செண்பக ஜெகதீசன்
இறைவனைத் தேடி
இடைவிடாது மந்திரம் ஓதி
இசைக்கும் வாயைவிட,
இன்னலுறும் மனிதனைத் தேடி
இயன்றவரை உதவிடும் கரங்கள்
உயர்ந்தவைதான்..
உகந்தவைதான்-
இறைவன் பற்றிட…!
படத்துக்கு நன்றி
http://alittlebitdifferent.wordpress.com/2011/09/29/just-the-hands/
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
நன்றி…நன்றி…என்ன ஒரு அருமையான கவிதை.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை மிக அழகாகக் கூறிவிட்டீர்கள்.
….. தேமொழி
தேமொழி அவர்களின்
ஆழ்ந்த ரசனைக்கும்
ஆத்மார்த்தமான பாராட்டுரைக்கும்
ஆயிரமாய் நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…