Author: கிரேசி மோகன்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180902 -Radha Mala – watercolour-charcoal 10×14” raw -lr

    மாலை(திருமாலை) இராதைப்பொன் மாலையில்(சாயங்காலம்) சந்தித்து
    மாலையாய்(பூ மாலை) சங்கை(சங்குக் கழுத்தை) மருவிடும்(தழுவிட) -வேளையில்,
    அக்காள்(இராதை -ஆவின் சக்களத்தி) வருகையில் அக்காரக்(தித்திப்பு) கண்ணபிரான்
    அக்கால் கிடையாதம் ‘மே’(பொறாமைக் கனைப்பு)…..கிரேசி மோகன்

    Share
  • ரமணாயனம்-சுபம்,முடிவு,மங்களம்….!

     

    முக்தி காண்டம்
    ——————

    திருச்சுழி தோன்றி திருக்கூடல் காய்த்து
    திருவருணை நின்ற தருவாம் -குருச்சுவை
    ஞானப் பழத்தை நுகர நினைப்பது
    வானத்தை வில்லாய் வளைப்பு….(351)

    அருந்தி, உறங்கி, அளவளாவும் அன்பு
    நெருங்கி இருப்போர்க்கே ஞானம் -பெருந்தீ
    அருணை ரமணர் அணைப்பில் குளிர
    அருகதை அன்பே அரன்….(352)

    மேடிட்ட நெற்றியில் மேதமை இட்டவர்
    தோடுற்ற காதோன் திருவுரு -சாடுவிக்கின்
    ‘’கைகளால் பேசுவார் செய்கையால் சிந்திப்பார்’’
    பொய்கையாம் வர்ணிப்பைப் பார்….(353)

    சாது சிரிப்பிற்கிங்(கு) ஏது உவமானம்
    பாதுகாப் பேயதன் பாவமாம் -வேத
    மறைபொருளாய் வார்த்தை மனயிருளைப் போக்கும்
    கரைபுரளும் ஞானக் கடல்….(354)

    காந்த விழியிரண்டும் காணும் அடியார்க்கே
    காந்தம் பொழிந்தவரின் காமத்தால் -காந்தும்
    மனக்கருமை நீங்க குணச்சலவை செய்து
    வினைக்கதவை மூடும் விரல்….(355)

    நரேனை பரமஹம்ஸர் நிர்விகல்பம் தன்னில்
    சரேலென சேர்த்தாற்போல் சேர்ப்பீர் -பிரானென
    ‘’இந்த வினாவுக்(கு) இளைஞனே நீவிவேகா
    நந்தனாசொல் என்றார் நகைத்து….(356)

    தொட்டால் துலங்கிட, சுட்டால் பொரிந்திட
    பட்டால் பலித்திட பக்குவம் -கட்டாயம்
    வேண்டும் அதனோடு யாண்டும் குருவடியைத்
    தீண்டும் சரணா கதி….(357)

    ஒரா யிரமாசை தேறா மனதுக்குள்
    பாரா முகமேன் பகவானே -சீராக
    சாதகம் செய்ய சமர்த்தில்லை தேவராஜன்
    தீதாம் தன்னைத் திருத்து….(358)

    எல்லாம் எனதென்றே என்னிடம் விட்டுவிட்டு
    செல்லாத காசாய் சரணடை -கொள்ளலிது
    சக்திக்(கு) உகந்த சகாயமான சாதகம்
    முக்திக்கு முன்னுதிர்த்த முத்து….(359)

    நாணுர்வு நிஷ்டையில் நிற்க சவிகல்பம்
    நானொடுங்க நீடித்தால் நிர்விகல்பம் -வானுயர்ந்து
    வாயு பலூன் வெடித்துள்ளே வான்புக
    சாயும் நிலைசகஜம் சேர்….(360)

    இயல்பாக தன்னில் இருத்தலிங்கு முக்தி
    கயல்போல நீரில் கலந்து -செயலும்
    உடலில் உறுத்தும் உபாதிகள் எல்லாம்
    கடலில் அலையாகக் காண்….(361)

    புற்றில் தவமாய் புராணத்தோன் வான்மீகி
    புற்றே தவமாய் பகவானைப் -பற்றியது
    சார்கோமா தன்னை சுயம்புலிங்கம் என்பாராம்
    யார்கைக்கோ வந்தாற்போல் பார்த்து….(362)

    ரமணனே சத்குரு ராயனென்று பாடும்
    அமளியில் சேர்ந்தநம் அய்யன் -சுமுகமாய்
    ‘’ஏனென்னை இச்சிறிய மேனிக்குள் பார்க்கின்றீர்
    நானும்தான் நம்மெல்லோர் நான்….(363)

    அண்ணலை விட்டு அமெரிக்கா செல்கின்ற
    எண்ணத்தால்பெண் பக்தை எலினார் -கன்னத்தில்
    தங்கும்கண் ணீரை துடைத்துத் தகப்பன்நான்
    எங்குநீ சென்றாலும் அங்கு….(364)

    அன்பெனும் கட்டில் அகப்படும் பர்வதம்
    நண்பனாய் அன்பனாய் ஞானியாய் -வன்பகையால்
    கூடார் தமக்கும் குளிரடி வாரத்தில்
    கூடார மாகும் குரு….(365)

    ஆசுபர்ன் ஆர்தரின் பாசமிகு பெண்கிட்டி
    தேசம் திரும்பிடத் தேம்பினாள் -பாசமாய்
    என்னை மறவாதே என்றும் நினைவில்கொள்
    உன்னைநான் கொள்வேன் உளம்….(366)-

    எண்ணா(து) இருந்திடல் எவ்வளவு கஷ்டமோ
    எண்ணலவர்(கு) அவ்வளவு ஏதமாம் -அண்ணளுலம்
    தாம்புக் கயிறென்ற தோற்றப் பிழையாமே
    சாம்பல் அதற்கில்லை சத்து….(or)
    சாம்பலதால் ஆகாது சுற்று….(367)

    பற்றிலாத பற்றும் பழகப் பெருநெருப்பாய்
    பற்றிடும் ஆகவே முற்றுவை -வெற்றிலை
    சாப்பிட்டுப் போடுவதை சாக்கிட்டு விட்டாராம்
    கூப்பிட்ட ஆள்வராக் கண்டு….(368)

    பேஷ்கூறி பண்டிதர் சாஷ்டாங் கமாய்க்கேட்டார்
    காஷ்மீரி யாரிடம் கற்றதென்று -ஹாஸ்யமாய்
    ‘’ஆசையாய் கேட்டவும் ஆசாமி கேள்விக்கு
    பேசாமல் சொன்னேன் பதில்’’….(369)

    சன்யாஸி ஆகலாம் சம்சாரி வீட்டுக்குள்
    தன்யோ சனையால் தடம்புரண்டு -சன்யாஸி
    காட்டில் க்ரகஸ்த்தனாய் மாட்டித் தவிக்கலாம்
    ஆட்டுக்கு வாலிங்(கு) அளந்து….(370)

    மெய்யாம் துறவு மனதைத் துலக்குதல்
    பொய்யாம் துறவென்ற பாத்திரம் -உய்யாய்
    குடும்பஸ்த்தன் சன்யாசி கொள்கை அளவில்
    கடும்பித்தம் நானைக் களை….(371)

    தன்னைப் பராமரிக்கும் தாகம் துறந்திட
    உன்னைப் பராமரிக்கும் உன்னான்மா -கண்ணை
    மறைக்கின்ற மோகங்கள் மாயப் பிசாசு
    குறைக்கின்ற நாய்கடிக் காது….(372)

    உக்ராண உள்ளிலே ஒன்றுமில் லாதலால்
    அக்ரா சனர்சொன்னார் ஆட்குறைப்பு -அக்குரவர்
    வற்றாக் கருணையால் வந்ததாம் பண்டங்கள்
    பற்றாக் குறைதீர்க்கும் பற்று….(373)

    இதயம் வலது இடத்தில் விளங்கும்
    புதிய விளக்கம் புகன்றார் -உதயம்
    உலகெனும் கோலம் ஒடுங்கிடும் புள்ளி
    கலகநான் காரியின் கை….(374)

    சக்தி சிவனிடப் பக்கம் இருந்தாலும்
    முக்திவலம் செய்தல் வலப்புறமே -பக்தி
    இறையுணர்வு போதும் இடவல மையம்
    திரையவிழும் நாள்வரை தான்….(375)

    நெருப்புக்கு பஞ்சாக நிஷ்டைக்கு நெஞ்சு
    விருப்பிருந்தால் பற்றும் விரைவாய் -கிறுக்குத்
    தனமாய் இதயமிடம் தேடி அலைந்தால்
    மனமாய் மயக்கிடு மது….(376)

    என்ணெய்க் குளியல் எடுத்தாமைப் பாறைக்கு
    அண்ணல் வரமீண்டும் அந்திமத்தை -முன்னம்
    மதுரையில் பார்த்த புதிராகப் பார்த்தார்
    அதையவர் வாக்கில் அடுத்து….(377)

    வெள்ளம் புகுந்தாற்போல் வெள்ளைப் பிழம்பொன்று
    மெள்ளப் படர்ந்தியற்கை மேய்ந்தது -தெள்ளத்
    தெளிவாய் வளியாய் ஒளியாய் வெளியாய்
    களியாய் மரணக் கலப்பு….(378)
    கலப்புத் திருமரணம் கொண்டமுகூர்த் தத்தில்
    களைப்பாக சாய்ந்தேனோர் கல்லில் -வலப்பக்க
    மார்பி னிலிருந்தோர் மின்னல் புறப்பட்டு
    சார்ந்த திடப்பக்கம் சேர்ந்து….(379)

    சேர்ந்தென் னுடன்வந்த சாஸ்திரியார் ஓலமிட்டார்
    நேர்ந்தயென் சாவால் நடுநடுங்கி -தேர்ந்தேன்
    அதிதியாம் கூற்றை அழையா விருந்தை
    கதிகலங்க வைக்கும் கலை….(380)

    கலையாத அல்லி மலரதன் மொக்காய்
    வலமார் பிலிருவிரல் விட்டு -இலகும்
    இதயத் துளையில் இருளும் ஒளியும்
    உதயமாம் உண்மை உணர்….(381)

    உணரும் ஒளியை உலகியல் நாட்டம்
    புணர இருளாம் பிறப்பு -திணரும்
    திருட்டுமனக் கையில் திணித்திடு ‘’நானார்’’
    திறக்குமது ஆன்மாவின் தாழ்….(382)

    தாழுடைத்த கள்ளன் திரைகடல் ஆன்மாவில்
    மூழ்கடித்துப் போதல் மனோநாசம் -பாழுடல்
    பற்றின்றி வெற்றியாய் பேரின்ப சாம்ராஜ்ய
    கொற்றவனாய் இவ்வுலகில் சுற்று….(383)

    பெருநகர தம்பதியர் பேரார்வம் கொண்டு
    பெருமகன் ஏசு பிரானின் -மறுபிறப்பாய்
    எண்ணி வணங்கிட அண்ணலும் அற்புதமாய்
    சொன்னது கேட்டு சிலிர்ப்பு….(384)

    உங்கள் பெருநகர உப்புநீர் முற்புறத்தில்
    திங்கல் சலவைத் திடலுண்டு -அங்கங்கு
    தென்னை மரங்களும் திண்ணைகளும் உண்டைந்தாம்
    எண்ணில் அமர்வீர் என்று….(385)

    காலதேச வர்த்தமானக் கோலங்கள் தாண்டிய
    மூலமாம் ஆன்ம முனைப்புடையோன் -ஞாலத்தை
    கண்டிடுவான் கையளவில், எண்டிசையும் அண்டமும்
    உண்டில்லை ஆவதவன் உள்….(386)

    கொண்டுசென்ற வாழையில் விண்டு வினாயகர்க்கு
    துண்டுகூட வைக்காது தந்தவரை -கண்டித்தார்
    செம்மலை நீங்காது சுற்றுப் புறமறியும்
    செம்மலை யாரறிவார் சொல்….(387)

    சந்யாசம் வேண்டி சலித்துவந்த அன்பர்க்கு
    உன்ந்யாயம் உத்தமமா உன்னிப்பார் -அந்யாயம்
    தைக்க அரும்பாடு தையலிலை போல்வாழ்வு
    துய்க்கும்முன் தள்ளல் திமிர்….(388)

    எம்பிரான் கேட்டார் எழுதிட நோட்புக்கை
    நம்பியார் சொப்பனத்தில் நைச்சியமாய் -அன்பரதை
    மாதவம் முன்வைக்க ‘’ மாதவா நீமறந்த
    போதிலும் வந்ததுபார் புக்….(389)

    ராஜகோபால் பேரனை நாகராஜன் தீண்டிட
    மேஜைமேல் வைத்திறைஞ்சி வேண்டினார் -ராஜ
    சிகிச்சையாய் சேயைத்தன் சொர்ணக்கை யால்வருட
    மகிழ்ச்சியாய் பாலன் முழிப்பு….(390)

    அற்புதம் கண்டோர் அதிசியக்க அண்ணலோ
    அற்பமாய் சொல்வாராம் ‘’அப்படியா !’’ -நற்கதி
    நானாக செய்ததில்லை தானாக நேர்ந்திடும்
    சோணேசன் கையில்நாம் சொப்பு….(391)

    தொண்டர் மயக்கத்தால் உண்டு களைத்தவர்
    விண்டார் இனிவுப வாசமென்று -அண்டும்
    அடியார்கள் அன்புப் பிடிவாதம் தப்ப
    வடிவான வெற்பை வலம்….(392)

    வலம்வரும் வேளை வனிதையர் ஏழ்வர்
    பலமாய் படையல் படைக்க -சிலையாய்
    சமைந்தவர் அன்பாய் சமைத்ததை உண்டு
    சுமந்தார் உபவாசச் சோறு….(393)

    சோறன்று போட்டது யாரென்று கேட்டதற்கு
    ஊரொன்றி வாழ்ந்திடும் சப்தகன்னி -மாரென்று
    சோதித்தவர் சொன்னார் சமையலுக்கு வேண்டிய
    ஏதுமின்றி வந்தனரவ் வேழு….(394)

    இந்து கிருத்துவம் இஸ்லாம் இவைமூன்றும்
    அந்த பரத்திற்(கு) அணுகுமுறை -சொந்த
    முயற்சியே மெய்யுணர்வில் மொய்த்திட சாதனம்
    பயிற்சியாய்த் தேடல் பழகு….(395)

    எந்தவழி போனாலும் ஏகம்தான் மிஞ்சிடும்
    உந்துகின்ற உத்தமரை உன்மார்க -பந்துவாய்
    ஏற்கத் தடையில்லை, என்பதனால் இங்குபல
    தீர்க தரிசிகள் பார்….(396)

    அந்தணப் பண்டிதர் அக்பர் சபையிருந்து
    தந்தநூல் அல்லா உபநிஷத் -இந்தநற்
    சேதியை அண்ணலும் சையது டாக்டரும்
    ஓதிக் களித்தனரோர் நாள்….(397)

    ஏதுமே பேசாத சாதுவின் மேனிக்குள்
    வாதம் புகுந்தெதிர் வாதமிட -பாதமாயூர்
    வேதம் புகன்றிடும் வேப்பெண்ணை சாறுண்டால்
    சேதம் குறையுமாம் சற்று….(398)

    சற்றெண்ணை பூசிடும் சாக்கில் பதத்தினைப்
    பற்றிடப் போட்டியாம் பக்தர்க்குள் -முற்றும்
    துறந்தவர் கேட்பார் துளிக்கால் அளிப்பீர்
    கறந்துகொள்வேன் புண்ணியம்கால் பங்கு….(399)

    காலன் புறமுதுகு கண்டமுக் காலர்க்கு
    தோளின் எலும்புகள் தேய்ந்திட -மேலும்
    அணிலுக்காய் நாயை அடிக்கப்போய் தோளில்
    பிணியுற்றார் பட்டை பிளந்து….(400)

    வாம முழங்கை வழியாய் புகுந்தன்று
    ஆமையாம் கான்ஸர்நோய் அண்ணலிடம் -சாமியே
    காலடியின் கூட்டத்தால் கையடியில் வந்தநானும்
    போலடியார் தானென்றான் புற்று….(401)

    ஆடா(து) அசங்கா(து) அமர்ந்திருந்த உங்களை
    மேடையென் றெண்ணிமேல் ஏறிவிட்டேன் -ஆடிடுவோன்
    வாய்க்கெட்டும் ஆலம்நான் கைக்கேட்டும் மூலமும்
    நோய்க்கட்டி ஆனதென்நன் நாள்….(402)

    மாதுமையாள் கண்டத்தில் மாலையாய் சாய்கின்ற
    போதெம்மை பூஜைக் கரடியென்றாள் -ஆதலால்
    உய்ய வழியின்றி உம்மில் புகுந்தேன்நான்
    அய்ய அடைக்கலமுன் கை….(403)

    சிற்றின்பம் ஓடியது பேரின்பம் நாடியது
    உற்றன்பு கொண்டூ டுறுவுமிப் -புற்றின்பம்
    ஏற்றுப் பொறுத்து எமக்களிப்பீர் முக்தியை
    தூற்றுமூர் மூக்கை உடைத்து….(404)

    கொல்லும் கணைக்கூட்டம் காகுத்தன் தோளிருப்பு
    சொல்லும் வசவும் சரஸ்வதிதான் -அல்லும்
    பகலுமிங்கு சேர்ந்திருக்க புண்ணியத்துள் இப்புண்
    புகுதலென்ன பாவம் புகல்….(405)

    கர்கடக ராசிநான் கைராசி ஆனேனே
    சற்குரு உந்தன்கை சேர்ந்ததனால் -தற்பரமே
    கையடித்து சொன்னாலுன் கைவலிக்கும் வாக்களித்தேன்
    மெய்யடியார் மெய்யுண்ணேன் மெய்….(406)

    கொப்பளநோய் தன்னை குணமாக்க நீர்மனம்
    ஒப்பிடத் தூளாகும் அப்பளமாய் -சுப்பரா
    மய்யாவாள் வேண்ட மகானுரைத்தார் மெய்யாமை
    பொய்யாம் மனமுயல் போக்கு….(407)

    நேரிசை வெண்பாவில் சீரசைவு போனதற்கு
    நேரிசை வானநோய் மேனியின் -வாரிசே
    நானசம் பாவிதத்தை நன்குணர்ந்த ஞானிக்கு
    மானச சஞ்சார மேது….(408)

    அஸ்திரத்தை நோவானேன் அர்ஜுனன் எய்ததற்கு
    சஸ்திர வைத்தியம் செய்வதேன் -வஸ்திர
    மேனிக்கு வந்ததே ஹானி எனக்கல்ல
    ஞானிக்(கு) ஏதுடல் நெஞ்சு….(409)

    நோய்சிரமம் ஏற்று நொடிந்த ரமணரிடம்
    ஆசிரமம் அண்டி அறுவைக்காய் -பேச
    மயக்க மருந்தின்றி மாசை அகற்ற
    தயக்கமில்லை என்றார் தவர்….(410)

    தொண்டையில் ஹம்ஸரும் தோளில் கிருத்துவும்
    கொண்டனர் தொண்டர்தம் கர்மத்தை -பண்டை
    வினைப்பயன் ஏது விதிவசம்தான் ஏது
    தனிப்பெரும் வாஞ்சை தனக்கு….(or)
    கணித்திடும் தெய்வங் களுக்கு….(411)

    பாவியென்று வந்தவரின் பூர்வஜென்ம கர்மமேற்று
    கோவிலாய் மாற்றினார் கோட்டானை -தாவிய
    அப்பாவம் புற்றாக அண்ணலிடம் சேர்ந்திட
    அப்பிரா ரப்தம் அழிவு….(412)

    வண்டி அமர்ந்தவன் கொண்டுவந்த மூட்டையை
    மண்டை சுமத்தல் மதியீனம் -அண்டியோர்
    தேசிகன் தாளிடை தஞ்சம் புகுந்துவிடு
    நீசுக துக்க நினைப்பு….(413)

    வாமனனாய் வந்தகட்டி விக்கிரம னாய்வளர்ந்து
    கோமணத்தர் கையில்கை கூப்பியது -சாவினை
    போவென சொன்னவர்மேல் போயின்று நாளைவந்த
    ராவணனாய் நின்றான் ரணம்….(414)
    கள்ளுண்டோன் ஆடைமேல் கொண்ட உணர்வேயாம்
    உள்ளுண்ட சித்தன் உடலுணர்வு -புல்லுண்டு
    மண்ணுண்டு பூச்சி புழுவுண்டு போகுமிதை
    புண்ணுண்ட போதேன் பதைப்பு….(415)

    பலியுண்ட ஆட்டுக்கு பீடம் நெருங்கியும்
    கிலியின்றி போகும் கதையாய் -வலியுண்டு
    கூறுவார் வாய்தவறிக் கூட வலிக்கிறது
    கூறாராம் ஊராருக் காய்….(416)

    வேள்வியாய் மூலிகை வைத்தியர் பார்த்தது
    தோல்வியாய்ப் போக துவண்டாராம் -கேள்வியாய்
    கூனியவர்(கு) ஆறுதலாய் கூறினார் ‘’அன்பரே
    நானிருப்பேன் உம்மால் நிலைத்து’’….(417)

    ஜனவரியில் அண்ணல் ஜனித்த தினத்தில்
    ஜனவரிசை கூட்டத்தில் சேர்ந்து -அனைவரையும்
    போல்யானை நட்புடன் தாள்வணங்கிச் சென்றதாம்
    பால்யத்து தோழனைப் பார்த்து….(418)

    தேவை நமக்கு தயவு அனைத்திற்கும்
    சாவை நமக்காக சுமப்பாரோ -பாவை
    உடலிதை நால்வர் திடல்வரை சேர்ப்பர்
    இடைவெளியில் நானேன் இதற்கு….(419)

    பண்டங்கள் நூறு பறிமாறி நாலுமிலை
    உண்டபின் ஓரம் ஒதுக்கத்தான் -பிண்டமாம்
    வாழுமிலை மேனியிது வாழ்விலை ஆனபின்
    வாழையிலை போலெறியும் வீடு….(420)

    இல்லாத துன்பம் இருப்பதாய்த் தோன்றவைக்கும்
    பொல்லாத மாயையை போக்கிவிட்டு -எல்லாமும்
    சாட்சியாய்ப் பார்க்கின்ற சாஸ்வத மெய்யுணர்வே
    மோட்சமாம் நீயதில் மூழ்கு….(421)

    மணியென்ன கேட்ட மகானுடனே சொன்னார்
    இனியென்ன காலக் கணக்கு( இழுப்பு) -பணியாக
    அன்பர்க்(கு) அளித்தார் அமைதியாய் த்யானத்தை
    நண்பகல் வேளைஅந் நாள்….(422)

    ஆதவன் சாய்கின்ற அந்திப் பொழுதினில்
    மாதவம் சாய்ந்தது மஞ்சத்தில் -ஓதும்
    அருணா சலசிவத்தை அண்மையில் காண
    மரணாவஸ் தைக்கு முடிவு….(423)

    எட்டுநாப் பத்தேழு ஏப்ரல் பதினாலில்
    விட்டுடல் ஜோதி விரைவாக -முட்டக்
    கறுத்தவிரி வானை எரித்துவிண் மீனாய்
    பரத்திடம் முக்தி பறப்பு….(424)

    சுபம்(சத்யம்)
    முடிவு(சிவம்)
    மங்களம்(சங்கரம்)
    ——————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180901 Penance of Devaki and Yashoda 14×20” arches 300 gsm wcol lr

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்த நிறக்கண்ணன் நின்போல் -பிறப்பில்
    அனாதை ஆனாலும் ஆய்ச்சியர் அன்பால்
    அனாதி அவன்கதை ஆச்சு….!

    திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
    விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
    பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

    வேண்டுதல் வெண்பா….!
    ———————————————————————

    ஒருத்தி கருத்தரிக்க வேறொருத்தி காத்த
    கருத்தநிறக் கண்ணனனே, கோட்டை – திருச்சியில்
    மாது பிளஸ்டூவில் சாக்லேட் கிருஷ்ணாவில்
    தாதவிழ் பூவாய் மலர்….!

    எங்குநாம் சென்றாலும் அங்கவன் முன்னம்போய்
    தங்கு தடைகள் தவிர்த்திடுவான் -செங்கண்மால்
    தாளிரெண்டைப் பற்றித் துதிப்போர்தம் தீவினை
    தாளிரெண் டாகும் தெறித்து….!

    கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
    அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
    ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
    ஆயாசம் ஆனதா லா….!

    திரும்ப சிறையில் பிறந்து சிரித்து
    விரும்பி வ்ரஜமண் விரைந்து -கறந்த
    பசுக்கள் பால்மடி பச்சிளங் கன்று
    ருசிக்கும்முன் உண்ணகண்ணா ரா….!

    பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
    வெள்ளலைப் பாற்கடல் உள்ளமால் -புள்ளேறும்
    கார்மேக வண்ணனும் ஓர்மகன் அன்னையும்
    நேர்நிகர் ஆவார் நமக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180831Asatoma Sadgamaya-DWA mixed media 100dpi lr

    அஸத்தே எழுந்திரு,ஆதிஸத்நான் சொன்ன
    உஸத்தியான கீதையால் உள்ளம் -அஸங்கலையா:!
    வேண்டும் சமத்துவம், வீரன் அவனழியான்
    காண்டீபம் தானுன் களிப்பு”….!

    ”பேடித்தனம் காண வேடிக்கை யாயிருக்கு
    வாடிய அக்கினியே(அஸதோமா) வீரியம்கொள்(ஸத்கமய) -சூடிய
    உள்ளத் தளர்ச்சி ஒழிக, எழுந்திரு
    கொல்லத் துணிவதே கடன்”….

    ‘’சாத்திரங்கள் எல்லாமே சாதா ரணர்க்காகும்,
    தோத்திரம் போதும் துரீயமாம் -பாத்திரம்
    ரொம்பி வழிய ரங்கன் உபதேசம்
    நம்பினோர்க்கு நீராம் நெருப்பு’’.

    “ஆச்சரியம் கொண்டதால் பேச்சிழந்து போய்விடல்,
    மூச்சிரைக்க கர்மத்தில் மூழ்குதல், -கூர்ச்செரிந்து,
    பார்க்கையில் ஆனந்த பாஷ்பம் பெருகுதல்,
    நீர்க்குமிழி ! நீயோ நதி !”….!

    .
    ”இல்லாத தென்றும்மெய் இல்லை, இருப்பது
    இல்லா ததாகாது, இவ்வுண்மை -அல்லாது
    வேறொன்று மில்லையென, கூறுவோர் ஞானியர்:
    நூறொன்று மில்லாது செய்”….!….கிரேசி மோகன்….!

    .

    Share
  • ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

     

    தவரச காண்டம்
    —————-

    சீதைக்(கு) இருப்பிடம் ஸ்ரீராமன் தங்குமிடம்
    கீதைக்(கு) இருப்பிடம் கண்ணனே -தாதையும்
    கூடியிருந்து அன்பருடன் காகுத்தன் ராமனாய்
    தேடிவந்தோர்(கு) ஊட்டினார்கீ தை….(299)

    பனியோ, குளிர்மழையோ பல்துலக்கும் நேரம்
    தனியேவோர் பாறையில் தாவி -கனிவாய்
    செளபாக்கியம்மா கீழிருந்து சாமியைக் காண
    தவபாக் கியத்தார் தயவு….(300)

    கண்கெட்ட பின்னுமேன் காணவந்தாய் என்னையென
    பண்பட்ட சாமி பரிந்திட -உன்பட்டு
    பார்வை முதலியார் பாட்டியிவள் மேல்பட்டால்
    தீர்வைத் தருமென்றாள் தாய்….(301)

    இந்தநேரம் பார்த்திந்த ஏழையிடம் ஏதுமில்லை
    வந்தய்யர் நொந்தவண்ணம் வாடிட -‘’இந்தரோஷம்
    சுந்தரேசா ஏனுனக்கு உந்தனையே நீயெனக்கு
    தந்தபின்னும்’’ என்றார் தவர்….(302)

    தேசூரைச் சேர்ந்த துலுக்கப்பெண் தித்திப்பை
    ஆசான்தன் அன்னைக்(கு) அளித்திட -ஆசாரம்
    போய்விடும் என்றுரைக்க ‘’ பாரபட்சம் உண்டெனில்
    போய்விடு’’ என்றார்ஊர் பார்த்து….(303)

    அரிசனமோ அன்றி அரசனோ அங்கு
    தரிசனம் தந்தோர்க்குத் தன்னை -சரிசமமாய்
    காட்டுவார் ஆன்மீக காந்தியாம் கண்களால்
    நீட்டுவார்நால் வர்ண நிழல்….
    நீட்டுவார்நால் வர்ணக் கொடி….(304)

    நேரெதிர் நிற்பவர் நினைவின்றி நெக்குருக
    பாரதியார் பாடலைப் பாடிட -நாரதர்கள்
    கோளுரைக்க கோபித்துக், கூப்பிட்(டு) அருட்ப்ரகாசம்
    பாலுரைத்தார் பாடப் பரிந்து….(305)

    ஆணென்ன பெண்னென்ன ஆன்மீகப் பாற்கடலில்
    ஜாணென்ன மைலென்ன சாந்தியாம் -ஆன்மாவில்
    பேதமற்று போனபின்பு ஏதுபால் ஆதலால்
    ஓதலாம் பெண்களும் ஓம்….(306)

    வாட்டியொரு வெள்ளைமூ தாட்டியிரு கால்களை
    நீட்டிட கோபித்தார் நிர்வாகி -காட்டினார்
    சம்மணம் இட்டமர்ந்து, சட்டம் பொதுவென்று
    தம்மடக்கு வாதத்தாள் தொட்டு….(307)

    வந்தராஜ வாரிசு வந்தனித்தோர் சாதுவிடம்
    தந்தகாசு கண்டு துடித்தவர் -எந்தடா
    பேறுபாயப் பிச்சை பெறவந்தோன் போட்டயிந்த
    நூறுரூபாய் நோட்டு நகைப்பு….(308)

    அகப்பட்ட(து) ஆடு அபாயப் பாறை
    முகப்புற்ற மாபிளவில் மாட்டி -சுகப்ரும்மம்
    அன்றந்த ஆடுபிடித்(து) ஆயுள் அதற்க்களந்தார்
    நின்றழும் பெண்ணுக்காய் நேர்ந்து….(309)

    விதுரர் குடில்சென்ற விஷ்ணுகண்ணன் கூழை
    சிதறாது நாலுகை சேர்த்து -அதரத்தால்
    உண்டாற்போல், ஆட்டிடையன் அன்போ(டு) அளித்ததை
    மண்டியிட்டு உண்டார் மகான்….(310)

    தீண்டாமை காலத்தில் தாயன்புக் கேணியர்
    தோண்டியில் தண்ணீர் தளும்பிட -வேண்டிடும்
    புல்லறுக்கும் பெண்கள் புறமுதுகில் பெய்வாராம்
    கொள்ளிரக்கம் கீழோர்பால் கொண்டு….(311)

    தானிருக்க முன்போர் திண்ணையும் கூரையும்
    ஊணியப் பாட்டி உகந்ததோசைத் -தீனியின்முன்
    தேவா மிருதமும் தலைகுனியும் என்றாராம்
    மூவா அவளன்பு மொக்கு….(312)

    பட்ஷணம் மேலல்ல பாட்டியிவள் பக்தியின்
    லட்ஷணமே அன்பின் லஹரியென்றார் -அஷ்ஷணமே
    தின்றாராம் வேகாத தோசையை விண்டுவிண்டு
    அன்றாயர் கண்ணனிவர் அன்பு….(313)

    அம்பதாம் ஆண்டு அவரருணை வந்தநாள்
    ரொம்பதான் பாரபட்சம் அன்பர்கள் -உண்பதில்
    சாப்பாடு கொள்வேன் சமபந்தி போஜனமாய்
    சாப்பாடு வென்றவரின் சொல்….(314)

    போளூர் நடேசன் பவுர்ணமி பட்ஷத்தில்
    மாளூர் ஜெயித்தோர் முடியிறக்கும் -நாளில்வெண்
    கோவணம் மண்ணமர நாவிதர்நாற் காலியுற
    ஓவியம் தீட்டவர்மா ஓடு….(315)

    தமையந்தி நேரத்தில் தேடிவரு வோர்க்கும்
    சமையல் செய்தன்னம் தூதாய் -அமைய
    நளபாகர், சிந்தைசூழ் ‘நான்’சனி ஓட்டி
    உளபாகம் தேற்றும் உணவு….(316)

    அதிகாலை வேளை அடுப்படியில் வேலை
    கொதிசாம்பார் கூட்டு கறிகாய் -புதினாவில்
    சட்டினி என்று சமையல் படிதாண்டா
    பத்தினி யாம்பகவான் பார்….(317)

    தொப்பலாய் வேர்த்த தவத்திற்(கு) இதமாக
    சுப்பரா மய்யா விசிறிவிட -செப்பினார்
    ‘’காற்றுள்ள போதேநீ தூற்றிக்கொள் ஆன்மாவை
    மாற்றமில்லா மாற்றதுவே மெய்’’….(318)

    இங்கிலாந்து கேரட்டும் இந்தியக் கத்திரியும்
    எங்கு விளைந்தாலும் எந்தோட்டம் -பொங்கலை
    ஆழிசூழ் பூமியே ஆசிரமத் தோட்டம்தான்
    வாழிய ஏக உணர்வு….(or)
    வாழிய ஏக வழுத்து….(319)

    ஆக்கிய சாம்பாரில் தூக்கல் புளிப்பிருக்க
    நாக்கில் ருசிபார்த்த நாயன்மார் -வாக்குரைத்தார்
    ‘’எத்தைநாம் தின்றால்நம் பித்தம் தெளியுமென்று
    ஒத்தைக்கால் நிற்போர்க்கு ஊத்து….(320)
    மீதமான மோர்நீரை மூடிடாத சாக்கிட்டு
    போதுமென்றார் சமையலுள் பொல்லாப்பு -ஏதுமிதில்
    கோபமில்லை சாதுக்கு, கொள்ளுவதும் தள்ளுவதும்
    ஆபரண மாட்டல் அவிழ்ப்பு….(321)

    கிஷ்கிந்தா காண்டம்
    ——————–

    நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை
    பார்க்கும் எவற்றிலும் பேதமில்லை -காக்கை
    கருநாகம், மந்தி, கொடுஞ்சிறுத்தைக் கூட்டம்
    குருரமண சீடர் குழு….(322)

    முதுகில் குரங்கு ,முழந்தாளில் ஆடு
    எதிரில் அணிலெனக்(கு) என்று -புதிராகப்
    பார்த்திருக்க ஒவ்வொன்றாய் வேர்க்கடலை ஊட்டியதைப்
    பார்த்திருந்தால் பாரதியார் பாட்டு….(323)

    மேனியில் நாகம் மெதுவாக ஊர்ந்திடும்
    ஞானிமுன் சித்திரமாய் நின்றிடும் -கானின்
    புலிவந்து திண்ணையில் பொய்யுறக்கப் பூனையாய்
    மெலிதாக சொல்லும் மியாவ்….(324)

    அமெரிக்க அன்பர் அகாஸ்டோ கேட்டார்
    சமரசம் சாத்தியமா சொல்வீர் -அமரிக்கை
    மேவ அமர்ந்த மனிதரே உம்மைப்போல்
    தாவும் குரங்குமொன்று தான்….(325)

    நாமொழிக்க நாமிங்கு ஞானிதான் என்கிறீர் ?
    ஏனுமக்கு சந்தேகம் என்றவர் -நானிருந்தும்
    நீரிருந்தும் ஆங்கே நமதுபணி யாளிருந்தும்
    ஓரிருப்பு தானிங்(கு) உணர்வு….(326)

    விலங்கு, மனித, விருட்ச விதங்கள்
    விளங்கும் பலவான வீம்பு -விலங்காய்
    ஒருமை உணர்வை ஒதுக்கிடப் பூட்டும்
    வெறுமை விடுதலைசா வி….(or)
    வெறுமை விடுதலை வீடு….(327)

    வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
    பாடுமப் பண்பே பவித்திரம் -ஓடும்
    உயிரடையும் ஓர்நாள் ஒருமைக் கடலை
    தயிர்கடைய வெண்ணெய்த் திரள்….(328)

    மந்திமொட்டைப் பையனை மற்ற குரங்குகள்
    தொந்திரவு செய்ய தவம்செய்து -வந்தவனைக்
    கண்டால் மிரண்டு கவிகள் நடுங்கியதாம்
    உண்டாம் அதற்க்கும் உணர்வு….(329)

    பட்சணம் தன்னை பறிகொடுத்த வர்க்குமந்தி
    லட்சணம் சொன்னார் லயித்துமகான் -லட்சிய
    நோக்கிது போலவே நோக்குமிருந் தால்ஞானம்
    பார்க்கலாம் தாவிப் பறித்து….(330)

    நொண்டிக் குரங்குவெகு நட்பாம் ரமணருக்கு
    சண்டித் தனம்செய்ய சாப்பிட -கண்டித்த
    வர்கரத்தைப் பாய்ந்து வாயால் கடித்திட
    தற்பரம் தண்டனை தீர்ப்பு….(331)
    தீர்ப்பாக ஓரிருநாள் பார்க்கா திருந்திட
    ஆர்பாட் டமடங்கி அம்மந்தி -பார்ப்போர்
    வியக்கக் குழைந்தவர் வீராப் படங்க
    புயத்தில் அமர்ந்தது போய்….(332)

    பணியாய் மனிதர்க்கு போன குரங்கு
    இனிவனம் சென்றால் எதிர்ப்பு -எனினும்
    ஆரண்யம் சென்றரசன் ஆனவன் வந்தனன்
    காருண்யர் விஸ்வாசம் கொண்டு….(333)

    கொண்ட மனையாள்கள் குட்டிகள் சூழ்ந்திட
    நொண்டி ரமண தரிசனம் -கொண்டதைக்
    கண்டவர்கள், ராமனை கிஷ்கிந்தா காண்டத்தில்
    கண்டபலன் கொண்டார் களித்து….(334)

    கல்லெறிந்தோர் அன்பர் குரங்கொன்றைக் கொன்றிட
    சொல்லறியா சோகத்தில் சூழ்ந்தயினம் -சொல்லியதாம்
    போன சிதையை பகவானின் முன்வைத்து
    ஆன கதையை அழுது….(335)

    அழுத குரங்குகள் ஆறுதல் பெற்று
    தொழுது வணங்கித் திரும்ப -பழுது
    விளைவித்த அன்பர் விழுந்தாராம் நோயில்
    கிளைசுற்றம் கேட்டது காப்பு….(336)

    காப்புத் திருநீறாய் பாப்பார சாமியிவர்
    சாப்பாட் டடுப்படி சாம்பலிட -ஆ!பார்
    அசலான அற்புதம் முசல்மான் அன்பரெழுந்(து)
    அசலாமா லேகும் அழைப்பு….(337)

    தாகம் தவமாக ,தண்ணீர் ரமணராக
    காகம் கிணற்றங்கால் கொம்பில் -யாகமாய்
    மூன்றுநாள் மூச்சடக்க மோட்சம் அளித்தெடுத்தார்
    சான்றாய் சமாதியும் செய்து….(338)

    செய்யுமோ மெய்த்தவம் சிந்தை அதற்குண்டோ
    உய்யுமோ மோட்ச உலகுக்கு -அய்யமாய்
    சொன்னவர்க்கு சொன்னார் சிறகுடைய காக்கைக்கும்
    தன்னான்மா பொன்னான்மா தான்….(339)

    அன்பர் குளிக்கும் அடவிக்கு நீரருந்த
    வன்புலி வந்திட வாஞ்சையாய் -நண்பரே
    இன்றுபோய் நாளைவா என்றதும் அச்சிறுத்தை
    கன்றுபோல் சென்றதாம் கான்….(340)

    வாதுமைக் கண்களால் வாத்சல்ய மாய்ரமண
    சாதுவைப் பார்க்குமாம் சாப்பிடும் -போதினில்
    கோவிந்த லஷ்மி கடாட்சத்தால் ஆசிரமம்
    ஓவென்(று) உயர்ந்ததென்பார் தேவு….(341)

    ஆவென்று வாய்பிளந்து ஆசிரமம் பார்த்திருக்க
    ஆவன்று தேவன் அனுக்ரகத்தால் -சாவென்ற
    சூட்சுமம் தாண்டி சுயநினை வோடுமுக்தி
    மோட்சம் புகுந்ததுடல் மாய்த்து….(342)

    ஆயி சமாதிக்(கு) அருகே பசுவுக்கு
    கோயில் எழுப்பினார் குருநாதர் -ஆயினும்
    ஏனைய பேருக்காய் ஆனை கஜேந்திரன்
    வானை அடைந்ததாய் வாக்கு….(343)

    உருவுனார் துண்டை உருண்டதாம் முட்டை
    குருகுருவிக் குஞ்சின் கதிக்காய் -பரிவுடன்
    ஈரத்துணியில் முட்டையிட்டு ஈன்றவள் போல்காத்து
    வாரம் முழுக்கஅதை வேவு….(344))

    வேவுக்கு காரணம் வேதனையும், தாய்க்குருவி
    கோவிக்கும் என்ற கிலியுமாம் -சாவிற்கே
    அஞ்சாத அஞ்சலவர் அஞ்சினார், அஞ்சாம்நாள்
    குஞ்சான போது குதிப்பு….(345)

    குதித்தன்பர் மாதவனைக் கூப்பிட்டுக் குஞ்சை
    இதைப்பார் உயிரோ(டு) இருக்கு -பதித்தார்பின்
    அக்குஞ்சை ஆன்ம அருணைசேய் நெஞ்சத்தில்
    அக்கினிக்குஞ் சான தது….(346)

    வேட்டுவப் பையன் வறுமை களைந்தவனால்
    காட்டுப் புறாகொண்ட குற்றுயிரை -நீட்டுவித்தார்
    பச்சை திராட்சை பிழிந்ததன்மேல் பத்திட்டு
    இச்செய்கை யாறரிவார் இங்கு….(347)

    மரமண்டை தொண்டர்கள் மாமரத்தை தாக்கி
    கரம்கொண்ட கொம்பினால் கொய்ய -பரம்பார்த்து
    ‘’போதும் நிறுத்தும் பழத்துக்கு நன்றியாய்
    தீதிழைத்தல் பாவம் திருந்து’’….(348)

    எச்சம்மா நேர்ந்தாளாம் லட்சம் இலைபறித்து
    அர்ச்சனை சாமிக்(கு) அளிப்பதாய் -அச்சச்சோ
    சொல்லி விளித்தாராம் சாமிக்(கு) உனதுடலை
    கிள்ளிக் கொடுப்பாயோ கூறு….(349)

    கூறியது கேட்ட கிழவி முழித்தாளாம்
    மீறியதைச் சொன்னார் மகரிஷி -பாரினில்
    புல்லிலை காய்கனி பூச்சி புழுவினில்
    உள்ளவனே உள்ளானுன் னுள்….(350)

    ஆசிரம காண்டம்
    —————–

    வெப்பம் குடிதண்ணீர் சொற்பம், விருபாட்ஷி
    அப்பனைக் காண்போர்க்(கு) அவஸ்தையாம் -தப்பிட
    மாசிரமப் பட்டு மகானுக்காய் கந்தனென்போன்
    ஆசிரமம் கட்டினான் அங்கு….(219)

    கண்ணை மறைக்கின்ற கள்ளிப் புதரகற்றி
    தென்னை மரம்வைத்து தோட்டமிட்டான் -மண்ணிலவன்
    ராமன் குகனாய் ரமணருக்கு வந்தகந்தன்
    நாமம் நினைவில் நிலைப்பு….(220)

    கந்தன் குடிலுக்கு வந்தாறாம் ஆண்டினில்
    தன்தாய் தளர்ந்திடத் தாயுமானார் -தந்தார்
    நடுபுகுந்த கூற்றை நகர்ந்திடக் கூறி
    மடிசுமந்து மோட்ச மகிழ்வு….(221)

    கொப்பளமாய்த் தோன்றும்நான் சொப்பனமே ஆராய
    அப்புளுகன் ஆட்டம் அடங்குமாம் -அப்பளப்
    பாட்டினால் அன்னைக்கு ஊட்டினார் ஞானச்சாப்
    பாட்டினை சூடாய்ப் பொரித்து….(222)

    விலாநோக தன்னை வயிற்றில் சுமந்தோள்
    உலாவந்த தேகம் உதிர்ந்திட -பலாக்கொத்தில்
    மூர்த்தியாய் மாபலி தீர்த்தக் கரைதனில்
    சேர்த்தார் சமாதி சமைத்து….(223)

    உன்னை வெறுக்கலாம் தன்னை மறக்கலாம்
    அன்னை துறத்தல் அவமன்றோ -கண்ணை
    இமைகள் அணைக்க நமையாள் உறக்கம்
    சுமையா சுவர்கமா சொல்….(224)

    அராப்பள்ளி மாலன் சிராப்பள்ளி ஈசன்
    இராப்பகல் நூற்போன் இணைந்த -இராப்பள்ளி
    நாதன்தன் தாய்க்களித்தான் பாதுகாவ லாய்மாத்ரு
    பூதனை லிங்கம் பிடித்து….(225)

    தாயார் சமாதி தரிசிக்க வந்தவர்க்கு
    ஆயாச மாலும் அடியார்ள் -பாயாசம்
    நோக்கி எறும்புகள் போக்காய்ப் படையெடுக்க
    ஆக்கினார் ஆசிரமம் அங்கு….(226)

    எந்தசக்தி என்னை எமனெதிர்க்க வைத்ததோ
    அந்தசக்தி தானிங்(கு) அழைத்தது -வந்தபின்
    அங்கிங்(கு) ஆசிரமம் ஆனாற்போல் ஆனதென்றார்
    தங்குமிடம் தாயார் தயவு….(227)

    ஓலை சமாதியின் ஓரமாய்க் கட்டிய
    சூளையில் வேகாத செங்கல்லால் -ஆலயச்
    சுற்றுச் சுவரெழுப்பக் கற்றுக் கொடுத்தாராம்
    முற்றும் துறந்த முனி….(or)
    அற்றைக்கு ஞானச்சித் தாள்….(228)

    ஆகமச் சொற்படி அடிக்கல் , புனிதநீர்
    சாகர கங்கை அபிஷேகம் -ஸ்ரீகரர்
    நேராய் நுழைந்து நிறுவிஸ்ரீ சக்கிரத்தை
    ஆராதித் தாரங்(கு) அமர்ந்து….(229)

    ஆயிரம் ஆலயம் ஆயினும் அண்ணலின்
    தாயிற் சிறந்ததோர் கோயில்லிலை -தூயயிச்
    சேதியைச் சாதகர் சாட்விக் எனப்பட்ட
    சாதரு ணாசலா சொல்….(230)

    ஆசான் அனுமதிக்க ஆசிரம அன்பர்கள்
    காசோலை தந்திட கட்டுமானம் -கோசாலை
    சான்றோர்க்கு நூற்சாலை சாதக சாதுக்கள்
    போன்றோர் புகலிடம் பின்பு….(231)
    விருந்து சமைக்க விருந்தினர் தங்க
    விரிந்திட ஆசிரமம் விண்ணாய் -நிரஞ்சனா
    நந்தர் பொறுப்பேற்று நிர்வாகம் செய்யநிச்
    சிந்தையாய் நாதர் சதம்….(232)

    முகவையார் கண்ண முருகனார் பிள்ளை
    அகவையில் ஆசு கவியாய் -பகவனை
    தேனிக்(கு) இணையாய் திருவாச கித்தானார்
    மாணிக்க வாசக மாய்….(233)

    மணமாலை தந்த க்ஷரமண மாலை
    மனமாயை கொண்டுழலும் மாந்தர் -குணம்மாய்க்கும்
    நானாரை தன்மருக நானார்க்(கு) அளித்தமாம
    னானாரால் மாற்றம் நிகழ்வு….(234)

    எதானாலும் என்றும் யதார்த்தத்தில் நீந்தும்
    சதாசர்வ சாந்த சிவனை -கதாநாத
    காந்தனைக் கண்ட கனிமம் முருகனார்
    நான்தனைத் வென்றதன் நாள்….(235)

    கையிலென்ன காயிதம் கேட்ட ரமணரிடம்
    அய்யநின் பேரில் அடியேனின் -செய்யுளென்ற
    ஆசுகவி வாக்கினை அங்கீ கரித்தவரை
    ஆசிகவி ஆக்கினார் அன்று….(236)

    மாசிகரம் மாதுமையாள் பூசிக்கும் ஆசுரரை
    வாசகர்தம் பாசுரத்தால் விட்டன்று -ஈசன்
    பெருந்துறை வந்தாற்போல் பேதையிவன் பாக்காய்
    இருந்தயிறை யேரமணா இன்று….(237)

    திருவெம்பா வையைப்போல் தீந்தமிழில் ஞான
    குருவெம்பா வையை முருகாநீ -தரவுன்பால்
    மாணிக்க வாசகரின் மேதமை உள்ளதென்றார்
    சீனிக்(கு) எறும்பால் சிறப்பு….(238)

    சாதுவாய் வந்த சிவனை அறியாது
    வேதியர் அன்றானை வன்புலியை -மோதவிட
    தோலுரித்த ஈசன் திருவாய் உபதேசம்
    மாலறுக்கும் உந்தியார் நூல்….(239)

    பகவான் திருவாய் புலர்ந்த அமுதை
    அகவாய் மலர்ந்து அருந்தி -முகவை
    முருகனார் செய்யுள் முகமாய்க் கொடுத்தார்
    குருவா சகக்கோவை காண்….(240)

    ‘’அய்யே அதிசுலபம் ஆன்மவித்தை’’ பல்லவியை
    மெய்யன் முருகனார் முன்மொழிய -அய்யன்
    சரணமைந்து சொன்னார் சரளமாய் அன்று
    வருணன் ரமணகவி வாக்கு….(242)

    அன்பர்கள் கேள்விக்கு அய்யன் பதில்களை
    மண்பெற கோர்த்த முருகனார் -தன்பதிவில்
    எள்ளதில் எண்ணையாய் ஏற்றிக் கொடுத்ததே
    ‘’உள்ளது நாற்பதின்’’ உரு….(243)

    உள்ளதை உள்ளபடி உள்ளது நாற்பதை
    உள்ளம் அறிதற்க்(கு) உவமானம் -சுள்ளிக்
    கழியால் கடலைக் கடத்தல், ரமண
    வழிநாற் பதுஅவ் வகை….(244)

    ரமண வழி நாற்பது வெண்பாக்கள்….245 to 284….!
    ——————————————————___________________

    ரமண வழி வெண்பாக்கள்
    ——————————-

    உடலுயிர் நானா ? உணர்ச்சிகள் நானா ?
    நடைமுறை வாழ்க்கையில் நானார் ? -திடமாய்க்
    குடைந்த மனமாம் குகைதனில் ஆன்மா
    கடைந்த நவநீதம் காண்….(1)….3-12-2008

    மருந்துண்ணும் வேளை குரங்கெண்ணம் கொள்ளும்
    விருந்துண்ணச் சொன்னால் விலகிப் -புறம்சென்று
    இஷ்டமில்லா தோரிடம் ஏந்திப் பிழைத்திடும்
    துஷ்டநெஞ்சை தூர விரட்டு….(2)….3-12-2008

    ஆழ்ந்த உறக்க மதிலே அமைதியாய்
    வாழ்ந்து களிப்பவன் யாரென்று -தாழ்ந்து
    அகங்காரம் விட்டந்த ஆன்மனைத் தேடி
    சுகம்காணும் நாள்வரை சுற்று….(3)….3-12-2008

    எமனை எதிர்த்து மரணம் அளித்த
    ரமண ரகசியம் கற்றோர் -அமண
    உலகிலே ஆன்ம உடையணிந்து வாழ்வர்
    அலகிலா இன்பம் அடைந்து….(4)….3-12-2008

    நோய்நாட வேண்டாம் அதன்முதல் நாடவேண்டாம்
    ஆய்வாம் ரமண வழி ஆன்மீகம் -ஓய்வாம்
    மருந்தால் உடலின் மயக்கம் விலக்கும்
    விருந்தாம் உணர்வை வடித்து….(5)….3-12-2008

    சொப்பனத்தில் கண்ட சொகுசான தூக்கமது
    அப்படியே போச்சு அடரமணா ! -அப்புறம்
    எப்படியோ என்னை எவனோ எழுப்பினான்
    இப்படித் தானா இறப்பு….? (6)….3-12-2008

    காட்சிபல கண்டேன் கண்டதெல்லாம் இல்லையென்று
    சாட்சி சிரிக்கின்றான் சொல்ரமணா ! -ஆட்சி
    அவனிடமா என்னிடமா ஆராயும் சக்தி
    எவனிடம் உண்டென்(று) இயம்பு….(7)….3-12-2008

    ஈரம் தெரிகிறது ஏதோ இருக்கின்ற
    சாரம் அறிந்தேன் சரிரமணா -தீரம்
    அளித்திடு ஆழத்தில் ஆன்மாவில் மூழ்கி
    குளித்திட நானும் களித்து….(8)….3-12-2008

    சர்க்கரை தேடிச் சுவைக்கும் எறும்பதின்
    அக்கறை பொங்க அடரமணா !- அக்கரை
    சேர்ந்திட வேண்டும் சுமையாம் மனக்கழுதை
    தேய்ந்திடச் செய்கட் டெறும்பு….(9)….4-12-2008

    தானே கழுத்தில் தரித்தப்பொன் மாலையை
    காணோமென் றாளாம் கதைரமணா !-வீணே
    புதையலைத் தேடிடும் பூதமே மாயை
    அதையழித்தல் ஆன்ம அடைவு….(10)….4-12-2008

    வினையால் அணையும் பெயரும் புகழும்
    எனையாள லாமோ ரமணா ! -தனியாய்
    அணையாத ஆன்ம அகலாய் ஜொலிக்க
    நினைவாகும் நீயே நெருப்பு….(11)….4-12-2008

    நால்வர் பொறுப்பேற்று நாமே தலைமுதல்
    கால்வரை தூக்கி கனக்கின்றோம் -மால்வினை
    தேடல் விசாரத்தில் கூடிக் களிக்கும்முன்
    ஊடல் உணர்வே உடல்….(12)….5-12-2008

    எடுப்பார்கைப் பிள்ளை எதிர்ப்போர்க்குத் தொல்லை
    எடுத்துரைக்கப் போனால் இல்லை -கொடுப்பாய்
    திருடன் மனக்கையில் தேடலாம் சாவி
    திருடன் புருடனாய்த் தேர்வு (OR) தீர்வு….(13)….5-12-2008

    உச்சரிக்கும் மந்திரம் உற்பத்தி ஆகுமிடம்
    எச்சரிக்கை யோடுபார்க்க ஏகாந்தம் -நச்சரிப்பாய்
    நானில்லை என்ன நமதில்லை என்னபின்
    ஜாண்பிள்ளை ஆன்மா ஜனிப்பு….(14)….6-12-2008

    பார்ப்பான் அகத்தில் புலித்தோல் பசுவாக
    ஆர்ப்பரிக்கும் ஆணவத்துள் ஆன்மனாய் -தோற்பான்
    அவனே ஜெயிப்பான் அவனே சமர்த்த
    சிவனே அருணா சலத்து….(15)….5-12-2008

    கயமை அகந்தை கடமை பலனை
    நயமுறக் கூறி மயக்கும் -சுயமாய்
    இருந்த இடத்தில் பொருந்தி இருந்து
    அருந்து அருணா சலம் (OR) ஜலம்….(16)….5-12-2008

    முப்பதில் வாழ்க்கையில் மூப்பதில் மூழ்கையில்
    அப்பவும் இப்பவும் ஆசைதான் -தப்பிட
    மேனி நமதென்ற மாய மனப்படி
    ஏணியில் ஏறா(து) இறங்கு (OR) இரு….(17)….6-12-2008

    உட்புகும் உள்ளம் உணரும் உவகையை
    கட்புலனை கைகோர்க்கும் காயமாம் -மட்பாண்டம்
    நோயில் ஒடுங்கிபின் பாயில் முடங்கிடும்
    தாயில்லா சேயாய்த் தவித்து….(18)….6-12-2008

    சயனத்தில் தோன்றுகின்ற சொப்பனத்தை மூடும்
    நயனத்தால் காண்கின்ற நானார் -அயனொத்து
    தூக்கம் கனவு விழிப்பைப் படைத்திடும்
    போக்கே மனதின் பழுது….(19)….6-12-2008

    ஆவிற்(கு) ஒருகோயில் ஆயிக்(கு) ஒருகோயில்
    காவிக்குள் வாழ்ந்த கிரஹஸ்த்தா -சாவிற்கே
    சஞ்சலம் தந்த சமர்த்த ரமணரே
    தஞ்சமுன் பாதம் தயவு….(20)….7-12-2008

    வானகம் வீழ்ந்தாலும் வையகம் ஓய்ந்தாலும்
    நானகம் தோயநவ நீதமாம் -கானகம்
    போகாதே கண்மூடி சாகா வரம்காண
    வாகா னதாம்ரமண வழி….(21)….9-12-2008

    நந்த வனம்மாயை நாலாறு மாதம்பொய்
    வந்ததோர் ஆண்டி வெறும்புளுகு -விந்தையை
    வீணே ரசிக்கும் விளையாட்டு ஓயமனம்
    காணோம் எனஓடும் காண்….(22)….9-12-2008

    கண்டது காயாம் கவர்ந்தற்று , கைகூப்பி
    கண்டதை விண்ட கனிரமணர் -உண்டதில்
    சோறுண்டு மெல்ல சுகப்பானை விட்டான்ம
    ஊரொன்றில் உய்யும் உயிர்….(23)….22-12-2008

    வினையளவு கர்மம் திணையளவு தேடல்
    பனையளவு ஆனந்த பானம் -முனையளவு
    ஊசி நிலத்திலும் உல்லாச வாசியாம்
    வாசி ரமண வழி….(24)….23-12-2008

    கள்ளதில் போதையாய் கண்ணனில் ராதையாய்
    உள்ளதே ஆன்மா உணர்ந்திடு -உள்ளது
    நாற்பது சொன்ன நமது ரமணனை
    ஏற்பவர்(கு) இல்லை இறப்பு….(25)….2-1-2009

    உடலுறவு கொண்டு உணர்வை மறைக்கும்
    மடமனதின் மாயா வினோதம் -அடஅதை
    அப்படியே ஏற்று அருணா சலரமணன்
    சொற்படி செல்ல சுகம்….(26)….2-1-2009

    காண்போன் அழிய ககனம் ஒழிந்திடும்
    நான்போய் உதிக்கும் நமச்சிவாயம் -ஆண்பெண்
    அபேதம் அதையுணர்ந்து ஆன்ம வெளியில்
    உபாதிகள் அற்று உலவு….(27)….2-1-2009

    எதிராக வந்த எமனை எதிர்த்து
    பதினாறில் வென்ற பகவான் -பதிலாக
    ”நானார்” வினாவை நமக்களித்தார் நாமுய்ய
    தேனாறான் மாவில் திளைத்து….(28)….3-1-2009

    அய்யே அதிசுலப ஆன்ம விசாரணையை
    கையில் கனியாய் கவர்ந்தவராம் -அய்யன்
    ரமண வழியில் ரகசியங்கள் இல்லை
    நமனே துணையாம் நமக்கு….(29)….5-1-2009

    உடலதற்(கு) இல்லை உபாதிகள் ,ஆன்ம
    கடலதற்(கு) இல்லை கரைகள் -வடிவெடுத்து
    வந்துவந்து போகும் வினையுரு வானவன்
    தொந்தரவு நெஞ்சைத் துரத்து….(30)….6-1-2009

    மானாபி மானம் மதிநுட்பம் மாட்சிமைகள்
    நானாகி வந்த நயவஞ்சம் -தானாகி
    தன்னந் தனியாய் தவத்தில் திளைப்பவர்கு
    எண்ணம் எதிலே எதற்கு….(31)….7-1-2009

    மனோமயம் ஆளும் மமதை அரசன்
    கனாநனா காணும் குடிகள் -வினாவிட
    பூஜ்ஜியம் தோன்றிடும் ராஜ்ஜியம் ஆகிடும்
    ”நான்”ஜெயம் ஆன்மா நிகழ்வு….(32)….7-1-2009

    குப்பன்தன் சொப்பனத்தில் சுப்பனாய் மாறுகிறான்
    குப்பென வேர்த்து விழிக்கின்றான் -தப்பிதில்
    குப்பனாய் சுப்பனாய் கோலங்கொள் நானைநீ
    துப்புர வாக்கத் தெளிவு….(33)….9-1-2009

    தீதாளும் நெஞ்சு திரையிட்டு மூடிடும்
    பாதாள லிங்க பரவசத்தை -வேதாந்தம்
    செப்பரிய ஆன்மாவை சோதித்(து) அளித்தனன்
    அப்பளப் பாட்டில் அடைத்து….(34)….10-1-2009

    ரமண ஜயந்தி அன்று எழுதியது
    —————————————

    அருணா சலமமர்ந்த ஆதிரைக்குப் பின்னே
    மறுநாள் பிறந்த முனியே -திருநாள்
    ஜயந்தியில் மீண்டும் ஜகத்தின் மரண
    பயந்தீ அணைக்கப் பிற….(35)….11-1-2009

    முற்றும் உணர முழுதும் துறயிதில்
    சற்று குறைந்தாலும் சம்சாரம் -பற்றில்
    ஒருகாலும், சத்தில் ஒருகாலும் வைப்போர்
    ஒருகாலும் காணார் ஒளி….(36)….17-1-2009

    வெள்ளித் திரைக்கு வரலாமோ வெட்கம்தான்
    கள்ளத் தனமான காட்சிகளால் -உள்ளத்
    திரையதில் தோன்றி மறைகின்ற(து) எல்லாம்
    கரைவந்து மாயும் திரை….(37)….17-1-2009

    தானாய்ப் படர்க்கையாம் தன்மையின் முன்நிலை
    நானாய் ஒளிந்திடும் நம்மகந்தை -தூணாம்
    அதனை உதைக்க அரியுரு வான
    முதலாய் உதிக்கும் முடிவு….(38)….21-1-2009

    ஊணறியா, ஓடும் உயிரறியா, உள்ளுறையும்
    கோனறியா வண்ணமுன் கண்மூடும் -நானறிய
    வெள்ளமாய் வெண்பா வடித்த ரமணரின்
    உள்ளது நாற்ப(து) உரைத்து….(39)….21-1-2009

    முகமது தேடும் மலைபோல ஆன்ம
    அகமதில் வாழும் அருணை -புகலாய்
    இருந்த இடத்தில் இறைவனைக் காண
    விரைந்து வருமாம் விழிப்பு….(40)….21-1-2009

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180830 Dialogue with Arjuna A4 watercolour graphite 100dpi lr

    பாரங்கே பர்த்தனே, போர்ரதம் காத்திருக்கு
    யார்கண்கள் பட்டதோ யாமறியோம் -தேரின்
    கொடியுச்சி நீலகண்டர்(அனுமார் ருத்திரன் அம்சம்) கொக்கரிப்புகரிப்பு வெற்றி!
    மடியுச்சி கொண்டதேன் மண்டு….!

    ”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
    நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
    பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே
    பார்த்தால் புசிக்கும் பகை”….கிரேசி மோகன்….!

     

    Share
  • ரமணாயனம்…..தொடர்ச்சி….அமுத சுரபியில் வெளிவந்தது…..!

     

    ஞான காண்டம்
    —————-

    பிறவிப் பிணியை அறவே அகற்றி
    துறவுக்கும் அப்பால் திகழ்ந்த -பரிசுத்த
    ஆவியைக் கண்டதால் அர்ச்சிப்பீர் ‘’பகவானாய்”
    காவிய கண்டமுனி கூற்று….(26)

    இகவாழ்வின் அச்சம் இயலாமை கோபம்
    புகவொண்ணா சாத்வீகம் பெற்றும் -பகவானை
    மண்ணிட்ட மீனாக மாற்றியது , தண்ணீராம்
    அண்ணா மலையார் அழைப்பு….(27)

    நானாட்சி போனதால் நாடுடல் நாட்டம்போய்
    வானாச்சு, மண்ணாச்சு வீரமெலாம் -மீனாட்சி
    சுந்தரேஸர் முன்பு சிலிர்த்துகுக்கும் கண்ணீரை
    இந்தரோஷம் ஆன்மன் இயல்பு….(28)
    வந்தான்ம வெள்ளத்தில் தன்தேகம் ஆட்டமுற
    சந்தேகம் கொண்டார் சுரமென்று -பிந்தையோர்
    போதில் ‘’ இருந்துட்டு போகட்டும் என்றிருந்தேன்
    ஏதோ சுகமிருந்த(து) என்று….(29)

    விளக்கெண்ணை போன்ற இலக்கண பாடம்
    கலக்கிட வேம்பாய்க் கசந்து -இலக்கில்லா
    நீண்ட வெளிதனில் மூண்ட பரவசத்தில்
    ஆண்டவன் போலானான் ஆழ்ந்து….(30)

    தம்பியின் மேல்வைத்த நம்பிக்கை பொய்த்திட
    வெம்பிய அண்ணன் வெகுண்டுரைத்தான் -கொம்பையும்
    சொம்பையும் ஏந்திடும் சாமியார் வாழ்க்கைக்கு
    சம்பளக் கல்வி செலவு….(31)

    அன்பால் உரைத்தது அம்பாய் உறுத்திட
    கண்பாரா காட்சி குருடனுக்கேன் -தன்போர்வை
    ஆவணக் கல்வியல்ல கோவணச் செல்வமென்றான்
    மூவிழிக் காரன் மகன்….(or)
    மூவிழியோன் தத்து மகன்….(32)

    அண்ணனே முன்வந்து அஞ்சுரூ பாதந்து
    தின்னது போதுமெனத் திட்டிவிட்டு -தன்னுடைய
    கல்லூரி சம்பளமாய் கட்டென்(று) உரைத்தது
    செல்அருணை ஆச்சு செவிக்கு….(33)

    நானென் தகப்பனை நாடியவர் உத்திரவால்
    காணப் புறப்பட்டேன், ஏனென்று -வீணாய்
    விசனமேதும் வேண்டாம் வெகுநல்ல கார்யம்
    அசலம்தான் இஃதுக்(கு) அகம்….(or)
    அசலம்தான் இதுக்கிங்(கு) அகம்….(34)

    என்று கடிதம் எழுதியதும் இப்படிக்கு
    ஒன்றுமே போடா(து) உணர்ந்தவன் -இன்றண்ணன்
    சம்பளம் கட்டவில்லை என்பதைப் பின்குறித்து
    தன்பலம் நோக்கித் தவம்….(35)

    தாதை தெரிந்தாலும் கீதை புரிந்தாலும்
    பாதை அறியாத பார்த்தனாய் -ஏதோ
    ரயிலேறிச் சென்றான் ரகசியமாய்த் தன்னை
    கயிலாயன் கையில் கொடுத்து….(36)

    வண்டி ரயில்போகும் திண்டிவனம் தானென்று
    பண்டித முஸ்லீம் பயணிசொல்லி -அண்டி
    அருகமர்ந்து இஸ்லாமை ஆராயக் ,கற்றான்
    குருவருவார் எவ்வடிவும் கொண்டு….(37)

    விழும்புறத்தை வென்றோன் தொழும்முஸல்மான் தோளில்
    விழுப்புணர்வு நீங்க விழித்தான் -விழுப்புரத்தில்
    விள்ளல் பேரிக்காய் வள்ளலாய்ப் போக்கியது
    பிளைப் பசிக்கொடுமை பார்த்து….(38)

    பட்டுச் சிவப்பாக கட்டுக் குடுமியில்
    நிட்டையில் நின்றவரின் ஞானத்தில் -கட்டுண்டு
    முட்ட உணவிட்டு மாம்பழப் பட்டுசெல்ல
    துட்டைத் திணித்ததவர் தொண்டு….(39)

