செண்பக ஜெகதீசன்snakeindex      

 

இதயத்தைக் கோவிலாக்கி

அன்பை மதமாக்க வந்தான்

இறைவன்..

 

இந்த மனிதர்கள்,

இதயத்தைக் கல்லாக்கி

கல்லை இறைவனாக்கி

கோவிலாக்கி,

கல்லால் அடித்துக்கொள்கிறார்களே

இறைவனுக்காக-

தங்களுக்குள்…!

 

படத்துக்கு நன்றி

http://www.demotix.com/news/1580134/thousands-worship-serpent-gods-during-ayilyam-festival

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “கல்லாய்…

 1. ஆமாம்,ஐயா காலம் காலமாய் நடக்கிறது.யாரும் திருந்தும் வழியாகத் தெரியவில்லை.நல்லதொரு கவிதைக்கு நன்றி.

  அன்புடன்
  ….. தேமொழி 

 2. கடவுளையே கல்லால் அடிக்கவும் தயங்காத உலகம் இது. தங்களுக்குள் அடித்துக் கொள்ளவா தயங்கப் போகிறது. சரியாகச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன்.

 3. இறைவனென் பான் எத்தகையவன் என்ற 
  குறைவிலா அறிவை ஒவ்வொரு – மத 
  மறையும் கூறிடினும் -அதைப் படித்து 
  முறைபட வாழாமாக்கள் தாமே!

 4. “சுருக்”கென்று தைக்கிறது. நல்ல கவிதை.

 5. ‘கல்லாய்’ கவிதைக்குக் கருத்துரை வழங்கிச் சிறப்பித்த திருவாளர்கள்,
  தேமொழி, சச்சிதானந்தம், அலசியம், தனுசு ஆகியோருக்கு
  மிக்க நன்றி…!

 6. நெஞ்சைச் சுடும் உண்மை. மதம் பிடித்து அலைகின்றன மனித மனங்கள். காழ்ப்பை மனதில் வைத்து, சீழ்பிடித்த பிறவிகளாய், அன்பே மதம் என்பதை அறியாமல்,மனித வாழ்வின் மாண்பு தெரியாமல் வாழ்கிறார்கள். சிந்திக்க வைக்கும் நல்லதொரு கவிதை பகிர்விற்கு நெஞ்சார்ந்த நன்றி.

 7. பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் கருத்துரைக்கு
  மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *