்டையின் முடிவில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குப் (cease fire) பிறகு இஸ்ரேல், ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் பாதியளவு இன்னும் சில இடங்களைப் புதிதாகப் பிடித்துக்கொண்டது.  இப்படிப் பிடித்துக்கொண்ட இடங்களில் ஜெருசலேமின் ஒரு பகுதியும் அடங்கும்.  1956-இல் நடந்த சண்டையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் வற்புறுத்தியதால் இஸ்ரேல் யுத்தத்தில் பின்வாங்கியது.  1967-இல் மீண்டும் அரபு நாடுகளோடு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் சிரியா, ஜோர்டன், எகிப்து ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் போல் இரண்டு மடங்கு இடங்களைப் பிடித்துக்கொண்டது.  சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights), எகிப்தின் சினாய் தீபகற்பம் (Sinai Peninsula), ஜோர்டானின் வெஸ்ட் பேங்க் (West Bank), ஜெருசலேமின் புராதன நகரம் என்று பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.  1977-இல் எகிப்தில் அன்வர் சதாத் ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதால், அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலும் எகிப்தும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன.  ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.  பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் லெபனானில் செயல்பட்டு வந்தபோது இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு பிடித்த எல்லா இடங்களையும் விட்டு வரவில்லை.  சிரியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த ஒப்பந்தத்தை லெபனானும் ரத்துசெய்தது.

    இஸ்ரேல் உருவானதும் அங்கிருந்த பல பாலஸ்தீனிய அரேபியர்கள் பக்கத்து அரபு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டிருந்தனர்.  மிஞ்சியவர்கள் இப்போதைய இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம்.  இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டே போனதால், இஸ்ரேலிலும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களிலும் வாழ்ந்த அரேபியர்களுக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன.  இஸ்ரேல் தான் பிடித்துக்கொண்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனது.  இதுவும் அரேபியர்களின் கோபத்தைக் அதிகப்படுத்தியது.

    இது வரை இஸ்ரேல்  என்ற நாடு இருப்பதையே பாலஸ்தீனத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்.  ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் (Yasser Arafat) இந்த நிலையை மாற்றி முதல் முதலாக இஸ்ரேலுக்குத் தனி நாடாக இயங்கும் உரிமை இருக்கிறது என்றும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் 1992-இல் இஸ்ரேலின் பிரதம மந்திரியான யிட்சக் ராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தினார்.

    இதையடுத்து 1993-இல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) என்றுபெயர்.  இதன்படி வெஸ்ட் பேங்கும் காஸாவும் (Gaza) (காஸா எகிப்து-இஸ்ரேல் எல்லையில் இருக்கிறது.) சுயாட்சி அமைத்துக்கொள்வதென்றும் ஐந்து வருஷங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  (இந்த ஒப்பந்தத்தினால் அராபத்துக்கும் ராபினுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.)  1994-இல் யாசர் அராபத் Palestine Authority-யின் தலைவரனார்.

    1995-இல் ராபின் ஒரு யூத தீவிரவாதியால் கொலைசெய்யப்பட்டார்.  1996-இல் பிரதமர் பதவிக்கு வந்த பெஞ்சமின் நேத்தன்யாஹு (Benjamin Netanyahu) என்பவர் ஒரு வலதுசாரி.  (இவருடைய லிக்விட் (Likud party) கட்சிதான் 2013 ஜனவரியில் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பார்லிமெண்ட்டின் 120 இடங்களில் 31-ஐப் பிடித்திருக்கிறது.  இன்னும் இரண்டு கட்சிகளோடு சேர்ந்து இவர் அரசு அமைப்பார்.  மூன்றாவது முறையாகப் பிரதம மந்திரி பதவியை வகிப்பார்.)  ஆஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு அதிகச் சலுகை கொடுத்துவிட்டதாகவும் அதைப் பின்பற்றினால் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையலாம் என்றும் கூறி ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  காஸாவில் ஹமாஸ் (Hamas) என்னும் தீவிரவாத பாலஸ்தீனியக் கட்சி தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

    1997-இல் ஹமாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிரவாத தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து இருபது இஸ்ரேலியர்கள் உயிர் இழக்கக் காரணமாயினர்.  இதைத் தொடர்ந்து நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு மாறாகப் பல காரியங்கள் செய்தார்.  இஸ்ரேலில் வேலைபார்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பல நிபந்தனைகள் கொண்டுவந்தார்.  பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்குச் சேர வேண்டிய வரிப் பணத்தை அதற்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்.  இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களில் குடியிருப்புகளை அரசு தொடர்ந்து கட்டியதோடு பல வலதுசாரி இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்தார்.  இப்படியாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சண்டை வலுத்துக்கொண்டே போனது.

    யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது ஜெருசலேமிலும்  பலர் குடியேறினர்.  ஜெருசலேமைச்  சுற்றிலும் நிறைய யூதக் குடியிருப்புகள் இருக்கின்றன.  1967 சண்டைக்குப் பிறகு  இஸ்ரேல் அரசு நிறையக் குடியிருப்புகளைக் கட்டியது.  இவற்றில் சில அமெரிக்காவில் வாழும் பணம் படைத்த யூதர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான இடங்களை / வீடுகளை அவர்களிடமிருந்து நிறையப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ வாங்கிக் கட்டப்பட்டவை.  1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் பலவற்றைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேலைத் தாக்க பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேல் பகுதிக்குள் வந்தபோது 2001-இல் பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷேரன் (Ariel Sharon) பாலஸ்தீன இளைஞர்களை வரவிடாமல் தடுக்க உயர்ந்த மதில்களை அரேபியர்கள் வசிக்கும் பகுதிக்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே கட்டத் தொடங்கினார்.  2002-ஆம் ஆண்டில் ஆரம்பித்த சுவர் கட்டும் வேலை இன்னும் நடக்கிறது.

    ஷேரனால் ஆரம்பிக்கப்பட்ட  இந்தச் சுவர் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காகக் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும் இதனுடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனியர்களை வெஸ்ட்பேங்கிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களையும் இஸ்ரேலுடன் இணைத்து பாலஸ்தீனத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று ஐ.நா.வைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின் அதிகாரி ஒருவர் 2003-லேயே கூறியிருக்கிறார்.

    ஜெருசலேமின் பல இடங்களில்  இந்தச் சுவரைக் காண முடிந்தது.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனியர்கள் வாழும் இடங்களுக்கு இடையே ஓடுகிறது.  பாலஸ்தீனியர்கள் வாழும் வீடுகள் சுவருக்கு ஒரு புறமும் அவர்களுடைய ஆலிவ் மரங்கள் அடங்கிய தோப்புகள், விவசாயப் பண்ணைகள் மறுபுறமும் இருக்கின்றன.  இந்தச் சுவர்களைத் தாண்டிப் போவதற்கு சுவரில் ஆங்காங்கே வாயில்களும் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன.  இவற்றைத் தாண்டுவதற்கு இஸ்ரேல் அரசிடம் அனுமதி அட்டை பெற வேண்டும்.  அவற்றை இஸ்ரேல் அரசு எளிதாகக் கொடுப்பதில்லையாம்.  மேலும் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லுபடியாகுமாம்.  சுவரின் இஸ்ரேல் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கே அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.

    இந்தச் சுவர் நகர்ப் புறப் பகுதிகளில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது.  சில இடங்களில் 26 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.  கட்டி முடிக்கப்பட்டதும் 440 மைல் நீளம் கொண்டதாக இருக்குமாம்.  பெர்லின் சுவரை விட இரண்டு மடங்கு உயரமாம்.  கிராமப் புறப் பகுதிகளில் மின்சாரம் பாயும் இரும்புக் கம்பிகளால் ஆன வேலி காணப்படுகிறது.  வேலிக்கு இரு புறமும் ஆழமான அகழிகள் இருக்கின்றன.  சண்டையில் பிடித்துக்கொண்ட இடங்களில் ஏற்படுத்திய குடியிருப்புகளையும் இன்னும் எதிர்காலத்தில் அமைக்கக் கூடிய குடியிருப்புகளுக்கான இடங்களையும் உள்ளடக்கி இந்தச் சுவர் கட்டப்பட்டிருப்பதால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.  சுயேச்சையான பாலஸ்தீன நாடு உருவானாலும் அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாடாக இருப்பதற்குரிய அபாயம் இருக்கிறது.  வெஸ்ட் பேங்கின் செழுமை வாய்ந்த பகுதியின் பெரும் பகுதி இந்தச் சுவரின் இஸ்ரேல் பகுதியில் இருக்கிறது.  இஸ்ரேலில் வேலை பார்க்கும், சுவரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வேலைக்கு வருவதற்கு இந்தச் சுவரின் சோதனைச் சாவடிகள் மூலமாகத்தான் வர வேண்டும்.  நாங்கள் வெஸ்ட் பேங்கில் இருக்கும் பெத்லஹேம், ராமல்லா ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது இந்தச் சுவரின் வழியாக அதிலுள்ள சோதனைச்சாவடி மூலமாகத்தான் சென்றோம்.

    பயண வழிகாட்டி எங்களை யூதக்குடியிருப்புகளுக்கு நடுவே வசிக்கும் பாலஸ்தீனர்களின்  வீடுகளுக்குக் கூட்டிச் சென்றார்.  அவர்கள் தங்கள் சோகக் கதைகளை எங்களிடம்  கூறினர்.  பாலஸ்தீனர்களுக்குரிய வீடுகளை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இஸ்ரேலிய அரசு எடுத்துக்கொள்வதால் சிலர் தங்கள் வீடுகளை விட்டுப் போகவே பயப்படுகிறார்களாம்.  அப்படிப் போகும் பட்சத்தில் அரசு அவற்றை கையகப்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறதாம்.  நான் ஒரு எழுத்தாளர் என்றதும் ‘எங்களைப் பற்றி ஒரு முறையல்ல, பல முறை எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்’ என்றார்கள்.

    சுவர் பற்றிய படங்களை  இந்த ஆல்பத்தில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/TheWall?authkey=Gv1sRgCL_Pu8mm_obUPg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 57 (04.02.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    முரி வரி
    பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்
                            
                        (14)
    என் தோழனே!
    பூம்பொழில் தருகின்ற நறுமண மலர்
    அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்
    அங்கே நின்றிருந்த தலைவியின்
    குற்றமற்ற இனியமொழி
    பருத்த இளமையான அழகிய மார்புகள்
    முழுமையான மதிபோன்ற முகம்
    வளைந்து நின்ற புருவமாம் இருவில்
    அழகை எழுதுவதற்கரிய மின்னல் இடை
    இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தன.
                         (15)
    என் தோழனே!
    அலைகள் பரந்த நீர்த்துறை
    அழகிய மணற்பரப்பு
    மணம் அவிழ்க்கும் நறுமண மலர்
    மலர்கள் நெருங்கிய சோலை
    அங்கே நின்றிருந்த தலைவியின்
    மணம் விரவிய சுருள் கூந்தல்
    மதி போலும் அழகிய முகம்
    இரண்டு கயல்கள் போன்ற இருவிழிகள்
    இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
                          (16)
    என் தோழனே!
    சங்குகள் வளரும் துறை
    மணம் பரந்து விரிகின்ற சோலை
    கட்டவிழ்ந்த மண மலர்கள்
    ஆங்கு அவள் தனித்து உலாவுகின்ற இடம்
    முளை போல வளரும் பல்வரிசை
    நிறைமதி போன்ற முகம்
    இளமைப் பருவத்தினளது
    இணைந்த மார்புகள்
    இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    Share
  • சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இருவருக்கு ‘கரிகாலன் விருது’ 03/02/2013

    ‘கரிகாலன் விருது’ பெற்றுள்ள் பிரபல சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தன் மற்றும் திரு மா. இளங்கண்ணன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    03/02/2013

    சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின்நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி :

    http://tamilmurasu.com.sg/news/national

     

    Share