Blog

  • பண்டைக் கால குற்ற தண்டனை

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    Codified law என்பதற்கு குடிமை ஒழுங்கை சமூகத்தில் நிறுவ தொகுத்து பதிவுபடுத்திய  சட்டம் என்று பொருள். இப்படி நெறிமுறைப்பட்ட சட்டம் என்பது பண்டைய தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அரையர்கள் எனும் அரசர்கள் அந்தந்த நேரத்திற்கு சினந்து வெகுண்டு இட்ட ஆணைகளே சட்டங்களாகி நடைமுறைப் படுத்தப் பட்டன என்று தெரிகின்றது. இத்தகு தான்தோன்றிச் சட்டங்கள் நியாயமானதாக இருக்கவில்லை. பொதுவானதாக இருக்க வில்லை. ஏனென்றால் செல்வமுடையவர் தம்மிடம் இருந்த செல்வத்தால் கோவிலில் விளக்கேற்றி விட்டு தப்பிவிட்டனர். குற்றங்களை மெய்ப்பித்து தண்டனை பெற்றுத் தரும் காவல்துறை போன்ற அமைப்பு இல்லாமையால் ஊர் மக்கள் தாமாகவே முன் வந்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் அவலநிலையே இருந்துள்ளது. மனுதருமச் சட்டம் என்பதெல்லாம் இருந்ததில்லை என்றே தெரிகின்றது. இவற்றை எல்லாம் கீழ்க் காணும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை வடக்கு சுவர் 18 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரி பந்மராந த்ரிபுவநச் சக்கரவ
    2. த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 3 ஆவது
    3. வாணகோப்பாடி ராஜராஜவள நாட்டுப் பெண்ணைத் தெந்கரை
    4. க்கீழ் கொன்றைநாட்டு முடியனூரிருக்கும்  பள்ளிசேரி அடியநம்
    5. பியான கோவலராயப் பெரையன் மேற்படி நாட்டுப் பெண்ணை வட
    6. கரைச் செங்குன்ற நாட்டு வாளைவெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொ
    7. ன் பற்றியுடையான் குன்றன் சீருடையானைக் கோவலராயர்(யர்) வை
    8. [வ]டையிலே இவன் சேரி அடியநம்பி விருகத்தை எய்ய பிழை
    9. ச்சு இச்சீருடையான் மேலே அம்புபடப் பட்டமையில் எழு
    10. பத்தொன்பது நாட்டுச் சித்திரமேழிப் பெரிநாடுங் கூடி
    11. இருந்து இக்கோவலராயப் பெரையன் மேலே பழியாக்கி இவந்
    12. ரேலிந்தப் பழிதீரக் கொண்ட நடையாவது இன்நாட்டுச் ச
    13. ண்பையாந வீர்ராஜேந்த்ரபுரத்து உடையார் திருத்தாந் தோன்
    14. றி ஆள்ளுடையார் ஸ்ரீ கோயிலிலே இரண்டு திருநுந்தாவி
    15. ளக்கு வைக்கக் கடவநாக்கி இவந் விட்ட சாவாமூவாப் பசு
    16. அறுபத்து நாலு. இப்பசு அறுபத்து நாலுங் கைக்கொ
    17. ண்டோம் இக்கோயிலில் திருவுண்ணாழிகை ஸபையோம்.
    18. சந்த்ராதித்தவல். இது பந்மாயிஸ்வர ரக்ஷை.

    பள்ளி சேரி – பள்ளி மக்கள் வாழும் சேரி, பெரையன் – பறையன், விருகத்தை – செந்நாய் வகை; எய்ய – ஏவ; பிழைச்சு – பிழையாக, தவறாக; பட்டமை – செத்ததனால்; பழியாக்கி – குற்றஞ் சுமத்தி; நடையாவது – நடவடிக்கையாவது; திருவுண்ணாழிகைச் சபையோர் – கருவறைப் புகும் பிராமணர்; பன்மாகேசுவரர் ரக்ஷை – சிவனடியார் காப்பு.

    விளக்கம்: இரண்டாம் குலோத்துங்கனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1135-1136) வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் கண் அமைந்த தென் பெண்ணையின் தென்கரை ஊரான கீழ்க் கொன்றை நாட்டு முடியனூரில் உள்ள பள்ளிச்சேரியில் வாழுகின்ற அடியநம்பி கோவலராயன் எனும் பறையன் வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் வடகரைச் செங்குன்ற நாட்டில் வாளைவெட்டி ஊரில் இருக்கும் வெள்ளாளன் பொன்பற்றியுடையான் குன்றன் சீருடையான் என்பானைக் வேட்டையின் போது இவனுடைய சேரியைச் சேர்ந்த அடியநம்பி இவனுடன் சென்று வேட்டை நாயை ஏவ அதே நேரம் கோவலராயன் தொடுத்த அம்பு குறி தவறி சீருடையான் மேல் பட்டு தைத்து அவன் இறந்து போகின்றான். எழுபத் தொன்பது நாட்டின் சித்திரமேழிப் பெரியநாட்டு மக்கள் கூடி வந்து இருந்து இக் கோவலராயப் பறையன் மீது கொலைப் பழி சுமத்துகின்றனர். கோவலராய பறையன் ஒரு அரசன் நிலையில் இருந்ததால் அவனை தப்பவிடாமல் செய்யவே இவ்வாறு ஊரே திரண்டு அவனது குற்றத்திற்கு நடவடிக்கையாக சண்பை (ஜம்பை) திருத்தான் தோன்றி இறைவர் திருக்கோவிலில் இரண்டு திருநொந்தா விளக்கு ஏற்ற வேண்டும் என்று தண்டனையாக இடுகின்றனர். அதன்படி கோவலராயன் அறுபத்து நான்கு சாவோ மூப்போ எய்தாத இளம் பசுக்களை தருகின்றான். அவற்றை கருவறை பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் நாள் வரை நந்தாவிளக்கு ஏற்றுவதாக உறுதி கூறினர். இந்த நடைமுறையை சிவனடியார் காக்க வேண்டும் என்ற குறிப்போடு முடிகின்றது.

    கோவலராயன் செல்வ வளமுடையவன் என்பதால் 64 பசுக்களை அவனால் கொடுக்க முடிந்தது. இங்கே எழும் கேள்வி கோவிலில் விளக்கேற்றுவது எப்படி குற்றத்திற்கான தக்க தண்டனையாக இருக்க முடியும் என்பது தான்? தண்டத் தொகை, சிறைத் தண்டனை என்றால் அவற்றை தண்டனை என்று கருதலாம். இது அப்படி அல்ல. பழமையில் சிறைத் தண்டனை என்பதே இருந்ததில்லை போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    இக்காலத்தே காடுகள் ஒதுக்குபுறமான மலைப் பகுதியில் இருப்பது போல் அல்லாமல் அக்காலத்தே காடுகள் நடுவே தான் ஊர்களே அமைந்திருந்தன என்பது கோவலராயன் வேட்டையில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அக்கால் ஊர்கள் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு இப்படித் தான் காட்டின் நடுவே இருந்தன போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 65-66.

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை சுவரில் பொறிந்துள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியு ந்தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்
    2. ச்சாலை கல மறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு ந்தடிகை பாடியு நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்ல
    3. முங் கலி[ங்]கமு மெண்டிசை புகழ்தர வீழ மண்டலமு மிரட்டபாடி யேழரை யிலக்கமு ந்திண்டிறல் வென்றி தண்டாற் கொண்
    4. ட தன்னெழில் வளரூழி யெல்லாவியாண்டு ந்தொழுதக விளங்கு மியாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவிராச ராச ராசகேசரி ப
    5. ந்மரான  ஸ்ரீ ராசராச தேவற் கியாண்டு 28 ஆவது. இவ்வூர் வியாபாரி அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொ[ண்]டிருந்த பெண்டாட்டி
    6. [சீமா]தேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிலிருக்கும் பிராட்டி சீ[ரா]ளன் இராத்திரி [சீ]மாதேவிபெற்றியை வலியப்புக்கு பிடி
    7. _ _ _ _ அங்காடி பொற்றாமன் என் மணவாட்டியை நானிருக்கவே வலிய பிச்சானென்று புக்கு படக் குத்தினமையில் அங்காடி
    8. [பொ]ற்றாமன் மேல் வழக்கழிவு இலாமையில் பிராட்டி சீராள மாடைத் தோடொருங்கி பிராட்டி சீராளனுக்காக ஒரு நொந்தா விளக்கு
    9. _ _ _ _ த்தான் தோன்றியாள்வார்க்கு சந்த்ராதித்தவற் நிசத முழக்கு எண்ணை யட்டி விளக்கெரிக்க அங்காடி பொற்றாமன் குடுத்த பொ
    10. [ன் ப]தின் கழஞ்சும் கொண்டு நிசத முழக்கெண்ணை யச்சுவோமானோ யிந்நாட்டு பெண்ணைத் தெந்கரை பாலைப்பந்தலூ
    11. [ரோம்] சந்த்ராதித்தவற். பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    புக்கு – புகுந்து; பிடிச்சான் – கட்டிப் பிடித்தான்; படக் குத்தி – செத்து விழும்படிக் குத்தி; வழக்கழிவு – குற்றம் இல்லாமல் ஒழிய, மாடைத்தோடொருங்கி – ; நிசதம் – ஏற்பாடு, அட்டி – ஊற்றி

    விளக்கம்: இராசராசனின் மெய்க்கீர்த்தியோடு இக் கல்வெட்டு தொடங்குகின்றது. அவனது 28 ஆவது ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1012) பொறிக்கப்பட்டுள்ளது. சண்பையில் வாழும் வணிகன் அங்காடி பொற்றாமன் வைத்துக் கொண்டிருந்த சீமாதேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரில் வாழும் பிராட்டி சீராளன் என்பான் இரவில் வீடு புகுந்து சீமாதேவியைக் கட்டிப் பிடித்தான். எதிர்பாரத வகையில் அங்கு வந்திருந்த அங்காடி பொற்றாமன் “நானிருக்கும் போதே என் மணவாட்டியை வலியப் வந்து புகுந்து கட்டிப் பிடித்தாயா”? என்று உள்ளே புகுந்து சீராளன் செத்து விழுமாறு குத்தினான். மாடைத் தோடொருங்கி என்ற சொல்லுக்கு பொருள் விளங்க முடியவில்லை என்பதால் தெளிவான விளக்கம் அறிய முடியவில்லை. இதனால் அங்காடி பொற்றாமன் மேல் குற்ற வழக்கு போகாததால் பிராட்டி சீராளனுக்காக ஒரு நுந்தா விளக்கு எரிக்க தான்தோன்றி இறைவர்க்கு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை உழக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு எரிக்க ஏற்பாடாகி அதற்கு பொற்றாமன் 15 கழஞ்சு பொன் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு பெண்ணைத் தென்கரையில் பாலைப்பந்தலூர் வாழும் பிராமணர் உழக்கு எண்ணை ஊற்றி நந்தா விளக்கு எரிப்பதாக உறுதி கூறினர்.

    ‘’யாரோ ஒருவன் வைப்பாட்டி தானே’’ என்று சீராளன் தகாத செயலில் ஈடுபட்டு அதன் எதிர்வினையால் மாண்டான். இது அந்நாளில் பண்பற்றோர் சமூகத்தில் வாழ்ந்ததற்கு எடுத்துக்காட்டு. அதே நேரம் செல்வம் உள்ளவன் தண்டனை பெறாமல் தப்புவான் என்பது அங்காடி பொற்றாமனால் இக்கல்வெட்டில் மெய்ப்படுகின்றது. ஒரு கட்டமைந்த பேரரசுக் காலத்திலேயே இப்படி என்றால் சங்க காலத்திலே மட்டும் எப்படி இருந்திருக்கும் நீதியும் நியாயமும்?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 72-73.

    ?????????????
    ?????????????

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை தெற்கு சுவரில் பொறிந்துள்ள 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமருவி[ய] செங்கோல் வேந்தன் முன்னோன் சேனை பின்னதுவாக இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு கொல்
    2. லாபுரத்து சயத்தம்பம் நாட்டி முன்னாணை தவிர்த்து த[ன்]னாணை செலுத்தி எதிரமர் பெறாது எண்டிசை திகழ பறைய
    3. து கறங்க ஆங்கது கேட்டு பேராற்றங்கரை கொப்ப[த்து] வந்தெதிர் பொருந ஆஹ[வ]மல்லன் அஞ்சி புறங்கிட்டோட ஆ
    4. னையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் ஆங்கவன் விபவம் அ_ங்கலுங் கொண்டு விஜை[ய] அபிஷேகம் செய்
    5. து வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர தேவற்[கு] யாண்[டு] 3 வது. வாணகோப்பாடியான ரா
    6. ஜேந்த்ர வளநாட்டு பெண்ணைத் தென்கரை நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடி யிருக்கு[ம்] மலையமான் காட்டிமேலூருடையான் பழங்கூரன் கு
    7. ன்றன் மேற்படியூரிருக்கும் வீரர்பு[த்]திரன் தாய் சே[ந்]தன் உமையாளை இறைகாட்ட அவள் இறை கடவேனல்லேனென்று சொல்ல அவளை
    8. கொச்செய்விக்க. அவள் நஞ்சு குடித்து சாவ. நான்கு திசை பதினெண் பூமி நாநாதேசியும் கூட நிரைந்து. இந்த பழங்கூரன் குன்றன் மேல் ப
    9. ழியாக்கி [இ]வன் மேலிந்த பழிதீர கொண்ட நடையாவது வாளையூராகிய ராஜேந்த்ரபுரத்து திருத்தான் தோன்றி மாதேவர்க்கு திருநுந்தா விளக்
    10. கொன்று வை[க்க]க் கடவனாக்கி. இவன் வைத்த காசு முப்பத்திரண்டு. இக்காசு முப்பத்திரண்டு வாளையூரா[கிய] ராஜேந்த்ரபுரத்து நகரத்தோம் கொண்டோ
    11. ம் கொண்டு அருமொழிதேவ[ன்] மரக்காலோடு ஒக்கும் உழக்கால் நிசதம் உழக்கெண்ணை அட்டகடவோம் இவ்வெண்ணை வணிக்கிராமத்தோம்
    12. இருகூறும், சங்கரப்பாடியோம் ஒருகூறும். சந்திராதித்தவல். இது பன்மாஹேஸ்வரர் ரக்ஷை.

    இறை – வரி அல்லது கடன்; இறைகாட்ட – கட்ட வேண்டிய பணம் இவ்வளவு என்று சொல்ல; கொச்செய்விக்க – இழிமை செய்ய, சிறுமைபடுத்த, மானபங்கம் செய்; பழியாக்கி – குற்றம் சுமத்தி; பழிதீர – குற்றதண்டனையாக; நடை – நடவடிக்கை; ஒக்கும் – ஈடான, பொருத்தமான; இருகூறு – 2/3; ஒருகூறு- 1/3

    விளக்கம்: இராண்டாம் இராசேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் கல்வெட்டு அவனது 3 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1056-1057) வாணகோப்பாடியான ராசேந்திர வளநாட்டு பெண்ணைத் தென்கரையில் நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடியில் இருக்கும் மலையமான் காட்டி மேலூருடையான் பழங்கூரன் குன்றன் அதே ஊரைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பான் தாய் சேந்தன் உமையாளை இறை (வரி/கடன்) கட்ட சொல்கிறான். அவள் இறை கட்ட முடியாது என்று மறுக்கிறாள். அப்போது பழங்கூரன் குன்றன் அவளை சிறுமைப்படுத்தி அல்லது மானபங்கப்படுத்தி விடுகின்றான். இது அன்னாளிலே பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகும். இதனால் மனமுடைந்த அவள் நஞ்சு அருந்தி மாண்டு போகின்றாள்.  இதனால் வெகுண்டு திரண்ட நாற்றிசை பதினெண்பூமி நாநாதேசி வணிகர் கூடி நிரைந்து இந்த பழங்கூரன் குன்றனை குற்றவாளி ஆக்கி இதற்கு தண்டனை நடவடிக்கையாக திருத்தான்தோன்றி இறைவர்க்கு திருநுந்த விளக்கு ஒன்று வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். அதற்கென்று இவன் கொடுத்த காசு 32 ஆகும். இந்த 32 காசை வாளையூர் ராசேந்திரபுரத்து நகர்த்தவர் பெற்றுக்கொண்டனர். இதை வைத்து அருமொழித் தேவன் மரக்காலுக்கு ஈடும் இணையுமான உழக்கினால் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை நுந்தா விளக்கிற்கு உழக்கெண்ணை ஊற்றுவதாக உறுதி கூறுகின்றனர். இந்த வெண்ணையை வணிகக் கிராமத்தார் இரண்டு கூறும் (2/3,) சங்கரபாடி வணிகர்ஒரு கூறும் (1/3) தர ஏற்பாடு செய்தனர்.

    ஒரு சாதியார் அல்லது ஒரு தொழில் செய்வோர் கூட்டமாக அழுத்தம் கொடுத்தால் தான் அநியாயத்திற்கு நீதியும் நியாயமும் அந்நாளில் கிடைத்தது போலும் என்பதை மேற்கண்ட இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 75-76.

    ?????????????

    வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், வழுவூர் பிரம்மபூரீசுவரர் கோவில் திருச்சுற்றில் தென் சுவரில் வெட்டப்பட்ட 5 வரிக் கல்வெட்டு,

    1. சறுவாதிகாரி வருஷம் மாசிமாதம் 30 நாள் வழுகூர் ஊரவ[ர்] எம்மில் பொரிந்தியிசை ஓலை[யிட்]டு[க்] கொண்டபடி . மீநவராயர் அவப்படாக்காரி கடைப்பற்ற பொருமாள் கோயிலிலே பூந்து அடைத்துக் கொள்ளுகையில்.
    2. நாளது சாக கடைவனாகவும் நாளது சாகையில் ஊரிலே இருபது பணம் குடுக்க கடவோம் ஆகவும் மேலைக்கும் யாதொருவர் பறை எடுத்ததுண்டாநால் [இரு]பது பணம் குடுக்க கடைவோம் ஆகவும்
    3. பறை எடுத்த அன்று சாகக் கடைவனாகவும் யாதொருத்தர் ஒருநாள் யிரண்டு நாள் தாமதம் சொன்னதுன்டானா[ல்] அவன் சாதிக்கும் பிறம்பாய் நங்கை நாசிவனும் விலக்கி நன்மை தின்மை துறந்து சாதிக்குப் பி
    4. றம்பாகக் கடைவனாகவும் யிடங்குடுத்தவனே இந்தச் சேதம் உள்ளது குடுத்து யிராசகரத்துக்கும் அபராதமும் குடுத்து ஆவிக்க[ட]னையும் படக்கடைவனாகவும். இப்படி சம்மதித்து யிசை ஓலையிட்டுக் கொண்டோம் இவ்
    5. வனைவரோ(ம்). மிப்படிக்கு இவை ஊற்கு சமைந்த அபிமான பூஷண வேளார் எழுத்து. இப்படிக்கு இவர்கள் சொல்ல எழுதினமைக்கு  ஊற்க்கு தண்டகநாட்டு ப்ரமராயர் திருமலையார் மகன் அழகிய வரதன் எழுத்து.

    இசை ஓலை – உடன்பாட்டு ஒப்பந்தம், consent agreement; கடைப்பற்ற – பின்தொடர, துரத்த, follow; நாளது –இற்றை நாள்; மேலைக்கும் – இதற்கு மேலும், furthermore; பறை – அறிவிப்பு, சேதி, information; பிறம்பாய் – புறம்பாக, எதிராக, against; சேதம் – சீர்கேடு; இராசகரம் – அரசாங்க வரி; ஆவிக் கடன்- பிறவிக்கடன்; சமைந்த – உடன்பட்ட.

