Category: வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்

வல்லமையாளர் விருது

  • இந்த வார வல்லமையாளர்! (242)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திரு. இரா.பானுகுமார் அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இன்று தமிழ்மரபில் சமணத்துக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை உலகுக்கு அறிவிக்கும் “தமிழ் சமண மரபு விக்கி” பக்கம் தமிழ்மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதன் தலைவி முனைவர் சுபாஷினி அவர்களையும், திரு பானுகுமார் அவர்களையும், செல்வமுரளி அவர்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. இந்த பக்கம் வெளியாவது தமிழ் சமணத்தின் வரலாற்று சுவடுகளை தமிழர் அறியமிக உதவி செய்யும் என வல்லமை நம்புகிறது.

    சமணத்துக்கும் தமிழருக்கும் உள்ள உறவு மிக தொன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. ஆனால் கால ஓட்டத்தில் சமணமதம் தமிழகத்தில் இருந்த சுவடே தெரியாது இருந்த நிலையில் அதன் தொன்மையை வலையுலகில் பரப்பியவர்களில் பானுகுமார் அவர்கள் மிக முக்கியமானவர். 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வலைப்பதிவில் தமிழ்சமணம் குறித்து எழுதிய கட்டுரைகளை படித்து வியந்துகொண்டிருந்தேன். அவரும் பொள்ளாச்சி நாசா. கணேசன் அவர்களும் சமணர் குறித்த பல கட்டுரைகளை எழுதினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை அதற்கு பேருதவி செய்துள்ளது.

    சமணம் பற்றி மக்களுக்கு இருக்கும் பல குழப்பங்களை தெளிவிக்கிறார் பானுகுமார். உதாரணமாக சமணம் இல்லறவியலையும், இன்பத்தையும் மறுக்கிறது எனும் மாயையை கீழ்கண்டவாறு உடைக்கிறார்

    “உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்!

    மக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல!

    “இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்
    புல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)

    வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் – அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. “

    ஸ்வஸ்திகாவுக்கும் சமணத்துக்குள் உள்ள தொடர்பு என்ன என்பதை கீழ்கண்டவாறு விளக்குகிறார்

    “பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
    இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
    சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
    தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
    தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
    சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
    வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
    சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
    கொள்வார்கள்.”

    சமணத்தின் சிறப்பையும், தமிழ் மரபில் அதற்குள்ள சிறப்பையும் தமிழர் உணர இத்தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது. வல்லமையாளர் பானுகுமார் அவர்களுக்கு வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இவ்வார வல்லமையாளர் (241)

    இவ்வார வல்லமையாளராக மலேசியாவை சேர்ந்த கமலநாதன் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    தேனி எனும் புனைபெயரில் தமிழ் மீதும் சைவம் மீதும் ஒப்பற்ற அன்புகொண்டு எழுதிவரும் பெருந்தகையாளர் திரு கமலநாதன். இவர் திருக்குறளுக்கு சைவ சித்தாந்தம் சார்ந்து எழுதும் விளக்கவுரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் நில்லாது சைவசித்தாந்த கருத்துக்களை குறள் சார்ந்த பொருளில் அறியவும் வழி வகுக்கிறது.

    இதற்கு ஒரு சான்றாக திருக்குறளில் உள்ள அறவாழி அந்தணன் எனும் குறளுக்கு இவர் தரும் பொழிப்புரையை காண்போம்.

    திருக்குறளில் “அறவாழி அந்தணன்”

    சைவம் கூறுவதென்ன?

    பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
    மறவா அருள்தந்த மாதவன் நந்தி
    அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
    உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.(10:7௯-திருவருள் வைப்பு- பாடல் 10)

    முதுமுனைவர் சி. அருனை வடிவேலு அவர்களின் பொழிப்புரையும் குறிப்புரையும் – தருமை ஆதின திருமுறை விளக்கவுரை நூல்.

    பொழிப்புரை:

    சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் ல் அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்

    குறிப்புரை:

    `எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. “நந்தி“, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.

    “மாதவன்“ என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.

    “இறைவனாவான் அறவாழி அந்தணன்“ 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் – மேலே உள்ளவன்; அபரன் – கீழே உள்ளவன்.
    இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயக்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.

    தமிழ் மற்றும் சைவம் மேல் பக்தி பூண்டுள்ள கமலநாதன் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரை போலவே தமிழ்ச்சித்தாந்த நூல்களை வாசித்து பொருள்காணும் வல்லமை தமிழ் இளைஞர்களுக்கு வர இந்த தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (240)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திலகவதி மதனகோபால் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    திலகவதி மதனகோபால் அவர்களின் சொந்த ஊர் கோவை. உணவியல் துறையில் பட்டம் பெற்றவர் உணவியல் நிபுணர் ஆவார். முகநூலில் பல சமூக முன்னேற்ற கருத்துக்களை பகிர்ந்து வரும் திலகவதி அவர்கள் சமீபத்தில் பெண் முன்னேற்றம், பெண்விடுதலை குறித்த மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை பதிப்பித்திருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    #திருமணம்_மற்றும்_தாய்மை_அழகாக_இருக்கும்_என்று_என்_மகளிடம்_ஏன்_சொல்லுவேன்…..

    திருமணம் மற்றும் தாய்மை பெண்களின் வாழ்கையில் இன்றியமையாத ஒன்று அல்ல என்றாலும், அவற்றில் உள்ள நன்மைகளைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க நாம் முயற்சி செய்யவேண்டாமா?

    நான் ஒரு பெண்ணியவாதி தான், ஆனால் அதைப் பிரச்சாரம் செய்யும் ரகம் அல்ல. பெண்ணியம் பற்றிய தவறான புரிதலே ஆண்களை வெறுக்கும் நிலைக்கு மாறிவிடுகிறது.

    தன்னை மேம்படுத்திக்கொள்ள எல்லா வழிகளையும் நான் என் மகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன். அவள் ஆசைப்படும், விருப்பப்படும் எதை வேண்டுமானாலும் அவள் செய்யலாம். இறுதி முடிவு அவளுடையதாகவே இருப்பினும், திருமணம் மற்றும் தாய்மை முக்கியம் இல்லை என்று நான் ஒரு போதும் அவளிடம் சொல்ல மாட்டேன்.

