Blog

  • காவிரியின் கண்ணீர்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    கூடி விவசாயம் செய்வோர்க்கிங்கு இன்பமில்லை

    குடியரசு நாடான பெருமைமிகு நம்பாரதத்திலே..!

    வாடிச் சாவதெல்லாமிந்த வறுமை விவசாயிதான்

    வகையாய் வேறொர் தொழில்செய்ய வழியில்லை..!

    நாடியே எங்கள் வாழ்வெல்லாமொரு….நதியோரம்

    நெடிதுழைப்பவர் என்ப தாருக்கும் புரிவதில்லை..!

    கேடில்லை இனியுமக்கு என்றொரு சொல்லில்லை

    கடிதுலகை..பிரளயம் போலழிக்குமெம் கண்ணீரே..!

     

     

    தஞ்சையிலே பிறந்தது எங்களின் தலையெழுத்தா

    தப்போவென இப்போதும் நினைக்கத் தோன்றும்..!

    பிஞ்சிலே கருகிவிடும் நெற்கதிரே எங்களையும்

    பஞ்சைப் பரம்பரை யாக்கிவிடுமோ என்றேபயம்..!

    எஞ்சியிருந்த தென்னவோ நம்பிக்கை ஒன்றுதான்

    அதுவுமெம் நெஞ்சைப் பிளந்து விட்டதிப்போது..!

    கொஞ்சம் காத்திருந்தோம்….நல்லசேதி வருமென..

    காவிரி குளிர்வாள் நம் இதயத்துள்ளே..!

     

     

    பூவிரியும் சோலையும் நெல்வயலும் தழைத்தபல

    பழஞ்சரித்திரத்தைச் சொல்லும் காவிரி வரலாறு..!

    பாவிசைக்கும் பாவலனும் புலவனுமே நேசித்த

    காவிரிநதியைப் பங்கிடும் உரிமை ஆருக்குண்டு..?

    காவிரியை நம்பியேயெம் காலமெலாம் கழிந்தது

    காலத்துக்கும் அந்நதியே கதியெனக் கிடந்தோம்..!

    காவிரி அன்னையின் கண்ணீர்ப் பெருக்கெடுத்து

    காட்டாறாயின் இனியெம் கவலையெலாம் தீரும்..!

     

    ===============================================================

     

    நன்றி:: கலைமகள் வெளியீடு:: March’ 2018

     

     

     

     

    Share
  • மூலத் திராவிடம் தமிழ் அல்ல

     

    இ. அண்ணாமலை

    அண்மையில் Royal Society Open Science என்னும் ஆய்விதழில் (மார்ச், 2018) வெளிவந்த  A Bayesian phylogenetic study of the Dravidian language family என்னும் கட்டுரை தமிழுலகில் ஒரு பரவசத்தை உண்டாக்கியிருக்கிறது. திராவிட மொழிகள் ஆய்வில் இந்தக் கட்டுரையின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதைச் சொல்வது இந்தக் குறிப்பின் நோக்கம். ஆய்விதழாகவும் இப்போது  உருவெடுத்திருக்கும் வல்லமை தன் வாசகர்களுக்குத்  தவறான கருத்துகளத் தரக்கூடாது என்பது இதை எழுதுவதற்கு ஒரு உந்துதல்.

    திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளாக இருக்கிறது என்பது இந்தக் கட்டுரையின் கண்டுபிடிப்பு. இதைப் புதிய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. சுவலபில், கிருஷ்ணமூர்த்தி போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் மொழியியல் வழிமுறை (methodology) மூலம் தோராயமாகக் கணித்த காலம்தான் இது. இந்தப் புதிய கட்டுரை மரபணு ஆய்வு வழிமுறை மூலம் இதே வந்திருக்கிறது. இது திராவிட மொழி ஆராய்ச்சிக்கு நல்ல வரவுதான். ஒரு மக்கள் கூட்டத்தில் மக்களின் மரபணுக்களில் வித்தியாசம் இருக்கும். இவர்கள் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்றால், இந்த வித்தியாசம் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பெருகுகிறது என்பது மரபணு ஆய்வின் ஒரு கொள்கை. உள்ள வித்தியாசத்தைக் கணிதமுறையைப் பயன்படுத்திச் சுருக்கிகொண்டே போய், அதாவது பொதுவாக மக்களிடம் உள்ள மரபணுக்களைமட்டும் தனிப்படுத்திக்கொண்டே போனால், முந்திய ஒரு காலகட்டத்தில் பொதுவான மரபணுக்கள்மட்டும் இருந்த நிலை வரும். அந்த நிலை அந்த மக்கள் கூட்டம் தோன்றிய காலகட்டம் அல்ல. அதற்கு முன்னால் பொது மரபணுக்களே தொடர்ந்து இருந்துவந்த காலகட்டத்தின் எல்லைக்கோடு அந்த நிலை என்று சொல்ல வேண்டும்.

    மரபணுக்கள் என்னும் அலகுக்குப் பதில் மொழியின் சொற்களை அலகாக எடுத்துக்கொண்டு, மாறிய சொற்களை நீக்கிக்கொண்டே பின்னோக்கிப் போனால், மொழிக் குடும்பம் ஒரு மொழியாக, சொல் வித்தியாசம் இல்லாமல் இருந்த, காலத்தைக் காட்டும் என்பது ஆய்வாளர்களின் அனுமானம். இது சொல் வேறுபாடு இல்லாமல் கடைசியாக இருந்த காலத்தின் எல்லைக்கோடு. மரபணுக்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மாறிக்கொண்டே இருப்பது மரபியல் ஆய்வின் ஒரு கொள்கை. இது சரியானால், இந்த எல்லைக்கோட்டுக்கு முன்னால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மக்கள் கூட்டம் தனிக்கூட்டமாக உருவாகியிருக்க முடியாது. இந்த மரபணு ஆய்வின் கொள்கையையும் வழிமுறையையும் மொழிக்குடும்பத்துக்கும் பொருத்தி ஆய்வு செய்யும்போது ஆய்வு பின்னோக்கி எடுத்துச் செல்லும் எல்லைக்கோட்டுக்கு முன்னால் மூலமொழி இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனால திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் இருந்திருக்கும் என்று முடிவு கட்டுகிறார்கள். மொழியைப் பொறுத்தவரை சொல் மாற்றம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னால் –அதாவது ஆய்வில் நிறுவப்பட்ட மூலமொழியின் காலத்துக்குமுன்னால் – மொழி இல்லை என்று சொல்ல முடியாது. அதே சமயம், அதை நிருபீக்க மொழியியலில் வழிமுறை எதுவும் இல்லை.

    மரபணு ஆராய்ச்சி வழிமுறையை மொழி ஆராய்ச்சியில் பயன்படுத்துவதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை இங்கே பேசவில்லை. இங்கே ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். எல்லைக்கோட்டில் இருந்ததாகச் சொல்லும் மொழி ஆய்வின் கட்டுமானமே. ஒரு இயற்கையான மொழியின் எல்லாக் கூறுகளும் அதில் இருக்காது. அதாவது, மூல மொழி ஒரு கொள்கை (theoretical construct); மக்கள் வாழ்க்கையில் பேசிய மொழி (natural language) அல்ல. திராவிட மொழிகளைத் தரவாகக் கொண்டு கட்டுமானம் செய்யும் போது நமக்குக் கிடைக்கும் மொழி மூலத் திராவிடம்.

    இந்த ஆய்வின் முடிவைத் தமிழர்கள் புரிந்துகொள்வதில்தான் பெரிய தவறு இருக்கிறது. மூலத் திராவிடம் தமிழ் என்று கொள்வதே இந்தத் தவறு. இது  இதை வல்லமை ஆசிரியரின் குறிப்பில் காணலாம். மேலும், இந்த ஆய்வுக் கட்டுரையில் சமஸ்கிருதம்பற்றி ஒன்றும் இல்லை. இந்தக் கட்டுரை திராவிட மொழிக் குடும்பத்தையும் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தையும் ஒப்பிடவில்லை.

    4500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மொழி,  ஆய்வால் கட்டப்பட்ட மொழி,  மொழியின் ஒரு சிறு கூறே. அதற்கு ஆய்வாளர்கள் தரும் பெயர் மூலத் திராவிடம். இந்த மொழி தமிழ் அல்ல; இன்று வழக்கில் உள்ள எந்தத் திராவிட மொழியும் அல்ல. இதில் சங்கத் தமிழின் சில மொழிக்கூறுகளுக்கு மாறான கூறுகளும் உள்ளன  மூலத் திராவிடத்திலிருந்து காலப்போக்கில் பல கட்டங்களில் மூல மொழியிருந்து புதிய மொழிகள் தோன்றுகின்றன. அவற்றில் தமிழும் ஒன்று; இது 2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ் என்று பெயரிடப்பட்ட ஒரு மொழி. இந்த மொழி இந்தக் காலத்துக்கு முன்னும் பேசப்பட்டிருக்கலாம். தொடர்ந்து வரும் பேச்சுக்குத் தமிழ் என்று எப்போது பெயரிடப்பட வேண்டும் என்பது மொழியியலாளருக்கு முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கு மேலே சொன்ன ஆய்வுக்கட்டுரையில் தரும் காலம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள். (ஆய்வுக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட, கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).  இந்தத் தமிழில் இன்றைய மலையாளமும் அடங்கும். இந்த ஆராய்ச்சியின்படி, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பேசப்பட்ட மொழியில் துளு, தோடா, கோத்தா ஆகிய மொழிகளும் அடங்கும். தமிழ் என்று தனித்துப் பேசிய மொழியின் காலத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஆராய்ச்சி காட்டும் 2000 ஆண்டுகள் குறைவான கணிப்பு என்பது புரியும். தமிழின் காலத்தை இந்தக் காலகட்டத்திற்கு முன்னால் நிறுவுவதற்குத் தமிழில் எழுத்துச் சான்றுகளே உள்ளன.

    மேலே சொன்ன துளு முதலான மொழிகளுக்கு முன்னோடியாக இருந்த மொழியும் ஆய்வின் கட்டுமானம்தான். மூலத் திராவிடமும் கட்டுமானம்தான். இதற்குத் தமிழ் என்று பெயர் கொடுப்பது உங்கள் தாத்தா பெயரும் உங்கள் மூதாதையர் ஒருவர் பெயரும் ஒன்று என்று சொல்வது போன்றது; அது மட்டுமல்ல,  தாத்தாவும் அந்த நபரும் ஒருவரே என்று அடையாளம் காண்பதைப் போன்றது.

    இந்தக் கட்டுரையைத் தமிழின் தொன்மையைக் காட்டும் ஒன்றாகக் கொண்டாடுபவர்கள் இது ஒரு பெயர் விளையாட்டு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சுந்தரம் பிள்ளயின் தமிழ்த் தாய்ப் பாட்டில் தமிழிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்தன என்று சொன்னது ஒரு கவிதை வெளிப்பாடு. அது ஒரு அரசியல் வெளிப்பாடும்கூட. அது, மேலே சொன்ன கட்டுரை உட்பட, மொழியியல் ஆய்வின் வெளிப்பாடு அல்ல.

    இந்திய-ஆரிய மொழிகளின் மூலமொழியை -மூல இந்திய ஆரியத்தை- இன்றைய இந்திய-ஆரிய மொழிகளை ஒப்பிட்டு வரலாற்று மொழியியல் வழிமுறையைப் பயன்படுத்திக் கட்டுமானம் செய்தால், அது சமஸ்கிருதத்திலிருந்து சில வித்தியாங்களைக் கொண்டிருக்கும் என்று கூறலாம். அப்படிச் செய்யாமல், இந்திய ஆரிய மொழிகள் சமஸ்கிருத்திலிருந்து பிரிந்தன என்று சொல்வதற்கும் அரசியல் காரணம் உண்டு. ஆனால், இதற்குச் சில வரலாற்றுக் காரணங்களும் உண்டு. சமஸ்கிருதம் இந்திய-ஈரானிய மொழிக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனி மொழியான காலகட்டம் 3500 ஆண்டுகளுக்கு முன்.  அதாவது, மூலத்திராவிடத்தின் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின். போஜ்புரி, மைதிலி, ஒரியா, குஜராத்தி முதலான இந்திய-ஆரிய மொழிகள் (இதில் காஷ்மீரி அடங்காது), திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த பிராஹுயி, குடுஹ், கோண்டி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பிரிந்த காலத்துக்குப் பிற்பட்டவை. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் பிரிந்தது 3500 ஆண்டுகளுக்குப் பின்னால்தான். அவற்றிலிருந்துதான் இன்றைய இந்திய- ஆரிய மொழிகள் பிரிந்தன. இந்த மொழிகளில் சமஸ்கிருதத்தில் இல்லாத, மூல இந்திய-ஆரியத்தைச் சேர்ந்த சில மொழிக்கூறுகள் உண்டு. சமஸ்கிருதத்தின் சமகாலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் இந்திய-ஆரிய மொழிக்குடும்பம் இருந்ததற்கு ஆதாரமோ, இருந்திருந்தால் அவற்றின் தொடர்ச்சியில் வந்த மொழிகள் இன்று இருப்பதற்குச் சான்றோ, இல்லையாதலால் சமஸ்கிருதமே மூல இந்திய ஆரிய மொழி என்ற கருத்து மொழியியலிலும் நிலைப்பட்டிருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ரொமான்ஸ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிரெஞ்சு, ஸ்பானிஷ் முதலிய மொழிகள் லத்தீனிலிருந்து பிரிந்தவை என்று சொல்வதைப் போல.

    இந்த மொழி நிலைமையைத் திராவிட மொழிக்குடும்பத்துக்குத் தவறாகப் பொருத்துவதால், மூலத்திராவிடம் தமிழே என்ற பிழையான கருத்துப் பிறக்கிறது.

    (ஒரு மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிய என்னுடைய தமிழ் இன்று: கேள்வியும் பதிலும் (அடையாளம் பதிப்பகம்) என்ற நூலைப் படைக்கலாம். இதில் உள்ள கேள்வி பதில்கள் வல்லமையில் முன்னால் வெளிவந்தவை).

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘ஸ்ரீராம நவமி’’ ஸ்பெஷல்….பெருமாள் திருப் புகழ்….
    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….

    பெருமாள் திருப் புகழ்….
    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….

    தய்யான தான தானன தய்யான தான தானன
    தய்யான தான தானன -தனதான

    “பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும்
    செல்லாத காசு ஆகுவை -அதனாலே,
    அவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்
    வல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்

    சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட
    செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே
    செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்
    கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா

    கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்
    கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்
    அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட
    பொய்யான மாய மேனியில் -தளர்வாகி

    புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்
    கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்
    வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்
    வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….(33)

    “எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர திரு +எவ்வுள்+ஊர் =திருவள்ளூரில்
    வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….
    ——————————————————————————————————————————————————–

    Share
  • ’’ஷிரடியில் ஸ்ரீ ராம நவமி விஷேஷம்’’….! – படமும், பாடலும்….!

     

    ஷீரடி பாபா வெண்பாக்கள்
    ———————————-


    அக்கல்கோட் ராஜன் அவதார மானவா
    சிக்கல்கட் டாமிந்த சம்சாரம் -வெக்கங்கெட்
    டீரடியும் சேற்றினில் வைத்திங்கு சீரழிந்தோம்
    ஷீரடி ஆற்றில் செலுத்து….(1)

    சுகவாணி சாயி கமலவாசி சாயி
    மகமாயி சாயி அயனரியரன் -சாயி
    முகமதுவும் சாயி முனியேசு சாயி
    அகமதை ஷீரடியாய் ஆக்கு….(2)….

    மோதக மூக்கனே சாதக வாக்கனே
    தீதற போக்கிடும் போக்கனே -மாதவா
    சாயி மஹராஜா தாயின் அருள்சொரியும்
    ஆயி மகமாயி ஆவ்….(3)….

    தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
    காயமிது பொய்யென்று காணுவாய் -மாயமாய்
    ஆயிரம் ஒன்றாகும் ஒன்றா யிரமாகும்
    சாயிராம் சேவடியில் சேர்….(4)

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிவாய்
    ஷீரடி சாயியவன் சேவிப் பவர்க்கருள
    வேரடி பாயும் விழுது….(5)

    உதியெடுத்(து) உந்தன் நுதலிலே பூசி
    கதியென்று சாயி கமலப் -பதமிரெண்டை
    பற்றிவாழ பாவங்கள் பற்றாது, பாபாவை
    சற்றுநேரம் சிந்திக்க சித்து….(6)

    நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
    எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை -விட்டுவிட
    புத்தியில்லை, வெற்றிபெற சக்தியில்லை சத்குருவே
    பித்தனிவன் பேதமையைப் போக்கு….(7)

    தாயி தகப்பன் தெய்வமே ஷீரடி
    சாயி மகராஜா சத்குரு -சேய்நான்
    படித்த உமது சரித்திரம் பாடி
    முடிக்க அருள்வீர் மகிழ்ந்து….(8)

    சாதுவாய் ஷீரடி சொந்தங்கள் காத்திட
    கோதுமை மாவை அரைத்தது -தீதுரு
    காலரா நோயை வாலறுத்(து) ஓட்டிடும்
    போலோராம் சாயிநாதன் போக்கு….(9)

    வாயினால் பேசி வசனத்தை உச்சரிக்க
    சாயிராம் வாக்கை சரியாக்கு -தூயவா
    ஷீரடி வந்துன்னை சேவிக்கும் நாளன்று
    கூறிடுவேன் நன்றிக் கடன்….(10)

    சகிப்பு, வினயம், சகோதர பாவம்
    உகக்கும் அனைத்தையும் ஒன்றாய் -அகத்தும்
    புறத்தும் சமரச சன்மார்கம் காண
    சிரத்தினில் ஷீரடி சூடு….(11)

    கெட்டபுத்தி செய்கைகள் விட்டகன்(று) ஓடிட
    புட்டபர்த்தி பாதம் பணிந்திடு -பட்டுமலர்
    நித்தியமும் நெஞ்சில் நிறுத்த நிறுத்திடும்
    சத்யம் சிவசுந் தரத்து….(12)

    பத்திரம் பாதுகாப்பு பாபாவின் ஷீரடி
    சத்திரச் சாவடியில் சாஸ்வதம் -நித்திரை
    சொப்பனம் மற்றும் சகஜத்தில், சாயிராம்
    எப்பவும் காப்பு எமக்கு….(13)

    பன்றிக் காய்ச்சல் ஊரில் பரவிய போது….
    ——————————————————
    வந்திருக்கும் பன்றி வியாதி வெகுண்டோட
    எந்திரத்தில் முன்போல இட்டரைப்பாய் -உன்திறத்தைக்
    காட்டருள் பாபா கலங்குகிறோம், நீயல்லால்
    கூட்டெமெக்கு வேறிங்கார் கூறு….(14)

    ஆறடி மண்ணில் அடங்கும் உடலோடு
    மாரடித்துப் பார்த்தேன் முடியவில்லை -ஷீரடி
    நாதா சரண்புகுந்தேன் நின்னை, எனக்கருள்
    ஏதே னுமனுபூதி யை….(15)

    ஆள்காட் டிவிரல் அடுத்தவிரல் வாயிலாய்
    தாள்காட்டும் கட்டைவிரல் தீண்டிட -மால்கட்டின்
    வேரடிக்குப் பாய்ந்து வினைமரம் சாய்த்திடும்
    ஷீரடி பாபா செயல்….(16)

    மாபாவம் செய்தும் மகனீயர் ஷீரடி
    பாபா சரணம் புகுந்தோரை -ஆபாச
    இச்சைகள் அண்டாது என்றென்றும் காத்திடும்
    உச்சியில் இட்ட உதி….(17)

    வேப்ப மரத்தடியில் வீற்று மருந்தாக
    காப்பிடும் சாயி கசப்பாக -சாப்பிடத்
    தந்தாலும் நோய்க்கு தருகற் பகமாகி
    வந்தோர்க்கு வாழ்வில் வலுவு….(18)

    காம துனியெரித்து நாம உதியெடுத்து
    தாமசம் தீர்ப்பாய் தகப்பன்சாய் -ராமனே
    வேம்பாமென் நெஞ்சில் விளைந்த குருஸ்தானில்
    ஆம்பிளை அம்மா அமர்….(19)

    கந்தலா னாலுமதைக் கொண்டுத் திரம்கட்டி
    மந்திரமாய்த் தொங்கும் மரவணையில் -அந்தரத்தில்
    எங்கணம் ஏறினீர், அங்கணம் பாபாவே
    இங்கெனெக்கோர் உச்சி இடு….(20)

    தீர்த்தங்கள் ஏழும் தளும்பிடும் ஷீரடி
    மூர்த்தியின் பாதத்தில் MunNiiraai -ஆர்த்தி
    எடுபுத்தி, அன்பாம் எரியூட்டி, ஆர்வத்
    துடன்பக்தி நூலே திரி….(21)

    அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
    சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
    ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
    ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….(22)

    ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
    சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
    ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
    ஷீரடி மாயி சிரிப்பு….(23)

    ஆடை கபினி அணிந்தடி யார்களின்
    பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
    அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
    மரம்நிழல் சாயி மகான்….(24)

    ஆரத்தி நேரத்தில் ஆலயம் சென்றுனது
    பாரத்தை பாபாவின் பாதத்தில், -ஈரத்தில்
    கண்கள் பளபளக்க கைகூப்பி சேர்க்கமனப்
    புண்கள் மலராய் பிறப்பு….(25)

    “உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
    சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
    பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில்,
    தீபா வளிகாண் தினம்”….(26)…கிரேசி மோகன்….

    உதி-விபூதி, நுதல்-நெற்றி….

    Share
  • இராணுவ வீரர்களின் தற்கொலை?

    பவள சங்கரி

     

    எல்லைப் புறங்களில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர்கள், பணியில் இறப்பதைவிட தற்கொலை செய்து இறப்பது அதிகமாக உள்ளதாம். இந்தப்போக்கு 2011இல் 100 பேர் பணியில் இறந்தால், தற்கொலை செய்து இறந்தவர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. ஆனால் 2016/17 களில் இந்த நிலை பன்மடங்கு அதிகரித்து பணியில் இறப்பவர்கள் எண்ணிக்கை 700 ஆகவும் தற்கொலை செய்து இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக சுமாராக 950 ஆக உள்ளது. இந்த தற்கொலைக்கான காரணங்கள், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளவேண்டியது. அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இதற்கான சரியான தீர்வைக் காண்பதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்தது என்பதை உணர வேண்டும்!

    இராணுவத்திலிருந்து சமீபத்தில் சுமாராக 5000 வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிதாக வீரர்கள் சேரவில்லை என்று தலைமைத் தளபதி கூறியுள்ளது வேதனை அளிக்கக்கூடியது. அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்கள், குறிப்பிட்ட காலங்கள் நம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை சட்டமாக்குவதுதான் இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும். மேற்கத்திய நாடுகளில் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேற்கத்திய நாடுகளில் பொது மக்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
     
    இலண்டன் மாநகரின் பட்டத்து இளவரசர் என்றாலும், அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் மகன்களாக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி!
     
    இந்தியக் குடிமக்களும் இது போன்று இராணுவத்தில் பணியாற்ற கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம்.
    Share
  • செவ்வாய்க் கோளில் பூர்வீகக் கடல்கள் தோன்ற மூன்று பூத எரிமலை எழுச்சிகளே காரணம்

     

    செவ்வாய்க் கோளில் தாரிஸ் பீட எரிமலை [Tharis Volcano] மெதுவாய்த் தோன்றவில்லை, விரைவில் தோன்றியது, பூர்வீகமானது, கடல்கள் பின்னால் உருவாகின என்பது ஓர் அனுமானமே !  புதிய மாடல் மூலம்,  நாங்கள் சொல்வது :  கடல்கள் முன்னே உருவானவை, தாரிஸ் குன்றை வடித்த எரிமலைக் குழம்புடன் கடல்நீரும் கலந்தது என்பதே.  எரிமலை களே செவ்வாய்க் கோள் ஈரமாய் உள்ளதற்கு முக்கிய காரணம்.  எரிமலைச் சிதறல்களே செவ்வாய்ப் பீடத்தில் நீர்க் கால்வாய்களை உண்டாக்கி, அடித்தள நீர் மேற்தளம் வருவதற்கு வகை செய்து, மேற்திசை சமஎளியை நிரப்பி இருக்க வேண்டும்.

    டாக்டர் மைக்கேல் மங்கா  [பெர்க்கிலி விஞ்ஞானி, தலைமை ஆய்வாளி, கலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    olympus-mons-volcano-5

    செவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை :

    ஒலிம்பஸ் மாண் [Olympus Mon]

    +++++++++++++++++

    செவ்வாய்க் கடல்கள் பற்றிய புதிய மாடல் ஆராய்ச்சி முடிவுகள் :

    1.  மூன்றில் ஒருபகுதி செவ்வாய்த் தளப்பரப்பைத் திரவ நீர் ஒரு காலத்தில் மூடி இருந்தது.
    2.  ஆனால் இதுவரை எப்படி பரந்த அந்த கடற் பகுதி உருவானது என்பது மர்மக் கருத்தாகவே இருந்தது.
    3.  புதிய ஆய்வுக் கருத்து, செவ்வாய்க் கோளின் கடல்கள் அடுத்தடுத்து நேர்ந்த எரிமலைச் சிதறல்களால் தோன்றின என்று கூறுகிறது.
    4.  செவ்வாய்க் கோளின் மிகப்பெரும் எரிமலைப் பகுதியான தாரிஸ் எரிமலை எழுச்சியின் போது கடல்கள் உருவாயின.
    5. அதாவது செவ்வாயின் திரவ நீர்ப் பகுதிகள், முதலில் முடிவு செய்த காலத்துக்கு, சுமார் 300 மில்லியன் ஆண்டுக்கு முன்பே தோன்றி விட்டன.

