கிரேசி மோகன்

Dhruva - Keshav
Dhruva – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————
’’கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————-

Yogamaya - Keshav
Yogamaya – Keshav

பள்ளிதனைக் கொண்டதால், பிள்ளை பெறுவதால்,
வள்ளலாய் பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
நேர்நிக ராவர் நமக்கு….(162)

பழிவாய் மணக்க, பகலும் இரவும்,
மொழிவாய் முகுந்தா முராரி, -விழுவாய்,
வணங்க வரதன், வளரடி தன்னில்,
இணங்கும் இகபரம் இங்கு….(163)
பெண்ணாகி சாஸ்தாவை, அந்நாள் சுமந்தோனும்,
பெண்ணை சுமக்குமிட பாகனும், -முந்நாளில்,
விண்மண் அளக்க, வடிவத்தில் ஓங்கியதால்,
கண்ணனைமுக் கண்ணனாய்க் கொள்….(164)

பெரியாழ்வார் பாடியது, பெண்ணாண்டாள் சூடியது,
சரிதானா சித்த பிரமைதானா, -வெறியோடு,
உண்டில்லைப் பார்த்திடுவேன், வெண்பாவில், ஊர்ஜிதம்செய்,
உண்டென்றென் முன்னம் உதித்து….(165)
பெற்றதோர் வெற்றி, பொறாமைக் கிடமாகும்,
உற்றிடும் தோல்விக்கோ கேலிமிஞ்சும், -பற்றிலாது,
காரியம் யாவையும், காரணன் கண்ணனின்
பேரினில் போடப் பழகு….(166)

பொய்கையில் பூத்தபக்தி, பூதமதைக் காத்தது,
பொய்கலந்த போதுபேய் ஓட்டியது, -தெய்வமே,
மூன்றாழ்வார் மீதமுள்ள, சான்றோர்கள் போலாக,
தான்தோன்றி மாலே தயவு….(167)

————————————————————————————————————–

படங்களுக்கு நன்றி :

http://bhagavatham.blogspot.in/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *