Author: கிரேசி மோகன்

  • திருமால் திருப்புகழ் (119)

    கிரேசி மோகன்

    Grace to the fruit seller. Detail from Srimadbhagavatham. Oil on canvas - Keshav
    Grace to the fruit seller. Detail from Srimadbhagavatham. Oil on canvas – Keshav

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————
    தொண்டைக் கட்டு வந்தபோது வேண்டுதல் வெண்பா
    ——————————————————————————————-

    Vittala. Oil on canvas. #krishnafortoday - Keshav
    Vittala. Oil on canvas. #krishnafortoday – Keshav

     

    கொண்டை மயிற்பீலி, கொண்டென் கரகரா,
    தொண்டை சரிசெய்வாய் துப்புரவாய், -பண்டரி,
    விட்டலா பாண்டுரங்கா, வேய்ங்குழல் நாதமாய்,
    கொட்டவை வார்த்தைகளை சட்னு….(227)

    குரல்வளை தன்னை, கிரகணம் பிடிக்க,
    பொருள்விளங் காயாச்சு பேச்சு, -அருள்மழையை,
    தொண்டையில் பெய்திடுவீர், பண்டரி நாதரே,
    விண்டுரைக்க வைப்பீர் வசனம்….(228)

    வலம்புரியோ(டு) அன்று, களம்புகுந்தோன் இன்று,
    நலம்புரிந்தான் பேசிட நன்றாய், -வளம்புரிந்தான்,
    சும்மா இருந்த, சிருத்தொண்டை ஊதினான்,
    அம்மா அறிந்தேன் அரி….(229)

    வாத புரீசா, வ்ரஜகுல விஸ்வாசா,
    சேதம் அசேதனம் செய்திடுவோய், -தோது,
    புரியெந்தன் தொண்டை, சரியாகக், காக்கும்,
    அரியுந்தன் தொண்டைநீ ஆற்று….(230)

    பாடிப் பெறமோட்சப், பாதை இருக்கையில்,
    நாடிப் பறந்தேன் நவநீதா, -சாடிக்,
    கெடுக்கும் குரலெனக்கு, கொஞ்சமும் வேண்டாம்,
    முடக்கி மவுனியாய் மாற்று….(231)
    ——————————————————————————————————-

    என்னதவம் ஆனாலும், எங்கதைச் செய்தாலும்,
    தன்னந் தனியாய்த் தவிக்காதே, -கண்ணனருள்,
    கூட அழைத்துச்செல், கைகூடும் காரியங்கள்,
    மாடுகள் மேய்த்தோனின் பாடு….(232)

    ———————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • திருமால் திருப்புகழ் (118)

    கிரேசி மோகன்

    Vaatsalyam series #krishnafortoday Keshav
    Vaatsalyam series #krishnafortoday
    Keshav

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————————-

    Experiments with Krishna series. #krishnafortoday Keshav
    Experiments with Krishna series. #krishnafortoday Keshav

    மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்திரவில்,
    ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
    கார்முகில் வண்ணன்மேல், கோதூளி மின்னிட,
    பார்மிசை ராப்பக லாச்சு….(222)

    கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
    அண்ணா பலராமன் நலம்தானா. -பின்னால்,
    இதுபோ லெனைநீ, இங்கிதமாய்க் கேட்டு,
    பதிலொன்(று) எழுதிப் போடு….(223)

    கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
    அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி,
    யசோதையாள், நந்தகோபன், யாதவரைக் கேட்டு,
    விசாரித் ததாக விளம்பு….(224)

    கல்லில் சிலையாகக், காற்றில் இசையாக,
    புல்லில் பிருந்தா வனமாக, -சொல்லில்,
    பொருளாக அல்லும், பகலாகும் கண்ணன்,
    இருதாள் எண்ணல் இணைப்பு….(225)

    பேரா யிரம்கொண்டு, ஷீராப் தியிலுறங்கும்,
    ஆரா அமுதா அடைக்கலம், -தீராத,
    பித்தாண்ட ராதையாய், புத்தாண்டில் மாறிட,
    அத்தாயென் புத்தி அமர்….(226)

