Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …. (39)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே 1

    2012ம் ஆண்டு எனும் மாடியின் முடிவில் நின்று கொண்டு 2013 எனும் மாடியை வியப்புடன் நோக்கிக் கொண்டே இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.

    காலம் காற்றுப் போல பறக்கின்றது. ஒரு இரயில் பெட்டியில் உட்கார்ந்து கொண்டு சாளரத்தின் வாழியே வெளியே கடந்து செல்லும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பயணியின் கண்களில் தெரியும் அற்புதமான, மிதமான ,மோசமான காட்சிகள் இது அற்புதம், இது மிதம், இது மோசம் எனப்தைப் புரிந்து கொண்டு இரசிப்பதன் முன்னாலே அக்காட்சி மின்னல் வேகத்தில் மறைந்து விடுவது போலத்தான் வாழ்வின் நிகழ்வுகளும் எம்மைக் கடந்து கனவேகத்தில் பறக்கின்றன.

    ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் ? அட என்னடா அப்படி என்னதான் வித்தியாசம் என்கிறீர்களா?

    இரயில் பயணி தவற விட்ட காட்சியை நிச்சயம் மீண்டும் பார்த்துத்தான் ஆக வேண்டும் என எண்ணினால் அதே பயணத்தை , அதே பாதையில் மீணடுமொருமுறை செய்து கொள்ளலாம். ஆனால் நாம் எமது வாழ்வில் தவற விட்ட கணங்களை மீண்டும் அனுபவிப்பது சாத்தியமாகுமா? இல்லையே !

    முடிந்த ஆண்டின் கணக்கை கடைசிப் படியில் நின்று அலசுவது சுலபம். ஆனால் எமது முன்னே இருக்கும் ஆண்டு எமக்கு தரப்போவது என்ன? எமது வாழ்க்கைப் பயணம் எந்தப்பாதையில் எவ்வகையில் திருப்பப்படப் போகிறது என்பதை யாருமே அறிய மாட்டார்.

    அது ஒரு திறக்கப்படாத புத்தகம். அதன் நிகழ்வுகளை அனுபவித்துக் கொண்டே தான் அறியலாம். ஆனால் இதுவரை படித்து முடித்து கடைசிப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த 2012 எனும் அத்தியாயத்தில் நாம் கண்டவைதான் என்ன ? சற்றே அலசுவோமா வாருங்கள் !

    இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் இந்த 2012 ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். 2005ம் ஆண்டு சிங்கப்பூரில் உலக ஒலிம்பிக் கமிட்டியின் 2012 ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு இங்கிலாந்து என்று அறிவிக்கப்பட்ட நேரம் தொடக்கம் ஒலிம்பிக் நடந்து முடிந்த வரைக்கும் பலவகையான நிகழ்வுகல் அரங்கேறி முடிந்து விட்டன.

    ஆனால் அனைத்துக்கும் முடி சூட்டியது ஒலிம்பிக் போட்டி என்றே சொல்ல வேண்டும். டோனி பிளேயர் பிரதமராக இருந்த காலம் தொடங்கி இன்று டேவிட் கமரன் பிரதமராக இருக்கும் காலத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியே கடந்த 2012ம் ஆண்டின் முத்திரையான நிகழ்வு என்றால் மிகையாகாது.

    உலகப் பொருளாதாரம் கனவேகத்தில் சரிந்து கொண்டு சென்றதன் ஆரம்பம் 2008ம் ஆண்டே என்று சொல்லலாம். அச்சரிவினை சரியான முறையில் கையாளத் தவறி விட்டது இங்கிலாந்தின் அப்போதைய அரசாங்கம் எனும் வாதத்தை முன்வைத்து 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அரசாங்கம் அமைக்க மட்டுமே அதிகாரம் பெற்ற கன்சர்வேடிவ் கட்சி தனது அனுமானத்தின் படி நாட்டின் சரிவை மாற்றியமைக்கும் பணியில் எதிர்பார்த்தபடியான முன்னேற்றங்களை இந்த இரண்டரை வருடங்களில் ஏற்படுத்தவில்லை.

    மக்களின் மனதில் இருந்த பொருளாதார நிலை பற்றிய ஐயப்பாட்டை ஒரு 6 மாத காலம் மறக்கப் பண்ணியிருந்தது ஒலிம்பிக் போட்டிகளே !

    நாடு இருக்கும் சிக்கலுக்குள் ஒலிம்பிக் போட்டிக்காக இத்தனை தொகையான பணத்தை வாரி இறைப்பது தேவையா? எனும் வாதம் பல கோணங்களில் இருந்து எழுந்து கொண்டுதான் இருந்தது. இவ்வொலிம்பிக் போட்டிகள் அரசு எதிர்பார்த்தபடி வெற்றியடையாது எனும் எதிர்பார்ப்பில் அப்போது “சொன்னேன் கேட்டீர்களா?” எனும் பல்லவியைப் பாடக் காத்திருந்தவர்கள் எதிர்பார்ப்பில் மண்ணை வாரிப்போட்டு நாட்டின் அனைத்து மக்களும் தமது வேறுபாடுகளை மறந்து இவ்வொலிம்பிக் போட்டியின் வெற்றிக்காக உழைத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

    கொள்கையளவில் அதீத வேறுபாடுகளைக் கொண்டிருந்த கட்சிகளான “கன்சர்வேடிவ்” கட்ச்சியும், “லிபரல் டெமகிரட்ஸ்” கட்ச்சியும் கூட்டரசாங்கம் அமைத்திருந்தாலும் அதன் பலன் அவர்கள் இருவருக்கும் மோசமானதாகவே 2012ல் அமைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக் கருத்துக் கணிப்பீட்டில் இவ்விரண்டு கட்சிகளுக்கும் பலத்த அடி விழுந்துள்ளது.

    இவர்களது எதிர்காலம் எத்தகைய சுபீட்சம் வாய்ந்தது என்பதை 2013ம் ஆண்டின் நிகழ்வுகள் தான் காட்டப் போகிறது.

    அடுத்து இவ்வருடம் இங்க்லாந்தில் இடம்பெற்ற மிகவும் பரவலாக அனுபவிக்கப்பட்ட நிகழ்வு இங்கிலாந்து மகாராணியாரின் 60 ஆண்டுகால பதவிக்கால கொண்டாட்டங்களாகும்.

    இக்கொண்டாட்டங்கள் மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களை மறந்து ஒரு சிறிய இடைவெளியில் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    அது தவிர இங்கிலாந்தைப் பொறுத்தவரை இவ்வருடம் பலவழிகளிலும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான அரசியல் சட்டங்களை உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது.

    அமெரிக்காவை எடுத்துக் கொண்டோமானால் அமெரிக்க நாட்டின் முதலாவது கருப்பு இனைத்தைச் சேர்ந்த ஜனாதிபதி எனும் சாதனையை ஏற்படுத்திய ஒபாமா அவர்கள். தனது சாதனைக் காலம் ஒரு பதவிக்காலம் மட்டுமே என்று ஆக்கிவிடாமல் இவ்வருடம் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார்.

    முதலாவது முறை ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்றபோது உலகெங்கும் ஒரு அமைதி கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவற்றில் பல எதிர்பார்ப்புக்களாகவே முடிந்து போயின.

    நான்கு வருட கால பதவியின் மூலம் தான் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அந்த எதிர்பார்ப்புகளுக்கு இப்பதிவிக்காலத்திலாவது செயலாக்கம் கொடுப்பாரா என்பதையும் 2013ம் ஆண்டில் அவர் எடுக்கப் போகும் நடவடிக்கைகளை வைத்துத்தான் கூற முடியும்.

    கடந்த வருடம் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சில கசப்பான மனிதக் கொலைகள் நிகழ்வுகளின் மூலம் தன்மீது கறையைப் பூசிக்கொண்டிருக்கிறது. துப்பாக்கிகளை சாதாரண் குடிமகனும் வைத்திருக்கலாம் எனும் அவர்களின் அரசியல் சட்டத்திற்குப் பலமான சோதனைகள் எழுந்துள்ளன.

    மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக அரபு-இஸ்ரேல் சிக்கலுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு எத்தகைய அழுத்தத்தைப் பிரயோகிக்கப்போகிறது என்பதை ஆவலுடன் உலகின் பலநாடுகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதற்குரிய விடையையும் 2013 நல்குமா? என்பது கேள்விக்குறியே !

    ஆசிய நாடுகளை எடுத்துக் கொண்டோமானல் பொருளாதார ரீதியில் வளர்ந்து கொண்டு செல்லும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மேலைநாடுகளின் பொருளாதாரத் தேக்கத்தினால் சிறிது பின்னோக்கிச் சென்றிருந்தாலும் விளைவான பொருளாதாரக் கண்ணோட்டம் வளர்ச்சியாக இருந்திருக்கிறது.

    இப்பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் மத்திய வர்க்கத்தினோடு தங்கி விடாமல் பெரும்பான்மையான அடிமட்டத்தில் வாழும் மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை இந்தியா போன்ற நாடுகள் செயல்படுத்துமா ? என்பதையும் 2013ன் நடவடிக்கைகள் தான் உணர்த்தப் போகின்றன.

    “அரபு நாடுகளின் எழுச்சி” என்று வர்ணிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளினதும், அரபு நாடுகளினதும் சர்வாதிகாரத் தலைமைகள் தூக்கியெறியப்பட்டு “ஜனநாயக ஆட்சிமுறை” என வர்ணிக்கப்படும் ஆட்சிகள் பலநாடுகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாட்சி முறைகள் உலகப் பொருளாதாரத்தில் தம்மை இணைத்துக் கொள்ளும் வகையிலான ஜனநாயக முறையைப் பின்பற்றப் போகின்றனவா? அன்றி மதச் சார்பான தீவிர அரசியல் நடத்தும் ஆட்சிகளை அமைக்கப் போகின்றனவா? என்பதையும் இந்நாடுகளின் 2013ம் ஆண்டு நடவடிக்கைகள் காட்டிக் கொடுக்கப் போகின்றன.

    ஈழத்துத் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டு அங்கு வாழும் மக்கள் அனைவரும் சம உரிமையுடன், சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒரு அமைதி வாழ்வை அடைவார்களா? எனும் கேள்வியின் விடையையும் 2013ம் ஆண்டின் நிகழ்வுகளே அளிக்கப் போகின்றன.

    உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் தேவைகளும், ஆசைகளும் அவர்களது ஆற்றலை மீறிய அளவில் வளர்ந்து கொண்டு செல்கிறது

    மனிதாபிமானம், மனிதநேயம், அன்பு, கருணை என்பன மக்களின் பண்புகளில் முதலிடம் பெறும் தன்மை குறைந்து கொண்டு செல்கிறது.

    சமுதாயம், சமூகம் எனும் பரந்த நோக்கம் குறுகிக் கொண்டு தன்னலவட்டம் விரிந்து கொண்டு செல்கிறது.

    இத்தகைய ஒரு சூழலில் தான் டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் தனது முடிவை அடையப் போகிறது எனும் வதந்தி உலகமெங்கும் வேகமாகப் பரவி வந்தது. இவ்வதந்தியின் வேகத்திற்கு ஈடுகட்டும் முகமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் இத்தகைய நிகழ்வுக்குச் சாத்தியமில்லை என்று ஒரு மறுப்பறிக்கை விடுமளவிற்கு இக்கருத்து மக்களின் மனதில் ஒரு பீதியை, ஒரு கிலேசத்தைக் கிளப்பி விட்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

    ஆனால் இன்று அது வெறும் வதந்தி என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் இப்படியான ஒரு நிகழ்வு ஒவ்வொருவரையும் தமது வாழ்க்கையை எடைபோட்டுப் பார்க்கப் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கிறது.

    இந்த எடைபோடுதலில் மக்கள் வாழ்க்கையில் மனிதநேயம் எத்தகைய எடையை எடுத்தது என்பதே கேள்விக்குறி ?

    இனம், மதம், மொழி, நிறம் எனும் பாகுபாடுகளைக் கடந்து மனிதன் தன்னை மனிதனாகக் கணிக்க முயற்சித்துள்ளானா ?

    எம் அனைவரின் அவதானமும் 2013ம் நோக்கித் திரும்பியுள்ளது .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வால்ட்விட்மன் வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்

     

    வால்ட்விட்மன்  வசனகவிதை -5

    என் பாடத் துவக்கம்

    (Beginning My Studies)

                                                                                                                     (1819-1892)
                                                                                                           (புல்லின்இலைகள் -1)

                                                                                                         மூலம் : வால்ட் விட்மன்

                                                                                            தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு:

    அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.

    வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.

     1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

    தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.

    சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage toIndia.”].

     1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

    +++++++++++++++++++++++++++++

                                                                                                                   என் பாடத் துவக்கம்

                                                                                                                    (Beginning My Studies)

                                                                                                                          [வால்ட்விட்மன்]

    படிக்கத் துவங்கிய போது

    பரவசம் அளித்தது எனக்குப் பேரளவில் :

    எனது முதல் எட்டு நடை,

    கற்கும் தன்னுணர்வு, கற்கும் வடிவங்கள்,

    விளை யாட்டின் மேன்மை,

    சின்னஞ் சிறு பூச்சி, விலங்கு,

    கண்ணோக்கு, நட்பு, ஐம்புல உணர்வு !

    முதல் எட்டு அச்சம் தரினும், மிகையாய்

    மகிழ்ச்சி அளித்தது எனக்கு !

    நடந்த தூரம் சிறிது ! நடை மேலும்

    தொடர விருப் பில்லை !

    நிறுத்தினேன், திரிந்தேன் எந்நாளும்,

    பள்ளியில் கற்றதைப்

    பரவசப் பாக்களில் பாடுதற்கு !

    +++++++++++++++++

                                                                                                                              தொடங்குபவர்கள்

                                                                                                                                         (Beginners)

                                                                                                                                       வால்ட் விட்மன்

    வையத்தில் தொடங்குவோர்க் கெல்லாம்

    வசதிகள் எவ்விதம்

    வழங்கப் படும் படிப் படியாய் ?

    எவ்விதம் அவை அரிதானவை

    எவ்விதம் உலகுக்கு அச்சம் அளிக்கும் ?

    எவ்விதம் தமக்கேற் றளவில்

    ஏற்றுக் கொள்கிறார் ?

    தமக்குத் தாமே எவ்விதம் அவர்

    தாங்கிக் கொள்கிறார்

    இன வெறுப்பை எல்லாம்

    பிறரையும் முன் னிறுத்தி !

    தோன்றும் அவர்

    முரண்பாடு எத்தகையது அவரது

    வயதுக் கேற்ப !

    எப்படி அதை எதிர் கொள்வர்

    மக்கள்

    ஆயினும் அதை அறியாமல் ?

    எப்படி அவரது விதியில்

    ஏதோ ஒன்று நிலையாக உள்ளது

    எந்நாளும் ?

    எப்படி அவர் எப்போதும்

    தப்பாகத் தேர்ந் தெடுக்கிறார்

    தாம் மேலாய்ப் போற்றும்

    தமது வெகுமதிப் பரிசுகளை ?

    எவ்விதம் மாறாத

    ஒரே விலை கொடுத் தின்னும்

    வாங்கிக் கொள்கிறார்

    மாபெரும் அதே

    வாணிபச் சரக்கை ?

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம்லிங்கன்நாடகம்]

    Share
  • இறைவன் எங்கே..

    தேவா

    இறைவன்

    உண்டென்றும் இல்லை என்றும்

    உரைப்போர் உலகில் கோடியுண்டு

    கைலாயத்தில் கண்டேன்  ஈசனை என்போர் சிலர்

    காசிக்கு சென்றாலும் பாவங்கள்  போகவில்லை

    என்போரும் உண்டு ,

    பயிர் காத்திட மழை ,ஈந்திடும் முகிலும் இறைவனே என்று

    எழுதிவிட்டார் வள்ளுவன் ,

    தெய்வத்தை பல உருவில் வணங்கினாலும்

    அழுகின்ற குழந்தைக்கு பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

    ஆலயம் கட்டி வணங்குவேன்

    வாடுகின்ற மனிதனுக்கு ஊக்கமூட்டி ,

    பகிர்ந்துண்ணும் இதயமே இறைவன் வாழும் ஆலயம் அன்றோ!

     

    படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/csureshbabu/3350928450/

     

    Share
  • எல்லோருக்கும் நம் இறைவன் !

    விசாலம்

    காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணு உலகசிருஷ்டியில் ஒரு பாரபட்சமின்றி அபயம் என்று வந்தவர்களைக் கைவிடாமல்  காப்பாற்றியிருக்கிறார் இதில் ஆறறிவு படைத்தவர்கள் மட்டுமல்லாது ஐந்தறிவு பிராணிகளுக்கும் தன் அருள் தந்து உயர்ந்த பதவியையும் அளித்திருக்கிறார்.

    ஸ்ரீராமர் கானகத்தில் இருந்த தருணத்தில் பலருக்கு இவரது அன்பும் அருளும் கிடைத்திருக்கிறது   ஒரு படகோட்டியான குகன் ராமர் ,சீதை இலட்சுமணர் மூவரையும்  மிகவும் அன்பொழிய வரவேற்று .உபசரித்து பின் கங்கையைக்கடக்கவும்  உதவி புரிந்தான். அவனை அப்படியே ஆலிங்கனம்  செய்துகொண்ட ராமர்  தன்னுடைய சகோதரானாகவும் ஏற்றுக்கொண்டார்

    அரக்கனின் மகனாகப்பிறந்த பிரஹ்லாதன் தன் ஒரே நாமமான “ஓம் நமோநாரயணாய “என்பதை விடாமல் பிடித்துக்கொண்டு அவனது தந்தை கொடுத்த அத்தனைக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு உயிர் பிழைத்தான்  மலை உச்சியிலிருந்து அவன் தள்ளப்பட்டவுடன் ஒடோடி வந்து தன்கைகளில் அவனை   ஏந்தியபடி காப்பாற்றினார் விஷ்ணு அடுத்ததாக யானையை ஹிரண்யகசிபு அனுப்ப   யானை தன் காலால்  அவனை மிதிக்க வந்தவுடன் பிரஹ்லாதனைக்கண்டு அருகில் வந்து அப்படியே  வணங்கிவிட்டு சென்றது கடைசியில்  விஷ்ணுவே நரசிம்மாவதாரம் எடுத்து அவனுக்கு  அருள் புரிந்தார்  தன் பக்தனுக்கு எதிரியாக நின்ற அரக்கனைக்கொன்றாலும் கடைசியில் மோட்சம் அளித்தார்

    கானகத்தில் ராமர் சீதாபிராட்டியின் மடியில் தலை வைத்துப்படுத்திருக்க அந்த நேரம் பார்த்து ஜயந்தன் காகம் உருவில் வந்து   சீதையின் மார்ப்பைக்கொத்தியது    ஸ்ரீராமர்  தன் மேல் இரத்தத்துளி சொட்டுவதைப்பார்த்து விழித்து  காகத்தின் செயலைப்பார்த்து கடுங்கோபம் கொண்டு தர்ப்பையில் பிரம்மாஸ்திரம்  ஜபித்து அதன் மேல் ஏவினார் .ஜயந்தன் உருவில் இருந்த காகம் உயிர்ப் பிச்சைகேட்டு  பிரும்மா ,விஷ்ணு சிவன் எல்லோரிடமும் போக  ஸ்ரீராமர் விட்ட அஸ்திரத்தை   அவர்கள் தடுத்து நிறுத்த  முடியாதென்றும்  அதனால் ஸ்ரீராமரிடமே போய் மன்னிப்புக்கேட்கும்படி  சொல்ல  காகம் திரும்பவும் ஸ்ரீராமரிடமே வந்து அவர் பாதங்களில் விழுந்தது  பரந்தாமனும்  காகத்தை மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார் .

    இப்போது பார்த்தசாரதியாக வந்த கிருஷ்ணனைப்பார்க்கலாம்  மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கும்  கௌரவர்களுக்கும் போர் .அதில் அர்ஜுனனுக்குத்தேர் ஓட்டுபவராக கண்ணன் வருகின்றான் அப்படித்தேரை ஓட்டிவரும் போது  தேரில் கட்டிய குதிரைகள்  தாகத்தால் நாக்கு உலர்ந்து கனைத்தன .  இதைப்புரிந்து கொண்ட கிருஷ்ணர் குதிரைகளின்  தாகம் போக்க தன் அம்பை பூமியில் வீசிதண்ணீரை வெளியே பீச்ச வைத்து அதனது தாகத்தைப்போக்கினார் .

    பெருமாளே தன் மூச்சாகக்கொண்டிருந்த இந்திராஜும்னன்  என்ற அரசன் ஒரு தடவை தவம் செய்து கொண்டிருக்க அவரைப்பார்க்க திரு அகத்திய முனிவர்  வந்தார் .தன் தவத்தில் மூழ்கிப்போன அரசன் அகத்தியமுனிவரை வரவேற்க மறந்தான். பின் முனிவர் தான் வந்ததைத்தெரிவிக்க கனைத்தார்  பின்னர் அவர் கோபம் கொண்டு “உனக்கு இத்தனை கர்வம் கூடாது நீ யானையாகப் பிறக்கக் கடவது ” என சாபம் கொடுத்தார் .  அடுத்த பிறவியும் வந்தது . அரசன்  யானையாகப் பிறந்தான். ஆனாலும் அந்தப் பரந்தாமனை நினைக்காமல் இல்லை   தினமும் கஜேந்திரன் அருகே இருக்கும் குளத்திற்குச்சென்று தாமரை மலரைப்பறித்து அந்தத்திருமாலை வழிபடும் ஒரு நாள்  …. தாமரை மலரைப்பறிக்க   ஒரு முதலை  அதன் காலைக்கவ்வியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள்ளே இழுக்க ஆரம்பித்தது  /யானையோ தன் பூஜை முடியும் வரை பொறுத்துக்கொள்ளச்சொல்லி கெஞ்சியது. ஆனாலும் முதலை விடவில்லை ,  யானையும் கடைசி வரைப்போராடியது  .   ஒன்றும் பலனளிக்காமல் போக  “ஆதிமூலமே என்னைக் காப்பாற்று “என்று அலறியது   திருமால் கருடன் மேல் பறந்து வந்து தன் சக்கரத்தை வீசி முதலையின் கழுத்தை அரிந்து  யானையைக்காப்பாற்றிவிடுகிறார். இதுவே ‘கஜேந்திர மோட்சம்’,  என பாகவதத்தில் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது

    பறவையை எடுத்துக்கொண்டால் ஜடாயூ நம் கண்முன்னால் வருகிறார் .ராமர்   கானகத்தில்  பர்ணசாலை அமைத்து   சீதை லட்சுமணருடன்  இருந்த நேரத்தில் இராவணன்சீதையை அபகரிக்க திட்டம் போட்டு அதில்   வெற்றியும் பெற்று  சீதாபிராட்டியை   தூக்கி தன் விமானத்தில் வைத்து பறக்கும் நேரத்தில் ஜடாயூ என்ற பட்சி ராவணனை மடக்கியது அவனை மேலே போகவிடாமல் போர் புரிந்தது .சீதையைக்காப்பாற்ற தன் உயிர் போனாலும் போகட்டும் என்ற முடிவில் போரிட்டது தன்  அருமை நண்பர் தசரதரின் மருமகள் சீதையைக்காப்பாற்றியே ஆகவேண்டும்  என்ற தீர்மானத்தில் ஆக்ரோஷமாகப் போரிட அந்த இலங்கேஸ்வரன் தன் கத்தியால் அதன் இறகுகளை வெட்டி மாய்த்தான் .இதை எதிர்ப்பார்க்காத ஜடாயு சுருண்டு கீழே விழ அந்த நேரத்தில் ஸ்ரீராமரும் சீதையைத்தேடி அந்தப்பக்கம் வர ஜடாயூவின் நிலைமையைக்கண்டார் .ஜடாயூ தன் உயிரைப்பிடித்து வைத்துக் கொண்டு நடந்த விஷயத்தை  பரந்தாமனிடம் சொல்லி உயிரை விட்டது. ஸ்ரீராமர்  அதைத் தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து அதற்கு ஈமக்கடன்கள் எல்லாம் செய்து மோட்சமும் அளித்தார் .பறவைக்கும் மோட்சமளித்த பரந்தாமனின் கருணையை என்னவென்று சொல்வது?

