Blog

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (22)

    பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (2),தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    போர்க் கைதிகளை வைத்து இந்த மரணப் பாதையை அமைக்க ஜப்பானியப் படையினர் திட்டம் தீட்டினர்  என்பதையும் அவர்களோடு மலாயா இந்தோனீசியாவிலிருந்து ஏராளாமானோர் கூலிகளாக இந்தப் பணியில் வேலைக்கு கொண்டு வரப்பட்டார்கள் என்ற விபரத்தையும் இக்கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். இந்த இரண்டு வகை பணியாட்கள் குழுக்களிலும் வித்தியாம் இருப்பதை கட்டாயம் காணாமல் இருக்க முடியாது.

    போர்கைதிகளாக இப்பணியில் ஈடுபடுத்த அழைத்துக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆஸ்திரேலிய, ஆங்கிலேய டச்சு படைகளில் போர் வீரர்களாப் பணியாற்றியவர்கள். போர் விபரங்களும் தந்திரங்களும், காட்டிற்குள் வாழும் பயிற்சியும் நீண்ட கால அவஸ்தைகளையும் துன்புறுத்தல்களையும் உடல் ரீதியாகத் தாங்கும் மன பலத்தையும் கொண்டவர்கள் இவர்கள். பலர் உயர்ந்த கல்வியறிவும் கொண்டவர்கள். இராணுவத்தில் இயந்திரங்களை இயக்கவும், மருத்துவர்களாகவும், போர்க் கருவிகளைப் பயன்படுத்தவும், கடுமையான சூழலில் வாழ்வதற்குத் தீவிர பயிற்சியும் தங்கள் பணியின் ஒரு அங்கமாகக் கற்றவர்கள்.

     warm2

    காஞ்சனாபுரியிலிருந்து செல்லும் மலைப்பாதை. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதையில் ரயில் செல்கின்றது. (டிசம் 2013)

    ஆனால் கூலிகளாக இப்பணிக்கு அமர்த்தப்பட்ட மலாயாவின் இந்திய சீன, மலாய் மக்களும் இந்தோனீசிய மக்களும் மிக எளிய மக்கள். மிகச் சாதாரண மனிதர்கள். போதிய கல்வியறிவு பெறாத இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் கப்பலில் கூலிகளாக வேலை செய்ய வந்த தமிழர்களும், சீனாவிலிருந்து வணிகம் செய்ய வந்த சீனர்களும், விவசாயிகளாக தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மலாய் மக்களுமாவர். இத்தகையோரே பெரும்பான்மையினராக  இந்த மரணப்பாதையில் பணியாற்ற கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஆங்கிலமும், ஜப்பானிய மொழியும் தெரியாது. கல்வி அறிவு என்பதும் மிகக் குறைவு. ஏழைகளான இவர்களில் பெரும்பாலோர் மெலிந்த உடம்பினர்.

    முதலில் ஜப்பானியப் படைகள் இப்போர் கைதிகளையும் ஆசிய கூலிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த அறிவித்து இவர்களைக் கொண்டுவந்தபோது இவர்கள் எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை நம்ப வைத்து அழைத்து வந்தனர். தரமான இருப்பிடம், நல்ல உணவு ஆகியவையும் ஆரோக்கியமான வேலை சூழலும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை தந்திருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே ஜப்பானியப் படைகளின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து விட்டது.

     unnamed

    டச்சு போர்க் கைதிகள் – பல நாட்கள் போதிய உணவு இல்லாமையினாலும் கடுமையான உழைப்பினாலும் மெலிந்து காணப்படுகின்றனர்

    இப்போது நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி இந்த மரணப்பாதை அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த 180,000 ஆசிய கூலிகளில் 90,000 பேர் 1942லிருந்து 1943க்குள் இறந்து போயினர். இந்த கொடூர நிகழ்விற்கு முழுக்காரணமும் ஜப்பானியப் படைகளின் கொடுமையான பணியிட நடைமுறைகள் தாம்.

    சுகாதாரமற்ற குடிசைகளில்  நூற்றுக்கணக்கானோரை திணித்து தங்க வைத்து அவர்களது உடல் நிலை மோசமான நிலையிலும் பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டனர் என்பதை அருங்காட்சியகத்தின் குறிப்புக்குக்களிலிருந்து காணமுடிகின்றது. சுகாதார கேடு விரைவாகப் பரவிய நிலையில் ஒரு காலகட்டத்தில் மலேரியா நோய் பரவ,  கூட்டம் கூட்டமாக இவர்கள் இறந்து போயிருக்கின்றனர் இந்த 2 வருட காலத்தில் (1942-1943).

    வேலை.. வேலை வேலை.. இதுவே முக்கிய நோக்கம். மழை வெயில் என்ற பாரபட்ஷம் இல்லாமல் நேரம் காலம் வரையறை இல்லாமல் உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே. பலர் காலரா வந்தும், கடுமையாகத் தண்டிக்கப்பட்டும் இறந்து போன போது அவர்களை முறையாகப் புதைக்காமல் காடுகளில் தூக்கிப் போட்டு விட்டு செல்வார்களாம். அந்தப் பிணத்தின் நாற்றம் அழுகிப் போன சடலத்தைச் சுற்றி மொய்க்கும் ஈக்களும் உயிருடன் வாழும் ஏனைய கூலிகளின் கூடாரத்தையும் வந்து பார்த்து நோய்களைப் பரப்பிச் சென்றதன் விளைவாக வரிசை வரிசயாக இம்மக்கள் இறந்து போயினர். இவர்களது சடலங்களை மரணப்பாதை வழியில் சில இடங்களில் கூட்டமாகக் கொட்டி புதைத்து வைத்து தங்கள் பணியைத் தொடர்ந்தது ஜப்பானியப் படை.

    warm1

    நினைவு மண்டபத்தில் உள்ள தனித்தனி நினைவுக் கற்கள் (டிசம் 2013)

    இறந்து போன 12,399 ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, அமெரிக்க, டச்சு போர் கைதிகளுக்காவது இப்போது அவர்கள் ஒவ்வொருவர் பெயரையும் நினைத்துப் பார்க்க என்று காஞ்சனாபுரியில் மிகப்பெரிய நினைவு மண்டபமே உள்ளது. இங்கு இறந்த இவர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவுக் கல் அமைத்து வைத்திருக்கின்றனர். அந்த நிலை கூட ஆசிய கூலிகளுக்கு இல்லை.

    அதிகாலை, மதியம், மாலை இரவு என ஓய்வு என்பதே இல்லாமல் ரயில் பாதை அமைக்கும் பணியில் போர் கைதிகளும் கூலிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில் சிரமமே ஏற்பட்டிருக்கின்றது. பல வேளைகளில் கொஞ்சம் அரிசி சாதம் மட்டுமே என்ற நிலையிலேயே இவர்கள் நாட்களை கடக்க வேண்டிய சூழல். இது  2 ஆண்டுகாலம் தொடர்ந்திருக்கின்றது. நோயால் வாடியவர்களுக்கு மருத்துவ உதவிகளோ அதனை வழங்க எந்த வசதிகளுமோ கூட ஏற்பாடு செய்யப்படவில்லை.

    unnamed (1)

    போர் கைதிகளாக வந்த பணியாளர்கள், போர் கைதிகள் விதிப்படி தங்கள் குடும்பத்தாருக்கு தங்கள் நலனை விவரித்துக் கூறி கடிதம் அனுப்பி வைக்க சட்டப்படி அனுமதி உள்ளது.  அப்படி கடிதம் அனுப்ப செய்த முயற்சிகளில் அஞ்சல் அட்டைகளை ஜப்பானியப் படைகளே இவர்களை உண்மை நிலமையைக் கூற விடாத படி செய்து பொய் விபரங்களை உட்புகுத்தி இவர்கள் இங்கு நலமாக இருப்பது போல  எழுத வைத்து அனுப்பி வைப்பார்களாம். இப்படி அஞ்சல் செய்யப்பட்ட அஞ்சல்அட்டைகளில் சில இப்போர் கைதிகளின் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நல்ல உடல் நிலையில் இருப்பதாக வந்த அஞ்சல் அட்டையை பெற்றவர்கள் கூட அதே நபர் இறந்து போனசெய்தியறியாது இருந்திருக்கின்றனர் 2ம் உலகப் போர் முடியும் வரை. எவ்வளவு கொடுமையான நிலை ? நினைக்கும் போதே திகைப்பாகத்தான் இருக்கின்றது.

    மலாயாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணியாளர்கள் உண்மையாகவே தாம் எங்கே செல்கின்றோம் என்ற விபரங்கள் கூட மறைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு தாய்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களே. மலேசியாவின் கெடா மானிலத்திலுள்ள அலோர் ஸ்டார் காடுகளில் பணிபுரிய அழைத்துச் செல்வதாகச் சொல்லி ஏமாற்றி ஜப்பானியப் படை ஏஜெண்டுகள் இவர்களைத் தாய்லாந்தின் காஞ்சனாபுரிக்கு அழைத்து வந்தது. இப்புதிய வேலையில்  நல்ல தங்கும் வசதி, நல்ல உணவு உயர்ந்த  வருமானம் எல்லாம் கிடைக்கும் என்று ஏமாற்றியே இவர்கள் அழைத்து வரப்பட்டனர். ஆனால் உண்மை அதுவல்லவே!

    தொடரும்…

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 105

     

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை


    திருவரங்கத்தில் சாரணர் தோன்றுதல்

    அப்போது ஒரு நாள்
    ஆற்றின் நடுவே அமைந்திருந்த அரங்கத்தில்
    வேறெங்கும் காணப்படாத தன்மையுடனும் அழகுடனும்
    தனித்தனியாக வளைந்த
    மூங்கில் வேலிகளால் அடைக்கப்பட்ட
    பூஞ்சோலை ஒன்று இருந்தது.
    தேவர்களும் வந்து உறைவதற்கு விரும்பும்
    மலர்களின் மணம் வீசும் ஓர் இடத்தில்
    சாரணர்கள் வருகை புரிவதற்காகவென
    உலக நோன்பிகள் ஒருங்குகூடி அமைத்திட்ட
    ஒளிபொருந்திய சிலாதலம் ஒன்று இருந்தது.

    அதன் மீது
    அருகதேவன் அருளைப் பெற்ற
    அதிசயங்கள் மூன்றும் தப்பாத உண்மையுடைய
    தருமம் கூறும் சாரணர் சிலர்
    பட்டினப்பாக்கத்தை விட்டு வந்து
    இவர்கள் முன்னிலையில்
    அச்சிலாதலத்தின் மேல் தோன்றினர்.

    மூவரும் சாரணரை வழிபடுதலும், அச்சாரணர் அறிவுரை பகர்தலும்

    சாரணரைக் கணடதும் அம்மூவரும்,
    “யாம் முன்செய்த பழவினைகள் முற்றும் கெட்டழிவதாக”
    என்று மனத்துள் வேண்டியபடி
    சாரணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

    அம்மூவரும் அங்கே வருவதற்குக்
    காரணமாய் அமைந்த பழவினையையும்
    அவ்வினைப்பயனால் அவர்களுக்கு
    மேலும் நேரவிருக்கும் துன்பங்களையும்
    உடனே உணர்ந்தான் சாரணத்தலைவன்
    முக்காலும் உணரும் தன் ஞானத்தால்..

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 156 – 167
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • “ஆணிவேர்”

    தமிழ்த்தேனீ

     

    ரொம்பக் குழப்பம்.. இல்லை இனி குழப்பமே இல்லை, தெளிவுதான், இனி வாழ்க்கையில் எந்தக் கடவுளையும் நம்பப் போவதில்லை, கும்பிடப் போவதே இல்லை தீர்மானமான முடிவுக்கு வந்திருந்தார் சபேசன். ஏன் ஏன் இவ்வளவு விரக்தி. எதனால் வந்தது இப்படி ஒரு நிலை? யோசித்து யோசித்து மனம் வெறுத்துப் போனது அவருக்கு.

    ஆமாம் வாழ்க்கையில் ஒவ்வொரு படி ஏறும் போதும் இறைவா நீயே துணை என்று அவர் கடவுளை நினைக்காத நேரமே இல்லை. காலையில் எழுந்தவுடன் அவர் படுக்கையின் எதிரே இருக்கும் கடவுள் படத்தில் தான் முழிப்பார். அந்தக் கடவுளைப் பாராமல் மற்ற எதையுமே பார்க்க மாட்டார்.

    இரவு படுத்துத் துங்கும்போது மானசீகமாக எல்லாக் கடவுளரையும் கும்பிட்டுவிட்டு உறவினர் அத்துணை பேரையும் மனப்பாடமாக சொல்லி எல்லோரையும் நல்லா வைய்யின்னு வேண்டிக்கிட்டுத்தான் தூங்கப் போவார்.

    ஆன்மீகம் ஆன்மீகம் என்று எப்போதும் ஆன்மீகத்தில் ஆழ்ந்து கடவுளைக் கும்பிட்டு கும்பிட்டு ஒரு சில நேரங்களில் அவருக்கே தோன்றும் நாம் அதிகமாக கடவுளக் கும்பிடுகிறோமோ என்னும் அளவுக்கு கடவுள்களைக் கும்பிட்டு ஆயினும் அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று நினைத்து என்ன உபயோகம் நடப்பதெல்லாம் பார்க்கப் பார்க்க மனம் வெறுத்துப் போயிற்று அவருக்கு.

    அவருக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று எங்குமே யாருமே பார்க்கவில்லை. எங்கே போனாலும் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் அவரைக் கேவலமாகப் பார்ப்பதும். அவரை மட்டும் மட்டம் தட்டுவதுமாகவே வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

    கடவுளைத் திட்டுபவன், கடவுளை மறுப்பவன் எல்லா இட்த்திலும் முன்னே இருக்கிறான், அவந்தான் முன்னுக்கு வருகிறான். கடவுளரின் கோயில்களிலே கொள்ளை அடிப்பவர்கள் உயர் பதவியிலே இருக்கிறார்கள். கடவுளுடைய கோயிலைக் கொள்ளை அடிப்பவர்களைக் கூட தண்டிக்காமல் கடவுள் வெறுமனே இருக்கிறான். என்ன ஆயிற்று?

    அவனுக்கென்று ஏற்படுத்தி வைத்திருக்கும் உண்டியலை ஒருவன் உடைத்து பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போகிறான். அந்த உண்டியலைக் காவல் காக்க இருக்கும் கவலரைக் கொலை செய்துவிட்டு, இத்தனையையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறானே கடவுள். கடவுளுக்கே சக்தி போய் விட்டதா? எல்லோரையுமே காக்கும் சக்தி கொண்ட கடவுளுக்கு தன்னைத் தானே காத்துக்கொள்ளும் வலிமை கூட குன்றிப் போய்விட்டதா?

    காலமெல்லாம் இறைவா!.. இறைவா!.. என்று வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு கூட கருணை காட்டாமல், யார் அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவனுக்கு எல்லா வித வசதிகளும் செய்து கொடுத்து தன்னருகே நிற்க வைத்து மாலை போட்டு, அருளுகிறானே.

    கோயில்களிலும் அதிகமாகப் பணம் யார் கொடுக்கிறார்களோ அவருக்குத்தானே முதல் மரியாதை கிடைக்கிறது? பணம் இருந்தால் எப்படிப் பட்ட குற்றத்தையும், கொலைகளையும் செய்துவிட்டு சுதந்திரமாக இருக்கிறான் மனிதன்.

    ஒரு வேளை கடவுளுக்கே புரிந்துவிட்டது போலும் உலகத்திலே பணம்.. பணம்.. பணம் அது இல்லாவிடில் மதிப்பே கிடையாது என்று. ஒவ்வொரு இடத்திலும் நியாயமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகளையும், மரியாதையையும் எந்தத் தகுதியும் இல்லாதவருக்கே கொடுத்து, அந்தத் தகுதி இல்லாத மனிதர்கள் இவரையே கேவலமாகப் பார்த்து எள்ளி நகையாடச் செய்கிறானே, எந்த இடத்துக்குச் சென்றாலும் பாதகம் செய்யும் மனிதர்களுக்கே பதவியும் மரியாதையும் தந்து உண்மையான பக்தி செய்பவரை அவமானப் படுத்துகிறானே. இப்படி இருந்தால் எப்படி பக்தி வளரும், எப்படிக் கடவுளை மக்கள் நம்புவார்கள். அவருக்கு சுத்தமாகவே நம்பிக்கை போய்விட்டது. கடைசீ வரையில் எல்லாம் உனக்குத்தான் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு ஒரே அடியாக அடித்துக் கீழே தள்ளி அதள பாதாளம் வரையில் அழுத்தி மேலே சுற்றிலும் மற்றவர்கள் நின்று அவரை ஏளனப் படுத்தி கெக்கெலி கொட்டிச் சிரிக்க வைக்கிறானே.

    இனி இவனை எப்படி நம்புவது. நாம் எடுத்த முடிவுதான் மிகச் சிறந்த முடிவு. இனி இந்தக் கடவுளை நம்பப் போவதில்லை.கும்பிடப் போவதில்லை. தீர்மானமாக முடிவெடுத்து நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தார் சபேசன்.

    சொல்லி வைத்தாற்போல் மறு நாளிலிருந்து அவருக்கு வாழ்க்கையில் எல்லாமே வெற்றிகள்தான், ஆமாம் எங்கோ செல்பவர் கூட வலிய வந்து அவருக்கு உதவி அவருடைய எல்லாக் காரியங்களிலும் அவருக்கே வெற்றி வர வழி செய்கிறார்கள். அப்பாடா ! சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்தோம். இனி இந்தக் கடவுள் வேண்டாம் நம்முடைய மன உறுதியே போதும். அவருக்கு மனம் மிகத் தெளிவாக இருந்தது.

    அன்று அவருடைய ஆத்ம நண்பர் வெங்கடாசலம் வருகிறான். இன்று முழுவதும் அவனோடு கழிக்க வேண்டும். ஆமாம் மனதிலே உற்சாகம், எடுத்த காரியம் யாவினும் வெற்றி. இனி என்ன வேண்டும்

    என்ன சபேசன் நல்லா இருக்கியா என்று கேட்டபடி வந்தார் வெங்கடேசன்.
    வா வா நல்லா இருக்கேன்,எனக்கென்ன குறைச்சல் இந்தக் கடவுளோட அருளே வேண்டாம்னு என்னிக்கு முடிவெடுத்தேனோ அன்னிலேருந்து நல்லா இருக்கேன் என்றார். என்ன சபேசன் என்ன ஆச்சு உனக்கு. ஏன் இப்பிடிப் பேசறே என்றார் வெங்கடேசன்.

    பேச்சு மட்டும் இல்லே, இனி எல்லா செயலும் என்னை நம்பித்தான், இனி எந்தக் கடவுளையும் நம்பப் போவதில்லைன்னு தீர்மானமே எடுத்துட்டேன். அதான் இப்போ நல்லா இருக்கேன் என்றார்.