    தாய்மார்கள் திருமணம் முக்கியம் அல்ல என்று தங்கள் மகள்களுக்கு அறிவுரை கூறும் கட்டுரைகளைப் படிக்கும் போது எரிச்சலடைய செய்கிறது. நம்மைப் பாதுகாக்கவோ, பார்த்துக்கொள்ளவோ நம் வாழ்க்கையில் ஆண்கள் தேவையில்லை தான். நிதி ரீதியாகச் சுயாதீனமாக(financially independent) இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதைத் திருமணத்துடன் தொடர்புப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. பழங்காலத்தில் திருமணம் ஒரு பெண்ணின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவே இருந்திருக்கலாம், ஆனால் அதுவே திருமணத்திற்கான அடித்தளமாக இருப்பதாக நாம் இன்னும் நம்புகிறோம் என்று அர்த்தமா?

    1திருமணம் என்பது இரு மனங்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, ஒருவருக்கொருவர் தோழமை, ஆதரவு உணர்வோடு இருந்து மற்றவர்களுடைய தனிப்பான்மையைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, விசித்திரமான அணுகுமுறை மற்றும் எரிச்சலூட்டும் பழக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, எல்லாச் சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து ஒன்றாகப் பயணிப்பது. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒரு விதப் அழகான பிணைப்பு ஆகும்.

    வேறு எந்த உறவுமுறை இவை அனைத்தையும் வழங்க முடியும்? எப்படி நாம் நம் மகளிடம் திருமணம் அவசியம் இல்லை என்று சொல்ல யோசிக்க முடியும்? திருமணத்தால் ஏற்படும் சந்தோஷத்தையும், தாய்மை வழங்கக்கூடிய இணையற்ற உணர்வையும் அவர்கள் அனுபவிக்க நாம் விரும்பவில்லையா? ஆம், எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக அமைவதில்லை என்பது உண்மைதான் பலர் பல இன்னல்களுக்கும், இறுக்கமான வாழ்க்கைக்கும் தள்ள படிக்கிறார்கள், ஆனால் இந்தக் காரணங்களினால் திருமணத்தை விட்டுக்கொடுப்பது/தவிர்ப்பது என்பது ஒரு தீர்வாக இருக்க முடியாது.

    பெண்ணியம் அர்த்தம் என்ன? பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுடனான எல்லாப் பழமையான பழக்கவழக்கங்களையும் தடுப்பதா? அல்லது முன்னர்ச் செய்த எல்லாவற்றிற்கும் குருட்டுத்தனமாகச் எதிர்ப்பதா?

    நன்றாகப் படித்த ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதிலும், குழந்தைகள் பெற்றுக்கொள்வதிலும் என்ன தவறுள்ளது? எப்போதில் இருந்து இந்தப் பிற்போக்கு எண்ணம் உண்டானது புரியவில்லை?”

    இவரது சமூகநல கருத்துகளுக்காக இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அடுத்த தலைமுறை பெண்கள் இவரைபோன்ற ஆளுமைகளால் வழிநடத்தபட இவ்விருது ஊக்கம் அளிக்கும் என வல்லமை ஆசிரியர் குழு நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (239)

    செல்வன்
    இவ்வார வல்லமையாளராக அன்பு நண்பர் வேந்தன் அரசு (இயற்பெயர் ராஜு ராஜேந்திரன்) அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
    வேந்தரின் 69ஆம் பிறந்தநாள் இவ்வாரம் வந்ததால் அவர் அனைவராலும் வாழ்த்தப்படுகிறார். அந்த வாழ்த்துகள் வேந்தரின் வலையுலக எழுத்து வன்மைக்கு சான்றுகூறுவதாக அமைந்தன. அவ்வன்மையை 2005ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை முதல்வரிசையில் அமர்ந்து கண்டுகளிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியதை மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.
    2005ஆம் ஆண்டு அன்புடன் எனும் குழுவில் முதல்முதலாக நுழைந்தேன். அதுவே தமிழ் வலையுலகில் என் முதல் எழுத்துப்பயணம். அன்புடனில் என்னை ஈர்த்தவர்களில் முதன்மையானவர் வேந்தர். அங்கே நுழைந்ததும் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும் நான் படித்த மணிப்பள்ளியில் படித்தவர் என்பதும் இருவரையும் உடனே இணைத்தன. அதன்பின் சுதந்திர பொருளாதாரம் குறித்து அவர் எழுதிய மடல்கள் என்னை மிகக் கவர்ந்தன. அவுட்சோர்ஸிங் மூலம் இந்தியாவுக்கு நன்மை கிடைப்பதை ஒரு மிகக் குறுகிய கதை மூலம் எழுதி என்னை வியப்பில் ஆழ்த்தினார். நான் சிரமப்பட்டு பத்தி, பத்தியாக எழுதும் கட்டுரைகள் தரும் தாக்கத்தை விட ஒரு வரி, ஒரு பத்தியில் அவர் எழுதும் கதைகள், கருத்துக்கள் ஆகியவை சுதந்திர பொருளாதார கோட்பாட்டை எளிதில் விளக்கின.
    1
    வேந்தர் நேசிக்கும் விசயங்கள் என பட்டியல் இட்டால் மூன்றாமிடத்தில் சுதந்திர பொருளாதாரம், இரண்டாமிடத்தில் அவர் வாழ்ந்த கோவை மாநகரம் மற்றும் முதலிடத்தில் ஐயன் திருவள்ளுவர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். வள்ளுவர் மேல் கொண்ட தளராத அன்பினால் “வள்ளுவம் என் சமயம்” என வள்ளுவத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றவர் வேந்தர். சும்மா சொல்வதுடன் நின்றுவிடாமல் தமிழை ஆதரித்து கட்டுரைகள், தன்னால் இயன்ற அளவு தமிழறிஞர்களுக்கு நிதியுதவி என செய்துவந்தவர்.
    தமிழ் இணைய வரலாற்றை யாகு குழுக்கள் காலம் 1.0, கூகிள் குழுக்கள் காலம் 2.0, முகநூல் காலம் 3.0 மற்றும் தற்போது விசுவல் மீடியா காலம் 4.0 என பிரித்தால் வேந்தர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர். இணையம் 2.0 தலைமுறையில் குழுக்களில் 500, 1000 பேர் இருந்தாலே அது மிக அதிகம். மிக நீள மடல்களை தட்டி அனுப்பி ஓரிரு பேர் நாள்கணக்கில் விவாதம் செய்வோம். அவ்வகையில் இணையம் 2.0 ஒரு மிக கடினமான தளம் என கூறவேண்டும். அந்த தளத்தில் வேந்தர் போன்ற முன்னோடிகளிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
    வேந்தரின் 60வது பிறந்தநாள் விழாவுக்கு நேரில் சென்று அவரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் உரையாடுகையில் அவரது முற்போக்கு கருத்துக்களை அறிந்துகொண்டேன். பெண்ணியம், ஆன்மிகம், திராவிடம், பகுத்தறிவு போன்ற பல விசயங்களில் மிக முற்போக்கு கருத்து கொண்டிருந்தாலும், தன் கருத்தை சுயபரிசீலனை செய்ய அவர் தயங்கியது இல்லை. குறிப்பாக இவ்விசயங்களில் ஆழ்ந்துள்ளவர்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தொண்டர்களாக, அல்லது தலைவர்களின் அபாலஜிச்டுகளாக மாறிவிடுவது வழக்கம். வேந்தர் விதிவிலக்கு. தன் கருத்தை தன் கருத்தாக எடுத்து வைப்பாரே ஒழிய எந்த அரசியல் தலைவரையோ, தத்துவஞானியையோ மேற்கோள் காட்டமாட்டார். அவ்வளவு ஏன் அவர் நேசிக்கும், ஐயன் வள்ளூவரின் கருத்துக்களை கூட விவாதங்களில் மேற்கோள் காட்டியதில்லை. கடவுள் மறுப்பில் உறுதியாக நின்று திருவள்ளுவரை கூட அவர் இதில் மறுத்துள்ளார்.
    இவரது அக்கரை சீமையிலே எனும் மடல் தொடர் மூலம் சின்சினாட்டி நகர் வாழ் அமெரிக்கர்களை குறித்து அறிந்து கொள்ள இயன்றது. தற்போது நீள் மடல்கள் இடுவதை மிக குறைத்துக்கொண்டு ஒருவரியில் ட்வீட் போல தன் கருத்துக்களை சுருக்கி மடலாடல் குழுக்களில் எழுதி வருகிறார். முகநூலுக்கு பெருமளவு இவரது எழுத்து குடிபெயர்ந்து விட்டது
    இணையம் 4.0வில் வெற்றிக்கொடி நாட்டவிருக்கும் இணையதலைமுறைக்கு வேந்தரின் நற்பண்புகள் அமைய உதவும் என நம்பி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.
    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (238)

    செல்வன்
    இவ்வார வல்லமையாளராக திரு அரிசோனன் மகாதேவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
    வல்லமையில் பல ஆண்டுகளாக எழுதிவருபவர் திரு அரிசோனன். இவர் தமிழகத்தில் பிறந்து, கொரியாவில் பணியாற்றி தற்போது அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருகிறார். “தமிழ் இனி மெல்ல” எனும் சோழர் காலத்தை மையமாக வைத்த புதினத்தை தாரணி பதிப்பகத்தார் மூலம் வெளியிட்டுள்ளார். தாரகை எனும் வலைதளம் மூலம் தமிழ், தமிழ்மண் குறித்த செய்திகளை வெளியிடுகிறார்.
    அரிசோனா மண்ணில் தமிழும், ஆன்மிகமும் தழைப்பது இவரது எழுத்தின் மூலம் அறியலாம். அரிசோனா பிள்ளையார் ஆலயம் குறித்த செய்திகளை இவர்மூலம் வல்லமை குழுவில் அறிந்துகொண்டோம். சைவ உணவு மற்றும் ஜீவகாருண்யத்தில் மிகுந்த அக்கறை கொண்ட அரிசோனர் கொரியாவில் சைவம் என்றால் என்னவென்றே தெரிந்திராத நாட்டில் சைவ உணவுக்கொள்கையை பின்பற்ற தாம் பட்ட சிரமங்களை குழுவில் பதிவுகளின் மூலம் எடுத்துரைத்தார். பலசமயம் வெறும் சீரியலை மட்டுமே உண்டதையும், சைவ உணவின்றி பட்டினி இருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
    1
    வல்லமையில் நடந்த பலவிவாதங்களில் இவர் பங்குகொண்டுள்ளார். அதில் என்னை மிக கவர்ந்த விஷயம் தன்னை எதிர்ப்பவரையும் பண்புடன் இவர் அணுகும் விதமே. மிக சர்ச்சைக்குரிய கருத்துக்களை விவாதிக்கையிலும் உணர்ச்சிவசப்படாது கருத்தை எடுத்து வைப்பதில் வல்லவர்.
    மதுவிலக்கு கருத்தில் மிகதீவிர ஈடுபாடு உள்ள இவர் இது குறித்து குறிப்பிட்ட சம்பவம் ஒன்றில் தான் விருந்தினராக சென்ற இல்லம் ஒன்றில் மது குறித்து உரையாடி, விவாதம் எழுந்து அதனால் தான் உண்ணாமல் வெளியேறியதையும் குறிப்பிட்டார்.
    மதக்கலவரம் வந்த சமயம் சிறுபான்மை மதம் சார்ந்த தம்பதியினர் ஒருவரை கலவரக்காரர்கள் துரத்த அவர்களை தன் வீட்டில் வைத்து யாரும் அறியாமல், தனக்கு ஆபத்து வந்தாலும் வரலாம் எனும் சூழலிலும் கலங்காது குடிமகனாக தன் கடமையை ஆற்றிய பண்பாளர்
    இத்தகைய சிறப்புக்குரியவரை “ஒரு அரிசோனன் ” மகாதேவன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது. அரிசோனன் அவர்களின் நற்பண்புகள் வருங்கால இளைஞர்கள் பின்பற்ற இவ்விருது ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (237)

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    பாலகுமாரன் அறிமுகம் தேவையற்ற எழுத்தாளர். ஆனால் இவ்வாரம் சிகரெட்டின் தீமைகள் குறித்து அவர் எழுதிய கட்டுரை தமிழ்சமூகத்திற்கு மிக விழிப்புணர்வு தருவதாக அமைந்துள்ளது. அதை கீழே காணலாம்

    1

    “இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

    சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

    நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

    நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

    கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.

    இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    உதவியும் செய்தது. என்ன உதவி?

    சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

    காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

    வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.

    இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

    பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.
    எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். �நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள்� என்றும் சொன்னார்கள்.

    அது நேர்ந்தது.

    திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி� என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

    மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.

    முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.

    அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.
    நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

    நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக & நன்கு சுவாசிக்கிறவனாக & மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

    ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?

    சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
    அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

    பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

    இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.
    சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

    ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
    நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.

    இதை எப்படி சரி செய்வது?

    வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

    மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

    வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.

    ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

    ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

    மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

    �நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.

    மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

    சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.

    சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.

    அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.

    வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
    புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப்
    போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.

    நான் விட்ட பிறகும்

    அது விடவில்லை.

    சிகரெட் குறித்த விழிப்புணர்வை தன்னையே உதாரணமாக்கி அளித்த பாலகுமாரனுக்கு அளிக்கபடும் இவ்விருது இக்கொடிய வழக்கத்தை துறக்க தமிழ் சமூகத்திற்கு உதவும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் பாலகுமாரனுக்கு நம் நல்வாழ்த்துகள்

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (236)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக திரைப்பட நடிகர் அல்வா வாசு எனப்படும் வாசுதேவன் அவர்களை தேர்வு செய்கிறோம்.

    1970களில் மதுரையைச் சேர்ந்த வாசுதேவன் எனும் இளைஞர் சும்மா சென்னையை சுற்றிபார்க்கலாம் என சொல்லி வந்து சேர்கிறார். அவரது உறவினர் திரைத்துறையில் இருந்ததால் வந்து சேர்ந்த சில மணிநேரத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு கூட்டி சென்றுவிட்டார். அதன்பின் எடிட்டிங் பயிற்சி எடுத்து பெரிய இயக்குனர் ஆகும் கனவில் இயக்குனர் மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணியில் சேர்கிறார் அல்வா வாசு.

    இவருடன் மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்தவர்கள் விக்கிரமன், ஆர்.கே.செல்வமணி, சுந்தர் சி, சீமான், சசிகுமார் போன்றவர்கள் பெரிய இயக்குனர்களாக ஜொலிக்க, அவர்கள் பாணியில் தானும் படம் இயக்காது மணிவண்ணனுடன் இருப்பதே போதும் என நினைத்து அப்படியே உதவி இயக்குனராக இருந்துவிட்டார் வாசுதேவன்.

    அமைதிப்படையில் சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் சிறுவேடத்தில் நடித்ததால் அல்வா வாசு என்ற பட்டம் வந்து ஒட்டிக்கொண்டது. அதன்பின் மணிவண்ணனின் மார்க்கட்டு சரிய, வடிவேலுவுடன் சேர்ந்து சிறு,சிறு காமடி வேடங்களில் நடித்தார் அல்வா வாசு. “எல்லாம் அவன் செயல்” திரைப்படத்தில் “ஜாமீன்” வாங்கப் போகும் வக்கீல் வேடமும் அதில் வரும் “கடல்லெயே இல்லையாம்” வசனமும் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் அதை பேசிய நடிகர் அல்வா வாசு என்பது யாருக்கும் நினைவிருக்காது.

    1

    துணைநடிகர், அதிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வந்துபோகும் அள்ளக்கை வேடத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களும் வாசுவுக்கும் வந்து போயின. என்றாவது பெரிய நடிகர் ஆவோம், இயக்குனர் ஆவோம் எனும் கனவில் திரையுலகில் தனக்கான இடத்திற்காக போராடினார். சம்பளம் பெரிதாக வரவில்லை, பெயர் யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவரது முகம் பலருக்கும் நினைவிருந்தது. சாலையில் அவரை பார்ப்பவர்கள் நிறுத்தி “உங்களை இந்த படத்தில் பார்த்திருக்கிறேன்” என சொல்வதே அவர்களை பொறுத்தவரை ஆஸ்கார் விருதுக்கு சமம்.

    வடிவேலுவே முன்பு இப்படி கவுண்டமணியிடம் அடி வாங்கும் அள்ளக்கை வேடத்தில் நடித்தே பெரிய ஆளானார். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாருக்கும் அமைவது இல்லை. அல்வா வாசுவுக்கும் அமையவில்லை. வடிவேலு 2011ல் அரசியலில் சிக்கி வாய்ப்பை இழந்தார். அவரை நம்பி இருந்த அல்வா வாசுவும் வாய்ப்புகளை இழந்தார்.

    அதன்பின் அடுத்த தலைமுறை நகைச்சுவை நடிகர்களுடன் அவரால் இணைய முடியவில்லை. புதிய இயக்குனர்களும் 1979ல் இருந்து திரையுலகில் இருக்கும் இவரை கண்டுகொள்ளவில்லை. திரையுலகம் புதியவர்கள் தலைமையில் பயணித்தது. பழைய மனிதரான அல்வா வாசு வாய்ப்புகளை இழந்தார். அத்துடன் கல்லீரல் நோயும் அவரை தாக்கியது. பல சினிமா நடிகர்களை அழித்த கல்லீரல் வியாதி இவரையும் தாக்கியது.

    கடைசிகாலத்தில் நடிகர் சங்கம், பொன்வண்ணன், விஷால், கார்த்தி முதலானோர் உதவிய நிலையிலும், பலனின்றி தன் கனவுகள் நிறைவேறாமல் உயிரிழந்தார் அல்வா வாசு.

    அவரால் ஏன் பொருளாதார ரீதியில் வெற்றிபெற முடியவில்லை எனும் ஆராய்ச்சி நமக்கு அவசியம் இல்லை. ஆனால் ஒரு கலைஞனாக வடிவேலுவுடன் அவர் நடித்த வேடங்கள் காலாகாலத்துக்கும் அவரின் நடிப்பின்வெற்றிக்கான உதாரணமாக விளங்கும், எளிய கிராம மனிதனாக, சாதாரணனாக தான் நடிக்கும் பாத்திரத்தில் ஒன்றி நடித்த அவரின் நடிப்புத்திறனே இவர் யார் என யாரும் கேட்கவாய்ப்பின்றி செய்துவிட்டது. சாலைகளில், கிராம டீக்கடைகளில், சந்தைகளில் காணக்கூடிய எளிய மனிதராக படங்களில் தோன்றினார் வாசு. அந்த எளிமையே இவரை தனிமைப்படுத்தி பார்க்கமுடியாத நிலைக்கு ரசிகனை கொண்டுசென்றுவிட்டது.

    இறந்தபின் இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி, அவர் நடித்த படங்களை ரசிகர்கள் சிலாகித்து எழுதி, வாழும் காலத்தில் அடையாத புகழை தான் இறந்தபின் அடைந்து மறைந்தார் அல்வா வாசு.

    நிறைவேறாத கனவுகளுடன், அவை என்றாவது நிறைவேறும் எனும் ஆவலுடன் ஆண்டுக்கணக்கில் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் செலுத்தும் வணக்கமாக அல்வா வாசு அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து நம் எல்லோரையும் சிரிக்க வைத்த அக்கலைஞனுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறோம்.

    அடுத்த தலைமுறை திரைவிமர்சகர்கள் அல்வா வாசுவின் கதாபாத்திரங்களை ஆராய்ச்சி செய்ய இவ்விருது உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர் ! (235)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக பெஜவாடா வில்சன் அவர்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    கர்நாடகாவை சேர்ந்த பெஜவாடா வில்சன் மனிதகழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வருபவர். மனித கழிவுகளை மனிதர் கையால் அகற்றுதல் 1993ல் இருந்து இந்தியாவில் சட்டவிரோதம் என்பதே பலருக்கும் தெரியாத தகவல். ஏனெனில் இன்னும் அந்த சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே தெரியாத அளவு பல மாநிலங்களில் தொழிலாளர்கள் இன்னமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இத்தகைய தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெஜவாடா வில்சன். இவரது தந்தை ஜேக்கப் பெஜவாடா கர்நாடகாவின் கோலார் மாநகராட்சியில் மனித கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்தார். இதற்கு இந்தியில் சபாயி கரம்சோரி எனப் பெயர். இவரது சகோதரருக்கு இந்திய ரயில்வேயின் இரயில்களில் கழிவுகளை அகற்றும் வேலை கிடைத்தது. பள்ளியில் இவரை சகமாணவர்கள் தோட்டி என அழைத்து கேவலப்படுத்துவார்கள். இதனால் தற்கொலை செய்யகூட வில்சன் முயன்ற சூழல் எல்லாம் உருவானது.

    1

    பொலிட்டிகல் சயன்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற வில்சன் வேலைக்குப் போவதை விட்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுக்கு எதிராகப் போராட ஒரு இயக்கத்தைத் துவக்கினார். அதற்கு சஃபாயி கரம்சோரி அந்தோலன் என பெயர் சூட்டினார். கடிதங்கள் எழுதுதல், போராட்டம் என பலமுனைகளில் போராடி வந்தார். 1993இல் இந்திய பாராளுமன்றம் மனிதர்களின் கழிவை மனிதர்கள் அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை இயற்றியது. ஆனால் பலனின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இது இன்னமும் தொடர்ந்தே வருகிறது

    2003இல் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் வில்சன். சட்டம் அமுல்படுத்தாமல் இருப்பதை கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு 16 அரசு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டது. அனைத்து மாநிலங்களின் கேபினட் செக்ரட்டரிகளுக்கு இதை ஒழிக்க கடுமையான நெறிமுறைகளை அறிவித்து உத்தரவும் அனுப்பப்பட்டது.

    பத்தாவது திட்டகமிஷனில் கரம்சோரி அந்தோலன் சார்பில் இதற்கான திட்டங்கள், நெறிமுறைகளை வகுக்கும் குழுவின் தலைவராக பெஜவாடா வில்சன் இடம்பெற்றார்.

    இவருக்கு ஜூலைமாதம் ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

    துப்புரவு தொழிலாளிகளின் நலனுக்காக பாடுபடும் இவருக்கு அளிக்கப்படும் இந்த வல்லமையாளர் விருது, இக்கொடுமையை அகற்றும் பணிக்கான விழிப்புணர்வாக அமையும் என வல்லமை நம்புகிறது

    பெஜவாடா வில்சன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (234)

    இவ்வார வல்லமையாளாராக போராளி திரு வின்சென்ட் ராஜ் (எவிடென்ஸ் கதிர்) அவர்களை வல்லமை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறது. தனது உயிரையும் பணையம் வைத்து அவர் பல சமூக நலக் காரியங்களில் ஈடுபடுகின்றார்.
    சென்ற ஆண்டு நடந்த சங்கர் , கௌசல்யா – சங்கர் கொலையில் கௌசல்யாவின் தரப்பில் நீதி கிடைக்க போராடியவர் இவர்  போராடிக் கொண்டிருப்பவர் என்பதோடு அப்பெண் மீண்டும் கல்வியைத் தொடர உதவியதோடு புத்துணர்ச்சியுடன் புது வாழ்வு தொடங்கிடவும் வேலை செய்து சுய காலில் நிற்கவும் தைரியம் அளித்தவர்.
    அது மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் கொலை, பென்கள் ஆலியல் வன்கொடுமை ஆகியற்றிற்கு உடனடியாக  தனது உதவிக் கரம் நீட்டி அவர்களுக்காக சட்டப்படி நீதி கிடைக்க போராடி வருகின்றார்.

    சங்கர் கொலை குறித்த நிகழ்வில் பேசிய எவிடன்ஸ் கதிர், “இளவரசனின் திவ்யா, கோகுல்ராஜின் ஸ்வாதி ஆகியோர் இன்று நம்முடன் இல்லை.. ஆனால் சங்கரை இழந்த கெளசல்யா இன்று நம்முடன் இணைந்து நீதிக்காக போராடிக்கொண்டு இருக்கிறார். தேசிய சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதிய படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழக அரசு தங்கள் மாநிலத்தில் சாதிய படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதிய படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் சாதி எதிர்ப்புக்காகத் தங்களின் இன்னுயிரை நீத்த அந்த பெண்கள் அனைவரும் தியாகிகள் தான்.

    உடுமலை சங்கர் நினைவு நாள் கருத்தரங்கம்

    சங்கரின் படுகொலைக்கு பிறகு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரண தொகையில் சுமார் 1.75 லட்சம் ரூபாய் இன்னும் வரவேண்டியுள்ளது. இருந்தாலும் கொலை நடந்து ஒரு வருட காலம் ஆகியும், குற்றவாளிகளுக்குப் பிணை கிடைக்காமல் பார்த்துக்கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களை நாம் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.

     பாதிக்கபடும் பெண்களுக்கு குரம் கொடுத்தும், பட்டியல் இன மக்கள் மேலான வன்முறையையை எதிர்த்தும் செயல்பட அனைவர்க்கும் இத்தேர்வு ஊக்கமளிக்கும் என வல்லமை நம்புகிறது
    இவ்வார வல்லமையாளராக எவிடென்ஸ் கதிர் அவர்களை பரிந்துரை செய்த முனைவர் கே. சுபாஷினி அவர்களுக்கு வல்லமையின் நன்றி.இந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
    Share
  • இந்தவார வல்லமையாளர்! (233)

    செல்வன்

    இந்த வார வல்லமையாளர் – திரு. என். சொக்கன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர், கவிஞர் திரு என்.சொக்கன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    திரு என். சொக்கனை பத்தாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். இவ்வாரம் இவரது “பக்தித்தமிழ்” எனும் நூல் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இதை பற்றி குறிப்பிடும் என்.சொக்கன் அவர்கள்

    “தமிழைப் பொறுத்தவரை பக்தியும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கின்றன. வைணவத்தை ஆழ்வார்களும், ஆசார்யன்களும் தமிழால் வளப்படுத்தி, பாரெங்கும் பரப்பினார்கள் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சைவமும் அடியார்களால், நாயன்மார்களால் தமிழை ஆதாரமாகக்கொண்டு செழித்து வளர்ந்தது. இங்கே தமிழ், ஒட்டுமொத்தமான பக்தி வளர்ச்சிக்குதான் பயன்பட்டதே தவிர பிரிவினை எதற்கும் வித்திடவே இல்லை என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.அதைவிட பக்தியோடு தானும் வளர்ந்தது, பாமரராலும் எளிதாகஉணரப்பட்டது.

    எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என். சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து நூறு அத்தியாயங்கள் எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். சுமார் எண்ணூறு பாடல்களுக்கான எளிய விளக்கங்களோடு பலப்பல கதைகள், சுவையான நிகழ்வுகளோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    இந்நூல் தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. அச்சு நூலின் முதல் பாகம் வெளியாகிவிட்டது, அடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்” என்கிறார்.

    1

    Screen Shot 2017-07-31 at 10.30.19 PM

    குழந்தைகளுக்கு தமிழை அழகான எழுத்துநடை மூலம் கொண்டுசேர்க்கும் தமிழாசிரியர் என்.சொக்கன். குழந்தைகளுக்கான திருக்குறள் எனும் ஆடியோ, விடியோ தொகுப்பையும் வலையேற்றி வருகிறார். இவ்வாரம் அதில் 158வது விடியோ/ஆடியோ பதிப்பு வெளியானது. கம்பராமாயண வகுப்புகள், குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகளை எடுப்பதும் இவரது சாதனைகளில் சேர்ந்தது.

    தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர் ஆவார். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

    அம்பானி, ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி , சல்மான் ரஷ்டி, குஷ்வந் சிங், வால்ட் டிஸ்னி போன்ற பலரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தினமணி போன்ற பல நாளிதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    இவரைப் போல தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கம் கிடைக்கும் வகையில் இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (232)

    செல்வன்

    இந்தவார வல்லமையாளர் விருது! – கமலஹாசன்

    இவ்வார வல்லமையாளராக கலைஞானி கமலஹாசன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    இவ்வாரம் அதிகம் அடிபட்ட பெயர்களில் கமலஹாசன் பெயரே முதன்மையானது என்பதில் ஐயமில்லை. அரசியலுக்கு நடிகர்கள் வருவது புதிதல்ல எனினும் கமலஹாஸம் வருவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அவரும் இதுவரை “அரசியல் எனக்கு தெரியாதத் துறை” என்றே கூறிவந்தார். ஆனால் தமிழகத்தில் ஊழல் நிலவுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக தமிழக அமைச்சர்கள் அவர் மேல் கண்டனக்கனைகளை பொழிந்தவுடன், தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியை பொதுவெளியில் இட்டு ஊழல் நிலவுவதற்கான சான்றுகளை அம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக்கோரினார்.

    இம்மாதிரி ஊழல் புகார்களை வரவேற்க வேண்டிய தமிழக அரசு அதற்கு மாற்றாக அச்சத்தினால் மின்னஞ்சல் முகவரிகளையே வலைதளத்திலிருந்து அகற்றியது சர்ச்சையை உண்டாக்கியது. இத்தகைய ஊழல் குறித்த மிகப்பெரும் விவாதத்தை பொதுமக்கள் சார்பில் எழுப்பிய காரணத்தால் கமலஹாசன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம்.

    1

    தமிழகத்தில் இன்று நிலவும் மிகப்பெரும் கொள்ளை ஊழலின் விளைவாக இயற்கை வளங்களான ஏரிகள், குளங்கள், ஆற்றுமணல் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது, இயற்கை வளங்கள் கொள்ளை ஆகியவை நிற்கப்போவது கிடையாது. ஆக இதுகுறித்த விவாதங்கள் எழுந்து ஆளும், எதிர்கட்சிகள் இரண்டும் பொதுமன்றத்தில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய சூழல் உருவாவது நல்லதே. கமலஹாசன் போன்ற அறிஞர்கள் இதை எழுப்புவது பாராட்டுக்குரியது.

    நடிகர் கமலஹாசன் பன்முகத்தன்மை கொன்ட கலைஞர். சிவாஜிக்குப்பின் தமிழகம் கண்ட சிறந்த நடிகக்கலைஞர்களில் முதன்மையானவர். இவரது படங்கள் மிக முற்போக்கான கருத்தைக்கொண்டவை. பகுத்தறிவு, மூடநம்பிக்கையைத் தொலைத்த ஆன்மிகம், சாதி,மத வாதம் கடிதல் ஆகிய முற்போக்கு கருத்துக்களை இவர் படங்களில் காணலாம். நாயகன், மகாநதி, அன்பே சிவம், குணா ஆகிய படங்கள் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றவை.

    இத்தகைய மகா கலைஞனை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (231)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),&  Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அவர்கள் பெயர்:

    ஜாய்தீப் பாக்சி
    சிஷிர் சங்காயன்
    பிரகாஷ் சர்க்கார்
    சோமக் ராய்சவுத்ரி
    ஜோ ஜேக்கப்
    ப்ரதிக் தபாடே

    (ஆங்கிலத்தில் Joydeep Bagchi, Shishir Sankhyayan, Prakash Sarkar, Somak Raychaudhury, Joe Jacob, Pratik Dabhade)

    இந்த ஆறு விஞ்ஞானிகளும் புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே (கேலக்ஸி) கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயர் சூட்டியுள்ளனர். அதிலும் சரஸ்வதி கேல்க்ஸியானது சூப்பர்க்ளஸ்டர் எனப்படும் மிகப் பெரிய கேலக்சி வகையை சார்ந்தது.

    1

    சரஸ்வதி கேலக்ஸி பூமியில் இருந்து 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 60 கோடி ஒளியாண்டுகள் ஆகும். இதில் உள்ள நடசத்திரங்களின் எண்ணிக்கை (மூச்சை பிடித்துக்கொள்ளவும்) 20 லட்சம் ஆயிரம் கோடி.

    பிரபஞ்சம் தோன்றி 1000 கோடி ஆண்டுகள் கழித்து சரஸ்வதி தோன்றியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்த நம் கணக்கீடுகளை சரஸ்வதியை ஆய்வதன் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    இந்த மகத்தான சாதனையை செய்த இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டி அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (230)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர் – சஹா நாதன்

    சஹா நாதன் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் மாநகரில் வசிக்கும் புலம் பெயர் தமிழர். ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். விண் டிவி, தூர்தர்ஷன், மெரினா ரேடியோ, தமிழ்குஷி டாட்காம் ரேடியோ ஆகியவற்றில் அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    இவரது விருப்பத்துறைகள் ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்றம் ஆகியவை ஆகும். ரேடியோவில் “இன்று முதல் சக்ஸஸ்” மற்றும் “உன்னை அறிந்தால்” போன்ற சுயமுன்னேற்ற ஒலிபரப்பு தொடர்களை வழங்கி வந்தார்.

    இந்த சூழலில் சென்னையில் “பிரைவேட் ஜாப்ஸ்” எனும் உள்ளூர் செய்தித்தாளில் கட்டுரைத்தொடர் ஒன்று எழுதிவந்தார். அதைப்படித்த கல்கண்டு இதழ் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் அதை நூலாக வெளியிட இவரை ஊக்குவித்தார். அவரை தன் குருவாக ஏற்ற சஹாநாதன் அதை நூலாக வெளியிட்டார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் பல்கலைகழக நிறுவனர் பச்சைமுத்து அந்த நூலின் பிரதிகள் அனைத்தையும் வாங்கி தன் பள்ளி, கல்லூரி நூலகங்கள், மாணவர்களுக்கு வழங்கினார்.

    இந்த சூழலில் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் வாய்ப்பு கிட்டியது. அதன்பின்னும் தமிழ் மண்ணுடன் தனக்குள்ள தொடர்புகளை யுடியூப் சானல் ஒன்றை துவக்கி அங்கே தன் சுயமுன்னேற்ற மற்றும் ஆன்மிக கருத்துக்களை விடியோ பதிவுகளாக வழங்கி வருகிறார்.

    இதுவரை இவரது ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன. லக்ச்மண் ஸ்ருதியிடம் தன் மனிதாபிமான சேவைக்காக விருதுகளும் பெற்றுள்ளார்.

    இந்த வாரம் இவரது “The Golden key for wellness” எனும் நூல் மணிமேகலை பிரசுரம் சார்பில் வெளியாகிறது. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன சி.டி.ஓ கல் இராமன் தலைமை தாங்கி இந்நூலை வெளியிடுகிறார். மணிமேகலை பிரசுரம் எம்.டி ரவி தமிழ்வாணன் கலந்து கொள்கிறார்.1

    இந்த நூலின் வெற்றிக்கு நடிகை ரோகிணி உள்ளிட்ட பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ள நிலையில், தமிழக மக்களின் சுயமுன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆசிரியர் சஹாநாதனை வாழ்த்தி அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    1

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share
  • இவ்வார வல்லமையாளர்

    நம் இந்திய அரசாங்கத்திடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கிம் யாங் – ஷிக் கொரிய நாட்டில் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியம் ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று, தமது இந்தியத் தத்துவங்கள் முதுநிலை பட்டப்படிப்பை சியோல் டோங்க்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டமும் பெற்றவர்.

    unnamed (1)

    கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர்.

    இவர் பெற்றுள்ள விருதுகள் : The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற பல விருதுகள் பெற்றுள்ளவர் இவர். இவர்தம் அற்புதமான கவிதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்ட தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருப்பதையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்வதோடு எமக்களித்த கௌரவமாகவும் கருதுகிறேன்.

    பவள சங்கரி (மொழிபெயர்ப்பு)

    ஓ, எமது குருவே தாகூர் – கிம் யாங் ஷிக்

    ஆங்கிலத்தில் – கிம் ஜின் – சுப்

    உங்களுக்காகப் பாடுகிறேன் நான்
    அன்பின் பாடல், வேதனையின் பாடலும்
    சிலவேளைகளில் விரக்தியின் பாடலும்
    நீங்கள் இசைக்கும் அதே இன்கீதமதை
    உங்களுக்காகப் பாடுகிறேன் நானும்.

    வெகுகாலம் முன்பு
    எம் பத்தாம் அகவையில் அடியெடுத்தபோது
    எம் மென்னிதயமதை நிறைத்திருந்த
    வெகு தொலைவிலிருந்து வளி சுமந்து வந்த
    உங்கள் புதிரான பாடலின் ஓசையைக் கேட்டேன்.

    உங்கள் தாய் மண்ணிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்
    அந்த வெதுவெதுப்பான வசந்த வளி எமது சாளரத்தையும் சீண்டியது
    பிரகாசத்துடன் ஒளிர்கின்ற கதிரோனையும் நறுமணத்தையும் தழுவுகிறேன் நான்.