    புதிய மாடல் கருத்துப்படி செவ்வாய்க் கோளின் கடல்கள் முதலில் நினைத்திருந்த காலத்துக்கும் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு  முன்பே உருவாகி விட்டன என்று தலை ஆய்வாளி டாக்டர் மைக்கேல் மங்கா கூறுகிறார்.  அவர் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்.  அதாவது 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பே அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழ்ந்த எரிமலைச் சிதறல்களால், செவ்வாய்க் கோள் தளப்பகுதி மாறுதல் அடைந்து, திரவ நீர்ப்பகுதிகள் உருவாயின.  செவ்வாய்க் கோளில் 3000 மைல் [5000 கி.மீ] அகண்டுள்ள மிகப்பெரும் தாரிஸ் எரிமலை அரங்கில் எழுந்த தீவீரச் சிதறல்களுக்கும், கடல்கள் உருவாவதற்கும் ஓரிணைப்பு காணப்பட்டது.

    தாரிஸ் பூத எரிமலைகள் மேநோக்கி வீசிய வாயுக்கள் புகை மண்டலமே செவ்வாய்க் கோள் சூழ்வெளியாகி, முழுக்கோள் சூடேற்றம் [Global Warming] என்னும் கிரீன்ஹௌஸ் விளைவை [Greenhouse Effect] உண்டாக்கி, பனிநீரைத் திரவ நீராய் ஆக்கி வைத்துள்ளது.  அப்போது நீர் வளத்தில் உயிரினம் வசிக்கப் போதிய தருணம் இருந்துள்ளது.  3.7 பில்லியன் ஆண்டுகளாக, வாயுச் சூழ்வெளி மறைந்து, வெப்ப வரட்சியில் 87% திரவ நீரைச் செவ்வாய்க் கோள் இழந்திருக்கிறது.

    .

    செவ்வாய்க் கோளில் கடல்கள் உருவாவதற்கு மூன்று பூத எரிமலைப் பீடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

    1. தாரிஸ் [Tharis] எரிமலைப் பீடங்கள்.

    2. அரேபியாக் [Arabia ] கடல் பீடங்கள்.

    3. டியூடெரானிலஸ் [Deuteronilus] பீடங்கள்

     

    அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன.  NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப்பட்டுள்ளன.  எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டு கட்கு முற்பட்டவை என்று அறிந்தோம்.  அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது.  அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.

    மார்க்  காஃபி [Marc Caffee, Professor of Astronomy, Purdue University, USA]

    olympus-mons-volcano-8

    olympus-mons-volcano-10

    செவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்

    2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது.  அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை.  6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.

    ஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன.  அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன.  அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன.  அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார்.  2012 இல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.

    olympus-mons-volcano-4

    ஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்

    செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது.  அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.

    olympus-mons-meteorite

    விஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட  [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார்.  அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.

    அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில்  [Journal Science Advances] செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய கருத்துக்களைக் கூறுகிறார்.

    olympus-mons-volcano

    நமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன.  காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது.  எல்லாவற்றிலும் மிகப் பெரியது“ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை.  அது ஒரு “கவச எரிமலை”  [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட  விட்டம் 374 மைல் [624 கி.மீ.].  அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது.  ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது.  அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.]  அகண்டது.  பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.

    olympus-mons-volcano-9

    [youtube https://www.youtube.com/watch?v=hBLRfgFT7Xc?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=TZu7dZMdTXo?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    Ocean of Mars

     

    செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..

    கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன  இருக்க முடியும்?  மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.

    லொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]

    Mars Ocean

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    Clues for water in Mars

    1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன ! முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது !

    தற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.

    Water flow in Mars -1

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

    Pebbles in Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன.   கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

     

     

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது !

    அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    Mars Exploration

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts) 20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)

    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)

    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]

    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)

    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)

    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)

    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)

    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)

    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)

    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)

    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]

    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

    39. https://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]

    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]

    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]

    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/ [September 27, 2012]

    44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]

    45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]

    46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]

    47.http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html  [June 4, 2013]

    48.http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars [June 6, 2013]

    49.  http://en.wikipedia.org/wiki/Viking_program  [February 2, 2014]

    50. www.dailygalaxy.com/my_weblog/2014/02/image-of-the-day-clues-found-that-liquid-water-may-exist-on-mars-today-.html  [February 12, 2014]

    51.  www.dailygalaxy.com/my_weblog/2014/02/a-vast-oceanus-borealis-may-have-once-covered-13-of-mars.html  [February 17, 2014]

    52. http://www.space.com/20133-olympus-mons-giant-mountain-of-mars.html  [March 8, 2013]

    53.  https://en.wikipedia.org/wiki/Olympus_Mons  [January 29, 2017]

    53(a)  https://phys.org/news/2017-06-amount-martian-valleys.html [January 11, 2017]

    54. http://marsprogram.jpl.nasa.gov/gallery/atlas/olympus-mons.html

    55. http://www.marsdaily.com/reports/UH_research_finds_evidence_of_2_billion_years_of_volcanic_activity_on_Mars_999.html?mc_cid=ecba864f25&mc_eid=bb33fe70f4  [February 3, 2017]

    56. http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/-monster-mars-volcano-erupted-continuously-for-two-billion-years-unlike-anything-ever-seen-on-earth.html  [February 6, 2017]

    57. http://www.marsdaily.com/reports/Deep_buried_glaciers_spotted_on_Mars_999.html  [Jnauary 11, 2018]

    58.  http://www.marsdaily.com/reports/Steep_Slopes_on_Mars_Reveal_Structure_of_Buried_Ice_999.html  [January 11, 2018]

    59. http://www.marsdaily.com/reports/Studies_of_Clay_Formation_Provide_Clues_to_Early_Martian_Climate_999.html  [February 6, 2018]

    60.  http://www.dailymail.co.uk/sciencetech/article-5518639/Mars-oceans-formed-300-million-years-earlier-thought.html  [March 19, 2018]

    60. http://www.marsdaily.com/reports/Mars_oceans_formed_early_possibly_aided_by_massive_volcanic_eruptions_999.html  [March 20, 2018]

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 24, 2018  [R-2]

    https://jayabarathan.wordpress.com/  

    Virus-free. www.avg.com
    Attachments area
    Preview YouTube video Inside Monster Martian Volcanoes

    Preview YouTube video Facts About Olympus Mons A Large Shield Volcano on Mars

    Preview YouTube video Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180324 – Vanvihari -icam -wm -21.5×21.5 cms watercolour handmade paper

    ”கால மரத்தடியில், கோள(கிரகங்கள்) வனமமர்ந்த,
    பால கிருஷ்ணனைப் போற்றுவோம்: -நாளுமே
    வண்ணமாய் கேசவ்கை வந்திடும் கார்மேகக்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180323 – Vishwaroopa – DWA handmade paper- 63×21.5cms -wm

    ‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன்
    விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம்
    ஏற்றவன் தேரினில் வீற்ற பரந்தாமர்
    மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்….

     

    Share
  • ”HINDU FRIDAY REVIEW”….!

    ‘’மரத்தடி நீழல், கரத்திடைக் கூழும்
    பரத்திடப் புல்மெத்தை, பிக்‌ஷை -இரைத்திடத்தாய்: -(தாயொத்த மாந்தர்)
    ஆன்மனைத் தேடு அவசிய நாடகம்:
    நான்,மனை மக்கள் நடிப்பு’’….கிரேசி மோகன்….!

    (OR)
    ‘’மரத்தடி நீழல், கரத்திடைக் கூழும்
    பரத்திடப் புல்மெத்தை, பிக்‌ஷை -இரைத்திடத்தாய்: –
    ஏஸியில், சோறுண்டு ஏகாந்த வாழ்வினை
    லேஸியாய் க்ரேஸி லயி’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • ”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”

     

    பவள சங்கரி

     

    பொலிகையூர் ரேகா அவர்களை முதன் முதலில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் (சென்னை – 2017) சந்தித்தபோது பெயர் அறிமுகமின்றியே அவர்தம் எழுத்தின் வாயிலாகவேக் கவரப்பட்டேன். மிக யதார்த்தமான எழுத்து நடையுடன், இலங்கையின் கருமையான நாட்களையும், மக்களின் அவல நிலையையும், தற்கால முன்னேற்றத்தின் அகண்ட பாதைகளின் சுவடுகளையும் மிகவும் யதார்த்தமாக, துளியும் மிகைப்படாமல் எடுத்துரைத்த விதம் சிறப்பாக அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அவர்தம் கருத்தரங்க உரை அனைவரையும் கவர்ந்திருந்தது.