    அன்று இருவரும் மிக மகிழ்ச்சியோடு அவர்களுடைய இளமைப் பருவங்களையும் நினைத்து ,அதைப் பற்றி விவாதித்து பலவகை உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக இருந்தனர், மாலை ஐந்து மணி சரி சபேசா நான் இன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன், அதுவும் என்னோட எல்லா வேலைகளையும் ஒதுக்கிட்டு இவ்ளோ நேரம் மகிழ்ச்சியா பேசிகிட்டு இருந்தியே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி , சரி நான் கிளம்பறேன் என்றவர்,

    சபேசனையே அவரையே உற்றுப் பார்த்து, சபேசன் என் மனசிலே ஒண்ணு தோணுது அதைச் சொல்லிட்டுப் போறேன். இப்போ நீ எல்லாக் காரியத்திலேயும் வெற்றி அடையறே, மகிழ்ச்சியா இருக்கே. இதுக்கெல்லாம் நீ கடவுளை நம்பாம அவரைக் கும்பிடாம இருக்கியே அதுதான் காரணம்னு நெனைக்கிறியா?

    ஒரு வேளை இவ்வளவு நாள் பக்தியா கடவுளைக் கும்பிட்டியே அதனோட விளவாக் கூட இருக்கலாம் இல்லையா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், விதை போட்ட உடனே பலன் வருமா. அந்த விதை செடியா வளர்ந்து மரமா ஆகி அதுக்கப்புறம் பூத்துக் காய்ச்சு அதுக்குப் பின்னாடிதானே கனியாப் பலன் தருது

    நல்ல கனியற நேரத்திலே நீ தப்பான முடிவெடுத்துட்டு, அந்தத் தப்பான முடிவுனாலேதான் இந்தக் கனி எனக்கு கிடைச்சிருக்குன்னு நெனைக்கிறியோன்னு எனக்கு தோணுது.

    சரி எப்பிடி இருந்தாலும் நீ நம்பினாலும் நம்பாம இருந்தாலும் கடவுளுக்கு ஒரு நஷ்டமும் இல்லே, என்னைப் பொறுத்த வரை நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும். கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கும் தெரியலே, ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியுது. எனக்கு கடவுளை விட நீதான், உன்னோட நட்புதான் முக்கியம், உன்னோட நலன்தான் முக்கியம், சரி நான் வரேன் என்றபடி கிளம்பினார்… வெங்கடேசன்..

    மறுபடியும் குழம்ப ஆரம்பித்தார்!…சபேசன்

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (9)

    ராமஸ்வாமி ஸம்பத்

    இதுவே ராமாயண காவியத்தில் சுந்தர காண்டத்தின் துவக்கம். இதில் சுந்தரனான அனுமனே பிரதான பாத்திரம். இக்காண்டத்தின் இறுதியில்தான் ராமன் வருகிறான். ஆகவே இதனை சுந்தரனின் காண்டம் என்றும் சொல்லாம். ஏழு காண்டங்கள் கொண்ட இக்காவியத்தில் இந்த ஒரு காண்டத்தைத் தவிர ஏனைய காண்டங்கள் காரணப்பெயர் பெற்றவை. இதற்கு மட்டும் ஏன் ‘சுந்தர காண்டம்’ எனப்பெயர் சூட்டப்பட்டிருகிறது என்பதனைச் சற்று ஆராய்வோமா?

    ‘சுந்தரம்’ எனும் வடமொழிச் சொல்லுக்கு ’அழகு’ என்று பொருள். இக்காண்டத்தைப் பற்றி ஒரு வடமொழி ஸ்லோகத்தினை இங்கு நினைவுகூர்வது பயனளிக்கும்.

          ’சுந்தரே சுந்தரோ ராமஹ சுந்தரே சுந்தரி கதா

          சுந்தரே சுந்தரி ஸீதா சுந்தரே கிம் ந சுந்தரம்?’

    [சுந்தர காண்ட்த்தில் சுந்தரன் ‘தோள் கண்டார் தோளே கண்டார், தாள் கண்டார் தாளே கண்டார்’ எனப் பார்த்தவர்கள் பரவசிக்கும் எழிலுடை ராமன். சுந்தர காண்டமே ஒரு கவின்மிகு கதை. சுந்தர காண்டத்தின் செளந்தர்ய தேவதை ஸீதை. சுந்தரகாண்டத்தில் எதுதான் அழகில்லாதது?]

    விஸ்வகர்மாவால் குபேரனுக்காக நிர்மாணம் செய்யப்பட்ட எழில் கொஞ்சும் இலங்கை நகரையும், மலர்கள் பூத்துக்குலுங்கும் அசோகவன பூம்பொழில்களையும் வர்ணிப்பதாலும்; அனுமன் தான் முன்பின் பார்த்திராத ஸீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் அழகான அணுகுமுறையாலும்; ராமனின் பேரெழிலை அழகின் இருப்பிடமும் அவநி தனையையுமான ஸீதையிடம் அனுமன் சிலாகித்துக் கூறுவதாலும்;  அழகுக்கே அழகூட்டும் ஸீதையின் கற்புநெறியை ராமனிடம் விவரிப்பதாலும் இக்காண்டத்திற்கு ’சுந்தர காண்டம்’ எனப் பெயர் சூட்டியிருப்பது முற்றிலும் பொருத்தமானதே.

    மஹேந்திரகிரியிலிருந்து கடலைத்தாவி அனுகூல சத்துருக்களான மைனாக பர்வதம் மற்றும் சுரஸை செய்யும் இடர்ப்பாடுகளையும் பிரதிகூலம் செய்ய விழைந்த அரக்கி ஸிம்ஹிகையின் முயற்சியையும் முறியடித்து அனுமன் இலங்கைத் தீவினை அடைந்தான்.

    இலங்கைக் கரையில் குதித்ததும், தன் உருவை சிறிதாக்கிக்கொண்டு மதில்மேல் நடக்க ஆரம்பித்தான். திடீரென்று யாரோ தன் வாலைப்பற்றி இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப்பார்த்த அனுமனுக்கு அந்நாட்டின் காவல் தெய்வமான லங்கிணி கண்பட்டாள். மிக்க உயரத்தோடும் சினத்தினால் சிவந்த கண்களோடும் நீண்ட தெத்திப்பற்களோடும் திறந்த வாயிலிருந்து தொங்கும் நீண்ட நாக்கினாலும் பரட்டைத் தலையோடும் அவள் பயங்கரமாக இருந்தாள்.

    ”மிக தைரியமாக இலங்கை நகருக்குள் நுழையும் நீ யாரடா?” என்று அவள் கர்ஜித்தாள்.

    “எப்படியோ இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். எனக்கு இலங்கை அரசனின் மாளிகையையும் இந்த அழகான நகரத்தையும் காண வெகு நாட்களாக ஆவல். ஆகவே என்னை உள்ளே போகவிடு” என்றான் அனுமன்.

    பேய்போல் சிரித்த லங்கிணி, “அப்படியா, இங்கே வா” என்று கூறி அவனைத் தரதரவென்று இழுத்து அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். இதனை எதிர்பார்க்காத அனுமன் பொத்தென்று கீழே வீழ்ந்தான். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு தன் வலது கை முஷ்டியால் அவள் முகத்தின்மீது பலமாக குத்தினான்.

    வலிபொறுக்காமல் நிலைகுலைந்து வீழ்ந்த லங்கிணிக்கு பழைய நினைவு ஒன்று திரும்பியது. ’ஆஹா! பிரமதேவன் கூறியதுபோல் ராவணனின் இறுதிகாலம் நெருங்கிவிட்டதுபோலும்’ என நினைத்து, அனுமனை வணங்கி, “வானரனே! உனக்கு மிக்க நன்றி. உன்னால் எனக்குச் சற்றும் பிடிக்காத இந்த சேவகத்திலிருந்து விடுதலை கிடைத்துவிட்ட்து” என்று பரிவோடு கூறினாள். வியப்போடு நோக்கிய அனுமனிடம் தன் கதையைச் சொல்லத்தொடங்கினாள்

    ….நான் ஒரு தேவமாது. விஸ்வகர்மாவால் குபேரனுக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த இலங்கை நகரத்திற்கு குபேரன் என்னை காவல் தெய்வமாக நியமித்தான். அவன் மாற்றுத் தாய் மகனான வலிமைமிக்க ராவணன் குபேரனைப் போரில் தோற்கடித்து இந்த ராஜதானியையும் அவனுடைய புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டான். ராவணனின் ஆக்கிரமிப்பைச் சகிக்காமல் நான் பிரமதேவனிடம் சென்று முறையிட்டேன். அவர், “லங்கிணி, நீ அங்கேயே காவல் தெய்வமாக தொடர்ந்து இரு” என்றார். ”எனக்கு பொல்லாத அரக்கனிடம் பணிபுரிய இஷ்டமில்லை” என்று சொன்னபோது, அவர் ”கவலை வேண்டாம். அவன் முடிவுகாலம் வந்ததும் நீ என்னிடம் வரலாம்” என்றார். “அது எப்பொழுது வருமோ?” என்ற என் வினாவிற்கு, பிரமதேவர், “எப்போது நீ ஒரு பலம்வாய்ந்த வானரனால் அடிபட்டுக் கீழே விழுகிறாயோ அப்போதே ராவணனின் முடிவு நெருங்கிவிட்டது என்பதனை அறிவாய். அதன்பின் நீ இங்கு வரலாம்” என்றார்….

    ”வானர நண்பனே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். நீ எதற்காக கடல்தாண்டி இங்கு வந்திருக்கிறாயோ அம்முயற்சி திருவினையாகும்”  என்று கூறி பிரமலோகத்திற்கு ஏகினாள் லங்கிணி.

    ’ராமனின் அருளால் இந்நகரத்தில் நுழையும் எனக்கு நற்சகுனங்கள் எதிர்ப்படுகின்றன’ என நினைந்தவாறு மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும், நறுமணம் கமழும் மலர்ச்சோலைகளையும், விதவிதமான பறவைகள் கூடி விளையாடும் நீர்நிலைகளையும் கண்டு, ‘இதைத்தான் சொர்க்கபுரி என்பார்களோ?’ என்று அனுமன் வியந்தான். எல்லா மாளிகைகளையும் தேடியபின், அனுமன் ராவணனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அந்தப்புரத்தில் மதிய இளைப்பாறிக் கொண்டிருக்கும் மந்தோதரியைக் கண்டு ஒரு கணம் அவள் ஸீதைதானோ என எண்ணினான். ‘என்ன விபரீதமான எண்ணம். என் அன்னை ஸீதாதேவி அரக்கர்கோன் அந்தப்புரத்தில் எவ்வாறு இருப்பாள்?’ என சமாதானம் செய்துகொண்டு தன் தலையில் ஒரு குட்டு வைத்துக் கொண்டான். மாலை வந்தது. ஸீதையை எங்கும் காணாமல், ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்தவாறு ‘இத்தனை முயற்சியும் வீண்தானா?’ என்ற வருத்தத்தோடு, ‘ராமா, என் தெய்வமே! இனி நீயே துணைபுரிய வேண்டும்’ என பிரார்த்தித்தான். அதன் விளைவோ என்னவோ, கிழக்கில் பூரணச்சந்திரன் எழுந்தான். அந்த ஒளியில் அனுமனுக்கு அசோகவனம் தென்பட்டது. ‘ஆஹா, இந்த இடத்தில் நாம் தேடவில்லையே’ என நினைத்து அங்கு சென்றான்.

    ஒரு மரத்தின் இலைகளிடையே தன்னை மறைத்துக் கொண்டு, ஸீதை அரக்கிகளிடையே படும்பாட்டைக் கண்டான். அவர்களை கொன்றுவிட்டு அன்னையைக் காக்கவேண்டும் என நினைத்தபோது ராவணன் அங்கு வந்து சேர்ந்தான்.

    வந்த அரக்கர் அரசன், ஸீதையை நோக்கி “என் மனத்தைக் கொள்ளை கொண்டவளே! என்னை ஏன் இப்படி வாட்டுகிறாய்? கடந்த பத்து மாதங்களாக உன் கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்? என் பத்து மணிமுடிகளையும் உன் பாதத்தில் வைக்க சித்தமாக இருக்கிறேன். என்னைத் தோற்கடிக்க மூன்று உலகங்களிலும் யாரும் இல்லை.  சாம கானம் செய்து சிவபெருமானின் அருள் பெற்று அவன் கொடுத்த வாளின் மூலம் எப்பேற்பட்ட எதிரியையும் என்னால் கொல்ல முடியும். நாடு கடத்தப்பட்டு படைபலம் ஏதுமில்லாமல் இருக்கும் உன் கணவனால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. அவனால் இந்த பலத்த பாதுகாப்போடு கூடிய இலங்கையை நெருங்கவும் முடியாது. அந்த மனித பூச்சியை மறந்து விடு. என்னைச் சேர். உன்னை மூவுலகுக்கும் ராணியாகச் செய்கிறேன்” என்றான்.

    அரக்கனின் முகத்தைக் கூட பார்க்காமல், ஒரு துரும்பினை இடையில் நட்டு அதனை நோக்கியவாறு ஸீதை பேசலுற்றாள்: “சாம கானம் செய்து சிவபிரானின் அருள் பெற்றதாக பெருமை பேசுகிறாய். சாம வேததைக் கற்றவன் இப்படி பிறன் மனவியிடம் தகாது நடந்து கொள்ளலாமா? உனக்கு நல்லறிவு புகட்டுவர் யாரும் இலங்கையில் இல்லையா? என் மணாளன் திருமாலை ஒத்தவர். உன்போன்ற நரிகளை எளிதில் வெல்லக் கூடியவர். அது தெரிந்துதான் அவர் இல்லாத போது துறவி வேடம் பூண்டு என்னை ஏமாற்றிக் கடத்திக் கொண்டு வந்துவிட்டாய் போலும். தான் ஒருவராகவே ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் படையாட்கள் கொண்ட உன் சகோதரர்களான கரன், தூஷணன் மற்றும் திரிசிரஸை எல்லாம் தவிடுபொடியாக்கியவர். உன் அழிவு காலம் நெருங்கி விட்டது. நீயும் உன் அரக்கர் குலமும் பிழைக்க வேண்டும் என்றால் என் நாதனிடம் என்னை ஒப்படைத்து சரண் புகுவாய்.” இவ்வாறு ராமனின் பராக்கிரமாத்தையும் சரண் புகுந்தவருக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையையும் பலவாறு விளக்கி ஸீதை விம்மிய வண்ணம் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.

    தசகண்ட ராவணன் முகங்கள் கோபத்தில் சிவந்தன. “என் சிறைக் கைதியாக இருந்தாலும் மூவுலகத்தையும் நடுங்க வைக்கும் என்னை மிகவும் அவமதித்து விட்டாய். இன்னும் இரு மாதங்கள் கெடு வைக்கிறேன். அதற்குள் உன் மனதை மாற்றிக்கொண்டு என் அந்தப்புரத்தைச் சேர்வாய். இல்லையேல் கெடு தீர்ந்தபின் நீ எனக்கு காலைச் சிற்றுண்டி ஆவாய். இதனை நினைவில் வைத்துக் கொண்டு ஒரு சரியான முடிவை நீ எடுக்கவேண்டும்” என்று உரத்த குரலில் கர்ஜித்துவிட்டு அங்குள்ள அரக்கிகளை நோக்கி, “நீங்கள் யாரும் உங்களுக்கு இட்ட பணியை சரியாகச் செய்யவில்லை. எப்படியாவது அவள் மனத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்” என்று அதட்டிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

    அவன் சென்ற பிறகு அரக்கிகள் ஸீதையிடம் ராவணனின் சிறப்பினை உயர்த்திப் பேசி, நைச்சியமாகவும் பயமுறுத்தியும் அவளை வழிக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். “நீ எம்மானை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாங்களே உன்னை விழுங்கி விடுவோம்” என்றாள் அவர்களில் ஒருத்தி. அப்போதே அங்கு வந்த திரிஜடை – ராவணனின் தம்பி விபீஷணனின் மகள் – அவர்களை அதட்டி, “கொடூர மனம் படைத்தவர்களே! வாயை மூடுங்கள். இன்னும் இரண்டு மாதங்களில் இலங்கையின் நிலை மாறுவது உறுதி. நேற்று பிரம்ம முஹூர்த்ததில் நான் ஒரு கனாக்கண்டேன். அதில் ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் மூவரும் அரக்கர் பரிவாரம் புடை சூழ உடலெல்லாம் சாம்பல் பூசிக்கொண்டும் கோணி ஆடை அணிந்துகொண்டும் தென்திசை நோக்கி செல்கின்றார்கள். ஸீதை மணாளன் இங்கு வந்து அவளை ஒரு விமானத்தில் ஏற்றி செல்கிறான். இக்கனவின் பொருளை உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன். ராமனின் வெற்றியும் ராவணனின் வீழ்ச்சியும் உறுதி. அப்போது உங்கள் நிலையை நினத்துப் பாருங்கள்” என்றாள். இதைக்கேட்ட அரக்கிகள் அச்சம் கொண்டு வெளியேறினார்கள். திரிஜடை விம்மி விம்மி அழும் ஸீதையைப் பரிவோடு தேற்றிவிட்டு தன் தந்தையின் மாளிகை சேர்ந்தாள்.

    தனித்து விடப்பட்ட ஸீதை துயரத்தில் ஆழ்ந்தவாறு தன் நிலை குறித்து ஆலோசனை செய்தாள்: ‘என் மனத்திற்கு இனியவரால் கடல் தாண்டி இங்கு வரமுடியுமா? அப்படி வந்து ராவணனைக் கொன்றாலும் அயலார் தேசத்தில் சிறைப்படுத்தப் பட்டிருந்த என்னை ஏற்றுக் கொள்வாரா? எது எப்படியானாலும் இரு திங்கள் கழித்து அந்த அரக்கனுக்கு சிற்றுண்டியாவதைவிட நான் ஏன் இப்போதே என்னை மாய்த்துக் கொள்ளக்கூடாது?’  மனத்தெளிவு கொண்டு ஸீதை அவ்வாறு செய்ய முற்பட்டாள்.

    மறைந்திருந்த அனுமன் அவள் குருக்கத்தி மரத்தின் மெலிந்த கிளை ஒன்றினைத் தன் கழுத்தில் சுற்றிக்கொள்வதைக் கண்டான். ‘ஐயகோ! இது என்ன விபரீதம்? அன்னை தற்கொலை செய்து கொண்டால் ராமன் உள்ளிட்ட அனைவரும் அவ்வாறே செய்வார்கள் அல்லவா? உள்ளம் நைந்த நிலையில் அன்னை எடுத்த இம்முடிவை தடுத்தே ஆகவேண்டும்’ என நினைத்து மெல்ல தன் இனிய குரலில் பேச ஆரம்பித்தான், “ராஜா தசரதோ நாம ரத குஞ்சர வாஜிமான்…”

    இதனைக் கேட்ட  ஸீதை, ’இந்த கடல்சூழ் இலங்கையில் என் மாமனைப் பற்றி ஏதோ விவரணை கேட்கிறதே’ என்று சுற்றிலும் நோக்கினாள். ’அன்னை தற்கொலை முயற்சியைச் சற்று நிறுத்திவிட்டு என் குரலைக் கேட்கிறாள்’ என ஊர்ஜிதம் செய்து கொண்டு அனுமன் தொடர்ந்தான்:

    “பலம் பொருந்திய மாபெரும் தேர் யானை குதிரை காலாட் படைகளைக் கொண்ட அயோத்தி மன்னன் தசரதனின் தவப்புதல்வனான ராமன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டி மகுடத்தைத் துறந்து இல்லாள் ஸீதை இளவல் லக்ஷ்மணனோடு பஞ்சவடியில் வனவாசம் செய்துகொண்டிருந்தான். அப்போது இலங்கை அரசன் ராவணன் வஞ்சகமாக ஸீதையைக் கடத்தி இங்கு சிறைப்படுத்தினான். இவ்விவரங்களை தசரதன் நண்பனான ஜடாயு எனும் பருந்தினிடமிருந்து தெரிந்து கொண்டு, சபரியின் ஆசியோடு தன்னைப்போல் மனைவியை இழந்து வாடும் வானர இளவரசன் சுக்ரீவன் நட்பை நாடி அவன் அண்ணன் வாலியைக் கொன்று அவனுக்குக் கிஷ்கிந்தை அரசு பதவி அளித்து அவன் மனைவி ருமையையும் மீட்டுத்தந்தான். சுக்ரீவன் ஆணைப்படி வானர வீரர்கள் நான்கு திக்குகளிலும் அன்னை ஸீதையைத் தேடுகின்றனர். தென்பகுதித் தேடலுக்கு அனுமன் எனும் பெயர்கொண்ட நான் நியமிக்கப்பட்டேன். ராமபிரானின் அருளால் நான் கடல் தாண்டி இங்கு வந்து அந்த கற்புக்கரசியைக் கண்டுகொண்டேன்.”

