Blog

  • எழுத்து நாகரிகம்!

    -எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்

     

    paper-penஎழுதத்தெரிந்துவிட்டால் எழுதிவிடலாம் எனப்பலபேர் நினைக்கிறார்கள்.
    அப்படி நினைத்தபடியால்தான் எப்படியோ எல்லாம் எழுதியும் விடுகிறார்கள்.

    எழுதிய விஷயங்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றி எந்தவித வருத்தமோ கவலையோ வருவதேயில்லை. மற்ற‌வர்கள் என்ன சொன்னாலும் என்ன எண்ணினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

    நாங்கள் எதைச்செய்தாலும் அந்தச் செயல் மற்றவர்களை எந்தவிதத்திலும் பாதித்து விடவே கூடாது. எங்களது விருப்பு வெறுப்புக்களைப் பகிரங்கப்படுத்தும் பொழுது மிகக் கவனமாகவே வெளிப்படுத்தவேண்டும். எங்களுக்குப் பிடித்த விஷயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கலாமா?அப்படி நினைக்கவே கூடாது.

    சாதாரணமாக வீட்டிலே இருக்கின்ற அம்மா அப்பா பிள்ளைகளிடையேயே சாப்பாட்டில் கூட வித்தியாசம் இருப்பதை காணமுடியும். அப்பாவுக்கு நல்ல‌ காரம் பிடிக்கும். அம்மாவோ எதிர்மாறாக இனிப்பையே விரும்புபவராக இருப்பார். பிள்ளைகள் ஒவ்வொன்றுமே வித்தியாசமான சுவையை விரும்பலாம்.

    அவர்களை பார்த்து…இனிமேல் நீங்கள் எல்லோரும் காரம்தான் சாப்பிட வேண்டும் என்று அப்பா கட்டளை இட்டாலோ வற்புறுத்தினாலோ அது நாகரிகமாக இருக்குமா?அது சர்வாதிகாரமாகவும் காட்டுமிராண்டித்தனமாக‌வுமாகவே இருக்கும் அல்லவா?

    வீட்டிலேயே இப்படி இருக்கையில் வெளியில் உள்ளவர்கள் நிலையைச் சிந்திப்பது முறையான செயல்தானே. ஒவ்வொருவருக்கும் விருப்புக்களும் விருப்பம் இல்லாத தன்மையும் நிறையவே இருக்கிறது. அது அவரவர் சுதந்திரம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் அவர் விருப்பத்தினை மற்றவர் மீது திணிக்க முயற்சிக்க நினைப்பதுதான் நாக‌ரிகமற்ற செயலாகி விடுகிறது எனலாம்.

    சினிமா பார்ப்பதை அந்த நாள்தொட்டு இன்றுவரைப் பலர் நல்லதென்று
    எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் நல்ல சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அதற்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அது சார்ந்தவர்களையும் திட்டித் தீர்ப்பதோ வசை பாடுவதோ முறையா? இதனை பலர் எழுத்தால் செய்யும்பொழுது எழுத்து நாகரிகம் சற்று யோசிக்கின்றது.

    சமயம் பக்தி கடவுள் இவையெல்லாம் பொதுவானவை. இவை பற்றி பல‌ கருத்து முரண்பாடுகள் காலத்துக் காலம் இருந்துதான் வந்திருக்கிறது. ஆனால் சமயங்களோ பக்திமார்க்கங்களோ கடவுள்பற்றிய நம்பிக்கைகளோ உலகைவிட்டு மறைந்து விடவில்லை.

    இதுபோலத்தான் உயர்வு தாழ்வு என்னும் சாதிப் பாகுபாடும். என்னதான் சமத்துவம் பேசினாலும் சாதியென்பதை ஒழிக்கமுடியவில்லை. அது ஒருபக்கத்தில் தனது வேலைகளைச் செய்தபடியே இருக்கிறது.

    புத்தர் வந்தார்; இயேசு வந்தார்; காந்தியும் வந்தார்; ரமணர்வந்தார்; ராமகிருஷ்ண‌ பரமஹம்சர் வந்தார்; அவரது வாரிசாக சுவாமி விவேகானந்தரும் வந்தார். இவர்கள் அனைவருமே மிக மிக நயமாகவும் அதேவேளை வெகு நாகரிகமாகவுமே நல்லவற்றைச் சொன்னார்கள் எழுத்தாயும் தந்தார்கள். யாரையும் குறை சொல்லவும் இல்லை. யாரையும் புண்படும்படிச் செய்யவும் முயல‌வில்லை. இது எமக்கெல்லாம் பெரியதொரு பாடமாகும்.

    இப்படி இவர்கள் எல்லாம் நடந்து காட்டிய பின்னரும் கூட நாகரிகம்
    இல்லாமல் இங்கிதம் என்றால் என்ன என்று தெரியாமல் புரியாமல்
    எல்லோர் மனத்தையும் நோகடிக்கும் வகையில் எழுதுவது என்பது
    இவர்களிடம் எப்படித்தான் வந்ததோ?

    வீட்டுக்குள் இருந்தால் அது அவர்களுக்கு மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டை விட்டு வெளியில் வரும்பொழுது அது பல பேரைப் பாதிக்கும் அல்லவா? இதை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லையோ தெரியவில்லை. விமர்சனம் என்பது தேவைதான். அதனை நாகரிகமாகச் செய்ய வேண்டும்.

    வாரியார் சுவாமிகள் பல இடக்கு முடக்கான கேள்விக் கணைகள் வந்தபோதெல்லாம் யாருக்கும் எந்தவித மனநெருடல்களும் ஏற்படாவகையில் மிகவும் நாகரிகமாக அதனைக் கையாண்டுள்ளார் என்பதை அறிகின்றோம்.

    எழுத்து என்பது மிகவும் வல்லமை வாய்ந்த ஆயுதமாகும். அதனை
    மிகவும் லாவகமாகக் கையாளாவிட்டால் அது தாக்கிச் சேதப்படுத்திவிடும். கத்தியால் பழத்தையும் வெட்டலாம். அதேவேளை ஒரு ஆளையும் வெட்டிவிடலாம். நாகரிகம் அற்ற எழுத்துக்கள் மற்றவரை வெட்டிக்காயப்படுத்திவிடும்.

    எனவே எழுத்தால் காயப்படுத்தாது…கருத்துக்களைக் கொடுப்போம்.
    எழுத்தால் கண்ணியத்தைக் காப்போம். எழுத்தால் யாவரையும் இதமாக வருடிக்கொடுப்போம். அப்பொழுது எழுதும் எழுத்தில் நிச்சயமாக நயத்தகு நாகரிகம் வந்தே சேரும். நல்ல எழுத்தால் நாடும் வளரும். வீடும் வளரும். நட்பும் வளரும். உறவுகளும் மலரும். உள்ளமெல்லாம் உயர்வு பெறும். கண்ணியத்தைக் கடைப்பிடித்துக் கருத்துக்களை எழுதுவோம்.

     

    Share
  • சீக்கிரம் அருள்வாய் கந்தா!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கருவிலை கருணை வேண்டும்
    கல்வியில் உயர்வு வேண்டும்
    தெருவெலாம் அலையா வண்ணம்              Murugan
    தினமெனைக் காக்க வேண்டும்

    ஒருமனம் கொண்டு உன்னை
    உவப்புடன் வணங்க வேண்டும்
    பெருமனம் கொண்டு என்னைப்
    பேணுவாய் கந்த வேளே!

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    காத்திட வேண்டும் ஐயா
    வறுமையில் வாடி நாளும்
    வதங்கிடா திருக்க வேண்டும்!

    தரமுடை மனத்தைப் பெற்றுத்
    தரணியில் வாழ வேண்டும்
    சிரமதில் அகந்தை போகச்
    சீக்கிரம் அருள்வாய் கந்தா!

    நரை திரை வந்திடாமல்
    நலமுடன் வாழ வேண்டும்
    நாளுமுன் நாமம் சொல்லி
    நானுனைப் பாட வேண்டும்

    குறையுடை வாழ்க்கை தன்னைக்
    குமராநீ அகற்ற வேண்டும்
    நெறியுடன் நின்று வாழ
    நீயெனக் கருள்வாய் ஐயா!

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 29

    சு.கோதண்டராமன்.

    அசுரர்கள்

     

    asura

    இந்திரனால் கொல்லப்பட்ட விருத்திராசுரன், தசரதன் உதவியோடு அழிக்கப்பட்ட சம்பராசுரன் ஆகியோரது கதைகளை நாம் புராணங்களில் பார்த்திருக்கிறோம். தாரகாசுரன், சிங்க முகாசுரன், சூர பத்மன் முதலிய அசுரர்களை முருகன் கொன்றதைக் கந்த புராணம் விவரிக்கிறது.

    அசுரர்கள் பட்டியலில் இந்திரன், அக்னி, வருணன், சூரியன் ஆகிய தேவர்களும் உண்டு என்பது தெரியுமா? ஆம், இவர்களையும் ரிக் வேதம் அசுரர் என்றே குறிப்பிடுகிறது. மேலும், த்யௌஸ் எனப்படும் ஆகாயம், மருத் எனப்படும் புயற்காற்று, வேள்வி நடத்துவோர், த்வஷ்டா என்னும் தேவத் தச்சர் இவர்களும் அசுரர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

    அது மட்டுமல்ல, சூரியன் முதலானவற்றைப் படைத்த முழு முதற் கடவுளையே, பரம்பொருளையே வேதம் அசுரர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கிறது.

    அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

    ஆனால் உண்மை இதுதான். அசுரர் என்று ஒரு இனம் இல்லை. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரன் முதலான தேவர்களை அசுரா என்று வேதம் விளிக்கும் போது அது அவர்களது வலிமையைக் குறிக்கும் சிறப்புப் பெயராகத்தான் வருகிறது.

    ஏதோ ஓரிரண்டு இடங்களில் மட்டும் அல்ல. ரிக் வேதத்தில் அஸுரர் என்ற சொல் வரும் 90 இடங்களிலும், அதிலிருந்து கிளைத்த அஸுர்ய போன்ற சொற்கள் வரும் 36 இடங்களிலும் இதே பொருள்தான். ரிக் 3.55 என்ற சூக்தத்தில் 22 மந்திரங்கள் உள்ளன. தேவர்களின் சிறப்புகளைப் போற்றும் இவை ஒவ்வொன்றும் “மஹத் தேவானாம் அசுரத்வம் ஏகம்” என்ற ஈற்றடியைக் கொண்டவை. இது “தேவர்களின் வலிமை பெரியது, தனித்துவம் வாய்ந்தது” என்று பொருள்படும்.

    பொதுவாக, ஒரு சொல்லுக்கு முன்னால் ‘அ’ என்ற முன்னொட்டைச் சேர்த்து எதிர்ச் சொல் உருவாக்குவது வழக்கம். ஆனால் அசுரர் என்ற சொல் சுரர் என்ற சொல்லிலிருந்து வந்ததல்ல. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் என்ற சொல்லை உருவாக்கினார்கள்.

    தீயவர்களைக் குறிக்க, அசுர என்ற சொல் வேதத்தில் ஆளப்பட்டிருக்கிறதா? இருக்கிறது. தேவர்களின் எதிரிகளான விருகத்வரஸ், வர்ச்சின், பிப்ரு என்ற மூவருக்கு அசுரர் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வலிமை கருதி அவ்வாறு அழைக்கப்படுகின்றனரே அன்றி அவர்களது இனத்தினாலோ குணத்தினாலோ அசுரர் என்ற பெயர் வரவில்லை.

    இந்திரனும் அக்னியும் வலிமையான பகைவர்களை அழித்ததனால் அசுரக்ன- அசுரர்களை அழித்தவர்- என்ற பெயர் பெறுகிறார்கள். மற்றபடி எல்லா அசுரர்களும் தேவர்களின் பகைவர்கள் என்ற கருத்தை அங்கு காண முடியவில்லை.

    வேதத்திற்கு உரை எழுதிய சாயணர் அசுரர் என்ற சொல்லுக்கு பெரும்பாலான இடங்களில் வலிமையானவர் என்ற பொருளைத் தருகிறார். சில இடங்களில் அதே சொல்லுக்கு, விரும்பத் தகாதவற்றை வெளியேற்றுபவர், எதிரிகளை அழிப்பவர், உயிர் கொடுப்பவர், மழை அனுப்புபவர், அசுரர்களை அழிப்பவர், உயிரும் உணர்வும் கொண்டவர், இருட்டை விரட்டி அடிப்பவர், ஊக்கம் தருபவர் என்று பல வகையாக விளக்கம் அளித்தாலும் அவை யாவும் வலிமையான என்ற பொருளின் விரிவாக்கமாகவே காணப்படுகின்றன. இந்த எல்லா இடங்களிலும் வலிமையான என்ற பொருள் மிகப் பொருத்தமாக இருக்கும்போது, சாயணர் ஏன் வலுக்கட்டாயமாக சொல்லின் உற்பத்தி வேரை மாற்றி விநோதப் பொருள் சொன்னார் என்பது புரியவில்லை.

    அசுரரும் ராட்சசரும் ஒன்றா? அல்ல. இன்று அவை இரண்டும் ஒரு பொருட் சொற்களாக இருந்தாலும் வேதத்தைப் பொறுத்த வரை அவை வேறு வேறுதான். அரக்கர் என்று தமிழில் குறிப்பிடப்படும் தீய பண்புள்ளோர் வேதத்தில் ரக்ஷஸ் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் வலிமை மிகுந்தவராக இருந்ததால் அசுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் பிறரைத் துன்புறுத்தும் தம் பண்பினால் ராட்சசர் எனப்பட்டனர். தன் வலிமையைப் பிறர் நலனுக்காகப் பயன்படுத்தும் அசுரர்களை தேவர் என்றும் பிறரைத் துன்புறுத்தும் அசுரர்களை ராட்சசர் என்றும் வேதம் அழைக்கிறது.

    Share
  • ஒரு சில கணங்களுக்குள் ……..

    எம். ரிஷான் ஷெரீப்

    ஒரு சில கணங்களுக்குள்
    இலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம்

    இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே நேற்று (29.10.2014) மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான மக்களை, அவர்கள் நேசித்த மண்ணே உயிருடன் விழுங்கிக் கொண்டுள்ளது. சடலங்கள் மீட்கப்படுகின்றன. 2004 இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பிறகு, இலங்கையில் பல நூறு உயிர்களைக் காவுகொண்ட இயற்கை அனர்த்தம் இதுவாகும். அதே போல இலங்கை, மலையக வரலாற்றில் இதுவரை இடம்பெற்றுள்ள மண் சரிவு அனர்த்தங்களில், இப்போது நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தத்தை மிகவும் மோசமான ஒன்றாகவும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படலாம்.

    arsh

    இக் கிராமத்தில் குறைந்தபட்சம் ஐம்பத்தேழு தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த முந்நூற்றைம்பது நபர்களாவது வசித்திருக்கலாம் என நம்பப்படுவதோடு, இந்த அனர்த்தம் நிகழ்வதற்கு முன்னர் வெளிப் பிரதேச பாடசாலைக்குச் சென்ற சிறுவர்,சிறுமியர்,வேலைகளுக்காகச் சென்ற சில தொழிலாளர்கள் என ஒரு சிலரே அனர்த்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இழப்புக்கள் சம்பந்தமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், போலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துச் சொல்லி தப்பித்துக் கொள்ள முற்படுகின்றனர். என்ற போதிலும், பல நூற்றுக்கணக்கான மக்களை நேற்று முதல் காணவில்லை. மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சி, நேற்று காலநிலையைக் குறிப்பிட்டு கைவிடப்பட்டதோடு, இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நேற்றே முழுமையாக நடந்திருந்தால் ஒருவேளை சிலரையாவது உயிருடன் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

    arsh1

    மலேசிய விமானம் காணாமல் போனபோது, அதில் பயணித்த உயிர்களுக்கு என்னவானது எனக் கேட்டு உலகமே ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகப் பிரார்த்தித்தது. Facebook, Twitter, Google plus போன்ற சமூக வலைத்தளங்களில் கூட, திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுக்கான பிரார்த்தனைகளும், உதவிகளும் பரந்திருந்தன. ஆனால், அதே போன்ற, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான உயிர்கள் இங்கும் காணாமல் போயிருக்கின்றன. மீட்கப்பட்டு, நிர்க்கதியான நிலையிலும் பல நூறு பேர் இருக்கின்றனர். ஆனால் மேற்சொன்ன சமூக வலைத்தளங்களிலோ, இணையத்தளங்களிலோ அவர்களுக்கான உதவிகளோ, பிரார்த்தனைகளோ கூட பரவலாக இல்லை. ஏனெனில், இவர்கள் இலங்கையின் ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். பூர்வீக நாடற்றவர்கள். வந்தேறு குடிகள். விரல் முனையில் உலகைச் சுற்றிவரும் மேற்தட்டு மக்களுக்கு, இவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இவர்களை இழந்தாலும் ஒன்றுதான்.

    arsh2

    யார் இவர்கள்? ஒரு பக்கம் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களோடும், மறுபக்கம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலாவணி, மிகக் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற குடிசைகள், நோய்நொடிகள், வறுமை எனப் பலவற்றோடும் போராட வேண்டியிருக்கும் இம் மக்கள் தென்னிந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட அப்பாவி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள். நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காக, எந்த அடிப்படை வசதிகளுமற்று அடிமைகளாக உழைக்கும் தமிழ் மக்கள் இவர்கள். எந்த அரசியல்வாதிகளாலும் கண்டுகொள்ளப்படாத ஏழைக் கூலி மனிதர்கள். யார், யாருக்காகவோ உழைத்துத் தேய்ந்து, தேயிலைச் செடிகளுக்கே உரமாகிப் போகும் அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.

    arsh3

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல்கால வாக்குகளுக்காகவும், ஏற்றுமதி வர்த்தகத்துக்கான உழைப்பாளிகளாகவும் மாத்திரமே இலங்கை அரசாங்கம் இவர்களைப் பார்க்கின்றது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என்றபோதும், இந்திய அரசியல்வாதிகள் கூட இவர்களது உரிமைகளுக்காகவோ, இவர்களைத் தமது நாட்டில் மீள்குடியேற்றச் செய்யவோ எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்களென மேடைகளில் கூச்சலிடுகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். அவர்கள் செய்வதுவும், இந்த அப்பாவிகளை வைத்து, தமது ஆதரவாளர்களை உசுப்பி விடும் பம்மாத்து அரசியலன்றி வேறென்ன?

    இலங்கை அரசு, உலகத்துக்கு தனது பகட்டையும், ஆடம்பரத்தையும் காண்பிப்பதற்காக நீரில் மிதக்கும் நகரங்களை நிர்மாணிக்கிறது. அதிவேகப் பாதைகளை அமைக்கிறது. இவற்றின் செலவுக்கான பணம், மேற்குறிப்பிட்ட ஏழை மக்களின் உழைப்பிலிருந்துதான் கிட்டுகிறது என்ற போதிலும், நான் மேலே சொன்ன எந்த வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர்களுக்கில்லை. அதிவேகப் பாதைகளை, பல மாடிக் கட்டிடங்களை, அதி நவீன ஹோட்டல்களை நிர்மாணிக்க முன்பு, தனது நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிட்டுகின்றனவா எனப் பார்க்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. ஆனால் ‘இவர்களை முன்பே இங்கிருந்து போகச் சொல்லிவிட்டோம்’ எனச் சொல்லி இன்று அரசாங்கம் தப்பிக் கொள்ளப் பார்க்கிறது.

    அரசாங்கமானது, வீடுகளைக் கட்டிக் கொடுத்து பாதுகாப்பாகக் குடியேற்ற வேண்டியது இவ்வாறான ஏழை மக்களைத்தானே தவிர, வசதியானவர்களையல்ல. வீண் ஆடம்பர அலங்காரங்களுக்காகவும், கிரிக்கட் வீரர்களுக்கும், நடிகர்களுக்கும் வீடு, வாகனம், காணிகளென பல கோடி ரூபாய்களைச் செலவழிக்கும் அரசாங்கம், இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதை என்னவென்பது?

    உலகிலுள்ள எந்த மனிதரிடத்திலும், திடீரென எவரும் வந்து அவர்கள் பரம்பரையாக வாழ்ந்துவரும் இடத்திலிருந்து வெளியேறி ‘நீ வேறெங்காவது போ’ எனச் சொன்னால் அவர்கள் எங்குதான் செல்வர்? ஒருவரது இருப்பிடமென்பது பூமி மாத்திரமல்ல. அது அவர்களது உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் சுற்றிப் பிணைக்கப்பட்ட ஆன்மா. அந்த ஏழைகளை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் புலம் பெயரச் சொன்னால், அகதியாய் அலையச் சொன்னால், அதை விட்டும் அவர்களைத் தடுப்பது எது? ஜீவனோபாய வழி முறைகள்.

    காலம், காலமாக தோட்டங்களையே நம்பி வாழும் ஏழைக் குடிகளுக்கு, அவர்களுக்கேற்ற ஜீவனோபாய வழிமுறைகளை அமைத்துக் கொடுத்து, தண்ணீர், மின்சார, கழிவறை வசதிகளோடு முறையான குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அரசாங்கமே குடியேற்றி வைப்பதுதானே முறை? அதை ஒருபோதும் செய்யவில்லை. இப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக பல தடவைகள் எச்சரிக்கப்பட்ட போதிலும், இங்கு வாழும் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இடம் மாற்றிக் குடியமைக்க அரசாங்கம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அண்மையில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக, இம் மலையகப் பிரதேசங்களில் போட்டியிட்ட வசதிபடைத்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் செலவிட்ட பணத்தில் ஒன்றிரண்டு சதவீதங்களைச் செலவழித்திருந்தால் கூட, இம் மக்களுக்கு ஆபத்தற்ற குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும்.

    இவ்வாறான ஆபத்தான பல பிரதேசங்கள் மலையகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலுமே குடியிருக்கச் செய்யப்பட்டிருப்பது அப்பாவி ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள். இனியாவது அரசாங்கம் இவர்களைக் கருத்திற்கொண்டு உடனடியாக பாதுகாப்பான இடங்களில் இவர்கள் பத்திரமாகக் குடியேற ஏற்பாடு செய்ய வேண்டும். கேமராக்களின் முன்பும், ஊடகங்களின் முன்பும் இன்று பாய்ந்து பாய்ந்து உதவி செய்யும் அரசியல்வாதிகளும், தலைவர்களும் ஒரே நாளில் தமது தாய் தந்தையரை, சொந்தங்களை, இருப்பிடங்களை இழந்து நிற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட எல்லா சிறுவர், சிறுமிகளதும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் உதவ வேண்டும். மீட்கப்பட்டவர்கள் உடல் காயங்களைப் போலவே, மனதளவிலும் அதிர்ந்து போயுள்ளனர். அவர்களுக்கான தக்க சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

    arsh4

    நேற்றைய அனர்த்தத்தைப் பார்வையிட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அங்கு பூஞ்சிரிப்போடு வருகை தந்திருக்கிறார். கேமராக்களின் முன்னர் பரிசுகள் போலச் சுற்றிய பார்சல்களை யார் யாருக்கோ அள்ளி வழங்குகிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பவும் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதிக்கு இந்த அனர்த்தத்தில் உதவிய புகைப்படங்களைக் காட்டியே வாக்குகளை அள்ளி விடலாம். அரசியல்வாதிகளுக்கு இவர்களது தேர்தல் கால வாக்குகள் மட்டும் போதும். இப்போதும் கூட அவர்கள், பல நூற்றுக்கணக்கான வாக்குகளை இழந்துவிட்டோமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, பாவப்பட்ட இந்த உயிர்களுக்காகவல்ல !

    – எம்.ரிஷான் ஷெரீப்
    30.10.2014

    Share
  • கந்த சஷ்டி….

    கிரேசி மோகன்

    crazy
    கந்தனாய் ஞானசம் பந்தனாய் சோணை வந்த ஸ்வாமி….

    ”சூரன் அகந்தையை, சோணை மலையடி
    வாரன் ரமண விசாரநான் -யாரென்ற,
    வேல்கொள்ள சம்ஹாரம், வெற்பருணை ஞானியின்
    தாள்கொள்ளும் நாளேசஷ் டி’’….கிரேசி மோகன்….

    Share
  • அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -4

    jay

    (கட்டுரை: 4)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    இப்போது தோன்றின
    புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
    கதிரியக்கம் பொழியும்
    புழுதிக் குண்டுகள் !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    புது யுகச் சூட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசுகள் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?

    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

    “ஒருவருக்குப் பின்னால் ஒருவராக யாரெனக் காண முடியாத தோற்றத்தில் மக்கள் பலர் ஓடினர் !  அவரது தோலுரிந்து கைகளி லிருந்தும், கன்னங்களிலிருந்தும் தொங்கிக் கொண்டிருந்தன !  முகமெல்லாம் சிவந்து உப்பிப் போய் எங்கே கண்கள் உள்ளன, எங்கே வாய் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதவாறு கடினமாக இருந்தது.”

    ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி

    “நான் கதிர்வீச்சு நோய்களால் திரும்பத் திரும்ப பத்துத் தடவைகள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டேன்.  மூன்று தடவைகள் (சாகக் கிடந்து) என் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு என் படுக்கை அருகிலே இருந்தனர்.  மரணத்தோடு போராடிப் போராடி நான் மெய்வருந்திக் களைத்துப் போய் விட்டேன்.”

    ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி ஸனாவோ சுபாய் (Sanao Tsuboi)

    “முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

    அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

    “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

    ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

    “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

    டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


    உலக நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்பு ஆற்றல்கள்

    இப்போது உலக அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் கைவசமுள்ள அணு ஆயுத வெடிக் குண்டுகளின் எண்ணிக்கையை அறிந்தோமானால் இன்னும் அத்தனை ஆயுதங்கள் உயிரனத்தை அழிக்க விழித்துள்ளன என்பதை நாம் கண்டு வியப்புறுவோம்.  அமெரிக்காவின் அணு ஆயுதக் குண்டுகளை ஏந்தியுள்ள கட்டளை ஏவுகணைகள் ரஷ்யாவையோ மற்ற பகை நாடுகளையோ குறிவைத்துப் பல திசைகளில் பல்வேறுச் சாதன முறைகள் மூலம் தாக்கப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன.  1991 இல் சோவியத் யூனியன் கவிழ்ந்து வல்லரசுக்களுக்கு இடையே இருந்த ஊமைப் போர் மறைந்த பிறகும் உச்ச வல்லமை படைத்த அமெரிக்கா இன்னும் 10,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதப் பேரழிவுக் குண்டுகளை வைத்துக் கொண்டு கண்காணித்து வருகிறது !  ரஷ்யா தன் கைவசம் 15,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதக் குண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளது.  பிரான்ஸ் 350, பிரிட்டன் 200, சைனா 200, இஸ்ரேல் 80, பாகிஸ்தான் 60, இந்தியா 50, வட கொரியா பத்துக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் (2007 மதிப்பீடுகள்) அணு ஆயுதக் குண்டுகள்.

    தற்போதைய அச்சம் ஏற்கனவே நாமறிந்த அணு ஆயுதக் குண்டுகள் அல்ல. தொல்லை தரவல்ல மூர்க்க வர்க்கம் களவாடி அவரது கைவசம் அகப்படும் “புழுதிக் குண்டுகள்” எனப்படும் கதிர்வீச்சுக் குண்டுகளே (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) !  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

    இப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவருக் கொருவர் பணிந்து தணிந்து மாஸ்கோ அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தப்படி [Moscow Treaty – Strategic Offensive Reductions Treaty (SORT)] தமது அசுர வல்லமையுள்ள அணு ஆயுதச் சேமிப்புகளை முதன் முதலாகக் குறைத்துக் கொள்ள உடன்பட்டிருக்கின்றன.  அந்த அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கைப்படி 2012 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவும், ரஷ்யாவும் தமது இயக்க அணுவெடி ஆயுதங்களை (1700 -2200) எண்ணிக்கைக்கு இடையில் குறைத்துக் கொள்ள வேண்டும்.  (Each Party shall reduce and limit strategic nuclear warheads, as stated by the President of the United States of America on November 13, 2001 and as stated by the President of the Russian Federation on November 13, 2001 and December 13, 2001 respectively, so that by December 31, 2012 the aggregate number of such warheads does not exceed 1700-2200 for each Party. Each Party shall determine for itself the composition and structure of its strategic offensive arms, based on the established aggregate limit for the number of such warheads.)  அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் சில மாடல்கள் (W-76 Model Warheads -100 kiloton TNT Capacity) தமது 30 ஆண்டு ஆயுட் காலத்தைக் கடந்து விட்டதால் அவற்றை ஏனோ புதுப்பிக்க அமெரிக்கா இப்போது ஈடுபட்டுள்ளது.

    அணு ஆயுத வணிகம் செய்த அப்துல் காதீர் கான்

    2008 மே மாதம் அளித்த நேர்முக உரையாடலில் டாக்டர் அப்துல் காதீர் கான் தனது முந்தைய குற்ற ஏற்பில் கூறியவற்றை மாற்றி ஈரான், வட கொரியா நாடுகளுக்கு அணு ஆயுத உற்பத்திக்கு உதவி புரிந்ததாக ஒப்புக் கொண்டார்.  மேலும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரஃப் தேசீய நலனுக்காகத் தன்னை ஒருப் பலி ஆடாக இருக்கக் கட்டாயப் படுத்தியதாகவும் கூறினார் !  அத்துடன் உலக நாடுகள் சில அணு ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபடக் காரணமானவர் ஜனாதிபதி முஷாரஃப்தான் என்றும் குறிப்பிட்டார்.  அணு ஆயுத யுரேனிய எருவைச் சேமித்துத் திரட்டும் சுழல்வீச்சு வடிகட்டிச் சாதனங்கள் (Centrifuge Equipment to Prepare Weapon Grade Uranium -235) பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் பாகிஸ்தானி லிருந்துதான் ஒரு விமானத்தின் மூலம் வட கொரியா வுக்கு அனுப்பப் பட்டன என்றும் வெளிப்படையாகக் கூறினார்.  மேலும் 1999 ஆம் ஆண்டில் தான் ஒரு பாகிஸ்தான் இராணுவ ஜெனரலோடு வட கொரியாவுக்குச் சென்று தோள் மீதிருந்து ஏவும் ஏவுகணைகளை (Shoulder-Launched Missiles) வாங்கச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.  அவரது குற்ற ஏற்புகளால் வெகுண்ட அமெரிக்க அரசாங்கம் தூண்டி டாக்டர் கான் பாகிஸ்தான் அணுசக்தி ஆணை யகத்திலிருந்து நீக்கப் பட்டு “இல்லச்சிறைக் கைதியாய்” அடைக்கப் பட்டார்.  பிப்ரவரி 6, 2009 இல் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் ஆணையிட்டபடி டாக்டர் கானை இல்லச் சிறையிலிருந்து விடுதலை யானார்.

    பாகிஸ்தானின் அணுக்குண்டு பிதா எனப்படும் அப்துல் காதீர் கான் ஏப்ரல் 27, 1936 தேதி (பிரிட்டிஷ் இந்தியாவில்) போபால் நகரில் பிறந்தார்.  1947  இல் பிரிவினைக்குப் பிறகு கான் குடும்பம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்தது.  கராச்சி பல்கலைக் கழகத்தில் 1960 இல் B.Sc பட்டம் பெற்றார்.  1961 இல் உலோகவியல் படிக்க மேற்கு ஜெர்மனிக்குச் சென்று 1967 இல் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.  அடுத்து நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உலோகவியல் பொறியியலில் Ph. D. (Metallugical Engineering) பட்டத்தையும் பெற்றார்.

    1972 இல் டாக்டர் கான் நெதர்லாந்து பௌதிக ஆய்வுக் கூடத்தில் (Physical Dynamics Research Laboratory, Amsterdam, Netherlands) சேர்ந்து யுரேனியம் செழிப்பூட்டும் அணுவியல் கூடத்தில்  (Uraniuam Enrichment Facility at Almelo, Netherlands) பணி செய்தார்.  அணுமின் சக்தி நிலையங்களுக்கு செழிப்பு யுரேனியத்தைத் தயாரிக்க அந்த ஆய்வுக்கூடத்தை 1970 இல் கட்டி முடித்தவை மூன்று நாடுகள் : பிரிட்டன், மேற்கு ஜெர்மனி & நெதர்லாந்து. யுரேனியம் ஹெக்ஸா ஃபுளூரைடு வாயுவிலிருந்து (Uranium Hexafluoride Gas) அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 எருவைத் தயாரிக்க 1500 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தேவைப்படும்.  அவற்றில் யுரேனியம் -238 & யுரேனியம் -235 ஆகிய இரண்டு ஏகமூலங்களும் (Isotopes of Uranium) 100,000 rpm (Revolutions per minute) வேகத்தில் சுற்றப்பட்டு யுரேனியம் -235 படிப்படியாக சேமிப்பாகிப் பிரித்தெடுக்கப் படும்.  அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 தயாரிப்பு முறைகள், மற்றும் யந்திர சாதனங்கள் யாவும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கப் படுபவை !

    1974 மே மாதம் 18 ஆம் தேதியில் இந்தியா “புத்தர் புன்னகை புரிகிறார்” (Bhuddha Smiling) என்னும் இராணுவக் குறிச்சொல் கொண்ட தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது !  பாகிஸ்தானைப் பைத்திய நாடாக்கியது ! டாக்டர் கான் “புத்தர் புன்னகை புரிந்தது பாகிஸ்தானின் மரணத்தை எதிர்நோக்கித்தான்” என்று கொதித்தெழுந்தார் !  1975 டிசம்பரில் டாக்டர் கான் வாயுச் சுழல்வீச்சு வடிகட்டிப் படங்களையும் (Gas Centrifuge Blueprints) மற்றும் தயாரிப்பு முறைகளையும் களவாடிக் கொண்டு நெதர்லாந்தை விட்டுப் பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார் !  டச் அரசாங்க ஒற்றர் பின்னர் செய்த ஒற்றில் மிகவும் இரகசியாமான யுரேனியம் -235 சேமிப்புத் தகவல் பாகிஸ்தானி வலைக் குழு ஒற்றர் மூலமாகக் களவாடப் பட்டது என்று தெரிய வந்தது !

    டாக்டர் கான் அப்போதைய முதன் மந்திரி ஸுல்ஃபிகார் அலி புட்டுவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.  1974 இல் இந்தியா தனது முதல் அணு ஆயுதத்தைச் சோதித்த பிறகு, டாக்டர் கான் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதன் அணு ஆயுத முயற்சிக்குத் தான் உதவுதாக முன்வந்தார்.  1998 மே மாதம் 11 இல் இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனைகள் பொரொன் பாலை நிலத்தில் நிகழ்ந்த பிறகு பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதச் சோனைகள் 1998 மே மாதம் 28 (யுரேனியம் -235 அணுக்குண்டு) & 30 (புளுடோனியக் குண்டு) தேதிகளில் இரண்டு முறைச் சோதனைகள் செய்து காட்டப் பட்டன.

    பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பு

    பாகிஸ்தான் அணுவியல் விஞ்ஞானிகள் திடீரெனச் செய்து காட்டிய செழிப்பு யுரேனிய அணுக்குண்டு, புளுடோனிய அணுக்குண்டு வெடிப்புகள் இரண்டும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி ஐயமுறச் செய்தன.  அத்தகைய விரைவான அணு ஆயுதத் தயாரிப்புகள் சில அன்னிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பின்றி நிகழ முடியாதென்று சந்தேகங்கள் உண்டாயின !  1980 ஆண்டுகளில் சைனாவின் தொழில் நிபுணர்கள் பாகிஸ்தான் அணுவியல் ஆய்வுக் கூடங்களில் உலவிய தாகத் தெரிகிறது !  1983 இல் டச் அரசாங்கம் யுரேனியச் செழிப்பு முறைப்பாடுச் சாதனங்களைக் களவாடி ஓடிப்போன டாக்டர் கான் மீது வழக்குத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் சிறையில் நாலாண்டு கள் தள்ள ஆணை இட்டது !  ஆனால் அப்போது பாகிஸ்தானில் இருந்த குற்றவாளி கானை டச் அரசாங்கம் கைது செய்ய முடியாமல் போனது !

    1987 இல் பிரிட்டீஷ் தின இதழ், ‘பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு நிபுணத்தை டாக்டர் கான் வெளியே இருந்து எடுத்து வந்ததாய்’, ஒப்புக் கொண்டதாக அறிவித்தது.  ஆனால் 1990 இல் டாக்டர் கான் பாகிஸ்தானி தகவல் அறிவிப்பாளருடன் உரையாடும் போது “நாங்கள் அன்னிய நாடுகளிலிருந்து எந்த மூலத் தகவலை அறியவில்லை” என்றும், “அணுவியல் நூல்கள், மாத இதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளைப் பயன்படுத்தினோம்,” என்றும் வெளிப்படையாகக் கூறினார் !  1991 இல் பாகிஸ்தான் தினச்செய்தி இதழ் ‘டான்’ (Dawn) டாக்டர் கான் தான்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்குக் காரண கர்த்தா வென்று பெருமைப் பட்டுக் கொண்டதாக அறிவித்தது.

    அணு ஆயுதச் சாதனங்களைப் பாகிஸ்தான் தயாரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்ய முன்வந்ததாக அறியப்படுகிறது.  நெதர்லாந்தில் டாக்டர் கான் 1970 ஆண்டுகளில் சுழல்வீச்சு வடிகட்டிகள் டிசைன், அமைப்பு முறைகளை முதலில் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்தார்.  அந்த நிபுணத்தை முதலில் பாகிஸ்தானுக்கும், பிறகு ஈரான், லிபியா, வட கொரியா நாடுகளுக்கும் அவர் பயன்படுத்தியாக அறிய வருகிறது.  நெதர்லாந்தில் செழிப்பு யுரேனிய ஆய்வுக்கூடம் கட்டிக் கொடுத்த பிரிட்டன் டாக்டர் கானுக்கு இருபதாண்டுகள் உபரிச் சாதனங்கள் (Centrifuge Parts & Spare Parts) அனுப்ப ஒப்பி வந்திருக்கிறது.

    பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்க செழுப்பு யுரேனியம் சேமிக்கத் தேவையான நுணுக்க சூனியமாக்கும் பம்ப்புகளை (Vacuum Pumps) ஜெர்மன் வர்த்தகக் கம்பேனி ஒன்று செய்து அனுப்பி இருக்கிறது.  ஸ்பெய்னில் உள்ள ஒரு தொழிற்சாலை இடைத் தரகர் மூலமாக லேத் யந்திரங்களைப் (Lathe Machines for Enrichment Plant) பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.  மொராக்கோவில்தான் டாக்டர் கான் வெளிநாட்டு நிபுணர்களைச் (ஈரான், லிபியா, வட கொரியா மற்றும் சாதனம் தயாரிப்பாளரை) சந்தித்து கூட்டுழைப்புப் பணிகளைச் செய்திருக் கிறார்.  மலேசியாவில் உள்ள ஸ்கோமி நுணுக்கத் தொழிற்சாலையில் தான் (Scomi Precision Engineering Company) எல்லா நாடுகளுக்கும் வேண்டிய 25,000 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தயாரிக்கப் பட்டுள்ளன !  வட கொரியா நாட்டுக்கு மட்டும் டாக்டர் கான் குறைந்தது 12 தடவைகள் அணு ஆயுதத் தயாரிப்பு சம்பந்தமாக நேரிடைப் பிரயாணம் செய்திருப்பதாகத் தெரிகிறது !  அதன் பிரதிபலனாக வட கொரியா தனது கட்டளை ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதாகவும் பின்னால் அறிய வருகிறது.

    1980 -1990 ஆண்டுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் கட்டளை ஏவுகணைத் தயாரிப்பு சம்பந்தமாக ‘பாகிஸ்தான் சைனா வடகொரியா’ நாடுகளுக்குள் கூட்டுழைப்பு நிகழ்ந்து வருவதாக மேற்திசை நாடு களுக்குள் ஓர் உறுதியான எண்ணம் வலுத்தது !  அமெரிக்க நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) 1980 ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்க ஒற்றர் டாக்டர் கானின் விமானப் பயணப் பெட்டியை உளவிச் சோதித்து சைனா பேஜிங்கிலிருந்து ஹிரோஷிமா மாடல் அணு ஆயுதம் போன்ற சில வரைப்பட விபரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அணு ஆயுதத் தயாரிப்புக்குச் சைனாவின் கூட்டுழைப்பு உள்ளதை முதன்முறை உறுதியாக அறிந்ததாக வெளியிட்டது !

    இத்தகைய பயங்கர அணு ஆயுதக் குண்டுகளைப் பலநாடுகள் தயாரிக்கக் காரணமாக இருந்த டாக்டர் கான் இப்போது பாகிஸ்தானில் ஒரு கோடிஸ்வரன் என்பதைச் சொல்லத் தேவையில்லை ! அவருக்கு உதவியாகப் பணி செய்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பலரும் பணம் திரட்ட பயங்கர வேலைகள் செய்து வந்திருக்கிறார்.  இந்த இரகசிய வேலைகளில் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் அனுமதி இல்லாமல் பல்லாயிரம் டாலர் நிதித் திணிப்பின்றி ஈரான், வட கொரியா நாடுகளில் அணு ஆயுதப் பெருக்கம் பரவி இருக்குமா ?  ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்கும், வட கொரியா கட்டளை ஏவுகணைகளைக் கொடுத்ததற்கும் தேவைப்படும் மில்லியன் கணக்கான டாலர்களை வருடா வருடம் யார் கொடுத்து வந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் ?  அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானையும், வட கொரியாவையும் தடுத்து வசைபாடிக் கொண்டு பாகிஸ்தானுடன் ஆழ்ந்த தோழமை பேணி வரும் உலக வல்லரசு களில் உச்ச வல்லரசான அமெரிக்க நாடுதான் !

