Category: ஏனைய கவிஞர்கள்

  • முத்தான முத்தல்லவோ!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்தமுத்தல்லவோ

    அன்று மலர்ந்த பாடல்கள் அத்தனையும் மனித வாழ்க்கையோடு ஒன்றிக்கிடந்தவை.  அதனால்தான் மனம் இன்னும் அப்பாடல்களை அசைபோட்டுக் கொண்டுள்ளது.  பிறப்பு முதல் நடப்புகள் அத்தனையையும் தன்னுள் கொண்டு தளிர்நடை போடும் பாடல்கள் இன்பரசம் ஊட்டும் வகையில் இன்றும் இதயம் தொடுகின்றன.  காற்றிலே மிதந்துவரும் அந்த கானங்களைக் கேட்க பிரியப்படுகிறோமே ஏன்?

    ஓரு திரைப்படம் எடுக்கப்படுகின்ற தருணத்தில் பாடல்கள் அமைவது பல்வேறு சூழல்களை உள்ளடக்கிய விஷயம்.  கவிஞரின் கைவண்ணம் அந்தப் பாடல் காட்சிக்கேற்றவாறு.. கதைக்கருவை பிரதிபலிக்க வெளிப்படுவது சிறப்பு!  இதோ.. இந்தப் பாடல்..  இன்று மதியம் வேண்டும் இரண்டு மணிக்கு என்று முன்பகல் 12மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  மெல்லிசை மன்னர் கவிஞரை அழைத்து அவசரத்தை வலியுறுத்த.. அம்..என்னும் முன்னும் உம் என்னும் முன்னும் வார்த்தைகள் வந்து விழும் என்று சொல்லப்படும் இரட்டையர்கள்.. கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் வந்துதிர்த்த முத்தான பாடலிது!

    தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சிறுவயது பெண்ணுக்கு .. பிறந்தநாள்!  எல்லோரும் இணைந்து கொண்டாடும் அந்த மருத்துவமனையில்..  திரைப்படம் பார்ப்போர் மனதில் இழைந்தோடும் சோகத்திற்கு இடையே வருடும் தென்றலாய் வருகிறது இப்பாடல்!

    வார்த்தைகள் கைமுளைத்து வண்ணம் காட்டுகின்றன!  எழில்கொஞ்சும் மழலைமுகம் பால்சிந்துதோ.. பவளமல்லிகை நான் என்றே பவனிவந்ததோ!  தாலாட்டுப் பாடல்களின் தாயானவன் .. கவிஞன்.. இதோ இந்த வசந்த ரோஜாவை வர்ணிக்கும் அழகில் கொஞ்சம் மயங்குங்கள்!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இன்னொரு பொக்கிஷம்  – நெஞ்சில் ஓர் ஆலயம் – அதில் மலர்ந்த பாடல் ..

    முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ

    கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

    (முத்தான)

    சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ

    செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

    மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

    பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

    (முத்தான)

    வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

    தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

    மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

    (முத்தான)

    பாடல் : முத்தான முத்தல்லவோ

    குரல் : P.சுசீலா

    வரிகள் : கண்ணதாசன்

    இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    http://www.youtube.com/watch?v=7MOdsFe6_6c

    Share
  • தமிழுக்கும் அமுதென்று பேர்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தமிழுக்கு அமுதென்று பேர் – பாரதிதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி.. பி.சுசீலா – கே.ஆர்.விஜயா

    நம் தாய்மொழி தமிழின் அழகை, இனிமையை,பெருமையை இதைவிட வேறெந்தக் கவிதையிலும்ஒருசேர உயர்த்திச் சொன்னவரில்லை என்னும் பெருமையைத் தட்டிச் செல்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

    குறிப்பாக பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில்பயன்படுத்தப்பட்ட பாரதிதாசன் கவிதையிது! கதையின்நாயகி வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் -தமிழை நேசிக்கின்ற நெஞ்சம் தனக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

    பாடும் குயிலாய் தமிழ்த்திரையிசையில் பவனிவரும் பி.சுசீலா அமுதையே பொழிந்து தந்திருக்கிறார். அழகிய குழந்தைக்கு மேலும் அழகு சேர்க்க ஆபரணங்கள் அணிவிக்கும் அன்னையைப் போல் தாயுமானவர்கள் இருவர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி..

    பொங்கும் கடலென பூரித்து எழுகின்ற சங்கத்தமிழ் முரசமன்றோ.. பாவேந்தர்! தங்குதடையில்லா தமிழினை.. தமிழ் உணர்வினை.. தமிழ் மரபினை.. வருகின்ற தலைமுறைகளுக்கு உரமேற்றி வைத்த கவிதையிது!

    சொற்கள் எல்லாம் அவரிடம் ஏவல்செய்ய அணிவகுத்துநிற்க.. தமிழே கடலாகி.. அவர்தந்த முத்துக்கள்தான்அவர்தம் படைப்புகள் என்பதில் வியப்பென்ன?

    தமிழை நேசிப்பதும், சுவாசிப்பதும், வாசிப்பதும்இவர்தம் வழியென்றாக..அதன் புகழை எடுத்தியம்பச்சொன்னால்.. தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்என்றும்..அறிவுக்குத் தேன் என்றும்.. கவிதைக்கு வயிரத்தின்வாள் என்றும்.. உயிருக்கு நிகர் என்கிறார்..

    பாவேந்தரைப்போல் ஒரு கவிஞரை தமிழ் உலகம் காணாதிருந்தால் எழுச்சியும், இன உணர்வும், மொழிப்பற்றும் இன்றைக்கு உள்ள அளவு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி! புரட்சிக்கவிஞன் என்றால் புதுவைதந்த பாரதிதாசன் என்பதற்கு இப்பாடலே முரசறையும்!

    தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்

    தமிழுக்கு அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.
    தமிழுக்கு நிலவென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நிர்
    தமிழுக்கு மணமென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர்
    தமிழுக்கு மதுவென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
    பயிருக்கு வேர் .

    தமிழ் எங்கள் இளமைக்கு பால்
    ஆஆஆஆஆஆஆஆஆ
    தமிழ் எங்கள் இளமைக்கு பால்
    இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
    புலவர்க்கு வேல்
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வாண்
    இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
    சுடர் தந்த தேன்

    தமிழ் எங்கள் அறிவுக்கு தோல்
    இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்
    வயிரத்தின் வாழ்
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    Share
  • கனவுகளே.. ஆயிரம் கனவுகளே..

    கவிஞர் காவிரி மைந்தன்

     

    கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..- கவிஞர் நா. காமராசன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

     

    · கவிஞர்நா. காமராசன்

    · கனவுகளே.. ஆயிரம்கனவுகளே..·

    நினைவுகளும் கனவுகளும் ஒன்றுக்குள் ஒன்று ஒன்றானவை. நிழல்களும் நிஜங்களும் போல! நினைவுப் பிரதேசங்களின் நீட்சியாக சில நேரம் கனவுப் பிரதேங்கள் அமைவதுண்டு! எண்ணக்கனவுகளில் வண்ணங்களிருந்தால் எழுகின்ற கனவுகள் ஆயிரமோ?

    · வரிவரியாய்வாரிவழங்கும்கவிவள்ளல்பரம்பரையில்.. தன் சிந்தனைச் செம்மையால் தலைநிமிர்ந்த புதுக்கவிதைப் பிதாமகன் நா.காமராசன் ஆவார். இவரெழுதித் திரையில் மிதந்த கானங்கள் ஒருசிலதான்! அவற்றுள் ஒன்று இது எனலாம்!

    · கற்பனை கொடிகட்டிப் பறக்க காதலின் ராஜ்ஜியம் நடக்கிறது பாருங்கள்! கவித்துவபாணியில் மலர்ந்த கற்பகத்தருவா இந்தப் பாடல்!

    · மக்கள்திலகத்துடன் கதாநாயகி லதா இணைய நீதிக்குத்தலைவணங்கு திரைப்படத்தில் டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் மற்றுமொரு மகோன்னதப் படைப்பை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வார்த்திருக்கிறார்.

    · மானுடவாழ்வின் ஜீவநதி காதல் என்பதால் அன்பின் சங்கமம்நடைபெறும்! என்னுயிர் நீயென உன்னுயிர் நானென உறவின் தத்துவங்கள் பிறக்கும்!

    · வழக்கமான பாணியில் எம்.ஜி.ஆர் பாடல்களில் கனவுக் காட்சிகளுண்டு! வண்ண வண்ண ஆடைமாற்றங்கள் உண்டு! எழுதித்தாருங்களேன் ஒரு கனவுப்பாடலாக ஒரு காதல் பாடலை என்று கேட்டமாத்திரத்தில்..

    · பொங்கிவந்த தமிழமுதை பூப்போன்ற வார்த்தைகளால் அங்குலம் அங்குலமாய் அழகியல் ஆராய்ச்சி நடத்தி என்றென்றும் நம் இதயத்தில் நிறைந்த இனியபாடல் பிறந்ததோ?

    · கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என்

    கண்மணியை இங்கு வரச் சொல்லுங்கள் கொஞ்சம் வரச் சொல்லுங்கள்

    கனவுகளே ஆயிரம் கனவுகளே காதல் தேவனின் தூதர்களே என் காதலனை

    இங்கு வரவிடுங்கள் கொஞ்சம் வர விடுங்கள் (கனவுகளே)

     

    · நகக்குறி வரைகின்ற சித்திரமோ அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ

    · முகம் என்று அதற்கொரு தலைநகரோ விழிகள் மூடிய கோட்டைக் கதவுகளோ இதழ் என்ற மலர் மட்டும் விரியட்டுமே அங்கு இதயத்தின் வண்டுகள் பறக்கட்டுமே கைவளைவிலங்குகள் நொறுங்கட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே அங்கு காதலின் சிறகுகள் உயரட்டுமே (கனவுகளே)

    · உடை என்ற திரைமட்டும் விலகட்டுமே இன்ப உடல் எங்கும் நாடகம் நடக்கட்டுமே உறவென்ற தேர் இங்கு ஓடட்டுமே அதில் ஊடலின் கொடி ஒன்று அசையட்டுமே நிலவென்ற தீபமும் ஒளிரட்டுமே அதில் நித்திரை இரவுகள் எரியாட்டுமே காதலில் கவிதைகள் வளரட்டுமே ஒருகாவியம் தொட்டிலில் தவழட்டுமே ஒரு காவியம் தொட்டிலில் தவழட்டுமே…

     

    · காமதேவனின் கோட்டைவரை.. படையெடுப்பு நடத்திய கவிஞரும் ஒரு காம ராசனே!

    http://www.youtube.com/watch?v=78RAATdmyIw

    Share
  • வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞர்கா.மு.ஷெரீப்

    · எத்தனையோ திரைப்பாடல்கள் நம் மனதைத் தொடுகின்றன. இன்னும் சில பாடல்கள் மனதில் நிறைகின்றன. தொடுகின்ற பாடல்களில் வரிகள் சுகமாயிருக்கும்! நிறைகின்ற பாடல்களில் அர்த்தங்கள் நிரம்பக்கிடைக்கும்!

    · வெறும் கற்பனைப் பூக்களை விற்பனை செய்யாமல், கருத்து முத்துக்களை அள்ளிவழங்கிய பெருமையை இந்த ஒற்றைப்பாடலில் ஒருவர் தட்டிச்செல்கிறார்.

    · அட.. விவரிக்க வேண்டியிராத வைரங்களைச் சொற்களாக்கி, எதார்த்தமான வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டுகின்ற கவிஞர்! இப்பாடல் எழுதிய காலம் சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்குப் பின்னரும் இன்றைக்கும் பொருந்துகின்ற ஜீவாம்சம் தெரிகிறது பாருங்கள்!

    · எளியவார்த்தைகளைமட்டும் பயன்படுத்தி இன்னும் சொல்லப்போனால், நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொற்களைவைத்து இவர் பட்டியலிட்டுள்ள அனுபவப்பதிவுகள் மானுடவாழ்விற்கு என்றைக்கும் தேவைப்படுகின்றன!

    · வாழ்ந்தாலும்ஏசும்தாழ்ந்தாலும்ஏசும்

    வையகம்இதுதானடா..

    வாழ்ந்தாரைக்கண்டால்மனதுக்குள்வெறுக்கும்
    வீழ்ந்தாரைக்கண்டால்வாய்விட்டுச்சிரிக்கும்
    இல்லாதுகேட்டால்ஏளனம்செய்யும்
    இருப்பவன்கேட்டால்நடிப்பெனமறுக்கும் (வாழ்ந்தாலும்ஏசும்..)