    அம்மியில்லை அண்ணாந்து, அருந்ததி காணவில்லை,
    நம்முடைய சந்திப்போ நட்டநிசி, -விம்மியழும்,
    ராதைக்குக் கண்ணன், ரகசியமாய்க் கூறினான்
    கோதையே நானுன் குழவி….(227)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • திருமால் திருப்புகழ் (117)

    கிரேசி மோகன்

    The story of Puranjana - Keshav
    The story of Puranjana – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    காரணம் நேற்றுண்டோம், சூரண மாற்றின்று,
    ஜீரணம் நாளைதான்: ஜீவிதம் -பூரணம்,
    கொள்ள சரண்புகு, கோகுல பாலகன்,
    கள்ள பிராந்தன் கழல்….(216)

    காமம், பொறாமை, குரோதம் இவைகளின்,
    சாமக் கிரியையால் சோர்வுற்றேன், -நாமம்,
    உரைத்தேன் முகுந்தா, உனதாழ் கடலில்
    கரைத்த பெருங்காயம் ஆக்கு….(217)

    அடிவானம் ராதை, அலைகடல் கண்ணன்,
    பிடிவாதம் இல்லா பிணைப்பு, -முடிவாக,
    ஜீவன் அலைந்து, ஜகன்நாத னோடிணையும்,
    பாவம் பரிகாரம் போகும்….(218)

    ஒன்பது ஓட்டை, உடலே உடனேநீ,
    தின்பது தூக்கம் தவிர்த்தாயர், -நண்பனின்,
    ஊது குழலாய், உருமாறி என்நாளும்,
    கீதகோ விந்தமதைக் கூவு….(219)

    குருவாயூர் பிள்ளை, திருநாமம் சொல்லி,
    வெறும்வாயை மெல்லு விடாது, -வரும்நாளில்,
    பக்திஅவல் உண்டு, பதிலுக்(கு) அளித்திடுவான்,
    முக்தியாம் செல்வம் மகிழ்ந்து….(220)

    மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்தபடி,
    ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
    கோதூளி வண்ணனே, கண்ணனே கண்ணுறங்க,
    வாதூளி ஆட விரைந்து….(221)

    ————————————————————————————————————–

     படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (116)

    கிரேசி மோகன்

    Bhagavatha:  Amritha and the Mohini avatara  - Keshav
    Bhagavatha: Amritha and the Mohini avatara – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ‘’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————————-blogger-image-1088852207

    பாரேழை உண்டுமிழ்ந்து, பள்ளிகொண்ட பாலகனே,
    பாரேழை எந்தன் பரிதவிப்பை, -பேரேழாய்,
    மாமன்கை எட்டாது, ஜாமம்போய் எட்டானோய்,
    காமமப்பேய் கொல்லும்முன் கொள்….(210)

    மூப்பும் பிணியும், முகமன் உரைத்திடும்,
    தோற்பும் பகையும் திரண்டெழும், -காப்பாய்,
    மருதம் முறித்து, மதயானை கொன்ற,
    வரதனை நெஞ்சே வணங்கு….(211)

    பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
    என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
    பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
    தொழுது கிடப்பதே தொண்டு….(212)
    ஆழ்வாரி தன்னில், அனந்த சயனத்தில்,
    ஆழ்வாரே ஆண்டாளின் அப்பாவாம், -ஆழ்வாரின்,
    பாடல் அழகால், பெருமை அடைந்தவனே,
    கூடல் அழகனே காப்பு….(213)

    ஆனைவா வென்றைக்க, ஆழியுடன் வந்தானை,
    ஆனைவாய் உண்டுமிழ்ந்த ஆழியானை, -ஆணைவாய்ச்,
    சங்கூதி பாரதம், செய்தானை பள்ளிகொள்ளும்,
    பொங்கோத ஆழியானைப் போற்று….(214)

    தீபாவளி EVE பாமா துணை
    ————————————————-
    நமக்குள் இருக்கும், நரகா சுரனார்,
    இமைக்கும் பொழுதில் இறக்க, -சமர்த்தன்,
    யதுகுலக் கண்ணன், இணைசகி பாமா,
    உதவிக்கு உண்டு உனக்கு…(215)

    ————————————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (115)

