Blog

  • “அன்புள்ள அம்மா” (10)

    ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி சரிதம்

    8dc95cfa-752d-4996-9467-c705bdbfa00b

    மீ.விசுவநாதன்

    நாத்திகம் மாறியது

    அந்த நாளும் வந்தது
    அந்த வீட்டில் பாகவத
    பாராயணம் ஒலித்தது !
    அது கேட்டு
    அவளின் கால்கள் அங்கே
    முந்திக் கொண்டு வந்தது !
    கிருஷ்ண நினைவிலே
    கரைந்த அவள்
    சொன்னதெல்லாம் பலித்தது !
    நாத்திகர் ஒருவரை
    அருகில் அழைத்தாள் நயந்து !
    தந்தாள் அவரிடம்
    தண்ணீர் உள்ள பாத்திரத்தை !
    அவள் தொட்டாள்
    தீர்த்தமானது ! மீண்டும்
    அதிலே அவர் கையை
    விட்டதும் பாலானது !

    உடனே விட்டார்
    சுதாமணி மீதிருந்த ஆத்திரத்தை !

    நாத்திகர் நின்றார் வியந்து !
    அவள் சக்தியைப்
    பார்த்துப் பார்த்து பயந்து !

    ஆத்திகத்தில் நம்பிக்கை
    இல்லாத இன்னொருவரை
    அழைத்தாள் !
    அதே பாத்திரத்தில்
    அவர் கையை விடச் சொன்னாள் !
    அவர்கையில் பஞ்சாமிருதம்
    அவள் சொன்னாள்
    அதுதான் கிருஷ்ணாமிருதம் !

    அவருக்கு ஆச்சர்யம்
    அவர் உடம்பெல்லாம்
    மயிர்க் கூச்சர்யம் !

    அன்பையும் நேர்மையையும்
    நம்பிக் கைபிடித்தால்
    நம்பிக்கை வேர்பிடிக்கும்
    நாத்திகம் மறைந்து
    ஆத்திகம் ஏர்பிடிக்கும் !

    ஆதரவு கேட்டவர்க்கு
    ஆருதலானாள்!
    பசி என்றோக்கு
    அன்ன பூரணியானாள் !
    அதனாலே ஊருக்கே
    அவளென்றும் வற்றாத
    ஆன்மிக ஊருணியானாள் !

    அவளொரு தெய்வப்பிறவி

    அவளுக்குத் திருமணம் செய்ய
    எண்ணினார் தந்தை !
    ஜாதகத்தைப் பார்த்ததும்
    ஜோதிடர் சொன்னார்,
    “அவளுக்கு இல்லை
    திருமண சிந்தை !
    அவள் ஒரு தெய்வப்பிறவி
    சுயம்புவான துறவி !”

    எப்பொழுதும் போலவே
    அவள் இயல்பாய் இருந்தாள்
    சொப்பன வாழ்வின்
    சொகுசை மறந்தாள் !

    ஊருக்கு வெளியில்
    ஒரு ஆலமரத்தடியில்
    கூடியிருந்த பக்தர்கள் முன்பு
    பாட்டுப் பாடினாள் !
    மழைவரும் நேரம்
    தன்னை மறந்து
    கூட்டுப் பிராத்தனை செய்தாள் !
    எங்கும் பெய்தமழை
    அங்கு அவர்களைச் சுற்றி
    மட்டும் பெய்யாமல்
    அருள் பெய்தாள் !

    எல்லோருக்குமே அம்மாவானாள்

    நாளுக்கு நாள்
    பக்தர் கூட்டம் கூடியது !
    அதுகண்டு தந்தையின்
    முகம் வாடியது !
    “நீ ஏன் இப்படி
    கஷ்டப்படுகிறாய்” என்றார் !
    “கஷ்டப் படுபவர்களின்
    அகம் தேடியது” என்றாள் !

    அப்பா சுகுணானந்தரிடம்
    வீட்டுத் தொழுவத்தில் இடம்
    கேட்டுப் பெற்றாள் பூசைக்கு !
    அப்பாவி மக்கள்
    நல்வாழ்வு காணும் ஆசைக்கு !
    பசுவைத் தொட்டுக் கொண்டே
    பாலகிருஷ்ண
    சிசுவின் மீது மெட்டுப் போட்டு
    ஆனந்தக் களியாடினாள் !
    பக்தர்கள் மனத்தை
    ஆகாய வெளியாக்கினாள் !

    ……(நம்மோடு இன்னும் தொடர்வாள் அம்மா)

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 46

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நீதி மன்றங்களுக்குச் சென்று நேர்மையற்றுக் கைக்கூலி வாங்கிப் பொய்ச் சாட்சி கூறும் மனிதரைப் பார் ! பூனை எலியுடன் விளையாடுவது போல் எப்படி எளிய மனிதரின் உள்ளத்தையும், சிந்தனைகளையும் தம் வசம் வளைக்கிறார் என்பதைப் பார் ! பொய்யும் புரட்டும், சூதும், வஞ்சகமும் உள்ள செல்வந்தர் இல்லத்துக்குச் சென்று பார்”
    கலில் கிப்ரான். (Decayed Teeth)
    ___________________

    நித்திய ஞானி
    ___________________

    பூமிக்கு எதிரி பல்லடுக்குத்
    தளத்தின் கீழ்
    ஒளிந்திருக்கும் மனிதனே !
    ஈதர் ஆவிக் கிடையே உள்ளவன் !
    அழுதிடும் அன்னையர் அலறலில்
    பசித்திடும் மதலையர் குரல்தனில்
    பங்கெடுப்பது பூமி !
    தனிமச் சிதைப்பும்
    மனித அற்பமும் எண்ணும் !
    நேற்றைய தினம்
    இங்கெல்லாம் குழந்தைகள்
    நிம்மதி யாய்த் தூங்கியதை
    நினைத்துக் கொள்ளும் !
    இல்லமற்று இன்று நகரங்களில்
    அல்ல லோடு மாந்தர்
    அழுது கொண்டு நிற்பதை
    அப்பால் வெறித்து நோக்குவதை
    அவ நம்பிக்கை யோடு
    கவலை யோடு,
    போர் வாழ்வில்
    புரண்டு வாழ்வதைக் கண்டு
    பூமி மனம் உடையும் !
    ___________________

    நின்று கொண்டி ருக்கும் ஆத்மா
    நிலையற்ற சிந்தனையில்
    கொன்றழிக்கும் கவலை யோடு
    உலக சக்தி களை
    ஆட்டிப் படைக்கும்
    தெய்வ நியதியின் நீதியைச்
    சந்தேகித்து
    பூமி முணு முணுக்கும் :
    “இந்தப் படைப்புக்களை எல்லாம்
    உந்தச் செய்யு மந்த
    நித்திய ஞானி
    சீறிச் சினந்து
    சீரழிவை விளை விக்கும் !
    அத்துடன் எதிர் பாரா
    பேரெழிலும் உருவாக்கும் !
    ___________________

    Share
  • படக்கவிதைப் போட்டி 46-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வாசகன் பாலசூரியனின் வண்ணப்படத்தை இவ்வாரத்தின் போட்டிப்படமாகத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி!

     boy in a swing

    ’யாரிடமும் பூசலின்றிப் பிணக்கின்றி ஊசலாடி மகிழ்ந்திருந்தால் வாழ்வே பூக்கோலந்தான்!’ என்று தன் புன்னகையால் புரியவைக்கின்றான் இந்தப் பாலகன். கள்ளமற்ற அவன் காந்தப்புன்னகை உள்ளம் தொடுகின்றது!

    அடுத்து, போட்டிக்கு வந்துள்ள கவிதைகளைக் கண்ணுறுவோம் வாருங்கள்!

    ***

    ஊனமான பொம்மையும், உடைந்த ஊஞ்சலுங்கூட வஞ்சமிலா நெஞ்சு படைத்த பிஞ்சுக்குழந்தைகட்குக் குதூகலத்தையும் மகிழ்வையும் தந்துவிடுகின்றன. பெரியவராகும்போதுதான் ’போதும்’ எனும் பெருந்தனம் நம்மிடமிருந்து காணாமல் போய்விடுகின்றது என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வஞ்சித்துவிட்டாலும் வறுமை,
    வஞ்சம் கொஞ்சமுமில்லை
    பிஞ்சுகள் நெஞ்சினிலே,
    அதனால்
    பஞ்சமில்லை சிரிப்புக்கு..

    ஊனமான பொம்மையிலும்,
    உடைந்த ஊஞ்சலிலும்
    கிடைத்துவிடுகிறது பேரானந்தம்..

    அடைத்துவிடுகிறது இந்த
    அமுத நீரூற்று,
    போதுமென்ற பெருந்தனம்
    போய்விடுகிறது,
    பிள்ளை
    பெரியவன் ஆனதும்..

    மாறுவானா மனிதன்
    மழலையரைப் பார்த்தாவது…!

    ***

    கற்பனைச் சிறகில் விரிகின்ற புதுஉலகினை விதைப்பது இச்சிறுவனின் முறுவலோ? என்று வியக்கிறார் திரு. கவிஜி.

    இல்லாத தேசத்தில்
    இரை தேடும்
    பறவையொன்றின்
    தொலைந்து போன
    ஒரு பாதை
    நீண்டு கிடப்பதான
    கற்பனையில்
    உதிர்க்கின்ற ஒரு இறகு
    புது உலகை
    விதைக்கத் தொடங்குகிறது,
    அது இவன் புன்னகையாகவும்
    இருக்கலாம்…

    ***

    ஆணி கழற்றிய பலகையில் ஆணிக்கையாய் ஆடுகின்றான் சிறுவன். இந்தப் பலகையின் பழுதை நீக்கி அதனைக் குழந்தைகள் ஆடுதற்கேற்ற ஆசனமாய் மாற்றிடல் வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    நாணிட வேண்டிய விடயம்
    பேணிப் பாதுகாக்காத விளையாட்டிடம்!
    ஆணி களட்டிய பலகையது
    ஆணிக்கையாகத் துணிந்து ஆசனமாக்கியது.

    பட சட்டத்தின் நடுவில்
    அடக்கிக் கட்டி, அமர்ந்து
    படபடப்பின்றி ஆடுகிறான் ஊஞ்சல்!
    அடடா! ஏழைக்கேற்ற எள்ளுருண்டை!

    விழுந்திடாது பிடிக்கும் உறுதியும்
    வழுகும் பலகையைக் கால்களால்
    அழுத்தும் சாதுரியச் சிரிப்பும்
    வாழ்வின் சவாலின் ஏற்பு!

    துள்ளும் மகிழ்வில் ஆடுகிறான்
    உள்ளதை வள்ளிசாக அனுபவித்துப்
    பிள்ளைகள் மகிழ்வாரவர் குணமது!
    அள்ளும் வாழ்க்கைப் பாடமது!

    பிள்ளைகள் விளையாட்டிடத்தை வளமாக
    பிரிதியுடன் பராமரித்தல் அவசியம்
    பிற்போக்கு நிலைமை மாறட்டும்!
    பிரதான கடமை மேலிடத்திற்கு! 

    (ஆணிக்கை – உறுதி)

    ***

    சிறுவனின் ஊ(ஞ்)சலாட்டம் உணர்த்திடும் வாழ்வியல் உண்மைகளைப் பாங்குறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது எது, அதன் ஆசிரியர் யார் என்று காண்போம்!

    கள்ளமற்ற வெள்ளை உள்ளம் பிள்ளைகளுடையது. அவர்களால் மட்டுமே சிறிய விஷயங்களில்கூடப் பெரிய இன்பத்தைக் காணமுடிகின்றது. தம் மனத்தைத் துயரின்றிப் பேணமுடிகின்றது. இந்தக்கலையை பெரியவர்களும் கற்றால் ’பேராசை’ எனும் வார்த்தையே வையத்தில் வழக்கொழிந்து போகுமே!

    ”இதோ ஒரு சிறுவன் உடைந்த ஆசனத்தையும் அரியாசனமாய் எண்ணி ஆடுகின்றான்! முகத்தில் மகிழ்ச்சியோ கரைபுரண்டு ஓடுகின்றது. அவன் ஊசலை உந்தி முன்னேறுவது போலவே நாமும் வாழ்வில் உந்துதலோடு முயன்றால் அனைவரையும் முந்தலாம் என்கிறது ஒரு கவிதை; தருகிறது மனத் தெளிவை!

    போகி யால்
    யாரோ போக்கிய
    உடைந்த ஊஞ்சல்
    பழைய இரும்பு
    எடுப்பவனிடம் சிக்கப்
    பழசானாலும்
    புதிதாய்த் தெரிந்தது
    அவன் மகனுக்கு
    அடுத்த நாளே அதை
    அரசு கட்டிலாக்கி
    அரியணனை ஏறினான்
    ஆனந்தமாய் வீசிவீசிஆட
    தூசியாய் தெரிந்தது துயரம்
    மகனின் உல்லாசம்
    பெற்றவனையும்
    தொற்றிக்கொண்டது
    சுடுபட்ட வாழ்க்கை
    விடு பட்டதுபோல்
    ஊஞ்சல் ஆட்டம்
    உல்லாசமானதுதான்
    சிதறிக்கிடக்கும்
    சீர் கெட்டவாழ்க்கை
    உதறி உந்தி உந்தி ஆடி
    உவகை அடைந்தான்
    கிடைப்பதைக் கொண்டு
    திருப்திப்படும் வாழ்க்கை
    புரிந்து சகித்து
    பொருந்தியே வாழும்
    பாடம் எல்லோருக்கும்
    பொருந்தும்தானே!