    இலங்கைக்குப்போக பாலம் அமைக்கும் தருணம் எல்லா வானரங்களும்  பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்க ஒரு சிறு அணிலும்  தானும் ஸ்ரீராமருக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டும் என்று எண்ணி தன் முதுகை ஈரத்தில் நனைத்து பின் மணலில் உருண்டு அந்த மணலை  பாலம் கட்டும் இடத்தில் உதறிவிட்டு வந்தது. இதைப்பலமுறை செய்ய ராமரும்  இதைக் கவனித்து ஓடோடி வந்து அதை மடியில் வைத்து தன் மூன்றுவிரல்களால் அதை அன்புடன் அதன் முதுகில் தடவிக்கொடுத்தார். அந்த மூன்று வரிகளை இன்றும் அணிலிடம் பார்க்கலாம்

    சுக்ரீவன்   தன் சகோதரன் வாலி யுடன் போரிட ராமரின் சரணம் நாட வானர இனமாக இருந்தாலும் சுக்ரீவனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு  வாலியுடன் போரிட்டு அவனுக்கு ராஜ்ஜியமும் திரும்ப வாங்கித்தருகிறார்  ஸ்ரீ ராமர்  அத்துடன் இல்லாமல்  அனுமனுக்கு சிறிய திருவடி என்ற உன்னத பதவியும் கொடுத்து  சிரஞ்சீவி பட்டமும் அளிக்கிறார் .தவிர  அவர் ஆசைபடி தன்னிடமே இருந்து சேவை செய்யும் வாய்ப்பையும் அளித்து கௌரவிக்கிறார் . அவரது அன்பை என்னவென்று சொல்ல !

    கிருஷ்ணாவதாரதில்  கண்ணனைக்கொல்ல வந்த எல்லோருக்குமே மோட்சம் கிடைத்து விடுகிறது இதில்  காளிங்கன் என்ற நாகம் நம் நினைவில் வரும் காளிங்கன் கக்கும் விஷத்தினால் யமுனையில் வாழும் பல நீர் விலங்குகள் மாண்டன  மீன்களெல்லாம் செத்து மடிந்தன  இதன் முன் கதைஎன்னவென்றால் முன்பு கருடன் யமுனையில் இருந்த மீன்களை  எல்லாம் தின்று வந்தது  இதனால் வருந்திய மீன்கள்  சௌபரி என்ற முனிவரிடம் சென்று முறையிட்டன  முனிவரும் மீன்களில் மேல் பரிதாபப்பட்டு   கருடனை அழைத்து  யமுனையில் வாழும் மீன்களைத்தின்னால்  அது இறந்துவிடும் என்று சாபம் கொடுத்தார்  கருடனுக்கு பயந்துக்கொண்டிருந்த காளிங்கன்  நல்லதாகப் போயிற்று  என்று எண்ணி தான் வாழ மிகவும் பாதுகாப்பான இடம் யமுனைதான் என்று அங்கு வந்து தங்கி அட்டூழியம் செய்தது இதனால் கோப கோபியர்கள் கவலையுற்று கண்ணனிடம் சொல்ல அவரும் யமுனையில் நேரே காளிங்கனின் தலையில் குதித்து வாலைப்பிடித்தபடி நடனமாடிபோர் புரிந்து அதை சாகும் நிலைக்கு கொண்டுவர  காளிங்கனின் இரு மனைவிகள் அழுதபடி கண்ணனிடம் சரணமடைந்தனர் பின் தங்கள் மாங்கல்ய பிச்சை  கேட்டனர்.. கண்ணன் அந்த கொடிய பாம்பையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளில் அனைத்துயிர்களிடத்தும் பரந்தாமன் சமமாக கருணைக்காட்டி உய்விக்க வருபவன் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். என்னே ஆண்டவனின் அருள்!

    படங்களுக்கு நன்றி:

    http://www.radiokrishna.com/cosmologia.htm

    http://devotionalonly.com/lord-mahavishnu-pictures-and-wallpapers/

    Share
  • பேணுக வீடும்!

    வன்புணர்வுக்கெதிரான போராட்டத்தில்
    பங்கேற்றுத் திரும்பியவனைக் கண்டதும்
    ஓடோடிச் சென்று
    தாவிப் பாய்ந்து
    மேலேறி
    கழுத்தைக் கட்டிக் கொண்டு
    அன்பும் அக்கறையுமாகச் சொல்கிறாள்!
    அம்மாவை அடிச்சிடாதீங்கப்பா
    அம்மா பாவம்ப்பா
    இன்னிக்கி… இன்னிக்கி….
    சோறு கொஞ்சமா குழைஞ்சிடுச்சாம்!!

    Share
  • கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்

    பவள சங்கரி

    இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும்   தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.

    பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

    ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.

    இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை  அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும்  உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.

    ஒரு பெண் பருவமடைதலை, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்று கொண்டாடும் மரபு சார்ந்த பழக்கம் ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து வழக்கத்தில் இருந்துள்ளது. ’பூப்பு நன்னீராட்டு விழா’ என்ற சொல் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்திலிருந்து ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டிச்சீர்’ என்ற சொல்லாட்சியே வழக்கில் இருந்துள்ளது. ’தெருட்டு’ என்ற சொல்லிற்கு ‘விவரம் அறிதல்’ என்ற பொருள் உண்டு. விவரம் அறியும் பருவம் என்பதை அறிவிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படலாம். ‘தெருட்டு’ என்ற சொல் நாளடைவில் மருவி ‘தெரட்டி’ அல்லது ‘திரட்டி’ என்று வழங்கப்பட்டிருக்கலாம்.

    இந்தத் திரட்டிச் சீரில் தாய்மாமன் பங்கு இன்றியமையாதது. வளமைச் சடங்குகளின் ஒன்றாகக் கருதப்படும் இது  மேளதாளங்களுடன், பட்டுப்புடவைகள் சீர் வரிசைகள் எனப் பெரும் கொண்டாட்டமாக விளங்கும் பெரும்பாலும் வீடுகளில் செய்யப்படும் இச்சடங்குகள், இடப்பற்றாக்குறை காரணமாக திருமண மண்டபம் போன்ற பொது இடங்களிலும் நடைபெறும் வழமையும் உள்ளது. ’தீட்டு கழிக்கும் சடங்கு’ என்றும் இதனைக் கூறுகின்றனர். பிட்டு செய்து சுற்றி தீட்டுக் கழிப்பது முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. இந்தச் சடங்குகள் செய்யாமல் ஒரு பெண்ணை மணமேடையில் ஏற்ற முடியாது என்ற பழக்கம் இன்றளவிலும் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது. கொங்கு நாட்டிற்கேயுரிய தனிப்பட்டதொரு மரபு விழாவாகவே இது இருந்து வருகிறது.

    அடுத்து வருவது, திருமணச் சடங்குகள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு. சமூகத்தில் ஒரு தனிப்பட்ட மதிப்பை அளிக்கக்கூடியதும் அதுதான்.

    ”திருமணம் ஆனவர்கட்கு மாங்கலிய  வரி வாங்கும் கொங்குச்செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது” என்கிறார் புலவர் ’கல்வெட்டு’ இராசு அவர்கள்.

    கொங்கு சமுதாயத்தில், குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தில் திருமணச் சடங்குகள் மிகவும் வித்தியாசமானது. மிகப் பழமையான பண்பாட்டிற்கு உரியதாம். முதலில் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் ஜாதகம், மற்றும் மற்ற பொருத்தங்கள்  பார்க்கும்போதே  சகுனங்கள் பார்ப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, பூனை குறுக்கே வருவதோ, விறகுக் கட்டை சுமை எதிரே வருவதோ நல்ல சகுனம் அல்லவாம். கழுதை கத்துவது, வண்ணான், (சலவைத் தொழிலாளி) அழுக்கு மூட்டை, சவம் போன்றவைகள் எதிர் வருவது நல்ல சகுனமாம். பறவை, விலங்கு போன்றவைகள் வலம் போக வேண்டுமாம். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் அடுத்து நிச்சயதார்த்தம் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். திருமண ஓலையும் வாசிக்கப்படும்.. அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளில், மாங்கல்யத்திற்கு பொன் கொடுத்தல், உப்புச் சர்க்கரை மாற்றுதல், விறகு வெட்டல், நெல் குத்துதல், முளைப்பாலி போடுதல், கூறைப்புடவை எடுத்தல், முகூர்த்தக்கால் போடுதல், படைக்கலம் வைத்தல், குயவர்களிடம் எழுத்துப்பானை என்ற பொங்கல் பானை வாங்குதல், பிறைமண் எடுத்தல், பேய்க் கரும்பு நாட்டல், காப்புக் கட்டுதல், சீர்த்தண்ணீர் கொண்டு வருதல், மங்கலன் முகம் துடைத்தல், ஆக்கை சுற்றிப் போடுதல், செஞ்சோறு அஞ்சடை கழித்தல், உருமால் கட்டுதல், கோயில் மாலை பெறுதல், குப்பாரி கொட்டல், நிறைநாழி, கணபதி மற்றும் குலதெய்வ வழிபாடு, வெற்றிலை கட்டுதல், இணைச்சீர், கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை, பட்டம் கட்டுதல்,, தாரை வார்த்தல், திருப்பூட்டுதல், நலங்கிடல்,  குலம் கோதுதல், அம்மி மிதித்து அருந்ததி காட்ட்ல், பரியம் செலுத்துதல், சம்பந்தம் கலக்கல் போன்ற பல்வேறு சடங்குகள் மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

    முனை முறியாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் போன்றவைகளின் கலவையே அறுகரிசி என்று சொல்லப்படுகிற அட்சதை. பெரியோர்  அந்த அறுகரிசியை இரண்டு கைகளாலும் எடுத்து,

    “ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க”
    என்று உச்சந்தலையில் 3 முறை இட்டு வாழ்த்துவார்கள்.

    மங்கல நாண் சூட்டி திருமணம் முடிந்த பிறகும் பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்களுடன், விருந்து மற்றும்  சாந்தி முகூர்த்தம் என்று பட்டியல் நீளும். இதன் பிறகு இறுதியாக உற்றார், உறவினரின் விருந்தோம்பலுடன் விழா இனிது நிறைவேறும். தற்காலத்தில் இதில் பெருமளவிலான சடங்குகள் சுருங்கி, கோவிலில் திருமணம் செய்து, மண்டபத்தில் வரவேற்பு வைத்து எளிதாக முடித்து விடுகிறார்கள். கோவிலில் வைக்கும் திருமணத்திற்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஐதீகம்.

    அடுத்து வருவது ’வளைகாப்பு’ என்கிற  கட்டுச்சாத விருந்து. அதாவது பெண் திருமணம் முடிந்து முதல் குழந்தை கருவுற்றவுடன், 5, 7, 9ம் மாதங்களில் அவரவர் குல வழக்கப்படி, ஏதாவது ஒரு மாதத்தில், கணவன் மற்றும் உறவினர்கள், முன்னிருந்து நடத்தும் சம்பிரதாயமான ஒரு விழா. நம் நாட்டில் பின்பற்ற்ப்படும் பல சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள்
    பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவ காலம் குறித்த அச்சத்துடனே இருப்பார்கள். ஏற்கனவே அனுபவம் பெற்ற தாய்மார்கள், நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இறை நம்பிக்கை மற்றும் சடங்குகள் மூலம் அதனைத் தெளிய வைத்து அவரை மனரீதியாக பிரசவத்திற்கு தயார் செய்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் பிரசவம் எளிதாவதற்காக மருந்து கொடுக்கும் வழக்கமும் உண்டு. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதத்திற்கு மேல் வெளியுலகத் தொடர்பை, அதாவ்து ஓசைகள், சூடு, குளிர்ச்சி போன்ற அனைத்தையும் உணர ஆரம்பிக்கின்றது. தாய் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் ஒலியினால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகவும், குழந்தைக்கு  உறவுகளின் அண்மையும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு தாயின் மன நிலையில் ஏற்படும் உற்சாகமும் வளரும் குழந்தைக்கு நன்மை பயக்கக்கூடியதாகிறது.

    மணப்பெண் போன்று அலங்காரம் செய்து உயர்ந்த மேடையில் அமரச்செய்து, தாய் வீட்டு சீதனங்களுடன், பலவகை இனிப்புகள், பழ வகைகள் இவைகளுடன், சந்தனம், குங்குமம்  அறுகரிசி, பன்னீர் போன்றவைகளுடன் நலங்கு வைத்து, மங்கல ஆரத்தி எடுத்து, வளையல் அணிவித்து, கலந்து கொள்ளும் பெண்களுக்கும் தாம்பூலமும் வளையல்களும் கொடுப்பார்கள்.  பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து, அப்பெண்ணை கணவன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நல்லநாள் பார்த்து சீருடன் சென்று மீண்டும் கணவன் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். பெண்மைக்கும், தாய்மைக்கும் செய்யும் மிகச் சிறந்த மரியாதைப் பண்பு இது. இதனால் அந்தப் பெண்ணின் மனநிலையில் ஏற்படும் நம்பிக்கையும், நல்ல சிந்தனைகளும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.

    இறுதியாக, கணவனை இழந்த பெண்களுக்குச் செய்யும் தேவையற்ற சில சடங்குகள். அது போன்ற சடங்குகளைச் செய்யாவிட்டால்  குடும்பத்தில் ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் விருப்பமின்றி செய்பவர்களும் உண்டு.கண்மூடித்தனமான பழக்கங்கள் மண்மூடிப் போக வேண்டும். பண்டைய பண்பாடும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று சில பழமைவாதிகள் இன்ற்ளவிலும் செய்யும் சில சடங்குகளும், சம்பிரதாயங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இரத்தக் கண்ணீர் வடியச் செய்யக்கூடியவை. இதெல்லாம் தேவைதானா, இதற்கெல்லாம் ஏதும் குறிப்பான காரணம் இருக்கிறதா, இந்தக் கொடுமைகளைக் கடைபிடிக்காவிட்டால் அப்படி என்னதான் நடந்துவிடும் என்ற வாதத்திற்கானதல்ல இது. . நம்முடைய பழைய சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான எல்லையை வகுக்க வேண்டும். அதாவது தேவையற்ற சில சடங்குகளும், சம்பிரதாயங்களும், மாற்றப்பட வேண்டும்.

    கணவனை இழந்த துக்கத்தில் நொந்து போயிருக்கும் பெண்ணை ஈவு, இரக்கமே இல்லாமல் சடங்குகள் என்ற பெயரில் செய்யக்கூடியவைகள் கொடுமை. இன்று பெரும்பாலும் அவைகள் தவிர்க்கப்பட்டு வருவதும், கணவனை இழந்த பெண்களும், பொட்டு வைத்துக் கொள்வதும், சாதாரணமாக உடுத்துவதும் பழக்கத்தில் வந்து கொண்டிருப்பதும் ஆறுதலான விசயங்கள். வெண்ணிற ஆடையோ, காவி ஆடையோ உடுத்தும் வழமை பெரும்பாலும் மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே பொறுப்பாக முடியாது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டிருப்பதன் விளைவு வருந்தச் செய்யும் தேவையற்ற சடங்குகளின் நிராகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இன்று, பெருகி வரும் காதல் மணங்களும், பெற்றோர் சம்மத்ததுடன் நடைபெறும் பிற மத, இன, மொழியின் கலப்புத்  திருமணங்களாலும், பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதும் நிதர்சனம்.

    உசாத்துணை : திருமணச் சீர்கள் பற்றிய விவரங்கள், புலவர் இராசு அவர்களின் “கொங்கு வேளாளர் சீர்களும், இலக்கியங்களும்” என்ற நூல்.

    நன்றி: தமிழ் மரபு விக்கி.

    Share
  • டிசம்பர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    இம்மாதம் வந்துள்ள 21 கதைகளுள் மூன்று மிக முக்கியமாகத் தெரிகின்றன.

    இரண்டு பேர், பழமைபேசியும், மணியும் முன்னரே தெரிந்தவர்கள்.

    தெரிந்தெடுக்கப்பட்டவரகளும் கூட.  இருவரும் இம்முறையும் தாம் சொல்ல வந்த விஷயத்தாலும் சொல்லும் திறமையாலும் முன்னிற்கின்றனர். அதே போல நரசய்யாவும் புனைவு அல்ல எனினும், அவர் சொல்லித்தானே இது உண்மை சம்பவம், புனைவு அல்ல என்று நமக்குத் தெரிகிறது, அன்றாட கடல் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடும்  வாழ்வின் எல்லைக்குப் போய் மீளும் அனுபவத்தை ஏதோ தூங்கி எழுந்த சமாசாரமாக நாடக பாணியும் அதீத வார்த்தைகளும் அற்று மிக அடங்கிய குரலில் எழுதியிருக்கிறார்.  மணி பேசாப் பொருளை எவ்வளவு தூரம் பேசவும் வேண்டும், பேசாது ஒதுங்கவும் வேண்டும், என்று தானே எல்லைக் கோடு இட்டு விளையாடியிருக்கிறார். பழமை பேசியும் பாசமும் ஏக்கமும் மூன்று காலகட்டங்களில் வெளிப்படும் வேறுபடும் உணர்வுகளை, மறுபடியும் அசட்டு உணர்ச்சிகள் இல்லாது எழுதியிருக்கிறார். இம்மூன்றுமே எனக்கு திறமையான எழுத்துக்களாகப் படுகின்றன. எதை விடுவது? எதை ஏற்பது? புனைவு அல்ல என்று ஒதுக்குவதா? ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒதுக்குவதா? ஒவ்வொரு முறையும் ஒரு  புது உலகம். ஒரு  புது வெளியீட்டு முறை.  கைப்பாவை,  மனம் அகண்டம், அங்கிங்கென்னாதபடி, மூன்றையுமே சொல்லத் தோன்றுகிறது. வ்ருடக் கடைசித் தேர்வில் ஒன்று தானே தேர்வு பெறும், எத்தனை எழுதினாலும். இப்போதைக்கு புதிய அனுபவங்களையும், அதைச் சொல்லும் திறமையையும்  கொண்டவர்களை அங்கீகரிப்போமே.

    இம்மூவரில் எவரையும் ஒதுக்கும் காரணங்கள் இப்போது எனக்கு ஏதும் புலப்படவில்லை. இடைப்பட்ட நிலை தானே.

    பங்கு கொண்ட எல்லோருக்கும் என்  புது வருட வாழ்த்துக்கள்

    தேர்வு செய்யப்பட்டுள்ள சிறுகதைகள், (1) பழமை பேசியின், கைப்பாவை, (2) மணியின் மனம் அகண்டம், (3) நரசய்யாவின் அங்கிங்கென்னாதபடி.

    வெ.சா.

    டிசம்பர் (2012) சிறுகதைப் போட்டியில் பங்குபெற்ற  சிறுகதைகள்:

    1.விதி செய்வோம்

    2. ரிஷி கர்பம்

    3. ரத்தப் பிச்சை

    4. பலா மரங்கள்

    5. கைப்பாவை

    6. பூக்களில் பேதமென்ன?

    7. அன்னையர் தினம்

    8. ஞானோதயம்

    9. அவசரப் புத்தி

    10.ப்ரைவசி

    11. ஊர் நூலகம்

    12. அருவி சத்தம்

    13. குழந்தையும் தெய்வமும்

    14. விழுதுக்குள் வேர்

    15. அங்கிங்கெனாதபடி!

    16. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?

    17. ஜோடிக்கிளிகள்

    18. கண் பேசும் வார்த்தைகள்

    19. மனம் அகண்டம்

    20. கூர் வாள்

    21. ஸ்டீல் பீரோ

    பரிசு பெற்ற மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.  போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    ஆசிரியர்

    Share
  • நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் !

                                                                 சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    செந்நிறக் கோளுக்குச்
    சீக்கரம் செல்லும்
    ராக்கெட் தயாராகி வருகுது !
    நாற்பது நாட்களுக்குள்
    மின்னியல் உந்திடும் அதிவேக
    ஏவுகணை
    எதிர்கால விண்கப்பலை
    இயக்கப் போகுது !
    இரண்டு வருடங்கள் எடுத்தன
    இதற்கு முன்பு !
    பிளாஸ்மா ராக்கெட்டின்
    வலு மிகைவு ! எடை குறைவு !
    மலிவான பயணம் !
    நிதி விரயம் குறைவு !
    இயக்கத் திறன்பாடு மிகைவு !
    பயணக் காலம் குறைவு !
    பாதுகாப்பு மிகைவு !
    எரிவாயு ஆர்கான் மலிவு !
    எந்திர சாதனங்கள்
    குறைவு !
    பரிதியின் கதிர்வீச்சால் விமானிக்குப்
    பாதிப்புகள் குறைவு !
    பிளாஸ்மா
    விண்வெளிக் கப்பலில்
    விமானிகள் விரைவாய்ச் சென்று
    வியாழனுக்குப் போய் மீள
    ஈராண்டுதான் !

    ++++++++++++++++

    “வாஸிமர் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் ((VASIMR) விண்வெளிப் பயணம் செய்யத் தயாராக இருக்கும் ஏவுகணைகளையும் விட அதிக சக்தி வாய்ந்த மின்னியல் உந்துச் சாதனம் (High Power Electric Propulsion System).”

    “நாங்கள் ஆய்வு விருத்தி செய்யும் ராக்கெட் பொறிநுணுக்கம் ‘அணுப்பிணைவு நுணுக்க மாற்றம்’ (Transformational Technology in Nuclear Fusion) எனப்படுவது.  விண்வெளிப் போக்கு வரத்துக்கு இரசாயன எரிசக்திப் பயன்பாடு மெய்யாக வெகுதூரம் கொண்டு செல்லாது என்பது எனது நெடுங் காலத்துக் கருத்து.”

    ஃபிராங்கிலின் சாங்டியாஸ் (Franklin Chang-Diaz, VASIMR Plasma Rocket Engine Chief Designer)

    “ஆழ் விண்வெளி விண்ணுளவியில் (Deep Space -1 Spaceship) இணைத்துள்ள அயான் உந்து சக்தி எஞ்சின் (Ion Propulsion Engine) விண்வெளித் திட்ட வரலாற்றில் இதுவரை பயன்பட்ட ராக்கெட்டுகளை விட நீடித்த காலத்தில் பணி புரிந்துள்ளது.”

    நாசா விஞ்ஞானி, ஜான் பிரோ·பி (NASA Scientist John Brophy) (August 19, 2000)



    “(பரிதி சக்தி மின்னியல் எஞ்சின்) (Solar Electric Ion Engine) எனப்படும் புதிய ஏவுகணைப் பயன்பாடு இயற்கை நியதியைப் பின்பற்றி மெய்யாக விண்வெளியில் வேலை செய்வதை நாங்கள் காண முடிந்தது.  பரிதி வெளியேற்றும் பிளாஸ்மா அயனி வாயு பூமியின் காந்த தளத்தைத் தாக்கும் போது இருவிதமான பிளாஸ்மா அடுக்கு அரங்கிற்கு வரம்பை உருவாக்குகிறது.  ஒவ்வோர் அடுக்கும் வெவ்வேறு மின்னியல் பண்பாடு கொண்டது.  அந்த வேற்றுமையே பூகோள வாயு மண்டத்தைத் தாக்கி ‘வண்ண வான் ஒளியை’ (Aurora) உண்டாக்குகிறது.”

    ராஜர் வாக்கர் (Roger Walker, ESA Advasnced Concepts Team)

    “சில ஆண்டுகளில் நிச்சயம் இந்தப் பொறியியல் நுணுக்கம் (பிளாஸ்மா ராக்கெட்) பூமிக்கும் நிலவுக்கும், பூமிக்கும் செவ்வாயிக்கும் விண்கப்பல்களைத் தொடர்ந்து இயக்குவிக்கும்.”

    பீடர் கான்லன் (Neutel Project Chief Executive Officer)


    “பிளாஸ்மா பொறிநுணுக்கம் விண்வெளிப் பயணத்தை அதி வேகமாகவும், பாது காப்பாகவும் ஆக்கப் போகிறது.  எங்களைப் போன்ற விண்கப்பல் விமானிகள் பரிதி மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு விரைவாகச் செல்வதோடு பல்வேறு கோள்களுக்குப் போக உடனே தயாராக்க ஏதுவாகிறது.  அதாவது அதிவேகப் பயணம் என்றால் நுண்மை ஈர்ப்பில் (Micro-Gravity) குன்றிய நேரம், சூரியக் கதிர்வீச்சால் (Solar Radiation) விமானி களுக்குக் குறைந்த காலத் தாக்குதல் என்பது அர்த்தமாகும்.”

    டேவிட் வில்லியம்ஸ் (Canadian Astronaut Twice in Space)

    “பிளாஸ்மா பொறியல் நுணுக்கம் விண்வெளிப் பயணச் செயற்பாட்டுக்கு ஏற்றது.  சாதனம் மிகவும் சிறியது,  திறனியக்கம் (Efficiency) மிக்கது.  50 கிலோ வாட் மின்னாற்றலுக்கு உலகிலே மிகச் சிறிய சாதனம் இது.”

    டிமதி ஹார்டி (Neutel Project Head Engineer)

    “பிளாஸ்மா ராக்கெட் உறுதியானது.  நிலவுக்கு அப்பாலும், செவ்வாய்க் கோளுக்கு அப்பாலும் பயணம் செய்ய மெய்யாகப் பிணைவு நுணுக்க மாற்றம் நமக்குத் தேவை.  வாஸிமர் ராக்கெட் (VASIMR) வருங்காலப் பயணக் குதிரைக்கு உகந்த வளர்ச்சித் துறை (Work Horse for the Transformational Infrastructure) என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.”

