Blog

  • கால காலேசுவரர் சன்னதி

    பவள சங்கரி

    1

    நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
    பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
    ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
    நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே

    _ மத் சிதம்பர சுவாமிகள்

    2

    பூமாதேவி செய்த தவம்

     

     

    4

    3

    avRyBTlPmXDDsMri6FN1YlZC7b3aLOFuWSB8Ecs4uZE,af3F0NtqlJGUJMRoxBVR5Fi3re3dp0db8wrAoyrfJS4

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளதுதான், கால காலேசுவரர் சன்னதி. இன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் அற நிலையத்துறையின் பொறுப்பில் ரூ. 45 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்படுகிறது. ஆளுயர நடராசர் திருவுருவம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமணர் அல்லாத, தேசிகர் வகுப்பைச் சேர்ந்த ஒரு 90 வயது மூதாட்டியே இக்கோவிலுக்குத் தன்னால் இயன்ற வகையில், அவ்வப்போது வரும் பக்தர்களின் சிறு காணிக்கைகள் மூலம் பூசைகள் செய்து வந்திருக்கிறார். மழையும் பொய்த்துப்போனதால் ஊரில் விவசாயமும் நலிந்து போய், மக்கள் தங்கள் பாடே திண்டாட்டம் என்கிற நிலையில், சுவாமியை கவனிக்க முடியாமல் விட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் உள்ள, அனந்தமங்கலம் ஆஞ்சேநேயர் சுவாமி கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது கால காலேஸ்வரர் சன்னதி.

    என்றும் பதினாறு என்று வரம் பெற்ற மார்கண்டேயனைக் காக்கும் பொருட்டு, சிவபெருமான் எமனை வதம் செய்து காலசம்கார மூர்த்தியாக விளங்கும் திருத்தலமே, திருக்கடவூர். அப்படி வதம் செய்தபோது எமனின் தலை தெரித்து விழுந்த இடம்தான் எருக்கட்டாஞ்சேரி என்கிறார்கள். ஐயனின் திருவருளால் அந்தத் தலை மீண்டும் உயிர் பெற்று எழுந்த இத்தலம் ‘எழுப்பி விட்டான் சேரி’ எனப் பெயர் பெற்று பின்னர் மருவி ‘எருக்கட்டாஞ்சேரி’ என ஆகியுள்ளது.

    சிவபெருமானார் எமனை வதம் செய்ததால், மக்களுக்கு எமபயம் முற்றிலும் நீங்கிவிட்டது. அதனால் இறைபக்தி குறைந்ததோடு அதர்மங்கள் பெருகியுள்ளன. நாட்டில் அக்கிரமங்களும் அதிகரித்துள்ளன. பூமித்தாய் பாரம் தாங்காமல் மனம் நொந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்து பெற்ற வரத்தின் மூலமாக மீண்டும் எமனுக்கு உயிர் பெற்றுத் தருகிறாள். சினம் தணிந்த சிவபெருமான் எமனுடைய தலையை இத்தலத்தில் பொருந்தச் செய்து உயிர் கொடுத்தார்.எமனுக்கே உயிர் கொடுத்த இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு, மரணபயம் நீங்கி, நோய், நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது ஐதீகம். திருக்கடவூர் சென்று வழிபடும் பக்தர்கள் எருக்கட்டாஞ்சேரி கால காலேசுவரரையும் அன்னை கருத்தடக்கன்னியையும் வழிபட்டு வருவது வழக்கம். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளுடனும் வாழலாம் என்ற நம்பிக்கையும் மக்களிடம் பரவலாக இருக்கிறது. விரைவில் இக்கோவிலின் திருப்பணி நிறைவேறி ஐயனின் அருளொலி பூரணமாக பிரகாசிக்க நம்மால் ஆனதையும் செய்யலாமே..

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 16

    –சு.கோதண்டராமன்

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

    அக்னி – பல வகை

    Agni
    வேதத்தில் அக்னி என்பது பூமியில் நாம் மூட்டும் தீயை மட்டும் குறிப்பதல்ல. எதிர்க்க முடியாத வலிமை, இருளைத் துரத்தும் ஒளி, பகைவரை வாட்டும் வெப்பம், மனிதருக்கு உதவும் குணம், மனிதரைத் தூண்டும் திறன் உடைய எல்லாமே அக்னி தான்.

    விண்ணில் உள்ள சூரியனும் அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னலும் கூட அக்னியாகத் தான் குறிப்பிடப்படுகின்றன. விண்ணில் சூரியனாகவும், அந்தரிக்ஷத்தில் மின்னலாகவும் பூமியில் தீயாகவும் இருப்பதால் த்ரிஷதஸ்த (மூவுலகிலும் இருப்பவர்) எனப்படுகிறார்.

    மூன்று அக்னிகள் இருந்தன. அவற்றில் மனிதர் மகிழ்ச்சிக்காக ஒன்று மட்டும் பூமியில் வைக்கப்பட்டது. மற்ற இரண்டும் விண்ணில் வைக்கப்பட்டன[1] என்று வேதம் கூறுகிறது. அவை முறையே தீ, சூரியன், மின்னல் எனப் பொருள் கொள்கிறோம்.

    கர்ப்பத்தில் இருந்தபோது தனூனபாத், பிறந்த பின் நராசம்ஸன், தாயின் மடியில் இருக்கும்போது மாதரிச்வான்  என்று அக்னியின் பெயர்கள் பலவாகும்.[2]

    அக்னி ஒன்று தான். அது பல வகையாக மூட்டப்படுகிறது.[3] அக்னியின் பிறப்பிடங்களைப் பொறுத்து பத்து வகை உண்டு,[4] என்று வேதம் சொல்கிறது. அவற்றில்

    1. விண்ணில் பிறந்த சூரியன்,

    2. அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னல் இவற்றைப் பார்த்தோம்.

    3. கடலுக்குள் மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் வடவாக்னி என்று சொல்லப்படும் எரிமலைகளும் நீரில் தோன்றிய அக்னியாகக் கொள்ளப்படுகிறது. நீருக்குள் வாழும் அக்னி நீரால் மட்டுமே சூழப்பட்டிருப்பதால் ஆடை இல்லாதவராகவும், நீரையே ஆடையாக அணிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.[5] தேவர்கள் உன்னை நீருக்குள் கண்டுபிடித்தார்கள், குகையினுள் சிங்கம் போல என்கிறது வேதம்.[6] அக்னியை நீருக்கு நண்பன் என்று போற்றுகின்றனர். சமுத்திரத்தை ஏழு ஆறுகளின் சங்கமம் என்று வர்ணித்த அவர்கள் அந்த ஏழு ஆறுகளையும் அக்னியை வளர்த்த ஏழு சகோதரிகளாகப் போற்றுகிறார்கள். சில இடங்களில், “ஒன்றாக வாழ்கின்ற ஏழு ஆறுகள் அவனை கருத் தாங்கின” என்றும் கூறுகிறார்கள். அபாம் நபாத் (நீரின் மைந்தன்) என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்படுகிறது. நபாத் என்ற சொல் பேரன் என்றும் பொருள் படும். நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறது.[7] எனவே அவர் நீரின் பேரன்.

    4. பாறையில் தோன்றும் தீ கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தீ மூட்டப்படுகிறது. எனவே அக்னி பாறையின் மகனாகக் கூறப்படுகிறார்.[8]

    5. மரத்தில் தோன்றும் தீ மரங்கள் உரசுவதாலும் அக்னி பிறக்கிறது. மரமும் அக்னியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அரணிக்கட்டை முதலியவற்றில் மறைந்திருக்கும் தீயைப் பற்றி, “அசையாப் பொருட்களிலும் அவன் இருக்கிறான்”. “கர்ப்பிணியின் கர்ப்பம் போல இரு குச்சிகளில் அவன் அடங்கியுள்ளான்”[9] என மொழிகின்றனர். “பல வருடங்கள் கர்ப்பத்தில் இருந்தான். தாய் அவனை தந்தைக்குத் தெரியாமல் அணைத்து வைத்துக் கொள்கிறாள்” என்றும், நீர், கல், காட்டு மரங்கள், செடிகள் ஆகியவற்றிலிருந்து அவன் பிறப்பிக்கப்பட்டான் என்றும் போற்றினர்.[10]

    6. காட்டுத் தீ இவர் காடுகளை அழிக்கும்போது தேவர்கள் இவரைப் போற்றுகிறார்கள். காட்டில் ஓரிடத்தில் அக்னி பற்றினால் காடு முழுவதும் அழிகிறது. “ஒரு வருடத்தில் அங்கு புதிதாகத் தாவரங்கள் வளர்கின்றன.” “பழையன கழிந்து புதியன பிறக்கக் காரணமாயிருப்பது அக்னி.”[11]  காட்டில் தீப் பிடித்தால் அதன் வலிமையின் முன்னே எவரும் நிற்க முடியாது. எனவே அவர் காட்டின் தலைவன் எனவும் காட்டின் புதல்வன் எனவும் வர்ணிக்கப்படுகிறார். காட்டுத் தீயை ரிஷி வர்ணிக்கிறார்.

    “காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த மரங்களில் பரவும் அக்னி வாளுக்குப் பதிலாக தன் நாக்குகளையே பயன்படுத்திப் பேரிரைச்சலோடு காளை போல் சீறிக் கொண்டு விரைகிறார். அவர் பாதை கறுப்பாக ஆகிவிடுகிறது.”[12]

    “தேரில் பூட்டப்பட்ட உன் சிவப்புக் குதிரைகள் காற்றைப் போல் விரைந்து செல்வன, காட்டு மரங்களைப் புகையால் மூடுகிறது.”[13]

    “காற்றினால் தூண்டப்பட்டுப் பல திசைகளிலும் பரவும் அக்னி கட்டுப்பாடற்றுப் பாம்பு போல் வளைந்து உலர்ந்த புற்களினூடே செல்கிறது.”[14 ]

    “பூமித் தாயின் ஆடையை நக்கிக் கொண்டு அவர் வயல்களில் நீண்டும் அகன்றும் அலையும்போது மிருகங்கள் விரைந்தோடுகின்றன. செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கறுப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறார்.”[15]

    அக்னி ஒரு தத்துவம்

    வேதத்தில் அக்னி என்பது நாம் வெளியில் காண்கின்ற ஒரு பொருளாக மட்டும் கருதப்படவில்லை. அது ஒரு தத்துவம். ஒளி, வெம்மை, எதிரியை அழிக்கும் திறன், நல்லோர்க்கு உதவும் மனம், இடைவிடாது செயல்பட ஊக்கப்படுத்தும் தன்மை இவை கொண்ட பொருள்கள் எல்லாம் அக்னியாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன.

    இன்னும் வேறு எங்கெல்லாம் அக்னி காணப்படுகிறான் என்று தேடிய ரிஷிகளுக்கு ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது நினைவுக்கு வருகிறது.

    7. உயிர்த் தீ

    வாழும் மனிதரின் உடல்களில் எல்லாம் சூடு காணப்படுவதை அறிந்து  நம்மிடத்திலும் அக்னி இருக்கிறானே என்று வியந்தனர். மனிதருடனே வாழ்பவன், வாழும்  மனிதருக்காகப் பல இடங்களில் தங்குபவன் என்று போற்றினர். மேலும் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்லாது பிற உயிர்களிடத்திலும், தாவரங்களிடத்திலும் இந்தச் சூடு காணப்படுவதை அறிந்து அவனை, எல்லா உயிர்களுக்கும் தலைவன் (விச்வாயு), இருப்பு முழுவதும் வியாபித்தவன், உயிருள்ளோரை எல்லாம் ஒன்றுபடுத்துபவன் என்கின்றனர். “ரிஷிகளும், விண்ணில் பறக்கும் பறவைகளும், போரில் தோற்ற வீரர்களும் அக்னியை அழைக்கின்றனர்” என்றும், “ஓஷதிகள் அவனைக் கர்ப்பமாகத் தாங்கின” என்றும் பாடுகின்றனர். பிறந்த எல்லாவற்றையும் அறிந்தவன் (ஜாதவேதஸ்) என்ற பெயர் உயிருள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த உயிர்த் தீயையே குறிப்பதாக இருக்க வேண்டும்.

    எல்லா உயிர்களிடத்தும் வாழ்பவர் என்றால், தாவரங்களிலும் அவர் உள்ளார் என்று ஆகிறது. நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறார். மனிதன் பல அக்னிகளால் மூட்டப்படுகிறான் என்பதிலிருந்து[16] மனிதருக்குள் இன்னும் வேறு வகையான அக்னிகள் இருப்பது அறியப்படுகிறது. கணவனையும் மனைவியையும் நீ ஒன்று பட்ட மனத்தினர் ஆக்கும்போது அவர்கள் உனக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என்பதிலும்[17] எங்கள் தாம்பத்தியத்தை இனிமையாக நெறிப்படுத்துகிறாய்[18] என்பதிலும் அவர் கருவறைக்குள் நுழைந்து உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்பதிலும்[19]  அக்னிக்குத் தனூக்ருத் (உடலை உருவாக்குபவர்) என்ற பெயர் அளிக்கப்படுவதிலிருந்தும் அக்னி என்பது காமத் தீயைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

    8. பசித் தீ

    வயிற்றிலுள்ள பசியும் அக்னிக்கு உரிய பண்புகளைப் பெற்றிருப்பது தெரிகிறது. மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகியவை பசிக்கும் உண்டு. நம்மை நடக்கவும் வாழவும் வைக்கிற பசித் தீ உணவின் தலைவன் எனப்படுகிறது. வைச்வானரன் என்பது வயிற்றுத் தீக்கு அளிக்கப்படும் பெயர். இது எல்லா உயிர்களிடத்திலும் காணப்படுகிறது. ஜடரேஷு ஜின்வதே என்று பசி வயிற்றினுள் இருந்து தூண்டுவதை ரிஷி போற்றுகிறார்.[20]

    9. அறிவுத் தீ

    அறியாமை இருளை அகற்றல், எல்லாத் திசைகளிலும் பார்த்தல், மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதால் அறிவுத் துணிவும் அக்னி போன்றதே. மனிதருக்குத் தூண்டுதல் தருபவர், வீரச் செயல்களில் உதவுபவர், தூண் போல் தாங்குபவர் என்றும் அறிவால் உருவாக்கப்பட்டவர் என்றும் போற்றப்படுகிறார். கவி, ரிஷி, அறிவாளி, வருங்காலம் உணர்ந்தவர் என்ற அடைமொழிகள் அக்னிக்கு அளிக்கப்படுகின்றன. வலிமைக்கும் புனித எண்ணங்களுக்கும் தூண்டுதல் தருகிறார். இந்திரனைப் போலவே அக்னியும் விருத்திரனைக் கொன்றவர் எனப் பெயர் பெறுகிறார். (விருத்திரன் என்பது அறியாமை என்பது பாரதியின் விளக்கம்.) அக்னியே, உன்னிடமிருந்து தான் இலக்கியம், எண்ணங்கள், பிரார்த்தனைகள் தோன்றுகின்றன.[21] தவறான வழியில் செல்வோரைத் திருத்துபவர், சிலரைக் கொண்டு பலரை வீழ்த்துபவர் என்ற சிறப்புகள் அறிவாகிய அக்னிக்குப் பொருந்துபவை. அக்னியைத் தேவர்கள் முதல் மனிதனாகவும் மனித குலத்தின் தலைவனாகவும் நியமித்தனர். இளா என்ற பேச்சை மனிதக் குழந்தையின் ஆசிரியராக ஆக்கினர்  என்று கூறுமிடத்திலும் அது அறிவாகிய அக்னியையே குறிப்பிடுகிறது.

    10. மனதின் ஊக்க சக்தி

    இதுவும் அக்னியே. இந்த ஊக்க சக்தி தான் மனிதனைத் தேவ நிலைக்கு உயர்த்துகிறது. தேவர்கள் அம்ருதத்வம் அடைவது அக்னியின் செயல் திறனால் தான் என்கிறார் ரிஷி.[22] அக்னி, அம்ருதத்தின் காப்பாளன் எனவும்[23] மனிதர்கள் தேவனாகப் பிறப்பதை அறிந்தவர் எனவும்[24] கூறப்படுகிறார்.

    தேவர்கள் அக்னியை மனத்தால் தோற்றுவிப்பதாகவும் முனிவர்கள் அதை எண்ணத்தால் வளர்ப்பதாகவும் கூறுகிறது வேதம். யக்ஞங்களின் அடையாளமான அக்னி தன் அறிவினால் எல்லாவற்றையும் அறிகிறார். கடந்து செல்வது தான் இவருடைய நோக்கம்.[25]

    “அக்னி பல பெயர், பல வடிவம் கொண்டவர் என்றும் மற்ற அக்னிகள் இவருடைய கிளைகள்” என்றும் பேசுகின்றனர். அக்னிக்குச் செய்யப்படும் துதிகளில் சில எல்லா வகை அக்னியையும் உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

    பல வகை அக்னிகளுக்கும் பிரதிநிதியாகத்தான் தீயில் நாம் நெய்யால் ஆகுதி செய்கிறோம்.[26]

    குறிப்புகள்:

    1     3.2.9.
    2    3.29.11.
    3    8.58.2
    4    10.51.3
    5    3.1.6.
    6    3.9.4.
    7    3.5.8.
    8     2.1.1, 10.20.7
    9    3.29.2.
    10    1.70.2.
    11    1.140.2.
    12    1.58.4.
    13    1.94.10.
    14    1.141.77.
    15    1.140.9.
    16    6.11.6.
    17    5.3.2.
    18    5.28.3
    19    1.149.2.
    20    3.2.11.
    21     4.11.3
    22    6.7.4.
    23    6.7.7.
    24    7.2.10.
    25    3.11.3.
    26    7.8.1.

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

    Share
  • என் இனிய கண்ணதாசன்

    இசைக்கவி ரமணன்

     
    குடித்துச் சிவந்த கண்கள்download

    குப்புறக் கிடக்கும் உயிரை

    எடுத்துப் புரட்டித் தெம்பை

    ஏற்றும் கவிதையும் பாட்டும்

    கொடுத்துச் சிவந்த நெஞ்சம்

    கோலமயில் ஒருத்தியோடு

    கூடியே கிடந்து கொஞ்சி

    பாலமாய்ப் பஞ்சு மார்பில்

    படுத்துச் சிவந்த மேனி

    பட்டே அறிந்த ஞானி

    பரவசம் பருகும் தேனி

    பாதியில் பறந்த பாவி!

     

    கால்கடுக்க நான் நடந்து கண்ணிருண்ட போதிலெலாம்

    கன்னங்களை வருடவரும் தென்றல்! இவன்

    காற்றினிலே தலையசைக்கும் செந்நெல்! வந்து

    தோலுடுத்த என்மனதைத் தொல்லைவந்து சூழும்போது

    தோள்கொடுக்க ஓடிவந்த தோழன்! சும்மா

    சொல்லிச் சொல்லி வானைத்தொட்ட தேவன்!

     

    யாரெடுத்த தேகமோ! யாரிடத்தில் மோகமோ!

    யார்வசத்தில் தீருமோ! தெரியுமா? இந்த

    யாத்திரையின் இறுதியென்ன புரியுமா? இதில்

    தேரெங்கோ காத்திருக்க தெய்வமெங்கோ பார்த்திருக்க

    ஓரிடத்தும் நின்றிடாத கிள்ளை! அவள்

    ஒற்றையிதழ் பற்றிவாழ்ந்த பிள்ளை!

     

    காதலினால் போதையினால் கண்ணனையே வீழ்த்தியவன்

    ராதையினைக் கதிகலங்க வைத்தவன்! நெஞ்சில்

    ராத்திரியின் ரகசியமாய்த் தைத்தவன்! இவன்

    போதையிலே சொன்னதிலே போதிமரம் சிலிர்த்ததடி!

    பெளர்ணமியே வீதியுலா வந்ததே! அவன்

    புன்னகையில் புயலும் அடங்கி நின்றதே!

    தத்தைமகள் மெத்தையிதழ் முத்தமிட்டு முத்தமிட்டுத்

    தத்துவங்கள் சொன்னவனைக் கண்டேன்! அந்தச்

    சாயலிலே சற்று வெறி கொண்டேன்! இனி

    சத்தமில்லை சட்டமில்லை மொத்தமாகக் காதலிலே

    முப்பொழுதும் குப்புறநான் வீழ்ந்தேன்! அந்த

    மோகத்திலே முத்தெடுத்து வாழ்ந்தேன்!

     

    சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடும்போது

    சொர்க்கம்விட்டுச் சொல்லாமல் வந்தான்! எல்லாம்

    சொல்லிவிட்டுத் தான் திரும்பிச் சென்றான்! இவன்

    காதலுக்கு தேவன்! இன்பக் கன்னியர்க்கு ராஜன், நமது

    கவலைகளைத் தீர்க்கவந்த நேசன்! அந்தக்

    கண்ணனுக்கு மட்டுமிவன் தாசன்!

     

     

    Share
  • ஒரு பயணத்தின் முடிவில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (3)

     

    ஒரு பயணத்தின் முடிவில்

    (கேட்டு மகிழ)

     Melbourne-Daily-Photo-Blog-Beach-Dune-Harbour-Mornington-Peninsula-Pier-Sunset-MorningtonPeninsula_20120708_109_10_11-2

     

    இன்னும் சில நொடிகள்..

    இறங்கித்தான் ஆகவேண்டும்

    நீ நான் என்பார், அந்த

    நிலை மாறத்தான் வேண்டும்

     

    கன்னற் பேச்சுக்கள்

    காதினிலே குறுகுறுப்பு

    சின்ன விளையாட்டு

    சிலநேரக் கண்பனிப்பு

     

    என்று பலவாறாய்

    இன்புற் றிருந்ததெல்லாம்

    இன்னும் சிலநொடிக்குள்

    எங்கோ பறந்துவிடும்!

     

    உறவாகி விடுமென்றா

    உதடோரம் புன்னகைத்தோம்?

    மனமாரக் கண்ணிமைத்தோம்?

    மறைவாக ஸ்வப்பனித்தோம்?

     

    எந்தக் கூட்டத்தில்

    எங்கெங்கே பிறந்தோமோ

    அந்தக் கூட்டந்தான்

    அங்கங்கே சேரவந்தோம்!

     

    சேர்வது வேறு, இணைந்து

    செல்வது வேறு, என்றிந்தப்

    பார்வைக்குத் தெரிந்திருந்தால்

    படாதபாடு படுவோமா?

     

    நிலைய மிருப்பது

    நீ நான் இறங்கத்தான்

    நினைவொன் றிருப்பது

    நீ நான் துடிக்கத்தான்

     

    இருப்புப் பாதை

    இணைந்திடத்தான் போகிறது

    விருப்பேது வெறுப்பேது

    விவரமற்ற சூனியத்தில்…

     

    படத்திற்கு நன்றி:

    http://mel365.com/melbourne-daily-photo-a-never-ending-pier-into-port-phillips-bay/

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

     

    ருக்மணியும் கண்ணனும் நாவில் ஜலம் ஊறவைக்கும் நைவேத்ய ப்ரசாதம் போலிருக்கிறார்கள்….சூப்பர்….

     

    keshav

     

    “குலாப்ஜாமூன் ருக்மணி ,குல்கந்து கண்ணன்,
    பலாச்சுளையைத் தேனில் புதைத்த -கலாச்சுவைக்
    காரனவன் கேசவனின், கைமணம் வீசுது,
    சூரனவன் தஞ்சை சமைப்பு”.

    Share
  • அன்றும், இன்றும், என்றும் !!!

    — தேமொழி.
    thalaivan
    அன்று:
    தலைவன் (தனது நெஞ்சிற்குக் கூறியது):

    பெறுவ தியையா தாயினு முறுவதொன்
    றுண்டுமன் வாழிய நெஞ்சே திண்டேர்க்
    கைவள் ளோரி கானந் தீண்டி
    எறிவளி கமழு நெறிபடு கூந்தல்     
    மையீ ரோதி மாஅ யோள்வயின்
    இன்றை யன்ன நட்பி னிந்நோய்
    இறுமுறை யெனவொன் றின்றி
    மறுமை யுலகத்து மன்னுதல் பெறுமே.

    — பரணர், குறுந்தொகை பாடல் 199

    பின்புலம்:
    “தலைவா, இனி தலைவியை நீங்கள் காண்பது அரிது.  அவள் வீட்டை விட்டு வெளியேற வழியின்றி அவளது பெற்றோர் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள்”,  என்று  தலைவியின் தோழி தலைவனுக்குச் செய்தி சொல்லிச் செல்கிறாள்.  “இனி என் அன்புக்குரிய காதலியை இப்பிறவியில் காணவே முடியாதோ! ஆனாலும் இந்தச் சூழ்நிலையால் என் காதல் மாறாது எனது நெஞ்சே, ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வருவது என் காதல் என்பதை அறிவாய்” என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான் அந்தத் தலைவன்.

    பாடலின் பொருள்:
    எனது நெஞ்சே, உறுதியான தேரையும், சிறந்த கைவண்மையும் பெற்ற ஓரியின் காட்டின் வழியே வீசும் மணம் கமழும் காற்றினைப் போல நறுமணம் கொண்ட, நெளி நெளியான முடியினால் ஆன மைபோன்ற கரிய கூந்தலை உடைய என் காதலியை நான் இப்பிறவியில் காண முடியாமல் போனாலும்  நான் அவளிடம் கொண்ட காதலுக்கு அழிவில்லை. அடுத்து வரும் பிறவிகளிலும் என் காதல் தொடர்ந்து வரும்.

    ***

    இன்று:
    தலைவன் (தனது தலைவியிடம் கூறியது):

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

    — கவிஞர் கண்ணதாசன்

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://www.dinamani.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(117)

    –சக்தி சக்திதாசன்.

    சக்தி சக்திதாசன்
    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு மடலில் மனந்திறந்து உங்களுடன் பேசும் ஒரு சந்தர்ப்பம்.

    2014ம் ஆண்டு பிறந்ததுதான் தெரியும். இதோ 7 மாதங்கள் ஓடி மறையும் வேளை. வாழ்க்கையை நாம் மாதங்களில் கணக்கிட்டால் கிடைப்பது எமக்கு அதிர்ச்சியே !

    இலண்டனில் பலவருடகாலமாக வசித்து வரும் எனது பால்ய நண்பன் ஒருவனுடன் அன்றொருநாள் தொலைபேசியில் உறவாடிக் கொண்டிருந்தேன். மிகவும் சுவையாக பேசக்கூடிய அவன் தந்த ஒரு தகவல் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியையே தந்தது.

    அப்படி அவன் என்னதான் கூறி விட்டான் என்கிறீர்களா?

    இந்த உலகில் வாழும் மனிதர்களின் சராசரி வயது 70 என்று எடுத்துக் கொள்வோம். அப்படியாயின் ஒரு மனிதனின் வாழ்க்கை ஏறக்குறைய 840 மாதங்கள் தானே !

    உதாரணத்திற்கு என்னை எடுத்துக் கொள்வோம் வாழ்க்கையில் நான் 56 வருடங்களைக் கடந்து விட்டேன் அதாவது 672 மாதங்களை வாழ்ந்து முடித்து விட்டேன்.

    சரி மனிதனின் சராசரி வாழ்க்கையோ 840 மாதங்கள் அதிலே 672 போய்விட்டால் எஞ்சி இருப்பதோ 168 மாதங்களே !

    அடடா இனிக் கடக்கும் ஒவ்வொரு மாதமும் இந்த 168ல் ஒன்றை எடுத்துச் செல்லப்போகிறது . . . .

    எண்ணும் போது கொஞ்சம் அச்சமாக இருக்கிறது இல்லையா ?

    இன்னும் பார்க்க வேண்டியது, பழக வேண்டியது, சுவைக்க வேண்டியது வாழ்க்கையில் அநேகம் இருக்கிறதே. ஒருவேளை எனக்கு நேரம் கிடைக்காமல் போய்விடுமோ ? எனும் சந்தேகம் மனதை ஆக்கிரமிக்கிறது இல்லையா ?

    இவ்வுண்மையை அழகாக எடுத்துச் சொன்ன என் நண்பன் என் மெளனத்தைக் கண்டதும் பெரிதாகச் சிரித்துக் கொண்டே ” என்ன பயந்து விட்டாயா? “ என்று கேட்டான்.

    “இல்லேடா கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது ” என்றேன் சமாளித்துக் கொண்டே.

    அட இதைப்போய் ஏன் எமக்கு சொல்கிறான் என்கிறீர்களா? அன்பினியவர்களே ! வாழ்க்கையின் நீளத்தைக் கண்க்கிடும் போதுதான் அதன் உண்மையான அர்த்தம் விளங்குகிறது.

    எதையோ தேடி, எங்கோ ஓடி, யார் யாருடனோ தேவையற்ற சில்லறை விடயங்களுக்காக மனஸ்தாபப்பட்டு இதெல்லாம் எதற்காக மீதமிருக்கும் இந்த எஞ்சிய மாதங்களையும் மகிழ்வில்லாமல் ஆக்குவதற்காகவா ?

    மனித வாழ்க்கை எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அதை மகிழ்வுடனும் அமைதியாகவும் வாழ வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தார்மீகக் கடமையாகிறது..

    எனது மகனின் திருமணத்திற்காக மூன்றுவார காலம் சென்னை சென்று கடந்தவாரம் திரும்பி வந்தேன்.

    சென்னையில் நான் தங்கி இருந்த சமயம் பல சமயங்களில் பல கால் டாக்ஸிகளில் பிரயாணம் பண்ண வேண்டிய தேவையிருந்தது.

    அப்படிப் பயணிக்கும் பொழுதுகளில் பல வித்தியாசமான கார்ச் சாரதிகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையும் எனக்குத் தந்தது புதுப்புது அனுபவங்களே !

    வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று எண்ணும் போது அவர்களின் மனத்திடம் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

    இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் ஒரு 75 சதவிகிதம், நான் 19 வயது இளைஞனாக இருந்தபோது எனக்கு இருந்திருந்தால் எத்தனையோ சாதனைகள் படைத்திருக்கலாமே. அடடா, இன்னும் சராசரி 168 மாதங்களே எஞ்சியிருக்கும் போது இத்தனை அனுபவப் பாடங்களா ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

    அத்தோடு சேர்ந்து ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அந்த எல்லாம் அறிந்த ஆதிமூலம் எனக்கு இப்பொழுது  இவைகளை அறியத் தருகிறான். அட எமக்குப் பயன்படாவிட்டால் என்ன எனது அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வைப்பது என் கடமை எனும் எண்ணம் எனக்கு பேரானந்தத்தை ஏற்படுத்துகிறது.

    சிலநேரங்களில் சில மனிதர்கள் சில வகையினில் எம்மைப் பாதிப்பார்கள் அந்தப் பாதிப்புகளில் இருக்கும் அனுகூலங்களை மட்டும் நாம் பொறுக்கி எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டால் எதிலுமே குறை காணும் சுபாவம் எம்மை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அகலத் தொடங்கும்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொருவருக்காகவும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் காத்திருக்கிறது. அல்லாதவற்றை விலக்கி அவற்றைக் கண்டுகொள்ளும் ஆற்றலை நாம் வளர்த்துக் கொண்டுள்லோமா?

    இதுவே எம்முன்னால் இருக்கும் கேள்வி !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?

    கவிஞர் காவிரிமைந்தன்

    rainfall

    கூட்டம் கூட்டமாய்க் கொள்ளையிட வரவில்லை        
    கொட்டி அளந்து குளிர்விக்க வருகிற மழைத்துளி!    

    எந்த இடத்தில் விழுவோம் என்று திட்டமில்லாமல்
    எங்கும் எதிலும் இணைவோம் என்று சொல்கிற மழைத்துளி!

    வானம்வழங்கிய கொடை நாங்கள் தாகம் தீர்க்கவந்தோமென்று
    மண்ணில்விழுந்த மறுநொடியே தன்னிறம்மாறும் மழைத்துளி!

    உயிர்கள் வாழ ஆதாரம் அதை உணர்ந்தவர் நாங்கள்
    உடனடிச் சேவைப்பிரிவுபோல ஓடிவருகிற மழைத்துளி!

    தன்னலமேதும் எங்களுக்கின்றி இருப்பதெல்லாம் கொடுப்பதனால்
    கர்ணனை மிஞ்சிய கர்வம் கொள்ளும் மழைத்துளி!

    கடலில் விழுந்தபோதிலும் மீண்டும் ஜனனம் எடுத்தேனும்
    மனிதஉயிர்கள் பயனுறவே மண்ணில்விழுந்திடும் மழைத்துளி!

    பிறவியின் பயன் என்னவென்று பிறந்தவர் யாரும் சொல்லவில்லை!
    மழையாய், துளியாய் பிறந்ததுவும் மகத்துவம் கண்டது மழைத்துளி!

    வானம்பொய்த்துப் போய்விட்டால் வையகம் வாழ்ந்திட வழியில்லை!
    நுண்ணுயிர்வரையில் வாழ்வதற்கே வருக! வருக! மழைத்துளி!!

    Share
  • தூங்காதே.. தம்பி தூங்காதே.. – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    — கவிஞர் காவிரிமைந்தன்.
    thoongathe thambi

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

    அறிவுரைகள் என்பது பொதுவாகவே வேம்பாகக் கசக்கும் மனிதருக்கு!  அனுபவரீதியாக பட்டு உணர்ந்தவர்கள் சொல்லும்போது அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதுகூட சிரமமாகத் தெரிவது உண்டு!  ஆனாலும் திரைப்படம் என்னும் ஊடகம் வழியே சரியான கதை, திரைக்கதை, காட்சியமைப்போடு பின்னப்படும் பாடல்களில் இத்தகு அறிவுரைகள் மக்களால் முழுக்கவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

    நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
    பல சரித்திக் கதை சொல்லும் சிறை கதவும்
    சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
    சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்

    pattukkottaiபட்டுக்கோட்டையார் பாடல்கள் பெரும்பாலும் இந்த ரகம்!  அதுவும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு எழுதப்பட்வை புடம் போட்டத் தங்கம் எனலாம்!  எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையமைப்பில் நாடோடி மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது!

    தூங்காதே.. தம்பி தூங்காதே..

    விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
    உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்

    எழுதப்பட்ட காலம் முதல் என்றைக்கும் பொருந்தும்வரிகள்!  இது வெறும் பாட்டு அல்ல! மனிதன் வாழ வேண்டிய முறை அறியச் செய்யும் இரகசியச் சீட்டு!

    போர்  படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
    உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
    கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
    கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
    இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
    பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

    அளவுக்கு மீறிய தூக்கத்தால் விளையும் ஆபத்துக்களைப் படம்பிடித்து அளவான வரிகளிட்டு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.  டி.எம்.செளந்திராஜன் குரலில் எம்.ஜி.ஆர் அவர்களது நடிப்போடு மக்கள் மனதில் ஒன்றிக்கிடக்கும் பாடல்களில் இது ஒன்று!

    மொத்தத்தில் இது வெற்றிப் பாடல் மட்டுமல்ல!  சோம்பேறித்தனத்திற்கு வைத்திட்ட வேட்டு!!

    http://youtu.be/AKuKGJGu1yw

    காணொளி: -http://youtu.be/AKuKGJGu1yw

    திரைப்படம்: நாடோடி மன்னன் (1958)
    இசை: S.M. சுப்பையா
    பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

    தூங்காதே தம்பி… தூங்காதே…
    தூங்காதே தம்பி… தூங்காதே…
    நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
    தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
    சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

    நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
    பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
    நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
    பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
    சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
    சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
    சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்

    தூங்காதே தம்பி… தூங்காதே…

    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
    நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
    நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்

    சிலர் அல்லும் பகலும்
    தெரு கல்லாய் இருந்துவிட்டு
    அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்
    அல்லும் பகலும்
    தெரு கல்லாய் இருந்துவிட்டு
    அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்

    விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்

    விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
    உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்

    தூங்காதே தம்பி… தூங்காதே தம்பி…
    சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

    போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்…
    போர்  படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
    உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
    கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
    கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

    இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
    பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

    தூங்காதே தம்பி… தூங்காதே…
    நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
    தூங்காதே தம்பி… தூங்காதே…

    Share
  • பாத யாத்திரை!

    -சேசாத்ரி பாஸ்கர்

    இந்த வகை ஓட்டத்தை நான் ரசிப்பேன்
    ஒரே சீராய் ஒரே கோட்டில் நேர்படும் நடை!    ants-on-white-lg
    அங்கங்கே நின்று ஒரு சிறு முத்தம்!
    பின் அதனதன் ஒவ்வோர் வழி 
    கை மேல் நடந்தால் உடல் கூசும்!
    ஊதிவிட்டால் காணாமற் போகும் 
    என்றும் தரும் உற்சாகச் சிந்தனை 
    யார் அதன் தாய்? 
    யார் அதன் தந்தை? 
    நடப்பதே வாழ்வா? 
    நடந்தே மரணமா? 
    எங்கே துயிலும் அது? 
    அந்தக் குறு கண்ணில் வருமா கண்ணீர்?
    யாரிட்டார் அதன் பெயரைப் 
    பிள்ளையார் எறும்பு என்று?

    Share
  • காதல் நாற்பது – 14: காதலிப்பாய் காதலுக்காக !

    –சி. ஜெயபாரதன்.    

    Elizabeth-Browing
    காதல் நாற்பது (14)
    காதலிப்பாய் காதலுக்காக !
    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னைக் காதலிக்க
    வேண்டு மெனின்
    ஏதோ ஒன்றுக் கென நீ
    குறிப்பிட வேண்டாம்,
    காதலுக்காக மட்டுமே என்னைக்
    காதலிப்பது தவிர

    “அன்பு கொண்டது, அவள் அழகிய
    புன்னகைக்கு !
    கண்கவரும் தோற்றத் துக்கு !
    கண்ணியப் பேச்சுக்கு !
    எந்தன் மனம் ஒத்துப் போகு மொரு
    சிந்தனைச் சூழ்ச்சிக்கு !

    நிச்சயம் அவற்றில் மனதுக் கினிய
    நிம்மதி அந்த நாளில்.” என்று
    நீ சொல்ல வேண்டாம் !
    அவை யாவும் மாறிப் போகலாம்
    என்னினியவனே !
    உன்னிடமும் அவை
    மாறி விடலாம் அதுபோல் !
    மெய் வருந்திக் கொண்ட காதலும்
    தேய்ந்து போகலாம் !

    தேவை யில்லை அவ்விதம்
    மெய் வருந்திக் காதல் கொள்ள !
    கன்னங்களில் வழியும்
    கண்ணீரைத் துடைத்து என்னைக்
    காதலிக்க வேண்டாம்
    பரிதாபப் பட்டு நீ !
    உனது ஆறுதலை
    நெடுங் காலமாய்ப் பெற்று வரும்
    ஒரு பிறவி
    ஓலமிட மறந்து போய்
    உன் காதலை இழக்கலாம் !

    ஆனால்
    காதலிப்பாய் நீ என்னை
    காதலுக்காக மட்டுமே !
    முடிவில்லாக் காதல் பயணத்தில்
    காதலை நீ
    தொடரலாம் மேலும்
    நெடுங் காலம் !

    ********************

    Poem -15
    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing

    If thou must love me, let it be for nought
    Except for love’s sake only. Do not say
    “I love her for her smile–her look–her way
    Of speaking gently,–for a trick of thought
    That falls in well with mine, and certes brought
    A sense of pleasant ease on such a day”–
    For these things in themselves, Beloved, may
    Be changed, or change for thee,–and love, so wrought,
    May be unwrought so. Neither love me for
    Thine own dear pity’s wiping my cheeks dry,–
    A creature might forget to weep, who bore
    Thy comfort long, and lose thy love thereby!
    But love me for love’s sake, that evermore
    Thou may’st love on, through love’s eternity.

    **********

    Share
  • AS I SPOKE TO DHARMA

    ISAIKKAVI RAMANAN

    (My dear friend and a noble soul, Dharma Raman, interviewed me for a magazine a year or so ago. This morning, it popped up when I was searching my system for something else. Well, you had it! Here it is!!)

    We are a state that revels in bestowing titles to public figures – be it actors, politicians or artistes, most of which sound ridiculously bombastic and glaringly irrelevant. But there are a few exceptions. And Taruvai Ananthramaseshan Venkateswaran, better known as Isaikkavi Ramanan is certainly one of them. The epithet preceding the name could not have been more appropriate for a man who lives and breathes poetry and music.

    What strikes one the most when coming face to face with Isaikkavi Ramanan is his unpretentious humility, genuine warmth and extraordinary wit that are at once endearing and inspiring, giving away the spiritual journey that he has embarked upon in the last couple of decades and more. A prolific writer who has authored about a dozen books, written a staggering amount of poetry in Tamil and composed an equally impressive range of songs, Ramanan ‘s one of a kind poetry show on Podhigai channel called ‘Konjam Kavidhai Konjam Theneer’ where he converses with a variety of guests about the beauty of poetry, is immensely popular with a niche audience. He shares vignettes from his fascinating and eventful journey in this free- wheeling chat.

    Who has been the biggest influence in your creative journey as a poet, writer and composer?

    My father Sri T.V. Anantharamaseshan has been the driving force behind my creative pursuits. An erudite Sanskrit scholar who had mastered the language to the extent of being able to converse very fluently in it, his achievements are nothing short of awe inspiring. An expert in Agamashastram – the science of temple architecture, performed Kumbabishekam for more than 20 temples in India and abroad. He was an astrologer par excellence, known for his photographic memory. He was deeply religious He has composed 27 Suprabathams. His stint as Asst Editor for ‘The Hindu’ is remembered by many for the insightful editorials he wrote for several years. But for all his formidable talents, he was very simple and unassuming. He passed away at the age of 87, leaving behind a legacy.

    When did you start writing poetry?

    I was fascinated by Sri M.V.Raghavan, my tamil teacher in school, who would recite Kamban and Bharathi with passion. We were living in Nanganallur at that time and I had the good fortune of associating with a number of poets and scholars who had a lasting impression on my mind as a teenager. Sri Radhakrishna Sastry who was a Siddha Vaidyar, Astrologer and a remarkable philosopher inspired me with his wisdom and knowledge. At the age of 17, I started writing poetry in both English and Tamil.

    What was your career like?

    After being in a few small jobs and an agonizing period of unemployment, I joined ‘The Hindu’ in 1977 as a Sales Representative and worked tirelessly for 27 years. My job involved a lot of travel which I always liked. That gave me an opportunity to see several historic places and temples and it also gave me the privacy I wanted for my poetry.

    For several years, every day was a long day. Not many know how difficult it is to cover 40 to 50 kms a day in places like Bangalore or Madurai and that too, leaving home very early in the morning and being chased by the street dogs which had an inexplicable hatred against a poor newspaper salesman!! I have worked as a packer, loader, delivery boy even after joining The Hindu. I never had any complaints. I enjoyed work. I relished labour. I learnt a lot mixing with the poor and deprived. After all, I am just an ordinary graduate, somewhat fluent in Tamil and to a small extent in English. Life was hard but I soldiered on with gusto, penning verses, pining for my Parasakthi and singing along the road. Even literally!! Yes, wounds hurt you when they happen but when you pause and caress the scars today, don’t they become sweet? (Patta kaayangaL padumpodhu valithaalum thottup paarthaal thazumbugaL inikkum!!)

    I had a memorable period of stay in Visakhapatnam where I was the Regional Manager. My staff members were not merely men and women; they were blessings from the almighty. The synergy that resulted from this great team helped us in earning an enviable reputation among branches and winning several awards for achieving our targets. My staff members were the incentive for me! Yes, even if I was not well, I always wanted to go and meet them. It is now almost eight years after I quit employment. All of them are still in touch with me, pouring their love and affection as usual.

    It shocked them when I quit and surprised the Management. It took me two full days to convince my bosses. My staff? I could never convince them. They broke down, moved me and were very cross with me for leaving them. I quit like Sunil Gavaskar when my reputation as a Manager was as its peak. I quit at a time when I had 10 years of service in my hand (and nothing else!!) My good lady has always been a home maker and my twin boys were yet to settle down. I quit because I wanted to pursue my personal dreams — literary, cultural and spiritual. The inner call was getting louder by the day and I could not ignore it anymore..

    What prompted you to opt for early retirement and walk the spiritual path?

    Despite a successful career and gratifying creative pursuits, I yearned for spiritual progress and harmony. My quest led me to several disappointing and disastrous encounters which knocked me down very badly. Fortunately, in 1994, at the age of 40, I met my ultimate master, Satguru Sivananda Murty. He is my Master, my Beloved, my Refuge. It is he who guides me to this day. My life is over; my living continues. I was consciously mad, extremely anxious. Now I am at peace. I am enjoying the fatigue of relief. Tremendous love flows through me. I can talk to anyone. I can connect with life….all living beings.

    You are known as much for singing as for your poetic prowess. When did u start singing?

    I am not trained in music, hence I cannot call myself a singer. I don’t have a healthy throat or voice, neither do I have musical knowledge. I don’t know music, yet, I know nothing else except music. Well, that is the listener’s problem!! Music happened to me although learning of music never happened, since my career and hectic travelling did not allow me the luxury of taking lessons. I sing, for myself and those who enjoy the simplicity and truth behind my music.

    You have penned lyrics and composed hundreds of songs over the years. What is the process you go through when you do this?

    I have no technical expertise in composing songs as my knowledge of music, classical or otherwise is almost nil and I don’t carry the burden of conforming to a particular raga or thaalam. Not by choice, I just don’t know anything! My songs are neither classical nor entirely folk….you could call them pastoral. I think it is the music of my soul, because when composing actually happens, I go through a fascinating and unique experience. I have composed all kinds of songs- devotional, romantic, rustic, social, philosophical….whatever the genre of the song, I go through the same mental state. Something seizes me. I develop mild temperature. My stomach churns and I am in the grip of some unseen force. I seem to dwell temporarily in a corridor between consciousness and unconsciousness. Songs happen when I am on the other side of consciousness. It is almost as if I see a video. But I find the final outcome to be pitiably poor, paling in comparison to the exhilarating experience I go through.

    Is it the same for writing poetry as well?

    Yes, the process is the same, although there is a clear distinction between song and poem for me. For, there is music in every word; yet, not all words are musical. No one can guarantee my next word. I don’t know if I can write another word or compose another song. All my poems are spontaneous and from my heart, since I am under no compulsion to write for any specific situation. Of course, I can write a poem if someone asks me to and it could even be good and impressive. But it does not come from the heart.

    How has your experience in hosting the show Konjam Kavidhai Konjam Theneer been?

    Beautiful. A couple of years ago, Ms Andal Priyadarshini, poet, writer and a Producer in Door Darshan had invited me for a Kaviyarangam in her studio, not as a participant but to be part of the audience. After it was over, my friend and a remarkable poet with multifaceted talents Sri Marabin Maindan Muthaiah took me to her room. As the participants were waiting for their cheques and tea was served, he introduced me as a poet to Andal and her husband Sri Balaramani and enquired whether they had heard my sing. Though I had met them before, they were not aware that I was some kind of a poet who could sing somewhat. Yes, I sang a few songs. I could see Andal in tears. She declared that she would launch a programme with me as the mainstay. I explained to her that I was not a singer in the popular sense of the term, I could never sing in tune with the sruti and so on but she would not listen. And I thought that she was simply emotional but she organized things and called me. I fondly recall the first few sessions I had with Muthaiah and that remarkable lady Ms Jayanthasree Balakrishnan, who, to me, is an aspect of my Parasakthi. Though Andal was transferred to Coimbatore, DD persisted with the programme under another producer Mr Basha who is a brilliant poet himself and now under another producer Sri Krishnakumar.

    It provides me an opportunity to rub shoulders with many eminent poets and literary connoisseurs besides budding talents.

    Well, wherever I am, suddenly, someone comes to me and congratulates me about the show. I owe it to DD. I should mention Dr. Padma Subrahmanyam also here. She called me to anchor a mega show on the occasion of the 100th anniversary of Rajarajeswaram where more than 1000 dancers performed in the premises of the Big Temple, Thanjavur. Though my announcements were to be confined to six minutes, thanks to some communication gap, I had to speak extempore for several minutes. The programme was telecast live across the globe.

    I acted in a movie titled “Konjam Kaadhal Konjam Kavidhai” (adhuvum konjamthaan!) which is yet to be released. I am also acting in Sri K. Balachandar’s serial “Amudha Oor Achyarkuri” which is being telecast by Kalaignar TV. I have also been giving talks in Tamil and English on different topics in Tamilnadu and other states.

    What is the task ahead of you? How do you see yourself accomplishing it?

    As you would have understood by now, my post retirement life has been quite busy or rather active. I feel it is our dharma to express our best. My Master told me, “The best way to treat the gift of God is to return it to Him!” That is what I have been doing, expressing my best, sharing my joy through poetry, music, talks and photography. Alongside, my yathras continue. I must mention that I have been fortunate to visit different parts of the Himalayas about 29 times now. I have spent quite a few days in solitude.

    I am in deep love with this great country. I know its great distant past, its dismal present and its uncertain future. I do my bit in creating an awakening in the minds of the listeners about this.

    I am not special in any way. But I have been very fortunate in every way.

    I am at His feet, by His grace. Let Him do the rest as well!

    Share
  • காற்று வாங்கப் போனேன் (25)

    கே. ரவி

    awilliஎன் கல்லூரி நாட்களில் ஆங்கிலக் கவிதைகள் நிறையவே படித்து, ரசித்து, அந்தச் சுவையில் தோய்ந்திருந்தேன். கீட்ஸும், ஷெல்லியும், பைரனும் பள்ளி நாட்களிலேயே என்னைக் கவர்ந்ததோடு, மிகவும் பாதிக்கவும் செய்திருந்தார்கள். சற்று நிதானமாக, ஆனால் மிகவும் அழுத்தமாகப் பிறகு சுவடு பதித்தவர்கள், வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தும், அவருடைய நெருங்கிய நண்பர் எஸ்.டி.கோல்ரிட்ஜ்ஜும்.

    கோல்ரிட்ஜ் என்றதும் நினைவுக்கு வருவது அம்பத்தூர்தான். அம்பத்தூருக்கும் கோல்ரிட்ஜ்ஜுக்கும் என்னய்யா சம்பந்தம்? அது ஒரு சுவாரசியமான கதை.

    ar1

    1970-ஆம் ஆண்டு, நாங்கள், அதாவது, சிந்தனைக் கோட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள், அம்பத்தூரில் இருந்த ஒரு பள்ளியில் இரண்டு நாட்கள் முகாம் இட்டோம். அது உண்மையிலேயே ஓர் இலக்கிய முகாமாக, அல்லது, எங்கள் இலக்கிய வளர்ச்சியின் இன்னொரு முகமாக அமைந்தது. அந்தப் பள்ளியும் என் தந்தை விஸ்வம் நடத்திக் கொண்டிருந்த பள்ளிதான். நான், சுகி சிவம், சு.ரவி, ஆ.பாபு, கண்ணன் மேலும் சில நண்பர்கள் கும்பலாகச் சென்று அம்பத்தூரையே ஒரு கலக்குக் கலக்கி விட்டோம். அங்கே நாங்கள் அடித்த லூட்டிகளையும், அருகில் இருந்த வைஷ்ணவி கோயில், திருமுல்லை வாயில் கோயில் ஆகியவற்றுக்கு நடைப்பயணம் சென்றதையும், அதுவும், சிவத்தின் “தேவியின் கருணை மிகமிகப் பெரிது தேர்ந்து கொள்ளடா மானுடா” என்ற பாடலைப் பல ஸ்ருதிகளில் சத்தமாகப் பாடிக்கொண்டே சென்றதையும், அம்பத்தூர் பள்ளியின் புழக்கடையில் எங்களில் ஒருவனைத் தொட்டியில் போட்டு பாபு நீர் மொண்டு ஊற்றிக் குளிப்பாட்டிய கண்கொள்ளாக் காட்சியையும் இன்னும் நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது, என் தந்தை விஸ்வம், ஒரு மரத்தடியில், எங்களுக்கு ஆங்கிலக் கவிதைகளைப் படித்துப் பாடம் நடத்தியதுதான். அங்கேதான் கோல்ரிட்ஜ்ஜின் ‘ரைம் ஆஃப் தி ஏன்ஷியன்ட் மெரினர்’ (ஒரு கிழ மாலுமியின் கவிதை) என்ற அருமையான ஆங்கிலக் கவிதையை அவர் எங்களுக்கு முழுதாகப் படித்து, விளக்கி, நடித்துக் காட்டி அந்தக் கவிதை வெள்ளத்தில் அவர் எங்களை மூழ்கடித்தார்.