    இவ்வாறு கூறி அவன் நிறுத்தியதும், ஸீதை நான்குபுறமும் நோக்கி மரத்தின்மீது அமர்ந்திருக்கும் அனுமனைக் கண்டாள். ‘இது கனவா, உண்மையா?’ என்று நினைத்து, ‘கனவில் வானரத்தைப் பார்த்தால் அபசகுனம் என்பார்களே’ என்று கலங்கினாள். ‘இல்லை இது கனவல்ல. இதோ அவ்வானரன் கீழே இறங்குகிறானே. ஒருவேளை இது அரக்கர்களின் மாயையோ?’ என்று அச்சம் கொண்டாள்.

    அன்னையின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த அனுமன், “அம்மா! நான் ராமனின் தூதன். வாயு புத்திரனான என் பெயர் அனுமன். என்னை நம்புங்கள். தங்களுக்கும் அவர்க்கும் மட்டும் தெரிந்த சில நிகழ்வுகளை அவர் கூறியபடியே சொல்கிறேன். அப்போதாவது என்னைப் பற்றிய உண்மை தங்களுக்கு தெரியவரும்” என்று சொல்லி அவற்றை ஒன்றொன்றாக விவரித்தான். அவற்றில் ஒன்றினை பெரியாழ்வாரின் பாசுரத்தில் பார்ப்போமா?

    அல்லியம்பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம்

    சொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே!

    எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓரிட வகையில்

    மல்லிகை மாமாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

    [அல்லிமலர் மாலை போன்றவரே! மலர்க்கண்களையும் மடப்ப குணமும் உடைய மான் போன்றவரே! அடியேன் விண்ணப்பம் கேட்டருள்க. பெருமானும் தேவரீரும் தனியாக இனிதிருந்த இடத்தே, இரவிலே ஒரு மல்லிகை மாலை கொண்டு அவரைத் தேவரீர் கட்டியதும் ஓர் அடையாளம் ஆகும்]

    இங்கு ஒரு சிறிய விளக்கம். பஞ்சவடியில் ஒருமுறை அண்ணலும் அவளும் ஒரு போட்டியில் ஈடுபட்டனர். அதில் எவர் வெற்றி  பெறுகிறாரோ அவர் மற்றவரைக் ஒரு தூணில் கட்டவேண்டும். வெற்றிபெற்ற ஸீதை தன் மணாளனை கயிற்றினால் வலிக்க வலிக்கக் கட்டுவாளா? ஆகவே ஏகாந்தமான ஓரிரவில் யாரும் காணாவண்ணம் நீண்ட மல்லிகைச் சரம் ஒன்றினைக் கொண்டு அவனைக் கட்டினாள்.

    இப்படி பல அந்தரங்க அடையாளங்களைக் கூறியதோடு அனுமன் ராமன் கொடுத்த மோதிரத்தையும் அவளிடம் பவ்யமாகக் கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட ஸீதை உள்ளத்தில் மகிழ்ச்சி அலைமோத அனுமனை மனமார ஆசீர்வதித்து ”என் துயரைத் துடைத்த நீ நீடுழி வாழ்வாயாக!” எனறாள். அனுமனை ‘ஜானகி சோக நாசனன்’ என்று பக்தர்கள் போற்றுவார்கள். அவன் பெருமைதான் என்னே! இப்புவியில் ஆண் மக்கள் அனைவரும் அனுமனைப்போல் அபலை நங்கையரின் துயர் நீக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    அதன் பின்னர் ஸீதை தன் கூந்தலில் இருந்த  சூளாமணியை அனுமனிடம் கொடுத்து அதனை ராமபிரானிடம் சேர்க்குமாறு வேண்டினாள். “என் மணாளனிடம் இன்னும் ஒரே மாதம்தான் அவர் வருகைக்குக் காத்திருப்பேன் என்று சொல்” என்றாள்.

    இதற்கான அனுமனின் பதிலை ஆதிகவி வால்மீகி மொழியில் கேட்போம்:

    நிவ்ருத்த வனவாசம் தம் த்வயா ஸார்தம் அரிந்தமம்

    அபிஷிக்தம் அயோத்யாயாம் க்‌ஷிப்ரம் த்ரக்ஷ்யஸி ராகவம்.

    [”மாது சிரோமணியே! உனது கணவன் சத்ருக்களை அழிக்கப்போகும் பராக்ரமசாலி. அவன் வெற்றி பெறுவான். நீ அவனுடன் இணைவாய்; வனவாசம் பூர்த்தியாகி வெற்றி வீரனாக அயோத்தி திரும்பியதும் நீங்கள் இருவரும் அரியணையில் இணைபிரியாது வீற்றிருக்க பட்டாபிஷேகம் நிகழப் போகிறது.” தீர்க்க தரிசனத்தோடு வெகு அழகாக  அனுமன் ராமன் முடிசூடப்போவதை அன்னையிடம் சொல்லிவிட்டான். சுந்தரம் பொருந்திய ராமனின் பட்டாபிஷேகத்தை முன்கூட்டியே சுந்தரமாக நடத்திவிட்டான் சுந்தர காண்ட நாயகனான சுந்தரன் எனப்பெயர் கொண்ட அனுமன்].

    பின்னர் அசோகவனத்தை நீங்கி இலங்கை மன்னனின் பலத்தை அறிய நகருக்குள் சென்றான்.

    (​தொடரும்)

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​6​ ​

     

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்


    jj 1jj2​​
    jj3

     

    ​தகவல் :

     

     

     1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா – கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    கவிஞர் காவிரி மைந்தன்

    கலைகள் என்றதுமே நம் நினைவிற்கு வருவது சிலைகள்! சிலைகள் என்றதும் சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய பல்லவ ராஜ்ஜியமம் நெஞ்சில் நிழலாடுகிறது! காஞ்சியைத் தலைநகரமாய்க் கொண்ட பல்லவ மன்னன் மகேந்திர பல்லவன் மகன் நரசிம்மராஜ பல்லவன் சிற்பக்கலை ஆர்வத்திற்கு தக்கதொரு எடுத்துக்காட்டு! மாமல்லன் என்னும் அவன் நினைவால் உருவான மாமல்லபுரம்!

    காலவெள்ளத்தால் சிதைந்துவந்த சிற்பங்களை மத்திய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை கண்டெடுத்து காத்து வருதல் பழமையைப் போற்றிப்பாதுகாத்திடவும், வருகின்ற தலைமுறையினர் நம் முன்னோர் பற்றி அறிந்திடவும் கலை, பண்பாடு இவற்றில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கினர் என்பதற்கு சரித்திர சான்றுகாட்ட ஏதுவாக இருக்கும்!

    பள்ளிகளில் நாம் படிக்கும்போது குழந்தைகளுக்கு புரியும்வகையில், மிக மிக எளிய சொற்களைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்காகவே பாடல்கள் இயற்றித் தருவதில் பெயர்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் வா ராஜா வா திரைப்படத்திற்காக வடித்துத் தந்த பாடல்!

    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா.. அந்தக்

    கதை சொல்ல வந்தேனே சின்ன ராஜா.. வா.ராஜா வா..

    ஒட்டுக்கல்லை சேர்க்காம..

    ஒரே கல்லை குடைஞ்செடுத்து

    கட்டி வச்சா மண்டபத்தை பல்லவராஜா

    அதைக் கச்சிதமா சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    சொல்லு ராஜா சொல்லு..

    பல்லவ மன்னவனின் படைப்பில் உருவான மகாபலிபுரத்தின் சிறப்புகளை எவரும் உணரும் வண்ணம் பட்டியலிடுகிறது இப்பாடல்!

    கடலோரம் கோபுரம் மலைமேலே மண்டபம்

    எப்படித்தான் செஞ்சானோ பல்லவராஜா..

    அதை அப்படியே சொல்ல வந்தேன் சின்ன ராஜா

    ஆமா ராஜா ஆமா…

    சிற்பியரைக் கூட்டிவந்து சிற்பங்களை செய்யச்சொல்லி

    கற்பனையைக் காட்டிவிட்டான் பல்லவராஜா

    அந்த அற்புதத்தை சொல்ல வந்தேன் சின்ன ராஜா..

    வா.ராஜா வா..

    ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் குழந்தை அழ.வள்ளியப்பா அவர்கள் எழுதிய இப்பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எல்.ஆர். ஈஸ்வரி குரல் கொடுத்திருக்கிறார் பிள்ளைத்தமிழாய்!

    ஒரு வரலாற்றைக்கூட நான்கே சரணங்களில் வார்த்தளித்துக் கொடுத்திட இயலும் என்று எடுத்துக்காட்டும் வல்லுனராய் கவிஞர் குழந்தை அழ.வள்ளியப்பா!

    Share
  • வார ராசிபலன் 20-01-14-26-01-14

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

    ரிஷபம்: இந்த வாரம் பெண்களுக்கு பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர்கள் அவ்வப்பொழுது பிள்ளைகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள் சுய தொழில் புரிபவர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய வாரம் இது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் வாய்ப்பு உள்ளதால், எதிலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் தெளிவான முடிவு எடுத்து உயர் அதிகரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். .

    மிதுனம்: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள்சிறந்த பணியாளர்கள் உங்கள் வசம் இருக்க, வியாபாரிகள் அவர்களுக்கு வேண்டிய சலுகைகளை வழங்குதல் அவசியம். பணியில் இருப்பவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொண்டால் வேலைகள் எளிதில் முடியும். பொது வாழ் வில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை நிலவும். எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல அறிமுகங்கள் கலைஞர்களின் மன சந்தோஷத்தை அதிகரிக்கும். . மாணவர்கள் தீய நட்பைப் புறக்க ணித்தால், வாழ்க்கை செம்மையாகத் திகழும்.

    கடகம்: . கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டார தொடர்பு லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாண ங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், கலைஞர்கள் வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோ பாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய் திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக்காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள். பெண்கள் உறவுகளால், சில அசௌகரியங்களை சகித்துக் கொள்ளும் நிலைக்கு உள்ளாகலாம்

    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும்  பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும் கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிக தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது.

    கன்னி:. பெண்கள் உங்கள் பிரச்னைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது.வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளை சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையை சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும் நிலை இருப்பதால், வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது அவசிய மாகும்.மாணவர்கள் பல் மற்றும் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், ஆரோக்கியம் சீராக இருக்கும் .

    துலாம்: . பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். அலுவலகத்தில் நிலவும் போட்டியை சமாளிக்க அதிக உழைப்பும், நேரமும் தேவைப்படும்.வியாபாரிகள் சலுகைகளையும், வாய்ப்புகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ள, பொறுமையைக் கடைபிடியுங் ள்.வழக்கு விவகாரங்களில், நேரடி கவனம் செலுத்தினால், அவை சாதகமாய் மாறும் வாய்ப்புக்கள் கூடுதலாகும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம். இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடப்பது நல்லது

    விருச்சிகம்: இயந்திரங்களை இயக்குபவர்கள், தகுந்த பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுவது நலம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் , குடும்ப அமைதிக்கு பங்கம் நேராதவாறு திட்டமிட்டு பணிகளை முடித்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள்.அமைதியான சூழலில் அநேக பணிகளை முடிக்க முடியும். பெருந்தொகையைக் கையாளுபவர்கள் கவனமாக நடந்துகொண்டால்,உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் நேராது. பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க் எதிலும் நிதானமாகசெயல்படுவது அவசியம்.

    தனுசு: கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலி ருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலைதான்.

    மகரம்: பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்களை பத்திரமாக வைப்பது அவசியம். வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. மேலும் உங்களின் சரக்குகளுக்குத் தேவையான பாதுகாப்பைப் பலப்படுத்துவது அவசியம்..  மாணவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.

    கும்பம்: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்கு தேவையான பணத்தை ஒதுக் கிவிட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம்.பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.அதிகாரி ளால் ஏற்பட்ட கெடுபிடிகள் தளர்ந்து விட்டாலும், பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட பொறுப்பில் கவனமாக இருந்தால், வேண்டிய சலுகைகள் பெறலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். பங்குச் சந்தையில் அதிக பணம் முடக்க வேண்டாம்.

    மீனம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப் பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்னைகள் தானே குறைந்து விடும்.

    Share
  • அண்டார்க்டிகாவின் பூதப்பெரும் பனிமதில் [Glacier] சரிந்து மீளா நிலைக்குத் தேய்கிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
     

    Antarctica glacier melting

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AmQUSAVQjXs

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=suqptBOs2Yg

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QQn3kdCHPwM

    [January 12, 2014]

    சூட்டு யுகப் பிரளயம்
    காட்டுத் தீ போல் பரவுது !
    வீட்டைப் பாதிக்க வருகுது !
    வான்தொடும் பனிச்சுவர்  இடிந்து
    கூன் விழுந்து குறுகிப் போனது !
    யுக யுகமாய் வந்து போகும்
    பருவ கால நிகழ்ச்சிகள்
    விதி மாறிச் சுற்றியக்கம்
    சுதி மாறிப் போயின !
    பழைய பனிச்சிகரம் உருகிக்
    குளிர்  காலத்தில்
    புதுச் சிகரம் வளர வில்லை !

    பூமி அச்சு, சுழல்வீதி பிறழ்வதால்
    பரிதிக் கதிர்கள் பட்டு
    துருவப் பனித் தளங்கள்
    தடம் மாறிப் போயின !
    கடல் மட்டம் ஏறிக்
    கரைகள் மூழ்கிப் போயின !
    துரித மாக வருகுது,
    பூத வடிவில்  உருவெடுத்து
    பாதகம் செய்ய
    சூட்டு யுகப் பிரளயம் !

    +++++++++++++++++++++++

    What is melting the ice

    “அண்டார்க்டிகா பைன் தீவின் பனிச்சுவர் சுயமாய்த் தேயும் முறையில், சரிந்து போய்ச்  சிதைவில் மீளாத நிலைக்கு மெலிந்து வருகிறது.”

    கயல் துராண்டு [பனிச்சரிவு ஆய்வாளி, பிரென்ச் கிரெனோலில் ஆல்ஃப்ஸ் பல்கலைக் கழகம்.

    தற்போதைய மேற்கு அண்டார்க்டிகாவின் பனிமதில் முறிவு, ஆண்டுக்கு சுமார் 150 குயூபிக் கி.மீ. (36 கியூபிக் மைல்) வீதத்தில் முன்னைவிட மிகையான விரைவில் நிகழ்ந்து வருகிறது.  2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சார்பாக நிகழ்ந்த “காலநிலை விஞ்ஞானப் பேரவை” [United Nations’ Climate Science Forum]  எச்சரிக்கை அறிவிப்பு இது !

    அகில அரசியல் காலநிலை மாற்றப் பேரங்க  [Inter governmental Panel on Climate Change (IPCC)] விஞ்ஞானிகள் முடிவுரை.

    Fig 1 Antactic Icelands

    பூகோளம் ஒவ்வோர் ஆண்டும் பேரளவுப் பனித் திரட்சியை இழந்து கொண்டே வருகிறது !   இப்புதிய விளைவுகளால் ஏன்  கடல் மட்ட நீர் உயர்கிறது என்பதற்கும், எவ்விதம் பூமியிலுள்ள குளிர்ப் பகுதிகள் சூழ்வெளி மாறுதலால் பாதிக்கப் படுகின்றன என்பதற்கும் விடை கிடைக்க  அந்த நிகழ்ச்சி உதவி செய்கின்றது.

    ஜான் வாஹ்ர்  [பௌதிகப் பேராசிரியர், கொலராடோ பல்கலைக் கழகம்]

    பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி [Earth’s Orbit Drift] பல்லாயிரம் ஆண்டு அளவு கோலில் மாறுபடுகிறது !  ஆனால் கரியமில வாயு மாற்றத்தால், காலநிலை மாறுதல், இப்போது பத்தாண்டு அளவுக் கோலில் வெகு விரைவாக  நேர்கிறது.

    டி. ஜெ.  ஃபட்ஜ் [பூமி, விண்வெளி விஞ்ஞானம், வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்] 

    Arctic Ice Region

    பனியுகத்தின் முடிவில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆழமாய் அறிந்து கொள்ள புதிய கண்டுபிடிப்புகள் உதவி செய்கின்றன.   ஆனால் காலநிலைச் சூடேற்றத்தால் அண்டார்க்டிக் கண்டத்தில் என்ன மாறுபாடு நேரிடலாம் என்பதை அறிவதற்கும் அவை உதவுகின்றன.   தற்போது  அண்டார்க்டிகா மேற்குப் பகுதியில் உள்ள பனிக் குன்றுகள், கடலடி வெப்ப நீரோட்டத்தால் அறுபட்டுப் போவது போன்ற பெருத்த மாறுதலால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

    ஜூலி பாலைஸ்  [Julie Palais, Antarctic Glaciology Polar Programs Director]  

    அண்டார்க்டிகா பிற நிகழ்ச்சிகள்  பாதிக்கட்டும் என்று காத்துக் கிடக்கும் ஓர் முடத்துவக் கண்டம் [Passive Continent] என்று சில சமயம் நாம் கருதலாம்.   ஆனால் வட துருவத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிவதற்கு முன்பே, அங்கே ஏற்படும் மாறுபாடுகளை, அது காட்டி விடுகிறது !   பனிக்குன்றுகளின் தேய்வே [Deglaciation]  இறுதியாக நாம் கண்டு ஆராய மீளும் ஒரு பெரும் காலநிலை விளைவு !   அதுவே நமது காலநிலை ஏற்பாடு எவ்விதம் இயங்குகிறது என்பதை நமக்குக் கற்பிக்கிறது.

    டி. ஜெ.  ஃபட்ஜ் [பூமி, விண்வெளி விஞ்ஞானம், வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர்]

    The big thaw-2

    அண்டார்க்டிகாவின் பூதப் பனிச்சுவர்கள் முறிந்து தேய்ந்துபோய் வருகின்றன  

    உலகக்கடல் மட்டத்தைப் பாதிக்கும் பல பங்கீட்டுப் பனிச் சேமிப்புகளில் ஒன்றான அண்டார்க்டிகாவின் பைன் தீவின் [Antarctica’s Pine Glacier] மாபெரும் பனிச்சுவர் இடிந்து இப்போது மீளாத நிலைக்கு மெலிந்து தேய்ந்து விட்டது.  அந்த வீதத்தில் இன்னும் 20 ஆண்டுகளில் அதனால் கடல் மட்டம் 0.4 அங்குலம் [One Centimeter] உயரம் ஏறக்கூடும் என்று கணிக்கப் படுகிறது.

    “அண்டார்க்டிகா பைன் தீவின் பனிச்சுவர் சுயமாய்த் தேயும் முறையில், சரிந்து போய்ச்  சிதைவில் மீளாத நிலைக்கு மெலிந்து வருகிறது.”  என்று பிரென்ச் நாட்டு கிரெனோலில் ஆல்ஃப்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பனிச்சரிவு ஆய்வாளி கயல் துராண்டு கூறுகிறார்.

    துராண்டும் அவரது அகில நாட்டுக் குழுவினரும்  மூன்று விதக் கணனி போலி மாடலை [Three different Computer Simulation Models] உண்டாக்கி,  எதிர்கால ஆண்டர்க்டிகா அடித்தரைப் படத்தை [Antarctica Base Ground Lineஎ] வடிக்க முற்பட்டார்கள்.   கடந்த பத்தாண்டுகளில் அந்தக் கணக்குப்படி அடித்தரைக் கோடு சுமார் 10 கி.மீ. [6 மைல்] சுருங்கியுள்ளது.   ஒருவேளை அந்தக் கோடு  40 கி. மீ. [25 மைல்] நீளத்தில் நிலை யற்றதாக  இருக்கலாம் என்று இயற்கை விஞ்ஞான இதழின் [Nature]  காலநிலைப் பகுதியில் வெளியாகி உள்ளது.

    Antarctica Icy rocks melting

    இன்றைய காலநிலை அமைப்புப்படி மேற்கு அண்டார்க்டிகா பனித்தட்டின் பனிப்பளு இழப்பு மொத்த இழப்பில் 20% பங்கு.  அதற்குக் காரணம் ஒரு பூதப்பெரும் பனி மதில் சரிவு இழப்பே.   1992 முதல் 2011 வரை சராசரியாக ஆண்டுக்கு 20 பில்லியன் டன் பனிக்கட்டி இழக்கப் பட்டுக் கடல் மட்டம்  உயர்ந்துள்ளது !   இயற்கை விஞ்ஞான இதழ் அறிவிப்பின்படி தேய்வு அளவு 5 மடங்கு பெருகி ஆண்டுக்கு 100 பில்லியன் டன்னாகும் என்று எச்சரிக்கை செய்கிறது !   அதன் கோர விளைவு என்ன ?  அடுத்த 20 ஆண்டுகளில் பூகோளக் கடல் உயரம் சராசரி 1 செ.மீ [0.4 அங்குலம்] ஏறிவிடும் என்று அறிவிக்கிறது.  2010 ஆண்டு கணிப்பில் அறிவது : பூகோளச் சராசரிக் கடல் உயர ஏற்ற அளவு 3.2 மி.மீடர் [0.12 அங்குலம்]. இந்த ஏற்ற வீதம் கூட 20 ஆண்டுக்கு முன்னிருந்த அளவுக்கு இரட்டிப் பானது !  ஈசா [European Space Agency -ESA] வெளியீடு இதை மேலும் உறுதியாக்குகிறது. அதாவது தற்போதைய மேற்கு அண்டார்க்டிகாவின் பனிமதில் முறிவு,  ஆண்டுக்கு சுமார் 150 குயூபிக் கி.மீ. (36 கியூபிக் மைல்) வீதம் முன்னைவிட மிகையான விரைவில் நிகழ்கிறது.  2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சார்பாக நிகழ்ந்த “காலநிலை விஞ்ஞானப் பேரவையில்” [United Nations’ Climate Science Forum] அகில அரசியல் காலநிலை மாற்றப் பேரங்க  [Inter governmental Panel on Climate Change (IPCC)]  உலக விஞ்ஞானிகள் தமது முடிவுரையில்  கூறிய கருத்துக்களில் இதுவும் ஒன்று.

    Fig 1 The Great Fall of Ice

     

    தென்துருவப் பனிக்குன்றுகள் பூகோளச் சூடேற்றத்தால் உருகித் தேய்கின்றன

    அண்டார்க்டிகா கண்டத்தின் பனிக்குன்றுகள் தேய்கின்றன.   கிரீன்லாந்து பனிக்கண்டம் உருகி வருகிறது.   அவற்றைப் போல் உலகின் பெரும்பான்மையான 200,000 பனிப் பாறைகள்  உருகி மெலிந்து விட்டன.   2003 முதல் 2010 வரை ஒட்டு மொத்தமாக சுமார் 4.3 டிரில்லியன் டன் [10^12 டன்] பனிப்பாறை உருகிக் கடலில் நீர் கலந்தது.   அந்த பனிப்பாறைகளின் தாழ்ச்சி, உயர்ச்சிப் பரிமாணங்களை அளந்து அனுப்பியை, அமெரிக்க-ஜெர்மன் கூட்டுழைப்பு செய்த இரட்டைத் துணைகோள்கள் “கிரேஸ்” [Grace – Gravity Recovery and Climate Experiment]   எனப்படுவை.   கிரேஸ் துணைக்கோள் 2002 ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றி வர ஏவப் பட்டது.   பூமியைச் சுற்றும் அந்த இரட்டைத் துணைக்கோள்கள் பூமியின் கனத்த ஈர்ப்புத் திரட்சியை   [Earth’s Lumpy Gravity]  தமக்கு இடைப்பட்ட தூரத்தின் மூலம் அளக்கும்.    வெவ்வேறு சுற்றுவீதியில் பூமியை வலம்வரும் அந்தத் துணைக்கோள்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் [Tandem Orbit] சுற்றி வருபவை.   துணைக் கோள்களின் இடைத் தூரங்களுக்கு ஏற்ப பூமியின் ஈர்ப்புத் திரட்சியின்  வெவ்வேறு பகுதி அடர்த்திகள் [Lump Density of the Surface] வேறுபடுகின்றன.  இவ்விதம் எடுத்த கால இடைவெளிப் பதிவுகளில், பனிக்குன்றுகளின் திரட்சி  இழப்புகளை நாம் தொடர்ந்து கண்காணித்து வரமுடியும்.

    Twin Grace Satellites

    உறைந்த போது உருகிய நீர்க் கொள்ளளவு 1000 மைல் கனசதுரப் பனிப்பாறையை [Cubical Ice Rock] உண்டாக்க முடியும்.   அதுபோல் நீராய் உருகும் போது கடல் மட்டம் அரை அங்குலம் உயரும்.   2012 இல் எடுத்த பதிவுகளை நோக்கினால், இமய மலை போன்ற மத்திய ஆசிய மலைக் குன்றுகளில் உருகிய பனிப் பாறைகளின் பரிமாணம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50 பில்லியன் டன்னுக்கு மேற்படும் !   இது ஒருமுறைக் கணக்கீட்டில் வெளி வந்தது.   இதே அரங்குகளை “கிரேஸ்” இரட்டைத் துணைக் கோள் மூலம் கணித்ததில் அந்தப் பரிமாணம் ஆண்டுக்கு 4 பில்லியன் டன் என்று குறைவாகவே அறியப் பட்டது.

    பனிக்கரு பற்றி தேசீய விஞ்ஞானக் கழகம் செய்த ஆராய்ச்சி 

    மேற்கு அண்டார்க்டிகா பனிக் கோட்டத்தை ஆய்வு செய்த தேசீய விஞ்ஞானக் கழகம் [National Science Foundation] இரண்டு மைல் ஆழத்தில் துளைகளிட்டு அண்டார்க்டிகா கண்டம் 22,000 ஆண்டுக்கு முன்பே சூடேற ஆரம்பித்து விட்டது என்று சமீபத்தில் முடிவு செய்துள்ளார்.

     

     

    அண்டார்க்டிகா சூடேற பூமி சுற்றுவீதி [Earth’s Orbit] பிறழ்ச்சி ஓர் அடிப்படைக் காரணம்

    நூறாண்டுகளாக விஞ்ஞானிகள் “பூமியின் பனியுகங்கள் [Earth’s Ice Ages] தோன்றுவதற்குப் பூமியின் சுற்றுவீதிப் பிறழ்ச்சி  [Wobbling of Earth’s Orbit] ஓர் மூலாதாரக் காரணம் என்பதை அறிந்துள்ளார்கள்.    பூமி சுற்றுவீதிப் பிறழ்ச்சியின் போது சூரியன் திசைநோக்கு [Solar Orientaion to Earth] மாறுபட்டு, துருவப் பிரதேசங் களில் [Higher Latitudes]  விழும் கதிரொளி கூடிக் குறைந்து வேறுபடுகின்றது.   வடகோளப் பகுதியில்  [Northern Hemisphere] நேர்ந்த கடந்த பனியுகம் [Last Ice Age] 20,000 ஆண்டுகட்கு முன்பே முடிந்தது.  தென்கோளப் பகுதியில் கடந்த பனியுகம் 2000 ஆண்டுகள் கழித்துதான் [22,000] நிகழ்ந்தது என்று பெரும்பான்மைச் சான்றுகள் மூலம் அறியப் படுகிறது.  அதாவது தென்கோளப் பகுதி வட கோளப் பகுதியின் சூடேற்றத்தால் பாதகம் அடைந்துள்ளது என்பதே.   2013 ஆகஸ்டு 14 இல் “இயற்கை”  [Nature] விஞ்ஞான இதழில் வெளியான தகவலில் அண்டார்க்டிக் கண்ட சூடேற்றம் முன்பு நினைத்ததற்கு மாறாக 2000 அல்லது 4000 ஆண்டுகட்கு முன்னரே துவங்கி விட்டது !   வாஷிங்டன் பல்கலைக் கழக மாணவர் டி. ஜே. ஃபட்ஜ் என்பவரும் அவரது 41 குழு உறுப்பினரும் அண்டார்க்டிகா கண்டத்தில் பனிக் குன்றுகளில் இரு மின்கம்பிகளை [Two Electrodes] வேனிற் காலத்தில் 2 மைல் ஆழத்துக்கு இறக்கி மின்சாரக் கடத்துத் தன்மையைப் [Electrical Conductivity] பதிவு செய்து,  கடந்த பனிக்குன்றுத் தேய்வு [Last Deglaciation] சுமார் 18,000 – 22,000 ஆண்டுகட்கு முன்பே ஆரம்பித்து விட்டது என்று உறுதிப் படுத்தினர்.

    Grace Satellite Recordings

    “கடந்த பூகோளச் சூடேற்ற நிகழ்ச்சியை உண்டாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றம் 10,000 ஆண்டுகளாக நீடித்தது !  அடுத்த முன்னூறு ஆண்டுகளில் தொடர்ந்து புதைவு எரிசக்தி எருக்களை [Fossil Fuels] நாம் பயன்படுத்தி வந்தால் அதே பரிமாண அளவு வாயுக்களை உற்பத்தி செய்ய முடியும்.  புதைவு எருக்களை முற்றிலும் தவிர்த்துத் தற்போதுள்ள கார்பன் டையாக்ஸைடு கொள்ளளவைத் தொழிற்புரட்சிக்கு முந்தைய கொள்ளளவுக்குக் கொண்டு வர இன்னும் 10 அல்லது 15 ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்,”

    ஜேம்ஸ் ஸகோஸ் பேராசிரியர் பூவியல் விஞ்ஞானம், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

    “கிழக்கு ஆ·பிரிக்காவில் உள்ள கிலிமாஞ்சாரோ மலையின் பனிச்சிகரம் சூடேறும் பூகோளத்தால் 2015-2020 ஆண்டுகளுக்கு இடையில் முற்றிலும் உருகி மறைந்து விடும் என்று கணிக்கப்படுகிறது.  மாபெரும் அந்த புரட்சிகரமான மாறுதல் மலைப் பகுதிகளை நேராகவும், விமானம் மீதிருந்தும் காணலாம் ! 1912-2000 ஆண்டுகளுக்கு இடையில் கிலிமாஞ்சாரோவில் 82% பனிக் குன்றுகள் உருகிப் போய்விட்டன.”

    லோனி தாம்ஸன், பேராசிரியர் பூதளவியல் விஞ்ஞானம் (2006)

    Fig  Polar Ice Banks

    Grace Recordings

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங் களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

    Glacier melting Scenery

    உருகி மறைந்து போகும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள்

    கிழக்கு ஆஃபிரிக்காவில் கென்யா எல்லையில் உள்ள கிலிமாஞ்சாரோ பனிச் சிகரங்கள் சூடேறும் பூகோளத்தால் 2015-2020 ஆண்டுகளுக்கு இடையில் முற்றிலும் உருகி மறைந்து விடும் என்று கணிக்கிறார் பூதளவியல் பேராசிரியர் லோனி தாம்ஸன்.  2002 ஆம் ஆண்டில் அவரும் அவரது விஞ்ஞான சகாக்களும் கிலிமாஞ்சாரோ பனிமலை களை நேராக உளவி அறிவித்த அதிர்ச்சிச் செய்தி அது !  1962 இல் எடுத்த படங்களையும், 2000 இல் எடுத்த படங்களையும் ஒப்பிட்டுதான் தாம்ஸன் அவ்விதம் கூறி இருக்கிறார். ஏறக் குறைய அந்த நாற்பது வருடங்களில் பனித்தளங்களின் உயரம் சுமார் 56 அடி [17 மீடர்] தணிந்து போயுள்ளது.  மாபெரும் அந்த புரட்சிகரமான மாறுதல் பகுதிகளை நேராகவும், விமானம் மீதிருந்தும் காணலாம் !  1912-2000 ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட பனித்தேய்வுகளை ஒப்பிட்டால் 82% பனிக் குன்றுகள் உருகிப் போய்விட்டன என்று லோனி தாம்ஸன் குறிப்பிடுகிறார் !  கடந்த நான்கு ஆண்டுகளில் (2002-2006) மட்டும் பனித்தேய்வு மிகையாகி உள்ளது.  அந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட மூன்று வடபுறப் பனிப் பகுதிகளில் பனித் தேய்வுகள் 164 அடி [50 மீடர்] உயரத்திலிருந்து சுமார் 16 அடிக்குத் [5 மீடர்] தணிந்து விட்டன,  மலையின் அடிப்பீடம் தெரியும் விந்தையான ஒரு பெரும் செங்குத்துக் குழி பனித்தளம் நடுவே ஏற்பட்டிருக்கிறது !  இன்னும் ஆறு மாதங்களில் அது ஒரு பெரும் பிளவை உண்டாக்கிப் பனிக்குன்றை இரண்டாக்கி விடும் என்ற அச்சத்தைக் கிளப்பி உள்ளது.

    Earth's Orbit change

    கிலிமாஞ்சாரோ பனிச் சிகரத்தில் புதிதாக பனிபரப்புகள் எதுவும் குளிர்காலத்தில் எழவில்லை என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  இயற்கையின் விந்தையான சுதி மாறிப்போன சுற்றியக்கம் அது !  பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் பழமொழி பனித்தேய்வு மலைச் சிகரகங்களில் சில சமயங்களில் ஏனோ நிகழ்வதில்லை ! கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கிலிமாஞ்சாரோ மலைகளில் கரைந்து போன பனிப்பகுதிகள் ஏராளமானவை.  விமானப் படமெடுப்பு மூலமாக இப்போது பனிச் சிகரகங்களின் பரப்பையும், இழந்து போன நீர் வெள்ளத்தின் பரிமாணத்தையும் ஓரளவு கணித்து விடலாம் என்று லோனி தாம்ஸன் குறிப்பிடுகிறார். கிலிமாஞ்சாரோ பனிச்சிகர நீரிழப்பால் நேர்ந்த மனித இன்னல்கள் என்ன வென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  முதலாவது டான்ஸானியா [Tanzania] நாட்டின் நிதிவளம் ஓரளவு ஆண்டு தோறும் வருகையை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சார்ந்து உள்ளது.  உள் நாட்டு நகரங்களில் குடிநீர்க் குறைவு மக்களைப் பேரளவு பாதிக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கிலிமாஞ்சாரோ மலைப் பகுதிகளின் அண்டைப் புறங்களில் வாழ்வோருக்குப் பனிக்குன்றுகளின் நீரோட்டமே நில விளைச்சலுக்கும் பயன்படுகிறது.  நீரோட்டக் குறைவால் நிலவளமும் சீர்கேடாகும்.

    20 ஆம் நூற்றாண்டில் விரைவாகச் சூடேறிய பூகோளம்

    கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பூவியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஜேம்ஸ் ஸகோஸ் அமெரிக்க மேம்பாட்டு விஞ்ஞானக் குழுவகத்தில் [American Association of Advanced Science, St Louis (AAAS)] வெப்ப யுகத்தைப் பற்றித் தனது கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.  ஜேம்ஸ் ஸ்கோஸ் “பாலியோசீன்-ஈயோசீன் உச்ச வெப்பம்” [Paleocene-Eocene Thermal Maximum (PETM)] எனப்படும் வெப்ப யுகத்தின் சிறப்பியல் அறிவு நிபுணர். “கடந்த பூகோளச் சூடேற்ற நிகழ்ச்சியை உண்டாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களின் எழுச்சி 10,000 ஆண்டுகளாக நீடித்தது !  அடுத்த முன்னூறு ஆண்டுகளில் புதைவு எரிசக்தி எருக்களை [Fossil Fuels] நாம் அனுதினமும் பயன்படுத்தி வந்தால் அதே பரிமாண அளவு வாயுக்களை உற்பத்தி செய்ய முடியும்.” என்று கூறுகிறார். பூகோளச் சூடேற்றம் 5 டிகிரி செல்சியஸ் [9F] விரைவேற்ற மானது 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பாலியோசீன்-எபாக் [Paleocene-Epoch] முடிவில் திடீரென்று பேரளவு கிரீன் ஹவுஸ் வாயுக்கள் மீதேன், கார்பன் டையாக்ஸைடு வெளியேற்றத்தால் நிகழ்ந்தது.  முந்தைய மதிப்பீடு 2 டிரில்லியன் டன் கரி என்றுள்ள போது ஜேம்ஸ் ஸ்கோஸ் அதைவிட இரண்டு மடங்கும் மேல் [4.5 டிரில்லியன் டன் கரி] 10,000 ஆண்டுகளாய் சூழ்வெளியில் சேமிப்பானது என்று எடுத்துக் காட்டினார்.  [One Trillion –> 10^12 (1 with 12 Zeros)].  21 ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் இதே அளவு மீதேன், கார்பன் டையாக்ஸைடு வாயுக்களை உற்பத்தி செய்தால் இன்னும் 300 ஆண்டுகளில் 10,000 ஆண்டுகளின் பரிமாணத்துக்கு வந்துவிடும் என்று கூறினார்.