    கதிர்வீச்சடி அளவுகளும் அதனால் விளையும் உயிரினப் பாதிப்புகளும்

    Ionizing Radiation Dose Level Examples

    Recognized effects of acute radiation exposure are described in the article onradiation poisoning. The exact units of measurement vary, but light radiation sickness begins at about 50–100 rad (0.5–1 gray (Gy), 0.5–1 Sv, 50–100rem, 50,000–100,000 mrem).

    Although the SI unit of radiation dose equivalent is the sievert, chronic radiation levels and standards are still often given in millirems, 1/1000th of a rem (1 mrem = 0.01 mSv)

    Level (mSv ) Duration Description
    0.001-0.01 Hourly Cosmic ray dose on high-altitude flight, depends on position and solar sunspot phase.
    0.01 Annual USA dose from nuclear fuel and nuclear power plants
    0.01 Daily Natural background radiation, including radon
    0.1 Annual Average USA dose from consumer products
    0.15 Annual USA EPA cleanup standard
    0.25 Annual USA NRC cleanup standard for individual sites/sources
    0.27 Annual
    0.28 Annual USA dose from natural terrestrial sources
    0.39 Annual Global level of human internal radiation due to radioactive potassium
    0.46 Acute Estimated largest off-site dose possible from March 28, 1979 Three Mile Island accident
    0.48 Day USA NRC public area exposure limit
    0.66 Annual Average USA dose from human-made sources
    1 Annual Limit of dose from all DOE facilities to a member of the public who is not a radiation worker
    1.1 Annual 1980 average USA radiation worker occupational dose
    2 Annual USA average medical and natural background [5] Human internal radiation due to radon, varies with radon levels
    2.2 Acute Average dose from upper gastrointestinal diagnostic X-ray series
    3 Annual USA average dose from all natural sources
    3.66 Annual USA average from all sources, including medical diagnostic radiation doses
    few Annual Estimate of cobalt-60 contamination within about 0.5 mile of dirty bomb
    5 Annual USA NRC occupational limit for minors (10% of adult limit) USA NRC limit for visitors Orvieto town, Italy, natural [6]
    5 Pregnancy USA NRC occupational limit for pregnant women
    6.4 Annual High Background Radiation Area (HBRA) of Yangjiang, China
    7.6 Annual Fountainhead Rock Place, Santa Fe, NM natural
    10-50 Acute USA EPA nuclear accident emergency action level >
    50 Annual USA NRC occupational limit (10 CFR 20)
    100 Acute USA EPA acute dose level estimated to increase cancer risk 0.8%
    120 30 years Exposure, long duration, Ural mountains , lower limit, lower cancer mortality rate[8]
    150 Annual USA NRC occupational eye lens exposure limit
    175 Annual Guarapari, Brazil natural radiation sources
    250 Acute USA EPA voluntary maximum dose for emergency non-life-saving work
    250 2 hours Whole body dose exclusion zone criteria for US nuclear reactor siting[12](converted from 25 rem)
    260 Annual Ramsar, Iran, natural background peak dose [9
    500 Annual USA NRC occupational whole skin, limb skin, or single organ exposure limit
    500 30 years Exposure, long duration, Ural mountainsupper limit
    750 Acute USA EPA voluntary maximum dose for emergency life-saving work [11
    500-1000 Acute Low-level radiation sickness due to short-term exposure
    500-1000 Detonation World War II nuclear bomb victims
    3000 Acute Thyroid dose (due to iodine absorption) exclusion zone criteria for US nuclear reactor siting  (converted from 300 rem)
    4500-5000 Acute LD50 in humans (from radiation poisoningwith medical treatment.[13

    உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

    1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம் !

    1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப் பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

    1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

    (கட்டுரை தொடரும்)

    *****************************

    தகவல் :

    Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

    1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

    3. (a) http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/(ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

    4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

    5. Oppenheimer, By: James Kunetka

    6. Hand Book of World War II, Abbeydale Press

    7. The Deadly Element, By: Lennard Bickel

    8. Canadian Nuclear Society Bulletin, June 1997

    9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

    10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

    11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

    12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

    13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

    14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

    15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

    16 Wikipedia Report on Dr. Abdus Salam –http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

    17. Wikipedia Report on Abdul Qadeer Khan –http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

    18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sortStrategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 31, 2009

    Share
  • அறுபடையோன் புகழ்….

    கிரேசி மோகன்

    crazy

    திருவேரகம்(சுவாமி மலை)….
    ————————————-
    குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட
    தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள்
    வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு
    ஏரகச் செல்வனை ஏத்து….

    பழமுதிர்சோலை
    ——————–
    கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும்
    தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால்
    கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க
    பழமுதிர் சோலைக்குள் புகு….

    திருத்தணி
    ————–
    விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி
    திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன்
    வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில்
    பொய்தீசல் சேராது போக்கு….

    திருச்செந்தூர்
    ——————-
    மாறுபடு சூரனுடல் வேறுபட வேலெய்து
    கூறுபட வைத்த குருநாதா -சீறுகடல்
    செந்தூரில் பத்தினிகள் சேர வளர்ந்திடும்
    சிந்தூர வண்ணனைச் சேர்….

    பழனி
    ——–
    மாம்பழம் தந்தை மறுத்ததால் கோபித்து
    தீம்பிழம் பாகி தவக்கோலம் -நாம்பழனி
    குன்றினில் கண்டு களித்திட காட்சிதரும்
    நின்றிடும் ஆண்டி நமக்கு….

    திருப்பரங்குன்றம்
    ———————–
    குரங்கென்ற நெஞ்சோடு கூடிக் குலாவி
    தரங்குன்றி தாழ்ந்தோம், தவித்தோம் -பரங்குன்றில்
    தெய்வானை கைப்பிடித்த தேவ சகாயனை
    கைவாய்மெய் கொண்டு கருது….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ் ,பகவான் ரமணர் இது போலத்தான் பசு லஷ்மிக்கு கரஸ்பரிஸ தீக்‌ஷை அளித்தார், அதன் அந்திம நேரத்தில்….

    crazy

    ஆனை முகமேறி, ஆயர் கொழுந்தவன்,
    தூணை நிகர்த்த துதிக்கையை, -சோணை,
    மகரிஷி போல, சுகமாய்த் தடவி,
    அகருசி ‘நானை’ அளிப்பு ….கிரேசி மோகன்….

    Share
  • இலை விளக்கியது

    இசைக்கவி ரமணன்

    istock_000009756153xsmall
    அந்த இலைக்குத் தெரிந்திருக்காது
    மீண்டும் அந்தக் கிளையில் ஏறித்
    தன்வகுப்புத் தோழிகளுடன் அமர்ந்து
    சளசளக்க முடியாதென்று

    தெரிந்திருந்தால், ஒரு
    சித்தனுக்கு விசிறுவதற்காகச்
    சென்றுகொண்டிருந்த தென்றலைச்
    சீழ்க்கையடித்து நிறுத்தி, ஓர்
    அரசகுமாரியின் ஒய்யாரத்தோடு
    அப்படி சாவகாசமாய் இறங்கியிருக்காது

    இறந்து, கொஞ்ச நேரம் பிடிக்கிறது
    இறந்துவிட்டது புரிவதற்கு

    இறங்கவில்லை
    இறக்கிவிடப்பட்டோம் என்பது
    கறுப்புச் சாலை சுட்டபின்புதான்
    உறுத்தியது இலைக்கு

    உயரே இருக்கும் தோழிகள்
    ஒருத்தரும் இதைக் கவனிக்காமல்
    ஒருத்தி இருந்த நினைப்பே இல்லாமல்
    ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்

    உறவு உணர்வு நினைவு எல்லாம்
    ஒரேயடியாய் முட்டியபோதும்
    உடம்பில்லை
    உலகில் இருந்தது
    உலகம் இருக்க
    உலகம் இன்றி
    உதிர்ந்து போனது
    உலகில்
    கிளை தரித்த இலையை
    விதி வரித்துக்கொண்டது

    மனதும் உயிரும் முழுக்க முழுக்க ஒரு
    முனையில் குவியும் மரணத் தருணம்தான்
    விதியின் துவக்கம் என்று
    விளக்கியது விழுந்த இலை

    சலனமற்ற கிளையில்
    சளசளத்துக் கொண்டிருக்கின்றன இலைகள்
    அடிமரத்தில் முதுகு சொறிந்துகொண்டு
    அவசரமாக எங்கோ சென்றது தெரு நாய்

    28.10.2014 / செவ்வாய் / 22.06

    Share
  • முக்தி தலம் சுப்பிரமண்யா – 1

    விசாலம்.

    நான் சிருங்கேரி போவதாக இருக்கிறேன் என்று என் தோழிகளிடம் சொன்னவுடனேயே “கண்டிப்பாகக் கட்டில் துர்க்கையைப்பார்த்து வா” என்றும் “சுப்பிரமண்யாவைப் பார்த்து வேண்டினால் வியாதிகள் எல்லாம் போய்விடும்” என்றும் பலர் பல கோயில்களைச் சொன்னார்கள். நாங்கள் மங்களூர் போய் இறங்கியவுடன் நாங்கள் அமர்த்திக்கொண்ட டாக்ஸி ஓட்டுனரும் வரிசையாக பார்க்க வேண்டிய தலங்களை மிக அழகாக விளக்கினார். இதை நம்பியே வாழ்வதால் எல்லாம் அவர் மனதில் பாடமாகிவிட்டது போலும்.

    நாங்களும் முதலில் துர்க்கையம்மனைப்பார்த்து வணங்கியப்பின் பல கோயில்களைப் பார்த்து முடித்தோம் ஒரு வாரம் தங்கியதால் எல்லாம் நிதானமாக, களைப்பில்லாமல் பார்க்க முடிந்தது. கந்தசஷ்டிக்காக நான் பார்த்துப் பரவசமடைந்த “ஸ்ரீ சுப்பிரமண்யா” கோயில் மட்டும் இங்கு எழுதுகிறேன்.

    அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில்

    Kukhi Subramanya
    நாங்கள் முதலில் சென்றது குமாரதாரா நதி. அங்கிருந்து மேற்கே பார்க்க குமாரபர்வதம் தெரிந்தது. அதைப்பார்த்துகொண்டே இருக்க ஒரு பத்து நிமிடத்திற்குள் கருமேகம் வந்து அதை மறைக்க குமார பர்வதம் ஒளிந்துக்கொண்டு விடுகிறது. மேகம் கலைய திரும்பவும் சிகரம் தெரிகிறது, மலை உச்சிக்குப்போக பாதை ஒன்றும் தென்படவில்லை. ஒரு சிலர் தங்கள் சாகாசத்திறமையைக் காட்ட (adventure) போய் வருகிறார்கள்.

    Kukhi Subramanya3அப்படி போய் வந்த இரு வாலிபர்களைக் கண்டு “மேலே பார்க்க என்ன இருக்கிறது ?” என்று கேட்டேன்.

    “மேலே குமார தாரா நதியும், தர்ப்பணா நதியும் உற்பத்தி ஆகின்றது, தவிர மலை உச்சியில் குமரனின் இரு பாதங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.”

    “வேறு என்ன பார்த்தீர்கள்?”

    “இங்குதான் ஷண்முக லிங்கம் கிடைக்கிறது. அதில் ஆறு பட்டைகள் இருக்கின்றன. இதுவே ஆறுமுகங்களாக வருகின்றன. இந்த லிங்கம் அளவில் மிகச்சிறியதாக இருக்கிறது. முழுப்பயிறு போன்ற அளவில் தான் இருக்கிறது இதையே பூஜையில் சாலிக்கிராமம் போல் வைத்துக்கொண்டு பூஜையும் செய்கின்றனர்.”

    அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன் அந்த ஷண்முகலிங்கத்தை நானும் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் யார் மலை உச்சிக்கு ஏறுவது என்று ஆசையை அடக்கிக்கொண்டேன். அங்கிருந்து வரும் இரு நதிகளும் சுப்பிரமண்யா தலத்தைச்சுற்றி ஓடுவது குமரனை பிரதட்சிணம் செய்வது போல் தோன்றியது. சுப்பிரமண்யா க்ஷேத்திரத்தில் பல தங்கும் விடுதிகள் இருக்கின்றன. அங்கு வந்த கூட்டத்தில் பலர் முண்டு உடுத்திய கேரள மக்களாகவும், பலர் கன்னட மக்களாகவும் இருந்தனர். பலருக்கு இது குலதெய்வக்கோயிலாக இருந்தது. இங்கு வந்து நதியில் ஸ்னானம் செய்து, மொட்டை அடித்துக்கொண்டு மாவிளக்கும் ஏற்றி வைத்துப் பூஜிக்கின்றனர். ஆலயம் நம் தமிழ் நாட்டு ஆலயம் போல் பெரிய கோபுரத்துடன் இருக்கும் என்று நினைத்து தான் சென்றேன். ஆனால் கோபுரம் அங்கு இல்லை. சாதாரண ஓட்டு வீடு போலத்தான் அந்தக்கோயில் இருந்தது.

    Kukhi Subramanya2வாசலில் ஒருவர் எங்களிடம் “இங்கு வந்து தரிசனம் செய்வதற்கு முன் ஆதி சுப்பிரமண்யா என்ற கோயிலுக்குசென்று அவர் அருள் பெற்று வர வேண்டும், அதுதான் முறை” என்று எங்களை அந்தக்கோயிலுக்கு அனுப்பி வைத்தார். அங்கு செல்ல வடக்குப்பக்கமாக ஒரு பத்து நிமிடம் நடக்கவேண்டும். அந்த இடத்தில் தான் முருகன் தனது பிரும்மஹத்தி தோஷம் நீங்க தவம் இருந்ததாகத் தெரிய வந்தது. அங்கு ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. அதன் அருகில் தான் தர்ப்பணா நதி ஓடுகிறது. ஒரு கண்ணாடியைப் போல் தெளிவான நீராக இருப்பதால் நீரின் கீழே இருக்கும் அழகிய கூழாங்கற்கள், மேலும் பல சிப்பிகள் பளீரென்றுத் தெரிந்தன. இதனால் தானோ இதன் பெயர் தர்ப்பணா என்று வந்ததோ!

    வழக்கம் போல் புற்றுக்கு பால் ஊற்றி பலர் பூஜை செய்கின்றனர். குழந்தை பேறு இல்லாதவர் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்கின்றனர். இங்கு பூஜை செய்தால் சரும நோய்கள் சரியாகிவிடுகின்றனவாம். தவிர இந்தப்புற்றின் மண்ணை உடலில் தேய்த்துக்கொண்டாலும், கரைத்து நீருடன் உட்கொண்டாலும் வியாதிகள் குணமாகிவிடுகிறதாம். தேள் கடி, பாம்புக்கடி, விஷம் எல்லாம் இதைத் தடவ சரியாகி விடுமாம்.

    Kukhi Subramanya4இதேபோல் தான் வைத்தீஸ்வரன் கோயிலின் வைத்தியநநாதசுவாமி ஆலயத்திலும் நோய் தீர மண் உருண்டை கொடுக்கிறார்கள். பாம்பு என்றவுடன் இதுவும் ஞாபகத்திற்கு வந்தது. இந்த இடத்தில் பாம்பு ஒருவரையும் கடித்ததில்லையாம். அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாதாம். இது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்.

    ராகு கேது தோஷம் என்றாலே இந்த ஸர்ப்ப பூஜையுடன் பலர் தங்களால் முடிந்த அளவு சர்ப்ப பிரதிமைகள் செய்து வைப்பார்கள். இங்கும் நான் பல நாகப்பிரதிமைகளைக் கண்டேன். தவிர எங்குப்பார்த்தாலும் முகம் பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன. அவை எதற்கென்றால் முகத்தில் கட்டிகளோ பருக்களோ ஏற்பட்டால் இது போல் வேண்டிக்கொண்டு வைத்தால் சரியாகிவிடுமாம். முகத்தில் பருக்கள் போக பல கிரீம்கள் தடவும் அவசியம் இங்கு வந்தால் இருக்காது என நினைக்கிறேன். அங்கிருந்து நகர்ந்து வந்தவுடன் ஒரு பிள்ளையார் அமர்ந்து அருள் புரிகிறார் . அவரையும் பார்த்து அருள் பெற்றவுடன் மீண்டும் முதலில் வந்த பெரிய கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

     

     

    படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

    Share
  • வழிகாட்டும் அழகு!

     சந்தர் சுப்பிரமணியன்

     

    உலகாளும் சேயன், உமையாளின் பாலன்,
    .. உறவாடும் நெஞ்சன் அழகன்,
    விலகாத இன்னல் விரைந்தோட வாழ்வின்
    .. வினைதீர்க்கும் வேலன், அழகன்,
    கலையாத காந்தள் கலைமார்பன், கந்தன்,
    .. கவின்தெய்வ யானை அமையின்
    வலமாரும் வேளின் வரைஆறுங் காண
    .. வழிகாட்டும் கீரன் உரையே (1)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 1-11)

     

    அலைமோதும் ஆழி அதில்வாழும் சூரர்
    .. அவரோடு போரில் பொருது
    தலைஆறு கொண்ட உருவோடு சூரன்
    .. தனையன்று வேல்கொண் டழிக்கும்
    நிலைகண்டு பேயும் நிலங்கண்ட சூரர்
    .. நிணங்கொண்டு பாடும் விதமாய்
    மலர்மேவு மாவின் மரங்கண்டு வீழ்த்தும்
    .. மறங்கொண்ட வீரன் குகனே (2)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 46-60 )

     

    மலர்மாலை வாசம் மணிபேசும் பட்டம்
    .. மதயானை கோல நுதலில்;
    வலிவான காற்றின் வடிவாக கூற்றம்
    .. வரும்போன்ற வேழம் அதன்மேல்
    அலங்கார ரூப அழகோடு காதின்
    .. அணிதாரை யாகி ஒளிர
    வலங்காணும் வேலன் முகம்வானில் நாளும்
    .. வலங்காணும் கோல நிலவே (3)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 78-90 )

     

    உலகுள்ள மாயை ஒழிகின்ற வண்ணம்
    .. ஒளியூட்டும் ஒற்றை முகமே
    நிலைநல்ல தாக்கும் முகம்வேறு வேத
    .. நிலைகாப்பின் காக்கும் முகமே
    நிலவன்ன ஞான முகம்வேறு போரில்
    .. நிணம்காணும் வேறு முகமே
    மலைவள்ளி காணும் முகம்வேறு; வேலன்
    .. முகம்ஆறு காண்க தினமும் (4)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 91-105)

     

    உலகோடும் எல்லோன் உடனோடும் ஆற்றல்
    .. உடையோரைக் காக்கும் ஒருகை
    நிலையாகி நிற்கும் இடையேறும் ஒன்று;
    .. நிலையேகும் ஒன்று தொடையில்;
    மலையொத்த மாவின் மதமாளுங் கோலை
    .. மனதாகி ஏற்கும் ஒருகை;
    வலமாகச் சுற்ற வடிவேலும் காப்பும்
    .. வகையென்று கொள்ளும் இருகை (5)

     

    மலர்மாலை ஏந்தும் கரமொன்று; மோன
    .. வடிவேற்கும் வண்ணம் மறுகை;
    ஒலிஆர்க்கும் நல்ல வளைஒன்று பூணும்;
    .. ஒலிசேர்க்கும் ஒன்று மணியால்;
    மலைகாடி யாவும் மழைஈயும் ஒன்று;
    .. மணமாலை சூட்டும் மறுகை;
    பலன்தேடு வோர்க்குப் பயனீயும் வேலன்
    .. பன்னிரண்டு கைகள் இவையே (6)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 107-118)

     

    மலம்யாவும் நீத்த தவஞானி, பக்தி
    .. வசமாகிப் பாடும் கலைஞன்,
    வலிவான பாம்பை வசமாக்கும் செம்புள்
    .. வடிவேற்றம் கொண்ட திருமால்,
    உலகேத்தும் ஐயன் உமைநாதன், தேவ
    .. உலகோரின் ராசன் எவரும்
    மலரோனின் சாபம் மறைந்தேக வேலன்
    .. மலையேறி வந்து விழைவார் (7)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 126-175)

     