    ஃபிராங்கிலின் சாங்டியாஸ் (Franklin Chang-Diaz, VASIMR Plasma Rocket Engine Chief Designer)


    புதுவித அதிவிரைவு விண்வெளிப் பயண ராக்கெட்டுகள்

    1960 -1970 ஆண்டுகளில் சந்திரனில் கால்வைத்த விண்வெளித் தீரர்களைச் சுமந்து சென்ற சனி -5 ராக்கெட் (Saturn V Rocket) திரவ எரிசக்தியில் இயங்கி விருத்தியானது.  அடுத்து விண்வெளி மீள்கப்பலில் (Space Shuttle) பயன்பட்டவை திடவ எரிசக்தியில் இயங்கிய ஏவுகணைகள்.  இவை இப்போது மெதுவாய்ச் செல்லும் புராதன ராக்கெட்டுகளாகி விட்டன ! அதி வேகத்தில் போகும் புதிய அயான் எஞ்சின் ராக்கெட்டுகள் எதிர்காலத்துக்காகப் படைக்கப்பட்டு வருகின்றன !  புதிய பிளாஸ்மா ராக்கெட்டுகள் 300 மடங்குக்கும் மேற்பட்ட வல்லமையில் இயங்குபவை. அதி வேகமாய் இயங்கிப் பயணக் காலத்தைக் குறைப்பவை.  அவற்றில் நகரும் யந்திரச் சாதனங்கள் மிகவும் குறைவு.  சாதாரண இரசாயனத் திரவ எரிசக்தியில் உந்தும் ராக்கெட்டில் செவ்வாய்க் கோளுக்குச் செல்ல சுமார் இரண்டு வருடங்கள் எடுக்கும் போது, பிளாஸ்மா ராக்கெட் மூலம் பயணத்தை நாற்பது நாட்களில் முடிக்கலாம்.  அதற்குத் தேவைப்படும் ஆர்கான் எரிவாயுவின் கொள்ளளவு மிகக் குறைவானதே.

    இந்தக் குறிக்கோளில் இப்போது 200 கி. வாட் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் ஒன்று வெற்றிகரமாகத் தயாராகி உள்ளது.  ஆனால் இந்த ராக்கெட் எஞ்சின் கனமான விண்கப்பலைப் பூமியிலிருந்து தூக்கிச் செல்ல உதவாது.  திரவ அல்லது திடவ எரிசக்தியில் (Solid or Liquid Fuel) இப்போது போல் ஏவப்பட்டுச் சுற்றுப் பாதையில் விடப்பட்ட விண்கப்பலை விரைவாக நெடுநாளைக்கு உந்திச் செல்ல அவை பயன்படும்.  நாசா இந்தப் பிளாஸ்மா ராக்கெட் எஞ்சினை 2013 ஆவது ஆண்டில் முதன் முதலாக அகில நாட்டு விண்வெளி நிலையத்துடன் (International Space Station) இணைத்துச் சோதனை செய்யத் திட்ட மிட்டுள்ளது.

    சோவியத் ரஷ்யா 1963–1965 ஆண்டுகளில் முன்னோடியாக பிளாஸ்மா ராக்கெட்டு களைச் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்ணுளவிகளில் பயன்படுத்தி இருக்கிறது.  நாசா 1998 இல் முதன்முதல் அயான் ஏவுகணை ஒன்றைத் தனது ஆழ்வெளி விண்கப்பலில் (Spaceship : Deep Space -1) வெற்றிகரமாகப் பயன்படுத்தி வால்மீன் பொரெல்லியை (Comet Borrelly) நோக்கி அனுப்பப் பட்டது.  அந்த அயான் எஞ்சின் விண்கப்பல் இயங்க 200 நாட்களுக்கு உந்து சக்தி அளித்தது.

    அடுத்து ஈசா (ESA -European Spase Agency) 2003 இல் தனது முதல் நிலவுப் பயணத்துக்கு அயான் எஞ்சின் (Ion Engine for SMART -1 Spacecraft) ஒன்றைப் பயன்படுத்தியது.  நவீன நூற்றாண்டில் கனடாவின் நோவா ஸ்கோஷ்யா கம்பெனி ஒன்று விருத்தி செய்த “ரேடியோ நிலைய மின்னலை அனுப்பிகள்’ (Radio Station Transmitters) பிளாஸ்மா ராக்கெட் தயாரிக்க உதவுகின்றன.

    நௌடல் ஹாக்கெட்ஸ் கோவைச் சேர்ந்த (Nautel Ltd. of Hacketts Cove with Texas Rocket Compay) டெக்ஸஸ் ராக்கெட் கம்பேனி அட் ஆஸ்ட்ராவுடன் (Texas Rocket Company, Ad Astra) சேர்ந்து பிளாஸ்மா ராக்கெட்டை உருவாக்கி வருகிறார்.  அது கால்ஃப் பந்து உறையளவு உள்ள ரேடியோ அதிர்வலை வீச்சு ஜனனி (Golf Bag Size Radio Frequency Generator). அந்த ரேடியோ அலைகள் நுண்ணலை அடுப்பு போல் சூடாக்கி (Microwave Oven Heater) ஸீனான் அல்லது ஆர்கான் வாயுவை பரிதியுள் இருக்கும் அயனிகள் போல் ஆக்கி பிளாஸ்மா (Xenon or Argon Gas into Plasma) நிலை அடைகிறது.  பிளாஸ்மா பிறகு பல்வேறு மின்காந்த அடுக்குகள் ஊடே அனுப்பப் பட்டு வேகம் அடைந்து உந்து சக்தி அளிக்கிறது.  இதுவே நவீன அதிவேக பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் என்று குறிப்பிடப் படுகிறது.

    அயான் உந்துவியல் எஞ்சின் எவ்விதம் இயங்குகிறது ?

    நிலவுக்குச் சென்றுள்ள ஈசாவின் விண்கப்பல் சுமார்ட் -1 இல் (SMART -1 Lunar Probe) பயன்பட்டிருக்கும் மின்னியல் உந்து எஞ்சின் இயங்கும் முறை பரிதியில் நிகழும் இயற்கை நியதியைப் பின்பற்றுகிறது.  எரிவாயு ஒன்று அயான்களாகி அந்த அயான்கள் பிறகு காந்த தளத்தில் விரைவாக்கம் பெற்று சிறு உந்து சக்தியை விண்கப்பலுக்கு உண்டாக்குகிறது.  ராக்கெட் எஞ்சினில் பயன்படும் வாயு : ஸீனான் (Xenon Gas).

    1.  ஸீனான் வாயு அணுக்கள் ஓர் உருளைக் கொள்கலத்தில் அதிக அழுத்தத்தில் அடைக்கப் பட்டு மின்சக்தியால் நேர்முனை ஏற்றமான ஸீனான் அயனிகளாகப் (Positively Charged Xenon Ions) பிரிவாகிறது.

    2.  உருளைக் கலத்தைச் சுற்றியுள்ள மின்வடங்கள் (Electric Coils) மின்காந்தத்தை உண்டாக்கி எதிர்முனை ஏற்றமுள்ள எலெக்டிரான்களைக் குவித்து எதிர்மின் முனையில் (Cathode) ஒதுக்குகிறது.

    3.  எதிர்மின் முனையில் எலெக்டிரான்கள் சேமிப்பாக, நேர்மின் முனை அயனிகள் சேர்ந்து விரைவாக்கம் பெற்று வெளியே தள்ளப் படுகின்றன.

    4.  விரைவாக்கம் பெற்ற ஸீனான் அயனிகள் வேகமாக வெளியேறும் போது எதிர்ப் புறத்தில் பேரளவு உந்து சக்தி உண்டாக்கப் படுகிறது.

    திரவ, திடவ எரிசக்தியைப் பயன்படுத்தியுள்ள இரசாயன ராக்கெட்டுகள் வெளிவிடும் தீமயக் காட்சி போலின்றி, அயனி ராக்கெட்டுகள் நீல வண்ண அயனிகளை வெளியேற்றும்.  இந்த வாயு அயான் வெளியேற்றமே ராக்கெட்டுக்கு எதிர் புறத்தில் உந்து சக்தி அளிக்கும்.  பயன்படும் ஸீனான் வாயு கனமற்றது.  மலிவானது.  இயக்க நிதிச் செலவு சிக்கனமானது.  சாதாரண ராக்கெட் போலின்றி அயனிகள் ராக்கெட் விரைவாகச் செல்வதால் கால நீட்சி குன்றுகிறது.  அயான் ராக்கெட்டுகளில் ஒரு குறைபாடும் உள்ளது.  திடீரென அது கனமான பளுவைத் தூக்கவோ, தள்ளவோ முடியாது.  ஆதலால் பூமியிலிருந்து கிளம்ப இரசாயன ராக்கெட்டுகளே தேவைப்படும்.  புமியின் ஈர்ப்பாற்றலைத் தாண்டிப் பயணம் செய்யும் போது அவற்றின் உந்து சக்தி மிகையாகிறது.  சுமார்ட் -1 இல் அமைத்த ‘பரிதி மின்னியல் உந்து எஞ்சின்’ (Solar Electric Propulsion) மிகச் சிறியது.  அதன் அயான் எஞ்சின் விண்கப்பலுக்கு அளிக்கும் உச்ச உந்து வேகம் மணிக்கு 16,000 கி.மீடர் (மணிக்கு 9600 மைல்).  அதன் எடை 375 கி.கிராம். அந்தச் சிறிய எஞ்சினால் நிலவை வந்தடைய 15 மாதங்கள் எடுத்தன.  சுமார்ட் -1 நிலவுப் பயண நிதி ஒதுக்கு 110 மில்லியன் ஈரோ (133 மில்லியன் US டாலர்).

    பிளாஸ்மா ராக்கெட் இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம்

    பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின் பரிதியின் உஷ்ணத்தை (Plasma Starts at 10,000 C) அடைந்து எரிசக்தி வாயுவை அயனிகள் (Ionized Gas Fuel) ஆக்கி உந்தும் பிணைவு நுணுக்கத்தைப் (Fusion Technology) பயன்படுத்துகிறது.  பிளாஸ்மா எஞ்சினில் மூன்று கட்ட சாதனங்கள் இயங்குகின்றன.  முன்னரங்கம், மைய அரங்கம், பின்னரங்கம் (Forward Cell, Central Cell & Aft Cell) என்று முக்கட்ட அமைப்பு ராக்கெட் இணைப்பாகச் சேர்க்கப் பட்டுள்ளது.

    1.  ராக்கெட்டின் முன்னரங்கம் : உந்து சக்தி தரும் ஹைடிரஜன், ஸீனான், ஆர்கான் போன்ற எரிசக்தி வாயு செலுத்தப் பட்டு அயனிகளாகி பிளாஸ்மா நிலைக்கு வரும் உருளைக் கலம்.

    2.  ராக்கெட்டின் மைய அரங்கம் :  இந்த உருளைக் கலத்தில் மின்காந்த சக்தி அயனிகளுக்கு மின்பெருக்கி போல் (Amplifier) மிகையான சக்தி ஊட்டுகிறது.   அதாவது ரேடியோ மின்னலைகள் நுண்ணலை அடுப்பு போல் (Microwave Oven) வெப்ப சக்தி அளிக்கின்றன.

    3.  ராக்கெட்டின் பின்னரங்கம் :  இந்த உருளைக் கலத்தில் ஒரு ‘மின்காந்த விரிவு வாய்’ (Magnetic Nozzle) மேற்கொண்டு வெப்ப சக்தி அளித்து உஷ்ணம் 100 மில்லியன் டிகிரி C ஆக ஏற்றம் அடைந்து அயனிகள் பிளாஸ்மாவாக (Plasma) அதி வேகத்தில் வெளியே தள்ளப் படுகின்றன.  அந்த வெப்ப நிலை விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle) ராக்கெட் வெளிவீச்சு போல் 25,000 மடங்கு சூடானது !  பிளாஸ்மா அதி வேக வெளியேற்ற விசை எதிர்த் திசையில் அதே அளவு ஆற்றல் உள்ள உந்து சக்தியை விண்கப்பலுக்குத் தருகிறது. (Action & Reaction are equal & opposite).

    ராக்கெட் குறிப்பியல் உந்து அதிர்வு (Rocket’s Specific Impulse)

    பரிதியில் நிகழும் அணுப்பிணைவு இயக்கம் பேரளவு வெப்ப சக்தியை வெளி யேற்றுகிறது.  ராக்கெட் பொறியியல் நிபுணர் இப்போது அந்த அளவற்ற சக்தியைப் பயன்படுத்த முனைகிறார்.  செவ்வாய்க் கோளுக்குப் போகத் திட்டமிடும் மனிதர் செல்லும் பயண காலத்தைப் பாதியாக்கும் இந்தப் புதிய பிணைவு இயக்க ராக்கெட்டுகள்.