    பண்பாடுஇன்றிபாதகம்செய்யும்
    பணத்தாசையாலேபகைத்திடநினைக்கும்
    குணத்தோடுவாழும்குடும்பத்தைஅழிக்கும்
    குணம்மாறிநடந்தேகொடுமையைவிளைக்கும்

    (வாழ்ந்தாலும்ஏசும்..)

     

    · படம் : நான்பெற்றசெல்வம் இசை : ஜி. ராமனாதன்

    · பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன் பாடலாசிரியர்: கா.மு.செரிப்

    · கவிஞர் கா.மு.ஷெரீப் என்னும் கவியுள்ளத்திலிருந்து உருகிய வெள்ளமிது! எக்காலத்திற்கும் ஏற்றபாடலாய் – கேட்டு ரசித்த பாடலாய் நில்லாமல் மெய்யுணர்வால் மேனிசிலிர்த்த பாட்டு! ஜி.இராமனாதன் இசையில் இது நான் பெற்ற செல்வத்திற்காக விளைந்த பாடல்! ஏழிசைவேந்தர் டி.எம்.செளந்திரராஜன் குரலில் நம் இதயங்களில் நிறைந்த பாடல்!

    Share
  • சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..

    கவிஞர் காவிரி மைந்தன்

    · பூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் கங்கை அமரன் இயற்றிய பாடலிது. வரிகள் எல்லாம் வசந்த விழா எடுத்து.. தாய்மையை வரவேற்கும் தலைவனையும் ..

    · தாய்மையைச் சுமக்கும் தலைவியையும் திரையில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்தம் பண்பட்ட நடிப்பில் பூத்த நந்தவனம் இந்தப் பாடல். செந்தில்நாதன் இயக்கத்தில்

    · உருவான இப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது.

    · கணவன் மனைவி தாம்பத்ய வாழ்வில் மிக முக்கிய கட்டமான தாய்மைப்பேறு நிலையில் இருவரின் அன்பு பரிமாற்றங்களை அழகாக அற்புதமாக படம் பிடித்து காட்டியமைக்காக இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

    · கண்ணைக் கவரும் குளிர்ந்த காட்சிப்படுத்தியமைக்காக ராஜ ராஜனும் (ஒளிப்பதிவாளர் ) கவனத்திற்கு வருகிறார்.

    · ஒவ்வொரு வரியிலும் உன்னத சொற்களைப் பயன்படுத்தி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ள கங்கை அமரன் .. எழுதிய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடல் என்று இதனைச் சொல்லலாம்.

    · இசை ஞானி என்று ஏன் அழைக்கிறோம் என்றால் .. இது தான் இசை.. இதுதான் இதயத்தை தொடும் இசை.. என்று இப்படம் முழுவதும் ஆறு பாடல்களிலும் ராஜாங்கம் நடத்தி இருக்கும் இளையராஜா இசையின் ராஜாவாகத் தெரிகிறார்.

    · மொத்தத்தில் இந்தப் பாடல் என்றைக்கும் சுகம் தரும் ரகம் .. ராகம்.. இதை தனது காந்தர்வ குரலில் வழங்கியிருக்கும் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா குரல்கள் ஒரு புதுவித அனுபவத்தை தருகின்றன என்றால் அது மிகையில்லை.

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
    கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

    அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
    அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
    இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

    மெல்லிய நூலிடை வாடியதேன்
    மன்மத காவியம் மூடியதேன்
    அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
    கீர்த்தனை பாடியதேன்.

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
    சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

    காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
    என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

    வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
    எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
    என் மகன் காவிய நாயகனே!
    என் உயிர் தேசத்து காவலனே!

    வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
    மானிடம் என் மகனே

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    படம்: பூந்தோட்ட காவல்காரன்
    இசை: இளையராஜா
    பாடியவர்: யேசுதாஸ். சுசீலா

     

    Sinthiya venmani from Poonthotha Kaavalkaran
    Share
  • வாராயோ வெண்ணிலாவே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    காதலர்கள் கொஞ்சி விளையாட இந்த வெண்ணிலா மட்டும்தான் காலகாலமாக இடம் கொடுத்து வருகிறது! எந்தக் கவிஞனும் சின்னக் குழந்தையாகிவிடுகிறான்.. நிலாவே உன்னைக்கண்டு! தூது விடுப்பதற்கும் நீயே சாலப்பொருத்தம் என்று சரித்திரம் பேசுகிறது! வட்டமுகம்காட்டி வான்வழியே உலா காணும் உன் வதனம் கண்டு சொக்கிப் போகாதவர்கள் யாரிங்கே? நீ சூரியனிடமிருந்து ஒளியைக் கடன்வாங்கியிருந்தாலும் உன் சுடர்மிகு ஒளிவெள்ளம் இன்பம் ஊட்டுவதால் இங்கே இரவுகளுக்குக்கூட கொண்டாட்டம்தானே! புரட்சிக்கவிஞர் முதல் பைந்தமிழர் பாசறை வழிவந்த எந்தக் கவிஞனும் உன்னைத் தொட்டுவிளையாட மறந்தவனில்லை! பட்டுக்கோட்டை கூட பாங்கான பாடல்தந்தான் அன்றோ.. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா? மூத்தவளா வெண்ணிலாவே.. என்ன அருமையான பாடல்!

    இதோ.. மற்றுமொரு வெள்ளித்திரைதந்த வெண்ணிலா பாடல்! அற்புத சுகமானது! ஆனந்த ரகமானது! நித்தமினிக்கும் இன்பத் திருவிழாபோல் நெஞ்சில் சந்தோஷ அலையடிக்குது! காதலனும் காதலியும்.. அட.. திரைப்படத்தில் கதாநாயகனும் நாயகியும் ஊடல் கொண்டு பாடும் பாடலாக.. உன்னை இடையே வைத்துக் கொண்டு! கற்பனை ராஜ்ஜியம் நடக்கும்போதெல்லாம் கண்டிப்பாக உன் பங்கு அதிகமிருக்கும் என்பார்கள்! பாட்டுத் தேரோட்டம் பாங்காக நடந்திருக்க.. பாடிய குயில்கள் இரண்டு.. ஒன்று.. ஏ. எம். ராஜா மற்றொன்று.. பி. லீலா !