    ”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே பல கதைகளை உருவாக்கக்கூடியது. ஆசிரியர் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையின் பாத்திரப் படைப்பையும் வித்தியாசமாக உருவாக்கியிருப்பதோடு கதை மாந்தர்களின் பெயர் சூட்டுவதிலும் ஒரு அழகியலைக் கடைபிடித்திருக்கிறார். சிற்பிகா, சங்கழகிப் பாட்டி, தமிழினி , இலக்கியா, இசையரசி, இனியா, அறிவழகன், தமிழேந்தி என்பன போன்ற மிக அழகான தமிழ் பெயர்கள் இவர்தம் படைப்புகளுக்கு அணிகலன் ஆகியுள்ளன.
    இத்தொகுப்பின்முதற்படைப்பான,“மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற கதை முத்தான முதல் கதையாகியுள்ளது. முதியோர் இல்லம் என்பது இன்றைய நாட்களில் மலிந்து கொண்டு வருவதாக உள்ளது.

    “கண்ணகிப் பாட்டியைப் போல இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த பின்புலம் உள்ளது. உறவினர்கள், பிள்ளைகள்,  அயலவர்கள் என யாரேனும் ஒருவர் கொண்டுவந்து சேர்த்தவர்களாகவோ அல்லது தாமாகவோ வந்து சேர்ந்தவர்களாக இருந்தனர்”

    இயந்திர உலகத்தில்  பணம் சேர்ப்பதற்காய், வேறு சிக்கல்களுக்காய் பெற்றவர்களை இங்கு விடும் பிள்ளைகளை என்ன செய்வது என அவள் எண்ணம் வண்டியோடு ஓடிக்கொண்டிருந்தது.

    ஆம் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள். அன்புக்காக, அரவணைப்புக்காக, அக்கறையான சில வார்த்தைகளுக்காக எல்லா இடங்களிலும் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்.

    உணர்வைத் தீண்டிய உன்னத படைப்பு இது!

    2. கானல் நீரும் கலைந்த கனவுகளும்

    செடி கொடிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பெரும்பாலும் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கதை நாயகியும் தனக்கும் அவற்றிற்குமிடையேயான பாசப் பிணைப்பு சிறிய அளவில் ஆரம்பித்துச் சிறிது காலப் பகுதிக்குள் பெருமளவில் பரவியதால் மாடிப் பகுதியையே ஒரு பசுமைத் தோட்டமாக மாற்றி வைத்திருந்த தனக்கு வேதனை ஏற்பட்ட காரணத்தைச் சொன்ன விதம் ஒரு தேர்ந்த விவசாயி தம் பயிர் பாதுகாப்பு குறித்து எடுக்கும் முயற்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் உரம் போடுவது குறித்தும், பூச்சி மருந்து அடிப்பது குறித்தும் மிகத் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் என்றே பாராட்ட வேண்டியுள்ளது. ‘அமிர்த கரைசல்’ உருவாக்கப்பட்ட விதமும், மீன் அமிலம் எனப்படும் இயற்கை உர உருவாக்க முறைமையும் ஆக்கப்பூர்வமானதாகவே உள்ளதை மறுக்கவியலாது.

    துருக்கறைகளையே நீக்கும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தை வாங்கி நீர் கலக்காமல் அப்படியே தெளிக்கும் கருவி கொண்டு தெளித்துவிட்டால் மறுநாள் காலையில் பெரும்பாலும் பூச்சிகளற்ற நிலையில் இருந்த அவரைச் செடிகளையும் கண்டு வியந்து நிற்க இயலுமாம்.

    “எல்லோருடைய கனவுகளையும், ஆசைகளையும் குழப்புவதற்கு அனைத்து இடங்களிலும், பலவிதமான குரங்குகள் இருக்கும் போல என்று நினைத்தபடியே விழுந்து கிடந்த மரங்களையும், செடி வளர்ப்புப் பைகளையும், பார்த்தேன். குரங்குகளின் தாக்குதலுக்குப் பின்னரும் சில செடிகள் கம்பீரமாக நிற்பதாகவே இப்போது தோன்றியது” என்ற ஆசிரியரின் சிந்தைகள் வியந்து போற்றத்தக்கது.
    மனித வாழ்வும் மரம், செடி கொடிகளைப்போன்று நிலையற்றது. பிறந்தவை அனைத்தும் ஓர்நாள் அழியக்கூடியவை. இருப்பினும் இடையிலேயே பூத்துக்குலுங்க வேண்டிய தருணத்தில் உருத்தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையின் வலியை உணர்வுப்பூர்வமாக வடித்தெடுத்திருக்கும் அருமையான புனைவு இது!

    3. ‘மண் மணம்’ பழங்கதைகளை மணமும், சுவையும் மாறாமல் அழகாக வரையப்பட்ட ஓவியம்.

    4. வாய்மையின் வாயாடிகள்

    திருமணம் என்ற ஒரு நிகழ்வு ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகையத் திருப்பு முனையாக அமைந்துவிடுகின்றது என்பதை அந்தப் பெண்ணின் பார்வையிலும், ஒரு தாயின் பார்வையிலும் மாறி மாறி பேசவைத்து இறுதியாக மிக யதார்த்தமான வசனங்களுடன் இயல்பாக முடித்திருக்கும் பாங்கு இந்தக் கதையாசிரியரின் பார்வையைத் தெளிவுற விளக்குவதாக அமைந்துள்ளது சிறப்பு.
    வாழ்க்கையில், சக மனிதரின் தர்மசங்கடங்களைப் புரிந்துகொள்ளாத சில நிரந்தரமான விசாரிப்புகள் எத்தகைய காயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவைகளை உணராதவர்கள் மட்டுமல்ல, உணர்ந்தவர்களும்கூட உதாசீனப்படுத்துகின்றனர் என்பதை உள்ளம் நோக உரித்துக்காட்டியுள்ள உயர்ந்த படைப்பு.

    5. “விதி(னை)யின் தீர்ப்புகள்”

    புறம் பேசும் பெண்களைச் சாடியுள்ள நல்லதொரு போக்கு இக்கதையின் சிறப்பம்சம் எனலாம்.
    “எல்லாருடைய வாழ்விலும் ஒரு முன்னாள் காதல் இருக்கலாம் அதனால் எனக்கு வருகின்றவர் என்னைப்போல யாரையும் காதலிக்காமல் தன் துணைவிக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” .
    ஆக்கப்பூர்வமான எண்ணங்களின் ஊற்றாக வெளிப்படும் படைப்பு!

    “ஒரு பெண் ஏமாற்றினால் அங்கே பாதிக்கப்படுவது ஒரு ஆணின் வாழ்க்கை மட்டுமல்ல எந்தத் தவறும் செய்யாத இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும்தான் என்பது பலரின் பார்வையிலிருந்து மறை(ற)ந்து கிடப்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டவாறு விதியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.” – முத்தாய்ப்பு!

    6. தேயாத நிலவுகள்

    குடும்பச் சுமைக்காகவும்,  பெற்றோரது கடமையை  முடிக்கும் நோக்கத்திற்காகவும் திருமணம் செய்து கொண்டு தங்கள் கனவுகளைத் தொலைத்துவிடுகின்ற பெண்களைப் பற்றிய ஆதங்கத்தைத் தெளிவுற விளக்கும் கதை.

    7. வழக்காடும் வழக்கங்கள்

    பெண்களின் இயற்கை உபாதைகளையும்கூட ஆண்களிடம் மறைக்கப்படுவதாலேயே இரு பாலருக்குமிடையே மனித இனம் என்பதையும் கடந்து வேறுபாடுகள் உருவாகி அதனால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே பெருமளவில் சமுதாயத்தில் பரவுகின்றன என்றதொரு சரியான கோணத்தை தெளிவாக உணர்த்தும் அனுபவங்களின் தொகுப்பாகவே உள்ளது இக்கதை.
    “மறைத்து மறைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள்தான் சமூகப் பொறுப்பற்றவர்களாக, அவர்களும் நம் போன்றவர்கள் என்று எண்ணாது பெண்களை போகப் பொருளாக எண்ணும் மனநிலைக்கு  ஆளாகின்றனர்.  இது ஆண்களிடம் இருந்து மறைக்க வேண்டியதல்ல ஆண்கள் உணர வேண்டிய பெண்களின் உடல் நிலை ” என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

    8. களையிழந்த காகிதங்கள்

    தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னோடு உறவாடியப் புத்தகங்களை இழக்க நேரிடும்போது ஒரு உயிர் படும் வேதனையைத் துல்லியமாக உணர்த்தியிருக்கும் இனிய படைப்பு. இழந்துவிட்ட காகிதங்களால் களையிழந்த முகங்கள்!