    Fig 2 Milankovitch Cycles

    ஒருதரம் பேரளவில் கரி வெளியேறினால், கடல் வெள்ளம், கடற்தள படிமானம் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளில் சூழ்வெளி வாயுவில் எஞ்சிய கரி விழுங்கப்பட 500 முதல் 1000 ஆண்டுகள் கூட ஆகலாம். “பாலியோசீன்-ஈயோசீன் உச்ச வெப்பம்” வழியாக மிஞ்சிய கரியின் அளவு கடல் வெள்ளம் விழுங்கும் ஆற்றல் தகுதிக்கு மீறியது.  அதனால் சூழ்வெளியில் கரியின் கொள்ளளவு சேமிப்பாகிறது.  மேலும் மனிதர் தொழிற்சாலைகள் மூலமாகக் கரியைச் சேர்ப்பது அதைவிட மிகையானது.  10,000 ஆண்டுகளில் பிரம்மாண்டமான கடல் வெள்ளம் 20 சுற்றியக்கத்தில் [1 cycle in 500 years] சூழ்வெளிக் கரியை கவர்ந்து விழுங்கி வந்துள்ளது.  அடுத்து கடல் உஷ்ணம் அதிகமானால் தற்போது பனிக்கட்டியான கடல்வளப் படிவங்களில் [Frozen Marine Deposits] உள்ள மீதேன் வாயுப் பேரளவில் வெளியேறி கார்பன் டையாக்ஸைடு வாயுவை விட 20 மடங்கு தீவிர பூகோளச் சூடேற்றத்தை உண்டாக்கு கிறது ! “புதை எருக்களை [Fossil Fuels] முற்றிலும் தவிர்த்துத் தற்போதுள்ள கார்பன் டையாக்ஸைடு வாயுக் கொள்ளளவை தொழிற்புரட்சிக்கு முந்தைய கொள்ளளவுக்குக் கொண்டு வர, இன்னும் 10 அல்லது 15 ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்,” என்று ஜேம்ஸ் ஸ்கோஸ் அழுத்தமாகக் கூறிகிறார்.

    What Global Warming does

    Fig 2 Argentina Glacier

    பூகோளச் சூடேற்றத்தால் விளையும் காலநிலை மாறுதல்கள்

    a).  பூமி, செவ்வாய்க் கோள்களும் அவற்றின் சூழ்வெளிகளும் :

    பூகோளக் காலநிலையை நிர்ணயம் செய்பவை நான்கு அமைப்புகள்:

    (1) பரிதிக்கும் கோளுக்கும் உள்ள இடைத் தூரம் [Distance],

    (2) அண்டக்கோளின் நிறை [Mass],

    (3) சூழ்வெளியில் கலந்துள்ள வாயுக்கள் [Atmospheric Composition].

    (4) கோளின் ஈர்ப்பாற்றல்.

    செவ்வாய்க் கோளின் நிறை சிறியது.  ஈர்ப்பாற்றலும் [Gravitational Force] சிறிதானதால் அதன் சூழ்வெளி வாயுத் திணிவு மிகவும் மென்மையானது.  செவ்வாய்ச் சூழ்வெளியின் மெல்லிய திணிவில், நீர்மை வரண்டுபோய் கார்பன் டையாக்ஸைடு வாயு பெரும் பான்மையாகப் [95%] பரவி உள்ளது.  அதே சமயத்தில் செவ்வாய்க் கோளை விடக் கனமானதும், ஈர்ப்பாற்றல் மிகுதி யாகவும் உள்ள பூமிக்குச் சீரிய சூழ்வெளி அமைந்துள்ளது.  அதனால் செவ்வாயை விட மிதமான வெப்பமும், குளிரும் ஓரளவு உஷ்ண நீட்சியில் [Temperature Range] நிலைப்பாகி பல மில்லியன் ஆண்டுகளாக உயிரினப் பயிரின வளர்ச்சிக்கு ஆதரவாக, ஏதுவாகப் பூமியில் உள்ளன.

    b).  சூழ்வெளி உஷ்ணம், கரி வாயுத் திணிவு கடந்த 400,000 ஆண்டுகளாக பூமியின் காலநிலை நிலையின்றி உஷ்ண வேறுபாட்டில் வெப்பக் குளிர்ச்சி யுகங்களாக மாறுபட்டு வருகிறது.  இந்த வேறுபாடுகள் காட்டுவது என்ன ? காலநிலையானது பூமியின் உட்புற மற்றும் வெளிப்புற மாறுதல்களால் பாதிக்கப் படுகின்றது என்பதே.

    Fig 2 Hurricanes & Global Temp

     

    c).  கண்ணாடி மாளிகை விளைவு [கிரீன்ஹவுஸ் விளைவு] பூகோளமானது ஓர் இயற்கையான உஷ்ணக் கட்டுப்பாடு ஏற்பாடைக் கொண்டது.  குடை போன்றுள்ள சூழ்வெளி வாயுக் கோளத்தில் சில குறிப்பிட்ட கிரீன்ஹவுஸ் வாயுக்களே அத்தகைய அரிய உஷ்ணக் கட்டுப்பாட்டை இயக்கி வருகின்றன.

    d).  சூரியக் கதிர்வீச்சுத் தாக்கம் (Radiative Forcing) பூகோளத்தில் விழுகின்ற சூரியக் கதிர்வீச்சும், விழுங்கப்படும் கதிர்வீச்சும், வெளியேறும் கதிர்வீச்சும் சமமாகி உஷ்ணம் சீராவது அல்லது மாறுபடுவது. 5.  பூமிக்கு மேல் 4000 மீடர் (13000 அடி) உயரத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயுத் திணிவளவுகள் [Concentrations] ஹவாயித் தீவிலுள்ள மௌனா லோவா மலை உச்சியில் ஆண்டு தோறும் பதிவாகி வருகின்றன. 6.  பூகோளச் சூழ்வெளியில் சேமிப்பாகும் கார்பன் டையாக்ஸைடு வாயு தொழிற்புரட்சிக்கு முன்னிருந்த அளவு: 280 ppmv.  தற்போது இருக்கும் அளவு (2006): 367 ppmv. [ppmv : parts per millian by Volume] 7.  கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியாக்கும் செல்வந்த நாடுகள்: (1995) பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [1700-1800] தொழிற்புரட்சி உண்டாகிச் செல்வம் செழித்த நாடுகளே பேரளவில் வெப்ப யுக வாயுக்களைச் சூழ்வெளியில் வெளியேற்றி வருகின்றன.

    Fig 1E Sea Level Raise

    ++++++++++++++++++

    (தொடரும்)

    தகவல்:

    1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]

    (April 9, 2007)

    2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3.  The Assault on Reason By Al Gore (2007)

    4.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    5.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    6.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    7.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

    8.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

    9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

    10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

    11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

    12.   http://en.wikipedia.org/wiki/Ice_age  [August 20, 2013]

    13   http://ngm.nationalgeographic.com/2007/06/big-thaw/big-thaw-text  [June 2007]

    14. http://theextinctionprotocol.wordpress.com/2011/06/28/antarcticas-pine-island-glacier-melting-from-below-twice-as-fast-as-perviously-thought/  [June 28, 2011]

    15 http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment  [May 15, 2013]

    16  http://www.nasa.gov/mission_pages/Grace/index.html#.UiDlG9Nza9I  [August 15, 2013]

    17.  http://www.abc.net.au/science/articles/2014/01/13/3924653.htm  [January 13, 2014]

    18.  http://phys.org/news/2014-01-giant-antarctic-glacier.html  [January 12, 2014]

    19.  http://www.newagebd.com/detail.php?date=2014-01-14&nid=80326#.UtgoQai_hK4  [January 14, 2014]

    20. http://www.terradaily.com/reports/Giant_Antarctic_glacier_beyond_point_of_no_return_999.htm  [January 12, 2014]

    21.  http://www.youtube.com/watch?v=QQn3kdCHPwM  [Video January 12, 2014]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 17, 2014)

    http://jayabarathan.wordpress.com/

    Exploring undersea volcanoes around Antarctica

    Glaciar Perito Moreno 2012 Increible caida bloque de hielo

    Giant Antarctic Pine Island Glacier melting beyond point of no return
    Share
  • வள்ளி தனக்கே குறவர் மலையாட்சி!

    பவள சங்கரி

    2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு. விஜயா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்

    மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது அன்பில் உறைந்திருந்த போழ்தில் பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ள பாடல்:

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக்
    குறவனெங்கள் வீட்டிற் கொண்ட
    வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி
    சீதனமா வழங்கி னாராற்
    பிள்ளைதனக் கெண்ணெயிலை யரைக்குமொரு
    துணியிலையென் பிறகே வந்த
    கள்ளிதனைக் கொண்டவன்றே குறவனுக்கு
    மெனக்குமிலை கங்சி தானே.
    20

    800px-PettaiNarikoravas

    நாகரீகம் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்திலும், சில இன மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளையும், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு, அவர்களின் பின் தங்கிய பொருளாதார நிலையும், போதிய கல்வியறிவும் இல்லாததே முக்கிய காரணமாகிறது. ‘நரிக்குறவர்கள்’ என்று அழைக்கப் பெறும், குறிப்பிட்ட ஒரு நிலையான தங்குமிடம் இல்லாத நாடோடிகளைப் போல வாழ்பவர்களான இவர்கள் அதனால் இழக்கக்கூடிய பல நன்மைகளில் மிக முக்கியமானது அவர்தம் குழந்தைகளின் கல்வி. பெற்றோர்களின் பின்னால் ஊர் ஊராக அலைந்துகொண்டு, அந்த வயதில் கிடைக்கக்கூடிய அத்துனை இன்பங்களையும் இழக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையின் உச்சம். ஆனால் இவர்களிடமும் ஆச்சரியப்படும் வகையில் பல திறமைகள் உள்ளது. குறிப்பாக குறவர்கள் காலம் காலமாகத் தாங்களே தயாரித்து உட்கொள்ளும் நாட்டு மருந்துகள், அதனால் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற்றிருப்பது. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைக் கொடுக்கும் இவர்களுடைய மருத்துவக் கலையை, இடாய்ச்சு நாட்டு அறிஞர் ஒருவர் ஆய்வு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நரிக்குறவப் பெண்கள் கலை வேலைப்பாடுகளில் கை தேர்ந்தவர்கள். இந்த இனத்து ஆண்கள் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ’கவண்வில்’ என்று சொல்கிற, சிறு பறவைகள், விலங்குகள், மரத்தில் இருக்கும் பழங்கள் போன்றவற்றை குறி பார்த்து அடிக்க உதவும் உண்டிவில்லை நன்கு கையாளும் திறமை மிக்கவர்கள். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி மணிகள் போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்து பிழைப்பவர்கள். இந்த நரிக்குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் , நாடி பார்த்து நோய்க்குறி சொல்வது ஆகியவற்றில் தனித்திறமை வாய்ந்தவர்கள். குறத்தி குறி சோசியம் சொல்லும் வாக்கு சுத்தமானது என்று இலக்கிய காலத்திலிருந்து போற்றப்பட்டு வருவது நாம் அறிந்ததே. குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மராட்டிய வீரர் சிவாஜியின் படைவீரர்களாக இருந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள். சிவாஜியின் ஆட்சிக்காலம் நிறைவுற்றபோது அவருடைய படை வீரர்களான இவர்கள் காட்டில் சென்று மறைந்து வாழ வேண்டி வந்ததாம். அப்பொழுது அங்கிருந்த இலை, தளைகளை உடுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கிருக்கும் துப்பாக்கி சுடும் திறமை மற்றும் வேட்டையாடும் திறமையைக் கண்டறிந்து துப்பாக்கி வழங்கி பிழைக்க வழி செய்திருக்கிறார்கள். அதன்பின் மெல்ல, ஊருக்குள் வந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு ‘வாகிரி’ என்ற பேச்சு மொழி மட்டும் உண்டு. ஆனால் இதற்கு எழுத்து வடிவம் இல்லை. குருவிக்காரர் என்றும் அழைக்கப்படுகிற இவர்கள் தமிழ்நாடு அரசால் மலைவாழ் மக்கள் (S.T) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

    வறுமையின் பிடியில் சிக்கி, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு குறைந்தபட்ச அடிப்படைக் கல்வியாவது கிடைத்து, அவர்களுடைய வாழ்விலும் மலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவரான சேலம் மாவட்ட ஆட்சியாளர் உயர்திரு ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்தம் துணைவியார் திருமதி. கிருத்திகா ஆகியோர் இந்த நரிக்குறவ இனக் குழந்தைகளின் மீது கொண்ட பரிவு மற்றும் அதீத அக்கறையின் காரணமாக அவர்களின் வாழ்விலும் ஒரு விடிவு பிறந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வெங்கட்ராமன் அவர்களின் மகள் வயிற்றுப் பெயரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நம் தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக நரிக்குறவர் குழந்தைகளுக்காக பள்ளி ஆரம்பித்திருக்கிறார்.

    vijaya

    2009 – 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதான, நல்லாசிரியர் விருது பெற்ற செல்வி.விஜயா அவர்கள் இந்தச் சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்து இவர் ஆற்றிய அரும் பணிக்காக இவ்விருதைப் பெற்றிருக்கிறார் . ஒரு சிறந்த ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக மகுடம் சூட்டிக்கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது ஆதீத ஈடுபாடும் மதிப்பும் கொண்ட விஜயா அவர்கள், கல்விப் பணிக்காகவே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். தனக்கென்று ஒரு குடும்பமும், குழந்தைகளும் தேவையில்லை என்று ஆசிரியப் பணிக்காகத் தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர். அந்த அர்ப்பணிப்பிற்கு ஆதாரமாக 2009 – 2010ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவருடைய சேவை பற்றியும், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக திருமிகு. விஜயா அவர்களை சேலத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்தோம். உற்சாகத்துடன் அவர் உரையாடியபோது அவர் வார்தைகளில் இருந்த உண்மையை அது உணர்த்தியது!

    செவ்வி : ஆசிரியத் தொழிலில் சவாலான இந்தப் பணியை எப்போது, எங்கு, ஏன் மேற்கொண்டீர்கள்?

    விஜயா : 2003 ஆம் ஆண்டு, சேலம் அருகில் மின்னாம்பள்ளி என்னும் கிராமத்தில், ஒரு கூடாரம் அமைத்து அதில் 9 குழந்தைகளுடன், முதன் முதலில் நரிக்குறவர் குழந்தைகளுக்காக ஆரம்பித்தோம். மின்னாம்பள்ளியில் அப்போது 51 நரிக்குறவர் குடும்பங்கள் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சேலம் மாவட்ட ஆட்சியாளராக இருந்த உயர்திரு ராதாகிருஷ்ணன், மற்றும் அவருடைய மனைவி கிருத்திகா ஆகியோரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக இப்பள்ளி உருவானது என்றே சொல்ல வேண்டும். மதிப்பிற்குரிய ஆட்சியாளர் அவர்கள், சேலம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக வசித்து வந்த நரிக்குறவர் குழந்தைகளின், ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளைக் கண்டு மனம் வருந்தி இவர்களுடைய வாழ்க்கை முறை மேம்பட ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே இப்பள்ளி உருவானதன் வரலாறு. அவருடைய துணைவியார் திருமதி கிருத்திகா அவர்கள் இதற்கு பெரிதும் ஈடுபாடு காட்டி, முழுமையாகத் தன் சேவைக் கரங்களை நீட்டினார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் அவர் பலரை இந்தத் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியும், அதை மறுத்துவிட்டனர். தாய்மை உணர்வுடன் கூடிய ஒரு பெண் ஆசிரியை மட்டுமே இப்பணியை முழுமையாகத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்த எனக்கு இப்பதவியைக் கொடுத்தார். நானும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக என்னால் இயன்ற அளவிற்கு என் பணியை செவ்வனே செய்திருக்கிறேன் என்றே நினைக்க முடிகிறது.

    செவ்வி : குறிப்பிட்ட இப்பணியை ஆசிரியத் தொழிலின் சவாலான பணி என்று நான் குறிப்பிட்டதை ஒப்புக்கொள்கிறீர்களா?

    விஜயா: ஆம். உண்மைதான். சமுதாயத்தில் ஓரளவிற்கேனும் நல்ல நிலையில் இருக்கும் சிறார்களுக்கு பாடம் எடுப்பதைக் காட்டிலும், அடிப்படை ஆரோக்கியம், நாகரீகம் போன்றவற்றில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை வழிக்குக் கொண்டு வருவதில் பெரும் முயற்சி எடுக்க வேண்டியதாக இருந்தது. ஆரம்பத்தில் பள்ளியின் உட்காரும் மர இருக்கைகளையெல்லாம் கூட வெளியே வீசிவிடுவார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தவும் முடியாது.

    செவ்வி: அந்தச் சிறார்களை வழிக்குக் கொண்டுவர என்னென்ன முயற்சிகள் செய்தீர்கள் என்று சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?

    vijaya 1விஜயா : முதல் நிலையில் அவர்கள் பெற்றோரிடம் சென்று பேசினோம். எனக்கு அப்போது குணராணி என்ற ஒரு உதவியாளர் இருந்தார். அவர் மிகுந்த சேவையுள்ளம் கொண்ட கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர். அவருடைய ஒத்துழைப்பு குறிப்பிடும்படியாக இருந்ததும், என் பணியை என்னால் ஓரளவிற்கேனும் சரியாகச் செய்ய முடிந்ததற்கான காரணமாக இருந்தது. மற்ற குழந்தைகளின் சாதாரண பள்ளி போல இதனை நடத்த வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்டோம். முதலில் அவர்களுக்குப் பிடித்த காரியங்களைச் செய்து எங்களிடம் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். முதல் காரியமாக ஒரு ஒலிபெருக்கி ஏற்பாடு செய்து, தினமும் காலையில் குறிப்பிட்ட அந்த 9 மணிக்கு, ஒலிபெருக்கியில் அவர்களுக்கு மிகவும் விருப்பமான எம்.ஜி.ஆர். பாடல்களைப் போடுவோம். இந்தப் பாடல்கள் ஒலிபரப்பாக ஆரம்பித்தவுடனே குழந்தைகள் ஆடிக்கொண்டே, ஓடி வந்துவிடுவார்கள். சில தாய்மார்களும்கூட உடன் வருவார்கள். அவர்கள் ஆட ஆரம்பிக்கும் போது, நாங்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம். மெல்ல மெல்ல, அவர்களுடன் கலந்து பழக இதுவே எங்களுக்கு அடிப்படையாக இருந்தது. பின் மெல்ல எங்கள் பேச்சைக் கேட்கும் நிலைக்கு வந்தார்கள். நாங்கள் பள்ளிக்கு வரும் போதே, வெல்லம், பொறி கடலை போன்ற தின்பண்டங்களை அன்றாடம் வாங்கி வந்துக்கொடுப்போம். அடுத்து சோப்பு, பல்பொடி என வாங்கி வந்து அவர்களுக்கு அன்றாடம் பல் தேய்த்து குளிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினோம். நல்ல துணிமணிகளை, வெளியில் பொது மக்களிடம் சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்தோம். பெரும்பாலானக் குழந்தைகள் வெறும் கோவணம் மட்டுமே கட்டியிருந்தார்கள். பள்ளிக்கு வரும் குழந்தைகளின் நடை, உடை, பாவனைகளின் மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடன், மற்ற குழந்தைகளுக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அங்கு அப்போது 51 கூடாரங்களில் வசித்துக் கொண்டிருந்த மக்களின் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வர ஆரம்பித்தனர். சின்னச் சின்ன வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம். ஜெ.ஜெ. பள்ளி என்ற அந்தப் பள்ளி பிரபலமாக ஆரம்பித்தது. அந்தப் பள்ளியைக் கடந்து செல்பவர்கள் கூட சிறிது நேரம் நின்று ஆச்சரியமாகப் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள்

    செவ்வி : நரிக்குறவர்கள் பேசும் மொழி ‘வாகிரி’ என்ற ஒரு எழுத்து வடிவமற்ற மொழி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மொழி உங்களுக்குத் தெரியுமா? அவர்களிடம் பேச்சுத் தொடர்பு எப்படி ஏற்படுத்திக் கொண்டீர்கள்?