    விளக்கம்: தமிழ் அறுபது ஆண்டு குறிப்பு கல்வெட்டில் இடம்பெறுவது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பிறகு வழக்கில் வந்தது. அதற்கு முன் இது அருகிய வழக்காகவே இருந்துள்ளது. இக்கல்வெட்டில் வேந்தன் பற்றிய குறிப்பு இல்லாகினும் சோழர் கால பிரம்மராயர் பதவி இதில் இடம்பெறுகின்றது. இந்தப் பதவி நாயக்கர் ஆட்சியில் இல்லை என்றாலும் விசயநகர ஆட்சியின் முற்பகுதி வரை அருகிய பதவியாக இருந்துள்ளது என்பதால் 15 – 16 ஆம் நூற்றாண்டில் இந்த சர்வாதிகாரி ஆண்டை வைக்க வேண்டி உள்ளது. சர்வாதிகாரி ஆண்டு 1408, 1468, 1528 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. இவற்றில் ஏதோ ஒரு ஆண்டில் இக் கல்வெட்டை சுட்டலாம்.

    மீனவராயர்க்கு அவபடக்காரியை துரத்திப் பின்தொடர அவன் பெருமாள் கோயிலிலே புகுந்து கதவை உட்புறமாக அடைத்துத் தப்பி மறைந்துவிடுகிறான். அவன் இன்றே சாகவேண்டும், அப்படி செத்தால் ஊரிலே 20 பணம் கொடுப்போம் என்று ஊரார் முடிவெடுக்கின்றனர். மேலும் யாராவது அவன் இருப்பிடத்தை அறிவிப்பார்களானால் அவருக்கு 20 பணம் கொடுப்போம். இருப்பிடத்தை அறிவித்த அன்றே அவபடக்காரி சாகவேண்டும். அவன் இருப்பிடம் அறிந்த எவரொருவரும் அதைக் கூற ஓரிரு நாள் காலந்தாழ்தினாலும் அவன் தன்  சாதிக்கு புறம்பானவன் ஆகிடுவான். அவனை நங்கையும் நாசிவனும் விலக்கிட வேண்டும் என்றும் அவன் நன்மை தீமைகளுக்கு கலந்துகொள்ளாமல் அவன் சாதிக்கு புறம்பானவன் ஆகிட வேண்டும் என்றும் அவன் இருப்பிடத்தை அறிவிக்காமல் தப்பவிட்டவன் இந்த சீர்கேட்டிற்கான இழப்பீட்டை ஏற்று அரசவரி செலுத்த வேண்டும் அதற்கான தண்டத் தொகையையும் கட்ட வேண்டும். அவன் ஆவிக்கடனையும் அடைக்க வேண்டும் என்று உத்தாரவாளனுக்கு இதாவது, ஆதரவாளனுக்கு எச்சரிக்கை விடுத்தனர் ஊரவர். இந்த தண்டனைக்கு ஒப்புக் கொண்டு ஊரவர் அனைவரும் உடன்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதற்கு ஊரின் கருத்துப்படி உடன்பட்டு அபிமாண பூசண வேளான் கையெழுத்திட்டான். இப்படி ஊரார் சொல்ல தண்டக நாட்டு பிரமராயன் மகன் அழகிய வரதன் எழுதி கையொப்பமிட்டான்.

    அவபடக்காரி மக்கள் செலுத்திய வரிப் பணத்தை தன்னகப்படுத்தியதாலோ அல்லது பெண்களிடம் கொச்சையாக நடந்த்தாலோ என்னவோ? இப்படி காரணம் குறிக்காத குற்றத்திற்காக மக்கள் வெகுண்டெழுந்து அவனுக்கு சாவுத் தண்டனை வழங்குகின்றனர். ஆம் சட்டத்தை தாமே கையில் எடுத்துக் கொண்டனர். மீனவராயர் உயர்அதிகாரம் உள்ள அரசர் அவருக்கு இவ்வாறு ஊரவர் தண்டனை கொடுத்ததாக தென்னிந்தியக் கல்வெட்டு 25 இல் விளக்கம் தந்திருப்பது ஏற்புடையதல்ல.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 82-83.

     https://tamilnadu-favtourism.blogspot.com/2016/01/jambunatheshwarar-temple-jambai.html

    Share
  • சேக்கிழார் பா நயம் – 46

    சேக்கிழார் பா நயம் – 46

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ————————————————–

    திருக்கயிலையில் இறைவன் காட்டிய அருட்கருணையால் கமலினிக்குத் திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றி வளரும் நல்வாய்ப்புக் கிட்டியது. திருக்கயிலையில் தவறான நோக்கமின்றிச் செய்த ‘சிறுகுறையும் நல்லதையே செய்யும்’ என்பதைக் கமலினியார், நாடே போற்றி மதிக்கும் பரவையாராக வளர்ந்த பாங்கு புலப்படுத்தும்.

    சுந்தரரின் மனங்கவர்ந்த மங்கையாக, இறைவனையே தூதராகக் காணும் பேறு பெற்றவராக, திருவாரூரினுள் யாவரும் மதிக்கத்தக்க பெண்ணடியாராக விளங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் வணங்கத் தக்கவரே யாவார். இனி அடுத்த பாடலில் பரவையார் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து இறைவன் சேவடியையே கருதி வளர்ந்த சிறப்பைக் கூறுகிறது.

    தளர் நடைப் பருவம் கடந்து பரவையார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெற்று வளர்கிறார். அவருடைய அகன்ற சிறு கண்கள் இளம் பெண்மான் குட்டியின் விழிகளைப் போல ஒளிவீசி விளங்குகின்றன. அவருடைய மார்பு சற்றே வளர்ந்து தாமரை மொட்டுப்போலத் திகழ்கின்றன. அவருடைய மொழி தேனுண்ணும் வண்டுகளைப் போல் ஒலிக்கிறது. அவருடைய மெல்லிய இடை , பவளக் கொடிபோல் விளங்குகிறது. அவரது நெற்றி இளம்பிறையின் கொழுந்து போல ஒளி வீசுகிறது. அவருடைய வளைந்த புருவங்கள் காமவேள், மலரம்புகளைஎய்து, மக்களைக் காமத்தில் வீழ்த்துவதற்கான பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் சிறிய வில்லோ? என்றெல்லாம் பறவையாரைக் காணும் சுற்றத்தாரும், பெரியோரும் போற்றுகின்றனர்.

    இந்தப் பாடலில் மானிளம் பிணை, இளமுகை, இளந்தேன்பதம், இளம் பவளக்கொடி, நிலவின் இளங்கொழுந்து, காமனின் இளையவில் என்ற உவமைகள்,அவரது இளமையையும் , கண், மார்பு,மொழி, இடை,நெற்றி, புருவம் ஆகியவற்றையும் உருவகித்துக் காட்டுகின்றன. அவருடைய அங்கங்களைக் குறிப்பிடாமல் , உவமைகளின் மூலம் அவற்றின் அழகையும் இளமையையும் குறிப்பிடுவது பாடலின் நயத்தைப் புலப் படுத்துகிறது. இனிப் பாடலைப் படித்தறிவோம்.

    “மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
    தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
    கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
    தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.”

    இப்பாடலில் இளம் என்ற சொல், இளமையான என்ற பொருளுடன் எட்டுமுறை அமைந்திருக்கும் அழகினைச் சொற்பொருட் பின்வரு நிலை அணி என்று கூறுவர்! ஆறு அங்கங்களின் இளமையை , இளம் என்ற சொல்லை எட்டுமுறை அமைத்து வருணிப்பது நுட்பமாக உணரத் தக்கது. இந்த ஆறு உறுப்புக்களும் மக்கள் எண்ணுவதை விட மிகவும் இளமையுடன் காட்சியளித்தன, என்று சேக்கிழார் பெருந்தகை நயம்படக் கூறுகிறார்.

    இளம்பெண்ணான பரவை நாச்சியாரின் வளர்ச்சியை அவர்தம் பண்பு நலன்கள் இனிப் புலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை இப்பாடல் உருவாக்குகின்றது.

    “முதுக்குறைந் தனளே , முதுக்குறைந்தனளே ,
    மலையன் ஓள்வேற் கண்ணி
    முலையும் வாரா முதுக்குறைந்தனளே! ‘’

    என்ற பழம்பாடலை இது நினைவூட்டுகின்றது.

    .

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 2

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 2

    நிர்மலா ராகவன்

    (முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் – https://www.vallamai.com/?p=93221)

    நாட்டியமும் தியானமும்

    பாலியில் பிரசித்தமானது Barong நாட்டியம். நிகழ்ச்சிக்குமுன் பல மணி நேரம் தியானம் செய்து Trance என்னும் மோன நிலை அடைவதால், எந்தப் பாத்திரமானாலும் தத்ரூபமாக அமைந்துவிடுகிறது.

    இருபது வருடங்களுக்குமுன், அனுமான் வேடம் தரித்த ஒருவர் குரங்காகவே மாறியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். போரில் `இறந்த’ பலர் இருபது நிமிடங்கள் அசையாது, மூச்சுகூட விடாது இருந்ததைப் பார்த்துப் பார்வையாளர்கள் பதறிப் போனோம். KECAK நடனத்தில், குதிரையாக ஆடியவர்கள் வெறுங்காலாலேயே கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தார்கள்!

    இப்போதோ, வெளிநாட்டுப் பயணிகளுக்காக வியாபார நோக்குடன் தினந்தோறும் ஆட நேர்வதால், அவ்வாறு தம்மையே மறக்கும் நிலைக்குப் போவது கிடையாது. கோயில்களில் மட்டுமே பிரமிப்பு ஊட்டும் அவ்வகை நாட்டியத்தைக் காண முடியும்.

    `புரா’ என்னும் கோயிலுக்குள் நுழையுமுன், ஆண், பெண் இருபாலரும் ஸாரோங் அணிந்து, இடுப்பை இறுக்கிச் சுற்றி மூன்று அங்குல அகலமுள்ள ஒரு பட்டியைக் கட்டிக்கொள்ள வேண்டும். பெண்களின் மேல்சட்டை `லேஸ்’ போன்ற மெல்லிய துணியால் ஆனது. மார்க்கச்சு போன்ற, தோள் தெரியும் உள்ளாடை. (முன்பொரு முறை, நான் புடவை அணிந்து கோயிலுக்குப் போனபோது, `ஸாரோங் இண்டியா!’ என்று ஒரு பெண் கூவ, பலர் ஓடி வந்து என்னை வேடிக்கை பார்த்தார்கள்!)

    கோயிலில் விக்கிரகம் கிடையாது. கதவு போல் இருக்கும் இடத்தின்முன் தரையில் அமர்ந்து, ஊதுபத்தியை ஏற்றி, தொன்னையிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்துத் தரையில் போட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள்.

    பூஜை முடிந்ததும், ஈரமான அரிசியை நெற்றியில் பதித்துக்கொள்கிறார்கள். நாட்டியம் ஆடுபவர்களில் பெண்களுடன் ஆண்களும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டிருப்பது போன்று படங்களில் தோன்றுவது இதனால்தான்.

    நாட்டிய நாடகத்தின்போது, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களின் காதிலும் frangipani என்ற பூ. வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட மரங்களை எங்கும் காணலாம். இனிய சுகந்தத்தால், இந்த மலர் சோப்பு, முகத்திற்குப் பூசும் க்ரீம் என்று பல்வித வாசனைத் திரவியங்களுக்குப் பயன்படுகிறது.

    இயற்கையே கடவுள்

    மனிதன், தாவர வகைகள், விலங்குகள் ஆகிய எல்லா உயிர்களிலும் ஆத்மா இருக்கிறது; அதனால் நாம் அனைவரும் தொடர்பு உடையவர்கள் என்ற நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தீவினர்.

    கடவுள் இயற்கையைப் படைக்கவில்லை, ஏனெனில், இயற்கைதான் கடவுள் என்று நம்புகிறார்கள். அதனால், தாவரங்கள் செழித்து வளர்வதை எங்கும் காணலாம். அவற்றை அழித்தால், ஒரு விதத்தில் நம்மையே அழித்துக்கொள்வது போல்தானே!

    குழந்தைகள் நம்மைப் பார்த்துத் தோழமையுடன் சிரிக்கிறார்கள். தெருவில் உலவும் நாய்கள் கொழுகொழுவென்று இருக்கின்றன. குரைக்காமல், நட்புடன் நம்மை நெருங்குகின்றன.

    “உனக்கு என்னைத் தெரியுமா?” என்று நான் கொஞ்சலாகக் கேட்க, என் அருகில் வந்து படுத்துக்கொண்டது ஒரு குண்டு நாய்.

    நெல் வயல்களில் வாத்துகளைக் காணலாம்.  அவை புழுக்களைக் கொத்தித் தின்கின்றன. அதற்காக வாத்துகளின் சொந்தக்காரர் காசு கொடுக்கிறார். மண்ணைப் புரட்டிப் போட்ட மாதிரியும் ஆயிற்று. வயல் சொந்தக்காரருக்கு இரட்டிப்பு லாபம்!

    மொழிகள்

    பள்ளிக்கூடங்களில், இந்தோனீசிய மொழியுடன், பாலியும் ஆங்கிலமும் போதிக்கப்படுகின்றன. சுற்றுலா சம்பந்தமான தொழில்களைத் தேர்ந்தெடுப்போர் மாண்டரின், ரஷ்ய மொழி, ஜெர்மன் என்று பலவற்றைக் கற்க வேண்டும்.

    எல்லாரும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். மலாய் மொழி இன்னும் எளிதாகப் புரிகிறது. நாம் மலாயில் பேசினால் மகிழ்ந்துவிடுகிறார்கள். மரியாதையாக, “beesa” என்றுதான் ஒவ்வொரு கோரிக்கையையும் முன்வைக்க வேண்டும்.

    அதாவது, வாடகைக்காரில் ஏறுமுன், `உங்களால் முடிந்தால்,’ என்ற பொருள்பட அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். சாப்பாட்டுக் கடைகளில் நமக்குத் தேவையானதைப் பட்டியல் போடுமுன், “beesa” என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமாம்.

    நான் பேசியது கடுமையாக இருந்திருக்கும்.

    “உங்களை டீச்சர் என்று அழைக்கலாமா? என்ன உத்தியோகம் பார்த்தீர்கள்?” என்று கேட்டுவிட்டு, “அதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே! டீச்சர்தான்!” என்றதும், “நினைத்தேன்!” என்றார்கள்!

    எரிமலை

    பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொங்கி எழுந்த எரிமலைக் குழம்பு, பாலி முழுவதும் இறுகிக் கிடக்கின்றது. (இப்போதும் ஆகோங் (Agung) என்னும் எரிமலை உண்டு).

    எரிமலைக் குழம்பு, வழவழப்பான கற்களாக ஆகிவிட்டது – ஆறுகளின் உபயத்தால். தோட்டத்தில் மட்டுமின்றி, நடைபாதையில், கழிப்பறைக்குள் என்று எல்லா இடங்களிலும் குண்டு கத்தரிக்காய் அளவில் இந்தக் கற்களைக் காணலாம். (இவற்றின்மேல் நடந்தால், காலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும்).

    எரிமலைக் குழம்பே எல்லாத் தரையிலும் படிந்து இருப்பதால், கருப்பு அரிசி என்று ஒரு வகை இங்கே கிடைக்கிறது. நல்ல ருசி. ஆனால், பழங்களில் இனிப்பு கிடையாது.

    கடல் நீலமல்ல

    பாலியின் வடக்கே கடல் நீர், அதை ஒட்டிய மணல் எல்லாமே கருப்பு. அதிகாலையில் படகில் பாதிக் கடல் போனால், டால்ஃபின்கள் நீரிலிருந்து மேலே குதித்து, சுழன்று விளையாடுவதைக் கண்குளிரப் பார்க்கலாம்.

    உணவு

    இருபது ஆண்டுகளுக்குமுன், ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் சிறிய நிலப்பரப்பில் அரிசி பயிரிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டும். வீட்டிலேயே இருக்கும் பெண்களும் முதியவர்களும் அந்த நெல்வயலைப் பராமரிப்பார்கள். விளைச்சல் போதாது, ராத்திரி ஒரு வேளை மட்டும்தான் அரிசி உணவு என்ற நிலை. இவர்கள் மாட்டிறைச்சி உண்பதால், பால் குடிக்கும் வழக்கம் கிடையாது. காலையில், பாலோ, சர்க்கரையோ சேர்க்காத காப்பி.

    பாலியில் இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, மனம் புழுங்கும் குணமும் இவர்களுக்குக் கிடையாது. கடமைதான் இவர்களுக்கு முக்கியம். “குடும்பத்திற்கு, ஒரே தெருவில் குடியிருப்பவர்களுக்கு, சொந்த ஊருக்கு, நாட்டுக்கு,” என்று அடுக்கினார் ஒருவர். அவர்கள் வெறும் பேச்சுடன் நிறுத்திக்கொள்வதில்லை.

    முட்டை, வெங்காயம், பூண்டு இவையெல்லாம் சேர்க்காத உணவு வகைகளை மட்டுமே விற்கும் vegan சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன.

    பஞ்சாபி கடைகளில் சப்பாத்தி, `நான்’ போன்றவை கிடைக்கின்றன. ஒரு கடை வாசலில் அவற்றைத் தயாரிக்கும் இளைஞரின் புகைப்படத்தைப் பெருமையுடன் வெளியிட்டிருக்கிறார்கள்!

    அழகுக்கு அழகு செய்ய

    வலியே தெரியாது செய்யப்படும் பாலி மஸாஜ் பிரசித்தமானது. ஊர் சுற்றிய களைப்பு நீங்க, பார்க்கும் இடமெல்லாம் உடம்புப்பிடி நிலையங்கள். கை, கால், உடல், முகம் என்று விதவிதமான மஸாஜ். (விமான தளத்தில் எல்லாப் பெண்களின் நகங்களும், புருவங்களும் மிக அழகாக இருப்பதை ரசித்துப் பார்த்தேன்).

    (தொடரும்…..

    Share
  • சிங்கப்பூரும் கியூபாவும்

    சிங்கப்பூரும் கியூபாவும்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற வாரம் நானும் கணவரும் சிங்கப்பூர் சென்றுவந்தோம். சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கழகம் (NIE) சார்பில் நடந்த பேச்சுத் தமிழைத் தமிழ்க் கல்வியில் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தில் ஆலோசனை வழங்கக் கணவர் சென்றபோது நானும் உடன் சென்றேன்.  சிங்கப்பூருக்கு நான் போவது இது இரண்டாவது தடவை. போன தடவை 2011-இல் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். அப்போதைவிட இப்போது சிங்கப்பூர் இன்னும் பொருளாதார முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று தெரிகிறது.

    விமான நிலையத்தை விட்டு வெளிவந்ததும் கொஞ்ச தூரத்தில் பெரிய பெரிய பல மாடிக் கட்டடங்கள் இருக்கின்றன.  சாலைகள் எல்லாம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சாலைகளில் வழுக்கிக்கொண்டு ஓடும் அயல்நாட்டுக் கார்கள்.  இந்தியாவில் பெரு நகரங்களுக்கிடையே ஓடும் சொகுசு பஸ்களைவிட நகருக்குள்ளேயே ஓடும் நகர பேருந்துகள் பல மடங்கு சொகுசு தருபவையாக இருக்கின்றன.  ஒரு நகரம், ஒரு நாடு என்று அழைக்கப்படும் ஒரே நகரத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரின் விஸ்தீரணம் சுமார் 300 சதுர மைல்கள். அந்தச் சிறிய இடத்திற்குள் எத்தனை கட்டடங்கள், எத்தனை பல்கலைக்கழகங்கள், எத்தனை ஆராய்ச்சி மையங்கள்.   நேர்த்தியான சாலைகள் எல்லாம் மிகச் சுத்தமாக இருக்கின்றன. அவற்றை யார் எப்போது சுத்தப்படுத்துகிறார்கள் என்பதற்கு ஒரு அடையாளமும் இல்லை. அவ்வப்போது ட்ரக்குகளில் இருக்கைகள் இல்லாமல் ட்ரக்கின் தரையில் அமர்ந்து பயணம் செய்யும் தொழிலாளர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானிக்க மட்டும்தான் முடியும்  (அமெரிக்காவில் தொழிலாளர்கள் கூட இப்படி ஸீட் பெல்ட் இல்லாமல் வாகனத்தின் தரையில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை. அவர்களும் இருக்கைகளில் அமர்ந்து ஸீட் பெல்ட் போட்டுக்கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும்). எங்கே பார்த்தாலும் விதவிதமான பல டிசைன்களில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மென்ட் கட்டடங்கள். இவற்றில் பல, அந்நிய நாட்டுப் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட கட்டடங்களுக்கிடையே பசுமையாகக் காட்சி தரும் மரங்கள், செடிகொடிகள்.

    நாங்கள் தங்கியிருந்த நான்யாங் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதி, அத்தனை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.  விருந்தினர் விடுதி அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் நுழைவாயிலை அடுத்து வரும் லவுஞ்ச் அத்தனை பெரியது. நுழைவாயிலின் கண்ணாடிக் கதவுகள், கண்ணாடிச் சுவர்கள் எல்லாம் எந்தவிதப் பிசிறும் இல்லாமல் அப்போதுதான் சுத்தப்படுத்தப்பட்டவை போல் காணப்படுகின்றன.  அந்த லவுஞ்சில் அதன் அளவுக்குத் தக்கவாறு பெரிய பூந்தொட்டி. வெளியே நீர் ஊற்றுகள், செடிகொடிகள் இத்யாதி. ஒவ்வொரு தளத்திலும் பிஸ்லேரி போன்ற பெரிய தண்ணீர் பாட்டில்கள். அவற்றிலிருந்து வேண்டியபோது வேண்டிய அளவு சுத்தத் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.

    அந்தச் சிறிய நாட்டில் அத்தனை மியூசியங்கள்.  எல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில்போல் எங்கே பார்த்தாலும் வளத்தின் செழுமை.  எங்கு சென்றாலும் சுத்தமான கழிப்பறைக்குப் பஞ்சமில்லை. இந்த வசதியில் அமெரிக்காவைக்கூட சிங்கப்பூர் மிஞ்சிவிடும்போல் தெரிகிறது.  சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் வந்தடைந்ததும் மனத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது பெங்களூரு விமான நிலையக் கழிவறைகள். அத்தனை வித்தியாசம் சிங்கப்பூர் விமான நிலையக் கழிப்பறைகளுக்கும் பெங்களூரு விமான நிலையக் கழிப்பறைகளுக்கும்.

    இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சிங்கப்பூர் இன்னும் பிரிட்டனின் காலனியாகத்தான் இருந்தது.  1963-இல்தான் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரண்டும் அடங்கிய பெடரேஷனாக சுதந்திரம் பெற்றது. 1965-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது. இந்தக் குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது.

    மூன்று வருஷங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கர்கள் கியூபாவுக்குப் போக இருந்த சில தடைகளை நீக்கினார்.  இன்னும் சில தடைகள் நீக்கப்பட்டு, கியூபா அமெரிக்கக் கலாச்சரத்தின் தாக்கத்திற்கு உட்படுமுன் கியூபாவைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று வேகவேகமாகப் பிரயாண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு கியூபாவுக்குப் போய்வந்தோம்.  (மேலும் சில தடைகள் நீக்கப்படாதது மட்டுமல்ல இருந்த தடைகளுக்கும் வலுவேற்றியிருக்கிறார் இப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் என்பது வேறு விஷயம்.)

    கியூபாவின் தலைநகரான ஹவானாவின் விமான நிலையமே மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இருந்தது.  சுத்தமான கழிப்பறைகள் விமானக் கூடத்தில் கூட இல்லை. கியூபா கரன்சியை வாங்குவதற்கு அத்தனை நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  அதைப் பெறுவதற்கு வரிசையில் நின்ற ஒருவரைத் தவிர மற்றவர்கள் உட்காருவதற்குக்கூட சரியான வசதிகள் இல்லை. நெடுநேரம் காத்திருந்து மிகவும் களைத்துப் போய் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  தங்கியிருந்த வீடு வசதியாக இருந்தாலும் (பெரிய வீடுகள் வைத்திருப்போர் பயணிகள் தங்குவதற்குத் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடலாம் என்று கியூபா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் சில நிபந்தனைகள் உண்டு) களைப்பைப் போக்கிக்கொள்ள பக்கத்தில் எந்த உணவக வசதியும் இல்லை.  இரவு உணவுக்கு வாடகையோடு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டுச் சொந்தக்காரரிடம் ஏற்பாடு செய்துகொண்டோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சிறிய உணவகங்கள் இருந்தனவே தவிர பல இடங்களில் உணவக வசதி எதுவும் இல்லை. சாலைகள் சிங்கப்பூர் அளவுக்கு நேர்த்தியாக இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே இருந்தன.  ஆனால் ஷாப்பிங் மால்கள் எதுவும் கிடையாது. மியுசியங்கள் இருந்தாலும் பிரமாதமாக இல்லை. அமெரிக்கா கியூபாவில் கோலோச்சிய காலத்தில் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட பழங்காலக் கார்கள்தான் வீதிகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக எப்படிப் பழுதுபார்த்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வளத்தின் அறிகுறி எங்கேயும் இல்லை.

    கியூபாவை விட்டுக் கிளம்பும்போது ஹவானா விமான நிலையத்தின் தன்மை, மனத்தில் ஒரு சோர்வை உண்டுபண்ணியிருந்தது.  விமானம் அமெரிக்காவின் மயாமிக்குள் நுழைந்தும் அங்கிருந்த கழிப்பறைகள், அமெரிக்காவின் வளத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.  மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை தனியாக ஒரு பெரிய அறையில் இருந்தது. அதற்குள்ளேயே கைகளைக் கழுவிக்கொள்ள சிங்க்கும் இருந்தது.  அந்த அளவு உள்ள வீடுகளில் நம் நாட்டில் நிறையப் பேர் வசிக்கிறார்கள்.

    கியூபாவுக்கும் சிங்கப்பூருக்கும் வளத்தில் ஏன் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்?  முதலாளித்துவவாதிகள் சிங்கப்பூரில் இருக்கும் வளமை, முதலாளித்துவத்தின் மகிமை என்பார்கள். கியூபாவின் வளமின்மை, கியூபா அரசின் கம்யூனிசக் கொள்கையால் வந்தது என்பார்கள்.   அமெரிக்க ஆதிக்கத்தை விட்டு கியூபா விலகியவுடனேயே அமெரிக்கா, கியூபா மீது விதித்த வர்த்தகத் தடைகள், கியூபாவின் வளமின்மைக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  சில தடைகளை நீக்குவதற்கு ஒபாமா முயன்றார். அந்தத் தடைகளையெல்லாம் மறுபடி கொண்டுவந்ததோடு புதிதாகச் சில தடைகளையும் கொண்டுவர முயல்கிறார் இப்போதைய இரக்கமற்ற ஜனாதிபதி ட்ரம்ப்.

    சிங்கப்பூர் அத்தனை வளமான நாடாக இருந்தாலும் மனித உரிமைகள் சில அந்தக் குடிமக்களுக்கு மறுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  இந்தியர்கள் சிலர், அதிலும் தமிழர்கள், தங்களுக்குச் சீனர்கள் அளவு சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்கிறார்கள். மேலும் எல்லா வளர்ந்த நாடுகளிலும் போல் சிங்கப்பூரிலும் தனக்கென்று வாழ்வதற்கான மேலை நாட்டு அடையாளங்களான திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது போன்ற வழக்கங்கள் தோன்றத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.  

    கியூபாவிலும் சில மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக அமெரிக்கா அலறிக்கொண்டிருக்கிறது.  கியூபாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி அரசை எதிர்த்து எளிதாக எதுவும் சொல்லிவிட முடியாது.  அரசை எதிர்க்கும் உரிமை இரண்டு நாடுகளிலும் கிடையாது. (இந்தியாவிலும் அது மெதுவாகத் தலைதூக்கி வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)  கியூபா மக்கள் பலரோடு பேசும் வாய்ப்பு எங்களுக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால் வாழ்க்கை வசதிகள் நிறைய இல்லையென்றாலும் அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்களா என்று சொல்ல முடியவில்லை.  இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கிடையே ஏன் இத்தனை வித்தியாசங்கள் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், பொருளாதார அமைப்பினால் மட்டுமல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

    Share
  • இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது.

    இந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது.

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    சந்திரயான் -2 திட்டம்  95% நிறைவு பெற்று, இறுதியில் தகவல் அனுப்பத் தவறியது. 

    [ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]

    ++++++++++++++++

    1. https://youtu.be/q7Omv4EX8RM
    2. https://economictimes.indiatimes.com/news/science/chandrayaan-2-setback-india-loses-contact-with-vikram-lander-during-descent/articleshow/71018277.cms?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=mlpdaily&ncode=4b749efe6f3285bfc668b352f29b8270
    3. https://youtu.be/phN5S9cHeWM
    4. https://frontline.thehindu.com/static/html/fl2619/stories/20090925261913200.htm
    5. http://www.cnn.com/2009/WORLD/asiapcf/08/30/india.moon.mission/index.html
    6. https://youtu.be/sd6grEvZn1A
    7. https://youtu.be/ANyg9VGSqbY

    +++++++++++++++++++++

    Image result for cHANDRAYAAN -2 lost contact

    நிலவை நெருங்கும் தளவுளவி தகவல் அனுப்பத் தவறியது

    இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறிய சந்திரயான் -2 தளவுளவி

    சந்திரயான் -2  மகத்தான நிலவுத் திட்டம், விண்சிமிழ் ஏவிய நாள் முதல் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிறைவேறி, இறுதியில் தளவுளவி நிலவைச் சுமார் ஒரு மைல் உயரத்தில் நெருங்கிய போது, மின்னலைத் தகவல் அனுப்பத் தவறி இந்திய மக்கள் கண்ணீர் விட்டு ஏமாற்றம் அடைந்தார்.  ஆயினும் இன்னும் இரண்டு ஆண்டுகட்கு விண்சிமிழ் நிலவைச் சுற்றித் தகவல் அனுப்பி வரும்.  தளவுளவி நிலவில் விழுந்து நொறுங்கிப் போகாமல் அமர்ந்துள்ளதை, மற்ற கனல் காட்சி [ தெர்மல் இமேஜிங் ] ஏற்பாடு மூலம் தெரிய வருகிறது.

    நிலவை நெருங்கும் போது சுமார் ஒரு மைல் உயரத்தில் 

    தளவுளவி மின்னலைத் தொடர்பு இழந்தது.

    +++++++++++++++

    தகவல் தொடர்பு அறுந்தாலும்,  தளவுளவி நிலவில் மெதுவாக இறங்கி அமர்ந்திருக்கலாம் என்று யூகிக்க இடம் உள்ளது.  மின்னலைத் தொடர்பு கிடைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.  அந்த முயற்சிகள் வெற்றிகரமாகி, தகவல் பெற்று தளவூர்தியும் அடுத்து நடந்து வரப் போகிறது.  14 நாட்கள் தளவூர்தியும் திட்டமிட்டபடி தகவல் சேர்த்து அனுப்புவதை இந்தியரும், உலக மாந்தரும் காணப் போகிறார் என்று உறுதியாக நம்பலாம்.

    ++++++++++++++++++++

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    +++++++++++++++++++++

    நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
    உளவிச் சென்று நாசா
    துணைக்கோளுடன் தென் துருவத்தில்
    ஒளிமறைவுக் குழியில்
    பனிப் படிவைக் கண்டது !
    நீரா அல்லது வாயுவா என்று
    பாரதமும் நாசாவும் ஆராயும்  !
    சந்திரனில் சின்னத்தை வைத்தது
    இந்திய மூவர்ணக் கொடி !
    யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
    பந்தய மில்லை !
    விந்தை புரிந்தது இந்தியா !
    இரண்டாம் சந்திரயான்
    2019  செப்டம்பரில் விண்சிமிழ்
    முதன்முதல்  இறக்கும்  தளவுளவி , தளவூர்தி.
    பாரத விண்வெளித் தீரர் மூவர் இயக்கும்
    சீரான விண்கப்பல் 2022 இல்
    தாரணி சுற்றி வரும் !
    செவ்வாய்க் கோள் செல்ல
    சந்திரனில் சாவடி அமைக்கும்
    திட்ட முள்ளது !
    அடுத்து இரண்டாம் சந்தரயான்
    நிலவைச் சுற்றி வந்து
    தளவுளவி நிலவில் அமர
    தளவூர்தி
    தவழ்ந்து சென்று நிலாத் தளம் 
    ஆராயப் போகுது
    ஈரேழ் நாட்கள். 

    +++++++++++

    சந்திரயான் -2 அனுப்பிய முதல் நிலாப்படம்
    [2019 ஆகஸ்டு 21]
    ++++++++++++++++
    +++++++++++++++++++++

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    இந்திய விண்சிமிழ் சந்திரயான் -2 முதல் நிலாப்படம் அனுப்பியது

    2019 ஆகஸ்டு 21 ஆம் தேதி இந்தியாவின் சந்திரயான் -2 நிலவின் சுற்றுப் பாதையில் புகுந்ததும், முதலில் அனுப்பிய மகத்தான நிலாப்படம் மேலே காட்சி தருகிறது.   இந்தப்படம்  விண்சிமிழ் நிலவுக்கு மேல் 1650 மைல் [2650 கி.மீ.] உயரத்தில் சுற்றிய போது எடுத்து அனுப்பப் பட்டது.  2019 செப்டம்பர் 2 இல் விண்சிமிழிடம் விக்ரம் தளவுளவி பிரிந்து, செப்டம்பர் 7 இல் மெதுவாக இறங்கி, நிலவில் அமரும்.   பின் அதலிருந்து தளவூர்தி “பிரங்கியான்” ஊர்ந்து நழுவி நிலவில் பதினான்கு பூமி நாட்கள் நகர்ந்து, தகவல் அனுப்பும்.   விண்வெளி வரலாறாகப் பதிவு செய்யப் போகும் இந்த அரிய இந்திய சந்திரயான் -2 இயக்கம், அமெரிக்கா, ரஷ்யா, சைனா நாடுகளுக்குப் பிறகு நான்காவது தீரச் செயலாகக் கருதப்படும்.

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Related image

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Image result for chandrayaan-2 sending lunar pictures

    Infographics: Challenges Chandrayaan 2 will face during Moon landing #Gallery
    சந்திரயான் -2  விண்சிமிழ்
    ++++++++++++++++++++
    Related image
    Chandrayaan -2 Launching July 22, 2019
    ++++++++
    ++++++++++++++++++++++++

    Related image

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    Related image

    சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

    ++++++++++++++++++++++++

    1. https://youtu.be/eRIOHJ9gJS0
    2. https://youtu.be/NJOWi4tEVy8
    3. https://youtu.be/kFVjb1RpPK0
    4. https://www.britannica.com/science/Apollo-space-program
    5. https://www.news18.com/news/tech/gearing-for-july-launch-chandrayaan-2-will-carry-nasa-payload-too-says-isro-2142881.html
    6. https://youtu.be/xMDdaNLc8DU
    7. https://youtu.be/xTki6w1Ohnw

    +++++++++++++++

    சந்திரயான் -2  தளவுளவி,  தளவூர்தி

    ++++++++++++++++++++++++

    இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் புரியும் சவாலான சந்திரயான் -2 நிலவு ஆராய்வுத் திட்டம்

    2019 ஜூலை 22 ஆம் தேதி இந்தியா நிலவு நோக்கி ஏவிய புதிய இரண்டாம் சந்திரயான் திட்ட விண்சிமிழ் இப்போது முதலிரண்டு புவியரங்கு நீள்வட்டப் பாதைச் சுற்றுக்களை [Earth Bound Elliptical Orbits] வெற்றிகர மாய் இயக்கி, அடுத்து சில சுற்றுகளை செய்து முடிக்க முற்படுகிறது.  இந்த வேகத்தில் சந்தியான் -2 விண்சிமிழ் ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கி, நிலவு அரங்கத்தை நீள் வட்டப் பாதையில் சுற்ற [Moon Bound Orbits] ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அவ்விதம் நிலவைச் சிலமுறைச் சுற்றி, செப்டம்பர் 7 ஆம் தேதி தளவுளவி இறங்கும் என்றும், பிறகு அதிலிருந்து தளவூர்தி நகர்ந்து 14 நாட்கள் ஆய்வுகள் நடத்தும் என்றும் திட்டமிடப் பட்டுள்ளது.

    இம்மாதிரி நிலவில் இதுவரை நடத்திக் காட்டிய மூன்று நாடுகள்: ரஷ்யா, அமெரிக்கா, சைனா.  இந்தியா திட்டமிட்ட இந்த நிலவுச் சாதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினால், விண் வெளித் தேடல் வரலாற்றில் நான்காவது இடத்தைப் பெறும்.  நிலவைக் கருவிகளோடு சுற்றும் விண்சிமிழின் எடை : 2.4 டன் [5300 பவுண்டு]. அது நிலவை ஓராண்டு சுற்றிவது, தளவுளவி, தளவூர்தி அனுப்பும், ஆராய்ச்சித் தகவலைப் பூமிக்கு அனுப்பி வரும்.  சந்தியான் -2 தளவுளவியின் பெயர் : விக்ரம்.  விண்வெளிப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவுப் பெயர்.  தளவூர்தியின் பெயர் : பிரக்யான் [ஞானம்].   தளவுளவி தென்துருவப் பகுதியில் இறங்கி நீர்ப்பனி உள்ளதா என்று சோதனை செய்யும்.  தளவூர்தி தவழ்ந்து சென்று நிலவுப் பாறைகளையும், மண்ணையும் 14 நாட்கள் அய்வு செய்யும்.  தளவூர்தி அனுப்பும் தகவல் ஒன்றை மட்டுமே தளவுளதி, நிலவைச் சுற்றும் விண்சிமிழுக்குத் தொடர்ந்து அனுப்பி வரும்.  விண்சிமிழ் அத்தகவலைப் புவிக்குப் பரிமாறும்.

    Related image

    சந்திரயான் -2  தளவுளவி நிலவில் செப்டம்பர் 7  இறங்கப் போகிறது.

    சந்திரயான் -2 எளிய நிதிச் செலவில் [140 மில்லியன் டாலர்] முடிக்கத் திட்டமிடப் பட்டது.  மற்ற எல்லா நாடுகளும் இதை விட அதிகமாகவே நிதிச்செலவு செய்துள்ளன.  பிரதமர் நரேந்திர மோடி இந்தியா 2022 ஆண்டுக்குள் மனிதர் இயக்கும் விண்சிமிழ் புவியைச் சுற்றும் தகுதி பெற்றுவிடும் என்று உறுதி கூறினார்.

    Image result for chandrayaan 2 update

    நகரும் தளவூர்தி 14 நாட்கள் சோதனை செய்யும்

     

    இந்திய விண்வெளி ஆய்வு ஆணையகத்தின் பேரார்வத் திட்டம் : சந்திரயான் -2 நிலவுப் பயணம்.