    எஸ். ராஜேஸ்வரராவ் இசையமைப்பில் தஞ்சை ராமையா தாஸ் வரிகள் இதயம் தழுவிச் செல்கிறார்.. கவிதைபோல் ஒரு சில பாடல்கள்தான் திரையிசையில் அமையும்.. அந்த வரிசையில் இந்தப் பாடல் பொருந்தும்!
    கனகச்சிதமான இசையும் கவிதையும் கலந்தினிக்கும் கானா அமிர்தம் என்பேன் நான்!

    AMR:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதினான்
    அகம்பாவம் கொண்ட சதியால்
    அறிவால் உயர்ந்திடும் பதி நான்
    சதிபதி விரோதம் மிகவே
    சிதைந்தது இதம் தரும் வாழ்வே

    PL:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    வாக்குரிமை தந்த பதியால்
    வாழ்ந்திடவே வந்த சதி நான்
    நம்பிட செய்வார் நேசம்
    நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

    AMR:
    வாராயோ வெண்ணிலாவே

    தன் பிடிவாதம் விடாது
    என்மனம் போல் நடக்காது
    தன் பிடிவாதம் விடாது
    என்மனம் போல் நடக்காது
    தமக்கென எதுவும் சொல்லாது
    நம்மையும் பேச விடாது

    PL:
    வாராயோ வெண்ணிலாவே

    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    அனுதினம் செய்வார் மோடி
    அகமகிழ்வார் போராடி
    இல்லறம் இப்படி நடந்தால்
    நல்லறம் ஆமோ நிலவே

    AMR, PL:
    வாராயோ வெண்ணிலாவே
    கேளாயோ எங்கள் கதையே
    வாராயோ வெண்ணிலாவே

    வாராயோ வெண்ணிலாவே…

    Share
  • கண்போன போக்கிலே கால் போகலாமா?

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஐம்புலன்கள், ஆறாம் அறிவு என மனித ஜாதியை மகத்துவமாய் படைத்த இறைவன் ‘மனம்’ என்கிற ஒன்றையும் மறைமுகமாய் சேர்த்தனுப்பிவிட்டனன்றோ? பகுத்தறியும் குணும் மனிதனுக்கு இருந்தும் ‘ஆசை’ என்னும் வலைதனில் அகப்பட்டு அவன் படும் அவஸ்தைகள் பலவன்றோ?

    கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் நம்மில் வாழும் மனிதர்களைக் காணுகின்றோம். அனுபவ ரீதியாக ஒருவன் பட்டுத் தெரிந்து கொள்கிற பகிரங்க விஷயங்கள் பல உண்டு! அந்தப் பாடங்கள் அவன் மட்டுமே அறிந்தவையாகின்றன! ஆனால், திரைப்பாடல்களில் – கவிஞர்கள் தங்கள் சொல்லாற்றலால், இதுபோன்ற அனுபவ முத்திரைகளை, வாழ்க்கைப் பாடங்களை மெட்டுக்குள் கட்டிவைக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்கிறார்கள். அதுவும் மக்களின் இதயங்களில் இமயமாய் வீற்றிருந்த எங்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதப்படுகின்ற போது இதுபோன்ற முத்தான வரிகள் வந்து கொத்துக் கொத்தாக விழுந்தனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது! தத்துவத்தின் தடாகமாய்..இப்பாடல் காட்சியளிக்கிறது! பணம் படைத்தவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இசை தலைமை தாங்குகிறது. டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் நடித்த இந்தக் காட்சி – ஒரு நாகரீக விடுதியில் முற்றிலும் வித்தியாசமாக நடைபெறும் போது இப்படிக் காட்சியமைப்பு வெற்றி பெறுமா என்கிற வினாவிற்கு இப்பாடலில் உள்ள வரிகளின் வீரியம், வார்த்தைகள் தாங்கி வரும் அர்த்தங்கள், பின்னணி இசை என்கிற கூட்டணி மந்திரம் வெற்றியை விண்முட்டச் செய்திருக்கிறது. மகாத்மா காந்திஜி கையில் தடியடன் ஒற்றைப் பாதையில் நடந்துசெல்வதை நினைவூட்டிப் பாடல் தொடங்குகிறது!

    இந்தப் பாடலை பெரும்பாலோர் கவியரசு கண்ணதாசனின் பாடல் என்றே கருத.. அந்தக் கருத்தை ஆச்சி மனோரமா அவர்கள் கவிஞர் வாலி அவர்களை முன்னிறுத்திய மேடையிலேயே எடுத்தியம்ப.. பின்னர் நிறைவுரை ஆற்றிய கவிஞர் வாலி அவர்கள்.. கண்போன போக்கிலே கால் போகலாமா பாடல் நான் இயற்றியது.. ஆச்சி கூட.. இந்தப் பாடலை கண்ணதாசன் பாடல் என்றே கருதியிருக்கிறார்கள்.. அதிலே எனக்குள்ள சந்தோஷம் என்ன தெரியுமா.. என் பாடலைத் தங்கத்தட்டோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்களே தவிர, தகரத்தட்டோடு அல்ல என்று தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார்.

    கண்போன போக்கிலே கால போகலாமா..
    கால் போன போக்கிலே மனம் போகலாமா..
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

    நான்கு வரிகளுக்குள் இங்கே சொல்லப்படாத இலக்கியம் என்ன என்றே அறைகூவலிடத் தோன்றுகிறது!

    நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
    நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
    ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்…
    உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

    வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிடவா எவரும் சொல்லிவிட முடியும்? எத்தனைக் காலங்கள் கடந்தாலும் இந்த வரிகளில் உள்ள பொருள் மாறிவிடக்கூடுமா?

    புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
    புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
    முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

    நாகரீகத்திற்கு அர்த்தம் தெரியாத மனிதர்களுக்கான சவுக்கடி இந்த வரிகள்! இன்னும் என்ன சொல்ல என்று நினைத்த கவிஞர் அடுத்தவரிகளில் மேலும் சொல்லாட்சி நடத்துகிறார்!

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

    இதுபோல பாடல் புனைந்தோர்.. எல்லோருக்கும் பொருந்தும் இந்தவரிகள்.. கதையின் நாயகன்.. மக்கள் திலகத்தின் வரலாற்றில் பொன்னாய் மின்னுகிற வரிகளில் சேர்ந்து காட்சியளிக்கின்றன!

    3 Attachments

    kanpona pokkile.jpg

    kanpona.jpg

    MGR & Sowckar Janaki – Kanpona Pokkile – Panam Padaithavan

    Share
  • என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே….

