நாள் முதலில் உன்
எதிர்பார்ப்பு,
நாள் முடிவில் உன்
அனுபவமானால்
நல்லதுதான்- உன்
அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!
படத்துக்கு நன்றி
நாள் முதலில் உன்
எதிர்பார்ப்பு,
நாள் முடிவில் உன்
அனுபவமானால்
நல்லதுதான்- உன்
அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!
படத்துக்கு நன்றி
வாரத்தில் ஒருநாள்
விடுமுறை நாள்..
மாதத்தில் ஒருநாள்
சம்பள நாள்..
வருடத்தில் ஒருநாள்
பிறந்தநாள்..
வாழ்க்கையில் ஒருநாள்
இறந்திடும் நாள்..
ஆனாலும்,
அனுதினமும் மனிதர்பலர்
அஞ்சியஞ்சி சாகிறாரே
அது ஏன்…!
படத்துக்கு நன்றி
செண்பக ஜெகதீசன்
உடலில் வலு இருக்கிறது
புலிக்கு-
அடுத்தவரை அடித்துத்தின்ன..
தப்பியோடத்
தைரியம் இருக்கிறது
மானுக்கு..
குடிலவேலை செய்யும்
குணம் இருக்கிறது
குள்ள நரிக்கு..
உடலை மறைத்து
உள்ளே வைத்துக்கொள்ள
ஓடு இருக்கிறது
ஆமைக்கு..
அத்தனையும் ஒன்றாய்ச் செய்ய
ஆற்றல் இருக்கிறது
மனிதனுக்கு..
ஆனாலும் அடிக்கடி
மட்டமாகிவிடுகிறானே
மிருகங்களை விடவும்…!
http://www.fanpop.com/clubs/wild-animals/images/2785495/title/big-cat-fight-wallpaper
செண்பக ஜெகதீசன்…
மாதா வாகும் பெண்ணினமே,
பாதகம் நிறைந்த பாரினிலே
பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,
சோதனை பலவாய் வந்தாலும்
சொந்தம் காப்பது உன்செயலே,
சாதனை பலவும் புரிந்திடவே
ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!
ஆளுக்கு ஆள் ஆயுள்,
அளவிலுண்டு வேறுபாடு-
கூடலாம், குறையலாம்..
அதில் அவன்
அழுதுகொண்டே பிறக்கிறான்
அழுதுகொண்டே வாழ்கிறான்
அழுதுகொண்டே சாகிறான்..
ஆனால் இந்தப் பூக்கள்,
சிலமணி நேரம் வாழ்ந்தாலும்
சிரித்துக்கொண்டே இருக்கின்றன..
புரிந்ததா மனிதனே,
தெரிந்துகொள் பார்த்து-
சிரித்து வாழ்
சிரிக்க வாழாதே அழுது…!
படத்துக்கு நன்றி
http://stuffpoint.com/flower/image/104090/beautiful-iris-purple-flowers-picture/
ஆம்பிள்ளய அதிகமாத்தான் நம்பிக்கெடாதே
அசிங்கப்பட்டு வாழ்க்கையிலே நொந்துவிடாதே,
காம்பிருக்க சுளைவிழுங்கும் பிறவிகதாண்டி
கண்மூடிப் போயிடாதே வேலியத்தாண்டி..
(ஆம்பிள்ளய..)
ஆயிரமாச் சத்தியங்கள் செய்திடுவாங்க
அத்தனையும் சத்தியமாய் நம்பிவிடாதே,
பாயும்புலி போலவேதான் பதுங்கிடுவாங்க- தனியே
பக்குவமாய்ப் பேசியபின் ஒதுங்கிடுவாங்க..
ஓவியமே நீயெனத்தான் கதைவிடுவாங்க
உயிரக்கூட விடுவேண்ணு வாயடிப்பாங்க,
தேவதையே நீதானுண்ணு ஏத்திடுவாங்க- பின்னே
தேவையில்ல நீயெனவே மாத்திடுவாங்க..
(ஆம்பிள்ளய..)
சொத்துசொகம் வேணாமுண்ணு சொல்லிடுவாங்க
சொத்தெல்லாம் நீதாண்ணு சுத்திடுவாங்க,
மத்ததெல்லாம் முடிஞ்சபின்னே மாறிடுவாங்க- உன்
மானமெல்லாம் போகக்கரை ஏறிடுவாங்க..
பேப்பரிலே பாப்பதெல்லாம் பொய்யிணுவாங்க
பேய்பிடிச்சி நீயலைய விட்டீடுவாங்க,
ஆப்பசைச்ச கொரங்குபோல மாட்டிக்கிடாதே- அதுக்கு
அப்புறமா அவப்பெயரச் சூட்டிக்கிடாதே..
(ஆம்பிள்ளய..)
அப்பாஅம்மா சொல்லக்கேக்கத் தவறிவிடாதே
ஆசைப்பட்டு வாழ்க்கையிலே இடறிவிடாதே,
எப்பவுமே நல்லதையே மறந்துவிடாதே- இதை
ஏத்துக்கிட்டா வாழ்க்கையுந்தான் சிறந்துவிடாதோ…
(ஆம்பிள்ளய..)
படத்துக்கு நன்றி
http://cutcaster.com/photo/901762805-Happy-Indian-woman/
அவரவர்க்கும் இருக்குது
ஆயிரம் வேலை- அதில்
அடுத்தவர் நிலைமீது
ஆகுமா கவலை,
சுவரின்றி அழகாய்ச்
சித்திரம் எழுதவா- அது
சுவடின்றி அழிவதில்
சுவையென்ன வாழுது..
கவலையை மறந்திடக்
கைவசம் யுக்திகள்- அதைக்
காட்டிடத் தோன்றுதே
கண்ணிலே பக்திகள்,
சவலைப் பிள்ளையாய்ச்
சமுதாயம் ஆனதே- அதைச்
சீரிடா நாட்டிலே
சிதையுதே மானமே…!
http://www.istockphoto.com/stock-photo-20966885-sad-worried-young-man-with-hands-on-face.php
ஆடுகள் அடித்துக்கொண்டால்,
அதிலே ஆதாயம்
அடுத்துவரும் ஓநாய்களுக்குத்தான்..
காய்ந்த எலும்பைக் கடிக்கும்
வேட்டைநாய் ருசித்திடும் இரத்தம்
வேறல்ல-
அதனுடையதுதான்..
தனிமரங்களின் கூட்டம்தான்
தோட்டம்-
தாக்குதல் அதிகம்தான் தனிமரத்திற்கு..
நாணல்கள் வளைவது
நாணமுற்று அல்ல-
நாளை வாழ்வை
நலமுடன் தொடரத்தான்..
நாணலானாலும், நெடுமரமானாலும்,
ஆடுகளானாலும்,
அடித்திடும் ஓநாயானாலும்,
படைத்தவன் இறைவன்..
அவனை மறந்திடில்,
ஆவது ஒன்றுமில்லை…!
படத்துக்கு நன்றி
இறைவனைத் தேடி
இடைவிடாது மந்திரம் ஓதி
இசைக்கும் வாயைவிட,
இன்னலுறும் மனிதனைத் தேடி
இயன்றவரை உதவிடும் கரங்கள்
உயர்ந்தவைதான்..
உகந்தவைதான்-
இறைவன் பற்றிட…!
படத்துக்கு நன்றி
http://alittlebitdifferent.wordpress.com/2011/09/29/just-the-hands/
செண்பக ஜெகதீசன்
இப்படியானால் இதயம்…
இதயம் குளிர்கையில்
இயல்பாய் வருவது நன்றி..
இதயம் இரும்பானால்
இருப்பதைப் புதைக்கும் கொன்று..
இதயம் கனிவானால்
இறைவன் அருள்வான் நின்று..
இதயம் மலரானால்
இருக்கலாம் உலகை வென்று…!
செண்பக ஜெகதீசன்
இடையே ஏனிந்த
இடி வந்து மின்னலுடன்
இன்னல் தருகிறது..
நல்லது நடக்கும்போது
நாலு கெட்டது
நடந்துதான் தீரும்..
இப்படிச் சொல்லி
இடியாய்ச் சிரிக்கிறான்
இறைவன்…!
படத்திற்கு நன்றி:
http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html
போடும் ஒரு நெல்லுக்காக
கிளி எடுத்த
பொய்யான சீட்டை வைத்துப்
புளுகுவதை நம்பாமல்,
கைரேகைக்
கதைகளையும் நம்பாமல்,
கைரேகை தேயக்
கடும் உழைப்பு உழைத்தால்
உன்ரேகை(அடையாளம்) தெரியும்
உயர்வாக…!
படத்துக்கு நன்றி: http://suite101.com/article/palm-reading-describes-four-personality-types-a91142
செண்பக ஜெகதீசன்
கன்றை நினைத்து கொட்டில்பசு
கண்ணீர் விட்டே அழைப்பதுவும்,
குன்றில் யானை ஏறிநின்று
குரலை உயர்த்திப் பிளிறுவதும்,
தின்று விடாமல் தாய்ப்பறவை
திசைக்கும் திரும்பிக் கூவுவதும்,
என்றும் காணும் உண்மைதானே
ஏற்றம் மிக்கது தாய்மைதானே…!
படத்துக்கு நன்றி: http://designbeep.com/2010/05/09/25-emotional-mother-and-baby-animal-photos-from-wildlife/
வந்தது புதிதாய் ஆண்டு
வாழ்க்கை சிறந்திட வேண்டு,
சிந்தையில் மேன்மை கொண்டால்
சிறப்புதான் என்றும் உண்டு,
முந்தைய ஆண்டின் தடைகள்
முன்னே செல்ல நடைக்கல்,
நொந்திடத் தேவை யில்லை
நாளை நீயே வெல்வாய்…!
படத்திற்கு நன்றி: http://www.ladcblog.org/2012/01/the-7-ups-of-life/thumbs-up/
கடவுள் கொடுத்த முகத்தைக்
கழற்றி வைத்துவிட்டு,
கைவசம் தயாராய் உள்ள
கபட முகங்களை
கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு
காட்சியளிக்கிறான்
காசினியில் மனிதன்..
இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,
இவர்கள் எழுப்பிய கோவில்களில்
இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்
ஏமாந்து விழிக்கிறான்-
எந்தமுகம் இவர்களுக்கு நாம்
தந்தமுகம் என்பதை அறியாமல்…!
படத்துக்கு நன்றி