Blog

  • வாழ்க்கை நலம் – 23

    குன்றக்குடி அடிகள்

    23.  பொறையுடைமை

    பொறுமை  – பொறுத்தாற்றுதல். பொறுமை பலவகை. துன்பம் வந்துற்றபோது  பொறுத்துக் கொள்ளல், நோய் வந்தபோது பொறுத்துக் கொள்ளல், பிறர் கூறும் பழிச்சொற்களை பொறுத்துக் கொள்ளல், பிறர் செய்யும் ஊறினைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளல் என்று பல வகையாகப் பிரித்துணரலாம். ஆயினும் பொருதாற்றுதல் என்பது ஒரே பண்புதான். தன்னைச் சார்ந்து தன்னாலேயே உருவாக்கிக் கொள்ளப் பெற்ற துன்பங்களுக்கு காரணம் அவரவரே. இதனை அவர்கள் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இடங்களில் பொறுமை இயற்கை. ஆனால் இந்த இடங்களில் கோபம் வந்தால் கூட ஒரே வழி வரவேற்கலாம். இங்கே தங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான தவறுகளை  – அறியாமை, வறுமை முதலியவற்றை நினைந்து அவற்றினோடு போராடத் துணியலாம். இந்த வகையில் வரவேற்கத் தக்கதேயாம்.

    ஆனால் பிறர் தன்னை இழித்துப் பேசியபொழுது, பிறர் தமக்குக் கொடிய துன்பங்களைச் செய்த பொழுது   – உடலுக்கு ஊறு முதலியன செய்த பொழுதும் பொறுமையை மேற்கொள்ளல் அரிது. இந்த மாதிரித் தருணங்களில் பொறுமை காட்டலே பொறுமை எனப்படும். போற்றுவதற்குப் பதிலாகத் தூற்றுபவர்களிடம் பொறுமையாக இருத்தலே பொறையுடைமை. “பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்றது கலித்தொகை.  நாடவர் பழித்துரையைப் பூணாக ஏற்றுக் கொண்டாலே உய்தி பெறலாம் என்பது திருவாசகக் கருத்து. பண்புகளில் சிறந்தது பொறையுடைமை. அதே போழ்து பொறையுடைமைப் பண்பு ஆளுமையைச் சார்ந்து விளங்க வேண்டும். ஆளுமை இல்லாதவர்களிடம் உள்ள பொறையுடைமைப் பண்பு ஆகாது. இதற்குப் பெயர் கோழைத்தனம். நாட்டு மக்கள் பொறையுடைமையின் பெயரால் கோழைகளாகக் கூடாது. ஆளுமைப்பண்பு தழுவிய பொறையுடையவராய் இருத்தல் வேண்டும். இதுவே திருக்குறளின் கருத்து.

    ஆடாது, அசையாது  – கற்களாக உடைத்தாலும் பொறுமையாக இருக்கும் மலையைப் பொறுமைக்குச் சான்றாகத் திருக்குறள் கூறவில்லை. திருக்குறள் பொறையுடமைக்கு எடுத்துக் காட்டாக நிலத்தைக் கூறுகிறது. ஏன்? நிலம் உழப்படுகிறது. உழுவதன் மூலம் நிலத்திற்கு ஊறு செய்யப்படுகிறது. நிலம் மண்வெட்டி கொண்டு கொத்தப்ப்படுகிறது; வெட்டப்படுகிறது. நிலத்தின் பரப்பில் கீறல்கள், வெட்டுப் பள்ளங்கள் தோன்றுகின்றன.  ஆயினும் நிலம் இத்துன்பங்கள் செய்தாரைச் சினப்பதில்லை; அவருக்குத் தீமை செய்வதில்லை. மாறாகத் தனக்குச் செய்யும் ஊறுகளையே ஆக்கமாக எடுத்துக் கொண்டு நிலம் செழுமையை அடைகிறது; வளம் கொழிக்கிறது. அந்த வளத்தினைத் தனக்குத் தீமை செய்த மனித குலத்திற்கே திரும்பத் தந்து விடுகிறது. அவர்கள் வாழ்க்கையை வளமாக்குகிறது; உயர்த்துகிறது, மலைக்கு இந்த இயல்பில்லை. மற்றவர்கள் மலையைக் குடைந்து கல் உடைத்து எடுத்தால் மலை பொறுத்துக் கொள்வது உண்மை; ஆனால் தன்னை அழித்துக் கொள்கிறது; கல் உடைப்பவனுக்கும் நெடிய பயன் தருவதில்லை.  ஆனால் உழப்பெறும்  – கொத்தப்பெறும் நிலம் அழிவதில்லை. தனக்கு ஏற்பட்ட அழிவையே ஆக்கமாக மாற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது; வாழ்விக்கிறது; நிலையாக வாழ்விக்கிறது. அதுபோல் பொறுமைப் பண்பின் மூலம் ஒரு மனிதன் அல்லது ஒரு இனம் அழிந்துவிடக் கூடாது; வளர வேண்டும். பொறுத்தல் என்ற பண்பு ஆக்கத்தின் பாற்பட்டது. “பொறுமையும் சாந்தமும் ஒருவனுக்கு ஆற்றலைக் கொடுப்பன” என்றார் லேஹண்ட்.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

    (குறள்  –  151)

     

     
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

     

    Share
  • போய்விடு இறைவா….


    தனுசு

     

    இறைவா
    நீ என்னை விட்டுப்போ
    அப்படியே
    எனக்கான உன் கருணையையும் கொண்டுபோ.

    இறைவா
    உன் இல்லத்தையும் மூடிக்கொள்
    அப்படியே
    எனக்கான அந்தப் பாதையையும் அடைத்துக்கொள்.

    உன்
    பரிவும் அருளும்
    பங்கு வைத்து பார் முழுக்கக் கொடு
    உன்
    அன்பும் அணைப்பும்
    ஏங்கி நிற்கும் அடியவர்க்கு வழங்கிவிடு.

    “வழிபட்டு வாழி” என்ற
    உன் மொழி கேட்டு
    விழி மூடி
    உன் பழியாய்
    நான் கிடக்க விரும்பவில்லை.
    என்னிலிருந்து
    நீ பிழைக்க
    என்வழி விட்டு நின்றுவிடு
    உன்
    எல்லைப் பரப்பு பற்றி எனக்கு கவலையில்லை.

    உன் சொர்க்க வாசல்
    அதை நீ எனக்கு
    தர்மம் செய்து தரவேண்டாம்
    வன் நரகமென பயமுறுத்தி
    என்னை நீ
    உன் பக்கம்
    இழுக்கவேண்டாம்.

    உன் சக்தி கொண்டு
    பக்தி தந்து
    பக்தனாக மாற்றிட வேண்டாம்.
    சாந்தி என்றும்
    சாந்தமென்றும்
    முக்தி பெற
    சந்தனத்தை பூசவேண்டாம்.

    உன் மோகம் தந்து
    ஆன்மீகத்தை
    என் மீது ஏற்றிடவேண்டாம்
    தயவும்
    துணையும்
    நீயே என
    நீயாக மெச்சிக்கொள்ள வேண்டாம்.

    மன்னிப்போ
    மறதியோ
    உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை.
    கண்டிப்பாய்
    இதை நான் உனக்கு விதிப்பதில்
    எனக்கு தயக்கமேதுமில்லை.

    ஏனென்றால்….
    என் அருகில்
    என் தாய் இருக்கிறாள்
    அது போதும் எனக்கு.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(71)

    சக்தி சக்திதாசன்

     

    images

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் அன்பு வணக்கங்களுடன்.

    அவசர வாழ்க்கையில் அர்த்தத்தைத் தேடி ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரீகம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகள் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    அதே சமயம் தாம் தமது காலாச்சார மையங்களைப் பாதுகாத்துக் கொள்கிறோம் எனும் பெயரில் சமுதாயங்கள் தம்மைத் தாமே அந்நியப்படுத்திக் கொண்டு வாழ்கின்றன.

    தீவிரவாதம் பல பெயர்களில் குறிப்பாக மதங்களின் பெயரால் பலவகைகளில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளன.

    இத்தகைய ஒரு சூழல் இங்கிலாந்தைப் போன்ற ஒரு பல்லினக் கலாச்சார மக்கள் நிறைந்த சமுதாய அமைப்பினைக் கொண்ட நாட்டின் அரசாங்கங்களை பலவகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியுள்ளன.

    அது மட்டுமில்லாமல் இயந்திரவியல் தொழில் நுட்பம் அதிகரிக்கும் அதே வேகத்தில் சமுதாயத்தில் நிகழும் குற்றச் செயல்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

    இவைகள் அனைத்துக்கும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரசாங்கம் கையாளும் விஞ்ஞான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமே நிகழ்வுகளைக் கண்காணிக்கும் தானியங்கி கமெராக்கள்.

    இத்தகைய இயந்திரங்கள் பல பொது இடங்கள் பலவற்றில் பொருத்தப்பட்டுள்ளன.

    இவற்றின் உதவியுடன் பல குற்றச்செயல்கள் தடுக்கப்படுவது உண்மையெனினும் இவற்றினால் மக்களின் பிரத்தியேக உரிமைகள் மீறப்படுகின்றன என்பது பொதுப்படையான சில அமைப்புக்களினாலும், பல பொதுமக்களினாலும் அரசாங்கத்தின் மீது முன் வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

    இத்தகைய தெருவோரக் கமிராக்களினாலும், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கமிராக்களினாலும் எடுக்கப்படும் படங்கள் எத்தகைய வகையில் உபயோகிக்கப்படுகின்றன என்பதுவே பலரின் அச்சத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

    இத்தகய நடவடிக்கைகளை ஆங்கிலத்தில் “Big brother watch” என்பார்கள். அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினரால் ஏனையோர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதான அர்த்தத்தில் கூறப்படுகிறது.

    சரி அதிலென்ன தவறு ?

    கேள்வி எழுகிறது அல்லவா? நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட நபர்கள் இந்நாட்டின் பிரஜைகள் எமக்கு அதற்கான பொறுப்புணர்வு இருக்கிறது அதி நம்பிக்கையில்லாமல் எமது ஒவ்வொரு செய்கையையும் கண்காணிப்பது எவ்வகையில் நியாயமாகும் ? என்பதுவே இதன் எதிர்ப்பாளர்களின் வாதம்.

    ஒன்றும் புரியாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று போய்க் கொண்டிருப்போருக்கு என்ன பயம்? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும் ? நியாயமாக சட்டத்தை மதித்து வாழ்வொருக்கு இத்தகிய கமிராக்கள் இருப்பதால் ஒன்றும் நேரப் போவதில்லையே பின் எதற்காக இந்த எதிர்ப்பு என்கிறார்கள் அரசாங்கமும் இந்தக் கமிராக்கள் இருப்பதனை ஆதரிப்பவர்களும்.

    தனிமனித உரிமைகளைப் பாதிப்பது மட்டுமல்ல இனரீதியான பாகுபாட்டையும் மக்களிடையே பிரிவு உணர்ச்சிகளையும் தூண்ட வழிவகுக்கும் பல நடவடிக்கைகளுக்கு இத்தகிய செயல்பாடுகள் காரணமாகின்றன என்கிறார்கள் புலம் பெயர்ந்து இந்நாட்டில் வாழும் பல வேற்று சமூகத்தினர்.

    உதாரணமாக 2010ம் ஆண்டு இங்கிலாந்தின் “வெஸ்ட் மிட்லண்ட்ஸ்(West Midlands)” போலிஸ் பிரிவு மன்னிப்புக் கோர வேண்டிய நிலைக்குத் தள்லப்பட்டது. ஏனெனில் இவர்கள் பொருத்திய 200 கமிராக்கள் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளை தனது பார்வையில் கொண்டிருந்த காரணத்தினால்.

    2007ம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னனியில் பார்க்கும் போது இத்தகைய கண்காணிப்பு அவசியம் தான் என்கிறார்கள் இதனை ஆதரிப்பவர்கள்.

    இவ்வகையான நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு எனும் போர்வையில் மக்களை இனரீதியகாப் பிரித்துப்பார்க்கப் பயன்படுகிறது என்று வாதிடுகிறார்கள் இதன் எதிர்ப்பாளர்கள்.

    அது மட்டுமின்றி பாதுகாப்பு எனும் போர்வையில் பாடசாலைகளில் இக்கமிராக்கள் பொருத்தப்படும் போது அங்கே சிறுவர்களின் பிரத்தியேக உரிமைகள் மீறப்படுகின்றன என்பது ஒருசாராரின் வாதம்.

    இத்தகிய கமிராக்களின் செயர்பாடுகள் குற்றச் செயல்களைத் தடுக்கும் வீதம் இதன் செயர்பாட்டை நியாயப்படுதுகிறது என்கிறார்கள் மற்றொரு அறிக்கையைச் சுட்டிக் காட்டி வாதிடும் அரசாங்கத் தரப்பு ஆதரவாளர்கள்.

    இந்த நிலைமையைச் சாளிக்கும் முகமாக அரசாங்கம் புதிய இக்கமிராக்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை அறிமுகம் செய்தார்கள்.

    இந்தச் சட்டம் இப்போது அமுலிக்கு வந்துள்ளது.

    அது என்ன சட்டம் ?

    “Surveillance camera code of practice “ அதாவது கன்காணிப்புக் கமிராக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்.

    “இத்தகைய கமிராக்கள் ஒரு நியாயபூர்வமான சட்டத்திற்கு உட்படும் வகையில் கன்காணிப்பதை நியாஇப்படுத்தும் வகையிலேயே இயக்கப்பட வேண்டும் அத்துடன் இத்தகைய அத்தாட்சி பெறப்படுவதற்கு மிக அழுத்தமான, அவசியமான தேவை இருக்க வேண்டும் ” இதுவே இச்சட்டத்தின் சாரம்சமாகும்.

    இந்தச் சட்டம் தாம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்பது இக்காமிராக்களின் இயக்கத்தை எதிர்ப்போரின் வாதம் இருக்கிறது.

    தம் நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்துவது ஒரு அரசாங்கத்திற்கு எத்த்னை முக்கியமோ அத்தனை முக்கியம் தமது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது.

    நாட்டின் குற்றச்செயல்களில் மலரும் பயங்கரவாதச் செயல்கள் என்பனவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுக்கும் நடவ்டிக்கைகளுக்கு தமது ஆதரவை நல்காமல் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜையின் கடமையாகவும் இருக்க முடியாது.

    இரண்டு தரப்பு வாதப் பிரதிவாதங்களையும் எடுத்துப் பார்க்கையில் எதற்கும் ஒரு சமநிலை பேணப்பட வேண்டியதன் அவசியம் புரிகிறது.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சிலை அழுதது – 3

    தேமொழி

     

    அபி பால்டிமோரில் வளர்ந்தவள்.  ரிக்கியைவிட நான்காண்டுகள் வயதில் சிறியவள். அவளும் ரிச்சர்டும் முதலில் சந்தித்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது அவள் ‘மேரிலாண்ட் பல்கலை’யின் ‘ஸ்மித் ஸ்கூல் ஆஃப் பிசினெஸ்’ஸில் நிதியியல் மூன்றாமாண்டு முடித்திருந்தாள். கோடையில் இண்டர்ன் ஆகப் பயிற்சி பெற வில்லியாம்ஸ்பெர்கில் இருக்கும் பால் காரப்பரேஷனுக்கு மூன்று மாதங்களுக்கு வேலைக்கு வந்திருந்தாள். அப்பொழுது ரிச்சர்ட் தனது படிப்பை முடித்துவிட்டு ஹாம்ப்டனில் உள்ள லேஞ்ச்லி  ஏர் ஃபோர்ஸ் பேஸில் பணிபுரிந்து கொண்டிருந்தான். அந்த ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் ஹாம்ப்டனில் உள்ள ஃபோர்ட் மன்றோவில் நடந்தது.  வாணவேடிக்கை,   கண்ட்ரி மியூசிக் பாடகர்கள் ‘எமிலி வெஸ்ட்’ மற்றும் ‘ஜிம்மி வெய்ன்’ ஆகியோரின் சிறப்பு இசைநிகழ்சிகள் நடந்தது.  அபிக்கு எமிலி வெஸ்ட்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அதனால் அவள் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றும் இரு பயிற்சி நிலையில் பணிபுரியும் மற்ற மாணவர்களுடன் வந்து கலந்து கொண்டாள்.

    எமிலி வெஸ்ட்டின் நிகழ்ச்சி முடிந்து அடுத்து ஜிம்மி வெய்னின் நிகழ்ச்சி நடந்த பொழுதுதான் ரிக்கியை முதலில் பார்த்தாள்.  அவன் “கவ் பாய்ஸ் அண்ட் இன்ஜின்ஸ்” பாடல் ஆரம்பித்த பொழுது உற்சாகமாகக் கூச்சலிட்டான். பிறகு தனது நண்பர்களுடன் ஆட ஆரம்பித்தான்.  பாடல் முடிந்ததும் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு ஒரு காலை மடக்கி  சுவரில் ஊன்றி ஓய்வு எடுத்தான்.  அபி அவனுக்கு மேல் வரிசையில் நின்று கொண்டு லெமனேட் குடித்துக் கொண்டிருந்தாள். ‘பரவாயில்லையே நன்றாகவே ஆடுகிறான் இவன்’, என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். அப்பொழுது அவளுக்கு பின் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி விளையாடிய சிறுவர்கள் இவள் மேல் இடித்துவிட, அபியின் கையில் இருந்த  லெமனேட் இருந்த காகிதக் கோப்பை அவள் கை தவறி அவன் தலையில் விழுந்து அவனை முழுக்காட்டியது.  அவள் அவசர அவசரமாக மன்னிப்பு கேட்பதற்குள், ரிக்கிக்கு இது எப்படி நடந்தது எனப் புரிந்து விட்டது.  ஒரே சமயத்தில் அவள் “மன்னித்துவிடுங்கள்” என்றும், அவன் “பரவாயில்லை” என்றும் சொல்லிக் கொண்டார்கள்.  “என்னை பானத்தால் குளிப்பட்டும் இரண்டாவது பெண் நீங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சிரித்தவாறே போய்விட்டான்.

    மறுபடியும் எதிர்பாராமல் அடுத்த வார இறுதியிலும் அவனை சந்தித்தாள். இம்முறை ‘வில்லியம்ஸ்பர்க் புஷ் கார்டன்’ உல்லாசப் பூங்காவில் நண்பர்களுடன் அவள் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பட்டான்.  அந்தச் சமயமும் அவள் சோடா குடித்துக் கொண்டிருந்தாள். கையில் பானத்துடன் அவளைப் பார்த்ததும், அவன் மேல் ஊற்றிவிடுவாள் என்று அச்சம் கொண்டவன் போல சட்டென்று  திரும்பி ஓடுவது போலப் பாசாங்கு செய்து அவளைப் பார்த்துச் சிரித்தான்.  அவளுக்கும் அவன் செய்கையைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து சிரித்ததில் புரைக்கேறியது. பிறகு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது அவனிடன் தான் அவனை முழுக்கட்டிய இரண்டாவது பெண் என்று அவன் சொன்னதைக் குறிப்பிட்டு முதலாவது பெண் யாரென்று கேட்டாள். அவனும் மிக உற்சாகமாக தனது பள்ளி இறுதியாண்டு ப்ரோம் நடனத்துணை ஷெர்லி டேவிஸுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட தகராறையும், அவள் அவன் தலையில் மில்க் ஷேக் ஊற்றியதையும், நடனத் திட்டம் தடம் மாறிப் போக ப்ரோம் நடனத்திற்கு அவளது சகோதரியுடன் ஆடியதையும் விவரமாகச் சொன்னான்.  பின்னர் பேஸ்புக்கில் நண்பர்களானார்கள், அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் ‘போக்’ செய்து கொண்டார்கள்.

    அவள் தனது பயிற்சி முடிந்து, விடுமுறை முடிந்து இறுதியாண்டிற்கென மீண்டும் பல்கலை சென்ற பின்னர் அவர்களுக்குத் தங்கள் தொடர்பு சாதாரண நட்பு அளவிற்கும் மேலே சென்று விட்டது புரிந்தது.  ரிக்கி அவ்வப்பொழுது வார இறுதியில் மேரிலாண்ட்  வந்து அவளை சந்தித்தான்.  அவளை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஒரு மோதிரம் பரிசளித்தான்.  அவளும் சம்மதித்து அவள் படிப்பு முடிந்து பட்டம் வாங்கிய பின்னர் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

    அந்த ஆண்டு இறுதியல் தேங்க்ஸ் கிவ்விங் என்னும் நன்றி கூறும் விழா நடக்கும் வார இறுதியில் அவளைத் தனது வீட்டிற்கு  அழைத்துச் சென்று, அவனது பெற்றோருக்கு அவளை அறிமுகப்படுத்தி அவளை மணந்து கொள்ளப் போவதாகச் சொன்னான்.  அவனது அப்பா வில்லியம்ஸ் கொதித்தெழுந்தார்.  அதற்குக் காரணம் வெள்ளை இனத்தவரான அவரால் கறுப்பினப் பெண்ணான அபியைத் தனது மருமகளாகவோ அல்லது தனது மகனின் துணையாகவோ நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.  ஆனால் அவனது தாயார் அதனைப் பெரிது படுத்தவில்லை.  அவர் வெள்ளை இனத்தவரானாலும் நாட்டின் வட பகுதியிலேயே  பெரும்பாலும் வாழ்ந்தவர். சிக்காகோவில் பிறந்து, நியூயார்க்கில் வளர்ந்து,  வாஷிங்டன் டி.சி. யில் படித்து வேலை பார்த்தவர்.  அப்பொழுதுதான் இராணுவத்தில் பணிபுரிந்த ரிச்சர்டின் அப்பாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து மணந்து கொண்டார்.  அத்துடன் இயல்பாகவே அவர் பரந்த மனத்துடன் இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர்.

    ஆனால் ரிச்சர்டின் தந்தை வில்லியம்ஸின் பின்புலம் வேறு.  அவர் குடும்பத்தினர் நாட்டின் தென் மாநிலங்களில் ஒன்றில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருப்பவர்கள். வெள்ளை இனத்தவர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று ஆழ் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டவர்கள். அப்பா வில்லியம்ஸின் தந்தையும் பெரிய தந்தையும், அதாவது ரிச்சர்டின் தாத்தாவும் பெரிய தாத்தாவும், இனவெறி கொண்ட கே.கே.கே. அல்லது ‘கு க்ளக்ஸ் கிளான்’ (KKK / Ku Klux Klan), என்ற இனவெறிக் கும்பலுடன் மறைமுகத் தொடர்பு கொண்டு ஆதரவும் அளித்ததாக அரசல் புரசலாக ஊரில் செய்திகள் உண்டு.  இந்த இனவெறிக்கூட்டம் கொள்ளையர்கள் போன்று தங்கள் முகத்தைக்  காட்டாமல் வெள்ளை முகமூடி அணிந்து, நீண்ட வெள்ளை அங்கி அணிந்து, கறுப்பர்களுக்கு சம உரிமை தருவதை 1950 மற்றும் 1960 களில் எதிர்த்துக்  கலவரம் செய்த தீவிரவாதிகள். கறுப்பர்களைத் துன்புறுத்துவதையும், அவர்களது வீட்டு வாசல்களில் சிலுவைகளை எரித்து அச்சுறுத்துவதையும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் அந்தக் கும்பல் பரவலாகச் செய்து வந்தார்கள். இதுபோன்ற அர்த்தமற்ற பிடிவாதப் போக்கு கொண்ட கொள்கைகளைக் கொண்ட கும்பலுடன் தொடர்பு கொண்டவர்களது குடும்பத்தோர் கறுப்பின ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதை நினைத்தும் பார்க்க முடியாதுதான்.

    ஆனால் கறுப்பின ஒபாமாவை நாட்டின் அதிபதியாகத் தேர்ந்தெடுத்த இக்கால இளைஞர் கூட்டத்தைச் சார்ந்தவன் ரிச்சர்ட்.  அவனுக்கு ஏனோ எப்பொழுதும் இன வேற்றுமை மனதில்  தோன்றியதில்லை.  அபியையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.   தேங்க்ஸ் கிவிங் பண்டிகைக்கு அபியை அவன் அழைத்து வந்து இவள்தான் என் வருங்கால மனைவியாக வரப் போகிறவள் என்று அறிக்கைவிடுவான் என்று அவன் குடும்பத்தில் யாரும் எதிர்பாக்கவில்லை.  அப்பா வில்லியம்ஸ் அபியிடம் முகம் கொடுத்து பேசவேயில்லை.  ரிச்சர்டின் விருப்பம் தெரிந்தவுடன் அவனிடமும் பேச மறுத்துவிட்டார். அபிக்கு அந்தக் குடும்பப் பண்டிகை அவளது வரவால் மகிழ்ச்சி இழந்தது வருத்தமாக இருந்தது. ஆனால் ரிக்கி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.  அவளையும் அடுத்த நாளே அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.  அபியிடமும், “வருந்தாதே, அவர்கள் அக்கால மனிதர்கள்.  பழமையிலிருந்து வெளி வர விரும்பாத அசட்டுப் பிடிவாதம் என் அப்பாவிற்கு அதிகம்.  நீயும் நானும் சிறியவர்கள் அல்ல. உனக்கும் எனக்கும் என்ன பிடிக்கிறது என்று நமக்குத் தெரியும். வாழ்க்கையில் எது சரி எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் அறிவு உள்ளவர்கள்தான்  நாம். நமக்கு பிடித்த வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்ததில் எந்த தவறும் இல்லை,” என்று ஆறுதல் சொன்னான்.

    தொடர்ந்து கோடையில் அவர்கள் திட்டப்படியே அபி பட்டம் வாங்கியதும் அவர்கள் திருமணம் நடந்தது.  அபியின் குடும்பமும் உறவினர்களும்,  நண்பர்களும், ரிக்கியுடன் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவன் பெற்றோர் திருமணத்தை புறக்கணித்து விட்டனர்.  அவன் தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவனது திருமண படங்களின் தொகுப்பையும் காணொளியையையும் யூ டியுப், பிக்காஸா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்து கொண்டு செய்தி அனுப்பினான்.  திருமணமான கையோடு அவனுக்கு ஆஃப்கானிஸ்தான் செல்ல வேண்டிய உத்தரவு கிடைத்தது.  எனவே அவன் திரும்பி வரும் வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத்  தள்ளிப் போடவும், அவள் மேல் படிப்பில் சேர்ந்து அவன் திரும்பி வருவதற்குள் அவளது படிப்பை முடிக்கவும் திட்டம் போட்டார்கள்.  ரிக்கிக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் ஆசை என்று அவளுக்குத் தெரியம்.  குழந்தை பிறக்கும் பொழுது அவன் உடன் இருப்பதை அபியும் விரும்பினாள்.

    பெரும்பாலான இராணுவ வீரர்களுக்குத் தங்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அருகிருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை. படங்களையும் காணொளிகளையும்தான் முதலில் பார்பார்கள்.  போர் முனையில் இருந்து வந்து சேர்வதற்குள் குழந்தை வளர்ந்திருக்கும்.  யாரோ மூன்றாவது மனிதரை அறிமுகப் படுத்துவது போல இதுதான் உன் அப்பா, இதுதான் உங்கள் பிள்ளை என்று அறிமுகப் படுத்த வேண்டியிருக்கும்.  அவர்களும் வாழ்வில் ஒரே ஒரு முறை கிடைக்கும் அறிய வாய்ப்புகளை, விரைவில் வளரும் குழந்தைகளின் முதல் மழலைச் சொல், முதல் நடை போன்ற மகிழ்ச்சி தரும் அனுபவங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே அவன் போருக்குச் சென்றதும் இவள் படிப்பைத் தொடர்ந்தாள். இருவரும் மின்னஞ்சல் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வளர்த்துக் கொண்டார்கள்.  மீண்டும் திருமணத்திற்கு முன் இருந்த கல்லூரி நாட்கள் போலவே காலம் சென்றது.

    அவன் திரும்பி வருவதையும், அவள்  பட்டம் வாங்குவதையும்  ஒரு சேர்த்துக் கொண்டாட ஹவாய் அல்லது  கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டாடுவது, அல்லது உல்லாசக் கப்பல் பயணம் போவது, எங்கு வாழ்க்கையைத் தொடங்குவது போன்ற சிறியதும் பெரியதுமாக பலப் பலத் திட்டங்கள் இருவரிடமும் இருந்தது.  ஆனால் அத்தனை திட்டங்களும் இராணுவத்தில் இருந்து ஒரு நாள் நள்ளிரவு வந்த தொலைபேசி அவசர செய்தி ஒன்றில் சிதைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியல் நிகழ்ந்த  ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் விமான விபத்தில் ரிச்சர்டும் மேலும் சில வீரர்களும் இறந்து விட்டார்கள் எனவும், அவனது உடல் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு டெலாவேரில் உள்ள டோவர் ஏர் ஃபோர்ஸ் பேஸிற்கு அனுப்பிவைக்கப் படவிருப்பதை அறிவித்து வருத்தமும் தெரிவிக்கப் பட்டது.  தூக்கத்தில் சிறிது நேரம் ஏதும் பயங்கரக் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் அபிக்கு வந்தது. அதிர்ச்சி மட்டும்தான் அவளுக்கு அப்பொழுது இருந்தது அழுகை சுத்தமாக வரவேயில்லை.  நிலைமை உண்மைதான் என உணர்ந்ததும் ரிச்சர்டின் தாயைக் கூப்பிட்டு செய்தியைச் சொன்னாள். பிறகு அவனது உடலை அவன் ஊருக்கு எடுத்துச் சென்று இறுதி மரியாதை செய்வதற்கும் அடக்கம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தாள்.  ரிச்சர்டின் பெற்றோர்கள் அவர்கள் பங்குக்கான ஏற்பாடுகளை தங்கள் ஊரில் தயாராக செய்து வைத்திருந்தார்கள்.

    அபி நேற்று இரவு ரிச்சர்டின் ஊருக்கு வந்தாள், நாளை பொழுது விடியும் முன்னரே மீண்டும் பால்டிமோருக்குப் பயணமாவாள்.  ஏனோ வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்தது போல, அர்த்தமில்லாமல் போனது போல உணர்ந்தாள். கைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள் நள்ளிரவுக்கு மேலே ஆகியிருந்தது. இன்னமும் மூன்று மணி நேரத்தில் கிளம்ப   வேண்டும். தூக்கம் வரும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கைபேசி வழியே தனது ஃபிலிக்கர் தளத்திற்குச் சென்று தனது படங்களின் தொகுப்பில் ரிச்சர்டின் படங்களாகத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்தாள், கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, பார்வையை மறைத்தது.  கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்ப்பதைத் தொடர்ந்தாள். ரிச்சர்டிற்குப் பிறகு கையோடு  தன்னை வெட்டிவிட்ட ரிச்சர்டின் தந்தை மீதோ, அதனை மறுத்து ஏதும் செய்ய இயலாமல் கலங்கிப் போயிருந்த ரிச்சர்டின் தாயின் மீதோ அவளுக்கு ஏனோ சிறிதும் கோபமே   வரவில்லை. ரிச்சர்டே போன பிறகு இவர்கள் யார் என்ற நிலைக்கு அவள் மனம் எப்பொழுதோ சென்றுவிட்டிருந்தது.

    (தொடரும்)

     

    படம் உதவி:
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQEkiA2xBeeJAprVUE2GVZSneEGljw3LMTW4BKo_2WAg9m7HKYQ
    http://media2.wavy.com//photo/2009/06/09/fireworks1_20090609143951_320_240.JPG

     

     

     

     

     

    Share
  • மகாபாரத முத்துக்கள் – பகுதி 2

    புவனேஷ்வர் 

    பூரிசிரவஸ் வதம் – பகுதி 2 – பரம்பரைப்பகைவன்!

    வணக்கம், அன்பர்களே.

    சென்ற பதிவில், நாம் துரோணருக்கும் துச்சாதனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கண்டோம். பதினான்காம் நாள் யுத்தத்தில் சாத்யகியிடம் அடிபட்டு ஓடி வந்த துச்சாதனனின் நிலை கண்டு துரோணர், பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என்று அறிவுறுத்திய கட்டம் அது. இன்று, அதே பதினான்காம் நாள் யுத்தத்தில், அடுத்து சாத்யகி பண்ணின ஒரு முக்கியமான காரியத்தை பார்க்கலாம். அது தான் பூரிசிரவஸ் வதம்.

    பரம்பரை பகை, குடும்பப்பகை என்று எல்லாம் இன்றைக்கு சொல்கிறார்களே, அதெல்லாம் அன்றைக்கும் உண்டு. இன்றைக்கு இருப்பதை விட கொஞ்சம் தூக்கலாகவே அப்போதெல்லாம் உண்டு எனத்தான் தெரிகிறது. அப்படி ஒரு பரம்பரைப்பகை தான் சாத்யகி குடும்பத்துக்கும், பூரிசிரவஸ் குடும்பத்துக்கும்.

    முதலில் இது என்ன பகை என்று ஒரு முன் கதை சுருக்கம் பார்ப்போம்.

    கண்ணன், பாண்டவர்கள் எல்லாரும் பிறப்பதற்கு முன், கண்ணனின் தாயாரான தேவகி அம்மையாருக்கு சுயம்வரம் ஏற்பாடாகி இருந்தது. அங்கே, யாதவர்களை சேர்ந்த சினி என்ற அரசன் வந்திருந்தான். அவன், அங்கிருந்த மற்ற ராஜாக்களை எல்லாம் போர் செய்து ஜெயித்து, தேவகியை வசுதேவருக்காக தனது தேரிலே ஏற்றிக்கொண்டு கிளம்பினான். இதை கண்ட மற்றொரு அரசனான சோமதத்தனுக்கு பொறுக்கவில்லை. ஆத்திரத்துடன் சினியை தன்னுடன் மல்யுத்தம் செய்ய அழைத்தான். சிறிது நேரம் மல்யுத்தம் நடந்தது. சோமதத்தன் தோற்றான். சினி, ஆத்திரத்தில் தனது வாளை உருவி உயர்த்தி, இடது கையால் சோமதத்தனின் தலை மயிரை பிடித்து இழுத்து, காலால் உதைத்து “பிழைத்துப்போ” என அவமானப்படுத்தி அனுப்பினான்.

    எல்லா அரசர்களுக்கும் முன்னால் சினியால் தான் அவமானப்படுத்தப்பட்டதை நினைந்து நினைந்து வெட்கி மாழ்கிய சோமதத்தன், மகாதேவரை குறித்து கடும் தவம் இயற்றினான். அவனது தவத்தால் மகிழ்ந்த மகாதேவரும் அவனுக்கு தரிசனம் தந்து, “உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என வரம் கேட்க சொன்னார். இவனும், தன்னை பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்திய சினியின் மகனை அதே போல பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்தக்கூடிய மகன் தனக்கு வேண்டும் என வரம் கேட்டாம். மகாதேவரும் “அங்ஙனமே ஆகுக” என வரம் தந்தருளி அந்தர்த்தானமானார்.

    சினியின் பேரன் சாத்யகி. சோமதத்தனின் மகன் பூரிசிரவஸ். பிள்ளைப்பருவத்தில் இருந்தே, இவர்களுக்குள் அந்த பரம்பரை பகை ஓதி ஓதி வளர்க்கப்பட்டது. எத்தனை தான் சிறப்புகள் இருப்பினும் கோபமும் க்ஷாத்ரமும் (பழிவாங்கும் பண்பு/வன்மம்) க்ஷத்ரியர்களுக்கு உண்டு. க்ஷத்ரியன் என்ற பெயரே அதில் இருந்து உண்டானதுதான். சரி.

    வாள் போரில் நிகரற்றவன் பூரிசிரவஸ். கத்திச்சண்டையில் பூரிசிரவசை யாரும் ஜெயிக்க முடியாது என்பது பிரசித்தம். முன்பு கூட ஒரு முறை சாத்யகியை கத்திச்சண்டைக்கு பூரிசிரவஸ் இழுத்த போது பீமசேனன் அவசர அவசரமாக வந்து சாத்யகியை விலக்கி தன் தேரில் அழைத்துப் போய் விட்டான். பூரிசிரவசின் வாள்வீரம் அவ்வளவு பிரசித்தம். அதே போல வில்வன்மையில் சாத்யகி அருச்சுனனை ஒத்தவன் என அனைவரும் சொல்லும் அளவுக்கு சாத்யகி விற்போரில் நிபுணன். அருச்சுனனின் சீடன். (அப்பொழுது கேட்கவா வேண்டும்?)

    சரி. துச்சாதனனை தோற்கடித்த பின், துச்சாதனன் துரோணரிடம் போனானா, சாத்யகி மற்ற வீரர்களை ஒரு கை பார்த்த வண்ணம், அருச்சுனனை நெருங்கினான்.

    இனிவியாசர்சொல்லுவதைப்பார்க்கலாம்!

    சாத்யகி, தூரத்தில் அருச்சுனனின் தேரை கண்டான். தன் உயிர் நண்பனும் ஆசாரியனுமான பல்குணனை கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உற்சாகம் மேலிட, எதிர்ப்பட்ட எல்லாரையும் துவம்சம் பண்ணிக்கொண்டு விஜயனுக்கு சகாயம் பண்ண போனான்.

    அப்போது திரிகர்த்தர்களின் விற்படை சாத்யகியை சூழ்ந்து கொண்டு தாக்கியது, தோள்தட்டும் ஓசையும், வாட்களும் ஈட்டிகளும் கதைகளும் நிறைந்த அந்த படையை தனி ஒருவனாக சாத்யகி விற்போரில் சிதறடித்தான். அருச்சுனனை கண்ட உற்சாகத்தால், அவன் வேகம் மேலும் கூடியது போல காணப்பட்டது. பகைவர்களும் அவன் வீரத்தை கண்டு அதிசயித்து வேடிக்கை பார்த்தனர். ஒரு கணம் மேற்கில் காணப்பட்ட சாத்யகி, அடுத்தகணம் கிழக்கிலும் பின் வடக்கிலும் பின் தெற்கிலுமாக தனது தேரிலே மிக்க வேகத்துடன் சஞ்சரித்து, நூறு வீரர்கள் ஒரே உருவில் போரிடுவதை போல போரிட்டான். திரிகர்த்தர்கள் படை கொஞ்ச நேரத்திலேயே ஓட ஆரம்பித்தது. இதைக்கண்டு பொறுக்காத கலிங்கர்கள் சாத்யகியை சூழ்ந்து கொண்டு, மதம் கொண்ட யானையை பாகர் கூட்டம் அங்குசத்தால் குத்துவது போல கணைகளால் துளைக்கப்பார்த்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களோடு போரிட்டு, அவர்களை கடந்தான் சாத்யகி. கடலிலே கரை காணாமல் நீந்திக்களைத்த ஒருவன், தெங்கும் நுங்கும் தேன்கதலிகளும் நிறைந்த கரையை அருகில் கண்டால் களிப்பது போல களிப்புற்ற சாத்யகி சிம்மநாதம் செய்தான்.

