கிரேசி மோகன்
நன்றி : காமகோடி – தீபாவளி மலர்
கிரேசி மோகன்

பார்த்தசாரதி பெருமாள்
———————————————
கவுத்த தலையுடன், காண்டீபம் சாய,
தவித்த விஜயனைத் தேற்றி, -சவுக்கினை,
வீசிப் புவிபார, தூசியைத் தட்டுகிறான்,
வாசிக்க கீதை வடித்து’’….
மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி
ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம் -பூசைக்கு,
ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
வாழ்வோனை நெஞ்சே வணங்கு…..
திருவல்லிக் கேணி வேதவல்லித் தாயார்
———————————————————————-
வேதவல்லித் தாயே, வினைதீர்க்கும் செங்கமலப்,
பாதவல்லி, பார்த்தன்தன் சாரதியின் -கீதவல்லி,
ஏதமில்லா ஞானத்தை, ஏதுமில்லா மோனத்தை,
சாதகனென் சிந்தையில் சேர்….கிரேசி மோகன்….
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
++++++++++
தீவிரக் காந்த ஆற்றல் கொண்டது
நியூட்ரான் விண்மீன் !
பூதப் புயல் உண்டாகி நிறை மிகுந்து
பொசுங்கும் விண்மீன்கள் !
பூமிக்கருகில் நெருங்கினால்
மாந்தரின்
உடற் மூலக்கூறுகளை முறித்து
முடமாக்கி விடும் !
உயிரினத்துக்குச்
சிதைவை
உண்டாக்கு பவை நியூட்ரான்
விண்மீன்கள் !
வாயு எரிசக்தி வற்றி
ஆயுள் முறியும் விண்மீன்கள் !
எரிசக்தி தீர்ந்து வற்றிய பிறகு
வறிய விண்மீனாகி
சிறிய தாகி
விரைவாகச் சுழன்று
பரிதி போல் திணிவு நிறைப்
பன்மடங்காய்ப் பெருத்து
ஆயுள் குன்றிச்
செத்தழி யாமல் மீண்டும்
புத்துயிரில் பிறக்கும் !
++++++++++++++
ஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி [Fermi Gamma-Ray Space Telescope] நியூட்ரான் விண்மீன் எப்படி உருவாகிறது என்று புரிந்து கொள்ள, அடிக்கடி தோன்றும் நுண்ணிய வெடிப்புகளைப் படமெடுத்துப் பதிவு செய்து தகவல் தந்துள்ளது. அதற்கேற்ற கருவி ஃபெர்மி வெடிப்பு மானி [Fermi Gamma-Ray Burst Monitor (GBM)] என்பது தெளிவாகிறது.
அன்னா வாட்ஸ் [வானியல் பௌதிக விஞ்ஞானி, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகம்]
ஒரு நியூட்ரான் விண்மீனை அதிர வைக்கப் பேரளவு காந்த சக்தி தேவைப்படுகிறது. பூமியில் அதற்கு ஒப்பீடாய்ச் சொல்லப் போனால், இதுவரைப் பெரியதாய்ப் பதிவு செய்யப் பட்ட பயங்கர நில நடுக்கமாகிய 1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 ரிக்டர் அளவுப் பூதப் பூகம்பத்தைக் கூறலாம். அந்தப் பேரழிவு அளவுக்கோலின்படி ஒரு நியூட்ரான் விண்மீன் கொந்தளிப்பு அதிர்ச்சி [Starquake Flare] ரிக்டர் அளவு : 23 என மதிப்பிடப் படுகிறது !
அன்னா வாட்ஸ் [வானியல் பௌதிக விஞ்ஞானி]

நியூட்ரான் விண்மீன் வெடித்து தீப்புயல் எழுச்சி
2009 ஜனவரி 22 இல் நாசாவின் ஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி [Fermi Gamma-Ray Space Telescope] ஒரு தீவிரக் காந்த ஆற்றல் உடைய நியூட்ரான் விண்மீனிலிருந்து, பேராற்றல் கொண்ட ஒரு திடீர் தீப்புயல் வெடிப்பு நேர்ந்ததைக் கண்டுபிடித்திருந்தது. இப்போது [2014] வானியல் விஞ்ஞானிகள் அந்தப் பதிவுத் தகவலை ஆராய்ந்து, காந்த விண்மீனில் [Magnetar] தள நடுக்க அலைகள் [Seismic Waves] உண்டாகி அதை முழுதாய் முறித்து வருவ தாக அறிந்துள்ளார்கள். தீவிரக் காந்த விண்மீன் மேற்தளம் முறிவுற்றால் பேரளவு சக்தி எழும் வெடிப்புகளைத் தூண்டிவிடும். அப்போது நியூட்ரான் விண்மீனில் தெரியும் நெளிவு, சுழிவுகளையும் ஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி பதிவு செய்துள்ளது. கடந்த 40 ஆண்டு களாக மூன்று முறை [1979, 1998, 2004] தீப்புயல் எழுச்சிகள் தெரிந்துள்ளன.
ஃபெர்மி காமாக் கதிர் விண்ணோக்கி [Fermi Gamma-Ray Space Telescope] நியூட்ரான் விண்மீன் எப்படி உருவாகிறது என்று புரிந்து கொள்ள, அடிக்கடி தோன்றும் நுண்ணிய வெடிப்புகளைப் படமெடுத்துப் பதிவு செய்து தகவல் தந்துள்ளது. அதற்கேற்ற கருவி ஃபெர்மி வெடிப்பு மானி [Fermi Gamma-Ray Burst Monitor (GBM)] என்பது தெளிவாகிறது.
பிரபஞ்சத்தில் நியூட்ரான் விண்மீன்களே திரட்சி மிக்க, தீவிரக் காந்தமுள்ள, மிக வேகமாய்ச் சுழலும் எரிசக்தி வற்றிய மரண விண்மீன்கள் ! அவை நிறை பெருத்து முறிந்து சூப்பர் நோவாக வெடிக்கின்றன. ஒரு நியூட்ரான் விண்மீன் அரை மில்லியன் பூமி நிறையைத் திரட்டி 12 மைல் விட்டக் கோளமாகச் சுருங்குகிறது ! இதுவரை 23 காந்த விண்மீன்கள் [Magnetars or Neutron Stars] கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காந்த சக்தி பூமியின் காந்த தளத்தை விட டிரில்லியன் தடவை [Trillion Times (10^12)] ஆற்றல் உள்ளது. கொந்தளிப்பு அதிர்ச்சி நிகழ காந்த விண்மீனில் அதைவிட 1000 மடங்கு ஆற்றல் தேவை !

காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism). குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) ! அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது ! அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.
விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)
“பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம். அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் ! அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும். அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன ! பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் ! அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”
டோனால்டு ஃபைகர் (Donald Figer (Rochester Institute of Tecnology, USA)

புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்
1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை ! காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) ! அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்த தளமே தேய்வாகிப் பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.
இதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன. முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப் படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars). இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20. அதன் கணிக்கப் பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம். பூமியின் காந்த தளம் : அரை காஸ். மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத் துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

காந்த விண்மீன்களின் இயற்கையான அமைப்பு
பூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை ! பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்). ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது. ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது. பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன. காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது ! அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் ! அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் ! அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.

