கிரேசி மோகன்

 SrimadBhagavatham - Kasturi Tilakam. - Keshav

SrimadBhagavatham – Kasturi Tilakam. – Keshav

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….

————————————————————-

’’கண்ணன் வெண்பாக்கள்’’

———————————————–

 

Bhagavatha - Trinavarta Keshav
Bhagavatha – Trinavarta Keshav

சரமழை பெய்திடும், சாரங்க பாணி,

நரனாகி கோதண்ட நாணால், -கரதூஷ னாதி

யரைத்தீர்த்த, நாரா யணஜோதி,

ஆதி அனாதியேநா தி….(168)

 

சிந்தையில் சிக்காத, சச்சிதா னந்தமே,

எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே,

தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,

சீராக ஆடிடும் சேய்….(169)

 

சிசுபால கம்சர்கள், சீரழிய அன்று,

வசுதேவ வம்ச திலகா, -பசுக்களை,

மேய்த்த பகவானே, பக்தர்க்(கு) அருள்புரிய,

வாய்த்த வரதனே வா….(170)

 

சோதரர்க்குள் பேதமற, தூதுசென்ற யாதவனை,

சோதனையால் வேதனைநம் மீதணையும், -போதினிலே,

கீதையை மூதுரைத்த, மாமதுரை மாதவனை,

ஆதிமது சூதனென்று ஓது….(171)

 

சுதாமன் அவலுக்கு, சொத்தை அளித்த,

கதாதரன் கண்ணன் பரம, -பிதாவாம்,

அலர்மேல் அன்னை, மணாளன் அருளால்,

மலரும்நாள் காசின் பிறப்பு….(172)

 

சுகந்த துளசி, சிலிர்க்க வலிமை,

மிகுந்த இருதோளில் பூணும், –முகுந்தன்,

நிதர்ஸனம் என்று, நடப்போர் வழியை,

சுதர்ஸனம் காக்கும் சுழன்று….(173)

 

————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.