    விஜயா : ஆம். வாகிரி என்பதுதான் அவர்கள் பேசும் மொழி. எனக்கு ஹிந்தி மொழி நன்கு தெரியும். வாகிரி மொழி Photo0210கிட்டத்தட்ட அதனை ஒத்து இருக்கும். நரிக்குறவர் சங்கத் தலைவர் சங்கர் என்பவர் அங்கு இருந்தார். அவரிடம் சில நாட்கள் சென்று நானும், குணராணியும், ஓரளவிற்கு முக்கியமான வார்த்தைகளைக் கற்றுக்கொண்டோம். ஹிந்தியும், ஆங்கிலமும் ஓரளவிற்கு படித்துக் கொள்ள முடிந்த அவர்களால், தமிழ் படிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. முதலில் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், நடை, உடையையும் மாற்றும் வேலையையே அதிகமாகச் செய்தோம். பின் மெல்ல, மெல்ல கல்வி கற்பிக்க ஆரம்பித்தோம். அப்போது பணியில் இருந்த முதன்மை கல்வி அலுவலர் திரு கார்மேகம் அவர்களின் முழு ஒத்துழைப்பும் எங்களுக்குக் கிடைத்தது.

    செவ்வி: முன்பின் பள்ளி பற்றி அறியாத அவர்களுக்கென்று ஏதும் தனிப்பட்ட முறை பாடத்திட்டங்களை உருவாக்கினீர்களா? அது பற்றி சொல்லுங்களேன்.

    விஜயா : ஆம். மற்ற குழந்தைகளுக்கு உள்ளது போல சாதாரண பாடத் திட்டம் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. விரைவிலேயே 52 குழந்தைகளை சேர்த்துவிட்டோம். வயது அடிப்படையில் அல்லாமல் அவர்களின் புரிந்து கொள்ளும் திறனின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டோம். பொதுவான ஆரோக்கியம் சார்ந்த கல்வி, அறிவியல், தமிழ், கணக்கு என்று சொல்லிக் கொடுத்தோம். ஆரோக்கியம் சார்ந்த கல்வி என்றால், அன்றாடம் குளிக்கும் வழக்கம், நல்ல உடை உடுத்துவது, சமுதாயத்தில் மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை என்று இப்படி பலவற்றையும், கற்றுக் கொடுத்தோம். அருகில் இருந்த திருமண மண்டபத்தில் மீந்த சாப்பாடு இருக்கிறது என்று கூப்பிட்டால் போய் வாங்கிச் சாப்பிடக் கூடாது. முன்னாலேயே அழைத்தால் மட்டுமே செல்ல வேண்டும். அதுவும் ஒழுங்காக உட்கார்ந்து இலையில் சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். அவர்களும் யார் சாப்பாடு கொடுத்தாலும் வந்து எங்களிடம் கேட்பார்கள் வாங்கி சாப்பிடலாமா என்று. அடுத்து அறிவியல் வகுப்பு என்றால் அருகில் இருந்த தோட்டம், வயல்வெளி, வனம் என அழைத்துச் சென்று இயற்கை சார்ந்த அறிவியல் வகுப்புகள் எடுத்தோம். கணக்குப் பாடம் எடுப்பது மிக எளிதான காரியம். ஒரு 6 வயது சிறுவன் கூட மிகச் சரியாகக் கணக்குப் போடுவான். அதே போல் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகள் கூட எளிதாகப் பழகினார்கள். எழுத்துப் பயிற்சி கொடுப்பது சற்று சிரமமாக இருந்தது. ஒரு எழுத்து சரியாக எழுதினால், பரிசாக வெல்லம் கொடுப்போம். அது அவர்களுக்கு உற்சாகம் அளிக்க, மேற்கொண்டு படிக்க வைக்க முடிந்தது. சிறுவர்கள் எலியையோ அல்லது பூனையையோ கண்டுவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதைப் பிடித்து அங்கு அருகில் இருந்த வெட்ட வெளியில் நெருப்பு மூட்டி அதைச் சுட்டுத் தின்றுவிடுவார்கள். பார்க்கவே அச்சப்படும் எங்களையும் உபசரிப்பார்கள். இவர்கள் பறவைகளை விசில் அடித்து வரவழக்கும் கலையை நன்கு கற்று வைத்திருந்தார்கள். அப்படி வரவழைக்கும் பறவைகளை ஒரு நாளும் சாப்பிட மாட்டார்கள். கொக்கு வேட்டைதான் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கும், பிடித்த உணவும் கூட.

    மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அவர் மனைவியும் வாரம் ஒரு முறை தவறாமல் நேரில் வருவார்கள். வரும்பொழுது அந்தச் சிறார்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்கள், பேனா, சிலேட், பல்பம், என அனைத்தும் வாங்கி வருவார்கள். இப்படி 75 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்தது. பின் வகுப்புகள் அதிகமாக விரிவுபடுத்தப்பட்டதால் கட்டிடங்களும் கட்டப்பட்டது. இறுதியில் எட்டாம் வகுப்பு வரை கொண்டு வந்தார்கள்.

    செவ்வி : அதற்கு மேற்கொண்டு மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்தார்களா?

    விஜயா : ஆம், பலர் மற்ற பள்ளிகளில் சென்று தங்கள் கல்வியைத் தொடரும் அளவிற்கு தன்னம்பிக்கை கொண்டுவிட்டார்கள் என்பதே மகிழ்ச்சியான செய்தி. ஏழெட்டு மாணவர்கள் சேலம் வைஸ்யா கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பும் படித்தார்கள் என்று அறிந்தேன். இந்தப் பள்ளி மிக நல்ல முறையில் நடைபெறுவது அறிந்து, ஆந்திர மாநிலத்தின் மண்டீஸ் என்ற ஒரு வகை பழங்குடியினரின் குழந்தைகளுக்கு இது போன்ற பள்ளி ஆரம்பிக்க வேண்டுமென்று, எங்கள் பள்ளியையும், கற்பிக்கும் முறையையும் பற்றி அறிந்துகொள்ள வந்தனர். டிஸ்கவரி தொலைக்காட்சி நிலையத்திலிருந்தும் வந்து அனைத்தையும் பதிவேற்றிச் சென்றார்கள்.

    செவ்வி : குழந்தைகளுக்குத் தவிர நரிக்குறவர் சமுதாயத்திற்கு என்று குறிப்பிடும்படியான பணிகள் ஏதாவது செய்திருக்கிறீர்களா?

    விஜயா : திருமதி. கிருத்திகா அவர்களின் பேரார்வம் மூலமாக நரிக்குறவர் சமூக மகளிருக்காக, மகளிர் மகாநாடு நடத்தினோம். கருத்தடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பால்ய விவாகம் செய்வதைத் தவிர்க்க வேண்டியதன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். அதனால் பெருமளவில் பால்ய விவாகத்தைத் தவிர்க்கவும் வைத்தோம். எந்த ஊரில் அந்தக் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு அவர்கள் வைப்பது வழக்கம். அதை மாற்றி வேறு பெயர்களும் வைக்கப் பழக்கினோம். அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஆவண செய்தோம்.

    செவ்வி : நரிக்குறவர் இனத்தில் திருமணம் எப்படி செய்கிறார்கள்? அவர்கள் குழுவிற்குள்ளேயே பெண் எடுப்பார்களா?

    விஜயா : குறவர் இனத்தில் பலவகைப் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் ஒரே குழுமத்தில் உள்ள பெண்ணை மணக்கமாட்டார்கள். வேறு ஒரு குழுமத்திலிருந்துதான் பெண் எடுப்பார்கள். நாங்கள் இருந்த அந்த காலகட்டத்தில், மின்னாம்பள்ளியில், லஷ்மணன் குரூப் மற்றும் சங்கர் குரூப் என இருவகைக் குழுக்கள் இருந்தார்கள். அவர்களிடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் வரும். லஷ்மணன் குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று நாகரீகமாக இருப்பார்கள். பெண்கள் புடவை உடுத்தியிருப்பார்கள். ஆனால் சங்கர் குழுவில் இருப்பவர்கள் நாகரீகம் குறைந்தவர்களாக இருப்பார்கள். பெண்கள் பாவாடை, தாவணி அணிந்திருப்பார்கள். அப்பொழுது இருவரும் தங்கள் குழந்தைகளை ஒன்றாகச் சேர்ந்து படிக்கவும் விரும்பாமல் தனித்தனி வகுப்புகள் வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார்கள். நாங்கள் அவர்களை உட்கார வைத்துப்பேசி சமரசம் செய்துதான் ஒன்றாகப் பள்ளியில் படிக்க வைத்தோம்.

    பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வரும் சமூகங்களில் நரிக்குறவர் சமூகம் முதன்மையானது. கடும் கட்டுப்பாடுகள், ஒழுக்கமான வாழ்க்கை முறைமையைக் கொண்ட இவர்களின் திருமண முறையும் சுவையானது. இவர்கள் சமூகத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை தர வேண்டும். அது மட்டுமல்லாமல் பெண் வீட்டுக்காரரின் உறவுமுறைகள் அனைவருக்கும் உடுத்த உடை வாங்கித்தர வேண்டும். திருமணச் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சாமிச்சொத்து என்று சொல்லக்கூடிய, மூதாதைகள் கொடுத்துவிட்டுப் போன வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள் போன்ற சாமிப்பொருட்கள். நிறைய வைத்திருப்பவர்களுக்கே மதிப்பு அதிகம். இவர்களில், எருமை வெட்டுகிறவர்கள், ஆடு வெட்டுகிறவர்கள் என்று இரண்டு பிரிவு உண்டு. எருமை வெட்டுகிறவர்கள் ஆடு வெட்டுகிறவர்கள் வீட்டில் மட்டும்தான் பெண் எடுக்க வேண்டும். அதற்கு மாறாக பெண் எடுத்தால் அண்ணன் தங்கை முறையாகிவிடும் என்பார்கள். பெண்களுக்கு 13 முதல் 14 வயதிலேயும், ஆணுக்கு அதிகபட்சம் 18 வயதிலும் திருமணம் செய்து விடுவார்கள். ஒரு சில காதல் திருமணங்களைத் தவிர, பெரும்பாலும் பெரியவர்கள் பாத்துதான் திருமணம் செய்கிறார்கள். இரவு நேரங்களில் திருமணம் செய்வார்கள். பெரும்பாலும் குழந்தைகள் பிறக்கும்போதே திருமணத்தை நிச்சயித்துவிடும் வழக்கம் நரிக்குறவர்களிடையே இருந்தது. உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக பெண் குழந்தைக்கு மூன்று வயதான உடனே, திருமணத்தை முடித்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடும் வழக்கம் இருந்தது. தற்போது அது குறைந்து விட்டது.

    தெளிவாக உருவான இவர்களின் குடும்ப அமைப்பு முறை, சகோதர, சகோதரி பாசம், புரிந்துணர்வு, பொருளாதாரப் பின்னடைவுகளைத் தாண்டியும் இவர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் நிம்மதியான, நிறைவான வாழ்க்கை முறைகள் பாராட்டிற்குரியது. இவர்களின் கூடி வாழும் வழமையும் போற்றுதலுக்குரியது. நாற்பது, ஐம்பது கூடாரங்களில் வாழும் குழந்தைகள் அனைவரும், பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும், எந்த வீட்டில் வேண்டுமானாலும் சென்று உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். கல்வியறிவு இல்லாத போதும் அவர்களுடைய கணக்குத் திறமை அபாரமானது. இளமையிலேயே நன்கு கணக்குப்போடும் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதே போல இயற்கை மூலிகைகளில் சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு முறை எனக்கு தலை வலி வந்தபோது ஒரு சிறுவன் காட்டுப் பூண்டு என்று ஒரு வகை தாவர மூலிகையைக் கொடுத்து முகரச் செய்தான். மயக்கம் வரும் அளவிற்கு ஒரு காரம் இருந்தது. பின் தலை வலியும் உடனே குணம் ஆனது. பிரசவம் கூட மிக எளிமையாக அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் மருத்துவமனை செல்வதில்லை. இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தன்மைகள் பலவும் இருக்கின்றது.

    உலகின் உன்னதமான பணிகளில் ஆசிரியப் பணியும் ஒன்று. ஏற்றி விடும் ஏணி என்பதைவிட, வாழ்க்கையில் பல பாடங்களையும் கற்றுத் தரும் பணி என்றே சொல்லலாம். அந்த வகையில், காரைக்கால் அம்மையார் மீண்டும் பிறவி இருந்தால் உன்னை மறாவாமல் இருக்கும் வரம் வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டியது போல, அடுத்தொரு பிறவியிலும் என்னை ஆசிரியப் பணியிலேயே இருக்கும் வரம் அருள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன். தாய் மட்டுமே ஒரு குழந்தையின் முதல் ஆசிரியையாக இருக்க முடியும். ஒரு குழந்தையை நல்ல குடிமகனாக உருவாக்குவது ஒரு அன்னையின் கைகளில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    தற்போது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, தனியார் பள்ளியான செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வராக இருக்கும் திருமிகு. விஜயா அவர்கள் இன்றும் குழந்தைகளை கல்வி கற்க ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகளை பல பள்ளிகளிலும் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நம் வல்லமையின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.

    நரிக்குறவர் படத்திற்கு நன்றி :

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

    Share
  • பயணப்பிணி வரக் காரணம் என்ன?

    தேமொழி

    பயணப்பிணி எனப்படும் “மோஷன் சிக்னெஸ்” (motion sickness) பயணத்தினால் ஏற்படும் ஓர் உடல்நலக்குறைவு.

    மக்களில் மூன்றில் ஒருவருக்கு பயணம் செய்யும் பொழுது, பயணம் ஒவ்வாத உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். கொந்தளிப்பு, ஆட்டம், குலுக்கல் நிறைந்த பயணங்கள் சிலரை மிகவும் பாதிக்கும். இப்பாதிப்பு கப்பல், ஊர்திகள், விமானமப் பயணங்களிலும் ஏற்படுவதால் இந்த பயணப்பிணி முறையே seasickness, car sickness, airsickness என்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாகக் குறிப்பிடப் படுவதும் உண்டு. இவ்வாறு பயணங்கள் மட்டும் அல்லாது இராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டிலும், வேகமாக பயணிக்கும் திரைப்படக் காட்சிகளைக் காண்பதிலும் கூடப் பயணப்பிணி உடல்நலக் குறைவு ஏற்படுவதுண்டு.

    ‘Motion sickness’ அல்லது ‘Travel sickness’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் இந்நோய் ‘கின்னட்டோசிஸ்’ (kinetosis) என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. பயணப்பிணி ஏன் ஏற்படுகிறது என்ற சரியான விடையை இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் பல காரணங்களும் ஆராயப்பட்டு வருகிறது.

    அறிகுறிகள்:
    குமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலைசுற்றல் (dizziness), மயக்கம் (fainting) , தலைவலி (headache), சோர்வு (fatigue) ஆகியவற்றை பயணப்பிணியினால் பாதிக்கபட்டோர் உணரும் அறிகுறிகளாகக் குறிப்பிடுவர்.

    பயணப்பிணி தோன்றக் காரணம்:
    பொதுவாகக் கருதப்படும் காரணம்; தனக்குக் கிடைக்கும் முரணான சமிக்கைகளை மூளை கையாளும் விதமே பயணப்பிணி தோன்றக் காரணம். நாம் ஓர் ஊர்தியில் பயணிக்கும் பொழுது, நமது புலன்கள் முரணான சமிக்கைகளை மூளைக்கு அனுப்புவதால், குழப்பமடைந்த மூளையின் எதிர்விளைவு பயணப்பிணியாக உருவெடுக்கிறது. நமது பயணத்தின் போது திசை, இயக்கம், அசைவு பற்றிய தகவல்களை மைய நரம்பு மண்டலதிற்கும், மூளைக்கும் அனுப்பும் புலனுறுப்புகள் கண், காது மற்றும் தோலின் திசுக்கள் ஆகியன.

    கண் பார்வை மூலம் காணும் காட்சியின் வழி திசை மற்றும் இயக்கத்தையும், காதில் உள்ள உட்செவியின் உள்ள ‘செவி முன்றில்’ (vestibular system) உதவியால் சமநிலை, அசைவு ஆகியவற்றையும், தோலின் கீழ் உள்ள தசைகளில் பொதிந்துள்ள உணர்வு நரம்புகள் ஈர்ப்புவிசை, வேகம் போன்ற தகவல்களையும் உள்வாங்கி புலனுறுப்புகள் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. பயண ஊர்தியில் பயணிக்கும் பொழுது நமது கண்ணானது நாம் அறையில் அசையாமல் அமர்ந்திருப்பது போன்ற தகவலை மூளைக்கு அனுப்புகிறது, ஆனால் காதின் சமநிலைக்குக் காரணமான செவிமுன்றில் நாம் வேகமாகப் பயணிப்பதாகத் தகவல் அனுப்புகிறது. முரண்பட்ட இச்சமிக்கைகளால் மூளை குழப்பமடைந்து பயணப்பிணி தோன்றுகிறது. அது குமட்டலாக, வாந்தி வரும் உணர்வாக மாறுகிறது (Motion sickness caused by motion that is felt but not seen). திரைப்படத்தில் தோன்றும் பயணக் கட்சிகளும் இவ்வாறே குழப்பத்தைத் தரும். ஆனால் அது சற்று மாறுபட்ட வகையில் செயல்படுகிறது. கண் பார்வை திரையில் தோன்றும் வேகமாகப் பயணிக்கும் தகவலை மூளைக்கு அனுப்பும் பொழுது, காது அது போன்ற இயக்கம் ஏதும் நிகழவில்லை என்ற தகவலை மூளைக்கு அனுப்பும், இதன் விளைவாகவும் சிலர் எதிர் கொள்வது பயணப் பிணியைதான்  (i.e., Motion sickness caused by motion that is seen but not felt).