    இஸ்ரோவின் [(ISRO)  INDIAN SPACE RESEARCH ORGANISATION] சிக்கனச் செலவு பேரார்வ நிலவுத் திட்டம் “சந்திரயான் -2”  வருகிற  ஜூலை மாதம்  9 – 16 தேதிகளுக்கு இடையே, 2019 ஆண்டில் விண்சிமிழ் ஏவப் போகிறது என்றும், செப்டம்பர் 6 இல் தளவுளவி நிலவில் இறங்கப் போகிறது என்றும் இஸ்ரோவின் தலைமை ஆளுநர் டாக்டர் கே. சிவன் மே மாதம் 20 ஆம் தேதியன்று அறிவித்தார்.  சிக்கலான சந்திரயான் -2  திட்ட நிகழ்வு பன்முறை தள்ளி வைக்கப் பட்டு தாமதமானது.  சந்திரயான் -1 நிலவுப் பயணத் திட்டம் 2009 இல் வெற்றிகரமாய் முடிந்து, விண்சிமிழ் பாரத தேசச் சின்னமோடு நிலவில் விழும்படிச் செய்யப்பட்டது.  அந்தப் பயணத்தில் சந்திராயன் -1 நிலவில் நீர் இருப்பதைக் கண்டு பிடித்தது.  இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சைனா ஆகிய மூன்று நாடுகள்தான் 239,000 மைல் [384,000 கி.மீ] தூர நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து,  தமது தளவுளவியை இறக்கி,  அதன் மூலம் தளவூர்தியைச் சுமந்து நகர்த்தி,  இயக்கி வந்துள்ளன.  சந்திரயான் -2  இல் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி [Orbiter, Lander & Rover] ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்களைத் [Modules]  தூக்கிச் செல்லும்.  தளவுளவியும், தளவூர்தியும் ஒன்றாய்ச் சேர்க்கப் பட்டு, விண்சுற்றியுடன் விண்சிமிழைப் பூத ராக்கெட் GSLV MK III சுமந்து செல்லும்.

    இந்திய நிபுணரின் சிக்கலான, சவாலான இரண்டாம் நிலவுப் பயணம்

    1. இதுவரை நிலவில் எந்த உலக நாட்டுத் தளவுளவியும் இறங்காத தென் துருவப்  பகுதியில் சந்திரான் -2 தளவுளவி முதன்முதல் இறங்கப் போகிறது.
    2. விண்சுற்றி  நிலவைச் சுற்றத் துவங்கி,  60 மைல் [100 கி.மீ] உயரத்தை அடையும் போது, தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கி, அதிலிருந்து நகரும் தளவூர்தி,  விண்சுற்றி நிலவைச் சுற்றி வருவது நீடிக்கும்.   தளவூர்தி பயணம் செய்து, மண் மாதிரிகளைச் சேர்க்கும்.   வாகனம் அவற்றை ஆய்வு செய்ய தளவுளவிக்குத்  தூக்கிச் செல்லும்.  மூன்றின் பளுவைச் சுமக்கும் விண்சிமிழின் நிறை 3 டன்.
    3. சந்திராயன் -2 நிலவுத் திட்டத்தின் விண்சிமிழ் சுமக்கும் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி ஆகிய மூன்றும் இஸ்ரோ தயாரித்தவை.  தளவூர்தி நிலவுத் தளத்தில் 14 நாட்கள் இயங்கி வரும்.

    Image result for Chandrayaan 2 Rover

    சிக்கனச் செலவில் இந்தியா செய்யும் இரண்டு சந்திரயான் & மங்கல்யான் திட்டங்கள்

    1.  செவ்வாய்க் கோளுக்கு  2013 இல் அனுப்பிய மங்கல்யான்  திட்டத்துக்கு 470 கோடி ரூபாய் செலவானது.  ஒப்பு நோக்க அமெரிக்கா ஹாலிவுட் தயாரித்த  ” கிராவிட்டி ” [Gravity]  திரைப் படத்துக்குச் செலவு : 644 கோடி ரூபாய். [100 மில்லியன் டாலர்]

    2.  சந்திரயான் -2 நிலவுப் பயண நிதி ஒதுக்கு : 800 கோடி ரூபாய்.  ஒப்பு நோக்க 2014 இல் ஹாலிவுட் தயாரித்த “இண்டர்ஸ்டெல்லர்”  [Intersteller]  திரைப்படம் தயாரிக்கச் செலவு 1062 கோடி ரூபாய் [165 மில்லியன் டாலர்]

    Image result for Chandrayaan 2 Rover

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

    Image result for Chandrayaan 2 Rover

    இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அப்பயணம்  2018 முதல் காலாண்த் திட்டமிடப் பட்டுள்ளது.  சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள்  ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.

    கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

    Image result for Chandrayaan 2 Rover

    ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)]  கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது.  அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.

    ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]

    தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    Image result for Chandrayaan 2 Rover

    [Click to Enlarge]

    தளவுளவியை மெதுவாய் இறக்கப் பயிலும் நிலவுத் தளப்பரப்புச் சோதனைச் சாதனம் [Lunar Terrain Test Facility for Lander Drop] தயாராக உள்ளது. மற்றும் தளவூர்தி நகர்ச்சிச் சோதிப்புகளும் [Rover Mobility Tests] தயாராக உள்ளன.

    ஜித்தேந்திர சிங், விண்வெளி ஆய்வு உதவி மந்திரி

    சிக்கலான GSLV  இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே.   இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது.  அந்த முயற்சியில் தற்போதுதான் வெற்றி ஏற்பட்டுள்ளது.

    அஜய் லேலி (Space Expert, Institute of  Defense & Security Analysis, New Delhi)

    2019 ஆண்டில் மீண்டும் நிலவை நோக்கிப் போகும் சந்திரயான் -2 விண்ணூர்தி

    2008 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் சந்திரான் -1 விண்ணூர்தி நிலவை நெருங்கி வெற்றிகரமாகச் சுற்றி முதன்முதல் பனித்தள வடிவில் நீர் இருப்பதை எடுத்துக் காட்டியது.  அது செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க இப்போது சந்திரயான் -2 தயாராகி வருகிறது.  சந்திரயான் -2 நிலவுத் தேடல் பயிற்சிகளில் தன்னுடன் நிலவில் மெதுவாய் இறங்கும் ஓர் தளவுளவியும் [Lunar Lander], அதிலிருந்து நிலவுத் தளப்பரப்பில் தவழ்ந்து சோதிக்கச் செல்லும் ஒரு தளவூர்தியும் [Lunar Rover] இணைக்கப் படும்.   ஆகவே சந்திரயான் -2 முதல் சந்திரயான் -1 விடப் பெரும் பளுவைத் தூக்கிச் செல்லும், பூத ராக்கெட் தயாரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் முதன்முதல் இந்திய விண்வெளி ஆய்வகம் நிலவில் மெதுவாய் இறங்கும் தளவுளவிப் பொறிநுணுக்கப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும்.

    மேலும் இறங்கிய தளவூர்தியிலிருந்து, நகர்ந்து செல்லும் தளவுளவி சோதிக்கப்பட வேண்டும்.  மேலும் சிறப்பாக, தளவுளவி நிலவின் தளத்தை ஆழ்ந்து சோதிக்க மண் மாதிரிகள் அனுப்புவதை, சந்திரயான் -2 மீளூர்தி [Return Trip]  எடுத்துக் கொண்டு மீளவேண்டும். சவாலான இப்பணிகள் வெற்றி பெறப் பல்வேறு பயிற்சிகள் செய்து துணிவும், மன அழுத்தமும் வேண்டும்.  2013 ஆம் ஆண்டில் ஏவப்பட வேண்டிய சந்திரயான் -2, ஐந்து வருடங்கள் தாமதமாகி 2018 ஆண்டு துவக்க மாதங்களில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வகம் அறிவித்துள்ளது. சந்திரயான் -2 திட்டத்துக்குத் தேவைப்படும் கனப்பளு தூக்கும் ஏவுகணை தயாரிப்பில் தாமதமானது முதல் காரணம்.  அடுத்துச் செவ்வாய்க்கோள் சுற்றும் மங்கல்யான் திட்டம் முதன்மை இடம் பெற்றது இரண்டாம் காரணம்.

    Image result for Chandrayaan 2 Rover

    Image result for Chandrayaan 2 Rover

    2017 பிப்ரவரி 15 இல் கனப்பளு தூக்கும் ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி அனுபவம் பெற்றுள்ளது. சந்திரயான் -2 விண்வெளித் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் ஒரு சுற்று விண்ணூர்தி, ஒரு தளவுளவி, ஒரு தளவூர்தி [One Orbiter, One Lander, One Rover]  ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்கள் கொண்டிருக்கும். சந்திரயான் -2 விண்ணூர்தி நிலவுக்கு 60 மைல் [100 கி.மீ] உயரத்தில் பறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணூர்தியிலிருந்து பிரித்து தளவுளவி மெதுவாய் இறக்கும் சிறிய எதிர்ப்பு ஏவுகணைகள் [Retro Rockets] நிலவுப் போலிக்குழிகள் [Lunar Craters] அமைக்கப்பட்டுச் சோதிக்கப் படுகின்றன.  தளவூர்தியைச் சுமந்து கொண்டு தளவுளவி மெதுவாய் இறங்கி நிலவின் தளத்தில் நிலையாக அமரும்.  பிறகு தளவூர்தி தானாகப் பிரிந்து தவழ்ந்து சென்று தளப்பரப்பு மண், பாறைகளைச் சோதிக்கும். இந்தியப் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான் -2 நிலவுத் திட்டத்துக்கு ஆகப் போகும் நிதிச் செலவு : சுமார் 91 மில்லியன் அமெரிக்க டாலர் [450 கோடி ரூபாய்] 2017 நாணய மதிப்பு.  2018 இல் சந்திரனில் தவழ்ந்து செல்லும் இந்தியத் தளவுளவி உலக நாடுகளில் பெரும் பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை..

    “முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லா மல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

    டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

    “நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”

    எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

    “சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

    மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

    Fig 1G Indian Rockets

    “இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1  & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது.  விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார்.  இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார்.  இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டு கிறது.  அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”

    ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.

    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்று வீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

    எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

    சந்திரயான் -2  நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்

    தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது.   அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும்.    தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது.   அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும்.    அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும்.   பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய  அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே !    2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி  ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்).    அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர்  நிதி ஒதுக்கு !   அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின்  “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்”  (Russian Cryogenic Engine)  சேர்க்கப் பட்டிருந்தது.     பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.

    Image result for Chandrayaan 2 Rover

     

    சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது.    சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய  PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட் பயன் பட்டது.    இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle)  ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது.   புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2  மிகக் கனமானது.  தாய்க்கப்பல் ஆணைச்சிமிழ்  தளவுளவி இறக்கியையும், தளவூர்தி வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இப்போது முழுமையாய்க் கிடைத்துள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

    Image result for Chandrayaan 2 Rover

    பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்

    GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது.   புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் வீதியில்  (Geosynchronous Transfer Orbit)   10 டன் பளுவைச் சுமக்க வல்லது.   ராக்கெட் எடை : 629 டன்,  உயரம் :  51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன்.    அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும்.   இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது.    எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த  GSLV -III ராக்கெட்  மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும்.    2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.

    2010 டிசம்பரில்  ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது.    எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர்.   அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.  தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது.  ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது.   கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன.   அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும்    குறிப்பிடத் தக்கதாகும்.   இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள் களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன.   இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும்.  முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும்.  தாமதமாகும்.

    ++++++++++++++++++++++++++

    தகவல்

    1. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-first-orbit-raising-manoeuvre-earth-1573017-2019-07-24
    2. https://in.mashable.com/science/5188/its-getting-there-chandrayaan-2-completes-second-orbit-successfully
    3. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-mission-launch-live-news-updates-1571958-2019-07-21
    4. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-mission-launch-live-news-updates-1571958-2019-07-21
    5. https://www.isro.gov.in/chandrayaan2-latest-updates
    Share
  • படக்கவிதைப் போட்டி – 223

    படக்கவிதைப் போட்டி – 223

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (09.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 222-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 222-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நித்தி ஆனந்த் எடுத்த இந்த வண்ணப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 222க்கு வழங்கியிருக்கின்றார் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    மழலையரில்லா உலகம் மலர்களில்லா இயற்கைபோன்று எழில்குன்றித் தோன்றும். புவியை அழகாக்கும் இப்புத்தம் புதுமலர்களைப் பாட வல்லமைமிகு கவிகளை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    *****

    வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளைகளின் விளையாட்டைத் தடுக்கவேண்டாம் என்று பெரியோருக்கு நல்லுரை நவில்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை விளையாட்டு…

    வெள்ளை உள்ளம் கொண்டதாலே
    வேறு பாடுகள் பார்ப்பதில்லை,
    பிள்ளை யாக இருக்கும்வரை
    பேதம் எதுவும் வருவதில்லை,
    கள்ளம் மனதில் இல்லாததால்
    கவலை வீணே கொள்வதில்லை,
    தள்ளி நிற்பீர் பெரியோரே
    தடுக்க வேண்டாம் விளையாட்டையே…!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வருங்காலத் தூண்கள்!

    வீடு நிறைய இடம் இருந்தும்
    ஓடி ஆடி விளையாட மறந்த
    புதிய தலைமுறை!
    உலகை வெல்லும்
    அத்தனை திறமை இருந்தும்
    உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் கைப்பேசியின் கைதியாய் இவர்கள்!
    சற்றே இடைவெளி விட்டு
    அகலும் விழிகள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அடிமை ஆகும்!
    நீண்ட நேரம் மின்சாரம் இன்றி
    செயல் இழந்த கைப்பேசி
    இவர்களை வீதிக்கு அழைத்து வந்ததோ விளையாட?
    செய்வது அறியா ஆழ்ந்த சிந்தனையில்
    அடுத்த உட்புற விளையாட்டைத்
    தேடும் புதிய தலைமுறை!
    இவர்கள் வருங்காலத் தூண்கள்!?

    அங்கையில் அடங்கும் கைப்பேசி விளையாட்டிலும், தொலைக்காட்சியிலும் தொலைந்துபோய்விட்ட  இன்றைய மழலையர், மின்சாரம் இல்லாவிட்டால் மட்டுமே தெருவில் இறங்கி விளையாடுகின்றார்கள் என்ற வருந்தத்தக்க உண்மையைப் பொருந்தவே பதிவு செய்திருக்கும் இக் கவிதையின் ஆசிரியர் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • (Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்

    (Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்

    முனைவர் த. ஆதித்தன்

    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.

    இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங்கடலில் இருந்ததாகக் கருதப்படும் பெரும் நிலப்பரப்பினையே குமரிக்கண்டம் என்கின்றனர். இப்பகுதி தொன்மையான தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடையது என்று ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர். கடலுள் மூழ்கிய கண்டம் ஒன்று இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று மேலைநாட்டு அறிஞர்கள் கூறியது குமரிக் கண்டத்தைத்தான் என்று நம்நாட்டு அறிஞர்கள் பலரும் கருதத் தொடங்கினர். அதன் அடிப்படையிலேயே லெமுரியா என்ற பெயரைக் குமரிக் கண்டத்தைக் குறிப்பதற்கு உரிய பெயராகக் கொண்டனர் எனலாம்.

    கடலுள் மறைந்து போனதாகக் கருதப்படும் பெருநிலப்பரப்பிற்கு லெமுரியா என்னும் பெயர் எப்படி வந்தது என்பது குறித்து,  “குரங்கு இனத்தைச் சார்ந்த லிமர்(Lemur) எனும் விலங்கு பரிணாமப் படியில் சற்றே கீழ்மட்டத்தில் உள்ள ப்ரோசிமியன் (Prosimian) எனும் பிரிவைச் சார்ந்ததாகும்.  இந்தப் பிரிவில் உள்ள விலங்குகளில் ஒன்றான தேவாங்குகள்(Loris) இந்தியா உட்பட சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்கின்றன. லிமர்கள் ஆப்பிரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் தீவிலும், அருகிலுள்ள கொடுமாரெஸ் தீவுகளிலும் மட்டுமே வாழ்கின்றன. இங்கு 30 கிராம் எடையுள்ள எலி லிமர் (Mouse Lemur) முதல் ஏழு கிலோ எடையுள்ள இந்திரி, சிஃபாகா எனும் லிமர்வரை பலவகை உள்ளன. தோற்றத்தில் மரநாய், கீரி போன்ற லிமர்கள், மயிர் அடர்ந்த நீண்ட வால் கொண்டவை.  இவற்றின் உறவு வகைக் குரங்குகள் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுவதால் மேற்கூறிய பகுதிகளை ஒரு காலத்தில் நிலப்பாலங்கள் இணைத்திருக்க வேண்டும் என்பது ஹிக்கலின் வாதம்.

    ஹிக்கல் கூற்றின் தொடர்ச்சியாக இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ஃபிலிப் ஸ்க்லேடர் (Philip Sclator) இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையே இந்து மகா சமுத்திரத்தில் இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு ‘லெமூரியா’  எனப் பெயரிட்டார்”1  என்று சு.கி. ஜெயகரன் விவரிக்கிறார்.(குமரி நிலநீட்சி, பக்கம் எண்.55-56) இதன் மூலம்  லிமூர் இன உயிரினங்கள் வாழ்ந்த இடப்பகுதி என்னும் அடிப்படையில் லெமூரியா, என்ற பெயரினை வழங்கியுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

    தமிழியல் ஆய்வாளர்களில் ஒரு பகுதியினர் லெமூரியா கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.  அதுவே கடலுள் மூழ்கிப் போன குமரிக்கண்டம் என்றும் நம்பத் தொடங்கினர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முதல், இடைச்சங்கங்கள் முதலாகப் பல இடங்களும் கடல்கொண்ட இக்குமரிக்கண்டத்தில் இருந்ததாகவே குறிப்பிடுகின்றனர்.  மூன்று சங்கங்களையும் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பெரும்நிலப்பரப்பு அது என்பது அவர்களின் வாதம்.  இதனை ஏற்றுக்கொள்ளுபவர்கள் குமரிக்கண்டம், மிகப் பழமையான நாகரிகச் செழுமையினைக் கொண்டது.  பெரும் பேரழிவினால் முழுவதுமாக மூழ்கிவிட்டது என்னும் கருத்தினைக் கூறி வருகின்றனர்.

    புவியியல் ஆய்வாளர்கள், புவியின் உள்பகுதியில் உள்ள தட்டுகளின் இடப்பெயர்வு காரணமாகவே மேல்பகுதியில் உள்ள நிலப்பரப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் என்கின்றனர்.  அதனை அறிவியல் ரீதியாகவும் நிரூபித்துள்ளனர்.  அம்முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது மிகப்பெரிய நிலப்பகுதி ஒரே நேரத்தில் முழுமையாக அழிந்து போவதற்கு வாய்ப்புகள் குறைவு. இப்புவியியல் அறிஞர்களின் கூற்றுப்படி கடலுள் நிலப்பரப்பு மூழ்குவதும், புதிய நிலப்பகுதி மேலெழும்புவதும் நிகழக் கூடியதுதான்.  ஆனால் அது சிறிது சிறிதாக ஒரு காலவரிசையில் நிகழக் கூடியது என்கின்றனர்.

    வெக்னர் என்னும் புவியியல் அறிஞரின் கண்டப் பெயர்ச்சிக் கொள்கையை உலகம் முழுவதும் உள்ள புவியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.  அவர் இன்று ஏழு கண்டங்களாக, தனித் தனி பிரிவுகளாக இருக்கின்ற நிலப்பரப்பு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கக் கூடும் என்கிறார்.  அந்த ஒருங்கமைந்த நிலப் பகுதியினைப் பாஞ்சியா என அழைக்கின்றனர்.

    புவியின் உட்பகுதியில் உள்ள தட்டுகளின் நகர்வாலும் மோதலாலும் மேல் உள்ள நிலப்பகுதி இடம் பெயருகின்றது என்பது அவரின் முடிவு.  அக்கொள்கை வெக்னர் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.