    “நீங்கள் யார்?
    நரைமுடிகளுடனும் வளைந்த முதுகுடனும் வந்த நீங்கள்
    கதிரொளியும் நறுமணமும் உடன் கொண்டுவந்துள்ளீர்கள்!”
    “இளம் பெண்ணே,
    எம் பாடல்களின் சுருள்களினூடே தேடியவாறோர் நாள்
    அந்த மர்ம தேசத்திற்கு நானும் வருவேன்
    மணமிகு மாங்கனிகள் பூத்துக்குலுங்கும் அக்களத்தில்
    தங்கமான இன்கனிகள் இலையுதிர்காலத்தில் கனியும்
    அங்கே பசுந்தென்னை மட்டைகள் குளிர் கடற்காற்றில்
    மென்மையாக அசைகிறது!”

    ஆயினும் நான்
    பிறந்து வளர்ந்த அத்தேசம் 
    காட்டுமிராண்டிகளின் ஆக்கிரமிப்பால்
    பேரழிவிற்கு உட்பட்டிருந்தது
    எங்கள் தேசம் அடக்குமுறையினாலும்
    அதிபயங்கரமான பேரழிவுகளினாலும் 
    இழிந்துபட்டுக் கிடந்தது.
    அன்றிலிருந்து எங்கள் தாய்மண் ஆழ்இருளில் மூழ்கிக்கிடந்தது
    தாங்கொணாப் பேரலைகளும் வீசியடித்தது 
    எரிச்சலையும் வேதனைத் துடிப்பையுமே விட்டுவைத்ததது.
    இருபத்தியெட்டு, மார்ச் 1929இல், யோகாஹாமா, ஜப்பானிலிருந்து நீங்கள் திரும்பியிருந்த அந்நொடியில் வேதனையில் வாடும் கொரிய தேசத்திற்காகத் தாங்கள் ஒரு சிறிய நான்கு வரிக்கவிதையை வடித்திருந்தீர்கள். 
    உங்கள் குரல் மெலிந்தும், மென்மையாகவும் இருந்தாலும் நீதிக்காக உங்கள் இதயத்திலிருந்து வெடித்துச்சிதறிய இரைச்சல், வெகுதொலைவில் இல்லாத கொரியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கான வெகுகாலக் காத்திருப்பின் தீர்க்கதரிசனமாகவே இருந்தது. 
    உங்களுடைய அசைக்கமுடியாத ஆழ்ந்த நம்பிக்கையும், அக்கறையும் ஒரு வாழ்க்கையைக்காத்து பிரகாசிக்கச் செய்தது.
    ‘கிழக்கே ஒரு விளக்கு’ என்ற உங்கள் பாடல், எங்கள் அடக்குமுறைப்புலம்பலினூடே எங்கள் செவிகளை நெருங்கி நெருங்கி வந்தது.

    பாடல் இதோ :

    கிழக்கே ஒரு விளக்கு – ஆர். தாகூர்

    ஆசியாவின் பொற்காலங்களில்
    விளக்கேந்தி ஒளியூட்டியவர்களினூடே
    கொரியாவும் ஒன்றே எனினும்
    கிழக்கு பட்டொளியாய் மின்னுதற்பொருட்டு
    அவ்விளக்கு மீண்டுமொருமுறை
    ஒளியூட்டக் காத்திருக்கும் தருணமிது!

    யோகாஹாமா, மார்ச் 1929

    imagesநீங்கள் சொன்னது சரி. 
    உங்கள் நற்கருணையின் உண்மை வெளிப்பாடே இந்த தீர்க்கதரிசனப் பாடல்.
    உங்கள் அறையில், நீங்கள் வழமையாக ஆழ்மன தியானத்தின்போது அமரும் சாய்வு நாற்காலியான, அந்த என் விருப்பமான நாற்காலியின் அருகில் நின்றிருக்கும்போது, நுண்ணிய, எளிய, மெல்லிய ஊதாவாக வளர்ந்துவரும்  புருவம் போன்ற பிறைநிலவையோ அல்லது வானின் துருவ நட்சத்திரத்தையோ அண்ணாந்து பார்ப்பது வழக்கம்.

    ஏதோவொரு தருணத்தில்
    உங்கள் அன்பெனும் நீரூற்றிலிருந்து நீர் இறைத்து,

    எம் மென்மையான இதயத்தின் வலிமிக்க தாகத்தைப்போக்கி,

    அதை ஒரு சாந்தமான கானகத்துக் குளிர்க்காற்றாக புனிதமாக்குகிறேன்.
    இப்படியாக உங்கள் இடைவிடா ஆழ்ந்த அன்பு

    என் ஆன்மாவை சாந்தமாக்கி, செறிவூட்டி,

    என் வாழ்வையும் வளமாக்கியுள்ளது.

    இன்று வளர்ந்துவிட்ட அப்பெண்
    அமைதியாகத் தன் வீணையை வாசிப்பாள்
    அன்பிற்காகவும் அமைதிக்காகவும்
    உங்கள் நித்திய சத்தியத்தை இசைக்கிறாள்..

    இந்த புதிய நூற்றாண்டிலும்
    அனைத்து மக்களின் அன்பிற்காகவும் பாடுவேன்
    நீங்கள் விரும்பியபடி,
    நீங்கள் பாடியவாறு மென்குரலில் பாடுகிறேன்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இவ்வார வல்லமையாளர்

    இவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி

    உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருக்கோயில் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது.

    இந்த நிகழ்வுக்கு ஆலோசனை அளித்து, நடக்கத் தூண்டுதலாக இருந்தவர், பார்யாய பேஜாவர் மடத்தின் தலைவரான விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் ஆவார்

    சுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மாலை 6.59 மணி அளவில் தன் நோன்பை முறித்த பின், வாழைப்பழம், ஆப்பிள், பேரீச்சை ஆகிய உணவுகளுடன் கஷாயமும் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் உரையாற்றிய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் “கர்நாடகாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

    2

    இவர் 30 ஆண்டுகளாக ரம்ஜான் சமயம் இந்து-முஸ்லிம் சம்மேளனத்தை நடத்தி வந்தாலும் உடுப்பி கோவிலில் நடப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.

    இப்தார் உணவு உண்டபின், கோயில் வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தினார்கள்.

    அன்பையும்  சமத்துவத்தையும் வலியுறுத்தும் வைணவம் மற்றும் இஸ்லாமிய நெறிகளை பின்பற்றுவோர் தம்மிடையே உள்ள ஒற்றுமைகளையும், தாம் இந்தியர், சகோதரர், ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகளை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    1

    இந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179

    Share