    கிரேசி மோகன்

    Bhagavatha --Ulukala bandhanam - Keshav
    Bhagavatha –Ulukala bandhanam – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–
    மீண்டும் உரலிழுத்து ,மாமருதம் சாய்த்தரவத்,
    தாண்டவம் ஆடித் தயிருண்டு, -வேண்டிய,
    ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
    யாதவா வந்திங்(கு) எழுது….(204)

    பாற்கடலை இன்றுவிலை, பேரமாய்ப் பேசினால்,
    வேர்கடலை கூட வராதுகேள், -யார்கடவுள்,
    உண்டுமிழ்ந்த நீயா ? உமிழ்ந்ததை உண்ணமீண்டும்
    பண்டமாற்று வோனா பகர்….(205)

    பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
    வள்ளலென பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
    கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
    நேர்நிகர் ஆவார் நமக்கு….(206)

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
    ———————————————————–

    மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி,
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம், -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு….(207)

    பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப்,
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும், -மாலே,
    பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே,
    அழகிய சிங்கா அருள்….(208)

    ஆராரோ என்றாய்ச்சி, சீராட்டித் தன்முலைப்பால்,
    சோறாலே எவ்வாறு சொக்கவைத்தாள் ! -பாரேழை,
    உண்டு பசியாறி, ஊழியில் ஆலிலையில்,
    பண்டு படுத்தோய் பகர்….(209)
    ————————————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • திருமால் திருப்புகழ் (114)

    கிரேசி மோகன்

    Santhanagopalam - Glory of the Supreme Person - Keshav
    Santhanagopalam – Glory of the Supreme Person – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-
    ஸ்ரீரங்கநாதர்
    ————————–
    முன்விழித்துப் பின்விழித்துப், பொன்மகள் பார்த்திருக்க,
    கண்விழிக்கா யோகமா? கற்பனையா? -தென்னிலங்கை,
    பக்கம் தவித்திருக்கும், பத்தினியாள் ஞாபகமா?
    துக்கமென்ன சொல்லிவிட்டு தூங்கு….(198)

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….(199)
    —————————————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
    குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
    பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
    போடுநீ ஆமாம்சா மி….(200)

     
    விடையேழ் அடக்கி வளைக்கரம் கொண்ட
    இடையா எனக்கிங்(கு) இருக்கும் -தடையான
    பாழும் வினைகளும் பஞ்சப் புலன்களும்
    வீழ வகைசெய் விரைந்து….(201)

    காயாம்பு மேனியும், கொவ்வைக் கனியிதழும்,
    ஓயாது தாலாட்டும் ஓங்காரத், -தாயன்பும்,
    புத்தியில் சேயாகிப், போற்றுவோர் வாக்கினில்,
    முத்தமிழ் முத்தமிடு மாம்….(202)

    அற்புதம் செய்ய, அவதரித்த ஆய்க்குலத்தோன்,
    பொற்பதம் போற்றிப் பணிந்திட, -கற்பூரம்,
    மூச்சில் மணத்திடும், மூடக் கழுதைக்கும்,
    ஆச்சரியம் கண்ணன் அருள்….(203)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • திருமால் திருப்புகழ் (113)

     

    கிரேசி மோகன்

    Ksheerasagara Shayana, oil on canvas. - Keshav
    Ksheerasagara Shayana, oil on canvas. – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————-
    ஸ்ரீரங்கநாதரைப் பற்றி
    ————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    நாரா யணாவுந்தன், பேரா யிரம்கூறி,
    ஆரா தனைசெய்(து), அறிகிலேன், -போறாத,
    வேளையில் கூப்பிட்டால், தோளைக் குலுக்காதே,
    காளையே கன்றெனைக் கா….(192)

    சூடிக் கொடுத்தவளை, நாடிக் கரம்பிடித்து,
    ஜோடிப் பொருத்தமான சீரங்கா, -பாடித்,
    தொடுத்திடுவேன் வெண்பா, தமிழாய்நீ என்பால்,
    கொடுத்திடுவாய் கார்முகிலாகா….(193)

    அடைக்கலம், நேசம், அரவணைப்பு, பாசம்,
    கடைவிரித்தக் காட்சியாய்க் காதல், -நடைபிணமாய்,
    காரங்க வண்ணன், கழல்கண்டு சேவிக்க,
    சீரங்கம் சென்றோர்க்கு சீர்….(194)