    இக்கோட்பாட்டின்படி. மிகப் பெரிய நிலப்பகுதி ஒரே நேரத்தில் முழுவதுமாகக் கடலுள் மூழ்குவதில்லை என்கின்றனர் புவியியலாளர்கள்.  ஆனால் இந்தியாவின் தென் பகுதியான குமரி முனைக்குத் தெற்கே கடலுள் மூழ்கிப்போன நிலப்பகுதி உள்ளது என்பதற்குச் சில ஆவணச் சான்றுகள் கிடைத்துள்ளன.

    கி.மு. 300 அளவில் இந்தியாவிற்குப் பயணம் வந்த கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸ் எழுதியுள்ள குறிப்பில், இந்திய நிலப் பகுதியின் தெற்கே நில நீட்சி இருந்தது  குறித்தும் அவற்றிற்கு இடையே ஆறு ஓடியது என்பது குறித்தும் செய்தி இடம் பெற்றுள்ளது.2  இவை குறித்து அபிதான சிந்தாமணியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அராபியத் தொன்மக் கதை ஒன்றிலும், இராமாயணக் கதையிலும் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னார்க்கும் இடையே உள்ள பாலம் குறித்த குறிப்பு உள்ளது.  இது ஆதாம் பாலம், இராம சேது, இராமர் பாலம் என பல பெயர்களால் வழங்கப் பெறுகின்றது. ஆங்கிலேயர்களால் கி.பி  1868இல் வெளியிடப்பட்ட ‘ மதுரா மேனுவல்’ (The Madura Country A Manual) என்னும் குறிப்பேட்டிலும்3 கி.பி.1972இல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட இராமநாதபுரம் விவரக் குறிப்பேட்டிலும்4   (Gazetteer) இதனைக் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    இதேபோல் கி.பி 1885இல் ஆங்கிலேய அரசால் வெளியிடப்பட்ட மெட்ராஸ் பிரசிடன்சி மேனுவல் (Manual of the Administration of the Madras Presidency) என்றும் விவரக் குறிப்பேட்டில் இந்த ஆதாம் பாலம் குறித்து விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  கி.பி.1480 வரையில் தரைவழியாக நடந்து செல்லக்கூடிய வகையில் இப்பகுதி அமைந்திருந்தது  என்கிறது  அக்குறிப்பேடு.  இலங்கைக்கும் இந்தியாவிற்குமான வணிகத் தொடர்பிற்கு இது பெருந்துணையாக இருந்தது  என்றும் மக்கள் தரைவழிப் பயணமாகவே இரு நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர் என்பது குறித்தும் இவ்விவரக் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.5

    இதன் மூலம் கி.பி.1480களில் நிலப்பகுதியாக இருந்த இராம சேது பகுதியானது இன்று கடலினுள் மூழ்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றும் கடலுள் சில அடிகள் ஆழத்தில் அப்பாலம் அதாவது நிலப்பரப்பு தென்படுவதை அறியலாம்.

    இதேபோன்று கடலினுள் நிலப்பகுதி மூழ்குவதனைப் புவியியல் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.  நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது 49 நாடுகளையும், வேறு பல பெரும் பிரிவுகளையும் கொண்ட பெரும் நிலப்பரப்பானது முழுவதுமாகக் கடலுள் மூழ்கி போனதா என்பதைக் குறித்ததே ஆகும்.

    இங்கு கண்டம் என்பது எதனைக் குறிக்கின்றது, இப்பொழுது நாம் குறிப்பிடும் பொருண்மையிலா?  அல்லது எப்பொருண்மையைக் கொண்டது என்பதைக் குறித்தும் ஆராய வேண்டி உள்ளது.

    பிங்கல நிகண்டு ‘நாடு’ என்பதற்குரிய பல சொற்களைக் கூறும்போது கண்டம் என்ற சொல்லைக் குறிப்பிடுகின்றது.6  சூடாமணி நிகண்டும் கண்டம் என்ற சொல் நாடு என்னும் பொருளிலும் வழங்கப்பட்டதனை உறுதி செய்கின்றது7  கேரளப் பகுதிகளில் நாடு என்ற சொல்லிற்கு ஊர் என்ற பொருள் உள்ளதையும் நாம் அறிவோம்.  இவற்றை எல்லாம் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது குமரிக்கண்டம் என்பதில் உள்ள கண்டம் என்னும் சொல்லினை இப்பொழுது உள்ள பொருண்மையிலான  பெரும் நிலப்பரப்பாகக் கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவு.  குமரிக்கண்டம் என்பது கடலுள் மூழ்கிய சிறு நிலப்பரப்பாகவே இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எனலாம்.  புவியியல் அறிஞர்களின் அறிவியல் பூர்வமான வாதங்களையும், ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு மேலாய்வுகள் மேற்கொண்டால் பரப்பளவு –  எல்லை போன்ற தகவல்களைத் துல்லியமாகப் பெறமுடியும். மேலும் அப்பகுதி குறித்த தொடர் ஆய்வுகள் ஆக்கப் பூர்வமான வகையில் நடைபெறும் பொழுது அந்நிலப்பரப்பின் தொன்மையும், நாகரிகச் செழுமையும் வெளிக்கொணரப்படும் என்பதில் ஐயமில்லை.

    சான்றெண் விளக்கம்

    1. ஜெயகரன், சு.கி., குமரி நில நீட்சி, காலச்சுவடு, நாகர்கோவில், டிசம்பர் 2002
    2. சிங்காரவேலு முதலியார். ஆ, அபிதான சிந்தாமணி, சீதைபதிப்பகம், சென்னை 5, 10ஆம் பதிப்பு, ஆகஸ்டு 2012
    1. J.H., The Madura Country A Manual, The Asylum Press, Mount Road, William Thomas, Madras, 1868.
    2. A., Tamil Nadu District Gazetteers – Ramanathapuram, The Director of Stationery and Printing, Madras, 1972
    3. Maclean, C.D, Manual of the Administration of the Madras Presidency, The Asylum Press, Mount Road, William Thomas, Madras, 1868
    4. இலம்போதரன். சு. (ப-ர்), பிங்கல நிகண்டு, வசந்தா பதிப்பகம், சென்னை – 88, இரண்டாம் பதிப்பு- 2005
    5. ஆறுமுக நாவலர்(ப-ர்), சூடாமணி நிகண்டு, வசந்தா பதிப்பகம், சென்னை – 88, முதல் பதிப்பு 2005

    =================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இந்திய உபகண்டத்தின் தென்முனை நீட்சியாக இருந்ததாகக்  கருதப்படும் குமரிக் கண்டம் பற்றித் தமிழரிடையே மூன்று விதமான கருத்துகள்  இப்போது பரவி வருகின்றன. குமரிக் கண்டம் இருந்தது என்று நம்புவோர் ஒரு சிலர்.  குமரிக் கண்டம் என்றொரு நீட்சிப் பகுதி இருந்தது இல்லை, அது வெறும் கற்பனை என்று நம்பாதவர் / மறுப்பவர் பலர் உள்ளார்.  மூன்றாவது பிரிவினர், குமரிக் கண்டம் பற்றிக் கருத்துரை வழங்க விழையாதவர்.  நான் குமரிக் கண்டம் இருந்திருக்க வேண்டும் என்று கருதும் முதல் வகுப்பைச் சேர்ந்தவன். பூதளவியல், வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம் மூலம் ஆராய்ந்து ஏற்றுக்கொண்டவன். அதனால் என் மதிப்பாய்வு, ஆய்வாளருக்கு உடன்பாடாக அமைந்துள்ளது. குமரிக் கண்டத்தை இல்லையென்று மறுப்பவரின் மதிப்பாய்வு வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கும்.  ஆகவே நான்  எழுதிய இந்த மதிப்பாய்வு ஒருநோக்கு, முறையில் ஒருபோக்கு நெறியான கருத்தோட்டம் என்று முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

    1,00,000 ஆண்டுகட்கு ஒருமுறை பனியுகம் தோன்றி  உலகக் கடல் நீர்வெள்ளம் சுண்டிப் போய், கடல் மட்டம் குறைந்து போவதும், பிறகு பல்லாயிர ஆண்டுகட்டுப் பின்னர்,  பனிக்குன்றுகள் உருகிக் கடல் நீர் மட்டம் உயர்வதும் பூமியில் பன்முறை நேர்ந்துள்ளன.  கடந்த 10,000 – 20,000 ஆண்டுகளில் அவ்விதம் நிகழ்ந்த பனியுகத்தில் கடல் நீர்மட்டம் சுமார் 300 அடி முதல் 1000 அடி வரை தாழ்ந்து மீண்டும் உயர்ந்துள்ளது என்பது என் யூகிப்பு. அப்போது கடற்கரைப் பகுதிகளில், நீர்மயம் சுண்டி நீட்சித் தளங்கள் தெரிந்தும், பிறகு  நீர் உருகி,  கடல் மட்டம் உயர்ந்து, அவை கடலுக்குள் மூழ்கியும் போயுள்ளன. இந்தியாவின் குஜராத் மாநில மேற்குக் கடலில் மூழ்கிய துவாரகாபுரி சுமார் 100 – 500 அடிக் கடலில் மூழ்கி உள்ளதைச் சமீபத்தில்  கண்டுபிடித்திருக்கிறார்.

    ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள்! மலைச் சிகரங்களில் பனிமுடி! பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments]! கடல் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils]! மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள்! குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள்! 1960 ஆம் ஆண்டு முதலாக கடல்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.

    ஆய்வாளர், குமரிக் கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இடையில் ஐயப்படும் சில வினாக்களைக் கேட்டுப் பதில் கூறாது போயுள்ளது தெரிகிறது.  கட்டுரையில் குமரிக் கண்டம்  இருப்பு பற்றிச் சிறந்த சான்றுகள் கூறி இருப்பினும், ஆய்வாளர் முடிவில் தான் என்ன உறுதிப்படுத்துகிறார் என்பது தெளிவாக  வெளிடப்படவில்லை.  ஆயினும் குமரிக் கண்டம் இருந்திருக்கக் கூடும் என்பதற்குப் பல சான்றுகள் இந்த ஆராய்ச்சியில் எடுத்துக் காட்டி இருக்கிறார். பயனுள்ள ஆராய்ச்சி.

    =================================================

    Share
  • தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

    தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

    -மேகலா இராமமூர்த்தி

    புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில்,  சுப்பிரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாளன்று பிறந்தவர் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். அவருடைய பிள்ளைத் திருநாமம் அண்ணாமலை என்பதாகும். மாணிக்கம் என்றும் அவர் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் அவருக்கு நிலைத்துவிட்டது.

    குழந்தைப் பருவத்திலேயே தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த மாணிக்கத்தை அவருடைய தாய்வழிப் பாட்டனாரும் பாட்டியாரும் வளர்த்தனர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியொன்றில் பயின்ற அவர் தம் பதினோராம் வயதில் வட்டித் தொழில் பழகுவதற்காகப் பர்மாவுக்குச் சென்றார்.

    அங்கே இரங்கூன் நகரத்திலுள்ள கடையொன்றில் உதவிசெய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். அவர் வேலைசெய்த வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் அவரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அந்த நபர் கடைக்கு வந்து தன்னை எங்கே என்று கேட்டால், ”முதலாளி இல்லை” என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் பொய்சொல்வதை அவ் இளம் வயதிலேயே பெருங்குற்றமாகக் கருதிய சிறுவன் மாணிக்கம், ”முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இங்கேயே இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய்சொல்ல மாட்டேன்!” என்று பிடிவாதமாக மறுத்துக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனாலேயே அவருக்குப் பொய்சொல்லா மாணிக்கம் என்று பெயர் வழங்கியதாகத் தெரியவருகின்றது.

    வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத சூழலில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப. மாணிக்கனாருக்குத் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற
    பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்று, முதன்மையாகத் தேர்ச்சியுற்றார்.

    சில திங்கள் அப்பல்கலைக்கழகத்திலேயே ஆய்வு மாணாக்கராய் இருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போதே தனியாகப் படித்து பி.ஓ.எல், எம். ஏ பட்டமும், ’தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ பற்றி ஆய்ந்து முனைவர்ப் பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபது ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் தொண்டாற்றினார். பின் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியேற்று தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணைநின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற்கழக ஆய்வு முதியராக வேலைபார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராகப் பணிசெய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவில் இவருக்கு டி.லிட். பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது.

    குன்றக்குடி ஆதீனம் ’முதுபெரும் புலவர்’ எனும் சிறப்புப் பட்டத்தையும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ‘செம்மல்’ எனும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின. அரசு இவர் மறைவுக்குப்பின் ’திருவள்ளுவர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

    தமிழ்ப்பல்கலைக்கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப்பெற்ற வல்லுநர்குழுவின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு வழிவகுத்தார் மாணிக்கனார். தமிழகப் புலவர் குழுவிற்கும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல. ’காரைக்குடி தமிழ்ச்சங்கம்’ நிறுவிச் சங்க இலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு ‘அறநூல்கள் ஒப்புவித்தல் போட்டி’ வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வாயெல்லாம் தமிழ்த்தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார்.

    வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் ‘கொடை விளக்கு’ எனும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு ‘மாமலர்கள்’ எனும் பெயரின் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும், தமிழ்க்காதலும் இருகண்களெனப் போற்றத்தக்கவை. இவ்விரு நூல்களும் தமிழர் அனைவரும் படித்துப் பயன்கொள்ளவேண்டிய அற்புதமான ஆராய்ச்சி நூல்களாகும்.

    காதலரின் பாலுணர்ச்சிகளை, அவர்தம் உளவியலைக் காட்சிப்படுத்துவதில் புலவர்களின் மாட்சி எத்தகையது என்பதை நுட்பமாய் ஆராய்ந்திருக்கும் நூல் தமிழ்க்காதல்.

    அகப்பொருள் பேசும் எழுதிணைகளின் இயல்பைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்க விரும்பிய மாணிக்கனார், கைக்கிளையை ’முதிராக் குறுங்கரு’ என்றும், பெருந்திணையை ’முற்றிவீழ் கரு’ என்றும் நடுவணதாய் அமைந்திருக்கும் அன்பின் ஐந்திணையே ’இயல்பான வளர்கரு’ என்றும் விளம்பியிருப்பது அவரின் நுண்மாண்நுழைபுலத்துக்குத் தக்க சான்றாகும்.

    அன்றைய பாடல்கள் குறித்து இன்றைய இளையோர் எழுப்பும் வினாக்கள் சிலவுண்டு. சங்கப்பாடல்கள் அடியெல்லை, கடுமையான இலக்கண வரம்புகள் முதலியவற்றை உள்ளடக்கியிருப்பது புலவரின் கற்பனைச் சிறகை ஒடிக்காதா? கவிதை ஆர்வத்தைச் சிதைக்காதா? என்பவை அவை.

    புலவர்கள் இந்த இலக்கண விதிகளையே பாடல் மரபெனக் கொண்டு அறிவறிந்து அடங்கிப் பாடல்படைத்த காரணத்தால்தான் ஞாலமதிப்பைப் பெற்று, அன்றைய புலவர்கள், இன்றளவும் புகழொளி வீசுகிறார்கள் என்று விடைபகரும் மாணிக்கனார்,

    புகழ்பெற்ற மேனாட்டுச் சிந்தனையாளரான Bertrand Russell தம்முடைய Marriage and morals’ எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும்,” Love poetry depends upon a certain delicate balance between convention and freedom, and is not likely to exist in its best form where this balance is upset in either direction.”

    காதற்பாட்டு, மரபுக்கும் உரிமைக்கும் இடையே மெல்லியதொரு சமநிலையை வேண்டிநிற்கும். அது சற்றே கோடினாலும் பாட்டு அதன் அழகுருவை இழந்துவிடும்” எனும் கருத்தைப் பொருத்தமாய் மேற்கோள் காட்டுவது அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நமக்கு அறியத்தருகின்றது.

    திருக்குறளில் தோய்ந்து, வள்ளுவர் நெஞ்சை ஆய்ந்து, வள்ளுவம் எனும் ஆராய்ச்சி நூலை படைத்திருக்கும் மாணிக்கனார், அதில் தம் உளக் கருத்துக்களைப் பன்னிரண்டு கற்பனைச் சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

    ”தமிழர்களே! நாம் புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மாணும் பறைசாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது; ‘புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்’ (538) என்பது ஒரு தனி வள்ளுவம். ‘செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்’ என்பது குறள்காட்டும் அச்சமுடிபு. ஆதலின் யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நெஞ்சம். இச்செயல் நெஞ்சமே என் திருக்குறட் பொழிவுகளின் உயிர்நிலை. விளக்கமெல்லாம் இதன் சூழ்நிலை. ‘குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள்வாழ்வு வாழ்வேன்; வள்ளுவர் ஆணை’ என்று எண்ணுமின்!” என அந்நூலில் வள்ளுவர் நெஞ்சத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் குறள் கற்கவும் அதன்வழி நிற்கவும் நம்மை வலியுறுத்துகின்றார்.

    இந்நூல்களேயன்றித் தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சாறு, தமிழ்க்கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள ’உரைநடையில் திருக்குறள்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.

    மணிவாசகர் நூலக வெளியீடான ‘கம்பர்’ என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசுபெற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் வினைச்சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங்கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவின் உரிமை, உப்பங்கழி, ஒருநொடியில் என்பனவாகும்.

    இவற்றில் ’தலைவர்களுக்கு’ என்ற நூலை நாம் அரசியல் சார்ந்த நூலாகக் கருதலாம். 1965ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இந்நூல் வெளிவந்ததாகத் தெரிகிறது. 1965, தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகும். காரணம் அரசாங்கத்தின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகமே போர்க்கோலம் பூண்டிருந்த ஆண்டு அது. ஆதலால் அச்சமயத்தில் தாம் எழுதி வெளியிட்ட அந்நூலில் மொழிச்சிக்கல் குறித்தும் அதற்கு ஏழு விதமான தீர்வுகள் குறித்தும் தம் கோணத்தில் மாணிக்கனார் விரிவாகப் பேசியிருக்கின்றார்.

    இவ்வாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் பனுவல் பல படைத்த அம் மூதறிஞர், தமிழ்ச் சொல்லாக்கத்துறைக்கும் குறிப்பிடத்தக்க  பங்களிப்புச் செய்திருக்கின்றார்.

    “சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம், அட்டவணைப்பர், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், இலக்கணர், தமிழ்வளர்ப்பிகள், இலக்கியப் படிப்பிகள், மாறுவேடி, நம்பிக்கைக் கேடி, தமிழ்மை, தமிழ் மன்னாயம், மக்கட் குழுவாயம், அணிய நாடுகள், சால்பியம், புரட்சியம், மக்களியம், ஒப்பியம், படைப்பியம்” என்பன அவற்றுள் சில.

    சிலப்பதிகாரம் எனும் காப்பியத்துக்கு அப்பெயர் சிலம்பு காரணமாக வந்தது என்பதை நாமறிவோம். எனினும் அச்சிலம்பு எது? யாருடையது? என்று கேட்டால் நம்மில் பெரும்பாலோர் கண்ணகியின் காற்சிலம்பே காப்பியத்தின் பெயருக்குக் காரணம் என்று கூறுவோம். ஆனால் வ.சுப. மாணிக்கனாரோ தம்முடைய ’காப்பியப் பார்வை’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள ‘எந்தச் சிலம்பு?’ எனும் ஆராய்ச்சிக்கட்டுரையில் கோப்பெருந்தேவியின் தொலைந்துபோன சிலம்பே சிலப்பதிகாரப் பெயருக்குக் காரணம் என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார். சிலப்பதிகாரப் பெயர் பற்றிய என் ஆராய்ச்சி, முன்னையோர் ஒருமுகமாகக் கூறிவரும் கருத்துக்கு முற்றுமுரணாக இருந்தாலும், உண்மை காண முயலுதலும், கண்ட உண்மையை வலியுறுத்துதலும் தமிழ் மாணவரின் கடன் எனும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுகின்றேன் எனக் கட்டுரையின் முடிவில் அவர் முத்தாய்ப்பாய்க் கூறியுள்ள கருத்து ஆய்வாளர் அனைவரும் மனங்கொளவேண்டிய ஒன்றாகும்.