    ’கிடைப்பதில் நிறைவாய் வாழ்வதே வாழ்க்கை’ என்று முத்தாய்ப்பாய்த் தன் கவிதையை முடித்திருக்கும்  திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    ’ஆண்டவன் ஆட்டுவிக்கும் ஊஞ்சலே இம்மானுட வாழ்க்கை; இதனை ஆடும் வகையில் ஆடினால் வாழ்வு பொருள்படும்; இல்லையேல் வாழ்வே இருள்படும்’ எனும் தத்துவ முத்தைத் தந்திருக்கும் கவிதையொன்று சிந்தை கவர்ந்தது.

    இருப்பதைக் கொண்டு
    மகிழ்வுடன் இங்கு
    இருப்பதே வாழ்க்கை…..இதைக்
    கருத்துடன் கூறும்
    சிறுவனின் சிறுமுகம்
    சிந்தனை நோக்கை.

    எத்தனை துயரம்
    இடரெது வரினும்
    இலேசாய்க் கொண்டால்…மனமே
    அத்தனைத் துயரையும்
    அழிந்திடச் செய்யும்
    அகத்தில் குழந்தை ஆனால்.

    ஊஞ்சல் என்பது
    ஆடிடும் வாழ்க்கை
    யார்க்கும் எளிதாய் அமைவது…அதை
    ஆடும் விதத்தில்
    ஆடி மகிழ்ந்தால்
    அற்புதமாகும் வாழ்வது.

    சிதைந்த ஊஞ்சல்
    அறுந்த சங்கிலி
    சிந்தையில் காட்டும் பாடமிது…இந்தத்
    திறந்த வெளியே
    பாடம் புகட்டும்
    சிறந்த பள்ளிக் கூடமிது.

    பூக்கள் மலரும்
    குழந்தையின் சிரிப்பில்
    பூங்காவாகும் நாட்கள்….கவிப்
    பாக்களில் வளரும்
    பருவங்கள் தோறும்
    வாழ்க்கைப் புத்தகத் தாள்கள்.

    எல்லாம் அறிவோம்
    எதுவும் அறியோம்
    என்பது தானிங்கு வாடிக்கை….இதை
    எண்ணி ஒவ்வொரு
    மணித்துளிஂவாழ்ந்தால்
    வாழ்க்கை வாண வேடிக்கை. 

    ’ஊஞ்சலில் அமர்ந்து வாழ்வியலை உபதேசிக்கின்றான் இந்தச்சிறுவன். இவன் மனநிலையை நாமும் பெற்றால், வாழ்வே வண்ணம் சிந்தும் வாணவேடிக்கைதான்’ எனும் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதை பாராட்டுக்குரியதாய்த் தேர்வுபெறுகின்றது.

    பங்குபெற்ற அனைவருக்கும் என் நன்றி!

     

     

    Share
  • களவு போகிறோமா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    சமீபத்தில் மிகவும் சுவாரசியமான ஒரு கதை படித்தேன். அன்று சனிக்கிழமை. 12 மணியளவில் ஒரு வீட்டின் கதவைத் தட்டி தபால்காரர் ஒரு தபாலைக் கொடுக்கிறார். அந்த வீட்டு அம்மணி அதைப் பிரித்துப் பார்க்கிறார். அதில் அன்று வெளியான ஒரு பிரபலமான திரைப்படத்திற்கு சில நுழைவுச் சீட்டுகள் மற்றும் குடும்பத்துடன் சென்று ஒரு பெரிய உணவு விடுதியில் உணவருந்த பரிசுக் கூப்பன்களும் இருந்தன. இதை அனுப்பிய நான் யார் என்று தெரிகிறதா என்ற வாசகத்துடன் வாழ்த்துக்களும் இருந்த அதைக் கண்ட அந்த அம்மணிக்கு இன்ப அதிர்ச்சி. கணவனிடம் உடனே சென்று காண்பிக்க அவரும் சற்றே யோசிக்க, பின் குடும்பமே சேர்ந்து இந்தப் பரிசுகளை அனுபவித்துவிட்டு பின்பு இதைப்பற்றி யோசிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தவர்களாக மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்று ஆனந்தமாக திரைப்படமும் கண்டு களித்து, உணவு விடுதியிலும் சென்று மனமார உணவருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தால், அங்கு பூட்டைத் திறக்க வேண்டிய வேலை கூட இல்லாமல் வீடு பறக்க திறந்திருந்ததோடு வீட்டிலுள்ள அனைத்து விலையுயர்ந்த பொருட்களும் காணாமல் போயிருந்தன. மேசையில் கொட்டை எழுத்தில் ஒரு வாசகமும் இருந்ததாம். ‘பரிசு வழங்கிய நான் யாரென்று இப்போது தெரிந்ததா’ என்று. இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது இன்றைய நம் பரிதாப நிலைதான்.

    தைப்பொங்கலுக்கு 100 ரூபாய் பணம், ஒரு கிலோ சக்கரை, கரும்பு 2 அடி துண்டு, பச்சரிசி என தமிழக அரசு வழங்கும் இலவசங்களைப் பெற முண்டியடிக்கும் மக்கள் வெள்ளம். இது போன்ற இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கத்தால் ஆண்டொன்றிற்கு ரூ. 20,000 கோடி செலவிடப்படுகிறது. கீழ்தட்டு மக்கள் வளம் பெறுவதற்காகவே இந்த இலவசங்களை அள்ளி வழங்குவதாக அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. எதிர்கட்சிகளும் இதற்கு விதி விலக்கு அல்ல. இலவசங்கள் எனும் கையூட்டுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளையும், அவர்தம் உரிமைகளையும் கவருகிறார்கள். ஆண்டொன்றிற்கு சுமாராக 20,000 கோடி ரூபாய் என்றால் ஐந்தாண்டுகளில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவர்கள் இலவசமாக வழங்கக்கூடிய பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவையாக இருப்பதும், அவைகள் பெரும்பாலும் பழுது பார்க்கும் மையங்களில் இருப்பதே கண்கூடாகக் காணப்படுகிறது. அதாவது இந்த ஒரு இலட்சம் கோடி ரூபாயானது தண்ணீர்ல் கரைந்த பெருங்காயமாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் திரு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது துவக்கப்பட்ட காகித ஆலை நிறுவனம் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. இந்த காகித ஆலை இன்று வளர்ந்தோங்கி இந்தியாவின் ஒரு தலை சிறந்த நிறுவனமாக மிளிர்வதைக் காணமுடிகிறது. இதை உருவாக்க சுமாராக 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இன்றும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும், வழங்கி செழிப்புடன் அன்றாடம் இலாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஒரு இலட்சம் கோடி ரூபாயில் இது போன்று எத்தனை ஆலைகளை நிறுவி வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இன்றைய தமிழ்நாட்டின் பொருளாதாரம் தடுமாறாமல் செழிப்புடன் இருக்க உத்திரவாதமாகியிருக்கலாம். இலாபத்தை ஈட்டித் தரும் வேலை வாய்ப்பைப் பெருக்கி மக்கள் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றியிருக்க வழியமைத்திருக்கலாம். ஒரு வேளை இலவசங்கள் வழங்கியேத் தீர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்பட்சத்தில் இலவசப் பொருட்கள் தயாரிப்பை அந்நிய நிறுவனங்களுக்கு அளிக்காமல், பல ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட மின்னணுசார் துறை மூலமாக உற்பத்தி செய்திருந்தால் பல ஆயிரம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கலாம் . இந்த வாய்ப்பை அந்நிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை கருத்தில் கொள்ளவேண்டும். இதனால் தனியார் நிறுவனங்களே தரமற்ற பொருட்களை வழங்கி கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தில் உண்மையான அக்கறையுடனும், தனிப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் சூலுறைத்து மேம்படுத்தக்கூடியத் திட்டங்களை எந்தக் கட்சியினரும் அறிவிக்காதது வேதனைக்குரியதாகும்.

    இன்றைக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி 2009ஆம் ஆண்டில் பதவியேற்ற பின்பு தம்முடைய முதல் உரையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்த காலகட்டத்தில் அமெரிக்க பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்ததையும், வியாபாரம், வேலை வாய்ப்பு, தொழில்துறை என அனைத்தும் முடங்கிக் கிடந்த நிலையை எடுத்துக்கூறி, தம் நாட்டை பலம் பொருந்திய நாடாக உருவாக்கி, முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதாக சூலுறைத்ததை, இன்று பலவற்றை சாதித்துக் காட்டியதை இன்று பட்டியலிட்டுள்ளதைக் காணும்போது நமக்கும் இது போன்ற சாதனைப் பட்டியலை எடுத்துரைக்கும் தலைவர்கள் அமையவில்லையோ என்று ஏக்கம் கொள்ளத்தான் செய்கிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    “ஆண்டாள் -25” ….
    ————————————–

    824bd021-1816-4861-abd3-06c2b85a9ccd

    ஒருத்தி மகனை ஒருபத்து மூன்றில்
    இருத்தியானாள் வைகுண்ட இல்லாள், -கருத்தவன்
    ஆரா அமுதன் அடைந்து மணத்தானே,
    நாரவள் பூநார ணன் ….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் – 25  கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்  

     க. பாலசுப்பிரமணியன்

    2df0377e-26f3-47a1-8153-db2f1bdcacc0

    சிரஞ்சீவியானாலும் சிரம் தாழ்த்தி வாழ்ந்தான்

    சிந்தையிலே நின்றான் அனுமனுக்கு ஸ்ரீராமன்

    சிதறாத அறிவுடனே சீதையைக் கண்டவன்

    சிலையாகிக் காலடியில் அன்போடு அமர்ந்தான் !

     

    வானுயரப் பறந்தாலும் பணிவுக்கு இலக்கணமே

    வில்லோனின் உள்ளமதை வென்றிட்ட வித்தகனே

    வைதேகி ராமனின் அருள்பெற்றது  கபிஸ்தலமே

    வருகின்ற துயர்நீக்கும் வள்ளல்களின் மன்னவனே  !

     

    மாமுனியே மனம்நொந்து மதக்களிராகச் சாபமிட

    மன்னவன் மண்டியிட மாமுனி செப்பிட்டான்

    “மாதவனை மனம்நிறுத்தி மலர்கள் தூவிடுவாய்

    மாமன்னா! மாலனால் பெற்றுவிடுவாய் சிறப்பு !”

     

    பூபாள நேரத்தில் பூப்பறிக்க  வந்தது யானை

    புலனறியா வலியினிலே நோக்கியது மண்ணை

    காலிழுத்து உயிர்பறிக்க முனைந்தது முதலை

    காத்திடக்  கண்ணனை அழைத்தது நல்வினை !

     

    அடியவர் குரலுக்கு அடியவன் ஆண்டவன்

    அன்பினில் அடங்கிய ஆதவன் மாதவன்

    கருடனில் ஏறினான் கருணையைப் பகிர்ந்திட

    கால்களுக்கு கருணை கஜேந்திரனுக்கு மோட்சம் !

     

    ஆனைக்கும் கபிக்கும் கிடைத்தது ஆண்டவன் காட்சி

    அருந்தவ முனிவர்க்கும் கிடைக்காத அருளின் மாட்சி

    அன்பினால் இணைந்திடும் உறவுகளுக்கு அவன் சாட்சி

    அன்னையாய் தந்தையாய் நண்பனாய் நாரணன் ஆட்சி !

     

    சூதில்லா மனமும் சுவை ஞானப்பொருளும்

    மாசில்லாக் காற்றும் மங்களமும் வாழ்மரபும்

    மந்தாரப் புன்னகையும் மடியாத ஈகையும்

    மங்காமல் தந்தருள்வாய் மார்கழி மணாளனே !

     

     

     

    Share
  • கலைச் சாகரம் (கலைக் கடல்) விருது பெற்றமைக்கு வல்லமையின் வாழ்த்துகள் ஐயா!

    30.12.2015 புதன்கிழமை பிற்பகல் 1330 மணி

    9dfeae35-de16-4949-bf33-1cd2bff51e6e
    சாவகச்சேரி, ஒல்லாந்தர் வீதி, ஐங்கரன் மண்டபம்.
    தென்மராட்சிக் கலாச்சாரப் பேரவை, தென்மராட்சிப் பிரதேச சபை இணைந்து வழங்கிய பண்பாட்டுப் பெருவிழா.
    தலைவர் பிரதேசச் செயலர், அஞ்சலிதேவி சாந்தசீலன்.

    683a2c90-4e94-4397-bd88-f4eef89fe66d
    முதன்மை விருந்தினர் செ. சீனிவாசன், தலைவர் கூட்டுறவு ஊழியர் ஆணக்குழு.
    தென்பொழில் மலர் வெளியீடு

    237d2f4a-9869-4708-914a-dc3013737382
    கலை நிகழச்சிகள்.

    a99f7e96-dff6-45a5-8182-cd07603b814c

    கலைச் சாகரம் (கலைக் கடல்) விருதுகள் ஐவருக்கு வழங்கல்.
    இலக்கியத்துக்கான விருது எனக்கு. யசோதரா (நடனம்), செல்லத்துரை (ஆர்மோனியம்), மாதுசிரோன்மணி (இசை), தங்கவேலு (நாதசுவரம்)

    Share
  • விடிஞ்சா கல்யாணம்

    — கவிஜி.

    ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல…. ஆனால்… மனமெங்கும் அந்த திகிலின் தவிப்புகளோடு….

    இளசுகள் கோவில் திடலில் அரட்டை அடித்துக் கொண்டும்.. திகில் விஷயத்தைப் பற்றி விவாதிக் கொண்டும் இருக்க.. பெருசுகள்.. மிரண்டு போய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்…கிட்டத்தட்ட ஊரின் மத்தியில் பெரிய வீதியில், மக்கள் கூட்டம் காலியாகவே இருக்க… சந்திரன் பெரிய வீதியின் நடுவிலிருக்கும் போர் பைப்பில் தண்ணீர் எடுக்க குடத்தை எடுத்துக் கொண்டு சென்றான்… அங்கே ஏற்கனவே இவன் வருகையைக் கவனித்து நியந்தா நின்று கொண்டிருக்க, இருவர் கண்களும் ரகசியம் பேசிக் கொண்டன…அது தீரா ரகசியம்…. தீர தீர ரகசியத்தின் கதவுகள் அடைத்துக் கொண்டே விரியும்…சங்கேத பாஷைகள்….

    ஆங்காங்கே நின்ற சிலரும் அவர்கள் மேல் கண்களை விடாமல் இல்லை.. ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்த காதல் கதைதான். ஆனாலும் திரைக்கதையில் சூடு பிடிக்கும் நேரத்தை எப்போதும் காத்திருக்கும் கூட்டத்தில் சிலர், அங்கு தண்ணீர் பிடிக்க நின்று கொண்டிருந்ததும்… வடிவேலு வீட்டு வாசலில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததும்…. நியந்தாவையும்… சந்திரனையும் ஒன்றும் செய்யவில்லை.. அவர்கள் எல்லாம் கடந்த தத்துவத்தில் கலந்து மூழ்கி… அவளின் நிறை குடத்துக்கும் சேர்த்து போர் பைப்பை அடித்துக் கொண்டிருந்தான்…இருவரும் ஒருவரையொருவர் தின்றே விடுவது போல பார்த்துக் கொண்டார்கள்….சரிவாக மேல் நோக்கி நீண்டு இருக்கும் போர் பைப்பின் அடி முனையை அவன் பிடித்து அடிக்க, சற்று கொஞ்சம் தள்ளி, இடைப்பட்ட இடத்தில் அவள் பிடித்திருக்க, அவனின் வலது கை உள்ளங்கைக்குள் கொண்ட கடிதத்தை நொடியினில் அவளின் உள்ளங்கைக்குள் நகர்த்தினான்.. அதற்கும் குறைவான நொடியினில்…அவளும் உள் வாங்கிக் கொண்டாள்..பெண்மையின் உள் வாங்கும் திறன் என்றைக்குமே வியப்புதான் என்பது போல நீர் கொட்டிக் கொண்டிருந்தது….

    கடிதம் கை மாறிய புள்ளியை காலம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டது போல.. மென் முறுவலைக் கொண்ட இருவரும்… மெல்ல சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டார்கள்…….. இன்று இரவு… புது வருடம்… பிறக்கும் நேரத்தில் அனைவரும் சர்ச்சில் கண்கள் மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கையில் அவள் சர்ச்சை விட்டு வெளியே வந்து விட வேண்டும்… போட்ட திட்டத்தின் படி இருவரும் ஓடி விடுவதுதான் கடிதத்தின் சாராம்சம்… அவள் கடிதத்தை பாவாடை பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டாள், சட்டையின் கை மடிப்பை சுருட்டி விடுவது போல…….

    “ஏன் ஒயிலா… டிவில சொல்ற மாதிரி இன்னைக்கு 4 மணிகெல்லாம் இருட்டாகும்ங்றது நிஜமா…?” என்ற ஒயிலா..கேட்டுக் கொண்டே “ஏன் சந்திரா … இன்னும் எவ்ளோ நேரம் தண்ணி அடிப்ப….. நாங்களும் அடிக்கனும்ல”- என்று சந்திரனைப் பார்த்து கேட்க கேட்கவே அவன், குடத்தைத் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்… நியந்தாவும், அவள் வீட்டை நோக்கி நடந்தாள்….பார்வையை அவர்கள் இருவர் மீதும் மாற்றி மாற்றி போட்ட பேபிக்கா…”ம்ம்ம்ம்……………………..” என்று ஒரு பெருமூச்சு விட்டபடியே……

    “அது என்ன அப்டி சொல்லிட்ட ஒயிலா… டிவில சொல்றது எத்தன நடந்திருக்கு…… அதுமில்லாம.. இதே மாதிரி 84வது வருசத்துல ஒரு டைம் அப்டி நடந்திருக்கு.. நானெல்லாம் சின்ன புள்ள, அப்போ.. நீயெல்லாம் பொறக்கவே இல்ல…வீட்ல இருக்கற ஆடு கோழியெல்லாம் அடிச்சு சாப்டோம்.. சாகத்தான போறோம்னு… அப்புறம் பார்த்தா… யாரும் சாகல…அந்த மாதிரிதான் இன்னைக்கும் நடக்க போகுது…. அது ஒண்ணுமில்ல.. பூமில நடக்கற கோளாறுதான்… இப்பிடி எல்லாத்துக்கும் காரணம்… அதும், இது நடந்தாலும் நடக்கலாம்.. இல்லானா இல்ல.. கவலைப் பட ஒன்னும் இல்லன்னுதான் அந்த டிவிக்காரன் சொன்னான்…..” என்றபடியே அவளும் நிறைந்த குடத்தைத் தூக்கிக் கொண்டு வீடு நோக்கி நடை போட..அதற்குள் மறு குடத்தைத் தூக்கிக் கொண்டு நியந்தாவும்,…. சந்திரனும் வந்து விட்டார்கள்…

    ‘ஆமா.. ஒவ்வொரு டிவிக்காரன் ஒவ்வொன்னு சொல்றான்… எதை நம்பறது” என்று புலம்பியபடியே ஒய்லாவும் குடத்தை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி நடந்தாள்….

    ஊருக்குள் ஆங்காங்கே.. அனைவரின் மனநிலையும் இந்த 4 மணிக்கு சூரியன் மறைவது பற்றிதான்…. கிட்டதட்ட அனைவருமே… சூரியன் மேலேயே ஒரு கண் வைத்திருந்தார்கள்…குடத்தை நிறைத்துக் கொண்டே தன் காதலியின் கண்களை ஊடுருவிக் கொண்டும்…. மென் புன்னகையில் வார்த்தைகள் பரிமாறிக் கொண்டிருக்க.. சட்டென அது நிகழ்ந்தது….. ஊரே கத்த துவங்கியது…

    ஒரு பக்கமாக இருந்து அணையும் லைட்டைப் போல.. சட சடவென சூரியன் தன் வெளிச்சத்தை நிறுத்திக் கொள்ளத் துவங்கினான்…அது ஓர் அதீத இருட்டை வெளிக் கொணர்ந்தது…. மிதக்க விட்ட இருட்டைப் போல.. ஒவ்வொருவரும் தனி தனி இருளாய் வெளியோடு நின்று புள்ளியானார்கள்…

    “ஹே….ஹே…………………….ஹே……………..” என்று கூச்சலும் குழப்பமும்…மக்களை சிதறி ஓட வைக்க அல்லது ஒருவரையொருவர் பற்றிக் கொள்ள.. தடுமாறி.. பயந்து… நிலை இழந்து தவித்து… நடு காட்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட இருட்டைப் போல… மிரண்டு தவிக்க… .. .. சட்டென எதிரே இருந்த நியந்தாவின் கையைப் பிடித்து இழுத்து ….அணைத்தான்….

    “டேய்…. என்னமோ நடக்குதுடா….” என்று வடிவேலு, அவன் வாசலில் நின்று சத்தம் போட்டுக் கத்த …. எதைப் பற்றியும் கவலைப் படாமல் சந்திரனும் நியந்தாவும் இதழோடு இதழ் பதித்து வெளிச்சம் உமிழ்ந்தார்கள்…

    இரவின் பிடியில்…. மிகப் பெரிய அச்சம் காதலாகவும்… பெரும் அமைதியாகவும்…. வெளிப்பட்டன…. சட்டென்று கூச்சல் குழப்பங்கள் மெல்ல மெல்ல குறைந்து ஆழ்ந்த மௌனத்துக்குள் ஒரு வித பெருமூச்சுக்கள் மட்டும் இரவைப் போர்த்திக் கொண்ட பெரும் பாம்பு போல… காற்றோடு மெல்லிய இரைச்சலாய் மிதக்கத் தொடங்கியது….. வானம் பார்த்த கண்களில் சூரியத் தேடல்கள் ஒரு 300 ஜோடிக் கண்களாக மின்னின…அது வழக்கம் போலான ஓர் இரவு இல்லை… அச்சங்களின் அச்சுக்களால் தூவப்பட்ட பயங்களின் ஆக்கிரமிப்பு…. பேச்சுகளை காவு வாங்கிய உமிழ்நீரின் விழுங்கல். தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த மரணத்தின் வாயில் மெல்ல விலகத் தொடங்கியது…. வானம் கொடுத்த கீற்று துகள்களின் வெளிச்சம் பட்டவுடன் மீண்டும் பிறந்த மனிதனாய்… புதிய பூமியாய்…. விடுபடத் துவங்கியது….. அடைபட்ட பறவைகளின் விடுதலையைப் போல மீண்டும் மெல்ல மெல்ல சத்தங்களும் கத்தல்களும்.. ஆரம்பிக்க……. ஆரம்பிக்க… விடுபட்டிருந்தார்கள்.. நியந்தாவும்.. சந்திரனும்…விட்டு விலகாமல் அவர்களைச் சுற்றியது… இதழ் சிவந்த முத்தங்கள்….

    சூரியன் சில நிமிடங்களில் மெல்ல மீண்டும் தலை காட்ட.. அனைவரின் முகத்திலும் படர்ந்திருந்த இருளின் சாயம் மெல்ல விலகி இயல்பு நிலைக்கு வந்தார்கள்…..

    இனி பயம் இல்லை என்பது போல ஊர் கலை கட்டத் துவங்கியது…. அது வரை நிறுத்தி வைக்கப் பட்ட கபடி போட்டி…. ஆட்டம் பாட்டம் ….. சரக்கு பார்ட்டி… அன்ன நடை, வண்ண நடை என்று குமரிகளின் அணிவகுப்பு… என்று ஊர் பட்டாசுகளுடன்…. 2005ஐ வழி அனுப்பிக் கொண்டிருந்தது…

    நேரம்..மாலை 6

    ஒவ்வொரு புது வருடமும் ஒரு வித தவிப்பை தந்து விடுகிறது….. காரணமற்ற சந்தோசம் போலொரு தோற்றத்தை விதைத்து விடுகிறது….எதையாவது கொண்டாட சொல்லும் மனதுக்குள் ஒரு வித வழி இல்லாமல் அங்கும் இங்கும் குட்டி போட்ட பூனை போல மதில் எழுப்பிக் கொண்டு விடுகிறது…ஊர், அது பாட்டுக்கு தன் புது வருட கொண்டாட்டங்களுக்கான வேலைகளை பார்க்கத் துவங்கி விட்டது… அதுவும்… இப்படி ஒரு உயிர் போகும் பிரச்சினைக்கு பின் தப்பித்துக் கொண்ட மறு வாழ்வென.. பார்க்கும் கண்கள் எல்லாம்… பகைமை மறந்து பேரன்பு பெருக பார்த்தது…

    நியந்தாவின் வீட்டுக்கு பின் புறம்… தன் துணிகள் அடங்கிய பேக்கை வைத்துக் கொண்டு பர பரக்க… சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றான் சந்திரன்… கொஞ்சம் முள் புதர்களும்.. புல்வெளிகளும் கொண்ட இயற்கையின் அரணாக அவனின் தலை மறைவு காக்கப் பட்ட மாலை மசங்கும் வேளையில் மொட்டை மாடியில் இருந்து நியந்தா தூக்கிப் போட்ட அவளின் பேக் சற்று பட படக்க வைத்து, நிமிட நேரக் காத்திருப்பை பூர்த்தி செய்தது…

    கீழே விழுந்த அவளின் பேக்கில் இருந்த துணிகளை எல்லாம் எடுத்து, தான் கொண்டு போயிருந்த தன் பேக்கில் வைத்து விட்டு அவளின் பேக்கை புதர் மறைவில் போட்டு விட்டு வீதியின் கிழுக்கு முகம் நோக்கி நடக்கத் துவங்கினான்…. யாரும் பேக்கோடு அவனைப் பார்த்து விடக் கூடாது என்பதில் முழுக் கவனமும்.. மிரண்டு, சிலிர்த்துக் கொண்டிருந்தது…. வீதியின் குறுக்கு சந்துகளில் புகுந்து.. இடது வலது என்று மாறி மாறி நடந்து, மத்தேயு வீட்டுக்கு முன் வரும் போது எதிரே பரிமளாக்கா வந்து கொண்டிருந்தாள்….

    “அயோ.. எமகாதகி…. மாட்னோம்… கதை முடிஞ்சது…..” என்று யோசித்துக் கொண்டே, என்ன செய்யலாம் என்று பர பரத்த மூளையை ஒன்று திரட்டும் வேளைக்குள், பார்த்தே விட்டாள் பரிமளாக்கா…

    சட்டென நின்று விட்டான் .. திரு திரு விழிகள்..திடும்மென வானம் பார்த்து, வாட்சைப் பார்த்து… ஏதேட்சையாக அந்த அக்காவைப் பார்ப்பது போல பார்க்க… அவனை கூர்ந்து கவனித்து விட்ட பரிமளா….. “என்ன சந்திரா… ஒரு படத்துல ரேஷன் அரிசியை குப்பைத் தொட்டில வெச்சுட்டு பேந்த பேந்த முழிக்கற பாக்கியராஜ் மாதிரி பாக்கற… ஏதும் ஒளிச்சு வெச்சிருக்கியா…?” என்று எட்டிப் பார்த்தாள், அவன் நின்ற இடத்தில் இருத்த குப்பைத் தொட்டியில்…

    “அயே. என்னாக்கா… என்னென்னமோ பேசற….. ஒளிச்சு வைக்க என்ன இருக்க… மனச கூட நான் ஒளிச்சு வைக்கறது இல்ல… ஆமா… என்னக்கா… நைட் சர்ச்ல ஏதும் நாடகத்துல நடிக்கறியா!?” என்று கேள்வியை நடை மாற்றினான்…

    “ம்கும்….. அது ஒன்னு தாண்டா பாக்கி.. என் பொழப்பே நடிப்பா நடிக்குது.. இதுல நான் வேற தனியா நடிக்கணுமா… கழுத… என்று முணகிக் கொண்டே கடந்து போக யத்தனிக்க..

    “இல்லக்கா… முடி நரைச்ச மாதிரி இருக்கு…துணிக்கு மேல துணி போட்டு கொஞ்சம் குண்டான மாதிரி இருக்க.. அதான் கேட்டேன்…” என்று அவனும் முன்னோக்கி நடப்பவன் போல நடக்கத் துவங்கினான்…

    அவனைத் திரும்பி பார்க்காமலே… “என்ன.. புதுசா பாக்கற மாதிரி உளறிட்டு போறான்.. வயசான உடம்பு வரும்.. முடி நரைக்கும்.. இதுல நடிப்பென்ன வேண்டிக் கிடக்கு…உன்ன மாதிரியே ஒல்லிப் பிச்சானாவே எல்லாரும் இருக்க முடியுமாடா…” என்று புலம்பியபடியே பரிமளாக்கா நடக்க… முன்னோக்கி நடந்தவன் சட்டென திரும்பி ஓடி வந்து குப்பைத் தொட்டியில் ஒரு மூலையில் வைத்திருந்த பேக்கை எடுத்துக் கொண்டு ஓடினான்.. “நல்ல வேளை இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தா மாட்டிருப்பேன்” என்று, மனம் முணு முணுத்தது சந்திரனுக்கு……

    நடப்பது போல சிறு ஓட்டம்.. ஓடுவது போல ஒரு நடை… ரவி வீட்டு திண்ணையில்… மயில்சாமி நண்பர்கள் நான்கு பேர் உட்கார்ந்து ஐந்து டம்ளரில் சரக்கு ஊற்றி… நான்கை எடுத்து ஒரே முகமாய் மேல் நோக்கி காட்டி “இது நம்ம ராஜாவுக்காக…” என்றபடியே மட மடவென குடித்தார்கள்.. அவர்களைக் கடந்து கொண்டிருந்த சந்திரன் கண்களில் இந்தக் காட்சி விழுக, மனித ஆர்வத்தின் நீட்சியாக சற்று ஓரமாய் நின்று அவர்களைக் கவனித்தான்……

    “என்னடா இது…எல்லாருமே நாடகத்துல நடிக்க போறானுங்களா…. மயில்சாமிக்கு ஜடாமுனின்னு பேரே இருக்கு, அவ்ளோ முடி இருக்கும்… இப்போ இவ்ளோ சொட்டையா இருக்கான்… அட எல்லாருக்குமே தொப்பை.. வழுக்கை என்று ஆளே மாறி இருக்காங்களே….. அது என்ன ராஜாவுக்கு…. ஒன்னுக்கு போன கேப்ல அவன் சரக்கையும் சேர்த்துக் குடிக்க பண்ற ஏற்பாடுதான இது….!” என்று யோசித்தபடியே.. “சரி.. நம்மல எவனும் பாக்காம இருந்தா சரி” என்று முணங்கிக் கொண்டே வீறு நடையை மாற்றி வேக நடையை கொண்டான்…. பதுங்கிச் செல்லும் புலியின் வேகத்தில் பேக்கை முதுகோடு போட்டுக் கொண்டு மலை ஏறுபவன் போல மூச்சை அளவோடு விட்டு வாங்கிக் கொண்டே நடந்தான்…

    “இன்னைக்கு மட்டும் நான் போய் சேர்ந்துட்டன்ன்ன்.. ஜெய்ச்சிட்டேன்ன்…..” என்று கவுண்டமணியின் வசனம் கூட மண்டைக்குள் செந்திலாய் பார்த்தது…….

    “என்ன சந்திரா…. என்னமோ திருடப்போறவன் மாதிரி போய்ட்டு இருக்க…… ஊரே.. கோயில்லயும்.. சார்ச்சுலயும் குமிஞ்சு கிடக்கு.. நீ எங்க கிழக்க போறவன்…” என்று மொட்டாயி திண்ணையில் படுத்திருந்த ஆறுமுகம் கேட்க, சட்டென பக்கவாட்டில் இருந்து அதுவும் இருட்டுக்குள் இருந்து எதிர்பாராத சத்தமாக ஒரு குரல் வர, கண நேர மிரட்டலாய் மிரண்ட சந்திரன் பேக்கை சட்டென கையோடு இறக்கி கால் பக்கத்தில் போட்டுக் கொண்டு……வராத வார்த்தைகளை யோசனை கொண்டு கோர்த்தான்….

    “இல்லை.. பங்காளிய பாக்க போயிட்டிருக்கேன்.. ஒரு சின்ன வேலை…… அதான்…” என்றான் முகத்தை துடைத்துக் கொண்டு.. ஒரு பக்கம்… ‘ஹேப்பி நியூ இயர்…” என்று மைக் செட்டில் பாட்டு ஓடிக் கொண்டிருக்க.. மறுபக்கம்…”ஆனந்தம் பொங்குதே,, ஆனந்தம் பொங்குதே.. ஆனந்தம் பொங்கி பொங்குதே….” என்று இன்னொரு மைக் செட்டில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது…. கொஞ்சம் சத்தமாகத்தான் பேச வேண்டி இருந்தது…

    “புது வருஷம் பொறக்க போகுது.. மாமன கவனிச்சுட்டு போடா சந்தரா…” என்று படுத்துக் கொண்டு காலாட்டியபடியே கேட்ட ஆறுமுகத்துக்கு 5 ரூபாயை எடுத்து கொடுத்தான்….. எடுத்துக் கொடுக்க, கொடுக்கவே.. “ஆமா மாமா.. எங்க மொட்டாயி காணோம்…..” என்றான்…. அவன் பார்வையின் நினைப்பு முழுக்க அவன் காலடியில் கிடந்த பேக்கிலேயே இருந்தது…. கையில் வாங்கி கண் அருகே கொண்டு போன ஆறுமுகம்.. 5 ரூபாய் நாணயத்தை இருட்டை விலக்கி உற்றுப் பார்த்து….ஒரு முடிவுக்கு வந்தவனாய்….”ம்ம்ம்.. மொட்டாயி செத்துப் போய்ட்டா… உனக்குத் தெரியாது…..?… வெண்ணை…இந்தா இதை தூக்கிட்டு ஓடிப் போய்டு…” என்று கையிலிருந்த 5 ரூபாய் நாணயத்தை தூக்கி சந்திரன் மேல் எறிந்தான்……..

    விட்டால் சரி என்பது போல குனிந்து அப்படியே பேக்கை இழுத்துக் கொண்டு ஓடியே போனான் சந்திரன்…

    ‘5 ரூ……வாய்க்கு ஊறுகாய் கூட கிடைக்காதுடா…. மசுருகளா… கோட்டர் 125 ரூவா…..டா…..” என்று புலம்பியபடியே மீண்டும் புரண்டு படுத்துக் கொண்டான் ஆறுமுகம்..

    மணி இரவு 7…

    கனத்து மௌனித்து கிடந்தது வீதி…. மூச்சுக்கு கூட காற்று இருக்கிறதா என்றால் பெரு மூச்சு வாங்கித்தான் உணர முடியும்…நீண்டு கிடந்த மஞ்சள் நிற வீதியில்… அடுக்கி வைத்தார் போல இரண்டு பக்கமும் இருந்த வீடுகளை ஒரு முறை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டான், சந்திரன்.. “நாளைக்கு இந்நேரம் என்ன ரணகளம் ஆகப் போகுதோ” என்று ஆழ்மனம் புலம்பியது வார்த்தைகளற்று…

    மோகினி போல சட்டென்று சித்திரக்குள்ளி குறுக்கு சந்து வழியாக வெளியே வந்தாள்… திக்கென்றாகி விட்டது சந்திரனுக்கு…

    ‘எங்கண்ணா கிளம்பிட்ட….” என்றாள்.. தன் புடவையை சரி …செய்தபடியே…

    அவள் இன்னும் கூர்ந்து கவனித்து விடுவதற்குள் பேக்கை மறைக்க வேண்டும் என்ற படபடப்பில், பேக்கை சற்று வலது பக்கமிருந்த திண்ணையில் படாரென வைத்து விட்டு….. “சும்மா… சித்ரா… பங்காளிய பாக்க…..” என்று அவளையே உற்று கவனித்தவன்.. என்ன சித்ரா… நீயும் நாடகத்துல நடிக்க போறியா… உங்கம்மா புடவைய கட்டிட்டு பெரிய பொம்பள மாதிரி கெட் அப் மாதிட்ட…” என்றான்…வார்த்தைகளை அளந்து அளந்து பேசுபவன் போல…

    ஏதோ டப்பிங் படம் பார்த்த மாதிரி……” நாடகமா.. நானா.. அதெல்லாம் ஒரு காலம்ண்ணா….அப்புறம்……….. இது ஒன்னும் எங்கம்மா புடவை இல்ல.. என் புடவைதான் .. எல்லாரும் ரெம்ப குண்டாகிட்டேனு சொல்றாங்க.. உனக்கும் அப்டிதான் தெரியுதா” என்றாள்.. இன்னும் அவள் புடவையை அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டேதான் இருந்தாள்…

    “ஆமா… இல்ல…. என்ன சொல்றது … ஆமா..கொஞ்சம் குண்டாத்தான் தெரியறா.. சொன்னா நம்பவா போறா”- என்று யோசித்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான் சந்திரன்…. அவள் பேக்கை பார்த்து விடக் கூடாது என்பதைப் போல பேக் இருந்த இடத்தை உடலைத் திருப்பி மறைத்தும் கொண்டான்…

    அவள் அவனைப் பார்க்காமலே… இன்னும் புடவையை சரி செய்தபடியே…”சரிண்ணா.. நான் கிளம்பறேன்…சர்ச்சுக்கு நேரமாச்சு…” என்று சொல்லி அவன் பதிலுக்கு காத்திராமல் போய்க் கொண்டிருந்தாள்……

    “யப்பா வாயாடி… இன்னைக்கு ஏதோ கொஞ்சமா பேசிட்டு போறா….”-என்றபடியே பேக்கை தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி வேக வேகமாய் ஓடினான்.. ‘ஓட ஓட தூரம் குறையல” என்பது போல.. குறையாமல் இருப்பது போல இருந்த கால்களின் வலிமைக்கு கிழக்கின் கோடியில் இருந்த புளிய மரத்தின் அருகாமை மிகப் பெரிய பிரமாண்ட பேயைப் போல பயமுறுத்தியது……… இந்த மரத்துக்கு ஊருக்குள் பேய் மரம் என்று தான் பெயரே…”இது தான் சரியான இடம்.. எவனும் கிட்ட கூட வர மாட்டான்” என்று நினைத்துக் கொண்டே… பேக்கை புளிய மரத்தின், சற்று மேலே வளைந்து சென்ற கிளைகளின் இடையே சொருகி வைத்தான்… “நைட் வர்றோம்.. பேக் எடுக்கறோம்.. இப்டி இந்த வழியே… பள்ளம் தாண்டி… சுடுகாடு தாண்டி, பவானி ரோட்டை பிடிச்சு ஈரோட பஸ் பிடிக்கறோம்… அப்புறம்.. போட்ட திட்டத்தின் படி கல்யாணம்….”- விடிஞ்சா கல்யாணம் என்று நினைக்கும் போதே உள்ளுக்குள் கட்டெறும்பு ஏறிய கரும்பாய் இனித்து சிவந்தது மனது..

    புது வித நம்பிக்கையோடு.. மீண்டும் ஊருக்குள் நடக்கத் துவங்கினான்.. ஊரே ஏதோ மாறி விட்டது போல ஒரு வகை பழுப்பு நிறம் போர்த்தி இருந்ததை ரசிக்க கூட முடிந்தது… “ஊரின் எல்லையைத் தாண்டி விட்டால், பின் யாரும் தங்களை ஒன்னும் செய்து விட முடியாது” என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான்…. நியந்தாவின் முதல் முத்தம் ஞாபகம் வந்தது…. முதலில் அவன் காதலிக்க துவங்கியது என்னவோ நியந்தாவின் அக்கா நிவ்யாவைத்தான்… அவள் “முடியாது” என்று கூறிய பின் “சரி கேட்டுப் பாப்போம்” என்று கேட்டதுதான்… நியந்தாவின் காதல்… அவளோ, தனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே அவனை காதலிப்பதாக கூறி மீண்டும் மீண்டும் சக்கரை ஆலையை விதைத்தாள்…நினைத்தாலே இனித்த அவளின் நினைவுகளில் தேங்கியே, ஊருக்குள் நடந்தவனின் பார்வையில், மயில்சாமி நண்பர்கள் விழுந்தார்கள்…. ஆளுக்கொரு பிளாஸ்டிக் டம்ளரில் சரக்கை வைத்துக் கொண்டு சலம்பிக் கொண்டிருந்தார்கள்.. “என்னடா அதுக்குள்ள இடத்தை மாத்திட்டானுங்க..” என்று முணங்கிக் கொண்டே பார்த்தவனுக்கு இம்முறை ராஜாவும் ஜோதியில் இருந்தது நன்றாக தெரிந்தது… “அட… மயில்சாமிக்கு மீண்டும் ஜடாமுனி போல கூந்தல் எப்படி முளைத்தது…..?…” தலையை முதன் முறையாக பிடித்துக் கொள்ளத் தோன்றியது சந்திரனுக்கு…….”ஒருவேளை தான் தான் கற்பனை செய்கிறோமோ ..” என்று ஒரு புயல் அவனுக்குள் விதையைப் போல விழுந்தது…..” காட்சிகள் யாவும் காட்சிகளா.. மாயங்களின் பிடியில்… மாறும் சூழ்ச்சிகளா…?”

    கண்களைத் தேய்த்துக் கொண்டு பார்த்தான்… முடி இருந்தது… “சற்று முன் ரவி வீட்டு திண்ணையில் பார்த்த போது சொட்டையாக இருந்தானே.. இப்போது எப்படி.. இத்தனை முடி மீண்டும்.. எது நிஜம்.. முடிக்கு டோப்பா வெச்சதா.. இல்ல.. சொட்ட மாதிரி வேஷம் போட்டதா…”- என்று குழம்பிக் கொண்டே மனதுக்குள் புரண்ட பிழைகளோடு மீண்டும் நடக்கத் துவங்கினான்….முன்னோக்கி நடந்தவனக்கு அடுத்த அதிர்ச்சியாய்… விசும்பிக் கொண்டிருந்தது… சித்திரக்குள்ளியின் முழங்கால் கட்டிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்த காட்சி……. மெல்ல அருகே சென்றான்.. அவள் விசும்பிக் கொண்டிருந்தாள்…

    “என்னாச்சு சித்ரா… ஏன் அழுதுட்டு இருக்க…?!” என்றான்.. அவளை கூர்ந்து பார்த்தபடியே..

    “நான் அழுதா உனக்கென்னண்ணா… வேலைய பாத்துட்டு போ.. நானே எங்கம்மா.. என்னைய நாடகம் நடிக்க விட மாட்டேங்குதுன்னு அழுதுட்டு இருக்கேன்…”-என்றபடியே அவள் தொடர்ந்து விசும்பலை சரியாக செய்தாள்..

    “அயோ.. என்னடா இது குழப்பம்…….” என்றபடியே.. அட… நாடகம் நடிக்க விருப்பம் இல்லன்னு இப்ப தான சொன்ன.. அதும் புடவை கட்டிட்டு இப்ப தானே ஜாம் ஜாம்னு போன.. அதுக்குள்ளே என்னாச்சு…”- என்றவனை…கூர்ந்து பார்த்த சித்ரா…சட்டென்று விசும்பலை நிறுத்தி விட்டு,… “நான் புடவை கட்டுனா நல்லாவா இருக்கும்..?…. எனக்கென்ன வயசு இருவதா…புடவை கட்டிட்டு திரிய…. பத்து தான….பாவாடை சட்டை தான் அழகா இருக்கும்…. நீ எங்கம்மாவ பார்த்து நான்னு நினைச்சிருப்ப.. லூசு மாதிரி…. “-என்றபடியே மீண்டும் விசும்பத் தொடங்கினாள்…

    நெஞ்சே அடைத்து விடும் போல் இருந்தது…. தலை சுற்றி நடந்தவனை.. மொட்டாயி குரல் தடுத்தது………

    “யார் ரத்னமா பேரனா…. என்ன ஊரே… கோயில்லயும் சார்ச்சுலயும் கிடக்கு.. நீ இங்க உலாவிட்டு கிடக்க… ஏதும் சிநேகிதம் கீற இருக்காடா… பேர கெடுத்துக்காத…” என்று திண்ணையில் உடகார்ந்தபடி வெத்திலையை குத்திக் கொண்டே பேசியது…….நின்று நிதானமாக மொட்டாயியை பார்த்தான்… திண்ணையை துலாவிய கண்களுக்கு ஆறுமுகம் அகப்படவில்லை…

    “ஆயா….. ஆறுமுகண்ணன் எங்க..” என்று மெல்ல கேட்டான்…அவன் கண்கள் அந்த இருள் சூழ்ந்த திண்ணையை வெறித்தது…. “மொட்டாய் செத்துப் போய்ட்டா… உனக்கு தெரியாது….” என்று ஆறுமுகம் கோபத்தில் கத்தியது, காரணமே இல்லாமல் மீண்டும் ஒலித்தது சந்திரன் செவியில்….ஒலிப்பதெல்லாம்…. ஒலியா….என்பதைப் போல மௌனம் கலைத்த மொட்டாயி…. ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டது… “அந்த தறுதலை காணாம போய்தான் ரெண்டு மாசம் ஆச்சே… உனக்கு தெரியாதா…… அவன் உருப்படுவானா… அரிசி சோரா குடுத்து வளத்தேனே.. இப்படி அந்த ஓடுகாலி நாய் கூட சேர்ந்து ஓடிப் போய்ட்டானே.. குடிகாரன் நாயி…..”-மொட்டாயின் குரல் தொடர…. நா வரளத் துவங்கியது சந்திரனுக்கு… “இல்ல.. இது சாதாரணம் இல்ல.. ஏதோ தப்பு நடக்குது….”

    தலைக்குள் ரீங்காரம் மெல்ல அல்ல.. மிக வேகமாக சுற்றுவது போல.. அவனின் கற்பனையோ…. அல்லது கற்பனையின் அவனோ… சுற்றத் தொடங்கினார்கள்… .. மனதுக்குள் தீர முடியாத கேள்விகளோடு குழப்பங்களும் நிறைந்து கொண்டன… கால்கள் முன்னோக்கி நடந்தாலும். மனதுக்குள் சற்று முன் பார்த்த, மாறிய கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை விரித்துக் கொண்டே சென்றது… எதிரே வந்து கொண்டிருந்த பரிமளாக்கா, இன்னும் எண்ணை ஊற்றினாள்.. சிக்கென்று, நடந்து வந்தவள்… அவன் முன்னால் நின்று… “என்ன சந்திரா.. இன்னைக்கு நீ ஆடப் போறியா… இல்லையா.. போன வருஷம் உன் ஆட்டம் மஜா டா.. “என்று கூறி விட்டு வேகமாக கடந்து போனாள்… வீதி லைட் வெளிச்சத்தில், அவளின் கறுத்த உடல் .. கணக் கச்சிதமாக அவனின் பாருக்குள் அலையாக ஆடியது….மீண்டும் கறுத்த முடியோடு…உடல் ஒல்லியாகி எப்பவும் போல இருந்தாள்…

    மனதுக்குள் ஏதேதோ சிந்தனைகளை ஓட விட்ட சந்திரன்…”அக்கா ஒரு நிமிஷம்”- என்று போனவளை நிறுத்தினான்.. அவளும், நின்று மெல்ல திரும்பினாள்….

    “அக்கா திரும்பாத……. திரும்பாமலே.. நான் கேக்றதுக்கு பதில் சொல்லு… என்றான் கணீர் குரலில்…

    திக் என்று நின்ற…. பரிமளா… கொஞ்சம் திரும்பிய கழுத்தைக் கூட வேகமாக முன் பக்கமாக திருப்பிக் கொண்டாள்…… “இது சந்திரன் குரல் மாதிரியே இல்லையே” என்று உடல் நடுங்க நினைத்த பரிமளா….. “ஏன் சந்திரா,.. என்ன கேக்க போற…ஏன் திரும்ப வேண்டான்னு சொல்ற…’ என்று மெலிதாக.. ஆனால் பிசிறில்லாமல் வார்த்தைகளை விட……” கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இதே இடத்துல நாம பார்த்தோம் தானக்கா…”என்றான்..பயந்து கொண்டே…. வேகமாய் வியர்க்கவும் தொடங்கி இருந்தது . அவன் உடலும் மனமும்…

    நின்றபடியே கண்களை இடதும் வலதும் திருப்பிய பரிமளா….. “என்ன கேக்கறான்…. இவன காலைல இருந்தே பாக்கலயே… ஏன் இப்டி கேக்கறான்… திரும்ப வேண்டானும் சொல்றான்… என்னாச்சு….” என்று தொடர்பற்ற யோசனையில் சிக்கி நிற்க… “சொல்லு………….க்கா….” என்று அடித்தொண்டையில் இருந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டான் சந்திரன்..

    “இல்லடா.. இப்போதான் பாக்கறேன்….”என்று பயந்தபடியே பரிமளா கூற…..” அயோ…பேயி………” என்று கத்திக் கொண்டு ஓடத் துவங்கினான் சந்திரன்… “அயோ.. பேயா….”- என்று பரிமளாவும் கத்திக் கொண்டு குறுக்கு சந்துக்குள் ஓடத் துவங்கினாள்……

    மணி இரவு 9.30

    கோவில் திடலில் நடந்து கொண்டிருந்த நாடகம் பார்க்க கூட்டத்தோடு நின்றான்…சந்திரன்….மனதுக்குள் பக் பக் என்றும் திக் திக் என்றும்.. ஏதேதோ… எண்ணங்கள் தடுமாற… ஒரே முகத்தில் இரண்டிரண்டு பேராக பலர் இருப்பது போல பிரமிக்கவும் செய்தான்….

    “என்ன… முனியாண்டி… கொஞ்ச நேரம் சர்ச்… கொஞ்ச நேரம் கோயில்னு ரெண்டு பக்கமும் இருக்க…சாமி மாதிரி ” என்று கேட்டபடியே செங்கல்ராஜ் நடந்து போக.. முனியாண்டி… அவனையும் பார்த்துக் கொண்டு…. இதை கவனித்துக் கொண்டிருந்த சந்திரனையும் பார்த்து.. “குடி…..” என்பது போல, ஒரு மலையாளியைப் போல ஜாடை செய்தான்……….நேரம் ஓட ஓட.. சிந்தனையில்.. குழப்பங்கள் மறைந்து…நியந்தாவின் ஞாபகங்கள் தலைக்குள் சுழன்றன…

    குளிரை போக்க பெரும்பாலைய மக்கள் தலையோடு குல்லா போட்டபடியும் ஸ்வெட்டர் போட்டபடியும் ஆவிகளைப் போல அலைந்து கொண்டிருந்தார்கள்….. இன்னும் சற்று நேரத்தில் புது வருடம் வந்து விடப் போகிறது… புது நம்பிக்கை பிறக்க போகிறது. என்று உள்ளுக்குள் கொண்ட குதூகலத்தை நடந்தே காட்டிக் கொண்டிருந்தார்கள்…மூளைக்குள் போட்டு வைத்த அத்தனை திட்டங்களையும்.. ஒரு சேர ஓட்டிப் பார்த்தான் சந்திரன்… அத்தனை குழப்பங்களையும் தாண்டி…….சில்லென்ற காற்று மெல்ல ஒரு ராணியின் விசிறியை போல… மிதந்து கொண்டிருந்தது….

    நேரம் 11.55.

    சர்ச்சில் அனைவரும் கண்கள் மூடி ஜெபிக்கத் தொடங்கினார்கள்… இன்னும் 5 நிமிடத்தில் புது விடியல்….

    அடுத்த நிமிடம்… நியந்தாவும்… சந்திரனும் ஓடிக் கொண்டிருந்தார்கள்…….

    டிக் டிக் டிக் …….அடுத்த நிமிடம்.. பேக் அவர்கள் கையில்.. டிக் டிக் டிக் ……அடுத்த நிமிடம்… பள்ளம் தாண்டி….. ஓடிக் கொண்டிருந்தார்கள்…..டிக் டிக் டிக் …… அடுத்த நிமிடம்.. பவானி சாலையில்….

    அடுத்த நிமிடம்…. தூரத்தில் பின்னால்.. பட்டாசுகளும்… கூக்குரல்களும்.. கொந்தளிக்க.. சட்டென்று நின்று, நியந்தாவும் சந்திரனும் ஒருவரையொரு ஆரத் தழுவிக் கொண்டார்கள்…. புது வருடம்…. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்… என்று ஊருக்குள் கத்திய சத்தம் ஒரு சாரலைப் போல.. அவர்களை நொடிகள் இடைவெளியில் வந்து சேர்ந்தன…… முத்த மழையில் நனைந்து கொண்டார்கள்…. ஒரு முறை அவளைத் தூக்கி சுற்றினான்… ஒரு குழந்தையைப் போல……. அவள் மெது மெதுவாய் தழுவி வழுக்கினாள்.. ஒரு குமரியைப் போல…..

    இருள் சூழ்ந்த சாலையில்…. அவளின் கண்கள் பிரகாசமாய் காதலை முணுமுணுத்தது… கண்களோடு இதழ் பதித்தவனுக்கு… பதில், கன்னம் கடித்து சொன்னாள்… இருவரும்…. இருள் புன்னைகையோடு மீண்டும் நடையும் ஓட்டமுமாக முன்னோக்கி நடக்க… பின்னால் தீப்பந்தங்களோடு ஒரு கூட்டம் அலறிக் கொண்டு வருவதை தூரக் காட்சிகளும்.. தூரக் கத்தல்களும்….உணர வைத்தன… மீண்டும் அதி வேகமாக அடிக்கத் தொடங்கிய இதயங்களை கோர்த்துக் கொண்ட கை கொண்டு தைரியப் படுத்திக் கொண்டு வேகம் எடுத்தார்கள்…. மிரண்டு போன மனதோடு… எல்லாம் புரிந்து விட…. ஓட்டம் வேகமெடுத்து… ஓடினார்கள்.. ஓடிக் கொண்டே இருந்தார்கள்…இருள் துரத்தும் அதே நேரத்தை…அவர்கள் துரத்துவது போல ஒரு ஓவியக் கரைதலாய் அவர்கள் காதலைக் கொண்டே கடந்து கொண்டு இருந்தார்கள்….

    கண நேர கீற்றாய் சட்டென ஒரு ஜீப் அவர்களைக் கடந்து முன்னால் சென்று,வேகமாய் நின்று… பின்.. அதே வேகத்தில் சர்ரேலென வந்து சர்ரென்று அவர்களின் அருகே நின்றது…

    இருவரும் மிரண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பார்க்க….உள்ளேயிருந்து டிரைவர், “சீக்கிரம் ஏறுங்க…. வாங்க…. நான் உங்கள டிராப் பண்றேன்… நீங்க எவ்ளோ ஓடினாலும் அவுங்க உங்கள பிடிச்சிடுவாங்க… வாங்க… யோசிக்க இது நேரமில்ல”- என்று கிட்டத்தட்ட ஆணையிடும் தொனியில் கூறினான்… “பயப்படாதீங்க… ஏறுங்க..” என்று கேட்ட பாதுகாப்பின் சத்தத்தை… நம்பவும் இல்லாத நம்பவும் செய்கின்ற தடுமாற்றத்தோடு அந்த நேர முடிவாக, ஏறிக் கொண்டார்கள்…..வண்டி அதே வேகத்தில் கிளம்பியது…. மெல்ல திரும்பிப் பார்த்த சந்திரனின் கண்களுக்கு குட்டி குட்டி தீப்பத்தங்கள் தூரத்தில் தலை அசைப்பது தெரிந்தது…. நியந்தாவும் சந்திரனும்… ஒருவரையொருவர்.. அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.. வண்டி அதே வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது… இரு பக்கமும் இருள் சூழ்ந்த காட்டுக்குள் ஒரு கீற்றைப் போல ஜீப்பின் முகப்பு வெளிச்சம் கீறிக் கொண்டு போக அதன் பின்னால் ஜீப் போய்க் கொண்டே இருந்தது……

    “ரெம்ப நன்றிங்க.. எங்கள ஈரோட்ல இறக்கி விட்ருங்க…” என்று ஒரு 30 கி மீ, ஒரு வகை மௌனம் கலந்த இருக்கதோடு கடந்த பயணத்தின் முமூடியையைக் கிழித்தான் சந்திரன்…

    மெல்ல புன்னகைத்துக் கொண்ட டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து கண நேரத்தில் விலகிய ஜீப் இடது புறமாக சரிந்து கவிழ்ந்து எதிரே இருந்த ஒரு புளிய மரத்தின் மீது மோதி சரிந்தது….. இருள் மிரண்டு ஒதுங்கிக் கொண்டது போல.. ஜீப்பின் முகப்பு வெளிச்சம் கோணல் மாணலாக அங்கும் இங்கும் பரவி விரவி… பாதி கண்கள் திறந்து மயங்கியது போல புளிய மரத்தின் கிளைகளின் ஊடாக நீண்டு கிடந்தது…

    கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே கணிக்க முடியாத சந்திரன் மெல்ல உள்ளே கிடந்த நியந்தாவை வெளியே இழுத்தான்…. ஆங்காங்கே சிராய்ப்புகளோடு நிற்க முடிந்தது அவனால்… திரும்பி தேடிய இருளுக்குள் முகப்பு வெளிச்ச பரப்பில், புளிய மரத்தின் அடியினில் ஒரு ரத்தக் காட்டேரியைப் போல முணகிக் கொண்டிருந்தான் … டிரைவர்….

    ஓடிச்சென்று அவன் அருகே நின்று அவனைத் தூக்க முயற்சிக்கையில் சந்திரன் அதிர்ந்தான்… இன்னும் நன்றாக அவனை உற்றுப் பார்த்தான்….ஆங்கங்கே அடி பட்டு முகம் கிழிந்து, ரத்தம் வழியக் கிடந்த அவனின் முகம் தொட்டு திருப்பி இன்னும் நன்றாகப் பார்த்தான்… மனதுக்குள் பெரும் குழப்பம்… அவனைக் கவ்வ, மிரண்டு இரண்டு அடி பின்னால் நகர்ந்து தடுமாறினான்…. ஆம்.. அவன் சந்திரனைப் போலவே இருந்தான்.. “என்ன விதமான குழப்பம்… இது..” என்று கண்களை அழுந்த அழுந்த தேய்த்துக் கொண்டு மீண்டும் அருகினில் சென்று பார்த்தான்…. ஒரு முறை, தான் தெளிவாகத்தான் இருக்கிறோமா என்ற சுய பரிசோதனைக்கு மனதை ஆட் படுத்திக் கொண்டான்…. மறுபடியும் பார்த்தான்… ஆம்.. அதே முகம்… அதே உடல்… ஆனால் கொஞ்சம் வயதாகி இருந்தான்…… மற்றபடி ஒரே உருவம்தான்…ஆம்… அந்த டிரைவர்… அப்படியே தன்னைப் போலவே இருந்ததைப் பார்த்து… என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிய சந்திரனை டிரைவர் பார்த்து மெல்ல புன்னகைத்தான்…. .

    தலையை பிடித்துக் கொண்டு, திக் திக் பார்வையோடு……. ‘என்ன நடக்குது.. ஒன்னும் புரியல.. ஊருக்குள்ள ஒருத்தர் மாதிரியே வயசான ஒருத்தர் இருக்காங்க.. சரி ஒருவேளை என் கற்பனையோன்னு கூட நினைச்சேன்.. ஆனா.. இங்க என்ன மாதிரியே வயசான நீ…… எப்டி… என்ன நடக்குது … ஆமா.. யார் நீ… எதுக்கு எங்கள காப்பாத்த வந்த… எங்கிருந்த வந்த…. “.. என்று பெரும் குழப்பத்தோடு மீண்டும் தலையில் கை வைத்துக் கொண்டு சரிந்திருக்கும் டிரைவர் அருகே அமர்ந்தான்…. லட்சம் பூச்சிகள் மனதுக்குள் அரிப்பது போல உடல் நடுங்கிய கோர்வையாய் ஒரு நிழலைப் போல கவனித்தான்….

    தன்னைப் போலவே இருந்த சந்திரனைப் பார்த்து, “பயப்படாத…. எல்லாம் சொல்றேன்..” என்று மெல்ல பேசத் தொடங்கினான் டிரைவர்…

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்……

    “சந்திரா…. விதி வலியது தெரியுமா…..’ என்று பேசத் தொடங்கினான் டிரைவர்..

    சட்டென கண்களை அகலமாய் திறந்த சந்திரன் “என் பேர் உனக்கெப்டி தெரியும்…?” என்று ஆச்சரியக் குறியில் அதிர்ந்தான்… .. முட்டியில் வழிந்த குருதியை உதறிக் கொண்டே…

    “பேர் என்ன…! எல்லாமே தெரியும்…” என்று இடைவெளி விட்ட டிரைவர் …..” என்னை பத்தி எனக்கு தெரியாதா…..?” என்றான்…..

    இன்னும் கூர்ந்து கவனித்த சந்திரன்… என்ன இது… “என்னை பத்தி எனக்கு தெரியாதா…..!”- ஒன்னும் புரியல’ என்று முணங்கினான். வெற்றுப் பார்வையில் மிகப் பெரிய பயம் கலந்து நின்றது….இரவாக…

    டிரைவர் மெல்ல சிரித்துக் கொண்டு…. “இன்னைக்கு சாயந்தரம் சூரியன் 4 மணிக்கே மறைஞ்சதுல ஏற்பட்ட கால மாற்றத்துல…கால குழப்பத்துல 2005ம் 2015ம் கலந்துடுச்சு சந்திரா… அதான்.. 10 வயசு வித்தியாசத்துல ஒரே மாதிரி ரெண்டு ரெண்டு பேரா இன்னைக்கு ஊருக்குள்ள இருக்காங்க… ஒரே கிணறு உனக்கு மூடி இருக்கற மாதிரி தெரியுது……எனக்கு திறந்து இருக்கற மாதிரி தெரியுது……..ராஜா இல்லாத நண்பர்களை முதல்ல நீ பார்த்தது 2015… அதுல ராஜா இல்ல… ரெண்டாவது, ராஜாவோட சேர்ந்து அந்த கூட்டத்தை நீ பார்த்தது 2005…. 2010ல ராஜா செத்துப் போய்ட்டான் சந்திரா… அதான் 2015ல நீ பாக்கும் போது ராஜா இல்ல… ஆனா அவனே 2005ல இருந்தான்ல..”

    சந்திரனுக்கு தலை சுற்றி வாந்தி வருவது போல இருந்தது…. “என்ன மாதிரியான ஆங்கில பட குழப்பம் இது?” என்று மனதுக்குள் முணங்கியவன் .. ஒரு முறை இன்று நடந்த அத்தனை குழப்பங்களையும் மனக் கண்ணால் ஓட்டிப் பார்த்தான்…பரிமளாக்கா …… சித்ரா…மொட்டாயி, ஆறுமுகம்…. செங்கல் ராஜ்…. இன்னும் கண்ட அத்தனை இரட்டை வேடங்களுக்கும் காரணம் புரியத் தொடங்க… இந்த பிரபஞ்சத்தின் மீது இனம் புரியாத பயம் வந்தது.. நிழலைப் போல ஒன்று நம்மை கண்காணித்துக் கொண்டே இருப்பதாய் அறிந்த வியாக்கியானத்தின் பிடியில்… மனிதன் ஒன்றுமே இல்லை என்ற சிந்தனைக் குழப்பம் தெளிவாய் புரிந்தது……

    “அப்டினா… என்னோட 2015, நான் தான் நீ……… இல்லையா…!” என்று ஆச்சரியப்பட்டான்… அவன் கண்கள் ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கி நீந்தியது…..2015 சந்திரனை உற்று.. ஏதோ கண்ணாடியில் தன்னைப் பார்ப்பது போல பார்த்தான்………..2005 சந்திரன்….அவர்களை சுற்றி பூமி வேக வேகமாய் சுற்றுவதைப் போலொரு மாயம்… மிதப்பதை உணர்ந்தார்கள்…இயல்புக்குள் கலந்து கொண்ட மாய தத்துவங்களின் கைகளில் மூளை பிசையப் படும் காட்சிக்குள் பின்னோக்கி தலைகீழாய் சரிவது போல் இருந்தது… சூழலின் இருண்மை…

    வரட்சியான பார்வையோடு, 2015 சந்திரன்……. “சரி சந்திரா…நீங்க கிளம்புங்க….அவுங்க கைல மாட்னா அவ்ளோதான்…..” என்றான்… தவிப்போடு……..

    “நீ… நீங்க……?”-தன்னையே வேறு ஒருவனாக பார்த்து பேசுவது என்பது இனம் புரியாத தவிப்பின் உச்சம் என்று உள் மனம் அசை போட்டது சந்திரனுக்கு…

    “நான் என்னை பாத்துக்குவேன் …., நீங்க போங்க… நாளைக்கு மறுமடியும் சூரியன் வழக்கம் போல உதிச்சிட்டா.. இந்த 2015 இருக்காது…நானும் இருக்க மாட்டேன்….இந்த குழப்பம் தீர்ந்திடும்… ஏன் அப்டி பாக்கற… அதான் நீ இருக்கியே… நீ தான நான்…இது என் நியந்தா தான…. “என்று சொல்லி மென் புன்னகையோடு கண்ணடித்தான்…

    “சரி” என்ற சந்திரன்.. எழுந்து நியந்தாவைக் கூட்டிக் கொண்டு ஓடத் துவங்கு முன் சற்று நின்று.. திரும்பி… “சந்திரா … எங்க கல்யாணம்…… நடந்திடும் தான… நீ எதிர்காலத்துலதான இருக்க.. அப்போ என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியும் தானே…? என்றான்…முகம் பிரகாசிக்க…

    2015 சந்திரன்… மெல்ல புன்னகைத்து விட்டு.. “காலத்தின் கணக்கை முன் கூட்டியே கணிக்கலாம்.. வாழ கூடாது… நீ போ… எல்லாம் புரியும்” என்றான்…..ஒரு வித அமானுஷ காற்று, அந்த இடத்தை நிரப்பியது….இருண்மையின் சிலிர்ப்புக்குள் மிதக்கத் துவங்கிய மாயக் கண்கள் புன்னகை செய்தன….

    சந்திரன் நியந்தாவைக் கூட்டிக் கொண்டு ஓடினான்… ஓடி புள்ளியாகி இருட்டுக்குள் மறைந்து போனான்….

    வேண்டும் என்றே ஜீப்பை கவிழ்த்திய காட்சியை ஒரு முறை நினைத்துப் பார்த்தான்….2015-சந்திரன்…. அவனுக்கு முன்னால் கவிழ்ந்து கிடந்த ஜீப்புக்கும் தரைக்கும் இடையே நசுங்கி செத்துக் கிடந்தாள் நியந்தா….

    “ஒரே ஆளாக இருந்தாலும்.. மனசு வேறடா…அது வருசத்துக்கு வருஷம் என்ன… நிமிசத்துக்கு நிமிஷம் மாறும்….இது என் நியந்தாடா…. நியந்தா எனக்கானவன்.. உன் கூட போக விடுவேனா….” என்ற 2015-சந்திரனின் மனம் ஒரு பேயைப் போல கண்கள் விரித்தது…..

    ஓடிக் கொண்டிருந்த சந்திரனின் கைகளில் இருந்த நியந்தாவின் கை மெல்ல காற்றோடு கரையத் துவங்கியது….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”ஆண்டாள் 24” ….
    ———————————–

    353c89e1-6a5b-442d-b712-7d74107a29d2

    அன்றிவ் உலகம் அளந்தோன் அடிபோற்றி,
    சென்றவ்வை குண்டத்தைச் சேர்ந்தவளின் -தென்றல்
    திருப்பாவைக் காற்றினை தூற்றிக்கொள் வோரை
    விருப்போடு போற்றி வணங்கு ….கிரேசி மோகன்…

    Share
  • “அவனையுணர்”

     
    மீ.விசுவநாதன்

    12523000_199099640440195_4256197451282348231_n
    எதுபலமோ அதுவே அனுமன்
    எதுநலமோ அதுவே அனுமன்
    எதுசுகமோ அதுவே அனுமன்
    எதுமருந்தோ அதுவே அனுமன்
    எதுபணிவோ அதுவே அனுமன்
    எதுதுணிவோ அதுவே அனுமன்
    எதுதுணையோ அதுவே அனுமன்
    இதுபுரிதால் அவனே மனிதன் !

    எதுகனிவோ அதுவே அனுமன்
    எதுஅழகோ அதுவே அனுமன்
    எதுஉறவோ அதுவே அனுமன்
    எதுஊயிரோ அதுவே அனுமன்
    எதுகலையோ அதுவே அனுமன்
    எதுசரியோ அதுவே அனுமன்
    எதுஅறிவோ அதுவே அனுமன்
    இதுஉணர்ந்தால் அவனே மனிதன் !

    (ஸ்ரீ அனுமன் ஜெயந்திதினம் – 09.01.2016)
    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், மா, மா)

    Share
  • மார்கழி மணாளன் – 24 -திருமோகூர் காளமேகப் பெருமாள்  

    க. பாலசுப்பிரமணியன்

    f813a8d7-64fa-458b-807e-19d7b5dca31b

    வைகுந்தத்திற்கு வழிகாட்டிய தலமன்றோ !

    விடியாத துயர் தீர்க்கும் சங்கு சக்கரமன்றோ !

    விழி வைத்தவர் கலி தீர்க்கும்  வழிகாட்டி

    வைகைக்கூடலிலே குடிகொண்ட காளமேகன் !

     

    அசுர மனமும் தேவ குணமும் அலைபாய்ந்தது

    அமுதத்தை அருந்திடவே கடல் கடைந்தது

    அழிவின்றி வாழ்ந்திடவே ஆணவமே துடித்தது

    அண்டங்கள் காத்திடவே அரங்கமே வந்தது !

     

    மோகிக்கும் அவதாரம் பத்தெடுத்தாலும் மோகனனே !

    மோகினியாய் மோகூரில் அழகை வளர்த்தவனே

    மோகத்தில் வீழ்ந்த அசுரர்களை மோதவிட்டு

    மோனத்தில் அமுதத்தை தேவருக்குத் தந்தவனே !

     

    காலத்தால் அழியாத வரமொன்று பெற்றான்

    கைவைத்த இடமெல்லாம் கனலாக்கப் பெற்றான்

    போகத்தில் மோகத்தில் சிறையான பதுமன்

    யோகத்தில் மோகினியின் தாகத்தில் எரிந்தான் !

     

    தன்தலையில் தானே கைவைத்து அழிந்தான்

    தரணியில் ஆணவத்திற்கு பாடம் அளித்தான்

    தான்மட்டும் வாழ நினைத்தவர் வாழ்ந்ததில்லை

    தருமம் காத்து நின்றவரேன்றும் தாழ்ந்ததில்லை !

     

    மோகத்தில் மூப்படையும் முடியாத தாகம்

    மோகூரான் போற்றிடவே மூவுலகும் தாண்டும் !

    மோனத்தில் மனம் நிற்க  மூலவனே காளமேகா

    மோகூரில் மோகினியாய் அருள்வாயே நீர்வண்ணா!!

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • விளையாட்டிலும் வெளிப்பட்ட வீரம்!

    -மேகலா இராமமூர்த்தி

    வீரமும் காதலும் தமிழர்வாழ்வின் இருகண்கள் என்பது நாம் அடிக்கடிக் கேட்கும் வாசம்தான்! ஆம்! அன்றையமக்களின் வாழ்வில் வீரமும் காதலும் இணையில்லா இருபெரும் உணர்வுகளாகவே காட்சியளித்திருக்கின்றன என்பதற்கு நம்இலக்கியங்கள் சாட்சிகூறுகின்றன. காதலைப் பாடும் அகத்திணைப்பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதி; எனினும், வீரத்தை விதந்தோதிய பாடல்களுக்கும் பஞ்சமில்லை. முடிமன்னர் கோலோச்சிய அன்றைய தமிழகத்தில், ’(போர்செய்து) விழுப்புண்படாத நாளெல்லாம் வீண்நாளே!’ என்பதே தமிழக வீரர்களின் எண்ணமாயிருந்திருப்பதை வான்புகழ் வள்ளுவரும் திருக்குறளில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

    விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து.
    (776)

    போரற்ற காலங்களில் ‘போரடிக்காமல்’ (not to get bored) பொழுதுபோக்குவதற்குக்கூட வீரவிளையாட்டுக்களையே நாடியிருக்கின்றனர் நம்மவர்! அவ்வாறு அவர்கள் விளையாடிய வீரவிளையாட்டுக்கள் சிலவற்றை இங்கே நாம் நினைவுகூர்வோம்!

    ஏறுதழுவுதல்: ஏற்றினைத் தழுவி அதன் திமிலைப்பிடித்து வீரஆடவர் அடக்குதலே ஏறுதழுவுதல் அல்லது ஏறுகோளாகும் (it is a bull-taming sport). இவ்விளையாட்டு ஆநிரைகளைத் தம் செல்வமாய்க்கொண்டிருந்த முல்லைநிலத்து மக்களிடையே அன்று மிகச்சாதாரணமாய் நடந்த ஓர் நிகழ்வு என்பதைச் சங்க இலக்கியம் நமக்கு அறியத்தருகின்றது. காளைகளின் கொம்பைப்பிடித்தல் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை என்பது தமிழர்கொள்கை.

    முல்லைநிலத்துக் காரிகையரின் கைத்தலம்பற்ற அப்பகுதியைச்சார்ந்த ஆடவர் ஏறுதழுவுதல் எனும் வீரவிளையாட்டில் வென்றேயாகவேண்டும் என்பது நியதி. வளமான புல்லையுண்டுத் தளதளவெனக் கொழுத்துநின்ற ஏறுகள், கொடும்புலிகளையும் குத்திக்கொல்லும் வீரமும் ஆற்றலும் மிக்கவை. ஆதலால், அவற்றைக் ’கொல்லேறு’ என்று குறிப்பிட்டனர் மக்கள். அந்தக்கொல்லேற்றின் கொம்பைக்கண்டு அஞ்சாத வீரமறவரையே அந்நிலத்துமகளிர் மணப்பர். அவ்வாறில்லாது, ஏற்றைக்கண்டஞ்சித் தோற்றோடுவோனின் தோள்களை இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தழுவ மாட்டார்கள் அப்பெண்டிர்!

    இதைத்தான்,

    கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
    புல்லாளே ஆயமகள்
    என்கின்றது முல்லைக்கலி.

    Madurai-alanganallur-jallikattuஅற்றைநாளைய ஏறுதழுவுதலே இற்றைநாளைய ’சல்லிக்கட்டாகும்.’ மதுரை மாவட்டத்தைச்சார்ந்த அலங்காநல்லூர் எனும் ஊர் தமிழ்மரபின் எச்சமான இவ்வீரவிளையாட்டை அழிந்துவிடாமல் காக்கும் ஊராய்த் திகழ்ந்துவருகின்றது. சில்லாண்டுகளாக, இவ்விளையாட்டில் விதிமீறல்கள், அரசியல் போன்றவை (விரும்பத்தகாதவகையில்) உள்நுழைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்விளையாட்டுக்குப் ’பிராணிவதை’ என்று முத்திரைகுத்தித் தடைவிதித்துவிட்டது. அத்தடையைவென்று, நம்மறவரின் மாண்பைக்காட்டும் இவ்வீரவிளையாட்டு தமிழ்மண்ணில் மீண்டும் உயிர்த்தெழும் என்று நம்புகின்றனர் சல்லிக்காட்டு ஆர்வலர்கள்!

    மல்லாடல்: மற்போர் (wrestling) என்ற பெயரில் அன்று நடைபெற்றுவந்த மல்லாடலும் ஓர் வீரவிளையாட்டே! தமிழகத்தில் வீரமல்லர்கள் பலர் அன்றிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவன் உறந்தையிலிருந்த (உறையூர்) வேளிர்தலைவனான தித்தனின் மகனான பெருநற்கிள்ளி. அழகும் ஆற்றலும் ஒருங்கே பொருந்திய வீரஇளைஞனான பெருநற்கிள்ளி, ’போரவை’ என்று அழைக்கப்பட்ட மற்போர் பயிற்சிக்கூடமொன்றை நடாத்திவந்தமையால் ’போரவைக் கோப்பெருநற்கிள்ளி’ என்றே இவனை அழைத்தனர் புலவோர். யாது காரணத்தாலோ, ’நொச்சிவேலித் தித்தன்’ என்று பரணரால் புகழந்துபோற்றப்பட்ட (அகம்.122) தித்தனுக்கும், அவனுடைய வீரமைந்தனான பெருநற்கிள்ளிக்கும் மனவேறுபாடு வந்துவிட்டது. அதனால், மகனென்றும் பாராது கிள்ளியை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுகின்றான் தித்தன்.

    அத்தனால் (தந்தை) வெளியேற்றப்பட்ட பெருநற்கிள்ளி பலவிடங்களில் சுற்றிவிட்டு ஆமூர் எனும் ஊரில்வந்து தங்கியிருந்தான். அவ்வூரில் புகழ்பெற்ற மல்லன் ஒருவன் இருந்தான். அவன் பெருநற்கிள்ளி மல்லாடலில் வல்லவன் என்றறிந்து அவனை மல்யுத்தத்துக்கு அறைகூவியழைத்தான். சிலிர்த்தெழுந்த கிள்ளி, அந்த மல்லனின் மார்பின்மீது ஒருகாலும், முதுகின்மீது மற்றொருகாலும் வைத்து அவன் மதவலியை முருக்கி, பசித்த யானை மூங்கிலைத் தின்பதுபோல், அவன் தலையையும் காலையும் முறியமோதி அவனை வென்றான். இந்தக் காட்சியைக்கண்டு வியப்பும் பெருமிதமும் அடைந்த புலவர் சாத்தந்தையார், “மகன்புரிந்த இந்த அற்புதப்போரினை தித்தன் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) கண்டிருக்கவேண்டுமே!” என்று மெய்புளகித்துப் பேசுகின்றார்.

    …. ஆமூர் ஆங்கண்
    மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
    ஒருகால் மார்பொதுங்கின்றே; ஒருகால்
    வருதார் தாங்கிப் பின்னொதுங்கின்றே
    நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்
    போர் அருந்தித்தன் காண்கதில் அம்ம
    பசித்துப் பணைமுயலும் யானை போல
    இருதலை ஒசிய எற்றிக்
    களம்புகு மல்லர் கடந்தடு நிலையே. (புறம் – 80)

    வேட்டையாடல்: வேட்டையாடுதல் அன்று சிலருக்குத் தொழிலாகவும் சிலருக்குப் பொழுதுபோக்கான வீரவிளையாட்டாகவும் விளங்கிற்று. வேட்டையைத் தொழிலாகக்கொண்டோர் ’வேடர்’ என்றும் ’வேட்டுவர்’ என்றும் அழைக்கப்பட்டனர். குறுநிலமன்னர்களான வேளிரும், பெருநிலமாண்ட வேந்தரும் இதனைப் பொழுதுபோக்காய்க் கொண்ருந்தனர். கொல்லிமலைத் தலைவனான ’வல்வில்’ ஓரி, ஓர் அம்பிலேயே யானை, புலி, மான், முள்ளம்பன்றி, உடும்பு என ஐந்து விலங்குகளை வீழ்த்தும் வில்லாளனாய்த் திகழ்ந்தான். அதன்காரணமாய், வில்லிலே வல்லவன் எனும்பொருள்பட ‘வல்வில்’ ஓரி என்று விளிக்கப்பட்டான்.

    விலங்குகளுக்கு வீடுபேறளிக்கும் கொலைத்தொழிலாக வேட்டம் விளங்கியபோதினும், அதிலும் ஓர் அறநெறியைப் பேணினர் வேட்டுவர் என்பதைக் கண்ணப்பநாயனார் புராணம் கவினுறக் கழறுகின்றது. ஆம்! விலங்குகளின் குட்டிகளையும், கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளையும் கொல்லாது விடுத்து, வலிய விலங்குகளை வேட்டையாடுவதையே வேட்டுவர் தம் வழக்கமாய்க்கொண்டிருந்தனர் என்றறியும்போது, வீரத்திலும் வெளிப்படும் அவர்தம் ஈரம் நம்மை நெகிழ்ச்சியுறச்செய்கின்றது.

    இச்செய்தியைப் பெரியபுராணம் மிடுக்கான சொற்களில் எடுத்தியம்புவதைக் காணுங்கள்.

    துடியடியன மடிசெவியன  
       துறுகயமுனி தொடரார்
    வெடிபடவிரி சிறுகுருளைகள்
     
       மிகைபடுகொலை விரவார்
    அடிதளர்வுறு கருவுடையன
     
       அணைவுறுபிணை அலையார்
    கொடியனஎதிர் முடுகியும்உறு
     
       கொலைபுரிசிலை மறவோர்   (பெ.புராணம் – கண்ணப்பநாயனார் புராணம்)

    இவ்வேட்டைக்கலை சங்ககாலத்தோடு மங்கிவிடவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து, வெள்ளையரை எதிர்த்து வீரமரணடைந்த மருதுசகோதரர்களில் மூத்தவரான பெரியமருது மிகச்சிறந்த வேட்டைக்காரராய்த் திகழ்ந்திருக்கின்றார். இச்செய்தியை, அவர்களோடு நெருங்கிப்பழகிய ஆங்கிலஅதிகாரி ஒருவர் தன்நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஆனைப்போர்: மனிதரும் மனிதரும் புரிந்துவந்த போர் போதாதென்று விலங்கினங்களையும் மோதவிட்டு வேடிக்கைப்பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் பண்டைத்தமிழர். அவற்றில் ஒன்று ஆனைப்போர். கருமலை போன்ற ஆனைகளை ஒன்றோடொன்று பொருதச்செய்து கண்டுகளித்திருக்கின்றனர் சீமான்களும் கோமான்களும். இப்போரைப் பாதுகாப்பாய்க் காண்பதற்கென்றே அரசர்களின் தலைநகரங்களில் அன்று தனிமாடங்கள் இருந்தனவாம்.

    வள்ளுவரும், செல்வத்தைத் தன்னிடமுடைய ஒருவன் ஒருசெயலைத் தொடங்குவது, குன்றிலே ஏறிநின்று (கீழேநிகழும்) யானைப்போரைப் பார்ப்பதுபோல் பாதுகாப்பானது என்று கூறுவதை இங்கே நாம் நினையலாம்.

    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை
    .  (758)

    ஆட்டுப்போர்: ஆனைப்போரைப்போலவே ஆட்டுக்கடாக்களை மோதவிட்டுக் களித்திருக்கின்றனர் தமிழ்க்குடியினர். அதற்கென்றே ஆட்டுக்கடாக்களைச் சிலர் வளர்க்கவும் செய்திருக்கின்றனர். இவற்றைப் ’பொருதகர்’ என்கின்றார் தெய்வப்புலவர்.

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து.
    (486)

    (ஊக்கமுடையவன் (காலம்பார்த்து) ஒடுங்கியிருப்பது, ஆட்டுக்கடா தாக்குவதற்குக் காலம்பார்த்து எவ்வாறு பின்வாங்குமோ அதனை ஒக்கும்.)

    சேவற்போர்: பறவையினங்களையும் போரின்றி இருக்கவிடவில்லைcock fight நம்மனோர். கோழிச்சேவல்கள், காடைகள் போன்றவற்றையும் போரில் ஈடுபடுத்தி அவற்றை ஆர்வத்தோடு கண்டுகளித்திருக்கின்றனர். சேவல்களின் கால்களில் முள்ளையோ கத்தியையோ கட்டிச் சற்றுக்கோரமாய்ப் போரிடச்செய்திருக்கின்றனர் என்று அறிகின்றோம்.

    கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
    உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றிச் சீறி
    வெறுப்புஇல களிப்பின் வெம்போர் மதுகைய வீரவாழ்க்கை
    மறுப்பட
    ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;

    என்று சேவற்போரின் தன்மையைக் கம்பகாவியம் பேசும்.

    அந்நாளில், சோழரின் பழையதலைநகரான உறையூரில் வீரக்கோழிகள் மிகுந்திருந்தமையால் அதற்குக் ’கோழியூர்’ என்ற பெயரும், அதனையாண்ட சோழருக்குக் ’கோழிச்சோழர்’ என்றபெயரும் ஏற்பட்டன.

    இவ்வாறு, பொருதலில்லா வாழ்க்கை பொருளற்ற வாழ்க்கை எனும் கொள்கையுடையோராய் வாழ்ந்து, வீரவரலாற்றை வடித்துச்சென்றிருக்கும் தமிழரின் மறம் – அவர்தம் போர்த்திறம் நம்மை மலைக்கவைக்கின்றது அல்லவா? 

     

    Share
  • மார்கழி மணாளன் – 23 திருச்சேறை – சாரநாதன்

     க. பாலசுப்பிரமணியன்

    2c0497a7-ff38-4cce-bc27-809ac8cf4fa3

    ஊழியிலிருந்து வேதங்கள் காத்திட வந்த மண்ணன்றோ

    உலகத்தை மீண்டும் உய்வித்தது திருச்சேறை நிலமன்றோ !

    பிரளயமும் கடந்திட புதுயுகமொன்று பிரம்மனும் படைத்திட

    பரந்தாமன் அருளாலே வந்த திருச்சேறை திருவருளே !

     

    புள்ளினமும் பூவினமும் காயோடு கனியினமும்

    புல்லினமும் கொடியினமும் மண்ணூறும் உயிரினமும்

    புவிசார்ந்த கோளினமும் புரியாத அசைவினமும்

    புன்னைமர மாலனின் புல்லாங்குழல் இசைவந்தது !

     

    யோகத்தில் உறங்கியும் கோளங்கள் காத்து

    உறவுக்குப் பாலங்கள் உணர்வாலே வைத்து

    உயிருக்கு உடலும் உடலுக்கு உணர்வும்

    உறவாடும் கலைகொடுத்த உத்தமன் நீயன்றோ !

     

    கங்கையோ உன் கால்கழுவி களிப்புற்றாள்

    காவிரியோ கருணை வேண்டித் தவமிருந்தாள்

    தவழ்கின்ற குழந்தையாய் தாய்பாசம் பெற்றே

    தந்தாய் அவதாரத்தின் அருள் தரிசனமே !

     

    கல்லொன்று வண்டியில் நித்தம் பூபாலன் களவாட

    காரிருளில் ஓரிரவில் கோயில் கொண்டோய் !

    காத்திடும் அபயக்கரத்தில் தாமரை எடுத்தாய்

    காத்திடுவாய் கண்ணா ! மலர் போலக் காசினியை !

     

    அஞ்சுகின்ற உள்ளமெல்லாம் காக்கும் அருளாளா !

    ஐந்துதேவியர் கூடநின்று அருள்கின்ற பெருமாளே  !

    அண்டங்களின்  சாரமான சத்வமே  சாரநாதா !

    அகிலமெல்லாம் அமைதியை அருள்வாயே ஆதிமூலா !

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: எய்ப்பினில் வைப்பென்பது

     

    வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
    துய்த்து வழங்கி யிருபாலு மத்தகத்
    தக்குழி நோக்கி யறஞ்செய்க வஃதன்றோ
    வெய்ப்பினில் வைப்பென் பது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வைத்ததனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
    துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
    தக்குழி நோக்கி, அறம் செய்க!-அஃது அன்றோ,
    எய்ப்பினில் வைப்பு என்பது?

    பொருள் விளக்கம்:
    தாம் தேடி வைத்துள்ள செல்வம் எல்லாம் தளர்வுற்ற பிற்கால பயனுக்காக என்று எண்ண வேண்டாம், தாமும் அப்பொருளைப் பயன்படுத்தி, பிறருக்கும் கொடுத்து உதவி செய்து, இம்மை மறுமை என்ற இரு வகை வாழ்வும் சிறப்படையுமாறு, உதவத்தக்கவர்களுக்கு நிதி வழங்கி நல்லறம் செய்வீர் எனில், அதுவன்றோ கேடு சூழும் காலத்தில் உதவும் சேமநிதி போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் அறம் செய்வதே இம்மை மறுமை என்ற இருவகை வாழ்வையும் சிறப்படையச் செய்யும். அந்த அறச்செயலே இடருற்ற காலத்தில் உதவும் செல்வம் போன்றது. ஈட்டும் பொருளின் பெருமை அதனைத் தக்கவாறு பயன்படுத்தி அறம் செய்து எவ்வாழ்விலும் சிறப்புற வாழ்வதில்தான் உள்ளது. இம்மைக்கும் மறுமைக்கும் என இரு வாழ்வையும் செய்யும் அறம் சிறப்புறச் செய்யும் என உணர்த்த விரும்பிய வள்ளுவர்,

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. (குறள்: 23)

    இம்மை மறுமை என இரு வாழ்வின் தன்மை உணர்ந்து, அறத்தைச் செய்பவரின் பெருமையே உலகில் சிறப்படைகிறது என்கிறார்.

    Share
  • வளவன் கனவு (26)

    சு. கோதண்டராமன்

    வாத சபை

    vallavan-kanavu1

    சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
    கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
    மந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
    அந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே

    -சம்பந்தர்

    ஊர் மக்கள் பெரும் திரளாகக் கூடி இருந்தனர். சம்பந்தரின் புகழ் ஏற்கெனவே பரவி இருந்ததால் அவரைக் காண விரும்பினர். அவரைக் கொல்லச் சமணர்கள் முயன்றார்கள் என்ற செய்தி அவர் பால் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது.

    அரசரும் அரசியும் வந்து உட்கார்ந்தனர். சம்பந்தர் சமண குருவைப் பார்த்துக் கேட்டார். “உங்கள் சமயம் பற்றிச் சொல்லுங்கள்.”

    “எங்கள் சமயம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இருக்கிறது. ரிஷப தேவரால் ஏற்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து மகாவீரர் வரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களால் போஷித்து வளர்க்கப்பட்டது. உங்கள் சமயம் நேற்று மழையில் முளைத்த காளான்.”

    சம்பந்தர் பேசினார், “இந்த வைகை நதி என்று தோன்றியது என்பதை யார் கூற முடியும்? அது போல என்று பிறந்தது என்று அறியாத தொன்மை உடையது வேதநெறி. அதை எதிர்த்துத்தான் உங்கள் சமயம் தோன்றியது. வைகையில் மக்கள் இறங்கிக் குளிக்கப் பல துறைகள் இருப்பது போல வேதநெறியிலும் பல துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சைவம். துறை புதிது என்பதால் ஆற்றின் தொன்மை குறையாது.”

    அரசர், அரசி, அமைச்சர் மூவரும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தனர்.

    சம்பந்தர் தொடர்ந்தார், “தெய்வம் பற்றிய உங்கள் கோட்பாடு என்ன?”

    “அத்தி நாத்தி, அதாவது, உண்டு இல்லை.”

    “இது என்னய்யா வழுக்கல் விடை? உண்டா, இல்லையா?”

    “நீங்கள் கூறுவது போல உலகத்தைப் படைத்துக் காக்கும் கடவுள் ஒருவர் இல்லை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த சமணத் துறவிகள் தெய்வமாகப் போற்றப்படுவார்கள். அவர்களுக்கு விசேஷ சக்திகள் உண்டு.”

    “உலகத்தைப் படைத்தவர் ஒருவர் இல்லை என்றால் உலகம் எப்படி வந்தது?”

    “உலகம் வினைகளின் தொகுதி. ஒவ்வொரு வினைக்கும் ஒரு விளைவு உண்டு. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. இவ்வாறு காரண காரியத் தொடர்பால் உலகமும் அதனுள் நடைபெறும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.”

    “மனிதன் துன்பத்துக்குக் காரணம் என்ன? அதைத் தீர்க்கும் வழி யாது?”

    “துன்பத்துக்குக் காரணம் அவரவர் செய்த தீவினைதான். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்”

    “நேற்று அரசர் உடலில் நோய் கண்டதற்கு அவரது தீவினைதான் காரணமோ?”

    “ஆம். முற்பிறவியில் செய்திருப்பார்.”

    “முதலில் அவரது உடலின் வலப்பக்கம் மட்டும் நோய் நீங்கியதே, வலப்பக்கம் நல்வினையும், இடப்பக்கம் தீவினையும் செய்ததா?”

    மக்கள் ஆரவாரித்தனர். சமணர்கள் தலை குனிந்தனர்.

    காலில் மிதிபட்டு எறும்பு முதலான சிற்றுயிர்கள் இறக்கக் கூடாது என்பதற்காக மயிற்பீலியால் தரையைத் துடைத்துக் கொண்டு நடக்கிறவர்கள் இந்தப் பால் மணம் மாறாப் பாலகனைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர்கள் இறைக் கொள்கை போலவே அகிம்சைக் கொள்கையும் இரட்டை வேடம் போடுகிறது என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சம்பந்தர் வாழ்க, சிவக்கன்று வெல்க என்ற கோஷம் வலுத்தது. மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் அரசர், வாதத்தில் சமணர்கள் தோற்றதாக அறிவித்தார்.

    அவர்கள் விதண்டாவாதம் செய்யத் தலைப்பட்டனர். ‘அனல் வாதம் செய்து உன் சமயத்தின் மேன்மையை நிரூபி’ என்றனர். “அனல் வாதமா? அப்படி என்றால் என்ன?” என்றார் இவர். “நீ உனது பாடல்களை எழுதிய ஏட்டை நெருப்பில் இட வேண்டும். அது அழியாமல் இருந்தால் சைவம் மேன்மையானது என ஒப்புக் கொள்வோம்”  என்றனர். சம்பந்தர் ‘போகமார்த்த’ என்று தொடங்கும் பதிகம் ஒன்று பாடினார். ஒவ்வொரு சொல்லாகப் பொருள் புரியும்படி நிறுத்தி நிதானமாக இசையுடன் பாடிக் கொண்டே அதைத் தன் கையாலேயே ஒரு ஏட்டில் எழுதினார். பதிகம் முடிந்தது. ஏடு நெருப்பில் இடப்பட்டது, எரிந்து விட்டது. கைதட்டிக் குதூகலித்தனர் சமணர்கள்.

    “அவசரப்படவேண்டாம். என் பாடல் அழியவில்லை. இங்கு கூடியிருக்கும் மக்களில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்” என்றார் சம்பந்தர். ஆம், கூடியிருந்த மக்கள் மனதில் அந்தப் பாடல் பதிந்திருந்தது. அத்தனை பேரும் அதைத் திரும்பக் கூறினர். ஏடுதான் அழிந்தது, பதிகம் அழியவில்லை.

    ‘புனல் வாதம் செய்தால்தான் நம்புவோம்’ என்றனர் சமணர். ‘உன் பாடல் எழுதிய ஏட்டை வைகையில் இட வேண்டும். அது அடித்துச் செல்லப்படாமல் இருந்தால் ஏற்போம்’ என்றனர்.

    சம்பந்தர் உடன்பட்டார். ‘வாழ்க அந்தணர்’ என்று தொடங்கி மற்றொரு பதிகம் பாடினார். முன்பு போலவே அது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லிக் கொடுத்தனர். அது விரைவில் பரவியது. ஏடு நீரில் அடித்துச் செல்லப்பட்டாலும் பாடல் மக்கள் செவி வழியாக மேற்கே ஒரு காதம் தொலைவில் உள்ள திருவேடகம் வரை பரவியது. மக்கள் மனதைச் சம்பந்தர் பாடல் பிணித்திருந்தது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? மக்கள் ஆதரவு சைவத்தின் பக்கம் இருப்பதை அறிந்த சமணர்கள் சைவத்தை ஏற்றனர். சமணம் கழுவேறியது.

     தொடரும்

    Share