    தரைவழி சென்றோன் இருள்வரும் நேரம்
    அறையணி நல்லூர் இறைவன் -கருவறை
    முன்வாசல் மண்டபத்தில் கண்கூசும் ஜோதியில்
    தன்கோசம் தான்மறந்தான் துய்த்து….(40)

    உண்ணா மயக்கமது அண்ணா மலைத்தொண்டு
    பண்ணோர்க்கும் உண்டோ பகவானே -என்னாச்சு
    பாழும் பசியால் பகவான் விழலாமா
    கீழனூர் காரணத்தைக் கேள்….(41)

    புடமிட்ட பொன்னாய் பகவானை மாற்ற
    படமிட்ட பாம்பின் விடத்தை -மிடறுற்றோன்
    செய்த விளையாடல் சேயும் உணர்ந்தான்’தான்’
    எய்த சிவதனுசின் அம்பு….(42)

    பாகவதக் கண்ணன் பகவான் ரமணராய்
    தாகம் பசியில் தவிப்பதை -பாகவதர்
    முத்துக் கிருஷ்ணருக்கு சித்தம் உரைக்கத்தன்
    பத்தினியிடம் கொண்டான் பகிர்ந்து….(43)

    ஆய்ப்பிள்ளை கண்ணனுக்(கு) அன்று பிறந்தநாள்
    தாய்க்குலமும் தர்மத்தில் தாராளம் -பாய்ந்தவனை
    இல்லம் இழுத்துப்போய் அள்ளக் குறையாத
    வெள்ளமாய் இட்டாள் விருந்து….(44)

    கரும்பு விருந்துக்குக் கூலியாய் காதில்
    இருந்த கடுக்கனை ஈடாய் -வருந்தி
    செலுத்தியவன் கையில் செலவுக்கு நான்கை
    அளித்தனன் பாகவதன் அன்று….(45)

    கடுக்கன் அடகுவைத்த காகிதத்தை ஞானி
    இடுக்கண்ணாய் எண்ணி எறிந்து -மிடுக்காய்
    அதிகாலை வேளையில் அண்ணா மலையில்
    குதிகாலை வைத்தான்சத் குரு….(46)

    அருணை காண்டம்
    ——————-

    அருணாசல மகிமை
    ——————–

    அவனியின் கர்வம் அருணையாம் பர்வம்
    சிவனிதய மர்ம ஸ்தலமாம் -புவனத்தின்
    ஆன்மீக நெஞ்சமாம் , அண்ணா மலைதீபம்
    ‘’நான்’’மோகம் நீக்கும் நெருப்பு….(47)

    ஆரூர் பிறந்தோர்க்கும் அக்காசி மாய்ந்தோர்க்கும்
    பாரில் சிதம்பரம் பார்த்தோர்க்கும் -நேரும்
    திருநாளாம் முக்தி அருணா சலத்தை
    ஒருநாள் நினைத்தாலே உண்டு….(48)

    பூசை புரியாது , ஈசன் திருநாமம்
    ஓசை செவியில் ஒலிக்காது -ஆசை
    பலவசம் போயும் மலைவலம் செய்ய
    இலவசம் முக்தி இணைப்பு….(49)

    மின்னிடும் பொன்னாய் , மிளிரும் வயிரமாய்
    திண்ணிரும்பாய் பாறையில் தத்துவமாய் -மண்ணில்
    யுகந்தோறும் மாறும் முகங்கொண்ட ஈசன்
    புகுந்திருக்கும் ஜோதிப் பிழம்பு….(50)

    அருணா சலத்தோன் அடிமுடி தேடி
    திருமால் அயனன்று தோற்க -உருவாய்
    உயர்ந்து விசும்படைந்த ஊன்றி உலகைப்
    பெயர்ந்த பரமே பொருப்பு….(51)

    சம்பந்தாண் டானன்பில் சிக்கியதால் தம்மகனை
    அம்பிகை தன்ணைப்பில் ஆட்கொண்டும் -கம்பத்தில்
    கந்தனொடு காளி கடவுள்கள் ஆடினர்
    சந்தம் அருணகிரி சொல்….(52)

    சந்திரன் வெண்குடையாய் சூரியன் கைவிளக்காய்
    இந்திரன் பூக்களை இறைத்திட -வந்து
    கரவலம் தந்து கயிலாயம் சேர்க்கும்
    கிரிவலம் வந்தோர்க்(கு) அறம்….(53)

    குளித்து மடியாய் வெளுத்த நுதலாய்
    உளத்தில் அரனை உடுத்தி -களைத்த
    நிறைகர் பிணியாய் நிதானம் காத்து
    வரைசுற்ற வாழ்வில் வளம்….(54)

    வந்த மகனை வரவேற்க கோவிலில்
    தந்தை இருந்தான் தனியாக -சிந்தை
    ஒருமித்(து) இருவரும் ஒன்றியதின் சாட்சி
    அறுவத்தி மூவராம் அங்கு….(55)

    ‘’அய்யா குடுமியைக் கொய்யவா’’ கேட்டவனை
    அய்யனின் சித்தமாய் ஆதரித்து -அய்யன்
    குளப்படியில் குந்தி கெளபீணம் சூடி
    தலைபடிந்து ஏற்றார் துறவு….(56)

    நாவிதர்க்கு நன்றிசொல்லி சாவிதந்த பொம்மையாய்
    கோவிலுக்கு சென்றோன்மேல் கொட்டியது -வாவியாய்
    வானத்து மேகமொன்று ஞானிக்(கு) அபிஷேகமாய்
    நானொழித்த மேனி நனைத்து….(57)

    ஆயிரங்கால் மண்டபத்தில் போயமர்ந்து தேகமாம்
    நோய்மறந்து ஆழ்ந்திருந்தான் நிஷ்டையில் -வாய்மலர்ந்து
    சேஷாத்ரி சாமிகள் பாசத் துடன்’’சின்ன
    சேஷாத்ரி’’ என்றளித்தார் சீர்….(58)

    உய்யும் தவம்கலைக்கும் பையன்கள் தொந்திரவால்
    அய்யன் இடமாற்றம் செய்தனன் -மையிருளாம்
    சாதா ரணர்களால் செல்ல முடியாத
    பாதாள லிங்க குகைக்கு….(59)

    பூரான் கறையான் புழுபூச்சி பல்லிகள்
    ஆரா அமுதாய் அவரெதிர் -பாரா
    உடலை ருசித்தும் கடவுள் நினைப்பில்
    ஜடமாய் இருந்தான் ஜெயித்து….(60)

    ஜாடியில் வைத்த சிவகடாட்ச ஊறுகாய்
    வாடாது பாதாள வாயிலுக்கு -மூடியாய்
    தானுகந்தான் தன்னை தவத்திரு சேஷாத்ரி
    ஞானியின்கால் ஞானம் அறிந்து….(61)

    வேதாளப் பையன்கள் விக்கிர மாதவத்தை
    சேதாரம் செய்ய சகியாது -பாதாளம்
    போன முதலியார் பார்த்தார் இருளிலும்
    ஞானக் கதிரவனை நன்கு….(62)

    பிராமண சாமியை பத்திரமாய்த் தூக்கி
    கிராமத்து மக்கள் கொணர்ந்து -பராமரிப்பாய்
    புண்ணான மேனிக்கு பாலா பிஷேகமாய்
    உண்ணா முலையாள் உணவு….(63)

    வாகன மண்டபத்தில் வில்வ மரத்தடியில்
    பூகனக்கும் நந்த வனப்புதரில் -மோகனமாய்
    யாகாவா ராயினும் நாகாத்(து) இருந்தனன்
    தேகான்ம பாவம் தொலைத்து….(64)

    சிவகங்கைத் தீர்த்தம் கவனத்தை ஈர்க்க
    அவனங்(கு) இலுப்பை இடத்தில் -தவசிங்கம்
    ஒத்திருந்த வேளையில் மெத்தப் படித்தவராம்
    உத்தண்டி சீடர் உறவு….(or)….
    உத்தண் டிநயினார் உற்று….(65)

    உய்யென்று வீசி உறையவைக்கும் காற்றுக்கு
    கையென்ற கம்பளியால் மெய்போர்த்தி -அய்யன்
    நயினார் நவில்கின்ற நூல்களின் ஞான
    வெயிலில் விடுத்தார் விறைப்பு….(66)

    வாசித்தார் கைவல்யம் வாசிஷ்ட யோகங்கள்
    ஆசிரிய ருக்கே அறிவுரையாய் -தேசிகன்
    கூடலில் பெற்றதைக் கற்றான் அருணையில்
    தேடல் தொலைந்தபின் தேர்வு….(67)

    தேவாரம் ஓதும் திருவருணைத் தம்பிரான்
    நாவார வேண்ட நயினாரும் -ஏ,வாரும்!
    ஆசானே என்றுரைக்கப் பேசாது போயமர்ந்தார்
    வாசம் குருமூர்த்தம் வந்து….(68)

    தென்முகத்தோன் , நந்தி தொடர்ந்து சனத்குமாரர்
    மண்ணில் பரஞ்சோதி மெய்கண்டார் -சொன்ன
    சிவஞான போதத்தைச் சேர்ந்தகுரு மூர்த்தம்
    தவமானோர் தங்கும் தரு….(69)

    பழைய சினேகிதனைப் பார்த்தகுரு மூர்த்தம்
    உழலும் எறும்புகள் ஊர்ந்து -கழலைப்
    பிடித்து பகவானின் பேரருளை வேண்டி
    கடித்ததில் கூலி கரும்பு….(70)

    முக்காலி போட்டு முழுமுதலை அவ்வறையில்
    உக்கார வைத்தாலும் ஊர்வனகள் -நிக்காது
    அண்டைச் சுவரேறி அய்யனின் குண்டலினித்
    தண்டில் வடம்பிடித்த தாம்….(71)

    தம்பிரான் பாலெண்ணை தேனென்(று) அபிஷேகச்
    சொம்புடன் வந்தங்கு சேர்ந்ததை -எம்பிரான்
    கண்டு சுவற்றில் கரியால் ‘’இதற்க்கென்றும்
    தொண்டிதுவே’’ என்றார் தடுத்து….(72)

    கோலத்து மாவுண்ண கூடும் எறும்புகளாய்
    பாலொத்த சேயை பெருந்திரளாய் -கால்இத்துப்
    போனாலும் கண்டார் , பிராமண சாமிமுகம்
    கோணாமல் வீற்றிருந்தார் கொலு….(74)

    அய்யன் குளப்பிள்ளை ஆனை முகனார்க்கு
    பையனாய் வாழ்ந்த பழனிசாமி -மெய்யன்பு
    பூண்டு ரமண பணியே பலனாக
    ஆண்டிருபத் தோரிருந்தார் அங்கு….(75)

    ஆன்மா ருசிகண்ட ஆனை ரமணர்க்கு
    ஊண்மா ருசியொழிந்து ஓய்ந்ததால் -வான்மேவும்
    ஊட்ட அமிழ்தையும் உண்பார் அடியார்தம்
    கூட்டான் சோறில் கலந்து….(76)

    கண்ணணைக்கும் ஆர்வமும் பெண்ணைக்கும் ஆசையும்
    உன்ணிணக்கம் சோற்றில் உழலுவதால் -சொன்னார்(அன்னமய)
    அழகாய் குமர குருபரர் கூற்றைப்
    பழக பகவான் பிறப்பு….(77)

    விடாக்கண்ட அய்யரென்ற வேங்கட ராமன்
    தொடாக்கண்டு அன்னத்தை , பேச்சு -கொடாக்கண்டர்
    ‘’வேங்கட ராமன் திருச்சுழி’’ என்றெழுதி
    ஆங்கிலத்தில் வைத்தார் அவர்க்கு….(78)

    குருமூர்த்தம் ஆண்டி ஒருமுகூர்த்தம் ஆண்டார்
    வரும்கூட்டம் வானாய் விரிய -அருகிருந்த
    தோப்பில் தனிமையைத் துய்த்தார் தனிமரமாய்
    தாப்பாள் தவத்தைத் திறந்து….(79)

    பரத்தை அறிந்த பகவான் ரமணர்
    மரத்துப் பரணில் மறைந்து -புறத்தை
    மறந்து வசித்தார் மலையாள சீடர்
    புரிந்த பணிவிடை பார்த்து….(80)

    மத்யான வேளையில் மாந்தோப்(பு) இனிமையில்
    அத்யந்த சீடன் பழனிசாமி -அத்யாத்ம
    ராமா யணத்தை ரசிக்க, மலையாள
    நாமா வளியுணர்ந்தார் நன்கு….(81)

    மதுரையில்
    ————–
    எங்கெங்கு தேடியும் வெங்கட ராமனின்
    தங்குமிடம் காணாத தாயார்தன் -சங்கடத்தில்
    சோர்ந்த சமயத்தில் சஞ்சீவி போலங்கு
    சேர்ந்தவர் சொன்னார் சுபம்….(82)

    ராவண நானொழித்து கோவண ஆடையில்
    சாவன மெய்யடக்கி சாந்தத்தில் -மேவிட
    மாமரத் தோப்பில் மாதவனாய் வேங்கட
    ராமனைக் கண்டேனென் றார்….(83)

    அருணை
    ———-

    சித்தப்பா நெல்லையப்பர் சோணையில் கண்டது
    சித்தப்பன் ஆன்மனின் சிந்தையாய் -எப்போதும்
    எங்கும் இருப்பதை இங்கே இழுத்தான்ம
    சிங்கத்தோல் போர்த்திய சிசு (or) சேய்….(84)

    மதுரையில்
    ————-

    தவமென்ன செய்தனை தாயழ கம்மே
    சிவனன்ன சேயை சுமக்க -அவனிருப்பு
    எல்லையிலா ஆன்மாவின் ஏகாந்த ஊரிலென்று
    நெல்லையப்பர் சொன்னார் நெகிழ்ந்து….(85)

    மகனெனப் பார்த்தேன் மகானாகப் பார்த்தான்
    புகழாய் இருக்கானுன் பிள்ளை -தகவலை
    மைத்துனர் சொன்னார் மதுரை மதனிக்கு
    பொய்த்தது தாயெதிர் பார்ப்பு….(86)

    அருணையில்
    ————–

    பிச்சை எடுக்க பிராமண சாமியை
    லஜ்ஜை தடுத்திட லேசாக -முச்சந்தி
    வாசியாய் கையேந்தி ஊசிய கஞ்சியை
    நாசிமுகர நானொழித்தார் நன்று….(87)

    உண்டு முடித்து உதறி கரங்களை
    சிண்டில் தடவிவெகு சந்தோஷமாய் -பண்டிதர்கள்
    வந்திருக்க சக்கர வர்த்திபோல் சந்திப்பார்
    தன்செருக்கை வென்று திமிர்ந்து….(88)

    பேசா மடந்தை பகவானை ஈசான்ய
    ஆசான் மடாதிபதி அன்போடு -வா,சாமி!
    தட்டாதே என்று தலைவாழை போட்டளித்தார்
    கட்டாய பிட்சை கொடுத்து….(89)

    மதுரையில் வந்த மரண பயமாம்
    புதிரவிழ்ந்து ஆன்மா பதிலாய்க் -குதிர
    எமாதி கணங்கள் எதிர்வர அஞ்சும்
    சமாதியில் நின்றார் சுகித்து….(90)

    வந்த அனுபூதி தந்த அமைதியில்
    எந்த சாதனையும் ஏற்க்காது -தந்தை
    அரனார் அகநானூற் றில்மூழ்கி விட்டொழித்தார்
    புறநானூ ரில்வாழ் பிறப்பு….(or)
    அரனக நானூற்றில் ஆழ்ந்தவர்க்கே விட்டார்
    புறநானூ ரில்வாழ் பொறுப்பு….(91)

    இடைச் செருகல்
    ——————-
    கண்ணன் கதைக்கு கிடைத்த சுகமுனிபோல்
    அண்ணல் பகவான் அவதார -எண்ணத்தை
    நால்வருணம் தாண்டிய பால்பிரண்டன் தீட்டினான்
    நூல்வடிவில் நானார் நிகழ்வு….

