இறைவன் எங்கே..

தேவா

இறைவன்

உண்டென்றும் இல்லை என்றும்

உரைப்போர் உலகில் கோடியுண்டு

கைலாயத்தில் கண்டேன்  ஈசனை என்போர் சிலர்

காசிக்கு சென்றாலும் பாவங்கள்  போகவில்லை

என்போரும் உண்டு ,

பயிர் காத்திட மழை ,ஈந்திடும் முகிலும் இறைவனே என்று

எழுதிவிட்டார் வள்ளுவன் ,

தெய்வத்தை பல உருவில் வணங்கினாலும்

அழுகின்ற குழந்தைக்கு பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்

ஆலயம் கட்டி வணங்குவேன்

வாடுகின்ற மனிதனுக்கு ஊக்கமூட்டி ,

பகிர்ந்துண்ணும் இதயமே இறைவன் வாழும் ஆலயம் அன்றோ!

 

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/csureshbabu/3350928450/

 

2 thoughts on “இறைவன் எங்கே..

 1. தேவா, உங்கள் கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டும் அருமையான பயனுள்ள கருத்துக்கள். பாராட்டுகள்.

  ….. தேமொழி

 2. இறைவன்

  உண்டென்றும் இல்லை என்றும்

  உரைப்போர் உலகில் கோடியுண்டு

  கைலாயத்தில் கண்டேன் ஈசனை என்போர் சிலர்

  காசிக்கு சென்றாலும் பாவங்கள் போகவில்லை

  என்போரும் உண்டு. நல்ல வரிகள். வாழ்த்துக்கள் தேவா. விசாகை மனோகரன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க