2013

-தனுசு-

 

எங்களோடு சேரும்
இன்னுமொரு என் நண்பனே
உனக்கு
வரவேற்பு முதலில்
வருக! வருக!!

ஒவ்வொரு ஆண்டும் சேரும்
ஒவ்வொரு நண்பனும்
ஒவ்வொரு வகையில்
எங்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறான்!

அந்த வகையில்
இன்று எங்களோடு கை கோர்க்கும் நீ
எங்கள் கரம் பற்றி
கொண்டு செல்….

குற்றம் தவிர்த்து
சுற்றம் சேர்த்து
பற்றை வளர்த்து
பஞ்சம் போக்கி
வன்மம் நீக்கி
நெஞ்சை நிமிர்த்தி
வீரம் வளர்த்து
வெற்றி படைத்து வாழ!

இதுவரை நாங்கள்
சேர்த்த நண்பர்களில்
நீயே
முதல்வனாய் இரு!
மூலவனாய் இரு!
முன்னவனாய் இரு!
மூத்தவனாய் இரு!

எங்கள் இல்லங்களில்
உன் பாதம் படத்துவங்கும்
இந்த நேரத்தில் இருக்கும்
உற்சாகமும் ஆணந்தமும்
என்றென்றும் நீடித்திருக்க வேண்டுமென
கூறிக்கொண்டு வா
அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

 


 

 

About தனுசு

கவிஞன் அல்ல . ஆனால் கவிதைகள் பிடிக்கும். - கப்பலில் பணி.

One comment

  1. மிக அற்புதமான கவிதை தந்து புத்தாண்டை வரவேற்றமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அனைவருக்கும் என் மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க