Tag Archives: தஞ்​சை ​வெ.​கோபாலன்

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 21ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் கன்னிவனநாதா கன்னிவனநாதா பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை பூசியநீற்றைப் புனை என்று அளித்தையிலை அடிமையென்று சொன்னையிலை அக்குமணி தந்தையிலை விடுமுலகம் போக்கி உன்றன் வேடம் அளித்தையிலை உன்னிலழைத்தையிலை ஒன்றாகிக் கொண்டையிலை நின்னடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை ஓங்குபரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான் ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை நாமந்தரித்தையிலை நானொழிய நின்றையிலை சேவவருளி எனைச் சிந்தித்தழைத்தையிலை முத்தி அளித்தையிலை மோனங் கொடுத்தையிலை சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை தவிர்ப்பைத் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 20ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் முதல்வன் முறையீடு. மதுரையம் பதியில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தர கடவுளை நோக்கிப் பாடியதாக அமைந்தவை. கன்னிவனமென்பது மீனாட்சியம்மன் ஆட்சிபுரியும் தலம். ஆதியில் கடம்பவனமாக இருந்த மதுரை ஊழிக்காலத்திலும் அழியாமல் நின்ற காரணத்தால் ‘கன்னி’ எனும் பெயர் பெற்றது. கன்னிவனநாதா, கன்னிவனநாதா, மூலமறியேன், முடியும் முடிவறியேன் ஞாலத்துட்பட்ட துயர் நாட நடக்குதடா, அறியாமையாம் மலத்தால் அறிவு முதற் கெட்டனடா பிரியா வினைப் பயனாற் பித்துப் பிடித்தனடா, தனுவாதிய நான்கும் தானாய் மயங்கினண்டா மனுவாதி சக்தி வலையில் அகப்பட்டனடா மாமாயை யென்னும் வனத்தில் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 19ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் இந்தப் பகுதியில் மனித இனத்தில் பிரஜோற்பத்தி தொடங்கி, மதலையாகி வளர்ந்து முதிர்ந்து இறுதியில் மூச்சடங்கி தீக்கிரையாகும் வரையிலான நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக யாக்கை நிலையாமை பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்தப் பகுதியில் அடிகளாரின் சொற்கள் படிக்கச் சற்று அருவருப்பாகத் தோன்றினாலும், அதுதான் முற்றிலும் உண்மை என்பதால் அந்த கசப்பான உண்மையை நம் மனம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உடற்கூற்று வண்ணம். ஒருமட மாதும் ஒருவனுமாகி இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து ஊறுசுரோணித மீது கலந்து 1. பனியிலொர்பாதி ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 15ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் பத்தெட்டாய் ஓரைந்தாய்ப் பதின்மூன்றையும் கடந்த ஒத்திட்டு நின்றது ஓர் ஓவியத்தைப் போற்றாமல் தெத்திட்டு நின்ற திரிகண்ணிக்கு உள்ளாகி வித்திடாய் நெஞ்சே விடவும் அறியாயே. 1. ஓ என்றன் மனமே! *முப்பத்தாறு தத்துவங்களையும் (அதாவது பத்து+எட்டு+ஐந்து+பதிமூன்று=முப்பத்திஆறு) கடந்து அதற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் ஓவியம் போன்றவனான சிவபெருமானின் அற்புத தரிசனம் கண்டு அப்பரப்பிரம்ம ஸ்வருபத்தில் நிலைத்த இன்பத்தைக் காணாமல், உலகத்தில் சுலபமாகக் கிடைக்ககூடிய அற்ப சுகங்கள் எனும் வலையில் மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்து உன் புத்தியை அதில் விதைத்துவிட்டு நிற்கிறாயே, ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 14ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் உடைக்கை யொருக்கி உயிரை அடைத்து வைத்த சடக்கைச் சதமென்று சார்ந்து அங்கு இறுமாந்தை உடைக்கைத் தகர்த்தே உயிரை யமன் கொள்கையிலே அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே. 1. புலால் உடலைக் காற்றால் நிரப்பி மூடி, அதில் உயிரை அடைத்து இந்த உடலை நிரந்தரமானது என்று எண்ணி இறுமாப்போடு அதில் குடியிருந்தாய்; பிறகு எமதர்மன் வந்து இந்த உடலில் நிரம்பியிருந்த உயிரைப் பறித்துக் கொண்டு போகின்ற காலத்தில், நீ அதுநாள் வரை சேர்த்து மறைந்து வைத்திருந்த பொருட்களும், செல்வங்களும் உன்கூட ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன் வஞ்சத்தை நீக்கி மறுநினைவு வாராமல் செஞ்சரணத் தாளைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே. 1. ஏ மனமே! திருவருள் சக்திகளான இறைவனுடைய இதயத்தின் ஞானசக்தி, சிரத்திலுள்ள பராசக்தி, தலை முடியிலுள்ள ஆதிசக்தி, கவசத்தில் அமைந்த இச்சா சக்தி, கண்களில் அமைந்த கிரியா சக்தி ஆகிய இந்த ஐந்து சக்திகளையும் வணங்கி, அவற்றைக் கொண்டு ஐம்புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி உன்வசப் படுத்திக் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 12ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் நெஞ்சோடு புலம்பல்  (இதில் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன் நெஞ்சை விளித்துச் சொல்லும் பாங்கில் ‘நெஞ்சே’ என்று முடித்திருப்பார்) மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச் செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர்தம் கண் வலையில் சிக்கிமிக அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. 1. ஏ மனமே! திருச்செங்காட்டில் திருநடனம் புரிகின்ற எம்பெருமான் நடராசனை வணங்கித் தொழாமல், மண்ணாசையையும், பொன்னாசையையும் காட்டி சபலத்தை உண்டு பண்ணி இருளில் ஆழ்த்திவிட்டு, அதோடு நில்லாமல் கண்ணால் ஜாடைகாட்டி மயக்கும் வேசியர்தம் வலையில் சிக்கிக் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 11ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் (அவருடைய அன்னை மறைந்தபோது அவருக்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடியவை.) ஐயிரண்டு திங்களா அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி. 1. பத்து மாதங்கள் சுமந்து, அங்கம் தளர்ந்து வருந்திப் பெற்று, ஆண் குழந்தை என்றுணர்ந்து தன் உடல் நோவெல்லாம் மறைந்து மனம் களிப்புற்று, குழந்தையைத் தன்னிரு கரங்களில் ஏந்தித் தாய்ப்பால் அளித்து என்னைப் போற்றி வளர்த்த அந்தத் தாயை இனி நான் எந்தப் பிறவியில் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 10ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் அடியார் உறவும், அரன் பூசை நேசமும், அன்பும் அன்றிப் படிமீதில் வேறு பயன் உளதோ, பங்கயன் வகுத்த குடியான சுற்றமும் தாரமும் வாழ்வும் குயக் கலங்கள் தடியால் அடியுண்ட வாறொக்கும் என்று இனம் சார்ந்திலரே. 1. சிவநேசச் செல்வர்களான அடியார்களின் நட்பும், சிவபெருமானுக்குச் செய்கின்ற பூஜைகளும், அவர் மீது செலுத்துகின்ற அன்பையும் உள்ளடக்கிய பக்தி மார்க்கத்தை விட இவ்வுலகிலுள்ள ஜீவன்களுக்கு வேறு நல்ல செயல் ஏதேனும் இருக்கிறதா என்ன? பிரமன் படைப்பில் நமக்கென்று அமைந்த சுற்றத்தார், மனைவி முதலான உறவினர்கள், ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 8ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டை இது என்றறிந்து போதப் பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல்லறிவால் வாதைப் பட்டாய், மடமானார் கலவி மயக்கத்திலே பேதைப் பட்டாய் நெஞ்சமே! உனைப் போல் இல்லை பித்தருமே. 1. என் நெஞ்சே! கேடு கெட்ட என் மனமே! பெரியோர்களைத் துணை கொண்டு நல்வழிப் படவில்லை; உன்னுடைய பேதமையால் நல்லவர்களிடம் சென்றடைந்தும் தவறுகளைச் செய்து வேதனைப் பட்டாய்; மான்போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்களின் கலவி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாய்; உன்னைப் போல வேறு பித்தர் எவரும் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 7ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன், இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே. 1. இங்கு நடைபெறும் எந்தச் செயலும், நான் எனும் இந்த உயிராலோ அல்லது அவ்வுயிரைத் தாங்கும் உடலாலோ நடைபெறவில்லை, நடப்பது அனைத்தும் இறைவா உன் செயலால் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன், இந்த ஊனுடம்பைப் பெற்று இந்த பூமியில் நான் பிறந்த பின்னர் செய்த ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 6ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப் போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தான் ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம் பொழுது காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. 1. பெரியோர்கள் நமக்கு எத்தனையோ உபதேசங்களைச் சொல்லி வைத்தார்கள்; எதைத்தான் கேட்டு அதன் வழி நடந்தோம்? நான்கு வேதங்கள் கூறுகின்ற நற்கருத்துக்களைக் கேட்டுப் பின்பற்றினோமா? இல்லை, மண்ணாசையை, பெண்மீதான ஆசையை விட்டுவிடு என்றார்கள் சிவ நேசச் செல்வர்கள், அவர்கள் சொல்லியபடியாவது அவற்றை விட்டுத் தொலைத்தோமா? இல்லையே! ஏதோ நல்ல காலம், ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 5ம் பகுதி

தஞ்​சை ​வெ. ​கோபாலன் ​பொது உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே. 1. இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் ...

Read More »

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 3ம் பகுதி

தஞ்​சை ​வெ.​கோபாலன் திருத்தில்லை சோறிடு நாடு, துணி தரும் குப்பை, தொண்டு அன்பரைக் கண்டு ஏறிடும் கைகள், இறங்கிடும் தீவினை எப்பொழுதும் நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம் கண்டால் ஊறிடும் கண்கள், உருகிடும் நெஞ்சம் என் உள்ளமுமே. 1. திருநீறு பூசிய உடலோடு பொன்னம்பலத்தில் நடனமிடும் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டால் கண்கள் பனிக்கும், நெஞ்சும் உள்ளமும் உருகும், நாடு வளம் கொழித்து பஞ்சமின்றி சோறிடும், குப்பைகூட உடுக்க துணி தரும், அடியார்களைக் கண்டால் கரங்கள் இரண்டும் தலைமேல் சென்று கும்பிடும், தீவினைகள் ...

Read More »