காந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்
பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை. 600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது ! பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது ! 2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது ! எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன ! சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) ! அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) ! 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் ! 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் !

காந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன ?
நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது. அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது. ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது. ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது ! பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள். சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது ! சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது ! 10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது ! பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனா கவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது !

மாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் !
கடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன ! மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன. சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும். சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும். ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன. இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு ! அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது. காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் ! சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன. அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன !

நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்
பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் ! பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர் நோவாவாக வெடித்து விடுகின்றன ! அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது ! அப்படிச் சிதை வாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான் களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது ! அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !
சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் ! தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் ! இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் ! அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது ! கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.

[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
10 (a) http://www.thinnai.com/?
11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
15. http://www.space.com/21347-
16. http://www.britannica.com/
17. http://www.dailygalaxy.com/my_
18. http://en.wikipedia.org/
19. http://en.wikipedia.org/wiki/
20. http://en.wikipedia.org/wiki/
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com ] October 25, 2014
Preview YouTube video Pulsars, Magnetars, Black Holes (Oh My!): The Wickedly Cool Stellar Undead
Preview YouTube video Magnetars – brighter than a galaxy, heavier than the Sun
Preview YouTube video SLAC All Access: Fermi Gamma-ray Space Telescope
–சு.கோதண்டராமன்.
முதல் நிலையில், பெருஞ் செயல்களுக்குத் தேவையான சக்திகளும் தன்னலமில்லாத உழைப்பும் கொண்ட மனிதர் தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டனர். அடுத்ததாக, நதி, சோமம், மேகம் போன்ற உயிரற்ற பொருட்களும் அவை மனிதர்க்கு உதவி செய்வதால் தேவத் தன்மை அளிக்கப்பட்டன. அவ்வாறே உதவியும் செய்து நல்வாழ்வுக்கு ஒரு உதாரணமாகவும் விளங்கும் மிருகமாகிய குதிரை தெய்வ நிலைக்கு உயர்ந்தது பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேதம் கூறும் சில அறிவுரைகள்:
1. உடலளவிலும் மனதளவிலும் எப்பொழுதும் வலிவுடையவனாக இரு.
2. இடையூறுகளைக் கண்டோ, எதிர்ப்புகளைக் கண்டோ அஞ்சாமல், அவற்றைத் தாண்டி இலக்கை அடையும் வரை போய்க்கொண்டே இரு.
3. சோம்பலைத் தவிர்.
4. செயல்பாட்டில் வேகம் காட்டு.
5. இடப்பட்ட கட்டுப்பாடுகளால் வேகம் குறையாதிரு.
6. எஜமானனிடம் விசுவாசமாக இரு. எதிரிகள் கண்டு அஞ்சும்படியான நிலையில் இரு.
7. நல்லோர் இணக்கம் நாடு. கீழோர் நட்பைத் தவிர்.
இவற்றைக் கடைப்பிடிப்பதால், மனிதர்க்குச் செல்வம், உணவு ஒளி சேருகிறது. துன்பங்களைக் கடக்கும் வலிமை கிடைக்கிறது என்று வேதம் கூறுகிறது.
இந்தப் பண்புகளைக் கொண்ட ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டால், நாம் அவற்றைப் பின்பற்றுவது எளிதாக இருக்கும் அல்லவா? அதற்காக வேதம் அடையாளம் காட்டுவது “ததிக்ரா” என்னும் குதிரையை.
உணவு தந்து உதவுபவை, தம்மையே உணவாகத் தருபவை, விவசாயத்தில் உதவுபவை, சுமை தூக்கி உதவுபவை என்று மனிதர்க்கு உதவும் மிருகங்கள் பல உண்டு. ஆனால் விவசாயத்திலும் உதவி, போர்க்களத்திலும் உதவி, தன் உயர் பண்புகள் மூலம் மக்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும் மிருகம், சுமையைச் சுமந்து கொண்டே விரைந்து செல்லக் கூடிய மிருகம் ஒன்று உண்டென்றால் அது குதிரை மட்டும்தான். இது மனிதரின் நீண்ட நாள் நண்பன். இதன் பண்புகள் வியக்கத் தக்கன. ரிஷி வாமதேவ கௌதமர் அதை வியந்து பாடிய பாடல்களின் (ரிக் வேதம் 4 ஆம் மண்டலம், 38, 39, 40 வது சூக்தங்கள்) சுருக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.
ததிக்ரா எவ்வளவு அழகான பிராணி! அதன் மேனி பளபளக்கும் வண்ணமயமானது. அதனிடம் ஒரு ராஜ கம்பீரம் உள்ளது. அது நமக்குப் போர்க்களத்திலும் பயன்படுகிறது. விவசாயத்திலும் பயன்படுகிறது.
போர்க்களத்தில் அது அஞ்சுவதில்லை. வீரர்கள் உற்சாகத்தில் குதிப்பதைப் போல இதுவும் கால்களை உயரத் தூக்கி ஆரவாரிக்கிறது. அது ஓய்வை விரும்புவதில்லை. அதனால் சற்று நேரம் கூட சும்மா இருக்க முடியாது. அதைக் கட்டிப் போட்டு வைத்தால், கால்களால் புழுதியை வாரி தன் மேலேயே இறைத்துக் கொள்கிறது.
தன் எஜமானன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கிறது. ஆயிரம் பேர் உள்ள கூட்டமாக இருந்தாலும் ஒருவரும் அதைத் தடுக்க முடியாது. அதன் கனைப்பு இடி போல எதிரிகளுக்கு அச்சம் தருவதாக உள்ளது. போர்க் களத்திலிருந்து வெற்றியுடன் மற்றவர்கள் பின் தொடர அது திரும்பும்போது அதன் முகத்தில் தெரியும் கம்பீரமே தனி.
ரதத்தை விரைந்து இழுத்துச் செல்கிறது. வழி சந்து பொந்துகளாக இருந்தாலும், அவற்றினூடே புகுந்து புறப்பட்டு காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுகிறது. சமவெளியில் சென்றால் கூட அது செல்லும் வேகத்தைப் பார்த்தால் மலைச் சரிவில் இறங்குவதைப் போலத் தோன்றுகிறது. அது வலிமை மிக்கது. அதன் வேகத்தைக் காற்றுக்கு ஒப்பிடலாமா? கழுகுக்கு ஒப்பிடலாமா?
கழுத்திலும், வாயிலும், பக்கங்களிலும் அதற்குப் பல கட்டுகளை இட்டாலும் அதன் வேகம் தடைபடுவதில்லை.
அது எப்பொழுதும் உயர்ந்தோருடனேயே பழகுகிறது. தாழ்ந்தோரை அது வெறுக்கிறது. அது தன் எஜமானரிடம் விசுவாசமாக உள்ளது.
குதிரையின் சிறப்புகளைப் பேசும் இதில் மனிதர்க்கு எங்கே அறிவுரை இருக்கிறது என்ற வினா எழலாம். மறை அல்லவா? மறைபொருளாக இருப்பது ஆழ்ந்து நோக்கினால்தான் புலப்படும்.
ததிக்ரா மனிதர்க்கு வழிகாட்டி. அதைப் போற்றுபவர்களின் பாவத்தைத் தேவர்கள் போக்குகிறார்கள், அது நம் சக்திக்கும் வலிமைக்கும் ஊற்று என்று மற்றோரிடத்தில் கூறுவதன் மூலம் அதன் சிறப்பியல்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திய வாமதேவர், துன்பங்களைத் தாண்டி எம்மை அழைத்துச் சென்றதற்காகத் ததிக்ராவை நான் தினந்தோறும் காலையில் போற்றுகிறேன் என்றும் பேசுகிறார்.
இவ்வாறு குதிரையின் சிறப்புகளைப் புகழ்ந்த அவர் போர்க்களத்திலும் வயல்களிலும் வெற்றி பெறுவதற்காகவும் பகைவர்களை வெல்வதற்காகவும் மனித குலத்துக்கு தேவர்கள் தந்த ஒரு நன்கொடை இது, இதற்காக நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று கூறுகிறார்.
போர்க்களத்தில் குதிரையின் பயன்பாடு பற்றி நாம் நன்கு அறிவோம். வயல்களில் வெற்றி பெறுவதற்காக என்று கூறுவதிலிருந்து அவர் காலச் சூழ்நிலையில் குதிரை விவசாயத்துக்குப் பயன்பட்டிருப்பதை அறிகிறோம். போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்காக என்று கூறிவிட்டு, மீண்டும், பகைவர்களை வெல்வதற்கு என்று அவர் கூறியிருப்பது ஏன்? இது கூறியது கூறலாக உள்ளதே என்று நினைக்கிறோம்.
ஆழ்ந்து நோக்குகையில் நமது வாழ்வியல் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள நமது மனக் கேடுகளையே அவர் பகைவர் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் என்பதை அறிகிறோம்.
வாமதேவரின் இந்த மூன்று சூக்தங்களின் மற்றொருசிறப்பு – வேதத்தில் குதிரையைக் குறிக்க வழக்கமாக அசுவ என்ற சொல்தான் பயன்படுகிறது. ஆனால் இந்த 21 பாடல்களில் மட்டும் ததிக்ரா, ததிக்ராவன் என்ற சொற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
ததிக்ரா என்பது ஒரு தேவலோகக் குதிரையின் பெயர் என்ற தோற்றம் ஏற்படும்படியாகத்தான் அது பல இடங்களிலும் ஆளப்பட்டுள்ளது. ஆனால் யாஸ்கரின் நிகண்டிலும் மகீதரரின் யஜுர்வேத உரையிலும் ததிக்ரா என்பது ஒரு தனிப்பட்ட குதிரையின் பெயராக இல்லாமல், குதிரை என்ற இனத்தைக் குறிக்கும் பல சொற்களில் ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. சொல்லின் வேரை ஆராய்ந்தால் இவர்கள் கூற்று உண்மை என்பது தெரியும்.
ததி என்றால் தாங்குவது, க்ரம் என்றால் விரைந்து செல்வது. எனவே, சுமை தாங்கி விரைந்து செல்லக் கூடிய ஒரே உயிரினம் குதிரைதான் என்பதைச் சுட்டும் வகையில்தான் அதை, ததிக்ரா என்ற பெயரால் அழைப்பது தெரிகிறது. வாழ்க்கைச் சுமைகள் நமது வேகத்தைக் குறைக்கக் கூடாது என்பது இதன் உட்பொருள். தன் சிறப்புகளின் காரணமாகக் குதிரை தேவ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தினசரி சந்தியா வந்தனத்தில் சொல்லும் மந்திரங்களில் ஒன்று இது. பாடப் பாட வாய் மணக்கும்படியான புகழ் கொண்ட ததிக்ரா என்ற வெற்றிகரமான குதிரையைப் போற்றுவோம். அது நமது ஆயுளை நீட்டிப்பதாக.
ததிக்ராவ்ணோ அகார்ஷம் ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத்.
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அல்லவா? குதிரையின் இத்தகைய உயர்நலங்களைப் பேசுவதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்பது இதன் பொருள்:
ததிக்ரா சூக்தங்களின் கடைசி மந்திரம் ஆழ்ந்த தத்துவப் பொருள் உடையது.
அவனே ஒளியில் வாழும் சூரியன். ஆகாயத்தில் வாழும் வசு. வேள்விக் கூடத்தில் தேவர்களை அழைப்பவன். வீட்டின் விருந்தினன். அவன் மனிதரிடத்தில், உயர்ந்த இடத்தில், ருதத்தில், விண்ணில், வசிக்கிறான். அவன் நீரில் தோன்றியவன். பசுக்களில் தோன்றியவன். ருதத்தில் தோன்றியவன். மலையில் தோன்றியவன். அவனே ருதம்.
என்று கூறுவதன் மூலம், பல பெயரிட்டுப் பல தேவர்களை வணங்கினாலும் எல்லாம் ஒன்றே. என்றும் மாறாத, மானிடரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத இயற்கை நியதியே எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது என்கிறார். குதிரையினிடத்திலும் அதன் செயல்பாட்டைக் கண்டு வியந்து அதனைப் பரம்பொருளாகக் கருதிப் போற்றுகிறார் வாமதேவ கௌதமர் .
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புவோர் அனைவராலும் பின்பற்றத் தகுந்தவை ததிக்ராவின் உயர்பண்புகள்.
படம் உதவிக்கு நன்றி:
https://tamilandvedas.files.wordpress.com/2014/08/meso-chariot-horse-british-museum-161.jpg
http://namakirthan-therajamarga.blogspot.com/2008/10/purpose-reason-of-doing-ashwametha.html
சந்தர் சுப்ரமணியன்
சித்திரையில் சூரியனின் சிரிப்பைக் கண்டு
.. சிலிர்த்தபடி வரவேற்றாள் செம்பெண் பூமி;
நித்திரையை உடைத்தொழிக்கும் நெருப்பைப் பேதை
.. நெடுநாளாய் நினைந்திருந்தாள்; நிறைந்த பெண்மை
அத்தனையும் அவன்விழிக்கே அளிக்க வேண்டி
.. அவளுடலைத் தினஞ்சுழற்றி அழகு சேர்த்தாள்;
இத்தரையின் சுழல்நோக்கி இளகி வெப்பை
.. இளவேனிற் பருவமென ஈந்தான் வெய்யோன் (1)
வைகாசி வரும்வரையில் வளைவான் நோக்கி
.. வஞ்சியவள் காத்திருந்தாள் வளைவான் என்றே;
பொய்யாகிப் போய்விடுமோ புகைந்த காதல்?
.. பொழுதெல்லாம் நினைத்துமனம் புகைந்த பின்னர்
‘நொய்யாதென் நெஞ்சடைந்தீர் நீரே’ என்று
.. நுண்மடலாய் ஆவியதில் நீரே சொல்லாய்
எய்தாளே வானோக்கி எழும்பும் ஆவி
.. இளவேனிற் பருவமதில் எழும்பும் போதே (2)
ஆனியெலாம் அவளனுப்பும் அன்பின் சொல்லை
.. அசையசையாய் கேட்டபினும் அவள்தான் அந்த
தேனினிய மடலனுப்பும் சொந்தம் என்றே
.. தெளியாத பகலவனும் சோர்ந்தான் உள்ளம்,
ஏனெவளோ எழுதுகிறாள், என்றும் நாம்முன்
.. எதிர்பார்க்கும் நிலமடந்தை எழுதாப் போதில்?