    Rocket Engines Type Thrust (Pound Force) Specific Impulse (Seconds) Lifetime Fuel Usage
    Saturn V F-1 (1x) (1960 years) Chemical 1,700,000 298 minutes
    Space Shuttle Main Engine (1x) (1980 years) Chemical 500,000 440 minutes
    NSTAR Ion Engine   (1) Electric 0.02 3300 years
    NEXT  Ion Engine     (2) Electric 0.07 4300 years
    VASIMR® VX-200(New Plasma Rocket)

    (2005)

    Electric 1 5000 >years

    அத்தோடு மனிதர் மீது பயணத்தின் போது பரிதிக் கதிர்த் தாக்குதலும் பாதியாகும்.  ராக்கெட் விஞ்ஞானத்தில் ஒரு ‘ராக்கெட் எஞ்சின் எரிசக்தி திறனியக்கம்’ (Fuel Efficiency of Rocket Engine) அதன் ‘குறிப்பியல் உந்து அதிர்வு’ (Specific Impulse) ஒப்பு நோக்கில் ஆராயப் படுகிறது.  குறிப்பிட்ட அளவு எரிசக்தியால் (Unit Fuel) உண்டாகும் குறிப்பளவு உந்து விசையானது (Unit Thrust) எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்பதே ஒப்பு நோக்கப் படுகிறது.  ‘குறிப்பியல் உந்து அதிர்வு’ (Specific Impulse) விநாடிகளில் (Seconds) கணக்கிடப் படுகிறது.

    ஓர் அணுப்பிணைவு எஞ்சின் ராக்கெட் சாதாரண இரசாயன எரிபொருள் ராக்கெட் எஞ்சினை விடச் சுமார் 300 மடங்கு மிகையான குறிப்பியல் உந்து அதிர்வு (Specific Impulse) கொண்டது.  திரவ, திடவ இரசாயன எரிபொருள் (Liquid or Solid Chemical Fuel Rocket)  பயன் படுத்தும் ராக்கெட் எஞ்சின் ‘குறிப்பியல் உந்து அதிர்வில்’ (Specific Impulse) கூறினால் சுமார் 450 விநாடிகள்.

    அதாவது ஒரு பவுண்டு (500 கிராம்) எரிபொருள் ஒரு பவுண்டு உந்து விசையை (Lb Force) 450 நிமிடங்கள் வரை நீடித்தளிக்கும்.  ஆனால் வல்லமை பெற்ற பிளாஸ்மா எஞ்சின் ஆர்கான், ஸீனான் வாயுவை அயனிகளாக்கி ‘குறிப்பியல் உந்து அதிர்வு’ 135,000 விநாடிகள் தரும் (450 X 300 = 135000).

    உதாரணமாக இரசாயன எரிபொருள் ராக்கெட்டில் இதுவரைச் செவ்வாய்க் கோளுக்குப் போக 2 ஆண்டுகள் எடுத்தன.  பிளாஸ்மா எஞ்சின் ராக்கெட்டில் விமானிகள் 40 நாட்களில் செவ்வாய்க் கோளை நெருங்கி விடலாம்.  அதுபோல் பூமியிலிருந்து பூதக்கோள் வியாழனுக்குப் போய்வரச் சுற்றுக் காலம் இரண்டே ஆண்டுகளில் முடிந்து விடலாம் !

    (தொடரும்)

    படங்கள்:  Astronomy Magazine, BBC News, National Geographic News, NASA & ESA

    தகவல்:

    1.  BBC Science & Technology – New Space Engine Clocks up Record (Aug 19, 2000)

    2.  How Fusion Propulsion Will Work By : Kevin Bonsor (March 12, 2001)

    3. (a) BBC News : Europe Lunar Adventure Begins -The First Solo European Mission to the Moon is Well on its Way (Sep 28, 2003)

    3 (b) BBC News : Probe Pushes onto Lunar Target – Smart -1 Spacecraft Has Fired up its Innovative Solar-Electric Engine (Sep 30, 2003)

    3 (c) BBC News : Europe Lunar Probe Arrives at the Moon -The Smart -1 Lunar Probe has Entered into Orbit Around the Moon – The First Europen Mission to do so. (Nov 16, 2004)

    4.  BBC News : Plasma Engine Passes Initial Test (Dec 14, 2005)

    5.  Space Fellowship : Plasma Rocket Engine VASIMR VX-200 First Stage Achieves Full Power Rating By : Klaus Schmidt (Oct 27, 2008)

    6. NASA Report : ESA SMART -1 Lunar Probe (Nov 23, 2009)

    7.  CBC (Canadian Broadcasting Company) News : Nova Scotia Company Helps Build Plasma Rocket (January 7, 2010)

    8.  Ad Astra Rocket Company : Chemical VS Plasma Rockets

    9.  Wikipedia : Plasma Propulsion Engine (May 20, 2010)

    10.  Space Flight Now : Plasma Rocket Could Revolutionize Space Travel By Stephan Clark (June 1, 2010)

    11.  Wikipedia : Variable Specific Impulse Magento Plasma Rocket (VASIMR) (June 1, 2010)

    ********************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) June 4, 2010

    Share
  • கண்ணாள் ஓதுகம்

    இன்று மனையாளிடமிருந்து இன்னமும் எதுவும் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நல்லதொரு தருணத்தில், என்றோ அறியப்பெற்ற இலவு காத்த கிளியின் கதைதான் நினைவுக்கு வருகிறது.

    காய் பழுத்துக் கனியாகும் தருவாயில் உண்ணலாமெனக் கிளியானது காத்திருக்க, முற்றி வெடித்த காயிலிருந்து தெறித்த வெண்பஞ்சுத் திரள்கள் சிதறி வான் நோக்கிப் பறக்க, காத்திருந்த அக்கிளி ஏமாந்து போனதாம். ஆனால் நான் இங்கு கண்டு கொண்டிருக்கும் காட்சியோ அதனின்றும் மாறாக இருக்கிறது.  இந்த இலவம் பஞ்சுத் திரள்கள் போன்ற இவ்வெண்கீற்றுகள் நளினத்தோடு அசைந்தாடியபடியே கீழ் நோக்கி வந்து புல்வெளியின் மேல் படர்ந்து கொண்டிருக்கின்றன.

    ”ஒயிட் கிறிஸ்துமஸ் எனச் சொல்வது இதனால்தானோ?” என்று எண்ணியபடியே சாளரத்தினூடாய் வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வானிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்த உறைபனிப் பிசிர்களின் நுரைநாட்டியம் எழிலார்ந்த கண்காட்சியாய் இருக்கிறது. இது போன்ற காற்றரவமற்ற பனிப்பொழிவின் போது பறக்கும் சன்னக்கீற்றுகளின் தவழோட்டப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும்.

    குறிப்பிட்ட உயரத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் இரு வேறு பனிக்கீற்றுகளை ஒரு சேரக் கவனித்து, அவை எப்படியான நளினங்களைக் கையாண்டு தரையிறங்குகின்றன; எது தரையைக் காலத்தாழ்ச்சியுடன் பிந்திச் சென்றடைகிறது என்பதே அவற்றுக்கிடையிலான போட்டியாகும். நாம் ஒன்றைக் கணிக்க, பெரும்பான்மையான நேரங்களில் அதுவே பிந்திச் சென்றடைந்து வெற்றி பெறும். ஆனால்  ஒரு சில கீற்றுகள் காற்றோடு கரைந்து விடும்; அல்லது, பிறிதொரு கீற்றோடு புணர்ந்து மறைந்து விடும். இப்போட்டிக்குச் சுவை கூட்டுவதே அத்தகைய எதிர்பாராதவைதான்.

    “காலையில எழுந்ததுமே வேடிக்கைதானா? எந்திரிச்சதே காலையில பத்து மணிக்கு. இதுல இவருக்கு அப்படியென்ன வேடிக்கையோ? ஏங்க, வாங்க இங்க!”

    பனிப்பொழிவுடனான இலயிப்பில் இருந்தவனை இடை மறித்ததிலிருந்து துவங்கியது, அன்றைய நாளுக்கான ஓதுகம்.  இதற்கு பொண்டாட்டி அர்ச்சனை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. நத்தார் நாளில் கிடைக்கப் பெறும் அர்ச்சனை என்பதால், அது ‘நத்தார் நாள் ஓதுகம்’ எனும் சிறப்பும் பெறுகிறது.

    நத்தார் நாள்! டொரொண்டோ நகரில் வாழும் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் இதுவுமொன்று. போர்ச்சுக்கீசியர் ஆண்ட நாடான இலங்கையில், கிறிஸ்துமசைக் குறிக்கும் போர்ச்சுக்கீசியச் சொல்லான ’நாட்டல்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததான் இந்த நத்தார் எனும் தமிழ்ச் சொல்.

    அது கிடக்கட்டும். நத்தார் நாள் என்பதால் நமக்கான அர்ச்சனைகள் ஓய்ந்து விடுமா? அவை ஓய்ந்து விட்டால்,  நம்மால்தான் இயல்பாய் இருந்துவிட முடியுமா என்ன??

    “என்ன நாஞ்சொல்றது காதில விழுதா, இல்லியா??”

    “விழுகுது, விழுகுது! காபி போட்டுட்டே சொல்லலாம்ல?!”

    “அதெல்லாம் போட்டுத்தான் வெச்சிருக்கு. உங்களுக்குதா நான் சொல்றது காதுலயே விழுகுறதில்ல! என்னங்க, எனக்கு ஒரு பொட்டுத் தூக்கங்கூட இல்ல தெரியுமா?”

    “அட! ஏன், என்னாச்சி?”

    “ஆமாங்க. திகழ் நல்லா தூங்கிட்டா. கமழ் கொஞ்சங்கூடத் தூங்கவே இல்ல. நாலஞ்சி வாட்டி வயித்துல போயிடிச்சி. ஒரே அனத்தல். ஆளே, கிரங்கிப் போயிட்டாளுங்க. ஒரு எட்டு எமர்ஜென்சிக்குப் போயிட்டு வந்திருங்க. கிறிஸ்துமஸ் நாளன்னிக்கு வேற யாரும் தெறந்திருக்க மாட்டாங்க!”

    “ப்ச்! என்னை எழுப்பி இருக்கலாமே? இதா, நான் ஒடனே கிளம்புறேன்!!”

    பாவம் பிள்ளை. சுருண்டு படுத்திருக்கிறாள். என்னைப் பார்த்ததும் கைகளை நீட்டுகிறாள்.

    “இரு தங்கம்! அப்பா முகங்கழுவி, உடுப்பு மாத்திட்டு வந்து உன்னை எடுத்துக்கிறேன்!” ஒரு முத்தத்தோடு விடைபெற்று, குளியலறைக்குப் போய் ஆயத்தமாகினேன்.

    ”ஏங்க, அதுக்குள்ள எங்க போனீங்க? ஒன்னு சொன்னா, அதைக் கிரமமா செய்ய மாட்டீங்களா?? அதுக்குள்ள இன்ட்டர்நெட்டுல என்ன வேண்டிக் கிடக்கு?”

    “நான் கீழ போயி, வண்டிய ஸ்டார்ட்ல நிறுத்திட்டு வந்தேன். அப்பத்தான கொஞ்சமாச்சும் வெதுவெதுப்பேறி இருக்கும்?!”

    “அதுக்கு இவ்வளவு நேரமா? இன்சூரன்சு கார்டு எடுத்து வெச்சிகிட்டீங்களா?? கையில இந்த பிஸ்கெட் பாக்கெட்டும், தண்ணியும் வெச்சிகிங்க. வயித்துல போறதால நான் பால் எதுவும் குடுக்கலை. சரியா?”

    “சரி!”

    “என்ன சரி? கொழந்தைக்குக் குளிராதா?? இருங்க, ஸ்வெட்டர் போட்டு, தலைக்கும் குல்லா போட்டு வுடுறேன்!!”

    குழந்தை என்னருகில் வந்து சொல்கிறாள், ”அப்பா, நான் நல்லாத்தான் இருக்கன்பா. கூட அம்மா வரலையா? அப்ப, நான் வரலப்பா!”

    ”அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா செல்லம்; போனவுடனே வந்திடலாம் செரியா?”

    வீட்டில் மற்ற பிள்ளைகள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரவு படம் பார்த்த பின்னர் ஊரிலிருக்கும் தாத்தா, பாட்டி, பெரியப்பா வீட்டு அண்ணன், தங்கைகளுடன் பேசிவிட்டுப் படுக்கைக்குப் போக வெகு நேரமாகிவிட்டிருந்ததும், பனிபொழிவின் போதான சூழலின் இதமும்தான் அவர்களுக்கான இன்பத்துயிலைக் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில் அகத்தாளின் தங்குதடையில்லா ஓதுகமும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டு இருக்கிறது.