    9. நிம்மதி

    மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று, இயற்கை உபாதைகளைத் தீர்க்கும் தளமான கழிவறை. அதுவும் பொது இடங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவோரின் அசூசையான மன நிலையைப் பிரதிபலிக்கும் குறுங்கதை இது.
    சில சந்தர்ப்பங்களில் இல்லை என்பதை விடவும் இந்த நிலைமையிலாவது இருக்கின்றது என்னும் நினைப்பே நிம்மதியானதுதான்போல என்ற எண்ணம் கழிவறைக்கு மட்டுமல்ல, களைத்துப்போய் நொந்த மேனிக்கும் கூடத்தான் என்கிறாரோ?

    10. தனிமைப் பறவைகள்

    தனிமை என்பது ஒரு சிலருக்கே, ஒரு சில காலங்களில் மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு கூட்டுப் பறவைகள் பிரிந்து தனிக்குடும்பம் ஏற்படுத்திக் கொள்வதென்பது இயல்பான ஒன்று என்றாலும், ஒரு தாய்ப்பறவைக்கு அது மகிழ்ச்சி கலந்த வேதனை என்றே கொள்ளமுடியும். தம்மை விட்டு விலகிச்செல்லும் பந்தங்களைக் காண உள்ளம் நோகத்தான் செய்யும். உள்ளம் தொட்ட உணர்வுப்பூர்வமான புனைவு!

    இந்த வகையில், கதை ஆசிரியர் பொலிகையூர் ரேகா அவர்களின் ஒவ்வொரு கதையும் வாழ்வியலின் அடிப்படையில் ஒவ்வொரு முகமாக அமைந்திருப்பது வாசிப்பவருக்கு சுவை கூட்டக்கூடியது. சிறந்த நடையும், எளிமையான மொழியும், சுவையான களங்களும் ஆசிரியரின் எழுத்தாற்றலை பறை சாற்றக்கூடியதாகவே உள்ளன. வரும் காலங்களில் பொலிகையூர் ரேகா மிகச்சிறந்த படைப்பாளர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!

     

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 10

     

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    அந்தப் பெண்ணும் சிறுமிகளும் போன பின்பு மைக்கேல் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி சைமனையும், மெட்ரீனாவையும் வணங்கி, “நான் இப்போது உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். இறைவன் என்னை மன்னித்து விட்டார். இத்தனை ஆண்டுகளும் எனக்கு உணவு, உடை, தங்க இடம் கொடுத்ததற்காக மிகவும் நன்றி. நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றான்.

    மைக்கேல் மேலிருந்து வெளிச்சம் பிரகாசிப்பதை கண்ட சைமன் தன் இருப்பிடத்திலிருந்து எழும்பி, “மைக்கேல், நீ சாதாரண மனிதனல்ல. இங்கு உன்னைத் தங்க வைப்பதற்கோ, கேள்விகள் கேட்பதற்கோ என்னால் முடியாது. ஆனால் இதை மட்டும் சொல். உன்னை நான் சந்தித்த போதும், வீட்டிற்கு அழைத்து வந்த நேரத்திலும் உன் முகம் மிகவும் இருண்டு போயிருந்தது. ஆனால் என் மனைவி, உனக்கு உணவு கொடுத்த போது முதல் தடவையாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தாய். அதன் பின் அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், இன்று மூன்றாவது தடவையாக அந்தப் பெண்ணும், சிறுமிகளும் வந்த போதும் புன்னகை புரிந்தாய். மூன்று முறைகளும் உன் முகம் பிரகாசித்தது. இன்று உன் முகம் பகல் வெளிச்சம் போலிருக்கிறது. ஏன் உன் முகம் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது? ஏன் மூன்று தடவைகள் மாத்திரம்தான் புன்னகைத்தாய்? சொல்லமாட்டாயா?” என்று கேட்டான்.

    அதற்கு மைக்கேல், “வெளிச்சம் என் மேல் பிரகாசிப்பதின் காரணம், இறைவன் என் தண்டனையை மன்னித்து விட்டார். மூன்று தடவைகள் புன்னகைத்ததின் காரணம், இறைவன் மூன்று உண்மைகளை அறிந்து கொள்ள என்னை இங்கு அனுப்பினார். நான் மூன்று உண்மைகளையும் அறிந்து கொண்டேன். உன் மனைவி உணவு கொடுத்த போது முதல் உண்மையை அறிந்து கொண்டேன். இரண்டாவது உண்மை, அந்தச் செல்வந்தர் பூட்ஸ்கள் தைக்க வந்த போதும், மூன்றாவது உண்மையை அந்தச் சிறுமிகளைக் கண்ட போது புரிந்து கொண்டேன். ஒவ்வொரு உண்மையும் தெரிய வந்த போது புன்னகைத்தேன்” என்றான்.

    “மைக்கேல், இறைவன் ஏன் உன்னைத் தண்டித்தார்? அந்த மூன்று உண்மைகளும் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று சைமன் கேட்டான்.

    “நான் பரலோகத்திலுள்ள தூதன். இறைவனுக்கு நான் கீழ்ப்படியாததால் தண்டிக்கப் பட்டேன். அவர் என்னைப் பூலோகத்திற்குச் சென்று ஒரு பெண்ணின் ஆத்துமாவை எடுத்துக் கொண்டு போக அனுப்பினார். நான் பூலோகத்திற்கு வந்து அவளைப் பார்த்த போது, அவள் அப்போதுதான் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அவளால் இரண்டு குழந்தைகளைத் தூக்கிப் பால் கொடுக்கச் சக்தியற்றவளாகக் காணப்பட்டாள். அவள் என்னைப் பார்த்த போது தன் ஆத்துமாவை எடுத்துச் செல்ல இறைவன் என்னை அனுப்பியுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு “இறைவனின் தூதனே, தயவு செய்து என் ஆத்துமாவைக் கொண்டு போகாதே. என் கணவனும் மரம் மேல் விழுந்து நசுங்கி இறந்து விட்டார். எனக்கு உற்றார், உறவினர் எவரும் கிடையாது. நான் இறப்பதற்கு முன்னால் இந்தக் குழந்தைகளுக்குப் பாலுட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகள் தாயும், தந்தையுமில்லாமல் வாழ முடியாது” என்று கூறி அழுதாள்.

    என் மனம் அவளுக்காக உருகியது. நான் ஒரு குழந்தையைத் தூக்கி அவள் பால் கொடுக்கப் படுக்க வைத்து விட்டு, மற்ற குழந்தையை அவள் கரங்களில் கொடுத்து விட்டுப் பரலோகம் சென்றேன். நான் இறைவனிடம் சென்று “அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை. அவள் கணவன் மேல் மரம் விழுந்து நசுங்கி இறந்து விட்டான். அவளுக்கு இப்போதுதான் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவள் என்னிடம், குழந்தைகள் வளர்ந்து தங்கள் கால்கள் ஊன்றி நிற்கும் வரைக்கும் நான் உயிர் வாழ வேண்டும். பிள்ளைகள் தாயும் தந்தையுமில்லாமல் வாழ முடியாதென்று சொல்லி அழுதாள். ஆகையால் அவள் ஆத்துமாவை நான் எடுத்து வரவில்லை”, என்றேன்.

    அதற்கு இறைவன், ”நீ திரும்பிப் போய், அந்தத் தாயின் உயிரை எடு. அதன் பிறகு மூன்று உண்மைகளைத் தெரிந்த பின் பரலோகம் திரும்பி வா” என்றார். முதல் உண்மை மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது என்ன?” மூன்றாவது “மனிதர்கள் எதினால் வாழ்கிறார்கள்?”.

    தொடரும்

    “நான் திரும்பி பூமிக்கு வந்து அந்தத் தாயின் ஆத்மாவை எடுத்தேன். அந்தக் குழந்தைகள் அவள் மார்பிலிருந்து விழுந்தன. அவள் சடலம் படுக்கையில் உருண்டு விழுந்ததால் ஒரு குழந்தையின் கால் நசுங்கி விட்டது. நான் அவள் ஆத்துமாவை இறைவனிடம் கொண்டு செல்லப் பறந்த போது பெருங் காற்று அடித்த வேகத்தில் என் சிறகுகள் தொய்ந்து கீழே விழுந்து விட்டன. அவள் ஆத்துமா தனியாக இறைவனிடம் சென்று விட்டது. நான் பாதையோரம் விழுந்து விட்டேன்”.

    Share
  • குதவறைக்குள் முதலிரவும், கலைத் தளமாகிய சோளக் களமும்

    இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபரீதமான விடுதியைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது. என் வீட்டிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் “ஹோட்டல் காஸ்ஆனஸ்“.

    ஹோட்டல் காஸானஸ்

    “ஆனஸ்” என்பது ஆசனவாயேதான் (Anus). “என்னக் கொடுமை இது?” என்று உங்கள் முகம் கோணுவதை என்னால் டெலிபதியின் உதவியுடன் உணரமுடிகிறது. “மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது” என்று எண்ணும் அளவிற்கு, ஒரு புறம் ஆளுயர ஆசனவாயைக் கொண்ட அந்தப் பாரிய பெருங்குடல் மாதிரியை வடிவமைத்தவர் ‘யூப் ஃபன் லீஸ்ஹௌட்’ என்கிற டச்சு வடிவமைப்பாளர்.

    விடுதிக்குள் ஒரே ஒரு அறைதான். எனவே ஒரு சமயத்தில் ஒரு விருந்தினர் மட்டும் தனியாகவோ அல்லது அவரது குடும்பத்துடனோ  தங்க முடியும். பெரும்பாலும் புதுமணத் தம்பதிகளின் திருமண இரவுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக அவர்களின் நண்பர்களோ அல்லது பெற்றோர்களோ வாடகைக்கு எடுப்பார்களாம். ‘குதவறைக்குள் முதலிரவு’. கேட்பதற்கே கவித்துவமாக இருக்கிறதுதானே? சில சமயங்களில் சாகசச் சுற்றுலா பயணிகளும் வந்து தாங்குவார்களாம். மலத்துவாரத்தின் உட்புறத்துக்கு அருகே இரண்டு பேருக்கான படுக்கையுடன் கூடிய அந்த அறையில் ஒரு மூன்று நட்சத்திர விடுதியின் அறையில் இருக்கும் அத்தனை அம்சங்களையும் எதிர்பார்க்கலாம். பெருங்குடலைப் போன்ற அறையின் வெளிப்புறத்தில் வீங்கியிருக்கும் நரம்புகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருக்கிறது. அதில் தங்கி இரவு தூங்குபவர்களுக்கு கண்டிப்பாக ஒரு இராட்சத பாலியஸ்டர் குடலுக்குள் உறங்குவது போன்றதொரு புதுமையான அனுபவம் கிடைக்கும்.

    அறையின் வெளிப்புறம்

    படுக்கை அறை

    குளத்தின் மறுபுறமிருந்து ஆசனவாய் காட்சி

    ஒரு கலைப்பூங்காவின் அழகிய இயற்கைக் சூழலில், அமைதியான குளத்தருகே கிடத்தி வைக்கப்பட்டுள்ள அந்த மாபெரும் தசைக் குழாய் விடுதி அறையில் ஓர் இரவு தங்குவதற்கு விலை என்ன தெரியுமா?

    ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் மட்டுமே.

    Jokes apart, இதற்குப் பின்புலத்தில் இருக்கும் கதையை, கனவை உங்களுக்கு விவரிக்க விழைகிறேன். அது ஒரு ‘சோளக் களம் கலைத் தளமான’ கதை.

    கலா ரசிகர்களான ‘ஹியர்ட்  ஃபெர்பேகெ’ மற்றும் ‘கார்லா ஃபெர்பேகெ-லென்ஸ்’ ஆகிய இருவரும் பெல்ஜியத்திலுள்ள ஆன்ட்வெர்ப் நகருக்கு அருகே ‘கெம்ஸேகெ’ என்ற இடத்தில்  கிட்டத்தட்ட முப்பது ஏக்கர் பரப்பளவில் கலைப் படைப்புகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு தளத்தை ஏற்படுத்தி அங்கு வித்தியாசமான, சுவாரசியமான நவீன கலைப் படைப்புகளை சேகரம் செய்து வருகிறார்கள். ஐரோப்பாவில் சமகால கலைகளுக்கான மிகப்பெரிய தனியார் முயற்சிகளில் ஒன்றாக ‘ஃபெர்பேகெ அறக்கட்டளையைச்’ சுட்டலாம்.

    பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் இந்த அறக்கட்டளை, கலைஞர்களுக்கென்றே ஒரு குடியிருப்பை அமைத்து, அவர்கள் அங்கேயே வந்து தங்கி படைப்புகளைத் தளத்திலேயே உருவாக்கவும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தளத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள ஏ4 பக்கங்கள், அறக்கட்டளையின் பத்து ஆண்டு வரலாற்றைச் சொல்கின்றன. இது போன்ற கலைப்படைப்புகளை சேகரிப்பதற்கு ஒருவகையான வெறி இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதை ஆமோதிப்பது போலவே, “கலைச் சேகரம் என்பது ஒருவகை நோய். அதை நிறுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை.” என்று கூறியிருக்கிறார் ஃபெர்பேகெ.

    இயற்கை, கலாச்சாரம், சூழலியல் இவை அனைத்தும் ஒன்றாக இணையும் அந்த நிலப்பரப்பு, கடந்த காலத்தில் ஒரு பெரிய கோழிக் கொட்டகையுடன் கூடிய வயல்வெளியாக இருந்திருக்கிறது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த இடத்தில் தன்னுடைய சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தை அமைத்துத் தானே அதற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நடத்தி வந்திருக்கிறார் ஹியர்ட்  ஃபெர்பேகெ. ஆனால், கலையின் மீதான காதலால் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தைக் கலைக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, அதைச் செவ்வனே நிறைவேற்றியும் காட்டியிருக்கிறார். இந்த எண்ணம் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதே ஒரு வித்தியாசமான கதை. ஒருமுறை ஒரு எஃகுச் சிற்பத்தைச் சரக்கேற்றிக் கொண்டுசெல்வதற்காக யாரோ இவரை அணுகியிருக்கிறார்கள். அங்கு ஆரம்பித்த அந்தக் கலைப் பயணம் இப்போது ஆயிரக்கணக்கான படைப்புகளின் கலைத் தொகுப்பாக வளர்ந்து நிற்பதைப் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

    தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பெல்ஜிய நாட்டு ஒவியக் கலைஞர்களின் படைப்புகளில் தொடங்கிய அவருடைய சேகரப் பணி, சமீபத்திய ஆண்டுகளில் சமகால படைப்புகள், உயிர்க் கலை என்று விரிவடைந்திருக்கிறது. அவர் சேகரித்துள்ள இருபதாம் நூற்றாண்டு கொலாஷ்கள் மட்டுமே கிட்டத்தட்ட நான்காயிரத்துக்கும் அதிகம். உண்மையில் இது ஒரு அசாதாரணப் பணி. இந்தத் தொகுப்பின் ஒரு பகுதிக்காகவே பெரியதொரு தனி அறையை ஒதுக்கி அங்கு நிரந்தர கண்காட்சி ஒன்றை அமைத்துள்ளார். தனித்துவமான இந்த இடத்துக்கு ஒவ்வொரு வருடமும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள்.

    கண்காட்சி

    யோஸ் டெல்ஹாயேவின் கலைப் படைப்பு

    ஆன்னி டி பீயின் கலைப் படைப்பு

    “எதையும் எடுக்காதீர்கள்; நிச்சயமாகப் பால் இல்லை” (புரிகிறதா? கீழே சிவப்பு விளக்கு!)

    அறக்கட்டளையின் பத்தாமாண்டு நிறைவை ஒட்டி எழுநூறு பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஃபெர்பேகெ. அந்தப் புத்தகத்தைத் தன்னுடைய ‘வாழ்க்கையின் நீட்சியாகக்’ காண்பவர், “இன்னும் சொல்லப்போனால் என்னுடைய வாழ்க்கையே அதிலுள்ள ஒரு கொலாஷைப் போன்றதுதான், என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும், கொலாஷில் உள்ள ஒரு துண்டைப் போன்றது. முதல் பார்வையில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் தொடர்பில்லாதது போலத்தான் தெரியும்” என்று தன் வாழ்க்கையை கொலாஷோடு ஒப்பிட்டுப் பார்க்கும் அந்தப் பார்வை எனக்கு சுவாரசியமாகப் பட்டாலும், எல்லோருடைய வாழ்வும் அப்படித்தானே என்கிற எண்ணம் உதித்தது. மற்றவர்களுக்கு எப்படியோ, என்னுடைய வாழ்க்கை  நிச்சயமாக ஒரு கொலாஷ்தான்.