    பாம்புல பட்டுப், படுக்கை விரிச்சதுல,
    சோம்பலா தூங்குற சொஸ்த்தமா, -ஆம்புள,
    சிங்கமே அன்னிக்கு, சின்னபய சொன்னதுக்கு,
    எங்கிருந்தோ வந்த(து) எவரு….(195)

    நாதா திருவரங்க, நாதா தரணிகுரு,
    நாதா ரமாப்பிராண நாதாவி, -னோதா,
    துயறருக்கும் பாதாம், புயம்மறந்தேன் தீதாம்,
    மயர்வறுக்க நீதான் மருந்து….(196)

    பொன்னையும், பூமியையும், முன்னை மணக்கையில்,
    திண்ணமாய்க் கட்டினாய்த் தாலியை, -தன்னையே,
    தாலியாக்கி உன்னைத், தழுவி மணந்துனக்கு,
    வேலியான பொன்னியுன் வாழ்வு….(197)

    ———————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

    Share
  • திருமால் திருப்புகழ் (112)

     

    கிரேசி மோகன்

    Bhagavatha - Govinda Pattabhishekam
    Bhagavatha – Govinda Pattabhishekam

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    வல்லாமை ஆகி, வடவரை தாங்கியோன்,
    இல்லாமை தந்திங்(கு) இருப்பினை, -சொல்லாமல்,
    உள்ளங்கை நெல்லி, உணர்தலாய் சொல்லுவான்,
    உள்ளங்கை கூப்பி உணர்….(186)

     
    வரையளவு வாழ்ந்து, தரையளவு தாழ்ந்து,
    குறையுளத் தோடு குறுகி, -நரைமுளைத்து,
    நாடி தளரும்முன், நந்தகோபன் மைந்தனை,
    நாடித் துதிக்க நிறைவு….(187)

     
    வரையனைய ஓங்கு, குறைகளைத் தாங்கும்,
    திரையணையில் தூங்கும் பெருமாளை, -கரமிணைய,
    கூப்பித் தொழுதிடுவாய், கோவர்த் தனமேந்தி,
    காப்புக் குடைவிரித்தோன் கால்….(188)

     
    வரையன்று தூக்கி, வ்ரஜபூமி காத்தோய்,
    குறையொன்றும் இல்லையெனெக் கேட்டோய், -பறைவேன்,
    நிறையொன்றும் இல்லையென, நீயெந்தன் நெஞ்சம்,
    நிறைந்தென்றும் கோவிந்தா நில்….(189)

     
    வேணு இசைக்கையில், வெண்ணை புசிக்கையில்,
    வானில் வரைதூக்கி நிற்கையில், -ஊணும்,
    ஒருகால் உதவ, மறுகால் தயாராய்,
    ஒருகால் குரல்வருமுன் கேட்டு….(190)

    வெண்ணை, தயிர்பால், மண்ணை, கோபியர்தம்,
    கண்ணை, உண்ட கிருஷ்ணா, -உன்னையென்,
    வாக்கிலெட்ட வைத்திடுவாய், வையம்காண் நாடகமாய்
    சாக்லேட் கிருஷ்ணா தலைப்பு….(191)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (112)

    கிரேசி மோகன்

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–blogger-image-1491932381
    உள்ளே புகுந்த, ஒருதுளி விந்துக்கு,
    பிள்ளை வடிவம் பெறவைப்போன், -கள்ளன்,
    பரிட்சித்தை கர்ப்பப், பரிசோ தனைசெய்,
    அரிச்சித்தம் ஆரறிவா ரோ….(180)

     
    உண்டி உடமைக்(கு), உகந்தோடி உச்சித்தேன்,
    நொண்டி முடமாய் நசிப்பீரே, -பண்டையில்,
    ஆலில் மிதந்த, அனந்த பதுமநாபன்,
    காலில் விழுவீர் காப்பு….(181)

    உதவிக் கரம்நீட்டி, உய்யவழி காட்டி,
    கதவைத் திறந்திடும் கண்ணா, -பதவிப்,
    புகழாசை விட்டுனது, பண்டரிவாழ் வீட்டில்
    திகழ்வேனோ தூணில் துரும்பு….(182)