    கலைமேவும் மாலை கழுத்தேற நல்ல
    .. கவிபாடி வாழ்த்தும் மகளிர்
    சிலைபோன்ற வேலன் திருக்கோலம் கண்டு
    .. திளைப்பாரெக் குன்றந் தனிலும்;
    பலவேறு நாத இசைமீட்டுங் கைகள்
    .. பணிவோரின் தேவை அறியும்;
    நிலந்தேயும் வண்ணம் துகிலார்ந்த வேலன்
    .. நிலைகாணல் என்றும் நலமே (8)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 201-215)

     

    மலைமீத மைந்த வடிவேலன் கோயில்
    .. வலமேகி நிற்கும் குறத்தி
    பலிபீடம் தன்னில் மலரெங்கும் தூவிப்
    .. பலிதந்த ஆட்டின் குருதி
    பலகூடை நெல்லின் மணியோடு சேர்த்துப்
    .. படைக்கின்ற போதில் அருவி
    ஒலியோடு பாடல் ஒலிகூட்டி வேலன்
    .. உளன்நாடி பூசை புரிவாள் (9)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 218-240)

     

    மலையோளின் மைந்தன், மறுப்போரின் கூற்றன்,
    .. வடிவேலன், போரில் பொருநன்,
    மலர்கொண்ட மார்பன், மறவீரன், செல்வ
    .. மணவாளன், குன்றின் கிழவோன்,
    பலநூல்கள் ஆயும் அறிவாளன், மெய்யன்,
    .. பலர்போற்றி ஏத்தும் பெருமன்,
    அலர்ந்தோர்க்கு வள்ளல், அகல்மார்பன், வேலன்,
    .. அவன்வாசல் சென்று தொழுவோம்! (10)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 257-271)

    Share
  • அணையாத சுடரேற்றுவேன்!

    -கே. ரவி

    அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்
    அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்
    கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்
    கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்
    அணையாத சுடரேற்றுவேன்!

    விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான                             flame-symbol
    விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற
    எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்
    விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள
    அணையாத சுடரேற்றுவேன்!

    பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்
    போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி
    பொய்யாகிப் போய்மறைய – எந்தப்
    பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ
    அணையாத சுடரேற்றுவேன்!

    மாயை விரித்த வலையோ – ஜனன
    மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ
    தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்
    தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்
    அணையாத சுடரேற்றுவேன்!

    சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி
    சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று
    கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்
    கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்
    பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து
    பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியிலொரு
    சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்
    சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)
    அணையாத சுடரேற்றுவேன் – இந்த
    அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!
    அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற
    அருளாட்சி மலரநான் அறைகூவியே
    அணையாத சுடரேற்றுவேன்!

     

    Share
  • கந்த சஷ்டிப் புனித நாள்!

    -சு. கோபாலன்

    Tiruchendur_murugan

     

     

     

     

     

     

     

     

     

    சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க
    ஆறுமுகன் ஆறுநாட்கள் அவனுடன் சமர் செய்து ஆறாம் நாள்(சஷ்டி)
    தருவாகி நின்ற அசுரனை தன் கூரிய வேலால் இரண்டாய்ப் பிளந்து
    ஒருபாதி சேவலாய் மறுபாதி மயிலாய் அசுரனை மாற்றி அமைத்துக்
    கருணை மிகு கந்தன் சேவலைக் கொடியாய் மயிலை வாகனமாய் ஏற்று,

    அருளைப் பொழிந்து உலகைக் காத்தானே திருச்செந்தூர் திருத்தலத்திலே!
    இந்திரன் மகிழ்ந்து மகள் தெய்வானையை ஏழாம்நாளன்று முருகனுக்கு
    மந்திரம் வேதங்கள் முழங்க திருப்பரங்கிரியில் மணம் செய்வித்தானே!

    கந்தனுக்கு உகந்த கந்த சஷ்டிப் புனித நாளில் அவன் ‘ஏழுபடை’
    வீடுகளில் தரிசனம் செய்வோமே!

    ஏழுபடை வீடு

    படிதோறும் திருப்புகழ் அடி பாடியபடியே மலையேறி
    வடிவேலன் அடி நாடி அடியவர் கூடிடுவர் திருத்தணி மலையிலே!

    காவடி தோளில் சுமந்து கந்தன் நாமம் நாவில் சுமந்து அவன்
    சேவடி பணிந்து சேவிக்க சேர்ந்திடுவர் பக்தர்கள் பழனி மலையிலே!

    முடி இறக்கி நேர்த்திக்கடன் முறையுடன் செய்து முடித்த பின்னர்
    முடிவிலா கடலில் முழுகி எழுந்து தொழுதிடுவர் திருச்செந்தூர் தலத்திலே!

    பால்குடம் ஏந்திப் பக்திப் பரவசம் பொங்க எடுத்துச் சென்று
    வேல் முருகனுக்கு அபிஷேகம் செய்து வணங்குவர் திருப்பரங்கிரியிலே!

    தந்தை ஈசனுக்கே ஆசானாகிப் பிரணவம் உபதேசித்த
    கந்தனை வணங்கி வளம் பெறுவரே சுவாமி மலையிலே!

    அடிமலையில் அழகரைத் தரிசித்து மலையேறி முடிமலையில்
    வடிவழகன் முருகனை வணங்கி மகிழ்வரே பழமுதிர்சோலையிலே!

    பொன்னான இதயம் படைத்த சின்னப்ப தேவரின் பெரு முயற்சியால்
    என்னப்பன் முருகனின் ஏழாவது படைவீடாக மிளிருதே மருத மலை!

    கந்தா கடம்பா கார்த்திகேயா கலியுக வரதா
    வடிவேலா வள்ளிமணாளா உந்தன் வரந்தா!        

     

    Share
  • சந்திர கிரஹணம்

    -மாதவ. பூவராகமூர்த்தி

    Lunar-Eclipseஅப்பா புது வருட பஞ்சாங்கம் வந்தவுடன் அட்டை போட்டு ஊசியால் தைத்துக் கூடத்து தூணில் இருக்கும் ஆனியில் மாட்டி வைப்பதற்குமுன் தாத்தா அதைப்பிரித்து அவர் அப்பா அம்மா திதி என்று என்பதைக் குறித்து விடுவார். அத்தைப்பாட்டி இந்த வருஷம் கிரஹணம் எப்பெல்லாம் வரது என்பாள்.

    தாத்தா ஒரு காது போன கண்ணாடியைப் போட்டுக் கொண்டு புரட்டாசியில் ஒரு சந்திர கிரஹணம் இருக்கு. மாசியில் ஒரு சூரிய கிரகணம் வரது என்பார். என் சின்ன வயதில் எனக்கு மிக ஆச்சர்யமாக இருக்கும் எப்படி இந்தப் பாம்பு பஞ்சாங்கக்காரர்கள் இதைக் குறிக்கிறார்கள்.

    எழுத நிறைய இருப்பதால் மேலே போகிறேன். அந்தக் காலத்தில் இந்தக் கிரகண நேரம் வீட்டைப் பாடாய்ப்படுத்தும். ஒரு நாள் அத்தைப் பாட்டி சாதம் பிசைந்து போடும்போது “பாட்டி கிரகணம்னா என்ன?” என்றேன். பாட்டி, ”அது வந்து சந்திர சூர்யா இருக்காளோல்யோ அவளா வருஷத்துக்கு ஒரு தடவை பாம்பு வந்து முழுங்கிடும்” அப்படின்னா; ”எந்தப் பாம்பு நாகப்பாம்பா?” என்றேன். சிரித்துக் கொண்டே ”நவக்கிரகத்துல இருக்கே ராகு கேது பாம்பு அதுதான்.”

    ”அப்பறம் விட்டுடுமா?” என்றேன். ”ஒரு கால கட்டம் பிடிச்சிண்டு அப்பறம் விட்டுடும்” என்றாள்.

    அன்று இரவு சொப்பனத்தில் பாம்பு என்னையும் முழுங்கியது. ஒரே இருட்டு; பயத்தில் வேர்க்கத் தொடங்கிவிட்டது. எழுந்து பார்த்தேன் நல்ல வேளை பாம்பு இல்லை!

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் கிரகணம் எங்கள் சாப்பாட்டுத் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரும். தாத்தா, ”மங்களம் நாளைக்குக் கிரகணம்…சூரிய கிரகணம்; மத்தியானம் பன்னண்டு மணியோடு சாப்பாடு நிறுத்திடணும்; போஜனாதிகள் மறுநாள் காலை சூரியோதயத்துக்குப் பின்னாலதான்” அப்படின்னு ஒரு குண்டைப் போடுவார்.

    அத்தைப்பாட்டி வேம்பு மாமாகிட்ட போய் எந்த எந்த நட்சத்திரத்து தோஷ நிவர்த்தி பண்ணனும்னு கேட்டுண்டு வா என்று அப்பாவை அனுப்புவார். அப்பா வேம்பு சாஸ்திரியிடம் கேட்டு நம் வீட்டில் யார் யாருக்குப் பட்டம் கட்டணும் என்று சொல்லி பனை ஓலை கொண்டுவருவார். சில சமயம் என் நட்சத்திரத்துக்கு வரும் என்று நினைக்கும் போது நாலாம் பாதம் உனக்கு இல்லை என்பார். கிரகணத்தின் போது அதை நெற்றியில் கட்டிக் கொண்டிருப்போம். கோவிலில் அர்ச்சனைப் பண்ணுவாள் அம்மா.

    சூரிய கிரகணம் அதிகாலையிலேயே பிடித்து விட்டால் சாயங்காலம் சகல துணிகளை நனைத்து எங்களை குளிக்கச் சொல்வார்கள். முதலில் அம்மா குளித்துவிட்டு தலைக்கு ஒரு ஈரிழைத் துண்டை கட்டிக் கொண்டு அவசரமாக உலர்த்திய புடவை கட்டி வெங்கலப் பானையில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு ஒரு அரிசி நொய் உப்புமா சுடச்சுடப் பண்ணிக் கூடத்தில் வைப்பாள். அதற்குப் பக்க வாத்தியம் வத்தல் மிளகாய் போட்டு அரைத்த தேங்காய் சிவப்பு சட்னி. அப்பறம் புளியைப் பிசைந்து ஒரு பச்சைக்குழம்பு பண்ணுவாள். அதில் கறிவேப்பிலை இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை எல்லாம் இருக்கும். தட்டில் போட்டவுடன் அந்த புளி தண்ணீரில் பச்சைமிளகாய் பிசைஞ்சு சாப்பிட நன்றாக இருக்கும்.