மோனவுளம் இதைநினைக்க மூச்சின் வெப்பே
.. முதுவேனிற் பருவமென முன்னர்த் தோன்றும் (3)
ஆடிவர அங்குலவும் அடர்ந்த மேகம்
.. அதிலீரம் படிந்தமடல், அழகுக் காலை;
ஓடிவரும் கருமுகில்கள், ஒன்றைத் தள்ள
.. உறவாடும் புவிகண்டான்; விண்ணை நோக்கிக்
கோடியென மடல்விடுக்கும் கோதைச் செம்மண்!
.. கூடிவிழிச் சிவந்ததுவோ? கொள்ளை நாணம்!
மூடுமனக் கண்திறந்து முன்காண் மண்ணில்
.. முதுவேனிற் பருவமென முகிழ்த்தான் வெய்யோன் (4)
ஆவணியில் அவள்மடல்கள் அனைத்தும் சேர்த்தே
.. ஆதவனும் நனைகின்றான், அன்பாய் வானில்
பூவழியச் செய்கின்றான்; பொழியும் மாரிப்
.. பூவிதழில் தன்விருப்பைப் பூக்கச் செய்தான்;
தாவியெழும் நீர்த்துளியில் தாக மாக
.. தங்கிநின்ற அவன்விருப்பு தாளில் வீழ
காவியுடை துறக்குமுடல் காதல் தன்னை
.. கார்காலம் முழுவதுமண் காத்து நிற்கும் (5)
புரட்டாசி மழைகண்டாள்; புரண்டங் கோடும்
.. புதுப்புனலாய் அகமகிழ்ந்தாள்; பொங்கும் பூவின்
திரட்டாலே துகிலுடுத்தாள்; செவ்வான் நீரைத்
.. தேக்குதற்கே நெஞ்சென்றாள்; தேடுந் தேனைத்
தரத்தானே மலரணிந்தாள்; தாகங் கொண்டே
.. தலைநோக்கிப் பொழிநீரை தானே ஏந்த
கரங்காட்டும் மரங்கொண்டாள்; கானில் எங்கும்
.. கார்காலம் வந்தவிதம் காட்டி நின்றாள் (6)
ஐப்பசியும் வந்ததவள் அன்பை ஊட்ட
.. ஆதவனை அருகழைத்தாள்; அடுப்பை மூட்டிக்
கைப்பதத்தைக் காட்டுகின்றாள்; கானே பானை,
.. கலமெங்கும் மலர்பொங்கும்; கடக்கும் ஆறே
நெய்ப்பரப்பாய் நெளிந்தோடும்; நிற்கும் வான்வில்
.. நீளகப்பை; மலர்வாசம் நெய்யில் தோயக்
குய்ப்புகையாய் முகிழெலுந்து கோலம் காட்டக்
.. குளிர்கால விருந்துணவைக் கோதை தந்தாள் (7)
கார்த்திகையில் நிலமளித்த காதற் சோற்றைக்
.. களித்துள்ளம் மகிழ்கின்றான் கண்ணால் வெய்யோன்
நீர்த்துகளில் நிலம்பதித்த நினைவின் ஈரம்
.. நிற்கின்ற நனவிலெலாம் நெகிழக் கண்டான்;
போர்த்தமுகில் எடுத்துலகைப் பொத்திப் பொத்திப்
.. பொன்போலக் காக்கின்றான்; பொழியும் வெப்பின்
கூர்தரையைக் கிழிக்கவொளி குறுக்கிக் கொண்டான்;
.. குளிர்காலம் எனும்பருவ கோலந் தந்தான் (8)
மார்கழியும் வந்ததங்கு வான மெல்லாம்
.. மலர்விரித்த வெண்பஞ்சு மஞ்சத் தோற்றம்;
வேர்கழித்துப் பூவனமே விண்ணில் சேர்ந்த
.. விந்தையிதோ? நிலமடந்தை வேணி சூட்ட
நார்தொடுக்கும் பகலவனின் நறும்பூ மாலை
.. நாரேறத் தாரகையோ? நனைக்கும் பாலோ?
மோர்பனியாய்ப் பொழிகிறதோ? முகிலின் தோய்வே
.. முன்பனியாய்ப் பெய்கிறதோ? முத்த நீரோ? (9)
தைக்கென்றே காத்திருந்தாள் தையல், கொஞ்சம்
.. தன்நடனம் காட்டுதற்காய்; தனியே நின்று
துய்க்கின்றான் அவன்பொருட்டு தோகை நெல்லைத்
.. தோதாய்க்காற் சலங்கையெனத் துணையாக் கொண்டு
வைக்கின்றாள் பாதமவள்; வனப்புச் சேர
.. வயலெங்கும் நாட்டியந்தான்; வானின் வெய்யோன்
மொய்க்கின்ற வண்டானான்; மோக மூட்டும்
.. முன்பனியே தேனாகும், முன்னர்ப் பூவே (10)
மாசியதும் வந்ததுகாண்; மங்கை சொல்லில்
.. மனங்களிப்பான் பகலவனும்; மனத்தில் ஆழ்ந்த
ஆசைமொழி அவன்முடிக்க ஆகும் நேரம்,
.. அந்நேரம் பின்னிரவே; அலையும் புள்ளின்
ஒசையினால் துயில்விடுப்பான்; உழைக்க வேண்டி
.. ஓடிடுவன்; சென்றபினும் ஒருத்தி மட்டும்
பேசியதை முணுமுணுக்கப் பேச்சின் மௌனம்
.. பின்பனியாய்ப் பொழிகையிலே பிறக்கும் நாளே (11)
பங்குனியில் படர்கொடியாய்ப் பலநாள் காதல்,
.. பார்க்காத இரவெல்லாம் பசலை மண்ணில்;
அங்கமெலாம் அவள்நினைவே அடர்ந்தி ருக்க
.. ஆதவனும் அயர்ந்திருக்க அல்லின் நீட்சி;
தங்கிவிட வேண்டுமென தரணி கெஞ்சத்
.. தாமதமாய்க் கதிரெழும்பும், தண்மை நீங்கப்
பொங்கியெழும் புத்தொளியாய்ப் புதிய போக்கில்
.. பின்பனியாய் மின்மினுக்கப் பேசும் பூவே (12)
கிரேசி மோகன்
அவன்தான் குமரன், அவன்தான் கிழவன்,
அவன்தான் அவன்தங்கை ஆயி, -அவன்தான்,
சிவன்தான், அயன்தான், தவம்தான், வரம்தான்,
அவன்தான் அனேகமான அது”….கிரேசி மோகன்….
— கே.ரவி.
சொற்களுக்குள் ஏறிக் கொண்டேன். என்ன செய்யப் போகிறாய்?
தம்பி, உனக்கும் எனக்கும் பதில் சொல்லவே வந்தது ஒரு கவிதை, 1978-ல்:
என்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
மேகங்களிலே தேகம் இழைத்து மேனி படைத்திடலாம்
மின்னலைப்போல் துள்ளித்துள்ளி வானில் குதித்திடலாம்
நிலாப்பிறையைத் துந்துபியாக்கி நாதம் எழுப்பிடலாம்
வானவில்லை வளைத்துக் கட்டி ஆடை நெய்திடலாம்
என்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
நீர்க்குமிழிக்குள் நினைவிழந்துபோய் நித்திரை செய்திடலாம் – அங்கு
நேர்ப்படுகின்ற காற்றை நமக்குக் காவல் அமர்த்திடலாம்
நட்சத்திரங்களை எல்லாம் நமது வார்த்தை வயிரங்களால்
வெட்கப்பட வைத்து நெஞ்சம் விம்மிப் புடைத்திடலாம்
என்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
உயிர்க்கருவுக்குள் ஊடுருவிப்போய் உண்மை யறிந்திடலாம் – அங்கு
வடிவம் எடுத்து வளரும் புதிய மாயம் உணர்ந்திடலாம்
உலக விளிம்புக் கோடிச்சென்றே உருண்டு விழுந்திடலாம்
விழுந்து கொண்டே வீரக் கதைகள் பேசிக் களித்திடலாம்
ஆனால் என்
சொற்களூக்குள் ஏறிக்கொண்டால் மீண்டுவர மாட்டாய்
சொற்களோடு சொற்களாகக் கரைந்துபோய் விடுவாய்
விழிதொடாத இடமெலாமென் மொழிநுழைந்து செல்லும்
அழிவிலாத அட்சரங்கள் அமரவாழ்வு நல்கும்
சொற்களுக்குள் ஏறிக்கொள் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் – என்
கற்பனைப் புரவியையுன் கண்களில் பூட்டுகிறேன்
அதோ அந்தக்
கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வரும்
கானல் நீரை எப்படிக் கடப்பது? கானல் நீர் ஒரு தோற்ற மயக்கம்தானே. அது மெய்யில்லையே! பிறகு அதை எப்படிக் கடந்து செல்வது? இருக்கும் ஒன்றைக் கடப்பதற்கு முயற்சி செய்யலாம். இல்லாத ஒன்றைக் கடக்க என்ன செய்ய முடியும்? இல்லாத ஒன்றைக் கடப்பது வெகு சுலபம். அது இல்லை என்பதை உணரும் கணமே அதைக் கடந்து சென்று விடுகிறோம். கானல் நீரைக் கடந்து செல்கிறோமோ இல்லையோ, இப்படிப்பட்ட வியாக்யான, விளக்கங்களை எல்லாம் கடந்து சென்றால்தான் கவிதையாகிய கற்பகச் சோலை வரும்!
புரிகிறது. ஆனாலும் அறிவு, அதான் நம்ம புத்தி சிகாமணி, எப்பொழுதும் இப்படிப்பட்ட வியாக்யானங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். மனம், அதாங்க நம்ம மனோன்மணி, பாவம், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் மாலையில், சென்னை, மெரினா கடற்கரை சாலையில் நான் காலார நடந்து சென்று கொண்டிருந்தேன். என் கூட ஒரு நங்கையும் நடந்து வந்தாள். ஒளவையார் சிலையருகே வந்ததும், ‘வாக்குண்டாம்’ என்ற செய்யுளை உரக்கச் சொல்லிக் கொண்டே நடந்தேன். ஏன் என்று கேட்க வேண்டாம். நான் எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும் அதை எப்படியாவது ஒரு கவிதையுடனோ, செய்யுளுடனோ தொடர்பு படுத்திவிடும் என் மனம். இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்குச் சமீப கால எடுத்துக்காட்டு ஒன்று சொல்கிறேன். எனக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்த மாத்திரையை என் ஓட்டுநர் சிவசங்கரன் வாங்கி வந்து கொடுத்ததும் அந்த மாத்திரையின் பெயரைப் பார்த்தேன். ரேஜோ டி (Razo D) என்று எழுதியிருந்தது. உடனே, ‘ரேஜோ, ரேஜோ டி என்னோட மருந்து’ என்று ‘யாரோ யாரோடீ’ என்ற திரைப்படப் பாடல் மெட்டில் என் மனம் முணுமுணுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பைத்தியம் முற்றி விட்டது.
சரி, மீண்டும் மெரினா கடற்கரை, ஒளவை சிலை, வாக்குண்டாம் என்ற சமாசாரத்துக்கு வருகிறேன். நான் அந்தச் செய்யுளைச் சொன்னதும் அருகில் நடந்து வந்த நங்கை அதன் அர்த்தத்தைக் கேட்டாள். அதை அப்படியே சொன்னாலே போதுமே, பொழிப்புரையே தேவையில்லையே என்று நினைத்து அர்த்தம் சொல்லத் தொடங்கியதும், என் குரலும், போக்கும் மாறிவிட்டதை உணர்ந்தேன். வேறு ஏதோ ஓர் அதிர்வுக்கு ஆட்பட்டு நான் பேசுவது போல் எனக்கே தோன்றியது. பேசினேன்:
வாக்கு உண்டாகும். சாதரணச் சொல் இல்லை வாக்கு என்பது. ‘மணிவாக்கு’ என்று பாரதி குறிப்பிட்டானே அந்த வாக்கு உண்டாகும். நல்ல மனம் உண்டாகும். அந்த ‘நல்ல’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரிய வேண்டுமா:
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
இந்த வாசகத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்க வேண்டும். அப்போது புரியலாம், ‘நல்ல’ என்ற சொல்லின் அர்த்தம். அத்துடன், மாமலராள் நோக்கு உண்டாகும். அதாவது, ‘மலரின் மேவு திருவே’ என்று பாரதி பாடினானே, அந்தத் திருமகளின் நோக்கு உன் மேல் விழும் என்பது ஒருபுறமிருக்க, மாமலராகிய இந்தப் பிரபஞ்சத்தையே ஆள்கின்ற நோக்கு உனக்கு ஏற்படும். பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று எளிதாக முடித்து விடக் கூடாது, தோழி! “மேனி நுடங்காது” என்ற சொற்றொடரை விட்டுவிடக் கூடாது. அதாவது மேனி வளையாமல், பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் சார்வாருக்கு என்று படிக்க வேண்டும். இது என்ன குழப்பம்! மேனி வளைந்துதானே இறைவனைத் தொழுவது வழக்கம். அதுதானே நமஸ்காரம் செய்யும் முறை. மேனி வளையாமல் என்றால்…? மேனி வளையாமல் த்யான நிலையில் அமர்ந்து கொண்டு வணங்க வேண்டுமோ? இல்லை மகளே. மேனி வளையாமல், பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம்! அதாவது, த்யான நிலையில் அமர்ந்து கொண்டு, உன் மேனி வளையாமல் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, தும்பிக்கையான் பாதத்தைச் சார வேண்டும். எது சார வேண்டும்? துப்பார் திருமேனி சார வேண்டும்! ஸ்தூல சரீரம் எனப்படும் திட்பவுடல் வளையாமல், நிமிர்ந்து த்யான நிலையில் அமர்ந்து கொண்டால், சூக்ஷ்ம சரீரம் எனப்படும் நுட்பவுடல் நீர்போல் தெளிவாக இருக்குமாம். வெறும் மேனி வளையாமல் த்யான நிலையில் உட்கார வேண்டும். மனம் அடங்கியிருக்க வேண்டும். அப்போது திருமேனியாக, தூய நீர்போல் ஆசாபாசங்கள் எதுவும் இன்றி நுட்பவுடல் துலங்கும். அப்போது அதில் பூக்கின்ற ஞான மலரைக் கொண்டு தும்பிக்கையான் பாதம் சார வேண்டுமாம். தும்பிக்கையைச் சொல்லி, அப்படிப்பட்ட கையுடையவனின் திருப்பாதத்தைக் காட்டுக்கிறாளே இந்தப் பாட்டி! கைகாட்டிக் கால்காட்டும் வித்தை என்ன வித்தையோ! தும்பிக்கை என்பது யோக மார்க்கத்தில், பன்னிரண்டு அங்குலத் தொலைவு பாயும் ஸ்வாஸத்தை, மூச்சுக் காற்றைக் குறிக்கும் ஒரு பரிபாஷை வழக்கு. அதன் பாதம் என்பதோ மூலாதாரச் சக்கரம் என்ற நுட்ப ஸ்தானம். அந்தத் திருப்பாதத்தைச் சேர்ந்தவர்க்கு என்று சொல்லாமல் ‘சார்வார் தமக்கு’ என்று சொல்கிறாளே!
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றொழித்துச் சார்தரா சார்தரு நோய்
உலகப் பொதுமறையின் சாரத்தை அன்றோ பாட்டி இங்கே குறிப்பிடுகிறாள்!
இதையெல்லாம் கேட்டுக் கொண்டே அருகில் நடந்து வந்து கொண்டிருந்த நங்கையின் கண்கள் பனித்தன. “சார், இப்படியெல்லாம் இந்தப் பாடல் பற்றி நான் யோசித்ததில்லையே” என்று நாத்தழுதழுக்க அவள் சொன்னதும், “யோசித்து வருவதில்லை இது. யோகத்தில் வருவது!” என்று நான் பதில் சொன்னதாக ஞாபகம்!
ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகள் என் செயலாளராகப் பணிபுரிந்ததோடு, எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்துவிட்டு, இப்பொழுது லண்டனில் சென்று வாழும் செல்வி ராணி ஶ்ரீநிவாசன் என்பவர்தான் அந்த நங்கை. இந்தச் சம்பவம் நடந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில், தான் ஒரு சொற்பொழிவு ஆற்றப் போவதாகவும், அதில் ‘வாக்குண்டாம்’ பாடலைப் பற்றிய விளக்கத்தைச் சொல்ல ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டு, அந்த விளக்கத்தை மீண்டும் நினைவு படுத்தி எழுதுமாறு மின்னஞ்சல் மூலம் என்னைக் அவள் கேட்டிருந்தாள். கேட்டதும் வருமா விளக்கம்? யோசித்து வருவதில்லை பெண்ணே, அது யோகத்தில் வருவது என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அவள் கேட்டபடி விளக்கம் அனுப்பாமலேயே விட்டுவிட்டேன். அவள் அந்தக் கூட்டத்தில் என்ன பேசினாளோ தெரியவில்லை.
இப்படியெல்லாம் வியாக்யானம் சொல்வது சரியா என்பது மிகவும் நியாயமான கேள்வி. ஆனால், ‘மறை’ என்று நம்பப்படும் படைப்புகளில் படிப்பவர் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு அடுக்குகளாக அர்த்தங்கள் பொதிந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. ‘The Occult Element in Tamil speech’ என்று பாரதி ஓர் ஆங்கிலக் கட்டுரை எழுதியிருந்தான். அதில் மறை வல்லுநர்கள் பொதுவான சமூக மொழியைப் பயன்படுத்தும் போது கூடத் தாங்கள் சொல்லும் சொற்றொடர்களில் மறை பொருள் இருக்கும் வண்ணமே பேசுவார்கள் என்று குறிப்பிட்டுவிட்டு, ‘அப்படிப்பட்டவர்கள், ‘உட்கார்’ என்று சொன்னால், அது, உட்(கு)+ ஆர் எனப் பிரிந்து, ‘உள்ளமைதி பெறுக’ எனப் பொருள்தரக் கூடும் என்று எழுதியுள்ளான்.
பதினைந்து அண்டுகளுக்கு முன், மெரினா கடற்கரை சாலை ஓர் ஆரண்யமாக, அதாவது, வனமாக ஆனதும், அங்கே, நெருங்கியமர்ந்து கொண்டு ஓர் உபநிடதப் போக்கில் ராணியும் நானும், கார்க்கியும் யக்ஞவால்க்யரும் போல் உரையாடியதும் இப்போது மனத்திரையில் நிழலாடுகிறது. அதெல்லாம் ஒரு கண நேர அனுபவம். யோசித்து வாராது தம்பி. வெறும் புத்தி முயற்சியில் விரித்துப் பேசும் வியாக்யானம் இல்லையது. ஆட்கொள்ளப்பட்ட நிலையில் உள்ளிருந்து ஊற்றெடுத்து வரும் உணர்வு தம்பி. ஆங்கிலத்தில் ‘ஞானத் தாழிசை’ விளக்க நூலாகிய ‘த வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ எழுதும் போது என்னை என் குருநாதர் அப்படிப்பட்ட நிலையில்தான் வைத்திருந்தார்.
‘தம்பட்டம் போதுமண்ணே’ என்று இடித்துரைக்கிறான் சிகாமணி.
தம்பட்டம் இல்லை தம்பி, தத்துவம். இப்பொழுது விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
நம் திட்ப உடலைக் கடந்த நிலையில் இன்னோர் அதிர்வுக்கு நாம் வசமாவதுதான் ‘பரவசம்’ என்ற செய்தியைச் சொல்லத்தான் இந்தக் கதை. அப்படிக் கடந்த நிலையில் வசமாவதைத்தான் ‘பரவசம்’ என்று குறிப்பிடுகிறோம். ஆங்கிலத்தில் இதுதான் ‘எக்ஸ்டஸி’ எனப்படுகிறது. இதையே தத்துவ மொழியில் சொன்னால், ‘Transcendental Experience’.
வியாக்யானமே தேவைப்படாத என் பாடல் ஒன்றின் வரிகள் இப்பொழுது மேலும் சுடர் விட்டுப் பிராகாசிப்பதைப் பார்க்க முடிகிறது. பாரதியை நினைத்து எழுதிய அந்தப் பாட்டு முழுமையும் முன்பே ஒரு பகுதியில் தந்து விட்டேன். இருந்தாலும், பரவசம் பற்றிய விளக்கத்துக்குப் பிறகு மேலும் ஒளிபெற்று விளங்கும் அந்த வரிகளை மட்டும் இங்கே மீண்டும் நினைவு கூரலாம்:
கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே
காட்டு வழியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே
தேடிச் சென்ற திசையெல்லாம் பெருந் தீ வளர்த்தானே
தேகம் எடுத்ததனாலே அவனும் தேய்ந்து விட்டானே
கானல் நீரைக் கடந்து சென்றால் கற்பகச் சோலை வருமா, வராதா?
(தொடரும்)
கே. ரவி

— சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்.
இங்கிலாந்துக் கலண்டரிலே இருக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்தச் சனிக்கிழமையன்று நள்ளிரவு நடைபெற இருக்கிறது.
அது என்ன நிகழ்வு என்று எண்ணத் தோன்றுகிறதா ?
வருடா வருடம் இங்கிலாந்தில் “சம்மர்” (Summer) என்றழைக்கப்படும் கோடை காலத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவும் அதே போல ” விண்டர்” (Winter) என்றழைக்கப்படும் மாரி காலத்தில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் முடுக்கி விடுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமை அதாவது நள்ளிரவு இந்நேரமாற்றம் நிகழவிருக்கிறது.