    வானரம் ஆயிரம், சூழ இலங்கைக்குப்,
    போனராமன் கட்டிய பாலத்தில், -ஏநரா!,
    ஏறிக் கடக்க, எதிர்கரையில் தெய்வமாய்,
    மாறிடச் செய்யும் மூலம்….(183)

    வான்முகடு மீறி, வளர்ந்திறங்கி மாபலிக்,
    கோன்முகடு தொட்டக் குறளுருவே, -தேன்முகடு,
    ஏறத் தவித்திடும்,ஏழை எனக்கருளை,
    கூறையைப் பிய்த்துக் கொடு….(184)                                                                                            

    வாழை யடிவாழை, வந்தோர் வளத்துடன்,
    வாழ அடிவைப்பாய் வீட்டுக்குள், -ஏழை,
    சகாயா ஏ!பாண்டு, ரங்கா என்னுள்,
    புகாயோ புகல்வாய் பதில்….(185)

    ————————————————————————————————-

     

    Share
  • திருமால் திருப்புகழ் (111)

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்னன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————blogger-image-1193904887
    தடையற்ற ராதை, இடைபற்றி வாழும்,
    இடவத்துப் பாதிமுகில் வண்ணா, -இடையினத்தா,
    அள்ளக் குறையாத, தெள்ளுதமிழ் வெண்பாக்கள்,
    வெள்ளமாய்ப் பாய்ந்தோட வா….(174)

    தயிர்வெண்ணை உண்டு ,தளதள வென்று,
    மயிற்பீலி சூடிநிற்கும் மன்னா, -வெயிற்கால,
    தாகமாய் தொண்டையில், சோகம் அடைக்குது,
    மோகமா! மோட்சமா! சொல்!….(175)

     
    திகட்டும் அளவு, திரவியம் தந்தாய்,
    புகட்டிய நஞ்சை புசித்தாய், -நகத்தால்,
    உரித்தெறிந்த உற்சாகம், இன்றெங்கு போயிற்று
    தரித்திர நாராயணா வா….(176)

     
    தீக்குள் தகிப்பாய், துளிநீரில் தாகிப்பாய்,
    காய்க்குள் கனிவாய் கொடியமனப், -பேய்க்குள்,
    முனியாய் இருப்பாய், முகுந்தா எனக்கு,
    தனியாய் தரிசனம் தா….(177)

     
    திருப்பாற்க் கடலில், திருவனந்தப் பாய்மேல்,
    விருப்பாய்க் கிடப்பாய் வெகுண்டால், -உரத்தால்,
    இரணியனைக் கொல்ல, இரும்பைப் பிளந்து,
    நரசிங்கம் ஆவோய் நம….(178)

     
    தொட்டால் சுடுவான், தொடாமல் இருந்தாலும்,
    கொட்டோகொட் டென்று குளிர்விப்பான், -விட்டலன்,
    சுட்டபழம் ஏற்பான் சுடாத பழங்களை,
    பட்டறையில் வைப்பான் புதைத்து….(179)

    —————————————————————————————————————-

     

    Share
  • திருமால் திருப்புகழ் (110)

    கிரேசி மோகன்

     SrimadBhagavatham - Kasturi Tilakam. - Keshav

    SrimadBhagavatham – Kasturi Tilakam. – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….

    ————————————————————-

    ’’கண்ணன் வெண்பாக்கள்’’

    ———————————————–

     

    Bhagavatha - Trinavarta Keshav
    Bhagavatha – Trinavarta Keshav

    சரமழை பெய்திடும், சாரங்க பாணி,

    நரனாகி கோதண்ட நாணால், -கரதூஷ னாதி

    யரைத்தீர்த்த, நாரா யணஜோதி,

    ஆதி அனாதியேநா தி….(168)

     

    சிந்தையில் சிக்காத, சச்சிதா னந்தமே,

    எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே,

    தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,

    சீராக ஆடிடும் சேய்….(169)

     