    சாத்யகி வருவதைக்கண்ட வாசுதேவன், “பார்த்தனே, அதோ உன் வழியை பின்பற்றி வரும் சினியின் பேரனைப்பார்! எதிரிகளால் வெல்லப்படாதவனே, அவன் உனது சிஷ்யனும் நண்பனுமாவான். எதிர்த்து வந்த மாபெரும் வீரர்களை எல்லாம் துரும்பென மதித்து அந்த இளம் காளை உனக்காக வருகிறான்! எதிரிகளுக்கு பலத்த சேதம் உண்டாக்கி விட்டு, உனக்கு உயிரினும் பிரியமான நண்பன் சாத்யகி வருகிறான், அதோ பார்! துரோணரையும் போஜ ராஜனான க்ருதவர்மனையும் தனது பாணங்களால் நொறுக்கி விட்டு, இந்த சாத்யகி உன்னிடம் வருகிறான்! ஆயுதப்பயிற்சியில் குறையற்றவனும் தருமபுத்திரனுடைய நலனையே குறிக்கோளாக கொண்டவனுமான இந்த சாத்யகி, சிறந்த பல வீரர்களை கொன்று விட்டு உன்னிடம் வருவதைப்பார்! யுத்த அரங்கத்தில் ஒரு செயற்கரிய செயலை செய்து முடித்து விட்டு, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! துரோணரை தலைமையாக கொண்ட பல மகாரதர்களுடன் ஒரே தேரில் நின்று, வேறு துணையின்றி போரிட்டு ஜெயித்து, அதோ, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! தன் தோள்வலியால் கௌரவப்படையை துளைத்து, யுதிஷ்டிரனால் அனுப்பப்பட்ட சாத்யகி வருகிறான், அதோ பார்! கௌரவர்களிடையே தனக்கு ஈடான ஒரு வீரனும் இல்லாத சாத்யகி, எண்ணிறந்த வீரர்களை எமனுக்கு விருந்தாக்கி விட்டு உன்னை நாடி வருவதை காண்! பசுக்கூட்டங்களில் இருந்து ஒரு சிம்மம் வெளிப்படுவது போல கௌரவப்படைகளுக்குள் இருந்து வெளிப்படும் சாத்யகியைப்பார்! தாமரை போன்ற அழகிய முகங்களுடைய பல அரசர்களின் தலைகளை பூமியின் மேல் பரப்பி விட்டு உன்னிடம் வரும் சாத்யகியை பார்! துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் யுத்தத்தில் வென்று, ஜலாசந்தனை கொன்று விட்டு உன்னிடம் வரும் சாத்யகியைப்பார்! கௌரவர்களை துரும்பென மதித்து, ரத்த ஆற்றினை இன்று உண்டாக்கிய சாத்யகி, உன்னை நோக்கி களிப்புடன் வருவதைப்பார், அருச்சுனா!” என்று சொன்னான்.

    பார்த்தனோ, சாத்யகியைக்கண்டு மகிழ்ச்சி அடையாமல், பெருத்த அதிருப்தியே அடைந்தான். கண்ணனிடம் அவன், “திண்மை பொருந்திய அழகிய தோள்களை உடைய கண்ணா, சாத்யகியின் வருகை எனக்கு சிறிதும் திருப்தி அளிப்பதாக இல்லை. கேசவனே, தருமராஜரை தனியாக விட்டு விட்டு இவன் இங்கு வந்து விட்டானே, யுதிஷ்டிரரின் நலம் பற்றி எனக்கு கவலையாக உள்ளது. (அவரைப்பிடிக்க வேண்டும் என முனைப்புடன் உள்ள துரோணரின் சபதத்திலிருந்து அவரைக்காக்க சாத்யகியை நியமித்து விட்டு ஜயத்ரதனை முடிக்க நான் வந்தேன், இவனோ அவரை தனியாக விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய வருகிறானே) இவனை பிரிந்து அவர் அங்கே யுத்த களத்தில் உயிரோடு உள்ளாரா என சந்தேகமாக உள்ளது.

    இவன் அங்கு தருமரை பாதுகாத்துக்கொண்டல்லவோ இருந்திருக்க வேண்டும்? இவன் எதற்காக கேசவா, என்னைப்பின் தொடர்ந்து வருகிறான்? பாதுகாக்க ஆளின்றி தருமராஜர் துரோணர் வசம் அனாதையைப்போல விடப்பட்டு விட்டாரே!

    நானோ இன்னும் ஜயத்ரதனை கொன்று முடிக்கவில்லை. அதோ பார், பூரிசிரவஸ் சாத்யகியை போருக்கு அறைகூவி அழைக்கிறான்! நான் இப்போது ஜயத்ரதனை கொல்ல முனைவேனா இல்லை இந்த சாத்யகியை காப்பாற்ற முனைவேனா? சூரியன் வேறு அஸ்தமிக்கத் துவங்கி விட்டான்.

    சாத்யகியைப் பொறுத்த வரை, அவன் மகாவீரன் தான், ஆனாலும், என் உயிரை விடப்பிரியமான உண்மை நண்பனான அவன் எனக்காக நாள் முழுக்க போராடி மிகவும் களைத்துள்ளான்.  அவன் தேரில் உள்ள ஆயுதங்கள் குறைந்து உள்ளன, அவனது குதிரைகளும் சாரதிகளும் களைத்து உள்ளார்கள். பூரிசிரவசோ, நன்கு இளைப்பாறி, முழு பலத்துடனும் படைபலத்துடனும் உள்ளான். இந்த போரில் வெற்றி சாத்யகி பக்கம் இருக்குமா கேசவனே? எனக்கு சந்தேகமாக உள்ளது!

    கௌரவர் படை எனும் பெரும் சமுத்திரத்தினை அனாயாசமாக கடந்த எனது நண்பன், சினியின் பேரன் சாத்யகி, பூரிசிரவஸ் எனும்  ஒரு பசுவின் குளம்படிக்குட்டையில் மூழ்கி விடுவானோ என எனக்கு அச்சமாக உள்ளதே, ஜனார்த்தனா!

    குருகுலஸ்ரேஷ்டனும், ஆயுதங்களில் தேர்ந்தவனும் மகாத்மாவுமான பூரிசிரவசுடன் இப்போது செய்யப்போகும் போரில் சாத்யகி வெற்றியைத்தழுவுவானா?

    இவனை இங்கு எனக்காக அனுப்பியது தரும ராஜா யுதிஷ்டிரர் எடுத்த பிழையான முடிவு என நினைக்கிறேன், கண்ணா. த்ரோணரைப்பற்றிய எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், என் மீது கொண்ட அளவற்ற அன்பினால், இவனை எனக்கு சகாயமாக அனுப்பி இருக்கிறார் எனவே நினைக்கிறேன்.

    இறைச்சியையே விரும்பும் கழுகு வானத்தில் வட்டமிடுவது போல, யுதிஷ்டிரரையே பிடிக்க முனைந்து அங்கே துரோணர் முயற்சிக்கிறாரே! அரசர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற சந்தகம் எனக்குள் வந்துவிட்டது மாதவா!”, என்று அருச்சுனன், அதிருப்தியும் கவலையும் கலந்த தொனியில் வாசுதேவனிடம் கூறினான்.

    அதே சமயம், பரம்பரைப்பகையை நினைத்து மிக்க ஆத்திரத்துடன் பூரிசிரவஸ், களைத்து இருந்த சாத்யகியை நோக்கி போருக்கு அறைகூவி விரைந்தான்.

    அப்புறம் என்ன நடந்தது?

    அது அடுத்த பதிவில், அன்பர்களே.

    உபரித்தகவல்: பல்குணன் = அர்ஜுனன். அவன் பிறந்த உத்தர ஃபால்குணீ நக்ஷத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பெற்றான். இந்த நக்ஷத்திரத்தை தமிழில் உத்தரம் (கன்னி ராசி) என்கிறோம். இதை அவனே, உத்தர குமாரனிடம் விராடபர்வத்தில் கோஹரன சண்டையின் போது  சொல்கிறான். இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் மாசம் ஃபால்குணி மாசம். தமிழில் பங்குனி. பல்குணன் என்ற பெயர் அல்லாமல் அர்ஜுனனின் பிற பெயர்களாவன ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹணன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன், சவ்யசாசி, தனஞ்சயன். குந்தியின் மைந்தனாதலால் கௌந்தேயன். பார்த்தன் என்னும் பெயரும் அதே அர்த்தம் தான். குந்தியின் இயற்பெயர் ப்ருதை. ஆக, அவள் மைந்தன் பார்த்தன். பாண்டு மைந்தன் ஆதலால் பாண்டவன். இவை இரண்டும் பாண்டவர் ஐவருக்கும் பொதுவான பெயர்கள். பாண்டவன் என்றால் ஐவர் நினைவும் வரினும் பார்த்தன் என்றால் அர்ஜுனன் நினைவு தான் வரும். இதிலிருந்து, கீர்த்தியும் புகழும் வாய்ந்த மைந்தன் தந்தையின் புகழைவிட, குறிப்பாக தனது தாயின் புகழை பெருக்குவான் என்பது தெள்ளென விளங்குகிறது. தாய்மை வாழ்க.

    (தொடரும்)

    Share
  • தொலைத்ததும் .. கிடைத்ததும் ..!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    யம்மா……நான் பாசாயிட்டேன் …..நான் பி.எஸ்.ஸி பாசாயிட்டேன்…..என்று சந்தோஷமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையும் தன மகள் மலர்விழியைப் பார்த்ததும் இட்டிலிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த மங்களவல்லிக்கு, தான் என்றைக்கோ பார்த்த 16 வயதினிலே படத்தின் கதாநாயகி மயிலு தான் டக்கென்று நினைவுக்கு வந்தாள் .

    “அதுக்கென்ன இப்போ?”

    என்ற அதே குருவம்மாளின் பதில் வாய்வரை வந்தும் அடக்கிக் கொண்டு…

    “ம்ம்…ம்ம்…அது சரி….உள்ளார போயி உப்பு ஜாடிய எடுத்தா….” என்று இயந்திர கதியாக மாவுரலை சுற்றிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து,

    “ஒனக்கு சந்தோஷப் படவே தெரியாதா?”

    சிடு சிடுத்து விட்டு தனது சுடிதாரின் துப்பட்டாவை ஓங்கி உதறி சரி செய்து மேலுக்குப் போர்த்திக் கொண்டபடியே அடுக்களைக்குள் நுழைகிறாள் மலர்விழி.

    அவளது வனப்பில் அவளுக்கே கர்வம் உண்டு.
    இறைவன் அவளது குடும்பத்தில் ஏழ்மையைக் கொடுத்த அதே அளவுக்கு அவளிடம் அழகையும் அள்ளிக் கொடுத்திருந்தான்.

    “எம்மாவ் …உப்பு ஜாடிய நீ எங்கிட்டு வெச்சிருக்கே…இங்கன ஒரே இருட்டாவுல்ல இருக்குது…..வெச்சவுங்களுக்குத் தானே இருக்குற எடம் தெரியும்…நீயே வந்து எடேன் ….அலிபாபா குகை மாதிரி ஒரு அடுக்களை….இதுல எதுக்குள்ளார என்ன இருக்குமுன்னு எனக்கு சோசியமாத் தெரியும்…”

    ரெண்டு நாளு முன்னாடி ரேசன் கடைக்கிப் போயி சீமத்தண்ணி ஊத்தறாண்டு சொல்லி அம்பது ரூவாவ புளி வெச்சிருந்த ஜாடிக்குள்ளார போட்டு வெச்சிருக்கேன் எடுடீண்டு சொன்னே….அதுக்குள்ளார கைய விட்டா…..அப்பா ஓடியாந்து எடுக்காதே…எடுக்காதேன்னு ஒடியாந்தாரு ….என்னான்னு ஒரு வார்த்தை கேட்டியா அதுக்குள்ளார அம்பது ரூபா குவாட்டர் பாட்டிலா மாறிக் கெடந்துச்சு…..இதெல்லாம் நீ கண்டுகிடவே கண்டுகிடாத…..ஆமா…..நீயா தண்ணியடிக்கிற? என்று எடக்கு மடக்காக பதில் சொல்கிறாள் மலர்.

    அடி கூறுகெட்ட சிறுக்கிடி நீ….ஒண்ணு கேட்டா ஒன்பது சொல்லுவ.. உன்கிட்ட எதுனாக் கேட்டுப்புட்டு எனக்கு உடனே கேட்டது கிடைச்சுருமா? கரண்டு இருந்தா நான் என்னாத்துக்கு இப்படி ஆட்டுக்கல்லாண்ட மல்லுக் கட்டி நிக்கப் போறேன். கிரைண்டர்ல போட்டு ஆட்டிக்கிட மாட்டேன். வந்துட்டா..குவாட்டரையும் ..இருட்டயும் பத்தி பேச…என்று எழுந்திருக்க முடியாமல் ரொம்பக் சங்கடத்தோட கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து….யம்மா… இன்னும் ரெண்டு இட்டிலி போடுன்னு கேட்டு வாங்கித் தின்னத் தெரியும்….இட்டிலிக்கி எதை எப்படி ஊறப் போடுறதுன்னு கூடத் தெரியாது..என்னிக்காச்சும் சமயக்கட்டுப் பக்கம் வந்து நின்னாத் தானே…அப்படி வீட்டுக் குள்ளார ஒரு ரூம்பு இருக்கறதயே நீ கண்டுக்கிட மாட்டே….முனகியபடியே உப்பை எடுக்க சமையல் கட்டுப்பக்கம் போனாள் மங்களவல்லி. கூலி வேலைக்கு போறவரு அலுப்பு சலுப்பு நீங்க ரூபாய எடுத்த எடத்துல வாங்கி வந்தத வெச்சிருக்கும். அவுகளுக்குத் தான் புத்தியில்ல…..கேக்குற உனக்குமா இல்ல…..பெத்தவளப் பாத்து வாய் கூசாம கேக்குறதப் பாரு. தண்ணியடிக்கிறியா…? தண்டால் எடுக்கிறியாண்டு…!

    யம்மா…நான் மேல் படிக்கப் போறேன்….டீச்சர் டிரைனிங் ஒரே வருஷம் தான்….அதுக்கு நான் காலேஜுல சேரணும் …ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேணும் என் ஃபிரண்டு சரோஜா சேர்ந்துட்டா..சேத்தியார்தோப்புல இருக்குது காலேஜு….இங்க சீர்காழில இருந்துக்கிட்டு வயலு வரப்ப பார்த்துக்கிட்டு அதுவும் நமக்கு சொந்தமில்லாததை, யாருக்கோ கூலிக்கி மாரடிச்சுக்கிட்டு ஒரு வசதியும் இல்லாமா இருக்குறத விட ….பேசாம நாம கூட வேற எங்கியாச்சும் நல்ல டவுனு பக்கமாப் பார்த்துப் போயிறலாமா ?

    நல்லாக் கேட்டியே ஒரு கேள்வி…பொறந்து, வளர்ந்து, வாக்கப்பட்டு, உழைக்கிற பூமிடி இது…இத்த உதறிப்புட்டு எங்கன எங்கள வரச் சொல்லுற ? நீ என்னமோ பெரிய தொரசாணி வீட்டம்மா கணக்கா பேசிபுட்டா ஆயிரிச்சா…..நான் அன்னிக்கி அடிச்சிகிட்டேன்…அடுத்த வூட்டுக்குப் போயி கரண்டி பிடிக்கிற கையி…இதுக்கு எதுக்கு பெரிய படிப்புன்னு….?உங்கப்பாரு கேட்கலை…நீ எங்க கேக்க வெச்சே…..காலேஜு படிப்பு படிக்கிறேன் ன்னு ஒத்தக் காலுல அடம் பிடிச்சி அறுவடைப் பணத்த அம்புட்டயும் அள்ளிக் கொண்டுட்டு போயி அந்த பாளாப் போன கடடுடத்து கிட்ட கொட்டிட்டு வந்து நின்ன..!

    எம்மா…அது படிக்க பீசு ….அன்னிக்கு அம்புட்டு கொடுத்ததாலத் தான இன்னிக்கி நானு ஒரு கிராஜு வேட் ன்னு பெருமையா சொல்லிக்கிட முடியுது. இனிமேட்டு நான் பி.எட் படிச்சிட்டா அம்புட்டுத்தேன்…..ஒரு டீச்சர் ஆகிப்புடுவேன். அதுக்குப் பெறவு நான் ஏன் உன்கிட்ட மேல படிக்கிறேன்னு கெஞ்சிக்கிட்டு நிக்கப் போறேன்.

    அன்னிக்கி என் தம்பிய கட்டியிருந்தீனா இன்னிக்கி கையில புள்ளயோட நீயும் துபாய் போயிருக்கலாமில்ல, கூறு கெட்டவளே..! நல்ல சான்சை நளுவ விட்டுப்போட்டு இப்பக் கெடந்து அலபாயுற. நீ என்னாத்தப் படிச்சா எவன் கேட்குறான்….கலியாணம் பண்ணி புள்ளையப் பெத்தமா போய் சேர்ந்தமான்னு நிக்காம…இவ படிச்சி ஊருக்குச் சொல்லிக் கொடுத்து பயபுள்ளைய சீமைக்கு அனுப்பப் போறியாக்கும்….? திருட்டுப் பயலுவ நடமாடற ஊருடி இது….எங்கிட்டுப் பார்த்தாலும் கொலையும் கொள்ளையுமா நடக்குது. கலியாணம் தாண்டி பாதுகாப்பு. வெளங்கிச்சா?

    எம்மா …எம்புட்டு சொல்றது. உம்ம மூளைக்கு முண்டாசு தான் கட்டோணம்.சொந்தத்துல கல்யாணம் கட்டினா புள்ள வந்து பொறக்காது பிரச்சனை தான் வந்து பொறக்கும் …எம்புட்டு சொன்னாலும் கேட்டுக்கிட மாட்டே.. கூறப் பத்தி நீ என்கிட்டப் பேசுறியா?

    மவ படிக்கிறாளே….நெறையப் படி…நான் தான் ஸ்கூல் போகலை நீனாச்சும் பெரிய டீச்சரா வரணும்டு சொல்ல முடியல உன்னால….துபாயில மாமா என்னா வேலை பாக்குது தெரியாதா? வருஷத்துக்கு ஒரு வாட்டி வந்து உன்கிட்ட ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்தா அவுரு பெரிய சீமைத் துரையா ? கொடுத்த் ரூபாய்க்கு இங்கனயே உக்காந்து ஆட்டுக்காலு சூப்பு வெய்யின்னு சொல்லி குடிச்சே கழிச்சுட்டு போயிருவாரு…நீயே தெனம் சொல்லிகிட்டே தானே இருப்பே. இப்ப நான் படிக்கோணும்..அதுக்கு வழி சொல்லு. உன்னோட வெளங்காத கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல என்னால ஆவாது.

    அடிப் போடி…வழக்குக்குப் பொறந்தவளே….என்னால இனிமேட்டு உன்னிய உக்கார வெச்சி படிக்க வெக்க முடியாது..நீ எங்கிட்டும் போக வேண்டாம்…பேசாம என்னோட சேர்ந்து மாயவரம் மார்கெட்டுல பூ வாங்கி கட்டி வைத்தீஸ்வரன் கோயில்ல விக்கிறதுக்கு உதவி பண்ண முடியுமாண்டு போளப்பப்பாரு போ.

    அதுக்கு நீ வேற ஆளப் பாரு…! சொடக்கென சொல்லிவிட்டு எழுந்து கொல்லப்புறம் சென்று விட்டாள் மலர்விழி.