     
    கவிஞர் காவிரி மைந்தன்

     

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! காதல் மன்னன் ஜெமினி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாட்டு! கற்பனைச் சிறகை விரித்து காதலின் சாம்ராஜ்ஜியத்தைத் தன்னாலும் கட்டியாள முடியும் என்று பட்டுக்கோட்டையார் எழுதி வைத்த பாட்டு! சமுதாய புரட்சிகர கம்யூனிஸ சித்தாத்தங்களை உள்ளடக்கிய பாடல்களின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் உள்ளக்கண் திறந்த பாடலிது என்று கூட சொல்லத்தோன்றுகிறது!

    பெண்ணை உவமையிட்டு போற்றி மகிழும் தமிழ் உலகம்! இம்மண்ணில் சொல்லப்பட்ட உவமைகளுக்கு நிகராக வேறெந்த மொழியிலும் பெண் பாராட்டப்படவில்லை. எங்கோ இருந்தாலும் எம் கண்ணில் நிறைவதால், குளிர்ச்சி தருவதால், இரவில் வருவதால், உறவுகளுக்கு உடனிருப்பதால், உனைத் தூதுவிடவும் வைத்தனரே நிலாவே! எழுத்தாணி கொண்டு உனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கற்பனை புலவர்களுக்கு முற்றிலுமாய் கை கொடுக்கிறதே! காலகாலமாகத் தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்ந்து வானில் வலம் வரும் முழுமதியே.. எங்கள் மக்கள் கவிஞன் மனதில் பொழிந்த மகரந்தப் பாடல் வரிகளிதோ..
    சந்தனத் தமிழெடுத்து சந்தங்கள் சேர்த்து சதிராட வைத்தபோது சுந்தரமாய் பாடலொன்று பிறந்திடுமே! அதிலும் நிலவைத் துணைக்கழைத்து அருமைக் காதலிக்கு உவமை சொல்லி வரைந்த பாடலிதை இனிமை என்பதன்றி வேறென்ன சொல்ல முடியும்? டி.எம்.செளந்திரராஜன் குரலில் டி.ஜி. லிங்கப்பா இசையில் பட்டுக்கோட்டையார் வடித்துவைத்தப் பட்டுக்கம்பளம்!!

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ

    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    பாடல்: என்னருமைக் காதலிக்கு
    திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    ஆண்டு: 1960

     

    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw
    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw

     

    Share
  • ஆயிரம் நிலவே வா…

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் புலவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது.. கவிஞர் கண்ணதாசனைவிட ஆயிரம் மடங்கு நான் படித்தவன் என்று சொல்ல.. ஜனங்களின் சலசலப்பு அடங்கும் முன்பாக.. என்னைவிட ஆயிரம் மடங்கு அவன் படைத்தவன் என்று சொன்னதும் கைத்தட்டல் அடங்கிட சில நிமிடங்கள் ஆனது என்றார்.

    திரைப்பாடல்கள் இலக்கியமாகுமா என்கிற வினாவிற்கு இந்த ஒரு பாடல் போதுமே எடுத்துக்காட்ட என்றே சொல்லலாம்!  புலவர் பெருமகனாரின் பூங்கவிதை இது!  பொங்கிடும் தமிழ்நதி புறப்பட்டு வந்தது காண் என்று சொல்வதே சரியாகும்!  பெண்ணை உவமைப்படுத்த ‘நிலா’வை இழுக்காத கவிஞர்களே இல்லை!  அட.. இவரென்ன.. ஆயிரம் நிலவே வா’ என ஒரு ஆனந்தப் பல்லவி தருகிறார்.  அகத்துறை பாடலென்பதால் மனசுக்குள் ஒரு மகரந்த மழை பொழிய வைக்கிறார்.  தலைவனும் தலைவியும் தழுவிடும் கோலங்களில் கிட்டிடும் சுகமத்தனையும் மொத்தமாய் அள்ளித்தருகிறார்.  கற்பனையில் கன்னித்தமிழைக் கட்டி ஆளத் தெரிந்தவர் என்பதால் சொற்சுகம், பொருட்சுகம் என சுகங்களின் ராஜபவனியில் நம்மையும் கலந்திடச் செய்கிறார்.

    AdimaiPenn

    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    இதழோரம் சுவை தேட புதுப்பாடல் விழி பாடப் பாட
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

    நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
    நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
    இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
    என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?

    மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
    கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
    இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
    அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

    பொய்கை எனும் நீர்மகளும் பாவாடை போர்த்திருந்தாள்
    தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
    என்ன துடிப்போ அவள் நிலை நீ உணரமாட்டாயோ?
    அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?

    மக்கள் திலகத்திற்காக முதன் முறையாக எஸ்பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் என்கிற வரலாறும் இதற்கு உண்டு! எனினும் அதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபின் உடல்நிலைக் குறைவால் ஒலிப்பதிவு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இவருக்கு பதிலாக இன்னொருவரை பாட வைக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்ட போது,பொன்மனச்செம்மல்.. புதிய பாடகன்.. எம்.ஜி.ஆருக்காக பாடுகிறேன் என்று தன் நண்பர்களிடமும் உறவினிர்களிடமும் சொல்லியிருப்பான்.  அவனுக்கு ஏமாற்றம் தர வேண்டாம்.. இன்னும் காத்திருக்கலாம் என்றாராம்.  திரையுலகில் புதிதாக நுழைகின்ற கலைஞனையும் அவன் மனப்பாங்குவரை யோசித்து ஆதரித்த புரட்சித்தலைவரைப் போல் இன்னொருவர் இனி வருவாரோ?

    எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சரித்திரப் பின்னணி கொண்ட படம்!  ஜெய்ப்பூர் அரண்மனையின் கதவுகள் புரட்சித்தலைவருக்காகவே திறக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன என்பதையும் மறக்க முடியுமா?

    http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8

    http://www.youtube.com/watch?v=JYcCIiVEMr8

     

    பாடல்: ஆயிரம் நிலவே வா

    திரைப்படம்: அடிமைப்பெண்

    பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

    இசை: கே.வி. மஹாதேவன்

    ஆண்டு: 1969

    Share
  • இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தஞ்சை ராமையாதாஸ் – பாடல் 

     

    கோபதாபங்களின் உணர்ச்சிக் குவியலாக மனித மனம்! அதுவும்கவிஞர்கள் உணர்வுகளின் சூறாவளியோடு தங்கள்வெளிப்பாடுகளை தருகின்றவர்களாக! வால்மீகிராமாயணத்தை வாசித்த கம்பன் – அதனைத் தமிழில்மொழிபெயர்க்கிறான் என்றால் அதுவும் 12000 செய்யுள்களாக..அவன் அந்தந்தப் பாத்திரங்களாய் மாறி அல்லவா சந்தக்கவிதைகளாக தந்த தமிழ் அமுதம் கம்பனின் உள்ளத்தைஉணரவைக்குதன்றோ?