    கலப்பிலா ஆன்மக் கலப்பற்று ஊறும்
    உலப்பிலா ஆனந்தத் தேனை -அலுப்பிலா(து)
    உண்டு களித்தவரை ஊர்மக்கள் மொய்த்திட
    கொண்ட குகன்பவழக் குன்று….(92)

    ஈரைந்து மாதம் இடுப்பு வலியேற்று
    பாரம் தனைசுமந்து பெற்றவள் -சீரைந்து
    ஈசன் மலைமுடியில் ஆசை மகனிவரின்
    வேஷம் தனைக்கண்டாள் வேர்த்து….(93)

    சுருட்டையில் கண்ணன் சிகையொத்த ராமன்
    பரட்டையில் இன்று பகவான் -இருட்டை
    பகலாக்கும் தெய்வ மகனாக ஏற்க
    இகலோக தாய்க்கோ இருள்….(94)

    அழுதாள் அடம்பிடித்தாள் அங்கிருந்தோர் காலில்
    தொழுதாள் அழைத்தாள் துணைக்கு -எழுதிடும்
    ஏதேனும் என்றுரைத்தார் காதோரம் பச்சையப்பர்
    மாதா மனம்குளிர மாற்று….(95)

    பெற்றெடுத்த தாய்மல்லும் பச்சையப்பர் வாய்ச்சொல்லும்
    முற்றும் துறந்த முனிவரை -சுற்றிவர
    புன்முறுவல் பூத்து பகவான் எழுதினார்
    பின்வரு மாறு பணித்து….(96)

    பகவான் உவாச
    —————-

    சுவரென்ற சக்தி சுழற்றித் திருப்பும்
    கவணெறி வேகத்தில் கர்மம் -அவரவர்
    ப்ராரப்தம் என்று பணிந்தேற்றுக் கொள்வீர்
    வேறர்த்தம் எல்லாமே வீண்….(97)

    நடவாத ஒன்றை நமது முயற்சி
    நடத்தா ததுபோல் நிகழ்வும் -தடையாய்
    எவனென செய்தும் எழுவது திண்ணம்
    மவுனக் கிடக்கையே மட்டு….(98)

    செயல்புரியும் மோகம் ,செயல்பலன் தாகம்
    அயலாக எண்ணல் தியாகம் -வயலாம்
    விசாரம் விடுத்து விழலான வாழ்வின்
    அசாதா ரணத்திற்க்கேன் அப்பு….(99)

    சிந்தை விளையாட்டு செப்ப வினையாகும்
    விந்தையாம் ‘’ நானார்’’ விசாரணை -வந்ததோர்
    ஆணவத்தைக் கூண்டில் அமர்த்தி வினவிட
    நானவஸ்த்தை ‘’நான்’’என்பான் நைந்து….(100)

    மாயநான் மார்பில் மணிகட்ட பூனையாம்
    தூயநான் தோன்றிடும் தூண்பிளந்து -சீயமாய்
    ஆன்மா அதற்கிரை ஆனால் அதுஇறையாய்
    ‘’நான்’’போன நம்முள் நுழைந்து….(101)

    அன்பர்கள் காண்டம்
    ——————–

    தாய்வந்து போனதும் தட்சிணா மூர்த்தியிவர்
    வாய்திறந்து கண்டார் வெளியுலகை -போய்தினமும்
    பிட்சை எடுத்துண்பார் போதிப்பார் அன்பர்க்கு
    கொச்சை மழலையில் குரு….(102)

    விருபாட்சி தேவமுனி வீற்ற குகையில்
    அரசாட்சி செய்யவந்த அமலர் -திருநீற்றால்
    அங்கிருந்த மேடையில் லிங்கப் பிரதிஷ்டை
    தங்கக் கரங்களால் தொட்டு….(103)

    விதேகமுக்தி கண்ட விருபாட்ஷ தேவர்
    அதேகணத்தில் தற்சோதி ஆகி -சதாசிவத்துள்
    பாய்ந்த குகையில் பதினேழு ஆண்டுகள்
    வாழ்ந்த விருந்தினி வாய்க்கு….(104)

    அன்பர்கள் கூட்டம் அதிகரிக்க கட்டணம்
    வம்பர்கள் வாங்க விரும்பாத -நம்பவர்
    வேறுயிடம் செல்ல விருபாட்ஷி தேவனில்லா
    தேரடியாய் மாறவசூல் தீர்வு….(105)

    நானை ஜெயித்தவர்க்கு சேனை பரிவாரம்
    பானை பிடித்த பழனிசாமி -பூணும்
    அணிகலன் கோவணம் ஆஸனம் பாறை
    முனிகணமும் நாணுமிவர் முன்….(106)

    வீதி எறிந்த வெறும்தாள்கள் சேகரித்து
    ஆதிகுரு சங்கரர் ஓதியதை -ஆதரித்த
    சீடனுக்கு தட்ஷிணையாய் சீர்மலை யாளத்தில்
    ஏடெடுப்பார் ஏழ்மையை ஏய்த்து….(107)

    வாய்ஜபம் இல்லை வழுத்தலில்லை ருத்ராஷக்
    காய்முகம் இல்லை கழுத்தில்,மான் -பாய்விரிப்பும்
    இல்லை படுக்க இருந்தும் பரசிவ
    எல்லைக்கு காவல் இவர்….(108)

    மனத்திருடன் கையில் கனச்சாவி தந்து
    எனக்கென்ன என்றிருந்த ஏழை -தனிக்குகை
    இல்லத்தை மூடிவிட்டு செல்வமாம் ஞானமொடு
    செல்வாராம் பிட்ஷைக்கு சேர்ந்து….(109)

    கொள்ளைநோய்க் காலம் குடிபுகுந்தார் பச்சையம்மன்
    பிள்ளையாய் கோயில் பிரகாரம் -வெள்ளமாய்
    காவல் துறைக்கு கொடுத்ததை கொண்டவர்க்கு
    சேவகம் செய்தார் சமைத்து….(110)

    பங்கிட்டு உண்ண பிளேக்நோயால் அன்பர்கள்
    அங்கிட்டு செல்வதற்கு அஞ்சியதால் -வெங்கிட்டு
    ராமன்போல் உண்ட ரமணர் உடல்தேறி
    பீமன்போல் கொண்டார் பலம்….(111)

    பிணித்தொல்லை நீங்க பின்னர் பிறவிப்
    பிணித்தொல்லை நீங்க பகவான் -கனிச்சொல்லை
    ஆசையாய் கேட்கவரும் அன்பர்க்காய் மேற்கொண்டார்
    பேசும் விரதத்தைப் பூண்டு….(112)

    ஒன்றான ஞானம் ஒருநாளும் மாறாது
    கொன்று மனதைக் கொளுத்தியபின் -என்றார்
    மவுனம் கலைத்த மகரிஷியைக் கேட்க
    கவனம் கலையா சிவன்….(113)

    ஆனைவரும் முன்னே மணியோசை யாம்போலே
    நானறிந்த நம்மவர்க்கு முன்னமே -சோணையில்
    சென்றலைந்த சேஷாத்ரி சாமிகள் உற்சவராம்
    குன்றமர்ந்த மூலவர்க்கு காப்பு….(114)

    தாயார் மரகதம் தந்தை வரதராஜர்
    சேயாய்ப் புவிவந்த சேஷாத்ரி -மாயா
    அருள்சக்தி அம்சமெனில் அன்பே சிவத்தின்
    பொருளாம் ரமண பொருப்பு….(115)

    நடைபாதை பொம்மை நவநீதக் கண்ணன்
    கடைகாண சேயிவர் கேட்க -தடையின்றி
    தந்ததும் பொம்மைகள் தீர்ந்ததாம் விற்றுப்போய்
    அந்தக்கை தங்கக்கை ஆச்சு….(116)

    காசெறிந்து வீச கடைபுகுந்த சாமியை
    பேசா(து) எஜமானர் பார்த்திருப்பார் -மாசறு
    தங்கக்கை தொட்டு துலக்கியபின் தந்ததை
    அங்குண்பார் நாயோ(டு) அமர்ந்து….(117)

    எதிர்படுவோர் எண்ணம் எடுத்துரைக்கும் சாமி
    புதிர்பட மாந்தோப்பில் பார்த்தார் -‘’குதிருக்குள்
    அப்பன் இருக்கானா ? அப்படி என்னதான்
    இப்பயல் உள்ளத்(து) இயல்பு’’….(118)

    தன்னுணர்வு பெற்ற தவசீலர்க்(கு) எல்லாமே
    மண்ணில் பிரம்ம மலர்ச்சியென்று -சொன்னதாம்
    அன்னைக்கு கூடல் அறிவுரையாய் காஞ்சிக்கு
    அன்னைக்கு சேயாய் அமைந்து….(119)

    ‘’ என்னமோ சொல்றே எனக்கொண்ணும் தோணல
    பண்ணுவேன் பூஜை புனஸ்காரம்’’ -சொன்னபின்
    சேஷாத்ரி போட்டாராம் சாஷ்டாங்க சேவிப்பு
    மீசையில் மண்ணாய் மலைக்கு….(120)

    ரமணர் மனவாசி ராமசாமி அய்யர்
    சமணமிட்டு கேட்கையில் சொன்னார் -சமனமிவர்
    சேஷாத்ரி சிந்தையுள் சித்தராம், பித்தராய்
    வேஷாத்ரி சேட்டை வெளிக்கு….(121)

    சேஷாத்ரி சாமிகள் சித்தி தினத்தன்று
    ஆசான் அருகிருந்தார் அஞ்சலியாய் -நேசமிது
    நட்புறவா ? நன்றியா ? நல்லுணர்வா ? நாமறியோம்
    கட்புலன்கள் நீத்தார் கடன்….(122)

    தாளா வயிற்றுவலி தான்தீர தென்பழனி
    வேலா யுதன்மீது வர்ஷித்த -பாலாக
    உண்டர்த்த நாரி உடல்தேறி கந்தனின்
    தொண்டர்த்தம் கண்டார் தெளிந்து….(123)

    தீவனம் தேடிடும் ஆவினம்போல் அர்த்தநாரி
    மேவினார் அண்ணா மலைப்புரத்தில் -கோவணம்
    பூண்ட மகரிஷி வேண்டிய தென்பழனி
    ஆண்டவனாய்க் காட்சிதந்தார் அங்கு….(124)

    வந்தார் ரமணவழி வள்ளிமலை சாமிகள்
    சந்தத் திருப்புகழை சன்னதியில் -அந்தநாள்
    அர்த்தநாரி கூற அதைபகவான் கேட்டவர்க்கு
    அர்த்தமூற வைத்தார் அகத்து….(125)

    கூடி கிரிவலம் பாடி வருகையில்
    வேடச்சி காவல் வகுப்பினை -வாடி
    பசியுற்ற பக்தர்க்காய் பின்வரு மாறுரைப்பார்
    ருசியாய் ரமணர் ரசித்து….(126)

    ‘’எந்தெந்தா காவலனே ஏமேமி காவலனே’’
    சுந்தரமாய் ஸ்ரீபகவான் செப்பிட -மந்திரம்போல்
    இட்டிலி காவலனே கம்பளிச் சாமிசொல்ல
    சட்டினியும் வந்ததாம் சேர்ந்து….(127)

    நேச ரமணர்த்த நாரியை போவென்றார்
    ஆசிரமம் விட்டு அடிவாரம் -ஈசனின்
    இட்டமென்று போய்க்கண்டார் குட்டையில் சேஷாத்ரி
    கட்டிய வாறெருமைக் கன்று….(128)

    செங்கமல சேஷாத்ரி சேற்றில் புரண்டெழுந்து
    அங்கர்த்த நாரியைஆ ரத்தழுவ -எங்கெங்கும்
    வந்ததாம் சந்தன வாசம் திருப்புகழாய்
    எந்தரோம கானுபா வுலு….(129)

    சொச்சநச்சம் இல்லாது சொந்தங் களையிழந்த
    எச்சம்மா பாட்டி எஜமானர் -இச்சரிதை
    ஞானிக்கும் அங்கே தியானிக்கும் அன்பர்க்கும்
    வாயினிக்க இட்டாள் விருந்து….(130)

    கட்டிய கோவணமாய் கைகளில் செங்கல்லாய்
    கட்டுமான வேலையில் கண்டவரை -கிட்டவந்து
    ‘’கூலி!சொல் சாமியெங்கே?’’ கேட்க பகவானும்
    கேலியாய் செய்தார் குறும்பு….(131)

    எல்லாம் அறிந்தவர் சொல்லாமல் சொன்னாராம்
    நல்லாப்போய் தேடிடுவீர் ‘நான’னறிய -பொல்லாத
    இச்செய்கை ஏனென்ற எச்சம்மா கேள்விக்கு
    அச்சாரச் சொற்கள் அடுத்து….(132)

    ‘’நானொழித்த நானேபோய் நான்தான் பகவானென்(று)
    ஏன்மொழிய வேண்டும்சொல் எச்சம்மா’’ -வீணன்றோ
    நெற்றி யிலெழுதி நாமம் சுமப்பதும்
    பற்றென்றார் பாட்டியைப் பார்த்து….(133)

    தத்தெடுத்த செல்லம்மா பெத்தெடுத்து செத்திட
    வித்ததற்கு நாமம் ரமணனென்று -முத்தரிடம்
    கூறிக் கொடுத்திட பேரன் பகவான்கண்
    நீரினால் ஞான நனைப்பு….(134)

    தொடரும் அமைதிக்குத் தொய்வாம்இக் கண்ணீர்
    இடருமக்கு எப்படி என்றோர்க்(கு) (or)
    இடரருளை நீக்காதா என்றோர்க்(கு) -உடனே
    மடையா! அருளிங்கு மாபெரும் அன்பு
    அடைக்கும்தாள் இல்லை அதற்கு….(135)

    வினைகள் பயனாய் விளைவது கர்மம்
    அணைப்பும், அடியும் அதனால் -நினைத்திருப்பாய்
    ஈசனை நன்றியாய் இவ்வாழ்வில் வெல்வோம்நாம்
    வாசனை போக்கு வரத்து….(136)
    முப்பத்தெட்(டு) ஆண்டுகள் மூதாட்டி எச்சம்மா
    உப்பையுண்(டு) ஆண்டார் உடல்பகவான் -இப்பணிக்கு
    ஈடாம் சபரி இராமனுக்கு செய்தது
    வீடுற்றாள் தொண்டால் விரைந்து….(or)
    வீடாம் பதவிகிழ விக்கு….(137)

    சொத்தினை விற்றதில் சேர்த்த பணம்நூறு
    உத்தண்டி யார்குரு தட்ஷிணையில் -புத்தகமாய்
    செந்தமிழில் சங்கர சூடா மணிபதிப்பு
    தன்கரத்தால் செய்தார் தவம்….(or)
    தன்கரத்தால் செய்தார் தொகுப்பு….(138)

    காட்சிகள் ,காணும் கருவிழிகள் ,காணுதல்
    ஆட்சியில் சிக்காத ஆண்மகன் -சாட்சியாய்
    சந்திப்போர் புந்தியில் சிந்தித் தவருள்ளம்
    வந்திக்கும் தெய்வமா வார்….(139)

    காத்மண்டு பாண்டே கருவறை லிங்கத்தில்
    ஆத்மார்த்த அண்ணல் அருள்முகத்தை -பார்த்தவர்
    நூற்றுக் கணக்கில் நிமலர் சிரித்தவண்ணம்
    தோற்றம் கொடுக்கத் திகைப்பு….(140)

    சாத்திர வாரிதி சம்ஸ்கிருத சாகரம்
    பாத்திரம் பொங்காத பாற்கடல் -நாத்திறன்
    காவிய கண்டர் கணபதி சாஸ்திரி
    சாவிலான் பாதம் சரண்….(141)

    விருபாட்ஷிப் பொந்தில் வினாயகர் போன்ற
    சொரூபத்தைக் கண்டகண்டர் சொன்னார் -அருளாட்சி
    முக்காலம் செய்யும்இக் கோலம் கணேசர்
    சுக்லாம் பரதரம் செப்பு….(142)

    வெள்ளை அரைத்துணியில் பிள்ளை பிரம்மமாய்
    விள்ளல் நிலாவின் வசீகரத்தில் -உள்ளோன்
    மனம்புத்தி, சித்தம், மமகாரம் நான்கை
    இனம்கண்டு வென்றோன் இவன்….(143)

    பாதாதி கேசமாய் வேதாந்தம் பார்த்திருந்தும்
    ஆதார குண்டலினி ஆஸ்ரயித்தும் -மேதா
    விலாசத்தால் ஆசுகவி விற்பன்ன ராயும்
    கலாசித்தர்க்(கு) இல்லை களிப்பு….(or)
    கலாசித்தர் நெஞ்சில் குறை….(144)

    காண்டீபர் காவிய கண்ட கணபதி
    வேண்டினார் கண்ண பகவானை -ஆண்டவா
    ஏட்டுச் சுரைக்காய்நான் ஏகப் பழம்பொருள்நீர்
    காட்டும் கனியுதிர் கா….(or)
    காட்டும் கனியாகும் கற்பு….(145)

    ஜபதபம் செய்தேன் சபைதனில் வென்றேன்
    உபமானம் இல்லா(து) உயர்ந்தேன் -அபலையாய்
    கெஞ்சினார் கண்டர் கருணைக் கடலிடம்
    விஞ்சும் தவப்பயனை வீழ்ந்து….(146)

    பகவான் உவாச
    —————

    நானென்ற ஓசை நவில்வது யாரென்று
    ஊணுறக்கத் திற்க்கீடாய் உன்னிப்பாய் -காணென்றும்
    ஒன்றிவிடும் உள்ளம்நான் ஊறும் இடத்தினில்
    மன்றமது மெய்த்தவக் குன்று….(147)

    விழிப்பு, கனவு, விழுங்கும் சுழுத்தி
    கழிக்கும் அதுவே’நான்’ காண்பாய் -உழைப்பாய்
    உடலான்ம பாவம் ஒழிக்கும் விதத்தை
    அட!ஆன்மத் தேடல் அதற்கு….(148)

    வெட்டியான்போல் நின்று விசாரணைக் கோல்கொண்டு
    சுட்டும் எழும்பும் சவமனம்மேல் -பட்டென்(று)
    அடித்திட ‘நானும்’ அடித்திடும் ‘நானார்’
    தடிக்கொம்பும் சாம்பலாம் தீக்கு….(149)