    பயணப்பிணி பக்க விளைவுகளுக்கு விளக்கம்:
    இவ்வாறு வயிற்றினைப் பாதிக்கும் குமட்டலுக்கும் வாந்திக்கும் காரணம் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் விளக்கப்படுகிறது. விரைவுப் பயணங்கள் வரலாற்றில் நிகழ்வது சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்தான். அதற்குமுன் மனிதர்களின் இயக்கம் பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்தது. இயற்கையில் மனிதர்கள் நச்சினை உண்டுவிட்டால், உடல் மனித உயிரைக் காக்கும் பொருட்டு குமட்டல், வாந்தி எடுப்பதன் மூலம் உடலில் இருந்து அவற்றை வெளியேற்றி மனித உயிரைக் காக்கும். அது போலவே, முரணான தகவல்களையும் நரம்புமண்டலம் நச்சுப் பொருள் என்ற வகையிலேயேக் கையாண்டு, குமட்டல், வாந்தி மூலம் நச்சை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கையை எடுக்கிறது. குமட்டல், வாந்தி என்ற பயணப்பிணியின் முக்கியமானப் பக்க விளைவுகளைக் கொண்டே இந்த விளக்கம் பிறந்ததுள்ளது. ஆனாலும் இக்கூற்று பல விளக்கங்களைத் தருவதில் தவறிவிடுகிறது. எதனால் பார்வையற்ற பயணிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது? எதனால் ஆடவரைவிட மகளிர் அதிகம் பயணப்பிணியினால் பாதிக்கபடுகிறார்கள்? வண்டி ஓட்டுனரைக் காட்டிலும் பயணிகள் பெரும்பாலும் பாதிப்படைவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

    பழக்கமற்ற சூழ்நிலைகளிலும், இடங்களிலும் நம் உடல் சமநிலையில் இருக்கமுடியாததால் ஏற்படும் கோளாறு இவ்வாறு பயணப்பிணியாக வெளிப்படுகிறது என்றும் மற்றொரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. பற்பல அறிவியல் முன்னேற்றங்கள் நிகழ்ந்துவிட்ட பொழுதும் எவ்வாறு சளி பிடிப்பதை தவிர்க்க முடியாத நிலையில் உள்ளோமோ அது  போலவே பயணப்பிணியும் மனித குலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.

    பயணப்பிணி மருந்தும் சிகிச்சையும்:
    மூளைக்குக் குழப்பம் தரும் இயக்கம் நின்று போனாலும், அல்லது நாம் அதைத் தவிர்க்கும் பொழுதும் பயணப்பிணி நிலைமை பெரும்பாலும் மாறிவிடும். மேலும் இப்பிணியைத்தவிர்க்க, பயணிக்கும் பொழுது தொடுவானத்தில் பார்வையை நிலை நிறுத்தவும், அல்லது பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி  அமர்ந்து பயணிப்பதைத் தவிர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப் படுகிறது.

    பயணங்களில் இஞ்சியை மெல்லுவதும் உதவுவதாக அனுபவபூர்வமான அறிவுரைகள் கொடுக்கப்படுகிறது, பேருந்து நிலையங்களில் நம்மூரில் ‘இஞ்சி மொரப்பா’ மிட்டாய்கள் விற்கப்படும் காரணமும் இதனால்தான்.

    சீனமருத்துவமான ‘அக்யூபங்க்ச்சர்’ (Acupuncture) முறையில் கண்டுணரப்பட்ட சிகிச்சைக்கான அதே உடற் பாகங்களிலேயே கொடுக்கப்படும் அழுத்தங்கள் (acupressure) உதவுவதாகவும் நம்பப்படுவதால் அந்த முறை சிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு கைக்காப்பு போன்ற பட்டைகளும் சிலரால் கை மணிக்கட்டில் அணியப்படுகிறது.

     

    கட்டுரைக்கான சான்றுகள்:

    1. FYI: What Causes Motion Sickness, And How Do You Cure It? Brooke Workneh, Popular Science, December 2012

    2. Treisman, M. Motion sickness: an evolutionary hypothesis. Science 197: 493-495, 1977.

    3. The mystery of motion sickness, Rose Eveleth, TED Ed Lessons, January 2014.

     

     

    படம் உதவி:
    http://www.popsci.com/sites/popsci.com/files/styles/article_image_large/public/images/2012/12/motion_sick.jpeg?itok=UXY3YxRV

    Share
  • வாழ்க்கை நலம் – 44

    குன்றக்குடி அடிகள்

    44. உண்மையான தவம்

    இந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான்.  ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல்தான்!

    இங்ஙனம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கைத் துன்பச் சுமையாகத் தோன்றும். “ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை” என்றார் எலியட்.

    ஒருவர் நம்மை நாடி வந்து கேட்ட பிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், “நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்” என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.

    உதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது; பலர் சுற்றமாகச் சூழ்வர்.

    இன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது. பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர்.  வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார்.  பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.

    இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும்.  ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர் பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.

    தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக் கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான்.  ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, காலத்தில் இடர்பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது; துன்பம் செய்யாது.

    மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால்தான்  மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது.  அதுவும், பழகிப் போனால் திறனாகாது.

    மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது; பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குலநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    வறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல்! மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.

    பசியைப் பொறுத்தலினும் – மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல்! இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.

    ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    (திருக்குறள் –  225)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (8)

    ராமஸ்வாமி ஸம்பத்

    அண்ணன் ஆணைப்படி லக்ஷ்மணன் சுக்ரீவனை கிஷ்கிந்தை அரசனாகவும் அங்கதனை அந்நாட்டின் இளவரசனாகவும் முடிசூட்டினான். மகிழ்ச்சிகொண்டு சுக்ரீவன் மது அருந்தியும் காம கேளிக்கைகளில் ஈடுபட்டும் அப்போதே தொடங்கிய கார்காலம் முழுதையும் கழித்தான். ராமனும் இளைய பெருமாளும் ஒரு குஹையில் வாசம் செய்தனர். சுக்ரீவனுக்குக் கார்காலம் பறந்து சென்றதென்றால் ராமனுக்கு ’இந்த ருதுவிற்கு ஒரு முடிவு உண்டோ’ என எண்ண வைத்தது. ஸீதையின் நினைவில் துயருற்ற அண்ணலை லக்ஷ்மணன் ஆறுதல் சொல்லி “அனுமன் போன்ற வானர வீரர்கள் உதவியுடன் ஜனகபுத்திரியை விரைவில் மீட்போம்” என்று சூளுரைத்தான்.

    கார்காலம் ஓய்ந்து, ’மாரி மலை முழஞ்சில் மன்னிக்கிடந்த’ ராமன் மனக்கவலையோடு ’சுக்ரீவன் ஏன் இன்னும் ஸீதையைத் தேடுவதற்கு ஆயத்தம் செய்யவில்லை? ஒருவேளை அமிதமான கேளிக்கைகளில் ஈடுபட்டு கொடுத்த வாக்கினை மறந்து விட்டானோ?’ என நினைத்தான். லக்ஷ்மணனை அழைத்து “தம்பி, நீ உடனே சுக்ரீவன் அரண்மனைக்குச் சென்று, ’வாலியை வதைத்த அதே அம்பு நன்றி மறந்தவரையும் வீழ்த்த சித்தமாக உள்ளது’ என்று அவனிடம் சொல்” என ஆனையிட்டான்.

    கோபக்கனல் தெரிக்க அரண்மனையில் நுழைந்த லக்ஷ்மணனை தாரை எதிர்கொண்டு, நிலைமையை தான் சரிசெய்வதாகச் சொல்லி இளவலின் சினத்தை அடக்கினாள். பின்னர் அங்கதனுடன் அந்தப்புரத்திற்குச் சென்று, சுக்ரீவனது  அலட்சியத்தைச் சாடி புத்தி புகட்டினாள். தெளிவுபெற்ற சுக்ரீவன், ராமனிடம் மன்னிப்புக் கோரினான். பாதம் பணிந்த வானரனைத் தழுவி ராமன் அடுத்து செய்ய வேண்டிய ஸீதை தேடல் முயற்சி குறித்து அவனுடன் ஆலோசனை செய்தான். அதன்படி சுக்ரீவன் நான்கு திக்குகளிலும் வானரப்படைகளை அனுப்பினான். தென் திசைக்கு அனுமன், அங்கதன், ஜாம்பவான் உள்ளிட்ட பெரும்படை அனுப்பப்பட்டது. ஒரு சில வாரங்களுக்குப்பின் கீழ், மேல், வட திசைகளுக்குச் சென்றவர் ஸீதையை எங்கும் காணாமல் கைவிரித்த வண்ணம் திரும்பினர்.

    ராமனின் உள்ளுணர்வு ’அனுமன் நிச்சயம் வெற்றிபெறுவான்’ என்று கூறியதால், அவன் தனக்கும் ஸீதைக்கும் மட்டுமே தெரிந்த சில தகவல்களை அனுமனிடம் சொல்லி தன் மோதிரத்தையும் கொடுத்திருந்தான். “இவ்வடையாளங்களால் ஸீதைக்கு உன்மீது நம்பிக்கை ஏற்படும்” என்றும் கூறியிருந்தான்.

    தென் திசை சென்ற வானரர்கள் பல அரண்யங்களிலும் மலைகளிலும் தேடி பசி தாகத்தால் களைத்தவராய் பிலம் என்னும் ஒரு குஹையை அடைந்தனர். குஹையின் உள்ளே குளிர்ந்த காற்று வீசியது. ஒரு அழகான சிறிய நகரம் காணப்பட்டது. பலவிதமான பழவகைகளைத் தாங்கும் தருக்கள்   நிறைந்திருந்தன. மனித, விலங்கு நடமாட்டமே அங்கு இல்லை. இவற்றின் நடுவே ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்த ஒரு தேவகன்னிகை அவர்களை கோபம் பொங்கும் கண்களோடு நோக்கினாள்.

    அனுமன் அவள் அருகே சென்று, “அன்னையே, தாங்கள் யார்? இந்த அத்வானமான இடத்தில் தனிமையில் என்ன செய்கிறீர்கள்?” என்று வினவினான்.

    “முதலில் நீ யார் என்று சொல். யாரும் நுழைய அச்சப்படும் இக்குஹையில் எவ்வாறு நுழைந்தீர்கள்? இங்கு வந்தவர் யாரும் வெளியே செல்லமுடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?”

    “அன்னையே, சினம் வேண்டாம். நாங்கள் வானர அரசன் சுக்ரீவனின் ஆணைப்படி அவர் உற்ற நண்பன் ராமபிரானின் மனைவியான ஸீதையைத்தேடி அலைகிறோம். அவள் அரக்கர்கோன் ராவணனால் கடத்தப்பட்டு விட்டாள்.”

    ’ராமன்’ எனும் சொலைக் கேட்டதும் அவள் முகம் மலர்ந்த்து.

    “வானரர்களே, வருக, வருக. உங்களுக்காகவே காத்திருக்கிறேன்” என்று சொல்லி, “முதலில் உங்கள் பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றாள். அதன்பின் அவள் தன் கதையைக் கூற முற்பட்டாள்.

    ….என் பெயர் சுயம்பிரபை. நான் இந்திரலோகத்தைச் சேர்ந்தவள். எனது உற்ற தோழி ஹேமையும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த மயன் என்னும் நகர நிர்மாண நிபுணனும் ஒருவரை ஒருவர் விரும்பி இந்த குஹையில் பலநாட்கள் ஆனந்தமாக்க் கழித்தனர். அவர்களுக்குக் காவலாக நான் இங்கிருந்தேன். காணாமற்போன  எங்களைத்தேடி வந்த இந்திரன் கோபமுற்று, அவ்வரக்கனைக் கொன்று, ஹேமையைச் சாடி, “நீ ஏன் வரம்பு மீறினாய்?” என்று கேட்டபோது, அவள் என்னைச் சுட்டிக்காட்டினாள். இந்திரன், “இந்த தகாத காரியத்திற்கு உடந்தையாக இருந்ததால், நீ இந்த பில நகரத்திலேயே தனித்திருந்து வாடுவாயாக” என்று என்னை சபித்தான். ”எனக்கு விடிவு கிடையாதா?” என்று மன்றாடிய என்னை நோக்கி, “என்றாவது ஒருநாள் வானரவீரர்கள் ராம காரியத்திற்கு உதவும் பொருட்டு இங்கு நுழைந்து வெளியே செல்ல வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு சகாயம் செய்தபின், நீ நம் உலகிற்கு வந்து சேரலாம்” என்றான் வானரசன். அன்றிலிருந்து உங்கள் வருகைக்காக தவமிருந்து வருகிறேன். என் தவம் பலித்தது இன்று….

    பின்னர், சுயம்பிரபை தன் தவ வலிமையினால் வானர வீரர் அனைவரையும் கீழைக்கடலோரம் சேர்ப்பித்து வானுலகுக்கு ஏகினாள்.

    கடற்கரை அருகே நின்ற வானரர்கள், வியப்போடும் கவலையேடும் ‘இனி என் செய்வோம்’ என ஆலோசனையில் வீழ்ந்தனர். அங்கதன், “நமக்குக் கொடுத்த கெடு தீர்ந்துவிட்டது. எனக்கு அன்னையைக் காண்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது. ஸீதையைக் குறித்த தகவலில்லாமல் கிஷ்கிந்தை சென்றால் சிற்றப்பன் என்னைக் கொன்றுவிடுவான். ஆகவே நான் இங்கேயே உண்ணாவிரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்” என்று சொல்லி தரையில் தர்ப்பைகளைப் பரப்பி அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அனைத்து வானரர்களும் அவ்வாறே செய்தனர்.

    இவற்றையெல்லாம் அருகே உள்ள குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதிய பிராயத்தை அடைந்திருந்த மாபெரும் பருந்து மகிழ்ச்சியுடன், ’அப்பாடா, இந்த குரங்குக் கூட்டம் இவ்வாறு உயிர் நீத்துவிட்டால் எனக்குக் கொஞ்ச காலத்துக்கு உணவு பற்றிய கவலையே இருக்காது’ என நினைத்தது.

    கடலில் நீராடிவிட்டு வந்த அனுமனும் ஜாம்பவானும் அங்கதனைச் சாடினர். “கிஷ்கிந்தை இளவரசனான நீயே நம்பிக்கை இழக்கலாமா? ஸீதையைக் காணாவிட்டால் என்ன? நாமெல்லாரும் எவ்வாறாகினும் இலங்கை சென்று அந்த ராவணனுடன் போராடுவோம். கிழப்பருந்தான ஜடாயு அச்சமில்லாமல் ராவணனுடன் உக்கிரமாக போராடி உயிர் விடவில்லையா? நாமும் அந்த பொல்லா அரக்கனைத் தாக்குவோம்” என்று அனுமன் கூறினான்.

    ஜடாயுவின் பெயரை அனுமன் சொன்னதும், குன்றிலிருந்த பருந்து “என்ன? என் அருமைத் தம்பி ஜடாயு இறந்து விட்டானா?” என்று கதறி “வானரர்களே, இறக்கைகள் இல்லா என்னை இந்த குன்றிலிருந்து இறக்குங்கள். நான் உங்களுடன் பேசவேண்டும்” என்று அலறியது.

    அனுமன் உடனே அதனை மெள்ள கீழே இறக்கினான். “வானரர்களே, என் பெயர் ஸம்பாதி. நானும் என் இளவல் ஜடாயுவும் அருணனின் புத்திரர்கள். என் தம்பியை ராவணன் கொன்றுவிட்டானா? அந்த விவரத்தை எனக்குக் கூறுங்கள்” என்றது அப்பருந்து.

    ஜாம்பவான் ஜடாயு எவ்வாறு மரணமடைந்தான் என்பதை விளக்கினான். “ராமனின் மனைவி ஸீதையைக் கவர்ந்து செல்லும் ராவணனைத் தடுக்க அவனை ஜடாயு பலவிதமாக தன் அலகினாலும் இறக்கைகளாலும் தாக்கினான். கோபம் கொண்ட அரக்கன் தனக்கு சிவபெருமான் வரமாகக் கொடுத்த வாளினால் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டியதோடு அவனைக் குற்றுயிரும் கொலை உயிருமாக வீழ்த்தினான். ஸீதையைத் தேடி அங்கு வந்த ராமனிடம் உன் தம்பி நடந்ததைக் கூறி உயிர் நீத்தான்.”

    ஸம்பாதி ஜடாயுவின் தீரத்தை மெச்சி, “நானும் அந்த அரக்கன் ஒரு பெண்ணைக் கடத்தி தென்கிழக்கு திசையில்  செல்வதைப் பார்த்தேன். ஓ! அவன் ராவணனா?” என்றான்.

    அனுமன் ஸம்பாதியிடம், “நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்யவேண்டும். உங்கள் கூர்ந்த பார்வையால் ராவணன் சென்ற திக்கை நோக்கி அவன் ஸீதையை எங்கு சிறை வைத்துள்ளான் என்பதனைக் கண்டு சொல்லவேண்டும்” என்றான்.

    ஸம்பாதி தன்னை மீண்டும் அக்குன்றில் ஏற்றிவைக்குமாறு பணித்தான். அனுமன் அவ்வாறே செய்ய, தனது தொலை நோக்கும் திறனால் இலங்கையில் அரக்கிகளைடையே ஸீதை படும் துயரினை விவரித்தான். அவ்வாறு அவன் சொல்லும்போதே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஸம்பாதியின் இறக்கைகள் மீண்டும் வளர ஆரம்பித்தன.

    “ஆஹா! சூரிய பகவான் ’ராம காரியத்திற்கு உதவி செய்தால் எரிந்துபோன உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும்’ என்று முன்பு சொன்னது பலித்து விட்ட்தே” என்று மகிழ்வோடு அந்த வரலாற்றை விவரிக்க ஆரம்பித்தான்.

    …..இள வயதில் நானும் ஜடாயுவும் யார் உயர உயரப் பறக்க வல்லவர் என்று போட்டியிட்டோம். அவ்வாறு பறந்து சூரிய மண்டலத்தையே எட்டிவிட்டோம். கதிரவனின் வெப்பத்தைத் தாங்கமுடியாத ஜடாயு “அண்ணா என்னைக் காப்பாற்றுங்கள்” என அலறினான். நான் உடனே அவனைவிட உயரப் பறந்து என் இறக்கைகளால் அவனை சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து காப்பாற்றினேன். இந்த முயற்சியில் என் இறக்கைகள் எரிந்து சாம்பலானதால் நான் இக்குன்றின்மீது வீழ்ந்து விட்டேன். இதை அறியாத ஜடாயு தன்னிடத்திற்குச் சென்றுவிட்டான். எரிச்சலில் கதறிய என்னை சூரிய பகவான் பரிவோடு பார்த்து, “ஸம்பாதி, கவலை வேண்டாம். என்றாவது ஒரு நாள் ஸீதையைத் தேடிக்கொண்டு இக்கடற்கரைக்கு வானரர்கள் வருவார்கள். அவர்களுக்கு நீ உதவி செய்தால் உன் இறக்கைகள் மீண்டும் வளர்ந்துவிடும்” என்றார். அதன்படி ராம காரியத்திற்கு சகாயம் செய்ய நானும் இத்தனை காலமாகக் காத்திருந்தேன். உங்கள் நல்வரவால் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. நானும் உய்ந்தேன்….

    ”வானரர்களே, நீங்கள் அனைவரும் இங்கிருந்து நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கை செல்வது கடினம். உங்களில் பலம் பொருந்திய ஒருவனை ஸீதையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்துங்கள்” என்று சொல்லி ஸம்பாதி தன்வழியே பறந்து சென்றான்.

    அதன்பின் ஜாம்பவான் தலைமையில் ஆலோசனை நடந்தது. எல்லாருடைய சக்தியையும் ஆராய்ந்து அவன் இந்த செயற்கரிய செயலை செய்ய வல்லவன் அனுமனே என்ற முடிவுக்கு வந்தான். பின்னர், ஜாம்பவானே அனுமனைப் பலவாறு சிலாகித்து உற்சாக மூட்டினான். ’சுந்தரன்’ எனும் பெயரையும் பெற்றிருந்த அனுமன் பெரிய உருக்கொண்டு இந்த அசாத்திய செயலைச் சாதிக்க, ராம நாமத்தினை ஜபித்தவாறு  மஹேந்திர மலையிலிருந்து இலங்கை நோக்கித் தாவ முற்பட்டான்.