    வீட்டில் இருக்கும் பால் தயிர் தோசைமாவு எல்லாவற்றிலும் தர்ப்பை போட்டு வைப்பார்கள். அப்படிப் போடவில்லை என்றால் அவைகளை மறுநாள் உபயோகப்படுத்தக் கூடாது.

    சந்திர கிரகணம் சில சமயம் மிகத் தாமதாக வந்து அதிகாலை வரை நீடித்தால் மறுநாள் இரவு சந்திர தரிசனம் முடிந்து சாப்பிட வேண்டும் என்று கட்டளை.

    பட்டினி என்று நினைத்தவுடன் முகம் வாடும். ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து வேளை சாப்பாடோ, டிபனோ சாப்பிடும் எங்களை ஒரு நாள் முழுக்க பட்டினி என்றால் வேறு எந்த வேலையும் செய்யத் தோன்றாது.

    மறுநாள் இரவு சந்திரன் வந்தவுடன் பார்த்துவிட்டுச் சாப்பிடுவோம். சந்திர சூர்ய கிரகணங்களின் போது கிரகண மத்ய வேளையில் தண்ணீரில் நின்று காயத்திரி ஜெபம் ஜெபிப்பார்கள். மஞ்சள் காமலை, தேள்கடி, சுளுக்கு, மந்திரங்கள் உருப்போட பலன் கிடைக்கும் என்பார் அப்பா. மஞ்சள் காமாலைக்கு ஊசி வைத்து மந்திரிப்பார். தேள்கடிக்குத் தென்னம் விளக்கு மாறைக் கட்டித் தேள்கடித்த இடத்தில் தடவி மந்திரம் சொல்வார். “இறங்கியிருக்கா?” என்பார். தேள் கடித்தவர்கள் வலியால் துடித்தபடி தலை ஆட்டுவார்கள். கொஞ்சநேரம் கழித்து எல்லாம் நீங்கி சரியாய் நடந்து போவார்கள். சுளுக்கு மந்திரம் மட்டும் அஸ்தமனத்தில்தான் மந்திரிப்பார்.

    இலுப்பைக் கரண்டியில் விளக்கெண்ணெய் தடவிச் சுளுக்கிய இடத்திலும் தடவி மேலிருந்து கீழாக நீவி விடுவார் மந்திரம் ஜெபித்தபடி. முடிந்த வுடன் இடம்விட்டு எழுந்திருந்து காலை சுழற்றி உதறச் சொல்வார். இரண்டு நாள் மந்திரத்திற்குப் பிறகு சுளுக்கு சரியாகிவிடும்.

    எலும்பு முறிவு என்றால் மூன்றாம் நாள் சொல்லி விடுவார். நீ மாவுக்கட்டு போட வேண்டியதுதான் என்று. அப்பா இருந்த வரை எனக்கு அந்த மந்திரங்களை எனக்கும் கற்றுக் கொடுங்கள் என்று கேட்கத் தோணவில்லை. அந்த மந்திரங்கள் எல்லாம் அப்பாவோடு போய்விட்டது.

    அதே போல் வீட்டில் யாராவது பிள்ளையாண்டிருந்தால் (இன்றைய வாசகர்களுக்காக ஃபேமிலி வேயில் இருந்தால்) இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தெருவே அவர்களுக்கு அட்வைஸ் வழங்க ஆரம்பித்துவிடும். ராஜி கமலத்தை ரூமை விட்டு வெளியே வரச்சொல்லாதே! ஜன்னல் கதவை ரூம் கதவை எல்லாம் மூடி வைச்சுடு. அவ எதுவும் பின்னப்படுத்தக் கூடாது; நகம் பிச்சிப் போடக்கூடாது. ஸர்வ ஜாக்ரதையா பாத்துக்கணும். பட்டாமணியார் ஆத்தில இரண்டாவது பொண்ணுக்கு பிரசவத்துல பார்த்தா ஒரு காது அடிப்பக்கம் சேரவே இல்லை என்று பயமுறுத்துவார்கள்.

    என் மாட்டுப்பெண் ’ஃபேமிலி வே’ நாங்கள் எல்லாரும் அவளுக்கு வேண்டிய அறிவுரை சொல்லி விட்டோம். இந்த கிரகண வேளையில் பாத்திரம் அலம்ப வந்த ஈஸ்வரி (கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்) அம்மா சொல்ல மறந்துட்டுது; உங்க மருமகளை பத்திரமா இருக்கச் சொல்லுங்க என்றாள். நம்பிக்கைகள் மிக ஆழமாக வேரூன்றியிருக்கின்றன.

    என் பள்ளி நாட்களில் எனக்குச் சந்திர கிரகணம் சூரிய கிரகணம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் என் நம்பிக்கைத் தகர்த்தெறியும் விதத்தில் சூரியன் பூமி சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது நிழல்படுவது தான் கிரகணம் என்றார். அத்தைப் பாட்டிக்கு முதலில் இதைப் போய்ச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

    ஒரு ஞாயிற்று கிழமை பாட்டி கிரகண்ம்னா பாம்பு பிடிக்கறது எல்லாம் இல்லை சந்திரன் சூரியன் பூமி எல்லாம் ஒரு நேர்கோட்டுல வர்றது. ‘உளறாதடா“ என்றாள். நான் ஒரு சிம்னியை ஏற்றிக்கொண்டு வந்து என் தங்கைகளை இரண்டு பந்துகளை அந்த விளக்கு வெளிச்சத்தில் சுற்றிக் காண்பித்தேன் நிழல் வந்தது.

    பாட்டி நம்ப மறுத்தாள் “பெரியவா சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும் அதெல்லாம் மார்க்குக்கு மட்டும் படி” என்றாள். நான் சொன்னதைப் பாட்டி புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தமாக இருந்தது. இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படியும் மனிதர்கள்!

    என் பாட்டி சொன்னது எனக்கு இத்தனை வருடத்திற்குப் பிறகு அனுபவங்களில் தெரிந்தது மறைபொருளாய் நம் முன்னோர்கள் காந்த சக்தியின் கதிர் வீச்சுக்கள் பற்றிப் புரிந்து சொல்லியிருக்கிறார்கள் என்று.

    கிரகணத்தின்போது ஒரு படி அரிசிக்குள் ஒரு இலுப்பைக் கரண்டியைச் சொருகி விட்டால் காந்த சக்தியில் படி கரண்டியில் நிற்கும் என்றும் கிரகணம் முடியும் வரை அது இருக்கும் என்றும் சொல்வார் அப்பா. நானும் அப்படி பண்ணி எல்லோருக்கும் காட்டுவேன். பிறகுதான் தெரிந்தது சாதாரண நாட்களிலும் நிற்கும் என்று.

    நான் காலேஜ் படிக்கும்போது கிரகணம் வந்தால் அம்மா எனக்குச் சில சலுகைகளைத் தந்தாள். அந்த நேரத்தில எதுவும் சாப்பிடாதே என்று சொல்வாள். நண்பர்களுடன் டீயும் மசால் வடையும் சாப்பிடுவதில் ஒரு பெருமிதம்.

    இன்று சந்திர கிரகணம் என் பெண்ணிடம் நான் சொன்னேன். அவள் நான் பார்த்துக்கிறேன் அப்பா என்றாள். பர்கர் பிட்ஸா எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

    கிரகணத்தின் போதே இந்த பதிவைச் செய்ய வேண்டும் என்று ஆசை. உடல் ஜுரத்தால் அவதிப்பட்டாலும் ஆர்வீஎஸ் முந்தி இதைப் போட வேண்டும் என்று ஒரு கங்கணம்.

    நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா? ஆமாம் கிரகணத்தின்போது ஃபேஸ் புக் போகலாமா என்று பாம்புப் பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறதா?

    Share
  • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    Unnidathil Ennai Koduthen

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.. உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்.. பல்லவியில் உள்ள சுகம் அனுபவிக்க இன்னுமொரு பிறவி வேண்டுமோ? இந்த வரியை வாசிக்கும்போதும், பாடலைக் கேட்கும்போதும் உள்ளத்தில் சுகம் ஆறாகப் பெருகி வருகிறது! இசையின் கோர்வை பாடலை உச்சத்திற்கு இட்டுச் செல்ல.. குரலின் இனிமை நம்மை ஏதோ இன்பத்தீவிற்குக் கடத்திச் செல்கிறது.

    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது

    சரணமா? இது சரம் சரமா? வாரத்தைகளில் உள்ள எளிமை.. இசையில் விளையும் இனிமை.. ரசித்துக் கேளுங்கள்.. ஆனந்த பைரவியா அல்லது மோகனமா? நானறியேன்..

    இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
    நினைத்தால் போதும்.. வருவேன்
    ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

    மொத்தத்தில் இங்கே பெண்மை பேசுகிறது! வன்மையைத் தொட்டு ஒரு பெண்மையை பேச வைக்கும் கவிஞரின் திறமெண்ணி வியக்கிறேன்!

    இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
    இரவும் பகலும் கலையே
    ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

    எத்தனை எளிமையான சொற்கள்.. நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே.. கவி ஆட்சி நடத்துகின்றார்! பாடலை உணர்ந்து கேளுங்கள்.. காதலின் பவித்ரம் புரியும்!

    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது

    கனகச்சிதமான வார்த்தைகள் நெருக்கமாய் தொடர்ந்துவர.. கவித்துவம் ததும்பி காதலைச் சொல்லி நமக்கு மயக்கம்தர..

    என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
    ஆசையில் விழுந்தேன் அங்கே
    ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

    கனவா நனவா.. கவிதைச் சுவையா? பாட்டு ஒன்றுக்குள் பல்சுவை தருகின்ற பல்கலைக்கழகம் கண்ணதாசன் எனலாமா?

    கவிஞர் எழுதிய திரைப்பாடல்களின் பல்லவிகள் பல நேரங்களில் திரைப்படங்களாய் வெளியாகின என்பதற்கு சான்றுகள் பல உண்டு! இதோ அவ்வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்..

    http://youtu.be/DFg_IWrwi5U
    காணொளி: http://youtu.be/DFg_IWrwi5U

     

    படம்: அவளுக்கென்று ஒரு மனம்
    எழுதியவர்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    பாடியவர்: எஸ்.ஜானகி
    …………………………………………………………………………..

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
    நினைத்தால் போதும்.. வருவேன்
    ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
    வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
    இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
    இரவும் பகலும் கலையே
    ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
    என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
    ஆசையில் விழுந்தேன் அங்கே
    ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

     

    kannadasnmsv tkrjanakiAvalukendru Oru Manam

     

     

     

     

     

     
    கவிஞர்.காவிரிமைந்தன்
    துபாய்

    Share