    மந்திர ஓசையுள் ளெங்கிருந்து தோன்றுதென்று
    எந்திரமாய்ப் பார்க்க எழுவாய்க்குள் -வந்தடங்கும்
    உந்தன் மனது ஒடுங்கிட மிஞ்சிடும்
    விந்தை மவுனம் விளைந்து….(150)

    ஆடி அசைந்திடும் ஆனை துதிக்கையாய்
    நாடிச் சலித்திடும் நம்மனப் -பேடிக்கு
    சங்கிலியாய்த் தந்திடுவீர் சத்வ குணங்களை
    பொங்கியெழும் பாரான்மா பூத்து….(or)
    அங்கொளிரும் ஆன்மா அலர்ந்து….(151)

    உப்புபுளி காரம் உணவில் தவிர்த்திடுவாய்
    செப்பிறைவன் நாமம் , சரணென்று -ஒப்படைப்பாய்
    உன்னையொரு மூர்த்தியிடம் உள்ளே தியானித்து
    தொன்னைமனம் நெய்யான்மா தொப்….(152)

    காவிய கண்டர் கருணைக்கை தூரிகையால்
    ஓவியம் போலவர்முன் உட்கார்ந்தார் -மேவிய
    சந்தேகம் ஓய்ந்திட சஞ்சலம் மாய்ந்திட
    தன்தேக பாவம் தொலைப்பு….(153)

    இராமனம் வென்று மராமரம் போல்வாழ்
    பிராமண சாமிபெயர் சீடர் -சிறாருரைக்க
    வேங்கட ராமனுக்கு வேறுபெயர் கண்டரிட்டார்
    ஈங்கிவர் ஸ்ரீரமணர் என்று….(154)

    திருவொற்றி யூரில் தவமிருந்த போது
    உருவொத்து வந்த ரமணர் -சிரமொத்தி
    தன்சாரம் தீட்சையாய் தந்தாராம் கண்டர்க்கு
    மின்சாரப் பாய்வு முனிக்கு….(155)

    சுமாரோர் மாதத்தில் செய்ய நினைத்தகண்டர்
    உமசஹஸ்ரம் பெய்தாரோர் நாளில் -தமாஷாக
    ‘’என்ன கணபதி சொன்னது போதுமா’’
    கண்சிமிட்டிக் கேட்டார்சத் குரு….(156)

    பச்சையம்மன் கோயில் பகவான் இருக்கையில்
    உச்சிமுகர்ந்து சென்றதாம் நட்சத்திரம் -இச்சரியை
    ஆறுமுறை ஆக அங்கிருந்த சாஸ்திரியார்
    ஆறுமுகன்தான் என்றார் அடித்து….(157)
    விருபாட்ஷி மாடத்து வேழன்மேல் வெண்பா
    உருவாச்சு ஓர்நாள் பகவான் -திருவாக்கால்
    வேடிக்கை வெண்பாவை பாடி கணபதிக்கு
    கோடிட்டுக் காட்டியதைக் கேள்….(158)

    பகவான் சொன்ன வெண்பா
    —————————

    பிள்ளையாப் பெற்றவனைப் பிச்சாண்டி யாக்கியெங்கும்
    பிள்ளையாப் பேழ்வயிற்றைப் பேணினீர் -பிள்ளையான்
    கன்னெஞ்சோ மாடத்துப் பிள்ளையாரே கண்பாரும்
    பின்வந்தான் தன்னைநீர் பெற்று….(159)

    மாடத்துப் பிள்ளையே வேடன் விருத்தனாம்
    நாடகத்தில் நீரண்ண னானீர்காண் -பூடகமாய்
    அன்னைக்(கு) அறிந்தனை பின்னை மறந்தனை
    தொன்னைக்குள் நெய்யான தால்….(160)

    பெற்றதனால் ஆயபயன் பாமர ஞானிக்கு
    கற்றுக் கொடுத்தார் வடமொழி -முற்றும்
    மறந்தகுரு சீடனை மிஞ்சினார் நூல்கள்
    பிறந்தமொழி தன்னில் பெயர்த்து….(161)

    உபாசித்த வித்தை உடலை வதைக்க
    கபாலம் அனலாய் கொதிக்க -ப்ரபோவென்று
    கூவிட கண்டருச்சி தீவிடும் குண்டலினி
    தாவிட வைத்தாராம் தொட்டு….(or)
    தாவிடச் செய்தார் தணித்து….(162)

    ஆன்மீகம் தாண்டிய ஆத்மார்த்த கேள்விக்கு
    வான்மேகம் போல்பதில் வர்ஷிக்க -‘’நான்’’மீக
    பாதையைக் கண்டர் பதிவெடுத்து ஸ்ரீரமண
    கீதையாய் செய்தார் குறித்து….(163)

    சிவப்பிர காசமென்ற சைவத்துப் பிள்ளை
    தவப்பிர காசத்தில் தோய்ந்து -உவப்புற
    தானார்வக் கேள்விக்கு தந்த பதில்களால்
    ‘’நானார்’’நூல் தோன்றியதன் நாள்….(164)

    ஈரேழு கேள்விக்(கு) இவர்பதில் சொல்கையில்
    ஈரேழு ஏழாம் இவர்வயது -மாறாத
    மோனத் திருந்த மகானன்று மண்ணிலே
    மோனத் திருந்த மகானன்று மண்ணளைந்தார்
    ஞானத்தைக் கோலமிட்டார் நன்கு….(or)
    ஞானத்தைக் கோலம் இழைத்து….(or)
    ஞானத்தைக் கோலம் நுழைத்து….(165)

    பிள்ளைக்குக் கல்யாணப் பிள்ளையாய் மாறிடும்
    கள்ளம் கருத்ததிவர் உள்ளத்தில் -வெள்ளை
    முனியிடம் கேட்க முனைந்து வருகையில்
    வினையிடம் விட்ட(து) இனி….(166)

    நூற்றுக் கணக்கில் நிலவொளி வீசிட
    தோற்றம் ஸ்படிகத் திரளாக -சீற்றப்
    பிரகாச ஜோதி பகவானாய்க் கண்டுசிவப்
    பிரகாசம் கொண்டார் ப்ரமிப்பு….(167)

    பேரின்பம் கண்டதில் பிள்ளைவாள் மாறினார்
    வேறின்பம் வேண்டாம் ரமணரடி -யாரின்பம்
    போலுலகில் இல்லையென்று பெற்ற அனுக்கிரக
    நூலகவல் தந்தார் நிறைந்து….(168)

    பிணிவாசி ஆன மனவாசி அய்யர்
    குணவாசி ஆக குகையில் -மனவாசம்
    விட்டான்ம மேடையில் வீற்றோனை வேண்டினார்
    கட்டாயம் காப்பாற்றக் கேட்டு….(169)

    தயிர்சாதம் ,சுண்டல், புளியோ தரையை
    வயிறுவாத அய்யரின் வாயில் -துயர்நீங்க
    போட்டு விரட்டினார் வாட்டும் வயிற்றுவலி
    ஆட்டம் முடிந்ததாம் அன்று….(170)

    தீர்த்தர் வயிற்றுவலி தீர்த்தபின் அய்யர்க்கு
    கீர்த்தனைகள் கற்றுக் கொடுத்தாராம் -ஈர்த்தவர்
    சீனியுண்ண தந்தாராம் சம்பளமாய் சங்கீதம்
    ஞானியவர் நேசம் நெகிழ்வு….(171)

    கதராடை பூண்ட காந்திய வாதி
    பதறாது பக்த்ர்க்(கு) உதவும் -இதவாதி
    ராமனாதன் ராமன் ரமணர்க்(கு) அனுமனாம்
    சாமதான பேததண்ட சாது….(172)

    ராமனாத ப்ரம்மசாரி ராத்திரி பகலாக
    தாமுகந்து நூற்பாராம் தக்களியில் -கோமணமாய்
    தேசூரின் மஸ்தானிடம் தைக்கக் கொடுப்பாராம்
    ஆசான் மகிழ்வார் அணிந்து….(173)

    அருணா சலம்பிள்ளை ஆக்கன்(று) இரண்டை
    ஒருநாள் கொடுக்க ரமணர் -முரணாக
    ஆ!சிரமம் சொல்லாமல் ஆசிரமம் ஏற்றதாம்
    ஆசிரம ராமனாதர் அன்பு….(174)

    ஈன்ற பொழுதின் பெரிதுவந்தாள் லட்சுமிதாய்
    சான்றோன் பகவான்பால் சேர்ந்ததால் -தோன்றின்
    புகழோடு தோன்றும் பசுவுக்கு ஞானி
    புகலாக வாழ்ந்தார் பிறகு….(175)

    ஆங்கிலேய ஹம்ப்ரீஸ் அமானுஷ்ய ஆர்வமுற்று
    தூங்கிட சொப்பனத்தில் தோன்றியதாம் -ஆங்கொரு
    குன்றும், குளமும், குகையும், குருவொருவர்
    நின்று தவமாய் நிலைப்பு….(176)

    கண்ட கனவினை விண்டு வரைந்தவர்
    தொண்டர் நரசிம்மய் யாகுரு -கண்டருக்கு
    ஓவியத்தைக் காட்ட உடனழைத்துச் சென்றாராம்
    காவியத்தைக் காட்ட குகைக்கு….(177)

    ‘’உன்னையவர் பார்க்கையில் உன்கண் இருக்கட்டும்
    அன்னையவர் பார்வை அகலாது’’ -சொன்னமுனி
    தெம்பளிக்க தெய்வத்தின் அன்புவிழி ஆனந்தம்
    ஹம்பரீசின் வாக்கில் அடுத்து….(178)

    ஆழ்மன ஆற்றல் அவர்கண் வழியாக
    ஊழ்கண வெள்ளத்(து) உவமையாய் -சூழ்ந்திட
    மெய்யது கோயிலாய் தெய்வம் சுடர்விட்டு
    உய்வதைக் கண்டேன் உணர்ந்து….(179)

    நானார் விளக்கம் நமக்கே புரியாது
    ஆனாலும் சேய்கள் அவர்முன்பு -தூணாக
    ஆழப்புதைந்து காக்கும் அமைதியில் கண்டுகொண்டேன்
    வாழுமவர்க்(கு) இல்லை வயது….(180)

    பெண்ணழகு பூவழகு என்பர் பகவானின்
    புன்னகையைக் காணாத பேதைகள் -என்மனம்
    மட்டும் அறிந்ததோர் மர்மத்தைக் கூறினார்
    பட்டென்(று) எனதுள்ளே பாய்ந்து….(181)

    புத்தகத்தில் பாம்பாய் புகுந்து பிறரெண்ணம்
    புத்தகமாய்ப் பார்த்துப் படிக்கவல்ல -புத்தரவர்
    ஹம்ப்ரீஸ் வினவிட அன்போ(டு) உரைத்ததினி
    எம்பிரான் வாக்காய் எழுத்து….(182)

    பகவான் உவாச
    ——————

    ஞானம் நிரந்தர கானம் குழந்தைக்கு
    ஏனென்றால் ‘நானங்’(கு) எழவில்லை -பேணிடுவீர்
    பிள்ளைப் பருவத்தை பேசா விருப்பத்தை
    வெள்ளை மனதை வலிந்து….(or)
    உள்ளின் உவப்பை உகந்து….(183)

    உனக்குதவும் செய்கை உலகளாவும் சேவை
    பிணக்கிதில் நீவேறாய்ப் பாரை -நினைப்பது
    ஆன்மாவில் ஒன்றிட ஆளே(து) உதவிட
    வீண்பேதம் காணல் விலக்கு….(184)

    கண்ணனும் ஏசுவும் பண்ணிய அற்புதங்கள்
    என்னளவில் ஆகுமா என்கிறீர் -முன்னமவர்
    செய்யவந்த செய்கையை செய்வதாய்ச் செய்யவில்லை
    கைவந்தோர்க்(கு) ஈதியற்கை காண்….(185)

    சித்தி வலைதனில் சிக்கிடாது நீந்திடுவாய்
    சத்திய மெய்ஞான சாகரத்தில் -உத்தியாய்
    பூரண சரணத்தில் பூத்திருப்போர்க்(கு) இல்லைகாண்
    காரண காரியக் கட்டு….(186)

    மனவிளிம்புக்(கு) அப்பால் மனமுவந்து சென்று
    குணமளிக்கும் ஆன்மாவில் கூடு -நினைவளிக்கும்
    புத்தியோடு நில்லாமல் சத்தியத்தைப் பார்த்திட
    கத்தி விசாரணையால் கொத்து….(187)

    சூதாடி உள்ளமதன் மீதாடும் எண்ணமுடன்
    வாதாடி மாய்த்துமனம் வென்றிடுவாய் -ஆத்தாடி
    சித்தம் சிவமாகும் பித்தம் பிணமாகும்
    அத்தை உரைத்தல் அறிது….(188)

    கும்பிடும் தெய்வம் கிருத்துவோ கண்ணனோ
    நம்பிட நாமதுவாய் எம்பிடுவோம் -என்பதற்கு
    மாதிரியாய் வாழ்ந்த மகான்விடை பெற்றகன்றார்
    பாதிரியாய் ஹம்ப்ரீஸ் பணிக்கு….(189)

    சிவய்யாவும் மற்றும் சிலரே இருந்த
    அவைக்குள் நுழைந்ததும் அங்கு -தவய்யா
    நேரவர் உட்கார்ந்தார் நேரம் ஒருமணி
    யாரவர் பாரதி யார்….(190)
    அங்கிருந்த போது அறியார் ரமணரவர்
    பொங்குதமிழ் ஞானப் புயலென்று -எங்கிருந்தோ
    வந்தார் ,இடைச்சாதி நானொழித்த ராமனுக்கு
    தந்தார் அணிலாய்த் தமிழ்….(191)

    வாழ்க மஹரிஷியார்,வாழ்க பாரதியார்
    வாழ்க தமிழ்த்தவ வல்லார்கள் -வாழ்க
    திருவருணைக் குன்று திருவல்லிக் கேணி
    குருவருள் கொஞ்சுதமிழ் காப்பு….(192)

    crazy mohan
    Aug 29, 2018, 8:27 AM (22 hours ago)
    to crazy, bcc: me

    Translate message
    Turn off for: Tamil
    சுந்தர காண்டம்
    —————
    அருந்தவப் பிள்ளை அருகிருக்க அன்னை
    திரும்பவும் வந்தவள் நோயால் -வருந்திட
    வேண்டுதல் வேண்டாமை தாண்டியவர் ஆண்டவனை
    வேண்டினார் வெண்பா விடுத்து….(193)

    பகவான் தன் தாயார் குணமாக
    சொன்ன நான்கு வெண்பாக்களில் ஒன்று
    ————————————–
    காலகா லாவுன் கமல பதம்சார்ந்த
    பாலன் எனைஈன்றாள் பாலந்தக் -காலன்தான்
    வாரா வகையுன்கால் வாரிசமே காட்டுவா
    யாராயினும் காலனுமே யார்….(194)
    (வாரிசம்-தாமரை)

    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    எதிராக வந்த எமனை -குதிகாலால்
    மாய உதைத்த மகாதேவா மைந்தனென்
    தாயை அவன்நெருங்கத் தடு….(195)

    சாகா வரம்பெற்ற சேயால் உரமுற்று
    போகாத தாயாரைப் புண்படுத்த -ஆகாதோர்
    ‘’இங்கில்லா விட்டால் இடம்வேறு எங்கேனும்
    தங்கிடலாம் வாவென்றார் தாய்க்கு’’….(196)

    ஆகாதோர் அச்சமுற்று அண்ணல் அடிபணிந்து
    போகாதீர் என்று புலம்பிட -த்யாகேசன்
    ஆதரிக்கத் தானே அமர்ந்துள்ளேன் நானென்றப்
    போதுரைத்தார் புன்முறுவல் பூத்து….(197)

    முன்காவி சங்கரர் பின்கரும்பு பட்டினத்தார்
    தன்தாயார்க்(கு) ஈமத்தீ தந்தனரே -என்கோவில்
    பாசமிகு அன்னை புழங்கும் இடமென்றார்
    கோசல ராமனாய்க் கோன்….(198)

    அன்னைக்கு மிக்கதோர் ஆலயம் ஏதுதந்தை
    சொன்னசொல்லுக்(கு) ஈடாய் சுருதியுண்டோ-பின்னர்
    பிதாவுக்குப் போடாத பிட்ஷையை ஏற்க
    கதாபுருஷன் கொண்டார் கடுப்பு….(199)

    ராமனாத சாமி ரமணபிட்ஷை ஆனபின்பு
    தாமதமாய் தந்தைக்(கு) உணவளிப்பார் -கோமணத்தார்
    அப்பனுக்கு இட்டபின்பு அப்புறம் மீந்ததையிச்
    சுப்பனுக்கு போடென்றார் சோறு….(200)

    அப்பனாய் லட்ஷணமாய் அன்பு மகள்பசிக்கு
    உப்பிடாத உன்ஞானம் எப்பவும் -தப்புடா
    சுப்புரா மய்யா சிசுதெய்வ ரூபேண
    செப்பினார் சம்சார சத்து….(201)

    தலைகாயும் வெய்யில் தரையெல்லாம் முட்கள்
    மலைப்பாதை சுற்றும் மடையா -இளைப்பாறி
    சும்மா இருந்து சுகம்காண மாட்டாதுன்
    இம்மாம் தொலைவு இழுக்கு….(202)

