செண்பக ஜெகதீசன்
மழையைத்தானே வேண்டினோம்..
இடையே ஏனிந்த
இடி வந்து மின்னலுடன்
இன்னல் தருகிறது..
நல்லது நடக்கும்போது
நாலு கெட்டது
நடந்துதான் தீரும்..
இப்படிச் சொல்லி
இடியாய்ச் சிரிக்கிறான்
இறைவன்…!
படத்திற்கு நன்றி:
http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
இடி போன்று அழுத்தமாகவும் மின்னல் போன்று பளிச்சென்றும் நயமுடன் ஒரு கவிதை. அருமை.
தனுசு அவர்களின் கருத்துரைக்கும்,
பாராட்டுரைக்கும் மிக்க நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…