    கொலாஷ் தொகுப்புப் புத்தகம்

    ஒவ்வொரு வார இறுதியிலும் ஏலத்தில் பங்குபெறுவதும், கண்காட்சிகளுக்குச் சென்று பார்வையிடுவதும் என்று மிகவும் கடினப்பட்டு கலைப் படைப்புகளைத் தொகுத்ததாகக் கூறும் ஃபெர்பேகெ, அவற்றை வாங்குவாரின் மனநிலையைப் கோபத்துடன் விமர்சிக்கிறார், “கலைப் படைப்புகளை வாங்கும் பெரும்பாலானவர்கள் ஒரு நன்கு அறியப்பட்ட கலைஞனின் மோசமான படைப்பைக்கூட வாங்கிக்கொள்ள முனைகிறார்களே தவிர, அறியப்படாத கலைஞனின் நல்ல படைப்பை வாங்க மறுக்கிறார்கள். எனக்குத் தரமான படைப்புதான் முக்கியம். கலைஞன் யார் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை.” என்று தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார்.

     

    வாங்குவதில் மட்டுமல்ல ரசிப்பதிலும் உலகெங்கும் இதே நிலைமைதானே. அவ்வளவு ஏன் எழுத்துச் சூழலிலும் இதே கதைத்தான். படைப்புகளை அனுப்பினால் நிறைய பத்திரிகைகளிலிருந்து பதில் கடிதம்கூட வருவதில்லை என்று நிறைய பேர் குமுறுவதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

    ஹியர்ட்  ஃபெர்பேகெ

    இது போன்ற கலை சார்ந்த முயற்சிகளுக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகைகளைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் என்னை வியப்பிலாழ்த்தியது; அவர் மீதான மரியாதை மேலும் அதிகரித்தது. “இதுபோன்ற அறிய செயல்களைச் செய்வதற்கு அரசாங்கத்தின் சிறு ஊக்க உதவித் தொகைகளை எதிர்பார்த்திருப்பது என்பது ‘அற்ப உயிரினத்தின் இயல்பு’.” என்று கூறிவிட்டு கலைஞனுக்கே உரிய கம்பீரத்துடன் சிரிப்பவர், “எனக்கு அது தேவையில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் சுயதொழில் செய்துவந்தவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு மட்டுமே. எனக்கான திட்டத்தை நானே வரைந்துகொள்ளவே விரும்புகிறேன்.” என்று அவர் கூறுவதில் ஒளிரும் அவரது தன்னம்பிக்கை ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. மேலும், “அரசாங்கம் இன்றைக்கு ஒன்று சொல்லும். நாளைக்கு ஒன்று செய்யும். அரசாங்கத்தை நம்பி இதுபோன்ற அறிய காரியங்களில் இறங்கினால், ஐந்து வருடங்கள் கழித்து நம்மைக் கையேந்த வைத்துவிடுவார்கள். நான் தன்னிறைவுடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த இடத்தின் உட்புறப் பகுதிகள் சிலவற்றையும், கலைப் படைப்புகளில் தங்க விரும்புபவர்களுக்கும் வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து நான் விரும்பியதையெல்லாம் செய்து வருகிறேன். இவ்விதம் எனக்கும் பணம் கிடைக்கிறது; கலைஞர்களுக்கும் உதவ முடிகிறது; அதே சமயம், பார்வையாளர்களுக்கும் பயணிகளுக்கும், கலையுடனும் கலைஞர்களுடனும் இயற்கையுடனும் தொடர்பு வைத்துக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார். உண்மைதான். இயற்கை சூழலில் ஒரு கலைப்படைப்புக்குள் தனியாக ஒரு இரவைக் கடத்துவது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவமாகவே இருக்கும்.

    தண்ணீர் மீது அமைக்கப்பட்ட இன்னொரு தங்குமிடம்

    நான்கடுக்கு குடியிருப்பு – ஒவ்வொரு அடுக்கிலும் செயற்கை புல்வெளி மீதமைந்த கூடாரங்கள்

    “கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற பாரதியின் கட்டளைக்கு, “கலைச் சேகரம் என்பது ஒருவகை நோய். அதை நிறுத்துவது என்கிற பேச்சுக்கே இடமில்லை மீசைக்காரரே!” என்று ஃபெர்பேகெ பதிலுரை தருவது போலவே எனக்குத் தோன்றுகிறது. இப்போது எனக்கு அந்த மலத்துவாரத்துக்குள் சென்று ஓரிரவு தங்குவது தவறில்லை என்றும் தோன்றுகிறது.

    Share
  • தாகம் ……

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

    ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பேயே

    நீராதாரத்தைப் பாதுகாக்க அல்லும்பகலும்

    பாராதுழைத்து அழகியவோர் கல்லணையை

    பார்போற்ற கட்டினான் கரிகாலன்!

     

    இத்தகு வரலாறு நமக்கிருந்தும்

    மெத்தனப்போக்காய் வாழ்ந்ததனால் திணை

    யத்தனையளவு நீருக்கும் நித்தம்

    எத்தனை எத்தனை போராட்டம்!

     

    தான் வாழ்ந்தால் போதுமென்று

    எண்ணுமிம்ம(மா)க்களாலே கழிவுகள் கலக்கும்

    தேன்சுவை நீர்நிலைக ளெல்லாம்

    வீணில் போவது அவலமன்றோ!

     

    பொழிகின்ற வான்மழையும் சேமிக்க

    வழியின்றி கடலில்போய் கலக்கிறது!

    விழிபிதுங்கும் பல மாசுக்களால்

    வாழ்வாதாரம் மெல்ல அழிகிறது!

     

    தடுப்பணை பலவும் கட்டிடுவோம் – நீர்

    கடலில் கலப்பதை குறைத்திடுவோம்!

    ஏரி குளங்கள் அனைத்தையுமே

    தூர்வாரி நீரை சேமிப்போம்!

     

    நாடெங்கும் மரங்களை நட்டிடுவோம்!

    தடையயற்ற மழையைப் பெற்றிடுவோம்!

    வீடுகளில் மழைநீர் சேகரித்து

    நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடுவோம்!

     

    நீர் சூழ்ந்த இவ்வுலகினிலே

    பருகும் நிலையில் இருக்கின்ற

    ஒரு சதவீதத்திற்கும் குறைவான

    நீரைப் பொன்னெனப்போற்றி காத்திடுவோம்!

     

     

    நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

    வானின்றி அமையாது ஒழுக்கு

    (குறள்: 20

    Share
  • கவிதையைக் காதலி

    சித்ரப்ரியங்கா

     

    அன்னை – அன்புக் கவிதை

    ஆசான் – அறிவுக் கவிதை

    இயற்கை – எழிற் கவிதை

    ஈகை – கொடைக் கவிதை

    உழைப்பு – முதலீட்டுக் கவிதை

    ஊக்கம் – உயர்த்தும் கவிதை

    எண்ணம் – சிந்தனைக் கவிதை

    ஏற்றம் – வெற்றிக் கவிதை

    ஐயம் – தேவயற்ற கவிதை

    ஒழுக்கம் – உயிர்க் கவிதை

    ஓய்வு-அத்யாவஸ்யக் கவிதை

    இப்படி

    எங்கும் கவிதை

    எதிலும் கவிதை!

    மனிதரே கவிதை

    மனிதருள்ளும் கவிதை!

    கவிதை என்றும் இனியது

    அதைக்

    காதலித்துப் பார்த்த என் உணர்விது!

    Share
  • அழுகிறதே அறிவுலகு !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்

    தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற

    இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை

    எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !

     

    பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்

    பேராசிரியராய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்

    பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே

    பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !

     

    வைத்தியர்கள் கைவிட்டும் மனமுடைந்து போகாமல்

    வாழுவேன் எனும்துணிவில் மற்றவரை வியக்கவைத்தார்

    வாழ்ந்துநின்ற வாழ்க்கைதனை வையகத்துக் குதவவைத்தார்

    மறைந்தாலும் ஸ்டீபன்ஹாக் மக்கள்மனம் உறைகின்றார் !

     

    புறவழகை அவரிழந்தார் அகவழகில் அவர்நிறைந்தார்

    புத்தூக்கம் புத்துணர்ச்சி மொத்தமாய் அவர்மிளிர்ந்தார்

    வருங்கால இளைஞருக்கு அவருழைத்த நல்லுழைப்பு

    வாழ்வுக்கு வழிகாட்டும் மாமருந்தாய் இருக்குதன்றோ !

     

    கணனிதனை வசமாக்கி கருத்தனைத்தும் கொடுத்துநின்று

    உலகிலினிலே விஞ்ஞான சாதனையால் உயர்ந்துநின்றார்

    நிலவுலகில் ஸ்டீபனைப்போல் இருப்பாரை யாம்காணோம்

    அவர்பிரிவை நினைத்தேங்கி அழுகிறதே அறிவுலகு !

    Share