    கல்லினில் முள்ளினில் காய்கின்ற வெய்யிலில்
    பிள்ளைநீ வந்தது பேதமை -சுள்ளி
    பொறுக்கும் கிழவி உருவத்தில் வந்து
    பொருப்புத் தகப்பன் உரைப்பு….(203)

    திட்டாய் இருந்தாலும் தீக்கண் இறையோனின்
    திட்டம் இதுவாய்த் தெளிந்து -மட்டம்
    அடித்தார் மலைசுற்றல் அன்றுமுதற்க் கொண்டு
    படித்தார் இகத்தில் பரம்….(204)

    போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
    பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
    எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
    தொழுத விதம்தான் தவம்….(205)

    முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
    முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
    சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
    கீரைக் கிழவியாம் காண்….(206)

    வயணமாய் அன்னம் வடித்தஅம் மூவர்
    அயனரி தீவாய் நயனன் -பயணமாய்
    பூமி உகந்தகுரு சாமிக்(கு) உதவிட
    நேமி,நூல், சூலத்தின் நட்பு….(207)

    சதியனு ஸூயா துதிசெய்ய ,வந்த
    பதிமூவர் தத்தகுரு பாலர் -அதுபோலே
    தத்த ரமணருக்கு தாய்மை பரிந்தனர்
    பித்தனயர் மால்பாட்டி போல்….(208)

    மலங்கா ரமணர் முதலியார் பாட்டி
    அலங்காரத் தம்மாவின் அன்பாம் -விலங்கில்
    அகப்பட்(டு) இருமுறை அன்னத்தை உண்டு
    உகப்பார் அவள்வார்த்தைக்(கு) உற்று….(209)

    பானையும் ஒன்று பகவானும் ஒன்றுதான்
    ஸ்நானமும் சோறுமதில் ஆனபின் -ஞானமாம்
    பானை பிடித்திடும் பாக்கிய சாலியாய்
    ஊனைக்கீ ரையாள் உதிர்ப்பு….(210)

    பசலையாம் கீரை பகவான் அகத்துக்
    குசலமாம் கீரைக் கிழவி -அசலமாய்
    நின்றாள் இறந்தும் நிமலர் வளர்த்தஆக்
    கன்றாய்ப் பிறந்தாள் கனகு….(211)

    பரத இரத்தினம்மா பால முனிக்கு
    விரதமாய் சோறிடுவாள் வாயில் -உறுதியாய்
    அண்டம் மறந்தமர்ந்து ஆன்மா லயித்ததால்
    கண்டம் இறங்காதாம் காற்று….(212)

    தாசியா னாலுமவள் ஆசிரம வாசியே
    பாசப் படிதாண்டா பத்தினி -ஆசியாய்
    ரத்தினம் மாளின் ரகசிய பக்திக்கு
    இத்தரையில் இல்லையென்றார் ஈடு….
    இத்தரையில் ஈடே(து) இயம்பு….(213)

    கம்மாள மீனாட்சி அம்மாள் அதிகாரம்
    கும்மாள மிட்டதைக் கூறியவர் -‘’அம்மா!
    பகவானை வாழும் பரிதாபம் இந்த
    பகவானுக் கேதான் பகல்’’….(214)
    (‘பகலை’ வெளிச்சம் என்ற வகையில்
    பயன்படுத்தியுள்ளேன்….okதானே….!)

    மடிந்தால் மகனுன் மடியில்தான் என்று
    கிடந்த அழகம்மை கொண்ட -அடம்தன்னை
    பாரா முகமாய் பகவான் இருந்தடக்க
    நீராய்ச் சொரிந்தாள் நிலத்து….(215)

    அம்மா அழுகைக்கும் ஆகாத் தியத்திற்கும்
    சும்மா இருந்தபின் செப்பினார் -எம்மால்
    உனக்குமட்டும் சேயாய் உறவாடல் ஆகாது
    தனக்கெல்லாப் பெண்களுமே தாய்….(216)

    கோசலையாய் ராமன்தாய் கைகே கியைமாற்ற
    ஆசிரமம் சேர்ந்தாள் அழகம்மை -தேசுடை
    காவி அணிந்துமகன் காரியாம் யாவிலும்
    மேவிக் கரமளித்தாள் மாது….(217)

    அன்னையன்(று) இட்ட அடுப்புதீ வேள்வியில்
    இன்னமும் ஆசிரமம் உண்கிறதாம் -அண்ணனுடன்
    தம்பிநாக சுந்தரமும் தங்க நிரஞ்சனனாய்
    தும்பிகள் சேர்ந்தனவாம் தேன்….(218)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180829-Govinda pattabhishekam 9×12 watercolour 100dpi Arches cover page lr

    ’’அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
    மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
    காட்டிய கேசவ் கவி”….!

    மந்தாகினி -ஆகாஸகங்கை….!

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • ”ரமணாயனம்’’….!அமுத சுரபியில் வெளிவந்தது….!

     

    ரமணாயனம்’’….!
    ————————–
    ”பால காண்டம்”
    ————————

    திருவா திரையில் திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு….(1)

    பேரூழி காலத்தில் பாராழி புக்காது
    நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
    திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை கருக்குழியில் கர்மம் கழித்து….(2)

    மகப்பேறு கண்ட முழியற்ற மாது
    சுகப்ரஸவம் ஆனதும் சொன்னாள் -தகப்பனார்
    சுந்தரம் அய்யரிடம் ஜோதியைக் கண்டதாய்
    வந்தசேய் வானத் துறவு….(3)

    அன்னாளில் சுந்தரம் அய்யரின் முன்னோர்க்கு
    சன்யாசி இட்டதோர் சாபத்தால் -பெண்ணாசை
    துச்சமென்றோர் பிள்ளை துறவறம் பூண்டது
    இச்சிறுவ னால்வரமா யிற்று….(4)

    முன்நாக சாமியும் பின்நாக சுந்தரமும்
    அண்ணனாய் தம்பியாய் ஆயினர் -கண்ணான
    தங்கை அலமேலு, நான்கில் ஒருவராய்
    வெங்கட ராமன் வளர்ப்பு….(5)

    ஆறுவது கோபம் அறியாத ராமன்தன்
    ஆறா வதுவயதில் அப்பனுடன் -ஏறுக்கு
    மாறாக பேசி மனைதுறந்தான், கொண்டான்பின்
    கூறாமல் கோவணக் கட்டு….(6)

    தந்தையிடம் சொன்ன தகாத வசனத்தால்
    நொந்த தனயன் நெகிழ்ச்சியால் -உந்த
    சகாயவல்லித் தாயார்முன் சென்றமர்ந்து வண்டாய்
    முகாரவிந்தம் மொய்த்தான் மகிழ்ந்து….(7)

    கோயில் குளத்தில் குளித்தபின் ஊரெல்லை
    வாயில் கவுண்டின்யம் வற்றிட -சாயும்
    பொழுதுவரை நீந்தி பிடித்துவைத்த நீரை
    மொழுகிடுவான் காளையார் மேல்….(or)….நீரால்
    தொழுதிடுவான் காளையார் தாள்….(8)

    தொடக்கப் படிப்பு திருச்சுழியில் பின்னர்
    தொடர்ந்தது திண்டுக்கல் தங்கி -முடிக்கும்முன்
    வீட்டில் தகப்பன் விபரீதம், ஞானிக்கு
    ஏட்டுச் சுரைக்காய் எதற்கு….(9)

    தகப்பன் மறைவால் திகைத்த குடும்பம்
    மிகப்பெரும் துக்கத்தை மீள -புகுந்தது
    தாய்மா னாமதுரை சேயிருவர் சொக்கப்பன்
    தாய்மீனாள் கூடும் தலம்….(10)

    வைகையில் நீச்சல், வலியாரை வீழ்த்திட
    கைவைக்கும் மல்யுத்தம், கோல்சுற்றல் -பொய்யாம்
    உடலை வளர்த்தான் உலகை அழைக்க
    கடலின் அலையாய் குதித்து….(11)

    சகாவான அப்துல் வகாபுடன் சேர்ந்து
    சகோதரன் போலூரைச் சுற்றும் -மகானிவன்
    அத்தனை ஜீவனும் ஆன்மன்தான் என்றுரைக்க
    ஒத்திகை பார்த்தான் உணர்ந்து….(12)

    சொப்புக் கரங்களால் சித்தி இடப்போகும்
    அப்பளத்து மாவை அவன்தொட -உப்பலாய்
    பொங்கிப் பொரிந்திடுமாம் வெங்கட ராமனை
    ‘’ தங்கக்கை” என்பர் துதித்து….(13)

    எங்கிருந்து வரேளென்று அங்கிருந்த அன்பரிடம்
    வெங்கட ராமன் வினவிட -எங்கவூர்
    அண்ணா மலையாம் அருணா சலமென்று
    சொன்னாராம் மந்திரச் சொல்….(14)

    இதய குகையில் இதுநாள் வரையில்
    பதுங்கிக் கிடந்த புலியை -புதியவர்
    அண்ணா மலையென்(று) அறிமுகம் செய்திட்டார்
    உண்ணா பசிக்கோர் உணவு….(15)

    காலம் கனிந்திடும் வேளை வரும்வரை
    காளை கிடந்தது கன்றாக -நாளும்
    அருணா சலத்தப்பன் ஆட்கொள்வான் என்று
    மரணாவஸ் தையில் மகன்….(16)

    நாயன்மார் போல்நானும் தூயன்பைத் துய்த்திடும்
    மாயம்நம் வாழ்வில் மலராதா -ஓயாமல்
    சேக்கிழார் சொன்ன சிவனடியார் போலிருக்க
    நோக்கியவன் நேர்ந்திட்டான் நோன்பு….(or)
    நோக்கினான் நேர்ந்திடும் நாள்….(17)

    புத்தகம் கையிலே புத்தியோ மெய்யிலே
    பித்தனைப் போல்வானம் பார்த்திருந்து -அத்தன்
    புலனாகக் காத்ததில் போனதாம் கல்வி
    இளமையில் கல்லாய் இவன்….(18)

    அராவணை நம்பி இராவணன் தம்பி
    மராமரம்போல் தூங்கி மகிழும் -சிறானிவன்
    எட்டாத பேரின்ப தொட்டிலேறப் போவதற்க்காய்
    கட்டுண்டான் சும்மா கிடந்து….(19)

    நரசிம்ம சாமி ஒருசமயம் கேட்க
    கரிசனமாய் ‘நான்’ஒழிந்த கூத்தை -சிரிசிரிக்க
    சொன்ன பகவானின் சொற்பானை சோற்றிலினி
    என்நா ருசித்தளவு எள்….(20)

    சொக்கப்ப நாய்க்கர் மதுரை சந்தில்இ
    லக்கம் பதிணொன்னில் லீலையாய் -மிக்கதோர்
    அச்சமாம் காலனை துச்ச மெனவுதைத்த
    அச்சிறுவன் தாளே அரண்….(21)….(காப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்)….

    பகவான் உவாச
    ——————————
    சித்தப்பா வீட்டில்நான் செத்தப்பா ஆனதும்
    முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை -வத்தாத
    ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை
    சாவதனை ஏற்றேன் சகித்து….(or)
    சாவதனில் கொண்டேன் சுகம்….(22)

    வந்தது சாவு வரட்டுமே சாவென்றால்
    எந்தஎது சாகிறது என்றவினா -தந்த
    பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
    களத்தில் இறந்தது கூற்று….(23)

    வந்த இறப்பை வரவேற்று வாசியின்றி
    அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய் -இந்த
    உடலை எடுத்து சுடலை நெருப்பில்
    விடுவதைப் பார்த்தேன் வியந்து….(24)

    உடல்போன பின்பும் உயிர்போன பின்பும்
    கடல்போல என்னிருப்பைக் கண்டேன் -மட’நான்’போய்
    தான்குவித்த குப்பையை தானே களைந்தது
    நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….(25)
    ————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180828-VatsalyamAla 9×12 strathmore 160g 100dpi wcol-charcoal-conté lr

    அன்னையைக் காப்பி அடிக்கின்றார், ஆவையும்
    தன்னையும் வாத்ஸல்யத் தார்கொண்டு(மாலை) -கன்னையும்(கன்னுக் குட்டியை)
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டுகிறார் முராரிமணி
    வண்ணனுக்(கு)இம் மாதம் வளர்ப்பு(ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்த கண்ணன் கோகுலாஷ்டமி வருது)
    …..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180827 New Forever A4-wcol 100 dpi lr

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்….

    Share
  • கடவுளைக் கண்டேன்….!

     

    காணாத காட்சியில் நானாக நானின்றி
    தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக
    கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான்
    நெய்யிருக்கும் பாலில் நுழைந்து….(1)….!

    எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும்
    பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும்
    செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும்
    தெய்வதம் கண்டேன் திகைத்து….(2)….!

    ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும்
    வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும்
    கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில்
    கடவுளைக் கண்டேன் களித்து….(3)….!

    காலை மழலையில் ,மாலை கிழவனில்
    சேலை இரவு சுகத்தில் -தோலாம்
    உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன்
    இறையின் இரவல் இருப்பு….(4)….!

    சேற்றில் முளைத்திடும் செங்கமலம் ,வீசும்நற்
    காற்றில் கலந்திடும் கந்தகம் -ஏற்றம்
    இகழ்ச்சியின்றி ஈசன் இருப்பதைக் கண்டேன்
    மகிழ்ச்சியில் துக்கம் மறந்து….(5)….!கிரேசி மோகன்….!!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    160225 Lakshmi Hayagreeva 24×32 watercolour lr

    கீழ் கொவள செட்டிப் புண்ணியத்தில் கோயில் கொள்ளப் போகும் ‘’அயக்ரீவர்’’ வந்தார் எதிர் வீட்டுக்கு….அவரை ஏளப் பண்ணும்
    பாக்கியம் அடியேனுக்குக் கிட்டியது….!

    கீழ்கொவள வீடில் குடியேறப் போகின்ற
    ஆழ்கல்விக்(கு) ஈசா அயக்ரீவா -கூழ்கவலை
    போக்கதனைப் போக்க பிராட்டியுடன் ஏளினோய்
    காப்பெனக்கு உந்தன் குளம்பு….!

    ஊர்செட்டிப் புண்ணியத்தில் உய்யும் அசுவமே
    மார்தட்டிச் சொல்லும் மடையன்நான் -சீர்கொட்டும்
    வெண்பாக்கள் யாத்துன்மேல் வாழும் வரமருள
    பெண்பால் பாரதியே பார்….!

    நிகமாந்த தேசிகன் நாவில் அமர்ந்து
    புகழ்வாய்ந்த பாதுகையைப் பாடி -அகமகிழ்ந்த,
    எண்ணியதை நல்கும் ஏற்றம் தரும்செட்டிப்
    புண்ணியத்தில் வாழும் பரி….!

    புண்ணியச் செட்டியில் புண்ணாக்(கு) அளித்தனரோ
    நண்ணிய(து) ஏனங்கு நாலுகாலில் -கண்ணனே
    பாரதப் போரில் பழகிய நன்றியோ
    நீரதைப் போலின் நிலத்து….!

    கொள்ளுக்(கு) அடங்காய் கவிதே சிகன்கூறும்
    சொல்லுக்குள் பாயுமுயர் ஜாதியே -கல்விக்கு
    வாய்த்த கடவுளே வாணி அரிதாரா
    போய்த்தவம் செய்யப் பழக்கு….!

    கட்டுக்(கு) அடங்காது செட்டிக்குப் புண்ணியத்தை
    கொட்டுமருள் கல்விக் குதிரையே -குட்ட
    குளம்பால் தலையில் குருவே வருக
    தளும்பா அறிவைத் தர….!

    புல்லும், படிகநீரும், புண்ணாக்கும் கொள்ளும்நான்
    அல்லும் பகலும் அளித்திடுவேன் -மெல்லும்
    தலம்செட்டிப் புண்ணியத்தில் தங்கும் பரியே
    பலனெட்டெட் ஆயகலை போடு….!

    சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
    நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
    வருவாய் அருகே குருவாகிக் காட்டு
    பரிமேல் அழகா பரிவு….!கிரேசி மோகன்….!

     

    Share
  • திருவோணத் திருமால்….!

     

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….!

    சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
    வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
    வாத புரீசன் வடமதுரா மன்னவன்
    கீதகோ விந்தந்தாள் காப்பு….!

    களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ
    குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன்
    ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி
    ஓணத்தில் கொள்வோம் உவப்பு….!

    வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த
    தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து
    வாமனக் குட்டனை வாத புரீசனை
    நீமனக் கட்டில் நிறுத்து….!கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180825 – MAya darshan to Markandeya. wcol -A4 100dpi lr

    வேறார்வம் கொள்ளாது ஆராப் புலனடக்கி
    நாரா யணனை நினைப்பதே -சாராம்சம்
    அன்நிலைக்கு செல்ல அனுபூதி தந்திடும்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    ஆழியில் தூங்கியொரு நாழி முழித்துலகை
    ஊழியி லுண்டு களைத்தவா -வாழிநீ
    உன்னை நினைந்து ருகியுறங்கு மென்னைநீ
    உன்கனவில் காண உறங்கு….கிரேசி மோகன்….!

    Share