    (​தொடரும்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…92

    சக்தி சக்திதாசன்

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…92

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்.

    babyparent1 babyparent2

    குழந்தைகள் தெய்வமும் குணத்தால் ஒன்ரு என்பார்கள். கள்ங்கமற்ற வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர்கள் குழந்தைகள்.

    ஒரு வெறும் காகிதத்தைக் கொடுத்து எம்மை எழுதச் சொன்னால் அதில் கிறுக்குவதற்கு மனம் வருமா?

    அது போலத்தான் கள்ளமற்ற குழந்தை மனதை சரியான முரையில் வளர்த்தெடுப்பது, அவர்களை இக்கால வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் வகுத்தெடுப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகிறது.

    கேட்பதை அப்படியே தமது உளத்தில் பதி செய்து கொள்வார்கள் குழந்தைகள். பார்க்கும் காட்ச்சிகளின் உள்ளார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் அதை அப்படியே கண்ணுக்குப் புலப்பட்ட வகையில் அர்த்தம் பண்ணிக் கொள்ளும் சுபாபமுடையவர்கள் குழந்தைகள்.

    என்னடா இது? குழந்தைகளைப் பர்றி அளவு கணக்கில்லாமல் அளந்து கொண்டு போகிறானே என்று எண்ணுகிறீர்களா?

    பயப்படாதீர்கள். சமீபத்தில் நான் காதில் வாங்கிய ஒரு செய்தியை சுவாசிப்பதே இம்மடலின் நோக்கம்.

    இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தைகளின் நலனைப் பாராமரிக்கும் அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் கருத்து அண்மையில் ஊடகங்களின் முதற்பக்கச் செய்தியாக மிதந்தது.

    பல பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாஅக வளர விடாமல் அவர்களின் திறமையை வளர்ப்பதாக எண்ணி அவர்களது நேரம் முழுவதையும் பயன்படுத்துவதற்காக பள்லிப் படிப்புத் தவிர்ந்த வெளி பயிற்சிகளில் அளவுக்கதிமகா ஈடுபடுத்துகிறார்கள் என்பதுவே அவரது கருத்து.

    அதாவது “ஜயையோ கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாமல் பணிகளில் கிடந்து அழுந்துகிறோமே” என்று எண்ணும் பெர்டியவர்களைப் போல குழந்தைகளுக்கும் சர்ரு நேரம் கூட குழந்தைகளாஅக உட்கார்ந்து தமக்கேயுரிய குழந்தைச் சுட்டித்தனம் புரிவதர்கு தகுந்த அளிவில் நேரம் கொடுக்கப்படுவதில்லை என்கிறார் இவர்.

    இத்தகிய நடவடிக்கைகளினால் குழந்தைகள் இயற்கையாக வளர்ச்சியடையாமல் சிறுவயதிலிருந்தே மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் வகையில் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பதுவும் இவர் கருத்தாகிறது.

    மிகவும் சிக்கலான ஒரு விவாதம்.  இல்லையா?

    இப்பிரபஞ்சத்திலே எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாஅக குழந்தைகள் பிரப்பதும் அவர்களை ஆன்னை தந்தையர் பேணிப்பாதுகாத்து வருவதும் இயற்கை நிகழ்வுகளாக் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

    அப்படியிருக்கையில் இன்றைய காலகட்டத்தில் இது ஏன் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகிறது? மனதைத் துருவும் ஒரு கேள்வி.

    காலமற்றம். ஆம் அதுவே உடனடியாக எமக்குக் கிடைக்ககூடிய விடையாகிறது.

    காலத்தின் மார்ரம், விஞ்ஞான வளர்ச்சி அவ்வளர்ச்சியின் வழியாக வாழ்க்கை வசதிகளின் ஏற்றத் தாழ்வு இவையனைத்தும் இன்றைய குழந்தை வளர்ப்பிற்கும் அன்றைய குழந்தை வளர்ப்பிற்கும் உஇள்ல வேறுபாட்டின் காரணங்களில் சிலவாகின்றன.

    அன்று ஒரு குழந்தையின் கைகளி அநேகமான நேரம் இருந்தது தனது நேரத்தைப் போக்கடிக்க தனது விளையாட்டுப் பொருட்களைத் தானாக கற்பனை செய்து உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையிருந்தது.

    ஆனால் இன்றைய குழந்தைகளின் கைகளில் நவீன கண்ணை சம்மந்தப்பட்ட பொருட்கள் கிடைத்ததும் அவர்களது கற்பனாதிரனை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருப்பதில்லை.

    ஆனால் இது எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துமா? இல்லை மத்துயதர, உயர்தர வாழ்க்கை வசதி கொண்ட குடும்பங்களின் குழந்தைகளினால் தான் இவற்றைப் பெற்றுக் கொள்ல முடியும்.

    அடிப்படை உணவு வசதிக்கே அல்லாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எங்கே போவார்கள் இவ்வசதிகளைப் பெற?

    தமது குழந்தைகளை இந்நவீன உலகில் திரமை மிக்கவர்களாஅக ஆக்குவதற்கு விளையாட்டு, கல்வி, விஞ்ஞானம் எனும் அனைத்துத் துறைகளிலும் பள்லிகளில் கிடைக்கும் போதனைகளை விட அதிக போதனைகளைப் பெர்றுக் கொடுபதர்காக தனியாரிடம் செல்கிறார்கள் வசதி படைத்தவர்கள்.

    ஆனால் வசதியற்றவர்களின் நிலை?

    அரசாங்கம் பள்லிகளில் இத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் வறுமைக்கோட்டின் கீழுள்ள குழந்தைகள் என்றுமே பின் தங்கியவர்களாகவே இருக்கப் போகிறார்கள்.

    இந்நிலையில் எது சரி,  பிள்ளைகள் இயற்கையாக வளரட்டும் என்ரு அவர்களை அவர்கள் வழியில் விடுவதா? இல்லை எமது சக்திக்குட்பட்ட வகையில் அவர்களது ஓய்விநேரத்தில் பலவித பயிற்சிகளுக்கு உள்ளாக்குவதா?

    மிகவும் ஆழமான விவாதம் சிந்திப்போம் மீண்டும் அடுத்த மடலில் அன்புடன் சக்தி சக்திதாசன் http://www.thamilpoonga.com http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

    கவிஞர் காவிரி மைந்தன்

    MGR ... MGR ....

    மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..

    அன்றலர்ந்த தாமரைபோல் அழகியநல்முகம்! செக்கர்வானம் தந்துவைத்த பொன்னிறம்! கொடுத்துச்சிவந்த கரங்களால் அவரும் பாரி! பறங்கிமலை அருகினில் தோட்டம்! தோட்டம்! ராமனின் கால்பட்டதால் அகலிகை பெற்ற விமோசனம்போல் எங்கள் ராமச்சந்திரன் வாழ்ந்த காரணத்தால் அது ராமாவரமாய் ஆனதோ? திரையில் தோன்றிய நாயகன் மக்கள் மனதில் வாழ்கிற காவியம்! இதற்கு முன்னோ இதற்குப் பின்னோ இப்படி ஒருவரில்லை! ஈடில்லை. உவமையில்லை!

    கும்பகோணத்தில் தன் தாய் ஒரு கவளம் சோறுதர முடியாமல் தவித்த தவிப்பை தன் மனதில் பதி்த்து தமிழகத்தில் எந்த தாய்க்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ஆர்ப்பரித்து சத்துணவுத் திட்டம் விரிவாக்கிய தலைமகன்! வாழ்ந்த நாளெல்லாம் மக்கள்..மக்கள் என்று மக்களை எண்ணியே தான் வாழ்ந்த ஓர் மகன்! அவனுக்குப் பிள்ளையில்லை என்று சொல்வார்கள். அட. அவனே பிள்ளைதானே தமிழருக்கெல்லாம்! எங்கவீட்டுப் பி்ள்ளை என்பது யாரை இங்கே? தமிழுக்குத் தலைவணங்கி தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் இட்டமகன்! தமிழ்க்கவிஞர்களை எல்லாம் கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து பாராட்டி பரிசளித்து அவர்கள் இதயங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்தமகன்! சமுதாயம், நாடு, மொழி, இனம் என்பதற்கு என்றைக்கும் முன்னிலைதந்து முழுமூச்சாய் உழைத்தவன்! ஏழைகள்மீது பரிவுகாட்டுதல், சாதிப்பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தை விரும்பியவன்!

    ஆதியிலே பெரியாரும். அடுத்துவந்த அண்ணாவும் திராவிட உணர்வூட்டித்தந்ததனால் தன்னுழைப்பை தவறாமல் தந்தானே! அண்ணாவின் பெயர்தாங்கி கழகம் கண்டு தேர்தல்களம் கண்ட நாள் முதலாய் வெற்றியையே அறிந்தானே! முதல் அமைச்சர் என ஆன 1977முதல் அவன் வாழ்ந்த நாள்வரைக்கும் அவனே ராஜா! வாய்பேச முடியாமல் போனபோதும். மக்கள் வாக்குகளோ அவனைத்தான் சேரும்! சேரும்!! அன்றொரு நாள் அவனுக்கு உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை. ஜப்பான் நிபுணர் முதல் உலக மருத்துவர்கள் கவனம்குறையாமல் காத்திருந்த எங்கள் ரோஜா! வாடிநிற்கும் காட்சி்யைத்தான் ஏடுதனில் பார்த்தோம். ஐயகோ. எங்கள் தங்கத்திற்கா இப்படி ஒரு நிலை? அழகுக்கு இலக்கணம் வகுத்துவைத்த அன்புத்தலைவனுக்கு வரலாமோ என்றெல்லாம் மனமுருக பிரார்த்தனைகள் உலகமெங்கும்!

    தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் . சிறுசிறு கோயில்முதல் அறுபடைவீடுவரை. எங்குபார்த்தாலும் மதங்களைக் கடந்து மக்களின் பிரார்த்தனை. அனலில்விழுந்து துடித்தனர் ஏழையரெல்லாம்! என்னுயிரை எடுத்துக்கொள். மன்னன் உயிர் காத்திடு என்று ஆயிரமாயிரம் உள்ளங்கள் தொழுதன! அழுதன! ஆண்டவன் காலடியில் விழுந்தன! தமிழகத்தின் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும் அதற்கு முன் இரண்டு பாடல்கள் காட்டப்படுவது எழுதப்படாத விதியானது! நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களது பாடலும் இறைவா உன் மாளி்கையில் எத்தனையோ மணிவிளக்கு . தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு என்கிற கவிஞர் வாலியின் பாடலும். (இரண்டுமே மெல்லிசை மன்னரின் இசை) ஒளிபரப்பானது. இந்தச் சரித்திரத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?

    அப்படி ஒரு அதிகாலை அமெரிக்காவிலிருந்து உடல்நலத்தோடு மக்கள்திலகம் வந்து நம் மண்ணில் இறங்குகிறார். என்கிற செய்தி. ஒருசில நாட்களுக்கு முன்னர் எட்ட அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வின் சார்பிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்றத்தினர் சார்பிலும் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் தலைநகரில் அலைமோதியது! அன்று பறங்கிமலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்.

    இரவென்றும் பாராமல். பனியென்றும் பாராமல். மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில் திரண்டது ஓரிடத்தில்! எம்.ஜி.ஆர் வருகிறார். எங்கள் தலைவர் வருகிறார். இன்னல்நீங்கி புதுப்பொலிவுடன் தமிழகத்தை ஆள. எங்கள் ராஜா வருகிறார். என்று உணர்வால். உள்ளத்துடிப்பால். கூடிநின்ற கூட்டமது! இரவெல்லாம் மக்களுக்காக மக்கள் திலகம் நடித்த ஐந்து திரைப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன! பொழுது மெல்ல விடிந்தது! பார்வைபடும் இடங்களெல்லாம் மக்கள் தலைகள்! அழகாக அமைக்கப்பட்ட மேடை. அதிலே எளிதாக எம்.ஜி.ஆர் கார் ஏறுவதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள். காத்திருந்த மக்கள் எல்லோர் மனதிலும் வேறெந்த நினைவுகளும் இல்லை. இல்லை! காலை மணி 6.50க்கு சென்னை வானொலியில் செய்திகள். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே தமிழகத்தின் முதல் அமைச்சராய் மூன்றாம் முறை வெற்றிபெற்ற சத்தியத்தாயின் தவப்புதல்வன்! தாயைத் தெய்வமாகப் போற்றியவன்! தமிழகத்தை உயிராக நேசித்தவன்!

    அவன் வந்த வானூர்தி தரையிறங்கிவிட்டது. பனிமூட்டம் இருப்பதனால் முதல் அமைச்சர் வருகையிலே தாமதம் என்று செய்திகள் ஒருபக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க. மக்களின் உற்சாகக் கரகோஷம் விண்ணைப்பிளக்க. உயிரையே பெற்றதுபோல் மக்கள் மகிழ. உலக வரலாற்றில் இப்படி ஒரு காட்சி நடந்ததுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! புராணப் புருஷர்களைப் பற்றி கதைகள் புனையப்பட்டு கேள்வியுற்றிருக்கிறோம். அன்று கண்முன்னே கண்ட காட்சி. புரட்சித்தலைவர் என்னும் சாதனைச் சரித்திரத்திற்கு மட்டுமான பிரத்யேக காலப்பதிவு!! இத்தனை உயிரோட்டத்தை நேரிலே கண்டு தரிசித்து திரும்பியது என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    எம்.ஜி.ஆரின் ரசிகன் என்கிற தகுதியோடு. அன்றைக்கு முதல் நாள் அவருக்காக எழுதிய கவிதையொன்று இதயக்கனியே வருக. வருக வென்று! அதனையும் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு வார்த்தை மாற்றாமல் தலைப்பை மட்டும் தர்மங்கள் வென்றது தலைப்பிட்டு வெளியிட்டார்! நான் விவரம்அறிந்த நாள் முதலாகப் பார்த்த பெரும் தண்ணீர் பிரதேசம் காவிரி! கொள்ளிடம்! திருச்சிக்கருகே உள்ள எங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் போதெல்லாம் என் கண்ணில் பட்ட காவிரி நினைவுக்கு வந்தது! மண்ணின் மைந்தன் என்பது போல் நதியின் மைந்தன் ஆனேன். காடு விரி்ந்ததனால் உருவான நதி காவிரி என்று கம்பன் சொல்லுவான். காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயர் புரட்சித்தலைவருக்காக புனைந்த கவிதைக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற இரண்டு வரிகள் என்னால் மறக்க முடியாதவை.

    புவியில் கவிதை புறப்பட்டுவிட்டது. உன்
    புன்னகை ஒன்றே வெற்றியைத் தொட்டது!

    Share
  • தங்கத்தில் முகமெடுத்து.. – கவிஞர் முத்துலிங்கம

    கவிஞர் முத்துலிங்கம்

     

    தங்கத்தில் முகமெடுத்து..

     

    ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் மீனவ நண்பன். படம் முழுவதும் எடுக்கப்பட்டு முடிந்த நிலையில் ஒரு நாள் காலை ராமாவரம் தோட்டத்தில் புரட்சித்தலைவரை சந்திக்க கவிஞர் முத்துலிங்கம் செல்கிறார். கவிஞரைக் கண்டதும் அகமகிழ வரவேற்று.. என்ன கவிஞரே.. இப்போது நான் நடித்து முடித்துள்ள மீனவ நண்பன் திரைப்படத்தில் நீங்கள் பாடல் எழுதவில்லையே.. இருக்கட்டும் இயக்குனரிடம் கேட்டு ஒரு கனவுப் பாடலையாவது நீங்கள் எழுத வைக்கிறேன் என்று சொல்லி இயக்குனரைத் தொடர்பு கொண்டார்.

    மறுக்க முடியாமல்.. இயக்குனரும், ஒரு கனவுக்காட்சியை இடம்பெறச் செய்தார்.

    திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன என்றாலும் – கவிஞர் முத்துலிங்கம் எழுதி.. அமோக வெற்றி பெற்ற இந்தப்பாடல்.. இதோ..

    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    மங்கைஎன்றுவந்திருக்கும்மலரோ
    நீ… மாலைநேரபொன்மஞ்சள்நிலவோ
    தங்கத்தில்முகமெடுத்து, சந்தனத்தில்உடலெடுத்து
    காமன்போலவந்திருக்கும்வடிவோ..
    அந்ததேவலோகமன்னவனும்நீயோ…

    வண்ணரதம்போலவேதென்றல்நடைகாட்டவா
    புள்ளிமான்போலவேதுள்ளிநான்ஓடவா
    வண்ணரதமாகினால்அதில்சிலைநானன்றோ
    புள்ளிமான்தேடும்கலைமானும்நானல்லவோ
    அசைந்து.. தவிழ்ந்து …அருகில்நெருங்குஅமுதாகவேஓஓஒ
    (தங்கத்தில்…)

    முல்லைமலர்செண்டுகள்கொண்டுகொடிஆடுது
    தென்றல்சதிராடினால்அந்தஇடைதாங்குமா?
    இந்தஇடைதாங்கவேகைகள்இருக்கின்றது
    கொஞ்சிஉறவாடமலர்மஞ்சம்அழைக்கின்றது
    மலர்ந்து.. கனிந்து.. சிரித்துகுலுங்கும்கனியாகவோ..

    எந்தன்மணக்கோயிலில்தெய்வம்உன்னைகாணுகிறேன்
    உந்தன்நிழல்போலவேவரும்வரம்கேட்கிறேன்
    இந்தமனராஜ்ஜியம்என்றும்உனக்காகவே.
    சொந்தமகராணிநீஎன்றுநான்சொல்லுவேன்
    நினைக்க.. இனிக்க.. கொடுத்துமகிழ்ந்தமுத்தாரமே…
    (தங்கத்தில்….)

    படம்: மீனவநண்பன்
    பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணிஜெயராம்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்வரிகள்: முத்துலிங்கம்

    ஒரு கவிஞனின் உள்ளம் என்ன? எதிர்பார்ப்பு என்ன என்பதை துல்லியமாய் கணக்கிட்டு வைத்த ஒரு கதாநாயகன் உண்டென்று சொன்னால், அது எம்.ஜி.ஆர் மட்டுமே!!
    அவன் வாழ்க்கை முழுவதும் தமிழைக் காதலித்த காரணத்தால், புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவன் மனதில் சிம்மாசனம் காத்திருந்தது!

    எந்த ஒரு திரைப்பாடலாசிரியனும் எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் எழுதிய பின் புகழின் உச்சிக்கு செல்லாமல் இல்லை.

    கவியரசு கண்ணதாசனை அரசு கவியாக்கி அழகு பார்த்த பொன்மனச்செம்மல்.. அவ்வரிசையில் புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கம் அவர்களையும் அமரவைத்த வரலாறு தமிழுக்குக் கிடைத்த பேறுதானே?

    http://www.youtube.com/watch?v=LUF4NzXhMbk

    Share