    அவசரகால மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் ஆறு மைல்கள்தான். ஆனாலும் அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கும் பனிப்பொழிவு. வேகமாகச் சென்றால் வண்டி ஒருபக்கமாக இழுத்துவிடும் என்கிற அச்சம். மிகக் கவனமாகவும் மெதுவாகவும் உருட்டினேன்.

    “அப்பா, சாந்தாகிளாஸ் எப்பப்பா நம்ம வீட்டுக்கு வந்தாரு? டோரா பொம்மையெல்லாம் எப்பிடிப்பா நம்ம வீட்டுக்கு வந்திச்சி??”, வழியெங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா புராணமே பாடினாள் கமழ். திடீரெனத் திசைமாறிக் கேட்டாளே ஒரு கேள்வி?! வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒன்றுக்கு நான்கு முறை மூச்சிழுத்துக் கொண்டேன்!! எப்படி, இந்தக் குழந்தைகளுக்கு இப்படியெல்லாம் கேட்கத் தோன்றுகிறதோ??

    “சொல்லுங்ப்பா. சாமிகிட்டப் போன குழந்தைகளோட வீட்டுக்கும் சாந்தா போயிருப்பாராப்பா? அவங்களுக்குக் குடுத்த கிஃப்ட் எல்லாத்தையும் அவங்க அப்பா, அம்மா என்ன செய்வாங்க??”, அமெரிக்காவில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாய் எழும் இக்கேள்விகளால் எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தும் அதை அவளுக்குக் காண்பித்து விடாமல் உரையாடலைச் சரிக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் நானிருக்கிறேன்.

    ”இத பாரு கண்ணா! இது எமர்ஜென்சி டாக்டரைப் பாக்குற இடம்; கொஞ்ச நேரமாகும். அம்மாவைக் கேட்டு அழக்கூடாது. போனதும் டயாப்பரை மாத்திகிடணும். சரியா?”

    சொல்லி முடிக்கவில்லை; அழைப்பு மணி ஒலித்தது. ஓதுகம் என்றால், ஓயாமல் ஓதப்பட வேண்டும்தானே? அல்லாவிடில் அதற்கான இலக்கணக் கூறுகள் பாழ்பட்டு விடுமல்லவா?! சரி, தயாராகுவோம் ஓதுகத்துக்குச் செவிமடுக்க!!

    ”சொல்டா!”

    “போயிச் சேர்ந்ததும் கூப்பிட்டு சொல்ல மாட்டீங்களா? ரோட்டுல பார்த்துக் கவனமாப் போய்ச் சேர்ந்தீங்களா, இல்லையா??”

    “இப்பதான் வந்து வண்டிய நிறுத்துறேன். நீ கூப்பிடுற!”

    “இங்கிட்டு இருக்கிற ஆஸ்பிடலுக்கு எதுக்கு இவ்ளோ நேரம்?”

    “வழியெல்லாம் இன்னும் பனி விழுந்திட்டு இருக்கு. அதான் மெதுவா ஓட்டிட்டு வர வேண்டியதாப் போச்சி!”

    “சரீ..! சரீ… எதுக்கும் ஒரு பதில், ஒரு விளக்கம், தயாரா வெச்சிருப்பீங்களே?! உள்ள போனதும் முதல் வேலையா டயாப்பரை மாத்திடுங்க. பையைக் கார்லயே வெச்சிட்டு போயிடாதீங்க; சரியா?”

    “இம், சரி! சொல்லியனுப்பினது ஞாவகம் இருக்கு. அப்ப நான் வெச்சிடவா?”, உடனே சரியெனச் சொல்வார்கள் என எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.

    “இல்ல. இன்னொன்னு சொல்லணும் உங்களுக்கு. இன்னிக்குக் கிறிஸ்துமஸ்ங்றதால கொஞ்சம் முன்னபின்ன ஆகும். குழந்தைய பத்திரமாப் பார்த்துகுங்க. உள்ள, போன் வேலை செய்யாது. அப்பப்ப ரூமை விட்டு வெளியில வந்து எனக்குப் பேச முயற்சி செய்யணும். செரியா?”

    ”டே, வெளியில வந்து பேசறதெல்லாம் நடக்குற காரியமா? அதும் குழந்தைய விட்டுட்டு??”

    “முயற்சி செய்யுங்கன்னுதான் சொன்னேன். புரியுதா? செரி, நான் வெச்சிடுறேன். பார்த்து டாக்டர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வாங்க!!”

    “ரொம்ப நல்லாவே!”, ஓய்ந்ததடா சாமி! மனத்துள் சிரிப்பு எக்காளமிட்டுக் கொண்டது.

    மருத்துவ மனையிலிருக்கும் கழிவறைக்குச் சென்று குழந்தைக்கு இடப்பட்டிருந்த அரைக்கச்சையை மாற்றி, துடைத்து விட்டுப் பின்னர் புதியதொன்று அணிவிக்கப்பட்டது. வரவேற்பு பணிப்பெண் எங்களைக் கவனித்து உள்ளே அனுப்பினாள். அமெரிக்க மருத்துவ எமர்ஜென்சிப் பிரிவு எனும் அவசர கால சிகிச்சைப் பிரிவில் இது ஒரு வினோதம் என்றுதான் சொல்ல வேண்டும். நான்கைந்து பேர்தான் அங்கு குழுமி இருந்தார்கள். விடுப்புக்காலங்களில் குறைந்தது ஐம்பது, அறுபது பேராவது இருப்பார்கள். ஆனால் இன்று பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை. பெருத்த மகிழ்ச்சி.

    சென்றமர்ந்த பத்துமணித் துளிகளுக்கெல்லாம் உள்ளே அழைத்துச் சென்று எங்களுக்கான அறையில் அமர வைத்து விட்டார்கள். இவ்வணுகுமுறையானது அமெரிக்காவுக்கே உரிய ஒரு சிறப்பாகும். மருத்துவமனை, குடிபுகல் மற்றும் குடியுரிமை அலுவலகம் முதலான இடங்களில் இம்முறை கையாளப்படுகிறது. உலகுக்கே உயரிய தலைவர் என நம்பப்படுகிற அமெரிக்க குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலும் கூட இம்முறையே கையாளப்படுகிறது.

    வருகையாளருக்கான நேர்முக நேரம் ஒதுக்கப்பட்டு அவருக்கான தனியறையும் ஒதுக்கப்பட்டு விடும். குறிப்பிட்ட நேரத்தில் குடியரசுத் தலைவரே அவ்வறைக்கு வந்து, வந்திருக்கும் வருகையாளரைச் சந்திப்பதுதான் அம்முறையாகும். இதன் மூலம், குடியரசுத் தலைவரின் நேர ஆளுமை கட்டுக்குள் வருகிறது; தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுகிறது. அல்லாவிடில், அவருடைய அறைக்குள் வருகையாளர் வருதல், இருக்கையில் இருத்துதல், வழியனுப்புதல் எனப் பலவாறாக குடியரசுத் தலைவரின் மதிப்புமிக்க நேரம் வீணாகும். இது போன்றே மருத்துவரின் நேரக்கட்டுப்பாடும் கையாளப்படுகிறது.

    தன் கையில் இருக்கும் கரடி பொம்மையுடன் பேசிக் கொண்டு இருந்தாள் கமழ்.  நத்தார் நாளில் வேலை செய்ய நேர்ந்த வருத்தமெதுவுமின்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர் அறைக்கு வெளியே இருந்த மருத்துவமனைப் பணியாளர்கள். சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவர் நீட்றா கதவைத் தட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

    உங்களை இந்த நன்னாளில் இங்கு வரச் செய்தது என்னவோ என வாஞ்சையாகக் கேட்டறிந்து கொண்டார் மருத்துவர் நீட்றா. கன்னத்தில் குழிவிழ, ”ஐ காட் கிஃப்ட் ஃப்ரம் சான்ட்டா” என்று சொல்லிச் சிரித்தாள் கமழ். அந்த அயர்விலும் அவள் அழகாய்க் காட்சியளித்தாள். உங்க குழந்தை மிகவும் அழகு எனச் சொல்லிக் கொண்டே அவளது காது, கண்கள் முதலானவற்றைப் பரிசோதித்துக் கொண்டார் நீட்றா.

    ”வயிற்றில் ஏதாவது வைரஸ் இருக்கக் கூடும். உடம்பு சுடவில்லையாதலால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று கூறிக்கொண்டே மருந்துக்கான சீட்டெழுதிக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கொண்டார் அவர்.

    குழந்தைக்குச் சட்டை, ஸ்வெட்டர் முதலானவற்றை அணிவித்து வெளியே அழைத்து வந்தேன். மருத்துவரைப் பார்த்ததற்கான உடன்தொகை(copay) செலுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தேன். என்னதான் மருத்துவக் காப்பீடு வைத்திருந்தாலும், உடன்தொகையாக சொச்சப் பணத்தை நாம்தான் கட்ட வேண்டுமென்பது அமெரிக்கக் காப்பீட்டு நடைமுறையாகும்.

    “சார், கேன் யூ ஹெல்ப் மீ சார்?” என்றாள் அந்த வெள்ளைக்காரி. எனக்கு மனம் சஞ்சலமாக இருந்தது. விட்டேற்றியாக ஏதாவது சொல்லியிருக்கலாம். ஆனால் உதவி கேட்டு நிற்பவர்களை நத்தார் நாளதுவுமாக எப்படி உதறித்தள்ளுவது? கமழ் வேறு உடனிருக்கிறாள். அந்தம்மாவைப் பார்க்கவும் பாவமாய் இருக்கிறது.  எந்த நேரத்திலும் அழலாம் என்கிற தொனியில் இருக்கிறது அவள் முகம். அவளுக்கென்ன துன்பமோ??

    அவளுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என வந்திருக்கிறாள். கிறிஸ்துமசுக்காக இருந்த காசெல்லாம் செலவாகி, பற்று அட்டைகளிலும் இனி கடன் வாங்கப் பெறுமானம் இல்லையாம். மகளுக்கு மருந்து வாங்கச் செலுத்த வேண்டிய உடன்தொகைக்கு இருபது டாலர் வேண்டுமெனக் கேட்கிறாள். மனம் கனக்கிறது. அவளது குழந்தையின் முகமும் பெருஞ்சோகமாய் இருக்கிறது.

    ”என்னிடம் பணமாக இல்லை. வேண்டுமானால் இருபத்தி நான்கு மணி நேர வால்கிரீன்சு மருந்தகத்திற்கு வாருங்கள்; உடன்தொகையை நானே செலுத்தி விடுகிறேன்!” எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டேன்.

    இந்த அமெரிக்காவில் இப்படியான ஏழைச்சோகம் நிறைய. காசு இருக்கும் வரையிலும் தாம்தூமென்று பொருட்களாய் வாங்கிச் செலவளிப்பது ஒரு பக்கம். தாய்மார்களின் இப்படிப்பட்ட அவலமும் அல்லலும் மறுபக்கம். கிட்டத்தட்ட முப்பது விழுக்காடு அளவிலான அமெரிக்கக் குழந்தைகளுக்கு அம்மாவின் ஆதரவு மட்டுந்தானாம். தனித்தாயா(single mom)க இருப்பாளோ இவளும்? மனம் பதைபதைத்தது. என்றுதான் இவர்கள் சேமிக்கக் கற்றுக் கொள்வார்களோ??

    உப்பும் புளியும் இருக்கும் மொடாவில், அரைக்காசு, முக்கால்க்காசு எனச் சிறுகச் சிறுகச் சேமிக்கும் என் அம்மாவின் நினைவுதான் எனக்கு வருகிறது. அஞ்சறைப் பெட்டியில் காசில்லையென்றால் அம்மாவுக்கு தலையே வெடித்துவிடும். அதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்குத் தெரிவதே இல்லை. எதுவும் கிடைக்காத நேரத்தில் சாணி தட்டிக் காய வைத்த வறட்டிகளை விற்றாவது காசாக்கி விடுவாள் அம்மா.

    விடுப்பு நாளான இந்நாளில் திறந்திருக்கும் ஒரே ஒரு மருந்தகம், இந்த வால்கிரீன்சு மருந்தகம்தான். நான் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் அந்த வெள்ளைக்காரியும் வந்து விட்டாள். எனது கையிலிருந்த மருந்துச் சீட்டினைக் கொடுத்தேன். அவளும் அவளது குழந்தைக்கானதைக் கொடுத்திருக்கிறாள். இன்னும் இருபது மணித்துளிகள் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள்.