    அடியாத்தி……இவளுக்கு வாரக் கோவத்தப் பாரேன்…இதையே அவ மாமியா கையில சொல்லியிருந்தா என்னத்துக்காவுது….ஊசி நூலு வெச்சி தெய்ச்சிருவாக. என்னியுமில்ல கிழி கிழின்னு கிழிச்சிருவாக. வாயில கோர்ட்டை வச்சிக்கிட்டு நிக்கிறா. என் சரக்க இப்படி வெச்சிக்கிட்டு நான் எவ கிட்ட என் மவளுக்கு மாப்பிள்ளை தேட. தெரிஞ்சவன் ஒரு பய கட்ட வரமாட்டான். தெரியாதவன் சிக்க நான் தெருத் தெருவாவுல்ல நடந்தாகணும். ஆட்டுக் கல்லோடு சேர்ந்து இவளது எண்ணமும் அரைந்து கொண்டிருந்தது.

    முதல்ல சென்னை பட்டணத்துக்குப் போகணும்ன்னு தான் சொல்லுவா அப்பால சினிமால எவனோ நடிக்க கூப்புட்டான்னு சொல்லி அப்படியே …ஓடிப்போயிருவே. இம்புட்டு வயசானவ நானே இன்னும் மெட்ராசுக்குப் போனதில்ல தெரியுமா?
    உனக்கு கேக்குது…அதுக்குத்தான் படிக்கவே வைக்கக் கூடாது ..

    அரசு சலுகையில் ரொம்ப சுலபமா படிச்சிப்புடலாமுன்னு இருந்தேன்….இந்தம்மா இப்படி முரண்டு பிடிக்கிறாங்க….அப்பா வரட்டும்…..கெஞ்சி அளுதுப்புட வேண்டியது தான். அப்பவாச்சும் கேப்பாக. அம்மா முரண்டு தெரிஞ்சது தான.

    கரண்ட்டு இல்லாத சீர்காழி மெல்ல மெல்ல இருண்டு இருண்டு ஊரே இருக்குமிடம் தெரியாமல் இருளில் அமிழ்ந்து போனது. சென்னையில பூரா வெளக்கும் எரிஞ்சு சும்மா ஜிகு ஜிகுண்டு இருக்குமாம்ல.
    ஷீலா நேத்துக் கூட போன்ல சொல்லிச்சு. எப்படியாச்சும் சென்னைக்கு போயி ஒரு நாலு காசு சம்பாதிச்சிட்டு வந்திறணம். ஒரு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிச்சா……..போதும் போதும்…..எப்படியாச்சும் டீச்சர் ஆயிறலாம். கண்ணுக்குள் நினைவுகள் பள்ளிக்கூடம் எழுப்ப அப்படியே மயக்கத்தில் உறங்கிப் போனாள் மலர்விழி.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    இன்னாம்மா ஷீலா…நீ இன்னாமோ நாலஞ்சு பொண்ணுங்கள வேலைக்கி இட்டாரேன்னு சொன்னியே…இன்னாச்சு? அதுங்க எப்போ வருதுங்க ? இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி? அதட்டினார் மானேஜர் ஆறுமுகம்.

    ஊருல சொல்லிருக்கேன் சார்…எப்பிடியும் வந்துருவா..ஒருத்தி கண்டிப்பா வரேன்னு சொல்லிருக்கா. சம்பளம் சொன்னீங்கன்னா..என்று தயக்கத்துடன் இழுத்தாள் ஷீலா.

    அது இன்னா வந்து என்னாட்டமா மேனசர் உத்தியோகமா பாக்கப் போவுது? மீனுல முள்ளு எடுக்குற வேல தான…எல்லாம் தருவோம்…இப்போ நீ எம்புட்டு துட்டு வாங்குற?

    ஒரு நாளிக்கி ஓ.டி எல்லாம் சேர்த்து முந்நூறு ரூபா வாங்கறேன் சார். இன்னும் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடுங்களேன் சார்..என்று சந்தடி சாக்கில் தன்னுடைய பெட்டிஷனை தயங்கி தயங்கி சொல்கிறாள் .

    ம்ம்ம்..அதும் வந்து ஓ.டி பாக்கச் சொல்லு முந்நூறு ரூபாய் கெடைக்கும்..சரியா….இன்னா படிச்ச புள்ளையா? நீ ஒரு பத்து உருப்படி பிடிச்சிக் கொடு. கமிஷன் எதாச்சும் போட்டு வாங்கிக்க.

    சரிங்க சார்.ஆமா பி.எஸ்.ஸி முடிச்சிருக்கு…டீச்சர் ஆக ஆசை…பி.எட் படிக்க பீஸு கட்டத் தான் இங்கன வேலைக்கு வாரேன்னு சொல்லிச்சி.

    அப்பால இன்னா ….கூட்டிட்டு வா…இன்னா படிச்சா இன்னா இங்கன எடுக்குறது முள்ளு தான..படிப்புக்கெல்லாம் கூட துட்டு கெடைக்காது சரியா?

    இன்னும் ரெண்டு நாளுல வந்திருவா சார். வேலை கண்டிப்பா தரணும் …அவ சீர்காழி லேர்ந்து வரணும்.ரொம்பவும் கஷ்டப் படுற குடும்பம். கூலிக்கு விவசாயம் பண்ணுற குடும்பம்.

    சரி தாயி….நீ அழைச்சுட்டு வா….பார்ப்பம்.

    ஷீலா நிம்மதியோடு எப்படியாச்சும் தன்னுடைய கல்லூரித் தோழி மலர்விழிக்கும் இங்க ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விடலாம் என்ற நிம்மதியில் ஏறாலைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

    மாலையில் கைபேசியில் மலர்விழியை அழைத்து விஷயம் சொல்லவும்….”டீ….மலரு…..வெரசாக் கெளம்பி பொழுதோட சென்னை வந்துருடி,,,,கிண்டில எறங்கிடு….நான் வந்து கூட்டிட்டு வந்துர்றேன்….நான் எதிர்பார்த்து காத்திட்டு இருப்பேன்..எங்க மேனேஜர் சார் கிட்ட சொல்லிட்டேன். வேலை போட்டுத் தாரேன்னு உத்தரவாதமா சொல்லிட்டாரு. நீ பத்திரமா கவலைப் படாமே வந்து சேரு. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கைபேசியை மூடியவள் தனது ரூமுக்கு விரைகிறாள்.

    ஹாஸ்டல் ரூம் வாசலில் பாண்டியன் அவளுக்காகவே காத்துக் கொண்டு நிற்பதைக் கண்டவள் மனசுக்குள் இன்னிக்கும் வந்து நின்னுடானே……வந்த என்னத்தை முகத்தில் காட்டாமல்….வாங்க வாங்க…..எப்ப வந்தீங்க…என்று கேட்டுக் கொண்டே எங்கிட்டாச்சும் வெளிய போயி சாப்பிட்டு வரலாம் இல்லியா..? இங்க ஹாஸ்டல் ரூமுக்கு நீங்க இன்னிக்கு வர வேண்டாம்…வார்டன் அம்மா திட்டுறாங்க…என்கிறாள்.

    சரி…ஷீலா…இன்னைக்கு இப்ப போன் .போட்டேன்..எங்கேஜா இருந்துச்சு…..யாருகிட்ட இம்புட்டு நேரம் பேசிகிட்டு இருந்தே? வேலை முடிஞ்சதும் நான் ஒருத்தன் காத்துக்கிட்டு இருப்பேன்னு நெனப்பே வர்லியாக்கும் இந்த சுந்தரிக்கி…சொல்லிக் கொண்டே அவளது கன்னத்தைக் கிள்ளியபடியே….சரி இன்னிக்கு எம்புட்டு துட்டு கெடச்சிச்சி …ஒரு அமௌண்ட வெட்டு…நான் பாட்டுக்கு போயிட்டே இருக்கேன்….சரக்கடிக்கிற எடத்துக்கு நீ இன்னாத்துக்கு?
    நீ ரூம்புக்கு போயி தின்னுட்டு தூங்கு…நாளிக்கு “சிங்கம்” படத்துக்கு அளச்சிட்டு போறேன்….என்னான்கறே..சரி தானே புள்ள?

    அடச்சீ……உன்னையல்லாம் எனக்குக் காதலன்னு சொல்ல வெச்சிட்டியே…எங்க ஊருல என்னோட வீட்டுக்கு தெரிஞ்சா என்னிய கண்டந்துண்டமா வெட்டி கூரு போட்ருவாக. மருவாதியா இனிமேட்டு என்கிட்டே காசு கேக்குற வேலைய விட்று. நான் இன்னா உனக்குக் கொடுக்கவா ராவில்ல பகலிலன்னு கையி வலி புடுங்க மீனு முள்ளு எடுத்து பாக்கிங் பண்ணிட்டு வாரேன். கஷ்டப் பட்டு உழைக்கிற காசை உன் போதைக்கு செலவு செய்ய என்னால ஆவாது. அதுக்கு நீ வேற எவளையாவது பாரு. நம்ம கையில உன்னோட நாட்டாமை இனிமேட்டு நடக்காது. எனக்கு சிங்கமும் வேண்டாம் எந்த அசிங்கமும் வேண்டாம்…நீ ஆளவிடு சாமி…இரு கையையும் சேர்த்து கூப்பி உனக்கு கோடி புண்ணியம்…போயிரு…என்கிறாள் ஷீலா.

    அடியே….நீ இப்படிச் சொன்னா…..போயிருவோமா? அன்னிக்கு நீ தான் என் புருஷன்…..கட்டினா உன்னத் தான் கட்டுவேன்னு பேசின….அதுக்குள்ளாற நான் கசந்து போயிட்டேனா? வேற எவனாச்சும் லைனு போட்டானா? பொறம்போக்கு….இந்தாரு ஷீலா….
    மனுசனுக்கு ஒரே பேச்சு….நான் பாட்டுக்கு போயிட்டு இருந்தேன்…நீ தானடி சிரிச்சே…..நீ தான உங்க பேரு என்னன்னு கேட்டுகிட்டு வந்து நின்ன..மறந்து போச்சா? நீங்க இப்படி சும்மா இருந்தவன கிண்டி கெளப்பி விடுவீங்க….நாங்க உங்க போதைக்கு ஊறுகாயா இருக்கணுமாக்கும்? உங்களுக்குப் பிடிச்சா நாங்க காதலன்….பிடிகாட்டிப் போனா அப்பால களட்டி விட ம்ம்ம்…..பிளானு…சம்பாதிக்கிற ஏத்தம்….பல்லை நற நற வென்று கடித்தபடி மெல்லிய குரலில் .சொல்லிக்கொண்டே தனது பாண்ட் பைக்குள் கையை விட்டு “இந்தாரு…ஷீலா….இதுக்குத் தான் நானும் கையோட மஞ்சக் கயிறு வச்சிக்கிட்டு அலையிறேன்…ஹாஸ்டல் வாசல்னு கூட பார்க்க மாட்டேன்……வார்டனை கூப்பிட்டு முன்னால வெச்சி உன் களுத்துல இத்தக் கட்டி இறுக்கிருவேன்…..என்று ஆவேசத்தோடு நெருங்குகிறான் அவன்.

    இந்தா…நிறுத்து….நான் என்ன உங்கள கலியாணம் கட்ட மாட்டேன்னா சொன்னேன். குடிக்க காசு தர மாட்டேன்னு தான் சொன்னேன்.
    அதுக்கு இம்புட்டு சிலம்புறே…இந்தா….பிடி நூறு ரூவா….எங்கியோ டாஸ்மாக்குல போயி பிறாண்டு…….இப்ப நீ ஆள விடு….அவன் கையில் ரூபாயைத் திணித்து விட்டு…இப்படிப் போயி மாட்டிக்கிட்டேன்….பார்க்க ஜீன்சும் டீஷர்ட்டும் போட்டுக்கிட்டு தனுஷ் மாதிரியே இருந்தான்…..நான் போற வாற எடத்துக்கு கூடவே பின்னாடி வந்துக்கிட்டு இருந்தான்…..நல்லவராத் தெரிஞ்சான்…….நாலு மாசத்துல ரௌடித் தனத்த காமிக்கிறான்…புலம்பியபடியே தன அறைக்குள் நுழைந்து கதவைச் சார்த்திவிட்டு ….பாயில் படுத்தவள் தலையணையில் முகம் புதைத்து குலுங்கிக் கொண்டிருந்தாள். மனத்துக்குள் ” இவனிடமிருந்து தப்பிப்பது எப்படி ?” என்ற கேள்வி எதிரொலித்துக் கொண்டிருந்தது.

    மயிலே….மயிலே…இறகு போடுன்னு சொன்னா இவளுகளுக்கு ஏறாது…..எல்லாம் நம்ம ரூட்டுல பேசினா அப்டியே இளகிறுவா…இவளைத் தெரியாதா? என்று சொல்லிக் கொண்டே நானா என்னிய காதலின்னு சொன்னேன்….நீயா வந்து மாட்டிக்கிட்டே.
    சொல்லிக் கொண்டே தனது சைக்கிளில் ஏறி…..”இரவினில் ஆட்டம்…..ம்ம்ம்ம்ம்……. பகலினில் தூக்கம்….ம்ம்ம்ம்ம்…….இது தான் எங்கள் .உலகம்..எங்கள் உலகம்…..” என்று பாடிக் கொண்டே டாஸ்மாக் கடையை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் பாண்டியன்.

    0 0 0 0 0 0 0 0 0 0 0 0

    அப்பாவின் காலைப் பிடித்ததில் அவர் மனம் இறங்கியதும் அவர் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு அப்பா….ன்னா அப்பா தான்…..என்று குதித்து ஓடி விரைவில் ஒரு தகரப் பெட்டிக்குள் உடைகளை திணித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் மலர்விழி.
    புலம்பிக் கொண்டிருந்த அம்மாவிடம்…..எம்மா…..போயிட்டு கை நிறைய துட்டோட வந்து நிப்பேன் பாரு…அப்பச் சொல்லுவே….என் ராசாத்தி….நீ டீச்சரா வாரா மாதிரி கனவு கண்டேன்ன்னு…..கொஞ்சம் சிரிச்சாப்புல தான் என்னிய அனுப்பி வையேன்…என்று மங்களவள்ளியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மலர்விழி …சிணுங்குகிறாள்.

    சொன்னாக் கேக்காத மவளை நான் எப்படி போயிட்டு வாடின்னு சொல்லுவேன். உனக்கு உங்கப்பாரு கொடுக்குற செல்லம். போயிட்டு வா…நீ நம்புற உலகம் உனக்கு பாடம் எடுக்கும். அப்பறமேட்டு தெரிஞ்சிட்டுப் போவுது.

    சீர்காழி பஸ் நிலையம்.

    “சிதம்பரம்…..கடலூர்…..பாண்டி……திண்டிவனம்…..சென்னை…..ஏறு…..ஏறு….ஏறு….”

    மலர்விழியின் காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது போலிருந்தது அந்தக் குரல்.

    அப்பா நான் வரேன்….என்று கையசைத்து விட்டு…பஸ்ஸில் ஏறி ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள்.

    “சென்னை பட்டணம்…
    எல்லாம் கட்டணம்…
    கையை நீட்டினா……காசு மழை கொட்டணும்…
    குடிக்கிற தண்ணி …..காசு….
    கொசுவை விரட்ட …..காசு…”

    பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

    சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.

    “ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு.

    பஸ்ஸில் பாட்டு ஒலிக்க ஆரம்பித்து பஸ் மெல்ல ஹாரன் அடித்த படியே சீர்காழி பஸ் நிலயத்தைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

    சீட்டு….சீட்டு…..என்றபடி கண்டக்டர் இவள் அருகில் வந்து நிற்கவும்.

    “ஒரு சென்னை” என்கிறாள் மலர்விழி ஏக உற்சாகத்தோடு

    எங்கிட்டு எறங்கோணம்….கோயம்பேடு தானா?

    …..என்னது……கோயம்பத்தூர் இல்லீங்க….கிண்டி……கிண்டி போகுமில்ல..? குழப்பத்துடன் கேட்கிறாள் மலர்விழி….கண்களை மலர்த்தி கொண்டு .

    அட….ஊரு பேரு தெரியாத புள்ளைங்க எல்லாம் வம்பை வெலக்கி வாங்கபஸ் ஏறி சென்னைக்கு டிக்கெட் கேக்குதுங்க….! முணு முணு த்துக் கொண்டே இருநூறு ரூபாய் எடு…. டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்து விட்டு…. மலர்விழியை ஓரவிழியால் ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்கிறான்.

    இதை எதையும் கண்டு கொள்ளாமல் மலர்விழி பஸ்ஸில் பாடிக்கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி அதில் ஐக்கியமாகி ரசித்தபடியே கண்களை மூடிக் கொண்டவள் சிறிது நேரத்தில் அப்படியே ஜன்னல் கம்பியோடு தன் முகத்தை சாய்த்துக் கொண்டு வந்த காற்றில் அப்படியே உறங்கிப் போகிறாள்.

    0 0 0 0 0 0 0 0

    இந்தா.பாப்பா……கிண்டி…கிண்டி…..வந்திரிச்சி…….எந்திரி….எந்திரி……நீள விசில் அடித்து பஸ் ஸ்டாண்டில் உறுமிக் கொண்டு நின்றது.

    திடுக்கிட்டு விழித்த மலர்விழி அவசர அவசரமாக அவளது தூக்கிக் கொண்டு இங்கவும்……போலாம்…ரைட்….என்ற குரலுக்கு அடங்கி பஸ் கிளம்பியது.

    சென்னையில் இரவெல்லாம் மழை கொட்டித் தீர்த்ததன் அடையாளமாக ரோடெல்லாம் ஈரம்….சகதி. மெல்ல மெல்ல காலை வைத்து நடைமேடையில் ஏறி நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டாள், எங்காவது தோழி ஷீலாவின் முகம் தெரிகிறதா….?
    என்று.

    ரோட்டின் அடுத்த பகுதியிலிருந்து கையை ஆட்டியபடியே…..வந்த ஷீலா …”ஏய்….மலரு…..நான் இங்கிட்டு இருக்கேன்…. நீ அங்ஙனயே நில்லு நா வாரேன்…..என்றவள் நீண்ட நாட்கள் கழித்து மலரைக் கண்ட மகிழ்வில் வேகமாக ஓடி வருகிறாள்.

    அடியே…..நடு ரோட்டுல இப்படி ஓடி வராதடி…எவனாவது இடிச்சி தள்ளிட்டு போயிருவான்…பதற்றத்தில் மலர் அங்கிருந்தபடியே கத்துகிறாள்.

    அதற்குள் அருகில் வந்துவிட்ட ஷீலா….மலர்விழியை அப்படியே கட்டிக் ..கொண்டு.நல்ல வேள புள்ள…சொன்னபடிக்கி ..நீனாச்சும் வந்த…..நம்ம லதா, வாணி, கீதா, மாரியம்மா, அந்த கோண மூக்கி கோவிந்தம்மா அது கூட வரல தெரியுமா? என்று ஆதங்கத்தோடு படபடத்தாள்.

    சரி விடுடீ …என் வீட்டுலயும் உனக்குத் தான் தெரியுமே….என் அம்மா விடவே இல்லை….எப்படியோ எங்கப்பா காலைப் பிடிச்சி காக்கை பிடிச்சேன் ஒருவழியா ஒத்துக்க வெச்சேன், அவுக மனசு மாறக்குள்ள பெட்டியை கட்டிப்புட்டேன்…என்று தனது சாமர்த்தியத்தை சந்தோஷத்துடன் ஷீலாவிடம் சொல்லிக் கொண்டே நடந்தாள் மலர்.

    திடீரென்று திரும்பிப் பார்த்த ஷீலா…உடனே சரிடி..நாம சீக்கிரமா வேலைக்குப் போவணும் …கொஞ்சம் வெரசா நடக்கிறியா…இந்தா அந்தப் பொட்டிய என் கையில கொடு என்று சொல்லி வலுக்கட்டாயமாக மலரின் கைகளிலிருந்து பெட்டியை இழுத்தவளின் அவசரத்தைக் கண்ட மலர்….இந்தாடி…..இவனுங்களுக்கெல்லாம் நீ ஏன் இம்புட்டு பயப்படுறே…..நானும் கவனிச்சேன்…கிறுக்கன்….அப்பமேட்டு நம்ப ரெண்டு பேத்தையுமே நோட் பண்ணிக்கிட்டு நிக்கான். கொஞ்சம் பொறு நான் வேணா போயி ரெண்டு வார்த்தை கேட்டுபுட்டு வரவா? என்று கேட்ட மலரின் கைகளை இருக்கப் பற்றிய ஷீலா, வேற வம்பே வேண்டாம்…..நீ ஒண்ணு …அது என் ஆளு தான்…பேரு பாண்டியன். நான் எங்கிட்டு போனாலும் அதுக்கு மூக்குல வேர்க்கும் போல…வந்து அட்டெண்டன்ஸ் போட்டுடும். நீ வார விசயத்தை சொல்ல வேணாமுன்னு ரகசியமா வெச்சிருந்தேன்…எப்படியோ மோப்பம் புடிச்சி வந்து நின்னுடிச்சி…நீ கண்டுகிடாதே. என் பக்கத்திலயே நட….பல்லைக் கடித்தபடியே மெல்லிய குரலில் சொல்லி முடித்த ஷீலாவை அதிசயமாகப் பார்க்கிறாள் மலர்.

    இன்னாடி சொல்லுறே ஷீலா….உன் ஆளா…..நீ லவ்வு பண்றியா? பட்டணத்துக்கு வந்ததும் உடனே இதுவும் வந்துருமா? ஆனா எனக்கு இதுக்கெல்லாம் தகிரியம் இல்ல…அதுக்கு உண்டான மூஞ்சியும் இல்லை….என்று அலுத்துக் கொள்ள…

    யாரு சொன்னா? என் மூஞ்சிக்கே ஒருத்தன் கிடைக்கும் போது ….உன்ன மாதிரி அழகிக்கு….அடியே மலரு…நீ ரொம்ப அழகு தெரியுமா?
    ஷீலா மலரைப் பார்த்து சொல்லிவிட்டு ஒரு நிமிடம் அப்படியே நிற்கிறாள். பிறகு ஆமாம் நீ கொள்ளை அழகு…அதான் உன் அம்மா உன்னைப் பொத்தி பொத்தி வெயக்குது ….என்று முடிக்கிறாள்.

    மலர்விழிக்கு எங்கிருந்தோ ஒரு கர்வம் வந்து அவள் தலையில் ஒரு மலர்கிரீடம் வைத்து விட்டுப் போனது. மனத்தில் எழுந்த சந்தோஷ உணர்வுகளுக்கு வார்த்தைகளைத் தேடித் தவித்தவள்…….ஒன்றும் புரிபடாத நிலையில், “அழகெல்லாம் முருகனே…அருளெல்லாம் முருகனே….தெளிவெல்லாம் முருகனே…தெய்வமும் முருகனே…தெய்வமும் முருகனே…”என்று பாடியபடியே இன்னும் எத்தனை தூரம் போவணும் நீ குடி இருக்குற வீட்டுக்கு? என்று கேள்வியும் கேட்கிறாள்.

    ம்ம்ம்…வீடில்லை…ஹாஸ்டல் ரூம்பு…ஒரு மாசம் தங்கறதுக்கு மூவாயிரம் ரூபாய். கட்டிலு மெத்தை எதுவும் கிடையாது..வெறும் பாயும் தலையணையும் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..இந்த சென்னையில இங்கன தான் இம்புட்டு சீப்பா ரூம்பு கிடைச்சுச்சு. வேறேங்கேனா போனா நாம சம்பாதிக்கிற அம்புட்டையும் அவுங்க கிட்ட தந்துட்டு மானத்தப் பாத்துட்டு சிரிச்சிகிட்டு நிக்கோணம். இதோ இந்த கட்டடம் தான் ஹாஸ்டல்….பாத்தியா பேர …”சாந்திக் குடில்”. உனக்காச்சும் இங்க எங்கிட்டாவது சாந்தி கெடைக்குதா பார்க்குறேன். என்று ஷீலா சொல்லிக் கொண்டே உள்ளே நுழைகிறாள்….மெல்ல வா அந்த கதவுல ஒரு ஆணி நீட்டிக்கிட்டு கெடக்கு…உன் கையை இல்லாத போனா உன் துப்பட்டாவை கிழிச்சி தொலைக்கும். பார்த்து வா..என்று கொண்டே வராண்டாவில் காலடி எடுத்து வைக்கவும்.

    டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்……….கிழிஞ்சிடுச்சிடீ…!மலர் அழாத குறையாக அலறவும்.

    நான் தான் பார்த்து வான்னு சொல்லிட்டே இருக்கேன்ல….போனாப் போவட்டும்..வேற வாங்கிகிறலாம். டி .நகர் போவோம்ல அங்கன வாங்கிறலாம் .

    போடி இவளே..நான் இங்க வந்து துப்பட்டாவைக் கிழிச்சுப்புட்டு வேற வாங்கவா வந்தேன்….போனாப் போவட்டுமாம்…ஆளப் பாரு…உன்னுது கிழிஞ்சிருந்தா வலிச்சிருக்கும்…என்று சொல்லிக் கொண்டே ஷீலாவைத் தொடர்ந்து நடக்கிறாள் மலர்விழி.

    ஏண்டி….உனக்கு இந்தப் பொறாமை…..எல்லாம் எனக்கும் நாலஞ்சி வாட்டி கிழிஞ்சி போச்சு. அதான் உனக்குச் சொன்னேன். ம்ம்…இதான் ரூம்பு…என்று தன் கர்சீப்பில் முடிச்சுப் போட்டு வைத்திருந்த பித்தளைச் சாவியை எடுத்து திறக்கிறாள்.

    மூன்று நான்கு தடவை மாற்றி மாற்றி போட்டபின் பூட்டு க்ளிக் திறந்து அதே வேகத்தில் அந்த மரக்கதவும் படால் என்று திறந்து கொண்டு இவர்களுக்கு வழி விட்டது.

    உள்ளே நுழையும் போதே ஒரு முடை நாற்றம்…..வந்து மலர் முகத்தை சுழித்துக் கொண்டாள் .

    ஏண்டி……இவளே…..! இதுவா…..இங்கனையா….நானும் தங்கணும்….! நம்ப வீட்டு மாட்டு கொட்டாய் கூட இத்த விட சொகுசா இருக்குமே….கருமம்…கருமம் ..என்னமோ நாறுது…என்று சொன்னதும் ஷீலாவின் முகம் சுண்டிப் போனது.

    நான் வரும்போதே நெனச்சேன்…..இம்புட்டு அசிங்கமா குப்பையும் கூளமுமா சின்னச் சந்துல கூட்டிட்டு போறாளே…ரூம்பு எப்பிடி இருக்குமோன்னு ..நான் நெனச்சது ரைட்டாத் தான் இருக்கு.

    இதுக்கும் மேலே இந்த சென்னையில உனக்கும் எனக்கும் தங்குறதுக்கு எடம் கெடைக்காது…நாம என்ன அம்பானி பரம்பரையா….?
    இதுக்கே நான் எப்பிடி அவஸ்தை படுறேன் தெரியுமா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…காலீல வேலைக்குப் போனா ராத்திரிக்கித் தான் இங்க வருவோம்…சில நாள் ஓ .டி பார்த்தால் வரவே மாட்டோம்….புரிஞ்சிச்சா.

    சரி..அப்ப நான் எங்கன எப்புடி .குளிக்கிறது?

    ஐயோ….சர்தான் போடி நீ சீமைத்துரை வீட்டு துரைசாணி..இனிமேட்டு எத்தப் பத்தியாச்சும் கேட்டே…கொண்டேபுடுவேன்…….! என்று கண்களை உருட்டிக் காண்பிக்கும் ஷீலாவைப் பார்த்து மலர் சிரிக்கிறாள்.

    அடுத்த ஒரு மணி நேரத்தில்…..இருவரும் எப்படியோ கஷ்டப்பட்டு தங்களை அலங்காரப் பதுமைகளாக அலங்கரித்துக் கொண்டு “நாங்க வேலைக்கு கிளம்பியாச்சு ” என்று பொதுவாக வார்டன் அம்மாவிடம் சொல்லிவிட்டு….சரட் ….சரட் ….என்று செருப்பு சத்தம் கேட்க ஒருவர் கையை ஒருவர் பற்றியபடியே கம்பெனியை நோக்கி நடக்கிறார்கள்.வெற்று ஹாண்ட்பாக் ஒன்று அவர்களின் தோளில் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டே வந்தது.

    தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்யப் போவதாக கற்பனை கண்டபடியே நடக்கிறாள் மலர்.

    கூவம், குப்பை,கூளம், சாராயக் கடை, சகதி , முட்டுச் சந்து…..மூத்திர சந்து எல்லாத்தையும் கடந்து நாற்றம் வரவேற்க ஒரு பழைய கட்டடத்துக்குள் அழைத்து செல்லும் பார்த்து ” இது மட்டும் என்ன ஓவியமா…? இதுக்கு அந்த ரூம்பு தேவலை…” என்று வாய் விட்டு சொன்னவள், ” அம்மா….நான் தப்பு பண்ணிட்டேன்……நீ எம்புட்டு சொன்னே….சென்னையில ஒரு நல்ல எடம் கூட இல்லம்மா..இந்த ஊருல எப்படி ரஜினி, கமல்,விஜய்,அஜித்,சூர்யா…..ஹாங்…..நயன்தாரா…..இவுங்க எல்லாம் இருக்காங்க…அத்துக்கிட்டு ஓட வேணாமா? என்று மனத்துக்குள் கேட்டுக் கொள்கிறாள்.

    கனத்த கனைப்பு சத்தம் கேட்ட இடத்தைத் திரும்பிப் பார்க்கும் போது அங்கு ஷீலா அவரிடம் “இவ தான் சார்….மலர்விழி” என்று கையைக் காட்டி கையோடு …நம்ப மானேஜர் சார் இவர் தான்…அவருக்கு குட் மார்னிங் சொல்லு..என்கிறாள்.

    மலருக்கு……தான் திடீரென்று தனது வீட்டின் முன்பு வாரா வாரம் வந்து காசுக்காக வித்தை காட்டும் குரங்காட்டியின் குரங்கு தான் நினைவுக்கு வந்தது. தான் இப்படி வந்த அன்றே குரங்காகிப் போனேனா…என்று சிறிது கவலையோடு குனிந்து ஒரு முறை தன்னையே பார்த்துக் கொண்டாள்.

    பிறகு தயங்கியபடியே “குட் மார்னிங்” என்று சொல்லுகையில் முதல் முதலாக ஒரு ஆங்கில வார்த்தையை வெளி மனிதரிடம் பேசும் சந்தர்ப்பம் கிட்டியதற்காக மகிழ்ந்தாள் மலர்.

    அவளை வைத்த கண் வாங்காமல் விழுங்கும் பார்வையில் கணக்குப் பண்ணிப் பார்த்த மனேஜர் “உன் பேரு என்னம்மா?” என்று குழையும் குரலில் கேட்டதும்.

    மலர்விழி…!

    ஆஹா…..அருமையான பேரு தான் போ….மலரு….என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டே…எம்மா …ஷீலா…இவளையும் உன் கூடவே வேலைக்கு வெச்சுக்கோ….வேலை சொல்லிக் கொடு..முதல்ல ரிஜிஸ்டர்….என்று கறாராக சொல்லிவிட்டு….மலர்விழியின் கன்னத்தைத் தடவி விட்டுப் போகிறான்.

    விருட்டென்று முகத்தை பின்னுக்கு இழுத்தவள்…..என்னாடி இவன்……என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே முழுங்கி விட்டு….எங்க…என்ன வேலை…சொல்லுடி…என்று ரெஜிஸ்டரில் கையெழுத்தைப் போடுகிறாள்.

    மனசு……வேலை கிடைச்சிருச்சி என்ற சந்தோஷத்தில் நிம்மதி அடைந்தாலும்…….”இந்த முதலையோட வாய்,கண்,கை…..எல்லாத்தையும் கட்டிப் போடணும்….” என்று முடிச்சுப் போட்டது.

    மீண்டும் அந்த மானேஜர் இவளை நோக்கி அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே வந்து கொண்டிருந்தான்.

    நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.

    இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.

    பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
    இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
    அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.

    தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

    இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .

    பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.

    அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..

    இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.

    குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.

    எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
    இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
    உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .

    என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .

    அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .

    என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.

    வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..

    “ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”

    (என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)

    டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)

    அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
    பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.

    இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

    வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.

    அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.

    அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”

    .அப்படியா..? எப்படி

    நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.

    அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.

    இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?

    எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?

    நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
    ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.

    குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
    அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.

    சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.

    “கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.

    நீண்ட நாட்கள் பழகியவன் போல அருகில் வந்தவன் அவளைத் தொட்டபடியே, ….மலரு. உனக்கு இங்க வேலை பார்க்க பிடிக்கலைண்டா சொல்லு…உன்னிய அசோக் பில்லர் கிட்ட பாக்கிங் ஆபீசு ஒண்ணு இருக்குது நான் அங்கனகுள்ள தான் இருப்பேன்..ஷீலாவையும் உன்னயும் அங்கனையே மாத்தி உடறேன்…சரியா? என்று சொல்லிவிட்டு கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    உடலெங்கும் திராவகத் துளி பட்டது போலத் தவித்தவளாக மலர்விஷி, ஷீலா வந்தா நானும் அங்க வந்துருவேன்..என்று நெளிந்து தன்னை அவனிடமிருந்து விலக்கி விலகி நின்று கொண்டாள்.

    இவனும் இவன் மூஞ்சியும்…இளிப்பைப் பாரு…..உனக்கெல்லாம் ஆண்டவன் கண்ணைக் கொடுத்திருக்கான் பாரு….அந்த ஆண்டவனுக்கு அறிவே இல்லை..என்று மனத்துக்குள் நினைத்தபடியே கூடையிலிருந்த இறால் மீனை எடுத்துத் தேய்த்து கழுவி முள்ளை எடுக்கிறாள்.

    பாவம் ஷீலா…இதே வேலையை எத்தனை மாசம் பண்ணிட்டு இருக்கா.அவ கலியாணத்துக்கு நாலு காசு சேத்துக்கிட வந்தவ,
    இங்கன வந்து மாப்பிள்ளையும் புடிச்சிட்டா …கெட்டிக்காரி. பாண்டியன் அப்பிடியே சினிமாக் காரன் தனுசு மாதிரியே இருக்காரு.
    அவ போயி என்னிய அழகுன்னு சொல்லிக்கிட்டு கெடக்கிறா . வெள்ளந்தியான மனசு அவளுக்கு.கைகள் காரியத்தில் கண்ணாக இருந்தாலும் எண்ணங்கள் மனசோடு பேசிக் கொண்டு தான் இருந்தது.

    தலையைக் குனிந்தபடி வேலையில் கவனமாக இருந்தாலும் அவளது கண்கள் அந்த அறையை அவ்வபோது துருவித் துருவிப் பார்த்து கொண்டே இருந்தது. அப்போது ஷீலா தனது கைபேசியில் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.

    இவள் சைகையில் யாருன்னு கேட்டதற்கு ஷீலா லேசான வெட்கத்துடன் சைகையால் மீசை போல செய்து காட்டி…அப்பறமா சொல்றேன்…என்று கைகளால் நீ வேலையைப் பாரு..மானஜர் சார் வந்தால் திட்டுவாரு என்று சொன்னாள் .

    பயம் என்றால் என்ன என்றே அறிந்திராத மலர்விழி “மானேஜர் சார் திட்டுவாரு போல….அந்தாளு இளிச்சுக்கிட்டே தானே நிக்கும்….ஒருவேளை ஷீலாவைத் திட்டும் போல .என்று ஒரு இனம் புரியாத உணர்வில் மேற்கொண்டு வேலையில் மும்முரமானாள்.

    அடேய் கசமாலம்….எங்கடாத் தொலைஞ்ச…என்று அங்கு நின்ற வேலைக்காரப் பையனை அழைத்த மானேஜர் “போடா போயி அந்த “அமீர்பெட் ஆஞ்சநேயுலு “வை நான் கூப்பிட்டேன்னு சொல்லி கையோட கூட்டீட்டு வா..

    இதைக் கேட்டதும் அந்த வேலைக்காரப் பையனின் கண்கள் தானாக இவளின் மேல் வந்து விழுந்தது.

    குறுகுறு வென்ற பார்வையில் தாக்கப் பட்டவளாக நிமிர்ந்து பார்த்ததும், அந்தச் சிறுவன் இவளையே வெறித்துப் பார்ப்பது தெரிந்ததும் இவளது மூளைக்குள் அபாய மணி அடித்தது.

    எம்புட்டு தமிழ் சினிமா பார்த்திருப்பேன்…..அப்ப சினிமால சென்னையை பத்தி சொல்லுறதெல்லாம் நெசம் தான் போலிருக்குது….என்ன தான் நடக்குதுண்டு வேடிக்கை பார்க்கலாம். அப்படி என்ன தான் பண்ணுவானுங்க…கடத்திட்டு போயி வாயில துணி அடச்சு நம்ம வீட்டுக்கு போனப் போட்டு பத்தாயிரம் பணம் கொடுத்தால் தான் மலரை உசுரோட விடுவோம்….
    இல்லன்னாக்காட்டி…..”சீ…சீ…என்ன மடத்தனம்….நான் என்ன வெறும் பத்தாயிரம் மட்டும் தானா…..? கற்பனையில கேக்குறத கொஞ்சம் கேக்கலாமே…..ஒரு பத்துக் கோடி……” ஆஹா …..நான் பத்துக் கோடியா ….மலரு…நீ சென்னைக்கு வந்தாலும் வந்தே….
    உன்னோட ரேட்டு கூடிட்டே போகுதே….நினைத்தவள் அவளையும் மீறி களுக் கென்று சிரித்துக் கொண்டாள் .

    என்னாச்சு மலரு…நீயே சிரிச்சுக்குற…..சந்தோசமா.?..என்று இந்த சர்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல எழுந்து வரும் மேனஜரை வெறுப்புடன் பார்த்தவள் “உனக்கேண்டா…..” ஆ…ஊன்னா ……ஆஜராயிடுற…இங்க நானும் ஷீலாவும் தான் பொண்ணுங்களா ….கிராமத்துலேர்ந்து வந்தா அடங்கிறுவாளுங்கன்னு நெனப்பு….இதே அந்த ஆம்பூர் அகிலாக்காட்ட வேலையைக் காட்ட வேண்டியது தானே…..நாங்கன்னா அம்புட்டு …எளப்பம் ….என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் .

    அதற்குள் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்ற மேனேஜரை நடு மண்டையில் நச்சென்று ஓங்கி குத்தவேண்டும் போலிருந்தது மலர்விழிக்கு. அவன் அருகில் வந்ததை கண்டுகொள்ளாதவளாக தன் பாட்டுக்கு சற்று விலகிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ..கூடவே..”ச்சே ….” என்று அலுத்துக் கொண்டாள் .

    என்னா…அலுத்துக்குறே….என்றவன் மீண்டும் நகர்ந்து வருவதற்குள், வாசலில் நிழலாடியது.

    வந்தது அமீர்பெட் ஆஞ்சநேயுலு தான்.இரட்டை நாடி சரீரம் ,கன்னங்கறுத்த கலரில் கனத்த செருப்பு, பஞ்சகச்சம் வெச்சு கட்டிய வெள்ளை வெளேர் வேட்டி , வெள்ளை நிறத்தில் கதர் ஜிப்பா ,வாய் நிறைய வெத்தலை…பன்னீர் புகையிலை…ஜர்தா பீடா வாசனை பத்தடிக்கு அடித்து விரட்ட,, முள்ளு முள்ளாக மீசையோ தாடியோ இல்லாத பளீர் முகத்தில் வெத்திலைக் கறையோட பற்கள் தெரியச் சிரிப்பும் கண்களை அடைத்தபடி தங்க ஃ ப்ரேம் போட்ட பவர் கண்ணாடி.அதற்கும் மேலே நெற்றி நிறைத்த நாமம், கர்ண கொடூரமான சாரீரம். அதற்கு ஜதி போடுவது போல சரட் …சரட் …என்ற செருப்புச் சத்தம் வேறு..

    “ஏன்டி …ஆறுமுகம்காரு பிலுசாரா ..எவரு …? ஈ அம்மாயி கொட்லக்கு கொத்தக வச்சிந்தா….. பாகுந்தே…பலட்டூரா…..”

    (என்ன. ஆறுமுகம் ..கூப்பிட்டீங்களா..? யாரு ? இந்தப் பொண்ணு கடைக்கு புதுசா வந்திருக்கா..? நல்லாருக்காளே …..கிராமமா…?)

    டேய்…பாபு…இட்ட ரா….! ஆ அம்மாயி பேரேன்டி …? என்று ரகசியமாக கேட்டான். (இங்க வா….அந்த பெண்ணின் பேரென்ன..?)

    அதற்குள் அந்த மானேஜர் குறுக்கே வந்து நின்று…மலர்விழி…! நல்ல தமிழ் பேரு….! என்று சொல்லி கண்ணடித்துச் சிரிக்கிறான்.

    இதை ஓரக் கண்ணால் கவனித்த மலர்விழி…”இந்த மாதிரி துமுரு பிடிச்ச ஆளுங்க “எல்லா எடத்துலயும் இருப்பாங்களாட்டியும்.
    பொட்டச்சிங்கன்னா இவனுங்க போதைக்கு ஊறுகாய் போல….! உன் நேரம் நல்லாயில்லை….வசமா நீ எங்கிட்ட மாட்னடா மவனே…..உன் போதையை ஏறக்க கண்ணுக்குள்ளார ஊறுகாய தீட்டிப்புடுவா இந்த மலரு..மனசுக்குள் கருவிக் கொண்டே மீனைத் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மலர்.

    இது போன்ற ஆத்து மீனுக்க்காகவே பணவலை விரித்துப் பிடிப்பவன் அந்த அமீர்பெட் ஆஞ்சநேயலு என்ற விஷயம் அறியாத ஷீலாவும், …ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

    வந்தவரிடம் மேனேஜர் ஆறுமுகம் குசு குசு வென்று ஏதோ பேசவும்.

    அதெல்லாம் படியும்….முதல்ல கோழியை …அமுக்கு….பெறவு கொசுவை பிடிக்கலாம்…என்று பூடகமாக சொல்லிவிட்டு , போகிற போக்கில் மலர்விழியைப் பார்த்து கௌரவப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு வெளியேறினார் வந்தவர்.

    அடுத்த நொடி மானேஜர் ஆறுமுகம் ஷீலாவிடம் வந்து நின்று……”அந்தப் பாப்பா ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்காரி……தெரியுமா ?”

    .அப்படியா..? எப்படி

    நீயுந்தான் மாசக்கணக்கா வேலைக்கு வந்தே…..ராவும் பகலும் கால்கடுக்க கைவலிக்க இம்புட்டு வேலை செஞ்சாத் தான் காச எண்ணும்படியா இருந்துச்சு….ஆனா…அவளுக்கு வந்த உடனே வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தியா ? அதான் எல்லாத்துக்கும் மச்சம் வேணும்….சொல்லிக் கொண்டே ஷீலாவின் முகத்தைப் பார்த்த ஆறுமுகம் தான் வைத்த பொடி அவளை ஏதாவது பாதித்ததா என்று முகத்தில் தேடினார்.

    அப்படி என்ன பெரிய அதிர்ஷ்டம்…..? இந்த இறால் கடையில…என்று மெல்ல இழுத்தபடி ஆர்வமானாள் ஷீலா.

    இப்ப வந்தாரே…அவரு இந்த இறால் மீனுல ஊறுகாய் தயாரிக்கிற கம்பெனி வெச்சிருக்காரு..அந்த ஊறுகாய் பாட்டில் மேலட்டையில் விளம்பரம் போடணுமாம்….அதுக்கு நம்ப மலரைத் தான் கூபபுடுறார். அட்டைப்படம், விளம்பர மாடல்….சும்மா ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும்….”ஆஹா …என்ன ருசி “….இதுக்கு எம்புட்டு பணம் தருவாரு தெரியுமா….?

    எம்புட்டு..ஒரு நாளைக்கு முந்நூறா ?

    நீ…முன்நூறுலயே கெட…அதுக்கு மேல யோசிக்காத…ஒரு படத்துக்கு அஞ்சாயிரம் ரூபாய் தருவாராம்..சொல்லிட்டு போனாரு. சீனியாரிட்டியில நீ தான் முந்திலேர்ந்து இங்கன இருக்குற. நீ சரின்னு சொன்னா நான் இதுல உன்னிய கோர்த்து விட்டுடறேன்..
    ஆனா இது ரகசியமா இருக்கோணம். என்ன சொல்றே ஷீலா. முதல்ல அட்டைப் படம்….பெறவு தொலைக்காட்சி விளம்பரம் அப்பிடியே மேல மேல போயி சினிமால கூட நடிக்கிற சான்ஸ் கெடைக்கும். அம்புட்டுக்கும் கொடுத்து வெச்சிருக்கணம். எனக்கு நீயும் நல்லாருக்கோணம்….மெல்ல மெல்ல ஷீலாவின் மனசுக்குள் ஆசை விஷத்தை கலந்து கொண்டிருந்தான் அவன்.

    குப்பென்று பொறாமையில் வியர்த்தாள் அவள். எப்படி…இவர் சொல்லுவது நிஜமானால், நான் மட்டும் என்ன அவளுக்கு இளைத்தவளா? இந்த வாய்ப்பை நான் தவற விடக் கூடாது..ஒரே படத்துக்கு அஞ்சாயிரம்…..அம்மாடியோ…எப்பிடியாச்சும் இதுக்குள்ள மலரை நுழைய விடக் கூடாது..பட படவென்று வந்தது ஷீலாவுக்கு. கையும் காலும் பரபரத்தது. எதைப் பற்றியும் யோசிகாமல் அறிவு பணத்தில் அமிழ்ந்தது. ஓரக் கண்ணால் வேலை செய்து கொண்டிருந்த மலர்விழியைப் பார்க்கிறாள்.
    அவளைப் பார்க்க பார்க்க இவளுக்குள் கனன்று கொழுந்து விட்டெரிந்தது நெருப்பு. அவளிடமிருந்த அன்பு அந்த பொறாமை நெருப்பில் கருகிச் சாம்பலானது.

    சார்……எனக்கே சொல்லுங்க….நான் இந்த விளம்பரத்தில் வரேன்….நான் இந்த விஷயத்தை மலர்கிட்ட சொல்லலை..நீங்க எனக்கே இந்த சான்ஸ் வாங்கிக் கொடுங்க ப்ளீஸ்….என்று கெஞ்சும் பார்வையில் ஆறுமுகத்தைப் பார்க்கிறாள்.

    “கோழியைப் பிடிச்சாச்சு” என்று மனசுக்குள் குதூகலமானான் ஆறுமுகம்.

    தனக்கு முன்னால் நடக்கும் இதையெதையும் அறியாத மலர் “பாவம் ஷீலா” எம்புட்டு கஷ்டப் பட்டு எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்திருக்கு.இந்த உதவிய என் உசுரு இருக்குமுட்டும் மறக்க மாட்டேன்.
    என்றெண்ணிக் கொண்டாள்.

    திடீரென்று அவள் விரலில் ஆழமாகக் குத்திய முள்ளை வெளியே பிடுங்கி எடுக்கவும்….”ரத்தம் குபுக் கென்று முத்தாக வெளியே தெரியவும்…”ஸ்ஸ்ஸ் ….ஆஆஆஆ…ஷீலா முள்ளு குத்திருச்சுடி…” என்று தன்னையறியாமல் கத்துகிறாள்.

    (தொடரும் )

    Share
  • பந்தக் காப்புரிமை (ரக்ஷாபந்தன்)

     

    சத்திய மணி

     

    மதுரைநாயகி மீனாட்சி காப்பிட்டுக் கொண்டே கண்ணனிடம் இயம்புகிறாள்

     

    ஒவ்வொரு அணுவிலும் இருப்பவனே

    ஒவ்வொரு நிகழ்விலும் தெரிபவனே

    காரணக் காரணம் ஆனவனே

    கருணை கடலில் துயில்பவனே

    மலையைக் குடையாய் பிடித்தவனே

    மதுவை  விழியில் விடுப்பவனே

    அன்பைச் சிரிப்பாய் அளிப்பவனே

    அழகிய! அழகா! என் அண்ணா!

    பாஞ்சாலிகளின் கதைதினமும்

    பாரதமண்ணில் நடக்குதடா

    பாரதிருப்பது முறையோ-உன்

    பாஞ்ச சைன்யம் முடங்கியதோ

    நீதிநியாயம் தர்மமெலாம்

    மீதியின்றி வறள்வதன்முன்

    அவதாரம் உடன் எடுப்பாயே

    அருளால்  இப்புவிக் காப்பாயே!

     

    காப்பிட்டத் தங்கைக்கு கண்ணன் கூற்று

     

    ஒவ்வொரு உயிரையும்  பெற்றவளே

    உண்டிடப்   பால்தரும்      உற்றவளே

    சூலமும்      வாள்படைத் தாங்கிடவே

    காலமும்    சுழற்சியும்     ஏற்பவளே

    என்னிடம் அன்பைப் பொழிபவளே

    எங்களின் சக்தியின்    இமையவளே

    தாய்மையின் வடிவே! உமையவளே!

    சேய்குலம் காப்பது   நீயல்லவோ?

    செல்வமும் வளமும் காத்திடுவாய்

    சிறப்புகள்   சேமங்கள் கூட்டிடுவாய்

    அழைத்ததும் சிங்கத்தில் விரைபவளே

    அருள்வதில் உன்னினும் உயர்வுளதோ?

     

    சரணம்

    அன்னையும் அண்ணனும் காப்பதனால்

    அகிலமும்     அன்பால்  சுழலுதடா

    துன்பமும் துயரமும் போகுமடா

    உண்மையும் உறவும் நிலைக்குமடா

    அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்

     

    Share
  • எங்கே போகிறது என் தேசம்?

    சூரியா

    எல்லையில் நமது வீரர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள்..! மீன் பிடிக்கப் போனவனை ஒரு நாட்டவன் பிடித்துச் செல்கிறான்..! இந்தியப் பொருளாதாரம் சரிகிறது..! நமது அரசிடம் இருந்து எந்த எதிர் வினையும் இல்லை. இப்படியே போனால் என்னவாகும் என் தேசத்தின் நிலை.

    சில மாதம் முன்பு நம் வீரர்கள் இருவரின் தலையை வெட்டிச் சென்றனர். அதற்கு கண்டனம் தெரிவித்தார் நமது பிரதம மந்திரி. இப்போது ஐவரை சுட்டுக் கொன்றுள்ளனர் இப்போதும் அதே கண்டனம். பாகிஸ்தானோ வருத்தம் தெரிவிக்கிறது. நமது வெளிவுறவுத் துறை அமைச்சரோ ஒரு படி மேலே போய் நம்மவர்களைச் சுட்டுக் கொன்றது பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் என்கிறார். எனக்கு ஒரு சந்தேகம் அவர் நமது நாட்டின் அமைச்சரா இல்லை பாகிஸ்தானுக்கா?.

    இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அதை ஏற்க மறுத்த ஒரு குடும்பம் ,இது வேண்டாம் அவர்களுக்குப் பதிலடி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். சாமானியனுக்கு வரும் கோபம் ஏன் பதவியில் இருப்பவர்களுக்கு வரவில்லை.

    எப்போதும் இராணுவத்திற்குத்தான் பட்ஜட்டில் அதிகப் பணம் ஒதுக்கப்படுகிறது எதற்கு அது. இத்தாலியில் ஹெலிஹாப்டர் வாங்குவதற்கு மட்டும் தான் அதைப் பயன் படுத்துவார்களோ என்னவோ?

    அடுத்ததாக சிங்கள அமைச்சர் பொது மேடையில் நாங்கள் பிடித்து சென்ற மீனவர்களுக்கு எங்கள் நாட்டு சட்டதிட்டத்தின் படி தான் தண்டணை தருவோம் என்கிறார். கட்சத்தீவைத் தர முடியாது என்கிறார். எல்லாம் கேட்டு விட்டு அவரிடம் பேச்சு வார்த்தையும் நடத்துகிறார் மன்மோகன் சிங். உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படி கிடையாது கடலில் என்ன கோடு போட்டா எல்லை வகுக்க முடியும்? சீக்கியர்களின் தலைமுடிக்காக ஃபிரான்ஸ் சென்ற மன்மோகன் சிங் தமிழனின் உயிருக்காக ஒரு முறைகூட வாய்திறந்து பேசவில்லையே. இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழ்நாட்டை தனி நாடாக பிரித்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    அமெரிக்க அதிபர் ஒபாமா , ரஷ்யா அதிபரின் சந்திப்பை தவிர்த்தார் காரணம் அவர்களது தகவல்களைப் பகிரங்கப்படுத்திய ஸ்னோடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக. எல்லா விசயத்திலும் அமெரிக்காவைப் பின்பற்றும் காங்கிரஸ் அரசு ஏன் இதே போல் சிங்கள அமைச்சரைத் தவிர்க்கவில்லை?. அங்கே வெறும் தகவலுக்கே அப்படி நடந்து கொள்கிறார்கள் இங்கே உயிரே போகிறது கவனி்ப்பார் இல்லை.

    கடைசியாக நம்ம பொருளாதாரம், ஏன் இந்த நிலை டாலரை சார்ந்திருக்க முக்கிய காரணம் திரவ தங்கமான பெட்ரோல் தான் , இது போக நாம் ஒவ்வொருவரும் இதற்கு காரணம் தான். காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை இந்திய தயாரிப்புகள் இருக்கும் என்று ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். ஒன்றோ இரண்டோ தான் இருக்கும். (நான் இப்போது தட்டச்சு செய்யும் மடிக்கணிணி கூட இந்திய தயாரிப்பு கிடையாது) இப்படி நாம் பயன் படுத்துவதிலும், உண்பதிலும் (Lays,KFC..),குடிப்பதிலும் (Pepsi, Coca cola..etc) இந்தியன் அல்லாத யாரோ இலாபம் அடைகிறார்கள். இதற்கு எல்லாரும் தான் காரணம். எல்லாரும் மாற வேண்டும். உடனே எப்படி மாற்றம் நிகழும் என்று நீங்கள் கேட்கலாம், எல்லாரும் நினைத்தால் முடியும் இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் முடிந்த வரை அன்னிய பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்போம் என்று.

    முன்பு மாவோ சீனாவை மறு கட்டமைப்பு செய்தது போல் இப்போது இந்தியாவை மாற்றுவோம்.

    Share
  • நம்பிக்கை….. அதானே எல்லாம்!

    சங்கர் ராமன்

    அசலாக இருங்கள்
    உங்களை யாரோடும்
    ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்…
    உங்கள் படைப்பின் நோக்கம்
    வேறாக இருக்கும்

    வித்தியாசமான மனிதர்களால் நிரம்பியது இந்த உலகம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும். “11 முட்டாள்கள் விளையாடுவத “ 11 ஆயிரம் முட்டாள்கள் உட்கார்ந்து ரசிக்கும் ஒரு சோம்பேறியான விளையாட்டு” என்று இன்று உலகமே கொண்டாடி வரும் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி விமர்சனம் செய்த ஒருவர்தான் பெர்னாட்ஷா. அவர் ஒரு தத்துவமேதை என்றே சொல்லலாம். சில தத்துவார்த்தமான பதில்களை அவரை விட வேறு யாரும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. அவரின் விமர்சனத்திற்காக பலரும் காத்துக்கிடந்த காலம் அது… அவரையே பலரும் விமர்சித்த காலமும் அதுதான். பெர்னாட்ஷாவிற்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்ததாகக் கூறுவர். நாமெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி எங்காவது வெளியிடங்களுக்கோ அல்லது வெளியூருக்கோ செல்கிறோம் என்றால் என்ன செய்வோம்?… வீட்டில் உள்ள விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு சன்னல்களைப் பூட்டி விட்டு உள்ளே இருக்கும் அத்தனை கதவுகளையும் பூட்டி விடுவோம். முடிந்தால் சரியாக பூட்டியிருக்கறதா ? என்ற சந்தேகத்தால் அந்த பூட்டை இழுத்தும் பார்த்து விடுவோம். பெர்னாடஷாவிடம் இருந்த வித்தியாசமான பழக்கம் இதுதான். அவர் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது நாம் செய்வது போல எதையும் செய்யமாட்டாராம். மாறாக அனைத்து சன்னல் கதவுகளையும் திறந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவாராம். அவர் வீட்டிற்குள் இருந்தால் அத்தனை கதவுகளையும் உட்பக்கமாகப் பூட்டு போட்டு விட்டு யாராவது வந்து கதைவைத் தடடினால் மட்டுமே திறப்பாராம். வித்தியாசமான பழக்கம்தானே இது. ஒருமுறை செய்தியாளர் ஒருவர் பெர்னாட்ஷாவிடம், “ஐயா நீங்கள் எப்போதும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டை பூட்டாமலும் வீட்டுக்குள் இருக்கும் போது உள்ளுக்குள்ளே பூட்டிவிடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டவுடன் “நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது ஏன் வீட்டைப் பூட்டுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு செய்தியாளரோ பூட்டவில்லை எனில் வீட்டில் உள்ள மதிப்புமிக்க பொருட்களை யாராவது திருடிச் சென்று விடுவார்கள்” என்றார். பெர்னாட்ஷாவோ சிரித்துக் கொண்டே என்னை விட மதிப்புமிக்க பொருள் உயர்ந்த பொருள் என் வீட்டில் ஏதுமில்லை. அதனால்தான் நான் வெளியில் செல்லும் போது வீட்டை பூட்டுவதில்லை, என்னை திருடிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே நான் இருக்கும் போது வீட்டை உள்ளே பூட்டி விடுகிறேன்” என்றார். திகைத்து நின்றனர் செய்தியாளர்கள். திகைத்தது செய்தியாளர்கள் மட்டுமல்ல நாமும் தானே…

    உங்களைவிட மதிப்புவாய்ந்தவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தவரை காப்பியடித்து அரைநிமிடம் கூட நம்மால் வாழ்ந்துவிட முடியாது. மாற்றங்களை உங்களிடமிருந்து தொடங்குங்கள்.

    உங்களைத் தவிர
    வேறு யாராலும்
    உங்களைப் போல வாழ்ந்திட முடியாது
    என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். சிறு குழந்தைகளைப் பாருங்கள்… எவ்வளவு மகிழ்ச்சியாக வளர்கிறது. அந்த குழந்தைகளுக்கும் பல்வேறு சாயங்களைப் பூசி அவர்களின் வண்ணங்களை மாற்றியது நாம்தான். அவர்களிடம் நாம் செய்ய ஆசைப்பட்டு இயலாமல் போனவற்றையெல்லாம் நம் குழந்தைகள் மீது திணித்து நம் நகலாக மாற்ற முயற்சிக்கிறோம். அவர்களின் அசல் தன்மையினை அழித்து விடுகிறோம்.

    உங்கள் குழந்தைகள்
    உங்களுக்காக வந்தவர்களில்லை
    உங்கள் வழியாக வந்தவர்கள்
    என்ற அற்புதமான வரிகளைச் சொன்னவரை மறந்து விட்டோம்… யார் சொன்னால் என்ன?.. நல்ல வரிகள்தானே… நாம் ஆசைப்பட்டதைத்தான் நம் குழந்தைகள்தான் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை பாரதி ஏற்றியிருந்தால் இன்று அவனது கவிதைகள் உலகப் புகழ் பெற்றிருக்காது. எங்கோ ஓர் மூலையில் தந்தை சொல்படி பொறியாளர் வேலை செய்திருப்பான். ரைட் சகோதரர்களோ சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டியே தனது காலத்தை கடத்தியிருப்பார்கள். பறக்கும் விமானம் அவர்களுக்கு சாத்தியமில்லாமலே போயிருக்கும்.

    “சமத்துக்கண்ணா.. இந்தா லட்டு சாப்பிடு… வெளியே கொண்டு போகாதே… இங்கேயே சாப்பிட்டுட்டு அப்புறமா விளையாடப் போகணும்..”. இந்த வசனத்தைக் கேட்டிருக்கிறீர்களா?.. நாம் எல்லோரும் அடிக்கடி கேட்கும் வசனம்தான்.. இனியும் கேட்கப்போகிறோம்… ஏனெனில் இது தொடரும் பாரம்பாரியம்தானே… என்ன கொடுக்கும் திண்பண்டத்தில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்… முறுக்கு, அதிரசம் அல்லது நவீன உலக பீட்சாவாகக் கூட இருக்கலாம். ஆனால் வார்த்தைகள் மாறுவதில்லை.

    இந்த வார்த்தைகள் 130 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கத்தாவில் ஒரு வீட்டிலும் ஒலித்தது. நரேந்திரா.. நீ சொல்லும் எதையும் கேட்கவே மாட்டாயா? நீ கொண்டு போகும் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கே கொடுத்து விட்டால் உனக்காக நீ எதை வைத்துக்கொள்ளப் போகிறாய்” என்று நரேந்திரனின் தாயார் சத்தமிட நரேந்திரனோ எனக்காக இந்த உலகமே இருக்கிறது” என்றானாம். அடுத்தவருக்காக அதிகமாக உதவி செய்கிறான் என்பதால் அவருடைய பெற்றோர் அவரை ஒருநாள் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள். நரேந்திரன் அசராமல் சன்னல் வழியாக ஆடைகளை வீசி ஏழைகளுக்கு எறிந்தான். அந்த நரேந்திரன்தான் பின்னாளில் விஸ்வரூபம் எடுத்த விவேகானந்தர். சிறு வயதிலிருந்த அவரது குணமே அவரின் அடையாளமாக மாறியது. அவரது குருவான இராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வாழ்ந்தவர் விவேகானந்தர். இராம கிருஷ்ணரின் நகலாக வாழவில்லை. இதனாலே இன்று விவேகானந்தரை உலகம் அடையாளப்படுத்தி இருக்கிறது. இராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர்தான் விவேகானந்தர். இராமகிருஷ்ணரின் ஒரே சீடர் விவேகானந்தர் அல்ல.. அவருக்குப் பின்னால் வந்த சீடர்கள் யாரும் ஏன் விவேகானந்தர் போல ஜொலிக்கவில்லை. அவர்கள் தங்களின் தனித்தன்மையை அடையாளப்படுதிதிக் கொள்ளவில்லை. இன்னொரு இராமகிருஷ்ணராக முயற்சி செய்தார்கள்… விளைவு.. அவர்களால் தங்களின் தனித்தன்மையை அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    உலகத்தில் எந்த ஜீவராசிகளும் மற்ற ஜீவராசிகள் போல காப்பியடித்து வாழ முயற்சிப்பதில்லை. மனிதனைத்தவிர… “உங்க வீட்ல கரண்ட் இருக்கா” நமது வீட்டில் மின்சாரம் தடைபட்டவுடன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து நாம் கேட்கும் கேள்வி. அவர்கள் வீட்டிலும் மின்சாரம் இலலையென்றால்தான் நமக்கு ஒரு ஆத்ம திருப்தி. தொலைக்காட்சி பெட்டிகள் பிரபலமாகாத காலத்திலேயே பக்கத்து வீட்டில் டி.வி. இருந்தால் நமது வீட்டில் ஆண்டணாவை மாட்டி அழகு பார்த்தவர்கள் நாம்… அந்த பழக்கம்தான் இன்று வளர்ந்து கணினியாகவோ செல்பேசிகளாகவோ வளர்ந்து நிற்கிறது எனலாம். உங்கள் மனதிற்குள் அடிக்கடி சொல்லி வாருங்கள். உலகின் மிகச்சிறந்த மனிதர் நீங்கள்தான் என்று…

    சாதனையாளர்களும் சிந்தனையாளர்களும் சொல்லிச்சென்ற வாசகம் ஒன்று உள்ளது
    “யாரையும் பின்பற்றி வாழலாம்
    எவரையும் காப்பியடிக்காதீர்கள்”

    தொடரும்

    Share
  • மரங்களைப்போல்…

    பிச்சினிக்காடு இளங்கோnew-oldimages

    அருவியென அன்புமழை பொழிந்த பெற்றோர்
    அரவணைத்து  மனம்குளிர வளர்த்த வர்கள்
    உருவிழந்து முதுமைவந்து கொடிபி டிக்க
    உள்ளத்தில் தளர்ச்சிவர உடல்ந டுங்க
    கருவிகளால் துணைக்கோலால் பார்த்தும் கேட்டும்
    கடத்துகிற வாழ்க்கையிலே இறுதி நாளில்
    மருவுகிற குழைந்தைகளால் மகிழ்ச்சி கிட்டும்
    மரங்களைப்போல் நிழல்தந்தால் பெருமை கொள்ளும்

    நீரூற்றி வளர்த்தபெரு மரங்க ளெல்லாம்
    நிழல்வழங்கி அரவணைக்கும் கனிகொ டுக்கும்
    யாரூற்றி வளர்த்தார்கள் பார்ப்ப தில்லை
    யாரென்றும் எவரென்றும் கேட்ப தில்லை
    வேரூன்றிப் போராடி வளர்ந்த பின்னே
    விளைகின்ற பயன்களெல்லாம் மக்க ளுக்கே
    பாருக்கே மழைவழங்கும் பசுமை கொஞ்சும்
    பறவைகளும் விலங்குகளும் புசித்தும் மிஞ்சும்

    நிழல்கேட்டு மரமலைதல் நீதி யாமோ
    நீர்கேட்டு கடல்வாடி போக லாமோ
    உழல்கின்ற மனத்தோடு பெற்றோ ரெல்லாம்
    உருக்குலைந்து போவதற்கா பெற்றார் பிள்ளை
    நிழலாக உடனிருந்து காக்க வேண்டும்
    நிம்மதிதான் அவர்முகத்தில் மின்ன வேண்டும்
    விழலுக்கு இறைத்ததென எண்ண லாமா
    விதைத்ததெல்லாம் பதர்களென நோக லாமா

    மனம்கனிந்து கருணையுடன் அணுக வேண்டும்
    மனம்குளிர்ந்து பெற்றோர்கள் மகிழ வேண்டும்
    குணமுடைய குழந்தைக ளேநிலைத்த சொத்தாம்
    குன்றாத புகழுக்கும் அதுவே வித்தாம்
    தனம்வேண்டாம்  தனக்குமிகு வளங்கள் வேண்டாம்
    தம்மைப்பார்க்க கேட்கதம்பிள் ளைஇருக் கின்றார்
    எனஎண்ணும் மனநிலையே போதும் போதும்
    ஏங்காது வாழ்ந்திடுவார் நாளும் நாளும்

    படத்துக்கு நன்றி

    http://www.stockphotopro.com/photo_of/old/767938GDF/South_Asian_Indian_happy

    Share
  • கல்லாய்…

    செண்பக ஜெகதீசன்snakeindex      

     

    இதயத்தைக் கோவிலாக்கி

    அன்பை மதமாக்க வந்தான்

    இறைவன்..

     

    இந்த மனிதர்கள்,

    இதயத்தைக் கல்லாக்கி

    கல்லை இறைவனாக்கி

    கோவிலாக்கி,

    கல்லால் அடித்துக்கொள்கிறார்களே

    இறைவனுக்காக-

    தங்களுக்குள்…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.demotix.com/news/1580134/thousands-worship-serpent-gods-during-ayilyam-festival

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Pasupathy_1தமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களின் எழுத்துதான். அதற்காக இந்த நூற்றாண்டில் உள்ள எழுத்தாளர்களை நான் குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எளிமை, இனிமை, புதுமை, நேர்த்தி, அழகான கதை அமைப்பு, சமுதாய சிக்கல்களை யாவரும் அறியும்படி எழுதும் கைவண்ணம் இவை அனைத்தையும் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இங்கே நான் சொல்ல வருவது.

    உரைநடையில் கல்கியிலிருந்து ஆரம்பித்து சுஜாதா இன்னும் எத்தனையோ எழுத்தாளர் வரை தமிழை அழகாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவர்கள் கூட (முக்கியமாக அந்தக் கால பெண்மணிகள்) கல்கி, தேவன், எஸ்.வி.எஸ், குமுதினி, லக்ஷ்மியின் கதைகளை விறுவிறுப்பாகப் படித்தார்கள் என்பதை இப்போதுள்ள பெரியவர்களின் வாயிலிருந்தே அறிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நம் தலைமுறையினருக்கு சற்றளவேனும் அந்தக் கால எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நாம் அறிமுகப்படுத்துகிறோமா, அல்லது நமது வாராந்தர மாதாந்தரிகள் இச்சேவையைப் புரிகின்றனவா என்று கேள்வி எழுந்தால் பதில் ஏமாற்றம்தான் தரும்.

    இத்தகைய நிலையில் கனடாவில் வாழும் பேராசிரியர், தமிழர் பசுபதி அவர்கள் இந்த அறிமுக வேலையை கண்ணும் கருத்துமாக, மெனக்கெட அந்தப் பழைய பத்திரிக்கைகளிலிருந்து அந்த எழுத்துக்களை அப்படியே படம் பிடித்து நமக்காக தன் வலைப்பகுதியில் தந்து வருகிறார். கல்கியிலிருந்து சின்ன அண்ணாமலை வரை, இந்த எழுத்தாளப் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அப்படியே அவர் எழுத்துக்கள் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இந்த வருடம் நூறாண்டு காணும் எழுத்தாளர் தேவனின் எழுத்துக்களை கடந்த சில ஆண்டுகளாக அப்படியே படம்பிடித்து தம் வலைப்பகுதியில் பதித்து வருகிறார், தேவன் கதைகளில் மல்லாராவ் கதைகள் மிகவும் சுவையானது. இந்த வாரத்தில் மல்லாரிராவ் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை ஒன்றைப் பதிப்பித்திருக்கிறார். இக்கதையை அறிமுகப்படுத்துமுன் தேவன் அவர்களைப் பற்றிய ஒரு அரிய செய்தியும் கூடவே வருகிறது. இதோ அவர் எழுத்து மூலமாக

    ‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது! அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம்! ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும்! பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள்! ஒரு கதையைத் தான் படியுங்களேன்! ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்!

    பேராசிரியர் பசுபதி கேட்டுக்கொண்டபடி நீங்களும் அந்த ராஜகிரி ரஸ்தா’வில் http://s-pasupathy.blogspot.in/2013/08/6.html ஒருமுறை பயணம் செய்து பாருங்களேன். பயணம் மிகச் சுவையாக இருக்கும் என்பதோடு அந்தத் தமிழ் எத்தனை ருசிகரமானது என்பதும் அறிந்துகொள்ளலாம்.

    இவைகளைப் படிக்கும்போது நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த எழுத்தாளர்களின் சிந்தனைகள் இப்போதும் சிறந்தவையாக நமக்குப்படுகிறது இப்படி ஒரு பொறுப்பை சுகமான சுமையாக எடுத்துக்கொண்டு. நம்முடைய மூதாதைய எழுத்தாளர்களின் பெருமையை அறிமுகப்படுத்தும் பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.

    கடைசிபாரா: வல்லமையில் ‘புதிய சுதந்திரப் பள்ளு’வில் ஒரு பின்னூட்டம்.

    பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள
    உற்றத் தந்திரம் யாதெனக் கூறில்
    மற்றவர் நலனதுக் கெடாது – யாதும்
    அற்றவர் நிலை யிலாதுச் செய்
    கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!

    Share
  • கீழ் வான சிவப்பு

    தனுசுimag va

    அடி வானம் சிவந்தது
    அது ஏன்?
    பல வினாக்கள் என்னுள் எழுந்தது
    அவைகளை உங்கள் முன் வைக்கிறேன்
    தகுந்த விடை தந்தால் ஏற்கிறேன்!

    பணி முடித்த சூரியன்
    சொல்லாமல்
    வீட்டுக்கு விரைவதால்
    வானம் கோபத்தில் சிவக்கிறதா?

    எரிக்கும் தன்னை வெறுத்து
    குளிர் தரும் நிலவை
    வரசொல்லும் வானுக்கு
    சூரியன் தீ வைக்கிறதா?

    ஒரு நாள் விளையாட்டில்
    இரவோ பகலோ
    யார் அத்து மீறுவதென புரியாமல்
    அந்தி நேரம்
    ஆட்டத்தை நிறுத்த
    அடிவானத்துக்கு
    சிவப்பு கொடி காட்டுகிறதா?

    இரவுக்கு
    அழகூட்ட வரும் நிலவுக்கு
    வானம் ஆரத்தி எடுக்கிறதா?

    இரவும் பகலும்
    கலவிக்கு தயாரானதால்
    வானம் வெட்கப்பட்டு சிவக்கிறதா?

    இரவின் வானம்
    நிலவாலும் நட்சத்திரத்தாலும்
    பூச்சூடுவதால்
    பகலின் முகம்
    பொறாமையால் கீழ்வானில் எரிகிறதா?

    இரவின் வண்ணத்திற்கு ஈடுகட்ட
    பகலவள்
    மருதாணியிட்டுக் கொண்டாளா?

    ஜாம விருந்துக்கு
    தயாராகும் வானம்
    மகிழ்ச்சியில்
    வெற்றிலை போட்டுக்கொண்டதா?

    இரவின் இருளால்
    உலகம் தவிக்காதிருக்க
    பகல்
    அடி வானில் தீப்பந்தம் ஏந்துகிறதா?

    நிலவவளை வரவேற்க
    பகலரசன்
    வானில்
    சிவப்பு கம்பளம் விரிக்கிறானா?

    பூலோக பெண்களுக்கு போட்டியாக
    மஞ்சள் அரைத்துக் குளித்த வானம்
    இன்று கொஞ்சம்
    அதிகமாக மஞ்சள் பூசிக்கொண்டதா?

    ஏன்?
    ஏன்? என்று எழுந்த
    விளங்க முடியா வினாக்களை
    உங்கள் முன் வைத்துவிட்டேன்
    தகுந்த பதிலை தாருங்கள்
    தலை வணங்கி ஏற்கிறேன்.

    Share
  • வாக்குமூலம்பற்றிய என் எழுத்துமூலம்

             

                     பிச்சினிக்காடு இளங்கோ

     

     அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய சமஸ்காராஎன்ற புதினம், தமயந்தி எழுதிய வாக்குமூலம்என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது.

                          தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன்.

     பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ  ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான்

    அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன்.

                         சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம்.

     அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது.

                        கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.

                          ஆண்களின் சுயநலம் இழக்காத போலி கட்டமைப்பால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நான் உணர்ந்த உண்மை. அரிதாரம் பூசாமல் கடைவிரித்து ஏமாற்றத்தைத்தருவது இன்றைய ஆண்போலிகளின் ஏதார்த்தமாக நான் பார்க்கிறேன். அப்படியான சூழலில்

    தமயந்தியின் பெருமுச்சு அக்னியைச்சுமந்திருக்கிறது அல்லது அடைகாக்கிறது என்பதில் அய்யமில்லை. எந்தக்கதையை எடுத்துக்கொண்டாலும் அங்கங்கே கவிதையின் கண்ணடிப்புகள், தீர்க்கமான சொல்வெட்டுகள் பளீச்சிடுவதைப் பார்க்கமுடிகிறது.

    எடுத்துக்காட்டுக்கு இதோ….

     

    உன்

    ஒற்றை ஸ்பரிசம்

    இன்னமும் ஈரத்தோடு

    மனதின் மூலையில்

    ஒட்டியிருக்கிறது

     

     

    கண்சிமிட்டும்

    பறவைகளின் பயணம்

    காற்றின் அலைக்கழிப்பால்

    ரத்தாகும் தருணங்கள்

    காயமானவை

     

    விலகி நிற்கும்

    உறவுகளைத்

    தனிமைப்பிரதேசத்தில்

    கைசுட்ட நெருப்பாய்

    ஞாபகப்படுத்துகிறது

      

    சந்தர்ப்பங்களின் வலையில்

    எல்லோரும் சரிவதுண்டு

    அப்படித்தான்

    நானும் அவளும்

     

    வெளிச்சம்

    ஒரு பறவையைபோல்

    பறந்து

    அறையெங்கும் பரவிற்று

     

    வெயில்மெல்ல

    யானைத் துதிக்கையால்

    ஜன்னலுக்குள்

    எட்டிப்பார்த்தபடி இருந்தது

     

    ஜன்னல் வழியாக

    பளிச்சென்று வெயிலாகும் வானம்

    என்னை வெறிக்கிறது

     

    சின்னவயதில்

    மழைக்காட்டி எனக்குச்

    சோறூட்டின தருணங்கள்

    என் ஞாபகத்தில்

    அச்சிடப்பட்டிருக்கின்றன

     

    சுயலாபங்களுக்காக

    கைகளைவிட்டுச்செல்லும்

    யாருக்காகவும் வருத்தப்படக்கூடாது

     

    பயத்திலேயே

    ஆண்பெண் உறவு

    நிலவுகிறது

     

     

    மழைநாளில்

    எங்கள் வீட்டுவாசல்

    விரிக்கும் குடைகள்

    எனக்காக அழும்

     

    இதை ஒரு கவிதையென்று நான் சொல்லவேண்டுமா என்ன?

    சமுகத்தைப்புரட்டிப்போடும் ஆவேசம் தமயந்திடம் குடிகொண்டிருக்கிறது என்பதின் அடையாளமாக ஆண்களின் பார்வையிலேயே சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாய் இந்தக்கட்டமைப்பு மனிதப்பண்புகளின்மேல் மறுகட்டமைப்பு பண்ணப்படுமெனில் அதுவே தீர்வாக இருக்கும்.”  என்ற வாக்குமூலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

    நித்தியானந்தாவைவைத்து ஒரு கருத்தையும் இப்படி நாம் மறைக்கப்பட்டவற்றையே நிஜமென நம்புகிறோம்.நிர்வாணத்தை மறுக்கும்

    மனநிலை இருக்கும்வரை இதுபோன்றபோலிகளே உண்மையாகக்கருதப்படுவார்கள்என்று பதிவுசெய்கிறார்.

