இலக்கியம்கவிதைகள்

எந்த முகம்…

செண்பக ஜெகதீசன்    

கடவுள் கொடுத்த முகத்தைக்

கழற்றி வைத்துவிட்டு,

கைவசம் தயாராய் உள்ள

கபட முகங்களை

கணத்துக்கொன்றாய் மாட்டிக்கொண்டு

காட்சியளிக்கிறான்

காசினியில் மனிதன்..

 

இங்கு வந்து பார்க்கும் இறைவனும்,

இவர்கள் எழுப்பிய கோவில்களில்

இருப்பதாய்ச்சொல்லும் இறைவனும்

ஏமாந்து விழிக்கிறான்-

எந்தமுகம் இவர்களுக்கு நாம்

தந்தமுகம் என்பதை அறியாமல்…!

 

படத்துக்கு நன்றி

  http://saniyaartblog.wordpress.com/category/grade-7/ 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க