இந்நிகழ்வுகளின் போது கோடைகால மாற்றத்தில் இரவு நேர தூக்கத்தில் ஒருமணி நேரத்தை இழப்பதுவும் மாரிகால மாற்றத்தில் இழந்த அந்த ஒரு மணிநேரத்தை மீண்டும் பெறுவதும் சகஜம்.
இம்மாற்றம் எப்போதும் சனிக்கிழமை நள்ளிரவு நேரம் தான் நடைபெறும். ஏனென்கிறீர்களா ?
பெரும்பான்மையானவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாதலால் இம்மாற்றத்தின் தாக்கத்தை ஞாயிற்றுக்கிழமை சரி செய்து விடலாம் என்பதுவே இதற்கு முக்கிய காரணமாகிறது.
நான் இங்கிலாந்துக்குள் நுழைந்தது மாணவனாக அப்போது எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வார விடுமுறை நாட்களில் பகுதிநேரப் பணிபுரிவது வழக்கம்..
அப்போது நான் மட்டுமல்ல என்னைப் போலவே ஈழத்திலிருந்து மாணவர்களாக வந்த அனைவருமே அத்தகைய ஒரு நிலையில் தான் இருந்தார்கள்.
அப்போது எனக்கும் என்னைபோன்ற ஒத்த நிலையிருந்தவர்களுக்கும் இந்த நேர மாற்றம் எரிச்சலை ஊட்டுவதாகவே இருந்தது.
எப்படி ?
சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பகலில் பணிபுரிகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், கோடைகால நேர மாற்றத்தில் எமது ஓய்வு நேரத்தில் ஒரு மணி நேரத்தை இழக்கிறோம். ஆனால் மாரிகால மாற்றத்தின் போது தூங்க ஒரு மணிநேரம் அதிகமாகக் கிடைக்கிறது.
சரி சனி, ஞாயிறுகளில் இரவு நேர பணி என்று வைத்துக் கொண்டால் கோடை கால மாற்றத்தின் போது ஒரு மணிநேரத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்வதும் மாரிகால மாற்றத்தின் போது ஒருமணி நேரத்தை ஊதியமில்லாமல் பணிபுரிவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நான் இங்கிலாந்துக்கு வந்து சுமார் ஒரு வருடத்தின் பின்னால் இரவு நேரக் காவலாளியாகப் பகுதிநேரப் பணிபுரிந்து வந்தேன். அப்போது சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் பணிபுரிவது வழக்கம்.
கோடைகால நேரமாற்றத்தை எவ்வித தாக்கமுமின்றி ஏற்றுக் கொண்ட நான் (ஒரு மணி நேரம் குறைவாக அதே சம்பளத்திற்கு பணிபுரிவதானால் யாருக்குக் கசக்கும் ?) மாரிகால மாற்றத்தின் போது எனது கட்டுப்பாட்டு அதிகாரியிடம் ஒருமணிநேரம் அதிகமாகப் பணிபுரிந்திருக்கிறேனே அதற்கு ஒருமணி நேரம் அதிகமான ஊதியம் தர வேண்டாமோ ? என்று கேட்டேன்.
பலமாகச் சிரித்த அவர் ” கோடைகால மாற்றத்தின் போது ஒரு மணி நேரம் குறைவாகப் பணிபுரிந்த போது ஒரு மணி நேர ஊதியத்தைப் பிடித்துக் கொண்டேனா ?” என்று கேட்டார்.
புன்னகையோடு மெளனிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?
சரி இப்படியாக இங்கிலாந்திலும் அநேகமான மேற்கு ஜரோப்பிய நாடுகளில் இடம்பெறும் நேரமாற்றத்திற்கான காரணம் தான் என்ன ?
இந்நேர மாற்றம் முதன்முதலாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜி.வி.கட்சன் (G.V.Hudson) என்பவரால் 1895ம் ஆண்டு முதன் முதலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
பூச்சிகளைப் பிடித்து அவற்றை ஆரய்ச்சி செய்யும் இவர் கோடைகாலங்களில் வெளிச்சமுள்ள நேரம் ஒருமணிநேரம் கூடுதலாக இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ந்து அதைப்பற்றி ஓர் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தார்.
இங்கிலாந்தில் ஒரு கட்டிட ஊழியரான வில்லியம் விலெட்ஸ் (William Willets) என்பவரால் இது பிரஸ்தாபிக்கப்பட்டது.
கோடை காலத்தில் ஒரு நாளின் அளவு கூடுதலாக இருந்தும் அதிகமானவர்கள் கூடுதலான நேரத்தைத் தூக்கத்தில் கழிப்பதகாகக் கருதிய இவர் கோடைகால நேரத்தை இருமணி நேரம் முன்னொக்கித் தள்ளி வைக்க வேண்டும் என்று பிரஸ்தாபித்தார்.
இவரது இந்தப்பிரேரணையை ரோபெர்ட் பியர்சன் எனும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் 1908ம் ஆண்டு சட்டமாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.
ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து பலமுறை இக்கோரிக்கை பாரளுமன்ற முன்றலுக்கு கொண்டுவரப்பட்டும் நிறைவேறவில்லை.
முதன் முதலில் மேற்கு ஜரோப்பாவில் இந்நேரமாற்றம் 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 திகதி ஜெர்மனியாலும் அதன் நேச நாடான ஆஸ்ட்ரியாவாலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதைப்பற்றி அமராகிவிட்ட எனது தந்தை அவர் வாழும் காலத்தில் குறிப்பிடும் போது தான் பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நிகழ்ந்த நிகழ்வு என்று குறிப்பிடுவதுண்டு.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்தாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளினாலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால் இந்நேரமாற்றம் ஒருமணிநேரத்தை மட்டும் உள்ளடக்கியதாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் ஏப்பிரல் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 முன்னொக்கி 03:00 மனிக்கு தள்ளப்படும். அக்டோபர் மாதம் மூன்றாவது வார விடுமுறைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 பின்னோக்கி 01:00 ஆக மாற்றப்படும்.
இதுவே நடைமுறை வழக்கத்திலிருந்து வருக்கிறது. ஓ …இவ்வாரம் சனிக்கிழமை தூங்கி ஞாயிற்றுக்கிழமை எழுந்திருக்கும் போது ஒரு மணிநேரம் அதிகமாக தூங்க முடியுமோ ?
இதே நேர மாற்றம் தான் அன்றைய மாணவ வாழ்வில் பிரச்சனை கொடுத்ததோ ?
மீண்டும் அடுத்த மடலில் …
அன்புடன்
சக்தி
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படங்கள்: இணையத்திலிருந்து
-சக்தி சக்திதாசன்
குனிந்து நின்ற
பெண்ணியத்தைச்
சமுதாய வரம்புக்குள்
தலைநிமிர வைத்தன
உன்
அற்புத எழுத்துக்கள்!
சறுக்கி விழுந்தவர்களையும்
சிக்கித் தவிப்பவர்களையும்
அன்றாட உணவுக்கு
அல்லல் படுவோரையும்
உன்
நாவல்களின்
நாயகர்களாக்கி
இலக்கியத்தில் நீ புது
இலக்கணங்களை வகுத்தாயே!
செப்பிடும் வகையும் தனி
செந்தமிழ்ச் சுவையும் தனி
தீந்தமிழ் எழுத்துக்களால்
சிந்தையைப் புதுப்பித்தவள் நீ!
அம்மா
ராஜன் கிருஷ்ணனே!
எழுத்துலகின் மேதையுனக்கு
எழுதுகிறான் இக்கற்றுக்குட்டி
கவிதையொன்று…
அஞ்சலியில்லையம்மா
ஆண்டவன் அடிகளில் ஏகிய
உனக்கு நான் செய்வது
பாமாலை அர்ச்சனையே!
உன்
எண்ணங்கள் மறைந்தால் தானே
நீ
மறைந்து விட்டாய் என்றாகும்
எப்போதும் ஒளிவிடும்
எழுத்துத் தீபம் நீ
மறையாமல் ஒளிர்ந்திடுவாய்!!
-நாகினி
மேலை நாட்டு மோகத்தில்
உண்ணும் உணவில்
ஆடம்பரம் கலந்து
ஆரோக்கியம் கெட்டபின்னே 
மதியில் சற்றுத் தெளிவு பிறந்து
தன்னோடு நாளைய தமிழரும்
நலமாய் வாழத்
தானிய உணவுகளாலான
தாயக பதார்த்தங்களின்
மகத்துவம் உணர்த்துகிறார்
இன்றைய சில இளைஞர்…
உலக அளவு கல்விக்கடலை
சிறு குண்டத்தில் அடைத்து
முற்றும் கற்ற மாமேதையெனப்
பகட்டும் போதையில்
தாய்மொழி தவிர்த்துப்
பிறமொழிப் பேச்சும் பல்மொழி
கலந்த தாய்மொழி வீச்சும்
நடைபோடும் சமூகத்தில்
நாளைய தமிழர் தனித்தமிழாளராய்த்
தரணியில் வீறுநடை நடக்கத்
தனித்துவத் தாய்மொழி பேசும்
மகோன்னத அமுதைப்
பரப்பவும் செய்கின்றார்
இன்றைய சில இளைஞர்…
மனிதத்தின் உயிர்மூச்சாம்
உணவு உடை மொழியென
அனைத்திலும் பாரம்பரியப் பண்பாடே
தலைசிறப்பெனப் பரப்பும்
இன்றைய சில இளைஞர் அறிவுரையை
அடிமனதில் உள்வாங்கி
நேற்றைய மூதாதையர்
வாழ்வினில் முற்றிலும்
ஒன்றி இணைந்திடுவார்
நாளைய தமிழர்!!
— கவிஞர் காவிரிமைந்தன்.
அழகியல்தன்னைப் படம்பிடிக்க நினையாதோர் யார்? இயற்கையின் படைப்பினில்தான் எத்தனை எத்தனை அழகு? இயற்கையை ரசிக்காத கலைஞன் இருக்க முடியுமா? அவன் கவிஞனாகவும் முடியுமா? இந்தக் கலவையின் பிரதிபிம்பம் .. ஆம்.. இயற்கையையும் தன் காதலியையும் இணைத்து கவிதைநடைபயில எழுத்துவடிவம் தந்திருக்கிறார் கவிஞர் நேதாஜி.
இசைவடிவம் தந்திருப்பவர் தேவராஜன். பாடியவர் உலக நாயகன் கமலஹாசன் என்பது மட்டுமல்ல.. அவர் பாடிய முதல் பாடல் என்பதும் இனிய சேதியாகும்.
இளமையின் வனப்பை எடுத்துக்காட்டி அதை இயற்கையில் நனைத்திடும் புதிய பாணி பல்லவியாய் துவங்குகிறது.
ஞாயிறு திங்களுடன் நடத்தும் பவனியிது. நாயகனின் உள்ளமெங்கும் ஊறித்திளைக்கும் அவன் நினைவுகள் நீராடிவரும் அழகைப் பாருங்கள்.. சரணங்களில்..
முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அந்தரங்கம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மிளிரும் நடிப்பில் இது ஒரு வெற்றிபெற்றப் பாடலாக…
http://youtu.be/ROaQotQM1FM
காணொளி: http://youtu.be/ROaQotQM1FM
திரைப் படம்: அந்தரங்கம்
பாடல்: கவிஞர் நேதாஜி
இசை: ஜி தேவராஜன்
குரல்: கமல்
நடிப்பு: கமல், தீபா
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
……………………………………………………………ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்உலகெங்கும் பொங்கித் ததும்பும்
அழகெந்தன் ஆணைக்கடங்கும்
அங்கங்கு மெருகு படியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்
அங்கங்கள் ஜாலம் புரியும்ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்மன்மதனும் ரதியும் உன்னால்
பொன் வதனம் பெற்றதென்னாள்
ஊர்வசியும் இங்கு வந்தாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்
பேரழகை வாங்கிச் சென்றாள்ஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்தங்கங்கள் இங்கு வருக
தரம் இன்னும் அதிகம் பெறுக
வைரங்கள் நம்பி வருக
புது வடிவம் தாங்கிப் பொலிக
புது வடிவம் தாங்கிப் பொலிகஞாயிறு ஒளி மழையில்
திங்கள் குளிக்க வந்தாள்
நான் அவள் பூ உடலில்
புது அழகினைப் படைக்க வந்தேன்
ஞாயிறு ஒளி மழையில்
இசைக்கவி ரமணன்
மழையின் இழைகள் ஒன்றுக்கொன்று
பேசிக்கொண்ட ரகசியங்களை
மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மரங்கள்
இலைகளின் நுனிவரை எழுதிவைத்துக் கொண்டன
நனைந்த இரவின் கருத்த தெருவில்
அளைந்த கால்களுடன்
பிணைந்த விரல்களுடன்
இணைந்து ஒசிந்த தேகங்களுடன்
இடையறாத தாகங்களுடன்
நீயும் நானும்
ஒரு குடைக்கீழ் கலந்த
இரண்டு இதயங்களின்
கொஞ்சலில் கொஞ்சம்
உறக்கம் கலைந்து துணுக்குற்றன
ஒற்றைக் காலில் கண்களை இறுக
மூடி நின்ற மைனாக்கள்
இங்குமங்கும் பார்த்த மரங்கள்
இனிமேல் தாங்க முடியாதென்று
இவர்கள்தான் சரியென்று
இலைகளிலிருந்து ரகசியங்களை
மல்லிகை மொட்டுக்கள் போல்
குடையின் மீது கவிழ்த்தன
ஒன்றிரண்டு மஞ்சள் மலர்களும்
ஒட்டிக்கொண்டுதான் வந்தன
குடைக்குக் கீழே நமது ரகசியங்கள்
குடைக்கு மேலே மழையின்
மரம்நனைந்த இலைசுமந்த ரகசியங்கள்
ரகசியங்களும் ரகசியங்களும்
சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
நீயும் நானும் சந்தித்தது போல்தான்
இருக்குமென்று பேசிக்கொண்டார்கள்
பாதி நிலா பளபளக்கும்
பாதையோரக் குளக்கரை அருகே
பாதிக் கலவியில் நம்மைப் பார்த்துப்
பதறி வியந்த கந்தர்வர்கள்
இரண்டில் ஒன்றாய்
ஒன்றே இரண்டிலுமாய்
மாறாமல் மாறி மாறி
மாயமாய்
கிரேசி மோகன்
மீண்டும் உரலிழுத்து, மாமருதம் சாய்த்தரவத்,
தாண்டவம் ஆடித், தயிருண்டு, -வேண்டிய,
ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
யாதவா கோடிட்(டு) எழுது ….கிரேசி மோகன்….