    பாட்டுக்கொரு புலவன் பாரதியார் – வெகுண்டெழுந்துவெஞ்சினம் கொண்டு அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திர கீதமுழக்கங்களைத் தந்தானே.. அதுவும் உணர்வுகளின்உச்சக்கட்டம்தானே!

     

    பாவேந்தர் பாரதிதாசன் – தூங்கிக்கிடந்த தமிழினத்தைத்தட்டியெழுப்பி புரட்சிக் கருத்துக்களை உத்வேகத்துடன்ஊட்டிவளர்த்து மொழி, இன உணர்வுகளின் முன்னணித்தூதுவனாய் காட்சி தந்தானே – மறுப்பவர் உண்டோ?

     

    மலைக்கள்ளன் திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதத்தொடங்கிய போது.. இசையமைப்பாளருக்கும்பாடலாசிரியருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் தஞ்சைராமையாதாஸ் இயற்றிய பல்லவி மட்டுமே நமக்குக் கிடைக்கப்பெற, வேற்று வழியின்றி அங்கிருந்த கோவை ஐயா முத்துஎன்னும் மற்றொரு கவிஞரைக் கொண்டு சரணங்கள்வரையப்பட்டதை என்ன சொல்வது? முன்னர் அமைந்த பல்லவிஇதோ..

    தொடரும் சரணங்கள் பாணி தனி..

     

    இரண்டையும் இணைத்து இசையமைக்கப்பட்ட பாடல்!

     

    காலங்கள் மாறி வந்த போதும் இந்தப் பாடலில் உள்ளகருத்துக்கள் சோடை போகாமல்.. அதுவும் பல்லவி இந்தசமூகத்தின் புரையோடிக்கிடக்கும் அயோக்கியர்களின் மீதுசாட்டையடியாய் விழுகிறது!

     

    அரசியல் செய்யும் கபளீகரங்களைப் பட்டவர்த்தனமாய் கேட்கும்கேள்வி.. காலங்களைத் தொடர்ந்து எதிரொலியாய் நம்காதுகளில் விழுகிறது!

     

    அடுத்து எழுதிய ஐயா முத்து அவர்களின் வரிகள்ஆட்சியிலிருப்பவர் செய்ய வேண்டிய திட்டங்கள் எவை என்றுபட்டியலிட்டுக்காட்டுகிறது! தேர்தல் அறிக்கையைநினைவூட்டும் சரணங்கள்.. எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில்..கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெற்றிபெற்ற திரைப்படம் -மலைக்கள்ளன்!

     

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்……

    படம : மலை கள்ளன்
    இசை : SM. சுப்பையாஹ் நாய்டு
    பாடல் : ராமையாஹ் தாஸ்
    பாடியவர் : T.M.S.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) –
    கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
    கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) –
    குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) –
    அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
    கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
    கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

     
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec

     
     
     
     
     
     
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
    Share
  • செந்தமிழ்க்கடல் சிலம்பொலி செல்லப்பனார்!

    காவிரி மைந்தன்

    வாழும் தமிழ் மொழியின் வற்றாத ஜீவ ஊற்றை.. வகை வகையாய் எடுத்துரைக்கும் இலக்கியங்கள்! வண்ணத்தமிழ் மொழிக்கு வசந்தகாலம் வந்ததுபோல்.. வந்திருக்கும் செந்தமிழ் அங்கீகாரம்!! வள்ளுவன் முதலாக வாழையடி வாழையாய் நற்றமிழைப் பனையேட்டில் பதித்து வைத்த பைந்தமிழ்ச் சான்றோர் பலர்! இவரெல்லாம் எடுத்துரைத்தப் பொக்கிஷத்தை செல்லரித்து தின்றதுபோக.. மீதமெனப் பத்திரப்படுத்த ஒரு தாத்தா.. உ.வே.சாமிநாத ஐயர் வந்தார்! கிட்டிய தமிழ்ச்செல்வம் அத்தனையும் உயிர்ப்பிக்க தன்னுயிரையே தந்தார்!!

    அத்திருமகனாரின் அளப்பரிய சேவையினால் தப்பித்த இலக்கியப் புதையல்கள்! இவைதான் எமதென்று இன்று மார்தட்டி நிற்கும் நாம்.. தமிழின மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளின் ஒட்டுமொத்த உணர்வைப் பெற்றிருந்தால்.. உலகிலேயே உயர்ந்தவர்கள் நாமென்று ஓங்கிக்குரல் கொடுத்திருப்போம்! அடிமை உணர்வுக்கு ஒருபோதும் அடிபணியாதிருந்திருப்போம்! உரிமை வாழ்வென்று உலகிற்கே எடுத்துச்சொன்ன பரம்பரையின் வரலாறு அறிந்திருப்போம்! அகத்துறை புறத்துறை எனப் பகுத்தறிந்து வாழ்ந்தவன் தமிழன்! அவ்வழி நடந்தால் இவ் வையகம் உய்திடும் உண்மையை உரக்கக் கூறுவோம்!

    அறநெறி தழைக்க வேண்டி அன்றுமுதல் புலவர் பெருமக்கள் அய்யன் முதலாக.. வரைந்துவைத்த பாக்கள்.. படிவங்கள்.. செய்யுள்கள்.. செப்புவதென்ன? வீரமும் காதலும் தமிழர் வாழ்க்கை என்கிற சீரும் சிறப்புமான வரலாற்றுப் பெட்டகங்கள் எனத் திகழும் இலக்கியப் பக்கங்களை இனிவரும் தலைமுறைகளுக்கும் எடுத்துரைக்கும் கடமையும் நம்மைச் சார்ந்ததே!

    அவ்வழியே.. தமிழர்தம் சிறப்புகளை தாங்கிநிற்கும் இலக்கியமாய்.. தன்னிகரில்லாப் பெருங்காப்பியமாய்.. ஆள்கின்ற சேரனின் தம்பியாய் பிறந்திருந்தும்.. தனிமை நாடி தவக்கோலம்பூண்டு ஒப்பிலா இலக்கியமாய் ஓங்குபுகழ் சிலப்பதிகாரம்தனை இயற்றி நீங்கிடாப் புகழ்பெற்ற இளங்கோவடிகள்!

    ஆங்கு அதனை பாரினிலே அவையோர் சபையெல்லாம் தினம் முழக்கம் செய்தவராய்.. வாழ்கின்ற வாழ்வெல்லாம் தமிழ்.. தமிழ்.. என்றே வாழ்பவராய்.. எளிமையின் இலக்கணத்தை எடுத்துரைக்கும் வல்லோனாய்.. புன்முறுவல் பூத்ததுபோல் திருமுகம் கொண்டவராய்.. சொல்லேதும் கடினமாய் தன்னகத்தேக் காணாதவராய்.. அல்லும் பகலும் பட்டிதொட்டியெங்கும் பயணம் கொண்டேனும் பைந்தமிழைக் காத்துநிற்கும் சீலராய்.. பாவலராய்.. நாவலராய்.. எதிரிகளே இல்லாத ஏகோபித்த மனிதராய்.. இன்னுமின்னும் இவர் புகழைச் சொல்லச் சொல்ல.. செந்தமிழ் மணக்காதோ? தென்னவரின் பெருமை சிறக்காதோ?

    அன்னவரின் அகவை 85ஆம்! நம்பவே முடியவில்லை.. நாட்டோரே.. நடமாடும் தமிழுக்கு அகவை இங்கேது? அவர் புகழைப் பாடுதலில் எந்தன் பங்கேது? சுகம் சுகமாய் இருப்பதனால் தமிழே உந்தன் சுவைஞன் நான் என்றே வாழ்கின்றேன்! சிலம்பின் பெருமையெல்லாம் உலகை வலம்வந்து எடுத்துரைத்த ஏந்தலிவர்! அருமை மிகநிறைந்த மாமனிதர்! யுகம் யுகமாகத் தேடினினும் காணக்கிடைக்கா மனிதரிவர்! வாழ்கின்ற யுகத்தில் நாம் வாழ்ந்த பெருமையுடன்.. வாழ்த்துரைக்க வயதின்றி வணங்கி மகிழ்கின்றேன்!

    Share
  • ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்

     கவிஞர் முத்துக்கூத்தன்

     

    ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும்

    · ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-

    ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை..

    · இந்தப்பல்லவிஎழுதப்பட்டதுகவிஞர்ஆலங்குடிசோமுஅவர்களால்! அவர் இல்லத்திற்கு சென்றிருந்த அவர்தம் நண்பர் முத்துக்கூத்தன் அவர்கள் கண்ணில் இந்தப்பல்லவிபட.. அண்ணே.. ரொம்பநல்லாயிருக்கு.. இதைநான்எடுத்துக்குறேன்..என்றார்.

    · கழைக்கூத்தாடியாய் தன்வாழ்க்கையை ஓட்டிவந்த முத்துக்கூத்தன் அவர்களை இந்தப் பல்லவி உந்தித்தள்ள.. அவர் உள்ளத்திலிருந்து பொங்கியவரிகள் சரணங்களாகின!

    · அரசகட்டளையில் தமிழ்த்திரையில் முதன்முறையாக .. சண்டைக்காட்சியில் திரைப்பாடல் ஒன்று இடம்பெற்றது அன்றுதான்!

    · மக்கள்தீர்ப்புக்கு எதிராக எவரும் அரசாள முடியாது என்கிற அருமையான வரியையும்.. அவர் மேற்கோள் காட்டிய அனைத்துவரிகளுமே புரட்சித்தலைவருக்குப் பிடித்துப்போக.. அரசகட்டளையில் இடம்பெற்ற பாடலானது. அன்றும் இன்றும் இந்தவரிகள் நெஞ்சில் மனனமானது!

    · ஆடிவா …

    ஆயிரம்கைகள்மறைத்துநின்றாலும்

    ஆதவன்மறைவதில்லை
    ஆணைகள்இட்டேயார்தடுத்தாலும்
    அலைகடல்ஓய்வதில்லை

    ஆடிவா..ஆடிவா.. ஆடிவா..

    · ஆடப்பிறந்தவளேஆடிவா
    புகழ்தேடப்பிறந்தவளேபாடிவா
    ஆடிவாஆடிவாஆடிவா

    இடைஎன்னும்கொடியாடநடமாடிவா
    இசைகொண்டுஅழகேநீதேராடிவா
    தரைமீதுபோராடசதிராடிவா
    செந்தமிழேநீபகைவென்றுமுடிசூடிவா
    (ஆடிவா )

    மயிலாடவான்கோழிதடைசெய்வதோ
    மாங்குயில்பாடகோட்டான்கள்குறைசொல்வதோ
    முயல்கூட்டம்சிங்கத்தின்எதிர்நிற்பதோ
    அதன்முறையற்றசெயலைநாம்வரவேற்பதோ
    (ஆடிவா )

    உயிருக்குநிகர்இந்தநாடல்லவோ
    அதன்உரிமைக்குஉரியவர்கள்நாமல்லவோ
    புயலுக்கும்நெருப்புக்கும்திரைபோடவோ
    மக்கள்தீர்ப்புக்குஎதிராகஅரசாளவோ
    (ஆடிவா )

     

    புரட்சிக்கும் தலைவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியபாடல் என்றுகூடச் சொல்லலாம்! நாட்டுப்பற்று, நமக்குள்ள உரிமை, எதிரிகளை எள்ளாடல், நமது வீரம் என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டு படைத்துள்ள பாட்டுப் படையலிது! எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கான கொள்ளைவிருந்து.. நாட்டிய மயிலாய் திரையில் தோன்றிநடைபோட்ட கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் கூட்டணியில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன்வழங்கிய இசையில் உணர்வுகளை மீட்டிடும் பாட்டு!! உள்ளம்எழும்இதைக்கேட்டு!!

    Share
  • கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா – கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    கவிஞர் காவிரி மைந்தன்

    கலைகள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது சிலைகள்! சிலைகள் என்றதும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவ ராஜ்ஜியமம் நெஞ்சில் நிழலாடுகிறது! காஞ்சியைத் தலைநகரமாய்க் கொண்ட பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் மகன் நரசிம்மராஜ பல்லவன் சிற்பக்கலை ஆர்வத்திற்கு தக்கதொரு எடுத்துக்காட்டு! மாமல்லன் என்னும் அவன் நினைவால் உருவான மாமல்லபுரம்!