     

                       எல்லா கதைகளையும் எடுத்துக்கொள்ளாமல் நூலின் தலைப்பாக இருக்கிற வாக்குமூலம்கதையைமட்டும் என் சொற்களால் சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன். தொகுப்பில் எல்லா கதைகளுமே ஒரு வகையில் வாக்குமூலம்தான். பொதுவாக எதையுமே வாக்குமூலமாகத்தானே அறிகிறோம்.. தமயந்தியின் வாக்குமூலம் நேர்மையானது; தூய்மையானது;

    தாய்மையானது; சோகமானது. சுதந்தரத்தோடு வாழ்வது என்று முடிவெடுத்துவிட்டால் சுதந்திரம் கைகூடுகிறதோ இல்லையோ சோகம் எஞ்சிவிடுகிறது. அப்படிச்சோகம் சுமந்து சுதந்தரம்கைகூடித் ததும்பும் மனநிலையில்  சொல்லப்பட்டிருக்கிறது வாக்குமூலம்தன்மகனைப்பிரிந்து வாழவேண்டிய சூழல் .விவாகரத்துக்காக காலம் கழிக்கும் நிலை. அது கிடைத்துவிடத்தான் போகிறது. அதைமிக மிக நுட்பமாக “ நீதி மன்றங்களில் உறவுகள் பிரிக்கப்படுகின்றன என்றாலும் தொப்புள்கொடிகளும் அறுத்தெறியப்படுகின்றன என்பதையும் உறுதி செய்தாகிவிட்டது. உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன்நினைவுகள் மட்டும்தான்என தமயந்தி சொல்கிறார். சோகத்தின் தொய்வும் நீதிமன்றத்தீர்ப்பும் ஒருசேர இதயத்துடிப்பாகியிருப்பதை உணரமுடிகிறது. உணர உணர நமக்கும் வலி வலுவாகவே வந்துவிடுகிறது.

    பிள்ளைகளைப்பிரிதல் கொடுமை. பிரித்தல் அதனினும் கொடுமை. பிள்ளையைப்பிரிந்து எப்படியான வாழ்க்கை அமைந்தாலும் பிரிந்த பிள்ளையை நினைத்தால் எல்லாம் கரைந்த மணல்வீடாகும் என்பது உண்மை. அதற்காக ஒரு நரகத்தைச் சகிக்கவும் முடியாது. நரகத்தில் வாழ்ந்துகொண்டு பிள்ளையை வளர்க்கமுடியாது என்ற தெளிவான முடிவாக இருக்கலாம். பெற்றப்பிள்ளைகளை நினைத்து வாழவும்முடியாமல் சாகவும்முடியாமல் எத்துணைத் தாய்மார்கள் நரகத்தில் தம்மை அழித்துக்கொண்டிருப்பார்கள் என்பதை ஒருகணம் அசைபோடமுடிகிறது.

    மகனைப்பிரிந்ததாயின் வலி வலுவாகவும் சுயத்தின் துணையோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

     

     

    உன்கண்கள்

      மழைவரும் வானம் மாதிரி

       இருட்டுவது

       நீ பிறந்ததிலிருந்தே

        எனக்குப்பொறுக்காது.” “ என்னன்னாலும் உங்கூடதாம்மா இருப்பேன். என்றும் உன்னை நான் பார்த்த ஒரு வாரத்துக்கு முன் நீ என்மடியில் படுத்தபடியாய்சொன்னாய்” “ பால்கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன.

    அதிகாலையில் தூக்கமும் கரகரப்பும் கூடின குரலோடு ம்மாஎன்று பாலுக்காக நீ அழைப்பது என் காலை நேரங்களை நிறைத்திருக்கிறது.”

    உனக்காக இடது கையில் நான் ஹோம்வொர்க்க எழுத, அவித்த கடலை சப்பிட்டபடி என் வாயிலும் ஒன்றிரண்டைத்திணிக்கும் உன் கைவிரல்களின்

    சூடு என் மனதை நிரப்புகிறது” “ அவ்வப்போது ரப்பரைவைத்து அழிக்கும்போது நெற்றிப்புருவத்தைத் தூக்கி என் உயிரை உருக்குவதுபோலொரு பார்வை பார்ப்பாய்.உன்னைப்பற்றி என்னிடம் மிச்சமிருப்பது உன் நினைவுகள்மட்டும்தான்

    உன் உள்ளங்கையில் என்னைப்பற்றின ரேகைகள் பதிந்திருக்கும்.என் மூச்சுக்காற்றின் சூடு உன்னை உஷ்ணப்படுத்திகொண்டே இருக்கும். உலகிலேயே மரணத்தண்டனையைக்காட்டிலும்கொடிய தண்டனை பிள்ளைகளைப்பிரிவதுதான்என்ற வாக்குமூலங்களிலிருந்து எத்துணைச்சோகமானது என்பதை விளக்க என்னால் முடியவில்லை.

    எந்தக்குழைந்தையையும் பத்து விநாடிகளுக்குமேல் இப்போது என்னால் பார்க்கமுடியவில்லைஎன்ற தமயந்தியின் கூற்று ரணமாக்கிவிடுகிறது என்னை. இது மட்டுமா?….இல்லை….இதோ ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்போடு நீ என்னிருந்து விடுபட்டு சிணுங்கும் அழுகையோடு பிறந்ததும் உன்னை என் வயிற்றுமேட்டில் சிரித்தமுகத்தோடு டாக்டரம்மா போட்டபோது எழுந்த உணர்வை சாகும் நேரமும் என் அடி வயிறு நினைத்திருக்கும்.” எப்படி நித்திரையைக்கலைக்கும் வரிகளைத்த ந்திருக்கிறார் தமயந்தி!

                               இப்படித் தாய்மையின் வருத்தத்தைப்பிழிந்து தந்திருக்கும் தமயந்தி திருமணமுறிவுக்கான காரணத்தை எங்கேயும் சொன்னதாகப்படவில்லை. ஆனாலும் ஓரிடத்தில் வரும் வாக்குமூலம் நமக்கு வழிகாட்டுகிறது. அதாவது நீ வளர்ந்தபிறகு உன்னிடம் சொல்லவேண்டுமென நான் சேமித்தவைத்த உண்மைகள் சில உண்டு. கவிதை எழுதியதற்காக ஒடிக்கப்பட்ட என் வலதுகை நடுவிரல், தனித்தன்மைகளற்று மறத்திருந்த என் சுயம்” . கவிதை எழுதியும் சுயத்தோடு பேசியும் குடும்பவாழ்வில் ஈடுபட்டவருக்கு தனித்தன்மைகளென கருதியவைகளே கணவனுக்கு ஒவ்வாத தன்மைகளாகமாறி இல்லறத்தை இழக்க கரணங்களாகிவிட்டன என முடிவுசெய்யமுடிகிறது.

    தனித்தன்மையோடு வாழவிரும்பும் பலரின் வாழ்க்கை இப்படித்தடுமாறி சிதறும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இவர்களே துணையைத்தேடுகிறார்கள்.பின் இவர்களே முரண்பட்டு பிரிந்துவிடுகிறார்கள். துணையைத்தேடும்போழுது சிலவற்றை மறந்திவிட்டார்களா!. அல்லது விருப்பம்போல் நடந்து பின் ஆண்கள் ஏமாற்றி விட்டார்களா? என நினைக்க நிறைய இடமிருக்கிறது.

    ஆனாலும் தாய்க்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆசிரியர் கரன்சி நோட்டுக்களின் வாடை புழங்கும் இடங்கள் உன்னைத்தீண்டாதென்பதில் நான் திடமாக இருக்கிறேன்என்ற வாக்குமூலத்தை ஓரிடத்தில் பதிவுசெய்திருக்கிறார். கதை முழுவதும் மகனைப்பிரிந்ததாயின் துயர், தன்னிடமிருக்கும் சுயத்தின் துணையோடு வெளிப்படும் வெறுமையை ஆசிரியர் தமயந்தி சொல்லுவதில் வெற்றிபெற்றிருந்தாலும் மகனைப்பிரிந்த தோல்வியை அவர் அடைந்திருக்கிறார் என்பதில் நமக்கும் வலி. கதையின் வெற்றியை, கதாசிரியரின் வெற்றியை சமூகத்தின் தோல்வியாக கருதவேண்டியிருக்கிறது. சொல்லும் திறனாலும் சொல்வதிலுள்ள உண்மையாலும் சமூகத்தை உணரவைத்தலில், வாசிப்போரின் இதயத்தைக் கனக்கவைத்தலில் வெற்றிபெற்றிருக்கிறார்.

                          பிள்ளையைப்பிரியும் மனமுறிவு கூடாதென்பதை தானடைந்த மனமுறிவின்வழி வலியைக்கொடுத்து நம்மை உணரவைத்திருக்கிறார் தமயந்தி. ஒருமுறை தாயின் உடல்நலம் மோசமானபோதுமகனை பார்க்க விருபியபோது மகனைக்கடத்த தாய் தீர்மானித்ததாக எச்சரிக்கை நோட்டிசு அனுப்பப்படுகிறது. அப்போது தாய் சொல்லுகிறாள்.. “பெற்ற மகனைக்கடத்த விரும்பும் தாயாகப்பார்க்கப்பட்டவள் உலகத்தில் நான் மட்டுமே இருக்கக்கூடும்என்று. தாய் பேருந்துகளில் வேலைக்குச்சென்றுவந்த பயணச்சீட்டுகளை மகன் சேகரித்து வைத்திருந்ததை நினைவுப்படுத்தித் தாய் கூறுகிறாள்  இப்போது நினைவுகளின் சேகரிப்பில் திளைத்திருக்கிறோம் இருவரும்“. நினைவின் அடையாளங்கள் துருப்பிடிக்காதென்று நினைக்கிறேன்திடீரென்று கனவு வருகிறது.கனவில் மரணம் வாவா என்றழைப்பதாகக்கூறும் தாய், “நீ பிறந்தபோது என்னை முதலில் பார்த்ததுபோல நான் இறக்கையில் உன்னைக்கடைசியாய் பார்க்கவேண்டும்என உருக்கமாக,ஏக்கமிகு வாக்குமூலத்தை வழங்குகிறார். அன்புள்ள மகனுக்கு என்று தொடங்கி, கடிதத்தை முடிக்கும் கடைசிவரியில்  உன் முகம்தேடிவழியும் கண்ணோரத்துத்துளிகளுடன் அம்மா“. கண்ணீர் துளியின்றி கடந்துபோகமுடியாத கதை வாக்குமூலம் என்ற தமயந்தியின் கருத்தை முன்மொழிந்து முடிக்கிறேன்.

     

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி-4)

    ராமஸ்வாமி ஸம்பத்

     porus

    “அன்பரே! ஜீலம் நதிக்கரையில் அடாது மழை பெய்தாலும் விடாது நடந்த யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த தருணத்தில், தினம் மாலையில் போர் நிலவரம் பற்றி என்னிடம் விவரிப்பீர்கள். போரஸின் பராக்கிரமத்தையும் சாகசத்தையும் வெகுவாக சிலாகித்து அவருடைய வீரத்தினைப் போற்றுவீர்கள். ‘உண்மையிலேயே போரஸ் எனக்குச் சரியான ஜோடி’ என்றெல்லாம் சொல்வீர்கள்.

    “ஒரு மாலை, இருபக்கங்களிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றி விவரித்து, ‘போரஸை யுத்த தந்திரங்களால்தான் தோற்கடிக்க முடியும்’ என்று கூறினீர்கள். அதற்கான திட்டத்தையும் என்னிடம் விவரித்தீர்கள். ’அதன்படி புறமுதுகிட்டு ஓடுவதுபோல் பாசாங்கு செய்து, போர் முடிந்து விட்டதாக போரஸை நம்பவைத்து, அவன் படை அயர்ந்த நிலையில் இருக்கும்போது பின்பக்கமாகச் சென்று தாக்கப்போவதுதான் அந்த திட்டம். அதனால் அவன் குழப்பமடைந்து தன் படையின் பெரும் பகுதியை அங்கு நகர்த்துவான். அப்போது நான் இப்பக்கத்திலிருந்து போரஸைத் தாக்குவேன்’ என்றீர்கள். ’உங்கள் படையும் இரண்டாகி பாதுகாப்பு குறைந்து தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ’ என்று எனக்கு அச்சம் மேலிட்டது.

    “பௌர்ணமி நாளான அன்றிரவு இதே போன்று கொட்டும் மழையில், நான் ஒரு பவுரவ ஒற்றன்போல் வேடமிட்டு சுலபமாக போரஸின் கூடாரத்திற்குள் நுழைந்தேன். கவலை தோய்ந்த முகத்தோடு அவர் அமர்ந்திருந்தார். வேடத்தைக் களைந்துவிட்டிருந்த என்னை அவர் வியப்புடன் நோக்கி, “பெண்ணே நீ யார்? எதற்கு இந்த நள்ளிரவில் கொட்டும் மழையில் என் கூடாரத்திற்கு தனியே வந்திருக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?’’ என்றார். நான், ‘பவுரவ மன்னரே! இன்றைய தினம் சிரவண பூர்ணிமா அல்லவா? என் போன்ற பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் நாளல்லவா? எனக்கு உடன்பிறந்தவர் யாரும் இல்லை. ஆகவே, இந்த சகோதரியின் ரக்‌ஷையை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இறை அருளால் உங்களுக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ என்றேன்.

    “போரஸ் மனம் மகிழ்ந்து, ‘தங்காய், உனக்கு இன்னும் மணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன். நீ என் வலது கை மணிக்கட்டில் ரக்‌ஷை கட்டியதால் உன்னை மணக்கப்போகும் பாக்கியசாலிக்கு எத்தீங்கும் வராது காப்பேன்’ என்றார். ‘அண்ணா, அப்படியானால், உங்கள் எதிர் முகாமில் இருக்கும் அலெக்சாண்டரை போரில் கொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன். அவரே என்னை மணம்புரியப் போகிறார்” என்றேன்.

    “பவுரவ மன்னர் பேரதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்து நின்றார். பின்பு சுதாரித்துக்கொண்டு, ‘தங்காய், நீ சாமர்த்தியசாலி. உன் காதலனைக் காக்க எப்பேற்பட்ட ஆபத்து நிறைந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். இந்த புருஷோத்தமன் வாக்களித்துவிட்டால் அதனை எக்காரணம் கொண்டும் மீறமாட்டான். நீ மன நிறைவோடு புறப்பட்டுச்செல்’ என்று கூறி தன் கழுத்தில் இருந்த வைரமாலையை எனக்கு அளித்தார். பின்னர் தன் மெய்க்காப்பாளனை அழைத்து என்னை ஜாக்கிரதையாக எங்கு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு விடுமாறு பணித்தார்.”

    இதைக்கேட்ட அலெக்சாண்டர் மிக்க ஆச்சரியமடைந்து, ‘ஓகோ, இதுதான் காரணமா அன்று போரஸின் தயக்கத்திற்கு?’ என நினைத்தான். பின்னர், “ரொக்ஸானா,  அது என்ன ரக்‌ஷை கட்டுவது? அது என்ன வழக்கம்” என்று வினவினான்.

    roxana“என் ஆருயிரே! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரிலிருந்து ஒரு சாம்ராஜ்யத்தை தர்மபுத்திரன் ஆண்டு வந்தான். அவன் நடத்திய ராஜசூய யாகத்தில் யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணன் என்கிற வாசுதேவர் பங்கு கொண்டார். யாக முடிவில் அவருக்கே முதல் தாம்பூலம் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்தருணத்தில் கண்ணனின் ஜன்ம வைரியான சிசுபாலன் அவரைப் பலவாறு வசைமாரி பொழிந்து அந்த யாகசாலையில் கலவரம் செய்தான். சினம்கொண்ட கண்ணன் தன் சுதர்சனம் என்கிற சக்கர ஆயுதத்தை அவன் மீது பிரயோகம் செய்தார். அந்தச் சக்கராயுதம் சிசுபாலன் தலையைக் கொய்து விட்டு கண்ணன் கையைத் திரும்பி வந்தடைந்தது. அப்போது கண்ணனின் வலது கை மணிக்கட்டு காயமுற்று குருதி பெருகியது. அதைக் கண்ட தர்மபுத்திரனின் பட்டத்து ராணியான துரோபதை தன் விலைமதிப்பான புடைவையின் முந்தானையைக் கிழித்து கண்ணன் மணிக்கட்டில் கட்டி குருதிப் பெருக்கை நிறுத்தினாள். கண்ணன்  மகிழ்ந்து, ‘தங்காய், இந்த பேருதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்? உன்னுடைய இந்த புடைவையில் எத்தனை நூலிழைகள் உள்ளதோ அத்தனை மதிப்புள்ள  புடைவைகளை உரிய காலத்தில் உனக்கு அளிப்பேன். அது மட்டுமல்ல. உன் கணவர்களான பஞ்ச பாண்டவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் காப்பேன்’ என்று வாஞ்சையுடன் வரமளித்தான். அன்று முதல் பரத கண்டத்தில் ஒவ்வொரு வருடமும் சிரவண பூர்ணிமா அன்று சகோதரிகள் தம்தம் சகோதரர்களுக்கு ரக்‌ஷை கட்டும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது” என்றுரைத்தாள் ரொக்ஸானா.

    இதைக்கேட்ட அலெக்சாண்டர், ‘எவ்வளவு உயர்ந்த மனிதன் இந்த போரஸ்! எதிரியின் காதலி தன்னை நயமாகப் பேசி மடக்கிவிட்டபோதிலும் தான் கொடுத்த வாக்கினை மீறாமல் இருந்திருக்கிறான். நல்மனம் படைத்தவன் இந்த பவுரவ மன்னன்’ என்று பெருமிதம் கொண்டான்.

    அதே நேரத்தில் ஒரு பெண்மூலம் தனக்கு உயிர்ப்பிச்சை கிடைத்திருக்கிறது என்ற எண்ணமே அவனுக்குக் கசந்தது.

    ”ரொக்ஸானா, அந்த நள்ளிரவில் நீ என் எதிரியின் முகாமுக்குச் சென்றது எனக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. உனக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அதை என்னால் சகித்துக்கொள்ள முடியுமா?”

    “மன்னியுங்கள் மாமன்னரே! இப்பரத கண்ட மண்ணின் மகிமையோ என்னவோ தெரியவில்லை. காதலனுக்காக இந்த சிறிய சாகசத்தைச் செய்ய முற்பட்டேன்” என்றாள் அவள்.

    “அது சரி. பாரசீகத்தைச் சேர்ந்த உனக்கு இப்பரத கண்ட பழக்க வழக்கங்கள் எவ்வாறு தெரிந்தன?”

    “பாக்டிரீயா நாட்டில் எனக்கு நாட்டியம் கற்பித்த ஆசான் பரத கண்டத்தைச் சேர்ந்தவர். அவர் எனக்கு பாரதவர்ஷத்தின் இதிகாச புராணங்களையும் இந்நிலப்பகுதியின் கலாச்சாரங்களையும் அடிக்கடி விளக்குவார். அதனால் எனக்கு இந்த மண்மீது ஒரு பற்று ஏற்பட்டது. இதனைக் காணவேண்டும் என்ற தீவிரமான அவாவும் உண்டாயிற்று. இறை அருளால் தங்கள் மூலம் அந்த பாக்கியமும் கிட்டியது” என்றாள் ரொக்ஸானா.

    அலெக்சாண்டரின் கூடாரத்தில் சில நொடிகள் மவுனமாகக் கடந்தன.

    (தொடரும்)

    Share