    ஒரு திருமண வைபவத்துக்குச் செல்லும் விருந்தினர்களில் ஒருவனை, ஒரு கிழ மாலுமி வழிமறிக்கிறான். ஏன் வழிமறிக்கிறாய் என்று விருந்தினன் கேட்டதும், கிழவன் அவன் கையைத் தன் மெலிந்த கரத்தால் பற்றுகிறான். “கப்பலொன்று இருந்தது” என்று கதையைத் தொடங்குகிறான். “கையை விடு” என்று விருந்தினன் சொன்னதும் கையை எடுத்துவிட்டு, ஒளிமின்னும் தன் கண்களால் அவனைப் பற்றி நிறுத்துகிறான் அந்தக் கிழவன். விருந்தினன் அசையாமல் நிற்கிறான். மூன்று வயதுக் குழந்தையைப் போலக் கதை கேட்கிறான். மாலுமி அவனை இப்படித் தன் வழிக்குக் கொண்டு வருகிறான். இப்படித்தான் ஒரு நாடகமாக ஆரம்பிக்கிறது அந்த நீண்ட கவிதை:

    He holds him with his skinny hand,boat

    ‘There was a ship,’ quoth he.

    ‘Hold off! unhand me, grey-beard loon!’

    Eftsoons his hand dropt he.

     

    He holds him with his glittering eye—

    The Wedding-Guest stood still,

    And listens like a three years’ child:

    The Mariner hath his will.

    இந்த வரிகள் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கின்றன. அந்த மாலுமிக் கிழவனைப் போலவே, சற்றே சிவந்த கண்களாலும், தம் கனத்த குரலாலும் என் தந்தை விஸ்வம் எங்களைக் கட்டிப் போட்டுவிட, நாங்கள் எல்லாரும் அசையாமல் அந்தக் குறுங்காவியம் முழுதும் அமர்ந்து கேட்டோமே, அந்தக் காட்சியும் அப்படியே பசுமையாக நினைவில் தங்கிவிட்டது!

    வேர்ட்ஸ்வொர்த்தின் “மைக்கெல்” என்ற அருமையான கவிதைச் சிறுகதையையும், தாமஸ் க்ரேயின் “எலிஜி வ்ரிட்டன் இன் அ கன்ட்ரி சர்ச்யார்ட்” (ஒரு புறநகர் இடுகாட்டில் எழுதப்பட்ட இரங்கற்பா) என்ற கவிதையையும் என் தந்தை அங்கேதான் படித்தும், நடித்தும் பாடம் நடத்தினார்.

    வொர்ட்ஸ்வொர்த்தின் இரண்டாம் நூற்றாண்டு விழாவைச் சிந்தனைக் கோட்டம் 1970-ஆம் ஆண்டு கொண்டாடியது. அதில் வொர்ட்ஸ்வொர்த் பற்றி நான் ஒரு கவிதை படித்தேன். ஆனால் ஏனோ அந்த நிகழ்ச்சி என் நினைவில் பின்தங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்னால் நண்பன் சு.ரவி அதை ஞாபகப் படுத்தியதோடு, தான் பத்திரப் படுத்தி வைத்திருந்த என் கையெழுத்துப் படிவத்தை நகலெடுத்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியதும் நான் நெகிழ்ந்து போனேன். அனுமன் கொண்டுவந்த சூடாமணியைக் கண்ட ராகவன் நிலையைக் கவிச்சகரவர்த்தி பாடுகிறானே, அதுபோல் நானும் ஆனேன்:

    பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்ravi

    துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;

    மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்

    தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்?

    வொர்ட்ஸ்வொர்த் பற்றி நான் எழுதிய அந்தக் கவிதை இதோ:

    புலமைக் குன்றேறிப் பூரிக்கும் இயற்கையதன்

    வளமைச் செழிப்பினிலே வைத்திழந்த நெஞ்சினனே

    இயற்கை எழிலில் இறைவன் திருவுருவின்

    நயம்தோன்றக் கண்டவனே நற்சிந்தைப் பாவலனே

    ஆங்கிலத்தில் தன்னேரும் அற்றதொரு மாகவியே

    பூங்குமுதப் பொற்றமிழிற் பொங்கும் புலமைக்கோ

    பாரதியை ஒத்தவனே பார்போற்றும் வித்தகனே

    ஓரத்தில் நின்றே மைய ஒளிப்பொருளாய்

    உன்னை உணர்ந்தவனே ஒப்பில்லா உத்தமனே

    சொன்ன கவிதையெலாம் சொட்டும் சுவையமுதே

    இன்னுமுன் ஏற்றத்தை என்னென்று சாற்றிடுவேன்

    சொன்னவையும் சொற்பமடா சொர்க்கக் கவித்திருவே

    நாலைம்ப தாண்டுகளுன் நாவை அழிக்கவிலை

    காலைக் கதிரவன்போல் என்றும் கவியுலகில்

    மாறாப் புதுமையுடன் மாண்பொளியே வீசிடுவாய்

    சீரார் தமிழ்மொழியின் சின்னஞ் சிறுகவிஞன்

    உன்னை வணங்குகிறேன் உண்மைத் திருவிளக்கே

    என்னை அருள்செய்வாய் இன்று

    17 வயதினிலே எழுதியது இந்தக் கவிதை. நினைத்துப் பார்த்து நெகிழாமல் இருக்க முடியுமா? மனோன்மணியின் மெல்லிய விசும்பல் ஒலி. ஆற்றின் சலசலப்பொலி போல, இதமாகச் செவியில் மோதுகிறது!

    “சரிண்ணே! 17 வயது, 20 வயதுண்ணு பேசிக்கிட்டே இருந்தா எப்படி? போன பகுதியிலே நான் கேட்டேனே கேள்வி அதற்கு இன்னும் பதில் வரலியே!” நம்ம புத்தி சிகாமணிதான் கேட்கிறான். அவனுக்கு பதில்சொல்வது போலவே அமைந்த ஒரு கவிதை, 1993-ஆம் ஆண்டில் நானெழுதிய ஒரு கவிதை, இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

    முதுமையின் கனிவை நேசிக்கிறேன் – இருந்தாலும்

    இளமையைத் தான்நான் யாசிக்கிறேன்

    இளமையில் இருந்து முதுமையில் நுழைய

    இருமுறை நானும் யோசிக்கிறேன்

     

    அருவியின் வேகம் அலைகளின் ஆற்றல்

    தென்றலைப் போலெங்கும் செல்லும் சுபாவம்

    உதயத்தின் செம்மை உள்ளத்தில் உண்மை

    இவையனைத் தும்,என் இளமையின் தன்மை

     

    முதுமையின் கனிவை நேசிக்கிறேன்

    இளமையின் கனவை யாசிக்கிறேன்

    இளமையில் இருந்து முதுமையில் நுழைய

    இருமுறை நானும் யோசிக்கிறேன்

     

    மதுச்சுமை யால்மலர் தளர்வதில்லை

    வாடி யுதிர்ந்துபின் வளர்வதில்லை

    புதுச்சுமை யால்நான் தளரவில்லை – என்னை

    நானே சுமப்பதை உணருகிறேன்

     

    எதுவரைக் கும்நான் எனத்தெரி யாமல்

    எதைநான் முதுமை யென்பேன்

    இதுவரை எத்தனை என்றுண ராமல்

    இதைப்போய் இளமை யென்றேன்

     

    முதுமையின் கனிவை நேசிக்கிறேன்

    இளமையின் கனவை யாசிக்கிறேன்

    இளமையில் முதுமை முதுமையில் இளமை

    இரண்டையும் ஒன்றாய் வாசிக்கிறேன்

    aravஅம்பத்தூர் பள்ளியிலே, நள்ளிரவு நேரம் வரை, மொட்டை மாடியில், அங்கே தரையில் பதித்திருந்த சதுரமான கண்ணாடி வழியாக வந்த வெளிச்சத்தில் கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைகளை நான் படிக்க, சிவமும், சு.ரவியும் மற்ற நண்பர்களும் சுற்றிப் படுத்துக் கொண்டு கேட்டு ரசிக்க, ஓ, சொர்க்கமே அதுதானோ என்பதுபோல் சொக்கிக் கிடந்தோம்!

    ஆங்கிலக் கவிஞன் பைரன், இத்தாலியப் பெண், அதுவும் வேறொருவனுக்கு மனைவியாகி விட்ட மங்கை, தெரெஸாவுக்கு எழுதிய கவிதைக் கடிதத்தைத் தமிழ் விருத்த நடையில் முருகுசுந்தரம் அழகாகத் வடித்திருந்த பாடல் இன்னும் நினைவில் இருக்கிறது:

    புதுமொட்டுப் பருவத்தைப் பொன்னிழைத்த தொட்டிலிலே கழித்து விட்டு

    மதுமொட்டுப் பருவத்தை மதக்கன்னி மாடத்தில் கழித்து விட்டு

    பதினெட்டுப் பருவத்தைப் பஞ்சணையில் கழிக்கின்ற படுக்கைப் பூவே

    மதிநட்டுக் கொலுவிருக்கும் கழுத்தழகி நானுன்னை மறப்ப தெங்கே!

    நட்சத்திரக் குவியலுடன் பரந்து, விரிந்து கிடக்கும் வானத்தைப்போல், சொற்குவியல்களால் அலங்கரிக்கப்பட்ட இளநெஞ்சங்களை இணைத்துக் கொண்டு எங்களுக்குள்ளேயே, எங்கள் எல்லாரையும் உள்ளடக்கி, ஒரு கவிதை வானம் விரியக் கண்டோம். எங்களை நாங்களே வியந்து கொண்டோம்.