    காலவெள்ளத்தால் சிதைந்துவந்த சிற்பங்களை மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்டெடுத்து காத்து வருதல் பழமையைப் போற்றிப்பாதுகாத்திடவும், வருகின்ற தலைமுறையினர் நம் முன்னோர் பற்றி அறிந்திடவும் கலை, பண்பாடு இவற்றில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கினர் என்பதற்கு சரித்திர சான்றுகாட்ட ஏதுவாக இருக்கும்!

    பள்ளிகளில் நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கு புரியும்வகையில், மிக மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்காகவே பாடல்கள் இயற்றித் தருவதில் பெயர்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் வா ராஜா வா திரைப்படத்திற்காக வடித்துத் தந்த பாடல்!

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக்

    கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா..

    ஒட்டுக்கல்லை சேர்க்காம..

    ஒரே கல்லை குடைஞ்செடுத்து

    கட்டி வச்சா மண்டபத்தை பல்லவராஜா

    அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    சொல்லு ராஜா சொல்லு..

    பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மகாபலிபுரத்தின் சிறப்புகளை எவரும் உணரும் வண்ணம் பட்டியலிடுகிறது இப்பாடல்!

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

    எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா..

    அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    ஆமா ராஜா ஆமா…

    சிற்பியரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி

    கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா

    அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    வா.ராஜா வா..

    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தை அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய இப்பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருக்கிறார் பிள்ளைத்தமிழாய்!

    ஒரு வரலாற்றைக்கூட நான்கே சரணங்களில் வார்த்தளித்துக் கொடுத்திட இயலும் என்று எடுத்துக்காட்டும் வல்லுனராய் கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    Share
  • தங்கத்தில் முகமெடுத்து.. – கவிஞர் முத்துலிங்கம

    கவிஞர் முத்துலிங்கம்

     

    தங்கத்தில் முகமெடுத்து..

     

    ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் மீனவ நண்பன். படம் முழுவதும் எடுக்கப்பட்டு முடிந்த நிலையில் ஒரு நாள் காலை ராமாவரம் தோட்டத்தில் புரட்சித்தலைவரை சந்திக்க கவிஞர் முத்துலிங்கம் செல்கிறார். கவிஞரைக் கண்டதும் அகமகிழ வரவேற்று.. என்ன கவிஞரே.. இப்போது நான் நடித்து முடித்துள்ள மீனவ நண்பன் திரைப்படத்தில் நீங்கள் பாடல் எழுதவில்லையே.. இருக்கட்டும் இயக்குனரிடம் கேட்டு ஒரு கனவுப் பாடலையாவது நீங்கள் எழுத வைக்கிறேன் என்று சொல்லி இயக்குனரைத் தொடர்பு கொண்டார்.

    மறுக்க முடியாமல்.. இயக்குனரும், ஒரு கனவுக்காட்சியை இடம்பெறச் செய்தார்.

    திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன என்றாலும் – கவிஞர் முத்துலிங்கம் எழுதி.. அமோக வெற்றி பெற்ற இந்தப்பாடல்.. இதோ..

    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    மங்கைஎன்றுவந்திருக்கும்மலரோ
    நீ… மாலைநேரபொன்மஞ்சள்நிலவோ
    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    காமன்போலவந்திருக்கும்வடிவோ..
    அந்ததேவலோகமன்னவனும்நீயோ…

    வண்ணரதம்போலவேதென்றல்நடைகாட்டவா
    புள்ளிமான்போலவேதுள்ளிநான்ஓடவா
    வண்ணரதமாகினால்அதில்சிலைநானன்றோ
    புள்ளிமான்தேடும்கலைமானும்நானல்லவோ
    அசைந்து.. தவிழ்ந்து …அருகில்நெருங்குஅமுதாகவேஓஓஒ
    (தங்கத்தில்…)

    முல்லைமலர்செண்டுகள்கொண்டுகொடிஆடுது
    தென்றல்சதிராடினால்அந்தஇடைதாங்குமா?
    இந்தஇடைதாங்கவேகைகள்இருக்கின்றது
    கொஞ்சிஉறவாடமலர்மஞ்சம்அழைக்கின்றது
    மலர்ந்து.. கனிந்து.. சிரித்துகுலுங்கும்கனியாகவோ..

    எந்தன்மணக்கோயிலில்தெய்வம்உன்னைகாணுகிறேன்
    உந்தன்நிழல்போலவேவரும்வரம்கேட்கிறேன்
    இந்தமனராஜ்ஜியம்என்றும்உனக்காகவே.
    சொந்தமகராணிநீஎன்றுநான்சொல்லுவேன்
    நினைக்க.. இனிக்க.. கொடுத்துமகிழ்ந்தமுத்தாரமே…
    (தங்கத்தில்….)

    படம்: மீனவநண்பன்
    பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்வரிகள்: முத்துலிங்கம்

    ஒரு கவிஞனின் உள்ளம் என்ன? எதிர்பார்ப்பு என்ன என்பதை துல்லியமாய் கணக்கிட்டு வைத்த ஒரு கதாநாயகன் உண்டென்று சொன்னால், அது எம்.ஜி.ஆர் மட்டுமே!!
    அவன் வாழ்க்கை முழுவதும் தமிழைக் காதலித்த காரணத்தால், புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவன் மனதில் சிம்மாசனம் காத்திருந்தது!

    எந்த ஒரு திரைப்பாடலாசிரியனும் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் எழுதிய பின் புகழின் உச்சிக்கு செல்லாமல் இல்லை.

    கவியரசு கண்ணதாசனை அரசு கவியாக்கி அழகு பார்த்த பொன்மனச்செம்மல்.. அவ்வரிசையில் புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கம் அவர்களையும் அமரவைத்த வரலாறு தமிழுக்குக் கிடைத்த பேறுதானே?

    http://www.youtube.com/watch?v=LUF4NzXhMbk

    Share
  • கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி

    கவிஞர் மருதகாசி

     

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..

    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடலாசிரியர் – மருதகாசி

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
    கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
    போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்..

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
    மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
    என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
    எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்

    http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE

     

    NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA

    Share