    சிசுபால கம்சர்கள், சீரழிய அன்று,

    வசுதேவ வம்ச திலகா, -பசுக்களை,

    மேய்த்த பகவானே, பக்தர்க்(கு) அருள்புரிய,

    வாய்த்த வரதனே வா….(170)

     

    சோதரர்க்குள் பேதமற, தூதுசென்ற யாதவனை,

    சோதனையால் வேதனைநம் மீதணையும், -போதினிலே,

    கீதையை மூதுரைத்த, மாமதுரை மாதவனை,

    ஆதிமது சூதனென்று ஓது….(171)

     

    சுதாமன் அவலுக்கு, சொத்தை அளித்த,

    கதாதரன் கண்ணன் பரம, -பிதாவாம்,

    அலர்மேல் அன்னை, மணாளன் அருளால்,

    மலரும்நாள் காசின் பிறப்பு….(172)

     

    சுகந்த துளசி, சிலிர்க்க வலிமை,

    மிகுந்த இருதோளில் பூணும், –முகுந்தன்,

    நிதர்ஸனம் என்று, நடப்போர் வழியை,

    சுதர்ஸனம் காக்கும் சுழன்று….(173)

     

    ————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (109)

    கிரேசி மோகன்

    Dhruva - Keshav
    Dhruva – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————-

    Yogamaya - Keshav
    Yogamaya – Keshav

    பள்ளிதனைக் கொண்டதால், பிள்ளை பெறுவதால்,
    வள்ளலாய் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
    கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
    நேர்நிக ராவர் நமக்கு….(162)

    பழிவாய் மணக்க, பகலும் இரவும்,
    மொழிவாய் முகுந்தா முராரி, -விழுவாய்,
    வணங்க வரதன், வளரடி தன்னில்,
    இணங்கும் இகபரம் இங்கு….(163)
    பெண்ணாகி சாஸ்தாவை, அந்நாள் சுமந்தோனும்,
    பெண்ணை சுமக்குமிட பாகனும், -முந்நாளில்,
    விண்மண் அளக்க, வடிவத்தில் ஓங்கியதால்,
    கண்ணனைமுக் கண்ணனாய்க் கொள்….(164)

    பெரியாழ்வார் பாடியது, பெண்ணாண்டாள் சூடியது,
    சரிதானா சித்த பிரமைதானா, -வெறியோடு,
    உண்டில்லைப் பார்த்திடுவேன், வெண்பாவில், ஊர்ஜிதம்செய்,
    உண்டென்றென் முன்னம் உதித்து….(165)
    பெற்றதோர் வெற்றி, பொறாமைக் கிடமாகும்,
    உற்றிடும் தோல்விக்கோ கேலிமிஞ்சும், -பற்றிலாது,
    காரியம் யாவையும், காரணன் கண்ணனின்
    பேரினில் போடப் பழகு….(166)

    பொய்கையில் பூத்தபக்தி, பூதமதைக் காத்தது,
    பொய்கலந்த போதுபேய் ஓட்டியது, -தெய்வமே,
    மூன்றாழ்வார் மீதமுள்ள, சான்றோர்கள் போலாக,
    தான்தோன்றி மாலே தயவு….(167)

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • கிரேசி மொழிகள்!

    கிரேசி மோகன்

     

    தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….

    ”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
    ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)

    ‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)

    ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
    புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
    எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)

    ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
    நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)

    ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)

    ‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)

    ‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)

    ‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)

    ‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
    கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
    இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)

    ’’தானாய் வருவது வெற்றி
    முயன்று பெறுவது தோல்வி’’….(10)

    ‘’முக்கால்வாசி வெற்றி
    மயிரிழையில் தோல்வியிடமிருந்து
    தப்புவதுதான்’’….(11)

    ’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)

    ’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
    5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
    ஆண்டியாகலாம்’’….(13)

    ‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
    கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
    ஈர மரணம்’’….(14)

    ‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)

    ‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)

    ‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
    கந்தையாக்காதே’’….(17)

    ‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
    தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)

    ‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
    சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)

    ‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)

    ‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
    ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)

    ’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)

    ‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)

    ‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
    பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
    ————————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (108)

    கிரேசி மோகன்

    Bhagavatha -- The 24 Gurus - the Avadutha's discourse  - Keshav
    Bhagavatha — The 24 Gurus – the Avadutha’s discourse – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————