    தமிழ்மொழிபால் தணியாக் காதல்கொண்ட அப்பெருமகனார், மழலையர் ஆங்கிலப்பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும்; தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்றுமொழி தமிழாதல் வேண்டும் எனும் கொள்கையினைப் பரப்பத் தமிழ்வழிக் கல்வி இயக்கங்கண்டு அதனைத் தமிழகம் எங்கணும் நடாத்திவந்தார். எழுத்துச் சீர்திருத்தம் எனும் பெயரில் எழுத்துமாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்தலாகாது என்பதனைத் தம் கட்டுரைவழி அறிஞருலகுக்கு அறிவுறுத்தினார்.

    வ.சுப. மாணிக்கனாரின் குணநலன்களைச் சுருங்க உரைப்பதென்றால்…

    எளிய தோற்றமும், உயரிய நோக்கமுங்கொண்ட பழுத்த தமிழறிஞர் அவர்! சிறந்த சிந்தனையாளர்; தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லாநிலைகளிலும் எங்கும் தமிழ்வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர். அனைத்துக்கும் மேலாய்ப் பண்புவழி உலகினை நடத்தத் தம் மதிநுட்பத்தையும் நூற்புலமையையும் அசைவிலா ஊக்கத்தோடு பயன்படுத்திவந்த சான்றோர். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப்பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர்.

    தமிழ்ப்புலமையும், சான்றாண்மையும், சிறந்த பண்புநலன்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அருந்தமிழறிஞரான வ.சுப.மாணிக்கனார், 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் இரவு மாரடைப்பால் புதுச்சேரியில் காலமானார்.

    அப் பேரறிஞரின் பொன்னுடல் இப்புவியைவிட்டு மறைந்தாலும், தன்னேரிலாத தமிழுக்கு அவராற்றியிருக்கின்ற அளப்பரிய பணிகளால் தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் என்றும் மாணிக்கமாய்ச் சுடர்விட்டு ஒளிர்வார்.

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://ta.wikipedia.org/wiki /வ._சுப._மாணிக்கம்
    2. வள்ளுவம் – வ.சுப. மாணிக்கனார் – மணிவாசகர் பதிப்பகம்
    3. தமிழ்க்காதல் – வ.சுப. மாணிக்கனார் – மெய்யப்பன் பதிப்பகம்

    Share
  • அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

    அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில்

    சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவர் கொண்ட 11 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகாத்தம் 1430 இதந் மேல் செல்லா நிந்ற விபவ சங்வற்சரத்து கும்ப நாயற்று பூர்வ்வபக்ஷத்து தெசமியும்
    2. ஆதித்தவாரமும் ஆயிலியத்து நாள் மகதைம[ண்ட]லம் ஆறகழ்ஊர் நாயினா[ர் திருக்காமீ]சுரமுடைய னாயனார் பாண்டியர் னாள் முதல் இந்தாள் வரைக்கும்
    3. திருநாளும் நடவாதிருக்கையில் சுவாமி நளோகண்டந்  வங்கி நாராயணந் மறைபுக்கார் காவலந் வல்லாள இராய பயங்கரந் சாடிக்காறர் கண்ட
    4. ந் ஸ்ரீமது எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் நாயனார் திருக்காமீசுரமுடைய நாயனாற்க்கு தேரும் சமைத்து திருநாளும் மாசித் திருநாளாக ஆயிலியத்திலே தேரும்
    5. மகத்திலே திருமசஞ்சநமும் ஆக கட்டளை பண்ணி திருநாள் நடக்கயில் தாமக _ _ _ நல்லூரில் கைக்கோளந் பெருமாள் மகன் பறையந் பறை எடுத்து, முதலியார் சன்னகமல
    6. னாயனார் ஆதிசண்டேசுர நாயநாரும் தாருமும் மாகேசுரரும் ஆக ஆறை னாயக மண்டபத்தில் நிறைவற நிறைந்து குறைவற கூடி இருந்து ஆதிசண்டேசுர னாயனார்
    7. திருவாய் மலர்ந்தருளிநபடி இந்த பறையனுக்கு உதித்_ _ _ டி ஆக ஆறகழ்ஊர் நன்செய் நிலத்தில் காளி அம்மை உடைப்புக்கு மேற்கு தியாகண நல்லூர் வய
    8. லுக்கு கிழக்கு நன்செய் உரூபாய் 250 ஓரணை ஏர் நடத்த பட்டு புன்செய் மாநிபமும் ஒருமனையும் ஒரு_ _ _ _ _க்கும் மானியமும் திருமஞ்சன வழிக்குதெற்கு இரண்_ _
    9. _ _ _ _ டு ஒரு தோட்டமும் கோயிலிலே நிற்றம் இருநாழி அருசியில் சோறும். மனையாவது சந்நதி தெருவில் வடசிறகில் ஒரு மனையும் குடுத்தருளி
    10.  _ _ _ _  ஆதிசண்டேசுரனாயனார் திருவாய் மலர்ந்தருளிநபடியாலே இந்த சுவந்திரம் உண்டாநது. இவன் தகப்பன் பெருமாளும் இவந் வற்கத்தாரும்  சந்திறாதித் _ _
    11. _ _ _ _ _ அனுபவித்து கொள்ளகடவர்களாகவும்இவை திருஞாந சம்பந்த பண்டிதர் எழுத்து. இவை பலமுதல் கங்காணி நயினார் எழுத்து.

    கட்டளை – அளவுகோள்; கைக்கோளன் – போர்வீரன்; முதலியார் –  தலைவர்;  உதிரப்பட்டி – இறந்தோர் நினைவாக தரப்படும் நிலதானம்; உடைப்பு – கரைஉடைந்தோடும் கால்வாய்; ஓரணை – ஓரேர் மாட்டிணை; வடசிறகு – வடக்கு பக்கம்; சுதந்திரம் – உரிமை

    விளக்கம்: சக ஆண்டு 1430 (பொ.ஊ.1508) விபவ ஆண்டு கும்ப ராசி ஞாயிறு, வளர்பிறை பத்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் மகதைமண்டத்தில் அமைந்த ஆறகளூரில் வீற்றிருக்கும் திருக்காமீசுவரர் கோவிலில் பாண்டியர் ஆட்சிக் காலம் தொட்டே இக்கல்வெட்டு பொளிந்த நாள்வரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்த திருவிழாவும் நடக்காதிருந்தது. தலைவர் நாளோகண்டன் வங்கி நாராயணன் மறைபுக்கார் காவலன் வல்லாள இராய பயங்கரன் சாடிக்காரர் கண்டன் ஸ்ரீமத் எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் திருக்காமீசுரருக்கு தேர் ஒன்று செய்வித்துக் கொடுத்ததோடு மாசியிலே திருவிழாவும் மாசி ஆயில்ய நட்சத்திரத்தில் தேர் ஓடவும் மக நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடக்குவும் காலஅளவாக வைத்தார். (சக ஆண்டும் விபவ ஆண்டும் ஒத்துப் போகவில்லை பிழையாக உள்ளது. விபவ ஆண்டு 1498 & 1558 இல் ஏற்படுகின்றது.) இப்படியாக திருவிழா நடக்கையில் போர்வீரனாக கைக்கோளன் பெருமாள் என்பான் மகன் பறையன் ஒருவன் இருந்தான். இப்பறையன் ஏதோ காரணத்தினால் இறந்து விடுகின்றான். பறை எடுத்து என்ற சொற்றொடர் இவன் இக்கோவிலில் பறை அடித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. அதனாலேயே இவன் குடும்பத்தாருக்கு இம்மானியம் கிட்டுகின்றது.

    இத்திருவிழாவின் போது தலைவர் சன்னகமல நாயனார், ஆதிசண்டேசுவர நாயனார், மாகேசுவரர் ஆகியோர் ஆறைநாயக மண்டபத்தில் கூடி இருக்கின்ற போது ஆதிசண்டேச்சுவரர் தம்வாயால் சொன்னபடியே இறந்த இப்பறையனுக்கு உதிரப்பட்டியாக இதாவது, இறந்தோர் நினைவாக அவன் குடும்பத்தாருக்கு தரப்படும் நிலதானமாக ஆறகளூர் நன்செய் நிலங்களில் உடைந்தோடும் காளி அம்மை கால்வாய்க்கு மேற்கில் தியாகணநல்லூர் வயலுக்கு கிழக்கே நன்செய் நிலமும், உரூபாய் 250க்கு காளைகள் பூட்டிய ஓர் ஏர் நடத்தப்பட்டு புன்செய் மானியமும் ஒரு வீடும் தரப்படுகின்றது. (இரு இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளதால் அங்கு என்ன கூறப்படுகின்றது என்று அறியமுடிவில்லை.) திருமஞ்சன வழிக்கு தெற்கே ஒரு தோட்டமும் கோயிலிலே நித்தம் இரு பொழுதிற்கு அரிசி சோறும் வழங்க ஏற்பாடானது. இந்த வீடானது சைவ உணவு உண்ணும் பிராமணர், வெள்ளாளர் வாழுகின்ற கோவில் முன்னிலையான சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் அமைந்திருந்தது. இந்த உரிமை யாவும் ஆதிசண்டேசுவரர் தம்வாயால் சொன்னதினாலே உண்டானது. இதை இவன் தந்தையும் இவன் வழிவந்தாரும் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை அனுபவிக்கக் கடவார்களாக என திருஞான சம்பந்த பண்டிதன் எழுதி ஒப்பமிட்டான். கங்காணி பெரியநயினார் ஒப்பமிட்டுள்ளார். பொதுவாக கோவிலில் பணிசெய்யும் பிராமணர், பணிப் பெண்டுகள் உள்ளிட்ட கோவில் பணியாளர் வாழ ஒரு வீடும், நிலமும், கோவிலில் இருந்து சோறும் பெற்றனர். இந்த பறையனுக்கும் அவ்வாறு தந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை, வழக்கமானது தான்.

    பறையன் இறந்ததால் அவரது உற்றார் உறவுகள் வாழ்வதற்கு பிராமணர் வாழும் தெருவை அண்டிய வட பகுதியில், இதாவது ஊரிலேயே வீடும் தரப்படுகின்றது. அதோடு ஒவ்வொரு நாளும் இரு பொழுதிற்கு அரிசிச் சோறும் கோவிலில் இருந்து வழங்கப்படுகின்றது. இவை அல்லாமல் நன்செய், புன்செய் நிலங்கள், தோட்டம் உள்ளிட்டனவும் மானியமாக வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு யாதெனில் இந்த பறையர் கோவிலினுள் சென்று பறை அடித்தார் என்பது தமிழக கோவில்களில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததில்லை என்றும் அது 17-18  ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் வழக்கில் வந்திருப்பதாகத் தெரிகின்றது.

    சனாதன தர்மம், அதன் நால்வருணக் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டு பிராமணர் தலித்துகளை அழுத்தி விட்டதாக கடந்த 130 ஆண்டுகளாக தலித்திய முன்னோடிகளும், 100 ஆண்டுகளாக திராவிடமும் சொல்லி வந்த செய்தி இக்கல்வெட்டு மூலம் பொய் என்றாகிவிட்டது.

    பி.கு: ஒரு செங்குந்தருக்கு பறையன் மகனாக இருக்க முடியாது, மகனும் செங்குந்தராகத் தான் இருக்க வேண்டும். அதே போல் ஒரு பறையனுக்கு ஒரு செங்குந்தன் தந்தையாக இருக்க முடியாது அவனும் ஒரு பறையனாகத் தான் இருக்க முடியும் . இதுவேசமூக நியாயம், முறை. ஆதலால் கல்வெட்டில் இடம் பெறும் கைக்கோளன் என்பது இங்கு செங்குந்தரை குறிப்பதல்ல மாறாக போர் வீரனையே குறிக்கின்றது.

    சிலர் தீண்டாமையை நிறுவ புலவர்களின் கற்பனைப் பாடலை, இதாவது இடைச் செருகல், அடித்தல் திருத்தல் நிரம்பிய பாடலை நாடி ஓடி அதில் சில வரிகளைச் சுட்டுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் நேரடியாக அனுபவப்பட்ட செய்திகளை ஏந்தும் கல்வெட்டுச் செய்திகளை புறந்தள்ளுகிறார்கள். இது அவர்தம் பொய்மைச் சார்பை காட்டுகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 28, பக். 421- 422.

    செங்கல்பட்டு மாவட்டம் திருவாடாணை திருவல்லீசுவரர் கோவில் கருவறை தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 4 வரி கல்வெட்டு.

    1. வெகுதானிய வருஷம் சித்திரை மாதம் 10 நாள் ஸ்ரீ மத் கேதாயுதானர் காரியத்துக்கு கடவர் தாசரும் தானத்தாரும் வித்தூர் உடையார்க்  கோயில் சேவிக்கும் பெண்களுக்கு கல்வெட்டு பூறுவம். சேவிக்கு பெண்களில்லாத படியா
    2. லே வரதராசர் புதுசாக விடுவித்த  அக்கநாயன் மகள் அப்பநாச்சிகு சன்னதி தெருவில் தென்சிறகில் கீழை  இரண்டுமனை விட்டு மூன்[றாம்] மனையும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு மேலை மனையும் அழகியர் மகள் [எ]றமநாச்சிக்கு
    3. இதில் மேலை மனையும், கம்பர் மகள் அழகிய நாச்சிக்கு வடசிறகில் மூன்றாமனையும், வெள்ளந்தாங்கினா மகள் பொன்னாகு கீழை மனையும் கி_ _ _ கீழ்பாதிரி [பு] நூற்[று] இருபது குழியும் நின்றப் பெற் பேரிலே நூறு குழியும் கோயிலே நாழி சோறும் சந்திராதி
    4. த்தவரையும் இம்மதிகா பெற்று கோயில் சேவுகும் கா_ _ _ சேவித்து [நடத்தக்] கடவார்களாகவும் [இத]ன் சுகத்திலே இருக் _ _ _ _ _

    தானத்தார் – கோவில்பொறுப்பாளர்; பூறுவம் – முன் வைத்து; சேவிக்கும்- தொண்டு (அ) ஊழியம் செய்யும்; விடுவித்த – வேலைக்கு கொண்டுவந்து விட்ட; சன்னதிதெரு – கிழக்கும் மேற்குமாக கோவிலின் கிழக்கு வாயிலில் அமைந்த தெரு; சிறகு – தெருப் பக்கம்

    விளக்கம்: கல்வெட்டில் சக ஆண்டு குறிப்போ அரசர் ஆட்சிஆண்டுக் குறிப்போ இல்லை. வெகுதானிய ஆண்டு 1518 அல்லது 1578 இல் நிகழ்கின்றது. சித்திரை மாதம் 10 ஆம் நாள் கேதாயுதானர் செயல்களுக்கு அமைந்த துறவியும் கோவில் பொறுப்பாளரும் வித்தூர் இறைவர் கோவிலில் தொண்டுசெய்யும் பணிப்பெண்களுக்கு இக் கல்வெட்டை முன் சான்றாக வைத்தனர்.

    இக்கோவிலில் தொண்டாற்றும் பணிப்பெண் இல்லாமையால் வரதராசர் என்பவர் புதிதாக 5 பணிப் பெண்களை வேலைக்கு கொண்டு வந்து விட்டார். அவருள் அக்கநாயன் மகள் அப்பநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு தென் பக்கத்தில் கிழக்குமுகத்தில் அமைந்த இரண்டு வீட்டை அடுத்து மூன்றாவது வீடும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு அங்கேயே மேற்கு முகத்தில் வீடும், அழகியருடைய மகள் எறமநாச்சிக்கு இதே மேற்கு முகத்தில் ஒரு வீடும், கம்பர் மகள் அழகியநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் மூன்றாவது வீடும், வெள்ளம்தாங்கினான் மகள் பொன்னாளுக்கு கிழக்கு முகத்தில் அமைந்த வீடும் தரப்பட்டன. இவர்களுக்கு கீழ்பாதிரியில் புன்செய் 120 குழியும், நிலையாக வேலையில் நின்றவர் பெயருக்கு 100 குழியும் ஆக 220 குழி நிலமும் அதோடு இவர்களுக்கு கோவில் பணியாளருக்கு சோறு வழங்கும் வேளையில் ஒவ்வொருவருக்கும் நாழி அளவு சோறும் தரப்படுகின்றது. இந்த மதிப்பை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை பெற்று அனுபவிப்பார்களாக.

    முதல் கல்வெட்டிற்கு துணைச்சான்றாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டது. முதல் கல்வெட்டில் பயன்படுத்தும் சொற்களும் அதன் கருத்தடைவும் இதிலும் உணரப்படுகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 256 – 257.

    திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோவில் உள்ளே அமைந்த இரண்டாம் தூணில் பொறிக்கப்பட்ட 127 வரிக் கல்வெட்டு. இடத் தேவை கருதி சாய்வுக் கோடாக வரிகள் குறிக்கப்பட்டுள்ளன.

    ஸ்வஸ்திஸ்ரீ ப்ரஸாத / ஞ் செ[ய்]தருளிய திருமு / வப்படி த்ரிபுவனச் / சக்ரவத்தி_  _ _ கோனே / ரின்மைய் கொண் / டான் களக்குடி நாட் / டுக் கருவாநல்லூரா / ன விக்கிரம பாண்டி / ய நல்லூர் ஸ்ரீ குலசே / கர விண்ணகர் ஆழ் / வார் கோயில் நம்புசெ / [ய்] வானுக்கும் இவ்வாழ் / வாற்கு மிழலைக் கூற் / றத்து நடுவிற்கூறு பு / ல்லூற்குடி பொன்பற் / றி உடையான் பொ _ _  / பெருமாளான ஐய்ய / ன் காலிங்கராயர் த / ம் பேரால் கண்ட மனம்பெரியான் ஸந்தி / க்கு திருப்படிமாற்றுள் / ளிட்டு வேண்டும் நிப / ந்தங்களுக்கு இந்நாட்டு / மானநிலை நல்லூரில் / வெட்டியாற்கு ஜீவி / தமாய் போந்தப் பா / டகப்படி  நிலம் ஒன் / றே முக்காலே ஒருமா / வும் இவர்களைத் தவி / ர்[ந்]து இரண்டாவதி /  னெதிராமாண்டு முத / ல் இம்மானநிலைந / ல்லூர் ஸபையார் /  க்கு காராண்மையும் _ _ _  / [வினி]யோகமும் தருவதா / ன அச்சும் காரியவா / ராட்சிச்சியும் வெட்டி / பாட்டமும் பஞ்சுபீலி /  சந்துவிக்கிரகப் பேறு / ம் வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் / பொன் வரியும் மற்றும் / எப்பேர்ப்பட்டினவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு /  ப்பதாக இடப்பெற / வேணுமென்று ஐய்ய / ன் காலிங்கராயர் நம / க்குச்  சொன்னமையி / ல்  இவ்வாழ்வார்[க்கு] ஐ / யன் காலிங்கராயர் த_ _ / திருப்படி மாற்றுள்ளி / ட்டு வேண்டும் நிவந் / தங்களும் இன்னாட் / டு மானநிலை ந[ல்]லூரி / ல் வெட்டியாற்கு ஜீ / விதமாய்ப் போ(ர்)ந்த /  பாடகப்படி நிலம் ஒ / ன்றே முக்காலே ஒரு மா வும் இவர்களை தவிர் /  ந்து இம்மானநிலை[ந] / ல்லூர் ஸபையாற்கு /  காராண்மையும் இவ் / வாழ்வாற்கு கடமையு / ம் அந்தராயமும் வினி / யோகமும் தருவதான /  அச்சும் காரியவாரா / ட்சியும் வெட்டிப்பாட் / டமும் பஞ்சுபீலி சந் / து விக்கிரகப் பேறும் / வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் /  பொன் வரியு மற்றும் / எப்பேற்பட்டனவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு / ப்பதாக இட்டு வரியி / லார் எழுந்திட்ட உள் / வரியும் நங்கேழ்வியு / ம் தரச் சொன்னோம் _ _ / கைக்கொண்டு திரு / ப்படி மாற்றுள்ளிட் / டு வேண்டும் நிவந்த / ங்கள் செல்லப்பண் / ணி இப்படி சந்த்ராதித்ய / வற் செல்வதாக கல்லி / லும் செம்பிலும் வெ  /  ட்டிவித்து கொள்க. / இவை செவ்விருக்கை / நாட்டு அச்சுதவயல் / அரையன் வண்டுவ / வரையப் பெருமானான கு / லசேகர விழுப்பரை / யன் எழுத்து உ யாண் / டு 3 நாள் 910 இவை  / மிழலைக்கூற்றத்து / வடபாம்பாற்று தண் / ணிரண்டக்குடியான /  தரணிவிச்சாதிர நல் / லூர் அடைக்குடை / யான் தேவபிரான் / தேசுடைய தேவனான /  காடுவெட்டி எழுத் / து உ இவை மதுரோ / தய வளநாட்டு கரஞை /  இருக்கை உழக்குடி மூ / த்தன் ஆள்கொண்டவி / ல்லியான பல்லவரா / [ய]ன் எழுத் / தினாலும் / ப்ரஸாதஞ் / செய்தரு /  ளிவித்து / இவை ப்ரஸாதஞ் செ / ய்தருளின திருமுகப்படி / கல்லில் வெட்டினேன் / இவூற்(த்) தச்சாரியன் / உடையானழகனான / பாண்டிய சிவாமணி யா /  சாரியன் எழுத்து உ / இவை ப்ரஸாதஞ் செயிதரு / ளின திருமுகப்படி கல்லில் / வெட்டினேன் இவ்வூ[ர்] தச்சாசா / ரியன் காகுந்தன் பரமனான /  ஆயிரத்தெண்வ ஆசாரியன் /  எழுத்து.