    “என்ன, நானே வெளியில வந்ததும் கூப்பிடச் சொன்னனே? கூப்பிட மாட்டீங்களா??”

    “சாரி! நான் இப்பதான்…”

    “எதுக்கும் ஒரு சாரி. அதெப்படிங்க உங்களால முடியுது? சரி, டாக்டர் என்ன சொன்னாரு?”

    “ஸ்டொமக் வைரஸா இருக்கும்னு சொல்லி மருந்து எழுதிக் குடுத்திருக்காரு!”

    “சரியப்ப, வீட்டுக்கு வாங்க. நான் வாங்கிக்கிறன்!!”

    “இல்ல. நான் வால்கிரீன்சு பார்மசியில குடுத்து இருக்கன்!”

    அவ்வளவுதான். சாமியாடி விட்டாள். “எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கணும். நான் ட்வெண்டிப் பெர்சண்ட் கூப்பன் வெச்சிருக்கன். அது போக, கிரிடிட் கார்டுல பே பண்ணக் கூடாது. ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் அக்கவுண்ட்ல பே பண்ணனும். உங்களை வெச்சிட்டு எனக்குப் பெரிய்ய்ய அக்கப்போரு!!”

    “இல்லடா. நான் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் கார்டு எடுத்திட்டு வந்திருக்கேன்!”, ஒருவழியாய்த் தப்பித்தாயிற்று. நல்ல வேளையாக, நான் மருத்துவச் செலவுக்கான வருமானவரிக் கழிவு தரும் ப்ளெக்சிபிள் ஸ்பெண்டிங் பற்று அட்டையைக் கொண்டு வந்திருந்தேன். அல்லாவிடில், அதற்கும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

    மீண்டும் அந்த வெள்ளைக்காரி என்னைப் பார்த்து ஒருவிதப் பணிவோடு சிரித்துப் பேச முயன்றாள். நான் மகளைக் கவனிக்கும் பாங்கில் தவிர்த்து விட்டேன். பேச்சுக் கொடுத்தால், சொந்தக்கதை சோகக்கதையைச் சொல்வார்கள். நமக்கெதுக்கு வம்பு?

    முறை வந்ததும், வெள்ளைக்காரியின் மருந்துக்கும் எங்களது மருந்துக்கும் நானே உடன்தொகை செலுத்து விடுகிறேன் எனச் சொன்னேன். அங்கிருந்த வேலையாள் என்னை ஒரு மாதிரி வித்தியாசமாய்ப் பார்க்கிறாள்.

    மருந்தைப் பெற்றுக் கொண்டவள் என்னைப் பார்த்து மீண்டும் நன்றி சொன்னாள். அடுத்த மாதம் காசோலை அனுப்புவதாகச் சொல்லி, அனுப்புவதற்கு ஏதுவாக என் வீட்டு முகவரியைக் கேட்டாள். பணிவுடன் மறுத்து விட்டேன். அலைபேசி எண்ணாவது கொடுங்கள் என வேண்டினாள். நத்தார் நாளில் உதவக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியெனச் சொல்லி அலைபேசி எண் பகிர்வதையும் தவிர்த்து விட்டேன்.

    கண்களில் நீர் மல்க அவளும், வீட்டிற்குப் போக வேண்டிய அவசரத்திலிருந்த நாங்களும் விடை பெற்றுக் கொண்டோம். கண்ணிலிருந்து மறையும் வரையிலும், அவர்களைப் பார்த்து கையசைத்துக் கொண்டே வந்தாள் கமழ்.

    ”அட, நீங்க இவ்வளவு சுருக்கமா வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லங்க!”

    “இன்னும் முன்னாடியே வந்திருப்போம். ஆனா அந்த இன்னொரு குடும்பத்துக்கும், அதான் அந்த வெள்ளைக்காரிக்கும் சேர்த்து பில் பே பண்றதுல கொஞ்சம் நேரம் செலவாயிடிச்சி!”

    “இன்னொரு குடும்பமா? என்ன உளர்றீங்க?? யாரது?? எழவு, உங்களை அனுப்புனதே தப்பாப் போச்சி!!”

    அவ்வளவுதான்! நத்தார் நாள் ஓதகம் பெருவேகம் கொண்டு சீற்றத்துடன் பொழியத் துவங்கியது.

    “நீ கொழந்தையப் பாரு. எனக்கு செமயாப் பசிக்குது! சிறுகுடல் பெருங்குடலைத் தின்றும் போல இருக்கு. போயிக் குளிச்சிட்டு வந்து சோறுங்கணும் முதல்ல!”, நடந்ததை முழுமையாகச் சொல்லாமல் வேகமாய்ச் சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டேன். மெய்யாலுமே பசிக் கிரக்கமாயிருக்கிறது எனக்கு.

    வீட்டு முகவரி, அலைபேசி எண் முதலான தனிப்பட்ட தகவலெதையும் பகிராமல் உதவி செய்து வந்த செருக்குடன் கூடிய மகிழ்ச்சியோடு, வெதுவெதுப்பான சுடுநீர்ச் சாறல்க்குளியலில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் நான்.  “யாரோ வெள்ளைக்காரியாம். யாரது? அவளை எப்படி இந்தாள் சந்திச்சாரு? இந்தாள் எதுக்கு அவளுக்குப் பணம் கட்டணும்??” இப்படியான பல குடைச்சல்களுடன் கூடிய தலைவலி வரவேண்டியவருக்கு வந்துவிட, சமையலறையில் உருண்டு புரண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது வாயில்லாத எங்கள் வீட்டுப் பாத்திரங்கள்.

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்!

     

     

    காலமெனும் தேரேறி வருடமொன்று
    காற்றோடின்று பறந்ததுவே
    கண்டது நாம் பல நன்மை தீமையே
    கரையட்டும் துன்பங்கள் அதனுடனே
    தடைகளைத் தாண்டி நாமும்
    விடைகளைத் தேடி ஓடினோம்
    முடைகளை விலக்கியே ஆண்டின்
    முடிவினில் மிதக்கிறோம்
    இரண்டாயிரத்து பன்னிரண்டு
    இயம்பிய உண்மைகள் பலவுண்டு
    இதயத்தில் அவற்றை நிறுத்தியே
    இரண்டாயிரத்து பதின்மூன்றேகுவோம்
    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    பதித்திடும் படிப்பினை பகிர்ந்திடும்
    பளிச்சிடும் உண்மைகள் விழித்திடும்
    பனித்திடும் விழிகளை நிறைத்திடும்
    சுவைத்திடும் காலங்கள் கொண்டது
    சுவைதரும் நிகழ்வுகள் கொண்டது
    சுகந்தரும் நினைவுகள் தந்திடும்
    சுந்தரமான புது வருடம்
    அனைத்து அன்பு உள்ளங்கள்
    அனைத்துக்கும் அன்புநிறை
    ஆயிரம் புதுவருட வாழ்த்துக்கள்
    வாழிய ! வாழிய ! நிறைவுறவே !
    அன்புடன்
    சக்தி சக்திதாசன் குடும்பம்
    Share
  • வருக புத்தாண்டே!

    கவிநயா

     

    புத்தாண்டை வரவேற்போம்!

    புதுவாழ்க்கை அமைத்திடுவோம்!

    புத்துணர்வு பெற்றிடுவோம்!

    புதுமைபல செய்திடுவோம்!

     

    கவலைகளைக் கழற்றி வைப்போம்!

    தன்னம்பிக்கை தக்க வைப்போம்!

    முயற்சிகளை முடுக்கிடுவோம்!

    அயர்ச்சிகளைத் தள்ளி வைப்போம்!

     

    அன்பாலே கோவில் செய்வோம்!

    அறிவொளியால் விளக்கிடுவோம்!

    அவனியெல்லாம் ஒளியேற்றி

    ஆனந்தமய மாக்கிடுவோம்!

     

    இயற்கையைப் பேணிடுவோம்!

    இச்சகத்தைப் போற்றிடுவோம்!

    இறையவனின் தாள்பணிந்து

    இன்பமுடன் வாழ்ந்திடுவோம்!

     

    படத்துக்கு நன்றி: http://thelonggoodbye.wordpress.com/2011/12/18/happy-new-year-wallpaper-romney-picks-up-endorsements-and-gets-machiavellian/

     

    Share
  • பூவிதழாய் வருக!

     

    திருஅரசு

    புத்தாண்டே வருக! பூவிதழாய் வருக!
    பூத்துக்குலுங்க வருக! நறுமணமாய் வருக!
    மெல்ல மெல்ல வருக! மெல்லிதழாய் வருக!
    சப்தமில்லாமல் வருக! சங்கீதமாய் வருக!
    தவழ்ந்து தவழ்ந்து வருக! தளிர்நடையாய் வருக!
    வசந்தமாய் வருக! வருக வருகவே!
    வண்ண வண்ணமாய் வருக! வளமாய்  வருக!
    பனித்துளியாய் வருக! பசுமையாய் வருக!
    சிறு சிறு மழையாய் வருக! சித்திரச் செவ்வானமாய் வருக!
    மழலையின் மகிழ்வு சிரிப்பாய் வருக, வருகவே!!

     

     

    Share
  • வந்தது புத்தாண்டு…

    செண்பக ஜெகதீசன்…

     

    வந்தது புதிதாய் ஆண்டு

    வாழ்க்கை சிறந்திட வேண்டு,

    சிந்தையில் மேன்மை கொண்டால்

    சிறப்புதான் என்றும் உண்டு,

    முந்தைய ஆண்டின் தடைகள்

    முன்னே செல்ல நடைக்கல்,

    நொந்திடத் தேவை யில்லை

    நாளை நீயே வெல்வாய்…!

     

    படத்திற்கு நன்றி: http://www.ladcblog.org/2012/01/the-7-ups-of-life/thumbs-up/

    Share
  • 2013

    -தனுசு-

     

    எங்களோடு சேரும்
    இன்னுமொரு என் நண்பனே
    உனக்கு
    வரவேற்பு முதலில்
    வருக! வருக!!

    ஒவ்வொரு ஆண்டும் சேரும்
    ஒவ்வொரு நண்பனும்
    ஒவ்வொரு வகையில்
    எங்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறான்!

    அந்த வகையில்
    இன்று எங்களோடு கை கோர்க்கும் நீ
    எங்கள் கரம் பற்றி
    கொண்டு செல்….

    குற்றம் தவிர்த்து
    சுற்றம் சேர்த்து
    பற்றை வளர்த்து
    பஞ்சம் போக்கி
    வன்மம் நீக்கி
    நெஞ்சை நிமிர்த்தி
    வீரம் வளர்த்து
    வெற்றி படைத்து வாழ!

    இதுவரை நாங்கள்
    சேர்த்த நண்பர்களில்
    நீயே
    முதல்வனாய் இரு!
    மூலவனாய் இரு!
    முன்னவனாய் இரு!
    மூத்தவனாய் இரு!

    எங்கள் இல்லங்களில்
    உன் பாதம் படத்துவங்கும்
    இந்த நேரத்தில் இருக்கும்
    உற்சாகமும் ஆணந்தமும்
    என்றென்றும் நீடித்திருக்க வேண்டுமென
    கூறிக்கொண்டு வா
    அனைவருக்கும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

     

     


     

     

    Share
  • இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்….!!

    ராஜேஸ்வரி ஜெகமணி

    ஆங்கில ஆண்டின் முதல் நாள் இது ..


    ஆனந்தமாய் வாழ்த்தும் பொன்னாள் இது..
    வெற்றி நம்மைத்தேடி வரும் நன்னாள் இது ..
    எண்ணப்படி வாழ்வு தரும்  இந்நாளில்
    இன்று போல் என்றும் வாழ புத்தாண்டு வாழ்த்துகள்….

    எண்ணிய முடிதல் வேண்டும்  
    நல்லவே எண்ணல்வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும் ;
     தெளிந்தநல் லறிவு  வேண்டும்;

    மனதில் உறுதி வேண்டும்
       வாக்கினிலே  இனிமை வேண்டும்;
    நினைவு நல்லது வேண்டும்,
       நெருங்கின பொருள் கைப்பட  வேண்டும் ;

    கனவு மெய்பட வேண்டும்,
       கைவசமாவது விரைவில்  வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்
       தரணியிலே பெருமை வேண்டும்;

    என்று  பொன் எழிலாய் பூத்திருக்கும் புத்தாண்டில் பிரார்த்திப்போம் …

    துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
    அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட புத்தாண்டினை வரவேற்போம் …

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    இனிய நாளை இன்னிசையோடும் இன்பத்தோடும் , இனிப்போடும் கொண்டாடி மகிழ இனிய வாழ்த்துகள்….

    Share