    Krishnapremi series. #krishnafortoday - Keshav
    Krishnapremi series. #krishnafortoday – Keshav

    கன்னிப்பெண் ராதைகைத், தாம்பால் கட்டுண்டு,
    பின்னிப் பிணைந்த கண்ணனவன், -முன்னம்,
    உரலிழுத்த ந்யாபகம், உந்த உருள,
    மருள முழித்தனள், மாது….(156)

    வெறுத்துப் பேசுவதாய், கார்முகில் வண்ணா,
    அருத்தம் கொள்ளாதே , கேளென் -வருத்தத்தைக்,
    கண்ணனுனைக் காணாது, போனாலென் கண்கள்முக்,
    கண்ணனைக் காணப்போம் காண்….(157)

    கத்திரிக்காய் தொட்டு, கணினி வரையில்வான்,
    உத்திரத்தில் வைத்துவிலை விற்கிறார்கள், -மொத்த,
    விலைவாசி ஏற்றம், விழுந்துதா காதில்,
    அலைவாசி தூங்காய் அயர்ந்து….(158)

    கவிதை வருவது, கண்ணன் அருளா !
    செவியுண்ட செய்யுள் செயலா !,-புவியத்தா,
    காவிய வாழ்க்கையா!, கைவல்ய வேட்கையா!,
    சாவியுன் கையில், செப்பு….(159)

    கோபத்தில் ராமன், கணையெடுத்து கர்ஜிக்க,
    ஆபத்(து) உணர்ந்த அலையரசன், -சாபத்துக்(கு),
    அஞ்சி சகியோடு, அண்ணல் சரணாகதி
    கெஞ்சிடும் கோலம், கவி….(160)

    தள்ளாடி னாலும், தடியூன் றினாலும்,
    பல்லாடி பொக்கையாய்ப் போனாலும், -கில்லாடி,
    கண்ணனைப் பாடும், கவியாக உள்ளவரை,
    வண்ணமுறும் வாழ்வு, வரம்….(161)

    ———————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/

    Share
  • திருமால் திருப்புகழ் (107)

     

    கிரேசி மோகன்

     

     Bhagavatham -Rukmini haranam Keshav
    Bhagavatham -Rukmini haranam Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)
    ———————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    Bhagavatha - Vamana avatara - Keshav
    Bhagavatha – Vamana avatara – Keshav

    கள்ளா குருவாயூர், பிள்ளாய் வருவாயே,
    உள்ளம் நிறைவாக என்முன்னே, – தெள்ளிய,
    மாமுனிக்கு மாதவா, காமினிக்கு காதலா,
    யாமினிக்க வாயாத வா….(150)

     
    கனிச்சுவை ராதை, கமலஇதழ் கவ்வி,
    துணிச்சலுடன் முத்தம் திணித்து, -அனிச்ச
    மலராள் அலறும்முன், மன்னிப்பு கேட்பான்,
    தளரான் எதற்கும் துணிந்து…(151).

     
    கண்ண புரத்துக், கருமணியை கற்கண்டை,
    வண்ணம் சிறுத்து வடிவாகி, -முன்னம்,
    வரமேற்று விண்ணளந்த, வாமன விக்ரம்,
    சிரமுற்றோர் இருதாள் சரண்….(152)

     
    கண்ணபிரான் காயாம்பூ, வண்ணபிரான், வெண்ணைமண்,
    தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறான்,
    முன்னவனாம் தென்மதுரை, அன்னையவள் அண்ணனையே,
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு….(153)

    164486_4339481400471_1764566644_n

    பாரதியாருக்கு நன்றி
    ———————
    கண்ணனென் சேவகன், கண்ணனென் காவலன்,
    கண்ணனென் மந்திரி, நண்பனென, -சொன்னவன்
    கண்ணனென் சாக்லேட், கிருஷ்ணாவாய் ஆக்கினான்,
    புண்ணிய மாச்சென் பிறப்பு….(154)

     
    கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
    அன்னையின் அன்பினாலா, அல்லது, -கண்ணனே,
    ஓயாத லீலையின், மாயா வசப்பட்டு,
    ஆயாசம் ஆனதா லா….(155)

    —————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

    Share