    நம்புசெய்வான் – பூசனை செய்பவன்; திருப்படி – கோயில் வாயிற்படி; நிவந்தம் – பூசை செலவு திட்டம்; வெட்டியார் – கிராம பணியாளர் அல்லது பிணஞ்சுடுபவர்; போந்த – முடிவான, finalized; பாடகப்படி – நில அளவு; காராண்மை  – ஒரு வரி; அச்சும் – பணமாக இறுக்கும் வரி; காரியவாராட்சி –அரசு அலுவலர்காக செலுத்தும் வரி, வெட்டிப்பாட்டம் –   ஒரு வரி; பஞ்சுபீலி – பஞ்சின் மீதான வரி, கேழ்வி – அரசன் வாய்மொழி உத்தரவு; இறையிலி – ஆளும் அரசர்களுக்கு தான் வரி சென்றுசேராது ஆனால் இனி ஊர் அல்லது கோவில் மேம்பாட்டிற்கு அது பயன்படுத்தப்படும் என்ற வகையில் எப்போதும் போல் மக்களுக்கு வரி உண்டு.

    விளக்கம்: இரண்டாவதின் எதிராமாண்டு என்பது 3-ம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை. கோனேரின்மை கொண்டான் என்று சிறப்பு அடைச்சொல் குறித்துள்ளதால் இது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது என்று குறித்துள்ளனர். இதுபொ.ஊ. 1271 ஆகும்.

    களக்குடி நாட் டுக் கருவாநல்லூரான விக்கிரம பாண்டிய நல்லூர் ஸ்ரீ குலசேகர பெருமாள் கோயில் பூசனை செய்பவனுக்கும் இப்பெருமாளுக்கும் மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு புல்லூர்குடி பொன்பற் றி உடையான் பெருமாளான ஐயன் காலிங்கராயன் தனது பேரால் கண்ட மனம்பெரியான் கோயில் திருப்படியை மாற்றுதல் உள்ளிட்ட வேண்டும் பூசை செலவிற்கு இந்நாட்டு மானநிலை நல்லூரில் வெட்டியாற்கு பிழைப்பாய் இருக்கவேண்டி முடிவு செய்து தரப்பட்ட பாடகப்படி நிலம் ஒன்றே முக்காலே ஒருமா ஆகும்.  இந்த வெட்டியார்களைத் தவிர்ந்து மூன்றாம் ஆட்சி ஆண்டு முதல் இம்மானநிலைநல்லூர் கோவில் சபையார்க்கு காராண்மை எனும் வரியும், பெருமாளுக்கு கடமை எனும் வரியும் அந்தராயமும், வினியோகமும், பணவரியும், காரியவாராட்சியான அரசு அலுவலர் வரியும்,  வெட்டிபாட்ட வரியும், பஞ்சு வரியும், சந்துவிக்கிரகப் பேறும், வாசல்பேறும், இலாஞ்சினைப் பேறும், பொன் வரியும் மற்றும் எப்பேர்ப் பட்டனவும் உட்பட எல்லாம் தேவதானமாகப் போய்விடும், அரசற்கு இனி போகாத இறையிலியாய் எப்போதும் போல் மக்களால் வரி கட்டப்படவேண்டும் என்று ஐயன் காலிங்கராயன எனக்குச்  சொன்னதால்  இப்பெருமளுக்கு உள்வரியும் தர உத்தரவிட்டு இவற்றைக் கைக்கொண்டு கோயில் திருப்படி மாற்றம் உள்ளிட்ட தேவையான செலவுகளை எதிர்கொள்ள வழி செய்தான் செவ்விருக்கை நாட்டு அச்சுதவயல் அரையன் வண்டுவ  வரையப் பெருமானான குலசேகர விழுப்பரையன், மதுரோதய வளநாட்டு கரஞை இருக்கை உழக்குடி மூத்தன் ஆள்கொண்டவில்லியான பல்லவராயன் என சில அரசர்கள் இப்படி கையெழுத்திட்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரையில் இந்த ஏற்பாடு செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிவித்து கொள்ளச் சொல்கின்றனர்.

    இக் கல்வெட்டில் இவர்கள் தவிர்ந்து என்று தெள்ளத்தெளிவாக வெட்டியார் அனுபவிக்கும் நிலத்தை தவிர்த்து பிறவற்றில் வரும் காராண்மை வரி வருவாய் இனி கோவில் சபையார்க்கு செல்வதாக என எழுதிக் கொடுத்த போதும் காராண்மை என்பதற்கு உழும் உரிமை என்ற பொருளைக் கொண்டதால் வெட்டியார் நிலம் இறையிலி ஆக்கப்பட்டு கோவிலுக்கு தேவதானமாக ஆக்கப்பட்டு விட்டதாக தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 22 பகுதி 2 நூலில் பிழைபட பொருள் கூறி உள்ளனர்.  இதே போல் தப்பும் தவறுமாய் பொருள் தந்ததால் தானோ என்னவோ இராசராசன் பறையரிடம் இருந்து நிலம் பறித்துக் கொண்டான் என்பதும்? அக்கல்வெட்டின் மூல பாடம் தந்தால் தக்க பொருளை அறிந்து கொள்ள முடியும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி 2, பக். 350 – 351.

    https://www.youtube.com/watch?v=wk_0FI5lg14

    Share
  • ஐயப்பன் காவியம் – 5

    ஐயப்பன் காவியம் – 5

    -இலந்தை சு. இராமசாமி 

    நாட்டுப் படலம்

    மா மா காய் – அறுசீர் விருத்தம்

    பசுமை சூழ்ந்த எழுநாடு
    பாண்டி யர்தம் வளநாடு
    ஒசிந்து செல்லும் பஃறுளியின்
    ஊட்டம் பெற்ற திருநாடு
    திசைகள் எட்டும் புகழ்பரப்பித்
    திகழ்ந்த நாடு, பொழில்நாடு
    இசைகள் பாடும் பாவாணர்
    ஏற்றம் பெற்ற எழில்நாடு (43)

    பொருநை வையை, பஃறுளியும்
    புகழ்சேர் குமரி பம்பைநதி
    பெருகிப் பொங்கும் காவிரியும்
    பெருமை சேர்த்த நதிநாடு
    திரும்பு கின்ற திசையெல்லாம்
    திகழும் மலைகள் நிறைநாடு
    கரும்பு போலத் திதிக்கின்ற
    கன்னல் தமிழின் மொழிநாடு (44)

    குமரிக் கோடும் அதைத்தாண்டிக்
    கூடும் பெரிய நிலப்பரப்பும்
    அமைந்திருந்த பெருநாட்டில்
    அம்மை மீனாள் முன்னாளில்
    அமர்ந்தே ஆட்சி புரிந்தாளாம்
    அந்தக் காலப் பாண்டியர்க்குத்
    தமரே அன்றி எதிரியெனச்
    சாற்ற எவரும் அங்கில்லை (45)

    காய் காய் காய் மா – எண்சீர் விருத்தம்

    அம்மையருள் மீனாட்சி பரம்பரையில் வந்தோர்
    ஆண்டுவந்த தென்மதுரைத் திருநாட்டில் அந்நாள்
    செம்மைபெறும் உக்கிரபாண் டியனென்னும் மன்னன்
    சிறப்பாக ஆண்டுவந்தான், தேசத்தில் முன்னர்
    வம்புசெய்த கடற்கொள்ளைக் குறும்பர்களை மன்னர்
    வளைத்தொடுக்கி விட்டதனால், அந்நாட்டில் மக்கள்
    இம்மியள வும்பகைமை இல்லாமல் தம்முள்
    ஏதுமொரு பேதமின்றி இயல்பாக வாழ்ந்தார். (46)

    சுதைகொண்டு மனைகட்டி, வாய்க்கால்கள் வெட்டி
    சோவென்று பெய்மழைநீர், அவற்றுள் திருப்பி
    அதைச்சேர்க்கக் குளம்வெட்டி, நீர்த்தட்டுப் பாடே
    அங்கில்லை எனும்வண்ணம் சேமங்கள் செய்தார்
    விதியாக முப்போகம் விளைகின்ற நஞ்சை
    வெவ்வேறு தானியங்கள் விளைகின்ற புஞ்சை
    இதுபோல புவியெங்கும் இல்லையெனும் வண்ணம்
    எழில்கொஞ்சும் தென்மதுரை புகழ்பெற்ற தன்றே! (47)

    நாநயமே உண்டுமிக, இந்நாளைப் போல
    நாணயங்கள் ஏதுமில்லை, பொருள் மாற்றம் கொண்டார்
    பாநயமே மிகுந்திருக்கும் பாடல்களை நெய்த
    பாவாணர் நிறைந்திருந்தார், பைந்தமிழில் வல்லார்.
    பூநயமே நுகர்ந்திருக்கும் வண்டுகளைப் போலே
    புதுநயமாய்க் கலைபயிலும் நாட்டங்கள் கொண்டார்.
    ஓ,நியமம் மிகக்கொண்டார், உடல் வலிமை கருதி
    உடற்பயிற்சிக் கூடங்கள் பலப்பலவும் கண்டார் (48)

    காய் காய் மா தேமா – எண்சீர் விருத்தம்

    கனிவகைகள் விளைவனவோ கொஞ்ச மில்லை
    காய்கறிகள் மிகப்பொலிவாய் அவற்றை விஞ்சும்
    புனிதமுள பூசைக்குத் தேவை யான
    பூக்களுக்கும் பஞ்சமில்லை, அந்த நாட்டில்
    மனைகளிலே வெளித்திண்ணை கட்டி வைத்தே
    வருகின்ற வெளியார்க்கு வசதி செய்தார்
    தனிமையிலே உண்ணாமல் விருந்தை ஓம்பும்
    தகைமையிலே சிறந்திருந்தார், தகுதி மிக்கார் (49)

    போராடும் வாய்ப்பில்லை என்ற போதும்
    பொருதுகிற மல்லர்களோ நிறைய உண்டு.
    தேரோடும் வீதியுண்டு, சொக்க நாதர்
    தெருவேறி வீதியுலா வருவதுண்டு
    நீராடக் கடற்கரையில் வசதி யுண்டு
    நெஞ்சோடு கலப்பதற்குக் காதல் உண்டு
    தாராடும் வாழைமரத் தோப்பும் உண்டு
    சந்தனத்துக் காடுண்டு, வாசம் உண்டு (50)

    கடற்கரையின் வாயிலிலே சுங்கம் வாங்கும்
    கணக்காயர் அலுவலகம் உண்டு, நீல
    இடப்பரப்பில் பொருளேற்றி வந்திருக்கும்
    எண்ணற்ற நாவாய்கள் நிற்ப துண்டு
    புடைப்புடைய மீன்வகைகள் நித்த நித்தம்
    புதுபுதிதாய் ஏற்றிவந்து விற்பதுண்டு
    கடற்பறவைக் கூட்டங்கள் மேற்ப றந்து
    கச்சிதமாய் வட்டமிடும் காட்சி உண்டு? (51)

    அரணாக நெடுஞ்சுவர்கள் மன்னன் வாழும்
    அரண்மனையைச் சூழ்ந்திருக்க, அதனை ஒட்டி
    உருவாக்கி வைத்துள்ள அகழி ஒட்டி
    உயர்ந்திருக்கும் காவல்மரக் காடும் உண்டு
    வருவோர்க்கும் போவோர்க்கும் தடையே இன்றி
    வாசலென்றும் அடைக்காமல் திறந்திருக்கும்
    குருவாக அகத்தியரைக் கொண்டி ருந்த
    கோமகனும் சிறப்பாக ஆண்டு வந்தான். (52)

    Share
  • நூலறி புலவ!  ஆசிரியர் பெரும!

    நூலறி புலவ! ஆசிரியர் பெரும!

    ஔவை நடராசன்

    ஆசிரியர் தினமாகிய இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றிப் படருகிறது. 117 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு.மயிலாசனம், திரு.முத்துக்குமாரசாமி, திரு.சுப்பிரமணியன் ஆகிய மூவருக்குப் பின் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராவார்.

    என் தந்தையார் பிறந்த ஓர் ஆண்டுக்குள் இரட்டைப் பிறப்பில் ஒரு பிறப்பு மறைந்தார். என்னுடைய பாட்டனார் பெயர் திரு.சுந்தரம், என் பாட்டியார் பெயர் திருமதி சந்திரவதி அம்மையார். என் பாட்டியார் 6 அடி உயரத்திற்கு மேல் இருப்பார். சிவந்த தோற்றத்துடன் திகழ்ந்தவர்.

    என் தந்தையார், திண்டிவனம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக மயிலம் வழியாக அன்றாடம் சென்று வந்ததாகக் கூறியது என் நினைவில் உள்ளது. “எஎஎம்” என்று அழைக்கப்பெறும் அந்தப் பள்ளிக்கூடம், டானிசு பணி மன்ற அறத்தினால் நடைபெற்றதாக நினைவு.

    என் தந்தையாரோடு காஞ்சி மாமுனிவரும் உடன் பயின்றதாக ஒரு முறை கூறினார். அந்தப் பள்ளியில் பயிலும்போதுதான் பள்ளிக்கு வந்த இரண்டு துரைசாமிகளுள் என் தந்தையார், ஔவை துரைசாமி என்று அழைக்கப்பெற்றார்.

    பத்தாம் வகுப்புப் பயின்ற அவர், வேலூர் சென்று ஊரிசு கல்லூரியில் எப்.ஏ. என்னும் வகுப்பில் சேர முயன்று, வறுமைச் சூழலால் கல்வியை நிறுத்திக்கொண்டார். பின்னர், துப்புரவுக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகவும் ஓராண்டுக்குள் கரந்தை சென்று, தமிழ்க் கல்வி தொடர்ந்ததாகவும் கூறினார்.

    வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சுவரை அவர் மேடைப் பேச்சு நின்றதுண்டே தவிர, அவர் எழுதிய உரை முத்துகள் ஒருகணமும் நின்றதில்லை.

    உரைவேந்தரின் உயர்ந்த புகழுக்குச் சிறந்த துணையாகத் தம் நலிந்த உடலோடு வாழ்ந்தவர் என் அன்னையார் திருமதி லோகாம்பாள்.

    உரைவேந்தரின் பிள்ளைகள் என்று இன்று நாங்கள் பிறருக்குச் சொல்லும்போது எங்கள் உடலில் சில அணுத்துகளேனும் அறிவுத்திறம் அமைந்திருக்குமோ என்று எண்ணுகிறேன்.

    117 ஆண்டுகள் முன்னர் இருந்த தமிழகம், இந்நாள் மிளிரும் தமிழகம் என எவ்வளவு மாற்றங்கள் பெற்றுள்ளன.

    என் தந்தையார், பகலில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, அந்தி வந்தால் தன் வீட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை இரவு 08.00 மணிவரை நடத்துவார்.

    ஆசிரியர் என்ற பெயரைத் தாம் வழிபட்ட முருகனுக்கு இட்ட பெயர் என்று சொல்லி, தான் கையொப்பம் இடும்போது தமிழ் ஆசிரியன் என்றே ஒப்பம் இடுவார். தந்தையாரின் புகழை நிறுவிய பெருந்தகைதான் புலவர் கா.கோவிந்தன் அவர்களாவார். ஆசிரியரை எண்ணும்போது, தம் 90ஆம் அகவையிலும் கண்களில் நீர் துளித்தபடி நிற்பார். ஆசிரியர் நாளன்று இப்படி ஆசிரியர் உரைவேந்தர் ஔவையை நினைக்கும்போது நெகிழ்கிறோம்.

    சேயாறு உயர்நிலைப்பள்ளியில் என் தந்தையார் தமிழாசிரியராக வாழ்வு தொடங்கிய நாளில்,

    “இன்று ஆசிரியர் ஓங்கினால்
    நாளை நாடு ஓங்கும்”

    “இன்று ஆசிரியர் தேங்கினால்
    நாளை நாடு தேங்கும்”

    “இன்று ஆசிரியர் தூங்கினால்
    நாளை நாடு தூங்கும்”

    என்று பேரறிஞர் அண்ணா, ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசிய பொன் வரிகளை நினைவுகூர்வது இன்றும் பொருத்தமானதே.

    —–

    Share
  • நோவறு பதிகம்

    நோவறு பதிகம்

    -பாவலர் மா.வரதராசன்

    மாயிரு ஞாலத் தருள்செய சத்தி மகிழ்ந்துதந்த
    ஆயிரும் ஞான்ற திருக்கையைப் பெற்றவன் ஐங்கரத்தன்
    தீயிரும் இன்னல் தொலைந்திட வேண்டிச் சிலம்புகிறேன்
    வாயிருந் தென்னை மகிழ்வுறச் செய்வாய் வணங்குவனே! (1)

    செய்யும் வினையெலாம் என்றன் திறனென்று தேர்ந்திருந்தேன்
    ஐய நினதருள் என்றறி யாத அறிவிலனைப்
    பெய்யு மழையெனப் பேதைமை நீக்கிப் பிணைத்திடுவாய்
    உய்யு வழியென வந்து பணிந்தனன் உன்னடியே! (2)

    அடியொடு காயம் அணைந்திடு மாயினும் ஆறிவிடும்
    முடிவிலாத் துன்பம் முடிவரை மூழ்கிடில் மூச்சிருமோ?
    கடிமலர்க் கொன்றை அகலத்தன் பெற்ற கணபதிநின்
    அடியினில் வீழ்ந்தேன் அருகென வாக அருளுகவே! (3)

    ஆக மிலாதவா றின்னற் கடலா யழுத்துமெனை
    ஆகத் தழிவுட னில்லா ளியல்பு மழியுதையா
    ஆகத்தி லேயுனைக் கொண்டு வழுத்தினேன் அம்பிகையை
    ஆகத்தே கொண்ட அருட்சிவன் மூத்த அருமகனே! (4)

    அருமக ளென்றே இருவரைத் தந்தாய் அகமகிழ்ந்தேன்
    கருமமும் பின்னே தொடர்ந்திடச் செய்தல் கருணையதோ?
    இருமலும் சோகையும் ஈழையும் வெப்பும் இலவெனினும்
    கருக்கிடும் அன்பில் மனையறம் தந்தாய் கணபதியே! (5)

    கணபதி யேயுன்றன் காலைப் பிடித்தேன் கலக்கத்துடன்
    அணைகுவை நெஞ்சில் இறுக்கிடும் துன்பம் அணைந்திடவே
    புணையெதிர் கொள்ளும் புரைகடல் துன்பமாம் புன்மையறத்
    துணையென வுன்னைத் தொடர்குவன் காக்கவே தூயவனே! (6)

    தூயவா நின்பதஞ் சேர்ந்தால் துயரந் தொலைப்பவனே
    மாயக் கணையெதிர் வந்தென்னை யாழ்த்த மறந்தனையோ?
    நேயத்தோ டுன்னை உளத்தில் நிறைத்தவர் நிம்மதியைக்
    காயத்து ளேவைத்துக் காத்திட வேண்டும் கணபதியே! (7)

    வேண்டும் வரங்களை வேண்டுவார் வேட்கும் விருப்புடனே
    யாண்டும் அருள்பவ னேநினை நானுமின்(று) யாசிக்கிறேன்
    தீண்டும் துயர்களும் தேடும் துயர்களுந் தேய்ந்தொழிய
    நீண்டநற் கையுடை நேயனே செய்க நிறைவினையே! (8)

    வினையழித் தெம்மைநீ ஆட்கொள்ள வேண்டும் வியன்முகனே
    எனையெதிர் நோக்குந்தீ யின்னற் பொசுங்கி இரிந்திடவும்
    நினைகுவர் நெஞ்சம் நிறைவுடன் உன்னை நினைந்திடவும்
    இணையெழிற் பாதத் தருள்செய வேண்டும் இளஞ்சிவனே! (9)

    சிவனொடு சத்தியும் சேர்ந்த திருகொண்ட செம்மலினை
    அவமழிந் தேகிட வேண்டுவர் வாழ்வை அகங்கொளுமே
    தவறியும் உன்னை மறந்திடும் உள்ளம் தரித்திடாமல்
    இவனையும் செய்வாய் இனியவன் என்றே இறைமுதலே! (10)

    நூற்பயன்
    * * * * * * * *
    வேத முதலோனை வேழ முகத்தோனைப்
    பாதகந் தீரப் பதிகத்தைச் – சேதமில்
    வண்ணத் தொருநாளும் வாகாய்த் துதிப்போருக்(கு)
    என்றைக்கும் சேரா திடர்!!

    Share
  • ஹொரர்

    ஹொரர்

    -முனைவர்.நா.தீபா சரவணன்

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    நானிங்க சிட்டௌட்டில உட்காந்து பேப்பர் வாசிச்சிட்டிருக்கும் போது எம்மகன் ஹால்ல சோஃபாவில ரிமோட்கன்ட்ரோல கையில வெச்சிட்டு உட்காந்திருந்தான். அவனே வீடியோ லைப்ரரியிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்த ஏதோ ஒரு ஹொரர் படம் வி.சி.பியில் ஓடிக்கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்தது ஹொரர் (திகில்) படங்கதான்.

    சமீபமா அவன் ஒரு படம் பார்க்க என்னயும் கூப்பிட்டான், அது ரொம்ப நல்லாருக்கும்னு அவனோட நண்பர்கள் சொன்னாங்களாம். சரி  பாக்கலாமேன்னு நானும் முடிவெடுத்தேன்.

    அது விசித்திரமான ஏதோ ஒரு நகரத்தில் உள்ள ஹைஸ்கூலைப் பற்றியது. முதல் காட்சில ஒரு ஆசிரியர் பாடம் நடத்தராரு. மாணவர்கள் யாருமே அப்படி ஒருவர் வந்ததாக கண்டுகொள்ளவில்லை. அவங்க பல குழுக்களாகப் பிரிஞ்ச பாராமுகமா இருக்காங்க. ‘குட்மானிங்ஆசிரியர் சத்தமாகச் சொல்றாரு. யாரும் அதைக் கேட்கறதில்ல.

    வகுப்பறைல ஒரு மூலைல ஒரு மாணவன் ஒரு மாணவியை பலமாகப் பிடித்து நிறுத்தி முத்தமிடத் தயாராகிக்கொண்டே மற்றொரு கையால் அவளது ஆடையை உயர்த்துகிறான். மாணவிகள் உட்பட நாலைந்து பசங்க அவங்கள சுத்தி நின்னு சத்தம் போட்டு மகிழறாங்க. மற்றொரு பக்கம் ரெண்டு மாணவர்கள் கட்டிப்புடிச்சிட்டும் அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டும் நிக்கறாங்க. அதற்கிடைல ஆசிரியர் மேசைமேல கையடித்து மாணவர்களோட கவனத்தத் திருப்ப பாக்கறாரு.

    முன் வரிசைல உட்கார்ந்த மாணவன் அவனுடைய தலைல பாதிமொட்டை அடிச்சிருக்கான், இடுப்பிலிருந்து ஒரு கத்திய உருவி டெஸ்கிலக் குத்தி வைக்கிறான். ஒரு காதில கடுக்கன் மாட்டின வேறொரு மாணவன் அவனுடைய முடியோ ஆந்த்ரே அகாஸினைப் போல. பெஞ்சில் ஏறி நின்று வாத்தியார்க்கு முன்பாக ஜீன்சோட ஜிப்பை தாழ்த்தறான். மொத்தத்தில் மோசமானச் சூழ்நிலை. இருந்தாலும் ஆசிரியர் கையிலுள்ள புத்தகத்தை விரித்தார். அது ஷேக்ஸ்பியரின் நூல். வாசிக்கத் தொடங்கினார். மாணவர்கள் பலரும் குதித்தெழுந்து வாசிப்பதை நிறுத்தக் கூறினார். ஆசிரியர் அதற்கு செவி மடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து சுயிங்கம் அசைத்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவரை நோக்கி நடந்தாங்க. ஆசிரியர் அவர்களை அவர்களுடைய இடத்தில் போய் உட்காருமாறு ஆக்ரோசமாகக் கூறுகிறார். மாணவர்கள் பின்வாங்கவில்லை

    அடுத்தக் காட்சில ஆசிரியர் காயங்களுடன் மூச்சு வாங்க நீளமான வழியில் நகர்கிறார். வாயிலிருந்து இரத்தம் சொட்டுகிறது.

    அவர் தலைமையாசிhரியர் அறைக்குக் கடந்து செல்கிறார். புகார் சொல்வதற்காக இருக்கலாம். ஆனால் அங்கே பார்ப்பதோ இருகைகளையும் உயர்த்திக்கொண்டு உதவுவார் யாருமின்றி நிற்கிற தலைமையாசிரியரை இரண்டு மாணவர்கள் அவருடைய கழுத்தில் கத்தி முனையை வைத்து ஊன்றிக் கொண்டு ஏதோ காரியத்தைச் சம்மதிக்க வைக்க முயன்று கொண்டிருந்தனர்.

    வெரி இன்ட்ரஸ்டிங்க் இல்ல டாடி?’ என்மகன் கேட்டான் என்ன சொல்றதுன்னு தெரியாம நான் கஷ்டப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு அவன் ஸ்கூல்விட்டு வந்த விதம் ஒரு பாக்ஸிங் போட்டியில் தோல்வியடைந்தவனைப் போல இருந்தது. மூக்கு கிட்டத்தட்ட சதைக்கப் பட்டிருந்தது. முகத்திலும் ஆங்காங்கே இரத்தம் கட்டி இருந்தது. யூனிஃபோம் முழுக்க மண்ணும் சகதியும்

    நத்திங் சீரியஸ்பசங்ககிட்ட சண்டைபோட்டேன்அவன் கூறினான்.

    அவனோட அடி ஏற்று ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு எனக்குத் தெரிஞ்சதே அடுத்தநாள்தான். காலைல நான் ஹெட்மாஸ்டரெ பாக்க பள்ளிக்குப் போனேன். என் மகனோட அனுபவத்த முன்வெச்சு பள்ளில அச்சடக்க நடவடிக்கை மேற்கொள்ளனும்ன்னு நான் சொன்னத முழுக்க அவரு பொறுமையாக் கேட்டாரு. பிறகு சொன்னாருசரிதான், ஆனா உங்க மகன் என்ன செஞ்சானு அவங்கிட்டயே கேளுங்க. அவங்கிட்ட அடிவாங்கி ஒருத்தன் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்

    நான் அவருகிட்ட மண்ணிப்பு கேட்டிட்டு சீக்கிரமா வெளில வந்திட்டேன்.

    ஹாய்! ……….கேட்டுக்குப் பக்கத்தில ஒரு சத்தம்

    நான் முகத்தை உயர்த்திப் பார்த்தேன்.

    என் பையனோட நண்பன்.

    இல்லையா?” அவன் கேட்டான்.

    இருக்கான்நான் கூறினேன்

    அவன் கேட்டைத் திறந்து உள்ளே வந்தான்.

    நடந்து வரவில்லை. கால்களில் ஷூக்கள் போலக் கட்டப்பட்ட ரோலர்களில் உருண்டு வந்தான்.

    பனிக்கு மேல் ஓடுவது போல் நகர்ந்தான். எம் பக்கத்துல வந்து உள்ளே எட்டிப்பார்த்து அவன் நண்பனைக் கூப்பிட்டான்.

    வெயிட்என் மகன் ரிமோட் கன்ட்ரோலை அமர்த்தி சோஃபாவில் போட்டுவிட்டு குதித்து எழுந்ததைப் பார்த்தேன். அவன் நண்பன் ஓரிடத்தில் நிற்காமல் சக்கரங்களைச் சுழற்றி உற்சாகமாக வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் கையில நியூஸ் பேப்பரோட மூழ்கியிருந்தேன். அவன் தானாக சிரித்துக் கொண்டு இலைகளையும் கொம்புகளையும் தொட்டுக் கொண்டு வட்டமிட்டான்.

    சில நிமிடங்களில் என் மகன் உள்ளிருந்து வந்தான். அவனும் பாதங்களில் சக்கரங்கள் கட்டியிருந்தான். ஒரு பாலெ நடனம் போல நகர்ந்து வந்து சிட்அவுட்டின் தூண்களைப் பிடித்து கொஞ்சநேரம் நின்றுவிட்டு படிகளிறங்கி முற்றத்தை அடைந்தான்

    அதற்குள் அவன் நண்பன் ஒரு வட்டம் முடித்துவிட்டு கைநீட்டி அவனுக்கு நேராக வந்தான்.

    அவங்க கை கோர்த்திட்டே கேட்டுக்குப் பக்கத்தில போனாங்க. பிறகு வெளில இறங்கினாங்க.

    நான் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கும்போதே மதில் சுவற்றுக்கு அப்புறம் ரெண்டு தலைகள் அதிவேகமாக நகர்ந்தன.

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 45

    சேக்கிழார் பா நயம் – 45

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————

    முன்பொரு காலத்தில் கைலாய மலையில் கமலினி, அனிந்திதை ஆகிய இருவரும் பார்வதியன்னை பூசைக்கு மலர் கொய்து தொடுத்தளிக்கும் பணி புரிந்தனர். அவர்களைக் கண்டு தன்னிலை மறந்த சுந்தரரை இறைவன் ‘’மாதர் மேல் மனம் வைத்தனை, ஆதலால் தென்திசையில் பிறந்து, அம்மங்கையருடன் வாழ்ந்து, பின்னர் சிவலோகம் அடைவாய்’’ என்று அனுப்பினார். அவ்வகையில் அப்பெண்களும் தென்னாட்டில் அவதரித்தனர். அவர்களுள் கமலினி என்ற மங்கை, திருவாரூரில் தோன்றிய சிறப்பை இப்பாடல் கூறுகிறது!

    கமலினியார் திருக்கயிலாய மலையில் இறைவிக்கே அணுக்கத் தொண்டு புரியும் பெருமை பெற்றவர். அவர் இம்மாநிலத்தில் பிறந்த நிகழ்ச்சியை அவதரித்ததாகக் கூறும் சிறப்பை உற்று நோக்க வேண்டும். இறைவனைத் தவிர வேறெவரையும் தமக்குப் பதியாகக் கருதாத உயர்குலமாகிய ”பதியிலார் ‘’ குலத்தில் அவர் தோன்றினார்!

    அப்பதியிலார்குலம் என்பது சிவனடியார்களின் வேண்டுகோளால் , பெருந்தவத்தால் கிட்டுவதாகும். இதனை

    “உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே யெம் கணவ ராவார் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
    …………………………………………………………………………….
    “எம் கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
    எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க“

    என வரும் திருவெம்பாவைத் திருவாசகங்களிற் காண்க.
    அவர்கள் குலத்தை உருத்திர கணிகையர் குலம் என்பர்.அக்குலத்தவர் அரன் சார்பும், அடியார் சார்பும் உடையவர்கள் ஆதலால் அவர்கள் உயர்ந்த மணிகளுக்கு இணையானவர்! அக்குலத்தார் செய்த நீண்ட தவத்தால் கமலினியார் பிறந்தார். அவருக்கு சாதகர்மம் நாமகரணம் என்ற சாதகம், பெயர் ஆகியன சூட்டும் சடங்குகளை முறையாகச் செய்தார்கள். ஆதலால் கமலினியாருக்குப் பரவையார் என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘’முருக வாங்கி கடைய முன் நிற்கும் ‘’ என்ற திருமுறை வாசகத்தின்படி, அவர் பிறந்த நிகழ்வை,

    ‘’கதிர்மணி பிறந்ததென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்தில் தோன்றி ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார். உருத்திர கணிகையர் மரபு வேறு, சேரிப்பரத்தையர் மரபு வேறு! இவர்கள் செய்த திருக்கோயிற் பணிகளைப் பின்னாளில் பரத்தையர் கைக்கொண்டனர் என்பது வரலாறு. இதன் விரிவை , காமிகாகமம், ஆசாரிய லட்சணப்படலத்தின் சுலோகங்களில் காணலாம்.

    இச்சை ஞானம் கிரியை என்ற சிவசத்திகள் மூவரின் நூபுரச் சத்தத்திலிருந்து முறையே உருத்திரகணிகை, உருத்திரகன்னிகை, உருத்திரதாசி என்ற மூவகையார் உண்டானார்கள் என்று காமிகாகமம் பேசும். இவர்களது இலக்கணங்களையும் ஒழுக்கங்களையும், இவர்கள் ஆலயங்களில் முறையே செய்யவேண்டிய திருப்பணிகளையும், ஆங்கு விரிவாய்க் காணலாம். உருத்திரகணிகை, மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிராகாரம் வரை திருவலகு திருமெழுக்கு இட்டுப் பஞ்சசூர்ணங்களினால் அலங்கரித்துச், சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், கானம் செய்தும், நிர்த்தனம் செய்தும், உபசரிக்கத்தக்கவள். சுத்தம், மிசிரம், கேவலம் என்ற மூவகை நிர்த்தனங்களிலே சுத்தநிர்த்தனமே உருத்திரகணிகைக்கு விதிக்கப்பெற்றது. ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று அவனை நாயகனாகக்கொள்வதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே தூர்க்கை இலக்குமி சரச்சுவதி என்ற இவர்களுடைய பாதச் சிலம்பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராமகன்னிகை, தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும் இவர்கள் இலக்கணம், கடமை, வாழ்க்கைத் திறம், மரபுவளர்ச்சி முதலியவை இன்ன எனவும் ஆங்கே விரிவாய்க் கூறப்பெற்றுள்ளன.

    இவைபற்றிப் பற்பலவாறு ஆராய்ச்சிகள் எழுந்து பெருமயக்கிற் கிடந்தந்தன. இவ்விருசாராரையு மின்றிப் பெண்கள் தம்மை இறைவன் பணிக்கே ஒப்புவித்துத்துறவுபூண்டுஒழுகியவர்களுமுண்டு. அன்னார் எக்குலத்தாராயினும் ஆகலாம். அவர் மேற்கூறிய இருமரபினருடன் மயங்கியறிதற்பாலரல்லர். முதலிற் பெண்டிர் துறவிகளாயிருந்து, பின்னர் மரபு வளர்ச்சிக்குரிய உருத்திரகணிகையராகி ,அதன்பின் அவர்களே நாளடைவில் பரத்தையர் குலத்தவராயினர் என்று கூறுவாருமுண்டு. இவையெல்லாம் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்பச் செய்திகளைப் பொருத்தி முடிபு செய்யும் தவறான ஆராய்ச்சிமுறையாம். பரத்தையர் சேரியும், பரத்தையிற் பிரிவும் தொல்காப்பியம் முதலிய மிக்க பழந்தமிழ் நூல்களிற் பல்லாயிர ஆண்டுகளின் முன்னரே பேசப்பெற்றன.

    “ஏமப்பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்,
    தாமேசெல்லுந் தாயரு முளரே“,
    “பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி,
    யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ,
    டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன“

    என்பன முதலிய தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களையும், அவற்றின்கீழ் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையையுங் காண்க. இவற்றிற் கிலக்கியங்களாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றிற் காணும் பரத்தையிற்பிரிவு முதலிய துறைகளையுங் காண்க.

    ‘உண்மை இவ்வாறாகவும், பண்டைநாளில் இவர்களுக்கு மரபு வளர்ச்சி கிடையாது என்றும், உலக வாழ்விற்குத் தகுதியற்ற பெண்கள் இறைவனையே பதியாகக் கொண்டொழுகினர் என்றும், பின் மற்றும் சிலர் அவர்களோடு கலத்தலாகி உலக இன்பம் துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர் என்றும், பின்னாளிற் கோயிற்றலைவர்களின் அடக்குமுறையால் கொடுமைக்கு ஆளாகி நாளடைவில் வேசையராயினர் என்றும் இவ்வாறு எழுந்த ஆராய்ச்சிகள் உண்மை நிலைக்கு மாறானவை என்று காணலாம்.
    இப்பெருமை மிக்க குலத்தில் தோன்றிய பரவையார் உருத்திர கணிகையர் ஆதலால், உருத்திரனுக்கு உரிய திருவாதிரை நன்னாளில் ,சாதம் எழுதுதல், திருப்பெயர் சூட்டுதல் ஆகியவற்றை மேன்மை மிக்க சான்றோர் இயற்றினர். இதனைச் சேக்கிழார்

    ‘’விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.
    ,
    என்று பாடியுள்ளார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் .

    கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்துள் தோன்றி, பரவையார் என்னும் நாமம்
    விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி ‘

    இப்பாட்டில் மதியணி புனிதன் நன்னாள் என்று சிவபெருமானுக்கு உரிய நன்னாளாகிய திருவாதிரை நாளைக் குறித்துள்ளார்.

    “மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
    முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
    ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
    ஊர்திரைநீர் வேலி உலகு !’’

    என்று இதனை முத்தொள்ளாயிரப் பாடல் கூறுகிறது. சிவபெருமானுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவரே நாளையும், நட்சத்திரத்தையும் நிலவையும் கதிரவனையும் படைத்தவர்! ஆதலால் சிவபெருமானைத் திருவாதிரை நாளில் தோன்றியவர் என்று ஏதோ ஒருகாரணம் கருதி உலகியல் வழக்கில் உரைப்பர். சிவபிரான் நிலவைச் சடையில் சூடிக்கொண்ட நாள் திருவாதிரை நாளாகஇருக்கலாம்! இதனையே பரவை நாச்சியார் தோன்றிய நாளாகக் கருதியது அவர்தம் காலத்தை வென்ற சிறப்பைக் குறிக்கிறது!!

    Share