    (தொடரும்)

    Share
  • தெய்விகக் களிப்பு

    இசைக்கவி ரமணன்

    ”எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்!”

    —- கண்ணதாசன்

    கலை என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தால் மட்டும் போதாது. மனித வாழ்வை மேம்படுத்தும்போதுதான், கலை, ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. “எல்லாக் கலைகளும் இசையை நோக்கி ஒசிந்தே இருக்கின்றன, “ என்பார்கள். (All arts tend to music) ஏனெனில், இசை என்பது, படைப்பின் ஆதாரமான நாதத்திலிருந்து வருவது. உலகம் நாதமயம் என்று கண்டவர்களின் உள்ளம் இசைமயமாகவே இருக்கும். உள்ளம் இசைமயமாக இருந்தால், உலகம் நாதமயம் என்பதும் புலனாகும்! அதனால்தான், ”ஆசை தரும் கோடி அதிசயங்கள் உண்டதிலும் ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!” என்றும் ”பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா,” என்றும், ”நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நின்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்,” என்று வியந்தும், உருகியும், பிரபஞ்ச உண்மையை அனுபவித்தும் பாடுகிறார் பாரதியார்.

    “Music is the direct route to God, though not the exclusive one,” என்பார்கள் பெரியோர். இறைவனிலிருந்து தோன்றி, மனித உலகில் இறங்கி, மானிட வாழ்வை மேம்படுத்தி, மனிதனை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதால் இசையே இறைவன் என்றும் கொண்டாடப் படுகிறது.

    இப்படிப்பட்ட மேன்மையுள்ளது இசை. இந்த மேன்மை நமக்கு எப்போது விளங்கும்? இசைக் கலைஞர்கள், அதை மனிதர்களின் மேம்பாட்டுக்காக வெளிப்படுத்தும்போது! “They live who live for others. All the rest are more dead than alive,” என்பார் சுவாமி விவேகானந்தர். படைப்பு என்பது எப்போதும் பரிபூரணமாக இருப்பது. எனவே, இங்கே யாரும் எதையும் சிருஷ்டிக்க முடியாது. இசையை நாம் உருவாக்கவில்லை இசைதான், நமது உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி, உயர்ந்த பண்புகளில் நம்மை ஈடுபடுத்தி, நம்மை ஆளாக்குகிறது.

    இசையைப் பொருத்தமட்டில், எல்லா நலங்களும் பொருந்திய மனிதர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஒரே வரிசையில்தான் இருக்கிறார்கள். ஊனமற்ற உடம்பு என்பது அதனளவிலே ஒரு சிறப்பாகிவிடாது. குறைபாடுகள் உள்ள உடம்பு என்பதும் அதனளவிலே ஒரு குறையாகிவிடாது. ஒரு மனிதன், தன்னை வைத்துக்கொண்டு என்ன செய்கிறான், அவனுடைய மனிதத் தரம் என்ன, அவன் மற்றவர்களுக்கு எவ்விதம் உதவியாக இருக்கிறான் போன்ற பல அம்சங்களை வைத்தே ஒரு மனிதன் ஞானமுள்ளவனா, ஊனமுள்ளவனா என்பதைக் காலம், சந்ததியினருக்கு அடையாளம் காட்டுகிறது.

    இந்தக் கருத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு பார்க்கும்போது, காசி விஸ்வநாதன் அறக்கட்டளை ஆண்டுகள் பலவாக ஆற்றிவரும் பணியின் மகத்துவம் நமக்குப் புரிகிறது. ”உன்னை உன்னால் உயர்த்திக்கொள்!,” என்றான் கண்ணன் கீதையிலே. “நாம் உடலால் குறைகளோடு பிறந்தோமேயன்றி, மற்ற மனிதர்களைவிட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. நாமே நமது நலத்தை நிர்வகிக்க வேண்டும்,” என்னும் உறுதியுடன் திரு. வள்ளியப்பன் தனது சக மனிதர்களுக்காகச் செய்துவரும் சேவை, ஒரு வீரனின் முயற்சிக்குச் சற்றும் குறைவற்றது.

    இந்த முயற்சியின் சிறப்பம்சமாக அண்மையில் சென்னை மியூசிக் அகாடெமி அரங்கத்தில் அவர் தெய்விகக் களிப்பு (Divine Delight) என்ற ஒரு மாபெரும் விழாவை நடத்திக் காட்டினார். இதை நடத்துவதில், அவருக்கு உறுதுணையாக இருந்த தாளாளர்கள் அனைவருக்கும் நமது நன்றி உரித்தாகிறது.

    இந்த விழாவில், நாம் ஒரே சமயத்தில் காணக்கூட முடியாத பெரும் கலைஞர்கள் ஒரு சேர இசை மழை பொழிந்தது, அரங்கத்தில் உள்ள பெரியோர்களையும், இளைஞர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தது.

    தங்களுடைய கலை, சக மனிதர்களின் வாழ்வு நலம்பெறுவதற்காக இறைவனால் வழங்கப்பட்ட கொடை என்பதை அந்த மேடையில் இருந்த ஒவ்வோர் இசைக் கலைஞரும் உணர்ந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கினார்கள். விழாவின் இறுதியில், அனைவரும் சேர்ந்து நமது வள்ளியப்பனை ஆரத் தழுவிப் புகழ்ந்ததில் ஒவ்வொரு நெஞ்சமும் அங்கே நெகிழ்ந்தது.

    இசையின் அருளால், நாம் ஒவ்வொருவரும் நமது குறைகள் எவையாயினும் அவை தீர்ந்து, இறைவனை அடைவோமாக!

    Share
  • திருமால் திருப்புகழ் (152)

    கிரேசி மோகன்

    கடந்த சில ஆண்டுகளாக அதிகாலையில் ஓவியர் கேசவ்வின் ‘’கண்ணன் வருவான்’’.…அதற்கு அப்போது(ஆழ்வார் சொன்னா மாதிரி’’அப்போதைக்கு இப்போதே’’) என்ன தோன்றுகிறதோ அதை ‘’வெண்பாவாக்கம்’’ செய்து கேசவ் மற்றும் சில நெருங்கிய நண்பர்களுக்கு அடியேன் அனுப்புவேன்….குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள்….அந்தக் ‘’குழந்தை தெய்வத்தைக்’’ வண்ணமாகவும், எண்ணமாகவும் கொண்டாடுவது, எங்கள் இருவரின் உபாசனை, உத்யோகம்….ஏன் காலைக் கடன் என்று கூட கொள்ளலாம்….’’கண்ணன் திருப்புகழை’’ இனி ‘’கேசவ் வண்ணமும் – கிரேசி எண்ணமும்’’ என்ற தலைப்பில் வல்லமையில் பகிர்ந்து கொள்ள விருப்பம்….கண்ணனுக்கு கேசவ்வின் வண்ண ‘’அபிஷேகம்’’ , அடியேன் கிரேசியின் எண்ண ‘’அலங்காரம்’’…. முன்ன பின்ன இருந்தாலும் கண்ணன் ஏற்றுக் கொள்வான்…. அவனுக்குத் தெரியும் இது ‘’குழந்தைகள் பாடும் தாலாட்டு’’ என்று…. ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து….

    முதலில் கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து (கோகுலாஷ்டமியும், ஹேப்பி ஓணமும்) கூறிவிட்டு , அவனை நமக்காக உருவாக்கும் ‘’கிருஷ்ணப் பிரேமி’’ ஸாரி ‘’BRUSHணப் பிரேமி’’ கேசவ் பிறந்த நாள் வாழ்த்தும் கூறி துவங்குவோம்….

    இன்று எங்கள் இல்லத்தில் கிருஷ்ண ஜெயந்தி….

    oonam

    “அவிழ்ந்துபீ தாம்பரம் அங்கம் நழுவ
    கவிழ்ந்தநிலை வாக்கில் கண்ணன் -தவழ்ந்து
    உதைத்துதைத்து இல்லத்தின் உள்ளே புகுந்து
    பதிக்கின்றான் பாதப் பிறப்பு”….

    HAPPY ஓணம்…

    craz
    “ஆனமட்டும் சுக்கிரன் ஆதியென்(று) ஓதியும்
    தானமிட்ட மாடுபலி தாடைப்பல், – வானமெட்ட
    ஆணுத்தமன் ஓங்கி அதைபிடித்துப் பார்த்ததை ,
    ஓணத் திருநாளில் ஓது”….

    craz1

    Happy birth day KESHAV ….

    keshav

    “காவியக் கண்ணன் கதைகளைக் கேட்டிருப்போம்,
    ஓவியமாய்க் காண, உடல்பொருள் -ஆவியைத்
    தந்தனன் தூரிகையால் தாரணிக் (கு) இந்நாளில்
    வந்துதித்த கேசவுக்கு வாழ்த்து”….ரசிகன் கிரேசி மோகன்….

     

    Share